Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. 87-90 இல் பின்னாளில் கருணா பிரிவின் போது நடந்ததை போல பல சம்பவங்கள் யாழில் அரங்கேறின. மாற்று இயக்க, புலி உறுப்பினர்கள் ஆளை ஆள் சுட்டதை விட, தத்தம் ஆதரவாளர்களை போட்டு தள்ளினர். ஒருநாள் புலி ஆதரவாளர் ஒருவரை ஈபி கொலை செய்தால், ஒரு கிழமைக்குள் புலிகள் ஒரு ஈபி ஆதரவாளரை கொலை செய்தார்கள். இது மறுவளமாகவும் நடந்தது. என்ன கருமம் செய்தேனோ தெரியாது - அப்போ எனக்கு பதின்ம வயது கூட இல்லை, இப்படி 3 கொலைகளை என் கண்ணால் கண்டேன். நாலாவதாக ஒருவரை (புலி ஆதரவாளர்) தேடி வந்த சமயம் அவர் வீட்டில் இல்லை, அவரின் மனைவி என்னை அனுப்பி அவர் நிண்ட வீட்டில் இருந்து அப்படியே கொழும்புக்கு படி தகவல் அனுப்பினார். இதை எல்லாம் இப்போ சொன்னால் எனக்கு PTSD எண்டு சொல்லி போடுவாங்கள். 83 க்கு பின் ஊரில் வளர்ந்த பலருக்கு PTSD இருக்கு - நாம் அதை காட்டி கொள்வதில்லை என்பது என் கருத்து.
  2. இவை எல்லாமும் மட்டும் அல்ல அதிபர் ஆனந்தராஜா போன்றோர் கொலைகளும் அரங்கேறின. இவை அரசியல் கொலைகள். ஆனால் களவுக்கு புலிகள் மரண தண்டனை வழங்கியதாக நான் அறியவில்லை. கப்பம் கேட்டு கொடுக்காத போது புளொட் சுட்டு கொன்றது என கேள்விபட்டுள்ளேன். புலிகள் பல கொலைகளை, குறிப்பாக 85-86 மற்றும் 87-90 இல் செய்தார்கள். எங்கள் ஊரில் புலியும் ஈப்பியும் ஏட்டிக்கு போட்டியாக கொன்றவர்கள் லிஸ்ட் மிக பெரிது. ஆனால் எல்லாமும் அரசியல், இராணுவ சம்பந்த பட்ட கொலைகளே. கோழி கள்ளன், மாட்டுக்கள்ளனை எல்லாம் சுட்டார்கள் என்பது - சோபா சக்தி போன்றோரின் மிகைபடுத்தல் மொழி என்றே நான் நினைக்கிறேன்.
  3. அதுக்கு பல terms and conditions இருக்கு, அப்பிளிகேசன போடுங்கோ பாப்பம்😂
  4. அப்படியும் எனக்கு மேலே போக போகிறீர்கள். கடைசியாய் வாறது சும்மா லேசுபட்ட விடயம் அல்ல என இப்போ புரிந்திருக்கும்😂 எனக்கு 1 பொரிக்கும் போல கிடக்கு. ஆனால் நிலை அதே தான் 😂
  5. கோபுவை பற்றி நான் அறியவில்லை. ஆனால் போயா, ஜப்பான் ஆகியோர் கொலை பற்றி அறிந்துள்ளேன். அதை புலிகள் செய்யவில்லை என நினைக்கிறேன். ஆனால் அந்த மனைவி கழுத்தை வெட்டியதை “தலைவன் வழி” என எத்தனை பெயர் எழுதினாலும் அவர்களுக்குதான் மண்டை பிழையே ஒழிய, இது அவரின் வழி அல்ல, என்பது வெள்ளிடமலை. சில பழமைவாத மடமைவாதிகள் தம் மனதில் தோன்றும் பிற்போக்கு அழுக்குகளை எல்லாம், தலைவர் வழி, புலிகள் வழி என பக்கெட் பண்ண முயல்வதை நாம் யாழில் கூட காண்கிறோம். ஆனால் அது உண்மை அல்ல.
  6. இன்றைக்கு (ம்) 3 முட்டை. வீட்டை மீட்டு கொண்டேன் 😂
  7. உங்கள் ஊரில் இப்படி செய்த இயக்கம் எது? உங்கள் வாழ்ந்த அனுபவத்தினை ந்நாஅன் மறுக்க முடியாது கூடாது, ஆனால் எனது அனுபவத்தில், அறிந்த மட்டில் புலிகளோ, 1987 க்கு முந்திய ஈபியோ சின்ன களவுகளுக்கு மரண தண்டனை வழங்கியதாக அறியவில்லை. இப்படியானவர்களை பொது இடங்களில் கட்டி வைத்து அடித்தார்கள், நான் கள்ளன் என அறிவிப்பு கழுத்தில் கட்டினார்கள். இவை பல உதயன், முரசொலியில் செய்தியாக வந்தன. ஆனால் மரண தண்டனை, இராணுவ, அரசியல் காரணங்களுக்காகவே அரங்கேறின என்பது என் அனுபவம். நான் அறியவில்லை என்பதால் நடக்கவில்லை என்றாகாது.
  8. சிம்பாப்வே தாதாக்களை இறக்கியது போல், யூ ஏ ஈ, நெதர்லாந்து சண்டியரை இறக்க வேண்டி வரும்.
  9. உதாரண வழக்குகள் எல்லாம் சிங்களவர் மீது பொலிஸ் சுட்ட நிகழ்வுகள். தமிழர் என்பதால் ஏதாவது நாயை சுட்ட வழக்கு இருந்தால் - அதுதான் செல்லுபடியாகும்😂. நான் அறிய காட்டி கொடுத்தோர், அரசியல் எதிரிகள்தான் இப்படி கொலை செய்யப்பட்டனர். கோழி, நகை கள்ளர் இப்படி சுட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏதேனும் ஆவணப்படுத்த பட்டுள்ளதா? உண்மை. சாவில் கூட அரசியல் பார்த்துத்தான் இந்த உலகம் நிலை எடுக்கும்.
  10. தெற்கில் ஜேவிபி ஆட்சிக்கு வந்த பின் போதை பொருள் மாபியா என பலரை போட்டு தள்ளிய போது, களை எடுப்பு என்று ஆதரித்தோர்…இது அனைவருக்கும் நடக்க அதிக காலம் செல்லாது என நான் எச்சரித்ததை கண்டு கொள்ளவே இல்லை. இனி மாடு பிடிக்கிறான், கண்டு பிடிக்கிறான் என கண்ட மேனிக்கு சுடுவார்கள் போல் உள்ளது. இந்த கொலைக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஏன் ஜனாதிபதியால் ஒரு நேரடி விசாரணைக்கு உத்தரவிட முடியவில்லை? இப்போது புரிகிறதா ஏன் அத்தனை அடியையும் வாங்கி கொண்டு யாழ்களத்தில் ஜஸ்டின் அண்ணா போன்றோர் fact checking செய்கிறார்கள் என்பது. தமது அரசியல் எதிரிகள் என்பதால் யாழில் மீண்டும், மீண்டும் சுமந்திரன், கருணாநிதி மீது பொய் தகவலைகளை (உண்மையான தகவல்களை சொல்ல இல்லை) தெரிந்து கொண்டே பரப்புவதும் இந்த வகையே. மொத்தத்தில் ஒட்டு மொத்தன் இனத்தையும் பொய்யை நம்பும் மூடர் கூட்டம் ஆக்கி விடுவோம்.
  11. யாராவது சிறுவர்களுக்கு கிரிகெட் பழக்கிறீர்கள் எனில் கனேடியன் பேட்ஸ்மென் தாடிவால் ஓடியதை போல் ஓடாமல் இருக்க சொல்லி பழக்கவும். ரிஸ்க் அதிகமான ஓட்டத்தை அவர் அழைத்தார்… மிக மெதுவாக ஓட ஆடம்பித்தார்… நேராக ஓடாமல் ஒரு கோணத்தில் ஓடினார்… Crease பண்ணும் போது பேட்டை slide in பண்ணாமல் குத்தினார், அது கிரீஸ் கோட்டில் மாட்டி கொண்டது. இதில் ஒன்றஒயாவது சரியாக செய்திருப்பின் அவுட் ஆகாமல் தப்பி இருக்கலாம். முன்பு இதை அம்பயர் அவுட் கொடுத்திருக்க மாட்டார், ஆனால் இப்போதைய கமேரா சூழ் கிரிகெட்டில்…. ஓட வேண்டும், ஒழிய முடியாது😂
  12. இண்டைக்கு கனடாவும், அமெரிக்காவும் தோத்தால் நான் எனது வீட்டை மீட்டு விடுவேன்😂
  13. பார் சிறிக்கு துணை தூதரை மட்டும்தான் சந்திக்க முடியும் போல😂. கூட ஒரு எம்பியிம் போகவில்லை.
  14. ஏனைய யாழ்கள கிரிகெட் ஜாம்பவான்கள்: முடிச்சு விட்டீங்க போங்க 😂
  15. தம்பரும் யூ எஸ் கிரிகெட் அணிக்கு வாழ்த்து சொல்லியுள்ளார். ஆனால் டீம் முழுக்க குடியேறியள் எண்டது ஆளுக்கு தெரியாது போல😂.
  16. இங்கே டிரம்ப் எப்ஸ்டீன் கோப்புகளில் பல்லாயிரக்கணக்கான தடவைகள் பெயர் குறிப்பிடபடவில்லை என்பது போலவும்…. டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வாகவில்லை என்பது போலவும்… பலர் எழுதுவது நகைப்புக்கிடமானது. இங்கே முழுக்க முழுக்க தோல்வி அடைந்துள்ளது அல்லது தோல்வி அடைய வைக்கப்பட்டுள்ளது, அமெரிக்காவின் நலன் மட்டுமே. ஈயூ வெற்றி தோல்வி இல்லாத டிரா நிலையில் இருக்கிறது. அமெரிக்கா விலகியதும், ஈயூ+யூகே நடுநடுங்கி விடும் என்ற புட்டின் எதிர் பார்ப்பை, உக்ரேனிலும், கிரீன்லாந்திலும் ஈயு தவிடுபொடியாக்கி உள்ளது. உக்ரேனின் 1/3 பகுதி நீங்கலாக மீதம் ஈயூவில் இணையும் எனில் - குறிப்பாக கருவாகி கொண்டிருக்கும் ஈயூ ஆர்மியில் உக்ரேன் இணையும் எனில் - அது ஈயூவின் நீண்டகால வெற்றியாக அமையும். கூடவே சீனாவோடு ஈயூ நெருங்குவதும், ரஸ்யாவுக்கு ஆப்பாகவே முடியும். அமேரிக்கா இல்லாமல் கூட ரஸ்யாவை விரட்ட, ஈயு அரசியல், இராணுவ, பொருளாதார முறைகளில் தயாராகி விட்டது. இது நல்ல விடயமே. மேலும் ஜேர்மனி இராணுவ மயபடும் போது, பிரான்ஸ்சின், யூகே யின் அணு ஆயுத வல்லமையோடு சேர்த்தால் - ரஸ்யா வாலட்ட முடியாதபடி செய்ய கூடிய இடத்துக்கு (அமெரிக்கா இல்லாமலே) ஐரோப்பா வந்து விட்டது. ரஸ்யாவுக்கு உக்ரேன் இராணுவ ரீதியில் 4 வருட 1 மாத மூக்குடைவு. அதில் எந்த மாற்றமும் இல்லை. அரசியல், ராஜதந்திர ரீதியில் கூட மாற்றம் ஏதுமில்லை. ஆனால் உளவு ரீதியில் டிரம்பின் தேர்வு பாரிய வெற்றி. இதில் முழு வெற்றி எண்டால் அது உக்ரேனுக்கே. செலென்ஸ்கி மட்டும் இல்லை என்றால். இப்போ உக்ரேன் என்று ஒரு நாடு உலக வரைபடத்தில் இருந்து நீங்கி 4 வருடம் ஆகி இருக்கும். செலென்ஸ்கி ஒரு உக்ரேனிய கிராமத்தை தக்க வைத்திருந்தாலே அது வெற்றிதான். ரஸ்ய இராணுவத்தின் மூக்கை உடைத்ததில் இராணுவ வெற்றியும். அத்தனை வல்லரசுகளை டீல் பண்ணும் விதத்தில் இராஜதந்திர வெற்றியும். தன் மக்களை கட்டுகோப்பாக வைத்திருப்பதில் அரசியல் வெற்றியும் அடைந்துள்ளவர் செலன்ஸ்கி மட்டுமே.
  17. இந்த விமானப்பறப்பு முயற்சியை நான் காணவில்லை. ஆனால் போய் பார்த்து வந்தவர்களின் நேரடி விபரிப்பை கேட்டுள்ளேன். VW வான்/பஸ் ஒன்றின் இயந்திரமே பயன்பட்டது என சொன்னார்கள். மீனவரின் வலையில் அகப்பட்ட ஹெலியை புலிகள் பார்வைக்கு வைத்த போது பள்ளிக்கூடத்தால் நேரே போய் பார்த்தேன். அப்போதே இயந்திர பகுதி அகற்றபட்டிருந்தது. பாசிபடிந்து ஒரு வித கடல் மணம் வீசியது. புலிகள் இதை திருத்தியதும் முதலாவது அடி கோட்டைக்குத்தான் என நாம் நண்பர்கள் (பிரைமறி பெடியள்) எமக்குள் பேசி கொண்டோம்😂. டெலோ இப்படி எதுவும் செய்யதாக ஒரு நியாபகமும் இல்லை.
  18. நீங்களா இப்படி எழுதுவது என சந்தேகமாக உள்ளது. அண்மையில் அமெரிக்காவில் ஒரு பெண்ணை ICE கொலை செய்தது போலத்தான் இதுவும். மாடு திருடுவதோ, அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதோ, பொலிஸ் மறிக்கும் போது நிப்பாட்டாது போவதோ மரண தண்டனைக்குரிய குற்றம் அல்ல. இந்த வாகனத்தால் பொலிசுக்கு ஆபத்தும் இல்லை. ஆகவே தற்காப்பு சூடும் இல்லை. வாகனத்தை நிறுத்த எத்தனையோ இடங்களில் சுட்டிருக்கலாம். உடற்கூராய்வு நெற்றியில் சுட்டதாக சொல்கிறதாம். வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ரவைகள் உள்ளே போன துளைகள் தெரிகிறன. இது நிச்சயமாக ஒரு execution தான். இலங்கை பொலிஸ் மேற்கு நாடுகள் போல இல்லைத்தான். ஆனால் இலங்கை பொலிஸின் அளவுகோலின் படி கூட இது அராஜகம்.
  19. 😂 பாவம் அந்த பெண்மணி. சொந்தகாரரோ யாரோ ஆர்வமிகுதியால் செய்த அதிகபிரசங்கிதனத்தால்…. அவரின் தனிப்பட்ட சாதனை கூட மதிப்பிழக்கிறது. இந்த திரியை வாசித்தால் செய்தி வெளியிட்டவருக்கு இந்த பெண் செவிலில் இரெண்டு விடுவார் என நினைக்கிறேன். #நான் சிவனேன்னு தானேடா பிஎச்டி செய்து கொண்டிருந்தேன்😂
  20. இன்னுமொரு டிக்டொக் வியாக்கியானம். சம்பந்தர் மகிந்தவுக்கு புலிகளை தோற்கடித்தமைக்கு நன்றி கூறினார் என்பதற்கான ஆதாரம் அல்ல.
  21. எனது ஆதரவு நிலை முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தே. 1987 வரை இந்திய அணி ஆதரவு. 1987-2009 வரை இலங்கை. 2009 இற்கு பின் ஆப்கானிஸ்தான். அப்போ எம்மை அடிக்காத ஒரு அணியை தேடியபோது, லீக் போட்டிகளில் ஆப்கான் சிறப்பாக ஆடுவதாக என் நண்பி ஒருவர் சொன்னார். அப்போ ஜேர்சி போன்ற சிறிய நாடுகளுடம் ஆப்கான் மோதி மேலே வந்து கொண்டிருந்த காலம். அப்போதிருந்து ஆப்கானிஸ்தான் ரசிகர். 2019 உலக கோப்பை இலங்கை-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் Cardiff வரை போய் ஆப்கானிஸ்தானை ஆதரித்தேன்😂.
  22. இந்த தொடரில் இலங்கை நடுவர்களையும் சேர்த்து கொண்டு 13 பேராக களம் இறங்கியது😂. பின்னர் ஒரு பேட்டியில் காலில் பந்து பட்டாலே எல்பி கொடுப்பார்கள் என்பதால் - தான் காலில் பந்தை முடிந்தளவு படவிடாமலே பேட்டிங் செய்ததாக சிறீகாந்த் கூறினார்😂. பல்லேகல்வுக்கு முன் அஸ்கிரிய தான் கண்டியின் சர்வதேச மைதானம். அங்கே மலைகளின் நிழல் மைதானத்தில் விழும். இதையும் ஒரு காரணமாக காட்டி - நடுவர்கள் ஒரு போட்டியை பேட்லைட் என நிபாட்டினார்கள் என நினைவு. எல்லாம் பிளக் அண்ட் வைட் டிவியில் பார்தது. இதில் ஜோக் என்னெவென்றால் அப்போ இலங்கையின் 4 முக்கிய அம்பயர்களில் 3 பேர் தமிழர். பொன்னுத்துரை, ஆனந்தப்பா, பிரான்சிஸ். இலங்கை வென்ற போட்டியில் பொன்னுத்துரை அம்பயர். ஆனந்தப்பாவும், பிரான்சிசும் 90 களின் நடுபகுதி வரை வேலை செய்தனர். பிரான்சிஸ் வெள்ளவத்தையில் வசித்தார். அடிக்கடி பஸ்சில் காண்பதுண்டு.
  23. முதலாவது டெஸ்ட் வெற்றிக்கு பின் (இந்தியாவை வென்றது) - ஜேஆர் லீவு விட்டார். மெண்டில் கேப்டன். 1985. அப்போ இந்தியா ஒருநாள் உலக கோப்பை சாம்பியன். டெஸ்டிற்க்கென அப்போ உலக போட்டி (WTC) இருக்கவில்லை. ஆகவே ODI உலக சாம்பியனை Test போட்டியில் இலங்கை வென்றாலும் கூட, உலக சாம்பியன் அணியை வீழ்தியதாக மார்தட்டி கொண்டது. இதேபோல் ஒரு விடுமுறை 1996 இல், லாகூரில் றணதுங்க தலைமையிலான அணி அவுஸ்ரேலிய அணியை வீழ்த்தி ஒருநாள் உலக கோப்பையை வென்ற போது சந்திரிகாவால் அறிவிக்கப்பட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.