Everything posted by goshan_che
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எங்கையோ எண்டு மொட்டையா சொன்னால் எப்படி? காபூல்.கொம் மிலா அல்லது கந்தஹார்.கொம் மிலா?😀
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்கு விளையாட ஓரளவு தெரியும். முன்னர் ODI, Test போட்டிகளின் விபரம் எல்லாமும் ஒரு கணினி போல டேட்டாவை மனதில் வைத்திருப்பேன். அசாருதீன், ஹன்சி கொரொஞ்சே, ஹெர்செல் கிப்ஸ், என சில மனதுக்கு பிடித்த வீரர்கள் செய்த ஊத்தை வேலையால் கிரிகெட் பார்பதையே ஒரு 10 வருடம் விட்டு விட்டேன். 2005 பேர்மிங்காம் ஆஷஸ் போட்டியை நண்பர் வீட்டில் சும்மா பார்க்க தொடங்கிய பிந்தான் மீளவும் கிரிகெட் பார்ப்பது. ஆனால் அதுவும் இங், அவுஸ், இந்தியா, தெ.ஆ விளையாடும் டெஸ்ட் போட்டிகளை மட்டுமே. குறிப்பாக T20 பார்ப்பதே இல்லை. அதனால்….வைபவ் சூர்ய வன்சிக்கும், சூர்யவம்சம் சரத்குமாருக்கும் கூட எனக்கு இப்போ வித்தியாசம் தெரியாது 😀.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
மேலே எழுதியதை தயவு செய்து அப்படி விளங்கி கொள்ள வேண்டாம். அந்த திரியில் நீங்கள் இத்தனை கெட்ட அனுபவதின் பின்னும் சிங்களவர் மீது தனிப்பட்டு இனக்குரோதம் காட்டாத நபர் என்பதை, பிள்ளைகளை கூட அப்படியே வளர்க்கும் நபர் என கண்டேன். ஆனால் வெளிநாட்டில் கூட இங்கே வளரும் பிள்ளை கூட இனக்குரோதியாக வளர்கிறதே எனும் உங்கள் ஆதங்கத்தையும் கண்டேன். நானும் இத்தனை கசப்புக்கு பின்னும் தனிப்பட்டு எவரிடமும் இன வன்மம் பாராட்டுவதில்லை, பிள்ளைக்கு அநீதியை சொல்லிகொடுத்தாலும் அது கண்மூடித்தனமாக இன வன்மத்தை வளர்க்க கூடாது என்றும் சொல்லியே வளர்கிறேன். அப்படி பட்ட ஒருவர் “ முஸ்லிமுகெல்லாம் பதில் சொல்ல முடியாது” என எழுதுகிறாரே என்பதே நான் சொல்ல வந்தது. மனம் புண்பட்டால் மன்னித்து கொள்ளவும்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
உங்கள் தன்னிலை விளக்க்கத்தை முற்றாக ஏற்று கொள்கிறேன். அவருக்கு நானா பட்டம் அளித்தவரும், நான் ஏனைய திரிகளில் சகஜமாக பேசும் உறவுதான் (சீமான் திரி தவிர😀). உங்கள் மூவர் இடையிலான பல விடயங்களை கண்டும் தலையிடாமல்தான் இருந்தேன். ஆனால் ஒரு ஆதாரமற்ற கருத்து, மீள மீள சொல்லப்படுவதால் உண்மை ஆகி விடக்கூடாது என்பதாலேயே என் கருத்தை பகிர்ந்தேன். தனிப்பட்டு உங்களை சீண்டும் அல்லது கருத்தை முடக்கும் நோக்கில் அல்ல. அவரும் எனக்கு உங்களை ஒத்த சம தூரத்தில் உள்ள உறவுதான். அவர் தமிழ் தேசியவாதி இல்லை என்பதால் அவர் சில விடயங்களை சொல்லும் தகுதி அற்றவர் என்பதையும், சில இடங்களில் அவர் அளவைதாண்டி விமர்சனம் செய்யும் போது அதையும் விமர்சித்துள்ளேன்( குசா அண்ணை மொழியில் - எல்லா பக்கமும் சுழண்டு சீன அடி 😀) . குறிப்பாக போராடி இருக்கவே தேவையில்லை அல்லது இலங்க அடையாளத்துள் கரையலாம் போன்ற கருத்துக்களை அவர் சொல்லும் போதோ, துரையப்பாவை விதந்துரைக்கும் போது, இப்படி பல சந்தர்பங்களில் என் எதிர்வினை காட்டமாகவே வந்துள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
டாக்டர் அப்பவே சொன்னவர் high protein diet ற்கு மாறச்சொல்லி. அதுதான்😀 படையப்பா சிவாஜி போல் அண்ணன் எனக்கு பெரிய வீட்டை எழுதி தருவார்😀.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
ஒரு பிரச்சனையும் இல்லை. நானே இங்கு, இருவரை தமிழர் அல்லாதோர் என கூறுபவந்தான். ஆனால் அதற்கு சந்தர்ப்ப சாட்சியாவது கொடுத்துள்ளேன். முக்கியமாக, நீங்கள் முஸ்லிம் ஆனால் உங்கள் கருத்துக்கு இதுதான் என் பதில் எனவும் கூறுவேன். ஆனால் ஐலண்ட் முஸ்லிம் என்பது அப்பட்டமானதும், ஆதாரமற்றதுமான புரட்டு. அவர் எழுப்பும் கேள்விகளை இதை மட்டுமே கூறி புறம்தள்ளும் போக்கு ஆபத்தானது. அதன் பின்னால் உள்ள உளவியலை மட்டுமே மேலே குறிப்பிட்டேன். தவிர யாழில் உங்கள் மனம் போனபடி நீங்கள் எழுதலாம், நானும். பரஸ்பர அனுமதியோ, ஆமதிப்போ தேவையில்லை. பிகு உங்கள் மகனுக்கு ஏற்பட்டது போன்ற அதே நிலமை எனது மகனுக்கும் அண்மையில் ஏற்பட்டது. அந்த திரியில் அலசபட்டவை பயனுள்ளதாக இருந்தது🙏.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🏏 International Cricket Grounds in Scotland The Grange Club, Edinburgh – Scotland’s primary cricket venue; has hosted numerous ODIs and T20Is, including matches in the 1999 Cricket World Cup. Titwood, Glasgow – Home of Clydesdale Cricket Club; approved for ICC internationals and has hosted ODIs and T20Is. Mannofield Park, Aberdeen – Regular host of Scotland’s home internationals; has staged many ODI and T20I fixtures. Cambusdoon New Ground, Ayr – Approved for international cricket and has hosted ODI matches. Forthill, Dundee – Another ground used for international matches in recent years. அநேகம் எடின்பரோவில் தான் நடக்கும் என நினைக்கிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சர்வதேச போட்டிகள் நடக்கும் மைதானங்கள் ஒன்றுக்கு மேலே இருக்கு ஆனால் டெஸ்ட் மைதானம் எதுவும் இல்லை.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இதன் பின்னால் ஒரு உலக மகா உளவியல் இருக்கிறது. வங்குரோத்து அரசியல் செய்வோருக்கு எப்போதும் ஒரு எதிரி தேவை. எதிரியே இல்லாவிடிலும் அவர்கள் பொய்யாக ஒரு எதிரியை சிருஸ்டித்த்தாவது கொள்வார்கள். பிரெக்சிற் காரருக்கு ஐரொப்பியர், ஹிட்லருக்கு யூதர், சீமானுக்கு தெலுங்கர்… யாழ்கள அண்ணையளுக்கு நீங்கள். உங்களை முஸ்லிம் அல்லது புளொட் அல்லது இரெண்டும் என கடந்து போனால் - நீங்கள் கேட்கும் அசெளகரியமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வராது. எனது பிள்ளையை அவுஸ்ரேலியாவில் பள்ளியில் கூட சிங்கள இனவாதம் துரத்துகிறது என நாமே (நியாயமாக) அங்கலைத்தாலும், அதே நாம் இன்னொரு கருத்தாளர் கேட்கும் கேள்விக்கு “நீ முஸ்லிம் எனவே நான் பதில் சொல்ல மாட்டேன்” என தெனாவட்டாக எழுத முடிகிறது என்றால் அது உங்களை கற்பனையாகவேனும் ஒரு எதிரி என உருவகித்தால் மட்டுமே சாத்தியப்படும். இப்போ நீங்கள் அனுரவை தவிர வேறு வழி இல்லை என சொல்லி ஐலண்டின் வழிக்குதானே வந்துள்ளீர்கள். டக்லசும், ஐலன்டும், சம்பந்தனும் பல வருடம் வந்த வழிக்கு இப்போ வந்த நீங்கள், அவர்களை எப்படி குறை சொல்லலாம்?
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
😂 சரிதான்😂
-
அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!
இப்பதான் தலையங்கத்தை வடிவாக வாசிச்சேன்… நியூட்டன், மேரி க்கியூரி, இராமானுஜம், ஐன்ஸ்டைக்கு கூட இப்படி தலையங்கம் போட்டிருப்பார்களா என்பது சந்தேகமே😂
-
அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!
வாழ்த்து. இந்த மைக்கல்…மன்னிக்கவும் மைல்கல் சாதனை என்ன? கட்டுரையை வாசித்தும் எனக்கு புரியவில்லை. பட்டங்கள், பட்டயங்கள் பெற்றுள்ளார். அது சம்பந்தமாக ஆராய்சி கட்டுரைகள் எழுதி உள்ளார்…. அவரின் கண்டு பிடிப்புகள்தான் என்ன? அவை ஆய்வகத்துக்கு அப்பால் அப்படி என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறன? முனைவர் பட்ட ஆராய்ச்சிதான் மைல்கல், எண்டால் தமிழரில் அது ஏலவே மைலுக்கு ஒரு கல்லு இருக்கு😂
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
அட சொன்னா நம்புங்கப்பா…. ஐலண்ட் முஸ்லிம் இல்லை….. ஆனால்…..: புளொட்……😂 ஸ்டார்ட் மியூசிக்😂😂😂 சிலவேளை முஸ்லிம் புளொட்டாகவும் இருக்கலாம் 😂😂😂.
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
நன்றி அண்ணா. விசமில்லாதா பாம்புதானா கொம்பேறி மூக்கன்? என்னமா கிலி ஏத்தி இருக்கிறார்கள். எங்கள் ஊர் ஜேம்ஸ் கமரனுகள் “போலியாக ஒரு பாடை கட்டி ஒப்பாரி வைத்து அழுதபடி அதை சுடலை நோக்கி எடுத்து போனால்தான் கொம்பேறி மூக்கன் இறங்கும்” என்பார்கள்😂. அப்படியே இந்த ஒண்டை கொண்டால் அதன் சோடி தேடி வந்து கொத்தும் எண்ட கதையும் பொய் என்பதை உறுதிபடுத்தி விடுங்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
4 ரன்னில் என் கணிப்பு தவறியுள்ளது😂
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
மாய்மாலத்துக்கு பதில் சொல்லமுடியாதுதான்…. ஆனால்… உங்களுக்கு பதில் எழுதும் எல்லாமும் தனிப்பட்டு உங்களை பற்றியதாக இருக்க தேவை இல்லை. அப்படி தனிப்பட்டு உங்களை பற்றி எழுத விரும்பின் நான் பூடகமாக எழுதவும் மாட்டேன்😂.
-
தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்
பாவம் அண்ணை, வயசு போன காலத்தில கொஞ்சம் ஓய்வா இருப்பம் எண்டா….. காலங்காத்தாலா கலர் கலரா கத்த வச்சிட்டானுவோ 😂 அடேய் சுமந்திரா…அண்ணனுக்கு ரத்த கொதிப்பு, மூல கொதிப்பு ஏதும் ஆச்சு… அதுக்கு நீதான் பொறுப்பு அஹங்😂
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சம்பந்தனை அன்றி வேறு எந்த தனிமனிதரையும் பற்றி அல்ல. போரட்டத்தில் 2009 க்கு பின் தீர்வை அடைய ஒரு அரிய சந்தர்ப்பம் வாய்த்தாதாக இங்கே ஒரு உருட்டு, உருட்டப்பட்டது… அதை இல்லை என நான் மறுத்து ஒரு வியாபார உதாரணத்தை சொன்னேன். அதை ஏதோ பஞ்சமாபாதகம் போல நீங்கள் எழுதினீர்கள். அப்படி இல்லை, போராட்டத்தில் வயிறு வளர்தோரே வெட்கம் இல்லாமல் உலாவும் உலகில் இப்படி ஒரு ஒப்பீட்டை செய்வது ஒண்டும் மோசமான செயல் இல்லை என எழுதினேன்.
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
நான் இலங்கை ஜனாதிபதியாக வர விரும்பியவர் இருவர் மட்டுமே…. ஒன்று தலைவர் மற்றது கலாநிதி விக்ரமபாஹு. ஆனால் இனவாத மதவாத சகதியில் உழலும் இலங்கையில் இது சாத்தியமில்லை. உங்களுக்கும் எனக்கும் என்ன முக்கோண காதலா - உங்களை தேடி வந்து நான் கொழுவுப்பட😂. அனுரவின் ஈரச்சாக்கு நயவஞ்சகத்தை யார் நெட்டித்தள்ளினாலும், காவடி எடுத்தாலும் என் எதிர்வினை இப்படித்தான் இருக்கும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ் அணித்தேர்வு மிக நியாயமாக நடக்கும். இது ஏன் என விளங்கவே இல்லை.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இதில் எங்கே உங்கள் மீதான தனிமனித தாக்குதல் அண்ணை? போரட்டத்தினை பயன்படுத்தி வயிறு வளர்த்தோர் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
ஓமண்ணை நான் பங்கு வியாபாரத்துடன் போராட்டத்தை வெறும் ஒப்பீடு மட்டுமே செய்தேன். அது ஒன்றும் உலக மகா குற்றம் இல்லை. குறிப்பாக போராட்டத்தையே வியாபாரம் ஆக்கி வயிறு வளர்த்தவர்களே வெள்ளையிம் சொள்ளையிமா வலம் வரும்போது. சிறிய இலாபம் வரும் போது அதற்குரிய பங்கை விற்றே ஆக வேண்டும். ஆனால் ஒரே நிறுவனத்தில் (போராட்ட முறையில்) முதலிடாமல் வெளியே எடுத்த காசை வேறு நிறுவனங்களில் (போராட்ட முறைகளில்) நாம் முதலிட்டு இருக்க வேண்டும்.
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
பிள்ளையானை அனுரவுக்கு முன்பே உள்ளே தூக்கி போட்டு விட்டார்கள். அனுர தனது போர்கால அமைசரவை சகாவான டக்லஸ் மீது போட்டது “பாவாடை நாடாவை காணவில்லை” ரீதியிலான கண்துடைப்பு வழக்கு - முடிந்தால் யூ எஸ் ஸ்டேட் டிப்பார்ட்மெண்ட் சொன்னதன் அடிப்படையில் அல்லது நிமலராஜன் கொலைக்கு டக்லஸ் மீது வழக்கு போட சொல்லுங்கள் உங்கள் அனுர மஹானை. மாட்டார் - ஏன் என்றால் அப்படி செய்தால் இனவாதத்தின் கைக்கூலியை காட்டி கொடுப்பதாகிவிடும்.
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
பால்காவடி…பன்னீர்காவடி…புஷ்பகாவடி…. பெண்ணுங்க எல்லாம் தூக்கி வந்தோம்… அனுர காவடி. ஐ ஆம் வெய்ட்டிங் மை சன்…. பதவிகாலம் முடியும் போது அனுர அப்படி என்னத்தை தமிழருக்கு அவித்து கொட்டிவிடுவார் என பார்க்கலாம்…. அசோக்….இந்த நாள உன்(ங்க) காலண்டர்ல குறித்துக்கோ😂. ஏன் என்றால் வேறு எவருக்கும் இப்படி முன்னாள் புலிவால்கள் யாழில் காவடி எடுத்ததில்லை.
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
நன்றி தம்பி