Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. கேள்வி நல்ல கேள்வி என்பதால் கேட்டேன்🤣 (பொதுவாக இண்டர்வியூக்களை நான் நடத்தும் போது எவராவது it’s a good question என சொன்னாலே - பதில் தெரியவில்லை, பதில்போல் எதையாவது எப்படி சடையலாம் என யோசிக்க டைம் எடுக்கிறார்கள் என்பதே அர்த்தம்🤣). ஆனால் நான் தமிழ் காங்கிரசை பற்றி கேள்வி கேட்க நீங்கள் கூட்டணி, கூட்டமைப்பு பற்றி பதில் ஏன் எழுதுகிறீர்கள். அவர்கள் பிஸ்கோத்துகள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். கேள்வி காங்கிரசார் பற்றியது. மீள முயலவும்🤣 அதுக்கு கனவானாக இருக்க வேண்டுமே🤣. என்னதான் இருந்தாலும் ஜிஜி கெட்டிக்காரன். கோர்ட்டு பக்கம் தலைவைத்தும் படுக்காத பாரிஸ்டருக்குத்தான் கனவான், குணவான், தட்டி வான் எந்த அரசியலும் செய்யத்தெரியாதே🤣
  2. அப்போ கஜேஸ் ஏன் போன மாகாணசபை தேர்தலை புறக்கணித்தனர்? அதனால் அவர்கள் ஈட்டிய அரசியல் இலாபம்தான் என்ன? பொன்னம்பலம் குடும்பத்தின் வாரிசு அரசியலுக்காகவும் கஜனின் ஒற்றை எம்பி கதிரைக்காகவும் நடத்தபடும் கம்பெனிதான் காங்கிரஸ். வாரிசு அரசியலை ஒழிப்பதாயின் முதலில் எமது நாட்டில், எமது ஊரில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
  3. நான் ஒரு விடயத்தில் மட்டும் அவர்களின் நடவடிக்கையை போற்றி உள்ளேன். ஆனா தமிழர் உரிமைக்கு ஜேவிபி ஏனையோரை விட அல்லது நிகரான ஆபத்து என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எனது நிலைப்பாடு - மாற்றான் தோட்டம் முழுவதும் நாற்றம் எடுத்தாலும் அதில் ஒரு மல்லிகை இருப்பின் மணக்கும். நீங்கள் அனுர காவடி. இரெண்டும் ஒன்றல்ல.
  4. தெரிந்தால் ஏன் யாழில் வந்து எழுதி, நேரத்தை பாழாக்கும் வீண் பேச்சுகாரர் என்ற பழிக்கு ஆளாகி இருக்க மாட்டேனே வசி 🤣. அண்மையில் இந்தியாவில் உழைத்த கறுப்பை, எப்படி மொரொசியஸ் வழியாக மீண்டும் இந்திய பங்கு வர்தகத்தில் இறக்கி, கறுப்பை வெள்ளை ஆக்குவதோடு, இலாபமும் பார்கிறார்கள் என ஒரு வீடியோ பார்த்தேன். அப்படி பல வழிகள் இருக்கலாம். அச்சொட்டாக தெரியவில்லை ஆனால் ஏதோ ஒரு வகையில் செய்கிறார்கள். மொமட் அல்பாயிட், டயனாவின் காதலர் டோடியின் தகப்பன். ஆரம்பத்தில் கோலமாவு, மற்றும் லெதர் வியாபாரம் அதில் வந்ததை வெள்ளையாக்கி பெரும் செல்வந்தரானார். ஆனால் ஹை கோர்ட் வரை போயும் பாஸ்போர்ட் கொடுக்கவில்லை. எந்த குற்றவியல் வழக்கிலும் குற்றம் தீர்க்கவில்லை - அதாவது அரசால் நிறுவ முடியவில்லை ஆனால் செய்கிறார் என தெரிந்திருந்தது.
  5. இரும்பு…. தேவைப்பட்டால் துருப்பிடிக்கும் 🤣 நல்ல ராணி காமிக்ஸ் புத்தகங்கள் போல பெயர் வைத்துள்ளார்கள்… இரும்பு மனிதன்… மாயாவி… மங்கயர்கரசி அம்மா என்ன லேடி ஜேம்ஸ்பாண்டா🤣
  6. இரெட்டை வரி ஒரே அடி ஹைக்கூ —-கவிஞர் அல்வாயான்—
  7. குற்றவாளிகள், பாலியல் விடயங்களில் ஈடுபடுவோர், அரசியல்வாதிகள் இந்த மூவரும் தமக்கு தேவைப்படின் இனபேதம் பார்ப்பார்கள். தேவைப்படின் இணைந்தும் செயல்படுவார்கள். அன்றும் இன்றும். முன்பும் கொழும்பின் பல குடு காங்சிகள் மூவின பிரதிநிதிதுவத்தை கொண்டிருந்தன.
  8. அருமை கோபி, அருமை. குறிப்பாக, ஐஸ், நஞ்சாகும் உணவு, புதைகுழிகள் பற்றிய கவிதைகள் அபாரம். ஆனால் இவை ஹைகூவின் வரைவிலக்கணத்துள் பொருந்துமா என்பது தெரியவில்லை, இதை ஒத்த சென்ரியு வகை கவிதை போலவே இருக்கிறது.
  9. இந்த விடயத்தில் அனுரா ஜேவிபி அரசை நானும் போற்றுகிறேன். வரும்….ஆனா வராது.
  10. இதுதான் வெள்ளைகாரன் அடிக்கடி சொல்லும் thin line வாதா. மெல்லிய கோட்டுக்கு இந்த பக்கம் நிற்கும் வரை நகைச்சுவை, அந்தபக்கம் போனால் கெட்டவார்த்தை🤣.
  11. இதுவும் நாட்டுக்கு நாடு வேறுபடும் ஒன்றே. யூகேயில் 135, ஆனால் அயர்லாந்தில் 150 என்கிறது ஜெமினி. அவுசில் 145 போல் உள்ளது. அதே போல் சில வாகனங்களில் 135 உயரமான பிள்ளையின் பாதம் முழுவதுமாக தரையில் பதியாது. நான் மேலே சொன்ன வரைவிலக்கணத்தை கடைப்பிடித்தால்- சீட்பெல்ட் போட்டாலும் வழுக்கி கொண்டு போய் அடிபடுவதில் இருந்து தவிர்க்கலாம். கொசுறு நாம் இப்போ பாவிக்கும் மூன்று புள்ளி இணைப்பு சீட் பெல்டை கண்டுபிடித்தது சுவீடனை சேர்ந்த என் அபிமான நிறுவனம் வொல்வோ. அதற்கு புலமைசார் உரிமை கோரி ஒரு பெரிய தொகையை பார்திருக்கலாம், ஆனால் இந்த தொழில்நுட்பத்தை மானிட பாதுகாப்புக்கென இலவசமாக கொடுத்தனர்.
  12. இது நாட்டுக்கு நாடு வேறு படுவதாக இருக்கலாம். யூகேயில் குழந்தைகளை முன்னிருக்கையில் அமர்த்தலாம். ஆனால் குழந்தைகள் இருக்கை கட்டாயம். அதிலும் குழந்தை-இருக்கை பின்னோக்கியது எனில் ஏர்பேக் தற்காலிக செயழிழப்பு செய்யதல் வேண்டும். ஆனால் சிறந்த வழி, பின்னிருக்கையில் அமர்த்துவதே.
  13. ம்ம்ம்… இந்தியா அல்லவா…. அப்படித்தான் இருக்கும். சடுதியாக பிரேக் போடுவது என்பது வாகனம் ஓட்டும் போது எதிர்பார்க்க வேண்டிய ஒன்று. அதுதான் டிரைவிங் டெஸ்டில் இதையும் சோதிப்பார்கள். யூகே சட்டப்படி ஒரு வாகனத்தை பின்னால் இருந்து அடித்தால் அடித்தவர் மீதுதான் பிழை. மிக, மிக அரிதாக சிசிடிவி போன்ற சாட்சிகள் இருந்தால் மட்டுமே அடிவாங்கியவர் மீது குற்றம் காணப்படும். அப்போது கூட 50:50 என்றே முடியும்.
  14. கார் முன் இருக்கைகளில் குறித்த வயதுவரை குழந்தைகளை உட்கார வைத்தல் ஆகாது. பின் இருக்கையில் கூட, இருக்கையின் அடித்தளத்தில் பயணியின் பிட்டம், தொடை பகுதி சமாந்தரமாக பதிந்து, முழங்கால் மூட்டு 90 பாகை வளைந்து, பாதம் தரையில் சமாந்தரமாக பதியும் அளவு உடல் உயரம் வளரும் வரை பூஸ்டர் சீட் எனும் துணை இருக்கை பயன்படுத்த வேண்டும். முன்னிருக்கையில் சில கார்களில் ஏர் பேக் கை தற்காலிகமாக செயலிழிக்க செய்யும் வசதி உள்ளது. இது குழந்தைகளை பூஸ்டர் அல்லது சைல்ட் சீட்டில் வைத்து முன் இருக்கையில் அமர்த்த உதவினாலும். பின் இருக்கையில் இவற்றை போட்டு அமர்துவதே மிக பாதுகாப்பானது. இதை எல்லாம் விட்டு விட்டு, குழந்தையை டிரைவரின் மடியில் வைத்து ஓடி விட்டு, ஏர் பேக்கை குறை சொல்ல முடியாது.
  15. அவர்: இந்தாய்யா…உண்மையை சொல்லு….நீ பிட்பாக்கெட் அடித்தாயா? இல்லையா? இவர்: நான் ஐநா சபையை பார்த்து கேட்கிறேன்… ஓ ஐ நா சபையே உனக்கு வெட்கம் இல்லையா? எத்தனை கொடுமைகளை நீ கவர் எடுத்து மறைக்கிறாய்…. நான் வத்திக்கனை நோக்கி சவால் விடுகிறேன்…. ஓ …வத்திக்கனே….🤣
  16. யாழ்பாணம்…. படகு….. தமிழ் நாடு….. வட இந்தியா… நேபாளம்…. ஐரோப்பா…. 1991 இல் இன்னொரு முற்றிலும் வேறுபட்ட காரணங்களுக்காக தேடப்பட்ட இன்னொரு இலங்கையை சேர்ந்த குழுவும்…. இதே பாதையில் தப்பலாம் என நம்பவைத்து ஏமாற்றப்பட்டதாக சொல்வார்கள். இதை வாசிக்க அன்றைய பத்திரிகை செய்திகள் நினைவுக்கு வந்தது.
  17. நன்றி. இவ்வாறு யாழ்க்களத்தில் இன்பம் துய்ப்பதை அனுமதிக்கும் தகுதிகாண் அதிகாரியாகியமைக்கு வாழ்த்துக்கள்🤣. நோ…நோ….சீமானை எதிர்ப்பது என்பது மனைவி மாதிரி மாறாது. விஜை பக்கத்து வீட்டில் புதிதாக குடி வந்த நல்ல பிகர் மாதிரி. பார்க்கலாம்…ரசிக்கலாம்…என்னதான் இப்படி வீட்டுக்குள்ளே அடைஞ்சு கிடப்பதா என ஆதங்கப்படலாம்… இவ்வளவு ஏன்…. பாஜகவோட பைக்கில் ஏறி சுற்றினால் சீமானை திட்டுவது போலவே ஏசலாம். இரெண்டையிம் ஒப்பிடவே முடியாது…
  18. டூ வன்னா வை விட்டு விட்டு தலைப்பை வாசித்து ஒரு தரம் கலங்கிட்டேன் நானு🤣
  19. டாக்டர் லீ க்கு வாழ்த்துக்கள். அந்த பெடியனை பார்….நீயும் இருக்கிறியே என சராசரித் தமிழ் பெற்றார் திட்ட இன்னுமொரு உதாரணபுருசர் 🤣
  20. இது திமுகவும் தோற்க வேண்டும், பிஜேபியிம் அரசில் அங்கம் வகிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் எமக்கு நல்ல தெரிவு. ஆனால் காங்கிரசுக்கு இதில் ஒரு இலாபமும் இல்லை. தவிர அதிமுக பெரும்பான்மைக்கு அதிக சீட்டுகள் எடுத்தாலும் கூட கூட்டணி ஆட்சிதான் என்பதை அமித்ஷா எடப்பாடியை வைத்து கொண்டே சொல்லி விட்டார், ஆகவே அதிமுக+பிஜேபி கூட்டணி அமைந்தால் - தமிழ் நாட்டு அரசில் பிஜேபி மந்திரிகள் இருபார்கள் என்றே நான் எண்ணுகிறேன். இது விஜை+ காங்கிரஸ் கூட்டணியால் மட்டும் சாதிக்க முடியாத விடயம். நிச்சயமாக. One week is along time in politics. இன்னும் 6 மாதம் இருக்கிறது.
  21. (2030 தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் இருந்து …) தம்பிங்க இத உன்னிப்பா கவனிக்கணும்… இத போலத்தான் 2026 இல என் வீட்ல குண்டு வச்சாங்க. அண்ணி கிச்சன்ல இருந்தா… மூத்தவன் அப்பதான் நாதக மாநில துணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்று வெளியூர் கலந்தாய்வுக்கு போயிருந்தான்… சின்னவன் இங்கிலீஸ் லிட்டரேச்சர் டியூசன் போயிருந்தான்…. தீடீர்ன்னு பார்த்தா எவனோ ஒரு ஆயிரம் டன் அணுகுண்ட என் வீட்டு உள்ளார வச்சிட்டு ஓடீட்டான்… பொலிசே பதறிடிச்சு…உள்ள வரமாட்டேன் என்னுட்டானுக… அமெரிக்க அணு விஞ்ஞானிகள் கூட கை விட்டுட்டானுக…. கிட்டதட்ட ஒட்டு மொத்த தெற்காசியாவே சாம்பல் ஆகும் தருணம்… அப்பதான் பாக்கிறேன்…. அந்த குண்டுக்கு பக்கத்தில்லே அதுக்கு எனர்ஜி வேணும்ல எனர்ஜி… அதுதான் மின் வலு… மின் வலு கொடுக்கணும்ணு நாலு 3அ மின்கலத்தை (3A battery) வச்சிருந்தானுங்க… விடுவேனா நான்…எங்க அண்ணன் தந்த டிரெயினிங் அப்படியே என் மனசுல ரிப்ளே ஆச்சு…. மெதுவா அது கிட்ட போய் என் வாயாலயே அந்த கலங்களை ஒண்ணு ஒண்டா கழட்டி எடுத்தேன்… இத White House situation ரூம்ல இருந்து பார்த்த அமெரிக்க அதிபர் பரன் டிரம்ப்… சீமான் சாதிச்சுட்டான்ப்பா என டொனால்டு கிட்ட அழுதுகிட்டே சொன்னார். (கூட்டத்தில் புதிதாக பள்ளிகூடத்தில் இருந்து நேற்று கட்சியில் சேர்ந்த தம்பிகள் விசில் பறக்கிறது)
  22. கொஞ்சம் காசு வேறு எந்த தேவைக்கும் அல்லாமல் இருந்தால் இந்த பங்குகளை 5x leverage இல்க் short பண்ணி பார்க்கலாம். வந்தால் மலை, போனால் எச் ராஜா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.