Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. அவர் மலையக மக்களை வாருங்கள் என்று அழைத்தார், அவர்களது வாழ்க்கைக்கு, அடுத்தவேளை சோற்றுக்கு வழியேதும் சொல்லவில்லை. வடக்கிலேயே பல மக்கள் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில், வாடகை வீடுகளில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஏதும் செய்ய சுமந்திரன் முன்வரவில்லை. அவருக்கு இப்போ அரசியல் செய்ய வேண்டும், அதற்காக ஏதோ சொல்கிறார் என்றால், கேட்பவர்களுக்கு விளங்க வேண்டும். தன் தொகுதியில் அநாதரவாக நிற்கும் மக்களுக்கு இவர் என்ன செய்தார்? தனக்கு வாக்குப்போட்டு மக்களுக்கு என்ன நன்மை செய்தார் என்பது. அப்படி செய்திருந்தால் இப்படி கோமாளி போல விமர்சனங்கள் வைப்பதும், ஓடியோடி குற்றம் தேடுவதும் நடந்திருக்காதே. மக்களை ஏமாற்றும்போது அவருக்கு எதிர் விளைவுகள் விளங்கவில்லை. இப்போ வாயால் தூற்றிக்கொண்டு திரிகிறார்.
  2. எத்தனை வேற்றுமைகள், கசப்பான அனுபங்கள், இருந்தபோதிலும் அத்தனையையும் தாங்கி சுமந்திரனின் எதேச்சாதிகாரமான அதட்டல்களையும் எச்சரிக்கைகளையும் ஏளனங்களையும் தாங்கி கூட்டமைப்பாக இயங்கிய போதிலும், அவர்களை விரட்டியடித்தவர் சுமந்திரன். பின்னர் தேர்தலின் பின் ஒன்று கூடுவோம் என்று பசப்பினார். இப்போ தனது கனவை நனவாக்க மீண்டும் தேசியம், ஒற்றுமை, சிநேகம் என்றெல்லாம் வகுப்பெடுப்பார். தேர்தலின் பின் மீண்டும் அதிகாரம் என்னும் முருங்கை மரத்தில் ஏறி நின்று சவால் விடுவார். எங்களைவிட இவரோடு பயணித்தவர்களுக்கு தெரியும் இவரைப்பற்றி. ஆனாலும் அவர்களுக்கு வேறு வழியில்லை, நான் அழைத்தேன் அவர்கள் என்னோடு கூத்தாடவில்லை என்று குற்றம் சாட்டுவார் என்று அவர்களும் இழுபடுகின்றனர். இவர்கள் ஒன்றும் மக்களின் நலன் கருதி ஒன்றிணையவில்லை, தங்களை தற்காத்துக்கொள்வதற்காக, நிலை நிறுத்துவதற்காக மக்களை ஏமாற்றுவதற்காக முயற்சிக்கிறார்கள் அவ்வளவே. இவர்கள் என்ன கூத்தாடினாலும் மக்கள் விழிப்பாக உள்ளனர்.
  3. தமிழரசுக்கட்சிக்கு விழுந்த பலமான அடி, அது இனி எழுந்திருப்பதற்கு பல காலம் எடுக்கும். தாமே தமிழரின் ஏகபோக கட்சி என்று சொல்லிக்கொண்டு எக்காளமாக தேர்தல் காலங்களில் வீரப்பேச்சு பேசி வாக்கு அறுவடை செய்த காலம் மலையேறி விட்டது. உணர்ச்சி வசப்பட்ட கருத்துக்களில் மக்கள் இனிமேல் மயங்கப்போவதில்லை. அவர்களுக்கு இப்போ இருப்பது வாழ்வியல் பிரச்சனை. அவர்களின் தேவைகளில், அழிவுகளில் அவர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர் யாரும் முன்னிற்பதில்லை அவர்களுக்காக. இனிமேல் மக்களுக்காக உழைக்க வேண்டும், அது நமது அரசியல்வாதிகளுக்கு ஒத்துவராத ஒன்று. அனுரா கட்சியை இழுத்து விட்டதே இவர்களது எதேச்சாதிகாரமே. அதற்காக அந்த அரசை குற்றம் சாட்டி தாம் தப்பிக்க முயற்சித்தனர், முடியாமற் போகவே மலையக மக்கள்மேல் பாசம் பிறந்தது, அதுவும் கைமீறிய நிலையில் ஒன்று படுகிறார்களாம். இது மக்களை ஏமாற்றுகிறோம் என்று நினைத்து தம்மைத்தாமே ஏமாற்றும் செயலது. வருமுன் காத்திருந்திருக்கலாம், ஆனால் அனுரா பக்கம் போனவர்களை திரும்ப அழைப்பது கடினமான ஒன்று. அதற்காக இவர்கள் கொடுக்க வேண்டியது அதிகம். அதற்கு இவர்கள் தயாரா? இந்த மாய வித்தைகள் இனி வருங்காலத்தில் எடுபடாது. தன் பக்கம் சாய்ந்த இந்த மக்களை இனிமேல் அனுரா இவர்கள் பக்கம் திரும்ப விடமாட்டார். ஆடித்தான் பார்க்கட்டுமேன்.
  4. இது அவர்களது உணர்வுகளை மதிக்கும் சரியான கருத்து. எடுத்தோம் கவிட்டோம் எனும் உணர்ச்சி மிக்க கருத்துக்களை வெளியிட்டு அவர்களை நிரந்தர அனாதைகளாக்கும் செயலாகும். அவர்களுக்கு சேர வேண்டிய நிவரணங்களையும் நஷ்ட ஈடுகளையும் தடுத்து நிரந்தரமாக கையேந்தி வாழும் நிலையை ஏற்படுத்தும். தூரநோக்கோடு அவர்களது எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். சரிந்துபோன எமது அரசியல் செல்வாக்கை தடுத்து நிறுத்தி உயர்த்துவதற்காக அவர்களது வாழ்வை பணயம் வைத்து விளையாடக்கூடாது. அதற்கு எவருக்கும் அதிகாரமில்லை.
  5. இந்தியாவும் வேண்டாம், சீனாவும் வேண்டாம், மெரிக்காவும் வேண்டாம். எல்லோரும் எங்களை சுரண்டி வளமாக வாழ்பவர்களே. நம்மை நாமே பாதுகாப்போம். தொப்புள் கொடி உறவென்று சொல்லிக்கொண்டு வயிற்றில் அடிப்பது, வளத்தையும் உயிரையும் சூறையாடிக்கொண்டு நிவாரணம் அனுப்புவது ஏற்றுக்கொள்ள முடியாது. எம்மை அழிப்பதும் நிவாரணம் அனுப்புவதும் எம்மை தமது அடிமைகளாக வைத்திருப்பதற்கே. அரசியல் வாதிகள் இனிவருங்காலங்களில் பார்வையாளர்கள் மட்டுமே, அவர்களை நம்பி எதுவும் ஆகப்போவதில்லை. இதனால் மலையக மக்களை வைத்து தமது பிழைப்பு நடத்த ஆரம்பித்துள்ளார்கள்.
  6. அவர்களைப்போல் சில்லறைத்தனமாக நடந்துகொள்ளாமல், பெருந்தன்மையோடு நடந்துகொள்ளும் கொள்கைத்திட்டம். அதனால் மதத்தை தவிர்த்திருக்கலாம். அது பாரபட்ஷம் (துவேசம்) காட்டுதல் என்று தீர்ப்பாகலாம். அவர்கள் எல்லோரையும் சமமாக நடத்துவதாலேயே இன்று பல மொழி, மத, கலாச்சார மக்கள் அங்கு வாழ முடிகிறது. இரண்டு மொழி உள்ள நாட்டிலேயே எத்தனை பாகுபாடுகள். இவர்கள் எந்தப்பிரச்னையுமில்லாமல் எல்லோரையும் வாழ விடுகிறார்கள். இவர்கள் வந்து அந்தபொதுப்பண்பை மாற்ற விளைவதே பிரச்சனை. இனிமேல் யாரும் எங்கேயும் எதையும் கழுவலாம் என்கிற சட்டம் வருமா அங்கே? பிறகு குத்துது குடையுது என்பார்கள். அடைக்கலம் கொடுத்த நாட்டிலேயே தங்கள் மதத்தின் பெயரால் தாராளமான கொலைகள், பாதிக்கப்படுவது அடைக்கல பெருந்தன்மையை எதிர்க்காத சாதாரண மக்களே
  7. அன்று இனக்கலவரத்தினால் அடியுண்டு சிதறுண்ட மக்களை காந்தீயம் என்கிற அமைப்பு வரவேற்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து குடியமர்த்தினர். ஆனாலும் கணிசமான மக்கள் மீண்டும் தமது பழைய இடங்களுக்கு சென்றனர். ஒரு இடத்தில வாழ்ந்து பழக்கப்பட்டவர்களை திடீரென வேறொரு இடத்திற்கு மாற்றுவது அவர்களின் இயல்பான வாழ்வை பாதிக்கும், அதோடு ஆண்டாண்டு காலமாக நாட்டுக்காக உழைத்து ஓடாகிப்போன அவர்களுக்கு வேண்டிய நிவாரணத்தை கொடுத்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டியது அரசின் கடமை. இவர்களை நாம் வரவேற்பது பிரச்சனையல்ல, அவர்கள் எமது தயவில் வாழ வேண்டிய நிலையிலும் சங்கடத்திலும் வாழ்வதிலும் பார்க்க அவர்களுக்குரிய நஷ்ட ஈடு கொடுக்கப்படவேண்டும், வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும், அதற்கு அவர்கள் உரித்துடையவர்கள். அவர்களுக்கு சேரவேண்டிய உரிமைகளை தடுத்து, தடங்கல்களை ஏற்படுத்தி அரசின் கடமைப்பாட்டிலிருந்து வலிய விலக்கிக்கொள்வதாக அமையும். அவர்கள் பெற வேண்டிய நிவாரணங்களை நஷ்ட ஈட்டைப்பெற முழு உரித்துமுடையவர்கள் அது அவர்களது உரிமை. அதை தடுத்து பரோபஹாரம் செய்கிறோம் எனும் பெயரில் ஏதிலிகளாக்காமல் இருந்தால் சரி. அதன் பின் அரசும் தனது கடமையிலிருந்து அவர்களை கைகழுவி விடும். பிறகு அவர்களுக்கு எந்த ஆதரவுமில்லாமல் போய்விடும். தமிழரசியல் வாதிகள் தமது மக்களையே அவர்களின் தேவைகளையே கவனிப்பதில்லை இதில் இவர்களை அழைத்து வாழ வைத்து விடுவார்கள். மனோ கணேசன் தனது கடமையிலிருந்து இலகுவாக தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்.
  8. ஆமா.... அவர்களது பழக்கவழங்கங்கள் மத போதனை இருக்கும் பாடசாலையை தவிர்த்து, ஏன் இங்கு வருகிறார்கள்? தங்கள் பழக்கவழக்கங்களை பரப்புவதற்கா அல்லது இவர்களது பழக்கவழக்கங்களை அழிப்பதற்கா? முஸ்லிம் நாடு என தங்கள் நாடுகளை பீற்றிக்கொள்கிறார்கள், பின் ஏன் இவர்கள் சொன்னால் மட்டும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதுவே அவர்கள் நாட்டில் அல்லது அவர்களது பாடசாலையில் அவர்களது விதிமுறைக்கப்பால் நடந்திருந்தால் இவர்களது செயற்பாடு எவ்வாறு இருந்திருக்கும். ஆசிரியரை பதவியிலிருந்து விலக்கிய நிர்வாகம் இந்த மாணவர்களின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்கிறதா? பிற பாடசாலையில் கல்வி கற்க செல்பவர்கள், அந்த பாடசாலையின் விதிமுறைகளை பின்பற்ற தெரிந்திருக்க வேண்டும், இல்லையேல் அங்கு கற்பதை தவிர்க்க வேண்டும். தங்கள் பாடசாலை கல்வி, ஒழுக்கம் நிறைவை தராத படியினாலேயே மற்ற மத பாடசாலையை தெரிந்தெடுத்துள்ளார்கள்.
  9. முன்னாள் இங்கிலாந்து பிரதமர் இலங்கை வந்தபோது, அவர் யழ்ப்பாணம் சென்று மக்களை சந்திக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தபோது, இலங்கை அரசாங்கம் அதற்கு பல தடைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் அவர் அங்கு வந்தபோது தமிழ் மக்கள், செல்வராசா கஜேந்திரன், அனந்தி அவர்களோடு பல மத குருமார் சந்திக்க காத்திருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை சந்திக்க முடியாமல் அவர்களை தடுத்து தள்ளி விழுத்தினர், அப்போது அனந்தி ஒரு பெண்ணாக இருந்தும் சில ஆவணங்கள் ஓடிச்சென்று டேவிட் கமரூனின் வாகனத்தின் யன்னல் வழியாக கொடுத்தார் . அந்நேரம் அங்கெ தமிழ்பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர் வேறு யாருமிருக்கவில்லை. சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்கள் யாழ்நூலகத்திலிருந்து பின்கதவு வழியாக சென்றனர். பின்னர் டேவிட் கமரூன், இடம் பெயர்ந்த மக்களின் குடிசைகளுக்கு சென்று அவர்களின் துயரம் நிறைந்த, வெள்ளம் நின்ற இடங்களில் அவர்களின் தற்காலிக குடிசைகளுக்கு சென்று பார்வையிட்டார், அதன் பின் வேறொரு சம்பவத்தில் சம்பந்தனும் சுமந்திரனும் மக்களை சந்திக்க சென்றபோது மாப்பிளை அழைக்கவா பட்டு வேட்டியோடு வந்தீர்கள் என்று மக்கள் கேள்வி கேட்டு அவர்களோடு உரையாட மறுத்து வெளியேற்றியிருந்தனர். நீங்கள் இணைந்திருந்த படம் கமரூன் மக்களோடு உரையாடியதாக இருந்திருக்கலாம். அந்த போராட்டங்களின் பின்னே மக்களை சென்று பார்வையிட்டார் அங்கு சுமந்திரனோ அல்லது வேறு யாருமோ அவர்களை அழைத்து சென்று உரையாடலை ஏற்படுத்தியிருக்கவில்லை. நாங்கள் உங்களிடம் ஆதாரம் கேட்கவில்லை, அப்படி கேட்டு நான் உங்களுக்காக கருத்து எழுதுவதுமில்லை. சில சமயங்களில் உங்களுக்கு பதில் எழுதாமல் பொதுவாக பதிந்து விட்டு கடந்து செல்வதுண்டு. அதைத்தான் பெட்டிக்கடை மூடுதல் என்று உங்கள் பாஷையில் எழுதுகிறீர்களென நினைக்கிறன். உங்கள் கருத்து அலட்டல், அதை நான் கடந்து செல்வேன் என்பவருக்கு, பதில் எழுதுவதை தவிர்த்தே அப்படி எழுதுவதுண்டு. இனியும் அப்படியே செய்வேன். நீங்கள் உங்கள் பாஷையில் எதை வேண்டுமானாலும் கூறி மகிழ்ந்து கொள்ளுங்கள். அதைப்பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. தமிழரின் ஏகபிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதையே எழுதுகிறேன், நீங்கள் தான் எனது கருத்துக்களை கடந்து செல்பவர் என பலதடவை அறிக்கையிட்டிருக்கிறீர்கள், பின் அவற்றிற்கு பதில் கருத்தெழுதி விதண்டாவாதம் செய்வீர்கள், வாசகர்களுக்கு என்னை யாரென அறிமுகப்படுத்தப்போகிறீர்கள் என்கிறீர்கள், என்னை வாசகர்களுக்கு தெரியாது ஏனெனில் நான் களத்திற்கு புதியவர் எனவே நீங்கள்தான் என்னை அவர்களுக்கு அறியப்படுத்தவேண்டும் அப்படி நீங்கள் உங்களுக்குள் எண்ணிக்கொள்கிறீர்கள். எனது கருத்தை கடந்து போகும் நீங்கள் எனது கருத்துக்கு ஏன் பதில் எழுதுகிறீர்கள்? ஏன் என்னை வாசகர்களுக்கு அறியதரவேண்டுமென துடிக்கிறீர்கள்? இங்கு எத்தனையோ கருத்து பதிகின்றேன், ஆனால் சுமந்திரனை பற்றி எழுதினால் மட்டும் நின்று வாசிப்பீர்கள் பதில் தருவீர்கள், பின் அலட்டல் என்பீர்கள். அந்த அலட்டலிலும் நீங்கள் பதில் எழுத ஏதோ உண்மை இருக்கிறது, அதை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை அதுதான் உண்மை. எனக்காக நீங்கள் ஆதாரம் தேடவும் வேண்டாம், நான் உங்களிடம் கேட்கவுமில்லை.
  10. ம், பெருந்தொகையான பணம், பொருட்கள் குவிகின்றன. கைகள் கடிக்கிறது, நாவில் நீர் ஊறுகிறது, முன்னைய காலமாக இருந்தால் பலமடங்கு ஒவ்வொரு அரசியல் வாதியின் பெயரிலும் வீட்டிலும் சேமிக்கப்பட்டிருக்கும். இப்போ ஒன்றும் செய்யமுடியவில்லை, மக்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார். அதைவிட இவரை ஜனாதிபதியாக்க பேரணி செய்த அரசியல் வாதிகள் அனுராவை புகழ்ந்துகொண்டு அவர் பக்கம் நகர ஆரம்பித்து விட்டார்கள். கூப்பாடு போட்டவர்களும் அமைதியடைந்து விட்டார்கள். இந்த நேரத்தில் பாராளுமன்றத்தை கூட்டி என்ன செய்தி சொல்லப்போகிறார்? சந்திரிகா கூட பலநாடுகளின் உதவி வருவதை கண்ட பின், தானும் நிதியளிக்கிறேன் என இரண்டோ, இரண்டரை மில்லியனோ அளித்திருக்கிறார். இருக்க வீடு இல்லை என்று அழுதவர், தனது பெயரும் வரவேண்டும் என் நினைத்துள்ளார் பெரிய விடயம்!
  11. தமிழருக்கு உதவி செய்வதில் அமெரிக்காவுக்குத்தான் எவ்வளவு அவசரம் என்று இதிலிருந்து தெரிகிறது. பெருந்தெருக்கள் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளது, வாகன வசதியும் தற்போது அவசரமாக இயங்க முடியாத நிலையாக இருக்கலாம். தமிழருக்கு தாமதிக்காமல் அவசரமாக உதவி வழங்க அமெரிக்கா நினைத்து, நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த தனது இராணுவ வீரர்களையும் அனுப்பியிருக்கிறது. இது புரியாமல் வந்தவர்கள் பலாலியிலிருந்து இராமேஸ்வரம் எத்தனை கிலோ மீற்றர் என விசாரித்தார்கள் என கதை எழுதவும் கூடும்.
  12. நீங்களும் உங்கள் பங்குக்கு ஆரம்பியுங்கள் போரை. இயற்கையும் அழிக்கட்டும் நீங்களும் அழியுங்கோ!
  13. ஐயோ, இப்படியுமா? நாங்கள் ஒருபுறம் குற்றம் சாட்டுகிறோம், இவர்களோ எங்களுக்கெதிராக பாராட்டு தெரிவிக்கிறார்கள், இவர்களும் அனுராப்பக்கம் அடித்துச்செல்லப்பட்டுவிட்டார்கள். அடித்தது அனுரா அலையென்றால், டித்வா புயலுமா இப்படி அடிக்குது. இது என்ன அநிஞாயம்?
  14. கூடி.... என்ன சாதிக்கப்போகிறார்கள்? கூடிய பொழுது எல்லோருமாக குற்றஞ்சாட்டி, கூப்பாடு போட்டு வெளியேறினார்கள், இப்போ ஏன் கூடவேண்டுமென்று அவசரம் காட்டுகிறார் இவர்? இப்போ மக்களுக்கு வேண்டியது உதவி. இவர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணித்து என்ன எதை மாற்றியமைக்கப்போகிறார்? ஓ..... தங்களைப்போல் நிவாரண தொகையை இவர்கள் பதுக்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறாரோ? கள்ளன் நினைப்பது தன்னைப்போற்தான் மற்றவர்களுமென்று. இவர் அனுராவுக்கு எதிராக ஒரு பேரணி கூட்டினார், அந்தப்பேரணி வெள்ளத்தோடு அனுரா பக்கம் அடியுண்டு போய்விட்டது. ஜனாதிபதி கனவை விட்டு, உழைத்து சாப்பிட முயற்சிக்கவும். உத்தியோகத்திற்கான கல்வித்தகமையுமில்லை, வருந்தியுழைக்க உடல் வளையாது, தந்தை வழி அரசியலும் தேறாது, விதி என்ன செய்ய நினைத்திருக்கிறதோ இவரை. ஆனால் ஒன்று, இவர் அரசியலுக்கு லாயக்கில்லை என்பதையே காலம் நிரூபித்து வருகிறது.
  15. அடடே.... நிவாரணப்பொருட்கள் விமானத்தில் பலாலிக்கே வந்து இறங்கிவிட்டதா? அனுரா சொல்லி அனுப்பியிருப்பாரோ, அல்லது யாரும் தமிழரை நினைக்கமாட்டார்கள் என்று அமெரிக்காவே நினைத்து வந்திறங்கி விட்டதோ என்னவோ? இனி தமிழர் ஓரங்கட்டப்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு எழாது....?
  16. தமிழர் நிம்மதியாக இருக்கக்கூடாது, அது தமது அரசியலுக்கு பாதிப்பு. இனக்கலவரத்தை தூண்டி நாட்டை சூறையாடி, சுகபோகம் அனுபவித்தவர்கள், அது தம் கையை விட்டுபோவது மாத்திரமல்ல தண்டனை அனுபவிக்கும் காலம் நெருங்குவதால் மீண்டும் அதை வைத்து அரசியலை கைப்பற்ற, நாட்டை தீவைத்து தமது லட்சியத்தை அடைய முயற்சிக்கிறார்கள். அவர்கள் வைத்த தீயிலேயே கருகப்போகிறார்கள். அனுராவின் செயற்பாடு அவர்களை கலக்கமடையச்செய்கிறது.
  17. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் கிடைத்திருக்காது, ஆதாரம் கொண்டு வாருங்கள், உறுதிப்படுத்துங்கள் என்று நாட்களை இழுத்தடித்து சிறு தொகையை கொடுத்துவிட்டு எந்த ஆதாரம், உறுதிப்படுத்தல், இழப்பு ஏதுமில்லாமல் அரசியல்வாதிகள் நோகாமல் சுருட்டிக்கொண்டு, தாங்களே உண்மையான சேவையாளர் என பீத்துவார்கள் கடந்த காலங்களில்.
  18. இதுவே, ராஜபக்ச ஆட்சியாக இருந்திருந்தால்; தங்கள் வீடு, சொத்துக்கு சேதம் என்று தங்கள் அரச கெடுபிடிகளுக்கும் சேர்த்து நஷ்ட ஈடு கோடிக்கணக்கில் சுருட்டியிருப்பார்கள். நான் ஒன்றும் எடுத்து வைச்சு சொல்லவில்லை, அரகலயா ஆர்ப்பாட்டத்தின்போது இல்லாத வீடுகளே சேதமேற்படுத்தப்பட்டதாக கோடிக்கணக்கில் சுருட்டி இப்போ அனுரா அரசு தோண்டி துருவி எடுக்குது.
  19. எங்கடை மக்களின் பிரதிநிதிகளுக்கு தெரியாத மனிதாபிமானத்தை, வெளிநாட்டுக்காரர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இனி அரசாங்கத்தின் மேல் விமர்சனம் குறைந்து, மறைந்து, நாங்களும் வாறோம் என்று கைகோர்க்க முண்டியடிப்பினம். சஜித்தின் கட்சியில் இருந்து ஒருவர் விலகிவிட்டார், அவர் அனுராவோடு சேர வாய்ப்புள்ளது. அனுரா அமைதியாக இருந்து செயலற்ற விமர்சனங்களுக்கு காது கொடுத்து நேரத்தை செலவழிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்யவேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். மக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், அரசியல்வாதிகளின் பொறுப்பான செயலை. அனர்த்தநிவாரணங்களை கொள்ளையடித்தவர்களுக்கு இப்போ வாயூறும். அனர்த்த, அழிவு காலங்களில் மக்களோடு வாழ்ந்து இழப்புகளை அனுபவித்தவர்களுக்கு தெரியும் அந்த நேரத்தில் எது முக்கியமென்பது. அழிவுகளின் பின் பதவிகளுக்கு வந்து அனுபவிப்பவர்கள் விமர்சனம் செய்யத்தான் முடியும். அந்த மக்களின் வலியோ, தேவையோ புரியாது அவர்களுக்கு. அனர்த்தத்தில் பதவி தேடும், அரசியல் செய்யும் வியாதிகள். சரி, அரசு முக்கிய கவனம் செலுத்தவில்லை, இவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? அதன் தீவிரம் இவர்களுக்கு தெரிந்திருந்தால் இவர்கள் அரசுக்கு நினைவூட்டி எச்சரிக்கை செய்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை? இவர்களுக்கு பொறுப்பில்லையா? அல்லது இவர்களும் இப்படியான வரலாறு காணாத இயற்கையின் சீற்றத்தை அறிந்திருக்கவில்லையா? இவர்களுக்கும் பதில் சொல்லவேண்டிய பொறுப்பிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய நேரத்தில், பொறுப்பற்ற விமர்சனம் செய்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் இவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே! அனர்த்தம் வருமுன் செய்யவேண்டியதை வந்தபின் செய்து, அரசியல் செய்யும் முட்டாள்கள்! இவர்கள் கையில் அரசு இருந்திருந்தால்; இவர்களும் இதைத்தான் அல்லது இதைவிட மோசமாக நடந்து கொண்டிருப்பார்கள் என்பதற்கு இவர்களது பொருத்தமற்ற விமர்சனம் சாட்சி.
  20. அது சரி, அது என்ன பெட்டிக்கடை சமாச்சாரம்? எதற்கெடுத்தாலும் பெட்டிக்கடையை மறக்க முடியாமலுள்ளது உங்களுக்கு. என்னை நோக்கி வரும் கேள்விகளுக்கு நான் பதிலளித்துக்கொண்டுதான் இருக்கிறேன், ஒருவேளை நீங்கள் கடந்து சென்றீர்களோ தெரியவில்லை. நிதானமாக மீண்டும் சென்று பாருங்கள். ஒரு தலைப்பில் கேள்வி கேட்பீர்கள், பின்னர் வேறு தலைப்புகளுக்கு மாறி குடைவீர்கள், அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது. என்னுடைய பதிவுகள் எப்படியானவை என்பது வாசகர்களுக்குத்தெரியும், நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. சாணக்கியன் சிங்களகட்சியில் இருக்கும்போதுதான் தமிழ் மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டார்கள், சுமந்திரன் தமிழ் மக்களின் பிரதிநிதியென்று பாராளுமன்றத்தில் இருக்கும்போதுதான் தாங்கள் கொன்றுகுவித்த மக்களின் தொகையை குறைத்து மஹிந்த அரசு கூறியது, அப்போ இந்த சுமந்திரனும் சாணக்கியனும் கேள்வி கேட்டார்களா? விமர்ச்சித்தார்களா? இயற்கையழிவு, யாரும் வெளியே வரமுடியாதநிலை, அழிவு ஒரு மாகாணத்தில் மட்டுமா நடந்தது? ஆளணி பத்தாது எல்லாவறையும் உடனடியாக கணக்கிடுவதற்கு, தமக்கு கிடைக்கும் தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள், உதவி வேண்டி கோரிக்கை வைக்கப்படுகிறது, மீட்ப்புப்பணி தங்களிடமுள்ள வளங்களை வைத்து தொடர்கிறது, விமர்ச்சிக்கும் நேரமா இது? ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி விமர்ச்சித்துக்கொண்டிருப்பாரா? அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு கொடுப்பாரா? அவர் தமிழ் மக்களுக்கு நன்மை செய்திருந்தால் ஏன் மக்கள் அவரை நிராகரித்தனர்? கௌரவமாக வெளியேறாமல் ஏன் குறுக்கு வழி தேடுகிறார்? இவர் என்னதான் விமர்ச்சித்தாலும் இவரை யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை, இவர் ஒரு வாய்ச்சவடால். அப்படியேதுமிருந்திருந்தால் என்னை வம்புக்கிழுக்குமுன் அந்த பட்டியலை இணைத்திருப்பார். பாவம் அவர், சுமந்திரனின் மேலுள்ள அனுதாபம் அப்படி அழுக்காறை கொட்டித்தீர்க்கிறார், அவரது குறைகளை சுட்டிக்காடுபவர் மேல்.
  21. புத்தரை வெள்ளமோ, சுனாமியோ அள்ளிக்கொண்டு போகும்வரை இந்தப்புத்தரால் தமிழருக்கு பதற்றந்தான். புத்தரை வைத்து கொழுத்தாடு பிடிக்கிறவர்களுக்கு, புத்தர் யார், அவரது போதனை, வாழ்வு முறை ஏதும் தெரியாது, அவரைவைத்து நாட்டை கொழுத்துவதும், காணி பிடிப்பதும், வயிறு வளப்பதுமே அவர்களது வேலை. பாராளுமன்றத்தை நாட்டை சுத்தம் செய்வதுபோல் மகாசங்கத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். அவர்களது வேலை என்ன, எங்கே அவர்கள் தங்கவேண்டும், ஒழுக்கம், கட்டுப்பாடு, அன்பு, காருண்யம் போன்றவற்றை படிப்பியுங்கள். வளர்க்க முடியாமல் விகாரைகளில் தள்ளிவிடப்படும் சிறுவர்களுக்கு விடுதிகளை ஏற்பாடு செய்து கல்வியை கொடுங்கள், ஒழுக்கத்தை கற்பியுங்கள், புத்தரின் போதனைகளை எடுத்துக்கூறுங்கள். தேர்ச்சி பெற்றவர்களை மட்டும் பரீட்சித்து பிக்குகளாக அங்கீகரியுங்கள். சிறுவயதிலேயே என்னவென்று தெரியாத பிள்ளைகளுக்கு காவி தரித்து உலகை ஏமாற்றுவதை, நாட்டை கொழுத்துவதை நிறுத்துங்கள், அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும் சட்ட விலக்களிப்பதையும் நிராகரியுங்கள். இவற்றுக்கு பணிந்து சேவை செய்பவர்களை மட்டும் பிக்குகளாக அங்கீகரியுங்கள். பணிய மறுப்போரை வீட்டுக்கு அனுப்புங்கள். ஓசியில் சாப்பிட்டு திமிர் வளர்ப்பதை தடுத்து, உழைத்து சாப்பிட சொல்லுங்கள். இல்லையேல் புத்தமதம் ஒரு கேலிக்கூத்தாக மாற்றி விட்டார்கள் இந்த சோம்பேறிகள். இப்படியே சென்றால், புத்தமதம் இலங்கையை விட்டு துடைத்தெறியப்படும். அதற்கு இந்த ஒழுக்கமற்ற பிக்குகளும் அவர்களை வளர்ப்பவர்களும் அவர்களுக்குப்பின்னால் ஒளிந்திருப்பவர்களுமே காரணம். இவர்கள்புத்தன்மேல், மதத்தின் மேல்பயமோ, பற்றோ, பக்தியோ இல்லாதவர்கள். மதத்தை தமது சுய லாபத்திற்காக பயன்படுத்துகிறார்கள். புத்த தர்மம், புனிதம் தெரியாதவர்களே இலங்கையில் பௌத்தர் என்று தம்மை அடையாளப்படுத்துகின்றனர். பௌத்த போதனை அன்பையும் கருணையையும் போதிக்கிறது. ஓடும் குருதியிலும் வடிந்தொழுகும் கண்ணீரிலும் தேடிப்பார்த்தாலும் சாதி தெரிவதில்லை என்றான் புத்தன். இவர்கள் செய்வதை பார்த்தால், சொல்வதை கேட்க முடிந்தால் அந்த புத்தனே தற்கொலை செய்வான் அல்லது இவர்களை விட்டு ஓடி ஒளிந்து விடுவான். பக்கதர்கள் இல்லாத இடத்தில் ஏக்கர் காணி வேண்டுமாம் புத்தருக்கு. இது ஒரு வேடிக்கை. எந்த மதமும் செய்யாத, விரும்பாத அருவெறுக்கும் செயல். மக்களை துரத்தியடித்துவிட்டு புத்தருக்கு காணி பிடிக்கும் பிக்குகள். இதுக்கு சாதாரண மனிதரை விட, மரியாதை அதிகம் வேண்டுமாம். இல்லையென்றால் சண்டித்தனம் காட்டி, எதிலும் மரியாதை, முன்னுரிமை கேட்குதுகள், இப்படி ஒரு மத குருமாரை கேள்விப்படவே முடியாது.
  22. நோபல் பரிசு கிடைக்காததைப்பற்றி கவலைப்படாதவர், ஏன் அது பற்றி விவரிக்கிறார்? அப்போ நோபல் பரிசினை எதிர்பார்த்தா இதெல்லாம் செய்தார்? பரிசு என்பது கேட்டு வாங்கப்படாது, அவர்களாகவே உங்களது செயற்பாடுகள் அந்த பரிசுக்கு தகுதியாய் இருந்தால் தருவார்கள் சேர்! கவலை வேண்டாம், தொடர்ந்து நல்லது செய்ய முயற்சியுங்கள்.
  23. இவர்கள் ஒருபுறம், மறுபுறம் எப்படியாவது தமிழருக்கும் அனுரா அரசுக்குமிடையில் ஒரு பிளவை ஏற்படுத்தி நாட்டில் வன்முறையை தூண்டமாட்டோமா என்றொரு பௌத்த இனவாத குழுவும் தையிட்டியில் மோதுது. திருகோணமலையில் சாதித்தவர்கள், இப்போ தையிட்டி நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். சஜித் இப்போ கூவிக்கொண்டு வரப்போகிறார். எத்தனை நகர்வுகள், அத்தனையும் அவர்களின் முடிவு காலத்திற்கே விரைவாய் கொண்டுசெல்லும். எங்கே நம்ம கதாநாயகர்கள், சட்ட வல்லுநர்கள்? அனுரா வெள்ள அனர்த்தங்களை கையாளும்போது, இவர்கள் இங்கே புத்தரை பலி கொடுத்து நாட்டை கொழுத்த விழையுதுகள். இதில ஒரு போலீசு கறுத்த கண்ணாடியோட வீடியோ பிடிக்குது, அங்கே திருகோணமலையில் ஒரு பிக்கு கறுத்த கண்ணாடியோட ஊடக சந்திப்பு நடத்தியது ஞானசார தேரருடன். இவர்கள் ஏன் இந்தகாலநிலையில் கறுத்த கண்ணாடி அணிகிறார்கள்? உண்மையை மறைக்கவா அல்லது தங்களை மறைக்கவா? கறுத்த கண்ணாடி அணிந்தால் தாங்கள் யாரென்பதை யாரும் அறிந்து கொள்ளமாட்டார்கள் என்று கருதுகிறார்களா? தமிழனை சீண்டி ரசிக்கும் கூட்டத்தை அடுத்துவரும் சுனாமி கொண்டுபோகும் வாய்ப்பேற்படலாம். திருகோணமலையில் பிக்குகளிடம் ஊடகவியலாளர் ஒரு கேள்வி எழுப்புகிறார், இங்கே போலீசார் பிரச்சனைகளை எழுப்புவதாக கூறுகிறீர்கள், அங்கே தையிட்டியில் போலீசாரை வைத்து நீங்கள் பிரச்சனை செய்கிறீர்களே. அதற்கு அந்தப்பிக்கு சொல்லுது, இனிமேல் உங்களது கேள்விகளுக்கு நான் பதிலளிக்க மாட்டேன், இந்த ஊடகவியலாளரை பாத்தா எனக்கு கோபம் வருகிறது. ஏன் கோபம் வரவேண்டும்? பதில் சொல்ல முடியாததாலா அல்லது அவர் உண்மையை பேசுவதாலா? இலங்கையில் உள்ள காணிகள் அனைத்தும் புத்தருடையனவாம், அதில் விகாரைகள் கட்டப்படவேண்டுமாம். கொஞ்சமாவது படித்த பகுத்தறிவுள்ள மனிதரை பௌத்த துறவிகளாக்க வேண்டும் அல்லது அவற்றை அளித்து பிக்குகளாக்க வேண்டும். வறிய பெற்றோர் கொண்டுவந்து விட்டுவிடுவார்கள், அவர்களுக்கு உண்மையான கல்வியறிவு இல்லை, ஒழுக்கம் கற்றுக்கொடுப்பதில்லை, கட்டுப்பாடு இல்லை, மேற்பார்வை இல்லை, கேள்வி இல்லை, தண்டனை இல்லை, பொறுப்பு இல்லை. எதுவேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம். பெரிய துறவிகளால் பாலியல் துஸ்பிரயோகம், சித்திரவதை அனுபவித்து வெளியேறுபவர்கள் அங்கே கற்றதை தாங்களும் செய்கிறார்கள்.
  24. இதில பெரும்பகிடி என்னவென்றால்; கிழக்கின் முதலமைச்சர் கனவில் மிதக்கிறவர் சொல்லுறார், இந்த அரசு மக்களை படுகொலை செய்துவிட்டதாம். சிரிப்பு சிரிப்பாய் வருகிறது. இயற்கை அழிவினால் பாதிக்கப்பட்ட மக்களை, உயிரிழந்த மக்களை நினைத்து அழுவதா? அல்லது அவர்களின் இழப்பிலும் அரசியல் செய்யும் இந்த வியாதிகளை நினைத்து சிரிப்பதா? தமிழ் மக்களை அள்ளை கொள்ளையாக கொலை செய்த கட்சிகளோடு சேர்ந்து இருந்துகொண்டு, அவற்றை கண்டிக்காமல் ரசித்துக்கொண்டிருந்தவர், இப்போது இயற்கையழிவுக்கு அரசை கண்டிக்கிறார் என்றால் பாருங்கோவன் அரசியல் பதவி ஆசையை. மக்களை முட்டாளாக்கும் செயல். ஆமா.... இது விமர்ச்சிக்கும் நேரமா? விமர்சிப்பதால் இழப்புகள் குறைந்து விடுமா அல்லது மக்கள் அதிலிருந்து மீண்டுதான் விடுவார்களா? எப்போது எதை, எங்கே, எப்படி பேசவேண்டும் என்கிற இங்கிதம் தெரியாதவர்கள், சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டு இவர்களது தனிப்பட்ட வக்கிரத்தை கொட்டுகிறார்கள். இதன் பலன் வெகுவிரைவில் அனுபவிப்பார்கள். எப்போதும் போலவா ஒவ்வொருதடவையும் பருவகால மழை பெய்கிறது? இவர்கள் தங்கள் மாவட்டங்களில் என்ன தயார் படுத்தல்களை செய்து மக்களை அறிவுறுத்தினார்கள்?
  25. தங்களுக்கு வாக்குப்போட்ட மக்களுக்கு, தமது கடமையை செய்வதற்கு அனுராவை விமர்சிக்க வேண்டும். அனுராவுக்கு வாக்குப்போட்ட மக்களையும் குறை கூறுவது. இதற்கு மக்கள் அனுரா கட்சிக்கே வாக்களிக்கலாம். இந்த மனிதர் பிழைப்பு நடத்துவதும் கெடுவதும் அவர் வாயாலேயேதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.