Jump to content

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1536
  • Joined

  • Days Won

    16

Everything posted by valavan

  1. நல்ல பொறுப்பான அம்மா அப்பாவாக இருந்து ஆளாக்கிவிட்டும் பொண்டாட்டி/புருஷன் மயக்கத்தில் அம்மா அப்பாவை பேஸ்மண்டில் அடைத்து வாழவிட்ட பிள்ளைகளும் உண்டு. நல்ல பொறுப்பான கணவனாக மனைவியாக வாழ்ந்திருந்தும், வெளி தோற்றத்தில் மயங்கி பெற்ற குழந்தைகளைகூட மறந்து அடுத்தவர்கூட ஓடிபோன மனைவியும் கணவனும் உண்டு. நல்ல சமூக பொறுப்புள்ள பிரஜையாக வாழ்பவர்களைதான் இந்த சமூகம் தமது தேவைக்கு மட்டும் பாவித்துவிட்டு அடிக்கடி ஏமாற்றும். வெட்டி பந்தா காட்டுபவர்களுடன் கூட்டு சேர்ந்து உதவி செய்தவர்களுக்கே வித்தை காட்டும். இது நடைமுறை வாழ்வில் கண்டதைதான் பகிர்கிறேன், உங்கள் கருத்தை முற்று முழுதாக மறுதலிப்பதாய் அர்த்தமல்ல.
  2. சத்தியமா அப்படி ஒன்றும் இல்லை குமாரசாமியண்ணா. பலவிதமான கருத்துக்களின் மீதான பார்வை/ஆதங்கம் அது. கருத்தாளர்களை சாட எனக்கு என்ன உரிமை இருக்கிறது? களவிதிகளே அதுக்கு இடம் கொடுக்காதே. மற்றவர்களை சாடுகிறேன் என்று தோன்றினால், என்னை மற்றவர்கள் சாடுவதற்கும் அவர்களுக்கு முழு உரிமையுண்டு. அதை எதிர்க்க எனக்கு எந்த உரிமைகளும் கிடையாது என்று நினைக்கிறேன்.
  3. தமிழ்சிறியின் நகைச்சுவை உணர்வுக்கு இந்த ஆக்கம் கொஞ்சம் சுமார்தான். யாழ்கள உறவுகளை வைத்து நகைச்சுவையாக ஒரு ஆக்கம் உருவாக்குங்கள் எல்லோராலும் விரும்பபடும். அனைவருடனும் நட்பாக பழகும் உங்களை யாரும் கோவித்து கொள்ள மாட்டார்கள்.
  4. TKR ன் தாயகத்தில் இருந்தபடி புலத்தின் உறவுகளுக்கு அங்குள்ள யதார்த்த நிலமையினை உறைக்க சொல்லும் கருத்துக்களில் எப்போதுமே உடன்பாடு உண்டு. ஆனால் திடீர் விடிவெள்ளி அரசியல்வாதிகளின்மீது நீங்கள் காட்டும் பரிவு மட்டுமே சுத்தமா பிடிப்பதேயில்லை. முஸ்லீம் சமூகம் ஆளும் வர்க்கத்துடன் ஒட்டியுறவாடியதால் குப்பை மட்டுமே அள்ள அங்குள்ள தமிழர்களை தள்ளிவிட பட்டார்கள் என்ற உங்கள் தகவல் ஒரு திரியில் பார்த்தேன்... தாயகத்தில் குப்பை அள்ளும் தமிழர் பற்றியும் எழுதுகிறீர்கள், தாயகத்துக்கு குட் பாய் சொல்லிவிட்டு போன தமிழர்கள் பற்றியும் எழுதுகிறீர்கள், எழுத்திலும் உங்கள் பெயர் தனிதான்.
  5. சுதந்திரமாய் வாழ நினைத்ததாலும், சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த முயன்ற ஒரேயொரு குற்றத்தினாலும்தான் எம் தலைமை எம்மைவிட்டு தொலைந்து போனது சுவியண்ணா.
  6. அன்று போருக்கும் போராடியவர்களுக்கும்.. அதற்கு துணை நின்றவர்களுக்கும் கை தடியாய் நின்றது யாழ். இன்று போர் செய்தவர்களும் இல்லை, போராடியவர்களும் இல்லை.. போராட்டுத்துக்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. கைத்தடி மட்டும் தனியே நிற்கிறது. கை தாங்கலாய் போராட்டத்தை தாங்கியவர்கள் எல்லோருமே உடலாலும் மனதாலும் கை கால் இழந்து நிற்கின்றனர், இழந்தது மட்டும் இல்லை அது தரும் வலியைகூட வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தை படுகின்றனர். பலர் நம்பிக்கையிழந்து இந்த மாற்று திறனாளி வாழ்வு இனிமே வேண்டாம் என்று ஓடியே போய்விட்டனர். சிலர் மாற்றங்கள் இனிமேலும் வரும் என்ற ஒற்றை புள்ளி நம்பிக்கையில் இந்த கைதடியை பிடித்தபடி காலம் கழிக்கின்றனர். அன்று நமக்கெதிராய் சிவப்பு புள்ளி உயிர் செலவாய் தெறித்த போரில் கோபம் கொண்டு இக் களத்தில் ஒன்று சேர்ந்தவர்கள், இனிமே எதுவும் ஆகபோவதில்லை என்று ஓடியே போய்விட்டனர். அவர்கள் ஓடி போன பின்பும் பச்சை புள்ளிகளை மட்டும் வரவாய் வைத்துக்கொண்டு சிலர் இந்த தளத்தில் உயிர் நகர்த்துகிறார்கள். எங்களுக்கு வடக்கு அரசியல்வாதிகளை பிடிக்காது, கிழக்கு அரசியல் வாதிகளையும் பிடிக்காது, எங்களுக்கு பிடித்தது எல்லாம் வடக்கு கிழக்கு என்ற வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி வரிபுலி சீருடையில் இருந்த போராளிகள் மட்டுமே. இன்று வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம் என்று போரிட்ட எம் தேச வீரர்களும் எங்கள்கூட இல்லை. ஆனால் அவர்கள் விரும்பியிருக்காத பிரதேச வாதங்கள் மட்டும் வடக்கும் கிழக்கும் சேர்ந்த சிலரிடம் விரும்பபட்டு எங்கள்கூட பயணிக்கிறது. அவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான்.. உதிப்பது கிழக்கு, மறைவது மேற்கு, இதுக்கு சம்பந்தமேயில்லாம வடக்கு கிழக்கு பிணக்கு பற்றி பேசுகிறவர்கள் உருபடாதவர்கள், அவர்கள் கருத்துக்கள் சபையேறாது. யாழ் எனும் கைத்தடி தனிப்பட்ட எவருக்கும் உரித்தானதொன்றல்ல, இனவிடுதலையில் சோர்வானவர்கள் எவர் வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் அவர்கள் பணத்தில் நகரலாம் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும். ஆனால் இனத்துக்கான காலபதிவுகளை ஒரு பணியாக தொடரும் தளங்களுக்கு காலம் செல்ல செல்ல நரம்புகள் இன்னும் முறுக்கேறுமே தவிர முடிவுக்கு வராது., வாழிய உங்கள் இன பணி.
  7. ஏற்கனவே இங்கு இணைத்தேனா, அல்லது வேறு யாரும் இணைத்தார்களா தெரியவில்லை, இந்த கருப்பு வெள்ளை பாடல் ஐயா டி எம் எஸ் குரலில் கேட்பது.. எஸ் பிபி குரலில் கேட்பது சுவை. ஏற்கனவே பகிரபட்டிருந்தால் மன்னிக்கவும்.
  8. தலைவருக்கான அஞ்சலி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் நான் சொல்ல வந்த கருத்தை நீக்கிவிட்டேன்.
  9. பழைய பாடல்கள் என்றால் இந்த மண்ணில் இப்போது உயிரோடு இல்லாத அந்தக்கால பாடகர்கள் மட்டுமா நினைவுக்கு வரும்? இரு வர்ணப்பாடல்கள் எனும்போதும் இப்போதும் நம்மிடையே உள்ள எஸ்பிபியும் நெஞ்சை அள்ளுவார். எப்படி நான்கு சினிமா தலைமுறைக்கும் இனிக்க இனிக்க பாட முடிகிறது இவரால் மட்டும்? : சம்சாரம் என்பதுமட்டும் வீணையல்ல எஸ்பிபியும்தான்: அன்புமேகமே.. எஸ்பிபி பாடினால் தேன் சிந்துமே வானம்.. பூமி அதை தன் செவிகளில் ஏந்தும்.. எனக்கு பிடிக்காத ஜெயலலிதாவின்.. எனக்கு பிடித்த நடனம்..&.ஸ்ரைல்../எஸ்பிபியின் பாடலில் இருப்பதால் இரண்டையும் ரசிக்கலாம்...
  10. யார் தருவார் இந்த அரியாசனம்: எப்படிபா இப்படி நடிக்கமுடியுது என்று சிவாஜியின் முக பாவனைகளை பார்த்து மெய் சிலிர்த்த பாடல்களில் ஒன்று அதிலும், , பாடலின் முடிவில் அந்த பெண்ணின் ருத்ர தாண்டவம்.....வாவ் ரகம்: மாதவி பொன் மயிலாள்.. பாடல்: நடனமா,நடிப்பா, குரலா ஒன்றையொன்று வென்றுபோக துடிக்கிறது என்று ரசித்த பாடல்: இசைகேட்டால்... செளந்தரராஜன் முழு உயிரையும் கொடுத்து பாடி வைக்க,அதனை முக பாவனைகள்,நடையினை வைத்து அவரை ஓவர்ரேக் பண்ணும் கலை, நடிக்கவென்றே பிறந்தவர்களால் மட்டுமே முடியும்: சிந்துநதியின்மிசை... 2:30 லிருந்து 2:50 வரை , இருந்த இடத்திலிருந்துகொண்டே முகபாவனையில் கதை சொல்லி முடிக்கும் வித்தை, எத்தனை தடவை யுரியூப்பில் இந்த கட்டத்தை மட்டும் சிரித்துக்கொண்டே பார்த்திருப்பேன் என்பது நிலைவில் இல்லை.
  11. இருவர்ணபாடல்கள் என்றால் எனக்கு இனிப்பவை
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் யாழ்கள கல்விமான்களில் ஒருவரான ராஜவன்னியனுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் யாழ்கள சின்னப்புவுக்கு... யாழில் அடையாளங்களில் ஒருவர், யாழ்கள உறவுகளை காணவில்லையென்ற தலைப்பை 1.2 தசாப்தங்களூக்கு முன்னர் ஆரம்பித்ததும் அவரே, இப்போ அவரையே காணவில்லை!
  13. உடலியல் ரீதியாக ஒரு மனிதனின் ஆரம்பமும், அஸ்தமனமும் ஒரேமாதிரிதான் இருக்கும் என்று சொல்வது இந்த படம்... பகிர்வுக்கு நன்றி!
  14. இன்னொரு தடவை கேட்பது உங்களுக்கு தொந்தரவா அமையும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும்!
  15. இந்த மனிதன் இன்னும் ஒருமுறை எங்கள் மண்ணில் பிறக்க சாத்தியம் இல்லை அப்படி பிறந்தாலும் எங்களுக்காக போராடி இன்னொருமுறை நீங்கள் ஏமாறவேண்டாம் என்று கேட்கும் கடமை இந்த படங்களை இணைக்கும் தமிழ்சிறிக்கும் அதை பார்வையிடும் எங்களுக்கும் உண்டு!
  16. இந்த மூண்டும் இருந்தால் ஓவர் அக்டிங் உலகத்தில இல்லாடிலும்.. உள்ளூருக்குள்ள இல்லாமல் மனிதன் வாழலாம்! சிந்திக்க வைச்ச வரிகள்தான் ! ஆனாலும் பப்பாவில எவனாச்சும் ஏத்திவிட்டால், ஒரு புகழை விரும்பி பாழபோன இந்த மனசு நாறுதே பலருக்கும்!
  17. நீங்க சொல்றீங்க, ஆனா, பல ராணுவ நெருக்கடிகளின்போதெல்லாம் சாதிகொடுமை என்றபேரில் அவர்கள் குடும்பமும், தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்த பண்டிதர் கட்டவுட்டுக்களும் தள்ளி வைக்கப்பட்டதே தமிழீழ வரலாற்று சோகம்! இப்போகூட பலருக்கு நீங்க சொல்லித்தான் பண்டிதர்பத்தியும் தெரிஞ்சிருக்கலாம்! ராணுவம் வடக்கை கைப்பற்றியதும் பலபேர் ’வீ’ர’ சப்தங்கள் அடங்கிபோயின ஆனா ராணுவம் முழுதாய் சுத்தி வர இருக்கும் சூழலிலும்... நிஜமான விடுதலையை நேசித்த ஒரு மாவீரனின் தாய் மட்டும் சத்தமா பேசுறா ...இங்குதான் உண்மையான தியாகத்துக்கு அர்த்தம் என்ன என்று நாங்கள் புரிந்துகொள்ள சந்தர்ப்பம்!
  18. ’வளவன்’ அப்படினு இப்போ இருக்குற இங்லீஷ் பெயரை தமிழில மாத்துவீங்களா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.