Everything posted by valavan
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
உலங்கு வானுர்தி பயணம் செய்தவர்களில் பலர் யுத்தம் நிறைவடைந்தபின் பிறந்தவர்களாகவே இருப்பார்கள் இதிலிருந்து புலப்படுவது யாதெனில் எது பற்றியும் கவலைப்படாத அவர்கள் அவர்களுக்கான வாழ்வை ஆரம்பித்து விட்டார்கள், நாம் கண் முன்னே அனைத்தையும் ரத்தமும் சதையுமாக பார்த்துவிட்டு வந்தும் எது பற்றியும் கவலைப்படாது வானுர்த்தியில் சென்று இலங்கை அரசுக்கு அந்நிய செலவாணி அதிகரிக்க செய்யும்போது, இலங்கை அரசுக்கு எந்த அந்நிய செலாவணி வருமானமும் கொடுக்காமல் அவர்கள் பயணம் செய்வது எந்த வகையிலும் தப்பில்லை இன துரோகமும் இல்லை வாழ்த்துக்கள் மாணவர்களே
-
யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள்
நீங்கள் உங்கள் கருத்துக்களில் உறுதியாக தொடர்ந்து நில்லுங்கள் அது உங்களின் தனிமனித உரிமை.
-
யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள்
இலங்கையின் ஒருபகுதி ஒவ்வொன்றாய் கட்டி எழுப்பப்பட்டுக்கொண்டிருந்தபோது தமிழர் பகுதியில் பத்து பத்தாய் தகர்க்கப்பட்டுக்கொண்டிருந்தது, தமிழர் பிரதேசங்களுக்கு தமிழ் அரசியல்வாதிகளும் எதுவும் செய்யபோவதில்லை, சிங்கள அரசியலும் பெரிதாய் கண்டுகொள்ள போவதுமில்லை, கையில் காசு உள்ளவர்கள் அவரவர் தனிப்பட்ட முறையில் தமது வளர்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், இடிந்து தகர்ந்து போயிருந்து படிப்படியாக உருப்பெற முனையும் எம் மண்ணுக்கு எவர் வந்து உதவி பண்ணினாலும் நன்றியுடன் கைப்பற்றுவோம். வெளிநாட்டிலிருந்து வந்து கல்கிசை பீச்சிலும், கண்டி தெப்ப குள பக்கமும் திரியாமல் எம் தாயக பிரதேசத்திற்கு தம்மால் முடிந்ததை செய்த இவர்கள் நன்றிக்குரியவர்கள். இது உதவி என்ற ஒரு கோணத்தை விட்டு மறு கோணத்தில் பார்த்தால், இவர்களுக்குள்ள தொடர்புகளும் சர்வதேச ஊடக பார்வையும் நாம் ஆயிரம் செய்தாலும் கவன ஈர்ப்பை பெறாத இலங்கையின் வடபுலத்தின் மீதான சர்வதேச விழிப்புணர்வு. எமக்குள் நாமே வசனங்கள் விவாதங்கள் கண்ணீர் அஞ்சலிகள் நடத்தியதால்தான் இறுதிபோர்வரை சர்வதேச கவனத்தை ஈர்க்க முடியவில்லை, அந்நாளில் சிறு அளவுகூட எமக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை, முடிந்ததெல்லாம் முடிந்தாயிற்று இதுபோன்ற நிகழ்வுகளால் சிறுதுளியாயினும் எதாச்சும் நாம் கவனம் பெற்றால் மகிழ்ச்சியே.
-
இலங்கையில் நீதி செத்துவிட்டது என்றவர்கள் உட்கட்சி பிரச்சினைக்காக நீதிமன்றங்களையே நாடியுள்ளனர் - டக்ளஸ்
இலங்கை அரசியலமைப்பின்படி இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி கட்சிக்குள் பிரச்சனையென்றால் இலங்கை நீதி மன்றைத்தான் நாடவேண்டும். இலங்கையில் நீதி செத்துவிட்டது என்று அவர்கள் சொன்னது இனங்களுக்கிடையே காட்டப்படும் பாகுபாடு சம்பந்தமான இனப்பிரச்சனை பற்றி. இன பிணக்கும் கட்சியும் ஒன்றல்ல, நீங்கள்கூடத்தான் ஈழமக்கள் என்றபேரில் கட்சி நடத்துகிறீர்கள் அதனால் நீங்கள் ஈழமக்கள் எனும் இனத்தால் அமைச்சராக்கப்பட்டவர் என்று பொருளாகிவிடுமா? அல்லது ஈழமக்களும் நீங்களும் ஒன்றாகிவிடுமா?
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
புலம் பெயர்ந்த மக்கள் தொகையில் கால் பங்கு உயிராபத்தை தவிர்க்க இருக்கும் வசதியை கொண்டோ எவர்கிட்டையாவது கடன் வாங்கியோ மேற்குலகம் நோக்கி நகர்ந்தவர்கள் என்றால் மீதி முக்கால் பங்கு நிச்சயமாக வசதியான வாழ்வை தேடி புலம்பெயர்ந்தவர்களே அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. இங்கு வேலை செய்துகொண்டு தனிமனிதனாக வாழும்வரை வாகனம் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாய் வாழலாம் மறைக்க ஒன்றுமில்லை. தாயகத்திலும் அதே நிலைதான் தனி ஒருவனாக வாழும்வரை நட்பு வட்டம் வாகனம் ஆட்டம் பாட்டம் பொழுதுபோக்குதான் பிரச்சனைகள் ஆரம்பிப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் என்று ஆகும்போதுதான். தாயகத்திலிருப்பவர்களுக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இங்குள்ள அடிப்படை வசதிகளே இலங்கையில் மிக பெரும் கோடீஸ்வரர்கள் அனுபவிக்கும் ஆடம்பர வசதிகள். அதற்காக அதனை ஆடம்பர வாழ்க்கை என்றோ அல்லது வசதியான வாழ்வென்றோ கருதினால் அவற்றை ஒதுக்கி வாழ முற்பட்டால் ரயில் நிலையங்களிலும் வணிக வளாகங்களின் ஓரங்கள், பாலங்களின் அடியில்தான் குடும்பத்துடன் தூங்கவேண்டும். கார் வைத்திருப்பதினால் இங்கு ஒருத்தன் ஆடம்பர வாழ்வை சுவைப்பவன் என்று ஆகிவிட முடியாது , கார் இல்லையென்றால் இங்கு ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவைக்கான பயணங்களின்போது அவன் பாதிநாள் தெருவிலேயே கழிந்துவிடும். ஒருவாரம் வேலைக்கு போகாவிட்டால் ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் அதனால் ஏற்பட்ட பண நெருக்குவாரம் தொடர்கதையாகவே செல்லும், ஏனென்றால் சாதாரண வேலை பார்ப்பவர்களுக்கு மேலதிக வருவாயை ஈட்டுவது என்பது சுலபமான காரியமல்ல , அதைவிடுத்து வருத்தின் 60%மான காலம் வாழ்க்கையோடு போராடிக்கொண்டு காலநிலையுடனும் போராடவேண்டும், இந்த இரண்டுடனும் போராடிக்கொண்டே தாயக போராட்ட காலத்திலும், பிற்பட்ட காலத்தில் தம்மால் முடிந்த அளவிற்கு உதவிக்கொண்டும் இருப்பவர்கள் ஏராளம் ஏராளம், எடுத்த எடுப்பில் நாம் ஒரு முடிவாக வார்த்தைகளை வீசினால் நிச்சயம் அது பலரின் உயர்வான எண்ணத்தை உதவும் குணத்தை ஏளனபடுத்தும் செயலாகவே அமையும். இங்கே வணிகம் செய்து வாழ்பவர்கள் அனைவருமே பணத்தை மூட்டை கட்டி வைத்திருப்பவர்களல்ல, பெரும்பாலானோர் பண புரட்டல் வண்டி ஓட்டுகிறவர்கள் அவர்கள் வாழ்வு தனி மனிதரைவிட மிகவும் அபாயமானது எந்த நிமிடம் வேண்டுமானாலும் மீளவே முடியாத அதல பாதாளத்தில் சிக்கி கொள்ளும் நிலை வரலாம் மாணவர்களாயிருப்பவர்களும், கல்வியினால் தொழில் வாய்ப்பு பெற்றவர்களினதும் நிலமை மிகவும் இக்கட்டானது சாதாரண மக்களாவது நிதி நெருக்கடி என்று வரும்போது எந்த கடினமான தொழில் என்றாலும் இறங்கி செய்து வண்டியோட்ட முயற்சிப்பார்கள், ஆனால் மேற்குறிப்பிட்டவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்துகொண்டு நெஞ்சுக்குள் இடி இடிக்க யோசித்துக்கொண்டு நிற்பார்கள், இங்கே ஏற்ற குறைவாய் யாரையும் குறிப்பிடவில்லை, அவர்கள் வாழ்வு முறையும் உடல் தகுதியும் ஒத்துழைக்காது என்பதையே குறிப்பிட்டேன். இத்தனையும் கடந்தும் சுமந்தும்தான் இங்குள்ளவர்கள் தாயக மக்களையும் மனதில் நினைத்து செயல்படுகிறார்கள், இலங்கைதமிழரின் சூடு சுரணையான போராட்டங்கள் மெளனித்தபோதும் இன்றுவரை இலங்கை அரசு பயப்படும் ஒரேயொரு திசை புலம்பெயர்ந்தவர்கள் நோக்கித்தான், அதற்கு காரணம் அவர்கள் வசதி வாழ்க்கை கிடைத்துவிட்டது என்று தூங்கவில்லை தாம் வாழ்ந்துவிட்டு வந்த மண்ணின் நினைப்பாக சர்வதேச மட்டத்தில் தலைவலி தருகிறார்கள் என்பதுஎம்மைவிட சிங்களவனுக்கு நன்கு தெரியும். கொரோனா காலத்தின் பின்னர் உலக அளவில் அனைத்து நாடுகளில் வாழும் மக்களின் நிலையும் தினமும் போராட்டம்தான், எந்த பொருள் எடுத்தாலும் மூன்று மடங்குவிலை, வீட்டு வாடகை, மின்சாரம், குடிநீர், குடும்ப செலவுகள் என்று அனைத்து கட்டணமும் அதிகரித்து புலம்பெயர் சமூகம் விழி பிதுங்கி நிற்கிறது, ஒவ்வொரு யூரோவும் ம் டாலரும் எண்ணி எண்ணியே செலவிடவேண்டியிருக்கிறது, வெளியே சிரிப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் தினமும் பதட்டம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தினமும் ஓட்டம். இத்தனைக்கு மத்தியிலும் கணிசமான மக்கள் தமது முகம் தெரிந்த தெரியாத உறவுகளுக்கு தம்மால் முடிந்ததை உதவிக்கொண்டுதானிருக்கிறார்கள், இலங்கையின் பிற இனத்தவர்களை எடுத்து பாருங்கள் பக்கத்துவீட்டுக்காரன் செத்து கிடந்தாலும் தமிழர்களைபோல் தெரியாத உறவுகளுக்கு கூட தொடர்ச்சியாக உதவும் குணம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். அப்படி என்றால் இலங்கயில் வந்து வாழலாமே என்று யாரும் கேட்கலாம், இலங்கையில் மட்டும் என்ன வாழ்கிறது? நிச்சயமாக இங்கு வாழ்ந்து இங்கு இறந்துபோவது வசதியான வாழ்வல்ல நிம்மதியான வாழ்வு. ஏனென்றால் சாதி,மதம், அரசியல் இனம், வட்டாரம் மாகாணம் மொழி என்று கீழ்தரமான மோதலில் நிம்மதியில்லாமல் வாழவேண்டிய நிலமை இங்கு ஏறக்குறைய இல்லவே இல்லை, அந்த ஒன்று இருந்தாலே போதுமே மனிதன் உணவு தன்னீருக்கு சிரமப்பட்டாலும் நிம்மதியாய் வாழ்து சாகலாம்.
-
புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
மிக நுட்பமாக முற்றாக புலம்பெயர்ந்தோரின் காணிகள், பிறர் பெயரில் அவர்கள் இலங்கையில் வைப்பிட்டிருக்கும் பணம் போன்றவற்றை குறி வைக்க போகிறார்கள் போல இருக்கிறது. இங்கிருந்தபடி அங்கிருப்பவர்கள் மூலம் சொத்துக்களை பராமரிப்பவர்களிடமிருந்து சுவீகரிக்கும் நிலை வரலாம் என்று தோன்றுகிறது.
-
யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
அரைகுறை ஆடையுடன் தமன்னா வந்தால் மாகாணங்கள் கடந்து பஸ் பஸ்ஸாக வந்து முன்னாடி நிகழ்ச்சி பாத்துக்கொண்டிருந்தவங்களையெல்லாம் மாடு உழக்கினமாதிரி உழக்கிக்கொண்டும் பனைமேல ஏறி நின்றும் பார்க்கும் கூட்டம், அறிவு சார்ந்த விடயத்தில் பெண் தலைமையேற்றால் வேண்டாம் என்று எதிர்ப்புக்குரலெழுப்புகிறது. போகிறபோக்கில் கலவிக்கு மட்டுமே பெண் வேண்டும் கல்விக்கு வேண்டாம் என்ற தலீபான்களின் கொள்கைகளை மனபூர்வமாக ஏற்கப்போகிறது போலும் யாழின் ஒருசில மக்கள் திருக்கூட்டம்.
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
ஆண் குழந்தையானாலும் சரி பெண் குழந்தையானாலும் சரி, அறிமுகமில்லாத வேற்று மனிதர்களை வீட்டோடு சேர்த்துக்கொள்ளவோ குழந்தைகளை தொடவோ தூக்கி கொஞ்சவோ , மாமாக்கு ஒரு அவ்வா கொடுங்கோ என்று கேண தனமா உறவு கொண்டாட அனுமதிக்கவோ தனியாக எங்கும் அனுப்பி வைக்கவோ அனுமதிப்பது சுருக்கு கயிறை கழுத்தில் மாட்டுவதற்கு சமம். ஒருசில மேலைநாடுகளில் குறிப்ப்பிட்ட வயதுக்கு பின்னர் பெற்ற தந்தையே தன்னோட மகளுக்கு உடை மாற்றுவது சட்டப்படி குற்றம், ஆரம்பத்தில் என்னடா இது கேவலமான சட்டம் என்று தோன்றியது, பின்னர் பெற்ற மகள் மீதே கை வைத்த கேவலமான ஒரு சில மனிதர்களை பார்த்த பின்பு சட்டம் பற்றி கேவலமா சிந்திச்சது நான்தான் என்று பின்பு தோன்றியது. அஞ்சலிகள் அந்த பிஞ்சுக்கு.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்துவதென்றால், முற்றுமுழுதாக இலவசமாக நடத்தவேண்டும். இல்லையேல் முற்றுமுழுதாக கட்டணம் வசூலித்து நடத்தப்பட்டிருக்கவேண்டும். வெறும் திரைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பிரபலங்களை பார்த்து வந்த கூட்டம் தூரத்தே நின்று பார்க்கும்போது புள்ளி புள்ளியாய் தெரிந்தால் அவர்களை நெருங்கி பார்க்க கண்டிப்பாக ஆர்வகோளாறில் முயலும், அவர்கள் வயசு அப்படி. உலக பணக்கார நாடு ஒன்றில் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் இந்திரனுக்கு இசை நிகழ்ச்சி வியாபாரத்தில் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற வாய்ப்பிருக்கு என்று கண்டிப்பாக தெரிந்திருக்கும், அதனால்தான் பலாலி விமான நிலையத்திலேயே குழப்பம் விளைவித்துவிடாதீர்கள் பிரபலங்கள் வரமாட்டோம் என்று கூறியும் வற்புறுத்தி கூட்டி வந்தோம் என்று அபாயமணியை அட்வான்சா அடிச்சிருந்தார். பணம் புரளும் ஒரு நிகழ்வை ஒழுங்குபடுத்தாமல் பாதி இலவசம் பாதி கட்டணம் என்று கோமாளிதனமாக நடத்தி அதை கலவரமாக்கி ஒட்டுமொத்த யாழ்மக்களுக்கும் அவபெயரை சம்பாதித்துகொடுத்த பெருமை இந்திரனையே சாரும் வேறு எவர்மீதும் விரல் நீட்டி குற்றம் சாட்ட முடியாது. உலகம் முழுவதுமே ஒழுங்கு படுத்தப்படாத கேளிக்கை நிகழ்வுகளில் குழப்பமும் , தடங்கலும் . கலவரமும் சகஜம் அதை ஒட்டுமொத்த இனத்தின் பழக்கங்களில் ஒன்றாகவோ, ஒரு பிரதேசத்தின் பண்புகளில் ஒன்றாகவோ சமூக ஊடகங்களிலும், இன்ன பிற வழிகளும் விமர்சிப்பது சிறுபிள்ளைதனமானது, இதுக்கு டக்ளஸ் வேற வக்காலத்து முதலீடு பாதிக்கப்படுமாம் சொல்றார். அப்படி பார்த்தால் இவரை ஒரு மக்கள் பிரதிநிதியாக ஒட்டுண்ணி அரசியல்வாதியாக பெற்றதற்கு இந்த இனம் எத்தனை தடவை பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்?
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
யாழில் கடும் பதற்றம் -இடைநிறுத்தப்பட்ட இசைநிகழ்ச்சி - ரசகரை துரத்தி பிடித்த பொலிஸ்
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
10 வயது கடந்துவிட்டால் ஓராம் வகுப்பில் சேர முடியாத வயோதிபர் 20 வயது கடந்துவிட்டால் குழந்தை பருவம் என்பதற்கு வயோதிபர் 30 வயசு கடந்துவிட்டால் மாணவ பருவத்திற்கு வயோதிபர் 40 வயசு கடந்துவிட்டால் பெண்/ஆண் தேடும் முதல் திருமண பருவத்திற்கு வயோதிபர் 50 வயசு கடந்துவிட்டால் உடல் உழைப்பு சார்ந்த வேலை தேடும் படலத்திற்கு வயோதிபர் 60 வயசுக்கப்புறம் முதிர்ந்த காலங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு வந்த முதியவர். முதுமை என்பது வயசு மட்டுமல்ல பலதையும் பட்டறிவையும் பல தசாப்தங்களாய் பார்த்தவர்கள் என்றும் பொருள் படலாம்.
-
கொஞ்சம் ரசிக்க
- துவாரகா உரையாற்றியதாக...
புரிதலுக்கு நன்றி. அதனால்தான் ‘’உரையாற்றியதாக.....’’ என்று தலைப்பிட்டேன் அந்த புள்ளிகளின் தொடராய் எந்த வார்த்தையையும் சேர்த்துக்கொள்ளலாம் என்ற ரீதியிலும் என்ன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்காலாம் என்றும் மறைமுகமா குறிப்பிட்டேன்..- துவாரகா உரையாற்றியதாக...
இதுபற்றி என்ன பேசி கொள்ளபோகிறார்கள் என்பதை அறியவே இணைத்தேன் பாலபத்திய ஓணாண்டி வேறொன்றுமில்லை.- துவாரகா உரையாற்றியதாக...
உண்மையா Deep Fake ’கா உலகம்தான் சொல்லணும்- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தற்போதைய நிலவரம் போர் ஏற்பாடுகளை நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள்- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பல வருட கள அனுபவம் உள்ளவர்களுக்கு சாதாரண பதிவு சம்பந்தப்பட்ட விஷயங்களியே தெளிவில்லையே, பல தசாப்த போரில் பக்கத்தில் நின்று பார்த்ததுபோல் அடுக்கடுக்காய் குற்றம் சுமத்துவற்கு வெறும் கர்ண பரம்பரை கதைகளையே ஆதாரமாக கொண்டுள்ளார்கள் என்பது வெளிப்படை. இவர்களுக்காக மூச்சிரைக்க மூச்சிரைக்க பதில் சொல்லி மாளும் கோசானுக்காக மனம் வருந்துவதை தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒரு இனத்தின் விடுதலையை முன்னிறுத்தி போராடியதை தவிர வேறெந்த பாரிய குற்றமும் புரியாத எமது விடுதலை இயக்கம் முள்ளி வாய்க்காலில் முற்றுப்பெற்றபோது முதல் வரிசையில் நின்று ஒரு அடக்குமுறை சிங்கள அரசுக்கு வாழ்த்து சொன்னவர்களில் எந்த பாலஸ்தீன போராட்டத்திற்கும் அதன் போராளிகளிற்கும் எழுத்தால் பக்கம் பக்கமாகவும் மனதால் கடலளவு அனுதாபமும் கொண்டிருந்தோமோ அதே பாலஸ்தீன இயக்கமும் அடக்கம். அவர்கள் இலங்கை அரசுக்கு வாழ்த்து சொன்னதற்கு மஹிந்த அரசு இஸ்லாமியர்களுடன் அப்போது கூடி குலவியதை தவிர வேறு எந்த காரணமும் இருக்க வாய்ப்பில்லை. இஸ்லாமியர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் மற்றவர்கள் தமக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் ஆனால் அவர்கள் எந்த மதத்திற்கோ இனத்திற்கோ இளாமியர்களை பெரும்பான்மையாக கொண்டிராத ஒரு நாட்டுக்கோ ஒருபோதும் ஆதரவாகவோ விசுவாசமாகவோ இருக்கவே மாட்டார்கள். இதற்கு எம் மண்ணிலேயே உதாரணம் இருக்கிறது, கிழக்கில் இந்திய ராணுவத்தை எதிர்க்க புலிகள் அமைப்பில் நூற்றுக்கணக்கில் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள், இந்திய ராணுவம் வெறியேறியதும் அவர்கள் மதகுருவின் ஒரு கூட்டத்தின் பின்னர் ஏறக்குறைய 350 பேர் ஆர்ஜிபி உட்பட்ட அனைத்து ஆயுதங்களுடனும் போய் இலங்கை ரானுவத்துடன் சேர்ந்து கொண்டார்கள். சேர்ந்து கொண்டது மட்டுமல்ல, புலிகளையும் தமிழர்களையும் இலங்கை ராணுவத்தைவிட மிக மோசமான ஆவேசத்துடன் ஜிகாத்,ஊர்காவல்படை,புலனாய்வுதுறை என சிங்கள படைத்தரப்பில் அங்கம் வகித்து வேட்டையாடினார்கள். இஸ்ரேல்பற்றி சொல்ல என்ன இருக்கிறது, இலங்கை தமிழர்களின் ஆயுதபோராட்டத்தை முளையிலேயே கிள்ளியெறிய ஆரம்பத்திலேயே இலங்கை அரசு இயந்திரத்துடன் கை கோர்த்தது இஸ்ரேல் மட்டுமே. ஒரேயொரு வித்தியாசம் இஸ்ரேல் எந்த காலமும் தமிழர் தரப்புடன் ஒன்றாய் நின்றதுமில்லை , கூட நின்றுவிட்டு தொப்பி பிரட்டியதும் இல்லை. அவர்கள் எதிரி என்ற கோணத்தில் கடைசிவரை மிக நேர்மையான எதிரிகளாகவே நின்றார்கள். இஸ்ரேலே இஸ்ரேலுக்குள் போர் தொடுத்து சதி செய்ய வாய்ப்பிருக்கு என்பதெல்லாம் அளவுக்கதிகமான ஊகம். இஸ்ரேலியன் ஒருவன் கொல்லப்பட்டாலே வாள் தூக்கும் இஸ்ரேல், உலகில் எந்த மூலையில் யூதர்கள் என்று தம்மை சொல்லிக்கொள்வோர் தமது மூதாதையர்கள் இஸ்ரேலியர்கள் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால் அவர்களுக்கான ஆதரவையும் குடியுரிமையும் வழங்க தயாராக இருக்கும் இஸ்ரேல், ஒருபோதும் தன்னோட குடிமக்களை இஸ்லாமியருக்கெதிரான போரில் ஒன்றிணைக்க பலி கொடுக்காது. இஸ்ரேலுக்கு ஒன்று என்றால் இஸ்ரேலியர்கள் மட்டுமல்ல ஐரோப்பிய அமெரிக்க அனைத்து வல்லரசுகளுமே இஸ்ரேல் பின்னாடியே அணிவகுக்கும். அவர்களுக்கு குறுக்கு வழியில் பலம் தேடவேண்டிய அவசியமே இல்லை. இஸ்லாமியர்களுக்கெதிராக கை கோர்க்க தன்னினத்தை பலியிடும் அளவிற்கு அளவிற்கு இஸ்லாமியர்களை ஒரு பொருட்டாகவும் எடுக்காது இஸ்ரேல். ஆக மொத்தம் இவர்கள் இருவருமே ஆணித்தரமாக எமது ஆதரவை தெரிவிக்க எந்த அருகதையும் இல்லாதவர்கள். ராமன் அடிச்சா என்ன ராவணன் வாங்கினா என்ன தூரத்தே இருந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்..- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
எந்த பரா துருப்புக்களை இறக்கி சிங்கள ஆட்சியாளர்களை வழிக்கு கொண்டுவர இந்தியா முயற்சித்ததோ அதே பரா துருப்புக்களை இறக்கி தமிழர்களுடன் மோதவிட்ட ஜே.ஆர் எனப்படும் மனிதன் தமிழர்களை பொறுத்தவரை கொடூரன் குள்ளநரியாக இருந்தாலும் சிங்களவர்களை பொறுத்தமட்டில் ஐயத்திற்கு இடமின்றி அவர்களுக்கு அவன் ஒரு ராஜ(தந்திர)குமாரன் தான் . என்னதான் எம் போராட்டவலு முற்று முழுதாக அழிந்து போனாலும், ஜே.ஆர் தலைமையில் தமிழர்களை ஒரு வழி பண்ண புறப்பட்ட ஜே.ஆர் உட்பட்ட ஏறக்குறைய அத்தனை அமைச்சர்களும் தம் வாழ்நாளில் சிங்களதேசமும் அவர்களின் ஏவல் படை தரப்பும் அடிவாங்கி அழிந்தத்தை தம் கண்முன்னால் பார்த்துவிட்டே இயற்கையாகவும் தாம் செய்த வினைகளை தாமே அறுத்து செயற்கையாகவும் அழிந்து போனார்கள். 13 ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு தமிழர்கள்மேல் காடைதனத்தை கட்டவிழ்த்து ருத்ர தாண்டவமாடியவர்கள் அவர்கள் கொல்லப்படுவதை பார்த்து ரசித்து சிரித்து கேலி செய்தவர்கள் , பின்னாட்களில் அவர்களின் பல ஆயிரம் படையினர் கொல்லப்பட்டு காயப்பட்டு அவர்களை காவியபடி கொழும்பு நகர வீதிகளில் அம்புலன்சுகள் அலறியபடி செல்லும்போது இறைச்சி போகுது என்று தமது படையினரை தாமே கிண்டல் செய்தார்கள். எம் போராட்ட சக்தி முற்றாக அழிந்து போனதுதான் இருந்தாலும் கேட்க எவனும் இல்லையென்று தூக்கி போட்டு பந்தாடியவர்களை திருப்பி மிதி மிதியென்று மிதித்து மரண பயம் என்றால் என்னவென்று அவர்களுக்கும் காண்பித்துவிட்டே மறைந்தார்கள். அதில் ஒரு சிறு நிம்மதி- யாழ் எனும் திமிர்.
ஒரு பக்கம் யாழ்நகரம், மறுபக்கம் மட்டு நகரம்... வாள் கொண்டு போர் செய்து வடக்கு கிழக்கு இணைந்தபடி வெல்லபார்த்தோம் முடியவில்ல. போகட்டும் முடிந்தவரை யாழ்கொண்டாவது இணைத்து பார்ப்போமே அதில் தவறென்ன? தர்மத்துக்கு புறம்பாக நாம் ஏதும் நடந்ததில்லை, வன்முறை எங்கள் பொழுது போக்கும் இல்லை. பொழுது போக்காய் எம்மை கொல்ல பார்த்தவர்களை எதிர்கொள்ள வேறு வழியின்றி வன்முறையை தேர்ந்தெடுக்க வைக்கப்பட்ட இனம் நாம். நாங்கள் இனி ஒரு ஆயுத போராட்டத்தை செய்ய போவதில்லை, ஆயுத போராட்டம் என்றால் பயம் என்று ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் நடமாடிய எம் மண்ணின் மாவீரர்கள் பெயரால் ஒன்றும் இதை அறிக்கையாய் விடவில்லை. அதற்கு உரிமையும் இல்லை. ஆண்டாண்டு காலம் போராடியும், ஆயிரக்கணக்கில் அல்ல ஆதரவு வழங்கிய எம் மக்களின் இறப்பும் சேர்த்து லட்சக்கணக்கில் உயிரிழப்பை சந்தித்தும் எதிரிகளால் விழுத்த முடியா ஒரு போராட்டம் எம்மவர்களால் விழுத்த பட்டதே. இனியும் எதுக்கு ஒரு இனம் தனது இனத்துக்காக ரத்தம் சிந்தி போராட வேண்டும். ஒரு அரச இயந்திரத்துக்கு எதிராய் இறுக்கமான ஒழுக்கம், நேர்த்தி,திட்டமிடல், சுயநலம் இன்மை,யுக்தியுடன் போராடுவதெல்லாம் போறவன் வருபவன் செய்ய கூடிய செயல் அல்ல. அது கோடிகளில் ஈழதமிழினம் இல்லாமல் போனாலும் கோடிகளில் ஒருவனால் மட்டுமே முடியும் செயல். அப்படி ஒருவர் எம்மினத்தின் கிரீடமாயிருந்தார், இப்போது அவர் பற்றிய செய்திகள் இல்லை, செய்திகள் இல்லாமல் போனால் என்ன, அவர் இருந்தபோதும் அவர்பற்றி ரோஷம் கொப்பளிக்க கொப்பளிக்க பேசி ஆனந்த பட்டோம், அவர் இல்லாமல் போன ஒரு நிலையிலும் அவர்மேல் உள்ள அதே காதலுடன் இருக்கிறோம். ஒருத்தர் இருக்கும்போது பாசம் கொட்டுவதற்கு பின்னால் பல நூறு சுயநல காரணங்கள் இருக்ககூடும். அவர் இல்லையென்று செய்தி வந்த பின்னரும்... உன்னை தவிர எம் இனத்துக்கு ஒருவர் எப்போதும் இல்லையே மானஸ்தனே என்று நினைக்கும்போது மனசு அழுகின்றது, அதற்கு இனம்மீதான பாசம் என்ற ஒரேயொரு காரணம் மட்டுமே இருக்கும். கண்ணுக்கு தெரிந்தாலா கடவுள் இருக்கிறார் என்று நம்புவோம்? காலின் நகத்தை கல்லொன்று மோதி பெயர்த்து விட்டால் கடவுளை நம்பாதவன்கூட அட கடவுளே என்று அவர் பெயர் சொல்லி கதறுவான், எம் நிலை இப்போ இதுதான். தாய் தந்தை இல்லையென்று இன்று ஆகிவிட்ட இந்த இனத்தின் கொடுமை நிலையை பார்க்கும்போது உனக்கு முன்னே நாம் போய் சேர்ந்திருக்ககூடாதா என்ற வலி பல தமிழர் மனசுக்குள் குமுறுவதுண்டு. நாங்கள் அரசியலாலும் ஆயுதத்தினாலும் போராட்ட வடிவங்கள் தொடுத்து தோற்றுபோன இனம், அடுத்த எம் தலைமுறை எம்மின துயரத்தை பிறருக்கு எடுத்து செல்லுமோ இல்லையோ, அடுத்த சந்ததிக்கும் அதுக்கு அடுத்த சந்ததிக்கும் யாழின் பெயரால் துயரங்களை எடுத்து சொல்வோம், கடத்தி போவோம் எம் இளையோர்க்கும் அவர்கள் குழந்தைகளுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் எம்மினத்தை வாழவைக்க பலர் சின்ன சின்னதாய் சிறு துண்டுகளாய் சிதறி செத்துகூட பார்த்தார்கள் முடியவில்லை என்ற கசப்பு வரலாற்றை அவர்கள் காதினில் போட்டு வைப்போம். நாங்கள் புலம் பெயர்ந்தவர்கள்தான் ஆனால் புலத்தை மறந்தவர்களில்லை. வெளிநாட்டு சுகத்தில் மயங்கி இருப்பவர்கள் தமிழன் என்றால் தாயகத்தின் அவலநிலை கண்டு தினமும் அவன் அழமாட்டான். இரத்தமும் கண்ணீரும் வேர்வையும் கலந்து போராடி தோற்று போனாலும், போராடிய வலிகளை பிறருக்கு கடத்தும் யாழ் இணையமே, நாளைக்கே யாழ் இணையம் ஏதோ ஒரு காரணத்தால் இயங்க முடியாது போனாலும், மான தமிழர் போராட்டத்திற்கு எவருக்கும் மண்டியிடாமலே உன் பங்கை வழங்கினாய் என்பதில் என்றைக்கும் உமக்கும் உம்மோடு தோள் நின்றவர்களுக்கும் உறுதியாய் ஒரு இன திமிர் இருக்கும். வாழிய என்று நாம் உமக்கு சொல்லவில்லை, வாழிய என்று நீர் எமக்கு சொல்லவேண்டும், நாம் வாழதானே உன்னால் முடிந்த ஒரு பங்களிப்பு செய்தாய். யாழ் இணையமே வாழ்த்துங்கள் எங்களை.- தமிழ் நாட்டில் முதல் நாள்..
அவர் பெயர் தவகரன், யாழ்பாணத்திலிருந்து யூரியூப் காணொலிகள் பதிவேற்றும் யாழ் சுதன் ஷங்கர் ஜெசி போன்ற பிரபல்யமான பலரில் இவரும் ஒருவர். எந்த உலகத்தில் வாழ்ந்தாலும் இந்திய விசா பெற்றுத்தான் அங்கு வரவேண்டுமென்றாலும், சென்னை என்பது உலக தமிழர்களின் தலை நகரம், அழுக்கான சினிமாவும் அரசியலும் அங்கிருந்தாலும், யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு போகும் தூரம்கூட இல்லாத தமிழகமும் எங்கள் தாய் மண்ணே.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
திண்ணையில்கூட அவர்கள் பெயரை பார்க்க விரும்பவில்லையா? முடியல என்று சொல்ற அளவிற்கு அவ்வளவு குடைச்சல் தந்திருக்கிறார்கள் போல, சக கருத்தாளனாய் அதை வன்மையாக கண்டிக்க முயற்சி செய்கிறேன். உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறட்டும் ☺️.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பெயர் மாறினாலும் பரவாயில்லை, எதுக்கு அந்த பச்சை புள்ளிகள் நிலாமதி அக்கா? சும்மா வேடிக்கைக்காக சொன்னேன், அவை கண்ணியமாக நீங்கள் கள உறவுகளுடன் பழகியதற்கான அடையாளங்கள். யோகவதி பெயர் நல்லாவே இல்லை. பெயரும் மாறகூடாது பச்சைபுள்ளிகளூம் மாறகூடாது. நிர்வாகம் நிலாமதி அக்காவுக்கு உதவி செய்யட்டும், மீண்டும் அதே பெயருடன் ஆக்கத்துடன் வருக.- எங்கள் ஊர் சூப்பர் உணவுகள்
சாமை வரகு தினை என்பதை நேரடியாக நானும் பார்த்ததேயில்லை. அது எப்படி நீங்கள் இருவரும் கெளபியை மறந்திருக்கலாம்?😝 ஆக குறைந்தது ஒவ்வொரு சரஸ்வதி பூசை வரும்போதாவது மனசில் அது நின்றே ஆகுமே.. நானெல்லாம் அப்போ... ரியூசன், பள்ளிக்கூடத்தில் வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்தண்டா மரை.. என்று ஆரம்பித்து கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே... என்று முடிக்கும்வரை .. இதெல்லாம் எப்போ பாடி முடிப்பாங்க என்ற கவலையில் தேங்காய் சொட்டு, சின்ன சீரகம், கருவேப்பிலை போட்டு தாளிச்ச கெளபி மீதுதான் ஒரு கண் இருந்துகிட்டே இருக்கும், ஊரில குறைஞ்ச விலையில் அதி உச்ச புரதம் நிறைந்த உணவு கெளபி என்று சொல்வார்கள்.. ஆனால் ஊரில் இருந்த காலத்தில் பார்த்த கெளபி எல்லாம் ஒரே பூச்சி புழு குடைஞ்சு ஒருபக்கம் ஓட்டையான ’உயிர்சத்து’ நிறைந்த தரமற்ற அந்த அவரை வகைதான். வெளிநாட்டுகளில் மிகவும் தரமானதுதான் கடைகளில் கிடைக்கிறது, ஏற்றுமதியென்றால் எப்போதுமே உயர்தரம். - துவாரகா உரையாற்றியதாக...
Important Information
By using this site, you agree to our Terms of Use.