Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by valavan

  1. ஐரோப்பா வெளிநாட்டவர்களை வெறுப்பதற்கும் வெளியேற்ற ஆசைப்படுவதற்கும் , எனதுநாடு எனக்கே என்று ஆவேசப்படுவதற்கும் 70%மான காரணம் எவனையாவது கொன்றால் சொர்க்கத்துக்கு போகலாம் என்ற இனிய மார்க்க இஸ்லாமியர்களே. ஏனைய காரணங்கள் மீதம்.
  2. யாழ்வரும்போது ஊர்புதினம் மட்டுமே அதிகமாய் பார்க்கும் வழக்கம் கொண்டவன், ஏனோ சம்பந்தர் போன செய்தியை கவனிக்கவேயில்லை, தற்செயலாக ஒரு இணையதளம் பார்த்தபோது அன்னாரின் இறுதி கிரியை ஏற்பாடு என்றிருந்தது , எப்போடா போனார் என்றிருந்தது, வேலை இடத்திலும் எவரும் இதுபற்றி பேசவில்லை சும்மா சொல்லகூடாது அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த அரசியலில் ரொம்ப பிஸியாக இருந்துவிட்டு போயிருக்கிறார் மனிசன். சம்பந்தர் எதுவும் பெற்றுதரவில்லை என்ற மனதாங்கலில் பலர் திட்டினாலும் சிங்களவன் கொடுத்தால்தானே இவர் வாங்க என்ற பரிதாபமும் உண்டு. ஆனாலும் அவன் தரமாட்டான் என்று தெரிந்தும் வாங்கி தருவோம் என்று சொல்லி ஆறு தசாப்தங்களுக்குமேல் ரீல் விட்டுபோட்டு போனதுக்கு திட்டலாம் தவறில்லை. சம்பந்தர் மட்டுமல்ல இன்று ஜனநாயக வழியில் போராடி சிங்களத்திடம் தீர்வு பெற்று தருவோம் என்று பீலாவிடும் அப்பர் , சுந்தரர்,மாணிக்க வாசகர்கள் எல்லாம் காலம் முடியும்வரை சிங்கள பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இப்படித்தான் கிளம்பி போவார்கள் என்பதில் எந்த குழப்பமும் எப்போதுமே இல்லை.
  3. இலங்கை தீவில் சிங்கள பெளத்தர் அல்லாத ஒருவர் ஜனாதிபதி ஆகமுடியாது என்ற நிலமை இருந்தும் பொதுவேட்பாளர் என்ற ஒருவரை நிறுத்தி கிட்டிபுள்ளு விளையாடுவது ... தனி சிங்களவர்களின் பெரும் ஆதரவோடு வரபோகும் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு எப்படி கோத்தபாய ஆட்சி தேர்வு செய்யப்பட்டதோ அதேபோல உங்களை நம்பி நாங்கள் இல்லையென்ற சிங்களவனின் எகத்தாளம் மேலும் அதிகரிக்கவே வழி வகுக்கும். சிறிதரனுக்கு தெரியாத அரசியலா நமக்கு தெரிந்துவிட போகிறது , ஆனால் சிங்களவர்களின் நடுவில் சிக்கிகொண்டுவிட்ட எமது இனத்தின் அரசியல் சூழலை சூழ்நிலைக்கேற்றவாறு எப்படி கையாளவேண்டும் என்பதே ஆதங்கம்
  4. தமிழர்பகுதியின் கடல்வள கொள்ளையை ஓரளவாவது தடுக்க வேறு என்னதான் வழி அவர்கள் வசம் இருக்கிறது? காலத்தோடு ஓடுவதை தவிர அவர்கள் கைவசம் ஏதுமில்லை, எம்மீது போர் தொடுத்த இனமென்று அவர்கள் தயவு தேவையில்லை என்று வடதமிழீழ மீனவர்கள் புறக்கணித்தால், இலங்கை கடற்படையும் தமிழர்பகுதிதானே எக்கேடாவது கெட்டு போகட்டும் என்று அவர்கள் பாட்டில் இருந்தால் பல ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் நெடுந்தீவு, மணற்காடு, பருத்திதுறை பொலிகண்டி,காங்கேசன்துறை, தொண்டைமானாறு கரைகளில் வந்து அலுப்பு நீங்க படுத்து சமைத்து சாப்பிட்டு வலைகளை உலர்த்திவிட்டு சாவகாசமாக மீண்டும் இந்தியா நோக்கி புறப்படுவார்கள்.
  5. நான் சொன்னது இன்னும் தீவிர செயற்பாட்டில் உள்ள ஆதரவாளர்கள் என்பது, புலிகள் அமைப்பு செயலிழந்த பின்னும் இலங்கை அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் வலைபின்னமைப்பில் உள்ள தீவிர செயற்பாட்டில் உள்ளவர்கள் பற்றியதானது அவர்களும் , புலி ஆதரவாளர்களும் ஒன்றல்ல, உதாரணத்திற்கு புலி ஆதரவாளரான நீங்களும், சிங்களம் கருதிக்கொண்டிருக்கிற இன்னும் உடைபடாத புலம்பெயர் புலிகள் கட்டமைப்பின் தீவிர செயற்பாட்டாளரும் ஒன்றல்ல. ஆதரவாளர்களை கைது செய்வதென்றால் புலம்பெயர் தேசம் எதுக்கு வடகிழக்கில் கடந்த ஓரிரு வருடங்களில் மாவீரர்நாள் அனுஷ்டித்த மக்களை அங்கேயே சிங்களவன் கைது செய்யலாமே. சிங்களவன் சூழ்ச்சி விஷயத்தில் எச்சரிக்கையாய் இருங்கள் என்று தாக்குதல் செய்தவர்களை சொல்லவந்தால் நீங்கள் என்னை தாளிப்பதில் குறியாயிருக்கிற்ர்ர்கள் என்பது புரிகிறது பரவாயில்லை, , அதையும் ஒரு கருத்தாக எடுத்துவிட்டு போகிறேன்.
  6. நிராஜ் டேவிட்டின் ஐஎஸ் ஐஎஸ் இயக்கம் சம்பந்தமான காணொலி ஒன்றில் , உலகம் முழுவதும் இலைமறை காயாக இருந்த இஸ்லாமிய கடும் மதவாதிகளை கண்டறிய அமெரிக்காவே அவர்களை வளர்த்து ஈராக் சிரியா போன்ற நாடுகளில் ஓரிடத்தில் ஒன்று சேர வைத்து ஏறக்குறைய 40000 இஸ்லாமிய தீவிரவாதிகளை ஒரேயடியாக அழித்தொழிப்பு தாக்குதல் செய்தது அதற்காகவே அவர்களை அமெரிக்கா வளர்த்திருக்கலாம் என்பதுபோல் சொல்லிருந்தார் இந்த பெண் விஷயத்திலும் அதுதான் நடக்குதுபோல, இன்னும் தீவிர செயற்பாட்டில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களை கண்டறிய சிங்களவனே ஏற்பாடு செய்த பெண்ணாக இவர் இருக்க வாய்ப்பிருக்கிறது, அவ பேச்சும் அப்படித்தான் இருக்கிறது. ஆடு தலையை நீட்டுறமாதிரி அந்த பெண்ணை அடிக்கபோயி நாங்கள்தான் அந்த செயற்பாட்டாளர்கள் என்று தாமாவே கையை உயர்த்தி மாட்டிக்கொள்ள போகிறார்கள். சாதாரண தாக்குதல் விஷயங்களில் மேற்குலக காவல்துறை, மற்றும் ஊடகங்கள் குற்றவாளிகளின் பெயர் விபரங்களை வெளியிடுவது வழமை, அவர்களுக்கு அது சாதாரணம் , தகவல் தேடியலையும் இலங்கை அரசுக்கு அது பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல் ஆகும். எதுவேண்டும் சொல் மனமே, பாலோ பழமோ அது உங்கள் சாய்ஸ்.
  7. பத்து மரங்கள் வளர்த்தா வராதா குமாரசாமியண்ண?
  8. எனது சகோதரத்தின் காணிக்குள் ஒரு முருங்கை மரம் காய்த்து கொட்டிக்கொண்டிருந்ததாம் , ஆனால் மரத்தில் மசுக்குட்டி ஏராளமாய் பிடித்து மதில் மேலால் ஏறி பக்கத்து வீட்டுக்கும் போக தொடங்கியதால் பக்கத்து வீட்டுக்காரரின் கொம்பிளையினால் மரத்துக்கு நெருப்பு எல்லாம் கொளுத்தி பிடிச்சு பார்த்தும் வேலைக்கு ஆகாததால் கடைசியில் தறித்து விடடார்களாம். முருங்கைக்காய் தாறுமாறாய் விலை ஏறின நேரம் பார்த்து தறிச்சு போட்டோமே என்று கவலைப்பட்டார்கள் . மசுக்குட்டி வராமல் செய்ய எதாவது வழி தெரிந்தால் யாராவது சொல்வீர்களா, மீண்டும் மரத்தை வளர்க்க சொல்லலாம்,
  9. அட பாவிங்களா , ஜஸ்டின் நீங்கள் அறிந்து வைத்திருப்பவை ஏராளம்.
  10. நீங்கள் சொல்வதும் உண்மைதான் , அதேநேரம் சில டாக்டர்களும் அப்பிள் சைடர் வினீகரை பரிந்துரை செய்கின்றனர் என்று நினைக்கிறேன்.
  11. ரத்தத்தில் சர்க்கரை கொழுப்பை கட்டுப்படுத்தவும் ரத்த குளாய்களில் ஏற்படும் அடைப்பினை சீர் செய்யவும் , மற்றும் முடி உதிர்தல் போன்றவற்றிற்கும் சிறந்த நிவாரணி அப்பிள் வினீகர் எங்கிறார்கள். தினமும் ஒரு தேய்க்கரண்டி அப்பிள் வினீகரை தண்ணீருடன் கலந்து அருந்துவது சிறப்பானது என்றும் சொல்கிறார்கள். ஆனால் மிக பெரும் கொடுமையான விஷயம் என்னவென்றால் எந்த மருத்துவ தகவல்கள் வந்தாலும் , பிறிதொருநாளில் அது தவறு இது தவறு , இது உண்மையில்லை என்று மற்றொரு ஆய்வு தகவலையும் வெளியிடுகிறார்கள். அதேபோல்தான் இந்த பூண்டு பற்றிய ஆய்வுமோ தெரியவில்லை.
  12. a எமது அழிவுக்கு நேரடியாக உதவியவனுக்கும் மறைமுகமாக வாழ்த்தியவனுக்கும் என்ன வித்தியாசத்தை உங்களால் உணர முடிகிறது? இனவழிப்பு சரியென்று எந்த இடத்திலும் நான் கூறவீல்லை, ஆனால் எமது இன அழிப்பை எதிரியுடன் கை குலுக்கி கொண்டாடியவர்களின் மோதலை அவர்கள் பிரச்சனை என்றுவிட்டு கடந்து செல்வேன். அது பெரிய குற்றம் என்று நான் கருதவில்லை. நோர்வேயின் அனுசரணை பேச்சுவார்த்தை ஒன்றிற்கு அப்புறம் ஒரு மாவீரர்நாள் உரையில் திருவாளர் அன்ரன் பாலசிங்கம் ஒரு கருத்தை சொன்னார், ''இந்த உலகம் நான் உனக்கு மூஞ்சையை பொத்தி அடிப்பேன் நீ என்னை கட்டி பிடிச்சு முத்தம் கொடு என்று சொல்ல வருகிறது, அதை எம் இனம் ஏற்காது'' பலமான சிங்களவன் பலவீனமான எம்மீது நடத்திய அழித்தொழிப்பு தாக்குதலை சரியென்று சொல்லி பலவீனமான பாலஸ்தீனம் எப்போதோ வாழ்த்து தெரிவித்துவிட்டது . ஆனால் எமது இனம் பலவீனமான பாலஸ்தீனமக்கள் அழிவது சரியென்று எவர்கூடவும் கை குலுக்கவும் இல்லை கொண்டாடவும் இல்லை, மெளனமாக கடந்து செல்ல எமக்கு உரிமை இருக்கிறது ஏனென்றால் நாம் அழுதபோது ஊர் வரவில்லை, ஊர் அழுகிறபோது எம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை, அவ்வளவுதான். ரஞ்சித்தின் பல கருத்துக்களுடன் எப்போதுமே எனக்கு உடன்பாடு உண்டு , ஆனால் நிச்சயமாக இந்த விசயத்தில் உங்கள கருத்துடன் ஒருபோதும் மனம் ஒன்றி போகாது. இதற்குமேல் நாங்கள் விவாதித்தால் அது கருத்து மோதலாகிவிடும். கருத்து மோதல்களில் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லாததால்தான் தனியே புலம்புறமாதிரி பொதுவாக கருத்தெழுதிவிட்டு செல்வது வழமை. எனது தனிப்பட்ட கருத்தாய் ஒன்றை கூறி முடிக்கிறேன், முஸ்லீம்கள் என்பவர்கள் தமது மதத்தவரை தவிர உலகில் எவன் செத்தாலும் அழிந்தாலும் ஒருபோதும் அவர்களுக்காக அனுதாபபடவோ கவலைபடவோ மாட்டார்கள், அவர்கள்போல் நாம் இருக்கவேண்டிய அவசியமில்லை, அதனால் கொல்லப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் மீண்டும் அஞ்சலிகள்.
  13. இந்த பிரச்சனைக்குள் வன்னியை இழுத்து ஒப்பீடு செய்யவேண்டிய எந்த அவசியமும் இல்லை. அயல்நாடுகளின் உதவியுடன் கமாஸ் போல வன்னியிலிருந்து ஒரேநாளில் 5000 ரொக்கட்டுகளை ஏவியபடி சிங்களவன் தேசத்திற்குள் நுழைந்து 1300 பேரை பாலினம் வயசு பாராமல் வகை தொகையின்றி கொன்று குவிக்கவில்லை, இசை நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்த எந்த வகையிலும் யுத்தத்திற்கு சம்பந்தமில்லாத மக்களை ஓட ஓட கொல்லவுமில்லை. அப்பாவி சிங்கள பெண் ஒருவரை நிர்வாணபடுத்தி என்னை கொல்லாதீர்கள் என்று கெஞ்ச கெஞ்ச கொன்று உடல்மேல் எச்சி துப்பி அவள் உடல்மேல் உக்கார்ந்து இருந்து சுற்றி வர நின்று கொண்டாடவுமில்லை. தள்ளாடும் முதியவர்களிலிருந்து தளிர்கள் வரை பயணகைதிகளாக பிடித்து வந்து இன்றுவரை கொடூரமாக அடைத்து வைக்கவுமில்லை, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் இருந்து மேற்குலகில் நடத்தப்படும் அப்பாவி மக்கள் மீதான படுகொலைகளை பாலஸ் தீனர்கள் பண்ணுவதுபோல் கொடிகளை கைகளில் ஏந்தியபடி பெண்கள்ள் சிறுவர்கள் அனைவரும் உற்சாக கோசமெழுப்பியபடி கொண்டாடியதும் இல்லை. எம் மண்ணை அபகரிக்க முனைந்தவர்களுடன் இறுதிவரை போரிட்டோம் அதுதான் வரலாறு,அதேபோல் தம் மண்ணை அபகரித்த இஸ்ரேல் ராணுவத்துடன் எவ்வளவு கொடூரமாக கமாஸ் மோதியிருந்தாலும் பிடிக்குதோ பிடிக்கலையோ அவர்கள் வீரத்தை பாராட்டியே தீருவோம். அதைவிட்டு கிழடு கட்டைகளிலிருந்து பச்சிளம் குழந்தைகள்வரை ஒரேநாளில் கொன்று பணயகைதிகளாக்கி வீரம் காட்டினால் வலிமையுள்ள எதிரி நிச்சயமாக போர் தொடுத்தே ஆவான், ஆனால் இஸ்ரேல் எல்லை தாண்டி ருத்ரதாண்டவம் ஆடுகிறது அதை மறுப்பதிற்கில்லை ஆனால் எம் பிரதேச பிரச்சனைகளை இவர்களுடன் ஒப்பிட வேண்டியதில்லை. இவர்களுக்கான அநீதியை கேட்க, அத்தியாவசிய பொருட்கள் வழங்க, பேச்சு வார்த்தைக்கு ஒழுங்கு பண்ண, இவர்களுக்காக போர் தொடுக்க, ஆயுதங்கள் , நிதி மருத்துவம் வழங்க மேற்குலகிலிருந்து அரபுநாடுகள்வரை தோள் நிற்கின்றன, ஆனால் நாம் எவரும் இல்லாமல் உரிமை மட்டும் கேட்ட ஒரே காரணத்துக்காக பூட்டிய அறையினுள் வைத்து கொல்லப்பட்ட மூட்டை பூச்சிபோல் நசுக்கி கொல்லப்பட்டோம் இன்றுவரை எவரும் பெரிதாக ஏனென்று கேட்கவில்லை, அப்பப்போ மனித உரிமை ஐநா பொறுப்புகூறல் என்பதோடு எம் கொலைகள் கணக்கிலெடுக்கப்படாது விடப்பட்டுவிட்டது. ஆனால் போர் ஆரம்பித்தநாளிலிருந்து அவர்களைபற்றி பேச அவர்களுக்காக வாதிட ஒட்டுமொத்த சர்வ வல்லமை பொருந்திய உலகநாடுகளும் போர் ஆரம்பித்த அடுத்த நாளிலிருந்தே அணியில் நிற்கின்றன, அதை இஸ்ரேல் செவிமடுக்கிறதா இல்லையா என்பது வேறு பிரச்சனை எங்கள் பிரச்சனை அல்ல, ஏனென்றால் எந்த துணை வலிமையும் இல்லாமையினால் தோற்கடிக்கப்பட்டவர்கள் நாங்கள். அதனால் வலிமையுள்லவர்களுக்கிடையிலான பிரச்சனைபற்றி நமது கருத்துக்கள் சபையினில் எடுபடாது. ஆனால் எமது பிரச்சனையும் அவர்கள் பிரச்சனையும் ஒன்றல்ல என்பதுபற்றி மட்டும் வாதிட முடியும். அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதை எந்த வகையிலும் சக மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் அப்பாவி வன்னி மக்கள் கொல்லப்பட்டதை இறுதி போருக்கு வாழ்த்து சொல்லி சிங்களத்துடன் கை குலுக்கிய வரலாறு பாலஸ்தீனத்துக்கு உண்டு. சொல்லபோனால் மூன்று மாதத்தில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்கள் தொகையைவிட மூன்றேநாளில் கொன்றொழிக்கப்பட்ட எம்மக்கள் தொகை இரண்டு மூன்று மடங்கு அதிகம், இஸ்ரேலிய இனகொலைகளை எவரும் ஆதரிக்க போவதில்லை, ஆனால் எம்மீதான இனகொலையை இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சேர்ந்து வாழ்த்தியது என்பதே கடந்தகாலம், கணப்பொழுதில் கடந்தவைகளை மறந்துபோகும் எமக்கு இதுவும் பத்தோடு பதினொன்றுதான். மறுபடியும் உரக்க சொல்வதானால் மக்கள் கொலைகள் கண்டிக்கப்பட வேண்டியது, ஆனால் மீண்டும் ஒருமுறை எம் மக்கள்மீது ஒரு படுகொலை நடத்தப்பட்டால் பாலஸ்தீனம் ஒருபோதும் எமக்காக குரல் கொடுக்காது, அவர்கள் மதத்தை சார்ந்தவர்களுக்கு ஏதும் என்றால் மட்டுமே குரல் கொடுப்பார்கள், அநியாயம் அக்கிரமம் என்பார்கள், பிறருக்கு வரும் வலிகளை சிரித்துக்கொண்டே கடந்துவிடுவார்கள் இது அவர்களின் சுயரூபம் என்பதை உலகமே பார்த்திருக்கிறது இனியும் பார்க்கும் கேட்க நாதியின்றி அழிந்துபோன நாம் ,கேட்க பலர் இருக்கும் இவர்கள் போரை மெளனமாக கடந்து போவதை தவிர நம்மால் ஆவது ஒன்றுமில்லை , நாம் வழமைபோல வன்னியையும் பாலஸ்தீனத்தையும் ஒப்பிட்டு சிறந்த மனிதாபிமானிகளாக தொடர்ந்து செல்வோம். கொல்லப்பட்ட அனைத்து தரப்பு அப்பாவிகளுக்கும் கொல்லப்பட்டுவிட்ட ஒரு இனத்தின் சார்பில் அஞ்சலிகள்
  14. ரசோ சொல்வதுபோல பிந்தியே உணரபடுவதால்தான் மீள முடியாத பல நோய்களில் பலர் சிக்குகின்றோம். உணவு உயிர் வாழ்தலுக்கு எவ்வளவு தூரம் நண்பனோ கட்டுப்பாடில்லாத உணவு பழக்கங்கள் அதேயளவு கொடூரமான எதிரியும்கூட என்பதற்காகதான் மேலே ரொம்ப இழுத்து சொல்லிவிட்டேன். அனைவரும் உடம்பு விஷயத்திலும் உணவு விசயத்திலும் அக்கறையா இருப்போம்.
  15. ஒருகாலம் எல்லாம் போட்டு தாக்கியதுதான், எனது அண்ணா ஒருமுறை சாப்பாட்டு விஷயத்தில் என்ன பிரச்சனையெல்லாம் இருக்குனு விளங்கபடுத்திய பின்னரே உணவு மீதான விருப்பம்போய் பயம் வந்தது. பொதி செய்யப்பட்ட எந்த உணவு வகை எடுத்தாலும் முதலில் அதன் பின்னாடி பார்ப்பதே வழக்கம். முதலில் பார்ப்பது சுகர், சோடியம், கலோரிஸ்.கொலஸ்ட்ரோல் வெளிநாடுகளில் பெரும்பாலான நம்மவர்கள் இறப்பது கொலஸ்ட்ரோலினாலும் சுகரினாலும் சோடியத்தினாலும்தான். கொலஸ்ட்ரோல் மாரடைப்பு இதயவியாதி, சோடியம் எனும் உப்பு ரத்த ழுத்தம், சுகர் பிரச்சனை சொல்லவே தேவையில்லை எம்மில் பாதிக்குமேல் சுகர் பிரச்சனையை காவிக்கொண்டு திரிபவர்களே. வெளிநாட்டில் ஆட்டு இறைச்சியினால் போய் சேர்ந்த எம்மவர்கள் ஆயிரம்பேருக்கு மேல வரும், எண்ணெயில் பொரித்த உணவுகளால் எந்த நிமிஷம் வேணுமென்றாலும் போகும் நிலையில் உள்ளவர்களும் பாதிபேர் வரும். சிலரிடம் சொன்னால் நம்புவதில்லை நான் பொரித்த மீன் சாப்பிட்டு 5 வருசம் வரும், ஆட்டு இறைச்சி அது அதுக்கு மேலிருக்கும், வெள்லை அரிசி சோறு என்பது உணவில் பெரும்பாலும் இல்லை, முக்கியமா கொத்துரொட்டி உடல்நல கேடான உணவுகளில் முதன்மையானது .பெரும்பாலும் சமன் மீன் சாப்பிடுவது ஆரோக்கியமானது, கோழி இறைச்சியும் கீரையும் அடிக்கடி சாப்பிடலாம் என்பது அபிப்பிராயம். இனிப்பு வைககள் குளிர்பானங்கள் தொடுவதேயில்லை, என்னமோ தெரியவில்லை அதெல்லாம் ஒருவகை ஒவ்வாமைபோலாகிவிட்டது, ஒருகாலம் புகை பழக்கத்துக்கு அடிமையாயிருந்தபோது வைத்தியரிடம் போனதுண்டு, வருடத்தில் ஒரு தடவை உடல் பரிசோதனை உண்டு அதை தவிர்த்து இன்றுவரை எந்த காரணத்துக்காகவும் ஆஸ்பத்திரி பக்கம் எட்டி பார்ப்பதில்லை. எம்மில் சிலர் பொரித்த எண்ணெயை போத்தலில் விட்டு வைத்து மறுபடியும்மறுபடியும் பயன் படுத்துகிறார்கள், பார்க்கவே பயமாயிருக்கும்.அது உயிருக்கே உலை வைக்கும் விசயம். அரிசி விசயத்தில் வடபகுதி மக்கள் 90 மானோர் சிவத்த புழுங்கல் அரிசியும் வன்னி மக்கள் சிவத்த பச்சை அரிசியும் காலம் காலமாக பயன்படுத்துகிறார்கள், இந்த மருத்துவ ஆய்வுகளுக்கு முன்னரே எம் முன்னோர்கள் அறிமுகபடுத்திய உணவு பழக்கம் வியப்பானது. மேலே ஜஸ்டின் சொன்னதுபோல் இதெல்லாம் பண்ணி 100 வருசம் வாழலாம் என்பது அர்த்தமல்ல, வாழும் நாட்களில் வாழ்க்கையில் பாதிநாளை ஆஸ்பத்திரியுடனும் பார்மசியுடனும்,அறுவை சிகிச்சையுடனும்,அரை கிலோ குளிசையுடனும் கழிப்பது மரணத்தைவிட நரகவேதனையானது.
  16. சஹ்ரான் இஸ்லாமியர்களல்லாத காபிர்களை மூட்டுமூட்டாக வெட்டி கொல்லுங்கள் என்று பேசி வீடியோ விட்டு பல மாதங்களின் பின்னரே தாக்குதல் நடைபெற்றிருந்தது. சாதாரணமா புலிகளின் தலைவரின் படத்துக்கு பேஸ்புக்கில் ஒரு லைக் போட்டாலே நாலாம் மாடிக்கு கொண்டுபோய் புலன் விசாரணை நடத்தும் இலங்கை படைகள் , சஹ்ரானின் காணொளியை கண்டும் காணாமல் விட்டபோதே எங்கோ ஒரு அபாயம் காத்திருகிறது என்பது இலங்கை பாதுகாப்பு அமைப்பினருக்கு தெரிந்திருக்கும் . மதவெறியோடு இருந்தவர்களை பதவிவெறி கொண்டவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதே பெரும்பாலானவர்களின் இன்றுவரையான சந்தேகம். என்னவோ ஏதோ..ஆனால் ஒன்று நிதர்சனம்.. மஹிந்த குடும்பத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து விட்டார்கள் என்பதே அது. மீண்டும் ஒரு தேர்தலின் பின்னர் கோட்டபாய மறுபடியும் இலங்கை ஜனாதிபதி ஆனாலும் ஒன்றும் ஆச்சரியபடுவதற்கில்லை..
  17. அது செயற்கையாக ஏற்படுத்தப்படும் வளர்ச்சி. நிகழ்கால பொருளாதார நெருக்கடியும், நாகரிக வளர்ச்சியும் அனைவரும் ஒன்று இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக்கொள்ள அவர்களோ இஸ்லாத்தை உலகமெங்கும் பரப்பவேண்டுமென்ற கொள்கைப்படி எந்தவித கட்டுப்பாடுமின்றி இனவிருத்தி செய்கிறார்கள். ஒரு குடும்பம் தெருவில் போனால் ஊர்வலமே போவதுமாதிரி குடும்ப உறுப்பினர்கள் அணிவகுப்பு. விரும்பி அனைத்து மதத்தினருமே தமது மதத்தை துறந்து அவர்கள் மதத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் மதத்தை தழுவினால்தான் அது உண்மையான உலகம் முழுவதுமான வளர்ச்சி.
  18. ஆப்ரிக்காவில் ஒரு இஸ்லாமீய அறிஞர் அண்ணா அவர்கள், பெண்குழந்தைகளுக்கு பிறப்புறுப்பை தைத்துவிடவேண்டும் அப்போதான் ஆண்களுக்கு நிறைவான சுகத்தை கொடுப்பா என்று அறிவித்து உலக அளவில் பரபரப்பானது. பின்பு இந்தியாவிலிருந்துவிட்டு மலாசியாவுக்கு ஓடிபோய் வாழும் மற்றொரு மத அறிஞர் திலகம் மதத்துக்காக எதுவும் பண்ணிட்டு சொர்க்கத்துகு போனால் அங்கே 62 கன்னிகள் கிடைக்கும் என்றார், அப்போகூட சொர்க்கத்தில் எது முக்கியம் எதை எதிர்பார்க்கிறார்கள் இந்த அறிஞர் கூட்டம் என்பது சில்லிட வைக்கிறது. இன்னொரு அறிஞர் பெண்கள் பூப்பெய்துவிட்டால் அவள் திருமணத்திற்கு தயாராகிவிட்டாள் என்றே அர்த்தம் என்றார், பெண்பிள்ளைகள் இப்போதெல்லாம் 10, 11 வயதில்கூட பூப்பெய்துகிறார்கள் என்பது தற்கால நடைமுறை. பின்பு தலீபான் அறிஞர் கூட்டம் பெண்களுக்கு பிரசவம் பெண்களே பார்க்கவேண்டும் என்று புனித சட்டம் போட்டார்கள், ஆனால் பெண்கள் படிக்க கூடாது என்றும் சட்டம் போட்டார்கள், படிக்காமல் எப்படி டாக்டராகி பிரசவம் பார்ப்பதென்று கடைசிவரை அந்த அறிஞர் கூட்டம் சொல்லவேயில்லை. மத அறிவில் டாக்டர் பட்டம் பெற்ற இன்னொரு அறிஞர் கூட்டம் இஸ்லாமிய பெண்கள் ஆண் துணை இல்லாமல் வெளியே கடைதெருவுக்கு கூட போக கூடாது என்று சொல்லியிருந்தார் ஆனால் இஸ்லாமிய ஆண்கள் ஐரோப்பா அமெரிக்கா என்று போய் பணத்தை அள்ளியிறைத்து பெண்கள் மத்தியிலேயே பொழுது போக்கிட்டு ஊர் திரும்புவார்கள். கணவனுக்கு மட்டும் காட்டவேண்டிய அழகை பிறருக்கு காண்பிக்ககூடாது என்று அறிஞர்கள் அலுமாரியை அவ்டி காரை மூடி வைச்சமாதிரி எத்தனை டிகிரி வெய்யில் என்றாலும் வெப்பத்தை உறிஞ்சி வைத்திருக்கும் கருப்பு துணியால் முழுவதும் மூடி செல்லவேண்டுமென்று சொல்வார்கள் , ஆனால் ஆண்கள் மனைவிக்கு மட்டும் காட்டவேண்டியதை மத்த மதக்காரர் எவர் கிடைப்பா என்று நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு கணவனுடன் போகும் பெண்களைகூட பார்த்து ஜொள்ளுவிட்டு அலைவார்கள். மொத்தத்தில் அண்ணனோட சிந்தனைகளும் செயல்களும் பெண்ணை பற்றியே சுற்றிவரும். அதையெல்லாம் கூட மன்னிக்கலாம் ஆனால் எல்லாத்தையும் பண்ணிப்பிபோட்டு இறுதியாக ஒரு வரி சொல்வார்கள் பாருங்கள். அதை தாங்கிக்கொள்ள இன்னொரு இதயம் இறைவனிடம் கேட்டு வாங்க வேண்டும் ’எந்த மதத்திலும் இல்லாத அளவிற்கு இஸ்லாம் பெண்களை மதிக்க கற்று கொடுத்திருகிறது’
  19. ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள் பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது, காலப்போக்கில் ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும், படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை, அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில் அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.
  20. யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம் ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட 36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான் நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே, நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  21. என் மகன்கள் இருவருமே ஆங்கில வழியில்தான் படிக்கின்றனர்.. ஏன் தெரியுமா? சீமான் சொன்ன அடடே காரணம்! Read more at: https://tamil.oneindia.com/news/chennai/seeman-reveals-his-sons-studied-in-english-medium-schools-594131.html
  22. போர் சூழல் இல்லாத நிலையில் காரணம் எதுவும் சொல்லாது எவரையும் சிறையிலடைக்கும் நிலமை இப்போது அமுல்படுத்தப்படுகிறதா தெரியவில்லை, நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம் ஈழபிரியன் அண்ணா.
  23. இலங்கை அரசுக்கெதிராக இவர்கள் இயங்கியதுக்கு ஆதாரங்கள் வழக்குகள் எதுவும் இருந்தால்தானே பயங்கரவாத சட்டம் இவர்கள் மீது பாயும்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.