Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by valavan

  1. தற்போதைய நிலவரம் போர் ஏற்பாடுகளை நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள்
  2. பல வருட கள அனுபவம் உள்ளவர்களுக்கு சாதாரண பதிவு சம்பந்தப்பட்ட விஷயங்களியே தெளிவில்லையே, பல தசாப்த போரில் பக்கத்தில் நின்று பார்த்ததுபோல் அடுக்கடுக்காய் குற்றம் சுமத்துவற்கு வெறும் கர்ண பரம்பரை கதைகளையே ஆதாரமாக கொண்டுள்ளார்கள் என்பது வெளிப்படை. இவர்களுக்காக மூச்சிரைக்க மூச்சிரைக்க பதில் சொல்லி மாளும் கோசானுக்காக மனம் வருந்துவதை தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.
  3. அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒரு இனத்தின் விடுதலையை முன்னிறுத்தி போராடியதை தவிர வேறெந்த பாரிய குற்றமும் புரியாத எமது விடுதலை இயக்கம் முள்ளி வாய்க்காலில் முற்றுப்பெற்றபோது முதல் வரிசையில் நின்று ஒரு அடக்குமுறை சிங்கள அரசுக்கு வாழ்த்து சொன்னவர்களில் எந்த பாலஸ்தீன போராட்டத்திற்கும் அதன் போராளிகளிற்கும் எழுத்தால் பக்கம் பக்கமாகவும் மனதால் கடலளவு அனுதாபமும் கொண்டிருந்தோமோ அதே பாலஸ்தீன இயக்கமும் அடக்கம். அவர்கள் இலங்கை அரசுக்கு வாழ்த்து சொன்னதற்கு மஹிந்த அரசு இஸ்லாமியர்களுடன் அப்போது கூடி குலவியதை தவிர வேறு எந்த காரணமும் இருக்க வாய்ப்பில்லை. இஸ்லாமியர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் மற்றவர்கள் தமக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் ஆனால் அவர்கள் எந்த மதத்திற்கோ இனத்திற்கோ இளாமியர்களை பெரும்பான்மையாக கொண்டிராத ஒரு நாட்டுக்கோ ஒருபோதும் ஆதரவாகவோ விசுவாசமாகவோ இருக்கவே மாட்டார்கள். இதற்கு எம் மண்ணிலேயே உதாரணம் இருக்கிறது, கிழக்கில் இந்திய ராணுவத்தை எதிர்க்க புலிகள் அமைப்பில் நூற்றுக்கணக்கில் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள், இந்திய ராணுவம் வெறியேறியதும் அவர்கள் மதகுருவின் ஒரு கூட்டத்தின் பின்னர் ஏறக்குறைய 350 பேர் ஆர்ஜிபி உட்பட்ட அனைத்து ஆயுதங்களுடனும் போய் இலங்கை ரானுவத்துடன் சேர்ந்து கொண்டார்கள். சேர்ந்து கொண்டது மட்டுமல்ல, புலிகளையும் தமிழர்களையும் இலங்கை ராணுவத்தைவிட மிக மோசமான ஆவேசத்துடன் ஜிகாத்,ஊர்காவல்படை,புலனாய்வுதுறை என சிங்கள படைத்தரப்பில் அங்கம் வகித்து வேட்டையாடினார்கள். இஸ்ரேல்பற்றி சொல்ல என்ன இருக்கிறது, இலங்கை தமிழர்களின் ஆயுதபோராட்டத்தை முளையிலேயே கிள்ளியெறிய ஆரம்பத்திலேயே இலங்கை அரசு இயந்திரத்துடன் கை கோர்த்தது இஸ்ரேல் மட்டுமே. ஒரேயொரு வித்தியாசம் இஸ்ரேல் எந்த காலமும் தமிழர் தரப்புடன் ஒன்றாய் நின்றதுமில்லை , கூட நின்றுவிட்டு தொப்பி பிரட்டியதும் இல்லை. அவர்கள் எதிரி என்ற கோணத்தில் கடைசிவரை மிக நேர்மையான எதிரிகளாகவே நின்றார்கள். இஸ்ரேலே இஸ்ரேலுக்குள் போர் தொடுத்து சதி செய்ய வாய்ப்பிருக்கு என்பதெல்லாம் அளவுக்கதிகமான ஊகம். இஸ்ரேலியன் ஒருவன் கொல்லப்பட்டாலே வாள் தூக்கும் இஸ்ரேல், உலகில் எந்த மூலையில் யூதர்கள் என்று தம்மை சொல்லிக்கொள்வோர் தமது மூதாதையர்கள் இஸ்ரேலியர்கள் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால் அவர்களுக்கான ஆதரவையும் குடியுரிமையும் வழங்க தயாராக இருக்கும் இஸ்ரேல், ஒருபோதும் தன்னோட குடிமக்களை இஸ்லாமியருக்கெதிரான போரில் ஒன்றிணைக்க பலி கொடுக்காது. இஸ்ரேலுக்கு ஒன்று என்றால் இஸ்ரேலியர்கள் மட்டுமல்ல ஐரோப்பிய அமெரிக்க அனைத்து வல்லரசுகளுமே இஸ்ரேல் பின்னாடியே அணிவகுக்கும். அவர்களுக்கு குறுக்கு வழியில் பலம் தேடவேண்டிய அவசியமே இல்லை. இஸ்லாமியர்களுக்கெதிராக கை கோர்க்க தன்னினத்தை பலியிடும் அளவிற்கு அளவிற்கு இஸ்லாமியர்களை ஒரு பொருட்டாகவும் எடுக்காது இஸ்ரேல். ஆக மொத்தம் இவர்கள் இருவருமே ஆணித்தரமாக எமது ஆதரவை தெரிவிக்க எந்த அருகதையும் இல்லாதவர்கள். ராமன் அடிச்சா என்ன ராவணன் வாங்கினா என்ன தூரத்தே இருந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்..
  4. எந்த பரா துருப்புக்களை இறக்கி சிங்கள ஆட்சியாளர்களை வழிக்கு கொண்டுவர இந்தியா முயற்சித்ததோ அதே பரா துருப்புக்களை இறக்கி தமிழர்களுடன் மோதவிட்ட ஜே.ஆர் எனப்படும் மனிதன் தமிழர்களை பொறுத்தவரை கொடூரன் குள்ளநரியாக இருந்தாலும் சிங்களவர்களை பொறுத்தமட்டில் ஐயத்திற்கு இடமின்றி அவர்களுக்கு அவன் ஒரு ராஜ(தந்திர)குமாரன் தான் . என்னதான் எம் போராட்டவலு முற்று முழுதாக அழிந்து போனாலும், ஜே.ஆர் தலைமையில் தமிழர்களை ஒரு வழி பண்ண புறப்பட்ட ஜே.ஆர் உட்பட்ட ஏறக்குறைய அத்தனை அமைச்சர்களும் தம் வாழ்நாளில் சிங்களதேசமும் அவர்களின் ஏவல் படை தரப்பும் அடிவாங்கி அழிந்தத்தை தம் கண்முன்னால் பார்த்துவிட்டே இயற்கையாகவும் தாம் செய்த வினைகளை தாமே அறுத்து செயற்கையாகவும் அழிந்து போனார்கள். 13 ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு தமிழர்கள்மேல் காடைதனத்தை கட்டவிழ்த்து ருத்ர தாண்டவமாடியவர்கள் அவர்கள் கொல்லப்படுவதை பார்த்து ரசித்து சிரித்து கேலி செய்தவர்கள் , பின்னாட்களில் அவர்களின் பல ஆயிரம் படையினர் கொல்லப்பட்டு காயப்பட்டு அவர்களை காவியபடி கொழும்பு நகர வீதிகளில் அம்புலன்சுகள் அலறியபடி செல்லும்போது இறைச்சி போகுது என்று தமது படையினரை தாமே கிண்டல் செய்தார்கள். எம் போராட்ட சக்தி முற்றாக அழிந்து போனதுதான் இருந்தாலும் கேட்க எவனும் இல்லையென்று தூக்கி போட்டு பந்தாடியவர்களை திருப்பி மிதி மிதியென்று மிதித்து மரண பயம் என்றால் என்னவென்று அவர்களுக்கும் காண்பித்துவிட்டே மறைந்தார்கள். அதில் ஒரு சிறு நிம்மதி
  5. ஒரு பக்கம் யாழ்நகரம், மறுபக்கம் மட்டு நகரம்... வாள் கொண்டு போர் செய்து வடக்கு கிழக்கு இணைந்தபடி வெல்லபார்த்தோம் முடியவில்ல. போகட்டும் முடிந்தவரை யாழ்கொண்டாவது இணைத்து பார்ப்போமே அதில் தவறென்ன? தர்மத்துக்கு புறம்பாக நாம் ஏதும் நடந்ததில்லை, வன்முறை எங்கள் பொழுது போக்கும் இல்லை. பொழுது போக்காய் எம்மை கொல்ல பார்த்தவர்களை எதிர்கொள்ள வேறு வழியின்றி வன்முறையை தேர்ந்தெடுக்க வைக்கப்பட்ட இனம் நாம். நாங்கள் இனி ஒரு ஆயுத போராட்டத்தை செய்ய போவதில்லை, ஆயுத போராட்டம் என்றால் பயம் என்று ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் நடமாடிய எம் மண்ணின் மாவீரர்கள் பெயரால் ஒன்றும் இதை அறிக்கையாய் விடவில்லை. அதற்கு உரிமையும் இல்லை. ஆண்டாண்டு காலம் போராடியும், ஆயிரக்கணக்கில் அல்ல ஆதரவு வழங்கிய எம் மக்களின் இறப்பும் சேர்த்து லட்சக்கணக்கில் உயிரிழப்பை சந்தித்தும் எதிரிகளால் விழுத்த முடியா ஒரு போராட்டம் எம்மவர்களால் விழுத்த பட்டதே. இனியும் எதுக்கு ஒரு இனம் தனது இனத்துக்காக ரத்தம் சிந்தி போராட வேண்டும். ஒரு அரச இயந்திரத்துக்கு எதிராய் இறுக்கமான ஒழுக்கம், நேர்த்தி,திட்டமிடல், சுயநலம் இன்மை,யுக்தியுடன் போராடுவதெல்லாம் போறவன் வருபவன் செய்ய கூடிய செயல் அல்ல. அது கோடிகளில் ஈழதமிழினம் இல்லாமல் போனாலும் கோடிகளில் ஒருவனால் மட்டுமே முடியும் செயல். அப்படி ஒருவர் எம்மினத்தின் கிரீடமாயிருந்தார், இப்போது அவர் பற்றிய செய்திகள் இல்லை, செய்திகள் இல்லாமல் போனால் என்ன, அவர் இருந்தபோதும் அவர்பற்றி ரோஷம் கொப்பளிக்க கொப்பளிக்க பேசி ஆனந்த பட்டோம், அவர் இல்லாமல் போன ஒரு நிலையிலும் அவர்மேல் உள்ள அதே காதலுடன் இருக்கிறோம். ஒருத்தர் இருக்கும்போது பாசம் கொட்டுவதற்கு பின்னால் பல நூறு சுயநல காரணங்கள் இருக்ககூடும். அவர் இல்லையென்று செய்தி வந்த பின்னரும்... உன்னை தவிர எம் இனத்துக்கு ஒருவர் எப்போதும் இல்லையே மானஸ்தனே என்று நினைக்கும்போது மனசு அழுகின்றது, அதற்கு இனம்மீதான பாசம் என்ற ஒரேயொரு காரணம் மட்டுமே இருக்கும். கண்ணுக்கு தெரிந்தாலா கடவுள் இருக்கிறார் என்று நம்புவோம்? காலின் நகத்தை கல்லொன்று மோதி பெயர்த்து விட்டால் கடவுளை நம்பாதவன்கூட அட கடவுளே என்று அவர் பெயர் சொல்லி கதறுவான், எம் நிலை இப்போ இதுதான். தாய் தந்தை இல்லையென்று இன்று ஆகிவிட்ட இந்த இனத்தின் கொடுமை நிலையை பார்க்கும்போது உனக்கு முன்னே நாம் போய் சேர்ந்திருக்ககூடாதா என்ற வலி பல தமிழர் மனசுக்குள் குமுறுவதுண்டு. நாங்கள் அரசியலாலும் ஆயுதத்தினாலும் போராட்ட வடிவங்கள் தொடுத்து தோற்றுபோன இனம், அடுத்த எம் தலைமுறை எம்மின துயரத்தை பிறருக்கு எடுத்து செல்லுமோ இல்லையோ, அடுத்த சந்ததிக்கும் அதுக்கு அடுத்த சந்ததிக்கும் யாழின் பெயரால் துயரங்களை எடுத்து சொல்வோம், கடத்தி போவோம் எம் இளையோர்க்கும் அவர்கள் குழந்தைகளுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் எம்மினத்தை வாழவைக்க பலர் சின்ன சின்னதாய் சிறு துண்டுகளாய் சிதறி செத்துகூட பார்த்தார்கள் முடியவில்லை என்ற கசப்பு வரலாற்றை அவர்கள் காதினில் போட்டு வைப்போம். நாங்கள் புலம் பெயர்ந்தவர்கள்தான் ஆனால் புலத்தை மறந்தவர்களில்லை. வெளிநாட்டு சுகத்தில் மயங்கி இருப்பவர்கள் தமிழன் என்றால் தாயகத்தின் அவலநிலை கண்டு தினமும் அவன் அழமாட்டான். இரத்தமும் கண்ணீரும் வேர்வையும் கலந்து போராடி தோற்று போனாலும், போராடிய வலிகளை பிறருக்கு கடத்தும் யாழ் இணையமே, நாளைக்கே யாழ் இணையம் ஏதோ ஒரு காரணத்தால் இயங்க முடியாது போனாலும், மான தமிழர் போராட்டத்திற்கு எவருக்கும் மண்டியிடாமலே உன் பங்கை வழங்கினாய் என்பதில் என்றைக்கும் உமக்கும் உம்மோடு தோள் நின்றவர்களுக்கும் உறுதியாய் ஒரு இன திமிர் இருக்கும். வாழிய என்று நாம் உமக்கு சொல்லவில்லை, வாழிய என்று நீர் எமக்கு சொல்லவேண்டும், நாம் வாழதானே உன்னால் முடிந்த ஒரு பங்களிப்பு செய்தாய். யாழ் இணையமே வாழ்த்துங்கள் எங்களை.
  6. அவர் பெயர் தவகரன், யாழ்பாணத்திலிருந்து யூரியூப் காணொலிகள் பதிவேற்றும் யாழ் சுதன் ஷங்கர் ஜெசி போன்ற பிரபல்யமான பலரில் இவரும் ஒருவர். எந்த உலகத்தில் வாழ்ந்தாலும் இந்திய விசா பெற்றுத்தான் அங்கு வரவேண்டுமென்றாலும், சென்னை என்பது உலக தமிழர்களின் தலை நகரம், அழுக்கான சினிமாவும் அரசியலும் அங்கிருந்தாலும், யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு போகும் தூரம்கூட இல்லாத தமிழகமும் எங்கள் தாய் மண்ணே.
  7. திண்ணையில்கூட அவர்கள் பெயரை பார்க்க விரும்பவில்லையா? முடியல என்று சொல்ற அளவிற்கு அவ்வளவு குடைச்சல் தந்திருக்கிறார்கள் போல, சக கருத்தாளனாய் அதை வன்மையாக கண்டிக்க முயற்சி செய்கிறேன். உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறட்டும் ☺️.
  8. பெயர் மாறினாலும் பரவாயில்லை, எதுக்கு அந்த பச்சை புள்ளிகள் நிலாமதி அக்கா? சும்மா வேடிக்கைக்காக சொன்னேன், அவை கண்ணியமாக நீங்கள் கள உறவுகளுடன் பழகியதற்கான அடையாளங்கள். யோகவதி பெயர் நல்லாவே இல்லை. பெயரும் மாறகூடாது பச்சைபுள்ளிகளூம் மாறகூடாது. நிர்வாகம் நிலாமதி அக்காவுக்கு உதவி செய்யட்டும், மீண்டும் அதே பெயருடன் ஆக்கத்துடன் வருக.
  9. சாமை வரகு தினை என்பதை நேரடியாக நானும் பார்த்ததேயில்லை. அது எப்படி நீங்கள் இருவரும் கெளபியை மறந்திருக்கலாம்?😝 ஆக குறைந்தது ஒவ்வொரு சரஸ்வதி பூசை வரும்போதாவது மனசில் அது நின்றே ஆகுமே.. நானெல்லாம் அப்போ... ரியூசன், பள்ளிக்கூடத்தில் வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்தண்டா மரை.. என்று ஆரம்பித்து கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே... என்று முடிக்கும்வரை .. இதெல்லாம் எப்போ பாடி முடிப்பாங்க என்ற கவலையில் தேங்காய் சொட்டு, சின்ன சீரகம், கருவேப்பிலை போட்டு தாளிச்ச கெளபி மீதுதான் ஒரு கண் இருந்துகிட்டே இருக்கும், ஊரில குறைஞ்ச விலையில் அதி உச்ச புரதம் நிறைந்த உணவு கெளபி என்று சொல்வார்கள்.. ஆனால் ஊரில் இருந்த காலத்தில் பார்த்த கெளபி எல்லாம் ஒரே பூச்சி புழு குடைஞ்சு ஒருபக்கம் ஓட்டையான ’உயிர்சத்து’ நிறைந்த தரமற்ற அந்த அவரை வகைதான். வெளிநாட்டுகளில் மிகவும் தரமானதுதான் கடைகளில் கிடைக்கிறது, ஏற்றுமதியென்றால் எப்போதுமே உயர்தரம்.
  10. உண்மை, இப்போ பொளந்து கட்டுறது ஏபிடி வில்லியர்ஸ்தான், சுவியண்ணா ஏபிடிக்கு ஒரு கவிதை எழுதுவார் என்று நம்புவோம்.
  11. ஒரு துரோகத்தின் நாட்காட்டி.. மறதி அதிகமான எமது சமூகத்தில் இரண்டு வருடங்கள் கடந்தாலே அனைத்து வகையான எதிரிகளும் எமக்கு என்னவெல்லாம் செய்தார்கள் என்பது 50% மறந்து போகிறது. அதுவே ஐந்து வருடங்களானால் நடந்த சம்பவங்களை ஒரு குத்து மதிப்பாக, ‘நினைவிருக்கிறது, அப்படி இருக்கும் எண்டு நினைக்கிறேன்’ அப்படித்தான் நடந்திருக்கோணும் எண்டு ஞாபகம்’ என்றே வரலாறுகளை நினைவில் வைக்கிறோம், அதற்கு மேலான காலங்களில் நமக்கு நடந்தவற்றை கூகுளில் தேடி பார்க்கிறோம். ரஞ்சித்தின் இந்த தலைப்பின் கீழான தொடர் பதிவுகள் யாழில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒன்று.
  12. அவர் அப்படி பேசினதும், எதுவுமே சொல்லாமல் பாலியல் வார்த்தைகள் பேசி மிரட்டுகிறார் என்று பொலிசுக்கு அடிச்சிருக்கலாம். காவல்துறை வந்ததும் மாஸ்க் சரியாக அணிய சொன்னேன் அதற்காகதான் அப்படி மிரட்டும் தொனியில் பாலியல் வார்த்தைகள் பிரயோகித்தார் என்று அவர்களுக்கு சொல்லியிருக்கலாம். இரண்டு குற்றங்கள் அவர்மேல் பதிவாகியிருக்கலாம், அதற்கு பிறகு இனி போகும் இடங்களிலாவது கொஞ்சம் கண்ணியமாக நடக்க பார்ப்பார். நம்மவர்கள் சிலருக்கு வெளிநாடுகள் வந்ததால் பாஸ்போர்ட்தான் மாறியிருக்கு பழக்க வழக்கங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கு.
  13. அதைதான் முதலே சொல்லிவிட்டேனே விசுகு அண்ணா. “””இது நடைமுறை வாழ்வில் கண்டதைதான் பகிர்கிறேன், உங்கள் கருத்தை முற்று முழுதாக மறுதலிப்பதாய் அர்த்தமல்ல.””””
  14. நான் பத்தாம் வகுப்பு படித்த காலம் வரைகூட அம்மாவுக்கு பக்கத்திலதான் பூனைகுட்டி போல நித்திரை கொண்டிருக்கிறேன். வாசிக்கும் பழக்கும் எனது தாயாருக்கு அதிகமாக இருந்ததினால் பக்கத்தில் படுத்திருக்கும்போது அவ சொன்ன புராண கதைகளை கேட்டே சாதாரணதர பரீட்சையில் மகா பாரதம் கம்ப ராமாயணம் பகுதிகளில் அதிக பெறுபேறுகள் பெற்றிருக்கிறேன். எங்காவது ஊர் விழாக்களுக்கு போனாலும் கிப்ஸ் சாரம் அணியும் வயசிலும் அம்மா பக்கதிலயே போயி குழந்தை போல உக்காந்திருக்கிறேன். ஆக்கினை தாங்காமல் , போய் பொடியளோட விளையாடேன்டா.. எதுக்கு அம்மா அம்மா எண்டு பின்னால திரியுறா? அம்மா செத்து போனால் என்ன செய்வா எண்டு என்ர பாசத்தின் லெவலை அளவிட சும்மா ஒரு கோப கேள்வி பலமுறை கேட்டிருக்கிறா. அப்போ நான் சொன்னதெல்லாம் ’நீ செத்துபோனா நானும் செத்துபோவேன்’. சொன்னபடியே அவ செத்து போயிட்டா... ஆனால் நான் இன்னும் வாழ்கிறேன். வலி தரும் பதிவு குமாரசாமியண்ணா.
  15. நல்ல பொறுப்பான அம்மா அப்பாவாக இருந்து ஆளாக்கிவிட்டும் பொண்டாட்டி/புருஷன் மயக்கத்தில் அம்மா அப்பாவை பேஸ்மண்டில் அடைத்து வாழவிட்ட பிள்ளைகளும் உண்டு. நல்ல பொறுப்பான கணவனாக மனைவியாக வாழ்ந்திருந்தும், வெளி தோற்றத்தில் மயங்கி பெற்ற குழந்தைகளைகூட மறந்து அடுத்தவர்கூட ஓடிபோன மனைவியும் கணவனும் உண்டு. நல்ல சமூக பொறுப்புள்ள பிரஜையாக வாழ்பவர்களைதான் இந்த சமூகம் தமது தேவைக்கு மட்டும் பாவித்துவிட்டு அடிக்கடி ஏமாற்றும். வெட்டி பந்தா காட்டுபவர்களுடன் கூட்டு சேர்ந்து உதவி செய்தவர்களுக்கே வித்தை காட்டும். இது நடைமுறை வாழ்வில் கண்டதைதான் பகிர்கிறேன், உங்கள் கருத்தை முற்று முழுதாக மறுதலிப்பதாய் அர்த்தமல்ல.
  16. சத்தியமா அப்படி ஒன்றும் இல்லை குமாரசாமியண்ணா. பலவிதமான கருத்துக்களின் மீதான பார்வை/ஆதங்கம் அது. கருத்தாளர்களை சாட எனக்கு என்ன உரிமை இருக்கிறது? களவிதிகளே அதுக்கு இடம் கொடுக்காதே. மற்றவர்களை சாடுகிறேன் என்று தோன்றினால், என்னை மற்றவர்கள் சாடுவதற்கும் அவர்களுக்கு முழு உரிமையுண்டு. அதை எதிர்க்க எனக்கு எந்த உரிமைகளும் கிடையாது என்று நினைக்கிறேன்.
  17. தமிழ்சிறியின் நகைச்சுவை உணர்வுக்கு இந்த ஆக்கம் கொஞ்சம் சுமார்தான். யாழ்கள உறவுகளை வைத்து நகைச்சுவையாக ஒரு ஆக்கம் உருவாக்குங்கள் எல்லோராலும் விரும்பபடும். அனைவருடனும் நட்பாக பழகும் உங்களை யாரும் கோவித்து கொள்ள மாட்டார்கள்.
  18. TKR ன் தாயகத்தில் இருந்தபடி புலத்தின் உறவுகளுக்கு அங்குள்ள யதார்த்த நிலமையினை உறைக்க சொல்லும் கருத்துக்களில் எப்போதுமே உடன்பாடு உண்டு. ஆனால் திடீர் விடிவெள்ளி அரசியல்வாதிகளின்மீது நீங்கள் காட்டும் பரிவு மட்டுமே சுத்தமா பிடிப்பதேயில்லை. முஸ்லீம் சமூகம் ஆளும் வர்க்கத்துடன் ஒட்டியுறவாடியதால் குப்பை மட்டுமே அள்ள அங்குள்ள தமிழர்களை தள்ளிவிட பட்டார்கள் என்ற உங்கள் தகவல் ஒரு திரியில் பார்த்தேன்... தாயகத்தில் குப்பை அள்ளும் தமிழர் பற்றியும் எழுதுகிறீர்கள், தாயகத்துக்கு குட் பாய் சொல்லிவிட்டு போன தமிழர்கள் பற்றியும் எழுதுகிறீர்கள், எழுத்திலும் உங்கள் பெயர் தனிதான்.
  19. சுதந்திரமாய் வாழ நினைத்ததாலும், சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த முயன்ற ஒரேயொரு குற்றத்தினாலும்தான் எம் தலைமை எம்மைவிட்டு தொலைந்து போனது சுவியண்ணா.
  20. அன்று போருக்கும் போராடியவர்களுக்கும்.. அதற்கு துணை நின்றவர்களுக்கும் கை தடியாய் நின்றது யாழ். இன்று போர் செய்தவர்களும் இல்லை, போராடியவர்களும் இல்லை.. போராட்டுத்துக்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. கைத்தடி மட்டும் தனியே நிற்கிறது. கை தாங்கலாய் போராட்டத்தை தாங்கியவர்கள் எல்லோருமே உடலாலும் மனதாலும் கை கால் இழந்து நிற்கின்றனர், இழந்தது மட்டும் இல்லை அது தரும் வலியைகூட வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தை படுகின்றனர். பலர் நம்பிக்கையிழந்து இந்த மாற்று திறனாளி வாழ்வு இனிமே வேண்டாம் என்று ஓடியே போய்விட்டனர். சிலர் மாற்றங்கள் இனிமேலும் வரும் என்ற ஒற்றை புள்ளி நம்பிக்கையில் இந்த கைதடியை பிடித்தபடி காலம் கழிக்கின்றனர். அன்று நமக்கெதிராய் சிவப்பு புள்ளி உயிர் செலவாய் தெறித்த போரில் கோபம் கொண்டு இக் களத்தில் ஒன்று சேர்ந்தவர்கள், இனிமே எதுவும் ஆகபோவதில்லை என்று ஓடியே போய்விட்டனர். அவர்கள் ஓடி போன பின்பும் பச்சை புள்ளிகளை மட்டும் வரவாய் வைத்துக்கொண்டு சிலர் இந்த தளத்தில் உயிர் நகர்த்துகிறார்கள். எங்களுக்கு வடக்கு அரசியல்வாதிகளை பிடிக்காது, கிழக்கு அரசியல் வாதிகளையும் பிடிக்காது, எங்களுக்கு பிடித்தது எல்லாம் வடக்கு கிழக்கு என்ற வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி வரிபுலி சீருடையில் இருந்த போராளிகள் மட்டுமே. இன்று வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம் என்று போரிட்ட எம் தேச வீரர்களும் எங்கள்கூட இல்லை. ஆனால் அவர்கள் விரும்பியிருக்காத பிரதேச வாதங்கள் மட்டும் வடக்கும் கிழக்கும் சேர்ந்த சிலரிடம் விரும்பபட்டு எங்கள்கூட பயணிக்கிறது. அவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான்.. உதிப்பது கிழக்கு, மறைவது மேற்கு, இதுக்கு சம்பந்தமேயில்லாம வடக்கு கிழக்கு பிணக்கு பற்றி பேசுகிறவர்கள் உருபடாதவர்கள், அவர்கள் கருத்துக்கள் சபையேறாது. யாழ் எனும் கைத்தடி தனிப்பட்ட எவருக்கும் உரித்தானதொன்றல்ல, இனவிடுதலையில் சோர்வானவர்கள் எவர் வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் அவர்கள் பணத்தில் நகரலாம் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும். ஆனால் இனத்துக்கான காலபதிவுகளை ஒரு பணியாக தொடரும் தளங்களுக்கு காலம் செல்ல செல்ல நரம்புகள் இன்னும் முறுக்கேறுமே தவிர முடிவுக்கு வராது., வாழிய உங்கள் இன பணி.
  21. ஏற்கனவே இங்கு இணைத்தேனா, அல்லது வேறு யாரும் இணைத்தார்களா தெரியவில்லை, இந்த கருப்பு வெள்ளை பாடல் ஐயா டி எம் எஸ் குரலில் கேட்பது.. எஸ் பிபி குரலில் கேட்பது சுவை. ஏற்கனவே பகிரபட்டிருந்தால் மன்னிக்கவும்.
  22. தலைவருக்கான அஞ்சலி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் நான் சொல்ல வந்த கருத்தை நீக்கிவிட்டேன்.
  23. பழைய பாடல்கள் என்றால் இந்த மண்ணில் இப்போது உயிரோடு இல்லாத அந்தக்கால பாடகர்கள் மட்டுமா நினைவுக்கு வரும்? இரு வர்ணப்பாடல்கள் எனும்போதும் இப்போதும் நம்மிடையே உள்ள எஸ்பிபியும் நெஞ்சை அள்ளுவார். எப்படி நான்கு சினிமா தலைமுறைக்கும் இனிக்க இனிக்க பாட முடிகிறது இவரால் மட்டும்? : சம்சாரம் என்பதுமட்டும் வீணையல்ல எஸ்பிபியும்தான்: அன்புமேகமே.. எஸ்பிபி பாடினால் தேன் சிந்துமே வானம்.. பூமி அதை தன் செவிகளில் ஏந்தும்.. எனக்கு பிடிக்காத ஜெயலலிதாவின்.. எனக்கு பிடித்த நடனம்..&.ஸ்ரைல்../எஸ்பிபியின் பாடலில் இருப்பதால் இரண்டையும் ரசிக்கலாம்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.