Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. தகப்பனின் தாய் - அப்பம்மா. தகப்பனின் பிள்ளை (இந்த விடயத்தை பதிந்தவர்) , அப்பம்மாவுக்கு (தகப்பனின் தாய்) பேரன் / பேத்தி. பேரன் / பேத்தியின் சந்ததி (பிள்ளைகள்) அப்பம்மாவுக்கு பூட்டன் / பூட்டி. நாவலர் பதிந்தவரின் சந்ததி என்றல்லவா வருகிறது. பின்வளமாக பாவித்து இருக்கிறார் போல இருக்கிறது. பூட்டன் / பூட்டி. பேரன் / பேத்தி அப்படி பாவிப்பதில்லை என்றே நினைக்கிறன்.
  2. ஏற்கனவே 1800 களின் இடைப்பட்டது என்று தெரியும். அனால், நான் சொல்வது தவறு என்றால், இதுவும் தவறாக இருக்க வேண்டும், அந்த நிலையில் இருப்பவர் (துறை பேராசிரியர்) இந்த விடயத்தில் தவறு விடுவதத்திற்கான வாய்ப்புகள் மிக குறைவு. https://tamilnation.org/sathyam/east/navalar_hudson.htm
  3. சேடம் இழுக்கும் போது ஏன் பாலூற்றுவது? சேடம் இழுக்கும் போது விழுங்க முடியாது, பால் (பாலாக இருக்க வேண்டும் என்பது அல்ல), சுவாசப்பாதையை அடைக்கும். இறப்பை வலியின்றி விரைவாக்கும். மருத்துவ, உயிரியல் துறையில் இருப்போரின் விளக்கம் என்ன?
  4. மக்காவில் பெட்டகத்துக்குள் இருக்கும் உருவம் சிவலிங்க வடிவம் என்று கேள்வி. வேறு எவராவது இந்த விடயத்தை கேள்விப்பட்டது?
  5. முதலில், சிங்களத்தில் எவராவது, எதையாவது நிலத்துக்குள் புதைக்காமல் கவனித்து கொள்ள வேண்டும். விட்டு விட்டு போகும் சிங்கள படை கூட இஹை செய்த்து விட்டு போகும் சாத்தியக்கூறுகள் இருக்கிறது. பின் தொல்பொருள், வரலாறு திணைக்களம் என்று தோண்டி, விகாரை எதாவது கட்டுதல் , சிங்கள மக்களை குடியேற்றுதல் என்று நடக்கும்.
  6. வி.பு, அவர் சிங்கள நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்காமல் சொல்லுவார் என்ற கணிப்பு சரி. வி.பு. ஆல் வி.பு அல்லது தமிழர் நிலைபாட்டை சொல்லுவார் என்று இருக்கவில்லை. ஏன், வி.பு துரோகிகள் என மாத்தையா, கருணாவை துரோகி என்று கணிப்பிடும் போது (இருவரும் அதை மறுத்தனர், மாத்தையா முழு புலிகளின் பிடியில் இருந்தும் அவரின் நிலைப்பாடானா தான் துரோகி இல்லை என்பதில் இருந்த்து இறங்கவில்லை. களத்தில் ஆரம்ப போராளியாகவேனும் சண்டை பிடித்து சாவதே மேல் என்று உறுதியுடன் இருந்தவர்), சிங்களத்தை பிரதிநிஹிஹுவம் செய்யும் ஒரு தமிழரை பற்றி கணிப்பிற்கு எவர் எனக்கு அதிகாரம் தரவேண்டும். பாசிசத்தை சொல்லவில்லை கேட்டு விட்டு பிரோயோகித்தால் ..
  7. இலங்கைத்தீவு தமிழர் பிரச்சனையில் , தீர்க்கும் தொற்றப்பட்டில், (சிங்கள) அரசின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு தமிழர் சிங்களத்தால் முற்றாக நம்பப்படுவர், சிங்கள நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று. அதனால் தான் அடிவருடி என்றேன் (துரோகி அல்ல.)
  8. ராசமாணிக்கம் தான் சந்திரிகா சமாதான பொதியை சிங்கள அரசு சார்பாக புலிகளுக்கு கொண்டு சென்றவர். தொடர்ந்த பேச்சுக்களில் சிங்கள அரசை பிரதிநிதித்துவம் செய்தவர். இதனால் தான் அவரை அடிவருடி என்றேன், ஏனெனில் வெளிப்படையாக சிங்கள அரசு சார்பாக நிற்பவர் . (செய்தியில் சொல்லப்பட்டு இருப்பது வேறு இராசமாணிக்கம் ஆயின் நான் சொல்லியதில் தவறு).
  9. இந்த ஆய்வு செய்யப்பட முடியாது, சந்ததி சந்ததியாக ஆய்வு நடக்க வேண்டும். அனால், ஒரு சந்ததியில் கூட, ஓர்பாலின பெற்றோ வளரும் பிள்ளை ஓர்பாலினத்தை தேர்ந்து எடுக்கும் சாத்தியக்கூறுகள், நேர்பாலினத்தில வளரும் பிள்ளையோடு ஒப்பிடும் போது கூடவா, குறையவோ என்பதை பற்றி ஆய்வு நடக்காது. அப்படி நடந்தலாலும், அது சந்ததியாக ஆய்வு இருக்கும் போதே அதன் நம்பகதத்தன்மை பற்றி கதைக்கலாம். 1. திருப்பியும் கேட் கிறேன், சந்ததி பரிசோதனைக்கு மற்றவர்கள் ஏன் ஆயத்தமாக இருக்க வேண்டும்? 2. அடிப்படையில் ஆண் விந்துவாலும், பெண் முட்டையிலும் உருவாக்கம் கருவின் சிசுவுக்கு. நேர்பாலினம் சமவாய்ப்பை , இடத்தை, சூழலை, மற்றும் எந்த வாழ்கை அம்சத்திலும் சமவாய்ப்பை அளிக்கிறது பாலினத் தெரிவுக்கு. இது பிள்ளையின் அடிப்படை உரிமை என்றதை நிராகரித்து, பிள்ளைக்கு பெற்றோரின் பாலினத்தனமையை தீர்மானிப்பது, சிறுபான்மையின் பாலியல் தேவைக்காக, அதுவும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் பெறாத பிள்ளைக்கு. நேர்பாலினத்தில் வளரும் பிள்ளை மாறும் என்றால், அது ஊக்குவிக்கப்படாத, சார்பாக சீவப்படாத, பிள்ளையின் உண்மையான தெரிவு. இதில் வேறு பல வருங்கால விளைவுகள் சொல்லப்பட முடியாது. ஆய்வும் செய்யப்பட முடியாது. இதில் வேறு பல வருங்கால விளைவுகள் சொல்லப்பட முடியாது. ஆய்வும் செய்யப்பட முடியாது. ஏனெனில் பல பிள்ளைகள் வளரும் போடு குறைபாடுகள் பற்றி பி பிரக்ஞை இல்லை, அனால் வெளியியில், வேறு நண்பர்களோ, தெரிந்தவர்களோ என்று பழகு பொது தான் அவர்களின் குறைபாடுகள், துர்பிரயோகத்துக்கு உட்பட்டதை பற்றி உணர்கிறார்கள். பிள்ளை வளர்ந்து, தன வளர்ந்து துர்பிரோயோக (ஒரு பாலின பெடோரோடம் .ளர்ந்தது) முறை என்றால் பிள்ளைக்கு பிறப்பிலேயே அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்று ஆகி விடும். இது ஒரு உதாரணம் மாத்திரமே. நீங்கள் சொல்லுவது மிகச்சிறிய கால இடைவெளி ஆய்வை வைத்து , அந்த காலம் இல்லை என்றே சொல்லலாம் (மனித விருத்தி வரலாற்று காலத்துடன் ஒப்பிடும் போது ), ஒரு துவாரப்பார்வை ஊடக. நான் சொல்லுவது, பல பரந்துபட்ட முழு மனித வாழ்க்கை, கரிசனைகள், போன்றவற்றை உள்ளடக்கி.
  10. எதிர்பார்த்தது தான். இந்தஅல்லது இதை போன்ற ஆய்வு நான் அறிந்தது தான். இது சந்தகி சந்ததி ஆக போனால் தான் இதன் விளைவு தெரியும். எனவே இந்த ஆய்வு இப்படியான முடிவுகளுக்குத் தான் வரும் (அப்படியான பரிசோதனைக்கு ஏன் மற்றவர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும்?) சும்மா, குறுகிய கால பிள்ளை வளர்ப்பை வைத்து முடிவுக்கு வருவது, இதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று திணிப்போரம், அந்த அஜெண்டாவை பரப்ப விரும்போக்குவோரும் செய்வது. இவ்வளவு பாலின தாராளவாதம் கதைக்கும் மேற்கு பாலின தாராளவாதம் திணிப்போர் , ஏன் மேற்கு அரசு அமைப்பு சிறுபான்மை, பெரும்பான்மை என்று வைத்து உள்ளது என்பதை கதைக்க ஆயத்தம் இல்லை, சிறுபான்மைக்கு அநேகமாக குழுமிய, நிறுவன உரிமைகள் ,விடயங்களில் இடம் இல்லை. உங்களின் ( மேற்கு பாலின தாராளவாதம் திணிப்போர) லிபரல் வாதத்தை முற்றுப்புள்ளி வைக்கும் மேற்கு அரசுகளும், சமூகமும். அனால், சிறுபான்மை , பெரும்பான்மை என்று வைத்து இருக்கா விட்டால், சிறுபான்மை மிகவும் ஒடுக்கப்படும். எனவே, ஒருபாலினத்தவர் (ஒரு சிறுபான்மையாக) இருக்கலாம், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அனால், அதற்காக, எல்லா உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற விடயம், பரந்த சிறுபான்மை, பெரும்பான்மை என்ற கட்டமைப்புக்கு உள்லேயே இருக்க வேண்டும், குறிப்பாக இதை பொறுத்தவரை.
  11. ஒரு பிள்ளையை ஒருபாலினத் தம்பதி தத்தெடுத்து வளர்க்கும் போது - அந்த பிள்ளை எதிர்பாலினத்தின் தன்மை தெரியாமல் வளர்வதும், குறிப்பாக விபரம் அறியும் பராயத்தில் (formation years). ஒரு பாலினத்தினர் பற்றி வெளிப்படுத்தக்கூடாது, அறிவிக்க கூடாது என்றதும் ஒரே விளைவு, அனால் பிள்ளைக்கு தாக்கம் கூட. பிள்ளைக்கு இயற்கையாக உருவாக கூடிய பாலினத்தன்மை வேண்டும் என்றே வடிவமைக்க (shape) வேண்டும் என்றே சூழல் (ஒருபாலின பெற்றோர்) உருவாக்கப்படுகிறது. அதுவும், வேறு நேர்பாலினத்தவர் பிள்ளைக்கு ( தத்தெடுத்து வளர்க்கும் போது) சூழல் (ஒரு பாலின தத்தெடுக்கும் பெற்றோர்), பிள்ளை அதன் பாலினத் தேர்வை சா ர்பாக (ஒருபாலினப்பக்கம்) தீர்மானிக வழிவகுக்கும் சாத்தியக்கூறுகள் மிகவும் கூட. ஏனெனில் சூழல் பாலினத்தேர்வை தீர்மனைப்பதில் பங்கு வகிக்கிறது. இதை எவராவது மறுக்கட்டும் பாப்போம், ஹார்வர்ட் பேராசிரியரையும் உள்ளடக்கி. (எந்த விதமாக (surrogacy .. ) பிள்ளையை அடைந்தாலும், அது அடிப்படை இயற்கை முறையில் தானே கருத்தரிக்கிறது) (வெகுஅருமையாகவே ஒருபாலின பெண் கருவை சுமந்து பெறுவதற்கு ஆயத்தம், ஆண் தம்பதிகள் என்றால் முடியாது) பிள்ளையும் ஒருபாலினத்தை தேர்ந்து எடுத்தால், அதுக்கு சந்ததி கொடுக்கிறது யார்? சந்ததி முடிந்து போவதற்கே வாய்ப்புகள் கூட. வாதத்துக்கு, ஒருபாலினம் மிகுதியாக வளர்ந்த்து விட்டது என்றால், அதன் விளைவு முழு மனிதனும் அழிவு, அல்லர் சமநிலை நேர் பாலினத்தவர் பக்கம் திரும்பும் வரை அழிவு. ஒரு பாலினகவர் தம்பதி, சோடி எதுவாகவும் வாழட்டும். அனால், அது திருமணம் இல்லை. அது திருமணம் என்றால், ஒரே நேரத்தில் நேர்பாலினத்தவர் ஒரே நேரத்தில் பல துணைகளை கொண்டு இருப்பதும் திருமணம் என்று வரும். மற்றது, இந்த ஒருபாலினத்தவர், பாலின தாவும் தன்மை கூட. ஒரு பாலினகவர் பிள்ளை தத்தெடுக்க, வளர்க்க அனுமதிப்பது கூடாது. ஒருபாலின வேட்கையாளரை ஏற்றுக்கொள்வது வேறு. அதை திருமணம் , சந்ததி விருத்தி, கூர்ப்புடன் குழப்புவது வேறு. இது பயம் அல்ல, சொல்லி இருப்பது எல்லாமே காரண, காரியம் உள்ளது.
  12. சோதிடத்தை நம்புமாறு சொல்லவில்லை. அனால், பெரிய அரசு / அமைப்புக்கு எதிரே பெரிய தாக்குதல், இன்னொரு பெரிய அரசினால் நடத்தப்படும் கண்ணுக்கு புலப்படாத சாத்திய கூறுகள் அதிகரித்து வருகிறது.
  13. அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அனால் , பொதுவாக, சந்ததி மாற்றம். வேறு குறிப்பிட்ட கங்களும் இருக்கலாம். உங்களுடையது கருத்து. அனால், நான் சொல்லும் இளவட்டம் எப்படி வாக்களிப்பை அணுகும் என்பது யதார்த்தம். சீமானின் அரசியல் செயற்பாட்டுடன், கமலை எவ்வாறு ஒப்பிடுவது, இருவரும் ஏறத்தாழ ஒரே கொள்கைகள் வைத்து இருக்கிறார்கள் என்ற எடுகோள் வைத்தாலும். மாறாக, கமல் பிரபாகரன் விடயத்தை கையில் எடுத்தாலும் (அப்படி எடுப்பதற்கு ஓர் மரபு தேவை, சீமானிடம் மட்டுமே அது உள்ளது என்பது வேறு விடயம்) , சீமான் போல வாக்கு வராது.
  14. சீமானுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நீங்கள் சொல்வதை கூட சீமான் எதிர்பார்ப்பாக கொண்டிருக்கலாம். அனால், இளவட்டம் கணை மூடி கொண்டு சீமான் குறித்த ஒருவரின் படத்தை வைப்பதால், அவதானிக்காமல் சிந்திக்காது வாக்களிக்கும் என்பது , இவ்வட்டத்தின் தகவல், சிந்தனை, பொதுவெளிப்பார்வை போன்றவற்றை மிகவும் குறைவாக மதிப்பிடுவது. சிறு உதாரணம், உங்கள் (நானும் உள்ளடக்கம்) இளவட்ட வயதில், இப்பொது இருக்கும் தகவல், சிந்தனை, உலகத்தில் நடப்பதை கையில் இருக்கும் செல்லிப்பேசியில் கொண்டிருப்பது போன்ற வெளி இருந்ததா? இப்போது இளவட்டம் (சந்ததி Z (90 நடு - 2005 - 2010 காலத்தில் பிறந்தவர்கள்) ) பாவிக்கும் சங்கேத சொற்கள் , சந்ததி Y க்கு (80 நடு - 90 நடு காலத்தில் பிறந்தவர்கள்), கூட சிம்மசொப்பனம். (இங்கே நிலாமதி / யாயினி இணைத்து என்று நினைவு, கோப்பாய் ஆசிரிய பயிற்சி கூடத்தில். தமிழ்நாட்டில் இருந்து வந்த சிறுவர் /பதின்ம வயது உளவியலாளர் ஆற்றிய உரையை பார்க்கவும். )
  15. ஆம். இது பொதுவாக சரி, எந்த தேர்த்லிலும், ஏனெனில் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுவது சிறு வாக்கு எல்லைகளுக்கு இடையே (margin). எனவே, சடுதியாக, அதுவும் தேர்த்தலுக்கு மிக குறுகிய காலத்தில் வரும் மாற்றங்கள், வெற்றி, தோல்வி எல்லையை மாற்றிவிடக்கூடிய மிக கூடிய சாத்திய கூறுகள் இருக்கிறது. மறுவளமாக, வாக்கு வங்கி அதிகரித்து இருப்பது, சின்னத்தை மாற்றியும், வாக்களிப்பபவர்கள் ஆக குறைந்தது அவதானித் வாக்களித்து உள்ளார்கள்.
  16. பிரபாகரன் படத்தை பார்த்து இள வட்டம் வாக்கு (எந்த கட்சி என்றாலும்) போடும் என்பது - இளவட்டத்தின் இப்பொது இருக்கும் தகவல், சிந்தனை ஆழத்தையும் பரிகாசிப்பது.
  17. சொறி சிங்களத்தின் பேய்க்காட்டுதல் திட்டத்தில் இதுவும் ஒன்று. ராசமாணிக்கம் சிங்களத்தின் அடிவருடி. சுயநிர்ணய என்ற தமிழ் மக்களின் வலுவான அரசியல் உரிமையை, ஏகோபித்த அபிலாசையை, பொருளாதாரம் கொண்டு மூடுவதற்கு சிங்களம் போடும் திட்டம். இதில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழ் பொருளாதர புள்ளிகள், வாய்ப்புகழ்ச்சிக்கும், பொன்னாடைக்கும் மயங்கிவிட்டன போலும்.
  18. நாடு கடந்த அரசாங்கங்கத்தின் உறுப்பினர்கள் எவரும் இரகசியம் இல்லை யார் என்று சொல்வதில் ஏன தேவை இல்லாத ஆலாபரணம்?
  19. இதை செய்வது சொறி சிங்கள காடையர் கூட்டம் அல்ல, அது ஒரு கருவி. இந்த திட்டத்தின் தோற்ற்றுவாய், வரலாறு, தொல்பொருள் துறை. மதத்தை பொறுத்தவரையில், பௌத்தம் தமிழிரிடம் நிலைக்காது என்பது எனது திடமான நம்பிக்கை. அதன் வரலாற்று, கலாசார, சமய காரணங்களை விளக்க இது இடம் இல்லை. (சுருக்கமாக , பௌத்ததின் ஓர் கோட்பாடு இருக்கும் நிலையை (status quo) ஏற்றுக்கொள்வது , பௌத்தத்தில் தர்மம் எனப்படுவது இருக்கும் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வது . சீரமைப்புக்கு இடம் இல்லை. (சிங்களத்தின் முழு நியாதிக்கமும் இது தான்). இதுவே மிக முக்கிய காரணம், மீண்டும் சைவம் மற்றும் பிற மாதங்கள் தமிழரிடம் திருப்பி வர காரணம்) சாதி யில் கூட சிங்களத்தில் தமிழரை விட ஆழம் கூட. காரணம் பௌத்தம். தமிழரில் சாதி பிரச்சனையில் பௌத்தத்தை ஏறுகொள்வோர், தமக்கும், அவர்களின் சந்ததிக்கும் தலையில் மண்ணை அள்ளி போடுகிறார்கள் என்று அறியாத முட்டா...
  20. எல்லோருக்கும் பொதுவான பதிவு. கபிதன், அவர் கருதும் எவர், சிங்களத்தின் முகவர் என்று வெளியில் சொல்லலாம். (தோற்றப்பாடுகளை வைத்து முடிவுக்கு வருவது மிக கடினம்) வேறு பல நாடுகடன்ஹா அமைபுக்களும் இருக்கிறது எதை செய்தார்கள் என்ற கேள்வியும் இருக்கிறது. ஆனால், நாடுகடந்த எந்த அமைப்போ, இந்த சூழ்நிலையில் தேவை. நாடுகடந்த எந்த அமைப்பிலும் போட்டி, இலகுவில் தலைமை கைமாறாது, எந்த அளவு வெளிப்படை தன்மை இருந்தாலும்.
  21. செயற்பாடுகளில் (அல்லது வேறு) ஆதாரம் இருக்கிறதா?
  22. விடுதலைப் புலிகள் (சிங்கள) மக்களை குறிப்பிட்ட இடத்துக்கு செல்லுங்கள், அங்கு பாதுகாப்பு உள்ளது, தாம் தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அறிவித்து, சிங்கள மக்கள் அந்த இடத்தில கூடிய பின் ஒரு போதும் தாக்கவில்லை. விடுதலைப் புலிகள் தாக்கிய இடத்தில சிங்கள மக்கள் இருந்து கொல்லப்பட்டு இருந்தால், அது யுத்தத்தின் இயற்கையான இழப்பு. திட்டமிட்ட (இனப்) படுகொலை இல்லை. ஆனாலும், சிங்கள அரசு நடத்திய வழிந்த ஆயுத இனப்படுகொலையையும், நடத்தி வரும் கட்டமைப்பு இனப்படுகொலையையும் , சிங்கள மக்களின் இழப்புக்கும் ஒப்பீடு இல்லை முதலில் சிங்கள மக்களின் இழப்பை சிங்கள அரசோ, எந்த பொது அமைப்போ நினைவு கூரவில்லை - ஏனெனில் சிங்கள அரசுக்கோ, சிங்கள இனத்துக்கோ சிங்கள மக்களின் இழப்பு எந்த வித (சமூகம், குழுமம், இனம், மக்கள் போன்ற ) பரிமாணமும், பரிணாமும் இல்லை.
  23. இதில் ஒன்று, icc சிலவற்றை வெளிப்படுத்துவது இல்லை. குறிப்பாக, அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் குற்றசாட்டு, பிரதான குற்றச்சாட்டில் பங்கு போன்றவை. எனவே, இஸ்ரேல் அதிகாரிகளுக்கும் icc என்ன அவர்களை பற்றி வைத்து இருக்கிறது, செய்யும் என்ற நிச்சயம் அற்ற தன்மை. அனால், icc அரசியல் இல்லாமல் இதை நடத்துமா என்று பாரிய கேள்வி இருக்கிறது? ஆயினும், மேற்கு என்ன செய்யும் என்றதை பிரான்ஸ் சொல்லி இருக்கிறது. அதாவது, சந்தர்ப்பம் வந்தால், icc இன் பிடிவிறாந்தை மறுக்க இடம் இருக்கிறது என்பதை மறைமுகமாக சொல்லப்பட்டு உள்ளது. ஏற்கனவே, அரசிய தொடங்கிவிட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.