-
Posts
2405 -
Joined
-
Last visited
-
Days Won
49
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Kavi arunasalam
-
போனை பறித்த திருடனுடன் காதல் வயப்பட்ட இளம்பெண் (வீடியோ இணைப்பு)
Kavi arunasalam replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
பாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் கண்ணதாசன் இப்படி எழுதியிருப்பார், “ அவன் தான் திருடன் என்றிருந்தேன் அவனை நானும் திருடிவிட்டேன் முதல்முதல் திருடும் காரணத்தால் முழுதாய் திருட மறந்துவிட்டேன் இன்றே அவனை கைது செய்வேன் என்றும் சிறையில் வைத்திருப்பேன் விளக்கம் சொல்வதும் முடியாது விடுதலை என்பதும் கிடையாது..” -
“பள்ளிச் சிநேகிதம் எல்லாம் படலைவரைதான்” என்று ஊரில் அப்போது சொல்வார்கள். அதையும் தாண்டி இது புதுமையானது. இந்தக் காதல் கதை இதுவரை அறியாததொன்று. தோமாஸ் மக்மெக்கினும்(78) நன்ஸி ஹாம்பெல்லும் (78) அமெரிக்கக் கல்லூரி ஒன்றில் ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரிக் காலம் முடிந்த பின்னர் இருவரும் அவரவர் பார்வையில் இருந்து காணாமல் போய் தங்கள் தங்களுக்கான குடும்பங்களை அமைத்துக் கொண்டு வெவ்வேறு பாதையில் போய் விட்டார்கள். என்னதான் இருவரும் விலகி வெகு தூரம் பயணித்தாலும், காலங்கள் நீண்டுதான் போனாலும் கல்லூரி நினைவுகள் மட்டும் அவர்களுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தன. “அவள் ஒரு உற்சாகமான பெண். நிறைந்த அழகி. அவளைக் காணும் போதெல்லாம் நான் நொறுங்கிப் போவேன். அவளுடன் இருப்பதற்கு எப்போதாவது எனக்கு நேரம் தருவாளா? என கல்லூரிக் காலத்தில் நான் ஏங்கி இருக்கிறேன். ஆனால் நடந்தது வேறாக இருந்தது. இருவரும் பிரிந்துவிட்டோம்” இப்படித் தனது நினைவுகளைச் சொல்கிறார் தோமாஸ் மக்மெக்கின். அவர் மேலும் குறிப்பிடுகையில், “கலிபோர்னியாவி்ல் உள்ள எங்கள் கல்லூரியின் பழைய மாணவர்களின் 60ஆவது ஒன்று கூடலுக்கு எனக்கு நன்ஸியிடம் இருந்து ஒரு ஈமெயில் வந்திருந்தது. 63 வருடங்களுக்குப் பின்னர் அவளிடம் இருந்து வந்த தகவல் அது. “என்னைச் சந்திக்க உனக்கு விருப்பம் இருந்தால் தெரிவி, நான் உனக்கான விமான ரிக்கெற்றை அனுப்பி வைக்கிறேன்” என அவளுக்குப் பதில் ஈமெயில் அனுப்பினேன். அவள் அதற்கு ஒத்துக் கொண்டாள். என்னைத் தேடிப் பறந்து வந்தாள். விமான நிலையத்தில் அவள் முன்னால் மண்டியிட்டு, நான் எப்பொழுதும் உன்னைக் காதலித்தவன். எனக்கு வேண்டியது எல்லாம் நீதான். எப்பொழுதும் உனது காதலனாக, துணைவனாக, நண்பனாக நான் இருப்பேன். என்னை மணந்து கொள்கிறாயா? எனக் கேட்டேன். நன்ஸிக்கு, நீண்ட நேரம் யோசிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. உடனேயே சம்மதித்துவிடாள்” கண்ணதாசன் ஒரு பாட்டில் இப்படி எழுதியிருப்பார், “முழுமை பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை கூடவரும்” மண்டியிட்ட ரோமியோவைப் பார்க்க விரும்பினால் கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
- 1 reply
-
- 1
-
தெற்கு ஐரோப்பா நெருப்பின் நடுவே தவிக்கிறது. கிறீஸ் நாட்டின் ரோடோஸ் தீவில் ஏற்பட்ட தீயை அணைக்க முடியாமல் கிறீஸ் அரசு திண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆயிரக் கணக்கான உல்லாசப் பயணிகள் தற்போது பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். யேர்மனியில் இருந்து விடுமுறைக்குச் சென்ற பயணிகளைத் திருப்பி அழைத்து வரும் பணியில் TUI விமான சேவை தற்போது ஈடுபட்டிருக்கிறது. திங்கட்கிழமை நான்கு விமானங்கள் இந்த சேவையில் ஈடுபட்டன. இன்றும் அதன் சேவை தொடர்கிறது. மேலும் விடுமுறைக்கு ரோடோஸ்,கோர்பு, ஈபோயே தீவுகளுக்குச் செல்ல இருக்கும் பயணிகள், எந்தவிதக் கட்டணங்களும் இல்லாமல் தங்கள் பயணத்தை இரத்து செய்யலாம் என யேர்மனிய உல்லாசப் பயண நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. அத்துடன் ஸ்பானியா, இத்தாலி, குறோஸியா, துருக்கி ஆகிய நாடுகளிலும் தீப் பரவல்கள் இருப்பதால் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேலாக இருப்பதாகவும் உலாசப் பயண நிறுவனங்கள் எச்சரிக்கின்றன. கிறீஸ் நாட்டின் ஈபோயே தீவில்,நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளானதால், 34,27 வயதான இரு விமானிகள் உயிர் இழந்திருக்கிறார்கள்.
-
“நீங்கள் யார்?” பிறிடெகார்ட் இன் கேள்வியால் குமார் அதிர்ந்து போனான். அவன் தன் மனைவி சந்திராவைப் பார்த்தான். இமை வெட்டாமல் மெதுவாக திறந்திருந்த வாயுடன் அவளும் அதிர்ச்சியில் இருந்தாள். கேள்வி கேட்ட பிறிடெகார்ட் பதிலுக்காகக் காத்திருப்பது போன்ற பாவனையுடன் இருந்தார். ஒருவேளை பகிடி விடுகிறாரா என்று குமார் தனக்குள் நினைத்துக் கொண்டான். ஆனால் ஷோபாவில் அமர்ந்திருந்த பிறிடெகார்ட்டைப் பார்த்த போது, அவனுக்கு அப்படித் தெரியவில்லை. எப்பொழுதும் மற்றவர் மனம் கவலைப்படும் அளவுக்கு நடந்து கொள்ளாதவர். ஏதோ ஒரு தவறு இருப்பது அவனுக்குத் தெரிந்தது. “எப்பிடி இருக்கிறீங்கள் மம்மா?”நிலமையை சீராக்க குமார் முயற்சித்தான். “நீங்கள் யாரென்று இன்னும் சொல்லவில்லையே” பிறிடெகார்ட்டின் கேள்வியில் சலிப்புத் தெரிந்தது. நேற்றுக் காலையில் கூட தொலைபேசியில் இவருடன் உரையாடி இருந்தோமே! இப்பொழுது என்ன நடந்தது இவருக்கு? குமாரும் சந்திராவும் ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள். நேற்று குமார், பிறிடெகார்ட்டுடன் தொலைபேசியில் கதைக்கும் போது, “நாளைக்கு வருகிறாயா? சந்திராவும் கூட வருகிறாளா? நல்லது. நாளைக்கு மதியம் ஒரு மணிக்கு வா. நாங்கள் மதிய உணவுக்கு ரெஸ்ரோரண்டுக்குப் போகலாம்” இப்படிச் சொன்ன பிறிடெகார்ட் இப்பொழுது “நீங்கள் யார்?” என்று கேள்வி கேட்பது அவர்களுக்கு விசித்திரமாக இருந்தது. குழப்பங்களுக்கு மத்தியில் குமார் சொன்னான், “நீங்கள்தானே இன்றைக்கு மத்தியானம் ஒரு மணிக்கு வரச் சொன்னனீங்கள்” “ஓ.. நீங்கள்தானா அது. சரி வாங்கோ சாப்பிடப் போகலாம். கார் கொண்டு வந்தனீங்கள்தானே?” குமாருக்கு இப்பொழுது நிலமை என்ன என்பது மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. பிறிடெகார்ட்டை அல்ஸ்கைமர் நோய் பாதித்திருக்கிறது. நினைவுகள் அவரிடத்தில் மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்தது. மனைவி, பிள்ளைகளை நாட்டிலே விட்டு விட்டு 1984இல் தனியாக குமார் யேர்மனிக்கு வந்த போது அவன் இருந்த அகதி முகாமின் முன்னால் உள்ள வீதியில் இருந்த ஒரு வாங்கிலில் இருந்து புத்தகம் வாசிப்பது அவனது வழக்கம். அன்றும் அப்படித்தான் அவன் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். “இளைஞனே, தொந்தரவுக்கு மன்னித்துக்கொள். நான் இந்த வாங்கிலில் அமரலாமா?” ஆங்கிலத்தில் அவனிடம் கேட்டு விட்டு ஒரு மூதாட்டி கனிவான பார்வையோடு அங்கே நின்றார். “தாராளமாக உட்காருங்கள்” அவரின் கனிவான பேச்சுக்கு கண்ணியமாக குமார் பதில் தந்தான். வாங்கிலில் அமர்ந்த அந்த மூதாட்டி அவனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார். “எனது பெயர் பிறிடெகார்ட். பிறிடெகார்ட் கிளாற்சிலே (Fridegart Glatzle). நான் ட்ராம்மில் இந்த வழியாகப் பயணிக்கும் பொழுதுகளில் நீங்கள் இந்த வாங்கிலில் இருந்து புத்தகம் வாசிப்பதை பல தடவைகள் பார்த்திருக்கிறேன்” குமார் சிரித்துக் கொண்டே தன்னை அறிமுகம் செய்து கொண்டான். “புத்தகங்கள் வாசிப்பதற்கேற்ற இடம் இதுவல்லவே. பூங்காவில் அமைதியான இடத்தில் இருந்து வாசிக்கலாம். இல்லை என்றால் வாசிகசாலைக்குப் போகலாம்” “முன்னே இருக்கிற அகதி முகாமில்தான் நான் இருக்கிறேன். பொழுது போகேல்லை.. ” யேர்மனியர் ஒருவர் தன்னுடன் உரையாடுவதில் அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சிறிலங்காவை விட்டு யேர்மனிக்கு தான் புலம் பெயர்ந்த விபரத்தை குமார் அவருக்குச் சொன்னான். பிறிடெகார்ட்டும் தன் பங்குக்கு, இரண்டாவது உலக யுத்தத்தில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட போர் விமானியான துணைவனை இழந்தது, உணவுக்காக எழுபது கிலோ மீற்றர் தூரம் சைக்கிளில் பயணித்தது, பிரான்ஸ், அமெரிக்க இராணுவ வீரர்களிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க எப்பொழுதும் அழுக்காக இருப்பது, அழுகிய உருளைக் கிழங்கை உடலில் பூசி அவர்கள் நெருங்கி வராமல் பார்த்துக் கொள்வது என்று நிறையவே சொல்ல ஆரம்பித்தார். “அகதி வாழ்க்கை இலகுவானதல்ல. பலவற்றை இழந்துதான் அந்த நிலமை வருகிறது. உங்களை நான் ஒருமையில் அழைக்கலாமா?” “அழையுங்கள். உங்களைப் பார்க்கும் போது எனது தாய் நினைவுக்கு வருகிறார்” “குமார், நீ ஒரு அகதி. உனது தனிமை.. இதை எல்லாம் ட்ராம்மில் நான் பயணிக்கும் போதே ஓரளவு கணித்திருந்தேன். இன்று உன்னுடன் கதைத்து உனக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்ற நோக்கத்துடனேயே இங்கே வந்திருக்கிறேன்” நாட்டில் இருக்கும் மனைவி பிள்ளைகளுடன் தொலைபேசியில் கதைக்க வாய்ப்பில்லை. கடிதம் எழுதிப் போட்டால் பதில் வருவதற்கு ஒரு மாதமாகும். சில வேளைகளில் அனுப்பப்படும் கடிதங்கள் போய்ச் சேருமா என்ற கேள்வியும் இருக்கும். சண்டைகள் நடுவே அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாத ஒரு அந்தரமான நிலை. இந்த நிலையில் பிறிடெகார்ட்டின் பேச்சும் அவர் தானாக அவனுக்கு உதவ வந்ததும் குமாருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவனது மனைவியும் பிள்ளைகளும் யேர்மனிக்கு வருவதற்கு பிறிடெகார்ட்தான் உதவிகள் செய்தார். அகதிக்கான அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் வேலை நிமித்தமாக குமார் வேறு நகரத்துக்கு குடும்பத்துடன் போய் விட்டான். ஆனாலும் பிறிடெகார்ட் குமாரின் குடும்பத்துடன் தொடர்பிலேயே இருந்தார். அடிக்கடி தொலைபேசியில் கதைத்துக் கொள்ளும் பிறிடெகார்ட் 150 கிலோ மீற்றர் ரயிலில் பயணித்து வருடத்துக்கு ஒரு முறையேனும் குமார் வீட்டுக்கு வந்து ஒரு வாரம் தங்கிப் போவார். அப்படி ஒரு தடவை குமார் வீட்டில் அவர் தங்கி இருந்த போது, “குமார் இங்கே வா. உன் மகள் என்னைப் பார்த்து என்ன சொன்னாள் தெரியுமா?” ஏதோ என்னவோ என்று குமார் ஓடி வந்த போது பிறிடெகார்ட் மலர்ந்த முகத்தோடு இருந்தார். “உன் மகள் என்னை ‘ஓமா’ (பாட்டி) என அழைத்தாள்” பிறிடெகார்ட் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தார். “எனக்கு ஒரு இனிய குடும்பம் கிடைத்திருக்கிறது” பிறிடெகார்ட் சந்தோசமாக இருந்தார். குமாரது குடும்பத்தில் பிறிடெகார்ட்டும் உறுப்பினராகிப் போனார். வேலைகள், வீடு மாற்றம் மற்றும் குடும்பத் தேவைகள் மத்தியில் வழமையாக இளவேனிற் காலத்தில் தங்களிடம் வரும் பிறிடெகார்ட் அந்த வருடம் வராமல் போனதை குமார் கவனிக்கவில்லை. நேற்று பிறிடெகார்ட்டின் நினைவு வந்து தொலைபேசி அழைப்பை எடுத்துக் கதைத்தால், தன்னால் இப்பொழுது பயணங்களை மேற்கொள்ள முடியாதென்றும் குமாருக்கு நேரமிருந்தால் தன்னை வந்து பார்க்கும்படியும் அவரிடம் இருந்து பதில் வந்தது. இன்று குமார் தனது மனைவியுடன் வந்து பார்த்தால் “நீங்கள் யார்?” என்ற கேள்வி அவரிடம் இருந்து வருகிறது. குமார், சந்திரா இருவரது குரல்களையும் தொலைபேசியில் கேட்கும் போது இனம் காணும் பிறிடெகார்ட்டுக்கு அவர்களது முகங்கள் மறந்து போயிற்று. நேரில் கதைக்கும் போதும் குரல்களை அவரால் இனம் காண முடியவில்லை. அன்றைய மதிய உணவை, ரெஸ்ரோரண்டில் அந்நியர்கள் இருவருடன் இருந்து உண்ட உணர்வு கூட பிறிடெகார்ட்டுக்கு வந்திருக்கலாம். பிறிடெகார்ட்டின் வீட்டுக்கு திரும்ப வந்த போது, “எனக்கு களைப்பாக இருக்கிறது. கொஞ்சம் நித்திரை கொள்ளப் போகிறேன்” என்றார். புறப்படச் சொல்கிறார் என்பதை குமாரும் சந்திராவும் புரிந்து கொண்டார்கள். அவர்கள் விடை பெறும்போது, “காரிலே பயணிக்கப் போகிறீர்கள். அவசரம் வேண்டாம்.நிதானமாக காரைச் செலுத்துங்கள். பெற்றோலுக்கு பணம் தரவா?” பிறிடெகார்ட் எந்தவித பாவங்களையும் முகத்தில் காட்டாமல் கேட்டார். அல்ஸ்கைமர் வந்தாலும் அவரது குணம் மட்டும் மாறவில்லை. உண்மைச் சம்பவம். Fridegart Glatzle ஒரு கலைஞர். அவரது படைப்புகள் இணைய விற்பனைத்தளத்தில் இருக்கிறது. https://ta.wikipedia.org/wiki/பிறீடெகார்ட்_கிளாற்சிலே
-
நானும் அதை ரசித்தேன். பாட்டிகள் ஒப்பாரிக்கு இடைவேளை கேட்க, பசுபதி கடுப்பாக… நன்றாக காட்சிப் படுதப்பட்டிருந்தன. ஆனாலும் முடிவில் சினிமாத்தனம் வந்து எட்டிப் பார்ப்பது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. பொறுமை இருந்தால் அஸ்வின்ஸ் பாருங்கள். Netflix இல் இருக்கிறது.
-
ஐரோப்பிய நாடுகளில் இது சாதாரணம். ஆனால் மலேசியாவில் தண்டனைக்குரிய குற்றம். ஓரினச்சேர்க்கை மலேசியாவில் தடைசெய்யப்பட்ட ஒன்று. அதை மீறுவோருக்கு 20 வருடங்கள் அளவிலான சிறைத்தண்டனை அல்லதுகசை அடிகள் வழங்கப்படலாம். பிரித்தானியாவைச் சேர்ந்த ‘1975 இசைக்குழு’ அந்தச் சட்டத்தை இப்பொழுது மீறி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை, மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் Good Vibes festival நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின்ஆரம்பத்திலேயே 1975 இசைக்குழுவின் பாடகரான Matty Healy (34), மலேசியாவில் உள்ள LGBTQ ( Lesbian, Gay, Bisexual, Transgendered and Questioning) சட்டத்தைப் பற்றி தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். நிகழ்ச்சியின் நடுவே பாடகர் Healy மேடையில் வைத்து Ross MacDonald (34)ஐ முத்தமிட பார்வையாளர்கள் ஆர்ப்பரித்து, கைதட்டி வரவேற்றதுடன் அதை உடனடியாக சமூகவலைத்தளங்களிலும் பகிர்ந்து கொண்டார்கள். முத்தத்தின் பின்னர் இசைக்குழுவினர் மேடையை விட்டு உள்ளே சென்றுவிட்டனர். சிறிது நேரத்துக்குப் பின்னர் பாடகர் Healy மட்டும்மேடைக்கு வந்து, தங்களது இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்த த் தடை இருப்பதாகக் கூறி பார்வையாளர்களுக்குத் தங்களதுவருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். உண்மையில் Good Vibes Festival நிகழ்ச்சி, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களும் நடைபெற இருந்தது. ஆனால் மலேசியஅரசாங்கம், இந்த நிகழ்வால் முழு நிகழ்ச்சிகளையும் இடை நிறுத்தி விட்டது. வேறு பிற இசைக்குழுக்கள் பங்குபற்ற இருந்த மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டதற்கு Healyம் அவரது இசைக்குழுவுமே காரணம் எனப் பல கலைஞர்கள் குற்றம் சுமத்தி தங்கள் அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்கள். மலேசியா நாட்டுச் சட்டத்தை மதிக்காதது, எந்தவித சமரசத்திற்கும் ஏற்றுக் கொள்ளப்படாததும், நாகரீகமற்றதுமான ஒரு செயல்என மலேசிய அமைச்சர் Fahmi Fadzil (42) தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இசைக்குழுவின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இசைக்குழுவானதுதண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மலேசியாவை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. தைவான்,இந்தோனேசியா ஆகிய இடங்களில் நடைபெற இருந்த 1975 இசைக்குழுவின் நிகழ்ச்சிகள் நடைபெறாது என இப்பொழுது அறிவித்திருக்கிறார்கள். பாடகர் Healy மேடையில் வைத்து முத்தம் தந்து பரபரப்பு ஏற்படுத்துவது இது முதல் தடவை அல்ல, முன்னரும் 2019இல் ஐக்கிய அரபுநாட்டிலும் மேடையில் வைத்து ஒரு ஆண் இரசிகருக்கு முத்தம் கொடுத்து சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
-
நல்லதொரு திரைப்படம். பசுபதி, ரோகிணி இருவரது நடிப்பும் அருமை
-
இரண்டு வார்த்தைகள் ஒரு 13 வயதுச் சிறுமியைத் தன்னைத் துன்புறுத்துவனிடம் இருந்து காப்பாற்றி இருக்கிறது. கலிபோர்னியாவிலுள்ள Long Beach நகரத்தில், ஒரு சலவை நிலையத்துக்கு முன்னால் நிறுத்தி இருந்த ஒரு காரில், சில நாட்களுக்கு முன்னால்கடத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்ட சிறுமி ஒருத்தி இருந்தாள். அப்பொழுது அவளைக் கடத்தியவன் சலவை நிலையத்தில் இருந்திருக்கிறான். தனியாகக் காரில் இருந்த அந்தச் சிறுமி ஒரு கிழிந்த பேப்பர்த் துண்டில் „Help me“ என்று எழுதி, அதைக் கார் கண்ணாடியில் அழுத்தி வெளியேதெரியும்படி காட்டினாள். அதைப் பார்த்த பாதசாரிகள் உடனடியாகப் பொலிஸுக்கு தகவல் தந்திருக்கிறார்கள். பொலிஸார் கார் தரித்திருந்த இடத்திற்கு வந்த போது, காரினுள் இருந்து சிறுமி Help me என்று தனது வாயால் சாடை காட்டுவதை அவதானித்துஉடனடியாகச் சிறுமியை மீட்டது மட்டுமல்லாமல் காரின் முன்னால் நின்ற 61 வயதான அவளைக் கடத்தியவனையும் கைது செய்திருக்கிறார்கள். அந்தச் சிறுமி, அவளது இருப்பிடமான Texas இல் உள்ள San Antonio வில் இருந்து. துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டிருக்கிறாள். இப்பொழுதுஅவள் 2000 கிலோ மீற்றருக்கு அப்பால் கலிபோர்னியாவில் மீட்கப் பட்டிருக்கிறாள் .பொலிஸாரின் விசாரணையில் San Antonio ஊரில் இருந்து அவளை ப் பல தடவைகள் பாலியல் வன்முறைக்கு அவன் உட்படுத்தி இருக்கிறான் என்பதுதெரியவந்தது. பொது மக்களின் அவசர நடவடிக்கை ஒரு சிறுமியைக் காப்பாற்றி இருக்கிறது. இப்படியான செயல்கள் தொடரவேண்டும் அது மக்களை ப் பாதுகாக்கமிகவும் அவசியமானது என Long Beach பொலிஸ் அதிகாரி மக்களுக்கு நன்றி சொன்னார்.
-
ஜேர்மனியின் தலைநகரில் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வந்த சிங்கம்
Kavi arunasalam replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
யேர்மனியின் தலைநகரம் பேர்லினில் சிங்கம் ஒன்று பொதுவெளியில் நிற்பதாக நேற்று செய்தி ஒன்று வர, அது தலைப்புச் செய்தியாக உலகெங்கும் வந்திருந்தது. இன்று அந்த சிங்க வேட்டை நிறுத்தப்பட்டிருக்கிறது என அறிவித்திருக்கிறார்கள்.தங்களால் தேடப்பட்டது சிங்கமாக இருக்க வாய்ப்பில்லை. மாறாக அது ஒரு காட்டுப் பன்றியாக இருக்க வேண்டும் என பேர்லின் மேயர் இப்பொழுது அறிவித்திருக்கிறார். தேடுதல் பணியில் 220 பொலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கூடவே ட்ரோனன், உலங்கு வானூர்திகள், கவச வாகனம் என பல பயன்படுத்தப் பட்டிருந்தன. இவற்றுக்கான செலவுகள் மட்டும் 100,000 யூரோக்கள் வரும் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் 100,000 ‘அம்போ’. -
மழை பெய்து வெள்ளம் வந்தால் அதை கடலுக்குள் கொண்டு சேர்ப்பதற்கான வாய்க்கால் எங்கள் ஊரிலே இருந்தது. எங்கள் ஊர் கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்த மதவின் கீழாக அந்த வெள்ளவாய்க்கால் வடிவமைக்கப்பட்டிருந்தது. கனமழை பெய்தால் அந்த வெள்ளவாய்க்காலில் வெள்ளம் கரைபுரளும். பலவிதமான பொருட்கள் அந்த வெள்ளத்தில் மிதந்து வரும். கூடைகள், பெட்டிகள், பாய்கள் என்று ஏகப்பட்ட பொருட்களுடன் சிலவேளைகளில் கோழிகள், பாம்புகளைக் கூட அந்த வெள்ள ஓட்டத்தில் காணலாம். கோடைகளில் தண்ணீர் இன்றி வாய்க்கால் காய்ந்திருக்கும். உடைந்த போத்தல் துண்டுகள், கற்கள் என பல குப்பைகள் அங்கே குவிந்திருக்கும். வெள்ளவாய்காலின் மேலே இருந்த சந்தி மதவை எப்பொழுது பார்த்தாலும் அழுக்காகவே தெரியும். எங்கள் ஊர் இளம் காளையர்கள் அதாவது கட்டுக்குள்ளே அடங்காத காளைகள் ஒரு காலை மடித்து வைத்து மதிலுக்கு முண்டு கொடுத்துக் கொண்டும் மறு காலை நிலத்தில் ஊன்றியும் ஆட்சி செய்யும் பீடம் அது. காலையில் எட்டில் இருந்து ஒன்பது மணிக்கும், பின்னர் மாலை நான்கு மணியில் இருந்தும் அந்த மதவில் காளைகளின்அரச தர்பார் அமர்க்களமாக இருக்கும். ஊரில் இருந்த இரண்டு பிரதான பெண்கள் பாடசாலைகளே அவர்களது அரச தர்பாருக்கான காரணிகள். காலையில் பாடசாலை கடைசி பஸ் போனதன் பின்னர் காளையர் கூட்டம் மெதுவாக கிழக்கு நோக்கி சந்தாதோட்டத்திற்கோ, அல்லது மேற்கு நோக்கி கூவிலுக்கோ நகரும் . சந்தாதோட்டமும், கூவிலும் கள்ளுக்குப் பேர்போன எங்கள் ஊர் கிராமங்கள். மாலை நான்கு மணிக்கு மீண்டும் மதவில் களை கட்டும் காளையர்களின் தர்பார் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கால நேரத்தை முடிவு செய்து கொள்ளும். கருத்துக்களில் உடன்பாடு ஏற்படாமல் அவர்களுக்குள் வாக்குவாதங்களுடன் சிலவேளைகளில் அடிதடிகளும் அங்கே இடம் பெறுவதும் உண்டு. என்னதான் வாக்குவாதங்களும், கைகலப்புகளும் அவர்களுக்குள் ஏற்பட்டாலும் அடுத்த நாள் காலையில் எதுவுமே நடக்காத மாதிரி ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் மதவில் இருந்து கதைத்துக் கொண்டிருப்பார்கள். குடிகாரன் பேச்சு மட்டுமல்ல அவர்கள் சண்டையும் 'விடிஞ்சால் போச்சு' என்பதை அங்கே நான் தெரிந்து கொண்ட ஒரு உண்மை. இந்த காளையர்கள் கூட்டத்தின் முரட்டுக்காளைதான் கனகலிங்கம். அவன்தான் காளையர்களின் தளபதி. திருமணம் ஆனவன். மற்றவர்களின் காசில் குடித்துக்கொண்டும், மனைவி சமைத்துப் போட மாமியார் வீட்டில் இருந்து உண்டி நிரப்பிக் கொண்டும் உருண்டு திரண்டிருப்பான். ஊரில் இருப்பவர்கள் இவனிடம் எட்டியே நின்றிருந்தனர். பசுமாடுகள் கூட பயம் கொண்டு இவனிடம் இருந்து தள்ளியே நடந்தன. இப்படியானவனிடம் அவள் ஏன் மயங்கினாள் என்பதை இன்றுவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் பெயர் கோகிலா. பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள். ஒரு சீவல் தொழிலாளியின் மகள். அவளது சமூகத்தில் நான் அறிந்தவகையில் படித்தவர் நாகேந்திரம் மட்டும்தான். அவர், கபொத சதாரணதரத்தில் வெற்றிகரமான சித்திகளைப் பெற்றுவிட்டு சீவல் தொழிலையே செய்ய ஆரம்பித்தார். அன்றைய காலத்தில் கபொத சதாரணதரத்துடனேயே அரச வேலைக்குள் சுலபமாக நுளைந்து விடலாம். ஆனால் நாகேந்திரமோ தங்கள் குலத் தொழிலையே செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவரிடமே இதைப் பற்றிக் கேட்டேன். சிரித்துக் கொண்டே சொன்னார், 'அரச வேலை எண்டாலும் சுத்தி நிக்கிறவையளுக்கு கூனிக் குறுகி வளைஞ்சு நிக்கோணும். பள்ளிக்கூடத்திலை நான் இருக்கிற வாங்கிலிலை இருக்கவே சங்கடப்படுறாங்கள். வேலை இடத்தில என்ன மரியாதை தருவாங்கள் என்று யோசிச்சுப் பார்த்தன்.குலத் தொழிலுக்கே வந்திட்டன். எனக்கு இது பரவாயில்லை" அன்று இப்படியான ஒரு நிலமை இருந்தும் தனது மகளை படிக்க வைத்துப் பார்க்க கோகிலாவின் தந்தை கனகனுக்கு ஆசை வந்திருக்க வேண்டும். அல்லது படித்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கோகிலாவுக்கு வந்திருக்க வேண்டும். அவர்களின் அந்த உந்துதல்தான் இன்று கோகிலாவை பத்தாவது வகுப்புவரை கொண்டுவந்து சேர்த்திருக்க வேண்டும். கோகிலாவுடன் இணைந்து பாடசாலைக்குச் செல்ல மேட்டுக்குடி விரும்பவில்லை என்றே நினைக்கிறேன் அவள் தனியாகத்தான் பாடசாலைக்குச் செல்வாள். அதுவே அவளுக்கு பின்னாளில் தொல்லையாகிப் போனது. பாடசாலை கடைசி பஸ் போன பின் கூவிலுக்கு கள்ளு குடிக்கச் செல்லும் காளையர் கூட்டத்தினரின் கண்களில் கோகிலா அடிக்கடி தனியாகத் தென்பட, காளையர் கூட்டம் சந்தாதோட்டப் பக்கம் கள்ளுக்குப் போவதை விடுத்து கூவிலுக்குப் போவதையே வாடிக்கையாக்கி விட்டது. கோகிலாவை முன்னே விட்டு இவர்கள் பின்னாலேயே போவார்கள். அவள் மருண்டு அடிக்கடி திரும்பிப் பார்க்க "அவள் என்னைத்தான் பார்கிறாள்" என்று காளையர்களுக்குள் பிரச்சனையாகிப் போனது. தலைவனுக்குத்தானே பலம் அதிகம். கனகலிங்கத்துடன் பிரச்சனையை வளர்த்துக் கொள்ள மற்றவர்கள் விரும்பவில்லை. ஆளாளுக்கு ஒதுங்கிக் கொண்டார்கள். இப்பொழுது சந்தி மதவில் கனகலிங்கமும் அவனது வலது கையான சிவாவும்தான் எஞ்சி இருந்தார்கள். கூவிலுக்கு போகும் பாதையிலிருந்து வலது பக்கம் திரும்பும் பாதையில் போனால் பாடசாலையின் பின்புற வாசலால் பாடசாலைக்குப் போய்விடலாம். ஆனால் கோகிலாவின் பாதை இப்பொழுது மாறிப் போனது. அவள் வலது பக்கம் திரும்பாமல் நேர் பாதையால் போனாள். அந்தப் பாதையில்தான் கனகலிங்கம் தனது ஆட்சிக்குள் ஒரு பாழடைந்த வீட்டை வைத்திருந்தான். அந்த வீட்டின் காவலனாக சிவா இருந்தான். பாடசாலை பதிவேட்டில் கோகிலாவின் வரவு குறைந்து கொண்டு போனது. இதை பாடசாலை நிர்வாகம் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஆகவே கனகனுக்கு இந்த விடயத்தை தெரியப்படுத்த ஆட்களில்லை. ஆனாலும் கனகனுக்கு ஒருநாள் எப்படியோ விடயம் தெரிந்து போயிற்று. அதன் பிறகு கோகிலாவுக்கு வீடே சிறையானது. காளையர்களுக்கு இது ஒரு சம்பவம் மட்டுமே. எதுவுமே நடக்காததைப் போல கனகலிங்கமும் சிவாவும் சந்தி மதவில் இருந்து வழமையான தங்களது வேலைகளைத் தொடர்ந்தார்கள். மேட்டுக்குடி அதனோடு சேர்ந்து மெகா குடி, சண்டியர் என பல கவசங்கள் அவர்களை காத்து நின்றன. தங்களை யாருமே எதுவும் கேட்க முடியாது,அசைக்க முடியாது என்ற அவர்களின் இறுமாப்பு ஒருநாள் இத்துப்போனது. அன்று சனிக்கிழமை. சந்தி மதவில் சிவா மட்டுமே தனியாக அமர்ந்திருந்தான். மதவின் எதிர்த்திசையில் இருந்த நாகலிங்கம் தேனீர் கடையின் முன்பாக இருந்த தூணில் தனது சைக்கிளை சாத்தி வைத்து விட்டு மடித்துக் கட்டிய சாரத்துடன் நாகேந்திரம் கைகட்டி நின்றார். அவர் கனகலிங்கத்தைத்தான் எதிர்பார்த்து நிற்கின்றார் என்கிற விடயம் மதவில் அமர்ந்திருந்த சிவாவின் சிற்றறிவுக்கு புரியாமல் போயிற்று. நேரம் போனதே தவிர கனகலிங்கம் சந்திக்கு அன்று வரவேயில்லை. காத்திருந்து சலித்துப்போன நாகேந்திரம், சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் மதவின் முன் நிறுத்தினார். சைக்கிளில் இருந்தபடியே இடது காலை மதவில் ஊன்றி, "சைக்கிளிலே ஏறு" என்றார். சிவா இதை எதிர்பார்க்கவில்லை. சைக்கிளின் முன் சில்லு அவனது இடது புறமும் நாகேந்திரத்தின் கால் வலது புறமும் அவனை அசைய விடவில்லை. போதாதற்கு நாகேந்திரம் தனது மடியில் சொருகி இருந்த பாளை சீவும் கத்தி சிவாவுக்கு மேலும் பயத்தை கூட்டியிருக்கலாம். மதவில் இருந்து வெள்ள வாய்காலுக்குள் குதித்து ஓடிவிடலாம் என்ற அவனது எண்ணத்தை வாயக்காலில், வெளியே நீட்டிக் கொண்டிருந்த உடைந்த போத்தல் துண்டுகள் தடுத்திருக்கும். அத்தோடு சேர்த்து காலையில் சில்வா பேக்கரியில் பாண் வாங்க வந்தவர்களின் பார்வைகள் சந்தி மதவுப் பக்கமாகத் திரும்பியிருந்ததால் அது தனியாக சண்டியர் சிவாவிற்கு சங்கடத்தை அதிகரித்திருந்திருக்கும். எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பாரத்திருப்பான் போலும், பேசாமல் சைக்கிளில் ஏறிக்கொண்டான். ஒரு நண்பனை ஏற்றிக்கொண்டு செல்வது போலவே நாகேந்திரம் சிவாவை சைக்கிளில் வைத்து சந்தாதோட்டம் பக்கமாக சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தார். ஆனால் சைக்கிள் பாரில் இருந்து கொண்டு எத்தனை தெய்வங்களை தனக்கு துணையாக சிவா அழைத்திருப்பான் என்பது யாருக்குமே தெரியப்போவதில்லை. அன்று பிற்பகல் இரண்டு மணியளவில் வீதியில் ஆரவாரம் கேட்டது. சந்தாதோட்டத்து ஆண்கள் எல்லாம் திரண்டு வந்து கொண்டிருந்தார்கள். ஏதோ ஊர்வலம் போகிறார்கள் என முதலில் நினைத்தேன். கொஞ்சம் கூர்ந்து பார்த்த பொழுதுதான் தெரிந்தது ஊர்வலத்தின் முன்னால் சிவா வந்து கொண்டிருந்தான். அவன் நடந்து வந்தான் என்று சொல்வது தவறு. அவன் தவழ்ந்து வந்தான் என்பதே சரியாக இருக்கும். ஆளாளுக்கு முறை வைத்து அடித்தார்கள், உதைத்தார்கள். "என்னாலே இதுக்கு மேலே நடக்க முடியாது" என்று சொன்ன சிவாவின் மடியை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து கிராமக்கோட்டுச் சந்தியில் போட்டு ஒரு கதகளி ஆடிவிட்டுப் போனார்கள். கட்டியிருந்த சாரம் கிழிந்து சண்டியர் என்ற சாயம் அழிந்து சந்தி மதவில் நீண்ட நேரம் இருந்த சிவாவை யாருமே கண்டு கொள்ளவில்லை. அந்த நிகழ்வுக்குப் பிறகு சந்தி மதவு எதுவித தொந்தரவும் இல்லாது அமைதியாக இருந்தது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்ற நகரசபையும் மதவுக்கு வெள்ளை வர்ணம் அடித்து விட்டிருந்தது. "றோட்டிலைதான் ஆம்பிளைகள் அடிச்சாங்கள். நாகேந்திரம் கொண்டே விட்டவுடனேயே அங்கையிருந்த பொம்பிளைகளெல்லாம் விளக்குமாறாலை அடிச்சாளுகள்" என்று தனது சகாக்களுக்கு சிவா சொன்னது மெதுவாக வெளியே கசிந்து கொண்டிருந்தது. இது நடந்தன் பின்னர் கனகலிங்கத்தை யாருமே காணவில்லை. ஊரை விட்டே போய்விட்டான் என்று கதை உலாவியது. ஆனால் பகல் முழுதும் தாய் வீட்டில் அடைந்து கிடந்து விட்டு இரவானதும் தனது மனைவி வீட்டுக்கு கனகலிங்கம் போய் வருவது இரகசியமாகவே இருந்தது. ஒரு மாதம் போயிருக்கும். ஒரு காலைநேரம், சந்தாதோட்டத்து குப்பை மேட்டில் பலத்த அடிகாயங்களுடன் மயக்கமாகக் கிடந்த கனகலிங்கத்தை அவனது மனைவியும், மச்சானும் சோமசெற் வாடகைக் காரில் மந்திகை ஆஸ்பத்திரிக்கு ஏற்றிக்கொண்டு போனார்கள். கிராமக் கோட்டுச் சந்தி மதவு வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து அமைதியாக இருந்தது. (ஒரு உண்மைச் சம்பவம். பெயர்களில் மட்டும் சில மாற்றங்கள்)
-
Justin, “அவர்களின் பிறப்புச் சான்றிதழில் 'சாதி' எனும் பகுதியில் 'வேடர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று பிபிசி தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. இலங்கையில், சாதி பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் இருக்கிறது என்று வெளிநாட்டுத் தமிழர்கள் தவறாக கருதக் கூடாது என்பதற்காகத்தான் அது ‘சாதி’ அல்ல ‘இனம்’ என்று இருக்க வேண்டும் என்று எழுதினேன். . ஈழத் தமிழர்களது இனப் பிரச்சினையை பிபிசி தமிழ் பெரிதாக காட்டாமல் வேறு வேறு பிரச்சினைகளை வெளி உலகுக்குத் தந்து திசை திருப்புகிறதே என்பதே எனது ஆதங்கம். “சாதிப்பாகுபாடு முக்கியமான பிரச்சினையா என்று குறவர் இனத்தவர் அல்லாதவர்கள், பாதிக்கப் படாதோர் தீர்மானிக்க இயலாது” என்ற உங்கள் கூற்றில் என்னிடம் மாற்றுக் கருத்து இல்லை. மற்றும்படி நான் தமிழர்களை சாதி வேறுபாடுகளின்றி இனமாகத்தான் பார்க்கிறேன். அவர்கள் வலி எனக்கும் தெரிகிறது.
-
Justin, ஆட்சேபணையும் உறுத்தலும் இங்கும் இருக்கிறது. நாங்கள் போராடும் போது இனமாகத்தான் போராடினோம். சாதி அப்போது இல்லை. 2009க்குப் பின்னர் மீண்டும் சிலர் சாதியை கையில் எடுத்துக் கொண்டார்கள். அந்த சிலரை மாற்றுவது என்பது இப்போதைய நிலையில் சிரமம். ஆனாலும் போராட்டக் காலத்தில் இல்லாமல் போனது போல் பின்னாளில் அது காணாமல் போகலாம். எனது ஆதங்கம் என்ன என்றால், பிபிசி தமிழ், ஈழத் தமிழர்கள் பற்றிய முக்கியமான பிரச்சனைகள விடுத்து, கவனத்தை வேறு எங்கேயோ திசை திருப்புகிறது என்பதுதான். இப்படியான செயற்பாட்டினால், ஒருவிதத்தில் ஈழத்தமிழர்களின் ஒற்றுமைக்கான நிலை கூடத் தளர்ந்து போகலாம். எது எப்படியோ, நீங்கள் குறிப்பிடபடி குறைந்த பட்சமான எனது ஆதங்கத்தை இங்கு பதிவு செய்கிறேன். தமிழ் அரசியல்வாதிகளே இலங்கை பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில், ‘சாதி’ என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறது. அது இப்போதும் உள்ளதா எனத் தெரியவில்லை. அப்படி இருக்குமாயின் உரியவர்கள் கவனத்துக்கு அதைக் கொண்டு வந்து அந்த வார்த்தைக்குப் பதிலாக முன்பிருந்தது போல் ‘இனம்’ என்று மாற்றிவிடச் சொல்லுங்கள்.
-
“யாழ்ப்பாணத்தில் சாதி பாகுபாடு எந்தளவு உள்ளது” “யாழ்ப்பாணம் சாதி வெறியின் கோட்டையா?” “யாழ்ப்பாணத்தில் நிலவும் தீவிர சாதிய பாகுபாடு - பள்ளிகளிலும் எதிரொலிக்கும் அவலம்” இவை எல்லாம் இந்த ஆண்டில் சிலரை பேட்டி கண்டு பிபிசி தமிழ் எழுதிய கட்டுரைகள். பிபிசி தமிழ், சமீபகாலமாக சாதியை வைத்து ஈழத்தவர்களை குறி பார்த்து அடித்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தில் எங்கோ ஒன்றிரண்டு நிகழ்வுகள் சாதி அடிப்படையில் நடந்திருக்கலாம். உடனேயே அதை எடுத்து ஊதி உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழருக்கு அடிப்படையான பிரச்சனைகள் பல இருந்தும் அதை எல்லாம் தாண்டி வந்து சாதியத்தை மட்டும் அது ஏன் உமிழ்கிறது? இப்பொழுது வேடுவரை துணைக்கு அழைத்து வந்திருக்கிறது. பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் race என்பதை யாரோ ஒருத்தர் ‘சாதி’ என்று மொழி பெயர்த்து வைத்திருக்கிறார். உண்மையில் அது ‘இனம்’ என்று இருந்திருக்க வேண்டும். பிபிசி தமிழ் பகுதி ஏன் இப்படி வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறது?
-
வாழ்க்கைக்கு சில வரிகள்.(படித்ததும் பகிர்ந்ததும்)
Kavi arunasalam replied to நிலாமதி's topic in கவிதைக் களம்
பூமியில்தானே இருக்கிறோம் -
கனடா, அமெரிக்கா இரண்டையும் இணைக்கும் அம்பாஸ்டர் பாலத்தை பழுது பார்க்கும் வேலையை அவர் செய்து கொண்டிருந்தார். சடுதியாக நிலை தவறி 50 மீற்றர் கீழே இருந்த Detroit ஆற்றில் விழ ஆரம்பித்தார். கனடா ஒன்ராரியோவைச் சேர்ந்த ஸ்பென்சர் கடந்த வாரம் (12.07.2023) பாலத்தைப் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது தனது பிடி தவறியதால் ஆற்றில் விழுந்து விட்டார். இதைக் கவனித்த அஞ்சல் ஊழியர்கள் உடனடியாகத் தங்களது படகை எடுத்துக் கொண்டு விபத்து நடந்த இடத்துக்குப் பயணித்தார்கள். பூங்காவில் இருந்த சுமார் 20 பேர் ஸ்பென்சர் விழுந்த இடத்தை கரையில் இருந்தே சுட்டிக் காட்டியதால், அஞ்சல் ஊழியர்கள் அவர் ஆற்றில் விழுந்த இடத்தை சுலபமாக அடையாளம் கண்டு அவரைக் காப்பாற்றித் தங்கள் படகில் ஏற்றிக் கொண்டார்கள். “ஸ்பென்சரை யார் என்று ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒரு விபத்து நடந்த போது எல்லோரும் ஒன்று சேர்ந்து அந்த முகம் தெரியாத மனிதனைக் காப்பாற்ற முயற்சித்தது மதிப்பு மிக்க ஒரு மனிதாபிமான செயல். அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்” என அஞ்சல் படகின் கப்ரன் ஷாம் குறிப்பிட்டார். 50 மீற்றர் கீழே, தண்ணீருக்குள் விழுந்ததால், ஸ்பென்சரின் உடலில் பல பாகங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த அமளியிலும், தனது துணைவி ஸெயேனேக்கு தனக்கு நடந்த விபத்தையும் தான் காப்பற்றப் பட்ட விபரத்தையும் ஸ்பென்சர் அறிவித்திருக்கிறார். “ஸ்பென்சரைக் காப்பாற்றி அவரை மீண்டும் எனக்கும் எங்களுடைய மகளுக்கும் தந்தவர்களுக்கு மிகப் பெரிய நன்றி. அவர்களின் இந்தச் செயல் பெறுமதியானது அவர்களுக்கு நன்றி மட்டும் போதாது. அவர்களைப் பாராட்ட வார்த்தைகள் கிடைக்காமல் திண்டாடுகிறேன்” என ஸெயேனே நன்றியுடன் சொல்லியுள்ளார்.
-
உண்மையில் இது அதிசயம்தான். ஒரு ஆங்கிலப் படத்துக்குத் தேவையான கதை ஒன்று அவரிடம் இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது நாயுடன் பாய்மரக் கட்டுமரத்தில் பயணித்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Tim Shaddock (51) பசிபிக் கடலில் காணாமல் போயிருந்தார். இப்பொழுது அவரும் அவரது பெல்லா என்ற நாயும் கண்டு பிடிக்கப்பட்டு ஆழ்கடலில் இருந்து காப்பாற்றப் பட்டுள்ளனர். சிட்னியை வாழ்விடமாகக் கொண்ட Tim Shaddock (51) பல வாரங்கள் கொண்ட, நீண்ட கட்டுமரக் கடல் பயணம் ஒன்றைத் திட்டமிட்டிருந்தார். அது மெக்ஸிக்கோ La Paz என்ற இடத்தில் இருந்து பிரான்சின் Polynesien வரையான 6000 கிலோ மீற்றர் கடற்பயணம். பயணம் தொடங்கிய சில கிழமைகளிலேயே புயலில் சிக்கி அவரது படகில் இருந்த எலெக்ரோனிக் கருவிகள் செயலிழந்து போனதன் பின்னால் அவரைப் பற்றிய தகவல்கள் வெளி உலகுக்குக் கிடைக்கவில்லை. "காப்பாற்றப் படுவேன்" என்று அவர் உறுதியாக நம்பி இருந்தார். கடலில் பிடித்த மீனும், சேகரிக்கப்பட்ட மழை நீரும்தான் அவருக்கும் அவரது நாயான பெல்லாவுக்கும் வாழ்வாதாரமாக இருந்திருக்கின்றன. காப்பாற்றப் பட்டதன் பின்னர், “தனிமையாகக் கடலில் நீண்ட நாட்கள் இருந்து விட்டேன். இப்பொழுது எனக்குத் தேவைப்படுவதெல்லாம் நல்ல உணவும், ஓய்வுமே” எனக் கூறியிருக்கிறார் Tim Shaddock. விமான விபத்து நடந்து 40 நாட்களுக்குப் பின்னர் அடர்ந்த காட்டில் காப்பாற்றப்பட்ட நான்கு சகோதரர்களுக்குப் பின் நடந்த ஒரு அதிசயம்தான் இப்பொழுது Tim Shaddockவும் அவரது நாயும் காப்பாற்றப்பட்டது.
-
பத்து செக்கன்கள் பிடித்துக் கொள்ளலாம் தப்பே இல்லை
Kavi arunasalam replied to Kavi arunasalam's topic in செய்தி திரட்டி
ஈழப்பிரியன், வழக்கின் பிரதி எடுக்குக் அளவுக்கு எனக்கு செல்வாக்கு இல்லை.பிபிசி இணைப்பைத் தருகிறேன். பிடிபட்டால் வீட்டுக்கு காட்டுவதென்றால் இது போதும் என்று நினைக்கிறேன் https://www.bbc.com/news/world-europe-66174352 -
இத்தாலியில், 2022 ஏப்ரலில் ஒருநாள் 17வயது மாணவி ஒருத்தி தனது நண்பியுடன் படிக்கட்டில் வகுப்பறைக்குச் சென்று கொண்டிருக்கும் போது தனது காற்சட்டையின் ஊடாகப் பின்புறத்தில் யாரோ தடவுவதை உணர்ந்திருக்கிறாள். திரும்பிப் பார்த்தால் அந்த வேலையைச் செய்தவர் கல்லூரிப் பராமரிப்பாளர். இந்தப் பிரச்சினை பெரிதாகி ரோம் நகர நீதிமன்றத்துக்குப் போனது. “நான் சும்மா வேடிக்கையாகத்தான் அதுவும் பத்து செகண்டுகள் கூட வராது தட்டி பார்த்தேன். அதுவும் அவர்கள் சொல்வது போல் காற்சட்டையின் உட்புறம் அல்ல, வெளிப்புறம்” என்று கல்லூரிப் பராமரிப்பாளர் தன் தரப்பில் சொல்லியிருக்கிறார். “10 செக்கன்கள் பிடிப்பதைத் தவறாகப் பார்க்க முடியாது” என நீதிபதி பாடசாலை பராமரிப்பவரை இந்த வாரம் வழக்கில் இருந்து விடுவித்திருக்கிறார். நீதிபதியின் தீர்ப்பை விமரசித்து, இந்த விவகாரம் இப்பொழுது சமூகவலைத் தளங்களில் பலரால் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.. https://twitter.com/MKWilliamsRome/status/1679476693868716033