-
Posts
2405 -
Joined
-
Last visited
-
Days Won
49
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Kavi arunasalam
-
“நான் ஒரு சேரி வாழ் பெண் என்றே எல்லோரும் சொல்கிறார்கள். ஆனாலும் நான் எனது வாழ்க்கையை விரும்புகிறேன். இப்பொழுது நான் ஒரு மொடல் ஆக இருக்கிறேன். ஒருநாள் நான் சுப்பர் மொடலாக வருவேன். இன்று நான் மொடலாக இருப்பதால்தான் எனது குடும்பம் மூன்று வேளையும் சாப்பிட என்னால் உதவ முடிகிறது” இப்படிச் சொல்கிறார் மும்பையைச் சேர்ந்த மலேஸா ஹார்வா (15) (Maleesha Kharwa) அமெரிக்காவைச் சேர்ந்த ரொபேர்ட் கொப்மன் (Robert Hoffman) ஒரு இசை அல்பத்தை உருவாக்குவதற்காக 2020இல் இந்தியா வந்திருந்தார். அவர் உருவாக்க இருந்த இசை அல்பத்துக்கு சேரியில் வாழும் ஒரு சிறுமி தேவைப்பட்டாள். மும்பை சேரிக் குடிசை வாழ் சிறுமியைத் தேடிய போது அவரால் கண்டு பிடிக்கப் பட்டவள் தான் மலேஸா. அப்பொழுது அவள் 12 வயதுச் சிறுமி. “மும்பையின் நடுப்பகுதியில், தெருக்களில் அவள் வசிக்கிறாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை, இன்னும் யாரும் அவளைக் கண்டுபிடிக்கவில்லை. இதற்கான காரணமாக, கருமையான தோலை அழகற்றதாகப் பார்ப்பதுதான் இந்திய க் கலாச்சாரம் என்பது எனக்குப் புரிந்தது.ஆனால் சர்வதேச அழகுத் துறை அவளை வித்தியாசமாகப் பார்க்கும் என்பதை நான் உறுதியாக அறிவேன்” இப்படிச் சொல்கிறார் ரொபேர்ட் கொப்மன். கோவிட் தொற்றுப் பரவல் காரணமாக தனது இசை அல்பத்தை இடை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு வந்து தனிமையில் இருந்த போதுதான், மலேஸாவுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ரொபேர்ட் கொப்மனுக்கு வந்தது. மலேஸாவின் தந்தையின் அனுமதியுடன் அவர் இன்ஸ்டாகிராமில் மலேஸாவின் கதையை பகிர்ந்து கொண்டார். அந்தக் கதை பலருக்குப் பிடித்துப் போக மலேஸா வெளிச்சத்துக்கு வரத் தொடங்கினாள். ‘சேரி இளவரசி’ என்ற பட்டத்துடன் இன்ஸ்டாகிராமில் இன்று பலர் அவளைத் தொடர்கிறார்கள். பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வரும் விளம்பரப் படங்களில் இப்பொழுது மலேஸா இருக்கிறாள். மலேஸாவின் சிறு வயதிலேயே அவளது தாய் இறந்து போனதன் பின்னர் தனது தம்பி, தந்தையுடன் சேரிக் குடிசையிலேயே அவள் வளர்ந்தாள். சேரியில் அவள் வாழ்ந்த போது உணவுக்காக, அவளது சின்னக் குடும்பம் மிகவும் சிரமப்பட்டது. நகரசபை, சேரிக் குடிசைகளை அவ்வப்போது அகற்றும் போது அவர்களது குடிசையும் பல தடவை அழிந்து போக வீதியிலேயே கேட்பாரற்று நின்றிருக்கிறார்கள். இன்று நிலைமை மாறி இருக்கிறது. மோடலிங் வேலையின் மூலம் கிடைத்த பணத்தில் மும்பையில் ஒரு வீட்டில் ஒரு அறையை மட்டும் மலேஸா வாடகைக்கு எடுத்திருக்கிறாள். "முன்பு எங்களிடம் மின்சாரம் இல்லை, நாங்கள் தண்ணீர் எடுக்க வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் இப்போது எங்களுக்கு மின்சார இணைப்பு உள்ளது, மின்சார விசிறி இருக்கிறது எங்களுக்கு குழாய் தண்ணீர் கிடைக்கிறது ,எங்கள் குடிசைகளை இடித்து விடுவார்கள் என்ற பயம் இல்லை, எங்கள் தலைக்கு மேல் பாதுகாப்பான கூரை இருக்கிறது. என் தந்தை என்னை நினைத்து பெருமைப்படுகிறார்” என்று ஒரு பத்திரிகை நேர்காணலில் மலேஸா தெரிவித்திருக்கிறாள். மொடலிங் தொழில் நிரந்தரமானது அல்ல. அது ஒரு ஆளை உச்சத்துக்கும் கொண்டு போகும் அதே நேரம் தரத்தைக் குறைத்து கீழே தள்ளியும் விடும் என்பது மலேஸாவுக்குத் தெரிந்திருக்கிறது. வாழ்க்கையில் கல்வி எப்போதும் முதலிடத்திலேயே இருக்கும் என்பதை அவள் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறாள். அதனால்தான் தன் படிப்பு நேரம் தவிர்ந்த பொழுதுகளில் மட்டுமே அவள் மொடலிங் செய்கிறாள். பல விளம்பரங்களில் மலேஸா தோன்றினாலும், இயற்கையாக இருப்பதுதான் அழகாக இருக்கிறது என்கிறாள். “நான் எல்லாவற்றிலும் அழகைப் பார்க்கிறேன். பளபளப்பான தோல் மட்டுமே அழகாக இருக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். அந்த நினைப்பை நான் தவறு என்றே சொல்வேன். அழகான முகங்கள் மேலும் அழகாக இருக்க வேண்டுமானால், மனம் மிக அழகாக இருப்பது முக்கியம். நான் என் நிறத்தை விரும்புகிறேன் மற்றும் சரியானதாக உணர்கிறேன். பெண்கள் பின்பற்ற வேண்டிய உண்மையான விதி என்று எதுவுமே இல்லை என்ற செய்தியை என்னால் பரப்ப முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்று மலேஸா சொல்கிறாள். "முடியாது என்று எதுவும் இல்லை என்பதற்கு எனது பயணம் சாட்சி. நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்." என்று சொல்லும் மலேஸாவைப் பல படங்களில் பார்க்க வேண்டுமானால் Instagram photo:Instagram
-
பஞ்சாராயம் நான் குடித்ததேயில்லை. உண்மையிலேயே அப்படி ஒன்று இருக்கிறதா?
-
எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி திரைப்படம்தான் கே.ஏ.தங்கவேலுவுக்கும் முதல்படம். “இன்னைக்கு உன்னை ‘சூட்’ பண்ணப் போறோம்” என்று இயக்குனர் டங்கன் கே.ஏ.தங்கவேலுவிடம் சொன்னதும் இவர் பதறிப் பயந்து என்.எஸ்.கிருஸ்ணனிடம் ஓடிப் போய் “அண்ணே, என்னை சுடப் போறாங்களா?” என்று அழுதாராம். “ பைத்தியக்காரா! உன்னைப் படம் பிடிக்கப் போறாங்களடா” என்று என்.எஸ்.கே விளக்கம் சொல்லி அவரைச் சமாதானம் செய்தாராம். இந்தச் சம்பவம் நடந்தது 1936இல். இந்தச் சம்பவத்தை எனக்கு நினைவூட்டியது இந்தச் செய்தி. கால்பந்தாட்ட வீரரான சுப்பர் ஸ்ரார் ஏர்லிங் கார்லாண்ட் (23) இறந்து விட்டதாக நோர்வே பத்திரிகை Verdens Gang சமீபத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டது. இந்தச் செய்தி உடனடியாக, பரவலாக எல்லா இடமும் போய்ச் சேர்ந்து விட்டது. ஆனால் அது ஒரு பாரிய தவறான செய்தியாகும். எர்லிங் ஹாலண்டை வைத்து தனித்துவமான புகைப்படங்களை புகைப்படக் கலைஞர் டேவிட் யாரோவ் (David Yarrow) எடுத்ததை ( Erling Haaland was shot on the estate of the billionaire Arne Fredly in Lysaker) தவறுதலாகப் புரிந்து கொண்டு, Verdens Gang பத்திரிகை அதைச் செய்தியாக வெளியிட சலசலப்பு ஏற்பட்டு விட்டது. இப்படியான தவறு எப்படி நிகழ்ந்தது என்று பார்த்தால், மொழி பெயர்ப்பில்தான் தவறு நடந்தது எனத் தெரிய வந்திருக்கிறது. Verdens Gang (VG) பத்திரிகை சில மாதங்களாக artificial intelligence (AI)ஐப் பாவித்து வருகிறது. அதனால்தான் இந்தத் தவறு நடந்திருக்கிறது என்பது வெளியே தெரிய வந்திருக்கிறது. ஆக சுய புத்தியும் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவது எவ்வளவு உண்மை என்பது இதனூடாகத் தெள்ளத் தெளிவாகிறது. Verdens Gang பத்திரிகை தங்கள் தவறுக்கு எர்லிங் ஹாலண்டிடம் மன்னிப்புக் கேட்டதோடு பெரிதும் வருந்துவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் மேல் விழுந்த ஏளனப் பார்வை சற்று அதிகமாகவே இருக்கிறது..
- 1 reply
-
- 3
-
துவாரகா பிரபாகரன் சுவிட்சர்லாந்தில் வதிவிட உரிமை பெற்றுள்ளார்.
Kavi arunasalam replied to வைரவன்'s topic in ஊர்ப் புதினம்
-
மதிலுக்கு மேலால் தொங்கிக் கொண்டிருக்கும் மாங்காய்களை களவாகப் பிடுங்கி கல்லில் உடைத்து உப்பு, தூள் போட்டு சாப்பிட்ட காலம் ஒன்றிருந்தது. மாங்காய் போலவே இளநீர், வாழைக்குலை என்று பட்டியல் நீளலாம். ஆனாலும் எங்களின் அந்தக் களவுகளை பெரும் களவுகளின் பட்டியலில் சேர்க்க முடியாது. காணிக்குள் இருக்கும் மாங்காயைக் குறி வைத்து கல்லு எடுத்து எறியும் போது, “மச்சான் இவன் கல்லு எடுத்து அடிச்சால் இரண்டு மாங்காயவது கட்டாயம் விழும்” என்று நண்பர்கள் சுட்டிக் காட்டும் போது ஒரு ‘கிக்’ ஒன்று தலைக்குள் ஏறி உருவேற்றும். சரியோ பிழையோ இளம் வயதில் அப்படியான சிறு சிறு களவுகள் ஒரு கிளு கிளுப்பை தந்திருந்தது என்பது என்னவோ உண்மை. கடந்த வாரம் யேர்மனியில் வந்திருந்த செய்தி ஒன்றை வாசித்த போது, எங்கள் களவுகள் யாரையும் பெரிதாக நட்டமடைய வைக்கவில்லை என்று கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஸ்வான்டோர்ப் (Schwandorf) மாவட்டத்தில் உள்ள டீற்றெர்ஸ்கியர்ஸன் (Dieterskirchen )என்ற நகரத்தில் 20 தொன் அப்பிள் பழங்கள் களவாடப் பட்டிருக்கின்றன. கடந்த வியாழன் (21.09.2023) மதிய நேரத்துக்கும் வெள்ளி மதியத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் தோட்டத்தில் இருந்த மரங்களில் இருந்து அப்பிள் பழங்கள் முழுவதுமாக காணாமல் போயிருந்தன. தோட்டம் மக்கள் குடியிருப்புகளில் இருந்து தள்ளியே இருந்தது. பெரிய வாகனங்கள் அந்தத் தோட்டத்துக்குள் செல்ல முடியாது. ஆக பல சிறிய வாகனங்கள் பழங்களை கொண்டு செல்லப் பயன் படுத்தப் பட்டிருக்க வேண்டும். அதே நேரம் பலர் இந்த அப்பிள் பழத் திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று பொலீஸார் தெரிவிக்கின்றன ர் . திருடப்பட்ட பழங்களின் மதிப்பு பல ஆயிரங்கள் இருக்கும் என அறிவித்திருக்கிறார்கள். 1956இல் மருதகாசி எழுதிய ஒரு பாடலில் உள்ள வரிகள் இங்கே பொருத்தமாக இருக்கும். “வானம் பொழியுது பூமி விளையுது தம்பிப் பயலே நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலை - ஆனா தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே - இது தகாது என்று எடுத்துச் சொல்லியும் புரியல்லே அதாலே மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை “
- 1 reply
-
- 3
-
யாழில் திடீர் பிரசித்தி பெற்றுவரும் இவர் யார்?
Kavi arunasalam replied to ஈழப்பிரியன்'s topic in செய்தி திரட்டி
-
யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு அறிவிப்பு
Kavi arunasalam replied to colomban's topic in ஊர்ப் புதினம்
-
“நல்ல” அரசியல்வாதிகளை மக்கள் ஏன் தேர்ந்தெடுப்பதில்லை?
Kavi arunasalam replied to கிருபன்'s topic in அரசியல் அலசல்
-
யேர்மனி நிடசாக்ஸன் மாநிலத்தின் டெல்மன் கோர்ஸ்ட் நகரத்துப் பூனைக்கு மரத்தில் இருந்து இறங்கத் தெரியவில்லை. அந்தப் பூனைக்கு வயது ஒன்றுதான்.பெயர் சிட் (Sid). கடந்த ஞாயிற்றுக் கிழமை சிட், ஓக் (oak) மரத்தில் விறி விறு என ஏறி விட்டது. 12 மீற்றர் உயரத்துக்கு ஏறிய பூனைக்கு இறங்குவதற்கு பயமாக இருந்ததால் மரத்தில் இருந்து அவலமாகக் கத்திக் கொண்டிருந்தது. சிட்டினுடைய சோகமான முகத்தை தரையில் இருந்து பார்த்த அதன் உரிமையாளர்(27), அதை மரத்தில் இருந்து தரைக்கு பாதுகாப்பாக கொண்டு வருவதற்காக வெறும் காலுடன் மரத்தில் ஏற ஆரம்பித்தார். மாலை 8மணி. கோடை முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பித்திருக்கும் நேரம். இருள் மெதுவாக பரவத் தொடங்கியது. மரத்தின் மேலே ஏறி, பூனையை தன் கையில் எடுத்துக் கொண்ட உரிமையாளர் கீழே தரையைப் பார்த்தார். ஒரு வயது பூனை சிட்டுக்கு வந்த அதே பயம் இருபத்தியேழு வயது உரிமையாளருக்கும் வந்து விட்டது. அவருக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. பூனையை ஒரு கையாலும் மரத்தை மறுகையாலும் பிடித்துக் கொண்டு மரத்திலேயே இருந்து விட்டார். இதை அவதானித்த அவரின் தம்பி உடனடியாக அவசரப் பிரிவுக்கு அழைப்பை எடுத்தார். அவர்கள் தீயணைப்புப் படையை அனுப்பி வைத்தனர். தீயணைப்புப் படையினரால் இருவரும் மரத்தில் இருந்து தரைக்கு கொண்டு வரப்பட்டார்கள். சாதாரணமாக இப்படியொருவருக்காக தீயணைப்புப்படை வந்திருந்தால் அதற்கான கட்டணத்தை அவர் செலுத்தியாக வேண்டும். இங்கு அவர் ஒரு பூனையைக் காப்பாற்றியிருக்கிறார் என்பதால் அவரிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படவில்லை. “ஏறியவனுக்கு இறங்கத் தெரியவில்லை என்பது அவமானமாக இருந்தது” என்று பூனையின் உரிமையாளர் குறிப்பிட்டார். பூனைக்கு ஒரு வயதுதான். விபரம் போதாது. மறுபடி எதில் ஏறப் போகிறதோ?
-
தியாகதீபம் திலீபனின் ஊர்தி மீது காடையர்கள் தாக்குதல்
Kavi arunasalam replied to nochchi's topic in ஊர்ப் புதினம்
-
சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?
Kavi arunasalam replied to ரஞ்சித்'s topic in அரசியல் அலசல்
-
தியாகதீபம் திலீபனின் ஊர்தி மீது காடையர்கள் தாக்குதல்
Kavi arunasalam replied to nochchi's topic in ஊர்ப் புதினம்
எங்கள் வரலாற்றிலேயே அகிம்சைப் போராட்டத்தின் முதல் அடையாளம் என்றால் அது திலீபன்தான். திலீபனின் தியாகம் பற்றி உலகமே அறிந்தது. திலீபனின் தியாகத்தை நாங்கள் மதிப்பதாக இருந்தால், முதற் கட்டமாக நாங்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். ஒரு பொது இடத்தில் அமைதியாக தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவதே அவருக்கு நாங்கள் செலுத்தும் மதிப்பாகும். நாங்கள் தான் கொள்கைப் பிடிப்பாளர்கள் என தனித்தனியாக அதுவும் கட்சிகள் ரீதியாக தியாகி திலீபனுக்கு செய்யப்படும் அஞ்சலிகள் அநாவசியமானவை. அது ஒருவகையில் சுயநலம் என்று கூடச் சொல்லலாம். தனி ஒருவர் மீதானாலும் சரி அல்லது ஒரு குழு மீதானாலும் சரி தாக்குதல் நிகழுமானால் அது கண்டிக்கப் பட வேண்டும் என்பதில் எதிர் கருத்து கிடையாது. ஆனால் நாங்களே அதற்கான காரணியாக இருப்போமானால் அந்த நிகழ்வு நடை பெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்களே எடுத்திருக்க வேண்டும். கஜேந்திரன், தாங்கள் திலீபனின் தியாகத்தை பெரும்பான்மை மக்களுக்கு தெளிவு படுத்த விரும்பியதாகவும் அதன் மூலம் அவர்கள் ஆட்சியாளர்களைப் புரிந்து கொள்வார்கள் என்ற அடிப்படையிலேயே இதுவரை தாங்கள் பயணிக்காத பாதையில் ஊர்தியை செலுத்தியதாகவும் சொல்லியிருக்கிறார். இது ஒரு வில்லங்கம் பிடித்த வேலை. இது அரசியலில் இப்பொழுதுதான் ஆனா, ஆவன்னா படித்தவர்களுக்கும் விளங்கும். நேற்று நடந்த நிகழ்வு, தன்னை வருத்தி ஈழத் தமிழருக்காக அமைதிப் போராட்டத்தை மேற்கொண்டு எங்கள் கண் முன்னே மெது மெதுவாக உயிர் துறந்த ஒரு புனிதனை வீதியில் வைத்து அசிங்கப் படுத்தி தங்கள் கட்சியை வளர்க்கும் ஒரு நிலையாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. இன்னுமொன்று. நாலு ஐந்து பேர் மட்டும் பங்கு கொள்ளும் ஊர்தி பவனியைக் கண்டு, எப்படி பெரும்பான்மை எங்கள் நிலையைப் புரிந்து கொள்ளும்? பவனியை ஏற்பாடு செய்தவருக்கே பாதுகாப்பில்லாத போது இவர்களை நம்பி எப்படி பொது மக்கள் போவார்கள்? ‘பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை’ நடந்த பேரணியை ஒருதரம் நினைத்துப் பார்க்கிறேன். கடந்த வருடம் ஒக்ரோபரில் நாட்டுக்குப் போய் இருந்தேன். தெகிவல சிவன் கோவில் தேர்த்திருவிழா, தேர்ப் பவனிக்காக காலி வீதியை சில மணிநேரம் ஒருபக்கம் மூடி இருந்தார்கள். தென்னிந்தியாவில் இருந்து வந்த கலைஞர்களின் குதிரை ஆட்டங்கள், நடனங்கள் என பல நடந்தன. பிரச்சனைகள் எதுவும் நடைபெறவில்லை. தானே தடியைக் கொடுத்து அடிவாங்கிய கதையாகத்தான் கஜேந்திரனை நான் பார்க்கிறேன். இவருக்கு நடந்ததற்காக பதாதை பிடித்து வீதியில் நின்று கண்டனம் செலுத்தி ஆர்ப்பாட்டம் செய்து நேரத்தை வீணாக்காமல் , தியாகச்சுடர் திலீபனுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தவே நான் விரும்புவேன். -
லம்பேடுசா தீவு இத்தாலிக்குச் சொந்தமானது. ருனீசியாவில் இருந்து 200 கடல் மைல் தூரத்தில் மத்தியதரைக் கடலில் உள்ள பெலகி தீவுகளில் இதுவும் ஒன்று. வெறும் 20 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இத்தீவின் சனத்தொகை 7000க்கு சற்று அதிகம். ஆழம் இல்லாத கடல், பல வர்ணங்கள் கொண்ட கடல்வாழ் உயிரினங்கள், 27 பாகை செல்சியஸ் வெப்பநிலை என சுற்றுலாப் பயணிகளை கவரும் அழகான தீவான லம்பேடுசா, இப்பொழுது அகதிகளால் திண்டாடுகிறது. சென்ற கிழமை மட்டும் இந்தத் தீவுக்கு கடல் மார்க்கமாக வந்து சேர்ந்த அகதிகள் 7000க்கு மேல் என அறிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு படகு என்ற வீதம் ஏராளமான படகுகள் அணிவகுத்து வந்தன என ஊடகங்கள் சொல்கின்றன. லம்பேடுசா தீவின் மக்கள் தொகையை விட ஒரு கிழமையில் வந்து சேர்ந்த அகதிகள் தொகை அதிகம் என லம்பேடுசாவின் மேஜர் அறிவித்திருக்கிறார். 600 அகதிகளை மட்டும் தங்கக் கூடிய வசதி கொண்ட இடத்தில் எப்படி 7000 பேரை இப்பொழுது தங்க வைப்பது என்று விழி பிதுங்கி நிற்கிறது லம்பேடுசா தீவு. படுக்க இடம் இல்லை. நிற்க நிழல் இல்லை. குடிநீர், உணவு வசதிகள் போதாது. சுகாதாரச் சீர்கேடுகள். இன்னும் அதிகமாக வந்து சேரப் போகும் அகதிகள். இவை எல்லாம் சேர்ந்து லம்பேடுசாவை நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் தங்களது அன்றாட வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது என்று அங்கு வாழும் மக்கள் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். 2022 இல் ஆட்சிக்கு வந்த தீவிர வலதுசாரியான ஜியோர்ஜியா மெலோனி என்ன செய்யப் போகிறார் என்பது இப்பொழுது உள்ள கேள்வி. அகதிகளாக வந்திருந்தவர்களிடம் “ஜரோப்பாவில் எந்த நாட்டுக்குப் போகப் போகிறீர்கள்?”என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதில், “யேர்மனி” ஆக இருந்தது.
-
சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?
Kavi arunasalam replied to ரஞ்சித்'s topic in அரசியல் அலசல்
-
கதறும் மாடுகள், இரத்த வெள்ளத்தில் ஆடுகள். யேர்மனியில் செல்ம் (Selm) நகரத்தில் உள்ள இறைச்சிக் கூடத்தில் சட்ட விரோதமான முறையில் மிருகங்களுக்கு வேதனைகள் தந்து கொல்லப்படுவதாக விலங்கு உரிமை ஆர்வல நிறுவனமான Soko Tierschutz தொடர்ந்த வழக்கு 15.09.2023 விசாரணைக்கு வந்தது. டோர்ட்மூண்டிற்கு அருகிலுள்ள செல்ம் நகரத்தில் உள்ள இறைச்சிக் கூடத்தில் மூன்று ஆண்கள் தங்கள் இஸ்லாமிய முறையில் குறைந்தது 188 விலங்குகளை படுகொலை செய்துள்ளனர். இந்த முறையில் விலங்குகள் கொல்லப்படும் போது அவை மிகுந்த வேதனைகளை அனுபவிக்கின்றன என்பதே வழக்கின் விபரம். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறைச்சிக் கூடத்தின் உரிமையாளரும்(54) அவரது இரண்டு மகன்களும் ஆவர். மயக்க மருந்து இல்லாமல் விலங்குகளின் கழுத்தை இஸ்லாமிய முறைப்படி அறுத்து, இரத்தம் வரும் வகையில் கொன்றதாக இறைச்சிக்கூட உரிமையாளர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் தனது நாடான துருக்கியில் வாழ்ந்த போது இந்த முறையில் விலங்குகளை உணவுக்காக கொன்றிருப்பதாகவும் சொன்னார். விலங்கு உரிமை ஆர்வலர்கள், இறைச்சிக் கூடத்தில் வேலை செய்யும் ஒரு ஊழியரைக் (28) கொண்டு அங்கே இரகசியமாக கமராக்களைப் பொருத்தி மூன்று வாரங்களாகப் படம் பிடித்து நீதிமன்றில் சமர்பித்திருந்தார்கள். ஒற்றைக் காலில் தொங்கிக் கொண்டிருக்கும் பல கிலோ எடையுள்ள ஒரு மாட்டின் கழுத்தை வெட்டிவிட, அது மூன்று நிமிடங்களுக்கு மேலாக துடித்துக் கொண்டிருந்ததையும், ஆடுகள் கழுத்து வெட்டப்பட்டு ஒரே இடத்தில் வீசப்படுவதையும், அவை நீண்ட நேரமாக துடி துடித்துக் கொண்டிருந்ததையும் வீடியோவில் பார்த்த நீதிபதி Ulrich Oehrle, “மிகவும் வெறுக்கத்தக்க வழக்கை நாங்கள் இன்று கையாள்கிறோம். மிகப் பயங்கரமானது” எனக் குறிப்பிட்டார். உணவுக்காக விலங்குகளை இந்த வகையில் கொலை செய்வது பண்டைய காலத்து முறை. இஸ்லாம் மற்றும் யூத மதத்தில் விலங்குகளை கொலை செய்யும் போது முடிந்தவரை முழுவதுமாக இரத்தம் வெளியேறிய பின்னரே அதன் இறைச்சியை எடுத்துக் கொள்கிறார்கள். இந்த மதங்களின் நம்பிக்கை கொண்டவர்கள் இரத்தம் சாப்பிடுவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. அதே நேரம் ஜெர்மனியில், மயக்க மருந்து இல்லாமல் விலங்குகளின் கழுத்தை வெட்டிக் கொல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. முஸ்லீம் மத சமூகங்கள் தங்கள் மத வழிகாட்டுதல்களின்படி தியாகத் திருவிழாவிற்கு (குர்பன் பேரம்) ஆடு மற்றும் மாடுகளை வெட்ட அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் மயக்க மருந்து மற்றும் அதிகாரப்பூர்வ மேற்பார்வையின் கீழ்தான் அது நடக்க வேண்டும். இறைச்சிக் கூட உரிமையாளருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையையும் அவரின் இரண்டு மகன்களுக்கு, “இப்படியான விடயங்கள் தொடரக் கூடாது” என்ற எச்சரிப்பையும் நீதிபதி அறிவித்தார். ஆனாலும் இந்த வழக்கின் தீர்பபுக்கும் மேன்முறையீடு ஒன்று இருக்கிறது. அத்தோடு அனுமதியின்றி வேலைத்தளத்தில் களவாக கமரா பொருத்தி படம் பிடித்ததற்காக 28 வயதான அந்த ஊழியர் மேல் வழக்கும் தொடரப் படலாம்.
-
துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே நம்மை சுகம் பெற வைக்கும் கருணை உள்ளம்