Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. நன்றி, உங்கள் அனைவரது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் துமிலனுக்கும் தெரியப்படுத்துகிறேன்🙏
  2. துமிலன் செல்வகுமாரன் ஈழத்தில் இருந்து தனது நான்காவது வயதில் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். வெளிநாட்டவர்களுக்கு எதிராகச் செயற்படும் NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளைப் பற்றிய Geheimsache NSU என்ற புத்தகத்தை இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதி இருக்கின்றார். 2023இல் யேர்மனி-ஸ்வேபிஸ் ஹால் நகரில் நடந்த நான்கு விதவைகளின் தொடர் கொலைகளை ஆராய்ந்து பொலீஸாரின் கவனக்குறைவையும், அசட்டையீனத்தையும் பத்திரிகையில் எழுதி, துமிலன் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதனுடைய சாராம்சம் கீழே இருக்கிறது. வீட்டின் வரவேற்பறையின் நடைபாதையில், நிலவிரிப்பின் கீழ் பெரிய அளவில் உறைந்திருந்த இரத்தத்தின் அடையாளம், அறுந்து தொங்கிக் கொண்டிருந்த தொலைபேசியின் வயர், வரவேற்பறையை ஒட்டி இருந்த சமையலறையில் தலையில் காயத்துடன் இறந்த படி 86 வயதான எடித் லாங்கி என்ற மூதாட்டி தரையில் கிடந்த விதம் என்பன அங்கே ஒரு வன்முறை நிகழ்ந்திருந்தது என்பதைத் துல்லியமாகக் காட்டின. அத்தோடு எடித் லாங்கியின் கைப்பை மற்றும் பணப்பை இரண்டும் திறந்தபடி வெறுமையாகக் காணப்பட்டன. ஆனால் காவல்துறையினரோ அதை ஒரு விபத்து மரணம் என்று அறிவித்து விட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்கள். பொதுமக்களும் அந்த மரணத்தை பெரிதாகக் கண்டு கொள்ளவில் லை . Suedwest Presse-ஐச் சேர்ந்த நிருபரான துமிலன் இதைப்பற்றி ஆய்வு செய்து பத்திரிகையில் எழுதிய பின்னரே எடித் லாங்கி என்ற மூதாட்டியின் மரணம், கொலை என்றும் அது தொடர்பான விபரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்பின்னரே காவல்துறைத் தலைவர் தங்கள் தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். “ஸ்வேபிஸ் ஹாலின் விதவை கொலைகள்" பற்றிய துமிலனது எழுத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும், "குருடாகப் பறந்து கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள்" என்ற கட்டுரைக்கு ஜெர்மனியின் மிகவும் மதிப்புமிக்க பத்திரிகை பரிசுகளில் ஒன்றான Stern Award 12.06.2024, புதன்கிழமை மாலை Hamburg நகரில் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் தைரியமாக ஆராய்ந்து மேற்கொண்ட அவரது செயற்பாடுகளுக்காக நடுவர் மன்றம் அவரைப் பாராட்டியும் இருக்கிறது. Stern Award ஐப் பெற்றுக் கொண்ட துமிலன் செல்வகுமாரன், "நான் பொலிஸ் துறையின் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், இருப்பினும் ஸ்வேபிஸ் ஹாலில், நடந்த தொடர் கொலைகளை பொலீஸ் புலனாய்வாளர்கள் சரியான முறையில் கையாளவில்லை” என்ற வருத்தத்தையும் விழா மேடையில் தெரிவித்தார். நூறு ஊடகங்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற 460 ஆக்கங்கள் Stern Awardக்காக ஆய்வு செய்யப்பட்டன. 48 பேர் கொண்ட நடுவர் குழு விருது குறித்து முடிவை எடுத்திருந்தது. Stern சஞ்சிகை இப்போது RTL Deutschland நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். துமிலன் செல்வகுமாரன் தந்த படங்கள், தகவல்களை வைத்தே ‘புதனும் புதிரும்’ என்று அந்தத் தொடர் கொலைகள் பற்றிய விபரங்களை யாழ் இணையத்தின் 26 அகவை சுய ஆக்கங்கள் பகுதியில் நான் எழுதியிருந்தேன். -கவி அருணாசலம்
  3. ஈழ விடுதலைப் போராட்டம் என்பது சினிமாப் படம் இல்லை. எத்தனை உயிர் இழப்புகள், எவ்வளவு தியாகங்கள்,எவ்வளவு அழிவுகள், எத்தனை இடம்பெயர்வுகள், பாரிய அனர்த்தங்கள் எனப் பலதைக் கண்ட ஒரு விடுதலைப் போராட்டம். இன்றும் அதன் வடுக்கள் தீரவில்லை. இதெல்லாம் நீங்கள் அறிந்ததுதான். அதை வியாபாரம் ஆக்கினால், கோவம் வருவது நியாயம்தானே? பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், விரைவில் வெளிவருவார் என்பதாகட்டும் அல்லது நீங்கள் கூறும் உண்டியல் குலுக்கலாகட்டும் இவையாவும் மகிழ்ச்சிகளையா கொட்டிக் கொடுக்கின்றன. இந்த வரிசையில் மேடைக்கு மேடை பிரபாகரன் படத்தைப் போட்டும், புலிக் கொடி பிடித்தும் சீமான் செய்வது அரசியல் வியாபாரமாக உங்களுக்குத் தெரியவில்லையா? “பிரபாகரன்தான் எனது தலைவன்” என்று சீமான் சொல்வதில் எவருமே கருத்துக்களை வைக்க முடியாது. அது சீமானின் தனிப்பட்ட விடயம். ஆனால் பிரபாகரன் படங்களை பெரிதாக மாட்டி, புலிக்கொடி பிடித்து மேடையில் முழங்குவதன் உள்நோக்கம் புரியவில்லையா? பிரபாகரன்தான் என் தலைவன் என்று சொன்னால் போதாதா? ஒவ்வொரு மேடையிலும் பிரபாகரன் படம் வைத்து புலிக்கொடி ஏற்றினால்தான் அவரது தம்பி, தங்கைகள் ‘சீமானின் தலைவர் பிரபாகரன்’ எனப் புரிந்து கொள்வார்களா? சீமான் போன்றவர்கள் இளம் வயதினரை உருவேற்றுவார்கள். அவர்களில் சிலர் தீக்குளிப்பார்கள். தலைவர்கள் போய் அஞ்சலி செய்துவிட்டு வருவார்கள். இப்படியானவர்களின் அரசியல் வியாபாரம் அறியவில்லையா? எங்களது ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. அடுத்தது என்ன என்று பதினைந்து வருடங்களுக்கு மேலாக எங்களுக்குத் தெரியவில்லை. இவர் ஒருத்தர் இடையில் புகுந்து ‘நாம் தமிழர்’ என்று புலிக்கொடி பிடித்துக் கொண்டு ‘அவர் பிழை இவர் பிழை’ என மேடைக்கு மேடை ஊழையிட்டுக் கொண்டிருக்கிறார். எத்தனையோ மாவீரர்களுக்குப் போர்த்தி வீரவணக்கம் செலுத்திய புலிக்கொடி இன்று சீமானின் கைகளில் இருக்கும் போது அவமானமாகத் தெரியவில்லையா? கடல் ஆமையைப் பிடிப்பதும், கொல்வதும், அதன் இறைச்சியை சந்தைப்படுத்துவதும் இலங்கையில் சட்டப்படி ஒரு குற்றச் செயல். ஆனால் சீமானோ தனக்கு பிரபாகரன் ஆமை இறைச்சி படைத்து விருந்து தந்தார் என்கிறார். ஒரு காட்சியையே சினிமாபோல் கற்பனையில் உருவாக்கி மேடைகளில் பிரபாகரனையே இழிவு படுத்தினார் என்பது ஏனோ சீமானின் தம்பி தங்கைகளுக்குப் புரியவில்லை சீமான் தனது கட்சிக் கொள்கைகளைச் சொல்லட்டும். தமிழக மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை விளக்கட்டும். திராவிடக் கட்சிகளை விமர்சிக்கட்டும். இதிலெல்லாம் தலையிட நான் வருவதில்லை. ஏனென்றால் அது அவர்களது தமிழ்நாட்டு அரசியல். முதலமைச்சர் ஆனாலும் கூட, ஈழத் தமிழர்களுக்காக சீமான் ஏதும் செய்யப் போவதில்லை. இதுதான் உண்மை.
  4. உங்கள் மரியாதை எல்லாம் எனக்கு வேண்டாம். பிரபாகரனை மட்டுமல்ல ஈழத் தமிழர்களது போராட்டங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப வளைத்துப் போட்டு அரசியல் நடத்தும் தமிழக அரசியல் வேடதாரிகளுக்கு எதிராக எனது குரல் எப்போதும் இருக்கும்.
  5. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சக்தி கிருஸ்ணசாமி எழுதிய வசனங்கள் பிரபல்யம். அதை இங்கே ‘உல்டா’செய்திருக்கிறேன் எங்களோடு களத்துக்கு வந்தாயா? தாயகம் மீட்கப் போர்க்களம் கண்டாயா? துப்பாக்கியைத் தோளிலாவது தாங்கினாயா? அல்லது களம் கண்ட எங்கள் வீரர்களின் துப்பாக்கிகளை துடைத்துத்தான் வைத்தாயா? மாமனா? மச்சானா? ……….. உனக்கெதற்கு தேசியத் தலைவர் படம் சைமன் அருளானந்தம் என்றுதான் நான் கேள்விப் பட்டிருக்கிறேன். உண்மையில்லையா?
  6. தவறான கருத்தானால் கண்டியுங்கள் விசுகு. ஏற்றுக் கொள்கிறேன். நான் எழுதியதில் எங்கே ‘மதவாதம்’ இருக்கிறது? என்று இங்கே நான் குழம்பிப் போய் இருக்கிறேன். Kapithan, நான் ‘சைமன் கட்சி’ என்றுதானே எழுதினேன். இதில் என்ன ‘கேனைத்தனம் ‘ இருக்கிறது என்பது புரியவில்லை.
  7. சைமன் கட்சியைப் பார்த்தேன். பிரபாகரன் தெரிந்தார் குத்தினேன்.
  8. பெருமாள், நான் யேர்மனியில் இருக்கிறேன். வரும் வெள்ளிக்கிழமை ஐரோப்பிய உதைபந்தாட்டப் போட்டி ஆரம்பிக்கிறது அல்லவா.
  9. பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது இதைத்தானோ? முன்னுரிமையோடு குந்தி இருக்கவும் விட்டிருக்கிறார்கள். சபாஸ்… பேஷ…பேஷ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.