Everything posted by ஏராளன்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் வீதியோர குண்டுவெடித்து ஐந்து இஸ்ரேலிய படையினர் பலி 08 JUL, 2025 | 03:16 PM காசாவில் வீதியோர குண்டுவெடிப்பில் ஐந்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் வடபகுதியில் பெய்ட்ஹனோன் பகுதியில் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை இரண்டு குண்டுகள் வெடிக்கவைக்கப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது ஐந்து படையினர் கொல்லப்பட்டதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை இஸ்ரேலிய படையினர் தாக்கப்பட்டதால் சமாதான பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என இஸ்ரேலின் வலதுசாரி அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாங்கள் எங்கள் படையினரை கொலை செய்பவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது, அவர்களை துண்டுதுண்டாக்கவேண்டும் அல்லது பட்டினி போடவேண்டும் அவர்களிற்கு ஒக்சிசன் வழங்கும் மனிதாபிமான உதவிகளை வழங்க கூடாது என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/219489
-
சிரிக்கலாம் வாங்க
எனக்கும் இந்த அனுபவம் உண்டு! 5ஆம் ஆண்டிற்குள் கற்கும்போது பாடசாலையில் எல்லோருக்கும் தடுப்பூசி போட அழைத்துச் செல்ல நான் மெதுவாக சிறுநீர் கழிக்க செல்வதுபோல போய் மறைந்திருக்க நண்பர்கள் பிடித்துக்கொண்டு போய் ஊசி போடவைத்தார்கள்.
-
செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு - பிரிட்டிஸ் வெளிவிவகார அமைச்சர்
Published By: RAJEEBAN 09 JUL, 2025 | 11:35 AM செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி தெரிவித்துள்ளார். வெளிவிவகார குழுவின் கூட்டத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்;டுள்ளதாவது, செம்மணியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். ஆம் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இந்த விடயம் குறித்து நேரடிப்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.கடந்த மாதம் குறித்து பேசினோம். இலங்கையின் பல பகுதிகளில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுடன் நாங்கள் நெருக்கமான தொடர்பினை பேணி வருகின்றோம்.அவர்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அரசசார்பற்ற அமைப்புகள் உட்பட ஏனைய தரப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். எங்களால் தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்வதற்கு நான் தயார். மனித புதைகுழி விடயத்தில் திறன் தொடர்பான பிரச்சினைகள் உள்ளமை குறித்த புரிந்துணர்வு காணப்படுகின்றது. இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை இதன் காரணமாக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான நியாயாதிக்கம் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை. https://www.virakesari.lk/article/219554
-
இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
இலங்கையுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்களாதேஷுக்கு பரபரப்பான வெற்றி; தொடரையும் சமப்படுத்தியது 05 JUL, 2025 | 10:55 PM (ஆர்.பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (05) நடைபெற்ற இரண்டாவது பகல் இரவு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் 16 ஓட்டங்களால் மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் 1 - 1 என சமப்படுத்தியுள்ளது. இந்தத் தொடரின் ஆரம்பப் போட்டியில் அறிமுகமான சுழல்பந்துவீச்சாளர் தன்விர் இஸ்லாம் தனது இரண்டாவது போட்டியில் மிகத் துல்லியமாக பந்துவீசி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார். அவரது மிகச் சிறந்த பந்துவீச்சும், தன்விர் ஹொசெய்ன், தௌஹித் ஹிரிதோய் ஆகிய இருவர் குவித்த அரைச் சதங்களும் பங்களாதேஷின் வெற்றியில் பிரதான பங்காற்றின. 249 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 232 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இலங்கை இன்னிங்ஸின் கடைசிக் கட்டத்தில் ஜனித் லியனகே தனி ஒருவராக வெற்றியை ஈட்டிக்கொடுக்க முயற்சித்த போதிலும் அது கைகூடாமல் போனது. முதல் போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் பெத்தும் நிஸ்ஸன்க பிரகாசிக்கத் தவறி 5 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர். நிஷான் மதுஷ்க (17) தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக குறைந்த எண்ணிக்கைக்கு ஆட்டம் இழந்ததுடன் அடுத்த போட்டியில் அவருக்கு விளையாட கிடைக்குமா என்ற சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸ் 20 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்து, ஆர். பிரேமதாச அரங்கில் அதிவேக அரைச் சதம் குவித்தவர் என்ற சாதனையை நிலைநாட்டினார். பதினொரு வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிராக திசர பெரேரா 23 பந்துகளில் பூர்த்திசெய்த அரைச் சதமே இந்த மைதானத்தில் பெறப்பட்ட முந்தைய அதிவேக அரைச் சதமாக இருந்தது. அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த பின்னர் நிதானத்தைக் கடைப்பிடித்த குசல் மெண்டிஸ் அடுத்த 11 பந்துகளில் 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். மொத்தமாக 31 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அபார சதம் குவித்த சரித் அசலன்க இந்தப் போட்டியில் 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். மறுபக்கத்தில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அரைகுறை மனதுடன் பந்தை அடித்து பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (126 - 5 விக்.) ஐந்து மாத இடைவெளிக்குப் பின்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய துனித் வெல்லாலகே 10 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்றார். அவரைத் தொடர்ந்து வனிந்து ஹசரங்க 13 ஓட்டங்களுடனும் மஹீஷ் தீக்ஷன 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (170 - 8 விக்.) எவ்வாறாயினும் துணிச்சலை வரவழைத்து புத்திசாதுரியத்துடன் துடுப்பெடுத்தாடிய ஜனித் லியனகே 9ஆவது விக்கெட்டில் துஷ்மன்த சமீரவுடன் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தார். 85 பந்துகளை எதிர்கொண்ட ஜனித் லியனகே 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 78 ஓட்டங்களைப் பெற்றார். துஷ்மன்த சமீர 13 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் தன்விர் இஸ்லாம் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 39 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். தன்ஸிம் ஹசன் சக்கிப் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது. மொத்த எண்ணிக்கை 10 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் தன்ஸித் ஹசன் (7) களம் விட்டகன்றார். தொடர்ந்து பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களாக இருந்தபோது பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் 67 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் மெஹிதி ஹசன் மிராஸ் (9), ஷமிம் ஹொசெய்ன் (22) ஆகிய இருவரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். இந் நிலையில் தௌஹித் ஹிரிதோய், ஜேக்கர் அலி ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஜேக்கர் அலி 24 ஓட்டங்களுடன் வெளியேறினார். மத்திய வரிசையில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தன்ஸிம் ஹசன் சக்கிப் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 22ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அசித்த பெர்னாண்டோ தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியை இந்தப் போட்டியில் பதிவுசெய்தார். அவர் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெடக்ளை வீழ்த்தியதுடன் வனிந்து ஹசரங்க 60 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: தன்விர் இஸ்லாம் https://www.virakesari.lk/article/219260
-
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி இறுதிப் போட்டிக்குத் தெரிவு - வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கடினப்பந்திலான துடுப்பாட்டம்
Champions of the U20 T10 Cricket Tournament at the Provincial Schools Games Competition 2025, proudly organised by the Provincial Department of Education, Northern Province! Chulipuram Victoria college runner up St. John’s College 61/8 in 10 overs. Victoria College 60/6 Just lost by 1 run
-
திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப்போராட்டம் - தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேல்முருகன்
ஈழத்தமிழர்களிற்கு நீதி கோரி திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப்போராட்டம் - தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேல்முருகன் 09 JUL, 2025 | 10:52 AM சிங்களப் பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதிக் கேட்டு திருச்சி சிறப்பு முகாமில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தோழர் யோகராசா நவநாதன் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! என தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் கட்சியின் தலைவர் தி வேல்முருகன் தெரிவித்துள்ளதாவது. 07.09.1996 அன்று சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் 11 சிங்கள ராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச்சென்ற தாய் ராசம்மா தம்பி பிரணவன் குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டு நால்வரின் உடலும் வயல்வெளியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கொடூர நிகழ்வால் பெரும் கவலையுற்ற ஈழத்தமிழ் சொந்தங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் மகளிர் அமைப்புகளும் சிங்களப் பேரினவாத அரசுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக 7 இராணுவ வீரர்களும்இ 2 காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். கிருஷாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனையை எதிர்கொண்ட இராணுவ வீரர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்சே இலங்கை நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் மூலமாகவே செம்மணி மனித புதைகுழிகள் வெளிச்சத்திற்கு வந்தன. குறிப்பாக 1995–96 ஆம் ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்து புதைக்கப்பட்டது தெரியவந்தது. ஐ.நா சபையின் தலையீடு காரணமாக சோமரத்ன ராஜபக்சே அடையாளம் காட்டிய இடங்கள் சிலவற்றில் கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. ஆனால் வழக்கம்போல் சிங்களப் பேரினவாத அரசு புதைகுழிகள் அனைத்தையும் முழுமையாகத் தோண்டி விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டது. அதுமட்டுமின்றி 2009 ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணைக்கொண்டு 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான முறையான விசாரணையையோ உரிய நீதியையோ இதுவரை பெற முடியாமல் உலகத்தமிழர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா குழுவின் பங்கேற்போடு தமிழீழத்தில் பல்வேறு இடங்களில் அகழ்வுப் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. அந்த அகழாய்வில் அரியாலை – சிந்துப்பாத்தி பகுதியிலிருந்த புதைகுழியிலிருந்து சிறு குழந்தை உட்படக் கொல்லப்பட்ட 50 மேற்பட்ட தமிழர் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழிகள் என்பது சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழ் இனப்படுகொலைகளில் ஒரு சிறு துளி மட்டுமே. இதுபோன்ற ஏராளமான மனித புதைகுழிகள் ஈழத்தாயகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. இந்நிலையில் சிங்களப் பேரினவாத அரசால் கொன்றுக் குவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் மறைவுக்கு நீதி விசாரணைக் கேட்டும் ஈழத்தமிழர்களுக்கான சம உரிமைக் கேட்டும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் யோகராசா நவநாதன் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 4 நாட்களாக அவர் மேற்கொண்ட போராட்டத்தில் நீருக் கூட அருந்தாமல் இருப்பதால் யோகராசா நவநாதன் உடல்நிலை மிகவும் மோசமாகி இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே தோழர் யோகராசா நவநாதனின் கோரிக்கையை ஏற்று சிங்களப் பேரினவாத அரசால் கொன்றொழிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் மறைவுக்கு உரிய நீதி விசாரணை நடத்தவும் ஈழத்தமிழர்களுக்கான சம உரிமை கிடைக்கவும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருச்சி சிறப்பு முகாம் என்கிற கொடூர முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்து அவர்கள் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் மேலும் அவர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கிற ஈழத்தமிழர்களுக்கோ அல்லது ஈழத்தில் வாழுகின்ற தமிழர்களுக்கோ சம உரிமை கிடைக்கவும் சிங்களப் பேரிவாத அரசால் வேட்டையாப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. எனவே உடல்நிலை மிகவும் மோசமடைந்து வரும் நிலையில் தோழர் யோகராசா நவநாதன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. https://www.virakesari.lk/article/219546
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வு, மூன்றாவது பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டது! 09 JUL, 2025 | 09:54 AM போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின், மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டில் நான்காவது இடத்தில் உள்ளது. 2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடங்கும். முன்னர் அடையாளம் காணப்பட்ட நான்காவது பெரிய புதைகுழி, 52 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ஆகும். நீதிமன்றத்தால் குற்றம் நிகழ்ந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழியில் கண்டறியப்பட்ட 56 மனித எலும்புக்கூடுகளில், மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 13ஆவது நாளான இன்றைய தினம் (ஜூலை 8) வரையில் 50 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தற்போது புதைகுழியில் மூன்று இடங்களில் இருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மனித எலும்புக்கூடுகள் இன்னும் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் கண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்ததை அடுத்து, ஜூன் 2 புதன்கிழமை இரண்டாவது இடத்தில் அகழ்வு ஆரம்பமானது. இதற்கு 'தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 2' என பெயரிடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை மூன்று என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார். "தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 2 இல் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் 3 எலும்பு எச்சங்கள் இன்னும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை. நாளை அது அகழ்வுக்கு இலக்கமிடப்படும். அதன் பின்னர் அகழ்வு இடம்பெறும்.” அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பமான முதல் இடத்திற்கு தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 1 எனவும், வரவிருக்கும் மழைக்காலத்தை சமாளிக்க வாய்க்கால் தோண்டும்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 3 எனவும் பெயரிடப்பட்டுள்ளதாக, தடயவியல், மானுடவியல் மற்றும் தடயவியல் தொல்பொருளியல் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற சட்டத்தரணி ரணிதா ஞானராஜா யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். முதல் தடயவியல் அகழாய்வுத்தளத்தில் 20 மீற்றர் தொலைவில் 11 மீற்றர் அகலமும் நீளமும் கொண்ட ஒரு புதிய கான் ஒன்று தோண்டப்பட்டுள்ளது, இது செம்மணி மனித புதைகுழியின் பரந்த தன்மையைப் பற்றிய ஒரு சிந்தனையை ஏற்படுத்திக்கொள்ள முடியுமென மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் ஊடகங்களிடம் தெரிவித்தார். இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு மேலதிகமாக, துணிகள், இரண்டு காலணிகள், ஒரு சிறு குழந்தையினுடையது என நம்பப்படும் இரண்டு வளையல்கள் மற்றும் ஒரு பொம்மை உள்ளிட்ட கருவிகளும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவனின் மேற்பார்வையின் கீழ் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சேமிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய மனித புதைகுழியின் அகழ்வாராய்ச்சி சர்வதேச தரத்திற்கு அமைய பாரபட்சமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் அங்கீகரித்தது. ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், ஜூன் 25 அன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு அருகில், மனித புதைகுழிகள் பற்றிய உண்மையை வெளிக்கொண்டுவர தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களால் விரிவான, வலுவான விசாரணை தேவை எனக் கூறியிருந்தார். மனித உரிமைகள் ஆணையாளரை மனித புதைகுழியை ஆய்வு செய்ய அனுமதிப்பதாக பகிரங்கமாக உறுதியளித்த அரசாங்கம், அதைத் தடுப்பதற்கான தோல்வியுற்ற, திட்டமிட்ட முயற்சி என்ற கடுமையான குற்றச்சாட்டுகளை இப்போது எதிர்கொள்கிறது. இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. 2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இலங்கையில் மூன்றாவது பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி ஆகும், அங்கு அதே ஆண்டில் 82 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. கொக்குத்தொடுவாய் புதைகுழியிலிருந்து 52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பின்னர் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்தன. ஒரு வருடத்திற்கு முன்னர், கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது, ஜூலை 13, 2024 அன்று முதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொழும்பு துறைமுகத்தில் உள்ள பழைய செயலக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட மொத்த மனித எலும்புகளின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தப் மனித புதைகுழிகள் அனைத்தும் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/219538
-
வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி? தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் பல் துலக்க வேண்டும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகெங்கிலும், வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பீரியோடோன்டிடிஸ். 4 மணி நேரங்களுக்கு முன்னர் உங்கள் சுவாசம் புத்துணர்வு இல்லாமல் துர்நாற்றத்துடன் இருப்பதாக கருதி, மற்றவர்களுடன் நெருங்கிச் செல்வதை தவிர்க்கிறீர்களா? கவலை வேண்டாம், இது சாதாரணமான ஒன்றுதான் என்பதுடன் அதற்கு தீர்வுகளும் இருக்கின்றன. பற்களைச் சுத்தமாக வைத்திருப்பது என்பது பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே உள்ள இடைவெளிகளிலும், நாக்கின் பின்பகுதியிலும் தங்கிவிடும் பாக்டீரியாக்களுக்கு எதிரான முடிவில்லாத போராட்டம் போன்றது. இந்த பாக்டீரியாக்களை அகற்றாவிட்டால், அவை அங்கு பெருகி, கடுமையான ஈறு நோய்களை ஏற்படுத்தலாம். ஆனால், இதைத் தடுக்க வழிகள் உள்ளன. வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம் என்ன? உலகெங்கிலும், வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பீரியோடோன்டிடிஸ், இது ஈறு விலகல் என்றும் அழைக்கப்படுகிறது. "வயது வந்தவர்களில் பாதி பேர் ஏதோ ஒரு வகையில் ஈறு நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்," என இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் பல் மறுசீரமைப்பு மருத்துவத்தின் இணை பேராசிரியரான மருத்துவர் பிரவீன் ஷர்மா, பிபிசியின் வாட்ஸ் அப் டாக்ஸ்? என்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார். "துர்நாற்றத்தை, வாய் குழியிலிருந்து வரும் துர்நாற்றமாக நீங்கள் கருதலாம்," என்று அவர் வாயை குறிப்பிட்டு கூறுகிறார். "இது 90% வாய் துர்நாற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம்." மீதமுள்ள 10% வாய் துர்நாற்றத்திற்கு வேறு காரணங்கள் உள்ளன. "கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் இருந்தால், ஒரு குறிப்பிட்ட வகையான மூச்சு இருக்கும்," என்கிறார் டாக்டர் ஷர்மா. "வயிற்றுப் பிரச்னைகள், இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் போன்ற பிரச்னைகள் உள்ள நோயாளிகளுக்கு ஒரு வகையான புளிப்பான சுவாசம் இருக்கும். எனவே, உடல் முழுவதும் ஏற்படும் நோய்கள் வாய்க்குழியில் வெளிப்படும். இதைப் பற்றி செய்யக்கூடியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பல் துலக்கும் போது வலிக்கும் ஈறுகளை துலக்குவதை இயல்பாகவே தவிர்ப்பது நோயாளிகள் செய்யும் ஒரு காரியம். பிரச்னையின் வேரை அடையுங்கள் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு இடையே தேங்கும் பாக்டீரியாவை நீங்கள் சுத்தப்படுத்தாவிட்டால், அது நுண்ணிய புண்களை ஏற்படுத்தி அதற்கு பின் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். இது ஜின்ஜைவைடிஸ், ஈறு நோயின் ஆரம்ப நிலை, ஆனால் இது சரிசெய்யக் கூடியது என்பது நற்செய்தி. "ஜின்ஜைவைடிஸ் என்பது ஈறுகளில் ஏற்படும் வீக்கம், உங்கள் ஈறுகள் சிவப்பாக வீங்கி, மற்றும் பல் துலக்கும் போது ரத்தம் வடிவதையும் வைத்து நீங்கள் கவனிக்கலாம்," என்கிறார் மருத்துவர் ஷர்மா. "இது மேலும் மோசமடைந்து பீரியோடோன்டைட்டிஸ் ஆக மாறும்." சிவப்பு, வீக்கம் அல்லது பல் துலக்கும் போது ரத்தம் வடிதல் ஆகியவை ஏற்படுகிறதா என் உங்கள் ஈறுகளைப் பரிசோதியுங்கள், ஆனால் நடவடிக்கை எடுக்க அவகாசம் இருக்கிறது என்பதால் அதிகம் கவலைப்பட வேண்டாம். "பல் துலக்கும் போது வலிக்கும் ஈறுகளை துலக்குவதை இயல்பாகவே தவிர்ப்பது நோயாளிகள் செய்யும் ஒரு காரியம். ஏனெனில் 'ஓ, நான் ஏதோ தவறு செய்கிறேன், அதனால்தான் ரத்தம் வடிகிறது, என அவர்கள் நினைக்கிறார்கள் என்கிறார் மருத்துவர் ஷர்மா. "இது கிட்டத்தட்ட தலைகீழாக உள்ளது - ரத்தம் வரும் ஈறுகளை ஒரு அறிகுறியாகக் கருதி, 'ஓ, நான் முன்பு சரியாக துலக்கவில்லை, இனி கொஞ்சம் நன்றாக துலக்க வேண்டும்,' என்று நினைக்க வேண்டும்." என்றார். படக்குறிப்பு, ஆரோக்கியமான பல்லில் ஈறுநோய் எவ்வாறு வளர்கிறது என்பதைக் காட்டும் கிராபிக்ஸ் கவனம் செலுத்தி பல் துலக்குங்கள் சரியாக பல் துலக்குவதற்கு நீங்கள் நேரம் ஒதுக்கவேண்டும் என்கிறார் மருத்துவர் ஷர்மா. "உங்கள் பற்களை துலக்கும் போதோ அல்லது பற்களை சுத்தப்படுத்தும் போதோ, நீங்கள் வேறு ஏதோ செய்து கொண்டிருக்கக் கூடாது," என்கிறார் அவர். நீங்கள் கண்ணாடி முன் நின்று முறையாக கவனம் செலுத்துவது சிறந்தது. வலது கை பழக்கமுள்ள பலர் தங்களை அறியாமலே தங்களது இடதுபுறம் அதிக நேரம் துலக்குகின்றனர், இடது கை பழக்கமுள்ளவர்கள் தங்களது வலதுபுறம் அதிக நேரம் துலக்குகின்றனர். இது குறைவான கவனம் செலுத்தப்படும் பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. நீங்கள் எந்த கையை பயன்படுத்துகிறீர்கள் என்பதை உணர்ந்து இரண்டு புறமும் கவனமாக ஒரே அளவு பல்துலக்குங்கள். பல் துலக்கும் நுட்பத்தை நன்கு தெரிந்துகொள்ளுங்கள் முதலில் பற்களுக்கிடையில் தூய்மைப்படுத்த தொடங்கலாம் என பரிந்துரைக்கிறார் மருத்துவர் ஷர்மா. "பிளேக் (பற்களில் ஏற்படும் படிவு) அகற்றுவதற்கும், ஈறு ஆரோக்கியத்திற்கும் உதவுவதற்கு, பற்களுக்கு இடையில் தூய்மைப்படுத்தும் பிரஷ்களை (இன்டர்டெண்டல் பிரஷ்) பயன்படுத்துவது சிறந்தது," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒவ்வொரு பல்லுக்கும் வெளிப்புறம், கடிக்கும் பகுதி மற்றும் உட்புறம் என மூன்று பரப்புகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்டர்டெண்டல் பிரஷை பயன்படுத்திய பின்னர் உங்கள் வாயில் பிரஷை நகர்த்தும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு பல்லுக்கும் வெளிப்புறம், கடிக்கும் பகுதி மற்றும் உட்புறம் என மூன்று பரப்புகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை அனைத்துமே கவனமாக தூய்மைப்படுத்தப்பட வேண்டும். பல் துலக்குவதற்குத் தேவையான குறைந்தபட்ச நேரம் இரண்டு நிமிடங்கள் என்பது பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். பலரும் பிரஷை பல்லுக்கு 90 டிகிரி கோணத்தில் பிடித்து முன்னும் பின்னும் அழுத்துவதன் மூலம் பல் துலக்குகிறார்கள், ஆனால் இந்த முறை ஈறு பின்னடைவை உண்டாக்கலாம். பிரஷ்ஷை பல்லுக்கு 45 டிகிரி கோணத்தில் பிடித்து மென்மையாக துலக்குங்கள். கீழ் பற்களின் ஈறு வரிசையை நோக்கி பிரஷின் நார்களை வைத்து மேற்பற்களின் ஈறு வரிசையை நோக்கி துலக்குங்கள். இது ஈறுவரிசையின் அடியில் மறைந்திருக்கும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும். சரியான நேரத்தில் பல் துலக்குங்கள் உணவுக்குப் பின் பல் துலக்குவது சரியானது என நம்மில் பலருக்கு கற்பிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது அப்படியல்ல. "காலை உணவுக்கு முன் பற்களை துலக்குவது சிறந்தது," என்கிறார் மருத்துவர் ஷர்மா. "அமிலத்தன்மை கொண்ட உணவுகளை உட்கொண்ட பிறகு பற்களைத் துலக்குவது பற்களின் கனிம பாகமான எனாமல் மற்றும் டெண்டினை மென்மையாக்கும் தன்மை கொண்டது என்பதால் அதை நீங்கள் செய்யக்கூடாது." உணவில் உள்ள அமிலம் உங்கள் பற்களின் மேல் பாதுகாப்பாக உள்ள எனாமல் மற்றும் அதற்கு கீழ் உள்ள டெண்டினை மென்மையடைய வைக்கிறது. எனவே உணவு உட்கொண்ட உடனே பற்களை துலக்குவது உங்களது எனாமலை பாதிப்படைய வைக்கலாம். "நீங்கள் காலை உணவு உட்கொண்ட பிறகு பல் துலக்குவதை விரும்பினால், உங்கள் காலை உணவுக்கும் பல் துலக்குவதற்கும் இடையில் சிறிது நேர இடைவேளை விடவேண்டும்." என்கிறார் மருத்துவர் ஷர்மா. நீங்கள் உங்கள் வாயைக் கொப்பளித்த பின்னர் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். அதே போல் ஒரு நாளைக்கு இரண்டு முறை இரண்டு நிமிடங்கள் துலக்குவது சிறந்ததென்றாலும், சிலருக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை பல் துலக்குவது போதுமானதாக இருக்கும். நீங்கள் தூங்கும்போது எச்சில் சுரப்பது குறைகிறது, இது இரவு நேரத்தில் பாக்டீரியாக்கள் உங்கள் பற்களை அதிக சேதப்படுத்த அனுமதிக்கிறது. எனவே நீங்கள் உங்கள் பற்களை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் முழுமையாக சுத்தப்படுத்தப் போகிறீர்கள் என்றால் அதற்கு இரவு நேரமே சிறந்தது. அடிக்கடி டீ, காபி குடிப்பது உள்பட இந்த 7 பழக்கங்கள் உங்கள் பற்களை பாதிக்கலாம்? ஈறுகளை பராமரிக்காவிட்டால் மரணத்திற்கு வழிவகுக்கும் நோய்கள் கூட ஏற்படலாம் - எச்சரிக்கும் மருத்துவர்கள் திருப்பத்தூர்: ஒரே கிளினிக்கில் பல் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளைத்தொற்றுக்கு பலியானது எப்படி? லான்செட் ஆய்வில் தெரியவந்த உண்மை பல் துலக்கும் பிரஷ்களில் இத்தனை வகைகளா? - பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள் சரியான உபகரணங்களைத் தேர்வு செய்யுங்கள் நடுத்தர விறைப்புள்ள நார்களைக் கொண்ட பிரஷைப் பயன்படுத்துங்கள். பற்பசைகள் விலை உயர்ந்தவையாக இருக்க வேண்டியதில்லை. "அதில் ஃபுளோரைட் இருக்கும்வரை எனக்கு மகிழ்ச்சியே," என்கிறார் மருத்துவர் ஷர்மா. இந்த கனிமம் பல்லின் எனாமலை வலுப்படுத்தி பல் சொத்தையாவதற்கு கூடுதல் எதிர்ப்பை தருகிறது. பல் சொத்தையாவதை தடுக்கும் வகையில் பல் துலக்கிய பின்னர், பற்பசையையும், ஃபுளோரைடையும் துப்புங்கள், ஆனால் வாய் கொப்பளிக்காதீர்கள். ஈறு நோயின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தால், மவுத்வாஷ் உபயோகிப்பதும் பயனுள்ளது, ஏனெனில் இது ப்ளேக் மற்றும் பாக்டீரியா உருவாவதைக் குறைக்க உதவுகிறது. ஆனால், இது பற்பசையில் உள்ள ஃபுளோரைடை நீக்கிவிடக் கூடும் என்பதால் பல் துலக்கிய பிறகு இதைப் பயன்படுத்த வேண்டாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிக அளவிலான சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் பல்சொத்தை ஏற்படுத்தலா. தீவிர ஈறு நோயை கண்டுகொள்ளுங்கள் ஈறு விலகல் (பீரியோடோன்டிடிஸ்) அதிகரித்தால், பற்களுக்கு இடையே இடைவெளிகள் உருவாகத் தொடங்குவதை நீங்கள் பார்க்கலாம், மேலும் பற்களை தாங்கி நிற்கும் எலும்பு அரிக்கப்படும்போது, பற்கள் தளர்ந்து போகலாம். இந்த நிலை கட்டுப்படுத்தப்படாவிட்டால், பற்கள் உதிரும் அளவுக்கு நிலைமை மோசமாகலாம். நீங்கள் நீடித்த துர்நாற்றத்தையும் அனுபவிக்க நேரிடலாம். உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக உங்கள் பல் மருத்துவரை அணுகவும். இறுதியாக, உங்களது சுவாசத்தைப் புத்துணர்ச்சியுள்ளதாக்க சில குறிப்புகள்: உங்கள் வாய் காய்ந்துபோய் இருந்தால் பாக்டீரியா வளரக்கூடும் என்பதால் நிறைய தண்ணீர் குடியுங்கள். நாக்கு சுத்தப்படுத்தும் கருவியைக் கொண்டு உங்கள் நாக்கை சுத்தப்படுத்துங்கள். இது வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கக் கூடிய உணவுத் துகள்கள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களை அகற்றுகிறது. உங்கள் சுவாசம் எவ்வளவு புத்துணர்ச்சியுடன் இருக்கிறது என்பது சரியாக தெரியாவிட்டால் அதை ஒரு நண்பரையோ, குடும்ப உறுப்பினரையோ பரிசோதிக்கவிடுங்கள். ஆனால் யாரிடம் கேட்கப் போகிறீர்கள் என்பதை தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள்! 29 ஏப்ரல் 2025 தேதியிட்ட பிபிசி-யின் What's Up Docs? பாட்காஸ்ட் எபிசோடை தழுவி எழுதப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1wp9x58p5yo
-
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்
யாழ். கடுகதி புகையிரதசேவை கல்கிசையில் இருந்து ஆரம்பமாகாமை குறித்து அமைச்சர் பிமல் வருத்தம் - தயாரெனின் மாத்திரம் பொதுமக்களுக்கு அறிவிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் 09 JUL, 2025 | 09:26 AM (நா.தனுஜா) யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை செவ்வாய்க்கிழமை (08) கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகாததன் காரணமாகவும், அதுகுறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படாததன் விளைவாகவும் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தமை குறித்து வருத்தமடைவதாகத் தெரிவித்துள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, கப்பல் துறை, சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, உரிய ஆயத்தங்களின் பின்னர் புகையிரதம் கல்கிசையிலிருந்து புறப்படுவதற்குத் தயார்நிலையில் உள்ளபோது மாத்திரம் அதுபற்றி மக்களுக்கு அறிவிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை (இன்டர்சிட்டி) செவ்வாய்க்கிழமை (8) அதிகாலை கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கல்கிசையிலிருந்து ஆரம்பமாகவிருந்த அதிவேக புகையிரதசேவை முன்னறிவிப்பின்றி அதிகாலை 5.45 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் வகையில் மீள்திருத்தம் செய்யப்பட்டது. அதன் விளைவாக அசௌகரியத்துக்கு உள்ளான பயணி ஒருவர், அவரது பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளங்களில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார், யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு, அதிகாலை 5.25 மணியளவில் வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை வந்தடையும் எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அது முன்னறிவிப்பு எதுவுமின்றி இரத்துச்செய்யப்பட்டது. வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் காத்திருந்த பயணிகள் வினவியதன் பின்னரே, யாழ் கடுகதி புகையிரதசேவை அதிகாலை 5.45 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் எனப் பதிலளிக்கப்பட்டது. இதுகுறித்து முன்கூட்டியே ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படாததன் காரணமாக பயணிகள் பலர் அதிகாலையில் மிகச்சொற்ப நேரத்துக்குள் வெள்ளவத்தையில் இருந்து கோட்டை புகையிரத நிலையத்துக்குச் செல்வதற்கு வாகனங்களின்றி மிகுந்த அசௌகரியத்துக்கு உள்ளாகினர். இச்சம்பவம் குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கும், குடும்பமாகப் பயணிப்பதற்கு தயாராக வந்திருந்தவர்களுக்கும் அநாவசியமான மனவழுத்தத்தையும், குழப்பத்தையும் தோற்றுவித்தது. அதுமாத்திரமன்றி கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட கடுகதி புகையிரசேவைக்கான டிக்கெட் கட்டணமாக 3,600 ரூபா அறவிடப்படுகின்ற போதிலும், அப்புகையிரதம் இருக்கைகள் உடைந்த நிலையில் சீராகப் பராமரிக்கப்படாமலேயே இருந்தன. இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விசேட கவனம் செலுத்தவேண்டும் எனப் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அப்பயணியின் எக்ஸ் தளப்பதிவின்கீழ் பதிவின்கீழ் பதிலளித்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 'இதுகுறித்து நான் புகையிரதத்திணைக்களத்திடம் கேட்டறிந்தேன் அவர்களால் ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை இன்றைய தினம் கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகவில்லை. எனவே அதற்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும், புகையிரதம் கல்கிசையில் இருந்து புறப்படுவதற்குத் தயார்நிலையில் உள்ளபோது மாத்திரம் அதுபற்றி பொதுமக்களுக்கு அறிவிக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். அதுமாத்திரமன்றி இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக பொதுமக்களிடம் மன்னிப்புக்கோரி அறிவிப்பொன்றை வெளியிடுமாறும் அவர்களிடம் வலியுறுத்தினேன். இவ்விடயத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக அமைச்சின் சார்பில் வருத்தமடைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/219533
-
தனது சம்பளப் பட்டியலை பகிரங்கப்படுத்தினார் எதிர்க்கட்சி உறுப்பினர் ஜகத் விதான
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாத சம்பளம் (கழிவுகள் போக) 3 இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் ஆகும். இதுக்காகவா தொடர்ந்து கதிரைகளை சூடாக்குகிறார்கள்?!
-
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா
Published By: VISHNU 09 JUL, 2025 | 01:53 AM வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா நாளைய தினம் புதன்கிழமை காலை நடைபெறவுள்ளது. அதிகாலை 4 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாகி , வசந்தமண்டப பூஜை காலை 07 மணிக்கு இடம்பெற்று, அதனை தொடர்ந்து நாகபூசணி அம்மன் உள்வீதியுலா வந்து , காலை 08.30 மணிக்கு தேரில் ஆரோகணித்து, பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பர். அதனை தொடர்ந்து காலை 09 மணிக்கு தேரில் வெளிவீதியுலா வந்து காலை 10.30 மணிக்கு தேர் இருப்பிடத்தை அடையும். மாலை 04 மணிக்கு அம்மனுக்கு பச்சை சாத்துதல் இடம்பெறும். நாளை மறுதினம் வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி , காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி , 7.30 மணிக்கு தீர்த்தோற்சவத்திற்கு அம்பாள் புறப்பட்டு செல்வார். அதேவேளை ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி, விசேட படகு சேவைகள் , பேருந்து சேவைகள் இடம்பெற்று வருவதுடன் , சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி படையினர் , சாரணர்கள் , செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/219528
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது 2வது அகழ்வாராய்ச்சி பணிகளுக்கான பகுதியென பிரகடனம்! Published By: VISHNU 09 JUL, 2025 | 01:50 AM செம்மணி மனிதப் புதை குழி அகழ்வின் இரணடாவது கட்டத்தின் 13வது நாள் அகழ்வுப் பணிகள் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 50 முழுமையாக அகழ் எடுக்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (8) செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே சந்தேகத்திற்கிடமான பகுதி என தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதுவாவினால் அடையாளமிடப்பட்ட பகுதி அகழ்வு ஆராய்ச்சி பணிகளுக்கான இரண்டாவது பிரதேசமாக நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே முதலில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அகழ்வாராய்ச்சி பகுதியானது அகழ்வு ஆராய்ச்சி பணிகளுக்கான முதலாவது பகுதியாகவும் அடையாளப்படுத்துப்பட்டுள்ளது. அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாவது பகுதியில் 3 மனித என்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டிருக்கிறது. 09ஆம் திகதி புதன்கிழமையிலிருந்து இலக்கமிடல் பணிகள் ஆரம்பமாகும். மனித எலும்புகளுடன் சேர்ந்த துணிகள் மற்றும் சப்பாத்து போன்ற பொருட்கள் அடையாளப்படுத்தப்பட்டு வைத்திருக்கப்பட்டுள்ளன. அவை இன்னமும் நிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்படவில்லை. அது பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் மேலதிக தகவல்கள் நாளையதினம் வழங்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/219527
-
யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
Published By: VISHNU 09 JUL, 2025 | 01:43 AM யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி - அச்செழு சூரசிட்டி பகுதியை சேர்ந்த 28 வயது என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கும் அவரது மனைவிக்குமிடையே கடந்த 2ஆம் திகதி முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மனைவியை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மனைவி கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 4ஆம் திகதி வீடு திரும்பிய நிலையில் தாயார் வீட்டிற்கு சென்று அங்கிருந்துள்ளார். இதனால் மன விரக்தியடைந்த கணவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/219526
-
யாழில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு ; பொலிஸார் தீவிர விசாரணை
09 JUL, 2025 | 09:51 AM யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் புதன்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராசாவின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்துள்ளார். இது இயற்கை மரணமா அல்லது செயற்கை மரணமா என இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219537
-
15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி
Published By: DIGITAL DESK 3 09 JUL, 2025 | 10:27 AM 15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான விடயமாகும் என பதுளை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பி.எஸ். பாலிபன தெரிவித்துள்ளார். உலக தோல் சுகாதார தினத்தை முன்னிட்டு பதுளை போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறுவர்கள் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறி விட்டு காட்டுக்குள் சென்று வெவ்வேறு நபர்களுடன் கூடி பழகி நாளை கழித்து வந்துள்ளனர். இந்நிலையிலேயே, 15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுவனை அவனின் சம்மதத்துடனும் பாலியல் துஷ்பிரயோகம் செய்வது சட்டவிரோதமானது. பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கனையில் உள்ள சொரபொர வெவ எனும் குளம் பகுதியில் சுமார் 15 சிறுவர்கள் சுற்றித்திரிவது பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/219535
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணியில் தோண்ட தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள் - பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியில்! Published By: VISHNU 08 JUL, 2025 | 06:34 PM யாழ்ப்பாணம் செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்படும் மற்றும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் இரண்டாவது கட்டத்தின் 13வது நாள் அகழ்வுப் பணிகள் செவ்வாய்க்கிழமை (8) முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் 56 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் 50 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா அவர்களின் குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியிலும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த எலும்புக்கூடுகளானது சிக்கலான நிலையில் காணப்படுகிறது. மேலும் முறைப்பாட்டாளரான குறித்த மயானத்தின் நிர்வாகத்தில் உள்ள திரு.கிருபாகரன், சட்டத்தரணி க.சுகாஷ், சட்டத்தரணி ரணித்தா ஆகியோர் இன்றையதினம் புதைகுழியை பார்வையிட்டனர். குறித்த புதைகுழி விவகாரமானது சர்வதேச ரீதியில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கு நீதி வேண்டி பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219509
-
ரயில் விபத்துகளில் மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி குற்றச் சாட்டு
"இரு குழந்தைகளையும் இழந்து விட்டேன்" - கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த தந்தை வேதனை படக்குறிப்பு, ரயில் மோதியதில் பள்ளி வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது. 8 ஜூலை 2025, 05:38 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் அந்த வேனை சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு ரயில் இழுத்துச் சென்றுள்ளது. இந்த விபத்தில் பள்ளி வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது. வேனில் இருந்த 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த நிலையில், மேலும் ஒரு மாணவர் பலியாகியுள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக, விதிகளை மீறியதாக கேட் கீப்பரை ரயில்வே பணியிடை நீக்கம் செய்துள்ளது. விபத்து நடந்தது எப்படி? ரயில்வே கூறுவது என்ன? என்ன நடந்தது? கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகேயுள்ள ரயில்வே கேட் பகுதியில் இன்று (ஜூலை 8, 2025) காலை 7.40 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. பள்ளி வேன், ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, அந்த தண்டவாளத்தில் வந்த விழுப்புரம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் அதன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பள்ளி வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. பள்ளி மாணவர்கள் எடுத்துச் சென்ற புத்தகப் பைகள் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்தன. பள்ளி வேன் மீது மோதிய ரயில், அந்த வேனை 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றுள்ளது. இந்த விபத்தில் பள்ளி வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது. அதில் பயணித்த 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கவனக் குறைவாக இருந்த கேட் கீப்பர், ரயில்வே கேட்டை மூடாமல் விட்டதே விபத்துக்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். படக்குறிப்பு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எஸ்.பி நேரில் ஆய்வு விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விபத்து நடந்த பகுதி 'ஆளில்லா ரயில்வே க்ராஸிங் அல்ல' என்றார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று காலை சுமார் 7.40 மணியளவில், விழுப்புரம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் செம்மாங்குப்பம் பகுதியைக் கடக்கும்போது, ஒரு பள்ளி வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இது ஆளில்லா ரயில்வே க்ராஸிங் அல்ல. பள்ளி வாகனத்தில், ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் இருந்துள்ளனர். சம்பவ இடத்தில் ஒரு மாணவர் இறந்துவிட்டார். மூன்று குழந்தைகளும், ஓட்டுநரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் மருத்துவமனையில் ஒரு மாணவி உயிரிழந்து விட்டதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினார். அவர் அளித்த தகவலின்படி, நிவாஸ் (வயது 12) என்ற மாணவரும், சாருமதி (வயது 16) என்ற மாணவியும் உயிரிழந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இரு குழந்தைகளையும் இழந்த பெற்றோர் கூறுவது என்ன? கடலூர் ரயில் விபத்தில் தமது இரு பிள்ளைகள் உயிரிழப்பிற்கு ரயில்வே நிர்வாகமே காரணம் என்று உயிரிழந்த சாருமதி, செழியனின் தந்தை செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். இந்த விபத்தில், சின்னகாட்டு சாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிடமணி - கலைச்செல்வி தம்பதியின் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மகள் சாருமதி (16), பதினொன்றாம் வகுப்பு பயிலும் மகன் செழியன்(15) மற்றும் மாணவர் விமலேஷ்(10) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து நடந்தபோது, திராவிடமணி - கலைச்செல்வி தம்பதியின் மகள் சாருமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர்களது மகன் செழியன் படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ரயில் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தனது பிள்ளைகளின் உயிரிழப்புக்கு ரயில்வே நிர்வாகமே முழு காரணம் என்றும், கேட் கீப்பரின் அஜாக்கிரதையால்தான் விபத்து நடந்ததாகவும், இந்த விபத்திற்குக் காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தனது இரண்டு பிள்ளைகளைப் பறிகொடுத்த திராவிட மணி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். திராவிட மணியின் உறவினரான ஆறுமுகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரயில்வே துறையின் அஜாக்கிரதையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு முழு பொறுப்பு ரயில்வே நிர்வாகம்தான். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகளை இழந்துள்ளார்கள். நினைக்கும்போது மனம் கனக்கிறது. இனி வரும் காலங்களில் இப்படியொன்று நடக்கக்கூடாது. அதற்காகவேனும் அரசு நேர்மையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்," என்று கூறினார். தெற்கு ரயில்வே கூறியது என்ன? இந்த விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளிக்கு சீக்கிரமாகச் செல்ல வேண்டும் என்று வேன் ஓட்டுநர் வற்புறுத்தியதால், கேட் கீப்பர் கேட்டைத் திறந்தார். ரயில்வே ரயில் இயக்கங்களின் பாதுகாப்பு விதிகளின்படி அவர் கேட்டை திறந்திருக்கக் கூடாது. கேட் கீப்பர் பாதுகாப்பு விதிகளை மீறியதால், அவர் இப்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயில்வே ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறது. ரயில்வே மருத்துவர்கள் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளைக் கண்காணித்து வருகின்றனர். தேவைப்பட்டால் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனிமொழி கூறியது என்ன? படக்குறிப்பு, இந்த விபத்தில் பள்ளி வாகனம் முற்றிலும் நொறுங்கியது. ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், "ரயில் மோதி பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதற்கு ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததே காரணம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "பள்ளி வாகன ஓட்டுநர் வற்புறுத்தியதால்தான் கேட்டை ரயில்வே கேட் கீப்பர் திறந்துள்ளார்" என்ற தகவலையும் ரயில்வே துறை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய மாணவர் மற்றும் பள்ளி வேன் ஓட்டுநரின் வாக்குமூலங்களில், "ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது," என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், "கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்தத் துயர்மிகு வேளையில், அந்தக் குடும்பங்களின் கரம்பற்றி எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் விரைவில் நலம்பெற விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "இந்த நாட்டில் 68,584 கி.மீ தூரமுள்ள ரயில்வே வழித்தடத்தில் வெறும் 1,548 கி.மீ மட்டுமே 'கவாச்' பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டி விட்டோம். இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், ஒன்றிய அரசுக்கு இதில் துளியளவும் கவலை இல்லை," எனக் குற்றம் சாட்டியுள்ளார். முக்கிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் திருச்சியிலிருந்து தாம்பரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் அரை மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. படக்குறிப்பு, விபத்து நடந்த பகுதி முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு இந்த விபத்து தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிவாஸ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் - உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார். "இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg691rp05eo
-
பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயற்படும் நாடுகளிற்கு எதிராக மேலும் பத்துவீத வரி - டிரம்ப்
'அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகள்': பிரிக்ஸ் நாடுகளை எச்சரித்த டிரம்ப் - இந்தியா சிந்திக்க வேண்டியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிக்ஸ் நாடுகள் 'அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளில்' இருந்து விலகியிருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்டுரை தகவல் முகமது ஷாஹித் பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது. ஆனால் அது இப்போது அதிகம் விவாதிக்கப்படுவதற்குக் காரணம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். உலகின் வேகமாக வளர்ந்து வரும் 10 பொருளாதார சக்திகளின் அமைப்பான பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று. ரியோ டி ஜெனிரோவில் சமீபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து டொனால்ட் டிரம்பின் எதிர்வினை வந்தது. 'பிரிக்ஸ்'-இன் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் இணைந்து செயல்படும் நாடுகளுக்கு அவர் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா, அமெரிக்கா இடையே ஒரு 'மினி வர்த்தக ஒப்பந்தம்' (Mini Trade deal) சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் அமெரிக்க அதிபர் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார். ஜூலை 7, திங்கள்கிழமை (அமெரிக்க நேரப்படி) பல நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தார். பிரிக்ஸ் அமைப்புக்கு டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலின் அர்த்தம் என்ன என்ற கேள்வி இப்போது எழுகிறது. அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தமும் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால், பிரிக்ஸ் அமைப்பின் ஒரு நிறுவன உறுப்பினராக, இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிக்ஸ் உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில், 'பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாடும் கூடுதலாக 10 சதவிகித வரியை எதிர்கொள்ள நேரிடும். இந்தக் கொள்கையில் எந்த விலக்கும் இருக்காது' என்று பதிவிட்டுள்ளார். பிரிக்ஸ் ரியோ பிரகடனத்திற்குப் பிறகு டிரம்ப் இதைப் பதிவிட்டதாக நம்பப்படுகிறது. பிரிக்ஸ் 17வது உச்சிமாநாடு ஜூலை 6-7 தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'பன்முகத்தன்மை மற்றும் நிலையான நிர்வாகத்திற்கான உலகளாவிய தெற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்' என்பதாகும். ரியோ பிரகடனம் 'உலகளாவிய நிர்வாகத்தை மேம்படுத்துதல்' மற்றும் 'சர்வதேச ஸ்திரத்தன்மை' பற்றிப் பேசுகிறது. இதனுடன், ஒருதலைப்பட்ச வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகள் போன்ற பிரச்னைகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. பிரகடனத்தின் இந்த விஷயத்தை குறிப்பிட்டே, டொனால்ட் டிரம்ப் வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தினார் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், பிரகடனத்தில் அமெரிக்காவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. 'வர்த்தகத்தின் போக்கைச் சிதைத்து, உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிமுறைகளை மீறும் ஒருதலைப்பட்ச வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளின் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து பிரிக்ஸ் நாடுகள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாக' ரியோ பிரகடனம் கூறுகிறது. இது தவிர, ஒருதலைபட்சமான பொருளாதாரத் தடைகள் மற்றும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது தீங்கு விளைவிக்கும் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என பிரகடனம் கூறுகிறது. இந்தப் பிரகடனம், உலக வர்த்தக அமைப்பினுடைய விதிகளின்படி வர்த்தகத்தை ஆதரிக்கிறது மற்றும் பலதரப்பு வர்த்தக அமைப்பைப் பற்றி வலியுறுத்துகிறது. டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலின் அர்த்தம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 'பிரிக்ஸ்' நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்தது ஏன் என்ற முக்கியமான கேள்விக்கு வருவோம். இந்தக் கேள்விக்கு, டெல்லியை சேர்ந்த வர்த்தக ஆராய்ச்சிக் குழுவான குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்-இன் (GTRI) நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா, "அமெரிக்காவிற்கு எதிராக எல்லாவற்றிலும் ஒரு சதி இருப்பதாக டிரம்ப் கருதுகிறார், மேலும் அமெரிக்காவின் பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை" என்று கூறுகிறார். "அனைத்து நாடுகளும் தனது 'காலனிகள்' என்று டிரம்ப் நினைக்கிறார். அவர் தனது கொள்கைகளை ஒருதலைப்பட்சமாக செயல்படுத்த விரும்புகிறார்" என்கிறார் அவர். இதற்கிடையில், சர்வதேச விவகாரங்களில் நிபுணரான மஞ்சரி சிங், டிரம்பின் அச்சுறுத்தல் குறித்து பேசுகையில், "அமெரிக்கா உறுப்பினராக இல்லாத எந்தவொரு அமைப்பும், எஸ்சிஓ (SCO) அல்லது பிரிக்ஸ் போன்றவை, அமெரிக்க விரோத அமைப்புகள் என்றே டிரம்ப் கருதுகிறார்" என்று கூறினார். பிரிக்ஸ் அமைப்பின் நிறுவன உறுப்பினர் நாடுகளில் இந்தியாவும், உலகின் மிகவும் சக்திவாய்ந்த பொருளாதாரங்களில் ஒன்றான ரஷ்யா மற்றும் சீனாவும் அடங்கும். ரஷ்யாவும் சீனாவும் தங்கள் நாணயங்களில் பரஸ்பர வர்த்தகம் செய்து வருகின்றன. 2022ஆம் ஆண்டில், பிரிக்ஸ் நாடுகளுக்கு என ஒரு புதிய சர்வதேச ரிசர்வ் நாணயத்தை ரஷ்யா முன்மொழிந்தது. "டாலருக்கு இணையான வங்கி முறையைப் பற்றி பிரிக்ஸ் எப்போதும் பேசி வருகிறது. இந்தக் காரணத்திற்காக, டிரம்ப் பிரிக்ஸ் அமைப்பை அமெரிக்க விரோதியாகக் கருதுகிறார். இருப்பினும், இன்றுவரை இந்த வங்கி முறை குறித்து ஒருமித்த கருத்து இல்லை. இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள். அவை வர்த்தகத்தைச் சார்ந்து உள்ளன, மேலும் வங்கி முறை பற்றிப் பேசுவது அவர்களுக்கு மிகவும் முக்கியம்" என்று மஞ்சரி சிங் கூறுகிறார். 'டாலருக்கு எதிரான ஒரு நாணய அமைப்பு' - இதுவே சர்ச்சைக்கு காரணமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிக்ஸ் அமைப்பு 2015ஆம் ஆண்டு புதிய மேம்பாட்டு வங்கியை நிறுவியது, சமீபத்திய உச்சிமாநாடு இந்த வங்கியின் பத்தாண்டு நிறைவைக் கொண்டாடியது. டாலருக்கு பதிலாக வேறு ஏதேனும் நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் யோசனைதான் டிரம்ப் எதிர்ப்பின் அடிப்படை என அஜய் ஸ்ரீவஸ்தவா கருதுகிறார். "பிரிக்ஸ் அமைப்புக்கு புவியியல் ரீதியாக எந்த தனித்துவமும் இல்லை. ஏனெனில் அது வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட நாடுகளைக் கொண்டுள்ளது. இந்த அமைப்புக்கு அரசியல் சக்தி இல்லை, ஆனால் சீனா போன்ற ஒரு சக்திவாய்ந்த நாடும் அதில் இருப்பது, அதற்கு ஒரு தனி மதிப்பை அளிக்கிறது." "பிரிக்ஸ் சக்தி வாய்ந்ததாக இல்லாவிட்டாலும் டிரம்ப் அதை அச்சுறுத்துகிறார், எனவே இதற்குக் காரணம் ரிசர்வ் நாணயத்தின் பிரச்னை. எந்த நாடும் அதன் நாணயத்தில் வணிகம் செய்வது பற்றிப் பேசும்போது, அமெரிக்கா இப்படித்தான் பேசுகிறது" என்று அவர் கூறுகிறார். அமெரிக்கா 2012ஆம் ஆண்டில், "பன்னாட்டு வங்கிகளுக்கு இடையிலான நிதிசார்ந்த தகவல் தொடர்புக்கான சங்கத்தில் இருந்து (SWIFT) இரானையும், 2022இல் ரஷ்யாவையும் விலக்கியது. இதன் பொருள், இந்த நாடுகள் இனி அதிகாரபூர்வ டாலர் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. "உலகம் முழுவதும் டாலர் பரிமாற்ற ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்கா அதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது" என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். "ரஷ்யா அல்லது இரானுடனான பகையால், அவர்கள் டாலரை பயன்படுத்த முடியாதபடி அமெரிக்கா ஒரு வழியை உருவாக்குகிறது. சீனா அல்லது ரஷ்யா தங்கள் நாணயத்தில் வர்த்தகம் செய்தால், அதற்கு டாலரை ஒரு ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்திய தான் காரணமாக இருக்கும்" என்று கூறினார். ஒரு பொதுவான நாணயத்தை உருவாக்க முடியுமா? பிரிக்ஸ் அமைப்புக்கு என ஒரு பொதுவான நாணயம் இருக்க முடியுமா? இந்தக் கேள்விக்கு பதிலாக ஐரோப்பா யூரோ நாணயத்தை உருவாக்கியது, ஆனால் அதற்கும் பல சிக்கல்கள் உள்ளன என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். "பிரிக்ஸ் அமைப்பில் ஒரு பொதுவான நாணயம் உருவாக்கப்பட்டால், அதை மிகவும் கவனமாகச் செய்ய வேண்டியிருக்கும். இந்த அமைப்பு சீனாவை மையமாகக் கொண்டது, எனவே பல நாடுகள் பொதுவான நாணயத்தில் ஆர்வம் காட்டுவது அரிது" என்கிறார். மறுபுறம், "பொது நாணயம் அல்லது பிரிக்ஸ் நாணயத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவது எளிதல்ல. ஏனெனில் அதில் பல சிக்கல்கள் உள்ளன, மேலும் அது டாலரை நேரடியாக எதிர்க்கிறது. ஒரு பொதுவான நாணயத்தில் பல பிரச்னைகள் உள்ளன. ஏனெனில் உங்களிடம் அது பெரிய அளவில் இருந்தால், நீங்கள் வர்த்தகம் செய்யும் குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும்" என்று மஞ்சரி சிங் கூறுகிறார். ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்யா மற்றும் சீனாவின் அதிபர்கள் கலந்து கொள்ளவில்லை. இதன் பின்னர், சீனாவும் ரஷ்யாவும் எஸ்சிஓ போன்ற அமைப்புகளில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்பட்டது. பிரிக்ஸ் இப்போது பலவீனமடைந்து வருகிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிக்ஸ் என்பது உலகின் வேகமாக வளர்ந்து வரும் 10 பொருளாதார நாடுகளின் அமைப்பாகும். பிரிக்ஸ் அமைப்பு பலவீனமடைந்து வருகிறதா என்ற கேள்விக்கு, பதிலளித்த அஜய் ஸ்ரீவஸ்தவா, "பிரிக்ஸ் ஒருபோதும் வலுவாக இருந்ததில்லை என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் அதில் உறுப்பினராகவுள்ள அனைத்து நாடுகளும் ஒரே மாதிரியான சித்தாந்தத்தைக் கொண்டிருக்கவில்லை. புவியியல் ரீதியாககூட அவற்றுக்கு இடையே எந்த ஒற்றுமையும் இல்லை. சில ஆய்வாளர்கள் வழங்கிய யோசனையின் அடிப்படையில், இந்த அமைப்பு உருவானது" என்கிறார். "இருப்பினும், பிரிக்ஸ் நாடுகள் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது. ஏனென்றால் இன்று அவை பிரிக்ஸ் தொடர்பாகக் கொடுக்கப்படும் அச்சுறுத்தலுக்கு பயந்தால், நாளை டிரம்ப் வேறு ஏதாவது ஒன்றைப் பற்றி மிரட்டலாம். அமெரிக்கா அதை எப்படிக் கையாளுகிறதோ, அதே வழியில் இந்த நாடுகளும் கையாள வேண்டும், ஏனெனில் அமெரிக்கா ஒன்றும் அதன் மீது குண்டுகளை வீசப் போவதில்லை. இரு நாடுகளும் சமமான லாபம் மற்றும் நஷ்டக் கொள்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். அதே நேரத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் இணை பேராசிரியரான அபராஜிதா காஷ்ய பிரிக்ஸ் பலவீனமடைகிறது என்ற கருத்தை மறுக்கிறார். "பிரிக்ஸ் பிளஸ், உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக செல்வாக்கு மிக்க நாடுகளை உள்ளடக்கி இருப்பதால் பிரிக்ஸ் பலவீனமடைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு" என்கிறார். இந்த மாநாட்டில் ஷி ஜின்பிங் மற்றும் புதின் கலந்து கொள்ளாதது குறித்துப் பேசிய அபராஜிதா, "இதுவொரு பெரிய பிரச்னை அல்ல. ஏனெனில் ஜின்பிங் தற்போது சீனாவின் உள்நாட்டுப் பொருளாதார சவால்களைக் கையாள்வதில் கவனம் செலுத்துகிறார், அதே நேரத்தில் ரஷ்ய அதிபர் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தனது வருகைகளை மட்டுப்படுத்தியுள்ளார்" என்கிறார். மறுபுறம், "சீனாவுடன் நெருக்கமாக இருக்கும் பல நாடுகள் சமீபத்தில் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்ததால், பிரிக்ஸ் அமைப்பை பலவீனமாகவோ அல்லது இந்தியா அதை ஆதரிப்பதாகவோ கருதக்கூடாது" என்று மஞ்சரி சிங் கூறுகிறார். "இந்த முறை நிகழ்ச்சி நிரல் நல்லாட்சி, செயற்கை நுண்ணறிவு போன்ற பிரச்னைகள் குறித்து இருந்தது. இதன் காரணமாகவே இந்த உச்சி மாநாடு பற்றி அதிக விவாதங்கள் எழவில்லை" என்கிறார். இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியா, அமெரிக்கா இடையே ஒரு 'மினி வர்த்தக ஒப்பந்தம்' கையெழுத்தாகியுள்ளதாக பல செய்திகள் கூறுகின்றன. டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபரான பிறகு, உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு வரிகளை விதிப்பதாக அறிவித்திருந்தார். இந்திய பொருட்களுக்கு 26 சதவிகித வரியை விதிப்பதாக அவர் அறிவித்திருந்தார். இருப்பினும், ஜூலை 9 வரை இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார். ஆனால் அனைத்து நாடுகளுக்கும் 10 சதவிகித வரி விகிதம் என்ற கொள்கை தொடர்ந்தது. ஜூலை 9 என்கிற வரம்பு விரைவில் காலாவதியாகப் போகிறது. அதற்கு முன் அமெரிக்கா பல்வேறு நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்ய வேண்டும். திங்கள் கிழமை முதல் அனைத்து நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை அறிவிப்பதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் அறிவித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா இடையே ஒரு மினி வர்த்தக ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிரிக்ஸ் நாடுகள் மீது வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்த பிறகு, அது இந்தியாவையும் பாதிக்குமா? இந்தக் கேள்விக்கு, இந்தியா உள்படப் பல பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். "இந்தியா தற்போது 10 சதவிகித வரியை ஏற்றுக்கொண்டுள்ளது, ஆனால் அடுத்து விதிக்கப்படுவதாகக் கூறப்படும் 26 சதவிகித வரி குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. விவசாயம் மற்றும் பால் பொருட்கள் தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க இந்தியா தயாராக இல்லை" என்கிறார். "அமெரிக்கா இன்று என்ன நினைக்கிறதோ அது ஒருபோதும் இறுதி ஒப்பந்தமாக இருக்காது. ஏனென்றால் அது இன்று ஒரு விஷயத்தைக் சொல்கிறது, நாளை அது வேறொன்றைச் சொல்லும். உதாரணமாக, வியட்நாமுடனான அமெரிக்காவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) கடந்த 20-25 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வந்தது, ஆனால் அது உடனடியாக முடிவுக்கு வந்தது" எனக் கூறுகிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா. "டிரம்ப், பிரிக்ஸ் அமைப்பு காரணமாக இந்தியா மீது வரிகளை விதித்தால், அதன் ஐடி, மருந்துத் துறை அல்லது ஜவுளி போன்ற தொழில்கள் பெரும் இழப்பைச் சந்திக்கும்" என்று அபராஜிதா காஷ்யப் கூறுகிறார். அமெரிக்காவின் அழுத்தம் பிரிக்ஸ் மற்றும் குளோபல் சௌத் போன்ற மன்றங்களில் மீண்டும் தீவிரமாக முதலீடு செய்ய இந்தியாவை தூண்டக்கூடும் என்று அவர் கூறுகிறார். "ஆனால், சீனா ஆதிக்கம் செலுத்தும் மன்றங்களை அதிகமாக சார்ந்திருக்கக் கூடாது என்ற சவாலையும் இந்தியா எதிர்கொள்ளும்" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgrx1lkdny5o
-
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம் - பொலிஸ்
08 JUL, 2025 | 03:19 PM சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்து. சிறுவர்களை யாசகம் மற்றும் கடினமான தொழில்களில் ஈடுபடுத்துதல், துன்புறுத்துதல், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்து. சிறுவர்களை பாதுகாப்பது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும். எனவே, சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/219488
-
லலித், குகன் உள்ளிட்ட யுத்தத்திற்கு பின் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம் – அமைச்சர் ஆனந்த விஜேபால
Published By: DIGITAL DESK 2 08 JUL, 2025 | 02:57 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ், குகன் முருகானந்தன், உட்பட யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேர வேளையில், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்த ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக, தற்போதைய ஜனாதிபதியின் நியமனத்தை அடுத்து ஏழு குற்றச் செயல்கள் தொடர்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை ஜனாதிபதி அறிவித்தார் என்பதை அறிவீர்களா?. 2011 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் காணாமலாக்கப்பட்ட லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகாநந்தன் ஆகிய இரண்டு அரசியல் செயற்பாட்டாளர்களின் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் இன்றளவிலான முன்னேற்றம் யாது? என்றும், இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல் நிலை முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற ஆயினும் இற்றைவரையில் தீர்க்கப்படாத ஏதேனுமொரு காணாமலாக்கப்பட்ட சம்பவம் பற்றிய விசாரணைகள் இன்றளவில் நிறைவடைந்துள்ளதா? என்றும் மற்றும் மேற்படி காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் தாமதமாக்கப்பட்டமைக்கு அரசியல் தலையீடுகள் காரணமாக அமைந்துள்ளனவா? என்றும் கேட்டார். இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, 2011 டிசம்பர் 9ஆம் திகதி இடம்பெற்ற லலித் குமார்,குகன் முருகானந்தம் காணாமல் போன சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் 2011 டிசம்பர் 11ஆம் திகதி விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் 17 சந்தர்ப்பங்களில் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலதிக அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார். எனினும் இறுதியாக 2014 ஒக்டோபர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கை தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிறுத்துவதற்கு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் இல்லாமையினால் பதில் பொலிஸ்மா அதிபரால் 2025 ஜூன் 3ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இது தொடர்பான தேவையான உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி குற்றவியல் விசாரணை மற்றும் நிதி விசாரணை பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்து இந்த விசாரணைகள் தொடர்பில் சகல ஆவணங்களையும் முன்வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அந்த திணைக்களத்தால் மனித கொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணை பிரிவினால் தற்போது விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற நான்கு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினாலும், 6 சம்பவங்கள் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது டன் இந்த காணாமல் போன சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றார். https://www.virakesari.lk/article/219476
-
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
கிரிக்கெட் உலகை மெய்சிலிர்க்கச் செய்த நெகிழ்ச்சி சம்பவம் தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்டவீரர் வியென் முல்டர் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்துள்ளார். மிகவும் அரிய உலக சாதனையொன்றை நிலைநாட்டக்கூடிய வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பினை முல்டர் நிராகரித்துள்ளார். கிரிக்கெட் உலகம் போற்றும் ஜாம்பவான்களில் ஒருவரான மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் பிரயன் லாராவின் சாதனையை முறியடிக்க முல்டருக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. தென்னாபிரிக்க அணியின் பதில் தலைவராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதி கூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை பிரயன் லாரா நிலைநாட்டியுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக பிரயன் லாரா ஆட்டமிழக்காது 400 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார். சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முல்டர் ஆட்டமிழக்காது 367 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டார். இந்தப் போட்டியில் முல்டர் தென்னாபிரிக்க அணியின் பதில் தலைவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முல்டர் சாதனை முயற்சியை தவிர்த்தார் பிரயன் லாரா ஓர் ஜாம்பவான் எனவும் அவரது சாதனையை தாம் முறியடிப்பது பொருத்தமற்றது எனவும் லாராவின் சாதனை அப்படியே நீடிக்க வேண்டும் அதுவே முறை எனவும் முல்டர் தெரிவித்துள்ளார். அணியின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் தாம் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் இந்தப் போட்டியில் முல்டர் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளார். தென் ஆபிரிக்க அணியின் சார்பில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்களை முல்டர் பெற்றுக்கொண்டுள்ளார். தனது நாட்டு வீரர் அல்லாத ஓர் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிக்கக் கூடாது அவரது பெயர் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டுமென முல்டர் சாதனை முயற்சியை கைவிட்டமை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. https://tamilwin.com/article/mulder-lara-keeping-that-record-1751937909
-
செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல் செய்தவருக்கு அச்சுறுத்தல்!
Published By: VISHNU 08 JUL, 2025 | 09:30 PM செம்மணி விடயம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய அச்சுறுத்தல், குறித்த மயானத்தின் நிர்வாகசபை உறுப்பினரான திரு.கிருபாகரன் தெரிவித்துள்ளார். 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மர்ம வாகனம் செம்மணியை நோட்டமிடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அந்த செய்திகள் முற்றும் முழுதாக உண்மை. அந்த மர்ம வாகனமானது எனது வீட்டு அருகாமையிலும் வந்திருந்தது. வழக்காளியான என்னை அச்சுறுத்துவதே இதன் நோக்கமாகும். வழக்கு தொடர்பாக 1995 - 2000 வரையான காலப்பகுதியில் இங்கே கடுமையான செய்தி தணிக்கைகள் இருந்த நிலையில் நீதிமன்ற செயற்பாடுகளும் பொலிஸ் செயல்பாடுகளும் இல்லாது நிர்வாக ரீதியான செயல்பாடுகள் அனைத்தும் இராணுவத்தின் வசம் இருந்ததால் மக்கள் தாமாக முன்வந்து எந்த சாட்சியங்களையும் பதியவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் நான் இந்த விடயத்தை இன்று கையில் எடுத்ததால் அரியாலை பகுதியில் இருக்கின்ற பாதிக்கப்பட்ட மக்கள் தமது சாட்சியங்களை எனக்கு தந்து கொண்டிருக்கின்ற நிலையிலே இந்த சாட்சியங்களை அச்சுறுத்துகின்ற அல்லது இந்த சாட்சியங்கள் சாட்சி கூற வருவதை தடுப்பதாக இந்த செயல்பாடு காணப்படுகிறது. அதாவது 1998ஆம் ஆண்டு முதலாவது குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச வழங்கிய புதைகுழிகள் தொடர்பான அறிக்கையிலே, பதினைந்தாவது புதைக்குழியாக குறிப்பிடப்பட்ட ஏ-9 வீதி, பொன்னம்பலம் சந்திக்கு அருகாமையில் இருக்கின்ற இராணுவ முகாமுக்கு அருகில் இருக்கின்ற கிணற்றிலிருந்து அகழ்வு இடம் பெற்றது. அதற்குப் பின்னால் இப்போதும் இராணுவ முகாம் இருக்கின்றது. அந்த இராணுவ முகாம் அமைந்துள்ள தனியார் காணிக்குள் தான் அந்த மர்ம வாகனம் சென்றது. இதனை நான் அவதானித்தேன். நான் வசிக்கின்ற வீட்டுக்கான வீதியானது எனது வீட்டுடனேயே முடிவடைகின்றது. ஆகையால் வேறொரு வாகனம் அந்த ஒழுங்கைக்கு வருவதற்கான அவசியம் இல்லை. இரண்டு வாகனங்கள் இவ்வாறு வந்திருந்தது. இதனை நேரில் கண்ட ஒருவர் எனக்கு தெரிவித்திருக்கின்றார். ஆகவே எவ்வாறான அச்சுறுத்தல்கள், எவ்வாறான செயற்பாடுகள் நடந்தாலும் இந்த வழக்கில் நான் உறுதியாக இருக்கின்றேன். மக்களும் உறுதியாக தமது சாட்சியங்களை தருகின்றார்கள். இதன்மூலம் பல உண்மைகள் வெளிவருகின்றன. அதனை நாங்கள் நீதிமன்ற செயற்பாட்டுக்கு சமர்ப்பித்து தொடர்ந்து தமிழ் மக்களுக்கான நீதிக்கான அனைத்து செயல்பாடுகளையும் முன்னெடுப்பேன் என்றார். https://www.virakesari.lk/article/219522
-
ரஷ்ய ஜனாதிபதி புட்டினால் பதவி நீக்கப்பட்ட ரஷ்ய அமைச்சர் உயிரை மாய்த்தார்
ரஷ்யாவில் புதின் பதவி நீக்கிய அமைச்சர் மர்ம மரணம் - என்ன நடந்தது? முழு பின்னணி பட மூலாதாரம்,VLADIMIR SMIRNOV/TASS படக்குறிப்பு, ரோமன் ஸ்டாரோவோய்டிற்கு 53 வயதாகியிருந்தது 25 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோய்ட் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ஸ்டாரோவோய்ட்டை அதிபர் விளாடிமிர் புதின் திங்கள்கிழமை பதவி நீக்கம் செய்திருந்தார். அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. அதன் பின் சற்று நேரத்தில் போக்குவரத்து துணை அமைச்சர் ஆண்ட்ரேய் நிக்கிடின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போது இந்த சம்பவத்திற்கான காரணங்களை கண்டறிய முயற்சிப்பதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ஸ்டாரோவோய்ட் இறப்பு பற்றிய அறிவிப்புக்கு முன், ரஷ்ய செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவிடம் செய்தியாளர்கள் ஸ்டாரோவோய்ட் பற்றி கேள்வி எழுப்பினர். குர்ஸ்கில் நடைபெற்ற சம்பவங்களால் ஸ்டாரோவோய்ட் மீது அதிபர் புதின் நம்பிக்கை இழந்துவிட்டாரா? என்பதுதான் கேள்வி. இதற்கு பதிலளித்த பெஸ்காவ், "நம்பிக்கை இழந்திருந்தால், அது அதிபரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் போன்ற வார்த்தைகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை." ஸ்டாரோவோய்ட் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் உயிரிழந்திருக்கலாம் என விசாரணை முகமையுடன் தொடர்புடைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஃபோர்ப்ஸ் பதிப்பகம் எழுதியுள்ளது. ஸ்டாரோவோய்ட் "நீண்ட காலத்திற்கு முன்னரே" உயிரிழந்துவிட்டதாக ஸ்டேட் டூமாவின் (ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவை) பாதுகாப்பு குழுவின் தலைவர் ஆண்ட்ரேய் கார்டபோலோவ் ரஷ்ய ஊடகமான ஆர்.டி.வி.ஐ. யிடம் தெரிவித்தார். ஆனால் ஸ்டாரோவோய்ட் திங்கள்கிழமை தனது காருக்கு அருகே சில மீட்டர் தொலைவில் இருந்த புதருக்கு பின்னால் உயிரிழந்து கிடந்ததாக ஆர்.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட ஒடிண்ட்சோவோ வாகன நிறுத்துமிடத்தில் விசாரணை குழுவினர் வேலை செய்துகொண்டிருக்கும் புகைப்படங்களும், காணொளியும் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் போக்குவரத்து அமைச்சராக நியமனம் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ரோமன் ஸ்டாரோவோய்ட் குர்ஸ்க் பகுதிக்கு ஐந்து ஆண்டுகளாக ஆளுநராக இருந்தார் ஸ்டாரோவோய்ட் 2024 மே மாதத்தில் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் அந்த பொறுப்பில் சுமார் ஒரு வருடம் நீடித்தார். முன்னதாக அவர் யுக்ரேன் எல்லையில் உள்ள குர்ஸ்க் பகுதி ஆளுநராக சுமார் ஐந்து ஆண்டுகள் இருந்தார். அவருக்கு பின்னர் அலெக்ஸி ஸ்மிர்னாவ் அங்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். முன்னதாக ஸ்மிர்னாவ் குர்ஸ்க் அரசின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார். ஊடகம் மற்றும் டெலிகிராம் சேனல்களின் கூற்றுப்படி, ஸ்டாரோவோய்டுக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படக்கூடும். முன்னாள் அமைச்சர் ஸ்டாரோவோய்ட்டுக்கு எதிராக ஸ்மிர்னாவ் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுவதாக 'காமர்சண்ட்' எழுதியுள்ளது. ஆர்.பி.சி வெளியீட்டின் கூற்றின்படி குர்ஸ்க் பகுதியை பலப்படுத்தும் கட்டுமானப் பணிகளில் ஸ்டாரோவோய்ட் ஊழல் செய்தாரா என ஒரு விசாரணை நடைபெற்று வருகிறது. 2019-ல் குர்ஸ்க் ஆளுநரானார் ஸ்டாரோவோய்ட் குர்ஸ்க்கில் 1972ஆம் ஆண்டு பிறந்தார். சிறிது காலத்திற்கு பிறகு அவரது குடும்பம் செயின்ட் பீட்டர்ஸ்பர்கிற்கு குடிபெயர்ந்தது. அவர் தனது அரசியல் பயணத்தை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து தொடங்கினார். வாலண்டினா மாட்வியென்கோ அங்கு ஆளுநராக இருந்தபோது, ஸ்டாரோவோய்ட் அவரது குழுவில் ஒரு அங்கமானார். ஸ்டாரோவோய்டிற்கு முதலில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள வாகன தொழிற்சாலைகளின் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் நகரில் நடைபெற்ற முக்கிய கட்டுமானப் பணிகளுக்கு மேற்பார்வையாளராக இருந்தார். பின்னர் விளாடிமிர் புதின் தலைமையில் இயங்கி வந்த ரஷ்ய அரசின் தொழில் மற்றும் கட்டமைப்புதுறையில் ஸ்டாரோவோய்ட் இணைந்தார். அந்த காலகட்டத்தில், ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயாரிப்பு பணிகளிலும் அவருக்கு தொடர்பு இருந்தது. 2012ஆம் ஆண்டில் (ரஷ்யாவில் சாலை அமைக்கும் முகமையான) ரோஸவ்டோடரின் தலைவராக ஸ்டாரோவோய்ட் நியமிக்கப்பட்டார், 2018-ல் அவர் போக்குவரத்து துறையின் துணை தலைவரானார். 2018 அக்டோபரில் அவர் குர்ஸ்க் பகுதியில் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிபிசி ரஷ்ய சேவை செய்தியாளர் கூறியது என்ன? பட மூலாதாரம்,TASS படக்குறிப்பு, ரோமன் ஸ்டாரோவோய்டின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியின் புகைப்படங்களை பல முகமையில் வெளியிட்டுள்ளவெளியிட்டுள்ளன ரோமன் ஸ்டாரோவோய்ட்டின் மரணம் புதினின் ரஷ்யாவுக்கு ஒரு அசாதாரண நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஸ்டாரோவோய்ட்டின் கதை, சோவியத் காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த நிகொலாய் ஷ்செலோகோவின் கதையை நினைவுப்படுத்துகிறது. ஷ்செலோகோவ் பதவி விலகிய பின்னர் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்பட்டார். 1984 டிசம்பரில் அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்ட பின்னர் அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். பட மூலாதாரம்,TASS படக்குறிப்பு, ரோமன் ஸ்டாரோவோய்டின் கார் அருகே புலனாய்வு குழு ரஷ்ய அரசு முகமைகளின் கூற்றுப்படி, 2022-2023ஆம் ஆண்டு குர்ஸ்க் அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் நடைபெற்றது. ஸ்டாரோவோய்ட் அப்போது அந்தப் பகுதியின் ஆளுநராக இருந்தார். அவரது முன்னாள் துணை அமைச்சர் அலெக்ஸி ஸ்மிர்னாவின் கைதுக்கு பின்னர், ரோமன் ஸ்டாரோவோய்ட் கடந்த மூன்று மாதங்களை அச்சத்திலும் எதிர்காலம் குறித்த கவலையிலும் செலவிட்டதாக நம்பப்படுகிறது. ரஷ்யாவில் கைது செய்யப்படுபவர்கள் தங்களுக்கு மேலான பதவியில் இருப்பவர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பது வழக்கமான ஒன்று. ஸ்டாரோவோய்ட் இதைக் குறித்தும் கவலை கொண்டிருக்கலாம். இதுவரை, தங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு இருக்கும் செல்வாக்கு தங்களை காப்பாற்றும் என பெரும்பாலான அதிகாரிகள் நம்பி வந்திருக்கின்றனர். சிலர் தாங்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பு நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். ரஷ்யாவின் செல்யபின்ஸ்க் பகுதியை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் (மிகெயில் யுர்யெவிக், மற்றும் அவருக்கு பின்னர் பதவியேற்ற போரிஸ் டப்ரோவ்ஸ்கி) ஏற்கனவே இதை செய்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2vp4rqye7o
-
செம்மணி மனித புதைகுழி நிச்சயமாக ஒரு குற்றம் நடந்த இடமாகவே காணப்படுகின்றது - சட்டத்தரணி ரத்னவேல்
08 JUL, 2025 | 12:08 PM செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுவது மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஏனென்றால் சிறுவர்களை எந்த விதத்திலும் குற்றவாளிகளாகவோ அல்லது குற்றச்செயலில் ஈடுபட்டவர்களாகவோ கருத முடியாது. எனவே இது நிச்சயமாக ஒரு குற்றம் நடந்த இடமாகவே இந்த மனித புதைகுழி காணப்படுகின்றது என சட்டத்தரணி கேஎஸ் ரத்னவேல் தெரிவித்துள்ளார் நேற்றைய நாள் அகழ்வின் முடிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இன்றைய தினம் 12வது நாளாகவும் அகழ்வு நடைபெற்றது, நிபுணர் ராஜ்சோமதேவாவும் அவரது குழுவினரும் மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் தொல்லியல் துறையை சேர்ந்த மாணவர்களும் இங்கு வந்து அகழ்வாராச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அத்துடன் புதியதொரு இடத்தையும் கண்டுபிடித்து அகழ்வாராச்சி இடம்பெறுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் மீட்கப்பட்டுள்ள கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் யாவுமே ஒரு குறைந்தளவு - அதாவது ஒன்றரையடிக்குள்ளான ஒரு இடத்தில் புதைத்திருக்கின்றார்கள். இது சாதாரணமாக உடல்கள் புதைக்கப்பட்ட இடமாக தெரியவில்லை, மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட இடமாக தெரியவில்லை அதற்கு மாறாக ஏனோதானோ என்று அவசர அவசரமாக சடுதியாக செய்யப்பட்ட விடயமாக தெரிகின்றது. சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுவது மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஏனென்றால் சிறுவர்களை எந்த விதத்திலும் குற்றவாளிகளாகவோ அல்லது குற்றச்செயலில் ஈடுபட்டவர்களாகவோ கருத முடியாது. எனவே இது நிச்சயமாக ஒரு குற்றம் நடந்த இடமாகவே இந்த மனித புதைகுழி காணப்படுகின்றது . இந்த விடயத்தில் ஆய்வாளர்கள் மிகவும் கவனமாக செயற்பட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219463
-
பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் - பொலிஸ் ஊடகப் பிரிவு
08 JUL, 2025 | 11:11 AM நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொதுமக்கள், பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள பல எளிமையான வழிமுறைகள் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள எளிமையான வழிமுறைகள்; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - 071 8591882 பொலிஸ் ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி - 071 8592067 பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் - 071 8592714 பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் - 071 8591883 Hunting இலகுவான தொலைபேசி இலக்கம் - 011 2887973 வாட்ஸ்அப் இலக்கம் - 071 8592802 பொலிஸ் ஊடகப் பிரிவின் இணையவழி முகவரி - http://www.police.lk/ பொலிஸ் முகநூல் பக்கம் - (https://www.facebook.com/srilankapoliceofficial) பொலிஸ் யூடியூப் - (https://www.youtube.com/@srilankapoliceofficial) பொலிஸ் எக்ஸ் (X) தளம் - https://x.com/SL_PoliceMedia?fbclid=IwY2xjawJtQNtleHRuA2FlbQIxMAABHvHLAIRrlUPeQeM0ReDB_ywX7_qDJjgTZYxUFaSzSHcLH9TVEUmCTZu8ewUw_aem_LYvQlcoYckoWxnjZgQkubw பொலிஸ் டிக்டோக் - https://www.tiktok.com/@sri_lanka_police?is_from_webapp=1&sender%20device=pc பொலிஸ் மின்னஞ்சல் முகவரிகள் - dir.media@police.gov.lk / oic.media@gov.lk / policemedia.media@gmail.com பொலிஸ் தபால் இலக்கம் - பொலிஸ் ஊடகப் பிரிவு, 14ஆவது மாடி, சுஹுருபாய, பத்தரமுல்லை , கொழும்பு மேலே குறிப்பிடப்பட்டுள்ள எளிமையான வழிமுறைகள் ஊடாக பொதுமக்கள், பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/219459