Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Iran Nuclear Site மீது US நேரடி தாக்குதல்; உச்சகட்ட பதற்றத்தில் Middle East - என்ன நடக்கிறது? இரான் இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பமாக இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இரான் சமாதானத்தை நாட வேண்டும் என்றும் பதில் தாக்குதல் தொடுத்தால் தங்களின் பதிலடி தற்போது நடத்தப்பட்ட தாக்குதலை விட மிக வலிமையானதாக இருக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். மறுபுறம், தங்களின் இறையாண்மையை தற்காத்துக்கொள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என இரான் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? #Iran #America #DonaldTrump இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  2. ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு Published By: DIGITAL DESK 2 22 JUN, 2025 | 05:14 PM கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன்படி வட மாகாணத்தில் 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (22) முற்பகல் இரணைமடு நெலும் பியச கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உயர் சித்தி பெற்ற முதல் 10 மாணவர்கள் வீதம், ஒரு மாவட்டத்தில் இருந்து 60 மாணவர்கள் தெரிவு செய்து, 300 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் 30 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டம் ஏனைய மாவட்டங்களிலும் நடைமுறைப்படவுள்ளது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதி நிதியத்தினை முறைமைப்படுத்தி, அதன் சேவைகளை விஸ்தரிப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். கடந்த கால நடைமுறைகளில் இருந்த தவறுகளை சீர்செய்து, இன்று அதன் நன்மைகளைப் பெற வேண்டியவர்களுக்கு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை செயற்திறன் மிக்க வகையில் மாற்றுவதற்கு அதனை டிஜிட்டல் மயப்படுத்தவும், அதன் சேவைகளை பிரதேச ரீதியாகப் பரவலாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இங்கு குறிப்பிட்டார். பிள்ளைகள் வாழ்க்கையை வெல்வதற்கு கல்வியே பிரதான கருவியாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிள்ளைகள் தமக்கு கிடைக்கும் இந்த நன்மைகளை சரியாகப் பயன்படுத்தி, கல்வியில் சிறந்து விளங்குவதோடு, சிறந்த பிரஜைகளாக வாழ்வில் வெற்றி பெறுவதுடன் அதேபோன்று, நாடும் தேசமும் வெற்றிபெறும் வகையில் பிள்ளைகள் செயற்பட வேண்டும் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரும் இங்கு உரையாற்றினார்கள். யாழ் இந்துக் கல்லூரி மாணவன் அபிஷேக் இங்கு நன்றியுரை ஆற்றியதுடன், பொருளாதாரத்தில் சிரமம் உள்ள மாணவர்கள் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும், அதற்காக ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி நிதியத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கே. இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, எம். ஜகதீஸ்வரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே, உட்பட ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவு பிரதானிகள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/218157
  3. 22 JUN, 2025 | 05:17 PM வவுனியா மாநகரசபை உறுப்பினர் ஒருவர் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டிருந்த பகுதிகளில் தனது சொந்த நிதியில் வாகனத்தை கூலிக்கு அமர்த்தி நீர் விநியோகம் மேற்கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. வவுனியா மாநகர சபையின் பண்டாரிக்குள வட்டார உறுப்பினரான சி.பிறேமதாஸ் என்பவராலேயே குறித்த வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்டது. வவுனியா நகரின் சில பகுதிகள், மன்னார் வீதி, குருமன்காடு, நகரசபை விடுதி, அரச விடுதிப் பகுதி உளளிட்ட சில பகுதிகளில் சனிக்கிழமை (21) பிற்பகல் 3 மணி முதல் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பினால் வழங்கப்படும் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டு சுமார் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது. இதனால் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள், அரச விடுதிகள், வீடுகள் என்பவற்றில் தமது அன்றாட செயற்பாடுகளுக்கு நீரைப் பெற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கினர். இந்நிலையில் வவுனியா மாநககர சபை உறுப்பினர் சி.பிறேமதாஸ் நீர்தாங்கி வாகனம் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி அதன் மூலம் அப் பகுதியில் உள்ள மக்களது வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு தானே நீரை எடுத்துக் கொடுத்து மக்களது அவசர நீர்த்தேவையை பூர்த்தி செய்துள்ளார். இவரது முன்மாதிரியான செயற்பாடு மக்களது பாராட்டைப் பெற்றுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் விநியோக குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த வெடிப்பு புகையிரத தண்டவாளத்திற்கு கீழ் உள்ள குழாயில் ஏற்பட்டுள்ளதால் புகையிரத திணைக்க அதிகாரிகள் வருகை தந்த பின்னரே அதனை சீர் செய்ய முடியும் என்பதாலேயே தாமத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிது. https://www.virakesari.lk/article/218156
  4. Published By: VISHNU 22 JUN, 2025 | 08:52 PM யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென காற்றுடன் பெய்த மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை தென்னிந்திய இசை கலைஞர்களின் பங்கேற்புடன் இசை நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் 5000, 3000 மற்றும் 2000 ரூபாய் பெறுமதியான நுழைவு சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு, நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இசை நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக, மங்கள விளக்கேற்றும் வேளை திடீரென கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையால், நிகழ்வுக்காக போடப்பட்டிருந்த கதிரைகள், அருகில் இருந்த பந்தல்களின் தகரங்கள் என்பன காற்றினால் தூக்கி வீசப்பட்டமையால், பார்வையாளர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையால், நிகழ்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஏற்பாட்டளர்கள் அறிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218169
  5. தூக்கம் குறைவு என நீங்கள் முன்னர் குறிப்பிட்டதற்கும் சிறுவயதில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கும் தொடர்பிருக்கலாமோ? தொடருங்கள் சகோதரா.
  6. கமிந்துவின் அரைச் சதத்தை ஷத்மான், ஷன்டோ அரைச் சதங்கள் விஞ்சின; இலங்கையை விட 187 ஓட்டங்களால் பங்களாதேஷ் முன்னிலை Published By: VISHNU 20 JUN, 2025 | 07:55 PM (நெவில் அன்தனி) காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் குவித்த அரைச் சதத்தை ஷத்மான் இஸ்லாம், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகியோரின் அரைச் சதங்கள் விஞ்சியதுடன் பங்களாதேஷ் முன்னிலையில் இருக்கிறது. போட்டியின் நான்காம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (20) இலங்கையை முதலாவது இன்னிங்ஸில் 485 ஒட்டங்களுக்கு ஆட்டம் இழக்கச் செய்த பங்களாதேஷ் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதம் இருக்க இலங்கையை விட 187 ஓட்டங்களால் பங்களாதேஷ் முன்னிலையில் இருக்கிறது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) பாடாலை மாணவர்கள் காலி கோட்டைக்கு மேலே உள்ள புல்வெளியில் இருந்து போட்டியைக் கண்டு களித்தமை விசேட அம்சமாகும். போட்டியின் ஐந்தாவதும் கடைசியுமான நாளைய தினம் சனிக்கிழமை (21) அதிசயம் நிகழ்ந்தாலன்றி இந்தப் போட்டி சுவாரஸ்யமற்ற முடிவை நோக்கி நகர்வதை தவிர்க்க முடியாது. பங்களாதேஷின் இரண்டாவது இன்னிங்ஸில் அனாமுல் ஹக் (4), மொமினுள் ஹக் (14) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். ஆனால், ஷத்மான் இஸ்லாம் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 76 ஓட்டங்களைப் பெற்றதால் பங்களாதேஷ் நல்ல நிலையை அடைந்தது. ஷத்மான் இஸ்லாமும் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் 3ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து ஷன்டோ திறமையாகத் துடுப்பெடுத்தாடி இப் போட்டியில் இரண்டாவது தடவையாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் முஷ்பிக்குர் ரஹிமுடன் 49 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளார். ஷன்டோ 56 ஓட்டங்களுடனும் ரஹீம் 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்னனர். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, மிலன் ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். முன்னதாக, நான்காம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 368 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 485 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா (19), குசல் மெண்டிஸ் (5) ஆகிய இருவரும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (386 - 6 விக்.) அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ், மிலன் ரத்நாயக்க ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதியான 84 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால் இருவரும் மொத்த எண்ணிக்கை 470 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தனர். கமிந்து மெண்டிஸ் தனது 13ஆவது டெஸ்டில் 5ஆவது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்து 87 ஓட்டங்களுடன் வெளியேறினார். மிலன் ரத்நாயக்க 39 ஓட்டங்களைப் பெற்றார். பின்வரிசையில் பிரபாத் ஜயசூரிய 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் நயீம் ஹசன் 121 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஹசன் மஹ்முத் 74 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/218025 டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உணர்ச்சிவசப்பட்டவராக விடைபெற்றார் மெத்யூஸ் : இலங்கை - பங்களாதேஷ் டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு 22 JUN, 2025 | 04:44 AM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியான ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தனது கடைசி இன்னிங்ஸில் ஏஞ்சலோ மெத்யூஸ் 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார். போட்டி முடிவில் பேசிய அவர், 'நான் ஏற்கனவே எனது ஓய்வை அறிவித்ததிலிருந்து எனக்கு கிடைத்த பாசத்தை என்னால் நம்பமுடியவில்லை. நிச்சயமாக பாசத்தினால் நிரம்பியிருக்கிறேன். எனக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது ஒரு எளிதான பயணம் அல்ல. நிறைய மேடு பள்ளங்களை சந்தித்தேன். ஆனால், எனக்கு கிடைத்த ஆதரவின் காரணமாக அவற்றை எல்லாம் கடந்து என்னால் எனது டெஸ்ட் வாழக்கைப் பயணத்தை நிறைவு செய்ய முடிந்தது. வெளிப்படையாக (நான் உணர்ச்சிவசப்படுறேன்) கூறுவதென்றால், கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வடிவத்திலிருந்தும் நான் விளையாட விரும்பிய வடிவத்திலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். இங்கிருந்து இளையவர்கள் கிரிக்கெட்டில் தொடர வேண்டிய தருணம் இது. 'ஓர் அற்புதமான டெஸ்ட் போட்டியில் விளையாடியதற்காக பங்களாதேஷை வாழ்த்தவேண்டும். முஷி (முஷ்பிக்குர்), ஷன்டோ ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். அதேபோன்று பெத்துமும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்' என்றார் மெத்யூஸ். தனது சொந்த கிரிக்கெட் வாழ்க்கையில் ஈட்டிய மகத்தான வெற்றிகளைப் பற்றி மெத்யூஸ் கூறுகையில், 'இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஈட்டிய வெற்றி, அவுஸ்திரேலியாவிற்கு எதிராக எமது சொந்த மண்ணில் 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் ஈட்டிய முழுமையான வெற்றி என்பன முக்கியமானவையும் மகத்தானவையுமாகும். அது முழு அணிக்கும் கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகும். எனக்கு ஒத்துழைப்பு நல்கிய சகல வீரர்களுக்கும் பயிற்றுநர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் அறிமுகமானது முதல் என்னோடு இருந்த அனைத்து இரசிகர்களுக்கும் நன்றி. மிக்க நன்றி' என்றார். இது இவ்வாறிருக்க, இப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பங்களாதேஷ் அணித் தலைவர் சதங்கள் குவித்தது விசேட அம்சமாகும். பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 296 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆட்டம் முடிவுக்குவந்த போது 4 விக்கெட்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பெத்தும் நிஸ்ஸன்க 24 ஓட்டங்களைப் பெற்றதுடன் கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் தலா 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீ;ச்சில் தய்ஜுல் இஸ்லாம் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பங்களாதேஷ் 6 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆட்டம் இழக்காமல் 125 ஓட்டங்களையும் ஷத்மான் இஸ்லாம் 76 ஓட்டங்களையும் முஷ்பிக்குர் ரஹிம் 45 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 102 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் 495 ஓட்டங்களையும் இலங்கை 485 ஓட்டங்களையும் பெற்றன. https://www.virakesari.lk/article/218092
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டுக்கால் சூப் குடிப்பது எலும்புகளுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல நன்மைகளை வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் எதிர்பாராதவிதமாக எலும்பு முறிவு ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து தினசரி குடிக்குமாறு வலியுறுத்துவார்கள். காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளால் அவதிப்படும் போது, வீட்டில் ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுப்பார்கள். இப்படி, பல விஷயங்களுக்கு ஆட்டுக்காலை சூப் வைத்துக் குடிக்குமாறு வலியுறுத்தும் அளவுக்கு அதில் அப்படி என்ன இருக்கிறது? உண்மையாகவே ஆட்டுக்கால் சூப், நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக எலும்பு மற்றும் மூட்டுகளுக்கு வலிமையை வழங்குகிறதா? இதைத் தெரிந்துகொள்ள ஊட்டச்சத்து நிபுணர்களிடம் பேசினோம். ஆட்டுக்கால் சூப் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? எலும்பின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலுக்குத் தேவையான, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகள் ஆட்டுக்காலில் இருந்து கிடைப்பதாக ஹார்வர்ட் பொது சுகாதாரக் கல்லூரியில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது. ஆட்டு இறைச்சியில், குறிப்பாக அதன் கால் எலும்புகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நமது எலும்புகள், மூட்டுகள், முடி, சருமம், ஆற்றல், நோய் எதிர்ப்பாற்றல் என்று பல வகைகளில் நன்மை பயப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ். ஆட்டுக்காலில் கொலாஜென் மற்றும் ஜெலட்டின் நிறைந்துள்ளதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக். இந்தக் கூறுகள், மூட்டு ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும், மூட்டு வலிக்கு நிவாரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். அதுமட்டுமின்றி கொலாஜென் சரும ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் உதவுவதாகக் கூறுகிறார் ரம்யா. அவரது கூற்றை ஆமோதிக்கும் வகையில் பேசிய திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென், மூட்டுகளில் உயவுப் பொருளாகச் (lubricant) செயல்படுவதாகக் குறிப்பிடுகிறார். அதோடு, அவை சருமத்தில் சுருக்கம் போன்ற முதிர்ச்சி அடைவதால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைப்பதாகவும், ஆட்டுக்கால் சூப்பை தொடர்ச்சியாகப் பருகுவது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் எனவும் தெரிவித்தார். படக்குறிப்பு,ஆட்டுக்காலில் இருக்கும் கோலாஜென் எலும்பு மற்றும் மூட்டுகளை வலுப்படுத்த உதவுவதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக் ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் எலும்புகள், சருமம் மட்டுமின்றி உடலின் பல செயல்பாடுகளைச் சீராக வைத்துக்கொள்ள உதவுவதாக விளக்கினார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா. அவரது கூற்றுப்படி, அதிலுள்ள கிளைசீன், ப்ரோலீன் போன்ற அமினோ அமிலங்கள், குடல் செயல்பாடுகளைச் சீராக்க உதவுவதோடு, கல்லீரல் செயல்பாட்டைச் சீரமைப்பதன் மூலமாக உடலின் நச்சு நீக்க செயல்முறையையும் பேணுகின்றன. "பாரம்பரியமாகவே, தமிழ்நாட்டில் காய்ச்சல், எலும்பு முறிவு போன்றவற்றை எதிர்கொள்ளும் நபர்களுக்கு, ஆட்டுக்கால் சூப் கொடுப்பது அறிவுறுத்தப்படுகிறது. அதற்குக் காரணம், வேகமாக குணமடைவதற்கான ஊட்டச்சத்து, வலிமை மற்றும் ஆற்றலை அவை வழங்குவதே" என்கிறார் ரம்யா. ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் நல்லதல்ல? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டுக்காலில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர் ஆட்டுக்கால் சூப் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைச் செய்தாலும் அவற்றில் கொழுப்பு அளவு அதிகம் இருப்பதால் அவற்றை இதய நோய், அதீத கொழுப்பு, உடல் பருமன் போன்ற பிச்னைகள் உள்ளவர்களுக்கு அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ரம்யா. அவற்றைச் சமைக்கும் விதத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறார் அவர். "முழுமையாகச் சுத்தப்படுத்தப்படாத எலும்புகளில் சால்மொனெல்லா அல்லது ஈ.கோலி போன்ற பாக்டீரிய தொற்றுகள் இருப்பதற்கான அபாயம் உள்ளது. ஆகவே, அவற்றைச் சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் தேவை" என வலியுறுத்தும் ரம்யா, நன்கு சமைக்கப்படாத ஆட்டுக்கால்களை உட்கொள்வதிலும் இத்தகைய ஆபத்துகள் இருக்க வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறார். உடலில் யூரிக் அமிலம் அதிகளவில் இருப்பவர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே சிறுநீரக பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இதை எடுத்துக்கொள்வது சிறந்தது என்று அறிவுறுத்துகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக். பொதுவாக, ஆட்டுக்கால்களில் இருக்கும் முழு பயன்களையும் பெற வேண்டுமெனில், அவற்றை 10 முதல் 12 மணிநேரம் வரை, மெல்லிய வெப்பத்தில் தொடர்ச்சியாக வேகவைக்க வேண்டும் என்கிறார் அவர். படக்குறிப்பு,மிகக் குறைந்த உடல் எடை கொண்டவர்களுக்கு, சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நல்ல பயன்கள் கிடைப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் ஆனால், "இன்றைய வாழ்க்கை முறையில் அது சாத்தியமில்லை. வீட்டில் வழக்கமாகச் சமைக்கும் முறையில்கூட ஓரளவுக்கு அந்த ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்பதால், வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை என்ற அளவில் சீராக எடுத்துக்கொண்டாலே அதன் பயன்கள் உடலுக்குக் கிடைக்கும்," என்று விளக்கினார். "சுமார் 10 மணிநேரம் தொடர்ந்து மிதமான சூட்டில் சமைப்பதன் மூலம் அவற்றில் இருக்கும் அனைத்து ஊட்டச்சத்துகளும் சுமார் 95% கிடைக்கும். ஆனால், அப்படித்தான் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வழக்கமான முறையில் சமைத்துச் சாப்பிட்டாலே ஆட்டுக்காலில் இருக்கும் சத்துகள் 50 முதல் 75 சதவிகிதம் வரை உடலுக்குக் கிடைக்கும். எனவே 10 மணிநேரம் சமைக்க வேண்டும் எனக் கருதி அவற்றைத் தவிர்ப்பதைவிட, வழக்கமான முறையில் சமைத்து தொடர்ந்து உட்கொள்வது சிறந்தது," என்கிறார் திவ்யா. ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் அவசியம்? ஆட்டுக்கால்களில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால், கொழுப்பு அதிகமுள்ள நபர்களுக்கு அதைப் பரிந்துரைப்பதில்லை எனக் கூறும் திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால் சூப் எலும்புகளை மட்டுமின்றி கிட்டத்தட்ட மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுவதாகக் குறிப்பிட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்களுக்கான உணவுமுறையில் ஆட்டுக்கால் சூப்பையும் தான் பரிந்துரைப்பதாகக் கூறுகிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES "பொதுவாக கீமோதெரபி சிகிச்சையில் பல பக்கவிளைவுகள் உள்ளன. அதை மேற்கொள்வோரால் பெரிதாகச் சாப்பிட முடியாது. ஆனால் அவர்கள் நிச்சயமாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாக வேண்டும். ஆட்டுக்கால் சூப்பில் அத்தகைய அனைத்து ஊட்டச்சத்துகளும் இருப்பதால் அதைப் பருகுவது ஆரோக்கியத்திற்கு உதவும்," என்றார். கீமோதெரபியால் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறையும் எனக் கூறிய திவ்யா, அதை மேம்படுத்த ஆட்டுக்கால் சூப் உதவும் என்பதும் தான் அதை அதிகம் பரிந்துரைக்க ஒரு காரணம் எனக் குறிப்பிட்டார். ஜிம் செல்பவர்கள் இதை உட்கொள்வது உடலை வலுப்படுத்துவதில் பெரிதும் உதவுவதாகக் கூறும் திவ்யா, புரோட்டீன் பவுடர் போன்றவற்றை உட்கொள்வதைவிட, இவற்றில் அதிக நன்மைகள் கிடைப்பதாகத் தெரிவித்தார். இவைபோக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள், உடல் எடைக் குறைபாடு உடையவர்கள், சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள், பலவீனமான எலும்புகளைக் கொண்டவர்கள் இதைச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்றும் விளக்கினார் திவ்யா. அதுமட்டுமின்றி, முடி உதிர்வு பிரச்னையைக் குறைப்பதிலும் இது பயனளிப்பதாகக் குறிப்பிடும் அவர், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென் உள்படப் பல கூறுகள், பலவிதமான நன்மைகளை உடலுக்கு வழங்குவதாகக் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ljg064e89o
  8. 22 JUN, 2025 | 01:08 PM (நா.தனுஜா) இலங்கையில் தூய, தரமான, குறைந்த செலவிலான வலுசக்தி உற்பத்தி செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக 150 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. இச்செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையினால் குறைந்த செலவில் பாதுகாப்பானதும், நிலைபேறானதுமான வலுசக்தியை உற்பத்தி செய்யமுடியும் எனவும், இது அதிக செலவில் இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருளில் நாடு தங்கியிருப்பதைக் குறைப்பதற்கும், சோலார் மற்றும் காற்று மூலமான வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் உலக வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 'இச்செயற்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் குறைந்த விலையில், தீங்கற்ற மின்சாரத்தை விநியோகிக்க முடியும். இந்த இலக்கை யதார்த்தபூர்வமாக அடைந்துகொள்வதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடனும் தனியார் துறையினருடனும் இணைந்து பணியாற்றுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்' என மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லென் தெரிவித்துள்ளார். அதேவேளை வலுசக்தி உற்பத்தியில் இலங்கை அடையவிருக்கும் நிலைமாற்றமானது தூய வலுசக்தி உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும், வலுசக்திக் கிடைப்பனவை மேம்படுத்துவதற்கும், நீண்டகால அடிப்படையிலான வலுசக்தி மீளெழுச்சியைக் கட்டியெழுப்புவதற்கும் வாய்ப்பாக அமையும் என சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் இமாத் என் ஃபகோரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218131
  9. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்க தாக்குதலிற்கு முன்னர் ஈரான் அகற்றிவிட்டது - ரொய்ட்டர் 22 JUN, 2025 | 01:59 PM அமெரிக்காவின் தாக்குதலிற்கு முன்னர் ஈரான் தனது போர்டோ அணுஉலையிலிருந்து மிகவும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றிவிட்டது என ஈரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் இரகசிய இடமொன்றிற்கு மாற்றிவிட்டது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். போர்டோ அணுஉலையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று எடுக்கப்பட்ட செய்மதி படங்கள் போர்டோ அணுஉலைக்கு அருகில் நீண்டவரிசையில் டிரக்குகள் காணப்படுவதை காண்பித்துள்ளன. https://www.virakesari.lk/article/218135
  10. Published By: DIGITAL DESK 3 22 JUN, 2025 | 09:48 AM பிரேசிலின் சாண்டா கேடரினா மாநிலத்தில் பிரியா கிராண்டே நகரில் சனிக்கிழமை (21) காலை வெப்பக்காற்று பலூன் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அதில் வெப்பக்காற்று பலூனில் பயணம் செய்த 21 பேரில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, 13 பேர் காயமடைந்துள்ளனர். சாண்டா கேடரினா மாநில தீயணைப்புத் துறையின் தகவல்படி , சுற்றுலாவிற்குப் பயன்படுத்தப்பட்ட பலூன், காலை விமானப் பயணத்தின் போது திடீரென தீப்பிடித்தது. தீ விபத்துக்குப் பின்னர், பலூன் பிரியா கிராண்டே நகரில் தரையில் விழுந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்த 13 பேர் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சுற்றுலாப் பயணிகளிடையே வெப்பக்காற்று பலூன்களின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, சாவ் பாலோ மாநிலத்தில் வானத்திலிருந்து மற்றொரு பலூன் விழுந்ததில் 27 வயது பெண்ணெருவர் உயிழந்ததோடு, 11 பேர் காயமடைந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. https://www.virakesari.lk/article/218104
  11. நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் 22 JUN, 2025 | 01:02 PM (நா.தனுஜா) அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளைய தினம் நாட்டுக்கு வருகைதரவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், மகாநாயக்க தேரர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்க்ள, மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் 'பொறுப்புக்கூறல் செயற்திட்டம்' முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு திங்கட்கிழமை (23) நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு மற்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் என்பன அறிவித்துள்ளன. முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட் அல் ஹுஸைன் கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்தார். அதன் பின்னரான காலப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஒருவர் நாட்டுக்கு மேற்கொள்ளும் நான்காவது விஜயமாக இது அமைந்திருக்கின்றது. அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை வரை (26) நாட்டில் தங்கியிருக்கும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அத்தோடு பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் ஏனைய முக்கிய அரச கட்டமைப்புக்களின் அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளார். அதேவேளை செவ்வாயன்று (24) மாலை 4.30 மணிக்கு பாராளுமன்றக் கட்சித்தலைவர்களை பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் சந்தித்துக் கலந்துரையாடவிருக்கும் வோல்கர் டேர்க், மாலை 5.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட சந்திப்பொன்றில் பங்கேற்கவுள்ளார். இச்சந்திப்புக்கு முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர், மதத்தலைவர்கள், இராஜதந்திரிகள் என சுமார் 300 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது. இதன்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், செயற்திறன்மிக்க தீர்வுகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் என்பன உள்ளடங்கலாக பரந்தளவிலான மனித உரிமைசார் பிரச்சினைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக மனித உரிமைகளின்மீது ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் குறித்தும் உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல்களை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தலைநகர் கொழும்பில் சந்திப்புக்களை முடித்துக்கொண்டு கண்டிக்கு விஜயம் செய்யவுள்ள உயர்ஸ்தானிகர், அங்கு தலதா மாளிகையில் மதவழிபாடுகளில் ஈடுபடவிருப்பதுடன் அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உரையாடவுள்ளார். அதனைத்தொடர்ந்து கிழக்கில் திருகோணமலைக்கும், வடக்கில் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ள அவர், அங்கும் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார். மேலும் இவ்விஜயத்தின் முடிவில் எதிர்வரும் வியாழக்கிழமை (26) கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ள வோல்கர் டேர்க், அதில் தனது இலங்கை விஜயத்துடன் தொடர்புடைய அவதானிப்புக்களையும், வலியுறுத்தல்களையும் வெளியிடவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முடிவுக்குவரவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதருவது செப்டெம்பரில் அவர் வெளியிடவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப்படுத்தும் என்ற கரிசனையின் அடிப்படையில் அவரை இப்போது நாட்டுக்கு வருகைதரவேண்டாம் என வலியுறுத்தி உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் உருவாகியிருந்த எதிர்ப்புக்கு மத்தியிலேயே அவரது இவ்விஜயம் இடம்பெறவுள்ளது. https://www.virakesari.lk/article/218129
  12. அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் - தலைநகரில் பல கட்டிடங்கள் சேதம் 22 JUN, 2025 | 11:23 AM ஈரானின் புதிய தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலிய தலைநகரில் கட்டிடங்கள் பலத்தை சேதத்தை சந்தித்துள்ள என அவசரசேவையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது பெரிய அளவிலான அழிவு பல இரண்டு மாடிக்கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன, சில தரைமட்டமாகியுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவு தெரிவித்துள்ளது. தரைமட்டமாகியுள்ள கட்டிடமொன்றையும் பெரும் சேதத்தை சந்தித்துள்ள ஏனைய கட்டிடங்களையும் காண்பிக்கும் வீடியோவை இஸ்ரேலின் அவசரசேவை பிரிவினர் வெளியிட்டுள்ளனர். அந்த பகுதியில் பல அவசரசேவை பணியாளர்களை காணமுடிகின்றது. வெடிபொருட்கள் மத்திய இஸ்ரேலில் விழுந்துள்ளதால் அப்பகுதிக்கு குண்டு அகற்றும் பிரிவினர் அனுப்பப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஹைபா நகரும் தாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் தாக்குதலை தொடர்ந்து ஆகக்குறைந்தது பத்து இடங்களிற்காவது அவசரசேவை பிரிவினரை அனுப்பியுள்ளோம் 10 பேர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218117
  13. அமெரிக்காவின் தாக்குதல் - நித்திய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஈரான் எச்சரிக்கை 22 JUN, 2025 | 10:45 AM ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்கா தாக்குதலை கண்டித்துள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் இந்த தாக்குதலால் நித்திய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். இன்றுகாலை நிகழ்வுகள் மூர்க்கத்தனமானவை மேலும் அவை நித்திய விளைவுகளை ஏற்படுத்தும் என தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அபாஸ் அரக்சி ஈரானிற்கு அதன் இறையாண்மையை பாதுகாப்பதற்காக அனைத்து சாத்தியப்பாடுகளையும் பயன்படுத்த தயார் என குறிப்பிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா ஈரானின் அமைதியான அணுஉலைகளை தாக்கியதன் மூலம் ஐநா சாசனம் சர்வதேச சட்டம் மற்றும் அணுஆயுத தடை பரவல் ஒப்பந்தம் என்பவற்றை கடுமையாக மீறியுள்ளது என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218111
  14. 22 JUN, 2025 | 11:22 AM மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா? இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா? என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது. மலையக மக்களின் காணி உரிமை பிரச்சனை தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சனிக்கிழமை (21) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லகீதரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மலையக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மைக்கல் பெவன், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் திருச்செல்வம் , மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் லக்சரண், முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டு மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான கருத்துக்களை ஊடகங்களுக்கு முன்வைத்தனர். மலையக மக்களின் காணி உரிமை பிரச்சனை தொடர்பான ஊடக அறிக்கையில், மலையக மக்களின் அடிப்படை உரிமைகளில் காணி உரிமையும் முக்கியமான தொன்றாக இருக்கின்றது. நீண்ட காலமாகவே நிலத்திற்கான உரிமையற்ற ஒரு சமூகமாக மலையக மக்கள் இருப்பதோடு எங்கள் உறவுகளின் தலைமுறைக்கே நில உரிமை என்பது மறுக்கப்பட்ட இருளாகவே காணப்படுகின்றது. அதற்கான வெளிச்சம் இதுவரையிலும் எட்டப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மனிதர்கள் காலடி படாத காடுகளை அழித்து அதில் பெருந்தோட்டங்களை உருவாக்கி இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு உழைப்பை வழங்கிய மலையக மக்களின் விழித்தோன்றல்களுக்கு அடிப்படையான காணி உரிமை என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது. உண்மையிலேயே இது நீதியானதா? இதற்கான நீதியை நிலைநாட்ட அரசாங்கங்களும் பெருந்தோட்ட கம்பெனிகளும் அதற்கான முற்றுமுழுதான முனைப்போடு தொழிற்சங்கங்களும் முன்வருவதில்லை என்பது கேள்விக்குறிய விடயமாகும். மக்கள் அவர்களுக்கான காணி உரிமையை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு போராட்டங்களை அன்று தொட்டு இன்று வரை மேற்கொண்டு தான் வருகிறார்கள். ஆனாலும் இன்று வரை தீர்வு காண முடியாத தன்மையே காணப்படுகின்றது. காணி உரிமைக்கான முதலாவது போராட்டம் 1946 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி மலையக மக்களின் முதலாவது காணிக்கான போராட்டம். கேகாலையின் உருலவள்ளி பெருந்தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. அப்பெருந்தோட்டத்தில் அம்மக்களின் 400 ஏக்கர் குடியிருப்பு நிலம் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமது காணிகளைப் பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக அது அமைந்திருந்தது. இலங்கைப் பெருந்தோட்டங்களில் உள்ள இந்திய வம்சாவளித் தொழிலாளர்களின் காணி உரிமைகளைக் கோரி இப்போராட்டத்தில் கேகாலை மற்றும் களனிப் பள்ளத்தாக்கு பிரதேசங்களைச் சேர்ந்த 125,000 த்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றிருந்தனர். 1972 ஆம் ஆண்டின் காணிச் சீர்திருத்தச் சட்டம் குடியேற்றங்கள் உருவாகவும் காணிக் கையகப்படுத்தல்கள் நிகழவும் வழிவகுத்தது. தொடர்ச்சியான காணிக் கையகப்படுத்தல்கள் போராட்டங்களுக்கு வழிவகுத்தன. டெவோன் தோட்டத்தின் 7,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக மே 11, 1977 அன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது சிவானு லட்சுமணன் என்ற இளம் தோட்டத்தொழிலாளி பொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் விளைவாக பெருந்தோட்ட நிலங்களை பறிமுதல் செய்யும் திட்டம் கைவிடப்பட்டது. அதே போன்று, 2000 ஆம் ஆண்டில், மேல் கொத்மலை நீர் மின்சார திட்டத்துக்காக அப்பிரதேச மக்களை வெளியேற்றும் முன்னெடுப்பு தொடர்ச்சியான மக்கள் போராட்டம் காரணமாக கைவிடப்பட்டது. 2014 ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தின் ஹபுத்தளை பிரதேசத்தில் மிரியாபேத்த பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு பேரழிவின் பின்னர், மலைநாட்டில் வாழும் மக்களுக்கு குடியிருப்புக்கு பொருத்தமான இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கோரிக்கை நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் முன்வைக்கப்பட்டது. காணி உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் மேற்கொண்ட தியாகங்கள் அளப்பெரியன. மலையக மக்களின் காணி உரிமைக்கான அங்கீகாரத்தை பாதுகாக்க பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும், அவர்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதுடன் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மீறல்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. எனவே, இந்தக் கோரிக்கை இலங்கையின் உரையாடலில் உள்ளடக்கப்படும் ஒரு தேவை தற்போது எழுந்துள்ளது. மேலும் மலையக மக்களுக்கு பெருந்தோட்டக் காணிகளை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பெனிகளுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையே காணப்படுகின்ற குத்தகை ஒப்பந்தம் காரணமாக காணி உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு பெருந்தோட்ட கம்பெனிகளுடன் எவ்வித தொடர்புமற்ற காணி சீர்திருத்த ஆணைக்குழு (JEDB),(SLSPC),(TRI) ஆகிய அரச நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள பெருந்தோட்ட காணிகளை அவற்றில் வாழும் மலையக மக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக அனுமதிப்பத்திரம், அழைப்பு பத்திரம், அளிப்பு பத்திரம் அறுதியீட்டு உறுதி ஊடாக வழங்குவதற்கு இதுவரையில் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும். மலையக மக்களுக்கு குடியிருப்புக்காக காணி வழங்கப்படும் பொழுது மாத்திரம் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட தேயிலைச் செடிகளுக்கும் ரப்பர் மரங்களுக்கும் அம்மக்களை விட அதிக மதிப்பு வழங்கப்பட்டு தேயிலைச் செடிகளையும் ரப்பர் மரங்களையும் காப்பாற்றுவதாக கூறி அவர்கள் தொடர்ந்து லயங்களிலே வாழவைக்கப்படுகின்றனர். மலையக சமூகங்களின் காணி உரிமைகளை உறுதி செய்வதற்காகவும் காணியற்றவர்களுக்காக காணிகளைக் கோருவதற்காக ஒத்த சிந்தனையுள்ளவர்களை ஒன்று திரட்டவும் ஒரு தேசிய தினமாக "காணி தினம்" இருக்கின்றது. இதன் அடிப்படையில் நான்காவது காணி தினத்தினை நேற்று சனிக்கிழமை (21) அட்டன் நகரில் முன்னெடுப்பதற்கு "நிலமற்றோர்க்கு நிலம்" எனும் தொணிப்பொருளில் "மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் ஏற்பாடுகளை செய்து வருவதாக அறியப்படுகிறது. மலையக மக்களின் காணி பிரச்சினை இன்னும் ஒரு கொள்கை ரீதியில் தேசிய வேலைத் திட்டத்துடன் முன்னெடுக்கப்படாத நிலையில், தற்போது அதற்கான அழுத்தங்கள் பாரியளவில் எழுந்திருப்பது முக்கியமான விடயமாகும். நீண்ட காலமாக மக்களின் தேவையாகவும் மக்களின் நிலம் சார்ந்த இருப்பியலை தக்க வைத்து கொள்வதற்கு இவ்விடயத்தில் முன்னேடுப்புக்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இனிமேல் சிறிதும் பின் நிற்காது முற்றுமுழுதாக ஆதரவளிக்கும் என்று தெரிவித்துக்கொள்கின்றோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/218116
  15. நிலத்தடியில் 200 அடி ஆழம் ஊடுருவி தாக்கும் 13,600 கிலோ வெடிகுண்டு - எவ்வாறு செயல்படும்? பட மூலாதாரம்,US AIR FORCE படக்குறிப்பு,US B-2 ஸ்பிரிட் மட்டுமே GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) வெடிகுண்டை ஏவும் வகையில் கட்டமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் பார்ருச்சோ பதவி, பிபிசி உலக சேவை 18 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரானின் பாதுகாப்பான அணுசக்தி தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை இரான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. கோம் மாகாண நெருக்கடி மேலாண்மைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் மோர்டெசா ஹெய்தாரி, "ஃபோர்டோ அணுசக்தி நிலையப் பகுதியின் ஒரு பகுதி வான்வழித் தாக்குதலுக்கு இலக்கானது" என்று கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரான் தலைநகர் டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 60 மைல் (96 கிமீ) தொலைவில் ஒரு மலைப் பகுதியில் ஃபோர்டோவில் யுரேனியம் செறிவூட்டல் தளம் அமைந்துள்ளது. நிலத்தடி வசதி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மைய விலக்கு இயந்திரங்களையும், சிறிய சுரங்கப்பாதைகளின் வலையமைப்பையும் கொண்டிருந்த 2 முக்கிய சுரங்கப்பாதைகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்த தளத்தை தாக்குமாறு அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஏற்கனவே முறையிட்டது. ஏனெனில், நிலத்தடியில் இருந்த அந்த அணுசக்தி தளத்தை தகர்க்கும் திறன் கொண்ட பங்கர் பஸ்டர் குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. பி-2 ரக அதிநவீன ஸ்டெல்த் ரக குண்டுவீச்சு விமானம் மூலம் அமெரிக்கா இந்த குண்டுகளை ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் மீது வீசியதாக கருதப்படுகிறது. GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணுஆயுதம் அல்லாத "பங்கர் பஸ்டர்" ("bunker buster") வெடிகுண்டு அமெரிக்காவிற்கு மட்டுமே உள்ளது. துல்லியமாக வழிகாட்டப்படும், 30,000 பவுண்ட் (13,600 கிலோ) எடையுள்ள இந்த வெடிகுண்டு, ஒரு மலைக்குள் ஆழமாக புதைக்கப்பட்டுள்ள இரானின் ஃபோர்டோ அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் வளாகத்தை ஊடுருவிச் சென்று தகர்க்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது. GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் ஆயுதம் என்ன செய்யும்? அதன் சவால்கள் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்த முடியும்? அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி, GBU-57A/B என்பது, "ஆழமாக புதைக்கப்பட்ட மற்றும் உறுதியாக கட்டப்பட்ட பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு பெரிய ஊடுருவக்கூடிய ஆயுதம்" என அறியப்படுகின்றது. இந்த வெடிகுண்டு சுமார் ஆறு மீட்டர் நீளமுடையது. இது வெடிக்கும் முன் சுமார் 200 அடி (61 மீட்டர்) ஆழத்தில் நிலத்தின் உள்ளே ஊடுருவக்கூடியது என நம்பப்படுகிறது. இதுபோன்ற வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டால், ஒவ்வொரு வெடிப்பும், நிலத்தை ஆழமாக துளையிட்டு, இலக்கைச் சேதப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது. போயிங்கால் தயாரிக்கப்பட்ட எம்ஓபி (MOP), தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது இதுவே முதன் முறையாகும். இது அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் மிஸைல் ரேஞ்ச் (White Sands Missile Range) என்ற ராணுவ சோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. "அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என அழைக்கப்படும் 21,600 பவுண்ட் (9,800 கிலோ) எடையுள்ள Massive Ordnance Air Blast (MOAB) வெடிகுண்டை விட இது அதிக சக்தி வாய்ந்தது. இந்த MOAB, 2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் போருக்காகப் பயன்படுத்தப்பட்டது. "MOAB போலவே பெரிய அளவிலான ஆயுதங்களை உருவாக்க முயற்சித்த அமெரிக்க விமானப்படை, வெடிபொருளை மிகவும் வலிமையான உலோகப் பெட்டிக்குள் வைத்திருக்கும் வகையில் வடிவமைத்தது. அதன் விளைவாக உருவானது தான் GBU-57A/B மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்" என்று கூறுகிறார் பிரிட்டனின் ப்ராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலுள்ள அமைதிக் கல்வித் துறையின் பேராசிரியரான பால் ரோஜர்ஸ். படக்குறிப்பு,பதுங்கு குழியை தகர்க்கும் குண்டு தற்போது , எம்ஓபி வெடிகுண்டை ஏவுவதற்காக கட்டமைக்கப்பட்டும், நிரலாக்கம் செய்யப்பட்டும் இருப்பது அமெரிக்காவின் B-2 ஸ்பிரிட் என்ற ஸ்டெல்த் பாம்பர் மட்டும் தான். B-2 என அழைக்கப்படும் இந்த போர் விமானம், நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் தயாரித்தது. அமெரிக்க விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாக இந்த விமானம் கருதப்படுகின்றது. இந்த விமானத்தின் உற்பத்தியாளரான நார்த்ரோப் க்ரம்மனின் கூற்றுப்படி, B-2 விமானம் 40,000 பவுண்டு (18,000 கிலோ) வரை சுமக்கக்கூடியது. ஆனால், இரண்டு GBU-57A/B "பங்கர் பஸ்டர்" வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் B-2 விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மொத்த எடை சுமார் 60,000 பவுண்டு (27,200 கிலோ). குண்டுவீச்சுக்குப் பயன்படும் இந்த நீண்ட தூர கனரக விமானம், எரிபொருள் நிரப்பாமல் சுமார் 7,000 மைல்கள் (11,000 கிமீ) வரை பறக்கக்கூடியது. பறக்கும் நிலையில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், அதன் வரம்பு 11,500 மைல்கள் (18,500 கிமீ) ஆக அதிகரிக்கிறது. இதன் மூலம், உலகின் எந்தப் பகுதியையும் சில மணி நேரங்களில் இந்த விமானத்தால் அடைய முடியும் என நார்த்ரோப் க்ரம்மன் கூறுகிறது. இரான் போன்ற நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய நாட்டிற்கு எதிராக எம்ஓபி வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டால், B-2 குண்டுவீச்சு விமானங்களுடன் கூடுதல் விமானங்களும் அதில் பங்கேற்க நேரிடும். எடுத்துக்காட்டாக, எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக F-22 ஸ்டெல்த் விமானங்கள் பயன்படுத்தப்படலாம். அதன் பிறகு, சேதத்தை மதிப்பீடு செய்யவும், அதற்குப் பிறகும் தாக்குதல்களைத் தொடர வேண்டுமா என்பதை தீர்மானிக்கவும் டிரோன்கள் பயன்படுத்தப்படலாம் என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார். இந்த எம்ஓபி வெடிகுண்டுகள் அமெரிக்காவிடம் மிகக் குறைந்த அளவே இருப்பதாக அவர் மதிப்பிடுகிறார். "அவர்கள் சுமார் 10 அல்லது 20 எம்ஓபி வெடிகுண்டுகளை வைத்திருக்கக்கூடும்" என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ். பட மூலாதாரம்,WHITEMAN AIR FORCE BASE படக்குறிப்பு,எம்ஓபி வெடிப்பதற்கு முன் மேற்பரப்பில் இருந்து சுமார் 200 அடி (61 மீட்டர்) வரை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது. பாதுகாப்பான தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ ஃபோர்டோ என்பது இரானின் இரண்டாவது அணுசக்தி செறிவூட்டல் நிலையமாகும். நடான்ஸுக்கு பிறகு இதுவும் ஒரு முக்கிய மையமாகக் கருதப்படுகிறது. டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே சுமார் 60 மைல் (95 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள கோம் நகருக்கு அருகில், ஒரு மலையின் ஓரத்தில் இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்திற்கான கட்டுமானம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர், 2009ஆம் ஆண்டு இந்த நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையம் அங்கு செயல்படுவதை, இரான் அதே ஆண்டில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. 80 மீட்டர் (260 அடி) ஆழத்தில் பாறை மற்றும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பதுடன், இரான் மற்றும் ரஷ்ய தயாரிப்புகளான தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை அமைப்புகளால், ஃபோர்டோ வளாகம் பாதுகாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில், சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA), அந்த தளத்தில் ஆயுத தரத்திற்கு அருகிலுள்ள 83.7% தூய்மையுடைய யுரேனியம் துகள்களைக் கண்டறிந்தது. இரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் அழிப்பதே, இரான் மீது தாக்குதல் நடத்துவதன் நோக்கம் என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார். அதனை, "இஸ்ரேலின் இருப்புக்கே (existential) ஓர் அச்சுறுத்தல்" எனவும் அவர் விவரித்தார். எப்போதுமே தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதியானது என்றும் அணு ஆயுதத்தை உருவாக்க அவர்கள் எப்போதும் முயற்சி செய்யவில்லை என்றும் இரான் கூறி வருகிறது. ஆனால் கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் 35 நாடுகளைக் கொண்ட நிர்வாக குழு, 20 ஆண்டுகளில் முதல் முறையாக இரான் தனது அணுசக்திப் பரவல் தடைகளை மீறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 'கேம் சேஞ்சர்' "ஃபோர்டோ தளம் செயல்பாட்டில் இருக்கும் வரை, இரான் அணு ஆயுதம் தொடர்பான அபாயத்தை ஏற்படுத்தும் நிலைமையில் தான் இருக்கிறது. டெஹ்ரானுக்கு, அந்த தளத்தில் செறிவூட்டலை அதிகரிக்கவோ அல்லது யுரேனியத்தை வேறு இடத்துக்கு மாற்றவோ வாய்ப்பு இருக்கிறது" என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் அணுசக்தி பரவல் தடுப்பு கொள்கைக்கான இயக்குநர் கெல்சி டேவன்போர்ட் கூறுகிறார். எம்ஓபி பயன்படுத்தப்பட்டாலும், இரானின் அணு ஆயுதத் தளங்கள் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றன, எவ்வளவு பாதுகாப்பாக உள்ளன என்பது தெரியாததால், இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினால் மட்டுமே வெற்றி கிடைப்பதற்கும் உத்தரவாதம் இல்லை என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cew0lwxwx02o
  16. Published By: VISHNU 22 JUN, 2025 | 12:22 AM 2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சு சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2024 (2025) சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் 21ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவில் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்புடைய தேர்வு முடிவுகள் இன்று நள்ளிரவில் வெளியிடப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவில் வெளியிடப்படாது என்றும், முடிவுகள் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் அனைத்து செய்திகளும் தவறானவை என்றும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/218089
  17. தோனி சாதனையை தகர்த்த ரிஷப் பந்த்: புதிய கேப்டன் கில் பவுலர்களை கையாளும் உத்தி பற்றி எழும் கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சதம் அடித்த இந்திய வீரர் ரிஷப் பந்த் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹெடிங்லியில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம், வாய்ப்புகளையும் எதிரணி செய்யும் தவறுகளையும் சரியாக பயன்படுத்தியவர்களுக்கு உரிய நாளாக அமைந்தது. அந்த வகையில் நேற்றைய நாள் இங்கிலாந்தின் நாளாகவே இருந்தது. இந்திய அணியில் ரிஷப் பந்தின் 7-வது டெஸ்ட் சதத்தைத் தவிர பெரிதாக இந்திய வீரர்கள் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 3 விக்கெட் இழப்புக்கு வரை 430 ரன்கள் என்று வலுவாக இருந்த இந்திய அணி, எப்படியும் 600 ரன்களை எட்டும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், அடுத்த 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும் மளமளவென இழந்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியும் தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்திருப்பது நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும். ரிஷப் பந்த் சதம் அடித்ததன் மூலம் எட்டியு புதிய மைல்கற்கள் என்ன? கேப்டன் கில் - ரிஷப் பந்த் ஜோடி சிறப்பான ஆட்டம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது. கில் 127 ரன்களுடனும், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 2வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ரிஷப் பந்த் வேகமாக ரன்களைச் சேர்க்கவே, கில் நிதானமாக ஆடினார். ரிஷப் பந்த் வழக்கத்தைவிட பவுண்டரிகளை அடித்து சதத்தை நெருங்கினார். 99 ரன்களில் இருந்த ரிஷப் பந்த் பஷீர் பந்தில் சிக்ஸர் அடித்து, டெஸ்ட் அரங்கில் 7-வது சதத்தை நிறைவு செய்தார். சதம் அடித்தவுடன் ரிஷப் பந்த் தனது ஹெல்மெட்டை கழற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, தனது வழக்கமான "சம்மர்சால்ட்" பல்டி அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். இந்த பார்ட்னர்ஷிப் 200 ரன்களைக் கடந்தது. சுப்மான் கில் 150 ரன்களை எட்டும் நிலையில், விக்கெட்டை இழந்தார். பஷீர் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முற்பட்டபோது, ஸ்குயர் லெக் திசையில் டங்கிடம் கேட்ச் கொடுத்து 147 ரன்களில் கில் விக்கெட்டை இழந்தார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 209 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். இதன் மூலம் கேப்டனாக அறிமுக ஆட்டத்திலேயே அதிக ரன்கள் சேர்த்த 2வது வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். முதலிடத்தில் விஜய் ஹசாரே 160 ரன்களில் முதலிடத்தில் உள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கில் 127 ரன்களுடனும், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 2வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர் திருப்புமுனை கேட்ச் அடுத்து வந்த கருண் நாயர், ரிஷப் பந்துடன் சேர்ந்தார். 8 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணிக்காக களமிறங்கியதால் கருண் நாயர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை கவர் திசையில் தூக்கி அடித்தார் கருண் நாயர். நிச்சயமாக கருண் நாயர் அடித்த ஷாட்டில் கேட்ச் பிடிப்பது கடினமானது. ஆனால், பீல்டிங்கில் இருந்த ஒலி போப் அந்தரத்தில் தாவிச் சென்று அற்புதமான கேட்ச் பிடித்து கருண் நாயர் விக்கெட்டைவீழ்த்தினார். மிகுந்த ஆசைகளுடன் களமிறங்கிய கருண் நாயர் இந்த கேட்சை நிச்சமயாக எதிர்பார்த்திருக்கமாட்டார். மிகுந்த ஏமாற்றத்துடன் கருண் நாயர் டக்அவுட்டில் வெளியேறினார். ஆட்டத்தில் கருண் நாயர் விக்கெட்தான் திருப்புமுனையாக அமைந்து, இங்கிலாந்தின் கரங்களுக்கு ஆட்டம் மாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கருண் நாயர் ஆட்டமிழந்து வெளியேறிய காட்சி ரிஷப் பந்தும் சிக்ஸரும் அடுத்து ஜடேஜா களமிறங்கினார். ரிஷப் பந்த் சதம் அடித்தபின் பவுண்டரி, சிக்ஸர் என அடித்து வேகமாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கி, 150 ரன்களுக்கு நெருங்கினார். ஆனால், டங்க் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ரிஷப் பந்த் 134 ரன்களில் ஆட்டமிழந்தார், இவர் கணக்கில் 6 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் சுப்மான் கில் (147), ரிஷப் பந்த் (134) ஜோடி 209 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தபின் நடுவரிசை பேட்டர்கள், கடைசிவரிசை பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இந்திய அணி அதிர்ச்சிகரமாக இழந்து முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்த காட்சி இங்கிலாந்து வலுவான தொடக்கம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியது. அப்போது லேசான மேக மூட்டம், குளிர்ந்த காற்று வீசியதை பயன்படுத்திய பும்ரா தனது ஸ்விங் பந்துவீச்சில் புதிய பந்தில் கிராளி விக்கெட்டை எளிதாக வீழ்த்தினார். ஆனால், 2வது விக்கெட்டுக்கு டக்கெட், போப் இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவைத் தடுத்து பேட் செய்தனர். பென் டக்கெட் 15 ரன்களில் இருந்தபோது ஸ்லிப்பில் அடித்த ஷாட்டை ரவீந்திர ஜடேஜா கேட்ச் பிடிக்கத் தவறினார், போப் 10 ரன்களில் இருந்தபோது பேட்டில் தெறித்த பந்தை கேட்ச் பிடிக்க ஜெய்ஸ்வால் தவறி இரு வாய்ப்புகளை வீணடித்தனர். இந்த இரு வாய்ப்புகளையும் இங்கிலாந்து பேட்டர்கள் பயன்படுத்தி நங்கூரமிட்டனர். சிறப்பாக ஆடிய டக்கெட் 68 பந்துகளில் அரைசதம் அடித்து 19-வது அரைசதத்தை நிறைவு செய்தார். 2-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து டக்கெட் 62 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் போல்டாகினார். போப் 64 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்துவந்த ஜோ ரூட், போப்புடன் சேர்ந்தார். இருவரையும் பிரிக்க பல பந்துவீச்சாளர்களை கேப்டன் கில் பயன்படு்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2வது விக்கெட்டுக்கு டக்கெட், போப் இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவைத் தடுத்து பேட் செய்தனர் பும்ராவை விரக்தி அடையச் செய்த நோபால் நிதானமாக ஆடி வந்த ஜோ ரூட் 28 ரன்கள் சேர்த்திருந்தபோது, பும்ரா பந்துவீச்சில் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து ஹேரி புரூக் களமிறங்கி, போப்புடன் சேர்ந்தார். 125 பந்துகளில் போப் சதத்தை நிறைவு செய்தார். கடைசி நேர ஓவர்களில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதி பும்ரா தனது முழு முயற்சியையும் செலுத்தினார். 2வது நாளின் கடைசி ஓவரை பும்ரா வீசியபோது, ஹேரி ப்ரூக் அடித்த ஷாட்டை கருண் நாயர் கேட்ச் பிடித்தார். ஆனால், அது நோபாலாக அறிவிக்கப்படவே பும்ரா விரக்தி அடைந்தார். பும்ரா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 நோபால்களை வீசினார். இந்திய அணித் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் பும்ரா மட்டுமே வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா, சிராஜ், ஜடேஜா 10 ஓவர்களுக்கு மேல் வீசியும் ஒருவிக்கெட்டையும் இந்த ஆடுகளத்தில் வீழ்த்த முடியவில்லை. 3வது நாளில் ஆடுகளம் இந்திய பந்துவீச்சாளர்களை இன்னும் சோதிக்கப் போகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,125 பந்துகளில் போப் சதத்தை நிறைவு செய்தார். கில் கேப்டன்சி மீது எழும் கேள்வி ஷர்துல் தாக்கூரை 40 ஓவர்களுக்கு மேல் பயன்படுத்தியும் எந்த பயனும் இல்லை. பந்து நன்றாக தேய்ந்துவிட்டநிலையில் ஷர்துல் தாக்கூரால் எந்த தாக்கத்தையும் பந்துவீச்சில் ஏற்படுத்த முடியவில்லை. புதிய பந்தாக இருக்கும்போதே பிரசித் கிருஷ்ணா, பும்ரா, சிராஜ், ஷர்துல் என 4 பேருக்கும் சமமான வாய்ப்புக் கிடைத்திருந்தால் இன்னும் கூடுதலாக விக்கெட்டை வீழ்த்தியிருக்கலாம். ஆனால், கேப்டன் கில் 3 பந்துவீச்சாளர்களையே பிரதானமாகப் பயன்படுத்தினார். சுழற்பந்தவீச்சாளர் ஜடேஜாவுக்கு நேற்று 9 ஓவர்கள் மட்டுமே வழங்கினார். இதுவே கோலி, ரோஹித் சர்மாவாக இருந்திருந்தால், சுழற்பந்துவீச்சுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கியிருப்பார்கள். ஆடுகளம் தனது தன்மையை இழந்து தூசி படிந்து வருவதால், இந்த நேரத்தில் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதுதான் சிறந்தது. ஆனால், கில் ஏன் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளி்க்கிறார் எனத் தெரியவில்லை. தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த விக்கெட் கீப்பர்களில் தோனியின் 6வது சதத்தை முறியடித்து, ரிஷப் பந்த் புதிய சாதனை நிகழ்த்தினார். இதன் மூலம் இந்திய விக்கெட் கீப்பர்களில் டெஸ்ட் அரங்கில் அதிக சதங்களை அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் ரிஷப் பந்த். பிரிட்டன் மண்ணில் ரிஷப் பந்த் அடித்த 3வது சதம் இதுவாகும். எந்த அணியின் விக்கெட் கீப்பரும் இங்கிலாந்து மண்ணில் 3 சதங்களை விளாசியது இல்லை. ரிஷப் பந்த் தவிர்த்து ஜிம்பாப்பே விக்கெட் கீப்பர் ஆன்டி பிளவர் இந்தியாவில் 3 சதங்களையும், இங்கிலாந்தின் லெஸ் ஆம்ஸ் மே.இ.தீவுகளிலும் 3 சதங்களை விளாசியுள்ளனர். பிரிட்டன் மண்ணில் வெளிநாட்டு அணியின் விக்கெட் கீப்பர் ஒருவர் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்ததில் ரிஷப் பந்த்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளார். வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையும் ரிஷப் பந்த்துக்கு கிடைத்துள்ளது, முதலிடத்தில் ஹர்திக் பாண்டியா இலங்கையில் 7 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். ரிஷப் பந்த் சேர்த்த 134 ரன்கள் தான் ஹெடிங்லி மைதானத்தில் விக்கெட் கீப்பர் சேர்த்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன், இலங்கைக்கு எதிராக பேர்ஸ்டோ 140 ரன்கள் சேர்த்துள்ளார். 2018ம் ஆண்டுக்குப்பின் ஒரு இன்னிங்ஸில் 3 இந்திய பேட்டர்கள் சதம் அடிப்பது இதுதான். இதுவரை 5 முறை இதுபோல் 3 பேட்டர்கள் சதம் அடித்துள்ளனர். கடைசியாக 2002ம் ஆண்டில் இதே ஹெடிங்லி மைதானத்தில் திராவிட், கங்குலி, சச்சின் சதம் அடித்த நிலையில் ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்குப்பின் ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பந்த் சதம் அடித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சிக்ஸர் அடித்து சதம் 3 முறை ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டியில் சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்துள்ளார். 2018ல் ஓவல் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் அடில் ரஷீத் பந்தில் சிக்ஸர் அடித்தும், 2021ல் ஆமதபாத்தில் ஜோ ரூட் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தும், இப்போது பஷீர் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தும் ரிஷப் பந்த் சதத்தை நிறைவு செய்துள்ளார். சச்சின் 6 முறையும், ரோஹித் சர்மா 3 முறையும் சிக்ஸர் அடித்து சதம் நிறைவு செய்துள்ளனர். 2002ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் அரங்கில் ரிஷப் பந்த்தைப் போல் டெஸ்ட் அரங்கில் எந்த விக்கெட் கீப்பரும், பேட்டரும் சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆடுகளம் எப்படி? ஆடுகளத்தில் பெரிதாக பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வேகப்பந்துவீச்சாளர்கள் உயிரைக் கொடுத்து பந்துவீசினாலும் ஸ்விங் ஆவதற்கு மறுக்கிறது, அதனால்தான் ஒன்றரை நாட்களில் இந்திய அணியால் 470 ரன்கள் சேர்க்க முடிந்தது, இங்கிலாந்து அணியும் விரைவாக 200 ரன்களை எட்ட முடிந்தது. 2வது நாளிலேயே ஆடுகளம் இவ்வாறு பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காமல் இருந்தால், அடுத்துவரும் நாட்களில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் காத்திருக்கிறது என்றே கூற வேண்டும். கடைசி இரு நாட்களில் ஆடுகளம் வறண்டால் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். அப்படி நடக்கும் பட்சத்தில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தில் தாக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c939gqrl03go
  18. இரான் மீது அமெரிக்கா தாக்குதல்: 3 அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீச்சு - நேரலை விவரம் பட மூலாதாரம்,US AIR FORCE படக்குறிப்பு, பி-2 குண்டுவீச்சு விமானம் 22 ஜூன் 2025, 01:11 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரானில் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதை டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இரானை உடனடியாக சமாதானத்திற்கு வருமாறும், இல்லாவிட்டால் அதிக அளவில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதல் பற்றி இரான் கூறுவது என்ன? 'ஓர் அற்புதமான இராணுவ வெற்றி' இரானில் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு டிரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தினார். "இந்த பயங்கரமான அழிவுகரமான தளங்களை அவர்கள் கட்டியெழுப்பும் போது எல்லோரும் பல ஆண்டுகளாக அந்தப் பெயர்களைக் கேட்டனர். இன்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஒரு அற்புதமான இராணுவ வெற்றி என்று நான் உலகிற்கு தெரிவிக்க முடியும். இரானின் முக்கிய அணு செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன" என்று டிரம்ப் தெரிவித்தார். பட மூலாதாரம்,REUTERS இரானுக்கு டிரம்ப் மிரட்டல் இரான் இப்போது சமாதானம் முன்வராவிட்டால், எதிர்காலத்தில் அமெரிக்காவின் தாக்குதல்கள் மிக அதிகமாக இருக்கும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். "அமைதி விரைவில் ஏற்படும் அல்லது கடந்த எட்டு நாட்களில் நாம் கண்டதை விட இரானுக்கு மிகப் பெரிய சோகம் ஏற்படும்" என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். "நினைவில் கொள்ளுங்கள், இன்னும் நிறைய இலக்குகள் உள்ளன. இன்றிரவு அவற்றில் மிகவும் கடினமானதாகவும், மிகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. ஆனால் அமைதி விரைவில் வரவில்லை என்றால், நாங்கள் துல்லியம், வேகம் மற்றும் திறமையுடன் மற்ற இலக்குகளை நோக்கிச் செல்வோம்," என்று அவர் கூறினார். "இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரு குழுவாக செயல்பட்டன" இரானின் முன்னாள் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக டிரம்ப் கூறுகிறார். "இது நடக்க விடமாட்டேன், இது தொடராது என்று நான் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தேன்" என்று குறிப்பிட்ட அவர், "இஸ்ரேலுக்கு எதிரான இந்த பயங்கரமான அச்சுறுத்தலை" அழிக்க இஸ்ரேலுடன் ஒரு "குழுவாக" பணியாற்றியதாகக் கூறி, பெஞ்சமின் நெதன்யாகுவை வாழ்த்தினார். டிரம்ப் உரை சுமார் நான்கு நிமிடங்கள் நீடித்தது. இரானில் 3 அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் முன்னதாக, "ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இரானின் 3 அணுசக்தி தளங்கள் மீதான எங்களது வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் முடித்துவிட்டோம். அனைத்து விமானங்களும் இப்போது இரான் வான்வெளிக்கு வெளியே உள்ளன," என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் குறிப்பிட்டிருந்தார். அனைத்து விமானங்களும் அமெரிக்காவிற்குத் திரும்பி வந்தன என்றும் டிரம்ப் மேலும் கூறினார். இரான் மீதான அமெரிக்க தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக, அமெரிக்காவின் பி-2 ரக ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் அமெரிக்க தீவுப் பகுதியான குவாமுக்கு முன்பே மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஊகத்தை அதிகப்படுத்தியிருந்தது. 'ஃபோர்டோ தகர்க்கப்பட்டுவிட்டது' "ஃபோர்டோ தகர்க்கப்பட்டுவிட்டது" என்ற ஒரு புலனாய்வு பயனரின் பதிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுபதிவு செய்துள்ளார். "இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம்" என்று அவர் தனது ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார். "இரான் இப்போது இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார். அமெரிக்காவுடன்முழு ஒருங்கிணைப்பு - இஸ்ரேல் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் அமெரிக்காவுடன் "முழு ஒருங்கிணைப்பில்" இருந்தது என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் இஸ்ரேலிய பொது ஊடகமான கானிடம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GOOGLE EARTH ஃபோர்டோ - ரகசிய இரானிய அணுசக்தி தளம் தலைநகரம் டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 60 மைல் (96 கிமீ) தொலைவில் ஒரு மலைப் பகுதியில் ஃபோர்டோவில் யுரேனியம் செறிவூட்டல் தளம் அமைந்துள்ளது. நிலத்தடி வசதி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மைய விலக்கு இயந்திரங்களையும், சிறிய சுரங்கப்பாதைகளின் வலையமைப்பையும் கொண்டிருந்த 2 முக்கிய சுரங்கப்பாதைகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்த தளத்தை தாக்குமாறு அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஏற்கனவே முறையிட்டது. ஏனெனில், நிலத்தடியில் இருந்த அந்த அணுசக்தி தளத்தை தகர்க்கும் திறன் கொண்ட பங்கர் பஸ்டர் குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. இரான் பதில் அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு இலக்கான அணுசக்தி தளங்களை தாங்கள் ஏற்கனவே காலி செய்துவிட்டதாக இரானிய அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஊடகத்தின் துணை அரசியல் இயக்குநர் ஹசன் அபேதினி அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசினார். இரான் இந்த மூன்று அணுசக்தி தளங்களையும் முன்னதாகவே காலி செய்துவிட்டதாக அவர் கூறினார். டிரம்ப் சொல்வது உண்மையாக இருந்தாலும் கூட, இரான் அந்த அணுசக்தி தளங்களில் இருந்த பொருட்களை ஏற்கனவே பாதுகாப்பாக வெளியே எடுத்துவிட்டதால், இந்த தாக்குதலால் பெரிய பின்னடைவு எதையும் சந்திக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதலை உறுதிப்படுத்திய இரான் இரானில் இருந்த பாதுகாப்பான அணுசக்தி தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை இரான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. கோம் மாகாண நெருக்கடி மேலாண்மைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் மோர்டெசா ஹெய்தாரி, "ஃபோர்டோ அணுசக்தி நிலையப் பகுதியின் ஒரு பகுதி வான்வழித் தாக்குதலுக்கு இலக்கானது" என்று கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல், நடான்ஸ், இஸ்பஹான் அணுசக்தி தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இரான் கூறியுள்ளது. இஸ்பஹானின் பாதுகாப்பு துணை ஆளுநர் அக்பர் சலேஹி, "நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் பல வெடிப்புகள் கேட்டன, இஸ்பஹான் மற்றும் நடான்ஸின் அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் தாக்குதல்களைக் கண்டோம்" என்று கூறியுள்ளார். இதன் மூலம், டிரம்ப் குறிப்பிட்ட 3 அணுசக்தி தளங்களும் தாக்குதலுக்கு இலக்கானது இரானிய அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,REUTERS இரானிடம் முன்னறிவித்த அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்னரே அதுகுறித்து இரானிடம் அமெரிக்கா தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமையன்று இரானை "ராஜதந்திர ரீதியாக" தொடர்பு கொண்டு தாக்குதல் நடத்த மட்டுமே செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், "ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகள் திட்டமிடப்படவில்லை" என்றும் அமெரிக்கா கூறியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தி கூறுகிறது. இந்த வார தொடக்கத்தில், இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியைக் கொல்லும் நெதன்யாகுவின் திட்டத்தை டிரம்ப் நிராகரித்துவிட்டதாக பல அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn0q81z52xzo
  19. நான்காம் பகல் போசன இடைவேளையின்போது இலங்கை 465 - 6 விக்; கமிந்து மெண்டிஸ் 83 ஆ.இ. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 12:34 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியின் நான்காம் நாளான இன்றைய பகல் போசன இடைவேளையின்போது இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 465 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கமிந்து மெண்டிஸ் 83 ஓட்டங்களுடனும் மிலன் ரத்நாயக்க 38 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். போட்டியின் நான்காம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்பு 368 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, தனஞ்சய டி சில்வா (19), குசல் மெண்டிஸ் (5) ஆகியோரின் விக்கெட்களை இழந்தது. எனினும் கமிந்து மெண்டிஸ், மிலன் ரத்நாயக்க ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளனர். பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 495 ஓட்டங்களைப் பெற்றது. https://www.virakesari.lk/article/217986
  20. 21 JUN, 2025 | 05:53 PM அராலி பகுதியில் சனிக்கிழமை (21) உழவு இயந்திரம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வர்த்தக ஸ்தாபனம் ஒன்றுக்கு சொந்தமான உழவு இயந்திரம் ஒன்று வாடிக்கையாளர் ஒருவருக்கு பொருட்களை ஏற்றிச் சென்றவேளையில், வீதியின் குறுக்கே மாடு பாய்ந்ததால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்துஇடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மின்கம்பமானது உழவு இயந்திரத்தின் மீது விழுந்துள்ள நிலையில் சாரதி எந்தவிதமான காயங்களும் இன்றி உயிர்தப்பியுள்ளார். விபத்தின்போது சேதமடைந்த மின்சார இணைப்பினை சரிசெய்யும் நடவடிக்கையில் வட்டுக்கோட்டை மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/218084
  21. 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார் தொடர்ந்து பேசிய அவர், "ருவாண்டா விவகாரத்தில் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும். இன்னும் காங்கோ, செர்பியா, கொசோவோ என நிறைய சொல்லலாம். முக்கியமாக இந்தியா- பாகிஸ்தான் விவகாரம். நான் நான்கு, ஐந்து முறை பெற்றிருக்க வேண்டும். ஆப்ரஹாம் ஒப்பந்தத்துக்காகவும் தந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எனக்கு நோபல் பரிசு தரமாட்டார்கள். அவர்கள் லிபரல்களுக்கு மட்டும்தான் தருவார்கள்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9vnx4k0ylo
  22. 21 JUN, 2025 | 04:10 PM வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இருந்து பெரியார்குளம் முருகன் ஆலயம் வரையான 1200 மீற்றர் நீளம் கொண்ட வீதி புனரமைக்கும் பணிகள் சனிக்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டது. கிராமப்புற வீதிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த பணிக்காக அண்ணளவாக 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகரசபையின் வட்டார உறுப்பினர் சி.கிருஸ்ணதாசின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் ஒழுங்குபடுத்தலில் இந்த வீதி புனரமைக்கப்படுகின்றது. நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர், வீதி அமைக்கும் பணியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர் சி.கிருஸ்ணதாஸ் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் சிரேஸ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் பிரமேரஞ்சன், கிராமத்தின் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/218075
  23. பெத்தும் நிஸ்ஸன்கவின் அபார சதத்தின் உதவியுடன் பங்ளாதேஷுக்கு இலங்கை துணிச்சலான பதில்; ஏஞ்சலோ மெத்யூஸுக்கு பங்களாதேஷ் வீரர்கள், இரசிகர்கள் மரியாதை Published By: VISHNU 19 JUN, 2025 | 08:53 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அபார சதத்தின் உதவியடன் இலங்கை துணிச்சலான பதில் அளித்துள்ளது. இது இவ்வாறிருக்க தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மெத்யூஸ் களம் புகுந்தபோதும் களம் விட்டு வெளியேறியபோதும் அவருக்க பலத்த மரியாதை செலுத்தப்பட்டது. பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் பெற்ற 495 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இலங்கை போட்டியின் மூன்றாம் நாளான இன்று வியாழக்கிழமை (19) ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 368 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதல் இன்னிங்ஸில் மேலும் 6 விக்கெட்கள் மீதம் இருக்க பங்களாதேஷைவிட 127 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில் இருக்கிறது. மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க தனது 17ஆவது டெஸ்ட் போட்டியில் 3ஆவது சதத்தைக் குவித்ததுடன், 64ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார். பெத்தும் நிஸ்ஸன்கவும் 31வயதான அறிமுக வீரர் லஹிரு உதாரவும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லஹிரு உதார 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் பெத்தும் நிஸ்ஸன்கவுடன் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால் அரைச் சதம் பெற்றதுடன் 157 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டார். தினேஷ் சந்திமால் 119 பந்துகளில் 4 பவுண்டறிகளுடன் 54 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஏஞ்சலோ மெத்யூஸ் தனது கடைசி டெஸ்டில் விளையாட களம் புகுந்தபோது பங்களாதேஷ் வீரர்களும் மத்தியஸ்தர்களும் இருமருங்கில் வரிசையாக நின்று அவருக்கு மரியாதை செலுத்தி வரவேற்றனர். நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஏஞ்சலோ மெத்யூஸ் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்து மைதானத்தை விட்டு வெளியேறியபோது அரங்கில் இருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பி அவரை பாராட்டி கௌரவித்தனர். மறுபக்கத்தில் திறமையாகவும் ஆக்ரோஷமாகவும் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க 256 பந்துகளை எதிர்கொண்டு 23 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 187 ஓட்டங்களைக் குவித்தார். டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும். கமிந்து மெண்டிஸ் 37 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 484 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் மொத்த எண்ணிக்கை 495 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது. துடுப்பாட்டத்தில் முஷ்பிக்குர் ரஹிம் 163 ஓட்டங்களையும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 148 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 90 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 85 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அறிமுக வீரர் தரிந்து ரத்நாயக்க 196 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். https://www.virakesari.lk/article/217954
  24. ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2026, ஆரம்பப் போட்டியில் இலங்கை - இங்கிலாந்து 19 JUN, 2025 | 05:57 AM (நெவில் அன்தனி) இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி - 20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியில் இலங்கையும் வரவேற்பு நாடான இங்கிலாந்தும் விளையாடவுள்ளன. இப் போட்டி பேர்மிங்ஹாம் எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் 2026 ஜூன் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தின் 10ஆவது அத்தியாயம் இங்கிலாந்தில் 2026ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் திகதி ஆரம்பமாகி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூலை 5ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவுபெறும். ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் 3 அத்தியாயங்களில் (2009, 2010, 2012) 8 அணிகளும் அடுத்த 6 அத்தியாயங்களில் (2014, 2016, 2018, 2020, 2023, 2024) 10 அணிகளும் பங்குபற்றின. பத்தாவது அத்தியாயத்தில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 10ஆக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், நியஸிலாந்து ஆகியவற்றுடன் குழு 2இல் இலங்கை இடம்பெறுகிறது. அத்துடன் பிராந்தியங்களில் நடைபெறும் மகளிர் ரி10 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றிலிருந்து இரண்டு அணிகள் இக் குழுவில் இணையும். குழு 1இல் அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், 2 தகுதிகாண் அணிகள் ஆகியன இடம்பெறும். 10 அணிகள் பங்குபற்றும் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் மொத்தம் 30 லீக் போட்டிகளும் 3 இறுதிச் சுற்று போட்டிகளும் நடத்தப்படும். லீக் போட்டிகள் யாவும் ஜூன் 29ஆம் திகதியுடன் நிறைவடையும். அரை இறுதிப் போட்டிகள் தி ஓவல் விளையாடரங்கிலும் இறுதிப் போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெறும். முதலாவது அரை இறுதிப் போட்டி ஜூன் 30ஆம் திகதியும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி ஜூலை 2ஆம் திகதியும் இறுதிப் போட்டி ஜூலை 5ஆம் திகதியும் நடைபெறும். லீக் போட்டிகள் எஜ்பெஸ்டன், ஹெடிங்லே, ஓல்ட் ட்ரஃபோர்ட் கிரிக்கெட் விளையாட்டரங்கு, பிறிஸ்டல் கவுன்ட் மைதானம், ஹெம்ப்ஷயர் பௌல் ஆகிய மைதானங்களில் நடைபெறும். இலங்கையின் போட்டிகள் (குழு 2) ஜூன் 12 எதிர் இங்கிலாந்து (எஜ்பெஸ்டன்) ஜூன் 16 எதிர் நியூஸிலாந்து (ஹெம்ப்ஷயர் பௌல்) ஜூன் 20 எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (பிறிஸ்டல் கவுன்டி) ஜுன் 23 எதிர் தகுதிகாண் அணி (பிறிஸ்டல் கவுன்டி) ஜூன் 25 எதிர் தகுதிகாண் அணி (ஓல்ட் ட்ரஃபோர்ட்) https://www.virakesari.lk/article/217868
  25. நில அபகரிப்பிற்கு தீர்வை காணுமாறு ஐநா மனித உரிமை ஆணையாளர் இலங்கை விஜயத்தின்போது வேண்டுகோள் விடுக்கவேண்டும் - மனித புதைகுழி அகழ்வின் போது சர்வதேச பிரசன்னம் அவசியம் - ஓக்லாந்து நிறுவகம் Published By: RAJEEBAN 21 JUN, 2025 | 12:58 PM ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கர் இலங்கைக்கு 23ம் திகதி முதல் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கையில் தற்போது இடம்பெறும் நில அபகரிப்புகள் கடந்த கால நில அபகரிப்புகள் மற்றும் தமிழர்களிற்கு எதிரான மனித உரிமைமீறல்களிற்கு இலங்கை அரசாங்கம் தீர்வை காணவேண்டும் என ஐக்கியநாடுகள் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என ஓக்லாந்து நிறுவகம் வேண்டுகோள் விடுக்கின்றது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களாகின்ற போதிலும்,1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தது முதல் ஒடுக்குமுறைக்குள்ளான புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னமும் நீதிக்காக காத்திருக்கின்றார்கள். பொறுப்புகூறல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பை மனித உரிமை ஆணையாளரின் விஜயம் வழங்குகின்றது. கடந்தமாதம் பல சிறுவர்கள் உடல்கள்கள் உட்பட 19 பேரின் மனித எச்சங்கள் காணப்பட்ட மனித புதைகுழி கடந்த மாதம் இலங்கையின் வடக்கில் யாழ் நகரத்திற்கு அருகில் உள்ள செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டபோதிலும்,பல தசாப்தங்களாக தண்டனை விடுபாட்டுரிமை,அவற்றை விசாரணை செய்ய தவறியமை போன்றவை காணப்பட்டதால் ,மனித புதைகுழியை தோண்டும்போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்ற காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேண்டுகோள்களுடன் ஒக்லாந்து நிறுவகம் இணைந்துகொள்கின்றது. நிலைமையை முழுமையாக மதிப்பிடுவதற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வடக்குகிழக்கின் அனைத்து பகுதிகளிற்கும் விஜயம் மேற்கொள்ளவேண்டும். 2009ம் ஆண்டு யுத்தத்தின் இறுதியில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலைகள் காரணமாக 169 796 தமிழர்கள் காணாமல்போயுள்ளதாகவும் கொல்லப்பட்டதாக கருதப்படுவதாகவும் முள்ளிவாய்க்காலிற்கு மனித உரிமை ஆணையாளர் விஜயம் மேற்கொள்ளவேண்டும் என காணாமல்போனவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த விஜயங்கள் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புகள்,நில அபகரிப்பு,கண்காணிப்பு, அச்சுறுத்தல் தமிழர்களின் பாரம்பரியம் திட்டமிடப்ட்டு சிதைக்கப்படுதல்,தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களில் புத்தவிகாரைகள் உருவாக்கப்படுதல் தடையின்றி தொடர்தல் போன்றவற்றைமதிப்பிடுவதற்கும் பார்ப்பதற்கும் உதவியாக அமையும். யாழ்ப்பாணம் தையிட்டியில் படையினரின் சட்டவிரோத விகாரைகளிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.தமிழர்களின் வரலாற்றை கலாச்சாரத்தை அழிப்பதற்கு இலங்கையின் ஆட்சியாளர்கள் முன்னெடுத்துவரும் திட்டமிட்ட தந்திரோபாயம் இதுவாகும். அநீதிகள் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வடக்குகிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் சட்டங்களை மீறியமைக்கா பொலிஸ் விசாரணை அச்சுறுத்தல் போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர். ஓக்லாந்து நிறுவகம் ஆவணப்படுத்தியுள்ளபோல தங்கள் நிலங்கள் காலனித்துவம் செய்யப்படுவது தொடர்வதால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் வீடுகள் நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் உள்ளனர். வடக்குகிழக்கை பிரிப்பதன் மூலம் தமிழர் தாயகத்தை பிரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தொடர்கின்றன.நீர்ப்பாசன திட்டங்கள், இராணுவ குடியேற்றங்கள் தொல்பொருள் ஒதுக்கீடுகள், சரணாலயங்கள்,பௌத்தமயமாக்கல், போன்றவற்றின் மூலம் இதனை செய்கின்றனர். வடக்குகிழக்கு தொடர்ந்தும் பெரும் இராணுவமயப்படுத்தலின் கீழ் காணப்படுகின்றது இது அந்த மக்களின் நாளாந்த நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இலங்கையிலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் பொறுப்புக்கூறல் நீதிக்கான தமிழ்மக்களின் தடையற்ற அர்ப்பணிப்பு-இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச சமூகம் அழுத்தங்களை பேண உதவியுள்ளது. மோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவேண்டும்,பொறுப்புக்கூறல் இடைவெளிக்கு முடிவை காணஅரசமைப்பு நிர்வாக சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும்,என டேர்க் முன்னர் விடுத்த வேண்டுகோள்களால் நாங்கள் நம்பிக்கைகொண்டுள்ளோம். ராஜபக்ச யுகம் முடிவிற்கு வந்துள்ள போதிலும்,ஜனாதிபதி திசநாயக்கவின் அரசாங்கம் முன்னைய ஆட்சியாளர்களின் கொள்கைகளையே பின்பற்றுகின்றது. சர்வதேச சட்டத்தினால் பாதிக்கப்பட்ட கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தியமைக்காக பொதுமக்களை தன்னிச்சையாக தடுத்துவைப்பதற்கு மிக மோசமான பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. சர்வதேச நடவடிக்கைகளை தூண்டுவதற்கு மனித உரிமை ஆணையாளரின் விஜயமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 59 வது அமர்வும் முக்கியமானவை. சர்வதேச மனித உரிமை மனிதாபிமான சட்டங்களை மீறியமைக்காகவும்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காகவும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவேண்டும். இராணுவமயப்படுத்துதலை நிறுத்தவேண்டும்,களவாடிய நிலங்களை மீள கையளிக்கவேண்டும்,வடக்குகிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியேற்றவேண்டும் என அதற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படவேண்டும். நம்பகதன்மை மிக்க உண்மையை தெரிவிக்கும் நடைமுறை, நீதி,இழப்பீடு போன்றவற்றை ஆரம்பிப்பதற்கும்,தமிழ் மக்களின் நீண்டகால துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கான அரசியல் தீர்வு ஆகியவற்றிற்கு இது அவசியமானது. https://www.virakesari.lk/article/218058

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.