Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. அனீரிஸம்: சல்மான் கானுக்கு வந்துள்ள இந்த மூளை நோய் எவ்வளவு அபாயகரமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மூளை அனீரிஸத்தை அண்மைக்காலமாக சமாளித்து வருவதாக சல்மான் கான் கூறுகிறார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் "தி கிரேட் இண்டியன் கபில் ஷோ" நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் விருந்தினராக நடிகர் சல்மான் கான் பங்கேற்றார். தனது திரைப்படமான சிக்கந்தரை விளம்பரப்படுத்துவதற்காக சல்மான் கான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கபிலும், குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் திரைப்படங்கள் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்புடைய கேள்விகளை எழுப்பினர். ஒரு கேள்விக்கு பதிலளித்த சல்மான் கான் தான் மூளை அனீரிஸம் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தனக்கு இருக்கும் உடல்நலக்குறைவு குறித்து பேசிய சல்மான், சிக்கந்தர் திரைப்பட படப்பிடிப்பின் போது தனக்கு விலா எலும்பில் காயம்பட்டதாக தெரிவித்தார். "நாங்கள் தினமும் எலும்புகளை உடைத்துக்கொள்கிறோம், விலாக்கள் உடைக்கப்படுகின்றன, டிரைஜிமினல் நியுரால்ஜியா இருந்தாலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். மூளையில் அனீரிஸம் இருக்கிறது, இருந்தாலும் வேலை செய்கிறேன். தமனி குறைபாடு (Arteriovenous malformation) இருக்கிறது, ஆனாலும் நடந்துகொண்டு இருக்கிறேன். நான் சண்டைக் காட்சிகளில் நடிக்கிறேன். என்னால் நடக்க முடியவில்லை, ஆனாலும் நடனமாடிக் கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் என் வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கின்றன" என்றார். சல்மான் இவ்விதம் கூறிய பின்னர் மூளை அனீரிஸம் தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடுவது அதிகரித்தது. மூளை அனீரிஸம் என்றால் என்ன? அது எவ்வளவு அபாயகரமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மூளை அனீரிஸம் (சித்தரிப்பு படம்) மூளை அனீரிஸம் என்றால் என்ன? ரத்த நாளத்தில் ஏற்படும் வீக்கம் அனீரிஸம் எனப்படுகிறது. ரத்த நாளம் பலவீனமடைவதால், அதிலும் குறிப்பாக அது இரண்டாக பிரியும் இடத்தில் இந்த வீக்கம் ஏற்படுகிறது. இந்த பலவீனமான பகுதி வழியாக ரத்தம் பாயும்போது, அந்த அழுத்தம் அந்த பகுதியை வெளிப்புறம் நோக்கி ஒரு பலூன் போல வீங்கச் செய்கிறது. வீக்கம் உடலில் எந்த நாளத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம், ஆனால் அவை பெரும்பாலும் இரண்டு இடங்களில் ஏற்படுகின்றன. இதயத்திலிருந்து உடலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனி மூளை மூளையில் வீக்கம் ஏற்பட்டால் அது மூளை அனீரிஸம் எனப்படுகிறது. மூளை அனீரிஸத்தின் வகைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES மூளை அனீரிஸங்கள் முக்கியமான மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. சாக்குலர் அனீரிஸம்: இது பெர்ரி அனீரிஸம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அனீரிஸம் பார்ப்பதற்கு ஒரு கொடியில் திராட்சை தொங்குவதைப் போல் காட்சியளிக்கிறது. அது முக்கிய தமனி அல்லது அதன் கிளைகளிலிருந்து வளரும் ரத்தம் நிரம்பிய ஒரு வட்டமான பையாகும். இது பெரும்பாலும் மூளையின் அடிப்பகுதியில் உள்ள தமனிகளில் உருவாகிறது. பெர்ரி அனீரிஸம் தான் சாதாரணமாக காணப்படும் அனீரிஸம் வகையாகும். ஃப்யுசிஃபார்ம் அனீரிஸம்: இந்த வகையான அனீரிஸத்தில் தமனியை சுற்றி வீக்கம் ஏற்படுகிறது. அதாவது தமனியின் அனைத்துப் பகுதிகளும் வீக்கமடைகின்றன. மைகாட்டிக் அனீரிஸம்: இந்த அனீரிஸம் ஒரு தொற்றால் ஏற்படுகிறது. மூளையின் தமனிகளை ஒரு தொற்று பாதிக்கும்போது, அது அவற்றின் சுவர்களை பலவீனப்படுத்துகிறது. இது ஒரு அனீரிஸம் உருவாவதற்கு காரணமாக அமையலாம். மூளை அனீரிஸத்தின் அறிகுறிகள் மூளை அனீரிஸம் வெடிக்கும்வரை அதனால் எந்த அபாயமும் ஏற்படுவதில்லை. அப்படி அது வெடித்தால், சப்அரக்னாய்டு ரத்தக்கசிவு என்ற மிகவும் அபாயகரமான நிலை ஏற்படும். இது மூளையில் ரத்தம் பரவ காரணமாக இருக்கிறது. இது மூளையில் பெரிய சேதத்தை ஏற்படுத்தக் கூடும். மூளை அனீரிஸம் வெடித்தப்பின் தெரியும் அறிகுறிகள்: திடீரென ஏற்படும் தீவிரமான, தாங்கமுடியாத தலைவலி (யாரோ உங்களை தலையில் பலமாக அடித்ததைப் போல) நியுக்கல் ரிஜிடிட்டி எனப்படும் பின்கழுத்து விறைப்பு குமட்டல் மற்றும் வாந்தி வெளிச்சத்தை பார்க்கும்போது வலி வெடிக்காத ஒரு மூளை அனீரிஸம், அதிலும் குறிப்பாக சிறியதாக உள்ள அனீரிஸம் பொதுவாக எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை. அது பெரியதாக இருந்தால், அது அருகே இருக்கும் நரம்புகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி தலைவலி, பார்வையில் மாற்றம் அல்லது முகம் மரத்துப் போதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES மூளை அனீரிஸம் ஏன் ஏற்படுகிறது? ரத்த நாளங்கள் ஏன் பலவீனமடைகின்றன என்பதை ஆய்வாளர்களால் முழுமையாக புரிந்துகொள்ளமுடியவில்லை, ஆனால் அதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. புகைப்பிடித்தல் உயர் ரத்த அழுத்தம் குடும்பத்தில் மூளை அனீரிஸம் இருப்பது (பரம்பரை காரணங்கள்) சில நேரங்களில் ரத்த நாளங்கள் பிறப்பு முதலே பலவீனமாக இருக்கின்றன தலையில் ஏற்பட்ட காயம் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அனீரிஸம் எந்த வயதிலும் ஏற்படலாம், ஆனால் இது 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. இவை ஆண்களை விட பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின்படி, ஒவ்வொரு வருடமும், இங்கிலாந்தில் பதினைந்தாயிரம் பேரில் ஒருவருக்கு மூளை அனீரிஸம் வெடிப்பு ஏற்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரைன் அனீரிஸம் ஃபவுண்டேஷனின் கூற்றின்படி, அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் எட்டு முதல் பத்து பேருக்கு இது ஏற்படுகிறது. இதற்கு என்ன சிகிச்சை? அமெரிக்காவில் ஆரோக்கியம் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் தனியார் அமைப்பு மேயோ கிளினிக். இந்த அமைப்பு மூளை அனீரிஸம் குறித்து விரிவான தகவல்களை அளித்துள்ளது. மூளை அனீரிஸத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு இரண்டு வகையான, பொதுவான சிகிச்சை முறைகள் உள்ளன – சர்ஜிகல் கிளிப்பிங் மற்றும் எண்டோவாஸ்குலர் சிகிச்சை. சில சமயங்களில், வெடிக்காத அனீரிஸத்திற்கு இந்த சிகிச்சைகள் பயன்படுத்தப்படலாம். ஆனால் இந்த சிகிச்சையால் கிடைக்கும் பலன்களைவிட அபாயம் அதிகமாக இருக்கக்கூடும். சர்ஜிகல் கிளிப்பிங் இந்த நடைமுறையில் அனீரிஸம் மூடப்படுகிறது. நரம்பியல் நிபுணர், ஒரு எலும்பை அகற்றுவதன் மூலம் அந்த வீக்கத்தை அணுகுகிறார். அதன் பின்னர் அவர் வீக்கத்திற்கு ரத்தத்தை விநியோகிக்கும் ரத்த நாளத்தை கண்டுபிடிக்கிறார். ரத்த ஓட்டம் அனீரிஸத்திற்குள் செல்லாத வகையில் ஒரு சிறிய உலோக கிளிப் அங்கு பொருத்தப்படுகிறது. சர்ஜிகல் கிளிப்பிங் என்பது மிகவும் திறனுள்ளதாக கருதப்படுகிறது. கிளிப் செய்யப்பட்ட அனீரிஸங்கள் மீண்டும் உருவாவதில்லை. இதில் மூளைக்குள் ரத்த கசிவு அல்லது ரத்த உறைவு ஆகியவை ஏற்படும் அபாயம் உள்ளது. சர்ஜிகல் கிளிப்பிங்கில் இருந்து உடல் நலம்பெறுவதற்கு 4 முதல் 6 வாரங்கள் ஆகிறது. வீக்கம் வெடிக்காமல் இருந்தால், மக்கள் மருத்துவமனையிலிருந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம். வெடித்த அனீரிஸமாக இருந்தால் மருத்துவமனையில் கூடுதல் காலம் இருக்கவேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மூளை அனீரிஸத்தை தவிர்க்க ஒருவர் புகைப்பிடித்தல், மருந்துகளை தவறாக பயன்படுத்துதல், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்கவேண்டும். எண்டோவாஸ்குலர் சிகிச்சை இதில் சர்ஜிகல் கிளிப்பிங்கை விட சற்றே எளிமையான சிகிச்சையாக இருப்பதால் சில சமயங்களில் அதைவிட பாதுகாப்பானதாகவும் இருக்கலாம். ஒரு மெல்லிய குழாய் (catheter) ரத்த நாளங்கள் வழியாக வீக்கத்திற்கு செலுத்தப்பட்டு சிறப்பு உலோக காயில்கள் உள்ளே வைக்கப்படுகின்றன. சர்ஜிகல் கிளிப்பிங்கைப் போல, இந்த நடைமுறையிலும் மூளையில் ரத்த கசிவு அல்லது ரத்த ஓட்டம் தடைபடுவதற்கான அபாயம் சிறிதளவு உள்ளது. அதோடு அனீரிஸங்கள் மீண்டும் தோன்றக்கூடும். எனவே 'இமேஜிங் டெஸ்ட்' எனப்படும் உள்ளுறுப்பு படங்களை அவ்வப்போது எடுத்து பரிசோதித்துக்கொள்வது முக்கியம். ஃப்லோ டைவர்சன் இதுவும் ஒரு எண்டோவாஸ்குலர் சிகிச்சையாகும். இதில், ரத்த ஓட்டத்தை அனீரிஸத்திடமிருந்து திசைதிருப்பும் வகையில் ரத்த நாளங்களில் ஒரு ஸ்டெண்ட் பொருத்தப்படுகிறது. இது அனீரிஸம் வெடிக்கும் அபாயத்தை குறைத்து உடல் அதை குணமாக்குவற்கு உதவுகிறது. இந்த நடைமுறை பெரிய அனீரிஸங்கள் அல்லது அறுவை சிகிச்சை அல்லது காயிலிங் மூலம் சிகிச்சை அளிக்க கடினமான அனீரிஸங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மூளை அனீரிஸத்தை தடுப்பது எப்படி? ஒரு அனீரிஸம் உருவாவதை தடுப்பதற்கு அல்லது ஏற்கனவே இருக்கும் ஒன்று மேலும் பெரிதாகி வெடிக்காமல் இருக்க சிறந்த வழி, ரத்த நாளங்களை சேதப்படுத்தும் பழக்கங்களை தவிர்ப்பது தான். இந்த விஷயங்களை தவிருங்கள்: புகைப்பிடித்தல் பொரித்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாதது கூடுதல் எடை அல்லது உடல் பருமன் - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cev0e7rw1e3o
  2. RESULT 1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England India 471 & 364 England (T:371) 465 & 373/5 England won by 5 wickets PLAYER OF THE MATCH Ben Duckett, ENG 62 & 149
  3. பெரிய நீலாவணையில் குடும்பப் பெண் கொலை - இரட்டை சகோதரிகள் கைது Published By: DIGITAL DESK 3 24 JUN, 2025 | 05:08 PM கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி மனோதர்ஷன் விதுஷா என்ற குடும்பப்பெண் கடந்த மே மாதம் வெள்ளிக்கிழமை (30) படுகொலை செய்யப்பட்டிருந்தார். இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் வெட்டப்பட்டு தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை பொதுமக்களின் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட குறித்த சம்பவம் தொடர்பில் பல தரப்பினரும் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், 24 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான அணி குறித்த படுகொலை தொடர்பில் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படுகொலை இடம்பெற்ற வேளை மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கி இருந்ததுடன், சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218345
  4. “அணையா விளக்கு” போராட்டம் உண்மையான பொறுப்புக்கூறலின் தேவையை நினைவுட்டுவதற்கான சந்தர்ப்பம் - தமிழ் சிவில் சமூக அமையம் 24 JUN, 2025 | 09:29 PM (எம்.நியூட்டன்) “அணையா விளக்கு” போராட்டம் உண்மையான பொறுப்புக்கூறலின் தேவையை நினைவுட்டுவதற்கான சந்தர்ப்பம் என தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது. செம்மணியில் நடைபெற்றுவரும் இந்த போராட்டம் தெடர்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தினர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: செம்மணியில் அண்மைக்காலத்தில் புதிதாக அகழப்பட்ட மனிதப் புதைகுழிகளை முறையாக அகழ்வு செய்ய வேண்டும் எனக் கோரி, நேற்றிலிருந்து மூன்று நாட்கள் “அணையா விளக்கு” என்ற பெயரில் நடைபெறுகின்ற போராட்டத்துக்கு தமிழ் சிவில் சமூக அமையம் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்றது. பதினாறு வருடங்களாக தமிழ் மக்களுடைய பொறுப்புக்கூறலுக்கான போராட்டத்தில் செம்மணியில் புதைகுழிகள் அண்மையில் மீளக் கண்டறியப்பட்டதும் அதன் அகழ்வின்போது பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் ஒரு திருப்புமுனையாக அமைகின்றது. பொறுப்புக்கூறலுக்கான தேவையையும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையைப் புரிந்தவர்கள் நீதியின் முன்னால் கொண்டு நிறுத்தப்படவேண்டிய தேவையையும், பொறுப்புக்கூறல் தொடர்பிலான தமிழ் மக்களுடைய அவாவினையும் குறித்த மனிதப் புதைகுழிகள் மீள ஞாபகமூட்டுகின்றன. மனிதப் புதைகுழிகளை மனித கௌரவத்தோடும் (human dignity) இறந்தவர்களுக்கு உரிய மரியாதையோடும் (respect for the dead) அணுகுவது என்பது அவசியமானது என சர்வதேச சட்டம் கூறுவதோடு, அவ்வாறான மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுமிடத்து அவற்றை முறையாக அகழ்வது தொடர்பிலும், அகழ்ந்து எடுக்கப்படுகின்ற எச்சங்களை முறையான விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பிலும், முறையான விசாரணையின் தொடர்ச்சியாக, அந்த மனிதப் புதைகுழிகளில் இடப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டமைக்கான காரணங்களை விசாரித்து பொறுப்புக்கூறலை சாத்தியப்படுத்துவது தொடர்பிலும், சர்வதேச சட்டத்தில் வழிகாட்டல் குறிப்புகள் தாராளமாக உண்டு. அவற்றைப் பின்பற்றி குறித்த அகழ்வு நடைபெற வேண்டும் என்பதனை தமிழ் சிவில் சமூகம் வலியுறுத்துகிறது. மேலும், செம்மணியில் மாத்திரம் அல்லாமல் மன்னாரிலும் கொக்கட்டிச்சோலையிலும், இன்னும் பல்வேறு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய அப்புதைகுழிகளும் முறையாக விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதும், உண்மைகள் வெளிக்கொணரப்படுவதும் அவசியம் என்பதனை தமிழ் சிவில் சமூகம் வலியுறுத்துகிறது. தமிழ் மக்கள் அரசினுடைய அங்கங்கள் தொடர்பில் நம்பிக்கையற்று இருப்பது புதிய விடயமல்ல. எனவே இவ்வாறான மனிதப் புதைகுழி அகழ்வின் போது சர்வதேச பங்குபற்றலும், சர்வதேச கண்காணிப்பும், சர்வதேச உள்ளீடும் இருப்பது அவசியம் என தமிழ் சிவில் சமூக அமையம் கருதுகிறது. மனிதப் புதைகுழி அகழ்வு, அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருட்களை விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தல், பின்னர் அது தொடர்பிலான குற்ற முறை, விசாரணை ஆகிய மூன்று கட்டங்களின் போதும் சர்வதேச கண்காணிப்பும் பங்களிப்பும் உள்ளீடும் அவசியம் என்பதனை தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்துகின்றது. மேலும், இவ்விடத்தில் தமிழ் மக்களுடைய பொறுப்புக்கூறல் தொடர்பான தேவையானது ஒரு சர்வதேச விசாரணை மூலமாகவே பூர்த்தியடையும் என்பதனை தமிழ் சிவில் சமூக அமையம் இவ்விடத்தில் மீள ஞாபகப்படுத்துவதோடு, 2021ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடருக்கு முன்னர், அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்களால் வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மீள ஞாபகப்படுத்தி, அதாவது ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இருந்து முறையாக இலங்கை பொறுப்புக்கூறல் விடயமானது ஐ.நா பொதுச்சபைக்கு பலப்படுத்தப்பட்டு அங்கிருந்து ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு பொறுப்புக் கொடுக்கப்பட்டு, ஐ.நா பாதுகாப்புச் சபை இலங்கை பொறுப்புக்கூறல் விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதை இவ்விடத்தில் நாம் ஞாபகப்படுத்துகிறோம். குறித்த விடயங்களை இந்த போராட்டம் நடைபெறுகின்ற மூன்று நாட்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கவனத்தில் கொண்டு இது தொடர்பிலான தனது பரிந்துரைகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்திலும் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்துகிறது. இறந்தவர்களுடைய நினைவுக்கும் இறந்தவர்கள் மீது எங்களுக்கு உள்ள மரியாதையையும், அந்த இறப்புக்கான காரணங்களை தேடி அறிவதற்கான எமது தொடர் பொறுப்புக்கூறலுக்கான போராட்டத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் பெருமளவில் நாம் இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டுமென தமிழ் சமூக அமையம் தமிழ் மக்களை உரிமையோடு கேட்டு நிற்கிறது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/218336
  5. காணி உறுதிகளை கையில் ஏந்தியவாறு நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் 24 JUN, 2025 | 06:15 PM (எம்.நியூட்டன்) “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி, வலிகாமம் வடக்கு மயிலிட்டி மிள்குடியேற்றக் குழு நான்காவது நாளாக தொடரும் இன்றைய (24) போராட்டத்தில் காணி உறுதிகளை கையில் ஏந்தியவாறு 500க்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 1990ஆம் ஆண்டு முதல் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு வகையான துன்பங்களை சுமந்தவாறு வாழ்ந்துவரும் நிலையில் தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி போராட்டங்களை நடத்திவருகிறார்கள். சிறுவர்கள் முதல் ஆண்கள், பெண்கள் வயோதிபர்கள் என பல தரப்பினர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இன்றைய நாளில் தமது கைகளில் காணி உறுதிகளை கையிலேந்தியவாறு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். “நாங்கள் அரச காணிகளை கேட்கவில்லை; எமது சொந்த நிலத்தைத்தான் கேட்கிறோம்", "எமது நிலத்தில்தான் எமது உயிர் போகவேண்டும்”, “இனியும் இடம்பெயர்ந்து அவல வாழ்வு வாழ முடியாது”, “எமது நிலத்தில் நிம்மதியாக வாழவேண்டும்” என தெரிவிக்கிறார்கள். இதன்போது முதியவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நான் எனது ஊரில் இருக்கும்போது முதலாளியாக இருந்தேன். இன்று தொழிலாளியாக இருக்கிறேன். வாழமுடியாமல் தற்போது இருக்கிறேன். சொந்த நிலத்தை விட்டால் மீண்டும் முதலாளியாக ஆகிவிடுவேன் என்கிறார். நம்பிக்கையுடன் இப்போராட்டத்தில் கலந்துகொண்ட இளம்பெண் ஒருவர் தெரிவிக்கையில், நான் பிறந்தது தற்போது இருக்கும் இடத்தில்தான். எனது சொந்த வீடு மயிலிட்டியில் என்று அப்பா, அம்மா கூறி கை காட்டுகிறார்கள். எமது வீட்டில் இராணுவத்தினர் இருக்கிறார்கள். அவ்வாறு என்றால் நான் எவ்வாறு எமது சொந்த வீட்டுக்குப் போவது? எங்கள் தலைமுறையும் இடப்பெயர்வு வாழ்க்கையை வாழ்வதா? என்று கேட்டார். நான்காவது நாளாக தொடரும் இன்றைய போராட்டத்தில் மத குருக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இடம்பெயர்ந்து வாழும் மக்கள், வலி வடக்கு, மயிலிட்டி, காங்கேசன்துறை மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/218339
  6. 24 JUN, 2025 | 03:38 PM இலங்கையில் வாழும் தனிநபரொருவரின் மாதாந்த செலவு தொடர்பில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் தனிநபரொருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் வாழும் தனிநபரொருக்கு தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதத்திற்கு 16,318 ரூபா தேவைப்படுவதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளின் அடிப்படையில் தனிநபரொருவரின் மாதாந்த செலவுகள் பின்வருமாறு, 2012 - 2013 ஆம் ஆண்டுகளில் 5,223 ரூபாய் 2016 ஆம் ஆண்டில் 6,117 ரூபாய் 2019 ஆம் ஆண்டில் 6,966 ரூபாய் 2024 ஆம் ஆண்டில் 16,476 ரூபாய் 2025 ஆம் ஆண்டில் 16,342 ரூபாய் https://www.virakesari.lk/article/218324
  7. LIVE 1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England India 471 & 364 England (80 ov, T:371) 465 & 349/5 Day 5 - Session 3: England need 22 runs. Current RR: 4.36 • Min. Ov. Rem: 16 • Last 10 ov (RR): 41/0 (4.10) வெற்றியை நெருங்கிவிட்டது இங்கிலாந்து அணி... கோச் பிரண்டன் மெக்கலமின் அணுகுமுறைக்கு வெற்றி.
  8. "40 முறை போதைப் பொருள் வாங்கிய ஸ்ரீகாந்த்" - வழக்கில் சிக்கியது எப்படி? பட மூலாதாரம்,ACTORSRIKANTH/INSTAGRAM படக்குறிப்பு, நடிகர் ஸ்ரீகாந்திற்கு ஜூலை 7ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் போதைப் பொருளைப் பயன்படுத்தியதான குற்றச்சாட்டில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக இதற்கு முன் நடந்த கைதுகளின் தொடர்ச்சியாக ஸ்ரீகாந்த் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை நகரக் காவல்துறையால் திங்கட்கிழமையன்று கைதுசெய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பாக, ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி டி. பிரசாத் அளித்த தகவலின் பேரில் ஸ்ரீகாந்த் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கொக்கெய்ன் என்ற போதைப் பொருளை வாங்கியது தொடர்பாக ஜூன் 23ஆம் தேதி நடிகர் ஸ்ரீகாந்தை விசாரணைக்காக அழைத்தது நுங்கம்பாக்கம் காவல்துறை. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் நாள் முழுக்க விசாரணை நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து எழும்பூர் 14வது பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜூலை 7ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. பிரபல நடிகர் ஒருவர், போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக கைதுசெய்யப்பட்டது அரசியல், திரையுலகு என பல இடங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இவ்வளவு பெரிய அளவில் இந்த விவகாரம் வெடிப்பதற்குக் காரணமாக அமைந்தது நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபான பாரில் கடந்த மே மாதம் நடந்த ஒரு மோதல்தான். மே மாதம் 22ஆம் தேதி திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளரான ராஜா என்பவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் மதுபானம் அருந்த வந்திருக்கிறார். அப்போது அங்கே, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் ஒருவருக்கும் ராஜாவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர். இதையடுத்து பார் நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. இந்த நிலையில், ராஜாவுக்கு ஆதரவாக சிலர் காவல் நிலையத்திற்கு வந்து, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கூறினர். இதையடுத்து இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டிய காவல்துறை, மே 29ஆம் தேதி மைலாப்பூரைச் சேர்ந்த டி. பிரசாத் (33), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர். கணேஷ்குமார் (42), வடபழனியில் உள்ள சின்ன போரூரைச் சேர்ந்த ஜி. தனசேகர் (29), பனையூரைச் சேர்ந்த டி. அஜய் ரோகன் (36), சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான நாகேந்திரசேதுபதி என்ற சுனாமி சேதுபதி (33) ஆகியோர் தேனியில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். இதற்குப் பிறகு ராஜா, சந்தோஷ் என்ற இருவரும் புனேவில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் பிரசாத் ஏற்கனவே சில மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இந்த மோசடிகளில் அவருக்குத் துணையாக இருந்த காவல்துறை துணை ஆய்வாளர் மணிகுமார் என்பவரும் காவலரான செந்தில்குமார் என்பவரும் கைதுசெய்யப்பட்டனர். பட மூலாதாரம்,ACTORSRIKANTH/INSTAGRAM படக்குறிப்பு,நடிகர் ஸ்ரீகாந்த் இதற்கிடையில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ANIU) அளித்த தகவல்களின் அடிப்படையில் சேலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற ப்ராடோ என்பவரை நுங்கம்பாக்கம் காவல்துறை சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஜூன் 17ஆம் தேதி கைதுசெய்தது. அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவர் ஜூன் 18ஆம் தேதி ஓசூரில் கைதுசெய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 11 கிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது. பிரதீப்பிடம் நடத்திய விசாரணையில், தான் பிரசாதிற்கு போதைப் பொருள்களை சப்ளை செய்ததாகவும் அவர் அதனை நடிகர் ஸ்ரீகாந்திற்கு கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். சுமார் 40 முறை இதுபோல வாங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் பின்னணியில்தான் ஸ்ரீகாந்த்தை அழைத்து விசாரித்த நுங்கம்பாக்கம் காவல்துறை, விசாரணைக்குப் பிறகு அரசு மருத்துவமனையில் போதைப் பொருள் சோதனைக்கு உட்படுத்தியது. அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில், கைதுசெய்யப்பட்டு அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையாகப் பேச காவல்துறை அதிகாரிகள் மறுக்கின்றனர். பிரதீப்பிடம் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இன்னொரு நடிகருக்கும் காவல்துறை விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. கேரள திரையுலகில் போதைப்பொருள் தொடர்பான சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES திரை நட்சத்திரங்கள் போதைப் பொருளைப் பயன்படுத்துவது என்பது இந்தியாவின் பல மாநிலங்களில் பெரும் சிக்கலான விவகாரமாகவே இருந்துவருகிறது. கடந்த ஏப்ரல் மாத மத்தியில் கொச்சியின் காலூர் பகுதியில் ஒரு ஹோட்டலில் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நடவடிக்கைக் குழு ஒரு அதிரடி சோதனையை நடத்தியது. அப்போது அந்த ஹோட்டலில் இருந்து ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவரை எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்திய கொச்சி நகரக் காவல்துறை, அவரைக் கைதுசெய்தது. பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, மலையாள திரைத்துறையின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகிஸ்தர்களை அழைத்து போதைப் பொருள் பரவல் குறித்து கூட்டம் நடத்தவிருப்பதாக அம்மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி மனோஜ் ஆபிரகாம் ஊடகங்களிடம் தெரிவித்தார். அதற்குச் சில நாட்களுக்கு முன்பாக ஆழப்புழாவில் ஒரு காரை கலால் துறையினர் சோதனையிட்டபோது, அந்தக் காரில் இருந்து ஹைபிரிட் கஞ்சா பிடிபட்டது. இது தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டனர். இந்த கஞ்சா பிடிபட்ட பிறகு, இது தொடர்பாக திரைத்துறையினர், தொலைக்காட்சி நடிகர்கள், மாடல்கள் ஆகியோரிடம் கலால் வரித் துறையினர் விசாரணை நடத்தினர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9xnmm21xpo
  9. யாழ். மாவட்ட அரச அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார் மருதலிங்கம் பிரதீபன் 24 JUN, 2025 | 12:59 PM யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் (24) சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்றுக்கொண்டார். இப்பதவியேற்பு நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட அரச அதிபர் ஸ்ரீமோகன் தலைமையில் மதத் தலைவர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள், பிரதேச சபையின் செயலர்கள் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்துறைசார் பொறுப்பு நிலை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. முதலில் மாவட்ட செயலகத்துக்கு தனது பாரியாருடன் வருகைதந்த மாவட்ட செயலாளரை, மேலதிக மாவட்ட அரச அதிபர் ஸ்ரீமோகன் கைலாகு கொடுத்து மாலை அணிவித்து வரவேற்றார். அதைத் தொடர்ந்து சக ஊழியர்களால் வரவேற்கப்பட்ட அரச அதிபர் பிரதீபன் மாவட்ட செயலரின் அதிகாரபூர்வ அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல மாதங்களாக மாவட்ட அரச அதிபர் வெற்றிடம் இருந்துவந்த நிலையில் பதில் அரச அதிபராக கடமையாற்றிவந்த ம.பிரதீபன் சில தினங்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தின் அரச அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்ட பிரதீபனுக்கான நியமனக் கடிதம் கடந்த 20.06.2025 அன்று அமைச்சரவை செயலாளர் W.M.D.J. பெர்னாண்டோவினூடாக பெற்றார். இந்நிலையில் பிரதீபன் இன்றைய தினம் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், பிரதீபன் 2024 மார்ச் 9ஆம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218309
  10. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது - ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் பிரதமர் தெரிவிப்பு 24 JUN, 2025 | 02:14 PM ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் (OHCHR) பயனுள்ள விதத்திலும் ஒத்துழைப்புடனும் செயற்படுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (23) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் (OHCHR) பயனுள்ள விதத்திலும் ஒத்துழைப்புடனும் செயற்படுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். சமீபத்தில் இலங்கை அரசியல் ஏற்பட்ட மாற்றம் குறித்து குறிப்பிட்ட அவர், அனைத்து சமூகங்களிடமிருந்தும் கிடைக்கப்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க மக்கள் ஆணையானது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார். கிராமப்புற வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுத்தல் மற்றும் தேவையான சமூக மாற்றத்தைப் போன்றே நிறுவன ரீதியிலான மாற்றங்களுடன் சட்ட மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை பின்பற்றுதல்.ஆகிய மூன்று முக்கிய காரணிகளில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். சமூக, கல்வி, சுகாதார மற்றும் பொருளாதார உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகளின் முழுமையான கட்டமைப்பை பாதுகாத்து மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது என்றும் பிரதமர் தெரிவித்தார். காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம்(OR) மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) போன்ற உள்நாட்டு இயங்குதளங்களை வலுப்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறைக்கு ஆதரவளிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதன் போது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான இலங்கையின் தொடர்ச்சியான தலையீட்டை பாராட்டிய உயர்ஸ்தானிகர், மனித உரிமைகள், ஜனநாயக ஆட்சி மற்றும் தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து விசேடமாகக் குறிப்பிட்டார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche, ஐக்கிய நாடுகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள். இலங்கை தூதுக்குழுவின் சார்பாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பிரதமர் அலுவலகத்தினதும் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவினதும் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/218295
  11. மட்டக்களப்பில் செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக தீப்பந்தம் ஏந்திய போராட்டம் Published By: VISHNU 24 JUN, 2025 | 02:48 AM செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஓந்தாச்சிமடம் பாலத்தில் திங்கட்கிழமை (23) மாலை தீப்பந்தம் ஏந்திய போராட்டம் நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன் மற்றும் இ.சிறிநாத், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவ்வார்ப்பாட்டத்தின் போது பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக நடந்து சென்று பின்னர் பாலத்தின் நடுப்பகுதியில் தீப்பந்தங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் ஆணையாளர் இலங்கைக்கு வருகின்ற போது இடையில் இடம்பெற்ற இவ்வாறான மனித புதைகுழிகள், இனப்படுபவர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதியினை பெற்று தர வேண்டும் என இதன் போது வலியுறுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/218274
  12. இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் வோல்கர் செம்மணி புதைகுழியை பார்வையிட ஏற்பாடு! Published By: DIGITAL DESK 3 24 JUN, 2025 | 10:33 AM இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், நாளை 25 ஆம் திகதி யாழுக்கான விஜயத்தின் போது அங்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவிருப்பதுடன், செம்மணி மனிதப்புதைகுழியையும் சென்று பார்வையிடவுள்ளார். இந்நிலையில், திங்கட்கிழமை (23) கொழும்பை வந்தடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கரை பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 3 தசாப்த கால யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிராக இடம்பெற்ற மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு திங்கட்கிழமை (23) இரவு நாட்டை வந்தடைந்தார். இன்று செவ்வாய்க்கிழமை (24) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடங்கலாக அரச கட்டமைப்பின் முக்கிய அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார். இன்றையதினம் மாலை 4.30 மணிக்கு பாராளுமன்றக் கட்சித்தலைவர்களை பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க். மாலை 5.30 மணிக்கு முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்ரகள், மதத்தலைவர்கள், இராஜதந்திரிகள் என சுமார் 300 பேர் பங்கேற்கும் சந்திப்பிலும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிலையில், நாளை புதன்கிழமை (25) கண்டிக்குப் பயணம் செய்து அங்கு தலதா மாளிகையில் மதவழிபாடுகளில் ஈடுபடுவதுடன். அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உரையாடவுள்ள வோல்கர் டேர்க், நாளைய தினமே திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அதன்படி, நாளையதினம் யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநதிகளுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ள உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரை ஒருமித்துச் சந்திக்கவுள்ளார். அதுமாத்திரமின்றி அவர் யாழ். விஜயத்தின்போது அண்மையில் கழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடங்கலாக 19 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதியையும் சென்று பார்வையிடவுள்ளார். https://www.virakesari.lk/article/218286
  13. ராகுல், பந்த் சதம்: கடைசி நாளில் பும்ராவை சமாளித்து இங்கிலாந்தால் 350 ரன் எடுக்க முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஹெடிங்லியில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 371 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்துள்ளது. கடைசி நாளான இன்று (ஜூன் 24) இங்கிலாந்து அணி வெற்றி பெற 350 ரன்களை சேர்க்க வேண்டிய நிலையில், அந்த அணியின் கைவசம் 10 விக்கெட்டுகள் இருக்கின்றன. கடைசி நாளில் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்த ஆடுகளத்தில் இதற்கு முன்பு 300 ரன்களுக்கு மேல் இலக்கு வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளதா? முதல் இன்னிங்சைப் போலவே இன்றும் பும்ரா சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றி தேடித் தருவாரா? ராகுல் - ரிஷப் பந்த் அபாரம் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் ராகுல் 47 ரன்களுடனும், கில் 6 ரன்களுடனும் நேற்றைய ஆட்டத்தைத் தொடங்கினர். நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கிய சுப்மன் கில், கார்ஸ் பந்துவீச்சில் பேட்டில் இன்சைட் எட்ஜ் எடுத்து கிளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கி, ராகுலுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். முதல் செஷனில் இந்திய அணி 63 ரன்கள்தான் சேர்த்தது. ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக பவுன்சராகி எகிறியதால் ராகுலும், ரிஷப் பந்தும் சற்று பொறுமையாக பேட் செய்தனர். முதல் இன்னிங்ஸைவிட 2வது இன்னிங்ஸில் ராகுல் கவர் ட்ரைவ், ஸ்குயர் ட்ரைவ், புல்ஆ-ஃப் ஷாட், ஆன்ட்ரைவ் ஷாட்களை அழகாக ஆடி ரன்களைச் சேர்த்தார். அவர் பெரிய ஷாட்களுக்கு முயற்சிக்கவில்லை. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் போன்று பேட் செய்த ராகுல், முதல் செஷனில் 44 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 87 பந்துகளில் ராகுல் அரைசதத்தை எட்டினார். பந்து தேய்ந்து பழையதானபின் ராகுல் தனது பேட்டிங் கியரை மாற்றி ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார். ராகுலுக்கு இங்கிலாந்து பீல்டர்கள் 3 முறை கேட்சை கோட்டைவிட்டனர். ராகுல் 59 ரன்களில் இருந்தபோதும், 99 ரன்களில் இருந்தபோதும் கிடைத்த கேட்ச் வாய்ப்பை இங்கிலாந்து வீரர்கள் நழுவவிட்டனர். முடிவில் ராகுல் சதத்தை நிறைவு செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,202 பந்துகளில் ராகுல் சதத்தை நிறைவு செய்தார் 137 ரன்கள் சேர்த்த ராகுல், கார்ஸ் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். தொடக்க வீரராகக் களமிறங்கி இங்கிலாந்து மண்ணில் ராகுல் 3வது சதத்தை நிறைவு செய்துள்ளார். ராகுல் டிராவிட், கவாஸ்கர், விஜய் மெர்ச்சன்ட் ஆகியோர் தொடக்க வீரராக 2 சதங்களைத்தான் அடித்திருந்தனர். கே.எல்.ராகுலைப் பொருத்தவரை ஆசிய நாடுகளை தாண்டியும் கடந்த 5 சுற்றுப்பயணங்களிலும் சிறப்பாகவே பேட் செய்துள்ளார். 2021ல் இங்கிலாந்து டெஸ்டில் 84, 129 ரன்களும், தென் ஆப்ரிக்காவில் 123 ரன்களும், ஆஸ்திரேலியத் தொடரில் 77, 26 ரன்களை ராகுல் சேர்த்துள்ளார். இந்த டெஸ்டிலும் 2வது இன்னிங்ஸில் இக்கட்டான சூழலில் சதம் அடித்து அணியை ராகுல் மீட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இக்கட்டான சூழலில் சதம் அடித்து அணியை ராகுல் மீட்டுள்ளார் 2வது சதம் அடித்த ரிஷப் பந்த் ராகுல் ஒருபுறம் நிதானமாக பேட் செய்ய, அவருக்கு ஈடு கொடுத்து ஆடிய ரிஷப் பந்த் தனது வழக்கமான ஆட்டத்தை ஆடி ரன்களைச் சேர்த்து 83 பந்துகளில் அரைசதம் எட்டினார். அடுத்த 50 பந்துகளில் வேகமாக ரன்களைச் சேர்த்த ரிஷப் பந்த் 50 ரன்களை சேர்த்து 130 பந்துகளில் தனது 8-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். ரிஷப் பந்த் 118 ரன்கள் சேர்த்த நிலையில் ஷோயிப் பஷீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 18 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் ஒரு கட்டத்தில் பஷீர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கினார். இதற்கு நடுவர் பால் ரீஃபில் அவுட் வழங்காத நிலையில் இங்கிலாந்து அப்பீல் சென்றது. ஆனால், ரிஷப் பந்த் பேட்டில் பந்து பட்ட பின் கால்காப்பில் பட்டதால் இங்கிலாந்தின் ரிவியூ வீணானது. இதன்பின், சுதாரித்துக்கொண்ட ரிஷப் பந்த் தனது ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்துக்கொண்டு நிதானமாக பேட் செய்தார். உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் ஒருவர் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்தது இது 2வது நிகழ்வாகும். இதற்கு முன்பு ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் ஆன்டி பிளவர் 2001ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஹராரேவில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசியிருந்தார். அதன்பின் 24 ஆண்டுகளுக்குப்பின் ரிஷப் பந்த் சதம் விளாசியுள்ளார். இந்திய அளவில் முதல் முறையாக ரிஷப் பந்த் சாதனை நிகழ்த்தியுள்ளார். அது மட்டுமல்லாமல், இங்கிலாந்துக்கு பயணம் செய்த வெளிநாட்டு அணிகளில் ஒரு பேட்டர் ஒரு டெஸ்டில் இரு சதங்களை விளாசிய 9-வது பேட்டராக ரிஷப் பந்த் பெயரெடுத்துள்ளார். கடைசியாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 2019ல் இரு சதங்களை விளாசியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சதம் எடுத்த மகிழ்ச்சியில் ரிஷப் பந்த் ரிஷப் பந்த் முதல் டெஸ்டிலேயே 252 ரன்களைக் குவித்து, ஒரு டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார். உலகளவில் 4வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் ரிஷப் பந்த் பெற்றார். ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் (17), ஆன்டி பிளவர் (12) இருவருக்கு அடுத்தபடியாக அதிக சதங்களை அடித்த விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் உள்ளார். கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காதவரை இந்திய அணி 333 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என வலுவான நிலையில் இருந்த நிலையில் ராகுல் ஆட்டமிழந்தபின் அடுத்த 31 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஷர்துல் தாக்கூர் இந்த முறையும் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரிசை வீரர்கள் 3 பேரும் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர். நூறாண்டுகளில் தோன்றாத தலைசிறந்த பந்து வீச்சாளர் - பும்ராவின் மாய வேகம் பேட்டர்களை தடுமாறச் செய்வது எப்படி? தோனியை விஞ்சி பந்த் புதிய சாதனை: இந்திய அணியின் தவறுகளை சரியாக பயன்படுத்திய இங்கிலாந்து கருண் நாயர் மறுபிறவி - இந்திய அணிக்கு தன்னை நிரூபிக்க இங்கிலாந்தில் அவர் செய்தது என்ன? 18 ஆண்டு ஏக்கத்தை தீர்க்குமா இந்திய இளம் படை? அணியில் யாருக்கு வாய்ப்பு அதிகம்? இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் ரிஷப் பந்த், ராகுல் இருவரைத் தவிர வேறு எந்த பேட்டர்களும் 25 ரன்களுக்கு மேல் சேர்க்கவில்லை. மிகவும் எதிர்பார்ப்பு அளித்த கருண் நாயர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கில் 8 ரன்னில் போல்டாகி அதிர்ச்சியளித்தார். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற 6 ரன்களைச் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு 371 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்துள்ளது. கிராவ்லி 12 ரன்களுடனும், டக்கெட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கடைசி நாளில் ஆடுகளம் எப்படி இருக்கும்? லீட்ஸ் மைதானத்தைப் பொருத்தவரை கடைசி நாளில் பேட் செய்ய அற்புதமான மைதானமாகும். கடந்த 11 ஆண்டுகளில் இங்கிலாந்து மண்ணில் கடைசி நாளில் பேட் செய்ய 2வது சிறந்த ஆடுகளமாக லீட்ஸ் திகழ்ந்து வருகிறது. ஆனால், கடைசி நாளில் ஆடுகளத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகள் மேலும் அதிகமாகும் என்பதால் பும்ரா, ஜடேஜாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். ஆனால், ஆடுகளத்தில் ரோலர் போட்டு உருட்டிவிட்டால், இங்கிலாந்து பேட்டர்களுக்குத்தான் முழுமையாக ஆடுகளம் ஒத்துழைத்து எளிதாக சேஸ் செய்துவிடுவார்கள். அதிலும், 2022ம் ஆண்டுக்குப்பின் பாஸ்பால் அதிரடி ஆட்ட முறையை கையாண்டு வரும் இங்கிலாந்து பேட்டர்கள் எளிதாக இந்த இலக்கை எட்டக்கூடும். லீட்ஸ் ஆடுகளத்தில் 300 ரன்களுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இங்கிலாந்து 4 முறை சேஸ் செய்துள்ளது. கடைசியாக 2019 ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் 359 ரன்கள் இலக்கை இங்கிலாந்து வெற்றிகரமாக சேஸ் செய்தது. ஆதலால், இங்கிலாந்து நிச்சமயாக 350 ரன்களை சேஸ் செய்யும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES 2022ம் ஆண்டுக்குப்பின் பாஸ்பால் ஆட்டத்தைக் கையில் எடுத்தபின் 23 டெஸ்ட் போட்டிகளில் 15 டெஸ்ட்களில் இங்கிலாந்து வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியைப் பொருத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜாவை நம்பியே இருக்கிறது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா இருவரும் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்களை பெரிதாக அச்சுறுத்தவில்லை. பும்ரா ஏதேனும் தனது பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்தினால், சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைத்து ஜடேஜாவின் பந்துவீச்சும் எடுபட்டால் இந்தியாவின் பக்கம் வெற்றியை எதிர்பார்க்கலாம். கைவசம் 10 விக்கெட்டுகளுடன் வலுவாக இருக்கும் இங்கிலாந்து அணியின் பக்கமே வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd0vjdljgg5o
  14. 'டிரம்ப் கெஞ்சினார்' : இரான் - இஸ்ரேல் சண்டை நிறுத்தத்திற்கு முதலில் அழைத்தது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 24 ஜூன் 2025, 01:28 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலும் இரானும் முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் இரானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தன்னிடம் வந்து, 'சமாதானம்' வேண்டி நின்றதாக அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில், இரான் அரசுத் தொலைக்காட்சியோ, சண்டை நிறுத்தத்துக்காக டிரம்ப் தங்களிடம் கெஞ்சியதாக கூறியுள்ளது. எந்தவொரு சண்டை நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த "ஒப்பந்தமும்" இல்லை என்று கூறியுள்ள இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ், இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், 'எங்களுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை' என்று தெரிவித்துள்ளார். சண்டை நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதா என்று இஸ்ரேலும் இரானும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? சண்டை நிறுத்தத்துக்கு முதலில் அழைத்தது யார்? சண்டை நிறுத்தத்துக்கு முதலில் அழைத்தது யார்? இஸ்ரேலும் இரானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தன்னிடம் வந்து, 'சமாதானம்' ஏற்பட வேண்டும் என்று கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்த கட்டத்தில், "அதற்கான நேரம் இது என்று எனக்குத் தெரியும்" என்று அவர் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்பே அறிவித்த சண்டை நிறுத்தத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள அவர், "உலகமும் மத்திய கிழக்கு நாடுகளும் உண்மையான வெற்றியாளர்கள். இரு நாடுகளும் தங்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய அன்பு, அமைதி மற்றும் செழிப்பைக் காணும்" என்று தெரிவித்துள்ளார். இரானும் இஸ்ரேலும் சண்டை நிறுத்தத்தை பகிரங்கமாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை, இருப்பினும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் தாங்களும் சண்டையை நிறுத்துவோம் என்று இரான் சமிக்ஞை செய்தது. "இரு நாடுகளும் பெறுவதற்கு நிறைய இருக்கிறது, ஆனால், நீதி மற்றும் உண்மையின் பாதையில் இருந்து விலகிச் சென்றால் இழக்க நிறைய இருக்கிறது" என்றும், இஸ்ரேல் மற்றும் இரானின் எதிர்காலம் "வரம்பற்றது மற்றும் பெரிய வாக்குறுதிகளால் நிரம்பியுள்ளது. கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக!" என்றும் டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,REUTERS 'சமாதானம் வேண்டி டிரம்ப் கெஞ்சினார்' இரான் அரசு தொலைக்காட்சி செய்தி சேனலான ஐ.ஆர்.ஐ.என்.என். (IRINN) சண்டை நிறுத்தம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான "வெற்றிகரமான" தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது சண்டை நிறுத்தம் திணிக்கப்பட்டிருப்பதாகவும், இரானின் தாக்குதலைத் தொடர்ந்து டிரம்ப் சண்டை நிறுத்தத்துக்காக "கெஞ்சினார்" என்றும் அரசு தொலைக்காட்சி ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட அறிக்கையை தொகுப்பாளர் சத்தமாக வாசித்தார். இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் இராணுவத்தை இந்த அறிக்கை பாராட்டியதுடன் இரானியர்களின் "எதிர்ப்பையும்" பாராட்டியது. 'சண்டை நிறுத்தம்' - டிரம்ப் அறிவிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் தாக்குதலில் டெஹ்ரானில் கட்டடம் தீப்பிடித்து கரும்புகை எழுந்த காட்சி. இஸ்ரேலுக்கும் இரானுக்கும் முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். "இப்போதிலிருந்து சுமார் ஆறு மணி நேரத்தில்" சண்டை நிறுத்தம் தொடங்கும் என்று அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் அறிவிப்பில் பரஸ்பர பகைமை குறித்த தகவல்கள் இருந்தாலும், "24 வது மணி நேரத்தில்" மோதல் அதிகாரப்பூர்வமாக முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. "எல்லாம் சரியாக நடக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில், இரு நாடுகளையும் நான் வாழ்த்த விரும்புகிறேன்." என்று கூறியுள்ள டிரம்ப், இந்த இஸ்ரேல்-இரான் மோதலை "12 நாள் போர்" என்று குறிப்பிட்டுள்ளார். "இது பல ஆண்டுகள் நீடித்து, முழு மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பேரழிவை ஏற்படுத்தியிருக்கக் கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை, ஒருபோதும் நடக்காது!" என்று டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார். சண்டை நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதா என்று இஸ்ரேலும் இரானும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES 'சண்டை நிறுத்தத்துக்கு கத்தார் உதவியது' கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, இரான் - இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட உதவினார் என்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்தனர். பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகளின் கூற்றுப்படி, கத்தார் உட்பட பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இரான் தாக்கிய பின்னர், இரானிய அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசிய போது சண்டை நிறுத்தம் பற்றி அமெரிக்கா தரப்பில் முன்மொழியப்பட்டது. இதில் கத்தாரும் முக்கிய பங்கு வகித்தது. சண்டை நிறுத்தம் - வெள்ளை மாளிகை அதிகாரி தகவல் இஸ்ரேலும் இரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ்ஸிடம் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால் இரு தரப்பினரும் முறையான அல்லது பொது பதிலை வெளியிடவில்லை. அவரது கூற்றுப்படி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை டிரம்ப் நேரடியாக தொடர்பு கொண்டார். இரான் இனிமேல் தாக்குதல் நடத்தாத பட்சத்தில் சண்டை நிறுத்தத்துக்கு தயார் என்று நெதன்யாகு ஒப்புக் கொண்டார் என்று சிபிஎஸ் செய்தி கூறுகிறது. அந்த செய்தியின் படி, இரான் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக மூத்த இரானிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் இரானியர்களுடன் நேரடி மற்றும் மறைமுக வழிகள் மூலம் தொடர்பு கொண்ட பிறகு சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக அந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் இரான் வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன? இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், 'எங்களுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை' என்று இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இஸ்ரேல் தனது "சட்டவிரோத ராணுவ நடவடிக்கைகளை" இப்போது நிறுத்தினால், இரான் பதிலடியைத் தொடர எந்த நோக்கமும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அந்த நேரம் ஏற்கெனவே கடந்துவிட்டது: "இரான் பலமுறை தெளிவுபடுத்தியது போல, இஸ்ரேல்தான் இரான் மீது போரை தொடங்கியது, மாறாக நாங்கள் அல்ல. தற்போது, எந்தவொரு சண்டை நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த "ஒப்பந்தமும்" இல்லை. இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சி இரானிய மக்களுக்கு எதிரான அதன் சட்டவிரோத ராணுவ நடவடிக்கைகளை டெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்." என்று சையத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். "இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க நமது சக்தி வாய்ந்த ஆயுதப் படைகளின் இராணுவ நடவடிக்கைகள் கடைசி நிமிடம் வரை, அதாவது அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தன," என்று சையத் அப்பாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ypepk0l1qo
  15. INNINGS BREAK 1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England India (96 ov) 471 & 364 England 465 Day 4 - Session 3: India lead by 370 runs. Current RR: 3.79 • Min. Ov. Rem: 17 • Last 10 ov (RR): 29/4 (2.90)
  16. Israel vs Iran: Nuclear Weapons யார் வைத்திருப்பது என முடிவு செய்வது யார்? Explained 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் இருந்து சில படிகள் தொலைவில் இருப்பதாக பலமுறை கூறியுள்ளார். இப்போது மீண்டும், இரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாகவும், இரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவும் இரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறது. ஆனால் இரான் உண்மையில் அணு ஆயுதங்களை உருவாக்குகிறது என்பதற்கு உறுதியான சான்றுகள் உள்ளனவா? மேலும், இஸ்ரேலின் அணு ஆயுதக் களஞ்சியம் பற்றி U.S. அமைதியாக இருப்பது ஏன்? Now once again, reports suggest that Iran is developing nuclear weapons, and Israel has reportedly attacked Iran’s nuclear facilities. U.S. President Donald Trump has gone as far as to demand Iran’s unconditional surrender. But is there solid evidence that Iran is indeed building nuclear arms? And why is the U.S. silent about Israel’s nuclear arsenal? #Iran #Israel #Nuclear இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  17. ஏழு பி-2 குண்டு வீச்சு விமானங்கள் - 18 மணிநேர பயணம் - நடுவானில் எரிபொருள் நிரப்புதல் - கவனத்தை திசை திருப்பிய போலி விமானங்கள் - அமெரிக்கா ஈரானின் அணுஉலைகளை தாக்கியது எப்படி? Published By: RAJEEBAN 23 JUN, 2025 | 12:53 PM bbc இருவழிப் பயணம் 18 மணி நேரப் பயணம் பல முறை நடுவானில் எரிபொருள் நிரப்புதல் தொடர்ச்சியான ஏமாற்று வேலைகள் - ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் பணி இப்படித்தான் முடிந்தது என்று அமெரிக்க இராணுவத்தின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரியும் கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவருமான நான்கு நட்சத்திர ஜெனரல் டான் கெய்ன் தெரிவித்தார். அமெரிக்கா 'ஒபரேஷன் மிட்நைட் ஹம்மர்' என்று அழைப்பதன் முழு தாக்கமும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் தாக்குதல்களுக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை பென்டகன் மாநாட்டில் சிக்கலான பணி எவ்வாறு வெளிப்பட்டது என்பதற்கான காலவரிசை வெளியானது அமெரிக்க குண்டுவீச்சுக்காரர்கள் "உலகத்திற்கு தெரியாமல் உள்ளே சென்று(ஈரான்) அங்கிருந்து வெளியேறினர் என " என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் செய்தியாளர்களிடம் கூறினார். நள்ளிரவுக்குப் பிறகு செயலாளர் ஹெக்ஸெ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பென்டகன் அதிகாரிகளுடன் வெள்ளை மாளிகையில் உள்ள சூழ்நிலை அவதானிப்பு அறையில் மிசோரியின் கிராமப்புறத்தில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்திலிருந்து ஒரு விமானக் குழு புறப்படுவதைப் பார்த்தபோது இது அனைத்தும் தொடங்கியது. இருளின் மறைவின் கீழ் பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் வைட்மேன் விமானப்படை தளத்திலிருந்து காலை 00:01 மணிக்கு (05:01 BST காலை 05:01 மணிக்கு) புறப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. அவர்களின் இறுதி இலக்கு: ஈரானின் மிகவும் பாதுகாப்பான அணுசக்தி தளங்கள். ஒலியின் வேகத்திற்கு சற்றுக் குறைவாக பயணிக்கும் சப்சோனிக் ஜெட் விமானங்கள் 18 மீ (60 அடி) ஆழத்திற்கு மேல்கொங்கிறீட்டை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்ட சக்திவாய்ந்த "பதுங்கு குழியை அழிக்கும்" குண்டுகளுடன் அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்தன. இது ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி செறிவூட்டல் நிலையத்தைத் தாக்கத் தேவையான ஆயுதமாகும். இது ஒரு மலையின் அடியில் நிலத்தடியில் புதைந்து கிடக்கிறது மற்றும் நாட்டின் அணுசக்தி திட்டத்தின் மையமாகக் கருதப்படுகிறது. உலகில் இந்த வகை ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே. ஆனால் உலகம் இன்னும் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவின் குவாம் தீவுப் பகுதிக்கு குண்டுவீச்சு விமானங்கள் அனுப்பப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து அனைவரின் பார்வையும் மேற்கு நோக்கி பசிபிக் பெருங்கடலை நோக்கி இருந்தது. "ஈரான் மீதான இஸ்ரேலின் போரில் அமெரிக்கா இணைவது குறித்த விவாதங்களுடன் இந்த நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படவில்லை என்றாலும் இந்த தொடர்பை சிலர் சந்தேகிப்பார்கள்" என்று பிபிசி அப்போது எழுதியது. பசிபிக் பெருங்கடலுக்கு மேலே மேற்கு நோக்கி பறந்த விமானங்கள் "மிகக் குறைந்த எண்ணிக்கையிலான திட்டமிடுபவர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ஏமாற்று முயற்சி" என்று ஜெனரல் கெய்ன் கூறினார். "ஒவ்வொன்றும் இரண்டு குழு உறுப்பினர்களைக் கொண்ட ஏழு பி-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்களைக் கொண்ட முக்கிய தாக்குதல் விமானங்கள் குறைந்தபட்ச தகவல்தொடர்புகளுடன் கிழக்கு நோக்கி அமைதியாகச் சென்றது" என்று அவர்கூறினார். அந்த இராணுவ விமானங்கள் விமான கண்காணிப்பு வலைத்தளங்களில் தோன்றவில்லை, இதனால் பென்டகனின் நிகழ்வுகள் குறித்த விளக்கத்தை பிபிசி சுயாதீனமாக சரிபார்க்க கடினமாக உள்ளது. மேலும் ஒரே இரவில் தளங்களில் ஏற்பட்ட சேதத்தின் அளவைக் காட்ட செயற்கைக்கோள் படங்கள் உதவக்கூடும் என்றாலும் அவை எப்போது தாக்கப்பட்டன என்பதை அவர்களால் சரியான நேரங்களை நமக்குச் சொல்ல முடியாது. இந்த விமானங்கள் மத்திய கிழக்கை அடைந்தபோது 17:00 EDT (22:00 BST) அளவில் எதிரிபடையினர் மற்றும் தரையிலிருந்து வான் ஏவுகணைகளில் இருந்து குண்டுவீச்சு விமானங்களைப் பாதுகாக்க உதவிய துணை விமானங்களும் அதனுடன் இணைந்தன. ஜெனரல் கெய்ன் இதை "சிக்கலான இறுக்கமான நேர சூழ்ச்சி" என்று கூறினார். ஆனால் ஈரானிய போர் விமானங்கள் புறப்படவில்லை, ஈரானின் வான்பாதுகாப்பு ஆயுதங்கள் ஒரு தாக்குதலை கூட மேற்கொள்ளவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். "ஈரானிய வான்வெளியில் இஸ்ரேலிய ஆதிக்கம் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் தண்டனையின்றி செயல்படுவதற்கான உந்துதலைத் தூண்டியது" என்று வாஷிங்டன் டிசியில் உள்ள மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் ஏவுகணை பாதுகாப்பு நிபுணர் பேட்ரிக்ஜா பாசில்சிக் பிபிசி வெரிஃபைக்கு தெரிவித்தார். அடுத்த ஒரு மணி நேரமும் நாற்பது நிமிடங்களும் ஜெனரல் கெய்ன் பொதுமக்களிற்கு இதுவரை தெரியாத விபரங்களை வெளியிட்டார். சில நிகழ்வுகளுக்கான விளக்கக் குறிப்பு சில நிகழ்வுகளுக்கான நேரங்களை வழங்கியிருந்தாலும் குண்டுவீச்சு விமானங்களின் பயணத்தைக் காட்டும் வரைபடம் ஒரு குறிப்பிட்ட விமானப் பாதை அல்ல மேலும் வழங்கப்பட்ட இரண்டு பதிப்புகளில் சற்று வேறுபட்டது. ஈரானின் அணுசக்தி ஆட்சியை அமெரிக்கா "அழித்துவிட்டதாக" கூறி அடுத்தடுத்த நிகழ்வுகளை முழுமையான வெற்றியாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் சேதத்தின் உண்மையான அளவு மற்றும் அதன் பின்விளைவுகள் இன்னும் அளவிடப்படவில்லை. தாக்குதல்களை ஈரான் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் சேதத்தின் அளவைக் குறைத்துள்ளது மற்றும் நிகழ்வுகளின் வரிசை குறித்த குறிப்பிட்ட கணக்கை வழங்கவில்லை. சுமார் 17:00 EDT (22:00 BST) மணிக்கு அரேபிய கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சுமார் இரண்டு மில்லியன் மக்கள் வசிக்கும் இஸ்பஹானுக்கு அருகிலுள்ள அணுசக்தி தளத்தை நோக்கி 25க்கும் மேற்பட்ட டொம்ஹவுக் தரைவழி தாக்குதல் கப்பல் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். அங்குள்ள அணுசக்தி நிலையம் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் உள்நாட்டில் இருந்தாலும் விமானங்கள் இரகசியமாக தங்கள் "பதுங்கு குழி" குண்டுகளை மற்ற இரண்டு அணுசக்தி தளங்கள் மீது வீசிய அதே நேரத்தில் கப்பல் ஏவுகணைகள் தாக்கும் அளவுக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் நெருக்கமாக இருந்தன என்று புதிய அமெரிக்க பாதுகாப்பு மையத்தின் பாதுகாப்பு நிபுணர் டாக்டர் ஸ்டேசி பெட்டிஜான் கூறினார். இதன் பொருள் அமெரிக்கா "பல தளங்கள் மீது ஒருங்கிணைந்த திடீர் தாக்குதலை" மேற்கொண்டது என்பதே என என்று அவர் பிபிசி வெரிஃபைக்கு தெரிவித்தார். அதேவேளை குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்தன, அங்கு ஈரானை குழப்பும் பல தந்திரோபாயங்களை அமெரிக்கா முன்னெடுத்தது என பென்டகன் தெரிவித்துள்ளது. பின்னர் வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பமாகின. ஈரானில் அதிகாலை 02:00 மணிக்குப் பிறகு சுமார் 18:40 விமானங்களின் தலைமை விமானம் போர்டோவில் உள்ள அணுஉலையின் இரண்டு குண்டுகளை வீசியது.- வீசியது.( GBU-57 Massive Ordnance Penetrator weapons -) ஒரு உண்மையான போர் நடவடிக்கையில் "பதுங்கு குழித் தாக்குதல்" குண்டுகள் வீசப்பட்டது அதுவே முதல் முறை. இந்த வகை குண்டு கொன்கிறீட்டிற்குள் 18 மீற்றர் செல்லக்கூடியது( 60 அடி) அல்லது பூமிக்குள் 61மீற்றர் செல்லக்கூடியது. இந்த குண்டு வெற்றிகரமானது என உறுதியாக தெரிவிக்க முடியாவிட்டாலும் பூமிக்குள் 80 மீற்றர் உள்ளே இருக்கின்றது என கருதப்படும் போர்டோவின் சுரங்கப்பாதைகளை தாக்ககூடியது இந்த வகை குண்டுகள் மாத்திரமே. மீதமுள்ள குண்டுவீச்சு விமானங்கள் பின்னர் தங்கள் இலக்குகளைத் தாக்கின - மொத்தம் 14 MOP ஃபோர்டோ மீதும் இரண்டாவது அணுசக்தி நிலையம் நடான்ஸில் வீசப்பட்டதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது. மேலும் ஃபோர்டோவிலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள இஸ்ஃபஹான் அணுசக்தி தளத்தில் டோமாஹாக் ஏவுகணைகள் தங்கள் இலக்குகளைத் தாக்கின. விமானங்கள் 18 மணிநேரம் காற்றில் செலவிட்ட பிறகு அனைத்து இலக்குகளும் சுமார் 25 நிமிடங்களில் தாக்கப்பட்டு 19:30 (00:30 BST)மணிக்கு ஈரானிலிருந்து அமெரிக்காவிற்குத் திரும்பும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் சுமார் 75 துல்லிய வழிகாட்டப்பட்ட ஆயுதங்களும் 125 க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்களும் பயன்படுத்தப்பட்டன மேலும் செயலாளர் ஹெக்செத் இந்த பணி ஈரானின் அணுசக்தி திறன்களை "சக்திவாய்ந்த மற்றும் தெளிவான" அழிப்பதை வழங்கியதாகக் கூறினார். ஆனால் தாக்குதல்களின் முழு நோக்கத்திற்கான சான்றுகளை மதிப்பிடுவதற்கு நேரம் எடுக்கும் - பதுங்கு குழி வெடிக்கும் குண்டுகள் முக்கிய அணுசக்தி தளங்களில் எவ்வளவு ஆழமாக நிலத்தடியில் ஊடுருவ முடிந்தது என்பதைக் காண கூடுதல் காட்சிகள் தேவை. "இது உலகில் வேறு எந்த நாடும் நிகழ்த்தியிருக்க முடியாத நம்பமுடியாத சிக்கலான மற்றும் மிகவும் அதிநவீன தாக்குதலாகும்" என்று டாக்டர் பெட்டிஜான் கூறினார். "இந்த நடவடிக்கை தந்திரோபாய ரீதியாக வெற்றி பெற்ற போதிலும் ஈரானின் அணுசக்தி திட்டத்தை நிரந்தரமாக பின்னுக்குத் தள்ளும் இலக்கை இது அடையுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. https://www.virakesari.lk/article/218206
  18. DRINKS 1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England India (90.2 ov) 471 & 349/8 England 465 Day 4 - Session 3: India lead by 355 runs. Current RR: 3.86 • Min. Ov. Rem: 22.4 • Last 10 ov (RR): 35/4 (3.50)
  19. பாடசாலைகள் நீச்சல் போட்டியில் முடிசூடா மன்னன் புனித சூசையப்பர் கல்லூரி; 20ஆவது தடவையாக சம்பியனானது 23 JUN, 2025 | 03:05 PM (நெவில் அன்தனி) கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் நடைபெற்று வந்த 50ஆவது அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான வயதுநிலை நீர்நிலை விளையாட்டு சம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி 20ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை சூடி நீச்சலில் முடிசூடா மன்னன் என்பதை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. சிறுவர்களுக்கான கனிஷ்ட பிரிவிலும் ஆண்களுக்கான சிரேஷ்ட பிரிவிலும் புனித சூசையப்பர் கல்லூரி சம்பியன் ஆனது. கனிஷ்ட பிரிவில் 272 புள்ளிகளைப் பெற்ற புனித சூசையப்பர் கல்லூரி சிரேஷ்ட பிரிவில் 290 புள்ளிகளைப் பெற்றது. இதற்கு அமைய மொத்தமாக 562 புள்ளிகளைப் பெற்ற புனித சூசையப்பர் கல்லூரி 294 புள்ளிகள் வித்தியாசத்தில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. ஒட்டுமொத்த நிலையில் ஆனந்த கல்லூரி 268 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 238.50 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன. அகில இலங்கை பாடசாலைகள் நீர்நிலை விளையாட்டுத்துறை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 50ஆவது வருடாந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான வயது நிலை நீர்நிலை விளையாட்டு சம்பியன்ஷிப்புக்கு நெஸ்லே மைலோ பூரண அனுசரணை வழங்கியது. பிரதமர் ஹரினி அமரசூரிய பிரதம அதிதியாகவும் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பேர்னி ஸ்டெஃபான் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு பிரதான பரிசுகளை வழங்கினர். வயதுநிலை சம்பியன் பாடசலைகள் 10 வயதின் கீழ்: புனித சூசையப்பர் (76 புள்ளிகள்) 12 வயதின் கீழ்: புனித சூசையப்பர் (76 புள்ளிகள்) 14 வயதின் கீழ்: புனித சூசையப்பர் (120 புள்ளிகள்) 16 வயதின் கீழ்: புனித சூசையப்பர் (95 புள்ளிகள்) 18 வயதின் கீழ்: புனித பேதுருவானவர் (87 புள்ளிகள்) 20 வயதின் கீழ்: ஆனந்த (143 புள்ளிகள்) தனிநபர் சம்பியன்கள் 14 வயதின் கீழ்: ஹஷேல் செனரத் (கொழும்பு கெட்வே) 30 புள்ளிகள் 16 வயதின் கீழ்: ஜேடன் டி சில்வா (ஸ்டஃபர்ட் இன்டர்நெஷனல்) 2 புதிய சாதனைகளுடன் 40 புள்ளிகள் 18 வயதின் கீழ்: எம்.எவ். முஹம்மத் (ஸாஹிரா) 3 புதிய சாதனைகளுடன் 45 புள்ளிகள் 20 வயதின் கீழ்: நிக் டி சில்வா (வத்தளை லைசியம்) 2 புதிய சாதனைகளுடன் 40 புள்ளிகள் https://www.virakesari.lk/article/218220
  20. ரஸ்யாவின் ஆதரவை கோரி ஈரானின் ஆன்மீக தலைவர் கடிதம் - புட்டினிடம் வழங்குவார் வெளிவிவகார அமைச்சர் 23 JUN, 2025 | 04:33 PM ரஸ்யாவின் ஆதரவை கோரி ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா கமேனி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். 1979ம் ஆண்டு புரட்சிக்கு பின்னர் அமெரிக்கா ஈரானிற்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையிலேயே கமேனி இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி புட்டினின் ஆதரவை கோரும் இந்த கடிதத்தை புட்டினிடம் வழங்கவுள்ளார் என விடயமறிந்த நபர்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர். ரஸ்யா இதுவரை வழங்கிய ஆதரவு குறித்து ஈரான் திருப்தியடையவில்லை என ஈரான் வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன. இஸ்ரேல் அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் ரஸ்யா மேலும் ஆதரவை வழங்கவேண்டும் என ஈரான் எதிர்பார்க்கின்றது. எனினும் ஈரான் எவ்வாறான உதவியை எதிர்பார்க்கின்றது என ஈரானிய வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை. புட்டின் ஈரானிய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ளதை உறுதி செய்துள்ள ரஸ்ய அதிகாரிகள் இருவரும் எதுகுறித்து பேசுவார்கள் என்பதை தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/218229
  21. இருண்டு கிடக்கும் செம்மணி மீது வெளிச்சம் படச்செய்வோம் - அணையா விளக்கினை பலப்படுத்துவோம் - மக்கள் செயல் அமைப்பும் சிவில் சமூகத்தினரும் வேண்டுகோள் Published By: RAJEEBAN 23 JUN, 2025 | 02:54 PM இருண்டு கிடக்கும் செம்மணி மீது வெளிச்சம்படச்செய்வதற்காக முன்னெடுக்கப்படும் அணையாவிளக்கு போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களினதும் ஆதரவையும் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். நாங்கள் இனப்படுகொலையை எதிர்கொண்ட இனம், எதிர்கால சந்ததிக்கு இதனை கடத்துவதன் ஊடாக நினைவுகளை கடத்த முயல்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அணையா விளக்கினை பலப்படுத்துவோம் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மெய்நிகர் கலந்துரையாடலின்போதே அவர்கள் இதனை தெரிவித்தனர். தமிழ் இனம் தன்னுடைய விடுதலையை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டவேளை தமிழ் மக்களிற்கு கிடைத்த பரிசுதான் காணாமலாக்கப்படுதலும், மனித புதைகுழிகளும் என தமிழ் சிவில் சமூக அமையத்தின் பொன்சிங்கம் தெரிவித்தார் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அண்மையில் செம்மணியில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன இது எங்களுக்கு புதிய விடயமல்ல, எத்தனை படுகொலைகளை எங்கள் மக்கள் சந்தித்துள்ளனர். சமீபத்தைய அறிக்கையொன்றின் படி ஜேவிபி கிளர்ச்சி காலத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அடங்கிய மனித புதைகுழிகள் உட்பட இலங்கையில் 59 மனித புதைகுழிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்குகிழக்கில் 13 பாரிய மனித புதைகுழிகள் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு இனம் தன்னுடைய விடுதலையை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டவேளை தமிழ் மக்களிற்கு கிடைத்த பரிசுதான் காணாமலாக்கப்படுதலும், மனித புதைகுழிகளும். காணாமலாக்கப்பட்டோர் விடயத்தை மனித புதைகுழிகளில் இருந்து பிரிக்க முடியாது. அதன் ஒரு வெளிப்பாடே மனிதப்புதைகுழிகள். செம்மணி மனித புதைகுழிகளை பொறுத்தவரை மிகவும் ஆச்சரியமளிக்கின்ற விடயம் என்னவென்றால் உடைகள் அகற்றப்பட்ட பின்னர் பிண்டங்களாக கொண்டுவந்து புதைக்கப்பட்டுள்ளனர். எந்த அடையாளத்தையும் காணமுடியவில்லை – எந்த அடையாளத்தையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. திட்டமிட்ட இனப்படுகொலைக்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. 600 பேரை புதைத்தோம் என கிருஷாந்தி படுகொலையாளி தெரிவித்திருந்தார். 12000 பேரை ஒரு சமூகம் தேடி அலைகின்றது. 7 வருடங்களிற்கு மேலாக தேடிக்கொண்டிருக்கின்ற சமூகம் இந்த புதைகுழிகள் குறித்து கேள்விப்பட்டதும், அனைவரும் அங்கு சென்று தேடியிருக்கவேண்டும் - அதற்கான தேவை உள்ளது. ஆனால் நாங்கள் எங்கள் இனம் அதனை செய்யவில்லை. மரணங்களை மதித்து விடைகாண்பதற்கு இந்த விடயம் மிக முக்கியமானது. இதே காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் செப்டம்பரில் காலாவதியாவதன் காரணமாக அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்குஅதனை பற்றி அவர் அறிக்கையிடவுள்ளார். அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதை அறிந்த கொழும்பை தளமாக கொண்ட சிவில் சமூகத்தினர் அவரது வருகையை பிற்போடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். வடக்குகிழக்கை சேர்ந்த சிவில் சமூகத்தினரும் தனிநபர்களும் இதேகோரிக்கையை விடுத்தனர். இலங்கை சில விடயங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அவர் இங்கு வரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்னெடுத்துள்ள இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் அதிகாரிகள் இலங்கை வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்தால் தான் ஆணையாளர் இலங்கை வரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். மனித உரிமை ஆணையாளருடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டோம், வருவதை எதிர்க்கவில்லை அவர் வந்தால் செம்மணிக்கு செல்லவேண்டும், இலங்கை அதிகாரிகளிடம் இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். சுஜீவன் ( மக்கள் செயல்) கிருஷாந்தி குமாரசுவாமி குற்றவாளி செம்மணியில் 400 உடல்களை புதைத்தாக தெரிவித்தார். பல வருடங்களாக இது தொடர்பில் நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாத நிலையில் தற்போது 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதே இந்த போராட்டத்தின் நோக்கம். எமது இளைஞர்கள் மத்தியிலும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. நாங்கள் இனப்படுகொலையை எதிர்கொண்ட இனம், எதிர்கால சந்ததிக்கு இதனை கடத்துவதன் ஊடாக நினைவுகளை கடத்த முயல்கின்றோம் நினைவுகளை பாதுகாப்பது இனப்படுகொலையை எதிர்கொண்ட இனத்தினை பொறுத்தவரை மிகவும் அவசியமான விடயம். பல படுகொலைகளை தமிழ் சமூகம் எதிர்கொண்டுள்ளது. செம்மணி இதற்கான ஒரு உதாரணம். இந்த போராட்டத்தின் ஊடாக அனைத்து பிரஜைகளையும், இளையோரையும் தனிநபர்களையும் உள்ளீர்க்க முயல்கின்றோம். இதுவரை காலமும் குறிப்பிட்ட சிலரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபாட்டை வெளிப்படுத்தி வந்துள்ளனர், பலரை உள்ளீர்த்தல் என்பது இந்த நடவடிக்கையின் நோக்கம். மக்களை நோக்கி எங்கள் கருத்துக்களை கொண்டு செல்ல முயல்கின்றோம். மக்கள் திரட்சியை ஏற்படுத்த முயல்கின்றோம். சமூக ஊடகங்கள் ஊடாகவும் எங்கள் போராட்டத்தினை முன்னெடுக்கின்றோம், இணையவழி மூலம் கையெழுத்து பெறும் நடவடிக்கையினை முன்னெடுக்கின்றோம். அணையா விளக்கு போராட்டத்தின் போது கவிதைகள், கட்டுரைகள், சித்திரங்கள், ஆவணப்படங்கள் என பல வழிமுறைகள் ஊடாக நினைவுகளை நடந்தவற்றை பகிர்ந்துகொள்ள திட்டமிட்டுள்ளோம். உங்கள் பிள்ளைகளை அழைத்து வாருங்கள். நாடக ஆற்றுகைக்கும் திட்டமிட்டுள்ளோம். அரசியல் சிவில்சமூக பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் நாங்கள் இதனை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். மூன்று நாட்களும் உங்கள் ஒத்துழைப்பு அவசியம். ஒன்றிணைதல் கட்டாய தேவை. மறுக்கப்பட்ட நீதியை முன்னெடுக்கும் களமாக இதனை பயன்படுத்துவோம், 3 நாட்களும் தொடர்ச்சியாக மக்கள் போராட்டமாக இது இடம்பெறும். ஜெரா( சிவில் சமூக செயற்பாட்டாளர்) நாங்கள் பொதுவெளியில் எல்லா தரப்பினதும் ஆதரவை கோரினோம். அந்த வழியில் சகல தரப்பினரும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஊடகங்கள் ஊடாக அறிந்தோம் அதற்கும் எங்களிற்கும் நேரடி தொடர்பில்லை. ஆனால் அதனை வரவேற்கின்றோம், இங்கு நாங்கள் செய்கின்ற மாதிரி அங்கும் செய்வதை நாங்கள் ஆத்மார்த்தமாக வரவேற்கின்றோம், மூன்று நாட்கள் நாங்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம், கடந்தகாலத்தில் எங்கள் பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவேளை எல்லோரும் ஒரு குடையின் கீழ் செயற்பட்டோம், அதன் அடிப்படையிலேயே இந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் முயற்சி உருவானது. அணையா விளக்கு மூலம் மனித புதைகுழி குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதும் எங்களின் நோக்கம். அணையாள விளக்கு இருண்டு கிடக்கும் செம்மணிக்கு வெளிச்சம் போடுவதற்கான ஒரு முயற்சியாகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சிந்து பாத்திக்கு வந்தால் அவரை சந்தித்து ஒரு பட்டயத்தை வழங்க திட்டமிட்டுள்ளோம். மருத்துவர் உதயசீலன் வாகனங்களில் விலங்குகள் அடிபட்டால் துடித்துப்போகின்ற சமூகத்தவர்கள் நாங்கள் ஆனால் இவர்கள் எங்கள் உறவுகள் ஆனால் யார் என்று தெரியவில்லை. எதற்காக எந்தவித அடையாளங்களும் இல்லாமல் மறைத்து வைத்தார்கள் என்பது தெரியவில்லை. இந்த விடயத்தை மக்கள் மயப்படுத்தவேண்டிய தேவையுள்ளது, எல்லோரும் வரவேண்டும், நீதி கேட்கும் மக்கள் என்ற அடிப்படையில் அனைவரும் இணைந்து கொள்ளவேண்டும். ஒரு நாள் கதவடைப்பு குறித்து சிலர் கருத்து தெரிவித்தார்கள், ஆனால் தற்போதுள்ள களநிலைமையில் அது சாத்தியமில்லை, அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாக அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டத்தை சட்டத்திற்கு உட்பட்ட விதத்தில் முன்னெடுக்க தீர்மானித்தோம். பலதரப்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் இணைந்துகொள்வார்கள், அவர்களிற்கு ஆபத்துள்ளது. ஆனால் அதனையும் மீறி இந்த செய்தியை உரத்துசொல்லவேண்டும். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் ஆதரவை எவ்வழியிலாவது வெளியிடுங்கள். கருப்பு பட்டியை அணியுங்கள், விளக்கை ஏற்றுங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக மாற்றுவோம். வடக்குகிழக்கில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படுகொலைகள் இடம்பெற்றன, பலரை கொலை செய்து புதைத்துள்ளனர். உள்ளுராட்சி தேர்தலில் அனேக கட்சிகள் தமிழ்தேசியத்தை சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தன அவர்கள் அந்த பகுதியில் காணாமல்போனவர்கள் குறித்த தகவல்களை திரட்டவேண்டும், நினைவுச்சின்னங்களை எழுப்பவேண்டும். வரலாற்றினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம். https://www.virakesari.lk/article/218217
  22. நூறாண்டுகளில் தோன்றாத தலைசிறந்த பந்து வீச்சாளர் - பும்ராவின் மாய வேகம் பேட்டர்களை தடுமாறச் செய்வது எப்படி? பட மூலாதாரம்,ALEX DAVIDSON/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீவென் ஃபின் பதவி, பிபிசி கிரிக்கெட் கட்டுரையாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா எல்லா காலத்திலும் அதிசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்ற கூற்றை நிராகரிப்பது என்பது உண்மையிலேயே கடினமாகி வருகிறது. ஒவ்வொரு முறை ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசும்போதும் அது, அந்தப் போட்டியில் தாக்கம் ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹெடிங்லியில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்டில் நாம் பார்க்கும் அவரது செயல்பாடுகளை விட அவரின் திறமை மிகவும் மேம்பட்டது. இங்கிலாந்துடனான போட்டியில், முதல் இன்னிங்ஸில் பும்ரா 83 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதோடு அவரது பந்துவீச்சில் மூன்று கேட்சுகளை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். மேலும், பும்ராவின் பந்துவீச்சில் ஹாரி புரூக் அடித்த பந்து கேட்ச் பிடிக்கப்பட்டாலும், அது நோ-பால் ஆகிவிட்டது. பும்ரா கையில் பந்து கிடைக்கும் போதெல்லாம் அது பாக்ஸ் ஆஃபிஸிலிருந்து திரைப்படம் பார்ப்பது போல தோன்றுகிறது. ஒவ்வொரு பந்திலும் ஏதோ நடப்பது போல் உணர்ந்தேன். மறு அணியில் இருக்கும் பந்து வீச்சாளர்களை அவர்கள் வேறேதோ விளையாட்டை விளையாடுவது போல நினைக்க வைத்துவிடுகிறார் பும்ரா. உலகின் சிறந்த வீரர்கள் கூட பும்ராவின் பந்துவீச்சில் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். சுழலும் அவரது கைகள், மணிக்கட்டின் ஓர் அசைவு, பும்ராவின் கையில் இருந்து பந்து வெளியேறுவதை பேட்ஸ்மேன் அறியும் முன்பே அது அவரை தாக்கிவிடுகிறது. ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டம் எனக்கு ஏற்பட்டிருந்தால், அவர் அதிகபட்சம் இரண்டு பந்துகளில் என்னை அவுட் ஆக்கிவிடுவார். அவரால் ஒரே ஓவரில் பெளன்சர், யார்க்கர், ஸ்விங், மெதுவாக என பந்து வீச முடியும். பும்ரா பந்து வீசும்போது பந்தைப் பார்ப்பது என்பதே கடினமானது என்பதால், அவர் நேரடியாக இரண்டாவது விருப்பத்திற்குச் செல்வார் என நம்புகிறேன். என்னைப் போன்ற ஒரு கீழ்வரிசை பேட்ஸ்மேனுக்கு அவர் அபாயகரமானவர் என்றே சொல்வேன். பட மூலாதாரம்,GEORGE WOOD/GETTY IMAGES வித்தியாசமான செயல்களைக் செய்யும் பந்து வீச்சாளர்களை பேட்ஸ்மேன்கள் "புரிந்துக்கொள்வது கடினம்" என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கலாம். கடைசி விநாடி வரை பந்தை பேட்ஸ்மேனின் பார்வையில் இருந்து மறைக்கும் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகவும் கொடூரமானது. பும்ராவைப் பொறுத்தவரை, பந்து அவரது தனித்துவமான லோட்-அப் பாயிண்டில் தொடங்குகிறது. ஒரு கடிகாரத்தையும், பும்ராவின் பந்துவீச்சையும் இணைத்து கற்பனை செய்து பாருங்கள். அவரது முழுமையாக நேராக்கப்பட்ட கை, இரண்டாவது எண்ணை சுட்டிக்காட்டுகிறது. பின்னர் அவரது கை, விரைவாக வளைந்து இறங்குகிறது, ஆனால் பந்து வீச வரும்போது, அவரது முழங்கை அதிகமாக நீட்டப்படுகிறது. இங்கிருந்துதான் அவர் தனது வேகத்தை ஓரளவு பெறுகிறார், பந்து அவரது முழங்கைக்குப் பின்னால் மறைந்துவிடும் அந்த சமயத்தில் பந்தை பேட்டரால் பார்க்க முடியாது. பின்னர் பும்ரா தனது மணிக்கட்டை அசைத்து, எந்தவிதமாகவும் பந்து வீசத் தயாராக இருக்கிறார். இது ஒரு கவண் போன்றது. கடைசி மில்லி விநாடியில், பந்தானது பேட்ஸ்மேனின் பார்வைக்கு வரும்போது, மணிக்கு 90 மைல் வேகத்தில் பறந்துவருகிறது. பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவும், பும்ராவுக்கு ஒரு சாதகமாகவும் இருப்பது பந்து வீசும் அவரது ரிலீஸ் பாயிண்ட் தான். வேறு எந்த வேகப்பந்து வீச்சாளரை விடவும் பும்ரா, பேட்ஸ்மேனுக்கு அருகில் இருந்து பந்தை வீசுகிறார். பட மூலாதாரம்,CLIVE MASON/GETTY IMAGES ஒரு வேகப்பந்து வீச்சாளரை அருகிலிருந்து பார்ப்பதை கற்பனை செய்து பாருங்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் கை, முன் பாதத்திற்கு நேராக மேலே இருக்கும்போது பந்தை விடுவிப்பதை பார்த்திருக்கலாம். பும்ரா எப்படியோ தனது கையை, முன் பாதத்திலிருந்து சுமார் 40 செ.மீ முன்னால் கொண்டு வந்துவிடுகிறார். இதனால் அவருக்கும் பேட்டருக்கும் இடையிலான தூரம் குறைகிறது, இதனால் எதிர்வினையாற்றுவதற்கு பேட்டருக்கு கிடைக்கும் நேரம் குறைகிறது. வேகமாக பந்து வீசும் ஒருவருக்கு பும்ரா பந்து வீசும் விதம் பொருந்தாது. பும்ரா எடுத்து வைக்கும் காலடிகள் சரளமானதாக இருக்காது, குறுகிய மற்றும் தடுமாறும் அடிகளாக இருக்கும். இதைப் பார்த்தால் அவரது பந்துவீசும் வேகம் புயலைப் போல் துரிதமானதாக இருக்கும் என்பதற்கான எந்தவித அறிகுறியும் இருக்காது. ஒரு பேட்ஸ்மேன், பும்ராவின் பந்துவீச்சை எத்தனை மணி நேரம் பார்த்து, அவதானித்து, புரிந்துக் கொண்டிருந்தாலும், களத்தில் ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ளும்போது ஆச்சரியப்படுவார். பும்ராவின் பந்து எந்தவிதமானதாக இருக்கும் என்பதை யாரும் கணித்துவிடமுடியாது. கையின் பாதை மாறாது, விரலின் நிலை மாறாது. எந்தவிதமான பந்து என்பதை கணிக்கமுடியாமல், தான் எவ்வித பந்தை எதிர்கொள்ளப்போகிறோம் என்று தெரியாமலேயே பேட்ஸ்மேன் 'பேட்' ஆட தயாராக இருக்க வேண்டும். ஒரு பந்து வீச்சாளரை விவரிக்க "beyond the perpendicular" என்ற சொற்றொடர் பயன்படுத்துவதை கேட்டிருக்கலாம். பந்துவீச்சையும் ஒரு கடிகாரத்தையும் வைத்து ஒரு கற்பனை செய்து பார்ப்போம். "ஓவர்-தி-டாப் ஆக்‌ஷன்" ரக பந்துவீச்சாளர்கள், தங்களின் தலைக்கு மேல், சரியாக, கடிகாரத்தில் எண் 12 இருக்கும் இடத்திற்கு நேராக கைகளை வைத்து பந்து வீசினால் எப்படி இருக்குமோ அப்படி வீசுவார்கள். 'ரவுண்ட்-ஆர்ம்' பந்து வீச்சாளர்கள் கடிகாரத்தில் எண் 1 அல்லது 2 இருக்கும் இடத்தில் இருந்து பந்து வீசுவது போல் இருக்கும். "beyond the perpendicular" என்ற நிலையில் பந்து வீசினால், அது கடிகாரத்தின் 11 ஆம் எண் இருப்பது போன்ற இடத்திலிருந்து வருகிறது. அதாவது கோணம் வலது கை பந்து வீச்சாளருக்கு வருவது போலவே இருக்கும். இதனால் பேட்ஸ்மேன் தேவையில்லாத பந்துகளில் விளையாட வேண்டியிருக்கும். இதற்கு ஒரு உதாரணம், ஜோ ரூட்டுக்கு எதிராக பும்ரா பெற்ற வெற்றியாகும், டெஸ்ட் கிரிக்கெட்டில், ஜோ ரூட்டை 10 முறை பும்ரா அவுட்டாக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் மட்டுமே ஜோ ரூட்டை அதிகமாக அவுட்டாக்கியுள்ளார். இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸைப் போலவே, ஜோ ரூட்டுக்கு ஆஃப் ஸ்டம்பிற்கு அப்பால் உள்ள பந்துகளாக பும்ரா போடுகிறார், பந்தை விளையாடத் தேர்வுசெய்தவுடன் கடைசி விநாடியில் அதை மாற்றி விடுகிறார், 2021 இல் அவர்களின் சண்டைகளைப் போலவே பந்துவீச்சும் தொடர்கிறது. பும்ராவின் பந்துவீச்சில், தொழில்நுட்ப கூறுகளைத் தவிர, இவ்வளவு சீராக போட்டிகளைப் பாதிக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் கிரிக்கெட் வரலாற்றில் இருந்ததில்லை என்றே நான் நினைக்கிறேன். ஒரு கணினியைப் போலவே, எந்தவொரு சூழ்நிலையிலும் தேவையானதை தொடர்ந்து கணக்கிட்டு பும்ரா செய்கிறார், அத்துடன் அவர் செய்ய விரும்புவதை ஏறக்குறைய சரியாகவும் செயல்படுத்திவிடுகிறார். ஜஸ்பிரித் பும்ராவின் பல்துறைத்திறனுக்கு உதாரணமாக, சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்தது 500 பந்துகளை வீசிய முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில், பும்ராவின் 6.27 என்ற எகானமி ரன்ரேட் சிறந்தது. அதே நேரத்தில், டெஸ்ட் வரலாற்றில் பும்ரா குறைந்தபட்சம் 200 விக்கெட்டுகளுடன் சிறந்த பந்துவீச்சு சராசரியையும் கொண்டுள்ளார். பும்ரா 19.33 உடன், 20.94 உடன் இரண்டாவது இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் மால்கம் மார்ஷலை விட மைல்கள் முன்னால் உள்ளார். வேறுவிதமாக சொல்வதென்றால், பும்ராவை விட குறைந்த சராசரியில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் அனைவரும் முதலாம் உலகப் போருக்கு முன்பு விளையாடியவர்கள் தான். பட மூலாதாரம்,VISIONHAUS/GETTY IMAGES டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் மேலும் விரிவடைந்து வரும் சூழலில், பந்து வீச்சாளர்களுக்கு மாறுபட்ட திறன்கள் தேவைப்படும் நிலை உருவாகிறது. பும்ரா இரண்டிலும் சிறந்தவர் என்பது அவருக்கு கூடுதல் பலம். விளையாட்டைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய பும்ரா, இந்தியாவின் டெஸ்ட் கேப்டனுக்கான விருப்பங்களில் முதல் தேர்வாக இருந்திருப்பார். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடுவதற்கு அவர் சிரமப்பட்டிருப்பார். அணிக்கு அது நியாயமாக இல்லை என்று உணர்ந்ததால், அந்தப் பணியைத் தொடர வேண்டாம் என்று அவரே முடிவு செய்தார். சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களின் சகாப்தத்தில் இருப்பது நமது அதிர்ஷ்டம். அண்மையில் சர்வதேச அளவில் ஓய்வு பெற்ற ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ககிசோ ரபாடா, கம்மின்ஸ், ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் உட்பட பலரை சொல்லலாம். இவர்கள் அனைவரிலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ரா உள்ளார் என்ற பாராட்டுக்கு ஜஸ்பிரித் பும்ரா தகுந்தவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg9rgywy5ko
  23. ஆடம்பர சொத்துகளை வைத்திருக்கும் 28 அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்; சி.ஐ.டி Published By: DIGITAL DESK 2 23 JUN, 2025 | 12:28 PM கொழும்பில் ஆடம்பர சொத்துகளை சேகரித்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆடம்பர சொத்து தொடர்பான விசாரணைகளில் முன்னாள் அமைச்சர்கள் பலர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ஆடம்பர சொத்துகளை சேகரித்து வைத்திருக்கும் சுமார் 28 அரசியல்வாதிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஒருவரின் சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தரப்புகளிலிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள சொத்துகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/218193
  24. 23 JUN, 2025 | 02:50 PM கிளிநொச்சியில் மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் - 2025 திங்கட்கிழமை (23) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில், கரைச்சி பிரதேச சபையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. "சுற்றாடல் எம்மைக் காக்கும் நாம் சுற்றாடலைக் காப்போம்" எனும் தொனிப்பொருளில் திங்கட்கிழமை (23) திகதி தொடக்கம் வெள்ளிக்கிழமை (27) ம் திகதி வரை இந்த வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இதேவேளை, இலத்திரனியல் மற்றும் மின்கழிவு சேகரிப்பு நிகழ்வு கரைச்சி பிரதேச சபையில் இன்று இடம்பெறுகிறது. நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர் R.M.Jaltota தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி திணைக்களத்தின் உள்ளூராட்சி உதவியாளர் மணிமேகலை, கரைச்சி பிரதேச சபை செயலாளர் த.ஞானராஜ் மற்றும் துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/218216
  25. எனது கணவர் அப்பாவி ; மஹிந்தானந்த அளுத்கமகேவின் மனைவி செனானி ஜயரத்ன 23 JUN, 2025 | 03:42 PM 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மனைவி செனானி ஜயரத்ன தனது கணவர் குறித்து முகநூல் பக்கத்தில் பல கருத்துக்களை பதிவிட்டுள்ளார். மஹிந்தானந்த அளுத்கமகேவின் மனைவி செனானி ஜயரத்ன தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் பின்வருமாறு, மஹிந்தானந்த அளுத்கமகே, 2021ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராக கடமையாற்றிய போது, தரமற்ற உரங்களை இறக்குமதி செய்வதற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்தியமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். எனது கணவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து நான் மிகவும் வருத்தத்துடன் உள்ளேன். அவருக்காக செய்வதற்கு இன்னும் எதுவும் என்னிடம் மீதி இல்லை. இதனால் நான் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இனி என்னை கொன்றாலும் எனக்கு வலிக்க போவதில்லை. எனது கணவர் அப்பாவி என எனக்கு தெரியும். அவர் மிகவும் அன்பானவர். இப்போது நான் தனிமையில் உள்ளேன். எனது கணவர் அவரது அரசியல் கடமைகளை வாழ்க்கையின் ஒரு பகுதியாக பார்த்தார். குடும்பத்தை போன்றே தனது அரசியல் கடமைகளையும் கவனித்தார். எனது கணவர் தனது அரசியல் வாழ்கையில் பல சவால்களுக்கு முகங்கொடுத்தார். அவர் குண்டு வெடிப்பினாலும் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது காலில் சத்திரசிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. எனது கணவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. எனக்கும் எனது கணவருக்கும் எதிராக பல கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. இதனால் நான் எனது கணவரை விட்டு பிரிந்து அமேரிக்காவுக்கும் சென்றேன். ஆனால் அவரை பிரிந்து என்னால் இருக்க முடியாததால் எங்களது நண்பன் டிலான் பெரேராவின் உதவியுடன் மீண்டும் கணவருடன் இணைந்தேன். எனது கணவரின் சொத்துக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்கழு அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை செய்தனர். ஆனால ்எனது கணவர் அந்த விசாரணைகளுக்கு தைரியமாக முகங்கொடுத்தார். தனது அரசியல் கடமைகளையும் தவறாமல் செய்தார். எனது கணவருக்கு எதிராக 12 வருட காலங்களாக சுமார் 14 வழக்குகளும்/ விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதனால் அவர் இரு தடவைகள் சிறைச்சாலைக்கும் சென்றார். இதனையடுத்து தரமற்ற உரங்களை இறக்குமதி செய்வதற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்தியமை தொடர்பில் எனது கணவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நீதிமன்றில் ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் எனது கணவருக்கு எதிராக 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நீதியை வழங்குவதே நீதிமன்றத்தின் கடமையாகும். ஆனால் எனது கணவருக்கு அரசாங்க அதிகாரத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டதா? எனது கணவருக்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் 5 மாத காலப்பகுதிக்குள் 2 நீதிபதிகள் மாற்றப்பட்டனர். எனது கணவரை விடுவித்து விடுதலை செய்வதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் நான் செய்வேன் என பதிவிட்டிருந்தார். https://www.virakesari.lk/article/218222

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.