Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பாடசாலைகள் நீச்சல் போட்டியில் முடிசூடா மன்னன் புனித சூசையப்பர் கல்லூரி; 20ஆவது தடவையாக சம்பியனானது 23 JUN, 2025 | 03:05 PM (நெவில் அன்தனி) கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் நடைபெற்று வந்த 50ஆவது அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான வயதுநிலை நீர்நிலை விளையாட்டு சம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி 20ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை சூடி நீச்சலில் முடிசூடா மன்னன் என்பதை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. சிறுவர்களுக்கான கனிஷ்ட பிரிவிலும் ஆண்களுக்கான சிரேஷ்ட பிரிவிலும் புனித சூசையப்பர் கல்லூரி சம்பியன் ஆனது. கனிஷ்ட பிரிவில் 272 புள்ளிகளைப் பெற்ற புனித சூசையப்பர் கல்லூரி சிரேஷ்ட பிரிவில் 290 புள்ளிகளைப் பெற்றது. இதற்கு அமைய மொத்தமாக 562 புள்ளிகளைப் பெற்ற புனித சூசையப்பர் கல்லூரி 294 புள்ளிகள் வித்தியாசத்தில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. ஒட்டுமொத்த நிலையில் ஆனந்த கல்லூரி 268 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 238.50 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன. அகில இலங்கை பாடசாலைகள் நீர்நிலை விளையாட்டுத்துறை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 50ஆவது வருடாந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான வயது நிலை நீர்நிலை விளையாட்டு சம்பியன்ஷிப்புக்கு நெஸ்லே மைலோ பூரண அனுசரணை வழங்கியது. பிரதமர் ஹரினி அமரசூரிய பிரதம அதிதியாகவும் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பேர்னி ஸ்டெஃபான் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு பிரதான பரிசுகளை வழங்கினர். வயதுநிலை சம்பியன் பாடசலைகள் 10 வயதின் கீழ்: புனித சூசையப்பர் (76 புள்ளிகள்) 12 வயதின் கீழ்: புனித சூசையப்பர் (76 புள்ளிகள்) 14 வயதின் கீழ்: புனித சூசையப்பர் (120 புள்ளிகள்) 16 வயதின் கீழ்: புனித சூசையப்பர் (95 புள்ளிகள்) 18 வயதின் கீழ்: புனித பேதுருவானவர் (87 புள்ளிகள்) 20 வயதின் கீழ்: ஆனந்த (143 புள்ளிகள்) தனிநபர் சம்பியன்கள் 14 வயதின் கீழ்: ஹஷேல் செனரத் (கொழும்பு கெட்வே) 30 புள்ளிகள் 16 வயதின் கீழ்: ஜேடன் டி சில்வா (ஸ்டஃபர்ட் இன்டர்நெஷனல்) 2 புதிய சாதனைகளுடன் 40 புள்ளிகள் 18 வயதின் கீழ்: எம்.எவ். முஹம்மத் (ஸாஹிரா) 3 புதிய சாதனைகளுடன் 45 புள்ளிகள் 20 வயதின் கீழ்: நிக் டி சில்வா (வத்தளை லைசியம்) 2 புதிய சாதனைகளுடன் 40 புள்ளிகள் https://www.virakesari.lk/article/218220
  2. ரஸ்யாவின் ஆதரவை கோரி ஈரானின் ஆன்மீக தலைவர் கடிதம் - புட்டினிடம் வழங்குவார் வெளிவிவகார அமைச்சர் 23 JUN, 2025 | 04:33 PM ரஸ்யாவின் ஆதரவை கோரி ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா கமேனி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். 1979ம் ஆண்டு புரட்சிக்கு பின்னர் அமெரிக்கா ஈரானிற்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையிலேயே கமேனி இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி புட்டினின் ஆதரவை கோரும் இந்த கடிதத்தை புட்டினிடம் வழங்கவுள்ளார் என விடயமறிந்த நபர்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர். ரஸ்யா இதுவரை வழங்கிய ஆதரவு குறித்து ஈரான் திருப்தியடையவில்லை என ஈரான் வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன. இஸ்ரேல் அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் ரஸ்யா மேலும் ஆதரவை வழங்கவேண்டும் என ஈரான் எதிர்பார்க்கின்றது. எனினும் ஈரான் எவ்வாறான உதவியை எதிர்பார்க்கின்றது என ஈரானிய வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை. புட்டின் ஈரானிய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ளதை உறுதி செய்துள்ள ரஸ்ய அதிகாரிகள் இருவரும் எதுகுறித்து பேசுவார்கள் என்பதை தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/218229
  3. இருண்டு கிடக்கும் செம்மணி மீது வெளிச்சம் படச்செய்வோம் - அணையா விளக்கினை பலப்படுத்துவோம் - மக்கள் செயல் அமைப்பும் சிவில் சமூகத்தினரும் வேண்டுகோள் Published By: RAJEEBAN 23 JUN, 2025 | 02:54 PM இருண்டு கிடக்கும் செம்மணி மீது வெளிச்சம்படச்செய்வதற்காக முன்னெடுக்கப்படும் அணையாவிளக்கு போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களினதும் ஆதரவையும் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். நாங்கள் இனப்படுகொலையை எதிர்கொண்ட இனம், எதிர்கால சந்ததிக்கு இதனை கடத்துவதன் ஊடாக நினைவுகளை கடத்த முயல்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அணையா விளக்கினை பலப்படுத்துவோம் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மெய்நிகர் கலந்துரையாடலின்போதே அவர்கள் இதனை தெரிவித்தனர். தமிழ் இனம் தன்னுடைய விடுதலையை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டவேளை தமிழ் மக்களிற்கு கிடைத்த பரிசுதான் காணாமலாக்கப்படுதலும், மனித புதைகுழிகளும் என தமிழ் சிவில் சமூக அமையத்தின் பொன்சிங்கம் தெரிவித்தார் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அண்மையில் செம்மணியில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன இது எங்களுக்கு புதிய விடயமல்ல, எத்தனை படுகொலைகளை எங்கள் மக்கள் சந்தித்துள்ளனர். சமீபத்தைய அறிக்கையொன்றின் படி ஜேவிபி கிளர்ச்சி காலத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அடங்கிய மனித புதைகுழிகள் உட்பட இலங்கையில் 59 மனித புதைகுழிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்குகிழக்கில் 13 பாரிய மனித புதைகுழிகள் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு இனம் தன்னுடைய விடுதலையை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டவேளை தமிழ் மக்களிற்கு கிடைத்த பரிசுதான் காணாமலாக்கப்படுதலும், மனித புதைகுழிகளும். காணாமலாக்கப்பட்டோர் விடயத்தை மனித புதைகுழிகளில் இருந்து பிரிக்க முடியாது. அதன் ஒரு வெளிப்பாடே மனிதப்புதைகுழிகள். செம்மணி மனித புதைகுழிகளை பொறுத்தவரை மிகவும் ஆச்சரியமளிக்கின்ற விடயம் என்னவென்றால் உடைகள் அகற்றப்பட்ட பின்னர் பிண்டங்களாக கொண்டுவந்து புதைக்கப்பட்டுள்ளனர். எந்த அடையாளத்தையும் காணமுடியவில்லை – எந்த அடையாளத்தையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. திட்டமிட்ட இனப்படுகொலைக்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. 600 பேரை புதைத்தோம் என கிருஷாந்தி படுகொலையாளி தெரிவித்திருந்தார். 12000 பேரை ஒரு சமூகம் தேடி அலைகின்றது. 7 வருடங்களிற்கு மேலாக தேடிக்கொண்டிருக்கின்ற சமூகம் இந்த புதைகுழிகள் குறித்து கேள்விப்பட்டதும், அனைவரும் அங்கு சென்று தேடியிருக்கவேண்டும் - அதற்கான தேவை உள்ளது. ஆனால் நாங்கள் எங்கள் இனம் அதனை செய்யவில்லை. மரணங்களை மதித்து விடைகாண்பதற்கு இந்த விடயம் மிக முக்கியமானது. இதே காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் செப்டம்பரில் காலாவதியாவதன் காரணமாக அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்குஅதனை பற்றி அவர் அறிக்கையிடவுள்ளார். அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதை அறிந்த கொழும்பை தளமாக கொண்ட சிவில் சமூகத்தினர் அவரது வருகையை பிற்போடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். வடக்குகிழக்கை சேர்ந்த சிவில் சமூகத்தினரும் தனிநபர்களும் இதேகோரிக்கையை விடுத்தனர். இலங்கை சில விடயங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அவர் இங்கு வரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்னெடுத்துள்ள இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் அதிகாரிகள் இலங்கை வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்தால் தான் ஆணையாளர் இலங்கை வரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். மனித உரிமை ஆணையாளருடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டோம், வருவதை எதிர்க்கவில்லை அவர் வந்தால் செம்மணிக்கு செல்லவேண்டும், இலங்கை அதிகாரிகளிடம் இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். சுஜீவன் ( மக்கள் செயல்) கிருஷாந்தி குமாரசுவாமி குற்றவாளி செம்மணியில் 400 உடல்களை புதைத்தாக தெரிவித்தார். பல வருடங்களாக இது தொடர்பில் நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாத நிலையில் தற்போது 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதே இந்த போராட்டத்தின் நோக்கம். எமது இளைஞர்கள் மத்தியிலும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. நாங்கள் இனப்படுகொலையை எதிர்கொண்ட இனம், எதிர்கால சந்ததிக்கு இதனை கடத்துவதன் ஊடாக நினைவுகளை கடத்த முயல்கின்றோம் நினைவுகளை பாதுகாப்பது இனப்படுகொலையை எதிர்கொண்ட இனத்தினை பொறுத்தவரை மிகவும் அவசியமான விடயம். பல படுகொலைகளை தமிழ் சமூகம் எதிர்கொண்டுள்ளது. செம்மணி இதற்கான ஒரு உதாரணம். இந்த போராட்டத்தின் ஊடாக அனைத்து பிரஜைகளையும், இளையோரையும் தனிநபர்களையும் உள்ளீர்க்க முயல்கின்றோம். இதுவரை காலமும் குறிப்பிட்ட சிலரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபாட்டை வெளிப்படுத்தி வந்துள்ளனர், பலரை உள்ளீர்த்தல் என்பது இந்த நடவடிக்கையின் நோக்கம். மக்களை நோக்கி எங்கள் கருத்துக்களை கொண்டு செல்ல முயல்கின்றோம். மக்கள் திரட்சியை ஏற்படுத்த முயல்கின்றோம். சமூக ஊடகங்கள் ஊடாகவும் எங்கள் போராட்டத்தினை முன்னெடுக்கின்றோம், இணையவழி மூலம் கையெழுத்து பெறும் நடவடிக்கையினை முன்னெடுக்கின்றோம். அணையா விளக்கு போராட்டத்தின் போது கவிதைகள், கட்டுரைகள், சித்திரங்கள், ஆவணப்படங்கள் என பல வழிமுறைகள் ஊடாக நினைவுகளை நடந்தவற்றை பகிர்ந்துகொள்ள திட்டமிட்டுள்ளோம். உங்கள் பிள்ளைகளை அழைத்து வாருங்கள். நாடக ஆற்றுகைக்கும் திட்டமிட்டுள்ளோம். அரசியல் சிவில்சமூக பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் நாங்கள் இதனை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். மூன்று நாட்களும் உங்கள் ஒத்துழைப்பு அவசியம். ஒன்றிணைதல் கட்டாய தேவை. மறுக்கப்பட்ட நீதியை முன்னெடுக்கும் களமாக இதனை பயன்படுத்துவோம், 3 நாட்களும் தொடர்ச்சியாக மக்கள் போராட்டமாக இது இடம்பெறும். ஜெரா( சிவில் சமூக செயற்பாட்டாளர்) நாங்கள் பொதுவெளியில் எல்லா தரப்பினதும் ஆதரவை கோரினோம். அந்த வழியில் சகல தரப்பினரும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஊடகங்கள் ஊடாக அறிந்தோம் அதற்கும் எங்களிற்கும் நேரடி தொடர்பில்லை. ஆனால் அதனை வரவேற்கின்றோம், இங்கு நாங்கள் செய்கின்ற மாதிரி அங்கும் செய்வதை நாங்கள் ஆத்மார்த்தமாக வரவேற்கின்றோம், மூன்று நாட்கள் நாங்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம், கடந்தகாலத்தில் எங்கள் பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவேளை எல்லோரும் ஒரு குடையின் கீழ் செயற்பட்டோம், அதன் அடிப்படையிலேயே இந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் முயற்சி உருவானது. அணையா விளக்கு மூலம் மனித புதைகுழி குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதும் எங்களின் நோக்கம். அணையாள விளக்கு இருண்டு கிடக்கும் செம்மணிக்கு வெளிச்சம் போடுவதற்கான ஒரு முயற்சியாகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சிந்து பாத்திக்கு வந்தால் அவரை சந்தித்து ஒரு பட்டயத்தை வழங்க திட்டமிட்டுள்ளோம். மருத்துவர் உதயசீலன் வாகனங்களில் விலங்குகள் அடிபட்டால் துடித்துப்போகின்ற சமூகத்தவர்கள் நாங்கள் ஆனால் இவர்கள் எங்கள் உறவுகள் ஆனால் யார் என்று தெரியவில்லை. எதற்காக எந்தவித அடையாளங்களும் இல்லாமல் மறைத்து வைத்தார்கள் என்பது தெரியவில்லை. இந்த விடயத்தை மக்கள் மயப்படுத்தவேண்டிய தேவையுள்ளது, எல்லோரும் வரவேண்டும், நீதி கேட்கும் மக்கள் என்ற அடிப்படையில் அனைவரும் இணைந்து கொள்ளவேண்டும். ஒரு நாள் கதவடைப்பு குறித்து சிலர் கருத்து தெரிவித்தார்கள், ஆனால் தற்போதுள்ள களநிலைமையில் அது சாத்தியமில்லை, அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாக அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டத்தை சட்டத்திற்கு உட்பட்ட விதத்தில் முன்னெடுக்க தீர்மானித்தோம். பலதரப்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் இணைந்துகொள்வார்கள், அவர்களிற்கு ஆபத்துள்ளது. ஆனால் அதனையும் மீறி இந்த செய்தியை உரத்துசொல்லவேண்டும். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் ஆதரவை எவ்வழியிலாவது வெளியிடுங்கள். கருப்பு பட்டியை அணியுங்கள், விளக்கை ஏற்றுங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக மாற்றுவோம். வடக்குகிழக்கில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படுகொலைகள் இடம்பெற்றன, பலரை கொலை செய்து புதைத்துள்ளனர். உள்ளுராட்சி தேர்தலில் அனேக கட்சிகள் தமிழ்தேசியத்தை சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தன அவர்கள் அந்த பகுதியில் காணாமல்போனவர்கள் குறித்த தகவல்களை திரட்டவேண்டும், நினைவுச்சின்னங்களை எழுப்பவேண்டும். வரலாற்றினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம். https://www.virakesari.lk/article/218217
  4. நூறாண்டுகளில் தோன்றாத தலைசிறந்த பந்து வீச்சாளர் - பும்ராவின் மாய வேகம் பேட்டர்களை தடுமாறச் செய்வது எப்படி? பட மூலாதாரம்,ALEX DAVIDSON/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீவென் ஃபின் பதவி, பிபிசி கிரிக்கெட் கட்டுரையாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா எல்லா காலத்திலும் அதிசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்ற கூற்றை நிராகரிப்பது என்பது உண்மையிலேயே கடினமாகி வருகிறது. ஒவ்வொரு முறை ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசும்போதும் அது, அந்தப் போட்டியில் தாக்கம் ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹெடிங்லியில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்டில் நாம் பார்க்கும் அவரது செயல்பாடுகளை விட அவரின் திறமை மிகவும் மேம்பட்டது. இங்கிலாந்துடனான போட்டியில், முதல் இன்னிங்ஸில் பும்ரா 83 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதோடு அவரது பந்துவீச்சில் மூன்று கேட்சுகளை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். மேலும், பும்ராவின் பந்துவீச்சில் ஹாரி புரூக் அடித்த பந்து கேட்ச் பிடிக்கப்பட்டாலும், அது நோ-பால் ஆகிவிட்டது. பும்ரா கையில் பந்து கிடைக்கும் போதெல்லாம் அது பாக்ஸ் ஆஃபிஸிலிருந்து திரைப்படம் பார்ப்பது போல தோன்றுகிறது. ஒவ்வொரு பந்திலும் ஏதோ நடப்பது போல் உணர்ந்தேன். மறு அணியில் இருக்கும் பந்து வீச்சாளர்களை அவர்கள் வேறேதோ விளையாட்டை விளையாடுவது போல நினைக்க வைத்துவிடுகிறார் பும்ரா. உலகின் சிறந்த வீரர்கள் கூட பும்ராவின் பந்துவீச்சில் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். சுழலும் அவரது கைகள், மணிக்கட்டின் ஓர் அசைவு, பும்ராவின் கையில் இருந்து பந்து வெளியேறுவதை பேட்ஸ்மேன் அறியும் முன்பே அது அவரை தாக்கிவிடுகிறது. ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டம் எனக்கு ஏற்பட்டிருந்தால், அவர் அதிகபட்சம் இரண்டு பந்துகளில் என்னை அவுட் ஆக்கிவிடுவார். அவரால் ஒரே ஓவரில் பெளன்சர், யார்க்கர், ஸ்விங், மெதுவாக என பந்து வீச முடியும். பும்ரா பந்து வீசும்போது பந்தைப் பார்ப்பது என்பதே கடினமானது என்பதால், அவர் நேரடியாக இரண்டாவது விருப்பத்திற்குச் செல்வார் என நம்புகிறேன். என்னைப் போன்ற ஒரு கீழ்வரிசை பேட்ஸ்மேனுக்கு அவர் அபாயகரமானவர் என்றே சொல்வேன். பட மூலாதாரம்,GEORGE WOOD/GETTY IMAGES வித்தியாசமான செயல்களைக் செய்யும் பந்து வீச்சாளர்களை பேட்ஸ்மேன்கள் "புரிந்துக்கொள்வது கடினம்" என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கலாம். கடைசி விநாடி வரை பந்தை பேட்ஸ்மேனின் பார்வையில் இருந்து மறைக்கும் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகவும் கொடூரமானது. பும்ராவைப் பொறுத்தவரை, பந்து அவரது தனித்துவமான லோட்-அப் பாயிண்டில் தொடங்குகிறது. ஒரு கடிகாரத்தையும், பும்ராவின் பந்துவீச்சையும் இணைத்து கற்பனை செய்து பாருங்கள். அவரது முழுமையாக நேராக்கப்பட்ட கை, இரண்டாவது எண்ணை சுட்டிக்காட்டுகிறது. பின்னர் அவரது கை, விரைவாக வளைந்து இறங்குகிறது, ஆனால் பந்து வீச வரும்போது, அவரது முழங்கை அதிகமாக நீட்டப்படுகிறது. இங்கிருந்துதான் அவர் தனது வேகத்தை ஓரளவு பெறுகிறார், பந்து அவரது முழங்கைக்குப் பின்னால் மறைந்துவிடும் அந்த சமயத்தில் பந்தை பேட்டரால் பார்க்க முடியாது. பின்னர் பும்ரா தனது மணிக்கட்டை அசைத்து, எந்தவிதமாகவும் பந்து வீசத் தயாராக இருக்கிறார். இது ஒரு கவண் போன்றது. கடைசி மில்லி விநாடியில், பந்தானது பேட்ஸ்மேனின் பார்வைக்கு வரும்போது, மணிக்கு 90 மைல் வேகத்தில் பறந்துவருகிறது. பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவும், பும்ராவுக்கு ஒரு சாதகமாகவும் இருப்பது பந்து வீசும் அவரது ரிலீஸ் பாயிண்ட் தான். வேறு எந்த வேகப்பந்து வீச்சாளரை விடவும் பும்ரா, பேட்ஸ்மேனுக்கு அருகில் இருந்து பந்தை வீசுகிறார். பட மூலாதாரம்,CLIVE MASON/GETTY IMAGES ஒரு வேகப்பந்து வீச்சாளரை அருகிலிருந்து பார்ப்பதை கற்பனை செய்து பாருங்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் கை, முன் பாதத்திற்கு நேராக மேலே இருக்கும்போது பந்தை விடுவிப்பதை பார்த்திருக்கலாம். பும்ரா எப்படியோ தனது கையை, முன் பாதத்திலிருந்து சுமார் 40 செ.மீ முன்னால் கொண்டு வந்துவிடுகிறார். இதனால் அவருக்கும் பேட்டருக்கும் இடையிலான தூரம் குறைகிறது, இதனால் எதிர்வினையாற்றுவதற்கு பேட்டருக்கு கிடைக்கும் நேரம் குறைகிறது. வேகமாக பந்து வீசும் ஒருவருக்கு பும்ரா பந்து வீசும் விதம் பொருந்தாது. பும்ரா எடுத்து வைக்கும் காலடிகள் சரளமானதாக இருக்காது, குறுகிய மற்றும் தடுமாறும் அடிகளாக இருக்கும். இதைப் பார்த்தால் அவரது பந்துவீசும் வேகம் புயலைப் போல் துரிதமானதாக இருக்கும் என்பதற்கான எந்தவித அறிகுறியும் இருக்காது. ஒரு பேட்ஸ்மேன், பும்ராவின் பந்துவீச்சை எத்தனை மணி நேரம் பார்த்து, அவதானித்து, புரிந்துக் கொண்டிருந்தாலும், களத்தில் ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ளும்போது ஆச்சரியப்படுவார். பும்ராவின் பந்து எந்தவிதமானதாக இருக்கும் என்பதை யாரும் கணித்துவிடமுடியாது. கையின் பாதை மாறாது, விரலின் நிலை மாறாது. எந்தவிதமான பந்து என்பதை கணிக்கமுடியாமல், தான் எவ்வித பந்தை எதிர்கொள்ளப்போகிறோம் என்று தெரியாமலேயே பேட்ஸ்மேன் 'பேட்' ஆட தயாராக இருக்க வேண்டும். ஒரு பந்து வீச்சாளரை விவரிக்க "beyond the perpendicular" என்ற சொற்றொடர் பயன்படுத்துவதை கேட்டிருக்கலாம். பந்துவீச்சையும் ஒரு கடிகாரத்தையும் வைத்து ஒரு கற்பனை செய்து பார்ப்போம். "ஓவர்-தி-டாப் ஆக்‌ஷன்" ரக பந்துவீச்சாளர்கள், தங்களின் தலைக்கு மேல், சரியாக, கடிகாரத்தில் எண் 12 இருக்கும் இடத்திற்கு நேராக கைகளை வைத்து பந்து வீசினால் எப்படி இருக்குமோ அப்படி வீசுவார்கள். 'ரவுண்ட்-ஆர்ம்' பந்து வீச்சாளர்கள் கடிகாரத்தில் எண் 1 அல்லது 2 இருக்கும் இடத்தில் இருந்து பந்து வீசுவது போல் இருக்கும். "beyond the perpendicular" என்ற நிலையில் பந்து வீசினால், அது கடிகாரத்தின் 11 ஆம் எண் இருப்பது போன்ற இடத்திலிருந்து வருகிறது. அதாவது கோணம் வலது கை பந்து வீச்சாளருக்கு வருவது போலவே இருக்கும். இதனால் பேட்ஸ்மேன் தேவையில்லாத பந்துகளில் விளையாட வேண்டியிருக்கும். இதற்கு ஒரு உதாரணம், ஜோ ரூட்டுக்கு எதிராக பும்ரா பெற்ற வெற்றியாகும், டெஸ்ட் கிரிக்கெட்டில், ஜோ ரூட்டை 10 முறை பும்ரா அவுட்டாக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் மட்டுமே ஜோ ரூட்டை அதிகமாக அவுட்டாக்கியுள்ளார். இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸைப் போலவே, ஜோ ரூட்டுக்கு ஆஃப் ஸ்டம்பிற்கு அப்பால் உள்ள பந்துகளாக பும்ரா போடுகிறார், பந்தை விளையாடத் தேர்வுசெய்தவுடன் கடைசி விநாடியில் அதை மாற்றி விடுகிறார், 2021 இல் அவர்களின் சண்டைகளைப் போலவே பந்துவீச்சும் தொடர்கிறது. பும்ராவின் பந்துவீச்சில், தொழில்நுட்ப கூறுகளைத் தவிர, இவ்வளவு சீராக போட்டிகளைப் பாதிக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் கிரிக்கெட் வரலாற்றில் இருந்ததில்லை என்றே நான் நினைக்கிறேன். ஒரு கணினியைப் போலவே, எந்தவொரு சூழ்நிலையிலும் தேவையானதை தொடர்ந்து கணக்கிட்டு பும்ரா செய்கிறார், அத்துடன் அவர் செய்ய விரும்புவதை ஏறக்குறைய சரியாகவும் செயல்படுத்திவிடுகிறார். ஜஸ்பிரித் பும்ராவின் பல்துறைத்திறனுக்கு உதாரணமாக, சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்தது 500 பந்துகளை வீசிய முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில், பும்ராவின் 6.27 என்ற எகானமி ரன்ரேட் சிறந்தது. அதே நேரத்தில், டெஸ்ட் வரலாற்றில் பும்ரா குறைந்தபட்சம் 200 விக்கெட்டுகளுடன் சிறந்த பந்துவீச்சு சராசரியையும் கொண்டுள்ளார். பும்ரா 19.33 உடன், 20.94 உடன் இரண்டாவது இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் மால்கம் மார்ஷலை விட மைல்கள் முன்னால் உள்ளார். வேறுவிதமாக சொல்வதென்றால், பும்ராவை விட குறைந்த சராசரியில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் அனைவரும் முதலாம் உலகப் போருக்கு முன்பு விளையாடியவர்கள் தான். பட மூலாதாரம்,VISIONHAUS/GETTY IMAGES டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் மேலும் விரிவடைந்து வரும் சூழலில், பந்து வீச்சாளர்களுக்கு மாறுபட்ட திறன்கள் தேவைப்படும் நிலை உருவாகிறது. பும்ரா இரண்டிலும் சிறந்தவர் என்பது அவருக்கு கூடுதல் பலம். விளையாட்டைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய பும்ரா, இந்தியாவின் டெஸ்ட் கேப்டனுக்கான விருப்பங்களில் முதல் தேர்வாக இருந்திருப்பார். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடுவதற்கு அவர் சிரமப்பட்டிருப்பார். அணிக்கு அது நியாயமாக இல்லை என்று உணர்ந்ததால், அந்தப் பணியைத் தொடர வேண்டாம் என்று அவரே முடிவு செய்தார். சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களின் சகாப்தத்தில் இருப்பது நமது அதிர்ஷ்டம். அண்மையில் சர்வதேச அளவில் ஓய்வு பெற்ற ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ககிசோ ரபாடா, கம்மின்ஸ், ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் உட்பட பலரை சொல்லலாம். இவர்கள் அனைவரிலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ரா உள்ளார் என்ற பாராட்டுக்கு ஜஸ்பிரித் பும்ரா தகுந்தவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg9rgywy5ko
  5. ஆடம்பர சொத்துகளை வைத்திருக்கும் 28 அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்; சி.ஐ.டி Published By: DIGITAL DESK 2 23 JUN, 2025 | 12:28 PM கொழும்பில் ஆடம்பர சொத்துகளை சேகரித்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆடம்பர சொத்து தொடர்பான விசாரணைகளில் முன்னாள் அமைச்சர்கள் பலர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ஆடம்பர சொத்துகளை சேகரித்து வைத்திருக்கும் சுமார் 28 அரசியல்வாதிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஒருவரின் சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தரப்புகளிலிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள சொத்துகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/218193
  6. 23 JUN, 2025 | 02:50 PM கிளிநொச்சியில் மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் - 2025 திங்கட்கிழமை (23) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில், கரைச்சி பிரதேச சபையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. "சுற்றாடல் எம்மைக் காக்கும் நாம் சுற்றாடலைக் காப்போம்" எனும் தொனிப்பொருளில் திங்கட்கிழமை (23) திகதி தொடக்கம் வெள்ளிக்கிழமை (27) ம் திகதி வரை இந்த வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இதேவேளை, இலத்திரனியல் மற்றும் மின்கழிவு சேகரிப்பு நிகழ்வு கரைச்சி பிரதேச சபையில் இன்று இடம்பெறுகிறது. நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர் R.M.Jaltota தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி திணைக்களத்தின் உள்ளூராட்சி உதவியாளர் மணிமேகலை, கரைச்சி பிரதேச சபை செயலாளர் த.ஞானராஜ் மற்றும் துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/218216
  7. எனது கணவர் அப்பாவி ; மஹிந்தானந்த அளுத்கமகேவின் மனைவி செனானி ஜயரத்ன 23 JUN, 2025 | 03:42 PM 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மனைவி செனானி ஜயரத்ன தனது கணவர் குறித்து முகநூல் பக்கத்தில் பல கருத்துக்களை பதிவிட்டுள்ளார். மஹிந்தானந்த அளுத்கமகேவின் மனைவி செனானி ஜயரத்ன தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் பின்வருமாறு, மஹிந்தானந்த அளுத்கமகே, 2021ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராக கடமையாற்றிய போது, தரமற்ற உரங்களை இறக்குமதி செய்வதற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்தியமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். எனது கணவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து நான் மிகவும் வருத்தத்துடன் உள்ளேன். அவருக்காக செய்வதற்கு இன்னும் எதுவும் என்னிடம் மீதி இல்லை. இதனால் நான் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இனி என்னை கொன்றாலும் எனக்கு வலிக்க போவதில்லை. எனது கணவர் அப்பாவி என எனக்கு தெரியும். அவர் மிகவும் அன்பானவர். இப்போது நான் தனிமையில் உள்ளேன். எனது கணவர் அவரது அரசியல் கடமைகளை வாழ்க்கையின் ஒரு பகுதியாக பார்த்தார். குடும்பத்தை போன்றே தனது அரசியல் கடமைகளையும் கவனித்தார். எனது கணவர் தனது அரசியல் வாழ்கையில் பல சவால்களுக்கு முகங்கொடுத்தார். அவர் குண்டு வெடிப்பினாலும் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது காலில் சத்திரசிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. எனது கணவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. எனக்கும் எனது கணவருக்கும் எதிராக பல கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. இதனால் நான் எனது கணவரை விட்டு பிரிந்து அமேரிக்காவுக்கும் சென்றேன். ஆனால் அவரை பிரிந்து என்னால் இருக்க முடியாததால் எங்களது நண்பன் டிலான் பெரேராவின் உதவியுடன் மீண்டும் கணவருடன் இணைந்தேன். எனது கணவரின் சொத்துக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்கழு அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை செய்தனர். ஆனால ்எனது கணவர் அந்த விசாரணைகளுக்கு தைரியமாக முகங்கொடுத்தார். தனது அரசியல் கடமைகளையும் தவறாமல் செய்தார். எனது கணவருக்கு எதிராக 12 வருட காலங்களாக சுமார் 14 வழக்குகளும்/ விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதனால் அவர் இரு தடவைகள் சிறைச்சாலைக்கும் சென்றார். இதனையடுத்து தரமற்ற உரங்களை இறக்குமதி செய்வதற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்தியமை தொடர்பில் எனது கணவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நீதிமன்றில் ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் எனது கணவருக்கு எதிராக 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நீதியை வழங்குவதே நீதிமன்றத்தின் கடமையாகும். ஆனால் எனது கணவருக்கு அரசாங்க அதிகாரத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டதா? எனது கணவருக்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் 5 மாத காலப்பகுதிக்குள் 2 நீதிபதிகள் மாற்றப்பட்டனர். எனது கணவரை விடுவித்து விடுதலை செய்வதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் நான் செய்வேன் என பதிவிட்டிருந்தார். https://www.virakesari.lk/article/218222
  8. காணி விடுவிப்பை வலியுறுத்தி மயிலிட்டியில் மூன்றாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம் 23 JUN, 2025 | 05:07 PM காணி விடுவிப்பை வலியுறுத்தி மயிலிட்டியில் இன்றும் (23) மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மயிலிட்டி சந்தியில் சனிக்கிழமை (21) இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணிகளை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218241
  9. ஈரான் ஏவுகணைதாக்குதல் - இஸ்ரேலில் மின்விநியோகம் பாதிப்பு 23 JUN, 2025 | 03:46 PM ஈரான் இன்று மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் காரணமாக மின்விநியோகம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 8000 இஸ்ரேலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய அதிகாரிகள் மின்நிலையங்கள் தாக்கப்படும் சாத்தியக்கூறுகளை எதிர்கொள்வதற்காக முன்கூட்டியே தயாராகயிருந்தனர், பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு மூன்று மணிநேரத்திற்குள் மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் தென்பகுதியில் ஒரு மூலோபாய உட்கட்டமைப்பு வசதிக்குஅருகில் சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலின் மின்சார கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதனால் பல சமூகங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் மின்சாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் மின்சார சபையின் பல குழுக்கள் களத்தில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218225
  10. TEA 1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England India (75 ov) 471 & 298/4 England 465 Day 4 - Session 2: India lead by 304 runs. Current RR: 3.97 • Min. Ov. Rem: 38 • Last 10 ov (RR): 45/1 (4.50)
  11. 23 JUN, 2025 | 11:21 AM யாழ்ப்பாணம், வலி. வடக்கில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரிய போராட்டம் நேற்று (22) இரண்டாவது நாளாகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மயிலிட்டி சந்தியில் சனிக்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தின்போது, இன்று 500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றுள்ளதோடு, தங்குதடையின்றி அமைதி வழியில் உணவு சமைத்து அங்கேயே தங்கியிருந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பாடசாலைச் சிறுவர்கள் கூட தமது பெற்றோருடன் பதாகைகளைத் தாங்கியவாறு, மூன்றாம் தலைமுறையாக தங்கள் நிலங்களுக்கான உரிமையைக் கோரி போராட்டத்தில் இணைந்துள்ளனர். மயிலிட்டி, பலாலி, அந்தோணிபுரம், காங்கேசன்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் எனப் பல தரப்பினரும் இத்தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 1990ஆம் ஆண்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள், போர் முடிவடைந்த பின்னரும் தங்கள் காணிகளை முழுமையாகப் பெறவில்லை. ஆட்சிக்கு வந்த ஒவ்வோர் அரசாங்கமும் காணியை விடுவிப்பதாகக் கூறி, சிறிய பகுதிகளை மட்டுமே விடுவித்துள்ளன. இதனால், வாடகை வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும், முகாம்களிலும் காணி உரிமையாளர்கள் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். "அனைத்துக் காணிகளையும் உடனடியாக விடுவிப்போம்" என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம், ஆறு மாதங்களாகியும் பெரியளவில் காணி விடுவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என போராட்டக்காரர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவம் நிலங்களை வைத்திருப்பதாகவும், தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறபோதும் காணிகள் விடுவிக்கப்படாமல் இருப்பது மக்களைத் தொடர்ந்தும் அகதிகளாக்குகிறது எனவும் அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர். தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளதாகக் கூறும் புதிய அரசாங்கம் இப்போராட்டம் குறித்து கவனம் செலுத்தும் வரை இது தொடரும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் உறுதியளித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218189
  12. கல்வி ஒரு இம்சையாக மாறிவிட்ட காலத்திலும் விளையாட்டின் மூலம் தலைமைத்துவத்தை வளர்த்துக்கொள்ள முடிந்துள்ளது - பிரதமர் ஹரிணி Published By: DIGITAL DESK 2 23 JUN, 2025 | 11:46 AM கல்வி ஒரு இம்சையாக மாறிவிட்ட காலத்திலும், விளையாட்டின் மூலம் தலைமைத்துவம், அணி உணர்வு மற்றும் சகிப்புத்தன்மை போன்ற மிகவும் முக்கியமான பண்புகளை வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறது. நாம் விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது ஒற்றுமை உட்பட விளையாட்டின் நற்பண்புகளை நமக்குள் வளர்த்துக்கொள்வதற்கே ஒழிய வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு அல்ல என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். சுகததாச விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற பாடசாலை நீச்சல் விளையாட்டு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 50வது பாடசாலை வருடாந்திர நீச்சல் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில், பிரதமர் பல்வேறு பிரிவுகளின் நீச்சல் மற்றும் நீர் மூழ்கும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதனுடன், ஒட்டுமொத்த ஆண்கள் நீச்சல் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து 20 வருடங்களாக மருதானை புனித ஜோசப் கல்லூரியும், ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன்ஷிப்பை கொழும்பு மகளிர் கல்லூரியும், ஒட்டுமொத்த கலப்பு பாடசாலைச் சாம்பியன்ஷிப்பை வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையும் வென்றன. அதேபோல் நீர் மூழ்கும் பிரிவில் ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன்ஷிப்பை கொழும்பு பேராயர் கல்லூரி அணியும், ஆண்கள் சாம்பியன்ஷிப்பை கொழும்பு றோயல் கல்லூரியும் வென்றன. இந்த நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், "நாம் விளையாட்டில் வெற்றியோடு தோல்வியையும் சமமாக அனுபவித்து தாங்கிக்கொள்ள வேண்டும். இதை நாம் முதலில் நமது பிள்ளைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். கல்வி ஒரு இம்சையாக மாறிவிட்ட காலத்திலும், விளையாட்டின் மூலம் தலைமைத்துவம், அணி உணர்வு மற்றும் சகிப்புத்தன்மை போன்ற மிகவும் முக்கியமான பண்புகளை வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறது. இன்றைய இந்த திறமைகள் என்னை வியக்கவைத்தன. உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது நாட்டின் குழந்தைகளின் திறமைகள் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்கிறன. வரலாற்றில் எப்போதும் இலங்கையின் நாமத்தை சர்வதேச அளவில் ஓங்கச் செய்ய நமது விளையாட்டு வீரர்களால் முடிந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் நான் அதனையும் நன்றியுடன் நினைவுகூர விரும்புகிறேன். இன்று என் முன்னால் இருக்கும் உங்களுக்கும் அவ்வாறு நமது நாட்டின் பெயரை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல தேவையான சக்தியும் தைரியமும் கிடைக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்" என்றார். இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் அதிகாரிகள், பாடசாலை நீர் விளையாட்டுச் சங்க உறுப்பினர்கள், அதிபர்கள் மற்றும் நெஸ்லே லங்கா தனியார் நிறுவன அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/218186
  13. செம்மணி புதைகுழி - சர்வதேச தடையவியல் நிபுணர்களையும் மனித உரிமை நிபுணர்களையும் அழையுங்கள் அனுரவிற்கு கனடிய தமிழர் பேரவை கடிதம் - அணையாவிளக்கிற்கு ஆதரவு Published By: RAJEEBAN 23 JUN, 2025 | 11:07 AM செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யுமாறும் அகழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் உண்மையின் பக்கம் நின்று இதனை கையாளுமாறும் கனடிய தமிழர் பேரவை இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் மனிதபுதைகுழி அகழ்வை மேற்கொள்ளவும் வலியுறுத்தி ஜூன் 23 தொடக்கம் 25 வரை இலங்கையில் நடக்கவிருக்கும் அணையா விளக்கு போராட்டத்திற்கும் கனடிய தமிழர் பேரவை தனது ஆதரவைத்தெரிவித்துள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கையின் வடபகுதியில் செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் சமீபத்தில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனையுடனும் கவலையுடனும் இந்த கடிதத்தை எழுதுகின்றோம். சிறுவர்கள் உட்பட பலரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் சமூகத்தினை மீண்டும் உலுக்கியுள்ளது.இலங்கையிலும் வெளிநாடுகளிலும். இது தனிப்பட்ட ஒரு சம்பவம் இல்லை மாறாக பல தசாப்தகால காணாமல்போதல், அரசபயங்கரவாதம்,பதில்கள் இன்றி பொறுப்புக்கூறல் இன்றி தமிழ் குடும்பங்கள் அனுபவித்துவரும் துயரங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமை ஆகியவற்றின் துயரம் மிகுந்த பாரம்பரியமாகும். கடந்த 25 வருடங்களாக செம்மணி தமிழ் சமூகத்தின் கூட்டு மனப்பான்மையை கடுமையாக பாதித்துவந்துள்ளது.இந்த பகுதி நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள் , படுகொலைகள் குறித்த குற்றச்சாட்டுகள்,இரகசியமாக உடல்கள் புதைக்கப்படுதல் ஆகியவற்றுடன் நீண்டகாலமாக தொடர்புபட்ட பகுதியாகும். அதன் மோசமான தன்மை குறித்து தெரிந்திருந்தாலும் சிறிய பகுதியே தோண்டப்பட்டுள்ளது.மேலும் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் உரிய காரணங்கள் தெரிவிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டன. மன்னார் ,கொக்குதொடுவாய், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் முழுமையாக தோண்டப்படாததும்,தெளிவற்ற விசாரணைகளும், தமிழ் மக்களின் நம்பிக்கைகளை மோசமாக பாதித்துள்ளன. நீதியை உறுதி செய்வதற்காக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இந்த சமீபத்தைய கண்டுபிடிப்பு உண்மைக்கான மற்றுமொரு வாய்ப்பு தவறவிடப்படுதலாக அமையும். மனித உரிமை நீதிக்காக தன்னை அர்ப்பணித்துள்ள அமைப்பு என்ற அடிப்படையில் இந்த தருணத்தினை தீவிரமாக கருதுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். உங்கள் அலுவலகத்தை வெளிப்படையான முழுமையான மனித புதைகுழிகளை தோண்டும் கட்டமைப்பை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அது தெளிவான காலவரையறை,முறையியல், பொதுமக்களிற்கு அறிவித்தல் ஆகியவற்றை கொண்டிருக்கவேண்டும். சர்வதேச தடயவியல் நிபுணர்களையும் மனித உரிமை நிபுணர்களையும் அகழ்வு ஆய்வின் ஒரு பகுதியாகயிருப்பதற்கு அழையுங்கள். காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பை உறுதிசெய்யுங்கள். தலையீடுகள் அல்லது ஆதாரங்களை தங்களிற்கு சாதகமாக மாற்றுதல்ஆகியவற்றை தவிர்ப்பதற்காகஅந்த பகுதியில் பணியாற்றுபவர்களிற்கு போதுமான வளங்களையும் பாதுகாப்பையும் வழங்குங்கள். https://www.virakesari.lk/article/218185
  14. அமெரிக்காவின் தாக்குதல் - வடகொரியா கடும் கண்டனம் 23 JUN, 2025 | 11:05 AM ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை வடகொரியா கண்டித்துள்ளது. ஈரானின் பாதுகாப்பு நலன்கள் மிக மோசமாக மீறப்பட்டது என தெரிவித்துள்ள வடகொரியா ஈரானின் ஆள்புல உரிமைகளும் மீறப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேற்குலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட இஸ்ரேலின் இடைவிடாத போர் நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய விரிவாக்கத்தினால் உருவான மத்திய கிழக்கின் பதட்டங்களிற்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே குற்றவாளிகள் என வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு நலன்களை வன்முறையாக நசுக்கிய அமெரிக்காவின் தாக்குதலை வடகொரியா கடுமையாக கண்டிக்கின்றது என அந்த நாட்டின் வெளிவிவகார பேச்சாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிராக நியாயமான சர்வதேச சமூகம் குரல் எழுப்பவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218190
  15. சிரிய தலைநகரில் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு Published By: DIGITAL DESK 3 23 JUN, 2025 | 10:53 AM சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் உள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 63 பேர் காயமடைந்துள்ளனர். இதனை சிரிய சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியள்ளது. டமஸ்கஸ், ட்வீலா பகுதியிலுள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை (22) ஆராதனை நடைபெற்றுள்ளது. இதன்போது, தேவாலயத்துக்குள் வந்த நபரொருவர் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளார். தற்கொலை குண்டு தாக்குதலை ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் மேற்கொண்டதாக் கூறப்பட்டாலும், அந்த அமைப்பு இந்த சம்பவத்தை இதுவரை உரிமைகோர வில்லை. குண்டு தாக்குதலில் தேவாலயத்திற்குள் பலிபீடத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு, உடைந்த கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும் பீடங்கள் மற்றும் சுவர்களில் இரத்தம் சிதறிக் கிடப்பது புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் பதிவாகியுள்ளன. சம்பவத்தை நேரில் பார்த்த லாரன்ஸ் மாமாரி, யாரோ ஒருவர் தேவாலயத்திற்குள் ஆயுதம் ஏந்தி நுழைந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தினார். அவர் குண்டை வெடிக்க செய்வதற்கு முன்னர் மக்கள் அவரை தடுக்க முயன்றனர் என அவர் ஏப்பி செய்தி சேவைக்குத் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் இதேபோன்றதொரு சம்பவம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்றது. அதில், 250க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, 219 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218182
  16. நிலத்தடி நீர்த் தேவை பற்றிய ஆய்வு Jun 22, 2025 - 10:20 - யாழ்ப்பாணத்தில் வழுக்கியாற்றைப் புனரமைப்பு செய்து நிலத்தடி நீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆய்வு ஒன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் நேற்று (21) ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் வறுத்தலைவிளான் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பிக்கும் வழுக்கையாற்றில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், அரச திணைக் களத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த ஆராய்ச்சி பயணத்தில் வருத்தலைவிளான் பகுதியில் ஆரம்பிக்கும் வழுக்கையாற்று பயணம் அராலியில் முடிவடையும். இதன்போது பொறியியலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ பீடம் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmc76w60i0076qp4khyhg75fy
  17. LUNCH 1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England India (48 ov) 471 & 153/3 England 465 Day 4 - Session 1: India lead by 159 runs. Current RR: 3.18 • Min. Ov. Rem: 66 • Last 10 ov (RR): 28/0 (2.80)
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா அணுஉலை கட்டுரை தகவல் எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ் பதவி, பிபிசி முண்டோ 23 ஜூன் 2025, 01:22 GMT இஸ்ரேலிடம் அணு ஆயுதம் 1960கள் முதலே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு ரகசியம். ஆனாலும் இதனை இஸ்ரேல் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ததில்லை. கடந்த வாரம் இரான் மீது ராணுவ தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. "அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையை இரான் எட்டியிருக்கிறது" என இஸ்ரேல் குற்றம் சாட்டியது. பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி இரான் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், இரு நாடுகளிடையேயான போராக மாறியது. அமைதி ஆராய்ச்சிக்கான சுயாதீன அமைப்பான அமைதிக் கல்விக்கான டாலஸ் மையத்தின் (Dallas Center for Peace Studies) ஆராய்ச்சியாளரான முனைவர் ஜேபியர் பிகஸ் பேசுகையில், "மத்திய கிழக்கில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு இஸ்ரேல் தான்" என்று கூறினார். சர்வதேச அணுசக்தி முகமையின் தகவல்படி, யுரேனியத்தை செறிவூட்டுவதில் 60 சதவிகிதத்தை இரான் எட்டியுள்ளது. ஆனால் பிகஸ் அளிக்கும் விளக்கத்தின்படி, "அணு ஆயுதத்தை தயாரிக்க யுரேனியம் 90 சதவிகிதத்துக்கு மேல் செறிவூட்டப்பட்டிருக்க வேண்டும்" இஸ்ரேல் ஒருபோதும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மாறாக, இரான், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால், அணு ஆயுதங்கள் தொடர்பான எந்த ஆய்வுக்கும் இஸ்ரேல் அணு சக்தி மையங்களை உட்படுத்த முடியாது. இதன் காரணமாகத் தான் இஸ்ரேலின் அணு ஆயுதங்கள் தொடர்பான எந்த தகவல்களும் கசியவிடப்படுவதன் மூலமே பெறப்படுகின்றன. அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித்துறை மற்றும் அணு சக்தி குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளும் சர்வதேச முகமைகள் மூலமாகவே இந்த தகவல்கள் வெளிப்படுகின்றன. இது தவிர, இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்களில் வேலை பார்த்து, பின்னர் அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவரான அணு பொறியாளர் மாவ்டுகாய் வானுனு 1986ம் ஆண்டு சன்டே டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியின் மூலமாகவும் பல தகவல்கள் கிடைத்தன. இஸ்ரேலிடம் அணு ஆயுதத்திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது என்பதை முதன்முதலில் வெளிப்படுத்திய இவர், பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டார். அமிமுட் அல்லது வேண்டுமென்றே தெளிவற்ற நிலை பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES படக்குறிப்பு, அணு ஆயுதங்கள் குறித்து "தெளிவின்மை" கொள்கையை கடைபிடிக்கும் இஸ்ரேல் இஸ்ரேலின் அணு ஆயுதம் குறித்த அதிகாரப்பூர்வ கொள்கையானது அமிமுட் (Amimut) என்ற ஹீப்ரு மொழி வார்த்தையால் குறிப்பிடப்படுகிறது. இதற்கு வேண்டுமென்றே தெளிவின்மையை ஏற்படுத்துதல் என பொருள் கொள்ளலாம். அதாவது, ஏற்கெனவே கூறியது போன்று அணு ஆயுதம் இருக்கிறதா என்பதை இஸ்ரேல் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. "இஸ்ரேலின் இந்த அணுகுமுறை அணு யுகத்தில் தனித்துவமானது என கருதலாம்" என, பிரிட்டனின் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்க்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஆவ்னெர் கோஹன். இவர் அணு ஆயுத பரவலை தடுப்பதற்கான கல்விகளுக்கான பேராசிரியர் என்பதோடு, இஸ்ரேல் அணு திட்டங்கள் குறித்த நிபுணராகவும் அறியப்படுகிறார். இந்த திட்டம் முற்றிலும் புதிது அல்ல இஸ்ரேலின் அதிபராகவும், பிரதமராகவும் இருந்துள்ள ஷிமோன் பெரஸ் தமது நினைவுக் குறிப்புகளில் இதனை எழுதியுள்ளார்: "தெளிவின்மைக்கு அசாதாரணமான சக்தி இருக்கிறது. சந்தேகம் என்பது இரண்டாவது ஹோலோகாஸ்ட்டை திட்டமிடுபவர்களுக்கு எதிரான சிறந்த தடுப்பரணாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார். கோஹன் கூறுகையில், "அணு சக்தி குறித்த தெளிவின்மை இஸ்ரேலின் மூலோபாய மற்றும் ராஜீய ரீதியான சாதனை" என குறிப்பிடுகிறார். அவரது கருத்தின்படி, சர்வதேச சமூகத்தின் மறைமுக ஒப்புதலுடன் கூடிய இந்த திட்டமானது "இஸ்ரேல் இரண்டு சூழ்நிலைகளிலும் பலனடைய உதவி செய்கிறது" என கூறியுள்ளார். "இஸ்ரேல் வேண்டுமேன்றே தெளிவற்ற தன்மையைத் தேர்வு செய்துள்ளது. இந்த நாடு அணுஆயுத பரவலை தடுப்பதற்கான எந்த ஒப்பந்தத்திலும் இணையவில்லை. இதனால் சர்வதேச அமைப்புகளின் எந்த ஆய்வுக்கும் உட்பட வேண்டியதில்லை" என பிபிசி முன்டோவிடம் கூறியுள்ளார் ஜேபியர் பிகஸ். "ராணுவ விவகாரங்களில் இஸ்ரேல் மட்டுமல்ல, உலகின் பல நாடுகள் வெளிப்படைத் தன்மை இல்லாமல் தான் உள்ளன. ஆனால், இஸ்ரேல் அணுசக்தி சார்ந்த விவகாரங்களிலும் வெளிப்படைத்தன்மை இன்றி இருக்கிறது " என்கிறார் பிகஸ். அவர் மேலும் கூறுகையில், "இஸ்ரேலின் பார்வையிலிருந்து இதனை அணுகும்போது, இந்த தெளிவின்மை அதன் விருப்பங்களை பாதுகாக்கிறது" என்கிறார். "இதில் உண்மை என்னவென்றால், இஸ்ரேலிடம் அணுசக்தி திட்டம் உள்ளது என்பது நமக்கு தெரியும், அந்நாட்டிடம் குண்டுகள் உள்ளன என்பதும் தெரியும். அவற்றை பயன்படுத்தும் திறனும் அந்நாட்டுக்கு இருக்கிறது என்பதையும் நாம் அறிவோம்" என பிகஸ் கூறுகிறார். பட மூலாதாரம், AHMAD GHARABLI/AFP/GETTY IMAGES "இந்த தெளிவின்மை வெளியிலிருந்து வந்த தகவல்களால் தான் உடைக்கப்பட்டது. இஸ்ரேல் ஒருபோதும் இதனை மறுக்கவோ, ஒப்புக்கொள்ளவோ இல்லை" என தமது அறிக்கையில் கூறும் கோஹன், "இந்த கொள்கை தனது இருப்பியலுக்கு எதிரான அச்சுறுத்தலில் இருந்து தற்காப்பு அளிப்பதோடு, அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்கு எதிரான அரசியல் பின்விளைவுகளிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்காக அரசியல், ராஜ்ஜீய மற்றும் தார்மீக விலைகளையும் இஸ்ரேல் கொடுப்பதில்லை" என கோஹன் கூறுகிறார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆதரவு பத்திரிகையான 'இஸ்ரேல் ஹாயோம்' அந்நாட்டில் மிகப்பெரிய சந்தாதாரர்களைக் கொண்ட இலவச பத்திரிகையாக அறியப்படுகிறது. இந்த இதழில் வெளியான நீண்ட கட்டுரையில் இஸ்ரேல் தனது அணு சக்தி திறன் குறித்து ஏன் எச்சரிக்கையாக இருக்கிறது என விளக்கப்பட்டுள்ளது. இந்த பத்திரிகையின் கருத்துப்படி, "அணு ஆயுதப் பரவலை எந்த விலை கொடுத்தேனும் தடுக்க வேண்டும் என்பது தான் இஸ்ரேலின் முதன்மை இலக்கு" என கூறப்பட்டுள்ளது. தெளிவின்மை கொள்கையின் ஆதரவாளர்களின் கூற்றுப்படி, "இந்த அணுகுமுறையை கைவிடுவது மத்தியக் கிழக்கில் அணு ஆயுதப்போட்டி விரிவடைவதற்கும், ஆயுதப் போட்டிக்கும் ஊக்கியாக அமையும்" என கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவலை தடுப்பதற்கான மையத்தின் வாதம் வேறாக உள்ளது. வெளிப்படைத் தன்மையற்று இருப்பது "மத்தியக் கிழக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லாத சூழலை ஏற்படுத்த தடையாக இருப்பதாக" அந்த மையம் கூறுகிறது. இஸ்ரேலிடம் அணுசக்தி திட்டம் இருப்பதை எப்படி அறியலாம்? பட மூலாதாரம்,SATELLITE IMAGE (C) 2020 MAXAR TECHNOLOGIES/GETTY IMAGES படக்குறிப்பு, நெகெவ் அணு ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் இஸ்ரேலின் அணுசக்தித்திறன் குறித்த முதல் தகவலானது 1962ம் ஆண்டு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தின் குறிப்பாணை ஒன்றின் மூலம் வெளிப்பட்டது. இதில், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே 1950களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் தெற்கு இஸ்ரேலின் டிமோனா நகரத்தில் அணு மின் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. "பிரான்ஸ் உடனான ஒத்துழைப்பு என்பது புளூட்டோனியத்தை உற்பத்தி செய்யும் அணுஉலையை கட்டமைப்பது" என்கிறார் பிகஸ். கூகுள் வரைபட உதவியுடனான தேடுதலின் முடிவில், "நெகெவ் அணு ஆராயச்சி மையம்" டிமோனா நகரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பாலைவனத்தின் நடுவே இருப்பதாக அறிய முடிகிறது. முதலில் இந்த வளாகத்துக்கு ஜவுளி தொழிற்சாலை, உலோகவியல் ஆராய்ச்சி மையம், வேளாண் வளாகம் என பல்வேறு அறிமுகங்கள் கொடுக்கப்பட்டன. சில காலத்துக்குப் பிறகு 1960களில் அப்போதைய இஸ்ரேல் பிரதமரான டேவிட் பென் குரியன், நாட்டின் அணுசக்தி திட்டம் குறித்து பொதுவெளியில் அறிவித்தார். இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், அணு ஆராய்ச்சி மையமானது "அமைதி நோக்கங்கள்" கொண்டிருப்பதாகக் கூறினார். அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறைகளின் விசாரணை அறிக்கைகள், "இஸ்ரேலிடம் அணு ஆயுத திட்டம் இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகின்றன" என்கிறார் பிகஸ். ரகசிய ஆவணங்களாக இருந்து பின்னர் வெளியிடப்பட்ட சில ஆவணங்களின் மூலம், குறைந்தது 1975 வரையிலும் இஸ்ரேல் அணு ஆயுதங்களை தயாரித்தது என்பதில் அமெரிக்க அரசு உறுதியாக இருந்தது என்பது தெரியவந்துள்ளது. ஆனால், இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்கள் குறித்த வரலாற்றில் முக்கிய திருப்புமுனையானது ஒரு நபரின் பெயருடன் தொடர்புடையது: அவர் தான் மாவ்டுகாய் வானுனு சன்டே டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டி பட மூலாதாரம், DAN PORGES/GETTY IMAGES படக்குறிப்பு, டிமோனா அணுசக்தி மையத்தில் பணியாற்றிய வானுனு 1980களில் இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாயின. வானுனு டிமோனா அணு உலையில் 1985ம் ஆண்டு வரையிலும் 9 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார். அங்கிருந்து வெளியேறும் முன்னதாக வளாகத்தை இரண்டு முறை முழுமையாக புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் அணு ஆயுத தயாரிப்புக்காக கதிரியக்கத் தன்மை கொண்ட பொருட்கள் பிரித்தெடுக்கப்படுவது மற்றும் தெர்மோநியூக்ளியர் ஆயுத வடிவமைப்புக்கான ஆய்வகங்களையும் காட்டின. 1986ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்ற வானுனு அணுசக்தி எதிர்ப்பு அமைப்பினரை சந்தித்தார். கொலம்பியாவைச் சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளரான ஆஸ்கர் கெரேரோவைச் சந்தித்த போது, இந்த புகைப்படங்களை வெளியிட சம்மதித்தார். இதன் மூலமாக வானுனு பிரிட்டிஷ் சன்டே டைம்ஸ் இதழுக்கு வேலை பார்க்கும் பீட்டர் ஹன்னம் எனும் பத்திரிகையாளரை சந்தித்தார். பிபிசியின் "விட்னஸ் டூ ஹிஸ்டரி" நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த பீட்டர் இந்த தகவல்களை வெளியிடுவதன் மூலம், இஸ்ரேல் சர்வதேச அழுத்தத்துக்கு ஆளாகி அணுசக்தி திட்டத்தை நிறுத்தும் என வானுனு நம்பினார் என கூறினார். ஆனால், இந்த நம்பிக்கை எதுவும் நிறைவேறவில்லை. இந்த நிகழ்ச்சியில் வெளியான தகவல்களின்படி, அணுசக்தி குறித்த தகவல் வெளியானதும் வானுனு கடத்தப்பட்டு, போதை மருந்து கொடுக்கப்பட்டு இஸ்ரேல் கொண்டு செல்லப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் தேசத் துரோகம் மற்றும் உளவு பார்த்து இஸ்ரேலின் அணு ஆயுத ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டுக்காக 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2004ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர், தனது செயலுக்காக "மகிழ்ச்சியும் பெருமையும்" அடைவதாகக் கூறினார். ஆனால் அவர் விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியதற்காக மீண்டும் தண்டிக்கப்பட்டார். இம்முறை வெளிநாட்டினருடன் பேசவும், இஸ்ரேலை விட்டு வெளியேறவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. வானுனு வெளிப்படுத்திய பின்னர் இஸ்ரேலிடம் அணு ஆயுத திட்டம் இருப்பது வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இஸ்ரேலிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன? பட மூலாதாரம், RONEN ZVULUN/POOL/AFP/GETTY IMAGES மாவ்டுகாய் வானுனு வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், அந்நாளில் இஸ்ரேலிடம் 100 முதல் 200 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. தற்போதைய சூழலில் ஸ்டாக் ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் போன்ற, அணு செயல்பாட்டு கண்காணிப்பு நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, இஸ்ரேலிடம் சுமார் 90 அணு ஆயுதங்கள் இருக்கலாம். இந்த ஆயுதங்களை தயாரிப்பதற்கான புளூட்டோனியம் டிமோனாவில் உள்ள நெகெவ் அணு ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இஸ்ரேலால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்களின்படி, இந்த அணு உலையானது 26 மெகாவாட் திறனுடைய வெப்ப உலையைக் கொண்டுள்ளது. ஆனால், இதன் உண்மையான திறன் இன்னும் அதிகமாக இருக்கலாம் என சிலர் நம்புகின்றனர். இஸ்ரேலின் மற்ற பகுதிகளில் உள்ள அணு திட்டங்களைப் போன்று இந்த உலையானது சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டதல்ல. பாதுகாப்பு நெறிமுறைகளானது அணு கட்டமைப்புகள் அமைதியான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதோடு வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதை தடை செய்கிறது. ஆனால், இஸ்ரேல் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் கொடுக்காத போது, அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை எப்படி கணக்கிட முடியும்? "சர்வதேச அமைப்புகள் அணு திட்டங்களை கண்காணித்து, ஆண்டுதோறும் ஆயுதங்கள் குறித்த மதிப்பீடுகளை வழங்குகின்றன" என்கிறார் பிகஸ். "குறைவான தகவல்களையே கொண்டிருக்கும் இஸ்ரேல் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளைப் பொருத்தவரையிலும், கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட யுரேனியம் மற்றும் புளூட்டோனியத்தின் உத்தேச அளவு மதிப்பிடப்பட்டு இதன் மூலம் அணு ஆயுதங்கள் கணக்கிடப்படும்" என பிகஸ் விளக்குகிறார். அணு உலைகள் இயங்கிய நேரம் மற்றும் அவற்றின் திறன் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இவற்றில் தயாரிக்கப்படும் அணு பிளவு பொருளின் அளவு மதிப்பிடப்படுகிறது. சுமார் 50 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வடகொரியாவுக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ பின்பற்றப்படும் இந்த அணுகுமுறையானது முற்றிலும் புதிது அல்ல. 2011-ல் நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பு , அணு உலைகளில் காலமுறைப்படியான ஆய்வுகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கட்டாயமாக்கப்படவில்லை. அப்போது, சர்வதேச அமைப்புகள் சோவியத் ஒன்றியம் அமெரிக்காவிடம் இருக்கும் அணு ஆயுதங்களை தோராயமாகவே கணக்கிட்டன என்று பிகஸ் கூறுகிறார். "இந்த மதிப்பீடுகள் பின்னாளில் ஆய்வு நடத்தப்பட்டு வெளியான அறிக்கைகளுடன் ஒத்துப்போயின. எனவே, இஸ்ரேலுக்கான தற்போதைய கணக்கீடு உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என நாம் கூறலாம்" என பிகஸ் கூறுகிறார். அணு ஆயுதமற்ற நாடாக மாற முடியுமா? பட மூலாதாரம்,REUTERS 2012-ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இஸ்ரேல் தனது அணுசக்தி திட்டங்களை சர்வதேச ஆய்வுக்கு அனுமதிக்குமாறு வலியுறுத்தியது. இஸ்ரேலை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இணைய வலியுறுத்தும் இந்த தீர்மானத்துக்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் கனடா வாக்களித்தன. 1970-ஆம் ஆண்டு இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இரான் கையெழுத்திட்டது. சமீப நாட்களில் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது குறித்து இரான் நாடாளுமன்றம் ஆலோசித்து வருவதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பாகெய் குறிப்பிட்டார். மறுபுறம் மத்திய கிழக்கு பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் தீர்மானமானது ஐ.நா. பொதுச்சபையில் அவ்வப்போது முன்மொழியப்படுகிறது. "இந்த முன்மொழிவை இஸ்ரேல் மறுத்துவிட்டதோடு, இதனை தனது இறையாண்மை மீதான தாக்குதல்" என்றும் விமர்சிக்கிறது என்கிறார் பிகஸ். அவரது கூற்றுப்படி, ஐக்கிய நாடுகள் அவையின் ஆயுதக்குறைப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் பத்திரிகை காப்பக அறிக்கைகளின்படி, இதுபோன்ற கட்டுப்பாடுகள் பிராந்தியத்தில் உள்ள உண்மையான அபாயங்களை குறைக்காது என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது. ஜேபியர் பிகஸ் வலியுறுத்துவது என்னவென்றால், "எந்த ஒரு நாடு அணு ஆயுதங்களை வைத்திருப்பதும் கவலை அளிக்கக்கூடியது தான். ஏனென்றால், இந்த ஆயுதங்களை வைத்திருப்பது இயல்பாகவே ஆபத்தானது" என்கிறார். "ஆனால் உண்மையில் இஸ்ரேல், ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானங்களை மீண்டும் மீண்டும் மீறி வருகிறது. சர்வதேச சட்டங்கள், மனிதாபிமான சட்டங்களை தொடர்ந்து புறக்கணிக்கும் இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. வேறு எந்த நாடும் அவற்றைத் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியுது என்பது இந்த விஷயத்தை இன்னும் கவலையடையச் செய்கிறது" என பிகஸ் கூறுகிறார். இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnvm326v8njo
  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 23 ஜூன் 2025, 06:31 GMT புதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என்கிற குரல்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. விசிகவைத் தொடர்ந்து காங்கிரசிலும் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுகள் வந்துள்ளன. "கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்தமுறை அதிக தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்போம். பேச்சுவார்த்தையின்போது, அமைச்சரவையில் பங்கு கேட்போம்" - என்று கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவருமான ராஜேஷ்குமார் கூறியுள்ளார். இதனை மறுக்கும் தி.மு.கவே, 'கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்' என்று கூறுகிறது. கூட்டணிக் கட்சிகளால் தி.மு.க-வுக்கு நெருக்கடியா? தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது? 'ஆட்சியில் பங்கு ' கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தங்களுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டதாக அப்போதே காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் முணுமுணுப்புகள் எழுந்தன. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் இப்போதே பேசத் தொடங்கியுள்ளனர். படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 20) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், "கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்தமுறை அதிக தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்போம்" என்றார். "காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. தமிழ்நாட்டின் நிலவரத்தை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தை நடக்கும் போது, 'அமைச்சரவையில் பங்கு வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும்' என்று கேட்போம்" என அவர் குறிப்பிட்டார். "துணை முதல்வர் பதவி...தராவிட்டால் மாற்று வழி" பட மூலாதாரம்,FACEBOOK/KRISHNAMURTHY படக்குறிப்பு, குறைந்தது 40 இடங்களைப் பெற வேண்டும் என்பதில் தலைமை உறுதியாக இருக்க வேண்டும் என்கிறார், பொன்.கிருஷ்ணமூர்த்தி இதே கருத்தை பிபிசி தமிழிடம் முன்வைத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, "கடந்த தேர்தலில் குறைவான தொகுதிகளை முடிவு செய்ததன் பின்னணியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் இருந்தார். தி.மு.க-வின் கோரிக்கையை ஏற்று குறைந்த இடங்களில் போட்டியிட்டோம்" எனக் கூறுகிறார். "ஆனால், 2026 தேர்தலில் குறைந்தது 40 இடங்களைப் பெற வேண்டும் என்பதில் தலைமை உறுதியாக இருக்க வேண்டும்" எனக் கூறும் பொன்.கிருஷ்ணமூர்த்தி, "அவ்வாறு கொடுக்காவிட்டால் மாற்று வழிகளை கட்சித் தலைமை ஆலோசிக்க வேண்டும். கூடவே, காங்கிரசுக்கு துணை முதலமைச்சர் பதவியும் தரப்பட வேண்டும்" என்கிறார். "தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. ஆட்சியில் பங்கு கொடுத்தால் தி.மு.க-வுக்கு அதன் பெருமை வந்து சேரும். கூட்டணி ஆட்சி என பா.ஜ.க கூறுகிறது. அவர்களே கூறும் போது, தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி கூறக் கூடாதா?" எனவும் பொன்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, "கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க தொகுதிகளைக் குறைத்துக் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை" என்று மட்டும் பதில் அளித்தார். 'கூட்டணி யாருக்கு அவசியம்': மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் vs திமுக எதிர்க்கருத்தால் கூட்டணியில் பிளவா? தமிழ்நாட்டில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்த பா.ம.க., இந்த நிலைக்கு வந்தது ஏன்? கமலுக்கு சீட், வைகோவுக்கு இல்லை - திமுக முடிவு ஏன்? அதிமுகவில் என்ன நடக்கிறது? "தனித்து நின்று வெற்றி பெற முடியாது" சமீப நாட்களாக, தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள், 'அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம்' எனப் பேசி வருகின்றன. ஜூன் 10 அன்று மா.கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதால் குறைவான தொகுதிகளைக் கேட்டுப் பெற்றோம். அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை" என பேட்டி ஒன்றில் தெரிவித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கட்சியின் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க செயல்படுத்தினாலும் தனித்து நின்று வெற்றி பெறுவது சாத்தியமில்லை" எனக் கூறிய பெ.சண்முகம், "அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியாக நின்று தேர்தலை எதிர்கொள்ளும் போது தி.மு.க தரப்பிலும் கூட்டணியாக நின்றால் மட்டுமே வெற்றி பெற முடியும்" எனக் கூறினார். பெ.சண்முகத்தின் கருத்தை வரவேற்று செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், "அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய தேவை, தி.மு.க-வுக்கு இருக்கிறது. அவர்களும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டிய விருப்பத்தில் இருப்பார்கள்" எனக் கூறினார். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைக்குப் பதில் அளித்த திருமாவளவன், "கூட்டணி ஆட்சி என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. வேண்டாம் என்ற நிலைப்பாடும் இல்லை. ஆனால், அந்தக் கோரிக்கையை வைக்கும் சூழல் கனியவில்லை" எனவும் தெரிவித்தார். "12 தொகுதிகள்" - துரை.வைகோ பட மூலாதாரம்,X/DURAIVAIKO படக்குறிப்பு, தங்கள் கட்சிக்கு குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் அங்கீகாரம் கிடைக்கும் எனக் கூறுகிறார், ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை.வைகோ. ஜூன் 22 அன்று ஈரோட்டில் நடைபெற்ற மதிமுகவின் 31வது பொதுக்குழு கூட்டத்தில், "2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து கூடுதல் தொகுதிகளைப் பெற்று, வென்று, மதிமுக தேர்தல் அங்கீகாரம் பெற வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. "தங்கள் கட்சி குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் அங்கீகாரம் கிடைக்கும்" எனக் கூறுகிறார், ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை.வைகோ. "எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறும்" "தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெறக் கூடிய அணியாக, தி.மு.க கூட்டணி உள்ளது. இதில் அதிக இடங்களைப் பெறுவதற்கான முயற்சிகள் இருக்கும். ஆனால், ஒதுக்கப்படும் இடங்களில் எத்தனை இடத்தில் கூட்டணிக் கட்சிகள் வெற்றிப்பெறப் போகிறார்கள் என்பது முக்கியம்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கும் இடங்களில் அவை பாதிக்கும் குறைவாக வெற்றி பெற்றால் அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறும் சூழல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,FACEBOOK/SIGAMANI படக்குறிப்பு, எத்தனை இடத்தில் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது முக்கியம் எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி. "உதாரணமாக, 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிக இடங்களை பெற்றாலும் காங்கிரஸ் கட்சியால் குறைந்த இடங்களில் மட்டும் வெற்றி பெற முடிந்தது. இதை மனதில் வைத்தே தி.மு.க இடங்களை ஒதுக்கும்" எனவும் சிகாமணி திருப்பதி குறிப்பிட்டார். 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. தி.மு.க 119 இடங்களில் போட்டியிட்டு 23 இடங்களில் வெற்றி பெற்றது. 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. தேர்தல் முடிவில் எட்டு தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. தி.மு.க-வுக்கு 89 தொகுதிகள் கிடைத்தன. "தொகுதிகளை ஒதுக்குவது மட்டுமல்ல, அந்தத் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெற வைக்கவும் தி.மு.க அதிகம் உழைக்க வேண்டிய நிலை உள்ளது" எனக் கூறுகிறார், சிகாமணி திருப்பதி. "வெற்றி மட்டுமே அளவுகோல் கிடையாது" பட மூலாதாரம்,FACEBOOK/MK STALIN இந்தக் கருத்தை மறுத்துப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி, "தேர்தலில் ஒரு கட்சியின் வெற்றி, தோல்வியை வைத்து கூட்டணியை முடிவு செய்ய முடியாது" எனக் கூறுகிறார். 2016 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க, ம.தி.மு.க, த.மா.கா, இ.கம்யூ, மா.கம்யூ ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியாக போட்டியிட்டன. "தி.மு.க தோல்வியடைவதற்கு இந்தக் கூட்டணியும் ஒரு காரணமாக இருந்தது. சுமார் ஒன்றரை சதவிகித வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி மட்டுமே அளவுகோல் கிடையாது. அதிகாரத்தில் பங்கு என்பதை நியாயமான கோரிக்கையாகவே பார்க்கிறேன்" எனக் கூறுகிறார் ஆர்.மணி. "காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை கூடுதல் இடங்களைக் கொடுக்காவிட்டால் கண்டிப்பாக பிரச்னை வரும். கூடுதல் இடங்களைத் தருவதைத் தவிர தி.மு.க-வுக்கு வேறு வழியில்லை" எனவும் ஆர்.மணி குறிப்பிட்டார். 'ஆட்சியில் பங்கு' என்ற காங்கிரஸின் கோரிக்கை குறித்துப் பேசும் ஆர்.மணி, " கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கின்றனர். ஆனால், வெற்றி பெற்ற பிறகு நாங்கள் மட்டுமே அதிகாரத்தில் இருப்போம் என்பதை ஏற்க முடியாது" என்கிறார். "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை தி.மு.க வைக்கிறது. ஆனால், அதிகாரத்தில் பங்கு என்பது தான் ஜனநாயகமாக இருக்கும். ஒரு கட்சி ஓர் இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும்" எனக் கூறுகிறார் ஆர்.மணி. தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க தொடர்ந்து முன்வைப்பதாகக் கூறும் ஆர்.மணி, "இது நியாயமான கோரிக்கை. இதை பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளும் முன்வைக்கின்றன" என்கிறார். "ஸ்டாலினால் சமாளிக்க முடியாது" - ஆர்.மணி 2006 சட்டமன்றத் தேர்தலில் 132 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க 96 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 36 பேரும் பா.ம.க உறுப்பினர்கள் 18 பேரும் தி.மு.க அரசுக்கு ஆதரவு கொடுத்தனர். இதை மேற்கோள் காட்டும் ஆர்.மணி, "2026 தேர்தலில் அப்படியொரு நிலை வந்தால் தி.மு.க தலைமையால் எதிர்கொள்ள முடியாது. வெளியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் அதிகாரத்தில் பங்கு கேட்கும். கருணாநிதியைப் போல ஸ்டாலினால் சமாளிக்க முடியாது" எனக் கூறுகிறார். "கூட்டணி ஆட்சி அமைவது தமிழ்நாட்டுக்கு நல்லது" எனக் கூறும் ஆர்.மணி, "மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைத்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளது. அதேபோல், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்." என்கிறார். "தமிழ்நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள்" - தி.மு.க பட மூலாதாரம்,FACEBOOK/CONSTANTINE படக்குறிப்பு, அதிகாரத்தில் பங்கு என்ற கருத்து ஏற்புடையதல்ல. அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் - தி.மு.க செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் "அதிகாரத்தில் பங்கு என்ற கருத்து ஏற்புடையதல்ல. அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்" எனக் கூறுகிறார், தி.மு.க செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன். "மாநிலத்தில் கூட்டாட்சி என்பதை மக்கள் ஏற்பதில்லை. ஒருவர் ஆளும் போது மட்டுமே தெளிவான முடிவை எடுக்க முடியும் என நினைக்கிறார்கள். கூட்டணி ஆட்சியாக இருந்தால் முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படும்" எனவும் அவர் குறிப்பிட்டார். 1980 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சரிபாதியாக தொகுதிகளை பிரித்துக்கொண்டு தி.மு.க-வும் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டதை நினைவுகூர்ந்து பேசிய கான்ஸ்டன்டைன், "அந்தக் கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. 2011 தேர்தலில் குறைவான தொகுதிகளில் தி.மு.க போட்டியிட்டபோதும் மக்கள் ஏற்கவில்லை" என்கிறார். பட மூலாதாரம்,FACEBOOK/VCK படக்குறிப்பு, எளிய மக்களுக்கு அதிகாரம் என்பதை திருமாவளவன் முன்வைத்தார். தற்போதும் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால், அது 2026 தேர்தலுக்குப் பொருந்துமா என்பது கிடையாது எனக் கூறிவிட்டார் - கான்ஸ்டன்டைன் "தவிர இது ஒன்றும் புதிய கோரிக்கை அல்ல" எனக் கூறும் கான்ஸ்டன்டைன், "கட்சி தொடங்கும் போதே, எளிய மக்களுக்கு அதிகாரம் என்பதை திருமாவளவன் முன்வைத்தார். தற்போதும் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால், அது 2026 தேர்தலுக்குப் பொருந்துமா என்பது குறித்து அவர் ஏதும் கூறவில்லை." என்கிறார். அதிக இடங்களை கேட்பதன் மூலம், ஏற்கெனவே கொடுத்ததை குறைத்துவிட வேண்டாம் என கூட்டணிக் கட்சிகள் உணர்த்துவதாக கான்ஸ்டன்டைன் தெரிவித்தார். "கூட்டணிக் கட்சிகள் கேட்பதைப் போல தி.மு.க-வினரும் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நினைப்பார்கள். தற்போதுள்ள எண்ணிக்கையே தொடரலாம் அல்லது சிறிய அளவில் மாற்றம் இருக்கலாம். அதைத் தலைமை முடிவு செய்யும்" என்கிறார், பேராசிரியர் கான்ஸ்டன்டைன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpqn91pp95qo
  20. நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடர வேண்டும் : செம்மணியில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் Published By: DIGITAL DESK 2 23 JUN, 2025 | 04:58 PM தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளை உலக நாடுகள் அறிந்திருந்தாலும் நீதிக்காக மக்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். செம்மணியில் திங்கட்கிழமை (23) ஆரம்பித்த அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உணர்வுபூர்வமான நிகழ்வில் கலந்து கொண்டுள்ளோம். தமிழ்மக்களின் வாழ்வில் நிண்டகால ஏற்படுத்தப்பட்ட பல அழிவுகளுக்கு நிநீகோரி இப்போராட்டம் நடாத்தப்படுகிறது. இது மக்களின் மனங்களில் அழியாத தாகமாக இருக்கிறது. இதுவரை காலமும் நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதனை உலக மக்கள் அனைவரும் சேர்ந்து செயற்படுத்த முன்வர வேண்டும். உலக நாடுகள் எல்லாம் எங்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளை அறிந்திருந்தாலும் அதைப்பற்றி எந்தவிதமான நீதியும் கிடைக்காமல் மக்கள் நிண்டகாலமாக அணையாத தாகத்தோடு அலைந்து கொட்டிருக்கிறார்கள். ஆகவே இவற்றுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தோடு இந்த அணையா தீபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . குறிப்பாக நாங்கள் நிக்கின்ற செம்மணி பிரதேசத்திலே மனித புதை குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. பல அப்பாவி மக்களது மனித எலும்புக்கூடுகள், எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் இந்த சூழலில் இந்த நிகழ்வு மிகவும் முக்கியமானதாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுகின்ற இந்த வேளையில் யுத்தத்தின் இறுதி நாட்களில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தேடுகின்ற, கேள்விகேட்கின்ற இந்த நாட்களில் மனித புதை குழிகள் பயங்கரமான ஒரு பதிவுகளை, கதைகளை எங்களுக்கு செல்லிக் கொண்டிருக்கின்றன. ஆகவே இவற்றை நாங்கள் உதாசினம் செய்து கொண்டிருக்காது இந்த அரசாங்கமும் உலக நாடுகளும் இந்த சந்தர்பத்தில் மக்கள் எதிர்பார்க்கின்ற நியாயமான நீதியை வழங்க வேண்டும். இனிமேலும் தாமதிக்க கூடாது, நீதியை பெறுவதற்கு தடையாக இருக்கின்ற எல்லாவிதமான தடைகளையும் நீக்கி நியாயமான முறையில் நீதிகிடைக்க வேண்டி இப்போராடம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் உணர்வோடு பங்குபற்றி இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/218238
  21. Published By: PRIYATHARSHAN 19 JUN, 2025 | 04:06 PM வீ. பிரியதர்சன் உங்கள் பிள்ளை, உடன்பிறந்தவர், கணவன், மனைவி அல்லது பெற்றோர் என ஒரு அன்புக்குரியவர் காணாமல்போனதை கற்பனை செய்து பாருங்கள், அவர்களை மீண்டும் கொண்டுவர அல்லது குறைந்தபட்சம் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள், அதற்குப் பதிலாக உங்கள் வேண்டுகோள்கள் செவிடர் காதுகளில் விழுகின்றன. அரசாங்கங்களும் புரட்சிகளும் வந்துபோயின. அனைத்தும் நீதியை உறுதியளித்தன. ஆனால் இறுதியில் அந்த நீதியை வழங்கத் தவறிவிட்டன. ஆயினும் இலங்கையின் வடக்கு, கிழக்கில் 3 மூவாயிரம் நாட்களுக்கு மேலாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர் நீதிக்காக. ஆம், இந்நிலையிலேயே 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி பாரிய மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணத்தின் அரியாலைப் பகுதியிலுள்ள செம்மணி - சிந்துப்பாத்தி பகுதி அறிவிக்கப்பட்டது. அங்கு 19 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீண்டும் அங்கு அகழ்வாராய்ச்சி தொடங்கும் போது மேலும் பல எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 19 எலும்புக்கூடுகளில் 3 பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள், மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம். செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள் மூலம் இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ்சோமதேவ கூறுகிறார். 1996 ஆம் ஆண்டில் கிருஷாந்தி குமாரசாமி வழக்கில் தண்டனை பெற்ற ஒரு இராணுவ சிப்பாயால் 1998 ஆம் ஆண்டில் முதன் முதலில் அம்பலப்படுத்தப்பட்டது செம்மணி புதைகுழி. இதையடுத்து 1999 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற ஆகழ்வின்போது 15 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவற்றில் சில எழும்புக்கூடுகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. இருப்பினும் அந்தக்காலப்பகுதியில் நீதி நிறுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக வடக்கு, கிழக்கைச் சேர்ந்த குடும்பங்கள் முக்கியமாக தாய்மார்கள் மற்றும் கணவனை தொலைத்த மனைவிமார்கள் தங்கள் காணாமல்போன அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தி நீதி கோரி தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அண்மையில் செம்மணியில் உள்ள சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் முன் போராட்டத்தை நடத்திய வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர், சர்வதேச மேற்பார்வை மற்றும் சர்வதேச தரநிர்ணயங்களுக்கு அமைய மனிதப் புதைகுழியின் அகழ்வினை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதுடன் இது ஒரு தனியான சம்பவமல்ல. இது குறித்த விசாரணைகள் மற்றும் அகழ்வுகள் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய முழு உண்மையையும் வெளிக்கொணர உதவும்" என கூறினர். இந்நிலையில், “ செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி இடம்பெறுவது அவசியம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களுக்கு நீதியையும் உண்மையையும் வழங்கும் நோக்கமாக அமைய வேண்டுமென்று சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மையம் (CHRD), காணாமல் போனவர்களின் குடும்பங்கள் (FoD), இலங்கை ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (JDS), கொழும்பு சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் - இலங்கை (ITJP) ஆகியன இணைந்து கடந்த 2023 இல் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்களில், உடல்கள் புதைக்கப்பட்ட பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதாகவும் ஆனால் இதுவரை 20 இடங்களில் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் இருந்து பகுதியளவில் மனித எச்சங்கள், எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இன்றுவரை தங்கள் அன்புக்குரியவர்களை தொலைத்த எந்தவொரு குடும்பமும் மனித எச்சங்களை பெறவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி குறித்து அரசாங்கமும் தென்னிலங்கை ஊடகங்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரும் மௌனமாக இருக்கின்றமை வலிகளை ஆழமாக்குவதுடன் இலங்கையின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கான வாய்ப்பை அச்சுறுத்துவதாக அமைகின்றது. எனவே அரசாங்கம் செம்மணி புதைகுழி அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கி, சர்வதேச தடயவியல் தரங்களை உறுதிப்படுத்த வேண்டும். காணாமல்போனோருக்கான அலுவலகம் போன்ற நிறுவனங்களை இயங்க வைப்பதன் மூலம் உண்மைகளை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையை கட்டியெழுப்பி, கடந்த காலத்தில் விட்ட தவறுகளை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம். கடந்த 1971 மற்றும் 1987, 1989 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜே.வி.பி. கிளர்ச்சிகளின் போது, தெற்கிலுள்ள சிங்களக் குடும்பங்கள் சூரியகந்த மற்றும் மாத்தளை புதைகுழிகளில் இழந்த அன்புக்குரியவர்களை நினைத்து வேதனையையை எதிர்கொண்டனர். அண்மையில் சர்வதேச தொலைக்காட்சி நேர்காணல் மூலம் வெளிச்சத்துக்கு வந்த படலந்த விவகாரம் பொதுமக்களின் சீற்றத்தை தூண்டியது. ஆனால் இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு எந்தப்பொறுப்பும் அளிக்கப்படவில்லை. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என நாம் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அழுதோம். அப்படியானால் நாம் ஏன் செம்மணியிலிருந்து விலகிச்செல்கின்றோம் ? கடந்த காலத்தை எதிர்கொள்வது பிரிவினை அல்ல, அது ஒற்றுமைக்கான பாதையாகும். நல்லிணக்கம் என்பது எமது கடந்த காலத்தின் கொடூரங்களை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான எமது கேடயம், மேலும் பொருளாதார மீட்சிக்கான பாதையும் கூட. நல்லிணக்கம் தான் முன்னோக்கிச் செல்லும் பாதை, அத்துடன் கடந்த கால தவறுகளுக்கு பொறுப்பேற்பது உண்மையைத் தேடுவதற்கும் உண்மையான குணப்படுத்தலுக்கும் இன்றியமையாதது. https://www.virakesari.lk/article/217915
  22. இரானை தாக்கி டிரம்ப் கையில் எடுத்த பேராபத்து என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்டனி ஜுர்சர் பதவி, வட அமெரிக்க செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "அமைதியை நிலைநாட்டுபவராக" இருப்பேன் என்ற வாக்குறுதியுடன் ஜனவரி மாதம் வெள்ளை மாளிக்கைக்கு திரும்பிய அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் - இஸ்ரேல் இடையே நடைபெறும் இடர்கள் மிகுந்த மோதலில் அமெரிக்காவை திணிக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளது. இதன் முலம் பதவியேற்றது முதல் மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவருவதற்கு மாறாக, பெரிய போரின் விளிம்பில் இந்த பிராந்தியத்தை டிரம்ப் அழைத்து சென்றுள்ளார். அமெரிக்க படைகள் இரானில் உள்ள மூன்று அணு ஆயுத நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்த இரண்டு மணி நேரத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய டிரம்ப், அந்த தாக்குதல் "அற்புதமான வெற்றியை," பெற்றதாக தெரிவித்தார். இந்த நகர்வு, இரான் ஒரு அணு ஆயுத சக்தியாக வளரக்கூடிய வாய்ப்பு இல்லாத ஒரு நீடித்த அமைதிக்கான கதவைத் திறக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். உச்சபட்ச பாதுகாப்பு கொண்ட தனது ஃபொர்டோ அணு ஆயுத நிலையத்திற்குச் சிறிய சேதங்கள்தான் ஏற்பட்டதாக இரான் தெரிவித்துள்ளது. எந்த தரப்பு சொல்வது உண்மை என்பதற்கு காலம் பதில் சொல்லும். அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடாவிட்டால், "மிகவும் மோசமான மற்றும் மிக எளிதான" தாக்குதல்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் என துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்பு செயலாளார் பீட் ஹெக்செத் ஆகியோர் புடைசூழ, டிரம்ப் இரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத்திய கிழக்கு ஏற்கனவே "விளிம்பில்" இருப்பதாக குறிப்பிட்டார் ஐநா பொதுச் செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ் இன்னமும் "பல இலக்குகளில் எஞ்சியிருப்பதாக" கூறிய டிரம்ப், அமெரிக்கா அவற்றை "வேகம், துல்லியம் மற்றும் திறனுடன்," தாக்கும் எனக் கூறினார். டிரம்ப்பின் வீரவேசமாக பேச்சுக்கள் ஒரு பக்கம் இருந்தாலும். இரானில் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டால் அது அமெரிக்கா, அந்தப் பிராந்தியம் மற்றும் மொத்த உலகுக்குமே மிக மோசமான சூழ்நிலையாக அமையக்கூடும். மத்திய கிழக்கு ஏற்கனவே "விளிம்பில்" இருப்பதாக குறிப்பிட்ட ஐநா பொதுச் செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ், மோதலைத் தீவிரப்படுத்தும் அமெரிக்காவின் முடிவால் ஒரு சுழற்சியான குழப்பநிலை ஏற்படும் என எச்சரித்தார். அமெரிக்கா தாக்கினால் பதிலடி தரப்படும் என ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்தது போல் இரான் பதிலடி தந்தால் – அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தை அமெரிக்க தரப்பு உணரக்கூடும். பி-2 போர் விமானம், ஜிபியூ- 57: இரானை தாக்க அமெரிக்கா இந்த ஆயுதங்களை இரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு - டிரம்ப் கூறியது என்ன? அமெரிக்க தாக்குதலில் இரான் அணுசக்தி தளங்களில் ஏற்பட்ட சேதம் என்ன? 5 கேள்வி-பதில்கள் காற்றில் பறந்த டிரம்ப்பின் இரண்டு வார எச்சரிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப்பின் வழக்கத்திற்கு மாறான முடிவு, தனது கட்சிக்குள் ஒற்றுமை இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு முயற்சியாக இருக்கக்கூடும் இரான் "நிபந்தனையின்றி சரணடையவேண்டும்" என இந்த வாரத்தில் டிரம்ப் பேசியது அவர் மேலும் பின்வாங்குவதைக் கடினமாக்கும் ஒரு நிலைக்கு அவரைத் தள்ளக்கூடும். இரானும் தன் பங்குக்கு விடுத்த எச்சரிக்கைகள் காரணமாக அதே போன்றதொரு மூலையில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இப்படித்தான் போர்கள் தொடங்கி அதோடு தொடர்புடையவர்களின் கற்பனையையும், கட்டுப்பாட்டையும் மீறி பெரிதாகின்றன. வியாழக்கிழமை, இரானியர்களுக்கு டிரம்ப் இரண்டு வாரம் அவகாசம் கொடுத்திருந்தார், ஆனால் அது எதிர்பார்த்ததைவிட மிகக் குறுகிய காலமாக- வெறும் இரண்டு நாட்களாக மாறிப் போனது. தான் நடவடிக்கை எடுத்துவிட்டதாக டிரம்ப் சனிக்கிழமை இரவு அறிவித்தார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு "இரண்டு வாரம் அவகாசம்" என்பது வெறும் ஏமாற்றுதானா? இரானியர்களுக்குப் போலியான ஒரு பாதுகாப்பு உணர்வை கொடுக்கும் முயற்சியா? அல்லது அமைதி பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப்பால் நியமிக்கப்பட்ட ஸ்டீவ் விட்காஃப் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததா? தாக்குதலுக்குப் பிந்தைய உடனடி தாக்கம் குறித்து அதிகம் தெரியவில்லை. ஆனால் தனது சமூக ஊடகப் பதிவு மற்றும் தனது தொலைக்காட்சி உரை மூலம் அமைதிக்கான கதவை திறக்க டிரம்ப் முயற்சி செய்தார். ஆனால் இது அதீத நம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கலாம். இரானின் ராணுவ வலிமையைக் குறைக்க இஸ்ரேல் கணிசமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், ஆயதுல்லாவிடம் இன்னமும் ஆயுதங்கள் உள்ளன. நிலைமை வேகமாக மோசமடையக் கூடும். இப்போது காத்திருப்பு தொடங்குகிறது. தனது அணு ஆயுத திட்ட மகுடத்தின் முத்தாக கருதப்படும் ஃபோர்டோ உட்பட மூன்று நிலைகள் மீதான தாக்குதல்களுக்கு இரான் எப்படி பதிலளிக்கப்போகிறது? அமெரிக்க தாக்குதல்கள் பேச்சுவார்த்தையில் இரான் மேலும் இறங்கிவர வழிவகுக்கும் என டிரம்ப் நம்புவதாக தோன்றுகிறது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலில் இருக்கும் போது பேச்சுவார்த்தை நடத்த விரும்பாத ஒரு நாடு, அமெரிக்கா குண்டுமழை பொழியும் போது பேசுவதற்கு தயாராக இருக்குமா என்பது கேள்விக்குறிதான். அமெரிக்காவின் தாக்குதல் தனித்துவமான வெற்றி பெற்றதாக டிரம்ப் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. அப்படி இல்லாவிட்டால், மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கான அழுத்தம் அதிகரிக்கும், மிகக் குறைந்த ராணுவ வெற்றிக்கு டிரம்ப் அதிக அரசியல் அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும். டிரம்ப் சந்திக்கும் அரசியல் எதிர்வினைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் தனது நடவடிக்கையை எடுத்துவிட்டார். ஆனால் இது எங்கு இட்டுச் செல்லும் என்பது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. உள்நாட்டு அரசியல் கவலைகளுடன் சர்வதேச பாதுகாப்பும் இந்த அபாயங்களில் அடங்கும். இரான் மீதான அமெரிக்க தாக்குதல் என்ற கருத்துக்கு ஜனநாயக கட்சியினர் மட்டுமல்லாது, டிரம்பின் "அமெரிக்கா முதலில் (America First)," இயக்கத்திற்குள்ளேயும் ஏற்கனவே கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. தனக்கு நெருக்கமான மூன்று ஆலோசகர்கள் உடன் தனது உரையை நிகழ்த்திய டிரம்ப்பின் வழக்கத்திற்கு மாறான முடிவு, தனது கட்சிக்குள் ஒற்றுமை இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு முயற்சியாக இருக்கக்கூடும். குறிப்பாக வெளியுறவு கொள்கையில் அமெரிக்கா மேலும் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை வெளிப்படையாக பேசிக்கொண்டிருக்கும் வான்ஸ், டிரம்ப் இன்னமும் பிற நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்யாதவர்தான் எனவும் அவரது ஆதரவாளாவர்கள் அவரை நம்ப வேண்டும் எனவும் அண்மையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். இந்த தாக்குதல் ஒருமுறை நடவடிக்கையாக இருந்தால், தனது சொந்த முகாமில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சீர்படுத்த டிரம்பால் முடியலாம். ஆனால் இது அமெரிக்காவை இதைவிட பெரிய மோதல்களுக்குள் இழுத்தால், அதிபர் தனது சொந்த தளபதிகள் மத்தியில் கலகத்தை எதிர்கொள்ள நேரலாம். தனது முதல் பதவிக்காலத்தில் போர் எதையும் தொடங்கவில்லை என மார்தட்டிக்கொண்டவரும், கடந்த ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது வெளிநாட்டு யுத்தங்களில் அமெரிக்காவை ஈடுபடுத்திய முந்தைய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பரப்புரை செய்தவருமான ஒரு அதிபருக்கு சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதல் ஒரு ஆக்ரோஷமான நடவடிக்கை. டிரம்ப் தனது நடவடிக்கையை எடுத்துவிட்டார். ஆனால் இது எங்கு இட்டுச் செல்லும் என்பது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyq8550v4eo
  23. ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்; இந்தியா ஒரு நட்பு நாடாக இருக்கும் - பிரதமர் மோடி Published By: VISHNU 22 JUN, 2025 | 08:42 PM ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (22) ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கோவுடன் தொலைபேசியில் இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல்-ஈரானியப் போர் பத்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்தும், நிலைமை மோசமடைவதைத் தடுக்க உரையாடல் மற்றும் ராஜதந்திரம் தேவை என்றும் இந்த அழைப்பு விவாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர தனது எக்ஸ் தளத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது; "ஈரான் ஜனாதிபதி பெசேகியுடன் பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதித்தோம். சமீபத்திய மோதல்களுக்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தோம். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான முன்னோக்கி செல்லும் வழியாக, உடனடியாக பதற்றத்தைக் குறைத்தல், உரையாடல் மற்றும் ராஜதந்திரம் ஆகியவற்றுக்கான எங்கள் அழைப்பை மீண்டும் வலியுறுத்தினோம்." 45 நிமிட உரையாடலில், ஈரான் அதிபர் பெசேகி, பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு நன்றி தெரிவித்ததோடு, பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் இந்தியா ஒரு நட்பு நாடாகவும் நண்பனாகவும் இருப்பதாகக் கூறினார். https://www.virakesari.lk/article/218166
  24. யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 ஆவது ஆண்டு நிறைவு மாபெரும் கால்பந்தாட்டப் போட்டி : சென் ஹென்றிஸ் கிண்ணத்தை சுவீகரித்தது Published By: VISHNU 22 JUN, 2025 | 06:47 PM யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரான்ஸ் பழைய மாணவர் சங்க ஆதரவில் அகில இலங்கைரீதியில் அழைக்கப்பட்ட கல்லூரிகளுக்கு இடையில் நடாத்திய அணிக்கு 07 பேர் கொண்ட மாபெரும் காற்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது. இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி.(A-அணி)யும் இளவாலை சென் ஹென்றீஸ் கல்லூரி அணியும் தலா 01:01 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிய வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட. சமநிலை தவிர்ப்பு உதையில்( Penalty) சென் ஹென்றிஸ் கல்லூரி சென் பற்றிக்ஸ் கல்லூரியை 04(05) : 01 (05) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சென் பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆண்டு நிறைவு கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. சென் பற்றிக்ஸ் கல்லூரி ( A-அணி) காலிறுதியாட்டத்தில் மன்னார் சென் சேவியர்ஸ் கல்லூரி அணியை 05:01 என்ற கோல்கணக்கிலும், அரையிறுதியாட்டத்தில் மன்னார்- நானாட்டான் சென் டிலாசால் கல்லூரியை 03:02 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218165
  25. DRINKS 1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England India (15 ov) 471 & 64/1 England 465 Day 3 - Session 3: India lead by 70 runs. Current RR: 4.26 • Min. Ov. Rem: 23 • Last 10 ov (RR): 44/0 (4.40)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.