Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. சுரங்கங்களை தகர்க்கும் உலகின் ஒரே வெடிகுண்டு - இரானின் அணு ஆராய்ச்சி மையங்களுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்துமா? பட மூலாதாரம்,US AIR FORCE படக்குறிப்பு, US B-2 ஸ்பிரிட் மட்டுமே GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) வெடிகுண்டை ஏவும் வகையில் கட்டமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் பார்ருச்சோ பதவி, பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களில் ஒன்று பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த ஆயுதம் இஸ்ரேலின் கைகளிலும் தற்போது இல்லை. GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணுஆயுதம் அல்லாத "பங்கர் பஸ்டர்" ("bunker buster") வெடிகுண்டு தான் அந்த ஆயுதம். அது, அமெரிக்காவிற்கு மட்டுமே சொந்தமானதாக உள்ளது. துல்லியமாக வழிகாட்டப்படும், 30,000 பவுண்ட் (13,600 கிலோ) எடையுள்ள இந்த வெடிகுண்டு, ஒரு மலைக்குள் ஆழமாக புதைக்கப்பட்டுள்ள இரானின் ஃபோர்டோ அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் வளாகத்தை ஊடுருவும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதுவரை, எம்ஓபி வெடிகுண்டை உபயோகிப்பதற்கான அனுமதியை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கவில்லை. GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் ஆயுதம் என்ன செய்யும்? அதன் சவால்கள் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்த முடியும்? அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி, GBU-57A/B என்பது, "ஆழமாக புதைக்கப்பட்ட மற்றும் உறுதியாக கட்டப்பட்ட பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு பெரிய ஊடுருவக்கூடிய ஆயுதம்"என அறியப்படுகின்றது. இந்த வெடிகுண்டு சுமார் ஆறு மீட்டர் நீளமுடையது. இது வெடிக்கும் முன் சுமார் 200 அடி (61 மீட்டர்) ஆழத்தில் நிலத்தின் உள்ளே ஊடுருவக்கூடியது என நம்பப்படுகிறது. இதுபோன்ற வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டால், ஒவ்வொரு வெடிப்பும், நிலத்தை ஆழமாக துளையிட்டு, இலக்கைச் சேதப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது. போயிங்கால் தயாரிக்கப்பட்ட எம்ஓபி (MOP), இதுவரை போரில் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. எனினும், இது அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் மிஸைல் ரேஞ்ச் (White Sands Missile Range) என்ற ராணுவ சோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. "அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என அழைக்கப்படும் 21,600 பவுண்ட் (9,800 கிலோ) எடையுள்ள Massive Ordnance Air Blast (MOAB) வெடிகுண்டை விட இது அதிக சக்தி வாய்ந்தது. இந்த MOAB, 2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் போருக்காக பயன்படுத்தப்பட்டது. "MOAB போலவே பெரிய அளவிலான ஆயுதங்களை உருவாக்க முயற்சித்த அமெரிக்க விமானப்படை, வெடி பொருளை மிகவும் வலிமையான உலோகப் பெட்டிக்குள் வைத்திருக்கும் வகையில் வடிவமைத்தது. அதன் விளைவாக உருவானது தான் GBU-57A/B மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்" என்று கூறுகிறார் பிரிட்டனின் ப்ராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலுள்ள அமைதிக் கல்வித் துறையின் பேராசிரியரான பால் ரோஜர்ஸ். தற்போது , எம்ஓபி வெடிகுண்டை ஏவுவதற்காக கட்டமைக்கப்பட்டும், நிரலாக்கம் செய்யப்பட்டும் இருப்பது அமெரிக்காவின் B-2 ஸ்பிரிட் என்ற ஸ்டெல்த் பாம்பர் மட்டும் தான். B-2 என அழைக்கப்படும் இந்த போர் விமானம், நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் தயாரித்தது. அமெரிக்க விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாக இந்த விமானம் கருதப்படுகின்றது. இந்த விமானத்தின் உற்பத்தியாளரான நார்த்ரோப் க்ரம்மனின் கூற்றுப்படி, B-2 விமானம் 40,000 பவுண்டு (18,000 கிலோ) வரை சுமக்கக்கூடியது. ஆனால், இரண்டு GBU-57A/B "பங்கர் பஸ்டர்" வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் B-2 விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மொத்த எடை சுமார் 60,000 பவுண்டு (27,200 கிலோ). குண்டுவீச்சுக்குப் பயன்படும் இந்த நீண்ட தூர கனரக விமானம், எரிபொருள் நிரப்பாமல் சுமார் 7,000 மைல்கள் (11,000 கிமீ) வரை பறக்கக்கூடியது. பறக்கும் நிலையில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், அதன் வரம்பு 11,500 மைல்கள் (18,500 கிமீ) ஆக அதிகரிக்கிறது. இதன் மூலம், உலகின் எந்தப் பகுதியையும் சில மணி நேரங்களில் இந்த விமானத்தால் அடைய முடியும் என நார்த்ரோப் க்ரம்மன் கூறுகிறது. இரான் போன்ற நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய நாட்டிற்கு எதிராக எம்ஓபி வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டால், B-2 குண்டுவீச்சு விமானங்களுடன் கூடுதல் விமானங்களும் அதில் பங்கேற்க நேரிடும். எடுத்துக்காட்டாக, எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக F-22 ஸ்டெல்த் ஸ்ட்ரைக் விமானங்கள் பயன்படுத்தப்படலாம். அதன் பிறகு, சேதத்தை மதிப்பீடு செய்யவும், அதற்குப் பிறகும் தாக்குதல்களைத் தொடரவேண்டுமா என்பதை தீர்மானிக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம் என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார். இந்த எம்ஓபி வெடிகுண்டுகள் அமெரிக்காவிடம் மிகக் குறைந்த அளவு இருப்பதாக அவர் மதிப்பிடுகிறார். "அவர்கள் சுமார் 10 அல்லது 20 எம்ஓபி வெடிகுண்டுகளை வைத்திருக்கக்கூடும்" என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ். பட மூலாதாரம்,WHITEMAN AIR FORCE BASE படக்குறிப்பு, எம்ஓபி வெடிப்பதற்கு முன் மேற்பரப்பில் இருந்து சுமார் 200 அடி (61 மீட்டர்) வரை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது. இரானுக்கு எதிராக எம்ஓபி வெடிகுண்டு பயன்படுத்தப்படுமா? ஃபோர்டோ என்பது இரானின் இரண்டாவது அணுசக்தி செறிவூட்டல் நிலையமாகும். நடான்ஸுக்கு பிறகு இதுவும் ஒரு முக்கிய மையமாகக் கருதப்படுகிறது. டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே சுமார் 60 மைல் (95 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள கோம் நகருக்கு அருகில், ஒரு மலையின் ஓரத்தில் இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்திற்கான கட்டுமானம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர், 2009ஆம் ஆண்டு இந்த நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையம் அங்கு செயல்படுவதை, இரான் அதே ஆண்டில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. 80 மீட்டர் (260 அடி) ஆழத்தில் பாறை மற்றும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பதுடன், இரான் மற்றும் ரஷ்ய தயாரிப்புகளான தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை அமைப்புகளால், ஃபோர்டோ வளாகம் பாதுகாக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில், சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA), அந்த தளத்தில் ஆயுத தரத்திற்கு அருகிலுள்ள 83.7% தூய்மையுடைய யுரேனியம் துகள்களைக் கண்டறிந்தது. இரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் அழிப்பதே, இரான் மீது தாக்குதல் நடத்துவதன் நோக்கம் என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார். அதனை, "இஸ்ரேலுக்கு ஒரு இருத்தலியல் (existential) அச்சுறுத்தல்" எனவும் அவர் விவரித்தார். அந்த நோக்கத்தை அடைய, ஃபோர்டோ வளாகமும் ஒரு முக்கியப் பகுதியாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். "இந்த முழு நடவடிக்கையும்… ஃபோர்டோவை முற்றிலும் நீக்குவதன் மூலம் முழுமை பெறும்" என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் யெச்சியல் லீட்டர் வெள்ளிக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு தெரிவித்தார். ஆனால் எம்ஓபி வெடிகுண்டை தனியாக பயன்படுத்துவதற்கான திறன் இஸ்ரேலிடம் இல்லை. மேலும், அமெரிக்கா நேரடியாக ஈடுபடாமல் அதற்கு அனுமதி அளிக்காது என்று பேராசிரியர் ரோஜர்ஸ் குறிப்பிட்டார். "நிச்சயமாக, இஸ்ரேலியர்கள் தனியாக இதைச் செய்ய அமெரிக்கா அனுமதிக்காது. மேலும் இத்தனை பெரிய அளவில் ஊடுருவும் வெடிகுண்டுகளும் இஸ்ரேலிடம் இல்லை" என்று அவர் கூறினார். அமெரிக்கா இந்த வெடிகுண்டை பயன்படுத்துமா என்பது, குறிப்பாக அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமையின் கீழ், அந்த நாடு தங்களது ஈடுபாட்டை அதிகரிக்க தயாரா என்ற விருப்பத்தைப் பொறுத்தது. "இஸ்ரேலுக்கு முழுமையாக ஆதரவளிக்க டிரம்ப் தயாராக உள்ளாரா என்பதைப் பொறுத்தது" என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ். கனடாவில் நடைபெற்ற G7 மாநாட்டில், அமெரிக்கா ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு என்ன தேவைப்படும் என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை"என்று டிரம்ப் பதில் அளித்தார். ஏபிசி நியூஸுடன் நடைபெற்ற சமீபத்திய நேர்காணலில், ஃபோர்டோ மீதான தாக்குதலில் அமெரிக்கா ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தூதர் லீட்டரிடம் கேட்கப்பட்டது. இஸ்ரேல், அமெரிக்காவிடம் தற்காப்பு உதவியை மட்டுமே கேட்டுள்ளது என்று அவர் பதில் கூறினார். "எங்களிடம் பல திட்டங்கள் உள்ளன. அவை ஃபோர்டோவை சமாளிக்க எங்களுக்கு உதவும்," என்று அவர் குறிப்பிட்டார். "எல்லா விஷயங்களும் வானத்தில் பறந்து தூரத்திலிருந்து குண்டு வீசுவது போன்றவை அல்ல," என்றும் அவர் கூறினார். எப்போதுமே தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதியானது என்றும் அணு ஆயுதத்தை உருவாக்க அவர்கள் எப்போதும் முயற்சி செய்யவில்லை என்றும் இரான் கூறி வருகிறது. ஆனால் கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் 35 நாடுகளைக் கொண்ட நிர்வாக குழு, 20 ஆண்டுகளில் முதல் முறையாக இரான் தனது அணுசக்திப் பரவல் தடைகளை மீறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானில் ராணுவ ரீதியாக தலையிட அமெரிக்காவிற்கு என்ன தேவை என்று கனடாவில் நடந்த G7 கூட்டத்தில் டிரம்பிடம் கேட்டபோது, 'நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை' என்று அவர் கூறினார். 'கேம் சேஞ்சர்' சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, "ஆழமாக புதைக்கப்பட்ட இரானின் அணுசக்தி நிலையங்களை சேதப்படுத்துவதில் இஸ்ரேல் எந்த வகையிலும் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு குறைவு தான்" என்று பேராசிரியர் ரோஜர்ஸ் நம்புகிறார். "தங்களால் செய்ய முடியாத விஷயத்தைச் செய்ய, இஸ்ரேலுக்கு எம்ஓபி போன்ற சக்திவாய்ந்த ஒரு வெடிகுண்டு தேவைப்படும்," என்று அவர் கூறினார். "ஃபோர்டோ தளம் செயல்பாட்டில் இருக்கும் வரை, இரான் அணு ஆயுதம் தொடர்பான அபாயத்தை ஏற்படுத்தும் நிலைமையில் தான் இருக்கிறது. டெஹ்ரானுக்கு, அந்த தளத்தில் செறிவூட்டலை அதிகரிக்கவோ அல்லது யுரேனியத்தை வேறு இடத்துக்கு மாற்றவோ வாய்ப்பு இருக்கிறது" என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் அணுசக்தி பரவல் தடுப்பு கொள்கைக்கான இயக்குநர் கெல்சி டேவன்போர்ட் கூறுகிறார். எம்ஓபி பயன்படுத்தப்பட்டாலும், இரானின் அணு ஆயுதத் தளங்கள் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றன, எவ்வளவு பாதுகாப்பாக உள்ளன என்பது தெரியாததால், இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினால் வெற்றி கிடைப்பதற்கும் உத்தரவாதம் இல்லை என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார். "தற்போது உள்ள எந்த ஆயுதத்தையும் விட, இரானின் நிலத்தடியில் ஆழமாக உள்ள அணுசக்தி திறன்களை சேதப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு இந்த ஆயுதத்திடமே உள்ளது. ஆனால் அதைச் செய்ய முடியுமா என்பது யாருக்குத் தெரியும்!" என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cew0lwxwx02o
  2. 18 JUN, 2025 | 09:29 AM நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (17) காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் வியாழக்கிழமை (26) தொடங்கி அடுத்த மாதம் வெள்ளிக்கிழமை (11) ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. அனைத்து பக்தர்களும் சிறப்பான முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீ நாக பூசணி அம்பாளை தரிசிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டடுள்ளது. மேலும், கடந்த வருட திருவிழா ஏற்பாடுகளில் கற்றுக் கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உயர் திருவிழாவினை மேலும் சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்கவும் என்றார். இக் கலந்துரையாடலில் பின்வரும் ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டன நயினாதீவில் மூழ்கிய கடற்பாதையினால் ஏற்பட்டுள்ள கடற் போக்குவரத்துக்கு இடையூறை தவிர்ப்பதற்காக ஒரு பகுதியை கடற்படையின் ஒத்துழைப்புடன் அகற்றுதல் குடிநீர் தேவைப்பாடுகள் ; ஆலயத்திற்குவரும் பக்தர்கள், அமுதசுரபி மண்டபம் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையத்திற்கான தேவையான அளவு குடிநீர்களை சீராக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வழங்குதல் பாதுகாப்பிற்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் ; அதாவது சப்பறத் திருவிழா வரை 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும், சப்பறம், தேர், தீர்த்தம் மற்றும் பூங்காவன உற்சவங்கள் வரை மேலும் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சேவையில் ஈடுபடுத்தல். பக்த்தர்கள் அணிந்துவரும் நகைகளுக்கு அவர்களே பொறுப்பு என அறக்காவலர் சபையால் முன்கூட்டியே அறிவித்தல் வழங்குதல். ஆலயத்திற்கு அருகிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை யின் வீதியினை நிரந்திமாக புனரமைப்பதற்கு முன்பாக தற்காலிகமாக சீர் செய்தல். முதல் தடவையாக தீவகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சாரணர்களின் சேவைகள் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை இலங்கை போக்குவரத்துச் சபையூடாக மேற்கொள்தல். திருவிழாக் காலங்களில் வழமைபோல் யாழ் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை காலை 5.30 மணிக்கு ஆரம்பமாதல் மற்றும் விசேட திருவிழாவான சப்பறம், தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களில் காலை 4.30 மணியிலிருந்து ஆரம்பமாகும் ஒவ்வொரு அரை மணித்தியாலங்களுக்கும் சேவை இடம் பெறவும் ஒழுங்குப்படுத்தல். குறிகட்டுவானில் இருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 80 ரூபாய் அறவிடுதல். அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நேரத்திற்கமைய தனியார் போக்குவரத்து மற்றும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை நடைபெறவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுதல். திருவிழா காலங்களில் நயினாதீவு கிராமங்களில் திருடர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடமாடும் சேவையினை ஈடுபடுத்தல். யாசகம் பெறுவோர் மற்றும் சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுத்துவதை கண்காணிப்பதற்கு ஒரு நாளைக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற அடிப்படையில் அங்கு கடமையாற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் உள்ளடங்கியவகையில் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தல். குறிகட்டுவான் துறைமுகத்தின் உள்நுழைவு வரை வாகனங்கள் தரித்து நிற்பதனை தடுத்தல். ஆலயத்திற்கு முன்பாகவுள்ள கடைகளை அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வேறு பொருத்தமான இடத்தில் மாற்றுதல். நயினாதீவுக்கு 24.06.2025 ஆம் திகதி முதல் 12.07.2025 ஆம் திகதி வரை கட்டடப்பொருட்களை குறிப்பாக கல் மற்றும் மணல் என்பவற்றை எடுத்துச் செல்வது முற்றாக தடைசெய்வதல். தொடர்ந்து எதிர்காலத்தில் கட்டடப் பொருட்களை நயினாதீவு வங்களாவடி துறைமுகத்தின் ஊடாக கொண்டு செல்வதற்கு ஏதுவாக பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள ம், வீதி அபிவிருத்தி அதிகாரசபைய, படகுச் சங்கம், ஆலய அறக்காவலர் சபையினர் மற்றும் பொது அமைப்புகள் ஆய்வு செய்து இறுதி தீர்மானம் எடுத்தல். நயினாதீவில் மதுபான விற்பனையினை மதுவரித்திணைக்களம் நடமாடும் சேவையூடாக கண்காணிப்பது எனவும், விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கைகளை எடுத்தல். பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்தல். அமுதசுரபி அன்னதான சபையினால் மதிய உணவு இரவு உணவு வழங்குதல். மேலும், வைத்திய சேவை, சுகாதாரம், மின்சாரத் தேவை, அம்புலன்ஸ் சேவை, இலங்கை செஞ்சிலுவை மற்றும் சென் ஜோன்ஸ் படையினர் சேவை உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, நாகபூஷணி அம்மன் ஆலயம் அறங்காவலர் சபைத் தலைவர் பரமலிங்கம், வேலணை பிரதேச செயலாளர் சிவகரன், சுகாதார வைத்திய அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், கடற்படை அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மதுவரித் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/217773
  3. 18 JUN, 2025 | 09:23 AM அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரின் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரும் பணியாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் செவ்வாய்க்கிழமை (17) கைதுசெய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட வைத்தியர் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் பிரபல நரம்பியல் நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன ஆவார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தகவல்படி, வைத்தியர் மகேஷி விஜேரத்னவும் மற்றைய நபரும் சில மருந்து வகைகளை தமது தனியார் மருத்துவ நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு அதிக விலைக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நோயாளிகளுக்கு ரூபா 30 மில்லியன் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217771
  4. காமனெயி, அணுசக்தி திட்டம்: இரானில் இஸ்ரேலின் உண்மையான இலக்கு எது? கட்டுரை தகவல் எழுதியவர், லைஸ் டூசெ பதவி, தலைமை சர்வதேச செய்தியாளர் 18 ஜூன் 2025, 01:55 GMT புதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர் வெள்ளியன்று இரான் மீது எதிர்பாராத வகையில் தாக்குதல்களை நடத்திய பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரடியாக இரானிய மக்களுக்கு உரையாற்றினார். ஆங்கிலத்தில் பேசிய அவர், "கொடிய மற்றும் அடக்குமுறை ஆட்சிக்கு" எதிராக நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனத் தெரிவித்தார். இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள், "நீங்கள் சுதந்திரத்தை அடைவதற்கான பாதையை தெளிவுபடுத்தியுள்ளது" என கூறியுள்ளார். தற்போது இரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்து, இலக்குகளும் பரவலாகி வரும் நிலையில், இஸ்ரேலின் உண்மையான இலக்கு தான் என்ன என பலரும் கேட்கின்றனர். இவை, முதல் தாக்குதல்கள் நடந்த வெள்ளியன்று நெதன்யாகு கூறியதைப் போல, "இரானின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுற்றுதல்களை" முடிவுக்குக் கொண்டு வருவது மட்டும் தானா? பொருளாதார தடைகளை நீக்குவதற்கு மாற்றாக, இரானின் அணுசக்தி திறன்களை கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வருவதும் அவரது இலக்கில் உண்டா? அல்லது சுதந்திரத்துக்கான பாதையை தெளிவுபடுத்தியதாக இரானிய மக்களிடம் கூறிய செய்தி, இரானில் மதகுரு ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் பெரிய நோக்கமும் அதில் உள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது நெதன்யாகுவின் திட்டங்களை அறிந்தவர்கள் யார்? இஸ்ரேலில் நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமரின் அரசியல் வாழ்க்கை, இரானிய இஸ்லாமியக் குடியரசால் வரப்போகும் ஆபத்துகளை உலகுக்கு எச்சரிக்கும் அவரின் தனிப்பட்ட இலக்கால் உந்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அவர் காட்டிய குண்டுகள் அடங்கிய பெட்டியில் தொடங்கி, கடந்த 20 மாதங்களாக எரிந்துக் கொண்டிருக்கும் பிராந்திய போரால் ஐ.நாவுக்கு செல்லாமல் தவிர்த்தது வரை இரான் தான் அனைத்தையும் விட மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது தான் அவரின் இலக்காக உள்ளது. கடந்த சில வருடங்களில் பல முறை இரானின் அணுசக்தி தளங்கள் மீது ராணுவ தாக்குதல்களுக்கு நெதன்யாகு உத்தரவிடாமல் அமெரிக்க அதிபர்களும், அவரின் சொந்த தளபதிகளுமே தடுத்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் அனுமதி வழங்கவில்லை எனக் கூறுகிறார். ஆனால் அத்தகைய ஒரு சிறு சமிக்ஞை கூட போதுமானதாக இருக்கும். "தற்போது அவர் மோதலை தொடங்கிவிட்டதால், அதில் முழுவதுமாக இறங்கிவிடுவார்" என நெதன்யாகுவின் திட்டத்தை ஒரு மேற்கத்திய அதிகாரி விவரித்தார். இஸ்ரேலின் முதன்மையான நோக்கம் இரானின் அணுசக்தி திட்டத்தை முடக்க வேண்டும் என்பது தான் என்கிற பார்வையையும் அவர் குறிப்பிட்டு காட்டுகிறார். இந்த முடிவு பல்வேறு நாடுகளாலும், சர்வதேச அணு சக்தி முகமையாலும் கண்டிக்கப்பட்டுள்ளது. அதன் இயக்குநர் ஜெனரல், "எந்தச் சூழலிலும் அணுசக்தி நிலையங்கள் தாக்கப்படக் கூடாது என்பதை நான் பலமுறை கூறியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டங்களின் கீழ் இது சட்டவிரோதமானது என வாதிடும் சட்ட வல்லுநர்களாலும் இது கண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பலரும் இஸ்ரேல் பிரதமர் அவரின் ஆலோசகர்கள் மற்றும் கூட்டாளிகள் பின் தொடரும் அதே இலக்குகளைத் தான் கொண்டுள்ளாரா எனக் கேட்கின்றனர். பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலுக்கு தான் ஒப்புதல் வழங்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். "நெதன்யாகு தனிப்பட்ட முறையில் ஆட்சி மாற்றத்தின் மீது இலக்கு வைத்துள்ள நிலையில், இஸ்ரேலின் அரசியல் மற்றும் ராணுவ கட்டமைப்பு இரானின் அணுசக்தி திட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதிலே குறியாக இருக்கின்றது" என்கிறார் சாத்தம் ஹவுஸ் ஆய்வு நிறுவனத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா திட்டத்தின் இயக்குநரான முனைவர் சனம் வகில். இரண்டாவது இலக்கு கடினமானதாக இருக்கலாம், ஆனால் எட்டக்கூடியது தான் என்று கூறும் அவர், "முதல் இலக்கு, இத்தகைய குறுகிய மற்றும் தீவிரமான மோதலில் எட்டுவது கடினம்" என்றார். இரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பது தான் நோக்கமா? இஸ்ரேலின் நடவடிக்கைகளை, தனது இருப்புக்கான அச்சுறுத்தல்களை அழிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற தோற்றத்தை வழங்க நெதன்யாகு முயல்கிறார். இரானின் பதில் தாக்குதல்கள், அணு குண்டு தயாரிப்பதற்கான கடைசிப்படி எனப் பிரகடனப்படுத்துகிறார் நெதன்யாகு. இரான், அணு ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்கிற இவரின் பிரகடனத்தை மேற்கத்திய கூட்டாளிகளும் வழிமொழிகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் நெதன்யாகுவின் அவசரமும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. அணு குண்டு தயாரிக்கும் திட்டம் தன்னிடம் இல்லை என இரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. கடந்த மார்ச் மாதம், அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநரான துள்சி கப்பார்ட், 'இரான் அணுகுண்டு தயாரிக்கவில்லை' என்பதை அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன எனத் தெரிவித்திருந்தார். சர்வதேச அணுசக்தி முகமையும் (ஐஏஇஏ) அதனுடைய காலாண்டு அறிக்கையிலும் இரான் 60% தூய்மை கொண்ட யுரேனித்தை சேகரித்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது. இது 9 அணு குண்டுகளை தயாரிப்பதற்குத் தேவையான 90% தூய்மை வாய்ந்த ஆயுத ரகத்தை விட தொழில்நுட்ப ரீதியில் சற்று குறைவாகவே உள்ளது. முதல் சில நாட்களில் நடான்ஸ், இஸ்ஃபஹான் மற்றும் ஃபோர்டோவ் என்கிற இரானின் 3 முக்கிய நிலைகள் குறிவைக்கப்பட்டுள்ளன. நடான்ஸில் விமான எரிபொருள் செறிவூட்டல் ஆலை அழிக்கப்பட்டது என ஐஏஇஏ தெரிவித்துள்ளது. இஸ்ஃபஹானில் உள்ள நான்கு "முக்கியமான கட்டடங்களும்" சேதமடைந்துள்ளதாக ஐஏஇஏ தெரிவித்துள்ளது. இரானுக்கு ஏற்பட்ட சேதம் "மிகப்பெரியது" என இஸ்ரேல் கூறும் நிலையில், அவை மிகவும் குறைவானவை என இரான் தெரிவித்துள்ளது. தற்போது வரை 9 அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தளபதிகளைக் கொன்றதன் மூலம் இரானின் "அறிவு ஆதாரங்களை" இஸ்ரேல் தாக்குகிறது. ராணுவ நிலைகள், ஏவுகணை ஏவும் தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளை உள்ளடக்கிய இஸ்ரேலின் இலக்குகள் தற்போது பொருளாதாரம் மற்றும் எண்ணெய் வளங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இரானும் தனது தாக்குதல் இலக்குகளை விஸ்தரித்து வருகிறது. இதனால், இருநாடுகளிலும் பொது மக்கள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES/ GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் மிகப்பெரிய மற்றும் பாதுகாக்கப்பட்ட இடமான ஃபோர்டோவ் ஆனால், இரானின் அணுசக்தி திட்டத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமென்றால், இரானின் மிகப்பெரிய மற்றும் பாதுகாக்கப்பட்ட இடமான ஃபோர்டோவுக்கு இஸ்ரேல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும். ஒரு மலைக்கு கீழே பாதாளத்தில் அமைந்துள்ள வளாகத்தில், இரான் அணுஆயுதம் தயாரிப்பதற்கு நெருக்கமான, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தேக்கி வைத்திருப்பதாக வல்லுநர்கள் நம்புகின்றனர். இஸ்ரேலின் தற்போதைய நோக்கம் அதனை இரானுக்கு கிடைக்க விடாமல் செய்ய வேண்டும் என்பது தான் என இஸ்ரேலிய ஊடகங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிக அளவிலான பாறைகளை ஊடுருவிச் சென்று ஆழமான இடங்களை அழிக்கும் குண்டுகள் இஸ்ரேலிடம் இல்லை. ஆனால், அமெரிக்க விமானப் படையிடம் உள்ளது. இவை எம்.ஒ.பி என அழைக்கப்படுகின்றன. இவை, மேசிவ் ஆர்ட்னன்ஸ் பெனிட்ரேட்டர் (Massive Ordnance Penetrator) என அழைக்கப்படும். பெரிய பாதிப்பு ஏற்படுத்த வேண்டுமென்றால் பல நாட்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட வேண்டும். "நெதன்யாகு டிரம்பை அழைத்து 'நான் இதையெல்லாம் செய்துவிட்டேன், பி-2 விமானங்களுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை நான் உறுதி செய்துவிட்டேன். ஆனால், என்னால் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாது' எனக் கூறுவது தான் சாத்தியமான சூழ்நிலையாக இருக்கும்" எனத் தெரிவிக்கிறார், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள உலகளாவிய எரிசக்தி கொள்கைக்கான மையத்தில் உள்ள முன்னாள் அமெரிக்க அதிகாரியும் இரான் நிபுணருமான ரிச்சர்ட் நெப்யூ. "அதிபர் டிரம்ப் எந்த பக்கம் சாய்வார் எனத் தெளிவாக தெரியாது" என மேற்கத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க திட்டமா? டிரம்ப் முன்னும் பின்னுமாக நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இரானை ராணுவ ரீதியாக மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலை வலியுறுத்தினார். ஏனென்றால் தாக்குதல் என்பது டிரம்ப் அதிகம் விரும்பும் இரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும். ஆனால், இஸ்ரேல் தாக்கிய பிறகு, அந்த தாக்குதல்களை "சிறப்பானது" என்று பாராட்டியவர் "இனி அதிகம் வரப்போகிறது" என்றும் எச்சரித்திருந்தார். ஆனால், இவை ஒப்பந்தத்தை நோக்கி இரானை நகர்த்தும் என்றும் அவர் கூறுகிறார். இதன் பிறகு ஞாயிறன்று அவரின் ட்ரூத் சோசியல் தளத்தில், "நாம் விரைவில் இஸ்ரேல் - இரான் இடையே அமைதியை நிலைநாட்டுவோம். பல அழைப்புகளும் சந்திப்புகளும் தற்போது நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார். ஞாயிறன்று ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை, இஸ்ரேல் உடனடியாக தாக்குதல் நடத்தாது என்று இரானை நம்ப வைப்பதற்கான சதித்திட்டம் தான் என இரான் சந்தேகிக்கிறது. வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இரானை ராணுவ ரீதியாக மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலை வலியுறுத்தினார் டிரம்ப். மற்றவர்கள் இந்த நேரத்தை முக்கியமானதாகப் பார்க்கின்றனர். "இஸ்ரேலின் எதிர்பாராத தாக்குதல்கள் இரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளும் அதிபர் டிரம்பின் சாத்தியங்களை இல்லாமல் ஆக்கவே திட்டமிடப்பட்டவை" என்கிறார் வெளியுறவுக்கான ஐரோப்பிய கவுன்சிலில் உள்ள மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா திட்டத்தின் துணைத் தலைவரான எல்லி ஜெரன்மாயே. "சில இஸ்ரேலிய அதிகாரிகள், இந்தத் தாக்குதல்கள் ராஜாங்க பாதையில் அமெரிக்க தரப்பை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது என வாதிடுகின்றனர், ஆனால் அதன் நேரமும் அளவும் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க வேண்டும் என்பதற்கானது தான் என்பது தெளிவாக உள்ளது" என்றார் அவர். "ஒரு ஒப்பந்தம் எட்டும் தூரத்தில் தான் இருந்தது" என இந்தப் பேச்சுவார்த்தைகளில் தொடர்புடைய அதிகாரிகள் கடந்த வாரம் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் இவை அனைத்தும், இரான் ஆக்கப்பூர்வ சிவில் திட்டங்களுக்கானதாக இருந்தாலும் ஒற்றை இலக்க அளவில் கூட யுரேனியம் செறிவூட்டலை மேற்கொள்ளக் கூடாது என்ற உச்சபட்ச கோரிக்கையில் இருந்து அமெரிக்கா எவ்வளவு தூரம் இறங்கி வருகிறது என்பதைப் பொறுத்து தான். இரான் இதனை ஏற்க கூடாத ஒன்றாக கருதுகிறது. டிரம்ப் தனது முதல் ஆட்சியில் நெதன்யாகுவின் இடைவிடாத கோரிக்கைகளுக்கு இணங்க 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு, இரான் 3.67% (அணு மின் நிலையங்களுக்கான எரிபொருளை தயாரிக்கக்கூடிய அளவு) என்கிற அளவில் மட்டுமே அதன் யுரேனியம் செறிவூட்டல் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டில் இருந்து விலகியது. தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ள இரானுக்கு 60 நாட்கள் கெடு விதித்தார் டிரம்ப். இந்த விவகாரத்தில் அனுபவம் வாய்ந்த மத்தியஸ்தர்கள், இத்தகைய சிக்கலான விவகாரத்துக்கு இது மிகவும் குறைவான காலகட்டம் என உணர்ந்தனர். 61வது நாளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. பேச்சுவார்த்தைக்கான பாதை தற்போது இல்லாமல் போய் விட்டது எனக் கூறும் வகில், "பதற்றத்தைத் தணிக்க பிராந்திய அளவிலான முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன" என்றார். நெதன்யாகு என்ன மனநிலையில் உள்ளார்? தற்போது அதிகரித்துள்ள பதற்றம் அணுசக்தி கையிருப்புகள், சூப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பற்றியது அல்ல என இரான் நம்புகிறது. "இவை, ஒரு நாடாக இரானின் திறன்களை அதன் ராணுவ வலிமையை குறைத்து இரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான அதிகார சமநிலையை வெகுவாகக் குறைத்து, முடிந்தால் இஸ்லாமியக் குடியரசு ஆட்சியை மொத்தமாக கவிழ்ப்பதற்கான இஸ்ரேலின் திட்டம் என்றே இரான் பார்க்கிறது" என்கிறார், இரான்ஸ் கிராண்ட் ஸ்ட்ராடஜி புத்தகத்தின் ஆசிரியரும் சர்வதேச விவகாரங்களுக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பள்ளியில் மத்திய கிழக்கு படிப்புகள் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பேராசிரியருமான வலி நஸ்ர். ஆனால், இரான் பொதுமக்கள் இதற்கு எவ்வாறு பதில் அளிப்பார்கள் என்பது தெளிவாக இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல வருடங்களாக சர்வதேச தடைகள் மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஊழலால் தவித்து வருகின்றனர் இரானிய மக்கள் 9 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த நாடு பல வருடங்களாக சர்வதேச தடைகள் மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஊழலால் தவிக்கிறது. விலைவாசி உயர்வு தொடங்கி வேலையில்லா திண்டாட்டம், தண்ணீர் மற்றும் மின்சார தட்டுப்பாடு மற்றும் பெண்களை கண்காணிக்கும் கலாசார காவலர்கள் வரை இரானில் பல விவகாரங்களில் போராட்டங்கள் ஒவ்வொரு வருடமும் தொடங்கி மறைந்திருக்கின்றன. 2022-ல் அதிக சுதந்திரம் வேண்டி எதிர்பாராத அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன. அவையெல்லாம் கடுமையான முறையில் கட்டுப்படுத்தப்பட்டன. தற்போது பொது மக்களின் மனநிலையை ஆய்வு செய்துள்ளார் நஸ்ர். "தொடக்கத்தில் பிரபலமில்லாத நான்கு, ஐந்து தளபதிகள் கொல்லப்பட்ட போது ஒரு விதமான நிம்மதியுணர்வு இருந்தது. ஆனால் தற்போது குடியிருப்பு கட்டடங்கள் தாக்கப்பட்டு, பொதுமக்கள் கொல்லப்படுகிறர்கள், நாட்டின் எரிசக்தி மற்றும் மின் கட்டமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன" "பெரும்பாலான இரானியர்கள் தங்கள் நாட்டின் மீது குண்டுகளை ஏவி வரும் ஆக்கிரமிப்பாளர் வசம் சாய்ந்து அதனை விடுதலையாகப் பார்க்கும் சூழ்நிலை இருப்பதாக எனக்கு தெரியவில்லை" என்றார். ஆனால், நெதன்யாகுவின் கூற்றுகள் பரவலான தாக்குதலைப் பற்றியே உள்ளன. பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு,எதிர்காலத்தில் அமெரிக்காவால் மட்டுமே இதனை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்றார் டேனியல் லெவி. சனிக்கிழமை, ஆயதுல்லா அலி காமனெயி அரசின் அனைத்து இடங்களையும், இலக்குகளையும் குறிவைத்து தாக்குவோம் என அவர் எச்சரித்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் ஆட்சி மாற்றம் ஒரு அங்கமாக இருக்கிறதா என்கிற கேள்விக்குப் பதிலளித்த இஸ்ரேல் பிரதமர், "அது சாத்தியமான முடிவாக இருக்கும், ஏனென்றால் இரான் அரசு மிகவும் பலவீனமாக உள்ளது" என்றார். "நாட்டின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என்கிற அரசின் அச்சத்தை உளவியல் போர் தந்திரத்தின் ஓர் அங்கமாக இஸ்ரேல் கையாளப் பார்க்கிறது" என்கிறார் நெதன்யாகு வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் ஆசிரியரும், தி எகனாமிஸ்டின் இஸ்ரேல் செய்தியாளருமான அன்ஷெல் பிஃபர். "இரான் அரசின் வீழ்ச்சியை யூகிப்பதோ அல்லது தூண்டுவதோ அர்த்தமற்றது என்பது இஸ்ரேல் உளவு அமைப்பின் ஒருமித்த எண்ணமாக உள்ளது. இது உடனடியாக நடக்கலாம் அல்லது 20 வருடங்களிலும் நடக்கலாம்" என்றார். ஆனால், நெதன்யாகுவின் எண்ணம் வேறாக இருக்கலாம் என பிஃபர் நம்புகிறார். "'தாம் திடமான நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக, நெதன்யாகு நம்பும் மனநிலையில் இருக்கும் சாத்தியங்கள் அதிகம்" என அவர் தெரிவித்தார். அளவில் சிறிய இஸ்ரேல், பெரிய நாடான இரானுடன் மோதுவது எப்படி சாத்தியமாகிறது? - அதிநவீன போர் தளவாடங்கள் கிடைப்பது எப்படி? இஸ்ரேலின் ஹைஃபா நகரை இரான் குறி வைப்பது ஏன்? இந்தியாவுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? நண்பர்கள் எதிரிகளானது எப்படி? இஸ்ரேல் - இரான் மோதல் பற்றிய 10 கேள்விகளும் பதில்களும் ஞாயிற்றுக்கிழமை இரவில், இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை கொல்லும் இஸ்ரேலின் திட்டத்தை அதிபர் டிரம்ப் நிராகரித்துவிட்டார் என ஒவ்வொரு அமெரிக்க ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ராய்ட்டர்ஸ் இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்ட போது இந்தப் பேச்சு தொடங்கியது. இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியன் முதல் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் ட்ஸச்சி ஹனெக்பி வரை முக்கிய தலைவர்கள் பலரும் தங்களது இலக்கு இரானின் அரசியல் தலைமை இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனால், இந்த தருணம் என்பது குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடியது என்று ஹனெக்பி மேலும் கூறினார். ஆபத்தான சண்டை மற்றும் கணிக்க முடியாத அமெரிக்க அதிபர் டிரம்பால்தான் இதன் முடிவு தீர்மானிக்கப்படும். "இதன் வெற்றி அல்லது தோல்வி என்பது இதற்குள் அமெரிக்காவை இழுக்க முடியுமா என்பதைப் பொறுத்து தான் உள்ளது" என்கிறார், அமெரிக்காவின் மத்திய கிழக்கு திட்ட தலைவரும் இஸ்ரேல் அரசின் முன்னாள் ஆலோசகருமான டேனியல் லெவி. "எதிர்காலத்தில் அமெரிக்காவால் மட்டுமே இதன் முடிவுகளை தீர்மானித்து, இந்த சண்டையை ஒரு நிறுத்தத்துக்குக் கொண்டு வர முடியும்" என்று அவர் கூறினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce371gq2kv6o
  5. எந்த காரணத்துக்காகவும் செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்படக் கூடாது - யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் 18 JUN, 2025 | 11:20 AM செம்மணிப் புதைகுழி விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதுடன், புதைகுழிகளின் நீட்சி அறியப்பட வேண்டும். எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக் கூடாது என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் இன முரண்பாடு தோன்றிய பின்னர் சிறுபான்மை இன மக்கள் பல வழிகளிலும் பாதிப்புகளை எதிர்கொண்டனர். அவ்வப்போது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இனக் கலவரங்களால் சிறுபான்மை இனத்தவர்கள் குறிப்பாகத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் அநியாயமாகக் கொல்லப்பட்டதுடன் பெறுமதி மிக்க சொத்துக்களும் சூறையாடப்பட்டன. இன முரண்பாடு என்பது உருமாற்றம் பெற்று ஆயுதப் பிணக்காக மாற்றமுற்ற போது பல்வேறு வழிகளிலும் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. படுகொலைகள். சந்தேகத்தின் பெயரிலான கைதுகள், காலவரையறையற்ற தடுப்புகள், விசாரணையற்று அல்லது விசாரணை முடிவுறுத்தப்படாது திட்டமிட்டு இழுத்தடிப்புச் செய்யப்பட்ட சிறைவாசம், காணாமலாக்கப்படுதல் என்றவாறாக அடக்குமுறைகளின் வடிவங்கள் நீண்ட பட்டியலைக் கொண்டன. தமிழர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைகளில் அதிகம் கவனம் கொடுக்கப்படும் விடயங்களாக இன்று வரை இருப்பவை சட்டத்தின் பிடியால் இறுக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் தடுத்து வைப்பும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த நிச்சயமற்ற தன்மையுமே. இவற்றுள்ளும் அதிக வலியையும் வேதனையையும் தருபவை காணாமலாக்கப்பட்டவர்களின் கதைகளே. இவ்வாறானதொரு விடயப்பரப்பாக செம்மணிப் புதைகுழி விவகாரமும் விளங்குகின்றது. ஆயினும் தொடர்ந்தும் கைவிடப்படும் விடயமாக இனியும் இது மாறிவிடக்கூடாது எனும் அக்கறையை யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினராகிய நாம் வலுவாகப் பதிவு செய்கின்றோம். இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணக் குடாநாடு இருந்தபோது காணாமல் ஆக்கப்பட்ட பலருக்கு இன்று வரை என்ன நடந்தது என்பது தெரியாத அவலநிலை தொடர்கின்றது. இந்த நிலையே இறுதிப் போரின் போதும் நிகழ்ந்துள்ளது. அவர்களது உறவினர்கள் பல்லாண்டுகளாக தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள். போருக்குப் பின்னரான சூழ்நிலையில் யார் எந்த வலுவான சத்தியும் இயற்கை நீதிக்கு மாறாக நிகழ்ந்த அவலங்களை மறைக்க நினைத்தாலும் அவை ஏதோவொரு விதத்தில் வெளிக்கிளம்பிய வண்ணமேயுள்ளன. செம்மணிப் புதைகுழி விவகாரமும் இப்போது அவ்வாறு வெளிக்கிளம்பி நீதித்துறையின் கட்டுப்பாட்டில் உரிய வகையில் முன்கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலை வலுவாக்கப்படவேண்டும் என்பதுடன் புதை குழிகளின் நீட்சி அறியப்படவும் வேண்டும் என்பதும் மிகவும் அவசியமானது. எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக்கூடாது. உரிய நிதியை உரிய காலத்தில் விடுவித்தல், புதைகுழி அகழ்வுப் பிரதேசங்களுக்கு உரிய பொலிஸ் பாதுகாப்பினை வழங்குதல், அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் தரப்பினர் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்காதிருத்தல் என்பன அவசியமானவையென எமது ஆசிரியர் சங்கம் கருதுகின்றது. இவ்விடயங்களில் எந்தவித நெகிழ்வுமற்று செயற்படவேண்டிய பொறுப்பு ஆட்சியிலுள்ள அரசாங்கத்துக்குரியது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217792
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மட் மர்ஃபி, தாமஸ் ஸ்பென்சர் & அலெக்ஸ் முர்ரே பதவி, பிபிசி வெரிஃபை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 3 நாட்களில் அமெரிக்க தளங்களில் இருந்து குறைந்தது 30 அமெரிக்க ராணுவ விமானங்கள், ஐரோப்பாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பிபிசி வெரிஃபையால் ஆராயப்பட்ட விமான கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விமானங்கள் அனைத்தும் போர் விமானங்கள் மற்றும் வானிலிருந்து குண்டுகளை வீச பயன்படுத்தப்படும் விமானங்களுக்கு (bombers) வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் டேங்கர் விமானங்களாகும். இவற்றில் கேசி-135 (KC-135) வகையை சேர்ந்த குறைந்தது 7 விமானங்கள், ஸ்பெயின், ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்க தளங்களில் சிறிது நேரம் நின்று சென்றன. கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறிவருகிறது. இந்த பின்னணியில் தான் அமெரிக்க போர் விமானங்களின் நகர்வு நடந்துள்ளது. அமெரிக்க போர் விமானங்கள் இடம்பெயர்ந்துள்ளதற்கும் இந்த மோதலுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், பிபிசி வெரிஃபையிடம் பேசிய நிபுணர் ஒருவர், டேங்கர் விமானங்களின் இடப்பெயர்வு "மிகவும் வழக்கத்துக்கு மாறானது" என்றார். எதற்காக இந்த நடவடிக்கை? ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட் (Rusi) எனும் சிந்தனை மையத்தை சேந்த மூத்த ஆய்வாளர் ஜஸ்டின் பிராங்க் கூறுகையில், அப்பிராந்தியத்தில் வரும் வாரங்களில் ஏற்படும் "தீவிரமான எதிர் நடவடிக்கைகளுக்கான" அவசரகால திட்டங்களை தயார் நிலையில் வைப்பதற்காக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என தோன்றுவதாக தெரிவித்தார். பிபிசி வெரிஃபையால் கண்காணிக்கப்பட்ட 7 விமானங்களும் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு பின்னர், செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி சிசிலிக்கு கிழக்கே பறந்ததை விமான கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. அவற்றில், 6 விமானங்கள் எங்கு சென்றன என்பது தெரியவில்லை, ஒரு விமானம் கிரேக்கத் தீவான க்ரீட்டில் தரையிறங்கியது. அயர்லாந்து பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைவர், வைஸ் அட்மிரல் மார்க் மெல்லெட் கூறுகையில், "இரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் தனக்கு அனுகூலத்தை ஏற்படுத்துவதற்கான வியூக ரீதியான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இருக்கலாம்" என்றார். கடந்த வெள்ளிக்கிழமை, இரானிய அணுசக்தி கட்டமைப்பின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தித் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்கு வழங்கிய காலக்கெடுவுக்கு மறுநாள் இந்த தாக்குதல் தொடங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES மத்திய கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த போர்க்கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (USS Nimitz) எனப்படும் தன்னுடைய விமான தாங்கிக் போர்க்கப்பலை தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி அமெரிக்கா இடம்பெயரச் செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, போர் விமானங்களின் இடம்பெயர்வு நிகழ்ந்துள்ளது. இந்த விமான தாங்கிக் போர்க்கப்பல் சார்ந்து வியட்நாமில் திட்டமிடப்பட்ட நிகழ்வு ஒன்று ரத்து செய்யப்பட்டது, "அவசர நடவடிக்கை தேவைகளுக்காக" அந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக ஹனோயில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. யுஎஸ்எஸ் நிமிட்ஸ் கடைசியாக, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மலாக்கா நீரிணையில் சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததை கப்பல் கண்காணிப்பு இணையதளமான மெரைன்டிராஃபிக் காட்டுகிறது. நிமிட்ஸ் கப்பலில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளன, ஏவுகணை தாக்குதல் நடத்துவற்கென வடிவமைக்கப்பட்ட போர்க் கப்பல்களும் அதன் பாதுகாப்புக்காக உடன் செல்கின்றன. F-16, F-22 மற்றும் F-35 ஆகிய போர் விமானங்களையும் மத்திய கிழக்கில் உள்ள தளங்களுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாக, பாதுகாப்பு அதிகாரிகள் 3 பேர் கூறியதாக, செவ்வாய்க்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்தது. ஐரோப்பாவுக்கு கடந்த சில தினங்களாக இட மாற்றம் செய்யப்பட்ட டேங்கர் விமானங்கள், இந்த போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பயன்படுத்தப்படலாம். இஸ்ரேலுக்கு அதரவாக இந்த மோதலில் அமெரிக்கா தலையிடலாம் என, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செவ்வாய்கிழமை தெரிவித்தார். இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான "அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டிரம்ப் முடிவு செய்யலாம்" என தன் சமூக ஊடக பக்கத்தில் வான்ஸ் தெரிவித்தார். பூமிக்கடியில் ஆழமாக சென்று தாக்கும் பங்கர் பஸ்டர் குண்டு இரானில் யுரேனியத்தை செறிவூட்டுவதற்காக நிலத்தடியில் இரண்டு தளங்கள் இயங்குவதாக நம்பப்படுகிறது. இதில், நடான்ஸ் இஸ்ரேலால் ஏற்கெனவே தாக்கப்பட்டுள்ளது. கோம் (Qom) நகருக்கு அருகிலுள்ள ஒரு மலையில் அமைத்துள்ள ஃபோர்டோ தளம் பூமிக்கடியில் மிகவும் ஆழமாக அமைக்கப்பட்டுள்ளது. ஃபோர்டோ கட்டமைப்பை ஊடுருவ GBU-57A/B எனப்படும் பெரியளவிலான குண்டை (Massive Ordnance Penetrator - MOP) அமெரிக்கா பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று மூத்த மேற்கத்திய ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர். 13,600 கிலோ எடையுள்ள இந்த வெடிகுண்டு, நிலத்தடியில் உள்ள அணுசக்தி தளங்களை தாக்கக்கூடியது என்பதால் "பங்கர் பஸ்டர்ஸ்" என்றும் அழைக்கப்படுகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேல் மீது திங்கட்கிழமை இரான் நடத்திய தாக்குதலை காட்டும் படம் இந்த குண்டு மட்டுமே 200 அடி (60 மீ) கான்கிரீட்டை கூட உடைக்கும் திறன் கொண்டதாக கருதப்படும் ஒரே ஆயுதமாகும். வழக்கமான ரேடார்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத பி-2 ஸ்டெல்த் போர் விமானங்களால் மட்டுமே இந்த குண்டை வீச முடியும். டியாகோ கார்சியா தீவில் உள்ள தன்னுடைய தளத்தில் அமெரிக்கா சமீபத்தில் பி-2 விமானங்களை நிறுத்தியது. இரானின் தெற்கு கடற்கரையிலிருந்து இந்த தீவு சுமார் 2,400 மைல் தொலைவில் இருந்தாலும், அந்த விமானங்கள் இருக்கும் இடமானது, இரானின் தாக்குதல் எல்லைக்குள் அவற்றை வைக்கக்கூடும். "[டியாகோ கார்சியாவிலிருந்து) ஒரு நிலையான நடவடிக்கையை மிகவும் திறமையாக இதன் மூலம் மேற்கொள்ள முடியும். அவற்றை எந்நேரமும் செயல்பாட்டில் வைத்திருக்க முடியும்." என, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் (RAF) முன்னாள் துணை தலைவரான (ஆபரேஷன்ஸ்) ஏர் மார்ஷல் கிரெக் பேக்வெல் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார். இரான்- இஸ்ரேல் மோதலில், வெளிப்படையாக இஸ்ரேலை ஆதரிக்க இந்தியா தயங்குவது ஏன்? இஸ்ரேல் - இரான் சண்டை வல்லரசுகளின் மோதலாக வாய்ப்பு: அமெரிக்கா, ரஷ்யா என்ன செய்கின்றன? அச்சம், அதிர்ச்சி, குழப்பம்: இஸ்ரேல் தாக்குதல் குறித்து இரான் மக்கள் கூறுவது என்ன? இரான், இஸ்ரேல் மோதலில் இந்தியாவின் ஆதரவு யாருக்கு? - துருவங்களாக பிரிந்து நிற்கும் உலகம் மார்ச் மாத இறுதியில் டியாகோ கார்சியாவில் பி-2 விமானங்கள் நிறுத்தப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் ஆரம்பத்தில் காட்டின. ஆனால், சமீபத்தில் வெளியான படங்களில் அந்த தீவில் பி-2 விமானங்கள் இல்லை. வைஸ் அட்மிரல் மெல்லெட் கூறுகையில், இரானை இலக்கு வைத்து நடத்தப்படும் எவ்வித நடவடிக்கைக்கும் முன்னதாக, அந்த தீவில் பி-2 விமானங்களை பார்க்கலாம் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். தீவில் தற்போது அந்த விமானங்கள் இல்லாதது, குழப்பமாக உள்ளதாகவும் அவர் கூறினார். இதை ஏர் மார்ஷல் கிரேக் பேக்வெல்லும் ஒப்புக்கொள்கிறார். வெள்ளை மாளிகை தாக்குதலை தொடங்க முடிவெடுத்தால், அமெரிக்க கண்டத்திலிருந்தும் கூட பி2 விமானங்கள் செலுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார். "இரானின் தற்காப்புத் திறனை இஸ்ரேல் அழித்துவிட்டதால், எந்தவொரு ராணுவ அல்லது அணுசக்தி இலக்குகளும் கூட இஸ்ரேலின் விருப்பத்தின் பேரிலேயே விடப்படும்." மெர்லின் தாமஸ் வழங்கிய கூடுதல் தகவல்களுடன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g2d1lz6q0o
  7. 17 JUN, 2025 | 08:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் இராணுவ ஒட்டுக் குழுத் தலைவருமாக இருந்தவரான டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின் போது மண்டைதீவு செம்பாட்டுத் தோட்டம், புனித தோமையார் ஆலயத்தின் அருகாமை, திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு குமுழுமுனை, கொக்குத்தொடுவாய் யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவின் கவனத்திற்கு கொண்டு வந்து கேள்வி எழுப்புகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியில், 1990களில் வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவுப் பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட சிறுவர்களும் இளைஞர்களுமே புதைக்கப்பட்டார்கள் என வடக்கு மற்றும் கிழக்கு மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடுகின்றன. 3ஆம் வட்டாரம், மண்டைதீவைச் சேர்ந்த சூசைதாஸ் யேசுரட்ணம் தர்மராணி என்ற தாயார், தனது இரு பிள்ளைகள் உட்பட்ட 84 பேர் மண்டைதீவில் காணாமலாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நீதியைப் பெற்றுத்தருமாறும் 2025.04.30 ஆம் திகதி ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, அதன் பிரதியை எனக்கும் கிடைக்கச் செய்துள்ளார். இப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் வெளிவந்த அறிக்கைகள் உள்ளன. மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவுப் பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட சிறுவர்களும், இளைஞர்களுமே படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள். இவர்களை இராணுவத்தினர் அழைத்து சென்ற போது பெற்றோர், உறவினர்கள் அப்போது தீவுப்பகுதியில் இராணுவ ஒட்டுக்குழுவின் தலைவராகவிருந்த டக்ளஸ் தேவானந்தாவிடம் ஓடிச்சென்று அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மன்றாடியபோது இராணுவத்தினர் விசாரித்து விட்டு விடுவிப்பார்கள் என டக்ளஸ் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் எவரும் விடுவிக்கப்படாது படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள். எனவே மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் இராணுவ ஒட்டுக் குழுத் தலைவருமாக இருந்தவரான டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/217728
  8. Published By: VISHNU 17 JUN, 2025 | 06:27 PM கிழக்கு பல்கலைக்கழத்தின் 11 வது உபவேந்தரா நியமிக்கப்பட்ட முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் செவ்வாய்க்கிழமை (17) தனது கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார். குறித்த பல்கலைக்களத்தின் 11 வது உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை பல்கலைக்கழகத்தின் பேரவையினால் கடந்த இரண்டு மாத்திற்கு முன்னர் பல்கலைகழகத்தில் இடம்பெற்றது. இதில் 8 பேர் களமிறங்கிய நிலையில் முதல் நிலையில் முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன், உட்பட 3 பேர் தெரிவு செய்யப்பட்டு பல்கலைகழக மானிய ஆணைக் குழுவிற்கு அனுப்பிய அந்த பெயர் பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்; இதனடிப்படையில் முதல் நிலையிலுள்ளதையடுத்து முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபனை ஜனாதிபதி கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 வது உபவேந்தராக நியமித்து அதற்கான கடிதத்தினை செவ்வாய்க்கிழமை (17) அனுப்பிவைத்துள்ளார். இதனையடுத்து புதிய உபவேந்தர் செவ்வாய்க்கிழமை (17) பகல் 12.00 மணியளவில் தமது கடமையை உத்தியோக பூர்வமாக பெறுப்பேற்றுக் கொண்டார். https://www.virakesari.lk/article/217755
  9. செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; அகழ்வாய்வுகள் முழுமையாக இடம்பெறுவதுடன், வெளிப்படைத் தன்மைஅவசியம் - ரவிகரன் எம்.பி Published By: VISHNU 17 JUN, 2025 | 06:06 PM யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்படுவதுடன், அகழ்வாய்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை இறுதிக்கட்டயுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் மற்றும், யுத்தக்குற்றங்களுக்கு இதுவரை உரியவகையில் பொறுப்புக்கூறப்படவில்லை என்பதை இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்தவிடயத்தில் கடந்த அரசாங்கங்களைப்போலவே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றில் செவ்வாய்க்கிழமை (17) உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மயான புதைகுழி அகழ்வுப் பணிகள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென இவ்வுயரிய சபையிலே வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். குறித்த செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 19 முழுமையான மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் புதைகுழியினை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 45 நாட்களுக்கு அகழ்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான உத்தரவு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தப் புதைகுழியினை அகழ்வு செய்து உரியவகையில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலைமைகள் கண்டறியப்படவேண்டுமெனவும், இந்த விட யத்தில் அரசாங்கமானது உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன். இந்தப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளை வைத்துப் பார்க்கும்போது சிறுவர்கள், பெண்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. இதனைவிட அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக் கூடுகளில் ஆடைகள் அணிந்திருந்தமைக்கான சான்றிதழ்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. எனவே, இந்த சடலங்கள் நிர்வாணமாக புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. திட்டமிட்ட வகையில் படுகொலைகள் செய்யப்பட்ட பின்னர் சடலங்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றே கருதவேண்டியுள்ளது. மேலும் செம்மணிப் பகுதியில் புதைகுழிகள் உள்ள விடயம் கடந்த 1999ஆம்ஆண்டு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களுக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. இதில் பிரதான சந்தேகநபரான இராணுவ லயன்ஸ் கோப்ரல் சோமரத்ன நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் 600பேர்வரையில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளதாக தகவலை வெளிப்படுத்தியிருந்தார். இந்த விவகாரமானது அன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. செம்மணியில் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, செம்மணி புதைகுழி தோண்டும் நடவடிக்கை அன்று இடம்பெற்றிருந்தது. லயன்ஸ் கோப்ரல் சோமரத்ன அடையாளம் காட்டிய சிலபகுதிகள் அந்தவேளையில் அகழப்பட்டன. அதில் 25 எலும்புக் கூடுகள் வரையில் மீட்கப்பட்டிருந்தன. அதன்பின்னர் இந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது. தற்போது செம்மணி பகுதியில் அகழ்வு இடம்பெற்றதையடுத்து மீண்டும் புதைகுழியொன்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. கடந்த மூன்று தசாப்த காலமாக வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற கொடூர யுத்தம் காரணமாக இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர். இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் காணாமலாக்கப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருந்தனர், தொண்ணூறாயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர், ஒன்பதாயிரம் சிறுவர்கள் அனாதரவாக்கப்பட்டனர். இவ்வாறு பேரிழப்புகளை தமிழ்மக்கள் சந்தித்திருந்தனர். யுத்தகாலத்தில் இராணுவத்தரப்பினரால் பலவேறு பகுதிகளில் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டிருந்தன. யுத்தம் முடிவடைந்து தற்போது 16வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பல இடங்களில் புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் இதுவரை 13 இடங்களில் புதைகுழிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் பலஇடங்களில் புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் 2013ஆம் ஆண்டு புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்தப் புதைகுழி அவ்வப்போது அகழப்பட்டதுடன் 2018ஆம் ஆண்டுவரை இந்தப்பணிகள் இடம்பெற்றிருந்தன. இங்குமீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்தன. ஆனால், மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் மன்னர் காலத்தைச் சேர்ந்தவை என்று கூறப் பட்டிருந்தது. இதன் உண்மைதன்மை என்ன என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பின்னர் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதேபோன்று மன்னார் நகரிலுள்ள ச.தொ.ச கட்டடத்துக்கு அருகில் 2018ஆம் ஆண்டு அகழ்வுப்பணி இடம்பெற்றபோது அங்கும்மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பகுதிகளிலும் அகழ்வுப்பணி இடம்பெற்றதுடன் இந்தவிவகாரம் தற்போதும் நீதிமன்றத்தில் உள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்பகுதியில் அகழ்வுப்பணி இடம்பெற்றபோது 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு இடங்களிலும் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்ற போது மனிதப் புதைகுழிகள் தென்படுகின்றமை வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் வழமையானவிடயமாக மாறிவிட்டது. யுத்தகாலத்தில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆங்காங்கே புதைக்கப்பட்டிருந்தனர். அந்த புதைகுழிகளே தற்போது வெளிப்பட்டுவருகின்றன. செம்மணிப் பகுதியில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதைகுழி தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும். அகழ்வுப்பணிகள் உரியவகையில் மேற்கொள்ளப்பட்டு எந்தக்காலப்பகுதியில் இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன, இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்ற விடயங்கள் கண்டறியப்படவேண்டும். இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக் கணக்கான மக்கள் காணாமல்போகச் செய்யப்பட்டுள்ளனர். படையினரிடம் சரணடைந்தவர்கள், படையினர்களிடம் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள், படையினரால் கைது செய்யப்பட்டவர்கள், படைத்தரப்பினரால் கடத்தப்பபட்டவர்கள் எனப் பலரும் காணாமல் போகச்செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்னநடந்தது என்றவிடயம் இதுவரை மர்மமாகவே உள்ளது. இவ்வாறு காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்களா என்ற சந்தேகம் பாதிக்கப்பட்ட மக்கள்மத்தியில் காணப்படுகின்றது. இதேபோன்றே இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் திறந்த நிலப்பரப்பில் இவர்கள்மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபோது தாக்குதல்களில் பெருமளவானோர் பலியாகியிருந்தனர். இவ்வாறு பலியானவர்கள் அந்தந்த இடங்களிலேயே புதைக்கப்பட்டிருந்தனர். செம்மணியில் இளைஞர், யுவதிகள் கொன்று புதைக்கப்பட்டமை, கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் இறுதியிலேயே தெரியவந்தது. ஆனாலும், அந்த புதைகுழிகள் தொடர்பில் அன்றைய காலப்பகுதியில் உரியவிசாரணைகள் நடத்தப்பட்டிருக்கவில்லை. அந்தப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப் பட்டிருக்கவில்லை. அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அன்று கிருஷாந்தி குமாரசாமியின் கொலைவழக்கின் பிரதான சந்தேக நபரான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன தகவலை வெளிப்படுத்தி யிருக்காவிடின் செம்மணி புதைகுழி விவகாரம் வெளிவந்திருக்கமாட்டாது. இந்தப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தகவல்கள் வெளிப் படுத்தப்பட்ட போதும் உரியவகையில் புதைகுழிகள் அகழப்படாமையினால்தான் தற்போது செம்மணியில் மீண்டும் புதைகுழி அடையாளம் காணப்பட்டிருக்கிறது. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் பல்வேறு இடங்களில் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அந்தப் புதைகுழிகள் தொடர்பில் உரியவிசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போது செம்மணியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதைகுழியில் பெருமளவானோர் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியில் 19எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் சிறுவர்கள், பெண்கள் ஆகியோரின் எலும்புக்கூடுகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இந்த புதைகுழி அகழ்வுக்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதற்கான சகல ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும். அகழ்வுச்செயற்பாட்டை நிறுத்தாது இதனை முழுமைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் இன்னமும் உரியவகையில் பொறுப்புக்கூறப்படவில்லை. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அந்த விடயத்தில் கடந்த அரசாங்கங்களைப் போன்றே செயற்பட்டு வருகின்றது. இந்த புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன் - என்றார். https://www.virakesari.lk/article/217753
  10. எரிபொருள் குறித்து அதிரடி அறிவிப்பு! எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஈரான் - இஸ்ரேல் பகுதிகளில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை அவதானிக்க கூடியதாக உள்ளதாவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, பொதுமக்கள் போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக்கொண்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmc0dgyf80007qp4ktbq7jcua
  11. ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும் - முள்ளிவாய்க்காலிற்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் - சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் கடிதம் Published By: RAJEEBAN 17 JUN, 2025 | 08:15 PM ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் துர்க்(Volker Türk) தனது இலங்கை விஜயத்தின் போது உள்நாட்டு யுத்த மீறல்களுடன் தொடர்புபட்ட செம்மணி மனித புதைகுழி போன்றவற்றையும் ஜேவிபி கிளர்ச்சி காலத்தைய மனித புதைகுழிகளையும் பார்வையிடவேண்டும் என சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. முள்ளிவாய்க்காலிற்கு விஜயம் மேற்கொள்ளுங்கள், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட சர்வதேசத்தவர்கள் அனைவரும் முள்ளிவாய்க்காலிற்கு சென்று யுத்தத்தின் இறுதி அட்டுழியங்களை பார்வையிடவேண்டும் அதன் மூலம் அரசாங்கம் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளவேண்டும், அதற்கு தீர்வு காணவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம் என்ற செய்தியை பாதிக்கப்பட்டவர்களிற்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் தெரிவிக்கவேண்டும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் துர்க்கிற்கு(Volker Türk) எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் உள்ள பலவந்தமாக காணாமலாக்கப்படுதலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தியுங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும், என பகிரங்கமாக வேண்டுகோள் விடுங்கள் எனவும் சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தலைமையிலான இலங்கையின் ஓரளவு புதிய அரசாங்கம் தேர்தலிற்கு முன்னர் புதிய வாக்குறுதிகளை வழங்கிய போதும் ஆனால் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் உறுதிப்பாட்டை சிறிதளவு கூட வெளிப்படுத்தவில்லை என சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் துர்க்கிற்கு(Volker Türk) அவரது இலங்கை விஜயம் குறித்து எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன. முன்னைய அரசாங்கங்களின் கொள்கைகளையே இதுவரை அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கம் பின்பற்றி வருவதாக சர்வதேச அரசசார்ப்பற்ற அமைப்புகள்தமது கடிதத்தில் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/217758
  12. அளவில் சிறிய இஸ்ரேல், பெரிய நாடான இரானுடன் மோதுவது எப்படி சாத்தியமாகிறது? - அதிநவீன போர் தளவாடங்கள் கிடைப்பது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலிடம் F-35 போன்ற அமெரிக்கத் தயாரிப்பு ஜெட் விமானங்கள் உள்ளன, ஆனால் இரானில் அதன் இலக்குகளை அடைய அவை போதுமானதா? கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனாதன் பீல் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரானுடனான இஸ்ரேலின் மோதலை பார்க்கும்போது, அது பொருந்தாத ஒன்றாக தோன்றலாம், அதாவது 90 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாடு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 8.8 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஒரு பெரிய நாட்டுடன் மோதுகிறது. ஆனால், இஸ்ரேலின் வலிமையான மற்றும் அதிநவீன, அமெரிக்காவால் மட்டுமே வழங்கப்படும் பெரிய ஆயுதக்கிடங்குடன் கூடிய ராணுவப் படைகள் காரணமாக, அந்நாட்டால் தன்னைவிட பெரிய எதிரியை விட மேலோங்கி இருக்க முடிகிறது. மத்திய கிழக்கில் தற்போது நடைபெற்று வரும் போரில் இருநாடுகளுக்கிடையேயான ஒப்பீடுகள் குறித்து பிபிசி இங்கே ஆராய்கிறது. இரான் இதுவரை சாதித்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES டெஹ்ரானின் வான்வெளியை தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துவிட்டதாக, இஸ்ரேல் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இரானின் சில பழைய போர் விமானங்கள் புறப்பட்டதற்கான அறிகுறிகளே இல்லை எனும் நிலையில், இஸ்ரேலின் கூற்று முற்றிலும் முரணானதாக உள்ளது. இஸ்ரேலிடம் உள்ள அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள், குறுகிய தொலைவிலிருந்து, சுட்டு வீழ்த்தப்படும் என்ற கவலை பெரிதளவில் இல்லாத, துல்லியமாக தாக்கவல்ல குண்டுகளை வீசும் திறன் படைத்ததாக உள்ளன. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் இரானின் எஸ்300 ஏவுகணை கட்டமைப்பை தொலைதூர ஆயுதங்கள் மூலம் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது. இதில், இரான் வான் பாதுகாப்பு அமைப்பால் ஏற்படும் பெருமளவு அச்சுறுத்தல்கள் அழிக்கப்பட்டன. சமீப நாட்களாக இஸ்ரேலிய வான் படை, தரையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ரேடார்கள் மற்றும் லாஞ்சர்களை (launchers) குறிவைத்து வருகிறது. தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாகவே, இரானின் பதில் தாக்குதல்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு தயாராகும் வகையில், இரானுக்குள் உளவுப் பிரிவினர் அனுப்பப்பட்டனர். இரானின் மீதமுள்ள வான் பாதுகாப்பு அமைப்பை குறிவைப்பதற்காக, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் முகவர்கள் அந்நாட்டுக்குள் டிரோன்களை கடத்திவந்து பயன்படுத்தினர். இரானின் உயர்மட்ட படைத் தளபதிகளும் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதன் மூலமும் இரானின் பதில் தாக்குதல்கள் மட்டுப்படுத்தப்பட்டன. இரானால் இப்போதும் மீண்டும் தாக்க முடியுமா? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, மத்திய கிழக்கில் மிகப்பெரிய ஏவுகணை கையிருப்பு இரானிடம் இருப்பதாக அமெரிக்கா கூறியது. இஸ்ரேல் தன் தாக்குதல்களை தொடங்குவதற்கு முன்பாகவே, மத்திய கிழக்கின் "மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை" என அமெரிக்கா விவரிக்கும் ஏவுகணை அமைப்பு இரானிடம் இருந்தது. அதன் எண்ணிக்கை 2,000 முதல் 3000க்கு இடைப்பட்டதாக இருக்கும். அந்த ஏவுகணை அமைப்புகள் சிலவும் அவற்றை தயாரிக்கக்கூடிய ஆலைகளும் இஸ்ரேலால் ஏற்கெனவே தாக்கப்பட்டன. இரானின் தரைவழியே தாக்கி அழிக்கக்கூடிய, மூன்றில் ஒருபங்கு லாஞ்சர்களை தாங்கள் அழித்ததாக, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. இருப்பினும், டெஹ்ரானால் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீச முடிந்தது, அவற்றில் சில இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பையும் ஊடுருவி தாக்கியது. தற்போது இரானின் தரைவழியிலான லாஞ்சர்களுள் மூன்றில் ஒருபங்கை அழித்தவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. ஆனால், இரானின் ஏவுகணை அமைப்புகள் குறைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அழிக்கப்படவில்லை. இது, இஸ்ரேலுக்கு மிகப்பெரும் நேரடியான அச்சுறுத்தலாக உள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களையும் தாண்டி, இரானிடம் இன்னும் பல குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளன. பாதுகாப்பு தொடர்பான சிந்தனை மையமான ருசி (Rusi) அமைப்பின் ஜஸ்டின் ப்ராங்க் கூறுகையில், டெஹ்ரானை விட தாங்கள் வான் பாதுகாப்பு அமைப்பில் ஆதிக்கம் செலுத்துவதாக இஸ்ரேல் கூறினாலும், அதை இன்னும் அந்நாடு அடையவில்லை. மேலும், இரானிடமிருந்து வரும் குறுகிய தூர ஏவுகணைகளால் இன்னும் அச்சுறுத்தல் உள்ளது. இரானுக்கு நட்பு நாடுகள் உள்ளதா? அவை என்ன செய்ய முடியும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, திங்களன்று டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய குடியரசு இரான் செய்தி நெட்வொர்க் அமைப்பால் பயன்படுத்தப்படும் ஒரு கட்டிடத்தை இஸ்ரேல் தாக்கியது. ராணுவ ஆலோசனைகள், ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம் ரீதியாக, காஸாவில் ஹமாஸ் மீதும் லெபனானில் ஹெஸ்பொலா மீதும் இரான் பல ஆண்டுகளாக கவனம் செலுத்தியுள்ளது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக இஸ்ரேலிய நடவடிக்கையால், தன் எல்லைகளிலிருந்து இஸ்ரேலை அச்சுறுத்துவதற்கான அந்த அமைப்புகளின் திறன் பெருமளவில் குறைந்துள்ளது. காஸாவில் ஹமாஸ் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது, அதேபோன்று ஹெஸ்பொலாவின் பலம், தனக்கு நிதியுதவி வழங்கும் ஒரு நாட்டின் (இரான்) மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற முடியாத அளவுக்கு குறைந்துள்ளது. ஏமனில் மிக தொலைவில் ஹூத்திகள் இருந்தபோதிலும், அவர்களால் அவ்வப்போது இஸ்ரேலின் மீது ஏவுகணைகளை வீச முடிந்தது. இந்தாண்டு தொடக்கத்தில் ஹூத்தி அமைப்பு, அமெரிக்காவின் குண்டுவீச்சிலிருந்து தப்பித்து, சில அமெரிக்க ரீப்பர் டிரோன்களை, குறுகிய தூர தரை மற்றும் கடல் வாயிலாக தாக்கக்கூடிய ஏவுகணைகள் மூலமாக சுட்டு வீழ்த்தியது. மற்ற நாடுகள் இதில் என்ன செய்ய முடியும்? இந்த பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளின் நலன்களை தாக்கும் திறன் இரானுக்கு உள்ளது. இராக்கில் இரானால் ஆதரிக்கப்படும் ஆயுதக் குழுக்கள், அப்பிராந்தியத்தில் மேற்கத்திய ராணுவ தளங்களை இலக்கு வைத்துள்ளன. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மோசமான சூழல்களுக்கு தயாராகி வருகிறது. பாக்தாத்தில் அமெரிக்க ராணுவ துருப்புகளுடன் 100 பிரிட்டன் துருப்புகள் உள்ளன. அவர்களின் பாதுகாப்பு கருதியே, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் சைப்ரஸுக்கு கூடுதலாக ஆர்ஏஎஃப் டைஃபூன் விமானங்களை அனுப்புவதற்கு சமீபத்தில் உத்தரவிட்டார். பஹ்ரைனில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவத்தின் கடற்படையினரும் கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த போர் எந்தளவுக்கு செல்கிறதோ, அந்தளவுக்கு அப்பிராந்தியத்தில் உள்ள மேற்கத்திய படைகளுக்கு ஆபத்து அதிகரிக்கும். ஆனால், ஹோர்முஸ் நீரிணையில் (Straight of Hormuz) உள்ள உலகின் முக்கியமான கப்பல் போக்குவரத்து பாதையை தடுப்பதற்கான அல்லது செயலிழக்கச் செய்வதற்கான திறன் இரானிடம் உள்ளது. இந்த மோதலை விரிவாக்குவது இரானுக்கு விவேகமான யோசனையாக இருக்காது, ஆனால் அந்த முடிவை தேர்ந்தெடுத்தால் அந்நாட்டால் அதை செய்ய முடியும். இஸ்ரேலால் அதன் இலக்கை அடைய முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போதைய சூழலில் இஸ்ரேலின் கை ஓங்கியுள்ளது, ஆனால் இந்த ராணுவ நடவடிக்கையை தொடர்வது, அமெரிக்க ஆதரவை சார்ந்தே பெரிதும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேல் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பில் ராணுவ உதவியை பெறுகிறது. அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானங்களிலிருந்து ஏவப்படும் ஆயுதங்கள் பலவும் அமெரிக்காவிலிருந்தே இஸ்ரேலுக்கு வந்துள்ளன. இஸ்ரேலின் அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்புக்கும் கூட இடைமறிக்கும் ஏவுகணைகள் சிலவும் அமெரிக்காவில் தான் தயாரிக்கப்பட்டவை. இரானின் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள அணுசக்தி கட்டமைப்புகளை தாக்குவதற்காக இஸ்ரேல் பயன்படுத்தும் 'பதுங்குகுழிகளை தாக்கவல்ல வெடிகுண்டுகள்' பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்து பெறப்பட்டவை. அவற்றை பயன்படுத்துவதற்கு ஆதரவாக உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானின் அதி உயர் தலைவர் அலி காமனேயியை கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டங்களை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று, இரானின் ஃபோர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி வளாகத்துக்குள் ஊடுருவத் தேவைப்படும் ஒரே ஆயுதமான 13,600 கிலோ பெரியளவிலான வெடிகுண்டை (Massive Ordnance Penetrator) இஸ்ரேல் அணுக அமெரிக்கா அனுமதிக்கவில்லை, இதையும் அமெரிக்க B2 மூலோபாய குண்டுவீச்சு விமானங்களால் (US B2 strategic bombers) மட்டுமே வழங்க முடியும். அமெரிக்க ராணுவ ஆதரவு தொடர்ந்தாலும் இஸ்ரேலுக்கு சில வரம்புகள் இருக்கும். இஸ்ரேலின் விமானப் படையின் பலம், இரானின் அணுசக்தி திட்டத்தை பின்னுக்குத் தள்ளக்கூடும், ஆனால் அது அதை அழிக்காது. இரானிய ஆட்சியைக் கவிழ்க்கும் இஸ்ரேலின் நம்பிக்கை மிகவும் சாத்தியமற்றதாகத் தெரிகிறது. விமானத் தாக்குதல்கள் பயத்தையும் குழப்பத்தையும் சேதங்களையும் உருவாக்கக்கூடும். ஆனால், 2011ம் ஆண்டில் லிபியாவைப் பற்றியோ அல்லது காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலையோ நினைத்துப் பாருங்கள், அவை அரிதாகவே தெளிவான வெற்றியை அளிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx23ednw7j1o
  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேரள மாநிலம் கொச்சியில் கள்ளுக்கடை (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 17 ஜூன் 2025, 02:43 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஒரு பக்கம் மதுவிலக்குக் கோரிக்கையை சிலர் முன்வைத்துவரும் நிலையில், கள் இறக்க அனுமதிக்க கோரும் போராட்டங்களும் அவ்வப்போது நடந்துவருகின்றன. கள் இறக்கி விற்பனை செய்வது விவசாயிகளுக்கு உதவும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? கேரளா, ஆந்திராவைப் போல தமிழ்நாட்டிலும் கள்ளுக்கடைகளை திறப்பதில் என்ன பிரச்னை? அரசு கூறும் சிக்கல் என்ன? தமிழ்நாட்டில் கள் விற்க தடை தமிழ்நாட்டில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமெனக் கோரி, தூத்துக்குடி மாவட்டத்தில் கள் இறக்கும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு கள் பாதுகாப்பு இயக்கம் நீண்ட காலமாக கள் இறக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கள்ளை இறக்கி, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மதுபானங்களைப் பொறுத்தவரை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனப்படும் டாஸ்மாக் மூலம் மொத்தமாக வாங்கி, தன்னுடைய கடைகள் மூலமாக விற்பனை செய்துவருகிறது. இது தவிர, தனியான உரிமங்கள் மூலம் தங்கும் விடுதிகள், தனியார் பார்களிலும் மதுபானங்களை விற்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், அங்கும் கள், சாராயம் போன்றவற்றை விற்க முடியாது. டாஸ்மாக் கடைகளிலும் உணவகங்களிலும் பார்களிலும் இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபானங்களையும் வெளிநாட்டு மதுபானங்களையும் மட்டுமே விற்பனை செய்ய முடியும். கள், சாராயம் போன்ற பானங்களை விற்க முடியாது. ஆனால், வெளிநாட்டு மதுபானங்களை விற்க அனுமதியளிக்கும் நிலையில், கள், சாராயம் போன்ற பானங்களையும் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. பட மூலாதாரம்,SEEMAN4TN_OFFICIAL/INSTAGRAM கள்ளுக்கு ஏன் அனுமதி இல்லை? ஆர்டிஐ கேள்விக்கு அரசு பதில் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள்ளை இறக்கி, விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு 'கள் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பு நீண்ட காலமாக இயங்கிவருகிறது. "2005ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கள்ளுக்கு ஏன் அனுமதியில்லை எனக் கேட்டோம். அதற்குப் பதிலளிக்கும் போது, பனை மரத்தில் இறக்கும் கள்ளில் போதை குறைவு என்பதால் குளோரல் ஹைட்ரேட் கலக்கிக் கொடுப்பார்கள். ஒவ்வொரு பனை மரத்திலிருந்தும் கள்ளை உற்பத்தி செய்ய முடியும் என்பதால், ஒவ்வொரு மரத்தையும் கண்காணிக்க முடியாது. இதனால் 1987ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கள் இறக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது என்றார்கள். இதற்குப் பிறகுதான் போராட ஆரம்பித்தோம். தமிழ்நாட்டில் மட்டும்தான் கள் இறக்க முடியவில்லை. புதுச்சேரி, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கள் விற்கிறார்கள். அங்கெல்லாம் கலப்படம் நடக்காது, இங்கே மட்டும்தான் நடக்குமா?" எனக் கேள்வி எழுப்புகிறார், தமிழ்நாடு கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி. தங்களைப் பொறுத்தவரை, கள் ஒரு போதை ஏற்படுத்தும் பானமல்ல என்றும் அது உணவின் ஒரு பகுதி என்றும் குறிப்பிடும் அவர், தமிழ்நாடு அரசு தனது மதுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென்கிறார். "பனை மரத்திலிருந்தும் தென்னை மரத்திலிருந்தும் கள் இறக்குவதில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது. அது போதை ஏற்படுத்தும் பானமே அல்ல" என்கிறார். பட மூலாதாரம்,NALLASAMY 'கலாசார சீரழிவு ஏற்படும்' ஆனால், கள்ளை ஒரு உணவைப் போல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கடுமையாக எதிர்க்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார். "கள் என்பது அடிப்படையில் மது. அது உணவு அல்ல. கஞ்சாவை மூலிகை என்று சொல்வதைப் போலத்தான், கள்ளை உணவு என்று சொல்வதும். மதுபானங்களின் விலை அதிகம் என்பதால், எல்லோராலும் நிறைய வாங்கிக் குடிக்க முடியாது. ஆனால், கள்ளின் விலை குறைவாக இருக்கும் என்பதால் இன்னும் நிறையப் பேர் குடிக்க ஆரம்பிப்பார்கள். இப்போது குடிப்பதைப் போல அதிக மடங்கு குடிப்பார்கள். குடி நோயாளிகளின் எண்ணிக்கை 3-4 மடங்கு அதிகரிக்கும்" என்கிறார் து. ரவிக்குமார். கள்ளுக் கடைகள் அமையும் இடங்களும் பிரச்னைக்குரியவை என்கிறார் அவர். "யார் வாடிக்கையாளரோ, அவர்களுக்கு அருகில்தான் இந்தக் கடைகளை அமைக்க நினைப்பார்கள். இயல்பாகவே அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் இந்தக் கடைகளை அமைப்பார்கள். அது அந்த அடித்தட்டு மக்களை மிகப் பெரிய கலாசாரச் சீரழிவுக்கு இட்டுச் செல்லும்" என்கிறார் அவர். ஒவ்வொரு மரத்திலிருந்தும் பெரிய அளவில் கள் இறக்க முடியாது என்பதால் அது கலப்படத்துக்குத்தான் வழிவகுக்கும் என்கிறார் ரவிக்குமார். "கள்ளுக் கடைகளைத் திறந்தால், அத்தனை கடைகளுக்கும் தேவைப்படும் அளவுக்கெல்லாம் கள் கிடைக்காது. அத்தனை மரங்களில் ஏறவும் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். ஆகவே, அதில் கலப்படம்தான் நடக்கும். கள்ளைப் போன்ற பானத்தை உருவாக்குவதற்காக கலக்கப்படும் ரசாயனங்கள் மிகத் தீங்கானவை. போலியான கள்ளை அருந்தியதால் கேரளாவில் பாதிப்புகள் ஏற்பட்டடதாக அவ்வப்போது செய்திகளில் வரத்தான் செய்கின்றன. 20 லிட்டர் கள்ளை வடித்தால், 200 லிட்டர் கள்ளை விற்பனை செய்வார்கள். ஆகவே கள்ளை இறக்க வேண்டும் எனச் சொல்வதே சட்ட விரோதம்" என்கிறார் ரவிக்குமார். பட மூலாதாரம்,WRITERRAVIKUMAR/X படக்குறிப்பு,ஒவ்வொரு மரத்திலிருந்தும் பெரிய அளவில் கள் இறக்க முடியாது என்பதால் அது கலப்படத்துக்குத்தான் வழிவகுக்கும் என்கிறார் ரவிக்குமார் கேரளா, ஆந்திராவில் நிலைமை என்ன? 70களின் இறுதியிலும் 80களிலும் கள்ளும் சாராயமும் அடித்தட்டு மக்களை கடுமையாக பாதிக்கிறது என்பதால்தான் கள்ளுக் கடைகளும் சாராயக் கடைகளும் மூடப்பட்டன என்கிறார் அவர். தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள மாநிலங்களில் கேரளாவிலும் ஆந்திராவிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கள்ளுக்கடைகள் உள்ளன. கேரள அரசின் 2023-24 மதுக் கொள்கையில், கள்ளை கள்ளுக் கடைகளில் மட்டுமல்லாமல் பிராண்ட் செய்து, ஹோட்டல்கள், பார்களிலும் விற்க நினைப்பதாக குறிப்பிட்டது. ஆனால், அங்கு கள் இறக்க பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கேரளா கள் இறக்கும் தொழிலாளர்கள் நல நிதியில் 2014ல் 30,000 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 2023ல் இந்த எண்ணிக்கை 15,000ஆக குறைந்தது. ஆந்திர மாநில அரசின் 2022-27 ஆண்டுகளுக்கான கள் கொள்கையின்படி, அம்மாநிலத்தில் 4,138 கள்ளுக்கடைகள் இயங்கிவருகின்றன. நல்லுசாமியைப் பொறுத்தவரை வெளிநாட்டு மதுபான வகைகளின் விற்பனையை நிறுத்திவிட்டு கள் விற்பனையை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்கிறார். "தமிழ்நாட்டில் விஸ்கி, பிராந்தி போன்ற வெளிநாட்டு மது வகைகளை விற்க தடை விதிக்கப்படுவதோடு, கள் விற்க அனுமதிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி டிசம்பர் மாதத்தில் கள் விடுதலை - மதுவிலக்கு மாநாடு ஒன்றை நடத்தப் போகிறோம். அந்த மாநாட்டுக்கு பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமாரை அழைக்கப்போகிறோம்" என்கிறார் நல்லுசாமி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பனை மரத்திலிருந்து இறக்கப்படும் கள்ளை உணவின் ஓர் அங்கமாக பார்க்க வேண்டும் என, கள் பாதுகாப்பு இயக்கம் கூறுகிறது தமிழ்நாட்டில் மது விலக்கின் வரலாறு தமிழ்நாட்டில் மதுவிலக்கு 1937ல் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் ராஜாஜி ஆட்சியில் இருந்தபோது 1937ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரை ஒட்டி, ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி விலகிய பிறகு மதுவிலக்கு மெல்லமெல்ல தளர்ச்சியடைந்தது. 1947ல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராகப் பதவி வகித்த போது, வடஆற்காடு, சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மதுவிலக்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. பிறகு 1948ல் அக்டோபர் 2ஆம் தேதி சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை ஆங்காங்கே எழுந்துவந்தது. இது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதியான டேக் சந்த் என்பவர் தலமையில் ஒரு குழுவை 1963ல் அமைத்தது மத்திய அரசு. இந்தக் குழு 1964ல் தனது அறிக்கையை அளித்தது. அதில் மதுவிலக்கு தொடர்பான பல கடுமையான பரிந்துரைகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த அறிக்கையை மாநிலங்கள் ஏற்கவில்லை. மதுவிலக்கினால் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதையும் அவை சுட்டிக்காட்டின. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த நிலையில், மதுவிலக்கை அமல்படுத்த முன்வரும் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் பாதியை தாங்கள் தருவதாக மத்திய அரசு கூறியது. ஆனால், மாநிலங்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு, ஏற்கெனவே மதுவிலக்கை அமல்படுத்தி வரும் தங்கள் மாநிலத்துக்கும் நிதியுதவி அளிக்க வேண்டும் எனக் கோரியது. ஆனால், மத்திய அரசின் நிதியுதிவி என்பது, புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்குத்தானே தவிர, ஏற்கெனவே அமல்படுத்திய மாநிலங்களுக்கு அல்ல எனக் கூறியது. இதையடுத்து, மாநில நிதி நிலையைக் காரணம் காட்டி 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் மதுவிலக்கை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்த நினைத்த தமிழ்நாடு அரசு 1973ல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கள்ளுக்கடைகளையும் மூடுவதாக அறிவித்தது. பிறகு, 1974ல் இருந்த அனைத்துச் சாராயக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. மீண்டும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES 1977ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு மதுவிலக்கைத் தளர்த்துவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது. முடிவில், 1981ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் மதுவிலக்குத் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, கள்ளுக்கடை, சாராயக் கடை, வெளிநாட்டு மதுபானங்களை விற்கும் கடைகள் திறக்கப்பட்டன. இதற்குப் பிறகு, 1987ல் கள், சாராயக் கடைகளை மூடுவதாக அரசு அறிவித்தது. ஆனால், இந்தியாவிலேயே தயாராகும் வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனை தொடர்ந்தது. 1989ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, 1990 முதல் மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்தியது. இதைத் தயாரித்து விற்பனை செய்ய டாஸ்கோ நிறுவனம் தொடங்கப்பட்டது. 1991ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, மலிவு விலை மது விற்பனையைத் தடை செய்தது. ஆனால், இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மது பானங்களின் விற்பனை தொடர்ந்தது. 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் மதுபான விற்பனையை டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகள் மூலம் நேரடியாக விற்பனை செய்ய ஆரம்பித்தது தமிழ்நாடு அரசு. அதிர்வலையை ஏற்படுத்திய சசி பெருமாள் மரணம் பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு,சசிபெருமாளின் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் மதுவிலக்குக்கு ஆதரவான கோரிக்கைகள் வலுவடைந்தன. சசி பெருமாள் என்பவர் இதற்காகத் தீவிரப் போராட்டங்களை நடத்திவந்தார். இந்நிலையில், 2015ஆம் ஆண்டில், ஒரு சிறுவனுக்கு அவனுடைய உறவினர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்து, அவன் அதைக் குடிப்பதை வீடியோ எடுத்தார். அது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அப்போதைய தி.மு.க. தலைவரான மு. கருணாநிதி, தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து பல கட்சிகள், மதுவிலக்கு குறித்து தங்கள் நிலைப்பாட்டை வெளியிட ஆரம்பித்தன. இந்நிலையில், 2015ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை என்ற இடத்தில் இருந்த மதுபானக் கடையை மூட வேண்டும் என போராட்டம் நடந்துவந்தது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சசி பெருமாள் அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தத் திட்டமிட்டார். இதையடுத்து அவரும் அந்த ஊரின் ஊராட்சி தலைவருமான ஜெயசீலனும் செல்போன் டவர் மீது ஏறினர். பாதிக்கு மேல் ஜெயசீலனால் ஏற முடியாத நிலையில், சசி பெருமாள் உச்சிக்குச் சென்றுவிட்டார். சுமார் ஐந்து மணி நேரம் செல்போன் டவர் உச்சியில் இருந்து போராடிய சசி பெருமாள், அங்கேயே மயங்கினார். அவரை தீயணைப்பு படையினர் கீழே இறக்கிவந்தபோது, அவரது உடலில் உயிர் இல்லை. காமராசர் திறந்த அணையில் இருந்து மது ஆலைக்கு தண்ணீர் தர எதிர்ப்பு - கேரளாவில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு மது, சிகரெட் மட்டுமல்ல, இந்த பழக்கங்களும் உங்கள் கல்லீரலை பாதிக்கலாம் என்று தெரியுமா? தாய் மட்டுமல்ல, தந்தை மது குடித்தாலும் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் - எச்சரிக்கும் புதிய ஆய்வு மரணத்தை ஏற்படுத்தும் கள்ளச் சாராயத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? சசிபெருமாளின் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் தாக்குதலுக்கு இலக்காயின. அன்றைய ஆளும் கட்சி தவிர்த்த அனைத்துக் கட்சிகளுமே பூரண மதுவிலக்குக்காக கோரிக்கை விடுத்தன. இதற்கு அடுத்த வந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆளும் அ.தி.மு.கவே வெற்றிபெற்ற நிலையில், மதுவிலக்கு கோரிக்கையை அரசியல் கட்சிகள் படிப்படியாக கைவிட ஆரம்பித்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyqjn553rwo
  14. கமல்ஹாசனை மன்னிப்புக் கேட்க வேண்டுமெனக் கூறுவது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் வேலையல்ல - உச்ச நீதிமன்றம் காட்டம் Published By: DIGITAL DESK 3 17 JUN, 2025 | 04:51 PM நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல. உயர்நீதிமன்றம் எப்படி, அப்படிக் கூறலாம்? கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி எழுப்பி உள்ளது. தக் லைஃப் படத்திற்கு தடை கிடையாது.. "குண்டர்கள்" படத்தை தடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக சரமாரி கேள்விகளை எழுப்பிய கர்நாடக உயர் நீதிமன்றம், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது. யாராக இருந்தாலும், கமல்ஹாசனாக இருந்தாலும் கூட, நீங்க கமலா இருங்க.. யாரா வேணா இருங்க... மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீங்கள் பெரிய நடிகராக இருந்து கொண்டு அப்படி பேசி இருக்க கூடாது. இந்த நாட்டின் பிரிவினை மொழிவாரி அடிப்படையில்தான் நடந்தது. ஒரு பொது நபர் இதுபோன்ற அறிக்கையை வெளியிட முடியாது. இதன் காரணமாக அமைதியின்மை, நல்லிணக்கமின்மை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மக்கள் மன்னிப்பு கேட்க மட்டுமே சொன்னார்கள். இப்போது நீங்கள் மன்னிப்பு கேட்காமல் இங்கு பாதுகாப்பு தேடி வருகிறீர்கள். நீங்கள் என்ன அடிப்படையில் அப்படி பேசினீர்கள், நீங்கள் ஒரு வரலாற்று ஆசிரியரா, மொழியியல் நிபுணரா? என்ன அடிப்படையில் பேசினீர்கள்? நீங்கள் மன்னிப்பு கேட்டிருந்தால் போதுமானதாக இருந்திருக்கும். மணிரத்னம் படம் என்பதால் படத்தின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியும், ஆனால் நீங்கள் மன்னிப்பு அறிக்கை (மன்னிப்பு) வெளியிட முடியாது என்று கூறுகிறீர்கள். நீங்களே உருவாக்கிய பிரச்சனைக்கு அரசாங்கத்தின் ஆதரவை எப்படி கேட்கிறீர்கள். நீங்கள் பேசிவிட்டு அதற்கு அரசு பாதுகாப்பு தர வேண்டுமா? மொழி என்பது மக்களுடன் இணைந்த ஒரு உணர்வு. நீங்கள் ஒரு சாதாரண மனிதர் அல்ல, நீங்கள் ஒரு பொது நபர். சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் கூட விசாரிக்கப்படுகிறார்கள். நீங்கள் பெரிய நபர். நீங்கள் பெரிய தவறுதலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்போது கர்நாடகாவில் படத்தை ஓட்ட வேண்டும் என்கிறீர்கள். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது. நீங்கள் மன்னிப்பு கேட்கலாம், மன்னிப்பு கேட்டால் இங்கே வரும் வசூல் மூலம் சம்பாதிக்கலாம். நீங்கள் பேசியதை, திரும்பப் பெறலாம். அந்த பேச்சில் இப்போதும் உறுதியாக நிற்கிறீர்களா? இது தமிழ் மற்றும் கன்னட அறிக்கை சண்டை கிடையாது. நீங்கள் பேசியதால் வந்த பிரச்சனை. வாய் தவறி ஏதேனும் நடக்கலாம். ஆனால் தெரிந்த பேசிய விஷயங்கள் அப்படி இல்லை. நீங்கள் பேசிய வார்த்தையைத் திரும்பப் பெற முடியாது, ஆனால் மன்னிப்பு கேட்கலாம். உடைந்த முட்டையை மீண்டும் சேர்க்க முடியாது என்று நீதிபதிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னதாக கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கில் படத்திற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் அதற்கு எதிராக கமல்ஹாசன் மேல்முறையீடு செய்து இருந்தார். இதை எதிர்த்து கமல்ஹாசன் மேல்முறையீடு செய்திருந்த நிலையில்தான் கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று 'தக் லைஃப்' வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல. உயர்நீதிமன்றம் எப்படி, அப்படிக் கூறலாம்? கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி எழுப்பி உள்ளது. தக் லைஃப் படத்திற்கு தடை கிடையாது.. "குண்டர்கள்" படத்தை தடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217732
  15. Published By: DIGITAL DESK 3 17 JUN, 2025 | 12:22 PM “MI6” எனப்படும் பிரித்தானியாவின் வெளிநாட்டு புலானாய்வு அமைப்பை முதல் முறையாக பெண்ணொருவரால் வழிநடத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். அதன்படி, 1999 ஆம் ஆண்டு முதல் MI6 புலானாய்வு அமைப்பில் பணியாற்றிவரும் புலானாய்வு அதிகாரியான பிளேஸ் மெட்ரூவெலி தலைவராக நியமனமிக்கப்பட்டுள்ளார். MI6 புலானாய்வு அமைப்பின் தற்போதைய தலைவர் சர் ரிச்சர்ட் மூரிடமிருந்து 18 ஆவது தலைவராக பதவியை பொறுப்பேற்கவுள்ளார். 47 வயதுடைய பிளேஸ் மெட்ரூவெலி தற்போது MI6 புலானாய்வு அமைப்பின் Q பிரிவின் பணிப்பாளர் நாயகமாக உள்ளார். தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கும் பொறுப்பாகவுள்ளார். MI6 மற்றும் MI5 ஆகிய உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எதிர் - புலனாய்வு அமைப்புகளில் பணிப்பாளராகவும் இருந்துள்ளார். பிளேஸ் மெட்ரூவெலி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் பட்டம் பெற்றுள்ளார். தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதிகளை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பணியாற்றினார். மெட்ரூவெலி தலைவராக நியமிக்கப்பட்டள்ளமை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “MI6 புலானாய்வு அமைப்பின் தலைவராக பிளேஸ் மெட்ரூவெலி நியமிக்கப்பட்டுள்ளமை வரலாற்று சிறப்பு மிக்க ஒரு விடயமாகும். நமது உளவுத்துறை சேவைகளின் பணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமது நீர்நிலைகளுக்குள் தங்கள் உளவு கப்பல்களை அனுப்பும் ஆக்கிரமிப்பாளர்களாலும், நமது பொது சேவைகளை சீர்குலைக்க முயலும் அதிநவீன சைபர் - சதித்திட்ட ஹேக்கர்களாலும் பிரித்தானியா முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுதல்களை எதிர்கொள்கின்றது எனத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செயிண்ட் மைக்கேல் மற்றும் செயிண்ட் ஜோர்ஜ் ஆணை (Order of St Michael and St George) எனப்படும் பிரித்தானிய ஆணையை தனது சேவைக்கான அங்கீகாரமாக பெற்ற மெட்ரெவெலி, “எனது சேவையை வழிநடத்தும்படி கோரப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன். பிரித்தானிய மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதிலும், வெளிநாடுகளில் பிரித்தானிய நலன்களை மேம்படுத்துவதிலும் MI6 - MI5 மற்றும் GCHQ உடன் - முக்கிய பங்கு வகிக்கிறது. MI6 இன் துணிச்சலான அதிகாரிகள் மற்றும் முகவர்கள் மற்றும் எங்கள் பல சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து அந்தப் பணியைத் தொடர நான் எதிர்பாக்கிறேன்.”எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217693
  16. இஸ்ரேலின் ஹைஃபா நகரை இரான் குறி வைப்பது ஏன்? இந்தியாவுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? பட மூலாதாரம்,AHMAD GHARABLI/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஹைஃபா நகர் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பிந்தைய படம் (ஜூன் 16,2025) 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் மற்றும் இஸ்ரேல் இடையே தொடர் தாக்குதல் தொடர்கிறது. இரானின் அணு ஆயுத திட்டத்தை குறிவைத்து இஸ்ரேல் பல வான்வழி தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. பதிலடியாக, இரானும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, அவற்றில் சில இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை தாண்டி குடியிருப்புப் பகுதிகளை அடைந்தன. இரான் சுகாதாரத்துறை கூற்றின்படி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு அந்நாட்டில் 224 பேர் உயிரிழந்துள்ளனர். மறுபக்கம் இஸ்ரேலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24ஐ எட்டியுள்ளது. இரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் டெல் அவிவ், ஹைஃபா மற்றும் பிற நகரங்களை சேர்ந்தவர்கள் என இஸ்ரேல் சொல்கிறது. இரான் தாக்குதலில் இஸ்ரேலின் இரண்டு முக்கிய நகரங்களான டெல் அவிவ் மற்றும் ஹைஃபா ஆகியவை இலக்காயின. ஹைஃபா என்பது இஸ்ரேலின் வடக்கு துறைமுக நகரம். இங்கு ஒரு பெரிய துறைமுகமும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் உள்ளன. முன்னதாக, டெல் அவிவ், ஹைஃபா மற்றும் பிற இஸ்ரேல் நகரங்கள் பல இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்கப்பட்டதாக இரானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இது போன்ற ஒரு சூழ்நிலையில், இஸ்ரேலின் ஹைஃபா நகரை குறிவைப்பதற்கான காரணங்கள் மற்றும் இந்த நகரத்திற்கு இந்தியாவுடன் இருக்கும் தொடர்பு குறித்தும் தெரிந்துகொள்ள முயற்சிக்கலாம். ஹைஃபா நகரம் இஸ்ரேலுக்கு ஏன் முக்கியமானது? இஸ்ரேல் விவகாரங்களில் நிபுணரான மூத்த பத்திரிகையாளர் ஹரேந்திர மிஸ்ரா, தற்போது ஜெருசலேமில் உள்ளார். பிபிசி செய்தியாளர் அபய் குமார் சிங்குடன் பேசுகையில், இஸ்ரேலுக்கு ஹைஃபா நகரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறுகிறார். "ஹைஃபா இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமாகும். இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் அமைந்த இந்த நகரம், மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமல்லாமல், பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் மிகவும் முக்கியமானது." என்றார் அவர். உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த நகரில் அதிகம் இருப்பதாக கூறும் அவர், "மைக்ரோசாஃப்டாக இருக்கட்டும், கூகுளாக இருக்கட்டும், இன்டெல்லாக இருக்கட்டும், அனைத்து ஹை-டெக் நிறுவனங்களும் தங்களது அலுவலகங்களை ஹைஃபாவில் வைத்திருக்கின்றன," என்கிறார். இஸ்ரேலின் மிகப்பெரிய கச்சா சுத்திகரிப்பு மையம் ஹைஃபா நகரில் இருக்கிறது, இது அதன் பொருளாதார முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது. ஹைஃபாவில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது இரானின் தாக்குதல் நடத்தியிருப்பது உறுதி செய்யப்ப்பட்டது திங்கட்கிழமை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து புகை எழுவது போன்று காணப்பட்ட ஒரு காணொளி அதனை உறுதிசெய்தது. இந்த வீடியோவில், இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ள பகுதியிலிருந்து புகை எழுவது தெரிகிறது. இந்த வீடியோ இரானின் தாக்குதல்களுக்குப் பின்னர் எடுக்கப்பட்டது. பட மூலாதாரம்,AHMAD GHARABLI/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஹைஃபா நகரில் இரான் ஏவுகணை தாக்கிய இடத்தில் இஸ்ரேலின் அவசர கால மற்றும் பாதுகாப்பு சேவை தொழிலாளர்கள் பிபிசி, வீடியோவின் பல முக்கிய பிரேம்களைப் பயன்படுத்தி ரிவர்ஸ் இமேஜ் சர்ச் எனப்படும் ஆய்வை மேற்கொண்டு, அவற்றை செய்தி முகமை படங்களுடன் பொருத்தி, சுத்திகரிப்பு ஆலை தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது. பின்னர், வீடியோவிலும் செய்தி முகமை படங்களிலும் காணப்பட்ட முக்கிய அம்சங்களை கூகுள் எர்த் மற்றும் அப்பகுதியின் பழைய காட்சிகளுடன் ஒப்பிட்டது. இஸ்ரேலிய ஊடக செய்திகளின்படி, சுத்திகரிப்பு ஆலை இரவில் இரானிய ஏவுகணைகளால் குறி வைக்கப்பட்டதாகவும், இதனால் விநியோக குழாய்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் சுத்திகரிப்பு ஆலையை இயக்கும் பசன் குழுமம்,தெரிவித்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், மற்ற பகுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் பசன் குழுமம் கூறியது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தவிர, ஹைஃபாவில் இஸ்ரேலின் துறைமுகமும் அமைந்திருப்பது இந்நகரத்தை பலவகையிலும் முக்கியமானதாக்குகிறது. ஹரேந்திர மிஸ்ரா கூறுகையில், "ஹைஃபா துறைமுகம் மிகவும் முக்கியமானது. அங்கு ஏராளமான சரக்குகள் வந்து செல்கின்றன. வரலாற்று கோணத்தில் பார்த்தால், இஸ்ரேலின் முதல் வெளியுலகத் தொடர்பு இந்நகரத்திலிருந்தே தொடங்கியது" என்றார். 2023 ஆம் ஆண்டு, ஹைஃபாவில் ஒரு துறைமுகத்தை அதானி குழுமம் கையகப்படுத்தியது. இதில் 70 சதவீத பங்கு அதானி குழுமத்திடமும், 30 சதவீத பங்கு இஸ்ரேலின் கடோட் குழுமத்திடமும் உள்ளது. நகரத்தின் மக்கள் தொகை குறித்து விளக்கும் ஹரேந்திர மிஸ்ரா, சுமார் நான்கு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்நகரம் ஒரு முன்மாதிரியாகக் கருதப்படுவதாகக் கூறுகிறார். "இங்கு கணிசமான அரபு மக்கள் உள்ளனர், இதில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அடங்குவர். பஹாய் சமூகத்திற்கு ஒரு மத வழிபாட்டு இடமும் உள்ளது. டெல்லியில் உள்ள லோட்டஸ் டெம்பிள் போன்று, இங்கு பஹாய் தோட்டம் உள்ளது." என்கிறார் அவர். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமான பஹாய் உலக மையமும் ஹைஃபாவில் அமைந்துள்ளது. பட மூலாதாரம்,AHMAD GHARABLI/AFP VIA GETTY IMAGES டெல் அவிவ், ஹைஃபா மட்டுமே இரானின் இலக்குகளாக உள்ளன? ஹைஃபாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இரான், அதை இலக்காக்கியிருக்கலாமா? இது குறித்து ஹரேந்திர மிஸ்ரா பேசுகையில், "மிக அதிக மூலோபாய மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை இரான் குறிவைப்பதாக நம்புகிறேன். பல மதங்களுக்கு புனித தலமாக இருப்பதால் ஜெருசலேம் இதுவரை தாக்கப்படவில்லை." என்றார். இரானின் ஏவுகணைகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளதாக அவர் சொல்கிறார். " இதுவரை பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் சொல்கிறது, ஆனால் 10-12 ஏவுகணைகள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து, கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன." என்று அவர் கூறுகிறார். ஹைஃபா மற்றும் டெல் அவிவ் போன்ற நகரங்கள் மக்கள் தொகை அதிக அடர்த்தி கொண்டவை என்பதுடன், இஸ்ரேல் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் கருதப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். "ஜெருசலேம் மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நகரமாக இருந்தாலும், அங்கு இஸ்லாமிய தலங்கள் அதிகம் இருப்பதால், ஒருவேளை இரான் இதுவரை அதை குறிவைக்காமல் இருக்கலாம்." என்பது அவரது கூற்று. பட மூலாதாரம்,UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES ஹைஃபாவுடன் இந்தியாவுக்கு என்ன தொடர்பு? இந்தியாவுக்கும் ஹைஃபாவுக்கும் இடையிலான உறவு 1918-ஆம் ஆண்டின் ஒரு வரலாற்று கதையுடன் ஆழமாகப் பிணைந்துள்ளது. முதலாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் பேரரசின் சார்பில் போரிட்ட இந்திய குதிரைப்படை வீரர்கள், துருக்கி, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகியவற்றின் கூட்டுப்படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து ஹைஃபா நகரத்தை விடுவித்தனர். இந்த வரலாறு இஸ்ரேலில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஹரேந்திர மிஸ்ரா கூறுகிறார். "ஹைஃபாவின் பள்ளிகளில் இந்த வரலாறு கற்பிக்கப்படுகிறது. 'ஹைஃபாவின் நாயகன்' யார் என்று குழந்தைகளிடம் கேட்டால், அவர்கள் மேஜர் தள்பத் சிங் என சொல்வார்கள்." என்று அவர் தெரிவித்தார். இந்தப் போரில், ஜோத்பூர் லான்சர்ஸின் தளபதியான மேஜர் தள்பத் சிங் ஷெகாவத் கொல்லப்பட்டார். அவருக்கு பின்னர் மிலிட்டரி கிராஸ் விருது வழங்கப்பட்டது. பிரிட்டனுக்காக போரிட்ட 44 இந்திய வீரர்கள் இந்தப் போரில் உயிரிழந்தனர். இது குதிரைப்படை முக்கிய பங்காற்றிய கடைசி யுத்தமாக வரலாற்றில் பார்க்கப்படுகிறது. ஹரேந்திர மிஸ்ரா கூறுகையில், "இந்திய தூதரகமும் ஹைஃபா நகராட்சியும் ஒவ்வொரு ஆண்டும் ஹைஃபா தினத்தை இணைந்து கொண்டாடுகின்றன. பிரதமர் நரேந்திர மோதி இங்கு வருகை தந்தபோது, அவர் அங்கு சென்று இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்." என்றார். இந்திய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள தீன் மூர்த்தி சௌக்கின் பெயர், தீன் மூர்த்தி ஹைஃபா சௌக் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இதற்கான விழாவில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கலந்து கொண்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c79qwvqqn0eo
  17. 17 JUN, 2025 | 02:06 PM வடபகுதியில் பல மனிதபுதைகுழிகள் உள்ளதாக வெளியாகியுள்ள உறுதிப்படுத்தப்படாத வாய்மொழிமூலதகவல்களை அடிப்படையாக வைத்து அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடாது என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கில் பல மனித புதைகுழிகள் குறித்து வாய்மொழி மூல உறுதிப்படுத்தப்படாத தகவல்களே வெளியாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் திருக்கேதீஸ்வரத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை கார்பன் பரிசோதனைக்காக புளோரிடாஅனுப்பவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217712
  18. Published By: RAJEEBAN 17 JUN, 2025 | 02:29 PM மன்னார் புதைகுழி விவகாரத்தை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து ஏமாற்றம்-இவ்வாறான சூழ்நிலைகளில் பணியாற்ற முடியாது செம்மணிமனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்கு தலைமைதாங்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர்பேராசிரியர் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 19 உடல்களில் மூன்று எலும்புக்கூடுகள் பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் என குறிப்பிட்டுள்ளார். அல்ஜசீராவிற்கு(ஜீவன் ரவீந்திரன் ) இதனை அவர் தெரிவித்துள்ளார் உடல்களை இறுதியில் மருத்துவர்கள் பகுப்பாய்வு செய்து அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முயல்வார்கள் என தெரிவித்துள்ள அவர் திகதிகளுடன் காணப்படும் பொலித்தீன் உறைகள் அல்லது ஆடைகள் போன்ற உடல்களுடன் மீட்கப்பட்ட பொருட்களை போன்றவற்றை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். மனித உடல்களுடன் பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை என்றால் கதிரியக்க காலமதிப்பீட்டு முறையை பயன்படுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம் என அல்ஜசீராவிற்கு தெரிவித்த அவர் செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள்மூலம் இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறினை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார் நான் இடைக்கால அறிக்கையொன்றை நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளேன்,இந்த புதைகுழிகளை பாரிய மனித புதைகுழிகள் என கருதலாம் என தெரிவித்துள்ளேன்,மேலதிக விசாரணைகள் தேவை என தெரிவித்துள்ளேன் என ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார் மன்னார் புதைகுழி விவகாரத்தை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ள சோமதேவ, மூன்று வருடத்திற்கு முன்னர் நான் நான் ஆரம்ப கோரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் கடந்தவாரமேஉடல்களை தோண்டியவேளை மீட்கப்பட்ட பொருட்களை கையளித்தார்கள் என குறிப்பிட்டுள்ளார். அவற்றை ஆராய்வதற்கான நிதியை அரசாங்கம் இன்னமும் ஒதுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சூழ்நிலைகளில் பணியாற்ற முடியாது எவரும் பொறுப்பேற்பதில்லை காணாமல்போனோர் அலுவலகம் ஒரு வெள்ளை யானை என ராஜ்சோமதேவ. குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217702
  19. பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிப்பதற்கான விதிகளில் மாற்றம் - ஐசிசி புதிய விதிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 17 ஜூன் 2025, 03:51 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வப்போது புதிய விதிகளையும், ஏற்கெனவே இருக்கும் விதிகளையும் காலத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாற்றி, இன்னும் உயிர்ப்புடன் கிரிக்கெட்டை வைத்திருக்கிறது. ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்த வேண்டி விதிகளில் மாற்றம் செய்வது, புதிய விதிகளைப் புகுத்துவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரிக்கெட் விளையாட்டின் அம்சங்களை மறுஆய்வு செய்து, விமர்சனங்களுக்கு ஏற்ப விதிகளில் மாற்றத்தையும், புதிய விதிகளையும் ஐசிசி அவ்வப்போது அறிவிக்கும். இது உலகக் கோப்பைத் தொடக்கம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முக்கியத் தொடர்களுக்கு முன்பாக ஐசிசி அறிவிக்கும். அந்த வகையில், ஏற்கெனவே இருக்கும் இரு விதிகளில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்து ஒப்புதல் அளித்துள்ளது. ஐசிசி அறிவித்துள்ள இந்த புதிய விதிகள் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஜூன் 17ம் தேதி (இன்று) நடைமுறைக்கு வருகிறது. ஒருநாள் போட்டிகளில் ஜூலை 2ம் தேதியும், டி20 போட்டிகளில் ஜூலை 10ம் தேதியும் சர்வதேச அளவில் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய விதிகள் என்ன? அவை யாருக்கு சாதகமாக அமையும்? ஐசிசி கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்ன? சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியிலும், அனைத்து சர்வதேச போட்டிகளிலும் கன்கசனில் (தலையில் அடிபடும் வீரர்) வெளியேறும் வீரருக்குப் பதிலாக மாற்று வீரரைச் சேர்க்கும் விதியிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்துள்ளது. ஒருநாள் போட்டியில் இரு பந்துகளை பயன்படுத்துவதில் மாற்றம் தற்போது ஒருநாள் போட்டிகளில் பந்துவீசும் அணி 50 ஓவர்கள் வீசுவதற்கு இரு பந்துகளைப் பயன்படுத்துகிறது. ஒரு முனையிலிருந்து வீசுவதற்கு ஒரு புதிய பந்தும், மறுமுனையில் இருந்து வீசும்போது ஒரு புதிய பந்தும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, தலா 25 ஓவர்களுக்கு ஒரு புதிய பந்து, பந்துவீசும் அணியால் பயன்படுத்தப்படுகிறது. இந்த விதியில் ஐசிசி மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி, இன்னிங்ஸ் தொடக்கம் முதல் 34 ஓவர்களுக்குள் இரு புதிய பந்துகளையும் பந்துவீசும் அணி பயன்படுத்த வேண்டும். அதாவது 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும், அடுத்த 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும் பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட இரு பந்துகளில் இருந்து ஏதாவது ஒரு பந்தையே கடைசி 15 ஓவர்களுக்கு பயன்படுத்த வேண்டும். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சமநிலையைக் கொண்டுவரும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டால் என்னாகும்? மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாகவோ அல்லது அதற்கும் குறைவாக குறைக்கப்பட்டால், பந்துவீசும் அணி ஒரு புதிய பந்து மட்டுமே பயன்படுத்தி பந்துவீச வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. வழக்கமாக 2 பந்துகள் பயன்படுத்தும் விதி இதற்குப் பொருந்தாது. ஐசிசி கன்கசன் விதியில் கொண்டுவந்துள்ள மாற்றம் என்ன? கன்கசன் (தலையில் அடிபடும் வீரர்) முறையில் ஒரு பேட்டர் வெளியேறும் சூழல் ஏற்பட்டால், அல்லது விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக எந்த மாற்று வீரரைக் கொண்டுவருவது குறித்து ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, போட்டி தொடங்கும் முன்பே இரு அணிகளும் கன்கசனுக்கான மாற்று வீரர் குறித்த பட்டியலை போட்டி நடுவரிடம் வழங்க வேண்டும். அந்த 5 வீரர்களில் ஒரு விக்கெட் கீப்பர், ஒரு பேட்டர், ஒரு வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர், ஒரு ஆல்ரவுண்டர் இருக்குமாறு வீரர்கள் பெயரை வழங்க வேண்டும். கன்கசனில் எந்த மாதிரியான வீரர் வெளியேறுகிறாரோ, அதற்கு ஏற்றபடியே மாற்று வீரரை களமிறக்க வேண்டும். ஒரு வேகப் பந்துவீச்சாளருக்கு தலையில் அடிபட்டு கன்கசனில் வெளியேறும் நிலையில், அவருக்குப் பதிலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர்தான் வர வேண்டும். ஒரு பேட்டர் தலையில் அடிபட்டு கன்கசனில் சென்றால் அவருக்குப் பதிலாக பேட்டர்தான் வர வேண்டும் என்று ஐசிசி கட்டுப்பாடு விதித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது கன்கசன் விதியில் திருத்தம் செய்ய என்ன காரணம்? கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி செய்த செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுதான் காரணம். கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தனர். அவரும் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தார். கன்கசன் மாற்று வீரருக்கு பேட்டிங் ஆல்ரவுண்டருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சேர்க்க போட்டி நடுவர் ஒப்புதல் அளித்தது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து, கன்கசனில் மாற்று வீரராகக் களமிறங்குவோருக்கு குறிப்பிட்ட ரோலில் களமிறங்க வேண்டும் என்ற விதியை ஐசிசி கொண்டுவர திட்டமிட்டது. அதாவது, பந்துவீச்சாளர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம், விக்கெட் கீப்பர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக மாற்றுவீரராக விக்கெட் கீப்பரை விளையாட அனுமதிக்கலாம் என்று விதிகளைக் கொண்டுவந்துள்ளது. பவுண்டரி எல்லையில் கேட்ச் விதிகளில் மாற்றம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்கும் "பன்னி ஹாப்" (bunny hop) முறைக்கு, அதாவது பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்தால் அதை வானில் தூக்கிப் போட்டோ அல்லது தட்டிவிட்டோ பீல்டர் பவுண்டரி எல்லைக்குள் வந்து கேட்ச் பிடிக்கும் முறைக்கு எம்சிசி (மெர்ல்போர்ன் கிரிக்கெட் கிளப்) தடை விதித்துள்ளது. ஆட்டத்தில் முக்கியத் திருப்புமுனையாக சில கேட்சுகள் அமையக்கூடும். அதில் பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்து அல்லது கேட்ச் பிடிக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து ஒரு பீல்டர் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும்போது பந்தை வானில் தூக்கி வீசியோ அல்லது மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசியோ கேட்ச் பிடிக்கிறார்கள். இந்த கேட்சில் பல்வேறு சந்தேகங்களும், பீல்டிங்கில் இருக்கும் நேர்மைத் தன்மையும் கேள்விக்குள்ளாகிறது. இதையடுத்து, முற்றிலுமாக பன்னிஹாப் கேட்சுக்கு எம்சிசி தடை விதித்துள்ளது. இதன்படி, ஒரு பீல்டர் பவுண்டரிக்கு வெளியே செல்லும் பந்தை கேட்ச் பிடிக்க பந்தை ஒருமுறை மட்டுமே தட்டி பிடிக்க வேண்டும், பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும் பந்தை பிடிக்க முற்பட்டு, வானில் பலமுறை தட்டிவிட்டு மீண்டும் பவுண்டரி எல்லைக்குள் பீல்டர் வந்து பிடிக்கும் முறை இனி செல்லாது. அவ்வாறு 2வது முறையாக பந்தை கையால் தட்டிவிட்டு பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது. பந்தை தட்டிவிட்டு கேட்ச் பிடிக்கும் முன்பாக, பீல்டர் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும், பந்தை பிடித்த பின்பும் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். பந்தை தொட்ட பின் பீல்டர் பவுண்டரி எல்லைக்கு அப்பால் சென்றாலோ அல்லது பவுண்டரி எல்லையைக் கடந்து பந்தை பலமுறை அந்தரத்தில் தட்டிவிட்டு பவுண்டரி எல்லைக்குள் வந்தபின் பீல்டர் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது. அது சிக்ஸராக அல்லது பவுண்டரியாக கருதப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐபிஎல் ஆட்டம் ஒன்றில் சிஎஸ்கே வீரர் பிரேவிஸ் அபாரமாக கேட்ச் பிடித்த காட்சி மாற்றம் கொண்டுவர என்ன காரணம்? ஆஸ்திரேலியாவில் 2023 சீசன் பிக்பாஷ் லீக் டி20 போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்ஸர் இடையிலான போட்டியில் பிடிக்கப்பட்ட கேட்ச்-தான் விதியில் திருத்தம் செய்ய காரணமாக அமைந்தது. சிட்னி சிக்ஸர் அணி வீரர் ஜோர்டான் சில்க் லாங் ஆன்திசையில் அடித்த ஷாட்டை பிரிஸ்பேன் வீரர் நீசர் கேட்ச் பிடித்தார். நீசர் கேட்ச் பிடித்தபோது, பவுண்டரி எல்லைக்கு வெளியே அந்தரத்தில் பறந்துகேட்ச் பிடித்தார், கேட்ச் பிடித்த அடுத்த நொடியே பந்தை வானில் தூக்கி வீசி பவுண்டரி எல்லைக்குள் நீசர் வந்து, மீண்டும் அந்தரத்தில் குதித்து அந்த பந்தை கேட்ச் பிடித்தார். நீசர் கேட்ச் பிடித்தபோது அவரின் இரு கால்களும் பவுண்டரிக்கு வெளியே அந்தரத்தில் இருந்ததே தவிர தரையில் படவில்லை, கேட்ச் பிடித்த பிறகு அவர் தனது காலை பவுண்டரி எல்லைக்குள் வைத்தார் என்பதால் இது கேட்சாக அறிவிக்கப்பட்டது. இந்த முறையில் நீசர் கேட்ச் பிடித்தது பெரிய சர்ச்சையானது, பன்னி ஹாப் முறையில் பிடிக்கும் கேட்சுக்கு தடை விதிக்க கோரிக்கை எழுந்த நிலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. தென் ஆப்ரிக்க அணியில் இட ஒதுக்கீடு ஏற்படுத்திய மாற்றம் என்ன? ஒரு சாம்பியன் உருவான கதை 'சோக்கர்ஸ்' தென் ஆப்ரிக்கா சாம்பியனாக மாறிய கதை - கேப்டன் பவுமா கூறியது என்ன? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பலமான ஆஸ்திரேலியாவை தென் ஆப்ரிக்கா வீழ்த்தியது எப்படி? 'தோல்வியே தெரியாத தலைவன்' - தென் ஆப்ரிக்காவின் கனவை நனவாக்கிய கேப்டன் பவுமா யார்? ரிலே கேட்சில் வந்துள்ள மாற்றம் என்ன? பழைய விதியின்படி, ஒரு பீல்டர் கேட்ச் பிடித்த தருணத்தில் அவர் பந்துடன் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்ல முயலும்போது, பந்தை மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசும்போது அந்த பீல்டரும் பவுண்டரி எல்லைக்குள் இருந்தவாறே அந்த பந்தை பிடித்தால் அது கேட்சாக கருதப்படும் ஆனால், புதிய விதியின்படி முதல் பீல்டர் அல்லது பந்தை இரண்டாவதாக பிடிக்கும் சகவீரர் பந்தை கேட்ச் பிடித்து முடிக்கும்போது கண்டிப்பாக பீல்டிங் எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். ஒருவேளை பந்தை கேட்ச் பிடிப்பதற்கு முன்பே, கேட்ச் பிடிக்கும் வீரர் பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று கேட்ச் பிடித்து, அதை தூக்கி வீசி மற்றொரு வீரருக்கு வீசி எறிந்து அவரும் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது, அது பவுண்டரி அல்லது சிக்ஸராகவே கருதப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20rlz01j8ko
  20. ஈரான் போர்க்கால தலைமைத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்'' - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு 17 JUN, 2025 | 02:13 PM டெல் அவிவ்: தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட உயர் ராணுவ தளபதி அலி ஷத்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்தன. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் ராணுவத் தளபதியுமான அலி ஷத்மானி, துல்லியமான உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து, மத்திய தெஹ்ரானில் ஐஏஎஃப் தாக்குதலில் கொல்லப்பட்டார்" என்று ஐடிஎஃப் ட்வீட் செய்தது. ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதி அலி ஷத்மானி ஈரானிய ஆயுதப் படைகளின் அவசரகால கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார். அவர் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ஈரானிய ராணுவம் இரண்டிற்கும் கட்டளை தளபதியாக இருந்தார். ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் விளைவாக ஈரான் மற்றும் இஸ்ரேலில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரானில், இதுவரை 224 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில், ஈரானின் பதிலடி தாக்குதல்களில் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 592 பேர் காயமடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/217715
  21. பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பௌயான் கலானி பதவி, செய்தியாளர் 17 ஜூன் 2025, 01:28 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக வல்லரசு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், இரானின் அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இஸ்ரேல் மற்றும் இரானின் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகின்றனர். தற்போது இஸ்ரேல் மற்றும் இரானுக்கு இடையிலான மோதலை நிறுத்த இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் கருப்பொருளில் மாற்றம் ஏற்பட்டது. யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான பிரச்னை மற்றும் அமெரிக்கா விதித்த புதிய வரிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில் தற்போது இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் கனடிய பிரதமர் மார்க் கார்னேவை, மாநாட்டிற்கு முதல் நாள் சந்தித்துப் பேசினார். அப்போது இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்கும் வழிகள் குறித்து மாநாட்டில் பேசலாம் என்று முடிவெடுத்தனர். இஸ்ரேல் - இரான் மோதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரிய அளவிலான போராக மாறுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளது. அண்டை நாடுகள் மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், ரஷ்யா போன்ற வல்லரசுகளையும் உள்ளே இழுத்து பெரிய அளவிலான போராக மாறுவதற்கான வாய்ப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. இதுவரை மத்தியஸ்தம் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் எந்த பலனும் கிட்டவில்லை. இஸ்ரேல் இரான் மீதான தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது. இரானிய ஏவுகணைகள் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா போன்ற இஸ்ரேலிய நகரங்களை தாக்கியுள்ளன. சமீபத்திய செய்திகளின் படி, இரானில் அமைந்திருக்கும் ராணுவ உள்கட்டமைப்புகளுக்கு அருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், அப்பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை செய்துள்ளது. இதுபோன்ற சூழலில் சண்டை நிறுத்தத்திற்கான நம்பிக்கை எங்கே உள்ளது? உலகத் தலைவர்கள் இதில் எத்தகைய பங்காற்ற இயலும்? தற்போது நம்பிக்கை அளிப்பது இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியின் அறிக்கை மட்டுமே. அவர் "இஸ்ரேல் தன்னுடைய தாக்குதல்களை நிறுத்தினால், இரானும் தாக்குதலை நிறுத்தும். இரானின் தற்போதைய செயல்பாடுகள் அனைத்தும் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கான எதிர்வினையே," என்று தெரிவித்தார். இருப்பினும், இஸ்ரேல் தனது நோக்கத்தை இன்னும் அடையவில்லை என்றே அதன் நடவடிக்கைகள் காட்டுகின்றன. இரானில் அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குவதற்கான செயல்திறனை அழித்து, இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதை நீக்குவதே அதன் நோக்கம் என்று இஸ்ரேல் தெரிவிக்கிறது. காணொளிக் குறிப்பு,இஸ்ரேல் - இரான் மோதல் மோசமடைந்தால் நிலைமை எப்படியெல்லாம் மாற வாய்ப்புள்ளது? அமெரிக்கா அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்தியஸ்தம் செய்வதில் கை தேர்ந்தவர் என்று கூறிக் கொள்வதுண்டு. அவர் தற்போது அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் தலையிடுவதற்கு பதிலாக இரான் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் குறித்து அவர் பேசுகிறார். "எளிமையாக இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே உடன்படிக்கை ஏற்படுத்தி இந்த மோதலை உடனே முடிவுக்குக் கொண்டு வர நம்மால் இயலும்," என்று ட்ரூத் சோசியல் சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆனால் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா துணை போகிறது என்று அந்த நாட்டின் மீது இரான் குற்றம் சுமத்துகிறது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் டிரம்ப், இரான் மீதான சாத்தியமான தாக்குதலுக்கு இஸ்ரேலுடன் துணை நிற்கிறார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இரான் மீதான தாக்குதல் தொடர்பாக டிரம்பிற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும் அமெரிக்கா ஒப்புக் கொண்டது. இரானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை கண்காணிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. டிரம்ப் தொடர்ந்து இஸ்ரேலின், குறிப்பாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறார். நெதன்யாகுவிடம் இந்த தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்த, மற்ற உலகத் தலைவர்களைக் காட்டிலும், டிரம்பிற்கு கூடுதல் அனுகூலத்தை வழங்குகிறது இந்த நட்புறவு. டிரம்பும், நெதன்யாகுவும் இரானின் அணு செறிவுத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் அதில் வெற்றி காண்பதற்கு இருவரும் வெவ்வேறு வழியை பின்பற்றுகின்றனர். ஞாயிறு அன்று அமெரிக்காவுடனான அணுசக்தி திட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பாஸ் அரக்சி தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்தார். "எங்களின் அணுசக்தி திட்டத்திற்கான முன்மொழிவை அமெரிக்கர்களிடம் இன்று நாங்கள் வழங்கியிருக்க வேண்டும். அது ஒப்பந்தத்தை உருவாக்க வழி வகுத்திருக்கும்," என்று கூறினார். ஆனால் இரான் முன்மொழிந்த திட்டம் தொடர்பான தகவல்கள் எதையும் அவர் வழங்கவில்லை. டிரம்ப் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, அமெரிக்கா (போர்) தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. மத்தியஸ்தம் செய்ய முன்வந்து இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை காட்டிக்கொள்ள விரும்புகிறது அமெரிக்கா. இந்த நிலைப்பாடு, இரான் மீதான இரு நாடுகளின் அணுகுமுறையில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று தீர்மானிக்கும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த போக்கு நீடிக்கும் பட்சத்தில், இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே நீடிக்கும் பதற்றத்தை தணிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க அந்த நாட்டிற்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க அதிபருடன் இஸ்ரேல் பிரதமர் ஐரோப்பா இரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை ஐரோப்பிய நாடுகள் கண்டிக்கவில்லை. இரான் பதில் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டன. இருப்பினும், இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாக நடத்தி மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழலை தணிக்க ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தயாராக உள்ளதாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வாட்ஃபுல் அறிவித்தார். இந்த பிராந்தியத்தில் அமைதியை உருவாக்க இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு முக்கிய நிபந்தனை என்று கருதுகிறார் அவர். மத்தியக் கிழக்கு பிராந்தியத்திற்கும் ஐரோப்பாவுக்கும் இரான் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை இரான் நிரூபித்தால் மட்டுமே அமைதி சாத்தியமாகும் என்று தெரிவித்தார் அவர். மத்திய கிழக்கில் நிலையற்ற தன்மை நிலவ இரானே காரணம் என்று முன்னதாக ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்திருந்தார். தற்போது நியாயப்படுத்த இயலாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அணுசக்தி திட்டத்தில் முன்னேறுவது அந்த சூழலை மேலும் மோசமாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், தாக்குதல் நடத்துவதை இரண்டு நாடுகளும் நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துக் கொண்டார். சமீபத்திய மாதங்களில், ஃபிரான்ஸ் இரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. ஃபிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட், இரு தரப்பினரும் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த பிராந்தியத்தில் தன்னுடைய சொந்த மக்கள் மற்றும் நலனுக்காக ஃபிரான்ஸ் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறினார். அதிபர் மக்ரோன், இரானுக்கு எதிரான தாக்குதலில் ஃபிரான்ஸ் பங்கேற்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால் இஸ்ரேலுக்கு எதிராக இரான் பதில் தாக்குதல் நடத்தும் போது இஸ்ரேலை ஃபிரான்ஸ் பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார். அமெரிக்கா முன்மொழிந்த அணுசக்தி ஒப்பந்தத்தை இரான் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற வருத்தத்தையும் அவர் பதிவு செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மத்திய கிழக்கில் ஸ்திரமற்றத் தன்மை நிலவ இரானே காரணம் என்று முன்னதாக ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்திருந்தார் ஜெர்மனி மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளைக் காட்டிலும் எதார்த்தமான அணுகுமுறையை இந்த விவகாரத்தில் கையாண்டுள்ளது பிரிட்டன். மத்தியக் கிழக்குக்கு கூடுதலாக போர் விமானங்களை அனுப்பியுள்ளது. சமீபத்திய நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்டார்மர், டைஃபூன் போர் விமானங்களும் வானில் இருந்தபடியே போர் விமானங்களுக்கு எரிபொருளை நிரப்பும் விமானமும் அனுப்பப்பட்டிருப்பதை அவர் உறுதி செய்தார். இதற்கு முந்தைய காலகட்டத்தில் இஸ்ரேல்-இரான் இடையே நடைபெற்ற மோதல்களின் போது, இஸ்ரேலை பாதுகாக்க போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதைப் போன்று இதுவும் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து தெளிவாக அவர் குறிப்பிடவில்லை. சனிக்கிழமை பிபிசியில் வெளியான செய்தி ஒன்றில், அங்கு நிலைமை வேகமாக மாறிவருகிறது என்று கியர் ஸ்டார்மர் கூறியதாக குறிப்பிட்டிருந்தது. பிரிட்டன் அதன் நட்பு நாடுகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இரான் - இஸ்ரேல் இடையே நீடித்து வரும் பதற்றமான சூழலை "தணிப்பதே" அவரின் முதன்மை செய்தி என்பது தெளிவானது. கனடாவில் ஜி7 உச்சி மாநாட்டின் போதும் அவர் இந்த பிரச்னை குறித்து பேசினார். மத்தியஸ்தம் செய்வதற்கு பதிலாக, இரான் தன்னுடைய அணு சக்தி செறிவூட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அழுத்தம் தரும் நாடுகளுடன் சேர்ந்து செயல்படுகிறது பிரிட்டன் என்பது தெளிவாகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் அரபு நாடுகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் சௌதி அரேபியா மற்றும் சில வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் வந்து சென்ற ஒரே மாதத்தில் மத்திய கிழக்கில் புதிய போர் சூழல் உருவாவதை அவர்கள் யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். பாரிய அளவிலான முதலீடு, இந்த பிராந்தியத்தில் மிகவும் நிலைத்தன்மையற்று இருக்கும் சிரியா மீதான பொருளாதார தடையை நீக்குதல் போன்ற பல முன்னெடுப்புகளை கொண்டிருந்தது அவரின் வருகை. ஐரோப்பிய தேசங்களைப் போன்றில்லாமல், அனைத்து வளைகுடா நாடுகளும், இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கண்டனத்தை பதிவு செய்தன. மிகவும் வலிமையான கருத்தை பதிவு செய்திருந்தது சௌதி அரேபியா. அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் எக்ஸ் தளத்தில், "சௌதி அரேபியா, எங்களின் சகோதர நாடான இரான் இஸ்லாமியக் குடியரசின் மீது நடத்தப்பட்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களை கடுமையாக கண்டிக்கிறது. இரானின் பிராந்திய இறையாண்மையை மீறும் இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும் உள்ளது," என்று தெரிவித்தது. இந்த கண்டனம் மட்டுமின்றி மத்திய கிழக்கில் உள்ள அரசியல் நிபுணர்களின் மதிப்பீடுகளும் வெளிவந்தன. இந்த நாடுகள் மறைமுகமாக பலவீனமான இரானை தங்களின் அண்டை நாடாக கொண்டிருக்க விரும்புகின்றன என்றும் அதேநேரத்தில் அவர்களின் சொந்த பிராந்தியங்களில் போர் பரவும் சூழலோ அல்லது அதன் பின்விளைவுகளோ தங்களை பாதிக்கக் கூடும் என்றும் அவர்கள் அஞ்சுவதாகவும் குறிப்பிடுகிறது அவர்களின் மதிப்பாய்வுகள். இந்த பிராந்தியத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு அமெரிக்க ராணுவ தளத்தை இரான் தாக்க முடிவெடுத்துவிட்டால் ஒரு பேராபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உருவாகின்றன. இஸ்ரேலிடம் இருந்து விலகிக் கொண்ட சௌதி அரேபியா, இஸ்ரேல் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் நாடுகளுடன் கை கோர்த்துக் கொண்டது. அரபு வளைகுடா நாடுகளுடனான இரானின் உறவு, கடந்த காலத்தில் இருந்ததைப் போல் இல்லாமல், மேம்பட்டு வருகின்ற சூழலில் இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இருப்பினும், பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் இஸ்ரேலுக்கு நேரடியாக ஆதரவு வழங்கியது போன்று இரானுக்கு ஆதரவாக எந்த நாடுகளும் நேரடியாக செயலில் ஈடுபட வெளிப்படையாக விருப்பம் தெரிவிக்கவில்லை. அதற்கு மாறாக இரான் பதில் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்வை எட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன. அவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, அவர்களின் நாடுகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு, கோடிக்கணக்கிலான நிதி முதலீடு மற்றும் எண்ணெய் பொருட்களை வாங்கும் முக்கிய நாடுகளாக இருக்கும் முதன்மை நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சம ஆதரவை வளைகுடா நாடுகள் வழங்க வேண்டும். அதே நேரத்தில் அழிவை ஏற்படுத்தும் ஒரு போர் சூழல் அவர்களின் நாடுகளுக்குள் நிகழ்வதை தடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இந்த சூழலில், சௌதி அரேபியா பன்முக அரசியல் விளையாட்டை விளையாடுவது போன்று தோன்றும். இஸ்ரேலுடனான சௌதியின் சமகால உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் இதில் அடங்கும். ஆனால் முழுமையாக அதில் வெற்றி பெற இயலவில்லை. அது மட்டுமின்றி, ஏமனின் ஹூத்திகளுடனான மற்றொரு பதற்றமான சூழல் ஏற்படுவதை தடுக்க சௌதி மேற்கொள்ளும் முயற்சிகளும் இதில் அடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சௌதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யா ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் இரானுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளது. இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ரஷ்யாவை சிக்கலான இடத்தில் நிறுத்தியுள்ளது. இவ்விரு நாடுகளுடன் நல்ல உறவைத் தொடர்வதை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது தற்போதைய சூழல். இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமான சூழலை தணிக்க ரஷ்யாவால் மத்தியஸ்தம் செய்ய இயலும் என்று சிலர் நம்புகின்றனர். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனும், இரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடம் பேசினார். சூழலை இயல்பு நிலைக்குக் கொண்டு வர தேவையான உதவிகளை அளிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். இவ்விரு நாட்டுத் தலைவர்களுடனும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். இரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த உள்ள வழிகளை அவர் பரிந்துரை செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகளைப் போன்றே, ரஷ்யாவும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இரானின் அணுசக்தி திட்டத்தை எதிர்க்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சனிக்கிழமை அலைபேசியில் அழைத்து இஸ்ரேலின் தாக்குதல் குறித்து விவாதித்துள்ளார் புதின். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் சீனா இரானின் நட்பு நாடுகளில் ஒன்றான சீனா இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு சீனா இஸ்ரேலிடம் கேட்டுக் கொண்டது. சௌத் சீனா மார்னிங் போஸ்ட் செய்திப் படி, சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் ஜியோடன் சாருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையே சண்டையை தொடராமல் அரசியல் ரீதியாக தீர்வு காண இயலும் என்று வாங் கூறியுள்ளார். சர்வதேச அமைப்புகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்ற சூழலில் இஸ்ரேலின் நடவடிக்கை ஏற்புடையதல்ல என்று வாங் உறுதியாகக் கூறியுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் சீனா, இரானின் ராணுவ திட்டங்களுக்கு உதவி செய்துள்ளது. ஒரு முழுமையான போர் வெடித்தால் என்னவாகும்? கிட்டத்தட்ட அனைத்து அரசியல் நிபுணர்களும், இரான் - இஸ்ரேலுக்கு இடையேயான மோதல் கட்டுப்பாட்டை மீறிச் சென்று முழு அளவிலான போராக மாறும் என்று கூறுகின்றனர். "மோசமான சாத்தியக்கூறாக இது இந்த பிராந்தியத்தில் இருக்கலாம். போர் பரவுவதை தடுக்க பல நாடுகளின் தலைவர்களும் வழி கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர். ஒரு சாத்தியமான வாய்ப்பு என்னவென்றால் இரானின் கூட்டாளிகளான, பலவீனம் அடைந்த லெபனானின் ஹெஸ்பொலா, ஏமனின் ஹூத்திகள், இராக்கில் உள்ள இரானின் ஆதரவுக் குழுக்கள் போன்றவை இந்த மோதலில் ஈடுபடலாம். இவர்கள் இந்த பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்காவை இந்த மோதலுக்குள் இழுக்கலாம். அப்படியான சூழலில் போர் புதிய திசை நோக்கி நகரும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்து பிரிட்டனும் ஃபிரான்ஸும் இரான் மீது தாக்குதல் நடத்தலாம். இத்தகைய சூழலில், பல ஆண்டுகளாக கயான் செய்தித்தாளின் ஆசிரியர்கள் கூறுவது போன்று இரான் ஒரு முக்கிய முடிவை எடுக்கும். அது ஹோர்முஸ் நீரிணை வழியே சரக்கு போக்குவரத்தை மூடுவது. உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இது போன்ற சூழலில், அமெரிக்க தளங்களை இரான் தாக்குமானால், அமெரிக்காவின் செல்வாக்குட்பட்ட அரபு நாடுகள் இரானுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த மோதலின் மற்றொரு பின்விளைவாக சைபர் போர் இருக்கும். எரிசக்தி உற்பத்தி நிலையங்கள், மின்சாரம் மற்றும் நீர் ஆதார கட்டமைப்புகள் உள்ளிட்டவையையும் போர் சேதமாக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இது போராக நீடித்தால் நாட்டில் இருந்து மக்கள் அதிகப்படியாக இடம் பெயர்வார்கள் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் எல்லை தாண்டிய படைப்பிரிவினர் , "ஐரோப்பிய எல்லைகளில் தங்களின் தாக்குதல்களை நடத்தலாம்," என்று மேற்கத்திய நிபுணர்கள் பலர் கணித்துள்ளனர். பதற்றம் நீடித்து, உள்கட்டுமானம் சீர்குலையும் எனில் இரானியர்கள் கூட்டம்கூட்டமாக பெரிய நகரங்களில் இருந்தும், நாட்டில் இருந்தும் மொத்தமாக வெளியேறுவார்கள். இது இடைக்கால இடம் பெயர்தலை உள் நாட்டிலும் அண்டை நாட்டிலும் ஏற்படுத்த வழிவகை செய்யும். சிரியப் போருக்குப் பிறகு தங்களின் நாடு மீண்டும் ஒரு சிறை போன்று மாறுவதை விரும்பவில்லை என்று துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் தன்னுடைய அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மோதல் நீடிப்பது இஸ்ரேலுக்கும் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். தற்போது வான்வழி தாக்குதல் குறித்த ஒவ்வொரு எச்சரிக்கை ஒலியின் போதும் லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் பணியிடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைகின்றனர். இஸ்ரேல் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் அங்குள்ள எண்ணெய் சுத்தகரிப்பு மையங்களை அழிக்கும். மின்சாரம் தடைபடும். இதர சேவைகளில் தடை ஏற்படும். பொருளாதாரம் மற்றும் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படும். பொதுமக்களின் உயிரிழப்புகளை அதிகரிக்கும். மோதலின் போது பாரசீக வளைகுடாவில் ஒரு அமெரிக்க கப்பல் நீரில் மூழ்கினாலோ அல்லது ஒரு ஏவுகணை மோதி பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானாலோ பேரழிவு தரும் பின்விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும். இதனால் தான் அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகள், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் தலைவர்கள் முழு அளவிலான போரை தடுக்க முயன்று வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ceqgq403wylo
  22. Published By: VISHNU 17 JUN, 2025 | 01:48 AM நாட்டின் லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு 16ஆம் திகதி திங்கட்கிழமை வென்று சாதனை படைத்துள்ளது. இது தேசிய லொட்டரி வாரியத்தின் மெகா பவரின் 2210வது சீட்டிழுப்பில் ரூ.474,599,422 சூப்பர் பரிசு தொகையாகும். வெற்றி பெற்ற லொட்டரி சீட்டை கோகரெல்லாவைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்றுள்ளார். முன்னதாக, தேசிய லொட்டரி வாரியத்தின் மெகா பவர் லொட்டரி, லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய பரிசான ரூ.230 மில்லியன் சூப்பர் பரிசை தற்போது வென்று சாதனை படைத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217669
  23. கட்டுரை தகவல் எழுதியவர், மோகன் பதவி, பிபிசி தமிழ் 28 நிமிடங்களுக்கு முன்னர் ரூ.100 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி மோசடியில் 5 மாநில காவல்துறையினரால் முக்கியப் புள்ளியாக செயல்பட்ட ஒருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களிடம் பணத்தை இழந்துள்ளனர். கோவையில் தொடங்கப்பட்ட நிறுவனம் இந்தியா முழுவதும் ரூ. 100 கோடி கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டது எப்படி? அவர்களிடம் பணத்தை இழந்தவர்களால் அதனை திரும்பப் பெற முடியுமா? அந்த நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? ஹாஷ்பே மோசடி நடந்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,hashpe.io இணையதள முகவரியை தற்போது விற்பனைக்கு உள்ளது கோவையில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஹாஷ்பே என்கிற நிதி சேவை வழங்கும் நிறுவனம் தொடங்கப்பட்டது. ட்ரான் கனெக்ட் (Tron Connect) என்கிற திட்டத்தில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்று அவர்கள் விளம்பரம் செய்தனர். ஹாஷ்பே இணையதளம் மூலம் கிரிப்டோகரன்சி வாங்கவும், பணத்தை எளிதாகவும் வேகமாகவும் அனுப்ப முடியும் என்றும் அவர்களது விளம்பரங்களில் கூறப்பட்டிருந்தது. 50 டாலர் செலவு செய்து புக்கிங் செய்வதன் மூலம் 50 மில்லியன் டாலர் வரை லாபம் சம்பாதிக்க முடியும் என்றது அந்த விளம்பரம். அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிப்டோகரன்சி பற்றிய பல கவர்ச்சிகரமான விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிறுவனத்தை பிரபலப்படுத்த சென்னையிலும் பின்னர் மும்பையில் சொகுசு கப்பலிலும் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. கார் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அறிவித்து குறுகிய காலத்திலேயே முதலீட்டாளர்களை கணிசமாக அவர்கள் ஈர்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை அவர்கள் திருப்பித் தராமல் போகவே புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான அசோகன் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பின்னரே இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. அவர் கிரிப்டோ முதலீட்டில் ரூ.93 லட்சத்தை இழந்துள்ளார். காவல்துறை விசாரணையில், புதுச்சேரியில் மட்டும் 9 பேர் சுமார் 2.6 கோடி ரூபாயை இழந்திருப்பது தெரியவந்தது. முதலில் புதுச்சேரி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்த, இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த இம்ரான் பாஷா என்பவர் பல மாத தேடலுக்குப் பிறகு பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இம்ரான் பாஷாவை புதுச்சேரி அழைத்துச் சென்ற காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். கைதான இம்ரான் பாஷா மீது புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் மோசடி வழக்குகள் உள்ளன. பட மூலாதாரம்,HASHPE.IO "நடிகைகளுக்கு விரைவில் சம்மன்" இந்தியா முழுவதும் இந்தக் குழு 100 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கிறார் புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவு காவல் ஆணையர் கீர்த்தி. பிபிசி தமிழிடம் பேசியவர், "முதலீடு செய்தவர்களை நம்ப வைப்பதற்காக ரூ.50 லட்சம் வரை ரொக்கமாக பரிசுத் தொகை வழங்கியுள்ளனர். இதனை நம்பிய முதலீட்டாளர்கள் அவர்கள் தளத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வந்துள்ளனர். இணையதளத்தை இவர்களே வடிவமைத்திருந்தனர் என்பதால் கிரிப்டோகரன்சியின் மதிப்பை தங்களின் இஷ்டத்திற்கு ஏற்றி வைத்துள்ளனர். பிறகு திடீரென ஒருநாள் அனைத்தும் நஷ்டம் அடைந்துவிட்டதாகக் கூறி அதன் மதிப்பை குறைத்துவிட்டனர். முதலீடு செய்தவர்கள் சந்தேகம் வந்து கேட்கவே இணையதளத்தை முடக்கிவிட்டு அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். இதில் மொத்தமாக எவ்வளவு மோசடி நடைபெற்றுள்ளது, யாருக்கு எவ்வளவு தொகை சென்றுள்ளது என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திரைப்பட நடிகைகளுக்கு இவர்கள் கொடுத்த பணமும் மோசடியாக சம்பாதித்தவை என்பதால் அவர்களுக்கும் விரைவில் முறையாக சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும்" என்றார். பட மூலாதாரம்,HASHPE.IO படக்குறிப்பு,ஷாஷ்பே நிறுவனம் கைது செய்யப்பட்டவர்கள் யார்? கோவையைச் சேர்ந்த இம்ரான் பாஷா, செயத் உஸ்மான் மற்றும் நித்திஷ் ஜெயின் என்கிற மூவர் தான் ஹாஷ்பே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களாக இருந்து வந்தனர். இவர்களில் நித்திஷ் ஜெயின் முதலில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மே 17-ம் தேதி செயத் உஸ்மான் கோவையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார். தலைமறைவாக இருந்த இம்ரான் பாஷா தற்போது பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் போக கோவையைச் சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். "இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் 3 பேரை தேடி வருகிறோம். இந்த மோசடியில் ஹாஷ்பே நிறுவனம் மட்டுமல்ல, பல இணை நிறுவனங்களும் சம்மந்தப்பட்டுள்ளன. மோசடி பணத்தை வெளிநாடுகள் உட்பட பல இடங்களுக்கு அனுப்பியுள்ளனர். அடுத்தக்கட்ட விசாரணைகளில் இவை முழுமையாக ஆராயப்படும்" எனத் தெரிவித்தார் ஆய்வாளர் கீர்த்தி கிரிப்டோகரன்சி முறைகேடுகள்: இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது?ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என? ஆனந்த் ஸ்ரீநிவாசன் பேட்டி: கிரிப்டோகரன்சி என்றால் என்ன, அவற்றில் முதலீடு செய்யலாமா? ரூ.100 கோடி கிரிப்டோகரன்சி மோசடி புகார்: எட்டாயிரம் பேரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியது எப்படி? பணத்தை மீட்க முடியுமா? சைபர் குற்றங்களைக் கையாளும் காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கிரிப்டோகரன்சி என்பது அரசால் அங்கீகரிக்கப்பட்டது அல்ல. பல பெயர்களில், பல குழுக்கள் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. கிரிப்டோகரன்சியை மைனிங் செய்வதில் தொடங்கி அவற்றைப் பதிவு செய்து, தளத்தை உருவாக்கி, விற்பனை செய்வது என இதில் பல கட்டங்கள் இருக்கின்றன. இதில் திரட்டப்படும் பணம் வங்கிகளையும் கடந்து செல்வதால் அவற்றை மீட்பது கடினமான ஒன்றாக உள்ளது" எனத் தெரிவித்தார். சைபர் சட்ட வழக்கறிஞரான ந.கார்த்திகேயன் கூறுகையில், "பணத்தை இழந்துவிட்ட நிலையில் முதலீடு செய்தவர்களிடம் உள்ள ஒரே தகவல் அவர் பணத்தை அனுப்பிய வங்கி கணக்கு விவரங்கள் தான். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் பிறரின் வங்கிக் கணக்கை அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்துகின்றனர். இதனால் மோசடி செய்யப்பட்ட பணம் அடுத்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை அறிவது கடினமாகிறது" என்றார். நடிகைகள் மீது என்ன நடவடிக்கை? இதனை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார் கார்த்திகேயன், "2019-ல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களில் இதற்கான ஷரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது யாராவது தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில் நடித்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் மீது வழக்குத் தொடர முடியும்." "காவல்துறை கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்கையில் பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் அளித்து நிவாரணமும் பெற முடியும். பார்வையாளர்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில் ஒருவர் முதன் முறையாக நடித்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம் மற்றும் ஓராண்டு வரை விளம்பரங்களில் நடிக்க தடை விதிக்க முடியும். மீண்டும் இதே தவறைச் செய்தால் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதித்து மூன்று ஆண்டுகள் வரை தடை விதிக்க முடியும். இவை விளம்பரத்தை எடுப்பவரில் இருந்து அதில் நடிப்பவர் வரை அனைவருக்கும் பொருந்தும்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg717lekv1no
  24. தெஹ்ரான் வான்வெளியை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ள இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களில் நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். மேலும், தெஹ்ரானின் வான்வெளியை இஸ்ரேலிய விமானப்படை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அணுசக்தி அச்சுறுத்தலை நீக்குதல் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை நீக்குதல் ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களை அடைய நாங்கள் எங்கள் பாதையில் செல்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நாங்கள் தெஹ்ரான் குடிமக்களிடம் பிராந்தியத்தை விட்டு வெளியேறுமாறு கூறியுள்யோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவருகின்றது. இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போரின் முடிவு தொடர்பில் தெளிவற்ற தன்மை காணப்படுகின்றது. போர்நிறுத்த பேச்சுவார்த்தை இந்நிலையில் ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க வலியுறுத்திவருகிறது. ஆனால் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியமை அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தூதரகம் சேதமடைந்துள்ளதால் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. https://tamilwin.com/article/israel-has-full-control-of-tehran-s-airspace-1750085552
  25. Published By: VISHNU 16 JUN, 2025 | 06:58 PM 2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை நாட்டில் உருவாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பொருளாதார வீழ்ச்சியின் போது ஒரு நாட்டின் சுயாட்சி மற்றும் இறையாண்மையைப் பேண முடியாது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு தேசமாக சுயாட்சி மற்றும் இறையாண்மையை அடைவதே, இறுதி பெறுபேறாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதற்காக, மிகவும் கடினமான மற்றும் கைவிடாத முயற்சியில் தனது தலைமையிலான அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், அரச அதிகாரிகள் மற்றும் பிரஜைகள் என அனைவரின் ஆதரவையும் இதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க, திங்கட்கிழமை (16) முற்பகல் கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற "இலங்கையின் மீட்சிக்கான பாதை: கடன் மற்றும் நிர்வாகம்" (Sri Lanka's Road to Recovery: Debt and Governance) என்ற கருத்தரங்கில் பிரதான உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் மேலோட்டமான பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாகியுள்ள போதிலும், அந்த நிலைமையை பலமாக நிலைநிறுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதிய பொருளாதார மறுசீரமைப்புகளும் மாற்றங்களும் அவசியம் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மிகக் குறுகிய காலத்தில் நாடு பல பொருளாதார வெற்றிகளைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி நாட்டை பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியாக வெற்றிபெறச் செய்வதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார். கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் இலங்கையின் அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி (ECF) வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவும் இந்த கருத்தரங்கு நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இங்கு உரையாற்றினர். இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை, சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாடாக, நமது நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிக ஆழமான நெருக்கடியின் விளைவுகளை நாம் எதிர்கொண்டோம். அதன்போது நாம் தேர்ந்தெடுக்க இரண்டு பாதைகள் இருந்தன. பழைய தோல்வியுற்ற மற்றும் அழிவுகரமான பாதையில் தொடர்வதா, அல்லது நமது நாட்டை மீண்டும் வெற்றிபெறச் செய்ய புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பதா, என்ற இரண்டு விடயங்கள் நமது முன்னே இருந்தன. இன்று, நாம் தேர்ந்தெடுத்த பாதை நாட்டிற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொண்டு வந்துள்ளது என்பதை நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க முடியும். அதில், அரசியல் அதிகாரத்திற்கு ஒரு பொறுப்பும் கடமையும் உள்ளது. அதேபோல், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு போன்ற அரச நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருந்தது. மேலும், இந்த மறுசீரமைப்புகளின்போது,பாதிக்கப்பட்ட மக்களுக்கே இதில் மிகப்பெரிய பங்கு இருந்தது. அவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக பெரும் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் செய்தனர். இன்று, ஒரு நாடாக நாம் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம். கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்ய முடிந்தது, மேலும் குறிப்பிடத்தக்க காலத்திற்கு டொலரை நிலையாக பேண முடிந்தது. எதிர்பார்க்கப்படும் அரச வருமானத்தை ஈட்டவும், எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு கையிருப்புக்களை உருவாக்கவும் முடிந்தது. இவ்வாறு, மேலோட்டமாகப் பார்த்தால் பொருளாதாரக் காரணிகளில் மிகவும் வலுவான நிலைபேற்றுத் தன்மையை பார்க்க முடிகிறது. ஆனால் நெருக்கடியின் ஆழமான காயங்கள் இன்னும் ஆறவில்லை. உள்நாட்டில் நெருக்கடி இன்னும் நீங்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, மேலோட்டமாக ஸ்திரத்தன்மை இருந்தாலும், அந்த நிலைமையை ஸ்திரப்படுத்தவும், பொருளாதாரத்தை, அது இருக்கும் இடத்திலிருந்து உயர்த்தவும் புதிய மறுசீரமைப்புகளும் பொருளாதார கட்டமைப்பில் மாற்றங்களும் அவசியம் ஆகும். பல முக்கியமான காரணிகள் குறித்து நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். நமது நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கவும், இந்த நெருக்கடியை வெற்றி கொள்ளவும் ஒரு வலுவான அரச சேவை அவசியம். ஆனால் அந்த அரச சேவைக்காக நாம் சுமக்கும் செலவு மிகப்பெரியது. இன்று, நாம் சுமக்கக்கூடாத ஒரு செலவைச் சுமக்கிறோம். எனவே, வலுவான அரச சேவையை உருவாக்குவதோடு, பிரஜைகளுக்கு மிகக் குறைந்த செலவில் அந்த சேவையை வழங்குவதே எங்கள் எதிர்பார்ப்பு. சில அரச நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். அந்த அரச நிறுவனங்கள் அந்தக் கால சமூக-பொருளாதார சூழ்நிலையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகக் கட்டமைக்கப்பட்டன. இன்று, அந்தப் பொருளாதார மற்றும் சமூக நிலைமை மாறிவிட்டது. சில நிறுவனங்களின் இருப்பு கூட தேவையற்றுப்போய் விட்டது. எனவே, நாம் அதைச் செய்ய வேண்டும். மேலும், ஒரே செயல்பாட்டிற்கு பல அரச நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களை நாம் இணைக்க வேண்டும். மேலும், சில அரச நிறுவனங்களின் நோக்கமும் இலக்குகளும் மாற்றப்பட வேண்டும். எனவே, இந்த ஸ்திரத்தன்மையை முன்னோக்கி எடுத்துச் செல்ல, அரச கட்டமைப்பின் வலுவான மாற்றம் தேவை. அதை மிகவும் வலுவாக செயல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நமது அரச பொறிமுறை முழுவதும் பரவலாக இருக்கும் செயற்திறனின்மை, குறிப்பாக ஊழல் மற்றும் இலஞ்சம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும். அண்மைய கால செய்தி அறிக்கைகளைப் பார்க்கும்போது, நமது நாடு எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம். பொலிஸாருக்குப் பயந்து பொலிஸ் மா அதிபர் ஒளிந்து கொண்டிருக்கிறார். சிறைச்சாலைகள் ஆணையாளர் சிறையில் அடைக்கப்படுகிறார். போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள். அப்படியானால் நமது அரச கட்டமைப்பு எங்கே செல்கிறது? திறமையின்மை, இலஞ்சம் மற்றும் ஊழல் இந்த நெருக்கடிக்கு ஒரு பெரிய பாதையை உருவாக்கின. இலஞ்சம் என்பது அந்த நேரத்தில் நடக்கும் ஒரு கொடுக்கல் வாங்கல் அல்ல. இலஞ்சம் மற்றும் ஊழல் அந்த குறிப்பிட்ட நேரத்தில் தேவையான திட்டங்களை செயல்படுத்தவில்லை. மறுபுறம், இலஞ்சம் மற்றும் ஊழல் நமக்கு தேவையற்ற திட்டங்களை செயல்படுத்தியது. அவை இன்றும் நமக்கு ஒரு சுமையாக மாறிவிட்டன. எனவே, இந்த சூழ்நிலையை விட்டு மீண்டு வர, அரச நிறுவனங்களை திறமையாக்குவதும், இலஞ்சம் மற்றும் ஊழலை தீர்க்கமாக தோற்கடிப்பதும் அவசியம். ஒரு நாடாக நாங்கள் அதற்கு உறுதிபூண்டுள்ளோம். நமது அரச நிறுவனங்கள் , குறிப்பாக பொருளாதாரம் தொடர்பான முக்கியமான பகுதிகளில், அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட அளவு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நமது வலுசக்தி சந்தை மற்றும் நிதிச் சந்தை மிகச் சிறிய சந்தைகள் ஆகும். எனவே, நம்மைப் போன்ற ஒரு நாட்டில், ஏகபோகத்தை உருவாக்கும் ஆபத்து உள்ளது. ஏகபோகத்தை உருவாக்கும் ஆபத்தை எதிர்கொள்ள, அரசாங்கம் சில பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பங்கைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இருப்பினும், அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு ஒரு சுமையாக இருக்கக்கூடாது. குறிப்பாக மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்கள் பொருளாதாரத்துடனும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையுடனும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் மீது அரசாங்கம் சில கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். அந்த நிறுவனங்களை நடத்துவதில் பொதுமக்கள் சுமையைச் சுமக்கக்கூடாது. எனவே, உற்பத்திச் செலவுக்கு ஏற்ப விலைகள் சீர் செய்யப்பட வேண்டும். ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்திச் செலவைப் பொறுத்து, ஒரு யூனிட் மின்சாரத்தின் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையை பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அதேபோன்று, உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்குத் தேவையான பொறிமுறைகளை வலுப்படுத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம். பிரஜைகள் அந்த சேவைகளின் செலவை செலுத்தி, அந்த சேவைகளைப் பெற வேண்டும். இருப்பினும், சில குறைந்த வருமானம் பெறுவோர் இருப்பதையும் நாங்கள் அறிவோம். பொருளாதார மறுசீரமைப்புகளின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் வரை காத்திருக்கச் சொல்ல நமக்கு உரிமை இல்லை. பலன்கள் அவர்களுக்கு செல்லும் வரை நாம் அந்த மக்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதுதான் ஒரு நீதியான அரசின் பொறுப்பு. எந்த நேரத்திலும், பொருளாதார செயல்பாட்டில் ஈடுபடாத ஒரு பிரிவினர் சமூகத்தில் உள்ளனர். முதியோராக இருக்கலாம், ஊனமுற்றவர்களாக இருக்கலாம், அவர்கள் வளரும் சூழலைப் பொறுத்து பொருளாதாரத்தில் இணைய முடியாமல் போகலாம். இதன் காரணமாக, பொருளாதாரத்தில் தீவிரமாக ஈடுபடாத மற்றும் இணைக்க முடியாத ஒரு சமூகம் எப்போதும் இருந்துகொண்டு தான் இருக்கும். அந்த சமூகத்தைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு. அந்த சமூகத்தைப் பற்றி குறிப்பிடாமல் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. இது மனிதநேயம், நீதி மற்றும் நியாயம் பற்றிய கேள்வி. எனவே, இலக்கு வைக்கப்பட்ட சமூகத்திற்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை எங்களிடம் உள்ளது. இது அரசியல்மயமாக்கப்பட்ட மானியத் திட்டம் அல்ல. அதை சமூக நீதி, சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்கான பொறுப்பு பற்றிய கேள்வியாகக் கருத நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் அனுபவத்தின்படி, நிவாரணத் திட்டங்கள் எப்போதும் அரசியல்மயமாக்கப்பட்ட திட்டங்களாக மாறிவிட்டன. அரசியலுக்காக சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஒருபோதும் செயல்படுத்த மாட்டோம் என்பதை நான் பொறுப்புடன் உங்களுக்குச் கூறுகிறேன். மறுபுறம், பல துறைகளில் நிலையான இலக்குகளை நாம் அடைந்துள்ளோம். ஆனால் இலக்குகளை விரைவாக அடைய வேண்டிய பல பகுதிகள் இன்னும் உள்ளன. முதலில், நாம் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க வேண்டும். கடந்த பல தசாப்தங்களைப் பார்க்கும்போது, அந்த குறிப்பிட்ட தருணத்தில், உலகின் பொருளாதார இயல்புடன், பொருளாதார செயற்பாடுகளையும் நாம் பார்த்தால், போதுமான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கத் தவறிய ஒரு நாடு நாம். எனவே, போதுமான அந்நிய நேரடி முதலீட்டை நாம் ஈர்க்க வேண்டும். ஆனால் அதை மீண்டும் கொண்டு வருவது ஒரு சவாலாகும். நாம் மிகவும் வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட இடத்தில் இல்லை. வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்திலிருந்து மீள்வதற்கு நாம் போராடும் இடத்தில் இருக்கிறோம். நமது நிதிச் சந்தைகள் மீதான நம்பிக்கை வீழ்ச்சி கண்டது. அன்றாடப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. டொலர் கையிருப்பு மிகக் குறைந்த அளவில் இருந்தது. அதிலிருந்து நாம் மீண்டு வருகிறோம். ஆனால், முதலீட்டை ஈர்க்க அது போதுமானதா? முதலீட்டிற்கு சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முதலீட்டிற்கு கவர்ச்சிகரமான சூழலை உருவாக்குவதிலும் சில சலுகைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். நமது நாட்டில் தேசிய பொருளாதாரத்தையும் தேசிய உற்பத்தியையும் எவ்வாறு மீட்டெடுப்பது? என்ற ஒரு கேள்வி உள்ளது. அண்மைய பொருளாதார வீழ்ச்சி காரணமாக, ஏராளமான சிறிய மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் வீழ்ச்சியடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் 90% க்கும் அதிகமானோர் தங்கள் நிர்வாகப் பிழைகள் அல்லது வணிகப் பிழைகள் காரணமாக பாதிக்கப்படவில்லை, மாறாக பொதுவான பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளை அவர்கள் அனுபவித்ததால் பாதிக்கப்பட்டனர். எனவே, அவற்றை மீட்டெடுக்க நாம் சில நிவாரணங்களை வழங்க வேண்டும். இந்த சூழ்நிலையிலிருந்து மேலும் ஒரு படி முன்னேற, நாம் இந்த பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். மூன்றாவதாக, பொருளாதார வளர்ச்சியும் பொருளாதார விரிவாக்கமும் நம் நாட்டில் முக்கியமானவை. கிராமப்புற மக்கள் பொருளாதாரத்திலிருந்து நீங்கியுள்ளனர். பொருளாதாரத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். தலைநகரில் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்த தரவுகளைப் பற்றி நாம் நிறைய பேசலாம். ஆனால் தரவுகளில் பிரதிபலிக்காத ஒரு உண்மை உள்ளது. பொருளாதார வளர்ச்சியின் காரணிகள் மக்களுக்கு நல்ல பலன்களைக் கொண்டுவர வேண்டுமென்றால், பொருளாதார விரிவாக்கம் அவசியம். எனவே, பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கும், தொலைதூர கிராமங்களின் பிரஜைகளை பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கும் தேவையான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் நாம் தொடங்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். எனவே, தற்போதைய பொருளாதார நிலைமையை உறுதிப்படுத்தி, இந்த நிலைமையை இன்னும் வலுப்படுத்தும் ஒரு பெரிய பணி நமக்கு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவிற்கும், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் எமது மக்களின் பொறுத்துக்கொள்ளும் அர்ப்பணிப்புக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நான் முன்பு கூறியது போல, சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் முன்னெடுக்கும் கடைசித் திட்டமாக இதை மாற்றுவதே எமது நோக்கம். அதற்கான எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் எங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தத் தேவையான பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கும் எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த இடத்தில் நாட்டின் இறையாண்மை நிலைத்திருக்காது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த இடத்தில் சுயாட்சி நிலைத்திருக்காது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நமது சுயாட்சியையும் இறையாண்மையையும் இழந்துவிட்டோம். எனவே, இதன் இறுதி விளைவாக, ஒரு தேசமாக நாம் சுயாட்சியையும் இறையாண்மையையும் பெற வேண்டும். அதற்காக ஒரு கடுமையான முயற்சி உள்ளது. விட்டுக்கொடுக்காத ஒரு முயற்சி உள்ளது. அதற்காக நிறைவு செய்ய வேண்டிய ஒரு பணி உள்ளது. அந்தப் பணியை செய்வதற்கு அரசியல் அதிகாரமாக எமது பங்களிப்பும், அரச அதிகாரிகள் என்ற வகையில் உங்கள் பொறுப்பு மற்றும் பொதுமக்களாக உங்கள் ஆதரவையும் நான் எதிர்பார்க்கிறேன். https://www.virakesari.lk/article/217660

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.