Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இரானுக்குள் ஒரு ரகசிய வலையமைப்பை உருவாக்கி தளபதிகள், ராணுவ தளங்களை 'மொசாட்' தாக்கியது எப்படி? பட மூலாதாரம்,THE IDF படக்குறிப்பு, இரானில் தாக்குதல்களை மேற்கொள்வதில் மொசாட் முக்கிய பங்கு வகித்ததாக ஊகங்கள் உள்ளன. கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி பாரசீக சேவை பதவி, 21 ஜூன் 2025, 08:36 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு வெளிவந்த பல அறிக்கைகள், போர் முனை வானத்தில் மட்டுமல்ல, நிலத்திலும் இருப்பதைக் குறிக்கின்றன. இரானில் ஆழமாக மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் ஊடுருவும் செயல்பாடுகள் மூலம் இஸ்ரேல் இதற்கு நீண்ட காலமாக தயாராகி வந்துள்ளது. இருப்பினும், இரானின் பாதுகாப்புப் படைகளுக்குள், இஸ்ரேல் ஊடுருவலாம் என்ற அச்சத்தை இரானிய அதிகாரிகள் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் இந்த முழு சம்பவத்தில் இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட்டின் பங்கு எந்தளவுக்கு இருந்தது என்பதை மதிப்பிடுவது எளிதான காரியமல்ல. இஸ்ரேல் பொதுவாக மொசாட்டின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. அதேபோல், இரானில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் பிற உளவுத்துறை அமைப்புகளும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. ஆயினும், இரானிய மண்ணில் இலக்குகளை அடையாளம் காண்பதிலும், நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் மொசாட் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது. பட மூலாதாரம்,ATTA KENARE/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட இரானிய ராணுவத் தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டெஹ்ரானில் ஒரு பதாகை வைக்கப்பட்டது. இரானுக்குள் நீர்மூழ்கி எதிர்ப்பு அமைப்புகள், ஏவுகணை கிடங்குகள், கட்டளை மையங்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தனிநபர்கள் மீது ஒரே நேரத்திலும், மிகவும் துல்லியமாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை பல ஊடக அறிக்கைகளும், சில இஸ்ரேலிய அதிகாரிகளின் கருத்துகளும் தெளிவுபடுத்துகின்றன. இரானுக்குள் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த உளவுத்துறை நடவடிக்கைகள் மூலம் இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் சாத்தியமாக்கியுள்ளது. இரான் உளவுத்துறைக்கு பெரும் இழப்பு பட மூலாதாரம்,MAJID SAEEDI/GETTY IMAGES படக்குறிப்பு,இரானின் தலைநகர் டெஹ்ரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலின் புகைப்படம் (13 ஜூன் 2025) இஸ்ரேலின் தாக்குதல்கள் இரானின் ராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்களை குறிவைத்தது மட்டுமல்லாமல், அதன் உளவுத்துறை திறன்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இரான் தலைவர்களும், ராணுவத் தளபதிகளும் குழப்பமும், திகைப்பும் அடைந்துள்ளனர். தாக்குதல்கள் நடந்த ஐந்தாவது நாளில் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை, உளவுத்துறை அபாயங்கள் குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் கடுமையான கவலை இருப்பதைக் காட்டுகிறது. அந்த அறிக்கையில், அதிகாரிகள் மற்றும் அவர்களது பாதுகாப்புக் குழுக்கள் மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் அல்லது மடிக்கணினிகள் போன்ற எந்தவொரு தகவல் தொடர்பு நெட்வொர்க்குடனும் இணைக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அதிகாரிகளுக்கு மட்டும் அல்ல. பொதுமக்களும் இந்த சாதனங்களை முடிந்தவரை குறைவாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த அளவிலான பொது எச்சரிக்கை என்பது வெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமன்றி, இரானுக்குள் சைபர் பாதுகாப்பில் ஆழமான ஊடுருவல் குறித்த அச்சம் வேகமாக வளர்ந்து வருவதைக் காட்டும் ஒரு அறிகுறியாகவும் உள்ளது. இரானுக்குள் தளவாடங்களை கடத்தி, ஒருங்கிணைத்து, ஆயுத உற்பத்தியா? இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் கூறுவதுபோல, இஸ்ரேலின் நடவடிக்கைகள் வெறும் முக்கியமான தகவல்களை அறிந்து கொள்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை. இஸ்ரேல், இரானிய மண்ணில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களைத் தயாரிக்கவும் , அவற்றை பயன்படுத்தவும் ஒரு திட்டமிட்ட வலையமைப்பை உருவாக்கியிருப்பதாக இந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நீண்ட காலம் நீடித்ததாகக் கூறப்படும் இந்த நடவடிக்கைகள், உள்ளூர் முகவர்களின் வலையமைப்பு, அவர்களுக்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு, போக்குவரத்து அமைப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன. சமீபத்திய தாக்குதல்களுக்கான அடித்தளம் இந்த முன்தயாரிப்புகளில் இருந்தே கட்டமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இராக் வழியாகச் செல்லும் லாரிகள், வணிகக் கொள்கலன்கள் மற்றும் பயணிகளின் சூட்கேஸ்களில் பொருட்கள் மறைத்து வைக்கப்படும் கடத்தல் முறைகளை பயன்படுத்தி, இஸ்ரேல் டிரோன்கள் மற்றும் ஏவுகணை உபகரணங்களை ஒவ்வொன்றாக இரானுக்குள் நகர்த்தியுள்ளதாக ராணுவ விவகார கண்காணிப்பாளரான 'தி வார் சோனும்' மற்றும் பிற ஆதாரங்களும் தெரிவித்துள்ளன. இந்த சாதனங்களில் மின்னணு கருவிகள் (electronic fuses), மேம்பட்ட எலக்ட்ரோ-ஆப்டிகல் கேமராக்கள், லித்தியம் பேட்டரிகள், இலகு ரக இயந்திரங்கள், ஜிபிஎஸ் அடிப்படையிலான வழிகாட்டுதல் அமைப்புகள் மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவையும் அடங்கும். பின்னர், பல ஆண்டுகளாக இரானின் பல்வேறு பகுதிகளில் மொசாட் அமைத்த ரகசிய இடங்களில், இந்த பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களாக மாற்றப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஹ்ரானுக்கு அருகில் மூன்று மாடி கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தற்கொலை டிரோன்களை தயாரிக்கவும் சேமிக்கவுமான ஒரு தளமாக இருந்ததாக அதிகாரிகள் விவரித்துள்ளதாகவும் இரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பட மூலாதாரம்,MIZAN படக்குறிப்பு,இரானின் பல்வேறு பகுதிகளில், மொசாட் அமைத்த ரகசிய இடங்களில், பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு ஆயுதங்களாக மாற்றப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன. இரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு செய்தியில், கட்டடத்தின் உள்ளே உள்ள மேசைகள் மற்றும் அலமாரிகளில் குறைந்தது ஒரு ட்ரோன், அதன் இறக்கைகள், பல்வேறு பாகங்கள் மற்றும் கட்டுப்பாட்டு உபகரணங்கள் இருந்தது காட்டப்பட்டது. அங்கே ஒரு 3D பிரிண்டரும் காணப்பட்டது. 'தி வார் ஸோன்' என்ற வலைதளத்தின் தகவல்படி, இந்த வகையான பிரிண்டர் யுக்ரேனில் டிரோன் பாகங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 16 திங்கட்கிழமையன்று டெஹ்ரானில் உள்ள ஒரு பகுதியில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில், மொசாட்டுடன் தொடர்புடைய 2 "முகவர்கள்" கைது செய்யப்பட்டதாக இரானிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அவர்களிடம் இருந்து 200 கிலோகிராமுக்கும் அதிகமான வெடிபொருட்கள், 23 டிரோன் பாகங்கள், லாஞ்சர்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் ஒரு நிசான் கார் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இரானின் மிகவும் முக்கியமான அணுசக்தி நிலையங்கள் அமைந்துள்ள இஸ்ஃபஹானில், ஏராளமான டிரோன் மற்றும் மைக்ரோ-டிரோன் உற்பத்திக்கான உபகரணங்கள் மற்றும் பாகங்களை வைத்திருந்த ஒரு பட்டறையை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோதனை செய்தார். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3D பிரிண்டர்கள் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி டிரோன்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன என்பது இந்த தகவல்களின்படி தெரியவருகின்றது. இதனால் அதிக அளவில் பாகங்களை கடத்த வேண்டிய தேவை இல்லாமல் போவதால், இரான் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு மொசாட் சப்ளை சங்கிலியை கண்டுபிடிப்பது கடினமாகிவிட்டிருந்தது. இந்தக் கூற்றுகளை பிபிசி சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை இரானிய பாதுகாப்பு நிறுவனங்கள் இதற்கு முன்பு பலமுறை கைது செய்துள்ளன. ஏவுகணைகள், நவீன ஆயுதங்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் பயன்படுத்துதல் பட மூலாதாரம்,TELEGRAM படக்குறிப்பு,ஸ்பைக் ஏவுகணை லாஞ்சர்களின் படங்கள், தரையில் உள்ள முக்காலி போன்ற அமைப்பின் மீது அதன் உருவத்தை மறைக்கும் உறைகளுடன் வைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் தகவல்களின்படி, இஸ்ரேல் ரகசிய நடவடிக்கையின் ஒரு முக்கிய அம்சமாக, இரானிய மண்ணில் உள்ள இலகுரக, துல்லியமான மற்றும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஏவுகணை அமைப்புகள் காணப்படுகின்றன. இத்தகைய நவீன மற்றும் சிறப்பு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை, அவற்றை இயக்குபவரின் உதவி இல்லாமல் இரானுக்குள் இருந்து சுட முடியும். தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில், இது பாரம்பரிய முறைகளை நேரடியாக சவால் செய்யும் ஒரு நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது. இரானின் ஆங்கில செய்தி சேவையான பிரஸ் டிவி திங்களன்று தனது டெலிகிராம் சேனலில், "இரானிய வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த ஸ்பைக் ரக ஏவுகணைகளை இரானிய உளவுத்துறை அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. இந்த அமைப்புகளில் இணைய-தானியங்கி மற்றும் ரிமோட் கண்ட்ரோல் பொருத்தப்பட்டிருந்தது" என்றும், "இந்த அமைப்பு மொசாட் முகவர்களால் இயக்கப்பட்டது"என்றும் அது குறிப்பிட்டுள்ளது. அவை ஒரு வாகனத்திலோ அல்லது டிரோனிலோ பொருத்தப்படவில்லை. மாறாக அவற்றை மறைக்கும் உறையுடன் கூடிய முக்காலி போன்ற அமைப்பின் மீது நிறுவப்பட்டு, தரையில் வைக்கப்பட்டிருந்தன என்பதை ஸ்பைக் லாஞ்சர் ஏவுகணைகளின் படங்கள் காட்டுகின்றன. இந்த ஏவுகணைகளில் எலக்ட்ரோ-ஆப்டிகல் வழிகாட்டுதல் அமைப்புகள், அதிநவீன கேமராக்கள் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பு ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதனால், தூரத்திலிருந்து கூட அவற்றுக்கு கட்டளை வழங்கப்படலாம். இதற்கு முன்பும், இரானில் இஸ்ரேல் ரிமோட் கண்ட்ரோல் ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020 நவம்பரில், இரானில் அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு மூத்த விஞ்ஞானி, ஒரு பிக்அப் வேனில் பொருத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் ஆயுதத்தால் படுகொலை செய்யப்பட்டதாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்ட எந்த நபரும் சம்பவ இடத்தில் இல்லை என்றும் இரானிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். பட மூலாதாரம்,MAJID SAEEDI/GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலிய தாக்குதலால் அழிக்கப்பட்ட இரானிய கட்டிடம் (13 ஜூன் 2025) இரானின் வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் அமைப்புகளை முடக்க திட்டம் இரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு, இரானின் வான் பாதுகாப்பு வலையமைப்பை முடக்க ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்துவதே இஸ்ரேலிய நடவடிக்கையின் முக்கிய பகுதி என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன. சிறிய தற்கொலை டிரோன்கள், தரையில் இருந்து ஏவப்படும் இரானிய ஏவுகணைகள் மற்றும் மின்னணு போர் இயந்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் பல்வேறு முயற்சிகள் இந்த உத்தியில் இணைக்கப்பட்டிருந்தன. இரானின் ரேடார் அமைப்புகளை முடக்குவது, வான் பாதுகாப்பு ஏவுகணை கட்டமைப்பை அழிப்பது மற்றும் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்த வசதியாக ஒரு பாதுகாப்பான வழியை உருவாக்குவது ஆகியவையே அதன் ஒட்டுமொத்த நோக்கமாக இருந்துள்ளது. ராணுவ விவகாரங்களை மையமாகக் கொண்ட வலைத்தளங்களின்படி, இந்த நடவடிக்கையின் தொடக்கத்தில், சிறிய மற்றும் இலகுரக குவாட்காப்டர் போன்ற டிரோன்கள் மற்றும் மைக்ரோ ட்ரோன்களின் தொகுதி ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய மாதங்களில் இந்த டிரோன்கள் ஏற்கனவே இரானின் பல பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. இரானின் முக்கிய தளபதிகளுக்கு குறி பட மூலாதாரம்,TASNIM/KHAMENEI படக்குறிப்பு,இரானிய இராணுவம் மற்றும் புரட்சிகர காவல்படையின் மூத்த அதிகாரிகளை இஸ்ரேல் குறிவைக்கிறது இரானிய ராணுவம் மற்றும் புரட்சிகர காவல்படையின் நிர்வாக அமைப்பை பலவீனப்படுத்துவதற்காக முக்கிய தளபதிகளுக்கு குறிவைத்தது தான் இஸ்ரேலின் நடவடிக்கையின் மற்றொரு முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது. மொசாட் மற்றும் அதன் கூட்டாளிகள் உளவுத் தகவல்கள் மற்றும் ஸ்மார்ட் ஆயுதங்களை பயன்படுத்தி, இரானின் பாதுகாப்புத்துறையில் கட்டளை பிறப்பிக்கும் அதிகார கட்டமைப்பில் சேதத்தை ஏற்படுத்தி, அதன் ராணுவ தயார் நிலையை மந்தமாக்கவும் முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையின் தொடக்கத்தில், ராணுவ தளங்கள் அல்லது ஏவுகணை ஏவுதளங்களை சில தாக்குதல்கள் குறிவைக்கவில்லை. மாறாக, உயர் அதிகாரிகளின் வீடுகள் அல்லது அலுவலகங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதல்கள் இரானுக்குள் இருந்தபடியே ஸ்பைக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன என ஊடக அறிக்கைகளும் குறிப்பிடுகின்றன. இந்த ஏவுகணைகளால், நேரடி கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் கட்டடங்களுக்குள் இருக்கும் மனிதர்களை நேரடியாக குறிவைக்க முடியும். இரான் தளபதிகளுக்கு மொசாட் குறி தாக்குதலுக்கு முன்பு மட்டுமல்லாமல், தாக்குதல் நடைபெறும் போதும் இஸ்ரேலின் உளவுத்துறை நடவடிக்கைகள் தொடர்ந்தன என்றும், அப்போது இரானின் உயர் ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டனர் என்றும் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. மூன்றாவது நாள் நடந்த தாக்குதலில் புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைப் பிரிவு தலைவர் முகமது கசெமியும் அவரது உதவியாளரும் குறிவைக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட தளபதிக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட அதிகாரியும் அடுத்த 4 நாட்களுக்குப் பிறகு கொல்லப்பட்டார். இஸ்ரேலின் முழுமையான உத்தி பல வருடங்களாக நடந்த தயாரிப்புகளின் விளைவு என அமெரிக்க சிந்தனைக் குழு 'ஹட்சன் இன்ஸ்டிடியூட்' வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகின்றது. இந்த திட்டத்தில், தொடர்ச்சியான தகவல் சேகரிப்பு, நேரலையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் திட்டமிடப்பட்ட இலக்குகளை ஆழமாக அணுகும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2ez7yz1zmvo
  2. மூன்றாம் நாள் பகல் போசன இடைவேளையின்போது இலங்கை 100 - 1 விக் 19 JUN, 2025 | 12:25 PM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் முதலாவது இன்னிங்ஸில் பெற்ற 495 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இலங்கை 3ஆம் நாள் பகல் போசன இடைவெளையின்போது ஒரு விக்கெட்டை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பெத்தும் நிஸ்ஸன்க 46 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். போட்டியின் 3ஆம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 484 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் மொத்த எண்ணிக்கை 495 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது. துடுப்பாட்டத்தில் முஷ்பிக்குர் ரஹிம் 163 ஓட்டங்களையும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 148 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 90 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 85 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தரிந்து ரத்நாயக்க 196 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை சார்பாக பெத்தும் நிஸ்ஸன்கவுடன் 31 வயதான அறிமுக வீரர் லஹிரு குமார ஆரம்ப ஜோடியாக களம் இறங்கினர். இருவரும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லஹிரு குமார 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து பெத்தும் நிஸ்ஸன்கவும் தினேஷ் சந்திமாலும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 100 ஓட்டங்களாக உயர்த்தினர். பந்துவீச்சில் தய்ஜுல் இஸ்லாம் 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/217892
  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 20 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகளை மோசடியாகத் தனது பெயருக்கு கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டதாக குற்றம் சாட்டி, வழக்கறிஞர் மூலமாக அவரது சகோதரர் தயாநிதி மாறன் எம்.பி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். 'முரசொலி மாறனின் சொத்து அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு முறையாகப் பகிர்ந்து அளிக்கப்படவில்லை' எனவும் நோட்டீஸில் தயாநிதி மாறன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் அவதூறானவை என சன் குழுமம் விளக்கம் அளித்துள்ளது. சன் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் உள்பட 8 பேருக்குத் தனது வழக்கறிஞர் மூலமாக கடந்த ஜூன் 10ஆம் தேதியன்று தயாநிதி மாறன் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சட்டவிரோத பங்கு பரிமாற்றம் மூலம் சன் நெட்வொர்க்கின் சொத்துகளை கலாநிதி மாறன் அபகரித்துக் கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அதில், "கடந்த 1985ஆம் ஆண்டு டிசம்பர் 12 முதல் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி மு.க.தயாளு மற்றும் மல்லிகா மாறனால் நடத்தப்பட்டது. இதனால் இந்த இரு குடும்பங்களும் தலா 50 சதவிகித பங்குகளை வைத்திருந்தன" எனக் கூறியுள்ளார். "தயாநிதி மாறனின் தந்தை எஸ்.என்.மாறன் என்ற முரசொலி மாறனுக்கு 47,500 பங்குகளும் மல்லிகா மாறனுக்கு 9 ஆயிரம் பங்குகளும் ஒதுக்கப்பட்டன. ஏற்கெனவே மல்லிகா மாறனிடம் ஆயிரம் பங்குகள் இருந்ததால், இத்துடன் சேர்த்து 10 ஆயிரம் பங்குகளாக இருந்தன" எனக் கூறியுள்ளார் தயாநிதி மாறன். இந்த சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் பின்னர் சன் டிவி லிமிடெட்டாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நோட்டீஸில் என்ன உள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES "கடந்த 2002ஆம் ஆண்டு பங்குதாரர்களுக்கும் முரசொலி மாறன் மற்றும் மல்லிகா மாறனுக்கும் போனஸ் பங்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி முரசொலி மாறனின் கணக்கில் 95 ஆயிரம் பங்குகளும் மல்லிகா மாறனின் கணக்கில் 20 ஆயிரம் பங்குகளும் சேர்ந்தன" எனவும் தயாநிதி மாறன் கூறுகிறார். தொடக்கத்தில் இருந்து 2003 செப்டம்பர் 15 வரை சன் நெட்வொர்க் நிறுவனத்தில் சம்பளம் பெறும் ஊழியராக கலாநிதி மாறன் இருந்ததாகக் கூறியுள்ள தயாநிதி மாறன், "இந்த நிறுவனங்களில் எந்தவித பங்கும் அவருக்கு இல்லை. ஆரோக்கியத்துடன் முரசொலி மாறன் இருந்தபோது கலாநிதிக்கு எந்தப் பங்குகளையும் அவர் அளிக்கவில்லை" என்கிறார். கடந்த 2002ஆம் ஆண்டில் முரசொலி மாறனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடல் உறுப்புகள் செயலிழந்ததால், கோமா நிலைக்குச் சென்றதாகக் கூறியுள்ள தயாநிதி மாறன், "2002 நவம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சிகிச்சைகள் பலன் அளிக்கவில்லை" எனக் கூறியுள்ளார். இதன் பிறகு தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட முரசொலி மாறன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார். தந்தையின் உடல்நிலை மோசமான நேரத்தில் குடும்பமே அதுகுறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது, "தனிப்பட்ட நலனுக்காக முழு சொத்துகளையும் அபகரிக்கும் நோக்கில் தனது சதித் திட்டத்தை கலாநிதி மாறன் செயல்படுத்தினார்" என தயாநிதி மாறன் நோட்டீஸில் விமர்சித்துள்ளார். தயாநிதி மாறன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES சன் நெட்வொர்க் குழுமத்தின் 12 லட்சம் பங்குகளை கருணாநிதி குடும்பம் உள்பட பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறாமல் தனது பெயருக்கு கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டார். கடந்த 2003ஆம் ஆண்டில் சன் நெட்வொர்க்கின் பங்கு மதிப்பு தோராயமாக 2,500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அப்படி இருக்கும்போது, 10 ரூபாய் மதிப்பில் பங்குகளை மாற்றியுள்ளார். கடந்த 2003, மார்ச் 31ஆம் தேதியன்று நிறுவனத்தின் இருப்பு மற்றும் உபரித் தொகையாக 253 கோடியே 53 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் இருந்தது. 15.9.2003 வரை நிறுவனத்தின் ஒரு பங்குகூட கலாநிதி மாறனிடம் இல்லை. ஆனால், ஒரே நேரத்தில் பெரும்பான்மையான பங்குதாரராக மாறினார். முரசொலி மாறன் 2003 நவம்பர் 23 அன்று உயிரிழந்தார். சென்னை மாநகராட்சிக்குத் தெரிவிக்கப்பட்டு நவம்பர் 28 அன்று அவரது இறப்பு பதிவு செய்யப்பட்டது. அவர் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. பல்வேறு நிறுவனங்களில் அவரது பங்குகளை உள்ளடக்கிய சொத்து, இந்து வாரிசுரிமை சட்டத்தின் 8வது பிரிவின்படி தாய் சண்முகசுந்தரம், மல்லிகா மாறன், கலாநிதி மாறன், தயாநிதி மாறன், மகள் அன்புக்கரசி ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்படவில்லை. கருணாநிதி கேட்ட கேள்வி முரசொலி மாறனின் இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு (2003 நவம்பர் 24) அன்று, "சொத்து மற்றும் தொழில்களைப் பிரிப்பது தொடர்பாக ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா?" எனத் தன்னிடம் கருணாநிதி கேட்டதாக தயாநிதி மாறன் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு "தந்தையைப் போலவே குடும்பத்துக்கு நன்மை தரக்கூடிய செயல்களை கலாநிதி மாறன் செய்வார்" எனத் தான் கருணாநிதியிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளதோடு, "ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக தனது திட்டத்தை அவர் செயல்படுத்தினார்" எனவும் கூறியுள்ளார். நம்பிக்கையை மீறுவது, ஏமாற்றுதல், மோசடி செய்தல், குற்றவியல் சதி ஆகியவற்றை இது தெளிவாக உணர்த்தியுள்ளதாகக் கூறியுள்ள தயாநிதி மாறன், "இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 406, 409, 463, 465, 467, 468, 471 மற்றும் 120பி (கூட்டு சதி) ஆகிய பிரிவுகளின்கீழ் இவை தண்டனைக்குரியது" என்று தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். சன் குழுமம் மற்றும் அதனுடன் தொடர்புள்ள நிறுவனங்களை 15.9.2003 அன்று இருந்த நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் எனவும் "பங்குகளை உரிமையாளர்களான மு.க.தயாளு மற்றும் முரசொலி மாறனின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மீண்டும் வழங்க வேண்டும்" எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். குற்றச்சாட்டுகள் குறித்து சன் குழுமம் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சன் குழுமம் முழுமையாக மறுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு நிறுவனத்தின் செயலாளர் ரவி ராமமூர்த்தி, வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 20) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சன் நெட்வொர்க் உரிமையாளருக்கும் குடும்ப உறுப்பினருக்கும் இடையில் நடக்கும் விவகாரம் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக, அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது குற்றம் சுமத்தப்படும் விஷயங்கள், 22 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனமாக இருந்தபோது நடந்தவை என்றும் ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை, அவதூறானவை என்றும் சட்டப்படி எந்த உண்மையும் இல்லை எனவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ள சன் நெட்வொர்க் குழுமம், "இடைத்தரகர்களால் அவை சரிபார்க்கப்பட்டன" எனத் தெரிவித்துள்ளது. "கட்டுரைகளில் கூறப்பட்டுள்ள தகவல்கள், வணிகம் அல்லது அதன் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் உரிமையாளரின் குடும்ப விவகாரங்களில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை" எனவும் சன் குழுமம் குறிப்பிட்டுள்ளது. "பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள பங்குதாரர்கள் எந்தவித குழப்பத்தையும் அடையக்கூடாது" என்பதற்காக சன் குழுமம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், வழக்கறிஞர் நோட்டீஸ் தொடர்பான எந்த விவரங்களையும் கடிதத்தில் சன் குழுமம் குறிப்பிடவில்லை. இது தொடர்பாக, தயாநிதி மாறனின் வழக்கறிஞர் சுரேஷை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது. "இதுதொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை" என்று மட்டும் அவர் பதில் அளித்தார். சன் குழுமம் உருவான கதை பட மூலாதாரம்,GETTY IMAGES சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம், 1985 டிசம்பர் 12ஆம் தேதி முதல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி மு.க.தயாளு மற்றும் மல்லிகா மாறனால் நடத்தப்பட்டது. கடந்த 1989ஆம் ஆண்டில் முரசொலி நாளேட்டின் நிர்வாகப் பொறுப்பை கலாநிதி மாறன் கவனித்து வந்தார். 1990ஆம் ஆண்டில் 'பூமாலை' என்ற பெயரில் மாதம் இருமுறை வீடியோ கேசட் ஒன்றை அவர் வெளியிட்டு வந்தார். செய்திகளை பின்னணிக் குரலுடன் அதற்கான படங்களைக் காட்சிப்படுத்தி வீடியோவாக உருவாக்கி வெளியிட்டனர். பிறகு 'சுமங்கலி பப்ளிகேஷன்ஸ்', 'சன் டிவி லிமிடெட்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இதன் பின்னணியில் முரசொலி மாறனும் கலாநிதி மாறனும் இருந்தனர். இதில் தயாளு அம்மாவும் பங்குதாரராக இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சன் தொலைக்காட்சி உருவான காலத்தில் தூர்தர்ஷன் தவிர வேறு தொலைக்காட்சிகள் இல்லாததால் அது பிரபலமடையத் தொடங்கியது. அப்போது 'தமிழ் மாலை' என்ற பெயரில் மூன்று மணிநேரம் மட்டும் ஒளிபரப்பு நடத்தப்பட்டது. பிறகு கேபிள் தொழிலிலும் கலாநிதி மாறன் இறங்கினார். சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்சிவி) நிறுவனத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் கேபிள் தொழிலை நடத்தி வருகிறார். சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதில் இருந்து 2007 வரையில் தி.மு.க தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் செயல்பட்டது. சன் குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 'தினகரன்' நாளேட்டில் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரியை மையப்படுத்தி கருத்துக் கணிப்பு ஒன்று வெளியானது. இதனால் அழகிரி தரப்பினர் கோபம் அடையவே, மதுரை தினகரன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று ஊழியர்கள் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக மாறன் சகோதரர்களை கருணாநிதி விலக்கி வைத்தார். அண்ணா சாலையில் இருந்த சன் தொலைக்காட்சி அலுவலகம், அடையாறுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 2007ஆம் ஆண்டு செப்டம்பரில் கலைஞர் தொலைக்காட்சி உருவானது. 'இதற்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது?' என அப்போதைய அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த கருணாநிதி, "சன் டிவியில் என் மனைவி தயாளு அம்மாள் வசமிருந்த 20 சதவிகித பங்குகளை முழுமையாக விட்டுக் கொடுத்ததால் 100 கோடி ரூபாய் கிடைத்தது" எனக் கூறியிருந்தார். தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காளி, மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் தொலைக்காட்சி சேனல்களை சன் குழுமம் நடத்தி வருகிறது. அந்த வகையில், சன் டிவி, சன் நியூஸ், சன் மியூசிக், ஆதித்யா, கே டிவி, ஜெமினி டிவி, சன் லைஃப், சுட்டி டிவி, ஜெமினி மூவிஸ் டிவி, ஜெமினி மியூசிக், ஜெமினி காமெடி, குஷி டிவி, ஜெமினி லைஃப், உதயா டிவி, சூர்யா டிவி, சூர்யா மூவிஸ், சூர்யா காமெடி, சூர்யா மியூசிக், கொச்சு டிவி, சன் பங்களா, சன் மராத்தி என இருபதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வருகிறது. மாறன் குடும்பத்தின் பின்னணி பட மூலாதாரம்,GETTY IMAGES முத்துவேல் மற்றும் அஞ்சுகம் தம்பதியின் மூன்றாவது மகனாகப் பிறந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் இருந்தனர். சண்முக சுந்தரத்தம்மாள் என அழைக்கப்பட்ட சண்முகசுந்தரத்துக்கு முரசொலி மாறன், முரசொலி செல்வம் ஆகிய மகன்களும் பெரிய நாயகத்துக்கு அமிர்தம் என்ற மகனும் இருந்தனர். முரசொலி மாறனின் இயற்பெயரான தியாகராஜ சுந்தரம் என்பதை நெடுமாறன் என கருணாநிதி மாற்றினார். ஆனால், இந்தப் பெயரில் இருவர் இருந்ததால், முரசொலி நாளேட்டின் பெயரையும் சேர்த்து முரசொலி மாறன் என்று அவர் வைத்துக் கொண்டார். இவருக்கு கலாநிதி மாறன், தயாநிதி மாறன் என இரு மகன்களும், அன்புக்கரசி என்ற மகளும் உள்ளனர். வெளிநாட்டில் எம்.பி.ஏ படிப்பை முடித்த கலாநிதி மாறன், தொடக்கத்தில் முரசொலி நாளேட்டின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்துள்ளார். இவருக்கு காவேரி என்ற மனைவியும் காவ்யா என்ற மகளும் உள்ளனர். கடந்த 2003ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியன்று முரசொலி மாறன் மறைந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து தீவிர அரசியலுக்குள் தயாநிதி மாறன் வந்தார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். 2004ஆம் ஆண்டு மத்திய சென்னை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். 2004 மே முதல் 2007 மே 13 வரை இந்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார். கருணாநிதியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 2008ஆம் ஆண்டு டிசம்பரில் மோதல் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "கண்கள் பனித்தது, இதயம் இனித்தது" என்று பதில் அளித்தார். கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதி மாறன், இந்திய ஜவுளித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2011ஆம் ஆண்டு வரை பதவியில் நீடித்தவர், 2ஜி விவகாரம் காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjel0l2pj80o
  4. Published By: RAJEEBAN 18 JUN, 2025 | 12:23 PM By Jeevan Ravindran இலங்கையின் வடபகுதியின் தலைநகரமான யாழ்ப்பாணத்தில் மிகவும் மும்முரமான வீதியிலிருந்து 100 மீற்றர் தொலைவில் இரண்டு பொலிஸார் சுடலையின் இரண்டு துருப்பிடித்துப்போன நிறத்தில் உள்ள கேட்களின் பின்னால் நின்று அவதானித்தவண்ணமுள்ளனர். இலங்கையில் மிகச்சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு பாதுகாப்பளிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த புதைகுழியிலிருந்து இதுவரை 3 குழந்தைகள் உட்பட 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாரிய மனித புதைகுழிகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இலங்கை தமிழர்களின் காயங்களை மீள கிளறியுள்ளது.இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களிற்கு தனிநாடு கோரிய பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் இடையிலான 26 வருட யுத்தம் காரணமாக தமிழ்மக்கள் துயரங்களை அனுபவித்தனர். அரசாங்கம் பலரை பலவந்தமாக காணாமலாக்கியது, 2017 இல் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிக்கை 1980களின் பின்னர் இலங்கையில் 60,000 முதல் 100,000 வரையிலானவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்திருந்தது. 2009 இல் முடிவிற்கு வந்த யுத்தத்தின் இறுதிகாலப்பகுதியில் 170,000 கொல்லப்பட்டனர் என தமிழ் சமூகம் குற்றம்சாட்டுகின்றது. ஐக்கியநாடுகள் 40,000 பேர் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது. 1996ம் ஆண்டு பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி இலங்கை இராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது முதல் கடந்த 25 வருடங்களாக செம்மணி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்;துள்ளது. அவரது தாயார், சகோதரர், குடும்ப நண்பர் ஆகியோரும் கொலை செய்யப்பட்டனர், அவர்களின் உடல்கள் செம்மணியில் 1996 இல் மீட்கப்பட்டன. கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவு கொலையில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட முன்னாள் இராணுவ கோப்ரல் சோமரட்ண ராஜபக்ச, 1998 விசாரணையின் போது செம்மணி புதைகுழியில் 300 முதல் 400 பேரை புதைத்ததாக தெரிவித்திருந்தார். அவர் வழங்கிய தகவல்களை தொடர்ந்து அடுத்த வருடம் 15 உடல்கள் மீட்கப்பட்டன, இதில் இருவர் 1996 இல் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்கள் என அடையாளம்காணப்பட்டனர். புதிய புதைகுழியின் கண்டுபிடிப்பு நீதிக்கான தேடலில் தமிழ் சமூகத்தினை தொடர்ந்து காயப்படுத்தி வரும் ஒரு பழைய கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. கடந்த கால விசாரணைகள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் யுத்தகால கொலைகள் குறித்த கேள்விகளிற்கு விடைகளை வழங்கவில்லை, அரசாங்கம் இந்த விடயங்கள் குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்தாதது இதற்கான ஒரு ஒரு காரணம் என்கின்றனர் தொல்லியல் நிபுணர்கள். செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி போன்றவற்றால் இவற்றிற்கு விடையை வழங்க முடியுமா? பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் செம்மணியில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை பெப்ரவரி மாதம் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. மே மாத நடுப்பகுதியில் தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின மீட்கப்பட்ட 19 உடல்களில் 3 உடல்கள் பிறந்த குழந்தைகளுடையவை அல்லது பத்துமாதத்திற்கு உட்பட குழந்தைகளுடையவை என அல்ஜசீராவிற்கு தெரிவித்தார் மனித புதைகுழிஅகழ்வுகளிற்கு தலைமைதாங்கும் தொல்லியல் நிபுணர் ராஜ்சோமதேவ. உடல்களை இறுதியில் மருத்துவர்கள் பகுப்பாய்வு செய்து அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முயல்வார்கள் என தெரிவித்த அவர் உடல்கள் புதைக்கப்பட்ட திகதியை கண்டறிவதற்காக ஆடைகள் அல்லது செல்லோபோன் உறைகள் போன்றவற்றை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்தார். மனித உடல்களுடன் பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை என்றால் கதிரியக்க காலமதிப்பீட்டு முறையை பயன்படுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார். மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம் என அல்ஜசீராவிற்கு தெரிவித்த அவர் செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள்மூலம் இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறினை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார். நான் இடைக்கால அறிக்கையொன்றை நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளேன்,இந்த புதைகுழிகளை பாரிய மனித புதைகுழிகள் என கருதலாம் என தெரிவித்துள்ளேன்,மேலதிக விசாரணைகள் தேவை என தெரிவித்துள்ளேன் என ராஜ்சோமதேவ தெரிவித்தார். நான் காணாமல்போன தங்கள் அன்புக்குரியவர்களை தேடும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 600 பேருடன்இணைந்து பணியாற்றுகின்றேன் இவர்களில் அதிகளவானவர்கள் 1996ம் ஆண்டிற்கும் 2008ம் ஆண்டிற்கும் இடையில் காணாமல்போனவர்கள் என காணாமல்போனவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா அல் ஜசீராவிற்கு தெரிவித்தார். இவர்களில் பலர் 1995 இல் யாழ்ப்பாணத்திலிருந்து இடமபெயர்ந்தவர்கள்,நாட்டின் தமிழர் தாயகத்தின் வடமாகாணத்தின் தலைநகர். காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் உடல்களை தோண்டும் நடவடிக்கைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருகின்றனர் என தெரிவித்த அவர் அடையாளம் காணும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறவேண்டும் என விரும்புகின்றனர் என தெரிவித்தார். மனித புதைகுழிகளை அகழும் முன்னைய நடவடிக்கைகள் மூலம் முடிவுகள் எதுவும் வெளியாகாத நிலையிலேயே இம்முறை உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். அந்த பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொலிஸாருக்கு காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் உதவுகின்றனர். தோல்வியில் முடிவடைந்த விசாரணைகளின் வரலாறு. இதேவேளை செம்மணி மனித புதைகுழியிலிருந்து என்ன நடந்தது என்பதற்கான துப்புகளை கண்டுபிடிப்பதற்கு அகழ்வில் ஈடுபட்டிருப்பவர்களிற்கு உதவுவதற்கு தமிழ் சமூகம் கொண்டுள்ள விருப்பம்,கடந்த கால அனுபவங்களால் பாதிக்கப்படுகின்றது. இலங்கையில் சமீபத்தில் ஏனைய மனித புதைகுழிகள் தோண்டப்பட்ட போதிலும் அவை அர்த்தமுள்ள பதில்களுக்கு வழிவகுக்க தவறிவிட்டன.மூடிமறைக்கப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. மன்னார் கொக்குதொடுவாய் ,திருக்கேதீஸ்வரம் .மனித புதைகுழிகளிற்கு நிகழ்ந்தது செம்மணி மனித புதைகுழிக்கும் நடக்கலாம் என அச்சம் கொண்டுள்ளதாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் சங்க தலைவி யோகராஜா கனகரஞ்சனி தெரிவித்தார். 'இதனையும் ஏனைய மனித புதைகுழிகள் போல அவர்கள் எந்த பதிலையும் நீதியையும் வழங்காமல் மூடிமறைக்கலாம்," என அவர் தெரிவித்தார். இவரின் மகன் அமலன் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர், 2009 இல் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போனார்.' கொலைகாரர்களை நீதி வழங்குமாறு கேட்டால் அவர்கள் நீதி வழங்குவார்களா"? மிகப்பெரிய மனித புதைகுழி அகழ்வு வடமேற்கு மன்னாரிலேயே இடம்பெற்றது. 2018 இல் இது ஆரம்பமானது. சோமதேவாவே இதனை தோண்டும் நடவடிக்கைகளிற்கு தலைமைதாங்கினார். 346 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன, நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இந்த மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தன. எனினும் சோமாதேவ மன்னார் புதைகுழி விடயத்தை அரசாங்கம் கையாளும் விதத்தினை கண்டித்தார். மூன்று வருடத்திற்கு முன்னர் நான் நான் ஆரம்ப கோரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் கடந்த வாரமே உடல்களை தோண்டியவேளை மீட்கப்பட்ட பொருட்களை கையளித்தார்கள் என குறிப்பிட்டார். அவற்றை ஆராய்வதற்கான நிதியை அரசாங்கம் இன்னமும் ஒதுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான சூழ்நிலைகளில் பணியாற்ற முடியாது எவரும் பொறுப்பேற்பதில்லை, காணாமல்போனோர் அலுவலகம் ஒரு வெள்ளை யானை என ராஜ்சோமதேவ தெரிவித்தார். செம்மணி புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளில் காணாமல்போனோர் அலுவலகம் ஒரு பார்வையாளராகவே இணைந்துகொண்டுள்ளது என தெரிவித்த அதன் பிரதிநிதி, மன்னார் புதைகுழி அகழ்வில் அது நீதியமைச்சுடன் இணைந்து செயற்பட்டது என குறிப்பிட்டார். வழங்கப்படவேண்டிய கட்டணங்கள் எதுவும் இல்லை என தெரிவித்த அவர் முறைப்படியான முறைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். 2024 இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுப்பதற்கு போதுமான நிதி மனித மற்றும் தொழில்நுட்ப வளங்கள் இல்லை என்பது கவலை அளிக்கிறது மேலும் இது தொடர்பாக சர்வதேச ஆதரவைப் பெற அரசாங்கத்தை ஊக்குவிக்கிறது" என்று கூறியது. கடந்தகாலத்தில் மனித புதைகுழி அகழ்வின் போது காணப்பட்ட குறைபாடுகள் பலவீனங்கள் செம்மணியிலும் காணப்படுகின்றன என தெரிவித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த அடையாளம் கொள்கை ஆராய்ச்சிகளிற்கான நிலையம், சர்வதேச நிபுணத்துவமோ மேற்பார்வையோ இல்லாமல் செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என குறிப்பிட்டது. மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கை வெளிப்படையாக நேர்மையாக நடைபெறுகின்றது என தமிழ் சமூகமும் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களும் கருதவேண்டும் என அரசாங்கம் விரும்பினால், முதலில் போதுமான நிதி ஒதுக்கீட்டுடன் அரசாங்கம் தெளிவான மற்றும் விரிவான மனித புதைகுழிகளை தோண்டும் கொள்கையை பின்பற்றவேண்டும், சர்வதேச பங்களிப்பிற்கு அனுமதி வழங்கவேண்டும், சர்வதேச நிபுணத்துவத்தை நாடவேண்டும், மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளில் காணாமல்போனோரின் குடும்பத்தவர்கள் பங்கெடுப்பதற்கும், சட்டபூர்வ பிரதிநிதித்துவத்தை பெறவும் அனுமதிக்கவேண்டும் என அடையாளத்தின் பிரதிநிதியொருவர் அல்ஜசீராவிற்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்தார். ஜனாதிபதியாக செப்டம்பரில் அனுரகுமார திசநாயக்க தெரிவு செய்யப்பட்டமை அவர் நீதிக்கு ஆதரவை வழங்குவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது ஆனால் இதுவரை அவர் அந்த நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதத்தில் இடம்பெறவில்லை என கனகரஞ்சினி தெரிவித்தார். ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 8 மாதங்களாகின்றது. இதுவரை அவர் எங்களின் பிரச்சினைகளை சிறிதளவும் கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்த அவர் ஆட்சியாளர் மாறியுள்ளார் ஆனால் யதார்த்தம் நீடிக்கின்றது என்றார். https://www.virakesari.lk/article/217798
  5. மழையினால் இரண்டரை மணி நேர தாமதத்தின் பின் பங்களாதேஷின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டது ; 26 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்களை இலங்கை வீழ்த்தியது 19 JUN, 2025 | 05:54 AM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பங்களாதேஷ், மழையினால் ஆட்டம் இரண்டரை மணி நேர ம் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் பின்னர் மீண்டும் தொடர்ந்தபோது 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 6 விக்கெட்களை இலங்கையிடம் தாரைவார்த்தது. தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 292 ஓட்டங்களில் இருந்து இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த பங்களாதேஷ் ஒரு கட்டத்தில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 458 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் 9 விக்கெட்களை இழந்து 496 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்த மொத்த எண்ணிக்கையில் மத்திய வரிசை வீரர்களான நஜ்முஸ் ஹொசெய்ன், முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய மூவரும் 411 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர். இந்தப் போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்தளவு சோபிக்கத் தவறிய போதிலும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா நால்வரையே மீண்டும் மீண்டும் பந்துவீச்சில் ஈடுபடுத்தியது பெரும் ஆச்சரியத்தையும் அதிருப்தியையும் தோற்றுவித்தது. எவ்வாறாயினும் இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் இலங்கை 6 விக்கெட்களை வீழ்த்தி பங்களாதேஷை ஓரளவு கட்டுப்படுத்தியது. தனது இன்னிங்ஸை 136 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ தனது எண்ணிக்கைக்கு மேலும் 12 ஓட்டங்களை சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். 279 பந்துகளை எதிர்கொண்ட ஷன்டோ 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 148 ஓட்டங்களைப் பெற்றார். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஷன்டோ 4ஆவது விக்கெட்டில் முன்னாள் அணித் தலைவர் முஷ்பிக்குருடன் 264 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அவர் ஆட்டம் இழந்த பின்னர் முஷ்பிக்குர் ரஹிமும் லிட்டன் தாஸும் இலங்கை பந்துவீச்சாளர்களை இலகுவாக எதிர்கொண்டு 114 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 423 ஓட்டங்களாக உயர்த்தியபோது கடும் மழை பெய்ததால் பிற்பகல் 1.40 மணி அளவில் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. இரண்டரை மணித்தியாலங்கள் தாமதத்தின் பின்னர் பிற்பகல் 4.15 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. மொத்த எண்ணிக்கை 458 ஓட்டங்களாக இருந்தபோது முஷ்பிக்குர் ரஹிமும் லிட்டன் தாஸும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுததாடிய முஷ்பிக்குர் ரஹிம் 350 பந்துகளில் 9 பவுண்டறிகளுடன் 163 ஓட்டங்களைப் பெற்றார். சற்று ஆக்ரோஷமாக துடுப்பெடுத்தாடிய லிட்டன் தாஸ் 123 பந்துகளில் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 90 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 149 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இந்த இருவரின் விக்கெட்களுடன் மேலும் 4 விக்கெட்கள் 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன. பந்துவீச்சில் மிலன் ரத்நாயக்க 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 80 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தரிந்து ரத்நாயக்க 196 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பங்களாதேஷ் அணியினர் பெரும்பாலும் இரண்டாம் நாள் ஆட்டத்துடன் தமது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டு நாளைக் காலை இலங்கைக்கு துடுப்பெடுத்தாடுமாறு அழைப்பு விடுப்பர் என கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/217867
  6. 7 நிமிடங்களில் 2,000 கிமீ பாயும்: இஸ்ரேல் மீது இரான் ஏவிய செஜில் ஏவுகணை எவ்வளவு சக்தி வாய்ந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரான் 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக செஜில் ஏவுகணையை பரிசோதித்தது. 21 ஜூன் 2025, 06:48 GMT புதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையிலான மோதல் இரு நாடுகளின் போர்த் திறன்களையும், அவற்றின் ஆயுதங்களையும் பரிசோதிக்கும் ஒரு களமாகவும் அமைந்துள்ளது. புதன்கிழமை இரவு இஸ்ரேலைத் தாக்கிய போது, முதன்முறையாக உள்நாட்டு தயாரிப்பான செஜில் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக, இரான் கூறியது. செஜில் என்பது கனமான, அதிக வெடிபொருள் பொருத்தப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையாகும். இருப்பினும், இஸ்ரேல் பாதுகாப்புப் படை செஜிலை வெற்றிகரமாக இடைமறித்துவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது . செஜில் ஏவுகணை இரானின் நடான்ஸ் நகரத்திலிருந்து ஏவப்பட்டால், இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவை ஏழு நிமிடங்களில் அடைய முடியும் என்பதிலிருந்தே அதன் வேகத்தை மதிப்பிடலாம் . ஏனென்றால், நடான்ஸிலிருந்து டெல் அவிவ் வரையிலான தூரம் சுமார் 2000 கிலோமீட்டர். புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்தத் தாக்குதல்கள் 'ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 3' இன் கீழ் நடத்தப்பட்டதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கூறியுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, செஜில் ஏவுகணை பேசுபடு பொருளாக தீவிரமடைந்துள்ளது. செஜில் ஏவுகணை எவ்வளவு சக்தி வாய்ந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செஜில் ஏவுகணையின் நீளம் சுமார் 18 மீட்டர், மேலும் திட எரிபொருளால் இயக்கப்படுவதால் அது ஆபத்தானதும் கூட . ஜூன் 19, வியாழக்கிழமை, இந்தியாவில் உள்ள இரானிய தூதரகம், ஐ.ஆர்.ஜி.சி-யை மேற்கோள் காட்டி செஜில் ஏவுகணை பற்றிய தகவலை வழங்கியுள்ளது. "இது 'ட்ரூ ப்ராமிஸ் 3' 'ஆபரேஷனின் பன்னிரண்டாவது பதிலடி தாக்குதல் ஆகும், மிகவும் கனமான மற்றும் நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய இரண்டு-நிலைகளை கொண்ட செஜில் ஏவுகணை ஏவப்பட்டது" என்று இரானிய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது. "செஜில் ஏவுகணைகள் திட எரிபொருளில் இயங்குகின்றன. அவை இரானின் மிகவும் துல்லியமான மற்றும் சக்தி வாய்ந்த மூலோபாய ஆயுதங்களில் ஒன்றாகும். எதிரி இலக்குகளை ஊடுருவி அழிக்கக்கூடிய திறனை அவை கொண்டுள்ளன." செஜில் ஏவுகணை சுமார் 18 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் திட எரிபொருளால் இயங்கக் கூடியது. இது மற்ற எரிபொருட்களைக் காட்டிலும் கூடுதல் அனுகூலங்களை வழங்கக் கூடியது. போர்க்களத்தில் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தும் இந்த ஏவுகணையை துரிதமாக ஏவுவதற்கு தயார் செய்யவும் முடியும். தூரம்: செஜில் ஏவுகணை அதிகபட்சமாக 2000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இது நடுத்தர தூரம் வரை சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த ஏவுகணையின் மூலம் இஸ்ரேல், தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவின் சில பகுதிகள் மற்றும் இஸ்ரேல் உள்பட மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் உள்ள இலக்குகளை இரானால் தாக்க முடியும். சுமந்து செல்லும் எடை: இந்த ஏவுகணை சுமார் 700 கிலோ எடையுள்ள வெடிபொருளை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்டது. இதன் மூலம் தாக்குதலுக்கு இலக்காகும் இடத்தல் பெரும் சேதத்தை விளைவிக்க முடியும். ஏவுகணையின் மொத்த எடை: ஏவப்படும் ஏவுகணையின் மொத்த எடை தோராயமாக 23,600 கி.கி. இருக்கும். அதாவது அதன் எரிபொருள், சுமந்து செல்லும் வெடிபோருள் உள்பட ஏவுகணையின் மொத்த எடை இதுவாகும். இந்த ஏவுகணையின் முதல் வெற்றிகரமான சோதனை 2008-ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. பரிசோதனையின் போது செஜில் ஏவுகணை 800 கி.மீ தூரம் பறந்தது. நவீன தொழில்நுட்பம் மற்றும் அதனை வழி நடத்தும் அமைப்புகளை சோதிக்க மே 2009ல் இரண்டாவது முறையாக செஜில் ஏவப்பட்டது . அமெரிக்காவின் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) தகவல்படி, செஜில் ஏவுகணையில் பல வகைகள் இருக்கக்கூடும். 2009 ஆம் ஆண்டில், 'செஜில் 2' என அழைக்கப்பட்ட ஏவுகணையை இரான் சோதித்தது. உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள், 'செஜில் 3' என்பது இன்னும் மேம்பட்டதாக இருக்கலாம் எனக் கூறுகின்றன. செஜில் 3 ஏவுகணை மூன்று நிலைகளைக் கொண்டதாகவும், அதிகபட்சமாக 4,000 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடியதாகவும் கூறப்படுகிறது. செஜில் ஏவுகணை 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு பொதுவெளியில் சோதிக்கப்படாததால், அது படையில் சேர்க்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பது குறித்த நிச்சயமற்ற நிலை நீடித்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2021-ஆம் ஆண்டு ஒரு ராணுவப் பயிற்சியின் போது, இரான் இந்த ஏவுகணையை பயன்படுத்தியது. இஸ்ரேல்-இரான் மோதல்: இதுவரை நடந்தது என்ன ? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியது. ஜூன் 13-ஆம் தேதி, டெஹ்ரான், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் உள்ளிட்ட பல இரானிய ராணுவ மற்றும் அணுசக்தி நிலைகளை இஸ்ரேல் தாக்கியது. இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்று இஸ்ரேல் பெயரிட்டது. இரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை, எனவே இரானை தாக்குவது மட்டுமே ஒரே வழி என்று இஸ்ரேல் கூறுகிறது. தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது டிரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இரான் ஏவியது. இரான் ஏவுகணை தாக்குதலில், தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனை சேதமடைந்தது. இருப்பினும், மருத்துவமனைக்கு அருகில் இருந்த ராணுவ தளம் தான் தனது இலக்காக இருந்தது என்கிறது இரான். இந்த தாக்குதலில் 71 பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அன்றிரவு முழுவதும் இஸ்ரேலின் பல பகுதிகளிலும் தாக்குதல்கள் நடந்தன. இஸ்ரேலால் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இரான் முதல் செஜில் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாகக் கூறியது. மருத்துவமனை மீதான ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, இரானில் உள்ள அரக் மற்றும் நடான்ஸ் உள்ளிட்ட பல அணுசக்தி மற்றும் ராணுவத் தளங்களை இஸ்ரேல் குறிவைத்தது. இதற்கிடையில், அராக் கனரக நீர் உலை உட்பட இரானின் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் இரவில் தாக்குதல் நடத்தியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8z9y1j738o
  7. பலம் வாய்ந்த நிலையில் பங்களாதேஷ் 18 JUN, 2025 | 12:26 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் மிகவும் பலமான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை 3 விக்கெட் இழப்புக்கு 292 ஓட்டங்களிலிருந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் மதிய போசன இடைவேளையின்போது 4 விக்கெட்களை இழந்து 383 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதலாம் நாள் ஆட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி சதங்கள் குவித்த அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் முன்னாள் தலைவர் முஷ்பிக்குர் ரஹிமும் 4ஆவது விக்கெட்டில் 264 ஓட்டங்ங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். ஷன்டோ 148 ஓட்டங்களைப் பெற்று அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஏஞ்சலோ மெத்யூஸிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 383 ஓட்டங்களாக உயர்த்தினர். முஷ்பிக்குர் ரஹிம் 7 பவுண்டறிகள் அடங்கலாக 141 ஓட்டங்களுடனும் லிட்டன் தாஸ் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 43 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ, தரிந்து ரத்நாயக்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்னர். https://www.virakesari.lk/article/217801
  8. கில், ஜெய்ஸ்வால் அபார சதம்: இந்திய இளம் படை இங்கிலாந்து மண்ணில் முதல் நாளே புதிய சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சதம் அடித்த கேப்டன் சுப்மன் கில்லும், ஜெய்ஸ்வாலும் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோரின் அபார சதம், ரிஷப் பந்தின் அரைசதம் ஆகியவற்றால் இளம் இந்திய அணி டெஸ்ட் சகாப்தத்தை மிரட்டலாகத் தொடங்கியுள்ளது. ஹெடிங்லியில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருக்கிறது. ஜெய்ஸ்வால் (101) ரன்களில் ஆட்டமிழக்கவே, கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களுடனும், துணை கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். முதல் விக்கெட்டுக்கு கேஎல்.ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி 91 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்ததே நடுவரிசை வீரர்கள் அழுத்தமின்றி பேட் செய்ய முடிந்தது. தமிழக வீரர் சாய் சுதர்சன் 4 பந்துகளை சந்தித்த நிலையில் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றினார். வலுவான தொடக்கம் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்கவே, இந்தியா சார்பில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் களமிறங்கினர். இங்கிலாந்து வீரர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்திய அணியின் பேட்டிங் அவர்களை திணறடிக்கும் வகையில் அமைந்திருந்தது. ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி அற்புதமாக இங்கிலாந்து பந்துவீச்சைச் சமாளித்து ஆடினர். குறிப்பாக ஜெய்ஸ்வால் பெரிய ஷாட்களுக்கு முயற்சிக்கவில்லை. நல்ல பந்துகளுக்கு மதிப்பளித்து லீவ் செய்து, ஆப் சைடிலேயே தனது பெரும்பகுதி ஷாட்களில் ரன்களைச் சேர்த்தார். ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கில் நிதானமும், பொறுமையும் நன்கு தெரிந்தது. 15 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. ராகுல் 42 ரன்கள் சேர்த்த நிலையில் கார்ஸ் பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராகுல் 42 ரன்கள் சேர்த்தநிலையில் கார்ஸ் பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சுதர்சன் டக் அவுட் ராகுல், ஜெய்ஸ்வால் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துப் பிரிந்தனர். அடுத்து அறிமுக ஆட்டத்தில் களமிறங்கிய சாய் சுதர்சன், 4 பந்துகளில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். சுதர்சன் களமிறங்கிய போது லெக் திசையில் ஸ்லிப் வைத்து ஸ்டோக்ஸ் பந்து வீசினார். லெக் சைடில் விலக்கி வீசப்பட்ட 2வது பந்தில் சுதர்சன் தட்டவே பந்து கால்காப்பில் பட்டு கேட்சானது, இங்கிலாந்து வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்யவே அவுட் வழங்கவில்லை. இந்த சம்பவத்திலேயே சுதர்சன் தன்னை சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டும், ஆனால், 4வது பந்தும் அதே போன்று ஸ்டோக்ஸ் வீச, தேவையற்ற ஷாட்டை சுதர்சன் ஆடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் செஷனில் இந்திய அணி 100 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,4 பந்துகளில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறிய சாய் சுதர்சன் கில், ஜெய்ஸ்வால் வலுவான கூட்டணி 3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், கேப்டன் கில் ஜோடி சேர்ந்தனர். ஜெய்ஸ்வால் ஏற்கெனவே நன்கு செட்டில் ஆகி இருந்தார். ஜெய்ஸ்வால் 96 பந்துகளில் அரைசதம் அடித்தார், கில் 56பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் அரைசதத்தை வேகமாக எட்டினார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கார்க், வோக்ஸ், டங், ஸ்டோக்ஸ் ஆகியோர் மாறிமாறிப் பந்துவீசியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. சுழற்பந்துவீச்சாளர் ஷோயிப் பஷீர் பந்துவீச்சில் கில், ஜெய்ஸ்வால் இருவரும் ரன் எடுக்கும் வேகத்தை குறைத்தார்களே தவிர தடுமாறவில்லை. இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்து சென்றது. ஜெய்ஸ்வால் 144 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடக்கமாகும். ஜெய்ஸ்வால் தனது சதத்தில் பெரும்பாலான ரன்களை ஆப் சைடிலேயே அடித்திருந்தார். வழக்காக லெக்திசையில் சிறப்பாக பேட் செய்யக்கூடிய ஜெய்ஸ்வால் பந்துவீச்சுக்கு ஏற்ப பேட்டிங்கை மாற்றி தனது முதிர்ச்சியை வெளிப்படுத்தினார். பிற்பகல் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்து 2வது செஷனில் வலுவாக காலூன்றியிருந்தது. தேநீர் இடைவேளைக்குப்பின் ஜெய்ஸ்வால் விக்கெட்டை இந்திய அணி இழந்தது. ஜெய்ஸ்வால் சதம் அடித்து 101 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 129 ரன்கள் சேர்த்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால், கேப்டன் கில் ஜோடி நேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிஷப் பந்த் அதிரடி தொடக்கம் 4வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் களமிறங்கி கில்லுடன் சேர்ந்தார். கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய ரிஷப் பந்த், தான் சந்தித்த 2வது பந்திலேயே கவர் திசையில் பவுண்டரி அடித்தார். இதைப் பார்த்த பந்துவீச்சாளர் ஸ்டோக்ஸ் சிரித்துக்கொண்டே ரிஷப் பந்தை கடந்து சென்றார். ரிஷப் பந்த், கில் இருவரும் 3வது செஷனில் ஆதிக்கம் செய்து ரன்களை வேகமாகச் சேர்த்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு இருவருக்கும் பெரிதாக எந்த சிரமத்தையும் அளிக்கவில்லை. தேநீர் இடைவேளைக்குப்பின் இந்திய அணி 300 ரன்களை எட்டியது. சுப்மன் கில் வேகமாக அரைசதம் அடித்திருந்த நிலையில் 140 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். ரிஷப் பந்த் 90 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் முயற்சி எந்த பலனையும் அளிக்கவில்லை. ரிஷப் பந்த் நிதானமாக பேட் செய்தாலும் அவ்வப்போது தனது பெரிய ஷாட்கள் மூலம் பவுண்டரிகளை அடித்து ரன்களைச் சேர்த்தார். ரிஷப் பந்த் பொதுவாக கடினமான ஆடுகளங்களில் சிறப்பாக பேட் செய்து ரன்களைச் சேர்க்கக் கூடியவர். ஹெடிங்லி ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்ட ரிஷப் பந்த் அதற்கு ஏற்றார்போல் தனது ஆட்டத்தை மாற்றி நிதானமாக பேட் செய்தார். 2வது புதிய பந்து 80-வது ஓவரில்தான் எடுக்கப்பட்டது. புதிய பந்து எடுத்தபின் விக்கெட் வீழ்த்தலாம் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இருந்தனர். ஆனால், ஏற்கெனவே செட்டில் ஆன பேட்டர்கள் கில், ரிஷப் பந்த் இருவரும் பந்துகளை நன்கு எதிர்கொண்டு ஆடியதால், அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. 4வது விக்கெட்டுக்கு கில், ரிஷப் பந்த் இருவரும் 138 ரன்கள் சேர்த்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுப்மன் கில் வேகமாக அரைசதம் அடித்த நிலையில் 140 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார் இங்கிலாந்தில் இந்திய இளம் படை முதல் நாளே புதிய சாதனை சீனியர் பேட்டர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோர் இல்லாத நிலையில் இளம் இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் என்ன செய்யப் போகிறது, அதிலும் ஸ்விங்கிற்கும், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எவ்வாறு சமாளித்து ஆடுவார்கள் என்ற எதிர்பார்ப்பிற்கும், கேள்விக்கும் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி பதில் அளித்துவிட்டனர். ஹெடிங்லி மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2022-ம் ஆண்டில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதல் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்ததுதான் இந்திய அணியின் அதிகபட்சமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு அணிகள் முதல் நாள் ஆட்டத்தில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹெடிங்லி மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 89 ஆண்டுகளுக்குப்பின் ஜெய்ஸ்வால் புதிய சாதனை ஜெய்ஸ்வால் கடந்த 18 மாதங்களுக்கு முன் இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்திருந்தார், இப்போது மீண்டும் அந்த அணிக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் சதம் அடித்து ஜெய்ஸ்வால் தன்னை நிரூபித்துள்ளார். வெளிநாடுகளில் ஜெய்ஸ்வால் அடித்த 3வது சதம் இதுவாகும். 2023-ல் ரோஸோவில் 171 ரன்கள், 2024-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் 161 ரன்கள், லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக 101 ரன்கள் என 3 சதங்களை ஜெய்ஸ்வால் வெளிநாட்டு மண்ணில் அடித்துள்ளார். இதுவரை எந்த பேட்டரும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் அறிமுக ஆட்டத்தில் 3 சதங்களை அடித்தது இல்லை. 96 பந்துகளில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், அடுத்த 48 பந்துகளில் விரைவாக 50 ரன்கள் சேர்த்து 144 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். இதில் 17 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும். 23 வயதில், ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்துள்ளார். இதற்கு முன் சயத் 1936ம் ஆண்டு ஓல்டு ட்ராபோர்ட் மைதானத்தில் 21 வயதில் 112 ரன்கள் சேர்த்த முஸ்தாக் அலிதான் குறைந்த வயதில் இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த பேட்டர் ஆவார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,96 பந்துகளில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், அடுத்த 48 பந்துகளில் விரைவாக 50 ரன்கள் சேர்த்து 144 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். கில்லின் 'தில்' பதில் கடந்த முறை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படாத நிலையில் தனக்கு கிடைத்த கேப்டன் வாய்ப்பிலும், ஆட்டத்திலும் கில் சாதித்து பதில் அளித்துவிட்டார். சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டபின், கேப்டன் பொறுப்பு சுமையுடன் அவரின் பேட்டிங் எவ்வாறு இருக்கப் போகிறது என்ற கேள்விக்கும், எதிர்பார்ப்புக்கும் சரியான பதில் அளித்துள்ளார். கேப்டன் பொறுப்பு ஏற்றவுடன் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த 4வது இந்திய வீரர் என்ற பெயரை சுப்மன் கில் பெற்றார். இதற்கு முன் விஜய் ஹசாரே(1951, இங்கிலாந்து), சுனில் கவாஸ்கர்(1976, நியூசிலாந்து) திலீப் வெங்சர்க்கர்(வெஸ்ட் இண்டீஸ், 1987), விராட் கோலி(2014, இங்கிலாந்து) ஆகியோர் கேப்டன் பொறுப்பேற்றவுடன் முதல் ஆட்டத்தில் சதம் விளாசியிருந்தனர். சுப்மன் கில் களத்துக்கு வந்ததில் இருந்து டெஸ்ட் போட்டியைப் போன்று நிதானமாக ஆடவில்லை. மாறாக வேகமாக ரன்களைச் சேர்த்து, 56 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்த 50 ரன்களைச் சேர்க்க 84 பந்துகளை எடுத்துக்கொண்டு 140 பந்துகளில் தனது 6-வது டெஸ்ட் சதத்தை அடித்தார். இங்கிலாந்து பந்துவீச்சு சொதப்பல் இங்கிலாந்து அணியில் ஆண்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட் இல்லாத குறை நன்றாகவே வெளிப்பட்டது. கார்ஸ், டங், வோக்ஸ், ஸ்டோக்ஸ் பந்துவீச்சு எந்த விதத்திலும் இந்திய பேட்டர்களுக்கு சிரமத்தை அளிக்கவில்லை. விதிவிலக்காக இருந்தது சுழற்பந்துவீச்சாளர் ஷோயிப் பஷீர் பந்துவீச்சு மட்டும்தான். இங்கிலாந்து மண்ணில் நன்கு பந்தை திருப்பும் பஷீர், இந்திய பேட்டர்களை சற்று யோசித்து ஆடவைத்தது. வேகப்பந்துவீச்சில் கார்ஸ் பந்துவீச்சு மட்டுமே பரவாயில்லை ரகம். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பெரும்பாலும் "லைன் அன்ட் லென்த்தில்" சரிவர பந்துவீசாததே முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பெரிய ஸ்கோர் சேர்க்க காரணமாக இருந்தது. முதல் நாள் ஆட்டத்தின் பின், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தங்களின் பந்துவீச்சில் எத்தனை பந்துகளை "ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்" வீசியிருக்கிறோம் என ஆய்வு செய்தால் அவர்களின் தவறு தெரிந்துவிடும். காயத்திலிருந்து மீண்டுவந்த கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் வேகம் இருக்கிறது, 145 கி.மீ வேகத்தில் பந்துவீசினாலும் சரியான லைன் அன்ட் லென்த் இல்லை என்பதால் அவரது பந்துவீச்சு பேட்டர்களுக்கு பெரிதாக சிரமத்தை தரவில்லை. ஹெடிங்லி ஆடுகளம் பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ள நிலையில், அதைப் புரிந்து கொண்டு இங்கிலாந்து அணி அதற்கேற்ப பந்துவீசவில்லை. இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்விங், காற்றின் வேகத்துக்கு ஏற்ப பந்தை திருப்பும் பாணி, துல்லியமான யார்கர்கள் என எதுவுமே இல்லை. முதல் நாளில் செய்த தவறுகளை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆய்வு செய்து திருத்தி விட்டு 2வது நாளான இன்று ஆட்டத்தை எதிர்கொண்டால் மட்டுமே அந்த அணியால் சமாளிக்க முடியும். இல்லாவிட்டால், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் பிரமாண்ட ஸ்கோராக மாறிவிடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14elmx1yyyo
  9. 21 JUN, 2025 | 09:57 AM “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் பாவனையோடு தொடர்புபட்ட முறைப்பாடுகள் எவையும் கடந்த ஓராண்டு காலமாக கிடைக்கப் பெறவில்லை” என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் “போதைப் பொருட் பாவனை” தொடர்பில் கோரப்பட்ட விடயங்களிற்கு பதிலளிக்கும் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் பின்வருமாறு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்க் கோரப்பட்ட பின்வரும் விடயங்களிற்கு பதிலளிக்கும் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் போதைப் பொருள் பாவனையோ அதுசார்ந்த முறைப்பாடுகளோ கிடைக்கப் பெறவில்லை என்று பதிலளித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் போதைப் பொருள் பாவனையோடு தொடர்புபட்டதாக முறைப்பாடுகள் எவையேனும் பல்கலைக்கழக மாணவர்கள், கலைப்பீட மாணவர்களிற்கு எதிராக கடந்த ஆறு மாத காலப் பகுதிக்குள் பதிவாகியுள்ளதா? அவ்வாறு பதிவாகியிருப்பின் பதிவாகிய சம்பவங்கள் எத்தனை? பதிவாகிய சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை? பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளிற்கு தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? போதைப் பொருட்கள் எவையேனும் கைப்பற்றப்பட்டிருப்பின், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் தற்போது யாருடைய பாதுகாப்பில் ஃ கையிருப்பில் உள்ளன? போதைப் பொருள் பாவனையோடு தொடர்புடைய மாணவர்கள் மீள கற்றல் நடவடிக்கைளிற்கு திரும்புவதற்கு ஏதேனும் ஆற்றுப்படுத்தல் அல்லது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் பாவனை உள்ளதென்று பல்கலைக்கழக மாணவர்களின் மீது பாராதூரமான குற்றச்சாட்டினை முன்வைத்து கலைப்பீடப் பீடாதிபதி சி.ரகுராம் கடந்த 25, சனவரி 2025 அன்று பதவி விலகி, ஒரு வாரகாலத்தினுள் மீள பொறுப்பேற்றிருந்தார். மாணவர்களிற்கு எதிராக தான் மேற்கொண்ட நிர்வாக முறைகேடுகளை மூடிமறைப்பதற்காகவே அவர் ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களிற்கும் எதிராக இவ்வாறான பொய்யானதொரு அவதூறினை பரப்பியிருந்தார் என்பது தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களின் ஊடாக உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக 25, சனவரி அன்று நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் அவரது முறைகேடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அவரது நிர்வாக முறைகேடுகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராக பணியாற்றிய சட்டத்துறை மாணவனினால் சவாலிற்கு உட்டபடுத்தப்பட்டது. பேராசிரியர் ரகுராமின் வலியுறுத்தலின் பேரில் அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது. எனினும் குறித்த வகுப்புத்தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினையடுத்து மாணவனிடம் சரணடைந்த பல்கலைக்கழக நிர்வாகம், 26.03.2025 அன்று எவ்வித நிபந்தனைகளுமின்றி வகுப்புத்தடை, விசாரணைச் செயன்முறைகள் யாவும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து நீக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் அளித்துள்ள பதிலின் அடிப்படையில் அவரது குற்றச்சாட்டு பொய்யானதொன்று என்பது நிரூபிக்கப்பட்டள்ளது. மேலும் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்று கோரிய பேராசிரியர் ரகுராமினால் கூட எவ்வித முறைப்பாடுகளும் முன்வைக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/218041
  10. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 03:31 PM சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தினால் அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க, 2013 ஆம் ஆண்டு தி ரோயல் பவுண்டேஷனுடன் இணைந்து பிரித்தானிய இளவரசர் வில்லியம் “வனவிலங்குகளுக்காக ஒன்றுபடுவோம்” (United for Wildlife) என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்புடன் இணைந்து இளவரசர் வில்லியம் நடத்தும் Guardians Of The Wild நிகழ்ச்சியில் இலங்கை வனவிலங்கு தொடர்பான ஆவணத் தொடர் வெளியிட்டப்பட்டுள்ளது. “யானைகளும் மனிதர்களும் அருகருகே வாழும் தீவு” என்ற ஆவணப்படம் பிபிசி எர்த் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வனப்பகுதி, தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் பாதுகாப்பில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த சிந்தக பத்திரணவை பிரித்தானிய துணை உயர்ஸ்தானிகர் லிசா வான்ஸ்டால் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி குழு வரவேற்றது. இதன்போது வனவிலங்கு சுகாதார மற்றும் வனவிலங்கு பாதுகாப்புது்துறையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் மாரசிங்க மற்றும் பணிப்பாளர் நாயகம் டாக்டர் தாரக்க பிரசாத் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர். இலங்கையின் காட்டு பகுதிகளில் யானைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகம் விரைவாக மாறுவதால், அவை புதிய சவால்களை எதிர்கொள்கின்றன, அவை மனிதர்களுடன் மேலும் நெருக்கமான தொடர்பு எல்லைக்குள் வருகின்றன. இருப்பினும், சிந்தக தலைமையில் அர்ப்பணிப்புடன் வனப்பகுதி, தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் பாதுகாப்பில் ஈடுபடும் குழு, இந்த மென்மையான இராட்சத உயிரினத்தை பாதுகாக்க போராடி வருகின்றது. மேலும் மக்களும் யானைகளும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை அவர்கள் திட்டமிடுகின்றார்கள். https://www.virakesari.lk/article/217999
  11. வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த உதவி கோரல் 20/06/2025 மாரீசங்கூடல் உயரப்புலத்தில் வசிக்கும் சிவானந்தராசா லக்சன் (பேசமுடியாதவர், மகனும் பேசமுடியாதவர், மனைவி இதய நோயாளி) என்பவருக்கு அரசின் பத்து லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது. வீடு கட்டும் பணிகளை நிறைவு செய்ய மேலும் ஏழரை லட்சம் ரூபா தேவையாக உள்ளது. கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே உங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி ஒரு குடும்பத்தை குடியிருக்க உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம். தொடர்புகொள்ள +94 77 777 5448, +94 77 959 1047 (WhatsApp, Viber)
  12. அணித் தலைவர் ஷன்டோ, முன்னாள் தலைவர் ரஹிம் குவித்த அபார சதங்களுடன் பலமான நிலையில் பங்களாதேஷ் Published By: VISHNU 17 JUN, 2025 | 07:32 PM (நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, முன்னாள் தலைவர் முஷ்பிக்குர் ரஹிம் ஆகியோர் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதங்களின் உதவியுடன் பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 292 ஓட்டங்களைக் குவித்துள்ளது. நான்காவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சி அத்தியாயத்தில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதுவாகும். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. மொத்த எண்ணிக்கை 5 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர்களில் ஒருவரான அனாமுல் ஹக் ஓட்டம் பெறாமல் அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஷத்மான் இஸ்லாம் 14 ஓட்டங்களுடனும் மொமினுள் ஹக் 29 ஓட்டங்களுடனும் இலங்கையின் அறிமுக சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்கவின் பந்துவீச்சில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெளியேறினர். 17ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்களாக இருந்தபோது ஜோடி சேர்ந்த ஷன்டோவும் ரஹிமும் மிகவும் பொறுப்புணர்வுடன் சுமார் 5 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடி இலங்கை பந்துவீச்சாளர்களை பெரும் சொதனைக்குள்ளாக்கினர். அவர்கள் இருவரும் அபார சதங்களைக் குவித்ததுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 247 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளனர். நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 260 பந்துகளில் 14 பவுண்டறிகள், ஒரு சிச்ஸ் அடங்கலாக 136 ஓட்டங்களுடனும் முஷ்பிக்குர் ரஹிம் 186 பந்துகளில் 5 பவுண்டறிகள் உட்பட 105 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். தனது 36ஆவது டெஸ்டில் விளையாடும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 6ஆவது சதத்தைக் குவித்ததுடன் தனது 97ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 38 வயதான மூத்த வீரர் முஷ்பிக்குர் ரஹிம் 12ஆவது சதத்தைப் பெற்றார். விளையாட்டிற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் முஷ்பிக்குர் ரஹிம் அபாரமாக துடுப்பெடுத்தாடினார். இலங்கை அணியில் ஆரம்ப வீரர் லஹிரு உதாரவும் சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்கவும் டெஸ்ட் அறிமுகம் பெற்றனர். தரிந்து ரத்நாயக்க ஆரம்பத்தில் சிறப்பாக பந்துவீசி 5 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஆனால் அதன் பின்னர் அவர் வீசிய 27 ஓவர்களில் 105 ஓட்டங்களைக் கொடுத்த அவரால் மேலதிக விக்டெகட் எதனையும் கைப்பற்ற முடியாமல் போனது. (124 - 2 விக்) தனது முதல் 15.5 ஓவர்களை வலதுகையால் பந்துவீசிய தரிந்து ரத்நாயக்க 16ஆவது ஓவரில் இடது கையால் பந்துவீச ஆரம்பித்தார். ஆனால் அவரால் பந்துவீச்சில் சாதிக்க முடியாமல் போனது. அசித்த பெர்னர்ணடோ 51 ஓட்டங்களுடக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன் மிலன் ரட்நாயக்க கட்டுப்பாட்டுடன் 12 ஓவர்கள் வீசி 19 ஓட்டங்களை மட்டும் கொடுத்தார். இலங்கையின் நட்சத்திர சுழல்பந்துவிச்சாளர் ப்ரபாத் ஜயசூரிய 28 ஒவர்களில் 85 ஓட்டங்களைக் கொடுத்து விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை. பகுதிநேர பந்துவீச்சாளர் கமிந்து மெண்டிஸை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா பயன்படுத்தாதது ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. இரண்டாம் நாள் ஆட்டம் நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்கும். https://www.virakesari.lk/article/217756
  13. அண்ணை, மருதலிங்கம் பிரதீபன் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
  14. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 04:20 PM யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20.06.2025) அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோ அவர்களினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது. மருதலிங்கம் பிரதீபன் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218011
  15. டெஸ்ட் அறிமுகம் பெற்றனர் லஹிரு உதார, தரிந்து ரத்நாயக்க; பங்களாதேஷ் 90 - 3 விக் 17 JUN, 2025 | 12:22 PM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை ஆரம்பமான இலங்கைக்கும் பங்காளாதேஷுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் முதலாம் நாள் ஆட்டத்தின் பகல்போசன இடைவேளையின்போது 3 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இப் போட்டியில் இலங்கை சார்பாக 31 வயதான வலதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லஹிரு உதார, இரண்டு கைகளாலும் பந்துவீசக்கூடிய 29 வயதான சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் டெஸ்ட் அறிமுகம் பெற்றனர். இன்றைய போட்டியில் பந்துவீச அழைக்கப்பட்ட தரிந்து ரத்நாயக்க தனது நான்காவது ஓவரில் மொமினுள் ஹக்கை ஆட்டம் இழக்கச் செய்ததன் மூலம் முதலாவது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார். பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. மொத்த எண்ணிக்கை 5 ஓட்டங்களாக இருந்தபோது அனாமுல் ஹக் ஓட்டம் பெறாமல் அசித்த பெர்னாண்டோவினால் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து ஷத்மான் இஸ்லாம் (14), மொமினுள் ஹக் (29) ஆகிய இருவரின் விக்கெட்களை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தரிந்து ரத்நாயக்க வீழ்த்தினார். (45 - 3 விக்) எனினும் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் சன்டோ (25 ஆ.இ.), முஷ்பிக்குர் ரஹிம் (20 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷ் அணியை நல்ல நிலையை நோக்கி நகர வைத்துள்ளனர். பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடரவுள்ளது. https://www.virakesari.lk/article/217697
  16. TEA 1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England Day 1 - Session 2: England chose to field. India (51 ov) 215/2 Current RR: 4.21 • Min. Ov. Rem: 38 • Last 10 ov (RR): 43/0 (4.30) England
  17. இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசுவதால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் பட மூலாதாரம்,GETTY IMAGES/MAXAR TECHNOLOGIES படக்குறிப்பு,இரானின் நடான்ஸ் அணுசக்தி தளம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ரெபேக்கா மோரேல், அலிசன் பிரான்சிஸ் & விக்டோரியா கில் பதவி, பிபிசி நியூஸ் அறிவியல் குழு 4 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் அணுசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைத்து வரும் இஸ்ரேல், இரானின் நிலத்தடி யுரேனியம் செறிவூட்டல் நிலையங்கள் மீது முக்கிய கவனம் செலுத்துகிறது. சர்வதேச அணுசக்தி முகமையின் கூற்றுப்படி (IAEA), இரானின் அணுசக்தி மையத்தில் உள்ள நடான்ஸ் நிலையம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. மற்றொரு தளமான ஃபோர்டோ, ஒரு மலையின் ஆழத்தில் அமைந்துள்ளது. அந்த நிலத்தடி அணுசக்தி நிலையத்தை அடைவதற்கு, அமெரிக்காவிடம் மட்டுமே உள்ள சக்திவாய்ந்த 'பங்கர் பஸ்டர்' குண்டுகள் தேவைப்படும். ஒருவேளை ஃபோர்டோ மீது குண்டுவீச்சு நடந்தால், அதனால் ஏற்படும் அபாயங்கள் என்னவாக இருக்கும்? இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் "மிகவும் கவலைக்குரியவை" என்று சர்வதேச அணுசக்தி முகமை விவரித்துள்ளது. திங்கள் கிழமையன்று, அதன் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி, ராணுவ விரிவாக்கம் "மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான விளைவுகளுடன் கதிரியக்க வெளியீட்டிற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது" என்று கூறினார். யுரேனியத்தின் ஒரு குறிப்பிட்ட வகையை (ஐசோடோப்பை) உருவாக்கிச் சேமிக்க, செறிவூட்டல் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சர்ரே பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டன் தேசிய இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பேடி ரீகனின் கூற்றுப்படி, யுரேனியத்தை நிலத்தில் இருந்து தோண்டி எடுக்கும்போது, அது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அவை, பெரும்பகுதியாக, 99.3 சதவிகிதம் யுரேனியம்-238, அதோடு, 0.7% - அதாவது சுமார் 150 அணுக்களில் ஒரு அணு யுரேனியம்-235 "அணு உலை வேலை செய்யத் தேவையானது இதுதான்" என்று விளக்குகிறார் பேராசிரியர் ரீகன். ஆற்றல் வெடிப்பு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானில் உள்ள முழுமையடையாத அராக் கனநீர் உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய காட்சிகளை இரானிய அரசு ஊடகம் வெளியிட்டது அணுசக்தி செறிவூட்டல் செயல்முறை, அடிப்படையில் யுரேனியம்-235 அளவை அதிகரிப்பதைக் குறிக்கிறது. யுரேனியத்தை அதன் வாயு வடிவத்தில் எடுத்து மைய விலக்குகள் (centrifuges) எனப்படும் இயந்திரங்களில் சுழற்றுவதன் மூலம் இந்தச் செயல்முறை நடைபெறுவதாக விளக்கினார் பேராசிரியர் ரீகன். மேலும் யுரேனியம்-238, தேவையான யுரேனியம்-235ஐ விட கனமாக இருப்பதால், அவை சுழலும்போது இரண்டும் பிரிந்து விடுகின்றன. செறிவூட்டலை அதிகரிக்க இந்தச் செயல்முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. ஆற்றலை வெளியிடும் கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு வினையை உருவாக்க அணுமின் நிலையங்களுக்குப் பொதுவாக இந்தச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தில் சுமார் 3-5% தேவைப்படுகிறது. ஆனால் அணு ஆயுதம் தயாரிப்பதே நோக்கமாக இருக்கும்போது, யுரேனியம்-235 சுமார் 90% தேவைப்படும். அடிப்படையில், யுரேனியம் எவ்வளவு செறிவூட்டப்படுகிறதோ, அந்த அணுக்கள் அனைத்தும் பிளவுபடும்போது ஆற்றல் வெடிப்பும் அதிகமாக இருக்கும். இரானின் யுரேனியம் சுமார் 60% செறிவூட்டப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது. அதாவது, அணு ஆயுதம் தயாரிக்கப் போதுமான அளவு செறிவூட்டும் பாதையில் அது முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், முறையாகச் சேமித்து வைக்கப்பட்ட, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மீது ராக்கெட்டை ஏவுவது, ஃபுகுஷிமா அல்லது செர்னோபில் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட பேரழிவுகளைப் போன்ற "அணுசக்தி விபத்தை" ஏற்படுத்தாது. "அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம், செறிவூட்டப்படாத யுரேனியத்தைவிட மூன்று மடங்கு அதிக கதிரியக்கத் தன்மை கொண்டது. ஆனால், மொத்த அளவில் பார்த்தால், இரண்டுமே அடர்த்தியான கதிரியக்கத் தன்மை கொண்டவை அல்ல. இதனால் பெரியளவில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும் அபாயமில்லை," என்று செர்னோபில் பேரழிவின் பின்விளைவுகளை ஆய்வு செய்த போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜிம் ஸ்மித் விளக்குகிறார். "யுரேனியம், ஓர் அணு உலை அல்லது வெடிகுண்டில் பயன்படுத்தப்படும்போது பிளவுபடும். இதனால் கதிரியக்க சீசியம், ஸ்ட்ரோன்டியம், அயோடின் போன்ற பிளவுப் பொருட்கள் உருவாகின்றன. இந்தப் பொருட்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் முக்கியக் காரணிகள். அதனால், இவற்றைப் பற்றியே நாங்கள் அதிக அக்கறை கொண்டுள்ளோம்," என்கிறார் அவர். ஆனால் செறிவூட்டல் தளங்களில் அணுசக்தி எதிர்வினை எதுவும் நடைபெறுவதில்லை. அதனால் ஒரு வெடிகுண்டு வெடித்தாலும் அது எந்த எதிர்வினையையும் தூண்டாது. எனவே, அந்த ஆபத்தான கதிரியக்க "பிளவுப் பொருட்கள்" இருக்காது என்று அவர் கூறுகிறார். ஆனால், வெடிப்பு ஏற்படும்போது, யுரேனியம் அந்த இடத்திற்குள் பரவிச் சிதறக்கூடும். அருகில் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதால், ஆயிரக்கணக்கான மக்கள் டெஹ்ரானில் இருந்து வெளியேறி வருகின்றனர் நடான்ஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்த பிறகு, ஐ.ஏ.இ.ஏ அந்த இடத்தில் கதிரியக்க மாசுபாட்டைக் கண்டுபிடித்தது. ஆனால் வெளியே உள்ள கதிரியக்கத்தின் அளவுகள் மாறாமல் சாதாரண மட்டங்களில் இருப்பதாக ஐ.ஏ.இ.ஏ குறிப்பிட்டது. "யுரேனியத்தின் கதிர்வீச்சு உண்மையில் அதிக தூரம் பயணிக்காது" என்கிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் கனிமவியல் மற்றும் கதிரியக்க கழிவு மேலாண்மைத் துறையின் தலைவர் பேராசிரியர் கிளேர் கார்க்ஹில். ஆனால் அந்த நிலையத்திற்கு அருகில் இருப்பவர்களுக்கு, உடல்நல அபாயங்கள் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். "மனித உடலுக்கு ஏற்படும் நச்சுத்தன்மையைப் பொறுத்தவரை, நீங்கள் நிச்சயமாக யுரேனியம் துகள்களைச் சுவாசிப்பதோ, உட்கொள்வதோ நல்லதல்ல," என்று அவர் கூறினார். "ஏனென்றால் யுரேனியம் துகள்கள் நுரையீரல் அல்லது வயிற்றுக்குள் உள்ள செல்களில் தங்கி, மெதுவாக, கதிரியக்கத்தால் சிதைத்து, சேதத்தை ஏற்படுத்தும்." கதிரியக்கத் தன்மையுடன் ஏற்படும் ரசாயன வெளிப்பாடும் அருகில் யார் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பிரச்னையாக இருக்கலாம். "ஏதேனும் விபத்து ஏற்பட்டு, மையவிலக்குகளில் (centrifuges) அடக்கப்பட்டிருந்த யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைட் (uranium hexafluoride) வாயு வெளியேறினால், அது மிக மோசமான ஒரு ரசாயன விபத்தாக மாறும்," என பாங்கூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அணுப் பொருள் வல்லுநரான பேராசிரியர் சைமன் மிடில்பர்க் தெரிவித்தார். "இந்த யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைட் காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் தொடர்புகொண்டால், அது மிகவும் அரிக்கும் தன்மையுடையதாகவும், ஆபத்தானதாகவும் மாறும். ஏனெனில் இது மிக வலிமையான ஓர் அமிலத்தை உருவாக்கக்கூடும்," என்றும் அவர் குறிப்பிட்டார். "ஆனால் அது அந்த உள்ளூர் பகுதிக்கு அப்பால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை." தங்கள் அவசர மையம் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதாகவும், இரானின் அணுசக்தி நிலையங்களின் நிலையும், அதன் தளங்களில் உள்ள கதிர்வீச்சு அளவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyg44glj3xo
  18. பட மூலாதாரம்,RAMJI கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களின் கோவில் பிரவேச நிகழ்வுகள் போராட்டங்களிலும் பிரச்னைகளிலும் முடிகின்ற சூழலில் சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் முதல் முறையாக மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குடமுழுக்கு விழா ஜூன் 8, 9 ஆகிய தினங்களில் நடைபெற்றது. கோவில் திருவிழா காலத்தில் அச்சிடப்படும் டி-சர்ட்கள், பேனர்கள் போன்றவற்றில் சாதிப் பெயர் ஏதுமின்றி, சாதிய பெருமை பேசும் பாடல்கள் ஏதுமின்றி, ஒற்றுமையாக குடமுழுக்கு நிகழ்ச்சியை நடத்தியிருப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். சாமி சிலையின் பல்லக்கைத் தூக்குவதில் இருந்து கோவில் கோபுர கலசத்தில் நீரைத் தெளிப்பது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அனைத்து தரப்பு மக்களும் சமமாகப் பங்கேற்றனர். அறுபது ஆண்டுகள் கழித்து முதல் முறையாக பட்டியல் சமூக மக்கள் மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தியது எப்படி? வழிபாட்டு உரிமைக்காகப் போராடிய பட்டியல் சமூக மக்கள் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டனம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பள்ளிப்பட்டி கிராமம். அந்த கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதே ஊரில் பட்டியலின மக்கள் சுமார் 300 பேர் வசித்து வருகின்றனர். அந்த ஊரில் 60 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக அந்தக் கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வந்தது. கடந்த 2010ஆம் ஆண்டு அந்தப் பழமையான கோவிலை இடித்துவிட்டுப் புதிய மாரியம்மன் கோவிலைக் கட்ட ஊர்மக்கள் திட்டமிட்டனர். பிபிசி தமிழிடம் பேசிய உள்ளூர் கிராம மக்கள், அந்த கோவிலின் பெரும்பான்மைப் பணிகள் முடிக்கப்பட்டு, முழுமை பெறாமல் சில ஆண்டு காலம் அப்படியே இருந்தது. அதன் பின்னர் ஊர் மக்கள் அனைவரிடம் இருந்தும் நிதி திரட்டி இந்தக் கோவில் பணிகளை முடிக்க ஆர்வம் காட்டினோம் என்று தெரிவிக்கின்றனர். நான்கு முக்கியக் கோரிக்கைகள் பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு,அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கோவில் குடமுழுக்கு விழாவை சிறப்பிக்க முடிவெடுத்த தருணம் "கோவில் கட்டி முடித்த பிறகு நடைபெறும் குடமுழுக்கு நிகழ்வில் பட்டியலின மக்களின் சம பங்களிப்பு இருக்க வேண்டும் என்பது தொடர்பாகப் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் நான்கு கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்தோம்" என்று தெரிவிக்கிறார் பட்டியல் பிரிவைச் சேர்ந்த ராம்ஜி. அந்தக் கோரிக்கைகள், பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் விழா கமிட்டியில் சம அளவிலான பொறுப்புகளை பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் கோவிலில் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வழி வகை செய்ய வேண்டும் கோவில் திருவிழாவின்போது சாமி சிலை தூக்குவதைப் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆண்டாண்டு காலமாகச் செய்து வருகின்றனர். ஆனால் அந்த வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சிலைகளை வண்டியில் வைத்து பவனி அழைத்து வர வேண்டும். "ஆரம்பத்தில் இதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். பிறகு ஒவ்வொரு வீடாக கட்டுமானப் பணிகளுக்காக ரூ.5000 வசூலிக்கப்பட்டது. பின்னர் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன," என்று தெரிவிக்கிறார் ராம்ஜி. "ஆரம்பத்தில் சிறு சிறு கோவில் நிகழ்வுகளில் பட்டியலின மக்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தோம். பிறகு சாதி இந்து சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் பால்குடம் போன்றவற்றை கோவிலுக்கு மேல்புறத்தில் இருந்து எடுத்து வர வேண்டும் என்றும் பட்டியலின பெண்கள் கீழ் புறத்தில் இருந்து எடுத்து வர வேண்டும் என்றும் பேச்சுகள் அடிபடத் தொடங்கின," என்று விவரிக்கும் ராம்ஜி, பிறகு மாவட்ட நிர்வாகத்தின் தலையீடுதான் இதற்குச் சிறந்த தீர்வாக இருக்கும் என்று நிர்வாகத்தை நாடியதாகக் குறிப்பிடுகிறார். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் முடிவுகள் பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு,மாரியம்மன் சிலை பவனி நிகழ்வில் பங்கேற்ற ஊர்ப் பொதுமக்கள் இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இரு தரப்பினருக்கும் இடையே வட்ட நிர்வாகம் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் மே 29ஆம் தேதி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் விழா கமிட்டி குழுவினர், கோவில் நிர்வாகிகள் மற்றும் இரு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட மூன்று முக்கிய முடிவுகள் தொடர்பான விரிவான அறிக்கையை வட்டாட்சியர் அலுவலகம் வெளியிட்டது. அதன்படி: கோவில் குடமுழுக்கு விழாவில், பள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வகுப்பினர்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். கோவில் விழாக் குழுவில் அனைத்து வகுப்பினரும் உறுப்பினராக இருக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும். சாமி ஊர்வலத்திற்கான வாகன ஏற்பாட்டைப் பொதுவான முறையில் செய்ய வேண்டும். வாட்ஸ்ஆப் குரூப்பில் சாதி தொடர்பான பதிவுகள் எதையும் பதிவிடக்கூடாது. சாமி ஊர்வலம், வழிபாட்டு முறைகள் என அனைத்திலும் சாதிப் பாகுபாடின்றி அனைத்து வகுப்பினரும் ஒற்றுமையுடன் கலந்துகொள்ள வேண்டும். திருவிழா சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வண்ணம் நடைபெற அனைத்து ஒத்துழைப்பையும், மேற்படி இருதரப்பினரும் வழங்க வேண்டும். இந்த முடிவுகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சேலம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சுவாமிநாதன், "மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு பார்க்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதன் அடிப்படையில், அமைதியான முறையில் வழிபாடு நடத்த மக்கள் அனைவரும் முன்வந்தனர்" என்று கூறினார். 'அடுத்த தலைமுறையினர் இதனால் பாதிக்கக் கூடாது' பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு,தேவையற்ற சர்ச்சைகள் மற்றும் பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்ட ஊர் பொதுமக்கள் இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய விழாக் கமிட்டி குழுவின் தலைவர் காசி விஸ்வநாதன் அடுத்து வரும் தலைமுறையினர் சாதிய கொடுமை மற்றும் தீண்டாமையின் வாசமின்றி வளர வேண்டும் என்று கூறினார். "தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற இடங்களில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்த வண்ணம் இருப்பதை நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம். ஆனால் கடவுள் மற்றும் வழிபாட்டு உரிமையானது அனைவருக்கும் பொதுவானது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வேண்டுதல்கள் இருக்கும். அதை கடவுளிடம் முறையிட கோவில்களுக்கு வருகின்றனர். பிற்போக்குத் தன்மை கொண்ட சாதிய கட்டுப்பாடுகளை நாங்கள் உடைக்க விரும்பினோம்," என்று தெரிவித்தார். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவர், "கோவில் திருவிழாவின்போது உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் குழுக்களில் சாதிய பெருமைகளைப் பேசும் வீடியோக்கள், சாதிப் பெயர்கள் மற்றும் பாடல்கள் போன்றவை பகிரப்படுவதை மறுத்தோம். மேற்கொண்டு பேனர்களிலும் சாதிப் பெயர்கள் ஏதும் இடம் பெறாமல் அச்சிடப்பட வேண்டும் என்றும் முடிவெடுத்தோம். அதை அனைவரும் முறையாகப் பின்பற்றினோம். மக்களும் எந்தவித எதிர்ப்பும் கூறாமல் மகிழ்வுடன் பங்கேற்றனர்," என்றார். இனி வருங்காலங்களிலும், அனைத்து கோவில் திருவிழாக்களிலும் இத்தகைய போக்கே தொடரும் என்றும் காசி விஸ்வநாதன் குறிப்பிட்டார். அனைத்து கோவில் நிகழ்வுகளிலும் பங்கேற்ற பட்டியலின மக்கள் பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு,குடமுழுக்கு நிகழ்வின்போது ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் சாதி வேறுபாடின்றி பங்கேற்றனர். ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது அனைத்துப் பிரிவினரும் ஒன்றாகச் சேர்ந்து பால் குடம் எடுத்துள்ளனர். "அனைவரும் ஒன்றாக பால் குடம் எடுத்தோம். பொங்கலும் ஒன்றாகப் படையலிடப்பட்டது. மேலும் மாரியம்மன் சிலை பவனியின்போது அந்தச் சிலையை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தூக்கிச் சென்றனர். எங்கள் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்க அனைத்தும் நடைபெற்றது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது," என்று கூறினார் ராம்ஜி. கேள்விக்குள்ளாகிறதா பட்டியலின வழிபாட்டு உரிமைகள்? "பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமைகள் காலம் காலமாகப் பல்வேறு இடங்களில் மறுக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதில் சில மாற்றங்களையும், சேலம் கிராமத்தில் நடந்திருப்பது போன்று நேர்மறையான மாற்றங்களையும் காண்பது மக்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தையும், மக்களுக்குக் கிடைத்திருக்கும் வெளியுலக அனுபவத்தையும் காட்டுகிறது," என்கிறார் அசோகா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டில் வெளியான தலித் இதழ்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆய்வு மாணவரான ஆர். யுவராஜ். தமிழ்நாடு பட்டியலின மக்களின் உரிமைகள் தொடர்பாக ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கவனித்து வரும் அவர், "இதுபோன்ற கோவில் வழிபாட்டு உரிமைகள் அனைத்து இடங்களிலும் சாத்தியம் இல்லை," என்றும் குறிப்பிட்டார். "பல சமூகத்தினர் சேர்ந்து வாழும் பகுதி என்பதால் இணக்கமாகச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. ஒரு தொழில்மயமாக்கப்பட்ட பகுதி என்றால் ஒரே தொழிலைச் சார்ந்து பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில், பழைய தீண்டாமை பழக்கவழக்கங்கள் எளிமையாக முடிவுக்கு வருகிறது. ஏனெனில் அவர்கள் தொழில் ரீதியாகவும், வாழ்வாதாரத்திற்கும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றனர். ஆனால் ஒரேயொரு சாதி இந்து பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையுடன், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு, வாழ்வும் வருமானமும் ஒரு எல்லைக்குள்தான் என்று வாழும் மக்களைக் கொண்ட பகுதிகளில் சாதிய கட்டுப்பாடுகள் இன்னும் இறுக்கமாகவே இருக்கின்றன," என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார். அதோடு, சமூக நீதிக்கான பயணம் மிக நீண்டது எனவும், சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தக் கோவில் பிரவேசம் ஓர் இளைப்பாறல் எனவும் யுவராஜ் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpw7g1ee0n2o
  19. 18 ஆண்டு ஏக்கத்தை தீர்க்குமா இந்திய இளம் படை? அணியில் யாருக்கு வாய்ப்பு அதிகம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூழலுக்கு ஏற்றார்போல் பந்துவீச்சு, பேட்டிங் வியூகத்தை மாற்றி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பதால், இது சுப்மன் கில்லுக்கு முற்றிலும் புதிய அனுபவமாகவே இருக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் (5 போட்டிகள்) இன்று பிரிட்டனின் ஹெடிங்லியில் லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் சகாப்தத்தை தொடங்குகிறது. 25 வயது ஆகிய சுப்மான் கில் 21-ம் நூற்றாண்டு இந்திய அணியின் இளம் கேப்டனாக உருவெடுத்துள்ளார். 18 ஆண்டுகள் வறட்சி 2007- ஆம் ஆண்டு ராகுல் திராவிட் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றபின் 18 ஆண்டுகளாக பிரிட்டன் மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாமல் இருக்கிறது. ஆதலால், இந்த முறை இளம் கேப்டன் சுப்மன் கில் மீதும், இளம் வீரர்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய அணியில் அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகியோர் டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் முற்றிலும் இளமையான அதே நேரத்தில் அனுபவம் குறைந்த வீரர்களுடன் இந்திய அணி டெஸ்ட் தொடரை அணுகுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பை இன்று பிரிட்டனில் நடைபெறுகிறது டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று அது மட்டுமல்லாமல் 2025-27-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று இந்த டெஸ்ட் தொடரிலிருந்து தொடங்குவதால் இந்திய அணி வெற்றியுடன் டெஸ்ட் தொடரை முடிக்கவும் தீர்மானமாக இருக்கிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இந்திய அணி 3-வது இடத்தையும், இங்கிலாந்து அணி, 22 போட்டிகளில் 11 வெற்றிகளுடன் 5-வது இடத்தையும் பிடித்தன. இந்திய அணி கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்றும், பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இழந்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு டெஸ்ட் தொடர் தோல்விகள் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக மாறின. 23 ஆண்டுகளுக்குப்பின் முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் கடைசியாக இந்திய அணி 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின் 23 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் இந்திய அணியால் டெஸ்ட் வெற்றியைப் பெற முடியவில்லை. கடைசியாக 2021-ஆம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்களில் இந்திய அணி தோற்றது. ஆதலால், இந்திய அணி இந்த மைதானத்தில் முதல் டெஸ்டில் வெற்றிபெற்றால்கூட கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகள் கழித்து கிடைத்த வெற்றியாகவே வரலாற்றில் பொறிக்கப்படும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய கிரிக்கெட் அணி (கோப்புப் படம்) கில் தலைமைக்கு பரிசோதனை சுப்மன் கில் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி இதற்கு முன் ஜிம்பாப்பேவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது. ஆனால் டெஸ்ட் தொடருக்கு முதல்முறையாக கில் தலைமை ஏற்றுள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் 5 முதல் தரப்போட்டிகளில் கில் கேப்டன்ஷிப் செய்துள்ளார், ரஞ்சிக் கோப்பையில் ஒரு முறை கேப்டன்ஷிப் செய்துள்ளார். ஒருநாள்போட்டி, டி20 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்வதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது டெஸ்ட் கேப்டன்ஷிப். சூழலுக்கு ஏற்றார்போல் பந்துவீச்சு, பேட்டிங் வியூகத்தை மாற்றி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பதால், இது சுப்மன் கில்லுக்கு முற்றிலும் புதிய அனுபவமாகவே இருக்கும். ஐபிஎல் டி20 தொடரில் சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன்ஷிப் செய்து ப்ளே ஆஃப் சுற்றுவரை கொண்டு சென்றார். சுப்மன் கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி "குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கில் கேப்டன்ஷி செய்யும்போது பார்த்தேன், என்னை அவர் ஈர்த்துவிட்டார். அவரின் அமைதி, வியூகம் அமைக்கும் முதிர்ச்சி, முடிவெடுக்கும் திறன் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது," எனத் தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்த சாய் சுதர்சன், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருப்பது கில்லுக்கு கூடுதல் பலத்தையும், எளிமையாக பணியைச் செய்யவும் வழிவகுக்கும். இவர்கள் தவிர ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், துணைக் கேப்டன் ரிஷப் பண்ட், கருண் நாயர் ஆகியோரும் டெஸ்ட் தொடரில் முத்திரை பதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சில் பும்ரா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஹர்சித் ராணா ஆகியோரும், சுழற்பந்துவீச்சுக்கு ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோரும் உள்ளனர். இங்கிலாந்து அணி ப்ளேயிங் லெவனை அறிவித்துவிட்ட நிலையில் இந்திய அணியில் இன்னும் ப்ளேயிங் லெவன் அறிவிக்கப்படவில்லை. ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், சுப்மான் கில், ரிஷப் பந்த், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் அல்லது வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் அல்லது பிரசித் கிருஷ்ணா - இவர்கள் உத்தேச ப்ளேயிங் லெவனாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபிஎல் டி20 தொடரில் சுப்மான் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன்ஷிப் செய்து ப்ளே ஆஃப் சுற்றுவரை கொண்டு சென்றார் சுப்மான் கில் ப்ளேயிங் லெவன் எப்படி இருக்கும்? ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் அருமையான தொடக்கத்தை அளித்த கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 3வது வீரராக கருண் நாயர், அன்கேப்டு வீரர் சாய் சுதர்சன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய கருண் நாயர் 8 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், ஐபிஎல் தொடரில் கலக்கலாக ஆடிய சுதர்சன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், 3வது இடம் யாருக்கு என்பது குழப்பமாக இருக்கிறது. விராட் கோலி களமிறங்கும் 4-வது இடத்தில் கேப்டன் சுப்மன் கில் களமிறங்குவார் என துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார் என்பதால் அந்த இடம் நிரப்பப்பட்டுவிட்டது. 3-வது இடம் கருண் நாயருக்கு வழங்கப்பட்டால், அடுத்ததாக ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் சாய் சுதர்சனா அல்லது ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியா என்ற கேள்வி எழுகிறது. பந்துவீச்சிலும் 5வது பந்துவீச்சாளராக வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்வதா அல்லது நிதிஷ் ரெட்டியை தேர்வு செய்வதா என்ற கேள்வியும் எழுகிறது. பிரிட்டன் மண்ணில் பந்தை நன்கு ஸ்விங் செய்யக்கூடியதில் நிதிஷ் ரெட்டியை விட ஷர்துல் தாக்கூர் சிறப்பாக செயல்படுவார். பேட்டிங்கிலும் ஓரளவு நன்றாக செயல்படுவார் என்பதால் 8-வது வீரராக ஷர்துல் தாக்கூர் வரவும் வாய்ப்புள்ளது. சுழற்பந்துவீச்சு வரிசையில் ஜடேஜா தவிர்த்து பேட்டிங்கில் வலுசேர்க்க வேண்டுமென்றால் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம், இல்லாவிட்டால் குல்தீப் யாதவ் களமிறங்கக்கூடும். வேகப்பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் தவிர்த்து பிரசித் கிருஷ்ணா, ராணா ஆகியோரில் ஒருவர் களமிறங்கலாம். பிரிட்டன் பருவநிலைக்கு ஏற்றார்போல் ராணாவை விட பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஸ்விங், பவுன்ஸர் இருக்கும் என்பதால், இருவரில் ஒருவர் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. இதில் இந்திய அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தேவை என்பதால், அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்புக் கிடைக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வலைப்பயிற்சியில் கருண்நாயர் இவர்கள் இல்லை இந்திய அணி கடைசியாக 2021-ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தில் இருந்த விராட் கோலி, அஸ்வின், ரோஹித் சர்மா, புஜாரா, ஷமி, ரஹானே, அக்ஸர் படேல், இசாந்த் சர்மா, சூர்யகுமார், விஹாரி, பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் இந்த அணியில் இல்லை. 2022-ஆம் ஆண்டு 5வது டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டன்ஷியில் இந்திய அணி ஆடியது. இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. ஆனால், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் சதம் விளாசினர். 98 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிம்மசொப்னாக திகழ்ந்தனர். ஆனால், இங்கிலாந்து அணி 378 ரன்களைத் துரத்தியதில் ரூட், பேர்ஸ்டோவின் சதம் வெற்றியைத் தேடித்தந்தது. மெக்கலம் பயிற்சியில் இங்கிலாந்து பிரன்டென் மெக்கலம் பயிற்சியில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியிலும் ஆக்ரோஷமான 'பாஸ்பால்' ஆட்டத்தை விளையாடுகிறது. இங்கிலாந்து அணி, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் தொடரை அணுகுகிறது. சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பக்கூடிய பந்துவீச்சாளர், பேட்டர், சிறந்த பீல்டர் என்பதால், இந்தத் தொடர் சவாலாகவே இந்திய அணிக்கு இருக்கும். துணைக் கேப்டனாக ஓலே போப் நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டிங்கில் ஜேக் கிராளே, பென் டக்கெட், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், ஜேம் ஸ்மித், போப், ஸ்டோக்ஸ் என வலுவான வரிசை இருக்கிறது. இதில் ஜோ ரூட்டுக்கு மட்டுமே இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. பந்துவீச்சில் காயம் காரணமாக 6 மாதங்கள் ஓய்வில் இருந்த கிறிஸ் வோக்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார், அவர் தவிர்த்து பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் ஆகிய வேகப்பந்துவீச்சாளரும், ஷோயிப் பஷீர் சுழற்பந்துவீச்சாளரும் உள்ளார். இங்கிலாந்து அணியின் நடுவரிசை பேட்டிங் வலுவாக இருக்கிறது. ஹேரி ப்ரூக், ஸ்டோக்ஸ், ரூட் ஆகியோர் ஆட்டத்தை எந்தநேரத்திலும் திருப்பக்கூடியவர்கள் என்பதால், இந்திய அணி நடுவரிசை விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இதில் ஹேரி ப்ரூக், ஜேம் ஸ்மித், கார்ஸ், டங் ஆகிய 4 வீரர்கள் முதல்முறையாக இந்திய அணிக்கு எதிராக களமிறங்குகிறார்கள். இவர்களின் பேட்டிங், பந்துவீச்சு குறித்து இந்திய வீரர்களுக்கும் தெரியாது, பும்ரா, சிராஜ் உள்ளிட்ட இந்திய பந்துவீச்சு குறித்தும் இவர்களுக்கும் தெரியாது என்பதும் சவாலாக இருக்கும். டாப் ஆர்டர் பேட்டர்கள் வலுவான அடித்தளம் அமைத்துவிட்டால் நடுவரிசை பேட்டர்கள் ஆட்டத்தை கையில் எடுத்துவிடுவார்கள், இதற்கு வாய்ப்பளிக்காமல் இந்திய பந்துவீச்சாளர்கள் செயல்பட வேண்டும். இங்கிலாந்து ப்ளேயிங் லெவன் ஜேக் கிராளே, பென் டக்கெட், ஓலே போப், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேம் ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்க், ஷோயிப் பஷீர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பக்கூடிய பந்துவீச்சாளர், பேட்டர், சிறந்த பீல்டர் என்பதால், இந்தத் தொடர் சவாலாகவே இந்திய அணிக்கு இருக்கும். ஆடுகளம் எப்படி? ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது. பிரிட்டனில் தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால் வெயில் நன்றாக இருக்கும் என்பதால், தொடக்கத்தில் மட்டுமே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும், அதன்பின் ஓரளவுக்கு பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும். ஆடுகள தலைமை வடிவமைப்பாளர் ராபின்ஸன் அளித்த பேட்டியில் "வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தை பேட்டர்கள், பந்துவீச்சாளர்களுக்கு சமமாக இருக்கும் வகையில் மாற்றியிருக்கிறோம். புற்களை அதிகமாக விட்டு வைக்காமல் குறைத்துவிட்டோம். ஆதலால், ஸ்விங், பவுன்ஸ் இருக்கும், பேட்டிங்கும் நன்றாக இருக்கும். முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு குறைவில்லாமல் சேர்க்கலாம். முதல் 3 நாட்கள் வெயில் இருக்கும் என்பதால் முதல் இன்னிங்ஸில் பேட்டர்களுக்கு நன்றாக இருக்கும், ஆனால் கடைசி இரு நாட்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதால், குளிர்ந்த சூழல், காற்றின் வேகம், ஆடுகளத்தின் தன்மை ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது (கோப்புப்படம்) இதுவரை இங்கிலாந்து-இந்தியா இந்திய அணி கடைசியாக 18 ஆண்டுகளுக்கு முன் 2007-ம் ஆண்டு திராவிட் தலைமையில் டெஸ்ட் தொடரை பிரிட்டன் மண்ணில் வென்றது. அதேபோல ஹெடிங்லி மைதானத்தில் கடைசியாக 2002ல் வென்றது, 23 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் இந்திய அணி வெல்லவில்லை. முதல் போட்டியில் வெற்றியும், டெஸ்ட் தொடர் வெற்றியும் இந்திய அணிக்கு வரலாறாக இருக்கும். இரு அணிகளும் கடந்த 1932ம் ஆண்டிலிருந்து 136 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 51 வெற்றிகளும், இந்திய அணி 35 வெற்றிகளும் பெற்றுள்ளன, 50 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கடைசியாக 2024ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியா வந்த போது 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்து சென்றது. இந்திய அணியும் கடைசியாக 2021ம் ஆண்டு இங்கிலாந்து பயணம் செய்து 2-2 என டெஸ்ட் தொடரை சமன் செய்தது. தொடக்கத்தில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்து டெஸ்ட் தொடரை வெல்லும் சூழலில் இருந்தது, ஆனால், கொரோனா தொற்று காரணமாக 2022 ஜூலை மாதம் டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வென்று தொடரை சமன் செய்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g8mmr7ln4o
  20. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 12:56 PM தினக்குரல் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் நீண்டகாலமாக கருத்தோவியராக பணியாற்றிய அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி (கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி) உடல் நலக் குறைவினால் வியாழக்கிழமை (19) காலமானார். அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர் சாலையில் காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை சனிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து வழங்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை கடந்த வருடம் பெற்றிருந்ததுடன், கருத்தோவிய படைப்புகளுக்காக 4 விருதுகளையும் 2 கலசப்பதக்கங்களையும் பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/217990
  21. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நாடு திரும்பினார் 20 JUN, 2025 | 10:43 AM சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of China) அழைப்பின் பேரில் சீனாவுக்கு 10 நாட்கள் விஜயம் மேற்கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நேற்று வியாழக்கிழமை (19) மாலை மீண்டும் நாடு திரும்பியுள்ளார். சீனாவின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் சுற்றுலாத் தளங்களை பார்வையிடும் நோக்கமாக இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது. டில்வின் சில்வாவுடன் சுமார் 29 பேர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர். மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உட்பட 29 பேர் நேற்று மாலை 06.20 மணியளவில் சீனா விமான சேவையின் எம்.யு - 231 விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்த விஜயத்தின் போது இலங்கையின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217968
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டின் ரோ பதவி, 20 ஜூன் 2025, 02:05 GMT எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பாலியல் ரீதியான வெளிப்படையான வார்த்தைகள் மற்றும் கருப்பொருள்கள் உள்ளன. சிலருக்கு மனித உடல் தொடர்பான விஷயங்கள் மீது ஒவ்வாமை இருக்கும். ஆனால் இது எவ்வாறு செயல்படுகிறது என்ற மர்மம் இப்போதுதான் வெளிப்படத் தொடங்குகிறது. ஆணுறைகள் தான் தனது உயிரைக் காப்பாற்றியதாக மௌரா நம்புகிறார். அமெரிக்காவின் ஓஹியோவில் வசிக்கும் மௌராவுக்கு தற்போது 43 வயதாகிறது. இந்தப் பிரச்னை முதலில் தனது இருபதுகளில் தொடங்கியது என்றும், அது மெதுவாகத் தன்னைத் தாக்கியது என்றும் கூறுகிறார். "(பாதுகாப்பற்ற) பாலுறவுக்குப் பிறகு என் பிறப்புறுப்பில் எரிச்சல் ஏற்பட்டதை நான் கவனித்தேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார். மௌரா (தனியுரிமையைப் பாதுகாக்க அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது துணையிடம் இதைப் பற்றிச் சொல்ல விரும்பவில்லை. எனவே, அவர் வெளியேறும் வரை காத்திருந்து, பின்னர் தன்னை நன்கு சுத்தப்படுத்திக் கொள்வார். சோப்பு முதல் லூப்ரிகன்ட் (Lubricant) வரை தான் பயன்படுத்தும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களை மாற்ற முயன்றார். ஆனால் பிரச்னை தீவிரமடைந்தது, வீக்கம் மற்றும் சிவந்து போகுதல் என அது தொடர்ந்தது. குறிப்பாக, விந்துவுடனான தொடர்புக்கு பிறகுதான் இதெல்லாம் நடந்தது. விந்து ஒவ்வாமை என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசியில் மௌரா அந்தத் துணையிடமிருந்து பிரிந்து, ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் உறுதியாக இருக்கும் இருக்கும் ஒருவரை விரும்பத் தொடங்கினார். "சில நாட்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்தது. ஒரு இரவில் உடலுறவுக்குப் பிறகு நாங்கள் படுக்கையில் படுத்திருந்தபோது, என் நாக்கு திடீரென்று வீங்கத் தொடங்கியது," என்று மௌரா நினைவு கூர்ந்தார். "என்ன நடக்கிறது என்பதைக் கண்ட என் துணை, 'உனக்கு மூச்சுத் திணறுகிறது!' என்று கத்தினார். என் இன்ஹேலரை தேடி எடுத்து, என் வாயில் திணித்து, அதை இயக்கினார். அதிர்ஷ்டவசமாக, மருந்து என் நுரையீரலுக்குள் செல்லும் அளவுக்கு நான் சுவாசித்துக் கொண்டிருந்தேன்." ஆஸ்துமா மற்றும் பல ஒவ்வாமைகளைக் கொண்ட மௌரா, ஆணுறையில் கசிவு ஏற்பட்டதாக நம்புகிறார். அவரும் அவருடைய நீண்டகால துணைவரும் இப்போது ஆணுறை பயன்பாட்டில் இன்னும் கவனமாக இருக்கிறார்கள். இத்தகைய அனுபவத்தை எதிர்கொள்ளும்வரை, விந்து ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது என்பது தனக்குத் தெரியாது என்று அவர் கூறுகிறார். மிகவும் அரிதானவை என்றாலும், சிலருக்கு மற்றவர்களின் உடல்களுடன் தொடர்பு ஏற்படும்போது, கடுமையான நோயெதிர்ப்பு எதிர்வினைகளால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் இத்தகைய நிலைமைகள் ஒருவரின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, வேலை, உறவுகள் மற்றும் பொதுவாக ஒருவர் உலகில் எவ்வாறு வாழ்கிறார் என்பதையும் பாதிக்கலாம். ஆனால் இந்த எதிர்வினைகள் எவ்வாறு வெளிப்படுகின்றன, அவற்றுக்கு சரியான காரணம் என்ன என்பது பெரும்பாலும் மர்மமாகவே உள்ளது. அவை உண்மையான ஒவ்வாமைகளா, அல்லது வேறு ஏதாவது? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த விசித்திரமான எதிர்வினைகள், மனித நோயெதிர்ப்பு மண்டலத்தின் தனித்தன்மைகள் மற்றும் நமது உடலின் வேதியியல் பற்றிய நுண்ணறிவுகளை விஞ்ஞானிகளுக்கு வழங்குகின்றன. பெரும்பாலும், மற்றொரு நபரின் உடல் தொடர்பான உணர்திறன் (Sensitivity) என்பது, அந்த உடலில் இருக்கக்கூடிய வெளிப்புறப் பொருட்களுடன் தொடர்புடையது. உதாரணமாக, அது டியோடரன்ட்கள் மற்றும் ஆஃப்டர் ஷேவ் கிரீம்கள் உள்ளிட்ட செயற்கை வாசனை திரவியங்களாக இருக்கலாம். 150க்கும் மேற்பட்ட வாசனை திரவியங்கள் இத்தகைய ஒவ்வாமையுடன் தொடர்புடையவை என கண்டறியப்பட்டுள்ளது. காரணம் என்பது எப்போதும் தெளிவாக இருக்காது. ஒரு அமெரிக்கப் பெண், தனது கணவரின் வாசனை திரவியத்தால் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு ஆளானார். அவருக்கு மாஸ்ட் செல் ஆக்டிவேஷன் சிண்ட்ரோம் என்ற நோய் ஏற்பட்டது. இந்த நிலையில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் செல்கள் செயலிழக்கத் தொடங்குகின்றன. ஆஸ்திரியாவில் உள்ள கெப்லர் பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர் சபீன் ஆல்ட்ரிச்டர் கூறுகையில், "இந்த இணைப்பு நிரூபிக்கப்படவில்லை என்றாலும், மாஸ்ட் செல் கோளாறுகள் உள்ள சில நோயாளிகள், மற்றவர்களின் இயற்கையான உடல் துர்நாற்றம் அல்லது தோலால் வெளிப்படும் ரசாயனங்களுக்கு உணர்திறன் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்." என்கிறார். உடல் துர்நாற்றத்திற்கு பங்களிக்கும் பல சேர்மங்களை தோல் வெளியிடுகிறது. இந்த தோல் வாயுக்களில் டோலுயீன் போன்ற ரசாயனங்கள் அடங்கும். இவை கச்சா எண்ணெயில் காணப்படுகிறது. மேலும், வண்ணப்பூச்சுகள் (Paint), பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கப் பயன்படுகிறது. மக்கள் தெரிந்தோ தெரியாமலோ டோலுயீனை நுகரலாம், உதாரணத்திற்கு, புகையிலை புகையில் உள்ள ஏராளமான ரசாயனங்களில் டோலுயீனும் ஒன்றாகும். 'பீப்பிள் அலர்ஜி டு மீ' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மனித தோல் தொடர்ந்து தூசித் துகள்களை உதிர்த்து வாயுக்களை வெளியிடுகிறது. பீப்பிள் அலர்ஜி டு மீ (PATM- People Allergic To Me) எனப்படும் மர்மமான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உடல்கள் காரணமாக ஏற்படும் ஒவ்வாமை குறித்து சில கூடுதல் நுண்ணறிவுகளை வழங்க முடியும். சமீபத்திய ஆய்வுகள், சிலரின் சரும வாயுக்கள் அவர்கள் அருகில் உள்ளவர்களுக்கு ஒவ்வாமை போன்ற எதிர்வினைகளைத் தூண்டுவதாகக் கூறுகின்றன. அத்தகைய நிகழ்வு பீப்பிள் அலர்ஜி டு மீ (PATM) என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானில் உள்ள டோக்காய் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியரான யோஷிகா செகின் மற்றும் அவரது குழுவினர், 2023ஆம் ஆண்டில் PATM அறிகுறிகளைப் பற்றி புகார் அளித்தவர்களால் வெளியிடப்பட்ட சரும வாயுக்களை ஆராய்ந்தனர். குழு ஆய்வு செய்த 75 சரும வாயுக்களில், குறிப்பாக டோலுயீன் இருக்க அதிக வாய்ப்புள்ளது. PATM உள்ளவர்கள், இந்த நிலை இல்லாதவர்களை விட சராசரியாக 39 மடங்கு அதிகமாக இந்த வேதிப்பொருளை வெளியேற்றினர். "சுவாசத்தின் போது டோலுயீன் காற்றின் வழியாக உள்ளிழுக்கப்படுகிறது. ஒரு தீங்கு விளைவிக்கும் சேர்மமாக, இது பொதுவாக கல்லீரலால் வளர்சிதை மாற்றமடைந்து சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது," என்று செகின் விளக்குகிறார். "இருப்பினும், PATM நோயாளிகளுக்கு டோலுயீனை உடைக்கும் திறன் குறைந்து, ரத்த ஓட்டத்தில் அது குவிந்து, பின்னர் தோல் வழியாக வெளியிடப்படுகிறது," என்று அவர் கூறுகிறார். PATM என்ற கருத்தாக்கமே இன்னும் பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும், அதற்கான நோயறிதல் அளவுகோல்கள் எதுவும் இல்லை என்றும் செக்கின் குறிப்பிடுகிறார். மறுபுறம், வியர்வை ஒவ்வாமை என்பது பொதுவாக மற்றவர்களின் வியர்வையை விட ஒருவரின் சொந்த வியர்வைக்கான உணர்திறனுடன் தொடர்புடையது. முடியைப் பொறுத்தவரை, மனித முடி ஒவ்வாமை இருப்பதாக ஆவணப்படுத்தப்பட்ட சில சந்தர்ப்பங்களில், எதிர்வினைக்கான காரணம் முடியில் உள்ள ஒவ்வாமை அல்ல, மாறாக வெளிப்புறப் பொருளில் உள்ள ஒவ்வாமையாக இருந்தது. எடுத்துக்காட்டாக ஒரு பூனையை வளர்ப்பவரின் முடியில் நுழையும் பூனை புரதம் (Cat protein) அல்லது கெரட்டின் முடி சிகிச்சையில் மூலம் வரும் ஃபார்மால்டிஹைட் வகைகள். உடல் திரவங்களிலிருந்து ஏற்படும் பாதிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முத்தமிடுவதால் உமிழ்நீர் வழியாக ஒவ்வாமை பரவும். உடல் திரவங்களில் உள்ள குறிப்பிட்ட ஒவ்வாமையூக்கிகளால் (Allergen) ஒவ்வாமை எதிர்வினைகள் தூண்டப்படலாம். பிரிட்டனில் ஒரு பெண்ணுக்கு பிரேசில் கொட்டைகள் (Brazil nuts- மனிதர்கள் உண்ணக்கூடிய ஒரு விதை அல்லது பாதாம் போன்ற ஒரு கொட்டை) தொடர்பான ஒவ்வாமை இருந்தது. அந்தப் பெண்ணின் துணைவர், அவர்களது உடலுறவுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு பிரேசில் கொட்டைகளை எடுத்துக்கொண்டார். இருப்பினும் இடைப்பட்ட நேரத்தில், அவர் தனது பற்கள், நகங்கள் மற்றும் கைகளை நன்றாக சுத்தம் செய்திருந்தார். ஆனால், அவருடனான உடலுறவுக்குப் பின், அந்தப் பெண்ணுக்கு தோல் அரிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பொதுவாக முத்தமிடும்போது இத்தகைய ஒவ்வாமை ஏற்பட்டால், அதற்கு பாதாம், வேர்க்கடலை போன்ற கொட்டைகள் காரணமென கூறப்பட்டாலும், பழங்கள், காய்கறிகள், கடல் உணவுகள் மற்றும் பால் ஆகியவற்றை உட்கொண்ட பிறகு, உமிழ்நீர் மூலமாகவும் ஒவ்வாமை எதிர்வினைகள் தூண்டப்படுகிறது. ஆன்டிபயாடிக் ஒவ்வாமை உள்ள பெண்கள், அந்த மருந்துகளை உட்கொண்டவர்களுடன் உடலுறவு மற்றும் (சாத்தியமான) வாய்வழி உறவு கொண்டபிறகு, பாதகமான எதிர்விளைவுகளை அனுபவித்துள்ளனர். ஆனால் இந்த வெளிப்புற ஒவ்வாமைகளுக்கு அப்பால், சில உடல் திரவங்களுக்குள் இருக்கும் புரதங்களும் ஒரு எதிர்வினையைத் தூண்டும். ஒரு உதாரணம் விந்து, சில மருத்துவர்கள் இதுகுறித்து அறிந்திருந்தாலும், இந்த விஷயத்தில் இன்னும் அதிக தகவல்கள் தேவைப்படுகிறது. விந்து ஒவ்வாமையின் அறிகுறிகள் (செமினல் பிளாஸ்மா ஹைபர்சென்சிட்டிவிட்டி என்றும் அழைக்கப்படுகின்றது) என்பது, அதீத தோல் அரிப்பு முதல் ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினையான அனாபிலாக்ஸிஸ் (Anaphylaxis) வரை இருக்கலாம். இது குறிப்பாக 20 மற்றும் 30 வயதுடையவர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஒட்டுமொத்தமாக 100க்கும் குறைவான ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகளே உள்ளன என்று 2024இல் வெளியான ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. செமினல் பிளாஸ்மா- விந்தணுவின் பெரும்பகுதியை உருவாக்கும் திரவம் இது. இதில் ஒவ்வாமை என்பது விந்தணுவை விட, அதனுள் இருக்கும் ஒரு புரதத்தின் காரணமாக ஏற்படுகிறது. 'கர்ப்பமடைய முயற்சிக்கும்போது, இந்த பிரச்னை' பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில், ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்புத் துறையின் 'கிளினிக்கல் மெடிசின்' பேராசிரியரான ஜோனாதன் பெர்ன்ஸ்டீன் இது குறித்து விளக்கினார். செமினல் பிளாஸ்மா ஹைபர்சென்சிட்டிவிட்டி கொண்டவர்களின் உடலில் என்ன நடக்கிறது என்பது சரியாகத் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார். செமினல் பிளாஸ்மா ஹைபர்சென்சிட்டிவிட்டி குறித்த ஆராய்ச்சியை செயல்படுத்த நல்ல விலங்கு மாதிரிகள் இல்லை, அல்லது போதுமான அளவு பாதிக்கப்பட்ட மனிதர்கள் இல்லை என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். விந்து ஒவ்வாமை என்பது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சார்ந்தோ அல்லது பரவலான முறையிலும் ஏற்படலாம். இது பொதுவாக யோனியுடன் அல்லது அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஸ்பெயினில், ஒரு பெண், யோனி வழி உடலுறவுக்குப் பிறகு எந்த ஒவ்வாமையையும் எதிர்கொள்ளவில்லை. குதவழி உடலுறவுக்குப் பிறகு, சுயநினைவை இழந்து, அனாபிலாக்ஸிஸின் பிற அறிகுறிகளையும் எதிர்கொண்டார். அவருக்கு, விந்து திரவத்திற்கு அதிக உணர்திறன் இருப்பது கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் ஒரு பெண்ணின் சருமம் விந்துடன் தொடர்பு கொண்டபோது (பாலியல் சாராத சூழ்நிலையில்) வீக்கம் மற்றும் தோல் அரிப்பு ஏற்பட்டது. உடலுறவுக்குப் பிறகான கடுமையான வலி மற்றும் எரிச்சல் உணர்வு ஆகியவை குறிப்பிட்ட அறிகுறிகளாக இருக்கலாம் என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். அவரது நோயாளிகளில் ஒருவர் அந்த உணர்வை, "யோனியில் ஆயிரம் ஊசிகள் கொண்டு குத்தப்படுவது போல இருந்தது" என்று விவரித்தார். ஒரு பெண், பல துணைவர்களின் விந்து அல்லது ஒருவரின் விந்துவுக்கு உணர்திறன் கொண்டவராக இருக்கலாம் என்று பெர்ன்ஸ்டீன் குறிப்பிடுகிறார். பொதுவாக இதில் நோயறிதல் (Diagnosis) என்பது ஒரு பாலியல் துணையிடமிருந்து சேகரித்த புதிய விந்து திரவ மாதிரியைப் பயன்படுத்தி செய்யப்படும் ஸ்கின் ப்ரிக் (Skin prick) சோதனையை உள்ளடக்கியது. பெர்ன்ஸ்டீனிடம் வழக்கமாக, ஒரு ஆண் துணைவருடன் வாழும் அல்லது ஒருதார மணம் செய்து கொண்ட பெண்களே சிகிச்சைக்கு வருகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் கர்ப்பமடைய முயற்சிக்கும்போது, இந்த பிரச்னையை எதிர்கொள்கிறார்கள். விந்து ஒவ்வாமை குறித்த சிகிச்சைக்கு அதிக நிபுணர்கள் இல்லாததால், சிலர் பெர்ன்ஸ்டீனுடன் கலந்தாலோசிக்க நீண்ட தூரம் பயணம் செய்து வருகிறார்கள். "மருத்துவ நிபுணர்களுக்கு அவ்வாறு வருபவர்களை எப்படி கையாள்வது என தெரியாததால், பல நோயாளிகள் ஒதுக்கப்படுகிறார்கள் அல்லது தீவிரமான ஸ்டீராய்டு சிகிச்சைகளைத் தொடங்குகிறார்கள்" என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். ஆனால் பெர்ன்ஸ்டீனின் கூற்றுப்படி, விந்து ஒவ்வாமை உள்ள எவரும் அவரது நுட்பத்திலிருந்து பயனடையலாம். ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே விந்து ஒவ்வாமை பற்றிய தரவு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. பெர்ன்ஸ்டீன் அது போன்ற ஒரு பாதிப்பை ஒருபோதும் பார்த்ததில்லை என்று கூறுகிறார், ஆனால் அது ஆண்களில் பாதிப்பு ஏற்படுத்துவதில்லையா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த ஒவ்வாமையின் அறிகுறிகள் யோனிக்குள் உள்ள குறிப்பிட்ட நிலைமைகளுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடுமா என்று அவர் யோசித்தார். இருப்பினும் இது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான குதவழி உடலுறவுக்குப் பிறகு ஏற்பட்ட ஒவ்வாமை குறித்த பதிலை அளிக்கவில்லை. சிகிச்சைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பெர்ன்ஸ்டீன் பரிசோதித்த முந்தைய சிகிச்சையில், ஒரு நோயாளியின் உணர்திறனைக் குறைக்க, அவரது தோலுக்குள் ஒரு துணையின் விந்துவை ஊசி மூலம் செலுத்துவது அடங்கும். இது போஸ்ட் ஆர்கஸமிக் இல்னஸ் சிண்ட்ரோமுக்கான (Post orgasmic illness syndrome) சிகிச்சையைப் போன்றது. (போஸ்ட் ஆர்கஸமிக் இல்னஸ் சிண்ட்ரோம்- இதில், ஆண்கள் தங்கள் சொந்த விந்தணுக்களுக்கே அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இதுவொரு அரிய மற்றும் ஒருவரை பலவீனப்படுத்தும் நிலையாகும்.) ஆனால் இந்த சோதனை முறை விலை உயர்ந்தது. "மாதிரிகளைத் தயாரிப்பதில் நிறைய ஆய்வகப் பணிகள் இருந்ததால், நோயாளிகள் அதற்கு அதிக பணம் செலுத்த வேண்டியிருந்தது" என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். பெர்ன்ஸ்டீனும் அவரது குழுவினரும் இரண்டு மணி நேர அமர்வில் இந்த நிலைக்கு சிகிச்சையளிக்க ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியைக் கண்டுபிடித்தனர். முதலில், அவர்கள் விந்தணுவிலிருந்து விந்து திரவத்தைப் பிரித்தனர். பின்னர், நோயாளி எவ்வளவு உணர்திறன் உடையவர் என்பதைப் பொறுத்து, திரவத்தை மிகவும் பலவீனமான நிலைக்கு - மில்லியனில் ஒரு பங்கு அல்லது பத்து மில்லியனில் ஒரு பங்கு என நீர்த்துப்போகச் செய்தனர். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும், அவர்கள் நீர்த்த திரவத்தை நோயாளியின் யோனியில் செலுத்தினர், ஒவ்வொரு முறையும் செறிவுகளை படிப்படியாக அதிகரித்தனர். இது நோயாளி சகிப்புத்தன்மையை வளர்க்க உதவியது. செயல்முறை முழுவதும், நோயாளி நெருக்கமாக கண்காணிக்கப்பட்டார். இதன் விளைவாக, "அதன் பிறகு, பெரும்பாலான நோயாளிகளுக்கு பெரிய ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படவில்லை. பின்னர் அந்த ஒரு துணையுடன் (விந்தணு மாதிரி அளித்த நபர்) அவர்களால் எந்த பிரச்னையும் இல்லாமல் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ள முடிந்தது." என பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிற மனிதர்கள் தொடர்பான ஒவ்வாமை என்பது துன்பகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உடலுறவுக்கு பிறகு ஆணின் பிறப்புறுப்பு சிவந்தது செமினல் பிளாஸ்மா மற்றும் விந்து தொடர்பான அதிக உணர்திறன் என்பது பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது அல்லது வேறு பிரச்னையாக கருதப்படுகிறது. உடலுறவின் போது பரவும் வேறு சில திரவங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் குறைவாகவே உள்ளன. கருப்பை வாய் மற்றும் யோனியின் செல்களால் சுரக்கப்படும் ஒரு திரவமான செர்விகோவஜினல் (Cervicovaginal) திரவத்திற்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, கிட்டத்தட்ட எந்த ஆராய்ச்சியும் இல்லை. இந்தத் திரவம் யோனி பகுதியின் வறண்ட தன்மையைக் குறைக்கவும், சில நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பை வழங்கவும் உதவுகிறது. ஆனால் போலந்தில் உள்ள தோல் மருத்துவ நிபுணரான மாரெக் ஜான்கோவ்ஸ்கி, செர்விகோவஜினல் திரவ ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியைக் தான் கண்டதாக கூறுகிறார். அந்த நோயாளி, ஒரு ஆண் பல மருத்துவர்களைச் சந்தித்த பிறகு அவரிடம் வந்தார். ஒரு பெண்ணுடன் யோனி உடலுறவு கொண்டு, சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த ஆணின் பிறப்புறுப்பு பகுதி சிவந்து, தோல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. வாய்வழி உடலுறவு கொண்ட பிறகு அவரது முகத்திலும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு ஒவ்வாமையாக இருக்கலாம் என்று அந்த நோயாளி நினைத்தார், ஆனால் மற்ற மருத்துவர்கள் அவர் கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ஜான்கோவ்ஸ்கி கூறுகிறார். இருப்பினும், ஜான்கோவ்ஸ்கி நேர்மறையான சிந்தனையுடன் இருந்தார். பாலியல் செயல்பாடுகளின் போது பெண்களால் சுரக்கப்படும் செர்விகோவஜினல் திரவத்திற்கு ஏற்படும் ஒவ்வாமைக்கான பிற சாத்தியமான நிகழ்வுகளையும் தேடினார். ஆண்டிஹிஸ்டமைன்களை எடுத்துக் கொண்ட பிறகு தன்னிடம் வந்த நோயாளி குணமடைந்ததாக அவர் கூறுகிறார். இந்த பாதிப்பு ஜான்கோவ்ஸ்கி மற்றும் அவரது குழுவினரை 2017இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வை மேற்கொள்ள வழிவகுத்தது. அவர்கள் தோல் மருத்துவர்கள் மற்றும் இந்த நிலை இருக்கக்கூடிய நபர்களை ஆய்வு செய்தனர். ஐந்து தோல் மருத்துவர்களில் ஒருவர் இதே போன்ற நிகழ்வுகளை நோயாளிகளிடம் கண்டதாகக் கூறினர். இருப்பினும் பல மருத்துவர்களால் இந்த ஒவ்வாமை உண்மையானதா என்பதை உறுதியாக கூறமுடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது துணைவர்களுக்கும், உணர்ச்சி ரீதியான தாக்கங்கள் சிக்கலானதாக இருக்கலாம். ஜான்கோவ்ஸ்கி மற்றும் அவரது குழுவினரின் ஆய்வில், செர்விகோவஜினல் திரவ ஒவ்வாமை உள்ளவர்கள், தொடர்புக்குப் பிறகு தோல் சிவந்து போவது, அரிப்பு, எரிச்சல், வீக்கம் ஆகியவை ஏற்பட்டதாகக் கூறினர். இந்த பதில்களின் அடிப்படையில், ஜான்கோவ்ஸ்கியும் அவரது குழுவினரும் இந்த ஒவ்வாமை அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்களை பாதிக்கும் விந்து ஒவ்வாமையைப் போலவே பொதுவானதாக இருக்கலாம் என்று மதிப்பிட்டனர். இருப்பினும், இதுவரை கிடைத்த சான்றுகள் அவதானிப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்றும், அதை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை என்றும் ஜான்கோவ்ஸ்கி கூறுகிறார். விந்து மற்றும் செர்விகோவஜினல் திரவ ஒவ்வாமைகளுக்கு இடையிலான ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஆணுறைகள் பிந்தையவற்றுக்கு பெரிதும் உதவாது. காரணம், ஆணுறைகள் ஆணுறுப்பு மற்றும் விதைப்பையை முழுமையாக மூடாது என்பதால். இருப்பினும், ஜான்கோவ்ஸ்கி மற்றும் அவரது குழுவினரின் ஆய்வு முடிவுகளில், ஆண்டிஹிஸ்டமின்கள் மற்றும் மீண்டும் அந்தத் திரவத்திற்கு பழக்கப்படுவது, செர்விகோவஜினல் திரவ ஒவ்வாமை உள்ளவர்களுக்கு உதவியது என்று கண்டறியப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர், இளம் வயதினர்- அதாவது தங்கள் காதல் உறவுகளின் தொடக்க கட்டத்தில் இருப்பவர்கள் என்றும், துணையுடனான நெருக்கத்திற்கான அவர்களின் வலுவான ஆசை அவர்களுக்கு இந்த ஒவ்வாமையின் அசௌகரியத்தைத் தாங்க உதவியது என்றும் அவர் குறிப்பிட்டார். காலப்போக்கில், திரவத்துடன் மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்வது அவர்களின் அறிகுறிகளைக் குறைப்பதாகத் தோன்றியது. எனவே இது விந்து ஒவ்வாமையிலிருந்து வேறுபட்டது, பொதுவாக விந்து ஒவ்வாமை, தானாகவே போய்விடாது. தங்கள் துணையிடம் ஏதாவது ஒரு விஷயத்தால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, அதன் தாக்கம் தீவிரமாக இருக்கலாம். விந்து மற்றும் அது தொடர்புடைய ஒவ்வாமையைத் தவிர்ப்பதற்கு விலையுயர்ந்த மாற்று வழிகள் தேவைப்பட்டிருக்கலாம் என்பதால், தானும் தன்னுடைய துணையும், குழந்தைகள் பெற வேண்டாம் என்ற முடிவை எடுப்பதில், தனது விந்து ஒவ்வாமை பிரச்னை ஒரு பங்கு வகித்ததாக மௌரா நம்புகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது துணைவர்களுக்கும், உணர்ச்சி ரீதியான தாக்கங்கள் சிக்கலானதாக இருக்கலாம். "எனது துணைவரின் விந்துவுக்கு எனக்கு ஒவ்வாமை இருப்பதாகக் கூறியதால், மனம் புண்பட்டதாக துணைவர் என்னிடம் கூறினார்," என்று மௌரா கூறுகிறார். ஆனால், அவரது காதல் உறவு பாதுகாப்பானதாக உள்ளது. அவரது துணைவர் ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் பிரச்னை இல்லை. "இந்த ஒவ்வாமைக்கு அவர் என்னை அல்ல, விதியையே குறை கூறுகிறார்." என்கிறார் மௌரா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyl6p49330o
  23. 20 JUN, 2025 | 09:57 AM நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நிலவிவரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக விரைவில் பிறிதொரு இடத்தில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபை அலுவலகத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மிக நீண்ட காலமாக செய்யப்பட்டுவந்த திண்மக் கழிவகற்றல் பொறிமுறைக்கு பொருத்தமான இடம் இல்லாத காரணத்தால் தற்போது சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. தற்சமயம் அதற்கான தீர்வாக மாற்றிடமொன்றுக்கு சுற்றுச்சூழல் அதிகார சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளரின் முயற்சியால் இதற்கான அனுமதி தற்போது கிடைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அதற்கான அமைவிடத்தில் தற்போது வேலைகள் உள்ளதன் காரணமாக அது இன்னும் முடிவடையவில்லை. திண்மக்கழிவகற்றல் தரம் பிரிக்கும் பகுதி தற்சமயம் இல்லாத காரணத்தால் மிகப்பெரிய சிரமத்துக்குள்ளாகியுள்ளோம். இந்த விடயத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை. திண்மக் கழிவுகளை தரம் பிரித்து தரும் பட்சத்தில் அதனை அகற்றுவதற்கான வசதிகள் இலகுவாக இருக்கும். உங்கள் ஒவ்வொருவரின் கையிலுமே எமது பிரதேசத்தின் தூய்மையும் இருக்கிறது. பிரதேச சபைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். ஒரிரு வாரங்களாக பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளோம். சில வாரங்களில் முழுமையான வினைத்திறனாக திண்மக் கழிவகற்றலை கொண்டு செல்வோம் என்பதை உறுதியுடன் கூறுகிறோம். காரைக்கால் பகுதி தற்போது திண்மக் கழிவகற்றலை தரம் பிரிக்கும் வேலையை செய்ய முடியாத பிரதேசமாக மாறியுள்ளது. அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றபடியால் தொடர்ச்சியாக அதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான மாற்றிடமாக நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட காரைமுனங்கு இந்து மயானத்துக்கு அருகில் திண்மக் கழிவகற்றல் இடமொன்றை அமைத்து எங்களுக்கு வர வேண்டிய நிதிப் பங்களிப்புடன் முழுமையான வேலை திட்டங்கள் நடக்கிறது. அந்த இடத்தில் அதனை திறம்பட செய்வோம் என எதிர்பார்க்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/217964
  24. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 09:37 AM வரலாற்றிலேயே மிகப்பெரிய கடவுச்சொல் கசிவு இடம்பெற்றுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகளாவிய பிரபல இணைய சேவைகளான ஆப்பிள், பேஸ்புக், கூகிள், GitHub, டெலிகிராம் உள்ளிட்டவற்றில் இருந்து 16 பில்லியன் தனித்துவமான username மற்றும் கடவுச்சொற்கள் (passwords) இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டு மே மாதம் வெளியான 184 மில்லியன் சான்று மீறலைவிட இது எண்ணிக்கையில் பெரிதாக இருப்பதால், இதனை துகாப்பு ஆய்வாளர்கள் "மாபெரும் அச்சுறுத்தல் " என வர்ணிக்கின்றனர். https://www.virakesari.lk/article/217960
  25. பல அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்த விசாரணை Published By: VISHNU 20 JUN, 2025 | 03:12 AM செல்வாக்கு மிக்க அமைச்சர்கள் பல அரசியல்வாதிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் தொரர்பாக பொலிஸார் நிதி மோசடி புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். குறித்த சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் என கூறப்படும் மில்லியன் கணக்கான ரூபாய் சொத்துக்களைக் கைப்பற்ற இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் இயங்கும் IAID தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புத் தலைவர் உட்பட 20க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்து காவல்துறை நிதி மோசடி புலனாய்வுப் பிரிவு இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது. அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் கூறப்படும் மில்லியன் கணக்கான ரூபாய் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, மேலும் சரிபார்க்க முடியாத சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்தும். சொத்துக்கள் விசாரிக்கப்படும் அரசியல்வாதிகளில் இலங்கை பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முந்தைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் குழு மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் அடங்கும். இந்தக் குழுவில் முன்னாள் மாகாண முதலமைச்சர்கள் பலரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் சொத்துக்கள் தொடர்பாகவும் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. விசாரணையின்போது, யாரேனும் முறைகேடான ஆதாயங்கள் மூலம் சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/217956

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.