Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. '400 நொடிகளில் டெல் அவிவ்' - இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதா இரான்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப்படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜூன் 18 புதன்கிழமை அன்று இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய இரான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் ஹைப்பர்சோனிக் ஃபடா ஏவுகணைகளை பயன்படுத்தியதாகக் கூறியுள்ளது. இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி.) இந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவை நோக்கி ஏவியதாக குறிப்பிட்டுள்ளது. இரானின் அரசு ஊடக முகமையான மெஹர் மற்றும் அரசு தொலைக்காட்சியான பிரஸ் டிவி, ஃபடா 1 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி. கூறியதாக தங்களின் செய்திகளில் குறிப்பிட்டுள்ளது. பிரஸ் டிவியின் செய்தியில், "தாக்குதலின் சமீபத்திய கட்டமானது முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது என்று ஐ.ஆர்.ஜி.சி. கூறியுள்ளது. தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ள முதல் தலைமுறை ஃபடா ஏவுகணைகள், இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்புகளின் முடிவுக்கு தொடக்கமாக அமைந்துள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை முதல் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல், இரானில் தாக்குதல்கள் நடத்துகிறது. மற்றொருபுறம், இரான் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா துறைமுகம் போன்ற இஸ்ரேலின் முக்கியமான பகுதிகளில் மீது ஏவுகணைகளை ஏவி வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலில் இரானின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை இதற்கும் முன்னதாக ஃபடா-1 ரக ஏவுகணைகளை இரான் பயன்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது ஒரு டஜன் ஃபடா-1 ரக ஏவுகணைகளை ஏவியது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் மோதலின் போது, இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. 2023-ஆம் ஆண்டு இந்த ஃபடா ஏவுகணைகள் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இந்த ரக ஏவுகணைகளுக்கு இரானின் அதி உயர் தலைவர் அலி காமனெயியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஐ.ஆர்.ஜி.சி. அமைப்பினர் இந்த ஏவுகணைகளை 'இஸ்ரேல் ஸ்ட்ரைக்கர்' என்று அழைக்கின்றனர். இந்த ஏவுகணைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட போது பெரிய அளவிலான பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டன. ஹீப்ரூ மொழியில் அச்சிடப்பட்ட அந்த பேனர்களில், "400 நொடிகளில் டெல் - அவிவ்," என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஐ.ஆர்.ஜி.சி. படையினர் இந்த ஏவுகணைகளை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்று அழைக்கின்றனர். ஆனால் பாதுகாப்புத்துறை நிபுணர்கள், உண்மையாகவே இந்த ஏவுகணைகளுக்கு ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப செயல்திறன் இருக்கிறதா என்று சந்தேகிக்கின்றனர். பட மூலாதாரம்,NEWS ONLINE படக்குறிப்பு, ஹீப்ரு மொழியில் அச்சிடப்பட்ட பேனர்கள் ஃபடா ஏவுகணைகளின் சிறப்பம்சங்கள் ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 5 முதல் 25 மடங்கு அதிக வேகத்தில் செல்லக் கூடியவை ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இரான் ஃபடா ஏவுகணைகளை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்று பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் பிரிவுகளில் இணைத்தது. அல்-ஃபடா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் 1,400 கி.மீ. வரை சென்று தாக்குதல் நடத்தும் தன்மை கொண்டவை என்று கூறப்படுகிறது. ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பில் சிக்காமல், அவற்றையே அழிக்கும் தன்மை கொண்டது என்று ஐ.ஆர்.ஜி.சி. கூறுகிறது. அல்-ஃபடா ஏவுகணைகள் இலக்குகளை தாக்கி அழிப்பதற்கு முன்பு 13 முதல் 15 'மெக்' வேகத்தில் செல்லும். மெக் 15 என்பது ஒரு நொடிக்கு 5 கி.மீ என்ற வேகத்தில் செல்வதை குறிப்பதாகும். "இந்த ஏவுகணைகள் மிகவும் வேகமாக செல்லக் கூடியது. வளிமண்டலத்திற்கு உள்ளும் வெளியும் பயணிக்கக் கூடியது. வேறெந்த ஏவுகணைகளாலும் ஃபடாவை அழிக்க இயலாது," என்று இந்த ஏவுகணைகளின் அறிமுக நிகழ்வன்று, புரட்சிகர காவல்படையின் விண்வெளி அமைப்புத் தளபதி அமீர் அலி ஹஜிஸேதா தெரிவித்தார். இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட், இந்த ஏவுகணைகள் குறித்து, "நம்முடைய எதிரிகள் அவர்கள் உருவாக்கிய ஆயுதங்கள் குறித்து பெருமை பேசி வருகின்றனர். நீர், நிலம் மற்றும் ஆகாயம் என எந்த இடத்திலும் எத்தகைய தொழில்நுட்பத்துக்கும் (மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டாலும்) சரியான பதில் நம்மிடம் உள்ளது," என்று தெரிவித்தார். அல்-ஃபடா 1 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அறிமுகம் செய்யப்பட்ட நான்கு மாதங்கள் கழித்து புரட்சிகர காவல்படையினர் அல்-ஃபடா 2 என்ற புதிய தலைமுறை க்ரூஸ் ஏவுகணைகளை அறிமுகம் செய்தனர். அது 1500 கி.மீ வரை பயணித்து இலக்குகளை தாக்கி அழிக்கும். இரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், அல்-ஃபடா 2 குறைவான உயரத்தில் பறக்கும் தன்மை கொண்டது. மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தன்னுடைய பாதையை மாற்றி அமைத்துக் கொள்ளும் செயல்திறனும் அதனிடம் உள்ளது. ஐ.ஆர்.ஜி.சி.யின் கீழ் செயல்படும் அஷூரா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகதிற்கு இரானின் அதி உயர் தலைவர் அலி காமனெயி வருகை தந்த போது அல்-ஃபடா க்ரூஸ் ஏவுகணைகள் அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது அது பயணிக்கும் தூரத்தின் திறன் குறித்து எந்த தகவலும் வெளியிப்படவில்லை. இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இரான் ஃபடா ஏவுகணைகளை அறிமுகம் செய்திருந்தாலும், இந்த ஆண்டு ஏப்ரல் 13 தாக்குதலின் போதும், கடந்த ஆண்டு அக்டோபர் 1 தாக்குதலின் போதும் அல்-ஃபடா 2 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படவில்லை. பட மூலாதாரம்,I.M.A. இரானின் கைவசம் உள்ள ஏவுகணை வகைகள் கடந்த அக்டோபர் 7 அன்று இரானின் ஏவுகணைகள் திட்டம் குறித்து ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது பிபிசி. அதன்படி, ராக்கெட் க்ரூஸ் ஏவுகணைகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இந்த நான்கு வகை ஏவுகணைகளே இரானால் உருவாக்கப்பட்டவை. இவற்றில் நிலத்தில் இருந்து நிலத்தில் மற்றும் நிலத்தில் இருந்து கடலில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளும் உள்ளன. இதுமட்டுமின்றி இரானின் ஆயுதக்கிடங்கில், பாதுகாப்பு அமைப்பில் செயல்படுத்தப்படும் ஏவுகணைகளும் உள்ளன. சில ரஷ்யா மற்றும் சீனாவால் உருவாக்கப்பட்டவை. சில இரானின் பாதுகாப்புப் படையினரால் உருவாக்கப்பட்டவை. அது இங்கே பட்டியலிடப்படவில்லை. ஏப்ரல் 2024 தாக்குதலின் போது 'இமாத் 3' பாலிஸ்டிக் ஏவுகணைகள், 'பாவேஹ்' க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 'ஷாஹித் 136' வகை டிரோன்களையும் இரான் பயன்படுத்தியது. ஆனால் 'கைபர் ஷிகான்' என்ற பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இரான் பயன்படுத்தியதாக அரசு செய்தி முகமை தெரிவித்தது. 'இமாத்' பாலிஸ்டிக் ஏவுகணை ஒரு மிட்-ரேஞ்ச் (medium-range) ஆயுதமாகும். ஆனால் 1700 கி.மீ வரை பயணித்து இலக்குகளை அழிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் நீளம் 15 மீட்டர்கள். அதன் வெடிபொருள் நிரப்பப்பட்டிருக்கும் பகுதியான வெடிப்பு முனையின் (warhead) எடையானது 750 கிலோ கிராம். இது 2015-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இமாத் ஏவுகணைகள், அல் கதார் (Al Qadr) பாலிஸ்டிக் ஏவுகணைகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். 'பாவேஹ்' என்பது மீடியம்-ரேஞ்ச் க்ரூஸ் ஏவுகணைகள். இது 1650 கி.மீக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கக் கூடிய செயல்திறன் கொண்டவை. இலக்கை அடைவதற்கு பல்வேறு பாதைகளை தேர்வு செய்யக் கூடிய ஏவுகணைகளின் முதல் தலைமுறை ஏவுகணைகள் என்று 'பாவேஹ்' அழைக்கப்பட்டது. 'பாவேஹ்' ரக ஏவுகணைகள் குழுவாக சென்று தாக்கக் கூடிய திறன் கொண்டவை. ஒன்றுக்கொன்று தொடர்பில் இருந்து இணைந்து செயல்படும் தன்மை கொண்டவை. இதனால் கூட இந்த ஏவுகணைகள் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். 'பாவேஹ்' 2023 பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இஸ்ரேல் வரை சென்று தாக்குதலை நடத்தக் கூடும் என்று இரான் தெரிவித்தது. அது ஏப்ரல் 13 தாக்குதலின் போது நிரூபிக்கப்பட்டது. இரானின் சமீபத்திய ஏவுகணைகள் அதிகபட்சமாக 2000 - 2500 கி.மீக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறனுடையவை. ஆனால் ஐரோப்பிய நாடுகளை தாக்கி அழிக்கும் அளவுக்கான திறன் கொண்ட ஏவுகணைகள் அதனிடம் இல்லை. இரானின் அதி உயர் தலைவர் அலி காமனெயி, தற்போதைக்கு 2 ஆயிரம் கி.மீ வரை இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை மட்டும் உருவாக்கினால் போதும் என்ற கட்டளையைப் பிறப்பித்ததாக இரானின் ராணுவப்படையினர் தெரிவிக்கின்றனர். அதனால்தான் நீண்ட தூரத்தை இலக்காகக் கொண்டு தாக்குதலை நடத்தும் லாங்க்-ரேஞ்ச் ஏவுகணைகளை உருவாக்கும் பணிகள் கைவிடப்பட்டன. காமனெயி, இந்த உத்தரவுக்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்று கூறினார். ஆனால் அது என்ன காரணம் என்று தெரிவிக்கவில்லை. இந்த ஏவுகணைகள் மட்டுமின்றி, 'ஜுல்ஃபிகர்' என்ற குறைந்த தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஷார்ட் - ரேஞ்ச் (700) பாலிஸ்டிக் ஏவுகணைகள் இரானிடம் உள்ளன. 2017 மற்றும் 2018 காலகட்டங்களில் ஐ.எஸ்.ஐ.எஸின் டாயிஷ் இலக்குகளை தாக்கி அழிக்க பயன்படுத்தப்பட்டன இவை. இதன் மொத்த நீளம் 10 மீட்டர். 'மொபைல் லாஞ்ச்' தளம் உள்ளது. ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிச் செல்லும் செயல்திறன் கொண்டதாக கூறப்படுகிறது. 'ஃபடா 110' ஏவுகணைகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமே 'ஜுல்ஃபிகர்'. இதன் வெடிப்புமுனையின் எடை 450 கிலோ. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yg3j596q4o
  2. அண்ணை, அந்த கட்டெறும்பு இல்லாட்டி அடுத்த கட்டெறும்பை பிடியுங்கோ! கந்தப்பு அண்ணாவே நடத்தட்டும்.
  3. 18 JUN, 2025 | 11:53 AM சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார திணைக்களத்தின் தலைமையகத்தில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோ உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடினர். மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவை எவராலும் சிதைக்க முடியாதென்றும் அந்த நட்புறவை சிதைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் இதன்போது வலியுறுத்திக் கூறினார். நாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு எந்தவொரு வேளையிலும் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாகவும் எந்தவொரு நாட்டின் தன்னாதிக்கத்துக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் சீனா செயற்படாது என்றும் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோ இதன்போது தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு வேளையின்போது, டில்வின் சில்வா குறிப்பிடுகையில், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலும் நிலவுகின்ற நட்புறவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்கவின் விஜயத்தின்போது மேலும் ஒருபடி உறுதிபெற்றுள்ளதாகவும், அதைப்போலவே, நான் உட்பட எமது தோழர்கள் மேற்கொண்ட இந்தச் சுற்றுப்பயணத்தில் தமது நட்புறவு இன்னொருபடி உறுதியானதாகவும் தெரிவித்தார். அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் தாம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சீனா இலங்கைக்கு வழங்குகின்ற ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்காலத்திலும் அந்த ஒத்துழைப்பினை தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். சீனாவில் மேற்கொண்ட இந்த சுற்றுப்பயணத்தில் சீனாவை கட்டியெழுப்புவதற்கு முன்னாள் தலைவர் மாவோ சே துங் தொடக்கம் நிகழ்கால தலைவர் ஷீ ஜின் பிங் வரை சீனாவில் செயற்பட்டு வரும் விதம் பற்றி தாம் மகிழ்ச்சியடைவதாகவும் சீனா தமக்கே உரித்தான பாணியில் மார்க்சிஸத்தை முன்னோக்கி கொண்டுசெல்வது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டார். மேலும், பாடசாலைகள் மற்றும் ஊர்களை கட்டியெழுப்புவதற்காக கட்சியானது செயற்பட்டுள்ள விதம் பற்றியும் கல்வியில் பெற்றுக்கொண்ட அனுபவம் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு சிறப்பாக பங்களிப்புச் செய்யும் என்பதையும் டில்வின் சில்வா குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பில் சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சன் ஹையான் உட்பட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஜெகதீஸ்வரன், மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மபிரிய விஜேசிங்க முதலானோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/217796
  4. @வீரப் பையன்26 , @தமிழ் சிறி அண்ணை, @ஈழப்பிரியன் அண்ணை @suvy அண்ணை மற்றும் முன்னாள் ஐபிஎல் சாம்பியன் @நந்தன் அண்ணை இந்நாள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன் @கிருபன் அண்ணை ஆகியோரையும் களமிறங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
  5. பட மூலாதாரம்,JULIUS CSOTONYI கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 18 ஜூன் 2025, 03:12 GMT மங்கோலிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில், ஒரு புதிய வகை டைனோசர்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை டைரனோசர்களின் (Tyrannosaurs) பரிணாம வரலாற்றை 'மாற்றி எழுதக்கூடியவை' என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆராய்ச்சியாளர்கள், 86 மில்லியன் ஆண்டுகள் பழமையான இரண்டு எலும்புக்கூடுகளை பகுப்பாய்வு செய்தனர். அவை, டைரனோசர்களின் நெருங்கிய மூதாதையராகக் கருதப்படும் ஒரு உயிரினத்திலிருந்து வந்தவை என்ற தீர்மானத்துக்கு அவர்கள் வந்தனர். இது டி ரெக்ஸ் (T rex) எனும் பிரபல விலங்கையும் உள்ளடக்கிய ஒரு குழுவாகும். ஆராய்ச்சியாளர்கள் இந்த இனத்துக்கு கான்கூலூ மங்கோலியென்சிஸ் என்று பெயரிட்டனர், அதாவது மங்கோலியாவின் டிராகன் இளவரசன். நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, டைனோசர்களின் அழிவு காலம் வரை, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவை அச்சுறுத்திய சக்தி வாய்ந்த வேட்டை விலங்குகளாக டைரனோசர்கள் எவ்வாறு பரிணமித்தன என்பது பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது. பட மூலாதாரம்,DARLA ZELENITSKY படக்குறிப்பு, புகைப்படத்தில் உள்ளது போன்ற டி-ரெக்ஸின் அழகான, முழுமையான படிமங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால், இதன் மூதாதையர்கள் மர்மம் நிறைந்தவர்களாகவே உள்ளனர். "'பிரின்ஸ்' என்பது இது ஒரு ஆரம்பகால, சிறிய டைரனோசராய்டு என்பதைக் குறிக்கிறது," என்று கனடாவின் கால்கரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் டார்லா ஜெலெனிட்ஸ்கி விளக்கினார். டைரனோசராய்டுகள் என்பது இரண்டு கால்களில் நடந்த மாமிச உண்ணி டைனோசர்களின் 'சூப்பர் ஃபேமிலி' வகையாகும். முதலில் தோன்றிய டைரனோசராய்டுகள் சிறியவையாக இருந்தன. பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கியுடன் இந்த ஆராய்ச்சியை வழிநடத்திய பிஹெச்டி மாணவர் ஜாரெட் வோரிஸ் பின்வருமாறு விளக்கினார். "இவை சிறிய, ஆனால் வேகமாக வேட்டையாடும் விலங்குகள். உணவுச் சங்கிலியின் முதன்மை வேட்டை விலங்குகளாக இருந்த பெரும் டைனோசர்களின் நிழலில் இவை வாழ்ந்தன." பட மூலாதாரம்,MASATO HATTORI படக்குறிப்பு, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டைரனோசரஸ் மூதாதையரான கான்கூலூ மங்கோலியென்சிஸை ஒரு கலைஞர் வரைந்துள்ளார். ஜுராசிக் காலத்தில் சுற்றித் திரிந்த சிறிய வேட்டை விலங்குகள் என்பதிலிருந்து, டி ரெக்ஸ் உள்ளிட்ட வலிமைமிக்க ராட்சத விலங்குகள் என மாறியது வரை 'கான்கூலூ' - ஒரு பரிணாம மாற்றத்தைக் குறிக்கிறது. "இது சுமார் 750 கிலோ எடையுள்ளதாக இருந்திருக்கும், அதே நேரத்தில் ஒரு பெரிய டி ரெக்ஸ் அதை விட எட்டு மடங்கு எடையுள்ளதாக இருந்திருக்கலாம். எனவே, இது முந்தைய மூதாதையர்களுக்கும் வலிமைமிக்க டைரனோசர்களுக்கும் இடையிலான ஒரு இடைநிலை புதைபடிவம்" என்று பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கி கூறுகிறார். "இது டைரனோசர்களின் பேரின வரிசையைத் (Family Tree) திருத்தவும் டைரனோசர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நமக்கு இதுவரை தெரிந்ததை மாற்றி எழுதவும் உதவியது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,RILEY BRANDT/UNIVERSITY OF CALGARY படக்குறிப்பு, முனைவர் பட்ட மாணவர்களான ஜாரெட் வொரிஸ் மற்றும் டார்லா ஜெலெனிட்ஸ்கி டைரனோசர்களின் படிமத்தை ஆய்வு செய்கின்றனர். இந்தப் புதிய இனம், டைரனோசர்களின் கொடுங்கோன்மைக்கு முக்கியமான பண்புகளாக இருந்தவற்றின் ஆரம்பகால பரிணாமக் கட்டங்களையும் எடுத்துரைக்கிறது. உதாரணத்துக்கு, வலுவான தாடையைக் கொண்ட மண்டை ஓடு கட்டமைப்பு. "அதன் மூக்கு எலும்பில் சில விஷயங்களை கவனிக்க முடிகிறது. அவை பிற்காலத்தில் டைரனோசர்களுக்கு அவற்றின் இரையைக் கடிக்கக் கூடிய அதீத சக்தியைக் கொடுத்தன" என்று ஜாரெட் வோரிஸ் கூறுகிறார். இத்தகைய சக்தி வாய்ந்த தாடைகளின் பரிணாம வளர்ச்சி தான், பெரிய இரைகளின் மீது பாய்ந்து, அதன் எலும்பைக் கூட கடிக்கும் சக்தியை டி ரெக்ஸ் விலங்குகளுக்கு அளித்தது. இந்த ஆராய்ச்சியில், குழு ஆய்வு செய்த இரண்டு (பகுதியளவிலான) எலும்புக்கூடுகள் முதன்முதலில் 1970களின் முற்பகுதியில் மங்கோலியாவில் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஆரம்பத்தில் 'அலெக்ட்ரோசொரஸ்' என்று அழைக்கப்படும் ஒரு இனத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்பட்டன. ஆனால், வோரிஸ் அவற்றை ஆய்வு செய்தபோது, அதன் தனித்துவமான டைரனோசொரஸ் தொடர்பான அம்சங்களை அவர் அடையாளம் கண்டார். "அவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது எனக்கு நினைவிருக்கிறது. 'அதில் இதுவொரு புதிய இனம் என நினைக்கிறேன்' என வோரிஸ் கூறியிருந்தார்" என்று பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கி நினைவு கூர்ந்தார். அந்த காலத்தில் சைபீரியா மற்றும் அலாஸ்காவை இணைத்திருந்த தரைப்பகுதி வழியாக வட அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையே இந்த டைனோசர்களால் இடம்பெயர முடிந்தது. அது புதிய வாழ்விடங்களைக் கண்டுபிடித்து, ஆக்கிரமிப்பதில் அவற்றுக்கு உதவியது. "கண்டங்களுக்கு இடையேயான இத்தகைய பயணங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளில் பல்வேறு டைரனோசர் குழுக்களின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது." என வோரிஸ் விளக்கினார். "கொடும் ஆட்சி புரிந்த அரசர்களாக மாறுவதற்கு முன்பு, 'டைரனோசர்கள்' இளவரசர்களாக இருந்தனர் என்பதை இந்தக் கண்டுபிடிப்பு நமக்குக் காட்டுகிறது" என்று பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கி கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly8wzwqxl4o
  6. Kerala, Andhra-ல் கள் விற்கும்போது தமிழ்நாட்டில் அனுமதி வழங்க அரசு மறுப்பது ஏன்? Tamilnadu Toddy Ban: தமிழ்நாட்டில் ஒரு பக்கம் மதுவிலக்குக் கோரிக்கையை சிலர் முன்வைத்துவரும் நிலையில், கள் இறக்க அனுமதிக்க கோரும் போராட்டங்களும் அவ்வப்போது நடந்துவருகின்றன. கள் இறக்கி விற்பனை செய்வது விவசாயிகளுக்கு உதவும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? கேரளா, ஆந்திராவைப் போல தமிழ்நாட்டிலும் கள்ளுக்கடைகளை திறப்பதில் என்ன பிரச்னை? அரசு கூறும் சிக்கல் என்ன? #Tamilnadu #Toddy #Liquor இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  7. 18 JUN, 2025 | 09:49 AM யாழில் கடுமையான காற்று காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது. வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/217775
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அன்பு வாகினி பதவி, உணவுத் தொழில்நுட்ப வல்லுநர் 18 ஜூன் 2025, 08:31 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் உலகளவில், குறிப்பாக இந்தியாவில், உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 Diabetes) ஆகியவை வேகமாக அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய ஆய்வுகளின்படி, 2030க்குள் உலகில் உடல் பருமனாக இருக்கும் பத்து குழந்தைகளில் ஒன்று இந்தியாவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது. இது பெரும்பாலும் வயதானோருக்கு மட்டுமே வரும் நோயாக இருந்தாலும், இப்போது குழந்தைகளிடமும் அதிகரித்து வருகிறது. இது நாட்டின் பொது சுகாதாரத்துக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் மூன்று காரணங்கள் என்ன? இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மூன்று காரணங்கள் முக்கியமாகின்றன. அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு (HFSS) கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் குழந்தைகளின் உடல் பருமன், நீரிழிவுக்கு முதன்மைக் காரணம். குளிர்பானங்கள், பேக்கரி உணவு வகைகள், பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் மறைமுக சர்க்கரை அதிக அளவில் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை உயர்த்தி, இன்சுலின் செயல்படும் தன்மையைக் குறைக்கிறது. இரண்டாவதாக, சக்கை உணவு (ஜங்க் ஃபுட்), பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எளிதாகவும், விலை மலிவாகவும் கிடைப்பதால் குழந்தைகளின் உணவுப் பழக்கம் மாறிவருகிறது. மூன்றாவதாக, உடல் ரீதியான செயல்பாடுகள் குறைந்துவிட்டிருப்பது இந்தப் பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகிறது. குழந்தைகள் வெளியே விளையாடுவதற்குப் பதிலாக கைப்பேசி, டேப்லெட், வீடியோ கேம்களில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள், உடற்கல்வி வகுப்புகளுக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இந்த மூன்று காரணிகளும் சேர்ந்து குழந்தைகளின் உடல்நலத்தை பெரிதும் பாதிக்கின்றன. விளம்பரங்களின் தாக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கார்ட்டூன் கதாபாத்திரங்கள், பிரபலங்கள் தோன்றும் விளம்பரங்கள் குழந்தைகளின் உணவுத் தேர்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 'ஜங்க் ஃபுட்' தயாரிக்கும் நிறுவனங்கள் குழந்தைகளுக்குப் பிடித்தமான கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகின்றன. நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் ஜங்க் ஃபுட் உணவு வகைகளை விளம்பரப்படுத்துவதால், குழந்தைகள் அவற்றை 'ட்ரெண்டி' என்று கருதுகின்றனர். ஜங்க் ஃபுட்டின் சுவை, அவை தரும் அனுபவத்தை மட்டுமே விளம்பரங்கள் முன்னிலைப்படுத்துகின்றன. உடல் பருமன், நீரிழிவு, பல் சிதைவு போன்ற நீண்டகால பாதிப்புகள் பற்றி அதில் எதுவும் காட்டப்படுவதில்லை. பள்ளிகளில் 'சர்க்கரைப் பலகை' அமைக்கும் முயற்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இந்த பிரச்னையை சமாளிக்க தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) ஒரு முக்கிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. சிபிஎஸ்இ (CBSE), மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளில் 'சர்க்கரைப் பலகை' (Sugar Boards) என்கிற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் சிபிஎஸ்இ 24,000க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு 'சர்க்கரைப் பலகை' அமைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. சர்க்கரைப் பலகை (Sugar Board) என்பது அதிக சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள், மக்களுக்கு ஏற்படுத்தும் ஒரு தகவல் பலகையாகும். இந்தப் பலகைகளில் மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு தேவையான முக்கியத் தகவல்கள் இடம்பெறும். முதலில், மாணவர்கள் தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படும். அதேபோல், அவர்கள் அன்றாடம் உண்ணும் சிற்றுண்டிகள், பானங்களில் எவ்வளவு சர்க்கரை அடங்கியுள்ளது என்பதை விளக்கும் தகவல்கள் தரப்படும். அதிகப்படியான சர்க்கரை உட்கொண்டால் ஏற்படும் ஆரோக்கிய அபாயங்கள், பல் சொத்தை, உடல் பருமன், நீரிழிவு நோய் போன்றவை பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். இதனுடன், ஆரோக்கியமான மாற்று உணவு வகைகள் பரிந்துரைக்கப்படும். இந்த முயற்சி மாணவர்களின் உணவுப் பழக்கங்களை மேம்படுத்தவும், அதிக - சர்க்கரை, உப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளின் நுகர்வைக் குறைக்கவும் உதவும். இதன்மூலம், பள்ளி கேன்டீன்களில் இத்தகைய ஆரோக்கியமற்ற உணவு வகைகளின் விற்பனையைக் கட்டுப்படுத்தவும் இயலும். இந்திய உணவு பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) இந்த முயற்சியை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும், குழந்தைகளின் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவதில் இது முக்கியமான நடவடிக்கை என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதேவேளை, பள்ளி கேன்டீன்களில் ஆரோக்கியமான, சத்தான உணவு வகைகள் வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. முழுமையான தீர்வுக்கான வழிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களால் மக்களின் ஆரோக்கியம், குறிப்பாக குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாகி வருகிறது. இந்த சூழ்நிலையை சரிசெய்ய அரசாங்கம், சுகாதாரத் துறை நிபுணர்கள், ஊட்டச்சத்து வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த 'உணவுக் கொள்கை' மாதிரியை உருவாக்க வேண்டும். இந்தக் கொள்கையின் மூலம், ஆரோக்கியமான உணவு வகைகள் மக்களுக்கு எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளுக்கு அருகே ஜங்க் ஃபுட் விற்பனையை முழுமையாகத் தடை செய்யும் தேசியத் திட்டத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக, பள்ளி வளாகங்களிலிருந்து 50 மீட்டர் தூரத்துக்குள் இந்த உணவு வகைகள் கிடைக்காதவாறு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். 'சர்க்கரைப் பலகை' போன்ற முயற்சிகள் நல்ல தொடக்கமாக இருந்தாலும், நீண்ட கால மாற்றத்துக்கு உணவு பழக்கவழக்கங்கள், விளம்பரத் தடைகள், உணவுப் பொருட்களின் விற்பனையில் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்கள் தேவை. இதற்கு ஒரு முன்மாதிரியாக, மெக்சிகோ, சிலி போன்ற நாடுகள் உணவு-பானங்களில் அதிக சர்க்கரை, கொழுப்பு அல்லது சோடியம் (உப்பு) இருப்பதை எளிதில் அடையாளம் காண உதவும் 'முன்பக்க எச்சரிக்கை லேபிள்களை' (Front-of-Pack Warning Labels) அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த லேபிள்கள் ஆரோக்கியமற்ற பொருட்களை நுகர்வோருக்கு தவிர்க்க உதவுகின்றன. இதேபோல், இந்தியாவிலும் உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (FSSAI) உடனடியாக எச்சரிக்கை லேபிளிங் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இத்தகைய நடவடிக்கைகள், குழந்தைகள் உட்பட அனைவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதேநேரத்தில், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக கொழுப்பு, சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள ஜங்க் ஃபுட் பொருட்கள் வரியின்றி இறக்குமதி செய்யப்படுவதால், அவை மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன. இந்த நிலைமை பொது சுகாதாரத்துக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. இதைத் தடுக்க, அரசாங்கம் உடனடியாக திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். ஒருங்கிணைந்த திட்டம் தேவை தற்போதைய 'சர்க்கரைப் பலகை' முயற்சி குழந்தைகளின் ஆரோக்கிய உணவுப் பழக்கங்களை மேம்படுத்த ஒரு நல்ல தொடக்கமாக இருந்தாலும், நிலையான மாற்றத்துக்கு ஒருங்கிணைந்த தேசிய பல்துறை செயல்திட்டம் தேவை. இதை அவசர கால அடிப்படையில் உருவாக்கி குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியம், சுகாதாரம் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்கும் தீர்வுகள் காண்பதற்கும் அரசாங்கம், கல்வியாளர்கள், பெற்றோர்கள், சமூக அமைப்புகளும் இந்த முயற்சியில் ஒருங்கிணைந்து உறுதிப்பட செயல்பட வேண்டும். (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்து ஆகும்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy4e31l3rx4o
  9. கத்தரிக்காய் வியாபாரிகள் முன்னாள் பேராசிரியர் ஜான் ஜோசப் கென்னடி இக்கட்டுரையில் பேசியிருப்பது அப்பட்டமான உண்மை - தனியார்மயமாக்கலில் வெகுவாக குழம்பிப் போயிருப்பது கல்வித்துறைதான். மாணவர்களை நுகர்வோராகப் பாவிப்பதால் அவர்களை முதிர்ச்சியும் பயிற்சியும் அற்றவர்களாகப் பார்க்க உயர்கல்வித்துறை தயாரில்லை. பதிலுக்கு மாணவர்களை அனைத்தும் கற்றறிந்த மேதைகளாகவும், அவர்களை வேலைக்குத் தயாரித்து அனுப்பும் பொறுப்பு மட்டுமே ஆசிரியர்களுடையது எனும் நம்பிக்கை பரவலாகத் தோன்றியுள்ளது. யு.ஜி.ஸியே அதைத்தான் பரிந்துரைக்கிறது - அவர்கள் மாணவர்கள் வேலை செய்து கற்பதை ஊக்கப்படுவது கல்வி போதனை குறித்து அவநம்பிக்கையினாலே. கல்லூரியில் கற்பிக்கப்படும் எதுவும் இளைஞர்களுக்கு வேலை செய்யப் பயன்படுவதில்லை என்று அதிகமாக தொழிற்துறையைச் சார்ந்தவர்களும் முதலீட்டாளர்களும் நம்புகிறார்கள். மெல்லமெல்ல உயர்கல்வியே தேவையில்லை, பள்ளிப்படிப்புக்குப் பின்பு நேரடியாக வேலைக்கு எடுக்கலாம் என்பதே திட்டம். மிகமிக அடிப்படையான திறன்களை மட்டுமே கொண்ட எந்திரத்தனமான கூட்டம் இன்றைய தொழிற்துறைக்கு, தனியார் நிறுவனங்களுக்குப் போதும். செயற்கை நுண்ணறிவு பொறியியலில் கைவைத்துவிட்ட பின்னர் இன்று பலரும் வேலை இழந்து வருகிறார்கள். வருங்காலத்தில் மருத்துவர்களும் வேலை இழப்பார்கள் என ஒரு அமெரிக்க மருத்துவர் பேசுவதைக் கேட்டேன். அதுவும் நிச்சயமாகச் சாத்தியமே. பத்திற்கு ஒரு மருத்துவரே இருப்பார்கள். செவிலியரும் செயற்கை நுண்ணறிவுமாக இணைந்து மருத்துவரின் இடத்தை எடுத்துக்கொள்வார்கள். நாட்டில் மிக அதிகமாக சம்பாதிக்கிற, கௌரவமான வேலைகளையே செயற்கை நுண்ணறிவு கபளிகரம் பண்ணும்போது மற்ற வேலைகளில் உள்ளவர்கள்? இது முதலில் பாதிக்கப் போவது உயர்கல்வித்துறையைத்தான்: மாணவர்களுக்கு கல்வி போதனையோ பயிற்சியோ அவசியம் இல்லை என நிர்வாகிகள் நம்பத் தொடங்கியுள்ளதால் நூற்றில் இருந்து பலநூறு மாணவர்களுக்குப் பாடமெடுக்க வகுப்புக்கு ஒரே ஒரு ஆசிரியரையே நியமிக்கிறார்கள். சர்வதேச அளவில் தரம் நிர்ணயிக்கும் நிறுவனங்களிடம் உயர்வான மதிப்பீடு பெறுவதற்கு பேராசிரியர்கள் ஆய்விதழ்களில் பிரசுரித்தால் போதும் என நினைக்கும் நிர்வாகங்கள் இன்று அவர்களுடைய கற்பிக்கும் திறனைப் பொருட்படுத்துவதில்லை. சில நிறுவனங்களில் ஆசிரியர் ஒரே சமயம் கன்னாபின்னாவெனப் பிரசுரிக்கவும் வேண்டும், நன்றாகப் போதிக்கவும் வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். ஆனால் ஆளைத் தேர்வு பண்ணும்போது போதிக்கும் திறனைச் சோதிப்பதில்லை. ஆய்வேட்டில் பிரசுரம் உள்ளதா என்று மட்டுமே பார்க்கிறார்கள். மாப்பிள்ளைக்கு வெளிநாட்டில் வேலை, கார், சொத்து உள்ளதா, அவர் ஆணாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என பெண் வீட்டார் எதிர்பார்ப்பதைப் போல நிலைமை மாறிவிட்டது. தனியார் கல்வி நிறுவனங்கள் அதனாலே இன்று மாணவர்களை ஈர்க்க மாணவர்களுக்கான ஈவெண்ட் மெனேஜ்மெண்ட் கம்பனியாக மாறிவருகிறது. ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், தொடர்ச்சியாக கவனத்தைச் சிதறடிக்கும் போட்டிகள் என வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை வைத்திருக்க முயல்கிறார்கள். இது முதலில் அமெரிக்காவிலேயே ஆரம்பித்தது. அதுவும் ஹார்வெர்டில். அங்கு தத்துவத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜேரெட் ஹேண்டர்ஸன் ஒவ்வொரு மாணவருக்கும் ஐந்து நிர்வாகிகள் அங்கு பணியாற்றுகிறார்கள், ஆனால் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு என்கிறார். மாணவர்கள் இன்று எதையும் சிரமப்பட்டு வாசிக்க விரும்புவதில்லை எனில் அதை ஒரு குறையாகவோ பிரச்சினையாகவோ ஹார்வெர்ட் நிர்வாகம் பார்ப்பதில்லை, அவர்களுக்கு ஏற்றபடி மேலோட்டமாக ஜாலியாகப் பேசிவிட்டு வந்தால்போதும் என அது ஆசிரியர்களைக் கேட்பதாகச் சொல்லும் அவர் கற்பித்தலில் தனக்கு மகிழ்ச்சியே இல்லாமல் போக வேலையை விட்டுவிட்டு யுடியூபராகிவிட்டதாக சொல்கிறார். இனிமேல் தான் கல்வித் துறைக்கே போகப் போவதில்லை என்கிறார் (இவரது தத்துவச் சேனல் பிரசித்தமானது: https://www.youtube.com/@_jared). இந்தப் போக்கு இந்தியாவுக்கும் உலகின் பல பகுதிகளுக்கும் பரவிவிட்டது. குறைவாக முதலீடு செய்து கட்டாயத்தின் பெயரில் கல்லூரிக்கு வரும் மாணவர்களைச் சுரண்டி நூறு மடங்கு சம்பாதிப்பதே தனியார் உயர்கல்வித்துறையின் உத்தேசம் ஆன பின்னர் எந்த அடிப்படையான படிப்புக்கும் மதிப்பற்றுவிட்டது - கணிதத்தை செயற்கை நுண்ணறிவு பார்த்துக்கொள்ளுமா அதைக் கற்பிக்கவே தேவையில்லை, நேரடியாக வேலையில் தேவைப்படும் ஒன்றை மட்டுமே கற்பித்துக்கொடு என்று நிர்வாகங்களும் கம்பெனி சி.இ.ஓக்களும் சொல்கிறார்கள். இதையே இன்றைய இளைஞர்களுக்கு வேலைத் தகுதியின்மை எனச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் மாறப் போகிற வேலைச் சந்தைக்குப் பொருத்தமான கல்வி எந்த கல்வி நிறுவனமும் அளிக்க முடியாது. பொறியியலின் அடிப்படையே தேவையில்லை, செயற்கை நுண்ணறிவை நிர்வகிக்கும் திறன் மட்டும் போதும், யாரும் பேசவோ எழுதவோ மொழியைக் கற்கத் தேவையில்லை, செயற்கை நுண்ணறிவே அதைச் செய்யும் என ஒரு கம்பெனி சி.இ.ஓ சொன்னால் அதைப் பின்பற்றி அரைகுறையாகக் கற்கும் ஒரு மாணவர் நாளை வேலையின் தேவை முழுக்க மாறும்போது நிர்கதியாக நிற்பார். அவரால் சொந்தமாகச் சிந்தித்து புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க, புதிய கட்டமைப்புகளை உருவாக்க இயலாதவராக இருப்பார். நான் இன்று அப்படியானவர்களை அதிகமாகப் பார்க்கிறேன் - அண்மையில் என்னிடம் ஒரு பேராசிரியர் சொன்னார்: அவர் ஒரு மாணவர் தேர்வு நேர்முகத்தில் இருந்தார். வணிகப் பயன்பாட்டுத் தரவுகளைப் பரிசோதித்து அவர்களைக் கட்டுப்படுத்தும் நிரல்களை எழுதக் கற்றுக்கொடுக்கும் படிப்பு அது. வந்த மாணவர்களில் 98% பேர்களுக்கு நிரலாக்க, வணிகவியல் படிப்போ அறிவோ இல்லை. ஆனாலும் அப்படிப்பை முடித்து வேலைக்குப் போக வேண்டும் என வருகிறார்கள். இவர்களுக்கு உயர்கல்விக்குப் பிறகு எந்த தகுதியும் ஆர்வமும் இல்லாமல் ஆச்சரியமில்லை. அது போதும் என்றே யு.ஜி.ஸியும் தனியார் கல்வி நிறுவனங்களும் ஒருசேர நினைக்கிறார்கள். உ.தா., நீங்கள் இளங்கலைப் படிப்பில் பொறியியல் படித்துவிட்டு நேரடியாக - எந்த அடிப்படையும் தெரியாமல் - மொழியில் முனைவர் பட்ட ஆய்வு பண்ணலாம். இதை கல்விச் சுதந்திரம் என்று யுஜிஸி நினைக்கிறது. ஆனால் இது படுமுட்டாள்தனம் என யுஜிஸி மண்டைகளுக்கு விளங்கவில்லை. தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகமாகச் சம்பாதிப்பதற்கு எந்தப் படிப்பிலும் எவரையும் சேர்க்கலாம் என விதிமுறையை யுஜிஸி கொண்டு வந்தது. இப்போது ஆன்லைனில் பட்டப்படிப்பை யுஜிஸி அனுமதிக்கிறது. இது மேலும் பல பெருங்குழப்பங்களைக் கொண்டு வரும். வேலையளிக்கும் நிறுவனங்கள் இந்த ஆன்லைன் படிப்பை நிராகரிக்கும் நிலை வரும். ஏனென்றால் நமது மாணவர்களுக்குத் தாமாகப் படிக்கிற பொறுப்பும் சுயக்கட்டுப்பாடும் இல்லை. கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் மோசடி செய்து பட்டம் வாங்கி விடுவார்கள். நான் அண்மையில் ஒரு முதுகலைப் பட்ட நேர்முகத்தில் ஒரு மாணவரைப் பார்த்தேன். அவர் பெங்களூரின் பிரசித்தமான தனியார் பல்கலையில் இளங்கலை ஆங்கிலப் படிப்பில் 83% மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். நான் மாணவராக இருந்தபோது 60-70% மதிப்பெண் வாங்க மிகச்சிறந்த மாணவராக இருக்க வேண்டும். அவர்களுக்கே தங்கப்பதக்கம் கிடைக்கும் (நான் என் இளங்கலையிலும் முதுகலையிலும் தங்கப்பதக்கம் பெற்றேன்.). சரி பெரிய புத்திசாலி போல என நினைத்து நான் அம்மாணவரிடம் அவர் ஒரு மாதத்திற்கு முன்பு அவர் தேர்வு எழுதிய பாடத்தில் இருந்து ஒரு கேள்வி கேட்டேன். ரொம்ப சாதாரணமான கேள்விதான். அவருக்குத் தெரியவில்லை. "மறந்துவிட்டது சார்" என்றார். சரி பரவாயில்லை. உங்கள் பாடத்திட்டத்தில் என்னவெல்லாம் இருந்தன என்று கேட்டால் அதுவும் தெரியவில்லை. அதெப்படி மறந்துபோகும்? எனக்கு நான் 25 ஆண்டுகளுக்கு முன் படித்ததெல்லாம் நினைவிருக்கிறதே. அவர் நூற்றுக்கு 82 மதிப்பெண்கள் வேறு அப்பாடத்தில் பெற்றிருந்தார். இன்னொரு மாணவர் கேரளாவைச் சேர்ந்தவர். அவர் 85%. ஆனால் ஒரு வாக்கியம் பேசினால் 10 தவறுகள் செய்கிறார். இவர்களுக்கு எப்படி இவ்வளவு மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன என்றால் அதை 'வாடிக்கையாளர் திருப்தி' எனும் பெயரில் நிர்வாகங்கள் நியாயப்படுத்துகின்றன. மதிப்பெண்ணை நியாயமாக அளித்தால் மாணவர் சேர்க்கை குறையும் என அஞ்சுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் அனைவரையும் தேர்வு செய்யும் முடிவை நாம் விமர்சிக்கையில் தனியாரில் நடக்கும் மோசடிகளைக் கண்டுகொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் மாணவர்களையே குற்றம் சொல்ல முடியாது - பல்கலைக்கழகத்தில் இன்று ஒருவர் துணைவேந்தர் ஆவதற்கு எந்த கல்வித்தகுதியும் தேவையில்லை, தொழிற்துறையில் உயர்பொறுப்பில் இருந்த அனுபவம் போதும் என யுஜிஸி கூறுகிறது. நமது பிரதமர் ஒரு சிறந்த நடிகர்தான், ஆனால் அவர் தொழில்முறை நடிகர் அல்லர். அதற்காக அவருக்கு பால்கே விருது கொடுக்க முடியாதில்லையா. இரண்டுக்கும் வித்தியாசமுள்ளது. யுஜிஸியோ கல்வித் தகுதியை விட பணம்தான் முக்கியம் எனும் கொள்கையை வைத்திருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தைவிட தனியாரின் லாபத்தையே அது பிரதானப்படுத்துகிறது. அதற்குத் தோதாக மட்டுமே விதிமுறைகளை இயற்றுகிறது. இப்படி எல்லா விதங்களிலும் அது உயர்கல்வியை அழிக்கும் பணியை ஆற்றுகிறது. இதுவும் அமெரிக்கப் பண்பாடுதான் - அங்கு தேர்தலிலே நிற்காத டெஸ்லா முதலாளி சற்று காலத்திற்கு முன்வரை அரசைக் கட்டுப்படுத்தவில்லையா! கத்தரிக்காய் வியாபாரிகளும் தக்காளி வியாபாரிகளுமாக உயர்கல்வித் துறையை நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். Posted 23 hours ago by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/06/blog-post_66.html
  10. ஈரானியர்கள் ஒருபோதும் சரணடைபவர்கள் இல்லை - ஆயத்தொல்லா கமேனி 18 JUN, 2025 | 04:27 PM ஈரானிற்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க தாக்குதலை மேற்கொண்டால் அது மீண்டும் சீர்செய்ய முடியாத சேதத்தை சந்திக்கும் என எச்சரித்துள்ள ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா கமேனி ஈரானியர்கள் சரணடைபவர்கள் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் ஆன்மீக தலைவரின் உரை அந்த நாட்டின் தொலைக்காட்சியில் வாசிக்கப்படுகின்றது அதில் கமேனி ஈரானையும் அதன் மக்களையும் வரலாற்றையும் நன்கு அறிந்த புத்திசாலிகள் ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தும் தொனியில் பேசமாட்டார்கள்,ஏனென்றால் ஈரானியர்கள் சரணடைபவர்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217844
  11. அப்ப நீங்கள் போட்டியில் பங்குபற்றலாம் தானே அண்ணை? கந்தப்பு அண்ணை போட்டியை நடத்த முன்வந்தால் பங்குபற்றுவீர்களா அண்ணை? @செம்பாட்டான் அண்ணை நடத்த முன்வந்தாலும் மகிழ்ச்சியே. முதலாவது போட்டியாளர் தயார், போட்டியை நடத்தப்போவது யார் யார்?! பத்துப்பேர் கையை தூக்கினால் 31 - 35 (31போட்டிகள் தானே) கேள்விகளுடன் சுருக்கமாக போட்டியை நடத்தலாமே அண்ணை.
  12. இஸ்ரேலிற்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் - ஈரான் 18 JUN, 2025 | 12:20 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானை நிபந்தனையற்ற விதத்தில் சரணடையுமாறும் பொறுமை குறைகின்றது எனவும் எச்சரித்த நிலையில் புதன்கிழமை இஸ்ரேலிற்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் தெரிவித்துள்ளது. டெல்அவி மக்கள் தாக்குதலிற்கு தயாராகவேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்த அதேவேளை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தனது ஹைபர்சோனிக் பட்டா ஏவுகணைகள் பாதுகாப்பான பதுங்குமிடங்களை உலுக்கிவருகின்றன என தெரிவித்துள்ளது. நேர்மையான வாக்குறுதி நடவடிக்கையின் 11வது சுற்றுதாக்குதல்களை பட்டா ஏவுகணைகளை பயன்படுத்தி மேற்கொண்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட ஐந்துமடங்கு அதிகமான வேகத்தில் பயணிக்ககூடியவை. நடுவானில் தங்கள் பயணத்தை மாற்றக்கூடியவை இதனால் அவற்றின் பயணத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். https://www.virakesari.lk/article/217800
  13. தையிட்டி விகாரை விவகாரம், செம்மணி புதைகுழி, காணி விடுவிப்பு குறித்து வடக்கு ஆளுநரிடம் கேட்டறிந்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Published By: DIGITAL DESK 3 18 JUN, 2025 | 02:43 PM யாழ்ப்பாணத்தின் வலி. வடக்கு பிரதேசத்தில் எதிர்காலத்திலும் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்கிற்கு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (18) வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இங்குள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக பிரிட்டன் தூதுவர் இந்தச் சந்திப்பின்போது ஆளுநரிடம் குறிப்பிட்டதுடன், முதலீட்டுக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் வினவினார். வடக்கில் அமையப்பெறவுள்ள மூன்று முதலீட்டு வலயங்களினதும் உட்கட்டுமான அபிவிருத்திற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஆளுநர் தெரிவித்தார். வேலை வாய்ப்புக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அவை அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் இங்கு அதிகளவில் வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார். இளையோரிடத்தில் புலம்பெயர்வுக்கான சிந்தனை மேலோங்கியிருக்கின்றது என்பதையும் ஏற்றுக்கொண்ட ஆளுநர், அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் இங்கே உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே முதலீட்டு வலயங்களை அமைக்கும் நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்டார். சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பிலும், விமான சேவை மற்றும் கப்பல் சேவைகள் தொடர்பாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கேட்டறிந்துகொண்டார். யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான உள்ளூர் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கட்டுநாயக்காவுக்கும் பலாலிக்கும் இடையிலான விமானசேவை ஆரம்பிப்பது பெருமளவு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவக்கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட ஆளுநர் இதற்குரிய கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி, தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் மற்றும் செம்மணி புதைகுழி அகழ்வு என்பன தொடர்பாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் களநிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார். கடந்த காலங்களில் பிரிட்டன் அரசாங்கம் ஐ.நா.வின் முகவர் அமைப்புக்கள் ஊடாக பல்வேறு நிதி உதவிகளை வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், தற்போதும் இந்தியாவிலிருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள அகதிகளுக்கான வாழ்வாதாரத்துக்கு உதவிகள் தேவை என்ற கோரிக்கையையும் ஆளுநர் முன்வைத்தார். மேலும், பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டிருந்தாலும் கிராமிய வீதிகள், கிராமிய உட்கட்டுமானங்களுக்கான தேவைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான தேவைப்பாடுகள் இன்னமும் உள்ளன எனவும் ஆளுநர் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தினார். இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/217828
  14. பட மூலாதாரம்,IRANIAN LEADER PRESS OFFICE / HANDOUT/ANADOLU VIA GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி பெர்சியன் சேவை பதவி, 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை தற்போதைய மோதலில் கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அதுவொரு சிறந்த யோசனை இல்லை" எனகூறி நிராகரித்ததாக, அமெரிக்க ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரான் மீதான சமீபத்திய தாக்குதல்கள் மூலம் இரானின் அணுசக்தி திறன்களால் ஏற்பட்டுள்ள "இருப்பியல் அச்சுறுத்தலை" அழிப்பதை தங்களுடைய இலக்கு என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், அதை தாண்டியும், இரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது, இஸ்ரேலிய ராணுவ தாக்குதல்களின் விளைவாக இருக்கலாம் என, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இரானின் அதி உயர் தலைவர் குறித்தும் நாட்டில் அவருடைய அதிகாரங்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அரசியலில் உள்ள பங்கு குறித்தும் இங்கே ஆராயப்பட்டுள்ளது. 1979ம் ஆண்டில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நாட்டின் அதி உயர் தலைவராக ஆன இரண்டாவது நபர் ஆயதுல்லா அலி காமனெயி. மேலும் 1989ம் ஆண்டிலிருந்து அவர் இப்பதவியில் உள்ளார். அவர் பதவியில் இல்லாத வாழ்நாளை இரானிய இளைஞர்கள் ஒருபோதும் கண்டதே இல்லை. அதிகார மையங்களுக்கு இடையே நடக்கும் போட்டி வலையின் மையத்தில் இருக்கிறார் காமனெயி. எந்தவொரு பொது கொள்கை சார்ந்த விவகாரங்களிலும் தன் அதிகாரத்தை அவர் பயன்படுத்த முடியும், பொது அலுவலகங்களுக்கான பதவிகளுக்கு அவரால் ஒருவரை தேர்ந்தெடுக்கவும் முடியும். ஒரு நாட்டின் தலைவராகவும் இரானின் புரட்சிகர காவல் படை உட்பட ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் அவர் ஒட்டுமொத்த அதிகாரம் கொண்டவராக உள்ளார். பட மூலாதாரம்,ANADOLU/GETTY IMAGES படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி, இரானின் அதிகார கட்டமைப்பின் மையமாக இருக்கிறார். இரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாட்டில் 1939ம் ஆண்டில் அவர் பிறந்தார். மத நம்பிக்கைகள் கொண்ட ஒரு குடும்பத்தின் எட்டு குழந்தைகளுள் இரண்டாவது குழந்தையாக பிறந்தவர் இவர். இரானில் ஆதிக்கம் செலுத்தும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு மத குருவாக காமனெயியின் தந்தை இருந்தார். காமனெயிக்கு கல்வியையும் தாண்டி குரான் குறித்து படிப்பதிலேயே ஆர்வம் இருந்தது. தன் 11 வயதிலேயே அவர் மத குருவாக தகுதி பெற்றார். ஆனால், அந்த சமயத்தில் இருந்த மத தலைவர்களை போலவே அவருடைய பணிகள் ஆன்மிகத்தை விட அரசியலை சார்ந்தே அதிகம் இருந்தது. சிறந்த பேச்சாளரான காமனெயி, இரான் மன்னர் ஷா-வை விமர்சிக்கும் நபராக ஆனார், அதைத் தொடர்ந்து இஸ்லாமிய புரட்சியால் அந்த மன்னர் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். பல ஆண்டுகளாக அவர் பதுங்குகுழியிலேயே இருந்தார் அல்லது சிறையிலேயே அடைக்கப்பட்டார். ஷாவின் ரகசிய காவல் துறையால் காமனெயி ஆறு முறை கைது செய்யப்பட்டிருந்தார், சித்ரவதை மற்றும் உள்நாட்டுக்குள்ளேயே நாடு கடத்தப்படுதல் போன்றவற்றுக்கு ஆளானார். 1979 இஸ்லாமிய புரட்சிக்கு அடுத்த ஆண்டே ஆயதுல்லா ருஹொல்லா கோமினி (Ayatollah Ruhollah Khomeini), அவரை தலைநகர் டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கான தலைவராக்கினார். அதன்பின், 1981ம் ஆண்டில் காமெனெயி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1989ம் ஆண்டு ஆயதுல்லா ருஹொல்லா கோமினிக்கு அடுத்த தலைராக, மதத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ருஹொல்லா கோமினி தன்னுடைய 86வது வயதில் காலமானார். மகன் மோஜ்தாபாவுக்கு உள்ள அதிகாரம் என்ன? அலி காமனெயி அரிதாகவே வெளிநாடுகளுக்கு பயணிப்பார். அவர், மத்திய டெஹ்ரானில் உள்ள வளாகத்தில் தன் மனைவியுடன் வசித்து வருவதாக தகவல் உள்ளது. தோட்டக்கலை மற்றும் கவிதைகள் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது; தன்னுடைய இளம் வயதில் அவருக்கு புகைப்பழக்கம் இருந்ததற்காக அவர் அறியப்பட்டார், இரானில் மதத்தலைவர் ஒருவர் புகைப்பிடிப்பது வழக்கத்துக்கு மாறானது. 1980களில் நடந்த ஒரு கொலை முயற்சியில் அவருடைய வலது கை செயலிழந்தது. அவருக்கும் அவருடைய மனைவிக்கும் மன்சோரே கோஜஸ்டே பேகெர்ஸாடேவுக்கும் (Mansoureh Khojasteh Baqerzadeh) ஆறு குழந்தைகள் உள்ளனர், அவர்களுள் 4 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆவர். காமனெயி குடும்பத்தினர் பொதுவெளியிலோ அல்லது ஊடகத்திலோ அரிதாகவே தோன்றியுள்ளனர். மேலும், அவருடைய குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அதிகாரபூர்வ அல்லது சரியான தகவல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. அவருடைய நான்கு மகன்களுள் இரண்டாவது மகனான மோஜ்தாபா, அவருடைய செல்வாக்கு காரணமாக, நன்கு அறியப்பட்ட நபராக உள்ளார், அவருடைய தந்தையின் நெருக்கமான வட்டாரத்தில் அவர் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறார். பட மூலாதாரம்,NURPHOTO/GETTY IMAGES படக்குறிப்பு, உச்ச தலைவரின் மகனான மோஜ்தாபா, இஸ்லாமிய குடியரசின் மிகவும் அதிகாரமிக்க நபராக கருதப்படுகிறார் டெஹ்ரானில் உள்ள அலாவி உயர்நிலை பள்ளியில் மோஜ்தாபா படித்தார், பாரம்பரியமாக இஸ்லாமிய குடியரசின் மூத்த அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளியாக இது அறியப்படுகிறது. பிரபலமான பழமைவாத தலைவரான கோலம்-அலி ஹதாத்-அடெலின் மகளை அவர் திருமணம் செய்தார், மதகுருவாக அவர் ஆகாத காலகட்டத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. அச்சமயத்தில் கோம் (Qom) நகரில் இறையியல் படிப்பை தொடங்க அவர் திட்டமிட்டிருந்தார். அவர் தன்னுடைய 30வது வயதில் இரானின் மிகவும் பிரபலமான, கோமில் உள்ள ஷியா இறையியல் பள்ளியில் தன் படிப்பை தொடங்கினார். 2000ம் ஆண்டுகளுக்கு மத்தியில் அரசியல் வட்டாரத்தில் மோஜ்தாபாவின் செல்வாக்கு குறித்து ஊடகத்தில் அரிதாகவே பேசப்பட்டாலும் பொதுவெளியில் அது அதிகமாக தெரிந்தது. 2004ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சையின் போது மோஜ்தாபா மிகுந்த கவனம் பெற்றார். அப்போது பிரபலமான வேட்பாளரான மெஹ்தி கரௌபி (Mehdi Karroubi) ஆயதுல்லா காமனெயிக்கு வெளிப்படையாக கடிதம் எழுதினார். மஹ்மௌத் அஹ்மதினெஜத்-க்கு (Mahmoud Ahmadinejad) ஆதரவாக மோஜ்தாபா பின்னணியில் செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். 2010ம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய குடியரசில் மிகுந்த அதிகாரமிக்க நபர்களுள் ஒருவராக பரவலாக அறியப்பட்டார். தன்னுடைய பதவிக்கு மோஜ்தாபாவையே காமனெயி விருப்ப வேட்பாளராக கொண்டிருப்பதாக, சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. எனினும், இந்த தகவலை அதிகாரபூர்வ வட்டாரங்கள் மறுத்துள்ளன. மேலும், அலி காமனெயி ஓர் அரசர் அல்ல, அவரால் எளிதாக ஆட்சியை அவருடைய மகனுக்கு வழங்க இயலாது. தன் தந்தையின் பழமைவாத வட்டாரத்துக்குள்ளும் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டவராக மோஜ்தாபா உள்ளார். அரசியலமைப்பை விட அதிகாரம் மிக்கதாக உள்ள உச்ச தலைவரின் அலுவலகத்திலும் மோஜ்தாபா அதிகாரம் கொண்டவராக உள்ளார். முஸ்தஃபா, காமனெயி குடும்பத்தின் மூத்த மகனாவார். இவர், தீவிர பழமைவாத மதகுருவான அஸிஸொல்லா கோஷ்வக்டின் (Azizollah Khoshvaght) மகளை திருமணம் செய்துள்ளார். 1980களில் நடந்த இரான் - இராக் போரில் முஸ்தஃபா மற்றும் மோஜ்தாபா இருவரும் முன்னணியில் செயல்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES படக்குறிப்பு,காமனெயி மகன்களுள் இளையவர் மேசம் (Meysam) அலி காமனெயியின் மூன்றாவது மகன் மசௌத், 1972ம் ஆண்டு பிறந்தார். கோம் செமினரி பழமைவாத ஆசிரியர்கள் சங்கத்துடன் இணைந்த, மிகவும் அறியப்பட்ட மத குருவான மோஹ்சென் கராஸியின் (Mohsen Kharazi) மகளான சூசன் கராஸியை இவர் திருமணம் செய்துள்ளார். சூசன் கராஸி, சீர்திருத்தவாத முன்னாள் ராஜதந்திரியான முகமது சதெக் கராஸியின் சகோதரி ஆவார். மசௌத் காமனெயி அரசியல் வட்டாரத்திலிருந்து விலகியே உள்ளார், அவர் குறித்து பொதுவெளியில் அதிக தகவல்கள் இல்லை. தன் தந்தையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகளை, கண்காணித்து காமனெயியின் பரப்புரை அமைப்பாக செயல்படும் அலுவலகத்துக்கு மசௌத் தலைமை தாங்கினார்; தன் தந்தையின் வாழ்க்கை வரலாறு மற்றும் நினைவுக்குறிப்புகளை தொகுக்கும் பொறுப்பும் அவரிடம் உள்ளது. காமனெயியின் இளைய மகனான மேசம், 1977ம் ஆண்டில் பிறந்தார். அவருடைய மூன்று அண்ணன்களை போலவே, இவரும் ஒரு மதகுருவாக உள்ளார். 1979ம் ஆண்டு நிகழ்ந்த புரட்சிக்கு முன்னதாக, புரட்சிகர மதகுருக்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்ததற்காக அறியப்படும் பணக்கார, செல்வாக்குமிக்க வணிகரான மஹ்மௌத் லோலாசியனின் (Mahmoud Lolachian) மகளை இவர் திருமணம் செய்துள்ளார். மேசம் மனைவியின் பெயர் ஊடகங்களில் குறிப்பிடப்படவில்லை. தன் தந்தை மேற்கொள்ளும் பணிகளை பாதுகாத்து அவற்றை வெளியிடுவதற்கான அலுவலகத்தில் மசௌத்துடன் இணைந்து மேசம் பணியாற்றுகிறார். இரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? போர்க்கப்பல், போர் விமானங்கள் நகர்வு இஸ்ரேல் - இரான் மோதல் முற்றுவதால் ரஷ்யா கவலை ஏன்? காமனெயி, அணுசக்தி திட்டம்: இரானில் இஸ்ரேலின் உண்மையான இலக்கு எது? இரானை ஆதரிக்கும் பாகிஸ்தான் இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? இரு மகள்கள் காமனெயியின் மகள்கள் குறித்து பொதுவெளியில் அதிகம் அறியப்படவில்லை. குடும்பத்தில் மிகவும் இளையவர்களாக புஷ்ரா மற்றும் ஹோடா உள்ளனர், 1979 புரட்சிக்குப் பிறகே அவர்கள் பிறந்தனர். 1980ம் ஆண்டு பிறந்த புஷ்ரா, காமனெயி அலுவலகத்தில் தலைமை அலுவலராக உள்ள கோகம்ஹோசெயின் (முகமது) மொஹம்மதி கோல்பயெகனியின் (Gholamhossein (Mohammad) Mohammadi Golpayegani) மகனான மொஹம்மது-ஜாவத் மொஹம்மதி கோல்பயெகனியை திருமணம் செய்துள்ளார். காமனெயியின் இளைய மகளான ஹோசா, 1981ம் ஆண்டு பிறந்தார். இமாம் சாதிக் பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் படித்து அங்கேயே கற்பித்த, மெஸ்பா அல்-ஹோடா மகேரி கனியை அவர் திருமணம் செய்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g8egxy9g1o
  15. 18 JUN, 2025 | 02:54 PM (எம்.நியூட்டன்) வடக்கு மாகாணத்திற்கு ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி சுற்றுலாத்துறை ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை முன்வைத்தார். வடமாகாணத்தின் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன், யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, புதன்கிழமை (18) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த பரிந்துரைகளை முன்வைத்தார். கொழும்பில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில், வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், வடமாகாணமே, இலங்கையின் அடுத்தபட்ட சுற்றுலா மையமாக வளரக்கூடிய வளமான பகுதி. யாழ்ப்பாணம் –கிளிநொச்சி பகுதிகள் பண்பாட்டு பாரம்பரியம், இயற்கை அழகு மற்றும் ஆன்மீக ஆழம் கொண்டவை. திறமையான திட்டமிடலும், சரியான விளம்பர முயற்சிகளும், முதலீடுகளும் இடம்பெற்றால், இது இலங்கையின் வடக்கு சுற்றுலா மையமாக மாறும். தற்போது வடக்கு மாகாணம், இலங்கையில் வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் சுமார் 3-5% மட்டுமே ஈர்க்கிறது. இது கொழும்பு, கண்டி, காலி, நுவரெலியா, தம்புள்ளை போன்ற பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். இவ்வாறு ஒப்பீட்டளவில் பின்னடைவில் இருக்கும் வடமாகாணத்தின் சுற்றுலா துறையை முன்னேற்ற, பல தளங்களில் மேம்பாட்டு நடவடிக்கைகள் அவசியம். குறிப்பாக ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தனியார் முதலீடுகளுடன் ஹோட்டல் மற்றும் விடுதி வசதிகள், நவீன விளம்பரங்கள், சமூக ஊடக விளம்பரங்கள், சிறப்பான இளைஞர் பயிற்சிகள், கிராமப்புற அனுபவத்துடன் வீட்டு விடுதிகள், யாழ் உணவுப் பாதைகள், நல்லூர் திருவிழா போன்ற திருவிழாக்களை சர்வதேச நாட்காட்டியில் இணைத்தல் போன்றவற்ரை நடைமுறைப்படுத்தவேண்டும் இவை யாவும் இணைந்து மேற்கொள்ளப்பட்டால், 2030ஆம் ஆண்டுக்குள் யாழ் மற்றும் வடமாகாணத்தில் மொத்த சுற்றுலா பங்கு 15-18% வரை உயரலாம். மேலும் வடமாகாணத்தில் தற்போதைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒரு விசேட உபக்குழுவை அமைத்து வடக்கு அபிவிருத்திக்காக திட்டமிட வேண்டும் என்றார். குறித்த விடயங்களை கேட்டறிந்த அமைச்சர் இவை தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/217826
  16. யாழ். மேயர் உள்ளிட்ட பல தரப்பினரை சந்திக்க பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம் Published By: DIGITAL DESK 3 18 JUN, 2025 | 02:30 PM இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் வடக்கிற்கான வியத்தை மேற்கொண்டுள்ளார். இவ்வாரம் யாழில் தங்கியிருக்கும் பிரித்தானியத் தூதுவர் அன்றூ பற்றிக், புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள யாழ். மாநகர சபை மேயர், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், தொழில் முனைவோர், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்புகளின் போது நல்லிணக்கம், கல்வி, மேம்பாடு மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217825
  17. சுரங்கங்களை தகர்க்கும் உலகின் ஒரே வெடிகுண்டு - இரானின் அணு ஆராய்ச்சி மையங்களுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்துமா? பட மூலாதாரம்,US AIR FORCE படக்குறிப்பு, US B-2 ஸ்பிரிட் மட்டுமே GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) வெடிகுண்டை ஏவும் வகையில் கட்டமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் பார்ருச்சோ பதவி, பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களில் ஒன்று பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த ஆயுதம் இஸ்ரேலின் கைகளிலும் தற்போது இல்லை. GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணுஆயுதம் அல்லாத "பங்கர் பஸ்டர்" ("bunker buster") வெடிகுண்டு தான் அந்த ஆயுதம். அது, அமெரிக்காவிற்கு மட்டுமே சொந்தமானதாக உள்ளது. துல்லியமாக வழிகாட்டப்படும், 30,000 பவுண்ட் (13,600 கிலோ) எடையுள்ள இந்த வெடிகுண்டு, ஒரு மலைக்குள் ஆழமாக புதைக்கப்பட்டுள்ள இரானின் ஃபோர்டோ அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் வளாகத்தை ஊடுருவும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதுவரை, எம்ஓபி வெடிகுண்டை உபயோகிப்பதற்கான அனுமதியை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கவில்லை. GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் ஆயுதம் என்ன செய்யும்? அதன் சவால்கள் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்த முடியும்? அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி, GBU-57A/B என்பது, "ஆழமாக புதைக்கப்பட்ட மற்றும் உறுதியாக கட்டப்பட்ட பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு பெரிய ஊடுருவக்கூடிய ஆயுதம்"என அறியப்படுகின்றது. இந்த வெடிகுண்டு சுமார் ஆறு மீட்டர் நீளமுடையது. இது வெடிக்கும் முன் சுமார் 200 அடி (61 மீட்டர்) ஆழத்தில் நிலத்தின் உள்ளே ஊடுருவக்கூடியது என நம்பப்படுகிறது. இதுபோன்ற வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டால், ஒவ்வொரு வெடிப்பும், நிலத்தை ஆழமாக துளையிட்டு, இலக்கைச் சேதப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது. போயிங்கால் தயாரிக்கப்பட்ட எம்ஓபி (MOP), இதுவரை போரில் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. எனினும், இது அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் மிஸைல் ரேஞ்ச் (White Sands Missile Range) என்ற ராணுவ சோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. "அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என அழைக்கப்படும் 21,600 பவுண்ட் (9,800 கிலோ) எடையுள்ள Massive Ordnance Air Blast (MOAB) வெடிகுண்டை விட இது அதிக சக்தி வாய்ந்தது. இந்த MOAB, 2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் போருக்காக பயன்படுத்தப்பட்டது. "MOAB போலவே பெரிய அளவிலான ஆயுதங்களை உருவாக்க முயற்சித்த அமெரிக்க விமானப்படை, வெடி பொருளை மிகவும் வலிமையான உலோகப் பெட்டிக்குள் வைத்திருக்கும் வகையில் வடிவமைத்தது. அதன் விளைவாக உருவானது தான் GBU-57A/B மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்" என்று கூறுகிறார் பிரிட்டனின் ப்ராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலுள்ள அமைதிக் கல்வித் துறையின் பேராசிரியரான பால் ரோஜர்ஸ். தற்போது , எம்ஓபி வெடிகுண்டை ஏவுவதற்காக கட்டமைக்கப்பட்டும், நிரலாக்கம் செய்யப்பட்டும் இருப்பது அமெரிக்காவின் B-2 ஸ்பிரிட் என்ற ஸ்டெல்த் பாம்பர் மட்டும் தான். B-2 என அழைக்கப்படும் இந்த போர் விமானம், நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் தயாரித்தது. அமெரிக்க விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாக இந்த விமானம் கருதப்படுகின்றது. இந்த விமானத்தின் உற்பத்தியாளரான நார்த்ரோப் க்ரம்மனின் கூற்றுப்படி, B-2 விமானம் 40,000 பவுண்டு (18,000 கிலோ) வரை சுமக்கக்கூடியது. ஆனால், இரண்டு GBU-57A/B "பங்கர் பஸ்டர்" வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் B-2 விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மொத்த எடை சுமார் 60,000 பவுண்டு (27,200 கிலோ). குண்டுவீச்சுக்குப் பயன்படும் இந்த நீண்ட தூர கனரக விமானம், எரிபொருள் நிரப்பாமல் சுமார் 7,000 மைல்கள் (11,000 கிமீ) வரை பறக்கக்கூடியது. பறக்கும் நிலையில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், அதன் வரம்பு 11,500 மைல்கள் (18,500 கிமீ) ஆக அதிகரிக்கிறது. இதன் மூலம், உலகின் எந்தப் பகுதியையும் சில மணி நேரங்களில் இந்த விமானத்தால் அடைய முடியும் என நார்த்ரோப் க்ரம்மன் கூறுகிறது. இரான் போன்ற நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய நாட்டிற்கு எதிராக எம்ஓபி வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டால், B-2 குண்டுவீச்சு விமானங்களுடன் கூடுதல் விமானங்களும் அதில் பங்கேற்க நேரிடும். எடுத்துக்காட்டாக, எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக F-22 ஸ்டெல்த் ஸ்ட்ரைக் விமானங்கள் பயன்படுத்தப்படலாம். அதன் பிறகு, சேதத்தை மதிப்பீடு செய்யவும், அதற்குப் பிறகும் தாக்குதல்களைத் தொடரவேண்டுமா என்பதை தீர்மானிக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம் என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார். இந்த எம்ஓபி வெடிகுண்டுகள் அமெரிக்காவிடம் மிகக் குறைந்த அளவு இருப்பதாக அவர் மதிப்பிடுகிறார். "அவர்கள் சுமார் 10 அல்லது 20 எம்ஓபி வெடிகுண்டுகளை வைத்திருக்கக்கூடும்" என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ். பட மூலாதாரம்,WHITEMAN AIR FORCE BASE படக்குறிப்பு, எம்ஓபி வெடிப்பதற்கு முன் மேற்பரப்பில் இருந்து சுமார் 200 அடி (61 மீட்டர்) வரை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது. இரானுக்கு எதிராக எம்ஓபி வெடிகுண்டு பயன்படுத்தப்படுமா? ஃபோர்டோ என்பது இரானின் இரண்டாவது அணுசக்தி செறிவூட்டல் நிலையமாகும். நடான்ஸுக்கு பிறகு இதுவும் ஒரு முக்கிய மையமாகக் கருதப்படுகிறது. டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே சுமார் 60 மைல் (95 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள கோம் நகருக்கு அருகில், ஒரு மலையின் ஓரத்தில் இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்திற்கான கட்டுமானம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர், 2009ஆம் ஆண்டு இந்த நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையம் அங்கு செயல்படுவதை, இரான் அதே ஆண்டில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. 80 மீட்டர் (260 அடி) ஆழத்தில் பாறை மற்றும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பதுடன், இரான் மற்றும் ரஷ்ய தயாரிப்புகளான தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை அமைப்புகளால், ஃபோர்டோ வளாகம் பாதுகாக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில், சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA), அந்த தளத்தில் ஆயுத தரத்திற்கு அருகிலுள்ள 83.7% தூய்மையுடைய யுரேனியம் துகள்களைக் கண்டறிந்தது. இரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் அழிப்பதே, இரான் மீது தாக்குதல் நடத்துவதன் நோக்கம் என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார். அதனை, "இஸ்ரேலுக்கு ஒரு இருத்தலியல் (existential) அச்சுறுத்தல்" எனவும் அவர் விவரித்தார். அந்த நோக்கத்தை அடைய, ஃபோர்டோ வளாகமும் ஒரு முக்கியப் பகுதியாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். "இந்த முழு நடவடிக்கையும்… ஃபோர்டோவை முற்றிலும் நீக்குவதன் மூலம் முழுமை பெறும்" என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் யெச்சியல் லீட்டர் வெள்ளிக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு தெரிவித்தார். ஆனால் எம்ஓபி வெடிகுண்டை தனியாக பயன்படுத்துவதற்கான திறன் இஸ்ரேலிடம் இல்லை. மேலும், அமெரிக்கா நேரடியாக ஈடுபடாமல் அதற்கு அனுமதி அளிக்காது என்று பேராசிரியர் ரோஜர்ஸ் குறிப்பிட்டார். "நிச்சயமாக, இஸ்ரேலியர்கள் தனியாக இதைச் செய்ய அமெரிக்கா அனுமதிக்காது. மேலும் இத்தனை பெரிய அளவில் ஊடுருவும் வெடிகுண்டுகளும் இஸ்ரேலிடம் இல்லை" என்று அவர் கூறினார். அமெரிக்கா இந்த வெடிகுண்டை பயன்படுத்துமா என்பது, குறிப்பாக அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமையின் கீழ், அந்த நாடு தங்களது ஈடுபாட்டை அதிகரிக்க தயாரா என்ற விருப்பத்தைப் பொறுத்தது. "இஸ்ரேலுக்கு முழுமையாக ஆதரவளிக்க டிரம்ப் தயாராக உள்ளாரா என்பதைப் பொறுத்தது" என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ். கனடாவில் நடைபெற்ற G7 மாநாட்டில், அமெரிக்கா ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு என்ன தேவைப்படும் என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை"என்று டிரம்ப் பதில் அளித்தார். ஏபிசி நியூஸுடன் நடைபெற்ற சமீபத்திய நேர்காணலில், ஃபோர்டோ மீதான தாக்குதலில் அமெரிக்கா ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தூதர் லீட்டரிடம் கேட்கப்பட்டது. இஸ்ரேல், அமெரிக்காவிடம் தற்காப்பு உதவியை மட்டுமே கேட்டுள்ளது என்று அவர் பதில் கூறினார். "எங்களிடம் பல திட்டங்கள் உள்ளன. அவை ஃபோர்டோவை சமாளிக்க எங்களுக்கு உதவும்," என்று அவர் குறிப்பிட்டார். "எல்லா விஷயங்களும் வானத்தில் பறந்து தூரத்திலிருந்து குண்டு வீசுவது போன்றவை அல்ல," என்றும் அவர் கூறினார். எப்போதுமே தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதியானது என்றும் அணு ஆயுதத்தை உருவாக்க அவர்கள் எப்போதும் முயற்சி செய்யவில்லை என்றும் இரான் கூறி வருகிறது. ஆனால் கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் 35 நாடுகளைக் கொண்ட நிர்வாக குழு, 20 ஆண்டுகளில் முதல் முறையாக இரான் தனது அணுசக்திப் பரவல் தடைகளை மீறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானில் ராணுவ ரீதியாக தலையிட அமெரிக்காவிற்கு என்ன தேவை என்று கனடாவில் நடந்த G7 கூட்டத்தில் டிரம்பிடம் கேட்டபோது, 'நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை' என்று அவர் கூறினார். 'கேம் சேஞ்சர்' சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, "ஆழமாக புதைக்கப்பட்ட இரானின் அணுசக்தி நிலையங்களை சேதப்படுத்துவதில் இஸ்ரேல் எந்த வகையிலும் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு குறைவு தான்" என்று பேராசிரியர் ரோஜர்ஸ் நம்புகிறார். "தங்களால் செய்ய முடியாத விஷயத்தைச் செய்ய, இஸ்ரேலுக்கு எம்ஓபி போன்ற சக்திவாய்ந்த ஒரு வெடிகுண்டு தேவைப்படும்," என்று அவர் கூறினார். "ஃபோர்டோ தளம் செயல்பாட்டில் இருக்கும் வரை, இரான் அணு ஆயுதம் தொடர்பான அபாயத்தை ஏற்படுத்தும் நிலைமையில் தான் இருக்கிறது. டெஹ்ரானுக்கு, அந்த தளத்தில் செறிவூட்டலை அதிகரிக்கவோ அல்லது யுரேனியத்தை வேறு இடத்துக்கு மாற்றவோ வாய்ப்பு இருக்கிறது" என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் அணுசக்தி பரவல் தடுப்பு கொள்கைக்கான இயக்குநர் கெல்சி டேவன்போர்ட் கூறுகிறார். எம்ஓபி பயன்படுத்தப்பட்டாலும், இரானின் அணு ஆயுதத் தளங்கள் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றன, எவ்வளவு பாதுகாப்பாக உள்ளன என்பது தெரியாததால், இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினால் வெற்றி கிடைப்பதற்கும் உத்தரவாதம் இல்லை என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார். "தற்போது உள்ள எந்த ஆயுதத்தையும் விட, இரானின் நிலத்தடியில் ஆழமாக உள்ள அணுசக்தி திறன்களை சேதப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு இந்த ஆயுதத்திடமே உள்ளது. ஆனால் அதைச் செய்ய முடியுமா என்பது யாருக்குத் தெரியும்!" என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cew0lwxwx02o
  18. 18 JUN, 2025 | 09:29 AM நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (17) காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் வியாழக்கிழமை (26) தொடங்கி அடுத்த மாதம் வெள்ளிக்கிழமை (11) ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. அனைத்து பக்தர்களும் சிறப்பான முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீ நாக பூசணி அம்பாளை தரிசிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டடுள்ளது. மேலும், கடந்த வருட திருவிழா ஏற்பாடுகளில் கற்றுக் கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உயர் திருவிழாவினை மேலும் சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்கவும் என்றார். இக் கலந்துரையாடலில் பின்வரும் ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டன நயினாதீவில் மூழ்கிய கடற்பாதையினால் ஏற்பட்டுள்ள கடற் போக்குவரத்துக்கு இடையூறை தவிர்ப்பதற்காக ஒரு பகுதியை கடற்படையின் ஒத்துழைப்புடன் அகற்றுதல் குடிநீர் தேவைப்பாடுகள் ; ஆலயத்திற்குவரும் பக்தர்கள், அமுதசுரபி மண்டபம் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையத்திற்கான தேவையான அளவு குடிநீர்களை சீராக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வழங்குதல் பாதுகாப்பிற்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் ; அதாவது சப்பறத் திருவிழா வரை 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும், சப்பறம், தேர், தீர்த்தம் மற்றும் பூங்காவன உற்சவங்கள் வரை மேலும் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சேவையில் ஈடுபடுத்தல். பக்த்தர்கள் அணிந்துவரும் நகைகளுக்கு அவர்களே பொறுப்பு என அறக்காவலர் சபையால் முன்கூட்டியே அறிவித்தல் வழங்குதல். ஆலயத்திற்கு அருகிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை யின் வீதியினை நிரந்திமாக புனரமைப்பதற்கு முன்பாக தற்காலிகமாக சீர் செய்தல். முதல் தடவையாக தீவகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சாரணர்களின் சேவைகள் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை இலங்கை போக்குவரத்துச் சபையூடாக மேற்கொள்தல். திருவிழாக் காலங்களில் வழமைபோல் யாழ் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை காலை 5.30 மணிக்கு ஆரம்பமாதல் மற்றும் விசேட திருவிழாவான சப்பறம், தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களில் காலை 4.30 மணியிலிருந்து ஆரம்பமாகும் ஒவ்வொரு அரை மணித்தியாலங்களுக்கும் சேவை இடம் பெறவும் ஒழுங்குப்படுத்தல். குறிகட்டுவானில் இருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 80 ரூபாய் அறவிடுதல். அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நேரத்திற்கமைய தனியார் போக்குவரத்து மற்றும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை நடைபெறவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுதல். திருவிழா காலங்களில் நயினாதீவு கிராமங்களில் திருடர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடமாடும் சேவையினை ஈடுபடுத்தல். யாசகம் பெறுவோர் மற்றும் சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுத்துவதை கண்காணிப்பதற்கு ஒரு நாளைக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற அடிப்படையில் அங்கு கடமையாற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் உள்ளடங்கியவகையில் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தல். குறிகட்டுவான் துறைமுகத்தின் உள்நுழைவு வரை வாகனங்கள் தரித்து நிற்பதனை தடுத்தல். ஆலயத்திற்கு முன்பாகவுள்ள கடைகளை அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வேறு பொருத்தமான இடத்தில் மாற்றுதல். நயினாதீவுக்கு 24.06.2025 ஆம் திகதி முதல் 12.07.2025 ஆம் திகதி வரை கட்டடப்பொருட்களை குறிப்பாக கல் மற்றும் மணல் என்பவற்றை எடுத்துச் செல்வது முற்றாக தடைசெய்வதல். தொடர்ந்து எதிர்காலத்தில் கட்டடப் பொருட்களை நயினாதீவு வங்களாவடி துறைமுகத்தின் ஊடாக கொண்டு செல்வதற்கு ஏதுவாக பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள ம், வீதி அபிவிருத்தி அதிகாரசபைய, படகுச் சங்கம், ஆலய அறக்காவலர் சபையினர் மற்றும் பொது அமைப்புகள் ஆய்வு செய்து இறுதி தீர்மானம் எடுத்தல். நயினாதீவில் மதுபான விற்பனையினை மதுவரித்திணைக்களம் நடமாடும் சேவையூடாக கண்காணிப்பது எனவும், விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கைகளை எடுத்தல். பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்தல். அமுதசுரபி அன்னதான சபையினால் மதிய உணவு இரவு உணவு வழங்குதல். மேலும், வைத்திய சேவை, சுகாதாரம், மின்சாரத் தேவை, அம்புலன்ஸ் சேவை, இலங்கை செஞ்சிலுவை மற்றும் சென் ஜோன்ஸ் படையினர் சேவை உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, நாகபூஷணி அம்மன் ஆலயம் அறங்காவலர் சபைத் தலைவர் பரமலிங்கம், வேலணை பிரதேச செயலாளர் சிவகரன், சுகாதார வைத்திய அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், கடற்படை அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மதுவரித் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/217773
  19. 18 JUN, 2025 | 09:23 AM அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரின் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரும் பணியாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் செவ்வாய்க்கிழமை (17) கைதுசெய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட வைத்தியர் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் பிரபல நரம்பியல் நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன ஆவார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தகவல்படி, வைத்தியர் மகேஷி விஜேரத்னவும் மற்றைய நபரும் சில மருந்து வகைகளை தமது தனியார் மருத்துவ நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு அதிக விலைக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நோயாளிகளுக்கு ரூபா 30 மில்லியன் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217771
  20. காமனெயி, அணுசக்தி திட்டம்: இரானில் இஸ்ரேலின் உண்மையான இலக்கு எது? கட்டுரை தகவல் எழுதியவர், லைஸ் டூசெ பதவி, தலைமை சர்வதேச செய்தியாளர் 18 ஜூன் 2025, 01:55 GMT புதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர் வெள்ளியன்று இரான் மீது எதிர்பாராத வகையில் தாக்குதல்களை நடத்திய பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரடியாக இரானிய மக்களுக்கு உரையாற்றினார். ஆங்கிலத்தில் பேசிய அவர், "கொடிய மற்றும் அடக்குமுறை ஆட்சிக்கு" எதிராக நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனத் தெரிவித்தார். இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள், "நீங்கள் சுதந்திரத்தை அடைவதற்கான பாதையை தெளிவுபடுத்தியுள்ளது" என கூறியுள்ளார். தற்போது இரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்து, இலக்குகளும் பரவலாகி வரும் நிலையில், இஸ்ரேலின் உண்மையான இலக்கு தான் என்ன என பலரும் கேட்கின்றனர். இவை, முதல் தாக்குதல்கள் நடந்த வெள்ளியன்று நெதன்யாகு கூறியதைப் போல, "இரானின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுற்றுதல்களை" முடிவுக்குக் கொண்டு வருவது மட்டும் தானா? பொருளாதார தடைகளை நீக்குவதற்கு மாற்றாக, இரானின் அணுசக்தி திறன்களை கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வருவதும் அவரது இலக்கில் உண்டா? அல்லது சுதந்திரத்துக்கான பாதையை தெளிவுபடுத்தியதாக இரானிய மக்களிடம் கூறிய செய்தி, இரானில் மதகுரு ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் பெரிய நோக்கமும் அதில் உள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது நெதன்யாகுவின் திட்டங்களை அறிந்தவர்கள் யார்? இஸ்ரேலில் நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமரின் அரசியல் வாழ்க்கை, இரானிய இஸ்லாமியக் குடியரசால் வரப்போகும் ஆபத்துகளை உலகுக்கு எச்சரிக்கும் அவரின் தனிப்பட்ட இலக்கால் உந்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அவர் காட்டிய குண்டுகள் அடங்கிய பெட்டியில் தொடங்கி, கடந்த 20 மாதங்களாக எரிந்துக் கொண்டிருக்கும் பிராந்திய போரால் ஐ.நாவுக்கு செல்லாமல் தவிர்த்தது வரை இரான் தான் அனைத்தையும் விட மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது தான் அவரின் இலக்காக உள்ளது. கடந்த சில வருடங்களில் பல முறை இரானின் அணுசக்தி தளங்கள் மீது ராணுவ தாக்குதல்களுக்கு நெதன்யாகு உத்தரவிடாமல் அமெரிக்க அதிபர்களும், அவரின் சொந்த தளபதிகளுமே தடுத்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் அனுமதி வழங்கவில்லை எனக் கூறுகிறார். ஆனால் அத்தகைய ஒரு சிறு சமிக்ஞை கூட போதுமானதாக இருக்கும். "தற்போது அவர் மோதலை தொடங்கிவிட்டதால், அதில் முழுவதுமாக இறங்கிவிடுவார்" என நெதன்யாகுவின் திட்டத்தை ஒரு மேற்கத்திய அதிகாரி விவரித்தார். இஸ்ரேலின் முதன்மையான நோக்கம் இரானின் அணுசக்தி திட்டத்தை முடக்க வேண்டும் என்பது தான் என்கிற பார்வையையும் அவர் குறிப்பிட்டு காட்டுகிறார். இந்த முடிவு பல்வேறு நாடுகளாலும், சர்வதேச அணு சக்தி முகமையாலும் கண்டிக்கப்பட்டுள்ளது. அதன் இயக்குநர் ஜெனரல், "எந்தச் சூழலிலும் அணுசக்தி நிலையங்கள் தாக்கப்படக் கூடாது என்பதை நான் பலமுறை கூறியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டங்களின் கீழ் இது சட்டவிரோதமானது என வாதிடும் சட்ட வல்லுநர்களாலும் இது கண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பலரும் இஸ்ரேல் பிரதமர் அவரின் ஆலோசகர்கள் மற்றும் கூட்டாளிகள் பின் தொடரும் அதே இலக்குகளைத் தான் கொண்டுள்ளாரா எனக் கேட்கின்றனர். பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலுக்கு தான் ஒப்புதல் வழங்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். "நெதன்யாகு தனிப்பட்ட முறையில் ஆட்சி மாற்றத்தின் மீது இலக்கு வைத்துள்ள நிலையில், இஸ்ரேலின் அரசியல் மற்றும் ராணுவ கட்டமைப்பு இரானின் அணுசக்தி திட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதிலே குறியாக இருக்கின்றது" என்கிறார் சாத்தம் ஹவுஸ் ஆய்வு நிறுவனத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா திட்டத்தின் இயக்குநரான முனைவர் சனம் வகில். இரண்டாவது இலக்கு கடினமானதாக இருக்கலாம், ஆனால் எட்டக்கூடியது தான் என்று கூறும் அவர், "முதல் இலக்கு, இத்தகைய குறுகிய மற்றும் தீவிரமான மோதலில் எட்டுவது கடினம்" என்றார். இரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பது தான் நோக்கமா? இஸ்ரேலின் நடவடிக்கைகளை, தனது இருப்புக்கான அச்சுறுத்தல்களை அழிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற தோற்றத்தை வழங்க நெதன்யாகு முயல்கிறார். இரானின் பதில் தாக்குதல்கள், அணு குண்டு தயாரிப்பதற்கான கடைசிப்படி எனப் பிரகடனப்படுத்துகிறார் நெதன்யாகு. இரான், அணு ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்கிற இவரின் பிரகடனத்தை மேற்கத்திய கூட்டாளிகளும் வழிமொழிகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் நெதன்யாகுவின் அவசரமும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. அணு குண்டு தயாரிக்கும் திட்டம் தன்னிடம் இல்லை என இரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. கடந்த மார்ச் மாதம், அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநரான துள்சி கப்பார்ட், 'இரான் அணுகுண்டு தயாரிக்கவில்லை' என்பதை அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன எனத் தெரிவித்திருந்தார். சர்வதேச அணுசக்தி முகமையும் (ஐஏஇஏ) அதனுடைய காலாண்டு அறிக்கையிலும் இரான் 60% தூய்மை கொண்ட யுரேனித்தை சேகரித்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது. இது 9 அணு குண்டுகளை தயாரிப்பதற்குத் தேவையான 90% தூய்மை வாய்ந்த ஆயுத ரகத்தை விட தொழில்நுட்ப ரீதியில் சற்று குறைவாகவே உள்ளது. முதல் சில நாட்களில் நடான்ஸ், இஸ்ஃபஹான் மற்றும் ஃபோர்டோவ் என்கிற இரானின் 3 முக்கிய நிலைகள் குறிவைக்கப்பட்டுள்ளன. நடான்ஸில் விமான எரிபொருள் செறிவூட்டல் ஆலை அழிக்கப்பட்டது என ஐஏஇஏ தெரிவித்துள்ளது. இஸ்ஃபஹானில் உள்ள நான்கு "முக்கியமான கட்டடங்களும்" சேதமடைந்துள்ளதாக ஐஏஇஏ தெரிவித்துள்ளது. இரானுக்கு ஏற்பட்ட சேதம் "மிகப்பெரியது" என இஸ்ரேல் கூறும் நிலையில், அவை மிகவும் குறைவானவை என இரான் தெரிவித்துள்ளது. தற்போது வரை 9 அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தளபதிகளைக் கொன்றதன் மூலம் இரானின் "அறிவு ஆதாரங்களை" இஸ்ரேல் தாக்குகிறது. ராணுவ நிலைகள், ஏவுகணை ஏவும் தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளை உள்ளடக்கிய இஸ்ரேலின் இலக்குகள் தற்போது பொருளாதாரம் மற்றும் எண்ணெய் வளங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இரானும் தனது தாக்குதல் இலக்குகளை விஸ்தரித்து வருகிறது. இதனால், இருநாடுகளிலும் பொது மக்கள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES/ GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் மிகப்பெரிய மற்றும் பாதுகாக்கப்பட்ட இடமான ஃபோர்டோவ் ஆனால், இரானின் அணுசக்தி திட்டத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமென்றால், இரானின் மிகப்பெரிய மற்றும் பாதுகாக்கப்பட்ட இடமான ஃபோர்டோவுக்கு இஸ்ரேல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும். ஒரு மலைக்கு கீழே பாதாளத்தில் அமைந்துள்ள வளாகத்தில், இரான் அணுஆயுதம் தயாரிப்பதற்கு நெருக்கமான, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தேக்கி வைத்திருப்பதாக வல்லுநர்கள் நம்புகின்றனர். இஸ்ரேலின் தற்போதைய நோக்கம் அதனை இரானுக்கு கிடைக்க விடாமல் செய்ய வேண்டும் என்பது தான் என இஸ்ரேலிய ஊடகங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிக அளவிலான பாறைகளை ஊடுருவிச் சென்று ஆழமான இடங்களை அழிக்கும் குண்டுகள் இஸ்ரேலிடம் இல்லை. ஆனால், அமெரிக்க விமானப் படையிடம் உள்ளது. இவை எம்.ஒ.பி என அழைக்கப்படுகின்றன. இவை, மேசிவ் ஆர்ட்னன்ஸ் பெனிட்ரேட்டர் (Massive Ordnance Penetrator) என அழைக்கப்படும். பெரிய பாதிப்பு ஏற்படுத்த வேண்டுமென்றால் பல நாட்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட வேண்டும். "நெதன்யாகு டிரம்பை அழைத்து 'நான் இதையெல்லாம் செய்துவிட்டேன், பி-2 விமானங்களுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை நான் உறுதி செய்துவிட்டேன். ஆனால், என்னால் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாது' எனக் கூறுவது தான் சாத்தியமான சூழ்நிலையாக இருக்கும்" எனத் தெரிவிக்கிறார், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள உலகளாவிய எரிசக்தி கொள்கைக்கான மையத்தில் உள்ள முன்னாள் அமெரிக்க அதிகாரியும் இரான் நிபுணருமான ரிச்சர்ட் நெப்யூ. "அதிபர் டிரம்ப் எந்த பக்கம் சாய்வார் எனத் தெளிவாக தெரியாது" என மேற்கத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க திட்டமா? டிரம்ப் முன்னும் பின்னுமாக நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இரானை ராணுவ ரீதியாக மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலை வலியுறுத்தினார். ஏனென்றால் தாக்குதல் என்பது டிரம்ப் அதிகம் விரும்பும் இரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும். ஆனால், இஸ்ரேல் தாக்கிய பிறகு, அந்த தாக்குதல்களை "சிறப்பானது" என்று பாராட்டியவர் "இனி அதிகம் வரப்போகிறது" என்றும் எச்சரித்திருந்தார். ஆனால், இவை ஒப்பந்தத்தை நோக்கி இரானை நகர்த்தும் என்றும் அவர் கூறுகிறார். இதன் பிறகு ஞாயிறன்று அவரின் ட்ரூத் சோசியல் தளத்தில், "நாம் விரைவில் இஸ்ரேல் - இரான் இடையே அமைதியை நிலைநாட்டுவோம். பல அழைப்புகளும் சந்திப்புகளும் தற்போது நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார். ஞாயிறன்று ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை, இஸ்ரேல் உடனடியாக தாக்குதல் நடத்தாது என்று இரானை நம்ப வைப்பதற்கான சதித்திட்டம் தான் என இரான் சந்தேகிக்கிறது. வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இரானை ராணுவ ரீதியாக மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலை வலியுறுத்தினார் டிரம்ப். மற்றவர்கள் இந்த நேரத்தை முக்கியமானதாகப் பார்க்கின்றனர். "இஸ்ரேலின் எதிர்பாராத தாக்குதல்கள் இரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளும் அதிபர் டிரம்பின் சாத்தியங்களை இல்லாமல் ஆக்கவே திட்டமிடப்பட்டவை" என்கிறார் வெளியுறவுக்கான ஐரோப்பிய கவுன்சிலில் உள்ள மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா திட்டத்தின் துணைத் தலைவரான எல்லி ஜெரன்மாயே. "சில இஸ்ரேலிய அதிகாரிகள், இந்தத் தாக்குதல்கள் ராஜாங்க பாதையில் அமெரிக்க தரப்பை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது என வாதிடுகின்றனர், ஆனால் அதன் நேரமும் அளவும் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க வேண்டும் என்பதற்கானது தான் என்பது தெளிவாக உள்ளது" என்றார் அவர். "ஒரு ஒப்பந்தம் எட்டும் தூரத்தில் தான் இருந்தது" என இந்தப் பேச்சுவார்த்தைகளில் தொடர்புடைய அதிகாரிகள் கடந்த வாரம் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் இவை அனைத்தும், இரான் ஆக்கப்பூர்வ சிவில் திட்டங்களுக்கானதாக இருந்தாலும் ஒற்றை இலக்க அளவில் கூட யுரேனியம் செறிவூட்டலை மேற்கொள்ளக் கூடாது என்ற உச்சபட்ச கோரிக்கையில் இருந்து அமெரிக்கா எவ்வளவு தூரம் இறங்கி வருகிறது என்பதைப் பொறுத்து தான். இரான் இதனை ஏற்க கூடாத ஒன்றாக கருதுகிறது. டிரம்ப் தனது முதல் ஆட்சியில் நெதன்யாகுவின் இடைவிடாத கோரிக்கைகளுக்கு இணங்க 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு, இரான் 3.67% (அணு மின் நிலையங்களுக்கான எரிபொருளை தயாரிக்கக்கூடிய அளவு) என்கிற அளவில் மட்டுமே அதன் யுரேனியம் செறிவூட்டல் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டில் இருந்து விலகியது. தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ள இரானுக்கு 60 நாட்கள் கெடு விதித்தார் டிரம்ப். இந்த விவகாரத்தில் அனுபவம் வாய்ந்த மத்தியஸ்தர்கள், இத்தகைய சிக்கலான விவகாரத்துக்கு இது மிகவும் குறைவான காலகட்டம் என உணர்ந்தனர். 61வது நாளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. பேச்சுவார்த்தைக்கான பாதை தற்போது இல்லாமல் போய் விட்டது எனக் கூறும் வகில், "பதற்றத்தைத் தணிக்க பிராந்திய அளவிலான முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன" என்றார். நெதன்யாகு என்ன மனநிலையில் உள்ளார்? தற்போது அதிகரித்துள்ள பதற்றம் அணுசக்தி கையிருப்புகள், சூப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பற்றியது அல்ல என இரான் நம்புகிறது. "இவை, ஒரு நாடாக இரானின் திறன்களை அதன் ராணுவ வலிமையை குறைத்து இரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான அதிகார சமநிலையை வெகுவாகக் குறைத்து, முடிந்தால் இஸ்லாமியக் குடியரசு ஆட்சியை மொத்தமாக கவிழ்ப்பதற்கான இஸ்ரேலின் திட்டம் என்றே இரான் பார்க்கிறது" என்கிறார், இரான்ஸ் கிராண்ட் ஸ்ட்ராடஜி புத்தகத்தின் ஆசிரியரும் சர்வதேச விவகாரங்களுக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பள்ளியில் மத்திய கிழக்கு படிப்புகள் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பேராசிரியருமான வலி நஸ்ர். ஆனால், இரான் பொதுமக்கள் இதற்கு எவ்வாறு பதில் அளிப்பார்கள் என்பது தெளிவாக இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல வருடங்களாக சர்வதேச தடைகள் மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஊழலால் தவித்து வருகின்றனர் இரானிய மக்கள் 9 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த நாடு பல வருடங்களாக சர்வதேச தடைகள் மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஊழலால் தவிக்கிறது. விலைவாசி உயர்வு தொடங்கி வேலையில்லா திண்டாட்டம், தண்ணீர் மற்றும் மின்சார தட்டுப்பாடு மற்றும் பெண்களை கண்காணிக்கும் கலாசார காவலர்கள் வரை இரானில் பல விவகாரங்களில் போராட்டங்கள் ஒவ்வொரு வருடமும் தொடங்கி மறைந்திருக்கின்றன. 2022-ல் அதிக சுதந்திரம் வேண்டி எதிர்பாராத அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன. அவையெல்லாம் கடுமையான முறையில் கட்டுப்படுத்தப்பட்டன. தற்போது பொது மக்களின் மனநிலையை ஆய்வு செய்துள்ளார் நஸ்ர். "தொடக்கத்தில் பிரபலமில்லாத நான்கு, ஐந்து தளபதிகள் கொல்லப்பட்ட போது ஒரு விதமான நிம்மதியுணர்வு இருந்தது. ஆனால் தற்போது குடியிருப்பு கட்டடங்கள் தாக்கப்பட்டு, பொதுமக்கள் கொல்லப்படுகிறர்கள், நாட்டின் எரிசக்தி மற்றும் மின் கட்டமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன" "பெரும்பாலான இரானியர்கள் தங்கள் நாட்டின் மீது குண்டுகளை ஏவி வரும் ஆக்கிரமிப்பாளர் வசம் சாய்ந்து அதனை விடுதலையாகப் பார்க்கும் சூழ்நிலை இருப்பதாக எனக்கு தெரியவில்லை" என்றார். ஆனால், நெதன்யாகுவின் கூற்றுகள் பரவலான தாக்குதலைப் பற்றியே உள்ளன. பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு,எதிர்காலத்தில் அமெரிக்காவால் மட்டுமே இதனை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்றார் டேனியல் லெவி. சனிக்கிழமை, ஆயதுல்லா அலி காமனெயி அரசின் அனைத்து இடங்களையும், இலக்குகளையும் குறிவைத்து தாக்குவோம் என அவர் எச்சரித்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் ஆட்சி மாற்றம் ஒரு அங்கமாக இருக்கிறதா என்கிற கேள்விக்குப் பதிலளித்த இஸ்ரேல் பிரதமர், "அது சாத்தியமான முடிவாக இருக்கும், ஏனென்றால் இரான் அரசு மிகவும் பலவீனமாக உள்ளது" என்றார். "நாட்டின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என்கிற அரசின் அச்சத்தை உளவியல் போர் தந்திரத்தின் ஓர் அங்கமாக இஸ்ரேல் கையாளப் பார்க்கிறது" என்கிறார் நெதன்யாகு வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் ஆசிரியரும், தி எகனாமிஸ்டின் இஸ்ரேல் செய்தியாளருமான அன்ஷெல் பிஃபர். "இரான் அரசின் வீழ்ச்சியை யூகிப்பதோ அல்லது தூண்டுவதோ அர்த்தமற்றது என்பது இஸ்ரேல் உளவு அமைப்பின் ஒருமித்த எண்ணமாக உள்ளது. இது உடனடியாக நடக்கலாம் அல்லது 20 வருடங்களிலும் நடக்கலாம்" என்றார். ஆனால், நெதன்யாகுவின் எண்ணம் வேறாக இருக்கலாம் என பிஃபர் நம்புகிறார். "'தாம் திடமான நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக, நெதன்யாகு நம்பும் மனநிலையில் இருக்கும் சாத்தியங்கள் அதிகம்" என அவர் தெரிவித்தார். அளவில் சிறிய இஸ்ரேல், பெரிய நாடான இரானுடன் மோதுவது எப்படி சாத்தியமாகிறது? - அதிநவீன போர் தளவாடங்கள் கிடைப்பது எப்படி? இஸ்ரேலின் ஹைஃபா நகரை இரான் குறி வைப்பது ஏன்? இந்தியாவுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? நண்பர்கள் எதிரிகளானது எப்படி? இஸ்ரேல் - இரான் மோதல் பற்றிய 10 கேள்விகளும் பதில்களும் ஞாயிற்றுக்கிழமை இரவில், இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை கொல்லும் இஸ்ரேலின் திட்டத்தை அதிபர் டிரம்ப் நிராகரித்துவிட்டார் என ஒவ்வொரு அமெரிக்க ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ராய்ட்டர்ஸ் இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்ட போது இந்தப் பேச்சு தொடங்கியது. இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியன் முதல் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் ட்ஸச்சி ஹனெக்பி வரை முக்கிய தலைவர்கள் பலரும் தங்களது இலக்கு இரானின் அரசியல் தலைமை இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனால், இந்த தருணம் என்பது குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடியது என்று ஹனெக்பி மேலும் கூறினார். ஆபத்தான சண்டை மற்றும் கணிக்க முடியாத அமெரிக்க அதிபர் டிரம்பால்தான் இதன் முடிவு தீர்மானிக்கப்படும். "இதன் வெற்றி அல்லது தோல்வி என்பது இதற்குள் அமெரிக்காவை இழுக்க முடியுமா என்பதைப் பொறுத்து தான் உள்ளது" என்கிறார், அமெரிக்காவின் மத்திய கிழக்கு திட்ட தலைவரும் இஸ்ரேல் அரசின் முன்னாள் ஆலோசகருமான டேனியல் லெவி. "எதிர்காலத்தில் அமெரிக்காவால் மட்டுமே இதன் முடிவுகளை தீர்மானித்து, இந்த சண்டையை ஒரு நிறுத்தத்துக்குக் கொண்டு வர முடியும்" என்று அவர் கூறினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce371gq2kv6o
  21. எந்த காரணத்துக்காகவும் செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்படக் கூடாது - யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் 18 JUN, 2025 | 11:20 AM செம்மணிப் புதைகுழி விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதுடன், புதைகுழிகளின் நீட்சி அறியப்பட வேண்டும். எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக் கூடாது என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் இன முரண்பாடு தோன்றிய பின்னர் சிறுபான்மை இன மக்கள் பல வழிகளிலும் பாதிப்புகளை எதிர்கொண்டனர். அவ்வப்போது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இனக் கலவரங்களால் சிறுபான்மை இனத்தவர்கள் குறிப்பாகத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் அநியாயமாகக் கொல்லப்பட்டதுடன் பெறுமதி மிக்க சொத்துக்களும் சூறையாடப்பட்டன. இன முரண்பாடு என்பது உருமாற்றம் பெற்று ஆயுதப் பிணக்காக மாற்றமுற்ற போது பல்வேறு வழிகளிலும் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. படுகொலைகள். சந்தேகத்தின் பெயரிலான கைதுகள், காலவரையறையற்ற தடுப்புகள், விசாரணையற்று அல்லது விசாரணை முடிவுறுத்தப்படாது திட்டமிட்டு இழுத்தடிப்புச் செய்யப்பட்ட சிறைவாசம், காணாமலாக்கப்படுதல் என்றவாறாக அடக்குமுறைகளின் வடிவங்கள் நீண்ட பட்டியலைக் கொண்டன. தமிழர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைகளில் அதிகம் கவனம் கொடுக்கப்படும் விடயங்களாக இன்று வரை இருப்பவை சட்டத்தின் பிடியால் இறுக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் தடுத்து வைப்பும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த நிச்சயமற்ற தன்மையுமே. இவற்றுள்ளும் அதிக வலியையும் வேதனையையும் தருபவை காணாமலாக்கப்பட்டவர்களின் கதைகளே. இவ்வாறானதொரு விடயப்பரப்பாக செம்மணிப் புதைகுழி விவகாரமும் விளங்குகின்றது. ஆயினும் தொடர்ந்தும் கைவிடப்படும் விடயமாக இனியும் இது மாறிவிடக்கூடாது எனும் அக்கறையை யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினராகிய நாம் வலுவாகப் பதிவு செய்கின்றோம். இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணக் குடாநாடு இருந்தபோது காணாமல் ஆக்கப்பட்ட பலருக்கு இன்று வரை என்ன நடந்தது என்பது தெரியாத அவலநிலை தொடர்கின்றது. இந்த நிலையே இறுதிப் போரின் போதும் நிகழ்ந்துள்ளது. அவர்களது உறவினர்கள் பல்லாண்டுகளாக தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள். போருக்குப் பின்னரான சூழ்நிலையில் யார் எந்த வலுவான சத்தியும் இயற்கை நீதிக்கு மாறாக நிகழ்ந்த அவலங்களை மறைக்க நினைத்தாலும் அவை ஏதோவொரு விதத்தில் வெளிக்கிளம்பிய வண்ணமேயுள்ளன. செம்மணிப் புதைகுழி விவகாரமும் இப்போது அவ்வாறு வெளிக்கிளம்பி நீதித்துறையின் கட்டுப்பாட்டில் உரிய வகையில் முன்கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலை வலுவாக்கப்படவேண்டும் என்பதுடன் புதை குழிகளின் நீட்சி அறியப்படவும் வேண்டும் என்பதும் மிகவும் அவசியமானது. எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக்கூடாது. உரிய நிதியை உரிய காலத்தில் விடுவித்தல், புதைகுழி அகழ்வுப் பிரதேசங்களுக்கு உரிய பொலிஸ் பாதுகாப்பினை வழங்குதல், அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் தரப்பினர் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்காதிருத்தல் என்பன அவசியமானவையென எமது ஆசிரியர் சங்கம் கருதுகின்றது. இவ்விடயங்களில் எந்தவித நெகிழ்வுமற்று செயற்படவேண்டிய பொறுப்பு ஆட்சியிலுள்ள அரசாங்கத்துக்குரியது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217792
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மட் மர்ஃபி, தாமஸ் ஸ்பென்சர் & அலெக்ஸ் முர்ரே பதவி, பிபிசி வெரிஃபை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 3 நாட்களில் அமெரிக்க தளங்களில் இருந்து குறைந்தது 30 அமெரிக்க ராணுவ விமானங்கள், ஐரோப்பாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பிபிசி வெரிஃபையால் ஆராயப்பட்ட விமான கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விமானங்கள் அனைத்தும் போர் விமானங்கள் மற்றும் வானிலிருந்து குண்டுகளை வீச பயன்படுத்தப்படும் விமானங்களுக்கு (bombers) வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் டேங்கர் விமானங்களாகும். இவற்றில் கேசி-135 (KC-135) வகையை சேர்ந்த குறைந்தது 7 விமானங்கள், ஸ்பெயின், ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்க தளங்களில் சிறிது நேரம் நின்று சென்றன. கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறிவருகிறது. இந்த பின்னணியில் தான் அமெரிக்க போர் விமானங்களின் நகர்வு நடந்துள்ளது. அமெரிக்க போர் விமானங்கள் இடம்பெயர்ந்துள்ளதற்கும் இந்த மோதலுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், பிபிசி வெரிஃபையிடம் பேசிய நிபுணர் ஒருவர், டேங்கர் விமானங்களின் இடப்பெயர்வு "மிகவும் வழக்கத்துக்கு மாறானது" என்றார். எதற்காக இந்த நடவடிக்கை? ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட் (Rusi) எனும் சிந்தனை மையத்தை சேந்த மூத்த ஆய்வாளர் ஜஸ்டின் பிராங்க் கூறுகையில், அப்பிராந்தியத்தில் வரும் வாரங்களில் ஏற்படும் "தீவிரமான எதிர் நடவடிக்கைகளுக்கான" அவசரகால திட்டங்களை தயார் நிலையில் வைப்பதற்காக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என தோன்றுவதாக தெரிவித்தார். பிபிசி வெரிஃபையால் கண்காணிக்கப்பட்ட 7 விமானங்களும் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு பின்னர், செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி சிசிலிக்கு கிழக்கே பறந்ததை விமான கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. அவற்றில், 6 விமானங்கள் எங்கு சென்றன என்பது தெரியவில்லை, ஒரு விமானம் கிரேக்கத் தீவான க்ரீட்டில் தரையிறங்கியது. அயர்லாந்து பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைவர், வைஸ் அட்மிரல் மார்க் மெல்லெட் கூறுகையில், "இரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் தனக்கு அனுகூலத்தை ஏற்படுத்துவதற்கான வியூக ரீதியான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இருக்கலாம்" என்றார். கடந்த வெள்ளிக்கிழமை, இரானிய அணுசக்தி கட்டமைப்பின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தித் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்கு வழங்கிய காலக்கெடுவுக்கு மறுநாள் இந்த தாக்குதல் தொடங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES மத்திய கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த போர்க்கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (USS Nimitz) எனப்படும் தன்னுடைய விமான தாங்கிக் போர்க்கப்பலை தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி அமெரிக்கா இடம்பெயரச் செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, போர் விமானங்களின் இடம்பெயர்வு நிகழ்ந்துள்ளது. இந்த விமான தாங்கிக் போர்க்கப்பல் சார்ந்து வியட்நாமில் திட்டமிடப்பட்ட நிகழ்வு ஒன்று ரத்து செய்யப்பட்டது, "அவசர நடவடிக்கை தேவைகளுக்காக" அந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக ஹனோயில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. யுஎஸ்எஸ் நிமிட்ஸ் கடைசியாக, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மலாக்கா நீரிணையில் சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததை கப்பல் கண்காணிப்பு இணையதளமான மெரைன்டிராஃபிக் காட்டுகிறது. நிமிட்ஸ் கப்பலில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளன, ஏவுகணை தாக்குதல் நடத்துவற்கென வடிவமைக்கப்பட்ட போர்க் கப்பல்களும் அதன் பாதுகாப்புக்காக உடன் செல்கின்றன. F-16, F-22 மற்றும் F-35 ஆகிய போர் விமானங்களையும் மத்திய கிழக்கில் உள்ள தளங்களுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாக, பாதுகாப்பு அதிகாரிகள் 3 பேர் கூறியதாக, செவ்வாய்க்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்தது. ஐரோப்பாவுக்கு கடந்த சில தினங்களாக இட மாற்றம் செய்யப்பட்ட டேங்கர் விமானங்கள், இந்த போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பயன்படுத்தப்படலாம். இஸ்ரேலுக்கு அதரவாக இந்த மோதலில் அமெரிக்கா தலையிடலாம் என, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செவ்வாய்கிழமை தெரிவித்தார். இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான "அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டிரம்ப் முடிவு செய்யலாம்" என தன் சமூக ஊடக பக்கத்தில் வான்ஸ் தெரிவித்தார். பூமிக்கடியில் ஆழமாக சென்று தாக்கும் பங்கர் பஸ்டர் குண்டு இரானில் யுரேனியத்தை செறிவூட்டுவதற்காக நிலத்தடியில் இரண்டு தளங்கள் இயங்குவதாக நம்பப்படுகிறது. இதில், நடான்ஸ் இஸ்ரேலால் ஏற்கெனவே தாக்கப்பட்டுள்ளது. கோம் (Qom) நகருக்கு அருகிலுள்ள ஒரு மலையில் அமைத்துள்ள ஃபோர்டோ தளம் பூமிக்கடியில் மிகவும் ஆழமாக அமைக்கப்பட்டுள்ளது. ஃபோர்டோ கட்டமைப்பை ஊடுருவ GBU-57A/B எனப்படும் பெரியளவிலான குண்டை (Massive Ordnance Penetrator - MOP) அமெரிக்கா பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று மூத்த மேற்கத்திய ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர். 13,600 கிலோ எடையுள்ள இந்த வெடிகுண்டு, நிலத்தடியில் உள்ள அணுசக்தி தளங்களை தாக்கக்கூடியது என்பதால் "பங்கர் பஸ்டர்ஸ்" என்றும் அழைக்கப்படுகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேல் மீது திங்கட்கிழமை இரான் நடத்திய தாக்குதலை காட்டும் படம் இந்த குண்டு மட்டுமே 200 அடி (60 மீ) கான்கிரீட்டை கூட உடைக்கும் திறன் கொண்டதாக கருதப்படும் ஒரே ஆயுதமாகும். வழக்கமான ரேடார்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத பி-2 ஸ்டெல்த் போர் விமானங்களால் மட்டுமே இந்த குண்டை வீச முடியும். டியாகோ கார்சியா தீவில் உள்ள தன்னுடைய தளத்தில் அமெரிக்கா சமீபத்தில் பி-2 விமானங்களை நிறுத்தியது. இரானின் தெற்கு கடற்கரையிலிருந்து இந்த தீவு சுமார் 2,400 மைல் தொலைவில் இருந்தாலும், அந்த விமானங்கள் இருக்கும் இடமானது, இரானின் தாக்குதல் எல்லைக்குள் அவற்றை வைக்கக்கூடும். "[டியாகோ கார்சியாவிலிருந்து) ஒரு நிலையான நடவடிக்கையை மிகவும் திறமையாக இதன் மூலம் மேற்கொள்ள முடியும். அவற்றை எந்நேரமும் செயல்பாட்டில் வைத்திருக்க முடியும்." என, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் (RAF) முன்னாள் துணை தலைவரான (ஆபரேஷன்ஸ்) ஏர் மார்ஷல் கிரெக் பேக்வெல் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார். இரான்- இஸ்ரேல் மோதலில், வெளிப்படையாக இஸ்ரேலை ஆதரிக்க இந்தியா தயங்குவது ஏன்? இஸ்ரேல் - இரான் சண்டை வல்லரசுகளின் மோதலாக வாய்ப்பு: அமெரிக்கா, ரஷ்யா என்ன செய்கின்றன? அச்சம், அதிர்ச்சி, குழப்பம்: இஸ்ரேல் தாக்குதல் குறித்து இரான் மக்கள் கூறுவது என்ன? இரான், இஸ்ரேல் மோதலில் இந்தியாவின் ஆதரவு யாருக்கு? - துருவங்களாக பிரிந்து நிற்கும் உலகம் மார்ச் மாத இறுதியில் டியாகோ கார்சியாவில் பி-2 விமானங்கள் நிறுத்தப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் ஆரம்பத்தில் காட்டின. ஆனால், சமீபத்தில் வெளியான படங்களில் அந்த தீவில் பி-2 விமானங்கள் இல்லை. வைஸ் அட்மிரல் மெல்லெட் கூறுகையில், இரானை இலக்கு வைத்து நடத்தப்படும் எவ்வித நடவடிக்கைக்கும் முன்னதாக, அந்த தீவில் பி-2 விமானங்களை பார்க்கலாம் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். தீவில் தற்போது அந்த விமானங்கள் இல்லாதது, குழப்பமாக உள்ளதாகவும் அவர் கூறினார். இதை ஏர் மார்ஷல் கிரேக் பேக்வெல்லும் ஒப்புக்கொள்கிறார். வெள்ளை மாளிகை தாக்குதலை தொடங்க முடிவெடுத்தால், அமெரிக்க கண்டத்திலிருந்தும் கூட பி2 விமானங்கள் செலுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார். "இரானின் தற்காப்புத் திறனை இஸ்ரேல் அழித்துவிட்டதால், எந்தவொரு ராணுவ அல்லது அணுசக்தி இலக்குகளும் கூட இஸ்ரேலின் விருப்பத்தின் பேரிலேயே விடப்படும்." மெர்லின் தாமஸ் வழங்கிய கூடுதல் தகவல்களுடன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g2d1lz6q0o
  23. 17 JUN, 2025 | 08:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் இராணுவ ஒட்டுக் குழுத் தலைவருமாக இருந்தவரான டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின் போது மண்டைதீவு செம்பாட்டுத் தோட்டம், புனித தோமையார் ஆலயத்தின் அருகாமை, திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு குமுழுமுனை, கொக்குத்தொடுவாய் யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவின் கவனத்திற்கு கொண்டு வந்து கேள்வி எழுப்புகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியில், 1990களில் வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவுப் பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட சிறுவர்களும் இளைஞர்களுமே புதைக்கப்பட்டார்கள் என வடக்கு மற்றும் கிழக்கு மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடுகின்றன. 3ஆம் வட்டாரம், மண்டைதீவைச் சேர்ந்த சூசைதாஸ் யேசுரட்ணம் தர்மராணி என்ற தாயார், தனது இரு பிள்ளைகள் உட்பட்ட 84 பேர் மண்டைதீவில் காணாமலாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நீதியைப் பெற்றுத்தருமாறும் 2025.04.30 ஆம் திகதி ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, அதன் பிரதியை எனக்கும் கிடைக்கச் செய்துள்ளார். இப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் வெளிவந்த அறிக்கைகள் உள்ளன. மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவுப் பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட சிறுவர்களும், இளைஞர்களுமே படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள். இவர்களை இராணுவத்தினர் அழைத்து சென்ற போது பெற்றோர், உறவினர்கள் அப்போது தீவுப்பகுதியில் இராணுவ ஒட்டுக்குழுவின் தலைவராகவிருந்த டக்ளஸ் தேவானந்தாவிடம் ஓடிச்சென்று அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மன்றாடியபோது இராணுவத்தினர் விசாரித்து விட்டு விடுவிப்பார்கள் என டக்ளஸ் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் எவரும் விடுவிக்கப்படாது படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள். எனவே மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் இராணுவ ஒட்டுக் குழுத் தலைவருமாக இருந்தவரான டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/217728
  24. Published By: VISHNU 17 JUN, 2025 | 06:27 PM கிழக்கு பல்கலைக்கழத்தின் 11 வது உபவேந்தரா நியமிக்கப்பட்ட முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் செவ்வாய்க்கிழமை (17) தனது கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார். குறித்த பல்கலைக்களத்தின் 11 வது உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை பல்கலைக்கழகத்தின் பேரவையினால் கடந்த இரண்டு மாத்திற்கு முன்னர் பல்கலைகழகத்தில் இடம்பெற்றது. இதில் 8 பேர் களமிறங்கிய நிலையில் முதல் நிலையில் முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன், உட்பட 3 பேர் தெரிவு செய்யப்பட்டு பல்கலைகழக மானிய ஆணைக் குழுவிற்கு அனுப்பிய அந்த பெயர் பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்; இதனடிப்படையில் முதல் நிலையிலுள்ளதையடுத்து முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபனை ஜனாதிபதி கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 வது உபவேந்தராக நியமித்து அதற்கான கடிதத்தினை செவ்வாய்க்கிழமை (17) அனுப்பிவைத்துள்ளார். இதனையடுத்து புதிய உபவேந்தர் செவ்வாய்க்கிழமை (17) பகல் 12.00 மணியளவில் தமது கடமையை உத்தியோக பூர்வமாக பெறுப்பேற்றுக் கொண்டார். https://www.virakesari.lk/article/217755
  25. செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; அகழ்வாய்வுகள் முழுமையாக இடம்பெறுவதுடன், வெளிப்படைத் தன்மைஅவசியம் - ரவிகரன் எம்.பி Published By: VISHNU 17 JUN, 2025 | 06:06 PM யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்படுவதுடன், அகழ்வாய்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை இறுதிக்கட்டயுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் மற்றும், யுத்தக்குற்றங்களுக்கு இதுவரை உரியவகையில் பொறுப்புக்கூறப்படவில்லை என்பதை இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்தவிடயத்தில் கடந்த அரசாங்கங்களைப்போலவே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றில் செவ்வாய்க்கிழமை (17) உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மயான புதைகுழி அகழ்வுப் பணிகள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென இவ்வுயரிய சபையிலே வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். குறித்த செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 19 முழுமையான மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் புதைகுழியினை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 45 நாட்களுக்கு அகழ்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான உத்தரவு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தப் புதைகுழியினை அகழ்வு செய்து உரியவகையில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலைமைகள் கண்டறியப்படவேண்டுமெனவும், இந்த விட யத்தில் அரசாங்கமானது உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன். இந்தப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளை வைத்துப் பார்க்கும்போது சிறுவர்கள், பெண்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. இதனைவிட அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக் கூடுகளில் ஆடைகள் அணிந்திருந்தமைக்கான சான்றிதழ்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. எனவே, இந்த சடலங்கள் நிர்வாணமாக புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. திட்டமிட்ட வகையில் படுகொலைகள் செய்யப்பட்ட பின்னர் சடலங்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றே கருதவேண்டியுள்ளது. மேலும் செம்மணிப் பகுதியில் புதைகுழிகள் உள்ள விடயம் கடந்த 1999ஆம்ஆண்டு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களுக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. இதில் பிரதான சந்தேகநபரான இராணுவ லயன்ஸ் கோப்ரல் சோமரத்ன நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் 600பேர்வரையில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளதாக தகவலை வெளிப்படுத்தியிருந்தார். இந்த விவகாரமானது அன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. செம்மணியில் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, செம்மணி புதைகுழி தோண்டும் நடவடிக்கை அன்று இடம்பெற்றிருந்தது. லயன்ஸ் கோப்ரல் சோமரத்ன அடையாளம் காட்டிய சிலபகுதிகள் அந்தவேளையில் அகழப்பட்டன. அதில் 25 எலும்புக் கூடுகள் வரையில் மீட்கப்பட்டிருந்தன. அதன்பின்னர் இந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது. தற்போது செம்மணி பகுதியில் அகழ்வு இடம்பெற்றதையடுத்து மீண்டும் புதைகுழியொன்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. கடந்த மூன்று தசாப்த காலமாக வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற கொடூர யுத்தம் காரணமாக இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர். இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் காணாமலாக்கப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருந்தனர், தொண்ணூறாயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர், ஒன்பதாயிரம் சிறுவர்கள் அனாதரவாக்கப்பட்டனர். இவ்வாறு பேரிழப்புகளை தமிழ்மக்கள் சந்தித்திருந்தனர். யுத்தகாலத்தில் இராணுவத்தரப்பினரால் பலவேறு பகுதிகளில் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டிருந்தன. யுத்தம் முடிவடைந்து தற்போது 16வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பல இடங்களில் புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் இதுவரை 13 இடங்களில் புதைகுழிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் பலஇடங்களில் புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் 2013ஆம் ஆண்டு புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்தப் புதைகுழி அவ்வப்போது அகழப்பட்டதுடன் 2018ஆம் ஆண்டுவரை இந்தப்பணிகள் இடம்பெற்றிருந்தன. இங்குமீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்தன. ஆனால், மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் மன்னர் காலத்தைச் சேர்ந்தவை என்று கூறப் பட்டிருந்தது. இதன் உண்மைதன்மை என்ன என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பின்னர் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதேபோன்று மன்னார் நகரிலுள்ள ச.தொ.ச கட்டடத்துக்கு அருகில் 2018ஆம் ஆண்டு அகழ்வுப்பணி இடம்பெற்றபோது அங்கும்மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பகுதிகளிலும் அகழ்வுப்பணி இடம்பெற்றதுடன் இந்தவிவகாரம் தற்போதும் நீதிமன்றத்தில் உள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்பகுதியில் அகழ்வுப்பணி இடம்பெற்றபோது 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு இடங்களிலும் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்ற போது மனிதப் புதைகுழிகள் தென்படுகின்றமை வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் வழமையானவிடயமாக மாறிவிட்டது. யுத்தகாலத்தில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆங்காங்கே புதைக்கப்பட்டிருந்தனர். அந்த புதைகுழிகளே தற்போது வெளிப்பட்டுவருகின்றன. செம்மணிப் பகுதியில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதைகுழி தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும். அகழ்வுப்பணிகள் உரியவகையில் மேற்கொள்ளப்பட்டு எந்தக்காலப்பகுதியில் இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன, இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்ற விடயங்கள் கண்டறியப்படவேண்டும். இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக் கணக்கான மக்கள் காணாமல்போகச் செய்யப்பட்டுள்ளனர். படையினரிடம் சரணடைந்தவர்கள், படையினர்களிடம் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள், படையினரால் கைது செய்யப்பட்டவர்கள், படைத்தரப்பினரால் கடத்தப்பபட்டவர்கள் எனப் பலரும் காணாமல் போகச்செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்னநடந்தது என்றவிடயம் இதுவரை மர்மமாகவே உள்ளது. இவ்வாறு காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்களா என்ற சந்தேகம் பாதிக்கப்பட்ட மக்கள்மத்தியில் காணப்படுகின்றது. இதேபோன்றே இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் திறந்த நிலப்பரப்பில் இவர்கள்மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபோது தாக்குதல்களில் பெருமளவானோர் பலியாகியிருந்தனர். இவ்வாறு பலியானவர்கள் அந்தந்த இடங்களிலேயே புதைக்கப்பட்டிருந்தனர். செம்மணியில் இளைஞர், யுவதிகள் கொன்று புதைக்கப்பட்டமை, கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் இறுதியிலேயே தெரியவந்தது. ஆனாலும், அந்த புதைகுழிகள் தொடர்பில் அன்றைய காலப்பகுதியில் உரியவிசாரணைகள் நடத்தப்பட்டிருக்கவில்லை. அந்தப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப் பட்டிருக்கவில்லை. அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அன்று கிருஷாந்தி குமாரசாமியின் கொலைவழக்கின் பிரதான சந்தேக நபரான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன தகவலை வெளிப்படுத்தி யிருக்காவிடின் செம்மணி புதைகுழி விவகாரம் வெளிவந்திருக்கமாட்டாது. இந்தப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தகவல்கள் வெளிப் படுத்தப்பட்ட போதும் உரியவகையில் புதைகுழிகள் அகழப்படாமையினால்தான் தற்போது செம்மணியில் மீண்டும் புதைகுழி அடையாளம் காணப்பட்டிருக்கிறது. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் பல்வேறு இடங்களில் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அந்தப் புதைகுழிகள் தொடர்பில் உரியவிசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போது செம்மணியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதைகுழியில் பெருமளவானோர் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியில் 19எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் சிறுவர்கள், பெண்கள் ஆகியோரின் எலும்புக்கூடுகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இந்த புதைகுழி அகழ்வுக்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதற்கான சகல ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும். அகழ்வுச்செயற்பாட்டை நிறுத்தாது இதனை முழுமைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் இன்னமும் உரியவகையில் பொறுப்புக்கூறப்படவில்லை. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அந்த விடயத்தில் கடந்த அரசாங்கங்களைப் போன்றே செயற்பட்டு வருகின்றது. இந்த புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன் - என்றார். https://www.virakesari.lk/article/217753

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.