Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்கின் யாழ் விஜயமும் முக்கிய சந்திப்புக்களும்! Published By: PRIYATHARSHAN 20 JUN, 2025 | 12:01 PM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் அங்கு பல்வேறு தரப்பினர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டார். கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன், வடமாகாண ஆளுநர், சுயதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழுக்கான விஜயத்தின் முதல் நாளில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், யாழ். கோட்டையை பார்வையிட்டார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரை சந்தித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரின்போது இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானம் கொண்டுவரப்படவிருப்பதாகவும் அப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஆதரவு கோரி ஏனைய உறுப்பு நாடுகளுடன் இப்போதிருந்தே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்,தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம், செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு, முதலீட்டுக்கான சந்தர்ப்பங்கள், கட்டுமான அபிவிருத்திகள், சுற்றுலாப் பயணிகளின் வருகை , விமான சேவை, கப்பல் சேவை, காணி உரித்து நிர்ணயத்திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டுள்ளார். இதேவேளை, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அவர்களின் வேதனைகளையும் துயரங்களையும் கேட்டறிந்தார். யாழ்ப்பாணத்திலுள்ள VVS விநியோகஸ்தார்களை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அவர்களின் பனை உற்பத்திப் பொருட்களின் பல்வகைப்பட்ட தயாரிப்புக்களை பார்வையிட்டதுடன், அங்கு தயாரிக்கப்படும் பாரிம்பரிய உள்ளூர் கூழை சுவைத்து மகிழ்ந்தார். இந்த சந்திப்பு நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்குவதற்கும் உள்ளுர் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் உள்ள ஆற்றலை எடுத்துக்காட்டுகின்றது. யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராசாவை சந்தித்து கலந்துரையாடிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், உயர்கல்வி, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களின் அபிலாஷைகள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் இந்த சந்திப்பு, கல்வியை ஆதரிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளது. யாழ். மாநகர மேயர் விவேகானந்தராஜா மதிவதானியை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், பிராந்திய மேம்பாடு, சேவை வழங்கல் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்துள்ளார், இந்த ஆக்கபூர்வமான ஈடுபாடுகள், மாகாண மற்றும் நகராட்சி மட்டங்களில் உள்ளடக்கிய நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான உள்ளூர் முன்னுரிமைகள் மற்றும் முயற்சிகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கயுள்ளது. யாழில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு சென்ற பிரித்தானிய உயர்ஸ்தானிகர், அங்குள்ள ஊழியர்களை சந்தித்து ஆங்கில மொழி கற்றல் மற்றும் டிஜிட்டல் கல்வியை ஆதரிப்பதில் அவர்களின் பணிகளை அறிந்துகொண்டார். உலகளாவிய சூழலில் செழித்து வளர இளைஞர்களுக்கு திறன்கள் மற்றும் நம்பிக்கையை வழங்குவதில் பிரிட்டிஷ் கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கிறது. வட இலங்கையில் புதுமைகளை முன்னெடுத்துச் செல்லும் இளம் தொழில்நுட்ப தொழில்முனைவோரை Yarl IT Hub -இல் சந்தித்தார் பிரித்தாகிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், இந்த மையம் ஒரு செழிப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும், உள்ளூர் திறமைகளை உலகளாவிய வாய்ப்புகளுடன் இணைக்கவும் உதவுகிறது. வளர்ச்சி, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறன்களை ஆதரிக்கிறது. தொழில்நுட்பம், தொழில்முனைவோரை உள்ளிடக்கிய வளர்ச்சியில் இளைஞர்களை வழிநடத்தும் முயற்சிகளை பிரித்தானிய மதிக்கிறதாக குறிப்பிட்டார். நாகதீப விகாரை மற்றும் நாகபூஷணி அம்மன் கோவில் ஆகியவற்றைப் பார்வையிட உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் நைனாதீவுக்குச் சென்றிருந்தார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகார் அன்று பற்றிக், உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். இந்தக் கலந்துரையாடல் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் சமூக முன்னுரிமைகள் குறித்த மதிப்புமிக்க முன்னோக்குகளை வழங்கியது. பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் சிவில் சமூகம் வகிக்கும் முக்கிய பங்கை பிரித்தானியா அங்கீகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தில் மீனவர்களின் பங்கு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மீனவர் அமைப்புகளிடமிருந்து பல தகவல்களை கேட்டறிந்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்று பற்றிக், நிலையான கொள்கைகளை வடிவமைப்பதில் அவர்களின் நுண்ணறிவு முக்கியமானது என்று குறிப்பிட்டார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஆர். சுரேந்திரகுமாரன் மற்றும் ஆராய்ச்சியாளர்களை சந்தித்த, உயர் ஸ்தானிகர் அன்று பற்றிக், இலங்கையில் முதன்மை மருத்துவத்தில் நீண்டகால நிலைமைகள் மேலாண்மைக்கான ஆதரவு குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார். இந்திய துணைத்தூதுவர் சாய் முரளியை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்று பற்றிக். யாழ்ப்பாணத்திலுள்ள பழைமை வாய்ந்த உணவகமான மலாயன் கபேக்கு சென்ற பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அங்கு உள்ளூர் செய்திகளை அறியும் முகமாக 94 வருட கால பழைமை வாய்ந்த வீரகேசரி பத்திரிகையில் செய்திகளை ஆராய்ந்தார். யாழ். தீபகற்பத்தில் சர்வதேச நீர் மேலாண்மை நிறுவன திட்டத்தின் முதலாம் கட்ட நிறைவுப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டார். நீர் மேலாண்மை, உணவுப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மை ஆகியவற்றில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நிலையான வளர்ச்சியை வலுப்படுத்தும், சமூகங்களை ஆதரிக்கும் மற்றும் இலங்கையில் நீண்டகால மீள்தன்மையை உருவாக்கும் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளுக்கு நிதியளிப்பதில் பிரித்தானிய பெருமை கொள்கிறது என உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217980
  2. மூத்த வீரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு SLC கௌரவிப்பு 17 JUN, 2025 | 12:13 PM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) காலை ஆரம்பமான இலங்கைக்கும் பங்காளாதேஷுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இலங்கையின் மூத்த வீரர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாகும். தனது 118ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மெத்யூஸ் இந்த டெஸ்ட போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறவுள்ளார். இதனை முன்னிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, இந்த நினைவுச் சின்னத்தை ஏஞ்சலோ மெத்யூஸிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் உதவித் தலைவர் ஜயன்த தர்மதாசவும் கலந்துகொண்டார். இந்தப் போட்டியில் இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட அழைக்கப்பட்டதை அடுத்து ஏஞ்சலோ மெத்யூஸ் முதலில் களத்தினுள் சென்றார். அப்போது பாடசாலை வீரர்கள் இருபுறமும் நின்றவாறு துடுப்பை உயர்த்தி அவருக்கு கௌரவம் செலுத்தினர். மெத்யூஸ் கையை உயர்த்தி அசைத்தவாறு களத்தினுள் புகுந்தார். அப்போது இலங்கை வீரர்களும் அரங்கில் குழுமியிருந்தவர்களும் பலத்த கரகோஷம் செய்து ஏஞ்சலோ மெத்யூஸை பாராட்டி கௌரவித்தனர். https://www.virakesari.lk/article/217694
  3. 19 JUN, 2025 | 09:36 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப் பற்று பிரதேச சபைக்கு சொந்தமான பூதன்வயலில் இருந்து மதவளசிங்கன் குளம் செல்லும் வீதியில் பிரதான பாலம் ஒன்று மிக நீண்ட காலமாக சீர் செய்யப்பட வேண்டிய தேவையில் காணப்பட்டுள்ளது. குறித்த பாலத்தினை அமைத்து தருமாறு மக்கள் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக தற்போது குறித்த பாலம் அமைக்கும் பணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதி அமைப்பினருடன் கலந்துரையாடாமல் திடீரென பால வேலைக்காக பாதையை முற்றுமுழுதாக வெட்டி பாலம் அமைக்கின்ற பணிகள் செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில் அருகிலே மாற்றுப் பாதை ஒன்றை அமைக்காமல் மக்களுடைய போக்குவரத்து முற்றாக தடைப்படக்கூடிய வகையில் மோட்டார் சைக்கிள் மட்டும் செல்லக்கூடிய ஒரு சிறிய பாதையை மட்டும் போட்டுவிட்டு குறித்த பாலம் அமைக்கும் பணி இடம்பெறுகின்றது. இந்நிலையில் குறித்த பகுதியூடாக விவசாய நடவடிக்கைகளுக்கு சென்ற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக கச்சான் காணிகளுக்கு செல்கின்ற மக்கள் வயல் நிலங்களுக்கு செல்கின்ற மக்கள் தங்களுடைய வயல் நிலங்கள் மற்றும் கச்சான் காணிகளுக்கான மூலப் பொருட்கள் அல்லது முடிவு பொருட்களை கொண்டு செல்ல அல்லது கொண்டுவர முடியாத இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் குறிப்பாக சிறுபோக அறுவடை ஆரம்பித்து இருக்கின்ற நிலைமையில் நேற்று முதல் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் குறித்த அறுவடை நெல்லினை வீடுகளுக்கு கொண்டுவர முடியாத இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு கேட்ட போது அதற்குரிய மாற்றுப் பாதை அமைத்து தர முடியாது என தெரிவித்திருக்கிறதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் எனவே தமக்கு உடனடியாக அந்த பாலம் அமைக்கின்ற இடத்திலே அதற்கு அருகாக மாற்றுப்பாதை ஒன்றை அமைத்து தங்களுடைய நெல்லுகளை வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கும் தங்களுடைய காணிகளுக்கு செல்வதற்கும் ஏற்ற வகையில் உளவு இயந்திரம் செல்லக்கூடிய வகையில் பாதை ஒன்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களுடைய விவசாய உள்ளீடுகளை உரிய வகையிலே தனது வீடுகளுக்கு கொண்டுவர முடியாமல் அந்தரிப்பதாகவும் எனவே இதற்குரிய அதிகாரிகள் உடனடியாக இதற்குரிய பாதையை அமைத்து தருமாறும் தங்களுக்கு அந்த இடத்தில் பாலம் அமைக்கப்பட வேண்டியது மிக முக்கியமானது எனவும் ஆனால் அந்த பாலம் அமைக்கின்ற பணியினால் தங்களுடைய விவசாய உற்பத்திகள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் பாலத்தை அமைக்குமாறும் ஆனால் அதற்கு அருகிலே மக்கள் சென்றுவரக்கூடிய பாதையை அமைத்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் குறிப்பாக பாதைகளில் கட்டுமான பணிகள் செய்கின்ற போது அதற்கு மாற்று பாதையை ஏற்பாடு செய்ய வேண்டியது அந்த பாதை கட்டுமானம் செய்கின்றவர்களுடைய பொறுப்பாக காணப்படுகின்ற நிலைமையில் அவ்வாறு செய்யப்படாமல் இந்த வேலை ஏன் செய்யப்படுகிறது என்பது தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். https://www.virakesari.lk/article/217950
  4. பட மூலாதாரம்,SERENITY STRULL/ BBC/ GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தாமஸ் ஜெர்மைன் பதவி, மூத்த தொழில்நுட்ப செய்தியாளர், பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தனது தேடுபொறியில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவியை பொருத்தி இணையத்தைப் புதுப்பிக்கப் போவதாக கூகுள் கூறுகிறது. கூகுளின் இந்த நடவடிக்கையால் இணையதளங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று பல நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்தக் கணிப்பு சரியா தவறா என்பதற்கு அப்பால், ஆன்லைன் வரலாற்றின் தற்போதைய அத்தியாயம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது. "இயந்திரமயமான இணையதளங்களுக்கு" உங்களை வரவேற்கிறோம். ஓர் எளிய பேரத்தின் அடிப்படையில் இணையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கூகுள் போன்ற தேடுபொறிகள் தங்கள் உள்ளடக்கத்தை இலவசமாகப் பெற இணையதளங்கள் அனுமதிக்கின்றன. 'கூகுள் சர்ச்' மக்களை இணையதளங்களுக்கு அனுப்புகிறது, அங்கு அவர்களுக்கு கூகுள் போன்ற தேடுபொறிகள் விளம்பரங்களைக் காட்டுகின்றன. அதன் மூலமாக மக்கள் பொருட்களை வாங்குகிறார்கள். பெரும்பாலான இணையதளங்கள் இப்படித்தான் பணம் சம்பாதிக்கின்றன. இணைய செயல்பாடுகளில் 68% தேடுபொறிகளில் இருந்தே தொடங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிலும், சுமார் 90% தேடல்கள் கூகுளில் நடைபெறுகின்றன. இணையம் ஒரு தோட்டம் என்று வைத்துக் கொண்டால், பூக்களை வளர்க்க உதவும் சூரியன் என்று கூகுளை குறிப்பிடலாம். தற்போதைய இந்த ஏற்பாடு பல தசாப்தங்களாக வலுவாக இருந்தது. ஆனால் ஒரு சிறிய மாற்றம், இந்த அமைப்பு சிதைந்து வருவதாக சிலரை நம்பச் செய்துள்ளது. கூகுள் தேடுபொறியில் ஒரு புதிய AI கருவி விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றபோதிலும், விமர்சகர்கள் அச்சப்படுகின்றனர். அவர்களது கணிப்புகள் நிதர்சனமாகிவிட்டால், இணையத்தில் பெரும் தாக்கம் ஏற்படலாம். தரமான தகவல்கள் ஆன்லைனில் கிடைப்பது அரிதாகலாம், ஏராளமான மக்கள் வேலைகளை இழக்க நேரிடலாம் என விமர்சகர்கள் அஞ்சுகின்றனர். இருந்தபோதிலும் விமர்சகர்களின் கணிப்புக்கு மாறாக, இது இணையதளங்களின் வணிக மாதிரியை மேம்படுத்தலாம் என்றும், சிறந்த உள்ளடக்கத்தைக் கண்டறியும் வாய்ப்புகளை விரிவுபடுத்தலாம் என்றும் பல நிபுணர்கள் கணிக்கின்றனர். ஆனால், எப்படியிருந்தாலும் உங்களுடைய டிஜிட்டல் அனுபவங்கள் இதுவரை இருந்தது போல இனி இருக்காது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. கூகுள் தேடுபொறியில் ஒரு விஷயத்தை தேடும்போது, AI உருவாக்கிய பதில்களான AI ஓவர்வியூஸ் தற்போது தோன்றுகிறது. இது அறிமுகப்படுத்தப்பட்டு ஓர் ஆண்டுதான் ஆகிறது. 2025 மே 20ஆம் தேதியன்று கூகுளின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் பேசிய நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை, தற்போது கூகுள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். அதாவது, "ஒரு முழுமையான செயற்கை நுண்ணறிவுத் தேடல் அனுபவத்தை விரும்புவோருக்கு, நாங்கள் ஒரு புதிய AI மோட்-ஐ அறிமுகப்படுத்துகிறோம். இது தேடலின் முழுமையான மறுபரிணாமமாக இருக்கும்," என்று அவர் கூறினார். பல ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு தொடர்பான செய்திகள் மிகைப்படுத்தப்பட்டு இருப்பதால், இதையும் நீங்கள் சந்தேகிக்கலாம். ஆனால் இது மிகைப்படுத்தல் அல்ல, நிதர்சனமான உண்மை. 'இது கூகுள் தேடலின் எதிர்காலம்' பட மூலாதாரம்,SERENITY STRULL/ BBC/ GETTY IMAGES மக்கள் ஆண்டுக்கு ஐந்து டிரில்லியன் முறை கூகுள் தேடலைப் பயன்படுத்துகிறார்கள். இது இணையத்தின் வடிவத்தை வரையறுக்கிறது. AI மோட் ஒரு தீவிரமான மாற்றமாக இருக்கும். AI ஓவர்வியூஸ் போலன்றி, AI மோட் பாரம்பரிய தேடல் முடிவுகளை முழுவதுமாக மாற்றுகிறது. அதற்குப் பதிலாக, உங்கள் கேள்விக்குப் பதிலளிக்க சாட்பாட் ஒரு குறுங்கட்டுரையைத் திறம்பட உருவாக்குகிறது. நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது, AI மோட் அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது தேடுபொறி மற்றும் நிறுவனத்தின் செயலியில் ஒரு பொத்தானாகத் தோன்றும். இது இப்போதைக்கு விருப்பத் தேர்வாக இருந்தாலும், "இது கூகுள் தேடலின் எதிர்காலம்" என்று கூகுள் சர்ச் பிரிவின் தலைவர் லிஸ் ரீட் இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவியைத் தொடங்கும்போதே தெளிவாகக் கூறிவிட்டார். AI ஓவர்வியூஸ் ஏற்கெனவே இணையத்தின் மற்ற பகுதிகளுக்கு மிகக் குறைந்த போக்குவரத்தை அனுப்பும் நிலையில், AI மோட் அந்தப் போக்கை மேலும் அதிகப்படுத்தக்கூடும் என்று விமர்சகர்கள் அஞ்சுகிறார்கள். இது நடந்தால், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நீங்கள் அனுபவித்து வரும் டிஜிட்டல் உள்ளடக்கத்தைத் தூண்டிய 'வணிக மாதிரி' நசுக்கப்படக்கூடும். "கூகுள் அதன் தற்போதைய வடிவத்தில் AI மோட் வசதியை இயல்பு நிலையாக மாற்றினால், அது இணையத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்," என சந்தைப்படுத்தல் நிறுவனமான ஆம்சிவின் சர்ச் எஞ்சின் ஆப்டிமைசேஷன் (SEO) உத்தி மற்றும் ஆராய்ச்சியின் துணைத் தலைவர் லில்லி ரே கூறுகிறார். "இது பெரும்பாலான வெளியீட்டாளர்களின் முக்கிய வருவாய் ஆதாரத்தை கணிசமாகக் குறைக்கும், மேலும் இது ஆர்கானிக் தேடல் மூலம் வரும் பயனர்களை நம்பியிருக்கும் உள்ளடக்க படைப்பாளர்களை ஊக்கமிழக்கச் செய்யும். அதாவது குறைந்தபட்சம் லட்சக்கணக்கான இணையதளங்கள் பாதிக்கப்படலாம். கூகுளிடம் அதற்கான சக்தி உள்ளது" என அவர் மேலும் கூறுகிறார். இந்தக் கவலைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று கூகுள் கூறுகிறது. AI மோட், இணையதளங்களை ஆரோக்கியமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் என்று நிறுவனம் நம்புகிறது. "ஒவ்வொரு நாளும், கோடிக்கணக்கான கிளிக்குகளை இணையதளங்களுக்கு அனுப்புகிறோம், மக்களை இணையத்துடன் இணைப்பது தொடர்ந்து எங்களுடைய முன்னுரிமையாக உள்ளது," என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகிறார். "AI ஓவர்வியூஸ் மற்றும் AI மோட் போன்ற புதிய முயற்சிகள் தேடலை மேம்படுத்துகின்றன மற்றும் மக்கள் கேட்கக்கூடிய கேள்விகளின் வகைகளை விரிவுபடுத்துகின்றன. இது உள்ளடக்கத்தைக் கண்டறிவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது" என அவர் மேலும் குறிப்பிட்டார். இப்படி பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும், கூகுள் மற்றும் அதன் விமர்சகர்கள் ஒரேயொரு விஷயத்தில் உடன்படுகிறார்கள்: "அது, இணையம் மிகவும் வித்தியாசமாக மாறப் போகிறது" என்பதுதான். குறைந்தபட்சம் அடுத்த ஓர் ஆண்டில் தற்போதைய ஆன்லைன் சகாப்தம் முடிவுக்கு வரும். அந்த மாற்றத்தின் இறுதியில் இணைய உலகம் எப்படி இருக்கும் என்பதுதான் ஒரே கேள்வி. வெளியீட்டாளர்களின் கவலை இணையம் எங்கும் செல்லவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சமூக ஊடக தளங்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாகச் செயல்படுகின்றன, கட்டணத் திரைகளைக் கொண்ட சில பிரபலமான தளங்கள் செழிப்பாக இருக்கின்றன. மக்கள் ஆன்லைனில் தகவல்களை தேடிக் கண்டறியும் முறை மட்டுமே மாறப் போகிறது. சிலரின் அச்சம், "பொதுவான இணையதளம்" ஆபத்தில் உள்ளது என்பதே. அதாவது, சுதந்திரமாக அணுகக்கூடிய சுயாதீன இணையதளங்களின் சுற்றுச்சூழல் அமைப்பு, அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் வணிகங்களுக்கு சிக்கல் வரலாம் என்று அஞ்சப்படுகிறது. தகவல், படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து கொள்ளும் அவர்கள், பெரும்பாலும் "வெளியீட்டாளர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள், இருப்பினும், இதற்கு முன்னரே நாம் இதைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். 2010இல் "இணையதளம் இறந்துவிட்டது" என்று வயர்டு பத்திரிகையின் ஓர் அட்டைப்படம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இன்றும் நாம் இங்கே இருக்கிறோம். ஸ்மார்ட்போன்கள், செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்தும் உலகளாவிய இணையதளம் தொடர்பான 'இறுதி நாள்' கணிப்புகளைத் தூண்டிவிட்டன. ஆனால் மே மாதத்தில் கூகுள் அறிவித்ததைத் தொடர்ந்து, டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு AI மோட் முன்னோடியில்லாத அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறும் நிபுணர்கள் பலரிடம் பிபிசி பேசியது. "இணையதளங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதற்கு 'அழிந்துவிடும்' என்று சொல்வது அதிகப்படியானது என்று நான் நினைக்கிறேன்," என போலெமிக் டிஜிட்டல் (Polemic Digital) என்ற எஸ்.இ.ஓ நிறுவனத்தின் நிறுவனர் பாரி ஆடம்ஸ் கூறுகிறார். அவர், "Decimation (பெருமளவில் குறையும்) என்பது சரியான சொல்" என்கிறார். கூகுள் இதை ஏற்கவில்லை. உண்மையில், AI ஓவர்வியூஸ் மற்றும் AI மோட் இணையத்திற்கு நல்லது என்று கூகுள் நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்த அம்சங்கள், பயனர்களை "இணையதளங்களின் பன்முகத்தன்மையை அதிகரிக்கின்றன" என்றும், மக்கள் தாங்கள் கிளிக் செய்யும் இணைப்புகளில் அதிக நேரம் செலவிடுவதால் "உயர் தரம்" கொண்ட தேடல் அனுபவம் சாத்தியமாகும் என்றும் கூகுள் உறுதிபடக் கூறுகிறது. இருந்தபோதிலும், கூகுளின் இந்தக் கூற்றுகளை ஆதரிக்கும் தரவை அந்த நிறுவனம் வழங்கவில்லை. ஆர்வமுள்ள வெளியீட்டாளர்களுக்கு கூகுள் AI வழிகாட்டி ஒன்றை வைத்துள்ளது. ஆனால் AI ஓவர்வியூஸ் இணையதளங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றிய தெளிவான தகவல்களை அது வழங்கவில்லை. இந்த தொடர்பான கேள்விகளுக்கு கூகுள் பதிலளிக்கவில்லை. அத்துடன், இந்த AI கருவிகள் தேடல் இணையத்திற்கு அனுப்பும் மொத்த டிராஃபிக்கை குறைக்கின்றன என்பதை கூகுள் மறுக்கவில்லை அல்லது குறைந்தபட்சம் நேரடியாக மறுக்கவில்லை என்றும் கூறலாம். "AI ஓவர்வியூஸ் மற்றும் AI மோட் இரண்டுமே மூலங்களுக்கான இணைப்புகளை உள்ளடக்கியுள்ளன, இருந்தபோதிலும் நீங்கள் தேடும் கேள்விக்கான பதிலை AI கொடுத்துவிட்டால், நீங்கள் ஏன் மூல பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும்?" என்ற கேள்வியை விமர்சகர்கள் எழுப்புகின்றனர். தரவுகள் இந்த தர்க்கத்தை ஆதரிப்பதாகத் தோன்றுகிறது. மக்கள் எதைத் தேடுகிறார்கள் என்பதைப் பொறுத்து, "கிளிக்-த்ரூ ரேட்" என்று அழைக்கப்படும் இணையதளங்களுக்கு கூகுள் அனுப்பும் போக்குவரத்தின் அளவை AI ஓவர்வியூஸ் 30% முதல் 70% வரை குறைப்பதாகப் பல்வேறு பகுப்பாய்வுகள் கூறுகின்றன. கூகுள் சர்ச்சில் இப்போது சுமார் 60% "ஜீரோ-கிளிக்" ஆக இருப்பதாகவும், பயனர் ஒரு இணைப்பை பார்வையிடாமலேயே அவர்களுக்கான பதில் கிடைத்து விடுவதாகவும் பகுப்பாய்வுகள் கண்டறிந்துள்ளன. 'இணையதளங்கள் விருத்தியடைந்து வருகின்றன' பட மூலாதாரம்,GOOGLE/ BBC AI மோட் வசதியின் சில பதிப்புகள் விரைவில் இயல்புநிலையாக மாறும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர், மேலும் இது பாரம்பரிய இணைப்புகளின் பட்டியலை முற்றிலுமாக நீக்குவதால், தேடுதலில் AI ஏற்படுத்தும் தாக்கம் அதிகரிக்கும். "கூகுளின் AI மோட், இணையதளங்களுக்குச் செல்லும் கிளிக்குகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் இது நேர்மறையிலான சூழ்நிலையில்தான்," என்கிறார் ஆடம்ஸ். "அதிக அளவிலான பயனர்கள் AI அவர்களுக்கு என்ன கொடுக்கிறதோ அதிலேயே திருப்தி அடைவார்கள் என நினைக்கிறேன். இது வணிகத்தில் சாத்தியமான லாபம் கிடைப்பதற்கும், திவாலாவதற்கும் உள்ள வித்தியாசமாக இருக்கலாம். பல வெளியீட்டாளர்களுக்கு, இது வியத்தகு முறையில் இருக்கும்." இது ஒரு சில வலைப்பதிவர்கள் வேலை இழப்பது தொடர்பானது மட்டுமல்ல, பயனர்கள் இணையத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும், அவர்கள் தகவல்களை எவ்வாறு கண்டறிகிறார்கள் என்பதையும் மாற்றக்கூடும். "இணையதளம் என்பது பல்வேறு தகவல்கள் உங்கள் விரல் நுனியில் உள்ளவை என்றே சொல்லலாம், ஆனால் அது இனி மாறக்கூடும்" என்று காற்றின் தர தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்யும் ஹவுஸ்ஃப்ரெஷின் நிர்வாக ஆசிரியர் கிசெல் நவரோ கூறுகிறார். கூகுளால் ஓரங்கட்டப்பட்டதாக உணரும் இணையதளங்களின் பிரதிநிதியாக நவரோ பேசுகிறார். பயனர்கள் தேடும் தகவல்களுக்கான ஆதாரங்களின் பன்முகத்தன்மையை இது மிகவும் குறைத்துவிடக்கூடும் என்று அவர் கவலை தெரிவிக்கிறார். "இணையதளம் நம் அனைவருக்குமான மிகப்பெரிய நூலகத்தைப் போன்றது. ஆனால், நூலகரிடம் புத்தகம் கேட்டால் அவர் புத்தகத்தைப் பற்றி மட்டுமே உங்களுக்குச் சொல்வார்" என்று அவர் கூறுகிறார். இதுபோன்ற கணிப்புகள் மற்றும் பகுப்பாய்வுகள் தவறானவை என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். பல்வேறு காரணங்களுக்காக இணையதளங்களின் போக்குவரத்து குறையலாம் என்றும், இந்தச் சிக்கல்களை பற்றிச் சொல்லும் ஆய்வுகள் பெரும்பாலும் சீரற்ற தரவு மற்றும் குறைபாடுள்ள முறையைப் பயன்படுத்துகின்றன என்றும் அவர் கூறுகிறார். "எங்கள் கண்ணோட்டத்தில், இணையதளங்கள் விருத்தியடைந்து வருகின்றன" என்று கூகுளின் அறிவு மற்றும் தகவல் துறையின் மூத்த துணைத் தலைவர் நிக் ஃபாக்ஸ், தனது சமீபத்திய பாட்காஸ்ட் நேர்காணலில் தெரிவித்துள்ளார். "இணையதளங்களின் நலன் மற்றும் எதிர்காலம் குறித்து கூகுளைவிட அதிக அக்கறை கொண்ட நிறுவனம் வேறெதுவும் இல்லை." உண்மையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இணையதளங்களில் உள்ள உள்ளடக்கத்தின் அளவு 45% அதிகரித்துள்ளது என்றும், இது ஸ்பேமை தவிர்த்த பிறகு இருக்கும் அளவு என்றும் ஃபாக்ஸ் கூறினார். "இதை தரவுகள் சொல்கின்றன," என்று அவர் கூறினார். "மக்கள் இன்னும் இணையதளங்களிலேயே மிகவும் அதிக அளவில் கிளிக் செய்கிறார்கள்." பல்வேறு உறுதிமொழிகள் இருந்தபோதிலும், சில இணையதளங்கள் AI அடிப்படையில் இயங்கும் சாட்பாட்கள் மற்றும் தேடுபொறியின் வருகையால் சிரமப்படுகின்றன. 'பொது இணையதளங்களை நிச்சயமாக அழிக்கப் போகிறது' பட மூலாதாரம்,HOUSEFRESH/ YUN SUN PARK கடந்த ஆண்டு, பெரிய பிராண்டுகளுக்கு கிளிக்குகளை மாற்றியமைக்கும் கூகுளின் வழிமுறைகளுக்கான புதுப்பிப்புகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறிய எண்ணற்ற சிறிய ஆன்லைன் வணிகங்களில் ஹவுஸ்ஃப்ரெஷ் நிறுவனமும் ஒன்று. தற்போது, தங்களுக்கு AI மூலம் சேதங்கள் அதிகரிப்பதாக நவரோ கூறுகிறார். "சில வாரங்களுக்கு முன்பு, திடீரென ஓர் அதிகரிப்பைக் கவனித்தோம்," என்று நவரோ கூறுகிறார். கூகுள் தேடலில் ஹவுஸ்ஃப்ரெஷ் எத்தனை முறை தோன்றும் என்ற பதிவுகள் அதிகரித்தன. "ஆனால் அதே நேரத்தில், கிளிக்குகள் குறைந்துவிட்டன. எனவே கூகுள் எங்கள் இணைப்புகளை அடிக்கடி காட்டுகிறது. ஆனால் யாரும் கிளிக் செய்வதில்லை. இது AI ஓவர்வியூஸ் உடன் தொடர்புடையது" என்கிறார் அவர். பிரைட்எட்ஜ் தரவு பகுப்பாய்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, AI ஓவர்வியூஸ் வந்த பிறகு, இணையம் முழுவதும் 49% பதிவுகள் அதிகரித்துள்ளன. ஆனால் மக்கள் தங்கள் பதில்களை செயற்கை நுண்ணறிவிடம் இருந்து பெறுவதால் 30% கிளிக்குகள் குறைந்துள்ளன. "கூகுள்தான் விதிகளை உருவாக்குகிறது, விளையாட்டை உருவாக்கிய அவர்களே, அதில் பங்கேற்றவர்களுக்கு வெகுமதி அளித்தனர்," என்று கூறும் நவரோ, "இப்போது அவர்களே, 'இது என் உள்கட்டமைப்பு, இணையதளம் அதில் வாழ்கிறது' என்று கூறுகிறார்கள். நமக்குத் தெரிந்த பொதுவான இணையதளத்தை அது நிச்சயமாக அழிக்கப் போகிறது என்று தோன்றுகிறது. அநேகமாக அது ஏற்கெனவே நடந்துவிட்டது." 'இயந்திர இணையதளத்தை வரவேற்போம்' AI மோட் என்பதன் மிகப்பெரிய தாக்கம், நீங்கள் ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் பெறும் அனுபவத்தில் எதிரொலிக்கும். சிலர் நம்புவது போல், நாம் புதிய முன்னுதாரணம் ஒன்றின் தொடக்க காலகட்டத்தில் இருக்கலாம். இணையதளத்தை எதிர்காலத்தில் "இயந்திர இணையதளம்" என்றே அழைக்கலாம் என்று தோன்றுகிறது. இணையதளங்கள் என்பது மனிதர்களுக்காக அல்லாமல் AI இயந்திரம் படிக்க உருவாக்கப்படும் இடமாகவும், நாம் சாட்பாட்கள் மூலம் சுருக்கங்களைப் படித்து தகவல்களைத் தெரிந்து கொள்ளும் முதன்மை வழியாகவும் மாறலாம். அண்மையில் கூகுள் நிறுவனத்தின் AI ஆராய்ச்சி ஆய்வகமான Google DeepMindஇன் தலைவரான டெமிஸ் ஹசாபிஸ் அளித்த பேட்டி ஒன்றில், வெளியீட்டாளர்கள் தங்கள் உள்ளடக்கத்தை நேரடியாக செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கு வழங்க விரும்புவார்கள் என்றும், சிலர் அந்தத் தகவலை மனிதர்கள் படிக்கும் வகையில் இணையதளங்களில் வெளியிடுவதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள் என்றும் கூறினார். "சில ஆண்டுகளில் விஷ்யங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். இணையதளங்கள் வழக்கம் போலவே, வசதியான முறையில் பதில்களைக் கொடுக்கும் ஓர் உலகமாக இருக்கும். ஆனால் திறந்த இணையதளத்தை மிகவும் பிரபலமாக்கிய சில விஷயங்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கக்கூடும். பல புதிய விஷயங்களை தரும் இந்த வாய்ப்பு நல்லதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். டீகோடர் பாட்காஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் பேசிய சுந்தர் பிச்சை, இது பயனர்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்று கூறினார். பட மூலாதாரம்,SERENITY STRULL/ BBC/ GETTY IMAGES கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு இணையதளங்களுக்கு நெட்வொர்க் சேவைகளை வழங்கும் Cloudflare நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மேத்யூ பிரின்ஸ், இதிலுள்ள மிகப்பெரிய சிக்கலை முன்னறிவிக்கிறார். "ரோபோக்கள் விளம்பரங்களை கிளிக் செய்வதில்லை," என்று அவர் கூறுகிறார். AI பார்வையாளர்களாக மாறினால், படைப்பாளர்களுக்கு எப்படி பணம் கிடைக்கும்? நேரடியான இழப்பீடு என்பது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். அமேசானின் செயற்கை நுண்ணறிவுக்காக, நியூயார்க் டைம்ஸ் உள்ளடக்க உரிமம் வழங்குகிறது. பயனர் தரவுகளில் செயற்கை நுண்ணறிவை பயிற்றுவிக்க ரெடிட்டுக்கு ஆண்டுக்கு $60 மில்லியன் கட்டணத்தை கூகுள் செலுத்துகிறது. டஜன் கணக்கான பெரிய வெளியீட்டாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் OpenAI மற்றும் பிறருடன் இதேபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிக தரவுகளைக் கொண்ட மிகப்பெரிய இணையதளங்கள் மட்டுமே இதுபோன்ற ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. "இதுபோன்ற உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்துவது இணையதளத்தைத் தக்கவைக்கத் தேவையான அளவில் செயல்படும் ஒரு மாதிரி என்று எனக்குத் தோன்றவில்லை," என்று விளம்பர தொழில்நுட்ப நிறுவனமான ராப்டிவின் நிர்வாக துணைத் தலைவர் டாம் கிரிட்ச்லோ கூறுகிறார். "கிளிக்குகள் குறைவதற்கு மாற்றாக அது எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்ப்பது கடினம்" என்கிறார் அவர். இணையத்தில் பணம் சம்பாதிப்பது கடினமாகிவிட்டால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று ஆடம்ஸும் மற்றவர்களும் எதிர்பார்க்கிறார்கள். நவரோவை போன்ற பலர் இந்த நிலையை ஏற்கெனவே எதிர்கொண்டுள்ளனர். 'புதிய வழி பிரகாசமாகத் தெரிகிறது' ஹவுஸ்ஃப்ரெஷ் நிறுவனம் யூட்யூபில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. ஆனால் சமூக ஊடக வழிமுறைகளின் விருப்பங்கள் இன்னும் நிலையற்றவையாகவே இருப்பதாக நவரோ கூறுகிறார். மேலும் படைப்பாளர்கள் விஷயத்தின் ஆழத்தையும் விவரங்களையும் தியாகம் செய்ய தளங்கள் கட்டாயப்படுத்துகின்றன. "உயர்தரம் வாய்ந்த உள்ளடக்கங்களை உருவாக்க எந்தவித ஊக்கமும் கிடைப்பதில்லை. அனைத்துமே பணமாக்குதல் மற்றும் மாற்றம் பற்றியதாக மாறும், அது தகவலை குறைவாகத் தெரிவிக்கவும் அதிகமாக விற்கவும் கட்டாயப்படுத்துகிறது," என்று நவரோ கூறுகிறார். இணையதளத்தில் வெளியீட்டாளர்கள் கொண்டிருந்த தன்னிச்சையான செயல்பாட்டை இழப்பது என்பது பார்வையாளர்களாகிய உங்களுக்கு தரம் குறைந்த உள்ளடக்கமே கிடைக்கும் என்பதையே ஒட்டுமொத்தமாகக் குறிக்கிறது என்று நவரோ கூறுகிறார். கூகுளுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய பிற தேடுபொறிகள் இருப்பதை மறுக்க முடியாது என்றாலும், அவர்களும் தங்கள் தேடல் கருவிகளில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைத்து வருகின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, மைக்ரோசாப்ட் அதன் Bing தேடுபொறியில் செயற்கை நுண்ணறிவை இணைத்து வருகிறது. ஆனால் கூகுளின் சிறிய போட்டியாளர்கள் மிகக் குறைந்த அளவே சந்தையில் பங்களிப்பதால், அவர்கள் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது கடினம் என்பதுடன், பலர் தங்கள் சொந்த AI கருவிகளைச் சேர்க்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயந்திர இணையதளம் மிகவும் நெருக்கமானதாகவும், பன்முகத் தன்மை குறைவானதாகவும் இருந்தாலும், ஆன்லைனில் தங்கள் நேரத்தைச் செலவிடுவோருக்கு இது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கலாம். சில பார்வையாளர்கள் பீதியடையவில்லை என்பதையும் கவனிக்கலாம். "பரிணாமம் என்ற அர்த்தத்தில் நான் கவலைப்படவில்லை," என்று சௌதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியரும், 1980களில் உலகளாவிய இணையதளத்தின் முன்னோடியாக இருந்த கட்டமைப்பை வடிவமைத்த ஆரம்பக்கால முன்னோடிகளில் ஒருவருமான டேம் வெண்டி ஹால் கூறுகிறார். "செயற்கை நுண்ணறிவு இப்போது சமன்பாட்டிற்குள் வருகிறது, அது அனைத்து இயக்கவியலையும் மாற்றப் போகிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை நான் சரியாகச் சொல்ல விரும்பவில்லை. இணையதளம் இன்னும் இருக்கிறது, அது இன்னும் திறந்தே இருக்கிறது. கூகுள் இந்த வழியில் சென்றால், பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழி பிரகாசமாகத் தெரிகிறது," என்று அவர் கூறுகிறார். 'இதுதான் திருட்டுக்கான வரையறை' பட மூலாதாரம்,GETTY IMAGES AI Mode என்பது ஈர்க்கக்கூடிய தொழில்நுட்பம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது ஒரு "fan-out முறையை " பயன்படுத்துகிறது. அதாவது, AI உங்கள் கேள்வியை துணை தலைப்புகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் பல தேடல்களைச் செய்கிறது. AI Mode மிகவும் மாறுபட்ட ஆதாரங்களைப் பரிந்துரைக்கவும், மிகவும் சிக்கலான கேள்விகளுக்கு ஆழமான பதில்களை உருவாக்கவும், ஆழமாகச் செல்லவும் உதவுகிறது. அத்துடன், தொடர்ந்து கேள்விகளைக் கேட்கும் திறனை நீங்கள் பெறுகிறீர்கள் என்று கூகுள் கூறுகிறது. கூகுளின் கூற்றுப்படி, AI ஓவர்வியூஸ்க்கான எதிர்வினைகள் AI மோட் மிகவும் பிரபலமாக இருக்கும் என்பதையே குறிக்கிறது. "மக்கள் AI ஓவர்வியூஸ் பயன்படுத்துவதால், அவர்களுக்குக் கிடைக்கும் பதில்களால் திருப்தி அடைவதையும், அவர்கள் அடிக்கடி தேடுவதையும் நாங்கள் காண்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 'தேடுபொறியில்' மிகவும் வெற்றிகரமான வெளியீடுகளில் இதுவும் ஒன்று," என்று கூகுளின் டெவலப்பர் மாநாட்டில் சுந்தர் பிச்சை கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது தேடலை சிறந்ததாக ஆக்குகிறது என்றும் பயனர்கள் விரும்புவது இதுதான் என்றும் கூகுள் கூறுகிறது. ஆனால் இதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது என்று 2,200க்கும் மேற்பட்ட பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தகக் குழுவான நியூஸ்/மீடியா அலையன்ஸின் தலைவர் டேனியல் காஃபி கூறுகிறார். (பிபிசி நியூஸ்/மீடியா அலையன்ஸில் உறுப்பினராக உள்ளது.) "இதுதான் திருட்டுக்கான வரையறை. செயற்கை நுண்ணறிவு பதில்கள், அசல் தயாரிப்புக்கு மாற்றாகும். அவர்கள் எங்களுடைய உள்ளடக்கத்தில் பணம் சம்பாதிக்கிறார்கள், அதற்கு ஈடாக எங்களுக்கு எதுவும் கிடைக்காது," என்று காஃபி கூறுகிறார். "விற்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் மக்களின் சார்பாக இந்த கூகுள் இந்த வணிக முடிவை எடுக்க முடியாது." வெளியீட்டாளர்களுக்கு வேறு வழியில்லை என்பதுதான் பிரச்னை என்று காஃபி உள்படப் பலரும் கூறுகின்றனர். நீதிமன்ற வழக்கு ஒன்றில் வெளியிடப்பட்ட உள் ஆவணங்கள், கூகுள் அதன் விதிகளை "சத்தமின்றிப் புதுப்பிக்க" தேர்வு செய்திருப்பதைக் காட்டுகின்றன. எனவே கூகுள் 'தேடலில்(search)' பங்கேற்பது என்பது இணையதளங்கள் தானாகவே AI க்காக உள்ளடக்கத்தைப் பயன்படுத்த அனுமதி அளிப்பதற்கு ஒப்புக் கொள்வதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டாளர்கள் விலகலாம் என்றாலும், அவர்கள் தேடல் முடிவுகளை முழுவதுமாக விலக்கினால் மட்டுமே அது முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 'இதுவே முடிவல்ல என நம்ப விரும்புகிறேன்' இந்த உள் ஆவணங்கள், நிறுவனத்தின் இறுதி முடிவெடுக்கும் செயல்முறையைப் பிரதிபலிக்காத ஆரம்ப விவாதங்களைக் காட்டுகின்றன என்றும், வெளியீட்டாளர்கள் தங்கள் உள்ளடக்கம் கூகுளில் கிடைக்கிறதா என்பதை எப்போதும் கட்டுப்படுத்தி வந்துள்ளனர் என்றும் கூகுள் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். இணையதள உரிமையாளர்கள் தங்கள் உள்ளடக்கத்தை AI மோட் மற்றும் AI ஓவர்வியூஸ் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் பதில்களில் இருந்து விலக்கி வைக்க அனுமதிக்கும் கட்டுப்பாடுகளை கூகுள் வழங்குகிறது என்று செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். "AI பதில்கள் அசல் தயாரிப்புக்கு மாற்றாக உள்ளன. இதை நாம் ஒருபோதும் விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கும் ஒரு வணிக முன்மொழிவாக நான் பார்க்கவில்லை," என்கிறார் காஃபி. கடந்த ஓர் ஆண்டாக, தேடுபொறி மற்றும் டிஜிட்டல் விளம்பர வணிகங்களில் கூகுள் ஒன்றல்ல, இரண்டு சட்டவிரோத தனியுரிமையை வைத்திருப்பதாக அமெரிக்க நீதிமன்றங்கள் கண்டறிந்துள்ளன. நீதிமன்றங்கள் இன்னும் விளைவுகளைத் தீர்மானித்து வருகின்றன. மேலும் இணையத்தின் மீதான கூகுளின் கட்டுப்பாட்டிற்குக் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கான சாத்தியங்களும் உள்ளன. நீதிமன்றங்களின் முடிவுகளுக்கு கூகுள் உடன்படவில்லை என்றும் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டு இருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது. நிறுவனம் மிகப்பெரிய போட்டியை எதிர்கொள்கிறது என்றும், நிறுவனத்தை உடைப்பதற்கான திட்டங்கள் நுகர்வோருக்கு மோசமானதாக இருக்கும் என்றும், புத்தாக்கங்களை மந்தப்படுத்தும் என்றும் நிறுவனம் வாதிடுகிறது. ஆனால் கூகுளின் பிடி ஏற்கெனவே சிறிய வழிகளில் தளர்ந்து கொண்டிருக்கலாம். இந்த நீதிமன்ற விசாரணைகளின்போது, சஃபாரியில் கூகுள் தேடல்கள் 22 ஆண்டுகளில் முதல் முறையாகக் குறைந்துள்ளதாக ஆப்பிள் நிர்வாகி எடி கியூ கூறினார். இதற்குக் காரணம் மக்கள் AI சாட்பாட்களை பயன்படுத்துவதே. ஆப்பிள் சாதனங்கள் உள்பட ஒட்டுமொத்த 'வினவல் வளர்ச்சியை' நிறுவனம் தொடர்ந்து காண்காணித்து வருவதாக அறிக்கை ஒன்றில் கூகுள் தெரிவித்துள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 72% அமெரிக்கர்கள் தேடுபொறிகளுக்குப் பதிலாக சில நேரங்களில் ChatGPT போன்ற AI கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். "நீங்களே சர்ச் செய்யும்போது அதிகம் கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்," என iPullRank என்ற SEO நிறுவனத்தின் நிறுவனர் மைக் கிங் கூறுகிறார். "ஆனால் பலர் தங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறார்கள்" என்றும் அவர் கூறுகிறார். ஆனால் AI இணைப்பு என்பது குறிப்பிடத்தக்க செலவுகளுடன் வரக்கூடும். "இது வடிகட்டி குமிழ்களை அதிகமாக உருவாக்கப் போகிறது. ஏனென்றால் கூகுள் உங்கள் வினாவுடன் தொடர்புடைய தகவல்களை உங்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக, விளக்கத்தைக் கொடுக்கிறது," என்று கிங் கூறுகிறார். AI சாட்பாட்கள் பற்றிய ஆராய்ச்சி, அவை எதிரொலி அறைகளாகச் செயல்படும் போக்கைக் கொண்டுள்ளன என்பதையும் குறிக்கிறது. "நீங்கள் எதிர்பார்க்கும் தகவல் வலுப்படுத்தப்பட்டதாக இருக்கும்," என்று கிங் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES AI பதில்களின் தரம் குறித்த அடிப்படைக் கவலைகள் உள்ளதையும் மறுக்க முடியாது. AI ஹாலிசினேஷன்ஸ், அவற்றின் தொழில்நுட்பத் திறன்கள் மேம்படும்போது மோசமடைந்து வருவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சுந்தர் பிச்சைகூட ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில் தொழில்நுட்பத்தின் "ஓர் உள்ளார்ந்த அம்சம்" ஹாலிசினேஷன்ஸ் என்று கூறினார். கூகுள் AI பதில்களை நிலைநிறுத்த அதன் பாரம்பரிய தேடல் முறைகளைப் பயன்படுத்துகிறது என்றும், மேலும் அதன் துல்லியத்தன்மை மேம்பட்டு வருவதாகவும் கூகுள் கூறுகிறது. கூகுளின் AI தேடல் பதில்களில் பெரும்பாலானவை உண்மையானவை என்றும், அவற்றின் துல்லியம், மற்ற தேடல் அம்சங்களுடன் இணையாக இருப்பதாகவும் பிபிசியுடனான நேர்காணலில் கூகுள் தெரிவித்துள்ளது. இருப்பினும், கூகுளின் AI ஓவர்வியூஸ், மக்களை கற்களைச் சாப்பிடவும் பீட்சா ரெசிபிகளில் பசையைச் சேர்க்கவும் அறிவுறுத்திய ஆரம்பக்கால சறுக்கல்கள் இருந்த காலங்களை மனதில் இருந்து அகற்றிவிட முடியாது. பிழைகளைச் சரிசெய்ய கூகுள் தீவிரமாக முயன்றாலும், 2025ஆம் ஆண்டில் ஒரு சமீபத்திய வியாழக்கிழமையில், AI ஓவர்வியூஸ், இது வியாழக்கிழமை அல்ல, இது 2025 அல்ல என்று கூறியதையும் சுலபமாக மறந்துவிட முடியாது. கணினி விஞ்ஞானிகள் "சாட் சாம்பர்ஸ் (chat chambers)" என்று உருவாக்கிய தவறான தகவல்களைக் கொண்ட அமைப்பையும்கூட ஏஐ ஓவர்வியூஸ் உருவாக்கக்கூடும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. கூகுள் AI, இணையத்தில் நீங்கள் காண்பதை மட்டுப்படுத்தாமல் உங்கள் ஆர்வங்களுடன் பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகிறார். இணையத்தை உருவாக்கி அதைச் சார்ந்து இருப்பவர்களுக்கு இயந்திர இணையதளத்தின் அச்சுறுத்தல் கவலையளிக்கும் அதே வேளையில், கூகுள் ஒரு வித்தியாசமான, உற்சாகமான படத்தை வரைகிறது. "ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் இணையதளங்களுக்கு போக்குவரத்தை அதிகமாக அனுப்புவதை நீங்கள் பார்க்க முடியும். நாங்கள் உறுதிபூண்டுள்ள தயாரிப்பின் திசை அதுதான் என்று நான் நினைக்கிறேன்," என்று சுந்தர் பிச்சை டீகோடர் நேர்காணலில் தெரிவித்தார். கூகுள் பிபிசியிடம் பேசியபோது, "தேடலை மேம்படுத்துவது, பயனர்கள் கேட்கக்கூடிய கேள்விகளின் வகைகளை உருவாக்குவது மற்றும் இறுதியில் உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கும் கண்டுபிடிப்பதற்குமான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது ஆகியவையே தனது தொலைநோக்குப் பார்வை என்று கூறுகிறது, இருப்பினும் இவை சாத்தியமான வெவ்வேறு வழிகளில்" என்று கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES "என்ன நடக்கப் போகிறது என்று நான் கணிக்கப் போவதில்லை. ஏனென்றால், நிச்சயமாக, எதிர்காலம் பன்முகத்தன்மை கொண்டது," என்கிறார் நீண்டகால தொழில்நுட்ப ஆதரவாளரும் ஆன்லைன் தளங்களின் சிதைவு குறித்து வரவுள்ள என்ஷிட்டிஃபிகேஷன் புத்தகத்தின் எழுத்தாளருமான கோரி டாக்டரோவ். "ஆனால், தகவல்களைக் கண்டுபிடிப்பதற்கான அல்லது எனது தகவல்களைக் கண்டறிவதற்கான ஒரு வழியாக கூகுளை மதிப்பவராக நான் இன்னும் இருந்திருந்தால், இதைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுவேன்" என்று அவர் கூறுகிறார். ஆனால் இணைய பயனர்கள் தாங்கள் காண விரும்பும் மாற்றங்களுக்கான அழுத்தத்தைக் கொடுக்கும் ஒரு தருணமாகவும் இது இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். "இந்த நெருக்கடியை நாம் வீணாக்கி விடக்கூடாது" என்கிறார் டாக்டரோவ். "மக்களை மிகவும் கோபப்படுத்தும் ஒன்றை கூகுள் செய்ய உள்ளது. எனது முதல் எண்ணம் 'சரி, அருமை. அந்தக் கோபத்தைப் பயன்படுத்திக் கொள்ள நாம் என்ன செய்யலாம் என்பதுதான்.' கூட்டணியை உருவாக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம்" எனக் குறிப்பிடுகிறார் அவர். சிலர் கூகுளின் தொலைநோக்குப் பார்வை நிறைவேறும் வரையோ அல்லது ஒழுங்குமுறை அதிகாரிகள் செயல்படுவதற்காகவோ காத்திருக்கவில்லை. கிளவுட்ஃப்ளேரின் மேத்யூ பிரின்ஸ், நேரடித் தலையீட்டை ஆதரிக்கிறார். தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்தாவிட்டால், கிளவுட்ஃப்ளேர் மற்றும் அனைத்து அளவிலான வெளியீட்டாளர்களின் கூட்டமைப்பும் கூட்டாக இணைந்து செயற்கை நுண்ணறிவு மூலம் தகவல்களை நகல் எடுப்பவர்களைத் தடுப்பதே அவரது திட்டம். இது "ஆன்லைனில் அனுமதிக்கப்பட்டவற்றின் விதிமுறைகளை மீட்டமைக்க" மற்றும் சிலிகான் பள்ளத்தாக்கின் மாதிரிகளுக்கு எரிபொருளாக இருக்கும் தங்கள் தரவுகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த கட்டாயப்படுத்தும் ஒரு துணிச்சலான முயற்சி. (இந்தத் திட்டம் குறித்த கேள்விகளுக்கு கூகுள் பதிலளிக்கவில்லை). இது,"எனது மிகவும் நேர்மறையான அணுகுமுறை, மனிதர்கள் இலவசமாக உள்ளடக்கத்தை பெறலாம், தானியங்கு நிரலிகள் உள்ளடக்கத்திற்காகப் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதும் என் கோரிக்கை" என்று பிரின்ஸ் கூறுகிறார். புதியதும் சிறப்பானதுமான ஒன்று, தற்போது இருப்பதற்கு மாற்றாக வந்தாலும்கூட, இழந்ததைப் பற்றிய ஏக்கத்தை உணராமல் இருப்பது கடினம் என்று நவரோ கூறுகிறார். "அந்த இணையதளம் என்பது ஒரு சில மக்கள் தாங்கள் விரும்பும் விஷயங்களை அடையும்போதுதான் நடக்கும்," என்று அவர் கூறுகிறார். தனது சிறு வயதில், ராக் இசைக் குழுவான குயினுக்காக தாம் உருவாக்கிய ஸ்பானிஷ் மொழி ரசிகர் தளத்தைப் பற்றி அவர் நினைவு கூர்ந்தார். "நான் குயின் இசைக்குழுவை இணையத்தில் தேடினேன். ஆனால் அந்த நேரத்தில் இசைக் குழுவைப் பற்றிய ஸ்பானிஷ் மொழி உள்ளடக்கம் அதிகமாக இல்லை. அதனால் நான் அதை உருவாக்கத் தொடங்கினேன். எனக்கு 10 வயதாக இருந்தபோது அதைச் செய்ய முடியும் என்று உணர்ந்ததால் அதை செய்ய முடிந்தது." "இதுவே முடிவல்ல என்று நம்ப விரும்புகிறேன்." *தாமஸ் ஜெர்மைன் பிபிசியின் மூத்த தொழில்நுட்ப செய்தியாளர். அவர் கடந்த பத்து ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு, தனியுரிமை மற்றும் இணைய கலாசாரத்தின் அம்சங்கள் குறித்து எழுதி வருகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cql2qwp622wo
  5. Published By: DIGITAL DESK 3 19 JUN, 2025 | 05:32 PM வீசா விண்ணப்பதாரர்களுக்கு விரிவாக்கப்பட்ட திரையிடல் மற்றும் சரிபார்ப்பு தொடர்பில் விசேட அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், எங்கள் வீசா செயல்முறை மூலம் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பின் மிக உயர்ந்த தரங்களை நிலைநிறுத்துவதன் மூலம், எங்கள் நாட்டையும் எங்கள் குடிமக்களையும் பாதுகாக்க வெளிவிவகார அமைச்சு உறுதிபூண்டுள்ளது. அமெரிக்க வீசா என்பது ஒரு சலுகை மட்டுமே. உரிமை அல்ல. அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் உட்பட, அமெரிக்காவிற்கு அனுமதிக்கப்படாத வீசா விண்ணப்பதாரர்களை அடையாளம் காண எங்கள் விசா சோதனை மற்றும் சோதனையில் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். புதிய வழிகாட்டுதலின் கீழ், F, M மற்றும் J குடியேறியவர் அல்லாத வகைப்பாடுகளில் உள்ள அனைத்து மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் விண்ணப்பதாரர்களின் ஒன்லைன் இருப்பு உட்பட விரிவான மற்றும் முழுமையான சோதனையை நாங்கள் மேற்கொள்வோம். இந்த சோதனையை எளிதாக்க, F, M மற்றும் J குடியேறியவர் அல்லாத வீசாக்களுக்கான அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் அனைத்து சமூக ஊடக சுயவிவரங்களிலும் உள்ள தனியுரிமை அமைப்புகளை "பொதுமக்கள்" என்று சரிசெய்ய அறிவுறுத்தப்படுவார்கள். எங்கள் வெளிநாட்டு இடுகைகள் விரைவில் F, M மற்றும் J குடியேறியவர்கள் அல்லாத வீசா விண்ணப்பங்களை திட்டமிடுவதை மீண்டும் தொடங்கும். விண்ணப்பதாரர்கள் சந்திப்பு கிடைப்பதற்காக தொடர்புடைய தூதரகம் அல்லது தூதரக வலைத்தளத்தைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு வீசா தீர்ப்பும் ஒரு தேசிய பாதுகாப்பு முடிவாகும். அமெரிக்காவிற்குள் நுழைய விண்ணப்பிப்பவர்கள் அமெரிக்கர்களுக்கும் நமது தேசிய நலன்களுக்கும் தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதையும், அனைத்து விண்ணப்பதாரர்களும் கோரப்படும் வீசாவிற்கான தங்கள் தகுதியை நம்பகத்தன்மையுடன் நிறுவுவதையும், அவர்கள் தங்கள் சேர்க்கைக்கான விதிமுறைகளுக்கு இணங்க நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவதையும் உறுதிசெய்ய, வீசா வழங்கும் செயல்முறையின் போது அமெரிக்கா விழிப்புடன் இருக்க வேண்டும். https://www.virakesari.lk/article/217927
  6. அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகியவற்றைப் போன்று நாங்களும் அதிக டெஸ்ட்களில் விளையாட தகுதி உடையவர்களே! - ஏஞ்சலோ மெத்யூஸ் Published By: VISHNU 17 JUN, 2025 | 01:25 AM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு போன்று இலங்கைக்கும் அதிகளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக அறைகூவல் விடுக்கப்படவேண்டும் என ஏஞ்சலோ மெத்யூஸ் தனது பிரியாவிடை டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஊடகங்கள் மத்தியில் தெரிவித்தார். இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி காலி சர்வதேச அரங்கில் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாவதற்கு முன்னதாக திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஏஞ்சலோ மெத்யூஸ் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் பிரகாசமாக இருக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு 'எமக்கு மிகக் குறைவான டெஸ்ட்கள் கிடைப்பது கவலைக்குரியதாகும். நேர்மையாகக் கூறுவதென்றால் 2008க்குப் பின்னர் நான் முதல் தடவையாக ஒரு வருடத்தில் நான்கு டெஸ்ட்களில் விளையாடுகிறேன். இது கவலை தருகிறது. இளம் கிரிக்கெட் தலைமுறையினர் இன்னும் அதிகமான டெஸ்ட்கள் வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஏனெனில் கிரிக்கெட் வடிவங்களில் டெஸ்ட் கிரிக்கெட்தான் உயரியதாகும். எனவே பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இளம் கிரிக்கெட் வீரர்கள் டெஸட் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கின்றனர். எனவே ஒரு வருடத்தில் 10 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படவேண்டும். 'இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் வருடத்தில் 15க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. அப்படியானால் எங்களால் ஏன் முடியாது. எங்களாலும் விளையாட முடியும். அதற்காக தொடர்ச்சியாக அறைகூவல் விடுத்தால் அது சாத்தியமாகும். நாங்கள் உலகக் கிண்ணங்களை வென்றுள்ளோம். ஒரு நாடு என்ற வகையில் நாங்கள் கிரிக்கெட்டுக்காக எவ்வளவோ செய்திருக்கிறோம். எனவே அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்றே நாங்களும் அதிகளவான டெஸ்ட் போட்டிகளில் விளையாட தகுதி உடையவர்களே' என பிரியாவிடை டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார். 16 வருடங்கள் இலங்கைக்காக மூவகை கிரிக்கெட்டில் எவ்வளவோ சாதித்த நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெறுவதற்கான காரணம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 'கிரிக்கெட் வாழ்க்கை என்பது ஒரு சுழற்சியாகும். நாங்கள் வருவதும் போவதுமாக இருக்கிறோம். கடந்த கால வீரர்கள் மிகச் சிறந்தவர்கள். நாங்கள் எல்லோரும் இளம் வீரர்களாக அணியில இணைந்து சிரேஷ்ட வீரர்களாக வெளியேறுகிறோம். என்னைப்பொறுத்த மட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வுபெறுவதற்கு சில காரணங்கள் இருக்கிறது. 'கடந்த ஏழு, எட்டு போட்டிகளில் எனது திறமை நான் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கவில்லை. எனவே அணிக்கு நான் சுமையாக இருக்க விரும்பவில்லை. நான் எமது அணியின் எதிர்கால அட்டவணையைப் பார்த்தபோது நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு போட்டிகள் இல்லை. (பங்களாதேஷுடனான தொடருக்குப் பின்னர் இன்னும் ஒரு வருடத்திற்கு பின்னரே அடுத்த டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது) இது துரதிர்ஷ்டவசமாகும். எனவே இதுதான் இளையவர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க சரியான தருணம் என எண்ணினேன். ஏனேனில் பல திறமையான இளம் வீரர்கள் சாதிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது' என்றார். தொடர்ந்து பதிலளித்த அவர், 'சனத் பயிற்றுநராக பொறுப்பேற்ற பின்னர், தரங்கவும் அவரது அணியினரும் தேர்வாளர்களாக வந்த பின்னர் தொடர்பாடல்கள் மிகவும் நன்றாக இருந்தது. அவர்கள் எங்களோடு அடிக்கடி உரையாடுகிறார்கள்.. சிரேஷ்ட வீரர்களோ அல்லது கனிஷ்ட வீரர்களோ அவர்கள் சரியானவற்றை கலந்துரையாடுகிறார்கள்.. அதுதான் முக்கியமானது. அணியில் சிறந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கு தொடர்பாடல்கள் பிரதானமானது. அதன் பின்னரே ஆற்றல் வெளிவரும். அதனை நான் நேரடியாக பார்த்துள்ளேன். நாங்கள் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயற்பட்டோம். எங்களுக்கு டெஸ்ட் இறுதிப் போட்டியில் விளையாட கிட்டத்தட்ட வாய்ப்பிருந்தது. அத்துடன் ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் சிறப்பாக விளையாடி இருந்தோம். ஆகவே தொடர்பாடல் மிகத் தெளிவாக இருந்ததுடன் சூழ்நிலையும் சிறப்பாக இருந்தது. அதனால் தான் ஆற்றல்களும் மேலும் மேலும் சிறப்பாக இருந்தது. அவர்கள் தங்களது பணியை சிறப்பாக ஆற்றுகின்றனர். அத்துடன் திறமையான வீரர்கள் உருவாகி வருகிறார்கள். அவர்களது தரமும் உயர்கிறது. எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது' என்றார். டெஸ்ட் ஓய்வுக்குப் பின்னர் இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிவரை விளையாட எண்ணியுள்ளதாக ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார். 'ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறுவதற்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கின்றது. அப் போட்டி இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறுவதால் சொந்த மண்ணில் இலங்கை சம்பியனாகவேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறேன். ஆனால், அதற்கு எனது உடற்தகுதி அனுமதிக்கவேண்டும். அதற்காக நான் கடுமையாக உழைக்கவுள்ளேன். கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு எனது திறமையை அதிகரித்துக்கொள்ளும் அதேவேளை உடற்தகுதியையும் பேணவுள்ளேன். அதன் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெறுவேன்' என பதிலளித்தார். இலங்கை அணி வீரராக நினைவிலிருந்து நீங்காத தருணங்கள் பற்றி கேட்டபோது, 'எனது கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டுப் பார்க்கும்போது ஒவ்வொரு விரரரையும் போன்று எனக்கும் நினைவிலிருந்து நீங்காத எத்தனையோ தருணங்கள் இருக்கின்றது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பர்னில் 2010இல் நாங்கள் ஈட்டிய வெற்றி - (ஒருநாள் போட்டியில் மெத்யூஸ் - மாலிங்க 9ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 132 ஓட்டங்களின் உதவியுடன் ஈட்டிய ஒரு விக்கெட் வெற்றி), இங்கிலாந்துக்கு எதிராக முதல் தடவையாக அந் நாட்டில் நாங்கள் ஈட்டிய (ஏஞ்சலோ மெத்யூஸின் தலைமையில்) முதலாவது டெஸ்ட் வெற்றி, 2016இல் அவஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு ஈட்டிய 3 - 0 தொடர் வெற்றி ஆகிய அனைத்தும் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஈட்டப்பட்ட மகத்தான வெற்றிகளாகும். அத்துடன் உலகக் கிண்ணத்தை மறக்க முடியாது. 2014 ரி20 உலகக் கிண்ணம், 2014 ஆசிய கிண்ணம் ஆகிய வெற்றிகளையும் ஈட்டினோம். வெற்றியீட்டிய இந்த அணிகளில் எல்லாம் நான் பங்காற்றியதையிட்டு மிகுந்த சந்தோஷம் அடைகிறேன்' என்றார். மகிழ்ச்சி தரக்கூடிய விடயங்களைப் போன்ற கசப்பான நிகழ்வுகள் ஏதேனும் இருக்கின்றதா? குறிப்பாக பங்களாதேஷுக்கு எதிரான 2021 உலகக் கிண்ணப் போட்டியில் டைம் அவுட் ஆன விதம் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்? 'அது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. ஆனால், அவர்கள் அனைவரும் எனது நண்பர்கள். அவர்களுக்கு எதிராக எனது மனதில் எதுவும் இல்லை. அவர்கள் எங்களுடன் நலமாகவே இருக்கின்றனர். வெளிப்படையாக கூறுவதென்றால் நாங்கள் சில வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டோம். ஆனால், அவர்களுக்கு எதிராக எனது மனதில் இதுவும் இல்லை. அவர்கள் மீது எனக்கு எவ்வித வெறுப்பும் இல்லை. வெறுப்பு என்பது கிரிக்கெட்டில் மோசமான வார்த்தை. நாங்கள் அனைவரும் கடினமாகவும் நேர்மையாகவும் விளையாடுகிறோம். அவர்கள் அனைவரும் எனது நல்ல நண்பர்கள்' என ஒரு சிறந்த வீரருக்கே உரிய விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் பதிலளித்தார் மெத்யூஸ். இலங்கை கிரிக்கெட் அணி வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அணித் தலைவர் பதவியை நீங்கள் துறந்ததற்கான காரணம் என்ன? 'ஸிம்பாப்வேக்கு எதிராக 2018இல் சந்தித்த தோல்வியை இலங்கை அணியினாலும் முழு இலங்கையினாலும் ஜீரணிக்க முடியவில்லை. இதனை அடுத்து நான் அணித் தலைவர் பதவியலிருந்து விலகிக்கொண்டேன். நாங்கள் வீழ்ச்சி அடைந்த நேரத்திலேயே அணித் தலைவர் பதவியிலிருந்து நான் விலக நேரிட்டது. அந்தத் தோல்வியினால் நான் பெரும் சோகம் அடைந்தேன். அந்தத் தோல்விக்கு பொறுப்பேற்க வெண்டும் என நான் எண்ணினேன். அதனால் தான் அணித் தலைவர் பதியிலிருந்து விலக நேரிட்டது. ஒரு வருடம் கழித்து தலைமைப் பதவியைப் பொறுப்பெற்குமாறு என்னிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன். '2008இலிருந்து இன்றுவரை நான் எல்லாவற்றையும் பார்த்துள்ளேன், எதிர்கொண்டுள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. அவற்றை நான் சமாளித்துக்கொண்டேன். ஆடுகளத்தின் உள்ளேயும் வெளியேயும் சவால்கள் வந்தன. உபாதைகளுக்குள்ளானேன். அவை அனைத்தையும் எதிர்கொண்டு மீண்டு வந்தேன். நான் எப்போதும் சரியானதை செய்ய முயற்சித்தேன் என கருதுகிறேன். வீரர்கள் என்ற வகையில் தலைவர் என்ற வகையில் நாங்கள் எடுக்கும் தீர்மானங்கள் சில வேளைகளில் தவறாகி விடுவதுண்டு. விளையாட்டில் இவ்வாறு இடம்பெறுவது சகஜம். ஆனால், பின்னோக்கிப் பார்க்கும் போது நான் எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு சரியான தீர்மானங்களையே எடுத்தேன் என்பதையிட்டு சந்தோஷமடைகிறேன். அத்துடன் அணிக்கான எனது நூற்றுக்கு 100 வீத பங்களிப்பை வழங்கினேன் என நம்புகிறேன்' என பதிலளித்தார் மெத்யூஸ். புனித சூயைப்பர் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவராக சகலதுறைகளிலும் பிரகாசித்த ஏஞ்சலோ மெத்யூஸ் 2006ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக விளையாடி இருந்தார். பாடசாலையை விட்டு விலகிய பின்னர் கலம்போ கோல்ட்ஸ் கழகத்தில் இணைந்த ஏஞ்சலோ மெத்யூஸ் கிட்டத்தட்ட 20 வருடங்கள் அக் கழகத்திற்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். தனது கிரிக்கெட் வளர்ச்சியில் இக் கழகமும் முக்கிய பங்காற்றியதாக தெரிவித்த அவர், '2007ஆம் ஆண்டு மாகாண கிரிக்கெட் போட்டியில் நான் சிறப்பாக விளையாடியதால் 2008இல் இலங்கை ஏ அணிக்கு நான் தெரிவுசெய்யப்பட்டேன். தென் ஆபிரிக்காவுக்கான அந்த கிரிக்கெட் விஜயத்தில் இரண்டு சதங்களை அடித்தேன். அதன் பின்னர் இலங்கை அணியில் நான் இணைக்கப்பட்டேன். அப்போது தொலைக்காட்சி திரைகளில் பார்த்து இரசித்த சனத் ஜயசூரிய, சமிந்த வாஸ், முரளிதரன், மஹேல, சங்கக்கார ஆகிய உலகத் தரம் வாய்ந்த வீரர்களை உடைமாற்று அறையில் (dressing room) பார்த்தபோது எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. 'ஆனால், அந்த சூழ்நிலையை எனது சொந்த வீடு போல் ஆக்கி எனது மன அழுத்தத்தை குறைத்ததுடன் உணர்ச்சிகளையும் இலகுவாக்கிய டி.எம். டில்ஷான், திலான் சமரவீர உட்பட அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். எனது கன்னி முயற்சியில் நான் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தேன். ஆனால் அவர்கள் எனது வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தினர். அத்துடன் தன்னம்பிக்கையும் ஊட்டினர். அவர்கள் அனைவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். அதன் பின்னர் நான் பின்னோக்கி நகரவில்லை. மேடு பள்ளங்களை சந்தித்தேன். தொல்லைகளும் கஷ்டங்களும் வந்தன. அவை அனைத்தையும் கடந்து வந்ததைப் பார்க்கும்போது இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார் அவர். ஊடக சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன்னர் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவியவர்களை நினைவுகூர்ந்த ஏஞ்சலோ மெத்யூஸ், தன்னை வளர்த்து ஆளாக்கி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்கிய தனது பெற்றோரே தனது ஹீரோக்கள் என கூறினார். 'நான் எத்தனையோ பேருக்கு நன்றிகூற கடமைபட்டுள்ளேன். எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வளவு நீண்டகால கிரிக்கெட் வாழ்க்கையை எனக்கு அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் பல தடவைகள் உபாதைக்குள்ளானேன். ஆனால், இறைவனின் ஆசியால் என்னால் 100 டெஸ்ட்களைப் பூர்த்திசெய்ய முடிந்தது. இது எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க விசேட பயணமாகும். இன்றுவரை நான் வீட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் தங்களை எனக்காக அர்ப்பணித்த எனது பெற்றோர், எனது உடன்பிறப்புகள், எனது மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கு நான் நன்றிகூறவேண்டும். நான் அழுத்தங்களை எதிர்கொண்டபோதெல்லாம் அவற்றிலிருந்து மீண்டு வர எனது மனைவி எனக்கு உறுதுணையாக இருந்தார். அது இலகுவானதல்ல. அவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். என்னை வளர்த்து இந்த நிலைக்கு ஆளாக்கிய எனது பெற்றோரிடம் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டேன். அவர்கள் தான் எனது ஹீரோக்கள். 'எனது நெருங்கிய நண்பர்கள், பிரச்சினைகள், சிரமங்களின்போது எனக்காக என்னோடு இருந்தவர்கள், எனது முன்னாள், சமகால பயிற்றுநர்கள், எனக்கு கல்வி தந்து என்னை விளையாட்டுத்துறையில் பிரகாசிக்கச் செய்த புனித சூசையப்பர் கல்லூரி, கல்லூரியின் முன்னாள், சமகால முதல்வர்கள் (அதிபர்கள்), முன்னாள் மற்றும் சமகால ஆசிரியர்கள், முன்னாள் மற்றும் சமகால பயிற்றுநர்கள் உட்பட எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்னேன். அத்துடன் எனது கழகம் கலம்போ கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கும் நன்றி கூறவேண்டும்' என மெத்யூஸ் தெரிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான, 100 டெஸ்ட்களைப் பூர்த்திசெய்த காலி சர்வதேச மைதானத்தில் ஏஞ்சலோ மெத்யூஸ் தனது பிரியாவிடை டெஸ்ட் போட்டியில் விளையாடவிருப்பது விசேட அம்சமாகும். https://www.virakesari.lk/article/217668
  7. பட மூலாதாரம்,IRCDS படக்குறிப்பு,ஷிபா மாலிக் மற்றும் அவரின் குடும்பத்தினர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை உள்பட 7 பேரை, ஜூன் 17 அன்று வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 35 ஆயிரம் ரூபாய் முன்பணத்துக்காக ஆறு மாதங்களாக செங்கல் சூளை உரிமையாளரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானதாக ஒடிசாவை சேர்ந்த ஷிபா மாலிக் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அரசின் அனுமதியின்றி சூளை செயல்பட்டதால், அதன் உரிமையாளர் எஸ். துளசி மீது கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர். ஒடிசா மாநில தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டது எப்படி? பட மூலாதாரம்,IRCDS படக்குறிப்பு, விசாரணை மேற்கொண்ட வருவாய்த்துறை துறை அதிகாரிகள் ஒடிசா மாநிலம், பாலாங்கீர் (Balangir) மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இருந்து சுமார் 80 பேர், கடந்த ஜனவரி மாதம் திருவள்ளூருக்கு வந்துள்ளனர். அவர்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள சிவன்வாயல் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளை ஒன்றில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். "செங்கல் சூளைகளில் வேலை பார்ப்பதற்காக இவர்களை அழைத்து வந்துள்ளனர். இவர்களுக்குத் தலா 35 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செங்கல் சூளை உரிமையாளர் அளித்துள்ளார்" என்கிறார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன். "சொந்த ஊரில் வானம் பார்த்த பூமி என்பதால் வருடத்தில் சில மாதங்கள்தான் விவசாய வேலைகள் இருக்கும். மற்ற நாட்களில் வேறு வேலைகளுக்குச் சென்றுவிடுவோம். குடும்பத்தில் கஷ்டம் அதிகரித்ததால், முன்பணத்தை வாங்கிக் கொண்டு செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்தோம்" எனக் கூறுகிறார், ஒடிசாவின் சலேபாடி கிராமத்தைச் சேர்ந்த ஷிபா மாலிக். பாலாங்கீர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், திருவள்ளூரில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரிய வருவது வாடிக்கையாக உள்ளது. பட மூலாதாரம்,IRCDS படக்குறிப்பு, சிவன்வாயல் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணியாற்றியவர்கள் தங்கியிருந்த இடம் 'ஆறு மாதங்களாக அவஸ்தை' - "கடந்த ஆறு மாதங்களாக குடிநீர், உணவு, இருப்பிடம் என முறையான அடிப்படை வசதிகள் எதுவும் நாங்கள் வேலை பார்த்த சூளையில் செய்து தரப்படவில்லை" என பிபிசி தமிழிடம் கூறினார் ஷிபா மாலிக். ஷிபாவிடம் ஒடியா மொழியில் உரையாடுவதற்காக அம்மாநிலத்தைச் சேர்ந்த சகில் எக்கா என்பவர் பிபிசி தமிழுக்கு உதவி செய்தார். இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நாள் ஒன்றுக்கு 13 முதல் 14 மணிநேரம் தங்களிடம் வேலை வாங்கப்பட்டதாகக் கூறும் ஷிபா மாலிக், "நாங்கள் குடும்பமாக வந்து வேலை செய்தோம். வாரம் முழுக்க செங்கல்லை அறுத்தாலும் ரூ. 500 தான் உரிமையாளர் தருவார். எதிர்த்துக் கேள்வி கேட்டால், அட்வான்ஸ் தொகையை கொடுத்துவிட்டுச் செல்லுமாறு கூறுவார்," என்கிறார். தங்கள் வேலைக்கு உரிய சம்பளம் இல்லாததால், சூளை உரிமையாளரிடம் சில தொழிலாளர்கள் சண்டையிட்டுள்ளனர். கடந்த ஜூன் முதல் வாரத்தில் சுமார் 70 தொழிலாளர்கள் முன்பணத்தைக் கொடுத்துவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டனர். "மீதமுள்ள மூன்று வயது குழந்தை உள்பட ஏழு பேருக்கு பணம் செலுத்துவதற்கு யாரும் இல்லை. இந்த தகவலை சூளையில் வேலை பார்த்த பெண்ணின் மகன், ஒடிசாவில் உள்ள அரசு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டனர்," எனக் கூறுகிறார், திருவள்ளூர் ஆர்.டி.ஓ.ரவிச்சந்திரன். இதன்பிறகு ஜூன் 17 அன்று சிவன்வாயலில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது அதிர்ச்சியூட்டும் சில விஷயங்களை கண்டறிந்துள்ளனர். பட மூலாதாரம்,IRCDS படக்குறிப்பு, வலி நிவாரணிகளாக போலி மருத்துவரால் வழங்கப்பட்ட மருந்துகள் 'உடல் வலியைப் போக்குவதற்கு ஊசி' "குடும்பமாக தங்குவதற்கு சிறிய குடிசை மாதிரி அமைத்துத் தந்துள்ளனர். அதன் உள்ளே நுழைவதற்கு 2 அடி உயரம்தான் உள்ளது. மின்வசதி உள்பட எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை" எனக் கூறுகிறார், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன். தொடர்ந்து பேசிய அவர், "14 மணிநேரத்துக்கும் மேலாக வேலை பார்த்ததால் அவர்களுக்கு உடல் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கக் கூடாது என்பதற்காக ஊசி போட்டு மருந்து கொடுத்துள்ளனர். இதற்காக வாரம் ஒருமுறை போலி மருத்துவர் ஒருவரை வரவழைத்துள்ளனர்," எனக் கூறுகிறார். போலி மருத்துவர் மூலம் மருந்துகளைக் கையாண்டதாக சூளை உரிமையாளர் மீது வெங்கல் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது, பயன்படுத்திய ஊசிகள், ஏராளமான மருந்து அட்டைகளைக் கைப்பற்றியுள்ளனர். மருந்துகளின் தன்மை குறித்து சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் வீ.புகழேந்தியிடம் கேட்டபோது, "வலி நிவாரணத்துக்கான மருந்துகளாக இவை உள்ளன" என்று மட்டும் பதில் அளித்தார். "நாளொன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் செங்கற்களை அறுப்போம். ஆனால், மிகக் குறைவான கூலியே கொடுக்கப்பட்டதால், அது உணவு செலவுக்கே சரியாக இருக்கும். ஊருக்குள் சென்று ரேசன் அரிசியை வாங்கி பயன்படுத்துவோம்" எனக் கூறுகிறார் ஷிபா மாலிக். "ஆறு மாதங்களாக வேலை பார்த்தாலும் சூளை உரிமையாளரிடம் வாங்கிய முன்பணத்தைக் கழிக்க முடியவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,IRCDS 'ஒடிசா தொழிலாளர்களை குறிவைக்கும் முகவர்கள்' "திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் உரிமம் பெறாத சூளைகளும் உள்ளன. ஒடிசாவில் வறுமையால் வாடும் மக்களை குறிவைத்து சில முகவர்கள் இயங்கி வருகின்றனர்" எனக் கூறுகிறார், திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த கிராமப்புற சமூக மேம்பாட்டு அமைப்பின் (Integrated rural community development society) ஒருங்கிணைப்பாளரான பழனி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தற்போது மீட்கப்பட்ட தொழிலாளர்கள் முகவர் மூலமாக வந்துள்ளனர். பகலில் வெயில் அதிகமாக இருப்பதால் இரவு 10 மணிக்கு மேல் சூளைக்குச் செல்கின்றனர். அதிகாலை வரை வேலை பார்ப்பார்கள். பகலில் கற்கள் காய்வதற்கு எளிதாக இருக்கும். சிலர் மாலை 4 மணிக்கு சென்றுவிட்டு 12 மணி வரையில் வேலை பார்ப்பார்கள்," எனவும் அவர் குறிப்பிட்டார். "ஒருவர் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்தாலும் ஆய்வு நடத்தும்போது, தங்களின் உரிமையாளர் குறித்து தவறாக எதுவும் கூற மாட்டார்கள். அதனால் மீட்பதில் சில நேரங்களில் சிக்கல் ஏற்படும்," எனக் கூறுகிறார் ஒருங்கிணைந்த கிராமப்புற சமூக மேம்பாட்டு அமைப்பின் களப் பணியாளர் சூர்யா நடராஜன். ஒருவர் கொத்தடிமை எனக் கண்டறியப்பட்டால் அவருக்கு மாநில அரசு ஒரு லட்ச ரூபாயை வழங்குவதாகவும் பிபிசி தமிழிடம் அவர் குறிப்பிட்டார். "மீட்கப்பட்ட தொழிலாளிக்கு வங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டு உடனே முப்பதாயிரம் ரூபாயை அரசு வரவு வைக்கிறது. வழக்கு நடக்கும் காலங்களில் மீதமுள்ள தொகையை வரவு வைப்பது வழக்கம்" என்கிறார் சூர்யா நடராஜன். செங்கல் சூளையில் இருந்து மீட்கப்பட்ட ஷிபா மாலிக், தீபாஞ்சலி மாலிக், சாய்ரேந்திரி நாக், பகாரட் நாக், ஹடுபரிகா, ஜென்ஹி பரிஹா மற்றும் மூன்று வயது குழந்தை ஆகியோரை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவே ரயில் மூலம் ஒடிசாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். '2 மாதங்களில் மூன்றாவது சம்பவம்' செங்கல் சூளையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, தொழிற்சாலைகள் சட்டம் 1948ன் கீழ் உரிமம் பெறவில்லை என்பதைக் கண்டறிந்தனர். ஊழியர்களுக்கான வருகைப் பதிவேடு, ஊதிய பதிவேடு ஆகியவற்றை பராமரிக்கவில்லை என்பதும் கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்கான ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதையும் ஆய்வில் கண்டறிந்தனர். சூளை உரிமையாளர் துளசி மீது வெங்கல் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சூளை உரிமையாளர் மீதான நடவடிக்கை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆர்.டி.ஓ ரவிச்சந்திரன், "முன்தொகை கொடுத்து தொழிலாளர்களைக் கூட்டி வருவது என்பது கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டங்களை மீறி அதிக நேரம் வேலை பார்க்க வைத்தது உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார். "ஆனால், அவரைக் கைது செய்ய முடியவில்லை. தற்போது சூளையின் உரிமையாளர் தலைமறைவாக இருக்கிறார்" என, ஆர்.டி.ஓ ரவிச்சந்திரன் தெரிவித்தார். கடந்த 2 மாதங்களில் மட்டும் மூன்று நிகழ்வுகளில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டுள்ளதாகக் கூறும் ரவிச்சந்திரன், மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக செங்கல் சூளை உரிமையாளர்களை அழைத்துக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் கூறுகிறார். "கொத்தடிமைகளாக யாரையும் பயன்படுத்த மாட்டோம் என்பதை அவர்களிடம் எழுதி வாங்க உள்ளோம்" எனத் தெரிவித்தார். கொத்தடிமைகளாக மக்களை பணிக்கு அமர்த்துவது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டால், கொத்தடிமைத் தொழிலாளர் முறை (அழித்தல்) சட்டம், 1976-ன் கீழ், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 2000 வரை அபராதமும் விதிக்கப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1wpn9rqg12o
  8. ஈழப்பிரியன் அண்ணாவுக்கு சந்திக்க நேரமில்லை போல, அடுத்தமுறை சந்திப்போம் என செய்தி அனுப்பி உள்ளார். சிறி அண்ணை இன்னொரு முறை வருகையில் சந்திப்போம்.
  9. ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள் Published By: VISHNU 16 JUN, 2025 | 02:49 AM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டது. இந்த டெஸ்ட் தொடரில் காலியில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிரேஷ்ட வீரர், முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான பூர்வாங்க குழாத்தில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார, பயிற்சியின்போது உபாதைக்குள்ளானதால் இந்தத் தொடரில் விளையாடமாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. அத்துடன் கசுன் ராஜித்த, அறிமுக வீரர் இசித்த விஜேசுந்தர ஆகியோர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கை குழாத்தில் இடம்பெறும் பசிந்து சூரியபண்டார, பவன் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க, இசித்த விஜேசுந்தர ஆகிய நால்வரும் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை. ஆரம்ப வீரர் லஹிரு குமார ஓரே ஒரு சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். ஆறு வருடங்களுக்கு பின்னர் சுழல்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய டெஸ்ட் குழாத்தில் இடம்பெறுவதுடன் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை ஏ அணிக்கான போட்டிகளிலும் பிரகாசித்த ஐந்து வீரர்கள் அறிமுக வீரர்களாக குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். நியூஸிலாந்துக்கு எதிராக காலியில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடிய அகில தனஞ்சய இம்முறை 7 உள்ளூர் 3 நாள் கிரிக்கெட் போட்டிகளில் 34 விக்கெட்களை வீழ்த்தி சுழல்பந்துவீச்சாளர்களில் சிறந்து விளங்கினார். அத்துடன் 6 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அவர் 33 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். உள்ளூர் 3 நாள் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த ஆரம்ப வீரர் லஹிரு உதார (9 போட்டிகளில் ஒரு இரட்டைச் சதத்துடன் 787 ஓட்டங்கள்), மத்திய வரிசை வீரர் பசித்து சூரியபண்டார (8 போட்டிகளில் 2 சதங்களுடன் 620 ஓட்டங்கள்), மற்றொரு மத்திய வரிசை வீரரான பவன் ரத்நாயக்க (8 போட்டிகளில் 542 ஓட்டங்கள்), சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் சோனால் தினூஷ (4 போட்டிகளில் 255 ஓட்டங்கள், 8 விக்கெட்கள்), சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்க (8 போட்டிகளில் 52 விக்கெட்கள்), இசித்த விஜேசுந்தர (44 முதல்தர போட்டிகளில் 112 விக்கெட்கள்) ஆகியோர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். சிரேஷ்ட வீரர்கள் எதிர்பார்த்தது போல குழாத்தில் இடம்பெறுகின்றனர். இலங்கை டெஸ்ட் குழாம் பெத்தும் நிஸ்ஸன்க, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபண்டார, சொனால தினூஷ, பவன் ரத்நாயக்க, ப்ரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, அக்கில தனஞ்சய, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, கசுன் ராஜித்த, இசித்த பெர்னாண்டோ. https://www.virakesari.lk/article/217564
  10. உங்கள் வசதிப்படி செய்யுங்க, போட்டிகளுக்கு அண்மையாக என்றால் நீங்கள் குறிப்பிட்டது போல் வீராங்கனைகளின் பெயர் விபரம் தெரியும்.
  11. அது வந்து... இப்ப நான் என்ன சொல்றது?! திரு சுகந்தன் அவர்கள், இந்தப் பகுதியை சுற்றுலா தலமாக்க முயற்சிக்கிறார். அத்தோடு கள்ளை போத்தலில் அடைத்து ஏற்றுமதி செய்கிறார். பனை மூலப்பொருட்களை வைத்து நிறைய உள்ளூர் உற்பத்திகள் விற்பனை, ஏற்றுமதி செய்கிறார். பாதுகாப்பான படகுச்சவாரி போன்றன பயிற்றப்பட்ட ஊழியர்களை வைத்து மேற்கொள்கிறார். ஆசையாக இருந்தால் ஒரு செய்தி அனுப்பி இருக்கலாமே அண்ணை? ஊருக்கு வந்தால் ஒரு பனைக் கள்ளு(வெறிக்காது) வாங்கித்தந்திருப்பேனே!
  12. கமேனி தொடர்ந்தும் உயிருடன் இருக்ககூடாது - இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் 19 JUN, 2025 | 04:00 PM இஸ்ரேலின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்ல கமேனி தொடர்ந்தும் உயிர்வாழ்வதற்கு அனுமதிக்க முடியாது என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார். ஈரானின் இன்றைய ஏவுகணைகளை தாக்குதலை தொடர்ந்தே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஈரான் போன்ற ஒரு நாட்டிற்கு தலைமை தாங்கி இஸ்ரேலை அழிப்பதை தனது பணியாகக் கொண்ட காமெனி போன்ற ஒரு சர்வாதிகாரி தொடர்ந்து இருக்க முடியாது. ”என அவர் தெரிவித்துள்ளார் இஸ்ரேலிய இராணுவத்திற்கு "அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார் மேலும் "அதன் அனைத்து இலக்குகளையும் அடைய இந்த மனிதன் தொடர்ந்து இருக்கக்கூடாது" என்பதை இராணுவம் .அறியும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217924
  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜிம்பாப்வேயில் 84,000-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், பிரியா சிப்பி பதவி, பிபிசி உலக சேவை 8 மணி நேரங்களுக்கு முன்னர் யானைகளின் எண்ணிக்கை அதீதமாக உயர்ந்துவிட்டது என்று சொல்ல முடியுமா? ஜிம்பாப்வே அரசை பொருத்தவரை யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவே ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக யானைகளை கொல்ல அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. விலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடைமுறை, அவற்றின் ஒரு பகுதியைக் 'கொல்லுதல்' ஆகும். அதாவது அதிகளவில் இருக்கும் விலங்குகளை, ஒரு குறிப்பிட்ட அளவில் அழிப்பதன் மூலம் அந்த விலங்கினத்தின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டில் (2024), இருநூறுக்கும் மேற்பட்ட யானைகளை கொல்ல அனுமதி கொடுத்ததற்காக ஜிம்பாப்வே அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது. இப்படிப்பட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில், தெற்கு ஜிம்பாப்வேயில் உள்ள சேவ் பள்ளத்தாக்கு பாதுகாப்புப் பகுதியில் வசிக்கும் யானைகளில் குறைந்தது 50 யானைகளை கொல்லும் திட்டத்தை அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்தது. யானைகளை கொல்லும் திட்டங்கள் ஏற்கனவே அமலில் இருப்பதாக தேசிய வனவிலங்கு ஆணையமான ஜிம்பார்க்ஸின் செய்தித் தொடர்பாளர் டினாஷே ஃபராவோ கூறுகிறார். தேசிய பூங்காவில் தற்போது 2,550 யானைகள் உள்ளன, ஆனால் அங்கு 800 யானைகளை 'பராமரிக்கும் திறன்' மட்டுமே உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். யானைகளை கொன்று அதிலிருந்து கிடைக்கும் மாமிசம், உள்ளூர் மக்களின் உணவுக்காக கொடுக்கப்படும் என்றும், யானைத் தந்தங்கள் தேசிய பூங்காவின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். "நமது வாழ்விடத்தைப் பாதுகாக்க, விலங்கு அதிகரிப்புப் பிரச்னையை நாம் சமாளிக்க வேண்டும்." என்று ஃபராவோ பிபிசியிடம் தெரிவித்தார். "அதீத அளவிலான யானைகள், தாங்கள் வாழும் வாழ்விடத்தையே அழித்துவிடுகின்றன. அது, யானைகளுக்கே ஆபத்தாக மாறி வருகிறது. இப்போது இருக்கும் பெருமளவிலான யானைகளின் எண்ணிக்கையை நமது சுற்றுச்சூழல் அமைப்பால் சமாளிக்க முடியாது," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜிம்பாப்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, யானைகளின் எண்ணிக்கையை குறைக்கும் பணி ஏற்கனவே நடைபெற்று வருகிறது 'பாதுகாக்கும் அணுகுமுறையால் அரசு எதிர்கொள்ளும் விமர்சனம்' ஜிம்பாப்வேயில் 1980களின் பிற்பகுதி வரை அமலில் இருந்த யானை அழிப்பு திட்டம் அதன்பிறகு 2024ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படவில்லை. ஜிம்பாப்வேயில் அதிக அளவிலான யானைகள் உள்ளன. உலகில் அதிகளவிலான யானைகளைக் கொண்ட நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே இரண்டாம் இடம் வகிக்கிறது. 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வான்வழி கணக்கெடுப்பின் அடிப்படையில், நாட்டில் 84,000க்கும் மேற்பட்ட யானைகள் இருந்ததாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன. KAZA அமைப்பு 2022இல் நடத்திய யானை கணக்கெடுப்பு மற்றொரு எண்ணிக்கையை காட்டியது. அதன்படி, ஜிம்பாப்வேயில் சுமார் 65,000 யானைகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1,31,000-க்கும் அதிகமான யானைகளைக் கொண்ட போட்ஸ்வானா, உலகில் அதிகளவிலான யானைகள் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. யானையின் எண்ணிக்கையை குறைக்கும் புதிய திட்டங்களுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. "இது பாதுகாப்பிற்கான மிகவும் மோசமான அணுகுமுறை," என்று ஜிம்பாப்வேயை தளமாகக் கொண்ட இயற்கை வள நிர்வாக மையத்தின் இயக்குனர் ஃபராய் மகுவு கூறுகிறார். "யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், வனவிலங்கு வழித்தடங்களை உருவாக்கி, அவை இயல்பான முறையில் வாழ்வதற்கான பிற பகுதிகளில் சுதந்திரமாக வாழவிடலாம்," என்று அவர் கூறுகிறார். "அதேபோல, யானைகள் குறைவாக உள்ள பகுதிகளுக்கு அவற்றை இடமாற்றம் செய்யலாம்." யானைகளை இடமாற்றம் செய்வது செலவு அதிகம் பிடிக்கும் செயல்முறை என்றும், அது அதீத எண்ணிக்கை என்ற பிரச்னையை தீர்க்காது என்றும் ஜிம்பாப்வே அதிகாரிகள் கூறுகின்றனர். "இடமாற்றம் என்பது அதிக செலவு பிடிக்கும் செயல்முறை. நம்மிடம் வளங்கள் குறைவாகவே உள்ளன. அத்துடன், ஜிம்பாப்வே ஒரு நாடாக பெரிய அளவில் வளராவிட்டாலும், விலங்குகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை மட்டும் மட்டற்ற அளவில் அதிகரித்து வருகிறது, இது வாழ்விடத்திற்கான போட்டியை உருவாக்குகிறது," என்று ஃபராவோ கூறுகிறார். ஆனால், யானைகளை இடமாற்றுவதும் வழக்கத்தில் இல்லாதது அல்ல. பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் இடமாற்ற முயற்சிகளில் மிகப்பெரிய ஒன்றில், அண்மையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து 70 வெள்ளை காண்டாமிருகங்கள் ருவாண்டாவுக்கு மாற்றப்பட்டன. இந்த முயற்சி வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையும், இனப்பெருக்கம் செய்ய புதிய இடம் ஒன்றை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. விலங்குகளின் அதிக எண்ணிக்கை, நீர் மற்றும் உணவு போன்ற வளங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், யானைகளை கொல்வது என்பது மனிதர்கள்-வனவிலங்கு மோதலை மோசமாக்கும் என்று மகுவு எச்சரிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அண்மையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து 70 வெள்ளை காண்டாமிருகங்கள் ருவாண்டாவுக்கு மாற்றப்பட்டன "யானைகள் மிகவும் புத்திசாலியானவை மற்றும் உணர்ச்சிபூர்வமான உயிரினம்," என்று அவர் கூறுகிறார். "ஒரு யானையைக் கொன்றால், பிற யானைகள் வழக்கமாக தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடரும் என்று நினைக்காதீர்கள், தங்களுடன் இருந்த சக உயிரினங்களின் இழப்பால் அவை பெரும் துக்கத்திற்கு ஆளாகின்றன. யானைகளின் துக்கத்தின் எதிரொலியை அருகிலுள்ள சமூகங்கள் மூர்க்கமாக எதிர்கொள்ள நேரிடும்" என அவர் எச்சரிக்கிறார். அண்டை நாடான நமீபியாவிலும் யானைகளை கொல்லும் நடைமுறை வழக்கில் உள்ளது. மேய்ச்சல் நிலங்கள் குறைவாக இருப்பதால் ஏற்படும் தாக்கங்களை குறைக்கவும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கவும், யானைகள் உட்பட 700க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை கடந்த ஆண்டில் நமீபியா அரசாங்கம் கொன்றது. யானைகளை கொல்வது என்பது "வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத 'யானை தந்தங்களின்' வர்த்தகத்தை மீண்டும் தூண்டும்" என்று வோர்ல்ட் அனிமல் ப்ரொடெக்‌ஷன் போன்ற விலங்கு உரிமை அமைப்புகள் முன்னெச்சரிக்கைகளை விடுத்துள்ளன. அதே நேரத்தில் விலங்குகளை துன்புறுத்துவதை எதிர்க்கும் பீட்டா (PETA) அமைப்பு, இத்தகைய நடைமுறைகளை "கொடூரமானது" மற்றும் "ஆபத்தான, குறுகிய பார்வை கொண்டது" என்று விவரித்துள்ளது. வேறு எங்கு யானைகளை கொல்லும் போக்கு இருக்கிறது? நோய்கள் பரவுவதைத் தடுக்க விலங்குகள் கொல்லப்படும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. பிரிட்டனில் போவைன் காசநோயின் பரவலைத் தடுக்கும் வகையில், ஒரு தசாப்தத்தில் 230,000க்கும் மேற்பட்ட வளைக்கரடிகள் (badgers), 278,000 க்கும் மேற்பட்ட பல்வேறு கால்நடைகள் கொல்லப்பட்டன. இருப்பினும் இந்த விலங்குகள் கொல்லப்படுவது, 2029ஆம் ஆண்டில் நிறுத்தப்படும் என்று கடந்த ஆண்டு அரசாங்கம் அறிவித்தது. இதற்கு பதிலாக வளைக்கரடிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. 2020ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய் பரவிய காலகட்டத்தில், ஸ்பெயினில் ஒரு பண்ணையில் இருந்த பல விலங்குகளுக்கு தொற்று பாதித்ததை அடுத்து, கிட்டத்தட்ட 1,00,000 மிங்க் எனும் கீரிகளைக் கொல்ல ஸ்பெயின் உத்தரவிட்டது. இதற்கிடையில், டென்மார்க்கில், கொரோனா வைரஸ் பாதித்த லட்சக்கணக்கான மிங்க் கீரிகளைக் கொல்லும் திட்டத்திற்கு அரசியல் ரீதியிலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. ஆஸ்திரேலியாவில், ஒவ்வொரு மாகாணமும் எவ்வளவு கங்காருக்களை கொல்லலாம் என்பதற்கான 'எண்ணிக்கை' அளவு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நிலத்தைப் பாதுகாக்கவும் வறட்சியின் போது வெகுஜன இறப்பு அபாயத்தைக் குறைக்கவும் விலங்குகளை அழித்தல் அவசியம் என்று அரசாங்கம் கூறுகிறது. விலங்குகளை அழித்தல் திட்டத்தை தேர்ந்தெடுப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்று சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். "கொலை செய்வது என்பது மிகவும் வெறுப்பூட்டும் விஷயமாக தோன்றினாலும், அதனை முற்றிலும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளும் ஏற்படுவதை நாங்கள் அறிவோம்," என்று சூழலியல் நிபுணரும் எழுத்தாளருமான ஹக் வார்விக் கூறுகிறார். "தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ விலங்குகளை தீவுகளில் மனிதர்கள் விட்டுவிட்டதால், இது அந்த இடத்தின் சூழலை மிக அதிகமாக மாற்றி, அங்குள்ள உள்ளூர் விலங்குகள் வாழ முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.'' தெற்கு ஜார்ஜியாவின் தொலைதூர தீவில் எலிகளை ஒழிக்கும் ஒரு திட்டத்தை வார்விக் மேற்கோள் காட்டுகிறார், அங்கு விடப்பட்ட எலிகள் உள்ளூர் விலங்குகளை அழித்துவிட்டன. "இந்த முயற்சி வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது, இது தார்மீக ரீதியாக நியாயமானது என்றும் தோன்றுகிறது," என்று அவர் கூறுகிறார். எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு விலங்குகளின் பாதுகாப்பை அளவிடுவதைவிட, ஒரு சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் அவை செழித்து வளரும் திறனால் அளவிட வேண்டும் என்று வார்விக் கருதுகிறார். "ஜிம்பாப்வேயில், 'விலங்கு அழிப்பு' திட்டம் வெற்றி பெறலாம், ஆனால் போதுமான வாழ்விடங்கள் இல்லாததால் யானைகள் தங்கள் வாழ்க்கைப் போரில் தோற்றுப் போகின்றன." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிட்டனின் சில பகுதிகளில், வனவிலங்கு அதிகாரிகள் வளைக்கரடிகளை அழிப்பதற்குப் பதிலாக தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளனர் வேறு ஏதேனும் விருப்பத்தெரிவுகள் உள்ளனவா? யானைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, தென்னாப்பிரிக்கா பிறப்பு கட்டுப்பாட்டு திட்டம் ஒன்றை ஒரு தசாப்தத்திற்கு முன்பு தொடங்கியது. கருத்தடை மருந்துகளை காற்றின் மூலமாக யானைகளின் மீது பாய்ச்சும் முறையாகும். தாய்லாந்தில் மனிதர்கள்-யானைகள் மோதல் அதிகரித்து இருக்கும் நிலையில், காட்டுப் யானைகளில் பெண் யானைகளுக்கு பிறப்பு கட்டுப்பாட்டைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்த ஆண்டு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நோயுற்ற விலங்குகள், மனிதர்கள் அல்லது பிற விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக மாறும் நிலையில், இதே போன்ற நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் வார்விக் சுட்டிக்காட்டுகிறார். "பிரிட்டனில் பூர்வீக சிவப்பு அணில்கள் மற்றும் இடம்பெயர்ந்து வந்த சாம்பல் அணில்களுக்கும் இடையிலான பிரச்னையை, விலங்கு பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களில் ஒன்றாக சொல்லலாம். சிவப்பு அணில்களைக் கொல்லும் ஒரு நோய், சாம்பல் அணில்களிடம் உள்ளது," என்று அவர் கூறுகிறார். "சிவப்பு அணில்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது அல்லது சாம்பல் அணில்களுக்கு கருத்தடை முறைகளைக் கண்டுபிடிப்பது ஒரு உத்தியாக இருக்கலாம்" என்று அவர் கூறுகிறார். பாதுகாப்புப் பிரச்னைகள் மிகவும் சிக்கலானவை என்றும், கொலை செய்வது பெரும்பாலும் விரைவான மற்றும் எளிமையான தீர்வாகக் கருதப்படுகிறது என்றும் வார்விக் கூறுகிறார். "இந்த சிக்கலுக்கு மாற்று வழிகளைக் காண்பதே முதல் தெரிவாக இருக்கவேண்டும். இடமாற்றம் அல்லது சமூக மேலாண்மை தொடர்பானதாக இருந்தாலும் மாற்று வழிகள்தான் சிறந்தது, விலங்குகளை அழிப்பது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும்." யானைகளுக்கு பிறப்பு கட்டுப்பாட்டு செய்வது குறித்து ஜிம்பாப்வே அரசின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டோம். "ஒரு பூங்காவிலோ சிறிய இடத்திலோ பிறப்புக் கட்டுப்பாடு முயற்சிகள் சாத்தியப்படலாம், ஆனால் பல்லாயிரக்கணக்கான யானைகளைக் கொண்ட மாபெரும் இடத்தைப் பற்றி நாங்கள் பேசுகிறோம், அங்கு பிறப்பு கட்டுப்பாடு முறைகளை நிர்வகிப்பது கடினம்" என்று ஃபராவோ பதிலளிக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2len1pyr11o
  14. ஈரான் மீதான தாக்குதலிற்கு டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளார் - வோல்ஸ்ரீட் ஜேர்னல் 19 JUN, 2025 | 02:13 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான தாக்குதல் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார் ஆனால் ஈரான் தனது அணுவாயுதிட்டத்தை கைவிடுமா என பார்ப்பதற்காக அதனை நடைமுறைப்படுத்துவதை தாமதிக்கின்றார் என அவரின் உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து வோல்ஸ்ரீட் ஜேர்னல் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஈரான் மீதான தாக்குதல் திட்டங்களிற்கு அனுமதியளிப்பதாக செவ்வாய்கிழமை இரவு டிரம்ப் தனது சிரேஸ்ட உதவியாளர்களிடம் தெரிவித்தார்,ஆனால் தெஹ்ரான் தனது அணுசக்தி திட்டங்களை கைவிடுமா என பார்ப்பதற்காக பொறுத்திருக்கின்றார் என விடயங்களை நன்கறிந்தவர்கள் தெரிவித்தனர். ஈரானின் நன்கு பாதுகாக்கப்பட்ட போர்டே அணுஉலை அமெரிக்காவின் இலக்காகயிருக்கலாம்,அது ஒரு மலைக்கு உள்ளே உருவாக்கப்பட்டுள்ளது,மிக வலுவான குண்டுகளால் மாத்திரமே அதனை அழிக்க முடியும் என இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஈரானின் அணுசக்திநிலையங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வீர்களா என்ற கேள்விக்கு நான் அதனை செய்யலாம் செய்யாமல் விடலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் நிபந்தனையற்ற விதத்தில் சரணடையவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள அவர் அடுத்தவாரம் மிகப்பெரியதாகயிருக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217906
  15. இரான் விஷயத்தில் டிரம்ப் நிர்வாகத்தில் பிளவு - இராக் போரின் மோசமான நினைவுகளால் அச்சமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துளசி கப்பார்ட்டுடன் டிரம்ப் கட்டுரை தகவல் எழுதியவர், அந்தோணி ஸுர்ச்சர் பதவி, பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் இணைய வேண்டுமா வேண்டாமா என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவில், அணு ஆயுதத்தை உருவாக்கும் பணியில் இரான் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதுதான் மையக் கேள்வியாக உள்ளது. இந்த பிரச்னை அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல்களை உருவாக்கலாம் என்பதால், டிரம்புக்கும் அவரது உயர் ஆலோசகர்களில் ஒருவருக்கும் இடையே ஒரு வெளிப்படையான பிளவை உருவாக்கியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கில் ஏற்பட்ட ஒரு நெருக்கடியின் போது, குடியரசுக் கட்சியைச் சார்ந்த மற்றொரு அதிபரின் நிர்வாகம் முன்வைத்த வாதங்களை இச்சூழல் நினைவூட்டுகிறது. கனடாவில் நடைபெற்ற G7 மாநாட்டிலிருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பும் போது, மார்ச் மாதத்தில் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் கூறிய, 'இரான் அணுகுண்டு உருவாக்கவில்லை' என்ற கருத்தை டிரம்ப் ஏற்கிறாரா என்று அவரிடம் கேட்கப்பட்டது. "அவர் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை," என்று அதற்கு பதிலளித்த டிரம்ப், இரான் அணுகுண்டு உருவாக்கத்துக்கு "மிக அருகில்" இருப்பதாக நம்புவதாகவும் கூறினார். 2003ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்த இரானின் அணு ஆயுத திட்டத்தை அந்த நாடு மீண்டும் தொடங்கவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அணு ஆயுத தயாரிப்புக்கான முக்கிய கூறான செறிவூட்டப்பட்ட யுரேனியம், இரானின் கையிருப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது என அமெரிக்க நாடாளுமன்றத்தில் கப்பார்ட் தெரிவித்தார். அமெரிக்க உளவுத்துறை குறித்து முன்பு வைத்த விமர்சனத்தாலும், பதவியில் இருந்து அகற்றப்பட்ட சிரியா அதிபர் பஷர் அல்-அசத் போன்ற அமெரிக்க எதிரிகளைச் சந்திக்க அவர் தயாராக இருந்ததாலும், வெளிநாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து வெளிப்படையாக கருத்து தெரிவித்ததாலும் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் பதவிக்கு துளசி கப்பார்ட் தேர்தேடுக்கப்பட்டபோது சர்ச்சை எழுந்தது. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்த துளசி கப்பார்ட், ஒரு காலத்தில் அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் செனட்டர் பெர்னி சாண்டர்ஸை ஆதரித்தார். பின்னர் 2022இல் ஜனநாயகக் கட்சியுடன் தொடர்பை முறித்துக் கொண்டு, கடந்த ஆண்டு டிரம்பை ஆதரிக்கத் தொடங்கினார். உளவுத்துறை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டது, பிப்ரவரியில் 52-48 என்ற வாக்கு அடிப்படையில் செனட் சபையால் உறுதிப்படுத்தப்பட்டபோது, டிரம்ப் தனது நிர்வகத்தில் உலக பிரச்னைகளில் அமெரிக்கா தலையிடுவதை விரும்பாதவர்களுக்கு இடம் தருகிறார் என்பதற்கான சான்றாக கருதப்பட்டது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இரான் தாக்குதலில் சேதமடைந்த இஸ்ரேல் மருத்துவமனை கெப்பார்ட் வேறுவிதமாக சொன்னாலும், டிரம்ப் உளவுத்துறை இயக்குநர் சொன்னதை ஏற்கவில்லை. இது, இரானுக்கு எதிராக கடுமையாக நடக்க விரும்பும் குழுவினர் வெள்ளைமாளிகையில் முக்கியத்துவம் பெறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது வெளிநாட்டு விவகாரங்களில் தலையிட விரும்பாத மற்றொருவரான துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், கப்பார்டை ஆதரித்துள்ளார். அதே நேரத்தில், இரான் தொடர்பாக டிரம்ப் எதைத் தேர்வு செய்தாலும், அதற்கு தானும் ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். "இந்த விவகாரத்தில் அதிபருக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். அமெரிக்க மக்களின் இலக்குகளை நிறைவேற்றும் வகையில்தான், அவர் அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்த விரும்புகிறார் என்பதை நான் உங்களுக்கு உறுதியாகக் கூற முடியும்" என்று செவ்வாயன்று எக்ஸ் தளத்தில் வான்ஸ் பதிவிட்டார். இஸ்ரேல் - இரான் மோதலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட வேண்டுமா என்பதைச் சுற்றி, டிரம்பின் ' America first (அமெரிக்கா முதலில்) ' இயக்கத்திற்குள் கடுமையான கருத்து வேறுபாடுகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், டிரம்ப் மற்றும் கப்பார்ட் ஆகியோருக்கு இடையே தோன்றிய கருத்து முரண்பாடும், அந்த இயக்கத்தின் உள்ளிருக்கும் இந்தக் குழப்பத்தில் ஒன்றாகவே காணப்படுகிறது. இரான் அணு ஆயுத தயாரிப்பில் மிக நெருக்கத்தில் இருப்பதாக நம்பும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரானுக்கெதிராகப் பேசும் குழுவினர் மற்றும் இஸ்ரேலிய அரசாங்கம் உட்பட பலரும், கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி அமைப்பின் அறிவிப்பை சுட்டிக்காட்டுகிறார்கள். அதில், இரான் 20 ஆண்டுகளில் முதன்முறையாக அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மீறியது எனக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா வெளியுறவு விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனக் கருதுபவர்கள், குறிப்பாக பழமைவாத ஊடகவியலாளர் டக்கர் கார்ல்சன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் போன்றவர்கள், 'இரான் அணு ஆயுதங்களை உருவாக்குகிறது என்பதற்கான ஆதாரம் மிகைப்படுத்தப்படுவதாகக் கூறுகிறார்கள். இதனை அடிப்டையாகக் கொண்டு, இரானில் ஆட்சி மாற்றம் செய்யவும், ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் முயற்சி நடக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். "இஸ்ரேலை ஆதரிப்பவர்களுக்கும், இரான் அல்லது பாலத்தீனியர்களை ஆதரிப்பவர்களுக்கும் இடையேதான் பிளவு இருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையான பிளவு, வன்முறையை எளிதாக ஊக்குவிப்பவர்களுக்கும், அதைத் தடுக்க நினைப்பவர்களுக்கும் இடையேதான் உள்ளது" என கடந்த வாரம் கார்ல்சன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். 2003ஆம் ஆண்டு அமெரிக்கா இராக் மீது நடத்திய படையெடுப்பை இப்போது அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் . அதேபோல், மூன்று மடங்கு பரப்பளவும் இரு மடங்கு மக்கள்தொகையும் கொண்ட இரான் மீது தாக்குதல் நடத்தினால், இதுவும் அதே போல் பேரழிவு தரும் வெளியுறவுக் கொள்கை முடிவாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். 2003ஆம் ஆண்டு இராக் மீது நடத்திய அமெரிக்க படையெடுப்பை, பேரழிவு தரும் ஆயுதங்களால் அமெரிக்காவுக்கு கடும் ஆபத்து ஏற்படலாம் எனக் கூறி ஜார்ஜ் புஷ் நிர்வாகம் நியாயப்படுத்தியது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் பின்னால் தவறானவை என நிரூபிக்கப்பட்டன. "அமெரிக்காவிற்கு ஆபத்து ஏற்படக்கூடிய தெளிவான சான்றுகள் இருக்கின்றன. அதற்கான இறுதிச் சான்றாக, அணுகுண்டு வெடிக்கும் வரை காத்திருக்க முடியாது " என்று புஷ் 2002ம் ஆண்டு அக்டோபரில் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அமெரிக்க நிர்வாகம் வெளியுறவுத்துறை செயலாளர் கொலின் பவலை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியது. அங்கு அவர் ஒரு சிறிய குப்பியை உயர்த்தி காட்டி, இது இராக்கிடம் உள்ள ஆயுதமாக பயன்படுத்தக்கூடிய ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவின் சிறிய மாதிரியை மட்டுமே குறிக்கிறது என்று கூறினார். "இவை வெறும் ஊகங்கள் மட்டுமல்ல" என்று கூறிய பவல், "நாங்கள் உங்களுக்கு வழங்குவது, உறுதியான நுண்ணறிவு தகவல்களின் அடிப்படையில் எடுத்த முடிவுகளும் உண்மைகளும் "என்று தெரிவித்தார். உளவுத்துறையின் தகவல்கள் உண்மையானதா என்ற சந்தேகங்கள் மற்றும் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் உள்ளதற்கான எந்த சான்றும் இல்லாத நிலையில், அதிகப் பொருட்செலவில், பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி அமெரிக்கா இராக்கில் படையெடுத்தது. இது பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் ஜனநாயகக் கட்சிக்கு வெற்றியை ஏற்படுத்தியது மற்றும் குடியரசுக் கட்சிக்கு உள்ளே அதிருப்தியையும் அதிகரித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புஷ்ஷின் வெளியுறவுச் செயலாளராக இருந்த கொலின் பவல், போருக்கான வாதத்தை முன்வைத்தார். 2016 ஆம் ஆண்டு வாக்கில், குடியரசுக் கட்சியினர் தங்களது அரசியல் நிலைப்பாட்டை குறித்து அதிகமான அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினர். இந்த சூழ்நிலையே, இராக் போரை விமர்சித்து வந்த டிரம்ப், தனது கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்வாகவும், பின்னர் வெள்ளை மாளிகையை கைப்பற்றவும் வழிவகுத்தது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அமெரிக்க உளவுத்துறை முடிவுகளைப் பொருட்படுத்தாமல், மத்திய கிழக்கில் ராணுவத் தலையீட்டைப் பற்றி டிரம்ப் யோசித்து வருகிறார். தென்கரலைனா செனட்டர் லிண்ட்சி கிராஹாம் போன்ற பழமைவாதிகள் இதுதான் ஆட்சி மாற்றத்துக்கான நேரம் என்று கூறினாலும், 2003ஆம் ஆண்டு இராக்கில் நடந்த படையெடுப்பும், அதன்பின் நாட்டைக் கட்டியெழுப்ப எடுக்கப்பட்ட முயற்சிகளையும் போன்ற ஒரு திட்டத்துக்கு வெள்ளை மாளிகையில் அதிக ஆதரவு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், ராணுவ நடவடிக்கைகள் கணிக்க முடியாத வழிகளில் உருவாகக்கூடும். மேலும் டிரம்ப், தனது கட்சியின் முன்னாள் அதிபரைவிட வேறுபட்ட சூழ்நிலையிலும், வேறுபட்ட திட்டத்தையும் கருத்தில் கொண்டிருந்தாலும், தனது உளவுத்துறை ஆலோசகர்களின் தகவல்களை நம்பினாலும் நிராகரித்தாலும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்க வாய்ப்புள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czxwdg32x76o
  16. 19 JUN, 2025 | 04:01 PM பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்த கடற்படையின் உதவியைப் பெறுதல், வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைகள் போன்ற பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். அதன்படி, நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கினார். இதன்போது ஜனாதிபதி தெரிவிக்கையில், என்னால் இந்த கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்ட கோரிக்கைகளாவன : கிழக்கு மாகாண காணிகளை விடுவித்தல் தொடர்பாக... மட்டக்களப்பு மாவட்டத்தின் காயன்கேணி பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு அருகில் இராணுவத்தினர் ஓய்வு விடுதி ஒன்றை நிர்மாணித்துள்ளதோடு, இது தொடர்பில் நாம் வினவியபோது, அந்த ஓய்வு விடுதியை அகற்ற முடியாது என இராணுவம் அறிவித்ததாக அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டாஞ்சேனையில் உள்ள பாடசாலை, பாலயடிவத்தை பிரதேசத்தில் உள்ள வர்த்தக சந்தை, குருக்கள் மடம் பகுதியில் உள்ள பாடசாலை இன்றளவிலும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படுகிறது. தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாம் மயானம் அமையப்பெற்றுள்ள காணியிலும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் தனியாருக்கு சொந்தமான காணியிலும் அமையப்பெற்றுள்ளது. வாகரை பிரதேசத்தில் கடற்படையினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் அளவு எவ்வளவு என்பது தொடர்பாகவும் அதில் எவ்வளவு காணி பயன்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாகவும் சரியான புரிதல் இல்லை என்பதுடன், வாகரை பிரதேசத்தில் அதிகளவான காணிகள் கடற்படையினருக்கு சொந்தமாக காணப்படுவதால், அந்தக் காணிகளை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்தேன். இந்தக் காணிகள் தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டும் என்பதால் இது தொடர்பான விசேட குழுவொன்றை நியமிக்குமாறு கேட்டிருந்தேன். ஆலையடி பிரதேசத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையும் இராணுவ முகாமிற்குள் அமைந்து காணப்படுவதுடன், இராணுவ முகாமிற்குள் அமைந்துள்ள சில பாடசாலைகளுக்கு பதிலாக மாற்றுப் பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும் அவை கிராமத்திற்கு வெளியில் அமைந்துள்ள காரணத்தினால் பல சிக்கல்களை மாணவர்கள் மற்றும் ஊர்மக்கள் சந்திக்கின்றனர். அனைத்து இராணுவ முகாம்களும் அமைந்துள்ள காணிகள் குறித்து மீளப் பரிசீலனை செய்து அறிக்கை ஒன்றினை வழங்குமாறு அறிவித்துள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன் அதன் அடிப்படையில் மீண்டும் கலந்துரையாடல் நடாத்தப்படும் எனவும் சபையில் கௌரவ தவிசாளர் தெரிவித்தார் எனக் கூறினார். https://www.virakesari.lk/article/217922
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES/BBC கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி நியூஸ் அரபிக் பதவி, 9 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்திய தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம், இஸ்ரேல் இரானிய அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகளை குறிவைத்துள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் நாட்டின் மேற்குப் பகுதியிலும் தலைநகர் டெஹ்ரானைச் சுற்றியும் நடந்துள்ளன. தாக்குதல்கள் வான்வழியாக நடந்திருந்தாலும், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட், இலக்குகளைக் கண்டறிந்து தரையிலிருந்து நடவடிக்கைகளை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. உதாரணமாக, மொசாட் உளவாளிகள் இரானின் மீதமுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க நாட்டிற்குள் கடத்தப்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. முன்னதாக தங்கள் பாதுகாப்புப் படைகளில் இஸ்ரேலிய உளவுத்துறை ஊடுருவியிருக்கலாம் என சந்தேகிப்பதாக இரானிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். ஜூன் 13 அன்று இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான முக்கிய இரானிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குறிவைக்கப்பட்டுள்ளனர், இது இஸ்ரேல் அவர்களின் இருப்பிடம் குறித்து உளவுத்துறை தகவல்களைப் பெற்றிருப்பதைக் குறிக்கிறது. இந்த நிகழ்வுகளில் மொசாட்டின் பங்கை மதிப்பிடுவது எளிதல்ல. இஸ்ரேல் அந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது மற்றும் உளவுத்துறையின் பிற பிரிவுகளும் உள்ளன. ஆனால் மொசாட் அமைப்பின் குறிப்பிடத்தக்க கடந்தகால செயல்பாடுகள் பற்றி நாம் அறிந்தவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். மொசாட்டின் வெற்றிகள் பட மூலாதாரம்,ANADOLU VIA GETTY படக்குறிப்பு, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (இடது) டெஹ்ரானுக்கு விஜயம் செய்தபோது, இரானிய புரட்சிகர காவல்படையின் தளபதி ஹொசைன் சலாமி (வலது) அவரை வரவேற்கிறார். இருவரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலை ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஜூலை 31, 2024 அன்று டெஹ்ரானில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது கொல்லப்பட்டார். இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் ஆரம்பத்தில் பொறுப்பேற்கவில்லை, ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு அதன் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இந்தக் கொலைக்குப் பின்னால் இஸ்ரேல் இருந்ததை ஒப்புக்கொண்டார். ஹனியேவின் மரணத்தைச் சுற்றியுள்ள கேள்விகளுக்கான பதில் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஹனியேவை, ஒரு ஏவுகணை 'நேரடியாக' தாக்கியதாக ஹமாஸின் மூத்த அதிகாரி கலீல் அல்-ஹய்யா ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஹனியேவுடன் இருந்த சாட்சிகளை மேற்கோள் காட்டி அவர் இதைக் கூறினார். ஆனால் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ஏழு அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி, ஹனியே தங்கியிருந்த கட்டடத்திற்குள், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே மறைத்து கொண்டுசெல்லப்பட்ட ஒரு வெடிகுண்டு மூலம் அவர் கொல்லப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிசியால் இந்தக் கூற்றுகளில் எதையும் சரிபார்க்க முடியவில்லை. 2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலால் கொல்லப்பட்ட பல ஹமாஸ் தலைவர்களில் ஹனியேவும் ஒருவர். இதில் காஸாவின் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், அவரது சகோதரர் முகமது, ஹமாஸின் ராணுவப் பிரிவின் தலைவர் முகமது டெய்ஃப் மற்றும் அவருக்கு அடுத்த இடத்தில இருந்த தலைவர் மர்வான் இசா ஆகியோர் அடங்குவர். ஹெஸ்பொலா அமைப்பின் சாதனங்கள் வெடித்த நிகழ்வு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெடித்துச் சிதறிய தகவல் தொடர்பு சாதனத்தால் கொல்லப்பட்ட ஹெஸ்பொலா உறுப்பினரின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. செப்டம்பர் 17, 2024 அன்று, லெபனான் முழுவதும் முக்கியமாக வலுவான ஹெஸ்பொலா இருப்பு உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன. இந்த வெடிப்புகள் பயனர்களையும் அருகிலுள்ள சிலரையும் காயப்படுத்தின அல்லது கொன்றன. மறுநாள் வாக்கி-டாக்கிகள் அதே பாணியில் வெடித்தன. நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர், காயமடைந்தனர். தாக்குதல் நடந்த நேரத்தில், இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும் ஒரு மோதலில் ஈடுபட்டிருந்தன. இது அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்களுக்கு ஒரு நாள் கழித்து, இஸ்ரேலிய நிலைகள் மீது ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியதின் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதலின் ஒரு பகுதியாகும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேல்தான் இதற்குப் பொறுப்பு என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டதாக அப்போது இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ்ஸுக்கு இரண்டு முன்னாள் மொசாட் ஏஜென்ட்கள் அளித்த பேட்டியில், இந்த நடவடிக்கையின் விவரங்களை வெளியிட்டனர். மொசாட் வாக்கி-டாக்கிகளை இயக்கும் பேட்டரிகளுக்குள் ஒரு வெடிக்கும் சாதனத்தை மறைத்து வைத்திருந்ததாகவும், பொதுவாக இந்த வாக்கி-டாக்கிகள் ஒருவரின் இதயத்திற்கு அருகில் இருக்குமாறு உடையில் பொருத்தப்படும் என்றும் கூறினர். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போலி நிறுவனத்திடமிருந்து 'நல்ல விலைக்கு' 16,000க்கும் மேற்பட்ட வாக்கி-டாக்கிகளை ஹெஸ்பொலா அறியாமல் வாங்கியதாகவும், பின்னர் 5,000 பேஜர்களையும் வாங்கியதாகவும் ஏஜென்ட்கள் தெரிவித்தனர் என சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வெடிப்புகள் லெபனான் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின, பல்பொருள் அங்காடிகள் உட்பட எல்லா இடங்களிலும் பேஜர்கள் கொண்டு செல்லப்பட்டபோது வெடிப்புகள் நிகழ்ந்தன. மருத்துவமனைகள் மனித உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிந்தன, அவர்களில் பலர் உடல் உறுப்புகளை இழந்திருந்தனர். ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் இந்தத் தாக்குதலை ஒரு போர்க்குற்றம் என்று அழைத்தார். மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவின் கொலைக்குப் பின்னால் மொசாட் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. நவம்பர் 2020இல், இரானின் மிக முக்கியமான அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை ஏற்றிச் சென்ற ஒரு வாகனத் தொடரணி, தலைநகர் டெஹ்ரானுக்கு கிழக்கே உள்ள அப்சார்ட் நகரில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய ரிமோட் கன்ட்ரோல் இயந்திர துப்பாக்கியால் ஃபக்ரிஸாதே கொல்லப்பட்டார். "பொதுமக்கள் யாரும் உயிரிழக்காமல், ஒரு நகரும் இலக்கை நோக்கி இதுபோன்ற 'சர்ஜிக்கல்' முறையில் படுகொலை செய்வதற்கு, களத்திலிருந்து நிகழ்நேர உளவுத் தகவல்கள் தேவைப்படும்" என்று பிபிசி பாரசீக செய்தியாளரான ஜியார் கோல் அப்போது குறிப்பிட்டிருந்தார். ஏப்ரல் 2018இல், இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பானதாகக் கூறப்படும் பல ஆவணங்களைக் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காட்சிப்படுத்தினார். இது பல மாதங்களுக்கு முன்பு, ஒரு இரானிய 'சேமிப்பு கட்டடத்தில்' மொசாட் அமைப்பு நடத்திய துணிச்சலான நடவடிக்கையில் திருடப்பட்டதாக அவர் கூறினார். இந்த கட்டிடம் டெஹ்ரானில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்திருந்தது. (இது பின்னர் இரானிய அதிபர் ஹசன் ரூஹானியால் உறுதிப்படுத்தப்பட்டது). ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் ஆவணங்களை வழங்கிய இஸ்ரேலிய பிரதமர், அறிவிக்கப்படாத ஒரு அணு ஆயுதத் திட்டத்திற்காக மொஹ்சென் ஃபக்ரிஸாதே பணியாற்றுகிறார் எனக் கூறினார். "மொஹ்சென் ஃபக்ரிஸாதே... அந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள்," என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். 2010 மற்றும் 2012க்கு இடையில், நான்கு இரானிய அணு விஞ்ஞானிகளை இஸ்ரேல் கொன்றதாக இரான் முன்பு குற்றம் சாட்டியிருந்தது. கழுத்து நெரித்து கொல்லப்பட்ட மஹ்மூத் அல்-மபூஹ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மஹ்மூத் அல்- மபூஹ் மீது முதலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. பின்னர் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார் 2010 ஆம் ஆண்டு, ஹமாஸின் மூத்த ராணுவத் தலைவரான மஹ்மூத் அல்-மபூஹ் துபை நாட்டின் ஹோட்டல் ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார். ஆரம்பத்தில், இது ஒரு இயற்கை மரணம் போல் தோன்றியது. ஆனால் துபை காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பின்னர், இறுதியில் கொலையாளிகளை அடையாளம் காண முடிந்தது. அல்-மபூ முதலில் மின்சாரத்தால் தாக்கப்பட்டு பிறகு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார் என்பதை காவல்துறை பின்னர் கண்டறிந்தது. இந்த நடவடிக்கை மொசாட்டால் திட்டமிடப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது. இது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதாண்மை ரீதியிலான சீற்றத்தைத் தூண்டியது. இருப்பினும், இஸ்ரேலிய தூதர்கள், மொசாட்டை தாக்குதலுடன் தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினர். மொபைல் போன் வெடிப்பில் கொல்லப்பட்ட யஹ்யா அய்யாஷ் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, யஹ்யா அய்யாஷின் படம் 1996 ஆம் ஆண்டு, ஹமாஸின் முக்கிய வெடிகுண்டு தயாரிப்பாளரான யஹ்யா அய்யாஷ், 50 கிராம் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட மோட்டோரோலா ஆல்ஃபா மொபைல் போன் மூலம் படுகொலை செய்யப்பட்டார். ஹமாஸின் ராணுவப் பிரிவில் ஒரு முக்கிய தலைவரான அய்யாஷ், குண்டுகளை உருவாக்குவதிலும், இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக சிக்கலான தாக்குதல்களை திட்டமிடுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர். 2019 இன் பிற்பகுதியில் இந்தக் கொலையின் சில விவரங்களை வெளியிடுவதற்கான தடைகளை இஸ்ரேல் நீக்கியது. மேலும் இஸ்ரேலின் 'சேனல் 13' தொலைக்காட்சி அய்யாஷ் மற்றும் அவரது தந்தை இடையேயான இறுதி தொலைபேசி அழைப்பின் பதிவை ஒளிபரப்பியது. ஆபரேஷன் பிரதர்ஸ் பட மூலாதாரம்,RAFFI BERG படக்குறிப்பு, எத்தியோப்பிய யூதர்கள் பயணித்த வாகனத்திற்கு அருகில் நிற்கும் ஒரு மொசாட் ஏஜென்ட். 1980களின் முற்பகுதியில், பிரதமர் மெனகெம் பிகின் அறிவுறுத்தலின் பேரில் மொசாட் அமைப்பு 7,000 க்கும் மேற்பட்ட எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த யூதர்களை சூடான் வழியாக இஸ்ரேலுக்கு அழைத்து சென்றது. இதற்காக ஒரு போலி டைவிங் ரிசார்ட்டை மொசாட் பயன்படுத்தியது. அரபு நாடுகள் கூட்டமைப்பில் உள்ள சூடான், இஸ்ரேலுக்கு எதிரி நாடு. எனவே ரகசியமாக செயல்பட்ட மொசாட் ஏஜென்ட்களின் குழு சூடானின் செங்கடல் கடற்கரையில் ஒரு ரிசார்ட்டை அமைத்து அதை தங்கள் தளமாக பயன்படுத்தினர். அந்த ஏஜென்ட்கள் பகலில் ஹோட்டல் ஊழியர்களாக பணிபுரிந்தனர். அண்டை நாடான எத்தியோப்பியாவிலிருந்து வந்த யூதர்களை இரவு நேரத்தில் அவர்கள் ரகசியமாக தங்கள் இடத்திற்கு கொண்டு சென்றனர். இந்த ஆபரேஷன் குறைந்தது ஐந்து ஆண்டுகள் நீடித்தது. அது கண்டுபிடிக்கப்படுவதற்குள் மொசாட் ஏஜென்ட்கள் தப்பி ஓடிவிட்டனர். ம்யூனிக் ஒலிம்பிக் தாக்குதலுக்கு பதிலடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாலத்தீன ஆயுதக்குழுவால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மியூனிக் ஒலிம்பிக் மைதானத்தில் இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். 1972-ஆம் ஆண்டு ஒரு பாலத்தீன ஆயுதக்குழு ம்யூனிக் ஒலிம்பிக்கின் போது இஸ்ரேல் ஒலிம்பிக் குழுவின் இரு உறுப்பினர்களை கொன்றது. ஒன்பது பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றது. பின்னர் மேற்கு ஜெர்மன் படையினரின் மீட்பு முயற்சி தோல்வியடைந்ததால், இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1972-ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஒலிம்பிக் குழுவைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். அடுத்து வந்த ஆண்டுகளில், மியூனிக் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட மெஹ்மூத் ஹம்ஷாரி உள்ளிட்டோருக்கு மொசாட் குறிவைத்தது மெஹ்மூத் ஹம்ஷாரி, பாரிஸில் இருந்த அவரது வீட்டில் தொலைபேசியில், வெடிக்கும் சாதனம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த குண்டுவெடிப்பில் ஹம்ஷாரி ஒரு காலை இழந்து இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆபரேஷன் என்டெபி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, என்டெபி பணயக்கைதிகள் ஒரு வாரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். 1976-ஆம் ஆண்டில் உகாண்டாவில் நடத்தப்பட்ட ஆபரேஷன் என்டெபி என்பது இஸ்ரேலின் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு 'மொசாட்' அமைப்பு உளவுத் தகவல்களை வழங்கியது. பாரிஸுக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தை பாலத்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் இரண்டு உறுப்பினர்களும் அவர்களது இரண்டு ஜெர்மன் கூட்டாளிகளும் கடத்தினர். அவர்கள் விமானத்தை உகாண்டாவிற்கு திருப்பினார். என்டெபி விமான நிலையத்தில் கடத்தல்காரர்கள் பயணிகளையும், விமானக்குழுவையும் பணயக்கைதிகளாக வைத்திருந்தனர். இஸ்ரேலிய கமாண்டோக்கள் விமான நிலையத்துக்குள் புகுந்து, 100 இஸ்ரேலிய மற்றும் யூத பணயக்கைதிகளை மீட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையின்போது மூன்று பணயக்கைதிகள், கடத்தல்காரர்கள், பல உகாண்டா ராணுவ வீரர்கள் மற்றும் இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சகோதரர், மூத்த கமாண்டோ யோனாதன் நெதன்யாகு ஆகியோர் கொல்லப்பட்டனர். நாஜி அதிகாரி அடால்ஃப் ஐக்மேன்னை தேடி கண்டுபிடித்தது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலில் நடந்த விசாரணையின் போது அடால்ஃப் ஐக்மேன் 1960-ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் இருந்து நாஜி அதிகாரி அடால்ஃப் ஐக்மேன்னை கடத்தியது மொசாட்டின் மிகவும் பிரபலமான உளவு நடவடிக்கைகளில் ஒன்றாகும். இரண்டாம் உலகப்போரின் போது நாஜிக்களால் 60 லட்சம் யூதர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதில் ஐக்மேன் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படுகிறார். தான் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக பல நாடுகளுக்கு தப்பி சென்று கொண்டே இருந்த ஐக்மேன் இறுதியில் அர்ஜென்டினாவில் குடியேறினார். 14 மொசாட் ஏஜென்ட்கள் கொண்ட குழு அவரைக் கண்டுபிடித்து கடத்தி இஸ்ரேலுக்குக் கொண்டு வந்தது. அங்கு விசாரணை நடத்தப்பட்டு இறுதியில் அவர் தூக்கிலிடப்பட்டார். குறிப்பிடத்தக்க தோல்விகள் பல வெற்றிகரமான நடவடிக்கைகளை நடத்தியுள்ள போதிலும் மொசாட் பல தோல்விகளையும் சந்தித்துள்ளது. 7 அக்டோபர் 2023- ஹமாஸ் நடத்திய தாக்குதல் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 2023 அக்டோபர் 7 அன்று காஸா எல்லைக்கு அருகிலுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல், மொத்த நாட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தாக்குதலை முன்னறிவிப்பதில் மொசாட்டின் தோல்வி பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தடுப்புக் கொள்கையில் உள்ள பலவீனத்தை இது பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. சுமார் 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், காஸா பகுதியில் ஒரு போரைத் தொடங்கியது. இதில், 40,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. யோம் கிப்பூர் போர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1973 அரபு இஸ்ரேலியப் போரின் போது சூயஸ் கால்வாயைக் கடக்கும் இஸ்ரேலியப் படைகள். கிட்டத்தட்ட சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேல் இதேபோன்ற ஒரு எதிர்பாராத தாக்குதலை சந்தித்தது. அக்டோபர் 6, 1973 அன்று, சினாய் தீபகற்பம் மற்றும் கோலன் குன்றுகளை மீட்பதற்காக எகிப்தும் சிரியாவும் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தின. யோம் கிப்பூர் எனப்படும் யூதர்களின் பாவநிவிர்த்தி தினத்தன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் இஸ்ரேலை ஆச்சரியப்படுத்தியது. எகிப்தியப் படைகள் சூயஸ் கால்வாயைக் கடந்தன. அதே நேரத்தில் சிரியா படைகள் இஸ்ரேலிய நிலைகளைத் தாக்கி கோலன் குன்றுப்பகுதியில் நுழைந்தன. அந்த நேரத்தில் சோவியத் யூனியன் சிரியா மற்றும் எகிப்துக்கு பொருட்களை வழங்கியது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா அவசரகால உதவிகளை வழங்கியது. பின்னர் இஸ்ரேல் படைகள் எதிர்ப்பை முறியடிப்பதில் வெற்றி பெற்றன. சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஐ.நா தீர்மானத்திற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 25-ஆம் தேதி சண்டை முடிவுக்கு வந்தது. ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல்-ஜஹரின் படுகொலை முயற்சி தோல்வி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மொசாட் அமைப்பால் தீவிரமாக தேடப்படும் ஹமாஸ் தலைவர்களில் ஒருவர் மஹ்மூத் அல்-ஜஹர். 2003-ஆம் ஆண்டு காஸா நகரில் உள்ள ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல்-ஜஹரின் வீட்டை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. அல்-ஜஹர் தாக்குதலில் இருந்து தப்பிய போதிலும் அவரது மனைவி, மகன் காலித் மற்றும் பலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் அவரது வீட்டை முற்றிலுமாக அழித்தது. மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைகளின் கடுமையான விளைவுகளை அது எடுத்துக்காட்டியது. ஹமாஸ் அரசியல் தலைவர் காலித் மெஷால் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காலித் மெஷால் 1996 மற்றும் 2017 க்கு இடையில் ஹமாஸின் அரசியல் தலைவராக பணியாற்றினார். 1997-ஆம் ஆண்டு ஜோர்டானில், ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவரான காலித் மெஷாலை விஷம் கொடுத்து இஸ்ரேல் கொலை செய்ய முயற்சித்தது. இஸ்ரேல் - ஜோர்டான் இடையே மிகப் பெரிய தூதாண்மை நெருக்கடியைத் தூண்டிய நடவடிக்கைகளுள் இது ஒன்றாகும். இஸ்ரேலிய ஏஜென்டுகள் பிடிபட்ட போது இந்த ஆபரேஷன் தோல்வியடைந்தது. மெஷாலின் உயிரைக் காப்பாற்ற அவருக்கு விஷமுறிவு மருந்தை வழங்க வேண்டிய சூழ்நிலைக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டது. மொசாட்டின் அப்போதைய தலைவர் டேனி யாடோம், மெஷாலுக்கு சிகிச்சை அளிக்க ஜோர்டன் சென்றார். இந்த கொலை முயற்சி ஜோர்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை மோசமாக்கியது. லவோன் விவகாரம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூயஸ் கால்வாயை தேசியமயமாக்குவதாக அறிவிக்கும் எகிப்து அதிபர் கமல் அப்தெல் நாசர். 1954 இல் எகிப்திய அதிகாரிகள் 'ஆபரேஷன் சுசன்னா' என அழைக்கப்படும் இஸ்ரேலிய உளவு நடவடிக்கையை முறியடித்தனர். சூயஸ் கால்வாயில் தனது படைகளை நிறுத்த பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக எகிப்தில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் நிலைகளில் குண்டுகள் வைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம். இந்த சம்பவம் இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த பின்ஹாஸ் லாவோனின் பெயரால் 'லாவோன் விவகாரம்' என்று அறியப்பட்டது. இந்த நடவடிக்கையை திட்டமிடுவதில் அவர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyzlxrzgy2o
  18. 19 JUN, 2025 | 03:33 PM விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, போர் முனையில் சந்தித்து பேசியதாகவும், அதன் பிறகு ஏகே 47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் இலங்கை போர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் படத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தி வருகிறார். எனவே, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது , இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு மனு அளித்த 15 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் தர வேண்டாமா என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. இதையடுத்து, வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். https://www.virakesari.lk/article/217916
  19. ஐநா மனித உரிமை ஆணையாளர் மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்; நில அபகரிப்பு குறித்து கரிசனையை வெளியிடவேண்டும் - மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் Published By: RAJEEBAN 19 JUN, 2025 | 03:27 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் மனித புதைகுழிகள் காணப்படும் பகுதிகளிற்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும்,தொடரும் காணி அபகரிப்புகள் குறித்து கரிசனையை வெளியிடவேண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டினை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கையின் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் 12 பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. இது குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது. ஐக்கியநாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் இம்மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 2024 தேர்தல்களின் மூலம் அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் உயர் ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல்தடவை. இலங்கையில் நடந்துவரும் ஆட்சி மாற்ற பொருளாதா நெருக்கடிகளின் விளைவுகள்கடந்தகால வன்முறைகளின் சுழற்சிமூன்று தசாப்தகால மோதல்களின் நீடித்த விளைவுகள் ஆகியவற்றுடன் நாடு போராடிக்கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் இந்த விஜயம் இடம்பெறுகின்றது. 2024 அரசாங்க மாற்றம் சீர்திருத்தத்தை உறுதியளித்தது புதிய கலாச்சாரம் ஏற்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை மீண்டும் தூண்டியது. ஆயினும்கூட ஏழு மாதங்களுக்குப் பிறகும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் மற்றும் முக்கிய நிர்வாகம் மற்றும் சட்ட சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சமூகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர் கடுமையான சமூக-பொருளாதார சவால்களையும் எதிர்கொள்கின்றனர். இத்தகைய சூழலுக்கு மத்தியில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சமீபத்திய பயன்பாடு சந்தேக நபர்களின் உரிய செயல்முறையை மீறியுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் போன்ற நீண்டகால பிரச்சினைகள் சமூகங்களுக்கு அவர்களின் நிலங்களை அணுகுவதற்கான உரிமை, சொந்தமாக்குதல் மற்றும் பயன்படுத்துவதற்கான உரிமை நடமாடும் சுதந்திரம் மற்றும் உயிர்வாழும் வழிமுறைகளை தொடர்ந்து மறுத்து வருகின்றன. திசாநாயக்க அரசாங்கத்தின் கீழும் சித்திரவதை மற்றும் காவல்நிலையத்தில் மரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினருடன் உண்மையான மற்றும் திறந்த உரையாடலை நடத்துங்கள் இதில் வடக்கு மற்றும் கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதும் அடங்கும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாகத் தடைசெய்து அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். சட்ட சீர்திருத்தங்களுக்கான எந்தவொரு எதிர்கால முயற்சிகளும் சர்வதேச தரங்களுக்கு இணங்க வேண்டும் மற்றும் பரந்த ஆலோசனைகளுக்குப் பிறகு வரைவு செய்யப்பட வேண்டும். பொறுப்புக்கூறலிற்கு தீர்வை காண்பதற்கான உறுதியான நடவடிக்கைகளிற்கான தேவைகள் குறித்து முன்னிலைப்படுத்துங்கள் பல தனிநபர்களை சமூகங்களை தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றியுள்ள நிலங்களை கையகப்படுத்தல் ஆக்கிரமிப்பு குறித்து கரிசனைகளை எழுப்புங்கள்.வடக்குகிழக்கில் நிலம் கையகப்படுத்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவேண்டும். மனித புதைகுழிகள் காணப்படும் பகுதிகளிற்கு விஜயம் மேற்கொண்டு புதைகுழிகளை தோண்;டுவது ஆவணப்படுத்துவது அறிக்கையிடுவது அடையாளம் காண்பது போன்ற விடயங்களில் சர்வதேச தராதரம் பயன்படுத்தப்படுவதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்தினை தொடர்ச்சியாக கண்காணிக்கும் ஆதரிப்பதற்கான ஆணையை வழங்கும் புதிய தீர்மானத்திற்கான தேவை குறித்து பேசுங்கள் - இந்த தீர்மானம் இரண்டு வருடகாலத்திற்கானதாகயிருக்கவேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் திட்டத்தினையும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அதன் திறனையும் புதுப்பிக்கவேண்டும் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் பரிந்துரைக்கின்றது. இந்த பரிந்துரைகளில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ள மனித உரிமைகள் பொறுப்புகூறல் நல்லிணக்க விவகாரங்கள் குறித்து அவசர கவனம் தேவை. ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரும் அவரது அலுவலகமும் மேலே குறிப்பிடப்பட்ட கரிசனைகளை முன்னிலைப்படுத்துவதற்கு இலங்கை விஜயத்தினை பயன்படுத்துவதுடன் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் உட்பட உடனடி நடவடிக்கைகளை வலியுறுத்தவேண்டும். https://www.virakesari.lk/article/217912
  20. முச்சதம் அடித்தும் ஒதுக்கப்பட்ட கருண் நாயர் – இங்கிலாந்து வழியாக இந்திய அணிக்கு வந்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2016இல், டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 303 ரன்கள் எடுத்து, முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கருண். கட்டுரை தகவல் எழுதியவர், மொஹ்சின் கமல் பதவி, பிபிசிக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் "நீங்கள் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடப் போவதில்லை என்று நினைத்தால், எங்கள் கிளப்பில் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் விளையாடக்கூடிய ஒரு வெளிநாட்டு வீரராக, எங்களுடனான நீண்டகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட சம்மதிப்பீர்களா?" நார்தாம்ப்டன்ஷையர் கவுன்டி கிரிக்கெட் கிளப்பின் அப்போதைய தலைமை பயிற்சியாளராக இருந்த ஜான் சாட்லர், 2023இல் கருண் நாயரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார். நாயரின் பதில் உறுதியாக இருந்தது, "நான் இந்தியாவுக்காக விளையாட விரும்புகிறேன், மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட என்னால் முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறேன். அந்தக் கனவு நனவாகும் வரை, வேறு எதையும் நான் கருத்தில் கொள்ளப்போவதில்லை." இப்போது அவருக்கு 33 வயதாகிறது. 2017இல் இந்தியாவுக்காக கடைசியாக விளையாடிய பிறகு, வெள்ளிக்கிழமை (ஜூன் 20) லீட்ஸில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாத இறுதியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு பயிற்சிப் போட்டிகளில் ஒன்றில், இரட்டை சதம் அடித்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட மீண்டும் வந்துவிட்டேன் என்பதை அவர் பதிவு செய்தார். 'ஒரு புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கருண் நாயர் 2016ஆம் ஆண்டு தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 303 ரன்கள் எடுத்து, முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கருண். ஆனால் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிறகு, இந்திய அணியில் தனக்கான இடத்தை அவர் இழந்தார். காலப்போக்கில், சர்வதேச கிரிக்கெட் குறித்த அவரது கனவுகள் மங்கத் தொடங்கின. 2022ஆம் ஆண்டில், அவர் கர்நாடகாவின் ரஞ்சி டிராபி அணியிலிருந்து கூட நீக்கப்பட்டார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக மோசமான தருணமாக இருக்கலாம். "உள்நாட்டு சீசன் முழுவதையும் தவறவிட்ட பிறகு, அவர் மிகவும் வருத்தப்பட்டார். அவர் என்னிடம் வந்து, 'நான் என்ன செய்வது? மீண்டும் விளையாட என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்று கூறினார்" என்று கருணின் நீண்டகால பயிற்சியாளரான விஜயகுமார் மதியல்கர் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பேசிய அவர், "அவர் ஒரு புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர், அதனால் அவரது மனநிலையைப் பற்றி நான் அவரிடம் தனியாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர் மிகவும் ஃபிட்டாகவும் இருக்கிறார், அதனால் அவரது உடல்திறன் குறித்து சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எனவே அவர் செய்ய வேண்டிய ஒரே விஷயம் அவரது திறன்களை மேம்படுத்துவதுதான்" என்றார். தனது அதிர்ஷ்டத்தை மாற்றத் தீர்மானித்தார் கருண். பெங்களூருவில் உள்ள தனது வீட்டிலிருந்து மதியல்கரின் அகாடமிக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, 2 மணிநேரம் பயணம் செய்து செல்வதை வழக்கமாக்கிக்கொண்டார். விஜயகுமார் மதியல்கர், 16 வயதுக்குட்பட்ட பிரிவில் கருண் ஆடிய காலத்தில் இருந்தே அவருக்கு பரிச்சயமானவர். "முழுமையாக திருப்தி அடையும் வரை, அவர் ஒருபோதும் வலைப் பயிற்சியில் இருந்து வெளியே வரமாட்டார். ஒவ்வொரு அமர்விலும் சுமார் 600 பந்துகளை எதிர்கொள்வார். அனைத்து ஷாட்களையும் பயிற்சி செய்வார். அவர் மிகவும் கடினமாக உழைத்தார். மணிக்கணக்கில் இடைவிடாமல் பேட்டிங் செய்வதே அவரது விருப்பமாக இருந்தது." என்கிறார் மதியல்கர். "அவர் தனது அணுகுமுறையில் ஒருபோதும் அலட்சியமாக இருந்ததில்லை. வலைப் பயிற்சியில் ஒரு பந்தை கூட சாதாரணமாக எதிர்கொண்டதில்லை. அவர் தனது உடற்தகுதி மற்றும் பிற திறன்களை மேம்படுத்துவதிலும் அயராது உழைத்தார்." என்று கூறுகிறார் மதியல்கர். கவுன்டி கிரிக்கெட் அனுபவம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கருண் நாயர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நார்தாம்ப்டன்ஷையருக்காக விளையாடினார். பல மாதங்களாகப் போராடிய பிறகு, கருண் மீண்டும் களத்தில் இறங்க ஆர்வமாக இருந்தார். ஆனால் இந்தியாவில் விளையாட அவருக்கான கிரிக்கெட் போட்டிகள் இல்லை. எனவே அவர் இங்கிலாந்தில் உள்ள நார்தாம்ப்டன்ஷையருக்காக, ஒரு வெளிநாட்டு வீரராக விளையாட முடிவு செய்தார். அந்த முடிவு முக்கியமானது என்பது பின்னர் உறுதியானது. "தங்கள் திறமையை நிரூபிக்க வெளிநாட்டு வீரர்கள் இங்கு வருகிறார்கள். நாங்கள் வழக்கமாக அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தைப் பெறுகிறோம்," என்று நார்தாம்ப்டன்ஷையரில் கருணுடன் பணியாற்றிய சாட்லர் கூறுகிறார். "கருண் இந்தியாவுக்காக டெஸ்ட்டில் முச்சதம் அடித்திருந்தார், ஆனால் அதன் பின்னர் சிறிது காலமாக விளையாடவில்லை. எனவே அவர் மீண்டும் விளையாட வேண்டுமென்ற உத்வேகத்தில் இருந்தார். ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்." என்கிறார் சாட்லர். அமைதியான சுபாவத்திற்கு பெயர் போன கருண் நாயர், நார்தாம்ப்டன்ஷயர் தனக்கு அளித்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார். "அவர் எவ்வளவு அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தார் என்பதுதான் தனித்துவமான விஷயம்," என்று சாட்லர் நினைவு கூர்ந்தார். "எட்ஜ்பாஸ்டனில் அவரது முதல் ஆட்டத்தில், ஆடுகளம் பசுமையாக இருந்தது. பந்துவீச்சுக்கு சாதகமான ஒரு ஆடுகளமாக இருந்தது. எங்கள் பேட்ஸ்மேன்களில் சிலர் அங்கு பேட்டிங் செய்வதை கடினமாக உணர்ந்தனர், விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. கருண் உள்ளே வந்தார், அவர் மிகவும் அமைதியாக விளையாடினார். தொடக்கூடாத பந்துகளை அவர் விட்டுவிட்டார். பின்னர், அதிரடியாக ஆட வேண்டிய வேண்டிய நேரம் வந்தபோது, அவர் சிறப்பாக ஆடினார். எனவே அவரது ஆட்டம் ஒரு அற்புதமான வரிசையில் காணப்பட்டது." என சாட்லர் கூறுகிறார். வலது கை பேட்ஸ்மேனான கருண் நாயர், மூன்று போட்டிகளில் 249 ரன்கள் எடுத்தார். இதில் சர்ரேக்கு எதிரான 150 ரன்கள் உள்பட, அவரது சிறப்பான ஆட்டங்கள் காரணமாக மீண்டும் அவரை நார்தாம்ப்டன்ஷையர் கவுன்டி கிரிக்கெட் கிளப் ஒப்பந்தம் செய்தது. 2024 ஆம் ஆண்டில், மீண்டும் களமிறங்கிய அவர், ஏழு போட்டிகளில் 487 ரன்கள் எடுத்தார், அதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும். ஆனால் அவர் எடுத்த ரன்கள் மட்டும் தனித்து நிற்கவில்லை. "அவரது அணுகுமுறை அற்புதமானது. அவர் மிகவும் கடினமாக உழைத்தார், மிகச்சிறந்த தொழில்முறை வீரராக இருந்தார். ஒவ்வொரு பயிற்சி அமர்வுக்கும் அவர் இருந்தார். களத்தில் பேட்டிங் செய்யும்போது, மிகவும் கவனமாக ஆடினார். ஒருபோதும் தனது விக்கெட்டை விட்டுக்கொடுக்கவில்லை," என்று யார்க்ஷயரில் இப்போது உதவி பயிற்சியாளராக இருக்கும் சாட்லர் கூறுகிறார். கருண் நாயர் இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட்டிலும் ரன்கள் குவித்திருந்தாலும், நார்தாம்ப்டன்ஷையர் அணியுடனான அவரது அனுபவமே அவரை மீண்டும் தேசிய அளவில் உறுதியாக நிலைநிறுத்த உதவியது. "கவுன்டி கிரிக்கெட் என்பது இடைவிடாமல் விளையாடப்படுகிறது, ஆட்டத்திற்கு ஆட்டம், அதிக ஓய்வு இருக்காது. யதார்த்தத்தில் நீங்கள் மாறுபட்ட பிட்ச்களில் விளையாடுகிறீர்கள். சில நேரங்களில் பிட்ச் தட்டையாக இருக்கலாம், சில நேரங்களில் பந்து வேறுமாதிரியாக திரும்பலாம், சில நேரங்களில் அது பசுமையாக இருக்கலாம்." என்கிறார் சாட்லர். "அவர் எங்களுக்காக இரண்டு முறை விளையாடியதால், பல்வேறு சூழ்நிலைகளில் விளையாடவும், தனது திறமைகளை சோதிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்று நான் நம்புகிறேன். அது அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது." என்று சாட்லர் கூறுகிறார். கருண் நாயர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதில் கவுன்டி கிரிக்கெட் வகித்த பங்கை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூட ஒப்புக்கொண்டார். "கருணின் அனுபவம் இந்திய அணிக்கு நல்லது. அவர் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடியவர், அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவரது அனுபவம் கைகொடுக்கும்," என்று ஜூன் 5 அன்று மும்பையில் நடந்த இந்திய சுற்றுப்பயணத்திற்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பின் போது கம்பீர் கூறினார். இந்த மாத தொடக்கத்தில் கேன்டர்பரியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 204 ரன்கள் எடுத்ததன் மூலம், ஹெடிங்லியில் நடைபெறும் முதல் டெஸ்டில் இந்தியாவின் மிடில் ஆர்டரில் கருண் நாயர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு விஷயத்தைக் குறித்து, கருணின் பயிற்சியாளர் நம்பிக்கையுடன் இருக்கிறார். "கருண் அங்கு விளையாடுவதில் அதிக அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அவர் முதல் போட்டியில் நிச்சயமாக விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு சதம் அடிப்பார்." என்று மதியல்கர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c056gz66mgqo
  21. அது கள்ளு இல்லை அண்ணைமார் பதநீர்! நேற்று தம்பியும் நானும் போயிருந்தோம்!!
  22. வல்லரசையே கதிகலங்க வைக்கும் போர் யுக்தி! உலகின் முதலாவது நாடாக ஈரான் படைத்துள்ள சாதனை மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டதாகவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதலாவது நாடு ஈரான் என்றும் ஈரானின் அரசு செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்த கூற்றை மறுத்தாலும், வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஆயுதத் திட்டமான F-35 இலிருந்து அமெரிக்கா பின்வாங்கும் முடிவை எடுத்துள்ளது. சாதனை இஸ்ரேலின் நான்காவது F-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா புதிய F-35 போர் விமானங்களுக்கான உத்தரவை பாதியாகக் குறைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் விமான உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுக்கு 48 ஜெட் விமானங்களுக்கான உத்தரவை 24 ஆகக் குறைத்து திருத்தப்பட்ட உத்தரவை பென்டகன் பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து, ஈரான்-இஸ்ரேல் போர், அமெரிக்க விமானப்படையின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான F-35 இன் பலவீனங்களை வெளிப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. விமர்சனம் இதன்படி, F-35 விமானத்தின் பயணத் திறன் 2025 ஆம் ஆண்டளவில் 51.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாகங்களைப் பெறுவதில் உள்ள சிரமம், சிக்கலான பராமரிப்பு மற்றும் அதிக விலை ஆகியவை இந்த விமானத்தின் முக்கிய குறைபாடுகளாக கூறப்படுகின்றன. ட்ரோன் போர் அதிகரித்துள்ள காலகட்டத்தில் F-35 காலாவதியானது என்று எலான் மஸ்க் உட்பட பலர் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/iran-is-shoot-down-5th-generation-fighter-jet-f-35-1750213555 செய்தியின் உண்மைத்தன்மை பற்றி யான் அறிந்திலேன்.
  23. யாழில் பனை சார்ந்த உற்பத்திகள் தொடர்பில் அறிந்து கொண்டார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Published By: DIGITAL DESK 3 19 JUN, 2025 | 11:17 AM இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள பனை சார்ந்த உற்பத்திகள் தொடர்பில் அறிந்து கொள்ள விநியோகஸ்தர்களை நேரில் சென்று பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் பார்வையிட்டுள்ளார். அங்கு பாரம்பரிய வளங்கள், தொழில் முயற்சியாண்மை மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகளுடன் நிலைபேண்தகு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல எவ்வாறு உள்ளூர் உற்பத்திகளை பாதுகாக்கவும் முடியும் என்பதை இந்த விஜயத்தின் போது அறிந்து கொண்டார். https://www.virakesari.lk/article/217876

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.