Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ஏராளன்

  1. Published By: VISHNU 25 MAY, 2025 | 11:28 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் சஞ்சிகை இன் ‘ஆசிய விஞ்ஞானி; - 100 பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல், ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது. பொதுவாக, இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகள், அவர்களின் தரமான ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும். பதிலாக முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும். விஞ்ஞானப் பீடாதிபதியாக கடந்த ஜந்து ஆண்டுகள் பணியாற்றிவரும் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் அவர்கள் பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில், துணைவேந்தர்கள் இயக்குனர்கள் சபையினரால் வழங்கப்பட்ட பௌதிக விஞ்ஞானத்திற்கான அதி சிறந்த இள ஆராய்ச்சியாளர் விருது, தேசிய விஞ்ஞான மன்றத்தினால் வழங்கப்பட்ட இள விஞ்ஞானி விருது, மற்றும் தேசிய ஆராய்ச்சி பேரவை பல தடவைகள் வழங்கிய சிறந்த ஆராய்ச்சி வெளியீட்டுகளுக்கான ஜனாதிபதி விருதுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவரின் ஆய்வுக் கட்டுரைகள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் அதிகளவு மேற்கோளிடப்பட்டு வருகின்றன. சர்வதேசத்தரத்திலான இவரது ஆய்வுச் செயற்பாடுகளினால் ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவாகியுள்ள சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாது யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். https://www.virakesari.lk/article/215676
  2. Published By: DIGITAL DESK 3 26 MAY, 2025 | 10:30 AM வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளதுடன் அதனோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள மலையில் குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேலாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. உகந்தை மலையில் நாங்கள் முருகன் சிலையொன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில் இந்த புத்தர் சிலை எவ்வாறு நிறுவப்பட்டது என்று மக்கள் கவலை தெரிவித்தததுடன் கதிர்காமம் போல் உகந்தையையும் மாற்றத் திட்டமிட்ட சதி நடக்கிறதா என்றும் அவர்கள் அஞ்சுகின்றார்கள். இந்த விடயம் தொடர்பாக இந்து மக்கள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். பிரபல சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித்திடமும் மக்கள் முறையிட்டுள்ளனர். உகந்தைமலை வள்ளியம்மன் மலையில் கடந்த காலத்தில் முருகன் சிலை அமைப்பதற்கு கிழக்கு முன்னாள் ஆளுநர், அமைச்சர்கள், ஆலய நிர்வாகத்தினர் முயற்சி செய்த போது அதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடை செய்ததாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில், அதே சூழலில் உள்ள மற்றுமொரு மலையில் புத்தர் சலை வைக்கப்பட்டிருப்பது இந்துக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து உரிய, நீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/215694
  3. 'நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்' - என்எல்சியை ஒட்டிய கிராமங்களில் என்ன நடக்கிறது? பிபிசி தமிழ் கள ஆய்வு பட மூலாதாரம்,NLC படக்குறிப்பு,என்.எல்.சி கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "வேலைக்குப் போனால் 200 ரூபாய் சம்பளம் வரும். மாதம் மருந்து செலவுக்கே மூன்றாயிரம் தேவைப்படுகிறது. தனியார் மருத்துவரிடம் தான் சிகிச்சை பெறுகிறேன். எங்கள் கிராமத்தில் மருத்துவ வசதிகள் இல்லை" நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களை ஒட்டியுள்ள சிறிய கிராமமான அம்மேரியைச் சேர்ந்த மணி என்பவரின் கூற்று இது. விவசாய கூலியாக இருக்கும் அவரது 2 சிறுநீரகங்களுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (NLC) நிறுவனத்தை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு அனல்மின் நிலையம் மற்றும் சுரங்கத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் காற்று மாசு ஆகியவையே காரணம் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நெய்வேலியில் நடத்திய ஆய்வில், நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு பாதரசம் இருப்பதைக் கண்டறியப்பட்டிருப்பதாக, பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என என்எல்சி நிர்வாகம் கூறுகிறது. அப்படியானால் நிலக்கரி சுரங்கங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் என்ன பிரச்னை? பிபிசி தமிழின் கள ஆய்வில் தெரியவந்தது என்ன? படக்குறிப்பு,நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு பாதரசம் இருப்பது தெரியவந்துள்ளது 64 ஆயிரம் ஏக்கர் திறந்தவெளி சுரங்கம் கடலூர் மாவட்டத்தில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் இந்தியா லிமிடெட் இயங்கி வருகிறது. சுமார் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வெட்டியெடுக்கப்படும் நிலக்கரி, நான்கு அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனல் மின் நிலையத்தில் 3390 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் உள்ளதாக என்எல்சியின் இணையதளம் கூறுகிறது. நிலக்கரி சுரங்கத்துக்காக 1956-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ள இடத்துக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அம்மேரி, ஆதண்டார் கொல்லை, கரிவெட்டி, கூரைப்பேட்டை, மூலப்பட்டு ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. நீர் நிலைகளில் பாதரசம் படக்குறிப்பு,கிராமங்களில் உள்ள நீர் ஆதாரங்களில் காட்மியம், துத்தநாகம், போரான் (Boron), செலினியம் போன்ற உலோகங்கள் இருப்பது தெரியவந்ததாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு நெய்வேலி, பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர், நிலத்தடி நீர், நீர்நிலை, விவசாய நிலம் ஆகியவற்றில் 'பூவுலகின் நண்பர்கள்' என்ற சுற்றுச்சூழல் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பி சோதனை செய்தபோது, வடக்கு வெள்ளூரில் உள்ள குடிநீர்த் தொட்டியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு பாதரசம் இருப்பது தெரியவந்தது என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இதுதவிர, கிராமங்களில் உள்ள நீர் ஆதாரங்களில் காட்மியம், துத்தநாகம், போரான் (Boron), செலினியம் போன்ற கன உலோகங்கள் இருப்பது தெரியவந்ததாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாயின. இதனைக் கண்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம். மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர், மெட்ரோ குடிநீர் வாரியம் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக வழக்கில் சேர்க்கப்பட்டனர். களநிலவரம் என்ன? படக்குறிப்பு,நெய்வேலி முதல் சுரங்கத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆதாண்டார் கொல்லை, மூலப்பட்டு, அம்மேரி உள்பட சுமார் 65 கிராமங்கள் உள்ளன. நெய்வேலி முதல் சுரங்கத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆதாண்டார் கொல்லை, மூலப்பட்டு, அம்மேரி உள்பட சுமார் 65 கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களின் அருகில் சுரங்கத்தில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருவதை பிபிசி தமிழ் கள ஆய்வின் போது பார்க்க முடிந்தது. பல இடங்களில் மிகப் பெரிய அளவில் குழிகள் தோண்டப்பட்டிருந்தன. சுரங்கம் செயல்படும் இடங்களுக்குச் சென்றபோது, முழுதாக கம்பி வேலி அமைக்கப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (CISF) தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு நம்மிடம் பேசிய சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருவர், "எந்தப் பகுதியில் இருந்து வருகிறீர்கள்?" என விசாரித்தார். அந்த வழியாக செல்லும் ஒவ்வொருவரையும் அவர் தீவிரமாக கண்காணிப்பதைப் பார்க்க முடிந்தது. நிலத்தடி நீரால் சிறுநீரக பாதிப்பா? படக்குறிப்பு,சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வருகிறார் தனசேகரன். அங்கிருந்து ஆதண்டார் கொல்லை கிராமத்துக்கு பிபிசி தமிழ் குழுவினர் சென்றோம். ''இங்கு குடியேறி 45 ஆண்டுகள் ஆகிவிட்டd. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கை, கால்களில் வலி, வீக்கம் இருந்ததால் ஆஸ்பத்திரிக்குப் போனேன். உப்பு அதிகமானதாக கூறி பரிசோதனைகளை எடுத்தார்கள்' எனக் கூறுகிறார், தனசேகரன். இவருக்கு சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வருகிறார். 'எனக்கு மது, சிகரெட் என எந்தப் பழக்கமும் இல்லை. நிலத்தடி நீரைத் தான் குடிப்பதற்கு பயன்படுத்தி வருகிறேன்.' எனக் கூறினார். தனது வீட்டில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் நிலக்கரிச் சுரங்கம் இருப்பதாக கூறுகிறார் தனசேகரனின் மகன் சத்தியமூர்த்தி. "என் அப்பாவுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் மருத்துவ செலவுக்கு தேவைப்படுகிறது. ஒருநாள் மருந்து சாப்பிடாவிட்டால் கால் வீக்கம் அதிகமாகிவிடும். இதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் டயாலிஸில் வரை சென்றிருக்கும்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சத்தியமூர்த்தி. மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொன்னது என்ன? படக்குறிப்பு,கடலூரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 115 மடங்கு பாதரசம் உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூடுதல் முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயலட்சுமி கூடுதல் அறிக்கை ஒன்றை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார். அதில், நீர்நிலைகள் (Surface water), நிலத்தடி நீர், மண், சாம்பல் துகள் என 22 மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆய்வில் 17 நீர்நிலைகளில் 15 இடங்களில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் பாதரசம் (0.0012 mg/l to 0.115 mg/l) உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலூரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 115 மடங்கு பாதரசம் உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. இவை குடிநீர் மற்றும் பாசனத்துக்கு ஏற்றதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,NLC படக்குறிப்பு,வானதி ராயபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 62 மடங்கு அதிகம் பாதரசம் இருப்பது அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார் "வளையமாதேவி கூட்டுக் குடிநீர்த் திட்டம், வாலஜா ஏரி, அய்யன் ஏரி, பரவனாறு ஆகியவை குடிநீர் ஆதாரமாக இருந்துள்ளன. நீர்நிலைகளில் இயற்கையாக பாதரசம் உருவாகாது. இவற்றில் எப்படி உருவானது" என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் வீரஅரசு கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சோதனையில் 9 நிலத்தடி நீர் மாதிரிகளில் ஆறு இடங்களில் பாதரசம் இருந்துள்ளது. அதன் அனுமதிக்கப்பட்ட அளவு என்பது 0.001 Mg/1 என, இந்திய அரசின் குடிநீர் தரக்கட்டுப்பாடு வரையறுத்துள்ளது. குடிநீரில் 0.006 mg/L என்ற அளவில் பாதரசம் இருக்கலாம் எனவும் செலினியத்தில் 0.01 என்ற அளவிலும் இருக்கலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அப்படியிருக்கும்போது, இங்கு 0.0025 Mg/l முதல் 0.0626 வரை பாதரசம் காணப்பட்டுள்ளது. "இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 2.5 முதல் 62 மடங்கு வரை அதிகம்" எனக் கூறுகிறார், பிரபாகரன் வீர அரசு. அதிலும், வானதி ராயபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 62 மடங்கு அதிகம் பாதரசம் இருப்பது அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். "நிலக்கரி சுரங்கங்களை ஒட்டி வாழும் மக்கள் இந்த நிலத்தடி நீரைத் தான் பயன்படுத்துகின்றனர்" எனவும் அவர் கூறினார். "இது வெறும் வாழ்வாதார பிரச்னை மட்டும் அல்ல. மக்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏராளமானோர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் டயாலிஸிஸ் செய்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை வசதிகள் கிடைப்பதில்லை" என்கிறார், பிரபாகரன் வீர அரசு. "நிலத்தடி நீரைத் தவிர வேறு ஆதாரம் இல்லை" படக்குறிப்பு,அம்மேரி கிராமத்தில் சுமார் 25 வருடங்களாக வசிக்கும் மணி என்பவருக்கும் இதே பிரச்னை தான். அம்மேரி கிராமத்தில் சுமார் 25 வருடங்களாக வசிக்கும் மணி என்பவருக்கும் இதே பிரச்னை தான். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் உடல் வீக்கம் அதிகமானதால், தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். "இரண்டு சிறுநீரகமும் சுருங்கிப் போய்விட்டதாக மருத்துவர் கூறினார். ஒவ்வொரு முறையும் சிகிச்சைக்குச் செல்லும்போது 3 ஆயிரம் செலவாகிறது." என்கிறார் மணி. "மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்றால் கடலூர் அல்லது புதுச்சேரி போக வேண்டும். எங்கள் கிராமத்துக்கு ஒரு செவிலியர் கூட வந்ததில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். "நிலத்தடி நீரைத் தவிர வேறு எந்தத் தண்ணீரும் எங்களுக்கு வருவதில்லை." என்கிறார் மணி. அரசு மருத்துவமனை உள்ளது.. ஆனால்? படக்குறிப்பு,இக்கிராமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் என்எல்சி அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அம்மேரி கிராமத்தில் மட்டும் சுமார் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் என்எல்சி மருத்துவமனை அமைந்துள்ளது. "இங்கு பொதுமக்கள் சென்றால் முதலுதவி சிகிச்சை மட்டும் செய்வார்கள். என்எல்சி ஊழியர்களுக்கு மட்டுமே அங்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கிராமத்தில் எந்த மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டதில்லை" என்கிறார், ஆதண்டார் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மணி. நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளியே வரும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து என்எல்சி டவுன்ஷிப்புக்கு (TownShip) கொடுப்பதாகக் கூறும் மணி, "கிராமங்களுக்கு அந்த நீர் வருவதில்லை. சுரங்கத்தில் மண்ணை இலகுவாக்குவதற்கு வெடி வைக்கின்றனர். அதன் கழிவுகள் ஓடை வழியாக செல்கிறது" எனக் குறிப்பிட்டார். படக்குறிப்பு,சுரங்கத்தின் பரப்பளவு அதிகரிப்பதால் கிராமத்துக்கு பிரச்னை அதிகரிப்பதாகக் கூறும் ரவி சுரங்கத்தின் பரப்பளவு அதிகரிப்பதால் கிராமத்துக்கு பிரச்னை அதிகரிப்பதாகக் கூறும் ரவி, "கீழே படியும் கரி உள்பட அனைத்துக் கழிவுகளையும் வெளியேற்றுகின்றனர். அது இங்குள்ள ஓடை வழியாக செல்கிறது" என்கிறார். அனல்மின் நிலையத்தின் கழிவுகள், வாலஜா ஏரியில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் சென்று அங்கிருந்து பெருமாள் ஏரி மூலமாக கடலில் சென்று கலப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆதண்டார் கொல்லையைச் சுற்றி வந்தபோது, ஊருக்குள் நீரோடை போல தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. "அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இது" எனக் கூறினார் ரவி. அந்த நீர் கருப்பு நிறத்தில் இருந்தது. படக்குறிப்பு,"அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இது" எனக் கூறினார் ரவி. அந்த நீர் கருப்பு நிறத்தில் இருந்தது." என்னென்ன பாதிப்புகள் வரும்? "பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்களால் மனித உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்?" என, சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தியிடம் பிபிசி தமிழ் கேட்டது. "சிறுநீரகங்களால் கன உலோகங்கள் வடிகட்டப்படும்போது அவை அதில் தங்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவை மோசமான புற்றுநோய் பாதிப்பையும் ஏற்படுத்தும்" என்று அவர் கூறுகிறார். தொழிற்சாலைக் கழிவுகளில் இருந்து ஆற்றில் கலக்கும் கன உலோகங்களால் புற்றுநோய், சிறுநீரக பாதிப்புகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். படக்குறிப்பு,என்.எல்.சி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் பதில் நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்ரீதியான பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் பிபிசி தமிழ் கேட்டது. "இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை. அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார். என்எல்சியின் விளக்கம் என்ன? என்எல்சியின் மக்கள் தொடர்புத் துறையின் துணைப் பொது மேலாளர் கல்பனா தேவியிடம் பிபிசி தமிழ் பேசியது. "உடல்நலப் பிரச்னைக்கு பாதரசம் உள்ளிட்டவை காரணம் எனக் கூறுகின்றனர். அதற்கான காரணம் குறித்து எந்த ஆவணங்களும் (Records) இல்லை" எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள அறிக்கைக்கு நீதிமன்றத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த விவகாரத்தை சட்டரீதியாகவே நாங்கள் கையாண்டு வருகிறோம்" எனக் கூறினார். மக்களுக்கு மருத்துவ முகாம்களை நடத்தாமல் இருப்பது குறித்துக் கேட்டபோது, "ஏராளமான மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன. சில விஷயங்கள் மக்களிடையே தவறாக கொண்டு செல்லப்படுகிறது. இதை சட்டரீதியாக என்எல்சி நிர்வாகம் கையாள உள்ளது" என்கிறார் கல்பனா தேவி. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyg6npd68po
  4. அபாயகரமான இரசாயனங்களுடன் உடன் சரக்கு கப்பல் கேரள கடல் பகுதியில் மூழ்கியது - 24 ஊழியர்கள் மீட்பு 26 MAY, 2025 | 10:27 AM திருவனந்தபுரம்: அபாயகரமான இரசாயனங்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கேரள கடல் பகுதியில் மூழ்கியது. அந்த கப்பலை இயக்கிய மாலுமிகள் உட்பட 24 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து லைபீரியாவை சேர்ந்த சரக்கு கப்பல் கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டது. இந்த கப்பலில் 100 கன்டெய்னர்கள் இருந்தன. இதில் 13 கன்டெய்னர்களில் அபாயகரமான ரசாயனங்களும் 12 கன்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்தது. மேலும் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் பர்னஸ் ஆயிலும் சரக்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்டது. இந்த சரக்கு கப்பல் நேற்று முன்தினம் கொச்சியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் இருந்தது. அப்போது கப்பல் ஒருபக்கமாக சாயத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் இந்திய கடலோர காவல் படை மற்றும் கடற்படையை சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கப்பலில் பணியாற்றிய 21 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 3 பேர் சரக்கு கப்பலில் தொடர்ந்து தங்கியிருந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கப்பல் கடலில் மூழ்காமல் இருக்க 3 பேரும் அதிதீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து கடற்படையின் ஐஎன்எஸ் சுஜாதா கப்பலை சேர்ந்த வீரர்கள் நேற்று மீதமிருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதன்பிறகு சரக்கு கப்பல் முழுமையாக கடலில் மூழ்கியது. சரக்கு கப்பலில் அபாயகரமான ரசாயனங்கள் இருப்பதால் சுமார் 20 கடல் மைல் தொலைவுக்குள் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரசாயனங்கள், டீசல், பர்னஸ் ஆயில் ஆகியவை கேரள கடல் பகுதியில் கலந்து வருகின்றன. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறிய ரக விமானம் மூலம் கடலில் தடுப்பு ரசாயனங்கள் தெளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கேரள அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த 24 பேர் லைபீரிய சரக்கு கப்பலில் பணியாற்றினர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். என்ன காரணத்துக்காக சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக கப்பலின் மாலுமிகள், பொறியாளர்களிடம் விசாரித்து வருகிறோம். கேரள கடல் பகுதியில் அபாயகரமான ரசாயனங்கள், டீசல், பர்னஸ் ஆயில் கலந்து வருகிறது. இதனால் எர்ணாகுளம், ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளின் கடல் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பகுதிகளில் கன்டெய்னர்கள் கரை ஒதுங்கும் அபாயமும் இருக்கிறது. எனவே மீனவர்கள், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கேரள தலைமைச் செயலாளர் ஜெயதிலக் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். கேரள கடல் பகுதியில் கலந்திருக்கும் அபாயகரமான ரசாயனங்கள், எண்ணெயை அகற்றுவது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. கடலோர காவல் படையை சேர்ந்த சாக்சம் என்ற கப்பல், எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கடற்படையின் கண்காணிப்பு விமானம் மூலம் கடலில் தடுப்பு ரசாயனம் தெளிக்கப்படுகிறது. எர்ணாகுளம், ஆலப்புழா கடல் பகுதிகள், கடற்கரைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. இவ்வாறு கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. https://www.virakesari.lk/article/215691
  5. இளம் வீரர்களால் சிஎஸ்கே பிரமாண்ட வெற்றி - ஓய்வு பற்றி தோனி கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 25 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆமதாபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 67-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியிடம் 83 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால், குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றில் முதலிடத்தைப் பெறுவதை தவறவிட்டுள்ளது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி, 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. 231 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 18.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்து 83 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் குஜராத் அணி 14 போட்டிகளில் 9 வெற்றிகள் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் மாறாமல் இருந்தாலும், பஞ்சாப் அணியின் நிகர ரன்ரேட்டைவிட மோசமாக 0.254 எனச் சரிந்துள்ளது. சிஎஸ்கே அணி ஏற்கெனவே தொடரை விட்டு வெளியேறிவிட்டதால், வெற்றியுடன் சீசனை முடித்துள்ளது. மும்பை, ஆர்சிபி முதலிடம் பிடிக்க வாய்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES குஜராத் அணியின் தோல்வியால் ப்ளே ஆஃப் சுற்றில் 3 அணிகளில் முதலிடத்தைப் பிடிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பை அணி பஞ்சாப்பை வீழ்த்திவிட்டால் 18 புள்ளிகளுடன் வலுவான நிகரரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடிக்கும். அதேசமயம், பஞ்சாப் அணி மும்பையிடம் தோற்கும்பட்சத்தில் 17 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடிக்கும். கடைசி லீக்கில் லக்னெள வென்றுவிட்டால் தற்போது 17 புள்ளிகளுடன் இருக்கும் ஆர்சிபி 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. 17 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்திவிட்டால் 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும், ஆர்சிபியும் கடைசி லீக்கில் வென்றுவிட்டால் 19 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் யாருக்கு முதலிடம் என்பது தெரியவரும். இவ்வாறு நடந்தால், மும்பை அணி கடைசி இடத்திலும், குஜராத் அணி 3வது இடத்தைப் பிடிக்கும். ஆக, தற்போது ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை முதலிடம் பிடிக்க ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தோற்க வேண்டும், ஆர்சிபி முதலிடம் பிடிக்க பஞ்சாப் தோற்று, ஆர்சிபி கடைசி லீக்கில் வெல்ல வேண்டும். ஆனால், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத் அணி இனிமேல் முதலிடம் பிடிக்க வாய்ப்பில்லை. இளம் வீரர்களின் காட்டாற்று ஆட்டம் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் உயர்வுக்கு அடித்தளமிட்டது தொடக்க வீரர் மாத்ரே(34), உர்வில் படேல்(37), பிரெவிஸ் (57) ஆகியோர்தான். கான்வே அரைசதம் அடித்தாலும் மிகவும் மெதுவாக ஆடினார். இளம் வீரர்கள் அதிரடியாக பேட் செய்து ரன்களைக் குவித்துவரும்போது அனுபவ வீரர் கான்வே படுமந்தாக பேட் செய்தது ரசிகர்களுக்கு எரிச்சலூட்டியது. ஜடேஜா கடைசி நேரத்தில் கேமியோ ஆடி ஆட்டமிழந்திருந்தால் கூடுதலாக ரன்கள் கிடைத்திருக்கும் ஆனால் டி20 ஆடுகிறோம் என மறந்து டெஸ்ட் போட்டியைப் போன்று ஜடேஜா பேட் செய்தார். சீனியர் வீரர்கள் இருவருமே பேட்டிங்கின் ஸ்வாரஸ்யத்தையும், ரன் வேகத்தையும் மட்டுப்படுத்தினர். இதில் உர்வில் படேல், மாத்ரே இருவருமே சிஎஸ்கே அணியின் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படவில்லை. காயத்தால் மாற்றுவீரர்களாக அணிக்குள் வந்த இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரெவிஸ் 57 ரன்கள் அடித்தார் அம்பலமான குஜராத்தின் பலவீனம் ஏற்கெனவே லக்னெள அணியிடம் 230 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ய முடியாமல் தோற்ற குஜராத்தின் பலவீனத்தை அறிந்து சிஎஸ்கே பெரிய ஸ்கோரை இலக்காக வைத்தது. சிஎஸ்கே விரித்த வலையில் குஜராத் பேட்டர்கள் கச்சிதமாக விழுந்தனர். இந்த ஆட்டத்தில் குஜராத் வென்றிருந்தால், அனைத்துமே தலைகீழாக மாறியிருக்கும். ஆனால் குஜராத் தோல்வியால், லீக் சுற்றில் போட்ட வெற்றி நடை வீணாகிப்போனது. லீக் சுற்றில் குஜராத் அணியின் 9 வெற்றிகளுமே பெரும்பாலும் டாப்-3 பேட்டர்களால் பெறப்பட்டவை. அது சேஸிங்காக இருந்தாலும், முதலில் பேட்டிங்காக இருந்தாலும் சுதர்சன், கில், பட்லர் ஆகிய 3 பேருமே ஆதிக்கம் செய்தனர். இதனால் நடுவரிசையை குஜராத் அணியால் பரிசோதித்து பார்க்க முடியவில்லை. ஆனால், பின்பகுதி லீக் போட்டிகளில் நடுவரிசை பேட்டர்கள் அணியை வழிநடத்திச் செல்ல வாய்ப்புக் கிடைத்தபோது,அணியின் உண்மையான நிலைமை என்னவென்று அம்பலமானது. குஜராத் அணியைப் பொருத்தவரை டாப்ஆர்டர் சுதர்சன், கில் இருவரின் விக்கெட்டை எடுத்துவிட்டாலே அணி ஆட்டம் கண்டுவிடும், ப்ளே ஆஃப் சுற்றில் பட்லர் இல்லாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக மாறும். குஜராத் அணியின் பலவீனம் அம்பலப்பட்டுவிட்டது ப்ளே ஆஃப் சுற்றில் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது கேள்விக்குறிதான். மாத்ரே அதிரடி தொடக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட் செய்ய முடிவு செய்தார். மாத்ரே, கான்வே ஆட்டத்தைத் தொடங்கினர். கான்வே தொடக்கத்திலிருந்தே பேட்டிங் ரிதத்துக்கு வரவில்லை, மிகவும் மந்தமாக செயல்பட்டார். ஆனால், அர்ஷத் கான் வீசிய 2வது ஓவரிலே மாத்ரே 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 28 ரன்கள் விளாசி அருமையான தொடக்கத்தை அளித்தார். உடனடியாக பிரசித் கிருஷ்ணா பந்துவீச வரவழைக்கப்பட்டார். பிரசித் ஓவரில் வீசப்பட்ட பவுன்ஸர், கூடுதல் வேகத்துக்கு திணறிய மாத்ரே, அதே ஓவரில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து 17 பந்துகளில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். உர்வில் படேல் விளாசல் அடுத்துவந்த உர்வில் படேல், கான்வேயுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடவே பவர்ப்ளே ஓவரில் சிஎஸ்கே ஒரு விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் சேர்த்தது. உர்வில் படேலும் பந்துகளை வீணாக்காமல் ஆடியதால் ஸ்கோர் வேகமாக உயரந்தது, கோட்ஸி ஓவரில் 3 பவுண்டரிகளை உர்வில் படேல் விளாசினர். கான்வேுவும் மெல்ல ஃபார்முக்குத் திரும்பி ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார். ரஷித்கான் வீசிய ஓவரில் லாங்ஆன் திசையில் உர்வில்படேல் அடித்த ஷாட்டை ஷாருக்கான் கேட்ச் பிடிக்கத் தவறினார். இந்த கேட்சைபிடித்திருந்தால், உர்வில் படேல் 25 ரன்களில் ஆட்டமிழந்திருப்பார். சாய் கிஷோர் வீசிய 10-வது ஓவரில் மிட்விக்கெட்டில் சிக்ஸர் விளாசிய உர்வில் படேல், அடுத்தபந்தையும் சிக்ஸருக்கு விளாச முயன்றார். ஆனால், சுப்மான் கில்லிடம் கேட்ச் கொடுத்து 19 பந்துகளில் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷிவம் துபே வந்தவுடனே கிஷோர் ஓவரில் சிக்ஸர் விளாசினார். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 115 ரன்கள் சேர்த்தது. ரஷித் கான் வீசிய 12-வது ஓவரில் கான்வே சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தார். ஷாருக்கான் வீசிய ஓவரில் சிக்ஸர் விளாசிய துபே, அதே ஓவரில் கோட்ஸிடம் கேட்ச் கொடுத்து 17 ரன்னில் வெளியேறினார். 13 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 150 ரன்களை எட்டியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷித் கான் வீசிய 12-வது ஓவரில் கான்வே சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தார். பிரெவிஸ் மின்னல்வேக அரைசதம் அடுத்துவந்த பிரெவிஸ், கான்வேயுடன் சேர்ந்தார். அரைசதத்தை நோக்கி நகர்ந்த கான்வே, ரஷித்கான் வீசிய 14-வது ஓவரில் சிக்ஸர் அடித்து 34 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இந்த சீசனில் கான்வே படுமந்தமாக பேட் செய்து இந்த அரைசதத்தை அடித்தார். அரைசதம் அடித்தவுடன் அடுத்த பந்தில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று போல்டாகி 52 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா, பிரெவிஸ் களத்தில் இருந்தனர். 15 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களுடன் இருந்தது. கடைசி 5 ஓவர்களில் பிரெவிஸ் அதிரடியாக 57 ரன்களை சிஎஸ்கே அணி சேர்த்தது. கோட்ஸீ வீசிய 17வது ஓவரில் பிரெவிஸ் சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்களும், அர்ஷத் கான் வீசிய 18-வது ஓவரில் ஜடேஜா சிக்ஸரும், பிரேவிஸ் பவுண்டரி என 14 ரன்களும் சேர்க்கவே சிஎஸ்கே ஸ்கோர் உயர்ந்தது. சிராஜ் வீசிய 19-வது ஓவரை குறிவைத்த பிரெவிஸ் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 17 ரன்கள் சேர்த்து, 19 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். பிரசித் வீசிய கடைசி ஓவரிலும் பிரெவிஸ் சிக்ஸர் அடித்து அடுத்த பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 23 பந்துகளில் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 18 பந்துகளில் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிஎஸ்கே பேட்டர்களுக்கு குஜராத் அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு எந்தவிதத்திலும் சிரமத்தையோ, ரன்சேர்ப்பதில் சவால்களையோ வழங்கவில்லை குஜராத்தின் பொறுப்பற்ற பந்துவீச்சு ப்ளேஆஃப் சுற்றுக்குள் சென்றுவிட்டோமே எதற்காக மெனக்கெட வேண்டும் என்ற ரீதியில்தான் குஜராத் அணி பந்துவீச்சு இருந்தது. 7 பந்துவீச்சாளர்களை குஜராத் அணி பயன்படுத்தியும் சிஎஸ்கே பேட்டர்களின் ரன்குவிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த 7 பந்துவீச்சாளர்களில் பிரசித் கிருஷ்ணா மட்டுமே ஓவருக்கு 5 ரன்களை வழங்கினார். மற்றவர்கள் அனைவரும் ஓவருக்கு 12 ரன்கள் வீதமும் அர்ஷத் கான் 2 ஓவர்களில் 42 ரன்களை வாரி வழங்கினார். சிஎஸ்கே பேட்டர்களுக்கு குஜராத் அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு எந்தவிதத்திலும் சிரமத்தையோ, ரன்சேர்ப்பதில் சவால்களையோ வழங்கவில்லை. குஜராத் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் நிலையில் இப்படி மோசமான பந்துவீச்சை வைத்து எவ்வாறு டிபெண்ட் செய்யப் போகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. 231 சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. ஏற்கெனவே லக்னெள அணியும் இதேபோன்று 230 ரன்களுக்கு மேல் சேர்த்த ஸ்கோரை சேஸ் செய்ய முடியாமல் குஜராத் அணி தோற்றிருந்தது. அதை மனதில் வைத்து சுதர்சன், கில் நிதானமாகத் தொடங்கினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சாய் சுதர்சன் நிதானமாகத் தொடங்கினர் எப்போதும் இல்லாதவகையில் புதிய பந்தில் ஜடேஜாவை பந்துவீச தோனி அழைத்தார். கடந்த 10 ஆண்டுகளில் புதிய பந்தில் முதல் ஓவரை ஜடேஜா வீசுவது இதுதான் முதல்முறையாக இருந்தது. கம்போஜ் கடினமான லெனத்தில் வீசியதால் சுப்மான் கில் சற்று சிரமப்பட்டு ரன்களைச் சேர்த்து சிக்ஸர் விளாசினார். ஆனால் மீண்டும் கடினமான லென்த்தில் கம்போஜ் பந்துவீச பெரிய ஷாட்டுக்கு கில் முயன்றபோது பேட்டில் எட்ஜ் எடுத்து 13 ரன்னில் கில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஜாஸ் பட்லர் 5 ரன்னில் கலீல் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கம்போஜ் வீசிய 5வது ஓவரில் ருதர்போர்ட் ரன் ஏதும் சேர்க்காமல் மாத்ரேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர்ப்ளே ஓவருக்குள் குஜராத் அணி 30 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணி தோல்வியின் பிடிக்குள் வந்துவிட்டதை அறிந்த தோனி, பந்துவீச்சாளர்களை ரொட்டேட் செய்து அருமையாகப் பயன்படுத்தினார். ஜடேஜா, துபே, நூர்அகமது என பந்துவீச்சாளர்களை பந்துவீசச் செய்து குஜராத் பேட்டர்களை திணறவைத்தார் தோனி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜாஸ் பட்லர் 5 ரன்னில் கலீல் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். சுதர்சன், ஷாருக்கான் இணைந்து அணியை மீட்கும் பணியைத் தொடங்கினர். துபே வீசிய 10-வது ஓவரில் சுதர்சன் சிக்ஸர், பவுண்டரியும், ஷாருக்கான் சிக்ஸரும் விளாசி 18 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா வீசிய 11வது ஓவரின் முதல் பந்தில் ஷாருக்கான் 19 ரன்னில் பதீரனாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரிலேயே சுதர்சனும் 41ரன்களில் துபேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியதால் குஜராத் தோல்வியை நோக்கி நகர்ந்தது. ரஷித்கான், திவேட்டியா தோல்வியிலிருந்து தப்பிக்க வைக்க முயன்றனர். ஆனால் இருவராலும் பெரிய பங்களிப்பு செய்ய முடியவில்லை. நூர் அகமது பந்துவீச்சில் ரஷித்கான்(12), திவேட்டியா(14) ரன்களில் விக்கெட்டை இழந்தனர். கோட்ஸி 5 ரன்னில் பதீரனா பந்துவீச்சில் போல்டாகினார். அர்ஷத் கான் 20 ரன்களில் நூர் அகமது பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த குஜராத் அணி, அடுத்த 40 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் அடுத்த 20 ரன்களுக்குள் மீதமிருந்த 2 விக்கெட்டுகளை இழந்தது. 18.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆட்டமிழந்து, 83 ரன்களில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே தரப்பில் கம்போஜ், நூர் அகமதுதலா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். எப்போது ஓய்வு - தோனி பதில் பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் " இறுதியில் நல்லவெற்றி. அரங்கம் நிறைந்திருந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் ஓரளவு ரசிகர்கள் வந்திருந்தனர். வெற்றியுடன் முடித்துள்ளோம், அனைவரின் சிறப்பான பங்களிப்பாக இருந்தது. என் ஓய்வு குறித்து முடிவு செய்ய 3 அல்லது 4 மாதங்கள் தேவைப்படும். இது தொழில்முறை கிரிக்கெட் என்பதால், முடிந்த அளவு சிறந்த பங்களிப்பை வழங்கிட வேண்டும். எந்த அளவு கிரிக்கெட் மீது தீராத பசி, ஆர்வத்தைப் பொருத்துதான் முடிவு செய்வேன். என் ஓய்வு குறித்து முடிவு செய்ய போதுமான நேரம் இருக்கிறது. நான் ராஞ்சிக்கு சென்று முடிவு செய்வேன். நான் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டேன் என்று சொல்லவும் இல்லை, திரும்பவும் வருவேன் என்றும் கூறவில்லை. எனக்கு முடிவெடுக்க போதுமான நேரம் இருக்கிறது. இந்த சீசன் தொடங்கும்போது 6 போட்டிகளில் 4 சென்னையில் நடந்தது. சேஸிங்கின்போது 2வது இன்னிங்ஸில் நாங்கள் மிகுந்த அழுத்தத்துக்கு ஆளாகினோம். பேட்டிங் எங்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்தது. இப்போது அனைவரும் பங்களிப்பு செய்துள்ளனர், ருதுராஜ் அடுத்த ஆண்டு வருவார், அவர் அதிகமாக எதைப்பற்றியும் கவலைப்படவில்லை" எனத் தெரிவித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly37nwe32do
  6. Published By: RAJEEBAN 23 MAY, 2025 | 02:39 PM tamilguardian 67 ஆண்டுகளிற்கு முன்னர் இந்த நாளில் இலங்கையில் சிங்கள காடையர்கள் தமிழர்களை தாக்கதொடங்கினார்கள், பாலியல்வன்முறைகளில் ஈடுபட்டார்கள், கொலை செய்தார்கள். தமிழ் மக்களிற்கு எதிரான தொடர்ச்சியான பயங்கரமான இனவன்முறைகளில் ஒன்றாக இந்த வன்முறை வரலாற்றில் பதிவாகயிருந்து. தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் அன்றைய நாட்களில் 300 முதல் 1500 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது. பலர் காயமடைந்தனர், சூறையாடல்கள் தமிழர்களின் வீடுகளை வர்த்தக நிலையங்களை அழித்தல் போன்றனவும் இடம்பெற்றன. 1958ம் ஆண்டு மே மாதம் 27 திகதி இலங்கை அரசாங்கம் அவசரகாலநிலையை பிரகடனம் செய்தது. 1956ம் ஆண்டில் சுதந்திர இலங்கையில் முதலாவது இன அடிப்படையிலான கலவரம் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் இந்த வன்முறைகள் இடம்பெற்றன. முதலில் 22ம் திகதி பொலனறுவையிலேயே வன்முறைகள் ஆரம்பமாகின. வவுனியாவில் இடம்பெறவிருந்த சமஸ்டி கட்சிக்கு சென்றுகொண்டிருந்த தமிழர்களை சிங்கள காடையர்கள் தாக்கியதை தொடர்ந்தே இந்த வன்முறைகள் வெடித்தன.. அதன் பின்னர் வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கு பரவின. கொழும்பில் இந்து மதகுரு ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார். கொழும்பு வீதிகளில் அலைந்து திரிந்த சிங்கள காடையர்கள் தங்களை கடந்து செல்பவர்களால் சிங்கள செய்தித்தாள்களை வாசிக்க முடியுமா என பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சிங்கள செய்தித்தாள்களை வாசிக்க முடியாதவர்கள் தாக்கப்பட்டனர்/கொல்லப்பட்டனர். அரசாங்கம் ஐந்து நாட்கள் காத்திருந்துவிட்டு அவசரகாலநிலையை பிரகடனம் செய்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது அரசியல் வாழ்க்கையை தீர்மானித்தது 1958ம் ஆண்டு இனக்கலவரம் என ஒருமுறை தெரிவித்திருந்தார். மார்ச் 1984 இல் பேட்டியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். 'நான் பாடசாலை மாணவனாகயிருந்தவேளை இடம்பெற்ற 1958ம் ஆண்டு இனக்கலவரம் என் மீது கடும் தாக்கத்தை செலுத்தியது. சிங்கள இனவாதிகளால் எங்கள் மக்கள் எப்படி ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்டார்கள் என்பதை நான் கேள்விப்பட்டேன். "எனது நண்பரின் குடும்பத்தை சேர்ந்த விதவைபெண் ஒருவரை ஒருமுறை நான் சந்தித்தேன், அவர் இனவெறியர்களின் படுகொலை குறித்து விபரித்தார். இனக்கலவரத்தின் போது சிங்கள காடையர்கள் கொழும்பில் உள்ள அவரது வீட்டை தாக்கினார்கள். அவர்கள் கணவனை கொலை செய்தார்கள், வீட்டிற்கு தீ வைத்தார்கள். அவரும் அவருடைய பிள்ளைகளும் கடும் காயங்களுடன் தப்பினார்கள், அவரது உடலில் காணப்பட்ட காயங்களை பார்த்தவேளை நான் கடும் அதிர்ச்சியடைந்தேன்." "சுடுதாரில் குழந்தைகளை வீசியது குறித்து நான் கேள்விப்பட்டேன். அவ்வாறான ஈவிரக்கமற்ற இதுபோன்ற கொடுமையான கதைகளைக் கேட்டபோது என் மக்கள் மீது எனக்கு ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்த இனவெறி அமைப்பிலிருந்து என் மக்களை மீட்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வம் என்னை ஆட்கொண்டது. நிராயுதபாணிகளான அப்பாவி மக்களுக்கு எதிராக ஆயுத பலத்தைப் பயன்படுத்தும் ஒரு அமைப்பை எதிர்கொள்ள ஆயுதப் போராட்டம் மட்டுமே ஒரே வழி என்பதை நான் உறுதியாக உணர்ந்தேன்" என விடுதலைப்புலிகளின் தலைவர் தெரிவித்திருந்தார். எமர்ஜென்சி '58: சிலோன் இனக் கலவரங்களின் கதையில் படுகொலை பற்றி எழுதுகையில் டார்சி விட்டாச்சி இவ்வாறு குறிப்பிட்டார். கலவரங்கள் தன்னிச்சையாக நடக்கவில்லை என்று கவர்னர் ஜெனரல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்தார் என குயின்ஸ் மாளிகையிலிருந்து செய்தி கசிந்தது. அவர் கூறியது: ‘ஜென்டில்மேன் இது தன்னிச்சையாக வகுப்புவாதத்தின் வெடிப்பு என்று உங்களில் யாருக்காவது தெரிந்தால் அதை உங்கள் மனதில் இருந்து நீக்கிவிடலாம். இதை கவனமாகத் திட்டமிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சரியாக அறிந்தவர்களின் பின்னால் இருந்த ஒரு சூத்திரதாரியின் வேலை இது. இது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட ஒரு டைம்- பொம், இப்போது வெடித்துவிட்டது. 1958 மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கை மக்கள் அனுபவித்த பயங்கரமும் வெறுப்பும் அந்த அடிப்படைத் தவறின் விளைவாகும். நம்மிடம் என்ன மிச்சம்? இடிந்து விழுந்த ஒரு தேசம் நாம் மறக்க முடியாத சில கொடூரமான பாடங்கள் மற்றும் ஒரு முக்கியமான கேள்வி: சிங்களவர்களும் தமிழர்களும் பிரியும் நிலையை அடைந்துவிட்டார்களா? https://www.virakesari.lk/article/215500
  7. INNINGS BREAK 68th Match (N), Delhi, May 25, 2025, Indian Premier League SRH chose to bat. Sunrisers Hyderabad (20 ov) 278/3 Current RR: 13.90 • Last 5 ov (RR): 74/1 (14.80) Kolkata Knight Riders Win Probability: SRH 91.15% • KKR 8.85%
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தினேஷ் அகிரா பதவி, கிரிக்கெட் நிபுணர் 25 மே 2025, 12:03 GMT தோனி ஓய்வுபெற வலியுறுத்தும் ரசிகர்களின் கருத்துக்கள் உண்மையில் ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகின்றன. தோனியை நன்றாக அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல, வழக்கமான தோனி நகர்வுதான் என்பது எளிதாக புரிந்துவிடும். தோனியின் ஓய்வறிவிப்புகளுக்கு என்று ஒரு தனித்த பாணி உண்டு. திடீர் முடிவுகள் போல தோற்றம் அளித்தாலும், ஒரு ஃபார்முலாவின் படிதான் அவை எப்போதும் அமைந்துள்ளன. அது என்ன ஃபார்முலா? தனது தலைமைத்துவமோ ஆட்டத்திறனோ கேள்விக்குள்ளாக்கப்படும் போது தோனி முதலில் அமைதிகாப்பார், விமர்சனங்களை சிரித்த முகத்துடன் எதிர்கொள்வார்; சமயங்களில் சற்று ஆக்ரோஷத்துடன். அடுத்ததாக தனது செயல்பாடுகளின் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க முயற்சிப்பார். தன்னுடைய பங்களிப்பு இனியும் அணிக்கு தேவைப்படாது என உணர்ந்த பிறகு, கடைசியாகத்தான் ஓய்வை அறிவிப்பார். அதுவும் யாரும் எதிர்பார்க்காத வகையில், யாரும் எதிர்பார்க்காத சமயத்தில். இந்த முடிவுக்கு வந்து சேர்வதற்கு வழக்கமாக தோனி எடுத்துக்கொள்ளும் காலம் 3–4 ஆண்டுகள். 2011 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அயல் மண்ணில் தொடர்ச்சியாக மண்ணைக் கவ்வியது. ஆனால், தோனி அவசரப்படவில்லை. 3 ஆண்டுகளுக்கு பிறகு 2015–ல், ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் யாரும் எதிர்பாராத சமயத்தில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தன்னுடைய பங்களிப்பு இனியும் அணிக்கு தேவைப்படாது என உணர்ந்த பிறகு, கடைசியாகத்தான் ஓய்வை அறிவிப்பார் தோனி 'ஓய்வுக்கு பின்னான கவலை' 2015 உலகக் கோப்பையின் போதே தோனியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணுகுமுறை மீதான விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டன. ஆனால் 2019 உலகக் கோப்பை முடிந்த பின்னர் சாவகாசமாக சில மாதம் கழித்து ஒரு சமூக வலைதள பதிவின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் முடிவை அவர் அறிவித்தார். தோனியின் முந்தைய ஓய்வறிப்புகளின் போது இப்போது போல ரசிகர்கள் காத்துக்கிடக்கவில்லை. களத்தை விட்டு விலக அவர் முடிவெடுக்கும் போதெல்லாம், அது எதிர்பார்த்த ஒன்றாக இருந்தபோதும், அவர்கள் உண்மையில் வருத்தத்தை வெளிப்படுத்தினர். ஆனால், இந்தமுறையோ தோனி எப்போதுதான் ஓய்வுபெறுவாரோ என்று கேட்டு கேட்டு சிஎஸ்கே ரசிகர்கள் சோர்ந்து போயுள்ளனர். ஏன் தோனி களத்தை காலிசெய்ய மறுக்கிறார்? கோபத்தில், விரக்தியில் ரசிகர்கள் சிலர் விமர்சிப்பதை போல, இதை வெறுமனே சுயநலம் என்று மட்டும் சுருக்கிட முடியாது. தோனி மட்டுமல்ல தான் விரும்பிய துறையில் உச்சத்தை தொட்ட எவர் ஒருவரும் அந்த களத்தை விட்டு அவ்வளவு எளிதாக விலக மாட்டார்கள். தன்னுடைய ஆளுமையை செதுக்கிய கிரிக்கெட்டை விட்டு முற்றும் முழுவதுமாக விலகுவது என்பது தோனிக்கு கடினமான முடிவாக இருக்கக் கூடும். ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யப் போகிறோம் என்கிற கவலையே, பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களை மன உளைச்சலுக்கு தள்ளுகிறது என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் டேவிட் ஃபிரித். சைலன்ஸ் ஆஃப் தி ஹார்ட் : கிரிக்கெட் சூசைட்ஸ் (Silence Of The Heart: Cricket Suicides) என்ற புத்தகத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தோனியே ஆகச்சிறந்த கேப்டன். ஒரு கேப்டனாக அவருடைய சாதனைகளும் சாகசங்களும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவை வணிக நோக்கமா? தோனி தொடர்ந்து விளையாடுவதற்கு அவருடைய பெருவிருப்பத்துடன் சேர்ந்து சிஎஸ்கே நிர்வாகத்தின் ஆதரவும் அதற்கு பின்னால் ஒரு பெரும் வணிக நோக்கம் இருப்பதும் உண்மைதான். ஆனால் இதை வெறுமனே கருப்பு வெள்ளையாக மட்டும் புரிந்துகொண்டு விட முடியாது. ரசிகர்களின் ஆதரவும் அபிமானமும் இருந்ததால் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் இத்தனை ஆண்டுகள் தோனியால் விளையாட முடிந்தது. பிறகு இப்போது ஏன் ரசிகர்கள் தோனியை ஓய்வுபெற சொல்கிறார்கள்? கிரிக்கெட்டில் 15 வருடங்களுக்கு ஒருமுறை தலைமுறை மாற்றம் ஏற்படுகிறது என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். கிரிக்கெட்டின் பாணி, கிரிக்கெட் வீரர்களின் சிந்தனை முறைகளில் நிகழும் மாற்றம் என இதனை புரிந்துகொள்ளலாம். தலைமுறை மாற்றம் என்பது மிகவும் நுட்பமாக நிகழும். ரஹ்மான் யுகம் முடிந்து அனிருத் யுகம் தொடங்கியதை போல. சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் திடீரென சரிவை சந்திப்பதை பார்க்கிறோம். தொடர்ச்சியாக அவர்களுடைய படங்கள் தோல்வியை சந்திக்க தொடங்கும். இதற்கும், அவர்களுடைய பாணியில் இருந்து அந்த படங்கள் பெரிதாக விலகியிருக்காது. அதே பாணி திரைப்படங்கள் தான், அதே ரசிகர்கள் தான். ஆனால், அப்போது ரசித்தவர்கள் ஏன் இப்போது ரசிக்கவில்லை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கிரிக்கெட்டில் 15 வருடங்களுக்கு ஒருமுறை தலைமுறை மாற்றம் ஏற்படுகிறது என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். ஆகச்சிறந்த ஐபிஎல் கேப்டன் 2007–ல் தோனி முதல்முறையாக கேப்டன் பொறுப்பு ஏற்றது முதல் 2020களின் தொடக்கம் வரை தோனியின் யுகம் என வரையறுக்கலாம். இப்போது நவீன கிரிக்கெட், குறிப்பாக T20 கிரிக்கெட் விளையாடப்படும் விதத்தில் பாரதூரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொடக்கத்தில் நிதானித்து விளையாடி, பிறகு மிடில் ஓவர்களில் வேகத்தை கூட்டி, இறுதிக்கட்டத்தில் மின்னல் வேகத்தில் முடிப்பது தோனியின் யுகம். ஆனால், இன்று மின்னல் வேகத்தில் தொடங்கி வேகத்தை மட்டுப்படுத்தாமல் அதே வேகத்தில் முடிப்பதாக புதுயுக கிரிக்கெட் உருவெடுத்துள்ளது. தோனியின் கேப்டன்சி குறித்து கிரிக்கெட் எழுத்தாளர் சித்தார்த் மோங்காவின் அவதானிப்பு கவனிக்கத்தக்கது. ''தோனி ரிஸ்க் எடுப்பவர் அல்ல. ரிஸ்க்கள் குறித்து மதிப்பிடுபவர். ஆனால், இன்று மதிப்பீடு செய்வதற்கு எல்லாம் நேரமில்லை. ரிஸ்க் எடுக்காமல் விளையாடுவதுதான், இன்று ரிஸ்க் என்பதாக மாறிவிட்டது'' என்கிறார் சித்தார்த் மோங்கா. இந்த தலைமுறை இடைவெளிக்கு சரியான உதாரணமாக சிஎஸ்கேவுக்கும் மற்ற அணிகளுக்கும் ஆட்டத்தை அணுகுவதில் உள்ள வித்தியாசத்தை சொல்லலாம். தோனியையும் சிஎஸ்கேவையும் பிரிந்துப் பார்க்க முடியாது. சிஎஸ்கேவின் ஆட்ட பாணி இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை ஆரம்ப காலத்தில் ஸ்டீபன் ஃபிளமிங் உடன் சேர்ந்து தோனி தான் வரையறுத்தார். அந்தப் பாணி காலாவதி ஆனதை உணராததால் தான் சிஎஸ்கே நிர்வாகம் ஏலத்தில் அனுபவம் என்ற பெயரில் வயதான வீரர்களை எடுத்து சொதப்பியது. பாதி போட்டித் தொடர் முடிந்த பிறகுதான், தனது தவறை உணர்ந்து ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டெவால்ட் பிரவிஸ் என இளம் வீரர்கள் மீது தன் பார்வையை திருப்பியுள்ளது. சிஎஸ்கேவின் அணுகுமுறையில் மாற்றம் தேவை என்பதை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்கும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுவிட்டார். தோனியின் ஓய்வு குறித்து வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானது முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கரின் விமர்சனம். அணியில் தோனியின் இருப்பே சிஎஸ்கே அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்கிறார் பாங்கர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2007–ல் தோனி முதல்முறையாக கேப்டன் பொறுப்பு ஏற்றது முதல் 2020களின் தொடக்கம் வரை தோனியின் யுகம் என வரையறுக்கலாம். களத்தில் தோனிதான் தலைவன் தோனி கேப்டனாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, களத்தில் அவர் இருக்கும்போது அவர்தான் தலைவன். அவர் கண்ணசைவில் தான் எல்லாம் நடக்கும். அப்படி இருக்கையில், எப்படி ஒரு கேப்டனால் தனக்கான அணியை கட்டமைக்க முடியும், தனக்கான ஒரு பாணியை புதிதாக வரித்துக்கொள்ள முடியும்? தோனியின் நிழலில் இருந்ததால்தான் ருதுராஜ் கெய்க்வாட்டால் கேப்டனாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால், தோனியோ அணியின் நலனை கருத்தில் கொண்டுதான் தான் தொடர்ந்து விளையாடி வருகிறேன் என நம்புகிறார். சரியான நேரத்தில் மாற்றம் (Transition) நிகழ வேண்டும், அப்போதுதான் தான் இல்லாத போதும் அணி வருங்காலத்திலும் ஆதிக்கத்தை தக்கவைக்க முடியும் என்பது அவருடைய நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், இந்த சிந்தனையும் கூட இப்போது எல்லாம் காலாவதியாகி வருவதை பார்க்கலாம். இந்த சீசனில் புதிய தலைமையின் கீழ் களமிறங்கிய பஞ்சாப் அணி, கடந்த காலத்தின் எந்தவொரு சுவடும் இன்றி புதிய பாணியில் விளையாடி அசத்துவதை என்ன சொல்வது? ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தோனியே ஆகச்சிறந்த கேப்டன். ஒரு கேப்டனாக அவருடைய சாதனைகளும் சாகசங்களும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவை. சிஎஸ்கேவுக்காக களமிறங்கிதான் அவர் அணியின் முகமாக இருக்க வேண்டும் என்பதில்லை. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crk2jdzld7po
  9. காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி - குழந்தை மருத்துவராக பல வருடங்களாக மருத்துவசேவையாற்றியவர் தனது அனைத்து சொந்தங்களையும் இழக்க நேரிட்ட தாங்க முடியாத கொடூரம் Published By: RAJEEBAN 25 MAY, 2025 | 11:00 AM காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் மருத்துவர் ஒருவரின் பத்து பிள்ளைகளில் 9 பிள்ளைகள் கொல்லப்பட்டனர். வைத்தியர் அலா அல் நஜார் என்பவரின் வீட்டை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் அவரது கணவரும் பிள்ளையொன்றும் காயமடைந்துள்ளனர் என நாசெர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவரின் உயிர்பிழைத்த 11 வயது மகனிற்கு சத்திரசிகிச்சையை மேற்கொண்ட பிரிட்டிஸ் மருத்துவர் கிரேஸ் குரூம் குழந்தை மருத்துவராக குழந்தைகள் சிறுவர்களிற்கு பல வருடங்களாக மருத்துவசேவையாற்றிய தாயார் ஒருவர் தனது அனைத்து சொந்தங்களையும் இழக்க நேரிட்டது தாங்க முடியாத கொடுரம் என பிபிசியிடம் தெரிவித்துள்ளார். வைத்தியரின் கணவர் கடும்காயங்களிற்குள்ளாகியுள்ளார், தலையை குண்டுசிதறல்கள் தாக்கியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். தந்தையும் மருத்துவர் நான் அவரிடம் கேட்டதற்கு அவர் தனக்கு அரசியல் இராணுவ தொடர்புகள் இல்லை, சமூக ஊடகங்களில் நான் பிரபலமாகயில்லை என தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். வைத்தியர் அலால அல் நஜாரின் குடும்பத்தினை பொறுத்தவரை இது நினைத்து பார்க்க முடியாத நிலைமை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹமாசின் மருத்துவ பிரிவினரால் வெளியிடப்பட்ட பிபிசியினால் உறுதி செய்யப்பட்ட வீடியோக்களில் ஹான்யூனிசின் இடிபாடுகளிற்கு இடையிலிருந்து சிறிய எரியுண்ட உடல்கள் மீட்கப்படுவதை காண்பித்துள்ளன. வைத்தியரின் கணவர் தனது மனைவியை மருத்துவமனையில்விட்டுவிட்டு வீட்டிற்கு வந்த ஒரிருநிமிடங்களில் அந்த வீடு தாக்குதலிற்குள்ளானது என ஹமாசின் சுகாதார அமைச்சின் இயக்குநர் வைத்தியர் முனீர் அல்போர்ஸ் தெரிவித்துள்ளார். மூத்த மகனிற்கு 12 வயது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215619
  10. டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தக் கடந்தது Published By: VISHNU 25 MAY, 2025 | 07:03 PM (செ.சுபதர்ஷனி) டெங்கு பரவலின் அதிகரிப்போடு 42 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாலப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 22 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 22,248 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இம்மாதத்தில் கடந்த சனிக்கிழமை (24) வரை சுமார் 4702 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஜனவரி மாதம் 4936 நோயாளர்களும், பெப்ரவரி மாதம் 3665 நோயாளர்களும், மார்ச் மாதம் 3770 நோயாளர்களும், ஏப்ரல் மாதம் 5175 டெங்கு நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். தொடரும் மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு, கொழும்பு மாநகர சபை, கம்பஹா, இரத்தினபுரி, கண்டி, , மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. டெங்கு பரவலை கருத்தில் கொண்டு 42 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் (MOH) அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 11 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 45.4 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இரண்டு நாட்களுக்கு மேல் கடுமையான காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் வைத்தியசாலையை நாடுவது நல்லது. கர்ப்பிணித் தாய்மார், சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் காய்ச்சல் நிலவுமாயின் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். முறையான கட்டுப்பாட்டு முறைகளால் மாத்திரமே டெங்கு பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இது தொடர்பில் அதிகாரிகள் மாத்திரமல்லாது பொதுமக்களும் அவதானத்துடனும் கரிசனையுடனும் செயற்படுவது அவசியம். நுளம்பு மற்றும் நுளம்பு குடம்பிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சின் கீழ் மே 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை 15 மாவட்டங்களில் உள்ள 95 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளை பிரதான கேந்திர நிலையமாக கொண்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. எதிர்வரும் தினங்களில் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதம் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. ஆகையால் பொதுமக்கள் டெங்கு அபாயத்தைக் கருத்தில் கொண்டு தாம் வாழும் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருக்கக் கூடிய பகுதிகளை இனங்கண்டு அவற்றை இல்லாதொழித்து தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215670
  11. பட மூலாதாரம்,T.M.SOUDARARAJAN படக்குறிப்பு,'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்' என்கிற வரியில் தெரியும் ஆதங்கத்தை மிக அழகாகத் தனது குரலில் கடத்தியிருப்பார் டி.எம்.எஸ் கட்டுரை தகவல் எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா பதவி, பிபிசி தமிழுக்காக 25 மே 2025, 02:01 GMT தமிழ் திரைப்பட இசையை ஒரு மணி மகுடமாக உருவகப்படுத்தினால் அதில் ஒரு நிலையான இடம் பெற்றிருக்கும் மாணிக்கம் தான் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன். டி.எம்.எஸ் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். திரை நாயகர்களுக்கே உரிய கம்பீரத்தை இவரை விட சிறப்பாக யாராலும் பாடல்களில் வெளிப்படுத்திவிட முடியாது. அதனாலேயே அவரது காலகட்டத்தில் முன்னணியில் இருந்த அத்தனை நட்சத்திரங்களுக்காகவும் பாடல்கள் பாடியுள்ளார். இன்று (மே 15) காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடிய டி.எம்.சௌந்தரராஜனின் நினைவு நாள் ஆகும். அதை முன்னிட்டு அவரது குரலில் ஒலித்த, 10 சிறந்த பாடல்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. கண் போன போக்கிலே கால் போகலாமா (பணம் படைத்தவன்) எம்.ஜி.ஆர் நாயகனாக நடிக்க, 1965-ஆம் ஆண்டு டி.ஆர்.ராமண்ணா தயாரித்து இயக்கிய பணம் படைத்தவன் படத்தில் இடம்பெற்ற பாடல். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணையின் இசையில் உருவான இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியவர் கவிஞர் வாலி. மேற்கத்திய செவ்வியல் இசை வடிவத்தில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலில் இருக்கும் வரிகள் அறிவுரை கூறும் தொனியிலேயே இருக்கும். முழுக்க தத்துவ வார்த்தைகள் நிறைந்திருக்கும் இந்தப் பாடலுக்கு டி.எம்.எஸ்ஸின் குரல் ஒரு நல் ஆசிரியர் பேசுவதைப் போன்ற தன்மையைத் தந்திருக்கும். 'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்' என்கிற வரியில் தெரியும் ஆதங்கத்தை மிக அழகாகத் தனது குரலில் கடத்தியிருப்பார் டி.எம்.எஸ். பட மூலாதாரம்,T.M.SOUDARARAJAN அம்மம்மா தம்பி என்று நம்பி (ராஜபார்ட் ரங்கதுரை) நடிகர் சிவாஜி கணேசனுக்காக டி.எம்.சௌந்தரராஜன் பாடிய சில பாடல்களில் சிவாஜி பாடுகிறாரா அல்லது டி.எம்.எஸ் தனது குரல் மூலம் நடிகராகத் தெரிகிறாரா என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருவரது திறமையும் கலந்து போயிருக்கும். அப்படி ஒருப் பாடலே 1973-ஆம் ஆண்டு வெளியான ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் வரும் அம்மம்மா தம்பி என்று நம்பி என்கிற பாடல். பி. மாதவன் இயக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசனின் வரிகள். தனியாளாக தம்பியையும், தங்கையும் தோளில் சுமந்து, ரயிலில் பாடல்கள் பாடி, கையேந்தி அவர்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுத்த அண்ணனின் கையறு நிலையை, பாட்டும் பேச்சுமாக, உணர்ச்சிகரமான பாணியில் வெளிப்படுத்தியிருப்பார் டி.எம்.எஸ். உட்கார்ந்த இடத்திலிருந்து சிவாஜி கணேசன் இந்தப் பாடலுக்காக வெளிப்படுத்திய நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. இசை கேட்டால் புவி அசைந்தாடும் (தவப்புதல்வன் ) தவப்புதல்வன் (1972) என்கிற சமூகப் படத்தில் நாயகியின் பார்வையில் ஒரு கதை சொல்லப்படும். அதில் அக்பர் அரசவைக் கவிஞராக இருந்த தான்சேன், ஆரோக்கியம் குன்றிய அக்பருடைய மகளுக்கு பாடல் மூலம் சிகிச்சை அளிப்பதாக ஒரு கற்பனைச் சூழல். இதற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான பாடல் தான், இசை கேட்டால் புவி அசைந்தாடும். இந்தப் பாடலின் அடிப்படை கர்நாடக இசையின் ராகத்தை ஒட்டி இருந்தாலும், பாடலின் ஆரம்பத்தில் இந்துஸ்தானி பாணியில் ஒரு ஆலாபனையுடன் நுழைவார் டி.எம்.எஸ். இந்தப் பாடலுக்கான சூழலிலும், வரிகளிலும் இருக்கும் கனிவு, கோபம் உள்ளிட்ட இரண்டு வித்தியாசமான உணர்வுகளையும் டி.எம்.எஸ் அசாதாரணமாகக் கையாண்டிருப்பார். கண்ணதாசன் ஏற்கனவே எழுதிய கவிதையே இந்தப் பாடலுக்கு வரிகளாகவும் பொருந்திப் போனது கூடுதல் சிறப்பு. யார் அந்த நிலவு (சாந்தி ) பிரபல மேற்கத்திய செவ்வியல் இசைக் கலைஞர்கள் சிலரின் பாணிக்கு இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி, நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் பீம் சிங் உள்ளிட்டவர்கள் ரசிகர்கள். அப்படி ஒரு பாணியில் நாம் ஏன் ஒரு பாடலை உருவாகக்கூடாது என்று யோசித்ததில் உருவானதே 1965-ஆம் ஆண்டு வெளியான சாந்தி என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற 'யார் அந்த நிலவு' என்கிற பாடல். அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களுக்கு முற்றிலுமாக புதிய அனுபவத்தைக் கொடுத்த இந்தப் பாடல், உருவாக்கத்தின் போதே பாடகர் டி.எம்.சௌந்தரராஜனை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இதை எப்படிப் பாடப் போகிறோம், நன்றாக இருக்குமா என்கிற சந்தேகத்துடன் பின்வாங்கியிருக்கிறார் டி.எம்.எஸ். அதன் பின் இசையமைப்பாளர் தந்த ஊக்கத்தில் மிகச்சிறப்பாக, மேற்கத்திய இசையின் பாணியை உள்வாங்கிக் கொண்டு தனது பாணியில் மிகச் சிறப்பாக இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். பாடலைக் கேட்ட சிவாஜி கணேசன், இந்தப் பாடலுக்கேற்றவாரு நடிக்க வேண்டும் என்றே 3 நாட்கள் படப்பிடிப்பைத் தள்ளிப்போட்டு, தன்னை தயார்படுத்தியிருக்கிறார். பட மூலாதாரம்,T.M.SOUDARARAJAN படக்குறிப்பு,பாடலின் இசையும், பாரதியின் வரிகளில் இருக்கும் புரட்சிகரமான சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் டி.எம்.எஸ்ஸின் குரலும் கேட்பவர்களை ஆட்கொள்ளும் சிந்து நதியின் மிசை நிலவினிலே (கை கொடுத்த தெய்வம்) சிவாஜி கணேசன், சாவித்திரி, எஸ்.எஸ்.ஆர் மற்றும் கே.ஆர்.விஜயா எனப் பல நட்சத்திரங்கள் நடித்திருந்த படம் கை கொடுத்த தெய்வம் (1964). கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் உருவான இந்தப் படத்தின் கதை, இரண்டு நண்பர்களைப் பற்றியது. ஆனால் இதில் தனக்குப் பிடித்த ஒரு பாரதியார் பாடலை கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று விரும்பினார் இயக்குநர். பாரதியாரின் புத்தகத்தை நாயகன் படித்து, அவர் கற்பனையில் வருவதாக இந்தப் பாடலையும் வைத்தார். இதைப் படிக்கும்போது, படத்துக்குப் பொருந்தாத சூழலாகத் தெரிந்தாலும், பாடலின் இசையும், பாரதியின் வரிகளில் இருக்கும் புரட்சிகரமான சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் டி.எம்.எஸ்ஸின் குரலும் கேட்பவர்களை ஆட்கொள்ளும். பாரதி பாடியிருந்தால் இப்படித்தான் இருக்குமோ என்று யோசிக்க வைப்பார் டி.எம்.எஸ். வரிகளுக்கு ஏற்றவாறு கேரளா, கர்நாடகா எனப் பல்வேறு இடங்களில் படமாக்கிய விதத்திலும் தேசிய ஒருமைப்பாட்டை பேசியிருப்பார் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். மாதவிப் பொன்மயிலாள் (இரு மலர்கள்) தமிழ் திரையில் சிவாஜி கணேசன் - பத்மினி இருவரும் சேர்ந்து நடித்த படங்களுக்கென்றே தனியிடம் உண்டு. 1967-ஆம் ஆண்டு வெளியான இரு மலர்கள் திரைப்படத்தில், படம் ஆரம்பித்த சில நிமிடங்களில், ஒரு போட்டியில் நாயகன் பாட, நாயகி நடனமாடும் பாடலாக இந்த மாதவிப் பொன்மயிலாள் வரும். வழக்கமாக இப்படி உருவாகும் ஒரு பாடலில் ஸ்வரங்கள் இருக்கும், ஜதிகள் இருக்கும், ஆனால் இரண்டும் கலந்து, சிக்கலான ஒரு அமைப்பில் உருவான இந்தப் பாடலை காதலும், குறும்பும் நிறைந்த குரலில் பாடி அசத்தியிருப்பார் டி.எம்.சௌந்தரராஜன். இன்றளவும் பாட்டுப் போட்டிகளில், பாடகர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க கரகரப்பிரியா ராகத்தில் உருவான இந்தப் பாடலைப் பாடினால் போதும். ஆனால் அப்படி யாராலும் மிக எளிதாகப் பாட முடியாத கனமான பாடல். இதுவே டி.எம்.எஸ்ஸின் குரல் வளம் எத்தகையது என்பதையும் காட்டும். கவிஞர் வாலி, தான் எழுதிய பாடல்களில் மிகப் பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். மன்னிக்க வேண்டுகிறேன், மகாராஜா ஒரு மகாராணி என டி.எம்.சௌந்தரராஜன் குரலில் இரண்டு டூயட் பாடல்களும் இந்தப் படத்தில் பிரபலம். ஏ.சி.திருலோகச்சந்தர் இந்தப் படத்தின் இயக்குநர். பொன்மகள் வந்தாள் (சொர்க்கம் ) எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் இருக்கும் ஒரு கதாபாத்திரம் கனவு கண்டால் என்ன ஆகும்? பொன்னும் பொருளும் நிறைந்த கனவாகத்தானே அது இருக்கும். இதை வெறும் காட்சியாக சொன்னால் மட்டும் போதாது, பாடலாகவும் வேண்டுமென்று முடிவு செய்தார் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா. உருவானது பொன்மகள் வந்தாள் பாடல். 1970-ஆம் ஆண்டு வெளியான சொர்க்கம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கியக் காரணம் இந்தப் பாடல். படத்தின் கதாபாத்திரம் காணும் கனவாக மட்டுமல்ல, கண்ணை மூடிக் கேட்டால் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையிலும், டி.எம்.சௌந்தரராஜனின் குரலிலும் கூட பொன்னையும் பொருளையும் நம்மால் உணர முடியும். ஆலங்குடி சோமுவின் வரிகளில் இருக்கும் நாயகன் கதாபாத்திரத்தின் கனவு, ஆசை, லட்சியம் என் அனைத்தையும் தனது குரலிலும் கொண்டு வந்திருப்பார் டி.எம்.எஸ். பல வருடங்கள் கழித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ரீமிக்ஸை வேறொரு பாடகர் பாடினாலும், கடினமான அந்த ஒரு வரியை மட்டும் டி.எம்.எஸ்ஸின் குரலிலேயே தக்க வைத்திருப்பார்கள். கேட்க எளிமையான பாடலாக இருந்தாலும், பாட, மிகக் கடினமான ஒரு பாடல். அதை டி.எம்.எஸ் தவிர வேறு யாராலும் அதே சிறப்புடன் மீண்டும் பாட முடியாது. அந்த நாள் ஞாபகம் (உயர்ந்த மனிதன்) மை ஃபேர் லேடி என்கிற ஆங்கிலப் படத்தின் ஒரு காட்சியமைப்பு தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனுக்கு மிகவும் பிடித்துப் போனது. இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடமும் அந்தக் காட்சிகளைக் காட்டி, இந்த பாணிக்கு ஏற்றவாரு ஒரு பாடல் வேண்டும் என்று விரும்பினார். அதில் பிறந்தது தான் உயர்ந்த மனிதன் (1968) படத்தில் வரும் அந்த நாள் ஞாபகம் என்கிற பாடல். உத்தர் புருஷ் என்கிற வங்கமொழிப் படத்தின் மறு உருவாக்கமான இதை கிருஷ்ணன் - பஞ்சு இயக்கியிருந்தனர். சிவாஜி கணேசன், மேஜர் சுந்தர்ராஜன், அசோகன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நாளை இந்த வேளை பார்த்து, வெள்ளிக் கிண்ணம் தான் என இந்தப் படத்தின் மற்ற பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், அந்த நாள் ஞாபகம் பாடலுக்கென்று தனிச்சிறப்பு உள்ளது. அன்று வரை தமிழ் சினிமாவில் உருவான பாடல்களிலேயே மிகப் புதுமையான வடிவம் கொண்டது இந்தப் பாடல். தொழில்நுட்பம் முன்னேறாத அந்த காலகட்டத்தில், சிவாஜி, மேஜர் சுந்தர் ராஜன், டி.எம்.எஸ் என அனைவரும் சேர்ந்து, வசனம், பாடல் என இந்தப் பாடலுக்குப் பங்காற்றியிருப்பார்கள். ஆடம்பரமான மேற்கத்திய செவ்வியல் இசையோட ஆரம்பமாகும் இந்தப் பாடல், கதாபாத்திரத்தின் ஏக்க உணர்வைப் பேசும். அதற்குத் தன் குரல் நடிப்பால் மிக அழகாக வடிவம் கொடுத்திருப்பார் டி.எம்.எஸ். பட மூலாதாரம்,T.M.SOUDARARAJAN படக்குறிப்பு,காலத்தால் அழியாத பல பாடல்களுக்கு சொந்தக்காரராய் இருந்த டி.எம்.எஸ் சௌந்தரராஜன் நீயே உனக்கு என்றும் நிகரானவன் (பலே பாண்டியா ) பாடல்களை வர்ணிக்கும் போது மிக அழகான பாடல், உணர்ச்சிகரமான பாடல், கவித்துவமான பாடல் என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆனால் மிக நகைச்சுவையான பாடல் என்ற பாராட்டை உண்மையாகப் பெறும் பாடல்கள் வெகு சில. அதில் என்றும் முதன்மையாக இருக்கும் பாடல், பலே பாண்டியா (1962) திரைப்படத்தில் வரும் நீயே உனக்கு என்றும் நிகரானவன். ஒரு பக்கம் கர்நாடக சங்கீதத்தில் தேர்ந்த ஒருவர் பாடுவது போல இருக்க வேண்டும், அதே நேரம் படத்தின், அந்தச் சூழலின் நகைச்சுவைத் தன்மை இழையோட வேண்டும். இவ்விரண்டையும் சரி விகிதத்தில் கலந்து கட்டி, தன் குரலில் குழைத்துத் தந்திருப்பார் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன். மாதவிப் பொன்மயிலாள் பாடலைப் போலவே, இதுவும் பாட மிகக் கடினமான பாடல். ஆனால் டி.எம்.எஸ்ஸுக்கு அப்படி அல்ல. திரையில் சிவாஜி கணேசனின் அப்பாவித்தனம், கேலி ஒரு பக்கம், கே பாலாஜியின் கடம் வாசிப்பு ஒரு பக்கம், எம்.ஆர்.ராதாவின் அதிரடியான கலாட்டா உடல்மொழி ஒரு பக்கம் என இன்றளவும் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும், ரசிக்க வைக்கும் இந்தப் பாடலை வெறும் 7 மணி நேரத்தில் படம் பிடித்திருக்கிறார் இயக்குநர் பி.ஆர்.பந்துலு. இந்தப் பாடலில் எம்.ஆர்.ராதா கதாபாத்திரம் பாடும் கொன்னக்கோல் பகுதிகளைப் பாடியவர் எம். ராஜு. மாசிலா நிலவே நம் (அம்பிகாபதி) ஓர் அமர காதல் கதையைச் சொல்லும் படம், மொத்தம் 27 பாடல்கள். இன்றைய சூழலில் விளையாட்டுக்காகக் கூட நினைத்து பார்க்க முடியாதவை இவ்விரண்டு விஷயங்களும். ஆனால் 1957-ஆம் ஆண்டு, பி.நீலகண்டன் இயக்கத்தில் உருவான அம்பிகாபதி திரைப்படத்தில் இது சாத்தியப்பட்டது. ஜி.ராமநாதன் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களுக்கு கண்ணதாசன், கே.டி.சந்தானம், பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் உட்பட பல கவிஞர்கள் வரிகள் எழுதியுள்ளனர். இதில் மாசிலா நிலவே என்று ஆரம்பிக்கும் காதல் பாடலுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. இது ராகமாலிகை என்கிற இசை வடிவத்தில் உருவான பாடல். ஒரு பக்கம், புன்னாகவராளி, மாண்ட் என ராகங்களின் அடிப்படையில் வளரும் பாடல், சட்டென ஒரு இடையிசையுடன் மேற்கத்திய வால்ட்ஸ் பாணிக்கு மாறும். இசையமைப்பாளரின் இந்த புது முயற்சிக்கு ஈடு கொடுத்திருப்பது டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் பானுமதி ஆகியவர்களின் குரல்கள். அந்தந்த மாறுதலுக்கு ஏற்றார்போல டி.எம்.சௌந்தரராஜன் இந்தப் பாடலைப் பாடியிருக்கும் அழகு, இதை காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்றாக நிலைபெற்றிருக்கச் செய்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy8n5z27kreo
  12. காணிகளை பந்தாடுவதற்கும் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தவும் ஆளும் கட்சி அரசியல் அதிகாரம் பிரயோகிக்கப்படக்கூடாது - பூநகரி சம்பவம் குறித்து நிரோஷ் Published By: DIGITAL DESK 2 25 MAY, 2025 | 07:31 PM உள்ளூராட்சி மன்றங்களில் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்படும் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை திட்டமிட்டு திரிவுபடுத்தும் வகையில் செயற்பட்டு மக்களை பிழையாக வழிநடத்தி அரச உத்தியோகத்தரின் தொழில் சுதந்திரத்திலும் செயற்பாடுகளிலும் தடை ஏற்படுத்தவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில், அப் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சி மன்ற நடைமுறைகளுக்கும் சட்டத்திற்கும் அமைவாக செயற்பட்டதனை திசை திருப்பும் வகையில் ஆளுங்கட்சி பிரதேச அரசியல்வாதிகள் கத்தரிக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்றை தயாரித்துள்ளனர். அதனை யாழ் - கிளிநொச்சி மாவட்ட ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். இது பொறுப்புமிக்க பதவியில் இருந்து கொண்டு அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்தும் அடாவடித்தனமாகும். அடிப்படையில் இவ்விடயம் குறித்து ஆராய்கையில், ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரின் அனுசரணையில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அரசியல் பிரமுகர் ஒருவர் சட்ட திட்டங்களுக்கு முரணாக, பெறுமதியான வீதியோரக் காணிகளை தனக்கு தேவையானவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதற்கு அரசாங்க ஒத்துழைப்பு காணப்பட்டுள்ளது. இங்கு மீறப்படும் உள்ளுராட்சி சட்டவிதிகள் தொடர்பில் உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை புறந்தள்ளி அரசியல் அதிகார மமதையில் குறித்த எதிர்த்தரப்பினர் உத்தியோகத்தர்கள் மற்றும் அச் சபையின் பொறுப்பதிகாரி, சபையின் தீர்மானங்களை தற்போது மேற்கொள்ளத்தக்க செயலாளர் மீது பலவந்தத்தை பிரயோகித்துள்ளனர். பலவந்தத்திற்கு இடமளிக்காத உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சி சட்டங்களின் அடிப்படையில் சட்டவிரோத கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். தமது காணி அபகரிப்பு நோக்கம் நிறைவேறுவதற்கு உள்ளூராட்சி மன்றம் தடையாகவுள்ள நிலையில் அங்கு பிரசன்னமாகியிருந்த உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் மீது அவதூறு மற்றும் அச்சுறுத்தல் பிரயோகிப்புக்கள் நடைபெற்றுள்ளன. மேலும் தாக்குதல் மேற்கொள்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றினை எல்லாம் மேற்கொண்டுவிட்டு தமது வசதிக்கு ஏற்றால் போல் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்கள் கத்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார். இதனால் உள்ளூராட்சி மன்ற பணியாளர்களின் கௌரவம் மற்றும் தொழிற்சுதந்திரம் அரசாங்க அதிகாரத்தினால் மீறப்பட்டுள்ளது. இப்படியான அரசாங்கத்தின் அரசியல் அணுகுமுறைகள் ஜனநாயக விரோதமானவை என்பதுடன் சட்டம் ஒழுங்கிற்கும் அப்பாற்பட்டவை. பிரதேச சபைகளின் உத்தியோகத்தர்களின் தொழிற்சுதந்திரத்தினையும் அவர்களது உரிமைகளையும் மீறுவனவாகும். அரசியல் தலையீடுகள் இன்றி நீதியான முறையில் உத்தியோகத்தர்கள் சேவையாற்றுவதற்கான அகப் புறச் சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பள்ள அரசாங்கத் தரப்பு சற்றேனும் அரசியல் தர்மத்திற்கு இடமளிக்காது மக்கள் விரோத நடவடிக்கைளில் ஈடுபடுவதையே இது காட்டுகின்றது. நல்லாட்சிக்கான தத்துவம் தொடர்பாக ஆளுங்கட்சி கவனம் செலுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களின் சுயாதீனம் அரச அதிகாரங்களால் பாதிக்கப்படும் போது அவற்றினை நாம் பார்த்திருக்க முடியாது என்றார். https://www.virakesari.lk/article/215666
  13. நம்பர் வன்னை அடித்து நாங்க இப்பவும் டான் தான் என்று சென்னை ரசிகர்களுக்கு பால் வார்க்கப்போகினமோ?! LIVE 67th Match (D/N), Ahmedabad, May 25, 2025, Indian Premier League CSK chose to bat. Chennai Super Kings (18/20 ov) 201/4 Current RR: 11.16 • Last 5 ov (RR): 51/1 (10.20) Live Forecast: CSK 225 Gujarat Titans
  14. Published By: DIGITAL DESK 2 25 MAY, 2025 | 09:57 AM (இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மதம், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளிலான இருதரப்பு தொடர்புகள் மேலும் பலமடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். பழைய நண்பரின் வருகை கடந்த காலங்களை நினைவுபடுத்தியுள்ளமை மகிழ்ச்சிக்குரியது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரால் (ஓய்வுநிலை)பஹீம் உல் அசீஸிடம் நன்றி தெரிவித்தார். இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரால் (ஓய்வுநிலை)பஹீம் உல் அசீஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு அண்மையில் கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தை உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை நெருக்கடியான நிலையை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் பாகிஸ்தான் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. யுத்தகாலத்தில் பாகிஸ்தான் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதால் விடுதலை புலிகள் அமைப்பு கொழும்பில் இருந்த அப்போதைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகளை கொலை செய்ய முயற்சித்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் அயல் நட்பு நாடு என்ற அடிப்படையில் பாகிஸ்தான் இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கியது. ஆகவே இவற்றுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதற்கு கடமைப்பட்டுள்ளேன். இரு நாடுகளுக்கும் இடையிலான மதம், அரசியல்,பொருளாதாரம் மற்றும் சமூக தொடர்பு உள்ளிட்ட நிலைகளிலான இருதரப்பு தொடர்புகள் மேலும் பலமடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். பழைய நண்பரின் வருகை கடந்த காலங்களை நினைவுப்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரிடம் நன்றி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215607
  15. 'உலகில் 8 பேரில் ஒருவரை பாதித்துள்ள இதய நோய் வர பிளாஸ்டிக்கே முக்கிய காரணம்' - இந்தியாவின் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிளாஸ்டிக் மாசுபாடு கட்டுரை தகவல் எழுதியவர், மோகன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், நம் கண்ணுக்குத் தெரியாத வில்லனாக இருக்கிறது என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டோம். ஆழ்கடல் தொடங்கி மனிதர்களின் ரத்தம், தாய்ப்பால் வரை நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கான பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வும் அதற்கு மாற்று கண்டுபிடிக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உணவுடன் சேர்த்து பிளாஸ்டிக் பாத்திரங்கள், சாதனங்களில் உள்ள ரசாயனப் பொருட்களையும் நமக்கே தெரியாமல் நாம் உட்கொள்வதற்கும் இதய நோய் இறப்புகளுக்கும் தொடர்பு உள்ளது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. புகழ் பெற்ற மருத்துவ இதழான 'தி லேன்சட்'-ன் ஒரு அங்கமான இபயோமெடிசின் மின்னிதழலில் வெளிவந்த ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 356,238 பேர் இதனால் உயிரிழந்த நிலையில், உலகிலேயே அதிக அளவாக இந்தியாவில் மட்டும் 103,587 பேர் உயிரிழந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. ஆய்வு என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இதய நோய் இறப்புகள் என்ன காரணத்தால் நிகழ்ந்தன என்பதை அறிவதே இந்த ஆய்வின் முதன்மை நோக்கமாக இருந்தது. (கோப்புப்படம்) 2011-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள், இதய நோயை முக்கியமான சுகாதாரப் பிரச்னையாக அங்கீகரித்தது. உலகம் முழுவதும் 100 கோடி பேர் (கிட்டத்தட்ட 8 பேரில் ஒருவர்) இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு மட்டும் 1.7 கோடி பேர் இதய நோயால் உயிரிழந்துள்ளனர். இது அந்த ஆண்டு உலகம் முழுவதும் பதிவான இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். உலகம் முழுவதும் ஏற்பட்ட இதய நோய் இறப்புகள் என்ன காரணத்தால் நிகழ்ந்தன என்பதை அறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிளாஸ்டிக் பாலிமர்கள் மற்றும் ரசாயன சேர்க்கைப் பொருட்கள், குறிப்பாக டை எத்தில்ஹெக்ஸைல் தாலேட் (Di(2-ethylhexyl)phthalate) என்கிற ரசாயனம் தான் இதய நோய் இறப்புகளுக்கு முக்கிய காரணியாக இருப்பது தெரியவந்துள்ளது. தாலேட் (phthalate) ரசாயனம் பாலிவினைல்குளோரைட் (பிவிசி) பிளாஸ்டிக்குகளை மென்மையாக்கப் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் உற்பத்தி அதிகமாக நடைபெறும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதன் பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. பிளாஸ்டிக் சார்ந்த ரசாயனங்கள் 55-64 வயது பிரிவில் உள்ளவர்களில் இதயநோய் இறப்புக்கு முக்கிய காரணியாக உள்ளது. இது அங்கீகரிக்கப்படாத முக்கியமான சுற்றுச்சூழல், சுகாதாரப் பிரச்னை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பேக்கேஜிங் செய்ய பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள் 2018-ம் ஆண்டு உலகம் முழுவதும் 356,238 இறப்புகள் தாலேட் நுகர்வுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. 55-64 வயதுக்குட்பட்ட பிரிவில் 14% மரணங்கள் இதனால் தான் நிகழ்ந்துள்ளன. இந்த இறப்புகளில் 16.8 சதவிகிதம் தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பதிவாகியுள்ளன. உலகின் வெவ்வேறு நாடுகளிலும் உள்ள தாலேட் பயன்பாடு அளவைப் பொருத்து இதய நோய் சுமை என்பது வேறுபடுகிறது. அதிக வருமான கொண்ட நாடுகளைவிடவும் குறைவான மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் இதன் பாதிப்பும், இதனால் ஏற்படும் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் ஆய்வு ஒன்றின்படி, உணவுப் பொருட்கள் மற்றும் தாலேட் பயன்படுத்தி செய்யப்பட்ட பாத்திரங்களில் வைத்து சாப்பிடும் உணவுகளில் இருந்து மனித உடலுக்கு அதிக அளவிலான தாலேட் வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அபாயகரமான கழிவுகள் கொட்டப்படும் இடங்கள் மற்றும் குப்பைக் கிடங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ரசாயனப் பொருட்கள் பரவலாக எதில் எல்லாம் பயன்படுத்தப்பட்டன? பொம்மைகள். பேக்கேஜிங் செய்ய பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள். அழகு சாதனப் பொருட்கள். பெயிண்ட். மருத்துவ மற்றும் ஆய்வக உபகரணங்கள். ஆனால் தற்போது பெரும்பாலான பொருட்களில் தாலேட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகள் சீனாவில் ஏற்பட்டதைவிட 70 சதவிகிதம் அதிகமாக உள்ளது. அதிக அளவில் வயதான மக்கள் தொகை கொண்ட நாடுகளான இந்தியா, சீனா மற்றும் இந்தோனீசியாவில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்த நாடுகளில் தாலேட் தாக்கத்தால் ஏற்படும் இதய நோய் மரணங்கள் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய சுமையாக இருக்கும் என ஆய்வறிக்கை கூறுகிறது. 2018-ம் ஆண்டின் தரவுபடி நாடு வாரியாக இறப்புகள் இந்தியா (103,587) சீனா (60,937) இந்தோனீசியா (19,761) சீனாவில் 2018-ம் ஆண்டு 55-64 வயதுக்குட்பட்ட பிரிவில் 15.72 கோடி மக்கள் வாழ்ந்த நிலையில் 60,937 பேர் இதன் தாக்கத்தால் ஏற்பட்ட இதய நோய்க்கு உயிரிழந்துள்ளனர். அதே சமயம் இந்தியாவில் அதே வருடம் 55-64 வயதுக்குட்பட்ட பிரிவில் 10.38 கோடி மக்கள் வாழ்ந்த நிலையில் 103,587 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் குறிப்பிடப்பட்ட வயதுப் பிரிவில் இந்தியாவின் மக்கள் தொகை, சீனாவின் மக்கள் தொகையில் 66 சதவிகிதம் என்கிற அளவில் தான் இருந்துள்ளது. ஆனால் இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகள் சீனாவைக் காட்டிலும் 70 சதவிகிதம் அதிகமாக உள்ளது. உயிரிழப்பு மற்றும் வாழ்நாள் இழப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உயிரிழப்புகளுடன் சேர்த்து வாழ்நாள் இழப்பு (Years of Lives Lost) என்கிற ஒரு கணக்கீடும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் உயிரிழப்புகளுடன் சேர்த்து வாழ்நாள் இழப்பு (Years of Lives Lost) என்கிற ஒரு கணக்கீடும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது உயிரிழப்புகளின் எண்ணிக்கை, அவர்களின் வயது மற்றும் ஒரு நாட்டில் உள்ள சராசரி ஆயுட்காலம் ஆகியவை கணக்கிடப்பட்டு இந்த அளவு நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி இந்தியா, சீனா மற்றும் இந்தோனீசியாவில் இந்த வயதினர் முறையே 29,04,389, 1,935,961 மற்றும் 587,073 வருட ஆயுட்காலத்தை இழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 55-64 வயதுக்குட்பட்ட பிரிவில் 356,000 பேர் பிளாஸ்டிக் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இது அந்த வருடத்தில் உலகம் முழுவதும் ஏற்பட்ட இதய நோய் இறப்புகளில் 13.5 சதவிகிதம் ஆகும். வாழ்நாள் இழப்புக்கான விலை என்ன? இந்த ஆய்வில் வாழ்நாள் இழப்புக்கான விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடத்திற்கும் தோராயமாக 1000 டாலர்கள் என வைத்துக் கொண்டாலும், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்பட்ட இறப்புகளின் சமூக செலவு 10.2 பில்லியன் டாலர்களாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது ஒரு தனிநபரின் வாழ்வை மதிப்பிடும் அளவு இல்லையென்றும் இத்தகைய இறப்புகளால் ஏற்படும் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஒரு கணக்கீடு என்றும் ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக பிளாஸ்டிக் தொழில்துறை உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளால் வரும் தாலேட் தாக்கங்கள் மற்றும் வணிக பொருட்களின் உற்பத்தியில் பயன்படும் பிவிசி போன்றவற்றில் தாலேட் பரவலாகப் பயன்படுத்தப்படுவதும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் சீனா, பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யும் முக்கியமான நாடாக இருந்தது. அவ்வருடத்தில் மட்டும் உலகில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் 29% சீனாவில் தான் இருந்துள்ளது. 2024-ம் ஆண்டு வெளியான ஆய்வின்படி இந்தியாவில் தான் பிளாஸ்டிக் உமிழ்வு (ஒவ்வொரு வருடமும் 9.3 மில்லியன் மெட்ரிக் டன்கள் என்கிற அளவில்) அதிகம். பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வேறுபடுவதாக ஆய்வு கூறுகிறது. பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் நுகர்வு அதிகரித்து வரும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் தான் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளதாக லேன்சட் ஆய்வு கூறுகிறது. கட்டுப்படுத்துவது எப்படி? 2008-ம் ஆண்டுக்கு முன்பாக இதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பெரிய அளவிலான விதிமுறைகள் இல்லை. ஆனால் ஜப்பான், கனடா போன்ற நாடுகளில் இதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் 2003-ம் ஆண்டு உணவு பேக்கேஜிங் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த பொருட்களின் தாலேட் உள்ளடக்கிய பொருட்களைப் பயன்படுத்த தடை கொண்டு வரப்பட்டது. 2006-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியமும் குழந்தைநலன் மற்றும் உணவுத் துறையில் தாலேட் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதித்தது. 2008-2018க்கு இடைப்பட்ட காலத்தில் கனடா குழந்தை பொம்மைகள் மற்றும் தயாரிப்புகளில் தாலேட் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதித்தது. இதே போல் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் குழந்தை பொருட்களில் தாலேட் பயன்படுத்த கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. 2018-ம் ஆண்டு சீனா பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட 24 வகையான வெளிநாட்டு கழிவுகளுக்குத் தடை விதித்துள்ளது. இந்தியாவும் சமீபத்தில் உணவு பேக்கேஜிங் துறையில் தாலேட் பயன்பாட்டிற்குக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வளரும் நாடுகள் சந்திக்கும் சவால்கள் என்ன? பல நாடுகளில் தாலேட் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த விதிமுறைகள் இல்லை என இந்த ஆய்வில் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது. வளரும் நாடுகள் இருவிதமான சுமைகளைச் சந்திப்பதாக லேன்சட் ஆய்வறிக்கை கூறுகிறது. ஒன்று அவர்கள் தங்கள் நாடுகளின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியை பெருக்க வேண்டும். மறுபுறம் தொழில் வளர்ச்சி கண்ட நாடுகளில் இருந்து வரும் கழிவுகளையும் சமாளிக்க வேண்டும். தொழில்துறையில் வளர்ந்த நாடுகளில் உருவாக்கப்படும் கழிவுகள் வளரும் நாடுகளில் கொட்டப்படுவதும் அந்த நாடுகள் மீதான சுமையை அதிகரித்துள்ளது. பாதிப்புகளைத் தவிர்க்க என்ன செய்வது? பட மூலாதாரம்,KUZHANDHAISAMY படக்குறிப்பு,மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு இந்தத் தகவல் புதிதல்ல என்கிறார் ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநரான குழந்தைசாமி மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு இந்தத் தகவல் புதிது அல்ல என்கிறார் ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநரான குழந்தைசாமி. "இந்தியாவில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயன கழிவுகளால் இதயநோய், நீரழிவு நோய், கருவுறாத்தன்மை மற்றும் புற்றுநோய் என நான்கு நோய்கள் பிரதானமாக வருகின்றன. லேன்சட் ஆய்வறிக்கை இதற்கான தீர்வை நோக்கி நகர்த்தும் என நம்புகிறேன்" என்றார். பிளாஸ்டிக் கழிவுகள் மூன்று வழிகளில் மனித உடலில் கலக்கின்றன என்று அவர் விவரித்தார். "முதலாவது பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதன் மூலம் வரும் புகையினால் வருகிறது. இரண்டாவது மாசடைந்த குடிநீரைப் பருகுவதன் மூலமும் உடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலக்கின்றன. மூன்றாவதாக உணவுப் பொருட்கள் மூலம் வருகின்றது" என்றார். இந்த பாதிப்பை தவிர்ப்பதற்கான வழிகளையும் முன்வைக்கிறார் குழந்தைசாமி. அதைப்பற்றி பேசியவர், "அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தவே கூடாது. ஒருமுறை பயன்படுத்த வேண்டிய பாட்டில் போன்ற பொருட்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர் மற்றும் பாத்திரங்களில் எடுத்துச் செல்லக்கூடாது." என்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyn71r4x1do
  16. 25 MAY, 2025 | 12:26 PM (நா.தனுஜா) அண்மையில் நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களின் அடைந்த பின்னடைவை அடுத்து, வெகுவிரைவில் மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் விரும்பாது எனவும், ஆகவே அதனைத் தொடர்ந்து இழுத்தடிப்புச்செய்து காலதாமதப்படுத்துவதற்கே முற்படும் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் தனிநபர் சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை (22) வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனை விரைவாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் மாகாணசபைகள், உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன வெள்ளிக்கிழமை (23) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட விக்னேஸ்வரன், 2018 ஆம் ஆண்டிலிருந்து மாகாணசபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டுவரும் நிலையில், இனியும் தாமதமின்றி அத்தேர்தலை நடத்தவேண்டும் என்றே தான் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதாகத் தெரிவித்தார். இருப்பினும் கடந்த பாராளுமன்றத்தேர்தலுடன் ஒப்பிடுகையில், அண்மையில் நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களின் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பின்னடைவைச் சந்தித்திருப்பதனால், மாகாணசபைத்தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பதற்கே அரசாங்கம் முற்படும் எனத் தான் கருதுவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். மாகாணசபைத்தேர்தலை நடாத்தி, அதனூடாக சில சபைகள் ஏனைய கட்சிகள்வசம் செல்வதை அரசாங்கம் ஒருபோதும் விரும்பாது. ஆகவே இவ்வருடமும் மாகாணசபைத்தேர்தலை நடத்தாமல் காலந்தாழ்த்துவதற்கே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படும் என அவர் விசனம் வெளியிட்டார். https://www.virakesari.lk/article/215617
  17. Published By: DIGITAL DESK 2 25 MAY, 2025 | 12:27 PM யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது. இந்த நடைபவணியானது, திருநெல்வேலியில் அமைந்துள்ள பட்டப்பின் படிப்புகள் பீட முன்றிலில் ஆரம்பமாகி யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் பிறவுன் வீதி மருத்துவ பீடம் ஊடாக மீண்டும் பல்கலைக்கழகத்தை அடைந்தது. நிகழ்வில் முக்கிய இடங்களில் மரம் நடுகையும் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா பட்டப்பின் படிப்புகள் பீட பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கண்ணதாசன் மற்றும் பீடாதிபதிகள் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் அலுவலர்கள் பழைய மாணவர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/215616
  18. 25 MAY, 2025 | 03:36 PM எனது தம்பி வெளிநாடு செல்ல வேண்டும் என்பது எமது அம்மாவின் ஆசை. அம்மாவின் ஆசையை நிறைவேற்றி, அம்மாவின் ஆத்மா ஈடேற வேண்டும் என்பதற்காகவும், எமது வீட்டுச் சுமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுதான் எனது தம்பி தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார். பெலாரஸ் நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்ற எனது தம்பியான விநாயகமூர்த்தி பகிரதனுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை என அவரது சகோதரன் விநாயகமூர்த்தி சசிகரன் தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எனது தம்பி விநாயகமூர்த்தி பகிரதன் என்பவர் எனது வீட்டில் இருந்து கடந்த 2025.01.07 ஆம் திகதி பெலாரஸ் எனும் நாட்டுக்கு தொழில்வாய்ப்புக்காகச் சென்றார். சட்டரீதியாகவே தொழில் வாய்ப்புக்காகத்தான் அவர் பயணமானார். அவர் திருகோணமலையைச் சேர்ந்த ஓர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஊடாகவே சென்றிருந்தார். எனது அம்மா மரணித்து ஒரு வருடமான காலத்தின் பின்னர் மிகுந்த மன வேதனைக்கு உட்பட்டு மிகவும் சிரமத்தின் மத்தியிலே தான் எனது தம்பி பெலாரஸ் நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார். அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்பது எமது அம்மாவின் ஆசை. அம்மாவின் ஆசையை நிறைவேற்றி, அம்மாவின் ஆத்மா ஈடேற வேண்டும் என்பதற்காகவும், எமது வீட்டுச் சுமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுதான் அவர் தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார். எனது தம்பி பெலாரஸ் நாட்டிற்குச் சென்று பின்னர் அவர் அங்கு மரணமடைந்துள்ளதாக தெரிவித்தும், அவர் தொடர்பில் இதுவரையில் எதுவித தொடர்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் அங்கு சென்று மூன்று மாதமான நிலையில் கடந்த 2025.04.06 ஆம் திகதி எமக்கு ஓர் திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றது. அவர் அங்கு தவறான முடிவெடுத்து உயிரிழந்தாக எனக்கு தகவல் கிடைத்திருந்தது. இச்செய்தி கேள்விப்பட்ட உடனேயே நாம் செய்வதறியாது திகைத்துப் போனோம். இது உண்மையானதா பொய்யானதா என நாம் தெரியாது இருக்கின்றோம். அந்த அதிர்ச்சியில் இருந்து எம்மால் இன்றும் மீள முடியாமல் இருக்கின்றது. எது நடந்தாலும் அதற்குரிய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நான் எனது தம்பி வெளிநாடு சென்ற ஆவணங்கள் அனைத்தையும் பிரதி செய்து கொண்டு பிரதேச செயலகத்திலே கடமையிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு உத்தியோகத்தரிடம் வழங்கியிருந்தேன். இவ்வாறு எனது சகோதரன் மரணம் அடைந்திருந்தால் அவருடைய சடலத்தை எனக்கு கொண்டு வந்து தருமாறு உரிய நாட்டிடம் தெரிவிக்குமாறு நான் அந்த உத்தியோதரிடம் தெரிவித்திருந்தேன். பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் அவர்கள் வெளிநாட்டு தூதரகத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்கள். இதற்கு மேலாக எனது தம்பிக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக நான் பல அரசியல்வாதிகளிடமும் தெரிவித்து இருந்தேன். கடந்த 2025.04.06 ஆம் திகதி அவர் உயிரிழந்ததாக அறிந்தோம். இன்று மே 25ஆம் திகதி ஆகிறது இரு மாதங்கள் ஆகின்றன. இதுவரைக்கும் எனது தம்பியின் தகவல்கள் எதுவும் தெரியாது. தம்பி பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பிய முகவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டு விட்டதாக எனக்கு குறுஞ் செய்தி ஒன்றை மாத்திரம் அனுப்பி உள்ளார். மீண்டும் அவருடன் தொடர்பை ஏற்படுத்த முயன்ற போது அவர் எமது அழைப்புக்கு பதில் அளிக்கின்றார் இல்லை. இவ்வாறான நிலைக்கு மத்தியிலும் மிகுந்த வேதனைக்கு மத்தியிலும் எமது வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கின்றது. மேலும் பெலாரஸ் நாட்டுடன் தொடர்புடைய ஏனைய நாடுகளின் தூதரகங்களும், இதனை கருத்தில் கொண்டு எனது சகோதரனுக்கு என்ன நடைபெற்றது என்பதை அறிந்து உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். எனது சகோதரன் உயிரோடு இருக்கிறாரா? உண்மையிலேயே மரணித்து விட்டாரா? அவர் மரணித்தால் அவருடைய உடலை எங்களது வீட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு உதவி செய்யுமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/215642
  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆல்ட்ரிச் அமெஸ் கட்டுரை தகவல் எழுதியவர், மைல்ஸ் பர்க் பதவி, 25 மே 2025, 02:43 GMT சோவியத் ஒன்றியத்துக்கு அமெரிக்காவின் உளவுத் தகவல்களை விற்று 100-க்கும் மேற்பட்ட ரகசிய திட்டங்களை முறியடிக்க உதவி 10 மேற்கு உளவாளிகளின் இறப்புக்கும் காரணமாக இருந்த குற்றத்திற்காக ஆல்ட்ரிச் சிறையில் உள்ளார். 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வருடம் பிப்ரவரியில் அமெஸால் துரோகம் இழைக்கப்பட்ட ஒரு உளவாளியிடம் பிபிசி பேசியது. 1985-ம் ஆண்டு அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவுக்கு வேலை பார்த்து வந்த சோவியத் ஏஜெண்ட்டுகள் ஒவ்வொருவராக காணாமல் போயினர். இந்த மேற்கத்திய உளவாளிகள் எல்லாம் சோவியத் உளவு அமைப்பான கேஜிபியால் பிடிக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டனர். ஒலெக் கோர்டிவ்ஸ்கி, அப்படிப்பட்ட ஒரு டபுள் ஏஜெண்ட் (ஒரு நாட்டின் உளவுத்துறையில் இருந்துகொண்டு வேறொரு நாட்டிற்கு வேலை பார்ப்பவர்கள்). லண்டனில் கேஜிபி நிலைய தலைவராக இருந்து கொண்டு பிரிட்டனின் உளவு அமைப்பான எம்.ஐ6-ற்கு பல வருடங்களாக ரகசியமாக வேலை பார்த்து வந்தார். ஆனால், ஒரு நாள் மாஸ்கோவில் மருந்தளிக்கப்பட்டு, ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு கிட்டத்தட்ட கொலை செய்யப்படும் நிலையில் இருந்தார். எம்.ஐ6 அவரை காரின் பின்பகுதியில் வைத்து சோவியத் ஒன்றியத்துக்கு வெளியே அழைத்து வந்ததால் நூலிழையில் உயிர் தப்பினார். அதன்பின்னர் தன்னைக் காட்டிக் கொடுத்தது யார் எனக் கண்டறிய கோர்டிவ்ஸ்கி முயற்சித்தார். "நான் ஒன்பது வருடங்களாக என்னைக் காட்டிக் கொடுத்தது யார் என கணித்து வந்தேன். ஆனால் எனக்கு பதில் கிடைக்கவில்லை" என 1994-ஆம் ஆண்டு 28 பிப்ரவரி-ஆம் தேதி பிபிசியின் டாம் மேன்கோல்ட்டிடம் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். அதற்கான பதில் இரண்டு மாதங்களில் கோர்டிவ்ஸ்கிக்கு கிடைத்தது. "சிஐஏ மற்றும் இதர உளவு அமைப்புகளில் எனக்குத் தெரிந்த அனைத்து உளவாளிகளையும் காட்டிக் கொடுத்தேன்" என அமெரிக்க நீதிமன்றத்தில் சிஐஏ அதிகாரி ஆல்ட்ரிச் அமெஸ் ஒப்புக்கொண்டபோது கோர்டிவ்ஸ்கிக்கு தெரியவந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆல்ட்ரிச் அமெஸ் 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி மேற்கு நாடுகளுக்கு உளவு பார்த்த 30-க்கும் மேற்பட்ட உளவாளிகளைக் காட்டிக் கொடுத்து 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆபரேஷன்களை சமரசம் செய்துவிட்டதாக அமெஸ் ஒப்புக்கொண்டார். கேஜிபியால் கொலோகொல் என அறியப்பட்ட அமெஸின் துரோகம், சோவியத் ராணுவ உளவுத்துறையின் மூத்த அதிகாரியும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்குலக நாடுகளுக்கு தகவல்களை வழங்கி வந்தவருமான ஜெனரல் டிமிட்ரி பாலியாகோவ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சிஐஏ உளவாளிகளின் இறப்புக்கு காரணமானது. அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய கேஜிபியின் உளவாளியான அமெஸ் தண்டிக்கப்பட்டு அவருக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. "1960-களில் பிரிட்டன் உளவாளியான கிம் ஃபில்பி, சோவியத் ஏஜெண்டாக வேலை பார்த்தது அம்பலமான போது பிரிட்டன் அரசு அதிர்ந்து போனதைப் போலவே அமெஸ் ஏற்படுத்திய பாதிப்பின் வீரியத்தால் அமெரிக்க அரசு அதிர்ந்து நின்றது" என 1994-ல் அளித்த பேட்டியில் தெரிவித்தார் மேன்கோல்ட். சோவியத்துக்கு எதிரான சிஐஏவின் உளவு பிரிவுக்கு தலைமை தாங்கியதால்தான் அமெஸால் இந்த அளவு பாதிப்புகளை ஏற்படுத்த முடிந்தது. இது சோவியத்துக்கு எதிரான அமெரிக்காவின் ரகசிய ஆபரேஷன்கள் மற்றும் அதன் உளவாளிகள் அடையாளம் காண்பதற்கு உதவிய தகவல்களை தடையின்றி அணுக அனுமதித்தது. அமெஸின் பதவி இதர மேற்கத்திய உளவு அமைப்புகளின் கூட்டங்களிலும் கலந்து கொள்ள அவரை அனுமதித்தது. இவ்வாறு தான் பிரிட்டன் உளவு அமைப்புகளான எம்.ஐ6 மற்றும் எம்.ஐ5-க்கு தகவல்களை வழங்கி வந்த கேஜிபி அதிகாரியான கோர்டிவ்ஸ்கி இவருடன் தொடர்பில் வந்தார். இந்த கூட்டங்கள் தான் "கேஜிபி உளவாளியே, கேஜிபி அதிகாரியிடம் தகவல் வழங்கும் விநோதமான சூழ்நிலையை உருவாக்கியது" என்றார் மேன்கோல்ட். "அமெரிக்கர்கள் விளக்கம் அளிப்பதில் மிகவும் தீவிரமாகவும் நன்றாகவும் செயல்பட்டனர்" என்கிறார் கோர்டிவ்ஸ்கி. மேலும் அவர், "நான் மிக ஆர்வமுடன் இருந்தேன். எனக்கு அமெரிக்கர்களைப் பிடித்துப் போனது. என் அறிவை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனால் அமெஸ் அங்கு இருந்தார் என்பதை உணர்கிறேன். என் புதிய தகவல்கள், புதிய பதில்கள் அன அனைத்தையுமே அவர் கேஜிபியிடம் கொடுத்திருப்பார்" என்றார். குடிப் பழக்கம் மற்றும் விவாகரத்து பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு,ஆல்ட்ரிச் அமெஸ் அமெஸ் மிக இளம் வயதிலே உளவு உலகிற்கு அறிமுகமானார். அவரின் தந்தை சிஐஏ ஆய்வாளராக இருந்த நிலையில் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திய தன்னுடைய மகனுக்கு அங்கேயே வேலை வாங்கிக் கொடுத்தார். ஆனால் பிற்காலத்தில் உளவு அமைப்பிற்கு துரோகம் இழைக்க வேண்டும் என்கிற அமெஸின் முடிவு அவரின் சித்தாந்த சறுக்கல்களை விடவும் பணத்தேவையைச் சார்ந்தே இருந்தது. தொடக்கத்தில் உளவு அதிகாரியாக நன்றாக வேலை செய்து வந்தார் அமெஸ். அவரின் மனைவியும் சக சிஏஐ ஏஜெண்டுமான நான்சி செகெபார்த் உடன் 1960களின் இறுதியில் துருக்கியில் முதலில் பணியமர்த்தப்பட்டார். அங்கு வெளிநாட்டு உளவாளிகளை வேலைக்குச் சேர்ப்பது தான் அவரின் பணியாக இருந்தது. ஆனால் அமெஸ் களப்பணிக்கு ஏற்றவர் அல்ல என நினைத்த அவரின் மேலதிகாரிகள் அவரை சிஐஏ தலைமையிடத்திற்கு அழைத்துக் கொண்டனர். அமெரிக்கா திரும்பிய பிறகு ரஷ்ய மொழி கற்றுக்கொண்டார். அவருக்கு ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிரான ஆபரேஷன்களைத் திட்டமிடும் பணி வழங்கப்பட்டது. குடிப்பழக்கத்தின் காரணமாக அமெஸ் தந்தையின் சிஐஏ பயணம் பாதியிலேயே முடிவுக்கு வந்தது. அதே போல அமெஸின் குடிப்பழக்கம் அவரின் வளர்ச்சியை தடம்புரளச் செய்தது. 1972-ல் அவர் குடிபோதையில் மற்றொரு பெண் சிஐஏ ஊழியருடன் சமரசமான சூழ்நிலையில் இன்னொரு ஏஜெண்டால் கண்டறியப்பட்டார். வேலையிலும் கவனக் குறைவான அணுகுமுறை அவருக்கு உதவவில்லை. 1976-ல் ஒருமுறை உளவுத் தகவல்கள் அடங்கிய பெட்டியை ரயிலில் தவறவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆல்ட்ரிச் அமெஸ் வேலையில் மீண்டும் சோபிக்கும் முயற்சியில் 1981-ஆம் ஆண்டு மாஸ்கோவில் இரண்டாவது வெளிநாட்டு பணியை ஏற்றுக் கொண்டார். அவரின் மனைவி நியூயார்க்கிலே இருந்தார். ஆனால் அவரின் நடத்தை மற்றும் நீடித்த அதீத குடிப்பழக்கத்தால் ஒரு தேர்ந்த சிஐஏ அதிகாரி எனப் பெயர் பெற தவறினார். 1981-ல் மாஸ்கோவில் ஒரு விபத்தில் சிக்கினார். எந்த அளவிற்கு போதையில் இருந்தார் என்றால் காவல்துறையின் கேள்விக்கு பதிலளிக்கவோ, அவருக்கு உதவ வந்த அமெரிக்கா தூதரக அதிகாரியையோ கூட அவரால் அடையாளம் காணவோ, முடியாத அளவுக்கு போதையில் இருந்தார். அதன் பிறகு, தூதரகத்தில் ஒரு கியூப அதிகாரியுடனான வாக்குவாதத்தைத் தொடர்ந்து அமெரிக்கா திரும்பிய பிறகு அவரின் குடிப்பழக்கத்தை மதிப்பிட அவரின் மேலதிகாரிகள் முடிவு செய்தனர். அமெஸ் தொடர்ந்து திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளில் ஈடுபட்டு வந்தார். அதில் ஒன்று தான் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. 1982-ம் இறுதியில் அவர் சிஐஏவுக்காக வேலை பார்த்த கொலம்பியரான மரியா டெல் ரொசாரியோ காசாஸ் டுபுய் உறவில் இருந்தார். அந்த உறவு தீவிரமாகவே தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ரொசாரியோவை திருமணம் செய்து அமெரிக்கா அழைத்து வர முடிவு செய்தார். சிஐஏவில் பெரிதாக சோபிக்காத நிலையிலும் அவருக்குத் தொடர்ந்து பணிகள் வழங்கப்பட்டன. 1983-ல் சிஐஏ தலைமையிடத்தில் சோவியத் ஆபரேஷன்களை முறியடிப்பதற்கான உளவு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது சிஐஏவின் ரகசிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் கிடைக்கச் செய்தது. நான்சியுடனான விவாகரத்து உடன்படிக்கையின்படி தம்பதியினராக அவர்கள் பெற்ற கடனை அடைப்பதோடு நான்சிக்கு ஜீவனாம்ச தொகையை வழங்கவும் ஒப்புக் கொண்டார் அமெஸ். இத்துடன் அவரது இரண்டாவது மனைவியின் விலையுயர்ந்த ரசனைகள், ஷாப்பிங் மீதான அவரின் தீரா விருப்பம் மற்றும் கொலம்பியாவுக்கு அவர் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளால் அவரின் பணச் சிக்கல் கட்டுப்பாடின்றி சென்றது. தனது அதிகரித்த கடன்கள் தான் தன் வசம் இருந்த ரகசியங்களை விற்க அவரைத் தூண்டியதாக பின்னாளில் அரிசோனா செனடர் டென்னிஸ் டிகோன்சினியிடம் கூறியுள்ளார். "நான் மிகுதியான பொருளாதார நெருக்கடிகளை உணர்ந்தேன். ஆனால் அதற்காக அளவு கடந்து எதிர்வினையாற்றிவிட்டேன்" என அமெஸ் தெரிவித்திருந்தார். நாட்டிற்குச் செய்த துரோகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"நான் கோட்டை கடந்துவிட்டேன், என்னால் திரும்ப முடியாது" என ஒரு செனட் அறிக்கையில் தெரிவித்திருந்தார். "அது பணத்தைப் பற்றியது. அவரின் துரோகம் பணத்தைத் தாண்டி எதற்காகவும் இல்லை என யாரையும் அவர் நம்ப வைக்க முயற்சித்ததாக நான் நினைக்கவில்லை" என அவரைக் கைது செய்த எஃப்.பி.ஐ அதிகாரியான லெஸ்சி ஜி வைஸர் 2015-ல் பிபிசியின் விட்னெஸ் ஹிஸ்டரியில் தெரிவித்தார். 1985-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி குடிபோதையில் அமெஸ் வாஷிங்டனில் சோவியத் தூதரகத்திற்குச் சென்றார். உள்ளே சென்றவர் அங்கே வரவேற்பில் இருந்தவரிடம் சில டபுள் ஏஜெண்ட்களின் பெயர் பட்டியலை வழங்கி தான் சிஐஏ அதிகாரி என்பதற்கான ஆவணங்களையும் காண்பித்து 50,000 டாலர் வேண்டும் என்கிற குறிப்பையும் வழங்கினார். இது தன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு கொண்டு வரும் நிகழ்வு. இது ஒரு முறை மட்டுமே நடக்கும் என நம்பியதாகவும், ஆனால் விரைவில் "நான் கோட்டை கடந்துவிட்டேன், என்னால் திரும்ப முடியாது" என ஒரு செனட் அறிக்கையில் தெரிவித்திருந்தார். அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்கு கேஜிபிக்கு அமெஸ் பல ரகசிய தகவல்களை வழங்கி வந்தார். சோவியத்தின் விண்வெளி நிலைகளை ஒட்டுக் கேட்கும் தொடர்பு சாதனங்கள் தொடங்கி சோவியத்தின் அணு ஆயுத ஏவுகணைகளை கணக்கிடும் நவீன தொழில்நுட்பம் வரை அனைத்து தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி சிஐஏவில் இருந்து அவர் எடுத்துச் சென்றார். அவரின் பணி சோவியத் தூதரக அதிகாரிகளுடனான அதிகாரப்பூர்வ கூட்டங்களை உள்ளடக்கியதால் தன்னைக் கையாள்பவர்களை எந்தச் சந்தேகமும் இல்லாமல் அவரால் நேருக்கு நேர் சந்திக்க முடிந்தது. அவர் ரகசிய ஆவணங்கள் அடங்கிய பைகளை முன்னரே தீர்மானிக்கப்பட்ட 'டெட் ட்ராப்' என அழைக்கப்படும் ரகசிய இடங்களில் விட்டுவிட்டு செல்வார். "அவர் ஒரு இடத்தில் ஆவணங்களை விட்டுச் செல்கிறார் என்றால் அங்குள்ள தபால்பெட்டியில் ஒரு தடத்தை வைத்துவிடுவார். அந்த அடையாளத்தை ரஷ்யர்கள் பார்த்தால் அந்த ட்ராப்பில் ஆவணங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வார்கள்" என்றார் வைஸர். "பின்னர் ஆவணங்களை எடுத்த ரஷ்யர்கள் அந்தத் தடயத்தை அழித்துவிடுவார்கள். இதனால் ஆவணப் பரிமாற்றம் பாதுகாப்பாக நடைபெற்றது என்பதை அவர் தெரிந்துகொள்வார்" அமெஸ் கசியவிட்ட ரகசிய உளவுத் தகவல்களால் சோவியத் ஒன்றியத்தில் உள்ள அனைத்து சிஐஏ உளவாளிகளையும் கண்டறிந்து அமெரிக்காவின் ரகசிய ஆபரேஷன்களையும் கேஜிபி முறியடித்துவிடும் சாத்தியம் இருந்தது. "அமெரிக்காவுக்கு இத்தகைய உயிரிழப்புகளை ஏற்படுத்திய வேறொரு உளவாளியை நான் அறிந்திருக்கவில்லை" என்றார் வைஸர். நிறைய சிஐஏ உளவாளிகள் திடீரென காணாமல் போனது 1986-ல் சிஐஏவுக்குள்ளே உளவாளியைத் தேடும் முயற்சியைத் தூண்டிவிட்டது. ஆனால் அமெஸ் அதில் சிக்காமல் பல வருடங்கள் தப்பித்துவந்தார். அவரின் துரோகத்திற்கு நன்றாக சம்பாதித்து வந்தார் அமெஸ். சோவியத் ஒன்றியத்திடமிருந்து மொத்தமாக 2.5 மில்லியன் டாலர்கள் பெற்றார். தனது புதிய செல்வத்தை மறைக்க அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வருடத்திற்கு 70,000 டாலருக்கு மேல் சம்பளம் பெறாத நிலையில் 540,000 டாலர் மதிப்புள்ள வீட்டை பணம் செலுத்தி வாங்கினார். வீட்டை மேம்படுத்த ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவு செய்தார். மேலும் ஜாகுவார் கார் ஒன்றையும் வாங்கினார். அவரின் ஆடம்பர வாழ்க்கை முறை தான் அவரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, 1994-ல் வைஸர் தலைமையிலான எஃப்.பி.ஐ குழுவால் கைது செய்யப்படுவதற்கும் வித்திட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆல்ட்ரிச் அமெஸ் கைது எஃப்.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட பிறகு அமெஸ் அதிகாரிகளுடன் விசாரணைக்கு ஒத்துழைத்தார். சோவியத் அதிகாரிகளுடனான சந்திப்பு மற்றும் பணம் பற்றி தெரியும் என ஒப்புக்கொண்ட அவரின் மனைவி ரொசாரியோவிற்கு குறைந்த தண்டனை கிடைக்க வேண்டும் என கோரிக்கைக்கு ஈடாக அவரின் உளவு நடவடிக்கைகளின் ஆழத்தை விவரித்தார். ரொசாரியோ ஐந்து ஆண்டுகள் கழித்து விடுவிக்கப்பட்டார். டபுள் ஏஜெண்டாக அம்பலமான சிஐஏ அதிகாரியான அமெஸ் இண்டியானா மாகாணத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை ஒன்றில் அவரின் தண்டனைக் காலத்தை தொடர்ந்து கழித்து வருகிறார். இதுநாள் வரை அமெஸ் தனது செயல்களுக்கோ அதனால் ஏற்பட்ட மரணங்களுக்கோ எந்த விதமான வருத்தமும் வெளிப்படுத்தவில்லை. "அவருக்கு தன்னைப் பற்றி மிக உயரிய எண்ணம் இருந்தது" என அமெஸ் பற்றி குறிப்பிடுகிறார் வைஸர். "அவர் பிடிபட்டதற்காக வருந்துகிறார். உளவாளியாக இருந்ததற்கு வருந்தவில்லை" என்றார் வைஸர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2j7dy8l89o
  20. 25 MAY, 2025 | 09:57 AM நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சனிக்கிழமை (24 ) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுடன் 4 பேர் அடங்கிய குழுவினரும் வருகை தந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சனிக்கிழமை (24) இரவு 11 மணியளவில் குறித்த குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் நியூசிலாந்து திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215608
  21. சுப்மன் கில் கேப்டன்: இந்திய அணியில் கோலி இடத்தை நிரப்பப் போவது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுப்மன் கில் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 24 மே 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் என நமக்கு மிகப்பரிட்சயமான கிரிக்கெட் வீரர்கள் இனி இந்திய டெஸ்ட் அணியில் இல்லை. இவர்களுக்கு பதிலாக பல இளம் தலைமுறை வீரர்களுக்கான கதவு இந்திய அணியில் திறந்துள்ளது. ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள பட்டோடி டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும், 5 போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான புதிய கேப்டன் பெயரும் பிசிசிஐ தேர்வுக் கூட்டத்தில் இன்று (மே24) அறிவிக்கப்பட்டது இதன்படி, சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார், துணைக் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் வரிசையில் சுப்மன் கில் 5வது இடத்தில் உள்ளார். இவருக்கு முன்னதாக மன்சூர் அலிகான் பட்டோடி, சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், ரவி சாஸ்திரி ஆகியோர் இளம் வயதில் இந்திய அணியை தலைமை தாங்கியுள்ளனர். பிரிட்டனில் டெஸ்ட் விளையாடுவது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு. அதேநேரம் சவாலானதும் கூட. சிறந்த பேட்டர், பந்துவீச்சாளரின் திறமை பிரிட்டன் மண்ணில் அங்கீகரிக்கப்படும், மதிக்கப்படும், உலகரங்கில் உயர்த்தப்படுவார். இங்கிலாந்து தொடரிலிருந்துதான் கங்குலி, திராவிட் போன்ற ஜாம்பவான்கள் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. ஆதலால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஒரு வீரர் முத்திரை பதித்துவிட்டால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை உலகளவில் கவனிக்கப்படும். வாய்ப்பும், சவாலும் ஒன்றாகக் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து கில் தலைமையில் இந்திய அணியின் டெஸ்ட் சகாப்தம் தொடங்குகிறது. அது மட்டுமல்லாமல் 2025-27ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றுப் போட்டியும் இதிலிருந்து தொடங்குகிறது. ரோஹித் சர்மா, கோலி, அஸ்வின், ஷமி ஆகிய சீனியர் வீரர்கள் இல்லாத சூழலில், பல புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கதவுகள் இந்திய அணியில் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழக வீரர் சாய் சுதர்சன், அர்ஷ்தீப் சிங், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் முதல்முறையாக வாய்ப்புப் பெற்றுள்ளனர். அபிமன்யு ஈஸ்வரன் பலமுறை இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டதில்லை, இந்த முறையும் அதே நிலையா என்பது தொடரில் தெரிந்துவிடும். நீண்டஇடைவெளிக்குப்பின் கருண் நாயர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் டெஸ்ட் அணிக்குள் மீண்டும் திரும்பியுள்ளனர். பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஸ்பெசலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். மற்றவகையில் குல்தீப் யாதவுடன் சேர்ந்து சுழற்பந்துவீச ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குஜராத் அணியில் சாய் சுதர்சனின் பங்களிப்பு அவருக்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது 18 ஆண்டுகளுக்கு முந்தைய வெற்றி பிரிட்டனில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்கில் ஜூன் 20ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி ஜூலை 2ம் தேதி எச்ஜ்பாஸ்டனிலும், 3வது டெஸ்ட் போட்டி ஜூலை 10 ம்தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், ஜூலை 23ம் தேதி ஓல்ட் டிராபோர்டில் 4வது டெஸ்ட் போட்டியும், 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்திலும் நடக்கிறது. கடைசியாக பட்டோடி டிராபி டெஸ்ட் தொடரை 2007ம் ஆண்டு ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய அணி 1-0 என்று வென்றது. அதன்பின், கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அணி பிரிட்டன் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இளம் கேப்டன் கில் தலைமையிலான அணி சாதிக்குமா என்பது எதிர்பார்ப்புதான். இந்திய அணி குறித்த பார்வை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர் பட்டோடி டிராபி டெஸ்ட் தொடருக்காக 18 வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் இன்று (மே24) அறிவித்தனர். அந்த வகையில் கேப்டனாக சுப்மன் கில், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்கால இந்திய அணியை கட்டமைக்கும் பொருட்டு 30 வயதுக்குள் இருக்கும் வீரர்களுக்கே அதிகமான முன்னுரிமை தரப்பட்டுள்ளது. ரவீந்திர ஜடேஜா, கருண் நாயர், பும்ரா மட்டுமே 30 வயதைக் கடந்தவர்கள், மற்ற வகையில் இளம் வீரர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பேட்டிங் வரிசையில் கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், கருண்நாயர், துருவ் ஜூரெல் ஆகியோர் உள்ளனர். இதில் தொடக்க வீரருக்கு சுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் உள்ளனர். கோலியின் இடத்தில் யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலியின் இடத்தில் கேஎல் ராகுல் விளையாட வாய்ப்பு டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் இடத்தை நிரப்ப சாய் சுதர்சன் பயன்படுத்தப்படலாம் என்றாலும், சுப்மன் கில்லுடன் ஆட்டத்தை சாய் சுதர்சன் தொடங்கவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு இருந்தால், விராட் கோலியின் 4வது இடத்தில் கருண் நாயர் அல்லது கே.எல்.ராகுல் களமிறங்கலாம். ரிஷப் பண்டுக்கு மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல், கே.எல்.ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர்கள் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர், நிதிஷ் குமார் ரெட்டியும், சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 5 வேகப்பந்து வீச்சாளர்கள் பிரிட்டன் மைதானங்கள் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும், நன்கு ஸ்விங் ஆகும், இந்திய அணி டெஸ்ட் ஆடும்போது அங்கு குளிர்காலம் இருக்கும் என்பதால் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பதால் வேகப்பந்துவீச்சுக்கு முன்னுரிமை அளி்க்கப்பட்டுள்ளது. பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் ஆகியோரும், ஸ்பெசலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். முகமது ஷமி காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை, தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அளவு உடல்நிலை தகுதியாக இல்லை என்பதால், அவர் பெயர் பரிசீலனையில் இல்லை. பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்த சர்ஃபராஸ் கான், ஹர்ஷித் ராணா, தேவ்தத்படிக்கல், தனுஷ் கோட்டியான் ஆகியோர் பெயரும் பரிசீலிக்கப்படவில்லை. இந்திய அணி விவரம் சுப்மன் கில்(கேப்டன்) ரிஷப் பண்ட்(துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, சாய் சுர்சன், அபமன்யு ஈஸ்வரன், கருண் நாயகர், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அர்ஷ்தீப் சிங். பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழக வீரர் இருவருக்கு வாய்ப்பு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சனின் அற்புதமான ஆட்டம் அவருக்கான இடத்தை டெஸ்ட் அணியில் உறுதி செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் மிஸ்டர் கன்சிஸ்டென்சி எனப் பெயரெடுத்த சுதர்சன் இங்கிலாந்து தொடரில் எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல வாஷிங்டன் சுந்தரும் தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அபிமன்யு ஈஸ்வரனின் இவரின் தந்தை தமிழர், தாய் பஞ்சாபி என்றாலும், அவர் மேற்கு வங்க அணிக்காக ஆடுகிறார். கில்லுக்கு புதிய அனுபவம் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில், இந்திய ஒருநாள் அணி அல்லது டெஸ்ட் அணியை இதற்கு முன் வழிநடத்தியது இல்லை. ஆனால் 2024ம் ஆண்டு ஜிம்பாப்பே சென்ற இந்திய T20 அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக இருந்து வழி நடத்தியிருக்கிறார். 2020-21 ம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடரில்தான் டெஸ்ட் போட்டியில் சுப்மன் அறிமுகமாகினார். இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கில் 5 சதங்கள், 7 அரைசதங்கள் உள்பட 1,893 ரன்கள் சேர்த்து 35 சராசரி வைத்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் கில் 42 சராசரியும், வெளிநாடுகளில் 27 சராசரியும் வைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக சுப்மன் கில் இதுவரை 2021-24 வரை 10 போட்டிகளில் ஆடி 592 ரன்கள் சேர்த்துள்ளார், இதில் பிரிட்டன் மண்ணில் 3 டெஸ்ட் போட்டியில் ஆடிய கில் 88 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். சொந்த மண்ணில் அதிகமான ரன்கள் குவித்த கில், வெளிநாடுகளில் பெரிதாக இதுவரை ரன்கள் குவித்ததில்லை. 8 ஆண்டுகளுக்குப்பின் கருண் நாயர் பட மூலாதாரம்,GETTY IMAGES கருண் நாயர் கடைசியாக 2017ம் ஆண்டு மார்ச் 25 முதல் 28ம் தேதிவரை நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக பங்கேற்றார். அதன்பின் 8 ஆண்டுகளுக்குப்பின் கருண் நாயர் இப்போது மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை 6 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கருண் நாயர் முச்சதம்(303) அடித்ததுதான் சிறந்த பேட்டிங்காக பார்க்கப்படுகிறது. அதைத் தவிர்த்து உள்நாட்டுப் போட்டிகளில் முதல்தரப் போட்டிகளிலும், லிஸ்ட் ஏ போட்டிகளிலும் 100 ஆட்டங்களுக்கு மேல் ஆடிய அனுபவ வீரர் என்பதாலும், பிரிட்டனில் கவுண்டி போட்டிகளில் ஆடிய அனுபவம் இருப்பதாலும் சமீபத்திய உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியதாலும் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ், ஷமி ஏன் இல்லை பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்ரேயாஸ், ஷமி பெயர் ஏன் பரிசீலிக்கப்படவில்லை என்பதற்கு தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில் "கணுக்கால் காயத்திலிருந்து உடல்நலன் தேறி ஷமி இப்போதுதான் வந்துள்ளார். ஐபிஎல் ஆடியபின் மீண்டும் லேசாக வலிவரத் தொடங்கியுள்ளது. அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தில் அவரால் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடும் நிலையில் உடல்நிலை இல்லை எனத் தெரியவந்தது. இதனால் அவருக்கு கூடுதலாக ஓய்வு அளிக்கப்பட்டது. ஸ்ரேயாஸ் அய்யர் சிறந்த வீரர். ஒருநாள், டி20 போட்டிக்கான சிறந்த வீரர். உள்நாட்டுப் போட்டிகளிலும் சிறப்பாக ஸ்ரேயாஸ் ஆடியுள்ளார். இப்போதுள்ள நிலையில் டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸுக்கு இடமில்லை" எனத் தெரிவித்தார். வேகப்பந்துவீச்சு வலிமையாக இருக்கிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES வேகப்பந்துவீச்சாளர்கள் தேர்வு குறித்து அகர்கர் கூறுகையில் " வேகப்பந்துவீச்சுக்கு முன்னுரிமை அளித்து வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். பும்ராவால் 5போட்டிகளிலும் பங்கேற்க முடியாது, அவரின் வேலைப்பளுவை கவனத்தில் வைத்திருக்கிறோம். அர்ஷ்தீப் சிங் புதிய பந்தில் நன்கு ஸ்விங் செய்யக்கூடியவர், அதிலும் பிரிட்டன் மண்ணில் அவரால் சிறப்பாக பந்துவீச முடியும். கவுண்டி அணியிலும் அர்ஷ்தீப் ஆடியுள்ளார். நிதிஷ், ஷர்துல் இருவரும் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள். சில நேரத்தில் கடைசிவரை பேட்டர்கள் தேவை எனும் பட்சத்தில் இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். வேகப்பந்துவீச்சில் வெரைட்டி தேவை என்பதை கருதி வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தார். சுப்மன் கில் எழுச்சி எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலியுடன் சுப்மன் கில் சுப்மன் கில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தேர்வுக் குழுத்தலைவர் அகர்கர் பேசுகையில் " ரோஹித் சர்மாவுக்குப்பின் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்க பல வாய்ப்புகளை கடந்த ஓர் ஆண்டாக பரிசீலித்தோம், அலசினோம். வீரர்களிடமிருந்தும் ஓய்வறையில் இருந்து கருத்துக்களைக் கேட்டோம். அதில் சுப்மன் கில் குறித்து நல்லவிதமான கருத்துக்கள் வந்தன. இளம் வீரர், தொடர்ந்து தன்னை வளர்த்து வருகிறார். கடந்த ஆண்டைப் போல் கில் இப்போது இல்லை, அடுத்த ஆண்டு இதைவிட சிறந்தவராக இருப்பார் என நம்புகிறோம். ஏதோ ஒரு சில டூருக்காக மட்டும் கேப்டன்களை தேர்வு செய்யக்கூடாது. கடந்த ஆண்டிலிருந்து கில் ஆட்டம் வளர்ந்து வருகிறது. நிச்சயமாக சிறந்த கேப்டனாக கில் வருவார். இங்கிலாந்து தொடரில் ஒவ்வொருவரின் திறமையும் பரிசோதிக்கப்படும். ஆஸ்திரேலியத் தொடரில் கில் சிறப்பாக செயல்பட்டார். ரோஹித், கோலி இல்லாத நிலையில் இளம் வீரர்கள் கொண்ட அணிக்கு நிச்சயமாக சவாலாக இந்தத் தொடர் அமையும். பேட்டிங்கைப் பொருத்தவரை கவலை இல்லை, அனுபவம்தான் அடுத்தடுத்து வளர்த்தெடுக்கும். ரிஷப் பண்ட் கடந்த 2 ஆண்டுகளில் சிறந்த பேட்டராக உருவெடுத்துள்ளார். சுப்மன் கில்லுக்கு நிச்சயமாக ரிஷப் பண்ட் துணையாக இருப்பார். இரு இளம் வீரர்களுமே அணியை முன்னோக்கி அழைத்துச் செல்வார்கள் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd7gy40l3pdo
  22. Published By: DIGITAL DESK 2 25 MAY, 2025 | 10:08 AM (நா.தனுஜா) காணி உரிமையாளர்கள் அவற்றுக்கு உரிமைகோருவதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நோக்கிலான கூட்டமொன்று இன்றைய தினம் காலை 9மணிக்கு வெற்றிலைக்கேணியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அக்கூட்டத்தில் கலந்துகொண்டு காணி உரிமைகோரல் தொடர்பில் அவசியமான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அழைப்புவிடுத்துள்ளார். அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமைகோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதுடன், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தியிருக்கின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் பூர்வீக காணிகளை சட்ட ரீதியாகப் பாதுகாப்பதற்குத் தம்மிடம் இலவச சட்ட ஆலோசனை பெறுமாறும், இந்த இலவச சட்ட ஆலோசனையை வழங்குவதற்காக தன்னார்வ அடிப்படையில் சட்டத்தரணிகள் பலர் முன்வந்திருப்பதாகவும் சுமந்திரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி வெளிநாடுகளில் அல்லது தூர பிரதேசங்களில் வசிக்கும் காணி உரிமையாளர்களின் உரித்தை நிரூபிப்பதற்கான ஆவணத்தயாரிப்புக்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் அறிவித்திருந்த அவர், அதற்குரிய விபரங்களை உள்ளடக்கி நிரப்பவேண்டிய இணைப்பையும் அவரது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் 9 மணிக்கு வெற்றிலைக்கேணியில் உள்ள ரம்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் இலவச சட்ட ஆலோசனை வழங்கல் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ள சுமந்திரன், அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் உள்வாங்கப்பட்டிருக்கும் காணியின் உரிமையாளர்கள் அக்காணிக்கான உரித்தைக் கோருவதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து சட்ட ஆலோசனை வழங்கவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே சட்ட ஆலோசனை பெற விரும்புபவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியும் எனவும் அவர் அழைப்புவிடுத்துள்ளார். அதேவேளை இவ்வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்படவேண்டும் என தாம் வலியுறுத்தியிருக்கும் நிலையில், இவ்வர்த்தமானி அறிவித்தலை சட்ட ரீதியாக சவாலுக்கு உட்படுத்துவதற்கான சாத்தியப்பாடு குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தலை நீக்குவதற்கு இம்மாதம் 28 ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியிருக்கும் பின்னணியில், அதற்கு முன்பதாக அதனை நீக்காவிடின் மாபெரும் மக்கள் போராட்டத்துக்குத் தயாராகிவருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். https://www.virakesari.lk/article/215612
  23. டெல்லிக்கு திருப்பம் தந்த புது ஹீரோ - பிளேஆஃபில் யாருக்கு எந்த இடம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சமீர் ரிஸ்வி கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. டெல்லி கேபிடல்ஸ் அணி இதற்கு முன் 22 முறை 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு 2வது முறையாக அதில் நேற்று வெற்றி பெற்றுள்ளது. ப்ளே ஆஃ சுற்று தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் டாப்-4 பட்டியலில் யாருக்கு எந்த இடம் என்பது குறித்து இன்னும் தெளிவான முடிவுக்கு வராத நிலை நீடித்து உச்சக் கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ப்ளே ஆஃப் சுற்று எந்தெந்த அணிகளுக்கு இடையே நடக்கும் என்பதை ஊகிக்க முடியாத பரபரப்பான கட்டத்தை நோக்கி ஐபிஎல் சீசன் நகர்ந்துள்ளது. ஸ்ரேயாஸ் போராட்டம், ஸ்டாய்னிஷ் அதிரடி பஞ்சாப் அணிக்கு தொடக்கத்திலேயே ஆர்யா ஆட்டமிழக்கவே, பிரப்சிம்ரன், இங்கிலிஸ் ஜோடி சேர்ந்து பவர்ப்ளேயில் ஸ்கோர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இங்கிலிஸ் 32 ரன்னில் விப்ராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழக்கவே, பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணி. நிலைக்காத பிரப்சிம்ரனும் 28 ரன்னில் விப்ராஜ் பந்துவீச்சில் போல்டாகினார். நடுவரிசையில் நேஹல் வதேரா(16), சஷாங் சிங்(11) ரன்களில் ஏமாற்றவே, கேப்டன் ஸ்ரேயாஸ் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தி அரைசதம் அடித்தார். 53 ரன்களில் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தபோது பஞ்சாப் அணி 172 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்டாய்னிஷ் ஸ்டாய்னிஷ் களமிறங்கி 16 பந்துகளில் 44 ரன்களை விளாசினார். 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசிய ஸ்டாய்னிஷ் பஞ்சாப் அணி 200 ரன்களைக் கடக்க உதவினார். முகேஷ் குமார் ஓவரில் லாங்ஆப்பில் சிக்ஸர், மோகித் சர்மா ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள், முஸ்தபிசுர் ரஹ்மான் ஓவரிலும் சிக்ஸர் என ஸ்டாய்னிஷ் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குல்தீப் ஓவரில் ஓமர்சாய், யான்சென் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும் ஸ்டாய்னிஷ் அதிரடிக்கு யாரும் கைவிலங்கிட முடியவில்லை, 16 பந்துகளில் 44 ரன்களுடன் ஸ்டாய்னிஷ் ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி தரப்பில் முஸ்தபிசுர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப், விப்ராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கருண் நாயர் கருண் நாயரின் உற்சாகம் டெல்லி அணிக்கு டூப்பிளசிஸ், ராகுல் இருவரும் வலுவான தொடக்கத்தை அளித்து வெற்றிக்கான தீர்மானத்தோடு ஆடினர். ராகுல் 31 ரன்னில் யான்சென் பந்துவீச்சிலும் அதைத் தொடர்ந்து டூப்பிளசிஸ்23 ரன்னில் பிரார் பந்துவீச்சிலும் வெளியேறினர். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட்டை இழந்து பஞ்சாப் 61 ரன்கள் சேர்த்தது. இந்திய டெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்குப்பின் இடம் பெற்ற உற்சாகத்தில் ஆடிய கருண் நாயர் நடுவரிசையில் அணியை வழிநடத்திச்செல்ல முக்கியமானவராக நேற்று இருந்தார். பிரவீண் துபே பந்துவீச்சில் வந்த வேகத்தில் கருண் நாயர் தொடர்ந்து 4 பவுண்டரிகளை விளாசினார். யான்சென் பந்துவீச்சில் சிக்ஸரும், பிரார் பந்துவீச்சில் பவுண்டரியும் அடித்து ரன்ரேட்டை குறையவிடாமல் கருண் நாயர் கொண்டு சென்றார். ஆனால் பிரார் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட்ஆடமுயன்ற கருண் நாயர், போல்டானார். 27 பந்துகளில் 44 ரன்கள்(2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள்) சேர்த்து கருண் நாயர் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரிஸ்வி அசத்தல் டெல்லி அணிக்கு வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது 21 வயது வீரர் சமீர் ரிஸ்விதான். 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 58 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி வெற்றிக்கு 46 பந்துகளில் 91 ரன்கள் தேவைப்பட்டது. ஓவருக்கு 12 ரன் ரேட் தேவை என்ற நிலையில் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை ரிஸ்வி வெளுத்துவாங்கினார். இளம் பேட்டர் ரிஸ்வி அச்சமின்றி பேட் செய்து ஓமர்சாய், யான்சென் பந்துவீச்சில் சிக்ஸரை பறக்கவிட்டார். ஹர்பிரித் பிரார் பந்துவீச்சில் சிக்ஸரும், ஸ்டாய்னிஷ், அர்ஷ்தீப் பந்துவீச்சில் சிக்ஸர் என மிரட்டலாக ரிஸ்வி பேட் செய்தார். ஐபிஎல் தொடரில் ரிஸ்வி 58 ரன்கள் என்பது அவரின் அதிகபட்ச ஸ்கோராகும். மோசமான பந்துவீச்சு பஞ்சாப் அணி சேர்த்த 207 ரன்கள் என்பது வலுவான ஸ்கோர்தான். இதை டிபெண்ட் செய்ய முடியாமவிட்டால் ப்ளே ஆஃப் சுற்றில் எவ்வாறு இதற்கும் குறைவான ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடியும். பஞ்சாப் அணியில் நேற்று 6 பந்துவீச்சாளர்களும் 10 ரன்ரேட்டுக்கு மேல்தான் வாரி வழங்கினர். வேகப்பந்துவீச்சாளர்கள் யான்சென், ஓமர்சாய், அர்ஷ்தீப், ஸ்டாய்னிஷ் ஆகியோர் 13.3 ஓவர்கள் வீசி 143 ரன்களை வாரி வழங்கினர். இவர்கள் பந்துவீச்சில் 9 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளை வாரி வழங்கி 98 ரன்களை கொடுத்தனர். பஞ்சாப் பந்துவீச்சு இன்னும் கட்டுக்கோப்பாக இருந்திருந்தால், குறிப்பாக ஓமர்சாய், யான்சென் பந்துவீச்சு துல்லியமாக இருந்திருந்தால், பஞ்சாப் அணி வென்றிருக்கும். கருண் நாயர், ரிஸ்வி பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் சிரமப்பட்டது, ரிஸ்வியை ஆட்டமிழக்காமல் சிரமப்பட்டபோதே, பஞ்சாப் அணி தோல்வியை நோக்கி செல்வது உறுதியானது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யான்சென் "பந்துவீச்சு சரியில்லை" பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் " 207 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர்தான். ஆனால், ஆடுகளத்தில் பல இடங்களில் பந்து பிட்ச் ஆகி ஒவ்வொருவிதமாக பேட்டரை நோக்கி வருவதால் பேட் செய்வது கடினமாக இருந்தது. பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகசெயல்படவில்லை. ஆடுகளத்தை அறிந்தபின் அதற்கு ஏற்றார்போல் துல்லியமான லென்த்தில் பந்துவீசியிருக்க வேண்டும். விக்கெட் எடுக்கும் முயற்சியில் அதிக பவுன்ஸர்களை வீசியது தவறு. இந்த சீசனில் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது, வெற்றிக்கு ஒவ்வொரு அணியும் தகுதியானவர்கள். நாம்தான் நிதானமாக பொறுமையாக, நேர்மறையாக செயல்பட வேண்டும். அடுத்தப் போட்டியில் இன்னும் வலிமையாக திட்டங்களுடன் வருவோம்" எனத் தெரிவித்தார். ஐபிஎல் பிளேஆஃப் சுற்றில் யாருக்கு எந்த இடம்? ப்ளே ஆஃப் சுற்றில் டாப்-2 மட்டுமல்ல டாப்-4-ல் யாருக்கு எந்த இடம் என்பது இன்னும் முடிவாகவில்லை. பஞ்சாப், ஆர்சிபி அணிகள் தலா 17 புள்ளிகளுடன் உள்ளன. நிகர ரன்ரேட்டில் பஞ்சாபை விட(0.327) ஆர்சிபி (0.255) குறைவாக இருக்கிறது. இரு அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கிறது. இதில் எந்த அணி அதிகபட்ச ரன்ரேட்டை பெறும் வகையில் வெல்கிறதோ அந்த அணி 19 புள்ளிகளுடன் முன்னேறும். அதேபோல குஜராத் அணி 18 புள்ளிகளுடன் இருக்கிறது. கடைசி லீக்கில் இன்று சிஎஸ்கேவுடன் மோதுகிறது. ஒருவேளை குஜராத் வென்றால் 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும். தோல்வி அடைந்தால், 18 புள்ளிகளுடன் இப்போதுள்ள 0.602 ரன்ரேட் குறையும். அதேநேரம், மும்பை அணி கடைசி லீக்கில் நாளை பஞ்சாபுடன் மோதுகிறது. ஒருவேளை பஞ்சாப் அணி வென்றால் 19 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்கும், மும்பை 16 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு செல்லும். ஆர்சிபி கடைசி லீக்கில் தோல்வி அடைந்தாலும் 3வதுஇடம் கிடைக்கும், ஒருவேளை மாபெரும் வெற்றி பெற்றால் 2வது இடத்துக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை பஞ்சாப் அணியை மும்பை வீழ்த்திவிட்டால், இன்று நடக்கும் ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் குஜராத் தோல்வி அடைந்தால், 18 புள்ளிகளுடன் வலுவான ரன்ரேட்டில் மும்பை முதலிடத்தைப் பிடிக்கும். ஆர்சிபி அணி கடைசி லீக்கில் வென்றால் 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும் மும்பை வலுவான ரன்ரேட்டுடன் இருந்தாலும் 18 புள்ளிகளுடன் இருப்பதால் 2வது இடத்தையும், குஜராத் 3வது இடத்தையும், பஞ்சாப் 4வது இடத்தையும் பிடிக்கும். எதிர்வரும் முக்கிய ஆட்டங்கள் இன்றைய ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே இடம்: ஆமதாபாத் நேரம்: மாலை 3.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் நாள் – மே 26 இடம் – ஜெய்பூர் நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs லக்னெள நாள் – மே 27 இடம் – லக்னெள நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-638 ரன்கள்(13 போட்டிகள்) சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-636 ரன்கள்(13 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்) நீலத் தொப்பி பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்) நூர் அகமது(சிஎஸ்கே) 21 விக்கெட்டுகள்(13போட்டிகள்) டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள்(13 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1e6jxl4v42o
  24. அண்ணை, மறுபடியும் சேர்ந்திட்டோமே!!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.