Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பாகிஸ்தானில் இந்திய தாக்குதலில் குறிவைக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாரின் பின்னணி பட மூலாதாரம்,GETTY IMAGES 8 மே 2025, 04:30 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில், பஹாவல்பூரில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் மற்றும் நான்கு நெருங்கிய கூட்டாளிகள் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை ஜெய்ஷ்-இ-முகமது (JEM) புதன்கிழமையன்று உறுதி செய்ததாக பிபிசியின் உருது சேவை கூறுகிறது. மசூத் அசாரின் மூத்த சகோதரி, அவரது கணவர், மருமகனின் மனைவி, மருமகள் மற்றும் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. அந்த அறிக்கையின் படி பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள சுப்ஹான் அல்லா மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மசூத் அசாரின் உறவினர்கள் இறந்துவிட்டனர். யார் இந்த மசூத் அசார்? கடந்த 1968 ஜூலை 10 அன்று பஹாவல்பூரில் அல்லாபக்ஷ் சபீரின் குடும்பத்தில் மசூத் அசார் பிறந்தார். அசாரின் தந்தை சபீர், பஹாவல்பூரில் உள்ள ஓர் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்திய உள்துறை அமைச்சகம், 2024 மார்ச் 7ஆம் தேதியன்று வெளியிட்ட 'மிகவும் தேடப்படும் குற்றவாளிகள்' பட்டியலில் 57 வயது மசூத் அசாரின் பெயர் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு எதிராக மசூத் செய்த குற்றங்களின் பட்டியல் நீண்டது. பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் மசூத் அசாரின் பெயர் இடம் பெற்றுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியன்று ஸ்ரீநகரில் அப்போதைய ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்ற வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர். இதில் மசூத் அசாருக்கும் பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு, 2001 டிசம்பர் 12இல், இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தீவிரவாதத் தாக்குதலிலும் அசாரின் பங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தாக்குதலில், இந்தியாவின் ஆறு பாதுகாப்புப் படையினர் மற்றும் மூவர் உயிரிழந்தனர். இந்தியா, பாகிஸ்தான் மோதல்: அதிகரித்து வரும் பதற்றம், அமைதியை வலியுறுத்தும் அமெரிக்கா - நேரலைஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியா, பாகிஸ்தான் மோதல் பின்வாங்க முடியாத அளவுக்கு முற்றிவிட்டதா? 4 முக்கிய கேள்விகள்4 மணி நேரங்களுக்கு முன்னர் புல்வாமா தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றச்சாட்டு பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,பிப்ரவரி 14, 2019 அன்று, புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அதில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். நாற்பது பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலிலும் மசூத் அசாரின் பங்கு உள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இவை அனைத்திற்கும் முன்னதாக, காந்தஹார் விமானக் கடத்தலின்போது மௌலானா மசூத் அசார் பெயர் பரபரப்பாகப் பேசப்பட்டது. 1999ஆம் ஆண்டு காந்தஹார் விமானக் கடத்தலின்போது விடுவிக்க வேண்டுமெனக் கோரப்பட்ட மூன்று தீவிரவாதிகளில் மசூத் அசாரும் ஒருவர். காந்தஹார் விமானக் கடத்தலின்போது, இந்திய அரசால் விடுவிக்கப்பட்ட மசூத் அசாரை அப்போதைய இந்திய அரசின் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங், சிறப்பு விமானத்தில் காந்தஹாருக்கு அழைத்துச் சென்றார். அன்று முதல், இந்திய பாதுகாப்பு அமைப்புகளால் தேடப்படும் குற்றவாளியாக மசூத் அசார் இருக்கிறார். மசூத் அசார் தலைவராக இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூரில் இருப்பதாக இந்திய அரசு தொடர்ந்து கூறி வந்தது. பாகிஸ்தான் எல்லைக்குள் 100 கிலோமீட்டர் உட்புறமாக அமைந்திருக்கும் பஹாவல்பூரில் இந்தியா முதன்முறையாகத் தாக்குதல் நடத்தியதற்கு ஜெய்ஹ்-இ-முகமது அமைப்பு அங்கு இருப்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மசூத் அசாரை ஒப்படைக்குமாறு இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டாலும், அவர் பாகிஸ்தானில் இல்லை என்றே பாகிஸ்தான் கூறி வந்தது. இந்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் நடத்திய பதில் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரின் நிலை என்ன?2 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இந்தியா குறிவைத்த டி.ஆர்.எஃப் தீவிரவாதக் குழுவின் முழு பின்னணி3 மணி நேரங்களுக்கு முன்னர் ஜிஹாதி நடவடிக்கைகளின் தொடக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மசூத் அசாரை ஒப்படைக்குமாறு இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டாலும், அவர் தங்கள் நாட்டில் இல்லை என்றே பாகிஸ்தான் கூறி வந்தது மௌலானா மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமதுவை ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இந்தியா கோரி வருகிறது. ஆனால் இந்தியாவின் இந்தக் கோரிக்கைக்கு எதிராகத் தனது வீட்டோ அதிகாரத்தை சீனா பயன்படுத்தி வருகிறது. இந்தியாவின் சுமார் பத்தாண்டு கால முயற்சிகள் மற்றும் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, கடந்த 2019 மே 1ஆம் தேதியன்று ஐ.நா சபை மௌலானா மசூத் அசாரின் அமைப்பை 'பயங்கரவாத அமைப்பு' என்று அறிவித்தது. இந்திய உள்துறை அமைச்சகத்தால் மிகவும் தேடப்படும் நபர்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள மசூத் அசாரின் செயல்பாடுகளின்படி, அவர் தலைமையில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு மிகப்பெரிய ஆட்சேர்ப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது. மேலும் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இளைஞர்களைத் தூண்டி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஜனவரி 2002இல், மௌலானா மசூத் அசார் பற்றிய விரிவான கட்டுரையை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டது. இந்தக் கட்டுரையின்படி, மசூத் அசார் கராச்சியில் படிக்கும்போது ஜிஹாதி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பாகிஸ்தானில் இந்திய ராணுவம் தாக்குதல் - இதுவரை நடந்தது என்ன? முழு விவரம்3 மணி நேரங்களுக்கு முன்னர் 'சில நிமிடங்களில் அடுத்தடுத்த ஏவுகணை' - நேரில் கண்ட இந்தியா - பாகிஸ்தான் மக்கள் கூறுவது என்ன?7 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மசூத் அசார் கராச்சியில் படிக்கும்போது ஜிஹாதி நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று தெரிவிக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி மசூத் அசார் கைது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, மசூத் அசார் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையவில்லை, 1994 ஜனவரியில் டாக்காவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் வந்தார். டெல்லியின் பிரபல ஹோட்டல்களில் சில நாட்கள் தங்கிய மசூத் அசார், முதலில் தேவ்பந்த் நகருக்குச் சென்றார், அங்கிருந்து காஷ்மீர் சென்றார். 1994 பிப்ரவரி 10ஆம் தேதி இந்திய பாதுகாப்புப் படையினரால் காஷ்மீரில் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மசூத் அசாரை விடுவிப்பதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மசூத் கைது செய்யப்பட்ட 10 மாதங்களில், தீவிரவாதிகள் டெல்லியில் சில வெளிநாட்டினரைக் கடத்திச் சென்று, அவர்களை விடுவிப்பதற்கு ஈடாக மசூத் அசாரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். சஹாரன்பூரில் இருந்து பணயக் கைதிகளை மீட்க உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி காவல்துறையின் முயற்சிகள் வெற்றியடைந்தன. மசூத் அசார் சிறையிலேயே இருந்தார். அதன்பிறகு ஓராண்டில் ஹர்கத்-உல்-அன்சார் மீண்டும் சில வெளிநாட்டினரைக் கடத்தி, மசூத் அசாரை விடுவிக்க முயன்றபோது, அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. அப்போதிருந்து, 1999இல் விடுவிக்கப்படும் வரை மசூத் அசார் ஜம்முவில் உள்ள கோட் பல்வால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்தச் சிறையில், காஷ்மீரில் கைது செய்யப்பட்ட காஷ்மீரி, ஆப்கன் மற்றும் பாகிஸ்தானி தீவிரவாதிகளின் மொத்த குழு ஒன்று சிறை வைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் ஹர்கத்-உல்-முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பின் ஸ்ரீநகர் தளபதி என்று அழைக்கப்படும் சைஃபுல்லா கான் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களும் இருந்தனர். இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல்: முழு தகவல் 6 காணொளிகளில்7 மே 2025 பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ஏவுகணை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு எப்படிப்பட்டது?3 மணி நேரங்களுக்கு முன்னர் மசூத் அசார் தீவிரவாதிகள் மீது ஏற்படுத்திய தாக்கம் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,மசூத் அசார், 1994 பிப்ரவரி 10 அன்று இந்திய பாதுகாப்புப் படையினரால் காஷ்மீரில் வைத்து கைது செய்யப்பட்டார் மசூத் அசார் சிறையில் இருந்தபோது அவருடன் முக்கியமான சில விஷயங்களை கலந்தாலோசித்ததாக சைஃபுல்லா, ஸ்ரீநகரில் பிபிசி செய்தியாளர் ஜுபைர் அகமதுவுடனான உரையாடலில் கூறியிருந்தார். "மௌலானா மசூத் அசார் உரை நிகழ்த்துவார், ஜிஹாத் சித்தாந்தம் குறித்து விரிவாகப் பேசுவார், அவர் துப்பாக்கியை எடுக்கவில்லை, யாரையும் கொல்லவில்லை" என்று சைஃபுல்லா தெரிவித்திருந்தார். மௌலானா அசாரின் பேச்சு, சிறையில் இருந்த தீவிரவாதிகளிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக சைஃபுல்லா கூறியிருந்தார். யூடியூபில் மௌலானாவின் வீடியோ துணுக்குகள் இந்தியாவுக்கு எதிரான போக்கை ஏற்படுத்தும் ஆத்திரமூட்டும் பேச்சாக இருந்ததாக ஜுபைர் அகமது தனது செய்தியில் தெரிவித்திருந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு பாகிஸ்தானில் தடை இருந்த போதிலும், அந்த அமைப்பு அங்கு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது என்று கூறும் பிபிசி உருது சேவையின் தற்போதைய ஆசிரியர் ஆசிஃப் ஃபரூக்கி, பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பின் உதவிகளைத் தொடர்ந்து அந்த அமைப்பு பெற்று வருவதாகவும் கூறுகிறார். ஆனால் இதற்கு ஆதாரமோ அல்லது எந்தவித சான்றுகளோ இல்லை. "கடந்த 1999இல் காந்தஹார் சம்பவத்திற்குப் பிறகு, மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் உதவியுடன் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை உருவாக்கினார். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானில் மசூத் அசார் கைது செய்யப்பட்டார், அவரது அமைப்பும் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு இன்றுவரை மசூத் அசாருக்கு ஆதரவாக வெளிப்படையாகவோ அல்லது ரகசியமாகவோ பாகிஸ்தான் தலைவர்கள் யாரும் பேசியதில்லை" என்று ஆசிஃப் ஃபரூக்கி தெரிவிக்கிறார். இந்தியாவின் வான் தாக்குதல்: உடைந்த பாகங்கள் பற்றி தெரியவந்தது என்ன?7 மே 2025 இந்தியாவின் தாக்குதல் பற்றி ஊடகங்களுக்கு விளக்கமளித்த பெண் அதிகாரிகள் யார்?3 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஆதரவு இல்லை பட மூலாதாரம்,ANI "பாகிஸ்தானில் மசூத் அசாருக்கு பெரிய அளவில் ஆதரவில்லை. ஒரு தீவிரவாதக் குழுவின் தலைவர் என்பதும், அவர் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதும் அனைவருக்கும் தெரியும்" என்று ஆசிஃப் ஃபரூக்கி கூறுகிறார். "பல தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ள மசூத் அசாருக்கு இளைஞர்களிடம் அபிமானம் இல்லை. ஆனால் இந்தியாவை தங்கள் எதிரியாகக் கருதும் ஒரு பிரிவினர் அசாரை ஆதரிக்கின்றனர்" என்கிறார் அவர். மௌலானா மசூத் அசார் பொது இடங்களில் பெரிய அளவில் நடமாடுவதில்லை. ஹபீஸ் சயீதை போலன்றி, மௌலானா தொடர்பான செய்திகள் பாகிஸ்தான் ஊடகங்களில் பெரிய அளவில் வெளியாவதும் இல்லை. கடந்த இருபது ஆண்டுகளில் மசூத்தின் இருப்பு குறித்து பொதுவெளியில் இரண்டு முறை மட்டுமே விவாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசும் ஆசிஃப் ஃபரூக்கி, "கராச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்திலும், அதன் பிறகு முசாஃபராபாத்தில் நடைபெற்ற ஜிஹாதி அமைப்புகளின் மாநாட்டிலும் காணப்பட்டார்" என்று தெரிவித்தார். -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c87p7qw4n74o
  2. Published By: DIGITAL DESK 2 08 MAY, 2025 | 10:04 AM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கை தமிழ் அரசியல் களத்தில் தலைமைத்துவம் தொடர்பான அக்கறைகள் அண்மைக்காலமாக உத்வேகம் பெறும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருக்கிறது. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் யார் எதிர்கால தமிழ் அரசியல் தலைவராக மேன்மைப்படுத்தக்கூடியவராக இருப்பார் என்பது உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு விவாதத்துக்குரிய ஒரு விடயமாக இருக்கும். வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு கட்டங்களில் செல்வாக்குமிக்க தலைவர்கள் வெளிக்கிளம்பி ஆதிக்கம் செய்த தோற்றப்பாடு இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றின் எடுத்துக்காட்டான ஒரு அம்சமாகும். பொன்னம்பலம் சகோதரர்கள் இராமநாதனும் அருணாச்சலமும், அருணாச்சலம் மகாதேவா , ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் ஆகியோர் வெவ்வேறு காலப்பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய ஜனநாயக தலைவர்களாக விளங்கினர். தமிழ் ஆயுதப் போராளிகளின் எழுச்சி மற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவ தோற்றப்பாடு இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட நிகழ்வுப் போக்குகளாகும். மேற்குறிப்பிட்ட அளவுகோலின்படி உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னர் 2010 ஆம் ஆண்டு தொடக்கி 2024 ஆம் ஆண்டுவரை இராஜவரோதயம் சம்பந்தனின் தலைமைத்துவக் காலப்பகுதி என்று கருதப்படுகிறது. இறுதி ஒரு சில வருடங்களில் அவரின் பிடி தளர்ந்துவிட்ட போதிலும், சம்பந்தன் உயர்த்தியிலும் அடையாள அடிப்படையிலும் கேள்விக்கு இடமின்றிய இலங்கை தமிழ் தலைவராக விளங்கினார். அவரது வாழ்வின் அந்திமக் காலத்தில் சம்பந்தன் " பெருந்தலைவர் " என்று அழைக்கப்பட்டார். கடந்த வருடம் சம்பந்தனின் மறைவுக்கு பிறகு தமிழ்த் தேசியவாத அரசியலில் தலைமைத்துவ வெற்றிடம் மிகவும் முனைப்பாக தெரிந்தது. மதுபான அனுமதிப் பத்திர சர்ச்சைக்கு பிறகு கடந்த வருடம் சி.வி. விக்னேஸ்வரனின் அரசியல் ஓய்வு மற்றும் இவ்வருட தொடக்கத்தில் சோமசுந்தரம் மாவை சேனாதிராஜாவின் மறைவு ஆகிய காரணிகள் தலைமைத்துவ வெற்றிடம் மேலும் விரிவடைவதற்கு பங்களிப்புச் செய்தன. இத்தகைய சூழ்நிலையில், தமிழ்த் தேசியவாத தலைமைத்துவ "சிம்மாசனத்துக்கு ஆர்வப்படும் ஒருவரை மேம்படுத்துவதற்கு தன்னல அக்கறைச் சக்திகளும் கட்சிகளும் ஒன்றுபட்டுத் திட்டமிட்டு தீவிர முயற்சிகளை முன்னெடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. அது வேறு எவருமல்ல, சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமேயாவார். கஜன் என்று பொதுவாக அறியப்படும் அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராகவும் இருக்கிறார். முதலில் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டுவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 2020 ஆம் ஆண்டில் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவாக தற்போதும் தொடருகிறார். 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கஜேந்திரகுமார் இலங்கை தமிழரசு கட்சியுடனும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் செயற்பாட்டு உறவுமுறை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு முயற்சி எடுத்தார். தமிழரசு கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சிவஞானம் சிறீதரனுடனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடனும் அவர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தையும் அவர் சந்தித்தார். ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தியில் இருந்து தெரிவான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணிதிரண்டு புதிய அரசியலமைப்பு யோசனைகளை முன்வைக்க வேண்டியது அவசியம் என்ற நிலைப்பாட்டை கஜேந்திரகுமார் எடுத்தார். அவரின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. வழமை போன்று அவர் அதற்கு தனது அரசியல் எதிரியான தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ . சுமந்திரனையே குற்றம் சாட்டினார். ஐக்கியப்பட்டு செயற்படுவதை நோக்கிய ஒரு நகர்வாக தனது முயற்சிகளை கஜேந்திரகுமார் காண்பித்தார் என்ற போதிலும், அதற்குள் இருக்கக்கூடிய அந்தரங்க அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை கூர்மதியுடைய அரசியல் அவதானிகளினால் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. தனது தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்டணி ஒன்றை உருவாக்குவதன் மூலம் கஜேந்திரகுமார் நடைமுறையில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தலைவர் என்ற அந்தஸ்தை அடைவதில் கண்வைத்தார். 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக இரா. சம்பந்தன் அவர்களே இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிப்படையான முயற்சி உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், அதியுயர் தமிழ் அரசியல் தலைவராக வருவதற்கான முயற்சி மிகவும் வெளிப்படையானதாக தெரிய வந்திருக்கிறது. கஜேந்திரகுமாரை இலங்கை தமிழர்களின் எதிர்காலத் தலைவராக காட்சிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் அப்பட்டமான முயற்சிகள் அரசியல் அவதானிகளை குழப்பத்துக்குள்ளாக்கியிருப்பது மாத்திரமல்ல, அவர்கள் அதை வேடிக்கையாகவும் நோக்குகிறார்கள். அரசியல் கூட்டங்களில் கஜேந்திரகுமாரின் புகழ்பாடப்படுகிறது. பல மூத்த தமிழ் அரசியல்வாதிகள் கஜேந்திரகுமாரின் அரசியல் உறுதிப்பாட்டுக்காக அவரை பாராட்டுவதுடன் அவரே அதியுயர் தமிழ்த் தலைவர் என்றும் அறிவிக்கிறார்கள். சுமார் அறுபது வருடங்களாக அரசியலில் இருந்து வரும் மூத்த சட்டத்தரணி ஒருவர் கஜேந்திரகுமாரின் தலைமையில் தமிழர்களின் எதிர்காலம் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் அரசியலில் இருந்து மகிழ்ச்சியுடன் ஓய்வுபெறலாம் என்று அண்மையில் கூறியிருந்தார். அதனால், உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு அதியுயர் தமிழ்த் தலைவராக கஜேந்திரகுமாரை முதன்மைப்படுத்தும் நோக்கில் மிகவும் வலுவான முறையில் குரலெழுப்பப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் இருக்கின்றன. கஜனின் விசுவாசிகளில் சிலர் அவரை விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பிறகு " தமிழ்த் தேசியத் தலைவர் " என்று வர்ணிக்கத் தொடங்கினார்கள். கண்டனக் குரல்கள் கிளம்பியதன் விளைவாக அந்த முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனால், உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு தமிழ்த் தேசியவாதத்தின் தலைவராக கஜேந்திரகுமாரை முதன்மைப்படுத்துவதற்கான புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது பெரிதும் சாத்தியம். அதனால், இத்தகைய பின்புலத்தில், இந்த கட்டுரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதும் தமிழ்த் தலைமைத்துவத்துக்கான அவரின் வாய்ப்புக்கள் மீதும் கவனம் செலுத்துகிறது. எனது முன்னைய எழுத்துக்கள் சிலவற்றின் உதவியுடன் கஜனின் அரசியல் பின்னணியை சுருக்கமாக விளக்க முனைகிறேன். தமிழ் அரசியல் வம்சம் தமிழ் அரசியல் அரங்கில் " வம்ச மரபுக்கு " கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரகாசமான ஒரு உதாரணமாகும். அவர் அரசியலில் பொன்னம்பலங்களின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர்.( சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாச்சலம் ஆகியோருடன் இந்த பொன்னம்பலங்களை குழம்பிக்கொள்ளத் தேவையில்லை) ஜீ.ஜீ பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் தந்தைவழிப் பாட்டனார் ஜீ.ஜீ. பொன்னம்பலம் என்று அறியப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தாபக தலைவரான கணபதி காங்கேசர் பொன்னம்பலம் ஆவார். அவர் தனது காலத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய சில வழக்குகளில் தனித்துவமான திறமையுடன் ஆஜரான சிறப்புவாய்ந்த ஒரு வழக்கறிஞராவார். ஜீ ஜீ. பொன்னம்பலம் பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரும் சுதந்திரத்துக்கு பின்னருமாக சுமார் இரு தசாப்த காலமாக இலங்கைத் தமிழர்களின் முடிசூடா அரசியல் தலைவராக விளங்கியவர். 1934 ஆம் ஆண்டு தொடக்கம் 1947 ஆம் ஆண்டு வரை அரசாங்க சபையில் ( State Council ) பருத்தித்துறை தொகுதியை பிரதிநிதித்துவம் செய்த பொன்னம்பலம் முதலில் 1947 ஆம் ஆண்டு தொடக்கம் 1960 ஆம் ஆண்டு வரையும் பிறகு 1965 ஆம் ஆண்டு தொடக்கம் 1970 ஆம் ஆண்டு வரையும் யாழ்ப்பாணத் தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தார். பிரதமர்கள் டி.எஸ். சேனநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கங்களில் (1947 - 1953 ) பொன்னம்பலம் கைத்தொழில் , கைத்தொழில் ஆராய்ச்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராக பதவி வகித்தார். "ஐம்பதுக்கு ஐம்பது " என்று பிரபலமாகச் சொல்லப்படுகின்ற சமநிலையான பிரதிநிதித்துவ அரசியல் கோரிக்கையை முன்வைத்ததால் ஜீ.ஜீ. மிகவும் பிரபல்யமானார். சமநிலையான பாராளுமன்றத்தில் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருக்கு 50 சதவீத ஆசனங்களும் சகல சிறுபான்மைச் சமூகங்களுக்கும் 50 சதவீதமான ஆசனங்களும் இருக்க வேண்டும் என்று ஜீ.ஜீ. விரும்பினார். குமார் பொன்னம்பலம் ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் மகன் காசிநாதர் காங்கேசர் பொன்னம்பலம் அல்லது ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஜூனியர். ஆனால், அவர் குமார் பொன்னம்பலம் என்றே பிரபல்யமாக அழைக்கப்பட்டார். அவரே கஜேந்திரகுமாரின் தந்தையார். ஒரு முன்னணி சட்டத்தரணியான குமார் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட பல தமிழ் இளைஞர்களின் வழக்குகளில் அவர்களுக்காக இலவசமாக வாதாடினார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட குமார் தந்தையின் மறைவுக்கு பிறகு தமிழ் காங்கிரஸுக்கு தலைமை தாங்கினார். அரசியலில் பிரபலமானவராக இருந்தபோதிலும், குமார் தனது வாழ்நாளில் ஒருபோதுமே அரசியல் பதவி எதற்கும் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை. 1977 ஜூலை பொததுத்தேர்தலில் ( பழைய தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையின் கீழ் ) யாழ்ப்பாணம் தொகுதியில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டு தோல்வி கண்டார். 1989 பெப்ரவரி பொதுத்தேர்தலில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் குமாரின் தலைமையில் தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மீண்டும் தோல்வியடைந்தனர். 1994 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சகலரையும் தமிழராகக் கொண்ட சுயேச்சை வேட்பாளர்கள் பட்டியலுக்கு குமார் தலைமை தாங்கினார். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. இலங்கையின் முதல் ஜனாதிபதி தேர்தல் 1982 அக்டோபரில் நடைபெற்றது. அதில் போட்டியிட்டதை அடுத்து குமார் தேசிய ரீதியில் பிரபல்யமானார். ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்ட அந்த ஜனாதிபதி தேர்தலில் 173, 000 வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று குமார் நான்காவதாக வந்தார். பின்னர் குமார் பொன்னம்பலம் விடுதலை புலிகள் இயக்கத்தை வெளிப்படையாகப் புகழத் தொடங்கினார். கொழும்பில் வாழ்ந்துகொண்டு அரசாங்கத்துக்கு ஆத்திரமூட்டக்கூடிய வகையில் விடுதலை புலிகளுக்கு ஆதரவான அறிக்கைகளை அவர் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தார். குமார் கொழும்பில் 2000 ஜனவரி 5 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். துப்பாக்கி ரவைகள் துளைத்த அவரின் உடல் வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் உள்ள ஒழுங்கை ஒன்றில் வாகனத்திற்குள் கிடக்கக்காணப்பட்டது. அவரது கொலைக்கு ஒரு சில தினங்கள் முன்னதாக குமார் பொன்னம்பலம் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதியிருந்தார். " ஒரு தமிழ் ஈழவன் என்ற முறையில் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். விடுதலை புலிகளின் அரசியல் கோட்பாட்டின் கலப்பற்ற, பச்சாதாபப்படாத ஒரு ஆதரவாளனாவும் அந்த நம்பிக்கையுடன் தென்னிலங்கையில் வாழ்கின்ற ஒருவனாகவும் இதை எழுதுகிறேன். இந்த நிலைப்பாட்டை இலங்கையில் மாத்திரமல்ல அதற்கு வெளியிலும் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்துகின்ற ஒருவனாக நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்" என்றே அவர் கடிதத்தை தொடங்கினார். விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குமாரின் மறைவுக்கு பிறகு " மாமனிதர் " என்ற கௌரவத்தை வழங்கினார். ஜீ.ஜீ.யின் பேரன், குமாரின் மகன் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் பேரனும் குமார் பொன்னம்பலத்தின் மகனுமான கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம் 1974 ஜனவரி 16 ஆம் திகதி பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியையும் இரண்டாம் நிலைக் கல்வியையும் கொழும்பு றோயல் கல்லூரியிலும் கொழும்பு சர்வதேச பாடசாலையிலும் பெற்றுக்கொண்ட கஜேந்திரகுமார் மூன்றாம் நிலைக் கல்விக்காக லண்டன் சென்றார். லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேய மற்றும் ஆபிரிக்க கற்கைகளுக்கான பாடசாலையில் சட்டத்தைப் படித்த அவர் சட்டமாணி (எல்.எல்.பி.) பெற்றார். பிறகு லிங்கன்ஸ் இன்னில் ஒரு பாரிஸ்டராக சேர்ந்து கொண்டார். கஜேந்திரகுமார் 1997 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒரு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதற்கு பிறகு அவர் இலங்கையில் ஒரு சட்டத்தரணியாக தகுதி பெறுவதற்காக கொழும்பில் சட்டக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். 1999 ஆம் ஆண்டில் இலங்கையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார். தனது தந்தையாரின் மறைவுக்கு பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீவிர அரசியலில் பிரவேசித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி. ஆர்.எல்.எவ்.) ஆகிய நான்கு தமிழ்க் கட்சிகள் 2001 ஆம் ஆண்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக ஒன்றிணைந்தன. கஜேந்திரகுமார் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.2004 ஆம் ஆண்டில் மீண்டும் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒரு கட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் விருப்பத்துக்குரியவராக கருதப்பட்ட கஜேந்திரகுமாருக்கு கூட்டயைப்புக்குள் பிரகாசமான அரசியல் எதிர்காலம் ஒன்று இருக்கும் என்ற பலரும் எதிர்வு கூறினர். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. கஜேந்திரனும் பத்மினியும் சுயாதீனமானதாக தோற்றம் பெற்றிருந்த போதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு பிறகு விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 2004 பொதுத்தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பட்டியலை பூர்த்தசெய்த விடுதலை புலிகள் தேர்தலில் முறைகேடுகளையும் செய்தனர். இரு தேசியப்பட்டியல் ஆசனங்கள் உட்பட கூட்டமைப்பு 24 ஆசனங்களை வென்றெடுத்தது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் விடுதலை புலிகளின் உயர் தலைமைத்துவத்துக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தனர். கஜேந்திரனும் பத்மினி சிதம்பரநாதனுமே அவர்கள். அவர்கள் இருவருக்கும் மிகவும் நெருக்கமானவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருந்தார். 2004 பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் விருப்பு வாக்குகளைப் பொறுத்தவரை, செல்வராஜா கஜேந்திரன் முதலாவதாகவும் ( 112, 077 ) பத்மினி இரண்டாவதாகவும் ( 68,240) கஜேந்திரகுமார் மூன்றாவதாகவும் (60, 770) வந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், 2009 மே மாதத்துக்கு பிறகு நிலைவரங்கள் மாறின. 2010 பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டபோது நிலைவரம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. ஏற்கெனவே விடுதலை புலிகளின் தலைமைத்துவத்துக்கு நெருக்கமானவர்களாக கஜேந்திரனும் பத்மினியும் இருந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை எதிர்த்து நிற்கவும் மலினப்படுத்தவும் அவர்களினால் " செல்வாக்கை" பயன்படுத்தக்கூடியதாக இருந்தது. பரமசிவன் கழுத்து நாகபாம்பு கருடனைப் பார்த்து நலமா என்று கேட்பதைப் போன்று அவர்கள் இருவரும் விடுதலை புலிகளிடம் தங்களுக்கு இருந்த செல்வாக்கு காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை அவமதித்தனர்.யாழ்ப்பாணத்தில் பல கல்விமான்களையும் துறைசார் நிபுணர்களையும் கூட அவர்கள் இருவரும் அலட்சியம் செய்தனர். கஜேந்திரனும் பத்மினியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியலிலும் ஈடுபட்டிருந்தனர். விடுதலை புலிகளுக்கு சார்பாக பட்டதாரி மாணவர்களை அரசியல்மயப்படுத்துவதிலும் தொடர்ச்சியான " "பொங்குதமிழ்" நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதிலும் அவர்கள் முன்னணியில் செயற்பட்டனர். பாலஸ்தீனத்தின் " இன்ரிபாடா " போராட்டத்தின் வழியில் மாணவர்களை வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கும் மாணவர்களை தூண்டினர். ஆனால், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச ப்துகாப்பு செயலாளராகவும் வந்த பிறகு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவான சக்திகளுக்கும் எதிராக வழமையான மார்க்கங்களிலும் வழமைக்கு மாறான வழிமுறைகளிலும் அரசாங்கம் பெருமளவில் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியது. விடுதலை புலிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளினால் பல்கலைக்கழக மாணவர்களில் சில பிரிவினர் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பக்கபலமாக செயற்பட கஜேந்திரனும் பத்மினியும் அங்கே நிற்கவில்லை. அவர்கள் இருவரும் முதலில் வன்னியிலும் பிறகு வெளிநாடுகளிலும் தஞ்சம் புகுந்தனர். 2010 தேர்தல் ஆனால், 2010 பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டபோது கஜேந்திரனும் பத்மினியும் நாடு திரும்பி மீண்டும் போட்டியிடுவதற்கு தயாராகினர். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் இவர்களுக்கு இடம்கொடுக்க தயாராக இருக்கவில்லை. மேலும், யாழ்ப்பாண மாணவர்களில் கணிசமான பிரிவினர் இவர்கள் இருவரையும் வேட்பாளர்களாக நியமனம் செய்வதை வரவேற்கப்போவதில்லை என்று கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அமைதியான முறையில் தெரியப்படுத்தினர். அதற்கு பிறகு நடந்தவற்றை எதிர்வரும் கட்டுரையில் பார்ப்போம். https://www.virakesari.lk/article/214154
  3. தரம்சலாவில் நடைபெற இருந்த 2 போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகளில் வாசித்த ஞாபகம்.
  4. சென்னையை விட்டு பாய்ஞ்சிட்டனா?! நம்பமுடியவில்லை!
  5. டேபிள் டாப்பில் குஜராத் டைட்டன்ஸ்: பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்- மும்பையின் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 6 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மே 2025 நடப்பு ஐபிஎல் சீசனின் 56வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. மழை குறுக்கீடு காரணமாக மாற்றியமைக்கப்பட்ட இந்த போட்டியில், மும்பை அணியை பேட்டிங்கில் சிறப்பாக கட்டுப்படுத்திய குஜராத் அணி சேசிங்கிலும் அசத்தியது. கடைசி பந்து வரை சென்ற இந்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. இதன் மூலம் குஜராத் அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் இதுவரையில் ஆடிய போட்டிகளின் நிலவரம் வருமாறு போட்டிகள்: 11, புள்ளிகள் 16, ரன்ரேட்: 0.793, எஞ்சியுள்ள போட்டிகள்: டெல்லி, லக்னெள, சிஎஸ்கே குஜராத் அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. 16 புள்ளிகளை எட்டியுள்ள குஜராத் வலுவான நிகர ரன்ரேட்டில் இருக்கிறது. குஜராத் அணியைப் பொருத்தவரை அடுத்து வரும் 3 போட்டிகளில் 1 போட்டியில் வென்றாலே ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய நிகர ரன்ரேட் துணை செய்யும். அதிலும் சொந்த மைதானத்தில் நடக்கும் 3 ஆட்டங்களில் 1 வெற்றி கிடைத்தாலே போதுமானது. சிஎஸ்கே, லக்னெள அணிகள் தடுமாறி வரும் நிலையில் அந்த அணிகளுக்கு எதிரான வெற்றி குஜராத்தை ப்ளே ஆஃப் சுற்றுக்குக் கொண்டு செல்லும். தோற்றாலும் ரன் ரேட்டில் வலுவான மும்பை அணி பட மூலாதாரம்,GETTY IMAGES போட்டிகள்: 12, புள்ளிகள்: 14, ரன்ரேட்: 1.156, எஞ்சியுள்ள ஆட்டங்கள்: பஞ்சாப், டெல்லி மும்பை அணி வலுவான ரன்ரேட்டில் 14 புள்ளிகளுடன் இருக்கிறது. அடுத்து வரக்கூடிய 2 ஆட்டங்களுமே மும்பை அணிக்கு சவாலானதுதான். இதில் இரண்டையுமே வென்றால் மட்டுமே மும்பை அணி கவலையின்றி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். வெற்றிக்கான கட்டாயம் இருக்கும் போதிலும், மற்ற அனைத்து அணிகளையும்விட ரன்ரேட் மும்பை அணிக்குத்தான் வலுவாக இருக்கிறது. இதனால், மும்பை ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கலாம். வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்த ஐபிஎல் சீசனில் ப்ளே ஆஃப் செல்லாமல் 3வது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெளியேறியது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றில் 4 இடங்களுக்கு 7 அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கவிருந்த 55வது குரூப் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. டெல்லி அணி முதலில் பேட் செய்து 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இந்த மழை தொடர்ந்து நீடித்ததால் மேற்கொண்டு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஆகவே ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இழந்தது. 11 போட்டிகளில் 7 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் அணி இருக்கிறது. இன்னும் 3 போட்டிகளில் அந்த அணி விளையாடி வென்றாலும் 13 புள்ளிகள்தான் பெற முடியும். இது ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லப் போதுமானதாக இருக்காது. இதையடுத்து ப்ளே ஆஃப் செல்லாமல் வெளியேறிய அணிகளின் எண்ணிக்கை சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் என 3 அணிகளாக அதிகரித்துள்ளது. அதேநேரம், ப்ளே ஆஃப் சுற்றில் 4 இடங்களுக்காக 7 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் லக்னெள, கொல்கத்தா அணிகளின் நிலைமை கம்பி மீது நடப்பது போல் இருக்கிறது. இந்த இரு அணிகளும் ஏதாவது ஒரு தோல்வியைச் சந்தித்தாலும் தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலையில் இருக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆர்சிபி அணிக்கு அடுத்ததாக லக்னெள, சன்ரைசர்ஸ், கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஆட்டங்கள் உள்ளன போட்டிகள்: 11, புள்ளிகள்: 16, நிகரரன்ரேட்: 0.482. எஞ்சியுள்ள போட்டிகள்: லக்னௌ, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா ஆர்சிபி அணி 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இருப்பினும் நிகர ரன்ரேட் மும்பை அணியைவிட குறைவாக இருப்பதால் நிகர ரன்ரேட்டை உயர்த்த வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆர்சிபி அணிக்கு அடுத்ததாக லக்னெள, சன்ரைசர்ஸ், கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஆட்டங்கள் உள்ளன. இதில் கொல்கத்தா, லக்னெள அணிகளை ஆர்சிபி வென்றாலே அந்த அணிகளின் தலைவிதி தெரிந்துவிடும். ஆர்சிபி அணியைப் பொருத்தவரை அடுத்து வரும் 3 போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு போட்டியை வென்றாலே 18 புள்ளிகளுடன் முடிக்க முடியும், 18 புள்ளிகள் வரை 5 அணிகளும் எடுக்க வாய்ப்புள்ளது. அதாவது ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் செல்ல நிகர ரன்ரேட்டை பொருட்டாகக் கருத வேண்டாம் என்றால் இன்னும் 2 வெற்றிகள் அவசியம். சொந்த மைதானத்தில் தொடர்ந்து 2 போட்டிகளை ஆர்சிபி வென்றது அந்த அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அடுத்து வரக்கூடிய 3 ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஏற்கெனவே வெளியேறிவிட்டதால் அந்த அணிக்கு வெற்றி தோல்வி பாதிக்காது, ஆர்சிபி எளிதாக வென்றுவிடலாம். ஆனால், கொல்கத்தா, லக்னெள அணிகளை ஆர்சிபி வெல்லும்பட்சத்தில் அந்த அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பு சிக்கலாகும். தோனி கண்ணில் பட்ட இலங்கை பள்ளி மாணவன் - ஐபிஎல்லில் கலக்கும் இலங்கை வீரர்கள்5 மே 2025 லக்னெளவை விளாசிய பிரப்சிம்ரன் - பஞ்சாபின் புதிய ஆயுதமாக மாறியது எப்படி?6 மே 2025 பஞ்சாப் கிங்ஸ் போட்டிகள்: 11, புள்ளிகள்: 15, ரன்ரேட்: 0.376, எஞ்சியுள்ள போட்டிகள்: டெல்லி, மும்பை, ராஜஸ்தான் பஞ்சாப் கிங்ஸ் அணி 15 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது, ஆனால், நிகர ரன்ரேட் அடிப்படையில் மும்பையைவிட குறைவாக இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றில் இடம் பிடிக்க பஞ்சாப் அணிக்கு எஞ்சியுள்ள 3 போட்டிகளில் குறைந்தபட்சம் 2 வெற்றிகள் தேவை. அப்போதுதான் 19 புள்ளிகளுடன் இடத்தை உறுதி செய்ய முடியும். ராஜஸ்தான் அணி ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில் அந்த அணியையும், மும்பை அல்லது டெல்லி அணியையும் வென்றால் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யலாம். ஒருவேளை பஞ்சாப் அணி 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்தால், மற்ற அணிகளின் வெற்றி தோல்விக்காகக் காத்திருக்க வேண்டியதிருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பஞ்சாப் கிங்ஸ் அணி 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது 6 தொடர் சிக்சர்களை பறக்கவிட்டு அச்சுறுத்திய ரியான் பராக் - ஒரு ரன் வித்தியாசத்தில் தப்பிப் பிழைத்த கே.கே.ஆர்4 மே 2025 சிறிய அலட்சியத்தால் தோற்றதா சென்னை? விடாமல் பயம் காட்டும் அந்த ஒரு விஷயம் என்ன?4 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ப்ளே ஆஃப் செல்ல டெல்லி அணிக்கு குறைந்தபட்சம் 2 வெற்றிகளாவது தேவை டெல்லி கேபிடல்ஸ் போட்டிகள்:11, புள்ளிகள்: 13, ரன்ரேட்: 0.362, மீதமுள்ள ஆட்டங்கள்: பஞ்சாப், குஜராத், மும்பை டெல்லி அணி தொடக்கத்தில் 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தது. ஆனால், அதன் பிறகு 6வது இடத்துக்குச் சரிந்து, கடைசி 4 போட்டிகளில் 3 புள்ளி மட்டுமே கிடைத்துள்ளது. தற்போது அந்த அணி 5 வது இடத்தில் உள்ளது. டெல்லி அணிக்கு அடுத்து வரக்கூடிய குஜராத், பஞ்சாப், மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மிகவும் சவாலானது. ப்ளே ஆஃப் செல்ல டெல்லி அணிக்கு குறைந்தபட்சம் 2 வெற்றிகளாவது தேவை. ஆனாலும் 17 புள்ளிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா என்று கூற முடியாது. மும்பை, பஞ்சாப், குஜராத் அணிகளை வீழ்த்துவதும் எளிதானது அல்ல. டெல்லி அணிக்கு அடுத்து வரக்கூடிய 3 போட்டிகளிலும் வெல்வதுதான் ப்ளே ஆஃப் செல்வதற்கான எளிய வழி. GT vs SRH: தமிழக வீரர் சாய் சுதர்சன் முதலிடம் - சுப்மன் கில் ரன் அவுட் சர்ச்சையானது ஏன்?3 மே 2025 ப்ளே ஆஃப் சுற்றில் நுழையப்போவது யார்? 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி3 மே 2025 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொல்கத்தா அணி ஒரு தோல்வியைத் தழுவினாலும்கூட தொடரிலிருந்து வெளியேறிவிடும் போட்டிகள்: 11, புள்ளிகள்: 11, ரன்ரேட்: 0.249, எஞ்சியுள்ள ஆட்டங்கள்: சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், ஆர்சிபி நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி மதில்மேல் பூனையாக நிற்கிறது. அடுத்து வரக்கூடிய 3 ஆட்டங்களில் வென்றாலும்கூட 17 புள்ளிகள்தான் கிடைக்கும். இது ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்கப் போதுமானதாக இருக்குமா என்று உறுதியாகக் கூற முடியாது. ஐந்து அணிகள் 18 புள்ளிகள் வரை எடுக்க வாய்ப்பிருக்கும்போது கொல்கத்தா அணியின் 17 புள்ளிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பைப் பெற்றுத் தராது. கொல்கத்தா அணி அடுத்து மோதும் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டதால், அந்த அணிகளை வெற்றி தோல்வி பாதிக்காது. ஆனால், கொல்கத்தா அணி ஒரு தோல்வியைத் தழுவினாலும்கூட தொடரிலிருந்து வெளியேறிவிடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லக்னெள அணி கேப்டன் ரிஷப் பன்ட் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் போட்டிகள்: 11, புள்ளிகள்:10, ரன்ரேட்: -0.469, எஞ்சியுள்ள ஆட்டங்கள்: ஆர்சிபி, குஜராத், சன்ரைசர்ஸ் லக்னெள அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது. அடுத்து வரும் 3 ஆட்டங்களிலும் பிரமாண்ட வெற்றி பெற்றால்தான் 16 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டையும் உயர்த்த முடியும். 16 புள்ளிகள்கூட ப்ளே ஆஃப் செல்ல முடியுமா என்பதை உறுதி செய்யாது. ஆர்சிபி, குஜராத் அணிகள் ஏற்கெனவே 16 புள்ளிகளை தொட்டுவிட்ட நிலையில் கடைசி இரு இடங்களுக்குத்தான் லக்னெள போட்டியிட முடியும். எஞ்சிய 3 ஆட்டங்களில் ஆர்சிபி, குஜராத்தை வெல்வது லக்னெளவுக்கு கடினமான பணி. நிகர ரன்ரேட்டும் மோசமாக இருப்பதால், ஒரு தோல்வி அடைந்தாலே லக்னெளவின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/crkxg5djppgo
  6. சகல உள்ளுராட்சிமன்றங்களிலும் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துங்கள்; தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் Published By: VISHNU 07 MAY, 2025 | 09:24 PM (நா.தனுஜா) உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம், உள்ளுராட்சிமன்றங்களில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டிய சட்டரீதியான கடப்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருக்கிறது. எனவே ஒவ்வொரு உள்ளுராட்சிமன்றமும் இளம் பெண்கள் உள்ளடங்கலாக 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதனை தேர்தல்கள் ஆணைக்குழு இறுக்கமாக நடைமுறைப்படுத்தவேண்டும். அதிலிருந்து தவறும் அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும் என 34 பெண்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து மன்னார் பெண்கள் அபிவிருத்திப்பேரவை, சமூக அபிவிருத்தி நிலையம், கிழக்கு சமூக அபிவிருத்தி நிதியம், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிதியம் என்பன உள்ளடங்கலாக 34 பெண்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் முடிவடைந்திருப்பதுடன், உள்ளுராட்சிமன்றங்களில் பெண்களின் 25 சதவீத கட்டாய பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தை இது மீளநினைவூட்டியிருக்கிறது. இம்முறை தேர்தலில் வாக்களித்தோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும், பிரசாரம், வாக்களிப்பு, தேர்தலில் போட்டியிடல், போனஸ் ஆசனத்தில் பதிவுசெய்யப்படல் என தேர்தல் செயன்முறையின் சகல கூறுகளிலும் பெண்கள் உத்வேகத்துடன் பங்கேற்றமையைக் காணமுடிந்தது. இதற்கு முன்னர் உள்ளுராட்சிமன்றங்களில் அங்கம்வகித்த அனுபவத்தைக்கொண்ட பெண்கள் பலர் இம்முறை கட்சிகளின் ஊடாகவோ, சுயேட்சையாகவோ போட்டியிட்டனர். அதேவேளை இத்தேர்தலில் அநேகமான பெண்கள் அதிகளவு வாக்குகளைப் பெற்றிருப்பதையும், மீண்டும் உள்ளுராட்சிமன்ற அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றிருப்பதையும் அவதானிக்கமுடிகிறது. இருப்பினும் பல சிறிய கட்சிகள் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களையே கைப்பற்றியிருப்பதானது, 'ஒவ்வொரு மூன்று ஆசனங்களுக்கு ஒரு பெண்' என்ற பிரதிநிதித்துவ வீதத்தை உறுதிசெய்வதில் சிக்கலை தோற்றுவித்திருக்கிறது. கடந்தகால தேர்தல் நடைமுறைகளை அவதானிக்கையில், பெரும்பாலான கட்சிகள் பெண்களை வேட்பாளர்களாக முன்மொழிவதில் தயக்கம் காண்பித்திருப்பதுடன், சில உள்ளுராட்சிமன்றங்கள் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதற்கு முழுமையாகத் தவறியிருந்தன. இருப்பினும் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் சட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் பிரகாரம், 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டிய சட்டரீதியான கடப்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு உள்ளுராட்சிமன்றமும் இளம் பெண்கள் உள்ளடங்கலாக 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதனை தேர்தல்கள் ஆணைக்குழு கட்டாயமாக நடைமுறைப்படுத்தவேண்டும். குறித்தவொரு கட்சி இரண்டு ஆசனங்களை வென்றிருப்பின், அவற்றில் குறைந்தபட்சம் ஒரு ஆசனமேனும் பெண் பிரதிநிதிக்கு ஒதுக்கப்படவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தவேண்டும். இக்கட்டாய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு அதற்குரிய அங்கீகாரம் பகிரங்கமாக வழங்கப்படும் அதேவேளை, அதனை உறுதிப்படுத்தாத கட்சிகள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/214139
  7. பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஆயுதமாக பிரப்சிம்ரன் உருவெடுத்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2019ம் ஆண்டே பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட பிரப்சிம்ரனுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மே 2025 லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்டர் 3 பேர் பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழக்கச் செய்து லக்னெளவின் தோல்வியை உறுதி செய்தார் பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங். தரம்சாலாவில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 37 ரன்களில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணி. 237 ரன்கள் இலக்கை துரத்திய லக்னெள அணி 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம் இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகள் பெற்று 2வது இடத்துக்கு நகர்ந்து ப்ளே ஆஃப் சுற்றை தக்கவைத்துள்ளது. இருப்பினும் இன்னும் 2 வெற்றிகள் அந்த அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும். பஞ்சாப் அணி புள்ளிகள் அடிப்படையில் 2வது இடத்தில் இருந்தாலும், அதன் நிகர ரன்ரேட் 0.376 என்று மும்பை(1.274), குஜராத் (0.867) அணிகளைவிடவும் குறைவாக இருக்கிறது. அடுத்துவரும் போட்டிகளில் ரன்ரேட்டை உயர்த்தும் அளவுக்கு பெரிய வெற்றிகளைப் பெற வேண்டியது அவசியமாகும். அதேசமயம், லக்னெள அணி 11 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் இருக்கிறது நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.456 ஆகக் குறைந்துவிட்டது. அடுத்துவரும் 3 போட்டிகளிலும் கட்டாயமாக பெரிய வெற்றிகளைப் பெற்று நிகர ரன்ரேட்ட உயர்த்தினால் ப்ளே ஆஃப் சுற்று நிலவரம் தெரியவரும். 16 புள்ளிகள் என்பது கூட இப்போதுள்ள நிலைமையில் சாத்தியமில்லாததாகத் தெரிகிறது. ஆதலால், லக்னெள அணி 16 புள்ளிகளுடன், நல்ல ரன்ரேட் பெற்றால் வாய்ப்பு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES பஞ்சாப் அணியின் 'மற்றொரு சேவாக்' பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் இருந்தபோது தொடக்க ஆட்டம் மிக வலிமையாக இருந்தது. அதே காலகட்டத்தை தற்போது பிரப்சிம்ரன் இருக்கும்போது பஞ்சாப் அணி பெற்றுள்ளது. பிரப்சிம்ரன் இதுவரை சர்வதேச போட்டிகளில் எதிலும் விளையாடாத அன்கேப்டு வீரர், இருப்பினும் ஐபிஎல் தொடரில் சர்வதேச பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்குகிறார். இந்த ஆட்டத்தில் 30 பந்துகளில் அரைசதம் அடித்த பிரப்சிம்ரன் சிங், 48 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார், ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இதில் 7 சிக்ஸர்கள், 6 பவுண்ரிகள். 30 பந்துகளில் அரைசதம் அடித்த பிரப்சிம்ரன், அடுத்த 18 பந்துகளில் 41 ரன்களைச் சேர்த்து 9 ரன்களில் சதத்தை தவறவிட்டார். முதல் தரப்போட்டிகளிலும், லிஸ்ட் ஏ போட்டிகளிலும் 50 ஆட்டங்களுக்கும் குறைவாகவே பிரப்சிம்ரன் பங்கேற்றுள்ளார். இருப்பினும் பிரப்சிம்ரன் ஆட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து 2019ம் ஆண்டு ஏலத்திலேயே ரூ.4.80 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. 2019ம் ஆண்டே பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட பிரப்சிம்ரனுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. 2023 சீசனில் இருந்துதான் பஞ்சாப் அணி பிரப்சிம்ரனை அனைத்துப் போட்டிகளிலும் பயன்படுத்தத் தொடங்கியது. கடந்த 3 சீசன்களிலும் சேர்த்து பிரப்சிம்ரன் சிங் 1,100 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதன் மூலம் அன்கேப்டு வீரர் ஒருவர் ஐபிஎல் டி20 போட்டியில் 1,100 ரன்களுக்கு மேல் சேர்த்த முதல் பேட்டர் என்ற பெருமையை பிரப்சிம்ரன் சிங் பெற்றார். நடப்பு சீசனிலும் 11 போட்டிகளில் ஆடிய பிரப்சிம்ரன் சிங் இதுவரை 4 அரைசதம் உள்பட 437 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 3 போட்டிகளும், ப்ளே ஆஃப் சுற்றுகளும் உள்ளதால் இவரின் ரன் கணக்கு இன்னும் அதிகரிக்கும். ஐபிஎல் தொடரில் இலங்கை வீரர்கள் : பதிராணா முதல் மலிங்கா 2.0 வரை5 மே 2025 6 தொடர் சிக்சர்களை பறக்கவிட்டு அச்சுறுத்திய ரியான் பராக் - ஒரு ரன் வித்தியாசத்தில் தப்பிப் பிழைத்த கே.கே.ஆர்4 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பஞ்சாப் அணி மட்டும் நேற்றைய ஆட்டத்தில் 18 பவுண்டரி, 16 சிக்ஸர்களை விளாசி 200 ரன்களுக்கு மேல் 11 வது முறையாகக் குவித்தது பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிரயன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆட்டம் அந்த அணிக்கு மிகப்பெரிய தூணாக அமைந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தாலே அடுத்து களமிறங்கும் வீரர்கள் மீது அழுத்தம் இருக்காமல், நிதானமாக நினைத்த ஷாட்களை ஆடி ஸ்கோரை உயர்த்த முடியும். அந்தப் பணியை பிரப்சிம்ரன் சிங் செய்துள்ளார். ஒரு காலத்தில் பஞ்சாப் அணிக்கு சேவாக் அளித்த அதிரடியான தொடக்கத்தை தற்போது பிரப்சிம்ரன் அளித்து வருகிறார். பஞ்சாப் அணி மட்டும் நேற்றைய ஆட்டத்தில் 18 பவுண்டரி, 16 சிக்ஸர்களை விளாசி 200 ரன்களுக்கு மேல் 11 வது முறையாகக் குவித்தது. இந்த சாதனையை மும்பை அணிக்கு அடுத்தார்போல் பஞ்சாப் அணி செய்துள்ளது. பிரப்சிம்ரன் சிங் ஆட்டம் தொடங்கியதிலிருந்தே அதிரடியாக பேட் செய்தார். பிரப்சிரம்ரன் 22 ரன்களில் இருந்தபோது ஆட்டமிழந்திருக்க வேண்டும், ஆனால் நிகோலஸ் பூரன் கேட்சை தவறவிட்டார். தனக்குக் கிடைத்த வாய்ப்பை வலுவாகப் பயன்படுத்திய பிரப்சிம்ரன் 91 ரன்களைக் குவித்து பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டார். ஸ்ரேயாஸ் அய்யர் (45), இங்கிலிஸ் (30) இருவரும் நடுப்பகுதயில் ஸ்கோரை உயர்த்த உதவினர். கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடிவரும் ஸ்ரேயாஸ் அய்யர் தன்னுடைய இடத்தில் இங்கிலிஸை களமிறக்கி ஆடவைத்து பின்வரிசையில் களமிறங்கினார். கடைசி நேரத்தில் சஷாங் சிங் கேமியோ ஆடி 15 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்ரேயாஸ் அய்யர், இங்கிலிஸ் இருவரும் நடுப்பகுதயில் ஸ்கோரை உயர்த்த உதவினர் அர்ஷ்தீப் எனும் பிரம்மாஸ்திரம் பஞ்சாப் அணிக்கு பந்துவீச்சில் கிடைத்திருக்கும் பிரம்மாஸ்திரம் அர்ஷ்தீப் சிங். 2019ம் ஆண்டிலிருந்து பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் நீடித்து வருகிறார். இதுவரை பஞ்சாப் அணிக்காக மட்டும் 92 விக்கெட்டுகளை அர்ஷ்தீப் வீழ்த்தியுள்ளார். இந்த சீசனிலும் இதுவரை 16 விக்கெட்டுகளை அர்ஷ்தீப் வீழ்த்தியுள்ளார். புதிய பந்தில் இடதுகை, வலது கைபேட்டர்களுக்கு ஏற்றவாறு பந்தை ஸ்விங் செய்து வீசுவதில் சிறப்பானவர் அர்ஷ்தீப் சிங். இந்த ஆட்டத்தில் பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் லக்னெள அணிக்கு தூண்களாக இருக்கும் டாப்ஆர்டர் பேட்டர்கள் எய்டன் மார்க்ரம் (13), மார்ஷ் (0), நிகோலஸ் பூரன் (6) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னெள அணியின் தோல்வியை ஏறக்குறைய உறுதி செய்தார். 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து லக்னெள அணி தடுமாறியது. இதைப் பயன்படுத்தி தொடர்ந்து பஞ்சாப் அணி நெருக்கடியளிக்க, கேப்டன் ரிஷப் பண்ட் (18), மில்லர் (11) என ஓமர்சாய் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தவுடன் லக்னெள தோல்வி உறுதியானது. 237 ரன்களை சேஸ் செய்யும் போராட்டத்தில் லக்னெள அணி 5 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் என்று போராடியது. அப்துல் சமது (45), ஆயுஷ் பதோனி (74) ஆகியோர் இறுதிவரை தங்களால் முடிந்த பங்களிப்பை அளித்து 41 பந்துகளில் 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். "ஏதேனும் ஒன்று குறையென்றால் சமாளிக்கலாம்" விரக்தியின் உச்சத்தில் தோனி - கவுரவத்தை காப்பாற்றுமா சிஎஸ்கே30 ஏப்ரல் 2025 சிஎஸ்கே ரசிகர்களை முதல் போட்டியிலேயே கவர்ந்த 'ஆயுஷ் மாத்ரே' அணியில் இடம் பிடித்த சுவாரஸ்ய பின்னணி21 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பஞ்சாப் அணிக்கு பந்துவீச்சில் கிடைத்திருக்கும் பிரம்மாஸ்திரம் அர்ஷ்தீப் சிங். 2019ம் ஆண்டிலிருந்து பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் நீடித்து வருகிறார் லக்னெளவின் கவலைகள் காயத்திலிருந்து மீண்டுவந்த மயங்க் யாதவை அணியில் சேர்த்தது லக்னெள அணி. கடந்த சீசனில் இருந்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மயங்க் யாதவ் பந்துவீச்சை பிரப்சிம்ரன் வெளுத்துவிட்டார். 4 ஓவர்கள் வீசிய மயங்க் 60 ரன்களை வாரி வழங்கினார். ஆவேஷ் கான் 19வது ஓவரில் மட்டும் 26 ரன்களை விட்டுக்கொடுத்தார் , இதில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் சென்றது. பஞ்சாப் அணியில் ஆகாஷ் சிங் மட்டுமே ஓவருக்கு 7 ரன்ரேட்டில் பந்துவீசினார், மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 14 ரன்ரேட்டில் பந்துவீசினர். பேட்டர்களில் நிகோலஸ் பூரன் முதல் 6 போட்டிகளில் லக்னெளவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்து அதிரடியாக பேட் செய்தார். முதல் 6 போட்டிகளில் 4 அரைசதங்களையும், ஒரு 44 ரன்கள், 12 ரன்கள் என 349 ரன்கள் சேர்த்து 69 சராசரி வைத்திருந்தார். நிகோலன் பூரனின் அதிரடி ஆட்டம் எதிரணிகளுக்கு பெரிய சவாலாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,237 ரன்களை சேஸ் செய்யும் போராட்டத்தில் லக்னெள அணி 5 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் என்று போராடியது ஆனால் கடந்த 5 போட்டிகளில் நிகோலஸ் பூரன் அதிபட்சமாக 27 ரன்களைக் கடக்கவில்லை, 5 போட்டிகளில் 61 ரன்கள் மட்டுமே சேர்த்து 12.2 ரன்கள் சராசரி வைத்துள்ளார். அதேபோல மிட்ஷெல் மார்ஷ் 2வது பகுதியிலும் பெரிதாக சோபிக்காதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவு. இதைவிட முக்கியமானது அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இந்த சீசனில் இதுவரை ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். இந்த சீசனில் 11-வது போட்டியில் 9வது முறையாக 25 ரன்களுக்கும் குறைவாக ரிஷப் பண்ட்நேற்று சேர்த்தார். ஐபிஎல் ஏலத்தில் அதிகமான தொகைக்கு ரிஷப் பண்ட் வாங்கப்பட்ட அழுத்தம் காரணமாக, அணியை வழிநடத்துவதிலும், ரன்களைச் சேர்ப்பதிலும் கடும் நெருக்கடியை எதிர்கொள்கிறார். மனிதனின் இடுப்பெலும்பில் சிங்கத்தின் பல்தடம் - ரோமானிய கிளாடியேட்டர் சண்டைகளுக்கு ஆதாரம்3 மே 2025 ஓட்டோமான் பேரரசின் அடிமைப்பெண் அரசியான கதை - ஹுர்ரெம் சுல்தானின் அறியாத பக்கங்கள்1 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மிட்சல் மார்ஷ் கடின உழைப்புக்கு பலன் வெற்றிக்குப்பின் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் கூறுகையில் " வீரர்கள் ஒவ்வொருவரும் சரியான நேரத்தில் விஸ்வரூமெடுக்கிறார்கள், அருமையாக பங்களிப்பு செய்கிறார்கள். பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் ஆட்டம் அருமையாக இருந்தது. களத்தில் இறங்கும்போது வெல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு வருகிறோம். அதில் புள்ளிவிவரங்களைப் பற்றி நாங்கள் யோசிப்பதில்லை, எந்த ஸ்கோர் எடுத்தாலும் அதை டிபெண்ட் செய்ய வேண்டும். கடின உழைப்புக்கு பலன் கிடைத்து வருகிறது. ஒவ்வொரு வீரரும் சிறப்பான பங்களிப்பு செய்கிறார்கள். விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். புள்ளிவிவரங்களைப் பற்றி கவலைப்படதீர்கள், வெற்றி மட்டுமே முக்கியம் என்று வீரர்களிடம் தெரிவித்துள்ளோம்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அர்ஷ்தீப் சிங் இன்றைய ஆட்டம் சன்ரைசர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் இடம்: ஹைதராபாத் நேரம்: இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் நாள் – மே 6 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம் கொல்கத்தா vs சிஎஸ்கே நாள் – மே 7 இடம் – கொல்கத்தா நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs லக்னெள நாள் – மே 9 இடம் – லக்னெள நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு விராட் கோலி(ஆர்சிபி) 505 ரன்கள்(11 போட்டிகள்) சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-504 ரன்கள்(10 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 475 (11 போட்டிகள்) பர்ப்பிள் தொப்பி பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 19 விக்கெட்டுகள்(10 போட்டிகள்) ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்) அர்ஷ்தீப் சிங்(பஞ்சாப்) 16 விக்கெட்டுகள்(11போட்டிகள்) - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c8x80qdl5g1o
  8. யாருப்பா இந்த பையன் உர்வில் பட்டேல்?! Urvil Patel* (rhb) 24 7 1 3 Chennai Super Kings (1.5/20 ov, T:180) 25/2 CSK need 155 runs in 109 balls. Current RR: 13.63 • Required RR: 8.53 Win Probability: CSK 39.45% • KKR 60.55%
  9. பஹல்காம் தாக்குதல் : இனிமேல் என்ன நடக்கும்? 07 MAY, 2025 | 11:56 AM கேணல் ஆர்.ஹரிஹரன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரின் பாகிஸ்தான் வசம் உள்ள பகுதியின் நடைமுறை எல்லை (Line of Control) வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. கடந்த 25 ஆண்டுகளில் அத்தகைய 12,037 மோதல்களில் 22,415 பேர் கொல்லப்பட்டதாக தெற்காசிய பயங்கரவாத விவரங்கள் தரும் வலைதளம் ஒன்று கூறுகிறது. கொல்லப்பட்டவர்களில் 4,980 பேர் அப்பாவி மக்கள், பெரும்பாலோர் (12,390) தீவிரவாதிகளே. பஹல்காமின் அருகே கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி நடந்த தாக்குதலில் பங்குபற்றிய நான்கு அல்லது ஐந்து தீவிரவாதிகள் அங்கே கூடியுள்ள சுற்றுலாப் பயணிகளில் இந்து ஆண்களைத் தெரிவு செய்து சுட்டுத்தள்ளினார்கள். அவர்கள் ஆயுதத்தைப் பறிக்க முயன்ற ஒரு முஸ்லிம் இளைஞனையும் வீழ்த்தினார்கள். பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா (எல்.இ.டி)யின் கீழ் காஷ்மீரில் இயங்கி வரும் “தி ரெசிஸ்ட்டன்ஸ் ஃபுரன்ட்” என்ற இயக்கத்தை சார்ந்த மூவர் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். இவர்களில் ஒருவர் பாகிஸ்தானியர். அப்பாவி மக்களைக் குறிவைத்த இந்த தாக்குதல், பல கேள்விகளை எழுப்பியுள்ளது. நடைமுறை எல்லையில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள பஹல்காமில் சுற்றுலா வரும் மக்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதன் குறிக்கோள் என்ன? இந்த தாக்குதல் மூலம் பாகிஸ்தான் அரசு மற்றும் இராணுவம் என்ன செய்தி சொல்ல விரும்புகிறது? 2019ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு விசேட அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு இரத்துச் செய்யப்பட்ட பிறகு, தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து வருகின்றன. முக்கியமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தாக்குதல்கள் பாதியாக குறைந்தது மட்டும் அல்லாமல் அவற்றின் தீவிரமும் குறைந்துள்ளது. அதனால் அங்கே சுற்றுலா வர்த்தகம் குறிப்பிடத்தக்க எழுச்சி அடைந்துள்ளது. உதாரணமாக, 2023ஆம் ஆண்டில், முன்னெப்போதும் காணாத வளர்ச்சியாக 2.11 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பகுதியில் சுற்றுலாத்துறை ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15.13%ஆக வளர்ந்து வருகிறது. பாகிஸ்தானின் இந்திய கொள்கையின் அடிப்படையே ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுப்பதாகும். ஆகவே தான் இந்தியாவுடன் நடந்த நான்கு போர்களில் பாகிஸ்தான் மூன்று முறை காஷ்மீரை மையப்படுத்தியது. ஆகவே அங்கே முன்னேறிவரும் பொருளாதார வளர்ச்சி தீவிரவாதத்தை நீர்த்துப் போகச்செய்வதால், பாகிஸ்தான் அதைத் தடுக்கவே சுற்றுலா பயணிகளின் மீது தாக்குதலை நடத்தியுள்ளது. இரண்டாவதாக, பாகிஸ்தானில் உள்ள பி.எல்.ஏ என்று கூறப்படும் பலூச் விடுதலை இராணுவப் போராளிகள் அண்மையில் பாகிஸ்தான் இராணுவத்தை எதிர்த்து தமது தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு 380 பயணிகளுடன் பயணித்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலை அவர்கள் கடத்தினார்கள். பாகிஸ்தான் ராணுவம் அணுகுவதற்கு கடினமாக இருந்த ஒரு மலைப்பகுதியில் அதை நிறுத்தினார்கள். பலூச் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் அல்லது பணயக் கைதிகள் கொல்லப்படுவார்கள் என்று அந்த அமைப்பு 48 மணிநேர இறுதி எச்சரிக்கை விடுத்தது. இந்த தாக்குதல் பாகிஸ்தான் இராணுவத்தின் இயலாமையை உலகுக்கு எடுத்துக்காட்டியது. இந்த கடத்தலில் இந்தியா பலூச் தீவிரவாதிகளுக்கு உதவியதாக பாகிஸ்தான் இராணுவம் நம்புகிறது. பாகிஸ்தானின் இராணுவத் தலைமைத் தளபதி (COAS) ஜெனரல் சையத் அசிம் முனீர், பஹல்காம் தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் பேசுகையில் பாகிஸ்தான் பிரிவினைக்கு அடிப்படையான இரு நாடுகள் கோட்பாட்டை எழுப்பினார். "முஸ்லிம்களும் இந்துக்களும் ஒன்று அல்ல, இரண்டு தனித்தனி நாடுகள் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது இருநாடுகள் கோட்பாடு. மதம், பழக்க வழக்கங்கள், மரபுகள், சிந்தனை மற்றும் அபிலாசைகள் உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முஸ்லிம்கள் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள்" என்று பாகிஸ்தான் இராணுவ அகடமியில் (PMA) நடந்த பயிற்சி அணிவகுப்பில் உரையாற்றும்போது அவர் கூறினார். இந்த மனப்பான்மையின் பிரதிபலிப்பே இந்த தடவை தாக்குதலில் தீவிரவாதிகள் இந்துக்களை தனிமைப்படுத்தி கொன்றது என்று கொள்ளலாமா என்ற ஐயம் ஏற்படுகிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அவர் பேசுகையில் "நமது முன்னோர்கள் பாகிஸ்தானை உருவாக்க மகத்தான தியாகங்களைச் செய்தனர். அதை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்" என்று அவர் கூறியது இந்த பிரச்சினையை எளிதில் முடிக்க பாகிஸ்தான் தயாராக இல்லை எனக் காட்டுகிறது. இந்தியா தொடர்பான தீர்மானங்களை பாகிஸ்தானில் இராணுவமே எடுக்கும். ஆகவே இந்திய-பாகிஸ்தான் தீவிரவாதப் போர், இராணுவப் போராக மாறும் அபாயம் அதிகமாகி வருகிறது என்றே கொள்ளலாம். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். மற்றும் இந்தியா சர்வதேச நாடுகளுக்கு பாகிஸ்தானில் மையம் கொண்டுள்ள தீவிரவாதத்தை எதிர்த்து தனது நிலைப்பாட்டை விளக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. 1960இல் பாகிஸ்தானுடன் கையொப்பமான சிந்து நதி தண்ணீர் பங்கீடு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஆகவே தற்போது, இந்தியா போரில் ஈடுபடாமல் மாற்று வழிகளில் பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுக்க விரும்புகிறது என்று கொள்ளலாம். இதனால் பயன் உண்டா என்பது சந்தேகமே. ஏனெனில், 26 நவம்பர் மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவே கூட பாகிஸ்தான் இதுவரை திருப்தியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் போர் விளையுமா என்ற வினாவுக்கு விடை காண்பது அவ்வளவு எளிதில்லை. https://www.virakesari.lk/article/214090
  10. 28 ஆம் திகதிக்குள் வர்த்தமானி அறிவித்தலை மீள பெறாவிட்டால் 29 இல் போராட்டம் வெடிக்கும்; சுமந்திரன் அறிவிப்பு வடக்கிலே ஆறாயிரம் ஏக்கர் காணி பறிபோகும் அபாயம் காணப்படுவதாகவும், அது குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக அரசு மீள பெறவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறவேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது. இன்று காலை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317702
  11. INNINGS BREAK 57th Match (N), Eden Gardens, May 07, 2025, Indian Premier League KKR chose to bat. Kolkata Knight Riders (20 ov) 179/6 Current RR: 8.95 • Last 5 ov (RR): 55/2 (11.00) Chennai Super Kings Win Probability: KKR 53.57% • CSK 46.43%
  12. 6 தொடர் சிக்சர்களை பறக்கவிட்டு அச்சுறுத்திய ரியான் பராக் - ஒரு ரன் வித்தியாசத்தில் தப்பிப் பிழைத்த கே.கே.ஆர் பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மே 2025 ஐ.பி.எல். தொடரின் 53வது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்த ராஜஸ்தான் அணியும், ஒரு போட்டியில் தோற்றாலும் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோகும் நிலையில் இருக்கும் கொல்கத்தா அணியும் மோதின. கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணி போராடி, ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது. இதனால் பிளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்பை கொல்கத்தா அணி தக்க வைத்துள்ளது என்ற போதிலும், அந்த அணி இன்னும் எஞ்சியுள்ள போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிளே ஆஃப்க்கு முன்னேற அனைத்து போட்டிகளிலும் கொல்கத்தா அணி வென்றாக வேண்டும் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். பவர்பிளேயில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்களை எடுத்தது. அபாயகரமான பேட்டரான சுனில் நரேனை இந்த போட்டியில் ராஜஸ்தான் 11 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. எனினும் ரஹ்மானுல்லா மற்றும் அஜிங்க்யா ரஹானே சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். மற்ற பேட்டர்கள் யாருமே ஏமாற்றாமல் தங்கள் பங்களிப்பை வழங்கினர். குறிப்பாக ஆண்ட்ரூ ரஸ்ஸல் 25 பந்துகளில் 57 ரன்களை விளாசினார். ரிங்குசிங் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி 6 பந்துகளில் 19 ரன்களை எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் 4 ஓவர்கள் வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதே போன்று வனிந்து ஹசரங்காவும் 4 ஓவர்களில் 35 ரன்களை கொடுத்திருந்தார். "ஏதேனும் ஒன்று குறையென்றால் சமாளிக்கலாம்" விரக்தியின் உச்சத்தில் தோனி - கவுரவத்தை காப்பாற்றுமா சிஎஸ்கே30 ஏப்ரல் 2025 வைபவ் சூர்யவன்ஷி: 14 வயதில் உலக கிரிக்கெட்டை திரும்பிப் பார்க்க வைத்த விவசாயி மகன்29 ஏப்ரல் 2025 சிஎஸ்கே-வில் தோனி நீடிப்பது அணிக்கு பலமா? பலவீனமா?1 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டநாயகன் விருது பெற்ற ஆண்ட்ரூ ரஸ்ஸல் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. அதிரடி சதத்தால் எதிர்பார்ப்புக்கு ஆளாகியிருந்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் இதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரியான் பராக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 29 பந்துகளில் அரை சதத்தைக் கடந்த ரியான் பராக், மொயின் அலி வீசிய 13வது ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடினார். இந்த ஓவரில் ஒரு வைடு பந்து தவிர்த்து வீசப்பட்ட 5 பந்துகளில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை ரியான் பராக் பறக்கவிட்டார். அடுத்ததாக வருண் சக்ரவர்த்தி வீசிய 14வது ஓவரின் முதல் பந்தை சிம்ரன் ஹெட்மயர் எதிர்கொண்டு ஒரு ரன் எடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரியான் பராக்கின் அச்சுறுத்தலான ஆட்டம் மீண்டும் ஸ்டிரைக்கர் எண்டுக்கு வந்த ரியான் பராக் அந்த ஓவரின் 2 வது பந்தில் சிக்சரை விளாசினார். இதன் மூலம் தொடர்ச்சியாக தான் எதிர்கொண்ட 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசி புதிய சாதனை படைத்தார். 45 பந்துகளை எதிர் கொண்ட இவர் 95 ரன்கள் குவித்து ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 22 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் 3வது பந்தில் ஷுபம் துபே சிக்சர் அடிக்கவே ஆட்டத்தில் அனல்பறந்தது. அடுத்த இரண்டு பந்துகளிலும், பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் துபே அடித்த பந்தில் 2 வது ரன்னுக்கு முயற்சிக்கும் போது, அற்புதமாக ஃபீல்டிங் செய்த ரிங்கு சிங் ஜோஃப்ரா ஆர்ச்சரை ரன் அவுட் செய்தார். இதனால் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் ஆண்ட்ரூ ரஸ்ஸல் ஆட்டநாயகன் விருது பெற்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8jez4j8e87o
  13. காஷ்மீரில் விழுந்து நொருங்கியது போர் விமானம் 07 MAY, 2025 | 09:09 AM இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் விமானமொன்று விழுந்துநொருங்கியுள்ளது. ஸ்ரீநகரிலிருந்து 19 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வுயான் என்ற கிராமத்தில் இந்த விமானம் விழுந்துநொருங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான சத்தம் கேட்டது அதன் பின்னர் பாரிய சத்தம் கேட்டது நாங்கள் வெளியில் ஓடிச்சென்றுபார்த்தவேளை விமானம் விழுந்து தீப்பிடித்திருந்தது என ஒருவர் தெரிவித்துள்ளார். போர் விமானமொன்று விழுந்து நொருங்கியுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/214068 பஞ்சாபில் பத்திண்டா விமானப்படை தளம் அருகே அடையாளம் தெரியாத விமானம் விபத்து: ஒருவர் பலி, 9 பேர் காயம் 07 MAY, 2025 | 01:45 PM indianexpress பஞ்சாபில் பட்டிண்டா அருகே உள்ள அகாலி குர்த் கிராமம் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் விமான விபத்து காரணமாக ஏற்பட்ட வெடிச்சத்தத்தால் திடுக்கிட்டு விழித்தது. விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட வெடிவிபத்தில் ஹரியானாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஒன்பது பேர் தீக்காயமடைந்தனர் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். அடையாளம் தெரியாத அந்த விமானம் பட்டிண்டாவில் உள்ள பிசியானா விமானப்படை நிலையத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்திற்கு அருகிலுள்ள வயல்களில் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. விரைவில் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்து குறித்து அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. விபத்து மற்றும் வெடிவிபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. சம்பவம் குறித்து பஞ்சாப் போலீஸாருக்கு முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் பிறகு தீயணைப்பு படை வரவழைக்கப்பட்டது. இராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் சூரிய உதயத்திற்கு முன்பு சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர். இராணுவம் அந்த பகுதியை சுற்றி வளைத்தது. மேலும் விமானப்படை ஒரு கூடாரத்தை அமைத்தது. விமானப்படை அதிகாரிகள் விரைவாக விமானத்தின் சிதைவுகளை சேகரிக்கத் தொடங்கினர். கிராம மக்கள் உயிரிழந்த ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த கோவிந்த் என்று அடையாளம் காட்டினர். மேலும் அவர் வீடியோ பதிவு செய்ய முயன்றபோது இறந்ததாகக் கூறினர். விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல முயன்றபோது மேலும் ஒன்பது பொதுமக்கள் காயமடைந்தனர். அவர்கள் பட்டிண்டாவின் கோனியானா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். "கோவிந்த் கோதுமை அறுவடைக்காக இங்கு வந்து விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு அறையில் தங்கியிருந்தார். அவர் சம்பவ இடத்திற்கு முதலில் சென்றவர்களில் ஒருவர். அவர் விபத்தை வீடியோ பதிவு செய்யத் தொடங்கினார், ஆனால் அதற்கு மிக அருகில் சென்றுவிட்டார். திடீரென்று எரிந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கோவிந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்" என்று பெயர் வெளியிட விரும்பாத கிராமவாசி ஒருவர் கூறினார். பொழுது விடிந்ததும் மேலும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வரத் தொடங்கினர். மேலும் அவர்களை வெடிவிபத்து நடந்த இடத்திலிருந்து விலக்கி வைப்பதற்காக காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டனர். https://www.virakesari.lk/article/214101
  14. பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ஆயுதப் படைகள் துல்லியமான தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்படி தகவலை வெளியிட்டிருக்கும் கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம், மேலும் தெரிவித்துள்ளதாவது; இன்று அதிகாலை இந்திய பாதுகாப்பு படையினர் ‘ஒபரேஷன் சிந்தூர்’ இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கின. இந்த தாக்குதலில் மொத்தமாக ஒன்பது (9) பயங்கரவாத முகாம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. இந்தியாவின் நடவடிக்கைகள் துல்லியமானவை, அத்துமீறல் இல்லாதவை. அத்துடன் குறித்த இலக்குகள் மீது மாத்திரமே தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் எந்தவொரு பாகிஸ்தானிய இராணுவ நிலைகளும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும், தாக்குதலை செயல்படுத்தும் முறையிலும் இந்தியா நிதானத்தைக் கடைப்பிடித்துள்ளது. 25 இந்தியர்களும் ஒரு நேபாளத்தைச் சேர்ந்தவரும் கொல்லப்பட்ட இரக்கமற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317698
  15. 07 MAY, 2025 | 04:48 PM குற்றச் செயல்கள் இடம்பெறும் போது சம்பவ இடத்தில் இருக்கும் பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீங்கள் இருக்கும் இடத்தில் ஏதேனுமொரு குற்றச் செயல் இடம்பெற்றால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள 5 விடங்களை உடனடியாக செய்யுங்கள் ; 1. குற்றச் செயல் இடம்பெற்ற இடத்தில் எவரேனும் காயமடைந்திருந்தால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவும். 2. உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கவும். 3.பொலிஸ் அதிகாரிகள் வரும் வரை குற்றச் செயல் இடம்பெற்ற இடத்திற்கு எவரையும் அனுப்ப வேண்டாம். 4. மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருந்தால் குற்றச் செயல் இடம்பெற்ற இடத்திற்குள் செல்லாமல் சற்று தள்ளியிருந்து அந்த இடத்தை பாதுகாக்கவும். 5. குற்றச் செயல் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸார் வருகை தந்த பின்னர் அவர்களின் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி சாட்சியமளிக்கவும். https://www.virakesari.lk/article/214117
  16. லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது Published By: VISHNU 05 MAY, 2025 | 01:36 AM (நெவில் அன்தனி) தரம்சாலா ஹிமாச்சல் ப்ரதேஷ் கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றக்கிழமை (04) இரவு நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 54ஆவது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை 37 ஓட்டங்களால் பஞ்சாப் கிங்ஸ் இலகுவாக வெற்றிகொண்டது. இந்த வெற்றியுடன் 15 புள்ளிகளைப் பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நிலையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைக் குவித்தது. ப்ரப்சிம்ரன் சிங் நான்கு இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து அணிக்கு தெம்பூட்டினார். ஜொஷ் இங்லிஷஸுடன் 2ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஷ்ரேயஸ் ஐயருடன் 3ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களையும் நெஹால் வதேராவுடன் 4ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களையும் ஷஷாங் சிங்குடன் 5ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களையும் ப்ரப்சிம்ரன் பகிர்ந்தார். 48 பந்துகளை எதிர்கொண்ட ப்ரப்சிம்ரன் 6 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 91 ஓட்டங்களையும் ஷ்ரேயஸ் ஐயர் 45 ஓட்டங்களையும் ஜொஷ் இங்லிஸ் 14 பந்துகளில் 30 ஓட்டங்களையும் ஷஷாங் சிங் 15 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 33 ஓட்டங்களையும் மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 5 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஆகாஷ் சிங் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் திக்வேஷ் ரதி 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 237 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இதல் அயுஷ் படோனி 40 பந்துகளில் 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்ககளுடன் 74 ஓட்டங்களைப் பெற்றார். அவரும் அப்துல் சமாதும் 6ஆவது விக்கெட்ல் பெறுமதிமிக்க 81 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அப்துல் சமாத் 24 பந்துகளில் 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 45 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் துடுப்பாட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ப்ரப்சிம்ரன் சிங் https://www.virakesari.lk/article/213680
  17. மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு Published By: DIGITAL DESK 2 07 MAY, 2025 | 05:18 PM வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று புதன்கிழமை (7) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர், 42 வயதுடைய ஒருவர் ஆவார். தற்போது சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கள்ளியடி வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து குறித்த குடும்பஸ்தரின் சடலம் புதுக்குடியிருப்பு பிரதேச ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/214118
  18. ஆபரேஷன் சிந்தூர்: ஊடகங்களுக்கு விளக்கமளித்த பெண் அதிகாரிகள் யார்? பட மூலாதாரம்,MINISTRY OF EXTERNAL AFFAIRS, INDIA படக்குறிப்பு, விங் கமாண்டர் வ்யோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களின் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்கிற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 22 அன்று, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த தாக்குதலுக்கு பதிலாக கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்துப் பேசியிருந்தனர். இந்திய ராணுவம் தனது நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்டது. மேலும் இது குறித்த தகவல்களை வழங்க, இந்திய ராணுவத்தின் இரண்டு பெண் அதிகாரிகள் புதன்கிழமை காலை பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் இதுவரை நடந்தது என்ன? எளிய விளக்கம்5 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் மீதான இந்திய தாக்குதல்கள் பற்றி சீனா, அமெரிக்கா கூறுவது என்ன?2 மணி நேரங்களுக்கு முன்னர் கர்னல் சோஃபியா குரேஷி பட மூலாதாரம்,@SPOKESPERSONMOD படக்குறிப்பு,கர்னல் சோஃபியா குரேஷி 2016ஆம் ஆண்டில், ஒரு பன்னாட்டு களப் பயிற்சி இந்தியாவின் புனே நகரத்தில் நடைபெற்றது. 'ஃபோர்ஸ் 18' எனப்படும் இந்தப் பயிற்சி, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பை (ASEAN Plus) உள்ளடக்கியது. இந்திய மண்ணில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய தரைப்படைப் பயிற்சி இதுவாகும். இதில், 40 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் படைக்கு, லெப்டினன்ட் கர்னல் சோஃபியா குரேஷி தலைமை தாங்கினார். அந்த நேரத்தில், இவ்வளவு பெரிய பன்னாட்டுப் பயிற்சியில் இந்திய ராணுவப் பயிற்சிக் குழுவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றார். பாதுகாப்பு அமைச்சகமும் இந்த தகவலை அதன் முந்தைய பதிவுகளில் ஒன்றில் வழங்கியிருந்தது, மேலும் சோஃபியா குரேஷியின் படங்களையும் பகிர்ந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த குரேஷி, உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். குரேஷி ஒரு ராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். ஓர் இந்திய ராணுவ அதிகாரியை அதிகாரியை சோஃபியா குரேஷி மணந்துள்ளார். சோஃபியா குரேஷி ஆறு ஆண்டுகள் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையிலும் பணியாற்றியுள்ளார். இதில் 2006ஆம் ஆண்டு காங்கோவில் குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றியதும் அடங்கும். அப்போது அவரது முக்கிய பணி என்பது அமைதி நடவடிக்கைகளுக்கான, பயிற்சிகள் தொடர்பான பங்களிப்புகளை வழங்குவதாகும். பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்திய பகுதிகளின் நிலை என்ன? புகைப்படங்களுடன் விளக்கம்6 மணி நேரங்களுக்கு முன்னர் 'உளவுத்துறை அளித்த முக்கிய தகவல்' - பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து இந்தியா கூறுவது என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் வ்யோமிகா சிங் பட மூலாதாரம்,MINISTRY OF EXTERNAL AFFAIRS, INDIA படக்குறிப்பு,வ்யோமிகா சிங் கடினமான சூழ்நிலைகளில் ஹெலிகாப்டர்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி ஊடகங்களுக்கு விளக்கிய இரண்டாவது அதிகாரி விங் கமாண்டர் வ்யோமிகா சிங் ஆவார். வ்யோமிகா சிங் இந்திய விமானப்படையில் ஹெலிகாப்டர் விமானியாக உள்ளார். செய்திகளின்படி, ஒரு விமானியாக வேண்டும் என்பதே அவரது வாழ்க்கை லட்சியமாக இருந்துள்ளது. வியோமிகா சிங், என்சிசி-இல் இருந்தவர். பொறியியல் படித்துள்ளார். அவர் 2019ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் முழு நேர விமானியாக நியமிக்கப்பட்டார். வ்யோமிகா சிங் 2500 மணி நேரத்திற்கும் மேலாக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஓட்டிய அனுபவம் கொண்டவர். ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கடினமான சூழ்நிலைகளில் சேடக் மற்றும் சீட்டா போன்ற ஹெலிகாப்டர்களை அவர் இயக்கியுள்ளார். பல மீட்பு நடவடிக்கைகளிலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். அதில் ஒன்று அருணாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 2020இல் நடந்த மீட்பு நடவடிக்கை. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7878ex321xo
  19. 2018-2023 காலத்திலும் பல சபைகளை தமிழரசுக் கட்சி பெரும்பான்மையின்றியே ஆட்சி செய்தது. பல கட்சிகள் எதிர்த்தரப்பில் இருந்தாலும் ஒற்றுமையாக எதிர்க்கவில்லை!
  20. Published By: RAJEEBAN 07 MAY, 2025 | 12:07 PM ஆறாயிரம் ஏக்கர் தமிழர் நிலத்தினை அபகரிக்கும் அரசாஙகத்தின் முயற்சிக்கு எதிராக மே 29 ம் திகதி இடம்பெறவுள்ள பாரிய மக்கள் போராட்டத்திற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும் என இலங்கை தமிழரசுகட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரிந்துவிட்டது உடைந்துவிட்டது என சொல்கின்ற செய்திகளை எல்லாம் கடந்த காலத்திலே நான் மறுத்துவந்திருக்கின்றேன். நாடாளுமன்றத்தின் இறுதிவரைக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பாக இயங்கினோம் நாடாளுமன்ற தேர்தலிலே அவர்கள் தனித்து போட்டியிட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலிலே தனித்து போட்டியிடக்கூடாதுஇஇந்த தேர்தலில்தான் தனித்து போட்டியிடவேண்டும். இந்த வேளையிலே நாங்கள் சொன்னதுதான் சரி அவர்கள் சொன்னது பிழை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க விரும்பவில்லைஇ நாங்கள் சேர்ந்து இயங்கவேண்டிய காலம்.நேரம். மிகவும் விசேடமாகஇஎங்களுடைய நிலங்களிலே 6000 ஏக்கர் பறிபோகின்ற சூழ்நிலை எழுந்திருக்கின்றது. நான் ஏற்கனவே அதற்கான ஒரு அறைகூவலை விடுத்திருக்கின்றேன், மீண்டும் நான் மக்கள் ஆணையுடன் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு கோரிக்கையை முன்வைக்கவிரும்புகின்றேன். 2025 மார்ச் மாதம் 28ம் திகதி பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி பிரசுரத்தை உடனடியாக மீளப்பெறுமாறு மக்கள் ஆணையோடு கோருகின்றோம். அது உடனடியாக மீளப்பெறவேண்டும் மே 28 வரை அரசாங்கத்திற்கு காலக்கெடுவை வழங்குவதாக நான் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றேன். மற்ற தமிழ் கட்சிகளிற்கு ஒரு அன்பான வேண்டுகோள்இஅரசாங்கம் இந்த வர்த்தமானியை மீளப்பெறாமலிருந்தால் மே 29ம் திகதி அதற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டமொன்றை முன்னெடுப்போம்அனைத்து கட்சிகளும் அதற்கு இணைந்து வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்இ இது இலங்கை தமிழரசுகட்சி பொதுச்செயலாளராக நான் விடுக்கும் அழைப்பாகயிருந்தாலும் கூட பொதுவாக மக்கள் சார்பாக விடுக்கப்படுகின்ற அழைப்பாக ஏற்று ஒரு கட்சி விடுக்கின்ற வேண்டுகோளாக அதனை கருதாமல் பொதுவாக அனைவரும் ஒன்றுசேர்ந்து அதனை செய்யவேண்டும்ஆதற்கு முன்னர் அரசாங்கம் அந்த வர்த்தமானியை மீளப்பெறவேண்டும் இல்லாவிட்டால் பாரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம்.நிலம் அழிந்தால் அனைத்தும் அழிந்துபோகும். https://www.virakesari.lk/article/214088
  21. இந்தியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவிப்பு 07 MAY, 2025 | 07:40 AM இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் ரக விமானங்கள் மூன்றையும், மிக் 29 விமானம் ஒன்றையும், எஸ்யு 30 போர் விமானமொன்றையும் தற்பாதுகாப்பிற்காக சுட்டுவீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஆளில்லா விமானமொன்றையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இதனை உறுதி செய்துள்ளார். இந்திய விமானங்கள் எந்த பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டன என்பதை பாகிஸ்தான் தெரிவிக்கவில்லை. இதேவேளை இதனை சிஎன்என்னினால் உறுதிப்படுத்தமுடியவில்லை. இதேவேளை இவ்வாறானதொரு தகவலை பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமட் அசீவினை மேற்கோள்காட்டி புளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது. சில இந்திய படையினர் போர்க்கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/214034
  22. பாகிஸ்தானில் இந்தியா எப்படி தாக்குதல் நடத்தியது? வெளியுறவு செயலர் கூறியது என்ன? நேரலை பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மே 2025, 00:27 GMT புதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர் "பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று இந்தியா அறிவித்துள்ளது. "பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட மற்றும் நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டன" என இந்தியா கூறியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளங்களின் மீது இலக்கு வைக்கப்படவில்லை எனவும் மிகவும் கவனத்துடன் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது. மேலும், இரு குழந்தைகள் உள்பட குறைந்தது 8 பேர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தார் கூறியுள்ளார். மேலும், இந்தத் தாக்குதலில் 35 பேர் காயமடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அகமதுபூர் கிழக்கு நகரில் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், "ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் மேற்கொண்ட பதில் தாக்குதலில் மூன்று இந்திய பொது மக்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது" என்று ராய்ட்டர்ஸ் மற்றும் ஏ.எஃப்.பி செய்தி முகமைகள் கூறியுள்ளன. பட மூலாதாரம்,BBC URDU படக்குறிப்பு,இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறும் பகுதி பட மூலாதாரம்,REUTERS இந்திய அரசு தனது அறிக்கையில், "இந்த நடவடிக்கை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்துள்ளது. அங்கிருந்துதான் இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டன," என்று கூறியுள்ளது. மொத்தம் ஒன்பது இலக்குகள் குறிவைக்கப்பட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியதாக சமீப ட்வீட் ஒன்றில் கூறியுள்ளார். இந்தியாவுக்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் எல்லையில் பூஞ்ச்-ராஜௌரி பகுதியில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலை நடத்தியதாக இந்தியா கூறுகிறது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் ஜியோ டிவியில் பேசுகையில், இந்தியா பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறுவது பொய் என்றும் அவை மக்கள் வாழும் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன என்றும் குற்றம்சாட்டினார். ஆனால், தற்போது வரை, எந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை பிபிசியால் சுயாதீனமான உறுதி செய்ய முடியவில்லை. Play video, "பாகிஸ்தான் மீது நள்ளிரவில் இந்தியா நடத்திய தாக்குதல் காட்சிகள் - காணொளி", கால அளவு 1,26 01:26 காணொளிக் குறிப்பு,பாகிஸ்தான் மீது நள்ளிரவில் இந்தியா நடத்திய தாக்குதல் காட்சிகள் - காணொளி இந்நிலையில், "பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக" இந்திய ராணுவம் கூறுகிறது. இந்திய ராணுவம் பதிவிட்ட ஒரு ட்வீட்டில், "ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச்-ராஜௌரி பகுதியில் உள்ள பீம்பர் காலியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக" தெரிவித்துள்ளது. மேலும் அதில், "இந்திய ராணுவம் சரியான முறையில் பதிலடி கொடுத்து வருவதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்தியா எப்படி தாக்குதல் நடத்தியது? பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "ஏப்ரல் 22ஆம் தேதி லஷ்கரே இ தொய்பாவை சேர்ந்த பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள், கொடூரமான தாக்குதலை பஹல்காமில் சுற்றுலா வந்திருந்த இந்திய குடும்பங்கள் மீது நடத்தியிருந்தன. அதில் அவர்கள் நேபாளத்தை சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேரை கொலை செய்திருந்தனர்" என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,BBC URDU படக்குறிப்பு,இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறும் பகுதி இதற்குப் பதிலடி கொடுப்பதற்காக புதன்கிழமை அதிகாலை 1:05 மணி மற்றும் 1:30 மணிக்கு இடையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகளைத் தாக்கினோம்" என்று தெரிவித்தார். எதிர்வினை ஆற்றுவதற்கான, எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பதில் கொடுப்பதற்கான உரிமையை இந்தியா பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பில் மிஸ்ரி, "இந்தியாவின் நடவடிக்கை குறிவைக்கப்பட்டது, அளவிடப்பட்டது மற்றும் ஆத்திரமூட்டாதது" என்று கூறினார். பஹல்காம் தாக்குதல் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது என்றும் அவர் கூறினார். ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலையைச் சீர்குலைப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அவர் கூறினார். "இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிப்பதன் மூலம் பின்தங்கிய நிலையில் வைத்திருப்பதே இதன் நோக்கம்" என்று அவர் கூறினார். இது தவிர, நாட்டில் மதக் கலவரங்களைத் தூண்டும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. தீவிரவாத உட்கட்டமைப்பை அகற்ற பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது என்று வெளியுறவுச் செயலாளர் கூறினார். மேலும், இந்திய அரசின் செய்தியாளர் சந்திப்பில் "இந்தத் தாக்குதலில் பொது மக்கள் யாரும் உயிரிழக்கவில்லை" என்றும் தெரிவிக்கப்பட்டது. பட மூலாதாரம்,ANI பாகிஸ்தான் எதிர்வினை என்ன? இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் எதிர்வினையாற்றியுள்ளார். இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலளித்துப் பேசிய அவர், திருப்பித் தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று தெரிவித்தார். "எதிரி நாடு மிகவும் கோழைத்தனமாக பாகிஸ்தானின் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தியாவின் இந்தத் தாக்குதலை "போர்ச் செயல்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், "இந்தப் போர்ச் செயலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என்று பதிவிட்டிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலளித்த ஷாபாஸ் ஷெரீஃப், பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உள்ளது என்று கூறியுள்ளார். (கோப்புப் படம்) பாகிஸ்தான் நாட்டு மக்கள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவத்திற்குத் துணை நிற்கிறார்கள், நாட்டின் மன உறுதி வலிமையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதேநேரம், "ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தின் பிரிவு 51இல் குறிப்பிடப்பட்டுள்ள தற்காப்பு உரிமையின்படி, பாகிஸ்தான் தனக்கு விருப்பமான நேரத்தில் மற்றும் இடத்தில் இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. "எதிரிகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் நன்றாகத் தெரியும். எதிரியின் தீய எண்ணங்கள் வெற்றி பெற ஒருபோதும் விடமாட்டோம்" என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்தார். ஷார்ட் வீடியோ Play video, "பாகிஸ்தானில் இந்திய நடத்திய தாக்குதலின் விளைவை காட்டும் காணொளி", கால அளவு 0,50 00:50 காணொளிக் குறிப்பு,பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலின் விளைவை காட்டும் காணொளி பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் மீது தாக்குதல்களை நடத்தியதாக இந்தியா அறிவித்துள்ளது. முசாபராபாத்தில் நடந்த தாக்குதலுக்கு பிந்தைய காணொளியை ஏபி செய்தி முகமை வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்தக் காணொளியை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை. பிபிசி உருதுவிடம் பேசியிருந்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப், "தீவிரவாதிகளின் மறைவிடங்களைக் குறி வைத்துள்ளதாக இந்தியா கூறுகிறது. சர்வதேச ஊடகத்துக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். அவை தீவிரவாத மறைவிடங்களா அல்லது பொதுமக்கள் வசிப்பிடங்களா என்பதை இங்கு வந்து அனைத்து பக்கங்களிலும் பாருங்கள். தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் இரண்டு மசூதிகளும் அடங்கும். எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துல்லியமான சமீபத்திய தரவுகள் தற்போது என்னிடம் இல்லை. தாக்குதல் நடந்ததாக உறுதி செய்யப்படுள்ள ஏழு இடங்களில் இரண்டு காஷ்மீரிலும் ஐந்து பாகிஸ்தானிலும் உள்ளன. இவை அனைத்துமே பொது மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள்" என்று தெரிவித்தார். இந்தியாவின் தாக்குதல்கள் குறித்து பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் அதுல்லா தரார், "அவர்கள் எங்கள் எல்லையைத் தாண்டியுள்ளனர்" என்று குறிப்பிட்டார். பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறிய கருத்துகளை தரார் மீண்டும் வலியுறுத்தினார். அவர், "இந்தத் தாக்குதல் நியாயமற்றது. இது முற்றிலும் திட்டமிடப்படாத தாக்குதல். நாங்கள் இதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம். எங்கள் பதில் தாக்குதல் வானிலும் நிலத்திலும் தொடரும்" என்று தெரிவித்தார். பாகிஸ்தான் மீது நள்ளிரவில் இந்தியா நடத்திய தாக்குதல் காட்சிகள் - காணொளி5 மணி நேரங்களுக்கு முன்னர் நள்ளிரவில் இந்தியா நடத்திய தாக்குதல் - அதிகரித்துள்ள பதற்றம்5 மணி நேரங்களுக்கு முன்னர் தாக்குதலை நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES தாக்குதல் நடந்த இடத்தின் தற்போதைய நிலைமை குறித்து நேரில் கண்ட சிலர் பிபிசியிடம் பேசுகையில், "நாங்கள் எங்கள் வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட வெடிச்சத்தம் எங்களை உலுக்கியது. இப்போது எங்கள் குடும்பங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வெளியே இருக்கிறோம். பாதுகாப்பான இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்," என்று முசாபராபாத்தில் வசிக்கும் ஷாநவாஸ் கூறினார். தாக்குதல்கள் மேலும் தொடரக்கூடும் என்று அங்குள்ள பலரும் அஞ்சுகிறார்கள். "முதல் குண்டுவெடிப்பு என் வீட்டை உலுக்கியபோது நான் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்," என்று தாக்குதல் நடந்த பகுதியிலுள்ள பிலால் மசூதியில் வசிக்கும் முகமது வாஹீத் கூறினார். "நான் உடனடியாக வெளியே ஓடிச் சென்றபோது, மற்றவர்களும் அதே நிலையில் இருப்பதைக் கண்டேன். மேலும் மூன்று ஏவுகணைகள் வந்து விழுந்தபோது, அனைவரையும் பீதி மற்றும் குழப்பம் ஆட்கொண்டிருந்தது. எங்களால் நிலைமையைப் புரிந்துகொள்ளவே முடியாமல் இருந்தோம்," என்று கூறினார் வாஹீத். மேலும், "டஜன் கணக்கான பெண்களும் ஆண்களும் காயமடைந்துள்ளனர். மக்கள் அவர்களை இங்கிருந்து சுமார் 25கி.மீ தொலைவிலுள்ள சி.எம்.ஹெச் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். நாங்கள் முசாபராபாத் நகருக்கு மிக அருகில் இருக்கிறோம். காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர்," என்று வஹீத் கூறுகிறார். இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை: நாளை என்ன நடக்கும்?6 மே 2025 பாக்லிஹார் அணை மதகுகளை மூடிய இந்தியா - மக்கள் நீரின்றி வாடலாம் என பாகிஸ்தான் அச்சம்6 மே 2025 தாக்குதல் குறித்து டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்நிலையில் இந்தத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியா பாகிஸ்தான் இடையிலான தாக்குதல்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இது அவமானகரமானது. இப்போதுதான் கேள்விப்பட்டோம் ஓவல் அலுவலகத்திற்குள் இப்போது வரும்போதுதான் தெரிய வந்தது," என்று தெரிவித்தார். மேலும், "கடந்த கால அனுபவங்களால், ஏதோ நடக்கப் போகிறது என மக்கள் அறிந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் நீண்ட காலமாக, பல தசாப்தங்களாக, நூற்றாண்டுகளாகப் போரிட்டு வருகின்றனர். இது விரைவில் முடிவுக்கு வருமென நம்புகிறேன்," என்று பதிலளித்தார். ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "சர்வதேச எல்லையில் இந்தியாவின் ராணுவ தாக்குதல் குறித்து மிகவும் கவலை கொள்கிறோம்" என்று தெரிவித்தார். மேலும், "முடிந்த வரை இரு நாட்டு ராணுவமும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று இரு நாடுகளுக்கும் பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுக்கிறார். மற்றொரு இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலுக்கான அபாயத்தை உலகம் தாங்காது" என்று தெரிவித்தார். 200 பாம்பு கடி வாங்கியவரின் உடலில் இருந்து அபூர்வ விஷமுறிவு மருந்து4 மே 2025 மனிதனின் இடுப்பெலும்பில் சிங்கத்தின் பல்தடம் - ரோமானிய கிளாடியேட்டர் சண்டைகளுக்கு ஆதாரம்3 மே 2025 "இரு நாட்டு தலைவர்களின் பெரிய சூதாட்டம்" "இது இரண்டு அணு ஆயுத போட்டியாளர்களுக்கு இடையிலான ஒரு வியத்தகு மோதல்" என்று பிபிசி உலக சேவையின் தெற்கு ஆசிய ஆசிரியர், அன்பரசன் எத்திராஜன் தெரிவிக்கிறார். மேலும், "இந்தியா ஏதாவது ராணுவ நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், பாகிஸ்தானுக்குள் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களின் தீவிரம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாங்கள் குண்டு வீசிய சில இடங்கள் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவை என்றும், அவை பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறிவைக்கவில்லை என்றும் இந்தியா கூறுகிறது. பாகிஸ்தான் பதிலடி கொடுப்பதாக சூளுரைத்துள்ளது, இதன் தன்மையும் இலக்குகளும் டெல்லியின் எதிர்வினையைத் தீர்மானிக்கும். "இரு நாடுகளும் தீவிரமடையும் நிலைமைகளைச் சமாளிக்க முடியும் என்று நினைக்கின்றன, ஆனால் பதற்றங்கள் அதிகமாக உள்ளன. எந்தவொரு ராணுவ மோதலின் போக்கையும் கணிப்பது கடினம். கடந்த காலங்களில் அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் அவற்றைக் கட்டுப்படுத்த தலையிட்டன. பட மூலாதாரம்,BBC URDU மற்ற உலகளாவிய பிரச்னைகள் காரணமாக டிரம்ப் நிர்வாகத்தின் கவனம் திசை திருப்பப்பட்ட நிலையில், பதற்றத்தைத் தணிக்க வாஷிங்டன் எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்," என்கிறார் அன்பரசன். மேலும், "இரு நாடுகளிலும் உள்ள அரசியல் தலைவர்கள் தாங்கள் தீர்க்கமாகச் செயல்பட்டுள்ளோம் என்று தங்கள் மக்களுக்குக் காட்ட விரும்புவார்கள், வெற்றியைக் கோருவார்கள். அவர்கள் ஒரு பெரிய சூதாட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறார் அவர். 'மத்தியஸ்தம் செய்ய சரியான தருணம்' மத்தியஸ்தம் செய்வதற்குச் சரியான தருணம் இது என்று வாஷிங்டனில் உள்ள தெற்காசிய ஆய்வாளர் மைக்கல் குகல்மேன் தெரிவித்துள்ளார். மேலும், "இந்தியா தாக்குதல் நடத்தியதாலும், பாகிஸ்தான் பதிலடி தாக்குதல் குறித்து எச்சரித்ததாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது மோதல் அபாயங்கள் அதிகமாக உள்ளன. இந்த ஆரம்ப நடவடிக்கைகளின் தன்மையின் அடிப்படையில், மேலும் விரோதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார். அதோடு, "கடந்த மாதம் பஹல்காமில் நடந்த தாக்குதல் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் உடன்படுவதாகத் தெரிகிறது, ஆனால் பதற்றத்தைத் தணிப்பது அவசியம். ஏற்கெனவே தீப்பற்றி எரியும் உலகத்தில், குறிப்பாக இரண்டு அணு ஆயுத போட்டியாளர்களுக்கு இடையிலான ஒரு போரை யாரும் விரும்பவில்லை. இந்தியா, பாகிஸ்தானுடன் நல்ல உறவுகளைக் கொண்ட நாடுகளான, அமெரிக்காவும் அரபு வளைகுடா நாடுகளும் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டிய நேரம் இது. அணுசக்தி அபாயங்கள் தொடங்குவதற்கு முன்பு இதைத் தணிப்பதற்கான வழிகளைத் தேடுமாறு இரு நாடுகளையும் வலியுறுத்த வேண்டும்" என்று அவர் கூறுகிறார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy8q8dw0yj2o
  23. -ஐ.வி.மகாசேனன்- ஜே.வி.பி. பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனரஞ்சக அரசியலின் தேர்தல் யுக்திகள் தொடர்பிலான விமர்சனங்கள் அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது. குறிப்பாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னரான ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் பிரசாரங்களில் அதிகளவில் வாக்குறுதிகளை வழங்கினார்கள். அதன் செயலாக்க தன்மைகள் தொடர்பில் சமகாலத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகள் நிறைந்துள்ளன. இந்த பின்னணியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்களில் கடந்த காலங்களை இருண்ட காலமாகவும், பழையவர்களை சாத்தான்களாகவும் சித்தரித்து, தங்களை புறக்கணிப்பதனூடாக பழைய இருண்ட காலத்திற்குள் சாத்தானின் பிடிக்குள் செல்வீர்களென்ற எச்சரிக்கை அச்சுறுத்தல்களை முன்வைக்கின்றார்கள். தங்களின் கடந்த காலங்களுக்கு பொறுப்பு கூறாது, தங்களை மீட்பர்களாகவும் புனிதர்களாகவும், தங்கள் ஆட்சியை ஒளி நிறைந்ததாகவும் சித்தரிக்க முயல்கின்றார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த ஏழு மாதங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் அடையப்பட்ட விகிதங்களையாவது பொதுவெளியில் சொல்ல திராணியற்ற நிலைமையிலேயே உள்ளார்கள். இக்கட்டுரை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 2024-செப்டம்பர் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் யாழ்ப்பாணத்தில் கொடுத்த வாக்குறுதிகளின் தன்மையை கடந்த ஏழு மாத கால ஆட்சியில் தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. 2024 செப்டம்பர்-05அன்று அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு யாழ்ப்பாணம் வந்திருந்தார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், கடந்த கால அரசாங்கங்களை (கடந்த கால பாதை) இனவாதிகளாகவும் தங்களை தூயவர்களாகவும், தங்களை மாத்திரமாகவே தூயவர்களாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். குறிப்பாக தமிழ் மக்களிடம் ஆழமாக நிறைந்துள்ள ராஜபக்ச எதிர்ப்பு வாதத்திற்கு தூபமிடும் வகையில் ராஜபக்சக்கனை சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் குறியீடாக சுட்டிக்காட்டி, ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுன கூடாரத்தின் உறுப்பினர்களே ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச கூடாரத்தில் பரவி இருப்பதாகவும் விழித்திருந்தார். குறிப்பாக ஜி.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும போன்றவர்கள் ராஜபக்சக்களின் அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்ததையும் தற்போது சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க கூடாரத்தில் உள்ளமையை குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான பின்னணியில் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள் யாவரையும் இனவாதியாக விழித்திருந்தார். இது தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து நிலையாகவே அமைகின்றது. தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் இக்கருத்தையே முன்னிறுத்தியிருந்தார்கள். சாத்தான்களின் விகிதம் அல்லது தோற்றம் வேறுபடலாம். எனினும் சாத்தான்கள் என்பது நிதர்சனமாகும். அநுரகுமார திசாநாயக்கவும் விதிவிலக்கானவரில்லை என்பதையே கடந்த காலமும் நிகழ்கால ஆட்சியும் உணர்த்துகின்றது. கடந்த காலங்களில் ராஜபக்சக்களுடன் இணைந்து பயணித்தவர்களின் பரவலை சுட்டிக்காட்டிய அனுரகுமார திசாநாயக்க, ஜே.வி.பி.யினதும் தனதும் கடந்த காலத்தை மறந்துள்ளார் அல்லது மறைத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியாக பரிணாமமாகியுள்ள ஜே.வி.பி.யும் கடந்த காலங்களில் ராஜபக்சக்களுடன் இணைந்து செயற்பட்டிருந்த இனவாதிகள் என்பதை அனுரகுமார திசாநாயக்க ஏற்றுக்கொள்ளவோ அல்லது பொறுப்புக்கூறவோ மறுத்திருந்தார். குறிப்பாக 2004 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் அமைச்சராக கூட்டு சேர்ந்து செயற்பட்டிருந்தார். அதுமட்டுமன்றி மகிந்த ராஜபக்ச நிறைவேற்றுத்துறை அதிகாரத்தை பெற்றுக்கொள்வதில் 2005 ஆம் அண்டு ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவின் பிரதான பங்காளியாக ஜே.வி.பியே காணப்பட்டது. அன்று ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினராக இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் முக்கிய பொறுப்பில் இருந்தார். எனவே, அன்றைய ஜே.வி.பி.யின் இனவாத செயற்பாடுகளுக்கு அனுரகுமார திசாநாயக்கவும் பொறுப்பாளி என்பதே நிதர்சனமாகும். தென்னிலங்கையின் ஏனைய அரசியல்வாதிகள் மீது அனுரகுமார திசாநாயக்க முன்வைத்த விமர்சனங்கள் யாவும் அவருக்கும் பொருத்தமானதாகவே அமைகின்றது. கடந்த கால அரசியல்வாதிகளை இனவாதிகளாகவும், தம்மை தூயவாதிகளாகவும் அனுரகுமார திசாநாயக்க பிரசாரம் செய்திருந்தார். குறிப்பாக தம்மை இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக விழித்திருந்தார். கடந்த ஏழு மாத கால ஆட்சியிலும் இச்சொல்லாடலை அதிகம் விழித்திருந்தார்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமது ஆட்சி இனவாதத்தை களைந்துள்ளதாக அடிக்கடி கூறி வருகின்றார்கள். எனினும் கடந்த ஏழு மாதங்களில் இனவாதத்தை களைவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாது என்பதற்கு போதியமான விளக்கங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் காணப்படவில்லை. அமைச்சரவை சிங்களமயமாக்கம். குறைந்தபட்சம் சன விகிதாசாரப்படி கூட அமைச்சரவையில் ஏனைய இனங்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. தையிட்டி விகாரை விவகாரத்தில் முன்னைய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிலிருந்து விலகி செல்லும் போக்கையே கடைப்பிடிக்கிறது. கடந்த கால ஆட்சி தவறானது, அவர்கள் இனவாதிகள், தாம் தூய்மையானவர்கள் என்று சொல்லியே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. தற்போது கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற இனவாத செயற்பாடுகளுக்கு நீதி வழங்காது செல்வதும் ஒரு வகையில் இனவாதத்திற்கு துணை போகும் செயற்பாடாகவே அமைகின்றது. சட்டவிரோத தையிட்டி விகாரை நிர்மாண விவகாரத்திற்கு இனவாத கலப்பற்ற சரியான தீர்வை வழங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றமை இனவாத செயற்பாடாகவே அமைகின்றது. அதுமட்டுமன்றி, சட்டவிரோத தையிட்டி விகாரை கட்டிட தொகுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்க காலப்பகுதியில் புதியதொரு மண்டப கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரச காவல்துறை இயந்திரங்களாகிய பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பிலேயே குறித்த கட்டிடம் திறக்கப்பட்டது. முப்படைகளின் தலைவராகவும் நிறைவேற்றுத் துறை ஜனாதிபதியின் அரச இயந்திரத்தின் பாதுகாப்பில் சட்டவிரோத கட்டிடம் திறக்கப்பட்டுள்ளமைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்புக்கூற தவறுவது அவர்களின் போலியான முகத்தை தோலுரிப்பதாகவும், அவர்களின் இனவாத முகத்தை வெளிப்படுத்துவதுமாகவே அமைகின்றது. மேலும், தமிழர்களின் அடையாளங்களை சிதைக்கும் முன்னைய ஆட்சியாளர்களின் இயல்பை தொடர்பவர்களாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காணப்படுகின்றது. ஈழத்தமிழ் நிலப்பரப்பின் அடையாளங்களில் ஒன்றாகவே ஆணையிறவு உப்பு காணப்படுகின்றது. அதற்கான சிங்கள பெயரிடலை கடந்த கால ஆட்சியாளர்களின் தவறாகவும் தாம் ஒருவார காலப்பகுதிக்குள் அதனை சீர்செய்வதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார். எனினும் தேசிய மக்கள் சக்தியின் அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவரான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் இலங்கை பாராளுமன்ற அவைத் தலைவருமான பிமல் ரத்நாயக்க, ‘தமிழ் மக்கள் தமது அடையாளத்தை பாதுகாக்க வலியுறுத்துவதை இனவாதமாக விழித்துள்ளார்.’ பிமல் ரத்நாயக்கவின் உரையாடல் ஆணையிறவு உப்பிற்கு இடப்பட்டுள்ள சிங்களப் பெயர் நிலைப்பதற்கான எதிர்வுகூறல்களையே உருவாக்கியுள்ளது. இந்த பின்னணியில் தேசிய மக்கள் சக்தியின் ‘இனவாதமற்ற ஆட்சி’ எனும் பரப்புரை, சிங்கள இனத்தை தவிர்ந்த ஏனைய இனங்களின் அடையாளங்களை இலங்கையிலிருந்து அழித்து விடுவதனால், ஒரே இனம் எஞ்சிய நிலையில் இனவாத தேவைகள் இருக்கப்போவதில்லை என்பதாகவே அமைகின்றது. கடந்த கால ஆட்சியாளர்கள் சிங்கள-பௌத்த இனவாதத்தை பாதுகாக்க, எதிராக கூறி (நேபயவiஎந Pசழியபயனெய) செய்தவற்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நேராக கூறி (Pழளவைiஎந Pசழியபயனெய) செய்கின்றது. இரு தரப்பினதும் இறுதி விளைவு சிங்கள – பௌத்த இன இருப்பை பாதுகாப்பதாக மாத்திரமே அமைகின்றது. கோத்தாபய ராஜபக்சவின் வியத்கம அமைப்பின் முன்னணி செயற்பாட்டாளர் நாலக கொடகே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களின் மனித உரிமைப் போராட்டத்திற்கு எதிராக செயற்படுவதாக அனுரகுமார திசநாயக்க ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முன்னர் சுட்டிக்காட்டியிருந்தார். இத்தகையோருக்கா தமிழ் மக்கள் வாக்களிக்கப் போகிறீர்கள் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். அதே கேள்வி தேசிய மக்கள் சக்தி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் அவர்களுக்கும் பொருத்தமுடையதாகவே அமைகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஐ.நா. மனித உரிமை பேரவை அரங்கில் தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைக்கு எதிராகவே உள்ளார்கள். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிராகரித்துள்ளதுடன், ஐ.நா. மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேச நாடுகள் சுட்டிக்காட்டும் போர்க்குற்ற இராணுவ மற்றும் முன்னாள் ஆட்சியாளர்களை பாதுகாக்கும் செயற்பாட்டையே மேற்கொள்கின்றனர். கோத்தாபய அரசாங்கத்தில் நாலக கொடகே செய்தவற்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேற்கொண்டு வருகின்றார். எனவே இத்தகையோருக்கா தமிழ் மக்கள் உள்ளூராட்சி சபைகளை வழங்க போகிறீர்கள் என்பதை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் கேள்விகளிலிருந்தே தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். எனவே, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அளந்துவிட்ட பல வாக்குறுதிகளின் முன்னுரையாக ஒப்புவித்த ‘இனவாதமற்ற ஆட்சி’ என்பதையே கடந்த ஏழு மாதங்களில் முழுமையாக வெளிப்படுத்த முடியாது, கடந்த கால ஆட்சி இயல்புகளை தொடரும் நிலைமைகளே காணப்படுகின்றது. ராஜபக்சக்கள் ‘மணலாற்றை’ ‘வெலி ஓயா’ என மாற்றிக்கொண்டார்களெனில், ஜே.வி.பி. பரிணாம தேசிய மக்கள் சக்தியினர் ‘ஆணையிறவு உப்பை’ ‘ரஜ லுணு’ என மாற்றிக் கொண்டுள்ளார்கள். இதனை தமிழ் மக்கள் சாதாரணமாக ஏற்றுக்கொள்வார்களாயின், நாளை ‘யாழ்ப்பாணத்தின்’ உத்தியோகபூர்வ பெயர் ‘யாபணய’ ஆகவும் மாறலாம். ‘திருகோணமலை’ ‘திகுணாமல’ ஆகவும் மாறலாம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாட்டு தன்மையை கடந்த ஏழு மாத கால அனுபவங்களில் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியினர் கொடுக்கப்படும் வாக்குறுதிகளுக்குள் செயற்படுபவர்கள் அல்ல. இலங்கையின் மரபார்ந்த மகாவம்ச மனோநிலையின் உச்ச செயற்பாட்டாளர்களாகவே உள்ளனர். உள்ளூராட்சி சபை தேர்தல் பிரசாரத்துக்காக யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஜனாதிபதி, தையிட்டி விவகாரத்தை இலகுவாக தீர்க்கலாம். அதில் பொதிந்துள்ள இனவாதமே அதனை தீர்க்க தடையாகிறது எனக் கூறிவிட்டு, தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பின் ஒரு வடிவமான பௌத்த பிக்குவிடம் சென்று சமரசம் பேசி தையிட்டி விவகாரத்திற்கு தீர்வு காண பரிந்துரைக்கின்றார். இதுவே மகாவம்ச மனோ நிலை. ஜனாதிபதியின் உரையில் உரிமைகளை கேட்கும் தமிழ் மக்களின் கோரிக்கையே இனவாதமாக காணப்படுகின்றது. மாறாக ஆக்கிரமிப்பு செய்துள்ள பௌத்த பிக்கு நீதவானாகின்றார். இத்தகைய தேசிய மக்கள் சக்திக்கா தமிழ் மக்கள் ஊரையும் நகரையும் வழங்கப் போகிறார்களா? என்பதை தமிழ் மக்கள் நிதானமாக சிந்திக்க வேண்டும். https://thinakkural.lk/article/317653
  24. இந்திய ஏவுகணை தாக்குதல்கள் - பொதுமக்கள் எட்டு பேர் பலி – பாகிஸ்தான் 07 MAY, 2025 | 09:12 AM இந்தியாவின் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் 8பேர்கொல்லப்பட்டுள்ளனர் என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முசாபராபாத்தில் இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. 35 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர் என பாக்கிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/214026
  25. 200 உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை ; 94 இடங்களில் பெரும்பான்மையை பெற்றது Published By: DIGITAL DESK 3 07 MAY, 2025 | 10:12 AM 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுள்ளது. இதுவரை வெளியான உத்தியோகபூர்வ முடிவுகளின் படி, 239 உள்ளூராட்சி சபைகளில் 200 சபைகளில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அதன்படி, தேசிய மக்கள் சக்தி 94 உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது, அங்கு அவர்கள் தங்கள் ஆட்சியை அமைக்க முடியும். எஞ்சியுள்ள உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மையைப் பெற அவர்கள் ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நேற்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றது. அதன்படி, 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்றது. https://www.virakesari.lk/article/214071

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.