Everything posted by ஏராளன்
-
தாயொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு நடந்த கதி!
குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்காக நிதி பெறச் சென்ற தாய்; பாலியல் இலஞ்சம் கோரிய அரச அதிகாரி - நீதிமன்றம் அளித்த தீர்ப்பு! 09 MAY, 2025 | 05:32 PM திஸ்ஸமஹாராமவில் 7 வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நிதி உதவியைப் பெறுவதற்கான அனுமதியை வழங்குவதற்காக, மூன்று குழந்தைகளின் தாய் ஒருவரிடம் (வயது 30) பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு இன்று (9) கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் 20 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் இந்த தண்டனை 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், பிரதிவாதியின் வாக்குரிமை உட்பட சிவில் உரிமைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இதனை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 2015 மார்ச் 31ஆம் திகதி திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த, நோயால் பாதிக்கப்பட்ட தனது 7 வயது பிள்ளைக்கு அறுவை சிகிச்சை செய்ய அரசாங்கத்தின் நிதி உதவியைப் பெறுவதற்கான அனுமதி வேண்டிச் சென்ற தாயிடம், திவிநெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார். இதனையடுத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவிடம் அந்த தாய் முறைப்பாடு அளித்துள்ளார். அதன் பின்னர், அந்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அந்த தாய், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தரால் அழைத்துச் செல்லப்பட்டபோது, மடக்கிப் பிடித்த இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வந்தது. இந்நிலையில் இன்று நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. அரச உத்தியோகத்தராக கடமையாற்றிக்கொண்டு பெண்ணிடம் சந்தேக நபர் பாலியல் இலஞ்சம் கோரியதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்தக் குற்றத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, இலேசான தண்டனை விதிக்க முடியாது என்பதை கருத்திற்கொண்டு இந்தத் தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/214301
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
மாணவி தற்கொலை சம்பவத்துடன் எமது அமைப்பாளருக்கு தொடர்பில்லை - லக்ஷ்மன் நிபுணாராச்சி Published By: DIGITAL DESK 2 09 MAY, 2025 | 05:35 PM (எம்.ஆர்.எம்.வசீம்) கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை சம்பவத்துடன் எமது கட்சி அமைப்பாளர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி திரிபுபடுத்தப்பட்டதாகும். அவர் இதில் சம்பந்தப்பட்டவில்லையென ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி தெரிவித்தார். கணக்காய்வு அறிக்கைகளின் ஊடாக முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியினால் வெள்ளிக்கிழமை (9) பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். விவாதத்தில் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றும் போது, பாடசாலை மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டமை தொடர்பில் இந்த சபையில் நாங்கள் கதைத்தோம். 2024 ஒக்டோபர் மாதத்தில் குறிப்பிட்ட சம்பவம் நடந்துள்ளதுடன், டிசம்பர் மாதத்திலேயே பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு பெற்றோர் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் 2025 ஜனவரி மாதத்திலேயே கைது செய்யப்படுகின்றார். சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இவர் இரண்டு நாட்களில் பிணையில் விடுவிக்கப்படுகின்றார். சிறுவர் துஷ்பிரயோகத்தில் அவர் சம்பந்தப்பட்டிருந்தால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த மாதம் 8 ஆம் திகதியே அவருக்கு இடமாற்றம் வழங்கப்படுகின்றது. போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்ட பின்னரே இந்த நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது. இந்த 5 மாதங்களாக என்ன செய்தது கல்வி அமைச்சு, பிரதமர் கல்வி அமைச்சராக பதவியேற்று 6 மாதங்களாகியும் ஏன் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதி கிடைக்காத காரணதத்தினாலேயே மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். உங்கள் கட்சி அமைப்பாளர் ஒருவருக்கு இதில் குற்றச்சாட்டு முன்வைவக்கப்பட்டுள்ளதாக நிபுணாராச்சி எம்.பி உரையாற்றுகையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த குற்றச்சாட்டு சும்மா தெரிவிக்கப்படவில்லை. மாணவியின் பெற்றோர் அது தொடர்பில் கூறுகின்றனர். குறித்த நபரே வகுப்பரையில் அந்த மாணவியை நிற்கவைத்து, பாடசாலையில் நடந்த சம்பவம் தொடர்பில் மற்றைய மாணவர்களின் முன்னால் மாணவியை அவமதித்துள்ளார். அவர் உங்களின் கட்சியின் அமைப்பாளர் என்று நாங்கள் காலையில் கூறவில்லை. நீங்களே இதனை அரசியலாக்க வேண்டாம் என்று கூறினீர்கள். குறித்த ஆசிரியர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான முறைமை எப்படி இருந்திருக்கிறது என்பதனை பாருங்கள். அந்த செயற்பாட்டு முறை வேகமானதான இருந்திருந்தால் அந்த மாணவியின் உயிரை காப்பாற்றியிருக்கலாம். சம்பந்தப்பட்ட அமைப்பாளரின் வீட்டுக்கு முன்னால் 7 பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்படும் ஒருவருக்கு இப்படி பாதுகாப்பு கொடுப்பதா? சிறுமியின் மரணத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்பு கூற வேண்டியவரின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா? அவர் வேறு கட்சியை சேர்ந்தவராக இருந்திருந்தால் இன்று சிறையில் இருந்திருப்பார். அவர் மறைமுகமாகவோ, நேரடியாகவோ இந்த மாணவியை அவமதிப்பு செய்துள்ளதாக பெற்றோரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையிலேயே அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் அமைப்பாளர் மட்டுமல்ல கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டவர். 35ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளார். அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளில் தீர்மானிக்கப்படும். மக்கள் அரசாங்கத்திடம் முறைமை மாற்றம் தொடர்பிலேயே எதிர்பார்த்தனர். இதனையே நீங்களும் எதிர்பார்த்தனர். ஆனால் நீங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் மெதுவானதாக இருக்கிறது என்றார். இதன்போது முஜிபுர் ரஹ்மான் எம்.பி. முன்வைத்த சில விடயங்கள் தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி பதிலளித்த ஆளும் கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி எம்.பி. கூறுகையில், இந்த விடயத்தை இவர்கள் அரசியல் செய்யப் போவதில்லை என்று கூறிக்கொண்டே எமது அமைப்பாளர் ஒருவரை இதனுள் சம்பந்தப்படுத்துகின்றனர். எமது அமைப்பாளர் இதற்குள் கிடையாது. அவர் குறித்த கல்வியகத்தின் உரிமையாளரே, அவர் ஆசிரியரும் கிடையாது. முழுமையாக திரிபுபடுத்தலையே செய்கின்றனர். திரிபுபடுத்தியே ஊடகங்களுக்கு கூறுகின்றனர். அந்த பிள்ளை தொடர்பான கவலை எங்களிடையே இருக்கிறது. பிரதமரும் இது தொடர்பில் கூறியுள்ளார். தவறுகள் மற்றும் தாமதங்கள் இருந்தால் அது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/214299
-
ஆப்ரேஷன் சிந்தூர்: அதிரடி தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம்!
பஞ்சாபில் ஏவுகணை போன்ற பொருட்கள் கண்டெடுப்பு - மக்கள் என்ன சொல்கிறார்கள்? பட மூலாதாரம்,GURPREETCHAWLA/RAVINDERROBIN படக்குறிப்பு,இந்த குண்டுவெடிப்பால் தான் மிகவும் பயந்ததாக ரச்பால் சிங் கூறுகிறார் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "இரவில் ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டபோது, எங்கள் உயிரே போய்விடும் போலிருந்தது. கூரையில் ஏறிப் பார்த்தபோது பக்கத்தில் இருந்த வயல்கள் எல்லாம் தீப்பிடித்திருந்தன. பிறகு நிலைமை மிக மோசமாகிவிட்டது. ஒரு கட்டத்தில் அலறல்களைக் கூடக் கேட்டோம்." பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பந்தேர் கிராமத்தைச் சேர்ந்தவரான ரச்பால் சிங்கின் வார்த்தைகள் இவை. அவருடைய வீட்டின் மீது குண்டுவெடிப்பின் சிதறல்கள் விழுந்துள்ளன. அவருடைய வயல்களும் தீப்பிடித்துள்ளன. "இரவில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் காலையில், எங்கள் முற்றத்திலும், அக்கம்பக்கத்தினரின் வீடுகளிலும் குண்டுகள் போன்ற பொருட்கள் கிடைத்தன.'' என்கிறார் ரச்பால் சிங் நேற்றைய இரவு, பஞ்சாபில் உள்ள மாவட்டங்களான அமிர்தசரஸ், பதிண்டா, குர்தாஸ்பூர் ஆகிய பகுதிகளில் குண்டுவெடிப்புகளின் சத்தம் கேட்டது மற்றும் காலையில் மர்மமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது போன்றவை நிகழ்ந்ததால் பீதி நிலவும் சூழல் உள்ளது. பாகிஸ்தானின் செயல்பாடுகள் இவை என்று கிராமத்தினர் கருதுகிறார்கள். பட மூலாதாரம்,RAVINDERROBIN படக்குறிப்பு,ஜேதுவால் கிராமத்தில் கிடைத்த பொருள் மே 6, 7 தேதிகளின் இடைப்பட்ட இரவு நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதன்பிறகு இந்த இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்து, எல்லைப் பகுதிகளில் இருக்கும் கிராமங்களில் பயம் நிலவும் சூழல் ஆரம்பித்திருக்கிறது. பஞ்சாபில் உள்ள கிராமத்தினர் என்ன சொல்கிறார்கள்? பட மூலாதாரம்,RAVINDERROBIN படக்குறிப்பு,தில்தார் சிங் ஒரு பெரிய குண்டுவெடிப்புச் சத்தத்தைக் கேட்டதாகக் கூறினார். குர்தாஸ்பூர் நிர்வாகம் , அடுத்த ஆணைகள் வரும்வரை இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை மின்சாரத்தைத் துண்டித்து வைத்துள்ளது. அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ஜேதுவால் கிராமத்தில் ஏவுகணை போன்ற பொருட்களைப் பார்த்ததாகவும், அது தங்கள் கிராமத்தில் பீதியை உருவாக்கியதாகவும் சிலர் கூறினர். இரவில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டபோது தான் கண் விழித்து, கூரை மீதேறிப் பார்த்ததாக ஜேதுவாலின் தில்தார் சிங் குறிப்பிடுகிறார். "காலையில் கிராமத்தில் ஏவுகணை விழுந்த வயல் பகுதிகளில் ஒரே கும்பலும் குழப்பமுமாகத்தான் இருந்தது. நாங்களும் போய் பார்த்தோம். அடுத்து காவல்துறை நிர்வாகம் வந்து பார்த்தது. அவற்றில் சில பகுதிகள் மக்களின் வீடுகளில் விழுந்தன. காவல்துறையினர் எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துச் சென்றுவிட்டனர்," என்று அவர் கூறினார். இன்னொரு கிராமத்தினரான, லவ்ப்ரீத் சிங், "ஒரு மணியளவில் பயங்கரமான சத்தத்தைக் கேட்டேன். அதன்பிறகு நான் கூரையின் மீது ஏறிப் பார்த்தேன். அப்போது நாங்கள் விமானம் போல எதையோ பார்த்தோம். கொஞ்சம் வெளிச்சமும் தெரிந்தது. அதற்கு சில நிமிடங்கள் கழித்து குண்டு வெடித்தது போல சத்தமும் கேட்டோம்" என்றார். "அது எங்களுக்கு அதிகமான பயத்தைக் கொடுத்தது. காலையில் வயலுக்கு வந்து நாங்கள் பார்த்தபோது ஏவுகணை போன்ற , 6-7 அடி நீளப் பொருள் ஒன்று எங்கள் வயலில் விழுந்து கிடந்தது". பட மூலாதாரம்,RAVINDERROBIN படக்குறிப்பு,லவ்ப்ரீத் சிங்கின் வயல்களில் ஏவுகணை போன்ற ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது ரச்பால் சிங், தான் வேலைக்குச் சென்று வந்த பிறகு தூங்கிக் கொண்டிருந்ததாகவும் சுமார் 1:20 மணியளவில் பெரும் சத்தம் கேட்டு எழுந்ததாகவும் கூறுகிறார். "என் அண்ணன்கள் காலையில் எழுந்து வெளியே சென்று பார்த்தபோது எங்கள் முற்றத்திலும், பக்கத்து வீட்டுக்காரர்களின் வீடுகளிலும் சில பொருட்கள் கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்திருக்கின்றனர்." "பிறகு பஞ்சாப் காவல்துறையினரும், ராணுவ வீரர்களும் வந்து அதைப் பார்த்தார்கள். குண்டு வெடித்தபோது என் உயிரே போய்விட்டது போலத்தான் உணர்ந்தேன். எங்களுக்கு போர் வேண்டாம்'' என்கிறார் ரச்பால் சிங். படக்குறிப்பு,சந்துவா வாலா கிராமத்தில் கிடைத்த மர்மமான பொருளை பார்க்கும் அரசு அதிகாரிகள். மோகா மாவட்டத்தில் உள்ள சந்துவான் வாலா கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்த மாட்டுக் கொட்டகையின் மேல் வானத்தில் இருந்து ஒரு பெரிய உலோகப் பொருள் விழுந்ததை அடுத்து அரசு நிர்வாகம் வேகமாக இந்த இடத்துக்கு சென்றது என்கிறார் பிபிசி செய்தியாளர் சுரிந்தர் மன் இந்த மர்மமான பொருளை மாவட்ட நிர்வாகம் தங்கள் பொறுப்பில் எடுத்து விசாரணையை ஆரம்பித்துள்ளது. இதேபோல் இதே மாவட்டத்தின் தல்வாண்டி பாங்கேரியா கிராமத்தின் அருகே உள்ள வயல்களில் ஒரு கனமான உலோகப் பொருள் விழுந்துள்ளது. ஆனால் இவை என்ன மாதிரியான பொருட்கள் இவை என்பதை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. பாகிஸ்தானின் அதிகார மையமான பஞ்சாபில் உள்ள பஹாவல்பூரை இந்தியா ஏன் தாக்கியது?8 மே 2025 இந்தியாவின் ஏவுகணை தாக்குதலை பாகிஸ்தான் தடுக்க முடியாதது ஏன்?8 மே 2025 பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக கூறும் இந்தியா, 25 இந்திய டிரோன்களை வீழ்த்தியதாக கோரும் பாகிஸ்தான்8 மே 2025 பட மூலாதாரம்,GURPREET CHAWLA படக்குறிப்பு,எல்லைப் பகுதிகளுக்கு அருகே இருக்கும் கிராமத்தினரின் வீடுகளில் கிடைத்த மர்மமான பொருட்கள் இந்திய அரசாங்கம் என்ன சொல்கிறது? மே 8 -ஆம் தேதி தேதிகளில் பாகிஸ்தான் ஏவுகணைகள், டிரோன்கள் போன்றவற்றைக் கொண்டு இந்தியாவில் உள்ள ராணுவ தளங்களை தாக்க முயற்சி செய்தது என்று இந்திய அரசு ஊடகமான டிடி நியூஸ் தெரிவித்துள்ளது. ''பாகிஸ்தான் இந்திய எல்லையில் வான்வெளியில் பல விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச எல்லையில் 36 இடங்களில் 300 - 400 டிரோன்களைப் பயன்படுத்தி ஊடுருவ பாகிஸ்தான் முயற்சித்தது. பாகிஸ்தான் பயன்படுத்திய டிரோன்களை இந்தியா சுட்டுவீழ்த்தியுள்ளது. இதன் மிச்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஏவுகணைத் தாக்குதலின்போதும் ஷெல் தாக்குதலின்போதும் பாகிஸ்தான் சிவில் விமானங்களுக்கு வான்வெளியை மூடவில்லை. பொதுமக்கள் பயணிக்கும் சிவில் விமானங்களை கேடயமாகப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது'' என இந்தியா தெரிவித்துள்ளது. -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg41ez54zdo
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
சமூக வலைதளங்களை நோக்கி மக்களின் ஏக்கங்கள்; அரசாங்கத்தின் பதில்களுக்கெதிராக அனுஷா சந்திரசேகரன் கண்டனம்! Published By: DIGITAL DESK 2 09 MAY, 2025 | 04:54 PM மாணவி அம்ஷிகா தொடர்பில் அரசாங்கம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர இழைக்கப்பட்ட அநீதிக்கு சமூக வலைதளங்களில் தீர்வை தேட தேவையில்லை என கூறுவது பொறுத்தமற்றது, இந்த கூற்றுக்கெதிராக நான் எனது கண்டனங்களை தெரிவிக்கிறேன் என சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த 29ம் திகதி 16 வயதான, ஒரு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எம் அனைவரையும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. குறித்த மாணவி ஒரு பிரபல மகளிர் பாடசாலையில் கல்வி கற்றுவந்த நிலையிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாகவும் அதனுடன் அந்த பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது. இந்த சம்பவம் தொடர்பில் குறித்த மாணவி பாடசாலைக்கு அறிவித்தும் கூட இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் குறித்த மாணவி பாடசாலையை விட்டு இடைவிலகியதாகவும் அறிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்வதற்கு முன்னராக குறித்த மாணவி அதிக மனவுளைச்சலுக்கு உள்ளாகியிருந்தமையும் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பில் பெற்றோர்களுக்கு நீதி கிடைக்காத ஒரு அவல சூழ்நிலையிலேயே சமூக வளைத்தளங்கள் வாயிலாக இந்த விடயம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் தான் அனைத்து தரப்பினரது கண்களும் திறந்து இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பில் மகளிர் அமைச்சரின் பாராளுமன்ற உரையில் "சமூக வளைத்தளங்களினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்ற கூற்று எமக்கு வேதனையளிக்கிறது. காரணம் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் நாசகார அரசாங்கத்தின் ஆட்சியையே தலைகீழாக மாற்றிய பெருமை இந்த சமூக வலைத்தளங்களுக்கு உண்டு என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன். இந்த அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக கூட இந்த சமூக வலைத்தளங்கள் அளப்பரிய பங்காற்றியது என்பதை எவரும் மறுக்கவும் முடியாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கமாக, பொறுப்பு வாய்ந்த ஒரு மகளிர் விவகார அமைச்சராக, ஒரு பெண்ணாக இன்னுமோர் பெண்ணுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக எழுப்பபட்டிருக்க வேண்டிய குரல் மகளிர் அமைச்சரது குரலாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரது கூற்று அது மக்களின் பக்கம் குற்றம் சாட்டும் முகமாக மாறியிருப்பது, பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை சட்டை செய்யாத, பதவியிலிருந்தும் தனது இயலாமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பது துரதிஷ்டவசமானது. பொதுமக்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீதான வெறுப்பை அதிகரிப்பதாக இந்த சம்பவம் அமைந்துவிட்டது. எதிர்காலத்தில் இவ்வாறான துரதிர்ஷ்ட சம்பவங்கள் நிகழவே கூடாது என்பதற்காக இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும். அம்ஷிகாவுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காகவும், எம் சமூகத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான துயர சம்பவங்கள் நிகழாமல் இருக்க, என்னுடைய ஒத்துழைப்பு அனைத்து வழிகளிலும் இருக்கும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். https://www.virakesari.lk/article/214298
-
ஆப்ரேஷன் சிந்தூர்: அதிரடி தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம்!
இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி மீது இந்திய இராணுவம் விடிய விடிய தாக்குதல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்கள் மீது இந்திய இராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் லடாக், காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ள இந்திய விமானப் படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு திடீரென ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. காஷ்மீரின் ஜம்மு விமானப்படைத் தளம், பஞ்சாபின் பதான்கோட் விமானப்படைத் தளம், ராஜஸ்தானில் நல், பலோடி, உத்தர்லை ஆகிய 3 இடங்களில் உள்ள விமானத் படைத் தளங்கள் மீது பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இதில் பெரும்பாலான ட்ரோன்களை இந்திய விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. மேலும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு பீரங்கி மூலம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் நேற்றிரவு ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் விடிய விடிய நீடித்தது குறிப்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், கராச்சி, சியால்கோட், கோட்லி உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன. இந்த பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்கள், விமானப் படை தளங்களில் மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய ராணுவ ட்ரோன்கள் லாகூரில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். 4 பாகிஸ்தான் வீரர்கள் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முழுவதும் அவசரநிலை அமுல் செய்யப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் விமானி கைது: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் நேற்று இரவு மீண்டும் தாக்குதல் நடத்தியது. ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது. ராஜஸ்தானின் ஜெய்சல்மர் எல்லை அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் போர் விமானத்தில் இருந்து விமானி வெளியேறி தப்பிச் செல்ல முயன்றார். அவரை இந்திய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். https://thinakkural.lk/article/317814
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
மாணவியின் மரணத்துக்கு நீதிகோரி மாணவர்கள் கொழும்பில் அமைதி போராட்டம் Published By: DIGITAL DESK 3 09 MAY, 2025 | 01:23 PM 16 வயதுடைய மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதிகோரி இன்று வெள்ளிக்கிழமை (09) மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஜோர்ஸ் ஆர்டி சில்வா மாவத்தை வீதியில் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மாணவர்கள் நடை பவணியாக காலி முகத்திடலுக்கு செல்ல உள்ளார்கள். அங்கு மாலை 4 மணி வரை அமைதி போராட்டத்தை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/214271
-
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரான்ஸ் கடற்படை கப்பல்
09 MAY, 2025 | 03:18 PM (எம்.மனோசித்ரா) பிரான்ஸ் கடற்படைக் கப்பலான 'பியூடெம்ப்ஸ் பியூப்ரே' உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை (09) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலானது 80.65 மீற்றர் நீளமும், மொத்தம் 58 அங்கத்தவர்களை கொண்டதாகும். கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் பெர்தியோ டிமிட்ரி பணியாற்றுகிறார். கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் குழுவினர்கள், தேசிய நீரியல் வரைபட அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்திய பின்னர், நீரியல் வரைபட சேவை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துறையாடவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துவ குழுவினர்கள் இலங்கையில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளதுடன், உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் எதிர்வரும் 13ஆம் திகதி அன்று கப்பளானது நாட்டை விட்டு புறப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/214282
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பிரான்ஸிஸ் பிரீவோஸ்ட் தெரிவு : பாப்பரசர் 14 ஆம் லியோ என அழைக்கப்படுவார் Published By: VISHNU 09 MAY, 2025 | 11:12 AM புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த கார்தினால் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ள முதல் அமெரிக்கர் இவராவர். புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ள கர்தினால் ரொபர்ட் பிரீவோஸ்ட் பாப்பரசர் 14 ஆம் லியோ (14 ஆம் சிங்கராயர்) என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 267 ஆவது பாப்பரசராக 69 வயதுடைய பாப்பரசர் 14 ஆம் லியோ தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/214242 அப்ப புரியல இப்ப புரியுது!
-
ஆப்ரேஷன் சிந்தூர்: அதிரடி தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம்!
இந்திய எல்லையில் நடந்த தாக்குதல் பற்றி இந்திய ராணுவம் கூறியது என்ன? - நேரலை பட மூலாதாரம்,ANI 9 மே 2025, 00:39 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவின் ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ஆகிய பகுதிகளில் மே 8 (வியாழக்கிழமை) இரவு பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது. நேற்றிரவு இந்திய பாதுகாப்பு அமைச்சகம், "ஜம்மு, பதான்கோட், உதம்பூரில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன," என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மே 8 இரவு, ஜம்மு நகரத்தில் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டத்தைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. ஜம்மு விமான நிலையத்திலும் வெடிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்முவில் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதாகவும், நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் பிபிசியிடம் தெரிவித்தது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் சீனாவுக்கு என்ன ஆபத்து?3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே நீடிக்கும் சச்சரவுக்கு காரணமான காஷ்மீர் பிரச்னையின் முழு பின்னணிஒரு மணி நேரத்துக்கு முன்னர் நள்ளிரவுத் தாக்குதல் பற்றி இந்திய ராணுவம் கூறியது என்ன? மே 8 நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் முழு மேற்கு எல்லையையும் தாக்கியதாக இந்திய ராணுவத்தின் கூடுதல் பொது தகவல் இயக்குநரகம் (ADG PI) தெரிவித்துள்ளது. எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ள இந்திய ராணுவத்தின் கூடுதல் பொது தகவல் இயக்குநரகம் (ADG PI), "பாகிஸ்தான் ஆயுதப் படைகள் மே 8, 2025 நள்ளிரவில் முழு மேற்கு எல்லையிலும் டிரோன்கள் மற்றும் பிற வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தின. ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் வீரர்கள் பல முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினர்," என்று குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்கள் திறம்பட செயலிழக்கப்பட்டதாகவும், போர் நிறுத்த மீறல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஸ்ரீநகரில் உள்ள பிபிசி செய்தியாளர் மஜித் ஜஹாங்கிர் கூறுகையில், வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் உரி பகுதியில் பலத்த ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், எல்லைக்கு அருகிலுள்ள பொதுமக்களின் பகுதிகள் குறிவைக்கப்பட்டதாகவும் கூறினார். ஜம்மு காஷ்மீரின் ராஜௌரியில் உள்ள பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, அங்கு முழு மின்தடை ஏற்பட்டதாகக் கூறினார். ஆனால், இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மோதல் தீவிரமடைகிறதா? முந்தைய அனுபவங்கள் சொல்வது என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் ஏவுகணை தாக்குதலை பாகிஸ்தான் தடுக்க முடியாதது ஏன்?8 மே 2025 ஜம்முவில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறியது என்ன? படக்குறிப்பு,ஜம்மு முழுவதும் மின்வெட்டு அமலில் இருப்பதாக பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரின் ராஜௌரியில் இருக்கும் பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, அங்கு முழுமையான மின் தடை அமலில் இருப்பதாகக் கூறினார். அப்பகுதியில் இருந்து செய்திகளை வழங்கி வரும் திவ்யா ஆர்யா, "பூஞ்ச் நகரத்தில் மின் தடை அமலில் உள்ளது. தற்போது விமான தாக்குதலின் சைரன்களை கேட்டதாகவும், குண்டு வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர். அதோடு, அவர்கள் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்குள்ள எங்கள் குழுவினர் தெரிவித்தனர்," என்று கூறினார். மேலும், ஜம்மு நகரிலும் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகக் கூறிய அவர், இரவு 08:45 மணியளவில் ஒரே நேரத்தில் பல வெடிப்புகள் ஏற்பட்டதாக அங்குள்ள உள்ளூர்வாசிகள் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார். "ஜம்மு நகரின் தெற்கு நோக்கிச் சென்றால், அங்குதான் எல்லாம் தொடங்கியது" என்கிறார் திவ்யா ஆர்யா. அங்கு வசிக்கும் மக்களிடம் இருந்து வெடிப்புகள் குறித்த தகவல்கள் கிடைத்தன. "ஜம்மு நகரில் சுமார் 10 வெடிப்புகள் கேட்டதாக ஜம்மு நகரின் ஒரு குடியிருப்பாளர் என்னிடம் தெரிவித்தார். அதன் பிறகு நகரத்தில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. வழக்கமான தொலைபேசி இணைப்புகளிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் அழைப்புகள் மட்டுமே வேலை செய்கின்றன." பட மூலாதாரம்,ANI நேற்றிரவு முதல் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளதாகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் திவ்யா ஆர்யா கூறினார். "ஜம்முவில் இருந்து ஒன்றரை மணிநேரப் பயணத்தில் இருக்கும் கத்துவாவில் வாழும் மக்களிடமும் நான் பேசினேன். அங்கு குறைந்தது இரண்டு வெடிச்சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்." இதற்கிடையே, ராஜஸ்தானின் பார்மர், ஜெய்சல்மர், பஞ்சாபின் குர்தாபூர் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்தியாவின் அரசு ஊடகமான டிடி நியூஸ், பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஜம்முவில் அமைந்திருக்கும் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் 8 ஏவுகணைகளை ஏவியதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதோடு, ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளையும் இந்திய வான் பாதுகாப்புப் பிரிவுகள் இடைமறித்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாகவும் டிடி நியூஸ் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES மூடப்பட்ட சிவில் விமான நிலையங்கள் பஞ்சாப், ஜம்மு, காஷ்மீர், லடாக், குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 24 விமான நிலையங்கள் சிவில் சேவைகளுக்காக மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் உத்தரவிட்டுள்ளது. அறிவுறுத்தல்களின்படி, அனைத்து விமான நிலையங்களிலும் அனைத்துப் பயணிகளுக்கும் இரண்டாம் நிலை சோதனைகள் (SLPC) மேற்கொள்ளப்படும். மேலும், விமான நிலையங்களில் ஏர் மார்ஷல்கள் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தை மேற்கோள் காட்டியுள்ள ஏர் இந்தியா தனது எக்ஸ் பக்கத்தில், உள்நாட்டுப் பயணிகள் இப்போது விமான நிலையத்திற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே வந்து சேர வேண்டும் எனவும், செக்-இன் கதவுகள் 75 நிமிடங்களுக்கு முன்பே மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgq32lk2pe2o
-
ஜப்பானில் பிரபல பிரேசில் பெண் மரணம்; இலங்கையர் கைது
Published By: DIGITAL DESK 3 09 MAY, 2025 | 09:56 AM ஜப்பானில் பிரேசிலின் செல்வாக்கு மிக்க 30 வயதுடைய அமண்டா போர்ஜஸ் டா சில்வா என்ற பெண்ணின் மரணம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமண்டா போர்ஜஸ் டா சில்வா ஜப்பானை நேசித்ததோடு, பார்முலா 1 கார் பந்தய ரசிகையுமாக இருந்துள்ளார். இவர் ஜப்பானில் பாதுகாப்பாக இருப்பதாக தனது தாயாரிடம் கூறியிருந்த நிலையில், தனது நாட்டுக்கு புறப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்து, சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள நரிட்டா நகரத்தில் வாடகை குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் புகையை சுவாசித்து மூச்சு திணறி அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் சந்தேகத்துக்கிடமாக காணப்பட்டதோடு, பின்னர் குற்றவியல் விசாரணை நடத்தப்பட்டது. அதில், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய, வேலையில்லாத 31 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் கட்டடத்துக்கு தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 31 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்க முயற்சிக்காமல் அவர் குடியிருப்பை விட்டு வெளியேறிவிட்டதாகவும் ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், கையடக்க தொலைப்பேசி, நகைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் உட்பட பல தனிப்பட்ட பொருட்களும் காணாமல் போயுள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் பொலிஸாரை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளன. அமண்டா போர்ஜஸ் டா சில்வா போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாகவும், அவரது மரணம் வேண்டுமென்றே சம்பவிக்கப்பட்டதா என ஜப்பானிய பொலிஸார் விசாரணை செய்து வருவதாகவும் பிரேசிலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாகியுள்ளது. பிரபலமான பார்முலா 1 கார் பந்தய ரசிகையான அமண்டா போர்ஜஸ் டா சில்வாவை இன்ஸ்டாகிராமில் சுமார் 13,000 பேர் பின்தொடர்கின்றனர். தற்போது ஜப்பானில் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச் செயல்களை வெளிநாட்டவர்கள் செய்வதாக சமூக ஊடகங்களில் தேசிய எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. https://www.virakesari.lk/article/214253
-
சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் அர்ச்சுனா இராமநாதன் சபையில் இருந்து வெளியேற்பட்டார்
Published By: VISHNU 09 MAY, 2025 | 03:09 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சபை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் படைக்கள சேவிதரால் சபையில் இருந்து வெளியேற்பட்டார். பாராளுமன்றம் வியாழக்கிழமை (08) காலை 9.30 மணிக்கு கூடியது முதல் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பல்வேறு விடயங்களுக்கும் ஒழுங்குப்பிரச்சினைகளை எழுப்பி கருத்துக்களை முன்வைத்துக்கொண்டிருந்தார். எனினும் அவருக்கு எதிராக ஏற்கனவே அமுலில் உள்ள அவரின் உரைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான தடை காரணமாக அவரின் கருத்துக்கள் வெளிவரவில்லை. இவ்வாறாக ஒவ்வொரு விடயங்களுக்கும் ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பியும் இடையீட்டு கேள்விகளை முன்வைத்தவாறும் அர்ச்சகனா இருந்த நிலையில் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 'அ' அட்டவணையின் ஒழுங்குவிதிகளின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க உரையாற்றிக்கொண்டிருந்தபோது அர்ச்சுனா தொடர்ந்து ஒழுங்குப்பிரச்சினைகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்தினார். இதனால் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, அர்ச்சுனாவுடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த அரவிந்த் செனரத் எம்.பி. அர்ச்சகுணாவைக்கு இருதடவைகள் எச்சரித்தபோதும் அவர் எதனையும் காதில் வாங்கிகொள்ளவில்லை.அவரை சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும் எனவும் எச்சரித்து இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் அர்ச்சுனா அதனை கருத்திற்கொள்ளவில்லை. நிலையில் அவரை சபையிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு சபைக்குதலைமைதாங்கிய உறுப்பினர் அறிவித்தார். ஆனால் அர்ச்சுனா சபையில் இருந்து வெளியேற மறுத்த நிலையில் நிலையில் கட்டளையில் உள்ள விடயத்தை அர்ச்சுனாவுக்கு அறிவித்த சபைக்கு தலைமைதாங்கிய உறுப்பினர் படைக்கல சேவிதர்களினால் வெளியேற்றப்பட நேரிடும் எனவும் கூறினார். .இதனையடுத்து கூச்சல் குழப்பங்களுக்கிடையில் அர்ச்சுனா சபையிலிருந்து வெளியேறிச் சென்றார். https://www.virakesari.lk/article/214248
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியாவின் ஏவுகணை தாக்குதலை பாகிஸ்தான் தடுக்க முடியாதது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதல் விமானங்களைக் கண்டறியும் ரேடார்கள் மற்றும் பிற உபகரணங்களைக் கொண்டுள்ளன கட்டுரை தகவல் எழுதியவர், இமாத் காலிக் பதவி, பிபிசி உருது இஸ்லாமாபாத்திலிருந்து 8 மே 2025 இஸ்ரேலின் புகழ்பெற்ற வான் பாதுகாப்பு அமைப்பான 'Iron Dome' அல்லது 'David's Sling' பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இது, மேம்பட்ட ஏவுகணை தடுப்பு அமைப்பாக கருதப்படுகிறது. ஏவுகணைத் தாக்குதல் இரானில் இருந்து வந்தாலும் சரி, ஹமாஸ் ஏவிய ராக்கெட் தாக்குதலாக இருந்தாலும் சரி அவை இஸ்ரேலிய வான்வெளியில் நுழைந்தவுடன், தானியங்கி பாதுகாப்பு அமைப்புகளின் உதவியுடன் நடுவானிலேயே அழிக்கப்படுகின்றன. போரின்போது ஒரு நாட்டுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்தப் பாதுகாப்பு அமைப்பில், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள், தாக்குதல் விமானங்களைக் கண்டறிந்து கண்காணிக்க ரேடார்கள் மற்றும் பிற உபகரணங்கள் இருக்கும். இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்', பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் பல இடங்களை குறிவைத்தது. 'பயங்கரவாதிகளின் மறைவிடங்கள்' இலக்கு வைத்து தாக்கப்பட்டதாக இந்தியா கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. நிலம், வான், கடல் மற்றும் கடலுக்கு அடியில் இருந்தும் இதனை ஏவ முடியும் (கோப்புப் படம்) பஹல்காமில் 26 பேரை கொன்ற தீவிரவாத நடவடிக்கைக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்தியா கூறுகிறது. மே 7ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 1:30 மணி வரை நீடித்த இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் உள்ள மசூதிகள் மற்றும் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறுகிறது. ஆனால், 'பயங்கரவாத கட்டமைப்புகளை' மட்டுமே குறிவைத்து தாக்கியதாக இந்தியா கூறியது. இருந்தபோதிலும், தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் செளத்ரி, ஆறு இடங்களில் பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தி மொத்தம் 24 தாக்குதல்களை இந்தியா நிகழ்த்தியதாகக் கூறினார். இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை போர் விமானங்கள் ஐந்தையும், 25 டிரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது பாகிஸ்தானின் கூற்றுக்கு இந்தியா எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தக் கூற்றை பிபிசி சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை. பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்துவது முதல்முறையல்ல. 2022 மார்ச் மாதத்தில், இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான் சன்னு நகருக்கு அருகில் விழுந்தது. அதில், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா வெளியிட்ட அறிக்கையில், இந்திய ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானை நோக்கி ஏவப்பட்டதாகக் கூறியிருந்தது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விரிவான தகவல்களை வழங்கிய பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பாபர் இப்திகார், தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்த 'இந்திய ஏவுகணை' தரையிலிருந்து ஏவப்படும் சூப்பர்சோனிக் ஏவுகணை என்று கூறியிருந்தார். மேலும், அந்த ஏவுகணை ஒரு சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை என்றும், ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என்றும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்ததாக பாகிஸ்தான் கூறியது. இந்த ஏவுகணையானது, பாகிஸ்தான் எல்லைக்குள் மூன்று நிமிடங்கள் 44 வினாடிகள் இருந்ததாகவும், பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணித்த பிறகு செயலிழந்ததாக கூறப்பட்டது. இந்தியாவின் சிர்சா நகரத்திலிருந்து ஏவுகணை ஏவப்பட்ட உடனேயே, பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பின் கண்காணிப்பிற்குள் அது வந்துவிட்டதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த ஏவுகணை ஏவப்பட்டது முதல் செயலிழந்தது வரையிலான செயல்பாடு முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது என்று பாகிஸ்தான் கூறியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளின் பாதுகாப்பு உபகரணக் கொள்முதல் அதிகரிப்பு (கோப்புப் படம்) பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு.. 2019 முதல், இரு நாடுகளும் புதிய பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியுள்ளன. இந்திய விமானப்படையிடம் பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பான 36 ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன. இந்தியாவின் அண்மைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டு ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறுகிறது. ஆனால் இதற்கு இந்தியா எந்தவித பதிலும் அளிக்கவில்லை. அதே காலகட்டத்தில் பாகிஸ்தான் சீனாவிடமிருந்து குறைந்தது 20 நவீன J-10 போர் விமானங்களை வாங்கியுள்ளது என்றும், அவை PL-15 ஏவுகணைகளைக் கொண்டவை என்றும் லண்டனை தளமாகக் கொண்ட International Institute of Strategic Studies தெரிவித்துள்ளது. வான் பாதுகாப்பைப் பொறுத்தவரை, 2019ம் ஆண்டிற்குப் பிறகு, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து S-400 எனப்படும் விமானங்களை அழிக்கும் ஏவுகணை அமைப்பை வாங்கியது. பாகிஸ்தான் சீனாவிடமிருந்து HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கியது. ரேடியோ பாகிஸ்தானின் கூற்றுப்படி, பாகிஸ்தான் விமானப்படையின் வான் பாதுகாப்பு திறன்களில் 'மேம்பட்ட வான்வழி தளங்கள், அதிக உயரம் முதல் நடுத்தர உயரம் வரையிலான வான் பாதுகாப்பு அமைப்பு, ஆளில்லா போர் விமானம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், விண்வெளி, சைபர், மின்னணு போர் உபகரணங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உபகரணங்களும் உள்ளதாக பாகிஸ்தான் விமானப்படையின் அண்மை அறிக்கை கூறுகிறது. ஆனால் பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலுக்குப் பிறகு, சில முக்கியமான கேள்விகள் எழுந்துள்ளன. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவிலிருந்து வரும் ஏவுகணைகளை குறிப்பிடத்தக்க அளவில் இடைமறிக்கும் திறன் கொண்டவையா? இந்தியாவிலிருந்து வரும் ஏவுகணைகளை பாகிஸ்தானால் ஏன் நடுவானில் அழிக்க முடியவில்லை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான், கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டதாகக் கூறுகிறது (கோப்புப் படம்) ஏவுகணைகளை பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்க முடியுமா? தரையிலிருந்து ஏவப்படும் குறுகிய தூர, நடுத்தர தூர மற்றும் தொலைதூர ஏவுகணைகளையும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறனை பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு கொண்டுள்ளது என்று பாகிஸ்தான் விமானப்படையின் முன்னாள் துணை ஏர் மார்ஷல் இக்ரமுல்லா பாஹ்டி பிபிசி உருதுவிடம் தெரிவித்தார். சீனாவில் தயாரிக்கப்பட்ட HQ-16FE உட்பட பாகிஸ்தான் தனது பாதுகாப்பு அமைப்பில் பல ஏவுகணை அமைப்புகளை இணைத்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு நவீன பாதுகாப்பு ஏவுகணை அமைப்புத் திறனை வழங்குகிறது. தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் போர் கப்பல்களைத் தாக்க இவை பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், வானிலிருந்து தரையை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறிக்கும் வகையிலான பாதுகாப்பு அமைப்பு எதுவும் இல்லை. பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய இந்தியா, தனது ஏவுகணைகளை வானிலிருந்து ஏவியதா அல்லது தரையிலிருந்து ஏவியதா என்பது தெரியவில்லை. உலகில் இதுவரை எந்த ஒரு பாதுகாப்பு அமைப்பும் முழுமையான பாதுகாப்பை வழங்குவதில்லை என்று பாகிஸ்தான் விமானப்படையின் முன்னாள் மூத்த அதிகாரி அதில் சுல்தான் பிபிசியிடம் தெரிவித்தார். பாகிஸ்தான், இந்தியா போல் எல்லையைப் பகிர்ந்துக் கொள்ளும் நாடுகள் எப்படி பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்று அவர் கேள்வி எழுப்புகிறார். அதிலும் வானிலிருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைத் தாக்குதல்களை 100 சதவீதம் நிறுத்துவது என்பது சாத்தியமற்றது என்று அவர் கூறுகிறார். ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளில் இருந்து வரும் ஏவுகணைகளைத் தடுக்க எந்தவொரு பாதுகாப்பு அமைப்பின் திறனுக்கும் வரம்பு இருக்கும் என அதில் சுல்தான் கூறுகிறார் நவீன பாதுகாப்பு அமைப்புகள் பயனுள்ளவைகளாக இருந்தாலும், 2,500 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள கிழக்கு எல்லையில் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவது சாத்தியமில்லை என்கிறார் அவர். ''உண்மையில் முழுமையான பாதுகாப்பு அமைப்பு நிறுவப்படவேண்டும் என்றால், பில்லியன் கணக்கான டாலர்கள் செலவாகும். அவ்வளவு செலவு செய்து பாதுகாப்பு அமைப்பை நிறுவினாலும், எல்லைகள் அருகாமையில் இருப்பதால் அவை மிகவும் பயனளிக்காது'' என்று அதில் சுல்தான் கூறுகிறார். இந்தியா, பாகிஸ்தான் மோதல் பின்வாங்க முடியாத அளவுக்கு முற்றிவிட்டதா? 4 முக்கிய கேள்விகள்8 மே 2025 'சில நிமிடங்களில் அடுத்தடுத்த ஏவுகணை' - நேரில் கண்ட இந்தியா - பாகிஸ்தான் மக்கள் கூறுவது என்ன?7 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் அண்மைத் தாக்குதல்களில், ஏவுகணைகள் வானில் இருந்து தரைக்கு ஏவப்பட்டிருக்கலாம் என்றும், தற்போது ஏவுகணைகள் மிகவும் நவீனமாகிவிட்டன என்றும் பாகிஸ்தான் விமானப்படையின் முன்னாள் துணை ஏர் மார்ஷல் இக்ரமுல்லா பாஹ்டி கூறினார். "ஏவுகணைகளின் வேகம் மிகவும் அதிகமாகிவிட்டது. மிக் 3 மணிக்கு 3,675 கிமீ செல்கிறது என்றால், மிக் 9 மணிக்கு 11,025 கிமீ வரை செல்லக்கூடியது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட எந்த நாடும் அத்தகைய அதிவேக ஏவுகணையை இடைமறிக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை" என்று அவர் கூறினார். வான்வழி ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறிப்பதில் மற்றொரு சிரமமும் உள்ளது. அவை பறக்கும் நேரம் மிகவும் குறைவாக இருப்பதால், எதிர்வினையாற்றுவதற்கான நேரமும் அதைவிடக் குறைவாகவே இருக்கும். மாறாக, தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளின் பறக்கும் காலம் அதிகமாக இருப்பதால் அவற்றை இடைமறிக்க முடியும் என்று இக்ரமுல்லா பாஹ்டி கூறுகிறார். நிலம் வழியாக இணைந்துள்ள நாடுகளிடம் இருந்து வரும் தாக்குதல்களை உலகில் உள்ள எந்தவொரு பாதுகாப்பு அமைப்பும் 100 சதவீதம் தடுக்க முடியாது என்று அதில் சுல்தான் கூறினார். இருப்பினும், பாதுகாப்பு அமைப்புகளால் இழப்புகளைக் குறைக்க முடியும் என்று சொல்லும் அவர், தாக்குதல் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம் என்றும் சொல்கிறார் அவர் '' ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளில் இருந்து வானிலிருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் ஏவப்பட்டால், அவற்றை ரேடாரில் அடையாளம் கண்டு உடனடியாக செயல்படுவது கடினமாகிவிடும். அதேசமயம், தரையிலிருந்து ஏவும் ஏவுகணைகள் அல்லது கப்பல் ஏவுகணைகளை கண்காணிப்பதும், எதிர்ப்பதும் எளிதானது. வான்வெளியில் போர் விமானங்கள் மோதிக் கொண்டால் அது மிகவும் மாறுபட்ட சூழ்நிலையாக இருக்கும்'' என்று அதில் சுல்தான் கூறினார். "தரையிலிருந்து வரும் ஏவுகணைகளை பொறுத்தவரை ஏவுகணைகளின் திறன், சாத்தியமான பாதைகள் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் வான்வழிப் தாக்குதலில், எங்கிருந்து தாக்குதல் வரும், எதுபோன்ற தாக்குதல் வரும் என்பது நமக்குத் தெரியாது. எல்லா பக்கங்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார். -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy3jdq0jveo
-
இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
09 MAY, 2025 | 10:08 AM இலங்கை விமான படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இராணுவ வீரர்களின் அணிவகுப்பொன்றின் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமான படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது ஹெலிகொப்டரில் இருந்த 2 விமானிகள் உட்பட 12 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/214255
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நான் 2000 இல் வைத்தியத்திற்காக விசாவிற்கு விண்ணப்பித்து தரவில்லை. 6 மாதம் கழித்து முன்னாள் பா.உ துரைராஜசிங்கம்(மட்டு) நேரடியாக அழைத்துச் சென்று விசா பெற்றுத் தந்தார். பின்னர் 2009 இல் விண்ணப்பித்தும் தரவில்லை. 2018 இல் அயலூர் தம்பி ஒருவர் தூதரகத்தில் பணியாற்றுகிறான், அவனூடாக முயன்று விசா பெற்றாலும் தனிப்பட்ட காரணங்களால் போகமுடியவில்லை. அப்போது தான் அவன் சொன்னான் என்னை தடைப்பட்டியலில்(black list ) போட்டுள்ளதாக!!! (ஒரு தரம் வெரித்தாஸ் தமிழ் வானொலிக்கு சொந்தப் பெயர் முகவரி போட்டு ஜெகத் கஸ்பார் அவர்களை பாராட்டி கடிதம் போட்டிருந்தேன்)
-
தமிழர்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
08 MAY, 2025 | 06:29 PM தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம். அரசியல் இருப்புக்காகவே தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாக சில குழுக்கள் போலி பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றன என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பொதுத் தேர்தல் என்பது வேறு, உள்ளூராட்சி சபைத் தேர்தலென்பது வேறு. எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுடன்தான், உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவை ஒப்பிட வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் 2018 தேர்தலில் வடக்கில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில்தான் தேசிய மக்கள் சக்திக்கு பிரதிநிதித்துவம் இருந்தது. ஆனால் இம்முறை வடக்கில் எல்லா பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்திக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றுள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் மிக்க விடயமாகும். எனினும், மக்களை பிரித்தாள்வதற்கு முற்படும் அரசியல்வாதிகளுக்கு இது பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாக போலி பிரச்சாரம் முன்னெடுத்து இன்பம் காண்கின்றனர். ஜனாதிபதி தோழர் அநுர குமார திசாநாயக்க மீதும், எம் மீதும், எமது அரசாங்கம் மீதும் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அப்படியே தொடர்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை எம்மால்தான் நிச்சயம் நிறைவேற்ற முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். நிச்சயம் அதனை செய்வோம். அதற்குரிய அடித்தளம் தற்போது இடப்பட்டு வருகிறது. எனவே, சதிகார அரசியல்வாதிகளால் எம்மையும் மக்களையும் பிரிக்க முடியாது. இலக்கை நோக்கிய எமது பயணம் தொடரும். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த அத்தனை சொந்தங்களுக்கும் நன்றிகள். அதேபோல வாக்களிக்காதவர்களுக்கும் எமது சேவைகள் தொடரும் என்றார். https://www.virakesari.lk/article/214231
-
உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா நாளை இலங்கைக்கு வருகை
உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் பிரதமருடன் சந்திப்பு Published By: DIGITAL DESK 2 08 MAY, 2025 | 12:17 PM பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்காவுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (7) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக பேணுவது குறித்து கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும். இலங்கை முகம்கொடுத்த அண்மைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உலக வங்கி வழங்கிய ஆதரவிற்காக உலக வங்கிக் குழுவின் தலைவருக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பேண்தகு அபிவிருத்திக்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்தும் வலியுறுத்தினார். அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த முறைமையைப் பாராட்டிய உலக வங்கி குழுமத் தலைவர் பங்கா, பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வேலை தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். சுகாதாரம், கல்வி, விவசாயம், சுற்றுலா மற்றும் உற்பத்தித் தொழிற்துறைகள் போன்ற முக்கியமான துறைகளில் முதலீடு செய்வது குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக விவசாயம் மற்றும் அதன் முக்கிய துறைகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் சாத்தியக்கூறுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் பங்கா தனது கருத்துக்களை தெரிவித்தார். புத்தாக்கம் மற்றும் உற்பத்தித்திறனுக்காக இந்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்வதை இலங்கையும் ஊக்குவித்தது. வளர்ந்து வரும் தொழிற் துறைகளின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வகையில் சுகாதாரக் கொள்கையை வலுப்படுத்தவும், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை விரிவுபடுத்தவும் அரசாங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த சந்திப்பில் உலக வங்கிக் குழுவின் விசேட ஆலோசகர் ட்ரெவர் கின்கெய்ட், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான துறை பணிப்பாளர் டேவிட் சிஸ்லன், மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான தேசிய பணிப்பாளர் கெவோர்க் சர்க்சியன், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் இமாத் ஃபகூரி இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா மற்றும் இலங்கைக்கான மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி.கே.ஜி. ஹரிச்சந்திர, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் பொருளாதார விவகார (இருதரப்பு) பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன பெரேரா மற்றும் அவ் அமைச்சின் வெளிவிவகாரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் தம்மிக பிரேமரத்ன ஆகியோர் பங்குபற்றினர். https://www.virakesari.lk/article/214167
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
நடந்து ஏறத்தாழ 24 ஆண்டுகளின் பின் எழுதுகிறோம்.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
அக்னிகீல முறியடிப்புச் சமர் https://padippakam.com/padippakam/document/ltte/Book/book00021.pdf இந்திய தலையீட்டால் தாமதமாக, மல்ரிபரல் வரவோடு தென்மராட்சியில் ஆளணி இழப்பு அதிகரிக்க பின்வாங்கினார்கள். பின்வாங்கலை பின்னடைவாக கருதி அக்னிகீல தொடங்கி இராணுவம் பலத்த இழப்புகளைச் சந்தித்ததோடு இராணுவ சமநிலை ஏற்பட்டதால் ஒப்பந்தம் வந்தது.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அமத்தி வாசிங்க அண்ணை, ஏற்கனவே த.வி.பு மீதான தடைக்கு புலம்பெயர் ஆதரவாளர்களின் இந்திய எதிர்ப்பையும் காரணமாக குறிப்பிட்டவர்கள்.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
அரியாலை, தென்மராட்சி பின்னடைவுக்கு பாகிஸ்தானில் இருந்து உடனடியாக கொண்டுவரப்பட்ட மல்ரிபரலும் ஒரு காரணமாக கூறப்பட்டது. தென்மராட்சி பின்வாங்கலை அடுத்து அக்னி கீலவிற்கு பின்னர் தான் சமாதான ஒப்பந்தத்திற்கு போனது.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
80 விமானங்களை தாக்குதலுக்கு பயன்படுத்தினவர்களாம்!
-
ஆப்ரேஷன் சிந்தூர்: அதிரடி தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம்!
இந்திய தாக்குதலுக்கு முன், பின்: பாகிஸ்தானில் பாதிப்பை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் - நேரலை பட மூலாதாரம்,GETTY IMAGES 8 மே 2025, 02:46 GMT புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் மே 7 அதிகாலையில் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பதற்றத்தைக் குறைக்குமாறு ஐ.நாவும் பாகிஸ்தானையும் இந்தியாவையும் கேட்டுக் கொண்டுள்ளன. இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில், 57 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய வெளியுறவு செயலர் தீவிரவாத முகாம்களே குறி வைக்கப்பட்டதாகவும் பொது மக்கள் யாரும் கொல்லப்படவில்லை எனவும் கூறினார். இதற்கிடையில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதல்களில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தற்போது வரை 16 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்ட வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பான நிகழ்வுகள் குறித்து முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விளக்குவதற்காக, இந்திய அரசு தலைநகர் டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியது. அதில், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானின் பாதிப்பை விளக்கும் புதிய செயற்கைக்கோள் படங்கள் பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES படக்குறிப்பு,பஹாவல்பூரில் உள்ள சுப்ஹான் அல்லா மசூதியின் மேற்கூரை புதன்கிழமை மாலை, மாக்சர் டெக்னாலஜிஸ் எனும் அமெரிக்க விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் புதிய செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டது. அதில் இந்திய ராணுவத்தால் தாக்கப்பட்ட பாகிஸ்தானின் இரண்டு முக்கிய இடங்களில் ஏற்பட்ட சேதத்தைக் காண முடிகிறது. தாக்குதல்களுக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட படங்கள், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹாவல்பூர் மற்றும் நங்கல் சஹ்தான் ஆகிய இரண்டு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள சேதத்தைக் காட்டுகின்றன. பஹாவல்பூரில், நகரின் மேற்கு புறநகரில் உள்ள சுப்ஹான் அல்லா மசூதியின் கூரையின் ஐந்து குவிமாடங்களில் மூன்று சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது. சுமார் 165 மீ தொலைவில், அதன் அருகிலுள்ள கட்டடங்களும் தாக்கத்தின் அறிகுறிகளைக் காட்டுகின்றன. நங்கல் சஹ்தான் என்ற சிறிய நகரத்தில், சுமார் 150 மீட்டர் இடைவெளியில் இருக்கும் இரண்டு கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக படங்கள் காட்டுகின்றன. ஒன்று பகுதியளவு சேதமடைந்ததாகவும், மற்றொன்று முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES படக்குறிப்பு,நங்கல் சஹ்தான் என்ற சிறிய நகரத்தில் சுமார் 150 மீட்டர் இடைவெளியில் இருக்கும் இரண்டு கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன பாகிஸ்தான் தாக்குதலில் 16 பொதுமக்கள் உயிரிழப்பு - இந்தியா தகவல் புதன்கிழமை காலையில் இருந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மூன்று பெண்கள், ஐந்து குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 15-ல் இருந்து 16 ஆக உயர்ந்தது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து பாகிஸ்தான் முன்னறிவிப்பு இல்லாமல் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளதாக இந்தியா ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் குப்வாரா, பாராமுல்லா, உரி, பூஞ்ச், மேந்தர் மற்றும் ரஜோரி ஆகிய இடங்களில் பாகிஸ்தான் பீரங்கிகள் மற்றும் அதிக திறன் கொண்ட ராணுவ ஆயுதங்கள் மூலம் நடத்தி வருகிற தாக்குதல்களை பதில் நடவடிக்கைகளை எடுத்து தடுத்து நிறுத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி நிச்சயம் - ஜெய்சங்கர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜெய்சங்கர் பாகிஸ்தானுடனான 'நிலைமையை மேலும் மோசமாக்கும் நோக்கம்' இந்தியாவிற்கு இல்லை என்றும், ஆனால் இந்தியா மீதான எந்தவொரு ராணுவத் தாக்குதலுக்கும் 'மிகவும் உறுதியான பதிலடி' வழங்கப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற 20வது இந்தியா-இரான் கூட்டு ஆணையக் கூட்டத்தில் ஜெய்சங்கர் உரையாற்றினார். அங்கு அவர் இந்தியாவிற்கு வந்திருக்கும் இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியை வரவேற்றார். இந்தியா-இரான் நட்பு ஒப்பந்தத்தின் 75 ஆண்டுகளை இரு நாடுகளும் கொண்டாடுகின்றன. "ஒரு காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி கொடுக்கும் நேரத்தில் நீங்கள் இந்தியாவுக்கு வருகை தருகிறீர்கள்," என்று ஜெய்சங்கர் கடந்த மாதம் பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிப்பிட்டு பேசினார். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது, ஆனால் பாகிஸ்தான் மறுத்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர் மீதான இந்தியாவின் வான்வழித் தாக்குதல்கள் குறித்துப் பேசிய அவர், "நிலைமையை மேலும் மோசமாக்குவது எங்கள் நோக்கமல்ல. இருப்பினும், எங்கள் மீது ராணுவத் தாக்குதல்கள் நடந்தால், அதற்கு மிக உறுதியான பதிலடி வழங்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார். "ஒரு அண்டை நாடு என்ற நோக்கத்திலும், ஒரு நட்பு நாடாகவும், நிலைமையை நீங்கள் நன்கு புரிந்துகொள்வது முக்கியம்" என்று இரானிய வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் கூறினார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய இரான் முன்பு முன்வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய டிரோன்களை அழித்ததாகக் கூறும் பாகிஸ்தான் நேற்றிரவு வெவ்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்ட 25 இந்திய டிரோன்களை அழித்துள்ளதாக பாகிஸ்தானின் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெஃப்டினெண்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி தெரிவித்தார். இந்தக் கூற்றுகளுக்கு இந்தியா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. லாகூர், குஜ்ரன்வாலா, சக்வால், அட்டாக், ராவல்பிண்டி, பஹாவல்பூர், மினாவலி, கராச்சி ஆகிய பகுதிகளில் இந்த டிரோன்களை அழித்ததாக லெஃப்டினெண்ட் ஜெனரல் சௌத்ரி கூறியுள்ளார். இவற்றில் ஒரு டிரோன் கீழே விழுந்ததில் சிந்த் மாகாணத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார். லாகூரில் உள்ள ஒரு ராணுவ முகாமைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், நான்கு ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும், ஒரு கட்டமைப்பு சேதமடைந்ததாகவும் அவர் கூறினார். இந்தநிலையில், பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பை குறி வைத்து அழித்ததாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. "லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்பட்டுள்ளது," என இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியா எவ்வாறு அமைப்புகளை குறிவைத்தது என்பது பற்றிய விவரங்களை அறிக்கையில் அளிக்கவில்லை. இருநாடுகளின் கூற்றையும் பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. ஷார்ட் வீடியோ Play video, "இந்தியா பாகிஸ்தான் பதற்றம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது என்ன?", கால அளவு 0,24 00:24 காணொளிக் குறிப்பு, இரு தரப்பிலும் பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில், உலகத் தலைவர்கள் இரு நாடுகளும் அமைதிக்கான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். பிபிசியிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். "இரு தரப்பினருடனும் தொடர்பில் இருக்கின்றோம். நீண்ட கால அமைதி மற்றும் பிராந்திய நிலைத்தன்மையை நிலைநாட்டுவதற்கான தீர்வை நோக்கி இரு நாடுகளும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்," என்று செய்தித் தொடர்பாளர் அறிவித்தார். முன்னதாக, வெளியுறவுத்துறையில் செய்தி சேகரிக்கும் பிபிசி செய்தியாளர் டாம் பேட்மன், "இந்தியாவின் தாக்குதல்களுக்குப் பிறகு கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வலியுறுத்தும் வகையிலான அமெரிக்காவின் கோரிக்கையில் ஒரு தெளிவு இல்லாதது, அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவுகள் சமீப ஆண்டுகளில் வலுவடைந்து இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதும் தெளிவாகிறது," என்று தெரிவித்தார். நேற்றிரவு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, டிரம்பின் அறிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். இந்த மோதல் விரைவாக முடிவுக்கு வந்து, அமைதியான தீர்வுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இன்று நடக்கப்போவது என்ன? இந்தியா மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளிக்க இந்திய அரசு காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இந்தியா வந்துள்ளார். அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சர்வதேச எல்லையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலும் இருக்கும் பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையில், பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றமும் காலை 11 மணிக்கு மீண்டும் கூடவுள்ளதாக அதிகாரப்பூர்வ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வான் தாக்குதல்: உடைந்த பாகங்கள் பற்றி தெரியவந்தது என்ன?7 மே 2025 இந்தியா, பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களின் தற்போதைய நிலை என்ன?8 மே 2025 நான்கு விமான நிலையங்களில் விமான சேவையை நிறுத்திய பாகிஸ்தான் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் மற்றும் சியால்கோட் விமான நிலையங்களில் "செயல்பாட்டுக் காரணங்களுக்காக" வியாழக்கிழமை காலை அனைத்து விமான சேவைகளையும் பாகிஸ்தான் இடைநிறுத்தி வைத்துள்ளதாக அந்நாட்டின் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் பல விமான நிலையங்களை மூடிவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், பாகிஸ்தான் வான்வெளி திறந்துள்ளதாகவும், "சிவில் விமானப் போக்குவரத்துக்குப் பாதுகாப்பான சூழல்" இருப்பதாகவும் அந்நாட்டின் விமான நிலைய ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் உரை பாகிஸ்தான் மீது தாக்குதலைத் தொடங்கி இந்தியா தவறு இழைத்துவிட்டதாக அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தெரிவித்தார். "இந்தத் தாக்குதல்களுக்கு அவர்கள் தகுந்த விலை கொடுக்க வேண்டும்" எனவும் அவர் கூறினார். பாகிஸ்தான் பின்வாங்கிவிடும் என இந்தியா நினைத்து இருந்ததாகவும், ஆனால் "தங்கள் நாட்டுக்காகப் போராடத் தெரிந்த தேசம் இது என்பதை இந்தியா மறந்துவிட்டது" என்றும் அந்த உரையில் அவர் தெரிவித்தார். மேற்கொண்டு பேசிய அவர், நாட்டின் பாதுகாப்புப் படையினர் இந்தியாவின் தாக்குதலை எதிர்த்ததாகக் கூறினார். அப்போது, இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக அவர் குறிப்பிட்டார். எனினும், இந்தக் கூற்றை இந்தியா உறுதிப்படுத்தவில்லை. இந்தியாவின் தாக்குதலுக்கு "எங்கள் தரப்பிலான பதிலடி அது" எனக் கூறிய பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், இந்தியா நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்படப் பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும் இந்தத் தாக்குதலில் தீவிரவாத இலக்குகளை மட்டுமே குறி வைத்ததாகவும் பொது மக்கள் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் இந்தியா கூறுகிறது. "உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் நாங்கள் பழி தீர்ப்போம் என்று சத்தியம் செய்கிறேன்," என்றும் அவர் அறிவித்துள்ளார். கார்ல் டோனிட்ஸ்: தன் அடுத்த வாரிசாக ஹிட்லர் அறிவித்த கடற்படை தளபதியின் பின்னணி6 மே 2025 இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து இரான் கவலைப்படுவது ஏன்?6 மே 2025 இந்திய எல்லையில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GURDEV SINGH இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பஞ்சாபின் சில கிராமங்களில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். தங்கள் உடைமைகளை டிராக்டர் ட்ராலிகளில் ஏற்றிக்கொண்டு, எல்லையில் இருந்து தொலைவில் உள்ள கிராமங்கள் அல்லது தங்களின் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்கின்றனர். எல்லையிலிருந்து வெளியேறும் சில குடும்பங்களிடம் பிபிசி பேசியபோது, பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க குடும்பத்தில் ஓரிரு பேர் வீட்டில் இருப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்தியா-பாகிஸ்தானுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள ஃபெரோஸ்பூர் மாவட்டத்தின் ஹுசைனிவாலா எல்லையில் சுமார் 12-14 கிராமங்கள் உள்ளன. ஜுகே ஹஸாரா சிங் கிராமத்தை சேர்ந்த ஜீத் சிங் கூறுகையில், "இங்கு பயம் நிறைந்த சூழல் உள்ளது. இங்கு உள்ளவர்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்கின்றனர்" என்றார். வயதான பெண்மணியான பஞ்சோ பாய் கூறுகையில், "நாங்கள் எங்கள் தானியங்களை எடுத்துக்கொண்டு மோகா மாவட்டத்துக்குச் செல்கிறோம். இங்கு போர் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. பாகிஸ்தான் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாம்" என்றார். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பல முக்கியமான தகவல்களைத் தெரிந்து கொள்ள 'சில நிமிடங்களில் அடுத்தடுத்த ஏவுகணை' - நேரில் கண்ட இந்தியா - பாகிஸ்தான் மக்கள் கூறுவது என்ன? இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல்: முழு தகவல் 6 காணொளிகளில் பாகிஸ்தானில் இந்திய ராணுவம் தாக்குதல் - இதுவரை நடந்தது என்ன? முழு விவரம் பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ஏவுகணை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு எப்படிப்பட்டது? இந்தியா, பாகிஸ்தான் மோதல் குறித்து மலாலா கவலை பட மூலாதாரம்,GETTY IMAGES பதற்றங்களைக் குறைக்கவும், மக்களின், குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக ஒன்றுபடவும் நடவடிக்கை எடுக்குமாறு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். "வெறுப்பும் வன்முறையும்தான் நமது பொதுவான எதிரிகள்" என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார். "இரு நாடுகளிலும் பாதிக்கப்பட்ட அனைத்து அப்பாவி மக்களின் அன்புக்கு உரியவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார். "இந்த ஆபத்தான நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள எனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் எங்களுடன் பணிபுரியும் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சிறுமிகளையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். சர்வதேச சமூகம் இப்போது ராஜ்ஜீய பேச்சுவார்த்தையை வளர்ப்பதில் செயல்பட வேண்டும்," என்று மலாலா கூறியுள்ளார். "நமது கூட்டுப் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கான ஒரே பாதை அமைதிதான்" என்று அவர் எழுதினார். கடந்த 2012ஆம் ஆண்டில், பெண் கல்வியை ஊக்குவித்து வந்த மலாலா, தாலிபன் தீவிரவாதிகளால் குறிவைக்கப்பட்டார். மலாலா இப்போது ஒரு குரல் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலராகத் தனக்கென ஒரு வலுவான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். 2014ஆம் ஆண்டில், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதுவரை நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாட்டிலும் பதற்றம் அதிகரிப்பு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவியது. இந்தியா, சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது. மேலும் பாக்லிஹார் அணை மதகுகளை மூடியது இந்தியா. பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்பரப்பைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி, தடை விதித்தது. இந்நிலையில், நேற்று (மே 7) அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் இந்தியா தாக்குதல்களை மேற்கொண்டது. அதுகுறித்த அறிக்கையில், "பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த தீவிரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட, நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டன" என இந்தியா அறிவித்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பதில் தாக்குதலை நடத்தியது. இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா, சீனா, இரான் உள்ளிட்ட உலக நாடுகள், இந்தியாவும் பாகிஸ்தானும் காட்டுப்பாட்டைக் கடைபிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cglxll4zrjeo
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
கொட்டாஞ்சேனையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவிக்கு நீதிகோரி மக்கள் ஆர்ப்பாட்டம்! Published By: DIGITAL DESK 3 08 MAY, 2025 | 12:08 PM கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிரை மாய்த்த பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (08) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு மாணவிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். கொட்டாஞ்சேனை விவேகாந்தர் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, ஹின்னி அப்புஹாமி மாவத்தையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு முன்னாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அத்துடன், கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் அமைந்துள்ள மாணவியின் வீட்டுக்கு முன்னால் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு மாணவியின் பெற்றோருக்கு ஆறுதலை தெரிவித்ததுடன், மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டனையின் முன்நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்து தங்களது ஆதரவு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன் உயிரிழந்த மாணவிக்காக ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். இதேவேளை, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள மாணவி ஆரம்பத்தில் கல்வி பயின்ற பாடசாலைக்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/214173
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக கூறும் இந்தியா, 25 இந்திய டிரோன்களை வீழ்த்தியதாக கோரும் பாகிஸ்தான் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் 8 மே 2025, 11:23 GMT புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, புதன்கிழமை இரவு முதல் 25 இந்திய டிரோன்களை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது. முன்னதாக, 12 இந்திய டிரோன்களை அழித்ததாக பாகிஸ்தானின் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெஃப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் கூற்றுகளுக்கு இந்தியா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. அதே சமயம், 'புதன்கிழமை இரவு, டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பல இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்க முயன்றதாக' இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் 'பல இடங்களில்' உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார்களை குறிவைத்து அழித்ததாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஒரு அறிக்கையையும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் மே 7 அதிகாலையில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில், 57 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ''பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து மட்டுமே தாக்குதல்'' நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்ட வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்டுள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதல்களில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 16 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் உறுதி செய்துள்ளார். '25 இந்திய டிரோன்களை அழித்தோம்- பாகிஸ்தான்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இந்திய துணை ராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தானின் வெவ்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்ட 12 இந்திய டிரோன்களை அழித்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெஃப்டினெண்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி முன்னர் தெரிவித்திருந்தார். அதன் பிறகு, பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புப் பிரிவின் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியானது. அதில் புதன்கிழமை இரவு முதல், பாகிஸ்தான் ராணுவம் 25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் தாக்குதல் பற்றி ஊடகங்களுக்கு விளக்கமளித்த பெண் அதிகாரிகள் யார்?9 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா, பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களின் தற்போதைய நிலை என்ன?9 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய துணை ராணுவ வீரர்கள் இன்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மே 07, 2025 அன்று நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இந்தியாவின் பதிலடி 'தெளிவான இலக்கோடு, அளவோடு மற்றும் பதற்றத்தை அதிகரிக்காத வகையில் நடத்தப்பட்டது' என தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவ தளங்கள் குறிவைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டது. இந்தியாவில் உள்ள ராணுவ தளங்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பொருத்தமான பதிலடி தரப்படும் என்பதும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது." என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நேற்றிரவு, அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தர்லாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பல ராணுவ தளங்களை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது என பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. பாகிஸ்தானின் இந்த தாக்குதல்கள் ஒருங்கிணைந்த 'கவுண்டர் UAS (ஆளில்லா விமான அமைப்பு) கிரிட்' மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் டிரோன்களின் சிதைந்த பாகங்கள் இப்போது பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வருவதாகவும், இது பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியது என்பதை நிரூபிக்கிறது என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், வியாழக்கிழமை காலை பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை இந்திய ராணுவம் குறிவைத்ததாக இந்தியாவின் அறிக்கை தெரிவித்துள்ளது. "நம்பகமான தகவலின்படி, லாகூரில் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது" என்றும் அமைச்சகம் கூறியது. ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் தனது துப்பாக்கிச் சூட்டின் தீவிரத்தை மோர்டார் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் துப்பாக்கிச் சூடு காரணமாக மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட பதினாறு அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், இதனால் பாகிஸ்தானின் மோர்டார் மற்றும் பீரங்கித் தாக்குதலை நிறுத்த மற்றும் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இருநாடுகளின் கூற்றையும் பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலின் விளைவுகளைக் காட்டும் 10 புகைப்படங்கள்5 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இந்திய தாக்குதலில் குறிவைக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாரின் பின்னணி6 மணி நேரங்களுக்கு முன்னர் 'பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி நிச்சயம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'நிலைமையை மேலும் மோசமாக்கும் நோக்கம்' இந்தியாவிற்கு இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார் பாகிஸ்தானுடனான 'நிலைமையை மேலும் மோசமாக்கும் நோக்கம்' இந்தியாவிற்கு இல்லை என்றும், ஆனால் இந்தியா மீதான எந்தவொரு ராணுவத் தாக்குதலுக்கும் 'மிகவும் உறுதியான பதிலடி' வழங்கப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற 20வது இந்தியா-இரான் கூட்டு ஆணையக் கூட்டத்தில் ஜெய்சங்கர் உரையாற்றினார். அங்கு அவர் வருகை தந்த இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியை வரவேற்றார். இந்தியா-இரான் நட்பு ஒப்பந்தத்தின் 75 ஆண்டுகளை இரு நாடுகளும் கொண்டாடுகின்றன. "ஒரு காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி கொடுக்கும் நேரத்தில் நீங்கள் இந்தியாவுக்கு வருகை தருகிறீர்கள்," என்று ஜெய்சங்கர் கடந்த மாதம் பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிப்பிட்டு பேசினார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர் மீதான இந்தியாவின் வான்வழித் தாக்குதல்கள் குறித்துப் பேசிய அவர், "நிலைமையை மேலும் மோசமாக்குவது எங்கள் நோக்கமல்ல. இருப்பினும், எங்கள் மீது ராணுவத் தாக்குதல்கள் நடந்தால், அதற்கு மிக மிக உறுதியான பதிலடி வழங்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார். "ஒரு அண்டை நாடு என்ற நோக்கத்திலும், ஒரு நட்பு நாடாகவும், நிலைமையை நீங்கள் நன்கு புரிந்துகொள்வது முக்கியம்" என்று ஜெய்சங்கர், இரானிய வெளியுறவு அமைச்சரிடம் கூறினார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய இரான் முன்பு முன்வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3wd6e0jqqjo
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
தோனி 100 நாட்-அவுட்: கொல்கத்தாவை வீழ்த்தி தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வந்த சிஎஸ்கே பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 16 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு 180 ரன்கள் அல்லது அதற்கு அதிகமான ரன்களை சேஸ் செய்வதில் சிஎஸ்கே-வுக்கு இருந்த சிரமம் நேற்றோடு முடிவுக்கு வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏறக்குறைய 12 போட்டிகளுக்குப் பிறகு 180 ரன்களை எட்டி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. நட்சத்திர வீரர்களுக்கே முன்னுரிமை கொடுத்து ஆடி வந்த சிஎஸ்கே, அணியில் மாற்றங்களைச் செய்து, மாத்ரே, ரஷீத், கம்போஜ், உர்வில் படேல், பிரேவிஸ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்த பிறகு கிடைத்துள்ள 3வது வெற்றி இது. அதோடு, ஐ.பி.எல் வரலாற்றில் 100 முறை நாட் அவுட்டாக இருந்து தோனி குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்துள்ளார். கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சிஎஸ்கே அணியின் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். கொல்கத்தாவின் ப்ளே ஆஃப் கனவு? இந்த வெற்றியால் சிஎஸ்கே அணியின் நிலையில் எந்த மாற்றமும் வரவில்லை. தொடர்ந்து கடைசி இடத்தில்தான் இருக்கிறது. ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் சிஎஸ்கே அடுத்த 2 போட்டிகளில் வென்றாலும் அது பெரிதாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கொல்கத்தா அணியைப் பொருத்தவரை இந்தத் தோல்வியால் அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. கொல்கத்தா அணி தற்போது 12 போட்டிகளில் 11 புள்ளிகளுடன் இருக்கிறது. இன்னும் 2 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில், அதிகபட்சமாக 15 புள்ளிகள் வரைதான் பெற முடியும். ஆனால், இது ப்ளே ஆஃப் செல்ல போதுமானதாக இருக்காது. ஒருவேளை கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் செல்ல வேண்டுமென்றால் மும்பை, பஞ்சாப் கிங்ஸ், லக்னெள, டெல்லி அணிகள் அடுத்து வரும் ஆட்டங்களில் தோற்று 14 புள்ளிகளுக்கு மேல் பெறாமல் இருந்தால் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் செல்லும். இந்தியா, பாகிஸ்தான் மோதல்: அதிகரித்து வரும் பதற்றம், அமைதியை வலியுறுத்தும் அமெரிக்கா - நேரலைஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாகிஸ்தானில் இந்திய தாக்குதலில் குறிவைக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாரின் பின்னணிஒரு மணி நேரத்துக்கு முன்னர் பயம் அறியா இளம் வீரர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென் ஆப்பிரிக்க இளம் வீர் பிரேவிஸ் 22 பந்துகளில் அடித்த அரைசதம் சேஸிங்கை விரைவுப்படுத்தியது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக நூர் அகமது தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால், உண்மையில் சிஎஸ்கே அணியின் சேஸிங் நாயகர்களாக இருந்தது அறிமுகப் போட்டியில் களமிறங்கிய உர்வில் படேல்(31), டெவால்ட் பிரேவிஸ் (52) ஆகியோரின் பயம் அறியா ஆட்டம்தான். சிஎஸ்கேவின் தொடக்க வீரர்களான ஆயுஷ் மாத்ரே, கான்வே இருவரும் டக்-அவுட்டில் வெளியேறிய பிறகு, 3வது வீரராக வந்த உர்வில் படேல், அறிமுகப் போட்டி என்ற பதற்றமும், பயமும் இல்லாமல் ஷாட்களை ஆடினார். நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசிய உர்வில் படேல் 11 பந்துகளில் 31 ரன்களை விளாசி, அரோரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேவில் உர்வில் படேல் அமைத்துக் கொடுத்த அடித்தளம் பவர்ப்ளே முடியும் வரை விக்கெட்டுகளை இழந்தாலும் ரன்ரேட் குறையவில்லை. ஜடேஜா(19), அஸ்வின்(8) சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. இருப்பினும் சிஎஸ்கே ரன்ரேட் ஓவருக்கு 10 ரன்கள் என்ற ரீதியில் ஸ்திரமாக இருந்தது. இதை அடிப்படையாக வைத்து நடுவரிசையில் ஷிவம் துபே, பிரேவிஸ் அணியை வெற்றிக்கு எடுத்துச் சென்றனர். அதேபோல தென் ஆப்பிரிக்க இளம் வீரர் பிரேவிஸ் 22 பந்துகளில் அடித்த அரைசதம் சேஸிங்கை விரைவுப்படுத்தியது. வைபவ் அரோரா வீசிய 11வது ஓவரில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்த பிரேவிஸ் ஆட்டத்தைத் தலைகீழாக மாற்றி, வெற்றியை சிஎஸ்கே பக்கம் இழுத்து வந்தார். அரோரா வீசிய ஓவருக்கு முன்பு வரை கொல்கத்தா அணியின் வெற்றி சதவிகிதம் 78 ஆக இருந்தது. ஆனால் பிரேவிஸ் 30 ரன்களை விளாசிய பிறகு, சிஎஸ்கேவின் வெற்றி 78 சதவிகிதமாக மாறியது. பிரேவிஸ், உர்வில் படேல் ஆகிய இருவரின் பயம் அறியா ஆட்டம்தான் சிஎஸ்கே சேஸிங்கை எளிதாக்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆயுஷ் மாத்ரே இந்த ஆட்டத்தில் டக்-அவுட்டில் வெளியேறினாலும், ஆர்சிபிக்கு எதிராக அற்புதமான இன்னிங்ஸ் ஆடினார். மாத்ரே, பிரேவிஸ், உர்வில் ஆகியோர் அனைவரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பிறகு காயமடைந்த வீரர்களுக்குப் பதிலாக சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டவர்கள். கான்வே, ஜடேஜா, விஜய் சங்கர், திரிபாதி, கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சிஎஸ்கே அணிக்காகப் பெரிதாக இந்த சீசனிலும் விளையாடாமல் ஏமாற்றிய நிலையில், இளம் வீரர்கள் நீண்ட போட்டிகளுக்குப் பின் 3வது வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். அடுத்து வரும் 2 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றியைப் பற்றிக் கவலைப்படாமல் அணியில் இருக்கும் இளம் வீரர்களைக் களமிறக்கி, 2026 சீசனுக்கு தயாராவது குறித்துச் சிந்திக்க வேண்டும். சிஎஸ்கே அணியில் கடந்த போட்டிகளைவிட இந்த ஆட்டத்தில் பேட்டர்கள் ரன் சேர்க்க வேண்டும் என்ற தாகத்தை ஏற்படுத்தினர். அதற்கு இளம் வீரர்களின் ஆட்டம் முக்கியக் காரணம். கொல்கத்தா அணி ஆட்டத்துக்கு முன்பாக பவர்ப்ளேவில் சிஎஸ்கே ரன்ரேட் இந்த சீசனில் 8.1 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆட்டத்தில் 10 ரன்ரேட்டுக்கு அதிகமாக இருந்தது. டாப் ஆர்டர் பேட்டர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடவில்லை, சுதந்திரமாக ஆடுவதில் தடுமாறுகிறார்கள். இதனால்தான் இந்த சீசனில் பெரும்பகுதி ஆட்டங்களில் பவர்ப்ளேவில் சிஎஸ்கே குறைந்தபட்சம் 2 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. பவர்ப்ளேவில் சிஎஸ்கே அணியின் தடுமாற்றம் தொடர்கிறது. இந்த ஆட்டத்தில் மோசமாக 5 விக்கெட்டுகளை இழந்தது சிஎஸ்கே. ஆனால் பிரேவிஸ் 11வது ஓவரை பயன்படுத்திய விதம்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. நடுவரிசையில் ஷிவம் துபே எடுத்த 45 ரன்கள், கடைசி நேரத்தில் தோனி(18 ரன்கள்) ரஸல் பந்தில் அடித்த சிக்ஸர் ஷாட் ஆகியவை சேஸிங்கை எளிதாக்கியது. டேபிள் டாப்பில் குஜராத் டைட்டன்ஸ்: பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்- மும்பையின் நிலை என்ன?6 மே 2025 பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஆயுதமாக பிரப்சிம்ரன் உருவெடுத்தது எப்படி?6 மே 2025 தவறைத் திருத்திய தோனி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொல்கத்தா அணி தற்போது 12 போட்டிகளில் 11 புள்ளிகளுடன் இருக்கிறது. இன்னும் 2 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில், அதிகபட்சமாக 15 புள்ளிகள் வரைதான் பெற முடியும். ஆர்சிபிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் தோனி களத்தில் இருந்த போதிலும் எந்த பெரிய ஷாட்டுக்கும் முயலவில்லை. ஆனால், இந்த ஆட்டத்தில் அரோரா வீசி ய 19வது ஓவரில் துபே, நூர் அகமது ஆட்டமிழந்த பிறகு சிஎஸ்கே வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. ரஸல் வீசிய கடைசி ஓவர் முதல் பந்து "லோ-ஃபுல்டாஸாக" வீசியதை டீப் மிட் விக்கெட்டில் அருமையான சிக்ஸராக மாற்றி, அழுத்தத்தைக் குறைத்தார். ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் பெரிய ஷாட்களை ஆடாமல் இருந்தது தவறு என்று பேசிய தோனி, இந்த ஆட்டத்தில் அந்த தவறைத் திருத்திக் கொண்டு சிக்ஸர் அடித்து அணியின் அழுத்தத்தைக் குறைத்து வெற்றியைத் தேடித் தந்தார். இந்தப் போட்டியில் தோனி இரு கேட்சுகளைப் பிடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 டிஸ்மிஸல் செய்த ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். 153 கேட்சுகள், 47 ஸ்டெம்பிங்குகள் என 270 போட்டிகளில் 200 டிஸ்மிசல்கள் செய்துள்ளார். தோனிக்கு அடுத்து தினேஷ் கார்த்திக் 174 டிஸ்மிசல்கள் செய்துள்ளார். தோனி கண்ணில் பட்ட இலங்கை பள்ளி மாணவன் - ஐபிஎல்லில் கலக்கும் இலங்கை வீரர்கள்5 மே 2025 6 தொடர் சிக்சர்களை பறக்கவிட்டு அச்சுறுத்திய ரியான் பராக் - ஒரு ரன் வித்தியாசத்தில் தப்பிப் பிழைத்த கே.கே.ஆர்4 மே 2025 போராடும் நடப்பு சாம்பியன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தப் போட்டியில் தோனி இரு கேட்சுகளை பிடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 டிஸ்மிஸல் செய்த ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் (11) ஏமாற்றம் அளித்த நிலையில் சுனில் நரேன் (26), கேப்டன் ரஹானே (48) ஆகியோரின் பார்ட்னர்ஷிப் நம்பிக்கையளித்தது. அதன்பின் மணிஷ் பாண்டே(36) ரஸல் (38) நடுப்பகுதியில் சிறப்பாக ஆடிய ஸ்கோரை உயர்த்தினர். அதிலும் மணிஷ் பாண்டே களத்துக்கு வந்தது முதல் பெரிய ஷாட்டுக்கு முயன்றும் அவரால் அடிக்க முடியவில்லை. டி20 போட்டியில் களமிறங்கி டெஸ்ட் போட்டி ரீதியில் விளையாடினார். ரிங்கு சிங் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி வைத்திருக்கும் பேட்டிங் வலிமையைக் கொண்டு அந்த அணி இன்னும் கூடுதலாக 20 ரன்களை சேர்த்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், முடியவில்லை. அதே போல பந்துவீச்சில் சுனில் நரேன், வருண் இருவரின் ஓவர்கள் தான் கட்டுக்கோப்பாக இருந்தது. வருண் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், நரேன் விக்கெட் வீழ்த்தாமல் 28 ரன்களையும் மட்டுமே கொடுத்தார். ஆனால், மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 10 ரன்கள் வீதம் வழங்கினர். அதிலும் வைபவ் அரோரா 16 ரன்ரேட்டில் வாரி வழங்கி தோல்விக்கு முக்கியக் காரணமானார். அவர் வீசிய 11வது ஓவரில் பிரேவிஸ் அடித்த 30 ரன்கள்தான் ஆட்டத்தை கொல்கத்தா கைகளில் இருந்து நழுவ வைக்கக் காரணமாக இருந்தது. வெற்றிக்காக அனைவரும் போராடியும் சிலர் செய்த தவறுக்குப் பெரிய விலையை கொல்கத்தா கொடுத்துள்ளது. சிஎஸ்கே-வை தோல்வியின் பிடியில் தள்ளி தொடரை விட்டே வெளியேற்றிய பஞ்சாப் கிங்ஸ்1 மே 2025 ப்ளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டு முதல் அணியாக வெளியேறும் சிஎஸ்கே - திட்டமிட்டு வீழ்த்திய ஸ்ரேயாஸ்1 மே 2025 எதிர்காலம் பற்றி தோனி கருத்து பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொல்கத்தா அணியைப் பொருத்தவரை இந்தத் தோல்வியால் அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. வெற்றிக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் "இது எங்களுக்குக் கிடைத்த 3வது வெற்றி. பல போட்டிகளில் நாங்கள் நினைத்தது போல சில விஷயங்கள் நடக்கவில்லை. பெருமையைப் பற்றிப் பேசுவதற்கு முன், நிதர்சனத்தை உணர வேண்டும். 25 வீரர்களும் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். எந்த பேட்டர் உடற்தகுதியுடன் இருக்கிறார், யாரை பந்துவீச வைக்கலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும். இந்த போட்டியில் பேட்டர்கள் ரன் சேர்க்க வேண்டும் என்ற தாகத்தோடு ஆடியது மகிழ்ச்சியாக இருந்தது," என்று கூறினார். மேலும், "எங்களுடன் அணியில் இருக்கும் மற்ற வீரர்களையும் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் பரிசோதிக்க வாய்ப்பாக இருக்கும். தொடரில் இருந்து நாங்கள் வெளியேறியதால், அந்த வீரர்களின் மனநிலை, அழுத்தத்தைத் தாங்கும் திறனை பரிசோதிக்கலாம். பிரேவிஸ் ஆட்டத்தைக் கடைசி வரை ஆழமாகக் கொண்டு செல்ல உதவினார். வருண், சுனில் நரேன் பந்துவீச்சில் நான் விக்கெட்டை இழக்கவில்லை. வேகப்பந்துவீச்சு வரட்டும் என்று காத்திருந்தேன்," என்றும் குறிப்பிட்டார். அதோடு, தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசிக் கட்டத்தில் இருப்பதாகக் கூறிய தோனி, "ஆண்டுக்கே 2 மாதங்கள்தான் விளையாடுகிறேன். இந்த ஐபிஎல் முடிந்தபின் அடுத்த 6 முதல் 8 மாதங்களுக்கு நான் கடினமாக உழைக்கும் அளவு, அழுத்தத்தைத் தாங்கும் அளவு உடல்நிலை தாங்குமா என பார்க்க வேண்டும். இப்போது எதையும் முடியு செய்ய முடியாது. ரசிகர்களின் அன்பும், அரவணைப்பும் அற்புதமாக இருக்கிறது," எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்து வரும் முக்கிய ஆட்டங்கள் இன்றைய ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் இடம்: தரம்சாலா நேரம்: இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் நாள் – மே 6 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம் ராஜஸ்தான் vs சிஎஸ்கே நாள் – மே 12 இடம் – சென்னை நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs லக்னெள நாள் – மே 9 இடம் – லக்னெள நேரம்- இரவு 7.30 மணி மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை vs பஞ்சாப் நாள் – மே 11 இடம் – தரம்சலா நேரம்- பிற்பகல் 3.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) - 510 (12 போட்டிகள்) சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்) - 509 ரன்கள்(11 போட்டிகள்) சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்) - 508 ரன்கள்(11 போட்டிகள்) நீலத் தொப்பி பிரசித் கிருஷ்ணா (குஜராத்) - 20 விக்கெட்டுகள்(11 போட்டிகள்) நூர் அகமது(சிஎஸ்கே) - 20 விக்கெட்டுகள்(12போட்டிகள்) ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) - 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்) - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98955eq639o