Everything posted by ஏராளன்
-
ஊடகவியலாளர்கள் தராகி சிவராம், ரஜிவர்மனின் நினைவேந்தல் வடமராட்சி ஊடக இல்லத்தில் அனுஷ்டிப்பு!
Published By: DIGITAL DESK 2 28 APR, 2025 | 03:56 PM படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான ஊடகவியலாளர்களான தராகி சிவராமின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், செல்வராசா ரஜிவர்மனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் திங்கட்கிழமை (28) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் தராகி சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு - பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட பின்னர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அருகில் அவரது சடலம் மீட்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலை 10.30 மணியளவில் யாழ். ஸ்டான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். யாழ். வடமராட்சி ஊடக இல்ல செயலாளர் இரா.மயூதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட தராகி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு வடமராட்சி ஊடக இல்ல தலைவர் கு.மகாலிங்கம் மாலை அணிவித்தார். தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதன் போது கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் தராகி சிவராம் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்த தமிழ் ஊடக கல்லூரி இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. அக் காணியை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு பக்க பலமாக தமிழ் அரசியல் வாதிகள் பாராளுமன்றில் குரல் குடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/213151
-
ஈரானில் பாரிய வெடிப்புச் சம்பவம்! 500க்கும் மேற்பட்டோர் காயம்
ஈரான் துறைமுக வெடிப்பு சம்பவம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு; காயமடைந்தவர்களைச் சந்தித்த ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் Published By: VISHNU 28 APR, 2025 | 08:59 AM ஈரானின் பாந்தர் அப்பாஸ் நகரிலுள்ள மிகப்பெரிய துறைமுகமான ஷாஹித் ராஜீயில் சனிக்கிழமை இரசாயனப் பொருட்களினால் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் அமெரிக்காவுடன் ஓமானில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ள நிலையில், ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் கொள்கலன்களில் இரசாயனங்கள் முறையாக சேமிக்கப்படாததே வெடிப்பு சம்பவத்துக்கு காரணம் என ஈரானின் நெருக்கடி முகாமைத்துவ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஹொசைன் ஜஃபாரி தெரிவித்துள்ளார். ஈரானின் நெருக்கடி முகாமைத்துவ அமைப்பின் பணிப்பாளர் இதற்கு முன்னர் துறைமுகத்திற்கு வருகை தந்தபோது இந்த துறைமுகத்திற்கு எச்சரிக்கைகளை விடுத்திருந்தார், மேலும் ஆபத்துக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டியிருந்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த பாரிய வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் ஞாயிற்றுக்கிழமை (27) பார்வையிட்ட அதேவேளை விசாரணைகளை நடத்தவும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/213109
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
RCB Vs DC: பெங்களூருவின் தொடர் வெற்றி ரகசியம் என்ன? எதிர்பாராத திருப்பம் தந்த வீரர் யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது. கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 46-வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி, 11 பந்துகள் மீதம் இருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 47 பந்துகளில் 73 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய க்ருனால் பாண்ட்யா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியது. நிகர ரன் ரேட்டைப் பொறுத்தவரை 0.521 என மும்பை, குஜராத் அணிகளைவிட குறைவாக இருக்கிறது. அடுத்துவரும் போட்டிகளில் ஏதேனும் பிரம்மாண்ட வெற்றியை ஆர்சிபி பெற்றால் நிகர ரன்ரேட் எகிறிவிடும். ஆர்சிபி அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் 3 வெற்றிகள் ப்ளேஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிடும். அதேநேரம், நேற்று முன்தினம் வரை முதலிடத்திலும், 2வது இடத்திலும் மாறி மாறி இருந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று 4வது இடத்துக்குச் சரிந்துள்ளது. நிகர ரன்ரேட் ஆர்சிபியை விட சற்று குறைவாக 0.482 என இருக்கிறது. டெல்லி அணிக்கு இன்னும் 5 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் 3 போட்டிகளில் வென்றால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடும். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா - தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி எப்படி இருக்கும்? இந்தியாவின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? சிஎஸ்கே தொடர் தோல்வி – சொதப்பிய அணி மீது தோனியின் கடும் அதிருப்தி என்ன? வழக்குகளின் பிடியில் மேலும் 6 அமைச்சர்கள் - செந்தில் பாலாஜி, பொன்முடி மட்டுமல்ல பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த ஆட்டத்தில் க்ருனால் பாண்ட்யாவோடு சேர்ந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கோலி ஆரஞ்சு தொப்பியுடன் கோலி ஆர்சிபி அணி இதுவரை 7 ஆட்டங்களில் வென்றுள்ளது, அதில் 4 போட்டிகளில் சேஸிங் செய்துதான் வெற்றி பெற்றுள்ளது. இந்த 4 போட்டிகளின் சேஸிங்கிலும் விராட் கோலி அரைசதம் அடித்துள்ள நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சேஸிங்கில் மட்டும் 245 ரன்கள் சேர்த்துள்ளார். அதிலும் இந்த 4 போட்டிகளிலும் நேற்றுதான் முதல்முறையாக கோலி ஆட்டமிழந்தார். இந்த சீசனில் கோலி 10 போட்டிகளில் 6 அரைசதங்களுடன் 443 ரன் அடித்து ஆரஞ்சு தொப்பியைப் பெற்றுள்ளார். இந்த சீசனில் கோலி மெதுவான ரன்குவிப்போடு தொடங்கினாலும், தனது அனுபவத்தை வெளிப்படுத்தி, ரன்குவிப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த ஆட்டத்தில்கூட க்ருனால் பாண்ட்யாவோடு சேர்ந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து "சேஸிங் கிங்" என்ற பெயருக்கு உரித்தாக கோலி விளங்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆர்சிபி அணியின் பவுலர்கள் வலிமையான டெல்லி அணியின் பேட்டிங்கை கட்டுப்படுத்தி 163 ரன்களுக்குள் சுருட்டினர் வெற்றிக்கு காரணமான ஆர்சிபியின் பந்துவீச்சு ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முதல் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட டெல்லி அணியை 163 ரன்களுக்குள் சுருட்டினர். புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட் இருவரும் 8 ஓவர்கள் வீசி 69 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஓவருக்கு சராசரியாக 8 ரன்கள் வழங்கினர். ஆனால், யாஷ் தயால் ஒரு விக்கெட் எடுத்தாலும் ரன்களை வாரி வழங்கினார். சுழற்பந்துவீச்சாளர்களான க்ருனால் பாண்ட்யா, சூயஸ் ஷர்மா இருவரும் 8 ஓவர்கள் வீசி 50 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதில் சூயஷ் ஷர்மா விக்கெட் வீழ்த்தாவிட்டாலும், 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து டெல்லி பேட்டர்களை திணறவிட்டார். அதேபோல க்ருனால் பாண்ட்யாவும், 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து கட்டுக்கோப்பாகப் பந்து வீசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முதல் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட டெல்லி அணியை 163 ரன்களுக்குள் சுருட்டினர் பேட்டிங்கில் விராட் கோலி, க்ருனால் பாண்ட்யா இடையே அமைந்த 4வது விக்கெட்டுக்கான 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமைந்தது. ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆர்சிபி அணி சரிவிலிருந்து மீண்டதை இரு கட்டமாகப் பிரிக்கலாம். 4 ஓவரிலேயே ஆர்சிபி 3 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 6 ஓவர்களில் ஆர்சிபி 40 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. அதன்பின் அடுத்த 10 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 101 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. க்ருனால் பாண்ட்யா நிதானமாகவே ஆட்டத்தைத் தொடங்கினார். இதில் ஹேசல்வுட் பந்தில் முதுகில் அடிவாங்கி, சமீரா பந்துவீச்சில் ஹெல்மெட்டில் அடிவாங்கி பேட்டிங்கில் சிரமப்பட்டார். 21 பந்துகளில் 17 ரன்களோடு சுமாராகவே குர்னல் பாண்ட்யா பேட் செய்தார். ஆனால், அடுத்த 26 பந்துகளில் க்ருனால் பாண்ட்யா 56 ரன்கள் சேர்த்து ஆர்சிபி வெற்றிக்கு முக்கியக் காரணமாகினார். ஆங்கர் ரோல் எடுத்து ஆடிய விராட் கோலி, 45 பந்துகளில் அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த இருவருக்கு இடையேயான பார்ட்னர்ஷிப்பும் நிதானமான ஆட்டமும் தான் ஆர்சிபி வெற்றிக்கு காரணமாகும். 9 ஆண்டுகளுக்குப்பின் அரைசதம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆர்சிபி வெற்றிக்கு முக்கியக் காரணம் குர்னல் பாண்ட்யா ஆட்டம் தான் ஆர்சிபி அணியின் சேஸிங்கைப் பொருத்தவரை கோலி, க்ருனால் பாண்ட்யா ஆட்டம் தான் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. இருவரின் பார்ட்னர்ஷிப்தான் முக்கியமாக இருந்து தொடக்கத்தில் தடுமாறிய அணியை வெற்றிக்கு அருகே வரை அழைத்து வந்தது. இந்தத் தொடரில் தற்போது வரை பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காத க்ருனால் பாண்ட்யா, நேற்று அரைசதம் அடித்தது, ஆர்சிபி அணியின் பேட்டர்கள் எந்த நேரத்திலும் சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்து ஆடக்கூடிய நிலையில் உள்ளனர் என்பதைக் காட்டினார். ஆர்சிபிக்கு தொடக்கம் உற்சாகமாக இருந்தாலும் அது நிலைக்கவில்லை. பில் சால்ட்டுக்கு பதிலாக பெத்தல் களமிறங்கி, ஸ்டார்க் பந்துவீச்சில் சிக்ஸர், பவுண்டரி அடித்த நிலையில் 12 ரன்னில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த படிக்கல் டக்அவுட்டில் அக்ஸர் பந்துவீச்சிலும், பட்டிதார் ரன் அவுட்டிலும் வெளியேறினர். இதனால் 3 விக்கெட் இழப்புக்கு 26 ரன்களுடன் ஆர்சிபி அணி தடுமாறியது. வழக்கமாக மிடில் ஆர்டரில் களமிறங்கும் குர்னல் பாண்ட்யா இந்த முறை 3வது வீரராக களமிறக்கப்பட்டார். டெல்லி ஆடுகளம் கறுப்பு வண்டல் மண் கொண்டதால் பந்து பேட்டரை நோக்கி சற்று நின்று வந்தது, பெரிதாக பவுன்ஸர் இல்லை என்பதால் பெரிய ஷாட்களை ஆடுவது சற்று சிரமமாக இருந்தது. கோலி, க்ருனால் பாண்ட்யா நிதானமாக ஆடியதால் பவர்ப்ளேயில் 3 விக்கெட் இழப்புக்கு ஆர்சிபி 35 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஒரே மேடையில் இந்து,முஸ்லிம் திருமண வரவேற்பு - ஒற்றுமைக்கு முன்னுதாரணம்27 ஏப்ரல் 2025 கனடா தேர்தல் 2025: இந்திய வம்சாவளியினரின் எதிர்பார்ப்பு என்ன?27 ஏப்ரல் 2025 ஐஎன்எஸ் விக்ராந்த்: "அரபிக்கடலின் காவலன்"-பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விமானந்தாங்கி போர்க்கப்பல்27 ஏப்ரல் 2025 பவர்ப்ளேயில் கோலி, க்ருனால் பேட்டிங்கையும், 10 ஓவர்கள் வரை இருவரின் பேட்டிங்கைப் பார்த்தால் ஆர்சிபி வெல்வது கடினம் என ரசிகர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், 10 ஓவர்களுக்குப் பின்பு தான் இருவரின் ஆட்டமும் சூடுபிடித்தது. கடைசி 10 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 99 ரன்கள் தேவைப்பட்டது. க்ருனால் பாண்ட்யாவைப் பொருத்தவரை அவரின் சகோதரர் ஹர்திக் பாண்ட்யா போன்று அதிரடி பேட்டர் எனச் சொல்ல முடியாது. பந்துவீச்சு ஆல்ரவுண்டரான க்ருனால் பாண்ட்யா ஏதாவது ஒரு ஆட்டத்தில் மட்டுமே அரிதாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். அதேநேரம் "பிஞ்ச் ஹிட்டர்" போன்று கேமியோவும் ஆடக்கூடியவர். மந்தமாக ஆட்டத்தைத் தொடங்கிய க்ருனால், 11வது ஓவரில் சமீரா பந்துவீச்சில் லெக்சைடில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார், முகேஷ்குமாரின் 13வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார். குல்தீப் யாதவ் ஓவரிலும் எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார். 21 பந்துகளில் 17 ரன்களுடன் இருந்த க்ருனால் பாண்ட்யா 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதாவது அடுத்த 17 பந்துகளில் 33 ரன்களை பாண்ட்யா விளாசினார். ஐபிஎல் தொடரில் கடைசியாக 2016ஆம் ஆண்டு க்ருனால் பாண்ட்யா அரைசதம் அடித்திருந்தார், அதன்பின் 3,269 நாட்கள் கழித்து இந்த ஆட்டத்தில் க்ருனால் பாண்ட்யா அரைசதம் அடித்துள்ளார். க்ருனால் பாண்ட்யாவை ஊக்கப்படுத்திக் கொண்டே பேட் செய்த கோலி 45 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆர்சிபி அணிக்கு வெற்றி பெற கடைசி 24 பந்துகளில் 45 ரன்கள் தேவைப்பட்டது. சமீரா வீசிய 18வது ஓவரில் லெக்கட்டரில் கோலி 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த டிம் டேவிட் ஆர்சிபியின் வெற்றியை வேகப்படுத்தினார். முகேஷ் குமார் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளை விளாசி ஆர்சிபியை வெற்றிக்கு வித்திட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெல்லி அணியின் பேட்டிங்கில் நிலையான பார்ட்னர்ஷிப் இல்லாதது பெரிய ஸ்கோர் செட் செய்வதில் பின்னடைவாக அமைந்தது. நடுப்பகுதியில் சொதப்பிய டெல்லி அபிஷேக் பொரெல், டூப்பிளசிஸ் இருவரும் நல்ல தொடக்கம் அளித்தனர். ஏப்ரல் 10ம் தேதிக்குப் பின் காயத்திலிருந்து மீண்டு வந்து டூப்பிளசிஸ் களமிறங்கினார். அபிஷேக் 11 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பேட்டிங்கில் தடுமாறிய டூப்பிளசிஸ் 26 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து குர்னல் பாண்ட்யாவிடம் விக்கெட்டை இழந்தார். கருண் நாயர் அதிரடியாகத் தொடங்கினாலும், பெரிய ஷாட்டுக்கு முற்பட்டு யாஷ்தயால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 39 பந்துகளில் 41 ரன்கள் சேரத்து புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அசுதோஷ் சர்மா (2), அக்ஸர் (15) என கீழ்வரிசை பேட்டர்களும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. டெல்லி அணியைப் பொருத்தவரை 50 ரன்கள் கூட எந்த பார்ட்னர்ஷிப்பும் நிலைக்கவில்லை. தொடக்க வீரர் அபிஷேக், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் ஆகிய இருவர் மட்டுமே அதிரடியாக பேட்டைச் சுழற்றினர். மற்ற அனைத்து பேட்டர்களும் ரன்சேர்க்க கடுமையாகத் திணறினர். சிறப்பாக ஆடியக்கூடிய கே.எல்.ராகுல்கூட நேற்று 2 பவுண்டரிகள் மட்டுமே அடித்தார். ஆடுகளத்தில் பந்து பேட்டரை நோக்கி மெதுவாகவும், சில நேரங்களில் தாழ்வாகவும் வந்ததால் பேட்டர்களால் பெரிய ஷாட்டுக்கு செல்ல முடியவில்லை. இதை ஆர்சிபி சுழற்பந்துவீச்சாளர்கள் க்ருனால், சூயஷ் இருவரும் சிறப்பாகப் பயன்படுத்தினர். கடைசி நேரத்தில் ஸ்டெப்ஸ், விப்ராஜ் இருவரும் சேர்ந்து 36 ரன்கள் சேர்த்தனர். இந்த ரன்களும் வராமல் இருந்திருந்தால் டெல்லி அணி 130 ரன்களை கடப்பதே கடினமாகியிருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெல்லி அணியின் பேட்டர்கள் நேற்றைய போட்டியில் ரன் சேர்க்க தடுமாறினர். பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியம் வெற்றிக்குப்பின் ஆரஞ்சு தொப்பி வீரர் விராட் கோலி கூறுகையில் "இந்த ஆடுகளத்தில் இந்த வெற்றி மிகச்சிறப்பானது. இதற்கு முன் இருந்த ஆடுகளத்தைவிட இந்த ஆடுகளம் வித்தியாசமாக இருக்கிறது. என்னைப் பொருத்தவரை சேஸிங்கில் களமிறங்கும்முன் என்னுடைய பங்கு என்ன, எப்படி ஆட வேண்டும், எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டுதான் நான் விளையாடுவேன். 3 விக்கெட் இழப்புக்கு 24 ரன்களுடன் நெருக்கடியாக இருந்தோம். ஆனால் க்ருனால் பாண்ட்யாவுடனான 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் வெற்றிக்கு கொண்டு சென்றது. க்ருனால் பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்தது. இந்த சீசனில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார் க்ருனால் பாண்ட்யா. நான் ஸ்கோர் போர்டைப் பார்ப்பேன், சூழல்களைப் பார்ப்பேன், பந்துவீச்சாளர்கள் யார், யாரெல்லாம் நமக்கு சவலாக இருப்பார்கள் என்று பார்த்து விளையாடுவேன். அதனால்தான் முதலில் ஒரு ரன், 2 ரன்கள் என ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்தேன். அதன்பின்பு தான் பவுண்டரி பக்கம் சென்றேன். இதனால் ஆட்டம் எங்களுக்கு தேக்கமடையாமல் சென்றது. பார்ட்னர்ஷிப் என்பது டி20 போட்டியில் மிக முக்கியம். ஆனால் பார்ட்னர்ஷிப் அமைப்பதையே இன்றைய பேட்டர்கள் மறந்துவிட்டார்கள். ஆட்டத்தை ஆழமாக வழிநடத்திச் செல்லும் பாணியையும் மறந்துவிட்டார்கள். இந்த சீசனில் நான் பார்த்தவரை, பேட்டர்கள் வருவதும், போவதுமாகத் தான் இருக்கிறார்கள். பேட்டிங்கில் தொழில்முறை சார்ந்த அம்சங்கள் இருக்க வேண்டும். சூழலை அறிந்து, அதற்கு ஏற்றார்போல் ஆட்டத்தை மாற்ற வேண்டும். க்ருனாலும், நானும் நன்கு பேசிக்கொண்டு எந்த பந்தில் பெரிய ஷாட்டுக்கு செல்லலாம், யாருடைய பந்துவீச்சை குறிவைக்கலாம் எனப் பேசி விளையாடி நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம். கடைசி வரிசையில் டிம் டேவிட், ஜிதேஷ், ரொமாரியோ போன்ற பவர்ஹிட்டர்கள் இருப்பதும் எனக்கு ஆறுதலாக இருந்தது. எங்களுக்கு விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பது சூயஷ் ஷர்மாதான்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு அணியின் டெல்லி அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இன்றைய ஆட்டம் ராஜஸ்தான் vs குஜராத் டைட்டன்ஸ் இடம்: ஜெய்பூர் நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 30 இடம் – சென்னை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் நாள் – மே 1 இடம் – ஜெய்பூர் நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs சிஎஸ்கே நாள் – மே 3 இடம் – பெங்களூரு நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? விராட் கோலி (ஆர்சிபி) - 443 ரன்கள் (9 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) - 427 (10 போட்டிகள்) சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்) - 417 ரன்கள் (8 போட்டிகள்) நீலத் தொப்பி யாருக்கு? ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) - 18 விக்கெட்டுகள் (10 போட்டிகள்) பிரசித் கிருஷ்ணா (குஜராத்) - 16 விக்கெட்டுகள் (8 போட்டிகள்) நூர் அகமது (சிஎஸ்கே) - 14 விக்கெட்டுகள் (9 போட்டிகள்) https://www.bbc.com/tamil/articles/cy4vegdg40ko
-
ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை நாம் அகற்றியுள்ளோம் - பிரதமர் ஹரிணி
28 APR, 2025 | 11:29 AM எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹுங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நேற்று (27) நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தனது உரையில் பிரதமர் கூறியதாவது: எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை நாங்கள் அகற்றியுள்ளோம். அந்த மக்கள் விரோத ஊழல்களுக்கும் குற்றங்களுக்கும் இனி எந்தப் பாதுகாப்பும் இல்லை. இதனால் பயந்து குழப்பமடைந்தவர்கள் அரச சேவையிலும் உள்ளனர். பாதுகாப்புத் தரப்பிலும் உள்ளனர். இவற்றையெல்லாம் அரசியல் ஆசீர்வாதத்துடனேயே மேற்கொண்டு வந்தனர். இப்போது அரசியல் ஆசீர்வாதம் இல்லாமல் போய்விட்டதால், எஞ்சிய முடிச்சுகளை அவிழ்க்க இது உள்நோக்கித் திருப்பப்பட்டுள்ளது. இப்போது அதைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். அதன் இரண்டு மிகவும் பிரபலமான சம்பவங்களில் ஒன்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டதாகும். பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டமை ஆகும். இதற்கு முன்பு பொலிஸ் மா அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதற்காக பாராளுமன்றம் மூன்று பேர் கொண்ட குழுவையும் நியமித்துள்ளது. இன்று, அந்தக் கும்பலால் பாதுகாக்கப்பட்டவர்கள் கூட பயப்படுகிறார்கள். முன்னைய ஆளும் கட்சியில் அமைச்சரவை பதவிகளை வகித்த பிள்ளையான் போன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கேயும் சில வேடிக்கையான விடயங்களைப் பார்த்தேன். மொட்டு கட்சியினரின் கூற்றுப்படி, பிள்ளையான் தான் போரை வென்றுள்ளார். ஆனால், பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் காணாமல் போனது தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டார். சூரியவெவ பிரதேச சபை சந்தை வரியை அறவிடுவதாகக் கூறப்படுகிறது. வரிகள் அறவிடப்படுமானால், அவை மீளவும் மக்களுக்கு ஒரு சேவையாகவோ அல்லது வசதியாகவோ வழங்கப்பட வேண்டும். இந்த முறை வரிக் கொள்கையை மீறுவதாகும். வரி அறவிட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. வேறு ஒருவர் பணத்தை அறவிடுகிறார். அறவிடப்படும் வரிகளைக் கொண்டு சந்தை பராமரிக்கப்படுமானால், சந்தை சிறந்த நிலையில் இருக்க வேண்டும். சூரியவெவ பிரதேச சபையின் வருமானம் 110 மில்லியன் ரூபாவாகும். அந்தப் பணத்தை பிரதேச சபைக்கே செலவிட்டிருந்தால், இன்று அது சிறந்த நிலையில் இருந்திருக்கும். அப்படி இல்லையென்றால், அந்தப் பணம் யாரோ ஒருவரின் கைகளுக்குச் சென்றுவிட்டது. பாடசாலைகள் பணம் அறவிடக்கூடாது என்று கூறப்பட்டாலும், அது இன்னும் நடப்பதாக எங்களுக்கு முறைப்பாடுகள் வருகின்றன. விரைவில் உரிய நடவடிக்கைகளை எடுப்போம். கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை விசாரிக்க அமைச்சில் போதுமான விசாரணை அதிகாரிகள் இல்லை. நாங்கள் இப்போது அந்த விசாரணைப் பிரிவை பலப்படுத்தி வருகிறோம். நாங்கள் நிறைவேற்றிய வரவு - செலவுத் திட்டத்தில் இருந்து கிராமத்தை அபிவிருத்தி செய்வதற்காக அதிக அளவு பணத்தை ஒதுக்கியுள்ளோம். கிராமத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், கிராமத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் கிராமத்தை சுத்தம் செய்தல் போன்றவற்றை நிறைவேற்றுவோம். அரசாங்கம் இப்போது பொருளாதாரத்தை ஒரு ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. அது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும். இதை வருவாயை அதிகரிக்கும் ஒரு நிலைக்கு நாம் கொண்டுவர வேண்டும். உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து பிள்ளைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். சித்தியடையாத சில பிள்ளைகள் ஏற்கனவே இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக பரீட்சை எழுதத் தயாராகி வருகின்றனர். அதேவேளை, சிலர் தொழில் திறன்களைப் பெறுவதற்காக முயற்சி எடுத்து வருகிறார்கள். ஆனால், சில பிள்ளைகளுக்கு என்ன செய்வது என்ற தெளிவான நோக்கம் எதுவும் அவர்களிடம் இல்லை. ஏனென்றால், இந்தக் கல்வி முறை அந்த பிள்ளைகளுக்கு ஒரு பாதையை வகுத்துத் தரவில்லை. நாங்கள் எதிர்காலத்தில் செயற்படுத்தத் திட்டமிட்டுள்ள எங்கள் புதிய திட்டத்தில், அனைத்து பிள்ளைகளுக்கும் சரியான வழிகாட்டுதலை வழங்கும் ஒரு முறைமையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். நாங்கள் அதை 2026இல் ஆரம்பிப்போம். அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் மட்டுமே ஆகிறது என்றும், எதிர்காலத்தில் இவை அனைத்தையும் சரிசெய்ய அரசாங்கம் பாடுபடும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாலிய சந்தருவன், அதுல வெலந்தகொட உட்பட பல வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/213122
-
உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
உயர்தர பரீட்சை பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க (Sampath Amaratunge) அறிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பெறுபேறுகளை வெளியிடும்போது உரிய நபரின் சுட்டெண் வேறு நபர்களிடம் சென்றடைந்தால் அதனைக் கொண்டு வேறு நபர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அதனைக் கணினி முறைமையில் இருந்து அகற்றி உரிய நபர்கள் விண்ணப்பிப்பதற்கு மீள ஏற்பாடுகள் செய்வதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும். எனவே உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்நிலையில், இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (2024) மொத்தமாக 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். அதன்படி, மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம் என அமித் ஜெயசுந்தர கூறியுள்ளார். பெறுபேறுகளின்படி, பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 64.73 வீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக சேர்க்கைக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், 2023 ஆம் ஆண்டில் இது 64.33 வீதமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு, இந்த ஆண்டு (2024) உயர்தரப் பரீட்சைக்கு 274,361 பரீட்சார்த்திகள் தோற்றியதாகவும், அவர்களில் 177,588 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்ததாகவும் அமித் ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார். https://ibctamil.com/article/announcement-al-exam-results-dept-of-examinations-1745806641
-
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
உயர்தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்று சாதித்த மாணவர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியானது. இந்நிலையில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சதிதி நிம்ஹாரா, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அத்துடன் கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அமாஷா துலாரி பெரேரா, வணிகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். மேலும் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியைச் சேர்ந்த லெசந்து ரன்சர குமாரகே, பௌதீக விஞ்ஞான பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதன்படி, குருநாகல், சந்தலங்கா மத்திய கல்லூரியின் மாணவி நெத்மி நவோத்யா, உயிர் முறைமைகள் தொழில்நுட்பம் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். மேலும், கம்பஹா, ரத்னாவலி மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த செனாலி சமத்கா, கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அத்துடன் உயிரியல் பிரிவில் நாடளாவிய ரீதியில் 2ஆம் இடத்தை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் மாணவன் யமுனானந்தா பிரணவன் பிடித்தார். அவரது சகோதரன் யமுனானந்தா சரவணன் நாடளாவிய ரீதியில் 5ஆம் இடத்தை பிடித்தார். இவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தாவின் இரட்டை புதல்வர்கள் ஆவர். கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியைச் சேர்ந்த தெவிந்து தில்மித் தஹாநாயக்க கணிதப் பிரிவில் நாட்டிலேயே இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அதே பாடசாலையின் மாணவர் நவிந்து தினெத் தென்னகோன் கணிதப் பிரிவில் நாட்டிலேயே ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். https://thinakkural.lk/article/317320
-
தமிழில் மருத்துவப் படிப்பு
ஆங்கில வழிக்கல்வியும் காலனிய அடிமை மனநிலையும் "Decolonization of medical education: A global screening of instructional languages and mother tongue dependence" எனும் ஆய்வுக் கட்டுரையில் ஹமாத் உலகம் முழுக்க, ஐரோப்பிய தேசங்கள் ஆங்கிலம் அல்லாத தத்தமது தாய்மொழியிலேயே மருத்துவக் கல்வியை வழங்குகின்றன என்கிறார். ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. உலகளவில் 2900 மருத்துவக் கல்லூரிகளில் 55.6% மேலானவற்றில் தாய்மொழியில் தான் கற்பிக்கிறார்கள், ஆங்கிலத்தில் அல்ல. இதனால் இவர்களுடைய மருத்துவ ஆய்வுத் தகுதியோ மருத்துவப் பணியாற்றும் திறனோ உலகளவிலான மதிப்போ இல்லாமல் ஆகிவிடவில்லை. ஆங்கிலம் தாய்மொழியாக அல்லாத 53 நாடுகளில் மட்டுமே ஆங்கில வழியில் மருத்துவம் கற்பிக்கப்படுகிறது. அதேநேத்தில் முன்னாள் காலனிய நாடுகள் (ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில்) மருத்துவக் கல்வியை பரவலாக ஆங்கிலத்தில் இன்றும் கற்பிக்கிறார்கள். இது ஒரு நடைமுறைத் தேவையாக அல்லாமல் பண்பாட்டுச் சிக்கலாகவோ உள்ளது. இந்தியாவைப் போன்ற முன்னாள் காலனிய நாடுகள் பின்-காலனிய தேசங்கள் ஆகும்போது மேற்கத்திய தேசங்களின் சாயலில் இருந்து விடுபட முடியாமல் திணறுவதுடன், உலகமயமாதலின் பிடியிலும் சிக்கியிருப்பதால் ஆங்கிலத்தைப் பிடிவாதமாகப் பற்றிக் கொள்கின்றன. இது இந்நாடுகளில் ஆங்கிலம் அறிந்த மேற்தட்டு, அறியாத கீழ்த்தட்டு எனும் பின்-காலனிய படிநிலையைத் தக்க வைக்கவும், ஆதிக்க கலாச்சாரத்தைத் தொடரவும் ஆளும் வர்க்கத்துக்கு உதவுகிறது. மெல்லமெல்ல இதிலிருந்து விடுபடுவது, எதிர்-காலனியமாக்கல் செய்வது வெகுமக்களுக்கு கல்வியை அணுக்கமாக்கும். மோடிக்கும், அமித் ஷாவுக்கும் இந்த உயரிய நோக்கம் உள்ளதாக நான் சொல்லவில்லை. அவர்கள் கடைசியில் இந்தி வழியாக மருத்துவம் கற்க வேண்டும் என்றே சொல்வார்கள், அதற்கே அதிகமாக நிதி வழங்குவார்கள். ஆனால் தாய்மொழி வழிக்கல்வி எனும் இந்த ஐடியா முக்கியமானது. தமிழ்நாட்டில் இருந்து ஒரிஜினலான ஆய்வுகள் நடக்கவும், ஆங்கிலப் பரிச்சயம் இல்லாத மக்களுக்கு மருத்துவத்தைப் புரிந்துகொள்ளவும், மருத்துவர்களுடன் அணுக்கமாக உணரவும் இது உதவும். https://thiruttusavi.blogspot.com/2025/04/blog-post_90.html
-
மாகாண சபைத் தேர்தலை நடத்த காத்திருக்கிறோம்; சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் செய்து தர வேண்டும் - மேலதிக தேர்தல் ஆணையாளர் அச்சுதன்
Published By: VISHNU 28 APR, 2025 | 01:47 AM (ரொபட் அன்டனி) மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் செய்து தரவேண்டும். நாம் இதற்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார். முன்னை பாராளுமன்றத்தில் முன்னாள் எம்.பி. சுமந்திரன் கொண்டுவந்த தனி நபர் பிரேரணை போன்ற ஒன்றை தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்து அதனை நிறைவேற்றினால் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்தும் தாமடைந்து வருகின்ற நிலையில் அதற்கான நகர்வுகள் தொடர்பில் வினவிய போதே மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார். ‘‘ஒவ்வொரு முறையும் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் இது தொடர்பான சட்ட ஏற்பாட்டை செய்து தருமாறு நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஒன்று எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லது பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதற்கு ஒரு பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுங்கள்’’ இவ்வாறு குறிப்பிடுகிறார் சிவசுப்பிரமணியம் அச்சுதன். 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய கலப்பு தேர்தல் முறைமைக்கு அமைவான எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதால் புதிய முறைமையில் தேர்தல் நடத்த முடியாத சூழல் காணப்படுகிறது. அதேவேளை பழைய முறைமையில் நடத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்று கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும். எனினும் கடந்த சில வருடங்களாகவே இந்த இரண்டு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் இது தொடர்பில் மேலதிக தேர்தல் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் கேசரிக்கு மேலும் குறிப்பிடுகையில், ஜனநாயகத்தின் விழுமியங்களை நாங்கள் பார்க்கின்ற போது, அதன் அடிப்படை தேர்தலாகும். இலங்கையில் நடைபெற ஏற்பாடாக இருக்கின்ற ஒவ்வொரு தேர்தலும் மிக முக்கியமானது. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என்பன ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். மாகாண சபைத் தேர்தல் நடைபெற வேண்டும். இந்தத் தேர்தலுக்கான காலப்பகுதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் இன்னும் நடத்தப்படவில்லை. மாகாண சபைகளின் காலம் முடிவடைந்தாலும் தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடு. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு சட்ட சிக்கல் உள்ளது. 2017ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை முறைமையை மாற்றி பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றிவிட்டார்கள். தொகுதி மற்றும் விகிதாசார முறை என்ற கலப்பு முறைமையை தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த தேர்தல் முறைமைக்கு ஏற்ப தொகுதி எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இதில் விநோதமான செயல் என்றால் அந்த அறிக்கையை சமர்ப்பித்த அப்போதைய அமைச்சரே அதற்கு எதிராக வாக்களித்தார். பாராளுமன்றத்தில் தற்போது இரண்டு வழிமுறைகள் காணப்படுகின்றன. பழைய முறைமையில் தேர்தலை நடத்த ஒரு பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அல்லது எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றம் ஏற்க வேண்டும். இதில் ஒன்றை விரைவாக செய்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம். இந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் சாதாரன பெறும்பான்மை போதுமாகும். குறித்த பிரேரணையை ஆளுங்கட்சியே செய்ய வேண்டும் என்றில்லை. பாராளுமன்றம் எவரும் கொண்டு வரலாம் என்று குறிப்பிட்டார். அண்மையில் இலங்கைக்கு இந்தியப் பிரதமர் விஜயம் மேற்கொண்டபோது மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இரு தரப்பு சந்திப்புகளின் போதும் இது தொடர்பாக பேசப்பட்டது. மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதியில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் விமல் ரத்நாயக்கவும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். https://www.virakesari.lk/article/213108
-
பாஜக - அதிமுக கூட்டணியல்ல அது ஒரு சதி
ஒவ்வொரு தேர்தலிலும், ஒரே நாடகத்தை நாம் பார்க்கிறோம். பாஜக அதிமுகவுடன் கைகோர்க்க வலியுறுத்துகிறது. அதிமுக நாங்கள் பிஜேபியுடன் கூட்டணி வைத்ததால் தான் தோற்றோம் என்றார்கள். எந்தக் காலத்தில் நடக்காது என்றார் தவழ்பாடி. வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் பொய். வெற்றி பெறத் தவறிய பிறகும் கூட, தமிழ்நாட்டு மக்கள் அவர்களை தெளிவாக நிராகரித்த பிறகும் கூட கூட்டணி ஏன்? பாஜக ஏன் இவ்வளவு அவசரமாக கூட்டணிக்காக துடித்தது? காரணம் என்ன தெரியுமா? இது தமிழ் நாட்டு மக்களின் நலனுக்கான தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல. இது ஒரு சதி வலை. பின்னுவது பிஜேபி. அடிமைக்கூட்டம் கைகட்டி மெய் வாய் மூடி தலையைக் கூட ஆட்டாமல் தமிழர்களைக் காவு கொடுக்க உதவி செய்கிறது. அதிமுகவை படிப்படியான கையகப்படுத்தும் திட்டம். அமைதியான, கணக்கிடப்பட்ட சதி. பாஜகவால் தமிழ்நாட்டில் தனியாக வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். இந்தி மேலாதிக்கம், வட இந்திய தேசியவாதம் மற்றும் தீவிர இந்துத்துவா ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட்ட அவர்களின் சித்தாந்தத்திற்கு தமிழ் மக்களின் மனதில் இடமில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் ஒரு பிராந்தியக் கட்சியின் பின்னால் மறைந்து கொள்கிறார்கள். அதிமுகவை ஒரு முகமூடியாக, ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். தமிழர்களே ஏமாறாதீர்கள் - இது இந்தியா முழுவதும் அவர்கள் பயன்படுத்திய அதே கதை. மகாராஷ்டிராவில், அவர்கள் பல ஆண்டுகளாக சிவசேனாவைப் பிடித்துக் கொண்டனர். பின்னர் என்ன? உள்ளிருந்து பிரித்தனர். கட்சியை கடத்தினர். இன்று என்ன ஆனது? பஞ்சாபில், அவர்கள் அகாலி தளத்தைப் பயன்படுத்தினர். பின்னர் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுடன் அவர்களை இணைத்து அழித்தனர். பீகாரில், அவர்கள் நிதிஷ் குமாருக்குப் பின்னால் நின்றனர், அவரது அரசியல் வாழ்க்கையை முடிக்க முயன்றனர். வடகிழக்கில், அவர்கள் பிராந்தியக் கட்சிகளை ஒவ்வொன்றாக உள்வாங்கினர் - பாஜக கொடியைத் தவிர வேறொரு கட்சியின் கொடியையும் காணவில்லை. இது கூட்டணி அரசியல் அல்ல. இது அரசியல் மனித பட்சிணி. அவர்கள் கூட்டணியை உருவாக்கவில்லை - அதை உடைக்கிறார்கள். அவர்கள் கூட்டணியை ஆதரிக்கவில்லை - அவர்கள் கூட்டணிக் கட்சிகளை விழுங்குகிறார்கள். இப்போது, தமிழ்நாடு அவர்களின் பட்டியலில் அடுத்தது என்ன? அவர்கள் ஏற்கனவே விளையாட்டைத் தொடங்கிவிட்டனர். அதிமுகவுக்குள் பாஜக ஆதரவு முகங்களை ஊக்குவித்தல். உள்ளிருந்து கட்சியை பலவீனப்படுத்துதல். அழுத்தம் கொடுக்க மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துதல். ஊடகக் கதைகளை கட்டுப்படுத்துதல். மெதுவாக, திமுகவுக்கு முக்கிய மாற்றாக தங்களை நிலைநிறுத்துதல். நான் இதை உரத்த குரலில் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன் - பாஜக அதிமுகவுக்கு ஆதரவளிக்க இங்கே இல்லை. பாஜக அதிமுகவை அழித்து ஒழித்து விட இங்கே உள்ளது. சிவசேனாவிற்கு செய்தது போல. JD(U) உடன் முயற்சித்தது போல. நேர்மையாக வெற்றி பெற முடியாத ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் திட்டமிட்டது போல. இது கூட்டணி அல்ல. இது அரசியல் கட்சிகளைக் கைதியாக்கும் உத்தி. அதிமுக விழித்தெழாது. துரோகம் அதன் வாடிக்கையானது. பொய்களே கொள்கையானது. தலையற்ற தலைமையின் கீழ் திக்குத் தெரியாது சுடுகாட்டில் போய் படுத்துக் கொண்டது. அழிந்தால் என்ன அழியாவிட்டால் தான் என்ன? தமிழர்களுக்கு இதுபற்றிய எந்தக் கவலையும் தேவையில்லை. நச்சுக் களையொன்று ஊடுபயிரென பொங்கிப் பெருகும் தமிழர் வாழ்வுக்குள் ஊடுறுவத் துடிக்கிறது. அந்த நச்சுக் களைக்கு தமிழர்கள் நஞ்சிட வேண்டும். தமிழ்நாடு நினைவில் கொள்ள வேண்டும் - தமிழ்நாடு டெல்லிக்கு தலைவணங்கும் நிலம் அல்ல. டெல்லியில் இருந்து விதிக்கப்படும் கட்டுப்பாட்டால் ஆளப்படும் மக்கள் அல்ல. பாஜகவுக்கு இங்கே இடமில்லை. இந்தக் கூட்டணி அரசியலை நாம் இப்போது நிறுத்தவில்லை என்றால், அவர்கள் ஒவ்வொரு குரலையும், ஒவ்வொரு கட்சியையும், மாநிலத்தில் மீதமுள்ள ஒவ்வொரு ஜனநாயகத்தையும் அழிப்பார்கள். மகாராஷ்டிராவில் மூன்றாம் மொழியாக இந்தியைக் கட்டாயமாக்கி விட்டார்கள். இது வாக்குகள் பற்றியது மட்டுமல்ல. இது தமிழர்களின் அடையாளம் பற்றியது. கூட்டாட்சியின் மகத்துவம் பற்றியது. சுய மரியாதையைப் பற்றியது. இதுவெல்லாம் அடிமைகளுக்குத் தெரியாது. ஒவ்வொரு அடிமையும் ஊழல் வழக்குகளால் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். தலை தூக்கினால் அரசியலில் அவர்களின் முகம் காணாமல் போய் விடும் என்பதால் மவுனியாக அழிவுக்குத் துணை போகின்றார்கள். தமிழ்நாடு விற்பனைக்கு இல்லை. தமிழக அரசியல் அவர்களின் விளையாட்டு மைதானம் அல்ல. தமிழக மக்கள் இந்தச் சதிக்கு ஒருபோதும் சரணடைய மாட்டார்கள். https://thangavelmanickadevar.blogspot.com/
-
தமிழர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கமாட்டோம்; ஜனாதிபதி உறுதி
பாதுகாப்பு காரணங்களுக்காக வடக்கு, கிழக்கில் அரசாங்கம் கையகப்படுத்திய அனைத்து காணிகளையும் மிக விரைவில் விடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். காணிகளை விடுவித்து மக்கள் விவசாயம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். தாம் சிங்கள மக்களுடன் அதிகளவில் நெருங்கிப்பழகுகின்ற போதிலும் அவர்கள் மத்தியில் அதிகளவில் பொதுக் கூட்டங்களை நடத்திய போதிலும் தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையை கடுகளவேனும் சீர்குலைக்கப் போவதில்லை என ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்தினார். எனவே, மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையை பலப்படுத்தும் செயற்பாடுகளையே எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தமது அரசாங்கத்தின் செயற்பாடுகளால் தமக்கு வாக்ககளிக்காத மக்களிடமிருந்தும் தம்மீது நம்பிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். https://thinakkural.lk/article/317323
-
தமிழில் மருத்துவப் படிப்பு
எனக்கு தமிழில் மருத்துவக் கல்வியை வழங்க ஓரளவுக்கு நல்ல வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது. மருத்துவத்தில் ஆய்வு செய்வதை, தேர்வு எழுதுவதை சற்றே சுலபமாக்கும். கலைச்சொற்கள்? இப்போதைக்கு ஆங்கில கலைச்சொற்களைக் கலந்து பாடநூல்களை உருவாக்கலாம். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அனைத்து ஆங்கில நூல்களையும் நிமிடத்தில் தமிழாக்கலாம். புனைவுக்கு மட்டுமே செயற்கை நுண்ணறிவு மொழியாக்கம் சரிவராது, ஆனால் அபுனைவுக்கு, அதுவும் தகவல்சார்ந்த நேரடி மொழியாக்கத்துக்கு அது ஏற்றது. ஆனால் ஆசிரியர்கள் இதற்குப் பழகியிருக்க மாட்டார்கள் என்பதால் மெல்லமெல்ல கொண்டு வரலாம். எதிர்காலத்தில் வெருள வைக்கும் ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்து நேரடியாகத் தமிழில் படிப்பது மத்திய வர்க்க, கீழ்வர்க்க சிறுநகர மாணவர்களுக்கு உதவும். மருத்துவர்களும் தமிழில் விளக்கினால் நோயாளிகள் புரிந்துகொள்வார்கள். மோடி எதைச் சொன்னாலும் திட்ட வேண்டியதில்லை. ஆங்கிலமே உலக மொழி, அதைக் கொண்டே நாம் வளர்ந்தோம் என அதை மிகைப்படுத்த தேவையில்லை. ஆங்கிலம் வழி படித்து வெளிநாட்டில் பணியாற்ற விரும்புவோரும் உள்ளூரில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விரும்புவோரும் அவரவருக்கு ஏற்ப பயிலும் மொழியைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இருந்தால் நல்லது. இன்னும் சொல்லப் போனால் தமிழ்வழி படித்த ஒரு மாணவரால் ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் முடியாது என்று தீர்மானிக்க முடியுமா? ஆங்கில வழியில் படித்தோர் எல்லாரும் இங்கு ஷேக்ஸ்பிராக இருக்கிறார்களா? இரு மொழிகளில் ஒரு திறம்படைத்த மருத்துவரால் இயங்க முடியாதா? அப்படியே இரு சாராருக்கும் வேறுபாடு தோன்றினால், தமிழில் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மருத்துவப் பணிகளில் அரசு ஒட இதுக்கீடு தந்தால் அது சமத்துவத்தை ஏற்படுத்தும். நான் இதை முழுமையாக ஆதரிக்கிறேன். https://thiruttusavi.blogspot.com/2025/04/blog-post_96.html
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை Published By: DIGITAL DESK 3 28 APR, 2025 | 11:26 AM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (28) முன்னிலையாகியுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் நிதி மோசடி வழக்கு தொடர்பாக வாக்கு மூலம் அளிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். கடந்த 17 ஆம் திகதி இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு அன்று முன்னிலையாக முடியாது என தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதிலாக இன்றையதினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. https://www.virakesari.lk/article/213115
-
சுறுசுறுப்பாக இருக்க இந்த காலை உணவு உதவுமா? எப்படி சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காலை உணவாக தானியங்களை உண்ணும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் 53 சதவிகிதம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ் - ஸ்கெல்லி பதவி, 4 மணி நேரங்களுக்கு முன்னர் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலமாக இருக்கும் தானியங்களை காலை உணவாக உண்பது ஆரோக்கியத்திற்கு உகந்தது. நமது அன்றாட உணவில் காலை உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி அடிக்கடி பேசுகிறோம். காலையில் சிறப்பான உணவை உட்கொண்டால், அன்றைய நாளில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் சக்தி உடலுக்குக் கிடைக்கும். இருப்பினும், சரியான காலை உணவு எது? குழந்தைகளுக்கு காலை உணவாக என்ன கொடுப்பது என்பதை முடிவு செய்வது கடினமானதாக இருக்கிறது. காலை உணவாக தானியங்களை உண்ணும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் 53 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்களும் தானியங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்ள விரும்பினால், பல தெரிவுகள் உள்ளன. ஓட்ஸ், மியூஸ்லி, கார்ன் ஃப்ளேக்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. ஆனால், மிகவும் பதப்படுத்தப்பட்டவையாக இருந்தால், அவை நமக்கு நல்லதல்ல என்றும் சில விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்த விஷயத்தின் உண்மைத்தன்மை என்ன என்பதையும், காலை உணவாக நாம் தானியங்களைச் சாப்பிட்டால் அது எந்த வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்பதையும் தெரிந்துக் கொள்வோம். அத்தியாவசிய சத்துக்கள் கொண்ட உணவு வகைகள் கோதுமை, அரிசி, ஓட்ஸ், பார்லி, மக்காச்சோளம் ஆகியவை தானிய வகைகளில் முக்கியமானவை. ஒவ்வொரு தானியமும் மூன்று முக்கிய சேர்மங்களைக் கொண்டவை ஆகும். தானியத்தின் வெளிப்புற அடுக்கில் நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும் தானியங்களில் ஸ்டார்ச் மற்றும் புரதங்கள் உள்ளன. அத்துடன், எண்ணெய், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நிரம்பியுள்ளன. தானியங்களை காலை உணவாக மாற்றும் திட்டம் தானியங்களை காலை உணவாக மாற்றலாம் என்ற யோசனை அமெரிக்க மருத்துவர் ஜான் ஹார்வியின் மனதில் உதித்தது. Battle Creek Sanitarium என்ற நிறுவனத்தில் அவர் பணிபுரிந்துவந்தார். நோயாளிகளுக்கு சமச்சீரான உணவை திட்டமிடும் பணியில் அவர் சில புதிய உணவு வகைகளை உருவாக்கினார். அதில் கிரனோலா மற்றும் சோளமும் இடம்பெற்றன. இன்று இந்த உணவுப்பொருட்கள் அனைத்தும் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. அதுமட்டுமல்ல, அவை பல்வேறு விதங்களில் விற்கப்படுகின்றன. அறுவடைக்குப் பிறகு, பல்வேறு கட்டங்களில் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படும் தானியங்கள், இறுதியில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. சில தானியங்கள் முழுமையானதாக இருக்கும். சிலவற்றில், வெளிப்புற அடுக்கு மட்டும் அகற்றப்படும். சில தானியங்கள் பதப்படுத்தப்படுகின்றன. வேறு சில அரைத்து மாவாக்கப்படுகின்றன. தானியம் உணவுப்பொருளாக மாற்றப்படும்போது, அதன் இறுதிப் பொருளில் உப்பு, சர்க்கரை, வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற பிற கூறுகளும் கலக்கப்படுகின்றன. பின்னர் அவை சமைக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ற வடிவத்திற்கு உருமாற்றப்படுகின்றன. தானியங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், அவை அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்க போதுமானதாகக் கருதப்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களும் தானியங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அவர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான அளவு வைட்டமின்கள் உணவில் இருந்து மட்டுமே கிடைத்துவிடாது. உதாரணமாக, சைவம் அல்லது வீகன் உணவு முறையை பின்பற்றுபவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருக்கும். பால் குடிக்காதவர்களுக்கு போதுமான அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் டி கிடைப்பதில்லை. அதேபோல, வயதாகும்போது, சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் பலவீனமடைகிறது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. தானியங்களை காலை உணவாக சாப்பிடுவதால் சில நன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், பெரும்பாலான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதற்கு செறிவூட்டப்பட்ட உணவுகள் இல்லாததும் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. கலப்பு தானியங்கள் கொண்ட காலை உணவுகளில் நார்ச்சத்து நிறைந்திருக்கும். நமது வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும் ஊட்டச்சத்து இது என்பதும், பொதுவாக 90 சதவீத மக்களுக்கு நார்ச்சத்து குறைபாடு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைசுக்கு தடை ஏன்?24 ஏப்ரல் 2025 மூளை வளர்ச்சி, அறிவாற்றலை மேம்படுத்த உதவும் முட்டை - எப்படி தெரியுமா?15 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தானியங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்ள விரும்பினால், பல தெரிவுகள் உள்ளன. சர்க்கரை அதிகம் உள்ள தானியம் "தானியங்களில் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் செறிவூட்டப்பட்டால், அவை ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்," என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஊட்டச்சத்து பேராசிரியர் சாரா பெர்ரி கூறுகிறார். பிரிட்டனில், 11 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் சுமார் 50 சதவீதத்தினர் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அமெரிக்காவில் 14 சதவீத பெரியவர்கள் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறுகிறார். "காலை உணவில் கவனமாக இருக்க வேண்டும். சில தானியங்களில் அதிக சர்க்கரையும், குறைந்த நார்ச்சத்தும் உள்ளது. அதேபோல, பழங்கள் மற்றும் காய்கறிகளும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொடுப்பதற்கு சிறந்த தேர்வாக இருக்கும்" என்று சாரா பெர்ரி கூறுகிறார். பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் ஆராய்ச்சியின்படி, 30 கிராம் சோளத்தில் தோராயமாக 11 கிராம் அளவு சர்க்கரை உள்ளது. ஒரே நேரத்தில் அதிக சர்க்கரை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதற்கு காரணமாகிவிடும். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நீரிழிவு நோய் அல்லது இதயம் தொடர்பான நோய்களை அதிகரிக்கும் அபாயமும் சோளத்தில் உள்ளது. இதுபோன்ற தானியங்கள் நமது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம் என்று கூறும் சாரா பெர்ரி, ஆனால் அது குறித்து தற்போது அதிக தகவல்கள் கிடைக்கவில்லை என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தானிய உணவுகளை எடுத்துக் கொள்வதில் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் சாரா பெர்ரியின் கருத்தை அனைவரும் ஒப்புக்கொள்வதில்லை. பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்துமே தீங்கு விளைவிப்பதில்லை என சில நிபுணர்கள் நம்புகிறார்கள். மேலும், காலை உணவாக உண்ணப்படும் அனைத்து வகையான தானியங்களும் ஒரே மாதிரியானவை அல்ல. மியூஸ்லி, ஆரோக்கியமான காலை உணவு என்று கூறும் பேராசிரியர் சாரா பெர்ரி, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த காலை உணவை உட்கொண்டால் அது ஆற்றலைத் தரும் என்றும், விரைவில் பசி எடுக்காது என்றும் கூறுகிறார். அமெரிக்காவில் காலை உணவில் ஓட்ஸ் மிகவும் பிரபலம். சுமார் 5 லட்சம் பேர் பங்கு கொண்ட ஒரு ஆய்வு, ஓட்ஸ் அதிகமாக உட்கொண்டவர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து, குறைவாக உட்கொண்டவர்களை விட 22 சதவீதம் குறைவாக இருப்பதாகக் காட்டுகிறது. ஓட்ஸில் உள்ள மிக முக்கியமான நன்மை பயக்கும் காரணி நார்ச்சத்து. ஓட்ஸ் தொடர்பான பல ஆய்வுகள் பீட்டா குளுக்கன் கொளஸ்ட்ரால் அளவை குறைப்பதாகக் கண்டறிந்துள்ளன. அதிலும், இதய நோய்கள் ஏற்பட காரணமான கெட்ட கொளஸ்ட்ராலான லிப்போபுரோட்டீன் (LDL) அளவை ஓட்ஸ் குறைக்கிறது. இருந்தபோதிலும் நன்றாக அரைத்த ஓட்ஸிலிருந்து தயாரிக்கப்படும் பல வகையான ஓட்ஸ் பொருட்களில் இந்த நன்மை இருப்பதாகத் தெரியவில்லை. ஓட்ஸ் மாவில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருள், துரிதமாக செரிமானமாகி, மிகக் குறுகிய காலத்தில் உடலில் அதிக சர்க்கரையை வெளியிடுகிறது. ஒரே வீடியோ தர்பூசணி விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது எப்படி? என்ன நடந்தது?11 ஏப்ரல் 2025 முகத்தில் பூசும் 'புரோபயாடிக்' அழகு சாதனப் பொருட்களில் பாக்டீரியாக்கள் உயிருடன் இருக்குமா?14 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஓட்ஸ் மாவில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருள், துரிதமாக செரிமானமாகி, மிகக் குறுகிய காலத்தில் உடலில் அதிக சர்க்கரையை வெளியிடுகிறது. ஒரு மருத்துவ பரிசோதனையில், தன்னார்வலர்கள் முழு ஒட்ஸை முதல் நாளும், அடுத்த நாள் அரைத்த ஓட்ஸையும் சாப்பிட்டார்கள். இரண்டு வகை ஓட்ஸிலும் நார்ச்சத்து, புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஒரே அளவில் இருந்தபோதிலும், நன்றாக அரைத்த ஓட்ஸை சாப்பிட்டவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. முழு தானியங்களை உண்பவர்களுக்கு புற்றுநோய் மற்றும் டைப்-2 நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களின் ஆரோக்கிய நன்மைகள் குறைந்துவிடும். "முழு தானியங்கள் நார்ச்சத்து நிறைந்தவை என்பதால் அவை நன்மை பயக்கும்" என்று இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து நிபுணர் ரிக்கார்டோ காவல்லோனெசா கூறுகிறார். நார்ச்சத்தின் முக்கியமான பண்பு, உணவை செரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதும், குளுக்கோஸைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதும் ஆகும் என்று அவர் கூறுகிறார். ஆனால், தானியங்களில் உள்ள நார்ச்சத்தை நீக்கினால் குளுக்கோஸ் வேகமாக உற்பத்தியாகும். எனவே, காலை உணவாக தானியங்களை உட்கொள்வது நமக்கு நல்லதா அல்லது கெட்டதா? என்ற கேள்விக்கான பதில் என்ன? "நீங்கள் எந்த வகையான தானியங்களை சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது". - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czd32zg6prpo
-
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
3 பாடங்களில் 9,457 மாணவர்கள்ஏ சித்தி இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். மேலும், மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம் என்றும் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர இவ்வாறு தெரிவித்தார். பெறுபேறுகளின்படி, பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 64.73 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரிவித்தார். பல்கலைக்கழக சேர்க்கைக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், 2023ஆம் ஆண்டில் 64.33 சதவீதத்தை எட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு 274,361 பரீட்சார்த்திகள் தோற்றியதாகவும், அவர்களில் 177,588 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்ததாகவும் அவர் கூறினார். மேலும், தேர்வில் 222,774 பள்ளி பரீட்சார்த்திகளும் 51,587 தனியார் பரீட்சார்த்திகளும் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார். அத்துடன், பரீட்சையில் 3 முக்கிய பாடங்களிலும் மொத்தம் 29,244 பரீட்சார்த்திகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/317326
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெளுத்துக்கட்டியது மும்பை இண்டியன்ஸ் Published By: VISHNU 27 APR, 2025 | 08:55 PM (நெவில் அன்தனி) மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 45ஆவது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை 54 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. முன்னாள் சம்பியனும் ஐந்து தடவைகள் சம்பியனுமான மும்பை இண்டியன்ஸ் இந்தப் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்து லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெளுத்துக்கட்டியது. இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் மும்பை இண்டியன்ஸ் 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. சூரியகுமார் யாதவ்வின் அதிரடி அரைச் சதம், ஜஸ்ப்ரிட் பும்ராவின் 4 விக்கெட் குவியல், வில் ஜெக்ஸின் சகலதுறை ஆட்டம் என்பன மும்பை இண்டியன்ஸின் இந்த வெற்றியில் பிரதான பங்காற்றின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களைக் குவித்தது. ரெயான் ரிக்ல்ட்ன், வில் ஜெக்ஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர். ரிக்ல்டன் 32 பந்துகளில் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 58 ஓட்டங்களையும் வில் ஜெக்ஸ் 29 ஓட்டங்களையும் பெற்றனர். தொடர்ந்து சூரியகுமார் யாதவ் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களை விளாசினார். மத்திய வரிசையில் நாமன் திர் 11 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களையும் கோர்பின் பொஷ் 10 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மயான்க் யாதவ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆவேஷ் கான் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 216 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஜஸ்ப்ரிட் பும்ரா, ட்ரென்ட் போல்ட் ஆகிய இருவரும் தங்களிடையே 7 விக்கெட்களைப் பகிர்ந்து லக்னோவை திக்குமுக்காடவைத்தனர். மிச்செல் மார்ஷ், நிக்கலஸ் பூரன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து மும்பைக்கு சோதனை கொடுக்கும் வகையில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தனர். ஆனால், நிக்கலஸ் பூரண் (27) ஆட்டம் இழந்ததும் ரிஷாப் பான்ட் 2 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு களம் விட்டகன்றார். தொடர்ந்து மிச்செல் மார்ஷ், அயூஷ் படோனி ஆகிய இருவரும் 29 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். ஆனால், லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸின் கடைசி 7 விக்கெட்கள் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிய மும்பை இலகுவாக வெற்றியீட்டியது. மிச்செல் மார்ஷ் 34 ஓட்டங்களையும் அயூஷ் படோனி 35 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ட்ரென்ட் போல்ட் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வில் ஜெக்ஸ் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன்: வில் ஜெக்ஸ். https://www.virakesari.lk/article/213103
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
27 APR, 2025 | 01:17 PM லாகூர்: கோரி, ஷாஹீன், கஸ்னவி ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியுள்ளார். அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்காக மட்டுமே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியதாவது: “பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தினால், அவர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும். எங்களிடம் உள்ள ராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் வெறும் கண்காட்சிக்கானது அல்ல. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 130 அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை எங்கு உள்ளன என்று யாருக்கும் தெரியாது. இந்த அணு ஆயுதங்கள் அனைத்தும் இந்தியாவை மட்டுமே குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன” என கூறியுள்ளார். எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தானில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. https://www.virakesari.lk/article/213062
-
பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஆரம்பம் - பிரதமர்
27 APR, 2025 | 04:56 PM கடந்த காலங்களில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது முறையாக நடைபெறவில்லை என்றும், எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து, திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்து, தேவையான திறமையான உத்தியோகத்தர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அரசாங்கம் செயற்படுகிறது. அந்தத் திட்டங்களை கிராமத்திற்குக் கொண்டு செல்வதற்கு இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியலின் உயர் மட்டங்கள் தூய்மைப்படுத்தப்பட்டது போல, கீழ் மட்டமும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். எங்கள் போட்டி குழுக்களுக்கு வெவ்வேறு நலன்கள் உள்ளன என்பதையும், இது எதிர்க்கட்சியின் அரசியல் இருப்புக்கான விடயம் என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் எங்களுக்கு இருப்பு தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அரசாங்கத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு எமக்கு ஒரு சரியான நிர்வாக முறைமை இருக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்திற்குள் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவார் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறியிருப்பதைக் கண்டேன். அது எப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. பின்னர் சஜித் பிரேமதாச டிசம்பர் மாதத்திற்குள் தான் ஜனாதிபதியாகிவிடுவேன் என்றார். இந்த கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. நகைச்சுவையான இத்தகைய கருத்துக்களை நாம் அனுதாபத்துடன் பார்த்து நம் வழியில் செல்ல வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், எமது பயணம் சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய எமக்குத் தேவையான குழுவை தெரிவுசெய்து அனுப்புவதுதான். ஜனாதிபதி அவர்கள் பதவிக்கு வந்ததிலிருந்து அரசியல் கலாசாரத்தில் நாம் ஏற்படுத்திய மாற்றத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த நாட்டு மக்களுக்கு சுமையாக இல்லாத வகையில் அரசாங்கத்தை நடத்துவதற்கு நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். அரசியல்வாதிகள் தங்கள் விருப்பப்படி நடந்துகொள்ள நாங்கள் அனுமதிப்பதில்லை. மேலதிக செலவுகள், வீண் விரயம் மற்றும் திருட்டு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இனிமேல் நாம் யாரையும் திருடியதாகக் குற்றம் சாட்ட முடியாது. தற்போது கண்டிக்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள். வரலாற்றில் முதல்முறையாக, கண்டிக்குச் சென்று புனித தந்தத்தை வழிபடும் பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முஸ்லிம் மக்கள் பள்ளிவாயல்களையும் வர்த்தகஸ்தாபனங்களையும் திறந்துகொடுத்துள்ளனர். நாட்டு மக்களிடையே அத்தகைய ஐக்கிய உணர்வு எழுந்துள்ளது. எமது பிள்ளைகளுக்கு அறிவு இருந்தாலும், உலகில் அவர்கள் முன்னேற உதவும் திறன்களையும் மனப்பான்மைகளையும் வளர்ப்பதில் கடுமையான சிக்கல்கள் உள்ளன. அது மட்டுமல்லாமல், இன்னும் மேலே சென்றால், குறைந்தபட்சம் இந்த கல்வி முறையில் அறிவு, அணுகுமுறைகள் மற்றும் திறன்கள் முறையாக வளர்க்கப்படவில்லை என்பதுதான் இதன் பொருள், இது ஒரு பெரிய சமூக நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பாடசாலைகளுக்கு இடையே முரண்பாடு உள்ளது. சிறந்த பாடசாலைகளுக்கும் அவ்வாறல்லாத பாடசாலைகளுக்கும், பிரபலமான பாடசாலைகளுக்கும் பிரபலமற்ற பாடசாலைகளுக்கும் இடையே பெரும் போட்டி நிலவுகிறது. உயர்தரப் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதில்லை. அவர்கள் பாடசாலைக்குச் செல்வது தமது பெயரைப் பதிவேட்டில் சேர்த்து, பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு மட்டுமே. ஆண் பிள்ளைகள் வேகமாக கல்வியை பாதியில் இடைநிறுத்தி வருகின்றனர். பாடசாலைகளிலும் பல பிரச்சனைகள் உள்ளன. கல்வி என்பது அறிவை வழங்குவது மட்டுமல்லாமல், சமூகத்திற்குத் தேவையான குணங்களையும் ஆன்மீக வளர்ச்சியையும் வளர்ப்பதாக இருக்க வேண்டும். இதை மாற்ற நாம் தலையிட வேண்டும். பின்னர், கல்வி மூலம், இந்தப் பொருளாதாரத்திலும் இந்த அபிவிருத்தித் திட்டத்திலும் ஈடுபடக்கூடிய திறன்களைக் கொண்டவர்களை உருவாக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் வழங்கப்படுவது பயிற்சி அல்ல, அது பகிடி வதை போன்ற ஒன்று. தங்குமிட வசதிகள் இல்லை, சுகாதார வசதிகள் இல்லை, கற்றல் வசதிகள் இல்லை, பதினைந்து ஆண்டுகளில் பாடத்திட்டம் மாறவில்லை, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்ற கற்பித்தல் விரிவுரையாளர்கள் இல்லை. இதையெல்லாம் நாம் சரிசெய்ய வேண்டும். ஜெர்மனியில், ஒரு ஆசிரியர் 9 வருட பயிற்சியின் பின்னரேயே பிள்ளைகளுக்கு கற்பிக்க அனுமதிக்கப்படுகிறார், ஆனால் எமது நாட்டில் என்ன செய்கிறார்கள்? அந்த சூழ்நிலை இல்லாவிட்டாலும், தற்போதைய நிலையிலிருந்து முன்னேறுவதற்குத் தேவையான சூழலை நாம் உருவாக்க வேண்டும். பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. சில பாடசாலைகளில் ஆசிரியர்களின் பகிர்வில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கடந்த காலங்களில் ஆசிரியர்கள் முறையாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவில்லை. எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். பாடசாலைகளில் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் பாடசாலைகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். மேலும், பிரிவெனா கல்வியில் பல கடுமையான பிரச்சினைகள் உள்ளன. அது பற்றி சரியாக ஆராய்ந்து, தேவைகளை அடையாளம் காணவும், தேவையான பரிந்துரைகளை உடனடியாக வழங்கவும் ஒரு குழு இப்போது நியமிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஆரம்பிக்கப்படும். இந்தப் புதிய சீர்திருத்தங்கள் தரம் 1 மற்றும் தரம் 6 க்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது பிரபலமடைவதற்கோ அல்லது வாக்குகளைப் பெறுவதற்கோ செய்யப்படவில்லை, மாறாக நம் நாட்டில் கல்வியை மேம்படுத்தும் உண்மையான நோக்கத்துடன் செய்யப்படுகிறது. கிராமிய மட்டத்தில் இவை அனைத்தையும் செயற்படுத்த களத்தில் தூய்மையான தலைமை மிகவும் முக்கியம். மே 6 ஆம் திகதி தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மகத்தான வெற்றியைத் தருவார்கள் என்று தான் நம்புவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். https://www.virakesari.lk/article/213080
-
ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம்; எதற்காக நாம் கிளிநொச்சிப் பாதைகளை மூடி வைத்திருக்க வேண்டும் - ஜனாதிபதி
27 APR, 2025 | 02:48 PM அலரி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம். ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம். எதற்காக நாம் கிளிநொச்சிப் பாதைகளை மூடி வைத்திருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சனிக்கிழமை (26) பிற்பகல் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கிளிநொச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றுகையில், அனைத்து மக்களும் சமனான உரிமைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த அரசாங்கம் அமைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் முப்பது வருடமாக யுத்தம் இடம்பெற்றது. இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள் பல கிராமங்கள் இழக்கப்பட்டன பலர் குழந்தைகளை இழந்தார்கள் தங்களுடைய உறவுகளை இழந்தார்கள் வீடுகளை சொத்துக்களை இழந்தார்கள். நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஊழலற்ற ஒரு அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம் கடந்த காலங்களிலே பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் காணிகள் இராணுவ முகாம்களுக்காக எடுத்திருக்கின்றார்கள். நாங்கள் இப்போது அந்த காணிகள் தொடர்பில் இராணுவ தலைவர்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கின்றோம் விடுவிக்க கூடிய அனைத்து இடங்களையும் மீண்டும் மக்களுக்காக வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். அது மட்டுமல்ல பாரம்பரியமாக பயிர் செய்து வந்த நிலங்கள் கூகுள் வரைபடத்தின்படி வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டிருக்கின்றன. இந்தப் பகுதி மக்கள் விவசாயம் செய்த நிலங்கள் மக்களுடைய நிலங்கள் அவற்றை மீண்டும் அவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். ஆகவே இன்னும் சில பாதைகள் மூடப்பட்டிருக்கின்றன கொழும்பிலே மூடி இருந்த பாதைகளை திறந்து இருக்கின்றோம் குறிப்பாக அலரி மாளிகைக்கு முன்பாக இருந்த பாதையை திறந்து இருக்கின்றோம். ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம் எதற்காக நாம் கிளிநொச்சிப் பாதைகளை மூடி வைத்திருக்க வேண்டும். அனைத்து பாதைகளையும் இந்த மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலே நாங்கள் திறந்து விடுவோம். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மூடிய பாதைகளை திறந்து விட்டிருக்கின்றோம். நாட்டை சாதாரண நிலைக்கு கொண்டு வர வேண்டும் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க இருக்கின்றோம். ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்புது திட்டங்களுக்கு நிதிகளை விடுவிக்க இருக்கின்றோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/213066
-
கிளிநொச்சி - பல கோடி ரூபா நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்
27 APR, 2025 | 01:26 PM கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து உரிய நிதி கையாளல்களின்றி விவசாயிகளிடம் இருந்து அறவிடப்பட்ட பலகோடி ரூபா நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் நீதியான விசாரணை ஒன்றினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (26) அனுப்பியுள்ள குறித்த கடித்த்தில் கிளிநொச்சி இரணைமடுக்குளத்ததின் கீழ் வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளாகிய நாங்கள் போரினால் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாது கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அழிவுகள் நோய்த் தாக்கங்கள் என்பவற்றாலும் பெரும் பாதிப்புக்களை எதிர் நோக்கியுள்ளோம். இவ்வாறு இருந்தும் ஒவ்வொரு போகத்திலும் மாவட்ட பயிர்செய்கை கூட்டத் தீர்மானங்களின் படி கட்டுப்பணங்களையும் செலுத்தி வருகின்றோம் குறிப்பாக வாய்க்கால் பராமரிப்பு குளத்தின் பராமரிப்பு கமவிதானை கொடுப்பனவுகள் என்பவற்றையும் முறையாக செலுத்தி வருகின்ற போதும் அதற்கான நிதிகளும் குறிப்பிட்ட சில கமக்கார அமைப்புக்களால் கமநல சேவை நிலைய அதிகாரிகளின் துணையுடன் முறைகேடாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் எந்தவிதமான கணக்காய்வுகளும் உரிய திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். இதனை விட இரணைமடுக்குளத்தின் கீழ் செயற்பட்டுவரும் இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் என்ற அமைப்பானது கமநல அபிவருத்தி திணைக்களத்தின் கீழ் செயற்பட்டு வருகின்ற போதும் இதுவரை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் கீழ் பதிவு செய்யப்படாமல் அதற்கான நிர்வாகக் கட்டமைப்பு 2017ம் ஆண்டிற்கு பின்னர் புனரமைப்பு செய்யப்படாமலும் இயங்கி வருகின்றது. அத்துடன் இரணைமடு குளத்தின் கீழ் உள்ள விவசாயிகளிடம் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பெரும்போகத்திலும் சிறுபோகத்திலும் ஏக்கர் ஒன்றுக்கு நூறு ரூபா வீதம் குறித்த சம்மேளனத்தினால் தொடர்ச்சியாக அறவிடப்பட்ட பலகோடி ரூபா நிதிக்கு என்ன நடந்துள்ளது என்று தெரியாமலே முறையற்ற விதத்திலே செலவிடப்பட்டிருக்கின்றது. அத்துடன் கடந்த காலங்களில் அதிகாரிகள் சிலரது ஊழல்களுக்காக ஒப்பந்த வேலைகள் வழங்கப்பட்டு அதன் மூலம் கிடைத்த நிதிக்கும் என்ன நடந்துள்ளது என்று தெரியாது போயுள்ளது. இந்த நிதி முறைகேடுகளுக்கு பின்னால் மாவட்டத்தின் உயர்நிலை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துணையாக இருந்து வருவதுடன் பொருளாளர் செயலாளர் தலைவர் உள்ளிட்ட தனிப்பட்ட சிலரே இதன்மூலம் நிதிகளை கொள்ளையிட்டு நன்மையடைந்து வருகின்றனர் இது தொடர்பான சில ஆவணங்களையும் இத்துடன் இணைத்துள்ளோம். முறையற்ற நிதி முறைகேடுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளாகிய நாங்கள் தங்களை தயவாக கோரி நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இதன் பிரதிகளை ஆணையாளர் நாயகம் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஆளுனர் வடக்குமாகானம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அரச அதிபர் இலஞ்ச ஊழல்கள் விசாரணைப்பிரிவு என்பவற்றுக்கும் பிரதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/213063
-
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
தந்தை மீதான பொய் குற்றச்சாட்டுகளால் பாடசாலை கல்வியில் குழப்பம்; வைத்தியர் ஷாபியின் மகள் உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி 27 APR, 2025 | 03:09 PM 2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுதாக்குதலின்போலியான கருத்தடை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட வைத்தியர் ஷாபி சிகாப்தீனின் மகள் 2024 கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் மிகத்திறமையாக சித்தியெய்தி உள்ளார். தந்தை எதிர்கொண்ட நெருக்கடிகளை தொடர்ந்து கடும் மன அழுத்தங்களை எதிர்கொண்டதால் தான் கல்விகற்றுக்கொண்டிருந்த பாடசாலையிலிருந்து விலகவேண்டிய நிலையை எதிர்கொண்ட போதிலும் அவர் தனிப்பட்ட பரீட்சார்த்தியாக பரீட்சை எழுதினார் கடும் மனஉறுதியை வெளிப்படுத்தினார். இவர் கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் 3 ஏ பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/213059
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
தபால்மூல வாக்களிப்பு செவ்வாயுடன் நிறைவு : தகுதி பெற்றவர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 2 27 APR, 2025 | 07:55 PM (இராஜதுரை ஹஷான்) உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (28) உடன் நிறைவடைகிறது. வாக்களிப்புக்கான காலம் இனி நீட்டிக்கப்படாது. ஆகவே வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள சகல அரச உத்தியோகத்தர்களும் தவறாமல் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் அதிகார சபைகளுக்கான உத்தியோகபூர்வ வாக்கெடுப்பு எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு இம்முறை 647,495 அரச உத்தியோகத்தர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்கமைய கடந்த 24, 25 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கெடுப்பு நடைபெற்றது.இன்றும், நாளையும் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. தபால்மூல வாக்கெடுப்பு வழங்கப்பட்ட காலவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதால் இனி வாக்களிப்புக்கு அவகாசம் வழங்க்கபடமாட்டாது. ஆகவே தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்ற சகல அரச உத்தியோகத்தர்களும் தவறாமல் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நேற்றைய தினம் விசேட தபால் சேவை ஊடாக விநியோகிக்கப்பட்டன. வாக்காளர் அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவடையும் இதுவரையான காலப்பகுதியில் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் 2024 உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்காக தேருநர் இடாப்பில் தாம் பதிவு செய்துக்கொண்ட முகவரிக்குரிய தபால் நிலையத்துக்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை கைவசம் வைத்திருப்பது வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்காளரை அடையாளம் காண்பதற்கு வசதியானதாக அமையுமென்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/213092
-
தம்பலகாமம் பிரதேச மாற்றுத் திறனாளிகளின் சுய உதவி குழு கூட்டம்
27 APR, 2025 | 05:16 PM திறனாளிகளின் சுய உதவிக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (25) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி வழிகாட்டலில் பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது, சுயஉதவி குழுக்களை எவ்வாறு வலுப்படுத்துவது, அவர்களின் வருமான மட்டத்தை எவ்வாறு அதிகரிப்பது மற்றும் மாற்றுத்திறனாளி சமூகத்தின் மனித உரிமைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. மேலும் சுயஉதவி குழுக்களின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. எதிர் வரும் தினங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் ஒன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் உத்தியோகத்தர் மூலமாக தெளிவூட்டல்கள் இடம் பெற்றன. இதில் சமூக சேவைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.பிரணவன், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் நஸ்ரின் திலானி மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் (CDF) உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/213087
-
கிளிநொச்சியில் கடும் மழை; பல வீடுகளுக்குள் வெள்ளம்
27 APR, 2025 | 05:09 PM கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்குள் உள்ளானது. அத்தோடு பொது மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் சென்றமையால் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக நகர் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள முறையற்ற மதில்கள் காரணமாக வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலையில் வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் வெள்ளம ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற முடியாது பொது மக்கள் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/213086
-
வழக்குகளின் பிடியில் மேலும் 6 அமைச்சர்கள் - செந்தில் பாலாஜி, பொன்முடி மட்டுமல்ல
பட மூலாதாரம்,DMK/WWW.DMK.IN கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 27 ஏப்ரல் 2025, 10:07 GMT 'அமைச்சராக இல்லை என்பதால் தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவருக்கு ஜாமீன் வேண்டுமா... அமைச்சர் பதவி வேண்டுமா?' என, ஏப்ரல் 23 அன்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. செந்தில் பாலாஜியின் கருத்தை அறிவதற்கு ஏப்ரல் 28 வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்தது. இந்த சூழ்நிலையில் செந்தில் பாலாஜி தமது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இவருடன் சேர்த்து பொன்முடியும் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. தி.மு.க அமைச்சர்களில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி போலவே, மேலும் 6 அமைச்சர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் மீதான வழக்குகள் என்ன? செந்தில் பாலாஜி மீதான வழக்கு என்ன? பட மூலாதாரம்,V.SENTHILBALAJI/FACEBOOK படக்குறிப்பு,2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. தி.மு.க அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, 2011-2015 அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, போக்குவரத்துத்துறையில் இளநிலை உதவியாளர், ஓட்டுநர், நடத்துநர் ஆகிய பணியிடங்களில் செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகள் சிலர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில், செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மற்றும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார். இதையேற்று, 2021 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை நிறுத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதே வழக்கில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறி 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் இருந்தபோதும் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். இதன் காரணமாக ஜாமீன் வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. 2024 பிப்ரவரி மாதம் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யுமாறு வித்யா குமார் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின்படி அடிப்படை உரிமை மீறப்பட்டதால் ஜாமீன் வழங்கினோம். 2 நாட்களுக்குள் அவர் அமைச்சர் ஆனதை ஏற்க முடியாது' எனக் கூறியது. மேலும், 'ஜாமீன் வேண்டுமா.. அமைச்சராக நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டது. இதனால் பதவியை ராஜினாமா செய்வதைத் தவிர செந்தில் பாலாஜிக்கு வேறு வழியில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. அதற்கேற்ப, தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாடு: திமுக விமர்சனங்களை மீறி செந்தில் பாலாஜியை தாங்கிப் பிடிப்பது ஏன்?3 அக்டோபர் 2024 மனித உடலின் 'நிலை மின்சாரத்தால்' பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுமா? - அமைச்சர் கூறியது உண்மையா?27 ஏப்ரல் 2025 பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?26 ஏப்ரல் 2025 அமைச்சர் துரைமுருகன்: பட மூலாதாரம்,@KATPADIDMK/X படக்குறிப்பு,2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தி.மு.க அமைச்சரவையில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன், 1996-2001 தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார். இதே காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 3.92 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, அவர் மீது 2002 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. 2007 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து 2013 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு சுமார் 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி தள்ளுபடி செய்யுமாறு துரைமுருகன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வழக்கில், ஏப்ரல் 23 ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பித்த சென்னை சென்னை உயர் நீதிமன்றம், வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், துரைமுருகன் மீதான விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இதுதவிர, 2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இருந்து துரைமுருகனும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். ஏப்ரல் 24 ஆம் தேதியன்று இந்த உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமைச்சர் பொன்முடி: பட மூலாதாரம்,KPONMUDI/FACEBOOK படக்குறிப்பு,பொன்முடி மீது 2002 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2021 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து, பொன்முடி மீதான சர்ச்சைகள் அணிவகுத்தன. மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்தை விமர்சித்தது, அரசு நிகழ்ச்சிகளில் பொதுமக்களை விமர்சித்தது எனத் தொடர்ந்து பொன்முடியின் பேச்சு விமர்சனத்துக்குள்ளானது. தி.மு.க பொதுக்குழு கூட்டத்திலேயே இதுதொடர்பாக தனது அதிருப்தியை முதலமைச்சர் ஸ்டாலின் வெளிக்காட்டினார். இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது, சைவம், வைணவம் ஆகிய மதங்களை பாலியல் தொழிலாளிகளுடன் ஒப்பிட்டு அவர் பேசினார். பொன்முடியின் பேச்சு இணையத்தில் பரவியது. இதையடுத்து, பொன்முடியை தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், "சைவ, வைணவ சமயங்கள் குறித்த பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார். "இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவில்லை என்றால் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறி ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். மீண்டும் வழக்கு விசாரணையின்போது, 'கட்சியே நடவடிக்கை எடுததும்கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை' எனக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "பொன்முடியின் பேச்சு வெறுப்பு வரம்புக்குள் வருகிறது" எனக் கூறினார். வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதற்காக பதிவுத் துறைக்கு தான் உத்தரவிடுவதாகவும் ஆனந்த் வெங்கடேஷ் கூறினார். இதுதவிர, 1996-2001 தி.மு.க ஆட்சியின்போது போக்குவரத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது 2002 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. அவர் 1.36 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு வேலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை மாவட்டத்தின் நிர்வாக நீதிபதிகள் வேறு மாவட்டத்துக்கு மாற்ற முடியுமா?' எனக் கேள்வி எழுப்பி, இதற்கு அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார். 'பொன்முடி மீதான வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற முடியும் என்றால், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கிலும் எந்த விசாரணையும் நடத்த முடியாது' எனக் கூறி இறுதி விசாரணையை ஒத்தி வைத்துள்ளார். இந்த சூழலில் செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து பொன்முடியும் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை இந்தியாவால் உண்மையில் தடுக்க முடியுமா?27 ஏப்ரல் 2025 "இது போர் அறைகூவல்" சிந்து நதிநீர் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதை எச்சரிக்கும் பாகிஸ்தான் அமைச்சர்26 ஏப்ரல் 2025 அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தி.மு.க ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 1996-2001 மற்றும் 2006-2011 தி.மு.க ஆட்சியிலும் அமைச்சராக பதவி வகித்தார். இந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட மூன்று பேரையும் விடுவிதது உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் ஒழிப்புத் துறை சார்பில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது பன்னீர்செல்வம் தரப்பில் சில வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அறக்கட்டளை சொத்துகளையும் குடும்ப சொத்துகளையும் வருமானத்துக்கு அதிகமான சொத்துகளாக ஊழல் ஒழிப்புத் துறை கணக்கிட்டுள்ளதாக வாதிடப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 25) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன் ஆகியோரை விடுவித்து கடலுர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் கடலூர் நீதிமன்றம் முடிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு: பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,2012 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்தனர் 2006-2011 தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76,40,433 அளவு சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது. 2012 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தன்னையும் தன் மனைவியையும் விடுவிக்குமாறு தங்கம் தென்னரசு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையேற்று 2022 ஆம் ஆண்டு இருவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ஊழல் ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். வழக்கை மறுவிசாரணை நடத்துமாறு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. "3 வயது குழந்தைக்கும் சாதிக்கொடுமை" கோவில் வழிபாட்டால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் தலித் மக்கள் - பிபிசி தமிழ் களஆய்வு26 ஏப்ரல் 2025 இந்தியாவுடன் பதற்றம்: பாகிஸ்தானின் 2 முக்கிய கவலைகள் இதுவா?26 ஏப்ரல் 2025 அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.44,56,067 ரூபாய் சொத்து சேர்த்ததாக ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது தி.மு.க ஆட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கடந்த 2006-2011 தி.மு.க அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.44,56,067 ரூபாய் சொத்து சேர்த்ததாக ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. 2012 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு விடுவித்தது. தங்கம் தென்னரசு வழக்குடன் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். சொத்துக்குவிப்பு வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராமச்சந்திரன் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றமும் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் மா.சுப்ரமணியன்: பட மூலாதாரம்,@SUBRAMANIAN_MA/X படக்குறிப்பு,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் 2006-2011 தி.மு.க ஆட்சியில் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த மா.சுப்ரமணியன், தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மனையை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துவிட்டதாக, குற்றம் சுமத்தப்பட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இந்தப் புகார் தொடர்பாக மா.சுப்ரமணியன் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவானது. இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மா.சுப்ரமணியன் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், நிலத்தை 1998 ஆம் ஆண்டே தான் வாங்கிவிட்டதாகவும் சுமார் 20 ஆண்டுகள் கழித்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார். நிலத்தை வாங்கியதன் மூலம் சிட்கோ மற்றும் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை எனவும் மோசடி நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கும் இடமில்லை என மா.சுப்ரமணியன் கூறியிருந்தார். வழக்கில் காவல்துறை மற்றும் புகார்தாரர் பார்த்திபன் ஆகியோரின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மா.சுப்ரமணியனின் மனுவை கடந்த மார்ச் 28 ஆம் தேதின்று தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். மா.சுப்ரமணியன் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். பாகிஸ்தான் வான்வெளியை மூடுவதால் இந்திய பயணிகளுக்கு என்ன பாதிப்பு?26 ஏப்ரல் 2025 பஹல்காம் தாக்குதல்: மோதி அரசின் ஜம்மு - காஷ்மீர் கொள்கை தோல்வியா? - ஓர் அலசல்26 ஏப்ரல் 2025 அமைச்சர் ஐ.பெரியசாமி: பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் ஐ.பெரியசாமி மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. தி.மு.க அரசில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமி, கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தார். வீட்டு வசதி வாரியத்தின் நிலத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு முறைகேடாக வழங்கியதாக, ஐ.பெரியசாமி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் ஐ.பெரியசாமி மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணைக்கு எடுத்துக் கொண்டார், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, ஜூலை மாதத்துக்குள் வழக்கின் விசாரணையை முடிக்குமாறு உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கும் தடை விதித்துள்ளது. 'தடை உத்தரவு தொடரும்' என கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgpzz9kzpvo
-
திக்கம் வடிசாலை தொடர்பில் சொல்லப்படுவது அப்பட்டமான பொய்; ஈ.பி.டிபி. குற்றச்சாட்டு
27 APR, 2025 | 05:05 PM திக்கம் வடிசாலை தொடர்பாக சொல்லப்படுவது அப்பட்டமான பொய் என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்டு தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாவும் தெரிவித்தார். யாழ். ஊடக மையத்தில் சனிக்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், திக்கம் வடிசாலையை வெளிநாட்டு தனியார் நிறுவனத்திடம் கையளிப்பதற்கான ஒப்பந்தத்துடன் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களையும் சம்மந்தப்படுத்தும் வகையில் சில ஊடகங்களி்ல் செய்தி வெளியாகியுள்ளது. உண்மையில், பனை அபிவிருத்தி சபையுடன் சம்மந்தப்பட்டவர்களினால் அவ்வாறான தகவல் வெளிப்படுத்தப்பட்டிருப்பின், அதில் எந்தவித உண்மைளும் இல்லை என்பதை பொறுப்புடன் கூற விரும்புகின்றோம். உண்மையில், கடந்த அரசாங்க காலத்தில் கைத்தொழில் சார்ந்த துறைசார் அமைச்சிற்கும் குறித்த வெளிநாட்டு நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தவிடாமல் தடுத்து வைத்திருந்ததே எமது செயலாளர் நாயகம் அவர்கள்தான் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இல்லாதுவிட்டிருந்தால், திக்கம் வடிசாலையை குறித்த நிறுவனம் பொறுப்பெடுத்து தமது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கும். டக்ளஸ் தேவானந்தாவை பொறுத்தவரையில், எமது வளங்கள் எமது தனித்துவ அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உணர்வுபூர்வமாக உறுதியான நிலைப்பாட்டை உடையவர். அதனடிப்படையில் திக்கம் வடிசாலை வெளிநாட்டு நிறுவனத்தின் கைகளுக்கு செல்லுமாயின், அதனால் கிடைக்கும் வருமானத்தின் கணிசமான பகுதி அவர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுவிடும் என்பதுடன், வருமான நோக்கங்களுக்காக முதலீட்டாளர்களினால் எமது பிரதேச உற்பத்திகளின் தனித்தவத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் அபாயம் இருப்பதை உணர்ந்து கொண்டு, திக்கம் வடிசாலை எமது பிரதேசங்களை சேர்ந்த துறைசார் சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வடிசாலை செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கான ஒத்தாசைகளை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறார். அதனடிப்படையில் கடந்த அரசாங்க காலத்தில் வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கான புறச்சூழல்களை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. இருந்தபோதிலும், ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்கா தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவரை சந்தித்த எமது செயலாளர் நாயகம், கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்க தீர்மானி்க்கப்பட்ட நிலையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான பட்டியலை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார். அந்த பட்டியலில் திக்கம் வடிசாலை விவகாரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திக்கம் வடிசாலை விவகாரத்தில் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தவறான முறையில் சம்மந்தப்பட்டிருப்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன், துறைசார் அமைச்சினால் உரிய நியமங்களை பின்பற்றி செய்யப்பட்ட ஒப்பந்தம் ஒன்றை பனை அபிவிருத்தி சபை பணிப்பாளர் சபையின் தீர்மானத்தினால் இரத்து செய்ய முடியும் என்பதும் மக்களை ஏமாற்றும் கருத்தாகவே இருக்கின்றது என்றார். https://www.virakesari.lk/article/213083