Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 25 APR, 2025 | 11:19 AM தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) ஏற்பாட்டில், இலங்கைக்கான ஆஸ்திரேலியா உயர்ஸ்தானியராலயத்தின் நிதி அனுசரணையுடன் பங்குபற்றல், பரிந்துரைத்தல், குரல் கொடுத்தல், வலுவூட்டல் (PAVE) எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் இயலாமைகளைக் கொண்ட நபர்களுக்கான அணுகல் வசதி தொடர்பான ஆய்வு அறிக்கை வெளியீடு புதன்கிழமை (23) யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இச் செயற்பாடு PAVE செயற்திட்ட இளைஞர் குழுவின் ஒர் சமூக பரிந்துரை முன்னெடுப்பு முயற்சியாகும். ஆய்வறிக்கையின் முதற்பிரதியினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பெற்றுக்கொண்டு உரையாற்றுகையில், யாழ். மாவட்டத்தில் தேர்தல்களின் போது இயலாமைகளைக் கொண்ட நபர்களுக்கான விசேட ஆயத்தங்கள் துறை சார் திணைக்களங்கினால் மேற்கொள்ளப்பட்டு வருவதனையும், மேலும் எவ்வாறு மாற்றுத்திறனாளிகளின் சமூக பொருளாதார உள்ளடக்கம் பற்றியும் கருத்துக்களை வழங்கியிருந்தார். விசேட தேவையுடைய நபர்களுக்கான உள்ளடங்கலான தேர்தல் வசதிப்பாடுகளின் முன்னேற்றம் குறித்து பங்குதாரர்களால் கலந்துரையாடப்பட்டது. மேலும் ஆய்வின் முக்கிய பரிந்துரைகள் துறை சார் அதிகாரிகளிடம் இளைஞர் குழுவினால் முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆராயப்பட்டன. இந் நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதியின் வட பிராந்திய அலுவலகத்தின் கள ஒருங்கிணைப்பு அலுவலர், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர், யாழ் மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவின் உதவி ஆணையாளர், இயலாமைகளை கொண்ட நபர்களுக்காக பணிபுரியும் அமைப்புக்கள், IFES நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட அலுவலர் துறைசார் அரச அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/212878
  2. - ஐ.வி.மகாசேனன்- உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் போட்டி கொதிநிலையை நோக்கி நகர்ந்துள்ளது. அரசியல் செய்தியிடல்களில் குட்டித் தேர்தல் என்றவாறு அழைக்கப்படுகின்றது. எனினும் தேர்தல்கள் யாவுமே மக்கள் எண்ணங்களை நாடிபிடித்து பார்க்கும் செயற்பாடாக அமைவதனால், அதன் பெறுமதிகள் உயர்வானதாகவே அமைகின்றது. அதனடிப்படையிலேயே ஆளும் தரப்பாகிய தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் யாவரும் தீவு முழுமையாக சூறாவளி பிரசார செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றார்கள். தமிழர் தாயகப்பகுதியிலும் தேசிய மக்கள் சக்தி தமது வெற்றியை பாதுகாத்துக் கொள்ள அதீத அக்கறை செலுத்தி வருகின்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் முழுமையாக வடக்கில் தீவிர பிரசார செயற்பாட்டில் உள்ளார். இதனைவிட இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் என இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் தொடர்ச்சியாக வடக்கு – கிழக்கில் முகாமிட்டு பிரசார செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார்கள். மறுமுனையில் தமிழ் அரசியல் கட்சிகள் தமது இருப்பை உறுதி செய்ய உள்ளூராட்சி சபை தேர்தலில் போராட வேண்டி உள்ளது. எனினும் அதற்குரிய வியூகங்களை களத்தில் காணமுடியவில்லை என்ற குற்றச்சாட்டை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இக்கட்டுரை உள்ளூராட்சி சபை தேர்தல் களத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் வியூகத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழரசியலில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரதான வகிபாகத்தை பெறுகின்றது. நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளுக்கு பெரும் நெடிக்கடியை உருவாக்கி இருந்தது. வடக்கில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே வாக்கு சிதறலால் பாராளுமன்ற ஆசனங்கள் குறைவடைந்திருந்தது. குறிப்பாக தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தலா ஒரு ஆசனங்களையே யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் பெற்றுக் கொண்டனர். எனினும் தென்னிலங்கை கட்சியான தேசிய மக்கள் சக்தி போனஸ் ஆசனம் உட்பட மூன்று ஆசனங்களை பெற்றிருந்தது. வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி ஆசனங்களை பெற்றிருந்தது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே தமிழரசுக்கட்சி செல்வாக்கு செலுத்தியிருந்தது. இப்பின்னணியில் தமிழ்த் தேசியத்தின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டது. சர்வதேச களங்களிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கில் உறுதியான பலத்தைப் பெற்றுள்ளமையை சுட்டிக்காட்டி வருகின்றனர். தமிழ்த்தேசியம் வெறுமனவே தமிழ்க்கட்சிகளிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளமையால், தமிழ்த்தேசிய இருப்பை காட்சிப்படுத்த, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் வெற்றி அவசியமாகின்றது.எனினும் இப்புரிதலை தமிழ் கட்சிகள் கொண்டுள்ளனவா என்பதில் சந்தேகமே காணப்படுகின்றது. இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் ஆசனங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி, வாக்குச் சிதறல்களே பிரதான காரணம் என்பதை பல அரசியல் அவதானிகளும் சுட்டிக்காட்டியிருந்தனர். வீழ்ச்சியின் பின்னரும் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே வினைத்திறனான மாற்றத்தை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முன்முயற்சிகளில் இனங்காண முடியவில்லை. பொது எதிரியாக தேசிய மக்கள் சக்தியை பிரசாரம் செய்கின்ற போதிலும், தமக்குள் பொதுக்கூட்டையோ அல்லது பொது ஒத்துழைப்பையோ நிறுவ தவறியுள்ளார்கள். தமிழரசு கட்சியில் ஆதிக்கம் செலுத்தும் அதன் பதில் செயலாளர், தமது தோல்வியை ஏற்றுக்கொள்ளாதவராகவும், தமிழரசுக் கட்சியை தொடர்ச்சியாக தமிழ்ப் பரப்பின் பிரதான சக்தியாக வலியுறுத்தும் நிலைமைகளே காணப்படுகின்றது. இக்கருத்தை பின்பற்றியே தமிழரசுக்கட்சியின் பதில் தலைவரும் கூட்டு முயற்சிக்கு விட்டுக்கொடுப்புடன் இணங்க தவறியிருந்தார். ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் தமிழரசுக் கட்சியிடம் காணப்படும் பரவலான கட்டமைப்பு மற்றும் வடக்கு – கிழக்கு முகமே ஓரளவு கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் அரசியல் இருப்பை பாதுகாத்தது. எனினும் தமிழரசுக்கட்சி வீட்டுச்சின்னத்தின் ஏகபிரதிநிதித்துவம் பலவீனப்பட்டுள்ளது என்ற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள தவறுகின்றனர். மாறாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் குறிப்பிடத்தக்க மாறுதல்களை அவதானிக்க கூடியதாகவும் வரவேற்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. பொதுத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பாராளுமன்ற செயற்பாட்டு தளத்தில் கூட்டுக்கான முன்முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். தமிழரசுக் கட்சியின் ‘பெரியவர்’ எண்ணங்களால் அம்முயற்சி பலவீனப்பட்டது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு சிறு கூட்டு முயற்சியை சாத்தியப்படுத்தி உள்ளது. எவ்வாறாயினும் வாக்கு சிதறல்களை கட்டுப்படுத்தக்கூடிய முழுமையான கூட்டணி அல்லது தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீளுருவாக்கம் சாத்தியப்படவில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே பிரதானமாக மும்முனைப் போட்டிகள் காணப்படுகின்றது. குறிப்பாக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியும் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசிய பேரவையாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான கூட்டணியினரும் மற்றும் சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினரும் வடக்கு – கிழக்கு முழுமையாக போட்டியிடுகின்றனர். மேலும், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் கணிசமான சபைகளில் மீன் சின்னத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினரும் போட்டியாளர்களாக காணப்படுகின்றனர். அரசியல் கொள்கை சார்ந்த கூட்டுகள் மற்றும் குறுகிய இலக்குகள் சார்ந்த கூட்டுகள் தொடர்பான அரசியல் அணுகுமுறைகளை தமிழ் அரசியல் கட்சிகள் உள்வாங்க தவறியுள்ளார்கள். இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் பிரதான கொள்கை எதிர் சக்திகளான சோவியத் ஒன்றியம் – அமெரிக்க, பிரிட்டன் நேசநாட்டு கூட்டணியுடன் இணைந்து செயற்பட்டிருந்தது. ஹிட்லர் தலைமையிலான நாசிசத்தை எதிர்த்து போரிட இருமுனை கொள்கை நிலைப்பாட்டினர் ஒன்றிணைந்தார்கள். போர் வெற்றியின் பின்னர் தமது கொள்கை சார்ந்து முரண்பட்டு கொண்டார்கள். அவ்வாறே இந்திய தேர்தலை பொறுத்த வரை கூட்டணியாக செயற்படுவதனூடாகவே சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற வெற்றிகளை பெற முடியும். ஆசனங்களை மையப்படுத்தியே கூட்டணிகளும் உருவாக்கப்படுகின்றன. தேர்தல் வெற்றியின் பின்னர் தமது கொள்கைவழி செயற்படும் நிலைமைகள் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக அகில இந்திய காங்கிரஸ் தலைமையிலான இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியில் தி.மு.க, வி.சி.க மற்றும் ம.தி.மு.க போன்ற தமிழக கட்சிகள் காணப்படுகின்றன. ம.தி.மு.க பொதுச்செயலாளர் இக்கூட்டணியினூடாக மாநிலங்களவை ஆசனத்தை பெற்றிருந்தார். பின்னர் மாநிலங்களவையில் ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலையில் காங்கிரஸின் தொடர்பு பற்றி கண்டித்திருந்தார். தற்போது 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை மையப்படுத்தி பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) மற்றும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க) இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டணியும் கொள்கைக்கு வெளியே பொது எதிரியாக திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) ஆட்சி மாற்றத்திற்கானதாகவே பிரசாரம் செய்யப்படுகின்றது. இப்பின்னணியில் அரசியலில் கூட்டணி உருவாக்கங்கள் ஒருவகையிலான அணுகுமுறையாகவே அமைகின்றது. எனினும் தமிழ் கட்சிகளிடையே காணப்பட்ட பெரியவர் எண்ணங்களும் அவநம்பிக்கைகளும் அரசியல் அறிவின்மைகளும் கூட்டணிக்கான வாய்ப்புக்களை இல்லாமல் செய்து விட்டது. இது பொது எதிரிக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் அரசியல் களத்தையே உருவாக்கியுள்ளது. கூட்டணிக்கான வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ள சூழலிலும், தமிழ் அரசியல் கட்சிகள் தந்திரோபாயமாக பொது எதிரியை கையாளுவதற்கான வாய்ப்புகள் இன்னும் தமிழ் அரசியல் கட்சிகளின் கைகளில் காணப்படவே செய்கின்றது. ஈழத் தமிழரசியலின் மூத்த அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ‘போட்டி இல்லா ஒப்பந்தம்’ தொடர்பில் உரையாடியிருந்தார். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பிலும் மு.திருநாவுக்கரசு அவர்கள் தமிழ்ப் பொது வேட்பாளர் கருத்தை பரிந்துரைத்திருந்தார். தமிழ் அரசியல் களம் அதனை புரிந்து கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் ஒரு தசாப்த காலம் தேவைப்பட்டிருந்தது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலேயே சிவில் அமைப்புகள் மற்றும் கட்சிகள் ஒன்றிணைந்த பொது கட்டமைப்பினூடாக தமிழ்ப் பொது வேட்பாளர் அரசியலில் சாத்தியப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான அனுபவங்களில், பொது எதிரியை கையாள்வதற்கான ‘போட்டி இல்லா ஒப்பந்தம்’ பற்றிய கருத்தை சுயநல அரசியலுக்குள் பயணிக்கும் அரசியல் கட்சிகள் எந்த அளவு புரிந்து கொள்வார்கள் என்பது சந்தேகமாகவே காணப்படுகின்றது. ‘போட்டி இல்லா ஒப்பந்த’ அணுகுமுறை என்பதில் மு.திருநாவுக்கரசு அவர்கள், ‘தமிழ் அரசியல் கட்சிகள் தமக்கிடையே போட்டியிடுவதை தவிர்த்து, பொது எதிரியான தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதை இலக்காக கொண்டு செயற்படுவதையே’ விபரித்துள்ளார். குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் வடக்கு – கிழக்கு உள்ளூராட்சி சபைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். தமது பலம் பலவீனங்களை சுயபரிசோதனைக்குட்படுத்தி சபைகளை ஒதுக்கிக் கொள்ளலாம். உதாரணமாக வல்வெட்டித்துறை நகரசபைக்கு எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவை கூட்டணியினர் பொருத்தமானவர்கள். ஏனைய தமிழ்க் கட்சிகள் போட்டியை தவிர்த்து கொள்ளலாம். அவ்வாறே கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை மையப்படுத்தி தமிழரசுக்கட்சி பலமானதாகும். மன்னார் நகர சபையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை மையப்படுத்தி ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி போட்டியிட ஏனைய தமிழ்க் கட்சிகள் போட்டியிலிருந்து விலகலாம். நல்லூர் பிரதேச சபையில் முன்னாள் தவிசாளர் தலைமையிலான பத்மநாதன் மயூரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி பலமான கட்சியாகும். இவ்வாறு வடக்கு – கிழக்கு உள்ளூராட்சி சபைகளை தமிழ்க் கட்சிகள் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறானதொரு விட்டுக்கொடுப்பினூடாக பொது எதிரியை தோற்கடிப்பதை இலக்காக கொண்டு செயற்படக்கூடிய அணுகுமுறை தற்போது வரை தமிழ்க் கட்சிகளிடம் காணப்படுவதை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஏற்படுத்தக்கூடிய தடைகளுக்கு எதிராக இதய சுத்தியுடன் தமிழ் அரசியல் கட்சிகள் செயற்பட விரும்பின், ஆசிரியரின் அணுகுமுறை பொருத்தமானதாகும். தமிழ் அரசியல் கட்சிகள் பிரசாரங்கள் மற்றும் செய்தி அறிக்கைகளில் தேசிய மக்கள் சக்தியை, தமிழ் மக்களுக்கு ஆபத்தான எதிரிகளாக, விளிக்கின்ற போதிலும், தொடர்ச்சியாக தமக்குள் மோதிக் கொள்ளும் நிலையிலேயே காணப்படுகின்றார்கள். ஒரு நிமிடம் தேசிய மக்கள் சக்தியை விமர்சிப்பார்களாயின், இரு நிமிடங்கள் தமிழ் கட்சிகளை விமர்சிக்க நேரம் ஒதுக்கும் நிலைமைகளே காணப்படுகின்றது. இதனடிப்படையில் தமக்குள் சண்டையிடவே தமிழ் அரசியல் கட்சிகள் அதிக நேரத்தை ஒதுக்கீடு செய்கின்றன. இது பொது எதிரிக்கு சாதகமான பிரசாரமாகவே அமைகின்றது. பொது எதிரியின் பிரசாரத்தையும் இணைத்தே தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்கின்றன. சமூக வலைத்தளங்களில் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான விமர்சனங்களுக்கு சமாந்தரமாகவே வீடு எதிர் சைக்கிள் எதிர் சங்கு விமர்சனங்களும் உயர்வாகவே காணப்படுகின்றது. தமிழ் கட்சிகள் போட்டியிடுவதாயினும், குறைந்தபட்சம் தமக்குள் வாய்த்தகராற்றில் ஈடுபடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தி தமிழ் அரசியல் பரப்புக்கு எத்தகைய பாதகமானது என்பதையே தமிழ் மக்களிடம் முன்னிறுத்த வேண்டும். மேலும் தத்தமது செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்கலாம். மாறாக தமிழ்க் கட்சிகள் தமக்குள் வசைபாடுவது ஆபத்தானதாகும். தமிழ் மக்களிடையே தமிழ்க் கட்சிகள் தொடர்பில் சலிப்பையே உருவாக்கும். எனவே, 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தல் என்பது தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை பொது எதிரியான தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதை இலக்காகக் கொண்டதாக அமைதலே தமிழ் அரசியலுக்கு பொருத்தமானதாகும். எனினும் தமிழ் அரசியல் கட்சிகளிடம் இத்தகைய தூய எண்ணம் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் தமிழ் மக்களிடமும் சிவில் தரப்பிடமும் சந்தேகங்களே காணப்படுகின்றது. இதன் பின்னணியிலேயே கடந்த தேர்தல் காலங்களில் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதில் முன்னணியில் செயற்பட்டிருந்த சிவில் சமூகங்களும் செயற்பாட்டாளர்களும் உள்ளுராட்சி சபை தேர்தலில் பெரிய அக்கறையின்றி காணப்படுகின்றார்கள். இறுதி வாய்ப்பாக மு.திருநாவுக்கரசு அவர்கள் தமிழ் அரசியல் இருப்பு சார்ந்த பற்றுறுதியில் தன்னார்வமாக ‘போட்டி இல்லா ஒப்பந்தம்’ அணுகுமுறையை பரிந்துரைத்துள்ளார். இதனை இறுகப்பற்றி தமிழ் அரசியல் கட்சிகள் தமது அரசியல் இருப்பையும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பையும் பாதுகாப்பார்களாயின் பயனுடையதாகும். https://thinakkural.lk/article/317169
  3. சொந்த மண்ணில் ஆர்சிபிக்கு முதல் வெற்றி - ராஜஸ்தானின் வெற்றியை ஒரே ஓவரில் பறித்த ஹேசல்வுட் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெங்களூருவில் நேற்று (ஏப்ரல் 24) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று 3வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. ஆனாலும், ஆர்சிபியின் நிகர ரன்ரேட் 0.482 என மும்பையைவிட குறைவாகவே இருக்கிறது. மும்பை அணி அடுத்து ஓர் ஆட்டத்தில் வென்றால் 2வது இடத்திற்கே நகர்ந்துவிடும் அளவுக்கு நிகர ரன்ரேட்டை வலுவாக வைத்துள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 9 போட்டிகளில் தொடர்ந்து சந்திக்கும் 5வது தோல்வி இது. 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் நீடிக்கிறது. ஆர்சிபி அணி இந்த சீசனில் இதுவரை சொந்த மைதானத்தில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த நிலையில் பெங்களூருவில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆட்டத்தை மாற்றிய ஒரே ஓவர் இந்த ஆட்டத்தில் சேஸிங்கின் தொடக்கத்தில் இருந்து ஆட்டம் ராஜஸ்தான் பக்கம்தான் இருந்தது. அந்த அணிதான் வெல்லும் என்று ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால், அனைத்தும் புவனேஷ்வர்குமார் வீசிய 18வது ஓவர் வரைதான். ஹேசல்வுட் வீசிய 19வது ஓவர்தான் ஆட்டத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. கடைசி இரண்டு ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி ஆடி வந்த துருவ் ஜூரெல்(47) ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஜோப்ரா ஆர்ச்சரும் ஆட்டமிழக்கவே, ஹேசல்வுட் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த ஓவர்தான் வெற்றியை ராஜஸ்தான் கரங்களில் இருந்து ஆர்சிபி பறித்தது. கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. யஷ் தயால் வீசிய ஓவரில் ஷுபம் துபே, ஹசரங்கா ஆட்டமிழந்து, 5 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் அந்த அணி தோல்வி அடைந்தது. பெற்றோருக்கான ஓட்டப் பந்தயத்தில் கலக்கிய முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை24 ஏப்ரல் 2025 சிஎஸ்கே அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற உள்ள ஒரே வழி என்ன?21 ஏப்ரல் 2025 தொடர்ந்து 3வது முறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது இந்த சீசனில் தொடர்ந்து 3வது முறையாக சேஸிங்ஸில் வெற்றிக்கு அருகே வந்து தோல்வியைச் சந்தித்துள்ளது ராஜஸ்தான் அணி. இதற்கு முன் லக்னெள அணிக்கு எதிராகவும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராகவும் கடைசி ஓவரில் 9 ரன்களை எடுக்க முடியாமல் ராஜஸ்தான் அணி தோற்றது. இந்தப் போட்டியில் வெற்றிக்கு அருகே வந்து கடைசி ஓவரில் 17 ரன்களை எடுக்க முடியாமல் ராஜஸ்தான் தோற்றது. ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரின் பந்துவீச்சையும் ராஜஸ்தான் பேட்டர்கள் வெளுத்துவிட்டனர். ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஆனால் நடுப்பகுதியில் குர்னல் பாண்டியா, சூயஸ் ஷர்மா இருவரும் ராஜஸ்தான் ரன்ரேட்டுக்கு பிரேக் போட்டனர். இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 62 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானுக்கு நெருக்கடியை அதிகப்படுத்தினர். குறிப்பாக கேப்டன் ரியான் பராக், நிதிஷ் ராணா ஆகிய பெரிய விக்கெட்டுகளை குர்னல் பாண்டியா வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தி பவர்ப்ளேவில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்க்க உதவினர். அடுத்த 14 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 134 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 8.1 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. 15வது ஓவரில் 150 ரன்களை எட்டிய நிலையில் அதன் பிறகு ஆட்டத்தில் மந்தநிலை ஏற்பட்டது. இருப்பினும் புவனேஷ்வர்குமார் வீசிய 18வது ஓவரில் துருவ் ஜூரெல் 22 ரன்களை விளாச, ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் திரும்பியது. கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் செட்டில் பேட்டர் துருவ் ஜூரெல், ஆர்ச்சர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஒரு ரன் சேர்த்தனர். கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 5 ரன்கள் மட்டுமே சேர்த்து ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது. ஐபிஎல்: ஒவ்வொரு வீரரின் பேட்டையும் களத்திலேயே நடுவர்கள் பரிசோதிப்பது ஏன்? விதிகள் கூறுவது என்ன?16 ஏப்ரல் 2025 வட கொரியாவில் மாரத்தான் ஓடிய வெளிநாட்டவர் அந்நாட்டு மக்கள் குறித்து கூறுவது என்ன?16 ஏப்ரல் 2025 திருப்புமுனையான ஹேசல்வுட்டின் 2 ஓவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் செட்டில் பேட்டர் துருவ் ஜூரெல், ஆர்ச்சர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் ஹேசல்வுட் வீசிய 17வது மற்றும் 19வது ஓவர்தான் ஆட்டத்தை ஆர்சிபி பக்கம் கொண்டு வந்தது. செட்டில் பேட்டர் ஷிம்ரன் ஹெட்மயரை(11) தனது 17வது ஓவரில் ஹேசல்வுட் ஆட்டமிழக்கச் செய்தார். ராஜஸ்தான் அணிக்கு எந்த நேரத்திலும் பெரிய ஷாட்களை ஆடக்கூடிய ஹெட்மயரை வீழ்த்தி ஹேசல்வுட் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அடுத்ததாகத் தனது 19வது ஓவரில் மற்றொரு செட்டில் பேட்டர் துருவ் ஜூரெல் விக்கெட்டுக்கு ஹேசல்வுட் குறிவைத்தார். ஏனென்றால் புவனேஷ்வர் வீசிய 18வது ஓவரில் ஜூரெல் 22 ரன்கள் சேர்த்ததால், ஹேசல்வுட் ஓவரை அடித்து துவம்சம் செய்யப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துருவ் ஜூரெலுக்கு துல்லியமான யார்க்கரை ஹேசல்வுட் வீசினார். யார்க்கரில் இருந்து தப்பிக்க ஜூரேல் பேட்டால் தடுக்கவே பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. 3வது நடுவரிடம் அப்பீல் செய்யவே, பந்து துருவ் ஜூரெல் பேட்டில் பட்டுச் சென்றது தெரிய வந்தது. விக்கெட் உறுதியானதால் பெரிய விக்கெட்டை வீழ்த்திய நிம்மதி ஆர்சிபிக்கு கிடைத்தது. அடுத்து களமிறங்கிய ஆர்ச்சருக்கு டெஸ்ட் லென்த் பந்தை வீசிவே வேறுவழியின்றி கேட்ச் கொடுத்து ஆர்ச்சர் ஆட்டமிழந்தார். இந்த ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகளை ஹேசல்வுட் வீழ்த்தினார். ஹேசல்வுட் 4 ஓவர்களை வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஜெய்ஸ்வால் இருக்கும் வரை ஹேசல்வுட் ஓவரை குறிவைத்து ஹாட்ரிக் பவுண்டரி, சிக்ஸர் என விளாசித் தள்ளினார். ஆனால் ஜெய்ஸ்வால் விக்கெட்டை ஹேசல்வுட் வீழ்த்திய பிறகு மற்ற பேட்டர்களுக்கு ஹேசல்வுட் சிம்ம சொப்பனமாக மாறினார். பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி காரணமா? பாதுகாப்பு நிபுணர்கள் விளக்கம்4 மணி நேரங்களுக்கு முன்னர் '3 ஆண்டுகள் பாலியல் துன்புறுத்தல்' – கோவை ஈஷா பள்ளி முன்னாள் மாணவருக்கு என்ன நேர்ந்தது?24 ஏப்ரல் 2025 ராஜஸ்தானுக்கு நெருக்கடியளித்த குர்னல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துருவ் ஜூரெல் 18வது ஓவரில் ஜூரெல் 22 ரன்கள் சேர்த்தால், ஹேசல்வுட் ஓவரை அடித்து துவம்சம் செய்யப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது ராஜஸ்தான் சேஸிங்கை தொடங்கியதில் இருந்து ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்டை கொண்டு சென்றது. ஜெய்ஸ்வால், 14 வயது வைபவ் சூர்யவன்ஷி(16ரன்கள்) இருவரும் சிக்ஸர், பவுண்டரி என ஆர்சிபி பந்துவீச்சை விளாசித் தள்ளினர். ராஜஸ்தான், 4.4 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து தனது கடமையைச் செய்துவிட்டுச் சென்றார். 8 ஓவர்களில் 100 ரன்களை எட்டி ராஜஸ்தான் வலுவாக இருந்தது. ஆனால், குர்னல் பாண்டியா, சூயஸ் ஷர்மா இருவரும் வீசிய 8 ஓவர்களுக்கு ராஜஸ்தான் ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர். குறிப்பாக கேப்டன் ரியான் பராக்(22) விக்கெட்டை 10வது ஓவரில் குர்னல் பாண்டியா வீழ்த்தி ராஜஸ்தானை லேசாக தடுமாறச் செய்தார். ஆனால் நிதிஷ் ராணா களத்தில் இருக்கிறாரே என்ற துணிச்சல் இருந்தது. ஆனால், நிதிஷ் ராணா(28) விக்கெட்டையும் 14வது ஓவரில் குர்னல் பாண்டியா எடுக்கவே ராஜஸ்தானுக்கு முதல் சறுக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு, சூயஸ் ஷர்மா, குர்னல் இருவரும் ராஜஸ்தான் பேட்டர்களை ரன் சேர்க்கவிடாமல் நெருக்கடி கொடுத்துப் பந்துவீசினர். தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆனது ஏன்? ருதுராஜின் நிலை என்ன?11 ஏப்ரல் 2025 மதுரை சிறுமி 7 வயதிலேயே டேக்வாண்டோ பயிற்சியாளராகி கின்னஸ் சாதனை9 ஏப்ரல் 2025 கோலி, படிக்கல் அரைசதம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேப்டன் ரியான் பராக்(22) விக்கெட்டை 10வது ஓவரில் குர்னல் பாண்டியா வீழ்த்தி ராஜஸ்தானை லேசாக தடுமாறச் செய்தார் ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்(26) பவர்ப்ளே முடிந்ததும் ஆட்டமிழந்தார். பவர் ப்ளேவில் கோலி, சால்ட் இருவரும் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு கூட்டணி சேர்ந்த படிக்கல், கோலி ஜோடி ஸ்கோரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. 2வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். விராட் கோலி 32 பந்துகளில் அரைசதம் அடித்து அடுத்த 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து 70 ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கோலியின் கணக்கில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும். படிக்கல் தனக்கு இருமுறை கேட்ச் நழுவவிட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி 26 பந்துகளில் அரைசதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பட்டிதாரும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா கூட்டணி 19 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ஸ்கோரை 200 ரன்கள் கடக்க உதவினர். இரவில் வாயை ஒட்டி வைத்துக்கொண்டு தூங்கினால் ஆழ்ந்து உறங்க முடியுமா? எப்படி?24 ஏப்ரல் 2025 இறந்து 38 ஆண்டு கழித்தும் பிரிட்டிஷ், ஜெர்மன் பத்திரிகைகளை முட்டாளாக்கிய 'ஹிட்லர்'23 ஏப்ரல் 2025 முதல் 10 ஓவர் வரை நம்பிக்கையில்லை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலி 32 பந்துகளில் அரைசதம் அடித்து அடுத்த 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து 70 ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் "எங்களுக்கு மிகவும் தேவைப்பட்ட வெற்றியாகப் பார்க்கிறோம். இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் முற்றிலும் வித்தியாசமாக, எதிர்பார்த்தது போல் இருந்தது. பத்தாவது ஓவருக்கு பிறகுதான் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியது. இதற்கு பந்துவீச்சாளர்கள்தான் காரணம். ஆட்டத்தை திருப்பி வெற்றிக்கு இழுத்து வந்த பந்துவீச்சாளர்களின் துணிச்சல் அபாரமானது. ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கை தொடக்கத்தில் பார்த்து நம்பிக்கையிழந்தேன்," என்று கூறினார். மேலும், "ஆட்டம் நெருக்கடியாகச் செல்லும் என்று முதலில் கணித்தேன். ஆனால், 10வது ஓவருக்கு பின் விக்கெட்டுகளை எடுத்த பிறகு, என் கணிப்பு மாறியது. விக்கெட் எடுத்தால்தான் ரன்களை தடுக்க முடியும் என்று நினைத்தேன் அதற்கேற்றார்போல் திட்டமிட்டோம்," எனத் தெரிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி8 ஏப்ரல் 2025 சன்ரைசர்ஸ் கண்டெடுத்த முத்து: டெல்லியை மிரட்டிய 23 வயது இளம் வீரர் அனிகேத் வர்மா யார்?31 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"ஆட்டத்தைத் திசை திருப்பி வெற்றிக்கு இழுத்து வந்த பந்துவீச்சாளர்கள் துணிச்சல் அபாரமானது" என்றார் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள் இன்றைய ஆட்டம் சிஎஸ்கே vs சன்ரைசர்ஸ் இடம்: சென்னை நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 30 இடம் – சென்னை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் நாள் - ஏப்ரல் 27 இடம் – மும்பை நேரம்- மாலை 3.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs டெல்லி கேபிடல்ஸ் நாள் - ஏப்ரல் 27 இடம் – டெல்லி நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-417 ரன்கள் (8 போட்டிகள்) விராட் கோலி(ஆர்சிபி)392 ரன்கள்(9 போட்டிகள்) நிகோலஸ் பூரன்(லக்னெள)-377 ரன்கள்(9 போட்டிகள்) நீலத் தொப்பி பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 16 விக்கெட்டுகள்(8 போட்டிகள்) ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 16 விக்கெட்டுகள்(9 போட்டிகள்) குல்தீப் யாதவ்(டெல்லி) 12 விக்கெட்டுகள்(8 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1wd43xrj1go
  4. Published By: DIGITAL DESK 2 25 APR, 2025 | 10:18 AM கொடிகாமம் சந்தைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டியதால் வியாபாரிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். புதன்கிழமை (23) இரவு வந்த சாவகச்சேரி பிரதேச சபையினர் இந்த நாசகார வேலையை செய்ததாக வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். தற்போது வெப்பமானது மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. ஆகையால் மரங்கள் நிற்பதன் மூலம்தான் ஓரளவேனும் வெப்பத்தின் தாக்கம் குறைவாக உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மக்களின் கருத்தையும் மீறி மரத்தை வெட்டியதாக அவர்கள் குற்றம் சாட்டினர். சந்தையில் உள்ள மலசல கூடங்களும் பயன்படுத்த முடியாமல் மிகவும் அசுத்தமான முறையில் காணப்படுகின்றதாகவும் அவற்றினை சாவகச்சேரி பிரதேச சபையினர் சுத்தம் செய்வதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் சந்தையில் சேருகின்ற கழிவுப் பொருட்களை உரிய முறையில் பிரதேச சபையினர் அகற்றுவதில்லை என்றும் குற்றம்சாட்டினர். மக்களுக்கு சரியான முறையில் சேவைகளை வழங்காத உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் கூறியுள்ளார். எமது இந்த பிரச்சினைக்கு அவர் எடுக்கப்போகின்ற நடவடிக்கை என்ன என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இல்லாத நிலையில் இவ்வாறான விரும்பத்தகாத விடயங்கள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212873
  5. மேல் மாகாணத்தில் சிக்குன்குன்யா நோய் தீவிரம் Published By: DIGITAL DESK 3 25 APR, 2025 | 10:03 AM நாட்டில் அதிகளவான சிக்குன்குன்யா நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். நாடளாவி ரீதியில் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 16,544 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் மேல் மாகாணத்தில் மட்டும் 7,611 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் அதிகளவாக 2,709 பேரும், கம்பஹாவில் 2,453 பேரும், களுத்துறையில் 567 பேரும் பதிவாகியுள்ளனர். இது தொடர்பில் மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், நும்புகளால் பரவும் சிக்குன்குன்யா நோயை தடுப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எனது உத்தரவின் கீழ் கொழும்பு பிராந்திய சுகாதார அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து ட்ரோன்களைப் பயன்படுத்தி புகை விசுறுதல் போன்ற அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன. அத்துடன், இம் மாதத்தில் 18 சிக்குன்குன்யா நோய் தடுப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/212867
  6. கனகராசா சரவணன் தமிழரசு கட்சி மைத்திரிபால சிறிசேன காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்களோ அவ்வாறே ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டது போல அனுரகுமார அரசாங்கத்துடன் இரகசியமான ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலே செயற்பட தொடங்கியுள்ளதுடன், ஜே.வி.பி தமிழ் எம்.பி.க்களின் பேச்சாளர்களாக சிலர் இயங்கி வருகின்றனர். எனவே சுமந்திரன் கட்சியில் இருக்கும் வரையும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை எதிர்பார்க்க முடியாது. மக்கள் சிந்தித்து செற்பட வேண்டும் என தமிழ் தேசிய கட்சி தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நல்லதம்பி சிறிகாந்தா தெரிவித்தார். மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியில் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் களுவன்கேணியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ் மக்கள் பேரவை என்பன இணைந்து சைக்கிள் சின்னத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் செவ்வாய்க்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றுது. இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிரேஸ்ட சட்டத்தரணி ந.சிறிகாந்தா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி சுகாஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். இதன்போது உரையாற்றிய நல்லதம்பி சிறிகாந்தா இவ்வாறு தெரிவித்தார் இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து திட்டம் தீட்டி தொடர்ச்சியாக செயற்பட்டு வந்த பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கங்களை விட இப்போது அனுரா குமார திசநாயக்கா தலைமையில் இயங்கி கொண்டிருக்கின்ற தேசிய மக்கள் சக்தி என அழைக்கப்படுகின்ற ஜே.வி.பி அரசாங்கம் மிக தீவிரமாக இராஜதந்திர ரீதியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஜே. ஆர் ஜெயவர்தன, பிறேமதாஸா, மகிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா யார் என்பது மக்களுக்கு தெரியும் ஆனால் இப்போது வந்திருக்கின்ற இந்த ஜனாதிபதி இனவாதத்தின் அழகு முகமாக தமிழ் மக்களை வழைத்துப் போடலாம் என திட்டம் தீட்டி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். கடந்த பொது தேர்தலிலே சிங்கள மக்களின் அதிக வாக்குகளால் ஆட்சிக்கு வந்த இவர்கள் தமிழ் மண்ணில் தேர்தல் நுணுக்கங்களையும் நுட்பங்களையும் பயன்படுத்தி சில ஆசனங்களை பெற்று கொண்டிருக்கும் சூழ்நிலையலே உலகத்துக்கு பாருங்கள் உள்ளுராட்சி முடிவுகளை நாங்கள் கனிசமான ஆசனங்ககளை வென்றிருக்கின்றோம் என காட்டமுடியும் என்ற நம்பிக்கையோடு அவர்களது வேட்பாளர்களை தமிழ் மாநிலம் முழுவதும் நிறுத்தியுள்ளனர். இலங்கையின் முதல் பிரதமர் டட்லிசேனநாயக்கா, டட்லி, சேர்ஜோன் கொத்தலாவ, மற்றும் சிங்கள சட்டத்தை கொண்டு வந்து இந்த நாட்டிலே தமிழர்களுக்கு அடிபோட்டு உதைபோட்ட பண்டாரநாயக்கா அரசாங்கம் அதன் பின்னர் ஆட்சி செய்த அனைவரும்; பௌத்த சிங்கள பேரினவாதத்தை முழு இலங்கை தீவையும் அரசியல் ரீதியாக கொண்டுவருகின்ற ஒரே நிகழ்சி நிரலில் செயற்பட்டனர். அந்த நிகழ்சி நிரலை இப்போதைய அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது இதை தோற்கடிக்க வேண்டும் எனவே எங்கள் தீர்ப்பு எங்கள் முடிவு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தீர்க்கமாக தெரிவிக்கப்பட வேண்டும். என்பதற்காக தமிழ் மக்கள் பேரவை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சைக்கிள் சின்னத்தில் தமிழ் ஈழம் முழுவதும் சிங்கள இனவெறி கும்பலின் வேட்பாளர்களுக்கு எதிராக சுயமரியாதை கொண்ட தமிழர்களான ஆண்களையும் பெண்களையும் இளைஞர்களையும் களத்தில் இறக்கியுள்ளோம். இது ஒரு சத்திய போராட்டம் இந்த போரட்டத்தில்; எங்களுடன் இணைந்திருக்க வேண்டிய தமிழ் கட்சிகள் தங்களுடைய சொந்த காரணங்களுக்காக தனித்து போட்டியிடுகின்றனர் காலப்போக்கிலே இந்த கொடியின் கீழ் வருவார்கள.; ஆனால் தமிழரசு கட்சி கடந்த தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கின்றோம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கின்றது. மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இந்த தேசிய மக்கள் சக்தியில் தமிழர்களாக போட்டியிட்டு தெரிவாகியவாகிய எம் பிக்களை அரசாங்கம், ஜனாதிபதி, மந்திரிகள் கண்டு கொள்ள வில்லை அவர்கள் குறைகளை அல்லது கோரிக்கைகளை நேரடியாக அரசாங்க தரப்பிடம் சமர்ப்பிக்க முடியாமல் திண்டாடுகின்றனர் எனவே அவர்களுக்காக நாங்கள் அவர்களுடைய கோரிக்கையை அரசாங்கத்துக்கு எடுத்து சொல்ல வேண்டியுள்ளது என பேசினார் இது எவ்வளவு வெட்ககேடு. எமது மக்களுக்காக பேச வேண்டியவர்கள் இன்று தமிழர்களின் தேசிய அபிலாசைகளுக்கு எதிரா செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சிங்கள இனவாதிகளின் எடுபிடிகளான இந்த ஜே.வி.பி தமிழ் எம்பிக்களுக்கு பேச்சாளர்களாக தமிழரசு கட்சி சில உறுப்பினர்கள் இயங்கி கொண்டிருக்கின்றனர் எவ்வளவு வெட்கம் கெட்ட நிலமை யாருடைய சார்பிலே இப்போது அரசாங்க தரகர்களாக சிங்கள இனவெறிக்கும்பலின் எம்பிக்களின் பேச்சாளர்களாக தங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். என்;பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இவர்கள் அரசியல் தரகர்கள் இவர்களை நம்பி எமது மக்கள் வாக்களிக்கின்ற போது ஒவ்வொரு வாக்கும் உரிமைக்காக உணர்வுக்காக விடுதலைக்காக அளிக்கப்படுகின்றது ஆனால் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் இன்று தமிழரசு கட்சி தமிழ் மக்களின் அரசில் கோரிக்கையை வலியுறுத்துகின்ற உரிமையை இழந்துள்ளது அவர்;களது கோரிக்கை எல்லாம் தமிழ் இனத்தின் விடுதலை அல்ல. நாங்களும் நீங்களும் அர்தமற்றுப் போய்விட்டது என கருதுகின்ற இந்திய இலங்கை 13 வது திருத்தத்தை பேசுகின்றனர் இந்த ஒப்பந்தம் தொடர்பாக இலங்கைக்கு இந்தியா தலைவர்கள் வரும் போது அதனை அமுல்படுத்துமாறு கோரியதாக ஊடகங்களில் சொல்லிவிட்டு போகின்றனர். அது என்ன நடக்கின்றது இலங்கை அரசு ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டுவிடுகின்றனர். இந்தியா விரும்பினால் இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த நிர்ப்பந்திக்க முடியும் அதை இந்தியா செய்யமாட்டாது 13 வதை பேசி பேசியே தமிழ் மக்களின் காலம் நீர்த்து போகும் என இந்தியா கணக்கு போடுகின்றது இது யதார்தமான நிலமை தமிழரசு கட்சி ஆளும் அரசாங்கத்தினுடைய ஏவல் படையாக மாற்றிக் கொண்டிருக்கின்றது இந்த பின்னணியில் தான் தமிழ் மக்களின் அடிப்படை இலச்சியத்தை குறிக்கோளை வலியுறுத்த கூடிய எங்களுக்கு ஒரு உறுதியான அரசியல் தலைமை தேவைப்படுகின்றது என உணர்ந்த காரணத்தினனால் நாங்கள் எல்லோரும் ஓர் அணி திரண்டுள்ளோம். நாங்கள் எல்லோரும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இருந்தாலும் தமிழ் மக்கள் விடுதலையை விரும்புவது உண்மை என்றால் ஓர் அணி திரண்டு தமிழ் மக்கள் விடுதலை பெறவேண்டும் என்ற உறதியான நிலைப்பாட்டில் நிற்கின்றனர் என்பதை கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் உலகம் அறிய உரத்து சொல்லவேண்டும். அதற்கான சந்தர்பம் தான் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலை தமிழ் தேசி பேரவை பார்கின்றது. கடந்த தேர்தலில் தட்டி தவறி கிடைத்த சில ஆசனங்களை வைத்து தமிழ் மக்கள் மாறிவிட்டதாக வெளி உலகத்துக்கு காட்டுகின்றது சுமந்திரனுடைய காருக்கு ஒரு சின்ன பிரச்சனை நடந்தால் அன்றைய ஜனாதிபதி மகிந்த விசாரிப்பார் சுமந்திரன் தமிழினத்தின் சாபக்கேடு அவரை கொண்டு வந்த சிலர் இன்று உயிரோடு இல்லை கடந்த தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னர் கூட தமிழரசு கட்சியை தொடர்ந்து நாசப்படுத்தி கொண்டிருக்கின்றார் அவர் தமிழரசு கட்சியில் இருந்து ஆட்டம் போடும்வரை நீங்களும் நாங்களும் எதையும் எதிர்பார்க முடியாது அந்த நிலமை மாற்றப்படக் கூடுமா என்பதை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் தமிழரசு கட்சிக்கு எதிராக இந்த தேர்தலிலே வாக்குகள் விழுமாக இருந்தால் அந்த நிலமை மாறும் என்றார். https://thinakkural.lk/article/317302
  7. 24 APR, 2025 | 09:56 PM (இராஜதுரை ஹஷான்) ஊழல் மோசடியால் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ஷர்கள் இன்று ஊழலற்ற வகையில் நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்று எமக்கு குறிப்பிடுகிறார்கள். ஊழல் மோசடியான அரச நிர்வாகத்தை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். மீண்டும் அவ்வாறான முறையற்ற நிர்வாகத்தை மக்கள் தோற்றுவிக்கமாட்டார்கள் என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். தங்காலை பகுதியில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் எளிமையாக இருப்பதையும் எதிர்கட்சியினர் இன்று விமர்சிக்கிறார்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் மற்றும் அரசாங்கங்கள் சுகபோகமாக செயற்பட்ட காரணத்தால் தான் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்தது, ஊழல் மோசடியால் பாதிக்கப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஜனாதிபதி மாளிகையிலோ, அலரிமாளிகையிலோ வசிப்பதில்லை. ஏனெனில் இவற்றை பராமரிப்பதற்கு பல மில்லியன் ரூபா மாதாந்தம் செலவாகும். நாடு வங்குரோத்து நிலையடைந்து மக்கள் கடினமான நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சுகபோகமாக வாழவில்லை. ஊழல் மோசடியால் நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிய ராஜபக்ஷர்கள் இன்று ஊழலற்ற வகையில் அரச நிர்வாகத்தை முன்னெடுப்பது குறித்து எமக்கு குறிப்பிடுகிறார்கள். நாமல் ராஜபக்ஷ ஊழலற்ற வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார். இது நகைப்புக்குரியது. இவர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். சுகபோகம் மற்றும் ஊழல் மிகுந்த அரசியல் கட்டமைப்பை மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். ஆகவே முறையற்ற அந்த நிர்வாக கட்டமைப்பை மீண்டும் தோற்றுவிக்கமாட்டார்கள். அரச செலவுகளை குறைத்துக் கொண்டு நாட்டை நிர்வகிக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/212854
  8. நாடளாவிய ரீதியில் ஆயுர்வேத, சித்த என்ற ரீதியில் இலங்கையில் சுதேச மருத்துவம் இருக்கின்றது. இந்த கற்கை நெறியை நிறைவுசெய்து தமிழ், சிங்களம், முஸ்லிம் என 1700 பட்டதாரிகள் வேலைக்காக காத்திருக்கின்றனர். இதைவிட 600 பேர் இறுதிப் பயிற்சி நிலையில் இருக்கின்றனர். அதைவிட ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏறத்தாள 1600 இற்கும் அதிகமானோர் இருக்கும் போது வெறும் 350 இற்கும் குறைவானவர்களையே நியமனத்தில் உள்வாங்க அரசு முனைகின்றனர். ஆனால் எம்மை கிராமங்கள் தோறும் சமூக நல வைத்திய அதிகாரிகளாக கூட எம்மை பயன்படுத்த முடியும்.
  9. 25 APR, 2025 | 10:11 AM புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு மத்தியில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா ஆதரவு அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பிலும் பரஸ்பரம் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை வழங்கும் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய நீர்வளத்துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி, பாகிஸ்தானின் நீர்வளத்துறை செயலாளர் சையத் அலி முர்தாசாவுக்கு எழுதிய கடிதத்தில், ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறியதால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தானால் தொடர்ந்து நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் உரிமைகளைத் தடுக்கிறது. நல்ல நம்பிக்கையுடன் ஒரு ஒப்பந்தத்தை மதிக்க வேண்டிய கடமை ஒரு ஒப்பந்தத்திற்கு அடிப்படையானது. அதற்கு பதிலாக நாங்கள் கண்டது இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தானால் தொடர்ந்து நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இடம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிதர்களுக்கான அமைப்பான பனுன் காஷ்மீர், காஷ்மீருக்கான பயண ஆலோசனையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். பள்ளத்தாக்கில் நிலைமை "இயல்பிலிருந்து வெகு தொலைவில்" உள்ளது. சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக இந்துக்கள் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்த பின்னணியில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு நிலைமையை ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக அவர் ஸ்ரீநகர் மற்றும் உதம்பூருக்குச் செல்வார் என்றும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டுள்ள மூத்த ராணுவத் தளபதிகள் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களின் அதிகாரிகளை அவர் சந்திக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/212874
  10. STRATEGIC TIMEOUT 42nd Match (N), Bengaluru, April 24, 2025, Indian Premier League Royal Challengers Bengaluru 205/5 Rajasthan Royals (13.6/20 ov, T:206) 140/4 RR need 66 runs in 36 balls. Current RR: 10.00 • Required RR: 11.00 • Last 5 ov (RR): 30/2 (6.00) Win Probability: RR 46.86% • RCB 53.14%
  11. புனித தந்ததாது கண்காட்சி நிகழ்வு இன்று ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் புனித தந்ததாது கண்காட்சி நிகழ்வு 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று பிற்பகல் தலதா மாளிகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வுக்காகக் கண்டியில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, கண்டியில் குறித்த நிகழ்வை முன்னிட்டு விசேடப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் சுதத் மாசிங்க தெரிவித்தார். தலதா மாளிகை யாத்திரையின் போது, புனித தந்ததாதுவை பார்வையிடுவதற்கு முக்கிய பிரமுகர்களுக்காக விசேட வரிசைகள் ஏற்படுத்தப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிக்குமார் மட்டுமே தலதா மாளிகைக்குள் நுழைய விசேட அனுமதி வழங்கப்படும் எனவும் அவர்களும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில், வெளிநாட்டுத் தூதுவர்கள் பிரமுகர்களாக, விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பொதுமக்கள் யாத்திரையைத் தொடங்குவதற்கு முன்பாக, புனித தந்ததாதுவை வழிபட வாய்ப்பு வழங்கப்படும். தலதா மாளிகை யாத்திரைக்குப் பிரவேசிக்க மூன்று வரிசைகளும், வெளியேற இரண்டு வரிசைகளும் அமைக்கப்படும் எனவும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் சுதத் மாசிங்க தெரிவித்துள்ளார். https://tamil.colombotimes.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/
  12. STRATEGIC TIMEOUT 42nd Match (N), Bengaluru, April 24, 2025, Indian Premier League Royal Challengers Bengaluru 205/5 Rajasthan Royals (8/20 ov, T:206) 99/2 RR need 107 runs in 72 balls. Current RR: 12.37 • Required RR: 8.91 • Last 5 ov (RR): 65/2 (13.00) Win Probability: RR 69.72% • RCB 30.28%
  13. தமிழ்நாட்டில் பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைசுக்கு தடை ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மயோனைஸ் என்பது வழுவழுப்பான அரை திடப்பொருள் வடிவில் இருக்கும் காரமில்லாத உணவுப் பொருளாகும். கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 24 ஏப்ரல் 2025, 13:03 GMT தமிழ்நாடு அரசு பச்சை முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் எனும் உணவுப்பொருளை உணவகங்கள், கடைகளில் தயாரிப்பது, சேமித்து வைப்பது மற்றும் விற்பனை செய்வதை தடை செய்துள்ளது. மயோனைஸ் என்பது ஷவர்மா, வறுத்த சிக்கன் போன்ற உணவு வகைகளுக்கு தொட்டுக்கொள்ளவும், சில வகை சாஸ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. பச்சை முட்டை, எண்ணெய் ஆகிய இரண்டே மயோனிஸின் முக்கிய மூலப் பொருட்களாகும். நீங்கள் சாப்பிடும் முறைக்கும் உடல் பருமனுக்கும் என்ன தொடர்பு தெரியுமா? இன்டர்மீடியா: உணவுக் கழிவுகளை சுவைமிக்க உணவாக மாற்றும் பூஞ்சை - விரும்பி உண்ணும் மக்கள் இறைச்சி உண்பதை சில காலம் நிறுத்தி, பின்னர் மீண்டும் சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படுமா? உணவில் சேர்க்கப்படும் நிறமூட்டிகள் பாதுகாப்பானதா? மயோனைஸ்க்கு தடை ஏன்? பச்சை முட்டை பயன்படுத்தி மயோனைஸ் தயாரிப்பது இந்திய உணவு பாதுகாப்பு விதிகளுக்கு புறம்பானது என கூறி தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையர் லால்வினா ஐஏஎஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், "உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006-ன்படி ஏப்ரல் 8ம் தேதி முதல் ஓராண்டுக்கு மயோனிஸின் எந்த நிலையிலான தயாரிப்பு, பதப்படுத்துதல், சேமித்தல், மற்றொரு இடத்துக்கு அனுப்புதல், விநியோகித்தல், விற்பனை ஆகியவை தடை செய்யப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மயோனைஸை "அதிக ஆபத்துள்ள உணவு" எனும் குறிப்பிடும் உணவு பாதுகாப்புத் துறை பச்சை முட்டைகள் பயன்படுத்தப்படுவதால் அவற்றிலிருந்து சால்மோனெல்லா எனும் பாக்டீரியாவின் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறது. உணவு தயாரிப்பாளர்கள் பலர் பச்சை முட்டைகளை பயன்படுத்தி முறையாக மயோனைஸ் தயாரிக்காததாலும் முறையாக அவற்றை சேமித்து வைக்காததாலும் சால்மோனெல்லா டைஃபிமுரியம், சால்மோனெல்லா எண்டிரிடிடிஸ், லிஸ்டிரியா மோனோசைடோஜென்ஸ், எஸ்ஸ்ரிசியா கோலி போன்ற பாக்டீரியாக்களின் தொற்று ஏற்பட்டு பொது சுகாதாரத்துக்கு ஆபத்தாகும் என்று உணவு பாதுகாப்புத் துறை கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பச்சை முட்டை பயன்படுத்தி மயோனைஸ் தயாரிப்பது இந்திய உணவு பாதுகாப்பு விதிகளுக்கு புறம்பானது என்பதால் அதை தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. மயோனைஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது? மயோனைஸ் என்பது வழுவழுப்பான அரை திடப்பொருள் வடிவில் இருக்கும் காரமில்லாத உணவுப் பொருளாகும். "மயோனைஸ் எனும் உணவுப்பொருள் பச்சை முட்டையின் மஞ்சள் கருவையும் ஆலிவ் எண்ணெய்யையும் ஒன்றாக 15 முதல் 20 நிமிடங்கள் வரை விடாமல் கலக்கிக் கொண்டே இருப்பதன் மூலம் கிடைப்பதாகும். இது தான் மயோனைஸின் அடிப்படை மூலப்பொருட்கள். இதனை அப்படியே சாப்பிடுவது சுவையாக இருக்காது. எனவே சில மருத்துவ குணம் கொண்ட இலை வகைகள் சேர்க்கப்படும். வெங்காயம், வெள்ளரி ஆகியவையும் சேர்க்கப்படலாம். காரம் இல்லாமல் சாப்பிடுபவர்கள் குறிப்பாக ஐரோப்பியர்களின் சாலட் போன்ற உணவுகளில் இது அதிகம் பயன்படுத்தப்படும்." என்று மாலத்தீவில் உள்ள சர்வதேச உணவகத்தில் 25 ஆண்டுகள் தலைமை சமையல் கலைஞராக இருந்த பொன்னுசாமி கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 சால்மோனெல்லா பாக்டீரியா எப்படி உருவாகிறது? சால்மோனெல்லா பாக்டீரியா தொற்றுக் கொண்டிருக்கும் கோழிகள் இடும் முட்டைகளில் இந்த பாக்டீரியா இருக்கக் கூடும். அதாவது, முட்டை உருவாகும் போதே, அது சால்மோனெல்லா தொற்றுடன் உருவாகக்கூடும். சில நேரங்களில் முட்டை ஒட்டில் இந்த பாக்டீரியா இருக்கக் கூடும். அதாவது முட்டையின் உள்ளே இந்த பாக்டீரியா இல்லாத போதும், அருகில் உள்ள கோழிகளின் கழிவுகளிலிருந்து முட்டை ஓட்டில் இந்த பாக்டீரியா வரக்கூடும். அந்த முட்டை ஓட்டை கழுவாமல் பயன்படுத்தும் போது, பாக்டீரியா உணவுப் பொருளில் கலந்து தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. முறையாக குளிரூட்டியில் பதப்படுத்தி வைக்காத போது, சால்மோனெல்லா வளர்வதற்கு அது ஏதுவான சூழலை உருவாக்கும். பொதுவாக அறையின் வெப்ப நிலையில், இந்தியாவில் சராசரியாக 28டிகிரி முதல் 35 டிகிரி வரையிலான அறை வெப்பத்தில் முட்டைகள் இருக்கும் போது அதில் சால்மோனெல்லா வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். பட மூலாதாரம்,GETTY IMAGES 5,000 எறும்புகள் ரூ.6.5 லட்சம்: நூதன முறையில் எறும்புகளை கடத்தி இவர்கள் என்ன செய்கிறார்கள்?22 ஏப்ரல் 2025 நீங்கள் அகால மரணமடையும் வாய்ப்புள்ளதா என்று காட்டும் எளிய பரிசோதனை - வீட்டிலேயே செய்யலாம்21 ஏப்ரல் 2025 மயோனைஸ் வேறு எங்கு தடை செய்யப்பட்டுள்ளது? துரித உணவுகள் உட்கொண்டு பலருக்கும் உணவு நஞ்சாகிய சம்பவங்கள் கேரளாவில் 2023-ம் ஆண்டு நிகழ்ந்தன. உணவு பாதுகாப்புத் துறை நடத்திய சோதனைகளில் அவை மயோனைஸுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று தெரியவந்தது. பச்சை முட்டைகள் பயன்படுத்தி தயாரிக்கும் மயோனைஸ்க்கு கேரள அரசு தடை விதித்தது. அதே போன்று பொதுமக்கள் பலர் தெலங்கானாவில் கடந்த ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த அரசு மயோனைஸை தடை செய்தது. "உணவு பாதுகாப்பு விதிகள்படி பச்சை முட்டைகளை பயன்படுத்தி மயோனைஸ் தயாரிப்பதற்கு அனுமதிப்பதில்லை. முட்டைகள் இல்லாமல் தயாரிக்கப்படும் மயோனைஸ், வெப்பத்தின் மூலம் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்ட (pasteurized) முட்டைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மயோனைஸ் ஆகியவற்றுக்கு அனுமதி உண்டு" என்கிறார் உணவு தொழில்நுட்ப நிபுணர் அன்பு வாஹினி. மேலும், "மயோனைஸ் சாப்பிட விரும்புவோர், வீட்டில் செய்து சாப்பிடுவதே சிறந்த வழியாக இருக்கும். மயோனைஸ் பொதுவாக உடனடியாக உட்கொள்ள வேண்டிய உணவுப் பொருளாகும். அதை சேமித்து வைத்து சாப்பிட வேண்டும் என்றால், முறையான குளிரூட்டிகள் இருக்க வேண்டும்" என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட திண்டுக்கல் காசம்பட்டியில் என்ன இருக்கிறது?22 ஏப்ரல் 2025 கடல்நீரில் இருந்து கார்பனை உறிஞ்சும் புதிய திட்டம் காலநிலை மாற்ற பிரச்னைக்கு தீர்வாகுமா?22 ஏப்ரல் 2025 மயோனைஸ் சாப்பிடுவதால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? சால்மோனெல்லா தொற்றுடன் கூடிய மயோனைஸ் சாப்பிட்டால், வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி, தலைவலி, காய்ச்சல் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். துரித உணவுகளில் மயோனைஸ் அதிகம் பயன்படுத்தப்படுவதால், இளைஞர்களிடம் இதன் பாதிப்புகளை அதிகம் காண முடிகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். "நீடித்த வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுடன் பல இளைஞர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களில் பலரும் ஓரிரு நாட்களுக்கு முன்பு துரித உணவகங்களில் மயோனைஸ் பயன்படுத்தப்பட்ட சவர்மா போன்ற உணவுகளை உட்கொண்டிருக்கின்றனர். இப்போது இரவு நேரங்களிலும் இது போன்ற உணவுகள் எளிதாக கிடைப்பதால், அங்கு சென்று நண்பர்களுடன் நேரம் கழிப்பதை இளைஞர்கள் விரும்புகின்றனர்" என்று மலக்குடல், ஆசனவாய், பெருங்குடல் ரோபோடிக் அறுவை சிகிச்சை மருத்துவர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் கூறுகிறார். குழந்தைகள், முதியவர்கள் என குறைந்த எதிர்ப்பு சக்தி கொண்ட எவரும் இதனால் பாதிக்கப்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். "குடல் பாதிப்புகள் சிலருக்கு தீவிரமாக ஏற்படலாம், குணமடைய பல வாரங்கள் ஆகலாம். சிலருக்கு பெருங்குடல் அழற்சி (ulcerative colitis) ஏற்படலாம். இவை அனைத்தும் உடலின் எதிர்ப்பு சக்தியையும் பொது ஆரோக்கியத்தையும் குறைக்கும்" என்கிறார் அவர். படக்குறிப்பு,வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் - மலக்குடல், ஆசனவாய், பெருங்குடல் ரோபோடிக் அறுவை சிகிச்சை மருத்துவர் கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளாகதான் மயோனைஸ் நமது உணவுகளில் அறிமுகமாகியுள்ளது என கூறும் உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் டாஃப்னி லவ்ஸ்லி, மயோனைஸ் அதிக கலோரி, அதிக கொழுப்புச் சத்து கொண்ட உணவு என்கிறார். "குளிர் பிரதேசங்களில் உள்ள மக்கள் உடலின் வெப்பத்தன்மையை தக்க வைத்துக் கொள்ள அதிக கொழுப்புச் சத்து கொண்ட உணவுகளை உண்பார்கள். அதிக கொழுப்பு மற்றும் கலோரி கொண்ட உணவுகள் சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய்களுக்கு இட்டுச் செல்லும் இந்தியாவில் இன்று இது போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்து வருகிறது." என்கிறார் அவர். தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லும் அவசியமே வராதா?23 ஏப்ரல் 2025 இறந்து 38 ஆண்டு கழித்தும் பிரிட்டிஷ், ஜெர்மன் பத்திரிகைகளை முட்டாளாக்கிய 'ஹிட்லர்'23 ஏப்ரல் 2025 பச்சை முட்டைகளை சாப்பிடலாமா? உடல் எடை பராமரிப்பில் பச்சை முட்டைகளை உண்பது பலருக்கு பழக்கமானதாக இருக்கலாம். ஆனால் அவ்வாறு உட்கொள்வது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "பச்சை முட்டைகள் பயன்படுத்தும் போது கண்டிப்பாக சால்மோனெல்லா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு" என்கிறார் உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் டாஃப்னி லவ்ஸ்லி. "சால்மோனெல்லா தொற்று ஏற்பட்ட முட்டைகளை சாப்பிடும் போது வாந்தி, மயக்கம், தலைவலி, வயிற்று வலி ஏற்படும். ஆனால் இவற்றை நாம் சால்மோனெல்லாவினால் தான் ஏற்படுகின்றன என்று தொடர்புப்படுத்தி பார்ப்பதில்லை. பச்சை முட்டை சாப்பிடுவதால் அதிக பலன்கள் கிடைக்கும் என்பது உண்மையல்ல. சமைத்த முட்டையை சாப்பிடுவதால் நாம் எதையும் இழக்கப் போவதுமில்லை" என்று அவர் விளக்குகிறார். முட்டைகளை பொதுவாக 70டிகிரி செல்சியசில் குறைந்தது 2 நிமிடங்களாவது சமைக்க வேண்டும் என்று குறிப்பிடும் டாஃப்னி லவ்ஸ்லி, அவை முழுவதுமாக சமைக்க 5 முதல் 7 நிமிடங்கள் ஆகும் என்கிறார். படக்குறிப்பு,டாஃப்னி லவ்ஸ்லி, உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் இரவில் வாயை ஒட்டி வைத்துக்கொண்டு தூங்கினால் ஆழ்ந்து உறங்க முடியுமா? எப்படி?8 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபஞ்சம் குறித்த புரிதலை புரட்டிப் போடும் புதிய தகவல்களை வழங்கிய இருண்ட ஆற்றல் ஆய்வு24 ஏப்ரல் 2025 முட்டைகள் இல்லாமல் மயோனைஸ் செய்ய முடியுமா? உண்மையான மயோனைஸ் செய்வதற்கு முட்டை அவசியம் என்றாலும், முட்டை இல்லாமலும் அதே போன்ற ஒரு உணவுப்பொருளை தயாரிக்க முடியும். முட்டை சேர்த்துக் கொள்ள விரும்பாத பலரும் முட்டைக்கு பதிலாக முந்திரி பருப்புகள் அல்லது பால் பயன்படுத்தி மயோனைஸ் தயாரிக்கின்றனர். இவை மட்டுமல்லாமல் பல்வேறு பொருட்களைக் கொண்டு, மயோனைஸ் போன்ற வழுவழுப்பான இளம் மஞ்சள் நிறத்தில் சுவையான உணவுப் பொருளை தயாரிக்க முடியும். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy7xwpv3j7o
  14. 23 APR, 2025 | 09:08 PM 'உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் என்பது கவர்ந்திழுக்கக்கூடிய விரும்பத்தகாத போலித்தனத்தை மூடி மறைக்கும் ஒன்று' என கிரிக்கெட்டின் விவிலியம் என வருணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை ஆசிரியர் லோரன்ஸ் பூத் விமர்சித்துள்ளார். அதற்கான முறைமை மாற்றப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். வருடாந்தம் வெளியிடப்படும் விஸ்டன் சஞ்சிகை நூலின் 162ஆவது பதிப்பில், தனது பார்வையை சர்வதேச கிரிக்கெட் பேரவை மீது பூத் திருப்பியுளளார். ஐசிசி சம்பயின்ஷிப் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஐசிசியினால் அனுமதிக்கப்பட் பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்தது. அந்த சந்தர்ப்பத்தில் (2024 ஆகஸ்ட்) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செயலாளராக இருந்து ஐசிசி தலைவராக ஜே ஷா நியமிக்கப்பட்டது குறித்து பூத் கேள்வி எழுப்பி இருந்தார். 'வகுப்புவாதம் ஒரு வருத்தமான உண்மையை உறுதிப்படுத்தியது. 2024தான் கிரிக்கெட்டின் முறையான நிர்வாகத்திற்குரிய எந்தவொரு கூற்றும் கைவிடப்பட்ட ஆண்டாகும். அது சிலருக்கு அல்ல, பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. துல்லியத்தைத் தீர்மானித்தல், சமநிலைகள் மற்றும் ஆளுமை என்பன குறித்த குழப்பத்தை அது தோற்றுவித்தது' என விஸ்டன் சஞ்சிகையில் பூத் எழுதியுள்ளார். இதேவேளை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் குறித்தும் பூத் கருத்து வெளியிடத்தவறவில்லை. அப் போட்டி இரண்டு வருடங்களுக்குப் பதிலாக நான்கு வருடங்களுக்கு நடத்தப்பட வேண்டும் என்ற யோசனையையும் அவர் முன்வைத்தார். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சி இரண்டு ஆண்டுகளைக் கொண்டது. அந்த காலப்பகுதியில் சொந்த மண்ணில் மூன்று தொடர்களும் அந்நிய மண்ணில் மூன்று தொடர்களுமாக 6 தொடர்களில் அணிகள் விளையாடுகின்றன. ஒரு டெஸ்ட் வெற்றிக்கு 12 புள்ளிகளும் போட்டி சமநிலையில் முடிவடைந்தால் இரண்டு அணிகளுக்கும் தலா 6 புள்ளிகளும், போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தால் இரண்டு அணிகளுக்கும் தலா நான்கு புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. எனினும் அணிகள் தத்தமது ஆறு டெஸ்ட் தொடர்களில் வெவ்வேறு எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் வெவ்வேறு எதிரணிகளுடன் விளையாடுவதால், ஒவ்வொரு அணியும் ஈட்டும் புள்ளிகளின் சதவீதத்தைக் கொண்டே அணிகள் தரவரிசைப் படுத்தப்படுகின்றன. 'ஷாவின் தலைமையிலான நிருவாகத்தின் கீழ் நடைபெறவுள்ள முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குழப்பகரமான முறைமையைக் கொண்டுள்ளது' என பூத் சுட்டிக்காட்டியுள்ளார். 'ஒவ்வொரு அணியும் வெவ்வேறு எண்ணிக்கையிலான போட்டிகளில் வெவ்வேறு எதிரணிகளுடன் விளையாடுவதால் அவற்றைத் தரைவரிசைப்படுத்த கணனி தேவைப்படுகிறது. இது எந்தவொரு விளையாட்டு முயற்சிக்கும் மாறுபாடானது. அது எளிதாக பின்பற்றப்படவேண்டும். 'ஒரு பாக்கெட்டுக்குள் அடைக்கப்பட்டது போன்று ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் வடிவமைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. கால்பந்தாட்டம், றக்பி போன்று உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான காலப்பகுதியை நான்கு வருடங்களாக இரட்டிப்பாக நீடிக்க வேண்டும். அத்துடன் தரவரிசையில் முதல் 9 இடங்களில் உள்ள அணிகள் ஒன்றையொன்று சொந்த மண்ணிலும் அந்நிய மண்ணிலும் என்ற முறையில் விளையாடவேண்டும். அந்தத் தொடர்கள் யாவும் குறைந்தது 3 டேஸ்ட்களைக் கொண்டிருக்க வேண்டும்' என்பதே பூத்தின் கருத்தாகும். இது இவ்வாறிருக்க, ஒட்டுமொத்தத்தில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் சகல அணிகளுக்கும் சமமான டெஸ்ட் போட்டிகள் கிடைக்கும் வகையில் அட்டவணை அமையவேண்டும் என்பதையே பூத்தின் கருத்துக்கள் வலியுறுத்தி நிற்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர். இதனை ஐசிசி நிறைவேற்றுக்குழு, கிரிக்கெட் குழு என்பன சீர்தூக்கிப் பார்ப்பது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானது என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர். ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் மூன்றாவது அத்தியாயம் அவுஸ்திரேலியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூன் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர் நான்காவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இரண்டு வருட சுழற்சி ஆரம்பமாகவுள்ளது. எவ்வாறாயினும் ஐசிசி கிரிக்கெட் குழுவினர், டெஸ்ட் விளையாடும் நாடுகளின் நிருவாகத்தினர் ஆகியோரிடம் இருந்து ஐசிசி ஆலோசனைகளைக் கோரியிருந்தை இங்கு மறக்கலாகாது. அது பற்றிய மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. -என்.வீ.ஏ. https://www.virakesari.lk/article/212765
  15. Published By: VISHNU 24 APR, 2025 | 09:22 PM தவறுதலாக பாகிஸ்தானில் எல்லைக்குள் சென்றதால் இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. ஓய்வு எடுப்பதற்காக நிழலைத்தேடிச் சென்றபோதே தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் குறித்த இந்திய எல்லைப் பாதுகாப்புடை வீரர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த வீரரை விடுவிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் எல்லையில் 182 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பி.கே.சிங் விவசாயிகளுடன் ஓய்வு எடுக்க நிழல் பகுதிக்கு செல்ல முயன்றபோது, இந்திய எல்லையில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளார். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் பி.கே. சிங்கை கைது செய்துள்ளனர். இராணுவ சீருடை மற்றும் அவருடைய துப்பாக்கியுடன் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளார். இவ்வாறு சென்ற பி.கே. சிங்கை பாதுகாப்பாக மீட்க இருநாட்டு வீரர்களிடையே சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அசாதாரணமானது அல்ல என்றும், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த காலங்களில் இவ்வாறு இடம்பெற்றுள்ளதாகவும் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற நிலையில், பயங்கரவாதத்தை ஆதரிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212859
  16. LIVE 42nd Match (N), Bengaluru, April 24, 2025, Indian Premier League Royal Challengers Bengaluru 205/5 Rajasthan Royals (4.6/20 ov, T:206) 58/1 RR need 148 runs in 90 balls. Current RR: 11.60 • Required RR: 9.86 Win Probability: RR 55.15% • RCB 44.85% RR 2வது விக்கெட் போயிற்று.
  17. பஹல்காம் தாக்குதல்: இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த முக்கிய முடிவுகள் பட மூலாதாரம்,PAKPMO/X படக்குறிப்பு,பாகிஸ்தான் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டம் 23 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், அட்டாரி- வாகா எல்லையை உடனடியாக மூடுதல் என ஐந்து முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்தது. இந்நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தானும் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இன்று (ஏப். 24) பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷரீஃப் தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது. பஹல்காமில் தாக்குதலை தொடர்ந்து இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஒருதலைபட்சமானது, அநியாயமானது என்றும் மிகவும் பொறுப்பற்றது, அரசியல் ரீதியானது என்றும் அந்த கூட்டத்தில் விமர்சிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்திய அரசின் முடிவை புறக்கணிப்பதாக அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உலக வங்கியால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட சர்வதேச ஒப்பந்தமாகும், எனவே அதுகுறித்து தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்குச் சொந்தமான நீரைத் தடுக்கவோ அல்லது திசைதிருப்பவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும், ஆற்றின் கீழ்ப் பகுதியின் உரிமைகளைப் பறிப்பதும் ஒரு போர்ச் செயலாகக் கருதப்பட்டு, முழு பலத்துடன் பதிலளிக்கப்படும். சிம்லா ஒப்பந்தம் உட்பட, இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைக்கும் உரிமையை பாகிஸ்தான் பயன்படுத்தும். வாகா எல்லையை பாகிஸ்தான் உடனடியாக மூடும். இந்தப் பாதை வழியாக இந்தியாவிலிருந்து அனைத்து எல்லை தாண்டிய போக்குவரத்தும் விதிவிலக்கு இல்லாமல் நிறுத்தப்படும். செல்லுபடியாகும் ஒப்புதல்களுடன் வாகா எல்லையை கடந்து சென்றவர்கள், ஏப்ரல் 30, 2025க்குள் அப்பாதை வழியாகத் திரும்பலாம். சீக்கிய மத யாத்ரீகர்களைத் தவிர, சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் இந்திய நாட்டினருக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் பாகிஸ்தான் உடனடியாக ரத்து செய்துள்ளது. SVES இன் கீழ் தற்போது பாகிஸ்தானில் உள்ள சீக்கிய யாத்ரீகர்கள் தவிர்த்து, இந்தியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமானபடை ஆலோசகர்களை அனுமதியற்றவர்கள் என்று பாகிஸ்தான் அறிவிக்கிறது. அவர்கள் ஏப்ரல் 30, 2025க்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும். இந்த ஆலோசகர்களுக்கான உதவி பணியாளர்களும் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக பணியாளர்களின் எண்ணிக்கை 30 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களாகக் குறைக்கப்படும். இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பாகிஸ்தானின் வான்வெளி உடனடியாக மூடப்படும். இந்தியாவுடனான அனைத்து வர்த்தகமும் உடனடியாக நிறுத்தப்படும், இதில் பாகிஸ்தான் வழியாக எந்தவொரு மூன்றாம் நாட்டுக்கும் மேற்கொள்ளப்படும் வர்த்தகமும் அடங்கும். ஆகிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன. இந்தியாவின் நடவடிக்கைகள் பட மூலாதாரம்,PIB ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 26க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து சௌதி அரேபியாவில் இருந்து இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோதி, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் புதன்கிழமை (ஏப்ரல் 23) அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்துக்குப் பின், பாகிஸ்தான் நாட்டவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவது உட்பட பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இந்தியாவின் இந்த முடிவுகள் பற்றிப் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இந்தியாவுக்கு உடனடியாக பதிலளிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார். "சில நிமிட தாமதத்தால் உயிர் தப்பினோம்" - பஹல்காமுக்கு சென்ற தமிழ்நாட்டு பயணிகள் கூறியது என்ன?23 ஏப்ரல் 2025 பஹல்காம்: தாக்குதலுக்குப் பிறகு எப்படி இருக்கிறது? - நிலைமையை விவரிக்கும் 15 புகைப்படங்கள்9 மணி நேரங்களுக்கு முன்னர் "பேல்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், என் கணவரை கொன்று விட்டனர்" - காஷ்மீர் தாக்குதலில் மனைவி கண்முன்னே கடற்படை அதிகாரி கொலை23 ஏப்ரல் 2025 பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த 5 முக்கிய முடிவுகள் பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு,அமைச்சரவை கூட்ட முடிவுகள் குறித்து வெளியுறவு செயலாளர் விளக்கம் பிரதமர் மோதி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசினார். அப்போது இந்தியா எடுத்த ஐந்து முக்கிய முடிவுகளை பற்றி அவர் தெரிவித்தார். அவை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் அட்டாரி- வாகா எல்லை உடனடியாக மூடப்படும் பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய விசா ரத்து இந்தியாவில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர்கள் வெளியேற்றம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய அதிகாரிகளின் எண்ணிக்கைக் குறைப்பு அப்போது அவர், "தீவிரவாதத் தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக" கூறினார். அதோடு, பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவு, நம்பிக்கை அளிக்கும் விதத்திலும், மாற்றமின்றியும் கைவிடும் வரை இது தொடரும் என விக்ரம் மிஸ்ரி கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES "அட்டாரி ஒருங்கிணைந்த எல்லை சோதனைச் சாவடி உடனடியாக மூடப்படும். உரிய ஆவணங்களுடன் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் வந்தவர்கள் மே 1ஆம் தேதிக்கு முன்னதாக பாகிஸ்தான் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்." மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக விக்ரம் மிஸ்ரி விவரித்தார். "பாகிஸ்தான் குடிமக்கள் சார்க் விசா திட்டத்தின் கீழ் இனி இந்தியாவில் பயணிக்க முடியாது. இதற்கு முன்னதாகப் பெற்ற விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். இந்த விசாவின் கீழ் இந்தியாவுக்குள் வந்த அனைவரும் உடனடியாக, 48 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்" என்றார். "டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் நாட்டை விட்டு வெளியேற ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது" எனவும் அவர் கூறினார். "இதே போன்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இருந்து பாதுகாப்பு ஆலோசக அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். இந்த ஆலோசகர்களுக்கான உதவி அதிகாரிகளின் பணியிடங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்றார். "மே 1 ஆம் தேதி முதல் தூதரகங்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 55இல் இருந்து 30 ஆக குறைக்கப்படும் எனவும், நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்த ஆலோசனைக்குப் பிறகு, பாதுகாப்புப் படைகள் உஷார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளது" எனவும் அவர் கூறினார். "பஹல்காம் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் பாகிஸ்தானின் பதிலடி என்ன? பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு உடனடியாக பதிலளிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். பிபிசி உருது செய்தியின்படி, பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் பேட்டியளித்தபோது, இந்தியாவில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும், பயங்கரவாதத்தை எந்த வகையிலும் ஆதரிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்துப் பேசும்போது, இந்தியா நீண்ட காலமாக அதிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் எந்தவொரு தாக்குதலுக்கும் பாகிஸ்தான் 100 சதவிகிதம் தகுந்த பதிலடி கொடுக்கும் நிலையில் உள்ளது என்றும் அவர் பேசியுள்ளார். பாலகோட் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் பறந்ததற்காக அபிநந்தன் பிடிபட்டதை இந்தியா நினைவில் வைத்திருக்கும் என அவர் கூறினார். மேலும், "பிரிவினைவாதிகளுக்கு இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது. பலுசிஸ்தானைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் சிகிச்சைக்காக இந்தியா செல்கின்றனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன," என அவர் தெரிவித்துள்ளார். "பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா மற்றவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாகத் தானே பொறுப்பேற்க வேண்டும்" எனவும், "பஹல்காம் தாக்குதல் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட 'தவறான நடவடிக்கையாக' இருக்கவும் வாய்ப்புள்ளது" என்றும் அவர் கூறினார். "காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள், அங்கு பல்லாண்டுக் காலமாக இருக்கும் ஏழு லட்சம் வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்று யாராவது இந்தியாவிடம் கேட்க வேண்டும்?" என்றும் அவர் பேசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு உலகளவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பிரதமர் நரேந்திர மோதியுடன் தொலைபேசியில் பேசினார். இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோதியை தொலைபேசி வாயிலாக அழைத்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். "அதிபர் டிரம்ப், இந்த தீவிரவாதத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்ததுடன், இந்தக் கொடூரமான தாக்குதலுக்குக் காரணமாக இருந்தவர்களை நீதியின் முன் கொண்டு வருவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நிற்கின்றன" என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார். இதற்கு முன்பு, டிரம்ப் ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "காஷ்மீரில் இருந்து வரும் செய்திகள் மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கின்றன. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும். பிரதமர் மோதிக்கும் இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும், ஆழ்ந்த அனுதாபமும் உண்டு" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்தியாவுக்கு நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உஷாவும் நானும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில நாட்களாக, இந்த நாட்டின் அழகு மற்றும் அதன் மக்களால் நாங்கள் மெய்மறந்து இருக்கிறோம். இந்தக் கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன" என்று பதிவிட்டிருந்தார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுவொரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்றும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இஸ்ரேல் இந்தியாவுடன் துணை நிற்கும் என்றும் கூறினார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0453vxp17no
  18. Published By: DIGITAL DESK 2 24 APR, 2025 | 05:52 PM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரா அரசாங்கம் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கிறது என்ற சந்தேகம் காணப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம். பொதுமக்கள் அச்சமில்லாமல் இருக்கலாம் என்று அரசாங்கம் குறிப்பிகிறது. ஆனால் பகிரங்கமாக தற்போது துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இந்த நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் மாத்திரம் 26 பேர் வரை உயிரிழந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. கடிதம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்த மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் ஏன் இலக்காகக் கொண்டு செயற்படுகிறது. நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி விட்டா அரசாங்கம் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கிறது. புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக தேடப்படும் பெண் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பாதாள குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் தேசிய பாதுகாப்பை அலட்சியப்படுத்துகிறது. பாதாள குழுவினராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யும் உரிமை எவருக்கும் கிடையாது. சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/212848
  19. 24 APR, 2025 | 05:17 PM இந்திய விமானங்களிற்கு தனது வான் எல்லையை மூடியுள்ள பாக்கிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகநடவடிக்கைகளையும் இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு சொந்தமான இந்தியாவிலிருந்து இந்தியாவிலிருந்து இயங்கும் அனைத்து விமானங்களிற்கும் தனது வான் எல்லையை மூடுவதாக பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் அல்லது மூன்றாவது நாட்டிலிருந்து பாக்கிஸ்தான் ஊடாக இந்தியாவிற்கு செல்லும் பொருட்கள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாகவும் பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது. பாக்கிஸ்தானிற்கு என ஒதுக்கப்பட்ட நீரோட்டத்தை தடை செய்யவோ அல்லது திருப்பிவிடவோ மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையையும் போர்நடவடிக்கையாக கருதப்போவதாக பாக்கிஸ்தான் எச்சரித்துள்ளது. https://www.virakesari.lk/article/212843
  20. பஹல்காம் பயங்கரவாதிகள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி 24 APR, 2025 | 02:31 PM மதுபானி(பிஹார்): பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள் என்று இந்திய பிரதமர்பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தைக் குறிக்கும் நிகழ்வு பிகாரின் மதுபானி நகரில் நடைபெற்றது. பிரதமர் மோடி முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றும் முன் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்துமாறு பிரதமர் மோடிட்டுக்கொண்டார். மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்துப் பேசிய பிரதமர் மோடி "பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் சதிகாரர்கள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள். ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா அடையாளம் கண்டு கண்காணித்து தண்டிக்கும் என்று நான் முழு உலகிற்கும் கூறுகிறேன். பூமியின் கடைசி வரை அவர்களைத் துரத்துவோம். அவர்களுடைய (பயங்கரவாதிகளின்) மீதமுள்ள மண்ணைப் பறிக்கும் நேரம் வந்துவிட்டது. கார்கில் முதல் கன்னியாகுமரி வரை முழு நாடும் இந்த பயங்கரவாதத் தாக்குதலால் வருத்தமாகவும் கவலையாகவும் உள்ளது. இந்த சம்பவத்தால் முழு நாடும் கோபமாக உள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள். மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் உள்ளனர். இந்த நேரத்தில் எங்களுடன் நின்ற பல்வேறு நாடுகளின் மக்களுக்கும் தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்" என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/212813
  21. பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு,வழக்கத்துக்கு மாறாகச் செயல்படும் ஒரு விசை, விண்மீன் திரள்களை ஒன்றிடம் இருந்து ஒன்றைத் தள்ளிவிடுகின்றது. கட்டுரை தகவல் எழுதியவர், பல்லவ் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் இருண்ட ஆற்றல் (Dark Energy). இது மிகவும் மர்மமான ஆற்றல். இதுதான் இந்தப் பிரபஞ்சம் விரிவடையக் காரணமாக இருக்கிறது. விஞ்ஞானிகள் இதை டார்க் எனர்ஜி என்று அழைக்கின்றனர். நாம் இவ்வளவு ஆண்டுகளாக நேரம், விண்வெளி ஆகியவற்றின் மீது கொண்டிருந்த புரிதலின் கோணத்தையே இந்த ஆற்றல் மாற்ற வாய்ப்பு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வானியலாளர்கள் வானியலில் தாங்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக் கூடிய கண்டுபிடிப்பை நெருங்கிக்கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். ஆனால், இந்தக் கண்டுபிடிப்பு வானியல் தொடர்பான நமது அடிப்படைப் புரிதலைக்கூட மீண்டும் ஒருமுறை கேள்வி கேட்க வைத்துவிடும். இந்த ஆய்வின் முதல்கட்ட கண்டுபிடிப்பு, தற்போது அனைவரும் பின்பற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கோட்பாட்டிற்கு முரணாக உள்ளது. இதன் முடிவுகளை உறுதி செய்வதற்கு இன்னும் நிறைய தரவுகளும் ஆதாரங்களும் தேவைப்படுகிறது. ஆனால் மிகவும் மதிக்கத் தகுந்த ஆய்வாளர்களான லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஓபர் லஹவ் போன்றோர்கூட கிடைக்கும் தரவுகளைக் கண்டு அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் மூழ்கியுள்ளனர். பேராசிரியர் ஓபர் லஹவ், "இதுவொரு வியத்தகு தருணம்," என்று பிபிசியிடம் தெரிவித்தார். விண்வெளி வீராங்கனைகள் விண்வெளியில் மாதவிடாயை எப்படி கையாள்வார்கள்? சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்? சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் போடும் குப்பைகள் என்ன ஆகும்? சுனிதா வில்லியம்ஸ் போல விண்வெளி வீரராவது எப்படி? என்ன படிக்க வேண்டும்? இருண்ட ஆற்றல் என்பது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் ஓபர் லஹவின் கருத்துப்படி, "இதுவரை பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள முன்மாதிரியாக இருந்த புரிதலில் மிகப்பெரிய மாற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம்." இருண்ட ஆற்றல் என ஒன்று இருப்பது கடந்த 1998ஆம் ஆண்டில் தெரிய வந்தபோது, அந்தக் கண்டுபிடிப்பே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதுவரை, இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியதாகக் கூறப்படும் பெருவெடிப்பு (Big Bang) நிகழ்வுக்குப் பிறகு ஈர்ப்பு விசையின் காரணமாக பிரபஞ்சம் விரிவடையும் வேகம் குறையும் என்றே நம்பப்பட்டது. பெருவெடிப்புக் கோட்பாடு, பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்க முயல்கிறது. ஆனால், அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் கணிப்புப்படி இதன் விரிவாக்கம் மேலும் வேகமடைந்து வருகிறது. இது ஏற்படக் காரணமாக இருக்கும் ஆற்றல் என்னவென்று தெரியாததாலும், அதைப் பற்றிய புரிதல் இல்லாததாலும் அதற்கு இருண்ட ஆற்றல் (டார்க் எனர்ஜி) என்று பெயர் சூட்டினர். துருக்கியில் அதிபர் எர்துவானுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவது ஏன்? முழு விளக்கம்26 மார்ச் 2025 படலந்த சித்ரவதை முகாமுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கூறும் தகவல்கள்25 மார்ச் 2025 'வலுவான ஆதாரம்' பட மூலாதாரம்,DESI படக்குறிப்பு,5,000 ஒளியியல் இழைகளைக் கொண்டுள்ள ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவி இருண்ட ஆற்றல் என்ன என்பது நமக்குத் தெரியாமல் இருப்பதால் அறிவியலில் இருக்கக்கூடிய மிகப்பெரிய மர்மமாக அது இருக்கிறது. இதற்கான விடையைக் கண்டுபிடிக்கும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவியின் உருவாக்கம் அத்தகைய முயற்சிகளில் ஒன்று. இது அரிசோனாவில் உள்ள டூசான் நகரத்தில், கிட் பீக் தேசிய கண்காணிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி, 5,000 ஒளியியல் இழைகளைக் (optical fibres) கொண்டுள்ளது. ஒவ்வொரு ஒளியியல் இழையும் ரோபோட்கள் மூலம் கேலக்ஸிகளை அதிவேகத்தில் கண்காணிக்கின்றன. கடந்த ஆண்டு, இந்தக் கருவியில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, இருண்ட ஆற்றல் வெளிப்படுத்திய ஆற்றல் காலப்போக்கில் மிகவும் மாறுபட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். முதலில், சராசரியாகக் கிடைக்கும் தரவுகளில் ஏற்பட்ட சிறு பிசகல் என்றே இதை அவர்கள் கருதினர். ஆனால், அந்தப் "பிசகல்" மேலும் வளர்ந்துள்ளது ஓர் ஆண்டுக்கால ஆய்வில் தெரிய வந்துள்ளது. "முன்பு இருந்ததைவிட இப்போது ஆதாரம் வலுவாக உள்ளது" என்று போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தின் பேரசிரியரான சேஷாத்ரி நடத்தூர் தெரிவித்தார். "கடந்த ஆண்டு நடைபெற்ற சோதனைகளைவிட அதிகளவிலான சோதனைகளைச் செய்துள்ளோம். அவற்றில் கிடைத்த ஆதாரங்கள் எல்லாம் நமக்குக் கிடைத்த மாறுப்பட்ட தரவுகள் அனைத்தும் உண்மை என்றும், எங்களால் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் ஏற்படும் தரவுப் பிசகல் இல்லை என்ற நம்பிக்கையையும் வலுவாக்கியுள்ளது," என்றார் அவர். 'இந்திய பேட்டரால் இப்படியும் விளாச முடியுமா!' - அசுதோஷ் ஷர்மா டுப்ளெசியை வாய் பிளக்க வைத்தது எப்படி?25 மார்ச் 2025 குனால் கம்ராவின் பகடிப் பாடல் சர்ச்சை குறித்து பிபிசியிடம் கருத்து தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே25 மார்ச் 2025 விசித்திரமான முடிவுகள் இதுவரை கிடைத்த தரவுகள், இதை ஒரு கண்டுபிடிப்பாக முன்வைக்கும் அளவுக்குப் போதுமானதாக இல்லாவிட்டாலும், ஸ்காட்லாந்து முன்னணி வானியலாளரும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கேத்தரின் ஹேமன்ஸின் கவனத்தை இதன் பக்கம் ஈர்த்துள்ளது. "நாம் நினைத்ததைவிட இந்த இருண்ட ஆற்றல் மிகவும் விசித்திரமானதாக இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார். "கடந்த 2024ஆம் ஆண்டு கிடைத்த தரவுகள் மிகவும் புதிதாக இருந்ததால், இது தொடர்பாக இன்னும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், இப்போது நம்மிடம் நிறைய தரவுகள் உள்ளன. நமக்குக் கிடைத்த தரவுகளில் இருக்கும் விலகல் சரியாகின்றதா அல்லது மிகப்பெரிய வானியல் கண்டுபிடிப்பை நோக்கி நமது பயணம் நெருங்கிக் கொண்டிருக்கின்றதா என்பதை இனி வரும் நாட்களில் தெரிந்துகொள்ளலாம்" என்றும் கேத்தரின் ஹேமன்ஸ் குறிப்பிட்டார். மாறுபட்ட தரவுகள் கிடைக்கக் காரணம் என்ன என்று கேட்டதற்கு, அது "யாருக்கும் தெரியாது" என்று புன்னகையுடன் ஒப்புக்கொண்டார். இந்தியா - சீனா உறவை மேம்படுத்தும் மோதியின் எண்ணம் ஈடேறுமா? அமெரிக்கா என்ன செய்கிறது?25 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு,இருண்ட ஆற்றல் தொடர்பாக இன்னும் நிறைய தரவுகளை ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் யூக்லிட் மிஷன் வழங்கும். "புதிதாகக் கிடைத்த முடிவுகள் சரியானவை என்றால், இதை ஏற்படுத்தும் ஆற்றலைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் புத்தம் புதிய கோட்பாடு ஒன்று உருவாகலாம், இது மிகவும் உற்சாகமளிக்கக் கூடியதாக இருக்கும்." மேற்கூறிய டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் இன்ஸ்ட்ரூமென்ட் (DESI) அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தோராயமாக 5 கோடி கேலக்ஸிகளையும் மற்ற ஒளி நிறைந்த பொருட்களையும் கணக்கிடும். இதன் மூலமாக அவர்களின் கணக்கீடுகள் சரியா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும். "இந்தப் பிரபஞ்சமே அது செயல்படும் வழிமுறையை நம்மிடம் சொல்லும். ஒருவேளை நாம் நினைத்ததைவிட அதன் செயல்பாடு மிகவும் சிக்கலானதாக இருக்கிறது என்பதை அது நமக்கு உணர்த்துகிறதா என்பதை நாம் அறிய வேண்டும்," என்கிறார் கலிஃபோர்னியாவின் லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த முதுமுனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரே குயூ. இருண்ட ஆற்றல் தொடர்பாக இன்னும் நிறைய தரவுகளை ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் யூக்லிட் மிஷன் வழங்கும். யூக்லிட் என்பது ஒரு விண்வெளி தொலைநோக்கி. இது DESI-ஐ விட இன்னும் நுணுக்கமான கணக்கீடுகளைக் கொடுக்கக்கூடியது. 2023ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்தத் தொலைநோக்கி புதிய புகைப்படங்களை அனுப்பியுள்ளது. டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவியில் ஆய்வு செய்வதற்கான திட்டத்தில் டர்ஹாம், யு.சி.எல். மற்றும் பிரிட்டனின் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம் உள்பட 70க்கும் மேற்பட்ட நிறுவங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c89yzqvqnz5o
  22. Published By: DIGITAL DESK 2 24 APR, 2025 | 05:11 PM யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையை ஆங்கிலமொழி மூலமான கற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு திட்டமிடுவதாக அறிகிறோம். இது ஆபத்தானது. எமது சுதேசிய மருத்தவப் பாரம்பரியம் பேணிப்பாதுகாப்பதற்காக சித்தமருத்துவ பீட கற்கை நெறி தமிழ்மொழியில் தொடரவேண்டும். இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு யாழ் பல்கலைக்கழக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம் பல சான்றோர். பெருமக்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. எமது பிரதேசப் பல்கலைக்கழகம் எமது பிரதேச சுதேசிய பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் பெரும் கடமையாகும். எமது சுதேசிய மருத்தவப் பாரம்பரியம் பேணிப்பாதுகாப்பதற்காக யாழ் பல்கலைக் கழக கல்விச் சமூகம் 70 களின் பிற்பகுதியில் எடுத்த முயற்சியின் விளைவாக சித்தமருத்துவத் துறை ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் அயராத முயற்சியால் சித்த மருத்தவ நுல்கள் ஏடுகள் சேகரிக்கப்பட்டு பாரம்பரிய வைத்தியர்களிடம் ஆலோசனை பெற்று பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு இத்துறை ஆரம்பிக்கப்பட்டது. இணுவில், வட்டுக்கோட்டை, சில்லாலை, ஏழாலை, பருத்தித்துறை, அளவெட்டி போன்ற ஊர்களில் இருந்து சித்த வைத்தியர்களின் நுல்கள், உதவிகள் பெறப்பட்டன. பல்கலைக் கழக நூலகர் முருகவேள், பதிவாளர் சிவராஜா போன்ற பெருமக்கள் சித்த மருத்துவத் துறைக்கான வளர்ச்சியில் அருந்துணை செய்துள்ளனர். சித்த மருத்துவ பீடம் முற்றுமுழுதாக சுதேசிய வைத்தியப் பாரம்பரியத்தை சிறப்பாக வளர்த்தெடுத்துள்ளார்கள். மேலும் கைதடியிலுள்ள சித்தவைத்திய போதனா வைத்தியசாலையின் வளச்சிக்கும் பெரும்பங்காற்றி வருகின்றார்கள். பல நூறு சித்த மருத்துவர்களை தொடர்ந்து உருவாக்கியுள்ளார்கள். துறை சார் விரிவுரையாளர்கள் பட்டப்பின் படிப்புகளை மேற்கொண்டு இன்று நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக விளங்குகிறார்கள். சகல கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் தமிழ்மொழி மூலம் சிறப்பாக நடைபெறுகின்றது. நீண்ட காலமாக எடுத்த முயற்சியின் பயனாக சித்த மருத்துவத் துறை தனிப்பீடமாக உயர்வுபெற்றுள்ளது மேலும் சித்தமருத்துவபீடம் விஸ்தரிப்பதற்காக புதிய நிலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் உயர்கல்வி அமைச்சு யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையை ஆங்கிலமொழி மூலமான கற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு திட்டமிடுவதாக அறிகிறோம். இது ஆபத்தானது. இது பாரம்பரிய சித்த மருத்துவத்துறையை அருகிப்போகச் செய்யும் முயற்சியாகும். அகத்தியர் பதிணென் சித்தர்கள், திருமூலர், திருக்குறள், பரராஜசேகரம் போன்ற மூல நுல்களை மொழி பெயர்ப்பதென்பது முடியாத விடயம். இதை அனைவரும் அறிவர். இந் நிலையில் சித்த மருத்துவத்தை ஆங்கில மொழியில் எவ்வாறு கற்பிக்கப் போகிறார்கள்? இவ் விடயம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மூதவை, பேரவை மற்றும் தூறைசார்ந்த அறிஞர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும். எக்காரணம் கொண்டும் தமிழ் மொழி மூல கற்பித்தலை மாற்றம் செய்யக் கூடாது. இதனைம் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிற்கு யாழ் பல்கலைக்கழக சமூகம் தெளிவுபடுத்த வேண்டும் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/212837
  23. இரவில் வாயை ஒட்டி வைத்துக்கொண்டு தூங்கினால் ஆழ்ந்து உறங்க முடியுமா? எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சோபியா பெட்டிசா பதவி, பிபிசி உலக சேவை 23 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பரவும் ஸ்லீப்மேக்ஸிங் (உறக்கத்தை அதிகப்படுத்துதல்) உத்தி, சிறந்த இரவு உறக்கம் தரும் எனக் கூறப்படுகிறது. நன்றாக உறங்குவதற்கு, தங்களது வாயை ஒட்டி வைப்பது முதல் படுக்கைக்கு செல்லும் முன்பு கிவி பழம் உண்பது வரை, இளைஞர்கள் முறையாக பின்பற்றும் பல்வேறு நுணுக்கமான செயல்முறைகளை கொண்ட மில்லியன் கணக்கான வீடியோக்கள் டிக் டாக்கில் பரவி வருகின்றன. ஆனால், தேவையான உறக்கத்தைப் பெறுவதற்கான தேடல் அளவுக்கு மீறிச் செல்லுமா? சில முறைகள் பாதிப்பில்லாதவையாக தோன்றினாலும், அனைத்தும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. மேலும்,சில முறைகள் நல்ல முறையில் பயனளிப்பதற்குப் பதிலாக அதிகமான தீங்கையும் ஏற்படுத்தக்கூடும். உறக்க நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களிடம் பேசி, நடைமுறையில் எந்தெந்த முறைகள் பயனளிக்கின்றன என்பதை நிறுவுவதற்கு பிபிசி முயல்கிறது. "பாகிஸ்தான் நாட்டவர்கள் வெளியேற கெடு " - பிரதமர் மோதி தலைமையிலான ஆலோசனையில் முடிவு2 நிமிடங்களுக்கு முன்னர் ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மெக்னீசியம் தூக்கத்திற்கு உதவும் - ஆனால் அதிகப்படியாக இதனை சாப்பிட்டால் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். நல்ல உறக்கத்தைப் பெற மெக்னீசியம் உதவுமா? மிகவும் பிரபலமான ஸ்லீப்மேக்ஸிங் குறிப்புகளில் ஒன்று மெக்னீசியத்தை உள்ளடக்கியது. குறிப்பாக வைரஸ் "ஸ்லீப்பி கேர்ள் மாக்டெயில்" எனப்படும் புளிப்பு செர்ரி சாறு மற்றும் கார்பனேற்றப்பட்ட தண்ணீரின் கலவையில் மெக்னீசியம் ஒரு முக்கிய மூலப்பொருளாகும். மது அல்லாத இந்தப் பானம், 2024 ஆம் ஆண்டில் உறக்கத்தைத் தூண்டும் அதன் நன்மைகளுக்காக சமூக ஊடகங்களில் பிரபலமடைந்தது. "மெக்னீசியம் உட்பொருள்கள் (சப்ளிமெண்ட்ஸ்) உறக்கத்தை மேம்படுத்த உதவக்கூடும் என்பதற்கான சில ஆதாரங்கள் உள்ளன, ஆனால் அது மெக்னீசியம் குறைபாடு உள்ளவர்களுக்கே பயன்படும்," என பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தூக்கமின்மை குறித்த முனைவர் பட்டம் பெற்ற தூக்க நிபுணர் மருத்துவர் லிண்ட்சே பிரவுனிங் கூறுகிறார். மேலும், அதிகப்படியான மெக்னீசியத்தை உட்கொள்வது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் அல்லது சில மருந்துகளுடன் இணைந்து எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர் பிரவுனிங் எச்சரிக்கிறார். "இந்த பானங்களில் மெக்னீசியத்தின் அளவு சில நேரங்களில் மிகவும் அதிகமாக இருக்கலாம், என்றும் இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும். இது நிச்சயமாக எந்த விதத்திலும் உங்களது உறக்கத்துக்கு உதவாது" என்றும் அவர் பிபிசியிடம் கூறுகிறார். அதற்கு மாறாக, சூடான பால் அல்லது புளிப்பான செர்ரி சாறு போன்ற, இயற்கையாகவே மெலடோனின் கூறுகளை உள்ளடக்கி, உறக்கத்தைத் தூண்டும் மாற்று பானங்களை அவர் பரிந்துரைக்கிறார். இந்திரா - முஜிபுர் உடன்பாட்டை 'அடிமை ஒப்பந்தம்' என்று வங்கதேச எதிர்க்கட்சிகள் அழைத்தது ஏன்?25 மார்ச் 2025 எரிமலை வெடிப்பால் கண்ணாடியாக மாறிய மனித மூளை - காணொளி25 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மவுத் டேப்பிங் மவுத் டேப்பிங்: ஆபத்தான போக்கா? டிக் டாக்கில் பரவியுள்ள மிகவும் சர்ச்சைக்குரிய ஸ்லீப்மேக்ஸிங் முறைகளில் ஒன்று, நாசி மூலம் சுவாசத்தை ஊக்குவிக்க, வாயை மூடிக்கொண்டு, உதடுகளை பிரிக்க இயலாதவாறு ஒட்டிக்கொள்ளும் முறையாகும். லண்டனில் உள்ள உடல்நலப் பயிற்சியாளரான லிசா டீ மற்றும் நியூயார்க்கில் உள்ள சமூக வலைதளப் பிரபலமான டெவோன் கெல்லி ஆகிய இருவரும் தங்கள் உறங்குவதற்கு முன்பு தாங்கள் கடைபிடிக்கும் நடைமுறைகளின் ஒரு பகுதியாக இதை பின்பற்றுகிறார்கள். "பல வருடங்களாக பற்களை இறுக்கிப் பிடிப்பதால் ஏற்படும் தாடை வலியுடன் போராடி, இரவில் வாயை பிரிக்க இயலாதவாறு ஒட்டிக்கொள்ளும் பழக்கத்தை நான் கடைபிடிக்கத் தொடங்கினேன்" என்று தனது அனுபவங்களை, தன்னைப் பின்தொடரும் ஆயிரக்கணக்கான மக்களுடன் வீடியோக்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறார் கெல்லி. "இது எனக்கு பெரிதும் உதவியது, இப்போது ஐந்து வருடங்களாக எனக்கு எந்த வலியும் இல்லை" என்கிறார் கெல்லி. 'ஹெல்தி ஹேப்பி ஏடிஹெச்டி' என்ற புத்தகத்தை எழுதிய லிசா, அவர் ஸ்லீப்மேக்ஸிங் முறைகளை பின்பற்றத் தொடங்கியதிலிருந்து, அவரது ஏடிஎச்டி அறிகுறிகள் குறையத் தொடங்கியதாகக் கூறுகிறார். அவரது டிக்டாக் வீடியோக்களில் அக்குபிரஷர் தலையணை மற்றும் பெரிய எடையுள்ள முகமூடியும் காட்டப்படுகின்றன. "நான் அதிகமாக கவனம் செலுத்துபவராகவும், குறைவான அழுத்தத்தையும் உணர்கிறேன்." பட மூலாதாரம்,DEVON KELLEY படக்குறிப்பு,கடந்த ஐந்து ஆண்டுகளில் 'ஸ்லீப்மேக்ஸிங்' தனது தூக்கத்தை மேம்படுத்தியுள்ளதாக டெவன் கெல்லி கூறுகிறார். ஆனால் இந்த முறை குறித்த சில கவலைகள் இருப்பதாக பிபிசியிடம் பேசிய நிபுணர்கள் கூறியுள்ளனர். "இது மிகவும் ஆபத்தானது," எனக் கூறும் மருத்துவர் பிரவுனிங், "நீங்கள் இரவில் சுவாசிக்க சிரமப்படும்போது, உங்கள் வாயை மூடிக்கொண்டிருந்தால், உங்களால் முழுமையாக மூச்சை உள்ளிழுக்க முடியாது. இது உங்கள் இதயத்தை அழுத்தலாம் அல்லது மாரடைப்பைத் தூண்டலாம்" என்றும் குறிப்பிடுகிறார். மேலும், இரவு உறக்கத்தில் சுவாசம் அவ்வப்போது நின்றுவிடும் ஒரு வகையான மூச்சுத்திணறல் பலருக்கும் கண்டறியப்படாமல் இருப்பதாகவும், மருத்துவர் பிரவுனிங் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் வாயை மூடிக்கொண்டு உறங்குவது தீவிரமான ஆபத்துகளை உருவாக்கக்கூடும். தொடர்ந்து பேசும் அவர், இந்த நடைமுறையானது வாய் பகுதியில் ஒவ்வாமை அல்லது எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடுகிறார். "நன்றாக உறங்குவதற்கு உங்களது வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை" என்று மருத்துவர் கார்லியாரா வெயிஸ் கூறுகிறார். அவரது முனைவர் பட்ட ஆராய்ச்சி நடத்தை தூக்க மருத்துவத்தில் கவனம் செலுத்துகிறது. டிக் டாக்கில் இந்த விஷயம் வைரலாக இருப்பதால் அதைப் பின்பற்ற வேண்டாம் என்று அவர் எச்சரிக்கிறார். விண்வெளி வீராங்கனைகள் விண்வெளியில் மாதவிடாயை எப்படி கையாள்வார்கள்?24 மார்ச் 2025 'மாஞ்சோலையை போல வால்பாறையில் இருந்தும் மக்களை வெளியேற்ற திட்டம்' - சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்துக்கு எதிர்ப்பு24 மார்ச் 2025 நாசியை விரிவாக்கும் பொருட்களைப் பயன்படுத்துதல் நாசி குழாய்களை விரிவுபடுத்தும் சாதனங்கள், இரவில் சுவாசத்தை எளிதாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. சில சமூக ஊடக பயனர்கள் அவற்றை குறட்டைக்கு ஒரு நல்ல தீர்வாக பரிந்துரைக்கின்றனர். மூக்கடைப்பு காரணமாக தூங்குவதில் சிக்கல் உள்ள சிலருக்கு, நாசியை விரிவாக்கும் இந்தப் பொருட்கள் குறிப்பிட்ட நிவாரணத்தை அளிக்கலாம். இருப்பினும், மருத்துவர் பிரவுனிங் கூறுகையில், பெரும்பாலான மக்களுக்கு, கவலை, மன அழுத்தம் அல்லது சரியான படுக்கை நேர ஓய்வு இல்லாததால் உறக்கம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்கிறார். எடுத்துக்காட்டாக, புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டு ஆய்வில், கவலை அல்லது மனச்சோர்வு உள்ளவர்களுக்கு தூக்கமின்மை ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. "நாசியை விரிவாக்கும் பொருட்கள் அந்த சிக்கல்கள் எதற்கும் உதவப் போவதில்லை," என்று மருத்துவர் பிரவுனிங் கூறுகிறார். நாசி துவாரத்தை விரிவாக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது, தூக்கத்தை மேம்படுத்துவதற்கோ அல்லது குறட்டையை குறைப்பதற்கோ உதவும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லையென மருத்துவர் வெயிஸ் கூறுகிறார். மேலும் குறட்டை விடுவது உறக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் அல்லது விரிவாக்கப்பட்ட டான்சில்ஸின் அறிகுறியாக இருக்கலாம் என்று அவர் எச்சரிக்கிறார். தொடர்ந்து பேசும் அவர், "கண்டறியப்படாத தூக்கக் கோளாறு இருப்பது ஆபத்து. நீங்கள் ஒரு தூக்க நிபுணரை அணுக வேண்டும்" " என்றும் கூறுகிறார். குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை, எவ்வாறு கழுவ வேண்டும்?24 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்?24 மார்ச் 2025 கிவி பழங்களை உண்ணுங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கிவி பழம் கிவி பழங்களை உண்பது உறக்கத்தை மேம்படுத்தும் என்று பரிந்துரைக்கும் வீடியோக்களால் டிக் டாக் நிரம்பியுள்ளது. தைவானில் உள்ள தைபே மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஒரு சிறிய ஆய்வில், படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு கிவி பழங்களை, நான்கு வாரங்களாக உண்டவர்கள் சிறந்த உறக்கத்தைப் பெற்று, எளிதாக உறங்க முடியும் என்று கூறியுள்ளனர். கிவியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் செரோடோனின் அளவு அதிகம். மூளையில் உள்ள செரோடோனின் என்ற வேதிப்பொருள், மனநிலை, உறக்கம் மற்றும் பிற செயல்பாடுகளை பாதிக்கிறது. ஆய்வின் படி, இது தூக்கக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கக்கூடும். இருப்பினும், கிவி பழங்களை உண்பதன் மூலம் நன்றான உறக்கத்தைப் பெற முடியும் என்பதை நிரூபிப்பதற்கு இன்னும் அதிகமான ஆராய்ச்சி தேவை என்று மருத்துவர் பிரவுனிங் சுட்டிக்காட்டுகிறார். அக்பரை பின்பற்றுமாறு ஔரங்கசீப்பை அறிவுறுத்திய சிவாஜி - ஒரு வரலாற்றுப் பார்வை23 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ் போல விண்வெளி வீரராவது எப்படி? என்ன படிக்க வேண்டும்?23 மார்ச் 2025 குளிர்ந்த அறையில் உறங்குவது நன்றாக உறங்குவதற்காக, சமூக ஊடகப் பிரபலங்களின் வீடியோக்களால் பரவலாகப் பகிரப்பட்ட இந்த உதவிக் குறிப்பு அறிவியலால் ஆதரிக்கப்படுகிறது. நாம் தூங்கும்போது, நமது உடல் வெப்பநிலை சுமார் ஒரு டிகிரி குறைகிறது, இது தூக்கத்தை ஒழுங்குபடுத்த உதவும் மெலடோனின் என்ற ஹார்மோனை உடல் உற்பத்தி செய்ய சமிக்ஞை அளிக்கிறது. நாம் உறங்கும் அறை மிகவும் சூடாக இருந்தால், நமது உடல்கள் சரியாக குளிர்ச்சியடையாது. குளிரான அறை, உறக்கத்துக்கு நன்மை பயக்கும் அதே வேளையில், மிகவும் குளிரான அறையில் உறங்குவதும் உறக்கத்துக்கு எதிர்மறையான மற்றும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஓய்வெடுக்கும்போது அசௌகரியம் ஏற்படுவது, உறக்கத்துக்கு இடையூறு விளைவிப்பதால், அது தூக்கத்தை கடினமாக்கும் என்று மருத்துவர் பிரவுனிங் எச்சரிக்கிறார். "முக்கியமானது "உகந்த" வெப்பநிலையை பராமரிப்பது, அதாவது சிறந்த உறக்கத்தைப் பெறுவதற்கு சுமார் 18 ° செல்ஸியஸை பராமரிப்பது " என்று அவர் கூறுகிறார். மெலடோனின் எடுத்துக்கொள்வது மெலடோனின் கூறு உள்ள பொருட்கள், குறிப்பாக பளிச்சென்ற நிறத்தில் சிறிய கரடி வடிவத்தில் உள்ள மிட்டாய்கள், உறக்கத்துக்கு உதவுவதாக சமூக ஊடகங்களில் பிரபலமடைந்துள்ளன. இவற்றில் நாம் இயற்கையாக உற்பத்தி செய்யும் ஹார்மோன் உள்ளது. இவை நமது உடலிடம், இது உறங்குவதற்கான நேரம் என்று சுட்டிக்காட்டும். அவை பல நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன மற்றும் பெரும்பாலும் விமானப் பயணத்தால் ஏற்படும் உடல் சோர்வை சரி செய்ய பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், மெலடோனின் உறக்கம் சார்ந்த பிரச்னைகளுக்கு விரைவான தீர்வாக மாறினாலும், அது தூக்கமின்மைக்கான மூல காரணத்தை நிவர்த்தி செய்யாது என்று மருத்துவர் பிரவுனிங் எச்சரிக்கிறார். "உங்களுக்கு விமானப் பயணத்தினால் அயர்ச்சி ஏற்படவில்லை என்றால் அல்லது உங்களது சர்க்காடியன் ரிதம் சரியான நேர மண்டலத்தில் இருந்தால், உங்களது உடலே படுக்கைக்கு முன்பு மெலடோனினை உற்பத்தி செய்கிறது" என்று மருத்துவர் பிரவுனிங் கூறுகிறார். அதனை அதிக அளவு எடுத்துக்கொள்வது மற்றும் மெலடோனினை அதிகம் பயன்படுத்துவது ஆகியவை அடுத்த நாள் உடல் நலக்குறைவை ஏற்படுத்தலாம், நீங்கள் உட்கொள்ளும் மற்ற மருந்துப் பொருட்களுடன் இணைந்து எதிர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தலாம் மற்றும் உங்கள் ஹார்மோன்களை சீர்குலைக்கலாம் என்று அவர் மேலும் கூறுகிறார். சீனா அசுர வேகத்தில் ஏ.ஐ துறையில் வளர்ந்து வருவதன் பின்னணி21 மார்ச் 2025 ஔரங்கசீப்பின் ஆக்ரா சிறையில் இருந்து சத்ரபதி சிவாஜி தப்பியது எப்படி?21 மார்ச் 2025 படுக்கைக்கு முன்பு திரை செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் உறக்கத்தை மேம்படுத்துவதற்காக சொல்லப்படும் மிகவும் பிரபலமான உதவிக் குறிப்புகளில் ஒன்று படுக்கைக்கு செல்வதற்கு முன்பு (மின்னனு சாதனங்களின்) திரைகளில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதாகும். ஏனெனில், திரைகளின் மூலம் வெளியாகும் பிரகாசமான நீல ஒளி மெலடோனின் உற்பத்தியில் தலையிடக்கூடும். ஆனால், இந்த வகை ஒளியானது முன்பு நினைத்தது போல் பிரச்னைக்குரியதாக இல்லாமல் இருக்கலாம் என்று சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. குறிப்பாக, மக்கள் மாலை நேரங்களில் தங்கள் சாதனங்களின் பிரகாசத்தை மங்கச் செய்தல் மற்றும் அவர்கள் திட்டமிட்ட நேரத்திற்குப் பிறகு அவற்றை பயன்படுத்தாமல் இருக்கும்போது, இது குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும். "உறக்கத்தை மேம்படுத்துவதற்கு ஒரு மந்திர தீர்வாக, படுக்கைக்கு முன்பு திரைகளை முற்றிலுமாக அகற்றும் இந்த யோசனை தற்போது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது," என்கிறார் மருத்துவர் பிரவுனிங். ஸ்வீடனில் உள்ள ஓரெப்ரோ பல்கலைக்கழகத்தின் 2024ம் ஆண்டின் ஆய்வை அவர் சுட்டிக்காட்டுகிறார், இது படுக்கைக்கு செல்வதற்கு முன் திரைகளைப் பயன்படுத்துபவர்கள், தூங்குவதற்கு ஒன்று முதல் ஒன்பது நிமிடங்களை மட்டுமே கூடுதலாக எடுத்ததாகக் வெளிப்படுத்துகிறது. உங்கள் திரையின் பிரகாசத்தை மங்கச் செய்யவும், இரவுப் நேரத்தில் பயன்படுத்துவதற்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட முறைகளை பயன்படுத்தவும், உறக்க நேரத்துக்கான நினைவூட்டலை உருவாக்கி வைத்துக்கொள்ளவும் அவர் பரிந்துரைக்கிறார். சீன இளைஞர்கள் சொந்தக் கவலைகளை டீப்சீக் செயலியிடம் புலம்பித் தள்ளுவது ஏன்?21 மார்ச் 2025 கராத்தே ஹுசைனி மரணம்: நடிகர், சினிமா, அரசியல் என பன்முகம் கொண்டவரின் வித்தியாசமான சாகசங்கள்25 மார்ச் 2025 எடையுள்ள முகக் கவசம் அல்லது போர்வையைப் பயன்படுத்துதல் பட மூலாதாரம்,GETTY IMAGES உடல்நலப் பயிற்சியாளர் லிசா டீ அத்தகைய பொருட்களில் முதலீடு செய்வது மதிப்புக்குரியது என்று நம்புகிறார். "எடை அதிகமுள்ள எனது போர்வையை எனக்கு மிகவும் பிடிக்கும். அது இப்போது எனது படுக்கையின் முக்கியப் பகுதியாக உள்ளது. ஏடிஹெய்ச்டி மற்றும் மன அழுத்தம் உள்ள பலர் இரவில் அமைதியின்மையுடன் போராடுகிறார்கள், மேலும் எடையுள்ள போர்வையின் மென்மையான, அழுத்தமும் கூட உடலை நிதானமாகவும் பாதுகாப்பாகவும் உணர உதவும். இது ஒரு அணைப்பு போன்றது"என்கிறார் லிசா. பொதுவாக உங்கள் உடல் எடையில் 10 சதவீதம் போன்ற அளவில், இவ்வகையான போர்வைகளை சரியான எடையுடன் தேர்ந்தெடுப்பது முக்கியமானது. எனவே இது உடலை கட்டுப்படுத்துவதை விட ஆறுதல் அளிக்கிறது. ஆனால் அவை ஏதேனும் வித்யாசத்தை ஏற்படுத்துகிறதா என்பதில் மருத்துவர் பிரவுனிங் சந்தேகம் கொண்டுள்ளார். "அதிக எடை உங்கள் மீது அழுத்துவது உங்களது சுவாசத்தைத் தடுக்கலாம் அல்லது ரத்த ஓட்டப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்" மேலும் "அவை மிகவும் தடிமனாக இருப்பதால், உடல் அதிக வெப்பமடைவதற்கும் வழிவகுக்கும்."என்று அவர் கூறுகிறார். அதிக எடையுள்ள முககவசங்களைக் குறித்து, பல டிக் டாக் பயனர்கள், உடலை அமைதிப்படுத்தும் அவற்றின் விளைவுகள் பற்றி ஆவலுடன் கூறினாலும், அவற்றின் பயன்பாட்டை ஆதரிக்கும் அறிவியல் சான்றுகள் குறைவாகவே உள்ளன. இது "உறக்கத்தை ஒரு பொருளாக வணிகமயமாக்குவதுடன் தொடர்புடையது" எனக் கூறும் மருத்துவர் வெயிஸ், "நல்ல உறக்கத்தை பெறுவதற்கு அதிகமான பொருட்களை வாங்க வேண்டும் என நாம் மக்களை தள்ளக்கூடாது." என்றும் குறிப்பிடுகிறார். ஸ்லீப்மேக்ஸிங் இளைஞர்களிடையே ஏன் மிகவும் பிரபலமானது? ஜென் ஸி தலைமுறையைச் சேர்ந்தவர்கள், முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்தவர்களை விட சுய-கவனிப்பில் அதிக கவனம் செலுத்துகிறது, மோசமான தூக்கத்துடன் தொடர்புடைய மனச்சோர்வு, உடல் பருமன் மற்றும் டிமென்ஷியா போன்ற கடுமையான உடல் நல அபாயங்களைப் பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். தூக்கத்தை மேம்படுத்துவதற்கான தெளிவான, கட்டமைக்கப்பட்ட திட்டத்தை வழங்குவதால், ஸ்லீப்மேக்ஸ்சிங் மக்களை ஈர்க்கிறது என்று டாக்டர் வெயிஸ் விளக்குகிறார், ஆனால் சிலர் அதை வெகுதூரம் எடுத்துச் செல்லக்கூடும் என்று எச்சரிக்கிறார். " உறங்குவதற்கு முன்னர் செய்ய வேண்டிய பணிகள் என்று ஒரு பெரிய பட்டியலை வைத்திருந்து, அவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற உணர்வு உண்மையில் மன அழுத்தத்தை உருவாக்கி, தூக்கத்தின் தரத்தை எதிர்மறையாக பாதிக்கலாம்." லிசா இதனை ஏற்கவில்லை. அவரின் பார்வையில், "களைப்பாகவும், உணர்ச்சி ரீதியில் நிலையற்றவராகவும், எரிச்சலாகவும் உணர்வதைக் காட்டிலும்" ஸ்லீப்மேக்ஸ்சிங் நடைமுறைகளைப் பின்பற்றுவது மக்களை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர உதவுமானால், அதனைப் பயன்படுத்துங்கள் என்கிறார் அவர். "இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறை என்பதாலும் அதற்காக நிறைய பொருட்களை வாங்க வேண்டும்" என்பதாலும் இந்த ஸ்லீப்மேக்சிங் மோகம் நீடிக்குமா என்பதில் மருத்துவர் வெயிஸுக்கு சந்தேகம் உள்ளது. அதே சமயம், ஸ்லீப்மேக்ஸ்சிங் மோகம் நீடிக்குமா என்று மருத்துவர் வெயிஸ் சந்தேகிக்கும் அதே வேளையில், தூக்கத்தை முன்னிலைப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் தொடர்ந்து அளிக்கப்படும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0rzljdpe55o
  24. 24 APR, 2025 | 04:46 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் கொட்டடி - மீனாட்சிபுரத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சி.யமுனானந்தா தெரிவித்தார். இக்காணி தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கொட்டடி - மீனாட்சிபுரம் பகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான 1.4 ஏக்கர் பரப்பளவுள்ள காணி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2010ஆம் ஆண்டு தொடக்கம் இந்த காணியை விடுவித்து தரும்படி கோரிக்கை விடுத்துவருகிற போதும் இன்று வரை காணி விடுவிக்கப்படவில்லை. இக்காணி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மேலதிக அபிவிருத்தி தேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியாகும். இந்த காணியில் பல வருடங்களாக இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் காணியை யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைக்காக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இக்காணியை உடனடியாக விடுவித்து தருவதற்கு வட மாகாண ஆளுநரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைகள் அதிகரித்துவரும் தற்போதைய சூழ்நிலையில் இந்த காணி அவசியமானது எனவும் துரித நடவடிக்கை எடுத்து காணியை விடுவித்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு கைகொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/212828
  25. Published By: DIGITAL DESK 2 24 APR, 2025 | 04:16 PM ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை அலைக்கழிப்பதை, பழிவாங்குவதை நிறுத்தாவிடின் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து தண்டனையை வழங்குவதைத்தவிர வேறுவழியில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் எச்சரிக்கைவிடுத்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான ஏப்ரல் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளுனர், தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றபோதும் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது மந்தமாக இருக்கின்றது. இதற்கும் அப்பால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் தொடர்பில் மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. மக்களை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே பதவிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனை மறந்து சில உள்ளூராட்சி மன்றங்கள் செயற்படுகின்றன. உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றின் செயலர்கள் இழைக்கின்ற தவறுகளால் ஒட்டுமொத்தமாக எல்லோருக்குமே பாதிப்பு ஏற்படுகின்றது. எமது நிர்வாகக் கட்டமைப்பிலிருக்கின்ற இவர்களின் தவறுகளுக்காக பாதிக்கப்பட்ட மக்களிடம் எனது மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். முன்னைய ஆட்சிக் காலங்களில் எமது மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு முன்வந்த பலர் பல்வேறு காரணங்களால் குறிப்பாக இலஞ்சம் கோரியமையால் திரும்பிச் சென்றனர். அவர்கள் இப்போதும் மீண்டும் வருகின்றனர். அவர்களுக்குரிய ஒழுங்குகளை நேரிய சிந்தனையுடன் அதிகாரிகள் செய்துகொடுக்கவேண்டும் என ஆளுனர் குறிப்பிட்டார். கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆளுநர் இதன் பின்னர் ஆராய்ந்தார். விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான 10 சதவீதக் கழிவு தொடர்பான விவகாரத்தில் ஒவ்வொரு சந்தையாக நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருப்பதாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் குறிப்பிட்டார். அந்தச் சந்தையுடன் தொடர்புடைய விவசாய அமைப்புக்களை முதல் கட்டமாக சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தார். வீதிகளில் குப்பைகள் போடும் செயற்பாடு தொடர்கின்ற நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சி.சி.ரி.வி. கமெராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார். சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காண்பிக்கும் நிலைமை காணப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் சட்டவிரோத கட்டுமானங்களை உள்ளூராட்சி மன்றங்கள் நேரடியாக இடித்தழிக்கக் கூடியதாக இருந்ததாகவும் தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டினுள் உள்ளமையால் தம்மால் வழக்குத் தாக்கல் செய்யக் கூடியதே ஒரே வழி எனக் குறிப்பிட்டனர். இதன்போது தொடரப்பட்ட பல வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாகவும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் தெரிவித்தனர். குறிப்பாக யாழ். மாநகர சபையால் சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் யாழ். மாநகர சபையாலேயே வழக்கு மீளப் பெறப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன என ஆணையாளர் குறிப்பிட்டார். அவ்வாறு மீளப்பெறப்பட்ட வழக்குகள் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து மீளவும் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதேபோல வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் சட்டவிரோதமானவையே. அதனை அகற்றுவதற்கான தொடர் நடவடிக்கை உள்ளூராட்சி மன்றங்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் அறிவுறுத்தினார். மேலும், இந்த விடயங்களில் உள்ளூராட்சி மன்றங்களால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார். மரம் நடுகையை ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றங்களும் ஊக்குவித்து செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து வடக்கின் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் கட்டட அனுமதி, ஆதனப் பெயர் மாற்றம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அவற்றில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை என்பன தொடர்பில் ஆராயப்பட்டன. இவற்றுக்கான அனுமதி வழங்குவதில் உள்ள தாமதங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அவற்றைக் களைவதற்கு தொடர்புடைய திணைக்களங்களை எதிர்காலத்தில் அழைத்து ஆராயவும் தீர்மானிக்கப்பட்டது. வவுனியா நகர சபை மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதற்குரிய ஆளணிகள் வழங்குவது மற்றும் கட்டடங்கள் அமைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது. மேலும், வீதிப் போக்குவரத்துத் தொடர்பில் கடந்த கூட்டத்தில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்த நிலையில் அது தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்கள் தெரிவித்தனர். அதேபோல நகர அபிவிருத்தி அதிகார சபையுடனான விவகாரங்களிலும் முன்னேற்றம் உள்ளதாகவும் குறிப்பிட்டனர். இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர், ஒவ்வொரு மாவட்டங்களினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/212824

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.