Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் தடை விதிப்பதாக மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. சைவ மற்றும் அசைவ உணவுகளைத் தொட்டு சாப்பிடுவதற்கு இந்த மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. சான்ட்விச், ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் உணவுப் பொருளாக மயோனைஸ் இருந்து வருகிறது இந்நிலையில், மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள தடை உத்தரவில், சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு மூலம் பரவும் நோய்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழகத்தில் மயோனைஸ் உணவுப்பொருளுக்கு ஏப்.8ம் தேதி முதல் அடுத்த ஆணடு வரை தடை விதிக்கப்படுகிறது. ஓராண்டுக்கு இந்த தடை விதிப்பு தொடரும். தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட அனைத்து உணவு நிறுவனங்களும் மூல முட்டை அடிப்படையிலான மயோனைஸின் பயன்பாடு, விற்பனை அல்லது விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தல், உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B8%E0%AE%95%E0%AE%95-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%9F/175-356131
  2. Published By: RAJEEBAN 24 APR, 2025 | 12:57 PM தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் வகையில் செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படுவதோடு தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும் என தமிழ்தேசிய பேரவை தெரிவித்துள்ளது. தமிழ்தேசிய பேரவை உள்ளுராட்சி சபை தேர்தல் யாழ்ப்பாண மாநரகசபைக்கான முன்மொழிவுகள் செயல்திட்ட ஆவணத்தை இன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. டிஜிட்டல் முறையிலான செயற்திட்டங்களுடன் தூய கருக்களுடன் தூய மாநகரத்தை கட்டமைப்பதற்காக, யாழ்ப்பாண மாநகரசபை வட்டாரங்களில் இருந்து தமிழ்தேசிய விடுதலைக்காக தமிழ்தேசிய உணர்வு மிக்கவர்களால், துடிப்புடன் செயற்படும் நேர்மையான ஊழல் அற்ற புதிய தலைவர்களை உள்ளடக்கிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்திற்கே உங்கள் வாக்குகளை செலுத்துங்கள். மாநகரசபையின் வருமானங்கள் மற்றும் அரச அரசசாரத நிதிகள் உரிய முறையயில் திட்டமிடப்பட்டு, நிலையான அபிவிருத்தியை நோக்கி இலஞ்சம் ஊழல் அற்ற பொறுப்புக்கூறல் வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதற்கு சைக்கிள் சின்னத்திற்கு மக்களின் ஏகோபித்த ஆணை அமையட்டும். எமது ஆட்சிக்காலத்தில் மாநகரசபைக்காக மக்கள் என்ற எண்ணம் நீக்கப்பட்டு மக்களிற்காகவே மாநகரசபை என்ற எண்ணம் உருவாக்கப்பட்டு மக்களிற்கான சேவைகளிற்கே முதன்மையளிக்கப்படும். தேங்கியிருக்கும் மக்கள் சார் தேவைகள் அனைத்தும், நாம் ஆட்சி அமைத்து மூன்று மாத காலத்திற்குள் மக்கள் நடமாடும் சேவைகள் ஊடாக சீர்செய்யப்படும். கழிவகற்றல், மின்விளக்கு பொருத்தல், குடிநீர் தொடர்பான சேவைகள் முறைப்பாட்டு பெறுதல்கள் டிஜிட்டல் முறையில் இலகுபடுத்தப்படுவதுடன், சோலை வரி உட்பட ஏனைய சேவைகளும் டிஜிட்டல் முறையில் இலகுபடுத்தப்படும். தற்காலத்தில் ஏற்பட்டுள்ள சமூகசீர்கேடுகள் மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து யாழ்மாநகரசபையின் குடியிருப்பாளர்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் 24 மணிநேரமும் கண்காணிக்ககூடிய வகையில் தரமான கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன் சட்டவிரோத செயற்பாடுகளிற்கு ஆதரவாக செயற்படுவோருக்கு பாரபட்சம் இன்றிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும். குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அனைத்து பிரதேசங்களிலும் நீர் விநியோக செயற்பாடு முன்னெடுக்கப்படுவதுடன் மழைநீர் சேகரிப்பு திட்டமும் விரிவாக முன்னெடுக்கப்படும். உள்ளுர் வீதிகள் பாரபட்சமின்றி செப்பனிடப்பட்டு திருத்தப்படுவதோடு வடிகால் அமைப்பும் சீர் செய்யப்பட்டு தெருவிளக்குகளும் பொருத்தப்படும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மதகுகளும் பாலங்களும் சீராக்கப்படுவதுடன் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு அவசியமான பாலங்கள் மதகுகளை அமைப்பது தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். நகரத்தின் பிரதான வடிகால்களில் இருந்து கடலிற்கு செல்லும் வடிகால்கள் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படாத வகையில் நிபுணத்துவ ஆய்வுடன் சீரமைக்கப்படும். சிறப்பாக செயற்படும் சனசமூக நிலையங்கள் விளையாட்டு கழகங்கள் எதிர்கொள்ளும் நிதிநெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக சபையினால் வழங்கப்படும் ஒப்பந்த வேலைகளில் இவர்களிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். யாழ்மாநகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஆலயங்கள் பள்ளிவாசல் மதவழிபாட்டு தலங்கள் போன்றவற்றிற்கு அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்குவதுடன் அவற்றிற்கு தேவையான உதவிகள் சிறப்பான முறையில் வழங்கப்படும். யாழ்மாநகரசபை எல்லைக்குள் காணப்படும் குளங்கள் யாவும் உரிய முறையில் புனரமைத்து பாதுகாக்கப்படுவதுடன், குளங்களை சுற்றி நடைபாதைகள் மற்றும் பொதுமக்கள் ஓய்வெடுப்பதற்கான வசதிகள் உருவாக்கப்படும். தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் வகையில் செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படுவதோடு தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும். யாழ்ப்பாண மாநகரசபையின் உண்மையான மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட தயாராகவுள்ள சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள். நீங்கள் வாக்களிக்கும் இறுதி நேரத்திலும் கூட சிந்தனை கலையான திடமான மாற்றத்தை உருவாக்க தமிழ்தேசிய பேரவையாக பயணிக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்திற்கே வாக்களிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/212803
  3. வானில் நாளை அரிய காட்சி தென்படும் Published By: DIGITAL DESK 3 24 APR, 2025 | 01:14 PM வானத்தில் வெள்ளி (Venus), சனி (Saturn) ஆகிய கோள்களும் சந்திரனும் (Moon) நெருக்கமாகத் தோன்றும் அரிதான காட்சி நிகழவுள்ளது. இந்த காட்சி நாளை வெள்ளிக்கிழமை (25) அதிகாலை 5.30 மணியளவில் கிழக்கு வானில் காண முடியும் கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் ஜானக அதாசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும், செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களும் சந்திரனும் நெருக்கமாகத் தோன்றும் அரிதான காட்சியை வெற்றுக் கண்களால் பார்வையிட கிடைத்த அரிய சந்தர்ப்பம் இதுவாகும். தொலைநோக்கி உள்ளிட்ட எந்தக் கருவியும் இதற்குத் தேவையில்லை. பூமியிலிருந்து பார்க்கும்போது இந்த காட்சி புன்னகை ஒரு முகத்தை போன்ற தோற்றத்தை ஒத்திருக்கும். சூரிய உதயத்திற்கு முன்னர் கிழக்கு வானில் இந்த அரிய காட்சி சுமார் ஒரு மணி நேரம் தென்படும். உலகில் உள்ள அனைவரும் பார்வையிடலாம். உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து மூன்றும் இணைந்து ஒரே இடத்தில் இருக்கும் போது புதன் (Mercury) கோள் தோன்றலாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/212801
  4. பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என அறிவித்து பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்த சந்தேகநபர்கள் தலை மற்றும் முகங்களை மறைக்கும் வகையில் தலைக்கவசங்களை அணிந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்றாலும், அது சாரதி மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவரின் பாதுகாப்பிற்காக மட்டுமே. எனவே, மோட்டார் சைக்கிளில் பயணிக்காத போது பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்வது கண்டறியப்பட்டால், அந்த நபரையும் அவரது உடமைகளையும் ஆய்வு செய்யுமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/317255
  5. தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றுடன் ஏப்ரல் 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் தபால்மூல வாக்குகளை அளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசு நிறுவனங்கள், பொலிஸார், முப்படைகள், பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் தபால்மூல வாக்கு விண்ணப்பதாரர்கள் இந்த நான்கு நாட்களில் தங்கள் தபால்மூல வாக்குகளை பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக 648,495 விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/317270
  6. Published By: RAJEEBAN 24 APR, 2025 | 11:33 AM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஈடுபட்ட ஒருவரை - ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவரை, சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட ஒருவரை உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நியமித்துள்ளமை முற்றிலும் பொருத்தமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக ஷானி அபயசேகரவை நியமித்த கடும் கேள்விகளை எழுப்புகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஈடுபட்ட ஒருவரை - ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவரை, சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட ஒருவரை இந்த குழுவின் முக்கிய பொறுப்பிற்கு நியமித்துள்ளமை முற்றிலும் பொருத்தமற்றது. இது வெறுமனே நடைமுறை ரீதியாக தவறான நடவடிக்கை மாத்திரமல்ல, இது ஒவ்வொரு நெறிமுறை தரத்தையும் மீறுவதாகும், இது செயல்முறையின் நம்பகதன்மை மீது இருண்ட நிழலை போர்த்துகின்றது. சட்டரீதியான முடிவுகள் நியாயமான விதத்தில் எடுக்கப்படுவது மாத்திரம் முக்கியமானதல்ல, நீதித்துறையின் மீது மக்களிற்கு நம்பிக்கை ஏற்படுதவற்கு அவ்வாறான முடிவுகள் வெளிப்படையானதாக நியாயமானதாக எடுக்கப்பட்டதாக மக்கள் உணர்வதும் அவசியம். மக்களின் நம்பிக்கை ஏற்கனவே மிகவும் பலவீனமான நிலையில் உள்ள சூழலில் இவ்வாறான தீர்மானங்கள் சந்தேகம் மற்றும் ஏமாற்றத்தை ஆழப்படுத்தும். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்ற தருணத்தில் ஷானி அபயசேகர சிஐடியின் இயக்குநராக பணியாற்றிக்கொண்டிருந்தார். இந்த தாக்குதல் குறித்த விசாரணைகளில் முக்கியமானவராக காணப்பட்டார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயும் பொலிஸ் குழுவில் அவரையும் இணைத்திருப்பது, நியாயபூர்வமான கரிசனைகளை எழுப்புகின்றது, குறிப்பாக அறிக்கையில் அவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்போது. ஷானி அபயசேகரவின் சமீபத்தைய அரசியல் அறிக்கைகள் இந்த விடயத்தை மேலும் குழப்பகரமானதாக்குகின்றது, அவரது பக்கச்சார்பினை தெளிவாக வெளிப்படுத்துகின்றது. இந்த விசாரணையை மேற்பார்வை செய்யும் அதிகாரிக்கு அரசியல் தொடர்புகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் பொதுமக்களிற்கு எவ்வாறு நம்பிக்கை ஏற்படும். இது ஒரு கட்சி சார்ந்த விடயமல்ல, இது தார்மீக தெளிவு மற்றும் நிறுவன ஒருமைப்பாடு சார்ந்த விடயம். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு வெளிப்படையான நம்பகமான நியாயமான செயல்முறை தேவை. இதற்கு குறைவான எதுவும் பாதிக்கப்பட்டவர்களிற்கு மாத்திரமல்ல பொறுப்புக்கூறல் என்ற கருத்திற்கே அநீதி இழைப்பதாக அமையும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/212790
  7. ஃபார்முக்கு வந்த ரோஹித், உருக்குலைந்த சன்ரைசர்ஸ் - இஷான் கிஷன் அவுட் ஆகாமலே வெளியேறியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 24 ஏப்ரல் 2025, 02:06 GMT ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல் 23) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 41வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது. 144 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டம் ஒரு தரப்பாக அமைந்தது. வலுவான பேட்டிங் வரிசையை வைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஸ்கோரை அடைவது மிகவும் எளிமையாக இருந்தது. பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் என சன்ரைசர்ஸ் தடுமாறியபோதே வெற்றி மும்பை இந்தியன்ஸ் பக்கம் வந்துவிட்டது. அதன் பிறகு கிளாசன், அபினவ் மனோகர் ஆட்டத்தால் கௌரமான ஸ்கோரை பெற்றாலும் அது ஹைதராபாத் ஆடுகளத்தில் சேஸிங் செய்யக் கடினமானதாக இருக்கவில்லை. இதனால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆட்டம் ஒருதரப்பாக அமைந்தது. இந்திய இளைஞர்களை கொரிய கலாசாரம் கவர்ந்திழுக்க என்ன காரணம்?20 ஏப்ரல் 2025 படுக்கையில் பாம்பு கடித்து இளைஞர் பலியானதாக வைரலான வீடியோ - அதிர வைக்கும் உண்மை21 ஏப்ரல் 2025 சன்ரைசர்ஸ் அணி வெளியேறுகிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகள், 4 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டை 0.673 என வலுவாக வைத்திருப்பதால், 3வது இடத்தில் இருந்த ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி அடுத்து வரும் 6 போட்டிகளிலும் வென்றாலும் ப்ளே ஆஃப் செல்லுமா என்பது சந்தேகம்தான். கணித அடிப்படையில் வேண்டுமானால் ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது என்று கூறலாம். ஆனால், நிதர்சனத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கான ப்ளே ஆஃப் வாய்ப்புக் கதவுகள் ஏறக்குறைய அடைக்கப்பட்டுவிட்டன. மெதுவான ஆடுகளம் கொண்ட வான்ஹடேவில் கடந்த வாரம் நடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. இந்த முறை பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான ஹைதராபாத் ஆடுகளத்தில் சன்ரைசர்ஸ் அணியை 143 ரன்களில் சுருட்டி, மும்பை அணி வென்றுள்ளது. ஆபத்தான நிலையில் சன்ரைசர்ஸ் - மும்பை அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது? சிஎஸ்கே அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற உள்ள ஒரே வழி என்ன? வட கொரியாவில் மாரத்தான் ஓடிய வெளிநாட்டவர் அந்நாட்டு மக்கள் குறித்து கூறுவது என்ன? 80 வயதிலும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் சாதிக்கும் மூதாட்டி ரோஹித் சர்மா மிரட்டல் ஃபார்ம் பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை அணியின் நம்பிக்கை நாயகனாகத் திகழும் ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்பி, தொடர்ந்து 2வது அரைசதம் அடித்திருப்பது மிகப்பெரிய பலம். தொடக்கத்தில் சில போட்டிகளில் ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது கவலையை அளித்திருந்தாலும், கடந்த சில போட்டிகளாக ரோஹித் சர்மா ஆங்கர் ரோல் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வது அந்த அணிக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. ரெக்கில்டன் விக்கெட்டை விரைவாக இழந்தபோதிலும், வில் ஜேக்ஸுடன் இணைந்து ரோஹித் சர்மா பவர்ப்ளேவில் ஸ்கோரை 56 ரன்களுக்கு உயர்த்தினார். முதல் 7 போட்டிகளில் 0, 8, 13, 17, 18, 26, 76* ரன்கள் சேர்த்திருந்த ரோஹித் சர்மா கடந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் அவரது ரன்கள் படிப்படியாக அதிகரித்து வருவது மும்பை அணிக்குப் பெரிய பலம். இந்த ஆட்டத்திலும் உனத்கட், ஈஷன் மலிங்கா ஓவரில் 3 பெரிய சிக்ஸர்களை விளாசி, 35 பந்துகளில் அரைசதத்தை ரோஹித் சர்மா நிறைவு செய்தார். 2வது விக்கெட்டுக்கு வில் ஜேக்ஸுடன் சேர்ந்து 64 ரன்களும், ஹர்திக் பாண்டியவுடன் சேர்ந்து 53 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் சேர்த்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் 76 ரன்கள் சேர்த்த ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்தில் 46 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் சூர்யகுமார், திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சூர்யகுமார் 19 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என 40 ரன்களிலும், திலக் 2 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரவில் நிம்மதியாக உறங்குவது எப்படி?4 மணி நேரங்களுக்கு முன்னர் தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லும் அவசியமே வராதா?23 ஏப்ரல் 2025 சன்ரைசர்ஸை திணறடித்த போல்ட், சஹர் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் வரிசையை மும்பையின் டிரென்ட் போல்ட், தீபக் சஹர் இருவரும் சேர்ந்து உருக்குலைத்தனர். புதிய பந்தில் இருவரின் ஸ்விங் பந்துவீச்சையும் சமாளிக்க முடியாமல் சன்ரைசர்ஸின் பேட்டர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். போல்ட் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், தீபக் சஹர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டத்தைக் கைப்பற்றினர். 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டிரென்ட் போல்ட் ஆட்டநாயகன் விருது வென்றார். பும்ரா 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும், சான்ட்னர் 4 ஓவர்கள் வீசி 19 ரன்களும் கொடுத்து சிக்கனமாகப் பந்துவீசினர். பவர்ப்ளே ஓவரில் 5 ஓவரில் 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இழந்து சன்ரைசர்ஸ் அணி தடுமாறியது. பவர்ப்ளேவில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா இருவருமே பெரிய ஷாட்களுக்குத்தான் முக்கியத்துவம் அளித்தார்களே தவிர பந்து ஸ்விங் ஆகி வருகிறதா, நிதானமாக பேட் செய்யலாமா என்று சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஆடுகளத்தில் இருந்த லேசான ஈரப்பதத்தால் பந்து சற்று நின்று, நன்றாக ஸ்விங் ஆனது. இதைக் கவனிக்காமல் பெரிய ஷாட்களுக்கு முயன்று டிராவிஸ் ஹெட்(0), அபிஷேக்(8) மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தீபக் சஹர் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்து, இஷான் கிஷன்(1), நிதிஷ் ரெட்டி(2) இருவர் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதில் இஷான் கிஷன் ஆட்டமிழந்ததுதான் வேடிக்கையாக இருந்தது. தீபக் சஹர் வீசிய பந்து லேசாக ஸ்விங் ஆகி இஷன் கிஷனுக்கு லெக் சைடில் சென்றது. அந்தப் பந்தை விக்கெட் கீப்பர் ரெக்கில்டன் கேட்ச் பிடித்தார். ஆனால், ஆட்டமிழந்து விட்டதாக நினைத்து இஷான் கிஷன் பெவிலியனுக்கு செல்லத் தொடங்கினார், மும்பை அணியில் எந்த பேட்டரும் நடுவரிடம் அவுட் கேட்கவில்லை. பந்துவீச்சாளர் தீபக் சஹர்கூட நடுவரிடம் அவுட் கேட்கவில்லை, நடுவரும் முதலில் வைட் பந்துக்காக கையைத் தூக்கி, இஷான் கிஷன் சென்றதைப் பார்த்து அவுட் வழங்க கையை மேலே தூக்கினார். ஆனால், அதன்பின் டிவி ரீப்ளேவில் பார்த்தபோது, அல்ட்ரா எட்ஜில் இஷான் கிஷன் பேட்டில் பந்துபடாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது தெரிய வந்தது. ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் அனிகேத் வர்மா 12 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்கவே, 5 விக்கெட் இழப்புக்கு 35 ரன்களுடன் சன்ரைசர்ஸ் அணி திணறியது. காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது சென்னையில் இருந்த 'கோல்வால்கர்' என்ன செய்தார்?22 ஏப்ரல் 2025 தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லும் அவசியமே வராதா?23 ஏப்ரல் 2025 காப்பாற்றிய கிளாசன் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்ததால் விரைவாகவே இம்பாக்ட் ப்ளேயராக அபினவ் மனோகர் களமிறங்கினார். கிளாசனுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய மனோகர், மெதுவாக ரன்களை சேர்த்தார். கிளாசன் அவ்வப்போது கிடைக்கின்ற வாய்ப்பில் பவுண்டரி. சிக்ஸர்களை விளாசினார். விக்னேஷ் புத்தூர் ஓவரில் சிக்ஸர், 2 பவுண்டரி என கிளாசன் அடித்தார். பொறுமையாகவும், பொறுப்பாகவும் ஆடிய கிளாசன் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது இந்த சீசனில் கிளாசன் அடிக்கும் முதல் அரைசதம். 17 முதல் 19வது ஓவர் வரை கிளாசன், மனோகர் வேகமாக விளாசி 35 ரன்களை சேர்த்தார். ஆனால், 19வது மற்றும் 20வது ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஆட்டம் அடங்கியது. பும்ரா வீசிய 19வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்கூப்பில் சிக்ஸர் அடித்த கிளாசன், அதே ஓவரில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அரிதான ஹிட்விக்கெட் போல்ட் வீசிய கடைசி ஓவரில் 43 ரன்கள் சேர்த்திருந்த அபினவ் மனோகர் ஹிட் விக்கெட்டில் வெளியேறினார். கம்மின்ஸ் ஒரு ரன்னில் போல்டானார். போல்ட் வீசிய யார்க்கரை தட்டிவிட ஸ்டெம்புக்கு அருகே மனோகர் சென்றபோது பேட் ஸ்டெம்பில் பட்டதால் ஹிட்விக்கெட்டில் ஆட்டமிழந்தார். இது ஐபிஎல் டி20 போட்டியில் மிகவும் அரிதான ஹிட் விக்கெட்டாகும். சன்ரைசர்ஸ் அணியில் கிளாசன்(71), மனோகர்(43) இருவரின் ரன்களை தவிர்த்துப் பார்த்தால் மற்ற பேட்டர்கள் யாரும் 10 ரன்கள்கூட எடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். கிளாசன் மட்டும் அணியின் சூழலை உணர்ந்து ஆடவில்லை என்றால், சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களில் சுருண்டிருக்கும். காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது சென்னையில் இருந்த 'கோல்வால்கர்' என்ன செய்தார்?22 ஏப்ரல் 2025 கடல்நீரில் இருந்து கார்பனை உறிஞ்சும் புதிய திட்டம் காலநிலை மாற்ற பிரச்னைக்கு தீர்வாகுமா?22 ஏப்ரல் 2025 ஆட்டமிழக்காமல் வெளியேறிய இஷான் கிஷன் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆட்டத்தில் தீபக் சஹர் பந்துவீச்சில் இஷான் கிஷன் ஆட்டமிழந்துதான் வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருந்தது. தீபக் சஹர் வீசிய 3வது ஓவரில் முதல் பந்தை இஷான் கிஷன் எதிர்கொண்டார். பந்து லேசாக ஸ்விங் ஆகி இஷான் கிஷனின் இடதுபுறமாகச் சென்றது. இஷான் கிஷனும் லெக்சைடில் சென்ற பந்தை அடிக்க முயன்றார், ஆனால் முடியவில்லை. பந்து விக்கெட் கீப்பர் ரெக்கில்டனிடம் சென்றது. மும்பை அணியில் எந்த வீரரும் நடுவரிடம் இஷான் கிஷன் அவுட் செய்யப்பட்டதாக முறையிடவில்லை. இஷான் கிஷனின் இடதுபுறம் சென்ற பந்து பேட்டில் படாமல் சென்றதால் நடுவரும் வைடு வழங்குவதற்காக கைகை அகலமாக விரித்தார். ஆனால், திடீரென இஷான் கிஷன் அவுட் ஆகிவிட்டதாக நினைத்து பெவிலியன் செல்லத் தொடங்கினார். மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, வேகமாக ஓடி வந்து இஷன் கிஷானின் ஹெல்மெட்டை பிடித்து, "நடுவரின் முடிவைப் பார்த்துவிட்டு பெவிலியன் செல்லுங்கள்" என்றார். ஆனால், இஷான் கிஷன் அதைக் கேட்காமல் சிரித்துக் கொண்டே பெவிலியன் நோக்கி நடந்தார். இதைக் கவனித்த நடுவர் வைடுக்காக கையை விரித்திருந்தவர், திடீரென அவுட் வழங்க கையை உயர்த்தினார். தீபக் சஹரும் நடுவரைப் பார்த்து அவுட் கேட்கலாமா, வேண்டாமா என்ற சந்தேகத்தில் அவுட் கேட்கவே நடுவரும் அவுட் வழங்கினார். நடுவரே அவுட் வழங்காமல் இருந்த நிலையில், மும்பை வீரர்கள் யாரும் நடுவரிடம் அவுட் கேட்காத நிலையில், விக்கெட் கீப்பர் ரெக்கில்டன் நடுவரிடம் முறையிடாத நிலையில் இஷான் கிஷன் ஏன் வெளியேறினார் என்பது குழப்பமாக இருந்தது. அதன் பிறகு இஷன் கிஷன் ஆக்ஸன் குறித்து ரீப்ளே செய்து பார்த்தபோது, இஷான் பேட்டில் பந்து படவில்லை என்பது அல்ட்ரா எட்ஜில் தெரிந்தது. தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் உயிருக்கே ஆபத்து - ஏன் தெரியுமா?22 ஏப்ரல் 2025 இறந்து 38 ஆண்டு கழித்தும் பிரிட்டிஷ், ஜெர்மன் பத்திரிகைகளை முட்டாளாக்கிய 'ஹிட்லர்'23 ஏப்ரல் 2025 முன்கூட்டியே திட்டமிடல் அல்ல பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக்குப் பிறகு மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், "வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. கிடைக்கின்ற தருணத்தைச் சரியான வழியில் வீரர்கள் கொண்டு சென்றனர். எங்கள் அணியில் ஒவ்வொரு வீரருக்கும் சரியான ஆட்டம் அமைந்துவிட்டால், நாம்தான் அனைத்து அணிகளையும் ஆதிக்கம் செய்வோம் என நினைத்தேன்" என்று தெரிவித்தார். மேலும், "தீபக் சஹர், போல்ட் இருவரும் வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தனர். ரோஹித், ஸ்கை இருவரும் ஃபினிஷிங் செய்தனர். அற்புதமான வெற்றி. கேப்டன்சியை பொருத்தவரை சூழலுக்கு ஏற்ப நான் பதில் அளிக்க வேண்டும், செயல்பட வேண்டும். முன்கூட்டியே திட்டமிட்டுவருவது சரியல்ல. இதுபோன்ற சூழலில் பவர்ப்ளேவில் சிறப்பாகப் பந்துவீசிய தீபக் சஹருக்கு தொடர்ந்து ஓவர்கள் ஏன் வழங்கக்கூடாது என்பது அந்த நேரத்தில் உதிக்கும் சிந்தனை. அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம், மன நிறைவாக இருக்கிறது" எனவும் தெரிவித்தார் ஹர்திக் பாண்டியா. சுட்டெரிக்கும் கோடையிலும் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் 10 எளிய வழிகள்22 ஏப்ரல் 2025 5,000 எறும்புகள் ரூ.6.5 லட்சம்: நூதன முறையில் எறும்புகளை கடத்தி இவர்கள் என்ன செய்கிறார்கள்?22 ஏப்ரல் 2025 அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள் இன்றைய ஆட்டம் ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ் இடம்: பெங்களூரு நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதர்பாத் நாள் - ஏப்ரல் 25 இடம் – சென்னை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் நாள் - ஏப்ரல் 27 இடம் – மும்பை நேரம்- மாலை 3.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs டெல்லி கேபிடல்ஸ் நாள் - ஏப்ரல் 27 இடம் – டெல்லி நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-417 ரன்கள் (8 போட்டிகள்) நிகோலஸ் பூரன்(லக்னெள)-377 ரன்கள் (9 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ்(மும்பை) 373 ரன்கள் (9 போட்டிகள்) பர்பிள் தொப்பி யாருக்கு? பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 16 விக்கெட்டுகள் (7 போட்டிகள்) குல்தீப் யாதவ்(டெல்லி) 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c62zd10vyv2o
  8. 23 APR, 2025 | 09:34 PM அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நீதி கிட்ட எந்தவிதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக் கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "நாட்டில் இனி இனவாதமும் மதவாதமும் இல்லை" எனக் கூறும் தற்போதைய ஜனாதிபதி தையிட்டியில் பேரினவாத மேலாதிக்க மனப்பான்மையுடனும் ஆக்கிரமிப்பு சிந்தனையுடனும் சட்டத்துக்கு விரோதமாக மக்கள் காணிகளில் கட்டப்பட்டுள்ள கட்டட பிரச்சினையை பேரினவாத பிக்குகளின் கைகளில் ஒப்படைத்து பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் காலடியில் விழவைப்பதற்கு நினைப்பதும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த இரண்டு வருட காலமாக போராடும் அரசியல் சக்திகளை அகற்றிட திட்டமிடுவதும் இனவாதமே, மதவாதமே. தையிட்டியில் எழுந்துள்ள மக்களின் பிரச்சினை பேரினவாத அரசியலில் ஆணிவேரினால் தோற்றுவிக்கப்பட்டதே. அதனை மூடி மறைத்து அரசியல் பேசும் தற்போதைய ஜனாதிபதி, பண்டாரநாயக்க, ஜெயவர்தன, சந்திரிகா, ராஜபக்ஷ வழியில் வந்த தமிழர்களுக்கு எதிரான அரசியல்வாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனலாம். உள்ளூராட்சி மன்ற தேர்தல் அண்மித்து கொண்டிருக்கையில் கண்டி தலதா மாளிகையில் வைக்கப்படுள்ள புனித தந்தத்தினை பௌத்த மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தி அரசியல் செய்யும் ஜனாதிபதி வடக்கில் தையிட்டியில் அரசியல் நீதிக்காக போராடுபவர்களை குறுகிய அரசியல் நோக்கமும் கொண்ட அரசியல்வாதிகள் என அடையாளப்படுத்தி குறிப்பாக தெற்கின் மக்களுக்கு அவர்களை இனவாதிகள், மதவாதிகள் என காட்ட நினைப்பது அரசியல் வஞ்சக நோக்கத்துடனாகும். தமிழர்களின் குரலாக கொழும்பு தலைநகரில் ஓங்கி குரல் கொடுத்த குமார் பொன்னம்பலம் அவர்கள் பட்டப்பகலில் கொழும்பு நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கான நீதி இன்னும் கிட்டவில்லை. அதே அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நீதி கிட்டும் என்பதற்கான எந்த விதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக் கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும். தையிட்டி சட்ட விரோத கட்டடத்துக்கு எதிராகவும் நில மீட்புக்காகவும் கடந்த இரண்டு வருட காலமாக போராடுபவர்களை கடந்த காலங்களில் பொலிஸார் அச்சுறுத்தி அடாவடித்தனம் புரிந்ததோடு, விசாரணை என பொலிஸ் நிலையங்களுக்கும் அழைத்ததுடன் நின்றுவிடாது நீதிமன்றத்திலும் நிறுத்தி போராட்டத்தை தொடருவதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர். எனினும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிரான உச்சக்கட்ட தொனியாகவே ஜனாதிபதியின் கூற்று அமைந்துள்ளது. இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய இனப்படுகொலையோடு தமிழர் தாயக அரசியல் அழிந்து ஒழிந்துவிட்டது என நினைக்கும் பேரினவாதிகளுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் பேரினவாதத்துக்கு எதிராக நடக்கும் அரசியல் போராட்டங்களும் நீண்ட நாட்களாக தொடரும் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை முழுமையாக அடக்கி ஒடுக்குவதற்கு தையிட்டி போராட்டத்தில் தெரியும் அரசியல் தலைமைத்துவத்தையும், அது நாடாளுமன்றத்தில் எழுப்பும் குரலையும் பயங்கரவாத குரலாக சித்திரிக்க எடுக்கும் முயற்சிக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நன்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழர்களின் அரசியலை அழிக்க பல்வேறு வடிவங்களில் இன அழிப்பை தொடர்ந்து இறுதியில் இனப்படுகொலை புரிந்தவர்கள் தொடர்ந்தும் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க படை தளங்களை விரிவாக்கி பலப்படுத்தியவர்கள் இறுதியில் தமது ஆக்கிரமிப்பு நோக்கத்தினை நிறைவேற்ற படையினரின் பாதுகாப்போடு பௌத்த சிங்கள அடையாளங்களை விதைக்கத் தொடங்கிவிட்டனர். இது விடயங்களில் கடந்த காலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அங்கீகாரம் அளித்து ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது தேசிய மக்கள் சக்தி முகத்தோடு வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியலை அழித்திடும் அரசியலை வேகப்படுத்திட முகாம் அமைத்து அரசியல் யுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் தமது அரசியலுக்கு எதிரானவர்கள் என நினைப்பவர்களை அடக்குவதற்கு இனவாத சாயம் பூச முற்படுவதோடு இவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தையும் பாவிக்க தயங்க மாட்டார்கள். இதன் மூலம் தமிழர்களை அரசியல் நீக்கம் செய்வதே இவர்களது நோக்கம் எனலாம். நீண்ட கால இன அழிப்புக்கும், இறுதி இனப்படுகொலைக்கும், நில ஆக்கிரமிப்புக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கும், பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்வதற்கும், பேரினவாத மதவாதிகள் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் காரணமாக இருந்தவர்கள் தற்போது மேடை அமைத்து நீலிக்கண்ணீர் வடித்து எங்களுக்கு வாக்களித்தால் உங்களின் கண்ணீரை துடைப்போம் என்று கூறுவது மீண்டும் மீண்டும் தமிழர்களை அழிவுக்குள் தள்ளுவதற்கே. எனவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முதலை கண்ணீர் வடிப்பவர்களையும், தனது கட்சிக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் அரசியல் துரோகம் செய்பவர்களையும், அற்ப சலுகைகளுக்காக மறைமுகமாக தமிழர்களின் தேசியத்துக்கு எதிராகவும் செயல்படும் அரசியல் துரோகிகளையும் அடையாளம் கண்டு துடைத்தெறிந்து தமிழர் நிலம் காக்கவும் தேசியம் காக்கவும் துணிச்சலோடு குரல் எழுப்புவோர்க்கு எமது வாக்கு பலத்தை வெளிப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். தேசத்தின் ஒற்றுமையே தேசியத்தின் வலிமை என்பதை நினைவில் கொள்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/212759
  9. 23 APR, 2025 | 04:37 PM துருக்கியை தொடர்ச்சியாக பல பூகம்பங்கள் தாக்கியுள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒருசில நிமிடங்களில் மர்மரா கடலோர பகுதியில் பல பூகம்பங்கள் உணரப்பட்டுள்ளன என துருக்கியின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இஸ்தான்புலை தாக்கியுள்ள பூகம்பமே பெரியது ( 6.2) இதன் தாக்கம் பல பகுதிகளில் உணரப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்தான்புலின் புயுக்செக்மேஸ் மாவட்டத்தை மூன்று பூகம்பங்கள் தாக்கியுள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இணையத்தளம் செயல்இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சேதமடைந்த கட்டிடங்களிற்குள் செல்லவேண்டாம் என இஸ்தான்புல் அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/212747
  10. RESULT 41st Match (N), Hyderabad, April 23, 2025, Indian Premier League Sunrisers Hyderabad 143/8 Mumbai Indians (15.4/20 ov, T:144) 146/3 MI won by 7 wickets (with 26 balls remaining)
  11. பட மூலாதாரம்,ANI 23 ஏப்ரல் 2025, 16:14 GMT புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலந்துகொண்டனர். பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின் பாகிஸ்தான் நாட்டவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார். அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறினார். "தீவிரவாதத் தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது" என அவர் கூறினார். பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை, நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாற்றம் இன்றியும் கைவிடும் வரை இது தொடரும் என விக்ரம் மிஸ்ரி கூறினார். "அட்டாரி ஒருங்கிணைந்த எல்லை சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படும். உரிய ஆவணங்களுடன் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் வந்தவர்கள் மே1 ம் தேதிக்கு முன்னதாக திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்." "சில நிமிட தாமதத்தால் உயிர் தப்பினோம்" - பஹல்காமுக்கு சென்ற தமிழ்நாட்டு பயணிகள் கூறியது என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் பஹல்காம்: தாக்குதலுக்குப் பிறகு எப்படி இருக்கிறது? - நிலைமையை விவரிக்கும் 15 புகைப்படங்கள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "பேல்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், என் கணவரை கொன்று விட்டனர்" - காஷ்மீர் தாக்குதலில் மனைவி கண்முன்னே கடற்படை அதிகாரி கொலை5 மணி நேரங்களுக்கு முன்னர் தூதரகங்களில் நடவடிக்கைகள் குறைப்பு பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு,அமைச்சரவை கூட்ட முடிவுகள் குறித்து வெளியுறவு செயலாளர் விளக்கம் மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக விக்ரம் மிஸ்ரி விவரித்தார். "பாகிஸ்தான் குடிமக்கள் சார்க் விசா திட்டத்தின் கீழ் இனி இந்தியாவில் பயணிக்க முடியாது. இதற்கு முன்னதாக பெற்ற விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும். இந்த விசாவின் கீழ் இந்தியாவுக்குள் வந்த அனைவரும் உடனடியாக 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் நாட்டை விட்டு வெளியேற ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து பாதுகாப்பு ஆலோசக அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். இந்த ஆலோசகர்களுக்கான உதவி அதிகாரிகள் பணியிடங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மே 1ம் தேதி முதல் தூதரகங்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 55 லிருந்து 30 ஆக குறைக்கப்படும். நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்த ஆலோசனைக்குப் பின், பாதுகாப்புப் படைகள் உஷார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0453vxp17no
  12. 23 APR, 2025 | 04:02 PM “புத்தகங்களே மிகவும் அமைதியான மற்றும் நிலையான நண்பர்களாவார்கள். அதேபோல் அவை புத்திசாலியான ஆலோசகர்கள் மற்றும் பொருமையான ஆசிரியர்களும் கூட” - சார்ல்ஸ் வில்லியம் எலியட் (Charles William Eliot) இன்று, சர்வதேச புத்தக தினம் ஆகும். புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம், சர்வதேச புத்தக தினம் கொண்டாடப்படுகின்றது. வாசிப்பு ஒன்றே மனிதனை பூரணப்படுத்தும். நல்ல புத்தகங்களே நல்ல நண்பர்கள் என்பார்கள். ஆக…. மனிதன் பலதரப்பட்ட புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ளவும், தன் மனநலனை மேம்படுத்துவதற்கும் உதவுவது நல்ல புத்தகங்களே என்றால் அது மிகையல்ல. இப்படி, மனிதனின் வாழ்வை ஒழுங்குபடுத்தக்கூடிய புத்தகங்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படுவதே சர்வதேச புத்தக தினம் ஆகும். அந்த வகையில், சர்வதேச புத்தக தினத்தின் ஆரம்பம் 1995ஆம் ஆண்டு ஆகும். புத்தகங்கள் பற்றி எடுத்துரைக்கும் பொருட்டு, உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் அந்த ஆண்டு தொடங்கிய நிலையில், ஏப்ரல் 23ஆம் திகதியை யுனெஸ்கோ அமைப்பு, உலகளவில் உள்ள எழுத்தாளர்களைக் கொண்டாடும் நாளாக அறிவித்தது. இந்த நாள் உலகின் சிறந்த எழுத்தாளர்களான வில்லியம் சேக்ஸ்பியர், பிரபல ஸ்பானிஷ் வரலாற்று ஆசிரியர் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரின் நினைவு நாளை குறிக்கும் வகையிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகளவில் புகழ் பெற்ற பிரபல எழுத்தாளர்களான மாரிஸ் ட்ரூன், ஹால்டோர் கே.லக்ஸ்னஸ், விளாடிமிர் நபோகோவ் மற்றும் மெனுவல் மெஜியா வலேஜோ ஆகியோரின் பிறந்தநாளாகவும் இந்த நாள் அமைந்துள்ளது. இந்த புகழ் பெற்ற எழுத்தாளர்கள் உலகை விட்டு சென்றாலும், அவர்கள் இலக்கியத்திற்கு அளித்த மகத்தான பங்களிப்பு தலைமுறை தலைமுறையாக புத்தக வாசகர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவித்து வருகிறது. புத்தக வாசிப்பு என்பது, வாழ்க்கையை அழகாக மாற்றக்கூடியது. புதிய புதிய சொற்களை கற்க முடியும். இதனால் உங்களின் சொற்களஞ்சியம் கணிசமாக விரிவடையும். நாம், புதிய சொற்களை கற்கும் போது, அறிவு மேம்பட்டு மொழி பற்றிய தெளிவான புரிதல் கிடைக்கும். இதனால் எழுத்துத் திறனும் மேம்படும். ஞாபக சக்தியை மேம்படுத்தவும், மன அமைதியைப் பெறவும் கூட, புத்தக வாசிப்பே சிறந்த வழியாகும். எப்போது பார்த்தாலும், கணினியிலும், கைபேசியிலும் மூழ்கிக் கிடப்பவர்களும், மன அழுத்தத்தால் தவிப்பவர்களும், ஒரு குறிப்பிட்ட நேரத்தை, நல்ல புத்தகங்களை வாசிக்க ஒதுக்கினால், மனம் அமைதியாகி, புத்துணர்வு ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம். ஆகவே, புத்தகம் மனித குலத்தின் அறிவுச் சொத்து. அதனை உணர்ந்து வாசிப்புத் திறனை மேம்படுத்துவோம். வாழ்க்கையை, சிறப்புடனும், பயனுள்ள வகையிலும் கழிக்க, சுவாசிக்கும் வரை வாசிப்போம். https://www.virakesari.lk/article/212732
  13. – நவீனன் (சிறிலங்காவில் இனப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் மொழி வெறி என்பது தான் அடிப்படைக் காரணம் என்றாலும், தற்போது ஆளும் அனுர அரசும் சிங்கள மொழிக்கே தொடர்ந்தும் முன்னுரிமை கொடுத்து வருகிறது) தமிழர் தாயகத்தில் உள்ள நிர்வாக கட்டமைப்புகளை மிக மிக தீவிரமாக தற்போதய அனுர அரசும் திட்டமிட்டு சிங்கள மயப்படுத்தி வருகின்றது. அதன் ஒரு வெளிப்பாடாகவே இந்தியப் பிரதமர் மோடியின் வருகையின் போது தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டது.1956 ம் ஆண்டில் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் தனிச்சிங்கள சட்டமே ஈழத்தில் நீண்ட காலமாக நடக்கும் இனப் போராட்டத்தின் மூல காரணி என்பதை இந்த அரசும் மறந்து போய்விட்டது போல தோன்றுகிறது. மோடிக்கு தமிழில் வரவேற்பு இல்லை: இந்தியப் பிரதமர் இலங்கைக்கு ஏப்ரல் 4 இல் வருகை தந்த வேளை தமிழ் வரவேற்பு பதாகைகள் எங்குமே வைக்கப்பட இல்லை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ இலங்கைப் பயணத்திற்காக கொழும்பில் வந்தடைந்த போது, தலைநகர் முழுவதும் பெரிய விளம்பரப் பலகைகள் மற்றும் வரவேற்புப் பதாகைகள் காணப்பட்டன. ஆனால் தமிழ் மொழி உள்ளடக்க வரவேற்பு பதாகைகள் இருக்கவே இல்லை. தமிழ் உலகின் பழமையான வாழும் மொழி, மற்றும் இந்திய பாரம்பரியத்தின் புதையல் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புகள் உட்பட, மோடி மீண்டும் மீண்டும் தமிழ் மொழியின் மீதான அபிமானத்தைப் பாராட்டிய போதிலும், இலங்கை அரசு அதன் செய்தியில் இந்த உணர்வுகளை முழுமையாக புறக்கணித்ததாகத் தோன்றியது. அத்துடன் மத்திய கொழும்பில் கட்டப்பட்ட முக்கிய பதாகைகள் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. சிறிலங்கா நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான தமிழை முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருந்தது. இலங்கையில் இந்திய முதலீடு அதிகரித்து வரும் நிலையில் மோடியின் வருகை நிகழ்ந்துள்ளது. இதில் எரிசக்தித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை அடங்கும். அவற்றில் பல தமிழர் தாயகத்தில் மையப்படுத்திய நிலையில் உள்ளன. ஆயினும் இலங்கையின் வட-கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகமே என்பதனை புறக்கணிக்க இந்த அனுர அரசும் முயலுகின்றது. 1956 தனிச் சிங்களம் சட்டம் : ஈழத்திலும் நீண்ட காலமாக நடக்கும் இனப் போராட்டத்தின் மூல காரணியும் மொழியே ஆகும். தனிச் சிங்களம் மட்டும் சட்டம் (Sinhala Only Act) அதிகாரபூர்வமாக 1956 ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழியாக (Official Language Act) அறிவிப்பின் பின்னரே தமிழ் மக்கள் கொடுமையாக அரசால் ஓடுக்கப்பட்டனர். தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சிமொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70% பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி மட்டுமே ஆட்சி மொழியாக்கப்பட்டது. நீண்ட காலமாக பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தது. அரசுப் பதவிகளுக்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது.ஆயினும் 1936 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரிகளான என். எம். பெரேரா, பிலிப் குணவர்தனா போன்றவர்கள் ஆங்கிலத்திற்குப் பதிலாக சிங்களம், மற்றும் தமிழ் ஆகியவற்றை ஆட்சிமொழிகளாக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். நவம்பர் 1936 இல், ‘இலங்கைத் தீவு முழுவதும் உள்ளாட்சிகள் மற்றும் காவல்துறை நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளிலேயே வழக்குகள் நடத்தப்பட வேண்டும்’ மற்றும் ‘காவல் நிலையங்களில் சாட்சிகளின் மொழிகளிலேயே வழக்குகள் பதியப்பட வேண்டும்’ போன்ற சட்டமூலங்கள் அரசாங்க சபையில் கொண்டுவரப்பட்டு சட்டச் செயலாளருக்கு மேலதிக ஆணைக்காக அனுப்பப்பட்டடன. 1944 இல் ஜே. ஆரின் இனவாதம்: ஆனால் 1944 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்தனா ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களத்தை மட்டுமே அதிகாரபூர்வ மொழியாக்க வேண்டும் என அரசாங்க சபையில் கோரினார். இதனூடகவே இனவாதம் இலங்கையில் வேரூன்றியது. ஆனாலும் ஆங்கிலம் தொடர்ந்து 1956 வரை ஆட்சி மொழியாக இருந்து வந்தது. 1956இல் சிங்கள மொழி அரச கரும மொழியானது மட்டுமன்றி இந்த சட்ட மூலமே தீவெங்கினும் வாழ்ந்து வந்த சிங்கள –தமிழ் இனங்களிடையே முரண்பாடுகளை உருவாக்கக் காரணமாயிற்று. இதன் பின் தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்குள்ள அரச நிறுவனங்களில் பணிகள் முடக்கப்பட்டன. தந்தை செல்வா தலைமையில் போராட்டங்கள்: தனிச் சிங்கள சட்டமூலத்தின் காரணமாக அரசுப்பணியில் உள்ள தமிழர்களும் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இச்சட்டத்தினை தமிழ், மற்றும் சிங்கள இடதுசாரி உறுப்பினர்கள் எதிர்த்தனர்.ஆயினும் தமிழர் தரப்பில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் பல போராட்டங்கள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தமிழர் பகுதிகளில் அரசின் செயற்பாடுகள் இயங்க விடாது செய்யப்பட்டன. இந்தப் போராட்டங்களையடுத்தே பண்டாரநாயக்கா 1958 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க திருத்தச் சட்டமொன்றை கொண்டு வந்ததுடன் தமிழ் மொழிக்கு சில விட்டுக்கொடுப்புகளை வேண்டா வெறுப்பாக ஏற்படுத்தினார். ஆயினும் இத்திருத்தங்கள் வெறும் கண்துடைப்பாகவே இருந்தன. அன்று தொடங்கிய ஈழத் தமிழரின் போராட்டம் இன்னமும் ஓயவில்லை. எத்தனையோ இனப்படுகொலைகள் தமிழர் தாயகம் மீது நிகழ்த்தப்பட்டும், சர்வதேசம் இன்னமும் கண்ணை மூடிக் கொண்டே உள்ளது. கிழக்கு பல்கலைகழத்தில் சிங்கள மயம்: இத்தனை ஆண்டுகளாக தமிழர்கள் வஞ்சிக்கப்பட்ட போதும் இன்னமும் சிங்கள அரசு அதனது நிலையை மாற்றவில்லை என்பது மிகவும் கவலைக்கிடமான விடயமாகும்.தற்போதைய கிழக்கு பல்கலைக்கழகத்தின் மேல் சபையான பேரவையின் (University Council) 15 வெளிவாரி உறுப்பினர்களில் 7 இடங்களுக்கு சிங்கள உறுப்பினர்களை இந்த அரசால் நியமித்திருக்குகின்றார்கள்.கண்துடைப்புக்காக வெறும் 5 இடங்களுக்கு தமிழ் உறுப்பினர்களும் 3 இடங்களுக்கு முஸ்லிம் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எதிர் காலத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமனங்கள், துணைவேந்தர் தெரிவு, விரிவுரையாளர்களை அமர்த்தவும் நீக்கவும் அதிகாரமுள்ள பேரவையில் சிங்கள உறுப்பினர்கள் முதல் முறையாக ஆதிக்கம் செலுத்த இருக்கின்றார்கள்.இதன் தொடர்ச்சியாக கிழக்கு பல்கலை கழகத்திற்கு மிக விரைவில் சிங்கள துணைவேந்தர் ஒருவரை நியமிக்க இருக்கின்றார்கள் என்றும் சொல்லப்படுகின்றது.இது போதாதென்று வவுனியா பல்கலைக்கழக பேரவையின் 7 வெளிவாரி உறுப்பினர்களில் 3 சிங்கள உறுப்பினர்களும் 3 தமிழர்களும் 1 முஸ்லிம் பிரதிநிதியும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். யாழ் பல்கலைகழக அவலம்: சிங்கள மயமாகி வரும் யாழ்ப்பாண பல்கலை கழக பேரவையின் 15 வெளிவாரி உறுப்பினர்களில் 3 சிங்கள உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இது தவிர கிழக்கு மாகாணத்தை குறி வைத்திருக்கும் ஜேவிபி சிங்கள ஆளுநருக்கு மேலதிகமாக அதன் பிரதம செயலாளராகவும் சிங்கள அதிகாரியை நியமித்துள்ளது. அத்துடன் கிழக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழுவின் தலைவராகவும் சிங்கள அதிகாரியே நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர் காலத்தில் மக்களால் தெரிவு செய்யப்படும் எந்தவொரு முதலமைச்சருக்கும் பொறுப்பு கூற வேண்டிய அவசியம் 13 ஆம் திருத்தத்தின் கீழ் இந்த அதிகாரிகளுக்கு இருக்க போவதில்லை. அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சருக்கே பொறுப்பு கூற வேண்டிய கட்டாயம் இல்லாத நிர்வாக அலகை ஜேவிபி உருவாக்கி வருகின்றது. கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு வழமை போல சிங்கள அதிகாரிகளே அரச அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டத்திற்கும் சிங்கள அதிகாரி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.சிங்கள ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டுள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கும் கல்கமூவ சாந்தபோதி தேரர் உட்பட்டவர்களுடன் தொடர்புடைய சிங்கள பிரதேச செயலாளர் ஒருவரே நியமிக்க பட இருக்கின்றார். வன்னி மாவட்டத்தில் ஜேவிபியில் போட்டியிட்டு இரு தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையிலும் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட சிங்கள உறுப்பினரே ஒருங்கிணைப்பு குழு தலைவராக்கப்பட்டள்ளார்.இவ் நியமனங்கள் ஊடக வவுனியா வடக்கு தமிழ் கிராமங்களின் எல்லைக்கோட்டின் வழி ஊடக நகர்ந்து மணலாறு சிங்கள குடியேற்றங்களை இணைத்து பரவும் பரந்த குடியேற்றத்தினை செறிவாக்க முயற்சிக்கின்றார்கள் போல் உள்ளது. இது போததென்று 27 பேர் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர் பட்டியலில் வெறும் இரண்டு தமிழ் அதிகாரிகளுக்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது.அரசாங்கத்திற்கு சொந்தமான 52 அரச நிறுவனங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள தலைமை பதவி நியமனத்திலும் எந்தவொரு தமிழ் அதிகாரிகளுக்கும் இடம் வழங்கப்படவில்லை. அதே போல அரசாங்கத்தின் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உட்பட அரச கட்டமைப்புகளிலும் தமிழ் அதிகாரிகளுக்கு போதிய பிரதிநித்துவம் கிடைக்கவில்லை. 50 நாடுகளில் இயங்கும் இலங்கையின் வெளிநாட்டு தூதுவராலயங்களின் தலைமை பதவிகளுக்கும் வெளிநாட்டு சேவையிலுள்ள எந்த தமிழ் அதிகாரிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வெளிநாட்டு சேவையுள்ள திறமையுள்ளோருக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படும் என ஜே.வி.பி அறிவித்திருந்துள்ள நிலையில் அதற்கு மாறாக தங்கள் கூட்டாளிகளை நியமித்து வருகின்றது. ஆனால் இதிலும் ஜே.வி.பி யில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை விசேடமாக திரு அனுரா குமார திஸ்ஸநாயக்க நியமித்துள்ள ‘Clean Sri Lanka’ செயலணியிலும் தமிழ் அதிகாரிகளுக்கு இடம் வழங்கப்படவில்லை.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுற்றுல்லா ஆலோசனை சபையிருக்கும் கூட தமிழ் பிரதிநித்துவம் முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அரசியல் நியமனங்கள் ஒன்றும் புதிய விடயமல்ல . ஆனால் இலங்கையராக ஒன்றிணைவோம் என பேசும் ஜேவிபி காலத்தில் தான் இது மோசமான நிலையை எட்டியுள்ளது.இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் திறமை அடிப்படையில் அரசியல் வேறுபாடு கடந்து Equality, Diversity, and Inclusion (EDI) தத்துவங்களை உள்வாங்கி வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்கும் அடிப்படை விடயத்தில் தவறிழைத்து விட்டு அபிவிருத்தி மற்றும் ஊழல் பற்றி பேச முடியாது. ஆனால் அபிவிருத்தி மற்றும் ஊழல் என வெறும் வாயால் பேசும் ஜேவிபி எல்லாவிதமான அசிங்கங்களையும் செய்கின்றது. இங்கு வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்கள் உட்பட அரச நிர்வாக கட்டமைப்பில் சிங்கள அதிகாரிகள் பணியாற்ற முடியாது என்று வாதிட முடியாது. போட்டி தேர்வு /நேர்முகம் மூலம் திறமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் யாரும் எங்கும் பணியாற்ற முடியும்.ஆனால் குறித்த இன /சமூக பிரிவை சேர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் வாய்ப்புகளை மறுப்பதும் திட்டமிட்ட ரீதியில் நிர்வாக கட்டமைப்புகளை சிங்கள மயப்படுத்துவதும் அருவருக்க தக்க செயல்களாகும். கடந்த 70 ஆண்டுகளாக தொடரும் இந்த அருவருக்க தக்க பாரம்பரியத்தை ஜே.வி.பி.யும் வெளிப்படையாக தொடருகின்றது. ஆனால் வெறும் வாயில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக ஜே.வி.பி அலம்புகின்றது. https://thinakkural.lk/article/317114
  14. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 2,298 முறைப்பாடுகள் பதிவு! 23 APR, 2025 | 02:15 PM 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி) 2,298 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 2,116 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 171 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/212724
  15. போப்பின் காதல் கதை கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ், திங்கட்கிழமை தனது 88வது வயதில் பக்கவாதம் மற்றும் மீளமுடியாத இதய செயலிழப்பு காரணமாக விண்ணுலகம் சென்றார். போப் பிரான்சிஸ், போப் பதவியை ஏற்ற ஐரோப்பியர் அல்லாத லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார். தனிப்பட்ட முறையில் போப் வாழ்க்கை முறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளார். தனிப்பட்ட குணங்களுக்காக மற்ற போப் பதவி வகித்தவர்களை விட சிறப்பானவவராக கருதப்படுகிறார். மக்கள் போப் மறைவை ஓட்டி அவரை பற்றிய, வாழ்க்கை நினைவுகளை, நினைவு கூர்ந்துள்ளனர். டிசம்பர் 17, 1936 அன்று அர்ஜென்டினா நாட்டில் உள்ள பியுனஸ் அயர்ஸில் நகரில் போப் பிரான்சிஸ் பிறந்தார். ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற பெயர் தான் அவருக்கு சூட்டப்பட்டிருந்தது. அவரது இளமைப் பருவ வாழ்க்கை குறித்த பல்வேறு கதைகள் சமூக ஊடகங்களில் தற்போது பரவி வருகின்றன. அவற்றில் ஒன்று அவரது அண்டை வீட்டாருடனான அவரது பருவ காதல் கதை. இந்த காதல் கதை ஒரு ஆச்சர்யம் மிகுந்த முடிவாக அனைவராலும் கருதப்படுகிறது. ஒருவேளை தனது எதிர்காலம் பற்றி அவருக்கு முன்பே தெரிந்து இருக்கக் கூடுமோ என்று கூட சந்தேகம் வருகிறது. ஜார்ஜ் மரியோ தனது ஆரம்பகால வாழ்க்கையை பியுனஸ் அயர்ஸில் கழித்தார். வேதியியல் படிப்பில் தேர்ச்சி பெற்ற அவர் பல்வேறு பணிகளை செய்துள்ளார். இந்த காலகட்டத்தில் ரசாயன ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் இரவு விடுதி பவுன்சர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளார். இளமைக் காலத்தில் அவர் தனக்கு என்று ஒரு குடும்பம் வேண்டும் என்று நினைத்தார். “சொர்க்கம் மற்றும் பூமியில்” மற்றும் “கடவுளின் பெயர் கருணை” போன்ற புத்தகங்களில், மற்றும் உரையாடல்களில் இதை வெளிப்படுத்தியுள்ளர். https://thinakkural.lk/article/317226
  16. 23 APR, 2025 | 02:26 PM (எம்.நியூட்டன்) விடுவிக்கப்பட்ட இடங்களில் விவசாயம் செய்ய இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன. இவை தொடர்பாக ஆய்வுகள் செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின் வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளில் விவசாயச் செய்கையை விரைவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் வேதநாயகன், கடந்த ஆண்டு ஆரம்பத்தில் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கென காணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்தக் காணிகளில் மக்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல இடர்ப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக விவசாயிகளால் எமக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அவர்களுக்கான மின்சார வசதி இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பாதைகள் அமைக்கப்பட வேண்டும் என மின்சார சபையினர் கோருவதாகத் தெரிவித்தார். பாதைகள் அமைப்பதற்கு சில இடங்களில் இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன. எனவே, இந்த விடயங்களைக் களைந்து விவசாயிகள் முழுமையாக விவசாயம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். வீதிகள் செப்பனிடுவதற்கு இடையூறாக உள்ள பாதுகாப்பு வேலிகளை அகற்றுவது தொடர்பில் உரிய இடங்களுக்கு இராணுவத்தினருடன் நேரில் சென்று பார்வையிடுவதற்கும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கு அமைய, விரைவில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி, வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான வீதிகள், பிரதேச சபையின் வீதிகள் என்பவற்றை உடனடியாக செப்பனிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளன என்று இதன்போது யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் குறிப்பிட்டார். மேலும், மின்சார இணைப்புக்கான கோரிக்கை கடிதத்தை முன்வைக்குமாறு மின்சார சபையினர் கேட்டுக்கொண்டனர். அதேவேளை பயனாளிகளின் மின்சார இணைப்புக் கட்டணத்தை வழங்குவதற்கும் யாழ். மாவட்டச் செயலர் இணக்கம் தெரிவித்தார். இதேவேளை, பயனாளிகள் விவசாயப் பணிகளில் ஈடுபடுவதற்காக காலையில் வந்து மாலையில் செல்ல வேண்டும் என்ற நிலைமை காணப்படுகிறது எனவும், அவர்கள் அங்கு கட்டுமானப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் இராணுவத்தினரிடம் முன்வைக்கப்பட்டது. அந்த மனிதாபிமானக் கோரிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடி பதிலளிப்பதாக இராணுவத்தினர் குறிப்பிட்டனர். மேலும், விவசாயக் கிணறுகளை புனரமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர் நடவடிக்கைகளை இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடனும் வலி. வடக்கு பிரதேச செயலர் தலைமையில் கலந்துரையாடுமாறு ஆளுநர் சபையில் பணிப்புரை விடுத்தார். இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்டச் செயலர், வலி.வடக்கு பிரதேச செயலர், வலி.வடக்கு பிரதேச சபைச் செயலரின் பிரதிநிதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர், இராணுவத்தினர் ஆகியோர் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/212720
  17. பட மூலாதாரம்,PALANIVEL THIAGA RAJAN/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனது துறைக்கான அதிகாரங்கள் குறித்து அதிருப்தியை சட்டமன்றத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். வேறொரு விழாவில் இதற்கு பதிலளிப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். என்ன நடக்கிறது? தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி கேள்வி நேரத்தின்போது கூடலூர் தொகுதியின் அ.தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான பொன். ஜெயசீலன் கேள்வி ஒன்றை எழுப்பினார். அந்த கேள்வியில், "எனது தொகுதியான கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான நிறுவனங்கள் ஏதும் இல்லை. ஆகவே, அந்தப் பகுதியில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை அமைத்துத் தருவதற்கு அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்" எனக் கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "இந்தக் கூட்டத் தொடரிலேயே என்னுடைய துறையில் இருக்கின்ற சிக்கல்களை கூறியிருக்கிறேன். நிதியும் மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல எல்லா தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் துறையின் கீழ் செயல்படுவதில்லை." என்றார். ஒரு சிறிய பங்கு, எல்காட் மட்டும்தான் தங்கள் துறையின் கீழ் செயல்படுகிறது எனக்கூறிய அமைச்சர், பாக்கியுள்ள டைடல், நியோ டைடல் எல்லாம் தொழில்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது என்றார். "அது அசாதாரணமான சூழலாக இருந்தாலும் 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, யாரிடம் நிதியும் திறனும் அதிகாரமும் இருக்கிறதோ அவர்களிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன். எங்களிடம் அது இல்லை" என்றார். அவரது இந்த பதில் ஆளும்கட்சியின் உறுப்பினர்களை அதிரவைத்தது. 'நிதியும் அதிகாரமும் என்னிடம் இல்லை' - சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பேசியது என்ன? திமுக கூட்டணியில் பாமக? திருமாவளவன் பேச்சால் எழும் புதிய கேள்விகள் யார் வேந்தர்? - ஆளுநர் அழைப்பால் துணை வேந்தர்கள் குழப்பம் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்ன? மாநில சுயாட்சி குறித்த மூவர் குழு: என்ன சாதிக்க முடியும்? இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, "உறுப்பினர் கோரிக்கையாக கேட்கிறார். அமைச்சர் இதையெல்லாம் உள்ளுக்குள்ளே முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்க வேண்டியது. பாசிட்டிவாகப் பதில் சொன்னால் உறுப்பினர்களுக்கு நன்றாக இருக்கும்" என்றார். தன்னுடைய அமைச்சரவைக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது குறித்து, சட்டமன்றத்துக்குள்ளேயே விமர்சனத்துடன் பி.டி.ஆர் பேசிய பேச்சு விவாதப் பொருளாகியிருந்தது. இந்த நிலையில்தான், ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பழனிவேல் தியாகராஜனின் விமர்சனத்துக்கும் வருத்தத்துக்கும் பதில் சொல்வதைப் போல சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் நீதிக் கட்சியின் தலைவருமாக இருந்தவரும் பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவுமான பி.டி. ராஜன் குறித்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. "திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி. ராஜன் வாழ்வே வரலாறு" என்ற பெயரில் எழுதப்பட்ட இந்த நூலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுப் பேசினார். பி.டி. ராஜன், நீதிக் கட்சி, திராவிட இயக்கம், மத்திய அரசு குறித்தெல்லாம் பேசிய முதலமைச்சர், தனது பேச்சை நிறைவுசெய்வதற்கு முன்பாக, பழனிவேல் தியாகராஜனின் முந்தைய நாள் பேச்சுக்கு பதில் சொல்வதைப் போல சில கருத்துகளைத் தெரிவித்தார். தீவிரவாத தாக்குதலை நடத்தியது யார்? - இந்திய அரசு சுட்டிக்காட்டும் புதிய அமைப்பு45 நிமிடங்களுக்கு முன்னர் காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 வயது கடற்படை லெப்டினன்ட் - தேனிலவு கொண்டாடச் சென்றவருக்கு சோகம்4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PALANIVEL THIAGA RAJAN/FACEBOOK படக்குறிப்பு,புத்தக வெளியீட்டு நிகழ்வில் மு.க. ஸ்டாலின் மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஸ்டாலின் வழங்கிய அறிவுரை "நம்முடைய பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தவரை அறிவார்ந்த வலிமையான வாதங்களை வைக்கக்கூடியவர். நான் அவருக்குக் கூற விரும்புவது இந்தச் சொல்லாற்றல் அவருக்குப் பலமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, அவரின் பலவீனமாக ஆகிவிடக்கூடாது. இதை ஏன் சொல்கிறேன் என்று அவருக்கே தெரியும். " என்றார். நம்முடைய எதிரிகள் வெறும் வாயையே மெல்லக்கூடிய வினோத ஆற்றல் பெற்றவர்கள் எனக்கூறிய முதலமைச்சர், அவர்களின் அவதூறுகளுக்கு உங்களின் சொல் அவலாக ஆகிவிடக்கூடாது என்பதை தி.மு.க. தலைவராக மட்டுமல்லாமல், உங்கள் மீது அக்கறை கொண்டவனாகவும் அறிவுரை வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என, பி.டி.ஆருக்கு அறிவுறுத்தினார். "என் சொல்லைத் தட்டாத பி.டி.ஆர். என்னுடைய அறிவுரையின் ஆழத்தையும் அர்த்தத்தையும் புரிந்துகொள்வார் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டார். சர்ச்சைகள் புதிதல்ல இதன் மூலம் இப்போதைக்கு இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருப்பதாகவே கருதப்படுகிறது. ஆனால், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இதுபோல பேசி சலசலப்பில் சிக்குவது முதன்முறை இல்லை. 2021ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சராவதற்கு முன்பாக, அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துவந்த கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தினாலும் பெரிய சர்ச்சையாக மாறவில்லை. அவர் நிதியமைச்சரான பிறகு, தனது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவனையே எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்து அதிரவைத்தார். '10 முதல் 15 நிமிடம் துப்பாக்கிச் சூடு நடந்தது' - ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் உயிர் பிழைத்தவர் பேட்டி23 ஏப்ரல் 2025 பஹல்காம் தாக்குதல்: டிரம்ப், புதின் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கூறியது என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PALANIVEL THIAGA RAJAN/FACEBOOK இருந்தபோதும், அவர் நிதியமைச்சராகப் பதவியேற்றதும் மாநிலத்தின் நிதி நிலையை மேம்படுத்த அவர் எடுத்த நடவடிக்கைகள் மிகுந்த கவனத்தைப் பெற்றன, பாராட்டுதல்களையும் பெற்றன. மற்றொரு பக்கம், தேசிய அளவில் தி.மு.கவின் முகத்தை மாற்றியமைப்பதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். ஆங்கில ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டிகள், தொலைக்காட்சி விவாதங்களில் அவர் பங்கேற்று முன்வைத்த கருத்துகள் ஆகியவை நாடு முழுவதும் வெகுவாகக் கவனிக்கப்பட்டன. இந்த நிலையில்தான் 2023ஆம் ஆண்டில் முதலமைச்சரின் குடும்பத்தினர் குறித்து இவர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சில நாட்களுக்குப் பிறகு நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டார். ஆடியோ வெளியானதன் தொடர்ச்சியாகவே முக்கியத்துவம் இல்லாத துறைக்கு அவர் மாற்றப்பட்டதாக பேசப்பட்டது. இருந்தபோதும் தொடர்ந்து செயல்பட்டுவந்த பழனிவேல் தியாகராஜன், தேசிய அளவிலான விவகாரங்களைத் தி.மு.க. கையில் எடுக்கும்போது, ஆங்கில ஊடகங்களில் தி.மு.கவின் கருத்துகளை வலுவாக முன்வைப்பதன் மூலம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துவந்தார். இந்த நிலையில்தான் சட்டமன்றத்தில் அவர் சமீபத்தில் பேசிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் தாக்குதல் பற்றி பாகிஸ்தானியர்கள் கூறுவது என்ன? பாக். ராணுவ தளபதி பேச்சு பற்றி விவாதம் ஏன்?9 மணி நேரங்களுக்கு முன்னர் தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லும் அவசியமே வராதா?23 ஏப்ரல் 2025 பிடிஆர் பேச்சு பெரிதுபடுத்தப்படுகிறதா? "பி.டி.ஆர். பேசிய பேச்சு இந்த முறை வழக்கத்துக்கு மாறாக பெரிதுபடுத்தப்படுகிறது. அவர் இந்தத் துறைக்கு வந்த பிறகு பல முறை தனது துறைக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான கார்த்திகேயன். அவர் சொல்வதைப்போல, தனது துறைக்கு மிகக் குறைவான நிதி ஒதுக்கீடு இருப்பது குறித்து பழனிவேல் தியாகராஜன் பேசுவது இதுவே முதல் முறையல்ல. 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதேபோல கேள்வி நேரத்தில் பேசிய பழனிவேல் தியாகராஜன், பிற மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களை ஒப்பிட்டு, தமிழ்நாட்டில் அந்தத் துறைக்கு குறைவாக நிதி ஒதுக்கப்படுவதாக குறிப்பிட்டார். " தமிழ்நாட்டில் 30 இடங்களில் 'ஐடி பார்க்' அமைக்க கோரிக்கை வந்துள்ளது எனக்கூறிய அமைச்சர், ஆனால், இந்த நிதியாண்டில் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு 119 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, இதை வைத்து ஓரளவுக்குத்தான் செயல்பட முடியும் என்றார். "கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களிளின் மொத்த பட்ஜெட் தமிழ்நாட்டைவிட குறைவாக இருந்தாலும் இந்தத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்குகிறார்கள். கர்நாடக மாநிலத்தில் ஐடி துறைக்கு 750 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. தெலங்கானாவில் 776 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இறந்து 38 ஆண்டு கழித்தும் பிரிட்டிஷ், ஜெர்மன் பத்திரிகைகளை முட்டாளாக்கிய 'ஹிட்லர்'23 ஏப்ரல் 2025 கே.எல்.ராகுல் புதிய சாதனை: கடந்த சீசனில் தன்னை திட்டிய லக்னௌ உரிமையாளருக்கு களத்திலேயே பதிலடி23 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,TNDIPR "இப்போதும் அதைத்தான் சொன்னார். ஆனால், இந்த முறை விவகாரம் பெரிதாகிவிட்டது. கூடுதலாக நிதி ஒதுக்கீடு இருக்கக்கூடிய துறை தனக்கு இருந்திருக்கலாம் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவும் இந்தப் பேச்சைப் பார்க்கலாம்" என்கிறார் கார்த்திகேயன். வெளிப்படையாக பேசியிருக்க வேண்டுமா? ஆனால், பி.டி.ஆர். இவ்வளவு வெளிப்படையாக இதனைப் பேசியிருக்க வேண்டியதில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "ஐ.டி. துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், இவர் நிதியமைச்சராக இருக்கும்போதும் இதுபோலத்தானே நிதி ஒதுக்கப்பட்டது? அப்போது இருந்தவர்கள் இப்படிப் பேசவில்லையே? ஒன்று, இது தனது துறைக்கான கேள்வியில்லை எனச் சொல்லியிருக்கலாம், அல்லது மென்மையாக மறுத்திருக்கலாம். இதுபோல பேசுவது முதலமைச்சருக்குத்தான் சங்கடத்தை ஏற்படுத்தும்" என்கிறார் குபேந்திரன். தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களைப் (IT Parks) பொறுத்தவரை, தொழில்துறையின் கீழ் உள்ள டிட்கோவும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள எல்காட்டும் இணைந்தும் தனித்தனியாகவும் கட்டிவருகின்றன. சென்னையில் உள்ள டைடல் பார்க், டிட்கோ - எல்காட் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் கட்டப்பட்டது. ஆனால், முதலீட்டின் பெரும்பகுதி டிட்கோவினுடையது என்பதால், அந்த நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மதுரை போன்ற இடங்களில் எல்காட் நிறுவனமே தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை கட்டியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8epg19y9reo
  18. மோடியிடம் போய்ச் சொல்; தன்னையும் சுடச் சொல்லி கெஞ்சிய பெண்; பஹல்காம் தாக்குதலில் வெளியான பகீர் தகவல் காஷ்மீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பிரதமர் மோடியிடம் போய்ச் சொல் என கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணிடம், தீவிரவாதி கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட்டில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் புல்வெளியில் குதிரை சவாரி உள்ளிட்ட கேளிக்கைகளில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அங்கு நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோரத் தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி, ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும் தேடுதல் வேட்டை தொடர்வதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையே, காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வேதனைகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். காஷ்மீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பிரதமர் மோடியிடம் போய்ச் சொல் என கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணிடம், தீவிரவாதி கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலின்போது, கர்நாடகாவைச் சேர்ந்த பல்லவி என்ற பெண், தனது கண்முன்னே கணவர் மஞ்சுநாத்தைப் பறிகொடுத்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தானும், கணவர் மஞ்சுநாத் மற்றும் மகன் அபிஜயாவும் சுற்றுலாவுக்கு பஹல்காம் வந்ததாகவும், பிற்பகல் 1.30 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் தன் கண்முன்னே கணவர் மஞ்சுநாத் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறினார். மேலும், கண்முன்னே கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தன்னையும் தனது மகனையும் சுட்டுக் கொன்று விடுமாறு தீவிரவாதிகளிடம் கெஞ்சியதாகவும், அதற்கு அந்த தீவிரவாதிகளில் ஒருவர், “நான் உன்னை கொல்ல மாட்டேன்.. இங்கே நடந்ததை உங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் போய் சொல்” என கூறியதாகவும் பல்லவி கண்ணீர் மல்க கூறியுள்ளார். https://thinakkural.lk/article/317217 மதத்தை கேட்டு சுட்டுக்கொன்றார்கள்; கணவரை இழந்த பெண் தகவல் தனது கணவர் இஸ்லாமியர் அல்லாதவர் என்ற காரணத்திற்காக தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக காஷ்மீர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட்டில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் புல்வெளியில் குதிரை சவாரி உள்ளிட்ட கேளிக்கைகளில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அங்கு நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் கண்டுமூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோரத் தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி, ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும் தேடுதல் வேட்டை தொடர்வதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையே, காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வேதனைகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன்படி, காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் தனது கணவர் இஸ்லாமியர் அல்லாதவர் என்ற காரணத்திற்காக தீவிரவாதி சுட்டுக் கொன்றதாக பெண் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த பேட்டியில், தனது கணவருடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த தீவிரவாதி, துப்பாக்கி முனையில் தனது கணவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டதாகவும் கூறினார். மேலும் “நீ இஸ்லாமியர் இல்லை” எனக் கூறி கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்த தம்பதி திருமணம் முடிந்து தேனிலவு சுற்றுப்பயணத்துக்காக காஷ்மீர் வந்துள்ளனர். வந்த இடத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. இதற்கிடையே, தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் சடலங்களை கட்டியணைத்து உறவினர்கள் கதறி அழும் காட்சி காண்போரை கணக்கச் செய்தது. இந்தத் தாக்குதலில் இந்துக்களை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி முஸ்லிம் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரின் அனந்த்நாக்கை சேர்ந்த சையத் ஹுசைன் ஷா என்பவர் உயிரிழந்துள்ளார். https://thinakkural.lk/article/317220
  19. அண்ணை, வருடத்தில் ஓரிரு தரம் பாவிக்க வாங்குங்கள் குறிகட்டுவான் ___ அவருடைய உச்சரிப்பை கேலியாக எடுக்கிறார்களா? அல்லது வேண்டுமென்றே உச்சரித்தாரா?!
  20. 23 APR, 2025 | 03:09 PM தம்பகல்ல பொலிஸ் பிரிவின் பஹலவத்த பகுதியில் வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டபோது, ஆயுதங்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஹலவத்த, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டு, 09 மிமீ வகை 05 வெடிமருந்துகள், 25 T56 வெடிமருந்துகள், 03 T56 வெடிமருந்துகள், 01 M16 வெடிமருந்துகள், 04 வெடிமருந்து பைகள், 03 பெல்ட் ஆர்டர்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/212719
  21. 23 APR, 2025 | 03:22 PM விசேட தேவையுடைய நபர்களின் தேவைகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவின் போக்குவரத்துத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதன் ஊடாக சாதகமான திசையை நோக்கி போக்குவரத்துத் துறையை வழிநடத்துவது தொடர்பான இரண்டாவது உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்த உபகுழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் அண்மையில் கூட்டம் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த த. சில்வா, பல்வேறு விசேட தேவையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். விசேட தேவையுடைய நபர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் குறித்து இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. விசேட தேவையுடைய சமூகத்தினருக்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாமை அவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரியதொரு பிரச்சினையாக இருப்பது இங்கு அடையளம் காணப்பட்டது. பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் முறையான அணுகல் வசதிகள் இல்லாமை காரணமாக இயலாமை உடைய நபர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் நிலை காணப்படுவதாகவும், இதற்காகப் பெருந்தொகைப் பணத்தைச் செலவிட வேண்டியிருப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். 2006ஆம் ஆண்டு 01ஆம் இலக்க விசேட தேவையுடையவர்களுக்கான அணுகல் குறித்த ஒழுங்குவிதி பற்றிய வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக விசேட தேவையுடைய சமூகத்தினருக்கு உரிய வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் இந்த உத்தரவுகளைப் பின்பற்றுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினர். அதன்படி, அந்தச் சட்டங்கள் நடைமுறையில் செயல்படுத்தப்படும்போது விசேட தேவையுடைய சமூகம் பெறும் நிவாரணம் குறித்தும் அவர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். சில பேருந்து நடத்துனர்களின் செயல்களால் விசேட தேவையுடைய நபர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிப்பதாக அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவிடம் சுட்டிக்காட்டினர். இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும், விசேட தேவையுடைய நபர்கள் தொடர்பான அணுகுமுறைகளை மேம்படுத்தவும் சட்டம் இயற்ற வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் ஆசனங்கள், சட்டரீதியாக விசேட தேவையுடைய நபர்களுக்கான ஆசனங்களை ஒதுக்க வேண்டியதன் அவசியம், பேருந்துகளில் நிபந்தனையின்றி விசேட தேவையுடைய நபர்களுக்கு இடமளிக்க வேண்டியதன் அவசியம், புகையிரத நிலையங்களில் விசேட தேவையுடைய நபர்களுக்கான தகவல் தொடர்பு வசதியை எளிதாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. செவிப்புலன் அற்ற சமூகத்தினருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து வினவப்பட்டதுடன், அவர்களுக்கு அவற்றை மீண்டும் வழங்குவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, விசேட தேவையுடைய நபர்களின் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளை இரண்டு வாரங்களுக்குள் எழுத்துமூலமாக இந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பெறப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளைப் பரிசீலித்த பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் உபகுழுவின் தலைவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/212716
  22. மன்னாரில் இருந்து ராமர் பாலத்தின் ஆறாவது மணற்திட்டு வரை சுற்றுலா பயணிகளுக்கு படகு சேவை மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்) வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இப் படகுச் சேவை தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் (22) மன்னார் மாவட்ட செயலாளர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கலந்துரையாடலில் வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் பத்திநாதன் மற்றும் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.எம். கீர்த்தி ஸ்ரீ சந்திரரத்ன மற்றும் பிரதேச செயலாளர்,முப்படையினர், பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மே மாதம் 15 ஆம் திகதி இத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். திட்டத்தை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டு நீண்ட காலமாக தாமதமான இந்த திட்டத்தை வெகுவிரைவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நேற்றைய கூட்டத்தில் குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதே நேரம் பாதுகாப்பு ஏற்பாடுகள், பயணிகள் எண்ணிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் கடற்படையினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் எனவும் கூட்டத்தில் கூறப்பட்டது. அடுத்த கட்டமாக சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணம் தொடர்பில் தீர்மானிப்பது எனவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/317214
  23. 23 APR, 2025 | 11:17 AM கட்டுநாயக்க, ஆண்டியம்பலம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கட்டுநாயக்க, ஆண்டியம்பலம பிரதேசத்திற்கு நேற்றைய தினம் காலை 10.00 மணியளவில் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் சென்ற துப்பாக்கிதாரிகள் இருவர், வட்டிக்கு பணம் கோரும் போர்வையில் 33 வயதுடைய வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். வட்டிக்கு பணம் கோரி வந்த துப்பாக்கிதாரிகள் தொடர்பில் சந்தேகமடைந்த வர்த்தகர் அவர்களை வீட்டிற்குள் வைத்து கதவை மூடியுள்ளார். இதனை அறிந்துகொண்ட துப்பாக்கிதாரிகள் வர்த்தகரை சுட்டுக்கொல்ல முயன்றுள்ளனர். இதன்போது துப்பாக்கிதாரிகளிடம் இருந்த துப்பாக்கி செயலிழந்துள்ளது. பின்னர் வர்த்தகரும் இரு துப்பாக்கிதாரிகளும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, துப்பாக்கிதாரிகள் இருவரும் வர்த்தகரின் வீட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டின் மதிலிலிருந்து கீழே குதித்துள்ளனர். இதன்போது ஒரு துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ள நிலையில் மற்றைய துப்பாக்கிதாரியின் கால் வீட்டின் மதிலில் மோதி காயமடைந்துள்ளது. பின்னர் காயமடைந்த துப்பாக்கிதாரி தனது கையிலிருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொல்ல முயன்ற போது துப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த கட்டுநாயக்க பொலிஸார் காயமடைந்த துப்பாக்கிதாரியை கைது செய்துள்ளனர். அம்பாறை பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய துப்பாக்கிதாரியே கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் காயமடைந்த துப்பாக்கிதாரி சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/212706
  24. இலங்கையிலுள்ள தீவிரவாதிகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். உடனான நேரடி தொடர்பு குறித்தம் முதல் எச்சரிக்கையை பாராளுமன்றம் ஏன் புறக்கணித்தது என்பதை கண்டறிய முயற்சியினை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முன்னாள் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் டாக்டர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, “ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை சூத்திரதாரிகளையும் பெரும் சதித்திட்டங்களையும் பற்றிப் பேசுபவர்கள், அந்தக் கூறப்படும் தொடர்பு நவம்பர் 18, 2016 அன்று பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டதை மறந்து விட்டார்கள், அப்போது நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சராக இருந்த நான், அந்தத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தினேன். ஒரு காலத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக இருந்தவர், அப்போதைய இராணுவ புலனாய்வு இயக்குநரகத்தின் (DMI) தலைவருடன் நிலைமையை உறுதிப்படுத்திய பின்னர் அந்த அறிவிப்பை அம்பலப்படுத்தினேன். உடனடியாக விசாரணையைத் தொடங்குவதற்குப் பதிலாக, யஹாபாலன அரசாங்கம் என்னை குறிவைத்தது. உண்மை என்னவென்றால், உயர்மட்ட யாகபாலனா தலைமை, குறிப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, விசாரணையைத் தொடர தைரியம் இல்லை. ஏனெனில், அனைத்து முஸ்லிம் எம்.பிக்களும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளைப் பொருட்படுத்தாமல், என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரினர். நான்கு பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த 32 முஸ்லிம்கள் குழு ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் இணைந்தது குறித்து பாராளுமன்றத்தில் அவர் வெளியிட்ட தகவல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சீனாவிடம் ஒப்படைப்பதை எதிர்த்த பின்னர், 2017 ஆகஸ்ட் மாத இறுதியில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதற்கு பங்களித்தது. அத்துடன், தனக்கு எந்த எம்.பியின் ஆதரவும் கிடைக்கவில்லை. இருப்பினும், ஒரு கட்டத்தில், அரசியலமைப்பு சபையில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஜான் செனவிரத்ன, வளர்ந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல் பூஜித் ஜெயசுந்தரவால் நிலைமையைக் கையாள முடியாத அளவுக்கு இருந்தது என்று அவருடன் ஒப்புக்கொண்டார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், ஏப்ரல் 2016இல் ஜெயசுந்தர ஐ.ஜி.பியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்ததாகக் கூறினார். ஆனால் பாராளுமன்றத்தில் அவர் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி அப்போதைய மாநில புலனாய்வு சேவை (SIS) இயக்குநர் (SIS) டிஐஜி நிலந்த ஜெயவர்தனவிடம் விளக்கம் கேட்டதாக ஜனாதிபதி வழக்கறிஞர் கூறினார். என் எச்சரிக்கைக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று SIS தலைவர் அறிவித்தபோது, தேசிய பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். வெளிப்படையாக ஜனாதிபதியும் பிரதமரும் SIS தலைவரின் கூற்றை ஏற்றுக்கொண்டனர். 40க்கும் மேற்பட்ட ஈஸ்டர் ஞாயிறு வழக்குகள், அதிகாரத்தில் உள்ள பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்தால் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படலாம். P CoI நடவடிக்கைகளின் போது, சஹ்ரான் ஹாஷிமின் நடவடிக்கைகள், குறிப்பாக கிழக்கில், ஜூன் 2017 இல் காவல்துறை சட்டமா அதிபர் துறையின் ஆலோசனையை கோரியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் 2017இல் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு வரை இந்த வடயம் ஒருபோதும் கவனிக்கப்படவில்லை. நவம்பர் 2016இல் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டதிலிருந்து, ஊடக அறிக்கைகளை பொலிஸார் ஆராய்ந்திருந்தால், ISIS வெளிப்பாட்டை எதிர்த்தவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். அத்துடன், ஏழு தற்கொலை குண்டுதாரிகளில் இருவரின் தந்தை 2015 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்தால் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான சூழ்நிலைகளை விளக்க முடியுமா? முன்னாள் ஏஜி டப்புல டி லிவேரா, பிசி, மே 24, 2021 அன்று ஓய்வு பெறுவதற்கு முன்னதாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை ஒரு பெரிய சதி என்று கூறிய பிறகு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) உடன் ஒத்துழைக்க மறுத்ததற்கான காரணத்தையும் விளக்க வேண்டும். அவரது கூற்று முழு விசாரணையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால், காவல்துறை அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் தீவிரவாதத்திற்கு எதிரான பொதுவான நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டிருந்தால் ஈஸ்டர் ஞாயிறு படுகொலையைத் தவிர்த்திருக்கலாம். 2019ஆம் ஆண்டு நடுப்பகுதியில், வனாத்தவில்லுவில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும், யகாபாலன அரசாங்கம் தீவிரவாத சக்திகளை தொடர்ந்து பாதுகாத்து வருவதாக ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். https://thinakkural.lk/article/317206
  25. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பள்ளிப்படிப்பையும் பாதியிலேயே நிறுத்திய அந்த பெண், தன் அம்மாவுடன் கூலி வேலைக்கு சென்றுள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 22 ஏப்ரல் 2025 எச்சரிக்கை: இந்த செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை அளிக்கக்கூடும் 2015-ஆம் ஆண்டில், 12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி ஒருவர், 10 ஆண்டுகள் கழித்து இளம்பெண்ணாக, நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார். குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, 10 ஆண்டுகள் சொந்த குடும்பத்தில் இருந்து, வெளியேற்றப்பட்ட அந்த பெண் இந்த ஆண்டு ஜனவரி மாதம், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈட்டை வழங்க நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தப்பட்டு, சொந்த பெயரை மாற்றிக் கொண்டு, வெளியூரில் சென்று வேறொரு அடையாளத்தில் வாழ்ந்த அந்த சிறுமி, 10 ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தது எப்படி? 10 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்தது எப்படி? காவல்துறையினர் எவ்வாறு அந்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்தனர்? வழக்கில் நடந்தது என்ன? 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த சிறுமியின் தாயார் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். ஆனால் புகார் அளித்து வெறும் இரண்டே நாளில் அந்த சிறுமி, அவருடைய அம்மா மற்றும் அப்பெண்ணின் உடன் பிறந்தோர் இரண்டு பேரும் எங்கே சென்றார்கள் என்று காவல்துறையினருக்கு தெரியவில்லை. 10 ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரம், எம்.கே.பி. நகர் காவல்துறையினர் பாதுகாப்புடன் 22 வயது இளம்பெண்ணாக திரும்பி வந்த அந்த சிறுமி, தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான தகவலை முதன்முறையாக சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்தார். சென்னையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் வசித்து வந்த வீட்டின் உரிமையாளரின் மருமகனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதையும், அதனைத் தொடர்ந்து அவர் திண்டுக்கல்லுக்கு கடத்திச் செல்லப்பட்டு மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதையும் அவர் நீதிமன்றத்தில் உறுதி செய்ததோடு, குற்றவாளியையும் அடையாளம் காட்டியுள்ளார். புகார் அளித்த சிறுமி காணாமல் போனது எப்படி? அப்போது வட சென்னையில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார் அந்த சிறுமி. 7-ஆம் வகுப்பு மாணவியான அவர் தொடர்ச்சியாக பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி அன்று அந்த சிறுமி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். அவருடைய குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் அவர் கிடைக்கவில்லை என்பதால் அவரைக் காணவில்லை என்று எம்.கே.பி. காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பிய அந்த சிறுமி, திண்டுக்கலுக்கு அவர் கடத்திச் செல்லப்பட்டதாகவும், அங்கே அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரின் அம்மா, அதே காவல்நிலையத்தில் அவர் வீட்டு உரிமையாளரின் மருமகன் மீது புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். "ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் அந்த பெண், அவரின் உடன்பிறந்தோர், மற்றும் அம்மா அனைவரும் சென்னையில் இருந்து வெளியேறிவிட்டனர். காவல்துறையினர் தரப்பில் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தியும் அந்த சிறுமியும் அவரின் குடும்பத்தினரும் எங்கே சென்றனர் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த பெண்ணின் தாயார் அளித்த புகார், போக்சோ வழக்காக பதிவு செய்யப்பட்டு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது," என்று தெரிவிக்கிறார் தற்போது எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவல்துறை அதிகாரி. ராஜஸ்தான்: 18 வயதில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணின் 32 வருட சட்டப் போராட்டம்12 செப்டெம்பர் 2024 தமிழ் சினிமா: பாலியல் குற்றங்களை தடுக்க நடிகர் சங்கம் எடுத்துள்ள புதிய நடவடிக்கைகள் என்ன?12 செப்டெம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எம்.கே.பி.நகர் காவல் நிலைய அதிகாரிகள் அந்த பெண்ணை கண்டுபிடித்தனர் குடும்பத்தில் இருந்து விரட்டப்பட்ட சிறுமி இந்த வழக்கில், ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ். அனிதா, இது குறித்து பேசும் போது, "இங்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் அவர்களின் குடும்பத்தால் கைவிடப்படும் போது என்ன ஆகும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. கூட்டுக்குடும்பத்தில் வசித்த அந்த சிறுமிக்கு நடந்த குற்றத்தை வன்முறையாக அவரின் அப்பா காணவில்லை. மாறாக அவரின் குடும்பத்திற்கு ஏற்பட்ட களங்கமாக கருதினார். அதனால் சிறுமி, சிறுமியின் அம்மா, மற்றும் உடன் பிறந்தோர் ஆகியோரை சென்னையில் இருக்க வேண்டாம் என்று கூறி துரத்திவிட்டிருக்கிறார் அவருடைய அப்பா. பெண்ணை சரியாக வளர்க்கவில்லை என்று கூறி தன்னுடைய மனைவியிடம் இருந்து முற்றிலுமாக பிரிந்துவிட்டார் அவர். குடும்ப உறவுகள் இந்த ஒரு நிகழ்வால் முறிந்து போனது. சொந்த அடையாளங்களை மறைத்துக் கொண்டு அந்த சிறுமியும், அம்மாவும், உடன் பிறந்தவர்களும் தென் தமிழகத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் வசிக்க ஆரம்பித்தனர். மிகவும் வயதான சிறுமியின் பாட்டி தான், வேலைக்குச் சென்று அந்த நான்கு பேரையும் காப்பாற்றினார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பள்ளிப்படிப்பு, வறுமை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அந்த சிறுமியின் தாயார் மனதளவில் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தார்," என்று கூறுகிறார். இந்த 10 ஆண்டுகளில் அந்த சிறுமியின் அப்பாவும் இறந்து போக, சென்னையில் உள்ள உறவினர்கள் யாரும் அவர்களிடம் பேசுவதில்லை என்று தெரிவிக்கிறார் எம்.கே.பி. காவல்நிலைய அதிகாரி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரண்டு முறைக்கு விசாரணைக்காக அப்பெண் சென்னை அழைத்துவரப்பட்டார் (சித்தரிப்புப் படம்) காவல்துறையினர் அவரை கண்டுபிடித்தது எப்படி? "அந்த சிறுமி காணாமல் போய்விட்டார் என்று கூறி இந்த வழக்கு முடித்து வைக்கப்படவில்லை. ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணை வரும் போதும் எம்.கே.பி. காவல் துறையினர், அந்த சிறுமியை கண்டுபிடிக்க இயலவில்லை என்று கூறி வந்தனர். கடந்த ஆண்டு இறுதியில் நீதிமன்றம், காவல்துறை துணை ஆணையருக்கு 'நோட்டீஸ்' அனுப்பியது. இந்த சிறுமியை கட்டாயம் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று காவல்துறைக்கு அழுத்தம் தந்தது நீதிமன்றம்," என்கிறார் அனிதா. "இது எங்களுக்கு சவாலானதாக இருந்தது. ஏன் என்றால், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நகரத்தை விட்டு வெளியே சென்றவர்களை எப்படி தேடி கண்டுபிடிப்பது? புகார் அளிக்கும் போது இருந்த ஒரே ஒரு செல்போன் எண்ணை வைத்து, எங்கள் காவல்நிலைய காவலர் தன்னுடைய தேடுதல் பணியை துவங்கினார். மூன்று வார கடும் தேடுதல் பணிக்குப் பிறகு அந்த பெண்ணின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது," என்கிறார் எம்.கே.பி. காவல்நிலைய அதிகாரி. "அவரை அவருடைய சிறிய வீட்டில் வைத்து பார்த்த போது, மிகவும் அச்சத்துடன் காணப்பட்டார் அந்த பெண். நீதிமன்றத்திற்கு வர மிகவும் தயக்கம் காட்டினார் அவர். அவரின் அச்சத்திற்கு காரணம் இருந்தது . ஆனால் அவருக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இரண்டு நாட்கள் அந்த பெண்ணுக்கு நம்பிக்கையை அளித்தோம். அதன் பிறகு அவர் பாதுகாப்பாக போக்சோ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். பிறகு நீதிபதியிடம் நடந்த விபரங்களைத் தெரிவித்தார். குற்றவாளிக்கு எதிரான தன்னுடைய வாக்குமூலத்தை அவர் பதிவு செய்தார்," என்று கூறுகிறார் அந்த அதிகாரி. இரண்டு முறைக்கு விசாரணைக்காக அப்பெண் சென்னை அழைத்துவரப்பட்டார். கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி அன்று, குற்றவாளிக்கு தண்டனையை உறுதி செய்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 15 லட்சம் நஷ்டஈட்டை அரசு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது போக்சோ சிறப்பு நீதிமன்றம். தற்போது குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அரிதாகவே நடக்கும் நிகழ்வு சென்னை உயர் நீதிமன்றத்தில் போக்சோ உள்ளிட்ட வழக்குகளுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் வி. அனுஷா இது குறித்து பேசும் போது, "போக்சோ வழக்குகளைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட நபர் தான் தனக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டும். அவர் காணாமல் போய்விட்டார் என்று வழக்கை முடித்துவைக்காமல், அந்த பெண் திரும்பி வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தது இந்த வழக்கில் தனித்துவமான ஒன்றாக இருக்கிறது," என்று கூறினார். "12 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார். 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதற்காக அவர் நீதிக்காக போராட வேண்டாம் என்றில்லை. அவர் அந்த மனநிலையைப் பெறுவதற்கான கால அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம். அவரின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது," என்றும் அவர் குறிப்பிட்டார். "பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்வது இந்த அரசாங்கத்தின் கடமை. ஏற்கனவே அந்த சிறுமி கடத்தப்பட்டு மீண்டும் வீடு திரும்பி வந்த நிலையில், காவல்துறையினர் அப்போதே எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால், இந்த வழக்கில் இவ்வளவு தாமதமாக நீதி கிடைத்திருக்காது," என்றார் அனுஷா. மேற்கொண்டு பேசிய அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதுகாப்பு, மனநல ஆலோசனை, படிப்பை மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை உறுதி செய்ய தவறிவிட்டது மாநில அரசு என்றும் அவர் தெரிவித்தார். பெண்கள் மீது அதிகரிக்கும் டிஜிட்டல் வன்முறைகள் – தற்காத்துக்கொள்வது எப்படி?31 ஆகஸ்ட் 2024 மனைவியை கணவன் வல்லுறவு செய்வது குற்றமாகாதா? உயர் நீதிமன்ற தீர்ப்பால் எழும் கேள்விகள்6 மே 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES நம்பிக்கையுடன் இருங்கள் "இந்த குற்றச்சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்திருக்கலாம். இன்று உலகம் வெகுவாக மாறிவிட்டது. பெற்றோர்கள், இது போன்ற ஒரு சூழலில் குழந்தைக்கு உற்ற பாதுகாப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் தங்களுக்கு நடந்த பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வர இயலும். பாதிக்கப்பட்ட உடனே புகார் அளிப்பது சிறந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் உறுதி செய்ய சட்டம் வழி வகை செய்கிறது. வேகமாக விசாரணை நடத்தி, 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது, பாதிப்பின் தன்மையை பொறுத்து மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட இதர செலவுகளுக்கு சிறுமிக்கு தேவையான நிதியை வழங்குவது, பெண் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பெரும்பாலான வழக்குகளில் ஆஜர்படுத்துவது, மனநல ஆலோசனை வழங்குவது, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் பாதுகாப்பற்ற சூழ்நிலை கொண்டிருந்தால் அவருக்கு காப்பகங்களில் இடம் அளிப்பது போன்றவற்றையும் போக்சோ சட்டம் உறுதி செய்கிறது. எனவே பாதிக்கப்பட்ட சிறுமிகளோ, பெண்களோ அல்லது பெற்றோர்களோ தயக்கம் காட்டாமல் புகாரளிக்க முன்வர வேண்டும்," என்றும் தெரிவிக்கிறார் எஸ்.அனிதா. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9djv5djx9vo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.