Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 'புதின் என்னை தவறாக வழிநடத்துகிறார் என்று தோன்றுகிறது' - ஸெலென்ஸ்கியை சந்தித்த பிறகு டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,ANDRIY YERMAK/TELEGRAM கட்டுரை தகவல் எழுதியவர், எம்மா ரோசிட்டர், பால் கிர்பி மற்றும் இயன் ஐக்மேன் பதவி, பிபிசி நியூஸ் 27 ஏப்ரல் 2025, 03:28 GMT வாடிகனில், போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கின் போது யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதைத் தொடர்ந்து 'யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் விருப்பம்' குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ரோமில் இருந்து கிளம்பிய பிறகு சமூக ஊடகங்களில் பதிவிட்ட டிரம்ப், "இந்த வார தொடக்கத்தில் யுக்ரேனின் கீவ் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களை கண்ட பிறகு, புதின் என்னை தவறாக வழிநடத்துகிறாரோ என்று அஞ்சுகிறேன். மேலும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது ஏவுகணைகளை வீசுவதற்கு புதினுக்கு எந்த காரணமும் இல்லை" என்றும் கூறினார். போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு தொடங்குவதற்கு சற்று முன்பு, செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் டிரம்பும் ஸெலென்ஸ்கியும் ஒரு தீவிர விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். ஸெலென்ஸ்கியுடனான 15 நிமிட சந்திப்பு 'மிகவும் பயனுள்ளதாக இருந்தது' என வெள்ளை மாளிகை விவரித்தது. யுக்ரேன் அதிபர், 'இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக மாறும் சாத்தியம்' இருப்பதாகக் கூறினார். கடந்த பிப்ரவரியில், அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நடந்த கடுமையான வார்த்தை மோதலுக்குப் பிறகு, யுக்ரேன் அதிபருடனான டிரம்பின் முதல் நேரடி சந்திப்பு இதுவாகும். தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட டிரம்ப், "யுக்ரேன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களைப் பார்த்தால், 'ஒருவேளை அவர் (புதின்) போரை நிறுத்த விரும்பவில்லை என்றும், அவர் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் எனக்குத் தோன்றுகிறது. தற்போது அவரை 'நிதிரீதியாக' அல்லது 'இரண்டாம் நிலைத் தடைகள்' மூலம் வேறுமாதிரியாக கையாள வேண்டுமா?" என்று தெரிவித்துள்ளார். யுக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை பட மூலாதாரம்,ANDRIY YERMAK/TELEGRAM படக்குறிப்பு,வாடிகனில், டிரம்ப் மற்றும் ஸெலென்ஸ்கியுடன் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் மற்றும் பிரான்ஸ் அதிபர் மக்ரோங். வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷ்ய அதிபர் இடையே நடந்த மூன்று மணி நேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 'ரஷ்யாவும் யுக்ரேனும் ஒரு ஒப்பந்தத்திற்கு மிக நெருக்கமாக' இருப்பதாக டிரம்ப் முன்னர் கூறியிருந்தார். இதற்கிடையில், 'முன்நிபந்தனைகள் ஏதும் இல்லாமல் யுக்ரேனுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா தயாராக இருப்பதாக, புதின் விட்காஃப்பிடம் உறுதிப்படுத்தியதாக' ரஷ்ய அதிபர் அலுவலகம் சனிக்கிழமை (ஏப்ரல் 26) அன்று தெரிவித்துள்ளது. கடந்த முறை நடந்த சந்திப்பின்போது, டிரம்ப் ஸெலென்ஸ்கியிடம் 'உங்களிடம் வேறு வாய்ப்புகள் இல்லை' என்று கூறியதுடன், ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஸெலென்ஸ்கியால் வெற்றிபெற முடியாது எனவும் கூறினார். இந்த வாரம் அவர் அந்த செய்தியை மீண்டும் கூறினார், "யுக்ரேன் தலைவரிடம் வெற்றி பெறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை." யுக்ரேன்தான் போரைத் தொடங்கியதாக டிரம்ப் முன்னர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஸெலென்ஸ்கி ஒரு தடையாக இருப்பதாக பலமுறை கூறியிருந்தார். ஆனால் சனிக்கிழமை நடந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை மிகவும் நேர்மறையான தொனியை வெளிப்படுத்தியது, அதே நேரத்தில் ஸெலென்ஸ்கி இந்த சந்திப்பை "நம்மால் கூட்டு முடிவுகளை அடைய முடிந்தால், இந்தச் சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக மாறும்" என்று விவரித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பாக இரண்டு புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அதில் அமெரிக்கத் தலைவர் நீல நிற 'சூட்' உடையிலும், யுக்ரேன் அதிபர் கருப்பு நிற மேல் சட்டை மற்றும் கால்சட்டையிலும், ஒருவருக்கொருவர் எதிரே அமர்ந்து தீவிர உரையாடலில் ஈடுபட்டிருப்பதைக் காண முடிகிறது. யுக்ரேனின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவும் இந்த சந்திப்பின் படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, அதில் "இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் முக்கியத்துவத்தை விவரிக்க வார்த்தைகள் தேவையில்லை. செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அமைதிக்காக உழைக்கும் இரண்டு தலைவர்கள்" என்ற தலைப்புடன் பதிவிட்டார். "இது போர் அறைகூவல்" சிந்து நதிநீர் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதை எச்சரிக்கும் பாகிஸ்தான் அமைச்சர்26 ஏப்ரல் 2025 சிந்து நதிநீரை இந்தியா உடனே நிறுத்த முடியுமா? - பாகிஸ்தான் அடையப்போகும் பாதிப்புகள் என்ன?26 ஏப்ரல் 2025 பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தலைவர்களை சந்தித்த ஸெலென்ஸ்கி பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு,பிரிட்டன் தூதரின் இல்லமான 'வில்லா வோல்கோன்ஸ்கியில்' பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரைச் சந்தித்த ஸெலென்ஸ்கி யுக்ரேனிய தூதுக்குழுவால் வெளியிடப்பட்ட மற்றொரு படம், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் மற்றும் பிரான்சின் மக்ரோங் ஆகியோருடன், டிரம்ப் மற்றும் ஸெலென்ஸ்கி நிற்பதைக் காட்டியது. பிரிட்டன் பிரதமரும் பிரெஞ்சு அதிபரும், டிரம்ப் மற்றும் ஸெலென்ஸ்கியை ஒன்றிணைக்க உதவியதாக இதன் உட்குறிப்பு இருந்தது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, டிரம்பும் ஸெலென்ஸ்கியும் பசிலிக்காவின் படிகளில் இறங்கி, இறுதிச் சடங்கு நடக்கும் பகுதியை நோக்கிச் சென்றனர். அங்கு ஸெலென்ஸ்கி கூட்டத்தினரின் கைதட்டலுடன் வரவேற்கப்பட்டார். பிறகு இரு தலைவர்களும் முன் வரிசையில் தங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்தனர். தனது மறையுரையில், போப் பிரான்சிஸின் அமைதிக்கான இடைவிடாத அழைப்புகளைப் பற்றி கார்டினல் ஜியோவானி பாட்டிஸ்டா ரே பேசினார். "'சுவர்களை அல்ல, பாலங்களைக் கட்டுங்கள்' என்பது போப் பிரான்சிஸ் பலமுறை திரும்பத் திரும்பச் சொன்ன அறிவுரை" என்று கார்டினல் கூறினார். பஹல்காம் தாக்குதல்: மோதி அரசின் ஜம்மு - காஷ்மீர் கொள்கை தோல்வியா? - ஓர் அலசல்26 ஏப்ரல் 2025 பாகிஸ்தான் வான்வெளியை மூடுவதால் இந்திய பயணிகளுக்கு என்ன பாதிப்பு?26 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாடிகனில், போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் டிரம்ப் மற்றும் ஸெலென்ஸ்கி யுக்ரேன் அதிகாரிகள், இரு தலைவர்கள் மீண்டும் சந்திப்பது சாத்தியம் என்று பேசியிருந்தனர். ஆனால் டிரம்பின் வாகன அணிவகுப்பு உடனடியாக செயின்ட் பீட்டர்ஸிலிருந்து புறப்பட்டது, சிறிது நேரத்திற்குப் பிறகு அவரது விமானம் ரோமில் இருந்து புறப்பட்டது. இருப்பினும், ஸெலென்ஸ்கி, வாடிகனுக்கான (Holy See) பிரெஞ்சு தூதரகம் அமைந்துள்ள 'வில்லா போனபார்ட்டின்' தோட்டத்தில் பிரான்சின் அதிபர் மக்ரோங்கை சந்தித்தார். பின்னர் அவர் பிரிட்டன் தூதரின் இல்லமான 'வில்லா வோல்கோன்ஸ்கியில்' பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரைச் சந்தித்தார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0el2d45rxeo
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 57 நிமிடங்களுக்கு முன்னர் 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீர' பாடலின் காப்புரிமை தொடர்பான வழக்கில் ரூ.2 கோடியை செலுத்துமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர் தொடந்த வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான வழக்கில் என்ன நடந்தது? காப்புரிமை தொடர்பான சர்ச்சைகள் தொடர்வது ஏன்? டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர் (Faiyaz Wasifuddin Dagar) மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். 'சிவ ஸ்துதி' - 'வீரா ராஜ வீர' சர்ச்சை மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் 'வீரா ராஜ வீர' என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடல் தனது தந்தை நசீர் ஃபயாசுதீன் தாகர் மற்றும் மாமா ஜாஹிருதீன் தாகர் ஆகியோர் சேர்ந்து வெளியிட்ட 'சிவ ஸ்துதி' என்ற பாடலில் இருந்து நகல் எடுக்கப்பட்டுள்ளதாக, தனது மனுவில் வசிஃபுதின் கூறியிருந்தார். தனது தந்தை மற்றும் மாமா ஆகியோர் 1989 மற்றும் 1994 ஆம் ஆண்டு இறந்ததைத் தொடர்ந்து சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தீர்வு மூலம் தனக்கு காப்புரிமை (Copy right) வழங்கப்பட்டதாக மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். 'வீரா ராஜ வீர' பாடல் ஒலிப்பதிவில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் (credit) கொடுக்கப்படவில்லை எனவும் வசிஃபுதின் தெரிவித்திருந்தார். ஆகவே, 'பொன்னியின் செல்வன் 2' படத்தைத் தயாரித்த மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். ஏ .ஆர்.ரஹ்மான் சொன்னது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், வழக்கு விசாரணையின்போது மேற்கண்ட குற்றச்சாட்டுகளை ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு மறுத்துள்ளது. 'சிவ ஸ்துதி' என்பது துருபத் வகையைச் சேர்ந்த பாரம்பரிய இசை எனவும் 'வீரா ராஜா வீர' பாடல், இந்துஸ்தானி மரபுகளைத் தாண்டி மேற்கத்திய இசையின் அடிப்படைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் வாதிடப்பட்டது. 'பொதுத் தளத்தில் உள்ள கிளாசிக்கல் படைப்புகள் மீது எந்த பிரத்யேக உரிமையையும் யாரும் கொண்டாட முடியாது' எனவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 25) டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங் தீர்ப்பளித்தார். 117 பக்க தீர்ப்பு - நீதிபதி கூறியது என்ன? 117 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், 'வீரா ராஜா வீர' பாடல், சில மாற்றங்களுடன் 'சிவ ஸ்துதி' பாடலின் இசையை அடிப்படையாக கொண்டும் ஈர்க்கப்பட்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். 'இந்துஸ்தானி இசை மரபுகளை அடிப்படையாகக் கொண்ட இசையமைப்புகள், அதன் அசல் (Original) தன்மையை வெளிப்படுத்தினால் காப்புரிமை சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட வேண்டும்' என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 'ராகம், தாளம் போன்ற அடிப்படை விஷயங்கள் பொதுத்தளத்தில் இருந்தாலும் பாரம்பரிய கட்டமைப்புகளைப் பயன்படுத்தி தனித்துவமான இசைப் படைப்புகளை உருவாக்கும் இசையமைப்பாளர்கள், காப்புரிமை சட்டம் 1957ன்கீழ் உரிமை உடையவர்கள்' என நீதிபதி பிரதீபா எம் சிங் கூறியுள்ளார். "அனைத்து பாரம்பரிய இசை அமைப்புகளும் ச,ரி,க,ம,ப,த,நி என எட்டு ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டவை" எனக் கூறியுள்ள நீதிபதி, "அனைத்து ஆங்கில படைப்புகளும் A to Z எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டவை" எனக் கூறியுள்ளார். "இலக்கணத்துக்கு (grammar) எழுத்தாளர்கள் யாரும் உரிமை கொண்டாடுவதில்லை. ஆனால், தங்களின் படைப்புகளுக்கு உரிமை கொண்டாடுகின்றனர். அதுபோலவே ராகமும் பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை" என நீதிபதி குறிப்பிட்டார். "இரண்டும் ஒரே மாதிரியாக உள்ளன" பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெல்லி உயர் நீதிமன்றம் தவிர, 'வீரா ராஜா வீர' பாடலின் மையக் கரு என்பது வெறுமனே ஈர்க்கப்பட்டதல்ல எனக் கூறியுள்ள நீதிபதி, "அந்தப் பாடலைக் கேட்பவரின் பார்வையில் சிவ ஸ்துதியின் ஸ்வரங்கள் மற்றும் செவியில் தாக்கம் ஆகியவை உண்மையில் ஒரே மாதிரியாக உள்ளன" எனக் கூறியுள்ளார். அந்தவகையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு மனுதாரரின் உரிமைகளை மீறுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அனைத்து ஓடிடி மற்றும் ஆன்லைன் தளங்களில் இந்தப் பாடலுக்குள்ள கிரடிட் ஸ்லைடை (Credit slide) மாற்ற வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதாவது, 'மறைந்த உஸ்தாத் நசீர், ஃபயாசுதீன் தாகர் மற்றும் ஜாஹிருதீன் தாகர் ஆகியோரின் சிவ ஸ்துதியை அடிப்படையாக கொண்ட இசையமைப்பு என மாற்ற வேண்டும்' என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி ரூபாயை டெபாசிட் செலுத்துமாறும் இந்த தொகை வழக்கின் விசாரணை முடிவுகளுக்கு உட்பட்டது எனவும் மனுதாரருக்கு செலவாக 2 லட்ச ரூபாயை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். "தன்னுடைய பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு இளையராஜா வழக்குத் தொடர்ந்த பிறகே இதுபோன்ற விஷயங்கள் வெளியில் வருகின்றன" எனக் கூறுகிறார், சினிமா விமர்சகர் ஆர்.எஸ்.அந்தணன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "காப்புரிமை தொடர்பான விவகாரங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் கெடுபிடி காட்டுவதற்கு வாய்ப்பில்லை. அவர், பணத்தைக் கொடுப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்" என்கிறார். காப்புரிமை சர்ச்சைகள் பட மூலாதாரம்,ILAIYARAAJA/FACEBOOK கடந்த 10 ஆண்டுகளாகவே தனது பாடல்களைப் பயன்படுத்துவோர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை, இசையமைப்பாளர் இளையராஜா எடுத்து வருகிறார். 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், இதை மேற்கோள் காட்டியுள்ளார். '2014 ஆம் ஆண்டு முதல் எனது பாடல்களைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை செல்லும். அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என இளையராஜா அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதியன்று நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தான் இசையமைத்த மூனறு பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக, படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். 'குட் பேட் அக்லி' படத்தில் 'ஒத்த ரூபாயும் தாரேன்', 'என் ஜோடி மஞ்சள் குருவி' மற்றும் 'இளமை இதோ இதோ' ஆகிய பாடல்களைக் குறிப்பிட்டு ரூ.5 கோடி ரூபாய் இழப்பீட்டை இளையராஜா கேட்டுள்ளார். "இசை தொடர்பான உரிமைகளை அறிந்தவர்கள், நீதிமன்றங்களை நாடி தங்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை எடுத்து வருவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்" எனக் கூறுகிறார் வழக்கறிஞர் சரவணன். இவர் காப்புரிமை தொடர்பாக இளையராஜா தொடர்ந்துள்ள வழக்குகளை நடத்தி வருகிறார். காப்புரிமை கோருவது ஏன்? தொடர்ந்து பேசிய சரவணன், "தான் இசையமைத்த பாடலுக்கு இளையராஜா எவ்வாறு உரிமை கோர முடியும் எனப் பலரும் கேட்டனர். தற்போது அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டனர்" என்கிறார். "ஒரு திரைப்படத்தை தயாரிக்கும்போது இசை, பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றுக்கும் சேர்த்து பணம் கொடுக்கப்படுகிறது. அந்தப் படம் வெளிவந்த பிறகு முழு படத்தையும் விற்கலாம். அப்போது பாடல்களுடன் சேர்த்து படத்தை வெளியிடலாம். ஆனால், பாடல்களை மட்டும் தனியாக பயன்படுத்தும்போது அதன் உரிமை இசையமைப்பாளருக்கு மட்டுமே உள்ளது. இது அவரின் இசைப் பணிக்கான உரிமை (Musical rights). இது அறிவுசார் சொத்துரிமையில் வரும்" என்கிறார் சரவணன். இசையமைப்பாளர்களுக்கு அறிவுசார் சொத்துரிமை என்று ஒன்று உள்ளது என்பதை இளையராஜா நிரூபித்துள்ளதாகவும் காப்புரிமை சட்டத்தை மீறினால் இழப்பீடு கோர முடியும் எனவும் அவர் தெரிவித்தார். "உரிய முறையில் சொல்லவில்லை" "பொருளாதார பின்னணி உள்ளவர்களால் காப்புரிமை தொடர்பான வழக்குகளை நடத்தி தீர்வை பெற முடியும். ஆனால், எங்களைப் போன்றவர்களுக்கு அது சாத்தியமில்லை" எனக் கூறுகிறார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கர்ணன். 2021 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'கர்ணன்' திரைப்படத்தில், 'கண்டா வரச் சொல்லுங்க' என்ற பாடம் இடம்பெற்றிருந்தது. 'இது தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் பாடல்' என்ற சர்ச்சை கிளம்பியது. படத்தின் டைட்டில் கார்டில் சுந்தர்ராஜனின் பெயர் இடம்பெற்றிருந்தது. 'ஆனால், தங்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை' என சுந்தர்ராஜனின் வாரிசுகள் குற்றம் சுமத்தியிருந்தனர். "பிறரின் பாடல்களை இசையமைப்பாளர்கள் கையாளும் போது, அதற்குரிய அங்கீகாரத்தைக் கொடுக்க வேண்டும். அதைத் தங்களின் பாடல் போல பயன்படுத்துவது வேதனையைத் தருகிறது" என பிபிசி தமிழிடம் கூறினார், கர்ணன். 'கண்டா வரச் சொல்லுங்க' பாடல் தொடர்பான சர்ச்சை, ஊடகங்களில் வெளியான பிறகே தங்களுக்குத் தெரியும் எனவும் கர்ணன் குறிப்பிட்டார். பாடல்களால் புகழ் கிடைத்தது, ஆனால்? பட மூலாதாரம்,MARISELVARAJ/X தொடர்ந்து பேசிய அவர், "பல திரைப்படங்களில் என் அப்பாவின் பாடல்களை பயன்படுத்தியுள்ளனர். நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" எனக் கூறுகிறார். "பிரபல கேசட் நிறுவனம் ஒன்றுக்கு என் தந்தை பாடல்களை எழுதி பாடிக் கொடுத்திருந்தார். அதன் உரிமையாளரிடம் நாங்கள் கேட்டபோது, 'பாடியதற்கு பணம் கொடுத்துவிட்டேன். அது என்னுடைய பாட்டு' எனக் கூறினார். ஆனால், அவர்களுக்கு பாடிக் கொடுப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே (1990) மதுரை வானொலி நிலையம், தூத்துக்குடி வானொலி நிலையம் ஆகியவற்றில் இதே பாடல்களை எனது அப்பா பாடியுள்ளார். பிறகு எப்படி அவர்கள் உரிமை கோர முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார். திருவிழா காலங்களிலும் கச்சேரிகளிலும் பாடுவது தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் தொழிலாக இருந்துள்ளது. "பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்களில் திருவிழாக்கள் அதிகம் நடக்கும். அப்போது தான் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்" என்கிறார் கர்ணன். தான் தற்போது தேநீர் கடை ஒன்றில் வேலை பார்த்து வருவதாகக் கூறிய கர்ணன், "பாடல்களால் என் அப்பாவுக்குப் புகழ் கிடைத்தது. ஆனால், குடும்பத்தை வறுமையிலேயே வைத்திருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் இறந்துவிட்டார்" என்கிறார். தனது தந்தையின் பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு வழக்கை நடத்துவதற்கான பொருளாதார பின்புலம் தங்களுக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y6r4d63x9o
  3. பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் திருவுடல் நல்லடக்கம் 26 APR, 2025 | 05:42 PM நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் திருவுடல் இன்று சனிக்கிழமை (26)நல்லடக்கம் செய்யப்பட்டதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. பாப்பரசர் பிரான்சிஸ் ஏப்ரல் 21ஆம் திகதி வாத்திக்கானில் உள்ள தனது இல்லத்தில் 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் நல்லடக்க ஆராதனை இத்தாலியின் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் இன்று சனிக்கிழமை (26) காலை 10 மணிக்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/213026
  4. வவுனியாவில் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு! Published By: DIGITAL DESK 2 26 APR, 2025 | 02:41 PM வவுனியாவில் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் சனிக்கிழமை (26) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா, மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தந்தை செல்வநாயகத்தின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூபியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், கட்சியின் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/212991
  5. 26 APR, 2025 | 08:00 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கிழமை (26) வெளியிடப்பட்டன. 2024ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் கடந்த நவம்பர் முதல் டிசம்பர் வரை இடம்பெற்றது. க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 333,183 மாணவர்கள் தோற்றினர். அவர்களில் 253,390 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 79,793 பேர் தனியார் விண்ணப்பதாரர்களாவர். 2024 (2025) க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk , www.results.exams.gov.lk ஆகிய இணைய தளங்களில் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/213032
  6. எஸ். ஜே.வி. செல்வநாயகம் ; மதத்தால் கிறிஸ்தவராகவும் கலாசாரத்தால் இந்துவாகவும் விளங்கிய ' காந்தியவாத' தமிழ் அரசியல் தலைவர் (பகுதி - 2) Published By: VISHNU 25 APR, 2025 | 09:45 PM ஜேன் றசல் கூறியது இந்த நிகழ்வுப் போக்குகளை " டொனமூர் அரசியலமைப்பின் கீழ் இனவாத அரசியல் " என்ற தனது நூலில் ஜேன் றசல் பின்வருமாறு எழுதினார்; "கிறிஸ்தவரான கொழும்பு வழக்கறிஞர் எஸ். ஜே.வி. செல்வநாயகம் பொன்னம்பலத்துக்கு அடுத்த தலைவராக வந்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அதிகாரத்துக்கான தனது தனிப்பட்ட குறிக்கோள்களை திருப்திப்படுத்துவதில் பெருமளவுக்கு அக்கறை கொண்டவரான பொன்னம்பலத்தைப் போலன்றி, செல்வநாயகம் சிங்கள பௌத்த கலாசாரத்தின் மேலெழுகை இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பில் கருத்தூன்றிய அக்கறை கொண்டவராக விளங்கினார். " செல்வநாயகம் ஆழமாகச் சிந்திக்கின்ற ஒரு மனிதர். அரசியல்வாதி என்ற வகையில் அவர் நேர்மையை வெளிக்காட்டினார். அது பொன்னம்பலத்திடம் இருக்கவில்லை. செல்வநாயகத்தின் தமிழ்த் தேசியவாதம் ஒரு சந்தர்ப்பவாத குமிழி அல்ல. மாறாக, அது ஒரு ஆழமான இயல்புணர்ச்சியாக இருந்தது ; தீவிரமாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்க் கலாசாரம் மீதான தடுமாற்றமற்ற விசுவாசத்துக்கு ஒப்பான ஒரு புரிதலாக இருந்தது. " இலங்கை தமிழ்க் கலாசாரத்துடனான செல்வநாயகத்தின் பிணைப்பு உண்மையான தமிழ்த் தேசியவாதத்துக்கு பெருமளவுக்கு நெருக்கமானதாக வந்தது. அவரது துயரார்ந்த கருத்துக்களும் வாய்மைவாய்ந்த நிலைப்பாடுகளும் (தனது பிற்காலத்தில் ஐக்கிய இலங்கை என்ற இலட்சியத்தில் இருந்து தனித்தமிழ் நாடு என்ற கோட்பாட்டுக்கு திரும்பிய) பொன்னம்பலம் அருணாச்சலத்தின் வாரிசாக அவரை பிரகடனம் செய்தன. " 1947 ஆம் ஆண்டில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் கொள்கையில் இருந்து வேறுபட்ட ஒரு கொள்கையை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் முன்வைக்கவில்லை என்ற போதிலும், அவரது அணுகுமுறை சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை தமிழர் அரசியலின் தொனியிலும் நடத்தையிலும் ஒரு தீவிரமான மாற்றம் ஏற்படப் போகின்றது என்பதற்கு குறிசொல்லியது." வேறுபாடுகளுக்கு காரணம் 1947 பாராளுமன்ற போட்டியிட்ட தமிழ் காங்கிரஸ் ஏழு ஆசனங்களில் வெற்றி பெற்றது. காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட்ட செல்வநாயகம் 12,126 வாக்குகள் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார். லங்கா சமசமாஜ கட்சியை சேர்ந்த நாகலிங்கத்தையும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த நடேசபிள்ளையையும் அவர் தோற்கடித்தார். தமிழ் காங்கிரஸின் எதிர்காலப் போக்கு குறித்து விரைவாகவே செல்வநாயகத்துக்கும் பொனானம்பலத்துக்கும் அரசியல் வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்து விட்டன. செல்வநாயகத்தின் மருமகனான பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் தனது " எஸ். ஜே.வி. செல்வநாயகமும் இலங்கை தமிழ்த் தேசியவாத நெருக்கடியும் 1947 -- 1977 " என்ற நூலில் அன்றைய நிலைவரத்தை பினவருமாறு எழுதியிருக்கிறார் ; " 1947 தேர்தலில் தமிழ் காஙகிரஸுக்கு கிடைத்த வெற்றியை முற்போக்கு சிந்தனைகொண்ட சிங்களக் கட்சிகளுடன் விட்டுக்கொடுத்து ஒத்துழைப்பதற்கு தமிழ் வாக்காளர்கள் தந்த ஆணையாகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறி தமிழ்ப்பகுதிகளுக்கு பயனைப் பெறுவதற்கு அமைச்சரவையில் பதவிகளைப் பெறுவதற்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாகவும் பொன்னம்பலம் வியாக்கியானம் செய்தார். " செல்வநாயகத்தைப் பொறுத்தவரை, தமிழர்களின் ஒத்துழைப்பை இந்திய வம்சாவளி தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை, சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து, புதிய அரசுக்கு சகலரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தேசியக்கொடி, தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் சிங்களவர்களை அரசாங்க உதவியுடன் குடியேற்றுவதை நிறுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஏற்புடைய தீர்வொன்றைக் காண்பதற்கான ஒரு நெம்புகோலாக தமிழர்களின் ஒத்துழைப்பை பயன்படுத்தவேண்டும் என்று விரும்பினார். இந்த முன்னிபந்தனைகள் நிநைவேற்றப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். இலங்கைத்தீவின் எதிர்கால அரசியலமைப்பு கட்டமைப்பை தீர்மானிப்பதற்கு அரசியலமைப்புச்சபை ஒன்று கூட்டப்பட வேண்டும் என்றும் செல்வநாயகம் விரும்பினார். பொன்னம்பலம் இந்த உத்தரவாதங்களைப் பெறவில்லை." பொன்னம்பலம் ஒரு அமைச்சராக வந்து குடியுரிமைப் பிரச்சினையில் அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களித்த பின்னரும் கூட, செல்வநாயகம் உடனடியாகப் பிரிந்து செல்லவில்லை. பதிலாக, அவர் தமிழ் காங்கிரஸிலேயே தொடர்ந்து இருந்து பொன்னம்பலத்துடன் போராடுவதா அல்லது புதிய அரசியல் கட்சியொன்றை தொடக்குவதா என்று தடுமாறிக் கொண்டிருந்தார். இறுதியாக கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் வன்னியசிங்கத்துடனும் செனட்டர் ஈ.எம்.வி. நாகநாதனுடனும் சேர்ந்து செல்வநாயகம் பிரிந்து சென்றார். 1949 டிசம்பரில் இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டது. செல்வநாயகத்தினதும் அவரது கட்சியினதும் நடவடிக்கைகள் தமிழர் அரசியலில் கோட்பாட்டு ரீதியான நகர்வு ஒனறை ஏற்படுத்தின. மொழி அடிப்படையில் தமிழ்த் தேசியவாதத்தை வகுத்து அவர் அதற்கு தெளிவாக வரையறுக்கப்பட்ட பிராந்திய அடிப்படையில் ஒரு பரிமாணத்தைக் கொடுத்தார். வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய தாயகங்கள். இரு மாகாணங்களும் சுயாட்சிகொண்ட ஒரு தமிழ் அரசாக அமையும். இந்த அரசு சிங்கள அரசுடன் சமஷ்டி ஏற்பாடு ஒன்றுக்கு வந்து இலங்கை ஒன்றியத்திற்குள் இருக்கும். தமிழரசு கட்சி சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்தைக் கோரியது. இது இலங்கை தமிழர்களுக்கான கோரிக்கையாக மாத்திரம் இல்லாமல் முஸ்லிம்களையும் மலையக தமிழர்களையும் உள்ளடக்கியதாக தமிழ்பேசும் மக்கள் சகலருக்குமான கோரிக்கையாக இருந்தது. சிங்களக் குடியேற்றங்கள் மூலமாக தமிழ் பாரம்பரியத் தாயகத்தின் குடிப்பரம்பல் மாற்றியமைக்கப்படுவதையும் தமிழரசு கட்சி எதிர்த்தது. புதிய கட்சியினால் 1952 பாராளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றியைப் பெறமுடியவில்லை. கோப்பாயில் வன்னியசிங்கமும் திருகோணமலையில் மாத்திமே பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர். மட்டக்களப்பில் தமிழரசு கட்சியின் ஆதரவுடன் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் அடுத்த நாளே ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவிவிட்டார். முன்னர் குறிப்பிட்டதைப் போன்று செல்வவநாயகம் காங்கேசன்துறையில் தோல்விகண்டார். தமிழர்கள் எதிர்நோக்கிய ஆபத்துக்கள் குறித்து செல்வநாயகத்தின் கருத்துக்களுக்கு தமிழ்ச்சமூகம் அந்த நேரத்தில் கவனம் கொடுக்கவில்லை. ஆனால், தெற்கில் சிங்கள பௌத்த தேசாயவாதிகள் செல்வாக்கைப் பெறத்தொடங்கியபோது அதற்கு சமாந்தரமாக தமிழ்ப்பகுதிகளில் தமிழ்த்தேசியவாதமும் உத்வேகம் பெறத் தொடங்கியது. விரைவாகவே தமிழ் மக்கள் அதிகரிக்கும் ஆபத்தை உணர்ந்து கொண்டார்கள். வரவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கை செய்த ஒரு தீர்க்கதரிசியாக செல்வநாயகத்தை நோக்கிய அவர்கள் அந்த முக்கியமான காலகட்டத்தில் தங்களுக்கு தலைமைதாங்கி வழிநடத்தக்கூடியவர் அவரே என்று புரிந்துகொண்டார்கள். கண்ணியமும் கனிவும் நிறைந்த செல்வநாயகம் தமிழர் அரசியலில் மிகுந்த மக்கள் செல்வாக்குடைய தனியொரு தலைவராக மாறினார். பண்டாரநாயக்கவின் தேர்தல் வெற்றி 1956 ஆம் ஆண்டு ஒரு மைல்கல்லாக அமைந்தது. சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாக்கும் வாக்குறுதியை சிங்கள மககளுக்கு வழங்கி எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க தெற்கில் தேர்தலில் பெருவெற்றி பெற்ற அதேவேளை, தமிழரசு கட்சி வடக்கில் ஆறு ஆசனங்களையும் கிழக்கில் நான்கு ஆசனங்களையும் வென்றெடுத்தது. தமிழரசு கட்சி செல்வநாயகத்தின் தலைமையில் புதியதொரு அரசியல் போராட்டக் கலாசாரத்தை தொடங்கியது. அது காந்திய கோட்பாட்டின் வழியில் அமைந்த ' அகிம்சைப்' போராட்டமாகும். அரசகரும மொழிகள் சட்டத்தை பாராளுமன்றம் விவாதித்துக் கொண்டிருந்தபோது கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகமே முதன்முதலான பெரிய போராட்டமாகும். அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகளின் ஆதரவுடனான குண்டர்கள் சத்தியாக்கிரகிகள் மீது ஈவிரக்கமற்ற முறையில் தாக்குதல்களை நடத்திய அதேவேளை, " கைகள் கட்டப்பட்ட " பொலிசார் பாரத்துக்கொண்டு நின்றனர். செல்வநாயகத்தின் மகனும் அவரின் முன்னிலையிலேயே தாக்கப்பட்டார். மகன் தாக்குதலுக்குள்ளான வேளையில் தந்தை பின்வாங்காமல் தரையில் அமர்ந்திருந்து சத்தியாக்கிரகத்தை தொடர்ந்தார். அந்த காட்சியை தமிழ்க்கவிஞர் காசி ஆனந்தன் கிளர்ச்சியைத் தூண்டும் வகையிலான கவிதையில் வடித்து காவியமாக்கினார். அரசியல் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் மகாநாடுகளுக்கு புறம்பாக , ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், கறுப்புக்கொடிப் போராட்டங்கள், ஹர்த்தால்கள், பகிஷ்கரிப்புகள், கடிதம் எழுதும் இயக்கம், நிருவாக ஒழுங்குவிதிகளுக்கு கீழ்ப்படியாமை,தார்பூசும் இயக்கம் என்று வேறுபல அகிம்சைப் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் எல்லாம் தமிழ் மக்களை பெருமளவுக்கு அரசியல்மயப்பட்ட ஒரு சமூகமாக மாற்றின. செல்வநாயகம் அவரது ஆதரவாளர்களினால் " தந்தை செல்வா", ஈழத்துக்காந்தி " என்று இப்போது அழைக்கப்பட்டார். தந்தை என்பது திராவிட இயக்கத்தில் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் தந்தையான ஈ.வெ. இராமசாமி நாயக்கர் " தந்தை பெரியார்" என்று அழைக்கப்பட்டார். ஈழத்துக்காந்தி என்பது இந்திய காங்கிரஸ் கலாசாரத்தில் இருந்து வந்தது. செல்வநாயகத்தின் எதிரிகள் அவரை " காற்சட்டைக்காந்தி " என்று கேலி செய்தனர். தமிழரசு கட்சியின் பெருப்பாலான ஆதரவாளர்கள் அவரை " பெரியவர் " என்று அழைத்தனர். செல்வநாயகம் இப்போது ஒரு வழிபாட்டுக்குரிய தலைவர் என்ற அந்தஸ்தை அடைந்து விட்டார். தமிழரசு கட்சியினால் நடத்தப்பட்ட போராட்டங்களில் தார்பூசும் ஸ்ரீ எதிர்ப்பு இயக்கமும் 1961 வெகுஜன சத்தியாக்கிரகமும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. தார்பூசும் இயக்கம் தொடர்பாக 1958 ஆம் ஆண்டில் செல்வநாயகம் மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டார். 1961 ஆம் ஆண்டில் அரசாங்க செயலகங்களுக்கு முன்பாக தமிழர்கள் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச நிருவாகம் முடக்கியது. தனியான தபால்சேவை ஆரம்பிக்கப்பட்டு முத்திரையும் வெளியிடப்பட்டபோது சத்தியாக்கிரக இயக்கம் அதன் உச்சத்தை எட்டியது. இறுதியில் அதை அடக்குவதற்கு அரசாங்கம் இராணுவத்தை அனுப்பியது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. செல்வநாயகம் உட்பட தமிழ்த் தலைவர்கள் தடுப்புக்காவலிலும் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டனர். 1958 ஆம் ஆண்டிலும் தமிழரசு தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். அதிகாரத்தில் இருந்த அரசாங்கத்தை கையாளும் விடயத்தில் செல்வநாயகத்தின் தந்திரோபாயம் அதற்கு எதிராகப் போராடுவதும் பேச்சுவார்த்தை நடத்துவதுமாகவே இருந்தது. அகிம்சைப் போராட்டங்கள் மற்றும் ஆவேசப் பேச்சுக்களுக்கு மத்தியிலும் தமிழரசு கட்சி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அரசியல் இணக்கத்தீர்வு ஒன்றை எட்டுவதிலேயே பெருமளவுக்கு நாட்டம் காட்டியது என்பதை நேர்மையுடன் குறிப்பிட வேண்டும். அரசியல் விட்டுக்கொடுப்பைச் செய்யுமுகமாக செல்வநாயகமும் தமிழரசு கட்சியும் தங்களது மூலமுதல் நிலைப்பாடுகளில் பெருமளவுக்கு தளர்வுகளைச் செய்தனர். உதாரணமாக, சமஷ்டிக் கட்டமைப்புக்கு பதிலாக பிராந்திய சபைகளையும் மாவட்ட சபைகளையும் ஏற்றுக் கொள்ளுமளவுக்கு இணங்கிவரக்கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். தமிழுக்கு அரசகரும மொழி அந்தஸ்து என்ற கெட்டியான நிலைப்பாட்டுக்கு பதிலாக தமிழ்மொழியின் பயன்பாடு தொடர்பில் விசேட ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருந்தனர். அவ்வாறு இருந்தாலும் கூட, செல்வநாயகம் இரு பிரதமர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் சிங்களத் தீவிரவாதிகளின் நெருக்குதல்களை அடுத்து கிழித்தெறியப்பட்டன. 1957 பண்டாரநாயக்க -- செல்வநாயகம் உடன்படிக்கையும் 1965 டட்லி சேனநாயக்க -- செல்வநாயகம் உடன்படிக்கையும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் தமிழர் பிரச்சினை வன்முறைப் பரிமாணங்களை எடுப்பதற்கு நீண்டகாலத்துக்கு முன்னரேயே தீர்க்கப்பட்டிருக்கும். அதே போன்றே செல்வநாயகம் போன்ற தலைவர்கள் அகிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுத்தபோது தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டிருந்தால் தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை தோன்றியிருக்காது. தமிழர் பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் ஊடாக தீர்த்து வைப்பதற்கு செல்வநாயகம் தவறிய போதிலும், அதை அவரது தவறு என்று தமிழ் மக்கள் கருதவில்லை. செல்வநாயகத்துக்கு துரோகம் செய்ததன் மூலமாக சிங்களத் தலைவர்களே தவறிழைத்ததாக தமிழ் மக்கள் கருதினர். செல்வநாயகத்தை ஏமாற்றியது என்பது தங்களை ஏமாற்றியதாகவே தமிழ் மக்கள் நம்பினர். அதனால் செல்வநாயகமும் தமிழரசு கட்சியும் தமிழ் பாராளுமன்ற ஆசனங்களால் பருமளவானவற்றை தொடர்ச்சியாகக் கைப்பற்றக்கூடியதாக இருந்தது. தமிழரசு கட்சிக்கு 1956 ஆம் ஆண்டில் பத்து ஆசனங்கள், 1960 மார்ச்சில் பதினைந்து ஆசனங்கள், 1960 ஜூலையில் 16 ஆசனங்கள், 1965 ஆம் ஆண்டில் 14 ஆசனங்கள், 1970 ஆம் ஆண்டில் 13 ஆசனங்கள் கிடைத்தன. தமிழர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கு பொருத்தமான உயர்ந்த சபை பாராளுமன்றமே என்ற அடிப்படையில் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடுவதை தமிழரசு கட்சி எப்போதுமே நியாயப்படுத்தியது. எதிரியினால் பிரித்தாளப்படுவதை தடுப்பதற்கு தமிழர்களின் ஐக்கியம் அவசியமானது என்றும் தமிழரசு கட்சி உறுதியாக நம்பியது. பாராளுமன்ற தேர்தல்களில் நெருக்கமான போட்டி நிலவுகின்ற சந்தர்ப்பங்களில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வலிமையான கூட்டணியாக திரண்டு நிற்பதன் மூலமாக அதிகாரச்சமநிலையைப் பேணக்கூடியதாக இருக்கும் என்றும் அதன் மூலமாக பலம்பொருந்திய ஒரு நிலையில் இருந்து கொண்டு பேரம்பேச முடியும் என்றும் தமிழரசு கட்சி கூறியது என்பது முக்கியமானதாகும். தமிழரசு கட்சியின் தந்திரோபாயங்கள் இந்த தந்திரோபாயங்கள் 1960 மார்ச் மற்றும் 1965 தேர்தல்களில் ஓரளவுக்கு வெற்றியளித்தது. அந்த தேர்தல்களில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற செல்வாக்கு அரசாங்கங்களை அமைப்பதிலும் கவிழ்ப்பதிரும் முக்கியமான ஒரு காரணியாக விளங்கியது. ஆனால், அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கங்கள் உறுதியான பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்தபோது தமிழரசு கட்சி அரசியல் ரீதியில் பலவீனமாகிப் போனது.தமிழரசு கட்சி அமைதிவழிப் போராட்டமும் பேச்சுவார்த்தையும் கலந்த அதன் தந்திரோபாயத்தை பொறுத்தவரை, 1961 ஆம் ஆண்டிலும் 1965 -- 68 காலப்பகுதியிரும் உச்சநிலையில் இருந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச நிருவாகத்தை முடங்க வைத்த 1961 சத்தியாக்கிரகம் தங்களது நியாயபூர்வமான மனக்குறைகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு இருந்த உணர்வுகளின் ஆழத்தையும் தமிழரசு கட்சிக்கு இருந்த பரவலான ஆதரவையும் தெளிவாக வெளிக்காட்டியது. ஆனால், அரசாங்கத்தின் பிரதிபலிப்பு அரசியல் விட்டுக்கொடுப்பாக அன்றி, ஜனநாயக ரீதியான அகிம்சைப் போராட்ட இயக்கம் ஒன்றை படைபலம் கொண்டு நசுக்குவதாகவே இருந்தது. தமிழரசு கட்சியின் போராட்ட தந்திரோபாயத்தை பொறுத்தவரை 1961 ஆம் ஆண்டு அதன் உயர்ந்த நிலையாக இருந்தது என்றால், பேச்சுவார்த்தை தந்திரோபாயம் 1965 ஆம் ஆண்டில் உச்ச நிலையில் இருந்தது. 1965 ஆம் ஆண்டில் பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் தமிழரசு கட்சி ஒரு பங்காளியாகியது. அந்த கட்சியின் செனட்டராக நியமிக்கப்பட்ட எம். திருச்செல்வம் அமைச்சரவையில் உள்ளூராட்சி அமைச்சரானார். மாவட்ட சபைகளின் ஊடாக ஓரளவு அதிகார பன்முகப்படுத்தலை நடைமுறைப்படுத்துவதே எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், அந்த முயற்சியும் கூட தோல்வியில் முடிந்தது. அந்த வகையில் நோக்கும்போது 1970 ஆம் ஆண்டளவில் தமிழரசு கட்சிக்கு இருந்த தந்திரோபாயத் தெரிவுகள் எல்லாமே தீர்ந்துபோய்விட்டன என்றுதான் கூறவேண்டும். அந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் சிங்கள வாக்காளர்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு மகத்தான ஆதரவை வழங்கியதை அடுத்து பாராளுமன்றத்திற்குள் பேரம்பேசுவதற்கு தமிழரசு கட்சிக்கு இருந்துவந்த சாத்தியப்பாடும் கூட இல்லாமல்போனது. " இனிமேல் தமிழர்களை கடவுளால்தான் காப்பற்ற முடியும்" என்று கூறி செல்வநாயகம் தனது விரக்தியை வெளிப்படுத்தினார். தனித்தமிழ் நாடும் ஆயுதப் போராட்டமும் பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல், புதிய அரசியலமைப்பு போன்ற நடவடிக்கைகள் தாங்கள் அன்னியப்படுத்தப்படுவதாக தமிழ் மக்களுக்கு இருந்த உணர்வை மேலும் ஆழமாக்கின. செலவநாயகம் முன்னெடுத்த அரசியல் பாதை இனிமேலும் பொருத்தமானதாகவோ அல்லது பின்பற்றுவதற்கான தகுதியைக் கொண்டதாகவோ இல்லாமல் போனது. செல்வநாயகத்தின் உடல்நிலையும் குன்றத் தொடங்கியது. ( அவர் பார்க்கின்சன் நோயானால் பீடிக்கப்பட்டிருந்தார்). எனாறாலும் அவர் தொடர்ந்தும் தமிழர்களின் அதியுயர் தலைவராக விளங்கினார். ஆனால், தமிழர்களின் அரசியல் சிந்தனை வேறுபட்ட ஒரு திசையில் விரைவாக நகரத்தொடங்கியது. தனித்தமிழ் ஈழமும் ஆயுதப் போராட்டமும் புதிய " மந்திரங்களாகின." வேறு வழியின்றி செல்வநாயகமும் எழுந்துவந்த அந்த அலைக்குள் அகப்பட வேண்டியதாயிற்று. செல்வநாயகம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தொடர்ந்து செல்லவிடாமல் பொலிசார் தடை செய்தனர். வீதியில் அமர்ந்திருந்து சத்தியாக்கிரகத்தை தொடங்குமாறு அவர் தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார். பலர் அவரின் உத்தரவுக்கு அடிபணிந்தனர். ஆனால், பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் அதை மறுத்து பொலிசாரை எதிர்கொண்டு ஊர்வலத்தை தொடர விரும்பினர். இளைஞர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை இணங்கவைப்பதற்கு அமிர்தலிங்கம் பெரும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. இறுதியில் இளைஞர்களும் வீதியில் அமர்ந்தனர். ஆனால், விரைவாகவே பல இளைஞர்கள் சத்தியாக்கிரகத்தில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணத்தின் பல வீதிகளில் அனுமதி பெறாத ஊர்வலத்தை நடத்தத் தொடங்கினர். அவர்கள் பொலிசாரை எதிர்கொள்ளத் தயாராயிருந்தனர். ஆனால், பொலிசார் அவர்களை அலட்சியம் செய்தனர். அந்த சம்பவம் வளர்ந்துகொண்டிருந்த இளைஞர் கிளர்ச்சியினதும் பழைய தலைவர்கள் பொருத்தமில்லாதவர்களாக மாறிக்கொண்டுவந்த போக்கினதும் ஒரு அடையாளமாக விளங்கியது. அந்திமக் காலத்தில் தேர்தல் சாதனை செல்வநாயகத்தின் மிகப்பெரிய தேர்தல் சாதனை அவரது அந்திமக் காலத்திலேயே இடம்பெற்றது. 1972 அக்டோபரில் காங்கேசன்துறை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்த அவர் புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது நிராகரிக்கிறார்களா என்பதை அறிந்துகொள்வதற்கு இடைத்தேர்தல் ஒன்றை நடத்துமாறு பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார். ஒரு கணிசமான கால தாமதத்துக்கு பிறகு காங்கேசன்துறை தொகுதியில் 1975 பெப்ரவரி 3 ஆம் திகதி இடைத்தேர்தலை அரசாங்கம் நடத்தியது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வி. பொன்னம்பலத்தை தோற்கடித்து செல்வநாயகம் முன்னென்றும் இல்லாத வகையில் 25, 927 வாக்குகளை கைப்பற்றினார். 16, 470 பெரும்பான்மை வாக்குகளுடனான வெற்றியை செல்வநாயகம் பெற்றார். தமிழர் அரசியலில் புதியதொரு கட்டம் 1972 ஆம் ஆண்டில் தமிழ் கட்சிகளின் ஒரு தளர்வான கூட்டணி. அமைக்கப்பட்டது. அது தமிழர் ஐக்கிய கூட்டணி என்று அழைக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் அந்த கூட்டணியின் பெயர் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி என்று மாற்றப்பட்டது. செர்வநாயகம், ஜீ.ஜீ பொன்னம்பலம், தொண்டமான-- மும்மூர்த்திகள் கூட்டணியின் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். தனித்தமிழ்நாட்டு கோரிக்கை முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. தமிழர் அரசியலில் புதியதொரு கட்டம் தொடங்கியது. செல்வநாயகமும்்தமிழ் ஈழக்கோரிக்கையை ஆதரித்தார். தமிழ் ஈழத்தை அமைப்பது என்பது வில்லங்கமான ஒரு காரியம், ஆனால் ஒரு தேசிய இனமாக தமிழர்கள் வாழவிரும்பினால் வேறு தெரிவு அவர்களுக்கு இல்லை என்று அவர் கூறினார். தமிழ் இளைஞர்கள் தங்களது துணிச்சல், தியாகம் மூலமாக மாத்திரமே ஈழத்தை அடைய முடியும் என்றும் செல்வநாயகம் கூறினார். தமிழ் ஈழத்தினதும் ஆயுதப் போராட்டத்தினதும் ஆதரவாளர்கள் செல்வநாயகத்தின் அந்த கூற்றை அவரின் இறுதி விருப்பமாகவும் புதிய ஏற்பாடாகவும் (Last will and testament ) கருதினர். தமிழ்க்காந்தியும் கூட ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கிறார் என்பதினதும் தமிழ் ஈழமே சமரசத்துக்கு இடமில்லாத அவரது நிலைப்பாடு என்பதினதும் சான்றாக அவர்கள் அதை வியாக்கியானப்படுத்தினர். தமிழ் ஈழத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக தாங்கள் செல்வநாயகத்தின் அடிச்சுவட்டையே பின்பற்றுவதாக விடுதலை புலிகளின் பேச்சாளர்கள் தமிழ் மக்கள் மத்தியில் பின்னரான காலப்பகுதியில் கூறினார்கள். தங்களது கூற்றுக்கு ஆதரவாக அவர்கள் செல்வநாயகத்தை மேற்கோள் காட்டவும் செய்தார்கள். வெவ்வேறு வியாக்கியானங்கள் தமிழ் ஈழம் மற்றும் ஆயுதப்போராட்டம் தொடர்பில் செல்வநாயகத்தின் நிலைப்பாடு விவாதத்துக்குரியதும் விளங்காப்போக்குடைய வியாக்கியானங்களுக்கும் உட்பட்டதுமாகும். தற்போது செல்வநாயகம் உயிருடன் இருந்திருந்தால் எவ்வாறு செயற்பட்டிருப்பார் என்பது பல வருடங்கள் கழிந்த நிலையில் இன்று பெருளவுக்கு ஊகங்களுக்கு உரியதாகவே இருக்கிறது. ஈழக் கோரிக்கையை அவர் சமஷ்டி அடிப்படையிலான தீர்வைக் காண்பதற்கான தந்திரோபாயமாகவே பயன்படுத்தியிருக்கக்கூடும் என்றும் ஆயுதப் போராட்டத்துக்கு அவர் ஒருபோதும் ஆதரவு அளத்திருக்க மாட்டார்கள் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் உணருகிறார்கள். ஆனால், இந்த விடயத்தில் உண்மை எது என்பது தொடர்பில் திட்டவட்டமான ஏகபோகத் தனியுரிமை எவருக்கும் இல்லை. இது தொடர்பிலான சர்ச்சை ஆய்வாளர்கள் மத்தியில் தீர்வுகாணமுடியாத விவாதத்துக்கான ஒரு தொனிப்பொருளாகவே தொடர்ந்து இருக்கும். அரசியல் மரபு செல்வநாயகம் 1977 ஏப்ரில் 26 ஆம் திகதி காலமானார்.வீடாடில் தவறி வீழ்ந்த அவர் மரணமடையும் வரை முழுமையான மயக்க நிலையிலேயே இருந்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செல்வநாயகத்தின் இறுதிச்சடங்கு தமிழர்கள் மத்தியில் முன்னென்றும் கண்டிராத கூட்டுச் சோகமாரியின் உண்மையான காட்சியாக அமைந்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு ஜூலையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு கிடைத்த பிரமாண்டமான வெற்றி செல்வநாயகத்தின் நினைவுக்கான ஒரு மகத்தான அஞ்சலியாக இருந்தது. அந்த தேர்தல் பிரசாரங்களின்போது செல்வநாயகத்தின் பெயரும் அவரது அரசியல் மரபும் மிகவும் பெரியளவில் வரவழைக்கப்பட்டன. சகல அரசியல் கட்சிகளும் செல்வநாயகத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தின. ஜெயவர்தனவும் அத்துலத்முதலியும் வெளிப்படுத்திய கருத்துக்கள் அவருக்கு செலுத்தப்பட்ட அஞ்சலியின் சில குறிகாட்டிகள் மாத்திரமே. ஆனால், முன்னர் சில சிங்களத் தலைலர்கள் செல்வநாயகத்தைப் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் இவற்றுக்கு முற்றிலும் முரணானவையாகவும் இரக்கமற்றவையாகவும் அமைந்திருந்தன என்பது கவனிக்கத்தக்கது. " மெலிந்த உருவமும் பசியால் வாடியவரைப் போன்ற தோற்மும் கொண்ட அந்த மனிதர் மீது என்னால் நம்பிக்கை வைக்கமுடியாது" என்று டி. எஸ். சேனநாயக்க செல்வநாயகத்தைப் பற்றி கூறினார். எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, " உலகில் உள்ள மனிதப் பிறவிகளில் மிகவும் ஆபத்தான வகையைச் சேர்ந்த ஒருவர் என்பது நிச்சயமானது. தனது சொந்த வழியில் அவர் இலட்சியத்தில் நேர்மையான உறுதிப்பாடு கொண்டவர். அவர் ஒரு இலட்சியவாதி. ஆனால், நடைமுறை யதார்த்தத்தைப் பற்றி எந்தவிதமான சிந்தனையும் இல்லாதவர். விவகாரங்களின் நடைமுறைச் சாத்தியமான பக்கத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாதவர். அத்தகைய ஆட்கள் மிகவும் ஆபத்தானவர்கள்" என்று செல்வநாயகத்தை வரணித்தார். அந்த நேரத்தில் நிலவிய மிகவும் கவலைக்குரிய நிலைவரம் இது. அகிம்சையில் நம்பிக்கை கொண்டவரும் அடிப்படைக் கோராக்கைகளுக்கு குறைவான எதையாவது ஏற்றுக்கொண்டு பிரச்சினைகளுக்கு இணக்கமான தீர்வைக் காண்பதில் நாட்டம் காட்டும் பண்பை வெளிப்படுத்தியவருமான அந்த மனிதர் நம்பிக்கை வைக்க முடியாதவராகவும் ஆபத்தானவராகவும் காண்பிக்கப்ட்டார். அன்று செல்வநாயகத்துடன் அமைதியான முறையில் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு அர்த்தபுஷ்டியான எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை. இன்று செல்வநாயகத்தின் நினைவு நடைமுறையில் அருகிப்போய் விட்டது. பிரபாகரன்தான் போராட்டத்தை ஆரம்பித்தார் என்று நினைக்கும் இன்றைய இளந்தலைமுறை சுமார் மூன்று தசாப்தகாலமாக தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அகிம்சைவழிப் போராட்டங்களுக்கு தலைமைதாங்கி வழிநடத்திய செல்வநாயகம் என்ற அந்த மனிதரை அறிந்திருப்பதாகவும்கூட இல்லை. ஊழலற்ற, தமிழர்களை ஏமாற்றாத நேர்மையானவர் தலைவர் என்று போற்றி வணங்கப்பட்ட அந்த மனிதரை இவர்களுக்கு தெரியாது. செல்வநாயகம் தனக்கே உரித்தான வழியில் போராட்டத்துக்கு தலைமைதாக்கி வழிநடத்தியிருக்காவிட்டால் எதிர்காலத்தில் ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கான தமிழ்த்தேசியவாத தளம் ஒன்றே இருந்திருக்காது என்பதை இன்றைய இளைய தலைமுறை விளங்கிக் கொள்ளவில்லை. வேலுப்பிள்ளை செல்வநாயகத்தினதும் அவரது அகிம்சை ஆயுதத்தினதும் நாட்கள் போய்விட்டன. எஞ்சியிருப்பது எல்லாம் வேலுப்பிள்ளை பிரபாகரனினதும் அவரது ஆயுதங்களினதும் நாட்கள் பற்றிய நினைவுகளே. https://www.virakesari.lk/article/212947
  7. ஈரானில் பாரிய வெடிப்பு சம்பவம் : 500 பேர் காயம் 26 APR, 2025 | 05:59 PM ஈரானின் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் நகரத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 500 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த பாரிய வெடிப்பு சம்பவம் இன்று சனிக்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது. இந்த பாரிய வெடிப்பு சம்பவத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் மக்கள் சிக்கியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் துறைமுக நகரத்திற்கு அருகிலுள்ள அலுவலக கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/213028
  8. Published By: VISHNU 25 APR, 2025 | 09:43 PM டி. பி.எஸ். ஜெயராஜ் " சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் இபோவில் பிறந்தார்.... மலேசியாவில் மிகவும் தூய்மையான நகரம் என்று பெயரெடுத்தது இபோ. அதனால்தான் போலும் செல்வநாயகத்தின் வாழ்வு சமகால அரசியலில் அறியப்படாத ஒரு தூய்மையைக் குறித்து நின்றது." -- எஸ். ஜே.வி. செல்வநாயகத்தின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீது 1977 செப்டெம்பர் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய அன்றைய வர்த்தக அமைச்சர் லலித் அத்துலத் முதலி இவ்வாறு கூறினார். அந்த அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றிய அன்றைய பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்தன, " செல்வநாயகம் உங்களை கைவிட்டு விடக்கூடியவர் அல்லது ஏமாற்றிவிடக்கூடியவர் என்று கூறிய ஒருவரை எனது சமூகத்திலோ அல்லது வேறு எந்த சமூகத்திலோ நான் சந்தித்ததில்லை" என்று கூறினார். இந்த கருத்துக்கள் " நலிந்த உடலைக் கொண்டவரான செல்வநாயகம் வடக்கின் முடிசூடா மன்னாகவே அறியப்படுகிறார். அவரின் நேர்மைக்கு அவரின் எதிரிகளும் மனமுவந்து சான்றுரைப்பார்கள் " என்று பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா 1963 ஆம் ஆண்டில் எழுதியதை அங்கீகரித்து நின்றன. சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மலேசியாவின் இபோ நகரில் 1898 மார்ச் 31 ஆம் திகதி பிறந்தார். கடந்த மார்ச் 31 ஆம் திகதி அவரது 127 வது பிறந்த தினமாகும். அவர் யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழையை சேர்ந்தவர். அவரது தந்தையார் விஸ்வநாதன் வேலுப்பிள்ளை மலேசியாவில் ஒரு வர்த்தகர். தாயார் ஹரியட் அன்னம்மாவின் கன்னிப்பெயர் கணபதிப்பிள்ளை. பிள்ளைகள் சிறந்த கல்வியைப் பெறவேண்டும் என்பதற்காக செல்வநாயகத்துக்கு நான்கு வயதாக இருந்தபோது தந்தையாரை தவிர, குடும்பம் தெல்லிப்பழைக்கு குடிபெயர்ந்தது. புரட்டஸ்தாந்து கிறிஸ்தவரான செல்வநாயகம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியிலும் இறுதியாக கல்கிசை சென். தோமஸ் கல்லூரியிலும் ( அப்போது அது கொழும்பு முகத்துவாரத்தில் இருந்தது) தனது கல்வியைப் பெற்றார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஆனந்தநாயகம் பின்னர் ஒரு கட்டத்தில் சென்.தோமஸ் கல்லூரியின் வார்டனாக (அதிபர்) பணியாற்றினார். செல்வநாயகமும் எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவும் அந்த கல்லூரியில் ஏககாலத்தில் படித்தவர்கள். ஆனால், பிறகு அரசியலில் மோதிக்கொண்டார்கள். செல்வநாயகம் முதலில் லண்டன் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவனாக படித்து (பி.எஸ்.சி. ) பட்டதாரியானார். அதையடுத்து அவர் சென். தோமஸ் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். பிறகு கொழும்பு லெஸ்லி கல்லூரியிலும் படிப்பித்த அவர் ஆசிரியராக இருந்துகொண்டு சட்டக்கல்வியை தொடர்ந்தார். அதில் சித்தியடைந்ததும் உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராக சேர்ந்து கொண்டார். பிரதானமாக சிவில் வழக்குகளுடன் தனது சட்டத்தொழிலை மட்டுப்படுத்திக்கொண்ட அவர் அதன் மூலமாக நன்கு சம்பாதித்தார். நன்கு மதிக்கப்ட்ட ஒரு சிவில் வழக்கறிஞரான அவர் நாளடைவில் இராணி அப்புக்காத்து (கியூ.சி.) ஆனார். செல்வநாயகம் 1927 ஆம் ஆண்டில் தெல்லிப்பழையின் மணியகாரர் ( நிருவாகப் பிரதானி ) ஆர்.ஆர். பார் குமாரகுலசிங்கியின் மகள் எமிலி கிறேஸ் பார் குமாரகுலசிங்கியை திருமணம் செய்து கொண்டார். ஆங்கிலக் கல்வியைப் பெற்ற அன்றைய மேட்டுக்குடியினர் வழக்கமாக அணியும் மேற்கத்தைய பாணி உடைக்குப் பதிலாக செல்வநாயகம் தனது திருமணத்தின்போது தமிழ்த்தேசிய ஆடையான வேட்டி, சால்வையை அணிந்தார். தமிழ்மொழி மற்றும் தமிழ்க் கலாசாரம் மீதான செல்வநாயகத்தின் பாசம் அரசியல் நோக்கங்களுக்காக செயற்கையான முறையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒன்று அல்ல. அது ஆழமான இயல்புணர்ச்சியின் விளைவானது. அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னதாக அவர் தன்னை யாழ்ப்பாணத்தவர் என்றே எப்போதும் சொல்வார். வீட்டில் சாத்தியமான அளவுக்கு அவர் வேட்டியையே கட்டியிருப்பார். சட்ட அல்லது உத்தியோகபூர்வ அலுவல்கள் அல்லது பல்வேறு சமூகத்தவர்கள் கலந்துகொள்ளும் ஒன்றுகூடல்களை தவிர மற்றும்படி செல்வநாயகம் தமிழர்களுடன் தமிழில் தான் உரையாடுவார். ஒரு தமிழ்க் கல்விமானாக இல்லாவிட்டாலும் கூட பண்டைய தமிழ் இலக்கியங்களுடன் நன்கு பரிச்சயமானவராக விளங்கிய அவர் கர்நாடக சங்கீதத்தையும் பரதநாட்டியத்தையும நன்கு இரசிப்பார். தமிழ்க் கலாசாரத்துடன் இத்தகைய நெருக்கத்தைக் கொண்டிருந்த போதிலும், அதேயளவுக்கு கிறிஸ்தவ மதத்திலும் நம்பிக்கைகளிலும் பற்றுறுதி கொண்டவராக செல்வநாயகம் விளங்கினார். தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாணப் பங்கின் ஒரு உறுப்பினரான அவர் கொழும்பில் அங்கிளிக்கன் தேவாலயத்தின் ஆராதனைகளில் பங்கேற்றார். ஆனால், வெள்ளவத்தையில் தென்னிந்திய திருச்சபை தேவாலயம் ஒன்றை திறந்த பிறகு கூடுதலாக அங்கு வந்து வழிபட்டார். அவரது கிறிஸ்தவம் அரசியல் பணிக்கு ஊக்கம் அளித்தது. சாமுவேல் , ஜேம்ஸ் என்பவையே செல்வநாயகத்தின் கிறிஸ்தவப் பெயர்களாக இருந்தபோதிலும், விவிலியத்தில் வரும் மோசஸ் தான் அவர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். பின்னரான நாட்களில் அவர் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தனது மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுத்து செழிப்புமிக்க -- வாக்களிக்கப்பட்ட பூமிக்கு அழைத்துச் செல்லும் ஒரு மோசஸாகவே தன்னைப் கருதிக்கொண்டார். செல்வநாயகத்தின் மறைவுக்கு பிறகு வெள்ளவத்தை தென்னிந்திய திருச்சபை தேவாலயத்தில் இடம்பெற்ற நினைவு ஆராதனையில் ஆயர் டி.ஜே. அம்பலவாணர் ' என் மக்களை போக விடு ' (let my people go) என்ற வேதாகம வசனத்தின் (Exodus 5.1) கீழ் மனதைத் தொடும் பிரசங்கம் ஒன்றை நிகழ்த்தினார். குறிப்பிட்ட அந்த விவிலிய வரிகள் மோசஸ் மற்றும் பார்வோன் (Pharaoh) உடனும் எகிப்தில் உள்ள இஸ்ரவேலருடனும் தொடர்புடைய பழைய ஏற்பாட்டில் உள்ளவையாகும். குறிப்பிட்ட சில அரசியல் பிரச்சினைகளைப் பற்றி சந்தேகம் வந்து உறுதியான தீர்மானத்தை எடுக்கமுடியாமல் இருந்த நேரங்களில் செல்வநாயகம் அமைதியாக தியானத்திலும் பிரார்த்தனையிலும் ஈடுபடுவார் என்று அவரது அரசியல் சகாக்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது அவரது துணிவாற்றலை வலுப்படுத்தியது. பிரார்த்தனைக்கு பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்ததும் அதில் அவர் உறுதியாக இருப்பார். எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யமாட்டார். இந்துப் பண்புகள் மீதும் பற்று இந்த கிறிஸ்தவ நம்பிக்கைக்கு மத்தியிலும் செல்வநாயகம் பெரும்பான்மையான ஒரு சைவச் சூழலில் இந்துப் பண்புகளையும் உள்வாங்கிக்கொண்டார். அவரது நெருங்கிய உறவினர்கள் பலர் இந்துக்களாகவும் இருந்தனர். தமிழ்க் கலாசாரம் மீதான அவரது பற்று இந்துப் பண்புகள் நோக்கி அவரை ஈர்த்தது. இதனால் தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் தன்னை மதத்தால் கிறிஸ்தவர் என்றும் கலாசாரத்தால் இந்து என்றும் கூறக்கூடியதாக இருந்தது. அரசியல் அனுகூலத்துக்காக அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை அவர் எடுக்கவில்லை என்பது முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியதாகும். செல்வநாயகத்தின் பாராளுமன்ற தொகுதியான காங்கேசன்துறையிலும் தமிழ்ச் சமூகத்திலும் அதிகப் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே. இந்து தமிழர்கள் மீது அவர் அன்பைக் கொண்டிருந்தாலும் அரசியல் ஆதரவை வளர்த்துக் கொள்வதற்காக அவர் அவ்வாறு செயற்கையாக நடந்து கொண்டதில்லை. அரசியலுக்கு வருவது குறித்து நினைப்பதற்கு முன்னரேயே அந்த பண்புகளை அவர் மனதில் பதியவைத்துக் கொண்டார். அரசியல் பயன்களுக்காக செல்வநாயகம் மதக் கோட்பாடுகளை விட்டுக் கொடுத்ததில்லை என்பதே உண்மை. அவரது ' கிறிஸ்தவத்தை ' அரசியல் எதிரிகள் அவருக்கு எதிராக அடிக்கடி பயன்படுத்தினார்கள். அவரது தமிழ் அரசியல் போட்டியாளர்கள் மதக்கூச்சலை தொகுதி மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பல தடவைகள் கிளப்பினார்கள். இந்துக்களுக்கே உரித்தான தமிழ்த் தலைமைத்துவத்தை அபகரிக்க முயற்சித்த ஒரு கிறிஸ்தவ வெளியாளாக அவர் காண்பிக்கப்பட்டார். இலங்கை தமிழரசு கட்சி முதன் முதலாக போட்டியிட்ட 1952 பொதுத் தேர்தலில் அது தீவிரமாகக் கூறப்பட்டது. 1956 ஆம் ஆண்டுக்கு பிறகு பொருட்படுத்தக்கூடிய எந்தவொரு அரசியல்வாதியும் செல்வநாயகத்துக்கு எதிராக கிறிஸ்தவ விரோதக் கூச்சலை வெளிப்படையாக கிளப்புவதற்கு துணிச்சல் கொள்ளவில்லை. ஆனால், மறைமுகமாக அது குசுகுசுக்கப்பட்டது. மாவிட்டபுரம் போராட்டம் 1970 தேர்தலின்போது இது விடயத்தில் ஒரேயொரு விதிவிலக்காக இருந்தவர் பேராசிரியர் சி. சுந்தரலிங்கம் எனலாம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் 1968 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களின் ஆலயப் பிரவேசத்துக்கு எதிரான இயக்கம் ஒன்றை அவர் முன்னெடுத்தார். அந்த இயக்கத்தில் அவரின் பாத்திரம் அவருக்கு காங்கேசன்துறை தொகுதிக்குள் வருகின்ற மாவிட்டபுரம் பகுதியில் சாதி அபிமானம் கொண்ட பல உயர்சாதி இந்துக்களின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது. அந்த சர்ச்சையில் இருந்து செல்வநாயகமும் தமிழரசு கட்சியினரும் பொதுவில் விலகியே இருந்தனர். ஆனால், ஆலயப் பிரவேசத்துக்கு உரிமை கோரிப் போராடிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு அவர்கள் தார்மீக ஆதரவை வழங்கினர். காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும், அந்த பிரச்சினையில் செல்வநாயகம் நேரடியாக சம்பந்தப்படாததால் வெறுப்படைந்திருந்த பழமைவாதப் போக்குடைய தமிழ் வட்டாரங்கள் மத்தியில் தனக்கு ஆதரவைத் தேடுவதற்கு சுந்தரலிங்கம் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதில் நாட்டம் காட்டினார். அதனால் அவர் அப்பட்டமாகவே செல்வநாயகத்துக்கு எதிராக கிறிஸ்தவ விரோதப் பிரசாரத்தை தூண்டிவிட்டார். வெள்ளியிலான வேல் ஒன்றையும் மரத்தாலான சிலுவை ஒன்றையும் காங்கேசன்துறை தொகுதியெங்கும் சுந்தரலிங்கம் கொண்டுதிரிந்தது அந்த பிரசாரத்தின் ஒரு அட்டகாசமான அம்சமாகும். அவற்றை உயர்த்திக் காண்பித்து " வேலா சிலுவையா ? " என்று மக்களைப் பார்த்து சுந்தரலிங்கம் உரத்துக் கேட்டார். ஆனால், காங்கேசன்துறை தொகுதியின் அதிகப் பெரும்பானமையான இந்து வாக்காளர்கள் செல்வநாயகத்தை மீண்டும் தெரிவுசெய்து சுந்தரலிங்கத்துக்கு சரியான ஒரு பதிலைக் கொடுத்தனர். 1956 தேர்தலில் மாத்திரம் தோல்வி இரு இடைவெளிகளை தவிர, 1947 ஆம் ஆண்டு தொடக்கம் 1977 ஆம் ஆண்டு வரை செல்வநாயகம் காங்கேசன்துறை தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தார். முதலாவது இடைவெளி 1952 -- 56 காலப்பகுதியாகும். 1952 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சுப்பையா நடேசபிள்ளையிடம் செல்வநாயகம் தோல்வி கண்டார். இரண்டாவது இடைவெளி 1972 அக்டோபர் -- 1975 பெப்ரவரி காலப்பகுதி. 1972 ஆம் ஆண்டில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிவியில் இருந்து விலகிய செல்வநாயகம், 1972 அரசியலமைப்பை தமிழர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதை பரீட்சித்துப் பார்க்கும் ஒரு வழிவகையாக காங்கேசன்துறையில் இடைத்தேர்தலை நடத்துமாறு அன்றைய பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்கவுக்கு சவால் விடுத்தார். நீண்ட கால தாமதத்துக்கு பிறகு இறுதியில் 1975 ஆண்டில் இடைத் தேர்தலை அரசாங்கம் நடத்தியது. அதில் செல்வநாயகம் 16 ஆயிரத்துக்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளினால் பெருவெற்றி பெற்றார். 1952 பொதுத்தேர்தலில் மாத்திரமே செல்வநாயகம் தோல்வி கண்டார். அப்போதுதான் தமிழரசு கட்சி வளர்ந்துகொண்டிருந்த நிலையில் தமிழ் வாக்காளர்கள் அதன் கொள்கைகளினால் பெரிதாக கவரப் பட்டிருக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜீ.ஜீ. பொன்னம்பலம் தொடர்ந்தும் தமிழர் அரசியலை ஆதிக்கம் செய்து கொண்டிருந்தார். புதிய கட்சியின் தலைவரான செல்வநாயகம் தான் போட்டியிட்ட தொகுதியை விடவும் கட்சியின் சார்பில் மற்றைய தொகுதிகளில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களுக்காக பிரசாரங்களில் ஈடுபடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார். செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட நடேசபிள்ளை தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயமாக அமைச்சராக வருவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாக இருந்தது. இந்த காரணங்கள் எல்லாம் சேர். பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனான நடேசபிள்ளை தெரிவாவதற்கு அனுகூலமானவையாக அமைந்தன. அத்துடன் செல்வநாயகம் ஒரு கிறிஸ்தவர் என்ற பிரசாரமும் தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் பயன்படுத்தப்பட்டது. தேர்தல் பிரசாரத்தின்போது தமிழரசு கட்சியின் சகல வேட்பாளர்களும் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு ஒரு விசேட பூசைக்காக சென்றனர். செல்வநாயகமும் அங்கு சென்று மேலங்கி இல்லாமல் கைகளைக் கட்டிய வண்ணம் நின்றார். இந்து சமய முறைப்படி காளாஞ்சி வழங்கப்படும்போது செல்வநாயகம் அதனை ஏற்றுக்கொள்வதைப் படம்பிடிக்க வேண்டும் என்று முன்னாள் ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் வீ. நவரத்தினம் விரும்பினார். காங்கேசன்துறை தொகுதியில் நிலவிய கிறிஸ்தவ விரோத பதற்றத்தை தணிப்பதற்கான ஒரு முயற்சியாக, கிறிஸ்தவராக இருந்த போதிலும் செல்வநாயகம் இந்துச் சடங்காசாரங்களையும் அனுஷ்டிக்கும் ஒரு மனிதர் என்று காண்பிப்பிப்பதே நவரத்தினத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால், படம் பிடிக்கப்படுவதற்கு மறுத்த செல்வநாயகம் இந்து மதத்தை தான் மதிக்கின்ற போதிலும், வாக்குகளுக்காக வழிபாட்டு பாசாங்குகளில் ஈடுபடுமளவுக்கு தாழ்ந்துபோக விரும்பலில்லை என்று கூறினார். அத்தகைய ஏமாற்று வேலைகளைச் செய்து வெற்றி பெறுவதிலும் பார்க்க தோல்வி காண்பது மேல் என்று அவர் கூறினார். அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். கிறிஸ்தவ விரோத பிரசாரங்கள் மதம் ஒரு இடையூறாக இருந்ததனால் 1952 தேர்தலில் தோல்வி கண்ட அதே மனிதர் காங்கேசன்துறை தொகுதியில் தொடர்ச்சியாக ஆறிற்கு மேற்பட்ட தடவைகள் ( 1956, 1960 மார்சு, 1960 ஜூலை, 1965, 1970, 1975) வெற்றிபெற்றார். தனது மதக் கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காமலும் மதரீதியான வாதங்களில் ஈடுபடாமலும் அவர் அந்த சாதனையை செய்து காட்டினார். இந்து பெரும்பான்மை தமிழர்களுக்கு தலைமை தாங்குவதில் செல்வாவுக்கு இருக்கும் உரிமையை கேள்விக்குள்ளாக்கி கிறிஸ்தவ பூச்சாண்டியைக் காட்டி தமிழரசு கட்சியின் நம்பகத்தன்மையை மலினப்படுத்தும் வகையிலான முயற்சிகளையும் அரசியல் எதிரிகள் முன்னெடுத்தார்கள். அத்தகைய பிரசாரங்களை செல்வாயகத்தின் ' இந்து ' தளபதிகள் உறுதியான முறையில் முறியடித்தார்கள். இன்னொரு கருத்துக் கோணத்திலும் கூட காங்கேசன்துறையில் ( 83 சதவீதம் இந்துக்கள், 16 சதவீதம் கிறிஸ்தவர்கள்) செல்வநாயகத்தின் தொடர்ச்சியான வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அவர் மக்களின் அன்றாட அலுவல்களை கவனிக்கும் ஒரு பாரம்பரியமான பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. தமிழ் மக்களின் பரந்தளவிலான அரசியல் சார்ந்த பிரச்சினைகள் மீதே அவர் பெருமளவுக்கு கவனம் செலுத்தினார். பிறகு உடல்நலம் குன்றத்தொடங்கியதும் அவர் தொகுதிக்கும் அடிக்கடி வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த பிரச்சினைகள் எல்லாம் இருந்த போதிலும் கூட காங்கேசன்துறை வாக்காளர்கள் செல்வாவை தொடர்ந்து தெரிவு செய்தார்கள். முன்னாள் செனட்டரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபையின் தலைவருமான (பொட்டர்) எஸ். நடராஜாவே அந்த மக்களின் நலன்களை கவனிக்கும் பணிகளைச் செய்து காங்கேசன்துறை தொகுதியின் உத்தியோகபூர்வமற்ற பாராளுமன்ற உறுப்பினர் போன்று விளங்கினார். செல்வநாயகத்தின் மதத்தை மக்கள் கருத்தில் எடுக்கவில்லை.தமிழரசு கட்சியே தொடர்ந்தும் முதன்மையான தமிழ் அரசியல் சக்தியாக விளங்கியது. கிறிஸ்தவ விரோத முயற்சிகள் நுணுக்கமான முறையில் தொடரவே செய்தன. அவற்றில் ஒன்று யாழ்ப்பாணத்தில் இந்து பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழ் காங்கிரஸின் கோரிக்கையாகும். திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழரசு கட்சியின் கோரிக்கைக்கு எதிராகவே அந்த கோரிக்கையை தமிழ் காங்கிரஸ் முன்வைத்தது. அது மத அடிப்படையில் தமிழரசு கட்சிக்கும் செல்வநாயகத்துக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதை மாத்திரமல்ல, யாழ்ப்பாண இந்து வாக்காளர்களை கவருவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமிட்ட ஒரு தந்திரோபாயமாகும். தமிழ் மக்களின் மதசார்பின்மை செல்வநாயகத்தை மலினப்படுத்தி தலைமைத்துவத்தில் இருந்து அவரை அகற்றுவதற்கு தமிழ் அரசியல் போட்டியாளர்கள் ஒருபுறத்தில் முயற்சித்துக் கொண்டிருந்த அதேவேளை, சிங்களவர்கள் மத்தியிலும் குறிப்பிட்ட சில பிரிவினர் அவரின் தலைமைத்துவத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பிரயத்தனங்களில் ஈடுபட்டார்கள். இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தமிழர்களுக்கு கிறிஸ்தவரான செல்வநாயகம் பொருத்தமான ஒரு தலைவர் அல்ல என்று கூறி அவர்கள் அவருக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதில் நாட்டம் காட்டினார்கள். இருந்தாலும் செல்வநாயகம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். மத அடிப்படையில் எந்த விதமான விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் தொடர்ச்சியாக அவர் காங்கேசன்துறை மக்களினால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு வந்தார். அவரின் வெற்றிகள் அடிப்படையில் தமிழ் மக்களின் மதசார்பற்ற மனோபாவத்துக்கும் இலங்கையில் இந்து மதத்தில் காணப்பட்ட சகிப்புத்தன்மைக்கும் கிடைத்த ஒரு மதிப்பாகும். இது தொடர்பில் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்றை நினைவுபடுத்த வேண்டியது பொருத்தமானதாகும். சிலோன் டெயிலி நியூஸ் பத்திரிகையில் 1970 அக்டோபர் 3 ஆம் திகதி வண. ஹேவன்பொல ரத்னசார தேரர் எழுதிய கடிதம் ஒன்றுக்கு பதிலளித்த செல்வநாயகம் ," என்னை கிறிஸ்தவன் என்று குறிப்பிட்டிருக்கும் நீங்கள் மதத்தால் பிரதானமாக இந்துக்களாக இருக்கும் தமிழர் தமிழர்களுக்கும் எனக்கும் ஒற்றுமை எதுவும் கிடையாது என்று கூறியிருக்கிறீர்கள். தங்களுக்கு தலைமை தாங்குவதற்காக எங்களது மதத்தை மாற்றிக்கொள்ளுமாறு என்னையோ அல்லது வேறு எந்த கிறிஸ்தவரையுமோ நிர்ப்பந்திக்கவில்லை என்பதற்காக இந்து மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்" என்று எழுதினார். இது " டொனமூர் பௌத்தர்கள் " என்ற ஒரு தோற்றப்பாட்டை பற்றிய குறிப்பு என்பது தெளிவானது. டொனமூர் அரசியலமைப்பின் கீழ் சர்வஜனவாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தங்களது தேர்தல் வெற்றி வாய்ப்புக்களுக்காக சில சிங்கள கிறிஸ்தவர்கள் பௌத்தர்களாக மாறினார்கள். 1960 -- 65 காலப்பகுதியிலும் கூட செல்வநாயகத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இந்த அடிப்படையில் சில தொடர்பாடல்கள் இடம்பெற்றன. தேசியவாத மறுமலர்ச்சி காலனித்துவத்துக்கு எதிரான சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் தேசியவாத மறுமலர்ச்சிகளில் குறிப்பிட்ட சில ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றின் முக்கியமான அம்சமாக மதமே இருந்தது.அநகாரிக தர்மபாலவினாலும் ஆறுமுக நாவலரினாலும் முன்னெடுக்கப்பட்ட மறுமலர்ச்சிவாதம் மதத்தை அதாவது முறையே பெளத்தத்தையும் இந்துமதத்தையும் அடியொற்றியதாக அமைந்தது. ஆனால், காலனித்துவத்துக்கு பின்னரான இந்த மறுமலர்ச்சிவாத இயக்கத்தின் தொடர்ச்சி ஒரு பெரிய வேறுபாட்டைக் கண்டது. சிங்கள அரசியல் கருத்தாடல் சிங்கள பௌத்த தேசியவாத உணர்வுடன் தொடர்ந்தது. அதுவே சிங்கள மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய கோட்பாடாக விளங்கியது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களை சிங்கள பௌத்த தேசியவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக பார்த்தார்கள். அதனால் எதிர்வினை வேறுபட்டதாக இருந்தது. அது மதத்தையல்ல, மொழியை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. சிங்கள தேசியவாதத்துக்கு எதிராக தமிழ்த் தேசியவாதம் கிளம்பியபோது அது பெருமளவுக்கு மதச்சார்பற்றதாக மாறியது. அது ஒரு தமிழ் இந்துத் தேசியவாதமாக இருக்கவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தன. எஸ். ஜே.வி. செல்வநாயகமும் தமிழ்க் கத்தோலிக்க கல்விமான் வணபிதா சேவியர் தனிநாயகம் அடிகளாரும் இதற்கு பங்களிப்புச் செய்த முக்கியமான இரு காரணகர்த்தாக்களாவர். உலகம் பூராவும் தமிழியல் ஆய்வு மீது அக்கறையை ஊக்கவிப்பதன் மூலம் தனிநாயகம் அடிகளார் ஒரு தமிழ்க் கலாசார மறுமலர்ச்சியை முன்னெடுத்தார். அவரின் பணிகள் தமிழர்களை அவர்களது புகழ்மிக்க பாரம்பரியம் குறித்து பெருமைப்பட வைத்தது. செல்வநாயகம் சிங்களத் திணிப்புக்கு எதிரான தமிழ் அரசியல் இயக்கத்துக்கு தலைமைதாங்கி வழிநடத்தினார். தமிழ்க்கப்பலின் மகத்தான மாலுமியாக அவரது செயற்பாடுகள் மொழியை மையமாகக் கொண்ட மதசார்பற்ற தமிழ்த் தேசியவாதப் பாதையொன்றை வகுத்தது. மொழியை அடிப்படையாகக் கொண்ட தேசியவாதத்தின் முனைப்பு தமிழ் இந்துக்களையும் தமிழ் கிறிஸ்தவர்களையும் மாத்திரமல்ல " தமிழ்பேசும் மக்கள் " என்ற கோட்பாட்டின் கீழ் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களையும் உள்ளடக்குகிற அளவுக்கு வெற்றிகரமானதாக விளங்கியது. ஒரு பற்றார்வத்துடனும் குறிக்கோளுடனும் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த மனிதர் தானாக விரும்பி அரசியலுக்கு வந்த ஒருவரல்ல. உயர்நீதிமன்ற நீதிபதியாக வரவேண்டும் என்பதே செல்வநாயகத்தின் ஆவலாக இருந்தது. அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகள் அல்லது அவர் கூறுவதைப் போன்று கடவுளின் சித்தம் அவரை அரசியலுக்கு கொண்டுவந்தன. பின்னர் ஒரு கட்டத்தில் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக வருவதற்கான சந்தர்ப்பமும் தோன்றியது. செல்வநாயகம் தனது அரசியல் நிலைப்பாட்டில் விட்டுக்கொடுப்பைச் செய்யாதவராக இருக்கப்போகிறார் என்பதை உணர்ந்து கொண்ட டி.எஸ். சேனநாயக்க அவருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பதவியைக் கொடுப்பதன் மூலமாக அரசியல் ரீதியில் ஒரு தடையை அகற்ற நினைத்தார். செல்வநாயகத்திடம் இரு தூதுவர்களை அனுப்பி தனது எண்ணத்தை சேனநாயக்க தெரியப்படுத்தினார். தனக்கு நீதிபதி பதவியை வழங்குவதற்கு அவர் விரும்பியதற்கான நோக்கத்தைப் புரிந்து கொண்ட செல்வநாயகம் அதை ஏற்க மறுத்து விட்டார். மேன்மையான ஆனால் இடைஞ்சல்கள் நிறைந்த அரசியல் இலட்சியப்பாதையில் செல்வதற்காக நீதிபதியாக வேண்டும் என்ற தனது வாழ்நாள் விருப்பத்தை அவர் கைவிட்டார். கொந்தளிப்பான டொனமூர் யுகத்தில் செல்வநாயகம் தமிழர் அரசியலில் இருந்து தூரவிலகியிருந்து கொண்டு அரசியல் நிகழ்வுப்போக்குகளை உன்னிப்பாக அவதானித்தார். 1940 களில் கொழும்பு சட்ட நூலகத்தில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை சந்தித்தபோதே அரசியலில் வெளிப்படையான ஆர்வத்தை முதன் முதலாக செல்வநாயகம் வெளிக்காட்டினார். தமிழர் பிரச்சினை தொடர்பில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பப்படவிருந்த மகஜர் ஒன்றில் தானாக முன்வந்து அவர் கையெழுத்திட்டார் அதற்குப் பிறகு தமிழ் அரசியல் விவகாரங்களில் நெருக்கமாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்த அவர் தமிழ் காங்கிரஸில் இணைந்து செயற்பட்டார். தீவிர அரசியலில் இறங்குவதற்கு அவரை இணங்கவைத்தவர் முன்னாள் கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேற்பிள்ளையின் தந்தையார் சிவசுப்பிரமணியமே ஆவார். சோல்பரி ஆணைக்குழுவை சந்திப்பதற்கு ஜீ.ஜீ. பொன்னம்பலம் தலைமையில் சென்ற தூதுக்குழுவில் செல்வநாயகமும் இருந்தார். விரைவாகவே தமிழ் காங்கிரஸின் செயற்பாடுகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்ட அவர் 1946 ஆம் ஆண்டளவில் பொன்னம்பலத்தின் " துணை காப்டனாக " கருதப்பட்டார். https://www.virakesari.lk/article/212948
  9. மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை; சந்தேக நபர் கைது! Published By: DIGITAL DESK 2 26 APR, 2025 | 10:11 AM மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வெள்ளிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 2ஆவது மைல்கல் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மன்னார் கொட்டவெளி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். இவர் மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவரை சுட்டுக்கொலை செய்த பிரதான சந்தேக நபர்களுக்கு தப்பிச் செல்வதற்கு உதவி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/212960
  10. Published By: VISHNU 26 APR, 2025 | 01:34 AM ஊழல் மோசடியில் ஈடுபட்டோர், படுகொலைகளில் ஈடுபட்டோர், ஆட் கடத்தல்களில் ஈடுபட்டோர், யாரும் இம்முறை தப்பிக்க முடியாது. அரசாங்கம் இந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றது. நாம் சரியான விடயத்தை முன்வைக்கின்றோம். கடந்த காலங்களில் சட்டத்தில் இருந்த ஓட்டைகளை பாவித்து யாரும் தப்பித்தார்கள் என்றால் அது இனி வரும் காலங்களில் இடம்பெற முடியாது. என வெளிவிவகாரப் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுதாவளை வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கான காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (25) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் நடைபெற்ற சண்டை சச்சரவுகள் இப்போது நடைபெறுவதில்லை. ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் விவாதிப்பதற்கான நேரம் பாராளுமன்றத்தில் தாராளமாக இருக்கின்றது. நாம் அந்த அரசியலை இதற்குள் கொண்டுவர தேவையில்லை நாங்கள் நம்புகின்றோம் எதிர்வரும் காலங்களில் நடைபெற இருக்கின்ற இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நாம் அனைத்து பிரதேச சபைகளையும் கைப்பற்றுவோம். இந்த சபைகள் ஊடாக எமது அபிவிருத்தி பணிகளை மிகவும் வேகமாக துரிதமாக எடுத்துச் செல்ல நாங்கள் முயல்கின்றோம். குற்றச்சாட்டுகளை முன்வைத்துதான் நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த விசாரணைகளின் அடிப்படையில்தான் கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில விசாரணைகளை அவதானித்தால் சிறிய குற்றச்சாட்டுகளாக இருக்கின்றன, சில விசாரணைகளை அவதானித்தால் நடுத்தரமான குற்றச்சாட்டுகளாக இருக்கின்றன, இன்னும் சில குற்றச்சாட்டுகளை பார்த்தால் மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன, விசாரணைகளை மேற்கொள்கின்ற அந்தந்த நிறுவனங்கள், அமைப்புக்கள் அது தொடர்பான விடயங்களை மிகவும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் மேற்கொள்கின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுபவர்களை எதிர்த்தரப்பினர் அரசியல் பழி வாங்கல் என யோசிக்கின்றார்கள். என்று சொன்னால் நாம் கூறுவதெல்லாம் எதிர்க்கட்சியினர் இதுவரை காலமும் அவர்கள் ஊழல்களில் ஈடுபட்டிருந்தால் அதனை அவர்களாகவே ஒப்புக்கொள்ள வேண்டுமாறு நாங்கள் கூறுகின்றோம். இல்லாவிட்டால் இனிவரும் காலங்களிலாவது எந்த ஒரு ஊழல் மோசடியிலும் ஈடுபட வேண்டாம் என நாங்கள் தெரிவிக்கின்றோம். கைது செய்யப்படுபவர்கள் தொடர்பில் எந்தவித அரசியல் தடைகளும் இல்லை. நாங்கள் எந்தவித விசாரணைகளிலும் கைதிகளிலும் எதுவித தலையீடுகளையும் மேற்கொள்வதில்லை. ஆனால் ஊழல் மோசடியில் ஈடுபட்டு படுகொலைகளில் ஈடுபட்டு ஆட் கடத்தல்களில் ஈடுபட்ட யாருக்கும் இம்முறை தப்பிக்க முடியாது அரசாங்கம் அந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றது. நாம் சரியான விடயத்தை முன்வைக்கின்றோம். கடந்த காலங்களில் சட்டத்தில் இருந்த ஓட்டைகளை பாவித்து யாரும் தப்பித்தார்கள் என்றால் அது இனி வரும் காலங்களில் இடம்பெற முடியாது. இந்த ஊழல்வாதிகளுக்கு இந்த மோசடிக்காரர்களுக்கும் ஆட்கடத்த காரர்களுக்கும் படுகொலை செய்தவர்களுக்கும் வாக்களிப்பதற்கு மக்கள் இருக்கின்றார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தினால் அவர்கள் வாக்களிப்பதற்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள். மக்களுக்கு நாம் கூறிக் கொள்வதெல்லாம் தயவுசெய்து மீண்டும் அவ்வாறான குற்றவாளிகளுக்கு வாக்களிக்க வேண்டாம். மக்கள் மனதுகளை சரியான முறையில் தெளிவுபடுத்திக் கொண்டு மக்களுக்கான களம் சந்தர்ப்பத்தை எமது கட்சி வழங்கியிருக்கின்றது. ஆகவே தேசிய மக்கள் சக்தி உங்களுக்கான கதவுகளை திறந்து வைத்திருக்கின்றது. என அவர் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/212954
  11. சிஎஸ்கே தொடர் தோல்வி – சொதப்பிய அணி மீது தோனியின் கடும் அதிருப்தி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 8 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 2025 ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு அதிர்ச்சியூட்டும் வகையிலும், ரசிகர்களுக்கு மிகுந்த சோகமாகவும் அமைந்துள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டதட்ட இழந்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு இன்னும் 5 போட்டிகள் இருக்கும் நிலையில் அதில் அனைத்திலும் வென்றால்கூட 10 புள்ளிகள், ஏற்கெனவே 4 புள்ளிகள் என 14 புள்ளிகள்தான் பெற முடியும். இந்த புள்ளிகளால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் உறுதியாகச் செல்ல முடியுமா என்பது சந்தேகம்தான். அதேசமயம், சன்ரைசர்ஸ் அணி தொடர்ச்சியாக 5 தோல்விகளைச் சந்தித்தபின் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்புக் கதவுகள் அடைக்கப்படவில்லை. அடுத்துவரக்கூடிய 5 போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் ஒருவேளை பிரமிப்பூட்டும் வெற்றிகளைப் பெற்றால், ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கும். ஆனால் ஒரு தோல்வி அடைந்தாலும், ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வது கடினமாகிவிடும். பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கேயின் வரலாற்று தோல்விகள் சன்ரைசர்ஸ் அணி சென்னையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக இதற்கு முன் 5 முறை மோதியும் ஒரு ஆட்டத்தில் கூட வென்றதில்லை. முதல்முறையாக சிஎஸ்கே அணியை அதன் கோட்டையான சென்னையில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது. இதன் மூலம் 5-1 என்ற கணக்கில் சன்ரைசர்ஸ் வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது. அதேசமயம், சிஎஸ்கே அணி இந்த சீசனில் மோசமான தோல்விகளைப் பதிவு செய்தது. ஆர்சிபி அணிக்கு எதிராக 17ஆண்டுகளில் முதல்முறையாக சென்னையில் சிஎஸ்கே தோற்றது. 15 ஆண்டுகளில் முதல்முறையாக டெல்லி கேபிடல்ஸ் அணியிடமும் சென்னையில் சிஎஸ்கே தோற்றது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் இதுவரை இல்லாத வகையில் மிகக்குறைந்த ஸ்கோரைப் பதிவு செய்தது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் தோல்வியே கண்டிராத சிஎஸ்கே முதல்முறையாகத் தோற்றுள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் முதல்முறையாக சென்னை சேப்பாக்கத்தில் 4 போட்டிகளில் தோல்வியை சிஎஸ்கே சந்தித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மாற்றங்கள் செய்திருந்தும், சிஎஸ்கே அணியின் தோல்வியை மட்டும் மாற்ற முடியவில்லை. ஹர்சல், மென்டிஸ் ஆட்டநாயகர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றியை எளிதாக்கியவர் பந்துவீச்சாளர் ஹர்சல் படேல். சிஎஸ்கே அணியின் முக்கியமான பேட்டர்களை முக்கியமான தருணத்தில் ஆட்டமிழக்கச்செய்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஹர்சல் ஏற்படுத்தினார். 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹர்சல் ஆட்டநாயகன் விருது வென்றார், இதில் 14 டாட் பந்துகளும் அடங்கும், அதாவது 2 ஓவர்களில் ரன் ஏதும் ஹர்சல் கொடுக்கவில்லை. மற்றொரு ஆட்டநாயகனாக இருப்பவர் கமிந்து மென்டிஸ். அதிகாரபூர்வ ஆட்டநாயகனாக இல்லை என்றாலும் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மென்டிஸ். டிவால்ட் பிரிவிஸை ஆட்டமிழக்கச் செய்ய லாங் ஆன் திசையில் கிடைத்த கேட்சை அந்தரத்தில் 11 மைக்ரோ விநாடிகள் பறந்து சென்று கமிந்து பிடித்த கேட்ச் யாரும் எதிர்பாராதது. சேப்பாக்க ரசிகர்களே வியந்து பாராட்டிய கேட்சாக மாறியது. சிஎஸ்கே ஸ்கோர் வேகமாக உயர்ந்த நிலையில் இந்த விக்கெட்டால் சிஎஸ்கே பேட்டிங் வரிசையே அதன்பின் உருக்குலைந்தது. இரு கரங்களாலும் பந்துவீசக்கூடிய கமிந்து மென்டிஸ் 3 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பேட்டிங்கிலும் சன்ரைசர்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று 32 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது சென்னையில் இருந்த 'கோல்வால்கர்' என்ன செய்தார்?22 ஏப்ரல் 2025 இயேசு உண்மையில் குட்டையாக, கருப்பு நிறத்தில் இருந்தவரா? ஒரு வரலாற்றுப் பார்வை20 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹர்சல் ஆட்டநாயகன் விருது வென்றார் மாற்றத்திலும் மாறாத சிஎஸ்கே சிஎஸ்கே அணியில் நேற்று ஏராளமான மாற்றங்கள் இருந்தன. பேபி ஏபிடி என்று அழைக்கப்படும் டேவால்ட் ப்ரீவிஸ், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் களம் இறங்கினர். ரவீந்திரா, அஸ்வின், திரிபாதி ஆகியோர் இல்லை. சாம் கரன், தீபக் ஹூடா மீண்டும் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வளவு மாற்றங்கள் செய்திருந்தும், சிஎஸ்கே அணியின் தோல்வியை மட்டும் மாற்ற முடியவில்லை. சேப்பாக்கம் போன்ற வறண்ட மைதானத்தில் 154 ரன்களை அடித்துக்கொண்டு அனுபவமே இல்லாத பந்துவீச்சாளர்களை வைத்து, டிஃபெண்ட் செய்வது என்பது மணல் கயிற்றால் மலையை இழப்பதுபோலாகும். முன்னொரு காலத்தில் 130 ரன்களை அடித்துக்கொண்டு சிஎஸ்கே டிஃபெண்ட் செய்திருந்தது. ஆனால் அப்போது இருந்த வீரர்கள், பந்துவீச்சாளர்கள் வேறு இப்போதுள்ள நிலைமை படுமோசமாக இருக்கிறது. சிஎஸ்கே அணியில் பிரிவிஸ் சேர்த்த 42 ரன்கள்தான் அதிகபட்சம், அடுத்தார்போல் ஆயுஷ் மாத்ரே 30 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் 20 ரன்களுக்கள் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சிஎஸ்கே அணி 13வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது, ஸ்கோர் எப்படியும் 6 ஓவர்களில் 60 ரன்கள் என 180 ரன்களை எட்டிவிடும் என கணிக்கப்பட்டது. ஆனால், கடைசி 6 விக்கெட்டுகளை 40 ரன்களுக்குள் சிஎஸ்கே இழந்தது. அதிலும் கடைசி 3 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை சிஎஸ்கே பறிகொடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES கோல்டன் விக்கெட் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஷீத் ஷமி வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் மாத்ரே அதிரடியாக பேட் செய்து 6 பவுண்டரிகளை அடித்து 4 ஓவர்களில் 37 ரன்களுக்கு உயர்த்தினார். சாம் கரனை ஒன்டவுன் இறக்கியும் பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை 9 ரன்னில் ஹர்சல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் வீசிய 6வது ஓவரில் மாத்ரே 30 ரன்கள் சேர்த்தநிலையில் இஷன் கிஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர்ப்ளே முடிவில் சிஎஸ்கே 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்த சீசனில் 6வது முறையாக பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை இழந்து மோசமாக பேட் செய்தது சிஎஸ்கே அணி. ஐன்ஸ்டீன் செய்த 3 'தவறுகள்' அறிவியல் உலகையே மாற்றிய கதை19 ஏப்ரல் 2025 டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய கடைசி நிமிடங்களில் உள்ளே என்ன நடந்தது? புதிய தகவல்15 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மாத்ரே 30 ரன்கள் சேர்த்தநிலையில் இஷன் கிஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிரிவிஸ் ஆறுதல் ரச்சின் ரவீந்திராவுக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட பிரிவிஸ் 3 சிக்ஸர்களை கமிந்து ஓவரில் விளாசினார். 25 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தநிலையில் ஹர்சல் படேலின் ஸ்லோ பாலில் லாங் ஆன் திசையில் தூக்கி அடித்தார். அங்கு ஃபீல்டிங் நின்றிருந்த கமிந்து மென்டிஸ் பறந்து சென்று இரு கரங்களாலும் பந்தை தாவிப்பிடித்தார். இந்த ஐபிஎல் சீசனில் சிறந்த கேட்ச் வரிசையில் நிச்சயமாக கமிந்து கேட்ச் இடம் பெறும். பிரிவீஸ் ஆட்டமிழந்தபின் சிஎஸ்கே பேட்டர்களிடமிருந்துபெரிதாக ரன்கள் ஏதும் வரவில்லை. ஷிவம் துபே(12), ஹூடா(22) தோனி(6), கம்போஜ்(2) ஜடேஜா(21) என விக்கெட்டுகளை இழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரச்சின் ரவீந்திராவுக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட பிரிவிஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார் 2வது பந்தில் விக்கெட் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர் முகமது ஷமி கோல்டன் விக்கெட் எடுத்தநிலையில் அதற்கு பதிலடியாக சிஎஸ்கே பந்துவீச்சாளர் கலீல் அகமது, முதல் ஓவர் 2வது பந்தில் அபிஷேக் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார். டிராவிஸ் ஹெட் இந்த சீசனில் சில போட்டிகளைத் தவிர்த்து தடுமாறி வருகிறார். அனைத்து பந்துகளையும் பெரிய ஷாட்களாக மாற்றும் அவரின் பாணி, பல நேரங்களில் தோல்வியில் முடிகிறது. இந்த ஆட்டத்திலும் டிராவிஸ் ஹெட் பல பெரிய ஷாட்களுக்கு முயன்றும் அது மீட் ஆகவில்லை. ஹெட் 19 ரன்கள் சேர்த்தநிலையில் கம்போஜ் பந்துவீச்சில் போல்டாகினார். அதிரடி பேட்டர் கிளாசன் வந்தவேகத்தில் 7 ரன்னில் ஜடேஜா ஓவரில் விக்கெட்டை இழந்தார். விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தபோதிலும் இஷான் கிஷன் நிதானமாக பேட் செய்து 44 ரன்களில் நூர் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் முதல் போட்டியில் சதம் அடித்தபின் இந்த ஆட்டத்தில்தான் நிதானமாக பேட் செய்துள்ளார். அனிகேத் வர்மா 19 ரன்களில் நூர் அகமதுவிடம் விக்கெட்டை இழந்தார். 106 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது சன்ரைசர்ஸ் அணி. ஆட்டம் யார் பக்கம் செல்லும் என்ற கேள்வி இருந்தது. 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிதிஷ் ரெட்டி, கமிந்து இருவரும் சிஎஸ்கே போராட்டத்தை அடக்கும் வகையில் பேட் செய்தனர். இருவரையும் பிரிக்க கடைசி நேரத்தில் பல பந்துவீச்சாளர்களை தோனி மாற்றியும் முடியவில்லை. இந்த இருவரில் ஒருவர் விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும் ஆட்டம் மாறியிருக்கும், ஆனால், கடைசி வரை களத்தில் இருந்து இருவரும் சன்ரைசர்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 6வது விக்கெட்டுக்கு இருவரும் 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நிதிஷ் ரெட்டி 19 ரன்களிலும், கமிந்து 32 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பரவியது எப்போது? வரலாற்றைப் புரட்டிப் போடும் புதிய கண்டுபிடிப்பு12 ஏப்ரல் 2025 'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள்8 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கலீல் அகமது, முதல் ஓவர் 2வது பந்தில் அபிஷேக் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார். பல் இல்லாத சிஎஸ்கே பந்துவீச்சு சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு நேற்று பெரிதாக சன்ரைசர்ஸ் பேட்டர்களுக்கு சிரமத்தை அளிக்கவில்லை. கம்போஜ், சாம்கரன், பதிராணா, கலீல் அகமது என 4 வேகப்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும், இந்த ஸ்கோரை டிஃபெண்ட் செய்ய முடியவில்லை. அன்சுல் கம்போஜ், கலீல் அகமது ஜடேஜாவுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தநிலையில் தோனி அவர்களுக்கு ஓவர்கள் வழங்காமல் சாம்கரனுக்கு வழங்கியது பெரிய தவறாகும். சாம்கரன் வீசிய 2 ஓவர்களில் 25 ரன்கள் சென்றது. அது மட்டுமல்லாமல் பதீராணா, நூர்அகமது இருவரம் நோபால்களையும், வைடுகளையும் வாரி வழங்கினார். சிஎஸ்கே நேற்று மட்டும் 14 உதிரிகளை வழங்கியது. இதைக் கட்டுப்படுத்தி இருந்தாலே 10 ரன்களை சேமித்து சன்ரைசர்ஸ் பேட்டர்களுக்கு ரன் நெருக்கடி கொடுத்திருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெரும்பாலான வீரர்கள் சரியாக விளையாடாவிட்டால் மாற்றம் செய்வது அவசியம்தான் என்றார் தோனி காரணம் என்ன? தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில், "நாங்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். முதல் இன்னிங்ஸில் விக்கெட் அருமையாக இருந்தது அதைப் பயன்படுத்தி பெரிய ஸ்கோராக மாற்ற தவறினோம். 154 ரன்கள் டிஃபெண்ட் செய்யக்கூடிய ஸ்கோர் இந்த மைதானத்தில் இல்லை. அதிகமாக டர்ன் ஆகவில்லை, வேகப்பந்துவீச்சுக்கும், சுழற்பந்துவீச்சுக்கும் ஓரளவு ஒத்துழைத்து, சராசரி மைதானம் போல் இல்லை. 2வது இன்னிங்ஸில் பந்துவீச்சுக்கு எங்களுக்கு ஆடுகளம் சற்று உதவியது. எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் அருமையாகப் பந்துவீசினர். இன்னும் 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருந்தால் டிஃபெண்ட் செய்திருப்போம். நடுவரிசையில் பிரிவிஸ் சிறப்பாக பேட் செய்தார். நடுப்பகுதி ஓவர்கள்தான் முக்கியமானது அதில் எங்கள் பந்துவீச்சையும், பேட்டிங்கையும் மேம்படுத்த வேண்டும். இந்த ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவதும், ரன் சேர்ப்பதும் முக்கியமானது. இதுபோன்ற தொடரில் ஏதேனும் ஒரு சில பகுதிகளில் ஓட்டைகள் இருந்தால் பரவாயில்லை. ஆனால், பெரும்பாலான வீரர்கள் சரியாக விளையாடாவிட்டால் மாற்றம் செய்வது அவசியம்தான். இப்படியே கொண்டு செல்ல முடியாது" எனத் தெரிவித்தார். இன்றைய ஆட்டம் கொல்கத்தா vs பஞ்சாப் கிங்ஸ் இடம்: கொல்கத்தா நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 30 இடம் – சென்னை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் நாள் - ஏப்ரல் 27 இடம் – மும்பை நேரம்- மாலை 3.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs டெல்லி கேபிடல்ஸ் நாள் - ஏப்ரல் 27 இடம் – டெல்லி நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)- 417 ரன்கள் (8 போட்டிகள்) விராட் கோலி (ஆர்சிபி) - 392 ரன்கள் (9 போட்டிகள்) நிகோலஸ் பூரன் (லக்னெள)- 377 ரன்கள் (9 போட்டிகள்) நீலத் தொப்பி பிரசித் கிருஷ்ணா (குஜராத்) - 16 விக்கெட்டுகள் (8 போட்டிகள்) ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) - 16 விக்கெட்டுகள் (9 போட்டிகள்) நூர் அகமது (சிஎஸ்கே) - 14 விக்கெட்டுகள் (9 போட்டிகள்) https://www.bbc.com/tamil/articles/clyqdl1e050o
  12. இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராக தயார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அவரது சட்டத்தரணி ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அவர் இவ்வாறு முன்னிலையாகவுள்ளார். https://thinakkural.lk/article/317315
  13. Published By: VISHNU 26 APR, 2025 | 01:21 AM ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் வருகையை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள தடையுத்தரவு கோரிய வவுனியா பொலிசாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸ்நாயக்கா சனிக்கிழமை (26) மாலை 4 மணிக்கு வவுனியா நகரசபை மைதானத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் அங்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தரவுள்ளனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், அவ்வாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றால் அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனவும் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு கோரியிருந்தனர். இதனை கவனத்தில் எடுத்த மன்று, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வது மக்களின் ஜனநாயக உரிமை. அதனை தடுக்க முடியாது. ஆனால் அமைதிக்கும் பங்கம் ஏற்படும் வகையில் யாராவது செயற்பட்டால் பொலிசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்து தடையுத்தரவு கோரிக்கையை மன்று நிராகரித்திருந்தது. https://www.virakesari.lk/article/212953
  14. கீரிமலையில் ஜனாதிபதி மாளிகையில் ஆய்வு – எதிர்கால பயன்பாடு குறித்து கலந்தாய்வு! Published By: VISHNU 25 APR, 2025 | 09:02 PM கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை வெள்ளிக்கிழமை (25) பார்வையிடும் விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த கட்டிடத்தின் எதிர்கால பயன்பாடு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையாக விரிவான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இந்த விஜயத்தில், நகர அபிவிருத்தி, கட்டுமான மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு. அனுர கருணாதிலக, கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் உயர் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கட்டிடத்தை சமூக மற்றும் அபிவிருத்தி நோக்கில் மக்களுக்கு பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவது குறித்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு, விரைவில் திட்டமிடல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/212944
  15. பட மூலாதாரம்,TNRAJBHAVAN 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பு, திராவிட இயக்கத்தினரின் போராட்டங்களுக்கு மத்தியில் உதகையில் இருநாள் துணைவேந்தர்கள் மாநாடு இன்று (ஏப். 25) ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் தொடங்கியது. மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் செயல்படும் மாநில அரசு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் யாரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. "மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் வீட்டு கதவுகளை நள்ளிரவில் தட்டி போலீஸார் எச்சரித்ததாலேயே" அவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார், மாநாட்டில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார், திமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவன். ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது என்ன? உதகை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இம்மாநாட்டில், மத்திய பல்கலைக்கழகம், மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் என, 34 கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் மொத்தம் 20 மாநில அரசு பல்கலைக்கழகங்கள் இருப்பதாக ஆளுநர் மாளிகை இணையதளம் கூறுகிறது. ஆனால், அந்த பல்கலைக்கழகங்களின் சார்பாக எந்தவொரு துணைவேந்தரோ அல்லது துணைவேந்தர் பொறுப்புக் குழு பிரதிநிதிகளோ பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தற்போது துணைவேந்தர்கள் இல்லை, அதற்கு பதிலாக துணைவேந்தர் பொறுப்புக் குழு செயல்பட்டு வருகிறது. மாநில பல்கலைக்கழகங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்காதது குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார். இந்த மாநாட்டில் பேசிய ஆர்.என். ரவி, "துரதிருஷ்டவசமாக இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்கள் பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என தங்களுக்கு மாநில அரசிடமிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக, அவர்கள் என்னிடம் எழுத்துபூர்வமாக தெரிவித்தனர்." என்றார். துணை வேந்தர்கள் மாநாடு - கோவையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காண்பிக்க முயற்சி 'குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு' - உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நகல் இணையத்தில் வெளியீடு மாநில சுயாட்சி குறித்த மூவர் குழு: என்ன சாதிக்க முடியும்? "நியாயமான உரிமை பறிபோகிறது" - மாநில சுயாட்சி தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன? தற்போது கூட துணைவேந்தர் ஒருவர் காவல் நிலையத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விதிமுறைகளை மீறி தனியார் அமைப்புகள் தொடங்கி, பல்கலைக்கழக நிதியை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் இன்று சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதைத்தான் ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிடுவதாக, கல்வியாளர்கள் கூறுகின்றனர். "இது முன்னெப்போதும் நடந்திராதது. நள்ளிரவில் துணைவேந்தர் வீடுகளின் கதவுகளைத் தட்டி காவல்துறை எச்சரித்துள்ளது. 'நீங்கள் மாநாட்டுக்கு சென்றால், வீட்டுக்குச் செல்ல முடியாது. உங்கள் குடும்பத்தைக் காண முடியாது' என எச்சரித்துள்ளனர். நான் அவர்களிடம், 'உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள், ஆபத்துக்கு ஆளாகாதீர்கள்,' என்று கூறினேன்" என ஆர்.என். ரவி கூறினார். தமிழ்நாட்டில் மாநில பல்கலைக்கழகங்கள், அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்துவிட்டதாக விமர்சித்த அவர், கல்வி தரத்தை மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றும் மாறாக இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் தெரிவித்தார். பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ள சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? இந்தியா விட்டுக்கொடுத்ததா?4 மணி நேரங்களுக்கு முன்னர் பஹல்காம்: மரண ஓலத்தின் மத்தியில் உயிர்காத்த குதிரைக்காரர்கள் – நெகிழ வைக்கும் காணொளி3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNRAJBHAVAN குற்றச்சாட்டை மறுக்கும் திமுக ஆளுநர் ஆர்.என். ரவியின் குற்றச்சாட்டை முற்றிலுமாக புறக்கணித்தது திமுக. திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கற்பனையாக பேசுவதில் ஆளுநருக்கு இணையாக இந்த உலகத்திலேயே யாரும் கிடையாது. இந்த மாநாடு எதற்காக கூட்டப்படுகிறது, இந்த மாநாட்டின் திட்டம், பேசுபொருள் என்ன என்பதையெல்லாம் ஆளுநர் மாளிகை துணைவேந்தர்களுக்கு அனுப்பியிருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும். கல்வி வளர்ச்சிக்கும் ஆளுநர், குடியரசு துணைத் தலைவருக்கும் என்ன தொடர்பு என்பதை விளக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பேசிய குடியரசு துணைத் தலைவரை மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார் ஆளுநர். ஆளுநரும் குடியரசு துணைத் தலைவரும் அரசியலமைப்பு சட்டத்தின்படி நடந்துகொள்ளாதவர்கள். தங்களுக்கு மிகப்பெரிய அதிகாரம் வந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர்." என்றார். தமிழக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசு தலைவருக்கும் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்ததை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சித்திருந்தார். அதையே டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டுப் பேசினார். பஹல்காமில் கொல்லப்பட்டவரின் மனைவி பாஜக அமைச்சரிடம் கொந்தளித்துப் பேசியது என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர் 'கனடாவில் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது' - கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TKS ELANGOVAN / X படக்குறிப்பு,ஆளுநரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் டி.கே.எஸ். இளங்கோவன் "ஆளுநர் கல்வி தொடர்பாக ஒரு கூட்டம் நடத்துகிறார் என்றால், மாநில கல்வி அமைச்சரிடம் முதலில் கேட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக எதற்காக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது என்பதை பேசியிருக்க வேண்டும். குடியரசு துணைத் தலைவருக்கு பதிலாக மத்திய கல்வி அமைச்சரை அழைத்து வந்திருக்க வேண்டும். கல்வித்துறை குறித்து குடியரசு துணைத் தலைவருக்கு என்ன தெரியும்? மாநில முதலமைச்சரிடம் இதுகுறித்து கூறினார்களா?" என டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வியெழுப்பினார். எச்சரிக்கை விடுக்கப்பட்டதா? மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்காதது குறித்து தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றின் பொறுப்பு துணைவேந்தர் ஒருவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பிபிசி தமிழிடம் பேசினார். "வரும் 27ம் தேதி எங்கள் பல்கலைக்கழகத்தில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கும் முக்கியமான கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் இருந்தன. மேலும், இன்று பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அதனால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை" என்றார். மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என காவல் துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என கேட்டபோது, அப்படியெல்லாம் எதுவும் வரவில்லை என்றார். இந்த மாநாட்டில் அரசியல் நோக்கம் இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறுவது குறித்த கேள்விக்கும் அவர் பதில் கூறவில்லை. மாநாட்டில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், "இந்த மாநாட்டில் துணைவேந்தர்கள் சிலர் பங்கேற்கவில்லை என்பது குறித்து ஆளுநர் கவலை கொள்ளத் தேவையில்லை. எந்த சூழ்நிலையால் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வந்தவர்களுக்கு வாழ்த்து கூறுவோம், வராதவர்கள் மாநாட்டின் குறிப்புகளில் இருந்து நடந்தவற்றை கற்றுக் கொள்ளலாம்" என்றார். பஹல்காம் தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிய பிறகு உடைந்து அழுத டிரைவர்7 மணி நேரங்களுக்கு முன்னர் பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒரே காஷ்மீரி - ஆதிலின் குடும்பத்தினர் கூறுவது என்ன?8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNRAJBHAVAN மாநாட்டுக்கு எதிர்ப்பு ஏன்? திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு தடையாகவும் மக்கள் நலனுக்கு எதிராகவும் செயல்படுகிறார் என தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு ஆளுநர் மீது குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாநில பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது "சட்டவிரோதம்" என்று ஏப். 08 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது, மசோதாக்கள் மீது ஆளுநர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு காலக்கெடுவும் விதித்தது. இதையடுத்து, ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவாக வரையறுத்திருப்பதாக தமிழ்நாடு அரசு கூறிவந்த நிலையில், அரசு-ஆளுநர் மோதல் சற்று தணியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விரைவிலேயே ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தும் செய்தி மீண்டும் சர்ச்சையை அதிகப்படுத்தியது. முன்னதாக, ஏப். 16 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தியிருந்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கான அதிகாரம் முதலமைச்சருக்கு வந்துவிட்டதால், அதிகாரமில்லாத வேந்தராக ஆளுநர் தொடர்வதாக முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் பிபிசி தமிழிடம் முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரே தொடர்வதாகக் கருதி, இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தது. பஹல்காமில் சுடுவதற்கு முன்பு ஆயுததாரிகள் கேட்டது என்ன? கொல்லப்பட்டவர்களின் மனைவி, மகன் பேட்டி7 மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்த போப் ஆண்டவர் ஆப்பிரிக்கராக இருப்பாரா? நிறவெறி தடையாக இருக்குமா?25 ஏப்ரல் 2025 இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த 2022ம் ஆண்டிலிருந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த துணைவேந்தர்கள் மாநாடு திட்டமிட்டு நடத்தப்படுவதாக, ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. "இதை தமிழ்நாடு ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான மோதலாக கட்டமைக்க முயற்சி மேற்கொள்வது வருந்தத்தக்கது" என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இந்த மாநாட்டுக்கு எதிராகவும் ஆளுநர், குடியரசு துணைத் தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை கண்டித்து உதகை காபி ஹவுஸ் பகுதியில் கருப்புக் கொடியுடன் திராவிட தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உதகை பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் பங்கேற்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly1xzkqe0eo
  16. கட்டுரை தகவல் எழுதியவர், சரப்ஜித் சிங் தலிவால் பதவி, பிபிசி நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "எங்களுக்கு வரும் கனவுகளிலும் மன அழுத்தம் எதிரொலிக்கிறது. கடன் தொல்லை, வேலை, மின்சாரக் கட்டணம், வீட்டுக்கடன் தவணை என பிரச்னைகளே இப்போது வாழ்க்கையாகிவிட்டது!" கனடாவில் வசிக்கும் ரமண்தீப் சிங் என்பவரின் கவலை நிறைந்த வார்த்தைகள் இவை. பஞ்சாபின் ஃபரித்கோட்டை சேர்ந்த ரமண்தீப் சிங், ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து தற்போது கனடாவின் குடியுரிமையைப் பெற்றுவிட்டார். கனடாவுக்கு வருவதற்கு முன்பு, பஞ்சாபில் கல்லூரி ஒன்றில் தற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் ரமண்தீப் சிங். "கனடா என்பது போராட்டத்தின் மற்றொரு பெயர், ஆனால் கனடா ஒரு மோசமான நாடு என்றும் சொல்லிவிட முடியாது, கனடா சிறந்த நாடு, எனக்கு மிகவும் பிடித்தமான நாடு என்றாலும், கொரோனாவுக்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது" என்று ரமண்தீப் சிங் கூறுகிறார். கனடாவில் இன்னும் சில நாட்களில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், வீடுகள் பற்றாக்குறை, வேலையின்மை, பணவீக்கம் என பல முக்கிய பிரச்னைகள் மக்களை பாதித்துள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம், நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடற்ற குடியேற்றக் கொள்கைகளால் அதிகரித்த மக்கள் தொகை என்று நம்பப்படுகிறது. படக்குறிப்பு,ரமண்தீப் சிங் நிலைமை எப்படி மாறியது? ரமண்தீப் சிங் கட்டுமானத் துறையில் பணிபுரிகிறார். கனடாவில் கணிசமான வருமானம் தரும் தொழில் இது. தற்போது கனடாவில் நிலவும் சூழ்நிலை குறித்த தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், "இங்கு வாழ்க்கை நடத்துவது கடினமாகிவிட்டது, வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன, பணவீக்கம் அதிகரித்து வருவதுடன், வீட்டு கடன் தவணைத் தொகை அதிகரித்துவிட்டது. இந்தக் காரணங்களால், கனடாவில் வசிக்கும் குடியேறிகள் சிரமப்படுகிறார்கள்." "நானும் என் மனைவியும் கடினமாக உழைத்து, சொந்தமாக ஒரு வீட்டை வாங்கினோம். வாழ்க்கை சுமூகமாக சென்றுக் கொண்டிருந்தது. சில வருடங்களில் பழைய வீட்டை விற்றுவிட்டு, இரு மடங்கு விலையில் பெரிய வீட்டை வாங்கினோம்" என்று ரமண்தீப் கூறுகிறார். ஆனால் கொரோனா பாதிப்புக்குப் பிறகு, கனடாவில் வீட்டுச் சந்தை சரியத் தொடங்கியது, அப்போது தொடங்கிய ரமண்தீப் சிங் குடும்பத்தின் பிரச்னைகள் இன்னும் தொடர்கின்றன. கடன் தவணை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்கள் நிலைமை மோசமாகிவிட்டதாகக் கூறும் ரமண்தீப், இப்போது என்ன செய்வது என்று தனக்குப் புரியவில்லை என்று கூறுகிறார். இது தவிர, கனடாவில் பணவீக்கம் மற்றும் பிற செலவுகள் அதிகரிப்பும் பிரச்னைகளை மேலும் அதிகரிக்கின்றன. "கனடாவிற்கு வந்து பத்தாண்டுகளான பிறகு, இங்கு வந்து குடியேறும் எங்கள் முடிவு தவறானது என்று இப்போது தோன்றுகிறது. வாழ்க்கை அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது" என்று ரமண்தீப் சிங் கூறுகிறார். "தற்போது கனடாவில் வாழ்வது கடினமாகிவிட்டது, தாயகத்திற்கு திரும்பிச் செல்வதற்கான வாய்ப்புகளும் இல்லை. நாங்கள் இந்தியாவிலுள்ள அனைத்தையும் விற்றுவிட்டு வந்துவிட்டோம்." "கனடா மிகவும் அழகான நாடு, எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் முன்னேற வாய்ப்பளிக்கிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையால், இங்கு வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டது" என்று ரமண்தீப் கூறுகிறார். கனடாவின் தற்போதைய நிலைமை, புலம்பெயர்ந்தோருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. பஹல்காம் தாக்குதல்: இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த முக்கிய முடிவுகள்24 ஏப்ரல் 2025 சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்றால் என்ன? இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன் இதில் கையெழுத்திட்டன?25 ஏப்ரல் 2025 புதிய குடியேறிகளின் நிலைமை மேலும் கடினம் படக்குறிப்பு,கனடாவில் தற்போது புதிதாக குடியேறுபவர்கள் அதிக சவால்களை எதிர்கொள்கின்றனர் கனடாவிற்கு புதிதாக குடியேறுபவர்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் மேலும் கடுமையாகிவிட்டது. விலைவாசி உயர்வு, வேலையின்மை என பல பிரச்னைகளுடன் அவர்கள் வாழ்க்கையை நடத்த போராடி வருகின்றனர். குறிப்பாக வீட்டுப் பிரச்னை புதிய குடியேறிகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ரமண்தீப்பைப் போலவே, குஜராத்தைச் சேர்ந்த மிதுல் தேசாய் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கனடா வந்தார். தற்போது ஒண்டேரியோவில் வசித்து வரும் மிதுல் தேசாய், ஹோட்டல் ஒன்றில் பணிபுரிகிறார். "முன்பு எல்லாம் நன்றாகவே இருந்தது, ஆனால் இப்போது குடியிருக்க வீடு கிடைப்பது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டுக்கான தவணைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இந்த முறை தேர்தலில் முக்கியப் பிரச்னையாக இருக்கப்போவது வீடு மற்றும் விலைவாசிதான்" என்று மிதுல் தேசாய் கூறுகிறார். மேலும், "சர்வதேச மாணவர்களின் வருகை கனடாவின் வீட்டு வாடகையை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. ஒரு காலத்தில் $300 ஆக இருந்த அடித்தள வீடுகளின் வாடகை $1500 முதல் $2000 வரை அதிகரித்தது" என்று மிதுல் தேசாய் கூறுகிறார். வீட்டு வாடகை அதிகரித்ததால், நல்ல வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் வீடுகளை சொந்தமாக வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கின்றனர். ஆனால் இப்போது வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், பல வீடுகள் காலியாக உள்ளன. இதனால், வாடகைக்கு வீடு கொடுத்து சம்பாதித்து வந்த வீட்டு உரிமையாளர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய வீட்டுக்கடன் தவணைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள். 2023-2024 ஆம் ஆண்டில் கனடா மாணவர் விசா திட்டத்தில் அப்போதைய ஜஸ்டின் ட்ரூடோ பெருமளவிலான மாற்றங்களைச் செய்தார். இதனால், மாணவர்களின் வருகை முன்பை விட கணிசமாகக் குறைந்துவிட்டதன் எதிரொலியாக, நாட்டின் வாடகை சந்தை நேரடியாக பாதிக்கப்பட்டதால், இப்போது வீடு மற்றும் வேலை இரண்டும் மக்களின் மன அழுத்தத்திற்கான முக்கிய காரணமாக மாறிவிட்டன. கணினி, ஸ்மார்ட்போன்களுக்கு பரஸ்பர வரி விதிப்பில் இருந்து டிரம்ப் விலக்கு அளித்தது ஏன்?14 ஏப்ரல் 2025 மனிதர்களே இல்லை: பென்குயின்கள் மட்டும் வசிக்கும் தீவுகளுக்கும் வரி விதித்த டிரம்ப்4 ஏப்ரல் 2025 சர்வதேச மாணவர்களின் எதிர்பார்ப்புகள் கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கனடா மிகவும் பிடித்த நாடாக இருந்து வருகிறது. பஞ்சாப், குஜராத், ஹரியாணா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பிகார், கேரளா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து மாணவர்கள் கனடாவுக்கு கல்வி கற்க வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பஞ்சாபிகள் மற்றும் குஜராத்திகள், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் கனடாவிற்கு அவர்கள் வந்துள்ளனர். நவ்ஜோத் சலாரியா என்பவர், 2022 ஆம் ஆண்டில் மாணவராக கனடாவிற்கு வந்தவர். இவர் பஞ்சாபை சேர்ந்தவர். தற்போது அவர், பணி அனுமதி விசா (work permit) பெற்று வேலையில் இருக்கிறார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருடைய பணி அனுமதி காலாவதியாகிவிடும் என்பதால் அவரின் கவலை அதிகரித்துவிட்டது "எனக்கு வேலை இருக்கிறது, ஆனால் கனடா நிரந்தர குடியுரிமை (PR) பெறவேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம். தற்போது இது தொடர்பாக எதுவும் நடக்கவில்லை" என்று நவ்ஜோத் சலாரியா கூறினார். அண்மையில் நிரந்தர குடியுரிமை தொடர்பான விதிமுறைகளிலும் கனடா அரசு பெரிய மாற்றங்களைச் செய்துள்ளதால், கனடாவில் கல்வி கற்றுவரும் வெளிநாட்டு மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் பலருடைய பணி அனுமதி விசா காலாவதியாகிவிட்டன. இதனால், கனடாவில் குடியேற வேண்டும் என்ற மாணவர்களின் கனவுகள் கானல்நீராகிவிட்டன. அதில், பஞ்சாப் மாநிலத்தின் தரன்தாரனை சேர்ந்த சிமர்ப்ரீத் சிங் என்பவரும் ஒருவர். "எனது பணி அனுமதி காலாவதிவிட்டதால் இனி கனடாவில் வேலை செய்ய முடியாது. வருமானம் இல்லாமல், செலவுகளுக்கு பணம் இல்லாமல் நிலைமை மோசமாகிவிட்டது" என்று சிமர்ப்ரீத் சிங் கூறினார். "இப்போது கனடாவில் நடைபெறவிருக்கும் தேர்தல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதுதான் எங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்" என்று அவர் கூறினார். படக்குறிப்பு,2023-2024ஆம் ஆண்டில், அப்போதைய ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் கனடாவின் மாணவர் விசா திட்டத்தில் பெரிய மாற்றங்களைச் செய்தது. குஜராத்தை சேர்ந்த சோனல் குப்தாவும் கனடாவுக்கு கல்வி பயில வந்தவர்தான். தற்போது, அவர் நிரந்தர குடியுரிமைக்காக காத்திருக்கிறார். கனடாவின் நிலைமை முன்பை விட நிறைய மாறிவிட்டது என்று சோனல் குப்தா கருதுகிறார். "கனடாவின் தற்போதைய நிலைமைக்கு வெளிநாட்டு மாணவர்களே காரணம் என்று கனடாவின் குடிமக்கள் கருதுகின்றனர். அது உண்மையல்ல. மாணவர்கள் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து இங்கு வந்துள்ளனர். உள்ளூர் மக்களுக்கு வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு" என்று சோனல் குப்தா கூறுகிறார். கனடாவின் தேர்தல்களை வெளிநாட்டு மாணவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் சோனல் குப்தா, நிலைமை எப்படியிருந்தாலும், ஏதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் நாட்களைக் கழிப்பதாக கூறுகிறார். கனடா பொதுத் தேர்தலில் இந்தியா, சீனா தலையிட வாய்ப்புள்ளதா? குற்றச்சாட்டின் பின்னணி என்ன?26 மார்ச் 2025 கனடாவின் புதிய பிரதமர் இந்தியாவுடன் உறவை மேம்படுத்துவாரா? குடியேற்ற கெடுபிடிகள் தளருமா?18 மார்ச் 2025 கனடாவில் வீடு பற்றாக்குறை தொடர்பான தரவுகள் படக்குறிப்பு,கனடாவில் வீட்டு விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. கனடா தற்போது குடியிருப்பு நெருக்கடியை எதிர்கொள்கிறது. அந்நாட்டு அரசின் தரவுகளின்படி, நாட்டில் சுமார் நான்கு லட்சம் வீடுகள் பற்றாக்குறையாக உள்ளன. கனடாவின் ஸ்கொட்டியாபேங்க் 2021 அறிக்கையின்படி, பிற G-7 நாடுகளை விட கனடாவில் வீடுகள் குறைவாக உள்ளது. ஆயிரம் குடியிருப்பாளர்களுக்கான வீடுகள் தொடர்பாக பிற ஜி-7 நாடுகளுடன் ஒப்பிடும்போது கனடாவில் வீடுகளின் எண்ணிக்கை குறைவு. 2016 ஆம் ஆண்டு முதல் மக்கள்தொகைக்கு ஏற்ப வீடுகள் கட்டுவதற்கான வேகம் குறைந்துள்ளது என்பதை தரவு தெளிவாகக் காட்டுகிறது. 2016 ஆம் ஆண்டில், 1,000 பேருக்கு 427 வீடுகள் என்றிருந்த நிலை, 2020 ஆம் ஆண்டில் 424ஆகக் குறைந்துள்ளது. "கனடாவின் மக்கள் தொகை பெருகும் விகிதத்தில் வீடுகள் கட்டப்படவில்லை, இது வீடுகளின் விலையில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது," என்று பிராம்ப்டனில் ரியல் எஸ்டேட் சந்தையுடன் தொடர்புடைய மின்கல் பத்ரா கூறுகிறார். "கனடாவில் வீடு வாங்குவது என்பது இப்போது கனவாகிவிட்டது, இங்கு, கடந்த சில மாதங்களில் வீட்டு விலைகள் 15-20 சதவீதம் அதிகரித்துள்ளன" என்று மின்கெல் பத்ரா சுட்டிக்காட்டுகிறார். இது, வாடகை சந்தையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, வீட்டு வாடகைகள் முன்பை விடக் குறைந்துள்ளன. இதன் காரணமாக, முதலீட்டிற்காக வீடு வாங்கியவர்கள் இப்போது தவணைகளைக் கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். படக்குறிப்பு,கனடாவிற்கு மாணவர் விசாவில் சென்ற மாணவர்கள் தங்களது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்தின் 2024 அறிக்கையுடன் 2019ம் ஆண்டின் அறிக்கையை ஒப்பிடும்போது, நிரந்தர குடியுரிமை கோருவோரின் எண்ணிக்கை 41 சதவீதம் அதிகரித்துள்ளது, கல்வி அல்லது வேலைக்காக கனடாவுக்கு தற்காலிகமாக வந்து நிரந்தர குடியுரிமை கோருவோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. கனடா அரசின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் 6 லட்சத்து 82 ஆயிரத்து 889 மாணவர்கள் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில், 25,605 வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு கனடாவின் நிரந்தர குடியுரிமையைப் பெற்றனர், இது 2022 ஐ விட 30 சதவீதம் அதிகம். 2023 ஆம் ஆண்டில், கனடா 4,71,808 புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொண்டது. இது 2022ம் ஆண்டைவிட 7.8 சதவீதம் அதிகமாகும். ஆனால் தேர்தலை கருத்தில் கொண்டு, கனடா அரசு, அதன் குடியேற்றம் மற்றும் மாணவர் அனுமதிக் கொள்கைகளில் பெரிய அளவிலான மாற்றங்களை செய்தது. எனவே தற்போது, மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ள மார்க் கார்னி - யார் இவர்?10 மார்ச் 2025 ஜம்மு காஷ்மீர் தாக்குதல் பற்றி பாகிஸ்தானியர்கள் கூறுவது என்ன? பாக். ராணுவ தளபதி பேச்சு பற்றி விவாதம் ஏன்?23 ஏப்ரல் 2025 படக்குறிப்பு,கனடாவின் நிலைமை முன்பை விட நிறைய மாறிவிட்டது என்று சோனல் குப்தா கருதுகிறார் கனடாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் குடியேற்றம் மற்றும் குடியிருப்பு பிரச்னை மிக முக்கியமானது. குடியிருப்புத் தவிர, அதிகரித்து வரும் பணவீக்கம், குறைந்துவரும் வேலைவாய்ப்புகள் மற்றும் அண்மையில் அமெரிக்கா விதித்த வரியின் தாக்கம் ஆகியவையும் இந்தத் தேர்தல்களில் முக்கியப் பிரச்னைகளாக உள்ளன. கனடாவில் லிபரல் கட்சி 2015 முதல் ஆட்சியில் உள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக, இங்குள்ள முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ், என்டிபி, கிரீன் பார்ட்டி உள்ளிட்ட எதிர்கட்சிகள் லிபரல் கட்சியை கேள்விகளால் துளைத்தெடுக்கின்றன. குறிப்பாக, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொலியேவ் என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் ஆகியோர், தற்போதைய கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கோருகின்றனர். லிபரல் கட்சித் தலைவரும், கனடா பிரதமருமான மார்க் கார்னி, "நாட்டில் வீட்டுவசதி நெருக்கடி நிலவுகிறது, நான் ஆட்சிக்கு வந்தால், ஐந்து லட்சம் புதிய வீடுகளைக் கட்டுவேன்" என்று கூறுகிறார். "கடந்த சில ஆண்டுகளாக பல காரணங்களால், குறிப்பாக குடியிருப்பு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை கடினமாக உள்ளது. ஆனால் கனடாவை மேம்படுத்த எங்கள் கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்" என்று மிசிசாகா-மால்டன் தொகுதியின் தற்போதைய எம்.பி.யான லிபரல் கட்சியை சேர்ந்த எக்விந்தர் கஹீர் கூறுகிறார் கடந்த 30 ஆண்டுகளாக கனடாவில் வசித்து வரும் வழக்கறிஞர் ஹர்மிந்தர் சிங் தில்லான், ஒரு சமூக ஆர்வலர் ஆவார். "கனடாவில் குடியிருப்புகள் தொடர்பான நெருக்கடி மிகப்பெரியது, குறிப்பாக 2018 முதல் 2022 வரை வீடுகளின் விலைகள் இரட்டிப்பாகிவிட்டது, 2025 தேர்தலில் வீடுகள் பற்றாக்குறை ஒரு முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது" என்று அவர் கூறுகிறார். அமெரிக்கா வரிகளை அதிகரித்துள்ளதால் பல வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சில மாணவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். இதன் காரணமாக வேலைவாய்ப்புகளும் குறைகிறது. ஏற்கனவே வேலையின்மையால் போராடி வரும் இளைஞர்களுக்கு இது இன்னும் பெரிய நெருக்கடியாக மாறி வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce3v5wvyy4xo
  17. LIVE 43rd Match (N), Chennai, April 25, 2025, Indian Premier League Chennai Super Kings (13.2/20 ov) 116/5 Sunrisers Hyderabad SRH chose to field. Current RR: 8.66 • Last 5 ov (RR): 49/2 (9.80) Live Forecast: CSK 185
  18. 25 APR, 2025 | 05:15 PM முல்லைத்தீவில் அமைச்சர் சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் மீன்பிடிதொழிலாளர் சங்கத்தின் தலைவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நேற்றைய தினம் வடமாகாணத்தில் கடந்த 15 வருடங்களாக வேருன்றியுள்ள வடமாகாணத்தை சாரத ஒரு அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகரன் தேர்தல் பிரச்சார வேலையில் ஈடுபடுவதற்கு முல்லைத்தீவிற்கு சென்றிருந்தார். முல்லைத்தீவிலே கேப்பாபிலவிற்கு சென்று கடற்தொழில் அமைச்சர் என்ற வகையிலே மீன்பிடி அமைச்சர் என்ற வகையிலே, அவர் அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை வெளியில் கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொள்ள விரும்பினார். அவர் கேப்பாபிலவிற்கு சென்று நந்திக்கடலை அடைவதற்கான பாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு தருணத்திலே, அவர் அங்குள்ள மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மக்களை சந்தித்துள்ளார். அங்குள்ள மீனவர்கள் நந்திக்கடலில்தான் தொழிலில் ஈடுபடுபவர்கள், உங்களிற்கு தெரியும், நந்திக்கடலில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்ற மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட ஒரு நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர் அங்கு சென்று அங்குள்ள மீன்பிடிசங்க தலைவரை சந்திக்க சென்று அவருடைய வீட்டிற்கு வெளியே நின்று அவரை கூப்பிட்டிருக்கின்றார். அப்போது அவர் செபஸ்தியாம்பிள்ளை சுகிர்ந்தன் வீட்டிற்கு வெளியே வந்து, அவருடைய ஏமாற்றத்தை, பொதுவாக இன்றைக்கு இருக்கக்கூடிய தங்களுடைய மக்களின் எதிர்பார்ப்புகள் முற்றுமுழுதாக கைவிடப்பட்டு, அவர்கள் அனாதைகளாக இருக்கின்ற சூழலிலே அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார். இதற்கு முதலும் டக்ளஸ், ராஜிதசேனரட்ண உட்பட பலர் வந்தார்கள், வந்து போவினம் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்திருக்கின்றார். எத்தனையோ தடவை நாங்கள் சொல்லியும் எதுவும் நடைபெறவில்லை, உங்களுடைய வருகையும் அந்த அடிப்படையில்தான் இருக்கும் என அவர் தெரிவித்திருக்கின்றார். எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று தன்னுடைய மனதிற்குள் இருக்கின்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். தொடர்ந்தும் அமைச்சர் சந்திரசேகரன் கதைத்துக்கொண்டிருக்கவே சுகிந்தன் நந்திக்கடலிற்கு சென்று நிலைமைகளை பார்ப்போம் அப்போதுதான் உங்களிற்கு விளங்கும் என தெரிவித்து அவர்களை நந்திக்கடலை நோக்கி கூட்டிச்செல்ல வெளிக்கிட்டிருக்கின்றார். அந்த பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது அதனைதான் அவர் அவர்களிற்கு சுட்டிக்காட்ட விரும்பினவர். வாகனம் செல்ல முடியாது இதனால்தான் சந்திரசேகரன் வாகனத்தை விட்டு இறங்கி, சென்று அவரை சந்திக்கவேண்டிய நிலைமை உருவானது. நாங்கள் தொழில் செய்வதற்கு ஒவ்வொரு நாளும் இந்த வீதிவழியாகத்தான் செல்லவேண்டும், இந்த வீதியை திருத்தி தருமாறு நாங்கள் எத்தனையோ முறை கேட்டிருக்கின்றோம். ஆனால் செய்து தரவில்லை என ஆதங்கப்பட்டிருக்கின்றார். இந்த நிலையில் இராமலிங்கம் சந்திரசேகரனின் கையாட்கள் அவரை தாக்கியுள்ளனர், மோசமாக தாக்கியுள்ளனர். அவர் இன்றும் அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றார், பொலிஸாருக்கு தெரிவிப்பதோ இல்லையோ என்ற அச்சத்தில் இருக்கின்றார். நேற்று அவர்கள் நடந்துகொண்ட விதத்தினால் அவர் பயந்துபோயுள்ளார். நாங்கள் இது குறித்து அறிந்ததும் அவருடன் தொடர்புகொண்டு இந்த விடயங்களை உறுதிப்படுத்தியுள்ளோம். இதனை நீங்கள் வெளிக்கொண்டுவந்தே ஆகவேண்டும் என நாங்கள் அவருக்கு தெளிவாக தெரிவித்திருக்கின்றோம். ஏனென்றால் இதனை வெளியில் கொண்டுவருவதன் மூலம்தான் உங்களின் பாதுகாப்பை நீங்கள் உறுதிப்படுத்தலாம் என தெரிவித்தோம், எந்தளவிற்கு இது மக்களிடம் போய்சேருதோ எந்தளவிற்கு இது சர்வதேச சமூகத்திடம் போய்சேருகின்றதோ, எந்தளவிற்கு இது மனித உரிமைகளை ஆய்வு செய்கின்ற தரப்புகளிடம் போய்சேருகின்றதோ அந்தளவிற்கு பாதுகாப்பாகயிருக்குமே தவிர அமைதியாக இருந்தால் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என கருதவேண்டாம் என தெரிவித்தோம். https://www.virakesari.lk/article/212933
  19. அமெரிக்காவுக்காகவும், பிரிட்டனுக்காகவும் கடந்த 30 ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு உதவுகிறோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அதிர்ச்சி பதிலை கொடுத்துள்ளார். மேற்கு நாடுகளுக்காகவே பாகிஸ்தான் இந்த வேலையை செய்து வருவதாகவும், தீவிரவாதிகளுக்கு அளித்த செயல்தான் தற்போது பாகிஸ்தானையே மோசமான நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 22 ஆம் திகதி ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பைசாரன் பள்ளத்தாக்கில் செவ்வாய்க்கிழமை இயற்கை காட்சிகளை ரசித்தபடி இருந்த அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது, திடீரென அங்கு வந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். மேலும், ஆண்களை குறிவைத்து மட்டுமே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தில் மொத்தம் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தான், தற்போது உலக நாடுகளையே உலுக்கியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அதில், “நாங்கள் சுமார் 3 தசாப்தங்களாக அமெரிக்காவுக்கும், பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகளுக்கும் இந்த மோசமான வேலையைச் செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். “அது ஒரு தவறு. அதற்காக நாங்கள் துன்பப்பட்டோம். அதனால்தான் நீங்கள் இதை என்னிடம் சொல்கிறீர்கள்” எனத் தெரிவித்தார். https://thinakkural.lk/article/317317
  20. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 2,623 முறைப்பாடுகள் பதிவு! 25 APR, 2025 | 03:57 PM 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி) 2,623 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 13 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 2,421 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 189 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/212924
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2013ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டபோது கானாவைச் சேர்ந்த கார்டினல் பீட்டர் டர்க்சன் ஒரு முக்கியப் போட்டியாளராகக் கருதப்பட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், லெபோ டிசெகோ பதவி, சர்வதேச மத நிருபர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் கத்தோலிக்க திருச்சபையின் வளர்ச்சி மட்டுமே அடுத்த போப் எங்கிருந்து வருவார் என்பதைக் கணிக்கக்கூடிய ஒரே காரணி என்றால், அடுத்த போப் ஆப்பிரிக்கராக இருப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது எனச் சொல்லலாம். ஆப்பிரிக்கா, உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் கத்தோலிக்க மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 2022 மற்றும் 2023ஐ உள்ளடக்கிய இரண்டு ஆண்டு காலத்தில் இது 3.31% அதிகரித்துள்ளது. வாடிகனின் சமீபத்திய புள்ளிவிவரங்கள், உலகின் கத்தோலிக்கர்களில் 20% பேர் ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்வதாகக் காட்டுகின்றன. இதற்கு நேர்மாறாக, ஐரோப்பா அதே காலகட்டத்தில் 0.2% என்ற மிகக் குறைந்த வளர்ச்சியைக் கண்டது. மேலும் 1910 மற்றும் 2010க்கு இடையில், கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 63%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பியூ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் கிறிஸ்தவத்தின் மையப் பகுதியாகக் கருதப்பட்ட இந்தப் பகுதி, உலகின் மதச்சார்பற்ற நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. கத்தோலிக்க திருச்சபை இன்னும் லத்தீன் அமெரிக்காவில் செல்வாக்கு மிக்கதாக இருந்தாலும், அங்குள்ள பல நாடுகளில் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவத்திற்கு எதிராகத் தனது வலிமையை அது இழந்து வருகிறது. கடந்த 2022இல், இந்தப் பிராந்தியத்தில் உள்ள 18 நாடுகளில் லத்தீனோபரோமெட்ரோ எனும் அமைப்பு நடத்திய ஆய்வில், கத்தோலிக்கர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை 2010இல் 70 சதவிகிதமாக இருந்தது. ஆனால், அதுவே 2020இல் 57% ஆகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆப்பிரிக்கா, உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் கத்தோலிக்க மக்கள்தொகையைக் கொண்டுள்ளது எனவே, அடுத்த போப்பை தேர்ந்தெடுக்க கார்டினல்கள் வாடிகனில் கூடும்போது, 'வேட்பாளர்' எங்கிருந்து வருகிறார் என்பதும் அடுத்த போப்பை தீர்மானிக்கும் அவர்களது முடிவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா? நைஜீரிய கத்தோலிக்கப் பாதிரியாரும் டீபால் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான பாதிரியார் ஸ்டான் சூ இலோ அப்படித்தான் நினைக்கிறார். "ஒரு ஆப்பிரிக்க போப் இருப்பது சிறப்பாக இருக்குமென நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். திருச்சபையின் தலைமை, உலகளாவிய சபையின் அமைப்பைச் சிறப்பாகப் பிரதிபலிக்க வேண்டும் என்றும் அவர் வாதிடுகிறார். போப் பிரான்சிஸ் 2013இல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 9% ஆக இருந்த துணை-சஹாரா ஆப்பிரிக்க பகுதிகளைச் சேர்ந்த கார்டினல்களின் விகிதத்தை 2022இல் 12% ஆக உயர்த்தினார். இப்போது அந்த கார்டினல்களும் வாக்களிக்க உள்ளார்கள். "அதற்காக அவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவருக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அர்த்தமல்ல" என்கிறார் பாதிரியார் சூ இலோ. "கார்டினல்கள் மிகவும் பிரபலமான ஒருவரைத்தான் தேர்வு செய்வார்கள். அதாவது தேர்வு செய்யப்படும் நபர் ஏற்கெனவே செல்வாக்கு மிக்க நபராக இருப்பார்" என்று அவர் கூறுகிறார். "இன்று வாடிகனில், மூத்த ஆப்பிரிக்க மதகுருமார்களில் எவரும் எந்த முக்கியப் பதவியையும் வகிக்கவில்லை என்பதுதான் சவால். அது ஒரு முக்கிய சிக்கல். போப் பதவிக்கு வரக்கூடிய ஆப்பிரிக்க கார்டினல்களை பற்றி நீங்கள் சிந்தித்தால், இன்றைய சூழலில் உலகளாவிய கத்தோலிக்க மதத்தில் யார் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அப்படி யாரும் இல்லை என்பதே நிதர்சனம்" என்கிறார் பாதிரியார் சூ இலோ. போப் பிரான்சிஸ் மறைவு: புதிய போப் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்?22 ஏப்ரல் 2025 போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்; பிரதமர் மோதி கூறியதென்ன?21 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2023ஆம் ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் தெற்கு சூடானுக்கு போப் பிரான்சிஸ் சென்றபோது, ஆயிரக்கணக்கானோர் அவரைப் பார்க்க வந்தனர். இந்த நிலை, 2013ஆம் ஆண்டு கானாவை சேர்ந்த கார்டினல் பீட்டர் டர்க்சன் போப் பதவிக்கு ஒரு வலுவான போட்டியாளராக இருந்ததற்கும், 2005ஆம் ஆண்டு நைஜீரிய கார்டினல் பிரான்சிஸ் அரின்ஸ், போப் பெனடிக்ட் XVI தேர்வு செய்யப்படுவதற்கு வழிவகுத்த மாநாட்டில் ஒரு சாத்தியமான வேட்பாளராக இருந்ததற்கும் நேர்மாறாக உள்ளது என்று பாதிரியார் சூ இலோ கூறுகிறார். "ஆப்பிரிக்கா தொடர்பான போப் பிரான்சிஸின் வெளிப்படையான மனப்பான்மையைக் கருத்தில் கொண்டால், ஆப்பிரிக்க கண்டத்திற்கும் கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது என்பது நம்மில் பலரை இன்னும் ஆச்சரியப்படுத்தும் ஒன்று" என்று பாதிரியார் சூ இலு கூறுகிறார். ஆப்பிரிக்காவில் இருந்து மூன்று போப்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இதுவரை மூன்று போப்கள் வந்திருந்தாலும்கூட, அதில் கடைசி போப் ஆணவடரான - போப் கெலாசியஸ் I - 1,500 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனவே இன்னொரு ஆப்பிரிக்க போப் வருவதற்கு இதுவே சரியான நேரம் என்று பலர் வாதிடுகின்றனர். ஆனால் சில ஆப்பிரிக்க கத்தோலிக்கர்கள், அடுத்த போப் எங்கிருந்து வரக்கூடும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நினைக்கிறார்கள். நோட்டர் டேம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் நைஜீரியாவில் பிறந்த கத்தோலிக்க பாதிரியாருமான பவுலினஸ் இகெச்சுக்வு ஒடோசோரும் அப்படித்தான் கருதுகிறார். "ஒருவர் ஆப்பிரிக்காவில் இருந்து வருவதால் அல்லது ஐரோப்பாவில் இருந்து வருவதால், அவர்தான் பிரதான வேட்பாளர் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை," என்று அவர் கூறுகிறார். "நீங்கள் எங்கிருந்து வந்தாலும், நீங்கள் தேர்வு செய்யப்பட்டவுடன், அனைவரின் பிரச்னைகளும் உங்கள் பிரச்னையாக மாறும். மக்கள் எங்கிருந்தாலும், அவர்கள் எத்தனை பேர் இருந்தாலும், எந்தச் சூழலில் இருந்தாலும், கிறிஸ்துவ சமூகத்தைக் கட்டிக்காப்பதே உங்களுக்கு இருக்கும் ஒரே கவலையாக இருக்கும்" என்கிறார். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், போப் தேவாலயத்தின் தலைமை இறையியலாளராக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். போப் என்பவர் பாரம்பரியத்தை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும், அதைப் பயன்படுத்தி மக்களுக்கு வழிகாட்டக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்று பவுலினஸ் நினைக்கிறார். பாகிஸ்தான் பல லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்றுவது ஏன்? தாலிபன் கூறுவது என்ன?22 ஏப்ரல் 2025 மோதி - ஜே.டி. வான்ஸ் சந்திப்பு - வரி விதிப்பு நடவடிக்கைகள் குறித்து பேசியது என்ன?21 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2023ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு பயணம் செய்தபோது அவர் நடத்திய திறந்தவெளி திருப்பலி கூட்டத்தில் 10 லட்சம் மக்கள் கலந்து கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த போப் ஆப்பிரிக்காவை சேர்ந்தவராக இருக்க வேண்டுமா என்று கேட்கப்படுவது விரக்தியை ஏற்படுத்துவதாக பாதிரியார் ஒடோசோர் கூறுகிறர். பன்மைத்துவத்தின் அடையாளமாக மட்டுமே ஒரு ஆப்பிரிக்க போப் பார்க்கப்படுவதை அவர் விரும்பவில்லை. இந்தப் பார்வை, "சரி, ஆப்பிரிக்க கத்தோலிக்கர்கள் எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறார்கள். எனவே நாம் அவர்களுக்கு ஏன் ஒரு போப்பை வழங்கக் கூடாது' என்று மக்கள் சொல்வது போல் இருக்கிறது" என்கிறார் அவர். அவரது பார்வையில், ஆப்பிரிக்காவில் உள்ள விசுவாசிகளைப் பாதிக்கும் விஷயங்களை வாடிகனில் அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும். "சில நேரங்களில், ஆப்பிரிக்கர்கள் முக்கியமற்றவர்கள் என்பது போல அல்லது அவர்களுடைய நம்பிக்கை ஏதோவொரு வகையில் தாழ்ந்ததாகவோ அல்லது போலியாகவோ பார்க்கப்படுவது போல மற்றும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படக் கூடாது என்பது போன்ற ஒரு சூழல் நிலவுகிறதோ எனத் தோன்றுகிறது" என்று அவர் கூறுகிறார். "ஆப்பிரிக்கர்கள் தங்கள் பிரச்னைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் காதுகளுக்குச் செல்லவில்லை என்று உணரும்போது, அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்குவார்கள். சரி, ஒருவேளை நம்மில் இருந்து ஒருவர் அங்கு இருந்தால் மட்டுமே நமது குரல் ஒலிக்கும் என்ற எண்ணமும் தோன்றும்" என்கிறார் பாதிரியார் ஒடோசோர். வாடிகனில் இனவெறியா? ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கார்டினல்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், அவர்களுக்கு திருச்சபையில் உண்மையான அதிகாரம் இல்லை என்று பாதிரியார் சூ இலோ கருதுகிறார். பாதிரியார் ஒடோசோரின் கருத்தும் அதுவே. "போப் பிரான்சிஸ் நியமிக்கும் கார்டினல்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை," என்று அவர் விளக்குகிறார். ஆனால், "நீங்கள் அவர்களை நியமிக்கும்போது, அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறீர்களா? நீங்கள் நியமிக்கும் இந்த மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுங்கள், வேலையில் அவர்களை நம்புங்கள், அதை அவர்கள் சுதந்திரமாகச் செய்யட்டும்" என்று அவர் கூறுகிறார். திருச்சபையின் தலைமை, அதன் உறுப்பினர்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் மேற்கொண்ட முயற்சிகளைத் தடுக்கக்கூடிய ஒரு பிரச்னையை, பாதிரியார் சூ இலோ மற்றும் பாதிரியார் ஒடோசோர் சுட்டிக்காட்டுகின்றனர். "திருச்சபையில் இனவெறி பற்றிய கேள்வி இன்னும் உள்ளது. நாம் ஒருபோதும் அதைப் பற்றிப் பேசியதில்லை" என்று பாதிரியார் ஒடோசோர் கூறுகிறார். "அது ஒருவரை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும், அவர் போப் அல்லது கத்தோலிக்க தேவாலயத்திற்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும் சரி, அவர் என்ன செய்தாலும் சரி, அவர் ஒரு ஆப்பிரிக்க போப்பாக மட்டுமே பார்க்கப்படுவார்." "மீறப்படும் ஈஸ்டர் சண்டை நிறுத்தம்" - ரஷ்யாவின் தாக்குதல் தொடர்வதாக குற்றம் சாட்டும் யுக்ரேன்20 ஏப்ரல் 2025 அமெரிக்கா - சீனா வரிக்குவரி யுத்தத்தால் இந்தியாவுக்கு புதிய சவால்20 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,திருச்சபையின் தலைமை, அதன் உறுப்பினர்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் நினைத்தார் அடுத்த போப்பை நியமிக்கும் கார்டினல்களில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு கார்டினல்களை, 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுத்திருந்தார். இது ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைவிட சற்று குறைவு. அதாவது, யார் புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டாலும், ஏழைகள் மற்றும் உரிமை மறுக்கப்பட்டவர்களைச் சென்றடைவதில் போப் பிரான்சிஸ் காட்டும் முக்கியத்துவத்தை அவர்களும் பகிர்ந்து கொள்வதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது. இந்த அணுகுமுறையை 'ஏழைகளுக்கு முன்னுரிமை' என்று அழைக்கிறார் பாதிரியார் சூ இலோ. இது, 'அவர்களது குரல்களைக் கேட்கும் ஒரு தேவாலயம், மிகவும் முற்போக்கான தேவாலயம், மிகவும் எளிமையான தேவாலயம்' என்பதில் கவனம் செலுத்துகிறது. அடுத்ததாக திருச்சபையை வழிநடத்தப் போகும் எவரிடமும் அவர் காண விரும்பும் ஒன்று இதுதான். ஆச்சரியமான முடிவு ஆனால் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம். அதற்கு மற்றொரு முக்கியக் காரணி உள்ளது என்று பாதிரியார் சூ இலோ கூறுகிறார். "கடவுள், பரிசுத்த ஆவி, திருச்சபையின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க உதவுகிறார் என்று கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். அதாவது, 2013இல் போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டதைப் போல, ஓர் ஆச்சரியமான முடிவாக இருக்கலாம். "அவர் வருவார் என யாரும் கணிக்கவில்லை" என்று பாதிரியார் சூ இலோ கூறுகிறார். "அடுத்த போப், திருச்சபை விவகாரங்களில் தனக்கு முன்பிருந்த போப் கொண்டிருந்த அதே பார்வையைக் கொண்டிருப்பது முக்கியமா, அல்லது அவர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது முக்கியமா?" என பாதிரியார் சூ இலோவிடம் கேள்வி எழுப்பினோம். "நான் ஒரு நல்ல பாதிரியாரைப் போல பதிலளிப்பேன்," என்று அவர் சிரித்துக் கொண்டே தொடர்ந்து பேசினார். "பிரான்சிஸின் கண்ணோட்டத்தைத் தொடரும் ஒரு போப்பை கடவுள் நமக்குத் தருவார் என்று நான் பிரார்த்தனை செய்வேன். அத்தகைய நபர் ஆப்பிரிக்காவில் இருந்து வருவார் என்று நான் பிரார்த்தனை செய்வேன்." என்றார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm24x8pg182o
  22. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) முற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார். முதலில் மல்வத்து மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகாநாயக்க வண, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரைச் சந்தித்து, ‘சிறி தலதா வழிபாடு’ மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார். பின்னர், அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க வண, வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்து, சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார். அஸ்கிரி பீடத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக கடமையாற்றும் வண,உருளேவத்த தம்மரக்கித நாயக்க தேரரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதுடன், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். https://thinakkural.lk/article/317312 மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி! Published By: DIGITAL DESK 2 25 APR, 2025 | 02:32 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார். முதலில் மல்வத்து மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகாநாயக்க வண, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரைச் சந்தித்து, "ஸ்ரீ தலதா வழிபாடு" மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார். பின்னர், அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க வண, வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்து, சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார். அஸ்கிரி பீடத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக கடமையாற்றும் வண,உருளேவத்த தம்மரக்கித நாயக்க தேரரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதுடன், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/212907
  23. 25 APR, 2025 | 03:55 PM மொஸ்கோவில் இடம்பெற்ற கார்க்குண்டுவெடிப்பில் இராணுவத்தின் உயர்அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். ரஸ்ய இராணுவத்தின் பிரதான செயற்பாட்டு அலுவலகத்தின் துணை தலைவரான யரோஸ்லாவ் மொஸ்காலிக் ரஸ்ய தலைநகரின் நெஸ்டேரோவ் பவுல்வார்ட்டில் இடம்பெற்ற கார்க்குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளார். காரின் எரிவாயு சிலிண்டருக்கு அருகில் பொருத்தப்பட்டடிருந்த வெடிபொருள் தொலைவிலிருந்து இயக்கப்படும் கருவி மூலம் வெடிக்கவைக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்மாடிகளிற்கு அருகில் கார் தீப்பற்றி எரிவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலிற்கு யார் காரணம் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் ரஸய இராணுவத்தின் உயர் அதிகாரிகளை ரஸ்யாவிற்குள் இலக்குவைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212922

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.