Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 21 APR, 2025 | 09:02 AM ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 6வது வருட நிறைவை முன்னிட்டு இன்று காலை 8.45 முதல் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் இல்ல தொடர்பாடல் பணிப்பாளர் அனைத்து இலங்கை மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட நாட்டின் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 6 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், தாக்குதலுக்கு காரணமானவர்கள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. இந்நிலையில், ஏப்ரல் 21 தாக்குதலின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் தலைமையில் விசேட ஆராதனை நிகழ்வு இடம்பெறவுள்ளது. அத்துடன் குறித்த பகுதியில் இன்று நடைபவனி ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. அதேநேரம், காலை 8.45 அளவில் நாடளாவிய ரீதியாக உள்ள சகல வழிபாட்டு ஸ்தலங்களிலும் மணி ஓசை எழுப்பப்படவுள்ளதுடன், 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/212491
  2. மும்பை ஹாட்ரிக் வெற்றி: தோல்வியிலும் சிஎஸ்கேவுக்கு கிடைத்த ஆறுதல் - தோனி கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரோஹித் சர்மா இந்த ஐபிஎல் சீசனில் முதல் அரைசதத்தை விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார். கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 21 ஏப்ரல் 2025, 01:50 GMT மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நடப்பு சீசனில் தனது முதல் அரைசதத்தை ரோஹித் விளாச, டி20 ஸ்பெஷலிஸ்டான சூர்யகுமாரும் வழக்கமான அதிரடியைக் காட்டியதால் மும்பை அணி சிரமமின்றி வெற்றி இலக்கை எட்டியது. நட்சத்திரங்கள் சரியான நேரத்தில் எழுச்சி பெற்றுள்ளதால், ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ள மும்பை அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், சிஎஸ்கே அணியின் பிளேஆஃப் வாய்ப்பு சிக்கலாகியுள்ளது. அறிமுக வீரர் களத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூட பெரிய நட்சத்திரங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் சிஎஸ்கே அணியின் சோகம். சிஎஸ்கேவின் பிளேஆஃப் வாய்ப்பு பற்றி தோனி என்ன சொன்னார்? சிஎஸ்கே மந்தமான தொடக்கம் சிஎஸ்கே அணி வீரர் டேவான் கான்வேயின் தந்தை காலமாகிவிட்டதால் நேற்று சிஎஸ்கே வீரர்கள் கையில் கறுப்புபட்டை அணிந்து விளையாடினர். கான்வே இல்லாத நிலையில் ரவீந்திரா, ஷேக் ரஸீத் களமிறங்கினர். அஸ்வனிகுமார் ஓவரில் ரவீந்திரா விரைவிலேயே விக்கெட்டை இழந்தார். 3.1 ஓவர்களி்ல் சிஎஸ்கே அணி முதல் விக்கெட்டை இழக்கும் வரை ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தது. அனுபவம் இல்லாத தொடக்க வீரர்களால் மும்பையின் பும்ரா, போல்ட் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை என்பது கண்கூடாகவே தெரிந்தது. 17 வயதான இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் அறிமுகமாகி, அதிரடியாக பேட் செய்தார். ஆயுஷ் மாத்ரே களத்துக்கு வந்தபின்புதான் சில பவுண்டரிகள், சிக்ஸர்கள் சிஎஸ்கே அணிக்கு கிடைத்தன. அதன் பின்னரே சிஎஸ்கே ஸ்கோர்போர்டில் ரன்கள் ஓடின. பவர்ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 48 ரன்களைச் சேர்த்தது சிஎஸ்கே அணி. ஆயுஷ்மாத்ரே, 15 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்த நிலையில் தீபக் சஹர் ஓவரில் சான்ட்னரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் தொடக்க ஆட்டக்காரர் ஷேக் ரசீத் 12 ரன்னில் சான்ட்னர் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆகி ஆட்டமிழந்தார். 63 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே தடுமாறியது. இயேசு உண்மையில் குட்டையாக, கருப்பு நிறத்தில் இருந்தவரா? ஒரு வரலாற்றுப் பார்வை20 ஏப்ரல் 2025 இயேசு பார்க்க எப்படி இருந்தார்? அவரை சிலுவையில் அறைந்த நாளை 'புனித வெள்ளி' என்று அழைப்பது ஏன்?19 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அஸ்வனி குமார் ஓவர்களை குறிவைத்து ஜடேஜாவும், துபேயும் ஆடத் தொடங்கி பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினர். சிஎஸ்கேவை மீட்ட ஜடேஜா, துபே கூட்டணி 4வது விக்கெட்டுக்கு ஜடேஜா, துபே இருவரும் ஜோடி சேர்ந்து சிஎஸ்கே அணியை மெல்ல சரிவிலிருந்து மீட்டனர். சான்ட்னர் பந்துவீச்சை அதி எச்சரிக்கையாக கையாண்ட துபே பெரிய ஷாட்களுக்கு செல்லவில்லை. இதனால் சான்ட்னர் 2 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். துபேயும், ஜடேஜாவும் நீண்டநேரம் பெரிய ஷாட்களுக்குச் செல்லாமல் இருந்தனர். 7வது ஓவர் முதல் 12வது ஓவர் வரை சிஎஸ்கே அணி ஒருபவுண்டரி கூட அடிக்கவில்லை டிரன்ட் போல்ட், அஸ்வனி குமார் ஓவர்களை குறிவைத்து ஜடேஜாவும், துபேயும் ஆடத் தொடங்கி, பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினர். துபே 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். பும்ரா ஸ்லோவர் பால் பந்துவீச்சில் துபே 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 79 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து களமிறங்கிய தோனி 4 ரன்னில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். டெத் ஓவர்களை பும்ரா, சான்ட்னர் வீசி சிஎஸ்கே பேட்டர்களை கட்டிப்போட்டனர். சான்ட்னர் 18வது ஓவரை வீசி ஒரு பவுண்டரி கூட அடிக்கவிடவில்லை. ஜடேஜா 34 பந்துகளில் அரைசதம் அடித்து 53 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல்: ஒவ்வொரு வீரரின் பேட்டையும் களத்திலேயே நடுவர்கள் பரிசோதிப்பது ஏன்? விதிகள் கூறுவது என்ன? ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன? ஐபிஎல்: பந்தில் எச்சில் தடவ தடை நீக்கப்பட்டதை பவுலர்கள் வரவேற்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையின் 'ராஜா ரோஹித்' தி மும்பை சா ராஜா என்று செல்லமாக அழைக்கப்படும் ரோஹித் சர்மா இந்த ஐபிஎல் சீசனில் முதல் அரைசதத்தை நேற்று விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார். ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் தீர்க்கமாக, பொறுமையாக, எந்த தவறையும் பேட்டிங்கில் செய்யாமல் அற்புதமாக பேட் செய்தார். இதபோன்று ரோஹித் நிதானமாகத் தொடங்கி, அதிரடியாக ஆடியது அரிதானது. கலீல் அகமது பந்துவீச்சில் ரோஹித் லெக்சைடில் அடித்த இரு "பிக்அப் ஷாட்" சிக்ஸர்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகியது. பதிராணா பந்துவீச்சை ரோஹித் கசக்கிப் பிழிந்துவிட்டார். நூர் அகமது ஓவரையும் அவர் விட்டு வைக்கவில்லை. ரோஹித் சர்மா ஃபார்முக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை சிஎஸ்கே இளம் வீரர்கள் நேற்று உணர்ந்திருப்பர். ரோஹித் சர்மா கடந்த 6 போட்டிகளாக 20 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை, மொத்தமே 82 ரன்கள்தான் சேர்த்திருந்தார் என்ற விமர்சிக்கப்பட்டது. ஆனால் நேற்று பிரமிப்பூட்டும் ஷாட்களை அடித்த ரோஹித் சர்மா 33 பந்துகளில் அரைசதம் விளாசி, 45 பந்துகளில் 76 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோஹித் கணக்கில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். சிஎஸ்கே அணிக்கு எதிராக ரோஹித் சர்மா அடித்த 9-வது அரைசதமாகும். ஒட்டுமொத்தத்தில் 44வது ஐபிஎல் அரைசதமாகும். ரோஹித்துக்கு துணையாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் அரைசதம் அடித்து, 30 பந்துகளில் 68 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய கடைசி நிமிடங்களில் உள்ளே என்ன நடந்தது? புதிய தகவல்15 ஏப்ரல் 2025 மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பரவியது எப்போது? வரலாற்றைப் புரட்டிப் போடும் புதிய கண்டுபிடிப்பு12 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரோஹித் சர்மா கடந்த 6 போட்டிகளாக 20 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை, மொத்தமே 82 ரன்கள்தான் சேர்த்திருந்தார் என்ற விமர்சிக்கப்பட்டது சென்னையை வதம் செய்த மும்பை இந்த ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிஎஸ்கே அணியை முற்றிலுமாக ஆதிக்கம் செய்தது என்று கூற வேண்டும். பந்துவீச்சில் போல்ட், அஸ்வனி குமார் ஓவர்களை மட்டுமே துபே, ஜடேஜா அடித்தனர். பும்ரா, சான்ட்னர் ஓவர்கள் சிஎஸ்கே பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தன. மும்பை வான்கடே மைதானத்தில் இதுபோன்ற 176 ஸ்கோர் என்பது டிபெண்டபிள் ஸ்கோர் கிடையாது. இன்னும் கூடுதலாக 30 ரன்களை சிஎஸ்கே சேர்த்திருந்தால் சற்று போராடியிருக்கலாம். ஆனால், இந்த ஸ்கோரை வைத்து வலிமையான பேட்டிங் வரிசை வைத்திருக்கும் மும்பை அணியை சுருட்டுவது சாத்தியமில்லை. பேட்டிங்கில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை தெறித்து ஓடவிட்டனர். அதிலும் ரோஹித் சர்மா லெக் சைடில் அடித்த சில ஷாட்கள் மின்னல் வேக ஃபேவரேட் சிக்ஸர்களாக இருந்தன. கலீல் அகமது ஓவரில் விளாசிய இரு சிக்ஸர்களும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. இருவரையும் பிரிக்க தோனியும் பல பந்துவீச்சாளர்களை மாற்றியும், கடைசி வரை பலனில்லை. பதிரணா, நூர் அகமது இருவரையும் வைத்துதான் நடுப்பகுதி ஓவர்களை சிஎஸ்கே சமாளித்து வந்தது. ஆனால், நேற்று இருவரின் பந்துவீச்சையும் ரோஹித் சர்மா, சூர்யகுமார் விளாசித் தள்ளினர். அதிலும் ஜடேஜா மீது சூர்யகுமாருக்கு என்ன கோபமோ தெரியவில்லை, ஜடேஜா ஓவரை குறிவைத்து சூர்யகுமார் ஸ்வீப் ஷாட், காலை மடக்கிக்கொண்டு லெக் சைடில் சிக்ஸர், பவுண்டரி என துவைத்து எடுத்துவிட்டார். பதிராணா 2 ஓவர்கள் வீசிய நிலையில், 4 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி என 34 ரன்களை ரோஹித், சூர்யா விளாசித் தள்ளினா். ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கே அணியை மும்பை அணி தங்களின் பந்துவீச்சாலும், பேட்டிங்காலும் ஆதிக்கம் செய்தது என்றுதான் கூற முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரோஹித் சர்மா, சூர்யகுமார் இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை ஓடவிட்டனர். சிஎஸ்கேயின் ஆறுதல் இவர்கள்தான் சிஎஸ்கே அணியின் ஆறுதலாக நேற்று இருவர் மட்டுமே இருந்தனர். ஒன்று இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின். சிஎஸ்கே அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் அடித்து விளாசிய ரோஹித், சூர்யாவால் அஸ்வின் பந்துவீச்சை பெரிதாக அடிக்க முடியவில்லை. 4 ஓவர்களை வீசிய அஸ்வின் விக்கெட் எடுக்காவிட்டாலும் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 ரன்ரேட்டில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். 2வது நபர் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேயின் அதிரடியான பேட்டிங். இவர் போன்ற இளம் வீரரை ஏன் சிஎஸ்கே பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுந்தது. அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய மாத்ரே, பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ஒரு கேட்சைப் பிடித்தார், ரோஹித் சர்மாவுக்கு ஒரு கேட்சை பிடித்து பவுண்டரி கோட்டில் கால் சென்றுவிடும் சூழலில் பந்தை தடுத்து தட்டிவிட்டு சிக்ஸர் செல்வதைத் தடுத்தார். பீல்டிங்கிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட ஆயுஷ் மாத்ரே ஆறுதல். இருவரைத் தவிர சிஎஸ்கே அணி வேறு எதிலும் ஆறுதல் பட முடியாது. சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை1 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய மாத்ரே, பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ஒரு கேட்சைப் பிடித்தார் சிஎஸ்கே மோசமான செயல்பாடு பீல்டிங், பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலுமே சிஎஸ்கே அணி சராசரிக்கும் குறைவாகவே செயல்பட்டது. நடுப்பகுதி ஓவர்களில் பதிராணா, நூர்முகமது இருவரையும் வைத்து எதிரணிகளை மிரட்டிய நிலையில் இருவரின் பந்துவீச்சையும் ரோஹித், ஸ்கை நொறுக்கினர். மும்பை அணியின் ஒரு விக்கெட்டைத் தவிர்த்து அடுத்ததாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியாத நிலையில்தான் பந்துவீச்சு பலவீனமாக இருந்துள்ளது. ரோஹித், சூர்யா இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய கேப்டன் தோனி பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும், இருவரும் விக்கெட்டை பறிகொடுக்க சிறிதுகூட இடம் அளிக்கவில்லை. ஜடேஜா, பதிராணா, நூர் முகமது, கலீல் அகமது, ஓவர்டன் பந்துவீச்சில் ரோஹித், ஸ்கை இருவரும் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினர். ஜடேஜா பந்துவீச்சில் இதற்கு முன் 4 முறை ஆட்டமிழந்துள்ள சூர்யகுமார் யாதவ் நேற்று ஜடேஜா ஓவரை குறிவைத்து அடித்தார். ஜடேஜா ஓவரில் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி, ஸ்வீப்ஸில் சிக்ஸர் அடித்து, ஜடேஜா ஓவரில் முதல்முறையாக ஸ்கை சிக்ஸர் விளாசினார். சூர்யகுமார் ஸ்வீப் ஷாட்டில் மட்டும் நேற்று 35 ரன்கள் சேர்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பீல்டிங், பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலுமே சிஎஸ்கே அணி சராசரிக்கும் குறைவாகவே செயல்பட்டது சிஎஸ்கேவை ஆளும் மும்பை கடந்த 2022ம் ஆண்டுக்குப்பின் வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே அணியை முதல்முறையாக வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியது சென்னை. அப்போது நடந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா, பும்ரா இல்லை. ஆனால், நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு பதிலடி கொடுத்தது மும்பை இந்தியன்ஸ். சிஎஸ்கே அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் 3வது முறையாக மும்பை அணிவீழ்த்தியது. இதற்கு முன் 2008 ஐபிஎல் சீசனில் இதே வான்ஹடே மைதானத்தில் சிஎஸ்கேவை 9 விக்கெட்டில் பந்தாடியது மும்பை அணி, 2020-ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவை 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை நசுக்கியது. இப்போது 3வது முறையாக 9 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வாகை சூடியுள்ளது. சிஎஸ்கே அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் 3 முறை வீழ்த்திய ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான் வேறு எந்த அணியும் இல்லை. சிஎஸ்கே அணி நிர்ணயித்த ஸ்கோரை 100 பந்துகளுக்குள் சேஸ் செய்து வென்ற ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான். இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த தொடர் 3வது வெற்றியாகும். இதன் மூலம் மும்பை அணி 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், நிகரரன்ரேட்டில் ஆர்சிபிக்கு இணையாக 0.483 என இருக்கிறது. இன்னும் ஒரு வெற்றியை மும்பை அணி பெற்றால் நிகர ரன் ரேட்டில் 2வது இடம் அல்லது 3வது இடத்துக்கு முன்னேறிவிடும். அக்பரை பின்பற்றுமாறு ஔரங்கசீப்பை அறிவுறுத்திய சிவாஜி - ஒரு வரலாற்றுப் பார்வை23 மார்ச் 2025 'இந்திய கிரிக்கெட் பிதாமகன்' என்று இவரை அழைப்பது ஏன்? பன்முக ஆளுமையின் ஆச்சர்யம் தரும் வாழ்க்கை18 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இதற்கு முன் 2008 ஐபிஎல் சீசனில் இதே வான்ஹடே மைதானத்தில் சிஎஸ்கேவை 9 விக்கெட்டில் பந்தாடியது மும்பை அணி சிஎஸ்கேவின் பிளேஆஃப் வாய்ப்பு பற்றி தோனி கூறியது என்ன? சிஎஸ்கே கேப்டன் தோனி தோல்விக்குப் பின் கூறுகையில் " நாங்கள் டிபெண்ட் செய்ய முடியாத ஸ்கோரையே சேர்த்தோம். 2வது பாதியில் பனியின் தாக்கம் இருந்ததும் பந்துவீச்சில் தொய்வடைய காரணம். உலகக் கிரிக்கெட்டில் சிறந்த டெத்ஓவர் பந்துவீச்சாளர் பும்ரா, டெத்பந்துவீச்சை மும்பை அணி தொடக்கத்திலேயே கொண்டு வந்தால் எங்களால் சிறந்த தொடக்கம் கொடுக்க முடியவில்லை. பவர்ப்ளேயில் அதிக ரன்களும் அடிக்க முடியவில்லை. ஆயுஷ் மாத்ரே சிறப்பாக பேட் செய்தார். மும்பை பேட்டர்கள் சுழற்பந்துவீச்சை சிறப்பாக கையாண்டனர். நாங்கள் இந்தத் தோல்வியை உணர்ந்து ஆலோசிக்க வேண்டும். இந்த தொடரில் வெற்றிகரமாக இல்லாவிட்டாலும் நாங்கள் நல்ல கிரி்க்கெட்டை விளையாடினோம், உணர்ச்சிவசப்படத் தேவையில்லை. நாங்கள் சரியான ஃபார்மில் கிரிக்கெட் விளையாடுகிறோமா அல்லது சரியான ஃபார்மில் இருக்கிறோமா என்பது அவசியம் ஆய்வுசெய்யப்பட வேண்டியது, இன்னும் அதிகமான ரன்கள் சேர்க்க வேண்டியது அவசியம். சில கேட்சுகள்தான் ஆட்டத்தை மாற்றும், பீல்டிங்கில் உள்ள குறைகளையும் களைய வேண்டும். நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாவிட்டால் சரியான வீரர்கள் கலவையுடன் அடுத்த சீசனில் சந்திக்கலாம்" எனத் தெரிவித்தார். வெளியேறுகிறதா சிஎஸ்கே? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இன்னும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து சிஎஸ்கே அணி அதிகாரபூர்வமாக வெளியேறவில்லை. ஆனால், இன்னும் ஒரு தோல்வி அந்த அணியை முழுமையாக வெளியேற்றிவிடும். அதேசமயம், சிஎஸ்கே அணி சந்தித்த 6வது தோல்வியாகும். 8 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே 2 வெற்றி, 6 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.392 என இருக்கிறது. இன்னும் 6 போட்டிகள் சிஎஸ்கே அணிக்கு மீதமிருக்கும் நிலையில் அனைத்திலும் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். ஒருவேளை 16 புள்ளிகளை சிஎஸ்கே அணி பெற்றாலும் அது ப்ளே ஆஃப் செல்ல தகுதியாக இருக்குமா என்பதும் சந்தேகம்தான். இன்னும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறவில்லை. ஆனால், இன்னும் ஒரு தோல்வி அந்த அணியை முழுமையாக வெளியேற்றிவிடும். இன்றைய ஆட்டம் கொல்கத்தா vs குஜராத் இடம்: கொல்கத்தா நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதர்பாத் நாள் - ஏப்ரல் 25 இடம் – சென்னை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் நாள் - ஏப்ரல் 23 இடம் – ஹைதராபாத் நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ் நாள் - ஏப்ரல் 24 இடம் – பெங்களூரு நேரம்- மாலை 3.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-368 ரன்கள்(8 போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-365 ரன்கள்(7 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ்(மும்பை) 333 ரன்கள்(8 போட்டிகள்) நீலத் தொப்பி யாருக்கு? பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 14 விக்கெட்டுகள்(7 போட்டிகள்) குல்தீப் யாதவ்(டெல்லி) 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39j4kx2xkwo
  3. Published By: VISHNU 21 APR, 2025 | 02:14 AM யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆலய சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நால்வரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/212488
  4. 21 APR, 2025 | 10:52 AM முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (21) காலை ஆஜராகியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212502
  5. Published By: DIGITAL DESK 2 20 APR, 2025 | 09:29 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது நல்லாட்சி அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர்களே தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரம் பகுதியில் சனிக்கிழமை (19) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி ராஜபக்ஷவினரை பேசி திரிவதால் ட்ரம்ப் வரியினை அகற்றப்போவதில்லை அதனை அவர் விளங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு வேலைத்திட்டமொன்றுடனான நோக்குடன் செல்லவேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷத சில்வா மற்றும் டீ.வீ.ஷானக்க ஆகியோர்களால் ஆலோசனை அடங்கிய வேலைத்திட்டம் ஒன்றினை வழங்கியுள்ளனர். அதையாவது எடுத்துக்கொண்டு ஒரு வேலைத்திட்டத்தினை செய்யவேண்டும். அவ்வாறு இல்லாமல் கடிதமொன்றினை அனுப்பி தபால் மூலம் பதில் ஒன்று வரும் வரையில் பார்த்துக் கொண்டிருந்தால் எமது நாட்டுக்கு இந்த சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் போகும். அரசாங்கம் தெளிவாக இதனை விட பொறுப்புடன் செயற்பட வேண்டும். இந்த நாட்டு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சியை அமைத்தனர். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. மீண்டும் பொய் கூறிக்கொண்டே அவர்கள் ஆட்சியை நகர்த்திக் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர் இன்று அது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாக விளங்கியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர்களே தற்போதய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறுகின்றார் அவர்களுக்கு அதிகாரம் வராமல் வேறு தரப்பினருக்கு அதிகாரம் செல்லும் சபைகளுக்கு நிதி வழங்க மாட்டோம் என்று, 2018 ஆம் ஆண்டு எந்த அதிகாரமும் இல்லாத நிலையில் தான் பொதுஜன பெரமுன வெற்றி ஈட்டியது. அன்று நாங்கள் நாட்டுக்கு வேலைசெய்து காட்டினோம் என்ற விடயத்தினை கூற விரும்புகிறேன். எமது கட்சி நாட்டுக்கு வேலை செய்த கட்சி ஆகையால் இந்த நாட்டு மக்கள் எமக்கு மீண்டும் அதிகாரத்தினை வழங்குவார்கள் என்று நம்பிக்கை எமக்கு உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/212453
  6. மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு எதிராக தொடரும் ஆர்ப்பாட்டங்கள் 20 APR, 2025 | 09:58 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளை மாளிகைக்கு வெளியிலும் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் துயரங்களை வெளிப்படுத்தியுள்ளனர். எல்சல்வடோருக்கு அமெரிக்க அரசாங்கம் தவறாக நாடு கடத்திய கில்மெர் அப்ரெகோ கார்சியா என்ற நபரை திருப்பிஅழைக்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமெரிக்காவில் அரசாங்கவேலைகளை குறைப்பதற்கான, ஏனைய நலன்புரி சேவைகளிற்கான நிதியை குறைப்பதற்கான முயற்சிகள் குறித்து தமது விரக்தியை ஆர்ப்பாட்டக்காரர்கள், வெளியிட்டுள்ளனர். கில்மெர் அப்ரெகோ கார்சியா என்ற நபரை டிரம்ப் நிர்வாகம் தவறுதலாக எல்சல்வடோரிற்கு அனுப்பியமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே தான் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ள ஒருவர் அவரை மீண்டும் நாட்டிற்கு கொண்டுவருவதற்காக எல்சல்வடோர் மீது டிரம்பினால் அழுத்தங்களை கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். பல ஆர்ப்பாட்டக்காராகள் மன்னர்கள் தேவையில்லை என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் சுலோக அட்டைகளுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த வாசகம் ஆங்கில ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவில் புரட்சி ஆரம்பித்த 250 வருடத்தின் ஆரம்பத்தை குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு இது மிகவும் ஆபத்தான தருணம் என தோமஸ்பாஸ்போர்ட் என்பவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் தோற்றம் பற்றியும் நாம் சிலவேளை சுதந்திரத்திற்காக போரிடவேண்டியிருக்கும் என்பது குறித்தும் அடுத்த தலைமுறை அறிந்திருக்கவேண்டும் என அவர் பொஸ்டனில் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 50501 என பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, அதாவது 50 ஆர்ப்பாட்டங்கள் 50 மாநிலங்கள் ஒரே நோக்கம் என்பதே இதன் அர்த்தம். https://www.virakesari.lk/article/212414
  7. Published By: VISHNU 20 APR, 2025 | 09:20 PM யாழ்ப்பாணத்தில் 69 வயதான மூதாட்டி ஒருவர் பொல்லினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் திருடும் நோக்குடன் சென்ற இளைஞனே மூதாட்டியை தாக்கி படுகொலை செய்துள்ளார் எனும் குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் இரண்டு மூதாட்டிகள் வசித்து வருகின்றனர். அதில் ஒருவர் 20ஆம் திகதி காலை உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்கு சென்றுள்ளார். மற்றையவர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அந்நிலையில் இரு மூதாட்டிகளும் தேவாலயத்திற்கு சென்றுள்ளார்கள் என நினைத்து , இளைஞன் வீட்டினுள் களவுக்கு சென்றுள்ளார். அவ்வேளை வீட்டில் இருந்த மூதாட்டி இளைஞன் களவில் ஈடுபடுவதனை அவதானித்ததை அடுத்து இளைஞன் பொல்லினால் மூதாட்டியை தலையில் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார். இரத்த வெள்ளத்தில் வீழ்ந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். அந்நிலையில், தேவாலயத்திற்கு சென்ற மற்றைய மூதாட்டி வீட்டிற்கு வந்த போது மூதாட்டி இரத்த வெள்ளத்தில் சடலமாக காணப்பட்டதனை அவதானித்து அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தடயவியல் பொலிஸார் அயல் வீட்டு இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/212481
  8. Published By: DIGITAL DESK 2 20 APR, 2025 | 09:17 PM பொலிஸ் திணைக்களத்தின் நிருவாக கட்டமைப்பினை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக வளாகத்தில் வடமாகாண வலய குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இவ் அலுவலகமானது, வியாழக்கிழமை (17) பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர சூரியவினால் திறந்துவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சீ.ஏ.தர்மபால உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/212476
  9. மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?வருத்தம் தெரிவித்தாரா? மல்லை சத்யா? பட மூலாதாரம்,ANI கட்டுரை தகவல் எழுதியவர், ஆ.நந்தகுமார் பதவி, பிபிசி தமிழ் 20 ஏப்ரல் 2025, 13:34 GMT சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வெளியிடப்பட்ட தீர்மான அறிக்கையில் ‘கழக முதன்மை செயலாளர்' என துரை வைகோவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது பதவியை ராஜினாமா செய்வதாக துரை வைகோ நேற்று அறிவித்திருந்த நிலையில், அவரது பதவி விலகலை மதிமுக தலைமை இன்று ஏற்க மறுத்துவிட்டதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த தீர்மான அறிக்கை இருந்தது. ‘நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதை சகித்துக் கொள்ள இயலாமல் கட்சிக்கும் தலைமைக்கும் தீராப் பழியை சுமத்தும் 'ஒருவர்' மத்தியில் பணியாற்றிட இயலாது’ என தனது ராஜினாமா அறிக்கையில் பெயரை குறிப்பிட விரும்பாமல் குற்றஞ்சாட்டியிருந்தார் துரை வைகோ. அந்த 'ஒருவர்' மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா என்பது இன்று வைகோ மேடையில் பேசியதன் மூலம் உறுதியானது. இன்று நடந்த கூட்டத்தில் அதே மல்லை சத்யா உடன் மேடையை பகிர்ந்துகொண்டார் துரை வைகோ. துரை வைகோ மற்றும் அவரது ஆதரவாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு கடந்த சில நாட்களாக மெளனம் காத்துவந்த மல்லை சத்யா, இன்று தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். சமூக ஊடக பதிவுகள் மற்றும் திருச்சியில் மல்லை சத்யாவுக்கு எதிராக திர்மானம் போன்ற நிகழ்வுகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த துரை வைகோ vs மல்லை சத்யா மோதல் குறித்து பல அடுக்கடுக்கான கேள்விகளை செய்தியாளர்கள் நேற்று (ஏப்ரல் 19) வைகோவிடம் எழுப்பினர். இந்த விவகாரத்தில் எந்த பக்கமும் சாயாததுபோல இருந்தது வைகோவின் பதில்கள். ஒரு கட்டத்தில் கட்சியில் பிரச்னையே இல்லை என்ற தொனியில் அவரது பதில்கள் இருந்தன. ஆனால், ”மல்லை சத்யா மட்டும் தலைவர் வைகோவுக்கு சேனாதிபதி இல்லை” என இன்று காலை கூட துரை வைகோ கூறியதன் மூலம் இந்த விவகாரம் இன்னும் புகைந்துக்கொண்டுதான் இருக்கிறது என்ற தோற்றத்தை கொடுத்தது. 'இணைந்த கைகள்' இயேசு கிறிஸ்துவின் மரணம் குறித்தான அறிவியல் ஆய்வில் கிடைத்த தகவல்கள்18 ஏப்ரல் 2025 மேலாதிக்கத்தை காட்ட தனது காலணிக்கு மரியாதை செய்ய சொன்ன ஒளரங்கசீப், அவமதித்த மதுரை மன்னர் - என்ன நடந்தது?19 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,மல்லை சத்யா தனது செயல்களுக்கு வருத்தம் கோரியதால் ராஜினாமா முடிவை திரும்ப பெற உள்ளதாக துரை வைகோ கூறினார் இதற்கிடையே திடீர் திருப்பமாக,''துரை வைகோவும், மல்லை சத்யாவும் மனம் விட்டுப் பேசி கட்டித் தழுவினர். இணைந்து பணியற்றுவோம் என்ற சமிக்ஞையை கொடுத்துள்ளனர்'' என இன்றைய நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறினார். ''துரை வைகோவும், மல்லை சத்யாவும் இன்று மனம் விட்டுப் பேசினார்கள். தங்கள் உணர்ச்சிகளையும் ஆவேசத்தின் வடியிலாக வந்த வார்த்தைகளையும் இருவரும் நாகரிகமாக கையாண்டனர்,'' எனவும் வைகோ கூறினார். அடுத்து பேசிய துரை வைகோ, மல்லை சத்யா தனது செயல்களுக்கு வருத்தம் கோரியதால் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற உள்ளதாக கூறினார். பின்னர் பேசிய மல்லை சத்யாவும் இதே பாணியிலான கருத்தை கூறி இணைந்து செயல்பட உள்ளதாக கூறினார். குறிப்பாக, மல்லை சத்யா வருத்தம் கோரினார் என செய்தியாளர்களிடம் துரை வைகோ கூறினாரே தவிர, வைகோ அப்படி கூறவில்லை. மல்லை சத்யா, துரை வைகோவுக்கு உறுதிமொழி கொடுத்தார் என்ற பதத்தையே அவர் பயன்படுத்தினார். இந்தநிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மல்லை சத்யா,''சமூக ஊடகங்களில் வந்த பதிவுகளால் கசப்புணர்வு ஏற்படுகின்ற நிலையும், அதனால் மதிமுகவின் கட்டுப்பாட்டுக்கு ஊறு நேருகின்ற நிலையும் ஏற்பட்டதற்கு இன்று கழக நிர்வாகக் குழுவில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டேன். இதனை ஏற்றுக் கொண்டு துரை வைகோ முதன்மைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என அறிவித்துள்ளார்'' என கூறியுள்ளார் பட மூலாதாரம்,MDMK மதிமுகவில் நடக்கும் இந்த அடுத்தடுத்த மாற்றங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்: ''மதிமுகவிற்கு ஏற்கனவே அடிப்படை கட்டமைப்பு பல மாவட்டங்களில் இல்லாமல் போய்விட்டது. இந்த சூழலில் இதுபோன்ற குழப்பம் கட்சியை மேலும் சுணக்கம் அடையவைக்கும்'' என்கிறார். இன்று காலை தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக கூறிய துரை வைகோ, கூட்டம் முடிந்த பிறகு பதவி விலகலை பின்வாங்குவதாக கூறுவது அரசியல் முதிர்ச்சியற்றதன்மையை கட்டுவதாக கூறுகிறார். ''கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் துரை வைகோ என்பது கிட்டத்தட்ட உறுதியான ஒன்று. உயர் பதவிக்கு வர விரும்புபவர் கட்சியின் பிரச்னை என்றால் அதை தற்போதைய பொதுச்செயலாளர் வைகோவிடம் சொல்லி தீர்த்திருக்க வேண்டும். ஆனால், பொதுவெளியில் ராஜினாமாவை அறிவிப்பது பதவிக்கு அழகல்ல, என்கிறார் பிரியன். வைகோ தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நிலையில், அவரது மகன் துரை வைகோ திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். '' கிட்டதட்ட அனைத்து கட்சியிலும் வாரிசு அரசியல் புகுந்துவிட்டது. அதனால், இரண்டு மூன்று தசாப்தமாக கட்சியில் இருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்படுவது இயல்புதான். அதுதான் தற்போது மதிமுகவிலும் வந்துள்ளது'' என்கிறார் பிரியன். இந்த மோதலுக்கு மத்தியில், வைகோ மல்லை சத்யாவுக்கு ஆதரவாக இருந்ததாகவும் மல்லை சத்யா அமைதி காத்து தனது அரசியல் அனுபவத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2ewp2z2lkko
  10. நாம் மக்களுக்காக சேவை செய்ய தயாரக இருக்கின்றோம் - வைத்தியர் பார்த்தீபன் உமாதேவி Published By: DIGITAL DESK 2 20 APR, 2025 | 09:12 PM நாம் மக்களுக்காக சேவை செய்ய தயாரக இருக்கின்றோம் என அனைத்திலங்கை வருங்கால சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தின் வைத்தியர் பார்த்தீபன் உமாதேவி தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) ஊடக சந்திப்பின் போதே தெரிவித்தார். இவர் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் ஆயுர்வேத, சித்த என்ற ரீதியில் இலங்கையில் சுதேச மருத்துவம் இருக்கின்றது. இந்த கற்கை நெறியை நிறைவுசெய்து தமிழ், சிங்களம், முஸ்லிம் என 1700 பட்டதாரிகள் வேலைக்காக காத்திருக்கின்றனர். இதைவிட 600 பேர் இறுதிப் பயிற்சி நிலையில் இருக்கின்றனர். இதே நேரம் மருத்துவப் பயிற்சி நெறியை முடித்தும் தம்மை பயன்படுத்தாத நிலையில் இலங்கையின் சுதேச மருத்துவம் இருப்பது கவலையானது. மக்களுக்காக சேவை செய்ய நாம் தயாராக இருக்கின்றோம் ஆனால் அரசு மௌனமாக இருக்கின்றது. அதைவிட ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏறத்தாள 1600 இற்கும் அதிகமானோர் இருக்கும் போது வெறும் 350 இற்கும் குறைவானவர்களையே நியமனத்தில் உள்வாங்க அரசு முனைகின்றனர். ஆனால் எம்மை கிராமங்கள் தோறும் சமூக நல வைத்திய அதிகாரிகளாக கூட எம்மை பயன்படுத்த முடியும். இந்த போக்கால் இலங்கைக்குரிய சுதேச மருத்துவம் இல்லாது அற்றுப்போகும் நிலையே உருவாகின்றது. நாட்டில் இருக்கும் எமது வளங்களை கொண்டே மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அதை அரசு முன்னெடுப்பதில்லை. இவ்வாறன நிலையில் மேலதிக தகைமை என்று கூறி வேறு வேலைகளுக்கு கூட எம்மை இணைத்துக் கொள்கின்றார்கள் இல்லை என்றும் கூறிய அவர் இந்த நிலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/212479
  11. விராட் கோலி புதிய சாதனை - இரண்டே நாட்களில் பஞ்சாபை பழி தீர்த்த ஆர்சிபி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முலான்பூரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்து 11 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில் பெங்களூருவில் ஆர்சிபி அணியை மோசமாக தோற்கடித்த பஞ்சாப்புக்கு, அவர்களின் சொந்த மைதானத்தில் வைத்து ஆர்சிபி பதிலடி கொடுத்துள்ளது. இந்த சீசனில் வெளிமைதானங்களில் ஆடிய ஆட்டங்கள் அனைத்திலும் ஆர்சிபி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 10 புள்ளிகளில் 5 அணிகள் இதன் மூலம் ஆர்சிபி அணி 8 போட்டிகளில் 5வெற்றிகளுடன் 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் கடும் போட்டி ஏற்பட்டு, 5 அணிகள் 10 புள்ளிகளுடன் உள்ளனர். நிகர ரன்ரேட் மட்டுமே அணிகளின் வரிசையை நிர்ணயிக்கிறது, நிகர ரன்ரேட்டும் ஒவ்வொரு அணிகளுக்கும் இடையே பெரிதாக வேறுபாடு இல்லை. இதனால் குஜராத், டெல்லி, ஆர்சிபி, பஞ்சாப், லக்னெள அணிகளுக்கு இடையே ப்ளே ஆஃப் செல்ல கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வேற்றுகிரகங்களில் உயிர்கள் இருப்பது சாத்தியமா? புதிய ஆதாரங்கள் கூறுவது என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் பூமியில் முதல் உயிரினம் தோன்றியது எப்படி?7 மணி நேரங்களுக்கு முன்னர் கங்னம் ஸ்டைல் முதல் பிடிஎஸ் வரை: இந்திய இளைஞர்களை கொரிய கலாசாரம் ஈர்ப்பது எப்படி?3 மணி நேரங்களுக்கு முன்னர் அதிரடித் தொடக்கம் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பட்டிதார் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். பிரயான்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். ஹேசல்வுட், புவனேஷ்வர், யாஷ் தயால் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் என ஓவருக்கு 10 ரன்ரேட்டில்பறக்கவிட்டனர். பிரவின்ஸ் ஆர்யா 22 ரன்கள் சேர்த்திருந்தபோது குர்னல் பாண்டியா வீசிய 5வது ஓவரில் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 42 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர், பிரப்சிம்ரனுடன் சேர்ந்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் சேர்த்திருந்தது. நிலையற்ற பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரில் குர்னல் பாண்டியா பந்துவீச்சில் பிரப்சிம்ரன் 33 ரன்னில் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் ஷெப்பர்ட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். பஞ்சாப் அணியின் முன்னணி ரன்சேர்ப்பாளர்களில் ஸ்ரேயாஸ் முதலிடத்தில் உள்ளார். 7 இன்னிங்ஸில் 3முறை அரைசதத்துக்கு மேல் ரன்களும் 4 முறை 10 ரன்களுக்குள்ளும் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்து நிலையற்ற தன்மையை பேட்டிங்கில் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 2024 ஐபிஎல் தொடரில் 147 ஆகஇருந்தநிலையில் 2025 சீசனில் 194 ஆக உயர்த்தியும் பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லை. 4வது விக்கெட்டுக்கு வந்த நேஹல் வதேரா 5 ரன்னில் ரன்அவுட் ஆகினார்.பஞ்சாப் கிங்ஸின் நடுவரிசை பேட்டிங் ஒட்டுமொத்தமாக ஏமாற்றியது. 62 ரன்களுக்கு ஒருவிக்கெட் என்ற நிலையில் இருந்த பஞ்சாப் அணி, அடுத்த 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் சிக்ஸர், பவுண்டரிகள் என 29 ரன்கள் சேர்த்தநிலையில் சூயஸ் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 12 வது ஓவரில் பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டியது. இங்கிலிஸ் ஆட்டமிழந்த அடுத்த சிறிது நேரத்தில் ஸ்டாய்னிஸ் ஒரு ரன்னில் சூயஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இளநீர் குடிப்பது சிறுநீரக கல்லை கரைக்குமா? மதுவால் ஏற்படும் ஹேங்ஓவரை சரிசெய்யுமா?9 மணி நேரங்களுக்கு முன்னர் மது, சிகரெட் மட்டுமல்ல, இந்த பழக்கங்களும் உங்கள் கல்லீரலை பாதிக்கலாம் என்று தெரியுமா?20 ஏப்ரல் 2025 நடுப்பகுதி ஓவர்களில் தடுமாற்றம் இந்த சீசனில் மட்டும் பஞ்சாப் அணி நடுப்பகுதி ஓவர்களில் மட்டும் இதுவரை 28 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. நல்ல தொடக்கத்தை அளித்தபோதிலும், அதைக் கட்டுக்கோப்பாக பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல நடுவரிசை பேட்டிங் பஞ்சாப் அணியில் வலுவாக இல்லை. குறிப்பாக நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழப்பதால், டெத் ஓவர்களில் பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல முடியவில்லை. செட்டில் பேட்டர்கள் நிலைத்து நின்றால் மட்டுமே பெரிய ஸ்கோருக்கு செல்கிறது. நடுப்பகுதி ஓவர்களில் பஞ்சாப் அணி 67 ரன்கள் மட்டுமே சேர்த்தது 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 12 வது ஓவரில் பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டிய பஞ்சாப் அணி அடுத்த 8 ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கடந்த சீசனில் சிறப்பாக ஆடிய சஷாங்க் சிங் இந்த சீசன் தொடங்கியதிலிருந்து ஒற்றைப்படை ரன்னைக் கடக்கவில்லை. கடைசி வரிசையில் சஷாங் சிங் களமிறங்குவதால் அவரால் செட்டில்ஆகி பேட் செய்ய நீண்ட நேர்ம் ஆகிறது. இந்த சீசனில் சஷாங் சிங் 118 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். டெத் ஓவரில் மிரட்டிய ஆர்சிபி பட மூலாதாரம்,GETTY IMAGES 7-வது விக்கெட்டுக்கு யான்சென், சஷாங் சிங் இருவரும் ரன்களைச் சேர்க்க முயன்றனர். ஆனால், புவனேஷ்வர், ஹேசல்வுட் இருவரும் சேர்ந்து டெத் ஓவர்களில் பஞ்சாப் பேட்டர்களை ரன் சேர்க்க அனுமதிக்கவில்லை. கடைசி 4 ஓவர்களில் மட்டும் ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர்கள் 8 யார்கர்களை வீசி பஞ்சாப் பேட்ர்களை திணறவிட்டனர், இதனால் கடைசி 4 ஓவர்களில் பஞ்சாப் அணி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பஞ்சாப் அணி 170 ரன்கள் சேர்த்துவிடலாம் என்று கற்பனையில் இருந்தநிலையில் 157 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. சஷாங் சிங் 31 ரன்களிலும் யான்சென் 25 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே பில் சால்ட்(1) முதல்ஓவரில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆர்சிபி இழந்தது. 2வது விக்கெட்டுக்கு படிக்கல், விராட் கோலி ஜோடி சேர்ந்தனர். பஞ்சாப் பந்துவீ்ச்சாளர்களின் பந்துவீச்சை படிக்கல், விராட் கோலி வெளுத்து வாங்கி, பவுண்டரி, சிக்ஸர் எனப் பறக்கவிட்டனர். ஒவ்வொரு ஓவரிலும் குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசி ரன்ரேட்டை உயர்வாகவே வைத்திருந்தனர். பவர்ப்ளேயில் ஆர்சிபி ஒருவிக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக பேட் செய்த படிக்கல் 30 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். கோலி புதிய சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES இருவரின் அதிரடியான ஆட்டத்தால் பார்ட்னர்ஷிப் 65 பந்துகளில் 100 ரன்களை எட்டியது. 11.4 ஓவர்களில் ஆர்சிபி 100 ரன்களை எட்டியது. விராட் கோலி நிதானமாக ஆடி 43 பந்துகளில் அரைசதம் எட்டி புதிய சாதனையை படைத்தார். இதுவரை ஐபிஎல் தொடரில் விராட் கோலி 67வது முறையாக அரைசதம் அதற்கு மேல் ரன்களை சேர்த்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் இதுவரை யாரும் எட்டாத சாதனையை கோலி செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக கோலி நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார், கடந்த 4 போட்டிகளில் பஞ்சாபுக்கு எதிராக 3 அரைசதங்களை கோலி விளாசியுள்ளார். கடந்த 10 இன்னிங்ஸ்களில் 8 போட்டிகளில் கோலி குறைந்தபட்சம் 20 ரன்கள் வரை பஞ்சாப்புக்கு எதிராகச் சேர்த்துள்ளார். ஒட்டுமொத்தமாக பஞ்சாப் அணிக்கு எதிராககோலி 1031 ரன்களை சேர்த்து, அதில் 5 அரைசதங்கள், ஒருசதம் அடங்கும். இந்த முறையும் கோலி பஞ்சாப் அணிக்கு எதிராக வலிமையான ஆட்டத்தை தொடங்கியுள்ளார். சிறப்பாக ஆடிய படிக்கல் 35 பந்துகளில் 61 ரன்களில்(4சிக்ஸர்,5பவுண்டரி) ஹர்பிரித் பிரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு கோலி, படிக்கல் 103 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த பட்டிதார் நிதானமாக ஆடவே, கோலி வேகமாக ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். பட்டிதார் 12 ரன்னில் சஹல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஜிதேஷ் சர்மா 11, கோலி 54 பந்துகளில் 73 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 18.5 ஓவர்களில் ஆர்சிபி அணி 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இயேசு மரித்த சிலுவையை நிராகரித்த கிறிஸ்தவர்கள் பின்னர் அதையே புனித அடையாளமாக ஏற்றது எப்படி?20 ஏப்ரல் 2025 கோடிக்கணக்கான ஐபோன்களை தயாரித்து தரும் சீனாவால் தற்போது ஆப்பிளுக்கு என்ன சிக்கல்?19 ஏப்ரல் 2025 ஆர்சிபி வெற்றிக்கு காரணம் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். குர்னல் பாண்டியா, சூயஷ் சர்மா இருவரும் 8 ஓவர்கள் வீசி 51 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நடுப்பகுதி ஓவர்களில் பஞ்சாப் பேட்டர்களை திணறவிட்டு ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர். ஹேசல்வுட், புவனேஷ் இருவரும் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் டெத் ஓவர்களில் இருவரின் துல்லியமான பந்துவீச்சும், 8யார்கர்களும் பஞ்சாப் பேட்டர்களை நிலைகுலையவைத்தது, கடைசி 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். பஞ்சாப் அணியில் வலிமையான பேட்டர்கள்இருந்தபோதிலும் 157 ரன்களுக்குள் சுருட்டிய பெருமை பந்தீவீச்சாளர்களுக்குத்தான். அடுத்ததாக விராட் கோலியின் பேட்டிங் குறிப்பிட்டே தீர வேண்டும்.பஞ்சாப் அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் எப்போதுமே கோலி சிறப்பாக ஆடக்கூடியவர். கடந்த 4இன்னிங்ஸில் பஞ்சாப் அணிக்கு எதிராக 3 அரைசதங்களை கோலிவிளாசியுள்ளார், கடந்த போட்டியில் மட்டுமே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்திலும் கோலியின் ஆங்கர் ரோல் ஆட்டம் பஞ்சாப் அணிக்கு பெரிய தலைவலியாக மாறியது. வியாழக்கிழமை பெங்களூருவில் நடந்த போட்டியில் மோசமாக ஆர்சிபி தோற்ற நிலையில், அதற்கு ஈடுகட்டவே கோலி கடைசிவரை களத்தில் நின்று வெற்றி தேடித்தந்து ஆட்டநாயகன் விருதும் வென்றார். இம்பாக்ட் ப்ளேயராக வந்த தேவ்தத் படிக்கல் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய படிக்கல் ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்று அரைசதம் அடித்தார். பேட்டிங்கில் இருவரின் ஆட்டம்தான் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சீசனில் மட்டும் பஞ்சாப் அணி நடுப்பகுதி ஓவர்களில் மட்டும் இதுவரை 28 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. பந்துவீச்சாளர்களே காரணம் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் " வெற்றிக்கு காரணம் பந்துவீச்சாளர்கள்தான். தேவ்தத், கோலி இருவரும் சிறப்பாக ஆடினர். பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தினர். பந்துவீ்ச்சாளர்கள் வெற்றிக்கான பாதை அமைத்தனர், அதில் பேட்டர்கள் பயணித்தனர். ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தியது சிறப்பு" எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்த ஆட்டம் சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதர்பாத் நாள் - ஏப்ரல் 25 இடம் – சென்னை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் நாள் - ஏப்ரல் 23 இடம் – ஹைதராபாத் நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ் நாள் - ஏப்ரல் 24 இடம் – பெங்களூரு நேரம்- மாலை 3.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-368 ரன்கள்(8 போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-365 ரன்கள்(7 போட்டிகள்) ஜாஸ் பட்லர்(குஜராத் டைட்டன்ஸ்) 315 ரன்கள்(7 போட்டிகள்) நீலத் தொப்பி பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 14 விக்கெட்டுகள்(7 போட்டிகள்) குல்தீப் யாதவ்(டெல்லி) 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9dj925ly0xo
  12. 15 மாவட்டங்களுக்கு கடும் வெப்ப எச்சரிக்கை Published By: DIGITAL DESK 3 20 APR, 2025 | 11:24 AM வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, வெளிப்புறங்களில் வேலையின் போது போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுப்பதும் முக்கியம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/212426
  13. 'எங்களுடைய மக்களின் உரிமைகள் இருப்பு சார்ந்த விடயங்கள் வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலால் பாதிக்கப்படுவதாகயிருந்தால், அதனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளகூடாது"- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: RAJEEBAN 20 APR, 2025 | 10:38 AM எங்களுடைய மக்களின் உரிமைகள் இருப்பு சார்ந்த விடயங்கள் வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலால் பாதிக்கப்படுவதாகயிருந்தால், அதனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளகூடாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சமூக அரசியல் செயற்பாட்டாளர் நியுட்டன் மரியநாயகம் எழுதிய காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை தீவில் பூகோள அரசியல் ஆதிக்கம் அதன் அழுத்தங்கள் நிச்சயமாக இருக்கும் இதனை மறுக்க முடியாது. அதனை விட தமிழ்தேசத்திலே வரக்கூடிய அழுத்தங்கள் என்பது, பொதுவாக இலங்கை தீவை அதிகமாகயிருக்கும். அப்படிப்பட்ட பூகோள அரசியல் போட்டித்தன்மை மிகவும் உச்சமடைந்திருக்கின்ற நிலையிலே, அதனுடைய உள்விளைவாக நாங்கள் இனப்படுகொலைக்கு முகம்கொடுத்த அதனை அனுபவித்த ஒரு நிலையிலே, அந்த இன அழிப்பிற்கு பிற்பாடு அந்த பூகோள அரசியலை கையாளுவது, எப்படி என்பது பற்றி நாங்கள் ஆழமாக சிந்தித்துவருகின்றோம். அதனுடைய ஒரு முக்கியமான விடயமாகத்தான் தமிழீழ நிலப்பரப்பிலே இருக்ககூடிய கடற்தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் இருக்கின்றன. அந்த வகையிலே இந்திய மீனவர்கள், தமிழ்நாட்டிலே இருந்து வந்து வடமாகாணத்திலே இருக்ககூடிய கடற்தொழிலாளர்கள் உடைய தொழிலை அழித்து நாளாந்தம் வந்து ஆயிரக்கணக்கிலே, அந்த படகுகள் வந்து எங்கள் மீனவர்களின் தொழிலை அழிப்பது என்பது எங்கள் கண்ணிற்கு முன்னாலே தெரிகின்ற விடயம். அதனை எதிர்ப்பது என்பது மிகவும் கடினமான விடயம் இல்லை ஏனென்றால் எங்கள் மக்களின் நேரடி பாதிப்பு, கண்ணிற்கு தெரிகின்றது. ஆனால், இந்த பாதிப்பு ஒருபக்கத்தில் உச்சமடைந்துகொண்டிருக்க இன்னொரு பக்கத்தில வந்து இந்தியாவிற்கு போட்டியாக இருக்ககூடிய சீன வல்லரசு எங்கள் கடல் எல்லைக்குள் தனது ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய விதத்திலே தங்களது கடலட்டை பண்ணைகள், முதல் வேறு பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போது, சீன வல்லரசின் அந்த விடயங்கள் கண்ணிற்கு சுலமபமாக தென்படுகின்ற விடயங்களாகயிருக்கவில்லை. எங்களை பொறுத்தவரையில் இந்த பூகோள ஆதிக்க போட்டியில், நாங்கள் வெளிப்படையாக கூறுகின்றோம், இலங்கை தீவை பொறுத்தவரை விசேடமாக தமிழ்தேசத்தை பொறுத்தவரையிலே நாங்கள் இந்தியாவிற்கு ஒரு முன்னுரிமை வழங்கியே ஆகவேண்டும் ஏனென்றால் அவர்களிற்கு இலங்கை தீவில் பாதுகாப்பு நலன்சார்ந்த அக்கறை உள்ளது. இலங்கை தீவு இந்தியாவிற்கு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரதேசம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதனை நாங்கள் வெளிப்படையாக சொல்கின்றோம். ஆனால் அதேநேரம், சீனா போன்ற ஒரு வல்லரசு இலங்கையிலேயோ அல்லது தமிழ்தேசத்திலேயே ஏதோ ஒரு நட்புறவை பேணுவதற்கு விரும்பி, உதவி செய்வதற்கு வருகின்ற நேரத்தில் அவர்களை எதிர்க்ககூடாது என்பதிலும் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். எங்களை பொறுத்தவரை எவரும் எங்களின் எதிரியாக இருக்ககூடாது எவரையும் எதிரியாக கணிக்கவும் கூடாது. ஆனால் எங்களுடைய மக்களின் உரிமைகள் இருப்பு சார்ந்த விடயங்கள் அந்த வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலால் பாதிக்கப்படுவதாகயிருந்தால், அதனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளகூடாது. https://www.virakesari.lk/article/212423
  14. கடைசிப் பந்து வரை திக் திக்: 14 வயதிலேயே ஐபிஎல் களம் கண்டு முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய இந்த சிறுவன் யார்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி ஜெய்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 36வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. முதலில் பேட் செய்த லக்னெள அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. 181 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. போட்டியின் பெரும்பகுதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அந்த அணி கடைசியில் கோட்டைவிட்டது. கடைசிப் பந்து வரை வெற்றி யாருக்கு என்பதே தெரியாத அளவுக்கு பரபரப்பாக இருந்த இந்தப் போட்டி ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்தது. லக்னெள மிடில் ஆர்டர் ஏமாற்றம் லக்னெள அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு மார்க்ரம்(66), இம்பாக்ட் வீரராக வந்த பதோனி(50) ஆகியோரின் அரைசதங்கள் உதவியதைவிட, கடைசி ஓவரில் அப்துல் சமது அடித்த 27 ரன்கள்தான் ஆட்டத்துக்கு புத்துயிர் கொடுத்தது. 10 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்த அப்துல் சமது லக்னெளவின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒருவராக இருந்தார். லக்னெள அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்து தடுமாறியது. நடுப்பகுதி வீரர்கள் பூரன்(11),கேப்டன் பந்த்(3), தொடக்க ஆட்டக்காரர் மார்ஷ்(4) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். மார்க் ரம், பதோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்து அணியை மீட்டது. மார்க்ரம், பதோனி ஆட்டமிழந்த பின் மில்லர், சமது சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றனர். மில்லருக்கு போதுமான வாய்ப்புக் கிடைக்காத நிலையில் சந்தீப் சர்மாவின் ஓவரை பயன்படுத்திய சமது வெளுத்து வாங்கினார். இதுதான் லக்னெள அணியின் வெற்றிக்கான தருணமாக அமைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அப்துல் சமது 14 வயது வீரரின் அறிமுகம் ராஜஸ்தான் அணி ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.10 கோடி கொடுத்து 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி எனும் வீரரை வாங்கியிருந்தது. அந்த வைபவ் சூர்யவன்ஷியை நேற்று இம்பாக்ட் வீரராக அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் இளம் வயதில் அறிமுகமான வீரர் எனும் பெருமையை வைபவ் பெற்றார். ராஜஸ்தான் அணியில் முதல் பாதியில் பெஞ்சில் இருந்த வைபவ், சாம்ஸனுக்கு ஏற்பட்ட காயத்தால் இந்தப் போட்டியில் வாய்ப்புப் பெற்றார். ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்கிய வைபவ் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஷர்துல் தாக்கூர் பந்தில் சிக்ஸருக்கு பறக்கவிட்டு அனைவரையும் வியக்க வைத்தார், அதன்பின் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியும் அடித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வைவப் சூர்யவன்ஷி முதல் போட்டியில் விளையாடுகிறோம் என்ற எந்த அச்சமும் இன்றி, பதற்றமும் இன்றி வைபவ் சிறப்பாக பேட் செய்தார். ஆவேஷ் கான் ஓவரில் ஒரு சிக்ஸர், பிரின்ஸ் யாதவ் ஓவரில் சிக்ஸர், என வெளுத்தார். ஆனால் மார்க்ரம் பந்துவீச்சில் இறங்கி அடிக்க முற்பட்டு ரிஷப் பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வைபவ் 20 பந்துகளில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 85 ரன்கள் எனும் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். 14வயதில் களமிறங்கிய வைபவ் ஸ்டெம்பிங் ஆகி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும்போது தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர்விட்டு அழுதுகொண்டே சென்றார். கோடிக்கணக்கான ஐபோன்களை தயாரித்து தரும் சீனாவால் தற்போது ஆப்பிளுக்கு என்ன சிக்கல்?19 ஏப்ரல் 2025 துரை வைகோ vs மல்லை சத்யா : கட்சி நிர்வாகிகள் கூறுவது என்ன ? மதிமுக மோதல் பின்னணி விவரம்3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜெய்ஸ்வால் 4வது அரைசதம் கண்ட ஜெய்ஸ்வால் ஜெய்ஸ்வாலுக்கு இந்த ஐபிஎல் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் 4 போட்டிகளில் 35 ரன்களே சேர்த்திருந்து ஏமாற்றம் அளித்திருந்தார். ஆனால், கடைசி 4 போட்டிகளில் ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக 4 அரைசதம் அடித்து 250 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். இந்த ஆட்டத்திலும் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார், பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்தது. 12வது ஓவரில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. வைபவ் ஆட்டமிழந்த பின் ராணா 9 ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு ரியான் பராக், ஜெய்ஸ்வால் கூட்டணி ஏறக்குறைய வெற்றிக்கு அருகே அணியைக் கொண்டு சென்றனர். 18-வது ஓவரில் ஆவேஷ்கான் பந்துவீச்சில் இருவருமே அடுத்தடுத்து ஆட்டமிழந்ததும் ஆட்டம் தலைகீழாக மாறிவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் அணி 18-வது ஓவர்வரை ஆட்டத்தை தன்வசம்தான் வைத்திருந்தது. ஆவேஷ் கான் வீசிய 18-வது ஓவரும், கடைசி ஓவரும்தான் ராஜஸ்தான் வெற்றியைப் பறித்தது. ஏனென்றால், 17வது ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது, 8 விக்கெட்டுகள் கைவசம் இருந்தன. ஆனால், ஆவேஷ் கான் வீசிய 18வது ஓவரில் செட்டில் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(74), ரியான் பராக்(34) இருவரைம் ஆட்டமிழக்கச் செய்தார். இதுதான் திருப்புமுனையாக அமைந்தது. கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது, ஹெட்மெயர், துருவ் ஜூரெல் சேர்ந்து 19-வது ஓவரில்11 ரன்கள் சேர்த்தனர். இதனால் கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் ஜுரெல் ஒரு ரன்னும், ஹெட்மயர் 2வது பந்தில் 2 ரன்னும் எடுத்தனர். ஹெட்மயர் 3வது பந்தை ஸ்குயர் லெக் திசையில் அடிக்கவே ஷர்துல் தாக்கூரிடம் கேட்சானது. அடுத்து வந்த சுபம் துபே 4 பந்தில் ரன் சேர்க்கவில்லை, 5வது பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரி தேவைப்பட்ட நிலையில் ஆவேஷ் வீசிய பந்தை துபே அடிக்க முற்படவே அதே ஆவேஷ் தடுக்கவே ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. ராஜஸ்தான் அணி கைக்கு மேல் கிடைத்த வெற்றியை 2வது போட்டியாக கோட்டைவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றியை 2வது முறையாக நழுவவிட்ட ராஜஸ்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி ஓவரில் வெற்றியைக் கோட்டைவிடுவது இது 2வது போட்டியாகும். ஏற்கெனவே கடந்த டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிட்ஷெல் ஸ்டார்க் பந்துவீச்சில் கடைசி ஓவரில் 9 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் ஆட்டம் டைஆனது. இதையடுத்து, ஆட்டம் சூப்பர்ஓவர் சென்று அதில் ராஜஸ்தான் அணி தோற்றது. இந்த வெற்றியின் மூலம் லக்னெள அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. முதல் 4 இடங்களில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் 10 புள்ளிகளுடன் இருப்பதால் ஐபிஎல் பரபரப்பை எட்டியுள்ளது. ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் 2 வெற்றிகள் 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் நீடிக்கிறது. இயேசு உண்மையில் கருமை நிறத்தில் இருந்தாரா? வரலாற்றாசிரியர்களின் கூற்று என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் ரசிகர் மன்றம், பட்டம் வேண்டாம்: அஜித் விலகி போனாலும் விடாத ரசிகர்கள் – அப்படி அவர் என்ன செய்தார்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "எப்படி தோற்றோம் எனத் தெரியவில்லை" ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறுகையில், "எங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கிறது. எந்த இடத்தில் தவறு செய்தோம் என எனக்குத் தெரியவில்லை. 18 முதல் 19வது ஓவர் வரை வெற்றி எங்கள் கையில்தான் இருந்தது, பின்னர் எப்படி ஆட்டம் கையைவிட்டு போனது எனத் தெரியவில்லை. இந்த தோல்விக்கு நான்தான் காரணம். ஆட்டமிழக்காமல் தவறான ஷாட்டை அடிக்காமல் ஆட்டத்தை 19வது ஓவரிலேயே முடித்துக் கொடுத்திருக்க வேண்டும். எங்கள் பந்துவீச்சில் 19 ஓவர்களை சிறப்பாக வீசிவிட்டு கடைசி ஓவரில் தவறு செய்தது துரதிர்ஷ்டம். கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசியிருந்தால் லக்னெள ஸ்கோரை 165 முதல் 170 ரன்களுக்குள் முடித்திருப்போம். 20 ரன்கள் தேவையின்றி வழங்கிவிட்டோம், அதையும் சேஸ் செய்ய முயன்று நெருங்கிய நிலையில் தோற்றிருக்கிறோம். ஆடுகளம் தெளிவாக இருந்தது, அந்த குறையும் கூற இயலாது" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி? ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் நேற்றைய ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமான தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஏற்கெனவே பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். 14 வயது 23 நாட்களே நிரம்பிய அவர் ஐபிஎல்லில் தடம் பதித்துள்ளார். பிகாரைச் சேர்ந்த வளரும் நட்சத்திரமான அவர், 2024-ம் ஆண்டு தனது 12 வயதிலேயே ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுகமாகி சாதனை ஏடுகளில் இடம்பிடித்தார். இதன் மூலம் பிகாரில் இருந்து இளம் வயதில் ரஞ்சி கிரிக்கெட் களம் கண்ட இரண்டாவது வீரரானார் வைபவ். அதிரடியாக ஷாட்களை விளாசுவதில் வல்லவரான சூர்யவன்ஷி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான டெஸ்டில் 58 பந்துகளில் சதம் அடித்து, அந்த பிரிவில் மிக வேகமாக சதம் அடித்த இந்திய இளம் வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். கிரிக்கெட் உலகில் மிக வேகமாக ஏற்றம் கண்ட வைபவ் சூர்யவன்ஷிதான், ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக இருக்கிறார். அவரை கடந்த ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. சஞ்சு சாம்சன், யாஷஷ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட சர்வதேச தரம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் இணைந்து தனது திறமைகளை மேலும் பட்டை தீட்டிக் கொண்டுள்ள அவர் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே முத்திரை பதித்துள்ளார். (மேற்கூறிய விவரங்கள் ஐபிஎல் இணையதளத்தில் பகிரப்பட்டவை) பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி இடத்தில் உள்ள சிஎஸ்கே பிளேஆஃப் செல்ல முடியுமா? தோனி முன்னுள்ள 2 வாய்ப்புகள் சொந்த மண்ணில் ஹாட்ரிக் தோல்வி: பேட்டிங் சொர்க்கபுரியில் ஆர்சிபி 95 ரன்னில் சுருண்டது ஏன்? கடைசி நேரத்தில் கோட்டைவிட்ட ராஜஸ்தான் - ஸ்டார்க்கின் மிரட்டலால் டெல்லி வெற்றி ஆபத்தான நிலையில் சன்ரைசர்ஸ் - மும்பை அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது? ஐபிஎல் கூடுதல் விவரம் இன்றைய ஆட்டங்கள் முதல் போட்டி பஞ்சாப் கிங்ஸ் vs ஆர்சிபி இடம்: நியூ சண்டிகர் நேரம்: மாலை 3.30 இரண்டாவது போட்டி மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே இடம்: மும்பை நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நாள் - ஏப்ரல் 25 இடம் – சென்னை நேரம்- இரவு 7.30 ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ் நாள் - ஏப்ரல் 24 இடம் – பெங்களூரு நேரம்- மாலை 3.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-368 ரன்கள்(8 போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-365 ரன்கள்(7 போட்டிகள்) ஜாஸ் பட்லர்(குஜராத் டைட்டன்ஸ்) 315 ரன்கள்(7 போட்டிகள்) நீலத் தொப்பி யாருக்கு? பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 14 விக்கெட்டுகள்(7 போட்டிகள்) குல்தீப் யாதவ்(டெல்லி) 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1k4pzk3kkeo
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அன்னாபெல் லியாங் பதவி, பிபிசி 19 ஏப்ரல் 2025, 11:25 GMT நீங்கள் பயன்படுத்தும் அனைத்து ஐபோன்களிலும் கலிஃபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும். நேர்த்தியான செவ்வக வடிவில் உள்ள இந்த செல்போன்கள் இன்று பலரின் வாழ்வில் தவிர்க்க முடியாததாகிறது. இவை அமெரிக்காவில் வடிவமைக்கப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள சீனாவில் இவை தயாரிக்கப்படுகிறது. இதே சீனாவுக்கு எதிராகத்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகப்படியான வரிவிதிப்பு தாக்குதல்களைத் தொடுத்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு 245 சதவிகிதம் வரை அமெரிக்கா வரி விதிக்கிறது. ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 22 கோடிக்கும் (220 மில்லியன்) அதிகமான ஐபோன்களை விற்பனை செய்கிறது. இவற்றில் உத்தேசமாக 10ல் ஒன்பது போன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. பேட்டரி முதல் திரை வரை ஆப்பிளின் உதிரிபாகங்கள் இங்கு தயாரிக்கப்படுகிறது மற்றும் பெறப்படுகிறது. பின்னர் அவை ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்புகளான ஐபோன்கள், ஐபாட்கள், மேக் புக்-ஆக ஒன்றிணைக்கப்படுகின்றன. ஆப்பிளின் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஸ்மார்ட் போன்கள், கணினிகள் மற்றும் சில மின்னணு சாதனங்களுக்கு வரி விதிப்பிலிருந்து கடந்த வாரம் டிரம்ப் விலக்கு அளித்தார். ஆனால் இந்த நிவாரணம் தற்காலிகமானதுதான். மேலும் சில வரிவிதிப்புகள் வர உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். தமது சமூக வலைத்தள பக்கமான ட்ரூத் சோஷியலில் ,"யாரும் பிடியிலிருந்து தப்ப முடியாது" என எழுதியுள்ள அவர் "செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக் விநியோகச் சங்கிலி" குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உலகளாவிய விநியோகச் சங்கிலியை ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய வலிமையாக கூறி வந்த நிலையில், அதுவே தற்போது பலவீனமாக மாறியுள்ளது. உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குபவை. ஆனால் டிரம்ப்பின் வரிவிதிப்பு அறிவிப்புகள் இந்த உறவை ஒரே இரவில் தலைகீழாக மாற்றி விட்டன. எனவே இது "இருவரில் அதிகம் சார்ந்திருப்பது யார்?" என்ற கேள்வியை எழுப்புகிறது. ஐன்ஸ்டீன் செய்த 3 'தவறுகள்' அறிவியல் உலகையே மாற்றிய கதை19 ஏப்ரல் 2025 இந்தியாவில் உயர் தர சேவையால் ஓலா, ஊபருக்கு சவால் விட்ட 'ப்ளூஸ்மார்ட்' வீழ்ந்தது எப்படி?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் K2-18b கோளில் உயிர்கள் இருக்க வாய்ப்புள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது எப்படி? - ஆய்வை வழிநடத்தும் நிக்கு மதுசூதன் யார்?18 ஏப்ரல் 2025 ஒரு உயிர்காக்கும் இணைப்பு அச்சுறுத்தலாக மாறியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2008ஆம் ஆண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய அதே ஆண்டில், ஆப்பிள் தனது முதல் கடையை பெய்ஜிங்கில் திறந்தது. உலகின் மதிப்பு மிக்க நிறுவனங்களின் பொருட்களை ஒருங்கிணைக்கும் (அசெம்பிள்) பணிகளை செய்வதன் மூலம் சீனா பெரிய அளவில் பலனடைகிறது. தரமான தயாரிப்புகளை செய்வதற்கான ஆற்றல் தங்களுக்கு உள்ளது என இதன் மூலம் மேற்குலக நாடுகளுக்கு சீனா தன்னை முன்னிலைப்படுத்தியது. மேலும் உள்ளூர் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அதிகரிக்கவும் இது உதவியது. 1990களில் மூன்றாம் தரப்பு விநியோகஸ்தர் மூலம் கணினிகளை விற்க ஆப்பிள் நிறுவனமானது சீனாவிற்குள் நுழைந்தது. 1997ம் ஆண்டில், சக போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல் திவாலாகும் நிலையில் இருந்த ஆப்பிள் நிறுவனம், இதற்கான உயிர்காக்கும் வழியை சீனாவில் கண்டுபிடித்தது. இளம் பொருளாதார நாடாக இருந்த சீனா, வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளைத் திறந்து வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தும் வகையில் தனது சந்தையைத் திறந்தது. ஆனாலும் 2001ம் ஆண்டு வரையிலும் ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சீனாவுக்குள் நுழையவில்லை. ஷாங்காயை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக நிறுவனம் மூலமாக சீனாவில் பொருட்களின் உற்பத்தியைத் தொடங்கியது. சீனாவில் இயங்கிய தாய்வானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து ஐபாட்கள், ஐமேக் மேலும் இதனைத் தொடர்ந்து ஐபோன்களையும் சீனாவில் தயாரிக்கத் தொடங்கியது. உலக நாடுகளுடன் பெய்ஜிங் வர்த்தகத்தை சீனா தொடங்கியது முதலே அமெரிக்காவின் ஊக்குவிப்பு எந்த விதத்திலும் குறைவானதாக இல்லை. உலக நாடகளின் தொழிற்சாலையாக மாறிக்கொண்டிருந்த சீனாவில் ஆப்பிள் தனது கால்தடங்களை பதித்துக் கொண்டிருந்தது. அந்நாட்களில் சீனா ஐ போன் தயாரிப்பை பிரதானமாகக் கொண்டிருக்கவில்லை. ஆனால், ஆப்பிள் தான் வளர்த்தெடுத்த விநியோகஸ்தர்களை ''உற்பத்திக்கான உச்ச நட்சத்திரங்களாக'' வளர உதவியது என்கிறார் விநியோகச் சங்கிலி நிபுணர் லின் ஜூபிங் கூறுகிறார். லின், பெய்ஜிங் ஜிங்டியாவோவை உதாரணமாகக் குறிப்பிடுகிறார். தற்போது அதிவேகமாக துல்லிய பணிகளை மேற்கொள்ளும் இயந்திரங்களை உருவாக்கும் முன்னணி நிறுவனமாகிய இது, அதிக செயல்திறனுடன் கூடிய மேம்பட்ட தொழில்நுட்ப கூறுகளை தயாரித்தது. தொடக்கத்தில் அக்ரிலிக் (பிளாஸ்டிக் போன்றது) வெட்டும் ஒரு சாதாரண நிறுவனமாக இருந்த இந்நிறுவனம், இயந்திர உற்பத்தியாளராகக் கருதப்படவில்லை. ஆனால் பின்னர், கண்ணாடி வெட்டும் இயந்திரங்களை உருவாக்கி, "ஆப்பிள் நிறுவன மொபைல் ஃபோன்களின் மேற்பகுதியை மேம்படுத்தும் துறையில் முக்கிய நட்சத்திரமாக" உருவெடுத்தது என்கிறார். 2008ஆம் ஆண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய அதே ஆண்டில், ஆப்பிள் தனது முதல் கடையை அந்நகரில் திறந்தது. அப்போது சீனாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே வலிமையான உறவு இருந்தது. அதன்பிறகு, 50 கடைகளை திறந்து இந்நிறுவனம் வேகமாக வளர்ச்சியடைந்தது. வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்தின் பொருட்களை வாங்குவதற்காக வரிசையில் நிற்கத் தொடங்கினர். ஆப்பிளின் லாப வரம்புகள் அதிகரித்ததுடன், சீனாவில் அதன் உற்பத்தி நிறுவனங்களும் (அசெம்பிளி) விரிவடைந்தன. ஃபாக்ஸ்கான் நிறுவனம், உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையை ஜெங்ஜோவிலில் இயக்கி வருகிறது. இது தற்போது "ஐபோன் நகரம்" என அழைக்கப்படுகிறது. வேகமாக வளர்ந்துவரும் சீனாவிற்கு, எளிமையான, ஆனால் தனித்துவமுடைய மற்றும் நேர்த்தியான தோற்றமுடைய மேம்பட்ட மேற்கத்திய தொழில்நுட்பத்தின் அடையாளமாக ஆப்பிள் மாறியது. இன்று, ஆப்பிளின் மதிப்புமிக்க ஐபோன்களில் பெரும்பாலானவை ஃபாக்ஸ்கான் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை இயக்கும் மேம்பட்ட சிப்கள், உலகின் மிகப்பெரிய சிப் உற்பத்தியாளரான டிஎஸ்எம்சியால் தாய்வானில் தயாரிக்கப்படுகின்றன. நிகேஆசியா மேற்கொண்ட பகுப்பாய்வின்படி, 2024ஆம் ஆண்டில் ஆப்பிளின் முக்கியமான 187 விநியோகஸ்தர்களில் சுமார் 150 பேர் சீனாவில் தொழிற்சாலைகள் வைத்திருந்தனர். "எங்களுக்கு உலகம் முழுவதும் சீனாவைப் போன்ற முக்கியமான விநியோகச் சங்கிலி எதுவும் இல்லை" என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் கூறினார். தானியங்கி கேமரா மூலம் அமேசான் பழங்குடிகளை கண்காணித்த ஆய்வாளர்களுக்கு காத்திருந்த ஆச்சர்யம்14 ஏப்ரல் 2025 ஜப்பான் தவிர, அமெரிக்க அணுகுண்டுகள் விழுந்த இன்னொரு நாடு எது தெரியுமா? என்ன நடந்தது?12 ஏப்ரல் 2025 மின்சாரம், கார் எதுவுமே வேண்டாம் என இந்த தீவு மக்கள் தவிர்ப்பது ஏன்?6 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆப்பிள் நிறுவனத்தின் செயல் நிர்வாக அதிகாரி டிம் குக் வரி அச்சுறுத்தல் - கற்பனையா அல்லது லட்சியமா? டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், சீனாவின் மீது அவர் விதித்த இறக்குமதி வரிகளில் இருந்து ஆப்பிள் விலக்குகளைப் பெற்றது. ஆனால் இந்த முறை, சில எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான வரிகளை மாற்றுவதற்கு முன்பு, டிரம்பின் நிர்வாகம் ஆப்பிள் நிறுவனத்தை ஒரு உதாரணமாக உருவாக்கியுள்ளது. அதிக வரிகளை விதிப்போம் என்ற அச்சுறுத்தலால், நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே பொருட்களை உருவாக்கத் தொடங்கும் என்று டிரம்பின் நிர்வாகம் நம்புகிறது. "மில்லியன் கணக்கான மக்கள் ஐபோன்களை உருவாக்க உழைக்கிறார்கள். அந்த வகையான உற்பத்தி அமெரிக்காவிற்கு வரப்போகிறது" என்று வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் இந்த மாத தொடக்கத்தில் ஒரு பேட்டியில் கூறினார். "செமிகண்டக்டர்கள், சிப்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற முக்கியமான தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்வதற்கு அமெரிக்கா சீனாவை நம்ப கூடாது என்பதை அதிபர் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்"என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கடந்த வாரம் மீண்டும் கூறினார். மேலும் "அதிபரின் வழிகாட்டுதலின் பேரில், இந்த நிறுவனங்கள் விரைவில் அமெரிக்காவில் தங்கள் உற்பத்தியை மாற்றுவதில் மும்முரமாக உள்ளன."என்றும் கூறினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyqpexwp22o
  16. -ஐ.வி.மகாசேனன்- “நாம் வரலாற்றை மாற்ற முடியும். ஆனால் புவியியலை மாற்ற முடியாது. நம் நண்பர்களை மாற்ற முடியும். ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது” -அடல் பிஹாரி வாஜ்பாய்- இலங்கை அரசியலிலும், ஈழத்தமிழரசியலிலும் இந்தியா தவிர்க்க முடியாததொரு காரணியாகும். தனிப்பட்ட விருப்பு – வெறுப்புக்கள் ஒவ்வொருவரிடமும் காணப்படினும், பிராந்திய அரசாக இந்தியாவின் தாக்கம் இலங்கை அரசியலிலும் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்திலும் ஆழமான கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் பின்னணியிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இலங்கைக்கான விஜயம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. எனினும் இந்தியப் பிரதமரின் விஜயம் வரலாற்றை திசைதிருப்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக இலங்கை -இந்திய பண்பாட்டு உறவு தமிழக – ஈழத்தமிழர்கள் பண்பாட்டு உறவை மையப்படுத்தியே கடந்த காலங்களில் விபரிக்கப்பட்டது. இந்திய – இலங்கை அரசியலும் அதன்வழியே நிர்மாணிக்கப்பட்டது. எனினும் அண்மைக்காலத்தில் தமிழக – ஈழத்தமிழர் உறவில் விரிசல் ஏற்படுத்தப்படுகிறது. இது தொடர்பில் கடந்த வார இப்பத்தியில் விபரிக்கப்பட்டிருந்தது. அதேவேளை நரேந்திர மோடியின் விஜயத்தில், கொழும்பு-புதுடெல்லி பௌத்த பண்பாட்டினை மையப்படுத்திய உறவை வலுப்படுத்தியுள்ளமையை இனங்காணக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரை கொழும்பு – புதுடெல்லி உறவு, பௌத்த பண்பாட்டால் பாதுகாக்கப்படுவதை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மூத்த அரச இராஜதந்திரியான கௌடில்யர், அண்டை நாட்டு வெளியுறவுக் கொள்கையில் அதிக கவனத்தை குவித்துள்ளார். இந்திய அரசாங்கங்களின் வெளியுறவுக் கொள்கை உருவாக்கங்களிலும் கௌடில்யரின் சிந்தனைகள் ஆழமான செல்வாக்கை செலுத்துகின்றது. ஒரு அரசின் பாதுகாப்பு, அரசுகளின் வலையமைப்பிற்குள் அதன் நிலைப்பாட்டால் தீர்மானிக்கப்படுகிறது என்றும், அதன் உடனடி அண்டை நாடுகள் ‘இயற்கை எதிரிகள்’ என்றும், அவர்களின் அண்டை நாடுகள் ‘இயற்கை கூட்டாளிகள்’ என்றும் கௌடில்யர் விபரிக்கின்றார். இப்பின்னணியில் உடனடி அண்டை நாடுகள் மீது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை கரிசனை தொடர்ச்சியாக உயர்வாகவே நிலைபெற்று வந்துள்ளது. ஆட்சியாளர்களின் எண்ணங்களில், அணுகுமுறைகளில் மாற்றங்களை அவதானிக்கின்ற போதிலும், இந்தியா உடனடி அண்டை நாடுகளின் மீது அதிக கவனக்குவிப்பை பேணி வந்துள்ளது. இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூருக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயத்தின் போது, இரண்டு தெற்காசிய நாடுகளும் தங்கள் நீண்டகால பகைமையை ஏன் வெல்ல வேண்டும் என்பது குறித்து பேசினார். அதில், “நாம் வரலாற்றை மாற்ற முடியும். ஆனால் புவியியலை மாற்ற முடியாது. நம் நண்பர்களை மாற்ற முடியும், ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது” எனக் குறிப்பிட்டிருந்தார். இது இந்தியா – பாகிஸ்தான் உறவை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. பொதுவான அரசியல் வரலாற்றையும், புவிசார் அரசியலையும் எதார்த்தபூர்வமாக விபரிக்கின்றது. இந்திய பிரதமரின் 2025 ஆம் ஆண்டு இலங்கையின் அநுராதபுர விஜயமும், காட்சிகளும், உரையாடல்களும் இலங்கை – இந்திய உறவின் வரலாற்றை மாற்றுவதாகவே அமைகின்றது. இலங்கை -இந்திய உறவின் ஆதாரத்தை நட்புக் காரணியை மாற்றுவதாகவே அறிய முடிகின்றது. நீண்டகாலமாக இந்தியா – இலங்கை பண்பாட்டு உறவு, தமிழகம் மற்றும் ஈழத்தமிழர் பண்பாட்டு தொடர்ச்சியாகவே அணுகப்பட்டிருந்தது. எனினும் நரேந்திர மோடியின் அனுராதபுர பயணம் இந்திய – இலங்கையின் பௌத்த பண்பாட்டு சுவடுகளை புதுப்பித்துள்ளதுடன், தமிழகத்தை ஆக்கிரமிப்பு சக்தியாக வேறுபடுத்துகின்றதா என்ற சந்தேகங்களை உருவாக்குகின்றது. இலங்கைக்கான விஜயத்தில் நரேந்திர மோடி இலங்கையின் புராதன இராச்சிய நகரான அநுராதபுரத்திற்கு சென்று இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான ஆழமான பௌத்த பண்பாட்டின் அடையாளமான புனித ஸ்ரீ மகாபோதி மரத்தில் பிரார்த்தனை செய்தார். மேலும், பண்டைய அனுராதபுர நகரத்திற்குள் உள்ள அட்டமஸ்தானம் அல்லது எட்டு புனித தலங்களில் ஒன்றான ‘உட மலுவ’ வுக்கு விஜயம் செய்து, எட்டு பெரிய பௌத்த ஆலயங்களின் தலைமை பிக்கு (அட்டமஸ்தானாதிபதி) மற்றும் நுவரகலவியவின் தலைமை சங்கநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய டாக்டர் பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரை சந்தித்து ஒரு சுமுகமான கலந்துரையாடலை மேற்கொண்டார். நரேந்திர மோடியின் அனுராதபுரத்திற்கான விஜயமும், அதன்வழி கட்டமைக்கப்படும் இலங்கை – இந்திய பௌத்த பண்பாட்டு உறவின் ஆழத்தை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது. முதலாவது, இலங்கையின் ஆதிக்க சக்தியாக பௌத்த மதமும் அதனை நெறிப்படுத்தும் பௌத்த சங்கங்களே காணப்படுகின்றமை நிதர்சனமாகும். இலங்கையின் அரசியலமைப்புக்கும் உயர்வாக பௌத்த சங்கங்களின் விருப்புகளும் எண்ணங்களுமே காணப்படுகின்றமையை அறியக்கூடியதாக அமைகின்றது. 1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் அரசியலமைப்பினூடாக இலங்கையில் செல்வாக்கு செலுத்த முனைந்த போதிலும், கடந்த 30 ஆண்டுகளில் அது எதிர்பார்த்த இலக்கை பூர்த்தி செய்ய போதுமானதாக அமையவில்லை. எனினும் சமீப காலமாக சீன அரசு இலங்கையின் பௌத்த பண்பாட்டை முன்னிறுத்தி உறுதியான உறவை கட்டமைத்து வருகின்றது. குறிப்பாக இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது, இரு நாட்டுத் தலைவர்களின் இணக்கங்கள் தொடர்பில் சீன மக்கள் குடியரசின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புத்த மதப் பரிமாற்றங்களின் பிணைப்பைக் கட்டமைக்கவும், மக்களிடையேயும் சகோதர நகரப் பரிமாற்றங்களை ஆழப்படுத்தவும் இரு தரப்பினரும் தயாராக உள்ளனர்” என்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை -சீனாவிற்கு இடையிலான பௌத்த பண்பாட்டு உறவு வலிந்து உருவாக்கப்படுவதாகும். எனினும் இந்திய -இலங்கை பௌத்த பண்பாட்டிலான உறவு இயற்கையானதாகும். இதனை மீளப்புதுப்பிக்கும் உரையாடலையும் செயற்பாட்டையுமே மோடியின் இலங்கை விஜயம் வெற்றிகரமாக நகர்த்தியுள்ளது. இரண்டாவது, அனுராதபுரத்தில் காணப்படும் புனித ஸ்ரீ மகாபோதி மரம் இலங்கை – இந்திய பௌத்த பண்பாட்டு உறவின் அடித்தளங்களில் ஒன்றாகும். இலங்கைக்கு பௌத்தம் இந்தியாவிலிருந்தே இலங்கையில் தேவநம்பிய தீசன் காலத்தில் இந்தியப் பேரரசர் அசோகனால் அனுப்பப்பட்டிருந்ததாக வரலாறு கூறுகின்றது. இங்கு ஆழமான செய்தி மறைக்கப்படுகின்றது. அசோகப் பேரரசிற்குள் இலங்கை சிற்றரசு காலனித்துவப்படுத்தப்பட்டு, பௌத்த மதம் திணிக்கப்பட்டு என்பதே வரலாறாக அமையக்கூடியதாகும். இப்பின்னணியிலேயே தேவநம்பியதீசனுக்கு அசோகப்பேரரசின் தூதர் அசோகனின் மகன் மகிந்த தேரரால் ‘தீசன்’ எனும் பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் பிரதமர் தரிசித்திருந்த புனித ஸ்ரீ மகாபோதி மரம் இந்திய மரத்தின் கிளையில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. இலங்கையில் இறுக்கமாகப் பாதுகாக்கப்படும் மகாபோதி மரம், இந்தியாவில் போத்கயாவில் புத்தர் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு ஞானம் பெற்றதாக நம்பப்படும் மரத்தின் கிளையிலிருந்தே கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் போத்கயாவில் போதி மரத்திலிருந்து எடுக்கப்பட்ட மரக்கன்று, பேரரசர் அசோகரின் மகள் தேரி சங்கமித்தாவால் கொண்டு வரப்பட்டு, கோயிலின் வளாகத்தில் நடப்பட்டதாக நம்பப்படுகின்றது. இப்பின்னணியில் இந்திய – இலங்கை பௌத்த பண்பாட்டு உறவுகளில் புனித ஸ்ரீ மகாபோதி மரமும் சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்தியப் பிரதமர் இலங்கையின் பௌத்தத்தின் ஆதாரமாக இந்தியாவை நினைவூட்டுவதாக மகாபோதி மர தரிசனம் அமைகின்றது. மூன்றாவது, இந்தியாவில் இந்து மதத்தின் கூறாக பௌத்தத்தை உள்வாங்கியுள்ள நிலையில், இந்தியா இலங்கையை பௌத்தத்தின் சிற்றரசாக ஏற்றுக்கொள்கின்றதா என்ற சந்தேகங்களை நரேந்திர மோடியின் அனுராதபுர விஜயத்தின் உரையாடல்கள் உருவாக்கியுள்ளது. அனுராதபுர பயணத்தில் இலங்கையில் பௌத்தத்தின் ஆரம்பகால வரலாற்றிலும் தேரவாத பௌத்தத்தின் பரவலிலும் முக்கியத்துவம் வாய்ந்த உடமலுவவுக்குச் சென்றிருந்த நரேந்திர மோடி, 1960 களில் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் புத்தரின் நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக உடமலுவ அட்டமஸ்தானாதிபதியிடம் பகிர்ந்து கொண்டார். இலங்கையில் இந்த புனித நினைவுச் சின்னங்களை காட்சிப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் விவாதிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், போத்கயாவை ஆன்மீக நகரமாக மேம்படுத்துமாறு அட்டமஸ்தானாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஜனாதிபதி திசாநாயக்கவுடன் கலந்துரையாடிய பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், அதை நனவாக்குவதற்கு பாடுபடுவதாகவும் உறுதியளித்தார். எனினும் போத்கயா விவகாரம் இந்தியாவில் வேறுபட்ட முரண்நிலையை கொண்டுள்ளது. இந்தியாவின் போத்கயா இந்துக்களின் ஆதிக்கம் நிறைந்த பிரதேசமாகவே காணப்படுகின்றது. 1891 ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த அநகாரிக தர்மபாலா தலையீட்டினாலேயே மகாபோதி சங்கம் உருவாக்கப்பட்டு, பௌத்த கரிசனை உள்வாங்கப்பட்டது. எனினும் சுதந்திர இந்தியா அரசில் 1949 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போத்கயா கோவில் சட்டம் மூலமாக பௌத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் சமபங்கு (50-50) நிர்வாக உரிமை வழங்கப்பட்டது. எனினும் தலைமை இந்துக்களிடம் பாரப்படுத்தப்பட்டது. இவ்விவகாரம் இன்றுவரை பௌத்த பிக்குகளின் போராட்டத்திற்கு ஆதாரமாகி உள்ளது. இவ்வாறான பின்னணிச் சூழலிலேயே இந்துவான நரேந்திர மோடி இலங்கையில் பௌத்த பிக்குவிடம் மண்டியிட்டு வணங்கியுள்ளார். மோடியின் செயற்பாடுகளும் உரைகளும் இந்தியாவை புனித இந்துப் பிரதேசமாக பேணுவதுடன், தென்னிலங்கையர்களின் மகாவம்ச மனோநிலையில் இலங்கையை புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்ட பௌத்த பூமியாக ஏற்பதாகவே அமைகின்றது. நான்காவது, அனுராதபுரம் வட இந்தியாவின் அசோகப் பேரரசு மற்றும் பௌத்தத்தின் வழிபாட்டு உறவை இறுகப் பிணைக்கின்ற போதிலும், தென்னிந்திய ஆதிக்க சக்தியாக அனுராதபுர இராசதானியின் வீழ்ச்சிக்கு காரணமாகின்ற வரலாற்றையும் பகிர்கின்றது. 1,300 ஆண்டுகளாக செழித்து வளர்ந்த இலங்கையின் அரசியல் மற்றும் மத தலைநகரான அனுராதபுரம், கி.பி 993 இல் தென்னிந்திய சோழப் படையெடுப்பிற்குப் பிறகு கைவிடப்பட்டது. சோழர்கள் தலைநகரை அனுராதபுரத்திலிருந்து பொலநறுவைக்கு மாற்றியதுடன், சைவப் பண்பாட்டையும் ஆரம்பமாக நிறுவினார்கள். இன்றும் பொலநறுவையில் சோழர்கால சிவாலயம் இனங்காணக்கூடியதாக அமைகின்றது. சோழ ஆக்கிரமிப்பால் சிதைக்கப்பட்ட தேரவாத பௌத்தத்தின் பண்பாட்டு இராச்சியமான அனுராதபுரம் பல ஆண்டுகளாக அடர்ந்த காட்டில் மறைக்கப்பட்டது. இப்பின்னணியில் நரேந்திர மோடியின் அனுராதபுரத்திற்கான விஜயம், இலங்கையின் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டு, இன்றைய இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள இந்தியாவின் அசோகப் பேரரசின் ஆக்கிரமிப்பு காலத்துடன், இலங்கையும் இந்தியாவும் இணங்கிப் போகும் சூழமைவே வெளிப்படுத்துகின்றது. இது இலங்கையின் ஆதிக்க சக்தியாக காணப்படும் பௌத்த பண்பாட்டால் நிகழ்த்தப்பட்டுள்ளது. எனவே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் இலங்கை -இந்திய உறவை பௌத்த பண்பாட்டினூடாக மீளகட்டுமானம் செய்கின்றது. வரலாற்றில் இலங்கை மீதான தென்னிந்திய ஆக்கிரமிப்பையும், நிகழ்காலத்தில் ஈழத்தமிழர்கள் மீதான கரிசனையையும் நிராகரித்து, புதுடெல்லி -கொழும்பு அசோகப்பேரரசு கால பௌத்த பண்பாட்டு உறவை மீளப் புதுப்பிப்பதை அரசியல் அவதானிகள் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தில் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தப் பயணம், பகிரப்பட்ட பாரம்பரியத்திற்கான இந்தியாவின் மீள புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இதனை அடையாளப்படுத்தும் வகையிலேயே இந்தியப் பிரதமரின் வருகை தொடர்பான இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தின் செய்திக் குறிப்பில், ‘பிரதமர் மோடியின் வருகை, நூற்றாண்டுகளின் நட்பு, வளமான எதிர்காலத்திற்கான அர்ப்பணிப்பு என்ற கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது, இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான கலாசார மற்றும் ஆன்மீக உறவுகளை அடையாளப்படுத்துகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமரின் சமூக வலைத்தளப் பதிவும், “இந்த வருகை நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாசார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது” என்றவாறு அமையப் பெற்றுள்ளது. இந்தப் பின்னணியில் இந்தியாவின் இந்து மதமும் இலங்கையின் பௌத்தமும் தமக்குள் நிலங்களை பங்கு போட்டுள்ளதா? என்ற சந்தேகமே இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பான ஈழத் தமிழர்களின் வினாவாக அமைகின்றது. https://thinakkural.lk/article/317034
  17. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா, வளத்துடன் வாழ்க.
  18. Published By: DIGITAL DESK 2 19 APR, 2025 | 05:42 PM வன்னிப் பகுதிகளில் காணப்படும் காணி விடயங்களிலுள்ள சிக்கல் நிலமைகள் மற்றும், வன்னிப் பகுதியிலுள்ள சில அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதனாயகனிடம் எடுத்துரைத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்குமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சனிக்கிழமை (19) இடம்பெற்ற சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வடக்கு ஆளுநருக்கு இந்த விடயங்களை எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில் தம்மால் எடுத்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஆளுநர் இதன்போது தெரிவித்ததாக ரவிகரன் தெரிவித்துள்ளார். இச் சந்திப்புத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, மன்னார்,வவுனியா மாவட்டங்களில் அதாவது வன்னியில் காணப்படும் சில குறைபாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண அளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடியிருந்தேன். குறிப்பாக வன்னிப் பகுதியில் காணிவிடயங்களில் இருக்கின்ற சிக்கல் நிலமைகள் தொடர்பிலும், அபிவிருத்தியுடன் தொடர்பான விடங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தேன். அளுநரிடம் என்னால் சுட்டிக்காட்டப்பட்ட வன்னிப் பகுதி காணிகள் தொடர்பான சிக்கல் நிலமைகள், வன்னி அபிவிருத்தியுடன் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார். அந்தவகையில் இச்சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது என்றார். https://www.virakesari.lk/article/212387
  19. 19 APR, 2025 | 05:50 PM தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்காது போனாலும் மற்றொரு தமிழ் கட்சிக்கே வடகிழக்கு தமிழ் மக்கள் வாக்களிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட முக்கியஸ்தர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளதுடன் தேசிய மக்கள் சக்தி என்ற மாயையை வடகிழக்கில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாநகர சபைக்கான பிரச்சார கூட்டம் வவுனியா பொங்கு தமிழ் தூபியில் இன்று சனிக்கிழமை (19) ஆரம்பமாகியது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழர் தாயகம் மிகப்பெரிய நெருக்கடிக்குள் அல்லது மாய வலைக்குள் சிக்கியுள்ள நேரத்தில் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தாயகத்தை ஆக்கிரமித்திருக்கிற ஜே.வி.பி. என்ற இனவாத கட்சி இம்முறையும் எமது வாக்குகளை சூறையாட நினைக்கும் நிலையில் அதற்கு தமிழ் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன். ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்கள் கடக்கின்ற நிலையில் அவர்கள் கூறியது எல்லாம் பொய் என்று வெளிப்பட்டு நிற்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். எமது நிலத்தில் எமது மொழியை பயன்படுத்த முடியாத அளவிற்கு அரச அதிகாரம் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஆனையிறவு உப்பு விடயத்தில் அறிந்துகொள்ள முடியும். அத்தோடு தையிட்டி சட்டவிரோத விகாரையில் இவர்களது ஆட்சிக்காலத்தில் தான் புதிதாக தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த அரசாங்கங்கள் எவற்றை பின்பற்றியதோ அதைவிட மோசமான முறையில் பல பொய்களை சொல்லி ஆட்சியமைத்த இந்த அரசாங்கம் மீளவும் தமிழ் மக்களை ஏமாற்றவே உள்ளூராட்சி தேர்தல் மூலம் வந்து நிற்கிறது. எனவே தமிழர் கிராமங்களிலும் வேரூன்ற நினைக்கின்ற ஜே.வி.பி.யினுடைய என்.பி.பி. என்ற மாயை இந்த மண்ணில் இருந்து கலைக்க வேண்டியவர்களாக தமிழ் மக்கள் இருக்கின்றனர். இன்று தேர்தல் விதிமுறைகளை முற்றாக மீறிய ஒரு கட்சியாக இது இருக்கிறது. மன்னார் மாவட்டத்தில் அண்மையில் ஜனாதிபதி பங்கேற்ற கூட்டம் ஒன்றில், சர்வாதிகாரப் போக்கிலே தனது வார்த்தைகளை பிரயோகித்துக் கொண்டிருக்கின்றார். ஒரு ஜானாதிபதியாக இருந்துகொண்டு இவ்வாறு செயற்படுவதானது உச்சக்கட்ட தேர்தல் விதி மீறலாகவே அமைந்துள்ளது. எனவே வடகிழக்கு மக்கள் நேர்மையான அரசியலை முன் நகர்த்திச்செல்பவர்கள் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை இந்த தேர்தலில் பலப்படுத்த வேண்டும். அதன் மூலமே என்.பி.பி. என்ற மாயையை வடகிழக்கில் இருந்து அகற்ற முடியும். உள்ளூராட்சி மன்றங்களில் மாற்றம் ஒன்றை நிகழ்த்துவதற்கு எமது அரசியல் இயக்கம் தயாராக இருக்கிறது. அத்துடன் இந்த நெருக்கடிகளில் இருந்து மக்கள் விடுபட வேண்டுமாக இருந்தால் எமது அரசியல் இயக்கத்திற்கு வாக்குகளை செலுத்தாவிடிலும் நிச்சயமாக ஏதாவது ஒரு தமிழ் கட்சிக்கே உங்கள் வாக்குகளை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/212394
  20. RESULT 35th Match (D/N), Ahmedabad, April 19, 2025, Indian Premier League PrevNext Delhi Capitals 203/8 Gujarat Titans (19.2/20 ov, T:204) 204/3 GT won by 7 wickets (with 4 balls remaining) INNINGS BREAK 36th Match (N), Jaipur, April 19, 2025, Indian Premier League Lucknow Super Giants (20 ov) 180/5 Rajasthan Royals LSG chose to bat.Stats view Current RR: 9.00 • Last 5 ov (RR): 59/2 (11.80) Win Probability: LSG 37.51% • RR 62.49%
  21. 19 APR, 2025 | 01:11 PM (எம்.மனோசித்ரா) புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமெனில் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் அரங்கேற்றியிருக்கும் நாடகமே பிள்ளையானின் கைதாகும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். களுத்துறை பிரதேசத்தில் சனிக்கிழமை (19) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் வெளியேறியதால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்ச்சியடைந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போராட்டங்களுக்கு தலைமை வகிக்கவில்லை. விஜேவீரவைப் போன்று அவரும் தலைமறைவாகவே இருந்தார். இந்நிலையில் போராட்டத்தை வழிநடத்திய ஒருவரே கருணா அம்மான். அவரது மிக முக்கிய சகாவாக பிள்ளையான் இருந்தார். ஆணையிறவு உட்பட 14 இராணுவ முகாம்களை சுமார் 4 நாட்களில் புலிகள் அழித்தனர். இந்த அனைத்து தாக்குதல்களையும் கருணா அம்மானே மேற்கொண்டார். கருணா அம்மானின் மாற்றத்தினாலேயே கிழக்கு மாகாணத்தை புலிகள் இழந்தனர். கருணா இருந்திருந்தால் இராணுவத்தினரால் ஒருபோதும் தொப்பிகலவை கைப்பற்றியிருக்க முடியாது. இந்திய இராணுவம் கூட தொப்பிகலவுக்குச் செல்ல அஞ்சியது. கருணா அம்மான் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே தொப்பிகலவையும் கைப்பற்ற முடிந்தது. கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் புலிகளிலிருந்து பிரிந்த பின்னரே என்றுமே கைப்பற்றப்ப முடியாது என பிரபாகரன் சவால் விடுத்திருந்த தோராபோரா மலையைக் கூட கைப்பற்ற முடிந்தது. அது மாத்திரமின்றி கிழக்கு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னரே ஆயுத பரிமாற்றமும் நிறுத்தப்பட்டது. எதிர்காலத்தில் தாம் பாதுகாக்கப்படுவோம் என்று நம்பியே கருணாவும் பிள்ளையானும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினர். அவ்வாறிருக்கையில் அரசாங்கம் அவர்களைக் காட்டிக் கொடுத்தால் அது நியாயமற்றது. இதன் ஊடாக வடக்கு புலம்பெயர் தமிழர்கள் ஊடாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். கருணா மற்றும் பிள்ளையான் கைது செய்யப்படுவது புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகும். இதனை நோக்கமாகக் கொண்டே அரசாங்கம் இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது. கருணா, பிள்ளையான் கொல்லப்படும் நாளே புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியடையும் நாளாகும். கலாநிதி என்.எம்.பெரேரா கூறியதைப் போன்று இன்று எதிரியின் எதிரியை நண்பனாக்கியிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் எதிரி கருணா அம்மான். கருணா அம்மானின் எதிரி புலம் பெயர் ஈழத்தமிழர்கள். புலம் பெயர் ஈழத்தமிழர்களின் நண்பன் ஜே.வி.பி. ஆகும். இது வரலாற்று பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றார். https://www.virakesari.lk/article/212369
  22. ரஜ லுணுவும் ஆனையிறவு உப்பும் வை.ஜெயமுருகன் சமூக அபிவிருத்தி ஆய்வாளர் ஆனையிறவு உப்பளத்தில் புதிதாக பூத்த மறு உற்பத்தியாகும் ‘ரஜ லுணு’ வின் அறிமுகம் பலர் மத்தியில் ஒரு விவாத நிலையை உருவாக்கியுள்ளது. ‘ரஜ லுணு’ வின் பெயர் தான் இங்கு விவாதப்பொருள். ‘ஆனையிறவு உப்பு’ என்பதுதான் பொருத்தமான பெயர் என்றும் பல குரல்கள் வருகின்றன. மிக முக்கியமான உப்பு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் முன்னெடுப்பு புதிதாக உருவாகும் போது, இவ்வாறான விவாதங்கள் ஒரு பின்னடைவைத் தரும் எனக் கருதுவோரும் உண்டு. விவாதங்கள் நல்ல முன்னெடுப்புக்களை கொண்டுவரும் என்று எண்ணுவோரும் உண்டு. உண்மையில், புதிதாக உருவாகிய உற்பத்தி ‘ரஜ லுணு’ வும் அதற்குரிய பெயராக முன்மொழிந்துள்ள ‘ஆனையிறவு உப்பு’ என்னும் சொற்கள் வேறுபாடுடையனதான். ஆனால் இவை இரண்டும் சுட்டும் நுகர்வுக்குரிய பொருள் ‘உப்பு’ தான். ஆனால், நுகர்வோர்கள் இதனைப் பார்க்கும் விதம், அதை அடையாளம் கொள்ளும் விதம் முற்றிலும் வேறுபடும். இது ஒரு சந்தைப் பொருளின் வர்த்தகப் பெயர் என்று குறுக்கிவிட முடியாத ஒரு வர்த்தகப் பெயர். இரு பெயர்களுக்கும் இடையில் நீண்ட அகன்ற பள்ளம் உள்ளது. பெயருக்கிடையிலான வலுவான மையம் கொள்ளும் நுண் அரசியல் மறைந்துள்ளது. குறியில் அறிவுத்துறை மூலம் இந்த இரண்டு பெயர்கள் கொள்ளும் வலுவான நுண் அரசியல் மற்றும் அரசியல் பொருண்மிய மையங்களை உடைத்துப் பார்க்கலாம். குறி அறிவியலில் (In semiotics), ஓர் “அடையாளத்தின் இடம்” என்பது குறிப்பானுக்கும் (the signifier) குறிக்கப்பட்டதற்கும் (the signified) இடையிலான உறவின் மூலம் புரிந்து கொள்ளப்படலாம். குறிப்பான் என்பது ஒரு சொல் அல்லது படம் போன்ற இயற்பியல் பிரதிநிதித்துவத்தை குறிக்கும். அதேநேரத்தில், குறிக்கப்பட்டது என்பது குறிப்பானின் கருத்தையும் அல்லது பொருளையும் குறிப்பிட்டுச் சுட்டும். இந்த இரண்டுக்கும் இடையிலான உறவே குழு அடையாளங்களை உருவாக்கவும் வெளிப்படுத்தவும் விளங்கிக் கொள்ளவும் பயன்படுத்தலாம். ‘ஆனையிறவு உப்பு’ என்னும் குறிப்பானுக்கும் அது உருவாக்கும் கருத்து அல்லது பொருளை விளங்கிக்கொண்டால், அண்மையில் வெளிக்கிளம்பிய ‘ரஜ லுணு’ க்கும், ‘ஆனையிறவு உப்பு’ என்னும் இரு பெயர்களுக்கிடையிலான விரிவான தெளிந்த விவாதத்தை முன்வைக்கலாம். ‘ரஜ லுணு’ என்பது ஓர் அடையாளத்தை நீர்த்து கரைக்கும் நிலை நோக்கிய மேலாதிக்கப் போக்கின் குறிப்பானாக அமைகிறது. ‘ஆனையிறவு உப்பு’ என்னும் குறிப்பான் தன் சுய அடையாளத்தை பேணவும், தன் வளமான பொருளாதார ஆதாரத்தின் இட அமைவை வலியுறுத்தும் ஒரு முனைப்பாகவும் பார்க்க முடிகிறது. அதனுடாக, ஒரு வலுவான ஓர் இன இருப்புக்கான ஆதாரத்தை பேணுவதற்குமான, தன் அரசியல் பொருண்மிய அடையாளத்தை விட்டுக்கொடுக்காத, ஒரு முனைப்பின் வலுவான குரல் எனவும் நோக்க முடியும். 2. பெயர் மாற்றம்: அதன் நுண் அரசியலும் அதனுள்ள ஒருத்தலுக்கான ஒத்திசைவும் இலன் பப்பே ஆய்வுகளின் பிரகாரம் பெயர் மாற்றம் மீதான நுண் அரசியலும் அதனுள்ள இருத்தலுக்கான ஒத்திசைவுகளும் மிகவும் ஆராயப்பட்டுள்ளன. (The Ethnic Cleansing of Palestine , September 1, 2007,by Ilan Pappe). பட்டிப்பளை ஆறு கல் ஓயா ஆகவும், திருகோணமலை முதலிக்குளம் மொரவெவ எனவும் மணல் ஆறு இன்று வெலிஓயா எனவும் மாற்றம் கொண்ட கள அனுபவங்களின் தளத்தில் நிதானமாக பார்க்கையில் பெயர் மாற்ற நுண் அரசியலின் வகிபாகத்தை நன்கு அசைபோடலாம். இந்நிலையில், போரின் பின்னரான கால கட்டத்தில் புதிய பெயர்களின் வருகை என்பது அதுவும் குறிப்பாக பொருண்மிய உற்பத்தியின் அடைமொழியாக வருவதென்பது ஒரு பிரதேசத்தின் பொருண்மிய அடையாளங்களை ஒரு நீர்த்து, கரைத்து, உலர்த்தும் ஒரு தூர நோக்கின் வெளிப்பாடு தானோ என்பதன் பின்னணியில் ‘ரஜ லுணு’ க்கும் ‘ஆனையிறவு உப்பு’ க்கும் இடையிலான ஒரு ஆழமான பார்வை தேவையாக உள்ளது. பெயரிடுவது மற்றும் பெயர் மாற்றம் செய்வது என்பது சாதாரணம். ஆனால், ‘ஆனையிறவு உப்பு’ ‘ரஜ லுணு’ வாக மாறுவது பெயர் மாற்றம் அல்ல; இது, ஒரு சந்தைக்குரிய பொருளின் பெயர் மாற்றம் அல்ல. இதன் பின் ஒரு வலுவான அரசியலும் அரசியல் பொருளாதாரத்துக்கான ஆபத்தும் மறைந்துள்ளது. ஒரு வலுவான அடையாள இருப்பின் அவசியம் என்பது ஒரு சமூக அரசியல் மற்றும் கலாசார விழிப்புநிலைக்கு தள்ளப்பட்ட மக்களுக்கு மிக அவசியமானது. ஒரு இருப்பிட அடையாள உணர்வின் அவசிய தேவை என்பதை பிந்தைய பின் நவீனத்துவ கருத்தாடல்களில் மிக நுண்ணியமாகக் காணலாம். 3. இலங்கையின் உப்பு சார் தொழில்துறை வளர்ச்சியில், வடக்கு மாகாணத்தின் வளமான உப்புத்தளங்கள் இலங்கையின் உப்பு சார் தொழில் துறை வளர்ச்சியில், வடக்கு மாகாணத்தின் பங்கு மிக கணிசமானது. வட மாகாணத்தின் வளமான உப்புத்தளங்கள் அதன் பலம் பொருந்திய வலுவான பொருளாதார மையங்கள். மேலும், அதன்மீது கட்டக்கூடிய பல பொருளாதார வாய்ப்புகளை கொண்டுள்ளன. உப்பளங்களின் பிரகாசமான எதிர்காலம் என்பது உப்பு சார் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முன்னெடுப்புகளில் தங்கியுள்ளன. கடலும் தரையும் இணைந்து தரும் வளமான உப்பு ஒரு உணவு, மருந்து. இரசாயன தொழில் சார் துறையில் அடிப்படைக்கு ஆதாரம். வட மாகாணத்தின் தற்போதுள்ள உப்பு நிலங்கள் உகந்த கடல் காற்றைக் கொண்டுள்ளன. மேலும் ஆண்டு முழுவதும் சூரிய ஒளியின் மிகுதியானது உப்பை அதிகமாக உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. நிலத்தின் உப்புக்கான புவியியல் திறன் என்பது வட மாகாணத்தின் கொடை என கொள்ளலாம். உப்பு சார் அபிவிருத்திக்கு சூரிய சக்தி மற்றும் காற்றாலைகளில் முதலீடு, மனித வள அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அக்கறை என்பன இத்துறையின் முழுமையான ஆற்றலைக் வெளிக்கொணரும். வட மாகாண அபிவிருத்தியின் பிரகாசமான பக்கங்களை இது வெளிக்காட்டும். உப்பு உற்பத்தி மட்டுமே கவனம் கொள்ளும் காலம் போய்விட்டது. உப்பின் மூலம் பல பெறுமதிசார் புதுமைகளை வெளிக்கொணர வேண்டும். உப்பு சார்ந்த துறை பல துறைகளுக்கு அடிப்படை. கடல் உப்பு தரக்கூடிய வாய்ப்புகள் முடிவற்றவை. உப்புசார் உற்பத்திகள் ஏற்றுமதிச் சந்தையில் நுழைவதற்கும் உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதற்கும் பல வாசல்களை திறக்கும் சூழ்நிலையை உருவாக்கி வருகின்றது. மருந்து தயாரிப்பில் உப்பு ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது கண் மற்றும் காது சொட்டுகள் மற்றும் உமிழ்நீரை உருவாக்க பயன்படுகிறது. உயர்தர பற்பசை உற்பத்தியும் உயர்தர உப்பைப் பயன்படுத்துகிறது. உப்பு உற்பத்தியின் மற்றொரு துணைத் தயாரிப்பு மீன் தீவனம், ஆர்டீமியா (உப்பு இறால்), உள்ளூர் சந்தைக்கு தேவைகள் அதிகமாகும். இலங்கையில் வளர்ந்து வரும் ஏற்றுமதி மீன் தொழிலில் ஆர்ட்டெமியா ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளாகும். மேலும், மசாலா ஏற்றுமதியாளர்கள் உயர்தர உப்பை ஒரு பாதுகாப்புப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இது அவர்களின் தயாரிப்புகளுக்கு மதிப்பு சேர்க்கிறது. இலங்கையின் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு பல வாய்ப்புக்கள் உள்ளன. உப்பளங்களின் எதிர்கால வளர்ச்சி பல பிரகாசமான சாத்தியங்களை கொண்டுள்ளது; நாம் பெரிய அளவில் சாதிக்க உதவும். 4. இலங்கையில் உப்பு உற்பத்தி செய்யப்படும் உப்பளங்களின் தற்போதைய நிலை. தற்போது, எல்லா உப்பளங்களும் அரசுக்கு சொந்தமானவை. இலங்கை மக்களுக்கு சொந்தமானவையாக இருந்ததை 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அரசாங்கம் ஒரு தேசியமயமாக்கல் கொள்கையை அமுல்படுத்தி அதன் மூலம் பெரும்பாலான பொது பயன்பாட்டு அமைப்புகள் மற்றும் அத்தியாவசிய தொழில்கள் தேசியமயமாக்கப்பட்டன. அவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. 1957 ஆம் ஆண்டின் 49 ஆம் எண் அரச தொழில்துறை கழக சட்டம் இயற்றப்பட்டது. அதன் கீழ் பல பொது நிறுவனங்கள் நிறுவப்பட்டன. அவற்றுள் தேசிய உப்பு கூட்டுத்தாபனம் டிசம்பர் 3, 1957 இல் நிறுவப்பட்டது. கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கிய இக்கூட்டுத்தாபனம் இலங்கையில் உப்புத் தொழிலைக் கைப்பற்றியது. உப்பு உற்பத்தி செய்யப்படும் உப்பளங்கள் அரசின் வசமாகின. 1977 க்குப் பிறகு தேசியமயமாக்கலில் இருந்து தனியார்மயமாக்கலுக்கு கொள்கை மாற்றம் ஏற்பட்டதால், பெரும்பாலான நிறுவனங்கள் புது வடிவம் பெற்றன. தனியாரிடம் இணைந்த ஒரு வகை மாற்றம் பெற்றன.1990 இல் இணைக்கப்பட்ட லங்கா சால்ட் லிமிடெட், தெற்கில் உள்ள ஹம்பாந்தோட்டை, புந்தல மற்றும் பலதுபான ஆகிய மூன்று உப்பளங்களை நிர்வகிக்கிறது.மாந்தை உப்பு லிமிடெட் 2001 ஆகஸ்ட் மாதம் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தின் செம்மணியில் உள்ள உப்பளங்களை கைப்பற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. 2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியால் தெற்கில் உப்பு உற்பத்தி தடைப்பட்டது. அதேவேளையில், வடக்கு உப்பளங்களில் உற்பத்தியானது உள்நாட்டுக் குழப்பங்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டு செயல் நிலையற்ற நிலை உருவானது. வடக்கு – கிழக்கு மாகாண உப்பளங்கள் இலங்கையின் வளமான உப்பு உற்பத்திப் பொருளாதார வலயங்களாகும். 1970 களில் நாட்டின் உப்புத் தேவையில் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண உப்பளங்கள் வழங்கின. இருப்பினும், உப்பு உற்பத்தியை வளர்ப்பதற்கான உந்துதல் இன்னும் முழுமையாக வளரவில்லை எனலாம். கிழக்கு மாகாணத்தில் கும்புறுப்பிட்டி, நிலாவெளி உப்பளங்களும் வடமாகாணத்தில் ஆனையிறவு மற்றும் மன்னார் (மாந்தை) உப்பளங்களும் வளமான, வளரக்கூடிய சாத்தியமான பகுதிகளாகும். ஆனையிறவு உப்பளமானது நாட்டிலேயே மகத்தான உப்பு மையமாகும். இருப்பினும், உப்பு உற்பத்தியை வளர்ப்பதற்கான உந்துதல் இன்னும் முழுமையாக வளரவில்லை எனலாம். ஆனையிறவு உப்பளமானது நாட்டிலேயே மகத்தான உப்பு மையமாகும். இது உப்பளங்களின் அரசன் எனலாம். இலங்கையில் உப்பு கைத்தொழில் தனியார்மயமாக்கலுக்குப் பிறகு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உப்பு உற்பத்தி எதிர்மறையாகப் பாதிக்கப்பட்டதால் உற்பத்தி கணிசமாக குறைந்தது. தெற்கில் குறிப்பிடத்தக்க இரண்டு உப்பளங்களான ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் உப்பளங்கள் இயங்கி வருகின்றன. இருப்பினும், உள் சவால்களை, அரசியல் தலையீடு காரணமாக இரண்டும் நட்டத்தில் நடை போடுகின்றன. உப்புத் திணைக்களம் 1966 இல் தேசிய உப்புக் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் உள்ள அனைத்து உப்பு மையங்களும் கூட்டுத்தாபனத்தின் கீழ் இருந்தன. அந்த ஆண்டு, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்கு நிபந்தனையின் கீழ் பொது நிறுவன சீர்திருத்த ஆணையத்தின் (PERC) மேற்பார்வையில் இலங்கை அரசாங்கம் லங்கா உப்பு நிறுவனத்தை உருவாக்கியது. இத்திட்டத்தின் கீழ், மன்னார் உப்பளம் தனியாக எடுக்கப்பட்டு மாந்தை உப்பு லிமிடெட் என மறுசீரமைக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள அனைத்து உப்பளங்களையும் தனியார்மயமாக்குவதை PERC மேற்பார்வையிட முடியாததால், இவை 1990 இல் மாந்தை உப்பு லிமிடெட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. மன்னார் நகரில் அமைந்துள்ள மாந்தை உப்பு லிமிடெட், 1991 மற்றும் 92 ஆம் ஆண்டுகளில், போர் காரணமாக ‘கம்பெனி’ உற்பத்தியை நிறுத்த வேண்டியிருந்தது. அக்டோபர் 2001 , அரசாங்கம் அந்த நிறுவனத்தை கைத்தொழில் அமைச்சின் கீழ் கொண்டு வந்தது. இலங்கையில் உப்பு உற்பத்தியில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள மாந்தை உப்பு லிமிடெட் / நேஷனல் சால்ட் லிமிடெட்டின் தூர நோக்கு, வடக்கில் உப்பு சார்ந்த நிறுவனங்களை உருவாக்குதல், மற்றும் அதன் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தலாகும். மாந்தை உப்பு லிமிடெட், சாதாரண உப்பு, அயோடின் கலந்த, நொறுக்கப்பட்ட மற்றும் தொழில்துறை உப்பு ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. முக்கிய உற்பத்திப் பகுதிகள் மன்னார் மற்றும் ஆனையிறவு (கிளிநொச்சி) மாவட்டத்திலும், அதன் நிர்வாக அலுவலகம் கொழும்பிலும் உள்ளது. இலங்கையில் உப்புத் துறை 1938 இல் தொடங்கப்பட்டது. ஜூன் 2021 இல், இது நேஷனல் சால்ட் லிமிடெட் என மறு பெயரிடப்பட்டது. நாட்டின் மற்றொரு பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நிறுவனத்தின் உப்புடன் ஒப்பிடும்போது, வட மாகாணத்தின் உப்பு தரத்தில் சிறந்ததாக (96% NaCl) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, மன்னார் உப்பளத்தில் 6,000 மெட்ரிக் தொன் கச்சா உப்பும், ஆனையிறவு உப்பளத்தில், ஆண்டுக்கு 17,000 மெட்ரிக் தொன் உப்பும் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது இதில், 64 நிரந்தரப் பணியாளர்கள் உள்ளனர். மேலும் சுமார் 250 பருவகால பணியாளர்கள் நிறுவனப் பணி புரிகின்றனர். அரசு நிறுவனமாக, 2007 ஆம் ஆண்டின் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்புத் தரத்தை உறுதி செய்வதற்காக இலங்கை தரநிலை நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்டது. மார்ச் 29, 2025 அன்று, தொழில்கள் மற்றும் நிறுவன மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, ஆனையிறவில் ஒரு புதிய மேசை உப்பு உற்பத்தி நிலையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். இது மணிக்கு 5 மெட்ரிக் டன் “ரஜ லுணு” உப்பை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. உப்புப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இப்புதிய முயற்சி துவங்கியது. ஆனையிறவு உப்பள உப்பு 29-03-2025 தொடக்கம் ‘ரஜ லுணு’ Raja Salt (Elephantpass) என்ற பெயரில் அரசாங்க உப்பு விற்பனைக்கு வந்துள்ளது. இங்கிருந்துதான், ஆனையிறவு உப்பின் பெயருக்கான குரல்கள் வெளிவந்தன. 5. ஆனையிறவு – உப்பு தலைநகரம் 1990 க்கு முன், ஆனையிறவு மற்றும் குருஞ்சத்தீவு உப்பளங்கள் 1000 ஏக்கருக்கு மேலான பரப்பளவான மிகப்பெரிய உப்பளங்களைக் கொண்டவை. ஆண்டுக்கு 85,000 மெட்ரிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. இந்த உற்பத்தியானது இலங்கையின் அனைத்து உப்புத் தேவைகளையும் பூர்த்தி செய்ததுடன், ஏற்றுமதிக்கு போதுமான உபரியை விட்டுச் சென்றது. போரின் போது அழிக்கப்பட்ட இந்த உப்பளங்கள், புனரமைக்கப்பட்டு (2003) மொத்த கொள்ளளவில் 15%க்கு உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. 1990 முதல் 2000 ஆம் ஆண்டு வரையில் யுத்தம் ஆனையிறவு மற்றும் குருஞ்சதீவில் உள்ள உப்பளங்களை காவுகொண்டன. உப்பளங்கள் கவனிப்பாரற்று போகின. 2000 அளவில், புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பகுதியுடன் தி எகனாமிக் கன்சல்டன்சி ஹவுஸ் (The Economic Consultancy House- TECH) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், 35 ஆண்டுகால உப்புத் தொழிலில் அனுபவம் வாய்ந்த எஸ். வேலாயுதபிள்ளை அவர்களின் உதவியுடன் அழிக்கப்பட்ட உப்புத் தொட்டி அமைப்பை மறுசீரமைப்பதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் முயன்றது. வெற்றிகரமாக புதிய உப்பு உற்பத்தி நிலையத்தை உருவாக்கியது. ஆனையிறவில் உப்பு உற்பத்தியை இயந்திரமயமாக்கி மேம்படுத்தும் முயற்சிகள் நடந்தன. ஆராய்ச்சி ஆய்வகத்திற்கான உபகரணங்கள், ஆலைக்கான ஜெனரேட்டர்கள் மற்றும் உப்பு ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் துணைக்கருவிகள் கொண்ட புதிய டிராக்டர் ஆகியவை இந்தியாவில் இருந்து நிதியுதவியுடன் இறக்குமதி செய்யப்பட்டன. யுனிசெஃப் ரூ. 10 மில்லியன் வழங்கி உதவியது. 2003 இல் தி எகனாமிக் கன்சல்டன்சி ஹவுஸ் (TECH) ஆனது இரண்டு இடங்களிலும் தொடர்ந்து உப்பு உற்பத்தியை அதிகரித்தது. குருஞ்சதீவு உப்பளத்தில் மூன்று கூடுதல் உப்புத் தொட்டிகளை நிர்மாணித்து, சுமார் 115 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியது. இந்தத் தொழிலகத்தில் 300 பேர் நிரந்தரமாக வேலை செய்ய முடியும். தற்காலிக மற்றும் பருவகால பணியாளர்களை சேர்த்தால், உப்பு செயல்பாட்டின் வேலை வாய்ப்பு 1000 ஐ தொடும். ஆனையிறவு உப்பளம் ஒரு பொருளாதார குறியீடு. அரசாங்க நிருவாகத்தின் போதும், இல்லாத போதும் இயங்கிய பெருமை ஆனையிறவு உப்பளத்தை சாரும். தரமான உப்பின் விளைநிலம் ஆனையிறவு. இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்தின், கிளிநொச்சியின் உப்பின் அடையாளம் மற்றும் உப்புத் தலைநகரம் ஆனையிறவு உப்பளம் எனலாம். ஆனையிறவு உப்பளம் இலங்கையின் பெருமை. ‘ஆனையிறவு உப்பு’ என்பது ஒரு வர்த்தக அடையாளம். Tokyo Cement போல. நெய்தலின் பெருமை ஆனையிறவு. ஆனையிறவு என்னும் இடப்பெயர் ஒரு அடைமொழியாக வருவது என்பது உப்பு உற்பத்தியின் பெருமை. இலங்கையின் உப்பு பொருளாதாரத்துக்கு மகுடம் கொள்ளும் பெயர் ஆனையிறவு உப்பு. உள்ளூர் உற்பத்தியும் உள்ளூர் பொருளாதாரமும், மண் பொருண்மிய அடையாளங்கள், எப்போதும் நெருக்கமாக இணைந்தவை; பிரிக்கமுடியாதவை. ஏனெனில், உள்ளூர் உற்பத்தி அடையாள உணர்வு என்பது ஒரு கலாசாரப் பாரம்பரிய அடையாளத் தளத்தின் உயிர். இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. உள்ளூர் உற்பத்தி அடையாள உணர்வு என்பது ஒரு கலாசார பாரம்பரியத்தின் அடையாள தளத்திலிருந்து கட்டமைக்கப்படுகிறது. வளர்க்கப்படுகிறது. அதேநேரத்தில், வலுவான உள்ளூர் பொருளாதாரம் மற்றும் அதன் உற்பத்திகள் சமூகத்தின் தனித்துவமான தன்மையை வலுப்படுத்துகிறது. மேலும், பொருளாதார அடையாளம் என்பது அமைவிட அடையாளம் தான். அத்துடன், அவ்விடத்துக்குரிய மக்களின் அடையாளத்தையும் உள்ளடக்கியது. இந்த இரண்டு அம்சங்களும் பின்னிப் பிணைந்தவை, ஒன்றோடொன்று இணைந்திருப்பவை. ஒரு நீடித்த நினைவக நிலப்பரப்பின் ஒரு இறுக்கமான உருவாக்கம் எனவும் கருதலாம். இதனால், பொருளாதார அடையாளம் பிராந்தியத்திற்கு சொந்தமானது. பிரதேசத்துக்கு சொந்தமானது என்பது ஒரு உணர்வு நிலை. கொண்டாடப்படவேண்டிய ஒரு வாழ்வியல் முறைமை. உள்ளூர் அடையாளமும் தேசிய அடையாளமாக ஒரு புள்ளியில் இணையும் நிலை, ஒரு கூட்டு அடையாள நிலை கொள்கிறது. ஆனையிறவு உப்பள பிரதேச பொருண்மிய அமைவிட அடையாளம் என்பது ஒரு கூட்டு நிலையின் நிலை. இந்த நிலையில்தான் ஆனையிறவு உப்புக்கு ‘ஆனையிறவு’ என்னும் அடைமொழியின் அவசியம் பற்றிய கோரிக்கை அணுகப்படவேண்டும். இது ஒரு அரசியல் கோஷம் இல்லை. ஒரு அரசியல் பொருண்மியத்தின் அடையாள கோஷம். விட்டுக்கொடுக்கமுடியாத நிலை. உள்ளூர் சமூக பொருண்மிய கலாசார அடையாளம் மற்றும் அதன் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது என்பது பல நன்மைகளை வழங்குபவை. தொழில்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல், கலாசார ஒருமைப்படுத்தலுக்கு (homogenization) வழிவகுத்துள்ளன. இதன் மூலம் உள்ளூர் மரபுகள் சார் உற்பத்தி மற்றும் வணிகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்பதை அங்கீகரிப்பதில் இருந்து இந்த அணுகுமுறை உருவாகிறது. உள்ளூர் அனுபவங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், சமூகங்கள் தங்கள் மீள்தன்மையை வலுப்படுத்த முடியும்.மேலும், சந்தைப் பொருண்மியத்தின் வலுவான இருப்பையும் தக்கவைக்க, அதனுடன் இணைய, வழிசமைக்கும். உலகில், சமூகங்கள் தங்கள் அடையாளங்களை வடிவமைப்பதில் மிக கவனம் கொள்கின்றன. இதில், தங்கள் கலாசாரத்தின் பங்கைப் புரிந்துகொண்டு அடையாளங்களை வடிவமைத்தார்கள். தற்போது, உள்ளூர் உற்பத்தி அடையாளங்களும் ஒரு வலுவான இன அடையாளங்களுடன் இணைக்கின்றன. இந்த நுண்ணறிவு மிக்க அடையாள பெறுமதியாக்க செயல்முறைமை என்பது ஒரு வணிக அல்லது நிறுவன சூழலில் “மாற்றத்திற்குப் பிந்தைய கட்ட” (The “post-transformative phase”) முறைமைக்கு மிக அருகில் வருவது. “மாற்றத்திற்குப் பிந்தைய கட்டம்” என்பது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் அல்லது மாற்றத்திற்குப் பிந்தைய காலகட்டத்தைக் குறிக்கிறது. இதன் போது கவனம் அந்த மாற்றங்களைத் தக்க வைத்துக்கொள்வது, புதிய நடைமுறைகளை உட்பொதிப்பது மற்றும் நீண்டகால வெற்றியை உறுதி செய்வதில் மாறுகிறது. இந்தப் போக்கு உள்ளூர் தனித்துவத்தை பெறுமதி கொள்ள, செழிக்க மற்றும் வளர்க்க உதவுகிறது. உள்ளூர் அடையாளம், பிராந்தியத்தின் வரலாறு மற்றும் நிலப்பரப்பில் ஆழமாக வேரூன்றியுள்ளது. வலுவான கூட்டுப் பெருமையை உருவாக்குகிறது. இது சுய அடையாளத்தின் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான தனிப்பட்ட சிறப்பை பிரதிபலிக்கிறது. கூடுதலாக, பிராந்திய அடையாளம் என்பது ஒரு சமூகம் அதன் சுற்றுப்புறங்களை நோக்கி கொண்டிருக்கும் நேர்மறையான உணர்வுகளை உள்ளடக்கியது. தங்கள் நிலப்பரப்பின் மீதான ஒவ்வொரு பகிரப்பட்ட அனுபவங்களும் ஒவ்வொரு தனிமனிதர்களுடையவை என்னும் நிலை கொள்கின்றன. கடந்த கால அனுபவங்கள் மற்றும் செயல்கள் மூலம், தங்கள் பிராந்தியம் மீதான கவனம் கொள்ளப்படுகின்றது. இதனால், ஒரு பிராந்திய பொருளாதார சமூகத்தை உருவாக்குவதோடு, ஒரு பெறுமதியான பொருளாதார அடையாளம் ஒன்றுக்கான திரள் நிலையும் உருவாகின்றது. இது தான் உப்பளப் பூக்களின் பொருண்மிய நிலை. ஆனையிறவு உப்பள பிரதேச பொருண்மிய அமைவிட அடையாளமாக புலரும் நிலை. போரின் காலத்துயர் அனுபவங்கள் பல்பரிமாண நிலை கொண்டவை. அவரவர் அனுபவ நிலை சார்ந்தது. அதேபோல, போர்க்கள அமைவிடம் ஒரு குறிப்பிட்ட கள நிலை அனுபவம். அக்கள நிலை, தன்னுள் கொண்ட தந்திரோபாய மதிப்பு என்பது அதன் அமைவிட ‘பொருள் நிலை’ கொண்டது. அவ் அமைவிடத்துக்காக கொடுக்கப்பட்ட விலை என்பது தன்னுள் கொண்ட தந்திரோபாய மதிப்பின் பெறுமதியை தருவது. ‘ஆனையிறவு’ என்பது காலனியத்துவ காலம் முதல் இன்று வரை ஒரு இடத்தின் பெயர் மட்டும் அல்ல; ஒரு வரலாற்றின் பொதிவிடம்; பொக்கிஷம் மற்றும் அடையாளம். போரின் பிந்திய சமூகங்களின் உணர்நிலை எப்போதும் ஒரு வகை பதட்டநிலைக்குரியது; சந்தேகம் கொண்ட திரள் நிலை. அதனால் தான் போருக்கு பிந்திய சமூகங்களின் பொருளாதார திட்டமிடலில் சமூகத்தின் உணர்நிலை பற்றிய ஒரு பூரண அறிவு நோக்குநிலை எப்போதும் தேவையான முன்நிபந்தனையாக உள்ளது. (Post war /conflict political economic and cultural sensitivities). போரின் பாதிப்பின் பின்னாலான சமூக – பொருளாதார கட்டமைப்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அரசியல் சமூக மற்றும் பொருளாதார கலாசார மற்றும் பிராந்திய அடையாளங்கள் மீதான கவனம் அவசியமானதாக கருதப்பட வேண்டும். போரின் மீள் கட்டுமானம் என்பது உள்ளூர் மக்களின் இடம் மற்றும் அவர்களின் பொருளாதார அடையாளங்கள் இரண்டையும் உள்ளடக்கியது. அவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தன்மை என்பது அப்பகுதிக்குரிய பிராந்தியத்திற்கு சொந்தமானது. ஒரு இடத்தின் பெயர் அடை மொழியாக வருவதற்கு காரணம் அவ்விடம் ஒரு நீடித்த நினைவக நிலப்பரப்பின் ஒரு பகுதிதான். ஒரு காலத்தின் சாட்சிதான். பகுதியில் வசிப்பவர்களுக்கு தங்கள் நினைவு மண்டலத்தின் பிரிக்கமுடியாத பகுதி. பிராந்திய அடையாளம், பிராந்தியத்தின் வரலாறு மற்றும் நிலப்பரப்பில் ஆழமாக வேரூன்றியுள்ளது. கூட்டுப் பெருமையின் வலுவான உணர்வை உருவாக்குகிறது. இது ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துடனான தனிப்பட்ட தொடர்பை பிரதிபலிக்கும் சுய அடையாளத்தின் ஒரு அம்சமாக கருதவேண்டும். பிராந்திய அடையாளம் ஒரு தளம். சதா பகிரப்படும் பிரதிபலிக்கும் அனுபவ மற்றும் செயல்கள் கொள்ளும் தளம். தனிநபர்கள் சமூக ஒற்றுமையை வளர்த்து, ஒரு பிராந்திய பொருளாதார சமூகத்தை உருவாக்குவதற்கு இத்தளம் அவசியம் தேவை. பொருளாதார அடையாளம் ஓர் இனத்தின் இருப்பின் அடித்தளம். சமூக உள்ளடக்கத்தின் புவியியல் அம்சத்தை இணைக்கும் ஒரு பாலம். பிராந்திய பொருளாதார அடையாளம் மற்றும் வரலாற்று உணர்திறன்களைக் கருத்தில் கொள்ளாமல், பிராந்திய பொருளாதார உற்பத்தி உணர் நிலையை கவனம் கொள்ளாது வேண்டுமென்றே மறுபெயரிடப்பட்டால், அது பிராந்திய அடையாளத்தின் இருத்தலியல் அச்சுறுத்தல் உணர்வுகளைத் தூண்டி, ஒற்றுமையின்மைக்கு வழிவகுக்கும். ஒரு மாறு கால சமாதான காலகட்டத்தில் மேலும் பல சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் விளைவிக்கும். இலங்கையின் வளர்ச்சியில் கிராம பொருளாதாரங்களின் வளர்ச்சி பெரும்பங்கு வகிக்கின்றன. இதனால் கிராமங்களில் உற்பத்தியாகக் கூடிய தனித்துவமான பொருட்களின் சிறப்புகளை நாம் மேம்படுத்தி காட்டுவது மிகவும் அவசியமாகிறது.எனவே புவிசார் குறியீடு என்பது ஒரு அங்கீகாரம் மட்டுமல்ல, அது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு திறவுகோல். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு குறிப்பாக தமிழ்நாடு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது. அந்த வகையில் தற்போது அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடிச் சேலை, பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 45 பொருட்கள் புவிசார் குறியீடுகளை பெற்றிருந்தன. புவிசார் குறியீடு என்றால் என்ன? ”உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள், இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள்” புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை.தனித்துவமான பொருட்களின் தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி, அதனை உலகளவில் எடுத்துச் செல்வதற்கு இந்த புவிசார் குறியீட்டு அங்கீகாரம் உதவுகிறது” என்கிறார் உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி கழகத் தலைவருமான சஞ்சய் காந்தி. (https://www.bbc.com/tamil/articles/c72vjlg4212o) . ‘ஆனையிறவு உப்பு’ என்பது புவிசார் குறியீடு உடையது. ‘ரஜ லுணு’ என்னும் வர்த்தக பெயர் என்பது ‘ஆனையிறவு உப்பு’ என்பதற்கு ஈடாகாது. அமைவிடம் கருதாது; உப்பு உற்பத்தியின் வரலாறு கருதாது ஏதோ ஒரு அவசரத்தில் ‘ரஜ லுணு’ உப்பு எனப் பெயரிட்டது ஒரு வித ஒவ்வாமையாக உள்ளது. ‘ஆனையிறவு உப்பு’ என்பது ஒரு சந்தையில் மிக மதிப்புக்கொண்ட பொருள். ஆகவே ‘ஆனையிறவு உப்பு’ என்று வருவது தான் மிகப்பொருத்தம். காங்கேசன்துறை சிமெண்ட், பரந்தன் கெமிக்கல் என்பது போல ‘ஆனையிறவு உப்பு’ என்பது தான் மிகப்பொருத்தம். இடம் சார் பொருண்மிய உற்பத்தி பெயருக்கு வலுக்கொடுக்க வேண்டும். ‘ஆனையிறவு உப்பு’ என்றால் ஆனையிறவுக்கும் உப்புக்கும் பெருமை. இலங்கைக்கும் பெருமை. https://thinakkural.lk/article/316956
  23. 18 வயதின் கீழ் ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கைக்கு அதிசிறந்த பெறுபேறுகள்; ஒரு தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் Published By: VISHNU 19 APR, 2025 | 01:18 PM (நெவில் அன்தனி) சவூதி அரேபியாவின் தமாம் விளையாட்டரங்கில் பெரிய வெள்ளிக்கிழமை (18) இரவு நிறைவுக்கு வந்த 6ஆவது 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஒரு தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை இலங்கை வென்றெடுத்தது. 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் 10 வருட வரலாற்றில் வரலாற்றில் இலங்கையின் அதிசிறந்த பேறுபெறு இதுவாகும். போட்டியின் கடைசி நாளான பெரிய வெள்ளிக்கிழமையன்று தருஷி அபிஷேகா பேமசிறி 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் (2:14.86) வென்றெடுத்த தங்கப் பதக்கத்துடன் மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம், 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. பெண்களுக்கான கலவை தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. கலவை தொடர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள், 14.25 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்ற இலங்கை அணியில் தனஞ்சனா செவ்மினி பெர்னாண்டோ, சன்சலா ஹிமாஷனி செனவிரத்ன, தருஷி அபிஷேகா, டில்கி நெஹாரா ஆகியோர் இடம்பெற்றனர். அப் போட்டியில் சீனா (2:11.11) தங்கப் பதக்கத்தையும் தாய்லாந்து (2:15.00) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன. இதனைவிட இலங்கைக்கு மேலும் 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பவன் நெத்ய சம்ப்பத் (2.03 மீற்றர்), பெண்களுக்கான முப்பாய்ச்சலில் டில்கி நெஹாரா (12.35 மீற்றர்), ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஷவிந்து அவிஷ்க (1:53.41 நி.) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தனர். முதலாம் நாளன்று ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் ஜனித் லக்ஷான் ஜென்கின்ஸ் (15.10 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் இரண்டாம் நாளன்று பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தனஞ்சனா செவ்மினி பெர்னாண்டோ (11.92 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் லஹிரு அச்சின்த (3:59.47) வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/212336

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.