Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 2 03 MAY, 2025 | 02:02 PM அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பாப்பரசர் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தோலிக்கர்களின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நித்திய இளைப்பாற்றி அடைந்தார். மறைந்த பாப்பரசருக்கு இலட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்திய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இத்தாலியின் உரோமில் பாப்பரசரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த பாப்பரசர் யார் என்பது தொடர்பில் எதிர்வரும் 7 ஆம் திகதி இரகசிய ஆலோசனைக் கூட்டமும் வாக்கெடுப்பும் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப், பாப்பரசர் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செய்யறிவு (AI ) புகைப்படம் என்று கூறப்படும் டிரம்ப்பின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. https://www.virakesari.lk/article/213583
  2. 03 MAY, 2025 | 07:31 PM தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வாக்களியுங்கள். அவர்களுக்குள் இருப்பது குடும்பச் சண்டை விரைவில் தீர்ந்துவிடும். அந்தச் சண்டைக்குள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பளித்தால் வடக்கு கிழக்கில் நாம் தனித்துவத்தையும் சுயமரியாதையும் இழந்தவர்களாகி விடுவோம் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் சனிக்கிழமை (03) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், தமிழர்கள் தமிழர்களாகவே தன்மானத்தோடு தலை நிமிர்ந்து தனித்துவமாக தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள். அதுவே எமக்கான வரலாற்றுக் கடமையும் பொறுப்பும் தார்மீக உரிமையும் ஆகும். கடந்த 70 ஆண்டுகளாக மாறி மாறி பல தேர்தல் மூலம் பல கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிட்டன, ஆனால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை நலிவடைந்தே போகின்றது. காலத்துக்கு காலம் ஆட்சியாளர்கள் பல்வேறு விதமான வாக்குறுதிகளை வழங்கி தமிழ்த் தலைவர்களை ஏமாற்றியதும் தமிழ் மக்களை ஏமாற்றியதுமே வரலாறாக நீள்கின்றன. பன்னாட்டு அனுசரணையோடு செய்யப்பட்ட பல ஒப்பந்தங்களையும் காற்றில் பறக்க விட்டதே அரசின் தொடர்கதை. அரசாங்கம் தொடர்ந்து நிலப்பறிப்பு, குடிப்பரம்பல் மாற்றம், மொழிச் சிதைப்பு, பண்பாட்டுச் சீரழிப்பு, இனத்துவ ஏகாதிபத்திய அடக்குமுறை, இனவாத வகுப்புவாத சிந்தனை, அரச திணைக்களங்கள் மூலம் நில அபகரிப்பு போன்ற பல்வேறு விதமான நெருக்கடிகளை தொடர்ந்து ஆட்சிக்கு வருபவர்களால் அரங்கேற்றப்படுகிறது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை சிறு பான்மையினராக்கும் முயற்சியிலே அரசாங்கம் முன் நோக்கி நகர்கின்றது. ஆட்சி அமைக்கின்ற எவரும் பௌத்த தேசியவாத மனநிலையில் இருந்தும் சிங்கள மேட்டிமை வாத சிந்தனையில் இருந்தும் தங்களை மாற்றிக் கொள்ள தயாராகவில்லை. பௌத்த தேசிய இனவாதத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்துவதனால் தான் சமூக, சமநீதி, சமத்துவம், இனத்துவ மொழித்துவ வேறுபாடின்மை போன்ற விடயங்களை குறைந்தபட்ச மேனும் நோக்கு நிலையாக கொள்வதில்லை. பௌத்த பீடங்களை திருப்திப்படுத்தவும் இராணுவத்தை மகிழ்ச்சிப்படுத்தவும் சிங்கள அடிப்படை வாதிகளை சாந்தப்படுத்தும் வேலையிலுமே ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய அரசும் இதுக்கு விதிவிலக்கு அல்ல. ஆட்சிக்கு வர முன்னர் பல்வேறு விதமான இடதுசாரி தத்துவத்தை முன் வைத்தவர்கள் ஆட்சிக் கதிரையில் அமர்ந்த பின்னர் இயல்பான இனவாத வலதுசாரி வகுப்பு வாதிகளாக மாறி விட்டார்கள். நடைமுறைச் சாத்திய மற்ற வாக்குறுதிகளை எல்லாம் தாராளமாக அள்ளி வீசியவர்கள் அதில் ஒரு சிலதை கூட நடைமுறைப்படுத்த முடியாமல் திணறுகிறார்கள். ஜே.வி.பி யில் இருந்து என்.பி .பி என பெயரை மாற்றிக் கொண்டால் கடந்த காலத்து இனவாத சக்திகள் எதனையும் இன்றைய இளைய சமூகம் அறிந்திருக்காது என் கின்ற அற்ப ஆசையிலே இத் தந்திரத்தை உபயோகிக்கிறார்கள். அது தொடர்ந்தும் வெற்றியை நோக்கி முன்னகர்த்துமா என்பது கேள்விக்குறியே! இலங்கையிலே இனவாதத்தை பட்டவர்த்தனமாக பொது வெளியிலே சிங்கள மக்கள் மத்தியிலே வெறுப்புணர்வை தூண்டி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பகைமையை ஏற்படுத்தியதில் மிகப்பெரிய பங்காற்றியவர்கள் ஜே.வி.பியினர் என்பது மறக்க முடியாத கடந்த கால வரலாறு. பெயரை மாற்றி விட்டால் மக்கள் மறந்து விடுவார்கள் என எண்ணுகிறார்கள் போலும் வடக்குக் கிழக்கில் அரச ஒட்டுக் குழுக்களாக இருந்தவர்கள் இப்பொழுது ஜன நாயகவாதிகளாக தங்களை காட்டிக் கொள்வது போல் தான் இவர்களுடைய மாய விம்பமும் தோன்றுகின்றது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்ட போதும் உருப்படியாக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சர்களும் பொய்யும் புரட்டுமாக பேசி வாக்கை தமதாக்கிக் கொள்ள முனைகிறார்கள். மக்களே விழித்துக் கொள்ளுங்கள். தமிழின அழிப்பாளர்களான ராஜபக்சக்களின் அடக்குமுறையை கூட துணிச்சலாக எதிர்கொண்ட தமிழ் மக்கள் ஜேவிபியின் என். பி .பி நாடகத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றோம். குறிப்பாக மன்னார் போன்ற பிரதேசங்களில் காற்றாலை மின்சாரம், கனிம மண் அகழ்வு, கரையோர மண்ணகழ்வு ஆகிய மூன்று திட்டங்களுக்கும் கொள்கை அளவில் அரசாங்கம் ஆதரவாகவே இருக்கிறது. இத்திட்டத்தை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிக்கலாமா? வடமராட்சி கிழக்கு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை 5940 ஏக்கரை கபளீகரம் செய்வதற்கு அரசாங்கம் முயல்கிறது இதை ஆதரிக்கலாமா? எனவே தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வாக்களியுங்கள் அவர்களுக்குள் இருப்பது குடும்பச் சண்டை அது விரைவில் தீர்ந்துவிடும். அந்தச் சண்டைக்குள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பளித்தால் வடக்கு கிழக்கில் நாம் தனித்துவத்தையும் சுயமரியாதையும் இழந்தவர்களாகி விடுவோம். நீண்ட நெடிய விடுதலைப் போரை நடத்திய இனம் வெறும் வாய்ச்சொல் வீரர்களுக்கு வாக்களிக்க முனைவது தேசத்துக்காக இழந்த எம்மவர்களின் ஆத்மா உங்களை ஒருபோதும் மன்னிக்காது. ஆகவே தென்னிலங்கையில் யாரும் எவருக்கும் வாக்களிக்கட்டும். வடக்கு கிழக்கிலே எங்களை நாங்கள் ஆளக்கூடிய சுயநிர்ணய உரித்தை தகவமைத்துக் கொள்வதற்கு எமது இருப்பு எமக்கு முக்கியம் அற்ப சொற்ப சலுகைகளுக்கும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்கும் உங்கள் வாக்கை அளித்து வாழ்க்கையையும் இருப்பையும் இழந்து விடாதீர்கள். வாக்களிக்க முன் நான் ஏன் இவருக்கு வாக்களிக்க வேண்டும். அதனால் நம் இனத்துக்கும், எம் நிலத்துக்கும், என் பண்பாட்டிற்கும், அடுத்த சந்ததிக்கும் நான் மதிப்பிடும் அரசியல் கணக்கு என்ன? என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் வாக்குச்சாவடிக்கு போக முன்னர் தீர்மானித்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் தமிழர்களாகவே தன்மானத்தோடு தலை நிமிர்ந்து தனித்துவமாக தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள். அதுவே எமக்கான வரலாற்றுக் கடமையும் பொறுப்பும் தார்மீக உரிமையும் ஆகும். என்றுள்ளது. https://www.virakesari.lk/article/213606
  3. Published By: DIGITAL DESK 2 03 MAY, 2025 | 05:04 PM சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியாலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை மாலை 03.00 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு நீதி கோரியும் ஊடகவியலாளர்கள் கோசங்களை எழுப்பினர். https://www.virakesari.lk/article/213594
  4. பட மூலாதாரம்,UNIVERSIDADE DE YORK படக்குறிப்பு,இந்த இளைஞனின் எலும்புகள் 2004ஆம் ஆண்டு யார்க்கில் நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைத்தவை கட்டுரை தகவல் எழுதியவர், அலெக்ஸ் மோஸ் மற்றும் விக்டோரியா கில் பதவி, பிபிசி நியூஸ் 3 மே 2025, 03:48 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ரோமானிய கிளாடியேட்டர் ஒருவரின் எலும்புக்கூட்டில் காணப்பட்ட பல் தடங்கள், சிங்கத்துக்கும் ஒரு மனிதனுக்கும் சண்டை நடந்ததை உறுதிப்படுத்தும் முதல் தொல்லியல் ஆதாரங்கள் ஆகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பிரிட்டனின் யார்க் பகுதியில் உள்ள ட்ரிஃப்பீல்டு டெரஸ்-இல், 2004-ஆம் ஆண்டு நடந்த அகழ்வாய்வில் இந்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த எலும்புக்கூட்டில் தடய ஆய்வு செய்யப்பட்டபோது, அந்த இளைஞனின் இடுப்பு பகுதியில் பல் தடங்களும், சேதங்களும் இருந்தன. அவை ஒரு சிங்கத்தால் ஏற்படுத்தப்பட்டதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த ஆய்வை மேற்கொண்ட தடயவியல் நிபுணரான பேராசிரியர் டிம் தாம்ப்ஸன், சிங்கம், புலி போன்றவற்றுடன் கிளாடியேட்டர்கள் சண்டையிட்டதற்கான முதல் 'நேரடி ஆதாரம்' இதுதான் என்றார். "ரோமானிய கிளாடியேட்டர்களின் சண்டையில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டது பற்றிய நமது புரிதல் பெரும்பாலும் வரலாற்று நூல்கள் மற்றும் கலைப் படைப்புகள் மூலமாகப் பெறப்பட்டவையே," என்கிறார் அவர். "இந்தக் கண்டுபிடிப்புதான் இப்படிப்பட்ட விஷயங்கள் ரோமானிய வரலாற்றில் நடைபெற்றன என்பதற்கான முதல் நேரடி ஆதாரம்," என்று கூறிய டிம், "இந்தப் பகுதியில் ரோமானிய பொழுதுபோக்கு கலை எப்படி இருந்தது என்பது தொடர்பான நம் பார்வையை இது மாற்றும்," என்றார். மெட்ராஸில் அடிமை வர்த்தகம் செய்த எலிஹு யேலின் மகன் கல்லறை இப்போது சர்ச்சையாவது ஏன்?2 மே 2025 ஓட்டோமான் பேரரசின் அடிமைப்பெண் அரசியான கதை - ஹுர்ரெம் சுல்தானின் அறியாத பக்கங்கள்1 மே 2025 3டி ஸ்கேன் மூலம் உறுதி படக்குறிப்பு,மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கத்தின் பல்தடங்களுடன் ஒப்பிட்டு இந்தக் காயம் உறுதிசெய்யப்பட்டது. நிபுணர்கள் இந்தக் காயங்களை ஆய்வு செய்ய 3டி ஸ்கேன் உள்ளிட்ட பல புதிய தடயவியல் முறைகளைப் பயன்படுத்தியதில் அந்த விலங்கு மனிதனை இடுப்பு பகுதியில் கடித்ததை உறுதிப்படுத்தியுள்ளனர். "அந்த மனிதன் இறக்கும் சமயத்தில் அந்த விலங்கு அவரைக் கடித்திருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தோம்," என்கிறார் அயர்லாந்து மேனூத் பல்கலைக்கழத்தின் பேராசிரியர் டிம் தாம்ப்ஸன். "அதனால் இறப்பிற்குப் பின் அவரை உண்பதற்காக அந்த மிருகம் முயற்சி செய்யவில்லை; அது கடித்ததுதான் இறப்புக்கே காரணமாக இருந்தது," என்று விளக்கம் தருகிறார் அவர். அந்தக் காயத்தை ஸ்கேன் செய்தது மட்டுமல்லாமல், லண்டன் மிருகக்காட்சி சாலையில் இருக்கும் சிங்கம், புலி போன்றவற்றின் பல் தடங்களோடு அதன் அளவு மற்றும் வடிவத்தை ஒப்பிட்டுப் பார்த்தனர். "இந்த நபரின் உடலில் இருந்த பல் தடங்களைப் பார்த்தால் அவை சிங்கத்தின் பல்தடங்களோடு பொருந்திப் போகின்றன," என்று பிபிசி நியூஸிடம் தாம்ப்ஸன் தெரிவித்தார். அது கடித்த இடம், அந்த கிளாடியேட்டர் எப்படிப்பட்ட சூழலில் மரணத்தைத் தழுவியிருக்கலாம் என்று முக்கியமான தடயங்களை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஸ்ஸல் க்ரோவ் நடித்த கிளாடியேட்டர் திரைப்படத்தில் இருந்து கிளாடியேட்டரும், புலியும் சண்டையிடும் காட்சி அந்த எலும்புக்கூடு, 26ல் இருந்து 35 வயதிற்குட்பட்ட மனிதனுடையது. வேறு இரு சடலங்களுடன் அந்த மனிதர் புதைக்கப்படிருந்தார். அந்த சடலங்களின் மீது குதிரையின் எலும்புகளும் காணப்பட்டன. முந்தைய ஆய்வு அந்த நபர் ஒரு 'Bestiarius' – அதாவது காட்டு விலங்குகளுடன் சண்டை போடும் ஒரு கிளாடியேட்டர் - எனக் குறித்தன. யார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மாலின் ஹோல்ஸ்ட், கடந்த முப்பதாண்டுகளாக எலும்புக்கூடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தாலும், இதற்கு முன் தான் 'இப்படிப்பட்ட பல்தடங்களைப் போல எதையும் பார்த்ததில்லை' என்று குறிப்பிடுகிறார். "குறுகிய மற்றும் கடினமான வாழ்வின்' பாதையை இந்த எச்சங்கள் வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். ''கடும் உடற்பயிற்சி செய்ததன் மூலம் அந்த மனிதருக்கு வலிமையான தசைகள் இருந்திருக்கும் என்பதையும், கடுமையான வேலை மற்றும் தொடர் சண்டைகளின் காரணமாக தோள் மற்றும் முதுகெலும்பில் காயங்கள் இருந்ததற்கான அறிகுறிகளையும் அந்த எலும்புகள் காட்டுகின்றன'' என ஹோல்ஸ்ட் கூறுகிறார். யார்க் ஆஸ்டியோஆர்க்கியாலஜியின் (அகழ்வாய்வில் கிடைக்கும் மனித எலும்புகளை ஆய்வு செய்வது) இயக்குநருமான ஹோல்ஸ்ட், "இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. ஏனெனில் இதன் மூலம் கிளாடியேட்டர்கள் அவர்கள் வாழும் காலகட்டத்தில் எப்படி இருந்தார்கள் என்பது பற்றிய ஒரு தெளிவான வரைபடத்தை தெரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம்," என்றார். ஹிட்லரின் மரணம் குறித்து விலகாத மர்மங்கள் - இறக்கும் தருவாயில் எப்படி இருந்தார்?30 ஏப்ரல் 2025 முகலாய பேரரசர் முகமது ஷாவிடம் இருந்து கோஹினூர் வைரத்தை சாதுர்யமாக கொள்ளையடித்த நாதிர் ஷா29 ஏப்ரல் 2025 'ரோமானிய கொலாசியத்தில் இருந்து வெகு தூரத்தில்…' படக்குறிப்பு,இந்தக் கண்டுபிடிப்பு 'பெரும் உற்சாகத்தை' ஏற்படுத்துவதாகக் கூறினார் மாலின் ஹோல்ஸ்ட். PLoS One என்ற கல்விசார் இதழில் வெளியான இந்த கண்டுபிடிப்புகள், "யார்க் போன்ற நகரங்களின் வெளிப்பகுதிகளில் பெரிய விலங்குகளும் இருந்தது உறுதிப்படுத்துகிறது. அதோடு மரணம் வரும் வேளையில் இந்த விலங்குகள் தங்களைத் தாங்களே எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது," என்றார்கள் ஆராய்ச்சியாளர்கள். ரோமானிய யார்க்கில் ஒரு பெரிய அரைவட்ட அரங்கு இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது என்கிறார்கள் நிபுணர்கள். அது எங்கிருக்கிறது என்று இன்னும் தெரியவில்லை என்றாலும், ஏதோ ஒரு விதப் பொழுதுபோக்குக்காக கிளாடியேட்டர் சண்டைகள் இங்கே தான் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். யார்க்கில் உயர்பதவியில் இருந்த ரோமானியத் தலைவர்கள் வசித்ததால் அவர்கள் ஒரு ஆடம்பரமான வாழ்வையே வாழ்ந்திருக்கக்கூடும். இதனால் செல்வம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படும் கிளாடியேட்டர் சண்டைகள் நடந்தன என்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. "நாம் நம்புவது போல, அடுத்தவர்களின் மகிழ்ச்சிக்காக சண்டையிட இந்த இடத்துக்கு அந்த மனிதனை எது வரவழைத்தது என்று நமக்குத் தெரியாது. ஆனால் பண்டைய உலகத்தின் 'வெம்ப்ளி ஸ்டேடியம்' என்று அழைக்கப்பட்ட ரோமானிய கொலாசியத்தில் இருந்து வெகு தூரத்தில் இப்படி ஒரு சண்டை நிகழ்ந்ததற்கான தொல்லியல் எலும்பு ஆதாரங்கள் கிடைத்தது ஆச்சர்யமான விஷயம்தான்," என்கிறார் யார்க் தொல்பொருள் அமைப்பின் தலைமை நிர்வாகி டேவிட் ஜென்னிங்ஸ். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c39jme11l4zo
  5. பாகிஸ்தான் கொடியை ஏந்திய கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்குள் நுழையத் தடை 03 MAY, 2025 | 04:29 PM பாகிஸ்தான் கொடியை ஏந்திய கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதேவேளை, இந்தியக் கொடியை ஏந்திய கப்பல்கள் பாகிஸ்தானில் உள்ள துறைமுகங்களில் நிறுத்தி வைப்பதற்கும் இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/213595
  6. GT vs SRH: தமிழக வீரர் சாய் சுதர்சன் முதலிடம் - சுப்மன் கில் ரன் அவுட் சர்ச்சையானது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சாய் சுதர்சன் ஆட்டம் இந்த சீசனில் வெகுவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மே 2025, 01:54 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் 2025 ஐபிஎல் டி20 சீசனில் தமிழக வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ள அணி குஜராத் டைட்டன்ஸ். சாய் சுதர்சன், சாய் கிஷார், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர் என அனைவருமே தமிழக மண்ணின் மைந்தர்கள். இவர்கள் 4 பேரும் கிடைக்கின்ற வாய்ப்பில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி, முத்திரை பதித்து வருகிறார்கள். அதிலும் தொடக்க வீரராகக் களமிறங்கும் சாய் சுதர்சனின் ஆட்டம் இந்த சீசனில் வெகுவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிரட்டல் ஜோடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத் அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர்கள் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடி அமைத்துக் கொடுக்கும் அடித்தளம் பல போட்டிகளில் வெற்றியைக் கொடுத்துள்ளது இந்த சீசனில் குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுடன் சேர்ந்து சாய் சுதர்சன் அமைக்கும் கூட்டணி பெரும்பாலான ஆட்டங்களில் பெரிய ஸ்கோருக்கும், வெற்றிக்கும் வழிவகுத்துள்ளது. ஆமதாபாத்தில் நேற்று நடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்கூட இருவரின் பார்ட்னர்ஷிப்பும் குஜராத் அணி 200 ரன்களுக்கு மேல் கடக்க உதவியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்தது. 225 ரன்களை சேஸ் செய்யும் முனைப்பில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது. வெளியேறும் சன்ரைசர்ஸ்? இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 10 போட்டிகளில் 7 வெற்றி பெற்று, 14 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. ஆர்சிபி அணியை விட நிகர ரன்ரேட்டில் 0.867 வலுவாக இருப்பதால் குஜராத் அணி 2வது இடம் பிடித்தது. அதேசமயம், சன்ரைசர்ஸ் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு கணித ரீதியாக முடியாவிட்டாலும், நிதர்சனத்தில் அந்த அணி அடுத்துவரும் 4 போட்டிகளிலும் வென்றாலும் 14 புள்ளிகளைக் கடக்க முடியாது. ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்கவும்கூட இந்த 14 புள்ளிகள் போதாது என்பதால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் சன்ரைசர்ஸ் அணி வெளியேறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES சிம்ம சொப்ன தொடக்க வீரர்கள் குஜராத் அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர்கள் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடி அமைத்துக் கொடுக்கும் அடித்தளம் பல போட்டிகளில் வெற்றியைக் கொடுத்துள்ளது. இதுவரை 10 இன்னிங்ஸ்களில் சாய் சுதர்சன், கில் ஜோடி 627 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளனர். இதில் 6 முறை 50 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்துள்ளனர். இருவரின் சராசரி 60.27 ரன்களாக உள்ளது. இருவரின் பேட்டிங்கிலும் இருக்கும் ஆக்ரோஷம், ஆவேசம்தான் குஜராத் அணிக்கு பவர்ப்ளேயில் பெரிய ஸ்கோரைப் பெற்றுக் கொடுத்துள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில்கூட 43 பந்துகளில் இருவரும் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர், இதில் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்களும் அடங்கும். இருவரின் பேட்டிங்கிலும் பவர்ப்ளேயில் 6 புல்ஷாட்கள், 2 ப்ளிக் ஷாட்கள், 2 கவர் ட்ரைவ் ஷாட்கள், ஒரு ஸ்ட்ரைட் ட்ரைவ், ஒரு ஸ்டீர், ஒரு கட்ஷாட் ஆகியவற்றின் மூலம்தான் பவுண்டரி, சிக்ஸர் கிடைத்தது. பவர்பளேயில் இருவரும் சேர்ந்து 82 ரன்கள் சேர்த்தது இந்த சீசனில் 6வது அதிகபட்சமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அணியை தூக்கி நிமர்த்துவதில் பட்லரின் பேட்டிங் முக்கியமானதாகும் இந்த சீசன் முழுவதும் கில், சுதர்சன் இருவரும் மிரட்டலான ஃபார்மில் இருப்பதால் எந்த பந்துவீச்சாளர் மோசமாக பந்துவீசினாலும் தண்டிக்கத் தவறுவதில்லை. நேற்றைய ஆட்டத்தில் ஷமியின் 3வது ஓவரில் இருவரும் சேர்ந்து 21 ரன்களை விளாசினர். ஐபிஎல் சீசனில் வேறு எந்த அணியிலும் இல்லாத வகையில் குஜராத் அணிக்கு தொடக்க ஜோடி அமைந்துள்ளது. இருவரின் ரன் வேட்கையும், ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்கிறது. அதிரடியாக ஆட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் நிதானமாக, பேட்டிங்கில் கட்டுப்பாட்டுடன், மோசமான பந்துகளை தேர்வு செய்து மட்டுமே ஷாட்களை அடித்து நங்கூரம் அமைக்கிறார்கள். இந்த ஆட்டத்தில் கூட சுதர்சன், கில் இருவரின் பேட்டிங்கிலும் 15 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன, ஷாட்களில் கன்ட்ரோல் சதவீதம் 94 ஆக இருக்கிறது. ஒரு பந்துக்கு குறைந்தபட்சம் 2 ரன்கள் சேர்க்கவேண்டும் என்ற சராசரியில் இருவரும் விளையாடுகிறார்கள். ஐபிஎல் சீசனில் குஜராத் அணி வெற்றிகரமாக மாறுவதற்கு சாய் சுதர்சன் , கில் கூட்டணி மட்டுமல்லாமல் மற்றொரு அதிரடி வீரர் ஜாஸ் பட்லரும் குறிப்பிடத்தகுந்தவர். கில், சுதர்சன் இருவரில் யாரேனும் ஒருவர் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால் அணியை தூக்கி நிமர்த்துவதில் பட்லரின் பேட்டிங் முக்கியமானதாகும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த பேட்டர்கள் வரிசையில் குஜராத் அணியின் டாப்-3 பேட்டர்கள் இடம் பெற்றுள்ளனர். சுதர்சன், கில், பட்லர் மூவருமே இடம் பெற்றள்ளது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES சச்சினை முந்திய சுதர்சன் தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்த சீசனில் 500 ரன்களைக் கடந்த முதல் பேட்டர் என்ற பெருமையையும், ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றியுள்ளார். 10 போட்டிகளில் 5 அரைசதங்கள் உள்பட 504 ரன்கள் குவித்து 50 ரன்களுக்கும் மேல் சுதர்சன் சராசரியும், 154 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். சாய் சுதர்சன் பேட்டிங்கில் இருக்கும் நிலைத்தன்மையைப் பார்த்து " மிஸ்டர் கன்சிஸ்டென்சி" என அழைக்கிறார்கள். சுதர்சன் நேற்றைய ஆட்டத்தில் 23 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 54 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை எட்டி சச்சின் டெண்டுல்கர் சாதனையை சுதர்சன் முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 59 இன்னிங்ஸ்களில் தான் 2000 ரன்களை எட்டினார். சுதர்சன் விரைவாக 54 இன்னிங்ஸ்களிலேயே இந்த ரன்களை எட்டினார். மிகவிரைவாக 2000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை ஷான் மார்ச் 53 இன்னிங்ஸ்களில் வைத்துள்ளார். சுதர்சன் 2வது இடத்தில் இருக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபிஎல் தொடரில் 54 இன்னிங்ஸ்களில் 2ஆயிரம் ரன்களை எட்டி சச்சின் டெண்டுல்கர் சாதனையை சுதர்சன் முறியடித்துள்ளார். குஜராத்தின் 3 தூண்கள் குஜராத் அணியின் பேட்டிங் வெற்றிக்கு டாப்-3 வரிசையில் இருக்கும் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில், ஜாஸ் பட்லர் ஆகிய 3 பேரும் தான் காரணம். குஜராத் அணி 10 இன்னிங்ஸ்களில் நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்கள் பேட்டிங் செய்ய குறைவாகவே வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனென்றால் இந்த 3 பேருமே பெரும்பாலான ஆட்டத்தை, ஓவர்களை ஆக்கமிரத்து ஆடுவதால் நடுவரிசை பேட்டர்களுக்கு களமிறங்க வாய்ப்புக் குறைவாக இருக்கிறது. இந்த 3 பேரும் சேர்ந்து சுதர்சன்(48),கில்(76),பட்லர்(64) என நேற்றைய ஆட்டத்தில் 188 ரன்கள் சேர்த்தனர். 218 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த குஜராத் அணி கடைசி ஓவரில் 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுப்மன் கில் 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார் சர்ச்சை ரன் அவுட் இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் 76 ரன்கள் சேர்த்திருந்தபோது ஹர்சல் படேல் வீசிய த்ரோவில் விக்கெட் கீப்பர் கிளாசனால் ரன்அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். ஆனால், இந்த ரன்அவுட் குறித்து 3வது நடுவரிடம் அப்பீல் செய்யவே, அதில் உறுதியற்ற தன்மை நிலவிய நிலையிலும் கில்லுக்கு அவுட் வழங்கினர். அதாவது ஹர்சல் படேல் வீசிய த்ரோவில் பந்து ஸ்டெம்பில் படுவதற்கு முன்பாகவே கிளாசனின் க்ளோவ் ஸ்டெம்பில் பட்டது தெரிந்தது. அதேநேரம், பந்தும் ஸ்டெம்பில் பட்டது. இரு சம்பவங்களும் மைக்ரோ வினாடிகள் இடைவெளியில் நடந்ததால், 3வது நடுவர் அவுட் வழங்கினார். இதைப் பார்த்து அதிருப்தி அடைந்த சுப்மன் கில் பெவிலியனுக்கு கோபத்துடன் சென்றார். அங்கிருந்த நடுவர்களிடம் சுப்மன் கில் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார்.அது மட்டுமல்லாமல் பந்துவீச களமிறங்கும்போதும், கள நடுவர்களிடம் தன்னுடைய ரன்அவுட் குறித்து வாக்குவாதம் செய்தார். இது ஐபிஎல் விதிகளின்படி தவறாகும், இதனால் நடுவர்கள் புகார் அளிக்கும்பட்சத்தில் சுப்மன் கில்லுக்கு தண்டனை விதிக்கப்படலாம். நம்பிக்கையிழந்த சன்ரைசர்ஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசன் கடந்த சீசன்போல் நம்பிக்கையானதாக அமையவில்லை. குறிப்பாக தொடக்க ஜோடி ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா இந்த சீசனில் பெரிய அளவுக்கு வெற்றிகரமான ஜோடியாக இல்லாதது அந்த அணியின் பெரும்பாலான தோல்விகளுக்கு காரணமாகும். இருவரில் ஒருவர் பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழப்பது, யாரேனும் ஒருவர் மட்டுமே நிலைத்து ஆடுவது சாதகமாக அமையவில்லை. அதிலும் இந்த சீசனில் அபிஷேக் ஷர்மா 314 ரன்களும், டிராவிஸ் ஹெட் 281 ரன்களும் மட்டுமே சேர்த்துள்ளனர். ஹெட் இதுவரை 2 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார், அபிஷேக் ஒரு சதம், ஒருஅரைசதம் மட்டுமே அடித்துள்ளார். இந்த ஆட்டத்திலும் டிராவிஸ் ஹெட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் ஷர்மா 41 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அபிஷேக் களத்தி்ல் இருந்தவரை சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கை இருந்தது. இவர் ஆட்டமிழந்தபின் படிப்படியாக அந்த நம்பிக்கை குறைந்தது. கிளாசன் 23, அனிகேத் வர்மா(3) , கமிந்து மெண்டிஸ்(0) என ஆட்டமிழந்தனர். பிரசித் கிருஷ்ணா கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக்குப்பின் குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் " கறுப்பு மண் ஆடுகளத்தில் சிக்ஸர் அடிப்பது கடினமாக இருந்தது. ஆனாலும் டாப் ஆர்டர் பேட்டர்கள் ஆடியவிதம் சிறப்பாக இருந்தது, ஸ்கோரை உயர்வாக கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கம்தான் இருந்தது. எங்களால் முடிந்தவரை சிறப்பான ரன்களை அடிக்கவே முயல்கிறோம். எங்கள் அணியின் பீல்டிங் இந்த சீசனில் சராசரிக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று நன்றாக இருந்தது. பிரசித், இசாந்த், கோட்ஸி ஆகியோர் ஸ்கோரை டிபெண்ட் செய்ய சரியாகப் பந்துவீசினர்.களத்தில் வீரர்கள் அனைவரும் 110% பங்களிப்பை வழங்கினர்" எனத் தெரிவித்தார். இன்றைய ஆட்டம் சிஎஸ்கே vs ஆர்சிபி இடம்: பெங்களூரு நேரம்: இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் நாள் – மே 6 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம் கொல்கத்தா vs சிஎஸ்கே நாள் – மே 7 இடம் – கொல்கத்தா நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs லக்னெள நாள் – மே 9 இடம் – லக்னெள நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-504 ரன்கள்(10 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 475 (11 போட்டிகள்) ஜாஸ் பட்லர்(குஜராத் டைட்டன்ஸ்) 470 ரன்கள்(10 போட்டிகள்) நீலத் தொப்பி பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 19 விக்கெட்டுகள்(10 போட்டிகள்) ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்) டிரன்ட் போல்ட் (மும்பை) 16 விக்கெட்டுகள்(11 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czrvdg4l2pno
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் மே 3, சனிக்கிழமை அன்று தமிழ் நாளேடுகள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம். கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை (மே 4) தொடங்குகிறது என்று இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு - மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 3) ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 8-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மே 6-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 84 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. இது மே 28-ம் தேதி வரை நீடிக்கிறது. பொதுவாக, இந்த காலகட்டத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கும். ஆனால், சமீபகாலமாக அக்னி நட்சத்திர காலகட்டத்தில் பரவலாக பல பகுதிகளில் கோடை மழை பொழிந்து குளிர்ச்சியை கொடுத்து வருகிறது," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'போலி சாதி சான்றிதழ் குறித்த விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும்' - உயர் நீதிமன்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES இடஒதுக்கீட்டு கொள்கையை பாதுகாக்கும் விதமாக போலி சாதி சான்றிதழ் தொடர்பான விசாரணையை குறித்த காலத்துக்குள் விரைவாக முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், பாங்க் ஆப் பரோடா வங்கியின் உதவி பொது மேலாளர் ஜீவன் தாக்கல் செய்துள்ள மனுவில், ''எங்கள் வங்கியில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஏராளமான ஊழியர்கள் சாதி சான்றிதழ்களை கொடுத்து வேலைக்கு சேருகின்றனர். அவர்கள் தரும் சாதி சான்றிதழ்கள் பல போலியாக உள்ளன. ஊழியர்களின் சான்றிதழின் உண்மைத்தன்மையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு மாநில அளவிலான ஆய்வுக்குழு உறுதி செய்யவேண்டும். ஆனால் இந்த குழு குறித்து காலத்துக்குள் விசாரித்து, உறுதி செய்வது இல்லை. இதனால், எங்கள் வங்கியின் ஊழியர்கள் ஓய்வூதிய பலன்களை நிர்ணயிக்க முடியவில்லை. எனவே, சாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய கால அளவை நிர்ணயித்து உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், " போலி சாதிச் சான்றிதழ் தொடர்பான விசாரணையை முடிக்கும் காலத்தை நிர்ணயிக்க இந்த உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், இந்த வழக்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்தோம். இடஒதுக்கீட்டு கொள்கையின் புனித்தன்மையையும், பொதுநலனையும் பாதுகாக்கும் விதமாக, போலி சாதி சான்றிதழ் குறித்த புகார்களை குறிப்பிட்ட நேரத்தில் விரைவாக விசாரித்து முடிக்க மாநில ஆய்வுக்குழுவுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் உத்தரவிட வேண்டும். மேலும், போதுமான எண்ணிக்கையில் மாநில ஆய்வுக்குழுக்களை உருவாக்க வேண்டும். அதுமட்டுமல்ல அனைத்து விதமான விசாரணைகளையும் தீவிரமாக மேற்கொண்டு, இறுதியில்தான் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதனால், இந்த விவகாரம் குறித்து தகுந்த உத்தரவை 6 வாரத்துக்குள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் பிறப்பிக்க வேண்டும்," என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்த தம்பதியினரினர் உடல்களை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் சிவகிரியைச் அடுத்த விளக்கேத்தி கீழ்பவானி வாய்க்கால் கரையில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம் (65). இவர்களது மகன், மகள் இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். வயதான தம்பதி மட்டும் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், இவர்களது வீட்டில் இருந்து வியாழக்கிழமை துர்நாற்றம் வீசியதை அடுத்து, அருகில் வசித்த உறவினர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது இருவரின் சடலங்களில் இருந்தே துர்நாற்றம் வந்தது தெரிந்துள்ளது. தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டனர். கொலைச் சம்பவம் நடைபெற்று மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் உடல்கள் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிட்டதாகவும், நகை பணத்துக்காக கொலை நடைபெற்றுள்ளதாகவும், கொலையில் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க பிடிக்க ஈரோடு ஏ.டி.எஸ்.பி. விவேகானதன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளாதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. விழிஞ்சம் துறைமுகத்தால் பொருளாதார ஸ்திரத்தன்மை: மோதி நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் துறைமுகம் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கின. விழிஞ்சம் துறைமுகத்தில் முதற்கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. துறைமுக திறப்பு விழாவில் பிரதமர் மோதி, "கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் கடல்சார் வலிமை மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் துறைமுகத் திறன் இரட்டிப்பாகியுள்ளது. செயல்திறன் மேம்பட்டுள்ளது. விழிஞ்சம் துறைமுகம் ரூ.8,867 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் சரக்கு கையாளும் திறனை விரைவில் மூன்று மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது பெரிய சரக்குக் கப்பல்களை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்பது நிச்சயம். இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும். பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் துறைமுகம் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும்," என்று கூறினார். பட மூலாதாரம்,@NARENDRAMODI/X அதானி குழுமத்துடன் இணைந்து இந்த விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. பல்வேறு நாடுகளில் இருந்தும் சரக்கு கப்பல்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly109p1llno
  8. 03 MAY, 2025 | 03:30 PM எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பிற்பகல் 04.00 மணிக்கு பின்னர் ஊடகங்களில் வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல்வாதிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்களிக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் கிடைத்தால் அதனை பிற்பகல் 04.00 மணிக்கு முன்னர் ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. சுதந்திரமான தேர்தல் இடம்பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/213589
  9. Published By: VISHNU 02 MAY, 2025 | 07:59 PM சிலி மற்றும் ஆர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (2) மாலை 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேப் ஹார்ன் மற்றும் அந்தாட்டிக்காவிற்கு இடையில் 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிலி அதிகாரிகள் நாட்டின் தெற்குப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர். சிலியின் தெற்கு முனையில் உள்ள மாகல்லன்ஸ் பகுதியின் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணியில் சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ அல்லது பொருள் சேதமோ எதுவும் ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. https://www.virakesari.lk/article/213549
  10. இஸ்ரேலில் பாரிய காட்டுத் தீ : பெரும்பகுதி நிலப்பரப்பு நாசம்! 02 MAY, 2025 | 06:33 PM இஸ்ரேலில் கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட பாரிய கட்டுத் தீயால் பெரும்பகுதி நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு அருகில் மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை முதல் பரவத் தொடங்கிய காட்டுத்தீயானது வேகமான காற்று, வெப்பம் மற்றும் உலா்வான பருவநிலை காரணமாக வெகு வேகமாகப் பரவி சுமாா் 20 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை நாசம் செய்துள்ளது. தற்போது தீ வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், காற்று அவ்வப்போது திசை மாறி வீசுவதால் அணைக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் தீ பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். தீயணைப்பு நடவடிக்கையில் சுமார் 10 தீயணைப்பு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தக் காட்டுத் தீயில் குடியிருப்பு வீடுகள் எதுவும் சேதமடையவில்லை என்றாலும், பூங்காக்கள் போன்ற பொது இடங்களைத் தவிா்க்க வேண்டும் எனவும், பொதுவெளியில் தீ மூட்டி சமைக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா். இந்தக் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இத்தாலி, குரோஷியா, ஸ்பெயின், பிரான்ஸ், உக்ரைன், ருமேனியா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு விமானங்களை அனுப்பியுள்ளன. இதேவேளை, இஸ்ரேலில் கடந்த 2010ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீயில் 12,000 ஏக்கா் நிலப்பரப்பு நாசமானதுடன் 44 போ் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/213546
  11. 02 MAY, 2025 | 06:21 PM அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிவந்த மைக் வோல்ட்ஸ் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். யேமனில் ஹௌத்தி கிளா்ச்சியாளர்களின் தலைவா்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா மேற்கொண்டுவரும் தாக்குதல் தொடா்பாக அவரும், துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்க்கோ ரூபியோ, தேசிய உளவு அமைப்பின் இயக்குநா் துளசி கப்பாா்ட் உள்ளிட்டோரும் ‘சிக்னல்’ என்ற தகவல் தொடா்பு செயலி மூலம் சில வாரங்களுக்கு முன்னா் மேற்கொண்ட தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருந்தனா். அப்போது, ‘தி அட்லாண்டிக்’ இதழின் தலைமை ஆசிரியா் ஜெஃப்ரி கோல்பா்கும் அந்த உரையாடலில் தவறுதலாக இணைக்கப்பட்டாா். இதனால் மிகுந்த ரகசிய முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் வெளியே கசிந்தன. இந்த விவகாரம் தொடா்பாக மைக் லோல்ட்ஸ் சா்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது அவா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/213544
  12. Published By: VISHNU 02 MAY, 2025 | 07:45 PM வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது பௌதீக ஆபத்துகளை அகற்றுவது மட்டுமல்ல, மக்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் அமைதியான வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு தேசிய தேவையாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பில் உள்ள காலி முகத்திடல் ஹோட்டலில் ஏப்ரல் 2 ஆம் திகதி நகர அபிவிருத்தி, நிர்மாணத் துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை திட்டத்தின் நன்கொடையாளர் ஒருங்கிணைப்பு மற்றும் பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியில் பங்காளிகளாக உள்ள அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். மோதல்களுக்குப் பின்னர் எழுந்த ஒரு தேவையாக இருந்தாலும், கண்ணிவெடி அகற்றல் என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும். இந்த செயன்முறை பௌதீக ஆபத்துகளை அகற்றுவது மட்டுமல்ல, மக்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் அமைதியான எதிர்காலத்திற்கான வாக்குறுதியை மீட்டெடுப்பது பற்றியதும் ஆகும். பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவது, பிள்ளைகள் பாதுகாப்பாக விளையாடுவது, விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு அச்சமின்றித் திரும்புவது, மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மீண்டும் கட்டியெழுப்புவது போன்ற விடயங்களுக்கு கண்ணிவெடிகளை அகற்றுவது மிகவும் முக்கியம். அரசாங்கத்தின் அபிவிருத்தி தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்வி, சுகாதாரம், தகவல் முகாமைத்துவம், சமூக நலன்பேணல் மற்றும் சுற்றாடல் நிலைத்தன்மைக்காக இந்த செயன்முறையை விரைவுபடுத்துவது மிகவும் முக்கியம். இதற்கு முன்னர் அபிவிருத்தி நடவடிக்கைகள் மனித நடவடிக்கைகளில் இருந்து விலக்கப்பட்டிருந்த இந்தப் பகுதிகள் செழிப்படையவும், எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்கவும், விவசாயத்தையும் சுதேச பொருளாதாரத்தையும் மேம்படுத்தவும், சூழல் நிலைத்தன்மையை உருவாக்கவும் கண்ணிவெடிகள் அகற்றல் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. வடக்கு மற்றும் கிழக்கில் சுமார் 23 சதுர கிலோமீட்டர் நிலம் இன்னும் கண்ணிவெடிகள் காரணமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, கண்ணிவெடிகள் உள்ள பகுதிகளை பொதுமக்கள் விரைவில் பயன்படுத்தக்கூடியதாக மாற்ற வேண்டும். 2028 ஜூன் 1ஆந் திகதிக்கு முன்னர் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ஒப்பந்தத்தின் பிரிவு 5 இன் கீழ் உள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. ஒவ்வொரு கண்ணிவெடியையும் அகற்றுவது மக்களின் நன்மைக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமானது என்றும், எனவே, சர்வதேச சமூகத்திடமிருந்து தொடர்ந்து ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இந்த நிகழ்வில், தேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டு மையத்தின் (NMAC) இணையத்தளம் திறந்துவைக்கப்படல் மற்றும் வட மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சித்திரக் கண்காட்சியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, மேலும் நன்கொடை அளித்த நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அவர்களின் ஆதரவிற்காக நினைவுப் பலகைகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வெளிநாட்டு பிரதிநிதிகள், நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் அமைச்சின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/213550
  13. க.சர்வேஸ்வரன் ஆசியாவின் சுவிஸ்சர்லாந்து என அழைக்கப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கு சுற்றுலாப் பிரதேசமான பகங்காமின் கடந்த செவ்வாய்கிழமை லஷ்கர் இ தொய்பா என்ற காஷ்மீர் தீவிரவாத அமைப்பு 26 சுற்றுலாக்காரர்களை சுட்டுக்கொண்டுள்ளது. இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் விடயத்தில் இந்தியா சுதந்திரமடைந்த நாளிலிருந்து (75 ஆண்டுகளாக) மோதல் நிலவி வருவது உலகறிந்த விடயம். காஷ்மீர் விடுதலை போரும் பல ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு பாகிஸ்தான் 75 ஆண்டுகாலமாக பயிற்சிகள் வழங்கி இந்தியாவிற்குள் அனுப்பி பல்வேறு காலகட்டங்களில் பெரியதும் சிறியதுமான தாக்குதல்களை நடத்தி வருவதும் இந்தியா பதில் நடவடிக்கைகள் எடுத்து வருவதும் அனைவரும் அறிந்ததே. மேற்கண்ட பாகிஸ்தான் பயிற்சியளித்து அனுப்பிய லக்ஷர் இ தொய்பா இயக்கத்தின் சுற்றுலா மக்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கொடுத்துள்ள பதிலடி யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானூடாக பாயும் சிந்து நதியை இந்தியா தடுக்காதிருப்பதற்கான ஒப்பந்தம் 1960களில் ஐ.நா. மேற்பார்வையின் கீழ் கையெழுத்தானது. சிந்து நதிநீர் பாகிஸ்தானை பொறுத்தவரை பெருமளவு மக்களுக்கான குடிநீராகவும் விவசாயத்திற்கான முதுகெலும்பாகவும் இருந்து வருகின்றது. இந்நிலையில் நடைபெற்ற இத்தாக்குதலுக்கு பதிலடியாக சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. மேலும் 26 நாடுகளின் இராஜதந்திரிகளை அழைத்து தமது இந்த முடிவுக்கு பாகிஸ்தானே முழுப்பொறுப்பும் என்ற விளக்கத்தை வெளியுறவுத்துறை விளக்கப்படுத்தியுள்ளது. முக்கிய நாடுகளின் இராஜதந்திரிகளுடனான சந்திப்புகளை வெளியுறவுத்துறை மேற்கொண்டு வருகின்றது. இவ்வறிவிப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் பங்குச்சந்தை வேகமாக சரிந்து வருகிறது. சிந்துநதி நீர்த் தடை என்பது பாகிஸ்தானின் உள்நாட்டு உற்பத்தியில் மட்டும் 30 வீதம் வரையில் வீழ்ச்சி காணும் என பாகிஸ்தானிய பொருளியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரியளவிலான தண்ணீர்ப் பஞ்சம் உட்பட சங்கிலித் தொடராக பாரிய பொருளாதாரத் தாக்கத்தை பாகிஸ்தான் சந்திக்க இருப்பதாக சர்வதேச பொருளியல் அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே இலங்கையைப் போன்றே கடுமையான பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதிலடி பாரிய தாக்கத்தை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற வகையில் பெருமளவு இந்திய ராஜதந்திரிகளை பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இதை இந்தியாவும் இரத்தத்திற்கு இரத்தம் என்ற வகையில் கையாளும் என எதிர்பார்க்கலாம். முற்றிவரும் இந்த முறுகல் நிலை சர்வதேச அளவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மேல் செல்லாமல் அதிகபட்ச பொறுமையை இரு தரப்பும் கடைப்பிடிக்குமாறு ஐ.நா.சபை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிந்துநதி நீர் விடயம் தமக்கு அறிவிக்கப்படவில்லையெ உலக வங்கி கூறியுள்ளது. இரண்டு நாடுகளும் அணுவாயுதத்தை தம்வசம் கொண்ட நாடுகள் என்ற வகையில் இம்மோதல் வெடித்தால் இப்பிராந்தியத்திற்கு ஏற்படக்கூடிய பாரிய அபாயங்களையும் அலட்சியம் செய்துவிட முடியாது. மொத்தத்தில் இந்தியாவின் நகர்வுகள் பாகிஸ்தானின் அடிமடியில் கைவைத்துள்ளமையும் பாகிஸ்தான் அதனை கையாள வல்லமையுள்ளதா? என்ற கேள்வியும் எழுகின்றது. ஐ.நா. சபையின் மேற்பார்வையின் கீழ் கையெழுத்திடப்பட்ட சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக மீறித் தற்காலிகமாக இந்தியா நிறுத்தி வைத்திருப்பதானது தன்னைச் சூழவுள்ள நாடுகள் தனது நலன்களை மதிக்காமல் செயற்பட்டால் என்னாகும் என்ற எச்சரிக்கையை விடுப்பதாகவும் நோக்க முடியும். பங்களாதேஷில் ஷேக் கஷினாவை வெளியேற்றிய சக்திகளும் இந்திய எதிர்நிலைப்பாட்டை கொண்டுள்ளன. இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்கள் ஒன்றில் சீன சார்பாகவோ அல்லது அமெரிக்க சார்பாகவோ தான் உண்மையாக செயற்பட்டார்களே ஒழிய இந்தியாவின் நண்பர்களாக செயற்படவில்லை. வேறுவழியின்றி இந்தியாவிடம் அடங்கிப் போக வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இருந்தனர். இன்று தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) என்ற பெயரில் ஆட்சி நடத்தும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இந்திய எதிர்ப்பு வாதத்தை தமது அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகக் கொன்றது. இந்திய விஸ்தரிப்பு வாதம் என்பதே அதன் சாராம்சமாகும். இந்திப் பிராந்தியத்தில் (தெற்காசியா) இந்தியா நிலப்பரப்பிலும் சரி மக்கள் தொகையிலும் சரி பொருளாதார வளத்திலும் சரி தொழில்நுட்பத்திலும் சரி பிராந்திய நாடுகளின் ஒட்டுமொத்தப் பலத்திற்கும் மேலானது. அதேவேளை இப்பிராந்திய நாடுகள் அனைத்தும் மொழியாலோ மதத்தாலோ ஏனைய கலாசாரப் பின்னணிகளாலோ இந்தியாவுடன் பின்னிப்பிணைந்தவை எனவே இவற்றைப் பயன்படுத்தி இந்தியா படிப்படியாக இலங்கை உட்பட இப்பிராந்திய நாடுகளை ஆக்கிரமிக்கும். எனவே இந்தியா இலங்கையின் இறைமைக்கு ஆபத்தானது. தமிழர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் இலங்கை முகவர்கள். எனவே தமிழர்களும் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தானவர்கள். இது ஜே.வி.பி.யின் அடிப்படைக் கொள்கை. இதனால்தான் ஜே.வி.பி. நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக இந்திய எதிர்ப்பு ஓலங்களை ஆரம்பத்திலிருந்தே எழுப்பி வந்தது. அதேவேளை ஜே.வி.பி. ஓர் வலுவான சீன சார்ப்பு கட்சி என்பதும் இன்று அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு பின்பலமாக சீனாவே செயற்பட்டது என்பதும் அறிந்ததே. அண்மையில் இந்தியப் பிரதமர் மோடி விஜயத்தின் போது சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தானது. மோடிக்கு அதியுயர் தேச மித்திர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இலங்கை மண்ணை இந்திய நலனுக்கெதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதி அனுரகுமார பேசியிருந்தார். ஆட்சியில் இருப்பதனால் இந்தியாவை மகிழ்விப்பதற்கும் தமது ஆட்சிக்கு பங்கம் வந்துவிடாமல் பார்க்கவும் விருதுகள் அறிக்கைகள் பயன்படலாம். ஆனால் இந்தியாவின் தேவை அதன் பல்வேறு திட்ட முன்மொழிவுகளை செயல்வடிவம் பெற வைப்பதே. இலங்கை முன்னைய ஆட்சியாளர்களும் சரி தற்போதை ஆட்சியாளர்களும் சரி இந்திய திட்ட முன்மொழிவுகளை இழுத்தடிப்பது தொடர்கிறது. அதேவேளை இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரி வருகிறது. இது 13வது திருத்தத்திற்கு மேலாக வடக்கு – கிழக்கு நிரந்தர இணைப்பையும் உள்ளடக்கிய கோரிக்கையாகும். இந்த விடயத்திலும் முன்னைய ஆட்சியாளர் காலம் கடத்தினர். தற்போதைய ஆட்சியாளர் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக தென்னிலங்கை முழுவதும் வன்முறைப் போராட்டம் நடத்தி 60 ஆயிரம் பேர் கொல்லப்பட காரணமானவர்கள். 13வது திருத்தத்தையே நடைமுறைப்படுத்த விருப்பமற்றவர்கள் இணைந்திருந்த வடக்கு – கிழக்கை பிரித்தவர்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவார்கள் என்றோ அரசியல் யாப்பில் முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்பதன் மூலம் பொலிஸ், காணி அதிகாரத்தையும் வழங்குங்கள் என்ற இந்தியாவின் கோரிக்கையும் ஜே.வி.பி. ஆட்சியாளருக்கு வெறுப்பேற்றும் விடயமாகும். எனவே இந்திய நலன்களுக்கு இலங்கை இடையூறும் நிலை ஏதேனும் வகையில் ஏற்பட்டால் மட்டுமல்ல இந்தியாவின் திட்ட முன்மொழிவுகளை இலங்கை பின்னடிக்கும் அல்லது நிராகரிக்கும் பட்சத்தில் இந்தியா இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கு காட்டிய சமிக்ஞைகள் போலவோ சற்று மேலாகவோ காட்டக்கூடும். உதாரணமாக கச்சதீவு விடயம் இருதரப்பு ஒப்பந்தமே. இந்தியா கச்சதீவில் தனது கடற்படையை நிலைகொள்ள வைப்பது கடினமானதல்ல. அதன்மூலம் அது இலங்கையை கையாளவும் முடியும். உள்நாட்டு அரசியலில் பலம்பெறவும் முடியும். எனவே சிந்துநதி நீர் ஒப்பந்த நிறுத்தி வைப்பானது கச்சதீவு ஒப்பந்தத்திற்கும் ஏற்படலாம். அதுமாத்திரமன்றி இனமோதல் தீர்வின் மீதும் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம். பிராந்திய சர்வதேச அரசியல் காலநிலைகள் எப்போது எவ்வாறு மாறும் என்று கூறமுடியாது. ஆனால் அது எப்போது எவ்வாறு மாறினாலும் இனமோதல் தீர்விற்கு சார்பாக அம்மாற்றங்களை கையாள தமிழ்த் தலைமைகள் தயாராக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இத்தகைய உருப்படியான அரசியல் தூரப்பார்வையுடனான வெளிப்பாடான கலந்துரையாடல்களோ கொள்கைத் திட்டங்களோ அன்றி துரோகிகள் தியாகிகள் பட்டங்கள் வழங்கும் நிறுவனங்களாகவும் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் குறுகிய கூட்டத்திலான சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களையுமே சில கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. யுத்த காலங்களில் எமது விடுதலை அல்லது அதிகாரப்பகிர்வு நோக்கிய பல சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப்படவில்லை. இனிமேலும் அவ்வாறு இருப்பது எம்மினத்தின் ஒட்டுமொத்த அழி;விற்கே இட்டுச்செல்லும். ஒருவர் மீது ஒருவர் பழிசொல்லவும் இழிவான பிரச்சாரங்கள் மேற்கொள்ளவும் எவருக்கும் அருகதையில்லை. கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் அரசியலை விடுத்து மக்கள் நலன்கருதி ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான களம் விரைந்து உருவாக்கப்பட வேண்டும். தீர்வு தொடர்பில் யாரும் முன்முனைப்பு எடுப்பார்கள். நாம் எதிர்வினையாற்றுவோம் என்ற வழக்கமான பல்லவியை விடுத்து நாம் ஒன்றுபட்டு சாத்தியமான மாற்றுத்திட்டங்களை வகுத்து இலங்கை அரசுடனும் சரி சர்வதேச சக்திகளுடனும் சரி இராஜதந்திர ரீதியான நகர்வுகளை மேற்கொள்ள எம்மைத் தயார் செய்ய வேண்டும். https://thinakkural.lk/article/317332
  14. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,998 முறைப்பாடுகள் பதிவு! 02 MAY, 2025 | 04:10 PM 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 01 ஆம் திகதி) 3,998 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 26 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3,722 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 250 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/213512
  15. 02 MAY, 2025 | 05:10 PM தமிழ் அரசுக் கட்சி தவறான கொள்கையைக் கைவிட்டு அந்தக் கட்சியை நிறுவிய தந்தை செல்வநாயகத்தின் கொள்கையின்படி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் நாம் நிச்சயமாக அவர்களுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இணைந்து பயணிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அல்வாய் மாலுசந்தி மைக்கேல் விளையாட்டுக்கழக மைதானத்தில் தமிழ்த் தேசிய பேரவை வியாழக்கிழமை (01) இரவு நடத்திய மே தினக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார். இக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த உள்ளூராட்சி சபைகள் தேர்தலில் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக - ஆணித்தரமாக தங்கள் வாக்குகளை செலுத்தாது விட்டால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டார்கள் என்று சந்தேகிக்கப்படுவது உறுதியானதாகி விடும். ஒரு முறை மாறிப் போடலாம். அதை நியாயப்படுத்தலாம். அடுத்ததடுத்த தேர்தல்களிலும் இவ்வாறு நடந்தால் அதனை நியாயப்படுத்த முடியாது. அந்த வகையில் இது சாதாரண உள்ளூராட்சி தேர்தல் அல்ல. முகங்களுக்கு வாக்களிக்கும் இந்தத் தேர்தல்தான் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தேர்தலாக மாறியுள்ளது. இது கஷ்ட காலமாகும். எனவே, எமது மக்கள் ஆழமாக சிந்தித்து எமது வாக்குகளை செலுத்த வேண்டும். தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரையில் இன்று இரு முக்கியமான விடயங்கள் உள்ளன. ஒன்று இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறல் மற்றது இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணுதலாகும். இந்த விடயங்களில், ஜே. வி. பி. என்ற தேசிய மக்கள் சக்திக்கும் இதற்கு முன்னர் ஆட்சி செய்த இனவாத கட்சிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. நாம் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிரானவர்கள் அல்லர். 2010இல் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியே வந்தபோது தலைமைத்துவம்தான் பிரச்னை என்று கூறினோம். தலைமைத்துவத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்பதால்தான் அப்போது, திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் மட்டும் போட்டியிட்டோம். இன்றும் நாம் சொல்கிறோம். தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவம்தான் இன்றும் பிரச்னை. தலைமைத்துவம் தவறாக நடப்பதால் ஒட்டுமொத்த கட்சியும் தவறான பாதையில் கொண்டு செல்லும் நிலைமைதான் இன்றுள்ளது. அந்தக் கட்சிக்குள் இருக்கும் நேர்மையானவர்கள் சரியான முடிவை எடுக்க இந்தத் தேர்தல் ஒரு சந்தர்ப்பமாக இருக்க வேண்டுமானால் கட்சிக்குள் இருக்கும் அவர்கள் விவாதத்தை உருவாக்க வேண்டுமானால் எந்தளவுக்கு தேசிய மக்கள் சக்தியை ஓரங்கட்ட வேண்டுமோ அதேயளவுக்கு தமிழ் அரசுக் கட்சியையும் ஓரங்கட்டவேண்டும். அப்படி ஒரு தெளிவான பாடம் கற்பித்தால் மட்டும்தான் தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக்கூடிய நேர்மையான உறுப்பினர்கள் மேலோங்க முடியும். தவறான தலைவர்களை வெளியேற்ற முடியும். இது தமிழ் அரசுக் கட்சியை தோற்கடித்து - முற்றுமுழுதாக ஓரங்கட்டும் செயல்பாடு அல்ல. அப்படி செய்ய முடியாது - செய்யவும் கூடாது. தமிழ் அரசுக் கட்சி தவறான கொள்கையை கைவிட்டு அந்தக் கட்சியை நிறுவிய தந்தை செல்வநாயகத்தின் கொள்கையின்படி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் அந்தக் கட்சியின் தவறான தலைமைத்துவத்தை மாற்றி திருத்தி சரியான பாதைக்கு அவர்கள் வருவதாக இருந்தால் நாம் நிச்சயமாக அவர்களுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இணைந்து பயணிப்போம் என்றார். https://www.virakesari.lk/article/213520
  16. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஒரு புதிய வைரஸ் பரவி வருவதால், மற்றொரு சாத்தியமான தொற்றுநோய்க்கு தயாராகுமாறு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மனிதகுள வரலாற்றில் பல முக்கிய தொற்று நோய்கள் பரவின. இவற்றில் SARS-CoV-2 என்று அழைக்கப்படும் வைரஸ், COVID-19 எனப்படும் நோயை உருவாக்கி, உலகளாவிய நெருக்கடி ஏற்படுத்தியது. இந்த நோய் 5 ஆண்டுகளுக்கு மேல் உலகளாவிய அளவில் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், தற்போதைய நிலைமை, வரவிருக்கும் நாட்களில் அமெரிக்கா மற்றொரு COVID-19 போன்ற தொற்றுநோயை எதிர்கொள்ளக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க பால் பண்ணைகளில் H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கைகளை எழுப்பி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஊடகங்களிடம் பேசிய அதிகாரிகள், மார்ச் 2024 முதல் நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட பால் பண்ணைகளை இந்த நோய் பாதித்துள்ளதாக உறுதிப்படுத்தினர். இதன் விளைவாக 70க்கும் மேற்பட்ட மனித நோய்த்தொற்றுகள் மற்றும் குறைந்தது ஒரு உறுதிப்படுத்தப்பட்ட மரணம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, லூசியானாவில் முதல் மனித மரணத்தை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) உறுதிப்படுத்தியிருந்தன, மேலும் பல மாநிலங்களிலும் அடுத்தடுத்த வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலூட்டிகளில் வைரஸ் தொடர்ந்து இருப்பது, மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவ உதவும் பிறழ்வுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று உலகளாவிய வைரஸ் நெட்வொர்க் (GVN) எச்சரிக்கிறது. விலங்குகள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் இருவருக்கும் மேம்பட்ட கண்காணிப்பு, தரப்படுத்தப்பட்ட சோதனை மற்றும் தடுப்பூசி உத்திகளின் அவசரத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர். தொற்றுநோய் பரவிய போதிலும், பொது மக்களுக்கு ஆபத்து குறைவாகவே இருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூறுகின்றன. இருப்பினும், குறிப்பாக பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். CDC இன் படி, H5 பறவைக் காய்ச்சல் உலகளவில் பறவைகளில் பரவலாக உள்ளது மற்றும் கோழி மற்றும் அமெரிக்க கறவை மாடுகளில் வெடிப்புகளை ஏற்படுத்துகிறது, மேலும் அமெரிக்க பால் மற்றும் கோழி பண்ணை தொழிலாளர்களில் பலருக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளது. தற்போதைய பொது சுகாதார ஆபத்து குறைவாக இருந்தாலும், CDC நிலைமையை கவனமாகக் கண்காணித்து வருகிறது, மேலும் விலங்குகளுடன் தொடர்பு கொண்டவர்களைக் கண்காணிக்க மாநிலங்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களில் H5 பறவைக் காய்ச்சல் செயல்பாட்டைக் கண்காணிக்க CDC அதன் காய்ச்சல் கண்காணிப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/317486
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஹஃப்சா கலீல் பதவி, பிபிசி நியூஸ் 2 மே 2025, 05:19 GMT ஜப்பானின் மிகவும் பரபரப்பான புல்லட் ரயில் பாதைகளில் ஒன்றின் மின் கம்பியில் பாம்பு சிக்கிக் கொண்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் புல்லட் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. டோக்கியோ மற்றும் ஒசாகா இடையே இயங்கும் டோகைடோ ஷின்கான்சென் ரயில் சேவை, புதன்கிழமையன்று உள்ளூர் நேரப்படி மாலை 5:45 மணிக்கு நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும், மாலை 7 மணிக்கு புல்லட் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் இப்போது கோல்டன் வீக் எனப்படும் பரபரப்பான விடுமுறைக் காலம். இந்த ஒரு வாரத்தில் நான்கு தேசிய விடுமுறைகள் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் ரயில்களும், விமானங்களும் நிரம்பி வழியும், விடுமுறை கொண்டாட்டங்கள் உச்சத்தை எட்டும். ஒசாகாவில் இந்த ஆண்டு உலகளாவிய கண்காட்சி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அக்டோபரில் இந்த உலகக் கண்காட்சி முடியும் வரை லட்சக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பார்வையாளர்கள் நகரத்திற்கு வந்து செல்வார்கள். ஜப்பானிய செய்தி நிறுவனமான கியோடோ நியூஸ் வெளியிட்ட செய்திப்படி, கிஃபு-ஹாஷிமா மற்றும் மைபாரா ரயில் நிலையங்களுக்கு இடையில் பாம்பு ஒன்று மின்கம்பியில் சிக்கிக்கொண்டது. இதனால் டோக்கியோ செல்லும் ரயில்கள், ஷின்-ஒசாகா மற்றும் நகோயா இடையே நின்றன. அதேபோல, ஒசாகா செல்லும் புல்லட் ரயில்கள் ஷின்-ஒசாகா மற்றும் டோக்கியோ இடையே நிறுத்தப்பட்டன. பாம்பு சிக்கியதால், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மின்சாரத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, ரயில் நிலையம் ஒன்றில் பயணிகள் ஊழியர்களைச் சுற்றி வளைத்துவிட்டதாகவும், டிக்கெட் இயந்திரங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அடிக்கடி புல்லட் ரயிலை பயன்படுத்தும் பயணி ஒருவர், இதுவரை இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதே இல்லை என்றும், மின்சாரம் துண்டிக்கப்பட்டு புல்லட் ரயில் நின்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் கூறினார். சாதிவாதி கணக்கெடுப்பு நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் - பாஜகவின் வியூகம் இதுவா?1 மே 2025 அமெரிக்கா - யுக்ரேன் ஒப்பந்தம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மோதலுக்கு பின் புதிய திருப்பம்7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "நான் மாதத்தில் பல முறை புல்லட் ரயிலை பயன்படுத்துகிறேன். ஆனால் மின்தடை காரணமாக ரயில் நிறுத்தப்பட்ட சூழலை நான் சந்தித்ததே இல்லை. இன்றுதான் இப்படிப்பட்ட அனுபவத்தை முதல் முறையாக அனுபவிக்கிறேன்" என்று 46 வயதான சடோஷி தாகவா, கியோடோ செய்தி நிறுவனத்திடம் கூறினார். புல்லட் ரயில் சேவைகளில் ஏற்பட்ட சிக்கல்களால் ''சோர்வடைந்து விட்டதாக" 26 வயதான கசுடோஷி டாச்சி என்ற பயணி கூறினார். "புல்லட் ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்," என்று அவர் கூறுகிறார். புல்லட் ரயில் சேவை பாம்பால் நிறுத்தப்பட்டது முதல் முறை அல்ல. ஏப்ரல் 2024இல், நகோயாவுக்கும் டோக்கியோவுக்கும் இடையிலான ரயிலில் இருந்த 16 அங்குல (40.6 செ.மீ) பாம்பை அதிகாரிகள் அகற்றிய நேரத்தில் ரயில் சேவையில் 17 நிமிட தாமதம் ஏற்பட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cz95zg50pyzo
  18. பரிபூரணம் அடைந்த நல்லை ஆதீன குருமுதல்வருக்கு அரசியல் தலைவர்கள், பொது மக்கள் அஞ்சலி Published By: DIGITAL DESK 3 02 MAY, 2025 | 04:38 PM பரிபூரணம் அடைந்த நல்லை ஆதீன சுவாமியின் புகழுடல் இன்று வெள்ளிக்கிழமை (02) காலை 6.15 அளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டு உள்ளது. அங்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிற்பகல் 4 மணி அளவில் பரிபூரணத்துக்குரிய கிரியைகள் ஆதீனத்தில் நடைபெற்று செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/213511
  19. ஜனாதிபதியின் வியட்நாம் விஜயம் 04 ஆம் திகதி ஆரம்பம் Published By: DIGITAL DESK 2 02 MAY, 2025 | 03:43 PM வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக, ஜனாதிபதி மே 03 ஆம் திகதி இரவு நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார். வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இடம்பெறும் ஜனாதிபதியின் இந்த வியட்நாம் அரச விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரச விஜயத்தின் போது ஜனாதிபதி, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், கம்யூனிஸ கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரையும் சந்திக்கவுள்ளார். மேலும், ஹோ சி மிங் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதன்போது சிறப்புரை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளார். இந்த விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவும், வர்த்தக சமூகத்தினரைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்லுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழு ஒன்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இந்த அரச விஜயத்தில் பங்கேற்க உள்ளனர். https://www.virakesari.lk/article/213504
  20. Published By: VISHNU 02 MAY, 2025 | 08:15 PM சமூக ஊடகத் தளமான டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தரவு பாதுகாப்பு ஆணையகமான அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் (DPC) 530 மில்லியன் யூரோக்கள் (சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதித்துள்ளது. வெளிப்படைத் தன்மை இல்லாததால் குறித்த அபராதத் தொகையை, டிக்டொக் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், 6 மாதங்களுக்குள் விதிகளுக்கு இணங்கவும் உத்தரவிட்டடுள்ளது. ஐரோப்பிய பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாக சீனாவிற்கு மாற்றியதாகவும், அவை சீன அதிகாரிகளின் அணுகலில் இருந்து பாதுகாக்கப்படவில்லை என உறுதிப்படுத்தத் தவறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவுக்கு சொந்தமான சமூக ஊடக செயலியான டிக்டொக் நிறுவனம், தங்கள் பயனர்களின் தரவுகள் எங்கு அனுப்பப்படுகிறது என்பது குறித்து வெளிப்படையாக இல்லையென ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமைக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR) விதிகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட மூன்றாவது பெரிய அபராதமாகும். கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்ட இந்த வழக்கில் மேன்முறையீடு செய்ய டிக்டொக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதேவேளை, பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்தியா மற்றும் அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/213552
  21. 02 MAY, 2025 | 04:32 PM ஓய்வூதியம் பெற்றவர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி இன்று வெள்ளிக்கிழமை (2) முற்பகல் 10.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 2020 - 2024 ஆண்டுக்கான ஓய்வூதியம் பெற்றோரின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வேண்டும் என இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். '2020 - 2024 ஓய்வூதிய ஒன்றியம்' குழுவினர் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில் 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்படவில்லை எனவும் இதேவேளை, 2025ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெறுவோருக்கு 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபா வரை சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் இதன் காரணமாக சம்பள முரண்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுட்டிக்காட்டினர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, அவர்கள் பேச்சுவார்த்தைக்காக பொலிஸாரால் செயலகத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரு மணித்தியாலத்தின் பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிரதிநிதிகள் ஆர்ப்பாட்ட இடத்துக்குச் சென்று கருத்து தெரிவித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது ஜனாதிபதி, இது தொடர்பாக அறிந்திருப்பதாகவும் பிரதி நிதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவிடம் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி பொறுப்பளித்திருப்பதாகவும் தேர்தல் முடிந்து இரண்டு வார காலத்தின் பின்னர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அங்கு தெரிவிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். https://www.virakesari.lk/article/213517
  22. பட மூலாதாரம்,BBC/ XIQING WANG படக்குறிப்பு,சீனா 2024இல் மட்டும் 34 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொம்மைகளை ஏற்றுமதி செய்திருந்தது, அதில் 10 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியானது கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் பதவி, சீனா செய்தியாளர், யிவூ நகரிலிருந்து 9 மணி நேரங்களுக்கு முன்னர் "அமெரிக்காவுக்கான விற்பனைகள் குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை," என்கிறார் ஹு டியான்கியாங். அவருடைய ஃபைட்டர் ஜெட் பொம்மை ஒன்று, எங்கள் தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது அவர் இதைத் தெரிவித்தார். பொம்மை விமானங்கள், சிறிய ட்ரோன்கள் என, வாங்குபவர்களை ஈர்க்கும் வகையில், அவரைச் சுற்றியுள்ள பொம்மைகளின் இரைச்சலுக்கு நடுவே அவர் பேசுவதைக் கேட்பது கடினமானது. உலகிலேயே மிகப்பெரிய மொத்த விற்பனை சந்தைகளுள் ஒன்றான, சீனாவின் யிவூ எனும் சிறுநகரில் அமைந்துள்ள சந்தையில் ஹு டியான்கியாங்கின் ஸோங்ஸியாங் டாய்ஸ் எனும் கடை உள்ளது. இந்தப் பகுதியில் 75,000க்கும் அதிகமான கடைகள் உள்ளன. மின்னும் கிறிஸ்துமஸ் விளக்குகள், குடைகள் முதல் மசாஜ் உபகரணங்கள் வரை பலவற்றை வாங்க மக்கள் இங்கே வருகின்றனர். இந்தச் சந்தையின் ஒரு பிரிவைச் சுற்றிப் பார்ப்பதற்கே ஒருநாளின் பாதி நேரம் செலவாகிவிடும். ஏனெனில் ஒவ்வொரு பிரிவிலும் பரந்த அளவிலான கடைகளில் ஏராளமான பொருட்கள் காட்சிக்கு உள்ளன. ஸேஜியாங் எனும் மாகாணத்தில், சீனாவின் கிழக்குக் கடற்கரையில் யிவூ நகரம் உள்ளது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக விளங்கும் இங்கு 30க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் உள்ளன. கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு சீனாவில் இருந்து விற்பனையானதில் 17% விற்பனை இங்கிருந்துதான் நடைபெற்றது. அதனால்தான், யிவூ நகரமும் இந்தப் பிராந்தியமும் அமெரிக்கா- சீனா வர்த்தகப் போரில் முன்னணியில் உள்ளன. வரிசையாக வைக்கப்பட்டுள்ள கவர்ச்சிகரமான பொம்மை விமானங்கள், ஒலியெழுப்பும் நாய்கள், பஞ்சு பொதிக்கப்பட்ட பொம்மைகள், பார்பிக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வலம்வரும் ஸ்பைடர்மேன் பொம்மைகளுடன் ஹு டியான்கியாங்கும் அமர்ந்திருக்கிறார். இவற்றில், 2024ஆம் ஆண்டில் 34 பில்லியன் டாலர் மதிப்பிலான பொம்மைகள் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. இதில், 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பொம்மைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின. ஆனால், தற்போது அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் இவை 245% வரை இறக்குமதி வரியை எதிர்கொள்கின்றன. உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதாக சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். சீனாவின் பாகிஸ்தான் பாசத்துக்கு காரணம் என்ன? சீனாவில் அழகுக்காக 100க்கும் மேலான அறுவை சிகிச்சைகளை செய்துகொண்ட இளம்பெண் அமெரிக்கா - சீனா வரிக்குவரி யுத்தத்தால் இந்தியாவுக்கு புதிய சவால் கோடிக்கணக்கான ஐபோன்களை தயாரித்து தரும் சீனாவால் தற்போது ஆப்பிளுக்கு என்ன சிக்கல்? ஆனால், 2018ஆம் ஆண்டில் சீனாவுக்கு எதிரான டிரம்பின் முதல் வர்த்தகப் போரில் இருந்ததைவிட இப்போது இங்கு நிலைமை மாறியுள்ளது. அந்த வர்த்தகப் போர் யிவூ நகருக்குப் படிப்பினையை கொடுத்துள்ளது. "மற்ற நாடுகளிடமும் பணம் இருக்கிறது" என்று அந்தப் படிப்பினையைச் சுருக்கமாகக் கூறுகிறார் ஹு. மற்றுமொரு கொந்தளிப்பான டிரம்ப் நிர்வாகத்துக்குத் தயாராகியுள்ள உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாட்டில், இந்த வர்த்தகப் போருக்கு நிலையான எதிர்ப்பு உள்ளது. அமெரிக்கா, உலக நாடுகளை வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அச்சுறுத்துவதாகத் தொடர்ந்து கூறி வரும் சீன அரசு, வர்த்தகப் போரில் இருந்து இன்னும் பின்வாங்கவில்லை. டிரம்பின் நடவடிக்கையால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மைக்கு மாற்றாக, சீனாவின் புதுமையான, ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு இணையத்தில் எழுந்துள்ள பாராட்டுகள் அதிகரித்து வருகின்றன. சீனாவில் அதிகளவில் கட்டுப்பாடுகள் இருக்கக்கூடிய சமூக ஊடகங்களில், சீனா தொடர்ந்து போராடும் என்ற நாட்டின் தலைமையின் உறுதிமொழியைப் பிரதிபலிக்கும் பதிவுகள் அதிகம் உள்ளன. டிரம்புடைய அமெரிக்காவை தாண்டி தங்களுக்கு மாற்று வழிகள் இருப்பதாக தொழிற்சாலைகள், சந்தைகள், தொழிலதிபர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். தனது வியாபாரத்தில் சுமார் 20%-30% அமெரிக்காவில் இருந்து வந்ததாக ஹு கூறுகிறார். ஆனால், இப்போது அப்படியல்ல. சாதிவாதி கணக்கெடுப்பு நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் - பாஜகவின் வியூகம் இதுவா?1 மே 2025 ரெட்ரோ விமர்சனம்: சூர்யாவின் கம்பேக் படமாக இருக்கிறதா?1 மே 2025 பட மூலாதாரம்,BBC/ XIQING WANG படக்குறிப்பு,சீனா 2024இல் மட்டும் 34 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொம்மைகளை ஏற்றுமதி செய்திருந்தது "அந்த 20-30% குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை," என்கிறார் ஹு. "இப்போது நாங்கள் பெரும்பாலும் தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்குக்கு விற்பனை செய்கிறோம். எங்களுக்கு வருமானத்தில் பற்றாக்குறை இல்லை, நாங்கள் பணக்காரர்களாக உள்ளோம்." டிரம்ப் குறித்துக் கேட்டபோது ஹுவின் சகாவான சென் லேங் பதில் கூறுகிறார். "அவர் சர்வதேச நகைச்சுவைகளைக் கூறுகிறார். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நகைச்சுவையைக் கூறுகிறார். வரியை உயர்த்துவதும் அவருக்கு ஒரு நகைச்சுவையைப் போன்றதுதான்." அந்தக் கடைக்கு அருகில், ஒலிப்பானுடன் கூடிய கார்களாக மாறக்கூடிய 100க்கும் அதிகமான ரோபோட்டுகளை வாங்குவதற்கு, இந்தச் சந்தைக்கு தினமும் வரக்கூடிய ஆயிரக்கணக்கானவர்களுள் ஒருவர் பேரம் பேசிக் கொண்டிருந்தார். கால்குலேட்டரில் பல எண்களைத் தட்டிப் பார்த்த பிறகு, இறுதி விலை சாக்பீஸ் கொண்டு தரையில் எழுதப்பட்டது. தான் துபையில் இருந்து வந்ததாக அவர் கூறினார். ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா முழுவதிலும் இருந்து அங்கு வந்திருந்த பலரையும் பிபிசி கண்டது. அமெரிக்கா - யுக்ரேன் ஒப்பந்தம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மோதலுக்கு பின் புதிய திருப்பம்3 மணி நேரங்களுக்கு முன்னர் 'முஸ்லிம்னா கல்மா படி' - பஹல்காமில் கண்முன்னே கணவனை இழந்த பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்1 மே 2025 லின் ஸியுபெங் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் இங்கு பொம்மை விற்பனை அமெரிக்க வாங்குநர்களைச் சார்ந்திருப்பதில் இருந்து விலகி வந்துவிட்டதைத் தாம் கவனித்திருப்பதாகக் கூறுகிறார். "எங்களுக்குப் பக்கத்தில் உள்ள கடை ஒன்றுக்கு சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்க வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து ஆர்டர் வந்தது. அதன் மதிப்பு, 10 லட்சம் யுவானைவிட அதிகம். ஆனால், இறக்குமதி வரி காரணமாக, அந்த ஆர்டரை ரத்து செய்ய அந்த உரிமையாளர் முடிவெடுத்தார்," என்று எங்களுக்குப் பருக தேநீர் கொடுத்துக் கொண்டே கூறினார். "அவர்களுக்கு (அமெரிக்கா) சீனா நிச்சயமாக தேவை," எனக் கூறும் அவர் அமெரிக்க பொம்மைகள் சீனாவில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாகக் கூறினார். "சமீப நாட்களாக அமெரிக்காவில் விற்பனையாளர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நினைக்கிறேன்." பட மூலாதாரம்,BBC/ XIQING WANG படக்குறிப்பு,அமெரிக்காவை தாண்டி மற்ற உலக நாடுகளில் இருந்தும் பொம்மை விற்பனைக்கு ஆர்வம் அதிகரித்துள்ளதாக பிபிசியிடம் பேசிய விற்பனையாளர்கள் தெரிவித்தனர் லின் சொல்வது சரிதான். இந்த வரி விதிப்பு தங்களுடைய தொழில்களுக்கு "பேரழிவை ஏற்படுத்துவதாக," அமெரிக்க பொம்மைக் கடை உரிமையாளர்கள் பலரும் வெள்ளை மாளிகைக்குக் கடிதம் எழுதினர். "இந்த வரிவிதிப்பு காரணமாக அமெரிக்கா முழுவதும் உள்ள சிறு தொழில்கள் பாதிப்புகளைச் சந்தித்து வருவதாக," லாஸ் ஏஞ்சலீஸில் பொம்மை நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ஜொனாதன் கேத்தீ பிபிசியிடம் பேசியபோது கூறினார். அர்ச்சகர் பயிற்சி முடித்தும் கருவறைக்குள் செல்ல முடியாமல் தவிக்கும் அர்ச்சகர்கள்2 மணி நேரங்களுக்கு முன்னர் டூரிஸ்ட் ஃபேமிலி சிரிப்பு வெடியா? சோக கதையா? - படம் எப்படி உள்ளது?1 மே 2025 கடந்த 2009ஆம் ஆண்டில் லாயல் சப்ஜெக்ட்ஸ் எனப்படும் தனது நிறுவனத்தில் தன்னுடைய கடைசி 500 டாலர்களை முதலீடு செய்திருந்தார் அவர். வெஸ்ட் ஹாலிவுட்டில் உள்ள இரண்டு அறைகளைக் கொண்ட பங்களாவில் இருந்து தனது நிறுவனத்தை நடத்திவந்தார். தற்போது அது பல லட்சக்கணக்கான டாலர் வணிகமாக உயர்ந்துள்ளதாகவும் ஆனால் வரிவிதிப்பு தமது திட்டங்களை அழித்துவிடும் என்றும் அவர் கூறினார். "ஒட்டுமொத்த பொம்மை தொழிலும் சரிவைச் சந்திக்கும். விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த சேதங்களைக் கவனித்து வருகிறோம். இன்னும் இது மோசமாகும்" என அவர் எச்சரிக்கிறார். விற்பனையாளர்களை மாற்றுவது கடினமான பணி என அவர் கூறுகிறார். "ஒரு பொம்மையை உற்பத்தி செய்ய களத்தில் நிறைய வளங்கள் தேவை. சீன வணிகர்கள் இந்தத் தொழிலை சுமார் 40 ஆண்டுகளாக நேர்த்தியாகக் கட்டமைத்துள்ளனர்." டிரம்பின் போர் டிரம்ப் ஆட்சி பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் சீனா முக்கியப் பங்கு வகித்தது, டிரம்ப் நிர்வாகமும் சீனாவும் நேரடியாக எதிர்கொண்டது. "ஒட்டுமொத்த உலகுக்கும் எதிராக அவர் (டிரம்ப்) போர் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது," என (சீனாவின்) மக்கள் விடுதலை ராணுவத்தின் முன்னாள் கர்னல் ஸோவ் போ கூறுகிறார். "நிச்சயமாக, சீனாவை கடுமையாகத் தாக்குவதற்கு அவர் முயல்கிறார்," என்றார் அவர். ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் நிறுவனத்தால் இயக்கப்படும் பனாமா கால்வாயை சீனா இயக்கி வருவதாகக் குற்றம்சாட்டும் டிரம்ப், அதை மீண்டும் கைப்பற்ற உறுதிபூண்டுள்ளார். சீனா ஏகபோகமாக அனுபவித்து வரும் அங்குள்ள அரிதான கனிமங்களை வெட்டி எடுப்பதற்கான வழிகளை அவர் யோசித்து வருகிறார். யுக்ரேனுடனான எந்தவொரு ஒப்பந்தம் ஏற்படுவதற்கும் முக்கியமான அம்சமாக பனாமா கால்வாய் உள்ளது. ஆர்டிக் பகுதியில் சீனாவின் நோக்கங்களை முறியடிக்கும் நோக்கிலேயே கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான எச்சரிக்கையையும் டிரம்ப் விடுத்ததாகக் கருதப்பட்டது. மேலும் மற்றொரு வர்த்தகப் போரையும் டிரம்ப் தொடங்கியுள்ளார். சீனாவின் வளர்ந்து வரும் விநியோகச் சங்கிலிக்கு முக்கியமாக உள்ள, அதன் அண்டை நாடுகளான வியட்நாம் மற்றும் காம்போடியாவை இந்த வர்த்தகப் போர் இலக்காக வைத்துள்ளது. ஆமதாபாத்: வங்கதேசத்தினர் வாழ்வதாகக் கூறி இரவோடு இரவாக இடிக்கப்பட்ட வீடுகள் - இடமின்றி தவிக்கும் மக்கள்1 மே 2025 இந்தியா vs பாகிஸ்தான்: ராணுவ பலம் யாருக்கு அதிகம்? அணு ஆயுதம் யாரிடம் எவ்வளவு உள்ளது?1 மே 2025 பட மூலாதாரம்,BBC/ XIQING WANG படக்குறிப்பு,"ஒட்டுமொத்த உலகத்துக்கும் எதிராக டிரம்ப் போர் தொடங்கியிருப்பதாக" ஸோவ் போ கூறுகிறார் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி பாதியாகக் குறைக்கப்படும் என டிரம்ப் கடந்த வாரம் கூறியிருந்தார். "சீனாவுடன் நியாயமான ஒப்பந்தத்தை" ஏற்படுத்துவது தொடர்பாகத் தனது நிர்வாகம் "முனைப்பாக" பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். ஆனால், இந்தக் கூற்றை சீனாவின் வர்த்தக துறை அமைச்சர் "அடிப்படையற்றது, உண்மைக்கு மாறானது" என மறுத்தார். சீன அரசு ஊடகமும் அதையே தெரிவித்திருந்தது. "அமெரிக்க வரலாற்றிலேயே டிரம்ப் மிக மோசமான ஓர் அதிபர்," என அரசுத் தொலைக்காட்சியில் கூறப்பட்டது. இதுதொடர்பாக சீன அதிபர் ஷி ஜின்பிங்கே நேரடியாகப் பேச வேண்டும் என அமெரிக்க அதிபர் காத்திருப்பதாகத் தெரிகிறது. "சீனாவில் ஏதேனும் நிச்சயமற்ற சூழல்களில் சிறிது காத்திருக்க வேண்டும் எனக் கூறுவோம்," என்கிறார் கோல் ஸோவ். "அதாவது, நிச்சயமற்ற சூழல்களில் அடுத்து என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. இத்தகைய பழிக்குப் பழி நடவடிக்கைகள் ஓரிரு மாதங்களுக்கு நீடிக்கலாம், மூன்று மாதங்களுக்கு மேல் அவை நீடிக்காது என நம்பலாம்." தொடர்ந்து நிலைமை அப்படியே இருக்காது எனக் கூறும் அவர் அப்படி தொடர்ந்தால் நன்றாக இருக்காது என்றும் கூறினார். சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடுவதால் ஆபத்தா? செய்யக் கூடாத 5 விஷயங்கள்1 மே 2025 இஸ்ரேலில் பரவிய காட்டுத்தீ - புகைமூட்டமாக காணப்படும் ஜெருசலேம்1 மே 2025 நிச்சயமாக அது சீனாவுக்கு நல்லதல்ல. டிரம்பின் வரிவிதிப்பு மட்டும் அந்நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் அல்ல, உள்நாட்டிலும் அந்நாடு பொருளாதார நெருக்கடி, நுகர்வு விகிதம் குறைதல் முதல் வீட்டு நெருக்கடி வரை பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தப் பிரச்னைகள் மக்களின் சேமிப்புகளையும் வருங்காலத்துக்கான நம்பிக்கையையும் சிதைத்துள்ளது. இந்த மோசமான காலகட்டத்தில் டிரம்பின் வரி விதிப்பும் சீன தொழில்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. கோல்ட்மேன் சச்ஸ் எனும் முதலீட்டு வங்கி நிறுவனம் இந்த ஆண்டு சீனாவின் பொருளாதாரம் 4.5% எனும் அளவில் உயரும் என்று கணித்துள்ளது, இது அரசின் இலக்கான 5%ஐ விடக் குறைவு. ஏப்ரல் மாத மத்தியில், முக்கியமான வர்த்தக மையமான குவாங்ஸோவில் இருந்து பிபிசி செய்தி சேகரித்தது. அந்த நேரத்தில், அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகள் தொழிற்சாலைகளின் தரைகளில் குவிந்து கிடந்த நிலையில், அமெரிக்கா-சீன வர்த்தகம் தடைபட்டு நின்றது. அது இந்த மாதப் பொருளாதார தரவுகளில் நிரூபணமானது. அவை தொழிற்சாலைகளில் வர்த்தக செயல்பாடுகள் பெருமளவில் மெதுவாகியுள்ளதைக் காட்டின. பட மூலாதாரம்,BBC/ XIQING WANG படக்குறிப்பு,பல பகுதிகளில் இருந்தும் வணிகர்கள் யிவூ நகருக்கு வாடிக்கையாளர்கள் வருகின்றனர், இது சீன ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவுக்கான பொருட்கள் ஏற்றுமதி மீண்டும் தொடங்கிவிட்டதா என விற்பனையாளர்களிடம் பிபிசி கேட்டபோது, அவர்களிடம் இருந்து வந்த பதில்கள் குழப்பத்தை ஏற்படுத்தின. விற்பனையாளர் ஒருவர் வால்மார்ட்டுக்கு சுமார் 5 லட்சம் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுவதற்குக் காத்திருப்பதாகக் கூறினார். மேலும் சிலரும் இதே நிச்சயமற்ற சூழலைப் பிரதிபலித்தனர். ஆனால், நாங்கள் பேசிய ஏற்றுமதியாளர்கள் இருவர், அமெரிக்க சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து சில பொருட்கள் இங்கு இறக்குமதியாவது மீண்டும் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்தார். சரக்கு கிரேன்கள், குடைகள் முதல் எல்லாவற்றையும் உள்ளடக்கிய இரு பொருளாதாரங்களுக்கு இடையிலான வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், வெவ்வேறு விதமான தொழில்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளே வரிவிதிப்பு தொடர்பாக எப்படி செயலாற்றுவது என்பதை முடிவு செய்கின்றனர். எந்தவித வணிகமாக இருந்தாலும் அமெரிக்க நுகர்வோர்கள் சீன பொருட்கள் இல்லாததையோ அல்லது அதிக விலையையோ அனுபவிப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ரஷ்ய சூனியக்காரியா, சீமாட்டியா? ஹுர்ரெம் சுல்தான் ஓட்டோமான் பேரரசின் சக்தி வாய்ந்த பெண்ணாக வளர்ந்த கதை1 மே 2025 பஹல்காம் தாக்குதல்: இந்திய எல்லையில் குவிக்கப்படும் படைகள் - என்ன நடக்கிறது? இன்றைய முக்கிய செய்திகள்1 மே 2025 அமெரிக்காவை தாண்டிய வாய்ப்புகள் செல்போன்கள், கணினிகள், செமிகண்டக்டர்கள், மரச்சாமான்கள், ஆடைகள், பொம்மைகள் ஆகியவற்றுக்கு உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா இன்னும் சீன உற்பத்தியையே பெரிதும் சார்ந்திருக்கிறது. அமெரிக்க இறக்குமதியில் 50% எலெக்ட்ரானிக் மற்றும் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. கடந்த வாரம் நடைபெற்ற கூட்டமொன்றில், அடுத்த மாதம் முதல் வணிகர்கள் காலியான அலமாரிகளையும் அதிக விலையையும் எதிர்கொள்வார்கள் என டிரம்பிடம் வால்மார்ட், டார்கெட் ஆகிய நிறுவனங்கள் கூறியதாகத் தகவல் வெளியானது. விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இத்தகைய அதிர்ச்சிகள், கிறிஸ்மஸ் வரை தொடரும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க வீடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அமைக்கப்படும் அலங்காரங்களில் சுமார் 90% சீனாவின் யிவூ நகரில் இருந்து வருகின்றன. வணிகர்கள் தற்போது தென் அமெரிக்காவில் விற்பனை செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக எங்களிடம் கூறினர். யிவூ நகரில் அந்தப் முயற்சிகளை பார்க்க முடிந்தது. கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பாக, அதிகாலையிலேயே மொத்த விற்பனை சந்தையில் வழக்கமான வார்த்தைகள் எதிரொலிக்கின்றன. "ஷுக்ரன்" என அரபுமொழியில் ஓர் ஆசிரியர் கூறுகிறார். அதன் அர்த்தம் "நன்றி" என்று கற்பதற்கு முன்பே, அந்த வார்த்தையைச் சரியாக உச்சரிப்பதற்குச் சில முறை அதைக் கூறுகின்றனர். "ஆஃப்வான்" என்பது அதற்குப் பதிலாக வருகிறது, "யூ ஆர் வெல்கம்" என்பதுதான் அதன் அர்த்தம். பட மூலாதாரம்,BBC/ XIQING WANG படக்குறிப்பு,பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் மொழியில் பேச விற்பனையாளர்கள் பயிற்சி எடுக்கின்றனர் உள்ளூர் அரசு அமைப்பால் இந்த இலவச வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் பெரும்பாலான மாணவர்கள் பெண்களே, வாடிக்கையாளர்களை ஈர்க்க அவர்கள் நன்றாக ஆடை அணிந்துகொள்கின்றனர். "சீனா முழுவதும் இந்த வர்த்தகத்தின் முதுகெலும்பாக இந்தப் பெண்களே உள்ளனர்," என ஒரு கடை உரிமையாளர் கூறுகிறார். இரானில் இருந்து வந்த இவர், ஆர்வம் மிக்க மாணவர் ஒருவருக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். "ஒருவருக்கொருவர் சிறப்பாகச் செயலாற்றவும், போட்டியில் நிலைத்திருக்கவும் அவர்கள் இந்தப் பாடங்களைக் கற்கின்றனர்." பெரும்பாலான வணிகர்கள் ஏற்கெனவே சில ஆங்கில வார்த்தைகளைப் பேசுகின்றனர். தற்போது தங்கள் புதிய வாடிக்கையாளர்களிடம் ஸ்பானிய மொழி அல்லது அரபு மொழியில் பேச வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். சீனாவின் மாறி வரும் வர்த்தக உறவின் ஒரு சிறிய, ஆனால் முக்கியமான சமிக்ஞையாக இது இருக்கிறது. கொலம்பியாவை சேர்ந்த ஆஸ்கர், பஞ்சு அடைக்கப்பட்ட முயல் மற்றும் கரடி பொம்மைகள் நிறைந்த பைகளுடன், சந்தையில் உள்ள மற்ற கடைகளில் சுற்றி வந்தார். அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் உலகின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த வணிகர்களுக்கு "பல வாய்ப்புகளை" ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார். "அமெரிக்காவுடன் சமீப நாட்களில் வணிகம் செய்வது குறைந்துள்ளதால், சீனாவுடன் வணிகம் செய்வது முக்கியம்" என்று அவர் வலியுறுத்துகிறார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9ve9k38xnzo
  23. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது என்ன? சமூகத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அகில இந்திய அளவில் இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? அடுத்து நடக்கவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தப் போவதாக மத்திய அரசு ஏப்ரல் 30ஆம் தேதியன்று அறிவித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் டெல்லியில் புதன்கிழமையன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "காங்கிரஸ் அரசுகள் எப்போதுமே சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து வந்திருக்கின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு நடந்த எந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளிலும் சாதி குறித்த விவரங்கள் சேகரிக்கப்படவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என 2010ஆம் ஆண்டில் மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். பெரும்பாலான அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டுமென பரிந்துரைத்தன. இருந்தபோதும் சமூக, பொருளாதார, சாதி கணக்கெடுப்பு (எஸ்இசிசி) ஒன்றை நடத்த மட்டுமே மத்திய அரசு முடிவெடுத்தது" என்று குறிப்பிட்டார். மத்திய அரசின் இந்த அறிவிப்பை பெரும்பாலான கட்சிகள் வரவேற்றுள்ளன. சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென நீண்ட காலமாகக் கோரி வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென அரசுக்கு நாங்கள் அளித்து வந்த அழுத்தத்திற்குப் பலன் கிடைத்துள்ளது. நாங்கள் இதோடு நிறுத்த விரும்பவில்லை. இட ஒதுக்கீட்டிற்குக் காரண அடிப்படையின்றி விதிக்கப்பட்டுள்ள 50 சதவிகித உச்சவரம்பை நீக்க வேண்டும். மேலும், தனியார் கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க வழிவகுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 15(5) முழுமையாகச் செயல்படுத்துவதை நாங்கள் உறுதிப்படுத்துவோம்" என்று குறிப்பிட்டார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் - கடைசியாக எப்போது நடத்தப்பட்டது? சாதிவாதி கணக்கெடுப்பு நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் - பாஜகவின் வியூகம் இதுவா? அதிக குழந்தை பெற்றுக் கொள்ள வலியுறுத்தும் தமிழ்நாடு, ஆந்திர முதல்வர்கள் - என்ன காரணம்? ஆயிரம் கோடியை நெருங்கும் உலக மக்கள் தொகை - இந்தியாவின் நிலை என்ன? தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளார். ஆனால், சில கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார். "சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தாமதிக்கவும் மறுக்கவும் செய்யப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து இதையும் நடத்தப் போவதாக மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், எப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும், எப்போது நிறைவடையும் என்ற முக்கியக் கேள்விகள் பதிலின்றியே நிற்கின்றன" என்றார். இது அறிவிக்கப்பட்ட தருணம் குறித்தும் அவர் கேள்வியெழுப்பினார். பிகார் தேர்தல்களில் சமூக நீதி ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்த திடீர் முடிவு அரசியல் அவசியத்தால் எடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது எனக் குறிப்பிட்ட அவர், சாதியின் அடிப்படையில் மக்களைப் பிரிப்பதாக எதிர்க்கட்சிகளைக் குற்றம் சாட்டிய இதே பிரதமர் அந்தக் கோரிக்கைக்கு இப்போது பணிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மற்றவர்கள், மாநில அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பைக் கோரியபோது, "நாங்கள் உறுதியாக நின்றோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் பணி. சென்சஸ் சட்டப்படி, மத்திய அரசு மட்டும்தான் சட்டரீதியாக செல்லத்தக்க சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும்" என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். ரெட்ரோ விமர்சனம்: சூர்யாவின் கம்பேக் படமாக இருக்கிறதா?1 மே 2025 அமெரிக்கா - யுக்ரேன் ஒப்பந்தம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மோதலுக்கு பின் புதிய திருப்பம்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அ.தி.மு.க., பா.ம.க. உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளன. சில கட்சிகள், எப்போது இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காலவரையறை குறிப்பிடப்படாததைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளன. இந்தியாவில் 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புதான் சாதிவாரியாக மேற்கொள்ளப்பட்ட கடைசி கணக்கெடுப்பு. 1980களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மையமாகக் கொண்ட கட்சிகள் வலுப்பெற்றபோது, சாதிவாரி கணக்கெடுப்பிற்கான கோரிக்கைகள் எழத் துவங்கின. சாதிவாரிக் கணக்கெடுப்பில் இருந்து வெளிவரும் புள்ளிவிவரங்கள் மூலம் யாருக்கு என்ன எண்ணிக்கை உள்ளது, சமூகத்தின் வளங்களில் யாருக்கு என்ன பங்கு உள்ளது என்ற உண்மைகள் வெளிவரும். இதில் சமத்துவமின்மை இருந்தால் அது தெரிய வரும் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு எதிரான குரல்களும் தொடர்ந்து எழுந்தன. ஆதிக்க சாதியினர் பொதுவாக இதுபோன்ற சாதிவாரி கணக்கெடுப்புகளை விரும்புவதில்லை. குறிப்பாக, சிறுபான்மையாக இருக்கும் ஆதிக்க சாதி பிரிவினர் இதை விரும்புவதில்லை என்ற கருத்து உள்ளது. இந்த நிலையில்தான், கடந்த சில ஆண்டுகளில் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கான கோரிக்கைகள் தொடர்ந்து வலுவடைந்து வந்தன. ஆனால், மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. இதைக் கடுமையாக எதிர்த்து வந்தது. இது மக்களைப் பிளவுபடுத்தும் கோரிக்கை எனக் கூறி வந்தது. ஆனால், திடீரென சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இருந்தபோதும், பல அரசியல் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல, எப்போது இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பது வெளியிடப்படவில்லை. 'முஸ்லிம்னா கல்மா படி' - பஹல்காமில் கண்முன்னே கணவனை இழந்த பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்1 மே 2025 அர்ச்சகர் பயிற்சி முடித்தும் கருவறைக்குள் செல்ல முடியாமல் தவிக்கும் அர்ச்சகர்கள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,அக்டோபர் 2023இல், பிகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்புத் தரவை வெளியிட்டது கடந்த 1865இல் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமான வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது. அதற்குப் பிறகு, 1872இல் அடுத்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டது என்றாலும் வங்க மாகாணத்தில் கணக்கெடுப்பு நடக்கவில்லை. இதற்குப் பிறகு, 1881இல் முதல் முறையாக, இந்தியாவின் அனைத்து இடங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் நேரடியாகவும் உள்ளூர் ஆட்சியாளர்களின் கீழ் உள்ள சமஸ்தானங்களில் சென்சஸ் ஆணையர் விதித்த அறிவுரைகளின்படியும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது தவிர, அந்தத் தருணத்தில் போர்ச்சுகீசு மற்றும் பிரெஞ்சு குடியேற்றங்களும் இந்தியாவில் இருந்தன. இதில் போர்ச்சுக்கீசியர்கள் கீழ் இருந்த பகுதிகளில், கணக்கெடுப்பு நடத்தப்பட்டு புள்ளிவிவரங்கள் பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு அளிக்கப்பட்டன. கடந்த 1881 முதல் 1941 வரை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டது. ஆனால், 1941ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு, இரண்டாம் உலகப் போர் காரணமாக முழுமையாக நடக்கவில்லை. ஆகவே, 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது. ஆமதாபாத்: வங்கதேசத்தினர் வாழ்வதாகக் கூறி இரவோடு இரவாக இடிக்கப்பட்ட வீடுகள் - இடமின்றி தவிக்கும் மக்கள்1 மே 2025 டூரிஸ்ட் ஃபேமிலி சிரிப்பு வெடியா? சோக கதையா? - படம் எப்படி உள்ளது?1 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியதில் இருந்தே, இந்தியாவில் உள்ள மதங்கள், சாதிகள், இனங்கள் ஆகியவற்றை வகைப்படுத்துவது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சவாலான விஷயமாகவே இருந்தது. ஆகவே, இது ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் ஒரு முறை மாறி வந்தது. 1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1,646 சாதிகள் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டது. 1941இல் எடுத்த கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 4,147ஆக உயர்ந்தது. இந்தியாவில் கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த கணக்கெடுப்பு 2021ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கோவிட் பெருந்தொற்றின் காரணமாக அப்போது அந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என இப்போது வரை மத்திய அரசு அறிவிக்கவில்லை. சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி குறித்த விவரம் சேகரிக்கப்படவில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டப்படி பட்டியல் சாதியினருக்கும் பழங்குடிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. மற்ற சாதியினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. ஆகவே, மற்ற சாதியினரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 2011ஆம் ஆண்டில் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஒருவரது சமூக பொருளாதார, சாதி விவரங்களையும் சேகரிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இந்த விவரங்கள் மட்டும் 1948ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின்படி மேற்கொள்ளப்படவில்லை. இதனால், சேகரிக்கப்பட்ட விவரங்களை அரசு வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. 2011 கணக்கெடுப்பின்போது மொத்தமாக 46 லட்சம் சாதிகள், துணை சாதிகள், சாதி பெயர்கள், குலங்கள் ஆகியவை மக்களால் அளிக்கப்பட்டிருந்தன. இந்தப் புள்ளி விவரங்களை அரசு வெளியிடாதது தொடர்பாகத் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்தக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட சாதி தொடர்பான விவரங்களைப் பகுப்பாய்வு செய்ய அப்போதைய நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. ஆனால், அதற்குப் பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தியா vs பாகிஸ்தான்: ராணுவ பலம் யாருக்கு அதிகம்? அணு ஆயுதம் யாரிடம் எவ்வளவு உள்ளது?1 மே 2025 சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடுவதால் ஆபத்தா? செய்யக் கூடாத 5 விஷயங்கள்1 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா சுதந்திரமடைந்த பிறகு சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏதும் நடத்தப்படாத நிலையில் சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்களை மேம்படுத்த சில முயற்சிகள் நடந்துள்ளன. இதற்கென நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு ஆணையங்கள் அமைக்கப்பட்டன. ஒன்று 1953இல் அமைக்கப்பட்ட கலேல்கர் ஆணையம். முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்றும் கலேல்கர் ஆணையம் என்றும் அழைக்கப்பட்ட இந்த ஆணையம் 1955இல் தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது. இந்தியா முழுவதும் 2399 சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும் 837 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும் இருப்பதாக இந்த ஆணையம் கூறியது. பின்தங்கிய நிலையை அளவிட சாதியை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஆனால், இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த கலேல்கரே இந்தப் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்தது. இதற்கு அடுத்ததாக, 1979ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி. மண்டல் நியமிக்கப்பட்டார். 1980ஆம் ஆண்டு மண்டல் ஆணையம் தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது. 1931ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை வைத்து, இந்தியாவில் 52 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என வரையறுத்தது. ஏற்கெனவே பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு 22.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஓபிசி பிரிவினரின் எண்ணிக்கை அளவுக்கு அதாவது 52 சதவிகித இட ஒதுக்கீடு அளித்தால், அது 50 சதவிகிதம் என்ற எல்லையைத் தாண்டிவிடும் என்பதால், வெறும் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்க ஆணையம் முடிவு செய்தது. 1990இல் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, ஆணையத்தின் அறிக்கையைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்தது. தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களைத் தவிர, நாடு முழுவதும் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு நிலவியது. முடிவில், வி.பி. சிங் அரசு கவிழ்ந்தது. இருந்தபோதும் பல்வேறு வழக்குகளுக்குப் பிறகு 27 சதவிகித இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது. இஸ்ரேலில் பரவிய காட்டுத்தீ - புகைமூட்டமாக காணப்படும் ஜெருசலேம்1 மே 2025 ரஷ்ய சூனியக்காரியா, சீமாட்டியா? ஹுர்ரெம் சுல்தான் ஓட்டோமான் பேரரசின் சக்தி வாய்ந்த பெண்ணாக வளர்ந்த கதை1 மே 2025 சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் தேவை? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்துப் பல முறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அப்படி நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டால் அது மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தும் என்ற வாதங்களும் பல முறை முன்வைக்கப்பட்டுள்ளன. "சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு நிச்சயம் தேவை இருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு மக்களைப் பிளவுபடுத்தும் என பா.ஜ.கவும் அவர்கள் உடன் இருப்பவர்களும்தான் சொல்லி வந்தார்கள். எப்போதுமே எந்தவொரு தரவுகளுமே சமூகத்தைப் பிரிக்காது. அது தவிர, எந்தவொரு உறுதியான நடவடிக்கையையும் (affirmative action) செயல்படுத்த தரவுகள் தேவை. அந்தத் தரவுகளை இந்த சாதிவாரிக் கணக்கெடுப்புகள் அளிக்கும்" என்றார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன் இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எண்களே மிகவும் பழையவை எனக் கூறிய அவர், 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வைத்துக்கொண்டு, அதில் உள்ள விவரங்களை ஆண்டுக்கு ஏற்றபடி உயர்த்தித் திட்டமிடுகிறார்கள் என்றார். "நமக்குத் துல்லியமான எண்கள் தேவை. அதேபோல, இட ஒதுக்கீட்டிற்கும் துல்லியமான எண்கள் தேவை. அதற்கு இந்தக் கணக்கெடுப்பு உதவும்" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதை வைத்து இட ஒதுக்கீட்டைத் தகுந்த முறையில் அளிக்க முடியும் என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி. "இந்தியாவில் 1931க்குப் பிறகு, எந்த சாதியினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற எந்தப் புள்ளிவிவரமும் கிடையாது. தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பில், பட்டியலினத்தோர், பழங்குடியினர் குறித்த தகவல்கள்தான் சேகரிக்கப்படுகின்றன. பிற்படுத்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுவதில்லை," என்றார் அவர் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவிகிதம்தான் வழங்கப்படுகிறது என்றும் ஆனால் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் 60 சதவிகிதம் அளவுக்கு இருப்பார்கள் எனக் கருதுவதாகவும் கூறினார் கோ. கருணாநிதி. "அதை இந்தக் கணக்கெடுப்பின் மூலம் உறுதி செய்ய முடியலாம்." பஹல்காம் தாக்குதல்: இந்திய எல்லையில் குவிக்கப்படும் படைகள் - என்ன நடக்கிறது? இன்றைய முக்கிய செய்திகள்1 மே 2025 பஹல்காம் தாக்குதல் நடந்த பகுதி பாதுகாப்பின்றி இருந்தது ஏன்? விடை கிடைக்காத 3 கேள்விகள்29 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,A S PANNEERSELVAN/X "இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில், நீதிமன்றங்கள் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களைக் கோருகின்றன. உதாரணமாக, கல்வி நிலையங்களில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது தொடர்பான வழக்கிலும் நீதிமன்றம் அப்படி ஒரு கேள்வியை எழுப்பியது," என்றார் கோ. கருணாநிதி. "அப்போது அரசுத் தரப்பில், 1931ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களை அளித்தபோது, அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் இப்போது எப்படி செல்லத்தக்கதாக இருக்கும் என நீதிமன்றம் கேட்டது. இப்போது பல தரப்பினர் இட ஒதுக்கீடு கோரி வருகின்றனர். இவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால், எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்தீர்கள் என நீதிமன்றம் கேள்வியெழுப்பும்" என்கிறார் அவர். மேலும், பிற்படுத்தப்பட்டோரின் சதவிகிதத்தோடு ஒப்பிட்டால் மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அரசின் எல்லாத் திட்டங்களுக்குமே புள்ளி விவரங்கள் தேவை என்றும் அவர் கூறினார். "இன ரீதியான ஒடுக்குமுறை இருக்கும் நாடுகளில், உறுதியான நடவடிக்கைக்கான (affirmative action) இனரீதியான தகவல்களைச் சேகரிக்கிறார்கள். இந்தியாவில் சாதி ரீதியான ஒடுக்குமுறை நீடிக்கும் நிலையில் சாதி ரீதியான புள்ளிவிவரங்களைச் சேகரிக்க வேண்டும்" என்கிறார் கோ. கருணாநிதி. வேறொரு விஷயத்தையும் ஏ.எஸ். பன்னீர்செல்வன் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, இந்தியாவில் உள்ள சாதி சார்ந்த புள்ளி விவரங்கள் 1931ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. அதிலிருந்து சமூகம் வெகுதூரம் பயணப்பட்டுள்ளது என்கிறார் அவர். "உதாரணமாகத் தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், அந்தக் காலகட்டத்தில் நாடார்கள் சமூக ரீதியில் மிகவும் பின்தங்கியவர்களாக இருந்தார்கள். இந்த நூறு ஆண்டுகளில் அவர்களின் நிலை எவ்வளவோ மாறிவிட்டது. ஷிவ் நாடார், டேவிட் டேவிதார் என சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க ஆட்கள் அந்த சமூகத்தில் இருந்து வந்துவிட்டார்கள். அப்படியிருக்கும் சூழலில் அந்தக் காலகட்டத்தில் புள்ளிவிவரங்களை இப்போதும் பயன்படுத்துவது சரியாக இருக்குமா? சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தினால், யார் கீழே சென்றிருக்கிறார்கள், யார் மேலே ஏறியுள்ளார்கள் என்ற விவரங்கள் நமக்குக் கிடைக்கும்" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன். பட மூலாதாரம்,ANI சாதிவாரிக் கணக்கெடுப்பை ஏற்காமல் இருந்த பா.ஜ.க. இந்த முடிவை எடுத்ததற்குக் காரணம், இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல்தான் என்ற கருத்தையும் சில விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். "நிச்சயமாக பிகார் தேர்தல்தான் இதற்குக் காரணம். சாதிவாரிக் கணக்கெடுப்பு எந்தெந்த சாதியினர் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதை அறியவும் அதன் மூலம் இடஓதுக்கீட்டை மாற்றியமைக்கவும் உதவக் கூடியது. இப்போது, இந்த விஷயங்கள் அனைத்தையும் பா.ஜ.க. ஏற்கிறது என்றால், மண்டல் கமிஷன் பரிந்துரைகளைக் கடுமையாக எதிர்த்தது ஏன்? மண்டல் பரிந்துரைகளை மத்திய அரசின் வேலை வாய்ப்புகளுக்கும் விரிவுபடுத்தியபோது அதை எதிர்த்தது ஏன்?" எனக் கேட்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன். இப்போது பிகார் தேர்தலில் சாதிவாரிக் கணக்கெடுப்பு முக்கிய விவகாரமாக முன்வைக்கப்படுவதால், பா.ஜ.க. இதை ஏற்றுக் கொண்டிருக்கிறது என்றும் "வெறும் கணக்கெடுப்பைத்தான் நடத்தப் போகிறோம், அதன் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் இருக்காது என்று கூறுவதாக இருந்தால் அதை வெளிப்படையாக அவர்களால் சொல்ல முடியுமா?" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன். ஆனால், பா.ஜ.க. எப்போதுமே இடஒதுக்கீட்டை ஆதரித்து வந்திருக்கிறது என்கிறார் பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி. "மண்டல் ஆணையத்தை அமைத்ததே ஜனதா ஆட்சியில்தான். அதற்குப் பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சிகள் அதைக் கிடப்பில் போட்டுவிட்டன. 1989இல் வி.பி. சிங்கின் ஆட்சி கவிழந்ததற்குக் காரணம், மண்டல் விவகாரமல்ல. அத்வானி கைது செய்யப்பட்டதுதான். தீக்குளித்த ராஜீவ் கோஸ்வாமியை பார்த்துவிட்டு வந்த அத்வானி, இதுபோலத் தீக்குளிப்பது தவறு என்றுதான் சொன்னார். இதற்கு முன்பாக ஒவ்வொரு மாநிலமும் சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தாங்களாக நடத்தப் போவதாகச் சொன்னதைத்தான் நாங்கள் எதிர்த்தோம். இப்போது மத்திய அரசு நடத்துவதில் பிரச்னையில்லை" என்கிறார் அவர். இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்றியமைக்க பா.ஜ.க. ஒப்புக்கொள்ளுமா? "இதுபோலக் கணக்கெடுப்பு நடந்தால் பல விவரங்கள் தெரிய வரும். அந்தத் தருணத்தில் அதைப் பற்றி முடிவெடுக்கலாம்" என்கிறார் அவர். டிரம்பின் வர்த்தகத் தடைகளை உடைத்து சாமர்த்தியமாக முன்னேறி வரும் சீன வணிகர்கள்8 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிட் 3 விமர்சனம்: ரத்தம் தெறிக்கும் கிரைம் த்ரில்லர் - ஆக்‌ஷன் ஹீரோ ஆக முயலும் நானி6 மணி நேரங்களுக்கு முன்னர் சாதி பிளவுகளைக் கூர்மைப்படுத்துமா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், இதுபோன்ற சாதிரீதியான கணக்கெடுப்புகளால் வேலை வாய்ப்புகளைப் பெறுவதில் பெரிய பலனிருக்காது என்பதுபோல, அது சாதிப் பிளவுகளைக் கூர்மைப்படுத்தவே செய்யும் என்கிறார் தலித் முரசு இதழின் ஆசிரியரான புனித பாண்டியன். "இந்தியா முழுக்க உள்ள அரசு வேலைவாய்ப்புகள் மூன்று சதவிகித்திற்கும் குறைவு. 98 சதவீத வேலை வாய்ப்புகள் தனியார் துறையில்தான் உள்ளன. தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமெனப் பல கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றினாலும் அவை தீர்மானங்களாகவே உள்ளன. சாதிவாரிக் கணக்கெடுப்பின் விவரங்கள் வந்தாலும் அதனால் ஏதும் நடக்காது. காரணம், இதுவரை பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள 27 சதவிகித இட ஒதுக்கீட்டையே அவர்கள் ஒழுங்காக நடைமுறைப்படுத்தவில்லை" என்கிறார் அவர். ஆகவே, இதுபோன்ற சாதிவாரிக் கணக்கெடுப்புகள் எதற்கு உதவுமென்றால், தங்கள் சாதியினர் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று காட்டவும் அதன் மூலம் சாதிப் பெருமிதங்களைப் பேசவும்தான் உதவும் என்றும் புனித பாண்டியன் கூறுகிறார். "அரசு வேலை வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதால், அதை விட்டுவிட்டு, அமைச்சரவையில் கூடுதல் இடங்கள், கூடுதல் எம்.எல்.ஏ. இடங்களை சில சாதியினர் கோருவதற்குத்தான் இது பயன்படும். தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலேயே இதுதான் நிலை என்றால், மற்ற மாநிலங்களின் நிலையை யோசித்துக் கொள்ளலாம்" என்கிறார் புனிதபாண்டியன். ஆனால், அரசியல் கட்சிகள் ஏற்கெனவே சாதி பார்த்துத்தான் தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்துவதால், இந்தப் புள்ளி விவரங்களால் புதிதாக ஏதும் நடந்துவிடாது என்கிறார் கோ. கருணாநிதி. முகலாய பேரரசர் முகமது ஷாவிடம் இருந்து கோஹினூர் வைரத்தை சாதுர்யமாக கொள்ளையடித்த நாதிர் ஷா29 ஏப்ரல் 2025 இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தால் அமெரிக்கா யாரை ஆதரிக்கும்?29 ஏப்ரல் 2025 தமிழ்நாடு எப்படி கூடுதல் இட ஒதுக்கீட்டை அளித்து வந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு 1931ஆம் ஆண்டுக் கணக்கெடுப்புதான் என்ற நிலையிலும்கூட, தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வந்த அரசுகள் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அதிகரித்து வந்தன. இது எப்படி நடந்தது? இந்தியாவில் நீண்ட காலமாக சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே அப்போதைய சென்னை மாகாணத்தில் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது. அந்தக் காலகட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதி குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வந்தன. இதை அடிப்படையாக வைத்து, அரசுப் பணிகளில் பிராமணர் அல்லாதோர் விகிதத்தை உயர்த்துவதற்காக Communal GO என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான அரசாணை பனகல் அரசர் தலைமையிலான அரசால் செப்டம்பர் 16, 1921இல் வெளியிடப்பட்டது. இது போல மூன்று அரசாணைகள் வெளியாயின. 1928 டிசம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட்ட மூன்றாவது கம்யூனல் ஜி.ஓ. மூலம்தான், இட ஒதுக்கீடுகள் அமலுக்கு வந்தன. அரசுப் பணிகள், கல்வியிடங்களில் பிராமணர் அல்லாதோரின் விகிதத்தை உயர்த்துவதற்காக இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டாலும், இதில் பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்த அரசாணையை எதிர்த்து இரு மாணவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றபோது, இந்த கம்யூனல் ஜி.ஓ. செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் பிறகு, இட ஒதுக்கீடு அளிக்க ஏதுவாக, இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. இதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவிகிதமும் பட்டியலினத்தோருக்கு 16 சதவிகிதமும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. மு. கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சரான பிறகு, பிற்படுத்தப்பட்டோரின் நிலை குறித்து ஆராய ஏ.என். சட்டநாதன் தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் தனது பரிந்துரைகளை 1970இல் அளித்தது. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், இட ஒதுக்கீட்டு விகிதத்தை தி.மு.க. அரசு மாற்றி அமைத்தது. அதன்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த 25 சதவிகித இட ஒதுக்கீடு 31 சதவிகித இட ஒதுக்கீடாக மாற்றப்பட்டது. பட்டியலினத்தோருக்கு வழங்கப்பட்டு வந்த 16 சதவிகித இட ஒதுக்கீடு 18 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், 1979இல் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசு இட ஒதுக்கீட்டைப் பெற வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டு வருமானம் ரூ. 9,000க்கு மேல் பெறுபவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தி.க., தி.மு.க. உள்ளிட்டவை போராட்டம் நடத்திய நிலையில், அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது. இதையடுத்து வருமான வரம்பு ஆணை திரும்பப் பெறப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த 31 சதவிகித இட ஒதுக்கீடு 50 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. 1989இல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடும் பட்டியலினத்தோருக்கு 18 சதவிகித இட ஒதுக்கீடும் பழங்குடியினருக்கு ஒரு சதவிகித இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது. "தமிழ்நாட்டில்தான் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பட்டியலினத்தோர் இட ஒதுக்கீட்டில் 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடாக அருந்ததியருக்கு வழங்கப்பட்டது. இது அனுபவ அடிப்படையில் செய்யப்பட்டது. புள்ளிவிவரங்கள் இன்னும் இதை மேம்படுத்த உதவும்" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce3v0l8yywlo
  24. 02 MAY, 2025 | 03:05 PM எமது மக்களுக்காக இதுவரை ஏதோ ஒரு வழியில் உழைத்த எமது தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாக்களித்து, அவர்களின் கரங்களுக்கு கொடுப்பது அவசியம் என வடக்கு - கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2) யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் குறித்த சங்க பிரதிநிதிகள் ஊடக சந்திப்பொன்றை நடத்தியபோதே சங்கத்தினர் இதனை தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி என்பது எமக்கான அதிகாரங்களைக் கொண்ட ஒரு கட்டமைப்பு. இதை எமது தமிழ் தேசியத்தில் இருக்கும் ஒரு தரப்பினரே ஆளுகை செய்ய வேண்டும். தமிழ் தேசியத்தின் வலிமையை இம்முறை நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலில் தமிழ் மக்கள் காண்பிக்க வேண்டும். தென்னிலங்கையின் கட்சிகளின் பிரதிநிதிகள், அவர்களால் இறக்கப்பட்டுள்ள சுயேச்சைக் குழுக்கள் போன்றவை எம்மை மீண்டும் ஏமாற்றவே முயல்கின்றன. இவர்களை இனியும் நம்ப முடியாது. இதை விட வடக்கில் தென்னிலங்கை கட்சிகளின் நலன்களை நிலைநாட்ட எமது சிலர் அக்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் எமது இருப்பை இல்லாதொழிக்க முயல்வது வெட்கக்கேடான விடயமாகும். எமது மக்களுக்காக இதுவரை ஏதோ ஒரு வழியில் உழைத்த எமது தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாக்களித்து, அவர்களின் கரங்களுக்கு கொடுப்பது அவசியம் என மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/213498
  25. காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை கட்டணம் குறைப்பு 02 MAY, 2025 | 01:45 PM காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவையின் இரு வழிக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் எடுத்துச்செல்லும் பொதிகளின் நிறை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக "சுபம்" நிறுவனத் தலைவர் தெரிவித்தார். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவையில் ஈடுபடும் "சுபம்" பயணிகள் படகு நிறுவனத்தின் தல்லைவர் சுந்தர்ராஜ் யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சேவை ஆரம்பிக்கும் போது 36 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்ட இருவழிக்கட்டணம் பின்னர் 30 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அது குறைக்கப்பட்டு 28 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் எடுத்துச் செல்லும் பயணப்பொதியின் அளவும் 10 கிலோவிலிருந்து 22 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலா மேம்பாட்டிற்காக இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்காக 7 வகையான புதிய சுற்றுலாப் பொதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து, இருவழி படகு போக்குவரத்து கட்டணம் அடங்கலாக 4 நாட்கள் தங்குவதற்கான கட்டணம் ஆக்க்குறைந்தது 70 ஆயிரம் ரூபாவிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன் அடுத்த மாதம் காங்கேசன்துறையிலிருந்து காலையில் புறப்படக்கூடியதான புதிய சேவையும் ஆரம்பிக்கவுள்ளது. எனவே இச்சேவைகளை பயன்படுத்தி இரு நாடுகளையும் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயனடைய வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/213492

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.