Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. தமிழ் மக்களின் தங்க நகைகளை அரசுடைமையாக்காது உரிய முறையில் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்; செல்வம் அடைக்கலநாதன் 04 MAY, 2025 | 05:19 PM எமது மக்களின் முதலீடாகவும் அவர்களின் கலாச்சார அடையாளமாகவும் காணப்படும் தங்க நகைகளை அரசுடைமையாக்காது உரியவர்களிடமே ஒப்படைக்க தற்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் வசமிருந்த தமிழ் மக்களின் பெருந்தொகையான நகைகள் தற்போது பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மத்திய வங்கியினால் குறித்த நகைகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவ் விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை (04) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மனிதாபிமான யுத்தம் என்ற போர்வையில் மக்களைக் கொன்று குவித்து அவர்களின் கலாச்சார அடையாளமாக பேணப்பட்டு வந்த சொத்துக்களை இல்லாமல் செய்து தமிழ் மக்களை நிர்க்கதியாக்கிய பேரினவாத சிந்தனை கொண்ட அரசுகள் தமிழ் மக்களின் பெருந்தொகையான நகைகளை மறைத்து வைத்திருப்பது தொடர்பில் இதுவரை எவ்விதமான கருத்துகளையும் வெளியிடாமல் இருந்திருக்கின்றது. இந்த நிலையில் நகைகளை வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள வங்கிகளில் அடகு வைத்த மக்கள் தமது நகைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் தமது முதலீடுகள் அனைத்தையும் இழந்திருப்பதனால் பெரும் வறுமையில் வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறான நிலைமையில் தற்போதைய அரசு தேர்தல் நலனுக்கானதாக இருந்தாலும் அந்த நகைகள் தொடர்பில் தகவல்களை வெளிக்கொணர்ந்து அதனை வெளிப்படுத்தியமையை வரவேற்கின்றேன். எனினும் குறித்த நகைகளை உரியவர்கள் இல்லை என்ற காரணங்களை காட்டி அரசுடைமையாக்காது நகைகளுக்கு உரித்தான தமிழ் மக்களிடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதேவேளை பொதுமக்களும் தங்களிடம் குறித்த நகைகளை அடகு வைத்த பற்றுச்சீட்டுக்கள் இருக்கும் பட்சத்தில் அதனை வெளிப்படுத்தி தமது நகைகளை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்வதற்கும் முன் வர வேண்டும். பற்றுச்சீட்டுக்கள் உள்ளவர்கள் அதன் பிரதிகளை என்னிடம் வழங்கும் பட்சத்தில் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரியவர்கள் இந்த நகைகளை பெறுவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுக்க முடியும். அத்துடன் அரசாங்கமானது வங்கிகளில் அடகு வைத்த பற்றுச் சீட்டுக்கள் பல பொது மக்களிடம் இல்லாத நிலை தற்போது காணப்படுகின்றது. அது மாத்திரமன்றி அடகு வைத்த பலர் இன்று இயற்கை எய்தியும் உள்ளதால் அவை தொடர்பில் ஏதுவான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். எனவே, அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமே தவிர நகைகளை அரசுடைமையாக்கி தமிழ் மக்களின் சொத்துக்களை கபளீகரம் செய்யக்கூடாது என்றார். https://www.virakesari.lk/article/213662
  2. என்னென்ன கதை சொல்றாங்க பாருங்க! Tamil Fishermen Attack Mangalore Fishermen in Kanyakumari | Mangalore and Kochi Boat Fight"
  3. முதலைகளுக்கு நடுவே 36 மணி நேரம் - அனகோண்டா காட்டில் விமான விபத்தில் சிக்கியவர்களின் கதை கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிகா ரான்ஸ்லி பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமேசானில் முதலைகள் நிறைந்த சதுப்பு நிலப் பகுதியில் சிக்கிக் கொண்ட ஐந்து பேர் 36 மணி நேரம் விமானத்தின் மேல் நிர்கதியாக இருந்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பொலிவியாவின் அமேசானாஸ் பகுதியில், 5 பேர் இருந்த சிறிய ரக விமானம் ஒன்று 48 மணி நேரத்திற்கு முன் காணாமல் போனது, தீவிரமாக மேற்கொண்ட தேடுதல்வேட்டையில் காணாமல் போனவர்களை உள்ளூர் மீனவர்கள் கண்டுபிடித்தனர். மூன்று பெண்கள், ஒரு குழந்தை மற்றும் 29 வயது விமானி என மொத்தம் ஐந்து பேரும் நல்ல நிலையில் மீட்கப்பட்டதாக அவசரகால செயல்பாட்டு மையத்தின் இயக்குனர் வில்சன் அவிலா தெரிவித்தார். மத்திய பொலிவியாவில் பறந்துக் கொண்டிருந்த சிறிய ரக விமானம் ரேடாரில் இருந்து காணாமல் போனது. அதையடுத்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. நாய் தவிர எந்தெந்த விலங்குகள் கடித்தால் ரேபிஸ் வரும்? கடிபட்ட உடனே செய்ய வேண்டியது என்ன?4 மே 2025 200 பாம்பு கடி வாங்கியவரின் உடலில் இருந்து அபூர்வ விஷமுறிவு மருந்து4 மே 2025 மனிதனின் இடுப்பெலும்பில் சிங்கத்தின் பல்தடம் - ரோமானிய கிளாடியேட்டர் சண்டைகளுக்கு ஆதாரம்3 மே 2025 விமானம் மீட்கப்பட்ட பிறகு உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய விமானி, வடக்கு பொலிவியாவில் உள்ள பௌரெஸிலிருந்து டிரினிடாட் நகருக்குச் விமானத்தின் சென்றுக் கொண்டிருந்தபோது, இட்டானோமாஸ் நதிக்கு அருகே அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்தார். வானில் பறந்துக் கொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டில் இருந்து விலகி, தானாகவே கீழே இறங்கத் தொடங்கியது என்றும், வேறுவழியில்லாமல் சதுப்பு நிலத்திற்கு அருகில் இருந்த நீர் நிலையில் விமானத்தை தரையிறக்கியதாகவும் விமானி ஆண்ட்ரெஸ் வெலார்டே கூறினார். விமானத்தில் இருந்த ஐந்து பேரும் விமானத்தில் இருந்து வெளியே வந்து, விமானத்தின் மீது ஏறி நின்றுக் கொண்டார்கள். ஆனால் அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. அவர்கள் இருந்த இடத்தை முதலைகள் சூழ்ந்துக் கொண்டன. விபத்தில் இருந்து தப்பியவர்களுக்கும் முதலைகளுக்கும் இடையில் மூன்று மீட்டர் தூரம் தான் இருந்தது. முதலை மட்டுமல்ல அனகோண்டாவும் வந்தது முதலைகள் அவ்வளவு அருகில் வந்தபோதும், மனிதர்களை உண்ணாமல் விட்டு வைத்தது ஏன்? தண்ணீரில் மூழ்கிய விமானத்திலிருந்து கசிந்த பெட்ரோல் தான் முதலைகள் தங்களை நெருங்காமல் இருக்கக் காரணமாக இருக்கும் என விமானி வேலார்டே நம்புகிறார். யாராவது வந்து தங்களைக் காப்பாற்றுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தபோது, முதலைகள் மட்டுமல்ல, அங்கு அனகோண்டா பாம்பு வந்ததையும் பார்த்ததாக அவர் கூறினார். காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் மீட்புப் பணியாளர்களுக்காக காத்துக் கொண்டிருந்த 36 மணி நேர அனுபவம் வித்தியாசமானது, வாழ்க்கையில் மறக்கவே முடியாதது என்று ஐவரும் கூறுகின்றனர். "கத்தோலிக்க வரலாற்றின் ஒரே பெண் போப் ஆண்டவர்" கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாரா?27 ஏப்ரல் 2025 இயேசு உண்மையில் குட்டையாக, கருப்பு நிறத்தில் இருந்தவரா? ஒரு வரலாற்றுப் பார்வை20 ஏப்ரல் 2025 'மாட்டிறைச்சி உண்ணும் பிராமணன் நான்' - 5 போர்களை கண்ட செங்கல்பட்டு ஜெனரல் சுந்தர்ஜியின் கதை15 ஏப்ரல் 2025 தங்களில் ஒருவர் வைத்திருந்த மரவள்ளிக்கிழங்கு மாவை சாப்பிட்டு பசியை போக்கிக் கொண்டதாக தெரிவித்தனர். "தண்ணீர் குடிக்கவில்லை, முதலைகள் எங்களை சுற்றி இருந்ததால் எங்கும் செல்ல முடியவில்லை," என்று வேலார்டே கூறினார். முதலைகளில் சிறிய உருவத்தைக் கொண்ட கெய்மன் வகை சிறுமுதலைகள் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் அதிக அளவில் காணப்படுகின்றன. காணாமல்போன விமானத்தை மீனவர்கள் கண்டுபிடித்த பிறகு, உயிர் பிழைத்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விமானம் காணாமல் போன பிறகு அதன் நிலை என்ன என்பது தொடர்பாக பல்வேறு விதமாக ஊகிக்கப்பட்டதாக பெனி பிராந்திய சுகாதாரத் துறையின் இயக்குனர் ரூபன் டோரஸ் கூறினார். காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து அவர்களை காப்பாற்ற அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட்டதாக அவர் அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியபோது தெரிவித்தார். 36 மணி நேரம் முதலைகளுக்கு நடுவில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் விமானத்தில் இருந்த ஐந்து பேரும் உயிருடன் காப்பாற்றப்பட்டனர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy0xr693y4lo
  4. ஜனாதிபதிக்கும் வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு Published By: DIGITAL DESK 2 04 MAY, 2025 | 04:58 PM வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை ( Tô Lâm) சந்தித்து கலந்துரையாடினார். வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான 55 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்து கொண்டமை குறிப்பித்தக்கது. https://www.virakesari.lk/article/213660
  5. 'பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம்' - முன்னாள் ரா தலைவர் பிபிசிக்கு பேட்டி படக்குறிப்பு,ரா அமைப்பின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் துலாத் கட்டுரை தகவல் எழுதியவர், ஜுகல் புரோகித் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "பஹல்காமில் நடந்த தாக்குதலில் காஷ்மீரிகளின் மீது எந்தத் தவறும் இல்லை. அங்கிருக்கும் சிலருக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பிருக்கலாம் அல்லது அதற்கான சதித் திட்டத்தில் பங்கேற்று இருக்கலாம்… ஆனால் இதற்காக அனைத்து காஷ்மீரிகளும் தண்டிக்கப்படக் கூடாது." இந்தக் கருத்தைக் கூறுவது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (RAW) முன்னாள் தலைவரும் ஐபிஎஸ் அதிகாரியுமான அமர்ஜித் சிங் துலாத். கடந்த மாதம் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா எதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்? இந்தியா என்ன செய்ய வேண்டும், அதிலும் குறிப்பாக ஜம்மு காஷ்மீரில்? இதுபோன்ற சில முக்கியமான கேள்விகளை அமர்ஜித் சிங்கிடம் கேட்டோம், அனுபவமிக்க அவருடைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை அறிய விரும்பினோம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் அருகே தாக்குதல் நடந்தது கடந்த 1940ஆம் ஆண்டு பிறந்த அமர்ஜித் சிங் துலாத், அடல் பிஹாரி வாஜ்பேய் அரசாங்கத்தில் பிரதமர் அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். தனது பணிக் காலத்தின் தொடக்கத்திலேயே ஜம்மு காஷ்மீரில் உளவுத்துறை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். பிபிசி உடனான சிறப்பு உரையாடலின்போது, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்பின் குறைபாடுகள் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குக் காரணம் என்று அவர் தெரிவித்தார். காஷ்மீர் பற்றிய கருத்தால் இந்தியாவின் கோபத்தைத் தூண்டிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் யார்?3 மே 2025 பஹல்காம் தாக்குதல் நடந்த பகுதி பாதுகாப்பின்றி இருந்தது ஏன்? விடை கிடைக்காத 3 கேள்விகள்29 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் "பஹல்காமில் நடந்தது போன்ற மிகவும் மோசமான தாக்குதல்கள் இதற்கு முன்பு நடந்ததில்லை என்று கூறுவேன். பஹல்காம் தாக்குதல் ஒரு பாதுகாப்பு தோல்வி என்றே எனக்கு தோன்றுகிறது. அங்கு எந்த வகையான பாதுகாப்பும் இல்லை. நிர்வாகத்திற்குத் தெரியாமல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருந்தால், இதுவும் உளவுத்துறை தோல்விதான்" என்று அவர் கூறுகிறார். தனது கருத்தைத் தெளிவுபடுத்தும் அவர் இவ்வாறு கூறுகிறார்: "நாம் உளவுத் தகவல்கள் அல்லது உளவுத்துறை அமைப்பு பற்றிப் பேசும்போது, காஷ்மீரில் மிக முக்கியமான துப்புகளும் தகவல்களும் காஷ்மீரிகளிடம் இருந்து மட்டுமே கிடைக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே காஷ்மீரிகளை நமக்கு இணக்கமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்." "இந்தத் தாக்குதல் ஏன் நடந்தது, எப்படி நடந்தது, என்ன நடந்தது, யார் பொறுப்பு என்பதை விசாரிக்க வேண்டும். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஜம்மு-காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைப் பேணும் பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது, அங்குள்ள முதலமைச்சரின் கைகளில் இல்லை. எனவே மத்திய அரசு இதைப் பற்றி ஆழமாக ஆராய வேண்டும். தவறு எங்கே நடந்தது என்பதை அங்குள்ள துணைநிலை ஆளுநர் ஆராய வேண்டும்" என்று அவர் கூறுகிறார். இந்தியா vs பாகிஸ்தான்: ராணுவ பலம் யாருக்கு அதிகம்? அணு ஆயுதம் யாரிடம் எவ்வளவு உள்ளது?1 மே 2025 "பாகிஸ்தான் மட்டுமல்ல சீனாவுக்கே அழுத்தம் கொடுக்கலாம்" - விக்ராந்துக்கு துணையாக வருகிறது ரஃபேல்-எம்29 ஏப்ரல் 2025 தீவிரவாத சம்பவங்களுக்கும் சுற்றுலாவுக்கு என்ன தொடர்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு, ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அரசாங்க தரவுகளின்படி, 2020ஆம் ஆண்டில் 34 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்துள்ளனர். அதுவே, 2023ஆம் ஆண்டின் இறுதியில், இந்த எண்ணிக்கை 2 கோடியே 11 லட்சத்தைத் தாண்டிவிட்டது. அதைவிட 2024ஆம் ஆண்டில், ஜூன் மாதத்திற்கு உள்ளாகவே, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே எட்டு லட்சத்தைத் தாண்டிவிட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது என்றால், அங்கு தீவிரவாத வன்முறைச் சம்பவங்கள் குறைந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. தெற்காசிய தீவிரவாத போர்ட்டலின்படி, 2012ஆம் ஆண்டில், தீவிரவாத வன்முறைச் சம்பவங்களில் ஜம்மு காஷ்மீரில் 19 பொதுமக்கள் உயிரிழந்தனர், பாதுகாப்புப் படையினர் 18 பேர் கொல்லப்பட்டனர், 84 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர் அதுவே 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தீவிரவாத வன்முறைகளில் பொதுமக்களில் 12 பேர், 33 பாதுகாப்புப் படையினர் மற்றும் 87 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2024ஆம் ஆண்டில், 31 பொதுமக்கள், 26 பாதுகாப்புப் படையினர் மற்றும் 69 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதாவது தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. ஆனால் அரசின் அறிக்கைகளில், ஜம்மு-காஷ்மீரில் 'பூஜ்ஜிய தீவிரவாதம்' போன்ற விஷயங்களும் இடம்பெறத் தொடங்கின. 'ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு ஏதுவான சூழல் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு விட்டதாகவும்' கூறப்பட்டது. அதே நேரத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமே இல்லாத பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தொடங்கினார்கள். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகுதான், பல பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு நிர்வாகம் தடை செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்தப் பிரச்னையை அமர்ஜித் சிங் துலாத் எப்படிப் பார்க்கிறார் என்று அவரிடம் கேட்டோம். "கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளன. சுற்றுலா என்பது வேறு, இயல்புநிலை என்பது வேறு. ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை நிலவுவதாக நாம் கூறும்போதெல்லாம், அந்தப் பக்கத்தில் இருந்து தாக்குதல்கள் நடக்கின்றன" என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் துறை 'பூஜ்ஜிய தீவிரவாதம்' பற்றிப் பேசியிருந்தது மேலும், "சுற்றுலாத்துறை அங்கு முன்னேறிக் கொண்டிருந்தது, பயணிகள் எல்லா இடங்களுக்கும் சென்று கொண்டிருந்தனர். ஆனால், அரசாங்கம் ஆபத்தை முன்கூட்டியே பார்த்திருக்க வேண்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் எங்கு சென்றாலும், பாதுகாப்பு இருப்பதைக் காணலாம். ஆனால், தாக்குதல் நடைபெற்றபோது பஹல்காமுக்கு வெளியே, பைசரன் பள்ளத்தாக்கில் ஏன் பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லை என்பது எனக்குத் தெரியவில்லை" என்று அமர்ஜித் சிங் ஆச்சரியப்படுகிறார். இந்தியா, பாகிஸ்தானுடன் பேசிய அமெரிக்கா - டிரம்ப் அரசின் நிலைப்பாடு ஏன் கேள்விக்குள்ளாகிறது?1 மே 2025 பஹல்காமில் தாக்குதலின்போது என்ன நடந்தது? சம்பவத்தை விவரித்த சுற்றுலா வழிகாட்டிகள்1 மே 2025 'இது இந்து-முஸ்லிம் பிரச்னை அல்ல' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, வன்முறைக்கு எதிராக ஸ்ரீநகரில் காஷ்மீர் வணிகர்கள் போராட்டங்களை நடத்தினார்கள் பஹல்காம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டு தெரிந்துகொண்டே சுட்டதாக, தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் தெரிவித்திருந்தனர். எனவே இந்தத் தாக்குதலின் பின்னணி என்ன, அதன் பின்னணியில் எத்தகைய சிந்தனை இருப்பதாகத் தோன்றுகிறது, இந்தியா என்ன மாதிரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று அமர்ஜித் சிங் துலாத்திடம் கேட்டோம். "பஹல்காமில் இந்து-முஸ்லிம் பிரச்னையில் தாக்குதல் நடைபெறவில்லை. ஜம்மு-காஷ்மீரிலோ அல்லது இந்தியாவிலோ இந்து-முஸ்லிம் பிரச்னை இல்லை. பார்க்கப் போனால், இங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று என்ற செய்தி தெளிவாகத் தரப்பட வேண்டும். கடந்த 1947இல் விடுதலை பெற்றது முதலே ஒரு சில மதப் பிரச்னைகள் உள்ளன. ஜம்மு-காஷ்மீர் ஒரு முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக இருந்த போதிலும், அங்கு ஒருபோதும் இந்து-முஸ்லிம் பிரச்னை இருந்ததில்லை" என்று அவர் பதில் கூறுகிறார். "காஷ்மீரியத் என்று நாம் அழைப்பது என்ன? காஷ்மீரியத்தின்படி, அங்குள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் நெருங்கியுள்ளனர். நாம் காஷ்மீரியத்தை இழக்கக்கூடாது என்று கூற விரும்புகிறேன், அதை உயிர்ப்புடன் வைத்திருப்பது மிகவும் முக்கியம்" என்று தெரிவித்தார் அவர். இந்தியா - வங்கதேச வர்த்தக உறவில் விரிசல்: வணிகங்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ன?2 மே 2025 பாகிஸ்தான் சிந்து நதி நீர் பிரச்னையை சமாளிக்க இந்த 4 வாய்ப்புகளைக் கையிலெடுக்குமா?2 மே 2025 'போர் நடக்கும் என்று நான் நம்பவில்லை' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நபிசா ராஸ் ஒரு இந்தியர், அவரது குழந்தைகள் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அது தூதரக நிலை, வர்த்தகம் அல்லது மக்கள் நடமாட்டம் போன்ற விஷயங்கள் எனப் பல்வேறு விஷயங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிடிஐ செய்தி முகமையின் செய்திகள்படி, பொருத்தமானதாகக் கருதும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க ஆயுதப் படைகளுக்கு அண்மையில் பிரதமர் நரேந்திர மோதி முழு சுதந்திரத்தையும் வழங்கியுள்ளார். அதே நேரத்தில், இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தானிலும் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, அடுத்து என்ன நடக்கும் என்று அமர்ஜித் சிங் துலாத் என்ன நினைக்கிறார் எனக் கேட்டோம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த ஆண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு அரசாங்கம் அமைந்தது "ராஜ்ஜீய ரீதியாக, பாகிஸ்தானுக்கு வலுவான செய்தி ஒன்றை இந்தியா அனுப்பியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளக்கூடும் என்றும் மக்கள் கூறுகிறார்கள். போர் என்பது மிகவும் தவறான வழி என்றும், வேறு வழியில்லை என்ற நிலையில் அது இறுதியானதாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். அதோடு போர் நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை" என்று துலாத் கூறுகிறார். "எதிர்காலத்தில் ஏதாவது ஒரு வழியில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். 2021ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டது ஏன்? அன்றைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், ராணுவத் தளபதி ஜெனரல் பாஜ்வாவும் இந்தியாவுடன் இணக்கமான உறவை விரும்பினார்கள். அதேபோல், இன்று பாகிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் நவாஸ் ஷெரீப்பும், பிரதமர் மோதியும் பரஸ்பரம் நல்லுறவைக் கொண்டுள்ளனர். எனவே சமாதானம் ஏற்படலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 போர் விமானம் இது பற்றி மேலும் விரிவாகப் பேசும் அமர்ஜித் சிங் துலாத், "தற்போது சூழல் சற்று மோசமாக உள்ளது, நிலைமை மாற சிறிது காலம் ஆகலாம். ஆனால் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்குப் பல வழிகள் உள்ளன. திரைக்குப் பின்னால் அதைச் செய்யுங்கள், பின்னணி சேனல் ஒன்றை உருவாக்கிப் பேசுங்கள். என்னைப் பொறுத்தவரை, அந்தப் பேச்சுவார்த்தைகள் ஒருபோதும் முடிவடையாது. நேரடியாகப் பேச விரும்பாவிட்டால், செளதி அரேபியா, இரான் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என உங்கள் சார்பாக வேறு யாராவது பேச்சுவார்த்தை நடத்துவார்கள்." "மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற நடவடிக்கை அல்லது பாலகோட் போன்ற ஏதாவது செய்யலாம், நிச்சயமாக அதைச் செய்யலாம். என்னைப் பொறுத்தவரை, ராணுவத்தின் பதில் நடவடிக்கை வரையறுக்கப்பட்டதாக இருக்கலாம், அதில் தவறில்லை" என்கிறார் துலாத். இந்த முழு விவகாரத்திலும் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை பொறுப்பாக்கி, இந்தியா நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை என்பதுதான். பஹல்காம் தாக்குதலுக்கு எல்லை தாண்டிய தொடர்புகள் இருப்பதாகவே வெளியுறவுச் செயலாளர் உறுதிபடக் கூறியிருந்தார். பஹல்காம் தாக்குதல்: அமெரிக்கா யார் பக்கம்? - ஜே.டி.வான்ஸின் பேச்சு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையா?3 மே 2025 'பண்ணை வீட்டு படுகொலைகள்' - கொங்கு மண்டலத்தில் தொடர்கொலைகளுக்கு தீர்வு என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் முன்பாக அடுத்து இருக்கும் பாதை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆதாரங்களை வழங்குவது இந்தியாவுக்கு பயனளிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் துலாத், "பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானின் உதவியின்றி நடந்திருக்காது. கடந்த காலங்களிலும் பாகிஸ்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதற்கான ஆதாரங்களை இந்தியா வழங்க முடிந்தால், அவற்றைப் பிற நாடுகளும் நம்பினால், இந்தியாவுக்கு நல்லது" என்கிறார். ஆனால், பஹல்காம் தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று கூறும் பாகிஸ்தான், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, 'நடுநிலை' விசாரணையில் பங்கேற்கும் என்று கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிர்வாகத்தின் கூற்றுப்படி, இடிக்கப்பட்ட இந்த வீடு அஹ்சன்-உல்-ஹக் ஷேக்கின் குடும்பத்திற்குச் சொந்தமானது உள்ளூர் தீவிரவாதிகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற விஷயம் புதிதானது இல்லை என துலாத் கூறுகிறார். "இந்தத் தாக்குதலில் உள்ளூர்வாசிகளில் சிலரும் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவலைக் கேள்விப்பட்டபோது, எனக்கு ஆச்சரியம் ஏதும் ஏற்படவில்லை. உண்மையில், இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பாலும் அது நமக்குத் தெரிய வராது. ஆனால் தற்போது மக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்படுகின்றன, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்காக உதவிய சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 250-300 பேரைக் கைது செய்யாதீர்கள். ஏனென்றால், அவ்வாறு செய்வது யார் மீது தவறு இருக்கிறது என்பதை அடையாளம் காண முடியாமல் நாம் தோல்வி அடைந்ததையே காட்டுகிறது" என்று அவர் கூறுகிறார். பாகிஸ்தான் சிந்து நதி நீர் பிரச்னையை சமாளிக்க இந்த 4 வாய்ப்புகளைக் கையிலெடுக்குமா?2 மே 2025 பிலாவல் பூட்டோவின் சர்ச்சை பேச்சுக்கு இந்தியாவில் எழுந்த கண்டனம் - தற்போதைய விளக்கம் என்ன?2 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த ஆகஸ்ட் 2019இல் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக காஷ்மீரில் வெடித்த போராட்டங்கள் உள்ளூர் மக்களிடையே அதிகரித்து வரும் விரக்திக்கான காரணத்தைக் கூறும் துலாத், "கடந்த ஆண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு அரசாங்கம் அமைந்தபோது, மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். தங்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டு விட்டதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால் இது தங்கள் அரசாங்கம் அல்ல என்பதைப் புரிந்துகொண்டதாக மக்கள் சொல்லத் தொடங்கிவிட்டனர். இப்போதும் ஜம்மு காஷ்மீரை நடத்துவது டெல்லிதான் (மத்திய அரசு) என்று அவர்கள் கூறுகின்றனர்" என்கிறார். "அங்கே மீண்டும் ஒருவிதமான விரக்தி நிலை வரத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் அடுத்து என்ன செய்ய வேண்டும்? அரசாங்கம் அங்குள்ள மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அங்குள்ள மக்கள் ஒருபோதும் வருத்தப்படக்கூடாது," என்று அவர் மேலும் கூறுகிறார். "கடந்த சில ஆண்டுகளில், சுற்றுலாப் பயணியாக அல்லாமல் நிலைமையைப் புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் காஷ்மீருக்கு சென்றிருந்தால், மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டிருக்கலாம். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, நாட்டில் மக்கள் மகிழ்ச்சியடைந்ததைப் பார்த்திருக்கலாம். ஒரு நோய் நீங்கியது என்றும் இது நல்லது என்றும் மக்கள் சொன்னார்கள்" என்று துலாத் சொல்கிறார். இதையெல்லாம் பார்த்த காஷ்மீர் மக்கள், டெல்லி (மத்திய அரசு) எப்போதும் தங்களுக்கு எதிராக இருப்பதாகவும், ஆனால் இந்திய மக்களும் தங்களுக்கு எதிரானவர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது என்றும் சொன்னார்கள். பின்னர் படிப்படியாக காஷ்மீர் அமைதியாகிவிட்டது. இந்த கனத்த மௌனத்தைக் கவனிக்க வேண்டும். இவ்வளவு அமைதியாக இருப்பது நல்லதல்ல" என்று தனது அனுபவத்தை மேற்கோள் காட்டி துலாத் கூறுகிறார். ஜம்மு காஷ்மீர் மக்களுடன் இந்தியா தொடர்ந்து பேச வேண்டும் என்று கூறும் துலாத், "சுற்றுலா மூலம் காஷ்மீரிகளுடான இடைவெளியை நிரப்ப முடியாது. அதற்குப் பேச்சுவார்த்தை அவசியம்" என்று முன்னாள் ரா தலைவர் அமர்ஜித் சிங் துலாத் கூறுகிறார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5ygng8qnvgo
  6. Published By: DIGITAL DESK 3 04 MAY, 2025 | 05:40 PM ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானி, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரிமாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (05) சந்தித்தார். இந்த சந்திப்பில் நீண்டகால இருதரப்பு நட்புறவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது, மேலும் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு ஜப்பானின் ஆதரவை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தினார். கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறவுகளில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம், குறிப்பாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். வெளிப்படைத்தன்மை, பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தேசிய மாற்றத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். காலநிலை மாற்றம், மனிதாபிமான உதவி மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற பொறுப்புகளை உள்ளடக்கியதாக இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் பங்கை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை குறித்தும் பிரதமர் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட ஐந்து முக்கிய துறைகளில் இராஜதந்திர உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இலங்கைக்கான ஜப்பானிய தூதர் அகியோ இசோமாட்டா உட்பட ஜப்பான் மற்றும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/213664
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 3 மே 2025 பாகிஸ்தானின் நீர்வழிப் பாதையை நிறுத்தவோ அல்லது திருப்பிவிடவோ இந்தியா ஏதேனும் கட்டமைப்பை உருவாக்கினால், அது அழிக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இந்தியாவை எச்சரித்துள்ளார். பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சியான ஜியோ நியூஸின் 'நயா பாகிஸ்தான்' நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர், "இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறி, தண்ணீரை நிறுத்தவோ அல்லது திருப்பிவிடவோ ஏதேனும் கட்டமைப்பை உருவாக்கினால், அது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலாகக் கருதப்படும். அந்தக் கட்டமைப்பை நாங்கள் அழிப்போம்" என்றார். "சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானது அல்ல, அது பாகிஸ்தானுக்கு எதிரான போர் அறிவிப்பாகும். ஒரு தாக்குதல் என்பது பீரங்கி குண்டுகள் அல்லது துப்பாக்கிகளால் நடத்தப்படுவது மட்டுமல்ல, அதற்கு பல வடிவங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று இது. இதன் காரணமாக, எங்கள் நாட்டு மக்கள் பசி அல்லது தாகத்தால் இறக்க நேரிடும்" என்று அவர் கூறினார். கடந்த ஏப்ரல் 22 அன்று, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, '1960ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை' நிறுத்தி வைப்பது உள்பட, பாகிஸ்தானுக்கு எதிரான பல கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. முன்னதாக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) தலைவருமான பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு இந்தியாவில் கடுமையான எதிர்வினை ஏற்பட்டது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் சுக்கூரில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிலாவல் பூட்டோ, 'ஒன்று, சிந்து நதியில் எங்களுக்கான தண்ணீர் பாயும் அல்லது அவர்களின் ரத்தம் பாயும்' என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் மத்திய நீர் மின்சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் உள்பட இந்தியாவின் பல பெரிய தலைவர்கள் பூட்டோவின் கருத்துக்கு கடுமையாக எதிர்வினையாற்றினர். இருப்பினும், பிபிசியுடனான உரையாடலில், பிலாவல் பூட்டோ தனது கருத்து குறித்து விளக்கமளித்தார். அந்தப் பேரணியில் 'சாமானிய பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளை' மட்டுமே தான் வலியுறுத்தியதாக அவர் கூறினார். 'இந்தியா மீதான சர்வதேச அழுத்தம்' பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,1960ல் இந்தியா பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜியோ நியூஸ் நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், "சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருதலைப்பட்சமாக மீறியுள்ளது. தற்போது, இந்த விவகாரத்தை நாங்கள் (பாகிஸ்தான்) பல மன்றங்களுக்கு எடுத்துச் செல்லவுள்ளோம்" என்று கூறினார். பஹல்காம் சம்பவம் தொடர்பாக இந்தியா எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மற்றும் போர் அச்சுறுத்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "போர் அச்சுறுத்தல் இல்லையென்றோ அல்லது குறைந்துவிட்டது என்றோ கூற முடியாது. 2019 ஆம் ஆண்டிலும் கூட 12 நாட்களுக்குப் பிறகு இந்தியா பதிலளித்துள்ளது" என்று கூறினார். பிப்ரவரி 14, 2019 அன்று, சிஆர்பிஎஃப் வாகனத் தொடரணியின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது. 'கடந்த சில நாட்களாக இந்தியா மீதான சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது' என்று கவாஜா ஆசிப் கூறினார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் அறிக்கை குறித்து பேசிய கவாஜா ஆசிப், "இந்தியா தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் (ஜே.டி. வான்ஸ்) ஒரு வாய்ப்பை அளித்துள்ளார். இந்தியா ஏதாவது செய்ய விரும்பினால், அதைச் செய்யட்டும் என்பதற்காக.." என்று கூறினார். "இது அமெரிக்க துணை அதிபரின் தனிப்பட்ட அறிக்கையாக இருக்கலாம், ஏனெனில் கொள்கை அறிக்கை வெள்ளை மாளிகையிலிருந்து வரும்" என்று ஆசிப் கூறினார். காஷ்மீர் பற்றிய கருத்தால் இந்தியாவின் கோபத்தைத் தூண்டிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் யார்?3 மே 2025 இந்தியா - வங்கதேச வர்த்தக உறவில் விரிசல்: வணிகங்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ன?2 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஃபாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சி ஒன்றில், "பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் 'ஏதோவொரு வகையில் பொறுப்பு'" என்று கூறியதோடு, இந்தியாவுக்கு அது ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை (மே 1) ஒரு நேர்காணலில், "சமீபத்திய (பஹல்காம்) தாக்குதலுக்கான இந்தியாவின் பதில் பரந்த பிராந்திய மோதலுக்கு வழிவகுக்காது என்பதே அமெரிக்காவின் நம்பிக்கை" என்று வான்ஸ் கூறினார். "பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுடன் ஒத்துழைக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது." என்றும் அவர் கூறினார். ஏப்ரல் 22 அன்று பஹல்காம் தாக்குதல் நடந்த சமயத்தில், வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகளுடன் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். மேலும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். பிலாவல் பூட்டோவின் சர்ச்சை பேச்சுக்கு இந்தியாவில் எழுந்த கண்டனம் - தற்போதைய விளக்கம் என்ன?2 மே 2025 பாகிஸ்தான் சிந்து நதி நீர் பிரச்னையை சமாளிக்க இந்த 4 வாய்ப்புகளைக் கையிலெடுக்குமா?2 மே 2025 இந்தியா மீதான அழுத்தத்தை அதிகரிக்க பாகிஸ்தான் முயற்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஷாபாஸ் ஷெரீப் பல வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்தித்து வருகிறார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், சௌதி அரேபியா உள்ளிட்ட பிற நாடுகளிடம், 'பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைக்க உதவுமாறு' வலியுறுத்தியுள்ளார், மேலும் இந்த நாடுகள் மூலம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கவும் முயற்சித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை (மே 2) பாகிஸ்தானுக்கான சௌதி அரேபியாவின் தூதர் நவாஃப் பின் சயீத் அல் மாலிகியுடன் பேசியதாக 'ரேடியோ பாகிஸ்தான்' தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு தெற்காசியாவின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பாகிஸ்தானின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ஷாபாஸ் ஷெரீப், "பயங்கரவாதம் எங்கு நடந்தாலும் பாகிஸ்தான் அதைக் கண்டிக்கிறது" என்றார். வெள்ளிக்கிழமை அன்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதர் ஹம்மாத் அபித் இப்ராஹிம் சலீம் அல்-ஜாபியையும் சந்தித்தார். "பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது பாகிஸ்தானே" என்று அவர் கூறினார். அதேபோல, வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமாபாத்தில் குவைத் தூதர் நாசர் அப்துல் ரஹ்மான் ஜாசரையும் ஷாபாஸ் ஷெரீப் சந்தித்துள்ளார். "கடந்த சில ஆண்டுகளில், 'பயங்கரவாதத்திற்கு' எதிரான பாகிஸ்தானின் போரில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 152 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பொருளாதார இழப்பை பாகிஸ்தான் சந்தித்துள்ளதாகவும்" அவர் கூறினார். டிரம்பின் வர்த்தகத் தடைகளை உடைத்து சாமர்த்தியமாக முன்னேறி வரும் சீன வணிகர்கள்2 மே 2025 இந்தியா, பாகிஸ்தானுடன் பேசிய அமெரிக்கா - டிரம்ப் அரசின் நிலைப்பாடு ஏன் கேள்விக்குள்ளாகிறது?1 மே 2025 இந்தியாவும் பாகிஸ்தானும் என்ன செய்கின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடினார் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் கடுமையான நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானும் பல நடவடிக்கைகளை எடுத்து, 'இந்தியா இனி பாகிஸ்தானின் வான்வெளியைப் பயன்படுத்த முடியாது' என்று கூறியது. இது தவிர, '1972ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தையும்' நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், வியாழக்கிழமை 'பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (பிபிஏ)' பாகிஸ்தான் எஃப்எம் வானொலியில் இந்திய பாடல்களின் பயன்பாட்டை நிறுத்தியது. இந்த தேசபக்தி சார்ந்த முடிவு என்றும், முழு நாட்டின் கூட்டு உணர்வைப் பிரதிபலிக்கிறது என்றும் பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. "பிபிஏவின் இந்த முடிவை நான் மிகவும் பாராட்டுகிறேன். இது போன்ற சமயங்களில் நாட்டின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் அடிப்படை உணர்வை ஆதரிப்பதற்காகவும் நாம் ஒன்றாக நிற்கிறோம் என்பதை இந்த முடிவு காட்டுகிறது" என்று பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் கூறினார். "தேசிய நலனுக்காக இந்த நடவடிக்கையை எடுத்ததற்காக ஊடகக் குழுக்களை நாங்கள் பாராட்டுகிறோம்" என்றும் அவர் கூறினார். இதற்கிடையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் சமூக ஊடகக் கணக்குகளும் இந்தியாவில் முடக்கப்பட்டன. இவற்றில் ஷாபாஸ் ஷெரீப்பின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமும் அடங்கும். முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் இந்தியாவில் முடக்கப்பட்டன. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn91rvpy0n8o
  8. இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது யெமனில் இருந்து ஏவுகணை தாக்குதல் Published By: DIGITAL DESK 3 04 MAY, 2025 | 05:17 PM இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து யெமனில் இருந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையமான பென் குரின் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி ஏவுகணை விமான நிலையத்திற்குள் உள்ளே ஓடுதளம் அருகே இருந்த வீதியில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர். இந்த ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து விமான நிலையத்தில் விமான சேவை சில நிமிடங்கள் இரத்து செய்யப்பட்டன. தற்போது விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அதேவேளை, ஹவுத்தி நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு 7 மடங்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாகவும், பதிலடி கொடுப்பது குறித்தும் பிரதமர் நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சரவையை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளார். இதன் மூலம் யெமனில் செயல்பட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் இன்னும் ஓரிரு நாட்களில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/213644
  9. வியட்நாம் சென்றடைந்தார் ஜனாதிபதி Published By: DIGITAL DESK 3 04 MAY, 2025 | 12:26 PM வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை (03) நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று ஞாயிற்றுக்கிழமை (04) முற்பகல் வியட்நாமின் நோய் பாய் (Noi Bai International Airport) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் வெளிவிவகார பிரதி அமைச்சருமான நுயென் மான் குவோங் (Nguyen Manh Cuong) உள்ளிட்ட அரச பிரதிநிதிகளால் அமோகமாக வரவேற்கப்பட்டனர். இந்த வரவேற்பு நிகழ்வில் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டேம் (Trinh Thi Tam),வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் போசித பெரேரா மற்றும் இலங்கைத் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டனர். இன்றைய தினம் பிற்பகல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸ கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை ( Tô Lâm) சந்திக்க உள்ளார். ஜனாதிபதி நாளை திங்கட்கிழமை (05) வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களிலும் ஈடுபட உள்ளார். மேலும், மே 06 ஆம் திகதி ஹோ சி மிங் நகரில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிறப்புரை நிகழ்த்துவார். இந்த விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடவும், வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்களை நடத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரச விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழுவும் இணைந்துகொள்கின்றது. https://www.virakesari.lk/article/213635
  10. ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த அஷ்வினி அம்பிகைபாகர் (Ashvini Ambihaipahar) என்பவர் அவுஸ்திரேலிய (Australia) நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் பொதுத்தேர்தல் நேற்று (03) இடம்பெற்ற நிலையில், சிட்னி Barton தொகுதியில் ஆளும் தொழிற்கட்சியின் வேட்பாளராக களம் இறங்கிய ஆஸ் எனப்படும் அஸ்வினி 66 சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர், ஈழத்தமிழ் படைப்புலகில் பிரபலமான கவிஞர்களில் ஒருவரான நாவற்குழியைச் சேர்ந்த மறைந்த கவிஞர் அம்பி எனப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகரின் பேர்த்தியாவார். உள்ளுராட்சி தேர்தல் கடந்த 2022 இல் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற நிலையில் நேற்று நாடாளுமன்றத் தேர்தலிலும் அஷ்வினி வெற்றி பெற்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் கனேடிய நீதியமைச்சரான ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற நிலையில் அவருக்கு மேலதிகமாக இன்னொரு ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினராக யுவனிதாவும் வெற்றிபெற்றிருந்தார். இந்த நிலையில், இப்போது அஷ்வினி அவுஸ்ரேலியாவில் வெற்றிபெற்றுள்ளார். கடந்த வருடம் ஏற்கனவே கடந்த வருடம் பிரித்தானியாவில் இடம்பெற்ற பொத்துதேர்தலில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த உமாகுமரன் (Uma Kumaran) நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். தற்போதைய நிலையில் மேற்குலக நாடுகளில் தாயக உணர்வு சார்ந்த நிலைப்பாட்டுடன் ஈழத்தமிழ் பூர்வீகத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் இடதுசாரி மற்றும் தாராளவாதக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முக்கிய விடயமாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/eelam-tamil-woman-elected-as-australian-mp-1746347480 @goshan_che அண்ணன் கவனத்திற்கு.
  11. Published By: DIGITAL DESK 3 04 MAY, 2025 | 04:28 PM பிரித்தானியாவில் குறிப்பிட்ட இடமொன்றினை இலக்கு வைக்கும் சதித்திட்டம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நடத்திய இருவேறு தேடுதலில் நடவடிக்கையில் எட்டு ஆண்கள் சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் ஈரானியர்கள் ஆவர். முதலில் கைது செய்யப்பட்ட 4 ஈரானிய நாட்டவர்களில் 29 வயதுடைய இருவர், 40 வயதுடைய ஒருவர் மற்றும் 46 வயதுடைய ஒருவர் அடங்குவர். ஐந்தாவது நபரின் நாடு மற்றும் வயது இன்னும் வெளியாகவில்லை. அதேவேளை, லண்டனில் மேலும் மூன்று ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நடவடிக்கைகளும் ஒன்றோடொன்று இணைந்தவை அல்ல என பொலிஸார் தெரிவித்தனர். "நமது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்கள் எடுத்த நடவடிக்கைக்கு நன்றி. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப நமது எதிர்வினையை மாற்றியமைக்க வேண்டிய தேவையை நிரூபிக்கும் கடும் சம்பவங்கள் இவை" என பொலிஸ் மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கு உள்நாட்டு அலுவல்கள் செயலாளர் யெவெட் கூப்பர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட முதல் ஐந்து பேரில், நான்கு பேர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஐந்தாவது நபர் பொலிஸ் மற்றும் குற்றவியல் சான்றுகள் சட்டத்தின் (பேஸ்) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்குத் தயாரானதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு லண்டன், ஸ்டாக்போர்ட், ரோச்டேல் மற்றும் மான்செஸ்டரில் உள்ள ஸ்விண்டன் ஆகிய இடங்களில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசாரணை குறிப்பிட்ட இடமொன்றினை இலக்கு வைக்கும் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படுவது தொடர்பானது என பொலிஸார் தெரிவித்தனர். கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் மற்றும் வில்ட்ஷயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரித்தானியா முழுவதும் உள்ள பயங்கரவாத தடுப்பு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மெட் பயங்கரவாத தடுப்பு கட்டளை பிரிவு இந்த விசாரணையை வழிநடத்துகிறது. https://www.virakesari.lk/article/213656
  12. நாய் தவிர எந்தெந்த விலங்குகள் கடித்தால் ரேபிஸ் வரும்? கடிபட்ட உடனே செய்ய வேண்டியது என்ன? கட்டுரை தகவல் எழுதியவர், க. சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்த போப் ஆண்டவருக்கான தேர்தல் எப்படி நடக்கும்? எளிய விளக்கம்27 ஏப்ரல் 2025 கோவையில் நாய் கடித்து இருவர் மரணம், எச்சரிக்கும் மருத்துவர்கள் - ரேபிஸ் தடுப்பூசி ஏன் அவசியம்?25 அக்டோபர் 2024 200 முறை பாம்பு கொத்தியும் உயிர் பிழைத்தவர் - பாம்புக்கடி மருந்துக்கு உதவுவது எப்படி?6 மணி நேரங்களுக்கு முன்னர் மனிதனின் இடுப்பெலும்பில் சிங்கத்தின் பல்தடம் - ரோமானிய கிளாடியேட்டர் சண்டைகளுக்கு ஆதாரம்3 மே 2025 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm24dkvrpvgo
  13. கசிந்தது இந்தியாவின் தாக்குதல் திட்டம்: அணு ஆயுதத்துடன் களமிறங்குவதாக அறிவித்த பாகிஸ்தான்..! பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக ரஷ்யாவுக்கான பாகிஸ்தானின் உயர்மட்ட தூதுவர் காலித் ஜமாலி தெரிவித்துள்ளார். இந்தியாவால் அவ்வாறனதொரு தாக்குதல் நடத்தப்பட்டால், அணு ஆயுதங்கள் உட்பட முழு இராணுவ ஆயுதங்களையும் பாகிஸ்தான் பயன்படுத்த நேரிடும் என அவர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, பாகிஸ்தானின் சில பகுதிகளைத் தாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சில ஆவணங்கள் கசிந்துள்ளதாகவும், குறித்த தாக்குதல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜமாலியின் எச்சரிக்கை சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் விடுத்த அணு ஆயுத பழிவாங்கும் அச்சுறுத்தல்களில் மிகவும் வெளிப்படையான ஒன்றாக இந்த எச்சரிக்கை கருதப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்துள்ள முறுகல் நிலைக்கு மத்தியில் ஜமாலியின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலைத் திட்டமிட்ட பயங்கரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்து ஆதரவளிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, இந்தியா சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் பங்கீட்டை நிர்வகிக்கும் 1960 ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) இடைநிறுத்தியது. ஏவுகணையை சோதனை இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பல போர்களை தடுப்பதற்கு உதவியதுடன், பதற்றமான இருதரப்பு உறவில் ஒரு அரிய உறுதிப்படுத்தும் ஏற்பாடாக நீண்ட காலமாகக் கருதப்பட்டது. போர் என்பது பீரங்கிகளையோ அல்லது தோட்டாக்களையோ சுடுவது மட்டுமல்ல என்றும் அதற்கு பல முகங்கள் உள்ளதாகவும் அந்த முகங்களில் ஒன்று தண்ணீரைத் தடுப்பது அல்லது திசை திருப்புவது, இது பசி மற்றும் தாகத்தால் இறப்புகளுக்கு வழிவகுக்கும் என பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததை ஒரு போர் நடவடிக்கை என்று கூறிய தூதுவர் காலித் ஜமாலி அதற்கு முழு அளவிலான அதிகாரம் உட்பட முழு பலத்துடன் பதிலளிக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதேவேளை, பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் இராணுவம் நேற்றையதினம் அப்தாலி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தமையானது, இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/pakistan-s-nuclear-warning-to-india-1746351034
  14. அடுத்த பாப்பரசர் நானே ..! சர்ச்சையை ஏற்படுத்திய ட்ரம்பின் புகைப்படம் உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான பாப்பரசர் பிரான்சி(pope francis)ஸ், வத்திக்கானில்(vatican) கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி காலமானார். புதிய பாப்பரசரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,அண்மையில் அடுத்த பாப்பரசர் தேர்வு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ” நான் பாப்பரசராக இருக்க விரும்புகிறேன். அதுவே என் முதல் தேர்வாக இருக்கும்.” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump) பதில் அளித்து இருந்தார். வலுக்கும் கண்டனம் இன்று பாப்பரசர் உடையில் தான் இருப்பது போன்ற ஒரு ஏஐ புகைப்படத்தை ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், ட்ரம்ப்பின் இந்த புகைப்படம் பாப்பரசரையும் புதிய பாப்பரசர் தேர்வு செய்யும் நடைமுறையையும் அவமதிப்பதாக இருப்பதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். https://ibctamil.com/article/pope-francis-trump-1746295671
  15. 03 MAY, 2025 | 07:27 PM (லியோ நிரோஷ தர்ஷன்) வெளிநாடுகளுக்கு சென்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்கு எதிராக பேசியதோ செயல்பட்டதோ கிடையாது. இதனை மக்கள் அறிவர். சர்வதேச ஒப்பந்தங்களுடன் அரசாங்கம் அரசியல் விளையாட நினைத்தால் பாரதூரமான நிலைமையே ஏற்படும். மின் கட்டண அதிகரிப்பு நாணய நிதிய நிபந்தனைகளில் முக்கியமான தொன்றாகியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு - 7 இல் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், நான்காவது தவணை கொடுப்பணவை விடுவிக்க போவதில்லை என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளப் போகின்றது. மின்சார கட்டணத்தை உடனடியாக அதிகரிக்குமாறு நாணய நிதியத்தின் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே குறிப்பிட்ட கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தனது அரசியல் போலித்தனத்தால் அரசாங்கம் சிக்கிக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும் அரசாங்கத்திற்கு இதுவொரு நெருக்கடியான நிலைமை தான். நடைமுறையில் உள்ள மின்சார கட்டணம் மின்சார உற்பத்தி செலவை ஈடு செய்ய வில்லை என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. ஆகவே கட்டண அதிகரிப்பு நிச்சயம் இடம்பெற வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி இவான் பாபஜோர்ஜியோ வலியுறுத்தியுள்ளார். எனவே சர்வதேச நாணய நிதியத்தின் பிரச்சினையை எம்மீது சுமத்துவது முறையல்ல. மாறாக தீர்வுகளை காண முயற்சிக்க வேண்டும். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளுக்கு சென்று நாட்டிற்கு எதிராக பேசியதில்லை. அதனை அனைவரும் அறிவர். நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன வாஷிங்டனுக்கு சென்றிருந்தார். அங்கு தான் மின்சார கட்டண விவகாரம் பேசப்பட்டுள்ளது. எனவே சர்வதேச விடயங்களுடன் இவ்வாறு அரசாங்கம் விளையாட இயலாது. நாடு நெருக்கடிக்குள் செல்லுமாயின் தலையீடுகளை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/213608
  16. 03 MAY, 2025 | 07:20 PM இந்நாட்டின் முன்னாள் போராளிகள் கனவு கண்டிருப்பார்கள். அது புலிகளாக இருக்கலாம், ஈ.பி.டி.பி.யாக இருக்கலாம், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆக இருக்கலாம். தமிழ் மக்கள் நிம்மதியாக, தன்மானத்துடன் வாழ வேண்டும் என்பது அவர்களின் கனவு. அந்த கனவை தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளால் நிறைவேற்ற முடியுமா? போராளிகளின் அர்ப்பணிப்புக்கு அவர்களால் அருகில்கூட வரமுடியாது. அவர்கள் கனவு கண்டிருந்தாலும் கூட அந்த கனவை நனவாக்குவதற்குரிய வேலையை நாம் செய்கின்றோம். இயக்கங்கள் மீது உண்மையான பற்றுள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தியையே ஆரத்தழுவிக்கொள்ள வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். சனிக்கிழமை (03) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ் ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன், யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளர் சு.கபிலன் ஆகியோரும் உடனிருந்தனர். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, கொழும்பில் கோட்சூட்டுடனும், யாழ்ப்பாணத்தில் வேட்டியுடனும் வலம் வருகின்ற - ரணிலின் கோப்புகளைத் தூக்கி திரிந்த செல்லப் பிள்ளை, அநுரவை யாழ்ப்பாணத்தில் கால் வைக்க விடமாட்டோம் எனக் கூறுகின்றார். முதலில் தனக்கு கால் வைக்க முடியுமா என்பதை யாழ்ப்பாணத்து மக்களால் நிராகரிக்கப்பட்ட அந்நபர் தேடிப் பார்க்க வேண்டும். நான் அமைச்சராக இருந்தாலும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் மக்கள் மத்தியில் செல்கின்றேன். ஆனால் அவர் பாதுகாப்புடன் வலம் வருகின்றார். இது வெட்கம். இவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதி. அநுரவை கால் வைக்க இடமளிக்கமாட்டாராம். தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாநகர சபை முதல்வர் வேட்பாளர் கபிலனுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படுமாம். வழக்கு தொடுப்பதைதவிர அவருக்கு வேறு என்ன தெரியும்? கபிலன் சுந்தரமூர்த்தி எமது கட்சியின் முதன்மை வேட்பாளர். அவர் தனி நபர் அல்ல. அவருக்கு பின்னால் எமது கட்சி, அரசாங்கம் உள்ளது. கபிலனுடன் விளையாட முற்படுவது எம்முடன் விளையாட முற்படுவதாகும். சாக்கடை அரசியலின் வெளிப்படாகவே அவரை இலக்கு வைத்து தாக்கி வருகின்றனர். யாழ்ப்பாணத்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் தமக்கான அரசியல் இருப்பை தேடுகின்றனர். அதனால் தான் போராட்டத்துக்கான அறைகூவல் விடுக்கப்படுகின்றது. ஆனால் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியும். அதேவேளை, இந்நாட்டின் முன்னாள் போராளிகள் கனவு கண்டிருப்பார்கள். அது புலிகளாக இருக்கலாம், ஈபிடிபியாக இருக்கலாம், ஈபிஆர்எல்எப் ஆக இருக்கலாம். தமிழ் மக்கள் நிம்மதியாக, தன்மானத்துடன் வாழ வேண்டும் என்பது அவர்களின் கனவு. அந்த கனவை தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளால் நிறைவேற்ற முடியுமா? போராளிகளின் அர்ப்பணிப்புக்கு அவர்களால் அருகில்கூட வரமுடியாது. அவர்கள் கனவு கண்டிருந்தாலும்கூட அந்த கனவை நனவாக்குவதற்குரிய வேலையை நாம் செய்கின்றோம். இயக்கங்கள் மீது உண்மையான பற்றுள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தியையே ஆரத்தழுவிக்கொள்ள வேண்டும். அதேவேளை, புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தை, உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. உண்மையான உரிமையாளர்கள் இல்லாதபோதுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/213612
  17. சிறிய அலட்சியத்தால் தோற்றதா சென்னை? விடாமல் பயம் காட்டும் அந்த ஒரு விஷயம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிஎஸ்கே அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆர்சிபி அணி. கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2024, மே 18 ஆம் தேதி பெங்களூருவில் ஐபிஎல் தொடரில் நடந்தது மீண்டும் நேற்று பெங்களூருவில் நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்திலும் நடந்து "தேஜாவு" நினைவு ஏற்பட்டது. 2024, மே 18 ஆம் தேதியும் ஆர்சிபி, சிஎஸ்கே அணியும் மோதின, கடைசி ஓவரை யாஷ் தயால் வீசி சிஎஸ்கே அணியை ப்ளே ஆஃப் செல்லவிடாமல் தடுத்தார். அதேபோன்று நேற்றும் ஆர்சிபி, சிஎஸ்கே அணிகளுக்கு இடையே லீக் ஆட்டம் நடந்தது, கடைசி ஓவரை யாஷ் தயால் வீசி, 15 ரன்களை சிஎஸ்கே பேட்டர்கள் அடிக்கவிடாமல் டிபெண்ட் செய்து 2 ரன்களில் ஆர்சிபி அணியை வெற்றி பெற வைத்தார். கடந்த ஆண்டும் யாஷ் தாயால் வீசிய கடைசி ஓவரில் தோனி ஆட்டமிழந்தார், இந்த முறையும் தோனி ஆட்டமிழந்தார். பெங்களுருவில் நேற்று நடந்த 52வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆர்சிபி அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது. 214 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்து 2 ரன்களில் தோல்வி அடைந்தது. கடைசி நேரத்தில் களமிறங்கிய 14 பந்துகளில் அரைசதம் விளாசிய ஆர்சிபி வீரர் ரோமாரியோ ஷெப்பர்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES முதலிடத்தில் ஆர்சிபி இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று, 16 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு நகர்ந்தது, நிகர ரன்ரேட்டைப் பொருத்தவரை 0.482 மட்டுமே இருக்கிறது. இது மும்பை இந்தியன்ஸ், குஜராத் அணியைவிட குறைவாகும். இன்னும் 2 வெற்றிகள் கிடைத்தால் ஆர்சிபி அணியை ப்ளே ஆஃப் சுற்றில் டாப்-2 இடங்களில் அமரவைக்கும். இந்த தோல்வியால் தொடர்ந்து 12வது முறையாக 180 ரன்களுக்கு மேல் அடித்த இலக்கை சேஸ் செய்யமுடியாமல் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது. ஆர்சிபி அணிக்கு பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வெற்றி தேடித்தந்தது கடைசி 2 ஓவர்கள்தான். பேட்டிங்கில் ரோமாரியோ ஷெப்பேர்ட் கடைசி 2 ஓவர்களில் அடித்த ரன்களும், பந்துவீச்சில் சூயாஷ் ஷர்மா, தயால் வீசிய 2 ஓவர்களும் திருப்புமுனை. மெட்ராஸில் அடிமை வர்த்தகம் செய்த எலிஹு யேலின் மகன் கல்லறை இப்போது சர்ச்சையாவது ஏன்?2 மே 2025 உணவுடன் சேர்த்து காபி குடிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிக்கல்கள்2 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆர்சிபி அணி 18-வது ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்திருந்தது கடைசி 2 ஓவர்கள் ஆர்சிபி அணி 18-வது ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்திருந்தது, அடுத்த இரு ஓவர்களிலும் சேர்த்து 184 ரன்களை சேர்க்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் கலீல் அகமது வீசிய 19-வது ஓவரில் ரோமாரியோ ஷெப்பார்ட் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 33 ரன்களையும், பதிராணா வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 21 ரன்கள் விளாசி இரு ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்து 14 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து 213 ரன்கள் சேர்க்க உதவினார். ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரைசதம் அடித்ததில் 2வது இடத்தை ரோமாரியோ ஷெப்பார்ட் பிடித்தார். முதலிடத்தில் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில் ஷெப்பர்ட் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதற்கு முன் ஆர்சிபி அணிக்காக அதிவேக அரைசதமாக கெயில் 17 பந்துகளில் அடித்திருந்தார், அதை ஷெப்பர்ட் முறியடித்து விட்டார். அதேபோல ஆர்சிபி பந்துவீச்சிலும் சூயாஷ் ஷர்மா வீசிய 18வது ஓவரும், யாஷ் தயால் வீசிய 20வது ஓவரும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தின. கடைசி 3 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்க 35 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் தோனி, ஜடேஜா இருந்தனர், இரு பெரிய ஃபினிஷர்கள் களத்தில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தோனி களமிறங்கியதும் சுழற்பந்துவீச்சாளர் சூயாஷ் ஷர்மாவை பந்துவீச அழைத்தனர். இளம் சுழற்பந்துவீச்சாளர் சூயாஷ் சர்மா தனது ஓவரில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து சிஎஸ்கே அணியை நெருக்கடியில் தள்ளினர். புவனேஷ்வர் வீசிய 19வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸர், ஜடேஜா ஒரு பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தனர். ஓட்டோமான் பேரரசின் அடிமைப்பெண் அரசியான கதை - ஹுர்ரெம் சுல்தானின் அறியாத பக்கங்கள்1 மே 2025 சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடுவதால் ஆபத்தா? செய்யக் கூடாத 5 விஷயங்கள்1 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புவனேஷ்வர் வீசிய 19வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸர், ஜடேஜா ஒரு பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவர் கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது, யாஷ் தயால் பந்துவீசினார். யாஷ் தயால் முதல் இரு பந்துகளை யார்கராக வீசவே தோனி, ஜடேஜா தலா ஒரு ரன் சேர்த்தனர். 3வது பந்தில் தோனியை கால்காப்பில் வாங்க வைத்து தயால் ஆட்டமிழக்கச் செய்யவே ரசிகர்களின் சத்தத்தால் அரங்கமே அதிர்ந்தது. இம்பாக்ட் வீரராக வந்த ஷிவம் துபே 4வது பந்தில் சிக்ஸர் விளாசவே ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது, 4வது பந்து ஃபுல்டாஸாக வந்ததால் நோபாலாகவும் மாறியது. இதனால் துபே ப்ரீஹி்ட்டில் மற்றொரு சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்துவிடுவார் என்று நினைத்த நேரத்தில் ப்ரீஹிட்டில் துபே ஒரு ரன் அடித்தார். அதன்பின் கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தயால் யார்கராக பந்துவீசவே துபே ஒரு ரன்னும், கடைசிபந்திலும் தயால் யார்கர் விளாச ஜடேஜா ஒரு ரன்னும் எடுக்கவே, ஆர்சிபி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இளம் மாணவர்களின் தற்கொலை எண்ணங்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?1 மே 2025 வீட்டுக்குள் புகுந்து சறுக்கு மரத்தில் ஏறி விளையாடிய கரடி1 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆர்சிபி வீரர் ரோமாரியோ ஷெப்பர்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். கோலிக்கு ஆரஞ்சு தொப்பி விராட் கோலி நேற்று 33 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஜேக்கப் பெத்தலுடன் சேர்ந்து 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான அடித்தளம் அமைத்தார். கோலி சேர்த்த 63 ரன்களில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என 187 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 505 ரன்கள் சேர்த்து சாய் சுதர்ஸனை முந்தி கோலி ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றினார். இந்த சீசனில் கோலி 7வது முறையாக 50க்கும் மேற்பட்ட ரன்களை அவர் விளாசியுள்ளார். இந்த 7 ஆட்டங்களிலும் ஆர்சிபி அணி வென்றுள்ளது. அது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் 8-வது முறையாக கோலி 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். மேலும் சிஎஸ்கே அணிக்கு எதிராக கோலி 1,146 ரன்கள் சேர்த்து, அந்த அணிக்கு எதிராக அதிகபட்ச ரன்கள் சேர்த்த பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார். கோலி நேற்று முக்கியமான கட்டத்தில் பவுண்டரி அருகே கேட்சை கோட்டை விட்டு பவுண்டரியும் செல்லவிட்டது ஆட்டத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியது, ஒருவேளை ஆர்சிபி தோல்வி அடைந்திருந்தால், அதற்கான ஒட்டுமொத்த பழியும் கோலி மீது விழுந்திருக்கும். கோலி மட்டும் அந்தக் கேட்சை பிடித்திருந்தால் ஜடேஜா ஆட்டமிழந்திருப்பார், ஆர்சிபி வென்றிருக்கும் என்ற ஊகம் கிளம்பி இருக்கும். கோலி கேட்ச் விட்டு, பவுண்டரி சென்றதைப் பார்த்த கேப்டன் பட்டிதார் தலையில் கை வைத்தார். மாரடைப்பு மரணங்களைத் தடுக்கும் வாட்ஸ் ஆப் குழுக்கள் - தமிழ்நாடு மருத்துவர்களின் புதிய முயற்சி30 ஏப்ரல் 2025 நச்சுப் பாம்புகள் நிறைந்த காட்டில் 500 நாட்கள் தப்பிப் பிழைத்த நாய் மீட்கப்பட்டது எப்படி?30 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜடேஜாவுக்கு நேற்றைய ஆட்டத்தில் 3 கேட்சுகளை ஆர்சிபி வீரர்கள் கோட்டைவிட்டும் அதை பயன்படுத்தவில்லை. 3 பேட்டர்கள் அரைசதம் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணியில் படிக்கல்(17), பட்டிதார்(11) ஜிதேஷ்(7) என சொற்பமாக ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தல் 28 பந்துகளில் தனது 2வது ஆட்டத்திலேயே அரைசதம் அடித்தார், 21 வயது 192 நாட்களில் ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை விளாசியுள்ளார். இவருக்கு முன்பாக குறைந்தவயதில் சாம் கரன்(20வயது), குர்பாஸ்(21வயது 129நாட்கள்) அரைசதம் அடித்திருந்தனர். ஆர்சிபி பேட்டர்கள் 3 பேர் கோலி(62), பெத்தல்(55), ஷெப்பர்ட்(53) அரைசதம் அடித்தனர். முகலாய பேரரசர் முகமது ஷாவிடம் இருந்து கோஹினூர் வைரத்தை சாதுர்யமாக கொள்ளையடித்த நாதிர் ஷா29 ஏப்ரல் 2025 ஹிட்லரின் மரணம் குறித்து விலகாத மர்மங்கள் - இறக்கும் தருவாயில் எப்படி இருந்தார்?30 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முதலில் பேட் செய்த ஆர்சிபி 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது. ஆட்டத்தை மாற்றிய ஷெப்பர்ட் ஆர்சிபி அணிக்கு கோலி, பெத்தல் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தபின் நடுவரிசை வீரர்கள் விரைவாக விக்கெட்டுகளை இழக்கவே ஸ்கோர் மந்தமானது. 11ஓவர்கள் முதல் 18வது ஓவர்கள்வரை 4 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களை மட்டுமே ஆர்சிபி சேர்த்தது. 157 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை ஆர்சிபி இழந்திருந்தது. கடைசி 14 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் ஷெப்பர்ட் களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களில் ஷெப்பர்ட் 54 ரன்கள் விளாசினார். கலீல் அகமது வீசிய 19-வது ஓவரில் 4 சிக்ஸர்கள், 2பவுண்டரிகள் என 33 ரன்களையும், பதிராணா வீசிய கடைசி ஓவரில் 2சிக்ஸர், 2 பவுண்டரி என அருமையான ஃபினிஷிங் செய்தார். சிஎஸ்கே அணிக்கு கிடைத்த அடுத்த முத்து சிஎஸ்கே அணிக்கு ஏற்கெனவே நடுவரிசையில் பிளாஸ்டர் பேட்டர் பிரெவிஸ் கிடைத்துள்ள நிலையில் அடுத்ததாக அருமையான தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே கிடைத்துள்ளார். ஆயுஷ் மாத்ரே, 25 பந்துகளில் அரைசதத்தையும், 48 பந்துகளில் 94 ரன்கள்(5 சிக்ஸர், 9பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணி சீசன் தொடக்கத்திலேயே ஆயுஷ் மாத்ரேவை களமிறக்கி இருக்க வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிஎஸ்கே அணிக்கு அருமையான தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே கிடைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் இளம்வயதில் அரைசதம் அடித்த 3வது பேட்டராக ஆயுஷ் மாத்ரே(17வயது291 நாட்கள்) இடம் பெற்றார். இதற்கு முன்பாக வைபவ் ரகுவன்ஷி(14வயது 32நாட்கள்), ரியான் பராக்(17வயது 175 நாட்கள்) ஆகியோர் இளம் வயதில் அரைசதம் அடித்திருந்தனர். சிஎஸ்கே அணி அடுத்த சீசனில் கெய்க்வாட்டுடன் இணைந்து களமிறங்க அதிரடியான பேட்டரான ஆயுஷ் மாத்ரேவை கண்டுபிடித்துள்ளது. புவனேஷ்வர் வீசிய ஓவரில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 26 ரன்களை மாத்ரே விளாசினார். ஜடேஜாவுடன் சேர்ந்து ஆயுஷ் மாத்ரே அமைத்த 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ரவீந்திர ஜடேஜாவும் 29 பந்துகளில் அரைசதம் அடித்து ஐபிஎல் தொடரில் தனது அதிகபட்ச ஸ்கோரான 77 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 29 பந்துகளில் அரைசதம் அடித்த ஜடேஜா, அடுத்த 16 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே சேர்த்து ரன்சேர்ப்பில் மந்தத்தை ஏற்படுத்தினார். ஜடேஜா கடைசி வரை ஒரே சீராக அடித்து ஆடியிருந்தால் நிச்சயமாக ஸ்கோரில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஜடேஜாவுக்கு நேற்றைய ஆட்டத்தில் 3 கேட்சுகளை ஆர்சிபி வீரர்கள் கோட்டைவிட்டும் அதை பயன்படுத்தவில்லை. சிஎஸ்கே அணியில் ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா இருவரைத் தவிர மற்ற பேட்டர்கள் பெரிதாக ரன்களையும் சேர்க்கவில்லை. ரஷீத்(14), சாம்கரன்(5), பிரெவிஸ்(0), தோனி(12) என சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த ஆட்டத்தில் விராட் கோலி ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றினார். பிரெவிஸ் அவுட் லுங்கி இங்கிடி வீசிய 17வது ஓவரில் மாத்ரே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததும், அடுத்து டெவால்ட் பிரெவிஸ் களமிறங்கினார். முதல் பந்தை இங்கிடி ஃபுல்டாஸாக விசவே, அதை தடுக்கும் முயற்சியில் பிரெவிஸ் கால்காப்பில் வாங்கினார். லுங்கி இங்கிடி அவுட் கேட்டு முறையிடவே களநடுவரும் அவுட் வழங்கினார். இதைப் பார்த்த பிரெவிஸ், மிகவும் ரிலாக்ஸாக நடந்து வந்து, ஜடேஜாவிடம் பேசிவிட்டுவந்து, டிஆர்எஸுக்கு அப்பீல் செய்தார். ஆனால், நடுவரோ டிஆர்ஸ் முடிவுக்கு அப்பீல் செய்ய வேண்டுமென்றால், ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்ட 10 வினாடிகளுக்குள் டிஆர்எஸ் எடுக்க வேண்டும், ஆனால், அதனை தாண்டி நேரமாகிவிட்டதால் டிஆர்எஸ் எடுக்க இயலாது எனத் தெரிவித்தனர். இதனால் விரக்தியுடன் பிரெவிஸ் வெளியேறினார். ஒருவேளை பிரெவிஸ் ஆட்டமிழக்கமல் இருந்தால், சிஎஸ்கே வெற்றி பெற்றிருக்கவும் வாய்ப்பு இருந்தது. பிரெவிஸின் கடைசி நேர அவுட், சிஎஸ்கே அணியின் தோல்விக்கு ஒருவிதத்தில் காரணமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"தோல்விக்கு நானே பொறுப்பு", என்று தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறினார் 'தோல்விக்கு நானே பொறுப்பு' தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி அளித்த பேட்டியில் " நான் களத்தில் இருந்தபோது, 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஷாட்களை பெரிய ஷாட்களாக மாற்றியிருந்தால் அழுத்தத்தைக் குறைத்திருக்கலாம் என உணர்கிறேன். ஆதலால், தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். டெத் ஓவர்களில் ஷெப்பர்ட் அருமையாக பேட் செய்தார், நாங்கள் எப்படி பந்துவீசினாலும் அடித்தார். அதிகமான யார்கர்களை வீச இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும். யார்கர்களை வீசமுடியாவிட்டால் அது ஃபுல்டாஸாகி பேட்டர்களுக்கு வாய்ப்பாகிவிடும். பதிராணா பந்துவீச்சில் வேகம் இருக்கிறது, பவுன்ஸர் வீசுகிறார், யார்கர் இல்லை. பெரும்பாலான பேட்டர்கள் பேடில் ஸ்கூப் ஷாட் அடித்து பழகவில்லை, தற்போதுதான் பயிற்சி எடுக்கிறார்கள். பெரும்பாலும் ரிஸ்கான ஷாட் என்பதால் அதற்கு பேட்டர்கள் செல்வதில்லை. பேட்டிங்கில் நாங்கள் இன்னும் பின்தங்கியிருந்தோம். ஆனால், இன்று பேட்டிங் பிரிவு சிறப்பாக செயல்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். இன்றைய ஆட்டம் கொல்கத்தா vs ராஜஸ்தான் இடம்: கொல்கத்தா நேரம்: மாலை 3.30 பஞ்சாப் vs லக்னெள இடம்: தரம்சலா நேரம்: இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் நாள் – மே 6 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம் கொல்கத்தா vs சிஎஸ்கே நாள் – மே 7 இடம் – கொல்கத்தா நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs லக்னெள நாள் – மே 9 இடம் – லக்னெள நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? விராட் கோலி(ஆர்சிபி) 505 ரன்கள்(11 போட்டிகள்) சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-504 ரன்கள்(10 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 475 (11 போட்டிகள்) பர்ப்பிள் தொப்பி யாருக்கு? பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 19 விக்கெட்டுகள்(10 போட்டிகள்) ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்) நூர் அகமது (சிஎஸ்கே) 16 விக்கெட்டுகள்(11 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cly10mpnm3no
  18. 03 MAY, 2025 | 07:25 PM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்த பதற்றங்களின் எதிரொலியாக இலங்கையிலும் இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர கருத்து மோதல்கள் மோலோங்கியுள்ளன. இலங்கையை பொறுத்த வரையில் இரு நாடுகளுடனுமே சிறந்த உறவுகளை கொண்டுள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றங்களும் ஏற்பட கூடிய ஆயுத ரீதியிலான மோதல்களும், இலங்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது புவிசார் அரசியல் ஆய்வாளர்களின் எச்சரிக்கைகளாக உள்ளது. மறுபுறம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகளில் கடல் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலையிலிருந்து தான் இந்தியா இலங்கையுடன் புதிய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முன்னெடுத்துள்ளது. ஆனால் சீனா மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் முக்கிய போர் கப்பல்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதற்கு இந்த ஒப்பந்தம் தடையாக அமையலாம் என்பது பலரின் நிலைப்பாடாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில், அதாவது இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒப்பந்தங்களை செய்து, மிக குறுகிய காலத்திற்குள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மோதல்களின் எதிரொலியாக தற்போது இலங்கையிலும் இரு நாடுகளுக்கு இராஜதந்திர சொற்சமர் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இது குறித்து பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட அறிக்கையில், ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அப்பாவி மக்களை போராட்டத்தில் பங்கேற்கத் தூண்டியது மற்றும் நிதியுதவி செய்தது யார் என்பது இரகசியமான ஒரு விடயமல்ல என்றும், அங்கு வந்த அப்பாவி மக்களில் பெரும்பாலோருக்கு அவர்கள் எங்கே வந்தார்கள், எதற்காக வந்தார்கள் என்பது கூடத் தெரியாது. இந்த நடவடிக்கைகளைத் திட்டமிட்டு பிளவுகளை உருவாக்கும் சக்திகள், சமூகத்தின் நல்லிணக்கத்தைப் பற்றியோ அல்லது விதிகள் மற்றும் உள்நாட்டு சட்டங்களையோ மதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் எந்தவொரு பொறுப்புள்ள நாட்டையும் போலவே பாகிஸ்தானும் ஏற்கனவே இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த சம்பவம் குறித்து சுயாதீன விசாரணையை கோரியுள்ள நிலையில், இந்தியாவின் எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாகவும் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் மேற்படி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழலிலேயே இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொண்டா பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஆனால் இந்த விஜயத்திற்கு முன்பதாக பாகிஸ்தான் - இலங்கை படைகளுக்கு இடையில் முன்னெடுக்கப்படவிருந்த கூட்டு பயிற்சி நடவடிக்கை இந்தியாவின் அழுத்தத்தில் நிறுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் வீரகேசரிக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/213610
  19. 04 MAY, 2025 | 07:42 AM சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், லோரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராகிறார். சிங்கப்பூர் பொதுத் தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது. சிங்கப்பூர் பொதுத்தேர்தல் சனிக்கிழமை (3) இடம்பெற்றது. மொத்தம் 211 வேட்பாளா்கள் போட்டியிட்ட இந்தத் தோ்தலில் 97 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 12 உறுப்பினர்கள் நியமன அடிப்படையிலும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். அதன்படி சிங்கப்பூரில் 97 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இடம்பெற்றது. இதில் 30 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். காலை வாக்குப்பதிவு ஆரம்பமாகியதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்குகளைப் பதிவுசெய்தனர். இந்தத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே போட்டி நிலவியது. இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகியது. ஆளும் மக்கள் செயல் கட்சி 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. இதையடுத்து லோரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராகிறார். . பிரீத்தம் சிங் தலைமையிலான எதிர்க்கட்சி 26 தொகுதிகளில் போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிங்கப்பூரின் பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/213620
  20. ஆஸ்திரேலியாவில் ஆண்டனி அல்பனீசி அலை - தேர்தலில் அபார வெற்றி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆண்டனி அல்பனீசி 4 மே 2025, 02:37 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் பொதுத்தேர்தலில், பாரிய பெரும்பான்மையுடன் தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஆண்டனி அல்பனீசி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில், அடுத்தடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் முதல் பிரதமராக ஆண்டனி அல்பனீசி உள்ளார். "பிரதமராக பணியாற்றுவது எனது வாழ்வின் மிகப்பெரிய பெருமை. இந்த பூமியின் சிறந்த நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்வதற்கான வாய்ப்பளித்த ஆஸ்திரேலிய மக்களுக்கு நன்றி", என்று தனது வெற்றி உரையில் ஆண்டனி அல்பனீசி கூறினார். அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை இன்னும் முடியடையவில்லை, ஆனாலும் அல்பனீசி தலைமையிலான தொழிலாளர் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை பெற்றுள்ளது. அதே நேரத்தில் லிபரல்- தேசிய கூட்டணி நாடு முழுவதும் படுதோல்வி அடைந்துள்ளது. ஏபிசி செய்திகளின் கணிப்புகளின்படி, தொழிலாளர் கட்சி 85 இடங்களிலும், லிபரல்-தேசிய கூட்டணி 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது வரை 65 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக உலக பொருளாதார நெருக்கடி, மற்றும் அந்நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வந்த அதிருப்திக்குப் பிறகு, இந்த பொதுத் தேர்தலில் அல்பனீசி வெற்றி பெற்றிருப்பது முக்கிய திருப்புமுனையாக உள்ளது. மனிதனின் இடுப்பெலும்பில் சிங்கத்தின் பல்தடம் - ரோமானிய கிளாடியேட்டர் சண்டைகளுக்கு ஆதாரம்3 மே 2025 200 முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்தவர் - பாம்புக்கடி மருந்துக்கு உதவுவது எப்படி?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பீட்டர் டட்டன் சனிக்கிழமை (மே 3) அன்று, தனது வெற்றி உரையில் ஆண்டனி அல்பனீசி, தனது தேர்தல் பிரசாரத்தில் பேசப்பட்ட சில முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டார். அவற்றில் புலம்பெயர்வு, காலநிலை மாற்றம், எரிசக்தி ஆகியவை அடங்கும். அப்போது அவர் தேர்தல் வாக்குறுதிகளை மீண்டும் குறிப்பிட்டார் "சுகாதாரப் பராமரிப்பு செலவுகளைக் குறைப்பேன், குறிப்பாக பொது மருத்துவரை பார்ப்பது குறைந்த செலவில் இருக்க ஏற்பாடுகள் செய்து தருவேன். ஆஸ்திரேலிய மக்கள் பலர் சொந்தமாக வீடு வாங்குவதை எளிதாக்குவேன். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இன்னும் தீவிரமாக வேலை செய்வேன்", என்று அவர் உறுதியளித்தார். ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களுடன் நல்லிணக்கத்தை மேம்படுத்த உறுதியளித்தார். "பூர்வகுடி ஆஸ்திரேலிய மக்களுக்கும் மற்ற ஆஸ்திரேலிய மக்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும்போது நாம் ஒரு வலிமையான நாடாக இருக்க முடியும்", என்று அவர் கூறினார். ஆல்பனீசியின் மிக முக்கியமான முன்னெடுப்புகளில் ஒன்றாக "தி வாய்ஸ்" என்பது பூர்வகுடி மக்களின் கருத்துக்களை அரசாங்கத்திற்கு கொண்டு செல்லும் ஒரு அமைப்பு. ஆனால், பல மாதங்களாக நடந்த கடுமையான மற்றும் பிளவுபடுத்தும் தேசிய விவாதத்திற்குப் பிறகு, அது அந்நாட்டின் மக்களால் பெருமளவில் நிராகரிக்கப்பட்டது. இது அவருக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தக்க பின்னடைவாகும். உணவுடன் சேர்த்து காபி குடிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிக்கல்கள்2 மே 2025 சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடுவதால் ஆபத்தா? செய்யக் கூடாத 5 விஷயங்கள்1 மே 2025 தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஆல்பனீசிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறையத் தொடங்கியது. இதனால் அவர் இந்த தேர்தலில் தோல்வியடைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. எதிர்கட்சி கூட்டணியாக லிபரல் - தேசிய கூட்டணியின் தலைவரான பீட்டர் டட்டன் இந்த பொதுத் தேர்தலில், தான் போட்டியிட்ட தொகுதியியான டிக்சனில் தோல்வியடைந்தது எதிர்கட்சிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது. "நான் இந்த நாட்டை நேசிக்கிறேன், அதற்காக கடுமையாகப் போராடியிருக்கிறேன்," என்று பிரிஸ்பேனில் ஆதரவாளர்களிடம் பேசிய பீட்டர் டட்டன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். ''நம்மை எதிர்த்து போட்டியிட்டவர்கள், இந்த தேர்தலில் நம்மை பற்றி குறிப்பிட்டது உண்மையல்ல. ஆனால், நாம் மீண்டும் தொடங்கி கட்டியெழுப்புவோம். நாங்கள் இதை செய்வோம்,ஏனெனில் எங்களின் கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகள் குறித்து எங்களுக்கு தெரியும்.நாங்கள் தொடந்து அதில் உறுதியாக இருப்போம்''என்று அவர் தெரிவித்தார் பிரசாரத்தில், பீட்டர் டட்டன் செய்த சில தவறுகள் குழப்பத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, சில கொள்கைகளை மாற்றி மாற்றி சொன்னது, விலை வாசி போன்ற முக்கிய விஷயங்களை பேசும்போது தவறு செய்தது போன்றவற்றை குழப்பத்தை ஏற்படுத்தின. குறிப்பாக ஆஸ்திரேலியன் ஃபுட்பல் லீக் (AFL) போட்டி ஒன்றில் பந்தை கேமராமேனின் தலையில் அடித்தது போன்ற சம்பவங்கள் அவரது பிரசாரத்திற்கு பின்னடைவாக அமைந்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cly10zd5nwxo
  21. 03 MAY, 2025 | 07:32 PM “உழலை ஒழிக்கிறோம்” என நண்பர் அனுர கூறுவதை, நான் வரவேற்கிறேன். இது எனது கொள்கையும் ஆகும். ஆனால், இதை மட்டும் சொல்லி, நாள்தோறும் புது, புது பொய்களையும் சொல்லி, இனியும் நாட்டை நடத்த முடியாது. நாட்டின் முதல் முக்கியத்துவம் பொருளாதாரத்துக்கு வழங்கப்பட்டே ஆகவேண்டும். இல்லா விட்டால் வர்த்தகம், தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். மட்டக்குளியில் வெள்ளிக்கிழமை (02) நிகழ்ந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடும். பண புழக்கம் கணிசமாக குறையும். இந்திய பொருளாரத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி, விசேட வர்த்தக சலுகைகளை கோரி பெற்று முன்னேறுவோம் என்றால், அதை செய்ய அனுர அரசுக்கு பொருளாதார தூர நோக்கு இல்லை. ஆகவே, அடுத்த வருட முதல் காலாண்டில், பொருளாதார நெருக்கடிக்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதை எதிர் கொள்ள நாம் கூட்டாக தயாராவோம். இந்த அரசாங்கம் இலங்கை வரலாற்றில் மிக பெரும் பலத்துடன் ஆட்சிக்கு வந்தது. ஆனாலும், ஆறே மாதத்துக்குள், பொருளாதார துறையில் திக்கு முக்காடி நிற்கிறது. “அரசாங்க செலவை குறைக்கிறோம், உழலை ஒழிக்கிறோம், ஊழல் செய்தவர்களை வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறோம்” என்ற நண்பர் அனுரவின் அரசு சொல்வதை நான் நூற்றுக்கு நூறு வரவேற்கிறேன். இவை எனது கொள்கைகளும் தான். ஆனால், இதை மட்டும் சொல்லி, சொல்லி, நாட்டை நடத்த முடியாது. நாள்தோறும் பொய்களை மாத்திரம் சொல்லி அரசாங்கத்தை நடத்த முடியாது. நாட்டின் முதல் முக்கியத்துவம் பொருளாதாரத்துக்கு வழங்கபட்டே ஆகவேண்டும். ஆனால், அதை செய்ய அனுர அரசுக்கு தூர நோக்கு இல்லை. ஏற்றுமதியில் வீழ்ச்சி, வெளிநாட்டு மூலதனம் அறவே இன்மை, வேலை இழப்பு, பண புழக்கம் குறைவு என்பவற்றை தவிர்க்க இந்திய பொருளாரத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி விசேட வர்த்தக சலுகைகளை கோரி பெற்று முன்னேறுவோம் என்றால், அவை அரசாங்க செவிகளில் ஏறவில்லை. 2024ம் வருடம் 5 விகிதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2025ம் வருடத்தில் 3.5 விகிதமாக குறையலாம் என உலக வங்கி ஆரூடம் கூறியுள்ளது. ஜனாதிபதி ட்ரம்பின் வரி கொள்கை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் இருந்து இலங்கைக்கு முதலீடுகள் வருவது நின்று போய், இன்று கணிசமான இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலகங்களை இந்தியாவை நோக்கி கொண்டு செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆகவே, இவை எல்லாம் சேர்ந்து, அடுத்த வருட முதல் காலாண்டில், பொருளாதார நெருக்கடிக்கான வாய்ப்புகள் மிக அதிகம். இந்நிலையில், இன்று நாம் இடம்பெறும் அரசியல் கூட்டணியை மேலும் விரிவு படுத்தி ஊழல் இல்லாத, ஆனால், “அனுபவம், ஆற்றல்” கொண்ட மிகப்பெரிய அரசியல் கூட்டணியை கட்டி எழுப்பும் முயற்சிகளை நாம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டோம். மக்கள் ஆணையுடன் வந்துள்ள அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கம் எமக்கு கிஞ்சித்தும் கிடையாது. ஆனால், எமக்கான தேசிய பொறுப்புகளை நாம் நிறைவேற்ற தயங்க மாட்டோம். கொழும்பில் நாம் பலமாக இருக்க வேண்டும். இந்த தேர்தலில், கொழும்பு மாநகர சபை - தெகிவளை மாநகர சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளின் அனைத்து வட்டாரங்களிலும் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களியுங்கள். பாராளுமன்ற தேர்தலின் போது, வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தமையை தவிர்த்து, முகம் தெரியாத நபர்களுக்கு வாக்களித்தமையையும் நிவர்த்தி செய்து, இந்த தேர்தலில் அணிதிரண்டு வாக்களியுங்கள். இந்த முறை வாக்கு சீட்டில் விருப்பு வாக்கு இலக்கங்கள் இல்லை. வேட்பாளர் பெயர்கள் இல்லை. கட்சி சின்னங்கள் மாத்திரமே இருக்கும். ஆகவே சின்னங்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள் என்றார். https://www.virakesari.lk/article/213605
  22. 03 MAY, 2025 | 05:52 AM உண்மையை பேசும் உரிமைக்குரிய நாள்… ஜனநாயகத்தின் நான்காவது தூணின் பெருமைகளை பறைசாற்றும் தினம்… அரசுக்கும் மக்களுக்கும் இடையில் பாலமாக செயற்படும் ஊடகத்தின் தினம்… இப்படி இன்றைய நாளை பலவிதங்களிலும் தெளிவுபடுத்தலாம். ஆம்… சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று (3). உலகம் முழுவதும் வருடந்தோறும் மே மாதம் 3ஆம் திகதி சர்வதேச ஊடக சுதந்திர தினம் (World Press Freedom Day) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது ஊடகங்களின் சுதந்திரத்தை உறுதி செய்யவும், உண்மையை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பை கோரவும் கடைபிடிக்கப்படும் முக்கியமான நாள் எனலாம். ஊடகம் என்பது ஒரு ஜனநாயக நாட்டில், மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான பாலமாக உள்ளது. அந்த வகையில், உண்மை, நேர்மை, நடுநிலை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படும் ஊடகமே மக்கள் நலனுக்காகச் செயற்படும். இருப்பினும், இன்று உலகின் பல நாடுகளில் ஊடகங்கள் பல்வேறு அழுத்தங்களால் பாதிக்கப்படுகின்றன. சில இடங்களில் சுதந்திரமாக எழுதும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்படுவது, கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுவது, ஏன் கொலை செய்யப்படுவது வரை இடம்பெறுகின்றமை மறுப்பதற்கில்லை. எது எப்படியிருந்தபோதிலும், மக்களுக்கு உண்மையையும் தெளிவையும் கொடுப்பதில், ஊடகங்கள் எப்போதுமே பின்னிற்பதில்லை. சிலரைத் தவிர்த்து, மற்ற அனைத்து ஊடகவியலாளர்களுமே, மக்களுக்கான உண்மைத் தகவல்களை அவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டபடிதான் உள்ளார்கள் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக, ஊடகத்துறையானது பல்வேறு நாடுகளிலும், பல வகையான அழுத்தங்கள் மற்றும் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாகின்றன. இதை எதிர்க்கவும், ஊடக சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் பொருட்டுமே, மே 3ஆம் திகதி சர்வதேச ஊடக சுதந்திர தினம் (World Press Freedom Day) கொண்டாடப்படுகிறது. ஆரம்பம் 1993ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UN General Assembly) சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை அறிவித்தது. இது UNESCOவின் பரிந்துரையின் பேரிலேயே நடை பெற்றது. இந்த தினம், ஊடகங்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் மட்டும் அல்லாமல், தொழில்முறை ஊடகவியலாளர்கள் எதிர்கொள்வது போன்ற ஆபத்துகள், துன்புறுத்தல்கள், கொலைகள் போன்றவை குறித்தும் உலகின் கவனத்தை ஈர்க்கிறது. இந்நாள் சொல்வது என்ன? ஊடக சுதந்திரத்தை உரிமையாகவே பார்க்கும் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தொழில்முறை சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும். மக்களும் ஊடக சுதந்திரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து அதற்கான ஆதரவை வழங்க வேண்டும். சுயாதீன ஊடகங்களுக்கான ஆதரவைக் கட்டமைக்க வேண்டும். உண்மையை கூறும் ஊடகவியலாளர்களை மக்கள் தம்மால் இயன்றளவுக்கு ஆதரிக்க வேண்டும். சமூக ஊடகங்களில் பொய்கள் பரவாமல் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உண்மையான தகவல்களை மக்களுக்கு அளிப்பது ஊடகத்தின் கடமை. அரசியல் தூண்டுதல், வணிக அழுத்தம் அல்லது ஜனாதிபதிகள் கொண்ட கட்டுப்பாடுகளின்றி ஊடகம் இயங்க வேண்டும். ஊடக சுதந்திரம் இல்லையெனில் மக்கள் புலனாய்வில்லாமல் தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். ஊடகவியலாளர்கள் தங்கள் வேலையை பாதுகாப்புடன் செய்யும் உரிமை பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக, உண்மை பேசும் வாய்ப்பும், அதை பாதுகாக்கும் சமூகமும் அமையவேண்டிய மிக முக்கிய தேவையாகும். அந்த வகையில், உலக ஊடக சுதந்திர தினமானது, உண்மையை பேசும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்பதை நினைவூட்டும் நாளாகும். மொத்தத்தில், உண்மை பேசுவோருக்கு இடமளிக்கும் வகையில், சுதந்திரமாக இயங்கும் ஊடகமே, மக்களுக்கான உண்மையை வெளிக்கொணரும். உண்மை தேடும் ஒவ்வொரு காலத்திலும், ஊடக சுதந்திரம் ஒளி வீசும் தீபமாக இருக்க வேண்டும். "சுதந்திர ஊடகமே உண்மையின் குரல்!" https://www.virakesari.lk/article/213535
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருப்பு மாம்பா என்பது உலகின் மிகக் கொடிய விஷமுடைய பாம்பு என்று கூறலாம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர் பதவி, 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக தனது உடலில் பாம்பு விஷத்தை செலுத்திக்கொண்ட ஒரு அமெரிக்கரின் ரத்தம், பாம்பு விஷத்துக்கு எதிராக "அபூர்வமான" ஒரு புதிய எதிர்ப்பு மருந்தை உருவாக்க வழிவகுத்தது என்கிறார்கள் விஞ்ஞானிகள். டிம் ஃப்ரைடின் என்பவரின் ரத்தத்தில் இருக்கும் ஆன்டிபாடிகள் (உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு புரதம்) விலங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளில், பல்வேறு வகையான ஆபத்தான பாம்பு விஷங்களுக்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குவதாக தெரிய வந்துள்ளது. தற்போது பாம்புக்கடிக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில், எந்த வகை விஷப் பாம்பு கடித்ததோ, அதற்கு ஏற்ற வகையில் தான் மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஃபிரைட் கடந்த 18 ஆண்டுகளாக, எந்த வகையான விஷப் பாம்பு கடித்தாலும் வேலை செய்யக்கூடிய வகையில் அனைத்துக்கும் பொதுவான எதிர்ப்பு மருந்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். பாம்புக்கடியால் ஆண்டுதோறும் 14,000 உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. உயிர் பிழைப்பவர்களில் மூன்று மடங்கு மக்கள், உடல் உறுப்புகளை இழப்பது அல்லது நிரந்தரமாக செயலிழப்பது போன்ற கடுமையான விளைவுகளை எதிர்கொள்கிறார்கள். உலகின் மிக ஆபத்தான மாம்பா, நாகப்பாம்பு, தைபான், கிரெய்ட் போன்ற பல வகை பாம்புகளிலிருந்து தயாரித்த 700க்கும் மேற்பட்ட விஷ ஊசிகளை தானாகவே தனது உடம்பில் செலுத்தியுள்ள ஃபிரைட் , 200 தடவைக்கு மேல் பாம்பு கடிகளையும் எதிர்கொண்டுள்ளார். ஆரம்பத்தில் பாம்புகளை கையாளும் போது தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தனது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க விரும்பிய அவர் , தனது முயற்சிகளை யூடியூப்பில் ஆவணப்படுத்தத் தொடங்கினார். ஆனால், அடுத்தடுத்து இரண்டு நாகப்பாம்புகள் கடித்ததால் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டபோது, தான் ஆரம்ப காலத்தில் "முற்றிலும் தவறான முடிவு செய்துவிட்டேன்" என்கிறார் முன்னாள் லாரி மெக்கானிக்கான ஃபிரைட் . "நான் இறக்க விரும்பவில்லை. ஒரு விரலை இழக்க விரும்பவில்லை. வேலையை இழக்க விரும்பவில்லை," என்று அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். உலகின் பிற பகுதிகளுக்கு பாம்புக்கடிக்கு எதிரான சிறந்த சிகிச்சைகளை உருவாக்குவதே ஃபிரைடின் உந்துதலாக இருந்தது. "இது ஒரு வாழ்க்கை முறையாக மாறியது, நான் இருக்கும் இடத்தில் இருந்து 8,000 மைல்கள் தொலைவில் பாம்புக்கடியில் இறக்கும் மக்களுக்காக, என்னால் முடிந்தவரை கடினமாக தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தேன்." என அவர் விளக்குகிறார். பழங்கால அரங்கில் நடந்த மனித - சிங்க சண்டை: எலும்பில் பதிந்த வரலாறு!4 மணி நேரங்களுக்கு முன்னர் நச்சுப் பாம்புகள் நிறைந்த காட்டில் 500 நாட்கள் தப்பிப் பிழைத்த நாய் மீட்கப்பட்டது எப்படி?30 ஏப்ரல் 2025 'பூமிக்கு ஒரு பாதுகாப்புக் கவசம் உள்ளது' - பூமி பற்றிய 10 சுவாரஸ்யமான உண்மைகள்22 ஏப்ரல் 2025 'உங்களது ரத்தத்தில் சில துளிகளை பெற விரும்புகிறேன்' குதிரைகள் போன்ற விலங்குகளுக்கு சிறிய அளவில் பாம்பு விஷத்தை செலுத்துவதன் மூலம் பாம்பு கடிக்கான முறிவு மருந்து ( ஆன்டிவீனோம் ) தற்போது தயாரிக்கப்படுகின்றது. அந்த விலங்குகளின் நோய் எதிர்ப்பு அமைப்பு அந்த விஷத்தை எதிர்த்து ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. பிறகு அவற்றை சிகிச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் விஷமும், விஷத்துக்கான முறிவு மருந்தும் ஒரே வகையில் பொருந்த வேண்டும். ஏனென்றால் பாம்பு கடிக்கும்போது அதில் உள்ள விஷத்தின் நச்சுப் பொருட்கள் ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு மாறுபடும். ஒரே இனத்தைச் சேர்ந்த பாம்புகளில் கூட பரவலான வகைகள் உண்டு. இந்தியாவில் பாம்புகளிலிருந்து தயாரிக்கப்படும் விஷ முறிவு மருந்து, இலங்கையில் அதே இனத்தில் உள்ள பாம்பு கடித்தால் அதற்கு எதிராக குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கும். ஒரே நேரத்தில் பல வகையான நச்சுக் கூறுகளுக்கு எதிராக போராடக்கூடிய வகையில் "பரவலாகச் செயல்படும் ஆன்டிபாடிகள்" எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்து வகைகளை ஆய்வாளர்கள் தேடத் தொடங்கினர். இந்த ஆன்டிபாடிகள், ஒவ்வொரு நச்சுப் பொருளிலும் இருக்கும் தனித்துவமான பகுதிகளை அல்லாமல், பல வகை நச்சுகளில் பொதுவாக காணப்படும் பகுதிகளை குறிவைத்து தாக்குகின்றன. அப்போது தான் பயோடெக் நிறுவனமான சென்டிவாக்ஸின் தலைமை நிர்வாகி மருத்துவர் ஜேக்கப் கிளான்வில், டிம் ஃப்ரைடைக் குறித்து அறிந்து கொண்டார். "உலகத்தில் யாராவது பரவலாகச் செயல்படும் ஆன்டிபாடிகளை உருவாக்கியிருக்க வாய்ப்பு இருந்தால், அது அவராகத் தான் இருக்க வேண்டும் . அதனால் அவரை தொடர்பு கொண்டேன்," என்கிறார் ஜேக்கப் கிளான்வில். முதல் முறை அவரை அழைத்த போது, 'இது கொஞ்சம் விசித்திரமாக இருக்கலாம், ஆனால் உங்கள் ரத்தத்தில் சில துளிகளை சோதனைக்காக பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்று ஃப்ரைடிடம் கேட்டதாகக் கூறுகிறார் ஜேக்கப் . அதற்கு ஃப்ரைட் சம்மதம் தெரிவித்தார். இந்த ஆய்வில் அவர் மீது இன்னும் அதிகமான விஷம் செலுத்தப்படாமல், அவரது இரத்தம் மட்டும் எடுத்துக்கொள்ளப்படுவதால், அதற்கு முறையான அனுமதி கிடைத்தது. பட மூலாதாரம்,JACOB GLANVILLE படக்குறிப்பு, பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சைகளை உருவாக்க டிம் ஃப்ரைட் விரும்பினார். இந்த ஆராய்ச்சி, விஷ பாம்புகளின் இரண்டு குடும்பங்களில் ஒன்றான 'எலாபிட்களை' மையமாகக் கொண்டது. இதில் பவளப்பாம்புகள், மாம்பாக்கள், நாகப்பாம்புகள், தைபன்கள் மற்றும் கிரெய்ட்கள் போன்ற பாம்புகள் அடங்கும். எலாபிட்களின் விஷம் முதன்மையாக நியூரோடாக்சின்கள் மூலம் (நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்) தாக்குகின்றன. இது பாதிக்கப்பட்டவரின் உடலை முடக்கி, சுவாசிக்க தேவையான தசைகளை செயலிழக்கச் செய்யும்போது உயிருக்கு அச்சுறுத்தலாக மாறும். பூமியில் மிகக் கொடிய பாம்புகளில் ஒன்றாக உலக சுகாதார அமைப்பால் அடையாளம் காணப்பட்ட 19 எலாபிட் வகை பாம்புகளை ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்தனர். பின்னர், ஆராய்ச்சியாளர்கள் ஃப்ரைடின் இரத்தத்தை பரிசோதித்து, அவரது உடலில் இந்த விஷத்தை முறிக்க உதவும் எதிர்ப்பு சக்தியை கண்டறிய முயற்சித்தனர். அந்த ஆய்வில் இரண்டு வகையான நியூரோடாக்சின்களை எதிர்த்துப் போராடக்கூடிய இரண்டு சிறப்பு ஆன்டிபாடிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பின்னர் மூன்றாவது நியூரோடாக்சினை எதிர்க்கும் வகையில், பாம்பு விஷத்துக்கு எதிரான மருந்தை அவர்கள் உருவாக்கினர். அவர்களின் இந்த ஆராய்ச்சி, செல் இதழில் வெளியிடப்பட்டது. எலிகள் மீது செய்யப்பட்ட பரிசோதனைகளில், 19 விஷ பாம்புகளில் 13 வகை பாம்புகளின் விஷத்திலிருந்து எலிகள் உயிர் பிழைக்க இந்த மருந்து உதவியது. மீதமுள்ள ஆறு வகை பாம்பு விஷங்களுக்கு எதிராக அவை குறிப்பிட்ட அளவு பாதுகாப்பைக் கொண்டிருந்தன. இந்த எதிர்ப்பு மருந்து " ஒப்பிட முடியாத அளவுக்கு பாதுகாப்பை வழங்குகிறது". பல எலாபிட் பாம்புகளுக்கு எதிராக தற்போது "குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை" என்று மருத்துவர் கிளான்வில் கூறுகிறார். பட மூலாதாரம்,JACOB GLANVILLE படக்குறிப்பு,உலகளாவிய விஷ எதிர்ப்பு மருந்தை உருவாக்குவதற்கு ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆன்டிபாடிகளை மேலும் மேம்படுத்தி, நான்காவதாக ஒரு பொருளைச் சேர்ப்பது எலாபிட் பாம்பு விஷத்திற்கு எதிராக முழுமையான பாதுகாப்பை வழங்குமா என்பதைக் கண்டறியவும் இந்த ஆய்வாளர்கள் குழு முயற்சிக்கிறது. மற்றொரு வகையான விரியன் பாம்புகள், நியூரோடாக்சின்களை உருவாக்குவதை விடவும், இரத்தத்தில் ஹீமோடாக்சின்களை உருவாக்குவதன் மூலமாகவே அதிகம் தாக்குகின்றன. பாம்பு விஷத்தில் சுமார் ஒரு டஜன் நச்சுகள் உள்ளன. இதில் செல்களை நேரடியாக கொல்லும் சைட்டோடாக்சின்களும் அடங்கும். "அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் அந்த நச்சுக்கள் ஒவ்வொன்றிற்கும் எதிராக ஏதாவது ஒன்றை நாம் பெறுவோம் என நான் நினைக்கிறேன்," என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் பீட்டர் குவாங். மறுபுறம் ஃபிரைடின் இரத்த மாதிரிகளுக்குள் இதற்கான மருந்தைக் கண்டறிவதற்கான பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன . "டிம்மின் ஆன்டிபாடிகள் அசாதாரணமானவை. ஏனென்றால் பரந்த அளவிலான விஷங்களை அடையாளம் கண்டு செயல்படுவதற்கு அவரது நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார்" என்று பேராசிரியர் குவாங் தெரிவித்தார். எல்லா வகை விஷங்களுக்கும் எதிராக போராடக்கூடிய ஒரே ஆன்டிவீனோம் (எதிர்ப்பு மருந்து) அல்லது எலாபிட்களுக்கும் விரியன் பாம்புகளுக்கும் தனித்தனியாக ஒரு மருந்தை உருவாக்குவதே இறுதி நம்பிக்கையாக உள்ளது. பூமியில் முதல் உயிரினம் தோன்றியது எப்படி?20 ஏப்ரல் 2025 ஐன்ஸ்டீன் செய்த 3 'தவறுகள்' அறிவியல் உலகையே மாற்றிய கதை19 ஏப்ரல் 2025 மூளை வளர்ச்சி, அறிவாற்றலை மேம்படுத்த உதவும் முட்டை - எப்படி தெரியுமா?15 ஏப்ரல் 2025 இதுகுறித்து பேசிய லிவர்பூல் ஸ்கூல் ஆஃப் டிராபிகல் மெடிசின் நிறுவனத்தில் பாம்புக்கடியை பற்றிய ஆராய்ச்சி மற்றும் தலையீடுகளுக்கான மையத்தின் தலைவரான பேராசிரியர் நிக் கேஸ்வெல் கூறுகையில், "இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அளவு "மிகவும் புதுமையானது". இது ஒரு பயனுள்ள வழிமுறையாக இருக்க முடியும் என்பதற்கான "உறுதியான ஆதாரத்தையும்" வழங்குகிறது" என்றார். "இந்த ஆராய்ச்சி புதிய திசையில் இந்தத் துறையை முன்னேற்றுகிறது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை." ஆனால், "இன்னும் செய்யவேண்டிய வேலை அதிகமாக உள்ளது" என்றும், மனிதர்கள் பயன்படுத்துவதற்கு முன்பு இந்த ஆன்டிவீனோமை பெரிய அளவில் சோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கிறார். இதுகுறித்து ஃப்ரைட் கூறுகையில் இந்த நிலையை எட்டியது "என்னை நன்றாக உணர வைக்கிறது" என்கிறார். "நான் மனித குலத்திற்காக நல்லது செய்கிறேன், அது தான் எனக்கு மிகவும் முக்கியமானது. அதைப் பற்றிய பெருமை எனக்குள்ளது. இது மிகவும் நன்றாக உள்ளது". - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0r5lq1kk19o
  24. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மிக இளவயதுள்ள சிறுமிகள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாவது இந்த வழக்குகளிலிருந்து தெரியவந்துள்ளது (சித்தரிப்புப்படம்) கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் 2 மே 2025 கோவையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், ஒன்றரை மாத கர்ப்பமாகியுள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமியின் உறவுக்கார இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற பாதிப்புக்குள்ளாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இத்தகைய சிறுமிகளுக்கு, உடல், உளவியல் ரீதியான சிகிச்சையை தொடர்ந்து வழங்க வேண்டியது அவசியமென்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். கோவையைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தான் வசிக்கும் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் பகிர்ந்த தகவலின்படி, கடந்த வாரத்தில் அந்தச் சிறுமி கடும் வயிற்றுவலி என்று கூறியதையடுத்து, அவரின் பெற்றோர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அந்த சிறுமி ஒன்றரை மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. சிறுமியிடம் விசாரித்தபோது, இவர்களின் உறவினரான 20 வயது இளைஞர் இதற்கு காரணம் என தெரியவந்ததை அடுத்து, பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். மற்றொரு வழக்கில், கோவையில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளியின் தங்கையை, வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் தொந்தரவு செய்த 22 வயது இளைஞர் இதே நாளில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? கனவு நிறைவேறியதா?2 மே 2025 முகலாய பேரரசர் முகமது ஷாவிடம் இருந்து கோஹினூர் வைரத்தை சாதுர்யமாக கொள்ளையடித்த நாதிர் ஷா29 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ், அவருடைய மைத்துனர் பெனட் ஹாரீஸ் என்பவரும் போக்சோ சட்டத்தில் கடந்த மாதத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபகாலமாக கோவையில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கையும், அதில் கைதாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. அதிலும் சிறுமிகள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாவதும் இந்த வழக்குகளிலிருந்து தெரியவந்துள்ளது. விழிப்புணர்வு காரணமாகவே புகார்கள் அதிகரிப்பு! இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகர காவல்துறையின் மத்திய காவல் உதவி ஆணையர் சிந்து, ''இப்போது தான் பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அதிகமாகியுள்ளது என்று கூறமுடியாது. போக்சோ சட்டம் குறித்து பொதுமக்களிடம் எழுந்துள்ள விழிப்புணர்வு காரணமாகவே, பெற்றோர் துணிவுடன் வந்து புகார் கொடுக்கின்றனர். தற்போது 12 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து உறவினர் மீதே கூறப்பட்டுள்ள புகாரும் இந்த விழிப்புணர்வு காரணமாக தரப்பட்டிருப்பதுதான்.'' என்றார். முன்பு நிறைய குற்றங்களில் உறவினர்கள், நண்பர்கள் என்று கருதி, பலரும் புகார் கொடுக்காமல் தவிர்த்து வந்ததாகக் கூறும் உதவி ஆணையர் சிந்து, அதேபோல முன்பு தனியார் மருத்துவமனைகளில் நடந்த சட்டவிரோத கருக்கலைப்புகள் பற்றி தகவல் தராமல் இருந்ததாகவும், இப்போது எல்லோருமே முறையாக காவல்துறைக்குத் தகவல் தருவதும் இத்தகைய வழக்குகள் அதிகரிப்பதற்குக் காரணமென்று தெரிவித்தார். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ''இதுபோல நிறைய குற்றங்கள் குறித்து, காவல்துறையின் கவனத்துக்கு வந்தாலும், பல சம்பவங்களில் புகார் கொடுக்க பெற்றோர் மறுத்துவிடுகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் பெற்றோரே முன் வந்து புகார் கொடுத்து இருப்பதை ஒரு நல்ல மாற்றமாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'' என்றார். இந்த சிறுமிக்கு பெற்றோர் ஒப்புதலுடன் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டத்தில் அனுமதியிருப்பதாக உதவி ஆணையர் சிந்து தெரிவித்தார். அதே நேரத்தில் சில பெற்றோர் சிறு வயதிலேயே திருமண பந்தத்தைப் பற்றிப் பேசி முடிவு செய்வதும் இத்தகைய குற்றங்கள் நடக்க முக்கிய காரணமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். உணவுடன் சேர்த்து காபி குடிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிக்கல்கள்2 மே 2025 பாகிஸ்தான் சிந்து நதி நீர் பிரச்னையை சமாளிக்க இந்த 4 வாய்ப்புகளைக் கையிலெடுக்குமா?2 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப்படம் உடல்ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் என்ன? இந்த 12 வயது சிறுமிக்கு உடல் ரீதியான தொடர் சிகிச்சையும், கண்காணிப்பும், உளவியல் ஆலோசனையும் மிக அவசியமென்று பெண் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். ''12 வயது சிறுமியான அவருக்கு இந்த கர்ப்பம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். கரு கலைப்பு உடலை பெருமளவில் பலவீனப்படுத்தும் என்பதால், அந்த சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்புதான் மிக முக்கியம்.'' என்கிறார் மகப்பேறு மருத்துவர் உஷா. உடலியல் ரீதியாக அந்த சிறுமி மீள்வதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும் என்று கூறும் மருத்துவர் உஷா, சிறுமிக்குத் தேவையான உளவியல் ஆலோசனையும் கொடுத்தால் மட்டுமே முழுமையாக மீட்டெடுக்க முடியும் என்கிறார். மருத்துவர்களின் ஆலோசனைப் படி தொடர்ச்சியாக, அவர்கள் பரிந்துரைக்கும் காலம் வரை சிகிச்சையை பாதிப்புக்கு ஆளான சிறுமி பெற வேண்டும். பாதிப்புக்குள்ளான 12 வயது சிறுமிக்குத் தரப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பெண் மருத்துவர் ஹரிப்ரியா தேவி சஜாத், ''முதலில் அந்த சிறுமிக்கு இடமாறுதல் அவசியம். தற்போதுள்ள சூழ்நிலையில் அவரை கண்டிக்க வேண்டுமென்று நினைக்காமல், அவர் மீது தனி கவனம் செலுத்தி, அவருக்குள் இருக்கும் உடல்ரீதியான பாதிப்புகளை அறிய வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. உளவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம் என்றாலும், வீட்டிலுள்ள சூழ்நிலைதான் அவரை முழுமையாக மீட்டெடுக்க உதவும். அதை நல்ல விதமாக உருவாக்கித்தர வேண்டும்.'' என்கிறார். இதுபோன்ற பாதிப்புக்குள்ளாகும் சிறுமிகளுக்கு, அரசு மருத்துவமனையிலேயே உளவியல் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இருப்பதாகக் குறிப்பிடும் காவல் அதிகாரிகள், கோவை மாநகர காவல் துறை சார்பிலும் இளவயது பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் கவுன்சிலிங் கொடுப்பதற்கு மனநல ஆலோசகர்களை ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தனர். சிறுமிக்குத் தரப்பட வேண்டிய உளவியல் சிகிச்சை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மனநல மருத்துவர் சந்தோஷி, ''இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, அந்த சிறுமியின் தனிப்பட்ட பாதிப்பு, அவருக்கு நேர்ந்த அனுபவம், அவருக்குள் இப்போது இருக்கும் உணர்வு, அவருடைய புரிதல் திறன் ஆகியவற்றை அறிந்தபின்பே, அவருக்கு எவ்வாறு உளவியல் சிகிச்சை கொடுப்பது என்பதை முடிவு செய்ய முடியும். பொதுவாக எல்லோருக்கும் தருவது போன்ற சிகிச்சையை இந்த சிறுமிக்குத் தருவது பலன் தராது.'' என்கிறார். இந்த நேரத்தில் அவரை உடல்ரீதியாக பலப்படுத்துவதை விட உளவியல்ரீதியாக திடப்படுத்துவது அவசியம் என்கிறார் சந்தோஷி. இதில் மனநல மருத்துவர்களின் ஆலோசனை மிக முக்கியம் என்றாலும் அதை விட அதிமுக்கியமாகப் பங்களிக்க வேண்டியவர்கள் பெற்றோர்கள்தான் என மனநல மருத்துவர் சந்தோஷி கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cevdwplrz7vo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.