Everything posted by ஏராளன்
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
எதிரணிகளுக்கு ரோஹித் அடிக்கும் எச்சரிக்கை மணி - திட்டமிட்டு ராஜஸ்தானை வெளியேற்றிய மும்பை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் அணியில் ஒரு சிறந்த கேப்டன் இருந்தாலே அந்த அணி சிறப்பாகச் செயல்படும். ஆனால், 4 சிறந்த கேப்டன்களோடு ஓர் அணி செயல்பட்டால் எதிரணியின் நிலைமை என்ன ஆகும்! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா,டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஒரே அணியில் முழு ஃபார்மில் விளையாடும்போது எதிரில் இருப்பது எந்த அணியாக இருந்தாலும் அதன் நிலைமை சற்று கவலைக்குரியதுதான். அந்த நிலைதான் நேற்று ராஜஸ்தான் அணிக்கும் ஏற்பட்டது. தொடரில் இருந்து வெளியேறிய ராஜஸ்தான் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் மிரட்டலான ஃபார்முக்கு வந்துள்ளது. முதல் 5 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது மும்பை அணி. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி, ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய பிரமாண்ட வெற்றி முதலிடத்துக்கு மும்பையை உயர்த்தியது. மும்பை அணி 11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் 1.24 நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது. இந்தத் தோல்வியோடு ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பையயும் இழந்து 2வது அணியாக வெளியேறியது. இனி 8 அணிகளுக்குள் மட்டுமே போட்டி நடக்கிறது. இதில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணி ப்ளே ஆஃப் செல்ல உள்ளதால் அடுத்து வரும் ஆட்டம் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும். கடந்த 2008 மற்றும் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி இது போலத் தொடர்ந்து 6 போட்டிகளில் இப்போதுதான் வெல்கிறது. அதுமட்டுமல்ல 2021, ஏப்ரல் 17ஆம் தேதிக்குப் பிறகு ஏறக்குறைய 3 சீசன்களுக்கு பின், மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜெய்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 50வது லீக்ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது. 218 ரன்கள் எனும் இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 16.1 ஓவர்களில் 117 ரன்களுக்குள் சுருட்டி, 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வென்றது. மும்பை அணியைப் பொருத்தவரை 200 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டாலே பெரும்பாலும் தோற்றதில்லை. 200 ரன்களுக்கு மேல் சேர்த்து தொடர்ந்து 17வது முறையாக தோல்வியடையாமல் மும்பை அணியின் பயணம் நீள்கிறது. ப்ளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டு முதல் அணியாக வெளியேறும் சிஎஸ்கே - திட்டமிட்டு வீழ்த்திய ஸ்ரேயாஸ்1 மே 2025 சிஎஸ்கே-வை தோல்வியின் பிடியில் தள்ளி தொடரை விட்டே வெளியேற்றிய பஞ்சாப் கிங்ஸ்1 மே 2025 ரோஹித்தின் அச்சுறுத்தும் ஃபார்ம் பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை அணியில் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது ரோஹித் சர்மாவின் ஃபார்ம்தான். கடந்த 6 போட்டிகளிலும் ரோஹித் சர்மாவின் பேட்டிங் எதிரணிகளுக்கு அச்சுறுத்தும் விதத்தில் இருக்கிறது. இந்த சீசனில் ரோஹித் சர்மா தனது 3வது அரைசதத்தை நேற்று அடித்துள்ளார். 2020 ஐபிஎல் சீசனுக்கு பின் ரோஹித் சர்மா இதுபோல் 3 அரைசதங்களை அடித்தது இந்த சீசனில்தான். ரோஹித் சர்மா தொடக்க வீரராக இருந்து அரைசதம் அடித்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தாலே அடுத்து வரக்கூடிய சூர்யகுமார், ஹர்திக் போன்ற பெரிய ஹிட்டர்களுக்கு சுமை குறைந்துவிடும், அணியும் பெரிய ஸ்கோருக்கு செல்லும். இதைத்தான் கடந்த 6 போட்டிகளிலும் ரோஹித் சர்மா கச்சிதமாகச் செய்து வருகிறார். மும்பை அணியும் தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளது. தொடக்க வீரராக ரோஹித் சர்மா எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்துவிட்டு ஆட்டமிழந்தாலே மும்பை அணி பெரிய ஸ்கோரை எட்டிவிடும். "ஏதேனும் ஒன்று குறையென்றால் சமாளிக்கலாம்" விரக்தியின் உச்சத்தில் தோனி - கவுரவத்தை காப்பாற்றுமா சிஎஸ்கே வெற்றி - தோல்வி எதுவாக இருந்தாலும் தோனியை சிஎஸ்கே நம்புவது ஏன்? வைபவ் சூர்யவன்ஷி: 14 வயதில் உலக கிரிக்கெட்டை திரும்பிப் பார்க்க வைத்த விவசாயி மகன் உணவுடன் சேர்த்து காபி குடிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிக்கல்கள் சிக்ஸர் அடிக்காத ஹிட்மேன் பட மூலாதாரம்,GETTY IMAGES ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கத்தில் ரோஹித் சர்மா, ரெக்கில்டன் 3 ஓவர்கள் வரை நிதானமாக ஆடி 16 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தில் சூடுபிடித்து பவுண்டரிகளாக விளாசினார். ஒரு சிக்ஸர்கூட நேற்று ரோஹித் அடிக்கவில்லை 9 பவுண்டரிகள் மட்டுமே அடித்தார். ரோஹித் சர்மா 89 போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ஸ்கோர்களை அடித்துள்ளார், அதில் சிக்ஸர் அடிக்காமல் இருந்தது இது 3வது முறை. அது மட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவின் நேற்றை பேட்டிங் மிகவும் சீராக இருந்தது. ஆஃப்சைடிலும், லெக் சைடிலும் பந்துகளை நிதானமாக அடித்து ரன்களை சேர்த்தார். எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் ரோஹித் சர்மா நின்று பேட் செய்கிறார், விக்கெட்டை எளிதாக இழந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு ஷாட்களையும் தேர்ந்தெடுத்து பேட் செய்கிறார். ரோஹித் சர்மாதனது அரைசதத்தில் 59.1 சதவீதம் ரன்களை ஆஃப் சைடில் அடித்தார். ஏற்கெனவே இந்த சீசனில் அடித்த 2 அரைசதத்திலும் 42% மற்றும் 32% ரன்களை ஆஃப் சைடில் அடித்திருந்தார். ஜெய்பூர் ஆடுகளம் தட்டையானது, இதற்கு ஏற்றார்போல் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களும் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் பந்துவீசவே ரோஹித் சர்மாவை கிராஸ்பேட் போட்டு விளையாடுவதற்கும் ஏதுவாக இருந்தது. ஆர்ச்சர், பரூக்கி என வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை எளிதாக பவுண்டரிக்கு ரோஹித் சர்மா விரட்டினார். ஓட்டோமான் பேரரசின் அடிமைப்பெண் அரசியான கதை - ஹுர்ரெம் சுல்தானின் அறியாத பக்கங்கள்1 மே 2025 மும்பையில் பிறந்த அழகிய பென்குயின் குட்டிகள் - இந்தியாவுக்கு எப்படி வந்தன?1 மே 2025 நளினமான பேட்டிங் பட மூலாதாரம்,GETTY IMAGES எப்போதும் இல்லாத வகையில் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் நேற்று ஒரு நளினம் இருந்தது. அவரின் ஸ்குயர் லெக் ஷாட், பைன் லெக் ஷாட் பவுண்டரி, வழக்கமான கவர்ட்ரைவ், மிட்ஆப் ஷாட் என 32 ரன்களை ஆப்சைடு சேர்த்தார். டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வுக்குப் பிறகு ரோஹித் சர்மா இப்போதுதான் டி20 போட்டிகளில் விளையாடுகிறார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருந்து அதைக் குறையவிடாமல் ஐபிஎல் தொடருக்கும் எடுத்து வந்துள்ளார். இந்த சீசனில் இதுவரை கடைசி 6 போட்டிகளில் 3 அரைசதங்களை விளாசிய ரோஹித் சர்மா ஒரு ஆட்டநாயகன் விருது மட்டுமே வென்றுள்ளார். இந்த ஆட்டத்தின் மூலம் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6,024 ரன்களை எட்டியுள்ளார். ரோஹித் சர்மாவுக்கு முன்பாக விராட் கோலி ஆர்சிபி அணிக்காக 8871 ரன்கள் சேர்த்துள்ளார். முதல் 5 போட்டிகளில் ரோஹித் சர்மா 20 ரன்களைக்கூட எட்ட முடியாத நிலையில் அடுத்தடுத்து அரைசதங்களை அடித்து மிரட்டலான ஃபார்முக்கு ரோஹித் சர்மா வந்துள்ளார். அதிலும் நேற்றைய ஆட்டத்தில் தனது ஸ்ட்ரைக் ரேட்டும் குறையாமல், சிக்ஸரும் அடிக்காமல் ரோஹித் சர்மா ஆட்டத்தை நகர்த்திய விதம் அழகானது. ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் கச்சிதமடைந்து வருவது. அடுத்து வரும் போட்டிகளில் எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு இது ஓர் எச்சரிக்கை என்றும் சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். பெற்றோருக்கான ஓட்டப் பந்தயத்தில் கலக்கிய முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை24 ஏப்ரல் 2025 பெற்றோருக்கான ஓட்டப் பந்தயத்தில் கலக்கிய முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை24 ஏப்ரல் 2025 4 பேட்டர்களின் மிரட்டல் ஆட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை அணியின் தொடக்க ஆட்டக்கார்கள் ரோஹித் சர்மா(53), ரெக்கில்டன்(61), சூர்யகுமார்(48), ஹர்திக் பாண்டியா(48) என 4 பேட்டர்களுமே சேர்ந்து 200 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டனர். ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணியில் முதல் 4 பேட்டர்கள் 40 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 4வது முறை. கடைசியாக 2011இல் ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டர்கள் இதுபோல் முதல் 4 பேர் 40 ரன்கள் சேர்த்திருந்தனர். அதன் பிறகு 14 ஆண்டுகள் கழித்து இப்போது நடந்துள்ளது. முதல் விக்கெட்டுக்கு ரெக்கில்டன், ரோஹித் சர்மா அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 116 ரன்களில் பிரிந்தனர். இந்த ஃபார்ம் குறையாமல் அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் கொண்டு சென்றனர். வழக்கமாக ஹர்திக் 5வது அல்லது 6வது பேட்டராக களமிறங்குவார். ஆனால், பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் கேப்டனாக முன்வந்து பேட் செய்தார். சூர்யகுமார் யாதவ் களத்துக்கு வந்து முதல் 6 பந்துகளிலேயே தனது முதல் சிக்ஸரை விளாசினார். 360 டிகிரி பேட்டர் என்று கூறுவதற்கு ஏற்ப சூர்யகுமார் நேற்று களத்தில் உருண்டு, வித்தியாசமான முறையில் ஷாட்களை ஆடினார். ஆர்ச்சர் வீசிய யார்கர் பந்துகளை யார்கராக வரவிடாமல் கீழே உருண்டு அடித்த ஷாட்கள், தேர்டு மேன் திசையில் அடித்த ஷாட்கள் புதுவிதம். சூர்யகுமார் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 11 முறை 25 ரன்களுக்கும் மேலாக அடித்த வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் பெற்றார். ஹர்திக் பாண்டியா எந்த நோக்கத்துக்காக களமிறங்கினாரோ அதை நிறைவேற்றினார். ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். பரூக்கியின் 18வது ஓவரில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தி 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் 44 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்தனர். ஒரு இன்னிங்ஸில் மும்பை அணியில் முதல் 4 பேட்டர்கள் 40 ரன்களுக்கு மேல் சேர்த்தது இதுதான் முதல்முறை. வைபவ் சூரியவன்ஷிக்கு உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறும் அறிவுரை என்ன?29 ஏப்ரல் 2025 வெயிலுக்கு இதம் தரும் நுங்கை கடும் வெயிலில் விற்கும் பெண்ணின் ஒருநாள் போராட்டம்1 மே 2025 வைபஷ் சூர்யவன்ஷி ஏமாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை அணியில் 4 கேப்டன்கள் வியூகம் அமைக்கும்போது, முழுநேரம் இல்லாத, அனுபவமில்லாத கேப்டன் இருக்கும் ராஜஸ்தான் அணியை வீழ்த்துவது அவர்களுக்கு எளிதாக இல்லை. பவர்ப்ளே ஓவர்களிலேயே ஆட்டத்தின் பாதியை மும்பை பந்துவீச்சாளர்கள் முடித்துவிட்டனர். மும்பை அணி வீரர்களின் துடிப்பு, உச்சகட்ட உற்சாகம், ஃபீல்டிங்கை சரி செய்த 4 கேப்டன்கள், 4 கேப்டன்களின் உற்சாகப் பங்களிப்பு ராஜஸ்தானுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு பேட்டரையும் கட்டம் கட்டித் தூக்கி, 15 ஓவர்களுக்குள் ஆட்டத்தை முடித்தனர். குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்த 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி 2 பந்துகளில் டக்-அவுட் ஆகி தீபக் சஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜெய்ஸ்வால் அதிரடியாக 2 சிக்ஸர்களை போல்ட் பந்துவீச்சில் அடித்தாலும், அதே ஓவரில் போல்டாகி வெளியேறினார். போல்ட் மற்றும் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சில் பவர்ப்ளே முடிவதற்குள் ராஜஸ்தான் அணி 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஏறக்குறைய தோல்வியில் விழுந்தது. இந்த சீசனில் மும்பை அணி பவர்ப்ளே ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 3வது முறை. ராஜஸ்தான் அணியில் ஒரு பேட்டர்கூட போராட்ட குணத்தை வெளிப்படுத்தவில்லை. 20 ரன்கள்கூட எந்த பேட்டரும் சேர்க்காமல் தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறியது போல் இருந்தது. போல்ட், கரன் ஷர்மா தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கொல்கத்தா தீ விபத்து: சோகத்தில் முடிந்த தமிழக குடும்பத்தின் சுற்றுலா – பேரக்குழந்தைகளுடன் தாத்தா பலி2 மணி நேரங்களுக்கு முன்னர் சாதிவாரி கணக்கெடுப்பு: மோதி அரசின் நிலைப்பாடு திடீரென மாறியது ஏன்?1 மே 2025 மும்பை வெற்றி பெற்றது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக்குப் பிறகு மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், "நாங்கள் பேட் செய்த விதமும், பந்துவீச்சு அணுகுமுறையும் அற்புதமாக இருந்தது. இன்னும் கூடுதலாக 15 ரன்கள் சேர்த்திருக்க முடியும். நானும், சூர்யாவும் பேசிக்கொண்டுதான் ஷாட்களை ஆடினோம். ரோஹித் மற்றும் ரியான் அதேபோன்ற ஆட்டத்தை வழங்கினர். இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது. சூழலைப் புரிந்து அனைவரும் விளையாடினர். பேட்டர்கள் நல்ல ஃபார்முக்கு வந்துள்ளனர், நல்ல பேட்ஸ்மேன்ஷிப் தெரிகிறது. பந்துவீச்சாளர்கள் அனைவருமே பங்களிக்கிறார்கள். எளிதான கிரிக்கெட்டை ஆடுகிறோம், நல்ல பலன் கிடைக்கிறது. ஒவ்வோர் ஆட்டத்தையும் பணிவுடன், ஒழுக்கத்துடன் ஆடுகிறோம், வெற்றி கிடைக்கிறது" எனத் தெரிவித்தார். அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள் இன்றைய ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடம்: ஆமதாபாத் நேரம்: இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் நாள் – மே 6 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs சிஎஸ்கே நாள் – மே 3 இடம் – பெங்களூரு நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 475 (11 போட்டிகள்) சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-456 ரன்கள்(9 போட்டிகள்) விராட் கோலி(ஆர்சிபி) 443 ரன்கள்(9போட்டிகள்) நீலத் தொப்பி ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்) பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 17 விக்கெட்டுகள்(9 போட்டிகள்) டிரன்ட் போல்ட் (மும்பை) 16 விக்கெட்டுகள்(11 போட்டிகள்) - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g3kqpggvyo
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
சிஎஸ்கே-வை தோல்வியின் பிடியில் தள்ளி தொடரை விட்டே வெளியேற்றிய பஞ்சாப் கிங்ஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES 30 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து சென்னை அணியில் ஷேக் ரஷீத் , ஆயுஷ் மாத்ரே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிலையில், இருவருமே 11 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய சாம் கரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பிரீவிஸ் தவிர்த்து யாருமே 20 ரன்களை எட்டவில்லை. எனினும் தனி ஒருவனாக போராடிய சாம் கரன் 47 பந்துகளில் 88 ரன்களை எடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பிரீவிஸ் 26 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். எம்எஸ் தோனி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி எடுத்து 11 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய அன்சுல் கம்போஜ் வந்த தடமே தெரியாமல் டக் அவுட் ஆனார். பஞ்சாப் அணியின் யுஸ்வேந்திர சாஹல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். தீபக் ஹூடா, அன்சுல் கம்போஜ், நூர் அகமது ஆகியேரின் விக்கெட்டுகளை ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அவர் வீழ்த்தினார். 19.2 ஓவர்களில் சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சாஹல் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிராப்சிம்ரன் சிங் நல்ல தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், 41 பந்துகளில் 71 ரன்களைக் குவித்தார். 19.4 ஓவர்களிவ் பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் போட்டியில் பஞ்சாப் அணி தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மறுபுறம் சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று நடைபெற்ற போட்டி தவிர்த்து சிஎஸ்கே அணிக்கு இன்னும் 4 போட்டிகள் எஞ்சி உள்ளன. இந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால்கூட சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. "இதுபோன்ற டி20 தொடர்களில், ஏதாவது ஒரு சில குறைபாடுகள் இருந்தால் பரவாயில்லை, சமாளிக்கலாம். ஆனால் பெரும்பாலான வீரர்கள் நன்றாக விளையாடவில்லை என்றால் என்ன செய்ய முடியும். அணியில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்த முறையிலேயே போட்டிகளை விளையாட முடியாது." சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இவ்வாறு பேசியிருந்தார். "ஏதேனும் ஒன்று குறையென்றால் சமாளிக்கலாம்" விரக்தியின் உச்சத்தில் தோனி - கவுரவரத்தை காப்பாற்றுமா சிஎஸ்கே ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த கொல்கத்தா - ஆபத்பாந்தவனாக வழிநடத்திய சுனில் நரைன் வைபவ் சூரியவன்ஷிக்கு உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறும் அறிவுரை என்ன? வைபவ் சூர்யவன்ஷி: 14 வயதில் உலக கிரிக்கெட்டை திரும்பிப் பார்க்க வைத்த விவசாயி மகன் சேப்பாக்கத்திலேயே சிஎஸ்கே தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தது ரசிகர்களுக்குப் பெரிய வருத்தத்தையும், ஆதங்கத்தையும் அளித்து வருகிறது. சிஎஸ்கே போட்டி என்றால் டிக்கெட் கிடைக்காத நிலை இருந்த காலத்தில், இப்போது சிஎஸ்கே போட்டிக்கு டிக்கெட் விற்பனை மந்தமாக இருக்கும் நிலை வந்துவிட்டது. சி.எஸ்.கே அணி இந்த சீசனில் இதுவரை 21 வீரர்களை களமிறக்கியுள்ளது. ப்ளே ஆஃப் வாய்ப்பு அந்த அணிக்கு மங்கிவரும் நிலையில் இனி உள்ள ஆட்டங்களை மீதம் உள்ள புதிய வீரர்களை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பாக கருதி, சி.எஸ்.கே அவர்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு புறம் 11 புள்ளிகளை பெற்றுள்ள பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இன்று நடைபெறும் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c3wx07d0wgpo
-
இந்தியாவின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காசிநாத் செந்தில் மன்னாருக்கு விஜயம்!
Published By: DIGITAL DESK 2 01 MAY, 2025 | 04:35 PM இந்தியாவின் தமிழ்நாடு திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான காசிநாத் செந்தில் புதன்கிழமை (30) மாலை மன்னாருக்கு விஜயம் செய்தார். சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் ஏற்பாட்டில் பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை (30) மன்னார் பிரஜைகள் குழுவுக்கு விஜயம் செய்த அவர், குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர். மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/213420
-
யுக்ரைனுடனான கனிம வள ஒப்பந்தத்தில் அமெரிக்கா கைச்சாத்து!
அமெரிக்கா - யுக்ரேன் ஒப்பந்தம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மோதலுக்கு பின் புதிய திருப்பம் பட மூலாதாரம்,US DEPARTMENT OF THE TREASURY படக்குறிப்பு,யுக்ரேனில், நீடித்த அமைதி மற்றும் செழிப்புக்கு இரு தரப்பினரும் உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் (இடது)தெரிவித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ன்ட் டெபஸ்மேன் ஜூனியர், டாம் பேட்மேன் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பல மாதங்கள் நீடித்த பதற்றமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, யுக்ரேனின் கனிம மற்றும் எரிசக்தி இருப்புக்களை விற்பனை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் கிடைக்கும் லாபத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் யுக்ரேனும் அமெரிக்காவும் கையொப்பமிட்டன. யுக்ரேனின் பாதுகாப்பு மற்றும் மறுகட்டமைப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலீடு செய்வதற்கான பொருளாதார ஊக்கத்தை வழங்கும் நோக்கத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், யுக்ரேனுக்கு ஏற்கனவே தங்கள் நாடு செய்துள்ள உதவியின் அளவு தொடர்பான அமெரிக்காவின் கவலைகளை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. யுக்ரேனில் கிராஃபைட், டைட்டானியம், லித்தியம் என பல்வேறு முக்கியமான கனிமங்கள் பெருமளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கனிமங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ராணுவ தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு உள்பட பல முக்கியமான துறைகளுக்கு பயன்படும் என்பதால் இந்த கனிமங்களுக்கு சர்வதேச அளவில் தேவை அதிக அளவில் உள்ளது. ராஜேந்திர சோழன் காதலிக்காக கட்டிய காதல் சின்னம் பற்றி தெரியுமா?30 ஏப்ரல் 2025 நச்சுப் பாம்புகள் நிறைந்த காட்டில் 500 நாட்கள் தப்பிப் பிழைத்த நாய் மீட்கப்பட்டது எப்படி?30 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,EPA யுக்ரேனில், நீடித்த அமைதி மற்றும் செழிப்புக்கு இரு தரப்பினரும் உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். போரினால் சிதிலமடைந்திருக்கும் யுக்ரேனின் பொருளாதாரத்தை உத்வேகத்துடன் மேம்படுத்துவதற்காக முதலீட்டு நிதியை உருவாக்குவது தொடர்பாகவும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்க-யுக்ரேன் மறுசீரமைப்பு முதலீட்டு நிதியம், 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யா யுக்ரேன் மீது போர் தொடுத்ததிலிருந்து அமெரிக்கா வழங்கிய "குறிப்பிடத்தக்க நிதி மற்றும் பொருள் ஆதரவை" அங்கீகரிக்கிறது என புதன்கிழமை பிற்பகல் அமெரிக்க கருவூலம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம், ''யுக்ரேன் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய வைக்க, அதன் வளங்களை சிறப்பாக பயன்படுத்த உதவும்'' என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார். டிரம்ப் நிர்வாகம், முன்னெப்போதையும் விட யுக்ரேனுடன் நெருக்கமாகவும் ஒற்றுமையுடன் செயல்படுவதை இந்த அறிக்கை உணர்த்துகிறது. இது "ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்பை" குறிக்கிறது மற்றும் "ரஷ்யாவின் இந்த போர் முயற்சிக்கு நிதியளித்த அல்லது ஆதரவளித்த நாடுகளும், நபர்களும் மறுகட்டமைப்பட்ட யுக்ரேனால் பயனடைய முடியாது" என்று அமெரிக்காவின் அறிக்கை கூறுகிறது. அமெரிக்கா மற்றும் யுக்ரேன் இடையிலான இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா இதுவரை பதிலளிக்கவில்லை. வீட்டுக்குள் புகுந்து சறுக்கு மரத்தில் ஏறி விளையாடிய கரடி1 மே 2025 ரஷ்ய சூனியக்காரியா, சீமாட்டியா? ஹுர்ரெம் சுல்தான் ஓட்டோமான் பேரரசின் சக்தி வாய்ந்த பெண்ணாக வளர்ந்த கதை2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DANIEL WITTENBERG/BBC அமெரிக்காவிடம் இருந்து ராணுவ உதவியை பெறுவதற்காக யுக்ரேனுக்கு இந்த ஒப்பந்தம் மிகவும் அவசியமானது என கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக புதன்கிழமையன்று வாஷிங்டனுக்கு சென்ற யுக்ரேனின் துணைப் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ, "புதிய நிதியம், நமது நாட்டிற்குள் உலகளாவிய முதலீட்டை ஈர்க்கும்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் விதிகளை பட்டியலிட்ட யுக்ரேனின் துணைப் பிரதமர், கனிமங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான திட்டங்களையும் இது உள்ளடக்கும் என்றும், ஆனால் வளங்கள் யுக்ரேனின் சொத்தாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த கூட்டாண்மை, 50:50 அடிப்படையில் சமமாக இருக்கும் என்றார் அவர். இருப்பினும் யுக்ரேன் நாடாளுமன்றத்தால் இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், யுக்ரேனுக்கு அமெரிக்கா புதிய உதவிகளை வழங்கும் என்று கூறிய யுக்ரேனின் துணைப் பிரதமர், உதாரணமாக வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உதவிகள் கிடைக்கும் கூறினார். எதிர்காலத்தில் யுக்ரேனுக்கு எந்தவொரு பாதுகாப்பு உத்தரவாதங்களையும் வழங்குவதற்கு முன்நிபந்தனையாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை வலியுறுத்தியிருந்தார். முக்கியமாக, அமெரிக்கா எதிர்காலத்தில் வழங்கும் பாதுகாப்பு உதவிக்கு ஈடாக, யுக்ரேன் தன் நாட்டின் சில இயற்கை வளங்களை அணுக அமெரிக்காவை அனுமதிக்கும் என ஒப்பந்தத்தின் வரைவு குறிப்பிடுகிறது. சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடுவதால் ஆபத்தா? செய்யக் கூடாத 5 விஷயங்கள்3 மணி நேரங்களுக்கு முன்னர் இளம் மாணவர்களின் தற்கொலை எண்ணங்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், இது டிரம்ப் விரும்பியதை விட குறைவாகவே இருக்கும். போர் தொடங்கியதிலிருந்து வழங்கப்பட்ட அனைத்து அமெரிக்க ராணுவ உதவிகளுக்கும் யுக்ரேனிடம் இருந்து பணத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதே அமெரிக்காவின் இன்றைய அதிபரின் எண்ணமாக இருந்தது. யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியால் அமெரிக்காவிடம் இருந்து, சில சலுகைகளைப் பெற முடிந்தது. கடைசி நிமிட மாற்றங்களைச் செய்ய எதிர் தரப்பு முயற்சிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து ஒப்பந்தம் கையொப்பமாவதில் தாமதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்களை நன்கு அறிந்த ஒரு அமெரிக்க வட்டாரம், வார இறுதியில் செய்யப்பட்ட சில விதிமுறைகளை மீண்டும் மாற்ற யுக்ரேன் முயற்சித்ததாக விமர்சித்தது. இந்த ஒப்பந்தம் தொடர்பான குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளை விளக்கும் ஆவணங்களில் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் கடந்த வாரம் கையெழுத்திட்டனர் உண்மையில் ஆரம்ப ஒப்பந்தம் இந்த ஆண்டு பிப்ரவரியில் கையெழுத்திடப்படவிருந்தது. டிரம்ப், ஸெலென்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட சூடான விவாதத்தைத் தொடர்ந்து, ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டது. போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில், டிரம்பும் ஸெலென்ஸ்கியும் நேரில் சந்தித்துப் பேசிய சில நாட்களுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், யுக்ரேனில் போர் நிறுத்தத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES புதன்கிழமை மாலை நியூஸ் நேஷன் நெட்வொர்க்கிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், ஒப்பந்தத்தை இறுதி செய்யவேண்டும் என வாடிகனில் தான் ஸெலென்ஸ்கியை சந்தித்தபோது அழுத்தம் கொடுத்ததாகக் கூறினார். "இரு நாடுகளும் கையெழுத்திடுவதற்கு தேவையான ஒப்பந்தத்தை உருவாக்குவது ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என ஸெலன்ஸ்கியிடம் நான் தெரிவித்தேன்," என்றும், "ஏனென்றால் மிகப் பெரிய நாடான ரஷ்யா மிகவும் வலிமையானது, முன்னேறிச் செல்கிறது" என்றும் டிரம்ப் கூறினார், ரஷ்ய-யுக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து யுக்ரேனுக்கு வழங்கிய பல பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளுக்கான பலனை அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெறும் என்றும் "உண்மையில் செய்த உதவிகள் இன்னும் அதிகமாக" இருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் கூறினார். "உலகின் பல இடங்களில் இல்லாத பல அரிய பொருட்கள் அவர்களிடம் உள்ளன, அது அவர்களிடம் உள்ள ஒரு பெரிய சொத்து." பூமியில் அரிதாக இருக்கும் வளங்களில் 90 சதவிகிதத்தை வைத்திருக்கும் சீனாவுடன், வர்த்தகப் போரில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கும் இந்த சமயத்தில் யுக்ரேனுடனான அமெரிக்காவின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8ep3kj5e0ko
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
Published By: VISHNU 01 MAY, 2025 | 08:56 PM மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை அனுர அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தொழிலாளர்களிற்காக அன்று முதல் இன்றுவரை இந் நாட்டில் செயற்படுகின்ற ஒரே கட்சி தமிழ் அரசுக் கட்சி தான். தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான நம்பிக்கையை பெற்ற பிரதான கட்சியும் எமது கட்சி தான். இப்படியாக உழைக்கும் தொழிலாளர்களிற்காகவும் மக்களுக்காகவும் எப்போதும் உண்மையாக குரல் கொடுத்து வருகிற நிலையில் ஆட்சியில் உள்ள அனுரகுமார தரப்பினர் தொடர்ச்சியாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றி வருகின்றனர். இவ்வாறு கடந்த காலங்களில் ஏமாற்றியவர்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக கோட்டாபாய ராஜபக்ச 51 வீதத்திற்கு மேல் வாக்கெடுத்து ஐனாதிபதியாகிய போதும் அதே மக்களால் துரத்தியடிக்கப்பட்டதை பார்த்திருந்தோம். சிங்கள மக்களாலே தான் நான் வந்தேன் வந்தேன் என கூறிக் கொண்டிருந்த கோட்டாவிற்கே இதே கதி என்றால் கேவலம் வெறுமனே 42 வீதத்தில் வந்த உங்களுக்கு என்ன நடக்குமோ. ஆகவே பொய்யான வாக்குறுதி வழங்கி மக்களை ஏமாற்றுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்றாமல் உள்ளீர்கள். ஆக மொத்தத்தில் பொய்யான வாக்குறுதிகளையே வழங்கி உள்ளீர்கள். எனவே உங்கள் வழியை நீங்கள் சரி பண்ணாவிட்டால் உங்களுக்கும் இது தான் நடக்கலாம். பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றாதீர்கள். குறிப்பாக நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளில் மக்களின் காணிகள் மக்களிடமே வழங்கப்படும் என்று கூறியிருந்தீர்கள். படையினர் வசமுள்ள மக்கள் காணியை விரைவில் விடுவிப்போம் என்றும் கூறியிருந்தீர்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கு மாறாக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளீர்கள். உங்களுடைய இந்தச் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. உங்களது வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக கைவாங்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் யாழ் மண்ணிற்கு வரமுடியாமல் கால் வைக்க முடியாமல் செய்வோம். எங்களை ஏமாளிகள் என கருத வேண்டாம். ஏமாற்றுவதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை. அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம்.மேலும் இன்றைய மே நாளில் நாம் சில தீர்மானங்களையும் எடுத்துள்ளோம். குறிப்பாக இராணுவ கையிருப்பில் உள்ள எமது மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும், விலைவாசி உயர்வைக் குறைக்க வேண்டும், தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை எடுத்துள்ளோம். இன்றைக்கு நாட்டில் நாளாந்தம் விலைவாசி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் தேர்தல் வருகிறபோது குறைப்பது மாதிரி குறைத்துக் கொண்டாலும் மறுபக்கம் விலை வாசி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக சீனியை விட உப்பின் விலை அதிகரித்துள்ளது. அதிலும் ரஜலுணு என உப்பிற்கு ஒரு புதிய பெயரை வைத்தவர்கள் அதைப் பற்றிக் கேட்டால் பெயரைப் பார்க்காதீர்கள் ருசியைப் பாருங்கள் எனச் சொல்கிறார்கள். தமிழ் பெயரை சிங்களப் பெயராக அவர்கள் மாற்றுவார்களாம். அதைப் பற்றி கேட்டால் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். ஆக தமிழ் பெயரை அவர்கள் இங்கு மாற்றலாம். தாங்கள் தமிழ் பெயரை வைக்க தயாரில்லை. இவ்வாறானவர்கள் தான் எங்களுக்கு வந்து உபதேசம் செய்கிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாத்திலே இதெல்லாம் நடக்கிறதென்றால் இனி என்ன என்ன எல்லாம் நடக்க போகிறதோ என்று பார்க்கலாம். சர்வதேச நாணய நிதிய ஓப்பந்தம் தங்களது அடிப்படைக் கொள்கைக்கு மாறானது எனக் கூறி அதற்கு எதிராக நீதிமன்றம் வரை சென்றவர்கள் இன்றைக்கு அந்த ஒப்பந்தத்தில் எதனையும் மாற்றாது அப்படியே ஏற்றுக் கொண்டு செயற்படுகின்றனர். கடன் மறுசீரமைப்பு செய்கிற போது தொழிலாளர வர்க்கத்திற்கு செய்யும் துரோகம் என்று சொன்னவர்கள் அதனையே இன்று பெருமையாக பேசிவருகிற நிலைமையை காணக்கூடியதாக உள்ளது. தங்களை இடது சாரிகள் என காட்டிகொண்டு மோசமான ஆட்சி செய்பவர்கள் தான் இந்த அனுரகுமார ஆட்சியாளர்கள். உங்களது தலைவர் ரோஹன விஜயவீர தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்று கூறியிருக்கின்றார் என்றால் நீங்களும் உண்மையான இடதுசாரிகள் என்றால் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என சொல்லுங்கள். இல்லலாவிட்டால் சிவப்பு சட்டை அணிவதில் அர்த்தமில்லை தொழிலாளர்களுக்கு நன்மை அளிப்பதாக கூறிக் கண்டு முதலாளித்துவ கொள்கையில் பயணித்துக் கொண்டு தொழிலாளர்களுக்கு எப்படி நன்மையளிக்க முடியும். எனவே முதலாளித்துவ கொள்கையை விட்டு விலகி உங்களது பழைய ஆரம்பத்திற்கு வாருங்கள். லெலினிஸ கோட்பாட்டிற்கு வாருங்கள், சம்பள உயர்வு கொடுங்கள், அப்படியாக உங்களால் திரும்பி வர முடியாவிட்டால் மக்களிடம் செல்ல முடியாத நிலை உங்களுக்கு விரைவில் ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/213449
-
யாழ். காங்கேசன்துறை - நாகை இடையே சரக்குக்கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை - சுபம் கப்பல் நிறுவனத் தலைவர்
01 MAY, 2025 | 01:24 PM இந்தியாவின் நாகையிலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அதற்கான ஒப்புதல் பெறும் பணி நடைபெற்று வருவதாகவும் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியளவில் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் சுபம் கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தியாவின் நாகையில் இருந்து யாழ். காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இடம்பெற்றுவரும் நிலையில், பயண கட்டணத்தை குறைத்துள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் நாகையில் இருந்து யாழ். காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் கப்பல் நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகளை கவரும் நோக்கில் பயணக் கட்டணத்தை குறைத்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பயணிகள் கப்பல் நிறுவன தலைவர் சுந்தர்ராஜன் நாகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் கப்பல் பயணிகளுக்கு உதவும் வகையில் தற்போதைய கட்டணமான 8,500 ரூபா (இந்திய ரூபா மதிப்பில்) 8000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் 10 கிலோ எடையுடைய உடைமைகளை மட்டுமே கப்பலில் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை 7 கிலோ ஹேண்ட் பேக் எடையாகவும், 15 கிலோ செக் இன் எடையாகவும் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கவுள்ளோம். இது தவிர 15,000 ரூபாவுக்கு 2 இரவுகள் பயணம் உட்பட மூன்று நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம், 30,000 ரூபாவுக்கு 5 இரவுகள் 6 நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பேக்கேஜ் மூலம் ராமர் பாலத்தை நேரடியாக பார்வையிடவும், அதில் நடந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பேக்கேஜ் திட்டத்தில் இருவழி பயணக் கட்டணம், தங்கும் வசதி, போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்படும். அதேபோல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான ஒப்புதல் பெறும் பணி நடைபெற்று வருகிறது. எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியளவில் இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புகள் உள்ளன. அதுபோல் மே 2ஆவது வாரத்தில் 2ஆவது பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. இதில் 250 இருக்கைகளில், 220 எக்கனாமிக் இருக்கைகளும், 20 பிசினஸ் இருக்கைகளும், 10 சூட் ரூம்கள் வசதியும் இருக்கும். வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் கப்பல் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், இந்த 2ஆவது கப்பல் போக்குவரத்தானது புயல் சின்னம் உருவாகும் காலத்தை தவிர்த்து, ஆண்டு முழுவதும் மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் வகையிலான தரத்தில் உருவாக்கி வருகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/213409
-
அர்ச்சகர் பயிற்சி முடித்தும் கருவறைக்குள் செல்ல முடியாமல் தவிக்கும் அர்ச்சகர்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் பல காரணங்களால் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரத் தாமதமாகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 1 மே 2025, 06:49 GMT அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் மாணவர்கள், விரைவில் தங்களுக்குப் பணி வாய்ப்புகளை வழங்க வேண்டுமெனக் கோருகிறார்கள். ஆனால், பணிநியமனம் செய்யாததற்கு நீதிமன்ற வழக்குகளை அரசு காரணம் காட்டுகிறது. திருப்பத்தூரைச் சேர்ந்த மு. கோகுல்நாத் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமுடையவர். பர்வதமலை அடிவாரத்தில் இருந்த ஆதி சிவலிங்காச்சாரியார் குரு சுவாமி பீடத்தில் மந்திரங்களைக் கற்றுக் கொண்டிருந்தார். அவர் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கான விளம்பரத்தைப் பார்த்து, திருவண்ணாமலையில் இருந்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் 2022ஆம் ஆண்டில் இணைந்தார். 2023இல் படிப்பை முடித்து தீட்சையும் பெற்றார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகப் போகின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணி வாய்ப்பு வரும் எனக் காத்திருக்கிறார். "எப்போதாவது புரோகிதத்திற்கு அழைப்பார்கள். அங்கு செல்வேன். என் தந்தையார் செயின் பாலீஷ் போடும் கடை வைத்திருக்கிறார். மீதி நேரத்தில் அந்த வேலையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்கிறார். தான் படிப்பை முடித்தவுடன் எந்தக் கோவிலில் பணி செய்ய விருப்பம் போன்ற தகவல்களையெல்லாம் அதிகாரிகள் வாங்கிச் சென்றதாகக் குறிப்பிடும் அவர், அதற்குப் பிறகு அது தொடர்பாக ஏதும் நடக்கவில்லை என்கிறார். அர்ச்சகர் நியமனத்தில் ஏற்படும் தாமதங்கள் கோகுல்நாத்தாவது படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் 2007 - 2008ஆம் ஆண்டில் துவங்கிய முதல் பயிற்சி வகுப்பில் தனது அர்ச்சகர் படிப்பை முடித்தவர். இப்போது அவர் ராசிபுரத்திலேயே உள்ள சிறிய கோவில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். புரோகிதம் செய்யும் வாய்ப்பு வந்தால், அதற்கும் சென்று வருகிறார். "2007-2008இல் முடித்தவர்களில் 28 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களில் சிலர் இறந்துவிட்டனர். படித்து முடித்தவர்களில் 50 சதவிகிதம் பேர் புரோகிதம் போன்ற சின்னச் சின்ன வேலைகளைச் செய்து வருகின்றனர். பூணூல் எல்லாம் அணிந்து தீட்சை பெற்ற பிறகு, இதை விட்டுவிட்டுப் போக முடியவில்லை" என்கிறார் விஜயகுமார். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் பயிற்சிப் பள்ளிகளில் தங்கள் படிப்பை முடித்து, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இந்த இருவரைப் போல 200க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கிறார்கள். இவர்கள் கடவுள்களுக்கு பூஜை செய்யச் செல்வதற்கான பாதையின் வழியை வழக்குகள் மறித்து நிற்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் வகையில் 2006ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. இதற்கென அரசாணை ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத் திட்டம், பயிற்சிக் காலம், கோவில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து சில பரிந்துரைகளை அளித்தது. தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது எப்போது? சட்டமியற்றி 18 ஆண்டாகியும் என்ன சிக்கல்?10 நவம்பர் 2024 ரஷ்ய சூனியக்காரியா, சீமாட்டியா? ஹுர்ரெம் சுல்தான் ஓட்டோமான் பேரரசின் சக்தி வாய்ந்த பெண்ணாக வளர்ந்த கதை6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா vs பாகிஸ்தான்: ராணுவ பலம் யாருக்கு அதிகம்? அணு ஆயுதம் யாரிடம் எவ்வளவு உள்ளது?8 மணி நேரங்களுக்கு முன்னர் பயிற்சி முடித்தும் வேலைக்காக காத்திருக்கும் அர்ச்சகர்கள் படக்குறிப்பு,அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்றுள்ள அர்ச்சகர்கள் பணி நியமானத்திற்காகக் காத்திருக்கின்றனர். அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து, அவர்களை அர்ச்சகராக்கும் நோக்கத்தில், 2007ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி, திருவரங்கம், திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. அதில் திருவல்லிக்கேணி, திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ கோவில்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மீதமுள்ள நான்கு இடங்களில் சைவ கோவில்களுக்கான அர்ச்சகர் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. கடந்த 2007 - 2008ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்தப் பயிற்சிப் பள்ளிகள் துவங்கப்பட்டபோது, மொத்தமாக 240 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்களில் சிலர் நடுவிலேயே விலகிவிட, 207 பேர் பயிற்சியை மொத்தமாக முடித்து 2008இல் தீட்சை பெற்றனர். இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அரசின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து, தடை ஆணையைப் பெற்றது. இதனால், இந்த மாணவர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. "தமிழக கோவில்களில் ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்" உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெரிவித்தது. ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை என்ற கருத்து நிலவியதால், பணி நியமனம் போன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்ற 3 பெண் அர்ச்சகர்களின் பின்னணி என்ன? எதிர்ப்புகளை கடந்து சாதித்தது எப்படி? தமிழ்நாடு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் எப்படிச் செயல்படுகின்றன? பதின் வயது மாணவர்கள் விபரீதமான முடிவுகளை எடுப்பது ஏன்? தீர்வு என்ன? அர்ச்சகர் நியமனமும் சட்டப் போராட்டங்களும் படக்குறிப்பு,அர்ச்சகர் நியமனம் தொடர்பான பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 2019ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றும் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இருக்க வேண்டிய தகுதிகளை வரையறை செய்யும் விதிகளை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டது. அந்தப் புதிய விதிகளின்படி, அர்ச்சகராக சேருவோர் 18 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் ஆகமப் பள்ளிகளில் பயிற்சி பெறுவோராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்குப் பிறகு, இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இரு சிறிய கோவில்களில் இருவருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் பணிவாய்ப்புக்காகக் காத்திருந்த நிலையில், 2021இல் புதிதாகப் பதவியேற்ற தி.மு.க. அரசு, அதே ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி 28 பேருக்குப் பணி வாய்ப்பு வழங்கியது. இந்த நிலையில் இந்த நியமனங்களை எதிர்த்து மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து புதிய நியமனங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இருந்தபோதும், மீண்டும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை நடத்தத் துவங்கியது தமிழ்நாடு அரசு. 2022-23இல் 94 பேரும் 2023 - 24இல் 111 பேரும் அர்ச்சகர் பயிற்சியை முடித்தனர். 2024 - 2025இல் 95 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், அனைத்து சாதி அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்தும் அறநிலையத் துறையின் புதிய விதிகளை எதிர்த்தும் அகில இந்திய ஆதி சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். கடந்த 2022ஆம் ஆண்டில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தமிழ்நாடு அரசு விதித்த விதிகள் செல்லும் என்றும் ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் அந்தந்த ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் எந்தெந்த கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன, எந்தெந்த கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றவில்லை என்பது குறித்துக் கண்டறிய ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தலித்துகள் உட்பட பல சாதிகளை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம்: இதன் வரலாறு என்ன? ரஷ்ய சூனியக்காரியா, சீமாட்டியா? ஹுர்ரெம் சுல்தான் ஓட்டோமான் பேரரசின் சக்தி வாய்ந்த பெண்ணாக வளர்ந்த கதை சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடுவதால் ஆபத்தா? செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்ன? நீதிமன்ற தீர்ப்பால் ஏற்பட்ட இழுபறி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் நீதிமன்ற தீர்ப்புகளால் தாமதம் ஆவதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பு, தமிழ்நாடு அரசுக்கு வெற்றி என்பதைப் போலத் தோன்றினாலும் உண்மையில் அது வெற்றியல்ல என்கிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். "அதற்குக் காரணம், ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் ஆகம முறைப்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்லிவிட்டது. இதனால், ஆகம கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிலை இந்தத் தீர்ப்பால் ஏற்பட்டது" என்கிறார் அவர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்து சமய அறநிலையத் துறை மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால், சில வைதீக அமைப்புகள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. "இந்த வழக்கில் அவர்கள் செய்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தால்கூட அர்ச்சகர்களை அரசு நியமிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்" என்கிறார் வாஞ்சிநாதன். அடுத்ததாக, சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. சுகவனேஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் பணியிடங்களை நிரப்ப அந்தக் கோவிலின் செயல் அலுவலர் கடந்த 2018இல் அறிவிப்பாணை வெளியிட்டார். ஆனால் இந்த அறிவிப்பு ஆகம விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அந்தக் கோவிலில் பரம்பரை அர்ச்சகராகப் பணியாற்றி வரும் முத்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், "ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்கலாம். அதற்கு சாதி தடையாக இருக்காது" என்று தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்துச் செய்யப்பட்ட மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் விவகாரம்: அரசின் விதி செல்லும் - உயர் நீதிமன்றம் நிர்மலா சீதாராமன் பேசுவது போல ஏஐ வீடியோ: ஆன்லைன் மோசடியில் ரூ.33 லட்சத்தை இழந்த காங்கிரஸ் நிர்வாகி "பாதுகாப்புக்கு ஒருவர் கூட இல்லை, போலீஸ் வர 1 மணி நேரம்" - தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டின் போது பைசரனில் நிலை இது தான் நிலுவையில் உள்ள வழக்குகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அர்ச்சகர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. பல மேல்முறையீட்டு மனுக்களும் நிலுவையில் உள்ளன. மேலும், திருச்சி வயலூர் கோவிலில், அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின் கீழ் இரு அர்ச்சகர்களை நியமித்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அந்த நியமனங்கள் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அர்ச்சகர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தை அணுகி, அந்தத் தீர்ப்பிற்குத் தடையாணை பெறப்பட்டுள்ளது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இப்படி அனைத்து சாதி அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாகப் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பயிற்சி முடித்தவர்களின் காத்திருப்பு நீண்டுகொண்டே போகிறது. "நாங்கள் அரசை நம்பிப் படித்தோம். இதுவரை வேலை கோரி மனு அளிப்பதைத் தவிர எந்தப் போராட்டங்களிலும் நாங்கள் ஈடுபட்டதில்லை. எங்களுக்கு அரசுதான் உதவ வேண்டும். அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணி வாய்ப்பு வழங்கப்படும் வரை எங்களுக்கு ஏதாவது ஒரு உதவித் தொகையை அரசு வழங்க வேண்டும். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் எங்களுக்கு அதுவொரு சிறிய ஆறுதலாகவேனும் இருக்கும்" என்கிறார் விஜயகுமார். இந்த விவகாரம் தொடர்பாகக் கேட்க இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர், இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர் பாபு ஆகியோரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இத்துறையின் கூடுதல் தலைமைச் செயலரான கே. மணிவாசனிடம் இது குறித்துக் கேட்டபோது இது தொடர்பான வழக்குகளை தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக நடத்தி வருவதாகத் தெரிவித்தார். "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகள் முடிவுக்கு வந்தால்தான் இந்த விவகாரத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். புதிய நியமனங்களை மேற்கொள்ள முடியும். இந்த விஷயத்தில் அரசு தீவிரமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும்போதும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வழக்கை எதிர்கொள்கிறோம்" என்கிறார் கே. மணிவாசன். இடைப்பட்ட காலத்தில் அந்த மாணவர்கள் உதவித்தொகை கோருவது குறித்துக் கேட்டபோது, "அதில் அரசுதான் முடிவெடுக்க வேண்டும். என்ன நடக்கிறதென பார்க்கலாம்" என்று மட்டும் பதிலளித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crld7g48n41o
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
STRATEGIC TIMEOUT 49th Match (N), Chennai, April 30, 2025, Indian Premier League PBKS chose to field. Chennai Super Kings (14/20 ov) 126/3 Current RR: 9.00 • Last 5 ov (RR): 46/0 (9.20) Live Forecast: CSK 184 Punjab Kings
-
36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!
இந்தியா ராணுவ தாக்குதலுக்கு திட்டமிடுவதாக பாகிஸ்தான் சந்தேகிப்பது ஏன்? என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY/X.COM/TARARATTAULLAH படக்குறிப்பு,பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பை தொடர்ந்து, தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் (வலதுபுறம்), இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று கூறியுள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், தில்நவாஸ் பாஷா பதவி, பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மோதல் தொடர்பான அச்சங்களுக்கு மத்தியில், இரு நாடுகளும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டுமென உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. திங்களன்று (ஏப்ரல் 28), சீனா, அமெரிக்கா, துருக்கி, கத்தார் ஆகிய நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தன. இருப்பினும், கடந்த பல நாட்களாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LOC) இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் போரின் விளிம்பில் நிற்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. மேலும் அடுத்த சில நாட்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவால் நடவடிக்கையும் எடுக்க முடியுமா? இதுதொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தனது சமீபத்திய அறிக்கையில் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அவரது அறிக்கைகளுக்குப் பிறகு, புதன்கிழமை (ஏப்ரல் 30) அதிகாலையில், பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் ஓர் அறிக்கையை வெளியிட்டார். பாகிஸ்தான் மீதான இந்தியாவின் (சாத்தியமான) தாக்குதல் குறித்த அவரது அறிக்கை, இந்திய நேரப்படி அதிகாலை 3:09 மணிக்கு வெளியானது. தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவேற்றிய அவர் உருது மொழியில் ஒரு பதிவையும் வெளியிட்டார். அதில், 'அடுத்த 24 முதல் 36 மணிநேரத்திற்குள் இந்தியா பாகிஸ்தானை தாக்கக்கூடும்' என்று அவர் கூறினார். "பாதுகாப்புக்கு ஒருவர் கூட இல்லை, போலீஸ் வர 1 மணி நேரம்" - தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டின் போது பைசரனில் நிலை இது தான்2 மணி நேரங்களுக்கு முன்னர் "பாகிஸ்தான் மட்டுமல்ல சீனாவுக்கே அழுத்தம் கொடுக்கலாம்" - விக்ராந்துக்கு துணையாக வருகிறது ரஃபேல்-எம்29 ஏப்ரல் 2025 பஹல்காம் தாக்குதல் நடந்த பகுதி பாதுகாப்பின்றி இருந்தது ஏன்? விடை கிடைக்காத 3 கேள்விகள்29 ஏப்ரல் 2025 பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியது என்ன? பாகிஸ்தான் மீது இந்தியா 'உடனடி நடவடிக்கை எடுக்கக்கூடும்' என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். திங்கள் கிழமையன்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "உடனடியாக ஏதாவது நடக்கலாம் என்பதால் எங்கள் படைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். இத்தகைய சூழ்நிலையில், சில மூலோபாய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அவை எடுக்கப்பட்டுள்ளன," என்றார். இந்தியாவின் சாத்தியமான தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம், அரசை எச்சரித்துள்ளதாகவும் கவாஜா ஆசிப் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் இந்தப் பேட்டியில், 'பாகிஸ்தானின் இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தால், அந்தச் சூழ்நிலையில் மட்டுமே பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும்' என்றும் கவாஜா ஆசிப் கூறினார். இதில் மூலோபாய முடிவுகளை எடுப்பது பற்றி கவாஜா ஆசிப் பேசியுள்ளார். இது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் தனது ராணுவ இருப்பை அதிகரித்து வருவதைக் குறிக்கிறது. ஆனால், இந்த நேர்காணலுக்குப் பிறகு எக்ஸ்பிரஸ் டிரிப்யூனுக்கு அளித்த பேட்டியில், 'அடுத்த இரண்டு-நான்கு நாட்களில் போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற தனது அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக' கவாஜா ஆசிப் கூறினார். பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனலான சாமா டிவியிடம் பேசிய கவாஜா ஆசிப், "நாம் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். போர் அச்சுறுத்தல் எழுந்து வருகிறது" என்றார். ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், "அடுத்த இரண்டு-மூன்று அல்லது நான்கு நாட்களில் நாம் போரில் இறங்க வாய்ப்புள்ளது" என்றார். பின்னர் அவர் ஜியோ நியூஸிடம் பேசுகையில், "போர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. எனவே அடுத்த இரண்டு-மூன்று நாட்கள் முக்கியமானவை என்று நான் சொன்னேன். ஏதாவது நடக்க வேண்டுமெனில், அது அடுத்த இரண்டு-மூன்று நாட்களில் நடக்கும்" என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான நிலைமை மாறிவிட்டதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். தனது அறிக்கையை, 'ஒரு போர் நடக்கப் போகிறது என்ற கணிப்பாகக் கருதக்கூடாது' என்றும், அடுத்த இரண்டு-மூன்று நாட்கள் முக்கியமானவை என்பதையே தான் குறிப்பிட்டதாகவும் கவாஜா ஆசிப் கூறினார். பதற்றங்களைத் தணிக்க நட்பு நாடுகளை பாகிஸ்தான் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறினார். வளைகுடா நாடுகள் மற்றும் சீனாவுடன் பாகிஸ்தான் பேசியுள்ளதாகவும், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் நிலைமை குறித்து விளக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். கவாஜா ஆசிபின் இந்தக் கருத்துகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். "பஹல்காம் சம்பவத்தை ஒரு சாக்காகக் கொண்டு அடுத்த 24 முதல் 36 மணிநேரத்திற்குள் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கு நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. எந்தவொரு தாக்குதலுக்கும் தீர்க்கமாக பதிலடி கொடுக்கப்படும். பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய பேரழிவுகரமான விளைவுகளுக்கு இந்தியாவே பொறுப்பாகும்" என்று தரார் தெரிவித்திருந்தார். இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,இந்திய பிரதமர் நரேந்திர மோதி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) அன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். ஏப்ரல் 22 அன்று, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உள்ளூர் காஷ்மீரி ஒருவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுப்பதாக இந்தியா அறிவித்தது. இதில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கான விசாக்களை ரத்து செய்வது ஆகியவை அடங்கும். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் இந்திய குடிமக்களின் விசாக்களை ரத்து செய்து, சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், சிந்து நதியின் நீரை இந்தியா நிறுத்தினால், பாகிஸ்தான் அதை ஒரு 'போர் நடவடிக்கையாகக்' கருதும் என்று கூறப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு தனது முதல் பொது அறிக்கையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, 'குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்' என்று கூறினார். இருப்பினும், பஹல்காம் தாக்குதலில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சூழ்நிலைகள் மாறிவிட்டனவா? சமீப காலமாக, ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையைக் கொண்டு வருவதில் இந்தியா முனைப்போடு இருந்தது. இந்த ஆண்டு அங்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அரசாங்கம் கூறுகிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான நிலைமை மாறிவிட்டதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். "பஹல்காம் தாக்குதல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று நியூஸ்வீக்கில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் தெற்காசிய நிபுணர் மைக்கேல் குகல்மேன் தெரிவித்திருந்தார். "கடந்த 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது. தாக்குதல்களின் இலக்கு மற்றும் அளவைக் கருத்தில் கொண்டு, இந்தியா பலமாக பதிலடி கொடுக்கும் என்பது உறுதி" என்று அவர் கூறியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சஞ்சய் லேலேவின் குடும்பத்தினர் 'தி கார்டியன்' பத்திரிகையிடம் பேசிய மைக்கேல் குகல்மேன், "இந்தியாவின் பார்வையில், பொதுமக்களின் அழுத்தம் மற்றும் தாக்குதலின் அளவைக் கருத்தில் கொண்டு, ஒருவித ராணுவ நடவடிக்கைக்கு வாய்ப்பு அதிகம். இது நடந்தால், பாகிஸ்தான் பலவீனமாகத் தோன்ற விரும்பாது. பாகிஸ்தானும் பதிலடி கொடுக்கும் என்பது உறுதி" என்றார். இந்தச் சூழ்நிலையில், இந்தியா அல்லது பாகிஸ்தானின் எந்தவொரு தவறான மதிப்பீடும் மேலும் சிக்கல்களை உருவாக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். "ஒரு வலுவான எதிர்வினையை நாம் காண முடிகிறது. இந்தியாவின் உறுதியை இந்தியர்களுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கும் அறிவிக்கும் விதமாக அமையக்கூடிய ஒரு எதிர்வினை" என்று ராணுவ நிபுணர் ஸ்ரீநாத் ராகவன் பிபிசியிடம் கூறினார். 2016 செப்டம்பரில் ஜம்மு காஷ்மீரின் யூரியில் உள்ள ராணுவ முகாம் மீதான தாக்குதலில் 19 வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக இந்தியா கூறியது. இதற்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வாகனத் தொடரணி மீதான தாக்குதலுக்குப் பிறகு, பிப்ரவரி 2019இல், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலகோட்டில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இந்தியா கூறியது. "2016 முதல், குறிப்பாக 2019 வரை, பதிலடி கொடுக்கும் அளவு என்பது எல்லை தாண்டிய தாக்குதல் அல்லது வான்வழித் தாக்குதல்களை எட்டியுள்ளது. எப்போதும் போல, ஆபத்து என்னவென்றால் இரு தரப்பிலிருந்தும் தவறான கணக்கீடுகள் இருக்கலாம்" என்று ஸ்ரீநாத் ராகவன் கூறுகிறார். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தால் அமெரிக்கா யாரை ஆதரிக்கும்?29 ஏப்ரல் 2025 பஹல்காம்: மரண ஓலத்தின் மத்தியில் உயிர்காத்த குதிரைக்காரர்கள் – நெகிழ வைக்கும் காணொளி25 ஏப்ரல் 2025 பாகிஸ்தானில் பதற்ற நிலையா? பட மூலாதாரம்,YOUTUBE/@ISPR படக்குறிப்பு,பாகிஸ்தான் ராணுவ தலைமை ஜெனரல் அசிம் முனீர் போர் அச்சங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானிடம் இருந்து வரும் அறிக்கைகள் அந்நாட்டில் பயம் அல்லது அமைதியின்மை நிலவுவதைப் பிரதிபலிக்கின்றனவா? இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பாகிஸ்தான் தயாராக இருப்பதாகக் காட்ட முயல்வதே இந்த அறிக்கைகளின் அர்த்தம் என்று ராணுவ ஆய்வாளர்கள் நம்புகின்றனர். "பாகிஸ்தான் இதுபோன்ற அறிக்கைகள் மூலம், தனது அரசாங்க மற்றும் ராணுவ மட்டத்தில் அனைத்திற்கும் தயார் நிலையில் உள்ளது என்பதையும், பாகிஸ்தான் தாக்கப்பட்டால், அந்நாடு அமைதியாக இருக்காது, பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது என்பதையும் இந்தியாவுக்கு சொல்ல விரும்புகிறது" என்று ராணுவ நிபுணர் அஜய் சுக்லா கூறுகிறார். இந்தியாவுடன் ராணுவ மோதலில் ஈடுபடும் திறன் தங்களுக்கு இருப்பதாகக் காட்டவும் பாகிஸ்தான் முயல்வதாக அஜய் சுக்லா கூறுகிறார். "பாலகோட் தாக்குதலின்போது, பாகிஸ்தான் இந்திய விமானப் படையின் ஒரு போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. தங்களது ராணுவத் திறன் குறித்த எந்தச் சந்தேகமும் வேண்டாம் என்பதைக் காட்ட பாகிஸ்தான் முயல்கிறது" என்று அஜய் சுக்லா கூறுகிறார். இந்தியா, பாகிஸ்தான் படைகளுக்கு இடையிலான சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்துப் பேசிய அவர், "இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நிறுத்தப்பட்டுள்ள படைகளுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மிகவும் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது" என்றார். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை குறித்துப் பேசிய அஜய் சுக்லா, "பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களின் அறிக்கைகளை நாம் நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் இந்தியாவின் நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாகக் கூறினால், நாம் பின்வாங்கப் போகிறோம் என்று நினைக்கக் கூடாது" என்றார். பஹல்காமில் கொல்லப்பட்டவரின் மனைவி பாஜக அமைச்சரிடம் கொந்தளித்துப் பேசியது என்ன?25 ஏப்ரல் 2025 'கனடாவில் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது' - கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?25 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு அதிகம் என்று அஜய் சுக்லா நம்புகிறார். "இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானும் இந்தியாவும் வெளியிட்ட அனைத்து அறிக்கைகளும் இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்பதையும், பஹல்காம் உயிரிழப்புகளுக்குப் பழிவாங்கப்படும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதலுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. பாலகோட் சம்பவத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே இவ்வளவு பதற்றம் இருந்ததில்லை" என்று அவர் கூறுகிறார். அஜய் சுக்லாவின் கூற்றுப்படி, இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒரு ராணுவ மோதல் நடக்கவிருப்பதற்கான அனைத்து அறிகுறிகளும் உள்ளன. மறுபுறம், பாகிஸ்தானின் காயிதே ஆசாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ராணுவ விவகாரங்களில் நிபுணருமான டாக்டர் சல்மா மாலிக், "பாகிஸ்தானில் பயமோ, அமைதியின்மையோ, பீதியோ இல்லை. வரவிருக்கும் சூழ்நிலைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. இதைத்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்" என்று கூறுகிறார். "பாகிஸ்தான் மக்களிடம் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், நாங்கள் எந்தச் சூழ்நிலைக்கும் தயாராக இருக்கிறோம் என்று கூறுகிறார். இந்தியா நட்புக்கரம் நீட்டினால், அது நட்புக்கானதாக இருக்கும். தாக்குதல் நடந்தால், அதற்கும் நாங்கள் தயாராக இருப்போம்" என்று அவர் கூறுகிறார். "பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்க்க விரும்புகிறது, ஆனால் போர் ஏற்பட்டால், அது அதற்கு முழுமையாகத் தயாராக உள்ளது. பாகிஸ்தான் பயப்படுவதாகப் புரிந்து கொள்ளக்கூடாது. பாகிஸ்தான் போர் குறித்துப் பேசவில்லை, இந்தியா தரப்பில் ஏதேனும் நடவடிக்கை இருந்தால், பாகிஸ்தான் அதற்கு பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது என்றுதான் கூறுகிறது" என்கிறார் சல்மா மாலிக். "பாலகோட் தாக்குதல் நடந்தபோதும், பாகிஸ்தான் பின்வாங்கவில்லை. எனவே இந்தியா என்ன நடவடிக்கை எடுத்தாலும், பாகிஸ்தானும் அதே வழியில் பதிலடி கொடுக்கும்" என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0m9783pmzmo
-
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் : ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு
மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்; ஊடகவியலாளர்கள் உட்பட 30 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு 30 APR, 2025 | 06:23 PM மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட 30 பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 18 மற்றும் 20ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின்போது கொம்மாதுறை பகுதியில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 சந்தேக நபர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு புதன்கிழமை (30) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏறாவூர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிந்த ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். இந்த நிலையில் இந்த ஊடகவியலாளரை தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி, இவ்வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி மற்றும் 20ஆம் திகதிக்கு விசாரணைக்காக ஒத்திவைத்தார். https://www.virakesari.lk/article/213365
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
Canada Election: ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சியில் கடும் சவால்களை சந்தித்த Liberal மீண்டும் வென்றது எப்படி? Canada-வில் திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தலில், மூன்றாவது முறையாக லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக CBC செய்தி முகமை தெரிவித்துள்ளது. முடிவுகள் முழுமையாக வெளியாகாத நிலையில், பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் Liberal Party முன்னிலையில் உள்ளது. சில நாட்களுக்கு முன் அரசியல் ரீதியான பின்தங்கி இருந்த லிபரல் கட்சியின் குறிப்பிடத்தக்க வெற்றி இதுவாகும். #MarkCarney #Canada #DonaldTrump இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
இலங்கை பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கிடையில் சந்திப்பு
30 APR, 2025 | 05:01 PM (எம்.மனோசித்ரா) தற்போது நடைபெற்று வரும் பாதுகாப்பு கலந்துரையாடலின் ஒரு அங்கமாக, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொத்தா மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு செயலாளருடன் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் இலங்கை இராணுவ பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர். பிறிதொரு சந்தர்ப்பத்தில், பாதுகாப்புச் செயலாளர் பாகிஸ்தானின் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் அஹத் கான் சீமாவையும் சந்தித்தார். இந்த சந்திப்புகள் இலங்கை அதன் அண்டை நாடுகளுடன் இருதரப்பு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பின் போது நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. https://www.virakesari.lk/article/213366
-
தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை
30 APR, 2025 | 05:13 PM (எம்.நியூட்டன்) மக்களுக்கு உரிய தரமான சிகிச்சை வழங்கும் சேவை நிலையமாக மாற்றுவதற்கான நிர்வாக சூழ்நிலைகளை ஏற்படுத்துமாறும் வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திதருமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், தெல்லிப்பளை கிளை கோரிக்கை முன்வைத்து தொழில் சங்க நடவடிக்கைக்கு தயாரி வருகிறது. இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை, யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்த படியாக மக்களிற்கான மருத்துவ சேவைகளை வழங்குவதில் முக்கியமான வைத்தியசாலையாகும். கடந்த சில ஆண்டுகளில் இவ் வைத்திய சாலையில் கடமையாற்றிய மருத்துவ அத்தியட்சகர்கள், மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள் ஏனைய ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிளை செயற்பாட்டின் மூலம், இவ்வைத்தியசாலை பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ளது. மனித வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன் பதினாறு வைத்தியர்கள் கடமையாற்றிய நிலையில் தற்போது கிட்டத்தட்ட அறுபது வைத்தியர்களும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு உள்ளக வைத்தியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது வைத்தியம், சத்திர சிகிச்சை, மகப்பேற்றியல், குழந்தை மருத்துவம் மற்று ம் கதிரியக்க பிரிவு அனைத்துக்கும் இரண்டு வைத்திய நிபுணர்களும் கடமையாற்றி வருகின்றனர். இவை அனைத்தும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA )மற்றும் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்பினால் சாத்தியமானது. அத்துடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையானது வடமாகாணத்தில் உள்ள ஒரு பிராந்திய புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் நிலையமாகவும் மனநல பாதிப்படைந்த நோயாளிகளுக்கான ஒரு முக்கியமான சிகிச்சை வழங்கும் நிலையமாக காணப்படுகின்றது. தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக தெல்லிப்பளை மருத்துவமனை நிர்வாகம் மிகவும் மந்தகதியில் செயல்படுகிறது மற்றும் மனநல சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை மற்றும் பிற சிகிச்சை சேவைகளில் திருப்திகரமான ஈடுபாடு இல்லாமல் இருக்கிறது. இதற்கான முக்கிய காரணம் மருத்துவமனை நிர்வாகியின் செயல்திறன் குறைபாடு மற்றும் அவரது அலுவலகத்திலிருந்து வெளியே வந்து மற்ற வைத்திய நிபுணர்கள், மருத்தவர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் நேரடியாக பேசி, பயனுள்ள சந்திப்புகளை ஏற்பாடு செய்து, உடனடி தீர்வுகளை வழங்கும் ஆர்வம் இல்லாமையே ஆகும். இந்த தாமதம் நோயாளிகளின் நலனையும், மருத்துவ சேவையின் தரத்தையும் பாதிக்கின்றது. புற்றுநோய்களிற்கான சிகிச்சை வழங்குவதில் புற்றுநோய் வைத்திய நிபுணர்கள் பல இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். முக்கியமாக அங்கே நோயாளிகளிற்கான சில பரிசோதனைகள் பல்லாயிரக்கணக்கான (40000 தொடக்கம் 50000 வரை) அவர்களின் சொந்த பணத்தை செலவழித்து தனியார் ஆய்வு ஊடங்களிலேயே செய்யப்படுகிறது. இதை நிவர்த்தி செய்யும் முகமாக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் Nuclear Medicine அலகு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அவ்வகையான பரிசோதனைகளை செய்ததற்கு தேவையான ஆய்வுகூட வசதிகளை செய்ய முன்வந்த போதும் வைத்தியசாலை நிர்வாகம் அதற்கான இடம் வழங்குவதில் இழுத்தடிப்பை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் புற்றுநோயின் இறுதி கட்டத்தை அடைந்த நோயாளிகளின் இறுதி நேரங்களை வலியின்றி பராமரிப்பதற்காக விடுதி ஒன்றை அமைப்பதற்கும் புற்றுநோயாளிகளின் மருத்துவ பதிவேடுகளை பேணி பாதுகாக்க தேவையான அறையினை நிர்மாணிக்க பல தடவைகள் அனுமதி கோரிய போதும் அதனை வழங்காது பெரும் முட்டுக்கட்டையாகவும் இருந்து வருகிறார். இதனால் புற்றுநோயாளர்களிற்கான சேவையினை பூரணமாக வழங்குவதில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் மனநல சிகிச்சை விடுதி மற்றும் ஏனைய விடுதிகளில் நிபுணர்களால் முன்மொழியப்படும் சிகிச்சைத் திட்டங்களை உரிய தரப்புகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளாமல் நிராகரித்து நோயாளிகளுக்கான பூரண சிகிச்சை வழங்குவதில் மருத்துவ நிபுணர்களின் ஒருமித்த சேவையை நோயாளர்களுக்கு வழங்க இயலாத வகையில் புறச்சூழ்நிலைகளை உருவாக்கி வருகின்றது. நோயாளர்களுக்கான சிறப்பான சேவைகளை வழங்குவதற்காக சுகாதார திணைக்களம் மற்றும் பிரதம செயலாளர் ஆளுநர் அலுவலகங்களில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் நிறைவேற்றப்படும் முடிவுகளை நிறைவேற்றி நோயாளர்களுக்கான கிடைக்கக்கூடிய அதிக உச்ச சேவையை எமது வைத்தியசாலையில் உள்ள மனித வளங்களையும் ஏனைய வளங்களையும் பயன்படுத்தி வழங்காது தெல்லிப்பளை வைத்தியசாலையை புற்றுநோய் விடுதிகளையும் மனநல நோய் விடுதிகளையும் ஏனைய விடுதிகளையும் திறம்பட நிர்வாகிக்க தவறியுள்ளார். அத்துடன் நோயாளர் நலன்புரி சங்க சேமிப்பு நிதியை நோயாளிகளின் மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தாமலும் ஏனைய தொண்டு நிறுவனங்கள் மற்றும் நலன் விரும்பிகளினால் நோயாளர்களின் மருத்துவ சேவையை திறம்பட வழங்குவதற்கு முன் வைக்கின்ற வசதிகளை வழங்குவதிலும் ஒருங்கிணைப்பதிலும் ஆர்வம் காட்டாது அதற்கு முட்டுக்கட்டையாகவும் இருந்து வருகின்றார். அத்துடன் வைத்தியசாலை ஊழியர்கள் முகம் கொடுக்கின்ற பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக பல முறைப்பாடுகளை முன் வைத்துள்ள போதிலும் அதற்குரிய தீர்வுகளை வழங்காது தான்தோன்றித்தனமான முடிவுகளை மேற்கொள்வதால் வைத்தியசாலை ஊழியர்கள் நோயாளிகளுக்கான சிகிச்சைகளை வழங்குவதில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த 02.04.2025 அன்று இரவு ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பளையின் அவசர சிகிச்சை பிரிவில் இடம்பெற்ற, தனிநபர் ஒருவரால் வைத்தியசாலை ஊழியர்களின் கடமைக்கும் ஏனைய நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கும் இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக, வைத்தியசாலை நிர்வாகம் காத்திரமான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொண்டு இருக்கவில்லை. இவ்வாறான இவருடைய பல செயற்பாடுகளை கண்டித்தும் குறித்த தினத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு எதுவித நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், வைத்தியர்களுடனும் ஏனைய வைத்தியசாலை ஊழியர்களுடனும் தொடர்புடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியதை கண்டித்தும், மேலும் அது தொடர்பான நடுநிலையான, பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றை உடனடியாக ஆரம்பிக்க வலியுறுத்தியும், எதிர்வரும் 02.04.2025 அன்று காலை 8.00 மணி முதல் 03.04.2025 காலை 8.00 மணி வரையிலான அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொள்ள இருக்கின்றது. இதற்கு ஏனைய வைத்தியசாலை தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவிக்க உள்ளன. எனவே, இதற்குரிய உடனடி விசாரணைகளை வட மாகாண, யாழ் பிராந்திய சுகாதார திணைக்களம், பிரதம செயலாளர், வட மாகாண ஆளுநர் ஆகியோர் ஆரம்பித்து, வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, மக்களுக்கு உரிய தரமான சிகிச்சை வழங்கும் சேவை நிலையமாக மாற்றுவதற்கான நிர்வாக சூழ்நிலைகளை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/213368
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
21 ஆம்லட் தயாராகிறது!!
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
தேர்தல் வெற்றியை உற்சாகமாக நடனமாடி கொண்டாடிய கனடா பிரதமர் மார்க் கார்னி 5 மணி நேரங்களுக்கு முன்னர் கனடாவின் அரசு செய்தி ஊடகமான சிபிசி நியூஸின் கூற்றுப்படி, மார்க் கார்னியின் லிபரல் கட்சி நாட்டின் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. மார்க் கார்னி, தனது வெற்றியை நடனமாடி கொண்டாடியதை இந்தக் காணொளியில் பார்க்கலாம். மார்க் கார்னி தமது வெற்றி உரையில், "நம் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்மை உடைக்க முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது" என்று கூறினார் . மேலும் "அமெரிக்காவுடனான எங்கள் பழைய உறவு இப்போது முடிந்துவிட்டது. அமெரிக்கா செய்த துரோகத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியை நாங்கள் கடந்துவிட்டோம்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgenwr57j1vo
-
பண்டாரநாயக்கவும் செல்வநாயகமும் 1957 ஆம் ஆண்டில் பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் ஏன், எவ்வாறு கைச்சாத்திட்டார்கள்?
29 APR, 2025 | 09:47 AM டி.பி.எஸ் ஜெயராஜ் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை (எஸ். ஜே.வி.) செல்வநாயகத்தின் 48 வது நினைவுதினம் ஏப்ரில் 26 ஆம் திகதி வந்துபோனது. தந்தை செல்வா என்று அறியப்பட்ட செல்வநாயகம் இலங்கை தமிழரசு கட்சியை 1949 டிசம்பரில் வேறு தலைவர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தார். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழர்களின் பிரதான அரசியல் கடசி என்று கருதப்படும் தமிழரசு கட்சி தற்போது அதன் வைரவிழாவைக் கண்டிருக்கிறது. செல்வநாயகம் சிங்கள பெரும்பான்மையின மேலாதிக்கத்துக்கு எதிரான தமிழ் அரசியல் எதிர்ப்பியக்கத்தை பல வருடங்களாக முன்னெடுத்தார். அவர் தனது அரசியல் அணுகுமுறையில் போராட்டமும் பேச்சுவார்த்தையும் கலந்த தந்திரோபாயத்தைக் கடைப்பிடித்தார். தமிழரசு கட்சி ஒருபுறத்தில், பல்வேறு அகிம்சைப் போராட்டங்களை முன்னெடுத்த அதேவேளை, மறுபுறத்தில் சந்தர்ப்பம் வாய்க்கின்ற வேளைகளில் எல்லாம் அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார். பண்டா - செல்வா ஒப்பந்தம் என்று பொதுவாக அறியப்பட்ட இணக்கப்பாட்டில் கைச்சாத்திட்டது செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியினால் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளில் ஒன்று. அது அதிகாரப்பகிர்வு கோட்பாட்டின் அடிப்படையில் அன்றைய பிரதமர் சொலமன் வெஸ்ற் றிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கவுக்கும் செல்வநாயகத்துக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தமாகும். பாரிய ஆற்றலைக் கொண்டிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. அதன் ஆயுள் மிகவும் குறுகியதாகவே இருந்தது. இந்த பின்புலத்தில், இந்த கட்டுரை எனது முன்னைய எழுத்துக்களின் உதவியுடன் பண்டா - செல்வா ஒப்பந்தம் 68 வருடங்களுக்கு முன்னர் ஏன், எவ்வாறே கைச்சாத்திடப்பட்டது என்பதில் கவனம் செலுத்துகிறது. ஆழமான துருவமயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 1956 பொதுத்தேர்தல் சிங்கள சமூகத்துக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இடையில் ஆழமான துருவமயமாதலை கொண்டுவந்தது. எஸ். டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி ( மஹாஜன எக்சத் பெரமுன ) என்ற கூட்டணி சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தென்னிலங்கையின் ஏழு மாகாணங்களிலும் பெருவெற்றி பெற்றது. சமஷ்டி கட்சி என்றும் அழைக்கப்படுகின்ற தமிழரசு கட்சி வடமாகாணத்தில் ஒன்பது ஆசனங்களில் ஆறு ஆசனங்களையும் கிழக்கு மாகாணத்தில் ஏழு ஆசனங்களில் நான்கு ஆசனங்களையும் கைப்பற்றியது. சிங்களத்தை மாத்திரம் உத்தியோகபூர்வ மொழியாக்கியது புதிய அரசாங்கம் முதல் செய்த காரியங்களில் ஒன்று. அதை எதிர்த்து கொழும்பு காலிமுகத்திடலில் அமைதிவழியில் போராட்டம் நடத்திய சத்தியாக்கிரகிகளை குண்டர்கள் கொடூரமாகத் தாக்கியபோது அதை தடுக்காமல் பொலிசார் பார்த்துக்கொண்டு நின்றனர். நாட்டின் பல பாகங்களிலும் தமிழர்களுக்கு எதிராக வன்முறை மூண்டது. ஜூன் 15 தனிச்சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் 56 -- 29 வாக்குகளால் நிறைவேறியது. தமிழரசு கட்சி அதன் மகாநாட்டை திருகோணமலையில் 1956 ஆகஸ்ட் 17 -- 19 நடத்தியபோது நாட்டில் பெரும் பதற்றம் நிலவியது. அந்த மகாநாட்டில் பின்வரும் நான்கு அடிப்படைக் கோரிக்கைகளை உள்ளடக்கியதாக ஒரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 1) சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலான இலங்கைக்குள் மொழிவழியான சுயாட்சி கொண்ட தமிழ் மாநிலம் அல்லது மாநிலங்களை நிறுவுதல். 2) நாட்டின் ஒரு உத்தியோகபூர்வ மொழியாக சிங்களத்துடன் சமத்துவமானதாக தமிழ் மொழிக்கு உரித்தான அந்தஸ்தை நிலைநாட்டுதல். 3) தற்போதைய குடியுரிமைச் சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலமாக பெருந்தோட்ட மாவட்டங்களில் உள்ள தமிழ்த் தொழிலாளர்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் மீளப்பெறுதல் ; 4) பாரம்பரியமாக தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்ற பகுதிகளில் சிங்கள மக்களை குடியேற்றும் சகல கொள்கைகளையும் உடனடியாக இல்லாமல் செய்தல். இந்த கோரிக்கைகளுக்கு சாதகமான முறையில் பதிலளிப்பதற்கு அரசாங்கத்துக்கு ஒரு வருடகால அவகாசத்தை வழங்குவது என்று மகாநாட்டு தீர்மானத்தில் கூறப்பட்டது. அரசாங்கத்திடம் இருந்து பதில் கிடைக்காத பட்சத்தில் ' நேரடி நடவடிக்கையாக ' அகிம்சைவழிப் போராட்ட இயக்கத்தை தமிழரசு கட்சி ஆரம்பிக்கவிருந்தது. 1957 ஆகஸ்ட் 20 வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. வாகன இலக்கத் தகடுகளில் 'சிங்கள ஸ்ரீ ' எழுத்து தொடர்பான சர்ச்சையுடன் 1957 ஆம் ஆண்டு பிறந்தது. நாட்டின் சிலோன் (CEYLON ) என்ற பெயரில் இருந்து ஆங்கில எழுத்துக்களை ( CE, CL, CN,EY, EN ) வாகன இலக்கத் தகடுகளில் பயன்படுத்துவதே முன்னைய நடைமுறையாக இருந்தது. புதிய அரசாங்கம் வாகன இலக்கங்கள் சிங்கள ஸ்ரீ யுடன் தொடங்க வேண்டும் என்று விரும்பியது. அதை சிங்களத் திணிப்பின் ஒரு வடிவம் என்று ஆட்சேபித்த தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் ஸ்ரீ எழுத்தும் இடம்பெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், தமிழ் எழுத்துக்களில் ஸ்ரீ கிடையாது. தமிழில் பயன்படுத்தப்படும் ஸ்ரீ சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம் தமிழரசு கட்சி வடக்கு, கிழக்கில் ஜனவரி 16 ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் ஒன்றைத் தொடங்கியது. இலக்கத் தகடுகளில் தமிழ் எழுத்துக்களுடன் வாகனங்கள் ஓடத் தொடங்கின. சிங்கள ஸ்ரீ சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு வந்த ஸ்ரீ யினால் பதிலீடு செய்யப்பட்டது. இலங்கையின் சதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை தமிழரசு கட்சி கரிநாளாக அனுஷ்டித்தது. ஹர்த்தால் வடக்கு, கிழக்கில் வழமை வாழ்வை ஸ்தம்பிக்க வைத்தது. திருகோணமலையில் மணிக்கூண்டுக் கோபுரத்தில் கறுப்புக்கொடி ஒன்றைக் கட்டுவதற்கு ஏறிய நடராஜா என்ற தொண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். வடக்கு, கிழக்கில் நடைபெற்ற போராட்டங்களுக்கு எதிர்ப்போராட்டம் ஒன்று சிங்களப் பெரும்பான்மை மாகாணங்களில் தொடங்கியது. வீதிச் சமிக்ஞைகளிலும் பெயர்ப்பலகைகளிலும் தமிழ் எழுத்துக்களுக்கு தார் பூசப்பட்டது. சிறிய அளவிலான இனமுறுகல் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றன. 'உத்தியோகபூர்வ' நோக்கங்களுக்காக வடக்கு, கிழக்கிற்கு விஜயம் செய்யும் அரசாங்க அமைச்சர்களையும் பிரதி அமைச்சர்களையும் பகிஷ்கரிக்குமாறும் தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது. அமைச்சர்கள் வருகைதரவிருந்த இடங்களில் சத்தியாக்கிரகிகள் குழுமிநின்று அவர்களின் நடமாட்டங்களுக்கு இடையூறு செய்தனர். இனப்பதற்றம் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் , நாடு பெரும் இரத்தக்களரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது போன்று தோன்றியது. இலங்கையின் சகல பிரதமர்கள் மத்தியிலும் மிகுந்த புத்திஜீவி என்று கூறக்கூடிய எஸ்.டபிள்யூ. ஆர்.டி. நிலைவரத்தைக் கட்டுப்படுத்தி மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை புரிந்துகொண்டார். தமிழ் மக்களின் மெய்யான மனக்குறைகளுக்கு பரிகாரம் காணப்பட வேண்டும் என்பதை அவர் உணர்ந்து கொணடார். 1926 ஆம் ஆண்டில் சமஷ்டி முறையை ஆதரித்த பண்டாரநாயக்கவுக்கு பயனுறுதியுடைய அதிகாரப்பகிர்வே ஒரே தீர்வு என்று தெரிந்தது. பிராந்திய சபைகளை (Regional Councils ) அமைப்பதன் மூலமாக விரிவான அதிகாரப் பன்முகப்படுத்தலுக்கான யோசனையை அவர் முன்வைத்தார். பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் ஒரு விளைவாக பிராந்திய சபைகள் திட்டம் பண்டாரநாயக்கவினால் அறிமுகப்படுத்தப்பட்டது என்றே பரவலாக நம்பப்படுகிறது. உண்மையில், பிராந்திய சபைகளுக்கான சட்ட நகல் வரைவு ஒன்று 1957 மே 17 ஆம் திகதி வெளியிடப்பட்டது. பண்டா - செல்வா ஒப்பந்தம் பிறகு ஜூலையிலேயே வந்தது. பிராந்திய சபைகள் சட்டமூலத்தை சமர்ப்பித்த பிறகு தமிழ்த் தலைவர்களுடன் புரிந்துணர்வு ஒன்றுக்கு வந்து அதை மேலும் மாற்றியமைக்க எஸ். டபிள்யூ. ஆர்.டி. விரும்பினார். சந்திப்புக்கான யோசனை அதேவேளை, தமிழரசு கட்சி ஆகஸ்ட் 20 ஆரம்பிப்பதற்கு திடடமிட்டிருந்த ' நேரடிப் போராட்ட ' இயக்கத்தை முன்னெடுப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. அதற்கென்று 25,000 தொண்டர்கள் பதிவு செய்யப்பட்டனர். தமிழர்களின் போராட்ட இயக்கத்தை முறியடிக்க ஒரு இலட்சம் தொண்டர்களை அணிதிரட்டும் முயற்சி ஒன்றை சில சிங்களத் தலைவர்கள் தொடங்கினர். பெரிய பலப்பரீட்சை ஒன்று மூளுவதை தடுக்கமுடியாமல் போகலாம் என்று தோன்றியது. அப்போதுதான் நிதான புத்தி வந்தது. எஸ்.டபிள்யூ. ஆர்.டி.க்கும் எஸ்.ஜே.வி.க்கும் இடையில் சந்திப்புக்கு யோசனை முன்வைக்கப்பட்டது. அது பிரதமரின் சொந்த முயற்சியாகவே முன்னெடுக்கப்பட்டது. இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பை இரு தமிழ் வழக்கறிஞர்களான பி. நவரத்தினராஜா கியூ.சி.யும் ஏ.சி. நடராஜாவும் ஏற்பாடு செய்தனர். நவரத்தினராஜா எஸ்.டபிள்யூ. ஆர்.டி.யினதும் எஸ்.ஜே.வி.யினதும் ஒரு தனிப்பட்ட நண்பர். நடராஜா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு துணைத் தலைவர். இந்த பேச்சுவார்த்தையை ஊக்கப்படுத்துவதில் அரசாங்கத் தரப்பில் இருந்து அன்றைய நிதியமைச்சர் ஸ்ரான்லி டி சொய்சா மிகவும் மெச்சத்தக்க ஒரு பாத்திரத்தை வகித்தார். முதலாவது சந்திப்பு முதலாவது சந்திப்பு ஹொரகொல்லையில் உள்ள பிரதமரின் வாசஸ்தலத்தில் 1957 ஜூன் 22 ஆம் திகதி இடம்பெற்றது. எஸ்.டபிள்யூ. ஆர்.டி. தானாகவே செல்வநாயகத்தின் காருக்கு அண்மையாக வந்து அவர் அதிலிருந்து இறங்கிவர உதவினார். இருவருமே அன்றைய நிலைவரத்தின் பாரதூரத்தன்மையை புரிந்துகொண்டனர் போன்று தெரிந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த சந்திப்பில் அரசாங்கத் தரப்பில் இருந்து எஸ்.டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கவும் ஸ்ரான்லி டி சொய்சாவும் தமிழரசு கட்சி தரப்பில் இருந்து எஸ். ஜே.வி. செல்வநாயகம், சி. வன்னியசிங்கம், என்.ஆர். இராஜவரோதயம், வீ.ஏ கந்தையா, ஈ.எம்.வி. நாகநாதன், வி. நவரத்தினம் ஆகியோரும் மத்தியஸ்தராக நவரத்தினராஜாவும் பங்கேற்றனர். முதலாவது சந்திப்பு மிகவும் சுமுகமான சூழ்நிலையில் இடம்பெற்றது. சிங்களம் உத்தியோகபூர்வ மொழியாக நடைமுறையில் வருவதற்கு பல வருடங்கள் செல்லும் என்று கூறியதன் மூலம் தமிழர்களின் அச்சத்தை தணிக்க எஸ்.டபிள்யூ. ஆர்.டி. முயற்சித்தார். பண்டாரநாயக்கவின் நிலைப்பாட்டை தமிழரசு கட்சி வரவேற்றது என்ற போதிலும், தமிழ் மொழியின் அந்தஸ்து தொடர்பில் இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. அதை் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. ஒத்துக்கொண்டார். அதிகாரப்பகிர்வு விடயம் பரிசீலனைக்கு வந்தபோது சமஷ்டி அரசு ஒன்றுக்கான அதன் கோரிக்கையை தமிழரசு கட்சி முன்வைத்தது. சமஷ்டி முறையே சிறந்த தீர்வு என்று எஸ்.டபிள்யூ. ஆர்.டி. 1926 ஆம் ஆண்டில் முன்வைத்த கருத்தே சமஷ்டிக் கோரிக்கையை தமிழரசு கட்சி முன்வைப்பதற்கு உந்துதலாக இருந்தது என்று அதன் தலைவர்கள் சுட்டிக் காட்டினர். ஆனால், தான் சமஷ்டி முறைக்காக அன்று குரல்கொடுத்த போதிலும் பிறகு தனது மனதை மாற்றிக் கொண்டதாக எஸ்.டபிள்யூ. ஆர்.டி பதிலளித்தார். தவிரவும், சமஷ்டி முறையை அறிமுகப்படுத்துவதற்கான ஆணை தனக்கு கிடையாது என்றும் எஸ். டபிள்யூ. ஆர்.டி. கூறினார். தமிழர்களின் மனக்குறைகளுக்கு பரிகாரம் காண்பதற்கும் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கும் சமஷ்டி முறைக்கு குறைவான ஒரு மாற்றுத் தீர்வு குறித்து தமிழரசு கட்சியினால் சிந்திக்க முடியாதா என்று அவர் கேட்டார். பிரதமரின் நிலைமையை புரிந்துகொண்ட தமிழரசு கட்சி சமஷ்டித் தீர்வொன்றை வலியுறுத்தாமல் இருப்பதற்கு இணங்கிக் கொண்டது. சமஷ்டிச் சுயாட்சி ' ( Federal autonomy ) இல்லாமல் ' பெருமளவு பன்முகப்படுத்தலை ' (Massive decentralisation ) விதந்துரைக்கும் மாற்று யோசனைகளை தமிழரசு கட்சி முன்வைக்க வேண்டும் என்று அப்போது பிரதமர் யோசனை கூறினார். தமிழரசு கட்சியின் தலைவர்கள் அதற்கு இணங்கியவாறு அந்த சந்திப்பை முடித்துக் கொண்டனர். சட்டக்கல்லூரியின் முன்னாள் அதிபர் பிரிட்டோ முத்துநாயகத்துடனும் செல்வநாயகத்தின் மருமகன் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சனுடனும் தமிழரசு கட்சி ஆலோசனை நடத்தியது. அப்போது பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்த வில்சன் பிறகு பேராதனை மற்றும் கனடாவின் நியூ புரூன்ஸ்விக் பல்கலைக் கழகங்களின் அரசியல் விஞ்ஞான பீடங்களின் தலைவராக பதவி வகித்தார். வட அயர்லாந்து இலங்கை பின்பற்றுவதற்கு பிரிட்டனில் வட அயர்லாந்துக்கு இருந்த அந்தஸ்து சிறந்த ஒரு முன்மாதிரி என்று பிரிட்டோ முத்துநாயகம் கருதினார் என்பது கவனிக்கத்தக்கது. வட அயர்லாந்து பாராளுமன்றம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கு கீழ்நிலையானது. ஆனால், சமஷ்டி முறைக்கு ஒப்பான பெருமளவு அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது. வட அயர்லாந்து அரசியலமைப்புச் சடடத்தின் பிரதி ஒன்று சட்டக்கல்லூரி அதிபரினால் தமிழரசு கட்சிக்கு கொடுக்கப்பட்டது. வில்சன் சமஷ்டி அமைப்பு முறையைக் கொண்ட பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளின் பிரதிகளை வழங்கினார். கோப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி. வன்னியசிங்கமும் தமிழரசு கட்சியின் செயலாளரான வி. நவரத்தினமும் மாற்றுத்திட்டம் ஒன்றை வரைவதில் ஈடுபட்டார்கள். மூன்று நாட்களில் அந்த பணியை நிறைவுசெய்த தமிழரசு கட்சியின் தலைவர்கள் நவரத்தினராஜா ஊடாக எஸ்.டபிள்யூ. ஆர்.டி.யின் பரிசீலனைக்கு வரைவை சமர்ப்பித்தார்கள். அல்ஸ்டர் வகை மாதிரியின் (Ulster model) செல்வாக்கு அந்த வரைவில் பெருமளவுக்கு பிரதிபலித்தது. ஒரு சபையைக் கொண்ட (Unicameral legislature ) பாராளுமன்றத்தையும் அமைச்சரவையையும் கொண்டதாக கீழ்நிலைப்பட்ட (Subordinate state ) வடக்கு கிழக்கு மாநிலம் அமையும். வெளிவிவகாரம், பாதுகாப்பு, நாணயம், முத்திரைகள், சுங்கம், பிராந்தியங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆகியவை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட நிதியை மாநிலங்களுக்கும் உள்ளூராட்சிகளுக்கும் (Block grants ) மத்திய அரசு வழங்கும் அதேவேளை உள்ளூர் வரியறவீடு வருவாய்க்கு உதவக்கூடியதாக இருக்கும். மாநிலத்தின் பொறுப்பில் பொலிஸ் இருக்கும். தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக மாநிலம் கொழும்பில் பிரதிநிதித்துவம் செய்யப்படும். தமிழ் விவகாரங்களுக்கு என்று மத்திய அமைச்சரவையில் அமைச்சர் ஒருவர் இருப்பார். இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் கொழும்பு றொஸ்மீட் பிளேஸில் உள்ள எஸ்.டபிள்யூ. ஆர்.டி.யின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. அதில் செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன், நவரத்தினம் ஆகியோர் தமிழரசு கட்சியின் சார்பில் கலந்துகொண்டனர். யோசனைகள் சாராம்சத்தில் சமஷ்டி முறைக்கு ஒத்ததாக இருந்ததாக பண்டாரநாயக்க சுட்டிக் காட்டினார். நிருவாக பன்முகப்படுத்தலை வலியுறுத்தும் வகையில் திட்டத்தை தனித்தனி சுருக்கக்குறிப்பாக தருமாறு பண்டாரநாயக்க யோசனை கூறினார். அத்துடன் 'பாராளுமன்றம்', 'அமைச்சரவை' என்ற சொற்கள் ஒரு தனிஅரசை குறிப்பவை போன்று இருப்பதாக அவர் ஆட்சேபனை தெரிவித்தார். தமிழரசு கட்சி திரும்பிச் சென்று சுருக்க குறிப்புகளாக யோசனைகளை அமைத்து ஆவணத்தை மீளாய்வு செய்தது. பிராந்திய சபைகள் கோட்பாடு பண்டாரநாயக்காவின் மூளையில் உதித்தவை என்பதால் தமிழரசு கட்சி ' பாராளுமன்றம் ' என்பதை ' பிராந்திய சபையினால் ' பதிலீடு செய்தது. அமைச்சரவைக்கு (Cabinet ) பதிலாக பணிப்பாளர்கள் சபை (Board of directors) என்று குறிப்பிடப்பட்டது. மூலமுதல் யோசனைகளின் சாராம்சம் பெருமளவுக்கு உள்ளபடியே விடப்பட்டது. அதற்கு பிறகு ஸ்ரான்லி டி சொய்சா, நவரத்தினரராஜா மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர்களுக்கு இடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அவற்றில் பிரதமர் பங்குபற்றவில்லை. ஆனால், தனது பிரதிநிதியான ஸ்ரான்லி டி சொய்சா ஊடாக பல மாற்றங்களை முன்வைத்தார். மூலமுதல் யோசனைகளில் இருந்து ஓரளவுக்கு அவை தளர்த்தப்பட்ட போதிலும், அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு தமிழரசு கட்சியை இணங்கவைக்கக்கூடியதாக இருந்தது. ஆனால், ஒரு விடயத்தில் தமிழரசு கட்சி உறுதியாக இருந்தது.வடக்கும் கிழக்கும் ஒரே தனியான பிராந்திய சபையாக அமையவேண்டும் என்று அது விரும்பியது. வடக்கு தனியான அலகாக இருப்பதற்கு அனுமதிக்கத் தயாராக இருந்த எஸ்.டபிள்யூ. ஆர்.டி. கிழக்கு இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான அலகுகளுடன் தனியானதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். தமிழரசு கட்சியின் ' தங்கமூளை ' என்று வர்ணிக்கப்பட்ட அதன் மதியூகி வி. நவரத்தினம் இந்த விவகாரத்தில் மிகவும் விடாப்பிடியானவராக இருந்தார். இறுதியில் ஏ.சி. நடராஜா நவரத்தினத்தை இணங்க வைத்து விட்டுக்கொடுப்பு ஏற்பாடு ஒன்றுக்கு வழிவகுத்தார். வடக்கும் கிழக்கும் தனித்தனியான சபைகளாக இருக்கும் அதேவேளை அவை விரும்பினால் இணைந்து கொள்ளலாம் என்பதே அந்த ஏற்பாடாகும். ஜூலை 25 - 26 இறுதிச் சந்திப்பு இறுதியும் தீர்க்கமானதுமான சந்திப்பு பழைய செனட் கட்டிடத்தில் அமைந்திருந்த பிரதமரின் அலவலகத்தில் 1957 ஜூூல 25 ஆம் திகதி இடம்பெற்றது. அதில் பல கபினெட் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். தமிழரசு கட்சியின் பல தலைவர்களும் பங்கேற்றனர். ' அனுசரணையாளரான ' நவரத்தினராஜாவும் பிரசன்னமாகியிருந்தார். பேச்சுவார்த்தைகள் இரவு 7 மணிக்கு தொடங்கின. உத்தியோகபூர்வ மொழி என்ற வகையில் சிங்களத்தின் அந்தஸ்து குறைக்கப்படக்கூடாது என்று அமைச்சர்கள் மிகவும் உறுதியாக இருந்தனர். நீண்ட கலந்தாலோசனைக்கு பிறகு வில்லியம் சில்வா தமிழை தேசிய சிறுபான்மைச் சமூகங்களின் மொழி என்று அங்கீகரிக்க வேண்டும் என்ற சமரச ஏற்பாட்டை முன்வைத்தார். வடக்கிலும் கிழக்கிலும் நிருவாக மொழியாகவும் தமிழ் இருக்கும். அலகு சம்பந்தப்பட விவகாரத்தில் வடக்கு ஒரு சபையாக இருக்கும் அதேவேளை கிழக்கு ஒன்று அல்லது அதற்கும் கூடுதலான அலகுகளாக பிரிக்கப்பட வேண்டும் என்ற பிரதமரின் நிலைப்பாட்டுக்கு தமிழரசு கட்சி இணக்கம் தெரிவித்தது. சபைகள் விரும்பினால், மாகாண எல்லைகளையும் கடந்து இணைந்துகொள்ள முடியும். அவசியமானால், நடைமுறையில் இருந்த எல்லைகளை மீளவரையலாம். பிராந்திய சபைகளுக்கான அதிகாரங்களைப் பொறுத்தவரை, பிலிப் குணவர்தனவுடன் சேர்ந்து பல அமைச்சர்கள் தங்களது அதிகாரங்களை விட்டுக் கொடுக்க மறுத்தார்கள். அமைச்சர்கள் இந்த விவகாரத்தை ஆராய்ந்து கொண்டிருக்க தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் வேறு ஒரு அறைக்கு சென்று காத்திருந்தார்கள். இறுதியில் அமைச்சர்கள் தங்களது அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு இணக்கினார்கள். குடியேற்றங்களை நிறுத்துவதற்கு தயாராக இருந்த பிரதமர் காணி குடியேற்ற நடைமுறைகள் தொடர்பில் தமிழரசு கட்சியுடன் திருப்திகரமான ஏற்பாடொன்றுக்கு இணங்கிக் கொண்டார். குடியுரிமைப் பிரச்சினையை தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துபேசி தீர்த்து வைப்பதாக பண்டாரநாயக்க கூறினார். அந்த பிரச்சினையை தமிழரசு கட்சி அவ்வாறே விட்டுவிட வேண்டும் என்றும் பிரதமர் யோசனை கூறினார். அதற்கு தமிழரசு கட்சி இணக்கியது. அந்த வேளையில் நேரம் நள்ளிரவைக் கடந்து 1957 ஜூலை 26 அதிகாலை பிறந்துவிட்டது. எட்டப்பட்ட இணக்கப்பாட்டை ஜூலை 26 அதிகாலை 2 மணிக்கு நவரத்தினம் தனித்தனி சுருக்கக் குறிப்புகளாக வாசித்தார். இரு தரப்பினரும் முறைப்படி இணங்கிக் கொண்டனர். மிகவும் பரபரப்பான செய்திக்காக காத்துக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் அதிகாலை 2.30 மணிக்கு அமைச்சரவை அறைக்கு அழைக்கப்பட்டனர். கமராக்களின் வெளிச்சத்தில் பண்டாரநாயக்கா மிகவும் கண்ணியமான முறையில் " எனது அருமை நண்பர்களே, உங்களை நித்திரையின்றி காத்திருக்க வைத்ததற்காக வருந்துகிறேன். ஆனால், இது உங்களுக்கும் எங்களுக்கும் நாட்டுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இரவு " என்று மன்னிப்புக் கோரினார். "உடன்படிக்கைக்கு வந்திருக்கிறோம் " றஞ்சி ஹண்டி அப்போது ஒரு லேக் ஹவுஸ் பத்திரிகையாளர். பின்னாளில் அவர் திருமதி மைத்திரிபால சேனநாயக்கவாக மாறினார். கட்டுப்படுத்த முடியாதவரான அவர் " முடிவுகளை எங்களுக்கு சொல்லுங்கள் " என்று உரத்துக் கத்தினார். அப்போது ஸ்ரான்லி டி சொய்சா " நாம் இணக்கப்பாடு ஒன்றை எட்டியிருக்கிறோம் " என்று அறிவித்தார். பிறகு எஸ்.ஜே.வி.யை திரும்பிப் பார்த்தவாறு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. " செல்வநாயகம் நீங்கள் கூறுவதைக் கேட்க அவர்கள் விரும்புகிறார்கள் " என்று கூறினார். இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டிருக்கிறது, அதன் விபரங்கள் பிரதமரினால் வெளியிடப்படும் என்று செல்வநாயகம் கூறினார். பத்திரிகைகள் அச்சுக்கு போவதற்கான காலஅவகாசம் இன்னமும் இருக்கிறதா என்று பத்திரிகையாளர்களிடம் பண்டாரநாயக்க கேட்டார். அப்போது லேக் ஹவுஸ் பத்திரிகையாளரான ஜோ சிகேரா மிகுந்த உற்சாகத்துடன் " தாமதித்து பத்திரிகைகளை அச்சிடுவதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எமக்கு உடனபடிக்கையின் முழு விபரங்களும் வேண்டும்" என்று கூறினார். வி.நவரத்தினத்தின் குறிப்புகளில் இருந்து பண்டாரநாயக்க விபரங்களை வாசித்தார். நீங்கள் திருப்தி அடைந்திருக்கிறீர்களா என்று தமிழரசு கட்சியின் தலைவர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் கேட்டனர். நாகநாதன், வன்னியசிங்கம், இராஜவரோதயம், அமிர்தலிங்கம் ஆகியோர் 'ஆம் ' என்று பதிலளித்தனர். அப்போது செல்வநாயகம் தமிழரசு கட்சி ஆகஸ்ட் 20 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த ' நேரடிப் போராட்ட ' இயக்கத்தைக் ஒத்திவைக்கும் என்று கூறினார். காலையில் பத்திரிகைகள் வழமைக்கு மாறாக உடன்படிக்கையின் முழு விபரங்களுடன் வெளிவந்தன. மாலைப் பத்திரிகைகளும் வழமையை விடவும் முன்னதாக கூடுதல் விபரங்களைத் தாங்கி வெளிவந்தன. ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்தாகவில்லை அந்த தருணத்தில் எந்த ஒப்பந்தமும் பண்டாரநாயக்கவினாலோ அல்லது செல்வநாயகத்தினாலோ கைச்சாத்திடப்படவில்லை என்பது நம்புவதற்கு கஷ்டமான ஆனால் வேடிக்கையான ஒரு விடயமாக இருந்திருக்கலாம். பண்டா -- செல்வா ஒப்பந்தம் ஒன்று அங்கே இருக்கவில்லை. அது ஒரு கனவான் ஒப்பந்தத்தைப் போன்றது. நவரத்தினத்துடன் சேர்ந்து செல்வநாயகம் கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டிருப்பதாக எழுத்தில் உருப்படியாக ஒன்றும் இல்லை என்று நவரத்தினம் தான் சுட்டிக்காட்டினார். பத்திரிகை அறிக்கைகள் மாத்திரமே வந்திருக்கின்றன. அப்போது நவரத்தினத்தை சற்று ஓய்வெடுத்துவிட்டு காலையில் மிகுதி விடயங்களைை கவனிக்குமாறு செல்வநாயகம் கேட்டுக் கொண்டார். காலையில் நேரகாலத்தோடு எழுந்த நவரத்தினம் பண்டா -- செல்வா ஒப்பந்தம் என்று பின்னர் அறியப்பட்ட இணக்கப்பாட்டின் நிபந்தனைகள் மற்றும் பிரிவுகளை வரைந்து மூன்று பிரதிகளை எடுத்துக்கொண்டார். அது இரண்டு பாகங்களாக அமைந்தது. முதலாவது பாகம் பேச்சுவார்த்தைகளினதும் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளினதும் சுருக்கமாக இருந்த அதேவேளை, இரண்டாவது பாகம் உத்தேச பிராந்திய சபைகளின் கட்டமைப்புகள், அதிகாரங்கள் மற்றும் உறுப்பாக்கங்கள் (Composition ) பற்றியதாக இருந்தது. சொலமனும் சாமுவேலும் ஜூலை 26 நண்பகல் பிரதிகளை எடுத்துக்கொண்டு செல்வநாயகம் பிரதமரின் அலுவலகத்துக்கு சென்றார். அங்குதான் பழைய தோமியன்களான சொலமனும் சாமுவேலும் பண்டாரநாயக்க -- செல்வநாயகம் ஒப்பந்தம் என்று அறியப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இணக்கப்பாட்டை அங்கீகரித்தார்கள். ஊடகங்களின் பரபரப்புகளுக்கு அப்பால் மிகவும் அமைதியாக அது செய்யப்பட்டது. பண்டாரநாயக்கவிடமும் செல்வநாயகத்திடமும் ஒவ்வொரு பிரதிகள் இருந்தன. அதன் ' வரைஞரான ' நவரத்தினம் மூன்றாவது பிரதியை தன்வசம் எடுத்துக் கொண்டார். பல வருடங்கள் கழித்து நவரத்தினம் தனது மகன் மோகனின் ரொறண்டோ இல்லத்தில் இந்த கட்டுரையாளருடனான சம்பாஷணை ஒன்றின்போது தன்னிடமிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஒப்பந்தத்தின் மூன்றாவது பிரதி இந்திய இராணுவத்தினர் வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருந்த காலத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ்.) போராளிகளினால் அழிக்கப்பட்ட சோகக் கதையைக் கூறினார். யாழ்ப்பாணத்தில் இருந்த நவரத்தினத்தின் வீட்டை அந்த போராளிகள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டபோது இது நடந்தது. ஒப்பந்தத்தின் சகல அம்சங்களும் தமிழரசு கட்சிக்கு திருப்தியைத் தரவில்லை, ஆனால் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறை உணர்வின் அடிப்படையில் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டது என்று பண்டா -- செல்வா ஒப்பந்தத்தின் பின்னால் இயக்குசக்தியாக விளங்கிய நவரத்தினம் என்னிடம் கூறினார். 1968 ஆம் ஆண்டில் தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து தமிழர் சுயாட்சிக் கழகத்தை தாபித்த அந்த முதுபெரும் தமிழ்த் தலைவர் 2006 ஆம் ஆண்டில் அவரது 97 வது வயதில் கனடாவின் மொண்ட்ரீயலில் காலமானார். பின்னோக்கிப் பார்க்கும்போது, பண்டா -- செல்வா ஒப்பந்தம் நாடு அதன் முழு ஆற்றல்களையும் வளங்களையும் பயன்படுத்தி முன்னேற வேண்டுமானால் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் கண்டேயாக வேண்டும் என்பதை விளங்கிக்கொண்ட இரு தலைவர்களினால் கைச்சாத்திடப்பட்ட ஒன்று என்று தோன்றுகிறது. அதேவேளை நாட்டில் அதிகரித்துக் கொண்டிருந்த இனமோதல் சூழ்நிலையை கட்டுப்படுத்துமுகமாக புரிந்துணர்வு ஒன்றுக்கு வரவேண்டிய அவசரமும் அவசியமும் உணரப்பட்டது. ஆனால், உடன்படிக்கை ஒருபோதுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்கு பெருமளவு எதிர்ப்புகள் கிளம்பின. எஸ்.டபிளயூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவினாலும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தினாலும் 1957 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். அன்றைய பிரதமரும் பெரிய தமிழக்கட்சியின் தலைவரும் கண்ட புரிந்துணர்வு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இனநெருக்கடியை அதன் ஆரம்பக் கட்டங்களிலேயே கட்டுப்படுத்தி வைப்பதற்கு உதவியிருக்கக்கூடும். பண்டா - செல்வா ஒப்பந்தம் , தெற்கில் கிளம்பிய அரசியல் எதிர்ப்பு காரணமாக செயற்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. சிங்கள பௌத்த மதகுருமார் மத்தியிலும் சாதாரண மக்கள் மத்தியிலும் கடும்போக்குடையவர்களிடமிருந்தும் அரசாங்கத்திற்குள்ளும் எதிரணிக்குள்ளும் இருந்த கடும்போக்கு சக்திகளிடமிருந்தும் ஒப்பந்தத்திற்கு கடுமையான எதிர்ப்பு வந்தது. தவறவிடப்பட்ட பொன்னான சந்தர்ப்பம் பண்டா - செல்வா ஒப்பந்தம் தமிழ் தேசியப் பிரச்சினையை அதிகாரப் பரவல் கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் இணக்கப்பாடு ஒன்றின் ஊடாக அதன் ஆரம்பக் கட்டங்களிலேயே தீர்த்துவைப்பதற்கு கிடைத்த ஒரு பொன்னான சந்தர்ப்பமாகும். ஆனால், அது ஒருபோதும் செயற்படவில்லை . செயற்பட அனுமதிக்கப்படவுமில்லை. இறுதியில் இனநெருக்கடி தீவிரமடைந்து போராக மாறி பல வருடங்களாக நாட்டில் இரத்த ஆறு ஓடிய அனர்த்தத்துக்கே வழிவகுத்தது. https://www.virakesari.lk/article/213218
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
"ஏதேனும் ஒன்று குறையென்றால் சமாளிக்கலாம்" விரக்தியின் உச்சத்தில் தோனி - கவுரவரத்தை காப்பாற்றுமா சிஎஸ்கே பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 30 ஏப்ரல் 2025, 08:40 GMT "இதுபோன்ற டி20 தொடர்களில், ஏதாவது ஒரு சில குறைபாடுகள் இருந்தால் பரவாயில்லை, சமாளிக்கலாம். ஆனால் பெரும்பாலான வீரர்கள் நன்றாக விளையாடவில்லை என்றால் என்ன செய்ய முடியும். அணியில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்த முறையிலேயே போட்டிகளை விளையாட முடியாது." இவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பொறுமை இழந்து பேசிய வார்த்தைகள். சிஎஸ்கே அணி தொடர்ந்து 2வது முறையாக ஐபிஎல் டி20 தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறவுள்ளது. அதிலும் ஐபிஎல் சீசனின் நடுப்பகுதியிலேயே சிஎஸ்கே அணியின் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. சிஎஸ்கே அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி, அதில் 2 வெற்றிகள் 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. அணியின் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.302 என்று மோசமாக இருக்கிறது. ப்ளே ஆஃப் வாய்ப்பு? சிஎஸ்கே அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மீதம் இருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடலாம் என்று யோசித்து பார்க்க முடியாது. இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால்கூட சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எஞ்சியிருக்கும் 4 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி எதிர்காலத்துக்குத் தனது சிறந்த வீரர்கள் கலவையைப் பரிசீலிக்கலாம், இளம் வீரர்களுக்கான வாய்ப்பு, அவர்களின் திறமையைக் கண்டறியும் களமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். கோட்டையில் வீழ்த்தப்பட்ட சிஎஸ்கே சென்னை சேப்பாக்கம் என்பது சிஎஸ்கே அணியின் கோட்டையாகக் கருதப்பட்டது. இதுவரை சேப்பாக்கத்தில் நடந்த 76 ஐபிஎல் போட்டிகளில் 51 ஆட்டங்களில் வென்று சிஎஸ்கே அணி தன்னை ராஜாவாக நிலைநிறுத்திக் கொண்டிருந்தது. கடந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடந்த 7 போட்டிகளில் 5 ஆட்டங்களில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. ஆனால் இந்த சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கே வெற்றியுடன் தொடங்கினாலும், அதன்பின் அடிக்கு மேல் அடி என சிஎஸ்கே அணியை மீண்டெழ விடாமல் விழுந்தது. ஆர்சிபி அணிக்கு எதிராக 17ஆண்டுகளில் முதல்முறையாக சென்னையில் சிஎஸ்கே தோற்றது. கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக டெல்லி கேபிடல்ஸ் அணியிடமும் சென்னையில் சிஎஸ்கே தோற்றது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் இதுவரை இல்லாத வகையில் மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. சன்ரைசர்ஸ் அணி சென்னையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக இதற்கு முன் 5 முறை மோதியும் ஒரு ஆட்டத்தில்கூட வென்றதில்லை. முதல் முறையாக சிஎஸ்கே அணியை அதன் கோட்டையான சென்னையில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது. கடந்த 13 ஆண்டுகளில் முதல்முறையாக சென்னை சேப்பாக்கத்தில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சிஎஸ்கே சந்தித்துள்ளது. சேப்பாக்கத்திலேயே சிஎஸ்கே தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தது ரசிகர்களுக்குப் பெரிய வருத்தத்தையும், ஆதங்கத்தையும் அளித்து வருகிறது. சிஎஸ்கே போட்டி என்றால் டிக்கெட் கிடைக்காத நிலை இருந்த காலத்தில், இப்போது சிஎஸ்கே போட்டிக்கு டிக்கெட் விற்பனை மந்தமாக இருக்கும் நிலை வந்துவிட்டது. இந்தியா ராணுவ தாக்குதலுக்கு திட்டமிடுவதாக பாகிஸ்தான் சந்தேகிப்பது ஏன்? என்ன நடக்கிறது?4 மணி நேரங்களுக்கு முன்னர் காலனி எனும் சொல்லால் தலித் மக்கள் சந்திக்கும் இன்னல்கள் என்ன? அரசின் அறிவிப்பு இதை மாற்றுமா?8 மணி நேரங்களுக்கு முன்னர் தோல்விக்கான காரணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணியின் படுமோசமான தோல்விகளுக்கு அணி வீரர்கள் தேர்வு, வீரர்களின் செயல்பாடு, பெரிய தொகை வீரர்களைத் தக்க வைப்பதில் தேக்கம், புதிய வீரர்களைத் தேர்ந்தெடுத்தும் வாய்ப்பு வழங்காதது, புதிதாக எதையும் பரிசோதிக்காதது எனப் பல அம்சங்கள் சொல்லப்படுகின்றன. சிஎஸ்கே அணி இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால், இதுவரை தொடக்க ஆட்டக்காரர்களாக நிலையாக எந்த வீரரையும் களமிறக்கவில்லை. ரச்சின் ரவீந்திரா, கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், திரிபாதி, ரஷீத் எனப் பல வீரர்களை முயன்றும் கை கொடுக்கவில்லை. அது மட்டுமின்றி தொடக்க ஜோடி குறைந்தபட்சம் பவர்ப்ளே ஓவர்கள் வரைகூட விக்கெட்டுகளை இழக்காமல் விளையாட வேண்டும். ஆனால், கடந்த 9 போட்டிகளில் 2 போட்டிகளைத் தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் பவர்ப்ளேவில் சிஎஸ்கே விக்கெட்டுகளை இழந்து, பவர்ப்ளே-ஐ சரியாகப் பயன்படுத்தத் தவறியுள்ளது. வலுவில்லாத நடுவரிசை நடுவரிசைக்கென வீரர்களை ஏலத்தில் சிஎஸ்கே அணி தேர்வு செய்தாலும் அந்த வீரர்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. குறிப்பாக தீபக் ஹூடா, சாம் கரன், விஜய் சங்கர், ஜடேஜா, ஷிவம் துபே என யாரும் நடுவரிசையில் எதிர்பார்த்த ஆட்டத்தை வழங்கவில்லை. நடுப்பகுதி ஓவர்களில்தான் ஸ்கோரை உயர்த்த முடியும். ஆனால், சிஎஸ்கே அணி நடுப்பகுதி ஓவர்களில் படுமந்தமாக ஆடியது, ஷிவம் துபே என்ற பெரிய ஹிட்டரை நம்பி மட்டுமே நடுப்பகுதியில் சிஎஸ்கே சவாரி செய்தது. ஆனால் ஷிவம் துபே பெரிய ஹிட்டர் என்றாலும், சிறந்த பேட்டர் என்று ஏற்க முடியாது. நின்ற இடத்தில் இருந்துதான் சிக்ஸர், பவுண்டரியை துபே அடிப்பாரே தவிர கால்களை நகர்த்தி, மைதானத்தின் நான்கு புறங்களிலும் ஷாட்களை அடிக்கும் வல்லமையான பேட்டர் இல்லை. வெற்றிக்கான எண்ணம் இல்லை சிஎஸ்கே வீரர்கள் தன்னம்பிக்கையற்றுக் காணப்படுகிறார்கள். சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில்கூட வெற்றிக்கான தருணம் எது என்பதைக் கண்டறிந்து அதைக் கைப்பற்றும் விழிப்புணர்வுகூட இல்லாமல் அணி வீரர்கள் இருப்பது கவலைக்குரியது. பேட்டர்களின் ஷாட் தேர்வு இந்த சீசனில் மிகவும் மோசமாக இருந்தது. எந்தப் பந்தில் எந்த ஷாட்களை ஆட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவு இல்லாமல் களத்துக்கு வந்தவுடன் பெரிய ஷாட்டுக்கு முயன்று சிஎஸ்கே வீரர்கள் ஆட்டமிழப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. நடுப்பகுதி ஓவர்களில் பார்ட்னர்ஷிப்களை அமைப்பது வெற்றிக்குப் பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும். ஆனால், இந்த சீசனில் சிஎஸ்கே அணி ஆடிய 9 போட்டிகளில் ஒரு பார்ட்னர்ஷிப்கூட 100 ரன்களை கடக்கவில்லை. பஹல்காம் தாக்குதலில் மகனை இழந்த தந்தை மீதி 9 குடும்பத்தினருடன் உயிர் தப்பியது எப்படி?6 மணி நேரங்களுக்கு முன்னர் தடுப்புக் காவல், விசா ரத்து - டிரம்ப் நடவடிக்கையால் அச்சத்தில் வாழும் வெளிநாட்டு மாணவர்கள்30 ஏப்ரல் 2025 ஃபீல்டிங் பிரச்னை பட மூலாதாரம்,GETTY IMAGES சிஸ்கே அணி இந்த சீசனில் ஃபீல்டிங்கிலும் சரி, கேட்சுகளிலும் சரி கையில் வெண்ணையைத் தடவிக்கொண்டு செயல்படுவதுபோல் இருந்தது. கடந்த 8 போட்டிகளில் 27 கேட்சுகளை சிஎஸ்கே வீரர்கள் பிடித்துள்ளனர். 16 கேட்சுகளை தவறவிட்டுள்ளனர். 13 ரன்அவுட்களை தவறவிட்டுள்ளனர், 26 முறை ஃபீல்டிங்கை சரியாகச் செய்யாமல் கோட்டைவிட்டுள்ளனர். ஐபிஎல் அணிகளில் 9 அணிகளின் கேட்ச் திறன் குறைந்தபட்சம் 70 சதவிகிதத்திற்கு அதிகமாக இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணியின் கேட்ச் திறன் 62 சதவீதத்தைக்கூட தாண்டவில்லை. சிஎஸ்கே அணியின் மோசமான தோல்விகளுக்கு மேற்கூறியவை காரணிகளாக இருந்தாலும், சரியான வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்திருந்தால் குறைந்தபட்சம் சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளிலாவது வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் அணி விமர்சிக்கப்படுகிறது. சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் "சிஎஸ்கே அணி ஏலத்தில் வீரர்களை எடுத்த முறையே தவறு. கடந்த காலத்தில் ஏலத்தின்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி நேரடியாகப் பங்கேற்காவிட்டாலும் ஒவ்வொரு வீரர்கள் ஏலத்திலும் ஆலோசனை நடத்துவார். ஆனால், இந்த முறை ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை, ஒருபோதும் மோசமான ஏலத்தை தோனி ஏற்கமாட்டார்," என்று தெரிவித்தார். மேலும், "தோனிதான் கடைசி முடிவை எடுப்பார் என நிர்வாகிகள் கூறலாம். ஆனால் எனக்குத் தெரிந்தவரை தோனி ஏலத்தில் பங்கேற்றதில்லை. சில வீரர்கள் குறித்து தகவல்களை மட்டும் தோனி வழங்கியுள்ளார். ஆனால், தீவிரமாக ஏலத்தில் ஈடுபட்டதில்லை. தோனிக்கு 43 வயதானாலும் தன்னால் அணிக்கு பங்களிப்பை வழங்க முடியும் எனத் தொடர்ந்து விளையாடுகிறார். ரூ.18 கோடி, ரூ.19 கோடி, ரூ.10 கோடி, ரூ.17 கோடி எனப் பல வீரர்களை அணி வாங்கியது, தக்கவைத்தது. ஆனால் அவர்கள் உச்சபங்களிப்பை வழங்கினார்களா?" என்றும் ரெய்னா கேள்வி எழுப்பியுள்ளார். ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த கொல்கத்தா - ஆபத்பாந்தவனாக வழிநடத்திய சுனில் நரைன்30 ஏப்ரல் 2025 வைபவ் சூரியவன்ஷிக்கு உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறும் அறிவுரை என்ன?29 ஏப்ரல் 2025 குழப்பத்தில் சிஎஸ்கே அணி பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே சரியான வீரர்கள் கலவையைக் கண்டறிய கடந்த இரு போட்டிகளாக சோதனைகளை செய்யத் தொடங்கியுள்ளது. ஒரு நேரத்தில் நடுவரிசை பேட்டிங்கிற்கு தூண்களாக ரெய்னா, ராயுடு இருவரும் இருந்தனர். மெதுவாக ஆட்டத்தைத் தொடங்கினாலும் இருவரும் சரியான நேரத்தில் ஸ்கோரை உச்சத்துக்குக் கொண்டு செல்வர். ஆனால், இருவரும் அணியை விட்டு சென்ற பிறகு சிஎஸ்கே அணியில் இவர்கள் இடத்துக்கு எந்த பேட்டர்களையும் கொண்டு வரவில்லை. சாம் கரனை 3வது வரிசையிலும், ஜடேஜாவை 4வது வரிசையிலும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி களமிறக்கியது. ஜடேஜாவை பொருத்தவரை 5,6,7வது இடத்தில்தான் 193 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார், 3வது வரிசையில் ஜடேஜா 3 முறை மட்டுமே களமிறங்கியுள்ளார். இப்படிப்பட்ட பேட்டரை எவ்வாறு 4வது வரிசையில் களமிறக்கலாம். டெவால்ட் பிரெவிஸ் என்னும் ஸ்பெசலிஷ்ட் பேட்டரை வைத்துக்கொண்டு சாம் கரனையும், ஜடேஜாவையும் களமிறக்கினார்கள். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் ஃபார்மில் இல்லை. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் கைநழுவியதே சாம் கரன் வீசிய 2 ஓவர்களில்தான். அப்படியிருக்க சாம்கரன் பெரும்பாலும் 5வது 6வது வரிசையில் களமிறங்கியவர், அவரை 3வது வீரராகக் களமிறக்கி சிஎஸ்கே கையைச் சுட்டுக் கொண்டதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விமர்சித்தனர். நடுவரிசைக்கென ஏலத்தில் எடுக்கப்பட்ட தீபக் ஹூடா 4 போட்டிகளில் 29 ரன்கள், ராகுல் திரிபாதி 5 போட்டிகளில் 55 ரன்கள், ஷிவம் துபே 242 ரன்கள் சேர்த்துள்ளனர். ஷிவம் துபே களமிறங்கிய பெரும்பாலான போட்டிகளில் கடும் அழுத்தம் இருந்ததால், அவரால் 150 ஸ்ட்ரைக் ரேட்டில்கூட விளையாட முடியவில்லை என்பது துரதிர்ஷ்டம். வைபவ் சூர்யவன்ஷி: 14 வயதில் உலக கிரிக்கெட்டை திரும்பிப் பார்க்க வைத்த விவசாயி மகன்29 ஏப்ரல் 2025 ஐபிஎல்லில் இது பழிவாங்கும் வாரம் - ராகுலின் காந்தாரா கொண்டாட்டத்தை கிண்டல் செய்த விராட் கோலி28 ஏப்ரல் 2025 தோனி இனியும் தேவையா? பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணியின் தோல்விக்கான காரணம் குறித்த கேள்விக்கு மூத்த விளையாட்டு செய்தியாளர் ஆர் முத்துக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "சிஎஸ்கே அணி என்றால் தோனி, தோனி என்றால் சிஎஸ்கே என்ற பிராண்ட் கட்டமைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்தக் கட்டமைப்பு உடைக்கப்பட வேண்டும்" என்றார். மேலும், "43 வயதில் தோனி இன்னும் உடல்தகுதியுடன் இருக்கிறார் என்று சகவீரர்கள் கூறலாம். ஆனால், மனம் ஒத்துழைக்கும் அளவுக்கு உடல்நிலை ஒத்துழைக்காது. கடந்த சீசனோடு ஒப்பிடுகையில் இந்த சீசனில் தோனியால் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை என்பதே இதற்குப் பதில். முதலில் 43 வயதாகும் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்று புதிய தலைமையைக் கொண்டு வர வேண்டும். தோனி இன்னும் ஒரு சீசன் விளையாடுவார் என்று சொல்லி ஒரு இடத்தை சிஎஸ்கே வீணடிக்காமல், இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்." சீனியர் வீரர்களைத் தக்கவைக்கிறேன் என்ற பெயரில் பெரிய தொகையை அதில் செலவிட்டு வருகின்றனர். குறிப்பாக ஜடேஜாவுக்கு ரூ.18 கோடி, அஸ்வின் ரூ.9 கோடி, துபே ரூ.12 கோடி, நூர் அகமது ரூ.10 கோடி செலவிட்டுள்ளனர். இவர்களை மாற்றிவிட்டு, புதிய வீரர்களை அடுத்து நடக்கும் ஏலத்தில் எடுக்க வேண்டும். இதைவிட முக்கியமானது தோனியை நீக்க வேண்டும். 43 வயதில் தோனி இனிமேல் என்ன பங்களிப்பு செய்வார் என எதிர்பார்க்கிறார்கள். தோனிக்கான இடத்தை இளம் வீரர் ஒருவருக்கு வழங்க வேண்டும். டி20 ஆட்டம் மாறிவிட்ட நிலையில், தோனியின் பழமையான ஆட்டம் இனிமேல் எடுபடாது. தோனியின் ஃபார்ம் முடிந்துவிட்டு என்ற உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள். கோலியைப் பாருங்கள் மாறிவரும் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ப தன்னுடைய கேமை மாற்றிக்கொண்டார். ஆனால், தோனியால் தன்னுடைய கேம் பாணியை மாற்றமுடியவில்லை, அவரால் ரிஸ்க் எடுக்க முடிவதில்லை. ஆகாஷ் சோப்ரா கூறியதைதான் இங்கு நினைவு கூற வேண்டும், தோனி இந்த டவுனில்தான் களமிறங்க வேண்டும், இங்குதான் விளையாட வேண்டும் என்று சொல்வதற்கு சிஎஸ்கே நிர்வாகத்தில் ஆட்கள் இல்லை, இதுதான் சிஎஸ்கே சரிவுக்கு பிரதான காரணம்" என்றார். நச்சுப் பாம்புகள் நிறைந்த காட்டில் 500 நாட்கள் தப்பிப் பிழைத்த நாய் மீட்கப்பட்டது எப்படி?7 மணி நேரங்களுக்கு முன்னர் முகலாயர் குறித்த வரலாற்றுப் பாடங்களை பாடநூலில் இருந்து நீக்கிய என்சிஇஆர்டி - இன்றைய முக்கிய செய்திகள்29 ஏப்ரல் 2025 சிஎஸ்கே மீண்டு எழ என்ன தேவை? பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணி ஏலத்தில் சரியான வீரர்களே வாங்க முடியாததற்கு முக்கியக் காரணம் தக்கவைப்பில் பெரிய தொகையை இழந்ததுதான். பதிராணா (ரூ.13 கோடி), ஜடேஜா (ரூ.18 கோடி), கெய்க்வாட் (ரூ.18 கோடி) துபே (ரூ.12 கோடி), தோனி (ரூ.4 கோடி) ஏறக்குறைய ரூ.65 கோடி தக்கவைப்பிலேயே சிஎஸ்கே நிர்வாகம் செலவிட்டுள்ளது. இது தவிர ஃபார்மில் இல்லாத அஸ்வினை ரூ.9.75 கோடிக்கும், நூர் அகமது-ஐ ரூ.10 கோடிக்கும் வாங்கியது. இதில் ரூ.20 கோடி வீணானது. இது தவிர டேவான் கான்வே (ரூ.6.25 கோடி) ரச்சின் ரவீந்திரா (ரூ.4 கோடி). இந்த வீரர்களுக்கு செலவிட்ட தொகையை வைத்து அடுத்த சீசனுக்கான ஏலத்தில் அதிகமான இளம் வீரர்களை ஏலத்தில் வாங்கலாம். இது குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்ரிநாத் அவரின் யூடியூப் சேனலில் பேசுகையில், "தக்கவைப்பில் உள்ள சீனியர் வீரர்களை தயக்கம் இல்லாமல் விடுவித்தாலே பெரிய தொகை சிஎஸ்கேவுக்கு கிடைக்கும். சிஎஸ்கே அணியில் அதிக விலைக்கு வாங்கிய வீரர்கள் பலரும் வெளியேதான் அமர்ந்துள்ளனர், ஏறக்குறைய ரூ.25 கோடி சும்மா கிடக்கிறது. அஸ்வின், கான்வே, ரச்சின் ஆகியோரை சரியாகப் பயன்படுத்தவே இல்லை. சீனியர் வீரர்களை விடுவித்தாலே அந்தப் பணத்தில் அடுத்த சீசனுக்கான மினி ஏலத்தில் புதிய இளம் வீரர்களை அணிக்குள் கொண்டுவரலாம். அது மட்டுமல்லாமல் இந்திய அளவில் நடக்கும் பல்வேறு போட்டிகளுக்கு சிஎஸ்கே சார்பில் ஒரு பிரதிநிதியை அனுப்பி இளம் வீரர்களின் ஆட்டத்தை கவனிக்க வேண்டும். உலகளவில் நடக்கும் லீக் போட்டிகளிலும் இளம் வீரர்களை கண்காணித்து அவர்களை ஏலத்தின்போது வாங்க வேண்டும்," என்று தெரிவித்துள்ளார். மேலும், "இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே செல்வது கடினம் என்பதால், அணியில் தற்போதுள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களில் யார் சிறப்பாக ஆடுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்களைத் தக்கவைக்க வேண்டும். ராமகிருஷ்ணா கோஷ், ஆந்த்ரே சித்தார்த், நாகர்கோட்டி, வன்ஸ் பேடி ஆகியோருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இதில் வன்ஸ் பேடி டெல்லி லீக்கில் சிறப்பாக பேட் செய்தவர் அவரை ஏன் இன்னும் பயன்படுத்வில்லை என்பது புரியவில்லை. இதைவிட முக்கியமான அம்சம் தோனி இன்னும் ஒரு சீசனாவது குறைந்தபட்சம் விளையாடி அணியைக் கட்டமைத்து கேப்டனை உருவாக்கிவிட்டுச் செல்ல வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c70zy0pry9wo
-
நியூசிலாந்தில் நிலநடுக்கம்
30 APR, 2025 | 10:35 AM நியூசிலாந்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. https://www.virakesari.lk/article/213309
-
36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!
24 – 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் இஸ்லாமாபாத்தில் தாக்குதல் நடத்த திட்டம்; பாகிஸ்தானிலிருந்து எச்சரிக்கை Digital News Team 30 ஏப்ரல், 2025 ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் திகதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஏப்ரல் 30) இரண்டாவது பாதுகாப்பு அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாதத்திற்கு எதிராக உரிய பதிலளி கொடுப்பதில் நமது தேசம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாகவும், பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்திருப்பதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இன்னும் 24 – 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் இஸ்லாமாபாத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்த இந்தியா தயாராகி வருவதாக நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர் கூறியுள்ளார். https://thinakkural.lk/article/317432
-
உலக அளவில் அச்சுறுத்தும் போர் சூழல்; இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்த 100 நாடுகள்
உலக அளவில் அதிகரிக்கும் போர் சூழல், மாறிவரும் புவியியல் அரசியல் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு நாடுகள் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாக அதிகரித்துள்ளன. உக்ரைன்- ரஷ்யா போர், காசா- இஸ்ரேல் போர், தென் கொரியாவுக்கு வடகொரிய மிரட்டல், தாய்வாணுக்கு சீனா மிரட்டல், இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் என உலகின் பல்வேறு பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் ராணுவ ஒதுக்கீட்டிற்கான நிதியை அதிகரித்துள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில், 2023- ஆம் ஆண்டை விட 2024- ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக ராணுவ நிதி 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இது 2023- ஆம் ஆண்டை 9 புள்ளி 4 சதவிகிதம் அதிகம். இரு பெரிய போர்களின் மையமாக உள்ள ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் ராணுவ நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரித்துள்ளது. மற்ற செலவினங்களை குறைத்து விட்டு, ராணுவப் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளிப்பதால், சமூக முன்னேற்ற திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும் நேட்டோ கூட்டணிக்கான அமெரிக்காவின் நிலைப்பாடு ஆகியவற்றால் ரஷ்யா உள்பட பல ஐரோப்பிய நாடுகளின் ராணுவச் செலவு 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பனிப்போரின் முடிவில் பதிவு செய்யப்பட்ட அளவை விட அதிகம் என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ராணுவச் செலவு 2024 ஆம் ஆண்டில் $149 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டை விட 38 சதவீதம் அதிகமாகும், ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.1 சதவிகிதம் ஆகும். உக்ரைனின் மொத்த ராணுவச் செலவு 2 புள்ளி 9 சதவீதம் அதிகரித்து 64.7 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. இது ரஷ்யாவின் ராணுவச் செலவில் 43 சதவீதமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 34 சதவீதத்துடன், மற்ற நாடுகளை விட மிகப்பெரிய ராணுவச் சுமையை உக்ரைன் சுமக்கிறது. மேலும் தற்போது, உக்ரைன் அனைத்து வரி வசூலையும் ராணுவத்திற்காக செலவிடுகிறது… இதனால் சில ஆண்டுகளில் அந்நாடு மிகப்பெரிய பொருளாதார சிக்கலை எதிர்கொள்ளும் என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. ஜெர்மனியின் ராணுவ நிதி ஒதுக்கீடும் 28 சதவீதம் அதிகரித்து, 88.5 பில்லியன் டாலர்களை தொட்டுள்ளது. ஜெர்மனி, இந்தியாவை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது பெரிய ராணுவ நாடாக மாறியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் ராணுவ நிதி ஒதுக்கீடும் கடந்த ஆண்டை விட 15 சதவீதம் அதிகரித்துள்ளது. காசாவை தாக்கி வரும் இஸ்ரேலின் ராணுவ நிதியை 65 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், பிராந்திய பிரச்சனைகளில் சிக்கியுள்ள ஈரான், தனது ராணுவ நிதியை 10 சதவிகிதம் குறைத்துக்கொண்டுள்ளது. ஈரான் மீது பல்வேறு நாடுகளும் விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அமெரிக்காவின் ராணுவச் செலவு 5.7 சதவீதம் அதிகரித்து 997 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. இது 2024 இல் உலக ராணுவ நிதியில் 37 சதவீதம். அதிகரித்து வரும் சிக்கலான புவிசார் அரசியல் உலகில் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிலைநாட்ட உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்கள் ராணுவப் படைகளை பலப்படுத்தி வருகின்றன. https://thinakkural.lk/article/317420
-
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முன் ஆர்ப்பாட்டம்!
Published By: DIGITAL DESK 3 30 APR, 2025 | 04:21 PM இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இரு வேறுபகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று புதன்கிழமை (30) முன்னெடுக்கப்பட்டன. கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முன் ஒரு குவினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்றைய தினம் காலை முன்னெடுத்தனர். இதேவேளை, பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றுமொரு குழுவினர் கொழும்பு விகாரமாதேசி பூங்காவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/213348
-
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பட மூலாதாரம்,GETTY IMAGES 30 ஏப்ரல் 2025, 11:10 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவெடுத்துள்ளதாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் என, ஏ.என்.ஐ. செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லியில் இன்று பிரதமர் மோதி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் இதனை தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பில் இதுவரை நடந்தது என்ன? சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவுக்குத் தேவையா?20 ஜனவரி 2023 சாதிவாரி கணக்கெடுப்பு: மோதி தயங்குவது ஏன்? ஸ்டாலின் முன் உள்ள தடைகள் என்ன? - 6 கேள்வி பதில்கள்26 ஜூன் 2024 சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு - ஆர்.எஸ்.எஸ் கருத்தும் காங்கிரஸின் 4 கேள்விகளும்3 செப்டெம்பர் 2024 எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தலைவர்கள் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். ஏற்கெனவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்பொழுது, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது. தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன்." என தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோதிக்கு அதிமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது? கடந்த 1865ஆம் ஆண்டில் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமான வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முறையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது. கடந்த 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிகள் விவரம் சேகரிக்கப்படவில்லை. ஆனால், பட்டியல் பிரிவில் இருக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. மற்ற சாதியினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. ஆகவே, மற்ற சாதியினரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை. இந்தியாவில் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011இல் மேற்கொள்ளப்பட்டது. அதற்கடுத்த கணக்கெடுப்பு, 2021இல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தருணத்தில் கோவிட் பரவல் இருந்த காரணத்தால், மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது மேற்கொள்ளப்படும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c75dg19vkg7o
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்பு; தனியார் துறை முதலாளிகளிடம் தேர்தல் ஆணையம் விடுத்திருக்கும் கோரிக்கை 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் வகையில், தனியார் துறை ஊழியர்களுக்கு தேவையான விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணையம் முதலாளிகளை கேட்டுக் கொண்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் பிரிவு 84A (1) இன் படி, இந்த விடுப்பு ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு அல்லது தனிப்பட்ட விடுப்பு இல்லாமல் வழங்கப்பட வேண்டும். பணியிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு உள்ள தூரத்தின் அடிப்படையில் வழங்கப்படும் விடுப்பின் நீளம் கீழ்கண்டவாறு தீர்மானிக்கப்பட வேண்டும். • 40 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான தூரமாக இருந்தால் அரை நாளாகவும், • 40 முதல் 100 கிலோ மீட்டர் வரை இருந்தால் ஒரு நாளாகவும், • 100 முதல் 150 கிலோ மீட்டர் வரை இருந்தால் ஒன்றரை நாளாகவும், • 150 கிலோ மீட்டருக்கு மேல் இருந்தால் இரண்டு நாட்களாகவும் விடுமுறை காலத்தை சரிசெய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்து https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317418
-
மட்டு. கரடியனாற்றில் 6 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் கைது
கனகராசா சரவணன் மட்டு. கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிப்பத்திரம் வழங்க 6 ஆயிரம் ரூபா இலஞ்சமாக வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (29) மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உணவு கடை ஒன்றை அமைப்பதற்காக கரடியனாறு சுகாதார பிரிவில் கடமையாற்றிவரும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரிடம் கோரியபோது அவர் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை கோரியுள்ளார். இதனையடுத்து குறித்த கடை உரிமையாளர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அவர்களின் வழிகாட்டலில் சம்பவதினமான இன்று பகல் 12 மணியளவில் கரடியனாறு பகுதி வீதியில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற பொது சுகாதார பரிசோதகர் கடை உரிமையாளரிடம் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை வாங்கிய நிலையில் அங்கு மாறுவேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317401
-
“இந்திய மீனவர்களை தடுப்போம்” - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது தடுக்கப்படும் -; இராமலிங்கம் சந்திரசேகர் 30 APR, 2025 | 10:58 AM இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். நெடுந்தீவு பகுதிக்கு செவ்வாய்க்கிழமை (29) பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் தமது வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் மீனவர்கள், அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு நிரந்தர பாதுகாப்பு பொறிமுறையொன்று அவசியம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்குரிய இராஜதந்திர நடவடிக்கை உட்பட அனைத்து விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும், இது தொடர்பில் கடற்படையினருக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் இறங்குத்துறை பிரச்சினை சம்பந்தமாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவை தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். அதேவேளை, நெடுந்தீவு மக்களுடனும் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது நெடுந்தீவு அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/213310