Everything posted by ஏராளன்
-
மது, சிகரெட் மட்டுமல்ல, இந்த பழக்கங்கள் இருந்தாலும் உங்கள் கல்லீரல் பாதிக்கப்படலாம் என்று தெரியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக கல்லீரல் தினம் ஏப்ரல் 19-ஆம் தேதி அனுசரிக்கப்படும் வேளையில் கல்லீரல் ஆரோக்கியம், கல்லீரலுக்கும் குடல் ஆரோக்கியத்துக்கும் இருக்கும் தொடர்பு குறித்து கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் ஶ்ரீநிவாசன் பிபிசி தமிழிடம் பேசினார் . அவருடனான நேர்காணலின் சில பகுதிகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. கல்லீரலை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய முதல் விசயம் என்ன? உடலில் உள்ள எல்லா உறுப்புகளின் செயல்பாடும் நமக்கு தெரியும். ஆனால், கல்லீரல் குறிப்பாக என்ன செய்கிறது என்று பலருக்கு தெரியாது. ஏனென்றால் கல்லீரல் உடலில் 500 வகையான வேலைகளை செய்கிறது. நாம் சாப்பிடும் உணவை வடிகட்டுகிறது, புரதம் உற்பத்தி செய்கிறது, எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே நாம் சாப்பிடும் சாப்பாட்டை கவனமாக எடுத்துக் கொண்டாலே கல்லீரலை பாதுகாக்கலாம். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் ஶ்ரீநிவாசன் கல்லீரல் பாதிப்புக்கு பொதுவாக மது பழக்கமே காரணம் என்று கூறப்படுகிறது. அது உண்மையா? அப்படி இல்லை. முழு உடல் பரிசோதனை செய்யும் போது, பலருக்கும் ஃபேட்டி லிவர் (Fatty-Liver) இருப்பது தெரியவருகிறது. இதில் கிரேட் 1, கிரேட் 2, கிரேட் 3, கிரேட் 4 என்று நான்கு நிலைகள் உள்ளன. இப்போதுள்ள சூழலில் தமிழ்நாட்டில் 30-40% பேருக்கு கிரேட் 1 ஃபேட்டி லிவர் இருக்கும் என்று கூறலாம். ஆனால் அவர்களில் சுமார் 18% பேர் மட்டுமே குடிப் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் அந்த பழக்கம் கிடையாது. Nonalcoholic steatohepatitis என்ற வகையிலான, குடிப் பழக்கம் அல்லாத காரணங்களினால் கல்லீரல் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. இதற்கு காரணம் நமது மந்தமான வாழ்க்கை முறை. நாம் உடலின் தேவைக்கு அதிகமாக சாப்பிடுகிறோம். சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுகிறேன் என்று சொல்பவர்கள் சிலர் அதிகமாக குளிர்பானங்கள் குடிக்கலாம், இனிப்புகள் எடுத்துக் கொள்ளலாம், பஜ்ஜி போண்டா போன்ற எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடலாம். இவை எல்லாம் ஃபேட்டி லிவருக்கு இட்டுச் செல்லும். ஃபேட்டி லிவர் என்பது பலர் நினைத்துக் கொள்வது போல கொழுப்புச் சத்து அல்ல. ஃபேட்டி லிவருக்கு முக்கிய காரணம் கார்போஹைட்ரேட் எனும் மாவுச் சத்து தான். மாவுச்சத்தை கொழுப்பாக மாற்றும் திறன் கல்லீரலுக்கு உண்டு. எனவே அதிக மாவுச் சத்து, அதிக சர்க்கரை, இவை எல்லாமே கொழுப்பாக மாறி கல்லீரலில் சேரும். மிக எளிமையாக இதை சொல்ல வேண்டும் என்றால் - எந்த உணவாக இருந்தாலும் அது முதலில் கல்லீரலில் தான் சேரும். கல்லீரல் தான் உடலுக்கு தேவையான நல்ல உணவை வடிகட்டி அதை மட்டும் இருதயத்துக்கு அனுப்பும். இருதயம் அதனை உடல் முழுவதும் பகிர்ந்து கொடுக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 ஆரோக்யமற்ற உணவு பழக்கத்தினால் மட்டுமே கல்லீரல் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட வாய்ப்பு உண்டா? 100% வாய்ப்பு உள்ளது. கல்லீரல் பாதிப்பில் தொடங்கி, கல்லீரல் செயல்பாடு முற்றிலும் முடங்கிப் போய் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் சில நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் உணவு கட்டுப்பாடுடன் இருக்கவில்லை என்றால் மிக விரைவில் கிரேட் 4 வரை அவர்களின் கல்லீரல் பாதிப்பு தீவிரமாகலாம். உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும் இது பொருந்தும். அவர்கள் மாதத்துக்கு ஒரு முறை குடிப்பவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களின் கல்லீரல் பாதிப்புக்கு குடிபழக்கத்தை காரணம் சொல்ல முடியாது. சொல்லப்போனால், குடிப்பழக்கம் அல்லாத காரணங்களினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் அதிகரிக்கும் சதவிகிதம் வேகமாக உயர்ந்து வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES கொரோனாவுக்கு பிறகு கல்லீரல் பாதிப்புகள் அதிகரிக்கும் விதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? வாழ்க்கை முறை மாறியுள்ளது. அலுவலகத்துக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் அதிகமாகியுள்ளனர். குறிப்பாக ஐடி துறையில் இருப்பவர்கள் இரவு நேரங்களில் வேலை பார்க்கும் போது, பசித்த உடன் உணவு டெலிவரி ஆப் மூலம் உடனடியாக ஆர்ட செய்து சாப்பிடுகின்றனர். அந்த உணவை எப்படி சமைக்கிறார்கள், அது என்ன மாதிரியான கடை என்றெல்லாம் பார்ப்பதில்லை, அருகில் இருப்பது எது என்று மட்டுமே பார்க்கிறார்கள். இவை எல்லாம் பாதிப்புகளை அதிகப்படுத்துகிறது. மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது?23 மார்ச் 2025 மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற 'லைக்கா' நாய் எவ்வாறு இறந்தது?22 மார்ச் 2025 இரவு நேரத்தில் சாப்பிடுவதால் கல்லீரல் பாதிப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்குமா? யார் அதிக நாட்கள் வாழ்கிறார்களோ அவர்கள் ஆரோக்யமானவர்களாக கருதப்படுகிறார்கள். அப்படி பார்க்கும் போது கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சராசரி வாழ்நாள் 85 ஆண்டுகள் ஆகும். நம்மை விட 20 ஆண்டுகள் அதிகம். அவர்களின் உணவுப் பழக்கத்தின் முக்கிய அம்சம் – இரவு உணவை அவர்கள் மாலை 6.30 மணிக்கு சாப்பிட்டுவிடுவார்கள். நாம் இரவு 10மணி, 11 மணிக்கு கூட சாப்பிடுவோம். இப்போது இரவு 2 மணி, 3 மணிக்கு கூட பிரியாணி கிடைக்கிறது. வயிறு முட்ட பிரியாணி சாப்பிடும் போது உடலில் தேவைக்கு மீறிய கலோரிகள் சேர்கின்றன. அவ்வளவு உணவை சாப்பிட்டு விட்டு, உடனே தூங்கிவிடுவார்கள், எந்த வேலையும் செய்ய போவதில்லை. அந்த உணவு நமது கல்லீரலில் தான் சென்று தங்கும். இரவு நேரத்தில் சாப்பிடும் போது உணவு செரிக்க நேரமாகும். அவை குடல் பகுதியிலேயே தங்கிவிடும். அப்போது பாக்டீரியாக்கள் செயல்பாடு அதிகரிக்கும். அதாவது பாலை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அது கெட்டுபோய்விடும் இல்லையா, அதே போல தான். உணவு செரிக்காமல் அதே இடத்தில் நீண்ட நேரம் தங்கியிருந்தால் அதுவும் கெட ஆரம்பித்துவிடும். அதனால் தான் பலருக்கு Irritable Bowel Syndrome போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. பாக்டீரியாக்கள் அதிகமாகும் போது அவை வாயு உற்பத்தி செய்யும். அந்த வாயு குடலை விரிக்கும். குடலை விரிக்கும் போது கழிப்பறைக்கு செல்லும் உந்துதல் ஏற்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வித்திட்ட 'ஹிட்லரின் விஞ்ஞானி'23 மார்ச் 2025 குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை, எவ்வாறு கழுவ வேண்டும்?24 மார்ச் 2025 கல்லீரல் ஆரோக்கியத்துக்கு குடல் ஆரோக்கியம் (gut health) எவ்வளவு முக்கியம்? கல்லீரலும் குடல் கிட்டத்தட்ட ஒரே உறுப்பு போல தான். நாம் சாப்பிடும் உணவில் உள்ள பாக்டீரியா, அவை உடலில் சென்ற பிறகு எப்படி வளர்கின்றன, அவற்றுடன் நமது உறவு எப்படி உள்ளது இவை எல்லாம் பற்றி பேசுவது தான் குடல் ஆரோக்கியம். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரே சமையலறையிலிருந்து சமைத்த உணவை தான் ஒவ்வொருவரும் சாப்பிட்டு வந்தனர். காலை உணவு வீட்டில் சாப்பிடுவோம், மதிய உணவு வீட்டிலிருந்து எடுத்துச் செல்வோம், இரவு உணவையும் வீட்டில் தான் சாப்பிடுவோம். வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் இதே வழக்கமாக இருக்கும். அப்போது நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கும் நமக்குமான தொடர்பு சீராக இருக்கும். ஆனால் இப்போது வெவ்வேறு வேளைகள் வெவ்வேறு இடத்திலிருந்து சாப்பிடுகிறோம். உடலில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் செல்கின்றன. அவை ஒன்றோடு ஒன்று சண்டையிடுகின்றன. அப்போது வாயு உற்பத்தியாகும். இவை எல்லாம் குடலுக்கு உகந்தது அல்ல. கவர் போடாத செல்போன் கீழே விழுந்தால் திரை உடையுமா? பிபிசி செய்தியாளரின் ஒரு மாத பரிசோதனை அனுபவம்16 ஏப்ரல் 2025 டைப்-5 நீரிழிவு: இந்தியாவில் இளம் வயதினரையும் பாதிக்கும் புதிய வகை நீரிழிவு யாருக்கெல்லாம் வரும்?16 ஏப்ரல் 2025 மன அழுத்தம், கல்லீரல், குடல் ஆரோக்கியம் இவற்றுக்கான தொடர்பு என்ன? சாலையில் நீங்கள் நடந்து செல்லும் போது திடீரென ஒரு லாரி உங்கள் மீது இடிப்பது போல வந்து, நின்றுவிட்டது என்று வைத்துக் கொள்ளலாம். "எனக்கு வயிறு கலக்கிவிட்டது" என்று கூறியிருப்பீர்கள். பதட்டமடையும் போது ஏன் வயிறு கலக்கிறது? நாம் பதட்டம் அடையும் போது வெளியாகும் சில சுரப்பிகள் குடலில் மாற்றங்களை உண்டாக்கும். நிறைய பேருக்கு தற்போது வேலை சூழல் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கிறது. அவர்களது உடலில் அதிகபடியான சுரப்பிகள் வெளியாகின்றன. அவை குடலை பாதிக்கும். குடல் சாப்பாட்டை உடனே வெளியேற்றிவிட வேண்டும் என்று நினைக்கும். எனவே தான் சிலருக்கு சாப்பிட்ட உடன் கழிவறை பயன்படுத்த வேண்டிய உந்துதல் ஏற்படும். இவை எல்லாமே மன அழுத்தம் தொடர்பானது தான். பாராசிட்டமால் அதிகமாக சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES பாராசிட்டமாமல் தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிப்பு, சில நேரங்களில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் ஏற்படலாம். குழந்தைகளில் பாராசிடாமல் பாய்சனிங் (paracetamol poisoning) அதிகம் காணப்படுகிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல் குறையவில்லை என்ற காரணத்தினால் பெற்றோர்கள் அறியாமையினால் மருத்துவர் கூறியதை விட அதிகமாக கொடுப்பார்கள். அதனால் கல்லீரல் பாதிப்பு கண்டிப்பாக ஏற்படுகிறது. மருந்துகள் கொடுத்து நிலைமை சீராகவில்லை என்றால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதை தவிர வேறு வழியில்லை. ஒவ்வொருவரும் எவ்வளவு பாராசிடாமல் எடுத்துக் கொள்ளலாம் என்பது ஒவ்வொருவரின் உடல் நிலையை பொருத்தது. ஏற்கெனவே குடிபழக்கத்தினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ள நபருக்கு ஒரு சில மாத்திரைகள் கூட ஆபத்தாக இருக்கலாம். ஆரோக்யமாக இருப்பவர்களுக்கு ஒரு நாளுக்கு பல மாத்திரைகள் சாப்பிட்டால் கூட பாதிப்பு இருக்காது. கல்லீரல் பாதிப்பு நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு வலியை குறைக்கக் கூட பாராசிடாமல் கொடுப்பதை மருத்துவர்கள் தவிர்த்துவிடுவோம். அந்த அளவுக்கு பாராசிட்டமாலும் கல்லீரல் பாதிப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. அதே போன்று உடல் எடை குறைப்பதற்கான பவுடர்களை உட்கொள்வதால் தீவிர கல்லீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனக்கு தெரிந்த இரண்டு மருத்துவர்கள் அதனை எடுத்துக் கொண்டனர். ஒருவர் இறந்துவிட்டார் . மற்றொருவருக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு தற்போது மெல்ல குணமாகிவருகிறார். அந்த பவுடரை எடுத்துக் கொள்ளும் போது திருப்தியாக சாப்பிட்ட உணர்வு கிடைக்கும். எனவே அந்த நாளில் நமக்கு தேவையான சத்துக்கள் எதையும் நாம் உட்கொள்ள மாட்டோம். அந்த பவுடரால் உடல் எடை குறையும். ஆனால் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்து பல ஆய்வுகள் உள்ளன. உலக கல்லீரல் தினம்: கல்லீரலை நாம் ஏன் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும்? குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு குடிக்காதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்? உடலில் 500 பணிகளைச் செய்யும் கல்லீரலை பாதுகாப்பது எப்படி? 'டாட்டூ' ஆபத்தா? கொழுப்பு கல்லீரல்: மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்? பாதிப்படைந்த கல்லீரல் முழுவதும் பழைய நிலைக்கு திரும்ப வழி உண்டா? கல்லீரல் நமது உடலின் மிக அற்புதமான உறுப்பாகும். கிரேக்க புராணங்களில் வரும் ப்ரோமதியஸ் என்பவருக்கு உடலிலிருந்து வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் கல்லீரலை காகம் ஒன்று தினமும் வந்து சாப்பிட்டுச் செல்லும். ஆனால் காகம் ஒவ்வொரு முறை வரும் போதும், கல்லீரல் பழைய நிலையில் வளர்ந்திருக்கும். கல்லீரலுக்கு மீண்டு வளரும் திறன் உள்ளது, ஆரோக்யமாக இருப்பவரின் கல்லீரலில் 70% வெட்டி எடுத்துவிட்டாலும், அந்த 30% கல்லீரல் அடுத்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 80% ஆக வளர்ந்திருக்கும். குடிபழக்கத்துக்கு அடிமையானவர்கள், அந்த பழக்கத்தை அடியோடு விட்டுவிட்டால் அப்போது வரை ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கி கல்லீரல் மீண்டும் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பிவிடும். ஆனால் இதை தான் குடிப்பவர்கள் சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். குடிப் பழக்கத்துக்கு அடிமையான எனது நோயாளி ஒருவர், அதிகமாக குடிக்கும் போது கண்கள் மஞ்சள் ஆகின்றன, தனக்கு மஞ்சள் காமாலை ஏற்படுகிறது என்று அவருக்கு தெரியும். ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்தால் சரியாகிவிடும் என்று கூறி கூறி குடித்துக் கொண்டே இருந்தார். இப்போது உயிரிழந்துவிட்டார். கல்லீரல் மீண்டு வளரும் திறன் கொண்டது என்றாலும் அதை தவறாக பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy7n54q4pyo
-
திசைகாட்டி வெற்றி பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தமைக்கு சஜித் அதிருப்தி
மத்தியிடம் இருந்தாலே உள்ளூராட்சிக்கு நிதி என ஜனாதிபதி பொய்யுரைப்பதால் அதிகாரப் பகிர்வு, உள்ளூராட்சி தத்துவம் கேலிக்குள்ளாக்கப்படுகின்றது உள்ளூராட்சி மன்றங்கள் மத்தியில் ஆளும் கட்சியின் ஆளுகைக்குள் உள்ளூராட்சி மன்றங்கள் இருந்தால் மட்டுமே மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனவும் தாம் நிதி ஒதுக்க முடியும் எனவும் தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி பேசுவதனால் அவர் அதிகாரப் பகிர்வையும் ஜனநாயக ரீதியில் உள்ளுராட்சி தத்துவத்தையும் மீறுகின்றார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களின் நிதி விடயத்தில் அந்தந்த சபைகளின் தலைவர்களுக்கே அதிகாரம் காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள் மத்தியில் தங்கி வாழும் நிறுவனங்கள் அல்ல. உள்ளூராட்சி என்பது ஆட்சி முறைமை. அது வரிகளையும் வருமானங்களையும் திரட்டுவதற்கும் தீர்மானிப்பதற்கும் செலவிடுவதற்கும் அதிகாரம் பொருந்திய சட்ட ரீதியான ஆட்சி அலகாகும். உள்ளூராட்சி மன்றங்கள் உலகளவில் வரலாற்று ரீதியில் உருவாக்கப்பட்ட ஆட்சி முறை என்ற அடிப்படையில் மத்திய அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப்பகிர்வைப் பெற்றுள்ளன. ஐனநாயக மற்றும் சட்ட ரீதியிலான அந்தஸ்தாக உள்ளூராட்சி மன்றங்கள் அதிகாரங்களைப் பெற்றுள்ளன. இலங்கையிலும் அரசியலமைப்புச் சட்ட சரத்துக்களின் ரீதியில் உருவாக்கப்பட்ட சட்டங்களினால் அதிகாரத்தினைப் பெற்றுள்ளன. சட்டரீதியில் உள்ளராட்சி மன்றங்கள் சோலைவரி, மாற்றம் ஆதனப் பெயர்மாற்றங்களின் போதான முத்திரைத் தீர்வை, நீதிமன்ற குற்றப்பணம், சேவைகளுக்கான அறவீடுகள், தண்டப்பணங்கள் என பல மில்லியன்களுக்கு உரித்தாளர்களாகவுள்ளன. வசதிக்குறைவான உள்ளூராட்சி மன்றங்களும் காணப்படுகின்றபோதும் அவ்வாறாக வசதிக்குறைவுக்கு மத்திய அரசின் எடுபிடியாக அல்லது ஆதிக்கத்தினுள் உள்ளூராட்சி மன்றங்கள் இருப்பது தீர்வல்ல. மத்திய அரசாங்கம் சர்வதேசத்திடம் பெறும் அதிக உதிவிகள் மக்களின் நலன்புரி விடயங்களை மையமாகக் கொண்டுள்ளன. அந் நிதி உதவிக்கான முன்மொழிவுகள் உள்ளூராட்சி மன்றங்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட சேவைப்பரப்புக்களாகக் காணப்படுகின்றன. மத்திய அரசாங்கம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல்வேறுபட்ட சர்வதேச தாபனங்களிலும,; நாடுகளிலும் இருந்து மானியங்களைப் பெறுகின்றது. அவ் உதவிக் கோரிக்கையில் உள்ளூராட்சி மன்றங்கள் செய்ய வேண்டிய சேவைப்பரப்புக்களை காரணங்காட்டியே உதவிகள் பெறுகின்றன. அவ்வாறு அரசாங்கம் பெறும் உதவிகளை ஜனாதிபதி தனது கட்சிக்காரரின் சபைக்கு மட்டும் தான் கொடுப்பேன் எனக் கூற முடியாது. அவ்வாறு ஜனாதிபதி செய்தால் உதவிகளை சர்வதேசம் வழங்காது. அப்படி அரசாங்கம் செயற்பட்டால் இலங்கைக்கு உதவி வழங்கும் சர்வதேச கொடையாளர்களின் கவனத்திற்கு நாம் கொண்டு செல்ல முடியும். அதனால் நாட்டிற்கான சர்வதேச உதவிகளே தடைப்பட்டுவிடும்;. சர்வதேச உதவி தடைப்பட்டால் அது மத்திய அரசாங்கத்தின் இருப்புக்கே ஆபத்தாக மாறிவிடும். வெளிநாட்டு உதவிகளை ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சபைகளுக்கு தேவை முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம் பகிர்ந்தே ஆகவேண்டும். உள்ளுராட்சி மன்றங்களின் ஆளணியினருக்கான சம்பள விடயங்கள் மத்திய அரசு சார்ந்திருந்த போதும் அவற்றிற்கான மானிய உதவியை இன்றைய ஜனாதிபதி நினைத்தால் மாத்திரம் நிறுத்திவிட முடியாது. உத்தியோகத்தர்களின் நியமனம் மற்றும் சேவை அடிப்படையில் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கு சட்டப் பாதுகாப்பும் தொழில் உரிமையும் உள்ளது. ஆகவே அரசாங்கம் போதையில் பேசுகின்ற தெருச் சண்டியர்கள் போல விலாசம் எழுப்பக்கூடாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். https://thinakkural.lk/article/317108
-
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரம் : 'வற்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்'
19 APR, 2025 | 01:12 PM மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கு முன்னர் 'பத்து தடவைகளுக்கு மேல்' சிந்தித்தே தீர்மானிக்கப்படும் எனக் கூறியிருந்தார். வெசாக் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்குகளைப் பெறுவதற்காக, நிதியமைச்சர் பதவியை வகிக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பிரச்சார மேடைகளில் மீண்டும் மீண்டும் வெளியிடும் கருத்துகள் கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. ஆளும் கட்சி அதிகாரத்தைப் பெறும் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எந்தப் பொறுப்பும் இல்லாமல் மத்திய அரசு நிதியளிக்கும் என்ற தேர்தல் வாக்குறுதிகள் அரசியல் வற்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் என கண்டனங்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 17ஆம் திகதி மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கு முன்னர் 'பத்து தடவைகளுக்கு மேல்' சிந்தித்தே தீர்மானிக்கப்படும் எனக் கூறியிருந்தார். "முன்மொழிவுகள் பிரதேச சபையிடமிருந்து வர வேண்டும். அந்த முன்மொழிவுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால், நிதியை ஒதுக்குவதற்கு முன்னர், யார் முன்மொழிவை அனுப்புகிறார்கள் என்பது பார்க்கப்படும். மன்னார் நகர சபை தேசிய மக்கள் சக்தியின் கைகளில் இருந்தால், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவு கண்களை மூடிக்கொண்டு அங்கீகரிக்கப்படும். ஆனால் அது மற்றவர்களின் கைகளில் இருந்தால், அவர்களின் முன்மொழிவு 10 தடவைகளுக்கு மேல் பார்க்கப்படும். அவர்களை நம்ப முடியாது". ஏப்ரல் 12 ஆம் திகதி, மன்னார் மாவட்டத்தின் முசலி தேர்தல் தொகுதியில் உள்ள சிலாவத்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாதீட்டில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியை 'சரியாகப் பயன்படுத்த' தனது குழுவிற்கு பிராந்திய அதிகாரம் அவசியம் என எச்சரிக்கை விடுத்திருந்தார். "இப்போது நாம் கிராமத்தை சுத்தம் செய்ய வேண்டும். கிராமத்தை சுத்தம் செய்து தாருங்கள். பின்னர் பாதீட்டில் இருந்து நாங்கள் ஒதுக்கிய நிதியை உங்களுக்கு பயனளிக்கும் வகையில் வேலை செய்ய பயன்படுத்தலாம்." மற்ற கட்சிகளின் பிராந்திய அரசியல் தலைமையை திருடர்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டார். வடக்கிற்கு வந்தபோது ஆளும் கட்சி அளித்த நிதி வாக்குறுதியை 'அச்சுறுத்தல்' என நாடாளுமன்றத்தில் உள்ள முக்கிய தமிழ் கட்சி கண்டித்துள்ளது. "இந்த வகையான தேர்தல் பிரச்சாரம் ஒரு அச்சுறுத்தல். பிராந்திய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. எங்களுக்குத் தெரிந்தவரை, இந்த பிராந்தியம் ஒரு தனி மாநிலம் அல்ல," என இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளார். மத்திய அரசுக்கு 'அத்தகைய அதிகாரம் இல்லை' உள்ளூராட்சி நிதியைப் பறிப்பதும் வாக்குகளைப் பலவந்தப்படுத்துவதும் நிறைவேற்று அதிகார உரிமை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டி, நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்று முன்னாள் ஆளுநர்கள் ஒரு கூட்டு ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளனர், அதில் ஒரு உள்ளூராட்சி நிறுவனத்தின் வருவாயை தடுக்க ஜனாதிபதி, அமைச்சரவை அல்லது ஆளுநருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனக் கூறினர். "அதாவது, அரசு சாரா அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவால் வெற்றிகொள்ளப்பட்ட மாநகர சபை, நகர சபை அல்லது பிரதேச சபைக்கு நிதியை தடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை." "உள்ளூராட்சி சபை தேசிய மக்கள் சக்தியின் கைகளில் இருந்தால், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவை கண்களை மூடிக்கொண்டு அங்கீகரிக்கப்படும். ஆனால் அது மற்றவர்களின் கைகளில் இருந்தால், அவர்களின் முன்மொழிவு 10 தடவைகளுக்கு மேல் பார்க்கப்படும்", என ஜனாதிபதி அல்லது வேறு எவரேனும் கூறுவது முற்றிலும் அரசியல் வற்புறுத்தல் என, மூன்று முன்னாள் ஆளுநர்களான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, அசாத் சாலி மற்றும் ரஜித் கீர்த்தி தென்னகோன் ஆகியோர், ஏப்ரல் 17 அன்று வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். "மன்னாரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் இரண்டாவது முறையாக இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது வாக்கு மோசடி. இது மக்களை தவறாக வழிநடத்துகிறது. இது எந்த அடிப்படையும் இல்லாத அறிவித்தலும் கூட". மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களை சுதந்திரமாக ஆட்சி செய்யும் நிலைமை இருக்க வேண்டும் எனக் கூறும் மூன்று முன்னாள் ஆளுநர்கள், ஆட்சிக்கு வந்த பின்னர் எதிர்க்கட்சியில் இருந்தபோது தெளிவாகத் தெரிந்த ஜனநாயக விழுமியங்களை அழிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை என்பதை தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டியுள்ளனர். "அரசியலமைப்பு மற்றும் சட்டங்களால் அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்ற ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளார். வாக்கு வற்புறுத்தல் நிறைவேற்று அதிகாரம் அல்ல." தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிரச்சாரம் தொடர்பான தேர்தல் சட்டங்களை எவ்வாறு மீறியுள்ளது என்பதையும் மூவரும் தங்கள் ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். "தேசிய மக்கள் சக்தியால் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில், 'பிரதேச சபை தற்போதுள்ள அரசாங்கத்திடமிருந்து நிதி கிடைக்கின்றது. பிரதேசத்திற்காக மற்றொரு கட்சி ஆட்சிக்கு வந்தால், ...........' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு அப்பட்டமான பொய். பிரச்சாரம் தொடர்பான தேர்தல் சட்டங்களை மீறுவதாகும்." நாடாளுமன்றத்தில் அதிகாரம் வைத்திருக்கும் குழு உள்ளூராட்சி அரசாங்கத்திலும் அதிகாரத்தை வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு மோசமான அரசியல் நடைமுறை என, மூன்று முன்னாள் ஆளுநர்களும் கருதுகின்றனர், மேலும் இது மக்களின் இறையாண்மையை மீறுவதாகும் என அவர்கள் கூறுகிறார்கள். "உள்ளூர் அரசாங்கங்கள் மக்கள் வாக்குகளால் உருவாக்கப்படுகின்றன. அதன் பிரதிநிதிகளுக்கு இருக்கும் அதிகாரம் அமைச்சரவை அமைச்சர்களுக்குக் கூட இல்லை. மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலும் எந்த நாகரீக ஆட்சியாளரும் நிதிக் கட்டுப்பாடுகளை உருவாக்க முடியாது. உள்ளூராட்சி அரசாங்கம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிக முக்கியமான வசதிகள் வழங்கப்படும் இடமாகும். அது அரசியலிலிருந்து விடுபட்டு மக்களின் நலனுக்காக மாத்திரமே இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அதிகாரம் வகிக்கும் குழு உள்ளூராட்சி மன்ற அரசாங்கத்திலும் அதிகாரத்தை வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு மோசமான அரசியல் நடைமுறை. இது மக்களின் இறையாண்மையை மீறுவதாகும்." உள்ளூர் அரசாங்க நிறுவனத்திற்குச் சொந்தமான முத்திரை வரி மற்றும் பிற நிதிகள் தடுக்கப்பட்டால், அவ்வாறு செய்யும் அதிகாரிக்கு எதிராக அழைப்பாணை பெற முடியுமென, நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்று முன்னாள் ஆளுநர்களும் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொது நிதி குறித்து தீர்மானம் எடுப்பவராக ஜனாதிபதி வெளியிட்ட கருத்து, 'வாக்காளர்கள் மீது தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்' என தேர்தல் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவிக்கின்றது. "தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படமாடடாது என நேரடியாகக் கூறப்படவில்லை என்றாலும், அது உள்ளூராட்சித் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 82 ஐ மீறுகிறது. தேவையற்ற செல்வாக்கு இருப்பதாகத் தெரிகிறது, அதாவது, வாக்காளரின் சுயாதீனமான தெரிவில் தாக்கம் செலுத்துகிறது" என, சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஜனாதிபதி இதுபோன்ற கருத்துக்களை வெளியிடமாட்டார் என, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, நம்பிக்கை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/212366
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு திகதிகளில் மாற்றம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு சில தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. இதன்படி 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புகள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக 22ஆம், 23ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தீர்ப்பின் நிமித்தம், அந்தத் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்ட மேலதிக நாட்களான 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/317118
-
நீக்கப்படுமா பயங்கரவாதத் தடைச் சட்டம்?
19 APR, 2025 | 02:08 PM பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மொஹமட் ருஷ்டி என்ற இளைஞன் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதன் பின்னர் ஏப்ரல் 11 ஆம் திகதி அவர் எந்தவொரு பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பில் இல்லை என கூறப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒரு முஸ்லிம் இளைஞரை 90 நாட்கள் சிறையில் அடைக்க பயங்கரவாதச் சட்டங்களைப் பயன்படுத்தியமை 'பெரிய தலைப்பாக' மாறியதால் மன்னாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கேலிக்குள்ளான பிரதமர் அந்த சட்டத்தை நீக்க 'நீக்க' ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார். மார்ச் 25 அன்று கொழும்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், மொஹமட் ருஷ்டி என்ற இளைஞரை தீவிரவாத அல்லது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டுள்ளதாகக் கூறி 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஏப்ரல் 11 அன்று, அந்த இளைஞன் எந்த பயங்கரவாத அமைப்புடனும் தொடர்புபட்டிருக்கவில்லை எனக் கூறியிருந்தார். ஏப்ரல் 12 அன்று மன்னார் மாவட்டத்தின் முசலி தேர்தல் மாவட்டத்தில் உள்ள சிலாவத்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் கலந்துகொண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பயங்கரவாதச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் மக்கள் எந்த வகையிலும் துன்பப்பட அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், ஒரு அரசாங்கம் என்ற வகையில், நெருக்கடிகளை ஒருபோதும் இனவெறி மனப்பான்மையுடன் பார்க்க மாட்டோம் எனவும் பிரதமர் கூறியதாக பிரதமரின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டிருந்தது. காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களைக் கண்டித்து குப்பைத் தொட்டியில் ஸ்டிக்கரை ஒட்டிய ஒரு இளைஞனை சிறையில் அடைக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தியமைக்காக அரசாங்கத்தை விமர்சித்தமையானது, அரசாங்கம் தொடர்பில் "தேடுவதற்கு எந்தத் தவறும் இல்லை" என்பதாலேயே என்பது பிரதமரின் வாதம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் கடந்த 11ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் நீதி அமைச்சில் நடைபெற்றதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு ஏப்ரல் 13ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய சட்டமூலம் உலகளாவிய பயங்கரவாதத்தையும் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு வரைபாக இருக்க வேண்டும் எனவும், இந்த நாட்டின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கான மனித உரிமைகளை அது மீறக்கூடாது எனவும் கடந்த 11 ஆம் திகதி நீதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் வலியுறுத்தினார். "முன்னைய அரசாங்கங்கள் இந்தத் திருத்தச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு உரிய விடாமுயற்சியுடன் செயல்படவில்லை, மேலும் இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட குழு மிகக் குறுகிய காலத்திற்குள் இந்தச் சட்டத்தை இரத்து செய்வதற்கான பொருத்தமான விடயங்களை அடைய வேண்டும் எனவும் அமைச்சர் குழுவின் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்," என அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெற்றதாக அரசாங்கம் பெப்ரவரியில் அறிவித்தது. "சட்ட வரைஞர்களால் தயாரிக்கப்பட்ட இறுதி வரைவை மேலும் ஆய்வு செய்து, அந்த வரைவு மசோதாவை மேலும் மேம்படுத்த பொருத்தமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவை நியமிக்க நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது" என அமைச்சரவை தீர்மானம் குறிப்பிடுகிறது. மே மாத ஆரம்பத்தில் பொதுமக்களின் கருத்துகளையும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்களையும் பெறவும், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகத்தின் கருத்துக்களையும் பெறவும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் குழுவிற்கு அறிவுறுத்தியதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக அடக்குமுறை சூழ்நிலையில் பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 7 ஆம் திகதி நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளுடன் மொஹமட் ருஷ்டிக்கு பிணை வழங்கப்பட்டபோது, அவர் தனது தொழிலை இழந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியிருந்தார். https://www.virakesari.lk/article/212378
-
ஏமன் எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 58 பேர் உயிரிழப்பு!
ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 19 APR, 2025 | 10:01 AM ஏமனில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இந்த தாக்குதலில் இதுவரை 171 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் இருந்து செயற்படும் ஹவுத்தி அமைப்பு ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுத்தி அமைப்பு தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், ஏமனில் ஹவுத்தி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212346
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
பிள்ளையான் கைது விவகாரம் : அப்பாவி ஒருவரை கைது செய்ததாக கூறி அனுதாபத்தை ஏற்படுத்த உதய கம்மன்பில முயற்சிக்கிறார் - சுனில் ஹந்துனெத்தி 18 APR, 2025 | 06:58 PM (இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்காக பிள்ளையான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. உபவேந்தர் ஒருவரை கடத்தி, காணாமலாக்கிய குற்றச்சாட்டுக்காகவே கைது செய்யப்பட்டார். குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் அப்பாவி ஒருவரை கைது செய்துள்ளதாக அனுதாபத்தை ஏற்படுத்தவே உதய கம்மன்பில முயற்சிக்கிறார் என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது : பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் தொடர்பில் கடந்த காலங்களில் சிங்கள பௌத்தவாதம், தேசியவாதம் பற்றி பேசிக்கொண்டிருந்த உதய கம்மன்பில தற்போது பேசுகிறார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக பிள்ளையானை மாற்றியமைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக உதய கம்மன்பில சொல்லிக்கொண்டு திரிகிறார். குண்டுத்தாக்குதல் விவகாரத்துக்காக பிள்ளையான் கைது செய்யப்படவில்லை. கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஒருவரை கடத்தி காணாமலாக்கிய குற்றச்சாட்டின் விசாரணைகளுக்கு அமைவாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் அப்பாவி ஒருவரை அரசாங்கம் கைது செய்துள்ளதாக அனுதாபத்தை ஏற்படுத்தவே உதய கம்மன்பில முயற்சிக்கிறார். பிள்ளையான் 2015 முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறையில் இருந்தார். 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று உதய கம்மன்பில குறிப்பிடுகிறார். பிள்ளையான் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உதய கம்மன்பில ஏன் முந்திக்கொள்கிறார். கம்மன்பில திணறாமல் சற்று அமைதியுடன் இருக்க வேண்டும். பிள்ளையான் தேசிய வீரன் என்று உதய கம்மன்பில குறிப்பிடுகிறார். இதனை ஏற்றுக்கொள்வதா என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/212325
-
பிள்ளையான் உண்மைகளை வெளிப்படுத்துவதை தடுக்க சதி; அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க வேண்டும் - ஹிருணிகா வலியுறுத்தல்
18 APR, 2025 | 02:01 PM (எம்.மனோசித்ரா) பிள்ளையான் என்பவர் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் மிக முக்கிய சாட்சியாளராவார். எனவே அவர் அவற்றை வெளியளிடுவதைத் தடுப்பதற்கு ஒரு குழு முயற்சிக்கின்றது. அவருக்கு சுயாதீன சட்டத்தரணிகள் குழுவையும், சிறப்பு பாதுகாப்பையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர வலியுறுத்தினார். கடுவலையில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடு;கையில், மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவார் என தேர்தல் பிரசாரங்களின் போது தேசிய மக்கள் சக்தி கூச்சலிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அதற்குரிய நடவடிக்கைகள் எவற்றையும் முன்னெடுக்காது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை அரசாங்கம் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறான நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என எவ்வாறு நம்ப முடியும்? பிள்ளையானின் கைது அனைவர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் ஏன் இதனை சரியாகக் கையாளவில்லை? உதய கம்மன்பில பிள்ளையானை தேசிய வீரர் எனக் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் ஏன் பதிலளிக்கவில்லை? இது தொடர்பில் விசாரணைகளேனும் முன்னெடுக்கப்பட வேண்டும். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, பிள்ளையான் இராணுவத்துக்கு உளவுத் தகவல்களை வழங்கியமை பொய் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் ஊடாக இராணுவத்துக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறிருக்கையில் கம்மன்பில போன்றோர் குறிப்பிடும் விடயங்கள் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடியவையாகும். இது ஒரு பெரிய நாடகம் என்றே எமக்குத் தோன்றுகிறது. ஒருபுறம் பட்டலந்த குறித்து பேசப்பட்டது. மறுபுறம் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்துக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. பிள்ளையான் போன்றோரது குரலை முடக்குவதற்காக முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். பிள்ளையான் என்ற நபர் மிக முக்கிய சாட்சியாளராவார். எனவே அவருக்கு வழங்க வேண்டிய சகல பாதுகாப்புக்களை வழங்கி, அவருக்கு சுயாதீன சட்டத்தரணிகள் குழுவொன்றை வழங்க வேண்டும். பிள்ளையான் வாயைத் திறந்தால் எமது நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் வெளிவரக் கூடும். எனவே அவற்றை தடுத்து நிறுத்துவதற்கான பணியாளராகவே கம்மன்பில தன்னை சட்டத்தரணியெனக் காண்பித்துக் கொண்டு பிள்ளையானை சந்திக்கின்றார். அவரை எவரேனும் இதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே அரசாங்கம் இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/212285
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? – சரத் வீரசேகர
குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி; ஜனாதிபதி குறிப்பிடவுள்ள புதியவர் யார் ? - சரத் வீரசேகர Published By: VISHNU 18 APR, 2025 | 10:49 PM (இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி அவரே பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவுக்கு இரண்டாம் பிரதானியாக செயற்பட்டார். 11 விசாரணை அறிக்கைகளில் இல்லாத புதிய விடயத்தை ஜனாதிபதி குறிப்பிடுவதை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் நோக்கத்துக்காக குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எந்த விசாரணை அறிக்கைகளிலும் குறிப்பிடப்படவில்லை. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏமாற்றப்பட்டதையிட்டு கவலையடைகிறோம் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் பிரதான பொறுப்புதாரிகளை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். நாளை இந்த இரண்டு நாட்களில் ஜனாதிபதி எதை சொல்ல போகிறார் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் வைத்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு, குண்டுத்தாக்குதலில் பிரதான சூத்திரதாரியை ஏப்ரல் 21 தினத்துக்கு முன்னர் பகிரங்கப்படுத்துவதாக வாக்குறுதியளித்தார். குண்டுத்தாக்குதலில் பிரதான சூத்திரதாரியை அறிவிக்காவிடின் ஏப்ரல் 21 தினத்துக்கு பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்குவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு பேராயர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தேசிய மட்டத்தில் 7 விசாரணைகளும், சர்வதேச மட்டத்தில் 4 விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. எந்த விசாரணைகளிலும் பிரதான சூத்திரதாரி யாரென்பது குறிப்பிடப்படவில்லை. இந்த விசாரணைகளில் குறிப்பிடப்படாத விடயங்களையா ஜனாதிபதி இவ்விரு தினங்களில் குறிப்பிட போகிறார் என்பதை பார்த்துக்கொண்டிக்கிறோம். ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் அது பேராயரை ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும். அது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கும் பாரியதொரு அநீதியாகும். குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பதையும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாதி சஹ்ரானை கொண்டு நௌபர் மௌலவி இந்த தாக்குதல்களை நடத்தினார் என்பதை முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பொறுப்புடன் பாராளுமன்றத்துக்கு அறிவித்திருந்தேன். நியூசிலாந்து நாட்டில் பள்ளிவாசல் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் தான் நௌபர் மௌலவியின் வழிநடத்தலின் கீழ் பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவினர் கத்தோலிக்க தேவாலயங்கள் மீதும், மேற்கத்தேயர்கள் இருந்த நட்சத்திர ஹோட்டல்களிலும் தாக்குதல்களை நடத்தினர். பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவினர் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் கூட்டாக ஒன்றிணைந்து இந்த விடயத்தை குறிப்பிட்டு சுய உடன்படிக்கை செய்துக் கொண்டுள்ளனர். இவ்விடயம் விசாரணைகளில் வெளிவந்தன. இவ்வாறான நிலையில் குண்டுத்தாக்குதல்கள் விவகாரத்தை குறுகிய அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வது பாதிக்கப்பட்டவர்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பேராயர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். அவரும் ஏமாற்றப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நீதியரசர் விஜித் மலல்கொட விசாரணை ஆணைக்குழு அறிக்கை, பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அறிக்கை, தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு அறிக்கை, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை, இமாம் அறிக்கை மற்றும் அல்விஸ் அறிக்கை ஆகியன உரிய தரப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எந்த அறிக்கையிலும் 'அரசியல் நோக்கத்துக்காக குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக'குறிப்பிடப்படவில்லை. அனைத்து அறிக்கைகளிலும் இது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தேவைக்காக நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் 45 வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்தனர். மேற்கொள்ளப்பட்ட 4 சர்வதேச மட்ட விசாரணைகளிலும் இது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. நௌபர் மௌலவி, மொஹமட் ரிஸ்கான் மற்றும் அஹமட் மில்ஹான் ஆகிய மூவரை பயங்கரவாதிகளாக குறிப்பிட்டு அமெரிக்க லொஸ் ஏஞ்சல் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி அவரே பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவுக்கு இரண்டாம் பிரதானியாக செயற்பட்டார். 11 விசாரணை அறிக்கைகளில் இல்லாத புதிய விடயத்தை ஜனாதிபதி குறிப்பிடுவதை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/212334
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
சொந்த மண்ணில் ஹாட்ரிக் தோல்வி: பேட்டிங் சொர்க்கபுரியில் ஆர்சிபி 95 ரன்னில் சுருண்டது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் பெங்களூரு சின்னசாமி அரங்கில் நேற்று நடந்த ஐபிஎல்லின் 34-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. மழை காரணமாக நீண்ட தாமதத்துக்குப்பின் 14 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் சேர்த்தது. 96 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் சேர்த்து வென்றது. நடப்பு சீசனில் வெளியூர் மைதானங்களில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியை ருசித்துள்ள ஆர்சிபி அணி, தனது சொந்த மைதானத்தில் நடந்த மூன்றாவது போட்டியிலும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துள்ளது. பேட்டிங் சொர்க்கபுரியான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் என்ன நடந்தது? ஆர்சிபி மோசமான பேட்டிங் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபி அணி இந்த சீசனில் தனது மோசமான பேட்டிங்கை நேற்று வெளிப்படுத்தியது. எந்த பேட்டரும், எந்தத் திட்டமிடலும் இன்றி களத்துக்கு வந்து விளையாடினர். தொடக்கத்தில் விக்கெட்டை இழந்து செல்லும் பேட்டர்கள் ஆடுகளத்தின் தன்மையைக் கூறி மற்ற பேட்டர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பினார்களா எனத் தெரியவில்லை. அனைத்து பேட்டர்களும் ஒரே மனநிலையில் வந்து பெரிய ஷாட்களுக்கு முயன்று விக்கெட்டுகளை இழந்தனர். பில்சால்ட்(4) வழக்கம் போல் பவுண்டரியுடன் தொடங்கினாலும், கிராஸ்பேட்டில் சிக்ஸர் அடிக்க முயன்று யான் சென் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் விக்கெட்டை இழந்தார். விராட் கோலியும்(1) கிராஸ் பேட்டில் பெரிய ஷாட்டுக்கு முயன்று அர்ஷ்தீப் பந்துவீச்சில் யான்செனிடம் கேட்ச் கொடுத்தார். லிவிங்ஸ்டோன் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் பார்ட்லெட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் இவரை ரூ.8.75 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி அணி. இதுவரை 7 போட்டிகளில் 87 ரன்கள் மட்டுமே லிவிங்ஸ்டன் சேர்த்துள்ளார். அணிக்கு தேவையான நேரத்தில் பங்களிப்பு செய்யாமல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES 4 ஓவர்கள் பவர்ப்ளே முடிவில் ஆர்சிபி 3 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பட்டிதாருடன் ஜோடி சேர்ந்த ஜிதேஷ் சர்மாவும் நிலைக்கவில்லை. யான்சென் பந்துவீச்சை சமாளிக்க திணறிய ஜிதேஷ் சர்மா, பலமுறை "பீட்டன்" ஆகிய ஷாட்களை அடிக்க முடியாமல் தடுமாறினார். சஹல் பந்துவீச்சில் ஜிதேஷ் சர்மா 2 ரன்னில் வதேராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த க்ருணால் பாண்டியா ஒரு ரன் சேர்த்த நிலையில் யான்சென் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிவந்த கேப்டன் பட்டிதார் 23 ரன்னில் சஹல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இம்பாக்ட் ப்ளேயர் என்று மனோஜ் பண்டகே என்ற வீரரை களமிறக்கினர். யான்சென் பந்துவீச்சில் தடுமாறிய மனோஜ், எந்த ஷாட் விளையாட போகிறோம் எனத் தெளிவில்லாமல் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். 8வது விக்கெட்டுக்கு புவனேஷ்வர்- டிம் டேவிட் ஜோடி 21 ரன்கள் சேர்த்தது, ஆர்சிபி அணியும் 50 ரன்களைக் கடந்தது.ஹர்பிரித் பிரார் தனது முதல் ஓவரிலேயே புவனேஷ்வர்(8), யாஷ் தயால் விக்கெட்டை வீழ்த்தினார். 9-வது விக்கெட்டுக்கு ஹேசல்வுடன், ஜோடி சேர்ந்த டேவிட் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார். பிரார்ட்வெல் பந்துவீச்சில் 2 பவுண்டரியும், ஹர்பிரித்பிரார் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களையும் விளாசி 26 பந்துகளில் அரைசதம் அடித்தார், ஆர்சிபியும் 95 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபியின் போராட்டம் ஆர்சிபி அணியும் 95 ரன்களை டிபெண்ட் செய்யலாம் என்ற ஆசையில் களமிறங்கியது. புவனேஷ்வர் குமார் வீசிய 3வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் ஸ்கூப்ஷாட் அடிக்க முயன்று 13 ரன்னில் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பிரியான்ஷ் ஆர்யா(16)ரன்னில் ஹேசல்வுட் பந்துவீச்சில் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்ரேயாஸ் அய்யர், இங்கிலிஸ் நிதானமாக ஆடி மோசமான பந்துகளை மட்டும் ஷாட்களாக மாற்றினர். ஆனால் ஹேசல்வுட் தான் வீசிய 8-வது ஓவரில் எக்ஸ்ட்ரா பவுன்ஸரில் ஒரே ஓவரில் ஸ்ரேயாஸ்(7), இங்கிலிஸ்(14) விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி அளித்தார். 43 பந்துகளில் பஞ்சாப் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES சுழற்பந்துவீச்சாளர் சூயஷ் சர்மா தொடக்கத்தில் நன்றாகத்தான் பந்துவீசினார். நேஹல் வதேராவும் சூயஷ் பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டு சில பவுண்டரிகளை விளாசி, ரன்ரேட்டை உயர்த்தினார். புவனேஷ்வர் ஓவரில் சசாங்சிங் விக்கெட்டை இழந்தார். சூயஷ் சர்மாவால் கடைசி நேரத்தில் பேட்டர்களுக்கு அழுத்தத்தை தர முடியவில்லை. இதனால் நேஹல் வதேரா லாங்ஆப், கவர் டிரைவில் பவுண்டரி, சிக்ஸரை அடித்து வெற்றியை நோக்கி அணியை விரட்டினார். ஸ்டாய்னிஷ் களமிறங்கி சிக்ஸர் விளாசவே, பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. நேஹல் வதேரா 19 பந்துகளில் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES தோல்விக்கு காரணம் என்ன? ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் " ஆடுகளத்தில் பந்து நின்று வந்ததால் கணிக்க முடியவில்லை. ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமாக பந்து வந்தது. என்னைப் பொருத்தவரை பேட்டர்கள் இன்னும் சிறப்பாக ஆடியிருக்கலாம். பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் முக்கியம். அதை செய்யத் தவறினோம். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தவறவிட்டோம். இந்த சூழலில் படிக்கலை களமிறக்காமல் விட்டுவிட்டோம். ஆடுகளம் மோசமாக இல்லை என்றாலும் நிதானமாக பேட் செய்திருந்தால் ஸ்கோர் செய்திருக்கலாம். பஞ்சாப் அணியினர் ஆடுகளத்தை அறிந்து பந்துவீசியதால் அவர்களுக்கு உதவியது. எங்கள் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எங்கள் பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை இருந்தது. சில நேரங்களில் பேட்டிங் எடுபடும், சில நேரங்களில் சொதப்பிவிடும். எங்கள் பேட்டிங் மீது என்ன பிரச்சினை என்று வீரர்களிடம் பேச இருக்கிறேன்" எனத் தெரிவித்தார். ஆர்சிபிக்கு தொடரும் சொந்த மைதான சோகம்! பட மூலாதாரம்,GETTY IMAGES பெங்களூரு அணிக்கம் சொந்த மைதானமான சின்னசாமி அரங்கிற்கும் ராசியே கிடையாது. பெரும்பாலான அணிகள் சொந்த மைதானத்தில் அற்புதமான சாதனைகளை வைத்திருக்கும் நிலையில் ஆர்சிபி அணி சொந்தமைதானத்தில் அதிகமான தோல்விகளைத்தான் சந்தித்துள்ளது. இதுவரை 92 போட்டிகளில் பெங்களூருவில் ஆடிய ஆர்சிபி அதில் 44 போட்டிகளில் தோற்றுள்ளது, 43 போட்டிகளில் வென்றுள்ளது. 4 போட்டிகளில் முடிவு இல்லை, ஒரு போட்டிடையில் முடிந்தது. இந்த சீசனிலும் கூட ஆர்சிபி அணி சொந்த மைதானத்தில் ஆடிய ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது, ஆனால், வெளி மைதானங்களில் பங்கேற்ற போட்டிகளில் வென்றுள்ளது. ஆர்சிபியின் சொந்த மைதான சோகம் இந்த சீசனிலும் தொடர்கிறது. ஆர்சிபி மானம் காத்த டிம்டேவிட் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டர் டிம் டேவிட் நேற்றுமட்டும் பொறுப்புடன் பேட் செய்யவில்லையென்றால் ஆர்சிபி 50 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் என 26 பந்துகளில் அரைசதம் அடித்து ஆர்சியின் மானத்தை காப்பாற்றி 95 ரன்கள் சேர்க்க உதவினார். ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள், அதன்பின் 9 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் என்ற மோசமானநிலையில் இருந்தது. இந்தநிலையில் இருந்து அணியை மீட்டு ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தது டிம் டேவிட்தான். கடைசியில் பிரார் ஓவரில் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியது. டிம் டேவிட் இல்லாவிட்டால் ஆர்சிபியின் நிலைமை மோசமாக இருந்திருக்கும். 26 பந்துகளில் அரைசதம் அடித்த டிம் டேவிட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி அணியுடன் ஒருநாள் இடைவெளியில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நியூ சண்டிகரில் மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடுகிறது. இதில் ஆர்சிபி வென்றால் புள்ளிப்பட்டியல் பரபரப்பாக மாறும். தற்போது ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. மழையால் மாறிய ஆடுகளம் பட மூலாதாரம்,GETTY IMAGES பெங்களூருவில் நேற்று மாலை பெய்ததையடுத்து, ஆட்டம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக, 6 ஓவர்கள் குறைக்கப்பட்டு 9 மணிக்கு மேல்தான் தொடங்கியது. மழையாலும், குளிர்ந்த காற்றாலும் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறியிருந்தது. வேகப்பந்துவீச்சுக்கும், ஸ்விங்கிற்கும், பவுன்ஸருக்கும் நன்றாக மைதானம் ஒத்துழைத்தது. சேஸிங்கிற்கு சொர்க்கபுரியென பெயரெடுத்த பெங்களூரு ஆடுகளம் தலைகீழாக மாறியது. இதைப் பயன்படுத்திய பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சென், யுஸ்வேந்திர சஹல், ஹர்பிரித் பிரார் ஆகியோர் ஆர்சிபி பேட்டிங் வரிசையை உருக்குலைத்தனர். முதல் 6 விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப், யான்சென், சஹல் கைப்பற்றிய நிலையில் பிரார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார்(23), டிம் டேவிட்(50) ஆகியோரைத் தவிர அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னோடு வெளியேறினர். இந்த ஆட்டத்தில் மொத்தம் 84 பந்துகள் வீசப்பட்ட நிலையில் அதில் 42 பந்துகளை டாட் பந்துகளாக ஆர்சிபி பேட்டர்கள் விட்டனர். அதேபோல ஆர்சிபி அணியிலும் ஹேசல்வுட் தனது பந்து வீச்சால் பஞ்சாப் பேட்டர்களை இந்த சேஸிங்கை எளிதாக முடிக்க விடாமல் தடுத்து 3 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் சூயஷ் சர்மா ஓவரில் அடிக்கப்பட்ட சிக்ஸர், பவுண்டரிகள், புவனேஷ்வர் ஓவரில் அடிக்கப்பட்ட ரன்கள் ஆட்டத்தை மாற்றியது. ஹேசல்வுட்டுக்கு ஒத்துழைத்து பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியிருந்தால், ஆர்சிபி வென்றிருந்தாலும் வியப்பில்லை. இன்றைய ஆட்டம் குஜராஜ் டைட்டன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் இடம்: ஆமதாபாத் நேரம்: மாலை 3.30 ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னெள இடம்: ஜெய்பூர் நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 20 இடம் – நியூ சண்டிகர் நேரம்- மாலை 3.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-357 ரன்கள்(7 போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 295 ரன்கள்(6 போட்டிகள்) நீலத் தொப்பி நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) ஜோஸ் ஹேசல்வுட்(ஆர்சிபி) 12 விக்கெட்டுகள்(7 போட்டிகள்) குல்தீப் யாதவ்(டெல்லி) 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) https://www.bbc.com/tamil/articles/cx28lzlp4gyo
-
தண்டனையே குற்றம் - T. Gobyshanger
குளப்படி செய்த என்று அடிவாங்கவில்லை! வீட்டுப்பாடம் செய்யாததற்கு வேண்டி இருக்கிறேன்.
-
'பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதி இருக்கக்கூடாது' - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு நடைமுறையில் சாத்தியமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 17 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 18 ஏப்ரல் 2025 தமிழ்நாடு முழுவதும் உள்ள சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவது எந்த அளவுக்குச் சாத்தியம்? தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கத் தவறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அந்தச் சங்க நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கெனவே அளித்த தீர்ப்புகளை ரத்து செய்து, சங்கத்துக்கான தேர்தல் நடவடிக்கைகளை தொடர அனுமதி அளிக்க அந்த வழக்கில் கோரப்பட்டிருந்தது. அதேபோல, திருச்செங்கோடு வட்டக்கொங்கு வேளாளர் சங்கம், தி புவர் எஜுகேஷனல் ஃபண்ட் ஆகியவற்றின் சார்பில் வெவ்வேறு கோரிக்கைகளோடு வேறு சில வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன. இந்த வழங்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி ஏப்ரல் 16ஆம் தேதி இந்த வழக்குகளில் மொத்தமாகத் தீர்ப்பளித்தார். நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீதான தாக்குதலில் என்ன நடந்தது? போலீசார் கூறியது என்ன? மனுஸ்மிருதி நகலை எரித்த அம்பேத்கர் கூறிய ஜனநாயகத்தின் 3 சக்திகள் எவை? பல்லடம் ஆணவக்கொலை: அவசரமாகப் புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் - உண்மை வெளிப்பட்டது எப்படி? பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களில் பெயர்ப் பலகைகளில் சாதிப் பெயர்கள் இனி இடம்பெறக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சுமார் 40 பக்கங்களுக்கு நீளும் இந்தத் தீர்ப்பில் பின்வரும் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சாதி சங்கங்கள் பலவும் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களை சாதி பெயர்களிலேயே நடத்துகின்றன. அந்த சாதி பெயர்களை அப்படியே தொடர அனுமதிக்க முடியுமா? இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமெனக் கூறியபோது அரசுத் தரப்பு வழக்கறிஞர் அதற்கு கால அவகாசம் கோரினார். பிறகு, அரசு தன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி, தற்போதைய வழக்கோடு இது தொடர்பில்லாதது; அதற்குள் செல்ல வேண்டாம் எனப் பதிலளித்தது. மேலும், நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்குகளை தேவையில்லாமல் போகச் செய்யும் வகையில், மனுதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, ஆணைகளை வெளியிட்டது. அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகளான நிலையில், சாதிப் பாகுபாடுகள் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. இன்னொரு சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்தார் என்பதற்காகவே பெற்றோர், தங்கள் குழந்தைகளைக் கொல்கின்றனர். குழந்தைகள் தூய்மையான மனதைக் கொண்டவர்கள் என்பதை அறிவோம். ஆனால், அது மாறிக்கொண்டிருக்கிறது. அவர்கள் சாதிகளை குறிப்பிடும் வகையில் கயிறுகளை அணிகிறார்கள். பையில் ஆயுதங்களைக் கொண்டுவந்து சக மாணவர்களைத் தாக்குகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - நடைமுறையில் சாத்தியமா?18 ஏப்ரல் 2025 வக்ஃப் சட்டம் – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதி என்ன? நீதிபதி கூறியது என்ன?17 ஏப்ரல் 2025 தற்போது மனுத்தாக்கல் செய்திருக்கும் மனுதாரர்கள், சாதியை முன்னெடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டவர்கள். அவர்களது சங்கப் பெயரிலேயே சாதி இருக்கிறது. அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த சங்கங்களில் சேர முடியும். அடுத்ததாக, ஒரே சமூகத்தைத் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து, சமூகத்துக்குப் பயனுள்ள சில விஷயங்களைச் செய்வதில் என்ன தவறு என்கிறார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட சாதிக்காக மட்டும் ஒரு சங்கத்தை உருவாக்கி, பெயரிலேயே சாதியை வைத்திருந்தால் அது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகிறது. இந்த சாதி சங்கங்களுக்கு உள்ளே உள்ள மோதல்கள், அது தொடர்பான வழக்குகள் என்பவை அரசியலமைப்புச் சட்ட இலக்குகளுக்கு முரணானவை. ஆகவே, இது போன்ற வழக்குகளை விசாரிக்க முடியாது. சங்கங்களின் பதிவாளர், எல்லா சங்கங்களின் பட்டியலையும் எடுத்து, அவற்றின் பெயர், நோக்கம் ஆகியவை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அவை தங்களது பெயரையும் விதிமுறைகளையும் மாற்றிக்கொள்ள கால அவகாசம் தர வேண்டும். அம்மாதிரி, பெயரையும் விதிமுறைகளையும் பதிவாளரிடம் சென்று மாற்றிக்கொண்டவர்கள் மட்டுமே இது போன்ற பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தை அணுகலாம். சங்கங்களில் பெயர்களில் உள்ள சாதிப் பெயரை நீக்கி, குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தங்கள் சங்கத்தில் இணைய முடியும் என்ற விதிகளை மாற்ற வேண்டும். அவ்வாறு திருத்தம் செய்யாத சங்கங்களின் செயல்பாடுகளை சட்டவிரோதம் என அறிவித்து, அவற்றின் பதிவை பதிவுத்துறை ஐ.ஜி. ரத்து செய்ய வேண்டும். இந்தப் பணியை மூன்று மாதங்களுக்குள் துவங்கி, ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இந்த சங்கங்களாலோ, அறக்கட்டளைகளாலோ நடத்தப்படும் பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாதிப் பெயர்களைக் கொண்டிருக்கக் கூடாது. சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களில் பெயர்ப் பலகைகளில் சாதிப் பெயர்கள் இனி இடம்பெறக்கூடாது. கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும். அவ்வாறு நீக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். அந்தக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களை அங்கீகாரம் பெற்ற வேறு கல்வி நிறுவனங்களுக்கு அரசு மாற்ற வேண்டும். அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்தப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்ற சாதிப் பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும். பொதுவான பெயரான அரசுப் பள்ளி என்ற பெயரே இடம்பெற வேண்டும். பள்ளிப் பெயர்களில் நன்கொடையாளர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். என இந்த தீர்ப்பு கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES சாதி சங்கங்கள் என்ன சொல்கின்றன? தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சாதிச் சங்கங்கள் இருக்கும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "தமிழ்நாட்டில் முதன்முதலில் துவங்கப்பட்ட வெகு சில சாதி சங்கங்களில், எங்களுடையதும் ஒன்று. 1927ல் இதனைத் துவங்கினோம். இது எங்களுடைய கலாசார அடையாளம். பெயரை எப்படி மாற்ற முடியும்? தமிழ்நாடு அரசு இந்தத் தீர்ப்பை எப்படி செயல்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவரான கே.பி.கே. செல்வராஜ். தாங்கள் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை வேறு, நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வேறு எனக்கூறிய அவர், சம்பந்தமே இல்லாத தீர்ப்பாக இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது என்றார். வேறு பல சாதி சங்கங்களும் அதிர்ந்து போயிருக்கின்றன. நாடார் சங்கங்களைப் பொறுத்தவரை ஞாயிற்றுக் கிழமையன்று சென்னையில்கூடி இந்த விவாகரம் குறித்து விவாதிக்கப் போவதாகச் சொல்கிறார் நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி. கரிக்கோல்ராஜ். "தீர்ப்பைப் பற்றி எங்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. எங்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 120 வருடங்கள் ஆகின்றன. அந்த காலகட்டத்தில் கிறிஸ்தவ அமைப்புகளும் சாதி அமைப்புகளும்தான் ஆங்காங்கே பள்ளிக்கூடங்களைத் துவங்கி கல்வி அளித்தன. அந்தப் பள்ளிக்கூடங்களில் சம்பந்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தான் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது" என்கிறார் அவர். இப்போது திடீரென இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்தால் என்ன சொல்வதெனத் தெரியவில்லை எனக்கூறும் அவர், இந்தியாவில் எங்கேயுமே ஜாதி பாகுபாடே இருக்காது என அரசு உத்தரவிட்டுவிட்டால், சங்கங்களைக் கலைத்துவிடுவதாக கூறினார். வரும் ஞாயிற்றுக் கிழமையன்று நடக்கவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்ப்பை மேல் முறையீடு செய்வதா, இல்லையா என்பதை முடிவு செய்வோம் என்கிறார் கரிக்கோல் ராஜ். விமான ஓடுதளத்தில் சாமி ஊர்வலம், மூடப்பட்ட விமான நிலையம் – எங்கு நடந்தது?17 ஏப்ரல் 2025 துரை வைகோ Vs மல்லை சத்யா: வைகோ கண்டித்தது ஏன்? ம.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?18 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது மிகச் சிக்கலான காரியம் என்கிறார்கள் சில மூத்த வழக்கறிஞர்கள். இது குறித்து பிபிசியிடம் பேசிய பெயரைத் தெரிவிக்க விரும்பாத மூத்த வழக்கறிஞர், "அரசுப் பள்ளிக்கூடங்களில் சாதிப் பெயர்கள் இருந்தால், அவற்றை நீக்க அரசினால் முடியும். மற்ற தனியார் கல்வி நிலையங்களில் எப்படி அதனைச் செய்ய முடியும்?" என கேள்வியெழுப்புகிறார். ஒரு கல்வி நிலையத்தை துவங்குவதற்கு அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. பள்ளிக்கூடம் அமையும் இடம், பாதுகாப்பான கட்டடம், கல்வி கற்பிப்பதற்கான கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்றவை குறித்துத்தான் இந்த விதிமுறைகள் பேசுகின்றன. "ஆனால், பள்ளிக்கூடத்தின் பெயரில் சாதி இருக்கலாமா, கூடாதா என்பது குறித்துப் பேசவில்லை.'' என்கிறார் அந்த வழக்கறிஞர். தென் மாவட்டங்களில் பல வருடங்களுக்கு முன்பு அரசுப் பள்ளிக்கூடங்கள் இல்லாத நிலையில் பல சாதி சங்கங்கள்தான் பள்ளிக்கூடங்களைத் துவங்கின என கூறுகிறார் அவர். மேலும், விதிமுறைகளிலோ, சட்டத்திலோ இல்லாத ஒன்றை எப்படிச் செயல்படுத்த முடியும் என்றும் மேலும் இப்போது அந்தப் பெயர்களை நீக்க வேண்டும்; இல்லாவிட்டால் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்றால் அது நடைமுறையில் எந்த அளவுக்கு சாத்தியம் எனத் தெரியவில்லை என்றும் கூறுகிறார் வழக்கறிஞர். ''பல நகரங்களில் பல சாதியினர் ஒன்று சேர்ந்து, வெறும் சாதிப் பெயர்களில் கல்லூரிகளை நடத்துகின்றனர். இப்போது அந்தப் பெயர்களை எப்படி மாற்ற முடியும்? அரசு நடத்தும் கள்ளர் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகளின் பெயர்களை மாற்ற வேண்டும் என நீதிபதி சந்துரு பரிந்துரைத்தபோதே, அதற்கு கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது" என்கிறார் மூத்த வழக்கறிஞர். இந்தியர்கள் பல லட்ச ரூபாய் செலுத்தியும் ஹஜ் பயணம் செல்வதில் சிக்கல் ஏன்?18 ஏப்ரல் 2025 'நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்ப்பு' ஆனால், இந்தத் தீர்ப்பு கட்டாயம் செயல்படுத்த வேண்டிய ஒரு உத்தரவு என்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார். கல்வி நிறுவனங்களில் சாதி பெயர் இருக்கவே கூடாது என்பதை நான்காண்டுகளுக்கும் மேலாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திவருவதாக அவர் குறிப்பிடுகிறார். நீதிபதி சந்துரு கமிட்டியும் அதை பரிந்துரைத்ததை அவர் சுட்டிக்காட்டுகிறார். "சுதந்திரத்துக்கு முன்பாக சாதியாகத் திரண்டுதான் கோரிக்கைகளை முன்னெடுத்தார்கள். ஆனால், சுதந்திரம் அடைந்த பிறகு, எல்லோரும் சமம் எனச் சொன்ன பிறகு இதுபோல சாதிச் சங்கங்களுக்கும் அவற்றின் செயல்பாடுகளுக்கும் என்ன இடம் இருக்கிறது?" என கேட்கிறார் அவர். சாதிய வேற்றுமையை களைவதை நோக்கி அரசு செயல்பட வேண்டும். அதைத்தான் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது என்கிறார் ரவிக்குமார். ''அதுதான் சமூக நீதியை நோக்கிய பயணமாக இருக்க முடியும்." இந்த உத்தரவு, அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட உத்தரவாக கருதும் ரவிக்குமார், இதை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழ்நாட்டு அரசுக்கு இருக்கிறது என்றும் முதலில் அரசின் கல்வி நிறுவனங்களில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். ஆனால், நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளே செயல்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், இந்த உத்தரவை செயல்படுத்துவதிலும் சுணக்கம் காட்டக் கூடாது என்கிறார் அவர். "நீதிபதி சந்துருவின் பரிந்துரைகள் மிக முக்கியமானவை. அவை ஏன் இன்னும் கிடப்பில் கிடக்கின்றன என்பது புரியவில்லை. முதலில் எல்லாத் தரப்பினருக்கும் கருத்தொற்றுமை இருக்கக்கூடிய விஷயங்களையாவது செயல்படுத்த வேண்டும். வேறு பல விஷயங்களில் தீவிரமாகச் செயல்படும் தமிழக அரசு சாதி தொடர்பான விஷயங்களில் தயங்குகிறது. அதனால்தான் அது தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கின்றன" என்கிறார் ரவிக்குமார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce84080v1y5o
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
சிஎஸ்கே பிளேஆஃப் செல்லுமா? தோனிக்கு இருக்கும் இரண்டே வாய்ப்பு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 34 நிமிடங்களுக்கு முன்னர் 18-வது ஐபிஎல் டி20 சீசன் தொடங்கி ஏறக்குறைய 74 ஆட்டங்களில் 32 போட்டிகள் முடிந்தநிலையில் இன்னும் எந்த அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது என்பதை ஊகிக்க முடியாத சூழல்தான் இருக்கிறது. நடப்பு சாம்பியன், முன்னாள் சாம்பியன்கள், முதல்முறையாக கோப்பைக்காக போராடும் அணிகள், 18 ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருக்கும் அணி என ஒவ்வொரு அணியும் ப்ளே ஆஃப்-க்கு நுழைய முழுத்திறமையையும் வெளிப்படுத்தி விளையாடி வருகின்றன ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் 14 போட்டிகளில் விளையாட வேண்டும். அந்த வகையில் சில அணிகள் 7 ஆட்டங்களை முடித்துள்ளன. சில அணிகள் 5 ஆட்டங்களையும், 6 ஆட்டங்களையும் விளையாடியுள்ளன. சராசரியாகப் பார்த்தால் ஒவ்வொரு அணியும் இன்னும் 7 முதல் 8 ஆட்டங்களில் விளையாட வேண்டியுள்ளது. இனிவரும் ஆட்டங்கள்தான் ஒவ்வொரு அணிக்கும் முக்கியமானதாகும். இதில் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல விரும்பும் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 8 வெற்றிகளைப் பெற வேண்டும் அல்லது சிக்கல் இல்லாமல் ப்ளே ஆஃப் செல்ல 9 வெற்றிகளைப் பெற வேண்டும் என்பதால் அடுத்துவரும் லீக் போட்டிகள் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும். பட மூலாதாரம்,GETTY IMAGES இதில் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருப்பது சிஎஸ்கேயின் தொடர் தோல்விகள், மும்பையின் மந்தமான செயல்பாடு, ஆர்சிபியின் புத்துணர்ச்சியான ஆட்டம்தான். ஏனென்றால், ஆர்சிபி அணி இந்த முறை கோப்பையை வெல்லும முனைப்போடு அதன் ஆட்டம் ஒவ்வொரு போட்டியிலும் உச்சத்தில் இருக்கிறது. ஆனால் 5 முறை சாம்பியன்களான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர் தோல்விகளாலும், சரியான வீரர்கள் தேர்வு இல்லாமலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியுமா என்ற கனவோடு இருக்கின்றன. இந்த 3 அணிகளின் செயல்பாடு ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. இது தவிர அக்ஸர் படேல் தலைமையில் சிறப்பாகச் செயல்படும் டெல்லி கேபிடல்ஸ், தமிழக வீரர்களை அதிகம் தாங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ், ஸ்ரேயாஸ் தலைமையில் பஞ்சாப் அணி ஆகிய அணிகளும் ப்ளே ஆஃப் செல்லும் ரேஸில் முன்னணியில் இருக்கின்றன. ஒவ்வொரு அணிகள் முன் இருக்கும் ப்ளே ஆஃப் வாய்ப்புக் குறித்துப் பார்க்கலாம். கடைசி நேரத்தில் கோட்டைவிட்ட ராஜஸ்தான் - ஸ்டார்க்கின் மிரட்டலால் டெல்லி வெற்றி18 ஏப்ரல் 2025 ஆபத்தான நிலையில் சன்ரைசர்ஸ் - மும்பை அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது?18 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே தலைக்கு மேல் தொங்கும் கத்தி சிஎஸ்கே அணி ருதுராஜ் கேப்டன்ஷியில் அடுத்தடுத்து வாங்கிய தோல்விகள், வீரர்களின் மோசமான செயல்பாடு, ஃபார்மில் இல்லாத வீரர்கள் தேர்வு ஆகியவற்றால் முதல் போட்டியில் மட்டும் வென்ற சிஎஸ்கே அடுத்த 5 தோல்விகளை சந்தித்து மோசமான நிலைக்கு சென்றது. காயம் காரணமாக ருதுராஜ் தொடரிலிருந்து விலகியதையடுத்து, கேப்டனாக தோனி அணியை வழிநடத்துகிறார். தோனி வழிநடத்திய முதல் போட்டியில் மோசமாக தோற்ற நிலையில் 2வது போட்டியில் சிஎஸ்கே வென்றது. இதுவரை சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் 5 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நிகர ரன்ரேட்டில் மைனஸ் 1.276 என கவலைக்குரிய இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணி இன்னும் 7 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. இந்த 7 ஆட்டங்களில் குறைந்தபட்சம் 6 வெற்றிகள் நல்ல ரன்ரேட்டில் தேவை அல்லது சிக்கல் இல்லாமல் ப்ளே ஆஃப் செல்ல வேண்டுமென்றால் 7 ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும். அவ்வாறு அடுத்துவரும் 6 போட்டிகளிலும் சிஎஸ்கே வென்றால் 12 புள்ளிகள் பெறும் ஏற்கெனவே 4 புள்ளிகளுடன் சேர்த்து 16 புள்ளிகள் பெறும். ஆனால் 16 புள்ளிகள் வைத்திருந்தால் ப்ளே ஆஃப் சுற்றில் நிகர ரன்ரேட் சிக்கல் வரலாம், போட்டியிருக்கும். ஆதலால் 7 போட்டிகளிலும் வென்று 18 புள்ளிகளுடன் இருந்தால் சிஎஸ்கே நிலை பாதுகாப்பாக இருக்கும். ஆகவே சிஎஸ்கே அணி அடுத்துவரும் 7ஆட்டங்களிலும் கண்டிப்பாக வெல்ல வேண்டும். ஒவ்வொரு போட்டியும் சிஎஸ்கே அணிக்கு தலைக்கு மீது தொங்கும் கத்திபோலத்தான். இரு போட்டிகளில் தோற்றாலே சிஎஸ்கே நடையைக் கட்ட வேண்டியதுதான். சிஎஸ்கே அணி வரும் 20-ம் தேதி மும்பையில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் வான்கடே மைதானத்தில் மோதுகிறது. மும்பையின் சொந்த மைதானத்தில் அந்த அணியை வீழ்த்துவது சவலானதாக இருக்கும். அடுத்ததாக இம்மாதம் 25-ம் தேதி சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது. பேட்டிங்கில் சிஎஸ்கே அணியை விழுங்கிவிடும் வகையில் அசுரத்தனமாக இருக்கும் சன்ரைசர்ஸ் அணி, பந்துவீச்சிலும் பெரிய படையை வைத்துள்ளதால், சன்ரைசர்ஸை சாய்ப்பது சிஎஸ்கேவுக்கு சாதாரண விஷயமல்ல. வரும் 30-ம் தேதி சேப்பாக்கத்தில் ஸ்ரோயஸ் அய்யர் தலைமையில் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது சிஎஸ்கே அணி. ஏற்கெனவே பஞ்சாப்பிடம் தோற்ற சிஎஸ்கே 2வது ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் மோதுகிறது. மே மாதம் 3-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் ஆர்சிபி அணியுடன் சிஎஸ்கே அணி மோதுகிறது. முதல் லீ்க்கில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி வீழ்த்தியிருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கும். ஆனால் பழிதீர்க்கும் வகையில் சிஎஸ்கே விளையாடினால் வெற்றி பெறலாம். மே 7-ம் தேதி கொல்கத்தாவில் கொல்கத்தா அணியுடனும், மே12-ம் தேதி சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் அணியுடனும், 18-ம் தேதி ஆமதாபாத் நகரில் குஜராத் அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது. இந்த 3 அணிகளில் 2 அணிகளிடம் ஏற்கெனவே சிஎஸ்கே அணி உதைபட்டுள்ளதால் சவாலாகவே இருக்கும். அடுத்துவரும் சிஎஸ்கேயின் 7 ஆட்டங்களில் 4 ஆட்டங்கள் சேப்பாக்கத்தில் நடப்பது மட்டும்தான் ஆறுதலானது. சிஎஸ்கே அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடியதில் 6 முறை சேஸிங் செய்து அதில் ஒருமுறை மட்டுமே வென்றது. அதிலும் 180 ரன்களுக்கு மேல் அதிகமான ஸ்கோரை சிஎஸ்கே சேஸ் செய்யவில்லை. சிஎஸ்கேவின் நடுப்பகுதி பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. தோனி வந்துதான் பினிஷ் செய்ய வேண்டிய எதிர்பார்ப்பும் பொய்த்துவிட்டது. பல வீரர்களை மாற்றி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து பரிசோதனை முயற்சியில் சிஎஸ்கே இருக்கிறது. இந்த பரிசோதனை முயற்சி வெற்றியும் பெறலாம், கையையும் சுட்டுக்கொள்ளலாம். தோனியின் தலைமையில் சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு இல்லை என்று சொல்லமுடியாவிட்டாலும், அது கடினமான பாதை. சிஎஸ்கே ப்ளேஆஃப் வாய்ப்பு கணக்கீட்டளவில் கடினம், நம்பிக்கையளவில் வாய்ப்புள்ளது. சிஎஸ்கேயின் ஆட்டம் அடுத்த 7 போட்டிகளில் பிரம்மிப்பூட்டும் வகையில் இருந்தால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பு சாத்தியமாகும். எதிர்பாராத கிளைமாக்ஸ்: 112 ரன் இலக்கை எட்ட விடாமல் கேகேஆரை சுருட்டிய ஸ்ரேயாசின் வியூகம்16 ஏப்ரல் 2025 ஐபிஎல்: ஒவ்வொரு வீரரின் பேட்டையும் களத்திலேயே நடுவர்கள் பரிசோதிப்பது ஏன்? விதிகள் கூறுவது என்ன?16 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காயம் காரணமாக ருதுராஜ் தொடரிலிருந்து விலகியதையடுத்து, கேப்டனாக தோனி அணியை வழிநடத்துகிறார். மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி? ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் 4 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணியை ஒப்பிடும்போது நிகர ரன்ரேட்டில் +0.239 என இருப்பது ஆறுதலானது. மும்பை அணிக்கு 7 போட்டிகள் மீதம் உள்ளன. இதில் குறைந்தபட்சம் 5 போட்டிகளில் வென்றால் புள்ளிப்பட்டியலில் மற்ற அணிகளின் நிலையை வைத்து ஒருவேளை ப்ளே ஆஃப் செல்லலாம். இல்லாவிட்டால் 6 போட்டிகளில் வென்றால் 18 புள்ளிகளுடன் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் பாதுகாப்பாக இருக்கும். மும்பை அணியின் நிகர ரன்ரேட் ஓரளவு பராவாயில்லை என்ற ரகத்தில் இருக்கிறது. தொடர்ந்து 5 போட்டிகளில் வெல்லும்பட்சத்தில் நல்ல ரன்ரேட்டில் 16 புள்ளிகளுடன் இருந்தாலே ப்ளே ஆஃப் செல்ல முடியும். மும்பை அணிக்கு அடுத்ததாக வரும் ஞாயிறன்று சிஎஸ்கே அணியுடனும், 23-ம் தேதி மீண்டும் சன்ரைசர்ஸ் அணியுடனும் மோதுகிறது. 27-ம் தேதி லக்னெள அணியுடனும், மே 1-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனும் மும்பை விளையாடுகிறது. மே 6-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியுடனும், 11-ம் தேதி பஞ்சாப் அணியுடனும், 15-ம் தேதி டெல்லி அணியுடனும் மும்பை மோதுகிறது. மும்பை அணி அடுத்து மோதவுள்ள 7 போட்டிகளில் 4 போட்டிகளை வான்கடே மைதானத்தில் விளையாடுவது அந்த அணிக்கு சாதகமான அம்சமாகும். தோனி புதிய சாதனை: தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டி சிஎஸ்கே அணிக்கு ஏற்றம் தந்த 'ஆட்டநாயகன்'15 ஏப்ரல் 2025 வென்றது சிஎஸ்கே: ஒற்றை கையால் சிக்சர் அடித்த வின்டேஜ் தோனி14 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பை அணிக்கு 7 போட்டிகள் மீதம் உள்ளன. இதில் குறைந்தபட்சம் 5 போட்டிகளில் வென்றால் புள்ளிப்பட்டியலில் மற்ற அணிகளின் நிலையை வைத்து ஒருவேளை ப்ளே ஆஃப் செல்லலாம் பாதி கிணறு தாண்டிய ஆர்சிபி ஆர்சிபி அணி இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தி வருகிறது. பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு இதுவரை 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன் ரேட்டும் பிளஸ் 0.672ல் சிறப்பாக இருக்கிறது. இந்த முறை ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்வதில் சிக்கல் இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தாலும் அந்த அணிக்கு குறைந்தபட்சம் இன்னும் 4 வெற்றிகள் தேவை. ஆர்சிபி அணிக்கு இன்னும் 8 போட்டிகள் மீதம் உள்ளநிலையில் அதில் 4 போட்டிகளில் நல்ல ரன்ரேட்டில் வென்றாலே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லலாம். 5 போட்டிகளில் வென்றால், 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப்சுற்றை உறுதி செய்யலாம். ஆர்சிபி அணிக்கு அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது. இன்று (18ம் தேதி) பெங்களூரிலும், 20-ஆம் தேதி அன்று நியூ சண்டிகரில் நடக்கும் ஆட்டத்திலும் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி மோதுகிறது. அடுத்தடுத்து பஞ்சாப் அணியுடன் ஆர்சிபி மோதுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டங்களில் ஆர்சிபி வென்றால் 12 புள்ளிகளுடன் வலுவாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேறும். ஆர்சிபி அணிக்கு அடுத்துவரக் கூடிய 8 போட்டிகளில் 5 போட்டிகள் பெங்களூருவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் சாதகமாகும். அதில் குறிப்பாக மே 3-ஆம் தேதி சிஎஸ்கே அணியுடன் மோதும் ஆட்டம் ஆர்சிபிக்கு முக்கியமாகும். சென்னையில் சிஎஸ்கே அணியை 17 ஆண்டுகளுக்குப் பின் வீழ்த்தியதால், அடிபட்ட சிங்கமாக சிஎஸ்கே வரும் என்பதால் அந்த ஆட்டம் மிகுந்த பரபரப்பாக இருக்கும். டெல்லியில் 27-ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடனும், லக்னெளவில் மே 9-ஆம் தேதி லக்னெள அணியுடனும், முலான்பூரில் 20-ஆம் தேதி பஞ்சாப் அணியுடனும் ஆர்சிபி வெளி மைதானங்களில் மோதுகிறது. இந்த 3 ஆட்டங்களில் ஏதேனும் 2 ஆட்டங்களில் வென்று, சொந்த மைதானத்தில் நடக்கும் 5 போட்டிகளில் 3 ஆட்டங்களில் ஆர்சிபி வென்றால் 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப்சுற்றுக்குள் செல்ல முடியும். ஆர்சிபி அணி 8 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கான பாதிக் கிணற்றைத் தாண்டிவிட்டது. மிரட்டல் சதம் விளாசியதும் அபிஷேக் எடுத்துக் காட்டிய பேப்பரில் என்ன எழுதியிருந்தது? அவர் கூறியது என்ன?13 ஏப்ரல் 2025 தொடர்ந்து சிறப்பாக ஆடியும் இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்? மனம் திறந்தார் சாய் சுதர்சன்12 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆர்சிபி அணி இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தி வருகிறது ஆபத்தான நிலையில் சன்ரைசர்ஸ் கடந்த சீசனில் 2வது இடத்தைப் பிடித்த சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து மோசமான நிலையில் இருக்கிறது. இதுவரை 7 போட்டிகளில் மோதியுள்ள சன்ரைசர்ஸ் அணி 2 வெற்றிகள், 5 தோல்விகளுடன் 4 புள்ளிகளில் 9வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டும் மைனஸில் இருக்கிறது. இன்னும் சன்ரைசர்ஸ் அணிக்கு 7 லீக் ஆட்டங்கள் மீதமுள்ளன. இதில் இரு போட்டிகளில் சன்ரைசர்ஸ் தோற்றாலே தொடரிலிருந்து வெளியேறிவிடும். ஆதலால், சன்ரைசர்ஸ் அணி அடுத்துவரும் 7 ஆட்டங்களில் மாபெரும் 6 வெற்றிகளைப் பெறுவது அவசியம். இது எழுத்தளவில் சாத்தியமானதாக இருக்கலாம். ஆனால், நிதர்சனத்தில் தொடர்ந்து 6 வெற்றிகளைக் குவிப்பது சந்தேகம்தான். ஏனென்றால் அடுத்து வரக்கூடிய 7 ஆட்டங்களில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளை மட்டுமே முந்தைய போட்டிகளில் சன்ரைசர்ஸ் வென்றுள்ளது. அடுத்து 23-ஆம் தேதி ஹைதராபாத்தில் மும்பையுடனும், 25-ஆம் தேதி சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியுடனும் சன்ரைசர்ஸ் மோதுகிறது மே 2-ஆம் தேதி குஜராத் அணியுடனும், மே 5-ஆம் தேதி ஹைதராபாத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடனும், 10-ஆம் தேதி கொல்கத்தா அணியுடன் ஹைதராபாத்திலும் சன்ரைசர்ஸ் அணி மோதுகிறது. 13-ஆம் தேதி பெங்களூருவில் ஆர்சிபி அணியுடனும், 18-ஆம் தேதி லக்னெளவில் லக்னெள அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் விளையாடுகிறது. சன்ரைசர்ஸ் அணி அடுத்துவரும் 7 போட்டிகளில் குறைந்தபட்சம் 6 வெற்றிகளுடன் முடித்து, நல்ல ரன்ரேட்டில் முடித்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு குறித்து நினைக்கலாம். இல்லாவிட்டால் லீக் சுற்றோடு வெளியேற வேண்டியதிருக்கும். சென்னையை கலங்கடித்த 'தனி ஒருவன்': ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரியுடன் சதம் தொட்ட 'இடது கை சேவாக்' யார்?9 ஏப்ரல் 2025 சன்ரைசர்ஸ் 4-வது தோல்வி: குஜராத் அணிக்காக பேட்டிங், பவுலிங்கில் ஜொலித்த தமிழக வீரர்கள்7 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த சீசனில் 2வது இடத்தைப் பிடித்த சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து மோசமான நிலையில் இருக்கிறது ராஜஸ்தானுக்கு முயற்சி தேவை ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ், சிஎஸ்கே அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருந்தாலும், இதில் மற்ற இரு அணிகளைவிட நிகர ரன்ரேட்டில் சுமாராக இருப்பதால் 8-வது இடத்தில் ராஜஸ்தான் இருக்கிறது. இதுவரை 7 போட்டிகளில் ஆடிய ராஜஸ்தான் அணி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று மைனஸில்தான் இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மீதமுள்ளன. இதில் குறைந்தபட்சம் 6 வெற்றிகளை ராஜஸ்தான் பெற்றால்தான் ப்ளே ஆஃப் ரேஸில் 16 புள்ளிகளுடன் நிற்க முடியும். அதிலும் 16 புள்ளிகள் என்பது உறுதியில்லை, இந்த புள்ளிகளுக்கும் போட்டி ஏற்பட்டால் நிகர ரன்ரேட் பார்க்கப்படும் என்பதால், நிகர ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் 6 வெற்றிகளை ராஜஸ்தான் பெற வேண்டும். அடுத்துவரும் 7 ஆட்டங்களில் பஞ்சாப், சிஎஸ்கே அணியை மட்டும் ராஜஸ்தான் முந்தைய ஆட்டங்களில் வென்றுள்ளது. மற்ற 5 அணிகளையும் வெல்லவில்லை என்பதால், சவாலாக இருக்கும். ராஜஸ்தான் அணி 8-வது இடத்தில் இருப்பதால் இரு பெரிய வெற்றிகள் கிடைத்தாலே நிகர ரன் ரேட்டில் உயர்ந்து, புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் டாப்-5 ரேங்கில் செல்ல முடியும். அதன்பின் ராஜஸ்தான் அணி நம்பிக்கையுடன் செயல்பட்டால் ப்ளே ஆஃப் செல்லமுடியும். கொல்கத்தா, லக்னெள போராட்டம் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் லக்னெள அணி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று 5வது இடத்திலும், கொல்கத்தா அணி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் இருக்கிறது. இரு அணிகளுக்கும் இன்னும் 7 போட்டிகள் மீதமிருக்கிறது. லக்னெள அணி 8 புள்ளிகளுடன் இருக்கிறது, அந்த அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் அதில் 4 போட்டிகளில் வெல்வது ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும். அதே போல கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணி 6 புள்ளிகளுடன் இருக்கிறது. அந்த அணி அடுத்து மோதவுள்ள 7 போட்டிகளில் குறைந்தபட்சம் 5 ஆட்டங்களில் வென்றால்கூட ப்ளே ஆஃப் சுற்று அந்தரத்தில் நிற்கும். ஆனால் 6 ஆட்டங்களில் வெற்றி பெறுவது ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும். சிஎஸ்கே-வில் தோனி நீடிப்பது அணிக்கு பலமா? பலவீனமா?1 ஏப்ரல் 2025 ஹசரங்கா சுழலில் வீழ்ந்தது சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு முதல் வெற்றி30 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ், சிஎஸ்கே அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருந்தாலும், இதில் மற்ற இரு அணிகளைவிட நிகர ரன்ரேட்டில் சுமாராக இருப்பதால் 8-வது இடத்தில் ராஜஸ்தான் இருக்கிறது குஜராத், பஞ்சாப், டெல்லி இடையே கடும் போட்டி ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் தலா 6 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் உள்ளன. டெல்லி கேபிடல்ஸ் அணி 6 போட்டிகளில் ஒரு தோல்வி, 5 வெற்றி, 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இதில் நிகர ரன்ரேட் அடிப்படையில் குஜராத் 2வது இடத்திலும், ஆர்சிபி 3வது இடத்திலும், பஞ்சாப் அணி 4வது இடத்திலும் உள்ளன. இந்த 3 அணிகளுக்கும் அடுத்துவரும் போட்டிகள் முக்கியமானவை. இந்த அணிகள் பெறும் வெற்றி தோல்வியை பொறுத்து, புள்ளிப்பட்டியலில் மாற்றம் இருக்கும். குறிப்பாக இன்று நடக்கும் பஞ்சாப், ஆர்சிபி இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணி 2வது இடத்தை நோக்கி நகரும். நாளை டெல்லி கேபிடல்ஸ், குஜராத் இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணி முதலிடத்துக்கு முன்னேறும். மீண்டும் ஞாயிறன்று பிற்பகல் ஆட்டத்தில் பஞ்சாப் - ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த இரு ஆட்டங்களும் இரு அணிகளின் நிலையைத் தீர்மானிக்கும் ஆட்டமாக இருக்கப் போகின்றன. ஒட்டுமொத்தத்தில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையே இந்த வாரத்தின் இறுதியில் நடக்கும் ஆட்டத்தின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம் இருக்கும். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y602334q2o
-
இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் நிறுத்தி வைப்பது பொதுமக்களின் சந்தேகத்தைத் தூண்டுகிறது - முஜிபுர் ரஹ்மான்
Published By: VISHNU 18 APR, 2025 | 07:38 PM (எம்.ஆர்.எம்.வசீம்) இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் மறைத்துக்கொண்டிருப்பதால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் சந்தேகங்களை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு என்ற வகையில் உலகில் எங்களுக்கு தனித்து பயணிக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி நாங்கள் நம்புவதில்லை. அதனால் ஏனைய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதனால் அரசாங்கம் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதை நாங்கள் எதிராக பார்ப்பதில்லை. அனைத்து நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கிறோம். என்றாலும் தற்போது பிரச்சினையாக இருப்பது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது, அரசாங்கம் அரசாங்கத்துடன் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சைத்திட்டிருக்கிறது. ஆனால் அந்த ஒப்பந்தங்கள் எதனையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. குறைந்தபட்சம் பாராளுமன்றத்துக்குகூட சமர்ப்பிக்கவில்லை. அதனால் ஒப்பந்தங்களில் இருக்கும் விடயங்கள் யாருக்கும் தெரியாது.அரசாங்கம் ஏன் இதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் இருக்கிறது என எங்களுக்கு தெரியாது. அரசாங்கம் இந்த ஒப்பந்தங்களை நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய கைச்சாத்திட்டிருந்தால், இந்த ஒப்பந்தத்துக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தால் இதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கும் முடியும். என்றாலும் இந்த ஒப்பந்தங்களை சபைக்கு சமர்ப்பிப்பதை பிற்படுத்தி வருவதாலே சமூகத்துக்குள்ளும் எங்களுக்குள்ளும் இதுதொடர்பில் சந்தேகங்கள் எழுவது நியாயமானதாகும். அத்துடன் அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களில் பாதுகாப்பு ஒப்பந்தமும் ஒன்றாகும். இலங்கையுடன் செய்துகொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் பாரிய வெற்றியாகவே இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.அவ்வாறு எதுவும் இல்லை என்றால் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அனைவருக்கும் பார்த்துக்கொள்ள முடியுமான வகையில் அரசாங்கத்துக்கு சபைக்கு சமர்ப்பிக்க முடியும்.அவ்வாறு இல்லாமல் தொடர்ந்தும் இதனை மறைக்க முற்படும்போதுதான் பிரச்சினை எழுகிறது. அதேபோன்று அரசாங்கம் சுகாதாரம் தொடர்பாகவும் இரண்டு ஒப்பந்தங்களை இந்தியாவுடன் செய்துகொண்டுள்ளது.அது தொடர்பாகவும் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.அதனால் அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தொடர்ந்தும் மறைத்துக்கொண்டு, இந்த ஒப்பந்தங்களில் நாட்டுக்கு நன்மை இருப்பதாக தெரிவித்துக்கொண்டு முன்னுக்கு செல்ல முற்பட்டாலும், நிச்சியமாக மக்கள் மத்தியில் இந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் எழும் சந்தேகங்களை தடுக்க முடியாது என்றார். https://www.virakesari.lk/article/212326
-
அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீன் செய்த 3 'தவறுகள்' உலகையே மாற்றிய கதை
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், எல்லன் சாங் பதவி, பிபிசி உலக சேவை 18 ஏப்ரல் 2025, 01:12 GMT மாபெரும் மேதைகள்கூட சாதாரண மனிதர்கள்தான். சார்பியல் கோட்பாட்டின் தந்தையாக, ஈர்ப்பு விசை மற்றும் ஒளியை ஆராய்ந்து விளக்கிய இயற்பியலாளராக ஐன்ஸ்டீன் இருக்கலாம். ஆனால் மாமேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கூட சில நேரங்களில் தனது சொந்தக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல் இருந்துள்ளார். தன் மீதான இந்த 'சுய சந்தேகம்', அவர் சில தவறுகளைச் செய்யவும் வழிவகுத்தது. 'மிகப் பெரிய தவறு' பொது சார்பியல் கோட்பாட்டு (General relativity) குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, ஈர்ப்பு சக்தி பிரபஞ்சத்தை சுருங்கச் செய்யும் அல்லது விரிவடையச் செய்யும் என ஐன்ஸ்டீனின் கணக்கீடுகள் சுட்டிக்காட்டின. ஆனால் அந்தக் காலகட்டத்தில், 'பிரபஞ்சம் நிலையானது' என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. எனவே, 1917ஆம் ஆண்டு வெளியான பொது சார்பியல் பற்றிய தனது ஆய்வறிக்கையில், ஈர்ப்பு விசையின் தாக்கத்தைச் சமநிலைப்படுத்த ஐன்ஸ்டீன் "அண்டவியல் மாறிலி" (cosmological constant) என்ற ஒன்றைத் தனது சமன்பாடுகளில் சேர்த்தார். இதன் மூலம் பிரபஞ்சம் நிலையானதாக இருக்க வேண்டும் என்று பரவலாக இருந்த கருத்தை அவர் ஏற்றுக்கொண்டார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, விஞ்ஞானிகள் பிரபஞ்சம் நிலையானது அல்ல என்பதற்கான புதிய ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கினர். உண்மையில், பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருந்தது. பின்னர், இயற்பியலாளர் ஜார்ஜ் காமோவ் 'My World Line: An Informal Autobiography' என்ற தனது நூலில் "அண்டவியல் மாறிலியின் அறிமுகம் அவர் வாழ்க்கையில் செய்த பெருந்தவறு" என்று ஐன்ஸ்டீன் குறித்து எழுதினார். பூமி தவிர்த்து இன்னொரு தொலைதூர கோளில் உயிர்கள் உள்ளதா? - சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் கோடையில் சூட்டைத் தணிக்கும் இளநீரின் உள்ளே தண்ணீர் உற்பத்தி ஆவது எப்படி?17 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,NASA/ESA/J MERTEN/D COE படக்குறிப்பு,அந்தக் காலத்தில், 'பிரபஞ்சம் நிலையானது' என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது ஆனால், இதற்கு இன்னொரு சுவாரஸ்யமான திருப்புமுனையும் உள்ளது. ஒரு மர்மமான "இருண்ட ஆற்றலின்" காரணமாக பிரபஞ்சத்தின் விரிவாக்கம் வேகப்படுத்தப்படுகிறது என்பதற்கான வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். தொடக்கத்தில் ஈர்ப்பு விசையைச் சமன்படுத்துவதற்காகத் தனது சமன்பாடுகளில் ஐன்ஸ்டீன் அறிமுகப்படுத்திய "அண்டவியல் மாறிலி" தான், உண்மையில் இந்த இருண்ட ஆற்றலுக்குச் சிறந்த விளக்கமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. எனவே, அது தவறு அல்ல என்று சிலர் கருதுகிறார்கள். தொலைதூர விண்மீன் குழுக்களின் அறிமுகம் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு மற்றொரு நிகழ்வையும் கணித்தது. நட்சத்திரம் போன்ற ஒரு மிகப்பெரிய பொருளின் ஈர்ப்பு புலம், அதன் பின்னால் உள்ள தொலைதூர பொருளில் இருந்து வரும் ஒளியை வளைத்துவிடும். இதன் மூலம் அந்தப் பெரிய பொருள் ஒரு சக்திவாய்ந்த பூதக்கண்ணாடி போல (பெரிதாகக் காட்டும் கண்ணாடி - magnifying lens) செயல்படுகிறது. 'ஈர்ப்புப் புல ஒளிவிலகல் - Gravitational lensing' (ஒரு பொருளிலிருந்து வரும் ஒளி, ஒரு பெரிய பொருளின் அருகே செல்லும்போது, அந்தப் பொருளின் ஈர்ப்புப் புலம் ஒளியின் பாதையை வளைத்து, பார்வையாளருக்கு அது வேறு இடத்தில் இருந்து வருவது போலத் தோற்றமளிக்கும்) எனப்படும் விளைவு, பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருக்கும் என்று ஐன்ஸ்டீன் நினைத்தார். அதனால், அவர் தனது கணக்கீடுகளை வெளியிடவே விரும்பவில்லை. ஆனால் செக் குடியரசைச் சேர்ந்த பொறியாளரான ஆர்.டபிள்யூ. மாண்டல் அதை வெளியிடுமாறு ஐன்ஸ்டீனை வற்புறுத்தினார். பின்னர் 1936ஆம் ஆண்டு சயின்ஸ் இதழில் வெளியான தனது சொந்த கட்டுரையை மேற்கோளிட்டு, "மாண்டல் என்னை வற்புறுத்தி வெளியிட வைத்த இந்தச் சிறிய கட்டுரையை, நீங்கள் வெளியிட உதவியதற்கு நன்றி கூற விரும்புகிறேன். இது பெரிதாக மதிக்கத்தக்கது அல்ல, ஆனால் இந்த ஏழைக்கு மகிழ்ச்சியளிக்கிறது," என ஐன்ஸ்டீன் அதன் பத்திரிக்கை ஆசிரியருக்கு கடிதம் எழுதினார். அந்தக் கட்டுரையில் உள்ள கண்டுபிடிப்பின் மதிப்பு வானியலுக்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் ஹப்பிள் தொலைநோக்கிக்கு, பூமிக்குக் அருகிலுள்ள பெரிய விண்மீன் குழுக்கள் மூலம் பெரிதாக்கப்பட்ட, தொலைதூர விண்மீன் குழுக்களின் விவரங்களைத் திரட்ட உதவுகிறது. குழந்தைகளை மோசமாக பாதிக்கக்கூடிய பெற்றோரின் 4 செயல்கள் - எப்படி நடந்து கொள்ள வேண்டும்?17 ஏப்ரல் 2025 கவர் போடாத செல்போன் கீழே விழுந்தால் திரை உடையுமா? பிபிசி செய்தியாளரின் ஒரு மாத பரிசோதனை அனுபவம்16 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,NASA/ESA படக்குறிப்பு,ஈர்ப்புப்புல ஒளிவிலகல், ஹப்பிள் டெலஸ்கோப்புக்கு 'ப்ளூ ஹார்ஸ்ஷு' விண்மீன் குழுவை படம்பிடிக்க உதவியுள்ளது 'குவாண்டம் இயக்கவியலில் சீரற்ற தன்மை கிடையாது' அலைகளும் துகள்களும் என ஒளியை விவரிக்கும் ஐன்ஸ்டீனின் 1905ஆம் ஆண்டின் கட்டுரை உள்பட, அவரது பணி இயற்பியலின் வளர்ந்து வரும் அந்தத் துறைக்கு அடித்தளம் அமைக்க உதவியது. குவாண்டம் இயக்கவியல், மிகச் சிறிய துகள்கள், அதாவது (அணுக்கள் மற்றும் எலக்ட்ரான்கள்) போன்றவற்றின் விசித்திரமான உலகத்தை விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குவாண்டம் பொருளால் ஒரே நேரத்தில் பல நிலைகளில் இருக்க முடியும் ('சூப்பர்பொசிஷனில்'). அதாவது ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடியும். ஆனால் நாம் அதை அளவிடும்போது, அது ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு (நிலைக்கு) கொண்டு வரப்படுகிறது. இதற்கான பிரபலமான விளக்கம் இயற்பியலாளர் எர்வின் ஷ்ரோடிங்கரால் அளிக்கப்பட்டுள்ளது. 'ஒரு பெட்டியில் உள்ள பூனையை யாரோ ஒருவர் அந்தப் பெட்டியின் மூடியைத் திறந்து சரிபார்க்கும் வரை ஒரே நேரத்தில் அது உயிருடனும் இருப்பதாகவும், இறந்து விட்டதாகவும் கருதப்படலாம்' என்பதுதான் அந்த விளக்கம். மூளை வளர்ச்சி, அறிவாற்றலை மேம்படுத்த உதவும் முட்டை - எப்படி தெரியுமா?15 ஏப்ரல் 2025 முகத்தில் பூசும் 'புரோபயாடிக்' அழகு சாதனப் பொருட்களில் பாக்டீரியாக்கள் உயிருடன் இருக்குமா?14 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எர்வின் ஷ்ரோடிங்கரின் முரண்பாடு ஒரு பெட்டியில் பூனை என்ற கருத்தைப் பயன்படுத்தி விளக்கப்பட்டது. ஆனால் குவாண்டம் இயக்கவியலின் நிச்சயமற்ற தன்மையை ஐன்ஸ்டீன் நிராகரித்தார். 1926இல், அவர் இயற்பியலாளர் மாக்ஸ் பார்னுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் "குவாண்டம் இயக்கவியலில் சீரற்ற தன்மை கிடையாது (God does not play dice)" என்று கூறித் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். விஞ்ஞானிகளான போரிஸ் பொடோல்ஸ்கி மற்றும் நேதன் ரோசனுடன் இணைந்து ஐன்ஸ்டீன் 1935ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில், சூப்பர் பொசிஷனில் உள்ள இரண்டு பொருள்கள் ஏதேனும் ஒரு வகையில் இணைக்கப்பட்டு, பின்னர் பிரிக்கப்பட்டால், ஒருவர் முதல் பொருளைக் கவனித்து அதற்கு மதிப்பை அளிக்கும்போது, இரண்டாவது பொருளைக் கவனிக்காமலே, அதன் மதிப்பு உடனடியாக நிர்ணயிக்கப்படும் எனக் குறிப்பிட்டார். இந்த யோசனை, குவாண்டம் சூப்பர்பொசிஷனுக்கு மறுப்பு தெரிவிக்கும் நோக்கம் கொண்டதாக இருந்தாலும், அது பல ஆண்டுகளுக்குப் பிறகு குவாண்டம் இயக்கவியலில் ஒரு முக்கியமான சிந்தனை வளர்ச்சிக்கு வித்திட்டது. அதை நாம் இப்போது குவாண்டம் பின்னல் (Entanglement) என்று அழைக்கிறோம். இது, இரண்டு பொருள்கள் வெகுவாக தொலைவில் இருந்தாலும் அவற்றை ஒன்றாக இணைக்க முடியும் எனக் கூறுகிறது. இதன் மூலம், ஐன்ஸ்டீன் புத்திசாலித்தனமாகத் தனது கோட்பாடுகளை விளக்கியுள்ளதையும், சில நேரங்களில் அவர் தவறு செய்திருந்தாலும், அந்தத் தவறுகளும் புதிய சிந்தனைகளை உருவாக்க உதவியுள்ளன, நவீன உலகில் பல தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு வித்திட்டுள்ளன என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgqvl2ng1z1o
-
மன்னாரில் ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கிவிட்டுச் சென்றுள்ளார் - வி.எஸ்.சிவகரன்
18 APR, 2025 | 03:38 PM மன்னாரில் ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். தேர்தல் மேடையில் வாக்கு பெறுவதற்காக நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசின் ஆட்சி முறைமைக்கான அவமானம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை (18) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், மன்னாருக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை (17) தேர்தல் பரப்புரை கூட்டத்துக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க காற்றாலை விடயம் சம்பந்தமாக முன்னுக்குப் பின் முரணான தகவலை வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். அவருடைய தகவலை பார்க்கின்றபோது, கொய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம் என்கிற கிராமத்துப் பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது. அவரது கதையும் அவ்வாறே அமைந்துள்ளது. காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வு போன்ற திட்டங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருக்கின்றன என்கிற செய்தியை அரசாங்கம் அரச அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. அது மாத்திரமின்றி 16.01.2025 அன்று மாவட்டச் செயலகத்தில் காற்றாலை திட்டம் சம்பந்தமான கூட்டம் நடத்தப்பட்டு, தற்காலிகமாக அத்திட்டத்தை இடை நிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் 28.01.2025 அன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்மானங்கள் எவையும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது கூட மன்னார் சௌத்பார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் ஜனாதிபதி நேற்றைய கூட்டத்தில் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பணிகள் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார். தற்போது நான்கு காற்றாலைகள் அமைக்கும் திட்டம் இடம்பெற்று வருகிறது. அதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. தாழ்வு பாட்டில் 10 காற்றாலைகள் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. அதற்கான சுற்றாடல் மதிப்பு அறிக்கை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூன்று தடவை அவர்கள் கள ஆய்வுக்கு வந்தபோது திருப்பி அனுப்பப்பட்ட போதும் கூட அந்த திட்டத்தை அரசு கைவிடுவதாக இல்லை. மூன்றாவது திட்டமான கரையோரத்தில் இருந்து மணல் அகழ்வு செய்வதற்கான நில அளவீடு செய்வதற்கு அரச திணைக்களங்கள், அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அதனை வழங்குவதற்கான துரித நடவடிக்கை இடம்பெற்று வருவதாக அறிகின்றோம். இந்த மூன்று திட்டங்களும் மன்னாரில் நடைபெறுவதற்கும் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்குமான சூழலையே கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு அவரது கட்சிக்காரர்கள் அல்லது அரச அதிகாரிகள் தவறான தகவல்களை வழங்குகின்றார்கள். அல்லது ஜனாதிபதி இதனை அரசியல் மேடையாக பயன்படுத்துகிறார் என தெரியவில்லை. மன்னாரில் வைத்து ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். தேர்தல் மேடையிலே வாக்கு பெறுவதற்காக நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசின் ஆட்சி முறைமைக்கான அவமானம். இடது சாரித்துவத்தில் ஆட்சி நடத்துகின்றோம் என கூறுகின்றவர்கள், களத்தில் ஒன்று இடம்பெற, வார்த்தைகளில் இன்னுமொன்றை உண்மைக்கு மாறாக பேசுவது என்பது ஜனநாயக விரோதம் ஆகும். எனவே, இவ்விடயங்களை ஜனாதிபதி உடனடியாக கவனத்தில் எடுத்து, அவர் கூறியது போல் இத்திட்டத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறைத்தபட்ச சூழல் பாதிப்போடு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும் அவர் கூறியிருந்தார். இவற்றை அரசு ஏமாற்றும் வார்த்தைகளாகவே பார்க்கின்றோம். இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என கடந்த 2 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம். மன்னார் மக்கள் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என சிவகரன் தெரிவித்தார். மேலும், இந்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதியின் கருத்து தொடர்பாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதி என்.எம்.ஆலம் ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/212298
-
இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு; 14,678 பேர் பாதிப்பு
18 APR, 2025 | 01:59 PM டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேர் உயிரிழந்ததோடு, 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில், அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நாட்டில் டெங்கு நோய்ப் பரவல் அதிகரித்து வருவதனால் இவ்வார இறுதியில் பிராந்திய மட்டத்தில் டெங்கு ஒழிப்புத் திட்ட செயற்பாடுகளை பாடசாலைகளில் முன்னெடுக்கவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் 2024ஆம் ஆண்டில் மொத்தமாக 49,870 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/212286
-
பெரிய வெள்ளியை முன்னிட்டு இன்று நடைபெற்ற திருச்சிலுவைப் பாதை வழிபாடுகள்
18 APR, 2025 | 06:03 PM இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினத்தை (18) பெரிய வெள்ளியாக உலகெங்கும் கிறித்தவர்கள் அனுஷ்டிக்கின்றனர். தவக்காலத்தின் சிறப்பு நாளான பெரிய வெள்ளியை முன்னிட்டு இன்றையதினம் நாட்டின் பல பிரதேசங்களில் உள்ள தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை யாத்திரைகள் பக்திபூர்வமாக நடைபெறுகின்றன. கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா தேவாலயம் பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு புனித வியாகுல மாதா தேவாலயத்தில் யேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் சிலுவைப் பாதை நடைபெற்றது. (படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்) மட்டக்களப்பு - மரியாள் தேவாலயம் அதன்படி, கிழக்கு மாகாணத்திலும் பலத்த பாதுகாப்புடன் பெரிய வெள்ளி சிலுவைப் பதை யாத்திழை வழிபாடுகள் நடைபெற்றன. மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை சிலுவைப் பாதை வழிபாடுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை மட்டக்களப்பில் பழமை வாய்ந்த மரியாள் தேவாலயத்திலும் ஆலய பங்குத்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் தலைமையில் பெரிய வெள்ளி சிலுவை பாதை வழிபாடுகள் நடத்தப்பட்டன. தேவாலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த சிலுவைப் பாதை நகரின் பிரதான வீதிகளின் ஊடாக சென்று, மீண்டும் தேவாலயத்தை சென்றடைந்தது. இந்த சிறப்பு வழிபாடுகளில் அதிகளவிலான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர். இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிறித்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மட்டக்களப்பில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் தேவாலயத்தின் பிரதான போதகர் ரோஷான் மகேசன் தலைமையில் பெரிய வெள்ளி சிலுவை பாதை வழிபாடுகள் நடைபெற்றன. இயேசு சிலுவையில் அறையப்பட்ட பாடுகளின் காட்சிகளும் இன்றைய பெரிய வெள்ளி வழிபாடுகளில் காண்பிக்கப்பட்டன. இதன்போது பெரிய வெள்ளியின் மகத்துவம் பற்றி தேவாலய பிரதம போதரால் சிறப்புரை ஆற்றப்பட்டது. இவ்வழிபாடுகளில் அதிகளவிலான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர். இயேசு ஜீவிக்கிறார் ; புனித வெள்ளி பாதயாத்திரை! கொழும்பு - 15 இல் அமைந்துள்ள இயேசு ஜீவிக்கிறார் சர்வதேச சுவிசேஷ பணிமனையின் புனித வெள்ளி பாதயாத்திரை இன்று 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து மனுக்குலத்தை மீட்டு, இரட்சிக்க மனிதனாக இப்பூமிக்கு வந்து, மக்களின் பாவத்திற்காக தன்னை தியாககமாய் ஒப்புக்கொடுத்து, சகல அவமானங்களையும், நிந்தைகளையும், நோய்களையும் சிலுவையில் சுமந்து தீர்த்ததை நினைவுகூர்ந்து பலர் பாதயாத்திரையில் கலந்துகொண்டனர். பாதயாத்திரையானது கொழும்பு ஆமர்வீதி (பழைய சுலைமான் வைத்தியசாலை எதிரில்) பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பித்து, பஞ்சிகாவத்தை, மருதானை, யூனியன் பிளேஸ் ஊடாக விஹாரமாதேவி பூங்காவை சென்றடைந்தது. சுவி. கலாநிதி. M.R. இராஜேந்திரம் மற்றும் சுவி. டாக்டர். C.V. இராஜேந்திரம் ஆகியோரால் தேவ செய்தி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212278
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த முக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவேளை இடம் மாற்றம் - கோட்டாபய ஆட்சியில் அநீதி இழைக்கப்பட்டதாக தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஜனாதிபதிக்கு கடிதம்
Published By: RAJEEBAN 18 APR, 2025 | 11:26 AM இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபயகுணசேகர 2019 இல் தான் இடமாற்றப்பட்டமை குறித்தும் உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்த தனது ஆராய்ச்சிகளிற்கு தடுக்கப்பட்டது குறித்தும் சுட்டிக்காட்டி ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். 2019 இல் விவரிக்கப்படாத இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டது ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 2019 ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சிலிருந்து காரணம் தெரிவிக்கப்படாமல் உடனடியாக தான் இடமாற்றப்பட்டதை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர் அவர்இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் என்ற அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த முக்கியமான ஆய்வொன்றில் ஈடுபட்டிருந்தவேளை தான் இடமாற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனது இடமாற்றம் திட்டமிட்ப்பட்ட ஆனால் முன்னெடுக்கப்படாத விதம் அரசியல் தலையீடுகள் குறித்தும்நிறுவன சமரசம் குறித்தும் தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றது என தெரிவித்துள்ள அவர் என்னை ஜேர்மனியின் பேர்ளினின் துணை தூதரகத்திற்கு நியமிப்பதாக தெரிவித்திருந்தார்கள் அதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் உள்ள உண்மைகள் அதிகாரத்துவ குழப்பம் மற்றும் அரசியல் நோக்கம் காரணமாக புதைந்துபோகக்கூடாதுஎன தெரிவித்துள்ள அசங்க அபயகுணசேகரஇ எனது திடீர் இடமாற்றம் குறித்து நீதி நிலைநாட்டப்ட்டால் நான் எனது நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் நேர்மையுடன் பணியாற்ற தயாராகயுள்ளேன்இஉத்தியோகபூர்வ வேண்டுகோள் விடுக்கப்பட்டால்உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/212272
-
வெப்பநிலை குறித்து கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்!
அதிகரிக்கும் வெப்பநிலை; விழிப்புடன் இருக்கவும்! 18 APR, 2025 | 11:13 AM நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை இன்று வெள்ளிக்கிழமை (18) எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருத்தல் மற்றும் வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுத்தல் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பம் தொடர்பான நோய்களிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள அதிகளவு நீர் அருந்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/212267
-
ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த முயற்சிகளை கைவிட அமெரிக்கா திட்டம்?
18 APR, 2025 | 04:52 PM ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெளிவாக தெரியாவிட்டால் அடுத்த சில நாட்களில் இதற்கான மத்தியஸ்த முயற்சியில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விலகிவிடுவார் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐரோப்பிய உக்ரேனிய தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய மார்கோ ரூபியோ “இந்த முயற்சியை வாரக்கணக்கிலோ மாதக்கணக்கிலோ தொடர நாங்கள் விரும்பவில்லை. நாம் இப்போது மிக விரைவாக தீர்மானிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்குள் இது சாத்தியமாகுமா இல்லையா என்பது குறித்து சில நாட்களில் நான் பேசுகிறேன். ட்ரம்ப் இவ்விஷயத்தில் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளார். ஏனெனில் இதற்காக அவர் நிறைய நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணித்துள்ளார். இது முக்கியமானது. என்றாலும் இதே அளவுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் உள்ளன. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதி செய்வது நம் முன் உள்ள ஒரு பிரச்சினை. அதேநேரத்தில் இது சாத்தியமாகுமா என்பதை நாம் குறுகிய காலத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த சவாலும் நம் முன் உள்ளது. ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டுவது கடினம் என்பது தெளிவாகத் தெரிந்தாலும் அது விரைவில் செய்யப்படுவதற்கான அறிகுறிகள் இருக்க வேண்டும். இதை 12 மணி நேரத்தில் செய்து முடிக்க முடியும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் அது எவ்வளவு தூரம் வித்தியாசமாக இருக்கிறது என்பதையும்இ அந்த வேறுபாடுகளைக் குறைக்க முடியுமா என்பதையும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.” என தெரிவித்தார். உக்ரைனின் கனிமங்களை அமெரிக்கா அணுக அனுமதிக்கும் ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறேன் என்று ட்ரம்ப் நேற்று(வியாழக்கிழமை) கூறி இருந்தார். உக்ரைனுடனான அமெரிக்கப் பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் வெளிப்பட்ட நிலையில் ரூபியோ இவ்வாறு கூறி இருக்கிறார். வளர்ந்து வரும் புவிசார் அரசியல் சவால்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் இல்லாததால் வெள்ளை மாளிகையில் அதிகரித்து வரும் விரக்தியை ரூபியோவின் கருத்துக்கள் வெளிக்காட்டுகின்றன. வெள்ளை மாளிகையில் தனது முதல் 24 மணி நேரத்திற்குள் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212307
-
விடுமுறையே இல்லாமல் தாய் வேலை செய்கிறாள்
அப்பிடி நீங்க நினைக்கலாம் அண்ணை! ஆயுள்தண்டனை(திருமணம்) கைதி தானே!!!
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
ஆபத்தான நிலையில் சன்ரைசர்ஸ் - மும்பை அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 17) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 33வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ், 18.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல்: ஒவ்வொரு வீரரின் பேட்டையும் களத்திலேயே நடுவர்கள் பரிசோதிப்பது ஏன்? விதிகள் கூறுவது என்ன? நடப்பு சீசனில் வேறெந்த அணியும் செய்யாததை செய்த சிஎஸ்கே - சேப்பாக்கத்தின் வரலாற்றுப் பதிவுகள் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி மதுரை சிறுமி 7 வயதிலேயே டேக்வாண்டோ பயிற்சியாளராகி கின்னஸ் சாதனை தப்பிக்கும் மும்பை இந்தியன்ஸ் இந்த வெற்றி மூலம் மும்பை அணி மெல்ல ப்ளே ஆஃப் சுற்றை நோக்கி தன்னைப் பாதுகாப்பாக நகர்த்தியுள்ளதோடு, தொடர்ந்து 2வது வெற்றியையும் பெற்றுள்ளது. ஏழு போட்டிகளில் 4 தோல்வி, 3 வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் மும்பை 7வது இடத்தில் இருக்கிறது. இதில் நிகரரன்ரடே் +0.239 என இருப்பது கூடுதல் சாதகம். இன்னும் மும்பை அணிக்கு 7 போட்டிகள் மீதம் இருப்பதால், அதில் குறைந்தபட்சம் 5 போட்டிகளில் வெற்றி கட்டாயம். அப்போதுதான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. கடந்த 5 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது, 7 போட்டிகளில் 2 வெற்றி 5 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் 7 போட்டிகள் இருப்பதால், அதில் குறைந்தபட்சம் 6 வெற்றிகள் பிரமிப்பூட்டும் வகையில் தேவை. அல்லது 7 போட்டிகளிலும் வென்றால்தான் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியும். அடுத்து வரும் போட்டிகளில் 2 தோல்விகளைச் சந்தித்தாலே சன்ரைசர்ஸ் அணியின் பயணம் லீக் சுற்றோடு முடிந்துவிடும். பூமி தவிர்த்து இன்னொரு தொலைதூர கோளில் உயிர்கள் உள்ளதா? - சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குழந்தைகளை மோசமாக பாதிக்கக்கூடிய பெற்றோரின் 4 செயல்கள் - எப்படி நடந்து கொள்ள வேண்டும்?17 ஏப்ரல் 2025 மெதுவான ஆடுகளம் பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை அணியின் வெற்றியில் ஆடுகளத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. மெதுவான, மந்தமான ஆடுகளத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மும்பை பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசியது வெற்றிக்குக் காரணம். குறிப்பாக ஆஃப் ஸ்பின்னர் வில் ஜேக்ஸ் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 36 ரன்களையும் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்ததால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். பும்ரா 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். போல்ட் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை சாய்த்தார். பொறுமை, நிதானம் இல்லை சன்ரைசர்ஸ் அணி சிவப்பு மண் கொண்ட பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஆடிப் பழகியவர்கள். இதுபோன்ற மெதுவான ஆடுகளத்தில் அதிரடி பேட்டிங் மனப்பான்மை கொண்ட அந்த பேட்டர்களால் விளையாட முடியவில்லை. வான்கடே ஆடுகளம் மோசமானது என்று நிராகரிக்க முடியாது, இந்த ஆடுகளத்திலும் குறைந்தபட்சம் 180 ரன்கள் வரை சராசரியாக சேர்க்க முடியும். ஆனால் இந்த ஆடுகளத்தில் நிதானமாக பேட் செய்து பந்துகளைக் கணித்து ஆட வேண்டும். அந்தப் பொறுமையும் நிதானமும் சன்ரைசர்ஸ் பேட்டர்களிடம் இல்லை. பவுலர்கள் கைகளில் இருந்து ரிலீஸ் ஆகும் பந்து பேட்டரை நோக்கி வேகமாக வராது, நினைத்த வேகத்தைவிடக் குறைவாகவும், சற்று ஸ்விங்குடன் அல்லது டர்ன்னுடன் வரும் என்பதால் பேட்டர்கள் கவனத்துடன் ஆட வேண்டும். ஆனால், சன்ரைசர்ஸ் பேட்டர்கள் யாரும் ஆங்கர் ரோல் எடுத்து விளையாடவில்லை, ஒருவர்கூட அரைசதம் அடிக்கவில்லை. அபிஷேக் சர்மா எடுத்த 40 ரன்கள்தான் அதிகபட்சம். அடுத்தார்போல கிளாசன் 37 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்டர்கள் அனைவரும் 25 ரன்களுக்கு உள்ளாகவே ஆட்டமிழந்தனர். நிதானமாக பேட் செய்திருந்தால் கூடுதலாக 20 முதல் 25 ரன்களை சேர்த்திருக்கலாம், ஆட்டத்தை நெருக்கடியாகக் கொண்டு சென்றிருக்கலாம். கோடையில் சூட்டைத் தணிக்கும் இளநீரின் உள்ளே தண்ணீர் உற்பத்தி ஆவது எப்படி?17 ஏப்ரல் 2025 கவர் போடாத செல்போன் கீழே விழுந்தால் திரை உடையுமா? பிபிசி செய்தியாளரின் ஒரு மாத பரிசோதனை அனுபவம்16 ஏப்ரல் 2025 அதிர்ஷ்டத்தை தவறவிட்ட சன்ரைசர்ஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அபிஷேக் சர்மா அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவருக்கும் நேற்றைய ஆட்டம் சிறப்பான தொடக்கமாக இல்லை. இருவரும் நினைத்து போல ஷாட்களை அடிக்க முடியவும் இல்லை. இதில் டிராவிஸ் ஹெட் ரன்சேர்க்க மிகவும் திணறினார், அபிஷேக் ஓரளவு சமாளித்து பவுண்டரிகளை விளாசினார். அதிலும் தீபக் சஹர் பந்துவீச்சில் அபிஷேக் சர்மா அடித்த கேட்சை வில் ஜேக்ஸ் தவறவிட்டார், டிராவிஸ் ஹெட்டுக்கு கரன் சர்மா ஒரு கேட்சை கோட்டை விட்டார். இந்த இரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைத்தும் இருவரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. பவர்ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி சன்ரைசர்ஸ் 46 ரன்கள் சேர்த்தது. ஹர்திக் பாண்டியா வீசிய 10வது ஓவரில் டிராவிஸ் ஹெட் ஸ்குயர் லெக் திசையில் அடித்த ஷாட் கேட்சானது. அப்போது அவர் 24 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், ஹர்திக் வீசியது நோபால் என அறிவிக்கப்பட்டதால் ஹெட் அவுட் ஆவதில் இருந்து தப்பித்தார். டிராவிஸ் ஹெட்டுக்கு 2வது அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தும் அவரால் நிலைத்து பேட் செய்ய முடியவில்லை. மந்தமான பேட்டிங் பவர்ப்ளேவில் பும்ரா 2 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே கொடுத்து சன்ரைசர்ஸ் ரன்ரேட்டை சுருக்கினார். கரன் சர்மாவுக்கு விரலில் ஏற்பட்ட காயத்தால் பந்துவீச முடியாத சூழலில் வில் ஜேக்ஸ் பந்துவீச அழைக்கப்பட்டார். ஜேக்ஸ் தனது 2வது ஓவரிலேயே இஷான் கிஷன் விக்கெட்டையும், 12வது ஓவரில் டிராவிஸ் ஹெட்(28) விக்கெட்டையும் வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணிக்கு அதிர்ச்சியளித்தார். அபிஷேக் சர்மா 40 ரன்களில் பாண்டியா ஓவரிலும், இஷான் கிஷன் 3 ரன்களில் ஜேக்ஸ் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஆடுகளம் பேட் செய்யக் கடினமாக இருந்தது, பந்து பேட்டரை நோக்கி மெதுவாக வந்தது என்பது சரியான கூற்றுதான். ஆனால், பேட்டர்கள் சற்று பொறுமையுடன் ஷாட்களை நேர்த்தியாக அடித்திருந்தால் விக்கெட்டை காப்பாற்றியிருக்க முடியும். சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டனர். சன்ரைசர்ஸ் அணியின் பேட்டர்கள் நேற்று மிக மந்தமாக பேட் செய்தனர். பேட்டர்களிடம் இருந்து பவுண்டரி, சிக்ஸர் வராததுதான் ஸ்கோர் உயராததற்கு முக்கியக் காரணம். 8 முதல் 15வது ஓவர்களுக்கு இடையே சன்ரைசர்ஸ் அணி பேட்டர்கள் 4 பவுண்டரி மட்டுமே அடித்திருந்தனர். நிதிஷ் ரெட்டி 21 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்ததில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தார். அவரும் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 10 நிமிடங்களில் வீட்டிற்கே டெலிவரி: ஆன்லைன் செயலிகளால் மளிகைக் கடைகள் காலியாகிறதா?15 ஏப்ரல் 2025 நிலநடுக்கத்திலும் நடுங்காத தாயுள்ளம் - குட்டியைக் காத்த யானைகள்15 ஏப்ரல் 2025 காப்பாற்றிய கிளாசன் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் கிளாசன் களத்தில் இருந்ததால் ஓரளவுக்கு ஸ்கோர் உயர்ந்தது. கிளாசன், அனிகேத் வர்மா இருவரும் கடைசி 3 ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்ததுதான் சன்ரைசர்ஸ் அணி 150 ரன்களை கடக்க உதவியது. கிளாசன் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 37 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் போல்டானார். அனிகேத் வர்மா தனது பங்கிற்கு 2 சிக்ஸர்களையும், கம்மின்ஸ் ஒரு சிக்ஸரையும் விளாசவே சன்ரைசர்ஸ் 162 ரன்கள் சேர்த்தது. ஆனால், சன்ரைசர்ஸ் அணி சேர்த்தது இந்த ஆடுகளத்தில் டிபெண்ட் செய்யப் போதுமானது அல்ல. இன்னும் கூடுதலாக 25 ரன்கள் சேர்த்திருந்தால் எதிரணிக்கு நெருக்கடி அளித்திருக்கலாம். மும்பை அதிரடித் தொடக்கம் இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய ரோஹித் சர்மா, ரெக்கில்டன் ஜோடி அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினர். ரோஹித் சர்மா இந்த சீசனில் முதல் அரைசதத்தை இன்னும் அடிக்கவில்லை என்ற போதிலும், 3 சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை உயர்த்தி 26 ரன்களில் கம்மின்ஸ் பந்தவீச்சில் ஆட்டமிழந்தார். ரெக்கில்டன் தொடக்கத்தில் திணறியபோதும், மலிங்கா ஓவரில் இஷான் 3 பவுண்டரிகளை விளாசினார். ஜீசன் அன்சாரி பந்துவீச்சில் ரெக்கில்டன் அடித்த ஷாட் கேட்சானது. ஆனால், விக்கெட் கீப்பிங் செய்த கிளாசனின் கைகள் ஸ்டெம்புக்கு வெளியே வந்ததால் நோபால் என அறிவிக்கப்பட்டது. இதனால் பெவிலியன் சென்ற ரெக்கில்டன் திரும்ப அழைக்கப்பட்டார். கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்ட ரெக்கில்டன் 31 ரன்னில் ஹர்சல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 'மாட்டிறைச்சி உண்ணும் பிராமணன் நான்' - 5 போர்களை கண்ட செங்கல்பட்டு ஜெனரல் சுந்தர்ஜியின் கதை15 ஏப்ரல் 2025 டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய கடைசி நிமிடங்களில் உள்ளே என்ன நடந்தது? புதிய தகவல்15 ஏப்ரல் 2025 சிரமப்படாத வெற்றி பட மூலாதாரம்,GETTY IMAGES மூன்றாவது விக்கெட்டுக்கு வில் ஜேக்ஸ், சூர்யகுமார் ஜோடி 52 ரன்கள் சேர்த்தனர். சூர்யகுமார் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 21 ரன்கள் சேர்த்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் வில் ஜேக்ஸ் 36 ரன்னில் கம்மின்ஸிடம் விக்கெட்டை இழந்தார். திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஜோடி கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி வெற்றியை நோக்கி அணியைச் செலுத்தினர். ஹர்திக் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் என 9 பந்துகளில் 21 ரன்கள் எனச் சிறிய கேமியோ ஆடி ஆட்டமிழந்தார். திலக் வர்மா 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 'பேட் செய்யக் கடினமாக இருந்தது' - ஹர்திக் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், "நாங்கள் மிகவும் ஸ்மார்ட்டாக, துல்லியமாகப் பந்து வீசினோம் என நினைக்கிறேன். திட்டங்களை சரியாகச் செயல்படுத்தியுள்ளோம். ஆடுகளம் பேட்டிங் செய்யக் கடினமாக இருந்தது, சில பந்துகளை விளையாடவே முடியவில்லை. இருப்பினும் சில நல்ல ஷாட்களை அடித்தோம். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் இருந்தது. வேகத்தைக் குறைத்து யார்க்கர் பந்துகளை வீச வைத்தோம், வேகத்தைக் குறைத்து பந்துவீச வைத்தவுடன் நல்ல பலன் கிடைத்தது," என்று தெரிவித்தார். அதனால்தான் பவர்ப்ளே முடிந்தவுடன் ஜேக்ஸை அழைத்து பந்துவீச வைத்ததாகக் கூறிய ஹர்திக், "அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. எங்கள் வெற்றிக்கு பந்துகளும், ரன்களும் சரிசமமாக இருந்தபோது, முன்னெடுத்துச் செல்ல சில பவுண்டரிகள், சிக்ஸர்கள் இருந்தால் பதற்றம் குறையும் என்பதால், சிறிய கேமியோ ஆடி வெற்றியை நோக்கி நகர்த்தினோம்," எனத் தெரிவித்தார். தானியங்கி கேமரா மூலம் அமேசான் பழங்குடிகளை கண்காணித்த ஆய்வாளர்களுக்கு காத்திருந்த ஆச்சர்யம்14 ஏப்ரல் 2025 முகத்தில் பூசும் 'புரோபயாடிக்' அழகு சாதனப் பொருட்களில் பாக்டீரியாக்கள் உயிருடன் இருக்குமா?14 ஏப்ரல் 2025 அடுத்த முக்கிய ஆட்டங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய ஆட்டம் ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ் இடம்: பெங்களூரு நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 20 இடம் – நியூ சண்டிகர் நேரம்- மாலை 3.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-357 ரன்கள்(7 போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 295 ரன்கள்(6 போட்டிகள்) பர்பிள் தொப்பி யாருக்கு? நூர் அகமது (சிஎஸ்கே) 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) குல்தீப் யாதவ் (டெல்லி) 11 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) கலீல் அகமது (சிஎஸ்கே) 11 விக்கெட்டுகள் (7 போட்டிகள்) - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn4wjw7yzj4o
-
வவுணதீவில் வாள்வெட்டு தாக்குதல்; பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயம் - சிறைச்சாலை உத்தியோகத்தரும் மடக்கிப் பிடிப்பு
18 APR, 2025 | 10:47 AM வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (15) இரவு 11 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட “கோபு” வாள்வெட்டுக் குழுவினர் வீடொன்றில் நுழைந்து தாக்குதல் நடத்தி அட்டகாசம் செய்ததில் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து கட்டி வைத்ததுடன் ஏனைய குழுவினர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பியோடியுள்ளனர். இது பற்றி தெரியவருவதாவது, மத்திய கிழக்கு நாடொன்றில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வரும் ஒருவர் அந்த பணத்தை வைத்து வவுணதீவு பிரதேசத்தில் “கோபு ரீம்” என்ற வாள்வெட்டு குழு ஒன்றை இயக்கிவருவதுடன் அந்த குழு பணத்தை பெற்று அவர்கள் சொல்லுபவர்களை தாக்குவது போன்ற அடியாட்கள் என்ற ரீதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை (15) இரவு கொத்தியாவல பிரதேசத்திலுள்ள சது என்பவருடன் முன்விரோதம் காரணமாக அவர் மீது தாக்குதல் நடாத்த கோபு வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 6 பேர் 3 மோட்டர்சைக்கிள்களில் அவரின் வீட்டை தேடிச் சென்ற நிலையில் அவர் வீட்டுக்கு அருகிலுள்ள காணியில் மாடுகளை கட்டிக்கொண்டிருந்த போது அவர் மீது தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர் அங்கிருந்து தப்பியோடி அருகிலுள்ள அவனது மாமனார் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில் வாள்வெட்டு குழுவினர் அங்கு சென்று வீட்டினுள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதில் சது மற்றும் அவரது மாமியார் படுகாயமடைந்ததையடுத்து அவர்கள் தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற சிறைச்சாலை உத்தியோகத்தரை மடக்கி பிடித்து கட்டிவைத்து பொலிஸாருக்கு அறிவித்தனர். இந்நிலையில் வாள் வெட்டு குழுவினர் கட்டிவைத்த சிறைச்சாலை உத்தியோகத்தரை மீட்டு கொண்டு மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடினர். அதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டு கொண்டு சென்றதுடன், தாக்குதலில் காயமடைந்தவர்களை மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர். இதேவேளை, குறித்த வாள்வெட்டு குழுவினர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கசிப்பு உற்பத்தி செய்பவர்கள் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர் என ஒருவரின் வீட்டுக்கு வாள்களுடன் சென்று அவர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற பிணையில் அண்மையில் வெளிவந்துள்ளதாகவும் இவர்கள் தொடர்ந்து பிரதேசத்தில் செய்துவரும் அட்டூழியத்தையடுத்து மக்கள் பயப் பீதியில் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212256
-
உள்ளாட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் - புதிய மசோதா ஒரு முன்மாதிரியா? அடையாள அரசியலா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருந்தார். இதன் மூலம் 13,988 மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், மாற்றுத்திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க இது உதவும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 'தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் 4 மணிநேரம் பணி என்ற பழைய நடைமுறையைக் கொண்டு வர வேண்டும்' என்பன போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சமீப காலமாக மாற்றுத்திறனாளி சங்கங்கள் சார்பாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு எந்தளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்? பூமி தவிர்த்து இன்னொரு தொலைதூர கோளில் உயிர்கள் உள்ளதா? - சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன? வக்ஃப் சட்டம் – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதி என்ன? நீதிபதி கூறியது என்ன? ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் மூலம் மாணவர்கள் எந்தெந்த கல்லூரிகளில் சேர முடியும்? உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளி பிரதிநிதித்துவம் பட மூலாதாரம்,TNDIPR நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் சட்ட மசோதாக்களை, தமிழக சட்டப்பேரவையில் (ஏப்ரல் 16) அறிமுகம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின், "நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 667 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், இப்போது, இந்த நிதியாண்டில் 1,432 கோடியாக, அதாவது இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளோம். இந்தியாவிலேயே, அதிக எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத் திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினர் ஆக்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார். இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்பு உரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்ட முன்வடிவுகள் வழிவகுக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். "இதை நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புற ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்களை முன்மொழிகிறேன். இந்த மசோதாக்கள் மூலம், மாற்றுத் திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமின்றி, அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாகத் திகழ்வார்கள்" என்று கூறினார். தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் என்றும், இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் சுமார் 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துகளிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் சட்டப்பேரவையில் அவர் தெரிவித்தார். தமிழ்நாடு பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - நடைமுறையில் சாத்தியமா?3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியர்கள் பல லட்ச ரூபாய் செலுத்தியும் ஹஜ் பயணம் செல்வதில் சிக்கல் ஏன்?3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, 2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஓர் ஒப்பந்தத்தை வெளியிட்டது இந்த சட்ட மசோதாக்கள் குறித்துப் பேசிய, மாற்றுத்திறனாளிகளுக்கான டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் நாதன், "நமது நாட்டில் பெரும்பாலான இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகள் இல்லை. ஒரு மாற்றுத்திறனாளி தனக்கு அரசின் சக்கர நாற்காலி வேண்டுமெனில், மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்குச் சென்று சான்றிதழ் பெற்று, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க வேண்டும். ஏதோவொரு குக்கிராமத்தில் வாழும் ஓர் ஏழை மாற்றுத் திறனாளிக்கு இது அவ்வளவு எளிதல்ல," என்று தெரிவித்தார். அரசியல் தலைவர்களோ அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களோ தங்கள் வலியைப் புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதைவிட, தாங்களே அதிகாரத்திற்குச் சென்றால்தான் இத்தகைய கடினமான நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று தீபக் நாதன் கருதுகிறார். ஆனால், "தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் அளவுக்கு இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் அல்லது வசதிகள் அமைவதில்லை. அப்படியிருக்க இந்தச் சட்டத்திருத்தம் மிகவும் பயனுள்ள ஒன்று" என்கிறார் தீபக் நாதன். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, 2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஓர் ஒப்பந்தத்தை வெளியிட்டது. இந்தியா உள்படப் பல நாடுகள் இதில் கையெழுத்திட்டன. மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு, அனைத்து விதமான மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம். அதில் ஆர்டிகிள் 29, மாற்றுத்திறனாளிகளின் அரசியல் உரிமைகள் பற்றித் தெளிவாக விளக்குகிறது. ஒரு நாட்டில் நடக்கும் தேர்தலில் வாக்களிப்பது மட்டுமின்றி அதில் போட்டியிடுவதற்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. "ஆனால், இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிடுவதற்கான சரிசமமான சூழல் உள்ளதா எனக் கேட்டால் சந்தேகமே. ஏனென்றால் இங்கு பலரும் வாழ்வாதாரத்திற்கே சிரமப்படுகிறார்கள் எனும்போது, பணம் செலவழித்து தேர்தலில் நிற்பதைக் கற்பனைகூடச் செய்ய முடியாது. அதனால்தான் தேர்தல் அரசியலில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநித்துவம் குறைவாக உள்ளது," என்றார் தீபக் நாதன். மேற்கொண்டு பேசியவர், "சமூகத்தில் எங்களுக்குக் கிடைக்கும் மரியாதை குறித்துச் சொல்லவே தேவையில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு முதலமைச்சரிடம் கடந்த பிப்ரவரி மாதம் எங்கள் இயக்கத்தின் சார்பாகக் கோரிக்கை வைத்தோம். அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றப்படும் என்று நினைக்கவில்லை" என்றும் குறிப்பிட்டார். வக்ஃப் சட்டம் – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதி என்ன? நீதிபதி கூறியது என்ன?17 ஏப்ரல் 2025 இந்தியாவில் அதிகமான நிலங்களை வக்ஃப் வாரியம் வைத்துள்ளதா? உண்மை என்ன?17 ஏப்ரல் 2025 'அடையாள அரசியல்' பட மூலாதாரம்,@DEEPAK_TMN படக்குறிப்பு,முதலமைச்சர் ஸ்டாலினுடன் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் நாதன் ஆனால், 'மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை' எனும் அமைப்பின் செயல் தலைவர் நம்புராஜன், தமிழக அரசின் இந்த மசோதாக்கள் 'வெறும் அடையாள அரசியல்' என்று விமர்சிக்கிறார். "இங்கு பல மாற்றுத்திறனாளிகள் வேலையின்றி, வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்தியாவிலேயே, அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குகிறோம் என முதலமைச்சர் கூறுகிறார். அந்த மாதாந்திர உதவித்தொகை 1500 ரூபாய் மட்டுமே. அதை உயர்த்திக் கொடுங்கள் என மாற்றுத்திறனாளிகள் நடத்தும் போராட்டங்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. நூறு நாள் வேலைத் திட்டத்தில் முன்பு 50 சதவிகித பணி, 4 மணிநேரம் வேலை என்று இருந்த நடைமுறையை மாற்றிவிட்டு, 8 மணிநேரப் பணி, நாள் முழுவதும் பணித்தளத்தில் இருக்க வேண்டும் என்ற 2024ஆம் ஆண்டு தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் உத்தரவை அமல்படுத்தினார்கள். அதை ரத்து செய்யக் கோரிக்கை வைத்தோம். அதையும் கண்டுகொள்ளவில்லை," என்று குற்றம் சாட்டுகிறார் நம்புராஜன். கடந்த ஜனவரி மாதம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சார்பில் உதவித்தொகையை அண்டை மாநிலங்களில் வழங்குவது போல் அதிகபட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் 4 மணிநேரம் பணி என்ற பழைய நடைமுறையைக் கொண்டு வரவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். "எங்களது போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான ஓர் உத்தியாகவே இதைப் பார்க்கிறேன். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 22ஆம் தேதி, சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளோம். உள்ளாட்சிகளில் நியமன உறுப்பினர் என்பது உரிமை அடிப்படையில் வழங்கப்பட்ட ஒன்றாகத் தெரியவில்லை, பச்சாதாப அடிப்படையில் வழங்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது" என்று கூறுகிறார் நம்புராஜன். ஆனால், நம்புராஜனின் கருத்தை மறுக்கும் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் நாதன், "இதுவொரு தொடக்கம்தான். நான் முன்பே கூறியது போல, நாங்கள் அதிகாரத்திற்குச் சென்றால்தானே, எங்களுக்கான அரசியலைப் பேச முடியும். அதற்கான ஒரு வழியாகத்தான் இதைப் பார்க்கிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த விவகாரத்தில், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் இந்த மசோதாக்களைக் கொண்டு வந்துள்ளது. இது நிச்சயம் அடையாள அரசியலாக இருக்காது. அதை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் அடுத்த கட்ட பணி. உதவித்தொகையை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன். அவர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது," என்கிறார். ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் மூலம் மாணவர்கள் எந்தெந்த கல்லூரிகளில் சேர முடியும்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மாநில சுயாட்சி குறித்த மூவர் குழு: என்ன சாதிக்க முடியும்?16 ஏப்ரல் 2025 இந்தியாவில் முதல் முறையா? படக்குறிப்பு,'மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை' அமைப்பின் செயல் தலைவர் நம்புராஜன் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த மசோதா, இந்தியாவுக்கு புதிதல்ல. கடந்த 2019ஆம் ஆண்டு, சத்தீஸ்கர் மாநிலத்தின் அப்போதைய அமைச்சரவை, '1993ஆம் ஆண்டு மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில்' ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதன் மூலம் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மாற்றுத்திறனாளி ஒருவர் உறுப்பினராக இருப்பது கட்டாயமாக்கப்பட்டது. தேர்தல் செயல்முறை மூலம் எந்த மாற்றுத்திறனாளியும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், அரசாங்கம் ஒருவரைப் பரிந்துரைக்க வேண்டும். உள்ளூர் நிர்வாக அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என சத்தீஸ்கர் அரசு கூறியது. இந்த நடைமுறை இப்போதும் முழுமையாகச் செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. "இவ்வாறு நியமன உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தகைய அதிகாரங்கள் வழங்கப்படும், இதனால் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் என்ன மாற்றம் வரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார் மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடையின் செயல் தலைவர் நம்புராஜன். "எங்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் வேண்டும்தான். ஆனால், முதலில் வாழ்வாதாரம் குறித்த சிக்கல்களைப் பார்க்க வேண்டும் அல்லவா? வெறும் வயிற்றில் அரசியல் செய்ய முடியாதே" என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crld2rngd01o