Everything posted by ஏராளன்
-
அமெரிக்க சீன வர்த்தக போரின் தாக்கம் உலகின் அனைத்து பகுதிகளிலும் எதிரொலிக்கும் - இருநாடுகளிற்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் முற்றாக செயல் இழக்கும் - சிங்கப்பூர் பிரதமர்
17 APR, 2025 | 10:38 AM அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போரின் தாக்கம் உலகின் அனைத்து பகுதிகளிலும் உணரப்படும் என சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வொங் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தனது புதியவரிகளை இடைநிறுத்திவைத்துள்ளமை குறித்து சிறிதும் நிம்மதிபெருமூச்சு விடமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்காவின் அறிவிப்புகள் ஏற்கனவே உலகின் பல பகுதிகளில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக போரினால் இரண்டு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகம் முற்றாக நின்றுபோகும் ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் இதனால் ஏற்படும் மிக மோசமான பாதிப்பினை அந்த இரு நாடுகளும் மாத்திரம் அனுபவிக்கப்போவதில்லை முழு உலகமும் உணரப்போகின்றது என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தனது புதிய வரிகளை ஜூலை வரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ள போதிலும் அமெரிக்கா பத்து வீத வரிகளை விதித்து வருகின்றது என தெரிவித்துள்ள அவர் ஒரு அறிவிப்பின் மூலம் வரிகள் எந்த நேரத்திலும் மாறலாம் என்ற நிலையில் எந்த நிறுவனமும் நீண்ட கால முதலீடுகள் குறித்து திட்டமிட முடியாது என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போர் இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகத்தை துண்டிக்கும்,என அவர் தெரிவித்துள்ளார் நாங்கள் தற்போது பார்த்துக்கொண்டிருப்பது உலக பொருளாதாரத்தின் மறு உருவாக்கத்தை என தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் ஆனால் இது ஒருங்கிணைந்த விதத்தில் இடம்பெறவில்லை மாறாக அமெரிக்கா சீனாவை மையமாக கொண்டதாக காணப்படுகின்றது எனசிங்கப்பூர் பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/212182
-
ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான நிதியை நிறுத்தினார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
ஹவார்ட்டை இனிமேல் கற்றலிற்கான சிறந்த இடமாக கருதமுடியாது - நிதி வழங்குவதை நிறுத்தவேண்டும் - டிரம்ப் 17 APR, 2025 | 01:58 PM ஹவார்ட் பல்கலைகழகத்தை ஒரு வேடிக்கை என வர்ணித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் அதற்கான நிதிகளை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹவார்ட் நிர்வாகம் வெளியாட்கள் தன்னை கண்காணிப்பதற்கு அனுமதி வழங்கவேண்டும் என டிரம்ப் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ள நிலையிலேயே டிரம்ப் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். ஹவார்ட்டை இனிமேல் கற்றலிற்கான சிறந்த இடமாக கருதமுடியாது என குறிப்பிட்டுள்ள டொனால்ட் டிரம்ப் உலகின் சிறந்த பல்கலைகழகங்களின் பட்டியலில் இடம்பெற தகுதியானதாக கருதக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். ஹவார்ட் என்பது ஒரு நகைச்சுவை, ஹவார்ட் வெறுப்புணர்வையும் முட்டாள்தனத்தையும் போதிக்கின்றது. அதற்கு இனிமேலும் அரசாங்கத்தின் உதவிகளை வழங்ககூடாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/212206
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் - உதவியவர்கள் யார் என்பதை வெளிப்படுத்துங்கள் - கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள்
17 APR, 2025 | 06:56 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் அந்த கொடூரமான செயலிற்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறிவது அவசரமான விடயம் என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குறித்த தனது விசேட செய்தியில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இதனை தெரிவித்துள்ளது. 2025ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்களாகின்றது என தெரிவித்துள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சுயாதீனமான, பக்கச்சார்பற்ற விசாரணைகளை உறுதி செய்வதற்காக அரசாங்கம் சில சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகளை நாங்கள் வரவேற்கும் அதேவேளை விசாரணையின் இறுதி நோக்கம் குற்றவாளிகள் யார், அவர்களிற்கு உதவியவர்கள் யார் என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும் என வலியுறுத்துவதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/212231
-
உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு
பூமி தவிர்த்து இன்னொரு தொலைதூர கோளில் உயிர்கள் உள்ளதா? - சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,CAMBRIDGE UNIVERSITY படக்குறிப்பு,இங்கு உயிர்கள் இருக்கலாம் என கூறப்படும் கே2-18பி கோளின் சித்தரிப்பு கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 56 நிமிடங்களுக்கு முன்னர் மற்றொரு நட்சத்திரத்தை சுற்றிவரும், உயிர்கள் வாழக்கூடிய தொலைதூர உலகம் இருப்பதற்கான புதிய, ஆனால் உறுதியற்ற ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கே2-18பி (K2-18b) எனும் கோளின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழு, பூமியில் உள்ள எளிய சிறிய உயிரினங்கள் மட்டுமே உற்பத்தி செய்யும் மூலக்கூறுகள் அங்கு இருப்பதற்கான அறிகுறிகளை கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் உயிர்களுடன் தொடர்புடைய வேதிப்பொருட்கள் அந்த கிரகத்தில் கண்டுபிடிக்கப்படுவது இது இரண்டாவது முறை. இந்த கண்டுபிடிப்பு மிகுந்த நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. ஆனால், இந்த முடிவுகளை உறுதி செய்ய இன்னும் அதிக தகவல்கள் தேவை என, அந்த ஆய்வுக் குழுவினரும் சுயாதீன வானியல் ஆய்வாளர்களும் கூறுகின்றனர். முழுவதும் பெண்களே அடங்கிய குழு தனது 11 நிமிட விண்வெளிப் பயணத்தில் என்ன செய்தது? வீடு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: உற்சாகத்தில் துள்ளி குதித்த செல்லப்பிராணிகள் விண்வெளியில் இருந்து இமயமலையை பார்த்த அனுபவம் பகிரும் சுனிதா வில்லியம்ஸ் 'நிச்சயம் இந்தியாவுக்கு செல்வேன்' - உறுதியளித்த சுனிதா வில்லியம்ஸ் விரைவிலேயே தாங்கள் உறுதியான ஆதாரத்தைப் பெறுவோம் என தான் நம்புவதாக, கேம்பிரிட்ஜ் வானியல் பல்கலைக்கழகத்தில் உள்ள தனது ஆய்வகத்தில் இந்த ஆய்வை வழிநடத்தும் பேராசிரியர் நிக்கு மதுசூதன் தெரிவித்தார். "அந்த கோளில் உயிர்கள் இருப்பதற்கான இதுவரையிலான வலுவான ஆதாரமாக இது உள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் இதை உறுதிப்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளது." கே2-18பி கோள் எப்படிப்பட்டது? கே2-18பி கோள் பூமியைவிட இரண்டரை மடங்கு பெரிது, பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் அல்லது 700 டிரில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. எந்தவொரு மனிதரும் தன்னுடைய வாழ்நாளில் பயணிப்பதை விட அதிக தொலைவு இதுவாகும். சிறிய சிவப்பு நட்சத்திரத்தின் வழியாக இந்த கோள் சுற்றி கடந்து செல்லும்போது, அதன் மீது படும் நட்சத்திரத்தின் ஒளி மூலம், கோளின் வேதியியல் கலவையை ஆய்வு செய்யும் அளவுக்கு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வலுவானது. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,பல நூறு டிரில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள கோள்களின் கலவையை ஆய்வு செய்யும் அளவுக்கு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வலுவானது உயிர்களுடன் தொடர்புடைய குறைந்தது இரண்டு மூலக்கூறுகளின் வேதியியல் அடையாளங்கள் அதன் வளிமண்டலத்தில் இருப்பதாக கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது, அதில் ஒன்று டைமெத்தைல் சல்ஃபைடு (DMS), மற்றொன்று டைமெத்தைல் டைசல்ஃபைடு (DMDS). பூமியில் இந்த வாயுக்கள் கடலில் உள்ள ஃபைட்டோபிளாங்டன் மற்றும் பாக்டீரியாக்கள் மூலம் உற்பத்தியாகிறது. ஒருமுறை கண்காணிக்கப்பட்ட போதே இந்தளவுக்கான வாயு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து தான் ஆச்சர்யப்பட்டதாக பேராசிரியர் மதுசூதன் தெரிவித்தார். 'ஏராளமான உயிர்கள்' "பூமியில் இந்த வாயுவின் அளவை விட அக்கோளின் வளிமண்டலத்தில் ஆயிரம் மடங்கு அதிகம் உள்ளதாக நாங்கள் கண்டறிந்துள்ளோம்," என அவர் தெரிவித்தார். "எனவே, உயிர்களுடனான தொடர்பு உண்மையாக இருந்தால், இந்த கோளில் ஏராளமான உயிர்கள் இருக்கும்," என்றும் அவர் கூறுகிறார். பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - நடைமுறையில் சாத்தியமா?3 மணி நேரங்களுக்கு முன்னர் வக்ஃப் சட்டம் – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதி என்ன? நீதிபதி கூறியது என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர் பேராசிரியர் மதுசூதன் மேலும் கூறுகையில், "கே2-18பி கோளில் உயிர்கள் இருப்பதை உறுதிப்படுத்தினால், அது இந்த விண்மீன் திரளில் உயிர்கள் இருப்பது மிகவும் பொதுவான ஒன்று என்பதை உறுதிப்படுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும்," என்றார். பிபிசியின் ரேடியோ 5 லைவ் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பேசிய அவர், "அறிவியலுக்கு இது மிக முக்கியமான தருணம், ஆனால் ஒரு உயிரினமாக இது நமக்கும் மிக முக்கியமானது" என்றார். "இதிலிருந்து ஒரு உதாரணம் கிடைத்தால், இந்த பிரபஞ்சம் எல்லையற்றதாக இருந்தால், இன்னும் பல கோள்களில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது." கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் விரிவுரையாளரும் இந்த ஆய்வில் பங்கேற்றவருமான முனைவர் சுபிர் சர்கர், இக்கோளில் கடல் இருக்கலாம் என்றும் அதில் ஏராளமான உயிர்கள் இருப்பதற்கான சாத்தியம் அதிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் பரிந்துரைக்கிறார், எனினும், "இது உறுதியாக தெரியவில்லை," என அவர் விஞ்ஞானிகளை எச்சரிக்கிறார். மற்ற கோள்களிலும் உயிர்கள் உள்ளதா என்பதற்கான ஆய்வை தங்கள் குழு தொடர்ந்து மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார். இந்த தருணத்தில் "ஒருவேளை", "ஆனால்" என நிச்சயமற்ற சூழல் இருப்பதை பேராசிரியர் மதுசூதனின் குழு வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறது. ஆய்வு முடிவுகளில் சந்தேகம் முதலாவதாக, தற்போது கண்டுபிடிக்கப்பட்டது, ஒரு கண்டுபிடிப்பு என கூறும் அளவுக்கான தரத்துடன் இல்லை. அதற்கு, தங்களுடைய ஆய்வு முடிவுகள் 99.99999% அளவுக்கு சரிதான் என்றும் இது எதிர்பாரா வெற்றி அல்ல என்பதையும் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்த வேண்டும். இதை அறிவியல் மொழியில் 'ஃபைவ் சிக்மா' (five sigma) முடிவு என்கின்றனர். இந்த சமீபத்திய முடிவுகளில் மூன்று சிக்மாக்கள் மட்டுமே உள்ளன அல்லது 99.7% மட்டுமே சரியாக உள்ளது. இது அதிகப்படியானது என தோன்றலாம், ஆனால் அறிவியல் சமூகத்தை சமாதானம் செய்ய இது போதுமானது அல்ல. ஆனால், 18 மாதங்களுக்கு முன்பு அக்குழு அடைந்த ஒரு சிக்மா அல்லது 68% என்பதை விட இது மிகவும் அதிகமானது, அச்சமயத்தில் இதுகுறித்து மிகுந்த சந்தேகம் எழுந்தது. படக்குறிப்பு,கே2-18பி கோள் குறித்து பிபிசியின் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது ஃபைவ் சிக்மா முடிவை கேம்பிரிட்ஜ் குழு அடைந்தாலும், அது அந்த கோளில் உயிர்கள் இருப்பதற்கான முடிவான ஆதாரம் அல்ல என்கிறார், எடின்பரோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஸ்காட்லாந்தின் புகழ்பெற்ற வானியல் ஆய்வாளருமான கேத்தரீன் ஹேமன்ஸ் கூறுகிறார், இவர் அந்த ஆய்வுக்குழுவை சேர்ந்தவர் அல்ல. "அவ்வளவு உறுதியான ஆதாரம் இருந்தாலும், அந்த வாயு எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி உள்ளது," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "பூமியில் இந்த வாயுக்கள் கடல்வாழ் உயிரினங்களால் உருவாகின்றன. ஆனால், மிக நேர்த்தியான தரவுகள் இருந்தபோதிலும், அப்படிப்பட்ட அந்நிய உலகில் அந்த வாயுக்கள்தான் உயிர்கள் இருப்பதற்கான தோற்றுவாயாக இருக்கும் என்பதை நம்மால் உறுதியாகக் கூற முடியாது. ஏனெனில், இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான விநோதமான விஷயங்கள் நடக்கும். மேலும், இந்த கோளில் அந்த மூலக்கூறுகள் உற்பத்தியாகும் அளவுக்கு என்ன மாதிரியான புவியியல் செயல்பாடுகள் நடக்கின்றன என்பது நமக்கு தெரியாது." சந்தேகங்களுக்கு ஆய்வுக்குழுவின் பதில் இதை கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழுவும் ஒப்புக்கொள்கிறது. இக்குழு மற்ற குழுவினருடன் சேர்ந்து டி.எம்.எஸ் மற்றும் டி.எம்.டி.எஸ் ஆகிய வாயுக்கள் உயிரற்ற ஒன்றால் உற்பத்தியாகக் கூடுமா என்பதை ஆய்வகத்தில் பரிசோதித்து வருகின்றனர். "இது எதிர்பாரா வெற்றியாக இருக்க 0.3% இருக்க வாய்ப்புள்ளது," என பேராசிரியர் மதுசூதன் கூறுகிறார். விமான ஓடுதளத்தில் சாமி ஊர்வலம், மூடப்பட்ட விமான நிலையம் – எங்கு நடந்தது?4 மணி நேரங்களுக்கு முன்னர் துரை வைகோ Vs மல்லை சத்யா: வைகோ கண்டித்தது ஏன்? ம.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?4 மணி நேரங்களுக்கு முன்னர் மற்றொரு கோள் ஒன்றில் உயிர்கள் இருப்பது உண்மையாக இருந்தால் அதை கூறுவது, "மிகப்பெரிய கூற்று," என அவர் பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் தெரிவித்தார். "எனவே அதை நாங்கள் முழுமையாக கவனிக்கவும் ஆராயவும் நினைக்கிறோம், இது எந்தவிதத்திலும் எதிர்பாரா வெற்றியாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதற்கான ஆதாரங்களை திரட்ட விரும்புகிறோம்." என்றார். "இது ஒரிரு ஆண்டுகளில் சாத்தியம்" என்று அவர் கூறினார். கே2-18பி பற்றிய தரவுகள் குறித்து மாற்று கருத்துக்கள் மற்றும் விளக்கங்களை மற்ற ஆய்வுக்குழுக்கள் முன்வைக்கின்றன. டி.எம்.எஸ் மற்றும் டி.எம்.டி.எஸ் வாயுக்கள் குறித்து மட்டுமல்லாமல், அக்கோளின் கலவை குறித்தும் தீவிரமான அறிவியல் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அக்கோளில் பெரியளவிலான கடல் இருக்கும் என்பதை பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் யூகிப்பதற்கான காரணம், அதன் வளிமண்டலத்தில் அம்மோனியா வாயு இல்லாததுதான். மிகப்பரந்த அளவிலான நீருக்கு அடியில் அம்மோனியா உறிஞ்சப்படும் என்பதுதான் அவர்களின் கருதுகோள். படக்குறிப்பு,இதுகுறித்து இன்னும் ஓரிரு ஆண்டுகளில் உறுதியான ஆதாரங்கள் கிடைக்கலாம் என பேராசிரியர் மதுசூதன் நம்புகிறார் ஆனால், உயிர்கள் வாழ்வதைத் தடுக்கும் வகையில் அக்கோளில் உருகிய பாறையும் இருக்கலாம் என்றும் விவரிக்கிறார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆலிவர் ஷார்ட்டில். "மற்ற நட்சத்திரங்களை சுற்றிவரும் கோள்கள் குறித்து நாம் அறிந்தவை எல்லாம், அதன் வளிமண்டலத்தில் கடந்து செல்லும் சிறு ஒளியின் வாயிலாகத்தான். எனவே, உயிர்கள் இருப்பதற்கான அறிகுறிகளை மட்டுமல்லாமல், மற்ற அனைத்தையும் ஆராய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது," என்றார் அவர். "கே2-18பி குறித்த அறிவியல் விவாதம் இன்னும் அந்த கோளின் அமைப்பு குறித்தே உள்ளது." நாசாவின் ஏமெஸ் ஆய்வு மையத்தை சேர்ந்த டாக்டர் நிக்கோலஸ், இந்த்க தகவல்கள் குறித்து மற்றொரு விளக்கத்தை அளிக்கிறார். எந்தவொரு மேற்பரப்பும் இல்லாத, ஒரு சிறிய வாயு அமைப்பு என பரிந்துரைக்கும் ஒரு ஆய்வை அவர் வெளியிட்டுள்ளார். இந்த இரு மாற்று விளக்கங்களும், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியிலிருந்து கிடைத்தத் தகவல்களுடன் முரணானதாக உள்ளது என, மற்ற குழுக்கள் அதற்கு சவால் விடுக்கின்றனர். எச்சரிக்கையுடன் அணுக வேண்டுமா? பிபிசியின் தி ஸ்கை அட் நைட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பேராசிரியர் கிறிஸ் லின்டாட், பேராசிரியர் மதுசூதன் குழு மீது தனக்கு "மிகப்பெரிய மரியாதை" இருப்பதாகவும் ஆனால் அந்த ஆய்வை தான் எச்சரிக்கையுடன் அணுகுவதாகவும் தெரிவித்தார். "உயிர்கள் குறித்தத் தேடுதலில் இது (முக்கிய) தருணம் என கூறுவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற தருணங்கள் முன்பும் இருந்ததுண்டு," என அவர் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். இந்தியர்கள் பல லட்ச ரூபாய் செலுத்தியும் ஹஜ் பயணம் செல்வதில் சிக்கல் ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் ஷேக் ஹசீனா ஆட்சியில் செயல்பட்ட கொடூரமான ரகசிய சிறையில் என்ன இருக்கிறது? பிபிசி கள ஆய்வு17 ஏப்ரல் 2025 "இந்த பிரபஞ்சத்தில் என்ன உள்ளன என்பது குறித்து புரிந்துகொள்ள முயற்சிக்கும் பெரும் முயற்சிகளில் ஒன்று," என்றே இந்த ஆய்வு பார்க்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அறிவியலின் மிகப்பெரிய கேள்விகளுள் ஒன்றுக்கு பதிலளிக்க இன்னும் பெரும் வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்பதை பேராசிரியர் மதுசூதன் ஏற்றுக்கொண்டார். ஆனால், தானும் தன்னுடைய குழுவினரும் சரியான வழியில் பயணிப்பதாக நம்புவதாக அவர் கூறினார். "இப்போதிலிருந்து பல பத்தாண்டுகள் கழித்து பார்க்கும்போது உயிர்கள் உள்ள மற்றொரு பிரபஞ்சம் அடையக் கூடியதுதான் என்பதை உணர்ந்து, அங்கீகரித்த தருணமாக நாம் இதைத் திரும்பிப் பார்ப்போம்," என்றார் அவர். "இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கின்றோமா என்ற அடிப்படையான கேள்விக்கு நாம் பதில் சொல்ல முடியும் என்ற வகையில் இது மிக முக்கியமான புள்ளி." இந்த ஆய்வு தி ஆஸ்ட்ரோஃபிசிக்கல் ஜர்னல் லெட்டர்ஸ் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8epxen8keeo
-
பார்வைக் குறைபாடு உடையவர்களை வலுவூட்டும் செயன்முறை பயிற்சி
17 APR, 2025 | 07:03 PM பார்வைக் குறைபாடுடையவர்களை வலுவூட்டும் வகையில் நான்கு நாள் செயன்முறை பயிற்சியொன்று இடம்பெற்றது. இந்த உள்ளகப் பயிற்சிகள் குருதெனிய கல்வி வள மத்திய நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டன. பிறவியிலே முழு அளவில் பார்வைக்குறைபாடு உடையவர்களும், இடைப்பட்ட காலத்தில் பார்க்கும் திறனை இழந்தவர்களுக்கும் இந்த பயிற்சி வழங்கப்பட்டது. கண்டி புகையிரத நியைத்தில் புகையிரத மேடைகளைப் பயன்படுத்தல், கண்டி வாவிக்கரையில் நடத்தல் மற்றும் கண்டி நகர நடைபாதைகளில் பயணித்தல் போன்ற விடயங்களை பிரதானமாகக் கொண்டு இந்த செயன்முறைப் பயிற்சி வழங்கப்பட்டது. மத்திய மாகாண சபை நலன்புரி மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம் பார்வையற்றவர்களை வலுவூட்டும் வகையில் இப்பயிற்சியை வழங்கியது. விசேடமாக தயார்ப்படுத்தப்பட்ட உபகரணங்களைக் கொண்டு, அன்ரொய்ட் தொலைபேசி உபயோகம், கணினி ஸ்க்ரீன் வாசிப்பு, செஸ் விளையாட்டு, சதுரங்கம் (டாம்) விளையாட்டு, பிரேல் முறையில் தயாரிக்கப்பட்ட கடதாசி அட்டைகளைக் கொண்ட விளையாட்டு போன்ற பல உள்ளக விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதற்கென தொடுகை மூலம் மற்றும் ஒலி மூலம் உணரக்கூடிய விசேட உபகரணங்கள் பாவிக்கப்பட்டன. இப்பயிற்சிகள் நாடளாவிய ரீதியில் பார்வைக் குறைபாடு இல்லாத அதிசிறந்த பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டன. https://www.virakesari.lk/article/212237
-
“மன்னார்-ராமேஸ்வரம் இடையே படகு சேவை “
மன்னாரில் மக்களின் கருத்துக்களை அறிந்து காற்றைக் கொண்டு மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதி 17 APR, 2025 | 03:24 PM மன்னாரில் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், காற்றைக் கொண்டு மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னார் பஜார் பகுதியில் இன்று வியாழக்கிழமை (17) காலை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னாரில் இருந்து தமிழ்நாடு, இராமேஸ்வரத்துக்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. சுமார் 5 – 6 வருடங்களுக்கு பின்னர், எம்மிடம் மிகப் பாரிய அளவிலான டொலர் கையிருப்பில் உள்ளது. கடந்த 6 மாதங்களாக ரூபாவின் மதிப்பு சரியவில்லை. நாம் எரிபொருள் விலையை குறைத்தோம். மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் பாடுபடுகிறோம். அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்ந்துள்ளது. மேலும், மன்னாரில் காற்றைக் கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகிறது. ஆனால், கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் இந்த மின் உற்பத்தி திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுமார் 5 – 6 வருடங்களுக்கு பின்னர், எம்மிடம் மிகப் பாரிய அளவிலான டொலர் கையிருப்பில் உள்ளது. கடந்த 6 மாதங்களாக ரூபாவின் மதிப்பு சரியவில்லை. நாம் எரிபொருள் விலையை குறைத்தோம். மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் பாடுபடுகிறோம். அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்ந்துள்ளது. அஸ்வெசும உதவித்தொகை அதிகரிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், அடுத்த ஜூன் மாதம் முதல் 400,000 புதிய குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும். இது மக்களை கவனித்துக்கொள்ளும் அரசாங்கமாகும். அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடைகள் வழங்கப்படுகின்றன. 300க்கும் குறைந்த எண்ணிக்கையுடைய மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு காலணிகள் வாங்க பணம் வழங்கப்படுகிறது. 1.6 மில்லியன் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய தலா ரூ. 6,000 வழங்கினோம். அது மாத்திரமல்லாமல், 5 - 6 வருடங்களுக்கு பின்னர் தற்போது 30ஆயிரம் பேரை அரச சேவையில் சேர்க்கவுள்ளோம். இதற்காக எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பின்னால் செல்லவேண்டிய அவசியமில்லை. பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவோம். அதன்படி பரீட்சைக்கு தோற்றி அதிக புள்ளிகளைப் பெற்று வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளுங்கள். அரச சேவையில் தமிழ் பேசுபவர்களின் பற்றாக்குறை உள்ளது. பொலிஸ் நிலையங்களிலும் இந்த குறைபாடு காணப்படுகிறது. எனவே, 2,000 புதிய பொலிஸார் பணியமர்த்தப்படுவார்கள். தமிழ் தெரிந்த உங்கள் பிள்ளைகளை பொலிஸ் பணியில் இணையச் செய்யுங்கள். இது ஒரு மரியாதைக்குரிய பணி; நம் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பணி. அதைத் தவிர மேலும், வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் பேசத் தெரிந்தவர்கள் அரச பணியில் சேர வேண்டும். இதன் மூலம் ஒன்றாக இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். அத்துடன் வடக்கில் நடந்த போர் காரணமாக மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது. சில வீதிகள் மூடப்பட வேண்டியிருந்தது. தேசிய மக்கள் சக்தி இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து அவற்றை விடுவித்துள்ளது. மக்கள் தங்கள் பணிகளை சுதந்திரமாகச் செய்யக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவோம் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/212205
-
தென்னிலங்கைக் கட்சிகளை நிராகரிக்கும் அதேசமயம் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்பதிலும் நிதானம் தேவை - பொ.ஐங்கரநேசன்
17 APR, 2025 | 01:28 PM தமிழ்க் கட்சிகள் எல்லாமே உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுவருகின்றன. ஜே.வி.பியை மாத்திரம் அல்ல; தென்னிலங்கைக் கட்சிகள் எதையுமே நாம் ஆதரிக்க முடியாது. தென்னிலங்கைக் கட்சிகளை நிராகரிக்கும் அதேசமயம் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்பதிலும் எமக்கு நிதானம் தேவை. தமிழ்த் தேசிய அரசியலை வியாபாரப் பண்டமாக்கி மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ் அரசியற் கட்சிகளையும் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வலி வடக்கு பிரதேச சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் புதன்கிழமை (16) மல்லாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதித் தேர்தலின்போதும் பாராளுமன்றத் தேர்தலின்போதும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களில் கணிசமானோர் ஜே.வி.பி என்னும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கிறார்கள், தமிழ்த் தேசிய அரசியற் பயணத்தில் ஒரு பின்னடைவாக வடக்கு, கிழக்கில் ஜே.வி.பி காலூன்றியமைக்கு எமது வாக்காளர்களைக் குற்றம் சாட்டுவது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. எங்கள் கைவிரல்களாலேயே எங்கள் கண்களைக் குத்துவது போன்று தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளே தென்னிலங்கைப் பேரினவாதக் கட்சிகளுக்குத் தமிழ் மக்களை வாக்களிக்கப் பழக்கினார்கள். முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுறுத்தப்பட்டவுடன் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் வரலாற்றுப் பிழையான முடிவை எடுத்தார். முள்ளிவாய்க்கால்வரை யுத்தத்தை முன்னின்று நடாத்திய சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்களை அவர் வாக்களிக்க வைத்தார். இதன் மூலம் போர்க்குற்றவாளி என்ற குற்றச்சாட்டிலிருந்து நாமே அவரை விடுதலை செய்தோம். இதன் விளைவாகவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எப்போதுமே எதிரான நிலைப்பாடுகளை எடுத்து வந்த ஜே.வி.பிக்கு இன்று தமிழ் மக்கள் வாக்களிக்கத் தலைப்பட்டுள்ளார்கள். எம் மத்தியிலுள்ள பல தமிழ்க் கட்சிகள் உதட்டளவில் தமிழ்த் தேசியம் பேசுவனவாகவும் மனதளவில் பேரினவாதக் கட்சிகளை விசுவாசிப்பனவாகவுமே உள்ளன. மதுபான விற்பனை அனுமதிப் பத்திரங்களை இலஞ்சமாகப் பெற்றும், பன்னாட்டு நிறுவனங்களிடம் பல கோடிகளைப் பெற்றும், மத்திய அரசின் பாதீடுகளை ஆதரித்தும் தமிழ்த் தேசிய விரோத நிலைப்பாடுகளை எடுப்பதற்கு இக்கட்சிகள் ஒருபோதும் தயங்கியதில்லை. தமிழ் மக்கள் இத்தேர்தலில் தென்னிலங்கைக் கட்சிகளோடு இப் போலித் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் சேர்த்தே நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/212202
-
துரை வைகோ Vs மல்லை சத்யா: வைகோ கண்டித்தது ஏன்? ம.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம்,MALLAI C E SATHYA கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 'மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்' எனக் கூறி, அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அந்த தீர்மானத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுடன் மோதல் போக்கைத் தொடர்வதால் சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ம.தி.மு.க-வில் என்ன நடக்கிறது? கூட்டணி ஆட்சி என்ற கூற்றை மறுக்கும் அதிமுக - பாஜக உடனான உடன்படிக்கை என்ன? அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் என்ன? திடீரென இமயமலை சென்றது ஏன்? தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே அதிமுக - பாஜக கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏன்? 'நானே தலைவர்' - மோதிக் கொள்ளும் ராமதாஸ் - அன்புமணி; பாமகவில் என்ன நடக்கிறது? முழு பின்னணி தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, 'மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும்' என்ற குரல்கள் எழுந்தன. ஆனால், 'துரை வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவதை தான் ஏற்கவில்லை' என செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்திருந்தார். தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக் குழு கூட்டத்தில் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் முதன்மைச் செயலாளராக உள்ளார். துரை வைகோவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு பட மூலாதாரம்,MALLAI C E SATHYA இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 106 பேர் பங்கேற்றனர். இதில் 104 பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக அறிவிக்கப்பட்டது. 'இவ்வாறு தேர்வு செய்யப்பட்டது வாரிசு அரசியல் இல்லை' என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் அளித்தார். 'ஒருவரை திணிப்பதுதான் வாரிசு அரசியல். தொண்டர்களின் விருப்பப்படி அவருக்குப் பதவி வழங்கப்பட்டது' என்றும் அவர் தெரிவித்தார். வைகோவின் முடிவை எதிர்த்து மதிமுக இளைஞரணி செயலாளராக இருந்த கோவை ஈஸ்வரன் பதவி விலகினார். மதிமுக அவைத் தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி, தனது விலகலுக்கு துரை வைகோவின் வருகையை ஒரு காரணமாக முன்வைத்திருந்தார். மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் பட மூலாதாரம்,MALLAI C E SATHYA படக்குறிப்பு,மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது இதன் தொடர்ச்சியாக, தற்போது மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது. கடந்த 12-ஆம் தேதி மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்ற மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில், நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சிலர் வாக்குவாதம் செய்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து துரை வைகோ வெளியேறினார். பொதுக்குழுவில் பேசிய வைகோ, "குடும்பத்துக்குள் சண்டை வருவது இயல்பு. ராமதாஸ் குடும்பத்துக்குள்ளேயே மோதல் வந்துவிட்டது. கண்ணாடியில் விரிசல் விழுந்தால் ஒட்ட வைக்க முடியாது. தண்ணீரில் விரிசல் விழுந்தால் தானாக சேர்ந்துவிடும்" எனக் கூறினார். "நானும் சத்யாவும் கண்ணாடியல்ல, ஓடும் தண்ணீர்" எனவும் வைகோ குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், 'கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்' எனக் கூறி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. சர்ச்சையை கிளப்பிய பதிவு இந்தநிலையில், மல்லை சத்யாவுக்கு எதிராக ம.தி.மு.க-வின் முன்னாள் மாணவரணி துணைச் செயலாளர் சத்தியகுமரனின் முகநூல் பதிவு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. 'ம.தி.மு.கவில் வைகோவுக்கு அடுத்தபடியாக துரை வைகோ மட்டுமே அடுத்த பரிணாமம். இதை ஏற்பவர்கள் கட்சியில் இருக்கலாம். இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்கள் உடனே வெளியேறலாம்' எனக் கூறியிருந்தார். பட மூலாதாரம்,DURAI VAIKO 'ம.தி.மு.க-வில் 30 ஆண்டுகள் அல்ல, 300 ஆண்டுகள் உழைத்திருந்தாலும் இதனை ஏற்க வேண்டும். இது துரை வைகோ காலம்' எனவும் அவர் பதிவிட்டிருந்தார். மல்லை சத்யாவை மையமாக வைத்து இவ்வாறு கூறியுள்ளதாக ம.தி.மு.க வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்தநிலையில், தனது முகநூல் பக்கத்தில் ''ம.தி.மு.க-வில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு நம்பிக்கை துரோகி உள்பட பல விருதுகளை எனக்குத் தந்துள்ளனர்'' எனப் பதிவிட்டுள்ளார் மல்லை சத்யா. 'வைகோவின் இதயத்தில் இருந்து நீக்க முடியாது' திருச்சி ம.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்துப் பதில் அளித்துள்ள மல்லை சத்யா, 'எனக்கு எதிராக சிலர் தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால், வைகோவின் இதயத்தில் இருந்து என்னை நீக்க முடியாது' எனக் பதிவிட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் சுவர் விளம்பரங்கள் மற்றும் அழைப்பிதழ்களில் மல்லை சத்யாவின் பெயர் புறக்கணிக்கப்படுவதாகவும் ம.தி.மு.க-வை விட்டு சீனியர்கள் சிலர் வெளியேறியது போல சத்யாவும் வெளியேற வேண்டும் என துரை வைகோ தரப்பினர் விரும்புவதாகவும் சத்யாவின் ஆதரவாளர் ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "கட்சியில் தகுதி அடிப்படையில் பொறுப்புக்கு வருவதை சிலர் விரும்பவில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் மல்லை சத்யா சிரித்தால் கூட அதைக் குற்ற நிகழ்வாக கருதுகின்றனர்" எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் அதிகமான நிலங்களை வக்ஃப் வாரியம் வைத்துள்ளதா? உண்மை என்ன?17 ஏப்ரல் 2025 முகலாய பேரரசு இந்தியாவில் வேரூன்ற காரணமான போரில் ராணாவை பாபர் வீழ்த்திய கதை17 ஏப்ரல் 2025 வைகோவின் கண்டனம் திருச்சியில் மல்லை சத்யாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ''சில மாவட்டக் கழகங்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. கட்சியின் கட்டுப்பாட்டுக்கு எதிராக இத்தகைய கூட்டங்களை நடத்துவது, தீர்மானங்களை நிறைவேற்றுவது போன்றவை கூடாது'' என அறிவுறுத்தப்படுவதாக வைகோ தெரிவித்துள்ளார். வரும் 20 ஆம் தேதியன்று ம.தி.மு.க நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் எனவும் வைகோ அறிவித்துள்ளார். பட மூலாதாரம்,MALLAI C E SATHYA படக்குறிப்பு,'வைகோவின் இதயத்தில் இருந்து என்னை நீக்க முடியாது' என மல்லை சத்யா தெரிவித்துள்ளார் "மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஏன்?" என அக்கட்சியின் மாநில மாணவரணி முன்னாள் துணை அமைப்பாளர் சத்தியகுமாரனிடம் பிபிசி தமிழ் பேசியது. "மல்லை சத்யாவின் கட்சிப் பணியை யாரும் மறுக்கவில்லை. அதேநேரம், தொண்டர்கள் அறிவுறுத்தியதால்தான் கட்சிப் பணிக்கு துரை வைகோ வந்தார். கட்சிக்கு எதிராகவும் பொதுக்குழுவுக்கு எதிராகவும் மல்லை சத்யா தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்" எனக் கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மறைவு தொடர்பான நிகழ்வில் கட்சிக்கு எதிராக மல்லை சத்யா செயல்பட்டதாகவும் அவர் விமர்சித்தார். "திராவிடர் கழகத் தலைவர் வீரமணியுடன் சென்று குமரி அனந்தனுக்கு வைகோ இறுதி மரியாதை செலுத்தினார். அப்போது வைகோவுடன் செல்லாமல் மல்லை சத்யா தனியாக சென்று அஞ்சலி செலுத்திவிட்டு ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தார்" என சத்தியகுமாரன் தெரிவித்தார். "ஒரு நிகழ்வு தொடர்பாக பொதுச் செயலாளர் பேசிவிட்டால் வேறு யாரும் பேசக் கூடாது. ஆனால், கட்சியின் சட்டவிதிகளுக்கு மாறாக அவரது செயல் உள்ளது. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்" எனவும் அவர் தெரிவித்தார். ராஜஸ்தானுக்கு பயம் காட்டிய ஸ்டார்க் - த்ரில் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி17 ஏப்ரல் 2025 ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் மூலம் மாணவர்கள் எந்தெந்த கல்லூரிகளில் சேர முடியும்?17 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,DURAI VAIKO படக்குறிப்பு,துரை வைகோவை கட்சியில் முன்னிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் துரைசாமி, கோவை ஈஸ்வரன் ஆகியோர் கட்சியிலிருந்து விலகினர் அதேநேரம், "கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சிப் பணிகளில் மல்லை சத்யா போதிய ஆர்வம் காட்டவில்லை" எனக் கூறுகிறார், ம.தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வைகோ தொடர்பாக சத்யாவின் ஆதரவாளர் ஒருவர் முகநூலில் அவதூறான கருத்தை வெளியிட்டார். இதற்கு சத்யா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதுதான் பிரச்னைக்கு காரணம்" எனக் கூறினார். அடுத்ததாக, ஈ.வெ.ரா.பெரியார், அண்ணா, வைகோ வரிசையில் சத்யாவின் படத்தை ஒருவர் பகிர்ந்ததாகக் கூறிய அவர், "இதற்கும் சத்யா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவையெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்களாக இருந்தன"எனத் தெரிவித்தார். "வைகோவுக்கு உடல்நலம் குன்றிப் போன பிறகு கட்சியை வளர்ப்பதற்கு துரை வைகோ உழைத்து வருகிறார். இந்தநிலையில் சிலரின் தூண்டுதலில் சத்யா செயல்படுவதாக தோன்றுகிறது" எனவும் அவர் தெரிவித்தார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மல்லை சத்யா முற்றிலும் மறுத்தார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். அதற்கு மேல் கூறுவதற்கு எதுவும் இல்லை" எனக் கூறினார். "இந்த விவகாரம் தொடர்பாக எந்தக் கருத்தையும் கூறக் கூடாது எனக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துவிட்டார். வரும் ஏப்ரல் 20 ஆம் தேதியன்று நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் அவர் பதில் அளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c807g8l2dvmo
-
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சிக்கிறோம்; இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் - ஜனாதிபதி
Published By: VISHNU 17 APR, 2025 | 09:14 PM (இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம், இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது, யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம்; அண்மையில் பிரதான கிரிக்கெட் வீரர் ஒருவர் என்னை சந்தித்தார். அவர் ஓரிரு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். அவர் தான் சனத் ஜயசூரிய, சனத் ஜயசூரிய என்னிடம் 'ஜனாதிபதி என்ன செய்ய வேண்டும்' என வினவினார். அப்போது 'எவ்வாறாவது யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும்' என்றேன். முதல் 10 ஆண்டு காலப்பகுதிக்குள் இலங்கை கிரிக்கெட் அணியில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் நாம் ஒன்றுப்பட வேண்டும். கல்வி, விளையாட்டு, கலாச்சாரம், உட்பட அனைத்து துறைகளிலும் திறமைக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/212243
-
VAT விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிவிப்பு!
வற் வரி தொடர்பில் வெளியான தகவல் Published By: DIGITAL DESK 3 17 APR, 2025 | 10:48 AM உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவற்றுக்கு வற் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் திரவ பால் மற்றும் தயிர் மீதான வற் வரி நீக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவுப்புக்கு அமைவாக, புதிய பால் குறைந்தபட்சம் நூற்றுக்கு 50 சதவீதம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வற் வரி திருத்த சட்டமூலம் ஏப்ரல் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஏப்ரல் 11 ஆம் திகதி கையெழுத்திட்டு அனுமதி அளித்தார். அதன்படி, தொடர்புடைய சட்டம் குறித்த திகதியில் அமுலுக்கு வந்ததிலிருந்து, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பல வரித் திருத்தங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. திரவ பால் மற்றும் தயிர் தவிர, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் மின்சார உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் 'நாப்தா' மீதான வற் வரியும் நீக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய வரி திருத்தத்திற்கு அமைவாக, வெளிநாடு வாழ் தனிநபர்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு வற் வரியை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், வெளிநாட்டு நபர்கள் இலங்கை தனிநபர்களுக்கு மின்னணு தளங்கள் மூலம் வழங்கும் சேவைகளுக்கு வற் வரி பொருந்தும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், வணிக நோக்கங்களுக்காக பொருட்களை இறக்குமதி செய்யும் அல்லது ஏற்றுமதி செய்யும் அனைத்து நபர்களும் வற் வரி திருத்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/212183
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
ராஜஸ்தானுக்கு பயம் காட்டிய ஸ்டார்க் - த்ரில் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லியில் நேற்று (ஏப்ரல் 16) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 32வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி. கடந்த 4 ஐபிஎல் சீசனில் முதல் சூப்பர் ஓவர் போட்டி நேற்று நடந்தது. மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே சூப்பர் ஓவரில் டெல்லி அணி வென்றது. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. 189 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் சூப்பர் ஓவர் இந்த சீசனில் முதல் சூப்பர் ஓவரில் பேட் செய்த ராஜஸ்தான் அணியின் பேட்டர்கள் ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோர் ரன்அவுட் ஆகவே 2 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 11 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி, 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கியது. ராஜஸ்தான் அணி சார்பாக சந்தீப் சர்மா பந்து வீசினார். கே.எல். ராகுல் ஒரு பவுண்டரி உள்பட 3 பந்துகளில் 7 ரன்கள் சேர்க்கவே டெல்லி அணிக்கு மீதமிருந்த 3 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், மிட் விக்கெட்டில் சிக்ஸர் விளாசவே 4வது பந்திலேயே டெல்லி இலக்கை அடைந்து வென்றது. டெல்லி அணி தோற்க வேண்டிய ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு இழுத்துச் சென்ற மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். நான்கு ஓவர்கள் வீசிய ஸ்டார்க் 36 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். கவர் போடாத செல்போன் கீழே விழுந்தால் திரை உடையுமா? பிபிசி செய்தியாளரின் ஒரு மாத பரிசோதனை அனுபவம்16 ஏப்ரல் 2025 இந்த சின்னச்சின்ன விஷயங்கள் கூட உங்கள் குழந்தையை மோசமாக பாதிக்கலாம் என்பது தெரியுமா?16 ஏப்ரல் 2025 பேட்டர்களின் மெத்தனம் பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் அணியின் பக்கம்தான் வெற்றி வாய்ப்பு இருந்தது. களத்தில் இருந்த பேட்டர்கள் பெரிய ஷாட்டுக்கு முயலவில்லை, கைவசம் 5 விக்கெட்டுகள் வரை இருக்கும் நிலையில் டெத் ஓவர்களில் நிதானமாக ஆடியது ராஜஸ்தானை தோல்விக்கு இட்டுச் சென்றது. ஹெட்மெயர், துருவ் ஜூரெல் பேட்டிலிருந்து பெரிய ஷாட் வந்திருந்தால் சூப்பர் ஓவர் வரை போட்டி சென்றிருக்க வாய்பில்லை. இருபதாவது ஓவரை ஸ்டார்க் வீசும்போது, ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் ஸ்டார்க் துல்லியமாக 5 யார்கர்களை வீசி 8 ரன்களை மட்டுமே கொடுத்தார். கடைசிப் பந்தில் 2 ரன்கள் ஓட முயன்ற துருவ் ஜூரெல் ரன் அவுட் ஆகவே ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. டெல்லி அணியை தோல்வியிலிருந்து மீட்ட ஆபத்பாந்தவனாக ஸ்டார்க் நேற்று திகழ்ந்தார். இந்த வெற்றியால் டெல்லி கேப்டல்ஸ் அணி 6 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்று, 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. முகத்தில் பூசும் 'புரோபயாடிக்' அழகு சாதனப் பொருட்களில் பாக்டீரியாக்கள் உயிருடன் இருக்குமா?14 ஏப்ரல் 2025 தனிமை - தனித்திருத்தல் என்ன வேறுபாடு? தனிமையை வெல்வது எப்படி?14 ஏப்ரல் 2025 ஸ்டெப்ஸ், அக்ஸர் அபாரம் டெல்லி அணிக்கு 6வது போட்டியாக தொடக்க ஆட்டக்காரர் ப்ரேசர் மெக்ருக் சிறப்பான தொடக்கத்தை அளிக்காமல் ஏமாற்றி 9 ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய கருண் நாயர் இந்த முறை டக்-அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் துஷார் தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரில் அபிஷேக் போரெல் 23 ரன்களை விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார். 34 ரன்களுக்கு டெல்லி 2 விக்கெட்டுகளை இழந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் களமிறங்கி, அபிஷேக்குடன் சேர்ந்தார். பவர்ப்ளேவில் டெல்லி 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல் நிதானமாக பேட் செய்து 17 பந்துகளில் 18 ரன்கள் என மெதுவாக ஆடினார். நீண்ட நேரம் நிலைக்காத ராகுல் 32 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். விக்கெட்டுகள் சரிந்த போதிலும் அரைசதம் நோக்கி நகர்ந்த அபிஷேக் போரெல் 49 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு கேப்டன் அக்ஸர் படேல், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் கூட்டணிதான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அருமையான கேமியோ ஆடிய அக்ஸர் படேல் 14 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் என 34 ரன்கள் சேர்த்து தீக்சனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 14 ஓவர்களில் 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என இருந்த டெல்லி அணி, அக்ஸரின் அதிரடியாக அடுத்த 2 ஓவர்களில் 146 ரன்களை எட்டியது, அக்ஸரும் 34 ரன்களில் வெளியேறினார். அஷுதோஷ் சர்மா, ஸ்டெப்ஸ் கூட்டணி கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினர். ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் ஸ்டெப்ஸ் 3 பவுண்டரிகள் உள்பட 16 ரன்கள் சேர்த்தார். 20வது ஓவரை வீசிய சந்தீப் சர்மா 4 வைடுகள், ஒரு நோ பால் என 11 பந்துகளை வீசி பவுண்டரி, சிக்ஸர் என 19 ரன்களை வாரி வழங்கினார். ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஓவரில் அதிகமான பந்துகளை வீசிய பெருமையை சந்தீப் பெற்றார். 19 பந்துகளில் இருவரும் சேர்ந்து 42 ரன்கள் சேர்த்தனர். ஸ்டெப்ஸ் 14 பந்துகளில் 34 ரன்களுடனும், அஷுதோஷ் சர்மா 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 10 நிமிடங்களில் வீட்டிற்கே டெலிவரி: ஆன்லைன் செயலிகளால் மளிகைக் கடைகள் காலியாகிறதா?15 ஏப்ரல் 2025 மூளை வளர்ச்சி, அறிவாற்றலை மேம்படுத்த உதவும் முட்டை - எப்படி தெரியுமா?15 ஏப்ரல் 2025 கடைசி ஓவரில் சொதப்பிய சந்தீப் சர்மா பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா கடைசி ஓவரை வீசுவதற்கு முன்பு வரை 3 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே வழங்கி கட்டுக்கோப்பாகப் பந்துவீசியிருந்தார். ஆனால் 20வது ஓவரில் 4 வைடுகள், ஒரு நோபால் ஒரு சிக்ஸர், பவுண்டரி எனத் தேவையின்றி 11 பந்துகளை வீசி 19 ரன்களை வாரி வழங்கினார். இந்த ஓவரை சந்தீப் சர்மா வழக்கம்போல் வீசியிருந்தாலே ஸ்கோரை கட்டுப்படுத்தியிருக்கலாம். ராஜஸ்தான் அணி வென்றிருக்கும். அப்படியில்லாமல் அவர் 19 ரன்களை சந்தீப் வழங்கியது ஆட்டத்தை டெல்லி பக்கம் திருப்பிவிட்டது. சாம்ஸன் ரிட்டயர் ஹர்ட் ராஜஸ்தான் அணியும் 189 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் அதிரடியாகத் தொடங்கியது. சாம்ஸன், ஜெய்ஸ்வால் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். முகேஷ், மோகித் சர்மா, விப்ராஜ் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என சாம்ஸன் வெளுத்தார். இதனால் பவர்ப்ளே ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. ஆனால், சிறப்பாக பேட் செய்து வந்த சாம்ஸனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 19 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த நிலையில் சாம்ஸன் ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் 8 ரன்னில் அக்ஸர் பந்துவீச்சில் போல்டானார். 3வது விக்கெட்டுக்கு வந்த ராணா, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். இருவரும் ஸ்கோரை உயர்த்தி மெல்ல அணியை வெற்றிக்கு நகர்த்தினர். ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். குல்தீப் பந்துவீச்சில் இறங்கி ஷாட் அடிக்க முற்பட்ட ஜெய்ஸ்வால் 51 ரன்னில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்தார். இளநீருக்குள் தண்ணீர் வருவது எப்படி? ஆச்சர்யம் தரும் தென்னை16 ஏப்ரல் 2025 டைப்-5 நீரிழிவு: இந்தியாவில் இளம் வயதினரையும் பாதிக்கும் புதிய வகை நீரிழிவு யாருக்கெல்லாம் வரும்?16 ஏப்ரல் 2025 ராணா அதிரடி பேட்டிங் பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்த சிறிது நேரத்தில், ராணாவும் ஆட்டமிழக்க வேண்டியது. ஆனால், ராணா தப்பிவிட்டார். அவர் 20 ரன்கள் சேர்த்திருந்தபோது, அக்ஸர் பந்துவீச்சில் லாங் ஆன் திசையில் கிடைத்த கேட்சை ஸ்டெப்ஸ் தவறவிட்டார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ராணா அடுத்த 12 பந்துகளில் 31 ரன்களை சேர்த்து, 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். ராணா களத்தில் இருந்த வரை ராஜஸ்தான் அணி வென்றுவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ராணா 51 ரன்னில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். வாய்பைத் தவறவிட்ட ஹெட்மெயர், ஜூரெல் கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 23 ரன்கள்தான் தேவைப்பட்டன. ஹெட்மெயர், துருவ் ஜூரெல் களத்தில் இருந்தனர். மோகித் சர்மா வீசிய 19வது ஓவரில் ஜூரெல் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க 14 ரன்கள் சேர்த்தனர். ஹெட்மெயர் பெரிய ஷாட்களை அடிக்கும் திறமை கொண்டவர். ஆனால், நேற்று அவரது பேட்டில் எதிர்பார்த்த ஷாட் சிக்கவில்லை. கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தை சந்தித்த ஹெட்மெயர் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை ஜூரெலிடம் கொடுத்தார். அதன் பிறகு ஸ்டார்க் 5 பந்துகளையும் யார்க்கர்களாகவும், அவுட்சைட் யார்க்கர்களாகவும் வீசவே ஒரு ரன், 2 ரன்கள் என சேர்க்க முடிந்தது. கடைசி பந்தில் ராஜஸ்தான் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜூரெல் மிட்விக்கெட்டில் தட்டிவிட்டு ஒரு ரன் ஓடி, 2வது ரன்னுக்கு முயலும்போது ரன்அவுட் ஆகவே ஆட்டம் டிராவில் முடிந்து சூப்பர் ஓவருக்கு சென்றது. அந்தமானில் மர்மமாக வாழும் சென்டினல் பழங்குடிகளை பார்க்க முயன்ற அமெரிக்கர் என்ன ஆனார்?11 ஏப்ரல் 2025 உடல் பருமன் தினசரி வாழ்வில் ஏற்படுத்தும் சவால்கள் என்ன? எப்படி சமாளிப்பது?11 ஏப்ரல் 2025 சூப்பர் ஓவர் பட மூலாதாரம்,GETTY IMAGES சூப்பர் ஓவரில் ஹெட்மெயர், ரியான் பராக் களமிறங்கினர். ஸ்டார்க் வீசிய ஓவரில் முதல் பந்தில் ரன் சேர்க்காத ஹெட்மெயர் 2வது பந்தில் பவுண்டரியும், அடுத்து ஒரு ரன்னும் எடுத்தார். நான்காவது பந்தை சந்தித்த ரியான் பராக் பவுண்டரி விளாசவே அந்த பந்து நோ பாலாக மாறியது. 4வது பந்தில் ரியான் பராக் ரன்அவுட் ஆனார். 5வது பந்தில் ஹெட்மெயர் ரன் அவுட் ஆகவே 2 விக்கெட்டுகளை இழந்து 12 ரன்களை ராஜஸ்தான் சேர்த்தது. சூப்பர் ஓவரில் டெல்லி அணிக்கு 12 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஸ்டெப்ஸ், ராகுல் களமிறங்கினர். சந்தீப் சர்மா வீசிய ஓவரில் முதல் பந்தில் ராகுல் 2 ரன்களை எடுத்தார். அடுத்த பந்தில் ராகுல் பவுண்டரி விளாசி, 3வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3 பந்துகளில் 6 ரன்கள் கிடைத்தன. 4வது பந்தை எதிர்கொண்ட ஸ்டெப்ஸ் மிட்விக்கெட்டில் சிக்ஸர் விளாசி வெற்றியைத் தேடித் தந்தார். ராஜஸ்தானின் வெற்றியைப் பறித்த ஸ்டார்க் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது குறித்து ராஜஸ்தான் கேப்டன் சாம்ஸன் கூறுகையில், "நான் பேட் செய்யும் சூழலில் இல்லை, அதனால்தான் மீண்டும் வரவில்லை. என் உடல்நிலை குறித்து நாளை தெரியும். நாங்கள் சிறப்பாகப் பந்துவீசினோம். எங்களின் பந்துவீச்சாளர்களும், பீல்டர்களும் நன்றாகச் செயல்பட்டதால்தான் குறைந்த ரன்களில் சுருட்ட முடிந்தது. டெல்லிஅணியின் ஸ்கோர் இந்த மைதானத்தில் சேஸ் செய்யக் கூடியதுதான். ஸ்டார்க் வீசிய கடைசி ஓவர் ஆட்டத்தைத் திருப்பியது. 20வது ஓவரில்தான் டெல்லி அணிக்கு ஸ்டார்க் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார். எங்களின் வெற்றியை ஸ்டார்க் எடுத்துச் சென்றார்," என்று தெரிவித்தார். மேலும், "கடந்த சில சீசன்களாகவே சிறப்பாகப் பந்துவீசுகிறார் என்பதால் சந்தீப் சர்மாவை சூப்பர் ஓவரில் பயன்படுத்தினோம். நான் களத்தில் இல்லாதது துரதிர்ஷ்டம். ஜோப்ரா ஆர்ச்சர் இழந்த ஃபார்மை மீட்டது அற்புதம்," என்றும் குறிப்பிட்டார். அடுத்த முக்கிய ஆட்டங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடம்: மும்பை நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 18 இடம் – பெங்களூரு நேரம்- மாலை 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-357 ரன்கள்(7 போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்) மிட்செல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 295 ரன்கள்(6 போட்டிகள்) பர்ப்பிள் தொப்பி யாருக்கு? நூர் அகமது(சிஎஸ்கே) - 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) குல்தீப் யாதவ்(டெல்லி) - 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) கலீல் அகமது(சிஎஸ்கே) - 11 விக்கெட்டுகள்(7 போட்டிகள்) - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgpq034q00o
-
பிள்ளையான் கைது, 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் அசாத் மௌலான வெளியிட்ட தகவல்கள்
Published By: VISHNU 17 APR, 2025 | 04:01 AM டி.பி.எஸ்.ஜெயராஜ் உள்ளூராட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கிழக்கு மாகாணத்தில் புதியதொரு தேர்தல் கூட்டணி தோன்றியது. பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கழகமும் சேர்ந்து கிழக்கு தமிழர் கட்டமைப்பை அமைத்தன. ஒரு சில வாரங்களுக்குள் கேணல் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இணைந்து கொண்டதை அடுத்து புதிய கூட்டணி பலமடைந்தது. கிழக்கு தமிழர் கூட்டமைப்பு அதன் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களை உற்சாகத்துடன் கிழக்கில் தொடங்கியது. யாழ்ப்பாண தலைமைத்துவத்துடனான தமிழ்க்கட்சிகளின் போதாமை மற்றும் கிழக்கில் முஸ்லிம் விஸ்தரிப்புவாதம் என்று சொல்லப்படுவதன் விளைவான பிரச்சினைகள் மீது கவனத்தை குவித்து கிழக்கு தமிழர்களின் வாக்குகளை கவரும் நம்பிக்கையை கூட்டமைப்பு கொண்டிருந்தது. கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பிரசாரங்கள் உத்வேகம் அடைந்துகொண்டிருந்த நிலையில், பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் என்ற "மும்மூர்திகளுக்கும் " அனர்த்தம் ஏற்பட்டது. இலஞ்ச குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட வியாழேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அடுத்து விடுதலை புலிகளுக்கும் இலங்கை ஆயுதப்படைகளுக்கும் இடையிலான போரின்போது மனித உரிமைமீறல்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டு முரளிதரனுக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்தது. இறுதியாக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் இரவீந்திரநாத் 2006 டிசம்பரில் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் தொடர்பிருந்ததாக சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடைச்சட்டம் முதலில் பிள்ளையான் விசாரணைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்துவைக்கப்பட்டார். அதற்கு பிறகு விசாரணைகளை தொடருவதற்காக அவரது தடுப்புக்காவல் 90 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது. இரு தடுப்புக்காவல் உத்தரவுகளும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே பிறப்பிக்கப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தற்போது பெருமளவு ஆர்ப்பாட்டங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். 2024 ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தலின்போது வாக்குறுதியளித்ததன் பிரகாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு பதிலாக அதே சடடத்தின் கீழ் சந்தேக நபர்களை தடுப்புக்காவலில் வைக்கி்ன்றமைக்காக ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் பிரதான எதிர்க்கட்சிகளும் செய்கின்ற ஆர்ப்பாட்டங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எட்டியும் கூட பார்க்கவில்லை. முன்னாள் முதவமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இராஜாங்க அமைச்சராகவும் இருந்த போதிலும், பிள்ளையானுக்கு ஒரு நேர்மறையான படிமம் ( Image) கிடையாது. பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக உண்மையில் அவருக்கு கெட்டபெயரே இருக்கிறது.ஆட்கள் கடத்தல் தொடங்கி கொலைகள் வரை அவருக்கு எதிரானவை என்று கூறப்படுகின்ற குற்றச்செயல்களின் பட்டியல் மிகவும் நீளமானது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையில் சம்பந்தபட்டதாக கூறப்பட்டு சில வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதிலும், பிள்ளையான் குறாறவாளியாகக் காணப்படவில்லை. பிள்ளையானுக்கு ஒரு எதிர்மறையான படிமம் இருக்கின்ற போதிலும், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அந்த கொடிய சட்டத்தை ஒரு கோட்பாட்டு அடிப்படையில் எதிர்ப்பதாக இருந்தால் பிள்ளையானின் தடுப்புக்காவலையும் எதிர்த்திருக்க வேண்டும். பதிலாக, அவர்கள் பக்கச்சார்பாகவும் தெரிந்தெடுத்து சிலரின் தடுப்புக்காவல்களை மாத்திரம் எதிர்க்கின்றார்கள் போன்று தெரிகிறது. இத்தகைய பின்புலத்தில் இந்த கட்டுரை பிள்யைானின் கைதையும் தடுப்புக் காவலையும் பற்றி கவனம் செலுத்துகிறது. சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அரசியல் கட்சியின் தலைவரான சிவநேசதுரை சந்திரகாந்தன் 2008 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக தெரிவு செய்யப்படடதன் மூலம் வரலாறு படைத்தார். 2012 ஆம் ஆண்டுவரை அவர் முதலமைச்சராக பதவி வகித்தார். பிள்ளையான் 2020 பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவானார். அந்த தேர்தலில் மாவட்டத்தில் மிகவும் கூடுதல் விருப்பு வாக்குகள் அவருக்கே கிடைத்தன.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழும் அதே பதவியில் தொடர்ந்து நீடித்தார். 2024 ஜனாதிபதி தேர்தலில் பிள்ளையானும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆதரவாளர்களும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தனர். ரணில் மூன்றாவதாக வந்தார். 2024 பாராளுமன்ற தேர்தலில் பிள்ளையானுக்கும் அவரது கட்சிக்கும் மட்டக்களப்பு மாவடடத்தில் மிகவும் குறைவான வாக்குகளே கிடைத்தன. அந்த மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி இலங்கை தமிழரசு கட்சி பெருவெற்றி பெற்றது. ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்திக்கும் மடக்களப்பில் ஒரு பாராளுமன்ற ஆசனம் கிடைத்தது. பிள்ளையான் உள்ளூராட்சி தேர்தல்களின் மூலமாக அரசியல் மீட்சியைப் பெறுவதில் நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நோக்கத்தைச் சாதிக்க கிழக்கு தமிழர் கூட்டமைப்பு உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது பிள்ளையானின் திட்டங்கள் எல்லாமே சிதறிப்போயின. முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏப்ரில் 8 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தை (சி.ஐ.டி.) சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்றினால் கைது செய்யப்பட்டார். அவர் மட்டக்களப்பில் தனது கட்சி அலுவலகத்தில் இருந்த வேளையிலேயே கைது இடம்பெற்றது. முதலில் பிள்ளையான் விசாரணைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டார். பேராசிரியர் இரவீந்திரநாத் ஆரம்பத்தில் வெளியான ஊடகச் செய்திகளின் பிரகாரம் பிள்ளையான் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பில் வைத்து காணாமல்போன சம்பவம் தொடராபாகவே பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். முன்னாள் துணைவேந்தர் பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்தில் பிள்ளையானுக்கு இருந்ததாக கூறப்படும் ஈடுபாடு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற இட்கடத்தல்கள் மற்றும் ஆட்கள் காணாமல் பேகச்செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்களை பிள்ளையானிடமிருந்து பெறமுடியும் என்று தாங்கள் நம்புவதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் கூறின. நிலைவரம் விரைவாகவே மாறியது.பிள்ளையான் 90 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். ஊடகச் செய்திகளின் பிரகாரம் பிள்ளையான் இப்போது 2019 ஏப்ரில் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். ஜ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையது என்று கூறப்பட்ட சஹரான் ஹாசிம் தலைமையிலான முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்றினால் ஈஸ்டர் ஞாயிறன்று நான்கு சுற்றுலா ஹோட்டல்களிலும் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் தொடர்ச்சியான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.260 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன் 500 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். கார்டினல் மல்கம் ரஞ்சித் தற்போது நடைபெற்றுவரும் விசாரணைகள் தொடர்பிலான முழு விபரங்களும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களின் ஆறாவது வருடாந்த நினைவுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க கொழும்பு கத்தோலிக்க அதிமேற்றிராணியார் அதிவண. கார்டினல் மல்கம் ரஞ்சித்துக்கு உறுதியளித்திருக்கிறார். ஈஸ்டர் அனர்தத்துக்கு பொறுப்பானவர்கள் என்று கூறப்படுகின்றவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுவது பற்றி கார்டினல் மல்கம் ரஞ்சித்துக்கு ஜனாதிபதி திசாநாயக்க அளித்த வாக்குறுதி, விசாரணைகளின் கவனம் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்தில் இருந்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களுக்கு திரும்ப வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது போன்று தெரிகிறது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவது ஏப்ரில் 21 காலக்கெடுவை சந்திப்பதற்காக துரிதப்டுத்தப்பட்ட முயற்சியின் ஒரு அங்கம் என்று கருதப்படுகிறது. உதய கம்மன்பில ஒரு வழமைக்கு மாறான திருப்பமாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில் பிள்ளையானின் சட்டத்தரணியாக வந்திருக்கிறார். தடுப்புக்காவலில் உள்ள பிள்ளையானை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் இரு அதிகாரிகள் முன்னிலையில் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேசுவதற்கு கம்மன்பில அனுமதிக்கப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமல் போன சம்பவம் தொடர்பாகவே தன்னைக் கைதுசெய்ததாக தனக்கு பிள்ளையான் கம்மன்பிலவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவரிடம் கூறப்பட்டிருக்கிறது. தமிழ் ஊடகங்களில் வெளியான செய்திகளின் பிரகாரம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் பெயர்களை வெளியிட்டு அரச சாட்சியாக மாறும்படி பிள்ளையான் இப்போது கேட்கப்படுகின்றார். சனல் 4 தொலைக்காட்சி ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் பிள்ளையானுக்கு இருந்ததாக கூறப்படும் தொடர்பு 2023 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தொலைக்காட்சியிலேயே முதன்முதலாக வெளியிடப்பட்டது. 2023 செப்டெம்பர் 5 செவ்வாய்க்கிழமை பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி அதன் " டிஸ்பாச்சஸ் " என்ற நிகழ்ச்சியில் " இலங்கையின் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள்" என்ற விவரண தொகுப்பை ஔிபரப்பியது. அதில் பிள்ளையானின் முன்னாள் செயலாளரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளருமான அசாத் மௌலானா என்ற முஹம்மத் மிஹிலார் முஹம்மத் ஹன்சீர் தனது முன்னாள் தலைவரைப் பற்றிய அதிர்ச்சிதரும் தகவல்களை வெளியிட்டார். கிழக்கு மாகாணத்தின் மருதமுனையைச் சேர்ந்த அசாத் மௌலானா ஐரோப்பாவுக்கு தப்பிச்சென்று சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரினார். பிள்ளையானுக்கும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவரான மேஜர் -- ஜெனரல் சுரேஷ் சாலேக்கும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களுடன் தொடர்புகள் இருந்ததாகவும் இருவருக்கும் குண்டுத்தாக்குதல் சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அசாத் மௌலானா கூறினார். ஆனால் பிள்ளையானும் சாலேயும் குற்றச்சாட்டுக்களை உடனடியாகவே மறுத்தனர். அப்படியானால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையானுக்கும் சுரேஷ் சாலேக்கும் எதிரான அசாத் மௌலானாவின் குற்றச்சாட்டுக்கள் எவை? சனல் 4 தொலைக்காட்சியினால் " டிஸ்பாச்சஸ் " நிகழ்ச்சியில் ஔிபரப்பு செய்யப்பட்ட " இலங்கையின் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் " விவரணத் தொகுப்பு ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் 2023 செப்டெம்பர் 21 ஆம் திகதி வேறு ஒரு அரங்கில் திரையிடப்பட்டது. அப்போது விவரணத் தொகுப்பின் இயக்குநரும் தயாரிப்பாளருமான தொம் வோக்கரும் நிறைவேற்று தயாரிப்பாளரான பென் டி பியரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். பிறகு அங்கு ஒரு கலந்துரையாடலும் இடம்பெற்றது. கலந்துரையாடலுக்கு முன்னதாக அசாத் மௌலானாவினால் வெளியிடப்பட்ட விரிவான அறிக்கை ஒன்றின் பிரதிகள் பிரசன்னமாகியிருந்தவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன. நேரடியாகக் கலந்து கொள்ளாத அசாத் மௌலானா பிறகு வீடியோ இணைப்பின் ஊடாக கேள்விகளுக்கு பதிலளித்தார். அசாத் மௌலானாவின் அறிக்கை அவரால் சனல் 4 தொலைக்காட்சி விவரணத் தொகுப்பில் கூறப்பட்ட கருத்துக்களின் தெளிவுபடுத்தலும் விரிவுபடுத்தலுமாகவே அமைந்தது. விவரணத் தொகுப்பில் வெளியிட்ட தகவல்களை கூடுதல் விபரங்களுடன் அவர் அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதன் தற்போதைய பொருத்தப்படும் முக்கியத்துவமும் கருதி அசாத் மௌலானாவின் அறிக்கையை முழுமையாக கீழே தருகிறோம் ; அசாத் மௌலானாவின் அறிக்கை "பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியினால் செப்டெம்பர் 5 ஆம் திகதி ஔிபரப்பான " இலங்கையின் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் " விவரணத் தொகுப்பு இலங்கையில் கணிசமானளவுக்கு ஆர்வத்தை தோற்றுவித்திருக்கிறது. பல்வேறு கட்டுரைகளும் ஆசிரிய தலையங்கங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. விவரணத் தொகுப்பு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்ற கோராக்கைக்கு ஓரளவு ஆதரவைத் திரட்டியிருக்கின்ற அதேவேளை பெருமளவு வதத்திகளும் போலிச் செய்திகளும் வெளியிடப்பட்டன. எனது மனைவி, பிள்ளைகளும் கூட அவதூறு செய்யப்பட்டார்கள். அவர்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. அதனால் பின்வரும் அறிக்கையை வெளியிடுவதற்கு நான் விரும்புகிறேன். " கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அரசியல் கட்சியின் தலைவரான பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனுக்காக நான் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 பெப்ரவரி வரை பணியாற்றினேன். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி முன்னதாக ஒரு தீவிரவாத இயக்கமாக செயற்பட்டது. நான் அந்த கட்சியின் பிரசாரச் செயலாளராகவும் பேச்சாளராகவும் இருந்தேன். நான் ஒரு போராளி அல்ல. உண்மையிலேயே நான் ஒருபோதும் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டவன் அல்ல. " எனது பதவி காரணமாக ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகவும் மகிந்த ராஜபக்சவின் அரசாங்க காலத்தில் இடம்பெற்ற பல அரசியல் கொலைகள் தொடர்பாகவும் முக்கியமானதும் இரகசியமானதுமான பெருமளவு தகவல்களைப் பெறக்கூடியதாக இருந்தது. " 2019 ஏப்ரில் 19 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் 45 சிறுவர்களும் 40 வெளிநாட்டவர்களும் உட்பட 269 பேர் கொல்லப்பட்டதுடன் 500 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். தற்கொலைக் குண்டுதாரிகளின் அடையாளத்தை ஊடகங்கள் வெளியிட்ட பின்னர் மாத்திரமே அந்த தாக்குதல்களின் சூத்திரதாரிகள் மற்றும் அவற்றை நடத்தியவர்கள் பற்றியும் தாக்குதல்களின் நோக்கங்கள் பற்றியும் என்னிடம் உறுதியான சான்றுகள் இருப்பதை நான் புரிந்துகொண்டேன். அந்த கொடூரமான தாக்குதல்களுக்கு தயாரிப்பு வேலைகளைச் செய்ததிலோ அல்லது தாக்குதல்களை நடத்தியதிலோ எனக்கு எந்த வகையிலும் சம்பந்தம் கிடையாது. " 2015 ஆண்டில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் தோல்வியைத் தொடர்ந்து பிள்ளையான் கைது செய்யப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மட்டக்களப்புச் சிறையில் அடைக்கப்பட்டார். பரராஜசிங்கம் 2005 நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார் . " பிள்ளையானின் ஒரு செயலாளர் என்ற வகையில், அவரை அவரின் சட்டத்தரணிகள் சகிதம் சந்தித்து சட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு என்னை நீதிமன்றம் அனுமதித்தது. 2017 செப்டெம்பரில் சிறைச்சாலைக்கான ஒரு விஜயத்தின்போது தன்னுடன் ஒரே கூண்டில் காத்தான்குடியைச் சேர்ந்த சில முஸ்லிம் கைதிகள் இருப்பதாக பிள்ளையான் என்னிடம் கூறினார். ஒரு தந்தை, அவரின் மகன் மற்றும் ஆறு பேர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் காத்தான்குடியில் இன்னொரு முஸ்லிம் குழு மீது தாக்குதல் நடத்தியதற்காகவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் என்று அழைக்கப்படும் ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். " பிள்ளையானின் வேண்டுகோளின்பேரில் நான் சைனி மௌலவியைச் சந்தித்தேன். பிறகு பிள்ளையான் என்னிடம் இந்த கைதிகளை பிணையில் வெளியில் எடுப்பதற்காக அவர்களின் உறவினர்களுக்கு நிதியை ஏற்பாடு செய்வதற்கு இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டார். அவர்கள் 2017 அக்டாபர் 24 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். 2018 ஜனவரி பிற்பகுதியில் பிள்ளையான் சைனி மௌலவியின் குழுவுக்கும் அப்போது ஒரு பிரிகேடியராக இருந்த சுரேஷ் சாலேக்கும் இரகசிய சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு என்னிடம் கேட்டார். சந்திப்புக்கான இடம் மற்றும் நேரம் தொடர்பில் சுரேஷ் சாலே எனக்கு அறிவிப்பார் என்றும் பிள்ளையான் கூறினார். " ஒரு சில நாட்கள் கழித்து சுரேஷ் சாலே என்னுடன் தொடர்பு கொண்டு புத்தளம் வனாத்தவில்லு பகுதிக்கு வருமாறு சைனி மௌலவிக்கு வேண்டுகோள் விடுக்குமாறு என்னைக் கேட்டார். அடுத்த நாள் கொழுப்பில் இருந்து புத்தளத்துக்கு இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவருடன் நான் பயணம் செய்தேன். சைனி மௌலவியின் குழு குருநாகலையில் இருந்து அங்கு வந்து சேர்ந்தது. இந்த சந்திப்புக்கு எனது சொந்த வாகனத்தையோ அல்லது சாரதியையோ பயன்படுத்த வேண்டாம் என்று என்னிடம் கூறிய பிள்ளையான் போக்குவரத்துக்கு இராணுவப் பலனாய்வுப் பிரிவு ஒழுங்கு செய்யும் என்று கூறினார். " புத்தளத்துக்கு வெளியே அமைந்திருக்கும் 50 -- 60 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பெரியதொரு தென்னந்தோட்டத்தில் 2018 பெப்ரவரி முற்பகுதியில் அந்த சந்திப்பு இடம்பெற்றது.சுரேஷ் சாலே சாம்பல் நிற டொயோட்டா கார் ஒன்றில் சாரதியுடன் வந்திருந்தார். அரை மணிநேரம் கழித்து சைனி மௌலவி ஆறு பேர் கொண்ட ஒரு குழுவுடன் வெள்ளை வான் ஒன்றில் வந்திருந்தார். சைனி மௌலவி தனது மூத்த சகோதரர் மௌலவி சஹரானை தங்களது குழுவின் தலைவர் என்று அறிமுகம் செய்தார். சந்திப்பு இரு மணித்தியாலங்களுக்கும அதிகமான நேரம் நீடித்தது. நான் அதில் கலந்துகொள்ளாமல் வெளியில் காத்திருந்தேன். அந்த சந்திப்புக்கு பிறகு நான் மட்டக்களப்புக்கு பயணம் செயதேன். சந்திப்பு பற்றி மறுநாள் பிள்ளையானுக்கு விபரங்களை தெரிவித்தேன். சுரேஷ் சாலேக்கு ஒரு பெரிய திட்டம் இருக்கிறது என்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளுடன் இருப்பதைப் போன்ற உடன்பாடொன்று சஹரான் குழுவுடனும் அவருக்கு இருக்கிறது என்றும் பிள்ளையான் கூறினார். இந்த சந்திப்பு பற்றிய தகவல்களை இரகசியமாக வைத்திருக்குமாறும் ஏதாவது உதவியை அவர்கள் கேட்டால் செய்துகொடுக்குமாறும் அவர் என்னிடம் கூறினார். 2017 செப்டெம்பரில் சிறையில் சைனி மௌலவியை சந்தித்ததை தவிர பிறகு நான் சஹரானையும் அவரின் குழுவினரையும் சுரேஷ் சாலேயுடனான 2018 பெப்ரவரி சந்திப்பின்போது ஒரு தடவை மாத்திரம் சந்தித்தேன். அதைத் தவிர அவர்களுடன் எனக்கு எந்த தொடர்புமோ அல்லது உறவுமுறையோ இருந்ததில்லை. அவர்களின் பயங்கரவாத நோக்கங்கள் குறித்தோ அல்லது திட்டம் குறித்தோ பயங்கரவாத தாககுதல் நடைபெறும் வரை எனக்கு எதுவும் தெரியாது. " 2019 ஏப்ரில் 19 ஈஸ்டர் ஞாயிறன்று காலை 7 மணியளவில் சுரேஷ் சாலே என்னுடன் தொடர்புகொண்டு கொழும்பில் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு உடனடியாகச் சென்று அங்கு காத்துக்கொண்டு நிற்கும் ஒரு நபரை ஏற்றிக் கொண்டு வருமாறும் அவரது தொலைபேசி இலக்கத்தைக் குறித்துக் கொள்ளுமாறும் கூறினார். அந்த நேரத்தில் நான் கொழும்பில் அல்ல மட்டக்களப்பில் நிற்கிறேன் என்று அவரிடம் கூறினேன். " இந்த தொலைபேசி சம்பாஷணைக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஏககாலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றன. தாக்குதல்களை அடு்த்து உடனடியாக பிள்ளையான் ஒரு சிறைக்காவலர் ஊடாக செய்தி அனுப்பி தன்னை அவசரமாகச் சந்திக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். அவரை காலை 11 மணியளவில் நான் சந்தித்தபோது ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி சுரேஷ் சாலேயே என்றும் இதே போன்ற தாக்குதல்கள் நடக்கும் என்று தான் நினைத்திருந்ததாகவும் என்னிடம் கூறினார். " சைனி மௌலவியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைவரத்தை அறியுமாறு பிள்ளையான் என்னைக் கேடடார். நான் முயற்சித்தேன். பதில் இல்லை. பிள்ளையானின் வேண்டுகோளின் பேரில் நான் ஏற்பாடு செய்த சந்திப்பில் பங்கேற்றவர்களே உண்மையில் ஈஸ்டர் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகள் என்பதை அன்றைய தினம் மாலை ஊடகச் செய்திகள் மூலமாக மாத்திரமே நான் அறிந்து கொண்டேன். நான் போய்ச் சந்திக்க வேண்டும் என்று சுரேஷ் சாலே விரும்பிய அந்த பேர்வழி ஜமீல் என்பவரே என்பதையும் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட அவர் பிறகு இறுதி நேரத்தில் திட்டத்தை மாற்றி அந்த ஹோட்டலை விட்டு வெளியேறி தெஹிவளையில் உள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் குண்டை வெடிக்க வைத்தவர் என்பதையும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகள் ஊடாக நான் அறிந்து கொண்டேன். " பிள்ளையானும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினரும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்தனர். கோட்டாபய ஜனாதிபதியாக வந்த பிறகு சுரேஷ் சாலே இலங்கை திரும்பினார். அவருக்கு மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டு அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. அந்த பதவியில் அவர் தொடருகிறார். " ஆனால், உறுதியளித்ததன் பிரகாரம் பிள்ளையானை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யவில்லை. பிள்ளையானுக்கு எதிராக தீர்க்கமான சான்றுகள் இருந்ததால் அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை வாபஸ் பெறுவதற்கு சட்டமா அதிபர் மறுப்புத் தெரிவித்ததே அதற்கு காரணமாகும். 2020 ஆகஸ்ட் 5 பாராளுமன்ற தேர்தலின்போது சிறையிலேயே தொடர்ந்து இருந்த பிள்ளையான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தேர்தலுக்கு பிறகு பிள்ளையான் என்னனயும் அவரது சகோதரரரையும் சுரேஷ் சாலேயைச் சென்று சந்திக்குமாறும் கோட்டாபய ராஜபக்சவும் தற்போதைய அரசாங்கமும் எவ்வாறு அதிகாரத்துக்கு வந்தார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று அவரிடம் கூறுமாறும் கேட்டுக் கொண்டார். தன்னை விடுதலை செய்யவில்லையானால் அதற்காக பாரியதொரு விலையை செலுத்த வேண்டியிருக்கும் என்று சுரேஷ் சாலேயை எசாசரிக்குமாறும் எம்மிடம் அவர் கூறினார். " சில நாட்கள் கழித்து பிள்ளையானுக்கு எதிரான வழக்கை சட்டமா அதிபர் மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் வைத்து வாபஸ் பெற்றார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதர்களை ஏற்பாடு செய்தவர்களைப் பற்றி எனக்கு தெரிந்தவற்றை தவிரவும், 2005 -- 2015 காலப்பகுதியில் இடம்பெற்ற பல அரசியல் கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் பற்றிய விரிவான தகவல்கள் என்னிடம் இருக்கின்றன. " இந்த கொலைகளில் பெருமளவானவை இலங்கை இராணுவத்தின் கீழ் இயங்கிய திரிப்போலி பிளட்டூன் என்ற இரகசிய கொலைப் படைப் பிரிவினாலேயே செய்யப்பட்டன. அந்த பிரிவு தொடக்கத்தில் மேஜர் பிரபாத் புலத்வத்த தலைமையிலும் பிறகு கேணல் ஷம்மி கருணாரத்ன தலைமையிலும் இயங்கியது. அது அப்போது இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் பின்னர் இராணுவ அதிகாரிகளின் பிரதானியாகவும் இருந்த மேஜர் ஜெனரல் அமால் கருணாசேனவின் நேரடி கட்டளையின் கீழ் இயங்கியது. இந்த பிளட்டூன் நேரடியாக கோட்டாபயவுக்கே பதில் கூறும் கடப்பாட்டைக் கொண்டிருந்தது. அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது அவரிடமிருந்து மாத்திரமே உத்தரவுகளை அது பெற்றது. " இந்த பிளட்டூனும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளும் போர்காலத்திலும் போரின் முடிவுக்கு பின்னரும் பத்திரிகையாளர்கள் கொலைகள் மற்றும் காணாமல்போதல் உட்பட பெருமளவு அரசியல் கொலைகளுக்கு பொறுப்பாக இருந்தது. குறிப்பாக அவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், பத்திரிகையாளர்களான லசந்த விக்கிரமதுங்க, தராக்கி சிவராம், ஐ. நடேசன் ஆகியோரின் கொலைகளுக்கும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் காணாமல் போனதற்கும் பொறுப்பாக இருந்தன. " இராணுவப் புலனாய்வு பிரிவினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளும் கூட்டாகச் செய்த பல்வேறு மனித உரிமைமீறல்கள் பற்றிய தகவல்களும் என்னிடம் இருக்கின்றன. அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி எனக்கு இணக்கம் இல்லை என்ற போதிலும், எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற பயத்தின் காரணமாக அவர்களிடம் இருந்து என்னை விலகியிருக்க என்னால் முடியாமல் இருந்தது. இலங்கை அதிகாரிகள் என்னை கடத்தவோ அல்லது சிறையிலடைக்கவோ அல்லது ஏன் கொலைசெய்யவோ கூடும் என்ற பயம் இன்று வரை எனக்கு இருக்கிறது. " சனல் 4 தொலைக்காட்சி விவரணத் தொகுப்பை ஔிபரப்பிய பிறகு உடனடியாக பொலிசார் எனது தாயாரையும் சகோதரியையும் சென்று பார்த்து விசாரணை செய்தார்கள். அது எனது பயத்தை மேலும் அதிகரித்தது. எனது தொலைபேசி இலக்கத்தையும் விலாசத்தையும் கண்டறியும் ஒரு முயற்சியாக எனது சகோதரியின் மகனை இனந்தெரியாத இரு நபர்கள் விசாரித்தார்கள். " ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை விசாரணை செய்யும் பெறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் பாராளுமன்ற தெரிவுக்குழுவும் அந்த அனர்த்தத்தின் சூத்திரதார்கள் மற்றும் அதை செய்தவர்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்தத் தவறிவிட்டன. " குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுவில் குறிப்பிடப்பட்டதைப் போன்று, அவர் தலைமையிலான விசாரணைக்குழு ( இராணுவத்தினருக்கும் குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய ) முக்கியமான சான்றுகளை கண்டறிந்தது. ஆனால், அந்த குழு விசாரணைகளை தொடருவதை இராணுவம் தடுத்தது. " நான் இந்த விபரங்களை எல்லாம் தெரிந்திருக்கின்ற காரணத்தினால், இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வுச் சேவையினால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டிருக்கிறேன். எனது உயிரைப் பாதுகாப்பதற்காக அரசியல் தஞ்சம் கோருவதற்காக நான் ஐரோப்பாவுக்கு தப்பியோடி வந்தேன். சுயாதீனமான சர்வதேச விசாரணை " இலங்கையில் இடம்பெற்ற பல பயங்கரவாத தாக்குதல்கள், அரசியல் கொலைகள், ஆட்கடத்தல்கள் திட்டமிடப்பட்டதை நேரில் கண்ட ஒரு சாட்சி என்ற வகையில் இந்த குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளில் சாட்சியமளிக்க நான் முன்வருகிறேன். ஆனால், உண்மையை வெளிப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு அக்கறை இருக்கிறது என்று நான் நம்பவில்லை . அதனால் நான் சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றின் முன்னிலையில் மாத்திரம் சாட்சியமளிக்க முன்வருவேன்." https://www.virakesari.lk/article/212173
-
கணினி சிப் தயாரிப்பில் ஆதிக்கத்தை நிறுவ முயலும் அமெரிக்கா - ஆசியாவின் சவாலை சமாளிக்குமா?
படக்குறிப்பு,நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகும், தொழில்நுட்ப மேலாதிக்கத்துக்காக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உள்ள போட்டியில் சிப்கள் ஒரு முக்கியப் போர்க்களமாகவே உள்ளன. கட்டுரை தகவல் எழுதியவர், சுரஞ்சனா திவாரி பதவி, 16 ஏப்ரல் 2025 பல ஆண்டுகளாக அமெரிக்கா சிப் உற்பத்தியை "தவற விட்டுவிட்டது" . இதன் காரணமாக சீனா மற்றும் பிற ஆசிய நாடுகள் வேகமாக முன்னேறத் தொடங்கின. அப்போது அமெரிக்க வர்த்தகச் செயலாளராக இருந்த ஜினா ரைமண்டோ, 2021 இல் எனக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகும், தொழில்நுட்ப மேலாதிக்கத்துக்காக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உள்ள போட்டியில் சிப்கள் ஒரு முக்கிய போர்க்களமாகவே உள்ளன. இந்நிலையில், பிற நாடுகள் பல ஆண்டுகளாக முயற்சி செய்து, முழுமையாக வெற்றி பெற்ற ஒரு மிக நுட்பமான, சிக்கலான உற்பத்தி முறையை வேகப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். தனது சுங்க வரிக் கொள்கை அமெரிக்கப் பொருளாதாரத்தை விடுவித்து, வேலைவாய்ப்புகளை மீண்டும் அமெரிக்காவுக்குச் சாதகமாக கொண்டு வரும் என டிரம்ப் கூறுகிறார். ஆனால், திறமையான தொழிலாளர்கள் கிடைக்காமலும், அமெரிக்க தொழிற்சாலைகளில் உள்ள தரமற்ற உற்பத்தியோடும், சில பெரிய நிறுவனங்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றன. அப்படியானால், டிரம்ப் வித்தியாசமாக என்ன செய்யப் போகிறார் ? தைவான் மற்றும் ஆசியாவின் பிற நாடுகள் உயர்தரமான சிப்களை உருவாக்கும் ரகசிய தொழில்நுட்பங்களை வைத்திருக்கும்போது, அமெரிக்காவும் அவற்றை பெரிய அளவில் உற்பத்தி செய்வது உண்மையில் சாத்தியமா? அமெரிக்கா - இரான் அணுசக்தி பேச்சுவார்த்தையில் இஸ்ரேலுக்கு உள்ள மிகப்பெரிய அச்சம் என்ன?16 ஏப்ரல் 2025 அமெரிக்கா, ரஷ்யா வரிசையில் இந்தியாவும் லேசர் ஆயுதம் தயாரிப்பு - எவ்வாறு செயல்படும்?16 ஏப்ரல் 2025 முழுவதும் பெண்களே அடங்கிய குழு தனது 11 நிமிட விண்வெளிப் பயணத்தில் என்ன செய்தது?15 ஏப்ரல் 2025 மைக்ரோசிப்களை உருவாக்குதல்: ரகசிய தொழில்நுட்பம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மைக்ரோசிப்கள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் ஆசிய நாடுகள் அதன் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. சலவை இயந்திரங்கள் முதல் ஐஃபோன்கள் வரை, ராணுவ ஜெட் விமானங்கள் முதல் மின்சார வாகனங்கள் வரை அனைத்துப் பொருட்களுக்கும் மின்சாரம் வழங்குவதில் செமிகண்டக்டர்கள் (semiconductors) முக்கிய இடம் வகிக்கின்றன. சிப்கள் (chips) எனப்படும் இந்த சிறிய சிலிக்கான் தகடுகள் முதலில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இன்று, மிகவும் மேம்பட்ட சிப்கள் ஆசியாவில் தான் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. சிப்களை உருவாக்குவதற்கு அதிகம் செலவாகும். மேலும் தொழில்நுட்ப ரீதியாக சிக்கலான செயல்முறையும் ஆகும். உதாரணமாக, அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட தைவான், ஜப்பான் அல்லது தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட, சீனாவில் இருந்து எடுக்கப்படும் அரிய உலோகங்கள் போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிப்களை ஒரு ஐபோன் கொண்டிருக்கலாம். அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, அவை வியட்நாமில் பேக்கேஜிங் செய்யப்படுவதற்கும், அதன் பிறகு அவற்றை ஒன்றிணைக்கவும், சோதனை செய்வதற்கும் சீனாவுக்கு அனுப்பப்படலாம். பல ஆண்டுகளாக வளர்ந்து, ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்ட சிப்களை உற்பத்தி செய்யும் அமைப்பாக இது உள்ளது. சிப் துறையை டிரம்ப் பாராட்டியுள்ளார், ஆனால் அதற்கு வரி விதிக்கப் போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் தொழிற்சாலைகளை கட்டவில்லை என்றால் 100 சதவிகித வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று தொழில்துறையின் முன்னணி நிறுவனமான தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனத்திடம் (TSMC) அவர் கூறியுள்ளார். இவ்வளவு சிக்கலான உற்பத்தி அமைப்பும் கடுமையான போட்டியும் உள்ள நிலையில், நிறுவனங்கள் அதிக செலவுகள் மற்றும் நீண்ட கால முதலீடுகளைச் செய்ய திட்டமிட வேண்டும், அது டிரம்ப் ஆட்சியில் இருக்கப்போகும் காலத்துக்குப் பிறகும் தொடர வேண்டும். கொள்கைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களும் அதற்கு உதவவில்லை. இதுவரை, சில நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்ய விருப்பம் காட்டியுள்ளன. சீனா, தைவான், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் சிப்களை உருவாக்கும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கிய குறிப்பிடத்தக்க மானியங்கள் அவற்றின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளன. 2022 ஆம் ஆண்டு அதிபர் ஜோ பைடனின் கீழ் சட்டமாக மாறிய அமெரிக்க சிப்கள் மற்றும் அறிவியல் சட்டத்தின் பின்னணியில் இருந்த சிந்தனையும் அதுதான் . உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மானியங்கள், வரிச் சலுகைகள் மற்றும் மானியங்களை ஒதுக்குவதன் மூலம் சிப்களின் உற்பத்தியை மீண்டும் அமெரிக்காவுக்குக் கொண்டு வரவும், விநியோகச் சங்கிலிகளை பன்முகப்படுத்தவும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அமெரிக்கா - இரான் அணுசக்தி பேச்சுவார்த்தையின் வெற்றி, தோல்வி இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?13 ஏப்ரல் 2025 அமெரிக்கா - இரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் சாத்தியமா? மாறி வரும் சர்வதேச அரசியல் கணக்குகள்12 ஏப்ரல் 2025 சிக்கலில் சீனா, கூட்டணி தேடும் ஐரோப்பா: டிரம்பின் வரிக்கு வரி யுத்தம் இந்தியாவுக்கு புதிய கதவுகளை திறக்குமா?12 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவில் தொழிற்சாலைகளை கட்டாவிட்டால் TSMC-க்கு 100 சதவிகித வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பாளரான தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (TSMC) மற்றும் உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பாளரான சாம்சங் (Samsung) போன்ற சில நிறுவனங்கள் இந்தச் சட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளன. தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (TSMC) அரிசோனாவில் ஆலைகளை கட்டுவதற்காக 6.6 பில்லியன் டாலர் மானியங்கள் மற்றும் கடன்களைப் பெற்றுள்ளது, மேலும் சாம்சங் டெக்சாஸின் டெய்லரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்காக சுமார் 6 பில்லியன் டாலர் பெறுகிறது. மூன்று ஆலைகளுக்கு 65 பில்லியன் டாலர் முதலீடு உறுதி செய்த தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம், அமெரிக்காவில் மேலும் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. சீனா தைவானை கட்டுப்படுத்துவதாக தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், சிப் உற்பத்திப் பணிகளை பன்முகப்படுத்துவது தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனத்துக்கும் பயனளிக்கக்கூடும். ஆனால், தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் மற்றும் சாம்சங் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களுடைய முதலீடுகளில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன, அதிகரித்து வரும் செலவுகள், திறமையான தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதில் ஏற்படும் சிரமங்கள், கட்டுமான தாமதங்கள் மற்றும் உள்ளூர் சங்கங்களின் எதிர்ப்புகள் ஆகியவை அதில் அடங்கும். "இது வெறும் பெட்டிகளை உருவாக்கும் தொழிற்சாலை அல்ல," என்கிறார் சந்தை நுண்ணறிவு நிறுவனமான கவுண்டர்பாயிண்டின் ஆராய்ச்சி இயக்குனர் மார்க் ஐன்ஸ்டீன். "சிப்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் மிகவும் உயர் தொழில்நுட்பம் கொண்ட, மிகவும் சிக்கலான சூழல்களில் கட்டப்படுகின்றன, அவற்றைக் கட்டுவதற்கு பல ஆண்டுகள் ஆகும்." அமெரிக்க முதலீடு இருந்தபோதிலும், குறிப்பாக மிகவும் மேம்பட்ட கணினி சிப்கள் உட்பட, அதன் பெரும்பகுதி உற்பத்தி தைவானில் தான் இருக்கும் என்று தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்தியா வழியே வங்கதேச பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி ரத்து - சீனாவை நெருங்கியதே காரணமா?12 ஏப்ரல் 2025 பங்குச் சந்தைகளில் நிச்சயமற்ற தன்மை - தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?12 ஏப்ரல் 2025 டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியது ஏன்?10 ஏப்ரல் 2025 தைவானின் வலிமையை சீனா திருட முயன்றதா? இன்று, அரிசோனாவில் உள்ள தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவன ஆலைகள் உயர்தர சிப்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால் "சிப் வார்: தி ஃபைட் ஃபார் தி வேர்ல்ட்ஸ் மோஸ்ட் கிரிட்டிகல் டெக்னாலஜி" என்ற புத்தகத்தின் ஆசிரியரான கிறிஸ் மில்லர், "தைவானில் அவர்கள் ஒரு தலைமுறைக்குப் பின்னால் உள்ளனர்" என்கிறார். "உற்பத்தி அளவு என்பது, அமெரிக்கா மற்றும் தைவானில் எவ்வளவு முதலீடு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தது. இன்று, தைவான் அதிக உற்பத்தி திறனைக் கொண்டுள்ளது." என்று அவர் கூறுகிறார். உண்மை என்னவென்றால், தைவான் அந்த திறனை வளர்த்துக் கொள்ள பல ஆண்டு காலம் ஆனது, மேலும் இந்தத் துறையில் தைவானின் வலிமையைத் திருட சீனா பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடும் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், அது தொடர்ந்து வளர்ந்து வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் அமெரிக்காவில் சிப் தயாரிப்பில் முதலீடு செய்துள்ளது. தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் தான் "ஃபவுண்டரி மாடலின்" முன்னோடியாக இருந்தது, இதில் சிப் தயாரிப்பாளர்கள், அமெரிக்க நிறுவனங்களின் வடிவமைப்புகளை எடுத்து, அந்த நிறுவனங்களுக்காக சிப்களை உற்பத்தி செய்தனர். ஆப்பிள், குவால்காம் மற்றும் இன்டெல் போன்ற சிலிக்கான் வேலியைச் சார்ந்த தொடக்கநிலை நிறுவனங்களின் எழுச்சியைக் கடந்து வந்த தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம், சிறந்த பொறியாளர்கள், மிகவும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் அறிவைப் பகிரும் சூழலுடன், அமெரிக்கா மற்றும் ஜப்பானிய தொலைநோக்குப் பார்வை கொண்ட நிறுவனங்களுடன் போட்டியிட முடிந்தது. "அமெரிக்காவால் சிப்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியுமா?" என்றால், "நிச்சயமாக முடியும். ஆனால் அவர்கள் சிப்களை ஒரு நானோமீட்டர் அளவு வரை குறைத்து தயாரிக்கப் போகிறார்களா? அநேகமாக இல்லை." என்கிறார் ஐன்ஸ்டீன். டிரம்பின் குடியேற்றக் கொள்கை இதற்கு ஒரு காரணமாக உள்ளது. இந்தக் கொள்கையினால், சீனா மற்றும் இந்தியாவிலிருந்து திறமையான பணியாளர்கள் அமெரிக்காவுக்கு வருவதை கட்டுப்படுத்தும் அபாயம் உள்ளது. அமெரிக்காவுக்கு திறமையான தொழிலாளர்களைக் கொண்டுவரும் அமெரிக்காவின் H-1B விசா திட்டத்துக்கு மஸ்க் அளித்த ஆதரவைக் குறிப்பிட்டு, "டெஸ்லாவுக்கான பொறியாளர்களைப் பெற்றுக்கொள்வதில், ஈலோன் மஸ்க் கூட குடியேற்றச் சிக்கல்களை எதிர்கொண்டார்," என்று ஐன்ஸ்டீன் கூறுகிறார். "அது ஒரு பெரிய தடையாக இருக்கிறது. குடியேற்றம் தொடர்பான தங்களின் நிலைப்பாட்டை முழுமையாக மாற்றாவிட்டால், அவர்களால் அதை சமாளிக்க முடியாது. ஏதாவது மாயாஜாலம் செய்வது போல் திடீரென்று திறமையான தொழிலாளர்களை உருவாக்க முடியாது" என்கிறார் ஐன்ஸ்டீன் . அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா - எங்கு போய் முடியும் வர்த்தகப் போர்?9 ஏப்ரல் 2025 டிரம்ப் சீனாவுடன் தீவிரமாக மோதுவது ஏன்? உலகளாவிய வர்த்தகத்தில் இதன் தாக்கம் என்ன?10 ஏப்ரல் 2025 டிரம்பின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுக்கும் போது இந்தியா மௌனம் காப்பது ஏன்?9 ஏப்ரல் 2025 உலகளாவிய தாக்கம் அப்படியிருந்தும், டிரம்ப் சுங்க வரிகளை இரட்டிப்பாக்கியுள்ளார், செமிகண்டக்டர் துறையில் தேசிய பாதுகாப்பு வர்த்தக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். "இது முறையாக இயங்கிக் கொண்டிருந்த அமைப்பில் ஒரு பெரிய தடையாக மாறிவிட்டது," என்கிறார் ஐன்ஸ்டீன். "உதாரணத்துக்கு, ஜப்பான் தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்க செமி கண்டக்டர்களை முக்கிய அடிப்படையாக எடுத்திருந்தது. ஆனால் சுங்க வரிகள் போன்றவை அந்த வணிகத் திட்டத்தில் இடம் பெற்றவை அல்ல." மில்லரின் கருத்துப்படி, இந்தத் தொழில்துறையின் நீண்டகால விளைவாக உலகின் முக்கிய பொருளாதாரங்களான சீனா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்நாட்டு உற்பத்தி மீதான கவனம் அதிகரிக்கும். சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவே, ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளை எதிர்கொண்டு, ஐரோப்பா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), சவுதி அரேபியா, மலேசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் தனது சந்தை விரிவாக்கத்தை முன்னெடுத்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் லாப வரம்புகள் குறைவாக இருப்பினும், சில நிறுவனங்கள் புதிய சந்தைகளை தேடுகின்றன. "சீனா இறுதியில் வெற்றி பெற விரும்புகிறது. அதற்காகவே, அது புதிய கண்டுபிடிப்புகளிலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீட்டிலும் தீவிரமாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. டீப்சீக் (Deepseek) விஷயத்தில் அது என்ன செய்தது என்பதையே பாருங்கள்," என்று சீனாவில் உருவாக்கப்பட்ட ஏஐ சாட்போட்டை குறிப்பிடுகிறார் ஐன்ஸ்டீன். "அவர்கள் இன்னும் சிறந்த சிப்களை உருவாக்கினால், அனைவரும் அவர்களையே நாடுவார்கள். குறைந்த செலவில் அதிக திறன் கொண்ட சிப்களை தற்போது அவர்களால் உருவாக்க முடியாது. அதி உயர் தொழில்நுட்ப உற்பத்தித் திறனைப் பெறுவதே எதிர்கால நோக்கமும் ஆகும்" பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தனது சுங்க வரிக் கொள்கை அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை மீண்டும் நாட்டுக்கே கொண்டு வரும் என டிரம்ப் கூறுகிறார். இதற்கிடையில், புதிய உற்பத்தி மையங்கள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. நிபுணர்கள் கூறுகையில், இந்தியா சிப் விநியோகச் சங்கிலியில் அமெரிக்காவை விட சிறப்பாக ஒருங்கிணைக்கப்படுவதற்கு சாத்தியமுள்ள நாடாக உள்ளது. சிப்களை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இந்தியா நிலவியல் ரீதியாக நெருக்கமாக உள்ளதும், தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்குதலும், மேம்பட்ட கல்வி தரமும் இதற்கு காரணமாக உள்ளது. இந்தியா சிப் உற்பத்திக்குத் தயாராக இருப்பதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், அது சில முக்கியமான சவால்களை எதிர்கொள்கிறது. இதில் தொழிற்சாலைகளுக்கான நிலத்தை கையகப்படுத்துதல் மற்றும் தேவையான தண்ணீர் கிடைப்பது முக்கியமானவை. சிப் உற்பத்திக்கு உயர்தரமான மற்றும் அதிகமான தண்ணீர் தேவைப்படும். ரகசிய 'ஏவுகணை நகரங்கள்': இந்தியாவுக்கு தெற்கே உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்குவோம் என இரான் மிரட்டல்8 ஏப்ரல் 2025 இந்திய பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.19 லட்சம் கோடி நஷ்டம் – எதிர்காலம் எப்படி இருக்கும்?8 ஏப்ரல் 2025 பேரம் பேசும் சிப்கள் சிப் நிறுவனங்கள் முற்றிலும் சுங்க வரிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், சிஸ்கோ போன்ற முக்கிய அமெரிக்க நிறுவனங்கள் சிப்களை அதிகம் சார்ந்துள்ளன. இந்நிலையில், இத்துறையில் வரிகள் விதிக்கப்பட்டால் அவற்றை மாற்ற வேண்டும் என டிரம்புக்கு அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் மேற்கொண்ட செய்த தீவிர முயற்சியின் விளைவாகவே, ஸ்மார்ட்போன், மடிக்கணினி மற்றும் மின்னணு உற்பத்திகளுக்கான சுங்க வரிகளில் விலக்கு கிடைத்ததாக சிலர் நம்புகின்றன. மேலும் இதன் விளைவாகவே , சீனாவுக்கு என்விடியா விற்கும் சிப்களில் இருந்த தடையை, டிரம்ப் நீக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திங்களன்று அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் ஆப்பிள் தயாரிக்கும் பொருட்கள் குறித்து கேட்டபோது, "நான் நெகிழ்வான தன்மை கொண்டவர்" என்று பதிலளித்தார் டிரம்ப். மேலும், "சில விஷயங்கள் வரக்கூடும், நான் டிம் குக்குடன் பேசுகிறேன், சமீபத்தில் டிம் குக்குக்கு உதவினேன்" என்றும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனாவுக்கு சிப் விற்பனை செய்வதற்கான தடையை டிரம்ப் நீக்க வேண்டும் என்று என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் விரும்பினார். இவை அனைத்தும் டிரம்ப் இறுதியில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சிப்பதால் தான் நடக்கிறது எனக் கருதுகிறார் ஐன்ஸ்டீன். உள்கட்டமைப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு சிப்களை உருவாக்க முடியாது என்பதை டிரம்ப் நிர்வாகம் புரிந்துகொண்டுள்ளது. "டிக் டாக்கின் உரிமையாளர் பைட் டான்ஸுக்குச் செய்ததைத்தான் டிரம்ப் நிர்வாகம் செய்ய முயற்சிக்கிறது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஆரக்கிள் அல்லது வேறு அமெரிக்க நிறுவனத்துக்கு ஒரு பங்கைக் கொடுக்காவிட்டால், இனி உங்களை அமெரிக்காவில் செயல்பட விடமாட்டேன் என்று அவர் கூறுகிறார்," என்கிறார் ஐன்ஸ்டீன். தொடர்ந்து பேசிய அவர், "அவர்கள் இங்கேயும் இதேபோன்ற ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் எங்கும் செல்லவில்லை, இன்டெலுடன் ஒப்பந்தம் செய்து, லாபத்தைப் பகிர்ந்துகொள்ள அவர்களை கட்டாயப்படுத்துவார்கள் என்றும் தெரிவித்தார். ஆசிய செமிகண்டக்டர் சிப் உற்பத்தி அமைப்பு, ஒரு முக்கிய பாடத்தை வழங்குகிறது. அதாவது, எந்த ஒரு நாடும் தனியாக சிப் தொழிற்சங்கத்தை இயக்க முடியாது, மேலும் மேம்பட்ட செமிகண்டக்டர்களை திறமையாகவும் பெரும்பான்மையாகவும் உருவாக்க விரும்பினால், அதற்கு நேரம் வேண்டும். ஆசியா முழுவதும் சிப் தொழில்நுட்பம் உருவாக அனுமதித்தது உலகளாவிய ஒத்துழைப்பினால் நடந்தது எனினும், பொருளாதாரத்தை பாதுகப்பதற்காகவும் மற்ற நாடுகளுடன் அமெரிக்காவுக்கு உள்ள தொடர்பைக் குறைப்பது போன்ற முயற்சிகளின் மூலமாகவும் டிரம்ப், சிப் தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0qn7n339x1o
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
LIVE 32nd Match (N), Delhi, April 16, 2025, Indian Premier League Delhi Capitals 188/5 Rajasthan Royals (18.4/20 ov, T:189) 177/3 RR need 12 runs in 8 balls.Stats view Current RR: 9.48 • Required RR: 9.00 • Last 5 ov (RR): 64/1 (12.80) Win Probability:RR 88.44% • DC 11.56%
-
திசைகாட்டி வெற்றி பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தமைக்கு சஜித் அதிருப்தி
16 APR, 2025 | 05:07 PM உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்றும் கட்சிகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தே உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்குவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கருத்து வெளியிட்டிருக்கிறார். ஜனாதிபதி அவ்வாறு கூறினாலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைக்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பொத்துவில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் செவ்வாய்கிழமை (15) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே ஜனாதிபதி நியமிக்கப்படுகின்றார். அவ்வாறு இல்லாது ஜேவிபிக்கு மாத்திரம் சேவையாற்றுவதற்காக நியமிக்கப்படவில்லை. ஜனாதிபதியானவர் கட்சி, சாதி, இனம், மதம் பாராமல் அனைவருக்கும் சமமான சேவையை வழங்க வேண்டும். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் அச்சுறுத்தல்களை கண்டு சளைக்க வேண்டாம். சமீபத்தில், நமது நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பலஸ்தீன மக்கள் குறித்து அவர் கருதிய கருத்தை ஸ்டிக்கர் ஒட்டி வெளிப்படுத்தியிருந்தார். அவ்விளைஞர் பலஸ்தீன மக்கள் சார்பாக தனது கருத்துக்களை முன்வைத்த போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பயங்கரவாத தடைச் சட்டத்தினை பிரயோகித்து கைது செய்தார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கூட பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக முன்நின்றார். ஆதரவான நிலைப்பாடுகளை எடுத்தார். பலஸ்தீன மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதம் முன்னெடுக்கப்பட்ட சமயங்களில், பாரிய படுகொலைகள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில், அப்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அநுர குமார திஸாநாயக்க குரல் எழுப்பினார். இன்று பலஸ்தீன மக்கள் சார்பாக நமது நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் குரல் எழுப்பிய சமயத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அவருக்கு எதிரான தடுப்புக் காவலில் வைக்கும் பத்திரத்தில் கையொப்பமிடும் அளவுக்கு கீழ்த்தரமாக நடந்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியிடம் இரட்டைக் கொள்கைகளும் இரட்டை நாடகங்களும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி பலஸ்தீன மக்களுக்காக நின்றது. இஸ்ரேலிய அரசும் பலஸ்தீன அரசும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் . ஜே.வி.பி அரசாங்கத்திற்கு பொய் சொல்லவும் ஏமாற்றவும் மட்டுமே தெரியும். அன்று தேர்தல் மேடையில் சொன்னதை இன்று செய்ய முடியாது புலம்பிக்கொண்டிருக்கின்றனர். இன்று மக்களுக்கு வறுமையும், அசௌகரியமும் அதிகரித்துள்ளன. இவ்வாறான நிலையில் வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். இதற்கான வலுவான முறையான வேலைத்திட்டமொன்று அவசியம் முன்னெடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/212138
-
அதிக வயதான ஆமைக்கும் தலையில் எண்ணெய் பூசும் நிகழ்வு
ஏன் புலி, சிங்கங்களுக்கு எண்ணை வைக்கவில்லை இவர்கள் என கூற அப்பா சிரித்துக் கொண்டிருந்தார்.
-
மரம் நடுகையின் அவசியத்தை தற்போதைய காலநிலை எமக்கு உணர்த்தியிருக்கின்றது - வட மாகாண ஆளுநர்
16 APR, 2025 | 04:20 PM மரம் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது. ஆனால் மனிதன் இல்லாவிட்டால் மரங்கள் சிறப்பாக வாழும். மரம் நடுகையின் அவசியத்தை தற்போதைய காலநிலை எமக்கு உணர்த்தியிருக்கின்றது. இதை தன்னார்வமாக முன்னெடுக்கம் கிறீன் லேயர் சுற்றுச்சூழல் அமைப்புக்கு எமது மாகாண மக்கள் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கிறீன் லேயர் அமைப்பின் ஏற்பாட்டில் பத்தாயிரம் நெல்லிக் கன்றுகளை நடுகை செய்யும் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கோப்பாய் பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்றது. நிகழ்வில் தலைமையுரையாற்றிய பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ, அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் முக்கிய அங்கத்தினுள் ஒன்றாக மரம் நடுகையும் இருக்கின்றது. கடந்த காலங்களில் எமது பிரதேசத்தில் மரங்கள் அழிக்கப்பட்டளவுக்கு அவை நடுகை செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து கிறீன் லேயர் அமைப்பின் நிறுவுனர் பா.சசிக்குமார் தனது உரையில், எமது பிரதேசத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுகை செய்யும் தனது இலக்கை கடந்த ஆண்டு அடைந்துள்ளதாகவும், தற்போது 10 லட்சம் மரக்கன்றுகளை நடுகை செய்யும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் நெல்லி மருத்துவக் குணம் உடையது மாத்திரமல்லாது பொருளாதார ரீதியில் வருமானத்தை ஈட்டித்தரும் என்பதையும் சுட்டிக்காட்டினார். உப்புநீரை நன்னீராக்கக் கூடிய தன்மையும் நெல்லி மரத்துக்கு உள்ளது எனத் தெரிவித்த அவர், வீடுகளில் வளர்ப்பதற்கு அது பொருத்தமானது என்பதையும் குறிப்பிட்டார். சருமங்கள் சுருங்குவதால் ஏற்படும் பாதிப்புக்கு நெல்லி மிகச் சிறந்த மருந்து என்பதால் வெளிநாடுகளில் இதன் பெறுமதி அதிகம் என்று சுட்டிக்காட்டியதுடன், நீரிழிவுக்கும் இது சிறந்ததொன்று குறிப்பிட்டார். பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், மரங்கள் செழிப்பாக இருக்கின்றமை வளமான நாட்டுக்கான அடையாளம். எமது மாகாணத்தில் கடந்த பல வருடங்களாக மரங்கள் பல தரப்புக்களாலும் நடுகை செய்யப்பட்டாலும் அவை உரிய பராமரிப்பு இல்லாமலும் வேறு பல காரணங்களாலும் உயிர்தப்பவில்லை. ஆனால், அண்மைக்காலமாக அப்படியில்லாமல் மரம் நடுகையுடன் நின்றுவிடாமல் அதனைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்துகின்றனர். கிறீன் லேயர் அமைப்பின் சசிக்குமார் ஆரம்பத்தில் தனியொருவனாகவே மரம் நடுகையை முன்னெடுத்திருந்தார். இன்று அவர் தனது இலக்கை விரிவுபடுத்தி இந்தச் செயற்றிட்டத்தில் பலரையும் உள்ளீர்த்திருக்கின்றார். எமது தேசத்தை வளமாக்க அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டுகின்றேன். அதேபோல பிரதேச செயலர் சிவஸ்ரீயும் தெல்லிப்பழையில் பிரதேச செயலராகக் கடமையாற்றிய காலத்தில், மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி என்பனவற்றை சிறப்பாக முன்னெடுத்தவர். அப்படிப்பட்ட ஒருவர் இருக்கின்ற பிரதேச செயலர் பிரிவில் மரம் நடுகையை முன்னெடுத்துள்ளீர்கள். அதுவும் சிறப்பாக வெற்றியளிக்கும். இப்போது ஒவ்வொரு தாழமுக்கத்தை தொடர்ந்தும் எமது மாகாணத்தின் வளி மாசடைகின்றது. அயல் நாடுகளிலிருந்து வரும் காற்றால் இந்த நிலைமை ஏற்படுகின்றது. எதிர்காலத்தில் இந்த நிலைமைகளை ஓரளவுக்கேனும் தணிப்பதற்கு நாம் இப்போதே மரங்களை நடுகை செய்யவேண்டும், என்று ஆளுநர் வலியுறுத்தினார். ஆளுநரால் பயனாளிகளுக்கு நெல்லி மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கோப்பாய் பிரதேச செயலக வளாகத்தில் நெல்லி மரக்கன்றையும் ஆளுநர் நடுகை செய்தார். https://www.virakesari.lk/article/212134
-
அதிக வயதான ஆமைக்கும் தலையில் எண்ணெய் பூசும் நிகழ்வு
செய்தியை வாசித்து இணைக்கும்போது அப்பாவிடம் சொன்னேன், நீங்கள் எழுதிவிட்டீர்கள் அண்ணை!
-
காற்றாலை, கனிம மண் அகழ்வு திட்டத்தை ஜனாதிபதி நிறுத்த வேண்டும் - மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை
16 APR, 2025 | 04:26 PM மக்களினுடைய நலனை கருத்தில் கொள்ளாமல் பன்னாட்டு கம்பனிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த அரசும் செயல்படுவது வேதனைக்குரிய விடயம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து புதன்கிழமை (16) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், மன்னார் தீவுப் பகுதியில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மற்றும் கனிம மண் அகழ்வு திட்டங்களை நிறுத்துமாறு கோரி பல வருடங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தாம் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக இந்தத் திட்டங்களை நிறுத்துவதாக ஜே.வி.பி யின் சட்டத்தரணிகள் குழு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக எம்மைச் சந்தித்து வாக்குறுதி அளித்திருந்தன. ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காற்றாலை திட்டம் டைட்டானியம் அகழ்வு கரையோர கனிம மணல் அகழ்வு, இம் மூன்று திட்டங்களாலும் மன்னார் தீவுப் பகுதி பல்வேறு விதமான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகும் என பல துறை சார்ந்த வல்லுநர்கள் தொடர்ச்சியாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் வேளையில் அரசு அதனைப் பொருட்படுத்தாமல் செயல்படுத்த முனைகிறது. மக்களினுடைய நலனை கருத்தில் கொள்ளாமல் பன்னாட்டு கம்பனிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த அரசும் செயல்படுவது வேதனைக்குரிய விடயம். கடந்த காலத்தில் உள்ள ஆட்சியாளர்கள் மீது அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் அடிமைகள் என்றும் இந்தியாவின் கைக்கூலிகள் என்றும் பல்வேறு விதமான விமர்சனங்களை தெரிவித்து வந்த ஜனாதிபதி அதே வேலையை அவரும் முன்னெடுப்பது வெட்கக்கேடான அரசியல் செயல்பாடு ஆகும். நடைமுறைச் சாத்தியமற்ற போலியான வாக்குறுதிகளை வழங்கி தேர்தலில் வெற்றி பெற்று அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றாடுகின்றது அரசு. ஆகவே, மூன்றாவது தேர்தலிலும் போலியான வாக்குறுதியை வழங்கி வெற்றி பெற முனைகிறீர்களா? நாளை மன்னாருக்கு வருகை தர உள்ள தாங்கள் இம் மூன்று திட்டங்களையும் நிறுத்துவதாக அறிவிக்க வேண்டும். இல்லையேல் நீங்கள் குற்றம் சாட்டியபடி ஏனைய அரசியல்வாதிகளுக்கும் தங்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லாதவராகவே காணப்படுவீர்கள். அரசியலிலும் அறம் மிக முக்கியம். நீண்ட காலத்துக்கு எவரையும் ஏமாற்ற முடியாது. மீண்டும் மீண்டும் இந்த மக்களை ஏமாற்றி வாக்கு பெற முனையாதீர்கள். நீங்கள் பின்பற்றுவதாக மேலிடையிடும் இடதுசாரித்துவத்துக்கே அவமானமும் இழுக்கும் ஆகும் தாங்கள் ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி. இப்படி மன்னாரில் உள்ள இம்மூன்று திட்டத்தையும் இரத்து செய்ய வேண்டும் இல்லையேல் மக்கள் தொடர்ந்து ஏமாற மாட்டார்கள் என்பது இத்தேர்தல் தங்களுக்கு உணர்த்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/212132
-
அதிக வயதான ஆமைக்கும் தலையில் எண்ணெய் பூசும் நிகழ்வு
16 APR, 2025 | 04:12 PM சித்திரைப் புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு அமைவாக இடம்பெறும் தலையில் எண்ணெய் பூசும் பாரம்பரிய நிகழ்வு இன்றைய தினத்தில் (16) இடம்பெற்றது. அந்த வகையில் புதுவருடத்தில் சிறந்த ஆரோக்கியமும் ஆசீர்வாதமும் கிடைக்கும் எனும் ஐதீகத்தின்படி இடம்பெறும் இந்நிகழ்வு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலும் சுப நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது. தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருங்களுக்கு தலையில் புத்தாண்டு எண்ணெய் பூசும் சடங்கு இன்று புதன்கிழமை (16) காலை நடத்தப்பட்டது. இதன்போது, தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள 153 வயதான ஆமைக்கு முதலில் தலையில் எண்ணெய் பூசப்பட்டது. இலங்கையில் உள்ள அதிக வயதான ஆமை இதுவாகும். இந்த ஆமையின் மொத்த எடை 400 கிலோவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆமை 1930 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்‘கடோல்’ எனும் யானையின் தலையிலும் கபில நிற கரடியின் தலையிலும் எண்ணெய் பூசப்பட்டது. இந்நிகழ்வானது, தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய, பிரதி பணிப்பாளர் தினுஷிகா மானவடு உட்பட மிருகக்காட்சிசாலையின் முகாமைத்துவ அதிகாரிகளால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. https://www.virakesari.lk/article/212110
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
ஐபிஎல்: ஒவ்வொரு வீரரின் பேட்டையும் களத்திலேயே நடுவர்கள் பரிசோதிப்பது ஏன்? விதிகள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இப்போது மட்டையின் அளவுகள் ஐபிஎல் போட்டிகளில் சரிபார்க்கப்படும் (சித்தரிப்புப் படம்) 16 ஏப்ரல் 2025, 08:22 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில், தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, ஐபிஎல்-இல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையில் சமநிலையின்மை இருப்பதாக கவலை தெரிவித்திருந்தார். மேலும் பலர் இந்தக் கவலையை வெளிப்படுத்தினர். ஐபிஎல்-இல் பேட்டிங் செய்யும் அணிகள் இருபது ஓவர்களில் 300 ரன்களை எட்ட முயற்சிக்கின்றன. அது நடந்தால் இந்த ஆட்டத்தை 'கிரிக்கெட்' என்று அழைக்காமல் வெறும் 'பேட்டிங்' என்று அழைக்க வேண்டும் என்று ரபாடா கூறியிருந்தார். இப்போது பிசிசிஐ ஒரு சமநிலையை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது. மட்டை (பேட்) இனி சோதனை செய்யப்படும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஐபிஎல்-இல் குவிக்கப்படும் ரன்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார் இனி ஒவ்வொரு பேட்ஸ்மேனும் பேட்டிங்கிற்கு 'கார்டு' அணிவதற்கு முன்பு அவர் பயன்படுத்தப் போகும் மட்டையைப் பரிசோதிக்க வேண்டும். அதாவது பேட்ஸ்மேன், பேட்டிங் செய்யத் தொடங்குவதற்கு முன்பு ஒரு நடுவர் மட்டையைச் சரிபார்ப்பார். இப்போது, நான்காவது நடுவர் தொடக்க பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தில் கால் வைப்பதற்கு முன்பு அவர்களின் மட்டைகளை சோதனை செய்வார். அதன் பின்னர் மைதானத்திற்கு வரும் பேட்ஸ்மேன்களின் மட்டைகளை மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் சரிபார்ப்பார்கள். ஐபிஎல்-இல் பல பேட்ஸ்மேன்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட பெரிய மட்டைகளைப் பயன்படுத்திய சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை, ஐபிஎல்-இல் இதைச் செய்த பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. களத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவத்தைக் கொண்டுவர ஐபிஎல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு, இங்கிலீஷ் கவுண்டி சர்க்யூட் அணியான நாட்டிங்ஹாம்ஷயர் மட்டைகளைப் பயன்படுத்துவதில் விதிகளை மீறியதால் சில புள்ளிகளை இழக்க வேண்டியிருந்தது. எதிர்பாராத கிளைமாக்ஸ்: 112 ரன் இலக்கை எட்ட விடாமல் கேகேஆரை சுருட்டிய பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாசின் வியூகம்7 மணி நேரங்களுக்கு முன்னர் தோனி புதிய சாதனை: தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டி சிஎஸ்கே அணிக்கு ஏற்றம் தந்த 'ஆட்டநாயகன்'15 ஏப்ரல் 2025 விதிகள் என்ன சொல்கின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கிரிக்கெட் மட்டையின் அளவு குறித்து விதிகள் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன. கிரிக்கெட்டில், ஒரு பேட்டர் பயன்படுத்தும் பேட் எவ்வளவு அகலமாகவும் கனமாகவும் இருக்க வேண்டும் என்பது குறித்த விதிகள் தெளிவாக உள்ளன. கிரிக்கெட்டில் மட்டைக்கு இரண்டு பாகங்கள் உள்ளன, ஒன்று பிளேடு (Blade), மற்றொன்று கைப்பிடி (Handle). மட்டையின் கைப்பிடி கேன் (Cane- மூங்கில் போன்ற) அல்லது மரத்தால் செய்யப்பட வேண்டும். பேட்டர் தனது கைகளால் இறுக்கிப் பிடிக்க உதவும் வகையில், கைப்பிடியில் ஒரு 'கிரிப்' (Grip) பொருத்தலாம். பொதுவாக இந்த 'கிரிப்' ரப்பரால் ஆனதாக இருக்கும். மட்டையின் கைப்பிடியைத் தவிர மற்ற பகுதி பிளேடு என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பான விதிகளும் தெளிவாக உள்ளன. MCC விதிகளின்படி, அதாவது லண்டனின் மார்லுபன் கிரிக்கெட் கிளப் விதிகளின்படி, கைப்பிடி உட்பட மட்டையின் மொத்த நீளம் 38 அங்குலம் அல்லது 96.52 செ.மீ-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மட்டையின் பிளேட்டின் அதிகபட்ச அகலம் 4.25 அங்குலம் அதாவது 10.8 செ.மீ இருக்கலாம். இதன் தடிமன் (Depth) 2.64 அங்குலம் அதாவது 6.7 சென்டிமீட்டர் வரை இருக்கலாம். விளிம்புகள் 1.56 அங்குலம் அதாவது 4.0 சென்டிமீட்டர் வரை இருக்கலாம். இவை MCC- இன் விதிகள். ஐபிஎல்-இல் நடுவர்களுக்கு வழங்கப்படும் முக்கோண ஸ்கேலில், ஒரு மட்டையின் முறையான அளவுகள் அச்சிடப்பட்டுள்ளன. மட்டை 2.68 அங்குல தடிமனும், 4.33 அங்குல அகலமும், விளிம்புகள் 1.61 அங்குலமும் இருக்க வேண்டும். மட்டையின் கீழ் பகுதி, அதாவது வளைந்த பகுதி (Curve) 0.20 அங்குலம் வரை இருக்கலாம். ஐபிஎல் போட்டிகளில், மட்டைகளை அளவிடுவதற்கு இந்த தரநிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு மட்டை இந்த தரத்தை பூர்த்தி செய்வது கட்டாயமாகும். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் பயன்படுத்தப்படும் மட்டைகளின் அளவு குறித்து கேள்விகள் எழுந்துவரும் நிலையில், மட்டைகளை அளவிடுவதற்காக நடுவர்கள் பரிசோதனை செய்யும் முறையை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது. தோல்வியின் பிடியில் இருந்த மும்பையை காப்பாற்றிய அபூர்வ நிகழ்வு - அந்த 3 பந்துகளில் என்ன நடந்தது?14 ஏப்ரல் 2025 20 ஓவர் போட்டிகளில் கோலியின் 100 வது அரை சதம் - வெற்றிப்பாதைக்கு திரும்பிய பெங்களூரு13 ஏப்ரல் 2025 போட்டியின் போது நடந்த சோதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மைதானத்தில் ஹர்திக் பாண்டியா உட்பட பல கிரிக்கெட் வீரர்களின் பேட்களை நடுவர்கள் சரிபார்த்துள்ளனர் (கோப்புப்படம்) இந்த ஐபிஎல் சீசனுக்கு முன்பு, போட்டி நடக்கும் நாளில் மட்டைகளை சோதனை செய்யும் வழக்கம் இல்லை. அதிகாரிகள் போட்டிக்கு ஒரு நாள் முன்பு மட்டைகளை சோதித்துப் பார்ப்பார்கள். ஆனால் இந்த முறையில் ஒரு சிக்கல் இருந்தது, அதாவது பேட்டர் போட்டி நடைபெறும் நாளில் மற்றொரு மட்டையுடன் மைதானத்திற்குள் நுழைய முடியும். கிரிக்கெட்டில், பல பேட்டர்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அகலமான அல்லது தடிமனான மட்டையுடன் விளையாடியுள்ளனர். மட்டையின் அடிப்பகுதியில் ஒரு முக்கிய இடம் உள்ளது, அதன் மூலம் தான் பேட்ஸ்மேன்கள் தங்களது பெரும்பாலான சிறந்த ஷாட்களை அடிப்பார்கள். அந்தப் பகுதி மேல் பகுதியை விட கனமாகவோ அல்லது அகலமாகவோ இருந்தால், மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ட்ரோக் அல்லது ஷாட்களை அடிக்க முடியும். அதிரடியாக பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்கள் அகலமான விளிம்புகளைக் கொண்ட மட்டைகளை விரும்புகிறார்கள். பெரும்பாலும் இதுபோன்ற சூழ்நிலையில், பந்து எதிர்பார்த்த வகையில் பேட்டில் படவில்லை என்றாலும் கூட அல்லது பந்து பேட்டின் விளிம்பில் பட்டாலும் கூட அது பவுண்டரியை தொடுகிறது. இருப்பினும், இப்போது மட்டைகளை அதிகமாகக் கண்காணிப்பதால், எந்தவொரு பேட்ஸ்மேனும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட பெரிய அல்லது அகலமான மட்டையுடன் மைதானத்திற்குள் நுழைய மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம். நடப்பு சீசனில் போட்டி நடக்கும் போது, ஹர்திக் பாண்டியா, ஷிம்ரான் ஹெட்மயர், நிதேஷ் ராணா மற்றும் பில் சால்ட் உள்ளிட்ட பல பேட்ஸ்மேன்களின் பேட்களை நடுவர்கள் சோதனை செய்துள்ளனர். மைதானத்தில் மட்டைகளை சோதனை செய்வது ஆட்டத்தை சீர்குலைக்கக் கூடும் என்ற அச்சமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் பேட் அளவு தொடர்பான விதிகளை பேட்ஸ்மேன்கள் யாராவது மீறியுள்ளனரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cwy7ndy4e47o
-
வடக்கு கிழக்கில் சைவமக்கள் வழிபாடு செய்த புராதன இடங்கள் ஆலயங்களை விடுவிக்கவேண்டும் - அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டுகோள்
Published By: VISHNU 16 APR, 2025 | 06:16 PM யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி கீரிமலை சடையம்மா மடம் ஆதிச்சிவன் கோவிலிருந்த நிலம், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் பாவனையிலுள்ள சுக்கிரவார சத்திர மடத்துநிலம் என்பவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்டகாலமாக சைவமக்கள் வழிபாடு செய்த புராதன இடங்கள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இன்றும் விடுவிக்கப்படாமல் உள்ளன. தாங்கள் இவற்றை விடுவிப்பதில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்போடு ஜனாதிபதியிடம் வேண்டுகிறோம். மேலும் பொதுமக்களின் காணிகளில் வடக்கு கிழக்கில் படையினர் தொடர்ந்து தங்கி உள்ளனர். தாங்கள் அவ்விடயத்தில் அக்கறை கொண்டு பொதுமக்களின் நிலங்களை விடுவிக்க வேண்டும். பாடல் பெற்ற தலமாகிய திருக்கோணேஸ்வரர் திருத்தலத்திற்கு அருகாமையில் பக்தர்களுக்கு இடையூறாக கோயிலுக்குச் செல்லும் பாதையில் பெட்டிக்கடைகள் அமைக்கப்பட்டு கோயில் புனிதத்தை தொடர்ந்து கெடுத்து வருகிறார்கள். இவ்விடயம் தொடர்பாக சென்ற வருடம் நல்லை ஆதீனத்துக்கு தாங்கள் வருகை தந்தபோது எடுத்துரைத்தோம். தயவுசெய்து வரலாற்றுப் பெருமைமிக்க திருக்கோணேஸ்வர திருத்தல சுற்றாடலை பேணுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சைவ மக்கள் சார்பில் வேண்டுகிறோம். தாங்கள் பதவி ஏற்றதும் நீண்டகாலமாக உள்ள தமிழர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைப்பேன் என கூறி வந்துள்ளீர்கள். நிரந்தரமான பூரண உரிமைகள் உள்ளடக்கிய தீர்வை வழங்கி எம்மினத்தின் நீண்ட காலப் பிரச்சினையை தீர்த்து வைக்க முன்வாருங்கள் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/212160
-
அமெரிக்கா - இரான் அணுசக்தி பேச்சுவார்த்தையில் இஸ்ரேலுக்கு உள்ள மிகப்பெரிய அச்சம் என்ன?
பட மூலாதாரம்,AP கட்டுரை தகவல் எழுதியவர், ரஃபி பெர்க் பதவி, பிபிசி செய்திகள் 15 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 16 ஏப்ரல் 2025 இரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டம் தொடர்பாக புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அமெரிக்காவும் இரானும் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 19) முதல் பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளன. 2018 ஆம் ஆண்டு இரான் மற்றும் உலக வல்லரசு நாடுகள் இடையிலான முந்தைய அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார் டொனால்ட் டிரம்ப். மேலும் அந்நாடுகள் மீது பொருளாதார தடைகளை அமல்படுத்தினார். இது இரானை கோபப்படுத்தியது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை என்றால் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க ஏன் அனுமதியில்லை? இரான் தனது அணுசக்தி திட்டங்கள் சிவில் நோக்கங்களுக்காக மட்டுமே என்று கூறுகிறது. அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிக்கவில்லை என்று அந்நாடு கூறுகிறது. ஆனால் பல்வேறு நாடுகளும் உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி ஏஜென்சியும் (IAEA) இதில் உறுதியாக இல்லை. 2002 ஆம் ஆண்டு இரானில் ரகசிய அணுசக்தி நிலையங்கள் இருப்பது கண்டறியப்பட்டபோது, அந்நாட்டின் நோக்கங்கள் குறித்த சந்தேகங்கள் எழுந்தன. இதன் மூலம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை (NPT) இரான் மீறியது. இந்த ஒப்பந்தத்தில் இரான் உள்பட பல உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் மூலம் உலக நாடுகள் மருத்துவம், விவசாயம் மற்றும் எரிசக்தி போன்ற ராணுவம் அல்லாத தேவைக்காக அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதிக்கிறது. ஆனால், இந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்களை உருவாக்குவதை அனுமதிக்காது. இரானின் அணுசக்தி திட்டம் எவ்வாறு மேம்பட்டது? 2018 ஆம் ஆண்டில் கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) என்று அழைக்கப்படும் தற்போதைய அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதிலிருந்து, மீண்டும் பொருளாதாரத் தடைகளை அறிமுகப்படுத்துவதற்கான முடிவிற்கு பழிவாங்கும் விதமாக இரான் முக்கிய வாக்குறுதிகளை மீறியுள்ளது. யுரேனியத்தை செறிவூட்ட ஆயிரக்கணக்கான மேம்பட்ட சென்ட்ரிஃபூக்ஸ் எனப்படும் சுத்திகரிப்பு இயந்திரங்களை இரான் நிறுவியுள்ளது. இவை கூட்டு விரிவான செயல் திட்டத்தால் தடை செய்யப்பட்டவை. "அணு ஆயுதங்களுக்கு 90% தூய்மைப்படுத்தப்பட்ட யுரேனியம் தேவைப்படுகிறது. கூட்டு விரிவான செயல் திட்டத்தின்படி, இரான் 3.67% வரை தூய்மைப்படுத்தப்பட்ட 300 கிலோ யுரேனியத்தை மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது. இது பொது அணுசக்தி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்கு போதுமானது, இந்த அளவு அணு ஆயுதங்கள் தயாரிக்க போதுமானதல்ல ஆனால் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இரானிடம் சுமார் 275 கிலோகிராம் யுரேனியத்தை 60% தூய்மைக்கு செறிவூட்டியுள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சி தெரிவித்தது. இரான் இன்னும் அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டினால், கோட்பாட்டளவில் சுமார் அரை டஜன் ஆயுதங்களை உருவாக்க இது போதுமானது ராஜமன்னார் குழு: மத்திய அரசுக்கு தலைவலி கொடுக்கும் மாநில சுயாட்சி பரிந்துரைகள் என்ன?15 ஏப்ரல் 2025 சரியாக படிக்கவில்லை எனில் பள்ளியை விட்டு நீக்கலாமா? - இரண்டாம் வகுப்பு குழந்தைக்கு நடந்தது என்ன?15 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஏன் வெளியேறியது? 2010 ஆம் ஆண்டு முதல் இரான் தனது அணுசக்தி திட்டத்தை ஒரு அணுகுண்டை உருவாக்கும் நோக்கத்திற்காக பயன்படுத்துவதாக சந்தேகித்ததால், அந்நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இந்த பொருளாதார தடைகளால் இரான் சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விற்பனை செய்வது நின்றது. அத்துடன் அந்நாட்டின் 100 பில்லியன் டாலர் வெளிநாட்டு சொத்துகள் முடங்கி போயின. இதனால் இரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இரான் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது, இது பணவீக்கம் அதிகரிக்க வழிவகுத்தது. 2015 ஆம் ஆண்டில் இரான் மற்றும் உலகின் ஆறு வல்லரசு நாடுகள் (அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரிட்டன்) பல வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) எனப்படும் ஒரு உடன்பாட்டிற்கு வந்தன. இரானின் அணுசக்தி திட்டத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன், சர்வதேச அணுசக்தி ஏஜென்சிக்கு இரானின் அனைத்து அணுசக்தி நிலையங்களை அணுகவும், சந்தேகத்திற்குரிய இடங்களை ஆய்வு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. இதற்குப் பதிலாக, இரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்க ஒப்புக்கொண்டன. இந்த கூட்டு விரிவான செயல் திட்டம் உடன்படிக்கை 15 ஆண்டுகள் வரை நீடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டது, அதன் பிறகு இந்த கட்டுப்பாடுகள் காலாவதியாகிவிடும். அமெரிக்கா, ரஷ்யா வரிசையில் இந்தியாவும் லேசர் ஆயுதம் தயாரிப்பு - எவ்வாறு செயல்படும்?3 மணி நேரங்களுக்கு முன்னர் டைப்-5 நீரிழிவு என்ற புதிய வகை நீரிழிவு நோய் யாருக்கெல்லாம் வரக் கூடும்?6 மணி நேரங்களுக்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபோது, ஒப்பந்தத்தின் முக்கிய தூணாக இருந்த அமெரிக்காவை ஒப்பந்தத்திலிருந்து விலக்கினார். அவர் இந்த ஒப்பந்தத்தை மோசமான ஒன்று என்று கூறினார். ஏனெனில் அது நிரந்தரமானது அல்ல, மேலும் இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் உள்ளிட்ட பிற விஷயங்களை அது கருத்தில் கொள்ளவில்லை. புதிய மற்றும் விரிவான ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த இரானை கட்டாயப்படுத்தும் "அதிகபட்ச அழுத்த" பிரசாரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கத் தடைகளை டிரம்ப் மீண்டும் விதித்தார். இஸ்ரேல் போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகள் இந்த ஒப்பந்தத்தை விரும்பவில்லை, அதனால் டிரம்ப் இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். இரான் ரகசிய ஆயுதத் திட்டத்தை இன்னும் தொடர்கிறது என்றும், பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் பில்லியன் கணக்கான டாலர்களை இரான் தனது ராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்த பயன்படுத்தும் என்றும் இஸ்ரேல் எச்சரித்தது. அமெரிக்கா விரும்புவது என்ன? பட மூலாதாரம்,REUTERS / GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனேயி இரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்த டிரம்பின் அறிவிப்பு இஸ்ரேலை ஆச்சரியப்படுத்தியது. கூட்டு விரிவான செயல் திட்டத்தை விட "சிறந்த" ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போவதாக அவர் நீண்ட காலமாக கூறி வந்தார். இருப்பினும் இதுவரை இரான் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதை நிராகரித்துள்ளது. இரான் ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படியவில்லை என்றால் அந்நாட்டின் மீது குண்டு வீசப்படும் என்று டிரம்ப் முன்னர் எச்சரித்திருந்தார். இரானின் அணுசக்தி திட்டத்தை "முழுமையாகக் கலைக்க" டிரம்ப் விரும்புவதாக அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் கூறியுள்ளார். இரானின் அணு செறிவூட்டல் என்பதை ஆயுதமயமாக்கல் மற்றும் மூலோபாய ஏவுகணைத் திட்டம் என்று கருத வேண்டும் என அவர் குறிப்பிட்டார். டொனால்ட் டிரம்ப் "நேரடி பேச்சுவார்த்தைகள்" நடைபெறும் என்று கூறியிருந்தாலும், இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி ஓமனில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மறைமுகமாகவே இருக்கும் என்று கூறினார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த இரான் தயாராக இருப்பதாகவும், ஆனால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படாது என்பதை டிரம்ப் முதலில் உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இளநீருக்குள் தண்ணீர் வருவது எப்படி? ஆச்சர்யம் தரும் தென்னையின் செயல்முறை2 மணி நேரங்களுக்கு முன்னர் 10 நிமிடங்களில் வீட்டிற்கே டெலிவரி: ஆன்லைன் செயலிகளால் மளிகைக் கடைகள் காலியாகிறதா?15 ஏப்ரல் 2025 இஸ்ரேலுக்கு உள்ள மிகப்பெரிய அச்சம் என்ன? டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை முழுமையாகக் கைவிடும் ஒப்பந்தம் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று கூறினார். "நாங்கள் உள்ளே நுழைந்து, அமெரிக்காவின் மேற்பார்வை மற்றும் செயல்பாட்டின் கீழ், அணு உலைகளை வெடித்து, அனைத்து உபகரணங்களையும் அழிப்போம்", என்றும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேலின் மிகப்பெரிய அச்சம் என்னவென்றால், டிரம்ப் இரான் முழுமையாக சரணடைவதற்கு குறைவான ஒரு சமரசத்தை ஏற்றுக்கொண்டு, அதை ஒரு இராஜதந்திர வெற்றியாக முன்வைக்கக்கூடும். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திடாத இஸ்ரேல், அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக கருதப்படுகிறது. இதனை இஸ்ரேல் உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக்கொள்ளாத அணு ஆயுதம் வைத்திருக்கும் இரான் இஸ்ரேலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று இஸ்ரேல் நம்புகிறது. டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய கடைசி நிமிடங்களில் உள்ளே என்ன நடந்தது? புதிய தகவல்15 ஏப்ரல் 2025 தோனி புதிய சாதனை: தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டி சிஎஸ்கே அணிக்கு ஏற்றம் தந்த 'ஆட்டநாயகன்'15 ஏப்ரல் 2025 அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானை தாக்க முடியுமா? அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானின் அணுசக்தி உட்கட்டமைப்பைத் தாக்கும் ராணுவத் திறன்களை வைத்துள்ளன. ஆனால் அத்தகைய நடவடிக்கை சிக்கலானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும், நிச்சயமற்ற விளைவைக் கொண்டிருக்கும். முக்கிய அணுசக்தி தளங்கள் ஆழமாக நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளன, இவற்றை மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளால் தகர்த்து மட்டுமே அணுக முடியும். அமெரிக்கா இந்த வெடிகுண்டுகளை வைத்திருந்தாலும், இஸ்ரேலிடம் இந்த குண்டுகள் இருப்பதாக தெரியவில்லை. இரான் தன்னை நிச்சயமாக தற்காத்துக் கொள்ளும், இதில் அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க சொத்துக்களை தாக்குவதும், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவதும் அடங்கும். இத்தகைய நடவடிக்கைகளை சமாளிக்க, அமெரிக்கா வளைகுடாவில் உள்ள தனது தளங்களையும், விமானம் தாங்கும் போர்க் கப்பல்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். "ஆனால் கத்தார் போன்ற நாடுகளில், அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படைத் தளம் இருந்தாலும், அந்நாடுகளால் பதிலடி தாக்குதல்களுக்கு பயந்து இரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு உதவ வராமல் போகலாம். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdde3pgd8vlo
-
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – கள ஆய்வில் ஈடுப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்!
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க முழுமூச்சுடன் செயற்படும் சனத் ஜயசூரிய Published By: VISHNU 16 APR, 2025 | 02:15 AM (ரொபட் அன்டனி) யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நாங்கள் அமைத்தே தீருவோம். இதனை நிர்மாணிப்பதற்கான உதவிகளை இந்தியாவிடம் உத்தியோகப்பூர்வமாக கோருவதற்கான கடிதத்தை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் அணித்தலைவருமான சனத் ஜயசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாண மக்கள் இவ்வாறு சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்று உருவாக்கப்படுவது தொடர்பில் மிக்க மகிழ்ச்சியை என்னிடம் தெரிவித்தனர். எனவே இதற்காக நாம் சகல முயற்சிகளையும் எடுப்போம் என்றும் சனத் ஜயசூரிய குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பான நிலைமைகளை ஆராய்வதற்கு கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரிகளுடன் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியையும் சனத் ஜயசூரிய பார்வையிட்டார். இது தொடர்பில் கேசரியுடன் கருத்து பகிர்கையிலேயே முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் சனத் ஜயசூரிய மேற்கண்ட விடயங்களை சுட்டிக்காட்டினார். ‘‘யாழ்ப்பாணத்துக்கு நான் வியாழக்கிழமை விஜயம் செய்து அங்கு மக்களுடன் கலந்துரையாடினேன். யாழ். மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் என்னுடன் உரையாடினர். கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். முக்கியமாக யாழில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் யாழ். மக்கள் என்னிடம் மிக்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விளையாட்டுத்துறை அமைச்சின் பிரதிநிதிகளுடன் இணைந்து நான் தற்போது இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியைப் பார்வையிட்டேன். யாழில் நாங்கள் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை எப்படியாவது அமைப்போம். இதற்காக முழுமூச்சுடன் செயற்படுவோம்.’’ இவ்வாறு குறிப்பிட்டார் சனத் ஜயசூரிய. அண்மையில் இலங்கைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விஜயம் செய்த போது 96ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணி வீரர்களை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அந்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட சனத் ஜயசூரிய நெருக்கடி நேரத்தின் போது இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தமை அவதானத்தைப் பெற்றதாக அமைந்தது. இது தொடர்பில் விரைவில் உத்தியோகப்பூர்வமாக கடிதமொன்றை இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளதாக சனத் ஜயசூரிய குறிப்பிட்டார். ‘‘இந்தியப் பிரதமரை சந்தித்த போது நாங்கள் இந்தக் கோரிக்கையை. வாய்மூலம் விடுத்தோம். ஆனால் அது தொடர்பாக உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை விடுக்கவேண்டியுள்ளது. எனவே விரைவில் இதற்கான உத்தியோகப்பூர்வமான கடிதம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படும்.’’ என்றும் சனத் ஜயசூரிய சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/212064
-
யாழ். குருநகர் கடற்கரையில் அதிரடியாக கைப்பற்றப்பட்ட துப்பாக்கி
யாழ்ப்பாணத்தில் (Jaffna) கடற்கரைப் பகுதி ஒன்றில் வைத்து ரி 56 ரக துப்பாக்கியொன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்று (15) இரவு குறித்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதம் மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பாவிக்க கூடிய நிலையில் இருப்பதாக காவல்துறையினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/gun-seized-by-police-at-guru-nagar-beach-jaffna-1744775933#google_vignette