ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!
Everything posted by ஏராளன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
INNINGS BREAK 8th Match (N), Chennai, March 28, 2025, Indian Premier League CSK chose to field Royal Challengers Bengaluru (20 ov) 196/7 Current RR: 9.80 • Last 5 ov (RR): 58/4 (11.60) Chennai Super Kings Win Probability:RCB 74.99% • CSK 25.01%
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
SRH-ஐ சிதைத்த ஷர்துலின் விஸ்வரூபம் - லக்னௌவின் ஆணிவேராக அமைந்த பூரன், மார்ஷ் ஜோடி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஹைதரபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 7வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது. 191 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 23 பந்துகள் மீதம் இருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஹைதராபாத் மைதானத்தில் 190 ரன்கள் சேர்த்தால்கூட டிஃபென்ட் செய்ய முடியாது என்பதை நேற்றைய ஆட்டம் உணர்த்திவிட்டது. கடந்த சீசனில் லக்னெள சேர்த்த 165 ரன்களை ஹெட், அபிஷேக் இருவரும் 9.5 ஓவர்களில் சேஸ் செய்து அவமானப்படுத்தியதற்கு பதிலடி கொடுத்தது லக்னெள அணி. லக்னெள அணி இந்த சீசனில் முதல் வெற்றியைப் பெற்று 2 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டி 0.963 என்று 2வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. லக்னெள அணி ஒரு வெற்றி ஒரு தோல்வி பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட்டில் வலுப்படுத்திக் கொண்டுள்ளது. சிஎஸ்கே, பஞ்சாப், டெல்லி அணிகள் தலா ஒரு வெற்றியுடன் இருந்தாலும் நிகர ரன்ரேட் சரிவால் பின்தங்கியுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பாலம் மீண்டும் திறக்க வித்திட்ட காதல் ஜோடியின் மரணம்3 மணி நேரங்களுக்கு முன்னர் மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது?23 மார்ச் 2025 விலை போகாத வீரர் விஸ்வரூபம் பட மூலாதாரம்,GETTY IMAGES லக்னெள அணியின் வெற்றிக்கு 3 பேரை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர், பேட்டிங்கில் நிகோலஸ் பூரன், மிட்ஷெல் மார்ஷ் ஆகிய மூவரும்தான் லக்னெள வெற்றிக்கு மூலதாராமாக இருந்தவர்கள். அதிலும் ஐபிஎல் டி20 ஏலத்தில் விலை போகாத விரக்தியில் இங்கிலாந்தில் கவுண்டி தொடர்களில் விளையாட ஷர்துல் ஆயத்தமானார். காயம் காரணமாக மாற்று வீரர் தேவை என்றபோது ஷர்துல் தாக்கூரை லக்னெள வாங்கியது. தனது திறமையை எந்த அணியினரும் மதிக்கவில்லை என்ற ஆதங்கத்தை ஒவ்வொரு போட்டியிலும் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் வெளிப்படுத்திச் சிறப்பாக ஆடி வருகிறார். முதல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த சீசனில் முன்னணி பந்துவீச்சாளர்கள் பலர் இருந்தபோதும் விலை போகாத வீரராக ஒதுக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி பர்பிள் தொப்பியுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்றார். எம்புரான் விமர்சனம்: லூசிஃபர் அளவுக்கு அழுத்தமான படமாக இருந்ததா?4 மணி நேரங்களுக்கு முன்னர் தங்க நகைகளை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் துருப் பிடிக்குமா?27 மார்ச் 2025 வெற்றியை பெரிதாக எடுக்கவில்லை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிகோலஸ் பூரன், மார்ஷ் இருவரும் சேர்ந்து 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் வெற்றிக்குப்பின் லக்னெள கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில், "உண்மையாகவே பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. அணியாக சிறப்பாகச் செயல்பட்டோம். வெற்றி பெற்றவுடன் உயரத்தில் பறக்கவும் இல்லை. தோற்றவுடன் நம்பிக்கை இழக்கவும் இல்லை. அணியாக கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. எங்களால் கட்டுப்படுத்தக்கூடிய அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்தினோம். ஆவேஷ், ஷர்துல் சிறப்பாகப் பந்துவீசினர். பூரனுக்கு முழு சுதந்திரம் அளித்துவிட்டோம். அந்தச் சுதந்திரம்தான் வெற்றியைக் கொடுத்துள்ளது. ஒவ்வொருவரும் சரியான திட்டமிடலுடன் வந்தோம், பயிற்சி எடுத்தோம், பின்னர் அதைச் செயல்படுத்தினோம்," என்று தெரிவித்தார். ரிஷப் பந்தை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 27 கோடிக்கு லக்னெள அணி வாங்கியது. முதல் வெற்றி கிடைக்காமலும், தன்னுடைய விலை அழுத்தத்தாலும், ரிஷப் பந்த் கடும் நெருக்கடியில் இருந்தார். இந்த வெற்றியால் ரிஷப் பந்த் நிம்மதி அடைந்தார் என்பதோடு, அணியின் நிர்வாகிகள் வெற்றிக்குப் பின் ஓடி வந்து ரிஷப் பந்தை கட்டியணைத்துப் பாராட்டியதன் மூலம் லக்னௌ அணிக்கு இந்த வெற்றியின் அவசியத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. தோனியின் வியூகத்தை உடைப்பாரா கோலி? கொல்கத்தாவை எளிதாக ஜெயிக்க வைத்த ராஜஸ்தான் அணி - கேப்டன் செய்த அந்த மிகப்பெரிய தவறு என்ன? ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன? ஒரேபோட்டியில் குவிக்கப்பட்ட 528 ரன்கள் ! இஷான் கிஷன் சதத்துடன் ஹைதராபாத் அமர்க்கள ஆரம்பம் சன்ரைசர்ஸை சிதைத்த வீரர்கள் நிகோலஸ் பூரனின் ஆட்டம் நேற்று மிரள வைத்துவிட்டது. இந்த ஐபிஎல் சீசனில் அதிவேகமாக 18 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்த வீரர் என்ற சாதனையை பூரன் படைத்தார். பூரன் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதற்கு அடுத்த 8 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது கணக்கில் 6 சிக்ஸர், 6 பவுண்டரி என 269 ஸ்ட்ரைக் ரேட்டில் ருத்ரதாண்டவமாடினார். அதேபோல கடந்த சீசனில் டெல்லி அணிக்கு சரியாக ஆடாத மார்ஷ் நேற்று சன்ரைசர்ஸ் பந்துவீச்சை அநாயாசமாகக் கையாண்டார். 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 31 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த இருவரும் சேர்த்த ரன்கள்தான் லக்னெள வெற்றிக்கு ஆணிவேராக அமைந்தது. குழம்பிய கம்மின்ஸ் நிகோலஸ் பூரன், மார்ஷ் இருவரும் சேர்ந்து சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தபோது, கேப்டன் கம்மின்ஸ் எவ்வாறு இருவரையும் பிரிப்பது எனத் தெரியாமல் குழம்பினார். இரண்டாவது ஓவரில் ஜோடி சேர்ந்த இருவரும் 9வது ஓவருக்குள் 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துவிட்டனர். பவர்பளே ஓவர்களில் 77 ரன்களும், 7.3 ஓவர்களில் 100 ரன்களையும் லக்னெள எட்டியது. நிகோலஸ் பூரன் 70 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தபோது லக்னெள வெற்றிக்கு 68 பந்துகளில் 71 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், லக்னெள அணி சிறிதுகூட பதற்றப்படாமல் இலக்கைத் துரத்தியது. டேவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்த அப்துல் சமது தனது பங்கிற்கு 8 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 22 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கினார். பூரன், மார்ஷ் இருவரையும் பிரிக்கவும், லக்னெள பேட்டர்களை ஆட்டமிழக்கச் செய்யவும் கம்மின்ஸ் நேற்று 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் அனைவரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் சராசரியாக ஓவருக்கு 12 என்ற ரன்ரேட்டில் ரன்களை வாரி வழங்கினர். யஷ்வந்த் வர்மா: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக சர்ச்சையில் சிக்கிய இவரின் 5 முக்கிய தீர்ப்புகள்27 மார்ச் 2025 பிரிட்டனில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த இரு பெண் உளவாளிகளை கண்டுபிடித்த பிபிசி27 மார்ச் 2025 இந்திரா காந்தி, ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு கடுமையாக எதிர்த்தது ஏன்?27 மார்ச் 2025 சன்ரைசர்ஸை கட்டம் கட்டிய லக்னெள பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிச்செல் மார்ஷின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு கொண்டாடிய சன்ரைசர்ஸ் அணி சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்த தொடக்கத்திலயே விக்கெட் வீழ்த்துவதுதான் சரியானது என்பதை அறிந்த லக்னெள அணி அதற்குரிய திட்டமிடலுடன் களமிறங்கியது. ஆஸ்திரேலிய பேட்டர் டிராவிஸ் ஹெட்டுக்கு வைடர் யார்கர்களையும், அபிஷேக் சர்மாவுக்கு ஷார்ட் பந்துகளையும் ஆயுதமாகப் பயன்படுத்தியது. ஷர்துல் தாக்கூர் வீசிய 2வது ஓவரிலேயே அதற்குரிய பலன் கிடைத்தது. அபிஷேக் ஷர்மா ஷார்ட் பந்தில் தூக்கி அடித்து 6 ரன்னில் பூரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் வந்த வேகத்தில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து டக்-அவுட்டில் விக்கெட்டை இழந்தார். டிராவிஸ் ஹெட்டுக்கும் குறிவைக்கப்பட்டது, ரவி பிஸ்னாய் பந்து வீச்சில் டிராவிஸ் ஹெட் அடித்த ஷாட்டில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை பூரன் தவறவிட்டார். ஆனால் ஹெட் 45 ரன்கள் சேர்த்திருந்தபோது, அவருக்கு வலுவான யார்கரை வீசி பிரின்ஸ் யாதவ் ஆட்டமிழக்கச் செய்தார். டாப் ஆர்டர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆயுதங்களையும், திட்டங்களையும் லக்னெள வைத்திருந்தது. கிளாசனுக்கு நேர்ந்த கொடுமை கிளாசன் களத்துக்கு வந்தவுடன் சிக்ஸர், பவுண்டரி என விளாசி 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். 11வது ஓவரை பிரின்ஸ் யாதவ் வீசினார். நிதிஷ் ரெட்டி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க பிரின்ஸ் முயன்றபோது அவரின் கைகளில் பட்டு பந்து நான்-ஸ்ட்ரைக்கர் ஸ்டெம்பில் பட்டது. அந்த நேரத்தில் கிளாசன் க்ரீஸைவிட்டு வெளியே நின்றிருந்தால் பரிதாபமாக ரன்-அவுட்டாகி வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் நிதிஷ் ரெட்டியை 32 ரன்களில் ரவி பிஸ்னோய் வெளியேற்றினார். ஹமாஸுக்கு எதிராக காஸாவில் வீதிகளில் இறங்கிய மக்கள் - திடீர் போராட்டத்துக்கு என்ன காரணம்?27 மார்ச் 2025 மேட்ரிமோனி தளங்களில் மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழக்கும் நபர்கள் - சைபர் போலீஸ் எச்சரிக்கை27 மார்ச் 2025 மம்மூட்டிக்காக சபரிமலையில் பூஜை செய்த மோகன்லால்: சர்ச்சையானது ஏன்? - இன்றைய டாப் 5 செய்திகள்27 மார்ச் 2025 புதிய கண்டுபிடிப்பான அனிகேத் வர்மா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சன்ரைசர்ஸ் அணியை எப்படி வீழ்த்துவது என்று மற்ற அணிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் சன்ரைசர்ஸ் அணி, இளம் வீரர் அனிகேத் வர்மாவை தனது புதிய கண்டுபிடிப்பாகப் பிடித்துள்ளது. 21 வயதாகும் அனிகேத் வர்மா, 13 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து 36 ரன்கள் சேர்த்து பிஞ்ச் ஹிட்டராக மாறினார். இந்த ரன்களை அனிகேத் அடிக்காமல் இருந்திருந்தால், சன்ரைசர்ஸ் அணி 160 ரன்களில் சுருண்டிருக்கும் என்பதுதான் நிதர்சனம். அனிகேத் வர்மா ஆட்டமிழந்த பிறகு, பின்வரிசையில் வந்த பேட்டர்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கம்மின்ஸ் மட்டும் 3 சிக்ஸர்களுடன் 18 ரன்கள் சேர்த்தார். டெத் ஓவர்களையும் பயன்படுத்த சன்ரைசர்ஸ் அணியில் கடைசி வரிசையில் பேட்டர்கள் இல்லை. ஒட்டுமொத்தத்தில் சன்ரைசர்ஸ் அணியை எப்படி காலி செய்வது என்று மற்ற அணிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ். அதிரடி வீரர்களுக்கு யார்கர் ஆயுதம் என்பதை உணர்ந்து, நேற்று மட்டும் 16 ஓவர்களில் 14 யார்கர்களை லக்னெள பந்துவீச்சாளர்கள் வீசியுள்ளனர். அதிலும் பிரின்ஸ் யாதவ் தன்னுடைய 4 ஓவர்களிலும் யார்கர்களை திட்டமிட்டு வீசினார். ஒருதரப்பாக ஆட்டத்தை மாற்றிய பூரன் லக்னெள அணி 190 ரன்களை துரத்தியது. ஆனால் மார்க்ரம் தொடக்கத்திலேயே ஏமாற்றினார். அடுத்து வந்த பூரன், பவுண்டரியுடன் கணக்கையும், அதிரடியையும் தொடங்கினார். பூரன் இடதுகை சுழற்பந்துவீச்சுக்குத் திணறுவார் என்று அபிஷேக் சர்மாவை பந்துவீச கம்மின்ஸ் அழைத்தார். ஆனால், அபிஷேக் பந்துவீச்சைத் துவைத்து எடுத்த பூரன் சிக்ஸர், பவுண்டரி எனச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆடம் ஸம்பா பந்துவீச்சை விட்டு வைக்காத பூரன், 2 சிக்ஸர்களை விளாசினார். பூரன் சந்தித்த முதல் 20 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடங்கும். 18 பந்துகளில் பூரன் அரைசதத்தை எட்டினார். பூரன் அதிரடியாக ஆடியபோது மார்ஷ் சிறிது பொறுமை காத்து 22 பந்துகளில் 37 ரன்களுடன் இருந்தார். பூரன் ஆட்டமிழந்தவுடன் மார்ஷ் அதிரடியாக ஆடத் தொடங்கி, ஷமி பந்துவீச்சில் 2 சிக்ஸர்கள், கம்மின்ஸ் பந்துவீச்சில் 2 பவுண்டரி என விளாசி 29 பந்துகளில் அரைசதம் எட்டினார். கடைசி 11 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. ரிஷப் பந்த்(15), பதோனி (6) விரைவாக விக்கெட்டை இழந்த நிலையில், மில்லர், அப்துல் சமது வெற்றியை உறுதி செய்தனர். அதிலும் சன்ரைசர்ஸ் அணியில் கடந்த சீசனில் இருந்த இளம் வீரர் அப்துல் சமது 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 8 பந்துகளில் 22 ரன்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மில்லர் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cedld161z54o
-
வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைக்கக் கூடாது; சுரேஷ் பகிரங்க வேண்டுகோள்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைக்கக் கூடாது என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகப் பார்க்கப்படுகின்றது. அத்தகைய முக்கியத்தும் உள்ள இந்தத் தேர்தலை வெறுமனே உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனக் குறைத்து மதிப்பிட கூடாது. இந்தச் சபைகள் அனைத்தையும் கைப்பற்ற ஆளுங்கட்சியினர் முழு வேலையையும் செய்வார்கள். ஏனெனில், அவர்கள் வசம் நிதிப் பலம், ஆட் பலம், முப்படைப் பலம் என சகலதையும் பயன்படுத்து ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளையும் செய்வார்கள். இதற்கு மேலாக வேட்பாளர்கள் மட்டுமல்லாது கட்சிகளுக்கு எதிராகவும் இல்லாத பொல்லாத பல பிரச்சாரங்களை அவர்கள் செய்யக் கூடும். ஆகையினால் இவற்றையெல்லாம் உணர்ந்தவர்களாக முழு வீச்சுடன் உங்களது பிரச்சாரங்களை மேற்கொண்டு வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் தேர்தலில் சில சபைகளில் எங்களது வேட்புமனுக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு எதிராக நாங்கள் உயர்நீதிமன்றத்துக்குச் சென்று வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கிறோம். இன்னும் சில தினங்களில் சாதகமான தீர்ப்பு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அவ்வாறான தீர்ப்பு வந்த பின்னர் சகல இடங்களிலும் நாம் எமது பிரச்சார நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்போம். இதனூடாக எங்களது சங்கு கூட்டணியைப் பலப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதில் தவறிழைக்கக் கூடாது. குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றம் வேண்டும் என்று ஒரு பகுதியினர் விரும்பி வாக்களித்தனர். அதனூடாக முகம் தெரியாத மூன்று பேரைக் கொண்டு வந்தார்கள். அவர்களை நாடாளுமன்றமும் அனுப்பி வைத்தார்கள். அவ்வாறு திசைகாட்டியில் வென்ற மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை யாராவது பார்த்து இருக்கிறீர்களா என்றால் இல்லை. இப்படி முகம் தெரியாதவர்களையே வாக்களித்து அனுப்பியிருக்கின்ற நிலையில் தங்களுக்கு மக்கள் ஆதரவு பலம் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். அப்படியான மனோநிலையில் மக்கள் இல்லை என்பதை அவர்களுக்கு இந்தத் தேர்தலின் ஊடாகத் தெரியப்படுத்த வேண்டும். அப்படியாக இந்த அரச தரப்பினர் மீண்டும் ஒரு தடவை வெல்வார்களாக இருந்தால் தமிழ் மக்களின் இத்தனை அழிவுகள், போராட்டங்கள், தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போன சூழ்நிலையை ஏற்படுத்தும் நிலைமை ஏற்படலாம். ஆகவே, அரச தரப்பில் இருந்து அல்லது சிங்கள தரப்பில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்யக் கூடாது என்பதில் தெளிவாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். இந்த ஆட்சியாளர்களின் ஏமாற்று வித்தைகளுக்கு இடமளிக்காது அவர்களுக்கு நல்லதொரு பாடத்தைப் புகட்டும் வகையில் உங்களது செயற்பாடுகள் அமைய வேண்டும். இந்த ஆளுந்தரப்பினருக்கு எதிராகவே நீங்கள் முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டியதாக உள்ளது. கடந்த தேர்தல் போன்று இதிலும் தவறிழைத்தால் அது ஒட்டுமொத்த தமிழினத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. இன்றைக்கு அதிக பலத்துடன் ஆளும் தரப்பாக ஜே.வி.பி. உள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு வாக்களித்து மீண்டும் வரலாற்றுத் தவறைத் தமிழ் மக்கள் இழைக்கக் கூடாது. ஆகையினால், இந்தச் சிங்கள தேசிய கட்சிகளை விலக்கி வைத்துவிட்டு தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். மேலும் சுயேச்சையாகவும் ஒரு எம்.பி. வந்திருக்கின்றார். அவர் யார் என்பதும் இப்போது அவர் என்ன என்ன செய்து வருகின்றார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். குறிப்பாகச் சொல்வதானால் தமிழ் மக்களின் கௌரவத்தைப் பாதிக்கும் வகையில்தான் இந்த வைத்தியரின் நடவடிக்கைகள் இருக்கின்றன. இதேவேளை, இந்தத் தேர்தலில் யாரும் வெல்ல முடியாது என்றும், தேர்தல் முடிந்த பின்னர் கூட்டுக்களை அமைக்கலாம் என்றவாறாக சுமந்திரன் கூறுவார். ஆனால், சபைகளில் நாங்கள் பெரும்பான்மையை எடுக்க வேண்டும். இதனூடாக கூட்டுச் சேராமலும் ஆட்சியமைக்க முடியும். கூட்டுச் சேர்ந்தால் தான் ஆட்சி அமைக்கலாம் என்றில்லை. அதேநேரத்தில் யாருடன் கூட்டு என்று பலர் கேட்கலாம். உண்மையில் மக்களின் முழுமையான ஆதரவுடன் நாங்கள் வெல்வோமாக இருந்தால் யாருடனும் கூட்டுச் சேர வேண்டிய தேவை கிடையாது. எனவே, கடந்த தேர்தலில் இழைத்த தவறுகளை மறுபடியும் இழைக்காமல் தமிழ் மக்களின் போராட்டங்களும், தியாகங்களும் வீண்போகாத வகையில் சிந்தித்துச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/316619
-
யாழில் மாணவியை தடியால் அடித்த குற்றத்தில் ஆசிரியர் கைது
Published By: DIGITAL DESK 2 28 MAR, 2025 | 10:58 AM பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவிக்கே அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தரம் - 05 இல் கற்கும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை பாடசாலையில் , ஆசிரியரால் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. பரீட்சையின் பின்னர், வினாத்தாளை மாணவர்களிடையே பரிமாறி , அதனை மாணவர்களையே திருத்துமாறு ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். அதனை அடுத்து மாணவர்கள் தமக்குள் வினாத்தாளை பரிமாறி திருத்தும் போது, அடிவாங்கியதாக கூறப்படும் மாணவி , தனது வினாத்தாளை திருத்திய மாணவிக்கு , பிழையான விடைகளை சரியாக எழுதி திருத்துமாறு கூறியுள்ளார். அந்த மாணவியும் அதனை செய்துள்ளார். இதனை அவதானித்த ஆசிரியர் இரு மாணவிகளையும் அழைத்து , கடுமையாக எச்சரித்து , மாணவிகளை தடியால் அடித்து , தண்டனை வழங்கியுள்ளார். அதில் விடைகளை சரியாக எழுத கூறிய மாணவி வீட்டிற்கு சென்று ஆசிரியர் அடித்த விடயத்தை கூறிய போது, மாணவியின் தாயார் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்த போது , மாணவி சிகிச்சை பெறும் அளவுக்கு எதுவும் இல்லை என வைத்தியசாலையில் இருந்து மாணவியை அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாணவியின் தாயார் ஆசிரியருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் ஆசிரியரை விசாரணைக்கு அழைத்து விசாரணைகளின் பின்னர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு , ஆசிரியருக்கு ஆதரவாக பாடசலையின் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையம் முன்பு கூடியிருந்த நிலையில் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , ஆசிரியரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளோம். நீதிமன்றில் வந்து பார்க்குமாறு அறிவுறுத்திய பின்னர் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். https://www.virakesari.lk/article/210417
-
தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை மீதான வழக்கை தள்ளுபடி செய்தது கனடா உச்சநீதிமன்றம்
தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை மீதான வழக்கை தள்ளுபடி செய்தது கனடா உச்சநீதிமன்றம் - தமிழின அழிப்பிற்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கு வலுசேர்க்கும் - விஜய் தணிகாசலம் 28 MAR, 2025 | 10:25 AM சட்டமூலம் 104ஐ எதிர்த்து தமிழின அழிப்பு மறுப்பாளர்களால் கனடா மேன்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கனடா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதேவேளை இந்த தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது என தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இது கனடா வாழ்தமிழர்களுக்கு மட்டுமல்ல இனஅழிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீளமுனையும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கும் அவர்களின் தலைமுறையினருக்குமான கல்வி அறிவூட்டலுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஒவ்வொரு ஆண்டும் மே 12 முதல் 18 வரை ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு தொடர்பான அறிவு புகட்டல் வாரமாக அங்கீகரிக்கப்பட்டு பள்ளிகள் கல்வியாளர்கள் தமிழ் சமூகம் மற்றும் அனைத்து ஒன்ராறியோ மக்களும் தமிழின அழிப்பு பற்றி கற்றுக் கொள்ள இச்சட்டம் வழிமைக்கிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஒவ்வொரு ஆண்டும் மே 12 முதல் 18 வரை ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு தொடர்பான அறிவு புகட்டல் வாரமாக அங்கீகரிக்கப்பட்டு பள்ளிகள் கல்வியாளர்கள் தமிழ் சமூகம் மற்றும் அனைத்து ஒன்ராறியோ மக்களும் தமிழின அழிப்பு பற்றி கற்றுக் கொள்ள இச்சட்டம் வழிமைக்கிறது. இத்தருணத்தில் ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அவர்களுக்கும் எனது சக சட்டமன்ற உறுப்பனர்களுக்கும் சட்டமூலம் 104ஐ பாதுகாப்பதில் அயராது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளுக்கும் குறிப்பாக தமிழ் இளையோருக்கும் நான் மிகவும் நன்றியுடையவனாயுள்ளேன். கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது. https://www.virakesari.lk/article/210411
-
பூமிக்கு அடியில் ஏவுகணை நகரம் அமைத்த ஈரான்; வீடியோ வெளியீடு
பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை, ராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப், அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அணு ஆயுத உற்பத்தி பற்றிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வரும் ஈரான், ஒப்பந்தத்தை புதுப்பிக்க முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறியிருந்தது. இந்த நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்கும் விதமாக புதிய ஒப்பந்தத்தைக் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை நடத்த டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தி, ஈரானுக்கு கடிதம் எழுதியிருந்தார். ட்ரம்பின் இந்தக் கடிதத்திற்கு பதிலளித்திருந்த ஈரான் அரசு, “அமெரிக்கா உத்தரவுகளை வழங்குவதையும் அச்சுறுத்தல்களை விடுப்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” என பதிலடி கொடுத்திருந்தார். இதன்மூலம் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில் உறுதியாக உள்ளது. அதுமட்டுமின்றி, அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்பதை தெளிவுப்படுத்தி உள்ளது. என்றாலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இதுதொடர்பாக இரண்டு மாத கால அவகாசம் அளித்திருப்பதாகவும், பேச்சுவார்த்தையை மறுத்தால் கடுமையான தடைகள் மற்றும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை, ராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. ‘ஏவுகணை நகரம்’ தொடர்பான 85 வினாடிகள் ஒளிபரப்பாகும் அந்த வீடியோவில், அந்நாட்டின் ராணுவ பலத்தைக் காட்டுவதாக உள்ளது. உயர் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது ஹொசைன் பகேரி மற்றும் ஐஆர்ஜிசி விண்வெளிப் படைத் தலைவர் அமீர் அலி ஹாஜிசாதே ஆகியோர் கோட்டை வளாகத்தை சுற்றிப் பார்ப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது. மேலும் அதில், ஈரானின் மிகவும் அதிநவீன ஏவுகணைகள் காண்பிக்கப்படுகின்றன. அதாவது கெய்பர் ஷேகான், காதர்-எச், செஜில் மற்றும் பாவே லேண்ட் அட்டாக் குரூஸ் ஏவுகணைகள் காட்டப்படுகின்றன. தொடர்ந்து நீண்ட, திறந்த சுரங்கப்பாதைகள் மற்றும் பரந்த குகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வெடிமருந்துகளும் காட்டப்படுகின்றன. மேலும் அந்த வீடியோவில், ’இன்று தொடங்கினால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு, வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை உலகிற்கு அறிமுகப்படுத்துவோம்’ என்றும் ஈரான் கூறியுள்ளது. இந்த வீடியோ அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட ஈரானின் எதிரிகளாக கருதப்படும் நாடுகளுக்கு ஈரான் அரசாங்கம் வெளியிட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலுக்கு மத்தியில், ஈரான் அரசு வெளியிட்டுள்ள வீடியோ மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற ஏவுகணை நகரம் மற்றும் கடற்படை சுரங்கம் தொடர்பான வீடியோக்களை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/316587
-
தமிழக மீனவர் பிரச்சினை 1974-இல் சர்வதேச கடல் எல்லைக் கோடு வரையப்பட்டபோது தொடங்கியது : நாடாளுமன்றத்தில் இந்தியவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
28 MAR, 2025 | 10:11 AM புதுடெல்லி: இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படுவது குறித்து திமுக உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "இலங்கையில் இரண்டு சட்டங்கள் உள்ளன. 1996-ஆம் ஆண்டின் மீன்வள மற்றும் நீர்வாழ் வளச் சட்டம் மற்றும் 1979-ஆம் ஆண்டின் வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் மீன்வள ஒழுங்கு முறைச் சட்டம். இந்த இரண்டு சட்டங்களும் 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டன. இதனால் மிகவும் கடுமையான தண்டனைகள், அதிக அபராதங்கள் மற்றும் அதிக தடுப்புக்காவல் ஆகியவை விதிக்கப்படுகின்றன. படகு உரிமையாளர்கள், படகை இயக்குபவர்கள், மீண்டும் மீண்டும் குற்றமிழைப்பவர்கள் ஆகியோர்தான் பெரும்பாலும் இலங்கை சிறையில் கைதிகளாக இருக்கிறார்கள். இது தீர்வுக்கான முயற்சிகளை சிக்கலாக்குகிறது. நமது அரசு இந்தப் பிரச்சினையை பாரம்பரிய வழியில் பெற்றுள்ளது என்பதை சபை அறிந்திருக்கிறது. இந்தப் பிரச்சினை 1974-இல் சர்வதேச கடல் எல்லைக் கோடு வரையப்பட்டபோது தொடங்கியது. அதைத் தொடர்ந்து 1976-இல் மீன்பிடி அதிகார வரம்பை வரையறுக்கும் கடிதப் பரிமாற்றங்கள் நடந்தன. இந்த முடிவுகள்தான் நிலைமைக்கான மூல காரணம். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மீனவர்கள் புவியியல் அருகாமை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களாக இருப்பது இயல்பானது. நேற்று வரை, இலங்கை காவலில் 86 இந்திய மீனவர்கள் இருந்தனர். இன்று, மேலும் ஒரு இழுவை படகும், 11 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, மொத்தம், 97 பேர் காவலில் உள்ளனர். இவர்களில், 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கின்றனர், இன்று 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார். இதற்கிடையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஏழு மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இன்று சென்னை விமான நிலையத்தை அடைந்தனர். இவர்களில் 4 பேர் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதியும், 3 பேர் பிப்ரவரி 22-ஆம் தேதியும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/210409
-
பாடசாலை மாணவர்கள் தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள்; வைத்தியர் நிபுணர்
ஸ்மார்ட் போன்களின் நீலத்திரையை இரவில் மெல்லிய மஞ்சள் திரையாக மாற்றி பாவிக்கவேண்டும்.
-
காசாவில் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்துகின்றோம் - சிபிஎஸ் நியுசிற்கு இஸ்ரேலிய இராணுவவீரர் தெரிவிப்பு
காசாவில் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்துகின்றோம், காரணம் இல்லாமல் கட்டிடங்களை தீயிட்டு எரிக்கின்றோம் - சிபிஎஸ் நியுசிற்கு இஸ்ரேலிய இராணுவவீரர் தெரிவிப்பு Published By: RAJEEBAN 27 MAR, 2025 | 01:44 PM கட்டிடங்களிற்குள் வெடிபொருட்கள் கண்ணிவெடிகள் உள்ளனவா என பார்ப்பதற்கான காசாவில் இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீனியர்களையே பயன்படுத்துகின்றனர் என சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவவீரர் ஒருவர் காசாவில் பொதுமக்களை தாங்கள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். காசாவிற்கு மீண்டும் யுத்தம் வந்துள்ளது,மார்ச் 17ம் திகதி யுத்தநிறுத்தத்தை கைவிட்டது முதல் இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீன பகுதி மீது உயிரிழப்பை ஏற்படுத்தும் கடும் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்,ஹமாசின் இலக்குகளை தாக்குவதாக அது தெரிவிக்கின்றது. இந்த தாக்குதல்கள் காரணமாக காசாவில்இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐம்பதினாயிரத்தை கடந்துள்ளது,என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இ;ஸ்ரேலின் இராணுவதந்திரோபாயங்கள்குறித்து கேள்வி எழுப்பிய இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவருடன் சிபிஎஸ் சமீபத்தில் உரையாடியது.டொம்மி ,உண்மையான பெயரில்லை,தன்னை அடையாளம் காட்ட விரும்பாமல் சிபிஎஸ் உடன் பேசுவதற்கு இணங்கினார், காசாவிற்குள் போரிட்ட இவர், இஸ்ரேலிய படையினர் பயன்படுத்தியாக தெரிவித்த சில தந்திரோபாயங்கள் கேள்வியை எழுப்பகூடியவையாக காணப்பட்டன. 'நாங்கள் காரணம் இல்லாமல் கட்டிடங்களை தீயிட்டு எரித்தோம்,இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல்" என அவர் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்தார்.'நாங்கள் பாதுகாப்பிற்காக மனிதக்கேடயங்களை பயன்படுத்தினோம்" கட்டிடங்களிற்குள் உள்ள வெடிபொருட்களை தேடுவற்கு நாய்களிற்கு பதில் பொதுமக்களை பயன்படுத்துமாறு எனக்கு பொறுப்பாகயிருந்த அதிகாரி தெரிவித்தார் என டொம்மி குறிப்பிட்டார். 'அவர்கள் பாலஸ்தீனியர்கள் என தெரிவித்த அவர் கட்டிடங்கள் ஆபத்தானவையா என பார்ப்பதற்காக முதலில் அவர்களை அனுப்பினோம்,கண்ணிவெடிகள் உள்ளனவா என பார்ப்பதற்காக அவர்களை அனுப்பினோம் அவர்கள் அச்சத்தி;ல் நடுங்கினார்கள்" என அவர் தெரிவித்தார். நாங்கள் எங்கள் தளபதியிடம் சென்று இதனை நிறுத்துமாறு கேட்டோம், ஆனால் அவர் அதனை தொடருமாறு உத்தரவிட்டார் அது தற்போது கொள்கையாகவிட்டது என டொம்மி சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210332
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Sunrisers Hyderabad 190/9 Lucknow Super Giants (8.4/20 ov, T:191) 120/2 LSG need 71 runs in 68 balls. Current RR: 13.84 • Required RR: 6.26 • Last 5 ov (RR): 78/1 (15.60) Win Probability:LSG 94.26% • SRH 5.74
-
ஹமாஸுக்கு எதிராக காஸாவில் வீதிகளில் இறங்கிய மக்கள் - திடீர் போராட்டத்துக்கு என்ன காரணம்?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபௌலூஃப் & அலெக்ஸ் பாய்ட் பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலுடனான போர் தொடங்கியதிலிருந்து காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை எதிர்த்து மிகப்பெரிய அளவில் நடந்த போரட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஹமாஸ் அதிகாரத்தில் இருந்து வெளியேறக் கோரி மக்கள் வீதிகளில் இறங்கினர். துப்பாக்கி, தடி போன்றவற்றை ஏந்திக்கொண்டு முகமூடி அணிந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சிலர், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கலைத்து, அவர்களில் பலரைத் தாக்கினர். ஹமாஸை விமர்சிக்கும் ஆர்வலர்களால் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட வீடியோ பதிவுகளில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) அன்று வடக்கு காஸாவில் உள்ள பெய்ட் லாஹியாவின் தெருக்களில் "வெளியேறு, வெளியேறு, ஹமாஸ் வெளியேறு", என்று முழக்கமிட்டுக் கொண்டே இளைஞர்கள் அணிவகுத்துச் சென்றதை காட்டின. "சந்தேகத்துக்குரிய அரசியல் நோக்கங்களை" முன்னெடுப்பதாகவும், இஸ்ரேல் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை திசை திருப்ப இந்த போராட்டக் குழு முயற்சி செய்து வருவதாகவும் கூறி, ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் குழுவின் ஆதரவாளர்கள், இந்த போராட்டங்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டனர். மேலும், இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை 'துரோகிகள்' என்று குற்றம் சாட்டினர். மேட்ரிமோனி தளங்களில் மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழக்கும் நபர்கள் - சைபர் போலீஸ் எச்சரிக்கை27 மார்ச் 2025 இந்திரா காந்தி ஃபெரோஸை கரம்பிடிக்க கடும் எதிர்ப்பு எழுந்தது ஏன்? திருமணம் எப்படி நடந்தது?5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஏன் போராட்டம்? வடக்கு காஸாவில் நடைபெற்ற இந்த போராட்டங்கள், இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்திய மறுநாள் நடைபெற்றன. இதனால் பெய்ட் லாஹியாவின் இந்த தாக்குதல் பெய்ட் லாஹியா நகரின் பெரும்பகுதி மக்களை வெளியேற்ற இஸ்ரேலிய அரசாங்கம் முடிவு செய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகிய சுமார் இரண்டு மாதத்துக்குப் பிறகு காஸாவில் ராணுவ தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான அமெரிக்காவின் புதிய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலளித்த ஹமாஸ், ஜனவரி மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட அசல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடைப்பிடிக்க தவறியதாக குற்றம் சாட்டியுள்ளது. கடந்த மார்ச் 18 ஆம் தேதி அன்று வான்வழித் தாக்குதல்களுடன் இஸ்ரேல் மீண்டும் அதன் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதிலிருந்து, நூற்றுக்கணக்கான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸின் மூத்த அரசியல் தலைவர் ஹமாஸுடன் உடன்பாடு எட்டப்படாத நிலையில் முழுவீச்சில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய இந்திய மாணவி 'ரஞ்சனி ஸ்ரீநிவாசன்' யார்? பின்னணி தகவல்கள் காஸா குழந்தைகளுக்கு ஜோர்டானில் சிகிச்சை - திரும்பிச் செல்வது எப்போது? போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுவது என்ன? போராட்டக்காரர்களில் ஒருவரான பெய்ட் லஹியாவைச் சேர்ந்த முகமது தியாப், போரில் தனது வீட்டை இழந்துள்ளார், மேலும் ஒரு வருடத்துக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தனது சகோதரரையும் இழந்தார். "எந்தவொரு நபருக்காகவும், எந்தத் தரப்பினரின் நடவடிக்கைகளுக்காகவும், வெளிநாட்டு நாடுகளின் நலன்களுக்காகவும் நாங்கள் இறக்க மாட்டோம்", என்று அவர் கூறினார். "ஹமாஸ் அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் மற்றும் துயரத்தில் இருப்பவர்களின் குரலைக் கேட்க வேண்டும், இடிபாடுகளில் இருந்து எழும் குரல் - அதுதான் மிகவும் உண்மையான குரல்." "ஹமாஸ் ஆட்சி ஒழிக, இஸ்லாமிய சகோதரத்துவ ஆட்சி ஒழிக" என்று போராட்டக்காரர்கள் முழக்கமிடுவதை அந்த நகரத்தில் படம்பிடிக்கப்பட்ட வீடியோ பதிவுகள் காட்டின. பாலத்தீன தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, 2007 ஆம் ஆண்டு முதல் ஹமாஸ் காஸாவில் ஒரே ஆட்சியாளராக இருந்து வருகிறது, அதற்கு ஒரு வருடம் முன்புதான் தேர்தலில் தனது போட்டியாளர்களை வன்முறையான முறையில் ஹமாஸ் வெளியேற்றியது. அதிமுக - பாஜக: வேகமெடுக்கும் கூட்டணி கணக்குகள் - எடப்பாடி பழனிசாமியின் திட்டம் என்ன?26 மார்ச் 2025 மம்மூட்டிக்காக சபரிமலையில் பூஜை செய்த மோகன்லால்: சர்ச்சையானது ஏன்? - இன்றைய டாப் 5 செய்திகள்27 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஹமாஸ் கூறுவது என்ன? இஸ்ரேல் – காஸா போர் தொடங்கியதிலிருந்து காஸாவில் ஹமாஸுக்கு எதிரான வெளிப்படையான விமர்சனம் தெருக்களிலும் இணையத்திலும் அதிகரித்துள்ளது. ஆனால், ஹமாஸுக்கு இன்னும் தீவிரமான ஆதரவாளர்கள் இருக்கின்றனர். ஹமாஸுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை துல்லியமாக அளவிடுவது கடினம். போர் தொடங்குவதற்கு முன்பே ஹமாஸுக்கு எதிர்ப்பு இருந்து வந்தது, ஆனால் பழிவாங்கும் பயத்தின் காரணமாக அவர்கள் வெளிப்படையாக எதிர்வினை ஆற்றாமல் அமைதியாக இருந்தனர். காஸாவைச் சேர்ந்த முகமது அல்-நஜ்ஜார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "மன்னிக்கவும், ஆனால் ஹமாஸ் உண்மையில் எதை நம்பி இருக்கிறது? அவர்கள் மக்களின் உயிர்களை நம்பி அதன் மீது பந்தயம் கட்டுகிறார்கள்", என்று பதிவிட்டுள்ளார். "ஹமாஸ் கூட எங்களை வெறும் உயிர்களாகத்தான் எண்ணுகிறது. ஹமாஸ் அதிகாரத்தை விட்டு விலக வேண்டும். எங்கள் காயங்களுக்கு நாங்களே மருந்து போட்டுக்கொள்கிறோம்", என்று கூறினார். ஹமாஸ் அதிகாரி டாக்டர் பாசெம் நைம் பிபிசியிடம் பேசுகையில், மக்களுக்கு "வலிமிகுந்த நிலையில் கதறி அழ உரிமை உண்டு" என்று கூறினார். ஆனால் அவர் போராட்டக்காரர்கள் "சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள்" மேற்கொள்வது போல இருப்பதாக குற்றம் சாட்டினார், மேலும் ஏன் காஸாவின் மேற்குக் கரையில் போராட்டங்கள் நடைபெறவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். காஸாவில் உள்ள மனிதாபிமான சூழ்நிலையை இஸ்ரேல் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை திசை திருப்ப பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார். வானில் தோன்றிய ஒளிரும் சுழல் - ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் காரணமா?27 மார்ச் 2025 ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன?26 மார்ச் 2025 கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி அன்று ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியதான் மூலம் இஸ்ரேல்-ஸா போர் தொடங்கியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக, ஹமாஸை அழிப்பதற்காக இஸ்ரேல் காஸாவில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் 50,000-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவின் 21 லட்சம் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்தனர், அவர்களில் பலர் பல முறை இடம்பெயர்ந்தனர். காஸாவில் சுமார் 70% கட்டடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. சுகாதாரப் பாதுகாப்பு, தண்ணீர் வசதிகள் மற்றும் சுகாதார அமைப்புகள் சீர்குலைந்தன. மேலும் உணவு, எரிபொருள், மருந்து மற்றும் தங்குமிடங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyrm5jjlvzo
-
இலங்கை இராணுவத்துக்கொரு நீதி? இஸ்ரேல் இராணுவத்துக்கொரு நீதியா? - ராஜித கேள்வி
Published By: DIGITAL DESK 2 27 MAR, 2025 | 05:38 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த, முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. ஆனால் அப்பாவி பலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கு பிரித்தானியா ஆதரவளித்து வருகிறது. அவ்வாறெனில் இலங்கை இராணுவத்துக்கொரு நீதி, இஸ்ரேல் இராணுவத்துக்கொரு நீதியா என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பினார். களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதென்றால், காசாவிலுள்ள அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று குவிப்பது மனித உரிமை இல்லையா என்று பிரித்தானிவிடம் கேட்கின்றேன். இஸ்ரேல் படை வீரர்களுக்கும் அரச தலைவர்களுக்கும் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? காசாவில் சுமார் 50 000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 70 சதவீதமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர். இவ்வாறு அராஜகத்தில் ஈடுபடும் இஸ்ரேல் இராணுவத்துக்காக பிரித்தானியா ஒரு பில்லியனுக்கும் அதிக உதவிகளை வழங்கியிருக்கிறது. தமது நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்களுக்கு நிவாரணத்தை வழங்காது இஸ்ரேல் இராணுவத்துக்கு உதவிக் கொண்டிருக்கும் பிரித்தானியாவே இவ்வாறு எமது படையினருக்கு எதிராக தடை விதித்துள்ளது. சிறுவர்களையும் பெண்களையும் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக விதிக்கப்படாத தடை எதற்காக இலங்கை இராணுவத்துக்கு மாத்திரம் விதிக்கப்பட வேண்டும்? பக்க சார்பாக செயற்படும் பிரித்தானிவின் செயற்பாட்டை கடுமையாகக் கண்டிக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/210364
-
50 ஆயிரம் பேருக்கு டைபாய்டு தடுப்பூசி - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு
50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசி - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு Published By: DIGITAL DESK 2 27 MAR, 2025 | 07:18 PM (செ.சுபதர்ஷனி) சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி நாட்டில் உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் திலங்க ருவான் பத்திரன தெரிவித்தார். தைராய்டு விசேட தடுப்பூசி திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சால் வியாழக்கிழமை (27) வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் உள்ள உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தைராய்டு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தொற்றுநோயியல் பிரிவு செயல்படுத்தியுள்ளது. அதற்கமைய தற்போது நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மேற்படி தடுப்பூசி வழங்கப்படுகிறது. நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த டைபாய்டு காய்ச்சல் பரவல் மற்றும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட தரவுகளுக்கமைய, முன்னுரிமையின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பட்டியலுக்கமைய இந்நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது. மேலும் கடந்த காலங்களில் டைபாய்டு தொற்று பரவல் சமூகத்தில் அதிகரிப்பதற்கு உணவுப்பொருள் தயாரிப்பு முறை மற்றும் விற்பனை ஆகிய பிரதான காரணங்களாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் இத்துறையில் பணிபுரிபவர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் மூலம் தைராய்டு தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடிவதுடன் ஏனையோருக்கு நோய்த் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப்படுகிறது. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் அனைத்து பிரதேசங்களிலும் தொற்றுநோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள 358 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளுக்கமைய தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நடமாடும் உணவு விற்பனையாளர்கள், உணவக ஊழியர்கள், சன நெரிசலான இடங்களில் உள்ள உணவுப்பொருள் விற்பனையாளர்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு குழுக்களாக உணவு தயாரித்தல், விற்பனை, விநியோகம் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. தைராய்டு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெற 3 வருடங்களுக்கு ஒரு முறை இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியம். சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த இலவச தடுப்பூசி திட்டம் பற்றிய மேலதிக தகவல்களை, தொற்றுநோயியல் பிரிவு மற்றும் நாடு முழுவதும் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் பெறலாம் என்றார். https://www.virakesari.lk/article/210374
-
திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - பதில் பொலிஸ் மா அதிபர்
Published By: DIGITAL DESK 2 27 MAR, 2025 | 07:15 PM (எம்.வை.எம்.சியாம்) திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பை வழங்க வேண்டும். அந்த அதிகாரிகளின் சார்பில் முன்னிற்க வேண்டிய பாரிய பொறுப்பு பொலிஸ் திணைக்களம் சார்பில் தனக்கு உள்ளதென பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். திட்டமிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களை பாராட்டி பணப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுப்பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அமைச்சின் மேலதிக செயலாளர் மல்லிகா சூரியப்பெரும உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். நாட்டில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய இராணுவப் படை, கடற்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் 515 பேருக்கும் சிவில் பிரஜைகள் அறுவருக்கும் சுமார் 29 மில்லியன் ரூபா பணம் மற்றும் பரிசு வழங்கப்பட்டன. இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட 140 அதிகாரிகளுக்கு இங்கு 24 மில்லியன் ரூபா பரிசுத்தொகையும் கௌரவ பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றிய பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உரையாற்றுகையில், இத்தகைய நிகழ்வுகள் ஊடாக அதிகாரிகளை நாம் ஊக்கப்படுத்துகின்றோம். உயர்ந்தபட்ச ரீதியில் கடமைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்கின்ற அதிகாரிகளின் கோவைகளை திரட்டி பணப்பரிசில்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு பணிப்பரிசில்களை வழங்குமாறு இந்த வருடத்தில் ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை விடுத்தார். அண்மைய நாட்களாக பொலிஸார் பல விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டிருந்தனர். எதிர்வரும் தேர்தலின் பின்னரும் அதிகாரிகள் மேற்கொள்ளும் விசேட நடவடிக்கைகளையும் கைதுகள் மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கும் பாராட்டு செலுத்தி பணப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வை ஜனாதிபதி தலைமையில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். எத்தகைய சவால்கள் இருந்தாலும் பொலிஸ் திணைக்களத்தில் மனித மற்றும் பௌதீக வள பற்றாக்குறை உள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. திட்டமிட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய விடயங்களை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பை வழங்க வேண்டும். அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அதிகாரிகளின் சார்பில் முன்னிற்க வேண்டிய பாரிய பொறுப்பு திணைக்களம் சார்பில் எனக்கு உள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் கலந்துரையாடி அதற்கான தீர்வை பெற்றுத் தருவதற்கு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார். https://www.virakesari.lk/article/210380
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
LIVE 7th Match (N), Hyderabad, March 27, 2025, Indian Premier League Sunrisers Hyderabad 190/9 Lucknow Super Giants (5/20 ov, T:191) 66/1 LSG need 125 runs in 90 balls. Current RR: 13.20 • Required RR: 8.33 Win Probability:LSG 77.73% • SRH 22.27%
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
கொல்கத்தாவை எளிதாக ஜெயிக்க வைத்த ராஜஸ்தான் அணி - கேப்டன் செய்த அந்த மிகப்பெரிய தவறு என்ன? பட மூலாதாரம்,X/@KKRIDERS கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 27 மார்ச் 2025, 01:55 GMT அசாம் மாநிலம் குவாஹட்டியில் நேற்று (மார்ச் 26) நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 15 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 2025 ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்து ராஜஸ்தான் அணி சேர்த்த ஸ்கோர்தான் மிகக்குறைவானதாகும். இந்த சீசனில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி 2 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட் இன்னும் மைனஸைவிட்டு மேலே வரவில்லை, மைனஸ் 0.308 என்ற ரீதியில்தான் இருக்கிறது. ஆனால் ராஜஸ்தான் அணி தொடர்ந்து இரு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசியிலும் நிகர ரன்ரேட்டில் மைனஸ் 1.882 என்று மோசமான நிலையில் இருக்கிறது வானில் தோன்றிய ஒளிரும் சுழல் - ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் காரணமா?27 மார்ச் 2025 உங்கள் வீட்டில் வாங்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? தெரிந்துகொள்வது எப்படி?26 மார்ச் 2025 பட மூலாதாரம்,X/@KKRIDERS படக்குறிப்பு, மொயின் அலி பந்துவீச்சில் 2 விக்கெட் எடுத்தாலும், பேட்டிங்கை மறந்துவிட்டதுபோல் செயல்பட்டு ஆட்டமிழந்தார் வெற்றிக்கு காரணமான பந்துவீச்சாளர்கள் கொல்கத்தா அணியில் வலிமையான சுழற்பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர் சுனில் நரேன் நேற்று விளையாடாத நிலையிலும் ராஜஸ்தான் அணியை 151 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது பாராட்டுக்குரியது. சுனில் நரேனுக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட மொயின் அலி பந்துவீச்சில் 2 விக்கெட் எடுத்தாலும், பேட்டிங்கை மறந்துவிட்டதுபோல் செயல்பட்டு ஆட்டமிழந்தார். தமிழகத்தின் 'மிஸ்ட்ரி ஸ்பின்னர்' என அழைக்கப்படும் வருண் சக்கிரவர்த்தி வழக்கம்போல் சிறப்பாக விளையாடி, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வேகப்பந்துவீச்சாளர்கள் ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானைக் கட்டுப்படுத்தினர். கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பெரும்பகுதி காரணம் பந்துவீச்சாளர்கள். தங்களுக்கு இடப்பட்ட பணியை சிறப்பாகச் செய்து 151 ரன்களுக்குள் சுருட்டினர். GT vs PBKS: சாய் சுதர்சன், சாய் கிஷோர் அசத்தியும் ஆட்டத்தையே திருப்பிப் போட்ட 3 ஓவர்கள் ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன? 'இந்திய பேட்டரால் இப்படியும் விளாச முடியுமா!' - அசுதோஷ் ஷர்மா டுப்ளெசியை வாய் பிளக்க வைத்தது எப்படி? 'என் மகனிடம் தோனி சொன்னது இதுதான்' - சிஎஸ்கே அணியை மிரட்டிய விக்னேஷ் புத்தூரின் தந்தை நெகிழ்ச்சி டீகாக் மட்டுமே போதும் இந்த இலக்கை எட்டுவதற்கு தொடக்க ஆட்டக்காரர் குவின்டன் டீகாக் சிறப்பாக பேட் செய்தார். நீண்ட காலத்துக்குப்பின் அற்புதமான ஆட்டத்தை டீ காக் வெளிப்படுத்தினார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தபோது இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியபின் இப்போது அதே வேகத்தில் நேற்று பேட் செய்தார். 61 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 97 ரன்களுடன் இறுதிவரை குவின்டன் டீ காக் ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ரஹானே (18), மொயின் அலி (5) ரன்கள் சேர்த்தனர். 'இம்பேக்ட் ப்ளேயர்' ரகுவன்ஷி 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் கோவிட் பேரிடரின் சோதனைக் காலம் மக்கள் வாழ்வை 5 ஆண்டுகளில் எப்படி மாற்றியுள்ளது?26 மார்ச் 2025 மூளையில் 5 முறை அறுவை சிகிச்சை செய்ததால் மீண்டும் 'குழந்தையான' பெண் - தற்போது எப்படி இருக்கிறார்?26 மார்ச் 2025 பட மூலாதாரம்,X/@KKRIDERS படக்குறிப்பு, மொயின் அலி மொயின் அலிக்கு எதிர்பாரா பணி இங்கிலாந்து அணியில் இருந்தபோதுகூட மொயின் அலி தொடக்கவீரராக பெரும்பாலும் களமிறங்கியது இல்லை, நடுவரிசை, ஒன்டவுனில் களமிறங்கியுள்ளார். சிஎஸ்கே அணியில் இருந்தபோதும், ஆர்சிபியில் இருந்தபோதும் நடுவரிசைதான் இவருக்குரிய இடம். ஆனால், நேற்று தொடக்க வீரராக மொயின் அலிக்கு கொடுக்கப்பட்ட பணியால் அவர் தடுமாறியது போன்றே தெரிந்தது. ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த சீசனில் படுமோசமாக பந்துவீசும் பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். அவரின் பந்துவீச்சையே எதிர்கொள்ள மொயின் அலி தடுமாறினார். ஜோஃப்ரா ஆர்ச்சரின் பவுன்ஸருக்கும், ஷார்ட் பந்துக்கும் மொயின் அலி ரன்களைக் குவிக்க யோசித்தார். ஒரு கட்டத்தில் தூக்கி அடித்தாலும் யாரும் பிடிக்க முடியாத இடத்தில் விழுந்தது. களத்தில் இருந்த மொயின் அலி 12 பந்துகளில் 5 ரன்களுடன் ரன்அவுட்டாகி வெளியேறினார். டீகாக் அதிரடி ஆட்டம் ஆனால், நிதானமாக ஆடத்தொடங்கிய டீகாக் வேகப்பந்துவீச்சையும், சுழற்பந்துவீச்சையும் வெளுத்து வாங்கினார். பவர்ப்ளேயில் கொல்கத்தா 40 ரன்களையும், 7.4 ஓவர்களில் 50 ரன்களையும் எட்டியது. டீ காக் 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். 12.1 ஓவர்களில் கொல்கத்தா அணி 100 ரன்களை எட்டியது. கேப்டன் ரஹானே முதல் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று சுழற்பந்துவீச்சுக்கு தடுமாறினார், கடைசியில் 18 ரன்னில் ஹசரங்கா விக்கெட்டை இழந்தார். குவாஹட்டியில் இரவில் பனிப்பொழிவு இருந்ததையடுத்து, 11வது ஓவரில் புதிய பந்து கொண்டுவரப்பட்டது. இந்த விதி இந்த சீசனில் கொண்டுவந்தபின முதல்முறையாக பந்து மாற்றப்பட்டது. பனிப்பொழிவு சற்று தொடங்கியபின் கொல்கத்தாவின் வெற்றி இன்னும் எளிதாகியது. 3வது விக்கெட்டுக்கு ரகுவன்ஷி, டீகாக் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 44 பந்துகளில் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டீகாக் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும், அதை அடிக்கவிடாமல் ஆர்ச்சர் தேவையின்றி இரு வைடு பந்துகளை வீசி டீகாக் சதம் அடிப்பதைத் தடுத்தார். இருப்பினும், கடைசியில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் விளாசி டீகாக்(97) ஆட்டத்தை முடித்தார். ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடைசியில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் விளாசி டீகாக்(97) ஆட்டத்தை முடித்தார் ரஹானே என்ன கூறினார்? முதல் வெற்றிக்குப்பின் கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே கூறுகையில், "முதல் 6 ஓவர்களில் சிறப்பாக பந்துவீசினோம், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினோம். நடுப்பகுதி ஓவர்களில் மொயின், வருண் அற்புதமாக செயல்பட்டனர். நரேன் இல்லாத நிலையில் மொயின் பந்துவீச்சில் நிரப்பினார். பந்துவீச்சாளர்களின் பணி சிறப்பாக இருந்தது வெற்றியை எளிதாக்கினர். விக்கெட் எடுக்க வேண்டும் என்று மொயினிடம் தெரிவித்தேன், அதை செய்துவிட்டார். மொயின் அலிக்கு முழு சுதந்திரம் அளித்தோம், ஆனால் பேட்டிங்கில் எதிர்பார்த்தவகையில் செயல்படவில்லை. ஆனால், பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்டார்" எனத் தெரிவித்தார் சுனிதா வில்லியம்ஸ் போல விண்வெளி வீரராவது எப்படி? என்ன படிக்க வேண்டும்?23 மார்ச் 2025 சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வித்திட்ட 'ஹிட்லரின் விஞ்ஞானி'23 மார்ச் 2025 குழப்பத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தற்காலிகக் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரியான் பராக் நேற்று அபத்தமாக கேப்டன்சி செய்து வர்ணனையாளர்களின் விமர்சனத்துக்கு ஆளானார். சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெட் போன்று, கேப்டன்சி செய்கிறார் என்று வர்ணனையாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். எந்த பேட்டரை எந்த வரிசையில் களமிறக்குவது, எந்த பந்துவீச்சாளரை எப்படி பயன்படுத்துவது, எந்த பேட்டருக்கு எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்துவது என்பதன் அடிப்படை தெரியாமல் நேற்று ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் செயல்பட்டதை நேற்றைய ஆட்டத்தை பார்த்தவர்கள் புரிந்திருப்பார்கள். ரியான் பராக் வழக்கமாக நடுவரிசையில்தான் களமிறங்குவார் நேற்று ஒன்டவுனில் களமிறங்கினார். தொழில்முறை பேட்டர் இல்லாத ஹசரங்காவை நடுவரிசையில் களமிறக்கி, கடந்த ஆட்டத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெலை 6-வது பேட்டராகவும், அதிரடி பேட்டர் ஹெட்மெயரை 8-வது வரிசையில் களமிறக்கினார். ஹெட்மெயரை 4வது வீரராகவும், துருவ் ஜுரெலை 3வது வீரராகவும், ரியான் பராக் 6வது அல்லது 5வது வீரராக களமிறங்கி இருக்கலாம். ஷுபம் துபே சிறந்த பேட்டர், அவரை நடுவரிசையில் களமிறக்கியதற்குப் பதிலாக 3வது வரிசையில் களமிறக்கி இருக்கலாம். இங்கிலாந்து முன்னாள் வீரரும் வர்ணணையாளருமான நிக்நைட் கூறுகையில், "எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஹெட்மெயர் அணியில் இருந்தால் அவரை ஏன் விரைவாக களமிறக்கவில்லை. உலகளவில் டாப் குவாலிட்டி பேட்டர் ஹெட்மெயர் அதிரடி ஆட்டக்காரர். அவரை விரைவாக களமிறக்கி இருந்தால் ஆட்டம் மாறியிருக்கும், அதிக ரன்கள் கிடைத்திருக்கும், ஆட்டத்தைத் திருப்பத்தானே அவரை வைத்துள்ளீர்கள். ஹெட்மெயரை கடைசி வரிசையில் களமிறக்கி என்ன சாதிக்கப் போகிறீர்கள்?" என காட்டமாக விமர்சித்தார். இந்த ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்து கடந்த 5 போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் 200 ரன்களை இலக்காக வைத்து விளையாடுகின்றன. முடிந்தவரை பேட்டர்களை 8வது வரிசை அல்லது 9வது வரிசையில் வைத்துக்கொள்ள முயல்கிறார்கள். ஆனால், ராஜஸ்தான் அணியில் 8 பேட்டர்கள் வரை இருந்தும் குழப்பமான சூழலில் பேட்டர்கள் களமிறங்கியதால்தான் தங்களுக்குரிய ரோல் தெரியாமல் ஆட்டத்தைத் தவறவிட்டனர். சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்?24 மார்ச் 2025 இந்தியாவில் விண்கல் தாக்கியதால் உருவான ஏரி - எங்கே உள்ளது தெரியுமா?23 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மொயின் அலி பந்துவீச்சில் 29 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்தார் ஒரு அரைசதம் கூட இல்லை ராஜஸ்தான் அணியில் சாம்ஸன்(13), ஜெய்ஸ்வால்(29), நிதிஷ் ராணா(8) ரியான் பராக்(25), ஹெட்மெயர்(7), துருவ் ஜூரெல்(33), ஷூபம் துபே(9) என இத்தனை பேட்டர்கள் இருந்தும் ஒருவர்கூட அரைசதம் அடிக்கவில்லை, எந்த பார்ட்னர்ஷிப்பும் அரைசதத்தை கடக்கவில்லை. சாம்ஸன் அடித்து ஆடும் முயற்சியில் வைபவ் அரோரா பந்துவீச்சில் க்ளீன்போல்டானார். கேப்டன் ரியான் பராக் 3 சிக்ஸர்களை விளாசிவிட்டு வருண் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஜெய்ஸ்வால் களத்தில் இருந்தவரை நம்பிக்கை இருந்தது. ஆனால், மொயின் அலி பந்துவீச்சில் 29 ரன்னில் ராணாவிடம் கேட்ச் கொடுத்தார். 2023 ஐபிஎல் தொடருக்குப்பின் ஜெய்ஸ்வால் சுழற்பந்துவீ்ச்சில் முதல்முறையாக விக்கெட்டை இழந்தார். கடந்த சீசனில் அஸ்வினை பயன்படுத்திய 5வது இடத்தில், ஹசரங்காவை பிஞ்ச் ஹிட்டராக பயன்படுத்த ராஜஸ்தான் அணி முயன்றது. ஆனால் முற்றிலும் தோல்வியாக முடிந்தது. வருண் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஹசரங்கா ஆட்டமிழந்தார். 67 ரன்களுக்கு ஒருவிக்கெட்டை இழந்திருந்த ராஜஸ்தான் அணி 82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஏறக்குறைய15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டாப்ஆர்டரின் 3 பேட்டர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர், மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கிலும் 25 ரன்களைக் கடக்கவில்லை, பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. சொந்த மண்ணில் ஆடியபோதும், ரியான் பராக்கால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cly2edp0je1o
-
கருணா அம்மான் உள்பட 4 இலங்கையர்களுக்கு தடை விதித்த பிரிட்டன் - இதன் விளைவுகள் என்ன?
படக்குறிப்பு, கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் முக்கிய நபர்கள் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையைத் தொடர்ந்து, உள்நாட்டு அரசியல் களத்தில் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் இலங்கை அரச பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி ஷவேந்திர சில்வா, இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒஃப் த பீல்ட் வசந்த கரணாகொட, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கே இவ்வாறு பிரிட்டன் தடை விதித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் மனித உரிமை மீறல் இடம் பெற்றுள்ளமைக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என பிரிட்டனில் இந்த நால்வர் அடையாளப்படுத்தப்பட்டு, அவர்கள் மீது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நால்வருக்கும் பிரிட்டனுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பிரிட்டனில் சொத்துகளை வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரிட்டனுக்குள் இந்த நால்வருக்கும் சொத்துகள் இருக்கும் பட்சத்தில், அவற்றைத் தடை செய்வதற்கும் அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பான குற்றச்சாட்டை அடுத்தே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. யஷ்வந்த் வர்மா: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக சர்ச்சையில் சிக்கிய இவரின் 5 முக்கிய தீர்ப்புகள்4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த இரு பெண் உளவாளிகளை கண்டுபிடித்த பிபிசி3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 15 வருடங்கள் பட மூலாதாரம்,SRI LANKA ARMY படக்குறிப்பு,ஷவேந்திர சில்வா இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி முடிவுக்கு வந்தது. முல்லைத்தீவு மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகப் பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அத்துடன், ராணுவத்திடம் சரணடைந்த பெரும்பாலான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழர்களின் உறவினர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இன்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் முடிவடைந்துள்ள பின்னணியிலும், தமக்கான நீதி இன்று வரை கிடைக்கவில்லை எனக் கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். இவ்வாறான பின்னணியிலேயே இந்தத் தடையை பிரிட்டன் விதித்துள்ளது. மேட்ரிமோனி தளங்களில் மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழக்கும் நபர்கள் - சைபர் போலீஸ் எச்சரிக்கை7 மணி நேரங்களுக்கு முன்னர் அதிமுக - பாஜக: வேகமெடுக்கும் கூட்டணி கணக்குகள் - எடப்பாடி பழனிசாமியின் திட்டம் என்ன?26 மார்ச் 2025 எந்தெந்த நாடுகளில் யார் யாருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது? கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்குத் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி கடற்படை புலனாய்வு அதிகாரியான சந்தன ஹெட்டியாராட்ச்சி, சிப்பாய் சுனில் ரத்நாயக்க உள்ளிட்டோர் மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி மேஜர் பிரபாத் புலத்வத்த மற்றும் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்குத் தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது. அவர்களின் சொத்துகளைத் தடை செய்யவும் தீர்மானம் எட்டப்பட்டது. கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, சிப்பாய் சுனில் ரத்நாயக்க, லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராட்ச்சி ஆகியோருக்கு, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி, தமது நாட்டிற்குள் பிரவேசிக்க கனடா தடை விதித்தது. அந்த நாட்டிலுள்ள அவர்களின் சொத்துகளை முடக்கவும் தீர்மானம் எட்டப்பட்டது. கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி கடற்படைத் தளபதி வசந்த கரணாகொடவிற்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி ஸ்ரீலங்கா விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, ரஷ்யாவின் முன்னாள் இலங்கைக்கான தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கும், அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது. ஷவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத் ஜயசூரிய, விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு 2025ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி பிரிட்டன் தடை விதித்துள்ளது. ஹமாஸுக்கு எதிராக காஸாவில் வீதிகளில் இறங்கிய மக்கள் - திடீர் போராட்டத்துக்கு என்ன காரணம்?5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திரா காந்தி ஃபெரோஸை கரம்பிடிக்க கடும் எதிர்ப்பு எழுந்தது ஏன்? திருமணம் எப்படி நடந்தது?3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி, கோட்டாபய ராஜபக்ஸ, தமது நாட்டிற்குள் பிரவேசிக்க கனடா தடை விதித்தது இலங்கை உள்நாட்டுப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் பிரிட்டனால் தடை விதிக்கப்பட்டுள்ள நால்வருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை அரசியல்வாதிகள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். யுத்தம் முடிவடைந்த தருணத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார். நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் மீது இவ்வாறு தடை விதிப்பதானது, அசாதாரணமாக செயற்பாடு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கும்போது தானே பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியதாகக் கூறிய அவர், இறுதித் தருணத்தில் என்ன நேர்ந்தது என்பதை தாம் நன்கு அறிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ''இந்தப் பாதுகாப்புப் படைகளின் தலைவர்கள் தாய்நாட்டின் ஒற்றுமைக்காகவும், பிராந்திய ஒருமைப்பாட்டிற்காகவும் போராடினார்கள். அவர்கள் பொது மக்களைக் கொலை செய்யவில்லை. யுத்தத்தின் இறுதி இரண்டு வாரங்களும் நினைவில் இருக்கும். இனங்களை அடிப்படையாகக் கொண்டு யாரும் கொலை செய்யப்படவில்லை" என்று கூறினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தொடர்ந்து பேசிய அவர், "நான் 5 சந்தர்ப்பங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றியிருந்தேன். பிரபாகரன் உயிரிழக்கும் சந்தர்ப்பத்திலும் நானே பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றியிருந்தேன். இறுதி இரண்டு வாரங்களில் என்ன நேர்ந்தது என்பதை நான் நன்கு அறிவேன். அதனால், எமது முப்படை அதிகாரிகளுக்கு இவ்வாறு தடை விதித்தமையானது அசாதாரணமான செயற்பாடாகும். அவர்கள் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். எமது ராணுவத்தினர் தமது உயிர்களை எந்தளவுக்கு அர்ப்பணித்துள்ளார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். அல்பிரட் துரையப்பா, அமிர்தலிங்கம் போன்றவர்களையும் விடுதலைப் புலிகள் அமைப்பு கொலை செய்தது. அவர்களை ஏன் கொலை செய்தாரகள்? இந்த விடயங்கள் குறித்தும் கதைக்க வேண்டும். எனினும், எமது ராணுவத்தினர் மீதான இந்த நடவடிக்கையானது ஒரு சூழ்ச்சியாகும். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். யுத்தம் முடிவடையவில்லை என்றால், கொழும்பும், பொலன்னறுவையும் இருந்திருக்காது. இந்த நாட்டைக் காப்பாற்றிய வீரர்களுக்கு சர்வதேச ரீதியில் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் நான் கவலையடைகிறேன்'' என யுத்தம் முடிவடையும் சந்தர்ப்பத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். பிரிட்டன் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையானது, மனித உரிமை மீறல் தொடர்பானது அல்லது எனக் கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, விடுதலைப் புலி அமைப்பிற்கு உதவி வழங்குவோரின் அழுத்தங்கள் காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவே இதைக் குறிப்பிட்டுள்ளார். இது நீதியான விடயம் அல்ல என்பதுடன், சில மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளுடைய நிதியின் ஊடாக விடுக்கப்படும் அழுத்தம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,PMD படக்குறிப்பு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ''நாட்டில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ள போதிலும், சர்வதேச ரீதியில் பிரிவினைவாதம் முடிவுக்கு வரவில்லை. விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் தற்போதுள்ள புலம்பெயர்ந்தோர் அரசியலில் ஆட்சி கவிழ்ப்புகளை மேற்கொள்வதற்கும், ஆட்சிகளை அமைப்பதற்குமான உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன்படி, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசியல்வாதிகள் தமது அரசாங்கங்களின் ஊடாகவும், தமது நிர்வாக வியூகங்களின் ஊடாகவும் எமது நாட்டின் மீது மீண்டுமொரு முறை பிரிவினைவாதத்தை ஸ்தாபிப்பதற்கும், ஈழ அரசாங்க கனவை நனவாக்கிக் கொள்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்" என்று கூறுகிறார் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ. மேலும் பேசிய அவர், "இது இன்று நேற்று இடம்பெற்ற ஒன்றல்ல. இதைத்தான் நாங்கள் முதலில் இருந்தே கூறி வருகிறோம். தற்போதுள்ள இலங்கை அரசாங்கம் இதுதொடர்பான பதில் அறிவிப்பை வெளியிடவில்லை. முதலில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டைக் கூற வேண்டும். ராணுவத்தினர் இந்த நாட்டிற்காகவே யுத்தத்தை நடத்தினார்கள். அது அவர்களின் தனிப்பட்ட பிரச்னை கிடையாது. அதற்கான தலைமைத்துவத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழங்கியிருந்தார். அதற்கு முன்னர் பல ஜனாதிபதிகள் இருந்துள்ளனர். அவர்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம், பயங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியதை மாத்திரமே இந்த அதிகாரிகள் மேற்கொண்டிருந்தார்கள்" என்றார். "எனினும், தெரிவு செய்யப்பட்ட சில அதிகாரிகளை மாத்திரம் இலக்காகக் கொண்டு யுத்த குற்றங்களுக்கு குற்றவாளிகளாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இது தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான பிரச்னை கிடையாது. இது விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கையர்களுக்கு இடையிலான பிரச்னை. நாங்கள் பயங்கரவாதிகளுடன் மோதினோம். இன்று புலம்பெயர்ந்தோரிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல்வாதிகள் என்ற இரு தரப்பினரும் இன்று தமிழ்-சிங்களப் பிரச்னையாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு இடம்பெறுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இந்த நாட்டு ராணுவ வீரர்களுக்காக நாங்கள் முன்னின்று குரல் எழுப்புவோம். அரசாங்கம் தமது நிலைப்பாட்டைக் கூற வேண்டும் என்பதுடன், மக்கள் ராணுவ வீரர்களுடன் இன்று ஒன்றுபட வேண்டும்," என்றார் நாமல் ராஜபக்ஸ. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஸவின் பதில் பட மூலாதாரம்,NAMAL RAJAPAKSA'S FACEBOOK படக்குறிப்பு,நாமல் ராஜபக்ஸ யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பாரியளவிலான யுத்த குற்றங்கள் இடம்பெற்றதாக பிரிட்டன் அரசாங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை தாம் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதியும், யுத்தத்தை நிறைவு செய்ய தலைமைத்துவம் வழங்கியவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். பிரிட்டன் அரசாங்கம் இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட நால்வர் மீது தடை விதித்த நிலையில், மஹிந்த ராஜபக்ஸ விசேட அறிக்கையொன்றை வெளியிட்டே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ''தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்வதற்கான தீர்மானத்தை இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான நானே எடுத்தேன். இலங்கையின் ஆயுதப் படை அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியது'' என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை அமல்படுத்தப்பட்டிருந்த காலப் பகுதியில், 2002ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் 363 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து 2004ஆம் ஆண்டு வெளியேறி, ஜனநாயக ரீதியில் அரசியல் நடவடிக்கைகளுக்குள் பிரவேசித்த விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளமையானது, விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயல்பட்ட தமிழர்களுக்கு தண்டனை வழங்கும் புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கை என்பது தெளிவாகியுள்ளதாக அவர் கூறுகின்றார். ''முப்பது ஆண்டுக் காலம் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பினால், 27,965 ராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அது மாத்திரமன்றி, அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என மேலும் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன'' என மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். கடந்த 2009ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை, உலகிலேயே மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பு என அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அமைப்பு 2008ஆம் ஆண்டு பெயரிட்டதாகவும் அவர் கூறுகின்றார். அத்துடன், பல்வேறு தரப்பினரால் விடுக்கப்படுகின்ற சட்ட அழுத்தங்களில் இருந்து தமது ஆயதப் படையை பாதுகாத்துக் கொள்வதற்காக பிரிட்டன் அரசாங்கம் 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் விசேட சட்டங்களை இயற்றியதை நினைவு படுத்துவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகத் தமது கடமைகளை நிறைவேற்றிய ஆயுதப் படை அதிகாரிகளை இலக்கு வைத்து வெளிநாட்டு அரசுகள் மற்றும் அமைப்புகள் விடுக்கும் அழுத்தங்களுக்குத் தற்போதைய அரசாங்கம் நேரடியாக முன்நிற்க வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அமித் ஷாவுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தையா? எடப்பாடி பழனிசாமி விளக்கம்26 மார்ச் 2025 டிரம்பின் நடவடிக்கைகளால் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயில்வது கடினமாகிறதா?26 மார்ச் 2025 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மஹிந்த ராஜபக்ஸ இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட நால்வர் மீது பிரிட்டன் விதித்துள்ள தடை ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்று எனவும், அந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகரகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர், சிறீதரன் இவ்விடயம் சார்ந்து அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில், "எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னதாக, இனப்படுகொலையின் பங்குதாரர்களான நால்வர் மீது பிரிட்டன் அரசு விதித்துள்ள பயணத்தடை, காலம் தாழ்த்தியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மீள அரும்பச் செய்திருக்கிறது," என்று தெரிவித்துள்ளார். மேலும், "இலங்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீது பேரினவாத அரசு வலிந்து நடத்திய போரின்போது மோசமான மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட இந்த நான்கு பேர் மீதும் பிரிட்டன் அரசு விதித்திருக்கும் தடையையும், சொத்து முடக்க அறிவிப்பையும், சர்வதேச நீதி கோரும் பயணத்தில் தமக்குக் கிடைத்திருக்கும் ஒரு சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றாகவே ஈழத்தமிழர்கள் பார்க்கிறார்கள்'' எனவும் கூறியுள்ளார். எண்பது வருடங்களுக்கு மேலாகக் கேட்பாரற்றுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் எண்ணங்களுக்கும் இறந்துபோன ஆத்மாக்களுக்கும் இந்தத் தடை அறிவிப்பு நீதியின் கதவு திறக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், "காலனித்துவ ஆட்சி முடிவில், சுதேசிகளான தமிழர்களின் இறைமையை பிறிதோர் இனத்தவரிடம் ஒப்படைத்துச் சென்றமை வரலாற்றுத் தவறு என்பதை உலகம் இப்போதாவது உணரத்தலைப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது" என்றும் குறிப்பிட்டுள்ளார். 'மாஞ்சோலையை போல வால்பாறையில் இருந்தும் மக்களை வெளியேற்ற திட்டம்' - சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்துக்கு எதிர்ப்பு24 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ்: 'விண்வெளியில் எப்போதும் பதற்றம், குறைவான தூக்கம்' - 12 ஆண்டுகளுக்கு முன் என்ன கூறினார்?20 மார்ச் 2025 அரசாங்கத்தின் பதில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். பிரிட்டன் அரசாங்கத்தால் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட நால்வர் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து, இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகருக்கு விடயங்களை தெளிவூட்டியபோதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஏதோவொரு வகையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்குமானால், அது தொடர்பில் உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறுகின்றார். தடை விதிக்கப்பட்ட நபர்களுக்கு அந்த நாட்டிலுள்ள சொத்துகள் முடக்கப்படும் மற்றும் அவர்களுக்கு அந்த நாட்டிற்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டமையானது, பிரிட்டனால் எடுக்கப்பட்ட ஒருதலைபட்ச நடவடிக்கை எனவும் அவர் கூறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளால் இவ்வாறு எடுக்கப்படுகின்ற ஒரு தலைப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை உள்நாட்டு நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டாஸ்மாக் கடைகளில் அமலாக்கத்துறை சோதனை ஏன்? செந்தில் பாலாஜி என்ன சொல்கிறார்?19 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ் பயணித்த டிராகன் விண்கலம் திடீரென 7 நிமிடங்கள் பூமியுடன் தொடர்பை இழந்தது ஏன்?19 மார்ச் 2025 பிரிட்டன் விதித்த தடையால் இலங்கைக்கு பாதிப்பு உள்ளதா? பட மூலாதாரம்,PRATHIBA MAHANAMAHEWA படக்குறிப்பு, பிரதீபா மஹனாமஹேவா இலங்கை முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட நால்வர் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையால் இலங்கைக்கு எவ்வாறான பாதிப்புகள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹனாமஹேவாவிடம் பிபிசி தமிழ் வினவியது. ''இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள தடையானது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் விதிக்கப்பட்ட தடை கிடையாது. அதை பிரிட்டனே விதித்துள்ளது. அமெரிக்கா, ஐநா மனித உரிமை பேரவையில் இருந்து விலகியதை அடுத்து, இலங்கை தொடர்பில் பிரிட்டனே அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. இது நபர்களுக்கு பிரட்டனால் விதிக்கப்பட்ட விசா மற்றும் சொத்துகளுக்கான தடையாகும். எனினும், அரச அதிகாரிகள் என்ற வகையில் இலங்கைக்கு இதனூடாக பாதிப்பு காணப்படுகின்றது. 2022ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. அதில் 72 ஈ என்ற ஷரத்தில் ஒரு விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மிகவும் தெளிவாகக் கூறியுள்ளனர். எனினும், இது தண்டனை வழங்கும் நடவடிக்கை கிடையாது" என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதீபா மஹனாமஹேவா, "தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. எனினும், 2025ஆம் ஆண்டாகும் போதும், நாம் அது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. எமது பக்கத்திலும் குறைப்பாடுகள் காணப்படுகின்றன. தேசிய பொறிமுறையொன்றை ஏற்படுத்தி, அதைச் செய்ய வேண்டியிருந்தது. இலங்கைக்குத் தற்போது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர். 72வது ஷரத்திலுள்ள பரிந்துரைகளைச் செயற்படுத்தவில்லை எனக் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மேலும் அழுத்தங்கள் அதிகரிக்கக்கூடும். பொருளாதாரக் குற்றங்கள் இடம் பெற்றுள்ளதாக ஈ சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பிலும் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. முறையற்ற விதத்தில் வேறு நாடுகளில் சொத்துகள் இருக்குமானால், அது தொடர்பிலும் தாம் உதவி செய்வோம் என அவர்கள் கூறுகின்றனர். பொதுநலவாய அமைப்பில் மனித உரிமை பிரிவுடன் இணைந்து பல வேலைகளை எம்மால் செய்திருக்க முடியும். நாங்களும் சிற்சில சந்தர்ப்பங்களில் பலவற்றைத் தவறியுள்ளோம். அதனாலேயே இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றன'' என்றார். ''இலங்கையில் ஐபிரிட் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு பிரிட்டன் 2018ஆம் ஆண்டு முதல் கூறி வருகின்றது. ஐபிரிட் நீதிமன்றமொன்று ஸ்தாபிக்க முடியாத பட்சத்தில், அதற்குப் பதிலாக என்ன செய்ய முடியும் என்பதையேனும் நாம் கூறியிருக்க வேண்டும். பிரிட்டன் மீது முழுமையாக விரலை நீட்ட முடியாது. மனித உரிமைப் பேரவையின் ஊடாக நம்மை பிரிட்டனே கண்காணிக்கின்றது. எதிர்காலத்தில் நடைபெறுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்து'' என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார். எனினும், இந்த நிலைமை தொடருமாக இருந்தால், ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு கிடைக்கப் பெறும் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இல்லாது போகுமோ என்ற அச்சம் எழுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். அத்துடன், தனி நாடொன்று என்ற விதத்தில் அவர்களால் நமக்கு எதிராக பொருளாதாரத் தடையைக்கூட ஏற்படுத்த முடியும் என அவர் கூறுகின்றார். வலையில் சிக்கும் விதத்தில் அல்லாமல், வலையில் சிக்காது அதைத் தவிர்த்துக் கொள்ளும் விதத்தில் இலங்கை செயல்பட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czed7j5k04po
-
பிரிட்டன் விதித்துள்ள தடைகள் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நாடுகள் தடைகளை விதிப்பதை ஊக்குவிக்கும் - பிரித்தானிய தமிழர் பேரவை
27 MAR, 2025 | 02:57 PM பிரிட்டனில் கொண்டுவரப்பட்ட தடைகள் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் பலநாடுகள் அவ்வாறான தடைகளை விதிப்பதற்கு ஊக்குவிக்கும் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளை ஊக்குவிக்கும் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றில் பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நான்கு இலங்கையர்கள் மீது பிரித்தானிய அரசாங்கத்தின் தடை நடவடிக்கையினை பிரித்தானிய தமிழர் பேரவை வரவேற்கிறது இலங்கை உள்நாட்டுப் போரின் போது நீதிக்குப் புறம்பான கொலைகள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது சொத்து முடக்கம் மற்றும் பயண தடைகளை விதித்ததற்காக பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய அரசாங்கத்தை வரவேற்று பாராட்டுகின்றது. உலகளாவிய மனித உரிமைகள் தடை விதிமுறைகளின் கீழ் மாக்னிட்ஸ்கி பாணியிலான தடையை அமல்படுத்தவும் (1) இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா (2) முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட (3) இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் (4) துணை இராணுவக் குழுவின் முன்னாள் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா அம்மான் (கருணா குழு) ஆகியோருக்கு எதிராகப் பயணத் தடை மற்றும் சொத்துக்களை முடக்குவதற்காக எடுக்கப்பட்ட இங்கிலாந்து அரசாங்கத்தின் முடிவினைப் பாராட்டுகிறோம். பிரித்தானியாவில் 2024 இல் நடந்து முடிந்த தேர்தலின் போது தாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒரு பகுதியை நிறைவேற்றியதற்காக பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் வெளியுறவு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான செயலாளர் டேவிட் லாமி எம்பி ஆகியோருக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியானது இந்த நேரத்தில் நினைவுகூரத் தக்கது. அத்துடன் இலங்கையில் குற்றவாளிகளுக்கு எதிராக மாக்னிட்ஸ்கி சட்டத்தை பிரயோகித்தமைக்காக அமெரிக்கா மற்றும் கனடாவுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். அமெரிக்காவின் "மேக்னிட்ஸ்கி சட்டம்" போன்ற சட்டத்தைப் பயன்படுத்தி பிரித்தானியா தமிழர் பேரவை பிரித்தானியாவில் வசித்து வரும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் மக்கள் அமைப்புகளின் பத்து வருட காலத்திற்கும் மேலாக இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சர்வதேச நீதி விசாரணைக்காக தொடர்ச்சியான கோரிக்கைகளை ஐ.நாவில் முன்வைக்க எம்முடன் தொடர்ந்து பயணித்த பல அரசியல்வாதிகளுடன் குறிப்பாக முன்னாள் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் தெரசா வில்லியர்ஸ் சேர் ஸ்டீபன் டிம்ஸ் எம்.பி. ஆகியோர் குறிப்பிடப்படக் கூடியவர்கள். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்கு எம்முடன் கலந்துகொண்ட வெஸ் ஸ்ட்ரீட்டிங் பாராளுமன்ற உறுப்பினர் சேர் எட் டேவி பாராளுமன்ற உறுப்பினர் போன்றோர் இலங்கையில் அட்டூழியக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்கக் கோட்பாட்டைப் பயன்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையாளர்கள் மீண்டும் மீண்டும் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 2020 மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு பிரித்தானிய தமிழர் பேரவையுடன் விஜயம் செய்த தெரசா வில்லியர்ஸ் அப்போதைய கன்சர்வேட்டிவ் அரசாங்கம் இது தொடர்பாக ஒரு சட்டத்தை முன்வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக எங்களுக்கு உறுதியளித்தார். இதன் விளைவாக ஜூலை 2020 இல் உலகளாவிய மனித உரிமைகள் தடை விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இந்த சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலுக்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதிக்காக போராடும் அதே வேளை மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனவழிப்பு போன்ற அட்டூழியக் குற்றங்கள் செய்தவர்களுக்கு எதிராக பிரித்தானியாவில் தடைகளை விதிப்பதற்கான நடவடிக்கைகளை பிரித்தானிய தமிழர் பேரவை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. மார்ச் 2009இலிருந்து ஐ.நா.மனித உரிமை கழகத்தில் இன் தொடர்ச்சியான முயற்சிகள் அங்கு மேற்கூறிய அரசியல்வாதிகள் மற்றும் எம் சகோதர அமைப்புகளுடன் இணைந்து எடுத்த காத்திரமான நடவடிக்கைகளின் விளைவாக மார்ச் 2021 இல்HRC/RES/46/1 எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 2022 இல் HRC/RES/51/1 என்ற மேலும் வலுவூட்டப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இரண்டு தீர்மானங்களின் அடிப்படையில் சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்தை ((OSLAP)) நிறுவி செயல்பாடுகளை தொடங்கின. ஸ்ரீலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆணை மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கான (1) எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குவதற்கும் (2) பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் தப்பியவர்களுக்காக வாதிடுவதற்கும் (3) தகுதி வாய்ந்த நியாயாதிக்கத்துடன் உறுப்பு நாடுகள் உட்பட தொடர்புடைய நீதித்துறை நடவடிக்கைகள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் (5) தகவல் மற்றும் ஆதாரங்களை சேகரித்தல் ஒருங்கிணைத்தல் பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் போன்றனவாகும். அத்துடன் இனவழிப்பு குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களையும் ஸ்ரீலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு தொகுத்து அனுப்பி வைக்க முடியும். இதன் விளைவாக ஆகஸ்ட் 2024 இல் வெளியிடப்பட்டஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இன் இடைக்கால அறிக்கை (HRC/57/19), இலங்கை ஆயுதப் படைகளால் இழைக்கப்பட்ட பல மனித உரிமை மீறல்களைOSLAP இன் சாட்சியங்களை அடிப்படையாக கொண்டு சுட்டிக் காட்டியது. 2024 செப்டெம்பர் மாதத்தில்ஸ்ரீலங்கா பொறுப்புக்கூறல் திட்டம் OSLAP தனது வசமுள்ள முக்கியமான அடையாள வழக்குகளை ( (emblematic cases ) உள்ளடக்கிய தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக மேலும் ஒரு வருட கால நீட்டிப்பு வழங்கப்பட்டு 2025 செப்டெம்பரில் நடைபெறவுள்ள 60வது மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை மீது கொண்டு வரவிருக்கும் புதிய தீர்மானம் இலங்கை அரசாலும் பாதுகாப்புப் படையினராலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களின் அளவையும் அதன் பாதிப்புகளையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்திற்குஇற்கு வழங்கப்பட்ட ஆணைக்கு அமையஇ ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்கள் நீதித்துறை பொறிமுறைகளில் சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கான தகவல்களை வழங்க ஸ்ரீலங்கா பொறுப்புக்கூறல் திட்டம் தயாராக உள்ளது ஒரு முக்கியமான சாதகமான அம்சமாகும். இவ்வாறாக முக்கியமான சர்வதேச தளங்களில் தமிழ் மக்கள் எடுத்த முக்கியமான நகர்வுகளின் தொடர்ச்சியாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றமிழைத்தவர்கள் மீது அமெரிக்காஇ கனடா மற்றும் பிரித்தானியாவில் கொண்டு வரப்பட்டுள்ள தடைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. உலகளாவிய மனித உரிமைகள் விதிமுறைகள் 2020 இன் (Global Human Rights Sanctions Regulations) கீழ் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் இங்கிலாந்து அரசாங்கம் சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதை தொடர்ந்து மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் பல நாடுகளை குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் (நுரு) உள்ள நாடுகள் அதனை பின்பற்ற ஊக்குவிக்கும். https://www.virakesari.lk/article/210357
-
தீவிரமடைந்து வரும் டெங்கு நோய்ப் பரவல்
இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு Published By: DIGITAL DESK 3 27 MAR, 2025 | 03:22 PM எட்டு மாவட்டங்களில் மூன்று நாட்கள் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட செயற் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுளம்பு பெருக்கம் அதிகமாக உள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, திருகோணமலை, மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும். தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இந்த ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விசேட டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட செயற் திட்டம் 29 வரை செயல்படுத்தப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. வீடுகள், பாடசாலைகள், பணிபுரியும் இடங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கபடும். அதேவேளை, சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்குமாறு பொதுமக்களை சுகாதார பரிசோதகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இவ் ஆண்டு இதுவரை 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். https://www.virakesari.lk/article/210356
-
பாடசாலை மாணவர்கள் தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள்; வைத்தியர் நிபுணர்
Published By: DIGITAL DESK 3 27 MAR, 2025 | 03:20 PM நாட்டில் தூக்கமின்மை பிரச்சினைகள் அதிகரித்து வருவதோடு, 63 சதவீதமான பாடசாலை மாணவர்களுக்கு போதுமானளவு தூக்கம் கிடைப்பதில்லை என சமூக வைத்திய நிபுணர் சிராந்திகா விதானகே தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உடல் ஆரோக்கியத்துக்கு தூக்கம் அவசிமானது. 16 தொடக்கம் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 8.2 சதவீதமானவர்கள் 4 மணித்தியாலங்கள் அல்லது அதற்கு குறைவான நேரம் தூக்குகிறார்கள். கடந்த 12 மாதங்களில் மாணவர்களுக்கு கடுமையாக வாகன விபத்துக்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், அவர்களில் 6.6 சதவீதமானவர்கள் பெண்களும், 16.4 சதவீதமானவர்கள் ஆண்களும் அடங்குவார்கள். அதேவேளை, கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் வன்முறை மற்றும் தற்செயலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதேவேளை, 47.9 சதவீதமான மாணவர்கள் ஆரிசியர்களால் தாக்கப்படுவது தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த 12 மாதங்களில் 6.1 சதவீதமான மாணவர்கள் கட்டடாயப்படுத்தி பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுப்படுத்தப்படுகின்றனர் எனவும், ஆண்களிடையே இது அதிகளவு பதிவாகியுள்ளது. https://www.virakesari.lk/article/210348
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
உள்ளூராட்சி மன்ற தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என அந்த தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/316605
-
திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த கனேடிய பிரதமர்!
கனடா தேர்தலில் சீனா, ரஷ்யா, இந்தியா தலையீடு: உளவு அமைப்பு குற்றச்சாட்டு 25 MAR, 2025 | 04:04 PM ஒட்டாவா: அடுத்த மாதம் நடைபெற உள்ள கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடு இருக்கலாம் என சிஎஸ்ஐஎஸ் எனப்படும் அந்த நாட்டின் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் எனக் கோரி காலிஸ்தான் உள்ளிட்ட சில பிரிவினைவாத இயக்கங்கள் வெளிநாடுகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கனடா நாட்டில் வசித்து வந்த பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதை இந்தியா மறுத்தது. தொடர்ந்து இருதரப்பு நாடுகளுக்கு இடையிலான உறவு விரிசல் அடைந்தது. இந்நிலையில் தேர்தலில் தலையிடலாம் என்ற குற்றச்சாட்டு பாய்ந்துள்ளது. “ஜனநாயக முறைப்படி நடைபெறும் கனடா நாட்டு தேர்தலில் செயற்கை நுண்ணறிவைசீனா பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதே போல கனடாவில் வசிக்கும் பல்வேறு சமூகங்கள் மற்றும் நாட்டின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடும் நோக்கமும் அதற்கான திறனையும் இந்திய அரசாங்கம் கொண்டுள்ளது என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்” என சிஎஸ்ஐஎஸ் அமைப்பின் துணை இயக்குநர் வனேசா லாயிட் கூறியுள்ளார். இதற்கு இந்தியா மற்றும் சீனா தரப்பில் இருந்து இன்னும் பதில் எதுவும் தரப்படவில்லை. அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை கனடா எதிர்கொண்டுள்ள நிலையில் அடுத்த மாதம் 28-ம் தேதி அங்கு தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/210169
-
ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்டின் இயக்குநர் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைது
Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 02:28 PM ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்ட் என்ற விவரணச் சித்திரத்தின் இயக்குநரை hamdan ballal இஸ்ரேலிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். ஹம்டான் பலாலின் வீட்டை முகக்கவசம் அணிந்த யூத குடியேற்றவாசிகள் தாக்கியதை தொடர்ந்தே இவரை இஸ்ரேலிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். மேற்குகரையில் கிராமங்கள் அழிக்கப்படுவதை பதிவு செய்த இயக்குநர்களில் ஒருவரான ஹம்டான் பலாலை 15க்கும் மேற்பட்ட யூத குடியேற்றவாசிகள் முகக்கவசம் அணிந்தவாறு தாக்கினார்கள் என இந்த சம்பவத்தை நேரில் பார்த்த யூத அமெரிக்க செயற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர். ஹெப்ரோனின் தென்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர்கள் பாலஸ்தீனியர்களை நோக்கி கற்களை வீசதொடங்கினார்கள், ஹம்டானின் வீட்டிற்கு அருகிலிருந்து நீர்த்தொட்டியை சேதப்படுத்தினார்கள் ஜோசப் என்ற நபர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஏனைய இராணுவ சீருடை அணிந்த யூதகுடியேற்றவாசிகளுடன் அந்த பகுதிக்கு இஸ்ரேலிய இராணுவத்தினர் வந்தனர். அவர்கள் ஹம்டானை அவரது வீட்டிற்குள் துரத்தி பிடித்து படையினரிடம் ஒப்படைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார். யூத குடியேற்றவாசிகள் அவரின் காரை சேதப்படுத்தினார்கள், அதன் டயர்களை சேதப்படுத்தினார்கள் என ரவிவ் என்பவர் கார்டியனிற்கு தெரிவித்துள்ளார். காயமடைந்த பலால் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210133
-
நியூசிலாந்தின் தென்தீவை தாக்கியது கடுமையான பூகம்பம்
25 MAR, 2025 | 10:38 AM நியூசிலாந்தின் தென்தீவு பகுதியில் கடுமையான பூகம்பம் தாக்கியுள்ளது. சுனாமி ஆபத்துள்ளதா என நாட்டின் பேரிடர் முகவர் அமைப்பு ஆராய்ந்து வருகின்றது. அந்த பகுதியில் வசிப்பவர்கள் கடற்கரையோரங்களை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுமார் 5000 மக்கள் பூகம்பத்தை உணர்ந்ததாகவும் பொருட்கள் விழுந்தன கட்டிடங்கள் குலுங்கின என நியுசிலாந்தின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/210121
-
வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பவை முட்டுக்கட்டைகள்
Published By: VISHNU 25 MAR, 2025 | 10:03 PM வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோருவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (25) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வடக்கு மாகாணத்தில் மீள்குடியமர்வு, அபிவிருத்தி, விவசாயம், சுற்றுலாத்துறை என எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ள முடியாதளவுக்கு வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் முட்டுக்கட்டைகள் தொடர்ச்சியாகப் போடப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் விசனம் வெளியிட்டார். கிளிநொச்சிக்கு வருகை தந்த காணி ஆணையாளர் நாயகத்திடம் இது தொடர்பில் முறையிட்ட நிலையில், அவர் இந்த விடயத்தை விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்பாசன அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அதற்கு அமைவாக எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உயர்மட்ட குழுக் கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பவற்றால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விவசாய நிலங்கள், மேய்ச்சல் தரவைகள், குளங்கள், வயல்கள், மக்கள் மீள்குடியமர்வுக்கான காணிகள் என்பன எவ்வளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் மாவட்ட ரீதியாக விவரங்களை தயாரிக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார். இதன்போது அரச காணிகள் மாத்திரமே, ஒதுக்கக் காணிகளாக அரச திணைக்களங்களால் அறிவிக்க முடியும் எனவும் தனியார் காணி எனின் அதனைச் சுவீகரித்தே ஒதுக்க காணிகளாக அறிவிக்க முடியும் என்றுமே சட்ட ஏற்பாடு உள்ளபோதும் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன அதனைப் பின்பற்றாமல் வர்த்தமானியை வெளியிட்டுள்ளன என ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலஅளவத் திணைக்களத்தின் வரைபடத்துக்கு அமைவாக வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன காணிகளை வர்த்தமானியில் பிரசுரித்தன என்றும், 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் கூகுள் வரைபடத்தின் உதவியுடன் அந்தத் திணைக்களங்கள் நேரடியாக தமக்குரியதாக அடையாளப்படுத்தும் காணிகளை வர்த்தமானியில் பிரசுரித்துள்ளன என்ற தகவலும் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வடக்கில் சில மாவட்டங்களில் வனவளத் திணைக்களத்துக்குரிய காணிகள், வனவளத் திணைக்களத்துக்கு என அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணிகள் என்பனவற்றை விடுத்து மக்களின் வயல்காணிகளாக உள்ளவற்றுக்குள்ளும் வனவளத் திணைக்களத்தின் எல்லைக் கல்லுகள் போடப்பட்டுள்ளன என அதிகாரிகள் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினர். அதேநேரம் சில இடங்களில் வனவளத் திணைக்களமும், வனஉயிரிகள் திணைக்களமும் ஒரே காணிகளையே தமக்குரியதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கடந்த ஆண்டு வடக்கின் 5 மாவட்டங்களில் விடுவிப்பதற்கு வனவளத் திணைக்களம் இணங்கிய காணிகளின் அளவுகளை விட புதிதாக தமது திணைக்களத்துக்கு கோரும் காணியின் அளவு அதிகம் என்றும் ஆளுநரின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். வனவளத் திணைக்களத்தால் சில இடங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டபோதும் அங்கு மக்கள் மிக நீண்டகாலமாக வசித்துவருகின்றனர். ஆனால் அவர்களுக்கான சட்டபூர்வ ஆவணங்களோ, வீட்டுத்திட்ட உதவிகளோ முன்னெடுக்க முடியாத நிலைமை இருப்பதாகவும், அதேபோன்று சட்டபூர்வமான ஆவணங்கள் உள்ள ஒருதொகுதி மக்கள் வர்த்தமானி அறிவித்தலால் தமது வசிப்பிடங்களில் குடியேற முடியாத நிலைமை இருப்பதாகவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அரச அதிகாரிகள் அபிவிருத்தித் தேவைக்காக காணிகளை விடுவிக்குமாறு வனவளத் திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைத்தால் அது நிராகரிக்கப்படும் அதேவேளை, தனியார் முதலீட்டாளர்கள் அல்லது வர்த்தகர்கள் முன்வைக்கும் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகளும் வடக்கில் நடைபெறுவதாக அதிகாரிகள் ஆளுநரிடம் குறிப்பிட்டனர். இதேநேரம், இந்தத் திணைக்களங்களின் பாகுபாடான செயற்பாடுகள் தொடர்பிலோ அல்லது அந்தத் திணைக்களங்களின் நடவடிக்கைகள் தொடர்பிலோ வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கேள்வி எழுப்பினால், மேற்படி இரண்டு திணைக்களங்களின் உயர் அதிகாரிகளால் அவமரியாதை செய்யப்படுவதாகவும் ஆளுநருக்குச் சுட்டிக்காட்டினர். இந்த விடயங்களைக் கவனத்திலெடுப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், எதிர்வரும் 9ஆம் திகதி கலந்துரையாடலுக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் விவரங்களை உரிய வகையில் தயார் செய்யுமாறும், கடந்த காலங்களில் எதிர்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் இரு திணைக்களங்கள் தொடர்பிலான விடயத்தை அணுகுவோம் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடலில், வடக்கின் 5 மாவட்டங்களினதும் மேலதிக மாவட்டச் செயலர்கள் - காணி, வடக்கு மாகாண காணி ஆணையாளர், பிரதி நில அளவையாளர் நாயகம் - வடக்கு, ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/210197