ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
Everything posted by ஏராளன்
-
இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க அனுராதபுரத்தில் தேடல்!
செவ்வந்தியை தேடிச்சென்ற சி.ஐ.டியினரிடம் போதைப்பொருளுடன் மாட்டிக்கொண்ட முன்னாள் இராணுவ மேஜர் கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண் நீண்ட நாட்களாக தலைமறைவாகியுள்ள நிலையில் அனுராதபுரம் நகரிலுள்ள ஹோட்டலில் தங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைந்து செயற்பட்ட பொலிஸார் அவரை கைது செய்யும் நோக்கில் நடத்திய சோதனையில், அவரைப் போலவே தோற்றமளிக்கும் பெண் மற்றும் முன்னாள் இராணுவ மேஜர் ஆகியோர் 3.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ், குஷ் மற்றும் கேரள கஞ்சா மற்றும் இரண்டு சொகுசு கார்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர் குருநாகல், உடவல வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய முன்னாள் இராணுவ மேஜர் மற்றும் 33 வயதுடைய பெண் ஆகியோர் என தெரியவந்துள்ளது. அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி நுவான் விக்ரமசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையை மேற்கொண்டது. இந்த சோதனையில் உதவுவதற்காக பொலிஸ் மோப்ப நாய் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரான முன்னாள் மேஜரும் செவ்வந்தி பெயரை கொண்ட பெண்ணும் தகாத உறவைப் பேணி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. முன்னாள் மேஜர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் அனுராதபுரத்தில் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்படவுள்ளனர். https://thinakkural.lk/article/316731
-
3 வது முறையாகவும் ஜனாதிபதியாக ஆசைப்படும் ட்ரம்ப்
டிரம்ப் மூன்றாவது முறையாக அதிபராக முடியுமா? பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், கிராமே பேக்கர் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மூன்றாவது முறையாக அதிபராக வேண்டும் என்று ஆசைப்படுவது பற்றி தான் 'நகைச்சுவையாகக் குறிப்பிடவில்லை' என்று கூறியிருக்கிறார் டொனால்ட் டிரம்ப். 'எந்த நபரும்…. இரண்டாவது முறைக்குப் பிறகு தேர்வாகக்கூடாது,'' என்று அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், டிரம்ப் ஆதரவாளர்கள் சிலர் அதற்கு வேறு வழிகள் இருக்கக்கூடும் என்று பரிந்துரைக்கிறார்கள். மூன்றாவது ஆட்சிக்காலத்தைப் பற்றி டிரம்ப் பேசுவது ஏன்? மூன்றாவது முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி என்பிசி ஊடகத்துக்குக் கொடுத்த நேர்காணலில் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் ''அதற்கென உள்ள சில வழிமுறைகளின் மூலம் அதைச் செய்ய முடியும்", என்று கூறினார். ''நான் நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை… நிறைய பேர் நான் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள்," என்றவர் தொடர்ந்து, ''ஆனால் நாம் அதற்கு இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டும் என்று சொல்கிறேன். உங்களுக்கே தெரியும் இது நிர்வாகத்தின் ஆரம்பகாலம்தான்." என கூறினார். இந்தியா - சீனா உறவை மேம்படுத்தும் மோதியின் எண்ணம் ஈடேறுமா? அமெரிக்கா என்ன செய்கிறது? டிரம்பின் வரிக்குவரி யுத்தம்: 1991 போல இந்தியாவில் இன்னொரு சீர்திருத்தத்திற்கு வழிவகுக்குமா? டிரம்பின் நடவடிக்கைகளால் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயில்வது கடினமாகிறதா? இரான் மீது குண்டு வீசுவோம் என்று டிரம்ப் மிரட்டல் - இரான் பதில் என்ன? இரண்டாவது பதவிக்காலம் முடியும் சமயத்தில் 82 வயதை நிறைவு செய்யப் போகும் டிரம்பிடம், 'இந்த நாட்டின் மிகக் கடினமான வேலையில்' தொடர்ந்து சேவை புரிய விருப்பமா என்று கேட்கப்பட்டது. அதற்கு, ''எனக்கு வேலை செய்யப் பிடிக்கும்'' என்று அவர் பதிலளித்தார். இதுதொடர்பாக அவர் கருத்து சொல்வது இது முதன்முறையல்ல. ஜனவரி மாதம் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது, ''ஒருமுறை அல்ல அதற்கும் அதிகமாக இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு முறைகள் சேவை செய்ய முடிவது என் வாழ்வில் மிகுந்த பெருமைக்குரிய விஷயம்", என்று குறிப்பிட்டார். ஆனால் பின்னர் இது ''பொய்யான செய்தி ஊடகங்களுக்காக" சொல்லப்பட்ட நகைச்சுவை என்று குறிப்பிட்டார். அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது? வெளிப்பார்வைக்குப் பார்க்கப் போனால், யாரும் மூன்றாவது முறை ஆட்சிக்கு வருவதை அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் தடை செய்கிறது. அதன் 22வது சட்டத்திருத்தம்: "அதிபர் பதவிக்கு யாரும் இருமுறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது, அதோடு வேறு ஒருவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்காலத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக அதிபர் பதவியை ஏற்றுக் கொண்ட அல்லது அதிபராக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்ட யாரும், இரண்டு வருட காலத்துக்கு மேல் பதவியில் இருந்தால், அவர்கள் ஒருமுறைக்கு மேல் அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது'', என்கிறது. அதாவது இடைக்கால அதிபராக பதவி வகிப்பவர்களும், 2 ஆண்டைக் கடந்து பதவியில் இருந்தால், மேலும் ஒருமுறை மட்டுமே நேரடியாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு கிடைக்கும். அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டுமென்றால் செனட் மற்றும் பிரதிநிதிகள் அவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவும், அதோடு நாட்டின் மாகாண அரசுகளிடம் இருந்து நான்கில் மூன்று பங்கு ஆதரவும் வேண்டும். டிரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கட்டுப்படுத்தினாலும் தேவையான பெரும்பான்மை அதற்கு இல்லை. அதோடு மாகாண அவைகளில் 50ல் 18 ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன. டிரம்ப் எப்படி மூன்றாவது முறையாக அதிபராக முடியும்? பட மூலாதாரம்,GETTY IMAGES அரசியலமைப்பு சட்டத்தில் நீதிமன்றத்துக்கு பதில் தெரியாத ஒரு ஓட்டை இருப்பதாக டிரம்ப் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். 22ம் சட்டத்திருத்தம் ஒரு நபர் இரண்டு ஆட்சிக்காலத்துக்கும் மேல் 'தேர்வாவதைத்' தான் தடை செய்கிறதே தவிர - 'பின்தொடர்வதைப்' பற்றி அத்திருத்தம் எதுவும் குறிப்பிடவில்லை என்று வாதிடுகிறார்கள். இந்தக் கோட்பாட்டின்படி இன்னொரு வேட்பாளருக்கு டிரம்ப் துணை அதிபராக இருக்கலாம் – 2028 தேர்தலின்போது - இப்போது அவருக்கு துணை அதிபராக இருக்கும் ஜே.டி.வான்ஸுக்குக் கூட. அவர்கள் வென்றால் அந்த வேட்பாளர் அதிபராக பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் மற்றும் உடனே ராஜினாமாவும் செய்யலாம் – அவரைத் தொடர்ந்து டிரம்ப் பதவியேற்க வழிவகுக்கலாம். டிரம்ப்பின் முன்னால் அறிவுரையாளர்களில் முக்கியமானவரான பாட்காஸ்டர் ஸ்டீவ் பனோன், டிரம்ப் ''மறுபடி போட்டியிட்டு மறுபடி ஜெயிப்பார்'' என்று நம்புவதாகவும், அதை எப்படிச் செய்வது என்பதற்கு 'சில மாற்றுமுறைகளும்' இருக்கிறது என்றும் கூறினார். "இந்தியா விண்வெளியில் கால்பதிக்க உதவுவேன்" - பத்திரிகையாளர் சந்திப்பில் சுனிதா வில்லியம்ஸ் கூறியது என்ன?6 மணி நேரங்களுக்கு முன்னர் அதிமுக, பாஜக கூட்டணி முடிவாகிவிட்டதா? அண்ணாமலையின் பேச்சு உணர்த்துவது என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் மக்களைவையில் டென்னிஸி மாகாணப் பிரதிநிதியாக இருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆண்டி ஆகிள்ஸ் ஒருவர் மூன்று முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான தீர்மானத்தை ஜனவரியில் முன்மொழிந்தார். இதன்படி அது தொடர்ச்சியான பதவிக்காலமாக இல்லாத பட்சத்தில் மூன்றாவது முறை தேர்வாகலாம். இதன்மூலம் இப்போது உயிரோடு இருப்பவர்களில் இதற்குத் தகுதியான ஒரே நபர் டிரம்பாகத்தான் இருக்க முடியும் என்பதே இதன் பொருள் – பராக் ஒபாமா, பில் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகிய அனைவரும் தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்திருக்கிறார்கள் - டிரம்ப் மட்டும்தான் 2016ல் வென்றார், 2020ல் தோற்றார் மற்றும் மறுபடி 2024 வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இப்படிப்பட்ட ஒரு அரசியலமைப்பு சட்டத்திருத்தம் தொடர்பான ஆகிள்ஸின் தீர்மானம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு குறைவுதானென்றாலும் அதைப் பற்றி மக்களைப் பேச வைத்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாரக் ஒபாமா தொடர்ந்து இருமுறை அதிபராக பதவி வகித்துள்ளார் டிரம்பின் மூன்றாவது ஆட்சிக்காலத்தை யார் எதிர்க்கிறார்கள்? ஜனநாயகக் கட்சியினருக்கு ஆழமான எதிர்ப்புகள் உள்ளன. ''இந்த அரசைத் தன்வயப்படுத்தி, ஜனநாயகத்தைக் குலைப்பதற்கான அவரது முயற்சியில் இது இன்னொரு உச்சம்," என்று கூறியிருக்கிறார் நியூயார்க் பிரதிநியான டேனியல் கோல்டுமேன். இவர் டிரம்பின் முதல் ஆட்சிக்கலைப்புக்கான வழக்கில் தலைமை வழக்கறிஞராக இருந்தவர். '' நாடாளுமன்றத்தில் இருக்கும் குடியரசுக்கட்சிப் பிரதிநிதிகள் அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கிறார்கள் என்றால், டிரம்பின் 'மூன்றாவது ஆட்சிக்கால விருப்பங்கள்' பற்றி வெளிப்படையாக எதிர்த்துப் பேசுவார்கள்". டிரம்பின் கட்சியைச் சேர்ந்தவர்களில் பலருக்கும் இது மோசமான யோசனையாகத் தோன்றுகிறது. டிரம்ப் மூன்றாவது முறையாக வெள்ளை மாளிகைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தான் ஆதரிக்கப்போவதில்லை என ஓக்லஹோமா மாகாணத்தின் குடியரசுக் கட்சி செனட்டரான மார்க்வெய்ன் முல்லின் பிப்ரவரியில் குறிப்பிட்டார். ''முதலில் நான் அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்தப்போவதில்லை, அமெரிக்க மக்கள் அப்படிச் செய்யத் தேர்ந்தெடுத்தால் தவிர", என்று என்பிசியிடம் தெரிவித்தார் முல்லின். பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை1 ஏப்ரல் 2025 மியான்மர் நிலநடுக்கம்: குலுங்கிய மருத்துவமனை, கைக்குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்8 மணி நேரங்களுக்கு முன்னர் "இந்தியா விண்வெளியில் கால்பதிக்க உதவுவேன்" - பத்திரிகையாளர் சந்திப்பில் சுனிதா வில்லியம்ஸ் கூறியது என்ன?6 மணி நேரங்களுக்கு முன்னர் சட்ட வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்? நாட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தேர்தல் சட்டப் பேராசிரியரான டெரெக் முல்லர், அரசியலமைப்புச் சட்டத்தின் 12வது சட்டத்திருத்தம், ''அதிபர் பதவிக்குப் போட்டியிடத் தகுதியில்லாத எந்த நபரும் அமெரிக்காவின் துணை அதிபராக இருப்பதற்கும் தகுதியில்லை,'' என்று குறிப்பிடுவதாகக் கூறியுள்ளார். அவர் பார்வையின்படி இரண்டுமுறை பதவிக்குப் போட்டியிடுவதே ஒருவர் துணை அதிபராகப் போட்டியிடுவதையும் தகுதி இழக்கச் செய்கிறது. ''எத்தனை முறை அதிபர் ஆகலாம் என்பதை எந்த ஒரு வினோத உத்தியின் மூலமும் மாற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை," என்கிறார் அவர். பாஸ்டனின் வடகிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அரசியலமைப்புச் சட்ட பேராசிரியரான ஜெரிமி பால், மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான 'எந்த ஒரு நம்பத்தகுந்த சட்ட வாதமும் இல்லை' என்று சிபிஎஸ் நியூஸ் – இடம் பேசியபோது தெரிவித்தார். இரு முறைக்கு மேல் தேர்வான ஒரே அமெரிக்க அதிபர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரண்டு முறைக்கு மேல் அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் ஃப்ராங்க்ளின் டெலனோ ரூஸ்வெல்ட் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தனது நான்காவது பதவிக்காலம் தொடங்கி மூன்றாவது மாதம் முடிந்த நிலையில் 1945ம் வருடம் ஏப்ரல் மாதம் அவர் உயிரிழந்தார். அவர் ஆட்சிக்காலத்தின் முக்கியப் பகுதிகளான பெரும் பொருளாதார வீழ்ச்சியும், இரண்டாம் உலகப்போரும் அவர் அதிபர் காலம் தொடர்ந்ததற்கான காரணிகளாகக் கூறப்படுகின்றன. அதுவரை அதிபர்கள் இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருக்கக் கூடாது என்பது சட்டமாக எழுதப்படவில்லை – மாறாக 1796ல் ஜார்ஜ் வாஷிங்டன் மூன்றாவது முறை பதவி ஏற்க மறுத்ததன் தொடர்ச்சியாக பின்தொடரப்பட்ட ஒரு சடங்காகத்தான் இருந்தது. ரூஸ்வெல்ட் தொடர்ந்து பதவியில் இருந்ததால் இந்தச் சடங்கை சட்டமாக, 22வது சட்டத்திருத்தமாக 1951ல் நிறைவேற்றினார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgnxprj8rro
-
பென்ஸ் - வெஸ்லி அணிகளுக்கு இடையிலான காட்மன் கிண்ண கிரிக்கெட் வெற்றி தோல்வியின்றி முடிவு
Published By: VISHNU 01 APR, 2025 | 07:44 PM (நெவில் அன்தனி) கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கும் பொறளை வெஸ்லி கல்லூரிக்கும் இடையில் பி.சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 5ஆவது வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் காட்மன் கிண்ண இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி எவ்வித பரபரப்பையும் ஏற்படுத்தாமல் வெற்றி தோல்வியின்றி இன்று (01) முடிவடைந்தது. இதன் காரணமாக வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் காட்மன் கிண்ணம் இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலையில் இருந்த புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கு மேலும் ஒரு வருடத்திற்கு கிண்ணம் சொந்தமானது. இரண்டு அணிகளும் 3 இன்னிங்ஸ்களிலும் 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்ததுடன், வெஸ்லி கல்லூரி சார்பாக நால்வர் அரைச் சதங்கள் குவித்ததுடன் புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி சார்பாக இருவர் அரைச் சதங்கள் பெற்றனர். திங்கட்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வெஸ்லி கல்லூரி முதல் இன்னிங்ஸில் நிர்ணயயிக்கப்பட்ட 65 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி சகல விக்கெட்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் சண்முகநாதன் ஷாருஜன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இந்தத் தொடரில் தனது 2ஆவது தொடர்ச்சியான அரைச் சதத்தைப் பூர்த்திசெய்தார். ஷாருஜன் 71 ஓட்டங்களைப் பெற்றதுடன் மெவன் திசாநாயக்க 50 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். டினுஜ சமரரட்ன, ரஷ்மிக்க அமரரட்ன ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸ் நிறைவில் 27 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த வெஸ்லி கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 7 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. சண்முகநாதன் ஷாருஜன் தான் உட்பட 9 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியபோதிலும் வெஸ்லி துடுப்பாட்ட வீரர்களின் பலம் மேலோங்கி இருந்தது. அணித் தலைவர் அனுக பஹன்சர, லித்தும் செனுஜ, தினேத் சிகேரா ஆகிய மூவரும் அரைச் சதங்கள் பெற்று அசத்தினர். அனுக பஹன்சரவும் லித்தும் செனுஜவும் 3ஆவது விக்கெட்டில் 146 ஓட்டங்களையும் தினேத் சிகேராவும் ருக்ஷான் தரங்கவும் 5ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களையும் பகிர்ந்தனர். எண்ணிக்கை சுருக்கம் வெஸ்லி 1ஆவது இன்: 208 - 6 விக். (ரஷ்மிக்க அமரரட்ன 98, தினுஜ வெனுசர சமரரட்ன 34, அனுக பஹன்சர 31, சண்முகநாதன் ஷாருஜன் 38 - 2 விக்.) புனித ஆசீர்வாதப்பர் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 235 (சண்முகநாதன் ஷாருஜன் 71, மெவன் திசாநாயக்க 50, தெஹான் பீட்டர் 36, மானிக்ய தேஷப்ரிய 25, தினுஜ சமரரட்ன 42 - 3 விக்., ரஷ்மிக்க அமரரட்ன 45 - 3 விக்., ஜீவகன் ஸ்ரீராம் 66 - 2 விக்.) வெஸ்லி 2ஆவது இன்: ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 255 - 7 விக். (அனுக பஹன்சர 82, லித்தும் செனுஜ 63, தினேத் சிகேரா 63) விருதுகள் சிறந்த களத்தடுப்பாளர்: ட்ரிஷேன் சில்வா (புனித ஆசீர்வாதப்பர்) சிறந்த பந்துவிச்சாளர்: தினுஜ வெனுசர (வெஸ்லி) சிறந்த துடுப்பாட்ட வீரர்: ரஷ்மிக்க அமரரட்ன (புனித ஆசீர்வாதப்பர்) ஆட்டநாயகன்: சண்முகநாதன் ஷாருஜன் (புனித ஆசீர்வாதப்பர்) https://www.virakesari.lk/article/210878
-
காங்கேசன்துறை தமிழர்கள் காணிகளில் புத்த விகாரை கட்டப்பட்டது சட்டவிரோதம் - இலங்கை விகாராதிபதி பிபிசிக்கு பேட்டி
3 மணி நேரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை விரிவாக்கப் பணிகள் தமிழ் மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்று தற்போது வெளியாகி வரும் தகவல்கள் இலங்கையில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில் இங்கிருந்து சென்ற தமிழ் மக்கள் பலரும் அக்காலத்தில் அங்கே ஒரு விகாரை இருந்ததாக தெரிவிக்கின்றனர். உண்மையில் அப்படி ஒரு விகாரை இருந்ததா? அங்குள்ள பிக்குவும், ராணுவமும், நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரரும் இந்த விவகாரம் குறித்து கூறுவது என்ன? இந்த விகாரை சர்ச்சையாவது ஏன்? "தற்போதுள்ள விகாரையை தமிழ் மக்களின் காணிகளிலேயே நிர்மாணித்துள்ளனர். இது தவறான விடயம் என நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகின்றோம். தமிழ் மக்களே இந்த இடத்தில் இருக்க வேண்டும்,'' என யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை மற்றும் நயினா தீவு விகாரையின் விகாராதிபதி (தலைமை தேரர்) நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். தையிட்டி பகுதியில் திஸ்ஸ ரஜமகா விகாரை அமைந்துள்ளது. இலங்கையில் மூன்று தசாப்த கால யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக இந்த தையிட்டி பகுதி காணப்படுகின்றது. இலங்கை ராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான யுத்தம் வலுப்பெற்ற 1990-ஆம் ஆண்டு காலப் பகுதியில் தையிட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறியதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தையிட்டி பகுதியிலிருந்து மக்கள் வெளியேறிய 90ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் அந்த இடத்திற்கு பௌத்த விகாரையொன்று காணப்பட்டுள்ளது. ஆனால் திஸ்ஸ விகாரை என்று அழைக்கப்படவில்லை என்று அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர். கருணா அம்மான் உள்பட 4 இலங்கையர்களுக்கு தடை விதித்த பிரிட்டன் - இதன் விளைவுகள் என்ன? படலந்த சித்ரவதை முகாமுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கூறும் தகவல்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான கருணா - பிள்ளையான் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்தது ஏன்? இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடுகள் - தடுப்பு நடவடிக்கை குறித்து கூட்டம் நடத்திய ஜனாதிபதி வரலாற்று சிறப்புமிக்கதா இந்த விகாரை? ''திஸ்ஸ ராஜமஹா விகாரை என்பது பழமையை வரலாற்று பெறுமதிமிக்க விகாரை என்பதுடன், சங்கமித்தை ஜயஸ்ரீ மஹாபோதிக்கு வருகை தரும்போது ஓய்வுக்கு தரித்திருந்த இடத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் விகாரையொன்றை அமைக்குமாறு தேவானப்பியதிஸ்ஸ மன்னனுக்கு அறிவித்துள்ளதாகவும் புராணக்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், முதலாவது தமிழ் தம்ம பாடசாலை இந்த விகாரையிலேயே ஆரம்பிக்கப்பட்டமையும் விசேடமாகும்,'' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார் என நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அதன் தலைவராக பதவி வகித்த போது இதை தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், 1946ம் ஆண்டு காலப் பகுதியில் காணி உரிமையாளரினால் இந்த விகாரைக்குரிய காணி ஈடு வைக்கப்பட்ட நிலையில், அதனை மீட்க முடியாது, பின்னர் வேறொரு நபருக்கு குறித்த காணி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த காணி பௌத்த அமைப்பொன்றுக்கு வழங்கப்பட்டதை அடுத்தே இங்கு பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டதாக பிரதேசத்தில் வாழும் தமது மூதாதையர் கூறியதாக, அந்த பிரதேச தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், தற்போது திஸ்ஸ விகாரை அமைந்துள்ள அந்த இடத்தில் ஏற்கனவே ஒரு விகாரை இருந்தது என்பது உறுதியாகியுள்ள பின்னணியில், யுத்த காலத்தில் விகாரையை அண்மித்து வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறிய சூழ்நிலையில், அந்த காணிகள் ராணுவம் வசமிருந்துள்ளது. இவ்வாறு ராணுவம் வசமிருந்த காணி விடுவிக்கப்பட்டதுடன், விடுவிக்கப்பட்ட தமிழர்களின் காணிகளை திஸ்ஸ விகாரையிலுள்ள பௌத்த மதகுருமார்கள் கைப்பற்றி, ராணுவத்தின் உதவியுடன் விகாரையை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வங்கதேசத்தில் ரோஹிஞ்சா அகதிகள் வாழும் உலகின் மிகப்பெரிய முகாம் மோசமான நிலையில் இருப்பது ஏன்?28 மார்ச் 2025 SRH-ஐ சிதைத்த ஷர்துலின் விஸ்வரூபம் - லக்னௌவின் ஆணிவேராக அமைந்த பூரன், மார்ஷ் ஜோடி28 மார்ச் 2025 பட மூலாதாரம்,PATHMANATHAN SARUJAN படக்குறிப்பு,யுத்த காலத்தில் விகாரையை அண்மித்து வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறிய சூழ்நிலையில், அந்த காணிகள் ராணுவம் வசமிருந்துள்ளது. காணிகளுக்கு செல்வதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது - உரிமையாளர்கள் கூறுவது என்ன? காணியின் உரிமையாளர்களில் ஒருவரான பத்மநாதன் சாரூஜன் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசும் போது, ''யுத்தம் காரணமாக 90ம் ஆண்டு காலப் பகுதியில் ஒரே நாளில் நாங்கள் தையிட்டி பகுதியிலிருந்து வெளியேறியிருந்தோம். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்த காணிகள் பகுதி பகுதியாகவே விடுவிக்கப்பட்டது. குறிப்பாக தையிட்டி விகாரை பிரச்னை நடைபெறும் பகுதி 2015-ஆம் ஆண்டே விடுவிக்கப்பட்டது," என்று மேற்கோள்காட்டினார். "விகாரைக்கு பக்கத்திலுள்ள காணிகளை பிடித்துக்கொண்டு சற்று தொலைவிலுள்ள காணிகளே முதலில் விடுவிக்கப்பட்டது. விகாரைக்குரிய நிர்மாணங்கள் நடைபெறும் இடத்தில் தான் எங்களுடைய காணி சிக்குண்டுள்ளது. இதுவரை எங்களுடைய காணிகளுக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டு தான் இருக்கின்றது," என்றும் அவர் தெரிவித்தார். ''காணி விடுவிக்கப்பட்டதை அடுத்து, அந்த விகாரைக்கு வருகைத் தந்த பௌத்த பிக்கு ஒருவர், நில அளவையாளர்களை அழைத்து வந்து அளவிட்டு, 24 பரப்பு காணிகளை அவர் எடுத்துக்கொண்டார். எங்களுடைய உறவினர் ஒருவரின் காணியும் அதில் இருந்துள்ளது. அவர் பிரச்னையை ஏற்படுத்தினார். பின்னர் எங்களுடைய நில அளவையாளர் மற்றும் அவர்களுடைய நில அளவையாளர் வந்து மறு அளவை செய்து பிரச்னையை முடித்து கொடுத்தார்கள். அதிலிருந்து அப்போது விலகி சென்றார்கள். அதன்பின்னர் பழைய விகாரையில் சிறு சிறு வேலைகள் நடந்துக்கொண்டிருந்தது. மைத்திரி - ரணில் ஆட்சி காலத்தில் பழைய விகாரையில் அபிவிருத்தி பணிகள் நடந்திருந்தன. எனினும், இடைநடுவில் விடுப்பட்ட அந்த பணிகள் இன்று வரை அப்படியே இருக்கின்றது. கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் கொரோனா பரவிய சந்தர்ப்பத்தில் பொதுமக்களின் காணிகளில் கொரோனா விதிமுறைகளில் பின்பற்றி அவர்கள் அத்திவார பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். விகாரை தான் கட்டுகின்றார்கள் என எங்களுக்கு தெரியாது. சுற்றி வர தகரங்களால் மூடி கட்டிடம் கட்டப்பட்டது. கொரோனா விதிமுறை காரணமாக எங்களால் வெளியில் போக முடியவில்லை. அப்போது இதனை கட்டினார்கள். இந்த இடத்தில் விகாரை கட்டவில்லை. ராணுவம் இருக்கின்றது. ராணுவம் வெளியேறும் போது முழு காணிகளையும் தந்து விடும் என அரசாங்க அதிபர் எங்களிடம் தெரிவித்தார். விகாரைக்குரிய காணி வேறொரு இடத்தில் இருக்கின்றது. அந்த இடத்தில் முதலிலேயே அத்திவாரம் போடப்பட்டுள்ளது என்பதனால் இந்த இடத்தில் விகாரை தான் கட்டப்படுகின்றது என்பதை நாங்கள் நம்பவில்லை. கொரோனா காலப் பகுதியை பயன்படுத்தி இதனை கட்டி முடித்து விட்டார்கள்.'' என அவர் மேலும் குறிப்பிட்டார். மம்மூட்டி மீதான அன்பால் மோகன்லால் செய்த செயல் சர்ச்சையாவது ஏன்?28 மார்ச் 2025 இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பாலம் மீண்டும் திறக்க வித்திட்ட காதல் ஜோடியின் மரணம்28 மார்ச் 2025 பட மூலாதாரம்,PATHMANATHAN SARUJAN படக்குறிப்பு,விகாரையை விரிவுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 16 நபர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கின்றனர் அங்குள்ள தமிழ் மக்கள் போராட்டத்தில் மக்கள் இந்த நிலையிலேயே, தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான போராட்டத்தை, காணி உரிமையாளர்கள் 2023ம் ஆண்டு ஆரம்பித்துள்ளனர். ''குறித்த பகுதியில் சுமார் 16 பேரின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்தே இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்பதை தென் பகுதியிலிருந்து வருகைத் தருகின்ற மக்களுக்கு உணர்த்துவதற்காகவே போராட்டங்களை நடத்துகின்றோம். உண்மையாக பௌத்த மதத்தை வழிபடுவோருக்கு உணர்த்துவதற்காகவே இதனை செய்கின்றோம். நயினை தீவு, யாழ்ப்பாணம் நகரம் போன்ற இடங்களில் பௌத்த விகாரைகள் இருக்கின்றன. அந்த இடங்களுக்கு சென்று போராட்டங்களை நடத்தவில்லை. இங்கு மாத்திரமே செய்கின்றோம். அநீதி இழைக்கப்பட்டுள்ளமையினாலேயே இந்த போராட்டத்தை நடத்துகின்றோம் என்பதை உணர்த்துவதற்காகவே இதனை செய்கின்றோம்'' என பத்மநாதன் சாரூஜன் குறிப்பிடுகின்றார். ''பொதுமக்களின் காணிகளிலேயே இந்த விகாரை கட்டப்பட்டுள்ளது. இதில் 8 ஏக்கர் காணி பிடிப்பட்டுள்ளது. ஒரு விடயத்தை தெளிவூட்ட வேண்டும். ஒவ்வொரு இடத்திற்கு ஒவ்வொரு அளவு பிரமாணம் இருக்கின்றது. கொழும்பில் பச்சர்ஸ் என்றும் யாழ்பாணத்தில் பரப்பு என்றும் வெவ்வேறு அளவைகளில் நிலம் அளவிடப்படுகிறது. 10 பச்சர்ஸ் ஒரு பரப்பு. 16 பரப்புகளை உள்ளடக்கியது ஒரு ஏக்கர். ஏக்கர், பரப்பு, பச்சர்ஸ் என்பதிலும் ஒரு குழப்பம் இருக்கின்றது. அவர்களுக்கு இருந்த காணி 20 பரப்பு. அப்படியென்றால் 200 பச்சர்ஸ். பொதுமக்களுக்குரிய காணி 8 ஏக்கர். கிட்டத்தட்ட 150 பரப்பிற்குரிய காணி அதில் பிடிப்பட்டுள்ளது.'' என பத்மநாதன் சாரூஜன் தெரிவிக்கின்றார். இந்த விகாரையை அண்மித்து எந்தவொரு சிங்களவர்களும் காணி உறுதியுடன் இன்று வரை வசித்திருக்கவில்லை என கூறும் அந்த பிரதேச மக்கள், தமிழர்களினால் வழங்கப்பட்ட காணியிலேயே விகாரை நிர்மாணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். அதைவிடுத்து, இந்த விகாரையானது புராதன பெருமதிமிக்க விகாரை என கூற முடியாது எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். காணி உறுதிப் பத்திரத்திற்கு அமைய விகாரை அமைந்துள்ள காணியில் விகாரை அவ்வாறு நடத்திச் செல்வதற்கு தாம் எந்தவிதத்திலும் எதிர்ப்பை வெளியிடவில்லை என கூறும் அந்த பிரதேச மக்கள், தனியார் காணிகளை ஆக்கிரமித்து விகாரையை விஸ்தரிக்கும் திட்டத்திற்கே எதிர்ப்பை வெளியிடுவதாகவும் குறிப்பிடுகின்றனர். இந்த விகாரையை நிர்மாணிக்கும் பணிகள் மற்றும் அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இன்றும் இலங்கை ராணுவம் ஈடுபட்டு வருவதாக பத்மநாதன் சாரூஜன் தெரிவிக்கின்றார். சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-வுக்கு எதிராக தொடரும் ஆர்சிபி-யின் 16 ஆண்டுகால தோல்வி முடிவுக்கு வருமா?28 மார்ச் 2025 எம்புரான் விமர்சனம்: லூசிஃபர் அளவுக்கு அழுத்தமான படமாக இருந்ததா?28 மார்ச் 2025 பட மூலாதாரம்,NAVATHAGALA PATHUMAKEERTHI THISS THERO படக்குறிப்பு,யாழ்ப்பாணத்தில் பிரசித்திப் பெற்ற நயினா தீவு பௌத்த விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி என்ன சொல்கின்றார்? யாழ்ப்பாணத்தில் பிரசித்திப் பெற்ற நயினா தீவு பௌத்த விகாரையின் விகாராதிபதியாக கடமையாற்றிய வரும் நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர், சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியாகவும் செயற்பட்டு வருகின்றார். திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியாக நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் செயற்பட்டாலும், திஸ்ஸ விகாரைக்கான கண்காணிப்பு பொறுப்பு மற்றுமொரு பௌத்த பிக்குவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பௌத்த பிக்குவே, இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை மற்றும் நயினா தீவு விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். ''இந்த பௌத்த பிக்கு ராணுவத்துடன் இணைந்து விகாரையின் காணியில் இல்லாது, தமிழ் மக்களின் காணிகளில் தற்போதுள்ள விகாரையை கட்டியுள்ளார். இது தவறு என நான் முதலில் இருந்தே கூறி வருகின்றேன். விகாரைக்கு 18 ஏக்கர் இருக்கின்றது. இது திஸ்ஸ விகாரைக்கு சொந்தமானது என கூறுகின்றனர். திஸ்ஸ விகாரைக்கு என்று காணி உறுதிப்பத்திரம் இருக்கின்றது. அந்த காணிகள் அந்த மக்கள் இருக்க வேண்டும். நான் தானே அதற்கான அனுமதியை கொடுக்க வேண்டும். தமிழ் மக்களிடம் காணி உறுதிப்பத்திரங்கள் இருக்கின்றன. வெசாக் உற்சவத்திற்கு அரசாங்கத்தினால் விகாரைகளுக்கு பணம் வழங்கப்பட்டது. திஸ்ஸ விகாரைக்கும் பணம் வழங்கப்பட்டது. அந்த பிக்குவுடன் இணைந்து ராணுவம் பணத்தை பெற்று தமிழ் மக்களின் காணிகளில் அந்த நிர்மாண பணிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. திஸ்ஸ விகாரைக்கு கிடைத்த பணத்தை கொண்டு, ஏனையோரின் காணிகளில் விகாரையை நிர்மாணித்தது சட்டவிரோதமானது. தமது காணிகளை கோரியே தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்,'' என நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் குறிப்பிடுகின்றார். ''தற்போதுள்ள நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரையை உடைக்க முடியாது. அவ்வாறு உடைத்தால் வேறு பிரச்னை வரும். அதனால், எனது காணியை தருகின்றேன் என நான் தமிழ் மக்களிடம் கூறினேன்.'' எனவும் அவர் தெரிவித்தார். ''நான் ஏனைய பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடினேன். தற்போதுள்ள பிக்குவிடம் உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. ஏனையோர் ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும் காணி விடுவிக்கப்படவில்லை. தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். அது நியாயமான போராட்டம். நான் பௌத்தம் என்றாலும், எமது காணிகளில் விகாரையை கட்ட வந்தால் எமது மக்களும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் அல்லவா? அது தெளிவாகவே தமிழ் மக்களின் காணிகள். வேண்டுமென்றே ராணுவத்துடன் இணைந்து இதனை செய்கின்றனர். எங்களையே உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வீதி தடையை ஏற்படுத்தியே இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டது.'' என அவர் குறிப்பிடுகின்றார். ''மக்கள் தவறானவர்கள் இல்லை. பிக்குவே தவறிழைத்தவர். ராணுவம் தவறிழைத்துள்ளது. அந்த பிக்கு பலவந்தமாகவே விகாரையில் இருக்கின்றார்,'' எனவும் நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் குறிப்பிடுகின்றார். 'கணவரின் நிறத்துடன் ஒப்பிட்டனர்' - கேரள பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி வேதனைப்பட்டதன் பின்னணி27 மார்ச் 2025 தங்க நகைகளை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் துருப் பிடிக்குமா?27 மார்ச் 2025 படக்குறிப்பு, விகாரையை விரிவுப்படுத்தும் பணிகள் நடைபெற்றது குறித்து அறிவிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் திஸ்ஸ விகாரை பிக்குவின் பதில் என்ன? சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகாரையில் தற்போதுள்ள பிக்கு தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து, அந்த பிக்குவை, பிபிசி தமிழ் தொடர்புக் கொண்டு வினவியது. தாம் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்பதனால், தற்போதைக்கு எந்தவொரு ஊடகத்திற்கும் பதிலளிக்க முடியாது என அவர் கூறினார். இலங்கை ராணுவத்தில் பதில் திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி மற்றும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தமிழ் மக்கள் ராணுவம் மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிபிசி தமிழ், ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வர்ண கமகேவிடம் வினவியது. ''ராணுவம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய என எந்தவொரு புனித தலத்திலிருந்தும் உதவிகளை கோரும் பட்சத்தில், அதற்கான உதவிகளை சட்டவிதிமுறைகளுக்கு அமைய நாங்கள் வழங்குவோம். சட்ட விதிமுறைகளுக்கு அமைவானது என்றால் நிச்சயம் நாங்கள் அதனை செய்துக்கொடுப்போம். அதைவிடுத்து, இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு செயற்பாடுகளிலும் ராணுவம் தொடர்புபடாது'' என ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வர்ண கமகே தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7989181jgxo
-
3 வது முறையாகவும் ஜனாதிபதியாக ஆசைப்படும் ட்ரம்ப்
மூன்றாவது தடவை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினார் டிரம்ப் - பராக் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட விரும்புவதாக கருத்து Published By: RAJEEBAN 01 APR, 2025 | 01:56 PM அமெரிக்க ஜனாதிபதியாக மூன்றாவது முறை தெரிவு செய்யப்படுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மூன்றாவது தடவை போட்டியிட்டால் அவருக்கு எதிராக போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு எதிராக போட்டியிடுவது சிறப்பான விடயமாகயிருக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசமைப்பு ஒருவர் இரண்டு தடவைகளிற்கு மேல் ஜனாதிபதியாக போட்டியிடுவதை அனுமதிக்காத போதிலும் டிரம்ப் மூன்றாவது தடவை ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். நான் மூன்றாவது தடவை ஜனாதிபதியாவதற்கான சில வழிமுறைகள் உள்ளன என என்பிசியின் பேட்டியில் டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா உங்களிற்கு எதிராக அவர் போட்டியிட்டால் எப்படி இருக்கும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு நான் அதனை விரும்புகின்றேன். அது சிறந்த விடயமாகயிருக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். மூன்றாவது தடவை அமெரிக்க ஜனாதிபதயாக பதவி வகிப்பதற்கான வழிமுறைகள் உள்ளதா என்பது குறித்து நான் இன்னமும் ஆராயவில்iலை என தெரிவித்துள்ள டிரம்ப் ஒரு வழியுள்ளது என சொல்கின்றார்கள், அது என்னவென்று எனக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளார். 1951 இல் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் தொடர்ச்சியாக நான்கு தடவைகள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் 22 திருத்தம் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது, இது எவரும் இரண்டு தடவைகளிற்கு மேல் ஜனாதிபதியாக தெரிவாக முடியாது என குறிப்பிடுகின்றது. இதேவேளை தனது முன்னாள் மருமகள் வனேசா டிரம்புடன் தான் உறவில் உள்ளதாக டைகர்வூட்ஸ் தனிப்பட்ட முறையில் தனக்கு தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி கடந்த மாதம் நான் அவருடன் சில தடவைகள் கோல்வ் விளையாடினேன், அவர் மிகச்சிறந்த நபர் மிகச்சிறந்த விளையாட்டு வீரர், அவர் இது பற்றி எனக்கு தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார். இருவர் குறித்தும் எனக்கு மகிழ்ச்சி அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என விரும்புகின்றேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210831
-
"புதிய ஆரம்பம்"
நன்றி ஐயா.
-
யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
புலவரே, ஆஸ்பத்திரிக்குள்ள நீங்க கேட்டது தரேலாது, வீட்டை போனதும் சொல்லுங்க பக்கத்து கடையில சொல்லி டோர் டெலிவரி செய்யலாம்!
-
யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
அண்ணை, இன்று காலை 8.47 அளவில் வீடு லைற்றா ஆடும்போதே நினைச்சன்! இங்கயும் வந்துவிட்டதா நிலநடுக்கம் என்று!!🥲
-
நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிப்பு : நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு உத்தரவு! Published By: DIGITAL DESK 2 01 APR, 2025 | 03:37 PM (டானியல் மாக்ரட் மேரி ) உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை புதன்கிழமை (02) வரை இடைநிறுத்துமாறு தொடர்புடைய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (1) இந்த மனுக்களை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முகமது லஃபார் தாஹீர் மற்றும் கே.பி.பிராணந்து ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழுவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சட்டத்தரணி அஜிரா அஸ்வர் தெரிவிக்கையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் தூய தேசத்திற்கான கட்சிக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், புத்தளம் மாநகர சபை மற்றும் கல்பிட்டி பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்குரிய மேன்முறையீடாக கடந்த 25 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தோம். இதனடிப்படையில், செவ்வாய்க்கிழமை (01) குறித்த வழக்கு பரிசீலிக்கப்பட்டு அதனடிப்படையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கான தற்காலிக தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.நாளை புதன்கிழமை (02) ஆம் திகதி வரை எந்த வித தேர்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் லஃபார் தாஹீர் தலைமையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் எஸ். எம் .இஷாம் மரிக்கார் தெரிவிக்கையில், புத்தளம் மாநகர சபை, கல்பிட்டி பிரதேச சபை ஆகிய இரு சபைகளிலும் ஏனைய சபைகளிலும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பில் தீர்வு எடுக்கும் வரைக்கும் தேர்தலுக்குரிய அனைத்து விடயங்களையும் நிறுத்தி வைக்குமாறு தொடர்புடைய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூய தேசத்திற்கான கட்சி புத்தளம் மாநகர சபையிலும், கல்பிட்டி பிரதேச சபையிலும் இரட்டைக் கொடி சின்னத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. அவற்றை நிராகரித்தமைக்காக நாங்கள் அதனை மீள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வழக்குத் தாக்கல் செய்திருந்தோம். அந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (1) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்காக எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஒரு நியாயம் உள்ளதை மிகத் தெளிவாக கூறி இருக்கிறார்கள். நாளை இது சம்பந்தமான தெளிவான முடிவொன்று எடுக்கப்படும். அதுவரைக்கும் புத்தளம் மாநகர சபை, கல்பிட்டி பிரதேச சபை ஆகிய இரு சபைகளிலும் ஏனைய சபைகளிலும் இந்த பிரச்சினை சம்பந்தமான தீர்வு எடுக்கும் வரைக்கும் தேர்தலுக்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு தற்காலிக தடை உத்தரவொன்றை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. ஆகவே இதுவும் எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். நாட்டில் இன்னும் நீதி சாகவில்லை. நீதி இருக்கிறது என்பதை மிகத்தெளிவாக நீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது. அதே நேரம் இளைஞர்கள் அரசியலுக்குள் வர வேண்டும் என்பதற்காக போடப்பட்ட சட்டமூலத்தை வைத்தே இளைஞர்களை நிராகரித்திருக்கிறார்கள். ஆகவே, நிராகரிக்கப்பட்ட வேட்பு மனு தாக்கல்களுக்கு எதிராக எமக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் என எமது நாட்டின் சட்டத்தை நம்பி நாங்கள் தாக்கல் செய்த வழக்கு இன்று வெற்றியாக அமைந்திருக்கிறது. ஒரு நாள் இந்த நாட்டின் தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்தி இருக்கிறார்கள் என்றால், நீதிக்கு ஆதரவாக அநீதிக்கு எதிராக செய்கின்ற போராட்டத்திற்கு வெற்றியை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இது எங்களுக்கு கவலையை ஏற்படுத்திய விடயமாகும். இதனால் நாங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்றோம் .புதன்கிழமை (02) எங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். ஆகவே எங்களுடைய ஆதரவாளர்கள், ஏக்கத்தோடு இருக்காமல் எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/210842
-
மாகாணசபை தேர்தல்கள் இந்த வருடம் இல்லை - அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ
01 APR, 2025 | 03:27 PM மாகாண சபை தேர்தல் இந்த வருடம் இடம்பெறாது என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தல் இடம்பெற்றால் ஆறுமாதத்திற்குள் இலங்கை மூன்று தேர்தல்களை சந்தித்திருக்கும் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக மற்றுமொரு தேர்தல் சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தொடர்ந்து தேர்தல்களை நடத்திக்கொண்டிருக்க முடியாது, அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தலுடன் பிரதானமான தேர்தல்கள் முடிவிற்கு வரும், மாகாணசபை தேர்தல்களை மாத்திரம் நடத்தவேண்டும், சட்டங்களை மாற்றவேண்டியுள்ளதாலும், நாட்டின் அபிவிருத்திக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாலும் மாகாண சபை தேர்தல்களை இந்த வருடம் நடத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210848
-
பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு
புதுமுக மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை 01 APR, 2025 | 03:15 PM யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிரஜன் தெரிவித்துள்ளார். விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக உட்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், எமது பீடத்தைச் சேர்ந்த புதுமுக மாணவன் ஒருவர் சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்டமை தொடர்பில் நாம் மிகுந்த வருத்தமடைகின்றோம். சம்பவம் தொடர்பாக அறிந்தவுடன் பல்கலைக்கழக சட்ட நிறைவேற்று அதிகாரி, மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருடன் நானும் வைத்தியசாலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவனை நேரில் பார்வையிட்டதுடன், வைத்திய நிபுணர்களிடமும் கலந்துரையாடினோம். பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரிடமிருந்தும், மாணவனிடமிருந்தும் பெறப்பட்ட முதற்கட்டத் தகவலின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும். இரண்டாம் வருடத்தைச் சேர்ந்த நான்கு சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கமைய மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பகிடிவதை மற்றும் மாணவர் ஒழுக்காற்று நடைமுறைகள் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை, பல்கலைக்க்கழக உபவிதிகளுக்கு அமைய, கிடைக்கப்பெறும் விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் ஊடாகப் பேரவைக்குச் சமர்ப்பிக்கப்படும். பேரவைத் தீர்மானத்துக்கமைய குற்றமிழைத்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்பவம் பல்கலைக்கழகத்துக்கு வெளியே இடம்பெற்றிருப்பதனால் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை வழங்கிய முறைப்பாடுகளுக்கமைய பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பல்கலைக்கழகம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றார். https://www.virakesari.lk/article/210841
-
கிளிநொச்சியில் மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்; இரத்தினசிங்கம் முரளிதரன்
01 APR, 2025 | 01:20 PM கிளிநொச்சி மாவட்டத்தில் 1209.22 ஏக்கர் மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் வசமுள்ள காணி தொடர்பில் கேட்ட போதே அவர் செவ்வாய்க்கிழமை (01) இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களது காணிகள் பல விடுவிக்கப்படாது இராணுவத்தினர் வசம் காணப்படுகின்றது. அந்தவகையில், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 653.65 ஏக்கரும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 180.38 ஏக்கரும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 116.61ஏக்கரும், பூநகரி பிரதேசசெயலர் பிரிவில் 248.18 ஏக்கரும் என 1209.22 ஏக்கர் காணி இராணுவம் வசமுள்ளது. மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர். மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படவேண்டும் என்பதே காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் வேண்டுகோள் எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/210825
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
கொல்கத்தா அணியை துவம்சம் செய்த அஸ்வனி குமாரை மும்பை கண்டுபிடித்ததன் பின்னணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானேவை மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அஸ்வனி குமார் வீழ்த்தினார். கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 1 ஏப்ரல் 2025, 02:10 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 12வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 117 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 43 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றது. கொல்கத்தாவுக்கு எதிராக பிரம்மாண்ட வெற்றி என்பதால், மைனஸ் நிகர ரன்ரேட்டில் இருந்த மும்பை இந்தியன்ஸ் 2 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு முன்னேறியது. வான்ஹடே மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 12 போட்டிகளில் விளையாடி, அதில் 10வது வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. எந்தவொரு அணிக்கு எதிராகவும் ஒரே மைதானத்தில் 10 வெற்றியை எந்த அணியும் ஐபிஎல் தொடரில் பதிவு செய்யவில்லை. கொல்கத்தா அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றாலும் 2 தோல்விகள் மோசமானதாக அமைந்ததால் நிகர ரன்ரேட்டில் மிகவும் பின்தங்கி கடைசி இடத்தில் இருக்கிறது. ஐபிஎல் சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் குறைந்தபட்சம் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. ஆர்சிபி, டெல்லி அணி மட்டுமே 2 வெற்றிகளுடன் உள்ளன. இனிமேல்தான் ஒவ்வோர் ஆட்டத்திலும் சூடு பிடிக்கும். சிஎஸ்கேவுக்கு சுமையாக மாறுகிறாரா தோனி? - கேள்விக்குள்ளாகும் செயல்பாடுகள் சன்ரைசர்ஸ் கண்டெடுத்த முத்து: டெல்லியை மிரட்டிய 23 வயது இளம் வீரர் அனிகேத் வர்மா யார்? தோனியின் சிக்சர்களாலும் தடுக்க முடியாத சிஎஸ்கேயின் வரலாற்றுத் தோல்வி ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன? அறிமுக ஆட்டநாயகன் மும்பை அணியின் வெற்றிக்கு மூலகாரணமாக இருந்தது அறிமுக வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார்தான். ஐபிஎல் அறிமுகத்திலேயே 3 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் தொடரில் அறிமுக ஆட்டத்தில் அமித் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் அதிகபட்சமாக இருந்தது. ஆனால் அஸ்வனி குமார் அவரின் சாதனையை முறியடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பேட்டிங்கில் குறைவான ஸ்கோர் என்பதால், கடந்த 2 போட்டிகளிலும் ஃபார்மின்றி தவித்த தென் ஆப்பிரிக்க பேட்டர் ரெக்கில்டன் இந்தப் போட்டியில் வெளுத்து வாங்கி, அரைசதம் அடித்து 62 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்கை தனக்குரிய ஸ்டைலில் 9 பந்துகளில் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் 'ஜிப்லி' என்றால் என்ன? அது முதலில் எப்படி உருவானது?31 மார்ச் 2025 குழந்தை கையில் செல்போனை கொடுத்ததால் பிகார் நபரிடம் ரூ.24 லட்சத்தை இழந்த தேனி வியாபாரி - எப்படி தெரியுமா?31 மார்ச் 2025 'மதியம் சாப்பிடாமல் இரவு களமிறங்கினேன்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அறிமுக வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார் மும்பை அணியின் வெற்றிக்கு மூலகாரணமாக இருந்தார். ஆட்டநாயகன் விருது வென்ற அஸ்வனி குமார் பேசுகையில், "எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததும், இந்த விருது கிடைத்ததும் மிகப்பெரிய விஷயம். இதை ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மொஹாலி மாவட்டம், ஹான்ஜேரி எனும் சிறிய கிராமத்தில் இருந்து வந்துள்ளேன். என்னுடைய கடின உழைப்பு, கடவுளின் அருளால் இங்கு வந்தேன். என்னால் சிறப்பாகப் பந்துவீச முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் பதற்றமாகவும் இருந்தது" என்றார். என்ன நடக்குமோ என்ற பதற்றத்தோடு இருந்ததாகவும், இதனால் மதியம் சாப்பிடக்கூட இல்லை என்றும் கூறிய அவர், "ஆனால் அனைவரும் பெருமைப்படும் வகையில் வெற்றி கிடைக்க உழைத்துள்ளதாகவும்" தெரிவித்தார். விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 கொல்கத்தாவின் மோசமான பேட்டிங் கொல்கத்தா அணியின் பேட்டிங் இந்தப் போட்டியில் மோசமாக இருந்தது. ரமன்தீப் சிங் தவிர அணியில் உள்ள மற்ற எந்த வீரரும் 20 ரன்களைக்கூட எட்டவில்லை. 20 ஓவர்களைக்கூட ஆட முடியாத நிலையில் 16 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்துக்கொண்டனர். கொல்கத்தா அணி, ஏலத்தில் நம்பிக்கை வைத்து ரஸல், சுனில் நேரேன், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங் எனப் பலரையும் தக்கவைத்தது. ஆனால், ஒருவர்கூட சிறப்பாக பேட் செய்யவில்லை. அதிலும் ஆண்ட்ரே ரஸல் 3 போட்டிகளாகியும் ஒரு போட்டியில்கூட இன்னும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ரூ.23 கோடிக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் அய்யரும் 3 போட்டிகளாக மோசமாக ஆடி வருகிறார். கேப்டன் ரஹானே முதல் போட்டியோடு சரி, அதன் பின் நிலையற்ற ரீதியில் பேட் செய்து வருகிறார். ரிங்கு சிங் தொடர்ந்து இதேபோன்று ஆடினால், விரைவில் இந்தியாவின் டி20 அணியில் சேர்க்கப்படாமல் போகலாம். முதல் ஓவரில் 30வது முறையாக விக்கெட் வீழ்த்திய போல்ட் டிரன்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே யார்கரில் சுனில் நரேன் டக்-அவுட்டில் வெளியேறினார். ஐபிஎல் தொடரில் 30வது முறையாக போல்ட் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தியுள்ளார். போல்ட் பந்துவீச்சை ஐபிஎல் தொடரில் 5 முறை சந்தித்த நரேன், 5 முறையும் அவரிடமே ஆட்டமிழந்துள்ளார். போல்டின் 19 பந்துகளைச் சந்தித்த நரேன் 23 ரன்களை சேர்த்துள்ளார். தீபக் ஹசர் வீசிய 2வது ஓவர் முதல் பந்தில் டீகாக் ஒரு ரன்னில் அஸ்வனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3வது ஓவரை அறிமுக வீரர் அஸ்வனி வீசி, முதல் பந்திலேயே ரஹானே(11) விக்கெட்டை சாய்த்தார். பிளாட்டினம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்களை சிறுகோள்களில் இருந்து பிரித்தெடுத்து வர முடியுமா?31 மார்ச் 2025 மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற 'லைக்கா' நாய் எவ்வாறு இறந்தது?22 மார்ச் 2025 ரூ.23 கோடி மதிப்பு வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நேரேன் அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர் 3 ரன்னில் தீபக் சஹர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரெக்கல்டனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர்ப்ளே ஓவர்கள் முடியும்போது கொல்கத்தா அணி 41 ரன்களுக்கு டாப்-ஆர்டர் விக்கெட்டுகள் உள்பட 4 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்குச் சென்றது. ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரில் ரகுவன்ஸி 26 ரன்னில் நமன்திரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பல சீசன்களாக ஃபார்மின்றி, எந்த அணியாலும் பெரிதாக கவனிக்கப்படாமல் இருந்த மணிஷ் பாண்டேவை கொல்கத்தா ஏலத்தில் எடுத்து பெரிதாக எதிர்பார்த்தது. ஆனால் மணிஷ் பாண்டேவும் ஏமாற்றினார். ரிங்கு சிங் 17 ரன்னிலும், மணிஷ் பாண்டே 19 ரன்னிலும் அஸ்வனி குமார் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆண்ட்ரே ரஸல் 5 ரன்னில் அஸ்வனி பந்துவீச்சில் க்ளீன் போல்டானார். அதன்பின் கடைசி வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கொல்கத்தா அணியில் ஒரு பார்ட்னர்ஷிப்கூட 50 ரன்களை எட்டவில்லை. 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த கொல்கத்தா அணி, அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. 20 ஓவர்களைக்கூட முழுமையாக ஆடாத கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பல மாதங்கள் காய்ந்து கிடக்கும் 'ஜாம்பி' தாவரம் சில மணி நேரத்தில் உயிர்த்தெழுவது எப்படி?30 மார்ச் 2025 குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை, எவ்வாறு கழுவ வேண்டும்?24 மார்ச் 2025 ஃபார்முக்கு வந்த ரெக்கில்டன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெங்கடேஷ் அய்யர் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். மும்பை அணி, 117 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. ரெக்கெல்டன் தான் சந்தித்த முதல் 4 பந்துகளும் பீட்டன் ஆகிய நிலையில் எட்ஜ் எடுத்து பவுண்டரியும், சிக்ஸரும் சென்றபின் நம்பிக்கையுடன் ஆடினார். கொல்கத்தா பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை வெளுத்த ரெக்கில்டன் விரைவாக ரன்களை சேர்த்தார். ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்த நிலையில் 13 ரன்னில் ரஸல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது போட்டியிலும் ரோஹித் சர்மா பேட்டிங் எடுபடவில்லை. முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளேவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த வில் ஜேக்ஸ், ரெக்கில்டனுடன் சேர்ந்தார். வில் ஜேக்ஸ் பெரிய ஷாட்டுக்கு முயன்றும் பெரிதாகப் பயனிக்கவில்லை. ஆனால் ரெக்கில்டன் சிக்ஸர், பவுண்டரி என துவம்சம் செய்து 33 பந்துகளில் அரைசதம் எட்டினார். ஷாட்கள் பெரிதாக அமையாமல் விரக்தியுடன் ஆடிய வில் ஜேக்ஸ் 18 ரன்னில் ரஸலிடம் விக்கெட்டை இழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பை இந்தியன்ஸ் அணியின் ரெக்கெல்டன் ஸ்கை புதிய மைல்கல் அடுத்து களமிறங்கிய 360 டிகிரி பேட்டர் சூர்யகுமார் யாதவ், தொடக்கம் முதலே சிக்ஸர், பவுண்டரி என ரசிகர்களுக்கு விருந்தளித்தார். 9 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி என 27 ரன்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ரெக்கில்டன் 62 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சூர்யகுமார் யாதவ் டி20 போட்டியில் 8,000 ரன்களை கடந்துள்ளார். இந்த எட்டாயிரம் ரன்களை கடக்க 5,256 பந்துகளை ஸ்கை சந்தித்து, 2வது அதிகவேக 8 ஆயிரம் ரன்களை குவித்த பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார். ஆண்ட்ரே ரஸல் 4,749 பந்துகளில் அதை எட்டி வேகமாக எட்டாயிரம் ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் யார் இந்த அஸ்வனி குமார்? பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் ஹான்ஜேரி எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வனி குமார். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அஸ்வனி குமாரின் குடும்பம் ஏழ்மையானது. ஆகையால், கிரிக்கெட் பயிற்சிக்குப் பணம் செலுத்தக்கூட முடியாத நிலையில் இருந்தார். பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களிலும் சென்று கிரிக்கெட் ஆடி 18 வயதில் அஸ்வனி குமார் முதல் தரப் போட்டியில் விளையாடத் தொடங்கினார். அதன் பிறகு பஞ்சாப் அணிக்காக ஒரு ஆட்டத்தில் ரஞ்சிக் கோப்பையிலும், 50 ஓவர் விஜய் ஹசாரே கோப்பைத் தொடரின் ஒரு ஆட்டத்திலும் அஸ்வனி ஆடினார். பஞ்சாப் அணியில் 2022-23 சீசனில் ஏராளமான திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்ததால் அஸ்வனிக்கு இடம் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி பந்துவீச்சாளர்கள் உடல்ரீதியாகவும் வலுவாக இருந்தநிலையில் அஸ்வனி குமார் சாதாரன உடல்வாகுடன் இருந்ததால் யாரும் இவரைப் பெரிதாக நினைக்கவில்லை. கடந்த 2023 சண்டிகரில் பேட் கிரிக்கெட் அகாடெமியில் அஸ்வனி குமார் சேர்ந்த பிறகு அவரின் திறமை மெருகேறியது. 2024-25 சயத் முஸ்டாக் அலி கோப்பைக்காக, அர்ஷ்தீப் சிங்குடன் இணைந்து பந்துவீசும் வாய்ப்பு அஸ்வனி குமாருக்குக் கிடைத்தது. ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் முன்பே பல போட்டிகளில் இவரின் பந்துவீச்சைப் பார்த்த சிஎஸ்கே நிர்வாகம் அஸ்வனி குமாரிடம் ஏதோ திறமை இருப்பதைக் கண்டறிந்தது. 2024 ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ், சிஎஸ்கே அணியினர் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக அஸ்வனி குமாரை சேர்த்தபோது இவரின் திறமையைக் கண்டு வியந்தனர். அதிலும் அஸ்வனி குமாருக்கு தனிப்பட்ட முறையில் கால் செய்த பஞ்சாப் நிர்வாகம் தங்களுக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக வர வேண்டும், சிஎஸ்கே முகாமுக்கு செல்லக்கூடாது என்று தெரிவித்ததாக கிரிக்இன்போ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிப் பெயர்ச்சி நிகழும் நாளை கணிப்பதில் ஜோதிடர்கள் முரண்படுவது ஏன்? அறிவியல் உண்மை என்ன?30 மார்ச் 2025 கோடையில் எந்தெந்த பாம்புகள் வீடுகளை நோக்கிப் படையெடுக்கும்? எப்படி தவிர்க்கலாம்?29 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அஸ்வனி குமார் ஒரு விக்கெட் எடுத்த பிறகு அவரை சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா கொண்டாடுகின்றனர். சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் பயிற்சிக்காக, 2025 ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாகவே அஸ்வனி குமார் சென்றார். அப்போது அஸ்வனி குமாரிடம் ஏதோ திறமை இருப்தைக் கண்டறிந்த மும்பை அணி நிர்வாகம், அவரைக் கவனித்தது. பந்துவீச்சில் அதிகமான வேகம் இல்லை, சராசரியாக 135 கி.மீ வேகம்தான். ஆனால் பேட்டர்கள் விளையாட முடியாத அளவுக்குச் சரியான லென்த், ஸ்விங் செய்தல், பல்வேறு வேரியேஷன்களுடன் வீசுவதைப் பார்த்து ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு எடுத்தனர். ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்ட பிறகு, சண்டிகரில் தனது பயிற்சியாளர் வீரேந்திர சிங்கிடம் சென்று தனிப்பட்ட முறையில் உடல் தகுதி மேம்பட அஸ்வனி குமார் பயிற்சி எடுத்து, பந்துவீச்சு பயிற்சி எடுத்து தவறுகளைத் திருத்தினார். மும்பை அணிக்குள் அஸ்வனி வந்தபின் அவரின் பந்துவீச்சு திறமை இன்னும் சிறப்பாக மாறியது. பஞ்சாப் அணிக்காக அஸ்வனி குமார் ஆடியபோது அவரின் பயிற்சியாளராக இருந்தது இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர்தான். கிரிக்இன்போ தளத்துக்கு ஜாபர் அளித்த பேட்டியில் "அஸ்வனி குமார் கடின உழைப்பாளி, எப்போது பார்த்தாலும் வலைப் பயிற்சியில்தான் இருப்பார், அவரை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருந்தார். அவரால் 140 கி.மீ வேகத்தில் பந்துவீச முடியும், யார்கர், பவுன்சர், ஸ்லோவர் பந்துகளைச் சிறப்பாக வீச முடியும். சரியான இடத்துக்கு அஸ்வனி சென்றது மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார். மும்பை அணி நிர்வாகம் கொல்கத்தா அணிக்காக களமிறங்கப் போகிறீர்கள் என்று அஸ்வனி குமாரிடம் கூறியதில் இருந்து பதற்றத்துடன் இருந்துள்ளார். இதனால் நேற்றைய மதிய உணவைக்கூட சாப்பிடாமல், வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு இரவு ஆட்டத்தில் அஸ்வனி விளையாடியுள்ளார். கேப்டன் ஹர்திக் பாண்டியா, அஸ்வனியிடம் பந்தை கொடுத்துவிட்டு "எஞ்சாய் யுவர்செல்ஃப்" என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு உற்சாகமடைந்த அஸ்வனி குமார் முதல் ஓவர் முதல் பந்திலேயே ரஹானே விக்கெட்டை சாய்த்தார். ஆண்ட்ரே ரஸுலுக்கு 140 கி.மீ வேகத்தில் பந்துவீசிய அஸ்வனி அவரை க்ளீன் போல்டாக்கினார். அஸ்வனி குமாரின் பந்துவீச்சில் அதிவேகமும் இல்லை, குறைந்த வேகமும் இல்லை, சராசரியாக 130 கி.மீ வேகத்தில்தான் வீசுகிறார். பந்துவீச்சில் வேரியேஷன் செய்யும்போது மட்டும் 140 கி.மீவேகத்துக்கு பந்தை அஸ்வனி வீசுகிறார். பஞ்சாபில் கடந்த ஆண்டு நடந்த ஷெர் இ பஞ்சாப் டி20 தொடரில் டெத் ஓவர்களை அஸ்வனி சிறப்பாக வீசியுள்ளார். அதிமான நெருக்கடி நேரத்தில்கூட, அஸ்வனி நிதானமாக, லென்த்தை கட்டுக்குள் வைத்தே பந்துவீசினார். இந்த சீசனில் மும்பை அணி சுழற்பந்தவீச்சாளர் விக்னேஷ் புத்தூர், வேகப்பந்துவீச்சாளர் ராஜூ, அஸ்வனி குமார் ஆகியோரைக் கண்டறிந்து திறமையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98g197d1l4o
-
இலங்கையில் மீண்டும் சிக்குன் குனியா
எச்.ஹுஸ்னா நாட்டில் 2024 ஆம் ஆண்டு டெங்கு நோயினால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், 24 உயிரிழப்புகளும் பதிவான நிலையில் இந்த ஆண்டின் 3 மாத நிறைவில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழலில் டெங்கு நோயினால் மக்களும் டெங்கு நோயாளர்களினால் வைத்தியசாலைகளும் திண்டாடிவரும் நிலையில், டெங்குவின் குடும்பத்தை சேர்ந்த சிக்குன் குனியாவும் தற்போது ஜோடி சேர்ந்து மக்களை மிரட்டத் தொடங்கியுள்ளது. இலங்கையில் நுளம்புகளால் பரவும் வைரஸ் நோயான சிக்குன்குனியா (Chikungunya) வேகமாகப் பரவி வருவதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். எனவே இலங்கை முழுவதும் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதன் அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவ ஆலோசகர் டொக்டர் அச்சலா பாலசூரிய எச்சரித்துள்ளார். அதேபோன்றே நாட்டின் பல நகரங்களிலும் மீண்டும் சிக்கன்குனியா நோய் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நுளம்பு பெருக்கம் காணப்படும் இடங்களை அகற்றுவதன் மூலம் மட்டுமே, சிக்குன்குனியா பரவலைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் நுளம்புகள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு இது பரவுகிறது. எனவே சிக்குன்குனியா நோய் ஏற்படுவதற்கு ஏதுவான காரணிகளை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். ஏற்கனவே கொரோனாவின் பிடியில் சிக்கி இதுவரையில் அதன் பாதிப்புகளிலிருந்து மீண்டெழ முடியாத நிலையில் தவித்துவரும் மக்களை டெங்கு நோய் புரட்டி எடுத்துவருவதுடன், இப்போது டெங்குவுடன் சிக்குன் குனியாவும் கை கோர்த்துள்ளதால் வைத்தியசாலைகள் டெங்கு, சிக்குன் குனியா நோயாளர்களினால் நிரம்பி வருகின்றன. ஏற்கனவே டெங்கு நோய் தொடர்பில் பல தடவைகள் விளக்கமளிக்கப்பட்டுள்ளதனால் இம்முறை சிக்குன்குனியாவிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என பார்ப்போம். சிக்குன்குனியா என்றால் என்ன? சிக்குன்குனியா என்பது ஆபிரிக்க மொழியான ‘மகோண்டீ’யில் (Makonde) இருந்து வந்தது. இந்தக் காய்ச்சல் வந்தவர்கள், பல்வேறு மூட்டுகளின் வலியால் அவதிப்பட்டு, வளைந்து சுருண்டு படுத்துக்கொள்வார்கள். சிக்குன்குனியா என்றால், அந்த மொழியில் ‘வளைந்துவிடுதல்’ என்று பொருள். இந்தக் காய்ச்சலின் பாதிப்பு 1779-ல் தான் முதன்முதலில் ஏற்பட்டதாக மருத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆனால், இந்தக் காய்ச்சல் குறித்து முழுமையாக விளக்கி விவரித்தவர்கள், மரியன் ரொபின்சன் மற்றும் லம்ஸ்டன் ஆகியோர்தான். இவர்கள்தான், 1952இல் மோஸாம்பிக் மற்றும் தன்ஸானியா நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட இக்காய்ச்சல் குறித்து ஆராய்ந்தார்கள். 1955ஆம் ஆண்டு இக் காய்ச்சல் குறித்து முழுமையாக விளக்கினார்கள். இலங்கையில் சிக்குன் குனியா இலங்கையைப் பொறுத்தவரை, இவ்வகைக் காய்ச்சலின் பாதிப்பு முதன்முறையாக 1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது. அப்போது இலங்கை மட்டும் பாதிக்கப்படவில்லை. இலங்கையுடன் சேர்ந்து பிற தெற்காசிய நாடுகளும் பாதிக்கப்பட்டன. அதன்பிறகு, மீண்டும் 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இலங்கையில் இந்தக் காய்ச்சலின் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் 2005, 2006 மற்றும் 2010 ஆம் ஆண்டு வரை இதன் தாக்கம் தொடர்ந்த்து. ஆனால், 2011 ஆம் ஆண்டில் இருந்து இதன் தாக்கம் பெருமளவு குறைந்துவிட்டது. தற்போது மீண்டும் இலங்கையில் பரவத் தொடங்கியுள்ளது எப்படிப் பரவுகிறது?. இந்த சிக்குன்குனியா காய்ச்சலையும் டெங்குவைப் பரப்பும் ஏடீஸ் வகை பெண் நுளம்புகள்தான் பரப்புகின்றன. எங்கெல்லாம் டெங்கு பரவும் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் சிக்குன் குனியாவும் பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக ஏடிஸ் ஈஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் இன நுளம்புகள் ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடித்து விட்டு இன்னொருவரை கடிக்கும்போது வைரஸ் பரவுகின்றது. இந்தக் காய்ச்சல் சிக்குன்குனியா (CHIK-V) வகை வைரஸ் வகையால் ஏற்படுகிறது. இந்த வைரஸில் இரண்டு உள்பிரிவுகள் உள்ளன. ஒன்று, ஆசிய பிரிவிலும், மற்றொன்று ஆபிரிக்கா பிரிவிலும் காணப்படுகிறது. இது ஒரு ஆர்.என்.ஏ. வைரஸ் வகை. டோகோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரஸ், ஆரம்பத்தில் தசைகளிலும் மூட்டுகளிலும் பெருகுவதால்தான் மனிதர்களுக்குப் பல்வேறு தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. இவை 60 முதல் 70 நானோமீட்டர் அளவு கொண்டவை. கோள வடிவத்தில் காணப்படும். நுளம்பு கடித்த 3 முதல் 7 நாள்களுக்குள் நோயாளிக்கு சிக்குன்குனியா காய்ச்சல் ஏற்படும். பாதிப்புக்கள் என்ன? காய்ச்சல், மூட்டுவலி இருக்கும். உடல் வலி, தலைவலி, மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். சிலருக்கு டெங்கு போல், தோல் சிவந்து போகலாம். சிலருக்கு வாந்தி, குமட்டல் ஏற்படலாம். பெரும்பாலும், ஒரு வாரத்தில் காய்ச்சல் சரியாகிவிடும். ஆனால், மூட்டுவலி, தசைவலி இரண்டும் பல மாதங்கள் வரைகூட நீடிக்கலாம். தாங்க முடியாத உடல்வலி, தசைவலி, மூட்டுவலி மற்றும் வீக்கம்தான் இக் காய்ச்சலின்முக்கிய பாதிப்புக்கள். இவ்வகைக் காய்ச்சலின் பல பாதிப்புக்கள் டெங்கு காய்ச்சலைப் போலவே இருக்கும். மேலும், ஜிக்கா வைரஸ் காய்ச்சலும் இதுபோன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். இதில் விசேஷம் என்னவென்றால், டெங்கு என்றாலும், சிக்குன்குனியா என்றாலும், ஜிக்கா என்றாலும், இந்த மூன்று வைரஸ் வகைகளையும் பரப்புவது ஏடீஸ் வகை பெண் நுளம்புகள் தான். அறிகுறிகள் சிக்குன்குனியாவின் அறிகுறிகள் பொதுவாக ஏடீஸ் வகை பெண் நுளம்புகள் கடித்த 4 முதல் 8 நாட்களுக்குப் பிறகு தோன்றும். பொதுவான அறிகுறிகளாக அதிக காய்ச்சல், 102°F (39°C) வரை காய்ச்சல் அடிக்கும், மூட்டு வலி, தசை வலி, தலைவலி, குமட்டல் , களைப்பு, தோல் அலர்ஜி போன்றன காணப்படும் . இந்த அறிகுறிகள் மிகப் பொதுவாக தெரிந்தாலும் வேறு பல காரணங்களாலும் உண்டாகக்கூடும், சில நாட்களுக்குத் தொடர்ந்து நீடித்தால், ஒரு மருத்துவ நிபுணரிடம் உங்களை பரிசோதனை செய்வது சிறந்ததாக அறிவுறுத்தப்படுகிறது. சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால், கண்கள் அதோடு நரம்புகள் மற்றும் இதயம் சார்ந்த சிக்கல்கள் போன்ற பெரும் பாதிப்புகளை அது உண்டாக்கலாம். வயதான நோயாளிகளில், சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால் இது இறப்புக்குக் கூட வழி வகுக்கலாம் எவ்வாறு தவிர்ப்பது? நம்மால் இயன்றவரை வீடுகளுக்குள்ளும் வீடுகளுக்கு வெளியேவும் நீர் சிறிய அளவு கூட தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏடிஸ் வகை நுளம்புகள் நன்னீரில் முட்டை இட்டு குஞ்சு பொரிப்பவை. மேலும் பகலில் கடிக்கும் தன்மை கொண்டவை. குழந்தைகளுக்கு முழுக்கை சட்டை அணிவிக்கலாம். நுளம்பு வலை உபயோகித்து உறங்கலாம். நுளம்பு எதிர்ப்பு களிம்புகளை பூசிக் கொள்ளலாம். அதீத காய்ச்சல் மற்றும் தீவிர மூட்டு வலி இருப்பின் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். வந்திருப்பது சிக்குன் குனியா இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டும். சிக்குன்குனியா நோயில் வலி நிவாரணிகள் – ரத்தக் கசிவு தன்மையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மருத்துவப் பரிசோதனை நோயாளிகள் தங்களுக்கு ஏற்பட்டிருப்பது என்ன வகைக் காய்ச்சல் என்பதைக் கண்டறிய மருத்துவரை நாட வேண்டும். அவரது பரிசோதனைக்குப் பின் சில ஆய்வுக்கூடப் பரிசோதனைகளைச் செய்து சிக்குன்குனியா காய்ச்சலைப் கண்டுபிடிக்கலாம்..பொதுவாக, காய்ச்சலுக்குச் செய்யும் ரத்தப் பரிசோதனைகள் , சிறுநீர் பரிசோதனைகள், நெஞ்சுப் பகுதி எக்ஸ்ரே ஆகிய அடிப்படைப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். மேலும், சிக்குன்குனியா பிசிஆர் பரிசோதனை மூலம் (RT – PCR – Reverse Transcriptase – Polymerase Chain Reaction) இந்தக் காய்ச்சலைப் பிற வகை வைரஸ் காய்ச்சலில் இருந்து எளிதாக அடையாளம் காணமுடியும்..சிக்குன்குனியா பிசிஆர் பரிசோதனை, காய்ச்சல் ஏற்பட்ட 6 நாள்களுக்குள் செய்வது நல்லது. ஆறு நாள்களுக்குப் பிறகும் காய்ச்சல் இருந்தால், மேக்-எலிசா (MAC-ELISA) பரிசோதனை செய்யவேண்டி இருக்கும். இதன்மூலம், இவ்வகை வைரஸ் வகைக்கு எதிராக உருவான எதிர்ப்பாற்றல் புரதங்களை அளவிட முடியும். சிகிச்சைகள் சிக்குன்குனியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவும், இந்த வைரஸை அழிப்பதற்கும் இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இவ்வகைக் காய்ச்சலுக்கும் பொதுவான சிகிச்சைகள், தொந்தரவுகளைக் குறைப்பதற்கான சிகிச்சைகள் என்ற அடிப்படையிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வகை சிகிச்சையில், நோயாளிக்கு முதலில் ஓய்வு எடுக்க வலியுறுத்தப்படுகிறது. காய்ச்சல் அதிகமாக இருந்தால், புற நோயாளியை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவருக்கு எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய கஞ்சி, பழரசம், இளநீர் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். இது, அவர்கள் சோர்வைப் போக்கும். வாய்வழி உணவு உட்கொள்ள முடியாமல் போனால், மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்குத் தேவையான திரவ மருந்துகள், விட்டமின் ஆகியவற்றை குழாய்கள் வழியாகச் செலுத்தி சிகிச்சை செய்ய வேண்டும். தொந்தரவுகளைக் குறைப்பதற்கான சிகிச்சை. நோயாளியின் காய்ச்சல், உடல் வலியைக் குறைப்பதற்காக பரசிட்டமோல் மருந்து உட்கொள்ள கொடுக்கலாம். இந்த மருந்தை உட்கொள்ள முடியாத நிலையில், காய்ச்சலை குறைப்பதற்கான திரவ மருந்தை குழாய் வழியாகச் செலுத்த வேண்டும். இதேபோன்றே, நோயாளிக்கு குமட்டல், வாந்தி ஆகியவற்றைக் குறைப்பதற்கான மருந்துகளையும் தொடர்ந்து கொடுப்பதுடன், நோயாளியின் காய்ச்சல் அளவு, நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசத் துடிப்பு, உள்செல்லும் நீர் மற்றும் வெளியேறும் நீரின் அளவு போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த நோயாளிகளுக்கும் அஸ்பிரின் (NSAIDS), பிற வலி குறைப்பான் மருந்துகளை தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே இதய நோயாளியாக இருந்து அஸ்பிரின் மருந்துகளை உட்கொள்வதாக இருந்தால், அதுகுறித்து மருந்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். சிக்குன்குனியா தொற்றுகளைத் தவிர்க்க உடல் நீர் வற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் காய்ச்சல் டெங்குவைப் போல கடுமையான வலி தொந்தரவுகளைத் தந்தாலும், உயிரிழப்பு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் ஆறுதல் தரும் விஷயம். சிக்குன் குனியா தொடர்பில் பொது மருத்துவர் டொக்டர் பரூக் அப்துல்லா கூறுகையில், வருடம் தோறும் நுளம்புகளினால் பரவும் காய்ச்சல்களான டெங்கு, சிக்குன் குனியா போன்றவை மழை காலங்களில் கூடும் என்பது நாம் அறிந்ததே. ஆயினும் இம்முறை சிக்குன் குனியா காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் மரபணு மாற்றங்களுடன் வெளிப்பட்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக காய்ச்சல் மற்றும் தீவிர மூட்டு வலி ஆகியவற்றுடன் மட்டுமே சிக்குன் குனியா வெளிப்படும். ஆனால் இம்முறை நரம்பியல் பாதிப்புகள் கூடவே பக்கவாதம் ஏற்படுதல் – மூக்கு கறுப்பாக மாறுதல் (இரண்டு வாரங்கள் கழித்து திரும்ப பழைய நிலைக்கு திரும்பி விடுகிறது) – கால் பாத எரிச்சல் – நுரையீரல் மற்றும் வயிற்றுப் பகுதியில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் – மூன்றில் ஒருவருக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படுவது போன்ற விசித்திர புதிய அறிகுறிகளுடன் வெளிப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது என்கின்றார். எனவே டெங்கு. சிக்குன் குனியாவிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள வேண்டுமானால் நுளம்புகள் கடிக்காமல் தடுப்பது, நுளம்புகளை ஒழிப்பது , சுற்றுப்புறத்தைச் சுற்றி நீர் தேங்காமல் தடுப்பது, தூய்மையாக வைத்துக்கொள்வது போன்றவைதான் ஒரே வழி. https://thinakkural.lk/article/316681
-
லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு
Published By: VISHNU 31 MAR, 2025 | 07:49 PM ஏப்ரல் மாதத்திற்கான லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் விலையை திருத்தியமைக்க லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரித்து புதிய விலை ரூ.4,100 ஆக விற்கப்படும், 5 கிலோ சிலிண்டர் ரூ.168 அதிகரித்து ரூ.1,645 ஆக விற்கப்படும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/210779
-
பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு
வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் ஊடாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.
-
பிளாட்டினம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்களை சிறுகோள்களில் இருந்து பிரித்தெடுத்து வர முடியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜாஷ் சிம்ஸ் பதவி, 31 மார்ச் 2025, 07:26 GMT ஒரு சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பணி சிக்கலில் உள்ள நிலையில், ஜாஷ் சிம்ஸ் நமக்கு மேலே உள்ள பல விண்வெளி பொருட்களின் அரிய தாதுக்களை பிரித்தெடுக்கும் முயற்சியில் நாம் உண்மையில் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதை விவரிக்கிறார். 2025 ஆம் ஆண்டுக்குள் உலகம் எப்படி இருக்கும் என்பது குறித்து 30 ஆண்டுகளுக்கு முன்பு பிபிசியின் அறிவியல் நிகழ்ச்சியான டுமாரோஸ் வேர்ல்ட் சில கணிப்புகளை வெளியிட்டது. தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தை கணிப்பது எவ்வளவு கடினம் என்பதற்கு இது ஒரு சான்றாகும். நமது வீடுகளில் ஹாலோகிராஃபிக் உதவியாளர்களுடன் பேசுவோம், இணைய வசதி அணுகல் தொடர்பாக பிரச்னைகள் ஏற்படும் என்று அந்த நிகழ்ச்சி கணித்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் இந்த 2025 ஆம் ஆண்டு நாம் விண்கற்களிலிருந்து தாதுக்களை எடுத்துக் கொண்டிருப்போம் என்றும் கூறியிருந்தது. நாம் இன்னும் அதை செய்யவில்லை என்றாலும், சில சிறிய நிறுவனங்கள் பலர் கற்பனை செய்ததை விட விரைவில் நடக்கும் என்று கூறுகின்றன. அமெரிக்க நிறுவனம் தீவிர முயற்சி கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட நிறுவனமான ஆஸ்ட்ரோஃபோர்ஜின் நிறுவனர், தங்கள் நிறுவனம்தான் அதை முதலில் செய்யும் என்று நம்புகிறார். இதற்கான முதல் படிகளை இந்த நிறுவனம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ளது. 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று, புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டில் $6.5 மில்லியன் (£5.1 மில்லியன்) மதிப்பிலான ஒடின் என்ற அதன் முதல் ஆளில்லா விண்கலத்தை ஆஸ்ட்ரோஃபோர்ஜ் ஏவியது. சுமார் ஒன்பது நாட்களுக்குப் பிறகு, ஒடின் விண்கலம் திட்டமிட்டபடி சந்திரனைத் தாண்டி விண்வெளியில் பயணம் செய்வதாக ஆஸ்ட்ரோஃபோர்ஜ் நம்புகிறது. இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக, ஓடினுடன் பெரிய தகவல் தொடர்பு சிக்கல்களை ஆஸ்ட்ரோஃபோர்ஜ் எதிர்கொண்டுள்ளது. இந்த கட்டுரை எழுதப்படும் நேரம் வரை அந்த தகவல் தொடர்பு சிக்கல் சரி செய்யப்படவில்லை. ஓடின் இப்போது அதன் 9 மாத கால பயணத்தின் இலக்கை அடைந்திருக்கலாம் என்று அந்நிறுவனம் நம்புகிறது. பூமியிலிருந்து சுமார் 8 மில்லியன் கி.மீ. (ஐந்து மில்லியன் மைல்கள்) தொலைவில் உள்ள, முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட 2022 OB5 என்ற சிறுகோளை ஓடின் சுற்றி வந்து, தனது சென்சார்கள் மூலம் அந்த சிறுகோளில் என்னென்ன தாதுக்கள் இருக்கும் என மதிப்பிடும். "வேகமாக நகர்ந்து பாறைகளை உடைக்க வேண்டும்" என்பது ஆஸ்ட்ரோஃபோர்ஜ் நிறுவனர் மாட் கியாலிச்சின் தாரக மந்திரமாக இருக்கலாம். அவர் தீர்க்க முடியாத தொழில்நுட்ப சிக்கல்களால் அசர போவதில்லை. ஆஸ்ட்ரோஃபோர்ஜ் இந்த தடைகளை எதிர்பார்த்தே இருந்தது. விண்கலத்துடன் மீண்டும் தொடர்பு கொள்ளாவிட்டாலும் நிறைய கற்றுக்கொண்டதாக அவர் கூறுகிறார். "ஆம், இன்னும் நிறைய சிறிய படிகளை எடுத்து வைக்க வேண்டும்," என்று அவர் ஒப்புக்கொள்கிறார். "ஆனால் நாங்கள் உண்மையில் அதை செய்ய ஆரம்பிக்க போகிறோம்". அடுத்த ஆண்டு, சில மதிப்புமிக்க, செறிவூட்டப்பட்ட உலோகங்களை பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்களில் வெட்டியெடுக்கும் வழிகளை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக நமது எரிபொருள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பத்திற்கு அவசியமான பிளாட்டினம் வகை சார்ந்த உலோகங்களை எடுக்க திட்டமுள்ளது. இவற்றை பூமிக்கு அடியில் தோண்டி எடுப்பதற்கு, பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழல், சமூக ரீதியாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் அதிக செலவாகும் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், விண்வெளியில் இருந்து இந்த உலோகங்களை பூமிக்குக் கொண்டு வருவது, குறிப்பாக குறுகிய காலத்தில், உண்மையில் சாத்தியமானதா என்றும், இது சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துமா என்றும் மற்றவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பட மூலாதாரம்,SPACEX படக்குறிப்பு,ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டில் தனது முதல் ஆளில்லா விண்கலத்தை ஆஸ்ட்ரோஃபோர்ஜ் ஏவியது. சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது சாத்தியமே அடுத்த பத்து ஆண்டுகளில் அடுத்தடுத்த சோதனை ஏவுதல்களில், ஆஸ்ட்ரோஃபோர்ஜ் சிறிய அளவிலான உலோகத்தை மட்டும் வெட்டி எடுக்கும் என்று கியாலிச் நம்புகிறார், ஆரம்பத்தில் சில கிராம்கள், அடுத்தடுத்து திட்டம் முன்னேறும் போது சில கிலோகிராம்களை கூட எடுக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை. இவை சில மீட்டர் முதல் அரை கிலோமீட்டர் வரை விட்டம் கொண்ட சிறுகோள்களை இலக்காக கொண்டு செய்ய முடியும். ஆரம்பகால பயணங்கள் வணிகரீதியாக இருக்காது, ஆனால் வெட்டி எடுக்கப்படும் உலோகங்களைப் பொறுத்து, அவற்றை வணிகமயமாக்கலுக்கு உட்படுத்த முடியும் என்று கியாலிச் கூறுகிறார். உதாரணமாக, ஒரு கிலோ ரேடியத்தின் விலை தற்போது $183,000ஆகும். ஆனால் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களில் ஒருவரும், 2019 ஆம் ஆண்டில் ஐந்து பெருங்கடல்களின் அடிப்பகுதியைப் பார்வையிட்ட முதல் நபராக நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கிய ஆய்வாளருமான விக்டர் வெஸ்கோவோ, தொழில்நுட்ப சவால்கள் "கருவிகளை உருவாக்கும் வரைதான்" என்று கூறுகிறார். "அதைச் செய்ய முடியும் என்பதைக் காட்ட சில மைக்ரோகிராம்களை சிறுகோள்களிலிருந்து கொண்டு வர வேண்டும், பின்னர் அதையே பெரிய அளவில் செய்ய வேண்டும்," என்று அவர் கூறுகிறார். "சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுப்பதை முழுமையாக செயல்படுத்துவது பல தசாப்த கால திட்டமாக இருக்கலாம். ஆனால் இது அளவு ரீதியான சிக்கல் மட்டுமே. இது ஒரு பெரிய பொறியியல் சாதனை என்பதில் சந்தேகமில்லை என்றாலும், சிறுகோள்களில் இருந்து நேரடியாக பொருட்களின் மாதிரிகளை எடுப்பது ஏற்கனவே அரசு விண்வெளி மையங்களால் செய்யப்பட்டுள்ளன" என்கிறார். 2005 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஹயபுசா 1 மற்றும் 2 திட்டத்தின் போது ஜப்பானும் 2020 ஆம் ஆண்டில் ஒசைரிஸ்-ரெக்ஸ் திட்டத்தின் போது நாஸாவும் இதை செய்துள்ளன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். பட மூலாதாரம்,ASTROFORGE படக்குறிப்பு,ஓடின் விண்கலத்தின் முன்பாக நிற்கும் ஆஸ்ட்ரோஃபோர்ஜ் குழு விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 சவால்கள் என்ன? சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் யோசனை விசித்திரமாகத் தோன்றினால், ரைட் சகோதரர்களின் மனிதர்களை ஏந்தி சென்ற முதல் விமானம் போன்ற பல தொழில்நுட்ப முன்னேற்றங்களும் அதே சுமையைக் கொண்டிருந்தன என வெஸ்கோவோ வாதிடுகிறார். அதாவது, அவை உண்மையில் நடக்கும் வரை அப்படிதான் தோன்றும் என்கிறார் அவர். விண்வெளி வளத் திட்டத்தைக் கொண்ட பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான கொலராடோ ஸ்கூல் ஆஃப் மைன்ஸின் இணை பேராசிரியர் இயன் லாங்கே, தற்போது சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் தொழில்நுட்ப தடைகளை மட்டுமே நம்மால் மதிப்பிட முடியும் என்று வலியுறுத்துகிறார். ஒரு விண்கலம் ஒரு சிறுகோளை சந்திப்பது மற்றொரு விண்கலத்துடன் அவ்வாறு செய்வதை விட சற்றே சிக்கலானதாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால், உதாரணமாக, ஈர்ப்பு விசையின் நிலைப்படுத்தும் சக்தி இல்லாமல் வளங்களை எவ்வாறு பிரித்தெடுக்க முடியும்? "சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணி ஒப்பீட்டளவில் நேரடியானது, ஆனால் நாம் விரும்புவதிலிருந்து நாம் விரும்பாததை பிரிக்க ஒருவித வேதியியல் அல்லது வெப்ப செயல்முறை மற்றும் ஈர்ப்பு விசை தேவைப்படுகிறது" என்று லாங்கே கூறுகிறார். "விண்வெளியில் அதை உருவாக்குவது மிகவும் கடினமாக இருக்கும். இந்த கட்டத்தில், ஏற்கெனவே நிறுவப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியுமா அல்லது சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் தொழில் முற்றிலும் புதியவற்றை உருவாக்க வேண்டுமா என்று சொல்வது கடினம்." என்கிறார். பட மூலாதாரம்,ASTROFORGE படக்குறிப்பு, 1967-ம் ஆண்டு ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கல் மாதிரி. தனியார் விண்வெளி வணிகத்தின் விளைவுகள் என்ன? விண்வெளி வளங்களை எவ்வாறு சேகரிக்கலாம் என்பது குறித்த யோசனைகளை நாசா உருவாக்கத் தொடங்கிய 1980கள் வரை சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது பற்றிய யோசனை பெரும்பாலும் அறிவுசார் ஆர்வத்தின் விஷயமாக இருந்தது என்று லாங்கே கூறுகிறார். இந்த யோசனைகள் 1990களில் அதிகரித்த சுற்றுச்சூழல் பிரச்னைகளுடன் வேகமெடுத்தன என்று அவர் மேலும் கூறுகிறார். சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட மூன் எக்ஸ்பிரஸ், பிளானட்டரி ரிசோர்சஸ், டீப் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பல தனியார் நிறுவனங்கள் இதற்காக அதிக செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2010களின் இறுதியில், பிளானட்டரி ரிசோர்சஸ், டீப் ஸ்பேஸ் மற்றொரு நிறுவனத்தால் வாங்கப்பட்டு, பிற திட்டங்களை நோக்கி இயக்கப்பட்டது. வணிக மற்றும் தொழில்நுட்ப சவால்களின் காரணமாக சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகள் இன்னும் 30 ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று லாங்கே நம்புகிறார். கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம்தான் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தியதாக வெஸ்கோவோ வாதிடுகிறார். சிலியில் கிட்டத்தட்ட நிறைவுபெற்றுள்ள வேரா சி ரூபின் ஆய்வகம் போன்ற புதிய ஆய்வகங்கள், விரைவில் சிறுகோள்களின் சிறந்த கண்காணிப்பை வழங்கும். ஒளியியல் மற்றும் ஸ்பெக்ட்ரோகிராஃபிக் பகுப்பாய்வு உலோகங்களை எடுப்பதற்கு தகுதியான சிறுகோள்களை அடையாளம் காண உதவுகின்றன, இவற்றில் எத்தனை சிறுகோள்களில் அது சாத்தியம் என்பது விவாதத்துக்கு உட்பட்டது என்றாலும் கூட. சக்தி வாய்ந்த கணினி தொழில்நுட்பம் மிகவும் பரவலாகக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. விண்கலத்தை குறைந்த செலவில் உருவாக்க மிகவும் மலிவான பொருட்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. "அரசாங்கங்கள் மட்டுமே இந்த வகையான காரியத்தைச் செய்ய முடியும் அல்லது தொழில்நுட்பத்தை அணுக முடியும் என்பதுதான் சற்று காலம் முன்பு வரை இருந்த நிலை. அவர்கள் அதை ஒருபோதும் திறம்பட செய்யவில்லை" என்று லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட டிரான்ஸ் ஆஸ்ட்ராவின் நிறுவனர் ஜோயல் செர்செல் கூறுகிறார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையில் உள்ள கழிவுகளை சேகரிப்பதற்காக டிரான்ஸ்ஆஸ்ட்ரா நிறுவனம் ஊதி பெரிதாக்கக்கூடிய வகையிலான பை ஒன்றை எப்படி பயன்படுத்துவது என்பது செய்து காட்டும். "இப்போது நம்மிடம் ஒரு துடிப்பான தனியார் விண்வெளி வணிகம் உள்ளது, இது சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது மக்கள் கணிப்பதை விட மிக விரைவாக சாத்தியமாக்கப் போகிறது" என்கிறார். மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது?23 மார்ச் 2025 மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற 'லைக்கா' நாய் எவ்வாறு இறந்தது?22 மார்ச் 2025 குறைந்துவரும் விண்வெளித் திட்டங்களின் செலவுகள் விண்வெளித் துறையின் தனியார்மயமாக்கல் மற்றும் மறு பயன்பாட்டு ராக்கெட்டுகளின் வளர்ச்சி காரணமாக, சுற்றுவட்டப்பாதையில் ஒரு விண்கலத்தை நிறுவுவது முன்பை போல் அல்லாமல் மிகவும் எளிதானது மற்றும் மலிவானது. "15 ஆண்டுகளுக்கு முன்பு 1 பவுண்டு (450 கிராம்) எடை கொண்டவற்றை விண்வெளியில் செலுத்த 10,000 டாலர்கள் செலவாகும் நிலையில், இப்போது சில ஆயிரங்களாக அது குறைந்துள்ளது" என்று வெஸ்கோவோ கூறுகிறார். "ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் போன்ற திட்டங்களுடன் , எதிர்காலத்தில் சில நூறு டாலர்கள் மட்டுமே செலவாகும் என்ற எதிர்பார்க்கலாம்" என்கிறார். வானியற்பியலாளரும் அறிவியல் தொடர்பாளருமான நீல் டிகிராஸ் டைசன், உலகின் முதல் டிரில்லியனர் சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகளை மேற்கொள்வதன் மூலம் வருவார் என்று கூறினார், "நீல் டிகிராஸ் டைசனின் கருத்து தவறல்ல என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவிக்கிறார் வெஸ்கோவோ. எப்படியிருந்தாலும், உலோக எடுப்பின் மூலம் பூமி எதிர்கொள்ளும் தொடர்ச்சியான அழிவைத் தடுக்க சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது அவசியம் என்று அவர் நம்புகிறார். ஆஸ்ட்ரோஃபோர்ஜின் திட்டங்களைப் பற்றி லாங்கேவுக்கு சந்தேகங்கள் உள்ளன. சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமாகலாம் என்று கூறும் அவர் ஆஸ்ட்ரோஃபோர்ஜின் பிளாட்டினம் குழு-மையப்படுத்தப்பட்ட வணிக மாதிரியைப் பற்றி அவர் மிகுந்த நம்பிக்கை கொள்ளவில்லை. "கடலின் அடிப்பகுதி உட்பட பூமியில் இந்த வளங்கள் அதிகமாக இருக்கும் போது, விண்வெளியில் இருந்து அவற்றை சேகரிப்பதை விட பூமியிலிருந்து எடுப்பதே எளிதானதாக இருக்கும். நாம் அந்த வளங்களை எடுக்க நம்மை நாமே அனுமதித்தால், இதற்கான பல சாத்தியக்கூறுகள் உள்ளன" என்றார். சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வித்திட்ட 'ஹிட்லரின் விஞ்ஞானி'23 மார்ச் 2025 குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை, எவ்வாறு கழுவ வேண்டும்?24 மார்ச் 2025 ஆழ்கடலில் உலோகங்களை எடுக்கும் பணிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததா? ஆனால் லான்காஸ்டர் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானி கேத்ரின் மில்லர், விரைவில் ஒழுங்குப்படுத்தப்படவுள்ள ஆழ்கடலில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகளை விட சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் கவர்ச்சிகரமான விருப்பமாக இருக்கும் என்று வாதிடுகிறார் . நிலத்தடி சுரங்கமும் "சரியானது இல்லை தான்... வாழ்விட அழிப்பு, சமூக நீதி பிரச்னைகள் என பல சிக்கல்கள் உள்ளன. கடற்பரப்பில் இருந்து கோபால்ட் மற்றும் தாமிரம் சேகரிப்பது வளங்களை எடுப்பது மட்டுமில்லை, கடற்பரப்பை அழிப்பதாகும், "என்று மில்லர் கூறுகிறார். நிச்சயமாக, ராக்கெட்டுகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்வது மிகவும் மாசு ஏற்படுத்தும், அதிக ஆற்றல் தேவைப்படும் செயலாகும். ஆனால் சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணியும் அவ்வாறானதே. பாரிஸ்-சாக்லே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் 2018 ஆம் ஆண்டு ஆய்வில், பூமியில் பிளாட்டினத்தை எடுக்க தோண்டுவதை சிறுகோள்களிலிருந்து உலோகங்களை எடுக்கும் பணி திட்டத்துடன் ஒப்பிட்டது. ஒரு சிறுகோளில் இருந்து வெட்டியெடுக்கப்படும் ஒவ்வொரு கிலோ பிளாட்டினத்திற்கும் 150 கிலோ கார்பன் டை ஆக்சைடு பூமியின் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். தற்போதைய நடைமுறைகளைப் பயன்படுத்தி பூமியில் 1 கிலோ பிளாட்டினத்தை எடுக்கையில் 40,000 கிலோ கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு காரணம் பூமியில் பிளாட்டினம் மிக அரிதாக கிடைப்பதாகும். பூமியின் மேலோட்டில் ஒரு மில்லியனில் 0.0005 பகுதிகள் மட்டுமே பிளாட்டினம் உள்ளது. அதிக உற்பத்தி செய்யும் சுரங்கங்கள் கூட தற்போது மில்லியனுக்கு ஐந்து முதல் 15 பகுதிகள் என்ற அளவிலேயே செயல்படுகின்றன. சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் நிறுவனமான கர்மன்+ என்ற நிறுவனத்தின் நிறுவனர் டேனன் க்ரூல், சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பதானது எதிர்காலத்தில் விண்வெளியில் ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான வளங்களைத் தேடுவதில் உள்ளது என்று நினைக்கிறார். 2035 ஆம் ஆண்டில் விண்வெளி பொருளாதாரம் 1.8 டிரில்லியன் டாலர் (£ 1.4 டிரில்லியன்) மதிப்புள்ளதாக இருக்கும் என்று உலக பொருளாதார மன்றம் கணித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையிலான சமநிலை குலையலாம் விண்வெளியில் உலோகங்களை எடுக்க தோண்டுவது இயற்கையாகவே கனிமங்கள் நிறைந்த வளரும் நாடுகளுக்கும், விண்வெளியில் அவற்றை அறுவடை செய்யத் தேவையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய வளர்ந்த நாடுகளுக்கும் இடையிலான அதிகார சமநிலையை மாற்றக்கூடும் என்று ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழக விண்வெளி கொள்கை நிறுவனத்தின் அறிஞர் டெகனிட் பைகோவ்ஸ்கி வாதிடுகிறார். "விண்வெளியில் பயன்படுத்த விண்வெளியில் வளங்களை சுரங்கப்படுத்துவது ஒரு விஷயம் - இப்போது முன்னணி விண்வெளி பயண நாடுகளைப் பாருங்கள், அவை விண்வெளியில் ஒரு நீடித்த மனித இருப்பை உருவாக்க முயன்று வருகின்றன, அதற்காக பொருட்களை சுரண்டுவது தர்க்க ரீதியானது," என்று அவர் கூறுகிறார். "ஆனால் [நிறுவப்பட்ட] பூமியின் பொருளாதாரத்தில் பயன்படுத்த அந்த வளங்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவது மற்றொரு விஷயம். இது பல்வேறு பங்குதாரர்களை பல வழிகளில் பாதிக்கும்" என்கிறார். சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணி என்று வரும்போது, பிளாட்டினம் சுரங்கப் பணிகள்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன. அதனுடன் சேர்த்து அரிய வகை உலோகங்கள், அணுக்கரு இணைவுக்குத் தேவையான ஹீலியம் -3 போன்ற பிற வளங்களுடன் வெட்டி எடுக்கப்படலாம். ஆனால், உயிர் காக்கும் ஆக்சிஜன் மற்றும் ராக்கெட் உந்துசக்தியான ஹைட்ரஜனுக்காக தண்ணீரை எடுப்பது, விண்வெளி வாழ்விடங்கள் அல்லது சூரிய ஆற்றல் சேகரிப்பான்களை உருவாக்க பயன்படும் மட்பாண்டங்களின் 3டி அச்சிடலுக்கான களிமண் ஆகியவற்றை சுரங்கத்தின் மூலம் எடுப்பதை யோசித்துப் பாருங்கள் என அவர் கூறுகிறார். சுரங்கத் தொழில் இவற்றை பூமியிலிருந்து முழுவதுமாக விண்வெளிக்கு கொண்டு செல்வதற்கான செலவுகளில் பெரும்பகுதியை குறைத்துவிடும். "சிறுகோள் வளங்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்ந்தோம், ஆனால் அது தெளிவற்றதாகத் தெரிகிறது" என்று க்ரல் கூறுகிறார். அதற்கு பதிலாக, கர்மன்+ நிறுவனம் விண்வெளியில் உள்ள வளங்களை எடுத்து, விண்வெளியிலேயே பயன்படுத்த திட்டமிடுகிறது. விண்வெளி வாழ்விடங்களை உருவாக்க அல்லது செயற்கைக்கோள்களை பராமரிப்பதற்கு அவை பயன்படலாம். கர்மன்+ நிறுவனம் சமீபத்தில் $20மில்லியன் முதலீட்டை திரட்டியுள்ளது. அதன் முதல் விண்கலத்திற்கான ஏவுதல், மாதிரிகள் சேகரிக்கும் அதன் திறன்களை சோதிக்க பிப்ரவரி 2027 க்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. 'தமிழிகம்' என்று பெயர் சூட்டப்பட்ட புதிய விலாங்கு மீனின் தனிச்சிறப்புகள் என்ன?22 மார்ச் 2025 கேரளாவில் 18 வயது இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான 'அனோரெக்சியா நெர்வோஸா' என்றால் என்ன?17 மார்ச் 2025 விண்வெளி வளங்கள் யாருக்கு சொந்தம்? இது இன்னும் பல பதிலளிக்கப்படாத கேள்விகளை இங்கே உள்ளன. இது ஒரு வகையான சுற்றுச்சூழல் சேதத்தை குறைத்து மற்றொன்றை உருவாக்குகிறதா? தோண்டப்பட்டவுடன் அவற்றிலிருந்து எஞ்சியிருக்கும் கழிவுகள் குறித்து சிலர் கவலை தெரிவித்துள்ளனர். இந்த கழிவுகளை எவ்வாறு அகற்றுவது என்ற சிக்கலைப் பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள், மற்ற விண்வெளி கழிவுகளைப் போலவே, இதுவும் இறுதியில் பூமியில் விழக்கூடும். இங்கிலாந்தில் உள்ள தி ஓபன் பல்கலைக் கழகத்தின் கிரக மற்றும் விண்வெளி அறிவியல் பேராசிரியர் மோனிகா கிரேடி போன்ற விஞ்ஞானிகள், விண்வெளியின் பரிசுத்தமான சூழலை களங்கப்படுத்தக் கூடாது என்று வாதிட்டனர், அதற்கு பதிலாக மனிதர்கள் " அவ்வப்போது சுத்தம் செய்ய" கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். ஆனால் இதற்கு மாறான கருத்துகளும் நிலவுகின்றன. விண்வெளியில் உள்ள வளங்கள் பூமியில் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக பார்க்கப்பட வேண்டும் என்று கியாலிச் வாதிடுகிறார். "அங்கு எல்லையற்ற விண்வெளி, எண்ணற்ற விண்கற்கள் உள்ளன, ஆனால் ஒரே ஒரு பூமி மட்டுமே உள்ளது," என்று அவர் கூறுகிறார். இருப்பினும், இந்த நிறுவனங்களால் தோண்டப்பட்ட சிறுகோள் வளங்களை வாங்கத் தொடங்குவதற்கு முன்பு பதிலளிக்க வேண்டிய இன்னும் ஒரு கேள்வி உள்ளது. உண்மையில் அவற்றை விற்க அந்த வளங்கள் அவர்களுடையதா? இது முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று என்று இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விண்வெளி சட்ட பேராசிரியரும், லண்டனை தளமாகக் கொண்ட விண்வெளியில் இருந்து உலோகங்களை எடுக்கும் நிறுவனமான ஆஸ்டிராய்ட் மைனிங் கார்பரேஷனின் ஆலோசகருமான ரோசன்னா டெப்லானோ கூறுகிறார். 115 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட சர்வதேச விண்வெளி சட்டம் குறித்த மிகப் பழமையான ஆனால் மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தமான 1967 வெளிப்புற விண்வெளி ஒப்பந்தம், நாம் விண்வெளியை பொதுவானதாக கருத வேண்டும் என்று கூறுகிறது, ஆனால் அதன் வளங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. "எனவே [சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது] தடை செய்யப்படவில்லை" என்று டெப்லானோ கூறுகிறார். விண்வெளியில் செயற்கைக் கோள்கள் ஒன்றுக்கொன்று மோதாமல், பாதுகாப்பாக நகர்வதன் பின்னணி பூமியின் உட்புற மையக்கரு வடிவம் மாறிவிட்டதா? விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல் பனாமா: கடலுக்கு அடியில் 11 மீட்டர் ஆழத்தில் வீடு கட்டி 120 நாட்கள் வாழ்ந்த மனிதர் விண்வெளியில் இருந்து எரிந்தபடி விழுந்த 'ராட்சத வளையம்' - எங்கிருந்து வந்தது? இதற்கிடையில், 1979 மூன் (சந்திரன்) ஒப்பந்தம், சந்திரனின் இயற்கை வளங்கள் யாருடைய சொத்தாகவும் மாறக்கூடாது என்று கூறுகிறது - ஆனால் இது சிலி, நெதர்லாந்து, மொராக்கோ உள்ளிட்ட 7 நாடுகளால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அவற்றில் எந்த நாடும் இன்றுவரை தங்கள் சொந்த மனிதர்களைக் கொண்ட விண்வெளிப் பயணத் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை. விண்வெளி வளங்களைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் குழு 2027-ல் கூடவுள்ளது, ஆனால் எந்தவொரு அறிவிப்பும் சட்டப்பூர்வமாக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்காது. உண்மையில், யுக்ரேனின் கனிம வளங்கள் மீதான சாத்தியமான உடன்பாடு குறித்து அமெரிக்காவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான விவாதங்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, தேசிய நலன்கள் முன்னுரிமை பெறக்கூடும். "சிறுகோள்களிலிருந்து பிரித்தெடுப்பது அறிவியல் ஆராய்ச்சிக்காக இருந்தால், அது மிகவும் சிக்கலாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என்று டெப்லானோ கூறுகிறார். ஆனால், வணிகமயமாகும்போது அரசியல் மட்டத்தில் பிரச்னை எழுகிறது. நாடுகள் ஏற்கனவே தங்கள் சொந்த தேசிய கண்ணோட்டத்தில் இருந்து இந்த விவகாரம் குறித்த விளக்கங்களை வழங்குகின்றன என்று அவர் மேலும் கூறுகிறார். "இது வணிகமயமாக்கலை ஊக்குவிப்பதாகும். அது நடக்கப் போகிறது." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvgeddvvyd1o
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தல்; விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு முக்கிய அறிவித்தல் 31 MAR, 2025 | 06:39 PM எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விசேட தேவையுடைய வாக்காளர்களுடன் வாக்கெடுப்பு நிலையத்திற்கு செல்லும் உதவியாளர்கள், 1. 18 வயதை பூர்த்தி செய்த ஒருவராக இருத்தல் வேண்டும் என்பதோடு தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளராக இருத்தல் கூடாது. 2. தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சி ஒன்றின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராகவோ வாக்கெடுப்பு நிலையத்தின் முகவராகவோ இருத்தல் கூடாது. 3. விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது உதவியாளர்களை உடன் அழைத்துச் செல்ல தகுதி சான்றிதழல் ஒன்றை உரிய வாக்கெடுப்பு நிலையத்தின் அலுவலருக்கு சமர்ப்பித்தல் வேண்டும். 4. தகுதி சான்றிதழலை பெற்றுக்கொள்ள தேவையான விண்ணப்பங்களை கிராம அலுவலர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் அல்லது https://www.elections.gov.lk/ என்ற தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். https://www.virakesari.lk/article/210760
-
பெண் நோயாளிகளை படம்பிடித்த அறுவை சிகிச்சை நிபுணர் கைது - ஜேர்மனியில் சம்பவம்
31 MAR, 2025 | 05:00 PM எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் 14 வயதுக்குட்பட்ட சிறுமி உட்பட பல பெண் நோயாளர்களை கையடக்கத் தொலைபேசி மூலம் படம்பிடித்தும், வீடியோ எடுத்தும் உள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யபட்டுள்ளார். வட மேற்கு ஜேர்மனியில் வசித்துவரும் 43 வயதுடைய ஹனோ என்னும் அறுவை சிகிச்சை நிபுணர் 190 சந்தர்ப்பங்களில் இப்படி பெண்களை படம் பிடித்துள்ளதுடன், பலரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஜேர்மன் செய்தித்தாளான பைல்ட் (BILD) செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அறுவை சிகிச்சை நபுணரிடமிருந்து சுமார் ஒரு இலட்சம் அளவிலான பெண்களின் புகைப்படங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இவர் பல ஆண்டுகாலமாக பெண்களை படம் பிடித்ததாகவும், பலரை துஷ்பிரயோகம் செய்தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நோயாளியான பெண் ஒருவர் குறித்த அறுவை சிகிச்சை நிபுணர் தனது பிரத்தியேக பகுதியை அவரின் கையடக்கத் தொலைபேசி மூலம் படம் எடுப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்தே அறுவை சிகிச்சை நிபுணர் கைது செய்யப்பட்டள்ளார். இருப்பினும், அறுவை சிகிச்சை நிபுணரான ஹனோ, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்நிலையில், ஜேர்மன் சட்டத்தின் படி இவர் மீதான குற்றச்சாட்டுகளால் இவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/210743
-
காசாவில் எட்டு மருத்துவர்களின் உயிரிழப்புக்கு செஞ்சிலுவைச் சங்கம் கண்டனம்!
இஸ்ரேலிய படையினர் அம்புலன்ஸ் மீது தாக்குதலை மேற்கொண்டு ஒரு வாரத்தின் பின்னர் மருத்துவ பணியாளர்களின் உடல்கள் மீட்பு - செஞ்சிலுவை சங்கம் கடும் சீற்றம் - இது எப்போது முடிவிற்கு வரும் என கேள்வி Published By: RAJEEBAN 31 MAR, 2025 | 12:46 PM இஸ்ரேலிய படையினர் அம்புலன்ஸ்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு ஒரு வாரத்தின் பின்னர் 8 மருத்துவ பணியாளர்களின் உடல்கள் உட்பட 14 உடல்கள் காசாவின் தென்பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செம்பிறை குழுவும், செஞ்சிலுவை குழுவும் தெரிவித்துள்ளன. சர்வதேச செம்பிறை மற்றும் செஞ்சிலுவை குழுக்களை சேர்ந்த மருத்துவ பணியாளர்களின் உடல்களே மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அம்புலன்ஸ்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டு ஏழு நாட்கள் மௌனத்திற்கு பின்னர் இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள செம்பிறை குழுவும், செஞ்சிலுவை குழுவும் கடந்த ஒரு வாரகாலமாக தாக்குதல் இடம்பெற்ற ரபாவிற்கு தாங்கள் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளன. 8 மருத்துவபணியாளர்களின் உடல்களுடன் காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் ஆறு பேரின் உடல்களையும் மீட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட உடல்களில் ஐக்கிய நாடுகளின் ஊழியர் ஒருவரின் உடலும் உள்ளதாகவும் பாலஸ்தீன செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது. ஒரு மருத்துவபணியாளரை காணவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு தங்கள் மருத்துவ சகாக்கள் சடலங்களாக மீட்கப்பட்டமை குறித்து கடும் சீற்றம் வெளியிட்டுள்ளதுடன் இது எப்போது முடிவிற்கு வரும் என கேள்வி எழுப்பியுள்ளது. நான் மனமுடைந்துபோயுள்ளேன், என தெரிவித்துள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்க மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஜகன் சப்பகெய்ன் இந்த அர்ப்பணிப்புள்ள அம்புலன்ஸ் பணியாளர்கள் காயமடைந்த மக்களை காப்பாற்ற சென்று கொண்டிருந்தார்கள், அவர்களின் வாகனங்கள் மீது இலச்சினை காணப்பட்டது. அது அவர்களை பாதுகாத்திருக்க வேண்டும், அம்புலன்ஸ்களில் தெளிவாக செஞ்சிலுவை என குறிப்பிடப்பட்டிருந்தது, அவர்கள் அவர்களின் குடும்பத்தவர்களிடம் பாதுகாப்பாக போய் சேர்ந்திருக்கவேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210719
-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளூராட்சி விடயங்களை இராணுவ மயப்படுத்துகின்றது
அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நிர்வாக ஒழுங்குகளுக்குள்ளாக கடமைகளை திணைக்களங்களுக்கு அறிவுறுத்தி அவற்றின் வாயிலாக மக்களுக்கான சேவையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர இராணுவத்தினை பயன்படுத்தி சாதாரண சிவில் நிர்வாகத்தினை செயல்திறன் குன்றியதாக மாற்றக்கூடாது. இராணுவமயமாக்கத்தினை ஊக்குவிக்க கூடாது என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தினை பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில், இராணுவ குழுக்கள் இணைந்து துய்மிப்புப் பணியில் ஈடுபட்டமை குறித்து தனது அதிருப்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மக்களையோ அல்லது கட்சித் தொண்டர்களையோ ஈடுபடுத்தி யாழ் மத்திய பேருந்து நிலையம் தூய்மிக்கப்பட்டிருக்குமாயின் நாம் அதனை வரவேற்றிருப்போம். மாறாக அரச அதிகாரத்தின் வாயிலாக, இராணுவத்தினை பெருமளவில் அழைத்து வந்து யாழ் மாநகர சபை ஆற்ற வேண்டிய தூய்மிப்புப் பணியை அரச எம்.பி இளங்குமரன் மேற்கொண்டுள்ளார். தங்களிடத்தில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தினை துப்புரவு செய்ய வேண்டிய நன்நோக்குக் காணப்படுமாயின் தங்கள் கட்சி ஆட்சியில் உள்ள அரசாங்கம் என்பதன் அடிப்படையில் சாதாரணமாக அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தால் அவர்கள் சிவில் நிர்வாக ஒழுங்கு முறைகளுக்கு அமைவாக பொறுப்பு வாய்ந்த திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் மேற்படி நடவடிக்கையினை மேற்கொண்டிருக்க முடியும். யாழ் மாநகர சபையில் ஆளணி வளம் உள்ளது. யாழ் மாநகர சபை பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லையானால் ஆளுநர் மாகாண உள்ளுராட்சி திணைக்கள விடயங்களுக்கு அதிகாரம் பொருந்தியவராகவுள்ளார். அவர் ஊடாக ஏனும் நடவடிக்கை எடுத்திருக்கலாம். இவற்றுக்கு மேலதிகமாக பொதுமக்களைத் திரட்டி அல்லது கட்சித் தொண்டர்கள் ஊடாக சிரமதானத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாது பெருமளவான இராணுவத்தினரைப் பயன்படுத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளீர்கள். இராணுவத்தினரை சிவில் நிர்வாகம் ஊடக மேற்கொள்ள வேண்டிய பணிகளில் தவிருங்கள். கடந்த கோட்டபய காலத்திலும் இராணுவத்தினை உள்ளூராட்சி விடயப்பரப்புகளுக்குள் நுழைப்பதற்கு பெரும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நான் உள்ளூராட்சி மன்றம் ஒன்றின் தலைவர் என்ற வகையில் அவற்றினை முற்றாக நிராகரித்திருந்தேன். நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களே இராணுத்தின் தயவில் இயங்கினால் தங்கள் கட்சி சார்ந்த எதிர்காலத்தில் தெரிவாகக் கூடிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சபைகளில் சிறிய வேலைகளைச் செய்வதற்கும் இராணுத்தினையே அழைக்க எத்தனிப்பர். எனவே இராணுவ ஒடுக்குமுறைகளுக்கு இனமாக ஆட்பட்டிருக்கும் எமது இனத்திற்கு இன்றுவரையில் தங்கள் கட்சி ஆரோக்கியமான பொறுப்புக்கூறலையோ தீர்வை முன்வைப்பதற்கோ முன்வரவில்லை. இவ்வாறிருக்க சாதாரண விடயங்களிலும் இராணுவ பிரசன்னத்தினையும் இராணுவமயமாக்கத்தினையும் மேற்கொள்வது எமது மக்களை மேலும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் செயற்பாடாகும் என வலி கிழக்கின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். https://thinakkural.lk/article/316701
-
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்யாவிட்டால் குண்டு வீசுவோம் – ட்ரம்ப் எச்சரிக்கை!
இரான் மீது குண்டு வீசுவோம் என்று டிரம்ப் மிரட்டல் - இரான் பதில் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எந்த ஒரு ராஜாங்க ரீதியான உறவுகளும் இல்லை. கடந்த சில நாட்களாக இரண்டு நாடுகளுக்கும் இடையே மறுபடியும் வார்த்தைப் போர் மூண்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் மீது குண்டு வீசப் போவதாக மிரட்டி வருகிறார். இரானோ அமெரிக்காவோடு இனி எந்த நேரடிப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று கூறி இருக்கிறது. சமீபத்தில் இரானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பு நிறுவனமான ஐஆர்என்ஏ, ஓமன் நாட்டின் மூலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடிதத்துக்கு பதில் அனுப்ப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. முன்னதாக புதிய அணு ஒப்பந்தத்திற்கு இரான் விரைவில் சம்மதிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறியிருந்தார். அமெரிக்கா தங்கள் மீது அதிகபட்ச அழுத்தம்' தரும் கொள்கையை கடைபிடிக்கும் வரை அதனுடன் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்று இரான் குறிப்பிட்டுள்ளது. இரானுக்கு டிரம்ப் மிரட்டல் மார்ச் மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய அணு ஒப்பந்தம் தொடர்பாக இரானின் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிக்கு ஒரு கடிதம் எழுதியதாகத் தெரிவித்தார். ஐஆர்என்ஏ-வின் கூற்றுப்படி இந்தக் கடிதம் மார்ச் 12-ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்களின் தூதர் வழியாக இரானை வந்தடைந்தது. இரான் பேச்சுவார்த்தையில் இடம்பெறாவிட்டால் அந்த நாடு அணுஆயுதங்கள் தயாரிப்பதை அமெரிக்கா எப்படியாவது தடுத்து நிறுத்தும் என்று டிரம்ப் கூறியுள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பைப் பற்றி, ஜெட்டாவில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி பேசும் போது ''அமெரிக்கா தங்கள் மீது அதிக அழுத்தம் கொடுப்பதைக் கொள்கையாக கொண்டிருக்கும் வரை அதனோடு நாங்கள் எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை", என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES அணுஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுடன் விரைவாக ஒரு உடன்படிக்கையை எட்டவில்லை என்றால் இரான் மீது குண்டு வீசப் போவதாகவும் அதன் மீது அதிக வரிகள் விதிக்கப் போவதாகவும் ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் மிரட்டியுள்ளார். ஆனால் கடந்த வாரமே வாஷிங்கடனுடன் நேரடிப் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ள இரான் மறுத்து விட்டது. அமெரிக்க செய்தித் தொலைக்காட்சிகளுள் ஒன்றான என்பிசி நியூஸ் உடனான தொலைபேசி நேர்காணலில் இரானைப் பற்றி டிரம்ப் பேசியபோது, ''அவர்கள் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால் கண்டிப்பாக வெடிகுண்டு வீசப்படும். இதற்கு முன் அவர்கள் பார்த்திராத மாதிரியான தாக்குதலாக அது இருக்கும்". அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகள் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சு இல்லை: இரான் அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதைத் திட்டவட்டமாக மறுப்பதாக இரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஏபி செய்தி முகமையின் கூற்றுப்படி, இரானின் உச்சபட்ச தலைவருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுப்பிய கடிதத்துக்கு டெஹ்ரானின் முதல் எதிர் நடவடிக்கை இதுதான். ஓமன் வழியாக மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை திறந்து வைத்துள்ளதாக அதிபர் மசூத் பெஷேஷ்கியன் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES இரானுடனான 2015-ஆம் ஆண்டு அணுஆயுத ஒப்பந்தத்தை 2018-ஆம் ஆண்டில் தனது முதல் ஆட்சிக்காலத்தில் ரத்து செய்தார் டிரம்ப். பின்னர் இரான் மீது அதிக அழுத்தம் தரும் கொள்கையின் ஒரு பகுதியாக இரான் மீது அவர் மீண்டும் தடைகளை கொண்டு வந்தார். 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, தனது அணு ஆயுத நடவடிக்கைளைக் குறைத்துக் கொள்ளவும் சர்வதேச ஆய்வாளர்களை அனுமதிக்கவும் இரான் ஒப்புக் கொண்டிருந்தது. அதற்கு ஈடாக, இரான் மேல் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன. இரானின் அணு ஆயுத் திட்டம் மற்றும் தொலைதூர ஏவுகணைத் திட்டங்களின் மீது காலவரையற்ற தடை விதிக்கும் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புவதாக 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யும்போது டிரம்ப் கூறினார். இதன் பிறகு இரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் எந்த குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது நிலைமை நிறையவே மாறியுள்ளது. காஸா தாக்குதலுக்குப் பிந்தைய நிலவரம் காஸா மோதல் காலகட்டத்தில் இஸ்ரேலின் குறி, 'எதிர்ப்பின் அச்சு' என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட இரானாகவே இருந்தது. இதே காலகட்டத்தில், இரான் உதவியுடன் செயல்படும் யேமனின் ஹாதி ஆயுதக்குழுவினர் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வந்தது. இதுதவிர இரானின் அணுஆயுத திட்டத்திற்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை மிரட்டலும் தொடர்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காஸாவில் ஒரு மசூதியின் இடிபாடுகளுக்கு அருகே இப்படித்தான் ஈத் தொழுகை நடைபெற்றது. ''நாங்கள் பேச்சுவார்த்தையைத் தவிர்க்க விரும்பவில்லை. ஏற்கனவே அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்பட்டதே இதுவரை பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று அவர்கள்தான் (அமெரிக்கா) நிரூபிக்க வேண்டும்," என்று அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தொடரலாம் என்று தலைவர் அழுத்திச் சொன்னதாக ஆயதுல்லா அலி காமனெயி பற்றிக் குறிப்பிட்டு அவர் கூறியுள்ளார். ஏபி செய்தி நிறுவனத்தின்படி, பெஷேஷ்கியானின் அறிக்கைக்கு , 'இரான் அணுஆயுதங்களை தயாரிக்கும் ஆற்றலைப் பெறுவதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாது என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை பதிலளித்துள்ளது. அதோடு கூடவே, ''இரானுடன் இந்த ஒப்பந்தம் பற்றிப் பேச அதிபர் டிரம்ப் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இரானிய அரசாங்கத்துக்கு இந்த ஒப்பந்தத்தில் விருப்பம் இல்லை என்றால் என்ன செய்வது என்பதில் அதிபர் தெளிவாக இருக்கிறார். அவர் வேறு விஷயங்களைத் தேர்ந்தெடுத்தால் அது இரானுக்கு நல்லதல்ல" என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான டிரம்பின் முன்மொழிவை நிராகரித்தது இரான் இரானுக்கு அழுத்தம் தரும் அமெரிக்காவின் கொள்கை வெள்ளை மாளிகையில் இரண்டாம் முறை பதவியேற்று ஒரு மாத காலத்துக்கும் குறைவான காலகட்டத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி, இரான் மீது 'அதிக அழுத்தம்' கொடுப்பதற்கான ஆணையில் கையெழுத்திட்டார் டிரம்ப். ''அணுஆயுதப் பரவலைத் தடுக்கும் ஒரு ஒப்பந்தத்தை இரானுடன் செய்ய விரும்புகிறேன். அவர்கள் சாக விரும்பவில்லை. யாருமே சாக விரும்புவதில்லை… நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டால் இஸ்ரேல் இரான் மீது குண்டு வீசாது." என்று நியூயார்க் டைம்ஸ் இதழிடம் டிரம்ப் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் கொமெரியும், இரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியனும் அமெரிக்காவுடன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்வதை மறுத்துள்ளனர். அமெரிக்க அரசாங்கத்துடனான எந்தப் பேச்சுவார்த்தையும் 'புத்திசாலித்தனமாகவோ, மரியாதைக்குரியதாகவோ' இல்லை என்று பிப்ரவரி 2025-இல் ஆயதுல்லா அலி காமனெயி குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தில் டிரம்பின் மிரட்டலுக்கு பதிலாக இரானின் அணுஆயுதத் திட்டத்தை எந்த ராணுவத் தாக்குதலாலும் முறியடிக்க முடியாது என்று இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்திருந்தார். இரான் அரசாங்க செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ-வில் வெளியான மார்ச் 8 அறிக்கையின்படி, ''இரானின் அணுஆயுதத் திட்டத்தை எந்த ராணுவத் தாக்குதலாலும் அழிக்க முடியாது. இந்தத் தொழில்நுட்பத்தை நாங்கள் பெற்றுவிட்டோம். எங்கள் மூளையில் உள்ள தொழில்நுட்பத்தை எந்த வெடிகுண்டாலும் அழிக்க முடியாது, '' என்று அப்பாஸ் அராச்சி தெரிவித்தார். இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு முழுவதும் முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்று அராச்சி எச்சரித்தார். அதிக அழுத்தம் தருவதென்பது சட்டத்தை மீறுவது மற்றும் மானுடத்திற்கு எதிரானது என்று பல சந்தர்ப்பங்களில் இரான் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அதிபராக இருந்த போது ஆயதுல்லா அலி காமனெயிக்குப் பல கடிதங்கள் எழுதியுள்ளார் பராக் ஒபாமா. அமெரிக்க அதிபர்கள் இதுவரை எத்தனை கடிதங்கள் எழுதியுள்ளனர்? கடந்த காலத்தில் இரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பல ரகசியப் பேச்சுவார்த்தைகள் மற்றும் மறைமுகக் கடிதப் போக்குவரத்துகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் கடந்த பதினைந்து வருடங்களாக இரான் மற்று அமெரிக்கத் தலைவர்கள் இடையேயான தொடர்புகள் பகிரங்கமாகி இருக்கின்றன. மே 2009-இல் பராக் ஒபாமா, ஆயதுல்லா காமனெயிக்கு முதல் கடிதம் எழுதினார். இதை 2009-ஆம் வருடம் ஜூன் மாதம் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகையின்போது காமனெயி குறிப்பிட்டதுடன், அதற்கு பதிலளிக்கவும் செய்தார். இதன் பிறகு செப்டம்பர் 2009-ல் காமனெயிக்கு இரண்டாம் கடிதம் பாரக் ஓபாமாவிடம் இருந்து வந்தது. டபானக் வலைத்தளத்தின்படி அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தவை பற்றி சரியான தகவல்கள் இல்லை. ஆனால் அதன் மூலமாக இரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழியை அமெரிக்க அதிபர் நாடுவதாக அந்த வலைத்தளம் குறிப்பிட்டிருந்தது. வாஷிங்டன் டைம்ஸோ, இரண்டு நாடுகளுக்கும் இடையே 'சிறந்த ஒத்துழைப்பை' ஒபாமா நாடுவதாக எழுதி இருந்தது. 2011-இல் ஒபாமா மூன்றாவது கடிதத்தை எழுதினார். இரான் நாடாளுமன்றத்தில் பேசிய அலி மோட்டாஹரி இந்தக் கடிதத்தைப் பற்றிச் சொல்லும் போது அதன் முதல் பகுதி மிரட்டல் தொனியிலும், இரண்டாம் பகுதி நட்புறவு பற்றியும் இருப்பதாகக் குறிப்பிட்டார். மூன்று வருடங்கள் கழித்து அக்டோபர் 2014-ஆம் வருடம் ஒபாமா தனது நான்காவது கடிதத்தை எழுதினார். இரானுக்கும், அமெரிக்காவுக்குமான 'பொதுவான நலன்கள்' பற்றி ஒபாமா குறிப்பிட்டிருந்ததாகவும், இஸ்லாமிய அரசாகச் சொல்லிக் கொள்ளும் ஐஸ் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பற்றியும் கருத்து தெரிவித்திருந்தாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டிருந்தது. 2014 பிப்ரவரி தொடக்கத்தில் ஓபாமாவுக்கு ஆயதுல்லா அலி காமனெயி ஒரு கடிதம் எழுதினார், அதில் எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. 2019-ஆம் வருடம் ஜூன் 13 அன்று காமனெயிக்கு டிரம்ப் ஒரு கடிதம் எழுதினார். முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, தானே சென்று இந்தக் கடிதத்தை இரானில் வழங்கினார். இந்த சந்திப்பின் போதும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று காமனெயி குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேலும், அமெரிக்காவும் இரான் அணு ஆயுதம் தயாரிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று எச்சரித்திருக்கும் அதே வேளையில், இந்த வருடம் 2025-ல் ட்ரம்பின் கடிதம் வந்திருக்கிறது. இது ஒரு ராணுவத் தாக்குதலுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y63147xy6o
-
பொறுப்புக்கூறல் மாத்திரம் இலங்கையின் நீண்டகாலச் சவால்களுக்கு முடிவைக் கொண்டுவராது - அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை கொடுக்க அரசாங்கத்தை வலியுறுத்துகிறது தேசிய சமாதானப் பேரவை
31 MAR, 2025 | 03:35 PM பொறுப்புக்கூறலினால் மாத்திரம் இலங்கையின் நீண்டகாலச் சவால்களுக்கு தீர்வைக் கண்டுவிட முடியாது என்று கூறியிருக்கும் தேசிய சமாதானப் பேரவை இனமோதலுக்கு வழிவகுத்த ஆழமான காரணிகளைக் கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்று அவசியமாகும் என்று வலியுறுத்தியிருக்கிறது. இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் தேசிய சமாதானப் பேரவை அதில் கூறியிருப்பதாவது ; மூன்று முன்னாள் இராணுவ தலைவர்கள் உட்பட நான்கு இலங்கையர்களுக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம் எடுத்த தீர்மானம் முக்கியமான ஒரு விவாதத்தை மூளவைத்திருக்கிறது. உலகின் வேறு பகுதிகளில் பாரிய வன்முறைகள் தடுக்கமுடியாத அளவுக்கு தொடருகின்ற ஒரு நேரத்தில் பிரிடடன் எடுத்திருக்கும் இந்த தீர்மானம் வேவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு நியமங்கள் பிரயோகிக்கப்படுவது பற்றி விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையைக் கண்டறிடதிலும் பொறுப்புக்கூற வைப்பதிலும் உள்ள நாட்டம் சகலருக்கும் ஒரே மாதிரியானதாகவும் அரசியல் நோக்கங்கள் இல்லாததாகவும் இருக்க வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை பக்கச்சார்பற்ற ஒரு சிவில் சமூக அமைப்பு என்ற வகையில் வலியுறுத்திக் கூறுகிறது. குறிப்பிட்ட ஒரு தரப்புக்கு தெரிவு செய்யப்பட்ட முறையில் பிரயோகிக்கப்படுவதாகநீதி இருக்க முடியாது. இன்று பாலஸ்தீனத்திலும் உக்ரெயினிலும் இன்று இடம்பெறுவதைப் போன்று 16 தொடக்கம் 37 வருடங்களுக்கு முன்னர் அத்துமீறல்கள் இடம்பெற்ற முள்ளிவாய்காலுக்கும் பட்டலந்தவுக்கும் ஒரேமாதிரியான நிதி அவசியமாகிறது. இலங்கையில் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக பாடுபடுவதாக ஐக்கிய இராச்சியம் கூறியிருக்கிறது. இலங்கையின் மனித உரிமைகள் சீர்திருத்தங்களை ஆதரிப்பதிலும் உறுதிப்பாடு கொண்டிருப்பதாக அது கூறுகிறது. தீர்வு காணப்படாத மனித உரிமைகள் பிரச்சினைகள் நீண்டகால விளைவுகளைக் கொண்டிருக்கின்றன என்பதை தேசிய சமாதானப் பேரவை ஏற்றுக்கொள்கிறது. ஜனதா விமுக்தி பெரமுன (ஜே வி.பி. ) கிளர்ச்சி யுகத்தின் பட்டலந்த சர்ச்சை அண்மையில் மீண்டும் வெளிக்கிளம்பியிருப்பது வரலாற்று அநீதிகள் எளிதில் மறைந்துபோய் விடாது என்பதை தெளிவாக வெளிக்காட்டுகிறது. அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான அக்கறைகளை விரிவான ஒரு முறையில் இலங்கை கையாளத் தவறினால் மேலும் பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய ஆபத்து இருக்கிறது. மனித உரிமைகள் அக்கறைகளின் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.பிளஸ் வர்த்தக சலுகைகளை இழக்கக்கூடிய சாத்தியப்பாடு இலங்கையின் பொருளாதார உறுதிப்பாட்டை அச்சுறுத்துகிறது. நம்பகத்தன்மை வாய்ந்த அவசர நடவடிக்கைகளின் அவசியத்தை இது தெளிவாக உணர்த்துகிறது. ஆனால், பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கைகளினால் மாத்திரம் நாட்டின் நீண்டகால சவால்களுக்கு தீர்வுகளைக் கொண்டுவர முடியாது. இலங்கை அதன் இனமோதலுக்கான மூலவேர்க் காரணிகளை கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டியது அவசியமாகிறது. இனப்போரும் கடந்த காலத்தைய பாரிய வன்செயல்களும் வெறுமனே குற்றவியல் செயற்பாடுகள் அல்ல, அவை ஒரு பெரிய அரசியல் போராட்டத்தின் ஒரு அங்கமாகும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அப்பால், நீண்டகால உறுதிப்பாட்டுக்கு அடித்தளத்தை அமைக்கக்கூடிய பரந்தளவிலான அரசியல் கருத்தொருமிப்பு தேவைப்படுகிறது. சகல சமூகங்களும் அரவணைக்கப்படுவதையும் நியாயமான அதிகாரப்பகிர்வையும் உறுதிசெய்வதற்கு பேச்சுவார்த்தை மூலமான இணக்கத்தின் அடிப்படையில் அரசியல் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படாவிட்டால், பொறுப்புக்கூறலை நோக்கிய முயற்சிகள் முழுமை பெறப்போவதில்லை என்பதுடன் பிளவுகள் மேலும் ஆழமாகக்கூடிய ஆபத்தும் உருவாகும். பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் இணக்கத்தீர்வு ஒன்றுக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலமாக தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய சமாதான பேரவை அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. வெளிப்படைத்தன்மை மற்றும் பரந்தளவு பங்கேற்பு மீது கட்டியெழுப்ப்பப்படக்கூடியதும் அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து விடுபட்டதுமான உண்மை ஆணைக்குழு ஒன்றை அமைப்பது மிகவும் முக்கியமான ஒரு நடவடிக்கையாக அமையும். ஆனால், அது அரசியல் கருத்தொருமிப்பில் வேரூன்றிய பரந்த ஒரு நல்லிணக்கச் செயன்முறையின் அங்கமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அத்தகைய ஒரு செயன்முறை எந்தளவுக்கு தாமதிக்கப்படுகிறதோ அந்தளவுக்கு (பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பரந்தளவிலான மக்கள் மத்தியில்) நீதி தொடர்பில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் சந்தேக உணர்வை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் பொறுப்புக்கூறலில் இருந்து நழுவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சியாகவும் நோக்கப்படும். பரந்தளவிலான அரசியல் சீர்திருத்தச் செயன்முறை ஒன்றிற்குள் ஒருங்கிணைக்கப்படுகின்ற -- நன்கு கட்டமைக்கப்பட்ட உண்மை ஆணைக்குழு ஒன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் கிடைக்கச் செய்யும் என்பது மாத்திரமல்ல , நிலைபேறான சமாதானம், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஐக்கியத்துக்கும் வழிவகுக்கும் என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும். https://www.virakesari.lk/article/210739
-
கொழும்பில் வானுயர்ந்து காணப்படும் கட்டிடங்கள் பாதுகாப்பானவையா?; வெளியான அறிவிப்பு
கொழும்பில் உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டிடங்கள் பூகம்பத்திலிருந்து தாங்கும் சக்தி கொண்டது என்றும் அவை அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளவை என்றும் நில அதிர்வு நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். இது தொடர்பில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு கூறுகையில், இலங்கை அனுபவித்த அதிகபட்ச நிலநடுக்கம் சுமார் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஆகும், இது எந்த தாக்கத்தையும் சேதத்தையும் ஏற்படுத்தாது. இருப்பினும், தற்போது கட்டப்பட்டு வரும் மற்றும் சமீபத்திய காலங்களில் கட்டப்பட்ட அனைத்து நவீன வானளாவிய கட்டிடங்களும் மிதமான அளவிலான நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டமைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளன. GSMB நில அதிர்வு நிபுணர் கூறியதாவது, நாடு குறைந்த ஆபத்துள்ள பகுதியில் இருந்தாலும், சர்வதேச மற்றும் உள்ளூர் பாரிய கட்டிட ஒப்பந்ததாரர்கள் இப்போது தங்கள் கட்டிடங்களில் நிலநடுக்க எதிர்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டுள்ளனர். சர்வதேச கட்டுமானத் தரம் கொண்ட நிலநடுக்க எதிர்ப்பு தொழில்நுட்பம் இப்போது இலங்கையிலும் பின்பற்றப்படுகிறது, மேலும் நகரத்தைத் தாக்கும் பாரிய நிலநடுக்கத்தில் கூட, கொழும்பு வானளாவிய கட்டிடங்கள் தாங்கும் சக்தி கொண்டவையாக உள்ளன என்று நில அதிர்வு நிபுணர் கூறினார். https://thinakkural.lk/article/316706
-
மியான்மரில் அடுத்தடுத்து இரு பெரிய நிலநடுக்கங்கள்.. அண்டை நாடான தாய்லாந்திலும் அதிர்ந்த கட்டடங்கள்
மியன்மார் பூகம்பம் - திங்கட்கிழமை இடிபாடுகளிற்குள் இருந்து மற்றுமொரு பெண் உயிருடன் மீட்பு - கர்ப்பிணியை காப்பாற்றும் முயற்சி தோல்வி Published By: RAJEEBAN 31 MAR, 2025 | 04:20 PM மியன்மாரை பூகம்பம் உலுக்கிய 60 மணித்தியாலங்களிற்கு பின்னர் திங்கட்கிழமை இடிபாடுகளிற்குள் இருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார்என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிர் பிழைத்திருக்க கூடியவர்களை மீட்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள மீட்பு பணியாளர்களிற்கு இது ஒரு நம்பிக்கை அளிக்கும் விடயமாக காணப்படுகின்றது. இயந்திரங்கள் அற்ற தன்னார்வ தொண்டர்களான மீட்பு பணியாளர்கள் பூகம்பம் தாக்கிய பின்னர் கட்டிட இடிபாடுகளிற்குள் இருந்து உயிருடன் இருப்பவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இந்த பூகம்பத்தினால் மியன்மாரிலும் தாய்லாந்திலும் 2000 பேர் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளது. உயிரிழப்புகளின் உண்மையான அளவு இதுவரை தெரியவரவில்லை என்ற அச்சமும் நிலவுகின்றது. திங்கட்கிழமை காலையில் ஐந்து மணிநேர மீட்பு நடவடிக்கையின் பின்னர் மண்டலாயின் கிரேட்வோல் ஹோட்டலின் இடிபாடுகளிற்குள் இருந்து பெண் ஒருவரை மீட்பு பணியாளர்கள் வெளியே கொண்டுவந்தவேளை மகிழ்ச்சியான நிலை காணப்பட்டது என மியன்மாருக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. மீட்பு பணியாளர்களையும் உதவிகளையும் அனுப்பியுள்ள நாடுகளில் சீனாவும் ஒன்று என்பது குறிப்பிடத்க்கது. உயிருடன் மீட்கப்பட்ட பெண் ஸ்டிரெச்சரில் கொண்டு செல்லப்பட்டவேளை அங்கு காணப்பட்டவர்கள் கரகோசங்களை எழுப்பியதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. மியன்மாரில் பூகம்பம்காரணமாக தரைமட்டமாகியுள்ள அலுவலகங்கள் பாடசாலைகள் ஹோட்டல்கள் மதவழிபாட்டுதலங்கள் மருத்துவமனைகள் போன்றவற்றின் இடிபாடுகளிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை மண்டலாயின் தொடர்மாடியொன்றின் இடிபாடுகளிற்குள் இருந்து கர்ப்பிணியொருவரை மீட்பதற்கான முயற்சிகளில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டனர், அவரை மீட்பதற்காக அவரது காலை துண்டித்தனர் ஆனால் பின்னர் அவர் உயிரிழந்தார். https://www.virakesari.lk/article/210750