Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ஏராளன்

  1. தையிட்டி விவகாரம் என்பது 16 காணிக்காரர்களின் பிரச்சினை மாத்திரமல்ல, இது திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நீங்களும் இதற்கு ஆதரவோ என்ற சந்தேகம் எழுக்கின்றது-; தேசிய மக்கள் சக்தியின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் காணி உரிமையாளர் Published By: RAJEEBAN 29 MAR, 2025 | 05:49 PM தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் கடந்த 20 திகதி, யாருடைய ஆதரவும் இல்லாமல் தன்னிச்சையாக சென்று, புத்த சாசன அமைச்சரை சந்தித்தோம். அவர் எங்களிற்கு ஒரு சாதகமான பதிலை தந்து நாங்கள் நம்பிக்கையோடு வந்து இரண்டு இரவுகள் கழிந்த நிலையில் அங்கே இன்னுமொரு சட்டவிரோத கட்டிடம் மிகக்கோலகலமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது என காணி உரிமையாளர்களில் ஒருவரான சுகுமாரி சாருஜன் தெரிவித்துள்ளார். வலிகாம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச அபிவிருத்திகுழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் இது தனியொரு 16 காணிக்காரர்களின் பிரச்சினை இல்லை, இதனை வந்து திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்பாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம், தடுக்க தடுக்க செய்து கொண்டு வாறீங்கள், நீங்களும் ஆதரவோ என்ற சந்தேகம் எங்களிற்கு எழுகின்றது என தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, இராணுவம் அரசாங்கத்தின் உதவியுடன் ஒரு பெரிய விகாரையை கட்டியுள்ளது, அது தொடர்பில் நாங்களிள் ஆளுநரிடம் போயிருக்கின்றோம். முன்னைய தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் போயிருக்கின்றோம். இது முன்னைய அரசாங்கங்கள் இனவாதமாக செயற்பட்ட விடயம் என நீங்கள் ஆட்சிக்கு வந்த காலத்தில் தெரிவித்திருந்தீர்கள்-இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எமது ஆட்சியில் இது இடம்பெறாது என எமக்கு வாக்குறுதிகள் தந்திருந்தீர்கள். ஆளுநரும் அறிக்கை எழுதுகின்றார் எழுதுகின்றார் இன்றுவரை எழுதி முடியவில்லை. கடந்த 20 திகதி, யாருடைய ஆதரவும் இல்லாமல் தன்னிச்சையாக சென்று, புத்த சாசன அமைச்சரை சந்தித்தோம். அவர் எங்களிற்கு ஒரு சாதகமான பதிலை தந்து நாங்கள் நம்பிக்கையோடு வந்து இரண்டு இரவுகள் கழிந்த நிலையில் அங்கே இன்னுமொரு சட்டவிரோத கட்டிடம் மிகக்கோலகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள்? பிரதேச செயலகம் தொடர்பாகவோ அல்லது இந்த பிரதேசத்திலிருந்து மக்கள் தொடர்பாக தெரிவுசெய்யப்பட்ட தாங்களோ இது தொடர்பாக அறிந்திருக்கின்றீர்களா? அல்லது இன்றுவரை இது தொடர்பில் எதுவும் தெரியாது என்ற பதிலைதான் கூறப்போகின்றீர்களா? இது தொடர்பான நடவடிக்கை என்ன கட்டத்தில் உள்ளது என்பதை இந்த இடத்தில் மக்களிற்கு நீங்கள் தெரியப்படுத்தவேண்டும். இது தனியொரு 16 காணிக்காரர்களின் பிரச்சினை இல்லை, இதனை வந்து திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்பாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம், தடுக்க தடுக்க செய்துகொண்டு வாறீங்கள் நீங்களும் ஆதரவோ என்ற சந்தேகம் எங்களிற்கு எழுகின்றது, இதற்கு உடனடியாக தீர்வை தரவேண்டும், இது சம்பந்தமாக தங்கடை பதிலை தரவேண்டும். நீங்கள் சட்டத்தினால் செய்ய முடியும் என தெரிவிக்கின்றீர்கள். எங்களிற்கு இந்த நாட்டின் சட்டத்திலேயோ நீதியிலோ நம்பிக்கை இல்லை. நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்ட பல விடயங்களை ஏதேச்சதிகாரமாக முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள், நாங்கள் குறுந்தூர் மலையை உதாரணமாக பார்க்கலாம், மேலதிக கட்டிடம் கட்டக்கூடாது என நீதிமன்றம் சொல்லியும், கட்டிக்கொண்டுதான் இருக்கின்றார்கள், சட்டத்திடம் அந்த பிரச்சினையை விட்டுவிட்டால் பின்னர் அதனை பொதுவெளியில் கதைக்க முடியாது. அதனை விடுத்து ஏன் நீங்கள் மற்றபக்கமாக பார்க்ககூடாது சம்பந்தப்பட்ட பௌத்த பிக்குவோ அல்லது பௌத்தசாசன அமைச்சோ நாங்கள் பொய் பிரச்சாரம் செய்கின்றோம் என சிறையில் போடலாம் ஏன் போடவில்லை, உங்கள் பக்கத்தில் உறுதிகளோ ஆவணங்களோ இல்லை என்று நிச்சயமாக தெரிந்தும் வழக்கு தொடரகோருகின்றார்கள் என்றால், உங்களுக்கு நன்கு தெரியும் அந்த இடத்தில தீர்ப்பொன்று வரும்போது நீங்கள் அதிகார துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு உங்களிற்கு சார்பாக சட்டத்தை மாற்றலாம் என்ற நம்பிக்கையில்தான் வழக்கிற்கு கூப்பிடுகின்றீர்கள். உங்களிடத்தில் எந்தவொரு ஆவணமும் இல்லை எங்களிடத்தில் உறுதி இருக்கின்றது ஏன் நாங்கள் நீதிமன்றம் செல்லவேண்டும். பிரதேச செயலகத்தில், கச்சேரியில் சகல ஆவணங்களும் உள்ளன. ஆதனை எடுத்துபாருங்கள், காணி அமைச்சின் ஊடாக இந்த பிரச்சினையை தீருங்கள். https://www.virakesari.lk/article/210564
  2. 29 MAR, 2025 | 06:56 PM சுழிபுரம் - திருவடிநிலை பகுதியில் சடலம் புதைக்கும் காணியை தனியார் ஒருவர் வாங்கியதால் சடலத்தை புதைப்பதற்கு மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயமானது வெள்ளிக்கிழமை (28) சங்கானை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இளைஞர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், காலம் காலமாக சடலங்களை புதைத்து வந்த காணியை தனியார் ஒருவர் வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காணியானது யாருடைய பெயரில் இருக்கிறது என பிரதேச சபையிடம் நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரியிருந்த போதும் அவர்கள் அதற்கு பதில் எதுவும் வழங்கவில்லை. 150ற்கும் மேற்பட்ட சடலங்களை புதைத்த இடத்தை வாங்கிய நபர் அதில் உள்ள கல்லறைகளை இடித்துவிட்டு சுற்றுலா மையத்துக்கான கட்டடம் அமைக்கப்போவதாக கூறுகின்றார். அத்துடன் ரொஜீனா என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்த பகுதியில் குறித்த சிறுமியின் உடலம் புதைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கானது இன்னமும் நிறைவடையவும் இல்லை. அந்த நிலத்தை வாங்கியதாக கூறியவரிடம் நாங்கள் சென்று, எவ்வளவு பணம் என்றாலும் பிரச்சினை இல்லை, அந்த நிலத்தை நாங்கள் வாங்குகின்றோம் என கேட்டோம். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்தார். இது குறித்து பல்வேறு தரப்பினருக்கும் கடிதங்களை நாங்கள் அனுப்பியுள்ளோம். இதுவரை பதிவுத் தபாலில் அனுப்பிய கடிதங்களுக்கு 25 ஆயிரம் ரூபா வரை செலவிட்டுள்ளோம். ஆனால் இந்த பிரச்சனையை தீர்ப்பதாக கடிதம் அனுப்புகின்றார்களே தவிர எந்தவிதமான நேரடி விசாரணைகளுக்கும் அழைக்கவில்லை. பொன்னாலையில் மாற்றுக்காணியை பிரதேச செயலகத்தினர் வழங்கினர். ஆனால் அந்த காணியில் ஒரு முழம் கூட தோண்ட முடியாது. அந்த நிலத்தில் சடலத்தை புதைத்தால் 15 வருடங்களானாலும் மக்கிப்போகாது. எமது பகுதியில் இருந்து சடலத்தை அந்த பகுதிக்கு கொண்டு செல்லவேண்டும் என்றால் 25ஆயிரம் ரூபா வாகனத்துக்கு செலவிட வேண்டும். ஆகையால் இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்போது குறுக்கிட்ட பொன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒருவர், தமது இடம் ஒரு இடுகாடு இல்லை என்றும், அங்கு சடலத்தை புதைப்பதற்கு அனுமதி வழங்க மோட்டோம். இதற்கான மாற்றுத் தீர்வினை கொண்டுவர வேண்டும் என்றார். பொன்னாலையில் அந்த காணி வழங்கப்படவில்லை. மூளாய் பகுதியிலேயே வழங்கப்பட்டது என சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/210563
  3. வெகுவிரைவில் ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 29 MAR, 2025 | 06:52 PM ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில், மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (29.03.2025) இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் ஆகியோரின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு ஆனையிறவில் நடைபெற்றது. இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது தற்பொழுது ரஜ என்ற பெயரிலேயே வெளிவருகின்றது. கடந்த ஆட்சி காலத்திலேயே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அந்த பெயரை மாற்ற முடியாது. அதற்கென நடைமுறைகள் உள்ளன. உடனடியாக நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகவே பழைய பெயரிலேயே விநியோகிக்கப்படுகின்றது. வெகுவிரைவில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஆனையிறவு உப்பளத்தின் பெயரிலேயே இலங்கையில் மட்டும் அல்ல. உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும். இது தொடர்பில் தமக்கு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/210565
  4. INNINGS BREAK 9th Match (N), Ahmedabad, March 29, 2025, Indian Premier League MI chose to field. Gujarat Titans (20 ov) 196/8 Current RR: 9.80 • Last 5 ov (RR): 56/6 (11.20) Mumbai Indians Win Probability:GT 66.60% • MI 33.40%
  5. ஜப்பானில் செய்யாத குற்றத்திற்காக 58 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நபருக்கு இழப்பீடு இத்தனை கோடிகளா?! ஜப்பானைச் சேர்ந்தவர் ஐவா ஹகாமடா (88). முன்னாள் குத்துச் சண்டை வீரரரான இவர், கடந்த 1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய ஜப்பானில் உள்ள ஹமாமத்சு பகுதியில் மிசோ பீன்ஸ் பேஸ்ட் நிறுவன ஊழியர் ஒருவரையும் அவரது குடும்பத்தினர் 3 பேரையும் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவல் துறையும் வழக்கறிஞர்களும் ஹகாமாடாவுக்கு எதிராக ஆதாரங்களை உருவாக்கினர். இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அவருக்கு 1968ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தொடர் மேல்முறையீடு மற்றும் மறுவிசாரணை கோரிக்கை காரணமாக அவர் தூக்கிலிடப்படவில்லை. பின்னர், அவருடைய, முதல் மேல்முறையீடு 27 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. அடுத்து, அவரது சகோதரியால் கடந்த 2008ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மேல்முறையீடு 2014இல் விசாரணைக்கு வந்தது. அப்போது, மரண தண்டனையை ரத்துசெய்த நீதிமன்றம், விசாரணையை நிலுவையில் வைத்திருந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மறுவிசாரணையின்போது அவர் நிரபராதி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இவர், உலகில் மரண தண்டனை கைதியாக நீண்டகாலம் சிறையில் இருந்தவராவார். இதைத் தொடர்ந்து, செய்யாத குற்றத்திற்காக ஹகாமடாவுக்கு தண்டனை வழங்கி சிறையில் அடைத்ததற்காக ஷிசுவோகா மாகாண காவல்துறைத் தலைவர் தகாயோஷி சுடா, நேரில் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியது. இந்த நிலையில், தற்போது ஹகாமடா முதுமையடைந்த தனது சகோதரியுடன் வாழ்ந்து வரும் நிலையில், அவர் மீது தவறுதலாகக் குற்றம் சுமத்தப்பட்டு தனது வாழ்நாளின் 58 ஆண்டுகளை சிறையிலேயே கழித்ததனால் ஷிஸோக்கோ நீதிமன்றம் கடந்த மார்ச் 24 அன்று அவருக்கு நிவாரணம் அறிவித்தது. அதன்படி, அவர் சிறையில் கழித்த ஒவ்வொரு நாளுக்கும் சுமார் 12,500 ஜப்பானிய யென் வீதம் மொத்தம் 21,73,62,500 யென் (1.4 மில்லியன் அமெரிக்க டாலர்) அளவிலான பணம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.11.9 கோடியாகும். ஆனால், இந்த பணமானது அவர் 58 ஆண்டுகளாக அனுபவித்த கொடுமைகளுக்கு இழப்பீடாகக் கருதப்படாது என்றும் அரசு செய்த தவறுகளை 200 மில்லியன் யென்கள் கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது என ஹக்காமட்டாவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/316583
  6. முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு சுமார் 30 ஐயாயிரம் ரூபா தண்டம் நீதிமன்றினால் இன்றையதினம் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் பழுதடைந்த அரிசியை கர்ப்பிணி தாய்மாருக்கு விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 22.03.2025 வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன், விசுவமடு பொது சுகாதார பரிசோதகர் சந்திரமோகன், உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் ஆகியோர் இணைந்து, புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலையங்களில் சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்காெண்டிருந்தனர். இதன்போது திகதி காலாவதியான 700kg அரிசி, பிஸ்கட் பைக்கற்றுகள் கைப்பற்றப்பட்டிருந்தது. காலாவதி பொருட்கள் கைப்பற்றப்பட்ட பிரபல விற்பனை நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக இன்று வெள்ளிகிழமை முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போது உரிமையாளர்களை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் 35,000 ரூபா தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டிருந்தது. https://thinakkural.lk/article/316625
  7. 29 MAR, 2025 | 02:33 PM இலங்கையின் பெண் பத்திரிகையாளர் நாமினி விஜயதாச புலனாய்வு இதழியலிற்கு ஆற்றிவரும் பெரும் பங்களிப்பையும் ஊழலை அம்பலப்படுத்துவதற்கான அவரது தளர்ச்சியற்ற அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையில் வெளிப்படைதன்மையை பரப்புரை செய்தல் என்பவற்றிற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளரின் சர்வதேச துணிச்சலான பெண் விருதை வழங்கி கௌரவித்துள்ளது. மூன்று தசாப்தங்களிற்கு மேலாக பத்திரிகையாளராக பணிபுரியும் நாமினி விஜயதாச தனது செய்தி அறிக்கையிடவில் துணிச்சலையும் நேர்மையையும் வெளிப்படுத்தி வந்துள்ளார். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் மனித பாதிப்புகளை பதிவு செய்வதன் மூலம் தனது பத்திரிகையாளர் பணியை ஆரம்பித்த அவர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான குரலாக விளங்கினார். அவரது புலனாய்வு பணி அரசாங்கத்தின் முறைகேடுகள் மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிச்சம் போட்டுக்காட்டியது, தனிப்பட்ட ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அவர் அந்த பணியை முன்னெடுத்தார். https://www.virakesari.lk/article/210534
  8. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜகத் ஜயசூரிய, வசந்த கரண்ணாகொட ஆகியோர் போர்க்களத்தின் முன்வரிசையில் நின்று போரிட்டவர்கள் அல்லர். பின்வரிசையில் நின்றவர்கள். போர்க்களத்தின் பின்வரிசையில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதனை விசாரிக்க வேண்டும். நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்திலேயே ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்தேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இவர்களில் இருவரைப் பற்றி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் விமர்சித்துள்ளேன். அதேபோன்றே போர்க்களத்தின் முன்னரங்கில் நின்று போரிட்ட சவேந்திர சில்வா எதுவித தவறும் செய்யவில்லை என்று உறுதிபட என்னால் கூறமுடியும் என தெரிவித்தார். https://thinakkural.lk/article/316628
  9. 29 MAR, 2025 | 12:45 PM நாட்டில் 1988, 1989 ஆம் ஆண்டு கலவர காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற நபர்களை காணமலாக்கிய பல்வேறு சம்பவங்களில், அப்போது இராணுவத்தின் மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என்று காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் ஒன்றியம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. கொழும்பில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப ஒன்றியத்தின் செயலாளர் மரீன் நிலாஷானி கருத்து தெரிவிக்கையில், 2012 ஆம் ஆண்டு மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் மனித புதைகுழியொன்று தோற்றம் பெற்றது. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வைத்திய பரிசோதனைகளில், 1986 – 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியேற்றப்பட்ட சடலங்கள் என்பது அதில் உறுதிபடுத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே இதுதொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதுதொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து இதனை மூடிமறைத்து விட்டார்கள். 1988, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக கோட்டாபய ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரராக இருந்தமையினாலேயே இந்த விடயம் மூடி மறைக்கப்பட்டது. கோட்டாபய ராஜபக்ஷ கடமையாற்றிய காலபகுதியில் மாத்திரம் மாத்தளை மாவட்டத்தில் 720 வரையிலானவர்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்திலிருந்த சகல பொலிஸ் நிலையங்களுக்கும், ஐந்து வருடங்களுக்கு மேல் பழைமையான சகலரது ஆவணங்களையும் நீக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பட்டலந்த வதைகூடத்தை ரணில் முன்னெடுத்துச் சென்ற காலத்தில், மாத்தளை முன்னெடுக்கப்பட்டு வந்த சகல வதைகூடங்களையும் செயற்படுத்தியது, வழிநடத்தியது கோட்டாபய ராஜபக்ஷ ஆவார் என்று சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/210512
  10. பட மூலாதாரம்,THIRUNALLARUTEMPLE.ORG கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என திருக்கணிதப் பஞ்சாங்கம் கூறும் நிலையில், அன்றைய தினம் சனிப்பெயர்ச்சி இல்லை என திருநள்ளாறு கோவில் அறிவித்திருக்கிறது. சனிப்பெயர்ச்சி எப்போது என்பதிலேயே முரண்பாடுகள் தோன்றுவது ஏன்? சனிப் பெயர்ச்சி தொடர்பான அறிவியல் உண்மை என்ன? சனிப் பெயர்ச்சி எப்போது? திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மார்ச் 29 அன்று சனிப் பெயர்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தை நம்புபவர்கள், இந்த சனிப் பெயர்ச்சிக்கான பரிகாரங்கள், பூஜைகளைச் செய்யலாம் என்ற விளம்பரங்களும் தென்படுகின்றன. ஊடகங்களில் ஜோதிடர்களும் இதற்கான பலன்களைச் சொல்லிவருகின்றனர். ஆனால், சனீஸ்வரனுக்கு மிக முக்கியமான கோவிலாகக் கருதப்படும் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவில் தேவஸ்தானம், மார்ச் 29ஆம் தேதி சனிப் பெயர்ச்சி இல்லை எனத் தெரிவித்துள்ளது. இது சனிப் பெயர்ச்சியை நம்பக்கூடிய பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வானியல் ரீதியாக சூரியக் குடும்பத்தில் ஆறாவதாக உள்ள கிரகம் சனி. இந்த கிரகம் சூரியனைச் சுற்றிவர 29.45 ஆண்டுகளாகின்றன. அதாவது சுமார் 30 ஆண்டுகள். ஜோதிடத்தை நம்புபவர்களைப் பொருத்தவரை, மொத்தம் 12 ராசிகள் உள்ளதாகவும் மனிதர்கள் ஒவ்வொருவரும் இந்த 12 ராசிகளில் ஏதாவது ஒன்றில் பிறந்ததாகவும் கருதப்படுகின்றனர். சிஎஸ்கே வரலாற்றுத் தோல்வி: சிக்ஸர்களை விளாசியும் தோனியை ரசிகர்கள் விமர்சிப்பது ஏன்?8 மணி நேரங்களுக்கு முன்னர் மியான்மரில் 7.7 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழப்பு11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சனிப் பெயர்ச்சி நிகழும் போது, எந்த ராசிக்குள் சனி நுழைகிறதோ அந்த ராசிகளைச் சேர்ந்தவர்கள் கவலையடைவதோடு, பரிகாரங்களையும் செய்ய ஆரம்பிப்பார்கள் ஏழரை சனி என்று ஜோதிடம் எதை கூறுகிறது? சூரியனைச் சுற்றிவர சனி எடுத்துக்கொள்ளும் இந்த 30 ஆண்டுகளில், ஒவ்வொரு ராசியிலும் 2.5 ஆண்டுகள் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த சனியின் நகர்வு, அவரவர் ராசியின் அடிப்படையில் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் நம்புகின்றனர். ஒருவருடைய ராசிக்குள் சனி இருப்பது, பெரும்பாலும் ஒரு சிக்கலான காலகட்டத்தை உருவாக்கும் என அவர்கள் நினைக்கின்றனர். ஒருவருடைய ராசி மட்டுமல்லாது, அதற்கு முந்தைய ராசியிலும், பிந்தைய ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலமும் அந்த ராசிக்காரர்களின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படும் என ஜோதிட நம்பிக்கையாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, ஒருவர் விருச்சிக ராசியைச் சேர்ந்தவராக இருந்தால், விருச்சிக ராசிக்குள் சனி இருக்கும் காலகட்டம் மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய ராசியான துலாம் ராசியில் சனி இருக்கும் இரண்டரை ஆண்டுகளும் விருச்சிக ராசிக்கு அடுத்த ராசியான தனுஷ ராசியில் சனி இருக்கும் காலகட்டமான இரண்டரை ஆண்டுகளும் சேர்த்து, மொத்தமாக ஏழரை ஆண்டுகள் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பது அவர்களது நம்பிக்கை. இந்த ஏழரை ஆண்டு காலமே, ஏழரை சனி எனக் குறிப்பிடப்படுகிறது. சனியைப் போலவே, குரு, ராகு - கேது ஆகிய கிரகங்கள் ஒருவரது ராசிக்கு வருவதும் விலகுவதும் வாழ்வின் நிகழ்வுகளை பாதிப்பதாக நம்பிக்கையாளர்கள் கருதுகின்றனர். இருந்த போதும், சனி கிரகத்தின் ஆதிக்கம் அதிகம் என நம்பிக்கையாளர்கள் கருதுவதால், ஒருவரது ராசிக்குள் சனி வருவதும், விலகுவதும் நம்பிக்கையாளர்களால் வெகுவாகக் கவனிக்கப்படுகிறது. மியான்மரை புரட்டுப்போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்- புகைப்படத்தொகுப்பு5 மணி நேரங்களுக்கு முன்னர் உருக்குலைந்த கட்டடங்கள்: மியான்மர், தாய்லாந்தை நடுங்க வைத்த நிலநடுக்கம் - அதிர்ச்சி வீடியோ28 மார்ச் 2025 பட மூலாதாரம்,THIRUNALLARUTEMPLE.ORG படக்குறிப்பு, மார்ச் 29ஆம் தேதி அன்று சனிப்பெயர்ச்சி இல்லை என்று திருநள்ளாறு கோவில் அறிவித்துள்ளது வாக்கியப் பஞ்சாங்கம் முறைப்படி சனிப்பெயர்ச்சி எப்போது? இப்படி கிரகங்கள் ஒருவரது ராசிக்குள் வருவதையும் விலகுவதையும் கணிக்க பஞ்சாங்கம் எனப்படும் வானியல் சார்ந்த கால அட்டவணைகள் (almanac) பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இந்தியாவில் இரு விதமான கணிப்புகளை அடிப்படையாக கொண்ட பஞ்சாங்கங்கள் நடைமுறையில் இருக்கின்றன. ஒன்று, வாக்கியப் பஞ்சாங்கம், மற்றொன்று திருக்கணிதப் பஞ்சாங்கம். இதில் வாக்கியப் பஞ்சாங்கம் பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தப் பஞ்சாங்கத்தில் வானியல் ரீதியாக உள்ள சில பிழைகளைத் திருத்தி, 19ஆம் நூற்றாண்டில் திருக்கணித பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. இப்போது தமிழ்நாட்டின் கோவில்களிலும் மடங்களிலும் வாக்கியப் பஞ்சாங்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவின் பிற பகுதிகளிலும் பெரும்பாலான ஜோதிடர்களும் திருக்கணித பஞ்சாங்கத்தையே பின்பற்றுகின்றனர். இந்தத் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி சனி, கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்கிறது. திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் அறிவிப்பு இந்த நிலையில்தான், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலின் (தர்பாரண்யேஸ்வரர் கோவில்) அதிகாரிகள் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், "பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனி பெயர்ச்சி (Saturn's Transit) தொடர்பாக பல்வேறு செய்திகள், கட்டுரைகள் வெளியாகிவருகின்றன. குறிப்பாக, 2025 மார்ச் 29ஆம் தேதி அன்று சனிப்பெயர்ச்சி நிகழும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளன. இது தொடர்பாக திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் - ஸ்ரீ சனீஸ்வர பகவான் புண்ணியத் திருத்தலம், வாக்கியப் பஞ்சாங்கம் முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம். இந்த பாரம்பரிய கணிப்பு முறையின்படி, 2026ஆம் ஆண்டிலேயே சனிப்பெயர்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கிறோம். ஆகையினால், 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும். திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனி பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு (Transit Rituals) நடைபெறும் சரியான தேதி மற்றும் நேரம் பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்" என இந்த அறிக்கை கூறியது. மார்ச் 24ஆம் தேதி வெளியான இந்த அறிக்கை, சனிப் பெயர்ச்சியை நம்பக் கூடிய பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. 'நெஞ்சை நோக்கி நேராக சுடுவது போல' பூமியை நோக்கி கதிர்களை வீசும் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு - முக்கியத்துவம் என்ன? வானில் தோன்றிய ஒளிரும் சுழல் - ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் காரணமா? சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்? சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் நொறுங்கி விழப் போவது ஏன்? எங்கு விழும்? ஜோதிடர்கள் கூறுவது என்ன? ஆனால், பிரபல ஜோதிடர்கள் மார்ச் 29ஆம் தேதிதான் சனிப்பெயர்ச்சி நிகழ்வதாகச் சொல்கின்றனர். "வாக்கியப் பஞ்சாங்கத்தில் உள்ள காலப் பிழைகளைத் திருத்தியதுதான் திருக்கணிதப் பஞ்சாங்கம். ஆனால் தமிழகப் பகுதிகளில் உள்ள கோவில்கள் மட்டும் இன்னமும் வாக்கியப் பஞ்சாங்கத்தைப் பின்பற்றுகின்றனர். திருப்பதி கோவிலிலேயே திருக்கணிதப் பஞ்சாங்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர். திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 29ஆம் தேதிதான் சனிப்பெயர்ச்சி நடக்கிறது. தற்போதைய சனிப்பெயர்ச்சியின்படி, உலகம் யுத்தத்தை நோக்கிச் செல்லும், பேரழிவுகள் நிகழும். அதற்கான எல்லா அறிகுறிகளும் தற்போது தெரிய ஆரம்பித்துவிட்டன. ஆகவே திருக்கணிதப் பஞ்சாங்கம் சொல்வதுதான் சரி" என்கிறார் பிரபல ஜோதிடரான ஷெல்வி. இதே கருத்தையே எதிரொலிக்கிறார் ஜோதிடத்திற்கான ஸ்டார் அகாதெமியின் நிறுவனர் எல்.ஆர். ஸ்ரீநிவாஸன். "நிழலைப் பார்த்து நேரத்தைச் சொல்வதற்கும் கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைச் சொல்வதற்கும் இடையில் உள்ள வித்தியாசம்தான் வாக்கியப் பஞ்சாங்கத்திற்கும் திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசம். தமிழ்நாடு, புதுச்சேரி, இலங்கையின் சில பகுதிகளில் உள்ள கோவில்களும் சிறு குழுக்களும்தான் இன்னும் வாக்கியப் பஞ்சாங்கத்தைப் பின்பற்றுகின்றனர். மற்ற எல்லா இடங்களிலும் திருக்கணித பஞ்சாங்கம்தான் பின்பற்றப்படுகிறது. இதனால், வாக்கியப் பஞ்சாங்கம் தவறு என்று சொல்லவரவில்லை. அந்தப் பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்து திருத்தப்பட்ட பஞ்சாங்கம்தான் திருக்கணித பஞ்சாங்கம். ஆகவே அதைப் பின்பற்றுவதே சரி," என்று கூறுகிறார் எல்.ஆர். ஸ்ரீநிவாஸன். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி அடுத்த ஆண்டு மார்ச் மாத முதல் வாரத்தில், அதாவது மார்ச் 6ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நடக்கவிருக்கிறது. 'த.வெ.க - தி.மு.க இடையில்தான் போட்டி' - பொதுக்குழுவில் விஜய் பேசியது என்ன?28 மார்ச் 2025 பாங்காக்: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்28 மார்ச் 2025 பட மூலாதாரம்,THIRUNALLARUTEMPLE.ORG படக்குறிப்பு, திருநள்ளாறு கோவிலில் வாக்கியப் பஞ்சாங்கம் பின்பற்றப்பட்டு வருகிறது வெவ்வேறு நாட்களில் சனிப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளதா? இந்த சனிப் பெயர்ச்சியில் வாக்கியப் பஞ்சாங்கத்திற்கும் திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கும் வித்தியாசம் வருகிறதென்றால், இதற்கு முந்தைய சனிப் பெயர்ச்சிக்கும் இதுபோல நடந்திருக்க வேண்டுமே? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஷெல்வி, பின்வருமாறு கூறினார்: "ஆம். இதற்கு முந்தைய சனிப்பெயர்ச்சியிலும் இதுபோல நடந்தது. ஆனால், அப்போது வித்தியாசம் சில நாட்கள்தான் என்பதால் பெரிதாக யாரும் கவனிக்கவில்லை. இந்த முறை வித்தியாசம் ஒரு ஆண்டு என்பதால் பெரிதாக பேசப்படுகிறது. அதைப்போலவே குருப் பெயர்ச்சி, ராகு - கேது பெயர்ச்சி ஆகியவற்றின்போது இரு பஞ்சாங்கங்களுக்கிடையிலும் வித்தியாசம் இருந்து வருகிறது. ஆனால், அவையெல்லாம் சில நாட்கள் வித்தியாசத்தில்தான் இருந்தன என்பதால் பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை." ஆனால், அறிவியலாளர்கள் இந்த இரு முறைகளிலுமே தவறு இருக்கிறது என்கிறார்கள். "ஆரம்பத்தில் கோள்களின் நகர்வைக் கணிக்க பரஹிதா என்ற முறையைப் பயன்படுத்தினார்கள். ஆனால், பதினைந்தாம் நூற்றாண்டுவாக்கில், தமிழ்நாட்டில் சுந்தரேஸ்வரா, கேரளாவில் நீலகண்ட சோமயாஜி, பரமேஸ்வரா போன்ற வானவியலாளர்கள் அந்த முறையில் கோள்கள் நகர்வதைக் கணிப்பதில் சில பிரச்சனை இருப்பதை உணர்ந்தார்கள். இதனால் சில தவறுகள் ஏற்படுவதையும் உணர்ந்தார்கள். பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு, பல பிழைகளை நீக்கி கோள்கள் நகர்வுக்கான ஒரு அட்டவணையை உருவாக்கினார்கள். இதுவே சுத்த வாக்கியப் பஞ்சாங்கம் எனக் குறிப்பிடப்பட்டது. ஆனால், இதிலும் சில பிழைகள் வரலாம், இந்தக் கணிப்பும் மாறலாம், அதற்கேற்றபடி அவ்வப்போது இதனைத் திருத்த வேண்டும் என்று சொல்லிவைத்தார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை. அதனைப் பயன்படுத்துபவர்கள் காலப்போக்கில் சுத்த வாக்கியப் பஞ்சாங்கத்தை கடவுளும் ரிஷிகளும் தந்தது எனச் சொல்ல ஆரம்பித்தார்கள்," என்று அவர்கள் கூறுகிறார்கள். வீர தீர சூரன் 2 படம் எப்படி உள்ளது? - வின்டேஜ் விக்ரமை திரையில் பார்க்கின்றனரா ரசிகர்கள்?28 மார்ச் 2025 வங்கதேசத்தில் ரோஹிஞ்சா அகதிகள் வாழும் உலகின் மிகப்பெரிய முகாம் மோசமான நிலையில் இருப்பது ஏன்?28 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சனிப் பெயர்ச்சி என எந்த நகர்வைச் சொல்கிறார்களோ, அந்த நகர்வு வானவியல்படி எப்போதோ நிகழ்ந்துவிட்டது திருக்கணித பஞ்சாங்கம் உருவானது எப்படி? இது குறித்து பிபிசியிடம் விரிவாகப் பேசிய மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர். த.வி.வெங்கடேஸ்வரன், "1868ல் ஒரு சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிந்தது. அப்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் மிகப் பெரிய தொலைநோக்கியை கொண்ட ஆய்வு நிலையம் இருந்தது. அங்கே ரகுநாதாச்சாரி என்ற வானவியலாளர் பணியாற்றிவந்தார். அவர் அந்த சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு முன்பே, அந்த கிரகணம் எப்போது ஏற்படும், எப்போது முடியும் என்றெல்லாம் கணக்கிட்டு ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதினார். பிறகு அதனை அப்போதிருந்த பஞ்சாங்கத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தார். அது முற்றிலும் வேறுபட்டிருந்தது. சூரிய கிரகணம் நிகழ்ந்த போது, பஞ்சாங்கத்தில் சொல்லியதுபோல நிகழவில்லை. வானவியல் அறிஞர்கள் கணித்தபடியே நிகழ்ந்தது. ஆகவே, வானியல் ஆய்வில் கிடைத்த முடிவுகளுக்கு ஏற்றபடி பஞ்சாங்கத்தைத் திருத்த நினைத்தார் ரகுநாதாச்சாரி. அதன்படி, பஞ்சாங்கத்தின் மீது ஆர்வம் கொண்ட சிலரோடு சேர்ந்து, வாக்கியப் பஞ்சாங்கத்தைத் திருத்தினார். இப்படி திருத்தப்பட்ட பஞ்சாங்கத்தை 'திருக்கணித பஞ்சாங்கம்' என்ற பெயரில் தமிழிலும் தெலுங்கிலும் பதிப்பிக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் இந்தப் பஞ்சாங்கத்திற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால், ரகுநாதாச்சாரியுடன் நிகழ்ந்த பல விவாதங்களுக்குப் பிறகு ஸ்ரீபெரும்புதூரில் இருந்த அகோபில மடம் அந்தப் பஞ்சாங்கத்தை ஏற்றுக்கொண்டது. இதற்குப் பிறகு கும்பகோணத்தில் இருந்த சங்கர மடமும் இதனை ஏற்றுக்கொண்டது. இதற்குப் பிறகு திருக்கணித பஞ்சாங்கம் பிரபலமாக ஆரம்பித்தது. ஆனால், அதிலும்கூட பிரச்னைகள் இருந்து வருகின்றன," என்கிறார். அறிவியல் உண்மை என்ன? திருக்கணிதப் பஞ்சாங்கம் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நடப்பதாகச் சொல்கிறது. வாக்கியப் பஞ்சாங்கம் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் சனிப் பெயர்ச்சி நடப்பதாகச் சொல்கிறது. "ஆனால் இவர்கள் சனிப் பெயர்ச்சி என எந்த நகர்வைச் சொல்கிறார்களோ, அந்த நகர்வு வானவியல்படி எப்போதோ நிகழ்ந்துவிட்டது" என்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன். நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை, சனிப் பெயர்ச்சி நிகழும் போது, எந்த ராசிக்குள் சனி நுழைகிறதோ அந்த ராசிகளைச் சேர்ந்தவர்கள் கவலையடைவதோடு, பரிகாரங்களையும் செய்ய ஆரம்பிப்பார்கள். சனி விலகும் ராசியைச் சேர்ந்தவர்கள், நிம்மதி உணர்வை அடைவார்கள். ஆனால், இந்த முறை வாக்கியப் பஞ்சாங்கத்திற்கும் திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கும் இடையில் உள்ள முரண்பாட்டால் இந்த இரு பிரிவினரும் ஒரு குழப்பமான உணர்வில் இருக்கிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq5z5yq50xpo
  11. மியான்மர் நிலநடுக்கத்தில் 1,002 பேர் பலி, 2,376 பேர் காயம் - ஆங் சாங் சூச்சி என்ன ஆனார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 28 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மார்ச் 28 அன்று மியான்மர் நாட்டின் மையப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 1002 பேர் உயிரிழந்ததாகவும், 2,376 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 30 பேரைக் காணவில்லை. மாண்டலே நகரில் மட்டும் 694 பேர் உயிரிழந்துவிட்டதாக மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் தடைபட்டதால் மியான்மரின் பெருநகரங்கள் பலவும் இருளில் மூழ்கின. மியான்மர் நாட்டின் ராணுவம் மற்றும் இதர துறைகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தாய்லாந்திலும் நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நிலடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளன. மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி மியான்மர் நகரான சர்காயிங்-ன் வடமேற்கில் 16 கிலோமீட்டரில், அமைந்திருந்தது. இந்த பகுதி தலைநகர் நேபிடோவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மியான்மரில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு 12 நிமிடங்களே ஆன நிலையில், மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏற்பட்ட நிலநடுக்கம் 6.4 ஆக பதிவானது. இதன் மையம், சர்காயிங்கிற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நேபிடோவில் சாலைகள் சிதைந்திருப்பதை படங்கள் காட்டுகின்றன. நாட்டின் ராணுவ அரசு 6 பகுதிகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,தாய்லாந்தில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது மியான்மருக்கு இந்தியா உதவி நிலநடுக்கம் மியான்மரை புரட்டிப் போட்டுள்ள நிலையில், அதன் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹிலெய்ங் உலக நாடுகளிடம் உதவி கேட்டுள்ளார். "எந்தவொரு நாடோ, அமைப்போ அல்லது தனி நபரோ மியான்மருக்கு வந்து உதவ விரும்பினால் வரவேற்கிறோம்." என்று அவர் தனது தொலைக்காட் உரையில் கூறியுள்ளார். அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏஷியான் ஆகியவை மியான்மருக்கு உதவ உறுதியளித்துள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு உதவுவதற்காக முதல் தொகுதி நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,INDIAN GOVERNMENT ஆங் சாங் சூச்சி என்ன ஆனார்? மியான்மரில் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூச்சி இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்படவில்லை என்று பிபிசியின் பர்மியன் சேவைக்கு சிறைத்துறை அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகரில் உள்ள சிறைச்சாலையில் சூச்சி பாதுகாப்பாக உள்ளார் என்று அந்த தகவல்கள் கூறுகின்றன. 2021-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட சூச்சி, அது முதல் அங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 2023-ம் ஆண்டு வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்ட அவர் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES தாய்லாந்தில் 6 பேர் பலி இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் சீனாவிலும் உணரப்பட்டது. தாய்லாந்தில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக தாய்லாந்தில் உள்ள தேசிய அவசர கால மருத்துவ சேவை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 43 பேரை காணவில்லை என தெரிவித்திருந்தது. கட்டடம் இடிந்து விழுந்தபோது சுமார் 320 தொழிலாளர்கள் அந்த இடத்தில் இருந்ததாகவும், மின் தூக்கியில் 20 பேர் சிக்கிக்கொண்டிருப்பதாகவும் முகநூல் பதிவொன்றில் தெரிவித்திருந்தது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து தெளிவில்லாத நிலையில், சம்பவ இடத்திலேயே ஒரு கள மருத்துவமனை அமைக்கப்பட்டு மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். Play video, "பாங்காக்: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்", கால அளவு 0,13 00:13 காணொளிக் குறிப்பு,பாங்காக்: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம் சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் பாங்காக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இரண்டாம் நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்ற சூழலில், தாய்லாந்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஒரு கட்டடத்தின் கூரை மீது இருந்த தண்ணீர் தெறித்து பல தளங்களை தாக்கி இறுதியாக கீழே தெருக்களில் ஊற்றியது. பிபிசி குழுவினர் பாங்காங்கில் கட்டடங்கள் அசைந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும், மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். நில அதிர்வு தலை சுற்றலை தருமளவு இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,மியான்மர் தலைநகரில் இடிந்து விழுந்த கட்டடம் 'நூற்றுக்கணக்கானவர்கள் இறந்திருக்கலாம்' மியான்மரின் மாண்டலேவில் இருக்கும் மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் சேதம் மிகப் பெரியது என பிபிசியிடம் தெரிவித்தார். ''உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகம். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதால் இப்போதைக்கு எங்களால் இவ்வளவுதான் சொல்லமுடியும்," என்று அவர்கள் கூறுகின்றனர். ''உயிரிழந்தவர்கள் எவ்வளவு பேர் என்பது சரியாக இன்னமும் தெரியவில்லை ,ஆனால் பல நூறு பேர் இறந்திருப்பார்கள்" என்று அவர்கள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES 'நிலநடுக்கத்தை நீண்ட நேரம் உணர்ந்தேன்' மியான்மரின் மிகப்பெரிய நகரான யாங்கானில் வசிக்கும் சோ லிவின் நிலநடுக்கத்தை நீண்ட நேரம் உணர்ந்ததாக தெரிவித்தார். நாட்டின் முன்னாள் தலைநகரான இந்த நகரில் பரவலாக சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை என அவர் தெரிவித்தார். எதிர்வரும் நாட்களில் இதைவிட பெரிய நிலநடுக்கம் ஏற்படுமோ என மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,மியான்மரில் சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்கள் விமான நிலையத்தில் பதற்றம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் மியான்மரின் மண்டலே விமானநிலையத்தில் எடுக்கப்பட்டதாக தோன்றும் உறுதிசெய்யப்படாத காணொளி வெளியாகியுள்ளது. அதில் மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு தார்சாலையில் அமர்ந்திருக்கின்றனர். பின்புலத்தில் ஜெட்விமானம் ஒன்று காணப்படுகிறது. ''அமருங்கள், ஓடாதீர்கள்'' என்ற குரல்கள் எழுவதை கேட்கமுடிகிறது. ஆன்லைனில் வெளியாகும் வீடியோக்களின் நம்பக்கத்தன்மையை உறுதி செய்ய பிபிசி முயற்சி செய்துகொண்டிருக்கிறது. பட மூலாதாரம்,MYANMAR'S MILITARY REGIME படக்குறிப்பு,மியான்மர் தலைநகர் நேபிடோவில் சாலைகள் சிதைந்துள்ளன மியான்மரிலிருந்து தகவல்களை பெறுவது ஏன் கடினம்? மியான்மரில் 2021ஆம் ஆண்டு முதலே ராணுவம் ஆட்சி செய்து வருவதால், தகவல் பெறுவது கடினமாக இருக்கிறது. உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி, அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகங்களை அரசு கட்டுப்படுத்துகிறது. இணைய சேவை பயன்பாடும் கட்டுபாட்டுக்கு உட்பட்டது. தொலைத்தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பிபிசியால் அடிமட்டத்தில் இயங்கும் உதவி முகமைகளை அணுகமுடியவில்லை. பட மூலாதாரம்,REUTERS தாய்லாந்து நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் இல்லை என்பதுடன் அங்கு அபூர்வமாக உணரப்படும் அனைத்து நிலநடுக்கங்களும் அண்டை நாடான மியன்மாரில் ஏற்படுகின்றன. பாங்காங்கில் உள்ள கட்டடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை தாங்ககூடியவகையில் வடிவமைக்கப்பட்டவை அல்ல என்பதால், கட்டமைப்புக்கு ஏற்படும் பாதிப்பு தீவிரமானதாக இருக்கலாம். நிலநடுக்கம் ஏற்பட்ட போதுதான் வீட்டில் சமைத்துக்கொண்டிந்ததாக பாங்காங்கில் வசிக்கும் பிபிசி செய்தியாளர் புய் து பிபிசி உலக சேவையின் நியூஸ்டே நிகழ்ச்சியில் தெரிவித்தார். "நான் மிகவும் பதற்றத்தில் இருந்தேன், நான் அச்சமடைந்திருந்தேன்," என்கிறார் அவர். "அது என்னவென்றே எனக்கு தெரியவில்லை, ஏனென்றால், பாங்காங்கில் இது போன்ற ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்." "எனது அபார்ட்மெண்டில் சுவர்களில் சில வெடிப்புகளை மட்டும் பார்த்தேன், நீச்சல் குளங்களிலிருந்து தண்ணீர் வெளியே தெளித்தது, மற்றும் மக்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். பின்னதிர்வு ஏற்பட்டவுடன் அவர் மேலும் பலருடன் சேர்ந்து தெருவுக்கு ஓடினர். "என்ன நடந்தது என புரிந்துகொள்ள நாங்கள் முயன்றுகொண்டிருந்தோம்," என்கிறார் அவர். "பாங்காங்கில் உள்ள கட்டடங்கள் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும்வகையில் கட்டமைக்கபடவில்லை, எனவே பெரிய அளவு சேதம் இருக்கப் போகிறது என நான் நினைக்கிறேன்," - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2kgk5nyv4eo
  12. கே-8 பயிற்சி விமான விபத்து; விசாரணைகளின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படுமா? 28 MAR, 2025 | 09:43 PM பயிற்சி நடவடிக்கையின் போது வாரியபொல பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கே-8 பயிற்சி விமானம் மார்ச் 21 ஆம் திகதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தின் போது பயிற்சி நடவடிக்கையில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியிருந்தனர். இவ்வாறானதொரு நிலையில் விமான விபத்திற்கான உண்மையான காரணிகளை கண்டறிவதற்காக விமானப்படை உத்தியோகப்பூர்வ விசாரணைகளை ஆரம்பித்தது. தனி குழு அமைத்து இந்த விசாரணைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்புகளிடமிருந்து தகவல்கள் பெற்றுக்கொண்டு வருவதாகவும் விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டார். இருப்பினும், விமானியின் தவறினாலேயே விமானம் விபத்துக்குள்ளானது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மார்ச் 23 ஆம் திகதி தெரிவித்தார். உத்தியோகப்பூர்வ விசாரணைகளை விமானப்படை ஆரம்பித்துள்ள நிலையில், அந்த விசாரணை முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தமை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதாவது விபத்திற்கான உண்மை காரணத்தை கண்டறிவதை திசைத்திருப்பும் வகையில் அமைச்சர் பிமல், அடிப்படையற்ற விதமாக விமானிகளை சாடியுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார். மேலும் துறைசார்ந்த அறிவின்றி விமானப்படையின் விசாரணை அறிக்கை வெளிவரும் முன்னர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க எவ்வாறு விமானிகள் மீது குற்றம் சுமத்த முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். அதேபோன்று அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தெளிவுப்படுத்தல் சந்தேகங்களுக்கும் வழிவகுத்துள்ளன. விபத்துக்குள்ளான கே-8 விமானத்தின் சீன உற்பத்தியாளர் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு சீன தரப்பை அவதானத்திற்கு உட்படுத்துவதை திசைதிருப்ப இத்தகைய கூற்றுக்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தாரா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றது. இத்தகைய செயற்பாடுகள் இலங்கை விமானப்படையின் தொழில்முறை மற்றும் வெளிப்படைத்தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறித்த கவலைகளை எழுப்புகிறது. ஏனெனில் விபத்து நடந்த தினத்தன்று இலங்கை-சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டிருந்தார். இராணுவ விமான விபத்து விசாரணைகளின் போது பொதுவாக இடிபாடுகள் ஆய்வு, விமானத் தரவு மதிப்பீடு மற்றும் விமானிகள் வாக்குமூலம் என்பவை ஊடாக விரிவான பகுப்பாய்வு செய்யப்படும். ஆனால் வாரியபொல பகுதியில் விபத்துக்குள்ளான கே-8 பயிற்சி விமான விபத்து குறித்து இவ்வாறானதொரு விரிவான விசாரணைக்கு முன்னர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமானிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளார். சீனாவின் ஹோங்டு விமானப் போக்குவரத்துத் தொழில் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கே-8 விமானங்கள், பாக்கிஸ்தான், சிம்பாப்வே மற்றும் சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொழில்நுட்பக் கோளாறுகளுடன் தொடர்புடைய விபத்துகளை எதிர்க்கொண்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையில் இலங்கையிலும் இடம்பெற்ற கே-8 விமானத்தின் விபத்து குறித்து முழுமையாக விசாரணை செய்யப்பட வேண்டும். ஏனெனில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பிற பயிற்சி விமானங்களுடன் இலங்கை விமானப்படையின் முந்தைய சிக்கல்கள் பல உள்ளன. இதேவேளை விமானப் பாதுகாப்பு கவலைகளுக்கு அப்பால், இவ்வாறான விபத்துக்கள் குறித்து அரசாங்க அதிகாரிகளின் முன்கூட்டிய அறிவிப்புகள் விசாரணைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகின்றன. எனவே விசாரணை குழுக்களுக்கு வெளிப்புற அழுத்தங்கள் இல்லாமல் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டியது அவசியமாகும். எவ்வாறாயினும் எந்தவொரு நாட்டையும் பொறுத்த வரை, தேசிய நலன் மற்றும் தேசிய பாதுகாப்பை விட வேறு எதுவும் இல்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும். https://www.virakesari.lk/article/210474
  13. 29 MAR, 2025 | 09:08 AM பொலிஸாரின் அடாவடித்தனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் ஒருவர் "அண்மைக் காலமாக பொலிஸாரின் அடாவடிகள் அதிகரித்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட பொலிஸார் நெல்லியடியில் ஒரு வீட்டுக்குள் சென்று அடாவடியில் ஈடுபடுகின்ற காணொளி வெளியாகி இருந்தது. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றீர்கள்" என கேள்வி எழுப்பியவேளை அவர் இவ்வாறு பதிலளித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா மேலும் தெரிவிக்கையில், பொலிஸாருக்கு போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் பொலிஸார் சில இடங்களில் தாங்கள் நினைத்தபடிதான் நடக்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் பிழையாக இருந்தால் அந்த பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/210500
  14. Published By: DIGITAL DESK 3 28 MAR, 2025 | 03:27 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இணக்கப்பாடு எட்டப்பட்ட ஒத்துழைப்பு மேம்பாட்டு திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்யவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பை ஏற்று ஏப்ரல் 4 - 6 வரை பிரதமர் மோடி இலங்கை வரவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்திற்குச் சென்று புனித ஸ்ரீமகா போதியில் மத வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். அதேவேளை இந்திய அரசின் நிதி உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்படவுள்ள பல திட்டங்களையும் பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார். குறிப்பாக இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மாத்திரமின்றி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட 'பகிரப்பட்ட எதிர்காலத்துக்கான கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கான' கூட்டுத் தொலைநோக்குப் பார்வையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒத்துழைப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பிரதமர் மோடி ஆய்வு செய்யவுள்ளமை விசேட அம்சமாகும். பிரதமர் நரேந்திர மோடி இறுதியாக 2019ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இந்தியாவும் இலங்கையும் வலுவான கலாச்சார மற்றும் வரலாற்று இணைப்புகளுடன் நாகரிக பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அந்த வகையில் இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வழக்கமான உயர் மட்ட ஈடுபாடுகளின் ஒரு பகுதியாகவும், மேலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பன்முக கூட்டாண்மையை ஆழப்படுத்துவதில் மேலும் உத்வேகத்தை அளிக்கும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் தாய்லாந்து மற்றும் இலங்கை பயணம் மற்றும் 6ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்பது, 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கை, 'கிழக்கு நோக்கி செயல்படுங்கள்' கொள்கை, 'மகாசாகர்' (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) தொலைநோக்குப் பார்வை மற்றும் இந்தோ-பசுபிக் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/210434
  15. சிஎஸ்கே வரலாற்றுத் தோல்வி: சிக்ஸர்களை விளாசியும் தோனியை ரசிகர்கள் விமர்சிப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் 17 ஆண்டுகளுக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன் மட்டுமே எடுத்து 50 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை அணியின் இந்த வரலாற்றுத் தோல்விக்கு காரணம் என்ன? நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி சிக்ஸர், பவுண்டரிகளை விளாசியும் கூட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை விமர்சிப்பது ஏன்? சால்ட், படிக்கலின் அதிரடி சிஎஸ்கே அணி கலீல் அகமதுவை வைத்து ஆட்டத்தை தொடங்கிய நிலையில் மற்றொருபுறம் அஸ்வினை பந்துவீசச் செய்தது. அவரின் முதல் ஓவரிலேயே பில் சால்ட் சிக்ஸர், பவுண்டரி என 16 ரன்களை விளாசினார். இதனால் வேறு வழியின்றி நூர் முகமதுவை பந்துவீச அழைத்தனர். சால்ட் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நூர் முகமது பந்துவீச்சில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் சிறிய கேமியோ ஆடிக்கொடுத்தார். பவர்ப்ளேயில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் சேர்த்தது. 10.3 ஓவர்களில் ஆர்சிபி அணி 100 ரன்களை எட்டியது. ஜடேஜாவின் முதல் ஓவரை கட்டம் கட்டிய படிக்கல் சிக்ஸர், பவுண்டரி என 15 ரன்களை விளாசினார். படிக்கல் 27 ரன்கள் சேர்த்தபோது, அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆர்சிபி அணி 2 விக்கெட்டுகளை இழந்த போதும் விராட் கோலி நிதானமாக பேட் செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கோலி பேட்டிங்கில் தடுமாற்றம் சிஎஸ்கே அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் கோலி அவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பேட் செய்ய முடியவில்லை. நினைத்த ஷாட்களை அடிக்க முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரராக வந்துள்ளதால் சிக்ஸர், பவுண்டரிக்கு பலமுறை கோலி முயற்சித்தார். பெரிதாக ஷாட்கள் அமையவில்லை. இதனால் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து விளையாடினார். பதிராணா வீசிய ஓவரில் கோலியின் ஹெல்மெட்டில் பந்துதாக்கியது. முதலுதவிக்குப்பின், ஒரு சிக்ஸர், பவுண்டரியை கோலி அடித்தார். இருப்பினும் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் கோலியின் (31) பேட்டிங் எதிர்பார்ப்புக்குரிய வகையில் இல்லை. முதல் ஆட்டத்தில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்த கோலி நேற்று 100 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஒரு சிஸ்கர், 2 பவுண்டரி மட்டுமே அடித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் களத்துக்கு வந்த பின் அவ்வப்போது பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன. பட்டிதாருக்கு மட்டும் நேற்று 3 கேட்சுகளை சிஎஸ்கே வீரர்கள் கோட்டை விட்டனர். கை மேல் கிடைத்த கேட்சை தீபக் ஹூடாவும், கலீல் அகமதுவும், ராகுல் திரிபாதியும் கோட்டைவிட்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திய பட்டிதார், சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் துவம்சம் செய்தார். விராட் கோலி ஆட்டமிழந்தபின் பட்டிதாருக்கு, சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. லிவிங்ஸ்டோன் (10), ஜிதேஷ் ஷர்மா(12) என நூர் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். ஆனால் மனம் தளராமல் ஆடிய பட்டிதார் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். 15.6 ஓவர்களில் ஆர்சிபி 150 ரன்களை எட்டியது. டெத் ஓவர்களில் ஆர்சிபி அணி சற்று தடுமாறியது. பதிராணா ஓவரை சமாளிக்க முடியாமல் பட்டிதார் விக்கெட்டையும், குர்னல் பாண்டியா விக்கெட்டையும் இழந்தது. ஆனால் சாம் கரன் வீசிய கடைசி ஓவரில் டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றார். மியான்மரில் 7.7 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழப்பு50 நிமிடங்களுக்கு முன்னர் மியான்மரை புரட்டுப்போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்- புகைப்படத்தொகுப்பு40 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஹேசல்வுட், புவனேஷ் மிரட்டல் ஆடுகளத்தில் சிறிய அளவு ஒத்துழைப்பு கிடைத்தாலும் பந்துவீச்சை எவ்வாறு மாற்ற முடியும் என்பதை புவனேஷ்வர் குமாரும், ஹேசல்வுட்டும் நேற்று செய்து காண்பித்தனர். புவனேஷ் 6-8 மீட்டர் லென்த்தில் பந்துவீசி சிஎஸ்கே பேட்டர்களை ஒருபுறம் திணறடிக்க, ஹேசல்வுட் 8-10 மீட்டர் லென்த்தில் பவுன்ஸரையும், சீமிங்கையும் அளித்து திக்குமுக்காடச் செய்தனர். தரமான வேகப்பந்துவீச்சுக்கு முன் சிஎஸ்கே பேட்டர்களின் திறமை என்ன என்பது நேற்று வெளிப்பட்டுவிட்டது. காயத்திலிருந்து மீண்டு வந்திருந்த புவனேஷ்வரின் அவுட்ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சிஎஸ்கே பேட்டர்கள் திணறினர். அதிலும் டெஸ்ட் பந்துவீச்சு போன்று ஹேசல்வுட் வீசியதை சிஎஸ்கே பேட்டர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை தொடக்கத்திலேயே ஹேசல்வுட் எடுத்து அதிர்ச்சியளித்தார். புவனேஷ்வர் தனது பவர்ப்ளே ஓவரில் 73-வது விக்கெட்டாக தீபக் ஹீடாவின் விக்கெட்டை வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES பவர்ப்ளே முடிவதற்குள் சிஎஸ்கே அணி 3 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சாம்கரனும் பெரிதாக ஸ்கோர் செய்யாமல் 8 ரன்னில் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே ஓரளவு பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் யாஷ் தயால் பந்துவீச்சில் இருவரின் விக்கெட்டும் வீழ்ந்தது. யாஷ் தயால் வீசிய 13-வது ஓவரில் ரவீந்திரா 41 ரன்னில் இன்சைட் எட்ஜில் போல்டாகினார். அதே ஓவரில் ஷிவம் துபேயும் 19 ரன்னில் இன்சைட் எட்ஜ் எடுத்து போல்டாகினார். இருவரும் ஆட்டமிழந்தபோதே சிஎஸ்கே அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது. வெற்றிக்கு தேவைப்படும் ரன்கள் அதிகம் இருந்தது. விக்கெட்டுகள் கைவசம் இல்லை. ஆடுகளம் ஆர்சிபி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகி இருக்கிறது. ஸ்கோர் செய்வதும் கடினமாக இருக்கிறது என்பதை சிஎஸ்கே பேட்டர்கள் உணர்ந்தனர். அஸ்வின் 11 ரன்களில் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சிலும் , ஜடேஜா 25 ரன்களில் ஹேசல்வுட் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்க 9-வது இடத்தில் களமிறங்கிய தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 30 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கேயின் தோல்வியை விரும்பாத ரசிகர்களுக்கு, தோனியின் பேட்டிங் ஆறுதலாக அமைந்தது. சொந்தமண்ணில் மோசமான தோல்வியை தவிர்க்கும் வகையில் தோனியும் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார். 'நெஞ்சை நோக்கி நேராக சுடுவது போல' பூமியை நோக்கி கதிர்களை வீசும் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு - முக்கியத்துவம் என்ன?28 மார்ச் 2025 பாங்காக்: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்28 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES கோலி கொண்டாட்டம் ஆர்சிபி அணி தொடக்கத்திலிருந்து எடுத்த ஒவ்வொரு விக்கெட்டையும் கோலி ரசித்து கொண்டாடினார். தீபக் ஹூடா பேட்டில் பந்து உரசிச் சென்றது பந்துவீச்சாளர் புவனேஷுக்கு கூட தெரியவில்லை. ஆனால், கோலி விரலை உயர்த்திக்கொண்டே அவுட் என குரலை உயர்த்தி ஓடிவந்தார். அது மட்டுமல்லாமல் டிஆர்எஸ் எடுங்கள் என்று சைகையால், பட்டிதாரையும் வலியுறுத்தினார். மூன்றாவது நடுவர் கணிப்பில் பேட்டில் பந்து உரசியது தெரிந்தது. ஹூடா விக்கெட்டை வீழ்த்தியதில் பெரும்பங்கு கோலிக்கு உரியது. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமே மோசமான பீல்டிங்கும், இன்னும் வயதான வீரர்களை நம்பி இருப்பதும்தான். குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் மட்டும் பட்டிதாருக்கு 3 கேட்சுகளை தீபக் ஹூடா,கலீல் அகமது, திரிபாதி ஆகியோர் கோட்டைவிட்டனர். தோனி ஒரு விக்கெட் கீப்பிங் கேட்சை கோட்டைவிட்டார். அடுத்தார்போல் ஜடேஜா, அஸ்வின், தோனி, சாம் கரன், ஷிவம் துபே என கடந்த பல சீசன்களாக ஆடிய வீரர்களை இன்னும் பயன்படுத்தும்போது, அவர்களுக்கு எவ்வாறு பந்துவீசுவது என எதிரணி எளிதாக ஹோம்ஓர்க் செய்துவரும். சிஎஸ்கே அணியில் இளம் வீரர்கள் பலர் இருந்தும் ஒருவருக்கு கூட பரிசோதனை அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மற்ற அணிகளில் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதேனும் புதிய வீரரை களமிறக்கி பரிசோதிக்கிறார்கள். சிலநேரம் அது வெற்றிக்கான வாய்ப்பாக மாறிவிடுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே பந்துவீச்சு நேற்று படுமோசமாக இருந்தது. குறிப்பாக அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு சராசரிக்கும் குறைவாக இருந்தது. நூர் அகமது மட்டும் தப்பினார். வேகப் பந்துவீச்சில் பதிராணா, கலீல் அகமது பந்துவீச்சில் வேகம் இருக்கிறதே தவிர துல்லியமான லென்த், பவுன்ஸ், ஸ்விங் இல்லை. ஹேசல்வுட், புவனேஷ்வர் பந்துவீச்சில் ஈட்டிபோல் இறங்கிய துல்லியம், லென்த் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களிடம் இல்லை. அடுத்ததாக 196 ரன்கள் எனும் பெரிய ஸ்கோர் மனரீதியாகவே வீரர்களுக்கு பதற்றத்தையும், ரன் சேர்க்கவேண்டி நெருக்கடியையும் ஏற்படுத்திவிட்டது. இதனால் விக்கெட் வீழ்ந்தவுடன் அழுத்தம் காரணமாக பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை இழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES தோனியை ரசிகர்கள் விமர்சிப்பது ஏன்? தோனி 16 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 30 ரன் சேர்த்தாலும் கூட, பேட்டிங் வரிசையில் 9-வதாக அவர் களம் இறங்கியது விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. 13 வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே ஆகிய இருவரின் விக்கெட்டையும் யாஷ் தயால் வீழ்த்தினார். சிஎஸ்கே வெற்றி பெற ஓவருக்கு 16 ரன்கள் சராசரியாக தேவைப்பட்ட அந்த நேரத்தில் தோனி களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக சிஎஸ்கே அணி ரவிச்சந்திரன் அஸ்வினை களமிறக்கியது. ஆட்டத்தின் 16-வது ஓவரில்தான் தோனி களமிறங்கினார். அந்த நேரத்தில், ஆட்டம் கிட்டத்தட்ட சிஎஸ்கே கையைவிட்டு போய்விட்டிருந்தது. இனி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்கிற கட்டத்தில், ஆட்டத்தின் கடைசி ஓவரில் 2 சிக்சர்களை விளாசி தனது ரசிகர்களை தோனி பரவசப்படுத்தினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் சிஎஸ்கே அணி தோல்வியடைந்துள்ளது. ரசிகர்கள் பலரும், சேஸிங்கில் தோனி மிகவும் பின்வரிசையில் இறங்கியதை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பட மூலாதாரம்,X சேஸிங்கில் அனுபவம் கொண்ட, பதற்றம் கொள்ளாமல் ரன் ரேட்டை பராமரிக்கும் திறன் கொண்ட தோனி அணிக்குத் தேவையான, இக்கட்டான நேரத்தில் களமிறங்காதது ஏன்? என்பது அவர்களின் கேள்வி. சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர், 5 கோப்பைகளை பெற்றுக் கொடுத்த அனுபவமான வீரர், இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் தாமாக முன்னெடுத்து நடுவரிசையில் களமிறங்கி ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுத்து வந்திருக்க வேண்டும். ஆனால், டெய்லெண்டர்கள் போல் கடைசியில் 9-வது இடத்தில் களமிறங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர். தோனியின் சிக்சர்களாலும் தடுக்க முடியாத சிஎஸ்கேயின் வரலாற்றுத் தோல்வி SRH-ஐ சிதைத்த ஷர்துலின் விஸ்வரூபம் - லக்னௌவின் ஆணிவேராக அமைந்த பூரன், மார்ஷ் ஜோடி 'என் மகனிடம் தோனி சொன்னது இதுதான்' - சிஎஸ்கே அணியை மிரட்டிய விக்னேஷ் புத்தூரின் தந்தை நெகிழ்ச்சி ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன? ஆட்ட நாயகன் பட்டிதார் ஆர்சிபி அணி வெற்றியுடன் ஐபிஎல் தொடரை 3-வது முறையாகத் தொடங்கியுள்ளது. 2014-வது சீசனில் அடுத்தடுத்து வெற்றிகளுடனும், 2021 ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 4 வெற்றிகளுடனும் ஐபிஎல் சீசனை ஆர்சிபி தொடங்கியது. ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் வேகப் பந்துவீச்சாளர்களும், கேப்டன் பட்டிதார், சக வீரர்களான பில்சால்ட், கோலி, படிக்கல், டிம்டேவிட் ஆகியோரின் கூட்டு உழைப்புதான். 32 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து நடுப்பகுதியில் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்த கேப்டன் ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆர்சிபி எப்படி சிஎஸ்கே அணியின் 12 ஓவர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளப்போகிறது என்று எதிர்பார்ப்பே ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் ஆர்சிபியின் ஹேசல்வுட், புவனேஷ்வரின் தரமான ஸ்விங், ஸீமிங்,எஸ்ட்ரா பவுன்ஸ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தோற்றது சிஎஸ்கே. புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட் இருவரும் 7 ஓவர்கள் வீசி 41 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். சிஎஸ்கே அணியின் வலிமையே சுழற்பந்துவீச்சுதான் என்று கூறப்பட்டது. ஆனால், நேற்று அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சை பில்சால்ட், படிக்கல், கோலி வெளுத்து வாங்கினர். இதனால் அஸ்வினுக்கும், ஜடேஜாவுக்கும் 5 ஓவர்களே வழங்கப்பட்டது. இருவரும் 5 ஓவர்கள் வீசி 59 ரன்களை வாரி வழங்கினர். சுழற்பந்து வீச்சாளர்கள் 9 ஓவர்கள் வீசிய நிலையில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 95 ரன்களை வாரி வழங்கினர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டத்தை மாற்றிய 6 ஓவர்கள் மாபெரும் வெற்றிக்குப் பின் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பேசுகையில் " இந்த ஆடுகளத்தில் இது நல்ல ஸ்கோர். பந்து சிலநேரம் நின்று வந்தது, பேட்டிங் செய்வது எளிதாக இல்லை. பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதும் கடினமாக இருந்தது. சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்துவது சிறப்பானது. ரசிகர்கள் சிஎஸ்கேவுக்கு ஆதரவாக இருக்கும்போது அதை மீறி சிஎஸ்கே அணியை வென்றோம். என்னுடைய பேட்டிங் முக்கியமானது. 200 ரன்கள் வரை எதிர்பார்த்தோம். களத்தில் நிலைத்து நின்றுவிட்டால் பெரிய ஸ்கோருக்கு இட்டுச் செல்ல திட்டமிட்டேன். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சற்று ஒத்துழைத்ததால் எங்களின் பந்துவீச்சாளர்களும் நன்கு பந்துவீசினர். குறிப்பாக லிவிங்ஸ்டோன் சிறப்பாகப் பந்துவீசினார். ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் இருவரும் சேர்ந்து முதல் 6 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட்டனர். கடினமான லென்த்தில் பந்துவீசி, பேட்டர்களை திணறவிட்டனர்" எனத் தெரிவித்தார். வங்கதேசத்தில் ரோஹிஞ்சா அகதிகள் வாழும் உலகின் மிகப்பெரிய முகாம் மோசமான நிலையில் இருப்பது ஏன்?28 மார்ச் 2025 படலந்த சித்ரவதை முகாமுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கூறும் தகவல்கள்25 மார்ச் 2025 3-வது முறை தோல்வி 50 ரன்களில் தோற்றது என்பது சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த தோல்வியாகும். இதற்கு முன் 50 ரன்கள் வித்தியாசத்துக்கு மேல் 2 முறை மட்டுமே சிஎஸ்கே தோற்றுள்ளது. மும்பைக்கு எதிராக 2013ல் 60 ரன்கள் வித்தியாசத்திலும், 2022ல் பஞ்சாப் அணிக்கு எதிராக 54 ரன்கள் வித்தியாசத்திலும் சிஎஸ்கே தோற்றது. அதன்பின் இப்போது 50 ரன்களில் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1mnm72eg17o
  16. தேசபந்து தென்னக்கோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது 29 MAR, 2025 | 10:20 AM பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பொலிஸாரிடமிருந்து தலைமறைவாக இருப்பதற்கு உதவி செய்ததாக கூறப்படும் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் என்பதுடன் மற்றையவர் தலவத்துகொட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆவார். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேசபந்து தென்னக்கோன் நீதிமன்ற உத்திரவை அவமதித்து சுமார் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த புதன்கிழமை (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தேசபந்து தென்னக்கோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/210505
  17. Published By: DIGITAL DESK 3 28 MAR, 2025 | 12:00 PM அவுஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெள்ளிக்கிழமை (28) அறிவித்துள்ளார். ஐந்து வாரங்கள் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. தொழிற் கட்சி சார்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் லிபரல் கட்சி சார்பாக பீட்டர் டட்டனும் போட்டியிடுகிறார்கள். இந்த இரு பிரதான கட்சிகளுக்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசம் இருக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வெற்றி பெறும் கட்சி கடந்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சிறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும். வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைகள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பிரதமர் அல்பனிஸ், “எங்கள் அரசாங்கம் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது. வாழ்க்கைச் செலவினப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதோடு எதிர்காலத்தைச் சிறப்பானதாக மாற்றி அமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும்,” எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210424
  18. 28 MAR, 2025 | 11:20 AM அமெரிக்காவுடனான ஆழமான உறவுகளின் யுகம்முடிவிற்கு வந்துவிட்டது என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடாவுடனான உறவுகளை டிரம்ப் முழுமையாக மாற்றிவிட்டார் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் எதிர்காலத்தில் எவ்வாறான வர்த்தக உடன்பாடுகள் ஏற்பட்டாலும் இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் மாற்றம் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார். நமது பொருளாதாரங்களின் ஆழமான ஓருங்கிணைப்பு, இறுக்கமான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை அடிப்படையாகொண்ட இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு பழைய உறவு முடிந்துவிட்டது என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். டிரம்பின் கார் வரிகள் நியாயப்படுத்த முடியாதவை என தெரிவித்துள்ள அவர் அவை இரண்டு நாடுகளிற்கும் இடையில் ஏற்கனவே உள்ள உறவுகளை மீறும் செயல் என குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் புதிய வரிகளிற்கு எதிரான பதில் நடவடிக்கையை அடுத்தவாரம் அறிவிப்போம், வரிகளிற்கு எதிராக போராடுவது, பாதுகாப்பது கட்டியெழுப்புவதே எங்கள் வழிமுறை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210421
  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் பதவி, பேராசிரியர், இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், மொஹாலி 3 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 12.9 நூறு கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கேலக்ஸி ஒன்றின் மையத்தில் 700 பத்து லட்சம் சூரியன் நிறையைக் கொண்ட ஒரு ராட்சத கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 'பிளேசர்' வகை ராட்சத கருந்துளை நெஞ்சை நோக்கி நேராகச் சுடுவது போலப் பூமியை நோக்கி ஆற்றல் வாய்ந்த கதிர்களை வீசுகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் தொடர்ச்சியாக வானியலாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். பிக் பாங் எனும் பிரபஞ்சம் தோன்றிய பின்னர் வெறும் 800 பத்து லட்சம் ஆண்டு இளம் வயதாக இருந்தபோதே VLASS J041009.05-013919.88 என்கிற (சுருக்கமாக J0410-0139 ) இந்த வினோதப் பெயர் கொண்ட கருந்துளை உருவாகியுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 'பிளேசர்' வகை ராட்சத கருந்துளைகளில் இதுதான் ஆகத் தொன்மை வாய்ந்தது, ஆகத்தொலைவில் உள்ளதும் கூட. மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் அஸ்ட்ரோனமியின் குழுத் தலைவரான எடுவார்டோ பனாடோஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, டிசம்பர் 2024இல் 'தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ் அண்ட நேசர் அஸ்ட்ரோனமியில்' தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளனர். அட்டகாமா லார்ச் மில்லிமீட்டர் அர்ரே, மாமல்லன் தொலைநோக்கிகள் மற்றும் சிலியில் அமைந்துள்ள ஐரோப்பியத் தெற்கு ஆய்வகத்தின் மிகப் பெரிய தொலைநோக்கி மற்றும் பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள நாசாவின் சந்திரா விண்வெளி தொலைநோக்கி உள்ளிட்ட பல தொலைநோக்கிகளின் தரவுகளை ஆராய்ச்சிக் குழு பயன்படுத்தியது. இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த வான் பொருளின் தொலைவு உட்படப் பல்வேறு தரவுகளை இனம் கண்டனர். கடந்த காலம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் ஆகப் பெரிய தொலைநோக்கிகள் உள்ளபடியே கடந்தகாலத்தைக் காட்டும் மாயக்கண்ணாடி போலத்தான். நொடிக்குச் சுமார் மூன்று லட்சம் மீட்டர் என ஒளி பயணம் செய்கிறது. எனவே ஒரு பொருளிலிருந்து நம் கண்களுக்கு ஒளி வந்து சேர குறிப்பிட்ட கால இடைவெளி ஏற்படும். எடுத்துக்காட்டாக இப்போது சூரியனைப் பார்த்தல் அது எட்டு நிமிடம் முன்பு இருந்த சூரியன். இப்போது காட்சி தரும் நிலவு 1.3 நொடிக்கு முன்பு இருந்த நிலவு. இரவு வானில் மிகப் பிரகாசமான விண்மீன் சிரியஸ் சுமார் 8.6 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில்தான் காட்சி தரும். அதாவது தொலைவில் உள்ள பொருளைக் காணும்போது கடந்த காலத்தைக் காண்கிறோம். ஐம்பது அறுபது வயதில் தலைமுடி நரைப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் பிறந்த கைக்குழந்தையின் தலைமுடி நரைக்கிறது என்றால் நாம் அதிர்ச்சி அடைவோம் அல்லவா? அதுபோலத் தான் இந்தக் கண்டுபிடிப்பு என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை பிக் பாங் நிகழ்வுக்குப் பிறகு 800 பத்து லட்சம் ஆண்டுகள் என்பது சிறு கைக்குழந்தை நிலை. பிரபஞ்சத்தின் இளம் வயதிலேயே இவ்வளவு நிறை கொண்ட குண்டு ராட்சத கருந்துளை எப்படி ஏற்பட்டு இருக்க முடியும் என விஞ்ஞானிகள் மலைத்து நிற்கின்றனர். கோவிட் பேரிடரின் சோதனைக் காலம் மக்கள் வாழ்வை 5 ஆண்டுகளில் எப்படி மாற்றியுள்ளது?26 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 'பிளேசர்' வகை ராட்சத கருந்துளை கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் சிலர் யானையின் வாலை தடவி கயிறு என்றும், காலை பிடித்துப் பார்த்து தூண் போல என்றும், காதை தடவிப் பார்த்து முறம் போல என்றும் தந்ததைப் பிடித்துப் பார்த்து ஈட்டி போல என்றும் தவறாகக் கருதுவது போல இதுகாறும் பிளேசர் குவாசர் மற்றும் துடிக்கும் ரேடியோ கேலக்ஸி முதலியவற்றைத் தனித்தனியான மூன்று வகை வான் பொருள்கள் எனத் தவறாகக் கருதி இருந்தனர். இவை மூன்றும் சூரிய நிறைபோல பத்து லட்சம் நூறு கோடிக் கணக்கில் நிறை கொண்ட குண்டு ராட்சச கருந்துளை கொண்ட உயிர்ப்புள்ள கோலடி கருக்கள் தாம். பெரும் அளவு நிறை அடர்த்தியாகச் சிறு வெளியில் சுருங்கும்போது கருந்துளை உருவாகிறது. கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் மிக வலுவானது. ஒளி கூட கருந்துளையிலிருந்து வெளியே வரமுடியாது. சூரியனைப் போலப் பத்து இருபது மடங்கு நிறைகொண்ட குட்டி கருந்துளை முதல் சூரியனைப் போல பத்து லட்சம்- நூறு கோடி நிறை கொண்ட ராட்சத கருந்துளைகள் வரை இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன. சூரியனைப் போலப் பல பத்து லட்சம் நிறை கொண்ட குண்டு ராட்சத கருந்துளைகள் அவற்றின் மீ நிறையின் காரணமாக ஈர்ப்பு புலம் வலுப் பெற்று அருகில் உள்ள பொருள்களைக் கவர்ந்து இழுக்கும். வாயு தூசு நிரம்பிய இந்தப் பொருள்கள் கருந்துளையை மிக வேகமாகச் சுற்றிச் சுழலும். தலைச்சுற்றும் வேகத்தில் இவை சுழலுவதால் ரேடியோ அலைகள், காமா கதிர்கள், எசஸ் கதிர்கள் எனப் பல்வேறு வகை மின்காந்த அலைகளை உமிழும். சுழலும் இந்தக் கருந்துளையைச் சுற்றி உருவெடுக்கும் காந்தப் புலத்தின் காரணமாகக் கருந்துளையின் இரண்டு துருவங்கள் அருகே ஜெட் போல மீ ஆற்றல் வாய்ந்த கதிர்கள் வெளிப்படும். கருந்துளை சுழல்வதால், கலங்கரை விளக்கு சுழல்வது போல் இந்த ஜெட் கதிர் சுழலும். சுழலும் இந்தச் சமதளத்தில் தற்செயலாகப் பூமி அமைந்தால் சுழலும் ஜெட் கதிர் பல்ஸ் துடிப்பு போலப் பூமியில் படும். இதுவே 'பிளேசர்' வகை ராட்சச கருந்துளை. இதே கருந்துளையின் ஜெட் பூமி நோக்கி இல்லை என்றால் அதை குவாசர் என்றும் மைய கருந்துளை தூசியினால் மறைக்கப்பட்டால் ரேடியோ கேலக்ஸி என்றும் மயங்கிவிடுகிறோம் எனச் சமீபத்தில் விஞ்ஞானிகள் புரிந்து தெளிந்துள்ளனர். ஔரங்கசீப்புக்கு பதிலாக அவரது சகோதரரை முன்னிலைப்படுத்த ஆர்எஸ்எஸ் விரும்புவது ஏன்?25 மார்ச் 2025 இந்திரா - முஜிபுர் உடன்பாட்டை 'அடிமை ஒப்பந்தம்' என்று வங்கதேச எதிர்க்கட்சிகள் அழைத்தது ஏன்?25 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் என்ன பெயர் வைக்கலாம்? இந்தக் கருந்துளையின் பெயரில் உள்ள VLASS என்பது "வெரி லார்ச் அர்ரே ஸ்கை சர்வே" (The Very Large Array Sky Survey) என்பதன் சுருக்கம் ஆகும். செப்டம்பர் 2017 முதல் வாகனத்தில் ஜி. ஜான்ஸ்கி வெரி லார்ச் அர்ரே வானொலி தொலைநோக்கி கொண்டு வானில் உள்ள வானொலி அலைகளை உமிழும் வான் பொருட்களின் கணக்கெடுப்பு செய்கிறனர். இதில் இனம் காணும் வான் பொருள்களைப் பட்டியல் செய்கின்றனர். எனவே இந்தக் கருந்துளை VLASS பட்டியலில் உள்ள வன்பொருள் என நாம் புரிந்துகொள்ளலாம். ஆங்கில எழுத்து J என்பது 2000 ஆண்டு சம இரவு பகல் புள்ளியிலிருந்து கணிதம் செய்து இந்த வான் பொருளின் இடத்தை நிர்ணயம் செய்துள்ளார் என்று பொருள். பூமியில் ஒவ்வொரு புள்ளியையும் அட்சரேகை தீர்க்கரேகை கொண்டு அடையாளப்படுத்துவது போல வான் மண்டல அட்சரேகை தீர்க்கரேகை தான் 041009.05-013919.88 என்கிற எண்கள். இதைப் பார்த்ததுமே வானவியலாளர்கள் இந்த வான் பொருளின் இருப்பிடம் என்ன என எளிதில் அறிந்துகொள்வார்கள். வானில் தோன்றிய ஒளிரும் சுழல் - ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் காரணமா? சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்? சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் போடும் குப்பைகள் என்ன ஆகும்? மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது? ஆகத்தொலைவான பிளேசர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் VLASS கணக்கெடுப்பை சாடையாகத் தேடியபோது சுமார் இருபது இடங்களில் பிளேசர் வகைக் கருந்துளை இருக்கலாம் என முதற்கட்டத் தகவல் கூறியது. இவற்றைக் கூர்ந்து ஆய்வு செய்தபோது J0410−0139 என்கிற ரேடியோ அலைகளை உமிழும் வான் பொருள் பிளேசர் வகைக் கருந்துளை எனவும், இது பிரபஞ்சத்தின் குழந்தைப் பருவத்தைச் சார்ந்தது எனவும் புலனாகியது. இதுவரை பல்லாயிரக்கணக்கான உயிர்ப்புள்ள கோலடி கருக்களை இனம் கண்டிருந்தாலும் அதில் வெறும் 3000 சொச்சம் மட்டுமே பிளேசர் வகை சார்ந்தது. எனவே ஒரு பிளேசர் கண்டால் பல ஆயிரம் உயிர்ப்புள்ள கோலடி கருக்கள் இருக்கலாம் என முடிவுக்கு வரமுடியும். இவற்றில் 2020இல் இனம் காணப்பட்ட SO J0309+27 என்கிற வான்பொருள்தான் இதுவரை ஆகலின்மையான பிளேசர் வகைக் கருந்துளையாக அறியப்பட்டது. இது பிரபஞ்சம் தோன்றி 800-900 பத்து லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு உருவானது. பிரபஞ்சம் தோன்றி 800-900 பத்து லட்சம் ஆண்டுக்காலத்தில் மீ நிறை கொண்ட ராட்சச கருந்துளை வளரமுடியும், ஆனால் வெறும் 700 பத்து லட்சம் ஆண்டுகளில் இப்படிப்பட்ட ராட்சத கருந்துளை வளர்ந்தது மர்மமே. கருந்துளைகள் குறித்தும் அவை எப்படி சடசடவென உருவாக்கி வளர்கின்றன என்பது குறித்தும் ஏற்கனவே நமக்கு இருந்த கருதுகோள்களை நீக்கி புத்தாக்கம் செய்யவேண்டும் என்கின்றார் சிலர். ராட்சத கருந்துளையின் ஜெட் திசை எதுவாகவும் இருக்கலாம். எனவே நம்மை நோக்கி நேராக ஜெட் திசை அமைவது என்பது பரிசுச்சீட்டு பரிசு போல. பல கோடி பேர் பரிசுச்சீட்டு சீட்டு வாங்கி இருந்தால் தானே பத்து கோடி பரிசுச்சீட்டு பரிசு ஒருவருக்குக் கிடைக்கும். எனவே பிரபஞ்சத்தின் குழந்தை நிலையில் நம்மை நோக்கி ஜெட் உள்ள பிளேசர் இருந்தால் வேறு திசை நோக்கி ஜெட் கொண்ட பல லட்சம் ராட்சத கருந்துளைகள் இருக்கவேண்டும். எனவே குழந்தைப் பருவப் பிரபஞ்சத்தின் தற்போதைய புரிதலை இந்தக் கண்டுபிடிப்பு கேள்விக்குள்ளாக்குகிறது. குறிப்பாகக் கருந்துளைகளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி; அவை எவ்வளவு பெரியதாக இருக்கும், எவ்வளவு விரைவாக வளர்ச்சியடையும், எத்தனை இருந்திருக்கலாம் முதலிய குறித்த நம்முடைய அனுமானங்கள் அனைத்தும் சவால் செய்யப்பட்டுள்ளன. (த வி வெங்கடேஸ்வரன், முன்னாள் முதுநிலை விஞ்ஞானி, அறிவியல் எழுத்தாளர், தற்போது மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வருகை பேராசிரியராகப் பணியாற்றுகிறார்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8x407d9z4no
  20. Published By: VISHNU 28 MAR, 2025 | 07:08 PM நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வுத் துறை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பக் குறியீடு அல்லது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய நிலையை எட்டியுள்ளதாக திணைக்களம் கூறுகிறது. அதன்படி, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்கவும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் குறித்து மக்கள் கவனமாக இருக்கவும், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்தவும், வெளிர், வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும் குறித்த திணைக்களம் அறிவுறுத்தியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/210493
  21. LIVE 8th Match (N), Chennai, March 28, 2025, Indian Premier League Royal Challengers Bengaluru 196/7 Chennai Super Kings (5.1/20 ov, T:197) 27/3 CSK need 170 runs in 89 balls Current RR: 5.22 • Required RR: 11.46 • Last 5 ov (RR): 27/3 (5.40) Win Probability:CSK 5.02% • RCB 94.98%
  22. மியான்மரை புரட்டிப்போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் - புகைப்படத்தொகுப்பு பட மூலாதாரம்,AP ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மத்திய மியான்மர் பகுதியில் 7.7 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சர்காயிங் நகருக்கு வடமேற்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது. வலுவான நில நடுக்கங்கள் தாய்லாந்து மற்றும் தென்மேற்கு சீனாவின் யுனான் வரை நீண்டிருந்தது. பட மூலாதாரம்,AFP நேபிடோவில் உள்ள ஒரு மருத்துவமனை வளாகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவசர சிகிச்சைப் பிரிவிற்கான நுழைவாயில் சேதமடைந்தது. மியான்மரின் ராணுவ தளபதி மின் ஆங் ஹலேய்ங் பாதிப்புகளை ஆய்வு செய்து, தப்பிப்பிழைத்து மைதானங்களில் திரண்டவர்களை சந்தித்தார் பட மூலாதாரம்,AFP பட மூலாதாரம்,AFP பட மூலாதாரம்,AFP பட மூலாதாரம்,AFP பட மூலாதாரம்,AFP பட மூலாதாரம்,AFP நில நடுக்கத்தின் தாக்கத்தால் சாலைகள் சிதிலமடைந்தன, மியான்மர் தலைநகர் முழுவதும் கட்டடங்கள் சேதமடைந்தன. பட மூலாதாரம்,EPA பட மூலாதாரம்,AFP பட மூலாதாரம்,AFP பட மூலாதாரம்,AFP நேபிடோவில் பெளத்த மத மட வளாகத்தின் பெரும்பகுதிகள் சேதமடைந்தன. பட மூலாதாரம்,AP பட மூலாதாரம்,AP பட மூலாதாரம்,AP மத்திய மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகில் உள்ள தாய்லாந்தின் பாங்காக் வரை நீண்டது. தாய்லாந்து தலைநகரில் ஒரு பெரிய கட்டடம் சரிந்ததைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்கிறது பட மூலாதாரம்,REUTERS பட மூலாதாரம்,REUTERS பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgq9q3qd1zyo
  23. 28 MAR, 2025 | 06:16 PM பட்டலந்த அறிக்கை பற்றி பேசுபவர்கள், பல வதைமுகாம்கள் வடக்கில் இயங்கின; இராணுவத்தினரிடம் கையளித்தவர்கள் உள்ளனர்; அதை விசாரிக்க இந்த அரசாங்கமும் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், உள்ளூராட்சி மன்றங்களில் சிறப்பாக செயற்பட்டால் அதன் பின்னர் வரும் மாகாண சபைத் தேர்தல், 5 வருடங்களுக்கு பின்வரும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றில் சிறப்பான வெற்றியை பெற முடியும். முல்லைத்தீவில் பாரம்பரிய வைத்தியம் படித்தவர்கள் வேலை இல்லாமல் இருப்பதால் கடந்த 7 வருடங்களாக வேலை கிடைக்காமையால் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றுகிறார்கள். பிரதேச சபைகள் இலவச மருத்துவ சேவையை வழங்க வேண்டும். அதற்கு ஏற்பட்ட சட்டங்களை வகுத்து சித்த மருத்துவ நிலையங்களை உருவாக்க முடியும். அதில் அவர்களை வைத்தியர்களாக நியமிக்க முடியும். கட்சியை பலப்படுத்துவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் அவசியம். அத்துடன் மக்களுக்கு சேவை வழங்க அவை முக்கியமானவை. தேர்தல் நேரம் பலர் வருவார்கள். ஆனால், கடந்த 75 வருடங்களாக தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக தியாகங்களை செய்த தாய் கட்சி ஆகிய தமிழ் அரசுக் கட்சி சீசனுக்கு வரும் பறவைகள் அல்ல. நாம் மக்களுடனேயே இருக்கின்றோம். வவுனியா வடக்கு பிரதேசத்திற்கு நீர் வரவில்லை. ஆனால் மகாவலி எல் வலயம் ஊடாக பல குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் திட்டமிட்ட இனப் பரம்பலை மாற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. அதேபோன்று, செட்டிக்குளம் பிரதேசத்தின் கீழ் மல்வத்து ஓயா திட்டத்தின் மூலம் ஆபத்தான நிலையில் உள்ளது. புதிதாக வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள். திட்டங்களை நேர்மையாக மக்களுக்கு செயற்படுத்தினால் நல்லது. ஆனால், இவ்வாறான திட்டங்களின் பின்னால் குடியேற்றங்கள் உள்ளன. இதனை கடந்த கால அரசாங்கங்கள் செய்தன. தற்போதைய அரசாங்கமும் அதனையே செய்கிறது. வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை கூற, ஏற்றுக்கொள்ள இந்த அரசாங்கமும் தயாரில்லை. அண்மையில் 4 பேரை பிரித்தானியா தடை செய்தது. அதனை எமது கட்சியும் வரவேற்றுள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு ஆதாரங்களுடன் இருந்த பலரில் 4 பேரை பிரித்தானியா தடை செய்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தினர் அந்த ஒருதலைப்பட்சமான முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார்கள். பட்டலந்த அறிக்கை பற்றி பேசும் அவர்கள், பல வதைமுகாம்கள் வடக்கில் இயங்கின. இராணுவத்தினரிடம் கையளித்தவர்கள் உள்ளனர். அதை விசாரிக்க தயாரில்லை. அதைப் பற்றி பேச அவர்கள் தயாரில்லை. கடந்த கால அரசாங்கங்கள் என்ன பதிலை சொன்னார்களோ அதே பதிலை தான் இவர்களும் சொல்கிறார்கள். அவர்களது செயற்பாடுகளை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்கியுள்ளோம். பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கும் நாட்டை எடுத்துள்ளார்கள். அவர்கள் உடனடியாக மாயாஜாலம் செய்ய முடியாது. அவர்கள் பொருளாதார ரீதியாக நாட்டை மீட்டு எமது அரசியல் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அதற்கு நாம் கால அவகாசம் வழங்கியுள்ளோம். அதனை அவர்கள் பயன்படுத்தி விரைவாக செய்ய வேண்டும். அது நடக்காவிடின் இந்த அரசாங்கத்தையும் நாம் எதிர்ப்போம். அதற்கான காலத்தை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/210485
  24. 'த.வெ.க - தி.மு.க இடையில்தான் போட்டி' - பொதுக்குழுவில் விஜய் பேசியது என்ன? பட மூலாதாரம்,TVK கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "அடுத்த வருடம் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் தி.மு.க-வுக்கும் இடையில் மட்டுமே போட்டி" என, த.வெ.க பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்துக்கு பல்வேறு வகைகளில் தி.மு.க ஆட்சி இடையூறு செய்வதாகவும் தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார். த.வெ.க முதல் பொதுக்குழுவில் என்ன நடந்தது? சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 28) நடைபெற்றது. கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் சார்ந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை த.வெ.க தலைவர் விஜய்க்கு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுவில் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் பேசி முடித்த பிறகு விஜய் பேசினார். "கதறல் சத்தம் எப்படி உள்ளது" எனத் தொண்டர்களைப் பார்த்து கேள்வி எழுப்பிய விஜய், "ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா அல்லது ஒரே ஒரு குடும்பம் மட்டுமே தமிழ்நாட்டை சுரண்டி வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா?" என பேச்சைத் தொடங்கினார். மன்னராட்சி விமர்சனம் இந்திரா காந்தி, ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு கடுமையாக எதிர்த்தது ஏன்?27 மார்ச் 2025 ஔரங்கசீப்புக்கு பதிலாக அவரது சகோதரரை முன்னிலைப்படுத்த ஆர்எஸ்எஸ் விரும்புவது ஏன்?25 மார்ச் 2025 பட மூலாதாரம்,TVK தொடர்ந்து பேசிய அவர், "எல்லாருக்கும் நல்லது நடப்பதுதான் அரசியல். அது தான் நமது அரசியல். கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல் எனக் கூறி மக்கள் பிரச்னைகளை மடை மாற்றி மக்களாட்சியை மன்னராட்சி போன்று நடத்துகிறார்கள்" என விமர்சித்தார். தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆட்சியில் உள்ளவர்கள் இடையூறு செய்வதாகக் கூறிய விஜய், த.வெ.க மாநாட்டில் தொடங்கி பரந்தூர் மக்கள் போராட்டம், பொதுக்குழு வரை எத்தனையோ தடைகளைத் தாண்டி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தான் நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். தனது பேச்சில், 'மன்னராட்சி முதல்வரே' என இரண்டு முறை முதலமைச்சர் ஸ்டாலினைக் குறிப்பிட்டு த.வெ.க தலைவர் விஜய் பேசினார். "பெயரில் உள்ளதைப் போல செயலிலும் ஆட்சியிலும் முதலமைச்சர் ஸ்டாலின் வீரத்தைக் காட்ட வேண்டும்" எனக் கூறினார். பட மூலாதாரம்,TVK தொடர்ந்து பேசிய அவர், "மத்திய பா.ஜ.க ஆட்சியை பாசிச ஆட்சி எனக் கூறுகிறார்கள். அதற்குக் குறைவில்லாத பாசிச ஆட்சியைத் தானே நீங்களும் கொடுக்கிறீர்கள்? கட்சித் தொண்டர்களையும் மக்களையும் சந்திப்பதற்கு தடை போடுவதற்கு நீங்கள் யார்?" எனக் கேட்டவர், சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற காரணத்தால் அமைதியாக இருப்பதாக குறிப்பிட்டார். "நேற்று வந்தவன் எல்லாம் முதலமைச்சர் ஆக கனவு காண்பதாக கூறுகிறீர்கள். அது நடக்கவே நடக்காது எனக் கூறுகிறீர்கள். பிறகு ஏன் எந்தக் கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை த.வெ.க-வுக்கு கொடுக்க வேண்டும்" எனக் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளதாகவே தெரியவில்லை எனவும் விமர்சித்தார் விஜய். தி.மு.க ஆட்சியில் பள்ளிக் குழந்தைகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரையில் பல்வேறு கொடுமைகளை அனுபவிப்பதாகக் கூறிய அவர், "அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என போராட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம்" என்றார். அடுத்து மத்திய பா.ஜ.க ஆட்சியை தனது பேச்சில் விஜய் விமர்சித்தார். "பிரதமர் மோதியின் பெயரைச் சொல்வதற்கு பயம் உள்ளதாக கூறுகிறார்கள். மத்தியில் ஆள்கிறவர் எனக் கூறுகிறோம். அங்கு என்ன காங்கிரஸா உள்ளது? பிறகு ஏன் பெயரைக் கூற வேண்டும் என சொல்கிறார்கள் " எனக் கூறினார். "தமிழ்நாடு.. தமிழர்கள் என்றாலே பிரதமர் மோதிக்கு அலர்ஜி" எனக் கூறிய விஜய், "ஜி.எஸ்.டியை சரியாக வாங்கிவிட்டு நிதியை ஒதுக்குவதில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் எனத் தொடங்கியபோதே உங்கள் திட்டம் தெரிந்துவிட்டது. உங்களிடம் சொல்ல விரும்புவது எல்லாம் தமிழ்நாட்டை கொஞ்சம் கவனமாக கையாளுங்கள்" என பிரதமர் மோதியை சுட்டிக் காட்டி பேசினார். இந்திரா - முஜிபுர் உடன்பாட்டை 'அடிமை ஒப்பந்தம்' என்று வங்கதேச எதிர்க்கட்சிகள் அழைத்தது ஏன்?25 மார்ச் 2025 சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வித்திட்ட 'ஹிட்லரின் விஞ்ஞானி'23 மார்ச் 2025 பட மூலாதாரம்,TVK "தி.மு.க, த.வெ.க இடையில்தான் போட்டி" 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அறுதிப் பெரும்பான்மை மற்றும் அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஆட்சி அமைத்ததும் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்யும் என தனது பேச்சில் நடிகர் விஜய் தெரிவித்தார். "அடுத்த ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும்" எனக் கூறிய விஜய், "இரண்டு கட்சிக்கும் இடையில்தான் போட்டி. ஒன்று த.வெ.க, இன்னொன்று தி.மு.க" எனவும் தெரிவித்தார். தி.மு.க, பா.ஜ.க-வை எதிர்த்து அரசியல் செய்வதால் அவர்களின் பெயரைக் கூற வேண்டிய கட்டாயம் விஜய்க்கு உள்ளதாக கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் கா.அய்யநாதன். தி.மு.க மற்றும் த.வெ.க ஆகிய கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி உள்ளதாக விஜய் பேசியதையும் அவர் மறுக்கிறார். " தி.மு.க என்பது நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சி. த.வெ.க அப்படி இல்லை" எனக் கூறுகிறார். முன்னதாக, த.வெ.க பொதுக்குழுவில் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்; பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது; மீனவர் போராட்டத்துக்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு; இரு மொழிக் கொள்கையில் உறுதி; நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்பன உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மாநில அரசுகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்; சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்தப்பட வேண்டும், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்துவதே ஒரே தீர்வு ஆகியவற்றை தனது தீர்மானங்களாக த.வெ.க வெளியிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2828w5l5zo
  25. Published By: DIGITAL DESK 2 28 MAR, 2025 | 04:48 PM பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடையைக் குறைக்குமாறு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்ட போதிலும், சில பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் கங்கா தில்ஹானி இது தொடர்பில் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையை குறைப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கை மூலம் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனை யும் மீறி சில பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் அதிகளவான புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் பிரகாரம் பாடசாலைகளுக்கு கண்காணிப்புக் குழுக்களை அனுப்பி புத்தகப் பைகளின் எடை தொடர்பில் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடை பதினைந்து முதல் இருபது கிலோ அல்லது அதற்கும் குறைவாக இருத்தல் வேண்டும். அதன்படி, முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை இரண்டு கிலோவாகவும்,இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை மூன்று கிலோவாகவும், ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை நான்கு கிலோவாகவும் இருத்தல் வேண்டும். பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை ஏழு கிலோவாக இருத்தல் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/210460

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.