Everything posted by ஏராளன்
-
வவுனியாவில் காசநோயால் கடந்த வருடம் மூன்று பேர் இறப்பு; 58 பேர் பாதிப்பு - காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி
காசநோயால் கடந்த வருடம் 9 பேர் இறப்பு : 56பேர் பாதிப்பு - வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் 24 MAR, 2025 | 01:21 PM காசநோயினால் வவுனியாவில் கடந்த வருடம் 9 பேர் இறப்படைந்துள்ளதுடன், 56பேர் நோயாளர்களாக இனம்காணப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டுபிரிவின் வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார். வவுனியாவில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இம்முறை “ஆம் எங்களால் காசநோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்” எனும் தொனிப்பொருளில் உலக காசநோய் தினம் மார்ச்24 ஆம் திகதி நினைவு கூரப்படுகின்றது. இலங்கையை பொறுத்தவரை ஒரு இலட்சம் பேரில் 62 பேர் காசநோயாளர்களாக இனம் காணப்பட வேண்டும். ஆனால் கடந்தவருடம் 8 ஆயிரம் பேரே நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். விகிதாசாரத்தின்படி அதன் எண்ணிக்கை 14ஆயிரமாக இருக்க வேண்டும். கடந்த வருடம் வவுனியாமாவட்டத்தில் 56 நோயாளர்கள் இனம்காணப்பட்டனர். அதில் 9பேர் உயிர் இழந்துள்ளனர். அவர்கள் நோய்வந்து உரிய நேரத்தில் சிகிச்சைக்கு வராமல் காலதாமதமாக வந்தமையால் அந்த மரணம் ஏற்ப்பட்டது. குறிப்பாக தொடர்ச்சியாக இரு வாரங்களிற்கு மேற்ப்பட்ட இருமல் மாலைநேரத்தில் காய்ச்சல், உணவில் நாட்டம் இன்மை, உடல்நிறை குறைவடைதல், சளியுடன் ரெத்தம் வெளியேறல். இப்படியான அறிகுறிகள் தென்பட்டால் அது காசநோயாக இருக்கலாம். மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள பொதுவைத்தியசாலைகளுக்கு சென்று சாதாரண சளிப்பரிசோதனையினை இலவசமாக செய்துகொள்வதன் மூலம் இந்த நோயினை இனம் காணலாம். எந்தவித அறிகுறியும் இல்லாமலும் இந்த நோய் உடலில் இருக்கலாம். குறிப்பாக ஏற்கனவே நோய் ஏற்ப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அல்லது நாட்பட்ட நோய் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சிறுநீரக நோயாளர்கள், போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் வெளிப்படாமல் இந்த நோய்கிருமி தங்ககூடும். அப்படியானவர்களுக்கு பரிசோதனையினை செய்வதன் மூலம் அதனை கண்டறியலாம். ஒருவருக்கு காசநோய் ஏற்ப்பட்டால் ஆறுமாதத்திற்கு நேரடி கண்காணிப்புடனான சிகிச்சையின் மூலம் மருந்துகளை பெற்றுக்கொண்டால் அதனை முற்றாக குணப்படுத்தலாம். அதற்கான மருந்து உள்ளது. அது தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை. சிகிச்சைகளை எடுக்கத்தவறினால் அது தீவிரமடைந்து இறப்பிற்கு வழிவகுக்கும் என்றார். https://www.virakesari.lk/article/210053
-
ஜனாதிபதி அனுரவின் எம்.பி. ஓய்வூதியம் நிறுத்தம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பெற்று வந்த ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து நாடாளுமன்ற நிதி இயக்குநருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஒரு ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்திருந்தால், அவர் நாடாளுமன்ற ஓய்வூதியத்திற்கு உரிமையுடையவர். அத்தோடு, அவர் ஓய்வு பெற்றவுடன், அவர் ஜனாதிபதி ஓய்வூதியத்திற்கும் உரிமையுடையவர். இந்த வழியில் இரண்டு ஓய்வூதியங்களை விரும்பவில்லை என்று அநுர குமார திசாநாயக்க கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராகப் பெறும் ஓய்வூதியப் பலன்களை நீக்குவதாக அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன்பு, அவர் நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கும் கடிதம் மூலம் தகவல் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் அந்தக் கடிதத்தை அதன் நிதி இயக்குநருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/316372
-
யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிற்கும் இடையில் மோதல்
இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதலில் யோஷித ராஜபக்ஷவுக்கு தொடர்பில்லை! 24 MAR, 2025 | 01:09 PM கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு ஏற்பட்ட மோதலுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவியுடன் குழுவொன்று சென்றுள்ளது. இதன்போது, இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவுக்கும் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலின் போது யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவினர் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இந்த மோதல் இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, கொம்பனி வீதி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், மோதல் ஏற்பட்ட நேரத்தில் யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் சம்பவ இடத்தில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் இரவு நேர களியாட்ட விடுதியை விட்டு வெளியேறிய பின்னரே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனி வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/210054
-
தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை திறந்துவைத்த வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர்
24 MAR, 2025 | 04:06 PM யாழ்ப்பாணத்தில் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையான திஸ்ஸ விகாரையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட மண்டபம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தி, சட்டவிரோதமான முறையில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், விகாரையை அகற்றி, தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு காணி உரிமையாளர்கள் கோரி வருவதுடன், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். இருந்த போதிலும், விகாரை நிர்வாகம், இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன், மடாலயம் ஒன்றினை எவ்வித அனுமதியும் பெறாது சட்டவிரோதமான முறையில் அமைத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சட்ட ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய பொலிஸார் அசமந்தமாக செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், சட்டவிரோத கட்டடத்தை வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தனபால திறந்து வைத்துள்ளார். இதேவேளை, போராட்டத்தில் ஈடுபடும் மக்களை தொடர்ந்தும் பொலிஸார் அச்சுறுத்தி வருகின்றனர். தமது காணிகளை கேட்டு போராடும் மக்களுக்கு எதிராக பிணையில் வெளியில் வர முடியாத சட்டத்தின் கீழ் வழக்குகளை தொடரவும் முயற்சித்து வந்தனர். இந்நிலையில், பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மனிதவுரிமை ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் தற்போதே மனித உரிமை ஆணைக்குழு தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவ்வாறான, நிலையில் விகாரை நிர்வாகத்தின் சட்ட ரீதியற்ற செயற்பாடுகளுக்கு பொலிஸார் தொடர்ந்தும் துணை போவது குறித்து காணி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/210069
-
திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த கனேடிய பிரதமர்!
கனடா பொதுத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது கனடாவின் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெறுமென பிரதமர் மார்க் கார்னி அறிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது விதித்துள்ள வரிகளை எதிர்கொள்வதற்கான அதிகாரத்தை கோரி பிரதமர் மார்க் கார்னி தேர்தலை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற முக்கியமான தருணங்களில் நாட்டை யார் வழிநடத்த வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் மார்க் கார்னி சுட்டிக்காட்டினார். கனடாவின் இரண்டு முக்கிய கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் லிபரல் கட்சி ஆகியன இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளன. கனடாவின் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் உள்ளிட்ட நான்கு வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்குகின்றனர். https://thinakkural.lk/article/316380
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
தோனி மின்னல் வேக ஸ்டம்பிங்: சென்னையை திணறடித்த மும்பையின் இளம் சுழல் 'மாயாவி' விக்னேஷ் யார்? பட மூலாதாரம்,X/CSK கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே அணி. மிகவும் எதிர்பார்ப்புக்குரியதாக அமைந்த இந்த ஆட்டத்தில் எளிய இலக்கைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை கடைசி ஓவர் வரை மும்பை அணி தள்ளிப்போட்டது. சிஎஸ்கே கையில் எடுத்த அதே ஆயுதத்தை மும்பை இந்தியன்ஸும் எடுத்து கடைசிவரை போராடியது. சிஎஸ்கேவில் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது இருப்பதைப் போல், மும்பை இந்தியன்ஸில் இளம் அறிமுக வீரர் விக்னேஷ் புத்தூர் சிஎஸ்கே ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதில் முக்கியமானவர். இம்பாக்ட் பிளேயராக களமிறக்கப்பட்ட அவர் தனது மந்திர சுழலால் சென்னை அணியின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார். மும்பையின் டாப்ஆர்டரை காலி செய்த கலீல் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலேயே கலீல் பந்துவீச்சில் ஷிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரிக்கெல்டனையும் கிளீன் போல்டு செய்து அவர் அசத்தினார். மறுபுறம் இளம் அதிரடி ஆட்டக்காரர் வில் ஜாக்ஸை சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் வெளியேற்றினார். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 4.4. ஓவர்களில் 36 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையை திணறவைத்த நூர்அகமது மும்பை அணிக்கு சூர்யகுமார், திலக்வர்மா இருவரும் சேர்ந்து ஓரளவு ஸ்கோரை நிலைப்படுத்தி பவர்ப்ளே முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தனர். இருவரின் பார்ட்னர்ஷிப் 51 ரன்கள் சேர்த்து நங்கூரமிட்டநிலையில் அதை நூர் அகமது உடைத்தார். நூர் அகமதுவின் பந்துவீச்சில் சூர்யகுமார் இறங்கி அடிக்க முற்பட்டு பந்தை தவறவிட்ட 0.012 மைக்ரோ வினாடிகளில் ஸ்டெம்பிங் செய்தார் தோனி. அடுத்துவந்த புதிய பேட்டர் ராபின் மின்ஸ் சரியாகக் கணிக்காமல் நூர் அகமது வீசிய 13-வது ஓவரில் ஸ்லோ பாலை அடிக்க முற்பட்டு கேட்சாகி 3 ரன்னில் ஆட்டமிழந்தார், அதே ஓவரில் திலக் வர்மா கால்காப்பில் வாங்கி 31 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். மும்பை அணியின் ரன்ரேட் ஓரளவு உயர்ந்தநிலையில் அதற்கு நூர்அகமது வலுவான பிரேக்போட்டார். அடுத்துவந்த நமன்திர்(17), சான்ட்னர்(17) இருவரும் ஓரளவு பங்களிப்பு செய்தனர். சிஎஸ்கே அணியில் நீண்டகாலம் இருந்து, தற்போது மும்பைக்காக விளையாடும் தீபக் சஹர் தன்னாலும் பேட் செய்ய முடியும் என்பதை நேற்று வெளிப்படுத்தினார். கடைசி நேரத்தில் சிறிய கேமியோ ஆடிய தீபக் சஹர் 15 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தீபக் சஹரின் இந்த பங்களிப்பால்தான் மும்பை அணியால் 150 ரன்களைக் கடக்க முடிந்தது. 2025 ஐபிஎல் தொடரில் விளையாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 முக்கிய வீரர்கள்21 மார்ச் 2025 கடைசி ஓவர் வரை திக் திக்! மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன் - மதுரை வீராங்கனை கமலினி சாதித்தது என்ன?16 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES கெய்க்வாட், ரவீந்திரா சிறப்பான ஆட்டம் 156 ரன்கள் எளிதாக சேஸ் செய்யக்கூடிய ஸ்கோர் இல்லை என்பதை மும்பை அணி தொடக்கத்தில் இருந்து வெளிப்படுத்தியது. தொடக்கத்திலேயே திரிபாதி விக்கெட்டை தீபக் சஹர் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். 3வது வீரராக வந்த கெய்க்வாட், ரவீ்ந்திராவுடன் சேர்ந்து அதிரடியாக பேட் செய்தார். ரச்சின் ரவீந்திரா ஆங்கர் ரோலில் ஆட, கெய்க்வாட் வேகமாக ரன்களைச் சேர்த்தார். தீபக் சஹர், சான்ட்னர், ராஜீ பந்துவீச்சை வெளுத்துவாங்கவே பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு சிஎஸ்கே 62 ரன்கள் சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES எளிதான வெற்றி கடினமானது கடைசி 13 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 83 ரன் தேவைப்பட்டது. கெய்க்வாட், ரவீந்திரா இருந்த ஃபார்மில் விரைவாக எட்டிவிடுவார்கள் நிகர ரன் ரேட்டை உயர்த்திவிடுவார்கள் என்று ரசிகர்கள் கருதினர். ஆனால், சிஎஸ்கே எடுத்த அதே ஆயுதத்தை, அவர்களுக்கு எதிராக மும்பையும் பயன்படுத்தியது. 4 சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்திய கேப்டன் சூர்யகுமார், 13 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்களுக்கே வழங்கினார். பந்துவீச்சாளர்களை ரொட்டேட் செய்து சிறப்பாக கேப்டன்சியையும் ஸ்கை செய்தார். சிஎஸ்கேவை கட்டிப்போட்ட புத்தூர் அறிமுக ரிஸ்ட் ஸ்பின்னர் விக்னேஷ் புத்தூர் பந்துவீச்சை சிஎஸ்கே பேட்டர்கள் எளிதாக எடை போட்டனர். இயல்புக்கும் குறைவான வேகத்தில் விக்னேஷ் பந்துவீசியதால் அவரின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயலும் போது கவனத்துடன் ஆட வேண்டும். கேப்டன் கெய்க்வாட் சிக்ஸர் அடிக்க முற்பட்டு, 53 ரன்னில் ஜேக்ஸிடம் கேட்சாகினார். அடுத்துவந்த ஷிவம் துபே(9), தீபக் ஹூடா(3) ஆகியோரும் புத்தூரின் ஸ்லோ ரிஸ்ட் ஸ்பின்னில் பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை பலிகொடுத்தனர். சாம்கரன் 4 ரன்னில் ஜேக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். சிஎஸ்கேவின் வேகமான வெற்றிப் பயனத்துக்கு விக்னேஷ் புத்தூர், உள்ளிட்ட 4 சுழற்பந்துவீச்சாளர்களும் பிரேக் போட்டனர். நமன் திர், வில் ஜேக்ஸ், சான்ட்னர், புத்தூர் என பலமுனை தாக்குதல்களை சிஎஸ்கே பேட்டர்களால் சமாளிக்க முடியவில்லை. கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 37 ரன் தேவைப்பட்டது. சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? முதல் ஆட்டத்திலேயே சர்ச்சை23 மார்ச் 2025 ஐபிஎல்: பந்தில் எச்சில் தடவ தடை நீக்கப்பட்டதை பவுலர்கள் வரவேற்பது ஏன்?23 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES டென்ஷனைக் குறைத்த ரவீந்திரா புத்தூர் வீசிய 18-வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா இரு சிக்ஸர்களை விளாசி வெற்றிக்கு தேவைப்படும் ரன்களைக் குறைத்தார். இடையே போல்ட் ஓவரில் ஜடேஜா பவுண்டரி அடித்ததும் சற்று பின்னடைவாக மும்பைக்கு அமைந்தது. கடைசி 2 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது, நமன்திர் வீசிய 19-வது ஓவரில் ஜடேஜா 17ரன்னில் ரன்அவுட்டாகினார். அரங்கமே அதிர்ந்தது ரசிகர்கள் எதற்காக காத்திருந்தார்களோ அந்த சம்பவம் நடந்தது, தோனி களமிறங்கும்போது, அரங்கில்இருந்த "டீஜே" ஒலிக்கவிட்ட பாடல்கள், அரங்கை அதிர வைத்தன. அதைவிட ரசிகர்களின் கரஒலியும், விசில் சத்தமும் பெரிதாக இருந்தது. தோனி கடைசி இரு பந்துகளைச் சந்தித்தும் ரன் சேர்க்கவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. சான்ட்னர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ரவீந்திரா சிக்ஸர் அடிக்கவே சிஎஸ்கே வென்றது. ரவீந்திரா 65 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் இளம் வீரர் புத்தூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES 13 ஆண்டாக தொடரும் சோகம் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2012ம் ஆண்டுக்குப்பின், ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் வெல்ல முடியாமல் தவிக்கிறது. இந்த போட்டியில் தோல்வியுடன் சேர்த்து 13 ஆண்டாக முதல் போட்டியில் தோற்று வருகிறது மும்பை அணி. அதிலும் சிஎஸ்கேவுக்கு எதிராக 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் முதல் போட்டியில் தோற்ற நிலையில் இந்த ஆட்டத்திலும் மும்பை தோற்றது. ஆட்டத்தின் நாயகன் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் இருவர் முக்கியக் காரணம். ஒருவர் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது, மற்றொருவர் ஆப்கானிஸ்தான் இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னர் நூர் அகமது. இதில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய நூர் அகமது ஆட்டநாயகன் விருது வென்றார். நூர் அகமதுவுக்கு ஐபிஎல் வாழ்க்கையில் இதுதான் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. இதற்கு முன் 3 விக்கெட் வீழ்த்தியிருந்த நிலையில் அதைவிட சிறப்பாக இந்தப் போட்டியில் பந்துவீசியுள்ளார். பேட்டிங்கில் கேப்டன் கெய்க்வாட்(53), ரச்சின் ரவீந்திரா(65) இருவரைத் தவிர சிஎஸ்கே அணியில் பெரிதாக யாரும் பங்களிப்பு செய்யவில்லை. கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடிய கெய்க்வாட் 26 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து பந்துக்கும், தேவைப்படும் ரன்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்துச் சென்றார். ஆங்கர் ரோல் எடுத்து ஆடிய ரச்சின் ரவீந்திரா கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES மின்னல் 'மகி' சிஎஸ்கே அணியில் நேற்று 43 வயது இளைஞர் என செல்லமாக அழைக்கப்படும் தோனி களமிறங்கிய போது அரங்கமே கைதட்டலிலும், விசில் சத்தத்திலும் அதிர்ந்தது. எம்எஸ் தோனியின் விக்கெட் கீப்பிங்கைப் பார்த்தபோது அவருக்கு 43 வயதுபோன்று தெரியவில்லை. உடற்தகுதியை அற்புதமாக பராமரிக்கும் தோனி நேற்று செய்த ஸ்டெம்பிங் கவனத்தை ஈர்த்தது. நூர் அகமதுவின் பந்துவீச்சில் சூர்யகுமார் இறங்கி அடிக்க முற்பட்டு பந்தை தவறவிட்ட 0.012 வினாடிகளில் ஸ்டெம்பிங் செய்துவிட்டு தோனி சிரித்துக்கொண்டே சென்றார். தோனியின் ஸ்டெம்பிங் வேகம் பற்றி அறிந்த ஸ்கை சிரித்துக்கொண்டே பெவிலியன் சென்றார். ஒரு பேட்டரின் பேட்டிங் ஆக்சன் கூட முழுமையாக முடியாத நிலையிலேயே, சில மைக்ரோ வினாடிகளில் இந்த ஸ்டெம்பிங்கை தோனி செய்துள்ளார். மின்னல் மகியின் ஆகச்சிறந்த ஸ்டெம்பிங் முதல் ஆட்டத்திலேயே தெரிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES தோனி குறித்து ருதுராஜ் கூறியது என்ன? வெற்றிக்குப் பின் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில் " நான் ஆட்டமிழந்தவுடன் சிறிது பதற்றமாக இருந்தது. சில போட்டிகள் கடைசி ஓவர்வரை செல்லும், வெற்றிபெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் அப்படித்தான் உணர்கிறேன். அணியில் 3வது வீரராகக் களமிறங்க வேண்டிய தேவை இருந்ததால் நான் வந்தேன். புதிய அணிக்கு சமநிலையை ஏற்படுத்த வேண்டும். திரிபாதி தொடக்க வீரராக சிறப்பாக ஆடக்கூடியவர். எங்களின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். கடந்த சில ஆண்டுகளாகவே கலீல் அகமது சிறப்பாக விளையாடி வருகிறார், அனுபவம் அதிகம்வந்துவிட்டது. நூர் அகமதுதான் அணியின் துருப்புச்சீட்டு. தோனி இப்போதும் ஒரே மாதிரியான உடல்தகுதியுடன் இருக்கிறார், வலைப்பயிற்சியில் பல சிக்ஸர்களை விளாசினார், இந்த ஆண்டும் பல சிக்ஸர்களை விளாசுவதைப் பார்க்கலாம்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES தோனி ஸ்டம்பிங் பற்றி நூர் அகமது கூறியது என்ன? ஆட்டநாயகன் விருது பெற்ற நூர் அமகது பேசுகையில், இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினா. எம்எஸ் தோனிக்கு நன்றி தெரிவித்த அவர், "ஐபிஎல்லில் இங்கு விளையாடுவது சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன். அணியில் வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய்வதில் கவனம் செலுத்தினேன். சூர்யகுமாரின் விக்கெட் சிறப்பு வாய்ந்தது. தோனியின் ஸ்டம்பிங் ஆச்சர்யமானதாக இருந்தது. தோனி போன்ற ஒருவர் ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருப்பது ஒரு பவுலராக எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES 10 ஆண்டுகளுக்குப் பின் 'யெல்லோ அஸ்வின்' 10 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வின் நேற்று மீண்டும் மஞ்சள் ஆடை அணிந்து உற்சாகமாக, அதிலும் சொந்த மண்ணில் விளையாடினார். தான் இன்னும் ஃபார்மில் இருக்கிறேன் என்பதை உரக்கச் சொல்லிய அஸ்வின் முதல் ஓவரிலேயே வில் ஜேக்ஸ்(11) விக்கெட்டை வீழ்த்தினார். அஸ்வின் அதே கேரம்பால், ஸ்லோபால், பந்துவீச்சில் வேரியேஷன் என சரியான லென்த்தில் பந்துவீசி பேட்டர்களுக்கு வழக்கம்போல் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். 4 ஓவர்கள் வீசிய அஸ்வின் 31 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஒரேபோட்டியில் குவிக்கப்பட்ட 528 ரன்கள் ! இஷான் கிஷன் சதத்துடன் ஹைதராபாத் அமர்க்கள ஆரம்பம்23 மார்ச் 2025 சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? முதல் ஆட்டத்திலேயே சர்ச்சை23 மார்ச் 2025 யார் இந்த விக்னேஷ் புத்தூர்? பட மூலாதாரம்,GETTY IMAGES எளிய இலக்கை துரத்திய சிஎஸ்கே அணியை திணறடித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் விக்னேஷ் புத்தூர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர். 23 வயதேயான இவரை 30 லட்ச ரூபாய் என்ற அடிப்படை விலையில் மும்பை அணி வாங்கியுள்ளது. கேரள கிரிக்கெட் லீக்கில் அலெப்பி ரிப்பிள்ஸ் (Aleppey Ripples) அணிக்காக அவர் விளையாடி வருகிறார். 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் முடிவில் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சயமானவராக அவர் இருப்பார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நம்புகிறது. கேரளாவில் 14 வயதுக்குட்டோர் மற்றும் 19 வயதுக்குட்டோருக்கான அணிகளில் விளையாடியுள்ள இவர், கேரள சீனியர் அணியில் இன்னும் இடம் பிடிக்கவில்லை. கேரள கிரிக்கெட் லீக்கில் 3 ஆட்டங்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே அவர் எடுத்துள்ளார். ஆனாலும், அவரது சுழலில் இருந்த மாயாஜாலம் மும்பை இந்தியன்ஸ் அணியை கவர, 30 லட்ச ரூபாய் என்ற அடிப்படைய விலையில் அவரை வாங்கியுள்ளது. தென் ஆப்ரிக்க டி20 கிரிக்கெட் லீக்கில் எம்ஐ கேப்டவுன் அணியின் பயிற்சியில் வலைப்பந்துவீச்சாளராக செயல்பட்ட பின்னர் ஐபிஎல் தொடரில் விக்னேஷ் புத்தூர் அறிமுகமாகியுள்ளார். முதல் போட்டியிலேயே ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் கவனம் ஈர்த்துள்ளார் என்று ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ இணையதளம் கூறுகிறது. நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொண்ட வேளையில், விக்னேஷ் புத்தூரை முதுகில் தட்டிக் கொடுத்தார் தோனி. இந்த தருணத்தை விக்னேஷ் புத்தூர் தனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்கவே மாட்டார் என்று கூறியுள்ள வர்ணனையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரவி சாஸ்திரி, இது விக்னேஷ் புத்தூருக்கு உற்சாகம் தரும் ஒன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjryx9r879zo
-
இந்தியாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்து : 2 பேர் உயிரிழப்பு
Published By: DIGITAL DESK 3 23 MAR, 2025 | 04:33 PM இந்தியாவில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 152 அடி உயர தேர் திடீரென சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் பெங்களூர், ஹுஸ்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அம்மனுக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே திருவிழாவையொட்டி சனிக்கிழமை (22) தேரோட்ட நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதன்போது, 152 அடி உயர தேரில் அம்மன் எழுந்தருளிய நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துள்ளனர். இந்த தேருடன் சேர்த்து நாகமங்களா மற்றும் ராயசந்திரா சாமி தேர்களும் சென்றுள்ளன. இந்நிலையில் தேரோட்ட நிகழ்ச்சியின் போது திடீரென லேசான காற்றுடன் மழை பெய்ததால் 152 அடி உயர தேர் பக்தர்களின் மேல் சாய்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். மேலும் தேரின் அடியில் 11 பக்தர்கள் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் வீதியோரம் இருந்த வீடுகளும் சேதமடைந்துள்ளன. இதையடுத்து தேரோட்டத்தையொட்டி பாதுகாப்புக்காக வந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் தேருக்கு அடியில் சிக்கி காயம் அடைந்த பக்தர்களை மீட்டுள்ளனர். தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் , பெங்களூருவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த நபர்களை மீட்பு குழுவினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு இதேபோல் மத்தூரம்மா அம்மன் கோவில் தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விழுந்து 2 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். https://www.virakesari.lk/article/209999
-
யுக்ரேன் - ரஷ்யா போரை டிரம்ப் உறுதியளித்தபடி துரிதமாக நிறுத்த முடியாதது ஏன்? 5 காரணங்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019-ஆம் ஆண்டு ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது, டிரம்பும் புதினும் சந்தித்துக் கொண்டனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் லாண்டேல், ஹன்னா சோர்னஸ் பதவி, 24 மார்ச் 2025, 03:58 GMT கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை டொனால்ட் டிரம்ப் சந்தித்த போது, அவர் அமெரிக்கத் தேர்தலில் அதிபர் வேட்பாளராக இருந்தார் . யுக்ரேனில் போரை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று டிரம்ப் அப்போது நம்பிக்கை தெரிவித்தார். "நாங்கள் வெற்றி பெற்றால், நாங்கள் போரை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என நான் நினைக்கிறேன்" என்று டிரம்ப் கூறினார். அவர் குறிப்பிட்ட 'விரைவு' என்பதன் அர்த்தம் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருந்தது. முன்னதாக நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், "நான் அதிபராக பதவியேற்கும் முன்பே இதை தீர்த்து வைப்பேன்" என்று டிரம்ப் உறுதியளித்தார். இது, 2023 மே மாதத்தில், "அதிபராக பதவியேற்ற பிறகு முதல் 24 மணி நேரத்துக்குள் போரை நிறுத்தி விடுவேன்" என்ற பேச்சு அவர் அளித்திருந்த முந்தைய உறுதிப்பாட்டை விட ஒரு படி மேலானதாகும். தற்போது, டிரம்ப் அதிபராக பதவியேற்று இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. வெள்ளை மாளிகையில், இந்த அளவுக்கு கடுமையான மற்றும் சிக்கலான மோதலை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை டிரம்ப் தற்போது உணரத் தொடங்கியிருக்கலாம். ஒரு நாளில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் என சொன்னது, 'சற்று கிண்டலாகவே' இருந்தது என கடந்த வார இறுதியில் அமெரிக்க அதிபர் ஒரு நேர்காணலில் ஏற்றுக்கொண்டார். டிரம்பின் குழுவினர் எதிர்பார்த்த வேகத்தில் முன்னேற்றம் ஏற்படாததற்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளன. 1. டிரம்பின் அதீத நம்பிக்கை முதலில், டிரம்ப் தனது தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் ராஜ தந்திரத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை, தவறானதாக இருக்கக் கூடும். மற்றொரு நாட்டின் தலைவருடன் அமர்ந்து நேரில் பேசி, ஒப்பந்தத்துக்கு வருவதன் மூலம், எந்த சர்வதேச பிரச்னையையும் தீர்க்க முடியும் என்பதே அவரது நீண்ட நாள் நம்பிக்கையாக இருந்து வந்தது. டிரம்ப், பிப்ரவரி 12ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் முதலில் பேசினார். ஒன்றரை மணி நேரம் நீடித்த அந்த உரையாடலை அவர் "மிகவும் பயனுள்ளதாய் இருந்தது" என்று கூறினார். பிறகு, மார்ச் 18ஆம் தேதி மீண்டும் இருவரும் பேசினர். ஆனால், டிரம்ப் விரும்பிய 30 நாட்கள் இடைக்கால போர்நிறுத்தம் இந்த தொலைபேசி உரையாடல்களில் உறுதி செய்யப்படவில்லை என்பது தற்போது தெளிவாகிறது. புதினிடமிருந்து அவர் பெற்ற ஒரே முக்கிய ஒப்பந்தம் என்னவென்றால், யுக்ரேனிய மின்சக்தி நிலையங்கள் மீது ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல்களை நிறுத்துவதாகக் கூறிய வாக்குறுதி தான். ஆனால், அந்த உரையாடல் முடிந்த சில மணி நேரங்களுக்குள் ரஷ்யா அந்த வாக்குறுதியை மீறியது என்று யுக்ரேன் குற்றம் சாட்டுகிறது. அமெரிக்கக் கல்வித் துறையின் பணிகள் என்ன? டிரம்பால் அதை அகற்ற முடியுமா?21 மார்ச் 2025 டிரம்ப், புதின் பேச்சுவார்த்தையால் பலன் ஏதும் இல்லையா?20 மார்ச் 2025 கோத்ரா கலவரம், ஆர்எஸ்எஸ், சீனா பற்றிய அமெரிக்க பாட்காஸ்டர் கேள்விகளுக்கு மோதி பதில் என்ன?18 மார்ச் 2025 2. அவசரம் காட்ட விரும்பாத புதின் இரண்டாவதாக, ரஷ்ய அதிபர் அவசரப்பட விரும்பவில்லை என்று தெளிவாக கூறியுள்ளார். டிரம்ப் அவருடன் தொலைபேசியில் பேசியதற்கு ஒரு மாதம் கழித்து மட்டுமே, கடந்த வாரம் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து முதன்முறையாக அவர் கருத்து தெரிவித்தார். நீண்ட கால தீர்வைப் பற்றி பேசுவதற்கு முன்பு இடைக்கால போர் நிறுத்தத்தை கோரும் அமெரிக்காவின் இரண்டு கட்ட திட்டத்தை தான் உறுதியாக எதிர்ப்பதாக புதின் வெளிப்படுத்தியுள்ளார். மாறாக, எந்தவொரு பேச்சுவார்த்தையும், "போரின் மூலக் காரணங்கள்" என்று அவர் கருதும் விஷயங்களை முதலில் தீர்க்க வேண்டும் என்பதில் புதின் உறுதியாக உள்ளார். நேட்டோ விரிவாக்கம் மற்றும் யுக்ரேன் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இருப்பது ஆகியவை ஏதாவது ஒரு வகையில் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக அவர் கூறுகிறார். எந்தவொரு உடன்பாடும் ஒப்புக் கொள்ளப்படுவதற்கு முன்பு, ரஷ்யா முன்வைக்கும் முக்கியமான கேள்விகளுக்கும் நிபந்தனைகளுக்கும் பதிலளிக்க வேண்டுமென்றும் புதின் வலியுறுத்துகிறார். பட மூலாதாரம்,GENYA SAVILOV/AFP படக்குறிப்பு, இந்த உபகரணங்கள் ரஷ்ய படைகளால் தாக்கப்பட்ட பின்னர் யுக்ரேனிய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டு கீவ் நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டன. 3. அமெரிக்காவின் அணுகுமுறை மூன்றாவது, ஆரம்பத்தில் யுக்ரேன் மீது கவனம் செலுத்த வேண்டும் எனும் அமெரிக்காவின் திட்டம் தவறானதாக இருக்கலாம். ஏனென்றால், அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு தடையாக இருப்பது அதிபர் ஸெலென்ஸ்கி தான் என வெள்ளை மாளிகை நம்பியது. ஆனால், டிரம்பின் ஆட்சி தொடங்கிய பிறகு உலகின் அரசியல் சூழல் எவ்வளவு மாற்றமடைந்துள்ளது என்பதை யுக்ரேன் அரசு புரிந்து கொள்ள தாமதித்துவிட்டது என்று மேற்கத்திய ராஜ தந்திரிகள் கூறுகின்றனர். யுக்ரேன் மீதான அமெரிக்காவின் அழுத்தம், அதிபர் அலுவலகத்தில் நடந்த கடுமையான உரையாடலுக்கு வழிவகுத்தது. இதனால் அதிக நேரமும், முயற்சியும், அரசியல் மூலதனமும் வீணாகியது. அந்தச் சந்திப்பில் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் யுக்ரேன் தலைவர் ஸெலென்ஸ்கியை கடுமையாக விமர்சித்தனர். இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் முரண்பாடுகள் ஏற்பட்டன. அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் உள்ள நாடுகள் ஒன்றுக்கொன்று எதிராக மாறின. இதுவும் ஒரு முக்கிய ராஜ்ஜீய சிக்கலாகி, அதை சரி செய்ய நேரம் எடுத்தது. அந்த நேரத்தில், விளாதிமிர் புதின் அமைதியாக இருந்து, எல்லாவற்றையும் பார்த்து ரசித்து, தன்னுடைய தருணத்துக்காக காத்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES 4. ரஷ்யா - யுக்ரேன் நேரடியாக பேசாமல் இருப்பது நான்காவதாக, இந்த போரின் மிகுந்த சிக்கலான தன்மை, எந்தவொரு தீர்வையும் எளிதாக்கவில்லை. யுக்ரேன் முதலில் வழங்கிய யோசனை, வான்வழித் தாக்குதல் மற்றும் கடல் வழித் தாக்குதலுக்கான ஒரு இடைக்கால போர் நிறுத்தம் என்பதாக இருந்தது. இது கண்காணிக்க எளிதாக இருக்கும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால், கடந்த வாரம் ஜெட்டாவில் நடந்த பேச்சுவார்த்தையில், கிழக்குப் பகுதியிலுள்ள 1,200 கிலோமீட்டருக்கும் அதிகமான முன்னணிப் போர் பகுதியையும் உட்படுத்தி உடனடி போர் நிறுத்தம் அமலாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. இதனால், அந்த போர் நிறுத்தத்தை கண்காணிக்க வேண்டிய அமைப்புகளுக்கு இன்னும் கடினமாகிவிட்டது. இதை விளாதிமிர் புதின் உடனே நிராகரித்தார். ஆனால், மின்சக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்ற அந்த எளிமையான முன்மொழிவுக்கு புதின் ஒப்புக்கொண்டிருந்தாலும், அதிலும் பல சிக்கல்கள் இல்லாமல் இல்லை. இந்த முன்மொழிவின் செயல்பாடுகள் பற்றிய விவாதங்களே, சவுதி அரேபியாவில் இன்று (திங்கட்கிழமை )நடைபெறவுள்ள தொழில்நுட்ப விவாதங்களில் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவ மற்றும் ஆற்றல் துறையின் நிபுணர்கள், அணுசக்தி உற்பத்தி நிலையங்கள் உட்பட பாதுகாப்பு வழங்க வேண்டிய மின் நிலையங்களின் விரிவான பட்டியலை தயாரிக்க உள்ளனர். அவர்கள் எந்த ஆயுதங்களையும் பயன்படுத்தக் கூடாது என்பதற்கும் ஒருமித்த முடிவுக்கு வர முயற்சி செய்கிறார்கள். ஆனால், ஆற்றல் உள்கட்டமைப்புக்கும் பிற பொதுமக்கள் வசதிகளுக்கும் இடையிலான எல்லையை வரையறுப்பது சுலபமல்ல. அதனால் அந்த விவாதம் கூட சிறிது நேரம் எடுக்கும். முக்கியமாக, யுக்ரேன் மற்றும் ரஷ்யா நேரடியாக பேசுவதில்லை. இருவரும் தனித்தனியாக அமெரிக்காவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அமெரிக்கா இருதரப்புக்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. இதுவும் கால தாமதத்திற்கு காரணமாகிறது. இந்திய மருந்துகள் மீது டிரம்ப் வரி விதிப்பது அமெரிக்க மக்களுக்கே சுமையாக மாறும் அபாயம்15 மார்ச் 2025 அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து டிரம்ப் எழுதிய கடிதத்திற்கு இரானின் பதில் என்ன?11 மார்ச் 2025 சௌதியில் இன்று பேச்சுவார்த்தை: அமெரிக்கா, யுக்ரேன், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் என்ன நினைக்கின்றன?11 மார்ச் 2025 5. பொருளாதார நன்மைகளில் அதிக கவனம் செலுத்தும் அமெரிக்கா ஐந்தாவது, போர் நிறுத்தத்தின் மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகளில் அமெரிக்கா அதிகமாக கவனம் செலுத்துவதாகும். டிரம்ப், அமெரிக்க நிறுவனங்களுக்கு யுக்ரேனின் முக்கியமான கனிம வளங்களை பெற வாய்ப்பு அளிக்கும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க முயற்சித்தார். யுக்ரேனின் எதிர்காலத்தில் அமெரிக்கா முதலீடு செய்வதாக சிலர் இதைப் பார்த்தனர் . ஆனால், மற்றவர்கள் இதை நாட்டின் இயற்கை வளங்களை மிரட்டி லாபம் பெறுவது போல இந்த அணுகுமுறையை கருதினர். ஆரம்பத்தில், எதிர்காலத்தில் ரஷ்யா மீண்டும் ஆக்கிரமிப்பதைத் தடுக்கும் வகையில், யுக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கினால்தான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வேன் என்று அதிபர் செலென்ஸ்கி கூறினார். ஆனால் வெள்ளை மாளிகை அதனை நிராகரித்து, அமெரிக்க சுரங்க நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் யுக்ரேனில் இருப்பதே பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இருக்கும் என தெரிவித்தது. இறுதியில், ஸெலென்ஸ்கி தனது நிலைப்பாட்டை மாற்றி , பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமலேயே கனிம ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்க தயாராகிவிட்டார். ஆனாலும், அமெரிக்கா இன்னும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. யுக்ரேனிய அணுமின் நிலையங்களுக்கான அணுகல் அல்லது உரிமை பெறுவதற்கான வாய்ப்பையும் சேர்த்து மீண்டும் விதிமுறைகளை மேம்படுத்தலாம் என்று அமெரிக்கா நம்புகிறது. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ள மார்க் கார்னி - யார் இவர்?10 மார்ச் 2025 டிரம்ப் தொனியில் மாற்றம் - ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போகிறாரா?8 மார்ச் 2025 உலகையே அச்சுறுத்தும் டிரம்பின் 'வரி விதிப்பு' ஆயுதம் எவ்வாறு செயல்படும்? எளிய விளக்கம்8 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இன்னும் கடினமானதாக வாய்ப்பு போர்களை முடிவுக்கு கொண்டு வருவது கடுமையானதும், அதிக நேரம் எடுக்கும் செயல்முறையாகவும் இருக்கும். டிரம்பின் அழுத்தம் இல்லாமல், போர் நிறுத்த விஷயத்தில் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. ஆனால், அவர் நினைத்ததுபோல் முன்னேற்றம் வேகமாகவோ எளிதானதாகவோ இல்லை. 2018 டிசம்பரில், அதிபர் பதவிக்கு பரப்புரை செய்துகொண்டு இருந்த போது, விளாதிமிர் புதினுடன் நடக்கும் பேச்சுவார்த்தை எளிதாக இருக்கும் என ஸெலென்ஸ்கி கூறினார். "மிகவும் எளிமையான முறையில் பேச வேண்டும்," என்று அவர் யுக்ரேனிய பத்திரிகையாளர் டிமிட்ரோ கார்டனிடம் கூறினார். "உங்களுக்கு என்ன வேண்டும்? உங்கள் நிபந்தனைகள் என்ன?" எனும் கேள்விக்கு, "இதுதான் எங்களுடைய நிலைப்பாடு" என்று நான் பதிலளிப்பேன். பிறகு, இருவருக்கும் பொதுவான ஒரு ஒப்பந்தத்துக்கு வரலாம்." என்றார். ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்தால், அது ஸெலென்ஸ்கி நினைத்ததைவிட மேலும் கடினமாக இருக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c798gjr3p8qo
-
யாழ் - காரைநகர் வீதியில் போட்டிபோட்டு ஓடும் தனியார் பஸ் சாரதிகள் : அச்சத்தில் மக்கள்
24 MAR, 2025 | 11:18 AM யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் போட்டி போட்டு ஓடும் தனியார் பஸ்களினால் பயணிகள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) கீரிமலையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸின் சாரதியும், காரைநகரிலிருந்து யாழ்.நகர் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸின் சாரதியுமே போட்டி போட்டுக்கொண்டு பஸ்ஸை செலுத்தியுள்ளனர். இதில் கீரிமலையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸின் சாரதி சமிஞ்சை விளக்கினை உரியமுறையில் பயன்படுத்தி பஸ்ஸை செலுத்தியபோதும் காரைநகரிலிருந்து யாழ்.நகர் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸின் சாரதி சமிஞ்சை விளக்கினை உரியமுறையில் பயன்படுத்தாது பஸ்ஸை செலுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/210041
-
இலங்கை விமானப்படை விமானம் ஒன்று விபத்து.
சீனாவின் K-18 விமானங்களை பரிசோதனை செய்கிறது இலங்கை Published By: VISHNU 24 MAR, 2025 | 03:04 AM இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அனைத்து K-8 ஜெட் விமானங்களிலும் நிலையான ஆய்வு நடத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவிக்கையில் விமான விபத்து குறித்து ஏழு பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. தேவை ஏற்பட்டால், வெளிநாட்டு ஆய்வுக் குழுக்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் சீனாவில் தயாரிக்கப்பட்ட K-8 ரக ஜெட் விமானங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார் வாரியபொல, மேல் மினுவங்கேட்டின் வெலகெதர பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாகியமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/210028
-
பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது - முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில
Published By: VISHNU 23 MAR, 2025 | 07:46 PM (எம்.மனோசித்ரா) நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையிலிருக்கும் நிலையிலும், நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிவிருந்து நீக்குவது குறித்து பாராளுமன்றத்தால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். சனிக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அது தவறான தகவலாகும். அவ்வாறு தேசபந்து தென்னகோனை தற்போது பொலிஸ்மா அதிபர் பதிவியிலிருந்து நீக்க முடியாது. தற்போது நாட்டில் நீதிமன்ற தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ்மா அதிபருடன், பதில் பொலிஸ்மா அதிபரொருவரும் இருக்கின்றார். வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபருக்குரிய பணிகளை செய்வதற்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் தற்போதும் தேசபந்துவே பொலிஸ்மா அதிபராவார். நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையிலிருக்கும் நிலையிலும், நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் அது குறித்து பாராளுமன்றத்தால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது. அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நேரடியாக நீதித்துறையில் பாராளுமன்றம் ஆதிக்கம் செலுத்துவதாகவே அமையும். எனவே நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை தேசபந்து குறித்த எந்தவொரு தீர்மானத்தையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கவோ, நிறைவேற்றவோ முடியாது. இவ்விவகாரத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பொய் கூறி பாராளுமன்றத்தை ஏமாற்றியிருக்கின்றார். தேசிய மக்கள் சக்தியினர் பொய் கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. பெப்ரவரி 27ஆம் திகதி தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கு நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் மார்ச் 17ஆம் திகதி தான் அவரது வீடு பரிசோதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பஸ்நாயக்க நிலமே ஆகியோரது இல்லங்களே சோதனைக்குட்படுத்தப்பட்டன. நீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்று 20 நாட்களின் பின்னர் தேசபந்துவின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னணியில் அரசாங்கம் அரங்கேற்றும் நாடகமே காணப்படுகிறது. தேசபந்துவின் மனைவி சட்டத்தரணியாவார். பொலிஸார் தமது இல்லத்தை சோதனைக்குட்படுத்தப் போவதில்லை என்பதை அறிந்ததால் தான் அவர் மதுபான போத்தல்களை அப்புறப்படுத்துவதற்கு கூட நடவடிக்கை எடுக்கவில்லை. தேசபந்துவின் நியமனம் சட்ட ரீதியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் 2031ஆம் ஆண்டு வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார். எனவே தான் அவரை கைது செய்வதில் பொலிஸார் பின்வாங்கினர் என்றார். https://www.virakesari.lk/article/210020
-
லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும் 16ஆவது பாதுகாப்பு படைக் குழு
23 MAR, 2025 | 05:51 PM லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் அமைதி காக்கும் பணிக்கு ஏப்ரல் 3ஆம் திகதி புறப்படவுள்ள 16ஆவது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கு கஜபா படையணி தலைமையகத்தில் சம்பிரதாயங்களுக்கமைய அணிவகுப்பு மரியாதை வழங்கியது. நேற்று சனிக்கிழமை (22) இந்நிகழ்வு இடம்பெற்றது. இராணுவத் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி தேசியக் கொடி, ஐக்கிய நாடுகள் சபைக் கொடி, இராணுவக் கொடி மற்றும் கஜபா படையணியின் கொடிகளை சம்பிரதாயமாக இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவின் கட்டளை அதிகாரியிடம் ஒப்படைத்தார். இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பல்வேறு படையணிகளைச் 11 அதிகாரிகள் மற்றும் 114 சிப்பாய்களை உள்ளடக்கிய 16ஆவது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவில் கஜபா படையணியின் லெப்டினன் கேணல் வை.எஸ்.எச்.என்.பீ. சில்வா கட்டளை அதியாரியாகவும், இலங்கை இராணுவ சேவைப் படையணியின் லெப்டினன் கேணல் கேவீஏ கொடிகர பீஎஸ்சீ இரண்டாம் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றுவார்கள். பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, கஜபா படையணியின் படைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் 16ஆவது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவில் உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/210013
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
ஒரேபோட்டியில் குவிக்கப்பட்ட 528 ரன்கள் ! இஷான் கிஷன் சதத்துடன் ஹைதராபாத் அமர்க்கள ஆரம்பம் பட மூலாதாரம்,SUNRISERSHYDERABAD/X PAGE படக்குறிப்பு, 45 பந்துகளில் முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார் இஷான் கிஷன் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 23 மார்ச் 2025 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2025 ஐபிஎல் சீசனையும் கடந்த சீசனைப் போல் அதிரடியாக தொடங்கி, சாதனை வெற்றியுடன் கணக்கைத் தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 2வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது. 287 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் சேர்த்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்து வெற்றி பெற்றது. ஏற்கெனவே 287 ரன்கள் எனும் சாதனை ஸ்கோரையும் சன்ரைசர்ஸ் அணிதான் அடித்திருந்தது. இன்றைய போட்டியில் 300 ரன்களை எட்டுவதற்கு 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டநிலையில் சன்ரைசர்ஸ் ஆட்டம் முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 2 புள்ளிகளுடன் 2.200 என்ற வலுவான நிகர ரன்ரேட்டுடன் ஆர்சிபியை பின்னுக்குத் தள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் இரு அணிகளிலும் சேர்த்து 51 பவுண்டரிகள், 30 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன, மொத்தம் 528 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஹைதராபாத்தில் ஆட்டத்தைக் காண வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் இரு அணியின் பேட்டர்களும் வானவேடிக்கை காண்பித்தனர். மோசமான சாதனை படைத்த பந்து வீச்சாளர்கள் Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு பேட்டிங்கில் சாதனைகள் படைக்கப்பட்டதால், பந்து வீச்சாளர்களுக்கு சோதனையான ஆட்டமாக இருந்தது. ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர், ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவராக மாறினார். கடந்த 2019, 2020 சீசன்களில் ஆர்ச்சரின் பந்துவீச்சு மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. 152 கி.மீ வேகத்தில் பந்துவீசி அச்சுறுத்தலாக திகழ்ந்த ஆர்ச்சர், இன்று 4 ஓவர்கள் வீசி 76 ரன்களை வாரிக்கொடுத்தார். மற்ற பந்துவீச்சாளர்களும் ஆர்ச்சருக்கு சற்றும் குறையவில்லை. தீக்சனா(52), பருக்கீ(49),சந்தீப் சர்மா(51), தேஷ்பாண்டே(44) என ரன்களை வாரிக்கொடுத்தனர். இவர்களில் 3 ஓவர்கள் மட்டுமே வீசிய பரூக்கி அரை சதம் ரன்களை வழங்குவதிலிருந்து 1 ரன்னில் தப்பினார். சன்ரைசர்ஸ் பேட்டர்கள் இந்த ஆட்டத்தில் 17 பந்துகளில் மட்டுமே ரன் ஏதும் எடுக்கவில்லை. ஆட்டநாயகனாக ஜொலித்த இஷான் கிஷன் பட மூலாதாரம்,SUNRISERSHYDERABAD/X PAGE 45 பந்துகளில் ஐபிஎல் போட்டிகளில் முதல் சதம் அடித்த இஷான் கிஷன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். சன்ரைசர்ஸ் அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருது வென்றார். சன்ரைசர்ஸ் அணியில் ஏற்கெனவே டிராவிஸ், அபிஷேக் என அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்குப் போட்டியாக இஷான் கிஷன் வந்துள்ளார். மைண்ட் கேமில் சன்ரைசர்ஸ் X பதிவை கடந்து செல்ல, 1 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு, 1 287 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் பிரமாண்ட இலக்கோடு ராஜஸ்தான் அணி களமிறங்கியது. இது போன்று இமாலய இலக்கை எடுத்துவிட்டாலே எதிரணி மனரீதியாக நம்பிக்கையிழந்து உடைந்து விடுவார்கள். இதன் பின்னர் எளிதாக பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி ஆட்டமிழக்கச் செய்து, நிகர ரன்ரேட்டை உயர்த்திக்கொள்வது கிரிக்கெட்டின் "உளவியல் ஆட்டத்தில்" முக்கியமான அஸ்திரமாகும். ஒருவரை மனரீதியாக வீழ்த்திவிட்டாலே பாதி வெற்றி கிடைத்ததுபோன்றது. இந்த கலையை சன்ரைசர்ஸ் அணி கடந்த சீசனில் இருந்து சிறப்பாகச் செய்து வருகிறது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் " 280 ரன்களுக்குமேல் அடிப்போம் என எதிர்பார்க்கவில்லை,வியப்பாக இருக்கிறது. ஏதாவது ஒரு அணி இதுபோன்று பெரிய ஸ்கோரை எடுத்துவிட்டாலே ஆட்டம் ஒருதரப்புதான் ரன்களை துரத்திச்செல்லும்போது, ஆட்டம் கடினமானதாக மாறிவிடும் . இஷான் ஆட்டம் அற்புதமாக இருந்தது. முதல் ஆட்டத்துக்கு தயாரானதே பிரமிப்பாக இருந்தது, எங்களின் பயிற்சியாளர்களும் அற்புதமானவர்கள், அனைத்து வீரர்களும் தயாராக இருந்ததால், சரியான நேரத்தில் திறமையை வெளிப்படுத்த முடிந்தது" எனத் தெரிவித்தார். அதிரடித் தொடக்கம் பட மூலாதாரம்,SUNRISERSHYDERABAD/X PAGE இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணிக்காக கடந்த சீசனில் பல சாதனைகளைச் செய்த டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா கூட்டணி இந்த முறையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதல் ஓவரிலிருந்து டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் சர்மாவும் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை வெளுத்து கட்டினர். ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் பரூக்கி, சந்தீப் சர்மா ஓவர்களை அபிஷேக், ஹெட் என இருவரும் துவம்சம் செய்தனர். பவுண்டரி, சிக்ஸர் என ஓவருக்கு 10 ரன்ரேட்டில் ஸ்கோர் உயர்ந்தது. இந்தப் போட்டியிலும் ஏதோ சம்பவம் செய்ய காத்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். 3.4 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 50 ரன்களை எட்டியது. இருவரின் பேட்டிங்கைப் பார்த்து மிரண்டு, சுழற்பந்துவீச்சாளர் தீக்சனாவை பந்துவீச அழைத்தார் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக். இது கைமேல் பலன் கொடுத்தது அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 11 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்த நிலையில் தீக்சனா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். முதல் விக்கெட்டுக்கு 19 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஹெட் அரைசதம் அடுத்ததாக சன்ரைசர்ஸ் அணிக்கு புதிதாக வந்துள்ள இஷான் கிஷன் களமிறங்கி டிராவிஸ் ஹெட்டுன் சேர்ந்தார். ஏற்கெனவே டிராவிஸ் ஹெட் ராட்சசத்தனமாக ஆடிவரும் நிலையில், அத்தோடு இஷான் கிஷனும் சேர்ந்து கொண்டு வெளுத்து வாங்கினார். ஆர்ச்சர் பந்துவீச அழைக்கப்பட்ட முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் சிக்ஸர், பவுண்டரி என 21 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே முடிவில் சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்து, ஐபிஎல் வரலாற்றில் 5வது அதிகபட்ச பவர்ப்ளே ரன்கள் என்ற சாதனை படைத்தது. பவுண்டரிகளாகப் பறக்கவிட்ட டிராவிஸ் ஹெட் 21 பந்துகளில் அரைசதம் எட்டினார். தேஷ்பாண்டே வீசிய 10-வது ஓவரில் ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து 31 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து(9பவுண்டரி, 3 சிக்ஸர்) ஹெட் ஆட்டமிழந்தார். இஷான், டிராவிஸ் கூட்டணி 38 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து பிரிந்தனர். 10 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. இஷான் சரவெடி ஆட்டம் X பதிவை கடந்து செல்ல, 2 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு, 2 அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷனுடன் சேர்ந்தார். ஹெட், அபிஷேக் ஆட்டமிழந்தால் என்ன நான் இருக்கிறேன் என்று ராஜஸ்தான் பந்துவீச்சை இஷான் கிஷன் வெளுக்கத் தொடங்கினார். ஆர்ச்சர் வீசிய 13வது ஓவரில் 3 சிக்ஸர்கள் உள்பட 22 ரன்கள் சேர்த்த இஷான் கிஷன் 25 பந்துகளில் அரைசதம் எட்டினார். தீக்சனா வீசிய 15-வது ஓவரில் நிதிஷ் குமார் 30 ரன்கள் சேர்த்தநிலையில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த கிளாசன், இஷானுடன் சேர்ந்தார். சந்தீப் சர்மா வீசிய 17-வது ஓவரில் சிக்ஸர் பவுண்டரி என 14 ரன்களை கிளாசன் எடுத்தார். ஆர்ச்சர் வீசிய 18-வதுஓவரை துவம்சம் செய்த கிளாசன் 4 பவுண்டரிகள் உள்பட 23 ரன்கள் சேர்த்தார். சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் ரியான் பராக்கிடம் கேட்ச் கொடுத்து கிளாசன் ஆட்டமிழந்தார். இவர் 14 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 34 ரன்கள் சேர்த்திருந்தார். அதே ஓவரில் இஷான் கிஷன் 2 சிக்ஸர்களை விளாசி 45 பந்துகளில் ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை நிறைவு செய்தார். 225 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய இஷான் கிஷன், 25 பந்துகளில் அரை சதம் அடித்தார். அடுத்த 50 ரன்களை வெறும் 20 பந்துகளில் விளாசி சதத்தைக் கடந்தார். தேஷ்பாண்டே வீசிய கடைசி ஓவரில் அங்கித்(7), அபினவ் மனோகர்(0) என விக்கெட்டை இழந்தனர். எனினும் இஷான் கிஷன் கடைசிப்பந்தில் பவுண்டரியுடன் இன்னிங்ஸை முடித்தார். 47 பந்துகளில் 106 ரன்களுடன்(11பவுண்டரி, 6 சிக்ஸர்) இஷான் கிஷன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இஷான் கிஷன் கடைசிவரை களத்தில் இருந்ததால்தான் சன்ரைசர்ஸ் அணியால் பெரியஸ்கோரைக் குவிக்க முடிந்தது. 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் தீக்சனா 52 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். விக்கெட் சரிவு 287 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கு இருந்த போதும், ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் நம்பிக்கையளிக்கும் விதத்தில் பேட்டிங்கை தொடங்கினார். ஷமி வீசிய முதல் ஓவரிலேயே சாம்ஸன் சிக்ஸர், 2 பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். சிமர்ஜித் வீசிய 2வது ஓவரில் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் மனோகரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த கேப்டன் பராக், ஒரு பவுண்டரி அடித்தநிலையில் அதே ஓவரின் 5வது பந்தில் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து 4ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது ஓவரிலேயே ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 3வது விக்கெட்டுக்கு சாம்ஸன், நிதிஷ் ராணா சேர்ந்தனர். சாம்ஸன் வழக்கம்போல் சிக்ஸர், பவுண்டரி என விளாசியதால் ரன்ரேட் குறையாமல் சென்றது. ராணா 11 ரன்னில் ஷமி பந்துவீச்சில் கம்மின்ஸிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்து ஜூரெல் களமிறங்கினார். கம்மின்ஸ் வீசிய 6வது ஓவரில் ஒரு சிக்ஸர் 3 பவுண்டரி என 20 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்தது. நம்பிக்கையளித்த சாம்ஸன், ஜூரெல் X பதிவை கடந்து செல்ல, 3 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு, 3 சாம்ஸனும், துருவ் ஜூரெலும் இணைந்து அதிரடியாக ஆடி சன்ரைசர்ஸ் அணிக்கு சவால் விடுக்கம் வகையில் ஸ்கோரை உயர்த்தினர். 9-வது ஓவரிலேயே ராஜஸ்தான் அணியும் 100 ரன்களை எட்டியது. 10ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தனர். சாம்ஸன் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிமர்ஜித் வீசிய 13-வது ஓவரில் ஜூரெல் 3 சிக்ஸர்களும், சாம்ஸன் ஒருபவுண்டரி என 26 ரன்கள்சேர்த்தனர். 28 பந்துகளில் ஜூரெல் அரைசதம் எட்டினார். ஹர்சல் படேல் வீசிய 14வது ஓவரில் விக்கெட் கீப்பர் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து சாம்ஸன் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 7பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். ஆடம் ஸம்பா வீசிய 15-வது ஓவரில் ஜூரெல் 35 பந்துகளில் 70 ரன்கள் (5பவுண்டரி, 6 சிக்ஸர்) சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து ஷுபம் துபே, ஹெட்மயர் அதிரடியால் ராஜஸ்தான் அணி 17.2 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. கடைசி இரு ஓவர்களில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு 70 ரன்கள் தேவைப்பட்டது. ஹெட்மயர், ஷுபம் துபே இருவரும் கடைசிவரை போராடியும் தோல்வியில் முடிந்தது. ஹெட்மயர் 42 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் ஹர்சல் படேலிடம் விக்கெட்டை இழந்தார். ஷுபம் துபே 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் சேர்த்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹர்ஷல் படேல், சிமர்ஜித் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq6y38n212ro
-
யாழில் அதிகரிக்கும் இணைய நிதி மோசடி!
24 MAR, 2025 | 09:50 AM யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக பல்வேறு பகுதிகளிலும் இணையம் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இவ்வாறான நிதி மோசடிகள் ஊர்காவற்துறை பகுதியில் மாத்திரம் நன்கு இடம்பெற்றுள்ள நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்த இணைய மோசடிகள் பல்வேறு வகையில் இடம்பெற்று வருகின்றன. நிகழ்நிலை செயலி (online App) ஒன்றினை மக்களிடையே பகிர்ந்து அதில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகிறது. அந்த செயலியில் ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலிடுவதன் மூலம் சிறிய அளவிலான கொடுப்பனவு வழங்கப்படுகிறது. மக்கள் முதல் வருமானத்தை நம்பி அடுத்த தடவை பெரிய ஒரு தொகையை முதலீடு செய்யும் பட்சத்தில் அந்த நிதியானது மோசடியாளர்களால் அபகரிக்கப்படுகிறது. மேலும், வங்கி கணக்கில் பணத்தினை வைப்புச் செய்துள்ளவர்களது கணக்கு இலக்கங்கள் மற்றும் அடையாள அட்டை இலக்கங்கள் என்பன ஆசை வார்த்தை கூறி மக்களிடமிருந்து மோசடியாளர்களால் பெறப்படுகிறது. பின்னர் அவர்களது கைபேசிக்கு இரகசிய இலக்கம் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து அந்த இரகசிய இலக்கமானது பெறப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் உள்ள பணம் மோசடி செய்யப்படுகிறது. இவ்வாறான சம்பவங்கள் சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து காணப்படுகின்றன. ஊர்காவற்துறை நீதிமன்றத்திலும் இவ்வாறான வழக்குகள் காணப்படுகின்றபடியால் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210036
-
பனிப்போரின் பாதையை மாற்றிய கோர்வ்டிஸ்கி காலமானார் - ரஸ்யா அணுவாயு தாக்குதலில் ஈடுபடலாம் என எச்சரித்தவர்
ரஸ்யாவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு மிக முக்கிய தகவல்களை வழங்கி பனிப்போரின் பாதையை மாற்றிய கோர்வ்டிஸ்கி காலமானார் - ரஸ்யா அணுவாயு தாக்குதலில் ஈடுபடலாம் என எச்சரித்தவர் Published By: RAJEEBAN 23 MAR, 2025 | 01:29 PM ரஸ்யாவின் புலனாய்வு பிரிவான கேஜிபிக்குள் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு மிகமுக்கியமான புலனாய்வு தகவல்களை வழங்கி பனிப்போரின் பாதையை மாற்றிய ஒலெக் கோர்வ்டிஸ்கி தனது 86 வயதில் காலமானார். 1985 இல் ரஸ்யாவிலிருந் தப்பிவந்து பிரிட்டனில் வாழ்ந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ள அவரின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளனர். பனிப்போர் யுத்த காலத்தின் மிக முக்கியமான உளவாளிகளில் ஒருவர் இவர் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். 1980களில் சோவித் யூனியனிற்கும் மேற்குலகிற்கும் இடையில் அணுவாயுத போர் வெடிக்கும் ஆபத்தான நிலையை தணித்தவர் இவரே. மொஸ்கோவில் 1938 இல் பிறந்த ஒலெக் கோர்வ்டிஸ்கி சோவியத் யூனியனின் கேஜபியில் 1960களில் இணைந்து கொண்ட பின்னர் லண்டன் கொப்பன்ஹேகன் உட்பட பல நாடுகளில் பணியாற்றினார். லண்டனிற்கான கேஜிபியின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். 1968 இல் பிராக்கின் சுதந்திர இயக்கத்தை சோவியத்யூனியனின் டாங்கிகள் நசுக்கி அழித்தது குறித்து சோவியத்தின் பல உளவாளிகள் அதிருப்தியடைந்தனர், இவர்களை பிரிட்டன் 1970களில் தனது எம்16 புலனாய்வு பிரிவிற்குள் உள்வாங்கியது. 1990 இல் ஒலெக் கோர்வ்டிஸ்கியும், பிரிட்டனின் புலனாய்வு வரலாற்றிசிரியர் கிறிஸ்டொபெர் அன்ரூவும் இணைந்து எழுதிய கேஜிபி ஒரு உள்கதை என்ற புத்தகம் பல விபரங்களை வெளிப்படுத்தியது.'' ஒரு கம்யுனிஸ்ட் கட்சி அரசாங்கம், தவிர்க்க முடியாமல் சகிப்புத்தன்மை, மனிதாபிமானமற்ற தன்மை போன்றவற்றை உருவாக்குகின்றது, சுதந்திரங்களை அழிப்பதற்கு வழிவகுக்கின்றது என கோர்வ்டிஸ்கி கருதினார் என அன்ரூ தெரிவித்திருந்தார். பனிப்போரின் மிகவும் அச்சமூட்டும் காலப்பகுதிகளில் ஒலெக் கோர்வ்டிஸ்கி பிரிட்டனிற்காக பணிபுரிந்தார். 1983ம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டனின் அணுவாயுத தாக்குதல் குறித்து சோவியத்யூனியனின் அரசியல் தலைமை மிகுந்த அச்சம் கொண்டுள்ளது, முன்கூட்டியே தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிடுகின்றது என கோர்வ்டிஸ்கி எச்சரித்தார். அவ்வேளை ஜேர்மனியில் இடம்பெற்ற நேட்டோவின் ஒத்திகையால் பதற்றநிலை உருவானது. எனினும் அது ஒரு அணுவாயுத தாக்குதலிற்கான ஒத்திகையல்ல என மொஸ்கோவின் அரசியல் தலைமைகளிற்கு தெளிவுபடுத்திய கோர்வ்டிஸ்கி பதற்ற நிலையை தணித்தார். அதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் சோவியத்யூனியனுடனான அணுவாயு பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1985 இல் கோர்வ்டிஸ்கியை மொஸ்கோ பிரிட்டனில் இருந்து கலந்தாலோசனைகளிற்காக அழைத்தது, தான் இரட்டை முகவர் என்பது தெரிந்துவிட்டது என்பதை அறிந்த அவர் அச்சத்துடன் ரஸயா சென்றார். அவர் விசாரிக்கப்பட்டார், ஆனால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை. இதன் பின்னர் இரகசிய நடவடிக்கையொன்றின் மூலம் அவரை பிரிட்டன் ரஸ்யாவிலிருந்து மீட்டுக்கொண்டுவந்தது. கெடுபிடி யுத்த காலத்தில் சோவியத்யூனியனில் இருந்து பிரிட்டனிற்கு தப்பிச்சென்ற சிரேஸ்ட உளவாளி இவர். பிரிட்டன் கோர்வ்டிஸ்கியை மிகவும் பெறுமதியானவராக கருதியது. இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் அவருடன் இணைவதற்கு அனுமதித்தால், அவர் அம்பலப்படுத்திய கேஜிபி உளவாளிகளை பிரிட்டன் நாடு கடத்தாது என மார்க்கிரட் தட்ச்சர் அறிவித்தார். எனினும் ரஸ்யா இந்த நிபந்தனையை ஏற்க மறுத்தது, இதன் காரணமாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சரின் அதிருப்தியையும் மீறி பிரதமர் மார்க்கிரட் தட்;ச்சர் 25 கேஜிபி உளவாளிகளை பிரிட்டனில் இருந்து நாடு கடத்தியது. மொஸ்கோ பதிலுக்கு 25 பிரிட்டிஸ் பிரஜைகளை நாடு கடத்தியது - இரண்டு நாடுளும் தொடர்ந்தும் பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டன, ஆனால் உறவுகள் பாதிக்கப்படவில்லை. ஆறுவருடங்கள் கோர்வ்டிஸ்கியின் குடும்பத்தை 24 மணிநேர கண்காணிப்பின் கீழ் வைத்திருந்த கேஜிபி 1991 இல் அவர்கள் அவருடன் இணைய அனுமதித்தது. https://www.virakesari.lk/article/209989
-
இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு!
இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸின் மூத்த அரசியல் தலைவர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸாவின் கான் யூனுஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் மூத்த அரசியல் தலைவர் சலா அல்-பர்தாவீல் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். ஹமாஸின் உயர்நிலை அரசியல் தலைவரான பர்தாவீல் மற்றும் அவரது மனைவி என இருவருமே கொல்லப்பட்டதாக உள்ளூர் நபர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய அதிகாரிகள் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கான் யூனிஸ் மற்றும் தெற்கு ரஃபாவில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. காஸாவில் மீண்டும் தீவிர தாக்குதல்களை இந்த வாரத்தில் இஸ்ரேல் தொடங்கியது. சுமார் 2 மாதங்களாக நடைமுறையில் இருந்த முதல் கட்ட போர் நிறுத்தம் இதனால் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்கும் அமெரிக்காவின் முன்மொழிவை ஹமாஸ் ஏற்க மறுத்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. மற்றொருபுறம் கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட உண்மையான உடன்படிக்கையை இஸ்ரேல் மீறிவிட்டதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த உடன்படிக்கையின்படி, இஸ்ரேலிய படைகளை திரும்ப பெறுவது, இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலத்தீன சிறைக்கைதிகளை படிப்படியாக விடுவிப்பது, போரை முழுவதுமாக நிறுத்தி காஸாவை மறு கட்டமைப்பு செய்வது போன்றவை திட்டமிடப்பட்டிருந்தது. இந்திய மருந்துகள் மீது டிரம்ப் வரி விதிப்பது அமெரிக்க மக்களுக்கே சுமையாக மாறும் அபாயம் ஐரோப்பாவின் பரபரப்பான ஹீத்ரோ விமான நிலையத்தை ஒரே ஒரு தீ விபத்து முடக்கியது எப்படி? அகதிகள் முகாமில் பிறந்தவர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஞாயிற்றுக்கிழமையன்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலின் ஏவுகணை தாக்கிய போது பர்தாவீல் மற்றும் அவரது மனைவி தங்களின் கூடாரத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 8 குழந்தைகளின் தந்தையான பர்தாவீல் ஹமாஸின் பிரபலமான அரசியல் ஆளுமையாக உள்ளார். கான் யூனிஸின் அகதிகள் முகாமில் பிறந்த இவர், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாருக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். ஹமாஸ் அமைப்பை நிறுவியவர்களை அடுத்து இரண்டாம் தலைமுறை தலைவர்களில் ஒருவராகவும் இவர் கருதப்பட்டார். ஹமாஸின் அரசியல் பிரிவுக்கு 2021-ஆம் ஆண்டு இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் போரில் சின்வார் மற்றும் ராவி முஷ்டாஹா கொல்லப்பட்ட பின்னர், பர்தாவீல் ஹமாஸின் உயர்நிலை அரசியல் தலைவராக கருதப்பட்டார் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த செவ்வாய்க்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் தெற்கு காஸாவில் தொடர்ச்சியான தீவிர குண்டு வீச்சுக்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடந்த வான்வழித் தாக்குதலில்தான் பர்தாவீல் கொல்லப்பட்டுள்ளார். பிபிசியிடம் பேசிய பாலத்தீனிய செம்பிறை சங்க செய்தி தொடர்பாளர் ஒருவர், ரஃபாவில் குண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அணுக முயன்ற அந்த அமைப்பின் பல ஆம்புலன்ஸ்களை இஸ்ரேலிய படைகள் சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிவித்தார். துணை மருத்துவப் பணியாளர்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும், காஸாவினுள் சிக்கியிருக்கும் மருத்துவக்குழு ஒன்றுடன் தொடர்பு பல மணி நேரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறினார். மேற்கு ரஃபாவில் உள்ள டெல் அல் சுல்தான் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. சீன இளைஞர்கள் சொந்தக் கவலைகளை டீப்சீக் செயலியிடம் புலம்பித் தள்ளுவது ஏன்?21 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ் போல விண்வெளி வீரராவது எப்படி? என்ன படிக்க வேண்டும்?23 மார்ச் 2025 ஆதவி: பொம்மைகளுடன் விளையாடும் வயதில் 'கார்பன் நியூட்ரல்' அங்கீகாரம் பெற்ற குழந்தை18 மார்ச் 2025 தரைவழியாகவும் தாக்குதல் பட மூலாதாரம்,GETTY IMAGES எகிப்து எல்லையிலுள்ள ஃபிலாடெல்ஃபி பாதையில் நிலைத் நிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய படைகளால் கவசவாகன (Tank) தாக்குதல்கள், மற்றும் ஹெலிகாப்டர் தாக்குதலும் நடத்தப்படுகிறது. அப்பகுதியின் அருகே வசிக்கும் அலா அல்-தின் சபா பிபிசியிடம் குரல் பதிவு தகவல் மூலம் அளித்த தகவலின்படி,"மழை பொழிவது போன்று தோட்டாக்கள் பொழிகின்றன. ஒரு பெண்ணுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவரை ஆம்புலன்ஸ் அணுக முடியவில்லை" என்றார். "துணை மருத்துவப் பணியாளர் ஒருவர் தரையில் விழுந்து கத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்" என்றும் அவர் கூறினார். 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் 1200 பேரைக் கொன்றனர், 251 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக தகர்க்கும் முனைப்புடன் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதுவரையிலான தாக்குதல்களில் 49,500 பாலத்தீனியர்கள் காஸாவில் கொல்லப்பட்டதாக ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c337k1p04d6o
-
இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடுகள் - தடுப்பு நடவடிக்கை குறித்து கூட்டம் நடத்திய ஜனாதிபதி
பட மூலாதாரம்,BBC SINHALA படக்குறிப்பு, இலங்கையின் பிரபல நிழலுலக நபராக விளங்கிய கனேமுல்ல சஞ்ஜீவ என அழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்ன, கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களினால் நடத்தப்படும் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை சமீபத்திய காலங்களில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இலங்கை தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (21) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. மாத்தறை வரலாற்று சிறப்பு மிக்க தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. சிறிய ரக வேன் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ரி-56 ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகிய இரண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமையும் ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் மற்றும் கைத்துப்பாக்கியொன்றின் துப்பாக்கி ரவைகள் போலீஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான கருணா - பிள்ளையான் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்தது ஏன்? இலங்கையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூராட்சி சபைத் தேர்தல் - எப்போது, எப்படி நடக்கும்? இலங்கையில் தலைமறைவாக இருந்தபோலீஸ் மாஅதிபர் சரண் - 'பிரபாகரனை தேடுவதை போன்று தேடினோம்' இந்திய மீனவர்களுக்கு எதிராக கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்க இலங்கையில் தீர்மானம் தேவேந்திரமுனை - கப்புகம்புர பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பிய இரண்டு நண்பர்களை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, துப்பாக்கி சூட்டை நடத்துவதற்காக சந்தேக நபர்கள் வருகை தந்த வேன், துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள குறுக்கு வீதியொன்றில் தீக்கிரையான நிலையில் போலீஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய சந்தேக நபர்கள், வேனை தீக்கிரையாக்கி, அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர். நூறாவது ஆண்டில் ஆர்எஸ்எஸ்: நிதி எங்கிருந்து வருகிறது? பாஜகவுடன் என்ன உறவு? முழு விவரம்23 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ் போல விண்வெளி வீரராவது எப்படி? என்ன படிக்க வேண்டும்?23 மார்ச் 2025 துப்பாக்கி பிரயோகத்தில் தேவேந்திரமுனை பகுதியை சேர்ந்த 28 மற்றும் 29 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய சந்தேக நபர்கள் மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை நடத்துவதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என போலீஸார் குறிப்பிடுகின்றனர். இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்காக போலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,BBC SINHALA 2025 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பான ஒரு பார்வை 2025ம் ஆண்டின் தொடக்கம் முதல் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை வரை பதிவான தகவல்களின் பிரகாரம், 27 துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம், பிபிசி தமிழுக்கு தெரிவித்தது. இந்த துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு பதிவான துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 18 சம்பவங்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை என போலீஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய 9 துப்பாக்கி பிரயோகங்களும் தனிப்பட்ட காரணங்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்கள் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு நடத்தப்பட்ட அனைத்து துப்பாக்கி பிரயோகங்களிலும் இதுவரை 76 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோக சம்பவங்களுடன் நேரடியாக மற்றும் மறைமுகமாக தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் குறிபபிடுகின்றனர். சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? முதல் ஆட்டத்திலேயே சர்ச்சை23 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸுக்கு 5$ தானா? - ஓவர் டைம் தொகை குறித்து டிரம்ப் கூறியது என்ன?22 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் பிரபல நிழலுலக நபராக விளங்கிய கனேமுல்ல சஞ்ஜீவ என அழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்ன, கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டார். கொழும்பு - புதுகடை நீதவான் நீதிமன்ற விசாரணை கூட்டில் விசாரணைக்காக நின்றுகொண்டிருந்த தருணத்தில், வழக்கறிஞர் வேடத்தில் வருகை தந்த துப்பாக்கிதாரியினால் நீதிமன்றத்தில் வைத்து இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருந்தது. நீதிமன்றத்துக்குள் வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமையானது, நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. இந்த நிலையில், இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய சந்தேக நபர்கள், நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்ற போதிலும், 8 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டனர். தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட சென்னை கூட்டத்தில் தீர்மானம் ஏன்? - முந்தைய நிலைப்பாட்டில் மாற்றமா?22 மார்ச் 2025 மும்பை இந்தியன்சுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸின் துருப்புச்சீட்டு யார்?23 மார்ச் 2025 எனினும், இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக விளங்கிய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை கைது செய்வதற்கான விசாரணைகளை போலீஸார் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர். இஷாரா செவ்வந்தி, இந்தியா அல்லது மாலத்தீவுக்கு கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிப்பதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அத்துடன், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இவ்வாறு இடம்பெறுகின்ற திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் போலீஸ் அதிகாரிகள், ராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் தொடர்புப்பட்டுள்ளமையை போலீஸார் உறுதி செய்துள்ளதுடன், சிறைச்சாலை அதிகாரிகள் குறித்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி நடவடிக்கை கோவையில் அடுத்தடுத்து 2 சட்டவிரோத குழந்தை தத்து சம்பவங்கள் - 15 பேர் கைது; என்ன நடந்தது?22 மார்ச் 2025 மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது?23 மார்ச் 2025 பட மூலாதாரம்,PMD MEDIA இலங்கையில் இடம்பெற்று வரும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் நோக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த 18ம் தேதி விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. திட்டமிட்ட குற்றச் செயல்கள் அதிகளவில் இடம்பெறும் மேல் மற்றும் தென் மாகாண போலீஸ் உயர் அதிகாரிகளையே ஜனாதிபதி இவ்வாறு சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமல்லாது, புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார். சட்ட ஆட்சியை பாதுகாக்கும் பொறுப்பு, போலீஸ் திணைக்களம் வசமானது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்குள் சட்ட ஆட்சியை பாதுகாக்காது, சிறந்த சமூகமொன்றை உருவாக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy05zn1vqyeo
-
யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிற்கும் இடையில் மோதல்
23 MAR, 2025 | 09:09 PM முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் மோதலில் ஈடுபடுவதை காண்பிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு விடுதிக்கு வெளியே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதல்கள் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன. பவுன்சர் ஒருவர் காயமடைந்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோஷித ராஜபக்சவுடன் சென்றவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிற்கும் இடையில் மோதல் இடம்பெற்றது சந்தேகநபர்கள் திம்பிரிகசாய, தெகிவள அத்திடியவை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/210023
-
தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற வளாகத்திற்குள் புதிய கட்டிடம்; - இன்று திறப்பதற்கு ஏற்பாடு
இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என தெரிவித்துக்கொண்டு அனுர தமிழர் பகுதிகளில் மேலும் மேலும் பௌத்தவிரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் - தையிட்டி விகாரைக்குள் புதிய கட்டிடம் குறித்து கஜேந்திரன் Published By: RAJEEBAN 23 MAR, 2025 | 12:38 PM கடந்த ஜனாதிபதி தேர்தலிலே நாடாளுமன்ற தேர்தலிலே அற்ப சலுகைகளிற்காக, இந்த இனவாத அரசாங்கத்திற்கு ,ஆதரவு வழங்கிய தமிழ் புத்திஜீவிகளும் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள். அனுர ஒரு புறத்திலே தான் இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என சொல்லிக்கொண்டு, இங்கே மேலும் மேலும் இந்த பௌத்த விரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. காணி உரிமையாளர்களும் இவ்வாறான தகவல் கிடைத்ததன் பேரில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இன்று இங்கே இராணுவத்தினரின் வாகனங்கள் அதிகளவில் வந்து ஏற்றி இறக்குகின்ற பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன, இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றநிலையிலே, இரண்டு நாட்களிற்கு முன்னர் கூட கொழும்பிலே காணி உரிமையாளர்களை அமைச்சர் சந்தித்து இது உங்களுடைய காணிகள் என சொன்னால் விடுவிப்போம் என ஒரு புறத்தில் கூறிக்கொண்டு, மறு புறத்திலே அதே அரச இயந்திரம், இந்த சட்டவிரோத விகாரைக்குள் அமைக்கப்பட்ட கட்டிட திறப்பு விழாவிற்காக தங்களின் அரச வளங்களை பயன்படுத்திக்கொண்டிருப்பது என்பது, அனுர அரசின் இரட்டை முகத்தை காட்டுகின்றது. அனுர ஒரு புறத்திலே தான் இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என சொல்லிக்கொண்டு, இங்கே மேலும் மேலும் இந்த பௌத்த விரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்,. அவருடைய தலைமையிலே முன்னெடுக்கின்றனர், பாதுகாப்பு அமைச்சரும் அவர்தான், பௌத்த விவகார அமைச்சரும் அவர்தான். எங்கள் மக்கள் இதனை புரிந்துகொள்ளவேண்டும், கடந்த ஜனாதிபதி தேர்தலிலே நாடாளுமன்ற தேர்தலிலே அற்ப சலுகைகளிற்காக, இந்த இனவாத அரசாங்கத்திற்கு ,ஆதரவு வழங்கிய தமிழ் புத்திஜீவிகளும் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள். இதனுடைய விளைவுகள் எதிர்காலத்தில் எவ்வாறு வந்து முடியும் என்பதை காலம்தான் சொல்லவேண்டும். இந்த திறப்பு விழா நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என்பது போராட்டக்காராகளின் காணி உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது. எந்த வகையிலும் இது நியாயப்படுத்த முடியாத ஏற்றுக்கொள்ள முடியாத, ஆக்கிரமிப்பு நடவடிக்கை. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ்குடாநாட்டில் உள்ள மக்கள் பெருமளவிலே திரண்டு வரவேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். https://www.virakesari.lk/article/209979
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான் முதல் சதம் குவித்து அசத்தல்; RRஐ வென்றது SHR Published By: VISHNU 23 MAR, 2025 | 09:38 PM (நெவில் அன்தனி) ஹைதராபாத், உப்பல் ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் (RR) அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இஷான் கிஷான் இந்த வருடத்திற்கான முதலாவது சதத்தைக் குவிக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) 44 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களைக் குவித்தது. ட்ரவிஸ் ஹெட் குவித்த அதிரடி அரைச் சதம், இஷான் கிஷான் ஆக்ரோஷமாகக் குவித்த ஆட்டம் இழக்காத சதம் என்பன சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கணிசமான மொத்த எண்ணிக்கைக்கு பெரிதும் உதவின. மேலும், ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணிக்கான இரண்டாவது அதிகூடிய மொத்த எண்ணிக்கையை இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் பதிவுசெய்தது. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குவித்த 287 ஓட்டங்களே ஐபிஎல் இல் ஓர் அணி பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும். இன்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா (24), ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 19 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து அதிரடி ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து ட்ரவிஸ் ஹெட், இஷான் கிஷான் ஆகிய இருவரும் 38 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 130 ஓட்டங்களாக உயர்த்தினர். ட்ரவிஸ் ஹெட் 31 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களைக் குவித்தார். தொடர்ந்து மறுபக்கத்தில் அபார ஆற்றலை வெளிப்படுத்திய இஷான் கிஷான் 3ஆவது விக்கெட்டில் நிட்டிஷ் குமார் ரெட்டியுடன் 29 பந்துகளில் 72 ஓட்டங்களையும் 4ஆவது விக்கெட்டில் ஹென்ரிச் க்ளாசனுடன் 24 பந்துகளில் 56 ஓட்டங்களையும் பகிர்ந்தார். இஷான் கிஷான் 47 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 106 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். நிட்டிஷ் குமார் ரெட்டி 30 ஓட்டங்களையும் ஹென்றிச் க்ளாசன் 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 287 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது. ராஜஸ்தான் றோயல்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. யஷஸ்வி ஜய்ஸ்வால் (1), அணித் தலைவர் ரெயான் பரக் (4) நிட்டிஷ் ராணா (11) ஆகிய மூவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (50 - 3 விக்.) ஆனால், சஞ்சு செம்சன், த்ருவ் ஜுரெல் ஆகிய இருவரும் அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 59 பந்துகளில் 111 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். சஞ்ச செம்சன் 37 பந்துகளில் 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 66 ஓட்டங்களையும் த்ருவ் ஜுவெல் 35 பந்துகளில் 5 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களையும் குவித்தனர். அவர்கள் இருவரும் மொத்த எண்ணிக்கை 161 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தனர். மத்திய வரிசையில் ஷிம்ரன் ஹெட்மயர் 23 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களையும் ஷுபம் டுபே 11 பந்துகளில் ஒரு சிக்ஸ், 4 பவுண்டறிகள் உட்பட ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 33 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் ஹர்ஷால் பட்டேல் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சிமர்ஜீத் சிங் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: இஷான் கிஷான் https://www.virakesari.lk/article/210024
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன் அண்ணா, வளத்துடன் வாழ்க. பிறந்தநாள் வாழ்த்துக்கள் த.கா.ராஜா, வளத்துடன் வாழ்க.
-
'4-5 சாக்கு மூட்டைகளில் பணம்': டெல்லி ஐகோர்ட் நீதிபதி சர்ச்சை பற்றி உச்ச நீதிமன்றம் அறிக்கை
பட மூலாதாரம், ALLAHABADHIGHCOURT.IN படக்குறிப்பு, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டிலிருந்து எரிந்த நிலையில் அதிகளவிலான பணம் கண்டெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், உமாங் போடார் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் நேற்று, மார்ச் 22 அன்று அதுதொடர்பான அறிக்கையை பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. யஷ்வந்த் வர்மா குறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வெளியிட்ட அறிக்கை மற்றும் அதற்கு வர்மா அளித்துள்ள பதிலறிக்கை ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. எரிந்த நிலையில் இருந்த பணம் தொடர்பாக டெல்லி காவல்துறையால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அந்த அறிக்கைகளில் உள்ளன. எனினும், அந்த அறிக்கையின் சில பகுதிகள் கருப்பு நிறத்தில் மறைக்கப்பட்டுள்ளன. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் புது டெல்லியில் உள்ள அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து பெருமளவு பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக, அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த பணம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் அவருடைய வீட்டின் சேமிப்பு அறையில் கடந்த 14-ஆம் தேதி தீ பரவியது. இதுதொடர்பாக, முதல் கட்ட விசாரணை நடத்துமாறு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிகே உபத்யாய்-க்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார். இந்த விவகாரம் குறித்து 'விரிவான விசாரணை' நடத்தப்பட வேண்டும் என்று, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார் டிகே உபத்யாய். அதேசமயம், தானோ அல்லது தன்னுடைய குடும்பத்தினரோ சேமிப்பு அறையில் ஒருபோதும் பணத்தை வைத்ததில்லை என்றும் தனக்கு எதிரான சதி இது என்றும் நீதிபதி யஷ்வந்த் வர்மா தெரிவித்தார். டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,SUPREME COURT படக்குறிப்பு, எரிந்த பணம் தொடர்பான படங்களும் உச்ச நீதிமன்ற அறிக்கையில் உள்ளன மார்ச் 15 அன்று, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ பரவியதாக, டெல்லி காவல் ஆணையரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிகே உபத்யாய் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். காவல் ஆணையர் அதில் என்ன சொன்னார் என்பது அறிக்கையில் கருப்பு நிறத்தால் மறைக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 அன்று, இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார் நீதிபதி டிகே உபத்யாய். மார்ச் 15 அன்று காலையில் நீதிபதி வர்மா வீட்டின் சேமிப்பு அறையில் இருந்து எரிந்த நிலையில் சில பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக, அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் தெரிவித்ததாகவும் நீதிபதி டிகே உபத்யாய் கூறியுள்ளார். பிள்ளைகளுக்கு தான பத்திரம் வழங்கியதை பெற்றோர் மீண்டும் ரத்து செய்ய முடியுமா? - நீதிமன்ற உத்தரவு கூறுவது என்ன? சாதிரீதியாக கோவில்களுக்கு உரிமை கோர முடியுமா?நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன? 2020 டெல்லி கலவரம்: ஐந்து ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களுக்கு விடுதலை எப்போது? பிபிசி கள ஆய்வு உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உயர்சாதி இந்துக்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளதா? அதன்பிறகு, இதுகுறித்து விசாரிக்க நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டுக்கு தன்னுடைய செயலாளரை அனுப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காவல் ஆணையரால் அனுப்பப்பட்ட சில அறிக்கைகளையும் டிகே உபத்யாய் தன் அறிக்கையுடன் இணைத்துள்ளார். அதில், சேமிப்பு அறையில் பாதி எரிந்த நிலையில் இருந்த 4-5 சாக்கு மூட்டைகளில் இருந்து பணம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அந்த வீட்டில் வசிப்பவர்கள், வேலையாட்கள் மற்றும் தோட்டக்காரர்கள் மட்டும் தான் சேமிப்பு அறைக்கு செல்ல முடியும் என டிகே உபத்யாய் கூறியுள்ளார். எனவே, இதுதொடர்பாக மேலதிக விசாரணை வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். டிகே உபத்யாயிடம் சில படங்கள் மற்றும் வீடியோக்களையும் காவல் ஆணையர் பகிர்ந்துள்ளார். அவற்றில், அந்த அறையில் ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் இருந்ததை காண முடிகிறது. அந்த படங்கள் மற்றும் வீடியோக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு அனுப்பியதாகவும் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு காட்டியதாகவும் தெரிவித்துள்ளார் டிகே உபத்யாய். சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? முதல் ஆட்டத்திலேயே சர்ச்சை7 மணி நேரங்களுக்கு முன்னர் தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட சென்னை கூட்டத்தில் தீர்மானம் ஏன்? - முந்தைய நிலைப்பாட்டில் மாற்றமா?22 மார்ச் 2025 நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறியது என்ன? பட மூலாதாரம்,SUPREME COURT படக்குறிப்பு, அந்த அறையில் எரிந்த நிலையில் பணத்தை தீயணைப்பு துறையினர் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் யஷ்வந்த் வர்மாவிடம் கீழ்க்கண்ட 3 கேள்விகளை முன்வைத்துள்ளனர். அந்த பணம் எப்படி சேமிப்பு அறைக்கு வந்தது? அந்த பணத்தின் ஆதாரம் என்ன? மார்ச் 15 அன்று காலை அந்த பணம் எப்படி அகற்றப்பட்டது? இதற்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா அளித்துள்ள பதிலில், வீட்டில் தீப்பற்றிய போது தான் மத்திய பிரதேசத்தில் இருந்ததாகவும் மார்ச் 15 மாலை தான் டெல்லி திரும்பியதாகவும் கூறியுள்ளார். வீட்டில் தீ பரவிய போது தனது மகளும் பணியாட்களும் வீட்டில் இருந்ததாகவும் ஆனால் தீ அணைக்கப்பட்ட பிறகு அவர்கள் சேமிப்பு அறையில் பணம் எதையும் பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தன்னிடம் வீடியோவை காட்டிய பிறகே, எரிந்த நிலையில் இருந்த பணம் குறித்து தனக்கு தெரியவந்ததாக யஷ்வந்த் வர்மா குறிப்பிட்டுள்ளார். நூறாவது ஆண்டில் ஆர்எஸ்எஸ்: நிதி எங்கிருந்து வருகிறது? பாஜகவுடன் என்ன உறவு? முழு விவரம்6 மணி நேரங்களுக்கு முன்னர் சிஎஸ்கே vs மும்பை: ஐபிஎல்லின் மாபெரும் இரு துருவ மோதலின் தொடக்கப் புள்ளி எது?4 மணி நேரங்களுக்கு முன்னர் இதுநாள் வரை தானோ அல்லது தன் குடும்பத்தினரோ அந்த அறையில் பணத்தை வைத்ததில்லை என்றும், இவ்விவகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணம் தன்னுடையது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய பதிலில், "திறந்த நிலையில் இருக்கக்கூடிய, எல்லோரும் சென்று வரக்கூடிய ஓர் அறையில் யாராவது பணம் வைப்பார்களா என்பது நம்ப முடியாததாக உள்ளது." என தெரிவித்துள்ளார். தான் வங்கியில் இருந்து மட்டும் தான் பணத்தை எடுப்பதாகவும் தன்னுடைய பணப் பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தாங்கள் வசிக்கும் வீட்டின் பகுதியிலிருந்து அந்த அறை முற்றிலும் பிரிக்கப்பட்டிருப்பதாகவும் தனது வீட்டுக்கும் அந்த அறைக்கும் இடையே ஒரு சுவர் இருப்பதாகவும் யஷ்வந்த் வர்மா குறிப்பிட்டுள்ளார். இதில் தொடர்புபடுத்தப்படும் பணத்தை தன்னிடம் காட்டவோ அல்லது கொடுக்கவோ இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய பணியாட்களிடமும் இதுதொடர்பாக தான் விசாரித்ததாகவும், எந்த பணமும் அந்த அறையிலிருந்து அகற்றப்படவில்லை என அவர்கள் தெரிவித்ததாகவும் வர்மா கூறியுள்ளார். இந்த முழு வழக்கும் தனக்கு எதிரான சதி என அவர் தெரிவித்துள்ளார். "பத்தாண்டுகளுக்கும் மேலாக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து உருவாக்கிய என்னுடைய புகழை இந்த சம்பவம் சிதைத்துள்ளது." என அவர் தெரிவித்துள்ளார். இதுநாள் வரை தனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் டிகே உபத்யாய் விரும்பினால் தான் நீதிபதியாக இருந்த காலம் முழுவதையும் விசாரிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். சுனிதா வில்லியம்ஸ் போல விண்வெளி வீரராவது எப்படி? என்ன படிக்க வேண்டும்?5 மணி நேரங்களுக்கு முன்னர் சுனிதா வில்லியம்ஸுக்கு 5$ தானா? - ஓவர் டைம் தொகை குறித்து டிரம்ப் கூறியது என்ன?22 மார்ச் 2025 அடுத்தது என்ன? பட மூலாதாரம்,SUPREME COURT படக்குறிப்பு, இதுநாள் வரை தானோ அல்லது தன் குடும்பத்தினரோ அந்த அறையில் பணத்தை வைத்ததில்லை என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா தெரிவித்துள்ளார் இந்த விவகாரம் இந்திய தலைமை நீதிபதியால் அமைக்கப்பட்ட குழுவிடம் வழங்கப்படுள்ளது. நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் கடந்த ஆறு மாத கால போன் பதிவுகளை தர வேண்டும் என காவல்துறையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தன்னுடைய மொபைல் போனிலிருந்து எந்தவொரு தரவுகளையும் அழிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி அமைத்துள்ள குழுவில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிஎஸ் சாந்த்வாலியா மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 1999-ல் உச்ச நீதிமன்றத்தில் உள்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதன்படி, உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான புகாரை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். விசாரணையின் அடிப்படையில், நீதிபதி குற்றமற்றவர் என்றோ அல்லது அந்த நீதிபதியை பதவி விலகுமாறோ அக்குழு கூறும். அவர் பதவி விலக மறுத்தால், அவரை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் மற்றும் குடியரசு தலைவருக்கு அக்குழு தகவல் அளிக்கும். சில சந்தர்ப்பங்களில், நீதிபதிக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்துமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இப்போதைக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எவ்வித நீதித்துறை சார் பணிகளும் வழங்கப்படக் கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா முடிவெடுத்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7980dldpq2o
-
தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற வளாகத்திற்குள் புதிய கட்டிடம்; - இன்று திறப்பதற்கு ஏற்பாடு
அமைச்சர் எங்களை கொழும்பிற்கு அழைத்து விகாரை விவகாரத்திற்கு தீர்வை விரைவில் முன்வைப்பதாக தெரிவிக்கின்றார் - ஆனால் இங்கே புதிய கட்டிடத்தை திறக்கின்றனர் - தமிழ் மக்கள் உண்மையை புரிந்துகொள்ளவேண்டும் - தையிட்டிகாணி உரிமையாளர் Published By: RAJEEBAN 23 MAR, 2025 | 11:17 AM அனுர அரசாங்கத்தின் அமைச்சர் எங்களை கொழும்பிற்கு அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கூடிய விரைவில் தீர்வை தருவதாக சொல்லியுள்ள அதே சந்தர்ப்பத்தில் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள் புதிய கட்டிட திறப்பு இடம்பெறவுள்ளது. இது வேதனைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள காணி உரிமையாளர் சாருஜன் பத்மநாதன் தமிழ் மக்கள் இதனை புரிந்துகொள்ளாவிட்டால் இதுபோன்று பல விடயங்கள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த போராட்டத்தை போயா தினத்தில் தான் நடத்திக்கொண்டிருந்தோம், போராட்டம் வலுப்பெற்ற நிலையில அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியாத நிலையில், யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள அமைச்சர் 20 ம் திகதி எங்களை அழைத்து, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தார். பௌத்த சாசன அமைச்சர். அவருடைய அலுவலகத்தில் வைத்து ஒரு மக்கள் சந்திப்பை ஒழுங்கு செய்தார், அவர் அங்கு தெளிவாக சொல்லியிருந்த விடயம் மக்களின் காணிகள் என்றால் மக்களிற்கே கையளிக்கவேண்டும் என்று. இது தங்கள் அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையிலே நாங்கள் உறுதிகள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் அவரிடம் காட்டியிருந்தோம். இது தங்களுடைய விடயங்களிற்கு பொறுப்பானதல்ல காணி அமைச்சிற்கும் பொறுப்பானது என அமைச்சர் தெரிவித்திருந்தார். அவர்களும் இந்த விடயம் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்குரிய முடிவை எவ்வளவு விரைவாக வழங்க முடியுமோ அவ்வளவு விரைவாக வழங்க முயல்கின்றோம் என அவர் சொல்லியுள்ள நிலையில அவருடைய அரசாங்கம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக புதிய கட்டிடத்தை திறக்க முயல்வது மன வருத்தத்திற்குரிய விடயம், மக்கள் இதனை உணராவிட்டால் இதுபோல பல விடயங்கள் நடக்கும், சகல மக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/209969
-
மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை தெளிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடல்
23 MAR, 2025 | 11:26 AM மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை மீண்டும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சிறுவர் அபிவிருத்திக் குழுவின் முதலாம் காலாண்டு குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. யாழ். மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவின் முதலாம் காலாண்டு குழுக் கூட்டமானது பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (21) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, அரசாங்கத்தால் ஓர் தாயின் கருவில் குழந்தை கருவுற்றதிலிருந்து அக்குழந்தை முதியவராகும்வரை அவர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக பிரதேச செயலகங்களில் முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதல் முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் வரையான பல்வேறு தரப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தம் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். எனினும், அவர்கள் மேலும் வினைத்திறனாக செயல்பட பிரதேச செயலாளர்கள் வழிப்படுத்த வேண்டும் என பதில் அரச அதிபர் கேட்டுக் கொண்டார். மேலும், மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் யூன் மாதம் 18 ஆம் திகதி பிறப்புப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கான நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாவும் அதற்கு முன்பாக பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக பிறப்புப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கான நடமாடும் சேவையை மே மாதம் 16ஆம் திகதி பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு பதில் அரச அதிபரால் அறிவுறுத்தப்பட்டது. பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டு 9 மற்றும் ஆண்டு 9 இற்கு கீழும் உள்ள பிள்ளைகளுக்கான அறநெறி வகுப்புகள், இணைப் பாடவிதானச் செயல்பாடுகள் மற்றும் ஒய்வுகளைக் கருதி தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விச் செயல்பாடுகளை நிறுத்திவைத்தல் என்ற தீர்மானத்துக்கு அமைய, பெற்றோர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் சீரான கட்டுப்பாட்டில் பேணுவதற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கண்காணிப்பு அவசியம் பிரதீபன் வலியுறுத்தினார். ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெண்கள் சிறுவர் பிரிவு இயங்காமல் உள்ளதாகவும், அதற்கான சேவைகள் முறைப்பாட்டுப் பிரிவுடன் இயங்குவதாகவும் கூட்டத்தில் பிரதேச செயலாளரால் சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைய, உடனடியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்ட பதில் அரச அதிபர், ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்து செயல்பட நடவடிக்கை எடுப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததாகவும் அதன் முன்னேற்றத்தை பிரதேச செயலாளர் அறிக்கையிடுமாறும் பதில் அரச அதிபர் கேட்டுக் கொண்டார். மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை மீண்டும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதில் அரச அதிபர் தெரிவித்தார். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் நகர்ப்புற பாடசாலை மாணவர்கள், பரீட்சை நிறைவடைந்து வெளிவரும் போது அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தனியார் கல்வி நிறுவனங்கள் துண்டுப் பிரசுரங்களை திணிப்பதாகவும், யாழ்ப்பாணம், நல்லூர், மல்லாகம் மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேசத்தில் உள்ள சில தனியார் கல்வி நிறுவனங்களுக்கு முன்பாக பெற்றோர்கள் கூடுதலாக தரித்து நிற்பதால் பொது மக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைய, போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கைக்காக ஆவன செய்வதாக பதில் அரச அதிபரால் தெரிவிக்கப்பட்டது. தாய், தந்தையை இழந்து பிள்ளைகளை பராமரிப்போருக்கு மாதாந்தக் கொடுப்பனவு மாகாணத்தால் 3000 ரூபாய் வழங்கப்படுவதாகவும், தொண்டு நிறுவனங்கள் 5000 ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்த மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர், பராமரிப்பாளர்கள் இக் கொடுப்பனவை பெறுவதற்கு நீதிமன்றக் கட்டளை பெறவேண்டும் எனவும் கூறினார். இதேவேளை, சிறுவர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்திக்கு உறுதுணையாகவிருக்கும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்குரிய சேவையை வினைத்திறனாக வழங்குவதன் ஊடக தமது வாழ்க்கையிலும் சிறப்படைய முடியும் என பதில் அரச அதிபர் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில், மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/209968
-
சீனத் தூதுவரின் இல்லத்தில் ரணிலுக்கு இராப்போசனம்
23 MAR, 2025 | 09:13 AM கொழும்பில் உள்ள சீனத் தூதுவரின் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சீனத் தூதுவர் இராப்போசனம் வழங்கியுள்ளார். நாளை திங்கட்கிழமை (24) ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு இவ்வாறு இராப்போசனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது ரணில் விக்கிரமசிங்கவின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/209957