Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 02 APR, 2025 | 05:20 PM (இராஜதுரை ஹஷான்) தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை தவிர்த்து ஏனைய வேட்பாளர்களை எவ்விதமான அடிப்படைகளுமில்லாமல் ஊழல்வாதிகள் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது பிரதிவாதிகளுக்கு இழைக்கும் அநீதியாகும். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிடுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தமது சுயாதீன அதிகாரத்துக்கமைய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் புதன்கிழமை (02) முறைப்பாடளித்ததன் பின்னர் ஐக்கிய குடியரசு முன்னணியின் உப தலைவரான தீக்ஷன கம்மன்பில குறிப்பிடுகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வெலிகம பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் 'ஊழல், மோசடியற்ற குழுவினர் வெற்றிப் பெறும் பிரதேச சபைகளுக்கு மாத்திரமே, மத்திய அரசாங்கத்தினால் மானியங்கள் ஒதுக்கப்படும். அவ்வாறன குழு தேசிய மக்கள் சக்தியிடமே உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஜனாதிபதி தனது அதிகாரத்தை நேரடியாக பயன்படுத்தி மத்திய அரசாங்கத்தால் மானியங்கள் வழங்குவது குறித்து தீர்மானிப்பது தேர்தலுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் ஒரு செயற்பாடாகும் . உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் அபிவிருத்திகள் குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சு மற்றும் உரிய உள்ளூராட்சிமன்றங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் தீர்மானம் எடுக்க வேண்டும். ஜனாதிபதியின் கூற்றில் அரச அதிகாரிகள் தமது அரசியல் நோக்கங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படுவது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை தவிர்த்து ஏனைய வேட்பாளர்களை எவ்விதமான அடிப்படைகளுமில்லாமல் ஊழல்வாதிகள் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது பிரதிவாதிகளுக்கு இழைக்கும் அநீதியாகும். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிடுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தமது சுயாதீன அதிகாரத்துக்கமைய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறித்த முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளோம். பிரதேச சபை அபிவிருத்திக்கு நிதி ஒதுக்க வேண்டுமாயின் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இது முறையற்றதாகும். சுதந்திரமான முறையில் தமது வேட்பாளரை தெரிவு செய்யும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு. தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை தவிர்த்து ஏனைய உறுப்பினர்களை ஊழல்வாதிகள் என்று குறிப்பிடுவது முறையற்றது. சகல வேட்பாளர்களின் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருத்தல் வேண்டும் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/210947
  2. 02 APR, 2025 | 04:09 PM காலம் சென்ற மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை (02) காலை 10 மணியளவில் மன்னாரில் நடை பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர பகுதியில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு முன் நடை பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் முன்னை நாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் உருவச் சிலைக்கு அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் அடிகளார் உள்ளடங்களாக அருட்சகோதரி, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் அமரர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை சமூக சம நீதிக்காய் தமிழ் தேசிய உணர்வுடன் ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைக்குரலாக பல சவால்களுக்கு மத்தியிலும் இன உணர்வுடன் இன உணர்வுக் காய் அறப்பணி புரிந்தார். நீண்ட காலமாய் சுகயீனமடைந்திருந்த மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி இயற்கை எய்தியமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/210941
  3. மாற்று சாதி இளைஞரை காதலித்த தங்கை கொலை - கைதான அண்ணன் அளித்த வாக்குமூலம் என்ன? பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தில் 22 வயது கல்லுாரி மாணவியைக் கொலை செய்ததாக அவரது உடன் பிறந்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இது, இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே இருந்த காதலின் காரணமாக நடந்த ஆணவக்கொலை என்று தகவல்கள் பரவியுள்ள நிலையில், இருவருமே மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். அதே நேரத்தில் ஆணவக்கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டால் இத்தகைய கொலைகள் நிகழ்வது தடுக்கப்படும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கருத்துத் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி–தங்கமணி தம்பதியினரின் மகள் வித்யா (வயது 22). இவர் கோவை அரசு கலைக்கல்லுாரியில் தமிழ் முதுகலை பயின்று வந்துள்ளார். கடந்த ஞாயிறன்று அவர் வீட்டில் இருந்தபோது, பீரோ விழுந்து அவர் இறந்து விட்டதாகக் கூறி, அவரின் உடலை அருகிலுள்ள மயானத்தில் புதைத்துள்ளனர். ஆனால் அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக, அவருடைய காதலர் வெண்மணி அளித்த தகவலின்பேரில், பருவாய் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, காமநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஏப்ரல் முதல் தேதியன்று, வித்யாவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, அதே இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மீண்டும் புதைக்கப்பட்டது. 'மலம் கலக்க முன்பகையே காரணம்' - சிபிசிஐடி குறிப்பிடும் சம்பவம் பற்றி வேங்கைவயல் மக்கள் கூறுவது என்ன? இரவில் தனியாக பயணிக்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தூத்துக்குடி தலித் மாணவரின் விரல்கள் வெட்டப்பட்ட விவகாரத்தின் முழு பின்னணி என்ன? "ஆசிரியர் இப்படி அடிப்பார் என நினைக்கவில்லை" - ஆறாம் வகுப்பு மாணவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை - என்ன நடந்தது? அவசர அவசரமாக புதைக்கப்பட்ட வித்யாவின் உடல்! பிரேத பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பே, தன் தங்கையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டு விட்டதன் அடிப்படையில் வித்யாவின் அண்ணன் சரவணகுமார் (வயது 24) கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜவேல். வித்யாவின் மீதிருந்த பாசத்தால்தான் திடீரென உணர்ச்சிவசப்பட்டு இந்த கொலையைச் செய்து விட்டதாக தங்களிடம் சரவணகுமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக அவர் மேலும் தகவல் பகிர்ந்தார். கொலைச்சம்பவம் குறித்து விளக்கிய காவல் ஆய்வாளர் ராஜவேல், ''வெண்மணி என்ற இளைஞரை வித்யா காதலித்துள்ளார். இருவரும் எம்பிசி பிரிவில் வேறுவேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். இந்த காதல் பிரச்னையால், வித்யாவும், சரவணகுமாரும் கடந்த சில மாதங்களாக பேசிக்கொள்ளவில்லை. சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில், இவர்களின் பெற்றோர் தண்டபாணி–தங்கமணி இருவரும் சர்ச்சுக்குச் சென்றுள்ளனர். பெற்றோர் இருவரும் மட்டும் மதம் மாறியுள்ளனர். பிள்ளைகள் இருவரும் மாறாததால் வீட்டில் இருந்துள்ளனர். தாயும், தந்தையும் சென்ற பின்பு, அண்ணனுக்கும், தங்கைக்கும் இடையில் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது அரிவாளால் வித்யாவின் தலையில் சரவணகுமார் தாக்கியதில் அவர் இறந்துள்ளார். அதன்பின் பீரோவைத் தள்ளிவிட்டு அதில்தான் அவர் இறந்துவிட்டதாக மற்றவர்களிடம் கூறியுள்ளார்.'' என்றார். தங்கம் வைப்பு திட்டத்தை கைவிட்ட அரசு - விலை உயர்வுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?6 மணி நேரங்களுக்கு முன்னர் சாம்சங் இந்தியா தொழிலாளர் போராட்டம் மாதக் கணக்கில் நீடிப்பது ஏன்? 5 கேள்வி பதில்கள்7 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு,வித்யாவின் குடும்பத்தினர் அன்று காலையிலிருந்து காதலர் வெண்மணி, வித்யாவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தன்னுடைய நண்பர் ஒருவரை அனுப்பிப் பார்த்தபோது, வித்யா இறந்து, அவரை அடக்கம் செய்யப்போவதாகத் தகவல் கிடைத்ததாக பிபிசி தமிழிடம் தகவல் தெரிவித்தார் வெண்மணியின் வழக்கறிஞர் ஆர்தர் குமார். அதன்பின் வெண்மணி அளித்த தகவலின்பேரில்தான், பருவாய் கிராம நிர்வாக அலுவலர், வித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்து, உடல் தோண்டியெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். "வித்யா இறந்ததை அறிந்து கொண்ட அவரின் தோழிகள் வீட்டுக்குச் சென்று வித்யாவை பார்ப்பதற்குள் வித்யாவின் உடல் புதைக்கப்பட்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே நான் காவல்துறையில் புகார் அளித்தேன்," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் வெண்மணி. முதலில் சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து இருப்பதாக காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜவேல் தெரிவித்தார். பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?6 மணி நேரங்களுக்கு முன்னர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு குறித்து நீங்கள் அவசியம் அறிய வேண்டிய 3 முக்கிய அம்சங்கள்2 ஏப்ரல் 2025 காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெண் வீட்டார் வித்யாவை பெண் கேட்டு, வெண்மணியின் குடும்பத்தார் சென்றதால் ஏற்பட்ட கோபத்தில்தான் கொலை நடந்துள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. காதலர் வெண்மணியிடம் பேசிய போது சொந்த சாதியில் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் திருமணத்திற்கு மறுத்ததாகக் கூறினர். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வெண்மணி, ''ஊடகங்களில் தெரிவிப்பதைப் போன்று நான் பெண் கேட்டு செல்லவில்லை. ஆனால் பிப்ரவரி மாதம் எங்களுடைய காதல் குறித்து வித்யாவின் அண்ணனிடம் போனில் பேசினேன். என்னுடைய அம்மாவும், அவருடைய அம்மாவிடம் பேசினார். ஆனால் அவர்கள், இது சரிப்பட்டு வராது என்று கூறி எங்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்." என்று தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர், "ஆரம்ப காலம் தொட்டே வித்யாவின் அண்ணனுக்கு எங்களின் காதல் மீது எதிர்ப்பு இருந்தது. இருவரும் ஒரே (மிகவும் பிற்படுத்தப்பட்ட) வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, சொந்த சாதியில் திருமணம் செய்து தர வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் மேலோங்கி இருந்தது. நாங்கள் காதல் குறித்து வீட்டில் தெரிவித்த பிறகும், படிப்பு முக்கியம் என்று வித்யாவை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். " என்றார். வித்யா உயிரிழந்த முந்தைய நாள் அதாவது சனிக்கிழமையன்றும் தான் தொலைபேசியில் பேசியதாக வெண்மணி கூறினார். இருவருமே மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர்! வித்யா, நாவிதர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். வெண்மணி மண்பானைகள் செய்யும் குலாலர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இருவருமே மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது சட்டப்படி தீண்டாமை குற்றமாகாது என்று பிபிசி தமிழிடம் தகவல் பகிர்ந்தனர் காமநாயக்கன்பாளையம் காவல் அதிகாரிகள். கோவை அரசு கலைக்கல்லுாரியில் வித்யா தமிழ் இளங்கலை படிக்கும்போது, அதே கல்லுாரியில் வெண்மணி தமிழ் எம்.பில் படித்து வந்துள்ளார். அப்போதே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். வித்யா தற்போது முதுகலை படித்து வந்துள்ளார். இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய வெண்மணியின் வழக்கறிஞர் ஆர்தர் குமார், ''வெண்மணி தேசிய அளவிலான ஆசிரியர் தகுதித்தேர்விலும் (NET) தேர்ச்சி பெற்றுவிட்டார். அடுத்து JRF (Junior Research Fellowships) தேர்விலும் தேர்ச்சி பெற்று விட்டதால் தனக்கு உதவித்தொகையே ரூ.45 ஆயிரம் வருமென்று கூறி, தனக்குத் திருமணம் செய்து தருமாறு வித்யாவின் அண்ணன் சரவணகுமாரிடம் வெண்மணி பேசியுள்ளார். இருவருமே சமவகுப்பினராக இருந்தும் அதற்கு மறுத்து கொலை செய்துள்ளார் சரவணகுமார்.'' என்று குற்றம் சாட்டினார். காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் சரவணகுமார் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், பிபிசி தமிழ் அங்கு நேரில் சென்றது. வித்யாவின் தாய் தங்கமணி, தந்தை தண்டபாணி, அவர்களின் உறவினர்கள் மற்றும் பருவாய் கிராமத்தைச் சேர்ந்த பலரும் அங்கு இருந்தனர். அவர்களில் யாரும் பேசுவதற்கு முன் வரவில்லை. பேச வந்தவர்களையும் மற்றவர்கள் அனுமதிக்கவில்லை. வக்ஃப் என்றால் என்ன? வக்ஃப் சட்டத்திருத்த மசோதா கூறும் மாற்றங்கள் என்ன?2 ஏப்ரல் 2025 விண்வெளியில் இருந்து இமயமலையை பார்த்த அனுபவம் பகிரும் சுனிதா வில்லியம்ஸ்2 ஏப்ரல் 2025 வித்யாவின் தாயார் தங்கமணியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, ''நான் என் மகளை இழந்து நிற்கிறேன். எதுவும் பேசுவதற்கில்லை.'' என்றார். சற்று தயக்கத்துடன் பிபிசி தமிழிடம் பேசிய வித்யாவின் தந்தை தண்டபாணி, ''அவர்கள் குடும்பத்திலிருந்து யாரும் எங்களிடம் பெண் கேட்டு வரவில்லை. நாங்கள் அந்தப் பையனைப் பார்த்ததே இல்லை. ஆனால் எங்கள் மகள் எங்களிடம் இதைப் பற்றிச் சொன்னாள். படித்து முடித்தபின், பதிவுத்திருமணம் செய்து வைப்பதாகக் கூறியிருந்தோம். அதற்குள் இப்படி நிகழ்ந்துவிட்டது. வேறு எதுவும் பேசக்கூடாது என்று போலீசார் கூறியுள்ளனர்.'' என்றார். பிபிசி தமிழிடம் பேசிய பருவாய் முன்னாள் கிராம ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், ''எங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்புமில்லை. ஆனால் ஊருக்குள் திடீரென ஒரு பெண் அசாதாரணமான முறையில் இறந்தது பற்றி போலீசுக்கு ஏன் தகவல் சொல்லவில்லை என்றே எங்களிடம் விசாரித்தனர். இவர்கள் இருவருமே எம்பிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள். இதை ஆணவக்கொலை என்று ஊடகங்கள் சொல்வது மிகத்தவறு.'' என்றார். பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு உதவிய பிரப்சிம்ரன், வதேராவின் அதிரடியில் தடுமாறிய லக்னௌ2 ஏப்ரல் 2025 தமிழ்நாட்டில் திருநங்கை மகளின் திருமணத்திற்காக போராடிய தாய் - நெகிழ வைக்கும் பாசப் போராட்டம்8 மணி நேரங்களுக்கு முன்னர் ஆணவக்கொலைக்கு எதிரான சட்டத்துக்கு வலுக்கும் கோரிக்கை! இந்த வழக்கில் குற்றவாளியாக சரவணகுமார் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் வேறு யாரும் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்தார்களா என்றும் சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''இப்போதைக்கு சரவணகுமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளோம். மேல் விசாரணை நடந்து வருகிறது. அதற்குப் பின்பே எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்.'' என்றார். இருவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில், இது ஆணவக்கொலை இல்லை என்று பலரும் வாதிட்டு வரும் நிலையில், வெவ்வேறு சமுதாயம் என்பதற்காக நடக்கும் அனைத்துக் கொலைகளுமே ஆணவக்கொலையாகத்தான் கருதப்படவேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கனகராஜ், ''ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டமியற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக பல இடங்களில் சமூக செயற்பாட்டாளர்கள் குரல் எழுப்பி வருகின்ற சூழலில், இத்தகைய கொலைகள் வெறும் கொலை வழக்கின் கீழ் பதிவு செய்யப்பட்டு அதற்கான தண்டனை மட்டுமே வழங்கப்படும். இது ஒரு ஆணவக் கொலை என்பதே கருத்தில் கொள்ளப்படாது. அரசு இது போன்ற கொலைகள் நடப்பதை தடுக்க, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்," என்றார். ஆனால் இதை முற்றிலும் மறுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ், ''தங்கையை கொன்றதை அண்ணனே ஒப்புக் கொண்டு விட்டார் என்பதால் இந்த வழக்கில் வேறு எந்தக் குழப்பங்களும் இல்லை. குற்றவாளியைக் கைது செய்து விட்டோம்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98ge3zgy9eo
  4. Published By: VISHNU 02 APR, 2025 | 07:03 PM நாட்டில் ஒடிசம் தொடர்பான ஆய்வுகள் ஏதும் சமீபகாலமாக மேற்கொள்ளப்படவில்லை எனினும், நாளாந்தம் வைத்திய சிகிச்சைக்காக வருகைத் தருபவர்கள் அவதானிக்கும் போது 50 சிறுவர்களில் ஒருவர் ஒடிசம் நிலையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுவதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஆசிரி ஹேமமாலா தெரிவித்தார். சர்வதேச ஒடிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (2) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், வருடாந்தம் ஏப்ரல் 2 ஆம் திகதி சர்வதேச ஒடிசம் விழிப்புணர்வு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இம்முறை “மாற்றங்களை கொண்டாடுவோம்” என்ற தொனிப்பொருளுக்கமைய அனுஷ்டிக்கப்படுகிறது. குழந்தையின் மூளை நரம்புகளில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு ஒடிசம் நிலை எனப்படுகிறது. நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைகளை தொடர்ச்சியாக பெறும் பட்சத்தில் ஒடிசம் நிலையால் பாதிப்புக்குள்ளாகிய சிறுவர்களின் மூளை நரம்புகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும். அவர்களும் சாதாரண சிறுவர்கள் போல கற்றல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபட உரிமை உண்டு. உலகில் பல சாதனைகளை புரிந்த நபர்களும் தனக்கு ஒடிசம் இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். எம்மிடம் இல்லாத பல திறமைகள் அவர்களிடம் உள்ளது. உலகளாவிய ரீதியில் தற்போது ஒடிசம் உள்ளிட்ட நரம்பியல் குறைபாடு நோய்களால் பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு 8 மாத குழந்தைகளிடையே மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் போது 93 சிறுவர்களில் ஒருவருக்கு ஒடிசம் குறைபாடுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு உலகளாவிய ரீதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தரவுகளின் அடிப்படையில் 36 சிறுவர்களில் ஒருவருக்கு ஒடிசம் உள்ளதாக தெரியவந்துள்ளது. நாட்டில் ஒடிசம் தொடர்பான ஆய்வு சமீபகாலத்தில் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் நாளாந்தம் வைத்திய சிகிச்சைக்காக வருகை தருபவர்களை அவதானிக்கும் போது சமூகத்தில் உள்ள 50 பேரில் ஒருவருக்கு ஒடிசம் பாதிப்புள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் உள்ள சிறுவர்களின் ஆரோக்கியம் தொடர்பான கேந்திர நிலையமாக செயற்படும் சுகாதார அமைச்சின் குடும்ப நல சுகாதார பணியகத்தினால், இவ்வருடம் ஒடிசம் எனப்படும் மூளை நரம்பியல் வளர்ச்சி குறைபாடு நோயால் பாதிப்புக்குள்ளாகிய சிறுவர்களுக்கு, நரம்பியல் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது. அதற்கமைய நோயை ஆரம்பத்தில் கண்டறிவதற்கான ஆலோசனைகளை உள்ளடக்கிய கையேடு சுகாதார அமைச்சால் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு, கண்டி, கம்பஹா, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் காலி ஆகிய 6 மாவட்டங்களை கேந்திர நிலையமாக கொண்டு ஒடிசம் குறைபாட்டால் பாதிப்புக்குள்ளாகிய சிறுவர்களுக்கான பிரதியோக சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அத்தோடு எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆதார வைத்தியசாலைகளிலும் ஒடிசம் மற்றும் நரம்பியல் குறைபாடு நோய்க்கான இடத்தை ஒதுக்கி, சிறுவர்களுக்கான சிகிச்சைகளை வழங்கவும் சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளது. பிள்ளைகளுக்காக வழங்கப்படும் சுகாதார கையேடுகளில், பிள்ளைகளின் திறன் வளர்ச்சி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுவர்களின் போசாக்கு, நிறை மற்றும் உயரம் தொடர்பில் அவதானிக்கும் பெற்றோர்கள், வயதுக்கேற்ற திறன் வளர்ச்சியை வெளிக்காட்டுகிறார்களால் என்பது தொடர்பில் கவனிப்பது குறைவாகவே உள்ளது. ஆகையால் பெற்றோர் குழந்தைகளின் திறன் வளர்ச்சி தொடர்பில் விசேடமாக கண்காணிக்க வேண்டும். பேச்சு திறன், அடையாளப்படுத்தல், எதிர்வினைகளை வெளிப்படுத்தல், நடத்தல் ஆகியன தொடர்பில் அவதானியுங்கள். சிறுவர்களிடம் வயதுக்கேற்ற நடத்தை கோலங்கள் அன்றி அசாதாரணமான நடத்தைகள் வெளிபடுமாயின் சிகிச்சை நிலையங்களை நாடுமாறு கோரிக்கை விடுகிறேன். பிறந்தது முதல் மூன்று வருட காலப்பகுதியில் மூளை நரம்புகள் துரிதமாக வளர்ச்சி அடைகின்றன. ஆகையால் மூன்று வயதுக்கு முன்னர் பிள்ளைகளின் ஒடிசம் நிலையை இனங்கண்டு சிகிச்சை அளிப்பது அவசியம் என்றார். https://www.virakesari.lk/article/210959
  5. 02 APR, 2025 | 10:47 AM காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையை விஸ்தரிக்கவுள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் அறிவித்துள்ளார். காசாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து இஸ்ரேலின் பாதுகாப்பு வலயங்களுடன் சேர்க்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் நடைபெறும் பகுதிகளில் இருந்து பெருமளவு மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ள அவர் பாலஸ்தீனியர்கள் ஹமாசினை அழிக்கவேண்டும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்யவேண்டும் இதுவே யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவருவதற்கான ஒரே வழி என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210895
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சோஃபியா பெட்டிஸா பதவி, பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் திரவ தங்கம் என்று அழைக்கப்படும் தாய்ப்பாலை நிபுணர்கள், மாய சக்தியின் பிறப்பிடம் என்றும் கூறுகின்றனர். தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு அம்சங்கள் குழந்தைகளுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது என்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் பெரியவர்கள் தாய்ப்பலை, அதில் உள்ள ஊட்டச்சத்துகளுக்காக சேமித்து வைத்து பயன்படுத்துகின்றனர். மூன்று குழந்தைகளுக்கு அப்பாவான ஜேம்சன் ரைடெனூர் அவருடைய 39 வயதில் முதன்முறையாக தாய்ப்பாலை அருந்தினார். அவருடைய துணைவி மெலிசா குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்துவந்தார். அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை ஜேம்சன் தன்னுடைய உணவில் ஒரு பகுதியாக சேர்த்து வந்தார். "மெலிசா இதனை 'ஒருவிதமாக' நினைத்தாலும் கூட, நான் இதனை 'ஷேக்கில்' பயன்படுத்துகிறேன்," என்று பிபிசியிடம் தெரிவித்தார். தாய்ப்பாலை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, 'பாடி பில்டர்' ஒருவர் யூடியூபில் பேசியதை பார்த்த பிறகு ஜேம்சன் தாய்ப்பாலின் நன்மை குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளார். "அந்த உடற்பயிற்சி செய்யும் நபர் பெரிய பலசாலியாக இருந்தார்," என்று ஜேம்சன் தெரிவித்தார். தினமும் நிம்மதியாக மலம் கழிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன?28 மார்ச் 2025 உங்கள் வீட்டில் வாங்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? தெரிந்துகொள்வது எப்படி?26 மார்ச் 2025 பட மூலாதாரம்,JAMESON RITENOUR படக்குறிப்பு,தாய்ப்பாலை உட்கொள்வதில் அதிக கவனம் தேவை என்று நிபுணர்கள் கூறுகின்ற போதும், ஜேம்சன் தாய்ப்பால் அவருக்கு தேவையான உத்வேகத்தை ஜிம்மில் வழங்குகிறது என்று நம்புகிறார். தாய்ப்பாலை உணவில் சேர்த்துக் கொள்வது ஜேம்சனின் தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நாள் ஒன்றுக்கு 226 கிராம் (8 அவுன்சஸ்) நிறை கொண்ட இரண்டு தாய்ப்பால் 'பாக்கெட்டுகளை' அவர்கள் பயன்படுத்துகிறார். "என் வாழ்வின் மிகவும் சிறந்த தோற்றத்தில் நான் தற்போது இருக்கிறேன்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "தசை வளர்ச்சிக்கு இது பெரிய அளவில் உதவுகிறது. 8 வாரங்களில் என்னுடைய தசை வளர்ச்சி மேம்பட்ட அதே நேரத்தில் உடல் எடையும் எனக்கு குறைந்தது," என்று அவர் தெரிவிக்கிறார். தாய்ப்பாலை தன்னுடைய உணவில் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்த காலத்தில் இருந்து அவருக்கு உடல் நலக்குறைவோ, காய்ச்சலோ ஏற்பட்டதாக நினைவில்லை என்று அவர் தெரிவிக்கிறார். "நான் குழந்தை போலவே வளர்ந்து, குழந்தை போலவே தூங்க விரும்புகிறேன். எனவே நான் குழந்தை போலவே சாப்பிட விரும்பினேன். நான் நன்றாக உணருகிறேன். பார்ப்பதற்கும் நன்றாக இருக்கிறேன்," என்று ஜேம்சன் தெரிவிக்கிறார். ஆன்லைனில் வாங்குவது ஆபத்தானது! தாய்ப்பால் அருந்துவதால் பெரியவர்களின் உடலுக்கு நன்மை கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்த அறிவியல் ரீதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் அதனால் பயன்கள் சில இருக்கின்றன என்று நிகழ்வுச் சான்றுகளை (anecdotal evidence) குறிப்பிடுகின்றனர் நிபுணர்கள். "தாய்ப்பாலில் அதீத புரதம் இருக்கிறது. இதனால் குழந்தையின் உடலில் தசை வளர்ச்சியானது வேகமாக இருக்கிறது. 'பாடி பில்டர்களுக்கு' இது தான் தேவை," என்று கூறுகிறார் மருத்துவர் லார்ஸ் போட். அமெரிக்காவின் சாண்டியாகோவில் அமைந்திருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மனித பால் நிறுவனத்தின் (Human Milk Institute) இயக்குநராக போட் பணியாற்றி வருகிறார். "பாடி பில்டர்களுக்கு அவர்களின் உடலைப் பற்றிய நல்ல புரிதல் என்பதால், அந்த பயன்பாட்டில் எதோ ஒன்று உள்ளது. இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்னவென்று தெரியவில்லை," என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆனால் முகநூல், க்ரைக்லிஸ்ட் மற்றும் ரெட்டிட் சமூக வலைதளங்கள் மூலம் வாங்கப்படும் தாய்ப்பால் எங்கிருந்து வருகிறது என்பதில் சந்தேகம் நிலவுவதால் இந்த விசயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார் போட். "அந்த பால் சோதனைக்கு உட்படுத்தப்படாதது. அதில் குறிப்பிடத்தக்க சுகாதார ஆபத்துகள் இருக்கலாம். எச்.ஐ.வி. மற்றும் ஹெபாடிடிஸ் போன்ற நோய்களின் தொற்று காரணிகள் அதில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன," என்று எச்சரிக்கிறார் போட். தாய்ப்பாலை வழங்கும் பெண்ணின் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் பொது ஆரோக்கியத்தைப் பொறுத்தே தாய்ப்பால் நல்லதாக இருக்கலாம். மேலும் அதில் பல தொற்றுகளுக்கான காரணிகளும் இருக்கலாம். முறையாக கிருமி நீக்கம் செய்யப்படாத, ஆரோக்கியமற்ற சூழல்களில் தான் பெண்கள் பெரும்பாலும் தாய்ப்பாலை 'பம்ப்' செய்து சேமித்து வைக்கின்றனர். எனவே தாய்ப்பால் எளிதில் நஞ்சாக மாறலாம். அமெரிக்காவில் உள்ள நேஷன்வைட் குழந்தைகள் மருத்துவமனை 2015-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் போது ஆன்லைனில் வாங்கப்படும் தாய்ப்பாலில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான காரணிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 101 மாதிரிகளில் 75% மாதிரிகளில் ஆபத்தை விளைவிக்கும் நோய்த்தொற்றுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 10% மாதிரிகள் மாட்டுப்பால் அல்லது குழந்தைகளுக்கு வழங்கப்படும் தாய்ப்பால் 'ஃபார்முலாக்கள்' என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை, எவ்வாறு கழுவ வேண்டும்?24 மார்ச் 2025 வீடுகளில் பரவும் பூஞ்சைகளை நுகர்வது உங்கள் ஆரோக்கியத்தையே முடக்கும் ஆபத்து21 மார்ச் 2025 பட மூலாதாரம்,JAMESON RITENOUR படக்குறிப்பு,ஜேம்சன் ஆன்லைன் மூலம் வாங்கிய தாய்ப்பால் பாக்கெட்டுகள் மெலிசாவுடனான உறவில் இருந்து ஜேம்சன் வெளியேறிய பிறகு அவருக்கு தாய்ப்பால் கிடைக்கவில்லை. எனவே அவர் ஆன்லைனில் தாய்ப்பாலை வாங்க ஆரம்பித்தார். கெட்டுப்போன தாய்ப்பாலால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அவருக்கு போதுமான விழிப்புணர்வு அப்போது இல்லை என்று அவர் தெரிவிக்கிறார். "இணையத்தில் யாரோ ஒரு நபரிடம் இருந்து நான் தாய்ப்பாலை வாங்கினேன். நான் முகநூலில் அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன். அவர் ஒரு சாதாரண பெண்ணாகவே இருந்தார்," என்று தெரிவித்த ஜேம்சன்,"என்னுடைய வாய்ப்புகளை நான் தவறவிடக்கூடாது என்று முடிவெடுத்தேன்," என்று கூறுகிறார். போதுமான அறிவியல் ஆதாரம் ஏதும் இல்லாதது அவருக்கு வருத்தம் அளிக்கவில்லை. ஏன் என்று கேட்டதற்கு, அவருடைய சொந்த அனுபவம் மிகவும் நேர்மறையாக இருக்கிறது என்று கூறுகிறார். "நான் சந்திக்கும் அவமானங்கள் தான் நேர்மறையாக இல்லை," என்று தெரிவித்த அவர், "மக்கள் என்னை அசௌகரியமாக பார்க்கின்றனர். ஏன் என்றால் தாய்ப்பாலானது குழந்தைகளுக்கானது. ஆனால் அவர்கள் நினைப்பது போன்று அவ்வளவு மோசமானதாக இல்லை," என்று கூறுகிறார் ஜேம்சன். பஞ்சாப் கிராமத்தில் தலை வழுக்கை சிகிச்சைக்கு சென்றவர்கள் கண் நோயால் அவதி - என்ன நடந்தது?19 மார்ச் 2025 கேரளாவில் 18 வயது இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான 'அனோரெக்சியா நெர்வோஸா' என்றால் என்ன?17 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு அம்சங்கள் குழந்தைகளுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது ஆபத்தில் இருக்கும் குழந்தைகள் என்ன ஆவார்கள்? தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகிறது என்று ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் மருத்துவர் மேகன் அசாத், "நான் ஒரு போதும் பெரியவர்கள், தாய்ப்பாலை அருந்த வேண்டும் என்று கூற மாட்டேன்," என்று தெரிவிக்கிறார். "இது அவர்களுக்கு ஆபத்து விளைவுக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் உண்மையாகவே தாய்ப்பால் தேவை உள்ள குழந்தைகளுக்கு இது சாத்தியமான ஆபத்தை ஏற்படுத்தலாம்," என்று கூறுகிறார். மருத்துவர் போட் இது குறித்து பேசும் போது, "தேவைக்கு அதிகமாக இருக்கும் தாய்ப்பாலை லாபத்திற்காக விற்பதற்கு பதில் குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்," என்று கூறுகிறார். "வறுமையில் வாடும் தாய்மார்கள் ஆன்லைனில் தாய்ப்பாலை விற்பனை செய்வதன் மூலமாக பணம் ஈட்டலாம் என்று நினைத்தால், அது பெரியவர்கள் மத்தியில் தாய்ப்பாலை உணவாக எடுத்துக் கொள்ளும் அபாயத்தை அதிகரிக்கும்," என்ற உண்மையை சுட்டிக்காட்டுகிறார் மருத்துவர் அசாத். ஆனால் இதில் எந்த விதமான குற்ற உணர்வும் ஏற்படவில்லை என்று ஜேம்சன் தெரிவிக்கிறார். "பசியோடு இருக்கும் குழந்தைகளைப் பற்றி கவலைப்படும் மக்கள் என் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் நான் ஒன்றும் மருத்துவமனைகளின் முன்பு பாலூட்டும் தாய்மார்களிடம் போய் பால் வேண்டும் என்று கேட்கவில்லை." உண்மையில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களிடம் சுரக்கும், தேவைக்கு மிஞ்சிய தாய்ப்பாலை வழங்குவதற்காக தொடர்பு கொண்டதாக தெரிவிக்கிறார். சாத்தியமான சுகாதார பலன்கள் தாய்ப்பால் இதுவரை அதிகம் ஆய்வுக்குட்படுத்தப்படாத பகுதியாகும் "ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கிய மக்கள் நீண்ட காலமாக தாய்ப்பால் குறித்து அதிக கவனம் செலுத்தவில்லை. தேவையற்ற பெண்களின் பிரச்னையாக இதைக் கருதினார்கள்," என்று கூறிய மருத்துவர் அசாத், இது ஒரு "ஆணாதிக்கப்பார்வை," என்று குறிப்பிடுகிறார். ஆனால் அது மாறிவருகிறது. தாய்ப்பால் குடிப்பதால் பெரியவர்களுக்கு ஏற்பட இருக்கும் சாத்தியமான ஆபத்துகளுக்கு மாறாக, அவர்களுக்கு ஏற்படும் கீல்வாதம், இருதய நோய், புற்று நோய் மற்றும் 'இரிட்டேடபிள் பவுல் சிண்ட்ரோம்' உள்ளிட்ட நோய்களுக்கு எவ்வாறு தாய்ப்பாலை கொண்டு சிகிச்சை அளிக்கலாம் என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 'மரத்திற்கு பின்னே யானை நின்றாலும் தெரியாது' - இந்த பெண்களின் ஆபத்தான காட்டுவழிப் பயணம் யாருக்காக?9 மார்ச் 2025 உடல் பருமனாகாமல் இருக்க தினசரி சமையலில் எந்த எண்ணெய், எவ்வளவு சேர்க்க வேண்டும்?8 மார்ச் 2025 பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு,உருகுவேவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் புட்டிகளில் அடைத்து சேமித்து வைக்கப்பட்டுள்ள தாய்ப்பால் தாய்ப்பாலில் காணப்படும் ப்ரீபையோடிக் நாரிழையான எச்.எம்.ஓ-வின் (Human Milk Oligosaccharides) பலன்கள் குறித்து ஆர்வம் தெரிவிக்கிறார் மருத்துவர் ஆசாத். இந்த நாரிழையை மனிதர்களால் செரிமானம் செய்ய முடியாது. ஆனால் குழந்தைகளின் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் பாக்டீரியா இந்த நாரிழையை பயன்படுத்திக் கொள்கிறது. "ஆராய்ச்சியாளர்கள் இந்த நாரிழையை பயன்படுத்தி பெரியவர்கள் மத்தியில் குடலில் வீக்கம் மற்றும் அழற்சியை உருவாக்கும், 'அழற்சி குடல் நோய்க்கு (inflammatory bowel disease)' சிகிச்சை அளிக்க இயலுமா என்று ஆய்வு செய்து வருகின்றனர். நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு 'மைக்ரோபையோம்கள்,' மிகவும் முக்கியமானது என்று நம் அனைவருக்கும் தெரியும். எனவே குடல் பகுதியில் இருக்கும் மைக்ரோபையோம்களை மேம்படுத்த புதிய வழிகளை நாம் கண்டுபிடித்தால் அது அனைத்து வகையான நன்மைகளையும் வழங்கும். தாய்ப்பாலில் காணப்படும் எச்.எம்.ஓ நாரிழை சாத்தியமான வாய்ப்புகளை கொண்டிருப்பதாக தெரிகிறது," என்று அவர் தெரிவித்தார். 2021-ஆம் ஆண்டு எலி மீது நடத்தப்பட்டு வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில், ஒரே ஒரு எச்.எம்.ஓ இதயத்தில் உள்ள ஆர்ட்டரிஸில் உருவாகும், அதேரோஸ்க்லேரோசிஸ் (atherosclerosis) என்ற அடைப்பை குறைக்க உதவியதை கண்டறிந்தார் மருத்துவர் போட். இந்த அடைப்பானது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும். "தாய்ப்பாலில் உள்ள மூலக்கூறுகள் தனித்துவமானவை. மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாக்கப்படும் ஒரே பொருள் இது தான்," என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் போட். செயற்கை மூலக்கூறுகளைக் கொண்டு உருவாக்கப்படும் மருந்துகள் போன்றில்லாமல், தாய்ப்பால் பாதுகாப்பானது. அதிக திறனுடன் செயல்படும் தன்மை கொண்டது என்று தெரிவிக்கிறார் அவர். சாத்தியமான நன்மைகள் குறித்து இவர்கள் பேசினாலும், உண்மையில் ஆய்வக தரவுகள் மிகவும் குறைவாகவே உள்ளது. மருத்துவர் போட் நம்பிக்கையுடன் இருப்பது போன்று, தற்போது நடைபெற்று வரும் ஆய்வக ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றால், ஆண்டுக்கு லட்சக்கணக்கானவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்களை தடுக்கும் மிகப்பெரிய பொறுப்பை தாய்ப்பால் மூலக்கூறுகள் வகிக்கும். "மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கையை குறைக்க இதனால் முடியும் என்று யோசித்துப் பாருங்கள். இது மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும்," என்று மருத்துவர் போட் தெரிவிக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvgql54g456o
  7. செயற்கை நுண்ணறிவு(ஏ ஐ) தொழில்நுட்பத்தின் மெகா வளர்ச்சி காணமாக வாரத்திற்கு இரு வேலை நாட்கள் என்கிற நடைமுறை 10 ஆண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் கணித்துள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகக்கூடும் என்றும், இதன் காரணமாக வேலைநாட்களும் குறையும் என்றும் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். பல்வேறு துறைகளில் தற்போது ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதேபோன்று, ட்ரெண்டிங்கில் உள்ள ‘ஜிப்லி’ வகை கார்ட் டூன் சித்திர படங்களும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மெகா வளர்ச்சியின் விளைவே என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். இப் படியே போனால்தொழில் நுட்பத்தை நம்பியே சுழலும் இந்த நவீன யுகத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு குறைந்துவிடும் என்பதையே பிரதிபலிக்கிறது. https://thinakkural.lk/article/316787
  8. அப்ப நீங்க வாயு புத்திரனின் தம்பி தான் போல! சஞ்சீவி மலையை அவர் தூக்கினார், வீரசிங்கத்தை சீ மண்டபத்தை நீங்க தாங்கிப்பிடித்தீர்கள்!!
  9. கட்டுரை தகவல் எழுதியவர், மேகா மோகன் பதவி, பிபிசி உலக செய்திகள் 2 ஏப்ரல் 2025, 01:20 GMT கடந்த 2019ஆம் ஆண்டில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, தமிழ்நாட்டில் சட்டபூர்வமாக திருமணமான முதல் திருநங்கை என்ற பெருமையை ஸ்ரீஜா பெற்றார். தற்போது, அம்மாவின் பெருமை எனப் பொருள்படும் 'அம்மாஸ் பிரைட்' (Amma's pride) என்ற புதிய ஆவணப்படம், ஸ்ரீஜாவின் திருமணத்திற்கு அரசு அங்கீகராம் கிடைக்க வேண்டும் என்று அவர் நடத்திய போராட்டத்தையும், அதில் அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது அம்மா வள்ளியின் முக்கியப் பங்கையும் விவரிக்கிறது. தனது மகளைக் கட்டி அணைத்துக்கொண்டே,"ஸ்ரீஜா, எனக்குக் கிடைத்த வரம்," என்று 45 வயதான வள்ளி பிபிசியிடம் கூறினார். தமிழ்நாட்டின் தூத்துக்குடியைச் சேர்ந்த 25 வயதான ஸ்ரீஜா, "என்னிடம் இருப்பது எல்லா திருநர் சமூகத்தைச் சேர்ந்த அனைவரிடமும் இல்லை என்பது எனக்குத் தெரியும்," என்கிறார். "எனது கல்வி, வேலை, திருமணம் என அனைத்தும் என் அம்மா எனக்கு அளித்த ஆதரவால்தான் சாத்தியமானது." தமிழ்நாட்டில், சட்டபூர்வமாக திருமணம் செய்துகொண்ட முதல் திருநங்கை என்ற ஸ்ரீஜாவின் தனித்துவமான அனுபவத்தை எடுத்துக்காட்டும் வகையில் 'அம்மாஸ் பிரைட்' என்னும் ஆவணப்படம் வெளியாகவுள்ளது. இதில் ஸ்ரீஜா மற்றும் அவரது அம்மா முதன்முறையாக தங்களது கதையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பிளாட்டினம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்களை சிறுகோள்களில் இருந்து பிரித்தெடுத்து வர முடியுமா?31 மார்ச் 2025 வேலைக்கு விண்ணப்பிக்க சரியான 'ரெஸ்யூம்' தயார் செய்வது எப்படி?31 மார்ச் 2025 'என் மகளுக்கு என்றும் துணையாக நிற்பேன்' பட மூலாதாரம்,CHITHRA JEYARAM/ BBC படக்குறிப்பு,ஸ்ரீஜா, அவரது கணவர் அருண் மற்றும் அம்மா வள்ளி (இடமிருந்து வலம்) ஸ்ரீஜா, தனது கணவர் அருணை 2017ஆம் ஆண்டில் ஒரு கோவிலில் சந்தித்தார். அவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் வட்டாரம் இருந்ததை அறிந்த பிறகு, அவர்கள் தொடார்ச்சியாகப் பேசிக்கொள்ளத் தொடங்கினர். அதற்கு முன்னதாகவே, ஸ்ரீஜா தனது பாலின மாற்றத்தை உணரத் தொடங்கி, திருநங்கையாக வெளிப்படையாக வாழ்ந்து வந்தார். "நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டோம். ஒரு திருநங்கையாகத் தனது அனுபவங்கள் குறித்து ஸ்ரீஜா என்னிடம் மனம் திறந்து பகிர்ந்தார்," என்று 29 வயதான அருண் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார். அதன் பின்னர் சில மாதங்களுக்குள், காதலிக்கத் தொடங்கி, வாழ்க்கை முழுவதும் ஒன்றாகச் சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்தனர். இருப்பினும், 2018ஆம் ஆண்டில், அவர்களது திருமணத்தைப் பதிவு செய்யும் அவர்களது முயற்சி நிராகரிக்கப்பட்டது. கடந்த 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின்படி, திருமணம் என்பது "மணமகன்" மற்றும் "மணமகள்" ஆகிய இருவருக்கும் இடையிலான பந்தம் என்று மட்டுமே வரையறுக்கிறது என பதிவாளர் வாதிட்டார். அதாவது அந்தச் சட்டத்தின் மூலம், திருநங்கைகள் திருமணத்துக்கான சட்ட வரம்புக்கு உட்படவில்லை. ஆனால் பால்புதுமை ஆர்வலர்களின் ஆதரவைப் பெற்ற இந்தத் தம்பதியினர், தங்கள் உறவை பொதுவெளியில் அறிவித்து சட்டபூர்வ அங்கீகாரம் பெறப் போராடினர். இந்த முறை அவர்களது முயற்சி வெற்றி பெற்றது. பட மூலாதாரம்,ARUN KUMAR / BBC படக்குறிப்பு,ஸ்ரீஜா மற்றும் வள்ளி கடந்த 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டமானது, திருநர்களை "மணமகள்" அல்லது "மணமகன்" ஆக சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என அறிவித்து, 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அவர்களின் திருமண உரிமையை உறுதி செய்தது. இதன் மூலம், அவர்கள் உலகளாவிய கவனத்தைப் பெற்றனர். இந்தத் தீர்ப்பு, இந்தியாவில் திருநர்களின் சமூக அங்கீகாரத்திற்கு ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று பால்புதுமையின ஆர்வலர்கள் கருதினர். மேலும், கலாசார மரபுகளின் சவால்களை எதிர்கொண்டதற்காக ஸ்ரீஜா, அருண் ஆகிய இருவரும் சமூகத்தில் கவனம் பெற்றனர். ஆனால், இத்துடன் அவர்கள் பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானார்கள். "செய்திகளில் எங்கள் கதை வெளியான மறுநாளே, நான் வேலையில் இருந்து நீக்கப்பட்டேன்," என்று கூறுகிறார் போக்குவரத்துத் துறையில் தொழிலாளராகப் பணியாற்றிய அருண். இது திருநர் சமூகத்தின் மீதிருந்த வெறுப்பின் காரணமாகவே ஏற்பட்டதாக அவர் நம்புகிறார். அதன் பிறகு ஆன்லைன் மூலமாகவும் அவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்தன. "திருநங்கையைத் திருமணம் செய்ததற்காக மக்கள் என்னைக் கடுமையாக விமர்சித்து, அவதூறான கருத்துகளை அனுப்பினர்," என்று அவர் கூறுகிறார். இந்த அழுத்தமான சூழ்நிலையால், தம்பதியினர் ஒரு குறுகிய காலத்திற்குப் பிரிந்து வாழ நேரிட்டது. இருப்பினும், ஸ்ரீஜா தனது கல்வியில் சிறந்து விளங்கி, உயர்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்தார். பின்னர் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற ஸ்ரீஜா, அவரது குடும்பத்தில் உயர்கல்வி பெற்ற மிகச் சிலருள் ஒருவரானார். 14 வயதில் பள்ளியை விட்டு வெளியேறிய வள்ளிக்கு, இது மிகவும் பெருமையான தருணமாக இருந்தது. Play video, "ஸ்ரீஜா", கால அளவு 1,22 01:22 காணொளிக் குறிப்பு, தனது திருமணத்திற்கான அரசின் அங்கீகாரத்திற்காகப் போராடுவதற்கு முன்பே, ஸ்ரீஜாவும் அவரது குடும்பத்தினரும் சமூக விரோதத்தையும் அவமானங்களையும் எதிர்கொண்டனர். தனது 17 வயதில் ஸ்ரீஜா ஒரு திருநங்கையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அவரும் அவரது தாயும் இளைய சகோதரரும், அவர்களது வீட்டு உரிமையாளரால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். குடும்ப உறுப்பினர்கள் பலர் அவர்களுடன் பேசுவதை நிறுத்தினர். ஆனால், ஸ்ரீஜாவின் அம்மாவும் சகோதரரும் உறுதியாக இருந்து, ஸ்ரீஜாவுக்கு தொடர்ந்து ஆதரவளித்தனர். "என் மகளுக்கு நான் எப்போதும் துணை நிற்பேன்" என்கிறார் வள்ளி. "அனைத்து திருநங்கைகளும் அவர்களது குடும்பத்தினரால் ஆதரிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீஜாவுக்கு ஆறு வயதாக இருக்கும்போது அவரது அப்பா இறந்ததால் தனி ஆளாக அவரது அம்மா வள்ளி அவரை வளர்த்து வந்தார். வள்ளி ஒரு பள்ளியின் உணவுக்கூடத்தில் வேலை செய்கிறார். குடும்ப வருமானம் குறைவாக இருந்தபோதிலும், மகளின் பாலின மாற்று சிகிச்சைக்குத் தேவையான செலவுகளைச் சமாளிக்க வள்ளி உதவினார். இதன் காரணமாகத் தனது தங்க நகைகள் சிலவற்றை வள்ளி விற்றார். "என் அம்மா என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்" என்கிறார் ஸ்ரீஜா. குழந்தை கையில் செல்போனை கொடுத்ததால் பிகார் நபரிடம் ரூ.24 லட்சத்தை இழந்த தேனி வியாபாரி - எப்படி தெரியுமா?31 மார்ச் 2025 சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் 'ஜிப்லி' என்றால் என்ன? அது முதலில் எப்படி உருவானது?31 மார்ச் 2025 'இந்த மனநிலை மாறும் என்று நம்புகிறேன்' பட மூலாதாரம்,ARUN KUMAR / BBC படக்குறிப்பு,தமிழ்நாட்டில் சட்டபூர்வமாக திருமணமான முதல் திருநங்கை என்ற பெருமையை ஸ்ரீஜா பெற்றுள்ளார். உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், திருநர்களின் எண்ணிக்கை சுமார் இருபது லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் என்று செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். திருநர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பது மற்றும் "மூன்றாம் பாலினம்" என்ற சட்டபூர்வ அங்கீகாரமும் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ளன. இருப்பினும் சமூகத் தடைகளையும், பாகுபாட்டையும் திருநங்கைகள் இன்றும் எதிர்கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் திருநங்கைகள் அதிகளவில் வன்முறைக்கும், மனநலப் பிரச்னைகளுக்கும் ஆளாகி, கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் சுகாதார சேவைகளைக் குறைந்த அளவிலேயே பெறுகிறார்கள் என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பலர் யாசகம் பெற்றோ, பாலியல் தொழிலில் ஈடுபடவோ கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். உலகளவில், கணிசமான திருநங்கைகள் தங்கள் குடும்பத்தினரால் நிராகரிக்கப்படுகிறார்கள் என்று ஐ.நா. தெரிவிக்கிறது. "இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் பெரும்பாலான திருநங்கைகள் குடும்பத்தின் ஆதரவின்றி வாழ்கிறார்கள்," என்று 'அம்மாஸ் பிரைட்' ஆவணப்படத்தின் இயக்குநர் சிவ கிரிஷ் கூறுகிறார். ஆனால், ஸ்ரீஜா மற்றும் வள்ளியின் கதை தனித்தன்மை வாய்ந்தது. திருநங்கைகளைச் சுற்றியுள்ள ஒரே மாதிரியான பார்வையையும், ஊடகங்களில் அவர்களைப் பற்றி அடிக்கடி வெளியாகும் ஒரே போன்ற கதைகளையும், குறிப்பாக, அதிர்ச்சிகரமான மற்றும் வன்கொடுமையை மையமாகக் கொண்ட கதைகளையும் சவாலுக்கு உட்படுத்த இந்தப் படம் உதவும் என்று ஸ்ரீஜா நம்புகிறார். "நாம் தலைவர்களாக இருக்க முடியும் என்பதை இந்த ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது. நான் ஒரு மேலாளர், மற்றும் தொழிலில் ஒர் ஆக்கபூர்வமான பங்களிப்பாளர்" என்கிறார் ஸ்ரீஜா. "திருநர்களைப் பற்றிப் புதிய கோணங்களில் சொல்லப்படும் கதைகளை மக்கள் பார்க்கும்போது, அவர்கள் மனநிலையும் மாற்றம் அடையும் என்று நான் நம்புகிறேன்." விண்வெளியில் ஒரு குழந்தை பிறந்தால் அதன் உடல் அமைப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்8 மணி நேரங்களுக்கு முன்னர் பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை1 ஏப்ரல் 2025 'நான் விரைவில் பாட்டி ஆக விரும்புகிறேன்' படக்குறிப்பு,கடந்த 2018ஆம் ஆண்டில், தங்களது திருமணத்தைப் பதிவு செய்யும் ஸ்ரீஜா, அருண் தம்பதியின் முயற்சி நிராகரிக்கப்பட்டது. சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்ட பிறகு, 'அம்மாஸ் பிரைட்' ஆவணப்படம் தற்போது இந்திய பார்வையாளர்களைச் சென்றடைய உள்ளது. மார்ச் 31, திங்கட்கிழமை நடைபெறும் சர்வதேச திருநர் தினத்துக்கு முன்னதாக, சென்னையில் பால்புதுமையின சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கான சிறப்புத் திரையிடலுடன் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. சென்னையில் இந்தத் திரையிடலைத் தொடர்ந்து, ஒரு பயிற்சி பட்டறை நடைபெறும். இதில் குடும்பத்தினர் திருநங்கைகளை ஏற்றுக் கொள்வதன் அவசியத்தையும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சமூக ஆதரவின் முக்கியத்துவத்தையும், சிறு குழுக்களாகப் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் விவாதிக்கவுள்ளனர். "எங்கள் திரையிடல் நிகழ்வுகள் திருநங்கைகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு இடையிலான உறவுகளை வளர்க்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று 'அம்மாஸ் பிரைட்' ஆவணப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான சித்ரா ஜெயராம் கூறுகிறார். சமூக பழமைவாதத்துக்கு எதிரான குடும்ப ஆதரவை முக்கிய கருப்பொருளாகக் கொண்டுள்ளதால், 'அம்மாஸ் பிரைட்' ஆவணப்படத் திரையிடல் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் கிராமப்புற பார்வையாளர்களுக்கும், இந்தியாவின் பிற நகரங்களுக்கும், நேபாளம், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்று தயாரிப்புக் குழு நம்புகிறது. ஸ்ரீஜாவும் அருணும் தற்போது தனியார் நிறுவனங்களில் மேலாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். விரைவில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் கனவாக உள்ளது. "நாங்கள் ஒரு சாதாரண, சராசரியான எதிர்காலத்தை எதிர்பார்க்கிறோம்," என்கிறார் ஸ்ரீஜா. "நான் விரைவில் பாட்டி ஆக விரும்புகிறேன்," என்று கூறிச் சிரிக்கிறார் வள்ளி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cd02zkpv44jo
  10. புரதச் சத்தும், நார்ச் சத்தும் அதிகமாகவும் மாவுச் சத்தை குறைவாகவும் கொண்ட உணவுகளை வழங்கவேண்டும்.
  11. மக்களுக்கும் சுகாதாரக் காப்புறுதி ஒன்றை அறிமுகப்படுத்தி இலவச வைத்தியம் என்று ஏச்சு(ஒரு சில தாதிகள்) வாங்குவதை நிறுத்த வேண்டும்.
  12. Former NC CM S.M. Ranjith sentenced to 16 years in prison April 2, 2025 at 9:57 AM Former Chief Minister of North Central Province S.M. Ranjith and his former secretary Shanthini Chandrasena were each sentenced to 16 years of rigorous imprisonment, for corruption charges brought by the Bribery Commission. The Bribery Commission alleged that first accused S.M. Ranjith while serving as the North Central Province Chief Minister had made arrangements to allocate fuel for the official vehicle of his private secretary Shanthi Chandrasena, despite her fuel allowance being already added to her salary. S.M. Ranjith is the brother of former Minister S.M. Chandrasena, while Shanthini Chandrasena is Chandrasena’s wife. She served as the private secretary to Chief Minister Ranjith during his tenure from 2012 to 2014. The Bribery Commission filed a case against Shanthini Chandrasena for allegedly obtaining fuel worth Rs. 2,680,528 and Rs. 5,379,623 through vouchers during this period. Both she and Ranjith have also been charged with influencing provincial councilors to release two additional vehicles, in addition to the Chief Minister’s two official cars and security vehicle. (Newswire) https://www.newswire.lk/2025/04/02/former-nc-cm-s-m-ranjith-sentenced-to-16-years-in-prison/ Samarakoon Mudiyanselage Ranjith known as S. M. Ranjith is the fifth Chief Minister of the North Central Province of Sri Lanka.[1][2][3] He belongs to the Sri Lanka Freedom Party and part of the United People's Freedom Alliance. https://en.wikipedia.org/wiki/S._M._Ranjith
  13. 02 APR, 2025 | 12:55 PM சென்னை: கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது. அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்கள்தான் என்பதை ஒன்றிய அரசு அடிக்கடி மறந்துவிடுகிற காரணத்தால் நாம் மீண்டும் மீண்டும் அவர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஒரு மீனவர்கூட கைது செய்யப்படமாட்டார் என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி சொன்னார்கள். ஆனாலும் இந்தத் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இலங்கையில் சில மாதங்களுக்கு முன்னால் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. ஏற்கெனவே இருந்தவர்கள் தோல்வியடைந்து புதியவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் நிலைமை மாறவில்லை; மீனவர்கள் மீதான தாக்குதல் ஓயவில்லை. பாரம்பரிய மீன்பிடி உரிமை கொண்ட நம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது தொடர்ந்து சிறைபிடிக்கப்படுகிறார்கள்; படகுகள் இலங்கை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. மார்ச் 27 அன்றுஇ நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 97 இந்திய மீனவர்கள் இலங்கைச் சிறையில் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அதில் 11 பேரை கடந்த 27 ஆம் தேதி இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 530 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர் சொன்ன கணக்குப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு இரண்டு மீனவர்களை கைது செய்துள்ளார்கள். எல்லைதாண்டி வந்தார்கள் என்று சொல்லி அவர்களுக்கு அதிகபட்ச சிறை தண்டனை விதிக்கப்படுகிறது அல்லது அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுகிறது. அண்டை நாடாக இருந்து கொண்டு இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான இரக்கமும் இல்லாமல் நம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் விதமாக ஏன் அடியோடு பறிக்கும் விதமாக இலங்கைக் கடற்படையினரும் இலங்கை அரசும் நடந்து கொள்வது நமக்கெல்லாம் மிகுந்த கவலையளிக்கிறது; கண்டிக்கத்தக்கது. இதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு தடுத்து நிறுத்திட வேண்டும். இந்தப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சவாலாக இருக்கிறது என்று ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லி இருக்கிறார்கள். இதில் என்ன சவால் இருக்க முடியும் என்று தெரியவில்லை. வேறொரு மாநில மீனவர்கள் இப்படி தொடர் தாக்குதலுக்கு உள்ளானால் இப்படித்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா? தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் நான் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டு வருகிறேன். இதுவரைக்கும் மீனவர்கள் கைது தாக்குதல் குறித்து 74 கடிதங்களை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் பிரதமர் அவர்களுக்கும் எழுதியிருக்கிறேன். பிரதமர் அவர்களை நேரில் சந்திக்கும் போதெல்லாம் இது குறித்து வலியுறுத்தியிருக்கிறேன். இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்பட இயலாமல் கடந்து கொண்டிருக்கிறது. கடிதம் எழுதினால் விடுவிப்பது பிறகு கைது செய்வதென்று இலங்கை அரசின் நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருப்பதால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு பாரம்பரிய மீன்பிடி உரிமை கேள்விக்குறியாகி கடலுக்குச் சென்றால் பத்திரமாக வீடு திரும்புவார்களா நம் சொந்தங்கள் என்று குடும்பத்தினர் மீளாக் கவலையில் மூழ்கியிருக்க வேண்டிய துயர நிலை ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு காலத்துக்கு இதனைச் சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இதுபோன்ற சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவு மீட்பே மிகச் சரியான வழி என்பதை இம்மாமன்றத்தின் வாயிலாக மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறேன். கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும் கச்சத்தீவை மாநில அரசுதான் இலங்கைக்கு அளித்தது போன்று ஒரு தவறான தகவலைப் பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகி விட்டது. ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக கட்சிகள் செய்யும் அதே தவறை ஒன்றிய அரசு செய்வது வருந்தத்தக்கது; ஏற்கமுடியாதது. கச்சத்தீவைப் பொறுத்தவரைக்கும் அந்தத் தீவைக் கொடுத்து ஒப்பந்தம் போட்ட போதே முதல்வராக இருந்த கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். தமிழ்நாட்டு மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார். கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது என்று அழுத்தந்திருத்தமாக வாதிட்டு இருக்கிறார். அன்றைக்கிருந்த தி.மு.க. எம்.பி.-க்கள் இரா செழியன் எஸ்.எஸ்.மாரிச்சாமி ஆகியோர் நாடாளுமன்றத்திலே கடுமையாக எதிர்த்து இருக்கிறார்கள். அதையும் மீறி கச்சத்தீவு ஒப்பந்தம் 28.6.1974 அன்று கையெழுத்து ஆனவுடன் மறுநாளே அதாவது 29.6.1974 அன்றே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் கூட்டி இதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி அன்றையதினமே பிரதமருக்கும் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் - தமிழ்நாடு அரசின் தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை பிரதமருக்குத் தெரிவித்துள்ளதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்போதே 21.8.1974 அன்று “இந்தியாவுக்கு சொந்தமானதும் தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தியமைக்க முயற்சி எடுத்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது” என அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியவர் முதல்வராக இருந்த கருணாநிதி. கச்சதீவை மீட்கவும் கச்சத்தீவில் இருக்கிற இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திராவிட முன்னேற்றக் கழக அரசு எடுத்து வந்திருக்கிறது. கழக அரசு ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் பிரதமருக்கும் கடிதங்கள் எழுதி தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்க வலியுறுத்தி வந்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 3.10.1991 மற்றும் 3.5.2013 ஆகிய தேதிகளிலும் அதேபோன்று இங்கே அமர்ந்திருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது 5.12.2014 அன்றும் கச்சத்தீவைத் திரும்பப் பெற இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது. நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் அவர்கள் முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வந்தபொழுது கச்சத்தீவைத் திரும்பப் பெற அவரிடம் வலியுறுத்திக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். பிறகு 19.7.2023 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் “வரலாற்று ரீதியாக கச்சத்தீவு இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறது. தமிழ்நாடு மீனவர்கள் பாரம்பரியமாக கச்சத்தீவைச் சுற்றி மீன்பிடித்துள்ளார்கள். மாநில அரசின் ஒப்புதலின்றி கச்சத்தீவு இலங்கைக்கு மாற்றப்பட்டதால் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.” என்பதை மேற்கோள்காட்டி “கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும். அதுவே தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்” என்று வலியுறுத்தி “அதுவரை தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டுக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டேன். ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கும் எனது 2.7.2024 தேதியிட்ட கடிதம் மூலம் கச்சத்தீவு பிரச்சினையையும் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையையும் வலியுறுத்தியிருக்கிறேன். ஆனால் இன்றுவரை மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய பா.ஜ.க. அரசு கச்சத்தீவை மீட்பது குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை நான் வேதனையுடன் இங்கே குறிப்பிடுகிறேன். ஆகவே இந்தச் சூழலில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கைக் கடற்படையினரால் கடும் தாக்குதலுக்கு உள்ளாவது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது கடும் அபராதம் விதிக்கப்படுவது போன்றவற்றிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்கவும் விரைவில் இலங்கை செல்லும் பிரதமர் அவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் கச்சத்தீவை மீட்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் விரும்புகிறது. இதனை அடிப்படையாகக் கொண்ட தீர்மானத்தை இப்போது நான் முன்மொழிகிறேன்: தீர்மானம்: “தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும் இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கிடவும் கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும். இதனைக் கருத்தில் கொண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் இந்திய பிரதமர் அவர்கள் அந்நாட்டு அரசுடன் பேசி இலங்கை சிறையில் வாடும் நம் நாட்டு மீனவர்களையும் அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்று இப்பேரவை வலியுறுத்துகிறது.” என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய மீனவர்களின் நலன் கருதி அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன். https://www.virakesari.lk/article/210914
  14. Published By: RAJEEBAN 02 APR, 2025 | 12:07 PM மன்னாரில் பாரிய அளவிலான காற்றாலை மின்திட்டத்தினால் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள் மீண்டும் கரிசனை வெளியிட்டுள்ளன. வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம்,சுற்றுச்சூழல் நீதிமையம்,சுற்றுசூழல் அறக்கட்டளை லிமிடெட் உட்பட் சூழல் பாதுகாப்பு அமைப்புகளே மன்னாரில் பாரிய அளவிலான காற்றாலை மின்திட்டத்தினால் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள் மீண்டும் கரிசனை வெளியிட்டுள்ளன. தனித்துவமான மற்றும் உணர்திறன் வாய்ந்த சுற்றுசூழல் அமைப்பை கொண்ட மன்னார் தீவு தொழில்துறை திட்டங்களால் கடுமையான பாதுகாப்பை எதிர்கொள்கின்றது என தெரிவித்து வரும் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் தொழில்துறை திட்டங்களால் மன்னார் தீவின் பல்லுயிரியல் பாதிக்கப்படலாம்,உள்ளுர் வனவிலங்குகளிற்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்துவருகின்றனர். மன்னாரில் அதானி குழுமம் முன்னெடுக்கவிருந்த காற்றாலை மின் திட்டத்தினால் சூழலிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கரிசனைகள் வெளியாகியிருந்தன, இந்த கரிசனைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதா என்பதே பிரச்சினையின் மையமாக உள்ளது. கட்டணங்கள் குறித்த விடயங்களும், பொருளாதார நலன்களும் முக்கியம் பெற்றன,சூழல் பாதிப்புகள் குறித்த விடயங்கள் புறக்கணிக்கப்பட்டன என சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் காரணமாக இலங்கையின் சூழல் பாதுகாப்பினை சமரசம் செய்யும் விதத்திலான திட்டமொன்று முன்னெடுக்கப்படும் ஆபத்துள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர். மன்னாரின் பலவீனமான சுற்றுசூழல் அமைப்புடன்,காற்றாலை மின்சக்தி திட்டம் இணைந்து இயங்க முடியுமா என சுற்றுச்சூழல் நீதிமையத்தின் சூழல் விஞ்ஞானி ஹேமந்த விதானகே கேள்வி எழுப்புகின்றார். மீள்சக்தி திட்;டத்தினை பல்லுயிரியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் முன்னெடுக்க கூடாது என அவர் தெரிவிக்கின்றார். அபிவிருத்தி குறித்த விவாதங்களின் போது சூழல் ஆர்வலர்கள் அபிவிருத்தி திட்டங்களிற்கு தடையாக உள்ளனர் என தவறாக சித்தரிக்கப்படுகின்றனர் என சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். https://www.virakesari.lk/article/210906
  15. இரண்டு ஜப்பானிய கப்பல்கள் கொழும்பை வந்தடைந்தன Published By: DIGITAL DESK 3 02 APR, 2025 | 12:49 PM (எம்.மனோசித்ரா) ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான புங்கோ (எம்.எஸ்.டி. - 464) மற்றும் இடாஜிமா (எம்.எஸ்.ஓ - 306) என்ற கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றுக்காக செவ்வாய்கிழமை (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. குறித்த கப்பல்களை இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த உராகா-கிளாஸ் மைன்ஸ்வீபர் டென்டர் வகைக்கு சொந்தமான புங்கோ என்ற கப்பலானது 141 மீற்றர் நீளமும், மொத்தம் 125 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர்டனாகா கோஜி பணியாற்றுகிறார். இதேபோன்று மைன்ஸ்வீபர் வகைக்கு சொந்தமான இடாஜிமா என்ற கப்பலானது 67 மீற்றர் நீளமும், மொத்தம் 54 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் ஒடா டாகாயுகி பணியாற்றுகிறார். மேலும், இந்த கப்பல்களானது இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துவ குழுவினர்கள் கொழும்புப் பிரதேசத்தில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளதுடன், உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் வெள்ளிக்கிழமை (04) நாட்டிலிருந்து புறப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/210892
  16. அமெரிக்க இராஜாங்க செயலாளரின் துணிச்சலான பெண் விருதை வென்றார் நாமினி விஜயதாச Published By: DIGITAL DESK 3 02 APR, 2025 | 11:50 AM அமெரிக்க இராஜாங்க செயலாளரின் சர்வதேச துணிச்சலான பெண் விருதை இலங்கை ஊடகவியலாளர் நாமினி விஜயதாச வென்றுள்ளார். இந்த விருது வொஷிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் வைத்து அவருக்கு செவ்வாய்க்கிழமை (01) வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் நிகழ்வில் நாமினி விஜயதாசவுக்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/210899
  17. கணேமுல்ல சஞ்சீவ படுகொலை; இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த யுவதி கைது 02 APR, 2025 | 11:14 AM பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட யுவதி ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இஷாரா செவ்வந்தி அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் குறித்த ஹோட்டலுக்கு சென்று சோதனையிட்ட போது இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட யுவதி ஒருவரை போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர். கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்துக்குள் வைத்து சுட்டுக்கொலை செய்வதற்காக சட்டத்தரணி வேடத்தில் சென்று பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என பொலிஸார் அண்மையில் அறிவித்திருந்தனர். இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் 071-8591727 அல்லது 071-8591735 என்ற தொலைபேசி இலக்கங்களுக்க தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இஷாரா செவ்வந்தியின் விபரங்கள் : பெயர் - பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி வயது - 25 தேசிய அடையாள அட்டை இலக்கம் - 995892480v முகவரி - இல. 243/01, நீர்கொழும்பு வீதி, ஜய மாவத்தை, கட்டுவெல்லேகம https://www.virakesari.lk/article/210898
  18. முன்னாள் முதலமைச்சர் மற்றும் அவரின் மைத்துனிக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை Published By: DIGITAL DESK 3 02 APR, 2025 | 11:16 AM வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (2) 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்திக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு ஆணைக்குழு ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முன்னெடுத்த நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எஸ்.எம் ரஞ்சித் சமரகோன் வட மத்திய மாகாணத்தின் முதலமைச்சராக செயற்பட்ட போது அவரது தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய ஷாந்தி சந்திரசேன முறையற்ற விதத்தில் இலாபமீட்ட இடமளித்தமை, எரிபொருள் கொடுப்பனவு சம்பளத்துடன் வழங்கப்பட்ட நிலையிலும் எரிபொருள் கொள்வனவு வவுச்சரின் ஊடாக 26,000,00 ரூபாவுக்கும் அதிகமான தொகையை வழங்கியமை, அவ்வாறு வழங்குவதற்கு அரச அதிகாரிகளைத் தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் தமது தீர்ப்பை அறிவித்த நீதிபதி சந்தேகநபர்களுக்கு எதிரான முறைப்பாட்டின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதற்கமைய இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குறிப்பிடக்கூடிய ஊழல் குற்றத்தை இழைத்தமைக்காக சந்தேகநபர்கள் இருவரையும் குற்றவாளிகளாக தீர்மானித்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தண்டனையை அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210890
  19. காஸாவில் வெடிக்கும் போராட்டம் | மக்களை ஒடுக்கும் ஹமாஸ் இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. பணயக் கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ஆம் கட்டம் அமல்படுத்தப்படவில்லை. எஞ்சிய பணயக் கைதிகளை உடனடியாக ஒப்படைக்கும்படி இஸ்ரேலும், காஸாவில் இருந்து வெளியேறும்படி ஹமாஸும் வலியுறுத்தியதால் 2ஆம் கட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்தது. இதையடுத்து, காஸா முனை மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. அதேவேளை, காஸாவில் இருந்து இஸ்ரேல் மீதும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, காஸாவில் வசிக்கும் மக்களில் ஒரு பகுதியினர் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக திரும்பி உள்ளனர். வடக்கு காஸாவின் பல்வேறு பகுதிகளில், “காஸாவை விட்டு ஹமாஸ் அமைப்பினர் வெளியேற வேண்டும்” என வலுவான கோரிக்கையை வைத்துப் மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தங்களுக்கு எழுந்துள்ள எதிர்ப்பை ஒடுக்க ஹமாஸ் தீவிரமான அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு பொதுவெளியில் வைத்து சாட்டையடி கொடுக்கப்பட்டதாகவும், 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் போரட்டம் நடத்தியவர்களில் பலர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட ஆறு பேரில் நாசர் ல் ராபியாஸ் என்ற 22 வயது இளைஞரும் ஒருவர். இவர் காஸாவின் டெல் அவிவ் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர். கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலை அவரின் வீட்டின் வெளியே ஹமாஸ் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து இதழான டெலிகிராப்க்கு ராமல்லாவை சேர்ந்த மூத்த காவல்த்துறை அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியின்படி, “ஹமாஸ் மக்களை கொடூரமான முறையில் ஒடுக்குகின்றனர். கழுத்தில் கயிறு கட்டப்பட்ட நாய்க்குட்டியைப்போல, அவர்கள் அவரை அவரது வீட்டு வாசலுக்கு இழுத்துச் சென்று, ’ஹமாஸைப் எதிர்ப்பவர்களுக்கு இதுதான் தண்டனை’ என்று அவரது குடும்பத்தினரிடம் கூறினர்” என்று தெரிவித்துள்ளார். அதுபோல், “எதிர்ப்பு தெரிவிக்கத் துணிந்த 22 வயது பாலஸ்தீனியர்” எனக் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேலிய செய்தி நிறுவனம் ஒன்று, ”அவர் கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் செல்லப்பட்டு, மக்கள் முன்னிலையில் தடிகளாலும், உலோகக் கம்பிகளாலும் தாக்கப்பட்டார்” என்று காஸாவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாக தெரிவித்துள்ளது. 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளிலும் ஹமாஸை எதிர்த்து காஸாவில் கிளர்ச்சிகள் நடந்தன. ஆனால் அவற்றை ஹமாஸ் கடுமையான அடக்குமுறையால் கட்டுப்படுத்தியாக நம்பப்படுகிறது. https://thinakkural.lk/article/316759
  20. 02 APR, 2025 | 11:13 AM ஏப்ரல் 5 முதல் 15 வரை நிழல் சிறிது நேரம் மறையும் அரிய நிகழ்வு நிகழவுள்ளதாக வானியலாளர் அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார். வானியலாளர் அனுர சி.பெரேரா மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சூரியன் நம் நாட்டின் மேல் அதன் உச்சத்தில் இருக்கும். இந்த உச்சநிலை ஏப்ரல் 5 முதல் 15 வரை நீடிக்கும். கொழும்பில் சூரியன் உச்சம் பெறுவது ஏப்ரல் 7 ஆம் திகதி நிகழ்கிறது. அன்று மதியம் 12:12 மணிக்கு யாராவது வெளியே இருந்தால், அவர்களின் நிழல் ஒரு கணம் மறைந்துவிடும். அவர்களால் தங்கள் சொந்த நிழலைப் பார்க்க முடியாது. வேறு யாராவது அதைப் பார்க்கலாம். "இந்த நிலைமை 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நீடிக்கும்." "4 ஆம் திகதி சூரியன் நம் நாட்டிற்குள் நுழைகிறது. அதாவது இந்த உச்சம் பெறுதல் பருத்தித்துறை முனையில் ஆரம்பமாகிறது. ஏப்ரல் 5 ஆம் திகதி எலமல்தெனிய, ஏப்ரல் 6 ஆம் திகதி களுத்துறை, ஏப்ரல் 7 ஆம் திகதி கொழும்பு - களனி, ஏப்ரல் 8 ஆம் திகதி மஹியங்கனை போன்ற பகுதிகளில் சூரியன் உச்சத்தை அடையும் என்றார். https://www.virakesari.lk/article/210889
  21. ஆண் குழந்தை என்னுடையதா?; எழுத்தாளர் - எலான் மஸ்க் இடையே வெடித்த மோதல்! உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்டவற்றின் தலைமை நிர்வாக இயக்குநருமான எலான் மஸ்க் தற்போது அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DODGE) துறையின் தலைவராக உள்ளார். அதிபர் டொனால்டு ட்ரம்ப்வின் நெருங்கிய நண்பரான எலான் மஸ்க்குக்கு வெவ்வேறு பெண்கள் மூலம் இதுவரை 14 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு மகள் திருநங்கையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதற்கிடையே ஆஸ்லே செயின்ட் கிளார் என்ற எழுத்தாளர் எலான் மஸ்க்கின் குழந்தையை தான் பெற்றெடுத்ததாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இது, உலக அளவில் பேசுபொருளானது. தனது குழந்தையின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காக ஆரம்பத்தில் இந்தச் செய்திகளைப் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை என்றும், ஆனால் ஊடகங்களின் அழுத்தம் காரணமாக அவ்வாறு செய்ய வேண்டியிருந்தது என்றும் ஆஸ்லே செயின்ட் கிளார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், குழந்தையின் தனிப் பொறுப்பையும் தந்தைவழி பரிசோதனையையும் கோரி நியூயார்க் உச்ச நீதிமன்றத்தில் மஸ்க்கிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை அமைதி காத்து வந்த மஸ்க், நேற்று மெளனம் கலைத்தார். அவர், ”ஆஷ்லேயின் ஆண் குழந்தை என்னுடையதா என்று எனக்குத் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிப்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் நான் அவருக்கு $2.5 மில்லியன் (கிட்டத்தட்ட ரூ.21.4 கோடி) கொடுத்துள்ளேன் மேலும் அவருக்கு வருடத்திற்கு $500k (ரூ.4.3 கோடி) அனுப்புகிறேன்” என்று மஸ்க் தெரிவித்துள்ளார். மஸ்க்கின் இந்தக் கருத்துக்கு ஆஷ்லே, “ஆலன் குழந்தை (நீங்கள் பெயரிட்ட) பிறப்பதற்கு முன்பே ஒரு சோதனை மூலம் உறுதிப்படுத்தும்படி நான் உங்களிடம் கேட்டேன். நீங்கள் மறுத்துவிட்டீர்கள். நீங்கள் எனக்குப் பணம் அனுப்பவில்லை, என்னைத் தண்டிப்பதாக நினைத்து பணத்தின் பெரும்பகுதியை நிறுத்திவிட்டீர்கள். ஆனால் நீங்கள் உண்மையில் உங்கள் மகனை மட்டுமே தண்டிக்கிறீர்கள். நீதிமன்றத்தில் நீங்கள் கடைசியாக எடுத்த முயற்சி என் வாயை மூட முயற்சித்தது என்பது முரண்பாடாக இருக்கிறது. அதேநேரத்தில் நீங்கள் உங்கள் சொந்த சமூக ஊடக சேனலைப் பயன்படுத்தி என்னைப் பற்றியும் எங்கள் குழந்தையைப் பற்றியும் உலகம் முழுவதும் அவதூறான செய்திகளைப் பரப்புகிறீர்கள். நீங்கள் மிகவும் முரட்டுத்தனமான மனிதர்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், தனது மகனை மஸ்க் மூன்று முறை மட்டுமே சந்தித்ததாகவும், அவரது வளர்ப்பில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்றும் செயிண்ட் கிளேர் கூறியுள்ளார். எலான் மஸ்க் தனது குழந்தை பராமரிப்புக்கான தொகையை 60% குறைத்ததாகவும், இதன் காரணமாகவே தனது டெஸ்லா காரை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் செயிண்ட் கிளேர் கூறியதைத் தொடர்ந்தே இந்த விவகாரம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. https://thinakkural.lk/article/316762
  22. 02 APR, 2025 | 09:54 AM மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போசாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் "பெலெஸ்ஸ" உணவகத்தில் செவ்வாய்க்கிழமை (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து வர்த்தகர்களின் ஆதரவுடன் நடத்திவரும் இந்த உணவகத் திட்டம் "Clean Sri Lanka" திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் 200 ரூபாய் என்ற குறைந்த விலையில் போசாக்கு நிறைந்த உணவை உண்டு மகிழும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும். இந்த போசாக்கான சமச்சீர் உணவின் செய்முறை அனைத்து அரச மற்றும் தனியார் உணவகங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பொதியிடப்பட்ட தேசிய உணவுகள் மற்றும் போசாக்கான சிற்றூண்டிகளையும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, தரமான, ஆரோக்கியமான மற்றும் போதியளவான உணவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவது அத்தியாவசியமானது என குறிப்பிட்டார். அதற்காக வழிகாட்டல்களை வழங்குதல் மற்றும் வர்த்தக சமூகத்தில் அணுகுமுறை ரீதியான மேம்பாட்டை உருவாக்குதல் உள்ளிட்ட நோக்கில் “Clean Sri Lanka”வேலைத்திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் (போசாக்கு) வைத்தியர் மொனிகா விஜேரத்ன மற்றும் சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் தேசிய உணவு ஊக்குவிப்பு சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தனியார் துறை வர்த்தகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/210888
  23. அமெரிக்க தளங்கள் அழிக்கப்படும்; ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை என்ற எச்சரிக்கையை அமெரிக்கா பின்பற்றினால், ஈரான் அப்பகுதியில் உள்ள "அமெரிக்க தளங்களைத் தாக்கும்” என அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது கலிபாஃப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஜனாதிபதி ட்ரம்ப், அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அணு ஆயுத உற்பத்தி பற்றிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வரும் ஈரான், ஒப்பந்தத்தை புதுப்பிக்க முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறியிருந்தது. இந்த நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்கும் விதமாக புதிய ஒப்பந்தத்தைக் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை நடத்த டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தி, ஈரானுக்கு கடிதம் எழுதியிருந்தார். ட்ரம்பின் இந்தக் கடிதத்திற்கு பதிலளித்திருந்த ஈரான் அரசு, “அமெரிக்கா உத்தரவுகளை வழங்குவதையும் அச்சுறுத்தல்களை விடுப்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” என பதிலடி கொடுத்திருந்தார். இதன்மூலம் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில் உறுதியாக உள்ளது. அது மட்டுமின்றி, அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்பதை தெளிவுப்படுத்தி உள்ளது. என்றாலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இதுதொடர்பாக இரண்டு மாத கால அவகாசம் அளித்திருப்பதாகவும், பேச்சுவார்த்தையை மறுத்தால் கடுமையான தடைகள் மற்றும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்திருந்தார். இதற்கிடையே, சமீபத்தில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை, ராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டிருந்தது. ‘ஏவுகணை நகரம்’ தொடர்பான 85 வினாடிகள் ஒளிபரப்பாகும் அந்த வீடியோவில், அந்நாட்டின் ராணுவ பலத்தைக் காட்டுவதாக அமைந்திருந்தது. இந்த நிலையில், ”ஈரான் மீது இராணுவ நடவடிக்கை என்ற எச்சரிக்கையை அமெரிக்கா பின்பற்றினால், ஈரான் அப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்கும்” என அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது கலிபாஃப் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஈரானின் புனிதத்தை அமெரிக்கா அழிக்க முயன்றால், பிராந்தியம் முழுவதும் வெடிமருந்துக் கிடங்கில் ஒரு தீப்பொறி போல வெடித்துச் சிதறும். அவர்களின் இராணுவ தளங்களும், அவர்களின் கூட்டாளிகளின் தளங்களும் பாதுகாப்பாக இருக்காது” என எச்சரித்துள்ளார். முன்னதாக வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்கி, ”அமெரிக்கா தனது அதிகபட்ச அழுத்தமளிப்பது என்ற கொள்கையை மாற்றாவிட்டால் பேச்சுவார்த்தை சாத்தியமல்ல. ட்ரம்பின் கடிதத்தை ஈரான் முழுமையாக ஆராய்ந்து, ஓமன் வழியாக பொருத்தமான பதிலை அனுப்பியுள்ளது” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/316684

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.