ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!
Everything posted by ஏராளன்
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
சிஎஸ்கே மீண்டும் தோல்வி: பேட்டிங்கில் தோனி எப்போதும் தாமதமாக களமிறங்குவது ஏன்? பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டியென்றாலே கடைசி ஓவர், கடைசிப்பந்துவரை ரசிகர்களை அமரவைப்பது, ரசிகர்களின் ரத்தக்கொதிப்பை எகிறவைப்பது, எளிய இலக்கை துரத்தக்கூட அதிக ஓவர்கள் எடுத்துக்கொள்வது போன்றவை இந்த சீசனிலும் தொடர்கிறது. குவஹாட்டியில் நேற்று (மார்ச் 30) நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியின் 11-வது ஆட்டமும் இதுபோன்றுதான் இருந்தது. கடைசிஓவர், கடைசிப் பந்து வரை ரசிகர்களின் பொறுமையையும், ரத்திக்கொதிப்பையும் எகிறவைத்தனர். குவஹாட்டியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது. 183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து 6 ரன்னில் தோல்வி அடைந்தது. பேட்டிங்கின் போது சிஎஸ்கே அணி இக்கட்டான நேரத்தில் இருக்கும் போது களமிறங்காமல், மிகவும் தாமதமாக தோனி களமிறங்குவது ஏன் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வரும் கேள்விகளுக்கு பயிற்சியாளர் பிளமிங் பதிலளித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ராணா 36 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார். ராணாவின் அதிரடி ஆட்டம் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்கார்ரான ஜெய்ஸ்வால் 3வது போட்டியாக ஏமாற்றி முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா, சஞ்சு சாம்ஸன் கூட்டணி ஆட்டத்தை கையில் எடுத்து ஸ்கோரை படுவேகமாக உயர்த்தினர். சாம்ஸன் நிதானமாக ஆட, நிதிஷ் ராணா சிஎஸ்கே பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரி என தெறிக்கவிட்டார். ராணாவின் அதிரடியைக் கட்டுப்படுத்த பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் முடியவில்லை. அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்கள் பவுண்டரி பறந்தது. வழக்காக 3வது வீரராக ரியான் பராக் களமிறங்குவார், ஆனால், ராணாவை களமிறக்கியதற்கு நல்ல பலன் கிடைத்தது. பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்தது. சாம்ஸன் 20 ரன்னில் நூர் முகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 82 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த கேப்டன் ரியான் பராக், ராணாவுடன் சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ராணா 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதுவரை ஐபிஎல் தொடர்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்காத ராணா, 36 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் முதல்முறையாக தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். ராணா கணக்கில் 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும். ரமலான் நோன்பு காலத்தில் உணவு சமைக்கும் போது சலனம் வருமா? முஸ்லிம் சமையல் கலைஞரின் அனுபவம்5 மணி நேரங்களுக்கு முன்னர் வேலைக்கு விண்ணப்பிக்க சரியான 'ரெஸ்யூம்' தயார் செய்வது எப்படி?5 மணி நேரங்களுக்கு முன்னர் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் அதன்பின் ஆட்டத்தை சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் கையில் எடுத்தனர். ராணா இருக்கும் வரை ஸ்கோர் எப்படியும் 200 ரன்களைக் கடந்துவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், துருவ் ஜூரெல் 3 ரன்னில் நூர் முகமது பந்துவீச்சிலும், ஹசரங்கா 4 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் கீழ்வரிசை பேட்டர்கள் ஹெட்மெயர்(19 ரன்கள்), ஆர்ச்சர்(0 ரன்), ரியான் பராக்(37 ரன்கள்) என வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். 182 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் அணியால் சேர்க்க முடிந்தது, ராஜஸ்தான் பேட்டிங் வரிசைக்கு கூடுதலாக இன்னும் 20 ரன்கள் சேர்த்திருக்கலாம். ஆனால், நடுவரிசை பேட்டர்கள் ஏமாற்றினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிதிஷ் ராணா சிஎஸ்கே பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரி என தெறிக்கவிட்டார். வீணடிக்கப்படும் ஹெட்மெயர் 7-வது வீரராக ஹெட்மெயரை களமிறக்கி ராஜஸ்தான் அவரின் திறமையை குறைக்கிறது, ஹெட்மெயரை 4வது வீரராக நடுவரிசையில் களமிறக்கியிருந்தால் அவர் ஆங்கர் ரோல் எடுத்து சிறப்பாக பேட் செய்திருப்பார். ஆனால் அவரை சரியாக பயன்படுத்தாமல் வீணடிக்கிறது ராஜஸ்தான் அணி. 124 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 52 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சிஎஸ்கே தரப்பில் நூர் அகமது, பதிராணா, கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பல மாதங்கள் காய்ந்து கிடக்கும் 'ஜாம்பி' தாவரம் சில மணி நேரத்தில் உயிர்த்தெழுவது எப்படி?30 மார்ச் 2025 குழந்தைகள் கையில் செல்போன்: பிகார் கும்பலிடம் ரூ.24 லட்சத்தை இழந்த தேனி வியாபாரி - என்ன நடந்தது?30 மார்ச் 2025 படம் காண்பித்த ஆர்ச்சர் 183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. ஆர்ச்சர் வீசிய மின்னல் வேக பவர்ப்ளே ஓவரில் தொடக்கத்திலேயே ரச்சின் ரவீந்திரா ரன் சேர்க்காமல் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணியை ஆர்ச்சர் தண்ணி குடிக்கவைத்தார். ஆர்ச்சரின் ஒவ்வொரு பந்தும் 145 கி.மீ வேகத்தில் கத்தி போல களத்தில் இறங்கியது. வேகப்பந்துவீச்சில் ஹார்டு லென்த்தில் பந்துவீசி, டெஸ்ட் பந்துவீச்சை சிஎஸ்கே பேட்டர்களுக்கு ஆர்ச்சர் காண்பித்தார். உண்மையாகவே இதுதான் ஆர்ச்சரின் தனித்தன்மையான பந்துவீச்சு இதுதான். ஆர்ச்சரின் பந்துவீச்சை சிஎஸ்கே பேட்டர்களால் தொடக்கூட முடியவில்லை. மறுபுறம் தேஷ்பாண்டே தனது பவுன்ஸரால் கெய்க்வாட்டின் முழங்கையில் காயத்தை ஏற்படுத்தினார். சிஎஸ்கே அணி பவர்ப்ளேயில் ஒட்டுமொத்தமாக கோட்டைவிட்டது. சந்தீப் சர்மா வீசிய 6-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் அடித்ததால் 42 ரன்களை பவர்ப்ளேயில் சேர்த்தது. முதல்3 ஓவர்களில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 5 ரன்கள் மட்டுமே சேர்த்து விழிபிதுங்கி இருந்தது. காமெடியாக மாறிய திரிபாதி திரிபாதி பேட் செய்யும்போது தோள்பட்டையை குலுக்கி, குலுக்கி பேட் செய்யும் காட்சியையும், ஆர்ச்சரின் பந்துவீச்சில் பலமுறை "பீட்டன்" ஆனதையும் பார்த்த வர்ணனையாளர்கள் கிண்டல் செய்தனர், சமூக வலைத்தளங்களிலும் திரிபாதியின் தோள் குலுக்கல் ஸ்டைல் உடனடியாக மீம்ஸாக மாறியது. 2 போட்டிகளிலும் சொதப்பிய திரிபாதி 23 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES திருப்புமுனை விக்கெட் அடுத்துவந்த ஷிவம் துபே, வந்தவேகத்தில் சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். ஆனால் துபே நீண்டநேரம் நிலைக்கவில்லை, ஹசரங்கா பந்துவீச்சில் அடித்த ஷாட்டை ரியான் பராக் அற்புதமாக கேட்ச் பிடிக்கவே 18 ரன்னில் ஆட்டமிழந்தார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது, சிஎஸ்கேயின் நம்பிக்கை பேட்டரை வெளியேற்றியது ராஜஸ்தானுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. அடுத்துவந்த தமிழக வீரர் விஜய் சங்கர் ஒரு சிக்ஸர் உட்பட 9 ரன்களுடன் ஹசரங்காவின் கூக்ளி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடிய கெய்க்வாட் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜடேஜா, கெய்க்வாட் கூட்டணி மெல்ல அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். ஆனால், ஹசரங்கா பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து கெய்க்வாட் 63 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்தாலும் தோனி இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் இருந்தனர். கடந்த போட்டியில் 9-வது வீரராக தோனி களமிறங்கியது கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் இந்த போட்டியில் அவர் 7-வது வீரராக் களமிறங்கினார். அக்வாபோனிக்ஸ்: மீன்களின் கழிவுகள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிக்கும் தம்பதி29 மார்ச் 2025 சிறுநீரை உரமாக மாற்றும் அமெரிக்க விவசாயிகள்29 மார்ச் 2025 பரபரப்பை ஏற்படுத்திய தோனி கெய்க்வாட் ஆட்டமிழந்த போது சிஎஸ்கே வெற்றிக்கு 25 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், தோனி, ஜடேஜா கூட்டணி அதை 12 பந்துகளில் 39 ரன்களாகக் குறைத்தனர். 18-வது ஓவரை வீசிய தீக்ஷனா பவுண்டரி இல்லாமல் பந்துவீசி சிஎஸ்கேவுக்கு சிக்கலை ஏற்படுத்தினார் ஆனால், தேஷ்பாண்டே வீசிய 19வது ஓவரில் தோனி 2 சிக்ஸர் பவுண்டரி என 19 ரன்கள் சேர்த்து ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா கடந்த சீசனில் சிஎஸ்கே அணியை டிபெண்ட் செய்ததால் அவரே இந்தமுறையும் பந்துவீசினார். அது மட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சை தோனி எளிதாக ஆடிவிடுவார் என்பதால் சந்தீப் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. சந்தீப் வீசிய 2வது பந்தில் தோனி அடித்த ஷாட்டை ஹெட்மெயர் கேட்ச் பிடிக்கவே 16 ரன்கள் எடுத்து அவர் வெளியேறினார். அடுத்துவந்த ஓவர்டன் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்கவே, அதன்பின் அடிக்க முடியாமல் சிஎஸ்கே 6 ரன்னில் தோல்வி அடைந்தது. ஜடேஜா 32 ரன்களிலும், ஜேமி ஓவர்டன் 11 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் வெற்றிக்காக காத்திருந்தோம் வெற்றிக்குப்பின் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் கூறுகையில் " இந்த வெற்றிக்காக நீண்டநேரம் காத்திருந்தோம். 20 ரன்கள் குறைவாகவே சேர்த்தோம். நடுப்பகுதியில் விரைவாக விக்கெட்டை இழந்ததுதான் இதற்கு காரணம். ஆனால் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம்,. கடந்த 2 ஆட்டங்களும் எங்களுக்கு கடுமையானதாக இருந்தது, ஆனால்,அந்தத் தோல்விகளை மறந்துவிட்டு, புத்துணர்ச்சியுடன் இந்த ஆட்டத்தை எதிர்கொண்டோம், அனைவரின் கூட்டுழைப்பால் வெற்றி கிடைத்தது. சூழலுக்கு ஏற்ப பந்துவீச்சை மாற்றினோம், ஆர்ச்சர் சிறப்பாக பந்துவீசினார், பீல்டிங்கும் எங்களிடம் இன்று சிறப்பாக இருந்தது, எங்களின் பீல்டிங் பயிற்சியாலர் திஷாந்துடன் நீண்ட பயிற்சி எடுத்ததற்கு பலன் கிடைத்தது" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒவ்வொரு விக்கெட் வீழ்த்தும்போது, "புஷ்பா" படபாணியில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி ஹசரங்கா ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதுதான் உண்மையான ஆர்ச்சர் இந்த சீசன் தொடங்கியதிலிருந்து அதிகமாக ரன் கொடுக்கப்பட்டு பந்துவீச்சில் வறுத்தெடுக்கப்பட்டவர் ஜோப்ரா ஆர்ச்சர். ஒருகாலத்தில் தனது மின்னல்வேகப்பந்துவீச்சால் உலக அணிகள அலறவிட்ட ஆர்ச்சரை இந்த சீசன் தொடக்கத்தில் அவரை கண்ணீர்விட வைத்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் தன்னுடைய பந்துவீச்சு தரம் என்ன என்பதையும், கிளாசிக் ஆர்ச்சர் யார் என்பதையும் வெளிப்படுத்தினார். ஆர்ச்சர் வீசிய 3 ஓவர்களும் அவரின் பந்துவீச்சு வேகம் சராசரியாக மணிக்கு 145கி.மீக்கு குறையவில்லை. ஆர்ச்சரின் டெஸ்ட் பந்துவீச்சு துல்லியம், ஹார்டு லென்த்தை சமாளிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், திரிபாதி இருவருமே திணறினர். ஆர்ச்சர் பந்துவீசியது மட்டும்தான் தெரிந்தது, ஆனால், பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றுவிடும், சிஎஸ்கே பேட்டர்கள் இருவரும் வேடிக்கை பார்க்க வேண்டும் அல்லது டிபெண்ட் செய்ய வேண்டிய நிலைதான் இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா தரமான வேகப்பந்துவீச்சுக்கு இணைகொடுக்காமல் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் ஆர்ச்சரின் பந்துவீச்சு சிஎஸ்கே பேட்டர்களுக்கு வேடிக்கை காட்டியது. ஆனால், ஆர்ச்சருக்கு நேற்று முழுமையாக ஓவர்களும் கொடுக்காமல் 3 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டது, 3 ஓவர்கள் வீசிய ஆர்ச்சர் ஒரு மெய்டன் 13 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். கோடையில் எந்தெந்த பாம்புகள் வீடுகளை நோக்கிப் படையெடுக்கும்? எப்படி தவிர்க்கலாம்?29 மார்ச் 2025 தினமும் நிம்மதியாக மலம் கழிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன?28 மார்ச் 2025 சிஎஸ்கே தோல்விக்கான காரணங்கள் சிஎஸ்கே அணியின் நேற்றைய தோல்விக்கு முக்கியமான காரணம் அணியின் தேர்வுதான். குறிப்பாக திரிபாதிக்குப் பதிலாக டேவான் கான்வேயை தொடக்க வீரராக களமிறக்கி இருக்கலாம். வேகப்பந்துவீச்சில் எதிரணியை மிரட்டும் அளவுக்கு நல்ல தரமான வேகப்பந்துவீச்சாளர்களை சேர்க்க வேண்டும். அன்சுல் கம்போஜ் உள்நாட்டில் சிறப்பாக பந்துவீசியவர் அவருக்கு இன்னும் வாய்ப்பளிக்கவில்லை. ராஜஸ்தான் அணியில் நேற்று இருந்த பீல்டிங் தரம் சிஎஸ்கேயிடம் இல்லை. இதைத்தான் கேப்டன் ருதுராஜும் பேட்டியில் குறிப்பிட்டார். நடுப் பகுதியில் ஷிவம் துபே என்னும் ஒற்றை பேட்டரை மட்டுமே பெரிய ஷாட்களுக்கு சிஎஸ்கே நம்பி இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியில் அனிகேத், அன்சாரி என இரு முத்துகளை கண்டெடுத்துள்ளது. அதுபோல் சிஎஸ்க அணியும் இளம் வீரர்களை கண்டுபிடிக்க வாய்ப்பளிக்கலாம். சிஎஸ்கே அணி தொடர்ந்து அஸ்வின், ஜடேஜா, ஷிவம் துபே, பதிராணா, என்று ஒரு மாதிரியான வீரர்களையே களமிறக்குவது எதிரணியின் வெற்றியை மிகவும் எளிதாக்கிவிடும். இந்த பேட்டர்களுக்கு எவ்வாறு பந்துவீசி விக்கெட் வீழ்த்தலாம் என்பதும், இவர்களின் பந்துவீச்சை எவ்வாறு விளையாடலாம் என்றும ஹோம்ஓர் செய்வது எதிரணிக்கு எளிது. எதிரணி ஊகிக்க முடியாத வகையில் பேட்டிங் வரிசையையும், பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்த வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES 2018 முதல் 180 ரன்னுக்கு மேல் சிஎஸ்கே சேஸ் செய்ததில்லை கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப்பின் சிஎஸ்கே அணி சேஸிங்கில் 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ததில்லை என்பது நேற்று உறுதியானது. 180 ரன்களுக்கு மேல் உள்ள இலக்குகளை சேஸிங் செய்த கடைசி 9 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோற்றுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் சந்தித்கும் 2வது தோல்வி, புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. ராஜஸ்தான் அணி இந்த சீசனில் பெறும் முதல் வெற்றியாகும், இருப்பினும் 8வது இடத்தில் இருக்கிறது. தங்க நகைகளை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் துருப் பிடிக்குமா?27 மார்ச் 2025 இந்திரா - ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு எதிர்த்தது ஏன்? ஆதரித்த காந்தி அதில் கலந்து கொள்ளாதது ஏன்?30 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தோனி தாமதமாக களமிறங்குவது ஏன்? இந்த ஐபிஎல் சீசனில் தொடக்கம் முதலே, பேட்டிங்கில் தோனி மிகவும் தாமதமாக களமிறங்குவது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. ஆர்சிபிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 13-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த போது, ரவிச்சந்திரன் அஸ்வினை களமிறக்கிவிட்டு தோனி 9வது வீரராக களமிறங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்றைய ஆட்டத்திலும் கூட, 12-வது ஓவரில் விஜய்சங்கர் 4-வது விக்கெட்டுக்கு ஆட்டமிழந்த போது தோனி களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ரவீந்திர ஜடேஜா களமிறங்கி கேப்டன் ருதுராஜூடன் ஜோடி சேர்ந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஃபினிஷர், மேட்ச் வின்னர் என்று பெயரெடுத்த தோனி, சிஎஸ்கே அணிக்குத் தேவையான நேரத்தில் களமிறங்காமல் கடைசி நேரத்தில் களம் காண்பது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. இதற்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய தோல்விக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் விடை கிடைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங், தோனி தாமதமாக களமிறங்குவது குறித்து விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், "அவரது உடலும் முழங்கால்களும் முன்பு போல் இல்லை. அவரால் நன்றாக நகர முடிகிறது. ஆனால், அவரால் தொடர்ந்து 10 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்ய முடியாது. எனவே அவர் நமக்கு என்ன கொடுக்க முடியும் என்பதை அன்றைய தினம் மதிப்பிடுவார். ஆட்டம் சமநிலையில் இருந்தால், அவர் சற்று முன்னதாகவே செல்வார். மற்ற சமயங்களில் அவர் மற்ற வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார்." என்றார். அதற்காக, 43 வயதான தோனியை அணியில் தொடர்ந்து தக்க வைப்பதற்கான வழிகளை சிஎஸ்கே நிர்வாகம் கண்டுபிடித்து வருகிறது என்று அர்த்தமல்ல என்றார் ஃப்ளெமிங். "கடந்த ஆண்டும் நான் சொன்னேன், அவர் எங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்க ஒரு வீரர். தலைமைத்துவம் மற்றும் விக்கெட் கீப்பிங் திறன் கொண்ட அவர் சிறப்பானவர். 10 ஓவர்கள் களத்தில் பேட்டிங் செய்வது என்பதை அவர் ஒருபோதும் செய்ததில்லை. சுமார் 13-14 ஓவர்களில் ஆட்டத்தின் நிலைமையைப் பொருத்து அவர் களமிறங்க விரும்புகிறார்" என்று பிளமிங் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cwyn3kxz3nzo
-
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்யாவிட்டால் குண்டு வீசுவோம் – ட்ரம்ப் எச்சரிக்கை!
அமெரிக்கா முன்வைத்துள்ள அணுசக்தி உடன்படிக்கையை ஈரான் ஏற்காவிட்டால் குண்டுவீச்சு - டிரம்ப் 31 MAR, 2025 | 11:32 AM அமெரிக்கா முன்வைத்துள்ள அணுசக்தி உடன்படிக்கையை ஈரான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா குண்டுவீசலாம் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானிற்கு எதிராக அமெரிக்கா வரிகளை விதிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். என்பிசி நியுசிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் அணுசக்தி திட்டம் தொடர்பான அமெரிக்காவின் உடன்படிக்கையை ஈரான் ஏற்றுக்கொள்வதற்கு சில வார அவகாசத்தை வழங்குவேன் பேச்சுவார்த்தைகள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதை அடிப்படையாக வைத்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஈரானிற்கு எதிராக எங்களிடம் இரண்டாம் நிலை வரிகள் உள்ளன என தெரிவித்துள்ள அவர் நாங்கள் அவர்களிற்கு சிலவாரங்கள் அவகாசம் வழங்குவோம், முன்னேற்றம் எதுவும் ஏற்படாவிட்டால் நாங்கள் அவற்றை நடைமுறைப்படுத்தப்போகின்றோம் என தெரிவித்துள்ளதுடன் அணுசக்தி உடன்படிக்கையை அடிப்படையாக வைத்தே இதனை நாங்கள் தீர்மானிப்போம், அவர்கள் உடன்படிக்கைக்கு இணங்கினால் நாங்கள் அந்த வரிகளை நடைமுறைப்படுத்தமாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/210706
-
இலங்கை கடற்பரப்பில் பயணித்த கப்பலில் சீன பிரஜைக்கு சுகயீனம் : வைத்திசாலையில் அனுமதித்த இலங்கை கடற்படை
Published By: DIGITAL DESK 3 31 MAR, 2025 | 10:31 AM இலங்கையின் தெற்கே காலியில் இருந்து 63 கடல் மைல் (சுமார் 116 கி.மீ) தொலைவில் பயணித்த MV AE Neptune என்ற கப்பலின் பணிக்குழுவைச் சேர்ந்த சீன பிரஜையொருவர் மயங்கி விழுந்து ஆபத்தான நிலையில் இலங்கை கடற்படையின் உதவியுடன் கரைக்குக் கொண்டுவந்து காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தென் கடற்பகுதியில் பயணித்து கொண்டிருந்த MV AE Neptune கப்பலின் பணிக்குழுவில் இருந்த சீன நாட்டவர் ஒருவர் கப்பலின் இயந்திர அறையில் மயங்கி விழுந்து ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அந்த சீன நபரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினை உதவுமாறு, அந்த கப்பலில் இருந்து கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிப்பு வழங்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவினர் உடனடியாக பதிலளித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியைக் கரைக்குக் கொண்டுவருவதற்கு மருத்துவக் குழுவுடன் இலங்கை கடற்படைக் கப்பலை அனுப்ப ஒருங்கிணைப்பு மையம் ஏற்பாடு செய்தது. அமதன்படி, நோயாளியை ஏற்றிச் சென்ற MV AE Neptune கப்பல் காலி துறைமுகத்திற்கு அருகில் வந்தடைந்த பின்னர், நோயாளி கப்பலில் இருந்து இலங்கை கடற்படைக் கப்பலுக்கு மாற்றப்பட்டார். பின்னர், சுகயீனமடைந்த சீனப் பிரஜைக்கு அடிப்படை முதலுதவிகளை வழங்கிய இலங்கை கடற்படையினர் அவரை காலி துறைமுகத்திற்கு அழைத்து வந்து மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். https://www.virakesari.lk/article/210691
-
யாழ் இணையமே! தொடர்ந்தும் வெற்றிநடைபோடவேண்டும்
அகவை 27 இல் அடியெடுத்து வைக்கும் யாழிணையத்திற்கு எனது வாழ்த்துகள். யாழின் நிர்வாகத்திற்கு நன்றிகள்.
-
குழந்தைகள் கையில் செல்போன்: பிகார் கும்பலிடம் ரூ.24 லட்சத்தை இழந்த தேனி வியாபாரி - என்ன நடந்தது?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் "இந்த தவறு எப்படி நடந்திருக்கும் எனக் கண்டறிய முடியவில்லை. ஆனால், எதையோ செய்து எங்கள் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டார்கள் என்று மட்டும் புரிகிறது. நான் இப்போது உயிருடன் இருப்பதே பெரிய விஷயம்..." எனக் கூறி கண்கலங்கினார் சிவநேசன். தேனி மாவட்டம் தேவாரத்தில் மளிகைக்கடை நடத்தி வரும் சிவநேசன், சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பலிடம் 24 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். குழந்தைகளிடம் செல்போனை கொடுத்ததன் விளைவாக இந்த மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார், தேனி சைபர் குற்றப் பிரிவு ஆய்வாளர். மளிகைக் கடைக்காரரிடம் மோசடி நடந்தது எப்படி? மோசடிக் கும்பலிடம் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? மேட்ரிமோனி தளங்களில் மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழக்கும் நபர்கள் - சைபர் போலீஸ் எச்சரிக்கை ரூ.13,000 கோடி கிரிப்டோகரன்சி கொள்ளை: வட கொரிய ஹேக்கர்கள் செயல்படுவது எப்படி? டீப் ஃபேக்: நெருங்கிப் பழகி ரகசியமாக ஆபாசப் படங்களை வெளியிட்ட நண்பன் - தம்பதி செய்தது என்ன? கோவை: 'ரூ. 6,000 செலுத்தினால் தினமும் ரூ. 300' - மொபைல் ஆப் மூலம் மக்களை ஏமாற்றியது எப்படி? தேனி மாவட்டம் தேவாரத்தில் பலசரக்கு கடை நடத்தி வரும் சிவநேசன், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தனது வங்கிக் கணக்கு விவரங்களை சரிபார்ப்பது வழக்கம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஸ்டேட் வங்கிக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கை அவர் சரிபார்த்தபோது அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. 2024 பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் மார்ச் 15 வரையிலான காலகட்டத்தில் அவரின் வங்கிக் கணக்கில் இருந்து 24,69,600 ரூபாய் திருடு போனதை அறிந்தார். சுமார் பத்துக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் இந்த மோசடி நடந்துள்ளது. "தேவாரம் ஸ்டேட் வங்கி கிளையின் மேலாளரிடம் முறையிட்டேன். அவர் உடனே எனது வங்கிக் கணக்கை ஆய்வு செய்தார். அப்போது, மனோஜ்குமார், அனில்குமார் என பலரின் கணக்குகளுக்கு பணம் சென்றிருப்பது தெரியவந்தது" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சிவநேசன். வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை தானும் தனது மனைவியும் செல்போனில் வைத்திருந்ததாகக் கூறும் சிவநேசன், "இரவு 11 மணிக்கு மேல் தான் பணத்தைத் திருடியுள்ளனர்" என்கிறார். "மார்ச் மாதம் என்பதால் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்காக இந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் வைத்திருந்தேன். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இப்படியொரு வழக்கத்தைக் கையாண்டு வருகிறேன்" எனக் கூறுகிறார் சிவநேசன். தனது பணம் திருடப்பட்டதை அறிந்ததும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேனி மாவட்ட சைபர் குற்றப் பிரிவில் சிவநேசன் புகார் அளித்துள்ளார். பதவி நீட்டிப்பில் ஜே.பி.நட்டா: பாஜக தலைவர் தேர்வு தாமதம் - ஆர்எஸ்எஸ் - பாஜக இடையே என்ன நடக்கிறது?30 மார்ச் 2025 வேலைக்கு விண்ணப்பிக்க சரியான 'ரெஸ்யூம்' தயாரிப்பது எப்படி?30 மார்ச் 2025 குழந்தைகள் கையில் செல்போன்... என்ன ஆபத்து? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப்படம் "புகார் கொடுத்த சில மாதங்களுக்குள் சைபர் குற்றப் பிரிவு ஆய்வாளர்கள் மாறிக் கொண்டே இருந்தனர். தற்போதைய ஆய்வாளர் வெங்கடாசலம்தான் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து கொடுத்தார்" எனக் கூறுகிறார் சிவநேசன். பணம் கொள்ளை போன பின்னணி குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சிவநேசன், " எனக்கு திருமணம் நடந்து 18 ஆண்டுகள் கழித்து இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இருவருக்கும் மூன்று வயது தான் ஆகின்றது. வீட்டில் உள்ள இரண்டு செல்போனிலும் பொம்மை படங்களை குழந்தைகள் பார்ப்பார்கள்" என்கிறார். "கடந்த ஆண்டு பிப்ரவரியில் செல்போனில் எந்த பட்டனை குழந்தைகள் அழுத்தினார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், அதன்பிறகு செல்போன் பயன்படுத்த முடியாத அளவுக்கு ஹேங் ஆகிவிட்டது" எனக் கூறுகிறார் சிவநேசன். இதன்பிறகே தனது வங்கிக் கணக்கில் இருந்து 24 லட்ச ரூபாய்க்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் பணத்தில் வீடு கட்டுவதற்காக பெறப்பட்ட ஒன்பது லட்ச ரூபாய் வங்கிக் கடனும் அடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். "வீட்டு கடனுக்கு டாப்அப் லோன் என்ற பெயரில் 10 லட்ச ரூபாயை கொடுத்தனர். பணம் பறிபோவதற்கு 1 மாதம் முன்பு இந்தப் பணம் வந்தது. இதில் இருந்து ஒரு லட்ச ரூபாயை மட்டுமே எடுத்தேன். இதற்கு மாத தவணையாக 15 ஆயிரம் செலுத்தி வருகிறேன்" எனவும் அவர் தெரிவித்தார். காவல்துறையில் புகார் கொடுத்து கிட்டதட்ட ஓராண்டு கடந்த பின்னரும் புகார் மனு கிடப்பில் இருந்துள்ளது. தேனி சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளராக பொறுப்பேற்ற வெங்கடாசலம், சிவநேசனை அழைத்து விசாரித்துள்ளார். மும்பை மீண்டும் தோல்வி: ரோஹித்திடம் ஹர்திக் நடந்து கொண்ட விதம் பற்றி ரசிகர்கள் கூறியது என்ன?30 மார்ச் 2025 புருண்டி அதிபர் மீது அங்கே வாழும் காங்கோ அகதிகள் கோபம் கொள்வது ஏன்?30 மார்ச் 2025 பிகாரில் கைதான நபர் யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES இதன் தொடர்ச்சியாக பிகார் தலைநகர் பாட்னாவை சேர்ந்த அர்ஜூன்குமார் என்ற நபரை சில வாரத்துக்கு முன்பு தேனி சைபர் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். "சிவநேசனின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்த கும்பலின் வங்கிக் கணக்கு விவரங்களை சரிபார்த்தபோது ஒரு கணக்கு மட்டும் செயலில் இருந்துள்ளதை அறிந்தோம்," எனக் கூறுகிறார் தேனி சைபர் குற்றப் பிரிவு ஆய்வாளர் வெங்கடாசலம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அந்தக் கணக்கு பிகாரை சேர்ந்த நீரஜ் குமார் என்பவர் பெயரில் இருந்தது. அந்தக் கணக்கில் ஒரு செல்போன் எண் இணைக்கப்பட்டிருந்தது" என்கிறார். அந்த செல்போன் எண்ணைப் பின்தொடர்ந்து சென்றபோது பாட்னாவில் உள்ள பண்டாரக் என்ற பகுதியில் அர்ஜூன் குமார் என்ற நபரை சைபர் கிரைம் போலீஸார் நேரில் சென்று கைது செய்துள்ளனர். இவர் கட்டட கொத்தனார் ஒருவருக்கு உதவியாளராக வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது. சனிப் பெயர்ச்சி நிகழும் நாளை கணிப்பதில் ஜோதிடர்கள் முரண்படுவது ஏன்? அறிவியல் உண்மை என்ன?30 மார்ச் 2025 மியான்மர் நிலநடுக்கத்தில் பலி 1,000-ஐத் தாண்டியது - ஆங் சாங் சூச்சி என்ன ஆனார்?29 மார்ச் 2025 பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,அர்ஜூன் குமார் "அவர் வேறொரு நபர் கேட்டதற்காக நான்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்கி கொடுத்துள்ளார். கூடவே சில சிம்கார்டுகளை வாங்கிக் கொடுத்துள்ளார். இதற்காக, கமிஷன் தொகையை பெற்றுள்ளார்" எனக் கூறுகிறார் வெங்கடாச்சலம். இந்த வழக்கில் அர்ஜூன் குமாரின் செல்போனை பறிமுதல் செய்துள்ளதாகக் கூறும் வெங்கடாச்சலம், "சிவநேசனின் வங்கிக் கணக்கில் 10 பரிவர்த்தனைகள் மூலம் பணம் எடுத்துள்ளனர். விசாரணையில் இந்தக் கும்பலின் நெட்வொர்க் நீண்டுகொண்டே செல்கிறது" எனவும் அவர் குறிப்பிட்டார். அர்ஜூன் குமாரிடம் இதுவரை எந்தப் பணமும் மீட்கப்படவில்லை. குழந்தைகள் விளையாட்டுத்தனமாக செல்போனை கையாண்டபோது இந்த தவறு நடந்துள்ளதாகவும் ஆய்வாளர் வெங்கடாசலம் தெரிவித்தார். எவ்வாறு தற்காத்துக் கொள்வது? பட மூலாதாரம்,GETTY IMAGES "இதுபோன்ற மோசடிகளில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது?" என, சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் கேட்டது. "தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பலரும் செல்போனில் தான் வைத்திருப்பார்கள். இணைய பரிவர்த்தனை என்பது திறந்தநிலையில் இருக்கும். புதிதாக எந்த செயலியை பதிவிறக்கம் செய்தாலும், செல்போனின் கட்டுப்பாடு வேறு நபரிடம் செல்வதை நாம் அறிவதில்லை" எனக் கூறுகிறார். "குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் சில செயலிகளை பயன்படுத்துகின்றனர். இது பார்ப்பதற்கு விளையாட்டு, லோன் என ஈர்க்கக் கூடியதாக இருக்கும். அதன் நோக்கத்துக்கு மாறானதாக இது இருக்கும். இதை பதிவிறக்கம் செய்தாலே மூன்றாம் நபரின் கட்டுப்பாட்டுக்கு செல்போன் சென்றுவிடும்" எனக் கூறுகிறார். செல்போனில் ஓடிபி எண் முதல் எஸ்எம்எஸ் வரை மோசடி கும்பலால் அறிந்து கொள்ள முடியும் எனவும் இதன்மூலம் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தைத் திருடுவதாகவும் அவர் தெரிவித்தார். தூத்துக்குடி அருகே காதலிக்க மறுத்த சிறுமி உயிரோடு தீ வைத்து எரிப்பு - இன்றைய டாப்5 செய்திகள்30 மார்ச் 2025 பல மாதங்கள் காய்ந்து கிடக்கும் 'ஜாம்பி' தாவரம் சில மணி நேரத்தில் உயிர்த்தெழுவது எப்படி?30 மார்ச் 2025 பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,புதிதாக எந்த செயலியை பதிவிறக்கம் செய்தாலும், செல்போனின் கட்டுப்பாடு வேறு நபரிடம் செல்வதை நாம் அறிவதில்லை என்கிறார் கார்த்திகேயன் இதனை தவிர்ப்பதற்கு சில வழிமுறைகளையும் அவர் பட்டியலிட்டார். * ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்போது அதன் கவர்ச்சிகரமான பெயர்களை கவனிக்காமல் அதன் தயாரிப்பு நிறுவனத்தைக் கவனிக்க வேண்டும். * குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கும்போது அவர்கள் சில புதுமையான செயலிகளை ஆராய்வது வழக்கம். அவர்களிடம் செல்போன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். * வங்கி கணக்கு விவரங்கள், இணைய பரிவர்த்தனை தொடர்பான தரவுகளை செல்போனில் வைத்திருப்பது சரியானதல்ல. புதுப்புது செயலிகளை நம்பி பலரும் ஏமாறுவதாகக் கூறும் கார்த்திகேயன், "திருடப்படும் பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மடைமாற்றப்படுவதால் அவ்வளவு எளிதில் மீட்க முடிவதில்லை" எனக் கூறினார். -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2yx7wed48o
-
யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை ஆரம்பம்
47 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் - திருச்சி இடையிலான விமான சேவை ஆரம்பம்! Published By: VISHNU 30 MAR, 2025 | 09:29 PM 47 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கு இடையிலான விமான சேவை இன்று 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமான சேவை நிறுவனத்தினால் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சியிலிருந்து 27 பயணிகளுடன் இன்று மதியம் 02.02 க்கு விமானமொன்று பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதேநேரம், பலாலி விமான நிலையத்திலிருந்து மீண்டும் 36 பயணிகளுடன் குறித்த விமானம் மாலை 3 மணியளவில் திருச்சியை நோக்கிப் புறப்பட்டது. இந்தநிலையில், எதிர்வரும் தினங்களில் குறித்த விமானமானது திருச்சியிலிருந்து பிற்பகல் 1.25 க்கு புறப்பட்டு பிற்பகல் 2.25 க்கு யாழ்ப்பாணத்தை வந்தடையவுள்ளது. பின்னர், யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகல் 3.05 க்கு புறப்படும் விமானம், மாலை 4.05 க்கு திருச்சியைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/210669
-
யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு மரணம்!
Published By: VISHNU 30 MAR, 2025 | 09:24 PM யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை 28.03.2025 அன்று இரவு உயிரிழந்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 26ஆம் திகதி, குழந்தைக்கு 2 மாதங்களில் போட வேண்டிய தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் 27ஆம் திகதி குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 28ஆம் திகதி இரவு உயிரிழந்தது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/210668
-
ரஸ்ய ஜனாதிபதி புட்டினின் கார் வெடித்து சிதறியது
Published By: DIGITAL DESK 3 30 MAR, 2025 | 04:14 PM ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் புட்டினின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றான கார் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. ரஸ்யாவைச் சேர்ந்த ஆரஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஆரஸ் லிமோசின் கார் மொஸ்கோ வீதியில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கார் ரஸ்ய உளவுத்துறையான (FSB)எப்.எஸ்.பி. தலைமையகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், திடீரென அந்த கார் வெடித்துத் தீப்பிடித்தது. முதலில் கார் எஞ்சனில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பிறகு அது மெல்ல உட்புறம் வரை பரவியதாகத் கூறப்படுகிறது. இந்த கார் ரஸ்ய ஜனாதிபதி மாளிகையின் ஜனாதிபதி சொத்து முகாமைத்துவ துறைக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இருப்பினும், திடீரென பாதுகாப்பு கார் வெடித்துச் சிதற என்ன காரணம் கார் வெடித்துச் சிதறிய போது உள்ளே யாராவது இருந்தார்களா என்பது போன்ற தகவல்கள் தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம் இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கார் வெடித்த சம்பவம் ரஸ்ய ஜனாதிபதி புட்டினை கொல்ல சதியாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அதேநேரம் இது சம்பவம் தொடர்பாக ரஸ்ய அரசு இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. ரஸ்ய ஜனாதிபதி புட்டினை கொலை செய்யச் சதித்திட்டங்கள் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் ரஸ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. https://www.virakesari.lk/article/210640
-
சுன்னாக நிலத்தடிநீரில் எண்ணெய் படலமா? - ஐந்து கிணறு மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்ப முடிவு!
Published By: DIGITAL DESK 2 30 MAR, 2025 | 03:01 PM சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீ பவானந்த ராஜா பணிப்புரை விடுத்துள்ளார். சனிக்கிழமை(29) உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுளமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீ பவனந்தராஜா தலைமையில் இடம் பெற்றபோது சமூகமட்ட பிரதிநிதி ஒருவர் முன்வைத்த கோரிக்கைக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்ட நிலையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் சுன்னாக நிலத்தடி நீரில் நொதேன் பவர் தனியார் நிறுவனத்தினால் வெளியேற்றப்படுகின்ற கழிவு எண்ணெய் நிலத்துக்கு கீழ் இறக்கப்பட்ட நிலையில் மக்களின் குடிநீர் கிணறுகள் தொடக்கம் விவசாய கிணறுகள் வரை கழிவு எண்ணெய் தாக்கம் உணரப்பட்டது. சிலர் அதனை மறுத்து வந்த போதும் இறுதியில் உண்மை கண்டறியப்பட்ட நிலையில் தற்போது சுன்னாக பிரதேச மக்களின் குடிநீர் கிணறுகள் தொடர்பில் என்ன நிலைப்பாடு இருக்கிறது என்பது தொடர்பில் மக்களுக்கு தெரியாது. ஏனெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களின் கிணறுகள் தொடர்பான பரிசோதனை அறிக்கைகளை எடுத்ததாக நாங்கள் அறியவில்லை. அது மட்டுமல்லாது மருதனார் மடப் பகுதியில் அமைந்துள்ள வாகனங்கள் சுத்திகரிக்கும் நிலையத்தில் அதிகளவிலான அரச நிறுவனங்களின் வாகனங்கள் சுத்திகரிப்பு இடம்பெறுகின்றது. குறித்த சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதி வளமான விவசாய நிலங்களைக் கொண்ட பகுதியாக காணப்படுகின்ற பகுதியில் குறித்த சுத்திகரிப்பு நிலையத்தின் எண்ணெய் கழிவுகள் அங்கு செல்கின்றது என்பது தொடர்பில் எமக்கு ஏதும் தெரியாது. இவ்வாறான நிலையில் முன்பு ஏற்பட்ட பாரிய அனர்த்தம் போன்று எதிர்காலத்தில் கழிவு எண்ணெயினால் ஏற்படும் ஆபத்தை தவிர்ப்பதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த அபிவிருத்தி குழு தலைவர், சுன்னாக நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் தாக்கம் தொடர்பில் நான் நன்கு அறிவேன். ஆகையால் பொதுமக்களின் குற்றச்சாட்டு தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருக்கும் நிலையில் நீர்வளங்கள் சபை அதிகாரிகள் சுன்னாகப் பகுதியில் உள்ள 5 குடி நீர் கிணறுகளின் நீர் மாதிரிகளில் எண்ணெய் படலம் இருக்கிறதா என்பது தொடர்பில் பரிசோதனை அறிக்கையை பிரதேச அபிவிருத்தி குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார். அதேபோன்று வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் எவ்வாறு வெளியேற்றப்படுகிறது என அறிக்கை சமர்ப்பிப்பதோடு சுற்றாடல் அதிகார சபையினால் குறித்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனுமதிகள் தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உடுவில் பிரதேச சபைச் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் திணைக்களத் தலைவர்கள், கிராம சேவையாளர்கள் சமூகமட்ட பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/210629
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
அவசரத்தால் வீழ்ந்த சன்ரைசர்ஸ்! டெல்லிக்கு வெற்றியளித்த ஸ்டார்க், குல்தீப்! பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 43 நிமிடங்களுக்கு முன்னர் விசாகப்பட்டிணத்தில் இன்று (மார்ச்30) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி, 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 24 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டெல்லி அணிக்கு முதல் வெற்றிய அசுதோஷ் ஷர்மா பெற்றுக் கொடுத்த நிலையில் இந்த போட்டியில் ஸ்டார்க், குல்தீப் இருவரும் பெற்றுக் கொடுத்தனர். 2 வெற்றிகளுடன் டெல்லி அணி 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் 1.320 நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது. அடுத்தடுத்து 2 தோல்விகளால் சன்ரைசர்ஸ் அணி 2 புள்ளிகளுடன் மைனஸ் 0.871 நிகர ரன்ரேட்டில் 7வது இடத்துக்குச் சரிந்துள்ளது. சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசையை உருக்குலைத்து 3.4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்ஷெல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருது பெற்றார். அசராத ஃபார்மில் இருக்கும் குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதுக்கு இணையான இடத்தில் இருக்கிறார். பேட்டிங்கில் எளிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு 40 வயதுக்கு மேலான டூப்பிளசிஸ் இந்த சீசனில் முதல் அரைசதத்தை தனக்கே உரிய ஸ்டைலில் பதிவு செய்தார். மற்ற வகையில் டெல்லி பேட்டர்கள் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸை சிதைத்த ஸ்டார்க் சன்ரைசர்ஸ் அணி என்றாலே அதிரடி ஆட்டம், பெரிய ஸ்கோர், சிக்ஸர், பவுண்டரி பறக்கும் ஆட்டம் என்ற எதிர்பார்ப்புடன் தான் பேட்டர்கள் களமிறங்கினர். ஆனால், மிட்ஷெல் ஸ்டார்க் அனைத்து நினைப்புகளையும் தவிடுபொடியாக்கினார். முதல் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மா சோம்பேறித்தனமாக ஓடி ரன்அவுட் ஆகினார். அடுத்துவந்த இஷான் கிஷனின் பலவீனத்தை நன்கு அறிந்த ஸ்டார்க் டீப் ஸ்குயரில் பீல்டரை நிறுத்தி சிறிது ஆப்சைடு விலக்கி ஷார்ட் பந்துவீசினார். சொல்லிவைத்தார்போல், இஷான் கிஷன் 2 ரன்னில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்டார்க் வீசிய அதே ஓவரில் வந்தவேகத்தில் நிதிஷ் குமார் ரெட்டி தேவையின்றி மிட்ஆன் திசையில் தூக்கி அடித்து படேலிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஓரளவுக்கு அதிரடியாக ஆடி வந்த டிராவிஸ் ஹெட்டும் நிலைக்கவில்லை. ஹெட் 22 ரன்கள் சேர்த்தநிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச்கொடுத்துவெளியேறினார். 5 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சன்ரைசர்ஸ் அணியின் பலமே டாப்ஆர்டர்தான் அந்த 4 பேட்டர்களும் பெவிலியன் சென்றபின் ஆட்டத்தில் என்ன ஸ்வாரஸ்யம் இருக்கப் போகிறது என்று ரசிகர்கள் எண்ணினர். ஆட்டத்தை மாற்றிய அனிகேத் வர்மா பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், 5வது விக்கெட்டுக்கு கிளாசன், அனிகேத் வர்மா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்தது. கடந்த போட்டியிலும் அதிரடியாக ஆடிய அனிகேத் வர்மா, இந்த ஆட்டத்திலும் கிடைத்த வாய்ப்பை வெளுத்து வாங்கினார். பவர்பளேயில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் சேர்த்தது. அனிகேத் வர்மா, கிளாசன் இருவரும் அதிரடிக்கு மாறியபின், டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 9.1ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை எட்டியது. இருவரும் டெல்லி பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரி என ஓடவிட்டனர். சர்வதேச அனுபவமே இல்லாத அனிகேத் வர்மா 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரும் அணியை பெரிய ஸ்கோரை நோக்கி நகர்த்திய நிலையில் மோகித் சர்மா பந்துவீச்சில் 32 ரன்கள் சேர்த்தநிலையில் கிளாசன் விக்கெட்டை இழந்தார். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடி ஆட்டம் மட்டும் போதுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்துவந்த அபினவ் மனோகர்(4), கேப்டன் கம்மின்ஸ்(2) இருவரும் ஆங்கர்ரோல் எடுத்து விளையாட வேண்டும் என நினைக்கவில்லை, வந்தவுடன் பெரிய ஷாட்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்து தேவையின்றி விக்கெட்டுகளை இழந்தனர். இருவரின் விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் சாய்த்தார். விக்கெட் ஒருபுறம் வீழ்ந்தாலும் அனிகேத் வர்மா தனுது பேட்டால், டெல்லி பந்துவீச்சாளர்களை பந்துவீச்சை துவைத்து எடுத்தார். குல்தீப் யாதவ் வீசிய கூக்ளி பந்துவீச்சை சிக்ஸருக்கு அனிகேத் வர்மா விரட்டும்போது, பவுண்டரிஎல்லையில் மெக்ரூக்கால் அருமையாக கேட்ச் பிடிக்கப்பட்டார். அனிகேத் வர்மா 41 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் ஹர்சல் படேல்(5), இம்பாக்ட் ப்ளேயராக வந்த முல்டர்(9) ரன்னில் ஆட்டமிழந்தனர். இன்னும் 8 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் அதை விளையாடக்கூட பேட்டர்கள் இல்லாத நிலையில் சன்ரைசர்ஸ் ஆட்டமிழந்தது. இந்த சீசனில் ஓவர்கள் மீதமிருக்கும்போதே ஆல்அவுட் ஆகிய முதல் அணியாக சன்சைரஸ் மாறியது. ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது. டூப்பிளசிஸ், ப்ரேசர் மெக்ருக் களமிறங்கினர். கடந்த ஆட்டத்தில் இருவருமே ஜொலிக்கவில்லை. இந்தஆட்டத்தில் டூப்பிளசிஸ் தனது கிளாசிக் பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மெக்ருக்கிற்கு பந்து பேட்டில் மீட்ஆகவில்லை பெரிய ஷாட்களுக்கு முயன்றும் கிடைக்கவில்லை. ஆனால், டூப்பிளசிஸ் தனக்கே உரிய ஸ்டைலில் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 40 வயதிலும் டூப்பிளசிஸ் ஷாட்கள் ஒவ்வொன்றும் இடிபோல் இறங்கியது. பவர்ப்ளேயில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சை கிழித்தெறிந்த டூப்பிளசிஸ் 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன்பின் நிலைக்காத டூப்பிளசிஸ் 50 ரன்னில் அன்சாரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தனர். அன்சாரி வீசிய அதே ஓவரின் கடைசிப்பந்தில் மெக்ருக்கும் 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கே.எல்.ராகுல் வந்தவேகத்தில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி அடித்து 15 ரன்னில் அன்சாரி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு அபிஷேக் போரெல்(34), ஸ்டெப்ஸ்(21)இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இரு இளம் முத்துக்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணி தோற்றாலும் இரு முத்துக்களை, கிரிக்கெட் உலகிற்கு அடையாளம் காண்பித்துள்ளது. இளம் பேட்டர் அனிகேத் வர்மா(74), சுழற்பந்துவீச்சாளர் ஜீசான் அன்சாரி ஆகிய இருவரையும் கிரிக்கெட் உலகிற்கு வெளிச்சம்பாய்ச்சிருக்கிறது. கடந்த சீசனில் நிதிஷ்குமார் ரெட்டியை அடையாளப்படுத்திய சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இருவருக்கும் வழங்கிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினர். இதில் 23வயதான அனிகேத் வர்மா மத்தியப் பிரதேசம் போபால் நகரைச் சேர்ந்தவர். ஏற்கெனவே ரஜத் பட்டிதார், வெங்கடேஷ் அய்யர் கலக்கிவரும் நிலையில் அனிகேத் ஜொலிக்கிறார். மத்தியப்பிரதேச டி20 லீக்கில் 32 பந்துகளில் சதம் அடித்தவர் அனிகேத் வர்மா. இவரின் பேட்டிங்கைப் பார்த்து மெய்சிலிர்த்து சன்ரைசர்ஸ் அணி அனிகேத் வர்மாவை ஏலத்தில் அடிப்படை விலைக்கு ரூ.30 லட்சத்துக்கு எடுத்தது. ஆனால் இவரை சன்ரைசர்ஸ் வாங்கியது போனஸாக அமைந்துள்ளது. மற்றொரு வீரர் 25வயதான உத்தரப்பிரதேச சுழற்பந்துவீச்சாளர் ஜீஸன் அன்சாரி. உ.பி. அணிக்காக ஒரு டி20 போட்டியில் மட்டுமே அன்சாரி விளையாடியுள்ளார். 2016ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இஷான் கிஷன், ரிஷப் பந்த், சர்பிராஸ் கான், கலீல் அகமதுவுடன் அன்சாரி விளையாடியவர். அவர்கள் மீது பட்ட வெளிச்சம் அன்சாரி மீது இப்போதுதான் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு டி20 லீக்கில் மீரட் மாவ்ரிக்ஸ் அணிக்காக ஆடிய அன்சாரி, 12 இன்னிங்ஸில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருவீரர்களையும் சன்ரைசர்ஸ் அணி கண்டறிந்து இந்திய அணிக்கு அளித்துள்ளது. அன்சாரியை அடிப்படை விலையான ரூ.40 லட்சத்துக்கு சன்ரைசர்ஸ் ஏலத்தில் எடுத்தது. இவர் கிடைத்தது சன்ரைசர்ஸ் அணிக்கு 2வது போனஸாகும். இருவரும் அடுத்துவரும் லீக் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணிக்கு கருப்பு குதிரைகளாக இருப்பார்கள். சன்ரைசர்ஸ் சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் அனைவருமே ஒரே சிந்தனையோடு களத்துக்கு வந்ததுதான் ஆட்டத்தில் தோல்விக்கு காரணமாகும். சன்ரைசர்ஸ் அடித்தால் 200 ரன்களுக்க மேல் ஸ்கோர் செய்வது, இல்லாவிட்டால் அனைத்து பேட்டர்களும் பிளாப் ஆவது. இதை ஃபார்முலாவாக வைத்துள்ளது. டாப்ஆர்டர் பேட்டர் ஒருவர் கூட இன்று மாற்றியோசிக்கவில்லை. விக்கெட்டுகள் மளமளவென சரிந்து வரும் நிலையில், களத்தில் ஆங்கர் ரோல் எடுத்து விளையாட வேண்டும் என்று எந்த பேட்டரும் நினைக்கவில்லை. இதில் அனிகேத் வர்மாதான் விதிவிலக்கு. சன்ரைசர்ஸ் பேட்டர்கள் அனைவரும் களத்துக்கு வந்து பெரிய ஷாட்களை ஆட வேண்டும், சிக்ஸர், பவுண்டரிகளாக குவிக்கவேண்டும் என்ற நோக்கில் வந்ததுதான் விரைவாக விக்கெட்டுகளை இழக்க காரணம். அனிகேத் வர்மா மட்டும் இல்லாவி்ட்டால் சன்ரைசர்ஸ் அணி மோசமான தோல்வியை சந்தித்திருக்கும். சன்ரைசர்ஸ் அணியில் இருக்கும் டாப்ஆர்டர் பேட்டர்கள் மெக்ருக், ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி ஆகிய 4 பேருமே அதிரடிக்கு பெயரெடுத்தவர்கள். இவர்கள் குறைந்த பந்துகளில் அதிக ரன்களை சேர்த்துக்கொடுத்து புறப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அணியின் சூழலுக்கு ஏற்ப இவர்களால் ஆடமுடியாதது அணியின் பின்னைடைவுக்கு காரணம். அணியின் சூழலைப் பார்த்து எவ்வாறு ஆட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையுள்ள பேட்டர்களை சன்ரைசர்ஸ் ஏலத்தில்வாங்கவில்லை. அந்த அணி அதிரடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பேட்டர்களை வாங்கியதுதான் இதுபோன்ற சரிவுக்கு காரணமாகியது. கடந்த போட்டியில் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் " நாங்கள் ஆடும் ஆட்டம் சில நேரங்களி்ல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும், சிலநேரங்களில் பெரிய தோல்வியையும் சந்திக்க வேண்டியதிருக்கும். ஆனால் தயாராக இருக்கவேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். அனிகேத்துக்கு புகழாரம் பட மூலாதாரம்,GETTY IMAGES தோல்விக்குப்பின் சன்ரைசர்ஸ் கேப்டன் பாட்கம்மின்ஸ் கூறுகையில் " அனிகேத் மூலம்தான் ரன்கள் கிடைத்தது. விரைவாகவே முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். மோசமான ஷாட்கள் மட்டுமல்ல ரன்அவுட்டிலும் விக்கெட்டை இழந்தோம். இது நடக்கத்தான் செய்யும். இதுதான் எங்கள் எல்லை என்று நான் நினைக்கவில்லை. கடந்த 2 போட்டிகளிலும் அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு சில விஷயங்கள் வித்தியாசமாக அமைந்து முடிவை மாற்றியிருக்கலாம். அனிகேத் அதிகம் தெரியாத பேட்டர்தான், ஆனால், இந்த சீசன் அவருக்கு அருமையாக இருக்கப் போகிறது. இவரின் ஆட்டம் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. வீரர்கள் தங்களால் முடிந்த முயற்சியை அளித்துள்ளனர், அதிகமாக மாற்றத்தை அளிப்போம் என நினைக்கவேண்டாம்" எனத் தெரிவித்தார். -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c705j9vw2jlo
-
யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை ஆரம்பம்
30 MAR, 2025 | 05:37 PM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) முதல் ஆரம்பமாகியுள்ளது. திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வேளை, விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. நிகழ்வில் இந்திய துணைத்தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட துணைத்தூதராக அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த விமான சேவையானது தினசரி மதியம் 1.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, 2.25 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும். யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, திருச்சியை மாலை 4 மணியளவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க விரும்புவோர், திருச்சி சென்ற திருச்சி ஊடாக சிங்கப்பூர் பயணிக்க கூடியவாறான விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளமையால், கொழும்பு சென்று சிங்கப்பூர் செல்வதற்கான நேர விரயம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/210655
-
இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில் நடைபெறும் – கடற்றொழில் அமைச்சர்
Published By: DIGITAL DESK 2 30 MAR, 2025 | 05:05 PM இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில் நடைபெறவுள்ளது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரத்தின் அனைத்து விசைப்படகு சங்க செயலாளர் சகாயம் தலைமையிலான இந்திய மீனவ பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர். நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்பதை இந்திய மீனவர்கள் உணர்ந்தனர் என்பதை அறியமுடிந்தது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கும், இது தொடர்பில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது. இதற்கமைய அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் எதிர்வரும் நாட்களில் நடைபெறும் எனவும் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/210644
-
மியான்மரில் கடும் நிலநடுக்கத்துக்கு மத்தியிலும் தாக்குதலை தொடரும் ராணுவம் - நாட்டில் என்ன நடக்கிறது?
படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை மாலை மியான்மர் ராணுவம் வெடிகுண்டு வீசியதாக கூறப்படும் பகுதியில் சேதமடைந்த கட்டடங்களின் சில புகைப்படங்கள் பிபிசிக்கு அனுப்பப்பட்டுள்ளன கட்டுரை தகவல் எழுதியவர், ரெபெக்கா ஹென்ஷ்கே பதவி, பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் மியான்மரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையிலும், ஏற்கெனவே போரால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் சில பகுதிகளில் ராணுவம் வெடிகுண்டு தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றது. இந்த தாக்குதல்கள், "அதிர்ச்சிகரமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என ஐ.நா சபை விவரித்துள்ளது. நிலநடுக்கத்துக்குப் பிறகு மக்களை மீட்பதற்கு நாம் முயற்சித்துவரும் வேளையில் ராணுவம் "வெடிகுண்டுகளை தொடர்ந்து வீசுவது முற்றிலும் நம்ப முடியாததாக உள்ளது" என ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் டாம் ஆன்ட்ரூஸ் பிபிசியிடம் தெரிவித்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக் கவிழ்ப்பு மூலமாக அந்நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவம், தனது அனைத்து (தாக்குதல்) நடவடிக்கைகளையும் கைவிடுமாறு அவர் வலியுறுத்தினார். மியான்மர்: பூகம்பத்தின் நடுவே பிறந்த குழந்தை மியான்மர் நிலநடுக்கத்தில் பலி 1,000-ஐத் தாண்டியது - ஆங் சாங் சூச்சி என்ன ஆனார்? மண்ணில் புதைந்த கட்டடங்கள், வீதியில் திரண்ட மக்கள் - மியான்மர் நிலநடுக்க பாதிப்பை விளக்கும் புகைப்படங்கள் உருக்குலைந்த கட்டடங்கள்: மியான்மர், தாய்லாந்தை நடுங்க வைத்த நிலநடுக்கம் - அதிர்ச்சி வீடியோ "ராணுவம் மீது செல்வாக்கு உள்ள எவரேனும் அதன் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை தெளிவாக உணர்த்த வேண்டும்," என அவர் கூறினார். "ராணுவ ஆட்சியாளர்கள், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்," என்றும் அவர் கூறினார். தாக்குதலில் ஏழு பேர் பலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நௌங்சோவில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக, பிபிசி பர்மிய சேவை உறுதிப்படுத்தியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு குறைந்தது மூன்று மணிநேரத்துக்குள் உள்ளூர் நேரப்படி மாலை 03.30 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட முக்கிய பகுதியான சர்காயிங் பிராந்தியத்தின் வட-மேற்கு பகுதியில் உள்ள சாங்-யூ டவுன்ஷிப்பில் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்றதாக, ஜனநாயகத்துக்கு ஆதரவான கிளர்ச்சிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. இக்குழுக்கள் ராணுவ ஆட்சியை அதிகாரத்திலிருந்து நீக்குவதற்காக போராடி வருகின்றன. ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட தேசிய ஒற்றுமை அரசு (என்யூஜி), நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் "தங்களை பாதுகாத்துக்கொள்ள எதிர் தாக்குதல்களை தவிர்த்து, இன்றிலிருந்து (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு வாரங்களுக்கு தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக," அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES சர்காயிங்கில் 7.7 என்ற அளவில் பதிவான கடும் நிலநடுக்கம் அருகிலுள்ள நாடுகளிலும் உணரப்பட்டது. மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே மற்றும் 241 கி.மீக்கு அப்பால் உள்ள தலைநகர் நேபிடோ ஆகியவற்றிலும் நிலநடுக்கத்தால் அழிவுகள் ஏற்பட்டன. 1,644 பேர் இதில் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமானோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கலாம் என்றும் ராணுவ ஆட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் போர் 2021-ல் ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகள் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வீதிகளில் இறங்கி, மக்களாட்சியை நிறுவுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பதவி நீட்டிப்பில் ஜே.பி.நட்டா: பாஜக தலைவர் தேர்வு தாமதம் - ஆர்எஸ்எஸ் - பாஜக இடையே என்ன நடக்கிறது?30 மார்ச் 2025 தூத்துக்குடி அருகே காதலிக்க மறுத்த சிறுமி உயிரோடு தீ வைத்து எரிப்பு - இன்றைய டாப்5 செய்திகள்30 மார்ச் 2025 சாதாரணமான அளவில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், விரைவிலேயே ஜனநாயகத்துக்கு ஆதரவான குழுக்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களின் பெரும் எதிர்ப்பாக உருவெடுத்து, முழு அளவிலான உள்நாட்டுப் போராக மாறியது. இந்த நான்கு ஆண்டுகளில் ஒருபுறம் ராணுவம், மற்றொரு புறம் கிளர்ச்சிக் குழுக்கள், ஆயுதக் குழுக்களுக்கு இடையே வன்முறை போராட்டம் தொடர்ந்து வருகிறது. பெரும்பகுதிகளை இழந்த ராணுவம் ராணுவம் இந்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக, அவமானகரமான தோல்விகளை சந்தித்து, பெருமளவிலான நிலப்பகுதியை இழந்தது. தன்னுடைய ஆட்சிக்கு ஏற்படும் எதிர்ப்பை எதிர்கொள்ள வான்வழித் தாக்குதல்களையே ராணுவம் பெருமளவில் நம்பியுள்ளது. நிலநடுக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள சர்காயிங் பிராந்தியத்தின் பெரும்பகுதிகள் ஜனநாயகத்துக்கு ஆதரவான எதிர்ப்பு குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து நான்கு ஆண்டுகளாகியும் நாட்டின் கால்வாசி பகுதிகள் கூட ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என, பிபிசி நடத்திய புலன் விசாரணை மூலம் தெரியவந்தது. கிளர்ச்சிக் குழுக்கள் மற்றும் எதிர்ப்பு குழுக்கள் நாட்டின் 42% நிலப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், மீதமுள்ள பகுதியில், பெரும்பாலான இடங்களில் சண்டை நடந்து வருவதாகவும் புலன் விசாரணை கூறுகிறது. பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,மியான்மர் தலைநகரில் இடிந்து விழுந்த கட்டடம் வான்வழி தாக்குதல்களில் ராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. வான்வழி தாக்குதல்களை முறியடிப்பதில் எதிர்ப்பு குழுக்களுக்கு போதாமை உள்ளது. எவ்வித பாரபட்சமும் இன்றி, ராணுவத்தால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் பள்ளிகள், மடங்கள், தேவாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மிக மோசமான வான்வழித் தாக்குதல்களில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 170 பேர் கொல்லப்பட்டனர். மும்பை மீண்டும் தோல்வி: ரோஹித்திடம் ஹர்திக் நடந்து கொண்ட விதம் பற்றி ரசிகர்கள் கூறியது என்ன?30 மார்ச் 2025 மியான்மர் நிலநடுக்கத்தில் பலி 1,000-ஐத் தாண்டியது - ஆங் சாங் சூச்சி என்ன ஆனார்?29 மார்ச் 2025 ராணுவம் தங்கள் நாட்டு மக்களுக்கு எதிராகவே போர் குற்றங்கள் மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்களை புரிவதாக, அந்நாட்டில் நிலவும் வன்முறைகள் குறித்து விசாரிக்கும் ஐ.நா. அமைப்பு எச்சரித்துள்ளது. ரஷ்யா, சீனா ஆதரவு ரஷ்யா மற்றும் சீனாவின் உதவியால், ராணுவத்தின் வான்வழி தாக்குதல்கள் தொடர்கிறது. ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்வினையாக ஐ.நா. ராணுவத்துக்கு எதிராக ஆயுதத்தடை விதிக்க அழைப்பு விடுத்துள்ள போதிலும், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ராணுவத்துக்கு அதிநவீன ஜெட் விமானங்கள் மற்றும் அவற்றை எப்படி இயக்குவது என்ற பயிற்சியையும் வழங்கியுள்ளன. ரஷ்யா மற்றும் சீனா மியான்மருக்கு தற்போது உதவிகளையும் மீட்பு குழுக்களையும் அனுப்பியுள்ளன. ஆனால், பிரிட்டனை சேர்ந்த பர்மிய செயற்பாட்டாளர் ஜூலி கின், "எங்களின் அப்பாவி மக்களை கொல்வதற்கு கொடூரமான ஆயுதங்களை ராணுவத்துக்கு வழங்கிய இந்த நாடுகளின் அனுதாபத்தை நம்புவது கடினமானது." என தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மியான்மர் ராணுவ தலைவர் மின் ஔங் ஹ்லேய்ங் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் உதவிக் குழுக்களின் அச்சம் நிலநடுக்கத்துக்காக அனுப்பப்படும் உதவிகளை உள்நாட்டுப் போருக்கு ராணுவம் ஆயுதமாக பயன்படுத்தக்கூடும் என்றும் பரவலாக கவலை எழுந்துள்ளது. எதிர்ப்பு குழுக்கள் தீவிரமாக இயங்கிவரும் பகுதிகளில் உதவிகளை மறுக்கும் வழக்கத்தை மியான்மர் ராணுவம் நீண்ட காலமாகவே பின்பற்றி வருகிறது. ஐ.நாவின் டாம் ஆன்ட்ரூஸ் பிபிசியிடம், கடந்த காலங்களில் நிவாரண பணிகளின்போது, ராணுவம் உதவிகளை தடுத்து, தன்னார்வலர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்தார். சனிப் பெயர்ச்சி நிகழும் நாளை கணிப்பதில் ஜோதிடர்கள் முரண்படுவது ஏன்? அறிவியல் உண்மை என்ன?30 மார்ச் 2025 பல மாதங்கள் காய்ந்து கிடக்கும் 'ஜாம்பி' தாவரம் சில மணி நேரத்தில் உயிர்த்தெழுவது எப்படி?30 மார்ச் 2025 "ராணுவ நிர்வாகம் உண்மையை வெளிப்படுத்தாது என்பதே, கடந்த காலங்களில் ஏற்பட்ட மானுட பேரழிவுகள், இயற்கை பேரழிவுகளில் இருந்து எங்களுக்கு தெரிந்தது. மனிதநேய உதவிகள் எங்கு அதிகம் தேவைப்படுகிறதோ அங்கு அவற்றைத் தடுக்கும் வழக்கத்தையும் ராணுவம் கொண்டுள்ளது," என்றார் அவர். "உதவிகளை அவர்கள் ஆயுதமாக்கிக் கொள்வார்கள். தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு உதவி பொருட்களை அனுப்பிவிடுவார்கள், தங்களின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளுக்கு அனுப்ப மறுத்துவிடுவார்கள். "எங்கெல்லாம் அதிக உதவிகள் தேவைப்படுகிறதோ, அங்கு வழிகளை மறித்து, அவற்றை கொண்டு செல்வோரை கைது செய்வார்கள், கடந்த காலங்களில் இயற்கை பேரிடர்களுக்கு உதவிப்பொருட்கள் கொண்டு செல்வதில் அவர்களின் அணுகுமுறை இப்படித்தான் இருந்தது. "இந்த பேரிடரிலும் இப்படித்தான் நடக்கும் என நான் அஞ்சுகிறேன், அப்படித்தான் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg7292j0djpo
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
INNINGS BREAK 11th Match (N), Guwahati, March 30, 2025, Indian Premier League CSK chose to field. Rajasthan Royals (20 ov) 182/9 Current RR: 9.10 • Last 5 ov (RR): 37/4 (7.40) Chennai Super Kings Win Probability:RR 46.50% • CSK 53.50%
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி அக்கா, வளத்துடன் வாழ்க.
-
பிரித்தானியாவின் தடையை வரவேற்கிறோம்; முன்னாள் ஜனாதிபதிகளையும் உள்ளடக்கவேண்டும் - வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
30 MAR, 2025 | 01:54 PM போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடைவிதித்துள்ளதை நாம் வரவேற்ப்பதுடன் சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இவ்வாறான தடைகள் விதிக்கப்படவேண்டும் என வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதிக்கு முன்பாக அவர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், இலங்கை அரசானது நீண்டகாலமாக பொறுப்புக்கூறலில் இருந்து தவறியுள்ளது. இதனால் நாம் சர்வதேச நீதிகோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகிறோம். இன்று போர்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாக சில இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடைவித்துள்ளதன் மூலம் இனப்படுகொலைஒன்று இங்கு நடந்துள்ளதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை உணரமுடியும். இவ்வாறு தடைவிதிக்கப்படவேண்டிய இன்னும் பல இராணுவத்தினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளும் உள்ளனர். அவர்கள் மீதும் இவ்வாறான தடைகளை விதிக்கவேண்டும். அனைத்துலக நாடுகளும் இந்த பயணத்தடைகளை விதித்து குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி சர்வதேச பொறிமுறையூடாக எமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும். இதுவே எமது எதிர்பார்ப்பு இதேவேளை 19காணாமல் போனஉறவுகள் உயிருடன் இருப்பதை தாம் கண்டுபிடித்துள்ளதாக காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தினர் அண்மையில் கூறியுள்ளனர். அவர்கள் உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை.நாம் தந்த சாட்சியங்களில் ஒன்றைகூட அந்த அலுவலகத்தினர் கண்டுபிடிக்கவில்லை. மாறாக சர்வதேசத்துக்கு அப்பட்டமான பொய்களை சொல்கின்றனர். பொய்யான அறிக்கைகளை அவர்கள் வெளியிடுகின்றனர். எனவே எமது மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். இந்தநிலையில் சர்வதேச நீதிப்பொறிமுறையூடாகவே எமக்கான நீதியை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றனர். https://www.virakesari.lk/article/210625
-
இராணுவத் தளபதி யாழுக்கு விஜயம்!
Published By: DIGITAL DESK 2 30 MAR, 2025 | 02:18 PM இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அண்மையில் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி சர்வ மத தலங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மதத் தலைவர்களுடன் சந்தித்து கலந்துரையாடினார். வரணி மத்திய கல்லூரியில் மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இராணுவத் தளபதி கலந்து கொண்டார். மேலும் கொடிகாமம் தெற்கில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடும் பயனாளி ஒருவரிடம் கையளிக்கப்பட்டது. யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதியை, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம். யஹாம்பத் வரவேற்றதுடன் விசேட சந்திப்புக்களும் இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/210624
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
மும்பை மீண்டும் தோல்வி: ரோஹித்திடம் ஹர்திக் நடந்து கொண்ட விதம் பற்றி ரசிகர்கள் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. 197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 36 ரன்களில் தோல்வி அடைந்தது. கடந்த 2023ம் ஆண்டிலிருந்து ஆமதாபாத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த 4 ஆட்டங்களிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் இருவர் மட்டும்தான். முதலாமவர் தமிழக வீரர் சாய் சுதர்சன் 41 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்ததும், பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருவரின் முத்தாய்ப்பான ஆட்டம் வெற்றிக்கு துணையாக இருந்தது. ஆட்டநாயகன் விருது பிரசித் கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, அந்த அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவிடம் நடந்துகொண்ட விதம் பற்றி அந்த அணி ரசிகர்கள் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பவர்ப்ளேயை பயன்படுத்திய கில், சாய் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்தி ரன்களைச் சேர்த்தனர். விக்கெட்டுகளை விடாமல் இருவரும் தலா 32 ரன்களைச் சேர்த்தனர். இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கி, 1,300 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டனர். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி குஜராத் 66 ரன்களைச் சேர்த்தது. பீல்டிங் கட்டுப்பாடுகள் தளர்ந்தபின் 7-வது ஓவர் முதல் 10-வது ஓவர்கள் வரை மும்பை அணி பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்ததால் 13 ரன்கள் மட்டுமே குஜராத் சேர்த்தது. சுப்மன் கில்லுக்கு ஏற்றார்போல் டீப் ஸ்குயர் லெக்கில் நமன்திரை நிறுத்தி ஹர்திக் பாண்டியா ஷார்ட் பந்து வீசினார். இதை கில் தூக்கி அடித்தபோது, நமன்திரிடம் கேட்சானது. ஹர்திக்கின் திட்டத்தால் சுப்மன் கில் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 78 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த ஜோஸ் பட்லர், அதிரடியாக பவுண்டரிகள், சிக்ஸரை விளாசி ரன்கள் சேர்த்தார். ஒருபக்கம் சுதர்சனும், மறுபுறம் பட்லரும் வேகமாக ரன்களைச் சேர்த்தனர். பட்லர் 39 ரன்கள் சேர்த்த நிலையில் முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES விக்கெட் சரிவு அடுத்து வந்த ஷாருக்கான் ஒரு சிக்ஸர் அடித்து 9 ரன்னில் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக பேட் செய்த சுதர்சன் 33 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அடுத்து களமிறங்கிய ரூதர்போர்ட் அதிரடியாக 2 சிக்ஸர்களை விளாசினார். 18-வது ஓவரிலிருந்து குஜராத்தின் கொலாப்ஸ் தொடங்கியது. போல்ட் வீசிய 18-வது ஓவரின் கடைசிப்பந்தில் சுதர்சன் யார்கர் பந்துவீச்சில் காலில் வாங்கி 63 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து தீபக் சஹர் வீசிய 19-வது ஓவரில் ராகுல் திவேட்டியா ஒரு பந்துகூட சந்திக்காமல் ரன்அவுட் ஆகினார், 2வது பந்தில் ரூதர்போர்ட் 18 ரன்னில் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்தார். சத்யநாரயண ராஜீ வீசிய கடைசி ஓவரில் ரஷித்கான் ஒரு சிக்ஸர் அடித்தநிலையில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார், கடைசிப் பந்தில் சாய் கிஷோர் ஒரு ரன்னில் ரன்அவுட் ஆகினார். 179 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்தது குஜராத் அணி, இதனால் எளிதாக 200 ரன்களை எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், கடைசி 17 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி கொலாப்ஸ் ஆகியது. குஜராத் தரப்பில் ஹர்திக் 2 விக்கெட்டுகளையும், போல்ட், தீபக் சஹர், ராஜூ, ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். மியான்மர் நிலநடுக்கத்தில் பலி 1,000-ஐத் தாண்டியது - ஆங் சாங் சூச்சி என்ன ஆனார்?29 மார்ச் 2025 கத்தார்: தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த இந்தியர் கைது - குடும்பத்தினர் கூறுவது என்ன?29 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ரோஹித் சர்மா ஏமாற்றம் 197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ரோஹித் சர்மா 2 பவுண்டரிகள் அடித்தநிலையில், சிராஜ் பந்துவீ்சில் சூட்சமத்தை அறியாமல் பேட் செய்தார். 2 பவுண்டரிகளை வழங்கிய சிராஜ் லென்த்தை சற்று இழுத்து இன்ஸ்விங் செய்தார், இதை கவனிக்காத ரோஹித் சர்மா வழக்கமான பந்து என நினைத்து ஆட முற்பட்டபோது க்ளீன் போல்டாகி வெளியேறினார். ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ரோஹித் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். தொடர்ந்து 2வது ஆட்டத்திலும் ரோஹித் சர்மாவிடம் இருந்து பெரிய ஸ்கோர் வரவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டைய கிளப்பிய ஸ்கை அடுத்து வந்த திலக் வர்மா வந்த வேகத்தில் ரபாடா பந்துவீச்சில் 2 பவுண்டரிகள், சிக்ஸர் என பறக்கவிட்டார். மறுபுறம் ரிக்கெல்டன் தடுமாறினார். சிராஜ் பந்துவீச்சில் இன்சைட் எட்ஜில் ரெக்கில்டன் 6 ரன்னில் போல்டாகி வெளியேறினார். டாப் ஆர்டர் இருவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அடுத்துவந்த சூர்யகுமார், திலக்வர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் களத்தில் இருக்கும் வரை ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் அடிக்கத் தொடங்கியதும், திலக் வர்மா தனது வேகக்தைக் குறைத்துக்கொண்டார். சிராஜ் பந்துவீச்சில் சுப்லா ஷாட் அடித்து ஸ்கை சிக்ஸருக்கு பறக்கவிட்டார், இசாந்த் ஓவரிலும் இதேபோல சிக்ஸரை ஸ்கை விளாசினார். ஸ்கையின் அதிரடிக்கு சாய்கிஷோரும் தப்பவில்லை, கவர்திசையில் சிக்ஸர் உதை வாங்கினார். சூர்யகுமார், திலக் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 42 பந்துகளில் 62 ரன்களை எட்டியது. கடைசி 9 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்டது. உலகுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் எஸ்யூவி கார்களின் விற்பனை வேகமாக உயர்வது ஏன்?29 மார்ச் 2025 சனிப் பெயர்ச்சி இன்று உண்டா? திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் அறிவிப்பால் சர்ச்சை - அறிவியல் உண்மை என்ன?30 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டத்தை மாற்றிய பிரசித் கிருஷ்ணா பிரசித் கிருஷ்ணா பந்துவீச அழைக்கப்பட்டபின் மும்பை அணியின் ஸ்கோர் சரியத் தொடங்கியது. அதிகமான ஸ்லோவர் பந்துகளை வீசி மும்பை பேட்டர்களை பிரசித் கிருஷ்ணா திணறவிட்டார். திலக் வர்மா 39 ரன்னில் பிரசித் கிருஷ்ணா ஸ்லோவர் பந்துக்கு இரையாகினார். அடுத்துவந்த புதுமுக வீரர் ராபின் மின்ஸ் 3 ரன்னில் சாய் கிஷோர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அரைசதம் நோக்கி நகர்ந்த ஸ்கை 48 ரன்களில் பிரசித் கிருஷ்ணாவின் 97 கிமீ ஸ்லோவர் பந்தில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 11 ரன்கள் சேர்த்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் அப்பட் ஷாட் அடிக்க முற்பட்டு சிராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 97 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்று வலுவாக இருந்த மும்பை அணி, அடுத்த 27 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து குலைந்தது. ஹர்திக் பாண்டியா கடந்த சீசனுக்கு முன்பு வரை இதே மைதானத்தில் குஜராத் அணிக்காக ஆடியிருந்தாலும், இந்த ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப தனது பேட்டிங்கை மாற்ற முடியவில்லை. கடைசி 3 ஓவர்களில் மும்பை அணி வெற்றிக்கு 73 ரன்கள் தேவைப்பட்டது. இது சாத்தியமில்லாத இலக்கு எனத் தெரிந்தது. சான்ட்னர் 18 ரன்களிலும், நமன் திர் 18 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES சாதகமாக அமைக்கப்பட்ட ஆடுகளம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆமதாபாத் ஆடுகளம் சாதகமாக அமைக்கப்பட்டதுதான் வெற்றிக்கு முக்கியக் காரணம். மும்பை அணி சிவப்பு மண் ஆடுகளத்தில் விளையாடிப் பழக்கப்பட்டது, இந்த ஆடுகளத்தில் பந்து பேட்டரை நோக்கி வேகமாக வரும், அடித்து ஆடுவது சுலபமாக இருக்கும். ஆனால், ஆமதாபாத்தில் நேற்றைய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு போடப்பட்ட கருப்பு, களிமண் ஆடுகளம். இந்த ஆடுகளத்தில் பந்து மெதுவாகவும், சற்று நின்றும் வரும். புதிய பந்தில்தான் பெரிய ஷாட்களை அடிக்க முடியும், பந்து சற்று தேய்ந்துவிட்டால் பெரிய ஷாட்கள் அடிப்பது கடினம். இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் சேர்த்தாலே சேஸிங் செய்வதற்கு எதிரணி சிரமப்பட வேண்டியதிருக்கும். இதில் 196 ரன்கள் இலக்கு என்பது சாத்தியமில்லாத இலக்காகும். கோடையில் எந்தெந்த பாம்புகள் வீடுகளை நோக்கிப் படையெடுக்கும்? எப்படி தவிர்க்கலாம்?29 மார்ச் 2025 உருக்குலைந்த கட்டடங்கள்: மியான்மர், தாய்லாந்தை நடுங்க வைத்த நிலநடுக்கம் - அதிர்ச்சி வீடியோ28 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆமதாபாத் மைதானத்தில் இதற்கு முன் 200 ரன்களுக்கு மேல்கூட ஸ்கோர் செய்யப்பட்ட ஆட்டங்கள் நடந்துள்ளன. அந்த ஆட்டங்கள் அனைத்தும் சிவப்பு மண் ஆடுகளத்தில் அடிக்கப்பட்டவை. ஆனால், நேற்றைய ஆட்டம் கருப்பு மண் ஆடுகளத்தில் விளையாடப்பட்டது. சிவப்பு மண் ஆடுகளத்தில் ஒருவேளை நேற்று ஆட்டம் நடந்திருந்தால், புதிய பந்தில் டிரன்ட் போல்டின் ஸ்விங், லென்த் பந்தையும், தீபக் சஹரின் ஸ்விங் பந்துவீச்சையும் குஜராத் பேட்டர்கள் சமாளித்திருக்க மாட்டார்கள். ஆனால், இந்த அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்கும் வகையில் கருப்பு மண் ஆடுகளம் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆடுகளத்தில் போல்ட், தீபக் சஹர் பந்துவீசினாலும் எதிர்பார்த்த வேகம் கிடைக்கவில்லை, ஸ்விங் செய்வதும் கடினமாக இருந்தது. ஆதலால் இந்த கருப்பு களிமண் ஆடுகளத்தை குஜராத் அணி கேட்டு வாங்கி ஆட்டத்தை நடத்தக் கோரியுள்ளது. தங்களுக்கு சாதகமான ஆடுகளத்தை நன்கு பயன்படுத்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. கருப்பு மண்ணில் விளையாடி அனுபவம் இல்லாத மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சிலும் சொதப்பி, பேட்டிங்கிலும் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே வரலாற்றுத் தோல்வி: சிக்ஸர்களை விளாசியும் தோனியை ரசிகர்கள் விமர்சிப்பது ஏன்? தோனியின் சிக்சர்களாலும் தடுக்க முடியாத சிஎஸ்கேயின் வரலாற்றுத் தோல்வி சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-வுக்கு எதிராக தொடரும் ஆர்சிபி-யின் 16 ஆண்டுகால தோல்வி முடிவுக்கு வருமா? SRH-ஐ சிதைத்த ஷர்துலின் விஸ்வரூபம் - லக்னௌவின் ஆணிவேராக அமைந்த பூரன், மார்ஷ் ஜோடி "களிமண் ஆடுகளத்தை விரும்பினோம்" பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக்குப்பின் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், "முதல் போட்டிக்கு முன்பாகவே இந்த கருப்பு களிமண் ஆடுகளத்தில் விளையாட விரும்பினோம். எதிரணி யார் என்பதைப் பொருத்தும் ஆடுகளம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதுபோன்ற ஆடுகளம் எங்களுக்கு சிவப்பு மண் ஆடுகளத்தைவிட பேட்டிங், பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். கருப்பு மண் ஆடுகளத்தில் ஆடு ம்போது பவுண்டர்கள் அடிப்பது கடினமாக இருக்கும், பந்து தேயும் போது ஷாட்களை ஆடுவது இன்னும் கடினமாக இருக்கும். எங்களைப் பொருத்தவரை திட்டங்கள் அனைத்தையும் கலந்து பேசி செயல்படுத்துவோம், சில நேரங்களில் நினைத்ததுபோல் நடக்கும், சிலவை நடக்காது. ரஷித் கான் டி20 போட்டியி்ல் முதல் முறையாக 2 ஓவர்கள் மட்டுமே இந்த ஆட்டத்தில் வீசியுள்ளார் ஏன் எனக்குத் தெரியவில்லை. வழக்கமாக ரஷித்கானுக்கு கடைசி கட்டத்தில் ஓவர்களை வீச அழைப்பேன், ஆனால், வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியதால், ஆட்டம் கையைவிட்டு செல்லக்கூடாது என்பதால் பந்துவீச்சை மாற்றவில்லை. பிரசித் கிருஷ்ணா அற்புதமாகப் பந்துவீசினார். அடுத்த ஆட்டம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணியுடன் இதே ஆடுகளத்தில்தான் விளையாடப் போகிறோம், சிறந்த சவாலாக இருக்கும்" எனத் தெரிவித்தார். ரோஹித்தை புகழ்ந்த ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சீசனிலேயே கேப்டன் மாற்றப்பட்டுவிட்ட போதிலும், அந்த அணியின் சில ரசிகர்கள் அந்த மாற்றத்தை ஏற்க இன்னும் கூட தயாராக இல்லை என்பதை நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகான சில சமூக வலைதள பதிவுகள் உணர்த்துகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை இன்னும் கொண்டாடும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களில் ஒரு பிரிவினர், நேற்றைய தோல்விக்குப் பிறகு அவரைப் புகழ்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். X பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு குறிப்பாக, குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கில் சிறப்பாக ஆடி ரன்களை குவித்துக் கொண்டிருந்த போது ரோஹித் சர்மாவிடம் ஹர்திக் பாண்டியா அடிக்கடி ஆலோசனை கேட்டதை பார்க்க முடிந்தது. அந்த வீடியோக்களையும், ஸ்கிரீன்ஷாட்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரோஹித் சர்மாவை 'கேப்டன் ஃபார் எவர்' என்று சில மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். குஜராத் அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா அமைத்த பீல்டிங் வியூகங்களையும், பவுலர்களை மாற்றிய விதத்தையும் அவர்கள் குறை கூறி பதிவிட்டுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0kx4v0m37xo
-
கனேடிய பொதுத்தேர்தல் களத்தில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள்
30 MAR, 2025 | 10:21 AM நமது நிருபர் கனேடிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நான் தமிழ் பேசும் வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். அவர்களில் இருவர் லிபரல் கட்சி சார்பிலும் ஏனைய இருவர் கொன்சவேர்ட்டிவ் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர். கடந்த லிபரல் அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றிய ஹரி ஆனந்தசங்கரி, ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியிலும் புதிய முகமாக தற்போதைய மார்க்கம் நகரசபையின் 7ஆம் வட்டார உறுப்பினர் ஜுவொனிற்றா நாதன் மார்க்கம் பிக்கரிங் - புரூக்ளின் தேர்தல் தொகுதியிலும் களமிறங்கவுள்ளனர். கொன்சர்வேர்ட்டிவ் கட்சி சார்பில் போட்டியிடும் லையனல் லோகநாதன் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியிலும் மற்றும் முன்னாள் பொலிஸ் அதிகாரியான நிரான் ஜெயநேசன் மார்க்கம்-யுனியன்வில் தொகுதியிலும் களமிறங்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/210588
-
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து சிறப்பு அறிக்கை!
12 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் Published By: DIGITAL DESK 3 30 MAR, 2025 | 10:52 AM நாட்டில் இன்று ஞாற்றுக்கிழமை (30) 12 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/210596
-
இலங்கையின் பொருளாதாரமும் தேசியப் பாதுகாப்பும் நேரடியாக கடல்சார் களத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன ; அமெரிக்க தூதுவர் ஜுலி சங்
30 MAR, 2025 | 09:17 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இந்தோ-பசிபிக் பிராந்தியம் உலகின் மிகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் செல்வாக்கு மிக்க பகுதிகளில் ஒன்றாக தொடர்கிறது. ஒரு தீவு நாடாக, இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பும் தேசிய பாதுகாப்பும் நேரடியாக கடல்சார் களத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங், இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக கடல்சார் வர்த்தக வழிகள் அமைந்துள்ளதால், இவற்றைப் பாதுகாப்பதன் மூலம், இலங்கை அதன் எதிர்காலத்தை பாதுகாக்கிறது என்றும் குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில், இலங்கையில் தனது மூன்று ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க திருப்பத்தைக் கண்டேன், ஆனால் பயணம் இன்னும் முடிவடையவில்லை. இலங்கையர்களில் கால் பகுதியினர் இன்னும் வறுமையில் வாழ்கின்றனர். எனவே நீண்ட காலமாகத் தேவைப்படும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இலங்கை நீண்ட கால வளர்ச்சிப் பாதையில் செல்வதை உறுதி செய்வதற்கு அவசியமான அடுத்த படியாகும். இந்தோ-பசிபிக் பிராந்தியம் உலகின் மிகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் செல்வாக்கு மிக்க பகுதிகளில் ஒன்றாக தொடர்கிறது. ஒரு தீவு நாடாக, இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பும் தேசியப் பாதுகாப்பும் நேரடியாக கடல்சார் களத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, திறந்த, சுதந்திரமான மற்றும் அமைதியான இந்தோ-பசிபிக் பகுதியைப் பராமரிப்பதில் அனைவருக்கும் பங்கு உள்ளது. இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் முக்கியமான அமைவிடம் காரணமாக பிராந்தியத்தில் வர்த்தக வழிகள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் இருப்பதை உறுதி செய்வதற்கு கடல்சார் கள விழிப்புணர்வு அவசியமாகும். ஏனெனில் இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக கடல்சார் வர்த்தக வழிகள் அமைந்துள்ளன. இவற்றைப் பாதுகாப்பதன் மூலம், இலங்கை அதன் எதிர்காலத்தை பாதுகாக்கிறது. கடல்சார் பாதுகாப்பு துறைமுகங்கள் அல்லது கடற்படை உள்கட்டமைப்பில் உள்ள அச்சுறுத்தல்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. கடற்கொள்ளை, கடத்தல், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட கடல்சார் களத்தில் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் என புதிய சவால்களுடன் விரிவடைகிறது. இவேவேளை, இலங்கையின் விரிவான பிரத்தியேக பொருளாதார மண்டலம் தேசிய பொருளாதார பாதுகாப்பிற்கு இன்றியமையாததாகும். ஏனெனில் இது கடல் வளங்களால் நிறைந்துள்ளது. ஆனால் இது சட்டவிரோத மீன்பிடி த்தலுக்கான இலக்காகவும் அமைகிறது. அமெரிக்கா இந்த முக்கியமான பிராந்தியத்தில் உறுதியான பங்காளியாக தொடர்ந்தும் இருக்கும். தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டுப் பாதுகாப்பிற்காக கடல்சார் கள விழிப்புணர்வு போன்ற துறைகளை மேம்படுத்துவோம். இந்தியப் பெருங்கடல் பிராந்தியமும், பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியமும், உலகளாவிய வர்த்தகம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஒருபோதும் இவ்வளவு முக்கியமானதாக இருந்ததில்லை. இன்று எதிர்கொள்ளும் சவால்கள் இருந்தபோதிலும், பகிரப்பட்ட எதிர்காலம் பிரகாசமானது. அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகிய நமது பகிரப்பட்ட இலக்குகள் அடையக் கூடியவை என்பதை நினைவில் கொள்வோம் என்றார். https://www.virakesari.lk/article/210582
-
இலங்கையில் பாலியல் நோய்கள் அதிகரிப்பதாக எச்சரிக்கை
நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு - சுகாதார அமைச்சு 30 MAR, 2025 | 09:24 AM நாட்டிலுள்ள இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கிடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் மாத்திரம் நாட்டில் 824 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 718 பேர் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் 47 பேர் எய்ட்ஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தனர். இலங்கையில் எச்.ஐ.வி பரவல் அதிகரித்து வருவதால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளுமாறு தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/210580
-
சுழிபுரத்தில் இறந்தவர்களை புதைக்கும் காணியை தனியார் வாங்கியதால் எழுந்துள்ள சர்ச்சை
அண்ணை, அங்கே திருவடிநிலை சைவசமய மக்களுடைய மயானம் உள்ளது. அதற்கருகே உள்ள தனியார் காணிக்குள்(உரிமையாளர்கள் வெளிநாட்டில்) களவாக உரியவர்களிடம் அனுமதி பெறாது சில உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை விரும்பாத காணி உரிமையாளர்கள் நிறுவனம் ஒன்றிற்கு காணியை கொடுக்க விரும்புகிறார்கள். 1995 ஆம் ஆண்டின் பின்னர் அதிகரிக்கும் மதம்மாற்றும் அமைப்புகளால் இப்போது தான் ஓரளவு மக்கள் மதம்மாறி உள்ளார்கள். 150 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்.
-
இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் – எச்சரிக்கை விடுப்பு
நிலநடுக்கம் வந்தால் யாழ்ப்பாணம் மிஞ்சாதே! கட்டிடங்களோட சமாதி தான். அண்ணை, கொழும்பு அலுவலகம் 24 மணிநேரம் இயங்குகிறதாம்! நண்பர் நேற்று அதிகாலை 3 மணிக்கு சரியான ஆவணங்களை வழங்கி காலை 10 மணிக்கு புதிய கடவுச் சீட்டை பெற்றுவிட்டார்.
-
முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் அமைக்க இந்தியா ஒத்துழைக்கும் : இந்தியாவை உரிய முறையில் அணுகுக; ரவிகரன் எம்.பி ஆலோசனை
29 MAR, 2025 | 06:50 PM முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் தாம் இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளியுடன் பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்திய துணைத்தூதுவருக்கு முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் ஒன்றை அமைக்கும் எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம், இந்தியாவை உரியமுறையில் அணுகுவதன் மூலம் முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் ஒன்றை அமைப்பதற்கான நிதி உதவியை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளமுடியுமென கூட்டுறவுப் பிரதி அமைச்சரும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஆலோசனை ஒன்றையும் வழங்கியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், பண்பாட்டு நடுவம் அமைப்பது தொடர்பில் பேசப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இக்கூட்டத்தில் இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்பாட்டு நடுவம் ஒன்றினை அமைப்பதற்கு பல்வேறு வழிகளிலும் முயற்சிக்கின்றோம். இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் என்னோடு பேசியிருந்தார். குறித்த பண்பாட்டு நடுவத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் நிறுவுவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை எடுத்து, கலாச்சார அமைச்சின் ஊடாக இதற்குரிய நிதி ஒதுக்கீட்டினைப் பெறுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்றார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்பாட்டு நடுவம் அமைப்பதுதொடர்பாக இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி அவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசியுள்ளேன். இந்தியத் துணைத் தூதுவருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்பாட்டு நடுவம் அமைக்கும் எண்ணமுள்ளது. அரசாங்கம் உரியவகையில் அணுகினால் முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் அமைப்பதற்கு இந்தியா நிதி உதவிகளை மேற்கொள்ளும் என்றார். இதனைத்தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்பாட்டு நடுவம் அமைக்கவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தை உரிய தரப்பினர்களுக்கு அனுப்பிவைப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/210566