Everything posted by ஏராளன்
-
வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பவை முட்டுக்கட்டைகள்
Published By: VISHNU 25 MAR, 2025 | 10:03 PM வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோருவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (25) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வடக்கு மாகாணத்தில் மீள்குடியமர்வு, அபிவிருத்தி, விவசாயம், சுற்றுலாத்துறை என எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ள முடியாதளவுக்கு வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் முட்டுக்கட்டைகள் தொடர்ச்சியாகப் போடப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் விசனம் வெளியிட்டார். கிளிநொச்சிக்கு வருகை தந்த காணி ஆணையாளர் நாயகத்திடம் இது தொடர்பில் முறையிட்ட நிலையில், அவர் இந்த விடயத்தை விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்பாசன அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அதற்கு அமைவாக எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உயர்மட்ட குழுக் கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பவற்றால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விவசாய நிலங்கள், மேய்ச்சல் தரவைகள், குளங்கள், வயல்கள், மக்கள் மீள்குடியமர்வுக்கான காணிகள் என்பன எவ்வளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் மாவட்ட ரீதியாக விவரங்களை தயாரிக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார். இதன்போது அரச காணிகள் மாத்திரமே, ஒதுக்கக் காணிகளாக அரச திணைக்களங்களால் அறிவிக்க முடியும் எனவும் தனியார் காணி எனின் அதனைச் சுவீகரித்தே ஒதுக்க காணிகளாக அறிவிக்க முடியும் என்றுமே சட்ட ஏற்பாடு உள்ளபோதும் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன அதனைப் பின்பற்றாமல் வர்த்தமானியை வெளியிட்டுள்ளன என ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலஅளவத் திணைக்களத்தின் வரைபடத்துக்கு அமைவாக வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன காணிகளை வர்த்தமானியில் பிரசுரித்தன என்றும், 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் கூகுள் வரைபடத்தின் உதவியுடன் அந்தத் திணைக்களங்கள் நேரடியாக தமக்குரியதாக அடையாளப்படுத்தும் காணிகளை வர்த்தமானியில் பிரசுரித்துள்ளன என்ற தகவலும் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வடக்கில் சில மாவட்டங்களில் வனவளத் திணைக்களத்துக்குரிய காணிகள், வனவளத் திணைக்களத்துக்கு என அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணிகள் என்பனவற்றை விடுத்து மக்களின் வயல்காணிகளாக உள்ளவற்றுக்குள்ளும் வனவளத் திணைக்களத்தின் எல்லைக் கல்லுகள் போடப்பட்டுள்ளன என அதிகாரிகள் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினர். அதேநேரம் சில இடங்களில் வனவளத் திணைக்களமும், வனஉயிரிகள் திணைக்களமும் ஒரே காணிகளையே தமக்குரியதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கடந்த ஆண்டு வடக்கின் 5 மாவட்டங்களில் விடுவிப்பதற்கு வனவளத் திணைக்களம் இணங்கிய காணிகளின் அளவுகளை விட புதிதாக தமது திணைக்களத்துக்கு கோரும் காணியின் அளவு அதிகம் என்றும் ஆளுநரின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். வனவளத் திணைக்களத்தால் சில இடங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டபோதும் அங்கு மக்கள் மிக நீண்டகாலமாக வசித்துவருகின்றனர். ஆனால் அவர்களுக்கான சட்டபூர்வ ஆவணங்களோ, வீட்டுத்திட்ட உதவிகளோ முன்னெடுக்க முடியாத நிலைமை இருப்பதாகவும், அதேபோன்று சட்டபூர்வமான ஆவணங்கள் உள்ள ஒருதொகுதி மக்கள் வர்த்தமானி அறிவித்தலால் தமது வசிப்பிடங்களில் குடியேற முடியாத நிலைமை இருப்பதாகவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அரச அதிகாரிகள் அபிவிருத்தித் தேவைக்காக காணிகளை விடுவிக்குமாறு வனவளத் திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைத்தால் அது நிராகரிக்கப்படும் அதேவேளை, தனியார் முதலீட்டாளர்கள் அல்லது வர்த்தகர்கள் முன்வைக்கும் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகளும் வடக்கில் நடைபெறுவதாக அதிகாரிகள் ஆளுநரிடம் குறிப்பிட்டனர். இதேநேரம், இந்தத் திணைக்களங்களின் பாகுபாடான செயற்பாடுகள் தொடர்பிலோ அல்லது அந்தத் திணைக்களங்களின் நடவடிக்கைகள் தொடர்பிலோ வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கேள்வி எழுப்பினால், மேற்படி இரண்டு திணைக்களங்களின் உயர் அதிகாரிகளால் அவமரியாதை செய்யப்படுவதாகவும் ஆளுநருக்குச் சுட்டிக்காட்டினர். இந்த விடயங்களைக் கவனத்திலெடுப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், எதிர்வரும் 9ஆம் திகதி கலந்துரையாடலுக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் விவரங்களை உரிய வகையில் தயார் செய்யுமாறும், கடந்த காலங்களில் எதிர்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் இரு திணைக்களங்கள் தொடர்பிலான விடயத்தை அணுகுவோம் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடலில், வடக்கின் 5 மாவட்டங்களினதும் மேலதிக மாவட்டச் செயலர்கள் - காணி, வடக்கு மாகாண காணி ஆணையாளர், பிரதி நில அளவையாளர் நாயகம் - வடக்கு, ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/210197
-
படலந்த சித்ரவதை முகாமுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கூறும் தகவல்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரணில் விக்ரமசிங்க கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியின் இறுதி ஓரிரு வருடங்களில், அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாம் தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சை தோன்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் இலங்கை ஜனாதிபதியும், 6 தடவை பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, அல் ஜசீரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் படலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதை அடுத்தே, படலந்த சித்திரவதை முகாம் பேசுபொருளாக மாறியது. படலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் நடத்தப்பட்ட படலந்த ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையுடன் தொடர்புபட்ட கேள்விகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்தே இந்த விடயம் பாரிய சர்ச்சையை நாட்டில் தோற்றுவித்துள்ளது. விண்வெளி வீராங்கனைகள் விண்வெளியில் மாதவிடாயை எப்படி கையாள்வார்கள்?24 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்?24 மார்ச் 2025 படலந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான அறிக்கையை, அரசாங்கம் கடந்த மார்ச் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் இந்த படலந்த சித்திரவதை முகாம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை குறித்து நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையினால் கொள்கை தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகின்றார். ''கடந்த 1988ஆம் ஆண்டின் தொடக்கம் 1990ஆம் ஆண்டில் சிவில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குற்றச் செயல்களில் படலந்த பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட பாரிய சித்திரவதை முகாம் தொடர்பில் நடத்தப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை குறித்து தற்போது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பேசப்பட்டு வருகின்றன" என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார். இது குறித்து தொடர்ந்து அவர் பேசுகையில், "1977ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் ஊடாக சட்டவிரோதமான, ஜனநாயக விரோதமான தன்னாட்சி அரசாங்கத்தை வீழ்த்தி 17 வருட சாபத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து ஜனநாயகத்தை உறுதி செய்வதே நோக்கமாக அமைந்திருந்தது. கடந்த 17 வருட காலப் பகுதியில் இடம்பெற்ற அரச பயங்கரவாதத்தில் கொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதே நோக்கம். சூரியகந்த போன்ற மனித புதைகுழிகள் தொடர்பாகவும், படலந்த போன்ற சித்திரவதை முகாம்கள் தொடர்பாகவும் அப்போதைய தலைவர்கள் அந்தந்த இடங்களுக்குச் சென்று தகவல்களை வெளியிட்ட தருணத்தில் நியாயத்தை நிலைநாட்டிக் கொள்ளவே மக்கள் எதிர்பார்த்தார்கள்" என்றார். இதன்படி, 1995ஆம் ஆண்டு படலந்த வீடமைப்புத் திட்டத்தில் நடத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத சித்திரவதை முகாம் குறித்த விசாரணைகளை நடத்த அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலப் பகுதிகள் பல தடவை நீடிக்கப்பட்டன. இந்த விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை 1998ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஜி.கே.ஜி.பெரேராவினால் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GOVERNMENT PRESS முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அமைக்கப்பட்ட படலந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 1998ஆம் ஆண்டு ஆணைக் குழுவினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், அந்த அறிக்கை கடந்த 14ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையிலேயே, படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான பேச்சு மீண்டும் உருவெடுத்த பின்னணியில், இந்த அறிக்கையைத் தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கடந்த 14ஆம் தேதி சமர்ப்பித்திருந்தது. ''இந்தச் சம்பவம் இடம்பெற்று 35 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு 30 வருடங்களும், ஆணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு 25 வருடங்களும் கடந்துள்ள இந்தத் தருணத்தில் எமது கட்சி மற்றும் எமது அமைச்சரவையினால் இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அதை மக்கள் மயப்படுத்துவதற்குமான பொறுப்பு நம்மிடம் உள்ளது'' என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகின்றார். இந்த அறிக்கையை சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைக்கவும், இந்த அறிக்கை தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்களை எட்டுவதற்கு ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள படலந்த சித்திரவதை முகாம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பான விவாதத்தை எதிர் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரை இந்த விவாதம் நடத்தப்பட இருப்பதுடன், இரண்டாம் கட்ட விவாதத்தை மே மாதத்தில் நடத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஔரங்கசீப்பை 'பொருத்தமற்றவர்' என கூறும் ஆர்எஸ்எஸ் அவரது சகோதரர் தாரா ஷிகோவை முன்னிலைப்படுத்துவது ஏன்?7 மணி நேரங்களுக்கு முன்னர் 'மாஞ்சோலையை போல வால்பாறையில் இருந்தும் மக்களை வெளியேற்ற திட்டம்' - சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்துக்கு எதிர்ப்பு24 மார்ச் 2025 படலந்த சித்திரவதை முகாம் - பின்னணி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க படலந்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைப்படி, 1980ஆம் ஆண்டு காலப் பகுதியின் இறுதிக் காலகட்டத்தில், அப்போதைய அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொலைகள், சித்திரவதை முகாம்கள், சட்டவிரோத தடுத்து வைப்புகள் இடம்பெற்ற பகுதியாக படலந்த சித்திரவதை முகாம் கூறப்படுகின்றது. கடந்த 1987-1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் படலந்த வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடுகளில் இந்த முகாம்கள் நடத்திச் செல்லப்பட்டதாகவும், இந்தப் பகுதியில் சட்டவிரோதமாக போலீஸ் அதிகாரிகளின் தலையீட்டில் பல்வேறு நபர்கள் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் 1995ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட படலந்த ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஐக்கிய தேசியக் கட்சியின் 17 வருட ஆட்சிக் காலத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் சித்திரவதைகள் மற்றும் கொலைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி மக்களுக்கான நியாயத்தைத் தமது அரசாங்கம் நிலைநாட்டும்" என்பது 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பிரதான தேர்தல் பிரசாரமாகக் காணப்பட்டது. இதன்படி, படலந்த சித்திரவதை முகாம் மற்றும் சூரியகந்த மனித புதைகுழி தொடர்பில் அந்தக் காலப் பகுதியில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி பீடம் ஏறிய சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி, படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஆட்சி பீடம் ஏறிய குறுகிய காலத்திலேயே ஆரம்பித்திருந்தார். இதன்படி, 1995ஆம் ஆண்டு இந்த ஜனாதிபதி ஆணைக்குழு, விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் ஆயுட்காலம் சுமார் 12 தடவைகளுக்கும் அதிக சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டதுடன், இந்த ஆணைக்குழுவின் அறிக்கை 1998ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி அப்போதைய ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டு இருந்தது. நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு: உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது?7 மணி நேரங்களுக்கு முன்னர் சிஎஸ்கேவை அதிர வைத்த விக்னேஷ் புத்தூர்: 'தோனியே பாராட்டினார்' - நெகிழ்ச்சியுடன் பகிரும் அறிமுக வீரரின் தந்தை25 மார்ச் 2025 ஆணைக்குழுவின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் அதிகாரியான சட்டத்தரணி எஸ்.குணவர்தன செயற்பட்டிருந்ததுடன், அவர் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னணியில் பதில் செயலாளராக டேவிட் கீதனகே பணியாற்றியிருந்தார். அதன் பின்னரான காலத்தில் இந்த ஆணைக்குழுவின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் இரண்டாம் நிலை தரத்தைக் கொண்ட அதிகாரியான ஜீ.கே.ஜீ.பெரேரா பணியாற்றியுள்ளார். கடந்த 1998ஆம் ஆண்டு தனது பணிகளை நிறைவு செய்த ஆணைக்குழு, அந்த அறிக்கையை அதே ஆண்டு ஜனாதிபதியிடம் கையளித்திருந்த போதிலும், இந்த அறிக்கை கடந்த 14ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. "கடந்த 1988ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை அரச உர கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான படலந்த வீடமைப்புத் திட்டத்தில் நடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோதமான சித்திரவதை முகாமில் நபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்களா? சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டார்களா? அதற்குப் பொறுப்பு கூறவேண்டிய நபர்கள் யார்?" என்பவை உள்ளிட்ட ஐந்து விடயங்கள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இந்த ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணைகள் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதியின் 2ஆம் இலக்க மேல் நீதிமன்ற வளாகத்தில் 1996ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்தக் கூட்டம் தொடர்ச்சியாக 127 நாட்கள் இடம்பெற்றது. இந்த விசாரணைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல தலைமைகளான ரணில் விக்ரமசிங்க, ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க உள்ளிட்ட 82 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. படலந்த சித்திரவதை முகாம் மற்றும் ரணில் விக்ரமசிங்க பட மூலாதாரம்,GOVERNMENT PRESS படக்குறிப்பு,படலந்த ஆணைக்குழுவின் விசாரணைக் குழு உறுப்பினர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தின் பியகம தேர்தல் தொகுதியில் படலந்த பகுதி அமைந்துள்ளது. இந்த படலந்த பகுதியில் இலங்கை உர கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வீடமைப்பு திட்டமொன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த வீடமைப்புத் திட்டத்தில் 64 வீடுகள் அமைக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டின் வசதிகள் மற்றும் தரங்களுக்கு அமைய ஏ, பி, சி என அந்த வீடுகள் வகைப்படுத்தப்பட்டிருந்தன. இந்த வீட்டுத் திட்டமானது, அப்போதைய கைத்தொழில் அமைச்சரான ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சுக்கு கீழ் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அப்போதைய கைத்தொழில் அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, அரச உர கூட்டுத்தாபனத்தின் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட அசோக்க சேனாநாயக்கவை தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு, படலந்த வீடமைப்புத் திட்டத்திலுள்ள வீடுகளில் சிலவற்றை போலீஸ் அதிகாரிகளுக்காக ஒதுக்கீடு செய்து தருமாறு கோரியுள்ளதாக ஆணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச உர கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வீடுகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரியாக உதவி போலீஸ் அத்தியட்சராக அப்போது கடமையாற்றிய டக்ளஸ் பீரிஸ் ஆணைக்குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளின் பிரகாரமே, படலந்த வீடமைப்புத் திட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகளை வழங்கியதாகவும், அவர் ஆலோசனை வழங்காத பட்சத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டிருக்காது எனவும் அரச உர கூட்டுத்தாபனத்தின் தலைமை அதிகாரியாகக் கடமையாற்றிய அசோக்க சேனாநாயக்க, ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார். இந்த வீடுகளை வழங்குவதற்காக எந்தவோர் உடன்படிக்கைகளும் கைச்சாத்து இடப்பட்டிருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அப்போதைய போலீஸ் மாஅதிபர் எர்னஸ்ட் பெரேரா சாட்சி வழங்கியுள்ளார். 'இந்த வீடமைப்புத் திட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டமையானது, டக்ளஸ் பீரிஸ், அரச உர கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் குறித்த அமைச்சர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்' என அப்போதைய போலீஸ் மாஅதிபர், ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார். சுனிதா வில்லியம்ஸ்: 'விண்வெளியில் எப்போதும் பதற்றம், குறைவான தூக்கம்' - 12 ஆண்டுகளுக்கு முன் என்ன கூறினார்?20 மார்ச் 2025 சீன இளைஞர்கள் சொந்தக் கவலைகளை டீப்சீக் செயலியிடம் புலம்பித் தள்ளுவது ஏன்?21 மார்ச் 2025 குறித்த வீடமைப்புத் திட்டத்தில் A 2/2 என்ற இலக்கத்தைக் கொண்ட வீட்டில் 1983ஆம் ஆண்டு மார்ச் 2ம் தேதி முதல் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரணில் விக்ரமசிங்க வசித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அந்தக் காலப் பகுதியில் அவர் பதவி வகித்த இளைஞர் விவகாரம் மற்றும் தொழில் பாதுகாப்பு அமைச்சரின் சுற்றுலா விடுதியாகவும், கைத்தொழில் அமைச்சரின் அதிகாரபூர்வ வீடாகவும் ரணில் விக்ரமசிங்க அந்த வீட்டைப் பயன்படுத்தியுள்ளார். சட்டவிரோதமான முறையில் நபர்களைத் தடுத்து வைத்து, அவர்களுக்கு சித்திரவதை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வீடுகளின் இலக்கங்களையும் ஆணைக்குழு தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, ஆணைக்குழுவின் ஆங்கில அறிக்கையின் பிரகாரம், 23 முதல் 26 வரையான இலக்கங்களைக் கொண்ட அறிக்கை பக்கங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1989 முதல் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம். இந்த வீட்டில்தான் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய டி.எம்.பந்துல என்ற நபர் சாட்சியம் வழங்கியுள்ளார். ஆணைக்குழுவினால் வீட்டுத் தொகுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபரினால் இந்த வீடு அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அத்துடன், ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியான போலீஸ் பரிசோதகர் சுதத் சந்திரசேகர தங்கியுள்ளார். உதவி போலீஸ் அதிகாரியான டக்ளஸ் பீரிஸின் பாதுகாப்பு அதிகாரிகளும் தங்கியுள்ளனர். இந்த வீட்டில்தான் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டு, தான் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக சாட்சியமளித்த அர்ல் சுகி பெரேரா என்பவர் இந்த வீட்டை அடையாளம் காட்டியுள்ளார். சபுகஸ்கந்த போலீஸாரிடம் வீடொன்று கையளிக்கப்பட்டு இருந்ததும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த வீட்டில்தான் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வாசல ஜயசேகர என்பவர் இந்த வீட்டை அடையாளம் கண்டுகொண்டுள்ளார். A 1/8 என்ற இலக்கத்தைக் கொண்ட வீடு எவருக்கும் கையளிக்கப்படாத பின்னணியில், அந்த வீட்டை அண்மித்து போலீஸ் அதிகாரிகளின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உர கூட்டுத் தாபனத்தின் தலைமை அதிகாரி பேலியகொடை போலீஸாரிடமும், ரணில் விக்ரமசிங்கவிடமும் அறிவித்துள்ளார். ஆனால், இந்த விடயம் தொடர்பில் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கியிருந்த A 1/7 என்ற வீட்டை அண்மித்து இந்த வீடு அமைந்துள்ளதுடன், அந்த வீடு பிரத்தியேக பாவனைக்காக வைக்கப்பட்டிருந்த இடம் என அஜித் ஜயசிங்க என்ற நபர் ஆணைக்குழுவிடம் சாட்சி வழங்கியுள்ளார். சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம்: ஸ்டார்லைனர் முதல் டிராகன் வரை - என்ன நடந்தது? முழு விவரம்19 மார்ச் 2025 கோத்ரா கலவரம், ஆர்எஸ்எஸ், சீனா பற்றிய அமெரிக்க பாட்காஸ்டர் கேள்விகளுக்கு மோதி பதில் என்ன?18 மார்ச் 2025 ரணில் விக்ரமசிங்கவின் சாட்சியம் அப்போதைய கைத்தொழில் அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, இந்த ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார். அதன்படி, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ரஞ்ஜன் விஜேரத்னவின் கோரிக்கைக்கு அமையவே தான் முன்னெடுத்ததாக அவர் கூறியுள்ளார். எனினும், அது தொடர்பான எந்தவோர் ஆவணங்களையும் முன்வைக்கவில்லை என்பதுடன், அது தொடர்பில் அப்போதைய போலீஸ் மாஅதிபர் மற்றும் போலீஸ் திணைக்களம் இது தொடர்பில் அறிந்து இருக்காமையினால், ரணில் விக்ரமசிங்கவின் சாட்சியம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்படுகின்றது. வழக்கறிஞர் விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சியின் மரணம் வழக்கறிஞரான விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சி என்பவர் 1988ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி காணாமல் போயிருந்தார். அவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி வழக்கறிஞர் ரஞ்ஜித் அபேசூரிய, போலீஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். காணாமல் போன விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சி கைது செய்யப்பட்டுள்ளாரா என அப்போதைய பாதுகாப்பு செயலாளர், அப்போதைய போலீஸ் மாஅதிபரிடம் வினவியுள்ளார். போலீஸ் மாஅதிபர் இந்த விடயம் தொடர்பில் கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி போலீஸ் மாஅதிபரிடம் வினவியபோது, அவ்வாறு கைது செய்யப்படவில்லை என்று பதில் வழங்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஜயதாஸ, தங்காலை போலீஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என அப்போதைய அரச பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகக் கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் புதல்வரான ரவி ஜெயவர்தன போலீஸ் மாஅதிபரிடம் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, போலீஸ் மாஅதிபர் தங்காலை போலீஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட போலீஸ் அத்தியட்சர் கரவிட்ட தர்மதாஸவிடம் வினவியுள்ளதுடன், அவ்வாறான சம்பவமொன்று பதிவாகியுள்ளதை அதிகாரி மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆங்கில அறிக்கையின் 72வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் மாஅதிபர் ஆர்னஸ்ட் பெரேராவின் சாட்சியத்தின் பிரகாரம், ரணில் விக்ரமசிங்க தன்னை தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு சந்தேக நபரை (வழக்கறிஞர் விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சி) கொழும்புவுக்கு கொண்டு வந்து, ''களனி பிரிவில் செயற்படுகின்ற விசேட குழுவிடம்'' ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, போலீஸ் மாஅதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம், வழக்கறிஞர் விஜயதாஸ லியக்க ஆராய்ச்சி கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு, களனி பிரதேசத்திற்குப் பொறுப்பாகச் செயற்பட்ட குற்றச் செயல் தடுப்புப் பிரிவின் போலீஸ் பரிசோதகர் குலரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் கடும் காயங்களுடன் வழக்கறிஞர் லியன்ன ஆராய்ச்சி மீட்கப்பட்டு, கொழும்பு பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர் நள்ளிரவு உயிரிழந்துள்ளார். ஆயுதங்களினால் தாக்குதல் நடத்தப்பட்டமையே மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவரின் உடலில் 207 இடங்களில் காயங்கள் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. குறித்த வழக்கறிஞரை கொழும்பிற்குக் கொண்டு வரும்படி தான் போலீஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கவில்லை என ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார். போலீஸ் மாஅதிபருக்கு ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படும் சம்பவத்தை ரணில் விக்ரமசிங்க நிராகரித்த போதிலும், முன்னாள் போலீஸ் மாஅதிபர் அர்னஸ்ட் பெரேராவிடம் குறுக்குக் கேள்வி எழுப்புவதற்கு ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வரவில்லை என்பது விசேடமான விடயமாக இந்த ஆணைக்குழுவினால் கருத்தில் கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான கருணா - பிள்ளையான் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்தது ஏன்?22 மார்ச் 2025 பாம்பு பிடிப்பவர்களே சில நேரம் அதனிடம் கடிபட்டு உயிரிழக்க நேரிடுவது ஏன்?24 மார்ச் 2025 படலந்த அறிக்கையின் பிரகாரம் இதற்கு யார் பொறுப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரணில் விக்ரமசிங்க கடந்த 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி முதல் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையான காலப் பகுதியில் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் எவரேனும் ஒருவர் அல்லது நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு, அவர்கள் அமானுஷியமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பொறுப்பு கூற வேண்டியவர்கள் தொடர்பான தரவுகள் ஆணைக்குழுவின் ஆங்கில பிரதியின் 119 முதல் 122 வரையான பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த 1986ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அப்போதைய கைத்தொழில் அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் போலீஸ் அதிகாரிகளை நிறுத்துவதற்கு, அரச உர கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அதனூடாக 13 வீடுகள் உதவி போலீஸ் அதிகாரி டக்ளஸ் பீரிஸிற்கு பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வீடுகளை வழங்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தமையானது, தனது அமைச்சுப் பதவியின் அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை எனக் கூறப்படுகின்றது. இந்த வீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு போலீஸ் திணைக்கள சரத்துகளுக்கு அமைய அது முறையற்றது என்பதுடன், அது குறித்து நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் சிரேஷ்ட போலீஸ் அதிகாரி நலீன் தெல்கொட பொறுப்பு கூறவேண்டும் என்பதுடன், அங்கு சட்டவிரோதமாக எதேனும் நடந்திருக்குமானால் அதை நிறுத்துவதற்காக அவர் நடவடிக்கை எடுக்காமை குறித்துப் பொறுப்பேற்க வேண்டும். ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் வரவழைக்கப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகளுக்குக் கூட்டம் நடத்தியமையும், அவரால் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்க போலீஸாரின் செயற்பாடுகளுக்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கும் தலையீடு செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய வழங்கப்பட்ட வீடுகளில் சட்டவிரோத தடுப்பு முகாம்களை ஸ்தாபிக்க வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்படுகின்றது. B2, B8, B34, A1/8 ஆகிய படலந்த வீடுகளில் சட்டவிரோத தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாம்களை நடத்த ரணில் விக்ரமசிங்க மற்றும் சிரேஷ்ட போலீஸ் அதிகாரி நலீன் தெல்கொட பொறுப்பு கூற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் அறிந்திருந்த போதிலும், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து அப்போதைய பிரதி போலீஸ் மாஅதிபர் எம்.எம்.ஆர் (மெரில்) குணரத்ன, அப்போதைய போலீஸ் மாஅதிபர் அர்னஸ்ட் பெரேரா ஆகியோர் பொறுப்பு கூற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் போடும் குப்பைகள் என்ன ஆகும்?23 மார்ச் 2025 'பூனை அளவுக்குப் பெரிய எலிகள்' - பிரிட்டனின் இந்த நகரில் என்ன நடக்கிறது?23 மார்ச் 2025 ஆணைக்குழுவின் பரிந்துரைகள் என்ன? பட மூலாதாரம்,BATALANDA COMMISSION REPORT படக்குறிப்பு,படலந்த சித்திரவதை முகாம் வரைபடம் நாட்டுப் பிரஜைகளின் அடிப்படை உரிமை தொடர்ச்சியாக மீறப்படும் நபர்கள் யார் என்பது அடையாளம் காணப்படும் பட்சத்தில், அவர்களின் பிரஜாவுரிமை ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே சரியான தண்டனை என்பதுடன், அதை வழங்குவதற்கான சட்ட அதிகாரத்தை உயர்நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் ஆங்கில அறிக்கையின் 124, 125 ஆகிய பக்கங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத விடயங்கள் இடம்பெறும் பகுதிகளுக்குச் சென்று அதுகுறித்து விசாரணைகளை நடத்தும் அதிகாரம் வழங்கும் வகையில், குற்றவியல் கோவை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என அந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்துமாறு போலீஸ் மாஅதிபருக்கு உத்தரவிடுதல் உள்ளிட்ட மேலும் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்க தற்போது கூறுவது என்ன? படலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை தான் முழுமையாகவே நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை விவகாரம் தொடர்பில் தன்மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார். ''கடந்த 1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கை கைச்சாத்து இடப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணி நாடு முழுவதும் வன்முறைகளைத் தோற்றுவிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டின் முக்கியமான இடங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டது" என அவர் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "பியகம பகுதியில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம், டீசல் மின் உற்பத்தி நிலையம், மாவெலியில் இருந்து கொழும்பிற்கு மின்சாரத்தைக் கடத்தும் மத்திய நிலையம் உள்ளிட்ட வர்த்தக மையங்களில் முக்கியமான பொருளாதார நிலையங்கள் காணப்பட்டன. அந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டது. பாதுகாப்புப் பிரிவினர் தங்குவதற்காக இலங்கை உர கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான, அந்தச் சந்தர்ப்பத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கட்டடங்கள் மற்றும் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் சில வீடுகளில் தங்கியிருந்தனர். இந்த வன்முறை காலப் பகுதியில் சப்புகஸ்கந்த போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி போலீஸ் பொறுப்பதிகாரி கொலை செய்யப்பட்டார்," என்று தெரிவித்துள்ளார். அதோடு, "அப்போதைய பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் விஜேரத்ன என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார். ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக வீடமைப்புத் திட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த வீடுகளை அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, களனி போலீஸ் அதிகாரியான நலின் தெல்கொடவிடம் கையளிக்கப்பட்டது" என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த காலப் பகுதியில் உள்ளுராட்சி சபை உறுப்பினர் ஒருவர், கூட்டுறவு சங்கத் தலைவர், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கொலை செய்யப்பட்டதாகவும், சில வீடுகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ள ரணில் விக்ரமசிங்க, "சரிவை எதிர்நோக்கியிருந்த பொருளாதாரத்தையும், மக்களின் இயல்வு வாழ்க்கையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக அதிகாரத்தில் இருந்த அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது'' எனத் தெரிவித்துள்ளார். சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வித்திட்ட 'ஹிட்லரின் விஞ்ஞானி'23 மார்ச் 2025 வீடுகளில் பரவும் பூஞ்சைகளை நுகர்வது உங்கள் ஆரோக்கியத்தையே முடக்கும் ஆபத்து21 மார்ச் 2025 அது மட்டுமின்ற், இந்த ஆணைக்குழு அரசியல் இலாபத்தை கருத்திற் கொண்டே செயற்பட்டதாகவும் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டுகின்றார். ''கடந்த 1994ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, படலந்த பகுதியில் சித்திரவதை முகாமொன்று இருந்ததா என்பதைக் கண்டறிவதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்தார். அதற்காகப் பலரை வரவழைத்திருந்தார். என்னை சாட்சியாளராக மாத்திரமே வரச் சொன்னார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் நான் எதிர்கட்சித் தலைவராகச் செயற்பட்டேன்." "படலந்த ஆணைக்குழு முழுமையாக அரசியல் சேறுபூசும் நடவடிக்கையை நோக்கமாகக் கொண்டது. எனினும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. அறிக்கையில் அமைச்சர் என்றே என்னைக் குறிப்பிட்டுள்ளனர். போலீஸ் அத்தியட்சகரினால் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்குவது சரியானது இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. போலீஸ் மாஅதிபருக்கு வீடுகளை வழங்கி, அதை போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்குவதே சரியான நடைமுறை எனக் கூறப்பட்டுள்ளது." "இதில் நானும், தெல்கொடவும் பொறுப்பு கூற வேண்டும் என ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் என்னுடன் தொடர்புப்படவில்லை'' என அவர் பதிலளித்துள்ளார். இந்த அறிக்கையை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை குறித்து விவாதம் இடம்பெறவில்லை எனத் தான் நம்புவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகின்றார். அத்துடன், நாடாளுமன்ற சபை அறிக்கையொன்றை 25 வருடங்களுக்குப் பின்னர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் சம்பிரதாயம் இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரமன்றி, உலகிலுள்ள எந்தவொரு நாடாளுமன்றத்திலும் கிடையாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் வழங்கியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2er00e9mkmo
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
LIVE 5th Match (N), Ahmedabad, March 25, 2025, Indian Premier League Punjab Kings 243/5 Gujarat Titans (8/20 ov, T:244) 82/1 GT need 162 runs in 72 balls Current RR: 10.25 • Required RR: 13.50 • Last 5 ov (RR): 65/1 (13.00) Win Probability:GT 8.91% • PBKS 91.09%
-
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை தளபதி ஆகியோருக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை முற்றிலும் ஒருதலைப்பட்சமானது - சரத் வீரசேகர 25 MAR, 2025 | 04:59 PM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை முற்றிலும் ஒருதலைபட்சமானது. பிரித்தானியாவின் இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இலங்கையின் பாதுகாப்பு துறையின் முன்னாள் உயர் அதிகாரிகள் மூவர் உட்பட கருணா அம்மான் என்று அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, விடுதலை புலிகள் அமைப்பினை இலங்கையில் இல்லாதொழித்தாலும் அந்த அமைப்பின் கொள்கையினை கொண்டவர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இன்றும் செல்வாக்கு செலுத்துகின்றனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பிரித்தானியாவில் வாழ்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவிடம் பிரித்தானியா பலமுறை எடுத்துரைத்தது. இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷ மேற்குலக நாடுகளின் அறிவுறுத்தலுக்கு அடிபணியாமல் நாட்டு மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு அமைய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இதன் பின்னரே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஊடாக பிரித்தானியா இலங்கைக்கு எதிராக பல தீர்மானங்களை கொண்டு வந்தது. பிற்பட்ட காலங்களில் இலங்கைக்கு எதிராக பிரேரணைகளை கொண்டு வரும் நாடுகளுக்கு பிரித்தானியா முழுமையாக ஆதரித்துள்ளது. முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய உட்பட கருணா அம்மான் ஆகியோருக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை முற்றிலும் ஒருதலைபட்சமானது. இந்த தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னர் இவர்களின் நிலைப்பாட்டை பிரித்தானியா கோரியதா, தன்னிச்சையான முறையில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்க வேண்டும். எதிர்வரும் செப்டெம்பர் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை மையப்படுத்திய வகையில் புதிய பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் உள்ளடக்கம் இலங்கைக்கு எதிரானதாகவே அமையும். நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இலங்கைக்கு எதிரான செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன. சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை கொண்டு செல்லும் செயற்பாடுகள் மறைமுகமாகவே முன்னெடுக்கப்படுகிறது. இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/210150
-
இலங்கை - சீன நட்புறவு என்றும் தொடரும்; சீனத் தூதுவர் கீ சென்ஹொங்
Published By: VISHNU 25 MAR, 2025 | 06:26 PM இலங்கை - சீன நட்புறவு சங்கத்தின் ஊடாக இரண்டு நாடுகளும் பரஸ்பரம் அக்கறை செலுத்தும் துறைகளை வலுப்படுத்துவது அவசியமாகும். இலங்கையும் சீனாவும் தங்கள் கடினமான காலங்களில் மிகவும் நட்புடன் இணைந்து பணியாற்றியுள்ளன. இந்த நட்பு என்றும் தொடரும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சீன நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் அண்மையில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே இத்தெரிவு இடம்பெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் அவர்களும் இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், இலங்கை - சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர தெரிவுசெய்யப்பட்டார். இங்கு உரையாற்றிய சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணப்படும் இரு தரப்பு கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளை நினைவு கூர்ந்தார். இந்த உறவுகளை மேம்படுத்துவதற்குப் பாராளுமன்ற நட்புறவு சங்கம் முக்கியமான தளமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இரு தரப்பினருக்கும் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்காக பொருளாதாரம், வர்த்தகம், கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக பணியாற்றுவதன் முக்கியத்தை வலியுறுத்திய சபாநாயகர், நட்புறவு சங்கத்தில் புதிய பொறுப்புக்களைப் பெற்றுக்கொண்டவர்கள் இதற்காகப் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் , நட்புறவு சங்கத்தின் ஊடாக இரண்டு நாடுகளும் பரஸ்பரம் அக்கறை செலுத்தும் துறைகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், இலங்கையும் சீனாவும் தங்கள் கடினமான காலங்களில் மிகவும் நட்புடன் இணைந்து பணியாற்றியுள்ளன என்பதை நினைவு கூர்ந்த அவர், சீன - இலங்கை நட்புறவு சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கை – சீன நட்புறவு சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில், நீண்ட காலமாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நட்புறவைப் பாராட்டினார். குறிப்பாக கல்வி மற்றும் வணிகக் கைத்தொழில் போன்ற துறைகளில் சீனாவிடம் காணப்படும் திறன் மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை பலப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு சகல உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்தார். கடந்த இலங்கை - சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினால் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வுகள் மற்றும் திட்டங்களை இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்ந்தும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் முன்வைத்தார். இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்தப் பாராளுமன்ற நட்புறவு சங்கம் செயற்படும் என அதன் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்தார். https://www.virakesari.lk/article/210190
-
காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை
25 MAR, 2025 | 06:33 PM (எம்.நியூட்டன்) காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்துவதற்கு முறையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் குழுவின் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் முதலானோரின் பங்கேற்புடன் இன்று செவ்வாய்க்கிழமை (25) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. காங்கேசன் துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை விடுவிப்பதற்கு பொருத்தமான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியால் கோரப்பட்டுள்ளது. இதற்கு அமைய ஜனாதிபதி மாளிகைக்கான காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கையை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகிறது. எனவே, காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முறையான அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கு பொருத்தமான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழ். அரசாங்க அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/210186
-
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் - நடிகர் மனோஜ் மாரடைப்பால் மரணம்
இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம் Published By: VISHNU 25 MAR, 2025 | 08:46 PM இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இன்று செவ்வாயக்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 48, மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வைத்தியரின் ஆலோசனையின் படி ஓய்வெடுத்து வந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானதாகத் தகவல் தெரிவிக்கின்றனர். அவருக்கு சமீபத்தில் தான் இதய அறுவை சிகிச்சை நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/210193
-
ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் - வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
Published By: RAJEEBAN 24 MAR, 2025 | 01:15 PM ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார். உலகம் பார்க்கக்கூடிய விதத்தில் ஈரான் தனது திட்டத்தை கைவிடவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அணுவாயுதங்களை உருவாக்கவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து ஈரான் விலகுவதற்கான தருணம் இது, அவர்கள் அணு ஆயுத திட்டங்களை தொடர்வதற்கு அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய எந்த தாக்குதலிற்கும் ஈரானே காரணம் என கருதப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஈரானின் அணுவாயுத திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள வோல்ட்ஸ் டிரம்பின் கருத்துக்களை எதிரொலித்துள்ளதுடன் ஈரான் கைவிடவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார். ஈரானின் அணுவாயுத திட்டத்தினை அமெரிக்கா முற்றா செயல் இழக்க செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். ஈரான் தனது இரகசிய ஆதரவு குழுக்கள் மூலம் ஏற்படுத்துகின்ற உயிரிழப்புகளையும் அழிவுகளையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் ஈரானிடம் அணுவாயுதங்கள் இருந்தால், மத்திய கிழக்கு முழுவதும் அணுவாயுத மோதலில் சிக்குப்படும், இது எங்களின் தேசிய பாதுகாப்பினை பொறுத்தவரை முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/210052
-
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர்; பிரிட்டனின் தடை குறித்து அலி சப்ரி Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 11:06 AM பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர் என்பதை பிரிட்டனின் தடை அறிவிப்புகள் வெளிப்படுத்துவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார் பிரிட்டன் இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கருணா அம்மானிற்கு எதிராக விதித்துள்ள தடைகள் குறித்த தனது சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஐக்கிய இராச்சியம் எங்கள் யுத்த வெற்றி வீரர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. இந்த விடயங்கள் எவையும் வெற்றிடத்தில் நிகழவில்லை. பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர். எங்களின் அரசியல்வாதிகள் சுயவிருப்பத்துடனோ அல்லது அறியாமையினாலோ அல்லது திட்டமிட்டோ அவர்களின் கரங்களில் சிக்கிக்கொள்வது வருந்தத்தக்க விடயம். உலகின் மிகக்கொடுரமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றை தோற்கடித்து, பல தசாப்தங்களாக இரத்தக்களறியை எதிர்கொண்ட எமது தேசத்திற்கு அமைதியையும் ஸ்திரதன்மையையும், கொண்டுவருவதற்கு பொறுப்பானவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் அரசியல் நோக்கத்திற்காக இலாபத்திற்காக ஆபத்தான முறையில் சமரசம் செய்துவருகின்றோம் என்பது எனக்கு உண்மையிலேயே கவலையளிக்கின்றது. ஐக்கியம் சுதந்திரத்திற்காக செய்யப்பட்ட தியாகங்களை மறந்தால் அது எவ்வளவு தூரம் நன்றிகெட்ட தேசமாக இருக்கமுடியும்? இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாகவே விளங்கவேண்டும், இதில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை. எங்கள் நாட்டின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டை பேணுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானதாகயிருக்கவேண்டும். அனைத்து இலங்கையர்களும் இனமதமொழி பேதமின்றி கௌவரம் சமத்துவத்துடன் பரஸ்பர கௌரவத்துடன் வாழும் நாட்டை கட்டியெழுப்பும் அதேவேளை வெளிப்படையான அல்லது நயவஞ்சகமான அனைத்து வகையான பிரிவினை வாதத்தையும் எதிர்ப்பதற்கான எங்களின் கூட்டு தீர்மானத்தை நாங்கள் வலுப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210126
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
'என் மகனிடம் தோனி சொன்னது இதுதான்' - சிஎஸ்கே அணியை மிரட்டிய விக்னேஷ் புத்தூரின் தந்தை நெகிழ்ச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டிக்குப் பின்னர் விக்னேஷுடன் பேசிய தோனி கட்டுரை தகவல் எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை பதவி, பிபிசி தமிழ் 24 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர் "தோனி எனது மகனைப் பாராட்டியதைப் பார்த்துவிட்டு எனக்கு தூக்கம் வரவில்லை" என்று கூறுகிறார், மும்பை இந்தியன்ஸ் வீரர் விக்னேஷ் புத்தூரின் தந்தை சுனில் குமார். ஆட்டோ ஓட்டுநரின் மகனான விக்னேஷ் புத்தூர் மும்பை அணியின் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கி பலரின் பார்வையை ஈர்த்தார். சென்னை - மும்பை என இரு பெரும் சாம்பியன் அணிகள் மோதும் போட்டிகள் பொதுவாக "எல்கிளாசிகோ" அதாவது பெரும் எதிர்பார்ப்புக்குரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் இருதரப்பிலும் ஜாம்பவான் வீரர்கள் பலர் இருந்த நிலையில், இவர்கள் அனைவருக்கும் மத்தியிலும் 24 வயது இளைஞர் விக்னேஷ் தனது அழுத்தமான தடத்தை பதிவு செய்துள்ளார். பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 53 ரன்களை அடித்திருந்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விக்னேஷின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மெதுவாக வந்த பந்தை ஸ்ரெயிட் டிரைவ் ஆட முயல, பந்து பேட்டின் முனையில் பட்டதால் கேட்சாக மாறியது. அடுத்து ஷிவம் துபே, இதே போன்று ஃபுல்டாஸ் ஆக வந்த பந்தை சிக்ஸ் ஆக மாற்ற முயன்று ஆட்டமிழந்தார். இதிலிருந்து மீள்வதற்குள் தீபக் ஹூடாவின் விக்கெட்டையும் விக்னேஷ் வீழ்த்தியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மந்திரப் பந்து வீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் விக்னேஷ் 'தோனி பாராட்டியதைப் பார்த்து தூக்கம் வரவில்லை' பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,தந்தை சுனில் குமார் மற்றும் தாயார் பிந்துவுடன் விக்னேஷ் நேற்றைய போட்டியில் மும்பை அணி தோற்ற போதிலும், அறிமுக போட்டியிலேயே 4 ஓவர்களில் 32 ரன்களை வழங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியில் வளரும் நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் விக்னேஷ் புத்தூர். விக்னேஷின் இந்த ஆட்டம் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பிபிசி தமிழிடம் பேசிய அவரது தந்தை சுனில் குமார், போட்டிக்குப் பின்னர் தனது மகனை தோனி பாராட்டுவதைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் தனக்கு தூக்கம் வரவில்லை என்று கூறினார். "தோனி சார் எனது மகனை வெகுவாக பாராட்டினார். பெற்றோருக்கு வாழ்த்துக்களை கூறுமாறு தோனி எனது மகனிடம் கூறினார். இரவு 12 மணியளவில் போட்டி முடிவடைந்ததும், எனது மகன் எனக்கு போன் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்" என்கிறார் சுனில். தோனி தன்னைப் பாராட்டிய புகைப்படத்தை தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் பதிவிட்டுள்ளார். கேரளாவில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் சுனில் குமார், நேற்றும் வழக்கம் போல தனது ஆட்டோவை ஓட்டச் சென்றுவிட்டார். மாலை 5 மணியளவில் உறவினருக்கு போன் செய்த விக்னேஷ், இன்று தான் விளையாட வாய்ப்பிருக்கலாம் என கூறியிருக்கிறார். "உறுதியாகத் தெரியாவிட்டாலும், தன்னை நன்கு பயிற்சி எடுக்கச் சொன்னதால் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது" என விக்னேஷ் கூறியிருக்கிறார். இதனால், ஆட்டோ ஓட்டும் பணியை முன்னமே முடித்துக் கொண்டு டிவி முன் அமர்ந்திருந்ததாக சுனில் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விக்னேஷின் வருகையால் சைனா மேன் வகை பந்து வீச்சில் மேலும் ஒருவர் 'மேலும் ஒரு சைனா மேன் பவுலர்' 10 வயதில் வீதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியிருக்கிறார் விக்னேஷ் அவரிடம் தனித்தன்மை இருப்பதைப் பார்த்து விட்டு, மலப்புரத்தில் அகாடமி நடத்தி வரும் விஜய்குமார் பயிற்சிக்கு சேர்த்துக் கொண்டுள்ளார். விக்னேஷ்-க்கு இளம் வயதில் பயிற்சி அளித்த விஜய்குமார் பிபிசி தமிழிடம் பேசிய போது,"நேற்று மாலை வரை இந்தியாவுக்கு சர்வதேச தரத்திலான ஒரே ஒரு சைனா மேன் பவுலராக குல்தீப் யாதவ் மட்டுமே இருந்தார். ஆனால் நேற்று ஐபிஎல் போட்டிக்குப் பிறகு விக்னேஷும் அந்த பட்டியலில் இணைந்து கொண்டார்" எனக் கூறினார் "கனவு போட்டியான இதில் பிரமாண்டத்தை நினைத்து அச்சப்படாமல் விக்னேஷ் செயல்பட்டார். ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பேட்டர்கள் இருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விக்னேஷ், துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தார்." என கூறும் விஜய்குமார், சைனா மேன் ஸ்டைல் பந்து வீச்சை துல்லியமாக வீசுவதுதான் விக்னேஷின் சிறப்பு எனக் கூறுகிறார். 10 வயதில் தம்மிடம் பயிற்சிக்காக வந்தபோது, மிதவேகம், ரைட் ஆர்ம் ஸ்பின் என பல பந்து வீச்சுக்களை முயற்சி செய்து பார்த்து விக்னேஷுக்கான தேர்வை இறுதி செய்ததாகக் கூறும் விஜய்குமார், ''தொடக்கத்தில் விக்கெட் கீப்பராகவும் அவருக்கு பயிற்சி அளித்தோம்'' என்று கூறினார். உறுதுணையாக இருந்த பயிற்சி அரங்கங்கள் Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற பின்னர் கேரள கிரிக்கெட் அகாடமியின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மாநில அணிக்காக அண்டர் 14, அண்டர் 19, அண்டர் 23 பிரிவுகளில் விளையாடியிருக்கிறார் விக்னேஷ். மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவரான விக்னேஷ், யாரிடமும் பேச மாட்டார் எனக் கூறும் விஜய்குமார், ஆனால் சிறந்த கிரிக்கெட் திறமை அவரிடம் இருப்பதாகக் கூறுகிறார். "விக்னேஷ் பயிற்சியைத் தொடங்கிய 2010, 2011 கால கட்டத்திற்கு முன்பு வரை கேரளாவில் கிரிக்கெட் பயிற்சிக்கான உள்ளரங்கங்கள் ஏதும் இல்லை. பின்னர் கேரள கிரிக்கெட் அகாடமியின் மூலம் மாவட்டம் தோறும் கிரிக்கெட் பயிற்சிக்கான உள்ளரங்கங்கள் உருவாக்கப்பட்டன. கேரளாவைப் பொறுத்தவரையிலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை இடைவிடாத மழை பெய்யும். இதனால் விளையாட்டு வீரர்களை பயிற்சியை கைவிட வேண்டியது வரும். இந்த இடைவெளிக்குப் பின்னர் பேட்டர்கள் தங்கள் ஃபுட் மூவ்மெண்ட்டை சரி செய்வதற்கும், பவுலர்கள் சரியான ஆக்ஷன் வேகம் மற்றும் துல்லியத்தைப் பெறுவதற்கும் திணறுவார்கள், உள்ளரங்கங்கள் கிடைத்த பின்பு இந்த பிரச்னை தீர்ந்தது. குறிப்பாக விக்னேஷின் வசிப்பிடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கிரிக்கெட் உள்ளரங்கம் கிடைத்தது" என பயிற்சியாளர் விஜய்குமார் நினைவு கூர்கிறார். சைனா மேன் பவுலிங் என்றால் என்ன? பட மூலாதாரம்,VIGNESH PUTHUR / INSTAGRAM படக்குறிப்பு, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் முடித்திருக்கிறார் விக்னேஷ் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தனது மணிக்கட்டை சுழற்றி பந்து வீசுவது சைனாமேன் பந்து வீச்சு என அழைக்கப்படுகிறது. பந்தின் சுழற்சிக்கு இடக்கையின் மணிக்கட்டில் கொடுக்கப்படும் மாறுபாடே காரணமாகிறது. 1920களில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட சைனாமேன் பவுலிங் எனப்படும் இந்த வார்த்தை ராய் கில்னர் என்ற பந்து வீச்சாளரை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் குல்தீப் யாதவ் மிக அரிதான சைனா மேன் பவுலராக அறியப்படுகிறார். தற்போது விக்னேஷ் புத்தூரையும் சைனாமேன் பவுலராக பலரும் ஒப்பிடத் தொடங்கியுள்ளனர். விளையாட்டு , கல்வி என அனைத்திலும் ஒரே பாதையில் பயணிக்கும் தனது மகன், முதுகலை ஆங்கில இலக்கிய படிப்பை முடித்திருப்பதாக சுனில் கூறுகிறார் இளங்கலை பட்டத்தில் நல்ல மதிப்பெண்களுடன் தனது மகன் தேர்ச்சியடைந்ததாக குறிப்பிடுகிறார் சுனில். -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8j0ddx30g1o
-
'மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன்' - உமாகுமரன்
Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 10:47 AM இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை நான் வரவேற்கின்றேன். யுத்தத்தின் இறுதி தருணங்களில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்களும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நீண்டகாலமாக வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். மோதலின் வடுக்களும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமையும் என்றும் நினைவிலிருந்து அழியாது. தமிழ் சமூகத்திற்குள் இது குறித்த வலி எவ்வளவு ஆழமானதாக காணப்படுகின்றது என்பது எனக்கு தெரியும், அவர்களில் பலர் 15 வருடங்களாக நீதிக்கான பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். மனித உரிமை மீறல்களிற்கு எதிரான தடை முக்கியமான முதலாவது நடவடிக்கையாகும். மிக நீண்டகாலமாக குற்றவாளிகள் தண்டனையின் பிடியிலிருந்து தப்பியுள்ளனர் . மனித உரிமை மீறல்களிற்கு காரணமானவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை என பல காலமாக தொழில்கட்சி உறுதியளித்து வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்தது போன்று மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன். உயிர்பிழைத்தவர்கள், விடைகளை இன்னமும் தேடும் குடும்பத்தவர்கள், இந்த குற்றங்களின் நிழலில் வளரும் அடுத்த தலைமுறையினருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், நீதி பொறுப்புக்கூறலிற்கு வேண்டுகோள் விடுப்பதற்கு எனது குரலை பயன்படுத்துவதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன். https://www.virakesari.lk/article/210123
-
ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை சுமந்திரனிடம் பிரித்தானிய பிரதிநிதி பென் மெல்லர் தெரிவிப்பு
24 MAR, 2025 | 08:02 PM ஆர்.ராம்- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 59ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை மையப்படுத்திய புதிய பிரேரணையொன்று பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லர் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன், அவர், வடக்கு,கிழக்கில் உள்ள நிலைமைகள் மற்றும் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்ததோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கீழ் செயற்படும் சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையின் கால நீடிப்பு தொடர்பிலும் பரஸ்பர கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லருக்கும், எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது, முதலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் போரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானத்தை பிரதான அனுசரணையாளர் என்ற வகையில் பிரித்தானியா தலைமைதாங்கிக் கொண்டுவரவுள்ள விடயத்தினை பென் மெல்லர் பகிர்ந்துள்ளார். அத்துடன், குறித்த பிரேரணைக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அதிகமான கவனம் செலுத்தப்பட்டுள்ளபோதும் அதற்கான சதகமான நிலைமைகள் குறைந்தே காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இலங்கையில் 'நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை' நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் புதிய பிரேரணையை கொண்டுவருவதில் பிரித்தானியா கொண்டிருக்கின்ற அர்ப்பணிப்பை வரவேற்ற சுமுந்திரன் அதற்கான அவசியத்தையும், சர்வதேச தளத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டையும் பகிர்ந்து கொண்டார். விடேசமாக தற்போதைய அரசாங்கம் கடந்தகால தவறுகளை சரிசெய்து முறைமை மாற்றத்தினையே மையப்படுத்தி ஆட்சியில் அமர்ந்தது. இவ்வாறான நிலையில் அந்த அரசாத்தினாலேயே அதற்கான இலக்குகளை முன்னகர்த்த முடியும் என்றும் குறிப்பிட்டார். அதனையடுத்து, மெல்லர் வடக்கு,கிழக்கு மக்களின் நிலைமைகள் தொடர்பில் கேட்டதோடு, அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் சுமந்திரனிடத்தில் வினவியிருந்தார். இதற்குப்பதிலளித்திருந்த சுமந்திரன், வடக்கு,கிழக்கு மக்கள் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதோடு அதிகாரங்கள் பகிரப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான நிரந்திரமான தீர்வொன்று இனப்பிரச்சிக்காக முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். அதற்காகவே அவர்கள் தொடர்ச்சியாக ஆணை வழங்கி வருகின்றார்கள் என்று குறிப்பிட்டார். அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் வடக்கு,கிழக்கு மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக மாற்றங்களை எதிர்பார்த்த மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தபோதும் அவற்றை இன்னமும் பூர்த்தி செய்யாத நிலைமை தான் நீடிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார். அத்தோடு, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் செய்யப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த நிலைப்பாடாக இருக்கின்ற நிலையில், சாட்சியங்களை திரட்டும் பொறிமுறையின் கால எல்லையையும் நீடிக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகவுள்ளதாகவும் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/210099
-
இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் - முன்னணி சோசலிச கட்சி
24 MAR, 2025 | 08:22 PM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு வர இருக்கும் இந்திய பிரதமரின் நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் ஐந்து ஒப்பந்தங்களில் கைச்சாத்திட இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அந்த ஒப்பந்தங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என முன்னணி சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார். பதுளை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற மக்கள் சக்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு வர இருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் இலங்கையில் அவரின் நிகழ்ச்சித்திட்டம் என்ன என அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் இந்திய ஊடகங்கள் அதுதொடர்பில் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட இருப்பதாக இந்திய ஊடகங்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருக்கின்றன. வெளிநாடுகளுடன் புரிந்துணர் ஒப்பந்தங்கள் தொடர்பில் கைச்சாத்திடும்போது அது தொடர்பில் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அங்கு இந்திய அரசாங்கத்துடன் சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருந்தார். ஆனால் அந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் முன்கூட்டி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்திய ஊடகங்கள் அதனை வெளியிட்டிருந்தன. அதேபோன்று தற்போது இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்து என்ன செய்யப்போகிறார் என அரசாங்கம் இதுவரை வெளியிடாத நிலையில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கம் நினைத்த பிரகாரம் செயற்பட முடியாது. அதற்கு அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதனால் இந்திய பிரதமருடன் அரசாங்கம் கைச்சாத்திட இருக்கும் 5புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ன என்பதை உடனடியாக வெளியிட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/210083
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
டெல்லி அசாத்திய வெற்றி: சிக்ஸர், பவுண்டரிகளால் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிய 'தனி ஒருவன்' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லி - லக்னௌ போட்டி ஐபிஎல் ஆட்டம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று 4வது ஆட்டத்திலேயே ரசிகர்களுக்கு உணர்த்திவிட்டது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 4வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. கடைசி ஓவர் வரை எந்த அணி வெல்லும் என்று யாராலும் கணிக்க முடியாத ஆட்டமாக இருந்தது. டெல்லி அணி வீரர் அசுதோஷ் ஷர்மா என்ற ஒற்றை பேட்டர்தான் சாத்தியமில்லாத வெற்றியை சாத்தியமாக்கினார். கடைசி ஓவரை அசுதோஷ் சந்திக்கும் வரை டெல்லி அணி பக்கம் வெற்றி இல்லை என்ற நிலைதான் இருந்தது. கடைசி ஓவரில் ஒரு பந்தை சந்தித்தவுடனே அசுதோஷ் வெற்றியை உறுதி செய்தார். லக்னௌ அதிரடி டெல்லி அணியின் பந்துவீச்சை தொடக்கத்தில் மிட்ஷெல் மார்ஷ், நிகோலஸ் பூரன் இருவரும் சேர்ந்து வெளுத்து வாங்கினர் 4.5 ஓவர்களில் 50 ரன்களும், பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்களும் என லக்னெள வலுவாக இருந்தது. மார்ஷ் 19 பந்துகளிலும், பூரன் 24 பந்துகளிலும் அரைசதத்தைக் கடந்தனர். இவர்கள் அணியின் ஸ்கோரை 250 ரன்களுக்கு உயர்த்துவார்கள் என கணிக்கப்பட்டது. ஆனால் மார்ஷ் 36 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்த நிலையில் முகேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், பூரன் 30 பந்துகளில் 75 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் க்ளீன் போல்டான பின் ஆட்டம் தலைகீழாக மாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES 13-வது ஓவரில் லக்னெள அணி 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது, அடுத்த 7 ஓவர்களில் லக்னெள அணி எப்படியும் குறைந்தபட்சம் 70 ரன்கள் சேர்த்து 246 ரன்கள் ஸ்கோர் செல்லும் என கணிக்கப்பட்டது. ஆனால், குல்தீப் யாதவ், மிட்ஷெல் ஸ்டார்க் இருவரும் சேர்ந்து லக்னெள பேட்டிங் வரிசையை சீர்குலைத்தனர். கேப்டன் ரிஷப் பந்த் டக்அவுட்டில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். குல்தீப் வீசிய 17வது ஓவரில் பதோனை சிக்ஸருக்கு முயன்று விக்கெட்டை இழந்தார், அதே ஓவரில் ஷர்துல் தாக்கூர் ரன்அவுட்டாகி வெளியேறினர். ஸ்டார்க் தனது கடைசி ஓவரில் ஷாபாஸ் அகமது, ரவி பிஸ்னோய் விக்கெட்டுகளை வீழ்த்தவே லக்னெள அணி 194 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 162 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என வலுவாக இருந்த லக்னெள அடுத்த 32 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி ஓவரில் டேவிட் மில்லர் 2 சிக்ஸர்களை விளாசி ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தினார். மில்லருக்கு ஒத்துழைத்து எந்த பார்ட்னர்ஷிப்பும் அமையவில்லை. 20 ஓவர் முடிவில் லக்னெள அணி 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்தது. டிரம்பின் வரி விதிப்பு இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டுவருமா?24 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்?24 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கடினமான இலக்கைத் துரத்திய டெல்லி அணி முதல் ஓவரிலேயே மெக்ருக்(1), போரெல்(0), ரிஸ்வி(4) என 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 13-வது ஓவரின் போது டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் என ஏறக்குறைய தோல்வியின் பிடியில் இருந்தது. டெல்லி அணி வெற்றிக்கு கடைசி 7 ஓவர்களில் 94 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி வெற்றி பெற 1.74 சதவீதமும், லக்னெள அணி வெல்ல 98.44 சதவீதமும் வாய்ப்பு இருப்பதாக கணினியின் கணிப்பு கூறியது. ஆனால், அனைத்துக் கணிப்புகளையும் தகர்த்து அசுதோஷ் ஷர்மா அறிமுக வீரராக வந்த விப்ராஜ் நிகம் ஆகியோர் போட்டியை வேறு திசையில் பயணிக்க வைத்தனர். 5வது விக்கெட்டை டெல்லி அணி இழந்த போது அந்த அணி வெற்றி பெற 145 ரன்கள் தேவைப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES திருப்பம் தந்த அசுதோஷ் ஷர்மா டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், அசுதோஷ் ஷர்மா ஆகிய இருவரும் களத்தில் இருந்த வரை டெல்லி அணி சற்று நம்பிக்கையுடன் இருந்தது. இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசினர். ஆனால் ஸ்டெப்ஸ் 34 ரன்னில் சித்தார்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பின் நம்பிக்கை குறையத் தொடங்கியது. ஆனால், அதன் பிறகுதான் ஆட்டத்தின் முடிவையே மாற்றிய அந்த ஜோடி அமைந்தது அறிமுக வீரர் விப்ராஜ் நிகம் வந்து, அசுதோஷுடன் சேர்ந்தார். பிஸ்னாய் வீசிய 14வது ஓவரை விப்ராஜ் விளாசினார். அந்த ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்கள் குவித்த விப்ராஜ், ஷாபாஸ் அகமது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் என 15 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் டெல்லி அணிக்கு நெருக்கடியைக் குறைத்து அவர் நம்பிக்கை அளித்தார். 15 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் என இருந்தது. கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 62 ரன்கள் தேவைப்பட்டன. பிரின்ஸ் வீசிய 16-வது ஓவரில் அசுதோஷ் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரி என 20 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தை பரபரப்பாக்கினார். திக்வேஷ் ரதி வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் விப்ராஜ் 39 ரன்னில் ஆட்டமிழக்க டெல்லி அணி மீண்டும் சிக்கலில் மாட்டியது. அடுத்து வந்த மிட்ஷெல் ஸ்டார்க் பெரிய ஷாட்டுக்கு முற்பட்டு பிஸ்னாய் ஓவரில் ஆட்டிமிழந்தார். பிஸ்னாய் வீசிய 18-வது ஓவரிலேயே 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியை அசுதோஷ் விளாசினார். தமிழ்நாட்டை சேர்ந்த அமெரிக்க தொழிலதிபரும், அவரது மனைவியும் பரஸ்பர குற்றச்சாட்டு - என்ன பிரச்னை?24 மார்ச் 2025 நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு: உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது?24 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES திக் திக் ஓவர்கள் இதனால் கடைசி 2 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டன. டெல்லி வசம் கடைசி 2 விக்கெட்டுகள்தான் இருந்தன. பிரின்ஸ் வீசிய 19-வது ஓவரில் பவுண்டரி அடித்த குல்தீப், அடுத்த பந்தில் ரன்அவுட்டானார். 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மோகித் சர்மா, அசுதோஷுடன் சேர்ந்தார். 4-வது பந்தில் 2 ரன்கள் சேர்த்து 28 பந்துகளில் அசுதோஷ் அரைசதத்தை நிறைவுசெய்தார். 5வது பந்தில் சிக்ஸரும், கடைசிப் பந்தில் பவுண்டரியும் அசுதோஷ் விளாச ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன. ஷாபாஸ் அகமது வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தை தவறவிட்ட மோகித் சர்மா அடுத்து பந்தில் ஒரு ரன் எடுத்தார். ஸ்லாட்டில் வீசப்பட்ட 3வது பந்தை சந்தித்த அசுதோஷ் தூக்கி அடித்து சிக்ஸருக்கு அனுப்பவே டெல்லி அணி ஆர்ப்பரிப்பான வெற்றியைப் பெற்றது. ஒரு கட்டத்தில் 19 பந்துகளில் 19 ரன் எடுத்திருந்த அசுதோஷ் ஆட்டத்தை முடிக்கும் போது 31 பந்துகளில் 66 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அசுதோஷ் சர்மா தான் சந்தித்த கடைசி 11 பந்துகளில் மட்டும் 46 ரன்கள் சேர்த்தார். அசுதோஷ் 31 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரி என 66 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது வென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES அசுதோஷ் ஷர்மா என்ன பேசினார்? ஆட்ட நாயகன் விருது வென்ற டெல்லி வீரர் அசுதோஷ் ஷர்மா கூறுகையில் "பல போட்டிகளை என்னால் ஃபினிஷ் செய்ய முடியாமல் போனதால், ஃபினிஷ் எப்படி செய்வது என கடந்த ஆண்டிலிருந்துதான் நான் ஃபினிஷிங்கை கற்றுக்கொண்டேன். என் கவனத்தை ஃபினிஷிங்கில் செலுத்தினேன், உள்நாட்டுப் போட்டிகளிலும் இதில்தான் கவனம் செலுத்தினேன். என் மீது அளவு கடந்த நம்பிக்கையை நான் வைத்திருக்கிறேன், கடைசி ஓவர், கடைசிப் பந்து வரை நான் களத்தில் இருந்தால் ஏதாவது செய்ய முடியும் என்று நம்புகிறேன். அமைதியாக இருக்க வேண்டும், நம்ப வேண்டும், பயிற்சி எடுத்த ஷாட்கள் குறித்து சிந்தித்து அதை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். இதைத்தான் இன்று நான் செய்தேன். விப்ராஜ் சிறப்பாக ஆடினார், நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பந்து மட்டும் உனக்கு செட்ஆகிவிட்டால் உன்னால் பெரியஷாட்களுக்கு செல்ல முடியும் என்றேன். அமைதியாக இருந்தேன், அதிகமான அழுத்தத்தை நான் எனக்குக் கொடுக்கவில்லை. இந்த ஆட்டநாயன் விருதை என்னுடைய வழிகாட்டி ஷிகர் தவாணுக்கு அர்ப்பணிக்கிறேன்" எனத் தெரிவித்தார். ஔரங்கசீப்பை 'பொருத்தமற்றவர்' என கூறும் ஆர்எஸ்எஸ் அவரது சகோதரர் தாரா ஷிகோவை முன்னிலைப்படுத்துவது ஏன்?2 மணி நேரங்களுக்கு முன்னர் யானை - மனித மோதலைத் தடுக்கும் தேனீக்கள் - எப்படி தெரியுமா?24 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES பஞ்சாபிலும் பட்டைய கிளப்பிய அசுதோஷ் கடந்த 2024-ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணியில் இருந்த அசுதோஷ் ஷர்மா, பல சாத்தியமற்ற வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். குறிப்பாக மும்பை அணிக்கு எதிராகவும், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகவும் அசுதோஷ் அற்புதமாக ஆடி பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இந்த ஆட்டத்தில் டெல்லி அணி இம்பாக்ட் வீரராகவே அசுதோஷை களமிறக்கியது, ஆட்டத்தின் போக்கை மெல்ல உணர்ந்து ,அதற்கு ஏற்றார்போல் சென்று, ஆட்டத்தை தனது அணி பக்கம் திருப்பினார் அசுதோஷ். லக்னெள அணி செய்த தவறுகள் லக்னெள அணிக்கு மிட்ஷெல் மார்ஷ்(72), நிகோலஸ் பூரன்(75) ஆகியோர் சேர்த்த ரன்கள்தான் பெரும்பகுதியாகும். லக்னெள அணியின் 22.97 சதவீத ரன்கள் கடைசி 7 ஓவர்களில் சேர்க்கப்பட்டவை. லக்னெள அணி 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் என இருந்தபின் அடுத்த 7 ஓவர்களில் 48 ரன்கள் மட்டுமே சேர்த்தது. நடுவரிசை பேட்டர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்தனர். கடைசியில் டேவிட் மில்லருக்கு ஒத்துழைத்து ஆட பார்ட்னர்ஷிப் இல்லை. சேஸிங்கில் அசுதோஷ் வெறித்தனமாக பேட் செய்தபோது, பிரின்ஸ் யாதவ் 16-வது ஓவரையும், 19-வது ஓவரையும் பந்துவீச ரிஷப் பந்த் எடுத்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒன்று. பிரின்ஸுக்கு ஓவர் வழங்குவதற்குப் பதிலாக ஷர்துல் தாக்கூருக்கு பந்துவீச வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். 'விக்னேஷ் புத்தூரிடம் தோனி சொன்னது இதுதான்' - தந்தை நெகிழ்ச்சி தோனி மின்னல் வேக ஸ்டம்பிங்: சென்னையை திணறடித்த மும்பையின் இளம் சுழல் 'மாயாவி' சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை, எவ்வாறு கழுவ வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES ஏனென்றால் ஷர்துல் தாக்கூர் தனது முதல் ஓவரிலேயே டெல்லி அணியின் பிரேசர், போரெல் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி ஃபார்மில் இருந்தார். அவருக்கு கடைசி வரை 2 ஓவர்கள் மட்டுமே ரிஷப் பந்த் வழங்கியிருந்தார். ஆல்ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் அணியில் இருந்தும் அவரை பயன்படுத்தவே இல்லை. கடந்த காலத்தில், இதுபோன்ற தருணங்களில் மார்ஷ் பல முறை சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். கேப்டன்சியில் சில நுணுக்கமான அம்சங்களில் ரிஷப் பந்த் தவறவிட்டது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதேபோல ஷாபாஸ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் மோகித் சர்மாவை ஸ்டெம்பிங் செய்யக் கிடைத்த வாய்ப்பையும் ரிஷப் பந்த் தவறவிட்டார். மாறாக மோகித் சர்மா கால் காப்பில் வாங்கியதற்காக அப்பீல் செய்து ரிஷப் பந்த் தவறு செய்தார். உச்சக்கட்ட பதற்றத்தில் ரிஷப் பந்த் இருந்த போதுதான் ஸ்டெம்பிங் வாய்ப்பை தவறவிட்டது நன்கு தெரிந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgr28gnlgpvo
-
தையிட்டி போராட்டம்; இனவாதிகளுக்கு அரசு அடிபணிந்து செயற்படுகிறது என்கிறார் சரத் வீரசேகர
தையிட்டி திஸ்ஸ விகாரையில் மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்தர்களின் மனங்களையும் பாதித்துள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸ விகாரையில் நேற்று முன்தினம் புதிதாக ஒரு விகாரைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது 29 பௌத்த பிக்குகள் பூஜை வழிபாட்டில் கலந்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு மதிய உணவு வழங்கலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகிய நிலையில் காலை 07 மணியளவில் நேற்று முன்தினம் திஸ்ஸ விகாரையின் முன்பாக தமிழ் மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அங்கு கூடியிருந்த இராணுவத்தினர் உடனடியாக விகாரையின் வளாகத்தில் இருந்து வெளியேறினர். தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் அவ்விடயத்தை விட்டு வெளியேறுமாறு இராணுவத்துக்கு கட்டளை பிறப்பித்தது யார்?, ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு மாத்திரமே அதிகாரம் உண்டு. சிங்கள பௌத்த நாட்டில் பௌத்த விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இனவாதிகளுக்கு அரசாங்கம் அடிபணிந்து செயற்படுகிறது. ஆகவே இதன் உண்மைத் தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார். https://thinakkural.lk/article/316413
-
பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை : பிரிட்டனின் தடைகள் குறித்து கனடாவின் நீதியமைச்சர்
Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 09:29 AM இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி, இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன். இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது. 2023 இல் கனடா மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளது. இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா தொடர்ந்து பாடுபடும். https://www.virakesari.lk/article/210109
-
கடையில் சொக்லேட் எடுத்ததாக தெரிவித்து சிறுமியை கம்பத்தில் கட்டி தாக்குதல்; யாழில் நடந்த கொடூரம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் கடை ஒன்றில் ‘கண்டோஸ்’ திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் சரமாரியாக தாக்கிய சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது; தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை அவரது தாயார் கடைக்கு சென்று அங்கு சில பொருட்களை கொள்வனவு செய்து வருமாறு அனுப்பியுள்ளார். இந்நிலையில் குறித்த சிறுமி கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார். மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்கு பெறுமதியான கண்டோஸ் ஒன்றினை எடுத்து உண்டுகொண்டிருந்த நிலையில், கடை உரிமையாளர் திருடப்பட்டதாக கருதி குறித்த 10 வயது சிறுமியை சிறுநீர் கழியும் வரை வயரால் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுமியின் கட்டை அவிழ்த்து விட்டுள்ளார்ர். இந்நிலையில் சிறுமி வேதனை மற்றும் அவமானம் தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த விடயமறிந்த பெற்றோர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/316415
-
இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம் 6 வாரங்களாக சுங்க பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது ; கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம்
24 MAR, 2025 | 08:19 PM (செ.சுபதர்ஷனி) களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம் கடந்த 6 வாரங்களாக சுங்க பிரிவில் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பில் திங்கட்கிழமை (24) அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள சுமார் 1500 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க சிரி ஸ்கேன் இயந்திரம் கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது. எனினும் தற்போது 6 வாரங்கள் கடந்துள்ள நிலையில் இவ்வியந்திரம் சுங்கப் பிரிவிலிருந்து விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. bகுறித்த இயந்திரத்தை விடுவிக்க ஒரு மில்லியன் ரூபா சுங்கப்பிரிவுக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு இயந்திரத்தை கொள்வனவுக்கான விலைமனுக் கோரல் தொடர்பான ஆவணங்கள் உரிய நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட போதும், பிற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. எவ்வாறெனினும் நீண்ட காலத்திற்குப் பின்னர் அவ்வியந்திரம் நாட்டை வந்தடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்த சிரி ஸ்கேன் இயந்திரம் செயலிழந்தது. இன்றுவரை அவசர பரிசோதனைக்காக நோயாளர்கள் அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், ஏனைய நோயாளர்கள் ஹோமாகம, களுபோவில, ஹொரன உள்ளிட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனால் நோயாளர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதுடன். தனியார் மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக பெருமளவான தொகையை செலவிட வேண்டியுள்ளது. அத்தோடு இது போன்ற உயர் தொழில்நுட்ப இயந்திரங்களை நீண்ட நாட்களுக்கு சுங்கப்பிரிவில் தடுத்து வைத்திருப்பதால் இயந்திரத்தின் பாகங்கள் சேதமடையக்கூடும். ஆகையால் இயந்திரத்தை உடனடியாக சுங்கப் பிரிவிலிருந்து விடுவித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/210086
-
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 24 மார்ச் 2025, 05:44 GMT சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 19 ஆம் தேதி பூமிக்கு திரும்பினார். அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது, விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். 'பிளான்ட் ஹேபிடட் -07' என்ற திட்டத்தின் கீழ், புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் அவர் 'ரோமெயின் லெட்யூஸ்' எனப்படும் ஒரு வகை கீரைச் செடியை வளர்த்தார். விண்வெளியில் தங்கும் வீரர்கள், தங்களுக்கான உணவை பூமியில் இருந்து எடுத்துச் செல்லும் போதிலும், விண்வெளியில் தாவரங்களை வளர்க்க ஏன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன? விண்வெளியில் தாவரங்கள் வளருமா? பட மூலாதாரம்,NASA விண்வெளியில் தாவரங்களை வளர்க்கும் ஆய்வு ஏன்? விண்வெளியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களில் விண்வெளி விவசாயமும் ஒன்று. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) விவசாயம் குறித்த பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விண்வெளி வீரர்களுக்காக, பூமியில் இருந்து வரும்போதே அவர்களுக்கு தேவையான உணவுகள் முன்கூட்டியே பதப்படுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தீர்ந்துவிடும். பிற கோள்கள் மற்றும் பூமியில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள விண்வெளிப் பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வாரங்கள், மாதங்கள் மற்றும் பல வருடங்கள் கூட ஆகலாம். அது போன்ற சூழலில்தான் இந்த விண்வெளி விவசாயம் கைகொடுக்கும். நாசாவின் கூற்றுப்படி, நீண்ட கால விண்வெளிப் பயணங்கள் மற்றும் பிற கோள்களில் மனிதர்கள் குடியேறுவதற்கு தேவையான தொழில்நுட்பங்களை வளர்ப்பதில் விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பது ஒரு நிலையான உணவு ஆதாரமாக இருக்கும். விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களில் ஆக்ஸிஜன் மற்றும் நீரை மறுசுழற்சி செய்வதற்காகவும் அங்கே தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு - சிபிஐ முடிவறிக்கை குறித்து ரியா சக்ரபர்த்தியின் வழக்கறிஞர் கூறுவது என்ன?23 மார்ச் 2025 கோவையில் இயங்காத என்டிசி மில்கள் - வேலை, ஊதியமின்றி பல ஆயிரம் தொழிலாளர்கள் தவிப்பு23 மார்ச் 2025 பட மூலாதாரம்,NASA தாவரங்கள் எவ்வாறு வளர்க்கப்படுகின்றன? ஒரு தாவரம் வளர, சூரிய ஒளி, நீர், ஆக்ஸிஜன், மண் ஆகியன தேவைப்படுகின்றன. அதை விட முக்கியமாக புவியீர்ப்பு விசை தேவைப்படும். இந்த புவியீர்ப்பு விசைதான் வேர்களை கீழ்நோக்கி வளரச் செய்கிறது. இது தாவரங்கள் மண்ணில் உறுதியாக நிற்க உதவுகிறது. நிலத்திற்கு அடியில் இருந்து உறிஞ்சப்படும் நீர் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் தாவரத்தின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில், தாவரங்கள் எவ்வாறு வளர்க்கப்படுகின்றன? நாசாவின் முயற்சிகள் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதில் முன்னோடியாக உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பல்வேறு பிரத்யேக ஆய்வுகளை நாசா செய்துள்ளது. அதன் மூலம், விண்வெளியில் பல்வேறு வகையான தாவரங்களை நாசா வெற்றிகரமாக வளர்த்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் முதல்படியாக, நாசா 2015 ஆம் ஆண்டு விண்வெளியில் எந்தெந்த மாதிரியான தாவரங்களை வளர்க்க முடியும் என்று சோதனை செய்ய தொடங்கியது. அமெரிக்காவின் ஃபேர்சைல்ட் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து 'கிரோயிங்க் பியாண்ட் எர்த்' என்ற திட்டத்தை நாசா தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், விண்வெளி நிலையத்தில் உள்ளதைப் போன்ற ஒரு சூழலில் வெவ்வேறு தாவரங்களின் விதைகளை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. புவி ஈர்ப்பு இல்லாத சூழலில் தோட்டங்களை அமைக்கவும் நாசா சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 'வெஜ்ஜி' என்று அழைக்கப்படும் காய்கறி உற்பத்தி அமைப்பு, விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் ஓர் அறையாகும். பூமியில் ஒரு தோட்டத்தைப் போலவே இங்கும் தாவரங்கள் விதையில் இருந்து தலையணை போன்ற ஒரு சிறிய அமைப்பில் வளர்க்கப்படுகின்றன. இந்த அமைப்பில் தாவரங்கள் வளர தேவையான மண் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கும். இதற்கு தேவையான தண்ணீர் மட்டும் பரமரிப்பாளர்களால் ஊற்றப்படும். இந்த அமைப்பின் மூலம் , கீரை, தக்காளி உள்ளிட்ட பல வகை பயிர்களை நாசா வெற்றிகரமாக வளர்த்துள்ளது. இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடுகள் - தடுப்பு நடவடிக்கை குறித்து கூட்டம் நடத்திய ஜனாதிபதி23 மார்ச் 2025 சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் போடும் குப்பைகள் என்ன ஆகும்?23 மார்ச் 2025 பட மூலாதாரம்,NASA வெஜ்ஜி திட்டத்துடன் இணைந்த எக்ஸ்-ரூட்ஸ் என்ற திட்டத்தின் மூலம் தாவரங்கள் வளர தேவையான மண் மற்றும் பிற காரணிகள் இல்லாமல் ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) அல்லது ஏரோபோனிக்ஸ் (Aeroponics) முறைப்படி விண்வெளியில் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஹைட்ரோபோனிக்ஸ் முறைப்படி, தாவரங்கள் மண்ணில் இல்லாமல், நீர் மற்றும் ஊட்டச்சத்து கரைசலில் வளர்க்கப்படுகின்றன. ஏரோபோனிக்ஸ் முறையில், தாவரங்களின் வேர்கள் காற்றில் தொங்கவிடப்பட்டு, நீர் மற்றும் ஊட்டச்சத்துகள் தெளிக்கப்படுகின்றன. மேம்பட்ட தாவர வாழ்விடம் எனப்படும் Advanced Plant Habitat என்ற மற்றொரு திட்டத்தின் மூலமாகவும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தாவரங்களை நாசா வளர்த்து வருகிறது. இந்த அமைப்பில், தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சூழல்களும் சென்சார் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. வெப்பநிலை, ஈரப்பதம், ஒளி, கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற தாவர வளர்ச்சிக்கு தேவையான உகந்த சூழல் இந்த அமைப்பில் உருவாக்கப்படுகிறது. LED விளக்குகள், நீர்ப்பாசன அமைப்பு போன்ற வசதிகள் கொண்ட இந்த அமைப்பில் குறைந்த அளவிலான பராமரிப்பே தேவைப்படும். விண்வெளி வீரர்கள் இதற்கென அதிக உழைப்பையும், நேரத்தையும் செலவிட வேண்டியதில்லை. இந்த அமைப்பின் மூலம் சிலி பெப்பர்ஸ் எனப்படும் குடை மிளகாயையும், முள்ளங்கியையும், சில பூக்களையும் நாசா விளைவித்துள்ளது. இந்தியாவின் பங்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) இந்த ஆண்டின் தொடக்கத்தில் PSLV-C60 POEM-4 என்ற ராக்கெட்டில் "CROPS" எனப்படும் Compact Research Module for Orbital Plant Studies எனப்படும் விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த சோதனைக்காக, தாவரங்கள் வளர உகந்த சூழலில் 8 காராமணி விதைகள் முளைப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன. நான்காவது நாளில், இந்த விதைகள் முளைப்பது காணப்பட்டது. ஐந்தாவது நாளில், முளைத்த விதைகளில் இரண்டு இலைகள் தெரிந்தது. இதுவே இஸ்ரோவின் வெற்றியாக கருதப்பட்டது. விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும், புதிய பயிர் வகைகளை உருவாக்குவதிலும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ESA) மற்றும் மற்ற நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும் முயற்சி செய்து வருவதாக இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநர் பாண்டியன் கூறுகிறார். '4-5 சாக்கு மூட்டைகளில் பணம்': டெல்லி ஐகோர்ட் நீதிபதி சர்ச்சை பற்றி உச்ச நீதிமன்றம் அறிக்கை23 மார்ச் 2025 அக்பரை பின்பற்றுமாறு ஔரங்கசீப்பை அறிவுறுத்திய சிவாஜி - ஒரு வரலாற்றுப் பார்வை23 மார்ச் 2025 பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு,இஸ்ரோவின் CROPS திட்டத்தில் விண்வெளியில் முளைத்த காராமணி பயிர்கள் பூமியை விட விண்வெளியில் தாவரங்கள் வேகமாக வளர்வது ஏன்? "விண்வெளி வீரர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க ஃபிரெஷ் உணவுகளை இதன் மூலம் வழங்க முடியும். விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய இந்த தாவரங்கள் உதவும். இவை குறைவான அளவே இருந்தாலும் இயற்கையான முறையில் இருப்பதால் அவர்களின் உடல்நலனுக்கு நன்மை மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கும்", என்கிறார் பாண்டியன். விண்வெளியில் தாவரங்களை விரைவாக விளைவிக்க முடியும் என்று தெரிவிக்கிறார் அவர். "உதாரணமாக பூமியில் பயிரிடும் போது, தாவரங்களுக்கு வைக்கப்படும் உரம் மழை போன்ற காரணிகளால் அடித்து செல்லப்படலாம் அல்லது தாவரங்கள் அதனை உறிஞ்ச நீண்ட நேரம் எடுக்கலாம். ஆனால் விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் திட்டங்களின் மூலம், தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நேரடியாக செலுத்தப்படுகின்றன. இதனால் தாவரங்கள் அவற்றை வேகமாக உறிஞ்சி இயல்பைவிட விரைவாகவே அவை வளர்கின்றன", என்று விளக்கினார் பாண்டியன். இந்த திட்டங்கள் மூலம் பூமியில் உள்ள விவசாய முறைகளை மேம்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். Spin-off technology முறையில் விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் புதுவித முயற்சிகளை பூமியில் செய்யப்படும் விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்தலாம் மற்றும் விளைச்சலை பெருக்கலாம் என்றும் பாண்டியன் கூறினார். Spin-off technology என்பது குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக வகுக்கப்பட்ட ஒரு திட்டம், பின்னர் மற்ற துறைகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பமாகும். உதாரணமாக நாசாவால் விண்வெளி வீரர்களின் இருக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட "மெமரி ஃபோம்" (Memory Foam) தொழில்நுட்பம், இன்று மெத்தைகள் மற்றும் தலையணை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. சுனிதா வில்லியம்ஸ்: 'விண்வெளியில் எப்போதும் பதற்றம், குறைவான தூக்கம்' - 12 ஆண்டுகளுக்கு முன் என்ன கூறினார்?20 மார்ச் 2025 சீன இளைஞர்கள் சொந்தக் கவலைகளை டீப்சீக் செயலியிடம் புலம்பித் தள்ளுவது ஏன்?21 மார்ச் 2025 பட மூலாதாரம்,NASA "எப்போதும் இயந்திரங்களைச் சுற்றியே இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு, ஆராய்ச்சி செய்வதைத் தவிர இந்த தாவரங்களை பராமரிப்பது மனதை அமைதிப்படுத்த உதவும். விண்வெளி வீரர்களின் பணிச் சுமை, மற்றும் தனிமை உணர்வை குறைத்து அவர்கள் மகிழ்ச்சியடைய இது ஒரு காரணியாக இருக்கும்" என்று உளவியல் ரீதியாகவும் விண்வெளி வீரர்களுக்கு இது பலன் தருவதாக கூறுகிறார் பாண்டியன். தற்போது வெறும் சோதனைக்காக சிறிய அளவிலே விண்வெளியில் தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. "இந்த திட்டங்கள் இன்னும் முழு வீச்சில் செயல்படுத்தப்படவில்லை. அவ்வாறு முழு வீச்சில் இது நடந்தால் விண்வெளிக்கு செல்லும் போது, அதிக அளவிலான உணவு பொருட்களை எடுத்துச் செல்வதை குறைக்க முடியும். மனிதர்கள் விண்வெளியிலும், மற்ற கோள்களிலும் வாழ்வதற்குத் தேவையான தொழில்நுட்பங்களை முழுமையாக சோதனை செய்து செயல்படுத்த முடியும்", என்று பாண்டியன் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0jg3zl6zx6o
-
கணித வினாத்தாள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட 80 வயது முதியவரான பரீட்சார்த்தி
24 MAR, 2025 | 07:10 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதும் 80 வயது முதியவர் ஒருவர், கணிதத் தேர்வுத் தாள் குறித்து அதிருப்தி தெரிவித்த பின்னர், கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்திக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த முதியவர், பொறியாளர்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கணிதப் பாடத்திற்கான வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறினார். முன்னர், கலை, வணிகம் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனித்தனி கணிதத் தேர்வுத் தாள்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், இப்போது அனைத்து மாணவர்களுக்கும் பொறியாளர்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வினாத்தாள்கள் வழங்கப்படுகின்றன. இது நியாயமற்றது மற்றும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். பொதுவான வினாத்தாளுக்குப் பதிலாக, பாடப் பிரிவுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கணித வினாத்தாள்களை வழங்கும் முறையை மீண்டும் தொடங்குமாறு அந்த முதியவர் வலியுறுத்தினார். மேலும், கல்விக் கட்டண முறையை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/210104
-
தனியார், அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து அறவிட வேண்டிய 36 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதியை பெற புதிய தொழில் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுப்பார் - மஹிந்த ஜயசிங்க
24 MAR, 2025 | 07:08 PM (எம்.ஆர்.எம்.வசீம்) தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து அறவிட வேண்டிய 36 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதி இருந்து வருகிறது. அதனை பெற்றுக்கொள்ள புதிய தொழில் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுப்பார் எனற் நம்பிக்கை இருக்கிறது என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். தொழில் திணைக்களத்தின் புதிய தொழில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள எச்.எம்.டி.என்.கே. வட்டலியத்த திங்கட்கிழமை (24) தொழில் அமைச்சில் கடமைகளை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர்அங்கு மேலும் குறிப்பிடுகையில், தொழில் அமைச்சின் கீழ் செயற்பட்டுவரும் தொழில் திணைக்களத்திற்கு பாரியதொரு பொறுப்பு இருந்து வருகிறது. வேலை செய்யும் மக்களுக்காக அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக புதிய தொழில் ஆணையாளர் உள்ளிட்ட பாரியாலய ஊழியர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என நான் எதிர்பார்க்கிறேன். ஆளும் அரசாங்கம் தொழிலாளர்களின் நலனோம்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக தொழில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் வேலைத்தலங்களில் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சிறுவர் தொழிலாளர்களை அகற்றுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு மேலதிகமாக 22ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து அறவிட வேண்டிய ஊழியர் சேமலாப நிதி பாரியதொரு தொகை இருக்கிறது. அது 36 பில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டிருக்கிறது. அந்த பணத்தை அறிவிட்டுக்கொள்ள தொழில் திணைக்களத்துக்கு பாரியதொரு பொறுப்பு இருக்கிறது. அரசாங்கம் என்றவகையில் இந்த பணத்தை பெற்றுக்கொள்ள பூரண ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்போம். புதிய தொழில் ஆணையாளர் நாயகம் இந்த அனைத்து பொறுப்புக்களையும் முன்னெடுப்பார் என நாங்கள் நம்புகிறோம். https://www.virakesari.lk/article/210105
-
தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களைத் திருடிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது!
யாழில் மின்கலங்களை திருடிய குற்றத்தில் கைதான கடற்படை முன்னாள் சிப்பாய் உட்பட ஐவருக்கும் விளக்கமறியல் 24 MAR, 2025 | 05:59 PM யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின்கலங்களை தொடர்ச்சியாக திருடிவந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் சிப்பாய் உட்பட ஐந்து பேரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கைத்தொலைபேசி தொலைத்தொடர்பு வலையமைப்புக்களின் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு பொருத்தப்பட்டிருந்த மின் கலங்கள் தொடர்ச்சியாக களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பாக கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குரிய பொலிஸ் நிலையங்களில் இந்த நிறுவனங்கள் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தன. முறைப்பாடுகளின் பிரகாரம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நளின் தர்சனா தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், மின்கலன்களை திருடியவர்கள் அம்பாறை பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற விசேட பொலிஸ் குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை அம்பாறையில் இருந்து கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்று, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தவேளை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படை முன்னாள் சிப்பாய் என்பதும், மற்றுமொருவர் களவாடப்பட்ட மின்கலங்களை கொள்வனவு செய்தவர் என்பதும் ஏனைய மூவரும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளன. சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 192 மின்கலங்களை திருடியுள்ளனர் எனவும் திருடப்பட்ட மின்கலம் ஒன்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்ச ரூபாவுக்கும் அதிகம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விசாரணைகளின் பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், ஐவரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேவேளை திருடப்பட்ட மின்கலங்களை பொலிஸார் கைப்பற்றியதோடு, அவற்றை நீதிமன்றில் சான்றுப் பொருட்களாக ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/210088
-
வவுனியாவில் காசநோயால் கடந்த வருடம் மூன்று பேர் இறப்பு; 58 பேர் பாதிப்பு - காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி
வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் 24 MAR, 2025 | 01:22 PM காச நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (24) வவுனியாவில் நடத்தப்பட்டது. வவுனியா, வைத்தியசாலை உள்வட்ட வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் ஆரம்பமான இந்த விழிப்புணர்வு ஊர்வலம் யாழ். வீதி, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி, கண்டி வீதி, மணிக்கூட்டு கோபுர சந்தி, பசார் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக சென்று வைத்தியசாலையை அடைந்தது. இதன்போது காச நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டதோடு, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் தாதியர்கள், நூற்றுக்கு மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/210055
-
மன்னார் பெண் தொழில்முனைவோருக்கு ஜப்பான் மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பு ஆதரவு
24 MAR, 2025 | 03:10 PM பெண்களின் பொருளாதார வலுவூட்டலை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சியில், இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் அமைச்சரும் துணைத் தலைவருமான காமோஷிடா நவோகி, “சமாதானத்துக்கான பாதைகள்: இலங்கையில் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு குறித்த தேசிய செயற்றிட்டத்தை நனவாக்குதல்” செயற்றிட்டத்தின் மூலம் ஆதரவளிக்கப்பட்ட மன்னார் மாவட்ட பெண் தொழில்முனைவோர்களை பார்வையிட்டார். கிறிசாலிஸ் நிறுவனத்துடன் பங்குதாரராக இணைந்து ஐ.நா. பெண்கள் அமைப்பினால் அமுல்படுத்தப்படும், ஜப்பான் அரசாங்கத்தின் தாராளமான ஆதரவுடனான இந்த செயற்றிட்டமானது மோதலால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம், மட்டக்களப்பு, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் பெண்கள் தலைமையிலான வணிகங்களை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை மேற்கொண்டு வருகிறது. ஜப்பான் அரசாங்கத்தின் 1.7 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியுடன், சுமார் 500 பெண் தொழில்முனைவோர் வணிகத் திட்டமிடல், நிதியியல் அறிவு மற்றும் உற்பத்திப் பொருளின் புத்தாக்கம் ஆகியவற்றில் தொடர்ச்சியான பயிற்சிகள் மூலமாக தங்களது இயலளவை வெற்றிகரமாக மேம்படுத்தியுள்ளனர். இந்த இலக்கு பயிற்சிகள் அவர்களின் வணிக மாதிரிகளை மேம்படுத்த உதவுவதுடன், சந்தைகளுக்கான அணுகலை அதிகரிப்பதற்கான பயிற்சிகள் மற்றும் அவர்களின் செயற்பாடுகளில் நிலைபேண்தகு தன்மையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றையும் வழங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய காமோஷிடா நவோகி, “பெண்களுக்கு அவசியமான திறன்களை வழங்குவதன் மூலமும், அவர்களின் இயலளவுகளை வெளிப்படுத்தி, நாம் சமூகங்கள் முழுவதும் எதிரொலிக்கும் நேர்மறையான மாற்றங்களை தூண்டலாம் என்பதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய உந்து சக்தியை உருவாக்க முடியும். பெண்களின் வலுவூட்டலுக்கும், இந்த நாட்டின் நிலைபேண்தகு, உள்ளடங்கலான அபிவிருத்திக்கு ஜப்பான் தொடர்ந்து தனது அர்ப்பணிப்பை வழங்குகிறது” என்று கூறினார். இந்த ஒத்துழைப்பானது பால்நிலை சமத்துவம் மற்றும் உள்ளடங்கலான அபிவிருத்திக்கான ஜப்பானின் நீண்டகால அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்டதுடன் நிலைபேண்தகு அபிவிருத்தி மற்றும் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலுக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் கீழ் பகிரப்பட்ட முன்னுரிமைகளை பிரதிபலிக்கின்றது. பொருளாதார வலுவூட்டலுக்கான வழிவகைகளை உருவாக்குவதன் மூலம் இந்த முயற்சியானது இலங்கையில் நிலைபேண்தகு சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கு பங்களிக்கிறது. https://www.virakesari.lk/article/210058
-
யானை - மனித மோதலைத் தடுக்கும் தேனீக்கள் - எப்படி தெரியுமா?
பட மூலாதாரம்,MEHA KUMAR/ SAVE THE ELEPHANTS படக்குறிப்பு, கென்யாவில், பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, யானைகளை விரட்டுவதற்கான ஒரு எளிமையான புத்திசாலித்தனமான தீர்வை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜெனாரோ டோமா பதவி, 24 மார்ச் 2025, 07:19 GMT யானைகள் தங்களது விவசாய நிலங்களுக்குள் புகுவதைக் தடுக்கும் வகையில், விவசாயிகள் தேனீக்களை புதிய உதவியாளர்களாக பயன்படுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் விரிவடைந்து வரும் விவசாய நிலங்கள் யானை வாழிடங்களை குறுக்கிடுவதால் யானை - மனித மோதல்கள் தவிர்க்க இயலாததாகி வருகிறது. யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதம் விளைவிப்பதும், ஆபத்தான மோதல் சம்பவங்கள் நிகழ்வதும் அதிகரித்து வருகின்றது. கென்யாவில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, யானைகளை விரட்டுவதற்கான ஒரு எளிமையான புத்திசாலித்தனமான தீர்வை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தேன் கூடுகளை ஆங்காங்கே இணைத்துக் கட்டியுள்ள ஒரு வகையான வேலிகள் தான் அந்தத் தீர்வு. யானைகள் தேனீக்களை வெறுக்கும் என்பதைப் பற்றி உள்ளூர் சமூகங்களின் நீண்ட கால அறிவை அடிப்படையாகக் கொண்டு, ஒலி எழுப்பக் கூடிய கூடிய இந்தத் தடைகள் உருவாக்கப்பட்டன. இவை விவசாயிகளுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல் ஏற்படாமல் நிலைமையை திறமையாக கட்டுப்படுத்தும் ஒரு வழியை உருவாக்குகின்றன. இப்போது இந்த முறை மொசாம்பிக்கில் இருந்து தாய்லாந்து வரை உலகம் முழுவதும் பரவி வருகின்றது. யானைகள் தேனீக்களை இவ்வளவு வெறுப்பதற்கான காரணம் என்ன? மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரிக்கும் இந்த நெரிசலான உலகில், தேனீக்கள் உண்மையில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று நம்பலாமா? மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற 'லைக்கா' நாய் எவ்வாறு இறந்தது?22 மார்ச் 2025 'தமிழிகம்' என்று பெயர் சூட்டப்பட்ட புதிய விலாங்கு மீனின் தனிச்சிறப்புகள் என்ன?22 மார்ச் 2025 சருமத்தை பொலிவூட்ட கொலாஜென் இணை மருந்துகள் உண்மையில் உதவுகிறதா? வெற்று விளம்பரமா?21 மார்ச் 2025 மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே ஏற்படும் மோதல்கள் , தற்போது உலகின் பல பகுதிகளில் அதிகரித்து வருகின்றன. கென்யாவில் மக்கள் தொகையும் வளங்களுக்கான தேவையும் அதிகரித்து வருவதால், மனிதர்கள் குடியிருக்கும் பகுதிகள், யானைகள் நடமாடும் பகுதிகளை ஒட்டி விரிவடைந்து வருகின்றன. அதே நேரத்தில், மனிதர்களுக்கும் பெரிய உயிரினங்களான யானைகளுக்கும் இடையேயான மோதல்களுக்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. "விவசாய நிலங்கள் விரிவடைவதும், மரங்கள் வெட்டப்படுவதும், நகரமயமாக்கலும், யானைகள் போன்ற அதிக நிலப்பரப்பு தேவைப்படும் விலங்குகளின் வாழ்விடங்கள் சுருங்கிப் போவதும், யானைகளை உணவு மற்றும் தண்ணீருக்காக மனிதர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையத் தூண்டி வருகிறது," என்று எத்தியோப்பியாவைச் சேர்ந்த யானை பாதுகாப்பு மற்றும் மனித-யானை மோதல் குறித்த ஆலோசகரான கிரேட்டா பிரான்செஸ்கா ஐயோரி கூறுகிறார். "யானைகள் இருக்கும் இடங்களிலெல்லாம், மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே ஏற்படும் மோதல் சம்பவங்கள் குறித்த தகவல்களும் வருகின்றன." பிரிட்டனின் வேல்ஸில் உள்ள பாங்கோர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வனவிலங்கு சூழலியல் நிபுணர் கிரேம் ஷானன், இருபது ஆண்டுகளாக ஆப்பிரிக்க யானைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இந்தப் பிரச்னைக்குரிய பகுதிகளில் வாழ தள்ளப்படுகிற மக்கள் பெரும்பாலும் ஏழ்மையான சூழ்நிலையில் உள்ளவர்கள் தான். "அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் விவசாயம் வாழ்க்கைக்கான முக்கியமான ஆதாரமாக இருக்கிறது." என்கிறார் கிரேம் ஷானன். ஆனால் நீரும், ஊட்டச்சத்து நிறைந்த பயிர்களும் யானைகளை வெகுவாக ஈர்க்கின்றன. இதனால் அவை மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் வர நேரிடுகிறது. மக்கள் தங்கள் நிலங்களை பராமரிக்க பல மாதங்கள் உழைக்கிறார்கள். "பயிர்களை நட்டுவிட்டு, அவை காய்க்கத் தொடங்கும் தருணத்தில் யானைகள் வந்துவிடுகின்றன," என்று மனிதர்களுக்கும்-யானைகளுக்குமான மோதல் அதிகமாக இருக்கும் கென்யாவின் முவாகோமா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இம்மானுவேல் முவாம்பா தெரிவிக்கிறார். "யானைகள் வந்தால் எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போய்விடும்" என்கிறார். "எங்களில் சிலர் வாழ்வாதாரத்துக்காக இந்தப் பயிர்களை நம்பி இருக்கிறோம், அது ஒரே இரவில் அழிக்கப்படுவதை கற்பனை செய்து பாருங்கள்" என்றும் முவாம்பா கூறுகிறார். விண்வெளியில் செயற்கைக் கோள்கள் ஒன்றுக்கொன்று மோதாமல், பாதுகாப்பாக நகர்வதன் பின்னணி19 மார்ச் 2025 கேரளாவில் 18 வயது இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான 'அனோரெக்சியா நெர்வோஸா' என்றால் என்ன?17 மார்ச் 2025 பாத்திரம் துலக்கும் ஸ்பாஞ்சில் மறைந்திருக்கும் ஆபத்து - எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?17 மார்ச் 2025 அது மட்டுமின்றி, இத்தகைய மோதல்கள் யானைகள் மற்றும் மனிதர்களின் உயிருக்கு ஆபத்தாக அமையலாம். பசியில் இருக்கும் 7 டன் எடையுள்ள யானைகள் பயிர்களுக்குள் நுழைவதைத் தடுக்க முயற்சிக்கும் விவசாயிகள் உயிரிழக்கும் நிலை ஏற்படலாம். அதே நேரத்தில், உணவுக்காக வந்த யானைகள் மனிதர்களால் கொல்லப்படும் அபாயமும் உள்ளது. இந்த மோதல்களைத் தடுக்கும் முயற்சியாக, விஞ்ஞானிகளும் உள்ளூர் மக்களும் பல ஆண்டுகளாக பல்வேறு முறைகளைச் சோதித்து வருகின்றனர். மின்சார வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள், சூரிய ஆற்றலில் விளங்கும் விளக்குகள், மிளகாய் பூசப்பட்ட செங்கற்கள், கடும் நாற்றமுள்ள யானை விரட்டிகள் மற்றும் யானைகளை பயமுறுத்த சத்தம் எழுப்புதல் போன்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறைக்கும் அதன் தனிப்பட்ட நன்மைகளும், சில குறைகளும் உள்ளன. ஆனால் யானைகளை விரட்டுவதற்குத் தேனீக்களை பயன்படுத்துவது, நம்பிக்கைக்குரிய மற்றும் திறமையான முறையாக உருவெடுத்துள்ளது. இது யானைகளை வெற்றிகரமாகத் தடுப்பதுடன், விவசாயிகளுக்கு பல விதமான கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது. 2000 களின் தொடக்கத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணரும், 'சேவ் தி எலிஃபண்ட்ஸ்' என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவருமான ஃபிரிட்ஸ் வோல்ராத் மற்றும் அந்த அமைப்பின் நிறுவனர் இயன் டக்ளஸ்-ஹாமில்டன், கென்யாவைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்களிடமிருந்து ஒரு நாட்டுப்புறக் கதையை கேட்ட போது இந்த யோசனை பிறந்தது. சில பகுதிகளில் மரங்கள் யானைகளால் சேதப்படுத்தப்படவில்லை, ஏனெனில் அவற்றில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன என்று சொல்லப்பட்ட அந்தக் கதை இருவரையும் ஆச்சரியப்படுத்தியது. பட மூலாதாரம்,SAVE THE ELEPHANTS படக்குறிப்பு, யானைகளை பயிர்களில் இருந்து விலக்கி வைப்பதற்கு தேனீக்கள் சிறந்த வழி என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன ( படம்: சேவ் த எலிபன்ட்ஸ் தொண்டு நிறுவனம்) இந்தக் கதையால் ஈர்க்கப்பட்ட வோல்ராத் மற்றும் டக்ளஸ்-ஹாமில்டன், 'சேவ் தி எலிஃபண்ட்ஸ்' அமைப்பின் இணை இயக்குநர் லூசி கிங்குடன் இணைந்து, தேனீக்கள் உண்மையில் யானைகளை பயமுறுத்தக் கூடியவை தானா என்பதை அறிவியல் முறையில் ஆராயத் தொடங்கினர். 2007-க்குள், அவர்கள் ஒரு முக்கியமான முடிவுக்கு வந்தார்கள். யானைகள் காட்டு ஆப்பிரிக்க தேனீக்கள் இருக்கும் மரங்களுக்கு அருகே செல்லாது என்றும், கூடவே "அந்த இடத்தை தவிர்க்கச் சொல்லி, ஒன்றுக்கொன்று எச்சரிக்கையையும் அனுப்புகின்றன" என்றும், "தேனீக்கள் கொட்டும் தன்மையுடையவை என்பதையும் யானைகள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளன. அதை அவை ஒருபோதும் மறக்காது" என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம் என்கிறார் லூசி கிங். பசியுடன் வரும் யானைகளின் தாக்குதலிலிருந்து விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க முடியும் வகையில் ஒரு புதிய முறையை லூசி கிங் உருவாக்கினார். அதாவது, தேன் கூடுகளை இணைத்துக் கட்டிய ஒரு வேலியை உருவாக்கினார். இந்த யோசனையை அவர் 2008ஆம் ஆண்டு கென்யாவின் லைக்கிபியா பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் முதன்முறையாக பரிசோதித்தார். அந்தப் பகுதி, யானைகள் அடிக்கடி பயிர்களை அழிப்பதால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. அந்த வேலி பண்ணையைச் சுற்றி அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு 10 மீட்டருக்கும் (33 அடி) ஒரு தேன் கூடு இரு தூண்களுக்கு இடையில் வைக்கப்படுகின்றது. தேன் மெழுகு மற்றும் லெமன் கிராஸ் எண்ணெய் போன்ற இயற்கையான வாசனைகள் மூலம் ஈர்க்கப்பட்ட ஆப்பிரிக்க தேனீக்கள், இந்த கூடுகளில் இயற்கையாகவே குடியேறி வாழத் தொடங்குகின்றன. இறைச்சி உண்பதை சில காலம் நிறுத்தி, பின்னர் மீண்டும் சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படுமா?16 மார்ச் 2025 உலக தூக்க தினம்: இரவு படுத்தவுடன் தூங்க பகலில் இந்த 5 உத்திகளை பின்பற்றுங்கள்14 மார்ச் 2025 ரேபிஸ் நோய் முற்றிய நோயாளிகளை கையாளும் வழிமுறைகள் - மருத்துவர் விளக்கம்13 மார்ச் 2025 "ஒரு ஏக்கர் (0.4 ஹெக்டேர்) பண்ணைக்கு 24 தேன் கூடுகள் தேவை," என்று கிங் விளக்குகிறார். ஆனால் அதில் பாதி கூடுகள் மட்டுமே உண்மையானவை. மீதமுள்ள 12 கூடுகள் வெறும் போலிகள். இவை மஞ்சள் நிற பலகையால் செய்யப்பட்டவை. இதனால் யானைகளுக்கு, அந்த இடத்தில் உண்மையில் அதிகமான தேன் கூடுகள் இருக்கின்றன என்ற உணர்வு ஏற்படுகிறது. இது ஒரே நேரத்தில் செலவுகளை குறைப்பதுடன், உண்மையான தேனீக்களுக்கு கூடுதல் இடத்தையும் வழங்குகின்றன. "யானைகள் இருட்டில் அவற்றை நெருங்கும் போது, தேனீக்களின் வாசனையும் தேனின் மணமும் உடனே அவற்றுக்குத் தெரியும். அதே சமயம் நிறைய மஞ்சள் பெட்டிகள் எங்கும் காணப்படும். எது உண்மையானது, எது போலியானது என்று யானைகளுக்கு புரியாது. அதனால் இது ஒரு மாயை போன்று தோன்றுகிறது. ஆனால் இந்த முறை நன்றாக வேலை செய்கிறது," என்கிறார் கிங். யானைகளைப் பயிர்களிலிருந்து தடுத்து உணவுப் பாதுகாப்பை வழங்குவதற்கு மட்டும் அல்லாமல், தேனீக்களுக்காக அமைக்கப்படும் இந்த வேலிகள் அவற்றைப் பயன்படுத்தும் சமூகங்களுக்கு பல்வேறு நன்மைகளையும் வழங்குகின்றன. முதலில், தேன் உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். "ஒரு விவசாயியிடம் தேனும், பயிர்களும் இருந்தால், அது குடும்பத்தை நடத்த போதுமானதாக இருக்கும்," என்கிறார் முவாம்பா. அவர் தற்போது 'சேவ் தி எலிஃபண்ட்ஸ்' அமைப்பில் 'தேன் கூடு வேலி' திட்டத்தின் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். முதன்முதலில் அவரது கிராமத்தில் தான் இந்த வேலிகள் பரிசோதிக்கப்பட்டன. இப்போது அவர் மற்ற விவசாயிகளுக்கு இந்த வேலிகளை எப்படிப் பொருத்துவது மற்றும் பராமரிப்பது என்பதைக் கற்றுத் தருகிறார். பட மூலாதாரம்,JANE WYNYARD/ SAVE THE ELEPHANTS படக்குறிப்பு, யானைகளைத் தடுப்பதுடன், தேன் கூடுகளால் அமைக்கப்பட்டுள்ள வேலிகள் தேன் விற்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற உதவும் (படம்: ஜேன் வைன்யார்ட்/ சேவ் த எலிபன்ட்ஸ் அமைப்பு) "பெண்கள் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான மோதலால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்" எனக் கூறுகிறார் கிங். பொதுவாக, விவசாய வேலைகளில் அதிகம் ஈடுபடுவது பெண்களே. அவர்கள் தான் யானைகளை விரட்டும் பொறுப்பையும் ஏற்க வேண்டியுள்ளது, இதனால் காயம் அடைவதற்கான அபாயமும் அவர்களுக்கு அதிகமாக உள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது இந்த சூழ்நிலைகளை மிகவும் திறம்பட கையாள அவர்களை அனுமதிக்கிறது. அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது, வீட்டுப் பொறுப்புகள், கல்வியைத் தொடர்வது அல்லது மற்ற விஷயங்களைச் செய்ய நேரம் ஒதுக்குவது ஆகியவை அவர்களுக்கு சாத்தியமாகிறது," எனக் கூறுகிறார் கிங். பல ஆண்டுகளாக, கிங் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள், கென்யாவில் தேன் கூடுகளால் அமைக்கப்படும் வேலிகள் எந்தளவு பயனுள்ளதாக உள்ளன என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை சேகரித்துள்ளனர். இன்று, இந்த வேலிகள் தான்சானியா, மொசாம்பிக் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பரிசோதிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து, மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான மோதல் நாள்தோறும் நிகழும் பிரச்னையாக இருக்கும் மற்றொரு நாடான தாய்லாந்திலும், இந்த முறையின் செயல்திறனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 2024ஆம் ஆண்டு, கிங் மற்றும் அவரது குழுவினர் ஒரு நீண்டகால ஆய்வின் முடிவை வெளியிட்டனர். இதில், இம்மானுவேல் முவாம்பா வசிக்கும் முவாம்பிட்டி மற்றும் முவாகோமா எனும் தெற்கு கென்யாவின் இரண்டு சிறிய கிராமங்களில், ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளின் செயல்திறன் ஆராயப்பட்டது. இந்த சமூகங்கள் முட்டைக்கோஸ் மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களின் உற்பத்தியைப் பெரிதும் சார்ந்துள்ளவை. இவை சாவோ தேசிய பூங்காவின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையே கடந்து செல்லும் பல யானைகளை ஈர்க்கின்றன. கென்யாவில் உள்ள சாவோ தேசிய பூங்கா, அதிக அளவிலான யானைகளை, அதாவது சுமார் 15,000 யானைகளை கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் உள்ளூர் மக்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினர். அவர்கள் தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளை அமைத்து, அதற்கான தகவல்களைத் திரட்டினார்கள். ஆய்வில், கிட்டத்தட்ட 4,000 யானைகள் இந்த வேலிகளை அணுகியதில், அதில் 75 சதவீத யானைகள் வேலியை மையமாகக் கொண்டு விரட்டப்பட்டன என்று கண்டறியப்பட்டது. மேலும், விவசாயிகள் தேன் விற்பனை மூலம் 2,250 டாலர் (சுமார் 1,740 யூரோ) வருமானம் ஈட்டினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கென்யாவின் தைடா டவென்டாவில் உள்ள தனது பண்ணையைச் சுற்றி தேன் கூடு வேலிக்கு அடுத்ததாக ஒரு மண்வெட்டியைப் பயன்படுத்தி தனது விவசாய நிலத்தை உழும் பெண் "இது மிகவும் புத்திசாலித்தனமான யோசனை என்று நான் நினைக்கிறேன்," என்றும், "இந்த இயற்கையான முறையைப் பயன்படுத்தி, இந்த விலங்குகள் பண்ணைகளை நெருங்காமல் தடுக்கும் திறன் கிடைத்திருக்கிறது. இது ஒரு அருமையான யோசனை," என்றும் நேரடியாக ஆராய்ச்சியில் ஈடுபடாத ஷானன் கூறுகிறார். இருப்பினும், இந்த ஆய்வு சில பலவீனங்களையும் வெளிப்படுத்தியது என்பதையும் ஷானன் குறிப்பிடுகிறார். உதாரணமாக, பூக்கும் தாவரங்கள் இல்லாததால் வறட்சியான ஆண்டுகளில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. 2018ஆம் ஆண்டு, முந்தைய வருட வறட்சியிலிருந்து தேனீக்கள் மீண்டு வருவதில் சிரமம் ஏற்பட்ட போது, அதிகமான யானைகள் கிராமங்களில் நுழைந்தன. அப்போது அந்த வேலிகள் சுமார் 73 சதவீத யானைகளை மட்டுமே தடுப்பதில் வெற்றி கண்டன. "எந்த ஒரு முறையை அல்லது கருவியைப் போலவே, இதற்கும் சில வரம்புகள் மற்றும் சவால்கள் இருக்கின்றன," என்கிறார் ஷானன். தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளில், காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்தும் தான் கவலைப்படுவதாக கிங் கூறுகிறார். "முன்பு 15 முதல் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இந்த வறட்சி ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படிப்பட்ட வறட்சிகள் ஏற்பட்டால், அது பெரிய சிக்கல் ஆகிவிடும். ஏனெனில் தேனீக்கள் சரியான நேரத்தில் மீண்டு வர முடியாது," என்கிறார் அவர். அதிகமான மழையும் தேனீக்களுக்கு மற்றொரு பிரச்னையாக இருக்கலாம் என்றும் கூறுகிறார். " மரங்களிலும் புதர்களிலும் இருக்கும் பூக்களை, மழை கீழே தள்ளிவிடும். இதனால் தேனீக்கள் தேன் சேர்க்க பூக்கள் கிடைக்காது," என விளக்குகிறார் கிங். தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளுடன் சேர்த்து பிற பாதுகாப்பு முறைகளையும் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, உலர்ந்த மிளகாய் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் அல்லது கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பது போன்றவற்றையும் பின்பற்ற வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். "ஒரே ஒரு முறையில் தீர்வு கிடையாது," என்கிறார் கிங். நீரிழிவு, உடல் பருமன் மருந்துகளில் புரட்சியை ஏற்படுத்தும் கிலா அரக்கன் பல்லியின் விஷம்12 மார்ச் 2025 மாடுகள் எவ்வாறு தகவல் பரிமாறிக் கொள்கின்றன? மனிதன் புரிந்து கொண்டால் என்ன மாற்றம் நிகழும்?9 மார்ச் 2025 உடல் பருமனாகாமல் இருக்க தினசரி சமையலில் எந்த எண்ணெய், எவ்வளவு சேர்க்க வேண்டும்?8 மார்ச் 2025 ஆனால் பரந்த அளவில் சிந்தித்தால், இப்படியான உள்ளூர் தீர்வுகள் மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதலை குறைக்க உதவினாலும், காலநிலை மாற்றம் மற்றும் நிலவியல் சிக்கல்கள் போன்றவற்றால் அவை ஆபத்தில் ஆழ்த்தப்படலாம் என்று ஐயோரி கூறுகிறார். இதன் விளைவாக, "மக்கள் இத்தகைய முயற்சிகளில் வைத்திருக்கும் நம்பிக்கையும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது" என்று அவர் தெரிவிக்கிறார். "எப்போதும் பலதரப்பட்ட அணுகுமுறையை நாம் பின்பற்ற வேண்டும். அதில் முக்கியமானவை, அரசாங்கத்துடன் எவ்வாறு இணைந்து செயல்படுவது? மக்களின் நம்பிக்கையை எவ்வாறு உருவாக்குவது? யானைகளும் மக்களும் எதிர்கொள்ளும் அழுத்தத்தை முறையாக எவ்வாறு குறைப்பது போன்றவை," என்று அவர் விளக்குகிறார். மேலும் "இவை பெரும்பாலும் மிகவும் சிக்கலான நடவடிக்கைகளாகவே அமையும்," என்றும் அவர் குறிப்பிடுகிறார் ஐயோரி . தற்போது, தேன் கூடுகளால் அமைக்கப்படும் வேலிகள் முவாம்பா மற்றும் பிற சமூகங்களுக்கு உதவுகின்றன. "நாங்கள் இரண்டு தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளுடன் தொடங்கினோம். இப்போது மூன்று கிராமங்களை உள்ளடக்கிய 700 தேன் கூடுகள் உள்ளன," என்கிறார் முவாம்பா. "இது இப்போது சமூகத்திற்கு ஒரு நல்ல விஷயமாக உள்ளது" என்று கூறும் முவாம்பா, இப்போதெல்லாம், யானைகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றும் தெரிவித்தார். தேன் கூடுகளால் அமைக்கப்படும் வேலிகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, "இங்குள்ள பெரும்பாலான விவசாய நிலங்களில் யானைகள் பயிர்களைத் தாக்கியிருந்தன" என்பதை கூறும் முவாம்பா", ஆனால், இப்போது, மக்கள் எளிதில் அச்சமின்றி வாழ முடிகிறது" என்பதையும் குறிப்பிடுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz61443yz6yo