Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. 17 MAR, 2025 | 03:27 PM கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ள பரிசுத்த பாப்பரசர் இதன் மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தனது பதவியில் தொடர்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரான்சின் ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அங்கிருந்தவாறே சீர்திருத்த தி;ட்டங்களிற்கு அனுமதி வழங்கும் ஆவணத்தில் கைச்சாத்திட்டார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. பெப்ரவரி 14 முதல் பாப்பரசர் மருத்துவமனையில் உள்ளார். கடந்த 12 வருடகாலப்பகுதியில் அவர் நீண்டநாட்கள் மருத்துவமனையில் உள்ளமை இதுவே முதல் தடவை. கத்தோலிக்க திருச்சபையில் பெண்களிற்கு அதிகளவு பங்களிப்பினை வழங்குவது,ஆட்சி மற்றும் தீர்மானம் எடுப்பதில் பாமர மக்களை அதிகளவில் சேர்ப்பது உட்பட பல சீர்திருத்தங்கள் குறித்து கத்தோலிக்க திருச்சபை ஆராயவுள்ளது. இந்த சீர்திருத்தங்களை ஆயர்கள் பேரவை என்ற அமைப்பு ஆராயும்.பரிசுத்த பாப்பரசர் தனது பதவிக்காலத்தில் பணி நிகழ்ச்சி நிரலை இந்த குழு மூலமே முன்னெடுத்துவருவார். சமீபகாலமாக பாப்பரசர் தனது புதுப்பித்தல் செயற்பாட்டில் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களை ஈடுபடுத்த முயன்றுவந்துள்ளார். இதேவேளை பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரது படத்தை முதல்தடவையாக வத்திக்கான் வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள தேவாலயத்தில் பாப்பரசர் திருப்பலியை நிறைவேற்றினார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/209449
  2. சிகிச்சைக்கு பின்னர் பாப்பரசர் எப்படி இருக்கிறார்; வத்திக்கான் வெளியிட்ட புகைப்படம் போப் பிரான்சிஸ் உடல் நலம் தேறிய நிலையில், தேவாலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், (88, வயது) முதுமை காரணமாக உடல் நலம் குன்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார். கடந்த பெப்ரவரி14ம் திகதி ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலில் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருகிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர். Thinakkural.lkசிகிச்சைக்கு பின்னர் பாப்பரசர் எப்படி இருக்கிறார்; வத்திக...போப் பிரான்சிஸ் உடல் நலம் தேறிய நிலையில், தேவாலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், (88, […]
  3. இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியை வெளிப்படுத்தும் ஆவணப்படம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கையளிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணப்படம் இன்று யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் கடற்றொழில் அமைச்சரிடம் கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது. இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியால் கடல் வளங்கள் பாதிக்கப்படுவதுடன் பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/316133
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா முகமையை மூடும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா செய்தி நிறுவனத்தை மூடுவதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்நிறுவனம் டிரம்ப் எதிர்ப்பு மனநிலையுடன் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், வரிசெலுத்துபவர்கள் இத்தகைய பிரசாரங்களுக்கு இலக்காவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மீதான அரசியல்வாதிகள் மற்றும் வலதுசாரி ஊடகங்களின் விமர்சனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப்போர் நேரத்தில் நாஜி பிரசாரங்களை எதிர்கொள்ளும் விதமாக கட்டமைக்கப்பட்ட வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா இன்னமும் ஒரு அடிப்படையில் ரேடியோ சேவையாகவே தொடர்கிறது. ஒவ்வொரு வாரமும் லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் இதன் சேவைகளைப் பெறுவதாக அந்நிறுவனம் கூறுகிறது. ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,1,300 ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் உள்ளனர் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் இயக்குநர் மைக் அப்ராமோவிட்ஸ் பேசுகையில், அவர் உட்பட அந்நிறுவனத்தின் 1,300 ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். "டிரம்பின் இந்த உத்தரவால் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா அதன் கடமையை செய்ய முடியவில்லை. குறிப்பாக இரான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் அமெரிக்காவை இழிவுபடுத்துவதற்காக தவறான செய்திகளை பரப்ப பில்லியன் டாலர் பணத்தை செலவிட்டு வருகின்றன." என்று அப்ராமோவிட்ஸ் கூறுகிறார். "இந்த நடவடிக்கை சுதந்திரமான மற்றும் தன்னிச்சையான ஊடகங்களுக்கான அமெரிக்காவின் நீண்டகால உறுதிப்பாட்டை குறைத்து மதிப்பிடுகிறது" என்று அமெரிக்க ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய தேசிய பிரஸ் கிளப் தெரிவித்துள்ளது. "ஒரே இரவில் ஒட்டுமொத்த செய்தியறையும் முடக்கப்படுமானால், பத்திரிகை சுதந்திரத்தின் நிலை குறித்து என்ன சொல்ல முடியும்" எனவும் கேள்வி எழுப்பியுள்ள அந்த அமைப்பு, "ஒரு நிறுவனம் துண்டாடப்பட்டுள்ளது. இது வெறும் ஊழியர் தொடர்புடையது அல்ல மாறாக சுதந்திரமான இதழியலின் எதிர்காலத்தை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் அடிப்படை மாற்றம்" என குற்றம் சாட்டியுள்ளது. மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட தகவல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரசாரங்களை எதிர்கொள்ளும் விதமாக இந்த முகமைகள் செயல்படுகின்றன அதிபரின் நடவடிக்கையானது விஓஏ எனப்படும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் தலைமை நிறுவனமான உலக ஊடகங்களுக்கான அமெரிக்க முகமையை (US Agency for Global Media) குறிவைக்கும் விதமாக உள்ளது. இந்நிறுவனம் Radio Free Europe மற்றும் Radio Free Asia போன்ற லாபநோக்கற்ற நிறுவனங்களுக்கு நிதி வழங்குகிறது. கம்யூனிஸ்ட் பிரசாரங்களை எதிர்கொள்ளும் வகையில் இவற்றின் செயல்பாடு இருக்கும். உலக ஊடகங்களுக்கான அமெரிக்க முகமை (USAGM) தனது மேலாளர்களை "பணியை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. மனித வளத்தை குறைத்துக் கொண்டு விதிகளுக்கு தேவைப்படும் அளவுக்கு செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்" என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ் கூற்றுப்படி, யூஎஸ்ஏஜிஎம் மனிதவள இயக்குநர் கிரிஸ்டல் தாமஸின் மின்னஞ்சல் மூலம் விஓஏ பணியாளர்களுக்கு இந்த விவரம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்-க்கு கிடைத்த தகவலின்படி, அனைத்து நிரந்தரமற்ற பணியாளர்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்ததாரர்களுக்கும் வழங்குவதற்கான பணம் தற்போது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேடியோ ஃப்ரீ ஏசியா மற்றும் ரேடியோ ஃப்ரீ யூரோப் அல்லது ரேடியோ லிபர்டி ஆகிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் சிபிஎஸ்-க்கு கிடைத்துள்ளது. அந்நிறுவனங்களுக்கான அமெரிக்க அரசின் நிதி உதவி ரத்து செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஎஸ்ஏஜிஎம் நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் விஓஏ மற்றும் இதர நிலையங்களின் கூற்றுப்படி தங்களுக்கு 400 மில்லியன் நேயர்கள் இருப்பதாக கூறுகின்றன. இது பிரிட்டன் அரசின் பகுதி நிதியோடு செயல்படும் பிபிசியின் உலக செய்தி சேவைக்கு இணையானது. ஆலோசகராக நியமிக்கப்பட்ட டிரம்பின் விசுவாசி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டிரம்ப்பின் தீவிர விசுவாசியான கரி லேக் யுஎஸ்ஏஜிஎம்-ன் சிறப்பு ஆலோசகராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார் செக் குடியரசு நாட்டின் வெளியுறவு அமைச்சரான ஜான் லிப்பாவ்ஸ்கி, பராகுவே-யில் இயங்கி வரும் ரேடியோ ஃப்ரீ யுரோ/ரேடியோ லிபர்ட்டியை தொடர்ந்து இயங்கச் செய்ய ஐரோப்பிய யூனியன் உதவும் என்று நம்புவதாகக் கூறினார். திங்கட் கிழமை நடைபெறும் ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் இந்த ஒலிபரப்பு சேவைகளை பகுதி அளவாவது இயங்கச் செய்ய வழிகளை காணுமாறு கேட்டுக் கொள்வேன் என செக் குடியரசின் வெளியுறவு அமைச்சர் கூறினார். பெரும் பணக்காரரும் டிரம்பின் பிரதான ஆலோசகர்களில் ஒருவருமான ஈலோன் மஸ்க் அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்கும் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். இவர் தமது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் விஓஏ மூடப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். வீடற்றவர்களை பாதுகாக்கும் திட்டம், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களுக்கான நிதி உள்ளிட்ட அமெரிக்க அரசின் பிற ஃபெடரல் முகமைகளுக்கான நிதியையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார். டிரம்ப் தமது முதல் ஆட்சிக்காலத்தின் போதும் விஓஏ குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். தன்னுடைய தீவிர விசுவாசியான கரி லேக்-ஐ யுஎஸ்ஏஜிஎம்-ன் சிறப்பு ஆலோசகராக சமீபத்தில் நியமித்தார். அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் பலவும் தனக்கு எதிராக பக்கச் சார்புடன் செயல்படுவதாக அதிபர் டிரம்ப் வழக்கமாகவே குற்றம் சாட்டி வந்தார். நீதித்துறையில் பேசும் போது சிஎன்என் மற்றும் எம்எஸ்என்பிசி ஆகிய செய்தி முகமைகளை "ஊழல்" என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிட்டார். நாஜி மற்றும் ஜப்பானிய பிரசாரங்களை எதிர்கொள்வதற்கான உத்தரவோடு 1942 ம் ஆண்டு வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தொடங்கப்பட்டது. இதன் முதல் ஒளிபரப்பு பிபிசியால் கடனாக வழங்கப்பட்ட ஒரு டிரான்ஸ்மீட்டரில் தொடங்கப்பட்டது என்பதன் மூலம் இதன் குறைந்தபட்ச நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அமெரிக்க முன்னாள் அதிபரான ஜெரால்டு ஃபோர்டு , விஓஏவின் தலையங்க சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான பொது சாசனத்தில் 1976-ஆம் ஆண்டு கையெழுத்திட்டார். ராணுவ தொடர்பற்ற ஒளிபரப்புகளை மேற்பார்வையிடும் நிர்வாகிகள் வாரியம் 1994-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட சட்டத் திருத்தம் ஒன்று விஓஏ மற்றும் துணை நிறுவனங்கள் அமெரிக்காவில் ஒளிபரப்பைத் தொடங்க அனுமதி வழங்கியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cr521p8494zo
  5. வெல்லாவெளியில் வெடிபொருட்களுடன் விமானப்படை கோப்ரல் ஒருவர் உட்பட இருவர் கைது கனகராசா சரவணன் மட்டு. வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக சென்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த லான்ட் குறோஸ் வாகனத்துடன் விமானப்படை கோப்பிரல் உட்பட இருவரை வெடிகுண்டு பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை (17) அதிகாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். வெல்லாவெளி பாலையடிவட்டை வீதியில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் பிரயாணித்த லான்ட்குரோஸ் வாகனத்தை பொலிசார் சந்தேகத்தில் நிறுத்திய போது அம்பாறை விமானப்படைக்கு செல்வதாக தெரிவித்ததையடுத்து குறித்த வாகனத்தை பொலிசர் சோதனையிட்டனர். இதனை தொடர்ந்து வாகனத்தில் வெடிபொருளுக்கான அமோனியா ஒருகிலோ, ஜெல்கூறு ஓன்று, வெடிக்கான கயிறு ஒருபந்தம், 3 போத்தல் கெமிக்கல் என்பவற்றை மீட்டதையடுத்து கொடகவில அரகம்பாவிலையைச் சேர்ந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் ரோன் கமரா இயக்குநரான விமானப்படை கோப்பிரல் ஹனிந்து போப்பிந்த சமரவீர மற்றும் களனி கொல்கம்புறவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சிறிலால் சுஜீவ ஆகிய இருவரையும் சந்தேகத்தினடிப்படையில் கைது செய்ததுடன், டபிள்யூ பி.கே.ஜே. 6270 லான்ட்குரோஸ் வாகனத்தை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் புதையல் தோண்டும் நோக்கத்துடன் இந்த பகுதிக்கு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/316131
  6. 17 MAR, 2025 | 05:15 PM பட்டலந்த சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்குப் பின்னர் வெளிவந்துள்ளது. இவ்வாறு வடக்கு கிழக்கில் இயங்கிய பல முகாம்களில் தமிழர்கள் படுகொலை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் என்பதற்காக அதனை மூடிமறைத்துவிட்டு சிங்கள இளைஞர்கள் மற்றும் உங்கள் கட்சியினர் மாத்திரம் பாதிக்கப்பட்டார்கள் என்று கருத்து கொண்டுவந்திருப்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே தமிழ்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டு ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது பேசும் பொருளாக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் 1988 ம் ஆண்டு இயங்கிய பட்டலந்தை சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜே.வி.பியின் இரண்டாம் கட்ட போராட்டத்தை மேற்கொண்ட போது அவர்களை அடக்குவதற்காகச் சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கின்றது மாத்திரமல்ல முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உச்சரிக்கப்பட்டுள்ளது. 1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்தை முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றதுடன் உண்மைகளும் புதைக்கப்பட்டுள்ளன. 37 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜே.வி.பியினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியிலிருந்து வெளியில் வந்துள்ளது இந்த ஜே.வி. பி என்ற தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வராவிட்டால் இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்காது. ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்கின்றது எனவே இது போன்ற வடக்கு கிழக்கில் பல சட்டவிரோத முகாம்கள் காணப்பட்டது. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கிய மட்டக்களப்பு சத்திருக்கொண்டான் படைமுகாமில் 4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் முதியோர்கள் பெண்கள் உட்பட 186 பொதுமக்களைச் சித்திரவதை செய்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில் படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள் அதில் ஒருவர் வெட்டுகாயங்களுடன் தப்பி வெளிவந்து உண்மைகளைத் தெரிவித்தார். இந்த சத்திருக் கொண்டான் முகாம் சித்திரவதை படுகொலை காணாமல் ஆக்கப்படுவதற்கு முக்கியமான முகாமாக இயங்கியது அவ்வாறே பல முகாம்கள் இயங்கியதுடன் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பிவராதளவுக்கு கல்லடி, கரடியனாறு, கொண்டைவெட்டுவான், உட்பட பல முகாம்கள் காணப்பட்டது. ஜே.வி.பியினர் பாதிக்கப்பட்ட விடையம் அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது ஏன் என்றால் தங்களுடைய தோழர்கள் சகாக்கள் கொல்லப்பட்ட விதம் சித்திரவதை செய்யப்பட்ட விதம் அதில் பங்கு கொண்ட முக்கிய புள்ளிகள் தொடர்பாக வெளியில் வந்துள்ளது. சித்திரவதை என்பது சாதாரன விடையமல்ல அமிலத் தொட்டிகளில் இளைஞர்களைப் போட்டு கொலை செய்துள்ளனர். எங்களை பொறுத்தமட்டில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் சார்பாகச் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை எண்ணிக்கை ரீதியாகச் சிறுபான்மையாக இருக்கின்றதனால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. எனவே எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களது நீதியை வெளியில் கொண்டுவரமுடியாது ஆனால் 37 வருடத்திற்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதை பாலியல் பலாத்காரம் போன்ற அநீதிகள் வெளியில் கொண்டுவருவதாக இருந்தால் நாங்களும் ஆட்சியை கைப்பற்றினால் தான் முடியும் ஆனால் நாங்கள் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலை சித்திரவதை அநியாயம் அராஜகத்தை வெளிக் கொண்டுவருவதற்கு வழியே இல்லை எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் நாங்கள் உருக்கமாகவும் நியாயமாகவும் கேட்பது உங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பட்டலந்தை சித்திரவதை முகாமை கொண்டுவந்திருப்பதாக மற்றவர்களுக்குக் கூறாமல் வடக்கு கிழக்கு பிரதேசத்திலும் இவ்வாறான படுகொலைகள் சித்திரவதைகள் நடந்துள்ளது போன்ற விடையங்களை நீங்கள் வெளிக் கொண்டுவருவதாக இருந்தால் நீங்கள் ஒரு சமத்துவவாதிகள், சத்திருக்கொண்டான் பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி போன்ற பல கிராமங்களை சேர்ந்த மக்களை வெளிப்படையாகச் சுற்றிவளைப்பில் கைது செய்து கூட்டிச் சென்று ஒரே இரவில் படுகொலை இதற்கு நீதி இல்லை. கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்ட பகலில் 180க்கு மேற்பட்டவர்கள் கொண்டு சென்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இன்றும் கூட புதைக்கப்பட்ட புதைகுழி எது என்று தெரியாமல் உள்ளது இவ்வாறு பல முகாம்களில் இப்படியான அநியாயங்கள் நடந்துள்ளன. ஆகவே தேசிய மக்கள் சகத்தியினர் பட்டலந்தை முகாம் ஒரு ஆரம்பப்புள்ளியாக இருந்தால் வடக்கு கிழக்கில் முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகளை வெளிக் கொண்டுவரவேண்டும். ஆனால் உங்களது தோழர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் நீதியைத் தேடுகின்றீர்கள்; எனவே சித்திரவதை முகாம்களில் தமிழர்களுக்கு இடம்பெற்ற அநியாயங்கள் கொண்டுவரவேண்டும் என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/209467
  7. விஜயகுமாரதுங்க படுகொலை உள்ளிட்ட முக்கிய படுகொலைகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்போம் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார். பட்டலந்த விவகாரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை போன்று 88 மற்றும் 89 காலப்பகுதியில் இடம்பெற்ற கலவரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என பட்டலந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பட்டலந்த சித்திரவதை முகாமினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. அரசாங்கம் இந்த அறிக்கைகளை சமர்ப்பித்ததை போன்று பிரதான மூன்று படுகொலைகள் தொடர்பான அறிக்கைகளையும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். விஜயகுமாரதுங்க படுகொலை உட்பட முக்கிய படுகொலைகள் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்போம். 1989 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 ஒருங்கிணைப்பாளர்கள் கொல்லப்பட்டார்கள். அதேபோல் சுதந்திர கட்சியின் 6300 உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களுக்கு நீதி கிடைக்காதா? 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனையும் ஆராய வேண்டும். மேலும் தமிழர்களுக்கு எதிரான இன கலவரத்தை மக்கள் விடுதலை முன்னணியே கட்டவிழ்த்துவிட்டது. தமிழர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் இன்று இனநல்லிணக்கம் பற்றி பேசுகிறார்கள் என்றார். https://thinakkural.lk/article/316085
  8. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று ஆரம்பம் 17 MAR, 2025 | 04:27 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் புதன்கிழமை (19) முதல் சனிக்கிழமை (22) வரை - நான்கு நாள்கள் பதின்மூன்று அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று திங்கட்கிழமை (17) காலை இடம்பெற்றது. இதன் போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றிய விபரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அதன் முழு விபரமும் வருமாறு: வருடந்தம் நடைபெறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு வைபவமானது, பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக அமைவதுடன், ஒவ்வொரு பட்டதாரியினதும் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாகவும் இடம்பிடிக்கின்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு பொன் விழா ஆண்டு நிறைவில் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. 39வது பட்டமளிப்பு விழாவுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிப்பார். இந்தப் பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்ப பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் வவுனியா வளாகத்தைச் (தற்போது வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானங்கள் பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பட்டமளிப்பு விழாவில் 399 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 686 உள்வாரி மாணவர்களுக்கும், 702 திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 133 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 399 மாணவர்கள் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை நான்கு மாணவர்களும், முது மெய்யியல்மாணிப் பட்டத்தை 11 மாணவர்களும், தமிழில் முதுமாணிப்பட்டத்தை 22 மாணவர்களும், சைவசித்தாந்தத்தில் முதுமாணிப்பட்டத்தை மூன்று மாணவர்களும், கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப்பட்டத்தை 38 மாணவர்களும், தூய சக்தித் தொழில்நுட்பங்களில் முதுமாணிப் பட்டத்தை ஒரு மாணவரும், கல்வியியலில் முதுமாணிப்பட்டத்தை 176 மாணவர்களும், பொது நிர்வாகத்தில் முதுமாணிப்பட்டத்தை 70 மாணவர்களும், கல்வியில் பட்டப்பின் தகமைச் சான்றிதழை 54 மாணவர்களும், பிராந்தியத் திட்டமிடலில் முதுமாணிப்பட்டத்தை 17 மாணவர்களும், தமிழில் பட்டப்பின் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெறவிருப்பதுடன் வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை இரண்டு மாணவர்களும் பெறுகின்றனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 147 மாணவர்கள் மருத்துவமாணி சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 177 மாணவர்கள் பொறியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 110 மாணவர்கள் விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 84 மாணவர்கள் பொறியியலில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், 91 மாணவர்கள் உயிர்முறைமைகளில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், சித்தமருத்துவ பீடத்தில் இருந்து 60 மாணவர்கள் சித்த மருத்துவ சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர். இவர்களுடன், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் இருந்து மருந்தகவியல் சிறப்புமாணிப் பட்டத்தை 39 மாணவர்களும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 52 மாணவர்களும், தாதியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 38 மாணவர்களும் பெறவிருக்கின்றனர். அத்துடன், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து சிறப்பு வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை 267 மாணவர்களும், வியாபார நிர்வாகமாணிப் (பொது) பட்டத்தை 13 மாணவர்களும், சிறப்பு வணிகமாணிப் பட்டத்தை 83 மாணவர்களும், வணிகமாணிப் (பொது) பட்டத்தை மூன்று மாணவர்களும் பெறவிருக்கின்றனர். இவர்களுடன், கலைப்பீடத்தில் இருந்து சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 276 மாணவர்களும், பொதுக் கலைமாணிப் பட்டத்தை 353 மாணவர்களும், மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 22 மாணவர்களும், சட்டமாணியில் சிறப்புப் பட்டத்தை 69 மாணவர்களும் பெறவிருக்கின்றனர். மேலும், சேர். பொன் இராமநாதன் ஆற்றுகைகள், காண்பியக் கலைகள் பீடத்தைச் சேர்ந்த 158 மாணவர்கள் நடனம், இசை மற்றும் சித்திரமும் வடிவமைப்பும் துறைகளில் நுண்கலைமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர். மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 36 மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 30 மாணவர்கள் கணனி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 57 மாணவர்கள் சுற்றுச் சூழல் விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமாணிப் பட்டத்தை இரண்டு மாணவர்களும், தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தை 106 மாணவர்களும், பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணி பட்டத்தை 56 மாணவர்களும் பெறவிருக்கின்றனர். வியாபாரக் கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 57 மாணவர்கள் கணக்கியலும், நிதியியலிலும் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 13 மாணவர்கள் வியாபாரப் பொருளியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 32 மாணவர்கள் மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 12 மாணவர்கள் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 34 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணி (பொது)ப் பட்டத்தையும், 67 மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், ஒன்பது மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும் பெறவிருக்கின்றனர். இவர்களுடன், தொழில்நுட்பக் கற்கைகள் பீடத்தில் இருந்து 110 மாணவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இளமாணி சிறப்புப் பட்டத்தையும் பெறுகின்றனர். பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் தொலைதூரக் கற்கைகள் முறைமை மூலம் பட்டக் கற்கைகளைப் பூர்த்தி செய்த 514 மாணவர்கள் கலைமாணி பட்டத்தையும், 76 மாணவர்கள் சிறப்பு வணிகமாணிப் பட்டத்தையும், 26 மாணவர்கள் வணிகமாணிப்பட்டத்தையும், 86 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளதுடன், 90 மாணவர்கள் உடற்கல்வியில் உயர் தகமைச் சான்றிதழ்களையும், 37 மாணவர்கள் தொழில்சார் ஆங்கிலத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் உயர் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும், வியாபார முகாமைத்துவத்தில் மூன்று மாணவர்கள் உயர் தகமைச் சான்றிதழ்களையும், வணிகத்தில் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெற இருப்பதுடன், வியாபார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெறுவது உறுதிப்படுத்தப்படவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 68 தங்கப் பதக்கங்களும், 57 பரிசில்களும், நான்கு புலமைப்பரிசில்களும், வழங்கப்படவுள்ளன. ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மதிப்புமிக்க பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கங்களை முறையே 2020 ஆம் கல்வியாண்டு பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து கலைப்பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும், 2021 ஆம் கல்வியாண்டுக்குரிய தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் கலைப்பீடத்தில் இருந்து ஒரு மாணவரும், மருத்துவ பீடத்தில் இருந்து ஒரு மாணவரும் பெறுவதுடன், 2022 ஆம் கல்வியாண்டுக்குரிய தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் முகாமைத்துக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து ஒரு மாணவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் பெறுகின்றனர். மேலும், தூய மற்றும் பிரயோக விஞ்ஞானத்தில் சிறந்த செயலாற்றுகைக்கான பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப் பதக்கத்தை பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பட்டமளிப்பு வைபவத்துக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் நிகழ்வுகளாக அமையும் நினைவுப் பேருரைகளான சேர். பொன் இராமநாதன் நினைவுப்பேருரை பங்குனி மாதம் 26ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப்பேருரை பி.ப 4.00 மணிக்கும் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவிருக்கின்றன. சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தகைசால் பேராசிரியருமான பொ.பாலசுந்தரம்பிள்ளை, “இலங்கை, வடமாகாணத்தில் குடித்தொகை வேறுபாட்டு ஒழுங்கும், இடஞ்சார் பரம்பல் மாற்றங்களும் 1871-2022 (The Population Variations Pattern and Spatial Distributional Changes in the Northern Province of Sri Lanka - 1871-2022)” என்ற தலைப்பிலும், மதிப்புமிகு சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையை கொழும்புப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் கலாநிதி. டர்சி தொறடெனியா, “ பெண்கள் ஆரோக்கியத்தின் முன்னோடி கலாநிதி சிவா சின்னத்தம்பி (Pioneer in Women’s Health Dr.Siva Chinnatamby)” என்ற ஆய்வுத் தலைப்பிலும் நினைவுப் பேருரைகளை நிகழ்த்தவிருக்கின்றனர். https://www.virakesari.lk/article/209459
  9. கோத்ரா கலவரம், ஆர்எஸ்எஸ், காந்தி, சீனா - அமெரிக்க பாட்காஸ்டர் கேள்விக்கு மோதி பதில் என்ன? பட மூலாதாரம்,ANI 17 மார்ச் 2025, 08:24 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரீட்மேனின் யூடியூப் சேனலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நேர்காணல் வழங்கியுள்ளார். இந்த மூன்று மணி நேர 17 நிமிட பாட்காஸ்டில், தனது தனிப்பட்ட வாழ்க்கையைத் தவிர, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து ராஷ்ட்ரா, மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மோதி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, குஜராத் கலவரம் குறித்தும் அவர் பேசியுள்ளார். தவிர, சீனா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உடனான உறவுகள் குறித்தும் இந்த நேர்காணலில் விவாதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், பிரதமர் மோதியின் நேர்காணல் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகங்களை எதிர்கொள்ள அஞ்சுபவர் ஒரு 'வலதுசாரி வெளிநாட்டு பாட்காஸ்டருடன்' பேசியதாகக் கூறியுள்ளார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நேர்காணலில், பிரதமர் மோதி பல்வேறு தலைப்புகளில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். 'பயங்கரவாதம் எங்கும் இருக்கலாம், ஆனால் அதன் பிறப்பிடம் பாகிஸ்தானில் உள்ளது' அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோதி கூறுகையில், "உலகில் எங்கு பயங்கரவாத சம்பவம் நடந்தாலும், அதுகுறித்த தேடல்கள் எப்படியோ பாகிஸ்தானுக்கு இட்டுச் செல்கின்றன" என்றார். "9/11 போன்ற ஒரு பெரிய சம்பவம் அமெரிக்காவில் நடந்தது. அதன் முக்கிய மூளையாக இருந்த ஒசாமா பின்லேடன் எங்கே கண்டுபிடிக்கப்பட்டார்? அவர் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்திருந்தார்" என்று மோதி தெரிவித்தார். "இந்தியாவிற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் பிரச்னையின் மையமாக பாகிஸ்தான் மாறிவிட்டது. இந்தப் பாதையால் யார் பயனடைவார்கள் என்பதை நாங்கள் தொடர்ந்து அவர்களிடம் கூறி வருகிறோம். நீங்கள் பயங்கரவாதத்தின் பாதையை கைவிட வேண்டும். அரசின் ஆதரவு கொண்ட பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும்" என்று பிரதமர் மோதி கூறினார். தொடர்ந்து பிரீட்மேனிடம் பேசிய அவர், "நானே அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்ள லாகூருக்குச் சென்றேன். பிரதமரான பிறகு, ஒரு நல்ல தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக, எனது பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தானை சிறப்பாக அழைத்தேன். ஒவ்வொரு முறையும் எடுக்கப்படும் நல்ல முயற்சிகள் அனைத்தும் எதிர்மறையாக மாறும்." என்றார். அமெரிக்கா: இந்தியர்களை கைவிலங்கிடப்பட்டு அனுப்பிய விவகாரத்தில் என்ன நடந்தது? முழு விவரம்7 பிப்ரவரி 2025 அமெரிக்கா: இந்திய குடியேறிகள் நாடு கடத்தப்படுவது இரு நாட்டு உறவை பாதிக்குமா?6 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவில் 9/11 தாக்குதல் நடந்த இடம் கோத்ரா கலவரம் பற்றி மோதி கூறியது என்ன ? நேர்காணலின் போது, குஜராத்தின் 2002 கலவரம் குறித்தும் பிரதமர் மோதியிடம் ஃப்ரீட்மேன் கேள்விகளைக் கேட்டார். அக்கேள்விகளுக்குப் பதிலளித்த மோதி, "அதற்கு முந்தைய சம்பவத்தை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். டிசம்பர் 24, 1999 அன்று, விமானம் கடத்தப்பட்டு காந்தஹாருக்குக் கொண்டு செல்லப்பட்டது. 2000ம் ஆண்டில், டெல்லியில் உள்ள செங்கோட்டை மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது" என்று கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோதி, "செப்டம்பர் 11, 2001 அன்று, அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அக்டோபர் 2001 இல், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. டிசம்பர் 13, 2001 அன்று, இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது"என்றார். பிறகு, "எட்டு முதல் பத்து மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பாருங்கள். அத்தகைய சூழலில், எனக்கு முதல்வர் பொறுப்பு கிடைத்தது. அதற்கு முன்பு, நூற்றாண்டின் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. நான் பதவியேற்றவுடன் இந்தப் பணியில் ஈடுபட்டேன்" என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சபர்மதி ரயிலின் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் மக்கள் இறந்தனர். "பிப்ரவரி 27, 2002 அன்று, சட்டமன்றத்தில் எனது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் அவையில் அமர்ந்திருந்தோம். நாங்கள் சட்டமன்ற உறுப்பினர்களான மூன்று நாட்களுக்குப் பிறகு, கோத்ரா சம்பவம் நடந்தது. அது ஒரு கொடூரமான சம்பவம். மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். காந்தஹர் விமான விபத்தில் தொடங்கி, பின்னணியில் பல பெரிய சம்பவங்கள் நடந்தன, ஏராளமான மக்கள் இறந்தனர், உயிருடன் எரிக்கப்பட்டனர். நிலைமை எப்படி இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?" என்றார். ஒரு பெரிய கலவரம் நடந்ததாகக் கூறுபவர்கள், இந்தத் தவறான கருத்தைப் பரப்பியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். "2002 ஆம் ஆண்டுக்கு முந்தைய தரவுகளைப் பார்த்தால், குஜராத்தில் எத்தனை கலவரங்கள் நடந்தன என்பதை நாம் காணலாம். பட்டம் விடும் போட்டியில் வகுப்புவாத வன்முறை நடந்துள்ளன. சைக்கிள் மோதலால் கூட வகுப்புவாத வன்முறைகள் நடந்துள்ளன. 2002 ஆம் ஆண்டுக்கு முன்பு, குஜராத்தில் 250க்கும் மேற்பட்ட பெரிய கலவரங்கள் நடந்தன. 1969 ஆம் ஆண்டு நடந்த கலவரங்கள் ஆறு மாதங்கள் நீடித்தன. அத்தகைய பெரிய சம்பவம் ஒரு தீப்பொறியாகி சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்" என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார். மத்திய பட்ஜெட் 2025: 'ஏழை, எளிய மக்களுக்கானது இல்லை' - பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன?2 பிப்ரவரி 2025 அமெரிக்க அதிபரான பிறகு முதன் முறையாக மோதியுடன் பேச்சு - டிரம்ப் முன்வைத்த 2 விஷயங்கள் என்ன?29 ஜனவரி 2025 வங்கதேசம் - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் சந்திப்பு அதிகரிப்பு - இந்தியா கூறியது என்ன?27 ஜனவரி 2025 "நான் போரை அல்ல, அமைதியை ஆதரிக்கிறேன்" பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று மோதி கூறினார். ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையே நீடிக்கும் போர் குறித்து பிரதமர் நரேந்திர மோதி தனது நேர்காணலில் பதிலளித்துள்ளார். "எங்கள் பின்னணி மிகவும் வலுவானது, நாங்கள் அமைதிக்காகப் பேசும் போதெல்லாம், உலகம் எங்கள் பேச்சைக் கேட்கிறது. ஏனென்றால் இது புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் பூமி" என்றார். பிரதமர் மோதி தொடர்ந்து பேசிய போது, ரஷ்யா-யுக்ரேன் குறித்து கூறுகையில், "எனக்கு ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளுடனும் நல்ல உறவு உள்ளது. இது போருக்கான நேரம் அல்ல என்று அதிபர் புதினிடம் நான் கூற முடியும். நட்பு மனப்பான்மையுடன், உலக நாடுகள் உங்களுடன் எவ்வளவு தூரம் நின்றாலும், போர்க்களத்தில் எந்த முடிவும் ஏற்படாது என்று ஸெலென்ஸ்கியிடமும் கூறுகிறேன் " என்றும் தெரிவித்தார். போரின் முடிவு பேச்சுவார்த்தை மூலமே அமையும் என்றும், ரஷ்யாவும் யுக்ரேனும் அந்த மேசையில் உள்ள போது தான் அது நடக்கும் என்றும் பிரதமர் மோதி கூறினார். "உலகமே யுக்ரேனுடன் எவ்வளவு தான் அமர்ந்து பேசினாலும், இரு தரப்பினரும் இருப்பது முக்கியம். நான் அமைதியை ஆதரிப்பவன் என எப்போதும் கூறுவேன்" என்றும் மோதி தெரிவித்தார். சீன அதிபரை அழைத்த டிரம்ப், தனது 'நண்பர்' மோதியை அழைக்காதது ஏன்?22 ஜனவரி 2025 ஹிண்டன்பர்க்: அதானி குழுமத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்த்த நிறுவனம் மூடப்படுவது ஏன்?17 ஜனவரி 2025 இந்தியா: ஒருபுறம் டிரம்ப், மறுபுறம் சீனா, பாகிஸ்தான் - மோதி அரசுக்கு 2025இல் காத்திருக்கும் சவால்கள்17 ஜனவரி 2025 ஆர்.எஸ்.எஸ் மற்றும் காந்தி குறித்து மோதி கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் நரேந்திர மோதி நேர்காணலின் போது, பிரதமர் மோதி ஆர்.எஸ்.எஸ் குறித்து விரிவாகப் பேசினார். "சங்கம் ஒரு பெரிய அமைப்பு. அது 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உலகில் எங்காவது இவ்வளவு பெரிய தன்னார்வ அமைப்பு இருக்குமா? கோடிக்கணக்கான மக்கள் அதனுடன் தொடர்புடையவர்கள். சங்கத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானது அல்ல. சங்கத்தின் செயல்பாடுகளை உணர வேண்டும். சங்கம் வாழ்க்கையின் நோக்கத்திற்கு வழிகாட்டுகிறது" என்று அவர் தெரிவித்தார். மேற்கொண்டு பேசிய அவர், "சங்கத்தின் சில தன்னார்வலர்கள் காடுகளில் வனவாசி கல்யாண் ஆசிரமத்தை நடத்துகிறார்கள். அவர்கள் பழங்குடியினரிடையே ஏகல் வித்யாலயாவை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் சிலர் அவர்களுக்கு 10 முதல் 15 டாலர்கள் நன்கொடை அளிக்கிறார்கள். இதுபோன்ற 70 ஆயிரம் பள்ளிகள் இயங்குகின்றன. அதேபோல், கல்வியில் புரட்சியைக் கொண்டுவர வித்யா பாரதி என்ற அமைப்பு அமைக்கப்பட்டது. அவர்கள் நாட்டில் சுமார் 25 ஆயிரம் பள்ளிகளை நடத்துகிறார்கள்" என்றும் பிரதமர் மோதி குறிப்பிட்டார். கூடுதலாக பாரதிய மஸ்தூர் சங்கம் குறித்தும் பிரதமர் மோதி விவாதித்தார். இதுகுறித்து பேசிய அவர், 'இடதுசாரி தொழிற்சங்கங்கள், உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள் என்று கூறுகின்றன. ஆர்.எஸ்.எஸ் கிளைகளிலிருந்து வெளியே வந்து தொழிற்சங்கங்களை நடத்துபவர்கள், 'தொழிலாளர்களே, உலகை ஒன்றிணையுங்கள்' என்று கூறுகிறார்கள். இரண்டு சொற்களில் மட்டுமே மாற்றம் உள்ளது, ஆனால் கருத்தியல் மாற்றம் மிகப் பெரியது. சங்கத்தின் சேவை மனப்பான்மை என்னை வடிவமைக்க உதவியது" என்று குறிப்பிட்டார். மேலும், மகாத்மா காந்தியின் செல்வாக்கு இன்றும் ஏதோ ஒரு வடிவத்தில் இந்திய வாழ்வில் காணப்படுகிறது என்று பிரதமர் மோதி நேர்காணலின் போது கூறினார். "சுதந்திரத்தைப் பற்றிப் பேசினால், லட்சக்கணக்கான துணிச்சலான மக்கள் இங்கு தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். அவர்கள் தங்கள் இளமையை சிறைகளில் கழித்தனர். அவர்கள் முன்வந்து நாட்டிற்காக தியாகிகளாக மாறினார்கள். அந்தப் பாரம்பரியம் தொடர்ந்தது, அது ஒரு சூழலையும் உருவாக்கியது. ஆனால் காந்தி ஒரு வெகுஜன இயக்கத்தைத் தொடங்கினார். அவர் ஒவ்வொரு செயலையும் சுதந்திரத்தின் நிறத்தால் வண்ணமயமாக்கினார். தண்டி யாத்திரை ஒரு பெரிய புரட்சியை உருவாக்கும் என்று ஆங்கிலேயர்களுக்கு ஒருபோதும் தெரியாது" என்று அவர் தெரிவித்தார். மேலும், மகாத்மா காந்தி கூட்டு உணர்வை வளர்த்ததாகவும், மக்களின் சக்தியை அங்கீகரித்ததாகவும் பிரதமர் மோதி கூறினார். என்னைப் பொறுத்தவரை, அது இன்றும் முக்கியமானது. நான் எந்த வேலை செய்தாலும், பொதுமக்களை இணைத்து செய்வதற்கே முயற்சிக்கிறேன் என்றும் தெரிவித்தார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நீக்க பாஜக மேலிடம் தயாராகிறதா?13 ஜனவரி 2025 ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகலால் இந்தியா - கனடா உறவு மேம்படுமா? ஒரு விரிவான அலசல்7 ஜனவரி 2025 அஜ்மீர் தர்காவுக்கு சால்வை வழங்கிய பிரதமர் மோதி: இந்து சேனா எதிர்ப்பது ஏன்?3 ஜனவரி 2025 'கண்ணுக்குக் கண் உரையாடல்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார். 2013 ஆம் ஆண்டு கட்சி தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்த போது, 'அவர் ஒரு மாநிலத்தில் ஆட்சி புரிந்து வருகிறார், வெளியுறவுக் கொள்கையை அவர் எவ்வாறு புரிந்துகொள்வார்' என்று மக்கள் கூறினர் என பிரதமர் மோதி குறிப்பிட்டார். "அப்போது நான் கூறினேன், ஒரு நேர்காணலில் முழு வெளியுறவுக் கொள்கையையும் விளக்க முடியாது. ஆனால், இதை மட்டும் நிச்சயமாகச் சொல்கிறேன், இந்தியா கண்களைத் தாழ்த்தியோ உயர்த்தியோ பேசாது, ஆனால் கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசும். இன்றும் கூட, நான் அந்தக் கருத்தைப் பின்பற்றுகிறேன். எனக்கு என் நாடுதான் முதன்மையானது. ஆனால் ஒருவரை அவமதிப்பது, ஒருவரைப் பற்றி தவறாகப் பேசுவது, இவை எனது கலாசாரத்தின் மதிப்புகளோ அல்லது எனது பாரம்பரியமோ அல்ல" என்று தெரிவித்தார். மன்மோகன் சிங்கை கோபப்படுத்திய மோதியின் குற்றச்சாட்டு - இரு தலைவர்களின் உறவு எப்படி இருந்தது?28 டிசம்பர் 2024 மோதி, மோகன் பாகவத் இடையே மறைமுக யுத்தம் நடக்கிறதா? உண்மை என்ன?26 டிசம்பர் 2024 மோதிக்கு உயரிய விருது கொடுத்த குவைத் - அந்நாட்டு ஊடகங்கள் கூறுவது என்ன?24 டிசம்பர் 2024 டிரம்ப் குறித்து மோதி கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி. (கோப்புப் படம்) பிரதமர் நரேந்திர மோதி, ஹூஸ்டன் மைதானத்தில் டிரம்புடன் இணைந்து பங்கேற்ற நிகழ்ச்சியைப் பற்றியும் குறிப்பிட்டார். உரைக்குப் பிறகு, அரங்கத்தைச் சுற்றிப் பார்க்கலாமா என்று டிரம்பிடம் கேட்ட போது, அவர் உடனடியாக ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார். "அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பு பதற்றமடைந்து விட்டது. பாதுகாப்பு எவ்வளவு இறுக்கமாக உள்ளது, எத்தனை சோதனைகள் செய்யப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். அவருக்கு இருக்கும் தைரியம் எனது மனதைத் தொட்டது. அவர் சுயமாக முடிவுகளை எடுக்கிறார், இரண்டாவதாக மோதி மீது நம்பிக்கை வைத்துள்ளார், மோதி அழைத்துச் செல்கிறார் என்றால் போகலாம் என்றார்" என்று மோதி நினைவுகூர்ந்தார். அனைத்து நெறிமுறைகளையும் மீறி, டிரம்ப் முழு கட்டடத்தையும் தனக்குக் காட்டியதாக பிரதமர் மோதி கூறினார். "அவர் 'அமெரிக்காவுக்கு முன்னுரிமை' என்பவராக உள்ளார். நான் 'இந்தியாவுக்கு முன்னுரிமை' என்கிறேன். அதனால் எங்களுடைய கூட்டணி சிறப்பாக பொருந்துகிறது." என்றும் கூறினார். அம்பேத்கரை காங்கிரஸ் வேண்டுமென்றே தேர்தலில் தோற்கடித்ததா? ஒரு வரலாற்று ஆய்வு22 டிசம்பர் 2024 இந்தியா - குவைத்: 43 ஆண்டுகளுக்கு பிறகு செல்லும் முதல் பிரதமர் - மோதியின் நோக்கம் என்ன?20 டிசம்பர் 2024 ராகுல் காந்தி ஆர்எஸ்எஸ் குறித்து பேசியது என்ன? பாஜக அஞ்சுவதாக பிரியங்கா காந்தி கூறியது ஏன்?20 டிசம்பர் 2024 சீனாவுடனான உறவுகள் குறித்து மோதி கூறியது என்ன? சீனாவுடனான உறவுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பிரதமர் மோதி பதிலளித்தார். இரு நாடுகளுக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான உறவுகள் இருப்பதாகவும், ஒரு காலத்தில் இந்தியாவும் சீனாவும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியைக் கொண்டிருந்தன என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதற்கான வரலாறு இல்லை என்றும் அவர் கூறினார். "ஒரு காலத்தில் சீனாவில் புத்தரின் செல்வாக்கு மிகவும் வலுவாக இருந்தது." என்றார். அமெரிக்காவில் ஸெலன்ஸ்கி நடத்தப்பட்ட விதம் இந்தியாவுக்கு சொல்லும் சேதி என்ன? டிரம்ப் - மோதி: இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன? 'நீதிபதி நாத்திகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை' - நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிபிசி பேட்டியில் கூறியது என்ன? "இந்த உறவுகள் வலுவாக இருக்க வேண்டும், இதேபோல் தொடர வேண்டும். இரண்டு அண்டை நாடுகளிடையே ஏதாவது ஒன்று நடப்பது இயல்பு தான். சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் இயற்கையானவை. இது குடும்பத்திலும் உள்ளது, ஆனால் எங்கள் வேறுபாடுகள் சச்சரவுகளாக மாறாமல் இருக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்" என்று பிரதமர் மோதி தெரிவித்தார். கால்வானை சுட்டிக்காட்டிய மோதி, "2020 ஆம் ஆண்டு எல்லையில் நடந்த சம்பவங்கள் எங்களுக்கிடையிலான சூழ்நிலையை பதற்றமானது. ஆனால் நான் அதிபர் ஜியைச் சந்தித்த பிறகு, எல்லையில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியது" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgp359n1ego
  10. தமிழீழ விடுதலைப் புலிகள் உள்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் திருத்தியமைக்கப்பட்ட 67 அமைப்புகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 45 பயங்கரவாத அமைப்புகளாகவும், 22 சட்டவிரோத அமைப்புகளாகவும் வகைப்படுத்தப்பட்டு திருத்தி அமைக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள், பாபர் கால்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் கமாண்டோ படை, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை, சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி, ஹர்கத் உல் முஹாஜூதின், அல் உம்ர் முஹாஜூதின், ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி, அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி, சிமி, தமிழ்நாடு விடுதலைப் படை, தமிழ் தேசிய மீட்புப் படை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் போர் உள்பட 45 அமைப்புகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, மக்கள் விடுதலை இராணுவம், தேசிய பெண்கள் முன்னணி, தேசிய மனித உரிமைகள் அமைப்பு கூட்டமைப்பு, அகில இந்திய இமாம்கள் கவுன்சில் உள்பட 22 அமைப்புகள் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் இந்தியாவில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். இந்த அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட உதவி செய்வது கடும் குற்றமாகும். அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/316136
  11. பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள் - கலந்தாலோசனைகள் யார் தலைமையில் இடம்பெற்றது? பட்டலந்த விசாரணை ஆணைக்குழு Published By: RAJEEBAN 17 MAR, 2025 | 04:13 PM ஆணைக்குழுவின் முன் இடம்பெற்ற செயற்பாடுகளின் போது பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சில சந்திப்புகள் கலந்துரையாடல்கள் இடம்பெற்றமை குறித்து தெரியவந்தது. இந்த சந்திப்புகள் கலந்துரையாடலின் உண்மையான தன்மை குறித்து அறிந்துகொள்வது அவசியம். சட்டவிரோத தடுப்பு முகாம் வதைகூடங்களை உருவாக்கி பேணிவந்தமைக்கும் இந்த சந்திப்புகளிற்கும் இடையில் தொடர்புள்ளதா? என்பதை அறிந்துகொள்வதற்கு இந்த சந்திப்புகளின் உண்மையான தன்மை குறித்து அறிந்துகொள்வது அவசியம். ஆணைக்குழுவின் குறிப்பு விதிமுறைகளின் படி, மேலே குறிப்பிடப்பட்ட சித்திரவதை முகாமை உருவாக்கி பேணி வந்ததால், பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் ஏதாவது சதி இடம்பெற்றதா என்பது குறித்து ஆராய்வது அவசியம். பட்டலந்த சந்திப்புகளில் கலந்துகொண்ட முக்கிய நபர்கள் சிலர் வழங்கிய வாக்குமூலங்களை நாங்கள் தற்போது இங்கே ஆராயவிரும்புகின்றோம். அவர்கள் அந்த சந்திப்புகள் தொடர்பில் தெரிவித்த விடயங்கள், அந்த சந்திப்புகளில் ஆராயப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் விடயங்கள். சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் நளின் தெல்கொடவே களனி பொலிஸ் பிரிவில் சிரேஸ்ட அதிகாரி. களனி பொலிஸ் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தால், தெல்கொடவிற்கு அது குறித்து தெரிந்திருக்கும் என எதிர்பார்க்கலாம். அந்த சந்திப்புகளின் மீது அவர் நேரடி கட்டுப்பாட்டைசெலுத்தியிருப்பார். இதன் காரணமாக தெல்கொட இந்த சந்திப்புகள் குறித்து தெரிவித்த விடயங்களில் இருந்து நாங்கள் ஆரம்பிக்கின்றோம். ஆணைக்குழுவிற்கு அவசியமான அல்லது பொருத்தமான அந்த காலப்பகுதியில், பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற இரண்டு மூன்று சந்திப்புகளில் கலந்துகொண்டுள்ளதாக தெல்கொட தெரிவித்தார். அந்த சந்திப்புகள் இடம்பெற்ற சரியான இடத்தை தெரிவிக்குமாறு ஆணைக்குழு அவரிடம் கேட்டவேளை அவர் ரணில் விக்கிரமசிங்கவின் சேர்கியுட் பங்களாவிலேயே அந்த சந்திப்புகள் இடம்பெற்றன என தெரிவித்தார். எனினும் அதன் பின்னர் தான் தெரிவித்ததை மாற்றிய அவர் சேர்கியுட் பங்களாவிற்கு முன்னாலிருந்த வீட்டில் அந்த சந்திப்புகள் இடம்பெற்றதாக தெரிவித்தார். கிளர்ச்சிகாலத்தில் அந்த பகுதிக்கான பாதுகாப்பை ஒருங்கிணைப்பதற்காகவே இந்த சந்திப்புகள் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார். விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்த சந்திப்புகள் இடம்பெற்றதாக தெல்கொட தெரிவித்தார். விக்கிரமசிங்க இந்த சந்திப்புகளிற்கு தலைமை தாங்கியுள்ளார். வழமைக்கு மாறான இந்த சந்திப்புகள், கூட்டங்களிற்கான சரியான காரணங்களை ஆணைக்குழு ஆராய்ந்தது. அமைதியையும் பொது ஒழுங்கையும் பேணுவதற்காகவே இந்த சந்திப்புகள் இடம்பெற்றன என தெல்கொட ஆரம்பத்தில் தெரிவித்தார். தொடர்ந்து கேள்வி எழுப்பியவேளை இந்த சந்திப்புகளில் அந்த பகுதியில் காணப்பட்ட நாசகாரசெயற்பாடுகள் குறித்து ஆராய்ந்ததாக அவர் தெரிவித்தார். இறுதியாக அவர் பெருமளவு தயக்கத்துடன், நாசகார வேலைகளில் ஈடுபடுபவர்களை ஒடுக்குவதற்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கே இந்த சந்திப்புகள் இடம்பெற்றதாக தெரிவித்தார். ஏன் அவர் இதனை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு தயங்கினார் என நாங்கள் ஆச்சரியமடைந்தோம்? 'நாசகார சக்திகளை ஒடுக்குதல் என்பதாலா" பொலிஸார் தங்களிற்கு சட்டரீதியாக அனுமதி வழங்கப்படாத, சட்டவிரோத படுகொலைகள் போன்ற விடயங்களை செய்ததன் காரணமாகவா? ஏன் இந்த சந்திப்புகளிற்கு விக்கிரமசிங்க தலைமை தாங்கவேண்டும் என நாங்கள் கேள்வி எழுப்பினோம். சாட்சியமளித்தவர்களிடம் ஏன் இந்த சந்திப்புகள் கூட்டங்களிற்கு விக்கிரமசிங்க தலைமை தாங்கவேண்டும் என கேள்வி எழுப்பினோம்? ஏனென்றால் அவர் பாதுகாப்பு அமைச்சரோ அல்லது பிரதிபாதுகாப்பு அமைச்சரோ இல்லை என நாங்கள் தெரிவித்தவேளை பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கினார் என தெல்கொட தெரிவித்தார். அதற்கு ஏன் பொலிஸாருக்கு அரசியல் தலைமைத்துவம் அவசியம் என கேள்வி எழுப்பியவேளை நாட்டில் அவ்வேளை நிலவிய சூழ்நிலை காரணமாக அரசியல் தலைமைத்துவத்தை பெறுவது அவசியம், இந்த விடயத்தில் அரசியல் தலைமைத்துவத்தின் உத்தரவுகளை பின்பற்றுவதை தவிர வேறு வழியிருக்கவில்லை என அவர் தெரிவித்தார். 'நான் எனது தலையை பாறையில் கொண்டுபோய் மோதுவது சாத்தியமில்லை," என தெல்கொட தெளிவுபடுத்தினார். இந்த விடயத்தில்தான் வேறு எதனையும் செய்ய முடியாது, தான்நிலைமையை மாற்றினால், அல்லது, அரசியல் தலைமைத்துவத்தின் உத்தரவுகளை எற்க மறுத்தால் அது தனக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையே அவர் அவ்வாறு தெரிவித்தார். பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் இந்த சந்திப்புகளில் ஈடுபட்டதை நியாயப்படுத்த முடியாதவராக தெல்கொட காணப்பட்டார், அவர் அந்த சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்களை பெருமளவிற்கு மறைத்துவிட்டார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். தமிழில் ரஜீபன் https://www.virakesari.lk/article/209461
  12. க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகியது Published By: DIGITAL DESK 3 17 MAR, 2025 | 09:37 AM கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் (2024 கல்வியாண்டுக்கான) இன்று திங்கட்கிழமை (17) ஆரம்பமாகியது. இந்த பரீட்சை எதிர்வரும் 26ஆம் திகதி வரை 3,663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு சீரான காலநிலை நிலவுவதால் மாணவர்கள் முன் கூட்டியே பரீட்சை மண்டபங்களுக்கு வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது. மட்டக்களப்பு மாவட்டத்திலும் சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களில் இருந்து பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோன்றுகின்றனர். ஆலயங்களில் வழிபட்ட பின்னர் மாணவர்கள் பரீட்சை மண்டபங்களுக்குச் சென்றதை அவதானிக்க முடிந்தது. பரீட்சை நிலையங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பெற்றோரிடம் ஆசிர்வாதங்களைப்பெற்று மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைந்ததை காணமுடிந்தது. https://www.virakesari.lk/article/209410
  13. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்ற அன்னலிங்கம் பிரேம சங்கருக்கு கௌரவிப்பு 17 MAR, 2025 | 09:54 AM திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றதை அடுத்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினரால் கௌரவிக்கப்பட்டார். குறித்த நிகழ்வு சனிக்கிழமை (15) திருகோணமலையில் இடம் பெற்றது. குறித்த பதவி உயர்வினை ஜனாதிபதியால் கடந்த செவ்வாய்க்கிழமை (11) வழங்கப்பட்டிருந்தது. குறித்த கௌரவிப்பு நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், ஏ.டபிள்யூ அப்துல் சத்தார் உட்பட சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/209409
  14. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்! 17 MAR, 2025 | 09:10 AM (இராஜதுரை ஹஷான்) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இன்று திங்கட்கிழமை (17) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை (20) வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சரியான தகவல்களுடன் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனுப்பத்திரங்களையும், சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடம் வலியுறுத்தியுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட காலவகாசம் நாளை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. தேர்தல் பணிகளில் ஈடுபட உத்தேசித்துள்ள அரச உத்தியோகஸ்த்தர்கள் தவறாமல் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தலுக்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு உத்தேசித்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 'சரியாகவும், தெளிவாகவும் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனு பத்திரத்தில் ஒரு பிரதியை மாத்திரம் அத்துடன் இணைக்கப்பட வேண்டிய அனைத்து இணைப்புக்களுடன் உரிய காலப்பகுதியினுள் உரிய மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தல் வேண்டும். இளம் வேட்பாண்மையை உறுதிப்படுத்துவதற்காக மேலதிக மாவட்டப் பதிவாளரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதியை சமர்ப்பித்தல் வேண்டுமென்பதுடன், அவ்வாறில்லையேல் சமாதான அல்லது சத்திய ஆணையாளர் ஒருவரால் அத்தாட்சிப்படுத்தி வயதை உறுதிப்படுத்துகின்ற சத்தியக் கடதாசியொன்றினை வேட்புமனுப்பத்திரத்தில் இணைத்து சமர்ப்பித்தல் வேண்டும்' என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் வைப்பிலிடல் மற்றும் வேட்புமனுக்களை கையளித்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 3 ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதற்கமைய கடந்த 3 ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் கட்டுப்பணத்தை வைப்பிட்டன. கட்டுப்பணம் வைப்பிலிடலுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் நாளை மறுதினம் புதன்கிழமையுடன் (19) நிறைவடைகிறது. இன்று திங்கட்கிழமை (17) முதல் புதன்கிழமை (19), மற்றும் எதிர்வரும் வியாழக்கிழமை (20) நண்பகல் வரை வேட்புமனுக்களை சமர்ப்பித்தல் அந்தந்த மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெறும். தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட காலவகாசம் திங்கட்கிழமை (17) நள்ளிரவுடன் நிறைவடையும். ஆகவே சரியான தகவல்களுடன் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. விண்ணப்பங்களை கையளிப்பதற்கு இனி காலவகாசம் வழங்கப்படமாட்டாது. அத்துடன் பூநகரி பிரதேச சபை (கிளிநொச்சி மாவட்டம்) மன்னார் பிரதேச சபை (மன்னார் மாவட்டம்) மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை (அம்பாறை மாவட்டம்) ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தல் கடந்த 10 ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் இடம்பெறுகின்ற நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி (புதன்கிழமை) நிறைவடையும். இந்த பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் 2025.03.24 முதல் 2025.03.27 ஆம் திகதி வரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/209378
  15. கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 16 மார்ச் 2025 "எங்களுக்கு இருக்கும் ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எங்களுக்கு எதிரி கிடையாது. தேர்தலில் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும். அதிமுக கூட்டணி குறித்து தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும்போது சொல்லப்படும்" என கடந்த மார்ச் 4ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்திருந்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவரது இந்தக் கருத்து, தமிழக அரசியலில் கவனம் பெறக் காரணம், சில மாதங்களுக்கு முன்புவரை எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள், 'பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை' என உறுதியாக கூறிவந்தனர். கடந்த ஆண்டு(2024) நவம்பரில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி "திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அதேசமயம் பாஜக-வோடு கூட்டணி இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை" என்றார். தவெக: விஜய் எதிர்பார்ப்பது என்ன? 2026 தேர்தலில் அதிமுக-வுக்கு ஆபத்தா? செங்கோட்டையன் கலகக் குரலா? அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் மாற்றம் நிகழுமா? ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்துகளை தமிழ்நாடு அரசு ஏலம் விடுமா? தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 முக்கிய தீர்மானங்கள் என்ன? இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, "வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயம் தர முடியும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகவும் வர வேண்டும். அது பழனிசாமியுடனா, பழனிசாமி இல்லாமலா என்று தெரியாது." என்றார். கடந்த வாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள்." என கூறியிருந்தார், பிறகு "தான் அதிமுகவை குறிப்பிட்டுப் பேசவில்லை" என விளக்கமும் அளித்தார். அதேநேரத்தில், அண்மைக்காலமாக செங்கோட்டையனின் செயல்பாடும் அதிமுகவில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக, அதிமுக- பாஜக குறித்து வெளியாகும் இத்தகைய கருத்துகளும் அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகளும் '2026 தேர்தலுக்காக, அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா?', 'அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா' போன்ற கேள்விகளை தமிழக அரசியல் களத்தில் எழுப்பியுள்ளன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதிமுக- பாஜக கூட்டணியும் பிரிவும் படக்குறிப்பு,தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் நீடித்த இந்த கூட்டணியால் இரு தேர்தல்களிலும் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழையும் வாய்ப்பு பாஜகவுக்கு மீண்டும் கிடைத்தது. அக்கட்சிக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர். ஆனால், தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. 2023 பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுக்குப் பின், இந்த மோதல் தீவிரம் அடைந்தது. 2023, ஜூன் மாதம், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில கருத்துகளைக் கூறியிருந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை தொடர்புப்படுத்தி அவர் கூறிய கருத்து, அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அண்ணாமலைக்கு எதிராக மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அதிமுக மீதும் அக்கட்சியின் தலைவர்கள் மீதும் அண்ணாமலை விமர்சனங்களை முன்வைத்தார். தமிழ்நாட்டில் முஸ்லிம்களை குறிவைத்து அதிகரித்து வரும் ஹஜ், உம்ரா பயண மோசடிகள்15 மார்ச் 2025 ஔரங்கசீப் கல்லறையை அகற்றும் கோரிக்கை: மத ஒற்றுமை பற்றிய கவலையில் குல்டாபாத் மக்கள்15 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, அக்கட்சியுடனான உறவை முறித்துக்கொள்வதாக, 2023 செப்டம்பரில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் இதன் காரணமாக, 'அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, அக்கட்சியுடனான உறவை முறித்துக்கொள்வதாக,' 2023 செப்டம்பரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பிறகு, 2024 பிப்ரவரியில் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியது குறித்துக் கேட்டபோது, "கூட்டணிக்கான எல்லா கதவுகளும் திறந்தே இருக்கின்றன. இது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்று பதிலளித்திருந்தார். ஆனாலும், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாக இருந்தது அதிமுக. தமிழ்நாட்டில் அரசர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அமைத்த நெடுஞ்சாலைகளும் மைல்கற்களும் - ஒரு வரலாற்றுப் பார்வை15 மார்ச் 2025 தமிழில் ரூபாயை குறிக்க 'ரூ' பயன்படுத்தப்பட ஆரம்பித்தது எப்போது?- ஓலைச் சுவடியில் எப்படி எழுதப்பட்டுள்ளது?14 மார்ச் 2025 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தலைமையில், தனித்தனி கூட்டணிகள் அமைந்தன. தேர்தல் முடிவில் ஒரு தொகுதியில்கூட இவ்விரு அணிகளால் வெற்றி பெற முடியவில்லை. 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டாம் இடம் பிடித்திருந்தது. சில தொகுதிகளில், திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட, அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளின் வேட்பாளர்கள் தனித்தனியே பெற்றிருந்த வாக்குகளின் கூட்டுத்தொகை அதிகமாக இருந்தது. உதாரணமாக, தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக களம் கண்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 4,11,367 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதே தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரா. அசோகன் 2,93,629 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இங்கு பாமக மற்றும் அதிமுக பெற்ற மொத்த வாக்குகள் 7,04,996. இது, இங்கு போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர் மணி பெற்ற வாக்குகளை விட 2,72,329 வாக்குகள் அதிகம். ராஜேந்திர சோழன் தனது சிற்றன்னை நினைவாகக் கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான கோவிலில் வெளிப்பட்ட பாதாள அறை14 மார்ச் 2025 மாநில அரசின் சுமையும் மத்திய அரசு பங்களிப்பு குறைவும் - தமிழ்நாடு பட்ஜெட்டின் 10 முக்கிய அம்சங்கள்15 மார்ச் 2025 'திமுக தான் ஒரே எதிரி' பட மூலாதாரம்,@BABUMURUGAVEL படக்குறிப்பு,திமுக தான் எங்கள் எதிரி என்ற கருத்தை நாங்கள் பல வருடங்களாகவே கூறி வருகிறோம் என்கிறார் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் "எங்களுக்கு இருக்கும் ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எங்களுக்கு எதிரி கிடையாது. தேர்தலில் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும்." என்ற எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பேச்சு குறித்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக செய்தித்தொடர்பாளருமான பாபு முருகவேலிடம் கேட்டோம். "திமுக தான் எங்கள் எதிரி என்ற கருத்தை நாங்கள் பல வருடங்களாகவே கூறி வருகிறோம். எடப்பாடி பழனிசாமி கூறியது போலவே, 2026 தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு ஒரு வெற்றிக் கூட்டணி அமைக்கப்படும். திமுக-வுக்கு எதிரான கட்சிகள் எங்களுடன் சேரலாம்." என்று கூறினார். ஆனால், எந்தக் கட்சி சேர்ந்தாலும் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என்று உறுதியாகக் கூறும் பாபு முருகவேல், "பாஜக குறித்து இப்போதே எதுவும் கூற முடியாது. ஆனால், போட்டி எப்போதும் போல, அதிமுக Vs திமுக தான். அதில் எந்தவித சந்தேகமுமில்லை" என்று தெரிவித்தார். பாஜகவுடன் கூட்டணி அமைக்க, அதிமுக அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்படுகிறதா எனக் கேட்டபோது, "அதிமுக-வுக்கு அழுத்தம் கொடுக்குமளவுக்கு இங்கு எந்தக் கட்சியும் இல்லை, கொடுக்கவும் முடியாது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தலைமையின் முடிவு இருக்குமே தவிர்த்து, வேறு எந்தக் காரணங்களுக்காகவும் எங்களது கட்சியை வளைக்க முடியாது" என்று கூறினார். பட மூலாதாரம்,FACEBOOK/SRSEKAR படக்குறிப்பு,ஆனால், திமுகவை எதிரியாகக் கருதும் எந்தக் கட்சியாக இருந்தாலும் பாஜக கூட்டணியில் இணையலாம் என்கிறார் எஸ்.ஆர்.சேகர் இதுகுறித்து பாஜகவின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் கேட்டபோது, "பாஜக- அதிமுக கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதில் திமுகவும், அதன் ஆதரவு ஊடகங்களும் தெளிவாக உள்ளன. அதனால், இரு கட்சிகளின்ன் தலைவர்களும் பேசுவதை பலவாறாக திரித்து செய்திகள் வெளியிடப்படுகின்றன. இதையெல்லாம் கடந்து, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு 'மெகா கூட்டணியை' பாரதிய ஜனதா கட்சி அமைக்கும். அதில் அதிமுக இருக்குமா என இப்போதே சொல்ல முடியாது. ஆனால், திமுகவை எதிரியாகக் கருதும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அதில் இணையலாம்." என்று கூறுகிறார். தமிழ்நாட்டின் சக்தி வாய்ந்த கட்சிகள் திமுகவுக்கு எதிராக ஓரணியில் சேரும் என்று கூறிய எஸ்.ஆர்.சேகர், "அதற்கான பணிகளை பாஜக முன்னெடுக்கும். அந்தக் கூட்டணியை பாஜக ஒன்றிணைக்கும்" என்கிறார். சீனாவின் பிரபல உணவகத்தில் சூப்பில் சிறுநீர் கழித்த இளைஞர்கள் - நிறுவனம் செய்தது என்ன?15 மார்ச் 2025 இந்திய மருந்துகள் மீது டிரம்ப் வரி விதிப்பது அமெரிக்க மக்களுக்கே சுமையாக மாறும் அபாயம்15 மார்ச் 2025 படக்குறிப்பு,கோப்புப் படம் அதிமுகவில் செங்கோட்டையன் தனித்து செயல்படுகிறாரா? கடந்த பிப்.9-ம் தேதி கோவையில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழா அழைப்பிதழில், எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெறாததால் அதில் பங்கேற்கவில்லை என அவர் காரணம் கூறியிருந்தார். நேற்று முன்தினம் தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, சட்டப்பேரவை வளாகத்தில் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பேரவைத் தலைவர் அப்பாவுவை அவர் சந்தித்தார். அவைத் தலைவரை தனியே சந்தித்தது ஏன்? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, "சபாநாயகரை சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பது சாதாரணமானது. இன்று கூட ஏழு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்துள்ளார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளேன். சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் அங்கு வருகை தந்தார். அவரிடம் அந்த கடிதம் கொடுக்கப்பட்டது" என்று பதிலளித்தார். பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பழனிசாமி, "அதை அவரிடம் கேளுங்கள். காரணம், அவரைக் கேட்டால்தானே தெரியும்?! என்னை சந்திப்பதை அவர் ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடம் சென்று கேளுங்கள். இதெல்லாம் இங்கே கேட்கவேண்டிய கேள்வி இல்லை. தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடிய பிரச்சினைகளை எல்லாம் இங்கே பேசாதீர்கள்." என்றார். அண்மைக்காலமாக செங்கோட்டையனின் செயல்பாடு அதிமுகவில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 'அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படும் அழுத்தம்' படக்குறிப்பு,அதிமுக- பாஜக கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் பிரியன். இது தொடர்பாக பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன், "பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற அழுத்தம் அதிமுகவுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உள்ளது என்பது உண்மை. ஆனால், அதைத் தாண்டி தேர்தல் கணக்கு என்று பார்க்கையில் அதிமுக-பாஜக கூட்டணி அமைவதே இரு கட்சிகளுக்கும் சாதகமாக இருக்கும்" என்கிறார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும், தனித்தனியாக பெற்ற வாக்குகளை சுட்டிக்காட்டும் பிரியன், "திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்தால் என்னவாகும் என்பதை அவர்கள் மக்களவைத் தேர்தலில் பார்த்துவிட்டார்கள். குறிப்பாக கொங்கு மண்டலத்தின் தோல்வி, இதை உணர்த்தியிருக்கும். எனவே கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. செங்கோட்டையன் உள்பட அதிமுகவின் பெரும்பாலான முக்கிய தலைவர்களும் அதையே விரும்புகிறார்கள். அவர்களும் அழுத்தம் கொடுக்கிறார்கள், அதனால் தான் 'திமுக மட்டுமே எதிரி' என எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்." என்கிறார். நடிகர் விஜயின் 'தமிழக வெற்றிக் கழகம்' ஒருபுறம், சீமானின் 'நாம் தமிழர்' ஒருபுறம் என இருப்பதால், இவற்றைத் தவிர்த்து பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை சேர்த்துக்கொண்டு அதிமுக- பாஜக 2026 தேர்தல் கூட்டணி அமையலாம் என்று பிரியன் கூறுகிறார். "ஒருவேளை 2026இல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் கூட, மத்தியில் பாஜக 2029 வரை ஆட்சியில் இருக்கும் என்பதால் அவர்களை அதிமுக பகைத்துக் கொள்ள விரும்பாது. எனவே அதிமுக- பாஜக கூட்டணி அமைய வாய்ப்புகள் அதிகம்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9den22wl9yo
  16. Published By: VISHNU 17 MAR, 2025 | 04:49 AM (எம்.வை.எம்.சியாம்) பட்டலந்த முகாம் ஆட்கொலை விவகாரத்துடன் தொடர்புடைய ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் மறைக்கப்பட்ட உண்மைகளை முழு உலகமும் அறிய வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இது அரசியல் பழிவாங்கல் அல்ல. எனவே தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளருமான புபுது ஜெயகொட தெரிவித்தார். அநுராதபுரத்தில் இடம்பெற்றக் கூட்டமொன்றில் சனிக்கிழமை (15) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் இடம்பெற்ற குற்றங்களுக்கு கண்களால் கண்ட சாட்சியங்கள் உள்ளன. மேலும் காலம் தாழ்த்த வேண்டாம். சாட்சி வழங்கியவர்கள் வயது சென்று மரணிக்கும் வரை காத்திருக்க வேண்டுமா? எனவே பார்த்து கொண்டிருக்க வேண்டாம். தற்போதைய அரசாங்கம் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் போது இரண்டு சட்டங்கள் உள்ளன. ஒன்று 1948 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டம். மற்றையது 1978 ஆம் ஆண்டு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு சட்டம். 1948 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தில் அந்த ஆணைக்குழுவுக்கு பிரஜா உரிமை இரத்து செய்யுமாறு கூறும் அதிகாரம் இல்லை. அந்த 1978 ஆம் ஆண்டும் சட்டத்தில் அந்த அதிகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பட்டலந்த விவகாரம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவை சந்திரிக்கா ஆராய்ந்தார். அவரது நண்பரை பாதுகாப்பதற்காக 1978 கொண்டு வந்த சட்டம் அதுவல்ல. ஆனால் அது 1948 ஆம் ஆண்டு சட்டத்துக்கு அமையவே அது இடம்பெற்றது. பட்டலந்த விவரகாம் தொடர்பான அதிகாரம் மேற்கொண்ட ஆணைக்குழுவுக்கு பிரஜா உரிமையை நீக்குவதற்கான அதிகாரம் வழங்க்படபவில்லை. இங்கு ஆட்கொலை இடம்பெற்றுள்ளது. ஆட்கொலை, அரச துரோகங்களுக்கு வேறு சட்டங்கள் தேவையில்லை. அது அறிந்த காலப்பகுதியில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். எனவே இங்கு வேறு விடயங்களை கூறிக்கொண்டிருக்க தேவையில்லை. ஆட்கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எனவே குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்யுங்கள்.குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவு விட முடியும். இந்த விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கூற முடியும். எனவே ரணிலை கைது செய்யுங்கள். டக்லஸ் பிரீஸை கைது செய்யுங்கள். தான் மரணித்து விட்டதாக பகிரங்கப்படுத்தியுள்ளார். எமக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவர் இன்னும் உயிரிழக்கவில்லை. தாம் வாழும் போது உயிரிழந்து விட்டதாக பொய்யான தகவல்களை பரப்புவது பாரிய குற்றமாகும். அங்கு இடம்பெற்ற துன்புறுத்தலில் சுனில் தெல்கொட பிரதான நபர்.அவரையும் கைது செய்யுங்கள். அங்கு கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுங்கள். அங்கு பணியாற்றி ஒய்வுப்பெற்ற ஒருவர் அண்மையில் பல தகவல்களை பகிரங்கப்படுத்தியுள்ளார். சிலர் பாலியல் ஆசைகளை நிறைவேற்றி விட்டு அந்த இளைஞர்களுக்கு செய்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் கண்களால் கண்ட சாட்சியங்கள் உள்ளன. அதேபோன்று சுதத் சந்திரசேகரை கைது செய்யுங்கள். ரணிலின் சீடராகவே சுதத் சந்திரசேகர செயற்பட்டார். அந்த பதவியில் இருந்து விலகிச்செல்லும் அவர் கடிதமொன்றை எழுதி இருந்தார். நான் உங்களுக்காக பல விடயங்களை செய்துள்ளேன். பட்டலந்தவில் மக்களை நீங்கள் கொலை செய்யுமாறு கூறியதன் பின்னர் நான் அதனை செய்தேன் என அவரது கையெழுத்தினால் அவர் கடிதமொன்றை எழுதியுள்ளார். ஒருவர் தாம் கொலை செய்துள்ளதாக பகிரங்கமாக கூறும் போது ஏன் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளார். இதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை வேண்டுமா? எனவே நீதியை பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள். இது அரசியல் பழிவாங்கல் அல்ல. இது ரணில் அல்லது வேறு எவரிடமோ மேற்கொள்ளும் அரசியல் பழிவாங்கல் அல்ல. எமது ஆயிரம் கணக்கான இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். வேண்டுமானால் நாம் அதற்கு மன்னிப்பு வழங்குவோம். பட்டலந்த சித்திரவதை முகாம் ஆட்கொலை விவரகத்துடன் ரணில் மத்திரம் தொடர்பு படவில்லை. மாத்தளை விஜய கல்லூரி புதைகுழி சம்பவம் தொடர்பில் கோட்டாபய பொறுப்புக்கூற வேண்டும். எனவே நீதி கிடைக்கவேண்டும். மறைக்கப்பட்ட உண்மைகளை முழு உலகமும் அறிய வேண்டும். அப்பாவி மக்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை சமூக அறிந்துகொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். அது அரசியல் பழிவாங்கல அல்ல என்றார். https://www.virakesari.lk/article/209401
  17. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் பட்டலந்த வதைமுகாம் பற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புதைக்கப்பட்ட உண்மைகளும் சிதைக்கப்பட்ட மனித உரிமைகளும் பட்டலந்த இருட்டில் இருந்து சூரிய ஒளிக்கு வந்துள்ளதாக அமைச்சர் விமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க விடயமாகும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஜேவிபியினருக்கு எதிரான பட்டலந்த வதைமுகாம் கொடுமைகள் ஜே.வி.பி யினர் ஆட்சியதிகாரத்துக்கு வந்ததன் பின்னர், சுமார் 37 ஆண்டுகளுக்கு முந்திய உண்மைகளை வெளிக்குக் கொண்டு வந்துள்ளனர். அதாவது ஜே.வி.பி. யினர் ஆட்சிக்கு வந்ததால்தான் ஜே.வி.பி யினருக்கு எதிரான சட்டவிரோதக் கொடிய செயல்களை அம்பலத்துக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புகள் 1956 இல் இருந்து ஆரம்பித்து 2009 வரை நடைபெற்றன. தற்போது தமிழர் பண்பாட்டு அழிப்புகள் நடைபெறுகின்றன. வடக்கு, கிழக்கில் குறிப்பாக 1978 -2009 இற்கு இடைப்பட்ட பயங்கரவாத தடைச்சட்ட, அவசர காலச் சட்ட ஆட்சியில் வடக்கு கிழக்கில் பட்டலந்த வதைமுகாமையும் மிஞ்சிய பல வதை முகாம்கள் கொலை முகாம்கள் காணப்பட்டன அவற்றில் தமிழர்கள் வகை தொகையின்றி சித்திரவதைகள் பாலியல்வதைகள் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் பட்டலந்த வதைமுகாம் படுகொலைகளை மிஞ்சிய சத்துருக் கொண்டான் கொக்கடிச்சோலை கொண்ட வட்டவான், கரடியனாறு, கல்லடி போன்ற பல முகாம்கள் சித்தரவதை படுகொலைகள் என்பவற்றுக்குப் பெயர் போன முகாம்களாக இருந்தன. ஒரே இரவில் 4 கிராமங்களைச் சேர்ந்த 186 பொதுமக்களை சித்திரவதைகள், பாலியல் பலாத்காரம் புரிந்து படுகொலைகள் செய்த பெருமை சத்துருக் கொண்டான் இராணுவ வதை முகாமுக்குண்டு. குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள்,உடல் ஊனமுற்றவர்கள் என்ற பேதமில்லாமல் சமத்துவப் படுகொலை செய்த கொடூரம் சத்துருக் கொண்டான் வதைமுகாமுக்கு உண்டு. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வடக்குக் கிழக்கில் பட்டலந்தை போன்ற வதை முகாம்களுக்குப் பஞ்சம் இருக்கவில்லை. கொலைகள் சித்திரவதைகள் ஸ்ரீலங்காவின் வன்மக்கலைகள் என்று சொலத்தக்க விதத்தில் சட்டபூர்வமான அதிகாரம் பெற்ற சக்திகளாலும் துணைக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன இவற்றை ஆராய்ந்து நீதி வழங்கும் தகுதி கடந்தகால அரசாங்கங்களுக்கு இருக்கவில்லை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஜேவிபி சகாக்கள் கொல்லப்பட்டதனால் பட்டலந்த வதைகள் கொலைகளை விசாரிக்க முன்வந்துள்ளன. ஆனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட வதைகள், கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டதை விசாரணை நடாத்தி நீதி வழங்கும் சம தருமம் தேசிய மக்கள் சக்திக்கு இருக்குமா? என்ற ஐயம் தமிழர்களுக்கு உண்டு. பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதாலும் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் சிங்களப் படையினர் என்பதாலும் இந்த சந்தேகம் தமிழர்களுக்கு கனதியாக உள்ளது என்று குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/316072
  18. பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா அதிபரால் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய முடியும் - முன்னாள் மனித உரிமை ஆணையாளர் 16 MAR, 2025 | 05:16 PM (இராஜதுரை ஹஷான்) பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களம் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய புதிய அரசியலமைப்பில் மக்கள் 'உயிர்வாழும் உரிமையை' உள்ளடக்க வேண்டும் என முன்னாள் மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பட்டலந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு தமது அறிக்கையில் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. விரிவான சாட்சிகள் கோரப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அரசாங்கம் பட்டலந்த விசாரணை அறிக்கையின் மூல பிரதியை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்தால்குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். பட்டலந்த விசாரணை அறிக்கையில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் மக்கள் 'உயிர்வாழும் உரிமை' உள்ளடக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே உத்தேச புதிய அரசியமைப்பு உருவாக்கத்தின் போது மக்கள் 'உயிர் வாழும்' உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். 'பட்டலந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை சபைமுதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கடந்த வெள்ளிக்கிழமை (14) பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்கு உப குழு ஒன்றை நியமிப்பதற்கும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகைள முன்னெடுப்பதற்கு அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் விவாதத்தையும், மே மாதம் இரண்டாம் நாள் விவாதத்தையும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/209385
  19. 16 MAR, 2025 | 05:16 PM (இராஜதுரை ஹஷான்) பொலிஸ் சேவை உட்பட பாதுகாப்பு சேவை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டில் சட்டம் என்பதொன்று கிடையாது என பாதாள குழுக்கள் கருதுகின்றன. அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கண்டியில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிபலனாகவே பொலிஸ் திணைக்களத்துக்கும், பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. இந்த முரண்பாடுகள் பொலிஸ் ஆணைக்குழு வரை தொடர்கிறது. இதனால் முழு பாதுகாப்பு கட்டமைப்பும் பலவீனமடைந்துள்ளது. நாட்டில் சட்டம் என்பதொன்று கிடையாது என்று ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்கள் கருதுகின்றனர். தமக்கு இணக்கமானவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கும் அளவுக்கு பொலிஸ் சேவை இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் சேவை மாத்திரமல்ல, பாதுகாப்பு சேவை உட்பட புலனாய்வு பிரிவும் இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் சேவை உட்பட பாதுகாப்பு சேவைகள் இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதால் சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளது. பொலிஸ்மா அதிபரை கைது செய்வதற்கு பொலிஸார் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளனர். இது உலக நகைச்சுவையாகும். தேசபந்து தென்னகோனை பொலிஸார் கைது செய்யமாட்டர்கள். உயர்நீதிமன்றத்தின் ஊடாக பிணை பெற்றுக்கொள்வதற்கு தேசபந்துக்கு சாதகமான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. அதுவரையில் அவர் கைது செய்யப்படமாட்டார். நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய குடியரசு முன்னணியின் சார்பில் பென்சில் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார். https://www.virakesari.lk/article/209384
  20. 2025 ஜனவரி மாதத்திற்கான அதிகாரபூர்வ வறுமைக்கோடு அட்டவணையை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2025 ஜனவரியில் ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு மாதத்தில் தேவைப்படும் குறைந்தபட்ச தொகை 16,334 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 டிசம்பரில் பதிவு செய்யப்பட்ட ரூ.16191ஐ விட இது 0.88% அதிகமாகும். இலங்கையில் பணவீக்கம் 2025 ஜனவரியில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி இலங்கையில் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது, இது முக்கியமாக வறுமைக்கோடு உயர்வதற்கு காரணமாக உள்ளது. வறுமைக்கோடு அட்டவணை மாவட்ட மட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது, அதில் கொழும்பு மாவட்டத்தில் அதிக மதிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு அவர்களின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 17,617 ரூபாய் தேவைப்படும். குறைந்த பெறுமதி மொனராகலை மாவட்டத்திலிருந்து 15,618 ரூபாவாக பதிவாகியுள்ளது. https://tamilwin.com/article/sri-lanka-economy-status-2025-1742121542
  21. சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் காவல்துறையினருடன் நட்பாக இருப்பதால் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்(N. Vedanayagam) தெரிவித்துள்ளார். அத்துடன், இது ஆபத்தான நிலைமையை உருவாக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி(Kilinochchi) கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று(16.03.2025) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். போர்ச் சூழல் அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “2003ஆம் ஆண்டிலிருந்து இறுதிப்போர் வரையில் இந்த மாவட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலராகவும், மாவட்டச் செயலராகவும் பணியாற்றியிருக்கின்றேன். கடந்த போர்ச் சூழலிலும் கல்விக்கான வசதிகள் உள்ளிட்ட சகல சேவைகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. வளங்கள் குறைவாக இருந்தாலும் மக்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்தோம். இன்று வளங்களும், தொடர்பாடலும் பெருகிவிட்டாலும் மக்களுக்கான சேவைகள் என்பது அருகிவிட்டது. அன்றைய எமது சேவைகளுக்கும் இன்றைய காலத்துச் சேவைகளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அரசாங்கத் தொழில்கள் இன்று பொதுமகன் அரச திணைக்களத்துக்குச் சென்றால் அரசாங்க அதிகாரிகள் பந்தடிப்பதுபோன்று அலைக்கழிக்கின்றனர். அல்லது இழுத்தடிக்கின்றனர். போர்க்காலத்தில் பணியாற்றியவர்கள் மக்களுக்குச் சேவை செய்யும் நோக்குடன் பணியாற்றினார்கள். இன்று அப்படியல்ல. கடந்த காலங்களில் அரசியலுக்காக ஒரு சில அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன. தொழிலுக்காக சம்பளம் வழங்கவில்லை. சம்பளம் வழங்கவேண்டும் என்பதற்காக அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன. மக்களுக்கான சேவை இதனால் உருவாகிய அரசாங்க அதிகாரிகள் பலர் தங்கள் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கின்றார்கள் இல்லை. ஏழையைக் கண்டால் உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் இயல்பாக மனதில் எழவேண்டும். அப்படிச் சிந்திப்பவர்கள் இன்று குறைவு. ஏழைக்குச் செய்யும் சேவையும், பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யும் சேவையும்தான் மிகப்பெரிய சேவை.” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/northern-province-governor-vedanayagam-speech-1742117936
  22. 16 MAR, 2025 | 11:53 AM உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது தாய்மொழியை பாதுகாக்கும் முயற்சி” என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, ஜன சேனா கட்சியின் 12-வது ஆண்டு விழாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அக்கட்சியின் தலைவரான பவன் கல்யாண் பேசி இருந்தார். அப்போது அவர், “இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. அது தேசத்துக்கு சிறப்பு சேர்க்கும். இது தமிழகத்துக்கும் பொருந்தும். இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் திரைப்படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யக் கூடாது. ஆனால், நிதி ஆதாயத்துக்காக தமிழ் படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்படுகின்றன” எனக் கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது எங்களின் தாய்மொழியை, எங்களது கலாச்சார அடையாளத்தை சுயமரியாதையோடு பாதுகாக்கும் முயற்சியாகும். இதை யாரேனும் பவன் கல்யாணுக்கு எடுத்துச் சொல்லவும்” என்று சமூக வலைதளப் பக்கத்தில் கருத்தைப் பகிர்ந்துள்ளார். பவன் கல்யாணின் கருத்துக்கு திமுக எம்.பி. கனிமொழியும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “தொழில்நுட்ப வளர்ச்சி எங்களை திரைப்படங்களை மொழி எல்லைகள் கடந்து ரசிக்கும்படி செய்திருக்கிறது” என்று குறிப்பிட்டு, பவன் கல்யாண் கடந்த 2017-ஆம் ஆண்டு தெரிவித்த கருத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தப் பதிவில் பவன், “வட இந்திய அரசியல்வாதிகள் நம் கலாச்சார பன்முகத்தன்மையை புரிந்து உரிய மரியாதை கொடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அன்றைய கருத்தையும், இன்றையும் கருத்தையும் ஒப்பிட்டு பவன் கல்யாணை கனிமொழி விமர்சித்துள்ளார். பவன் கல்யாணின் கருத்துக்கு பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/209354
  23. 16 MAR, 2025 | 02:12 PM (எம்.நியூட்டன்) கணித விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது என யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறைப் பேராசிரியர் க.சசிகேஷ் தெரிவித்தார். சட்டத்தரணி செல்வஸ்கந்தனால் மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட மகாஜனன் கணித விஞ்ஞான திறன்காண் போட்டிப்பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (15) தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பாவலர் துரையப்பாப்பிள்ளை மண்டபத்தில் நடைற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினரீக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கணித விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது. இது கவலையான விடயமாக உள்ளது. கணித விஞ்ஞான துறையில் மாணவர்கள் தெரிவு செய்வது குறைவதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது. சில தவறான கண்ணோட்டமோ தவறான புரிதலோ என்பது புரியாதுள்ளது. கணித விஞ்ஞான துறைகளை விட கலைத்துறையில் வேலைகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலையும் காணப்படுகிறது. ஆனால் கணித விஞ்ஞான துறையில் வேலை இல்லை என்று கூறுவதில்லை. படித்து முடிந்த கையோடு ஆக குறைந்தது. ஒரு வருடம் காத்திருக்க வேண்டிவரும் அதற்குள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ வேலை கிடைத்துவிடும் அல்லது மேற்படிப்புக்கு செல்லலாம். கணித, விஞ்ஞான துறைக்கு தற்போதும் ஆசிரியர்கள் பற்றாகுறையாகவே உள்ளது. மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் சரியான முறையில் தெளிவுபடுத்தல்களை, தயார்படுத்தல்களை செய்தால் அந்த துறையில் மாணவர்களை முன்னேற்றமடைய செய்யலாம். எனைய துறையைப்போல் வேலையில்லா போராட்டம் வேலையில்லா பிரச்சினைக்குள் சிக்குப் படதேவையில்லை என்பது எனது கருத்தாகும். கணித விஞ்ஞான துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்தே சட்டத்தரணி இ. செல்வஸ்கந்தனால் மாகாண மட்டத்தில் மகாஜனன் கணித விஞ்ஞான திறன்காண் போட்டிப்பரீட்சையை நீண்டகாலமாக நடாத்திவருகிறார். அரசாங்கமும் இந்த துறையை ஊக்கப்படுத்திவருகிறது. தற்போது இப்போட்டியில் பலமாணவர்கள் பங்குபற்றிவருகிறார்கள் என்பது பாராட்டுதலுக்குரியது. இது தொடரவேண்டும். இதேவேளை பல்கலைக்கழகங்களுடாகவோ அல்லது வேறு நிறுவனங்களுடாககவோ புத்தாக்க போட்டிகள் இடம்பெற்றுவருகின்றன. அவற்றிலும் மாணவர்களை ஊக்கத்தோடு பங்குபற்றவைக்க வேண்டும். சில் புத்தாக்க போட்டிகளில் ஒரு சில பாடசாலைகளே பங்குபற்றுகின்றன கிரமங்களில் உள்ள பாடசாலைகள் இத்தகைய போட்டிகளில் பங்குபற்றுவது குறைவாகவுள்ளன குறிப்பாக தேசிய ரீதியில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுவது குறைவாகவுள்ளது. இத்தகைய போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தடைகள் காணப்பட்டால் ஏற்பாட்டளர்களுடன் தொடர்பு கொண்டு அவற்றை சீர்செய்து கொள்ளலாம். தற்போதைய சூழலில் குறிப்பாக 2009 ஆண்டு யுத்தத்திற்கு பின்னரான சூழலில் யாழ் பல்கலைக்கழகத்தில் கணித விஞ்ஞான தூறையில் 65 வீதமனா மாணவர்கள் தென்னிலங்கையை சேர்ந்த மாணவர்களே கல்வி கற்கிறார்கள். தமிழ் மாணவர்களின் வீதம் குறைந்துகொண்டு செல்கிறது என்றார். https://www.virakesari.lk/article/209359
  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கேவின் பட்லர் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தென் கொரியாவில் ஏர்பஸ் ஏ321 விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது. ஒரு பவர் பேங்க்-ஆல் தீ விபத்து ஏற்பட்டது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் கொரியாவில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் ஜனவரி 28, 2025 அன்று ஏர் பூசன் பயணிகள் விமானம் தீப்பிடித்தது. இதில் மூன்று பேர் லேசான காயமடைந்தனர். தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் மார்ச் 14 அன்று, விசாரணையில் பவர் பேங்க் செயலிழந்திருப்பது தெரியவந்ததாகக் கூறியது. அதன் காரணமாக விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. பயணிகள் அமரும் இருக்கைக்கு மேலே உள்ள உடைமைகள் வைக்கும் பகுதியில் பவர் பேங்க் இருந்தது. அங்குதான் முதலில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. தாங்கள் கண்டுபிடித்த பவர் பேங்க்கில் தீப்பற்றியதற்கான தடயங்கள் இருந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், பவர் பேங்கின் பேட்டரி ஏன் சேதமடைந்தது என்று தெரியவில்லை. முக்கியமான விஷயம் என்னவென்றால், இது ஒரு இடைக்கால விசாரணை அறிக்கை மட்டுமே. விமானத்தின் இறுதி விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அமெரிக்காவில் இருந்து வெளியேறிய இந்திய மாணவி 'ரஞ்சனி ஸ்ரீநிவாசன்' யார்? பின்னணி தகவல்கள் பூமிக்கு வரும் விண்கலத்தின் வேகம் 39,000 கிலோமீட்டரில் இருந்து சில நிமிடங்களில் 800 கி.மீ.யாக குறைவது எப்படி? வங்கதேச ராணுவத்தில் பாகிஸ்தான் ஆதரவுக் குழு அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சியா? 2016 முதல் தடை உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக, செக் இன் உடைமைகளுடன் (விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒப்படைக்கும் உடைமைகள்) பவர் பேங்குகளை எடுத்துச் செல்ல பல ஆண்டுகளாக தடை விதித்துள்ளன. பவர் பேங்குகளில் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இந்த பேட்டரிகள் கடுமையான வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டவை. மேலும், அதில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் மின்கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்ட அறிவுரைகளின்படி, 2016 ஆம் ஆண்டு முதல் பயணிகள் விமானத்தின் செக் இன் உடைமைகளுடன் எந்தவித லித்தியம்-ஐயன் பேட்டரிகளையும் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது. தென் கொரியாவில் ஏர்பஸ் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, ஏர் பூசன் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. பயணிகள் விமானத்தின் உள்ளே இருக்கைகளுக்குக் கொண்டு செல்லும் உடைமைகளில் பவர் பேங்க்குகளை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. பவர் பேங்குகள் அதிக வெப்பமாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - எப்போது திரும்புவார்?7 மணி நேரங்களுக்கு முன்னர் சுனிதா வில்லியம்ஸ்: மீட்புக் குழுவின் ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்ன?13 மார்ச் 2025 பாகிஸ்தான்: கடத்தப்பட்ட ரயிலில் இருந்து 300 பயணிகள் மீட்பு, 33 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை13 மார்ச் 2025 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,தென் கொரியாவில் விமான விபத்துக்கான காரணம் குறித்த இடைக்கால விசாரணையில், விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பவர் பேங்க் காரணமாக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது அதே நேரத்தில், சீனா ஏர்லைன்ஸ் மற்றும் தாய் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் இதே போன்ற விதிகளை அமல்படுத்துகின்றன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விலைக்குறைவான விமான சேவை பிரிவான ஸ்கூட், ஏப்ரல் 1 முதல் விமானங்களில் பவர் பேங்க்குளைப் பயன்படுத்தவும், சார்ஜ் செய்யவும் தடை செய்ய உள்ளது. நாட்டில் விமானங்களில் ஏறும் பயணிகள், கையில் எடுத்து செல்லும் பேட்டரிகள் மற்றும் சார்ஜர்களை இருக்கைக்கு மேலே உள்ள உடைமைகள் வைக்கும் பகுதியில் வைக்காமல், தங்களுடன் வைத்துக்கொள்ளுமாறு பிப்ரவரி 28 அன்று, தென் கொரிய அரசு அறிவித்துள்ளது. லித்தியம் பேட்டரிகளால் கப்பல்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்ட சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்துள்ளன. மார்ச் 2017 இல், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து பெய்ஜிங்குக்குச் சென்ற விமானத்தில் ஒரு பெண்ணின் ஹெட்ஃபோன்கள் வெடித்தன. இதனால் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. தனது ஹெட்ஃபோன்கள் வெடிக்கும் சத்தம் கேட்டு எழுந்த அந்தப் பெண், உடனடியாக அவற்றைக் கழற்றி தரையில் வீசினார். விபத்துக்குப் பிறகு, லித்தியம் அயன் பேட்டரியில் ஏற்பட்ட கோளாறால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. முன்னதாக, சிட்னியில் ஒரு விமானத்தில் உடைமைகள் வைத்திருந்த பகுதியில் இருந்து புகை வெளியேறியதைக் கண்டதால் விமானம் நிறுத்தப்பட்டது. பின்னர் உடைமைகளில் வைக்கப்பட்டிருந்த லித்தியம் அயன் பேட்டரி தீப்பிடித்து எரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஜியோ, ஏர்டெல் ஒப்பந்தம் - இணைய வேகம், கட்டணம் எவ்வளவு இருக்கும்?12 மார்ச் 2025 ரூ.13,000 கோடி கிரிப்டோகரன்சி கொள்ளை: வட கொரிய ஹேக்கர்கள் செயல்படுவது எப்படி?12 மார்ச் 2025 பலூச் விடுதலை ராணுவம்: பாகிஸ்தானில் பயணிகளுடன் ரயிலை கடத்தி மிரட்டும் இவர்கள் யார்?12 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லித்தியம் அயன் பேட்டரிகள் கடுமையான வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டவை குப்பைக் கிடங்குகள் மற்றும் கழிவுகளை அகற்றும் பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் 700க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக பிரிட்டன் சுற்றுச்சூழல் சேவைகள் சங்கம் 2022 ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை தூக்கி வீசப்படும் லித்தியம் பேட்டரிகளால் ஏற்படுகின்றன. லித்தியம் அயன் பேட்டரிகள் சேதம் ஏற்பட்டாலோ அல்லது உடைந்தாலோ வெடிக்கக்கூடும். இந்த பேட்டரிகள் பவர் பேங்குகளில் மட்டுமல்ல, பல் துலக்கும் பிரஷ்கள், பொம்மைகள், மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czed0xky599o
  25. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025 பதில்கள் No Question Team1 Team 2 No Result Tie Prediction 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR RCB No Result Tie KKR 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH RR No Result Tie RR 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK MI No Result Tie CSK 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC LSG No Result Tie LSG 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT PBKS No Result Tie GT 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RR KKR No Result Tie KKR 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH LSG No Result Tie LSG 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK RCB No Result Tie CSK 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT MI No Result Tie GT 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் DC SRH No Result Tie DC 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RR CSK No Result Tie CSK 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI KKR No Result Tie KKR 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG PBKS No Result Tie LSG 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RCB GT No Result Tie GT 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR SRH No Result Tie KKR 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG MI No Result Tie MI 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK DC No Result Tie CSK 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS RR No Result Tie RR 19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR LSG No Result Tie KKR 20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH GT No Result Tie GT 21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI RCB No Result Tie MI 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS CSK No Result Tie CSK 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT RR No Result Tie GT 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB DC No Result Tie DC 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK KKR No Result Tie CSK 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG GT No Result Tie LSG 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH PBKS No Result Tie SRH 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR RCB No Result Tie RR 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC MI No Result Tie MI 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் LSG CSK No Result Tie CSK 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் PBKS KKR No Result Tie KKR 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC RR No Result Tie RR 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI SRH No Result Tie MI 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB PBKS No Result Tie PBKS 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT DC No Result Tie GT 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR LSG No Result Tie RR 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS RCB No Result Tie RCB 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI CSK No Result Tie CSK 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR GT No Result Tie GT 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG DC No Result Tie LSG 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH MI No Result Tie MI 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB RR No Result Tie RR 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK SRH No Result Tie CSK 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR PBKS No Result Tie KKR 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI LSG No Result Tie LSG 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC RCB No Result Tie DC 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR GT No Result Tie GT 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC KKR No Result Tie KKR 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK PBKS No Result Tie CSK 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் RR MI No Result Tie RR 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT SRH No Result Tie GT 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB CSK No Result Tie CSK 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR RR No Result Tie KKR 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS LSG No Result Tie LSG 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH DC No Result Tie DC 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI GT No Result Tie GT 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR CSK No Result Tie KKR 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS DC No Result Tie DC 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG RCB No Result Tie RCB 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH KKR No Result Tie SRH 61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS MI No Result Tie MI 62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் DC GT No Result Tie GT 63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK RR No Result Tie RR 64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB SRH No Result Tie SRH 65) புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT LSG No Result Tie GT 66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI DC No Result Tie MI 67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR PBKS No Result Tie RR 68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB KKR No Result Tie KKR 69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் GT CSK No Result Tie GT 70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் LSG SRH No Result Tie SRH 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT GT KKR Select KKR KKR LSG Select LSG Select MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB Select SRH Select SRH Select 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) CSK #2 - ? (3 புள்ளிகள்) GT #3 - ? (2 புள்ளிகள்) KKR #4 - ? (1 புள்ளி) RR 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! RCB 74) செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team KKR 76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRH 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) RCB 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Sanju Samson 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Varun Chakravarthy 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Travis Head 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rashid Khan 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Yashasvi Jaiswal 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.