Everything posted by ஏராளன்
-
பாஜகவுடன் கூட்டணி சேர பழனிசாமிக்கு அழுத்தம் தரப்படுகிறதா? அதிமுகவில் என்ன நடக்கிறது?
எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் சமாதானம் ஆனாரா? பின்னணியில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 18 மார்ச் 2025 "தனிப்பட்ட பிரச்னைகளைப் பற்றி பேச வேண்டாம். நான் யாரையும் எதிர்பார்த்தது இல்லை. கூட்டத்தை ஏன் தவிர்த்தார் என அவரிமே கேளுங்கள்." செங்கோட்டையன் தொடர்பான கேள்விக்கு மார்ச் 15ஆம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி இது. அதுவே மார்ச் 17ஆம் தேதி அவர் அளித்த பேட்டியில் சற்று உற்சாகம் தென்பட்டது. அப்போது, "எங்களை யாராலும் பிரிக்க முடியாது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். நான் முதலமைச்சர் ஆன காலத்தில் இருந்தே இதே திட்டத்தைப் போட்டு வருகிறார்கள். அ.தி.மு.க-வை யாராலும் உடைக்க முடியாது; முடக்க முடியாது," எனக் கூறினார். இரண்டு நாள் இடைவெளியில் என்ன நடந்தது? எடப்பாடி பழனிசாமியிடம் கே.ஏ.செங்கோட்டையன் சமாதானம் ஆனாரா? செங்கோட்டையன் தரப்பு சொல்வது என்ன? அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை புறக்கணித்த செங்கோட்டையன் தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, பட்ஜெட் கூட்டத் தொடரை எதிர்கொள்வது தொடர்பான அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தை கோபிச்செட்டிபாளையம் தொகுதி எம்.எல்.ஏ-வும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்தார். மார்ச் 15ஆம் தேதியன்று வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, நடைபெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. அதேநேரம், சபாநாயகர் அப்பாவுவை தனது தொகுதிப் பிரச்னை தொடர்பாக செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். இது விவாதத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சட்டமன்றக் கூட்டத் தொடரில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு அ.தி.மு.க தீர்மானித்தது. இதுகுறித்து ஆலோசிக்க எடப்பாடி பழனிசாமி கூட்டிய கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக கடந்த சனிக்கிழமையன்று (மார்ச் 15) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "அதைப் பற்றி அவரிடமே கேளுங்கள். அவருக்கு வேறு வேலைகள் இருக்கும். தனிப்பட்ட பிரச்னைகளைப் பற்றிப் பேச வேண்டாம். யாரையும் எதிர்பார்த்து நான் இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி கோபத்தை வெளிப்படுத்தினார். ஆனால், கடந்த ஒன்றரை மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையில் மோதல் தொடங்கிவிட்டது. பிப்ரவரி 9ஆம் தேதியன்று அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாய சங்கங்கள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆனால் அதற்கான விழா அழைப்பிதழ்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை எனக் கூறி விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா, மகளிர் தின விழா ஆகியவற்றை செங்கோட்டையன் புறக்கணித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னதாகவே அவர் பங்கேற்றார். இந்த நிகழ்வுகள் உள்கட்சி மோதலை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டினர். ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு அளிப்பதுதான் பிரச்னைக்குக் காரணம் என்றொரு கருத்தும் முன்வைக்கப்பட்டது. செங்கோட்டையன் கலகக் குரலா? அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் மாற்றம் நிகழுமா? ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்துகளை தமிழ்நாடு அரசு ஏலம் விடுமா? எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்தது ஏன்?- செங்கோட்டையன் கொடுத்த விளக்கம் பட மூலாதாரம்,@KASENKOTTAIYAN முடிவுக்கு வந்த உட்கட்சி மோதல் ஆனால், கடந்த திங்கள் கிழமையன்று (மார்ச் 17) உள்கட்சி மோதல்கள் முடிவை எட்டின. சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க கொண்டு வந்தது. சபாநாயகர் அப்பாவு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதையும் முன்வைத்து அ.தி.மு.க இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. தீர்மானத்தை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜூ உள்பட 16 பேர் முன்மொழிந்தனர். இதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறிவிட்டுத் தனது இருக்கையில் இருந்து அப்பாவு எழுந்து சென்றுவிட்டார். பின்னர் துணை சபநாயகர் பிச்சாண்டி சபையை நடத்தினார். அப்போது குரல் வாக்கெடுப்பு தொடர்பாக துணை சபாநாயகர் கூறிய அறிவிப்பு, அ.தி.மு.க சார்பில் தேர்வான புதிய உறுப்பினர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. "ஆனால் இதுதான் நடைமுறை" என எடப்பாடி பழனிசாமியிடம் சென்று செங்கோட்டையன் கூறினார். "மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் சொல்வதுதான் சரியானது. அதன்படியே செயல்படுங்கள்" என அ.தி.மு.க உறுப்பினர்களை நோக்கி எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதன்மூலம் இருவருக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பார்க்கப்பட்டது. இதை செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, "எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை" எனக் கூறினார். ஷேக் ஹசீனா இந்தியாவில் மாதக்கணக்கில் தங்கியிருப்பது ஏன்? அடுத்து என்ன?18 மார்ச் 2025 கனடாவின் புதிய பிரதமர் இந்தியாவுடன் உறவை மேம்படுத்துவாரா? குடியேற்ற கெடுபிடிகள் தளருமா?18 மார்ச் 2025 சமாதானம் பேசிய சீனியர்கள் பட மூலாதாரம்,@BABUMURUGAVEL படக்குறிப்பு,அ.தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாபு முருகவேல் இதுதொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "இதற்கான பின்னணிக் காரணம் என்னவென்று தெரியவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார். அ.தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது அவர், "இருவருக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை. செய்தியாளர் சந்திப்பில் பொதுச்செயலாளர் பேசிய கருத்துதான் எங்களின் நிலைப்பாடு. ஒன்றும் இல்லாத பிரச்னையை ஊதிப் பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறினார். "கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சிலர் செங்கோட்டையனிடம் தனிப்பட்ட முறையில் பேசியதால் இருவருக்கும் இடையே மோதல் முடிவுக்கு வந்ததாகப் பேசப்படுகிறதே?" எனக் கேட்டபோது, "கட்சியின் பொதுச் செயலாளரும் செங்கோட்டையனும் இயல்பாக இருந்தாலும் பொதுவெளியில் அது செய்தியாக மாறுகிறது. அதைத் தவிர்க்கும் வகையில் செங்கோட்டையனிடம் பேசியுள்ளனர். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்," எனக் கூறினார். டாஸ்மாக்: அமலாக்கத் துறை சோதனை ஏன்? மது விற்பனையில் உள்ள பிரச்னைகள் என்ன?18 மார்ச் 2025 சென்னையில் புதிதாக கார் வாங்க விரும்புவோர் அறிய வேண்டிய புதிய கொள்கை18 மார்ச் 2025 செங்கோட்டையனுக்கு நெருக்கடியா? பட மூலாதாரம்,@KASENKOTTAIYAN ஆனால், இந்த விவகாரத்தில் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமின் கருத்து வேறாக இருக்கிறது. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அ.தி.மு.க கொறடா முடிவுக்கு மாறாக எதிர்த்து வாக்களித்து இருந்தால் செங்கோட்டையனின் பதவி பறிபோக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தகுதி நீக்க முடிவை உடனே எடுத்துவிட முடியாது" எனக் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கோபிச்செட்டிபாளையம் தொகுதியைக் காலியானதாக அறிவித்து தேர்தலை நடத்துவது சாத்தியமல்ல. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் மட்டுமே இருக்கிறது," என்றார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். "இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. 2017ஆம் ஆண்டு தகுதி நீக்கம் என அறிவித்தாலும் 2019ஆம் ஆண்டுதான் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது" எனக் கூறுகிறார் ஷ்யாம். அதேநேரம், தனியார் ஊடக நிறுவனம் நடத்திய விழாவில் செங்கோட்டையன் பேசியதைக் குறிப்பிடும் ஷ்யாம், "அவர் பிரதமர் மோதி, நிதி அமைச்சர் ஆகியோரைப் பாராட்டிப் பேசினார். தான் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டார். ஆனால் அடுத்து வந்த நாள்களில் அவருக்கான சமிக்ஞை வராமல் போனதால் சமாதானம் ஏற்பட்டிருக்கலாம்," எனக் கூறுகிறார். தொடர்ந்து பேசிய ஷ்யாம், "எடப்பாடி பழனிசாமியை போல அதிரடி அரசியல் காட்டக்கூடிய நபர் செங்கோட்டையன் அல்ல. மேற்கு மண்டலத்தில் சமூகரீதியாக அவருக்கு நெருக்கடிகள் வந்திருக்கலாம்," எனவும் குறிப்பிட்டார். ஆனால் இதை மறுத்துப் பேசும் பாபு முருகவேல், "கட்சிதான் பெரிது. தனி நபர்கள் அல்ல. கட்சிக்கு விரோதமாகவோ பொதுச் செயலாளருக்கு எதிரான நிலைப்பாட்டையோ செங்கோட்டையன் எடுக்கவில்லை. அவ்வாறு எடுத்திருந்தால் பேசலாம்," என்கிறார். 'சமாதானம் ஏற்பட்டுவிட்டது' - செங்கோட்டையன் தரப்பு இதுதொடர்பாக, கே.ஏ.செங்கோட்டையனிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. அவர் சார்பாகப் பேசிய அவரது உதவியாளர் கதிர் முருகன், "இரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஆகிவிட்டது. இருவரும் நல்லபடியாகப் பேசி முடித்துவிட்டனர்" என்று மட்டும் பதில் அளித்தார். இதன் பின்னணி குறித்த மேலதிக கேள்விகளை எழுப்பியபோது, அவர் பதில் அளிக்கவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y0899ew0lo
-
ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160 இலட்சம் ரூபா செலவு; வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் விசாரணை அவசியமென்கிறார் அமைச்சர் பிமல்
அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும் செல்லவில்லை ; ரணில் தரப்பு விளக்கம் 18 MAR, 2025 | 09:40 PM (எம்.மனோசித்ரா) அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணங்களையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவும் 2023 ஆம் ஆண்டில், அரச செலவில் லண்டன் சென்றதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். 2023ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று சந்தர்ப்பங்களில் லண்டன் சென்றுள்ளார். மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்குப்பற்றுவதற்காக 2023 மே மாதம் 9ஆம் திகதி லண்டனுக்கான முதலாவது பயணத்தை மேற்கொண்டிருந்தார். பாரிஸ் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் சர்வதேச ஜனநாயக சங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான அமர்வில் கலந்துகொள்வதற்கான இரண்டாவதாக லண்டன் சென்றிருந்தார். அதனையடுத்து ஹவானாவில் நகரத்தில் இடம்பெற்ற G77 உச்சி மாநாட்டில் கலந்து கொண்தன் பின்னர், நியூயோர்க்கிற்கும் பின்னர் லண்டனுக்கும் பயணித்திருந்தார். மைத்ரி விக்ரமசிங்கவுக்கு பிரித்தானியாவின் வல்வர்ஹெப்டன் பல்கலைக்கழகத்தினால் பேராசிரியர் பதவி வழங்கும் நிகழ்வு அந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், நியூயோர்க்கிற்குச் சென்று வரும் வழியில் அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். இந்த பயணங்களின்போது அவர் பல அரச தலைவர்களை சந்தித்திருந்ததுடன், பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க சர்வதேச மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் மற்றும் மாநாடுகளிலும் பங்கேற்றிருந்தார். https://www.virakesari.lk/article/209586
-
டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை - முழுமையான யுத்த நிறுத்தத்திற்கான வேண்டுகோளை நிராகரித்தார் ரஸ்ய ஜனாதிபதி
Published By: RAJEEBAN 19 MAR, 2025 | 06:37 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான பேச்சுவார்த்தைகளின் போது உடனடி யுத்தநிறுத்தத்திற்கான வேண்டுகோளை நிராகரித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனின் வலுசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு இணங்கியுள்ளார். உக்ரைன் சமீபத்தில் சவுதி அரேபிய பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொண்ட ஒருமாதகால யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள புட்டின் வெளிநாடுகள் இராணுவ புலனாய்வு உதவிகளை உக்ரைனிற்கு வழங்குவதை நிறுத்தினால் மாத்திரம் முழுமையான யுத்த நிறுத்தம் வெற்றிபெறும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/209604
-
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
பத்திரமாக பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் - கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 17 மணி நேர பயணத்துக்குப் பிறகு சுனிதாவுடன் டிராகன் விண்கலம் கடலில் இறங்கியது 18 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். இந்திய நேரப்படி சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி, மிதந்தது. விண்கலத்தில் இருந்து வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ் சிரித்தபடி கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்தார். இந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் வளிமண்டல மறுநுழைவு என அழைக்கப்படும் ஆபத்தான கட்டத்தைக் கடந்து பூமியை நோக்கி பயணித்தது. பிறகு பல்வேறு கட்டங்களாக பாராசூட்கள் விரிக்கப்பட்டு, அதன் வேகம் குறைக்கப்பட்டு, நீரில் இறங்கி, மிதந்தது. ஸ்பிளாஷ்டவுன் (splashdown) என்ற முறையில் கடல் பகுதியில் விண்கலம் இறங்கியது. அதாவது, விண்கலம் இறங்கும்போது கடலில் உள்ள தண்ணீர் மிகப்பெரும் அளவில் தெறிக்கும் என்பதால், அந்த செயல்முறையை 'ஸ்பிளாஷ்டவுன்' என்கின்றனர். சற்றுத் தொலைவில் படகுகளில் காத்திருந்த மீட்புக் குழுவினர் நான்கு விண்வெளி வீரர்களையும் பத்திரமாக மீட்டனர். Play video, "சுனிதா வில்லியம்ஸ் வந்த விண்கலம் பத்திரமாக கடலில் விழுந்த காட்சி", கால அளவு 0,47 00:47 காணொளிக் குறிப்பு,சுனிதா வில்லியம்ஸ் வந்த விண்கலம் பத்திரமாக கடலில் விழுந்த காட்சி தொடர்பு துண்டிக்கப்பட்ட சில நிமிடங்கள் டிராகன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்தபோது சற்று நேரத்துக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது வழக்கமான நடைமுறையாகும். அப்போது விண்கலத்தைச் சுற்றி 1927 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. டிராகன் விண்கலத்தின் வெப்பத்தடுப்பு ஓடுகள் உள்ளே இருந்த விண்வெளி வீரர்களைப் பாதுகாத்தன. சிறிது நேரத்துக்குப் பிறகு தகவல் தொடர்பு மீட்கப்பட்டு கடலில் இறங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. தன்னிச்சையாக விண்கலம் பூமியை நோக்கி விரைந்தது. அப்போது விண்கலம் சுமார் 27,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. பின்னர் விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கும் பாரசூட்கள் விரிந்தன. நாசாவின் கேமராக்களில் இந்த நிகழ்வுகள் தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு கடலில் வந்து விழுந்த விண்கலத்தை, நாசாவின் மீட்புப் படகுகள் பத்திரமாக கப்பலுக்கு எடுத்து வந்தன. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட வீரர்களுடன் டிராகன் விண்கலம் கடலில் விழுந்தது. துள்ளிக் குதித்த டால்பின்கள் விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி பல டால்பின்கள் மேற்புறத்தில் நீந்திக் கொண்டிருந்தது நாசாவின் கேமராக்கள் காட்டின. அது மீட்புக் குழுவுக்குக் கிடைத்த பெருமை என்று நாசா விஞ்ஞானிகள் நகைச்சுவையாகக் கூறினர். கடலில் இருந்து விண்கலம் மீட்புப் படகில் ஏற்றப்பட்டபோது அதில் இருந்த கடல் நீர் கொப்பளித்து வெளியேறியது. சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் சாப்பிடுவது, குளிப்பது, கழிவுகளை அகற்றுவது எப்படி?18 மார்ச் 2025 மனிதர்கள் குவித்து வரும் விண்வெளிக் குப்பைகளால் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து18 மார்ச் 2025 விண்வெளியில் 'சிக்கியவர்கள்' என்பது உண்மையா? சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் திட்டமிடப்பட்ட 8 நாட்களை விட அதிக நாட்கள், அதாவது சுமார் 286 நாட்கள் விண்வெளியில் தங்க நேரிட்டது. இருவரும் விண்வெளியில் சிக்கித் தவிப்பதாக விவரிக்கப்பட்ட போதிலும் அது ஒருபோதும் உண்மையில்லை. ஏனெனில், கப்பல்களில் உள்ள உயிர் காக்கும் படகுகள் போலவே, சர்வதேச விண்வெளி நிலையத்திலும் ஒரு விண்கலம் அவசர கால பயன்பாட்டிற்காக எப்போதும் இணைந்தே இருக்கும். போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்ட நாசா, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு கருதி, அதே விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவதை தவிர்த்துவிட்டது. அதற்குப் பதிலாக, அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தொடர்ந்து தங்கியிருக்கவும், ஏற்கனவே திட்டமிட்டபடி, பூமியில் இருந்து செல்லும் அடுத்த விண்கலத்தில் இருவரும் பூமிக்கு அழைத்து வரவும் நாசா தீர்மானித்தது. நாசாவின் இந்த முடிவே, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதை மாதக்கணக்கில் தள்ளிப் போட்டது. ஆகவே, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளியில் அதிக காலம் தங்கி ஆய்வுகளைத் தொடர்ந்தனர். அவர்கள் சுற்றுப்பாதை ஆய்வகத்தில் பல சோதனைகளை மேற்கொண்டதுடன், ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையிலும் அவர்கள் பலமுறை ஈடுபட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES விண்வெளியில் தங்கிய கூடுதல் நாட்களில் இருவரும் சாதித்தது என்ன? விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண்மணி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே அதிக மணிநேரம் செலவழித்த பெண் ஆகிய சாதனைகளை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். இது சுனிதா வில்லியம்ஸின் மூன்றாவது விண்வெளிப் பயணம். மூன்று பயணத்திலும் சேர்த்து மொத்தமாக ஒன்பது முறை விண்வெளியில் நடந்துள்ளார் சுனிதா. இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 62 மணி நேரம் 6 நிமிடங்களை அவர் விண்வெளி நடையில் செலவிட்டுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடியே, அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தது, கிறிஸ்துமஸ் கொண்டாடியது, ஏற்கனவே வீட்டில் செலவிட திட்டமிட்டிருந்த கிறிஸ்துமஸுக்கு ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பியது, செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தியது என பலவற்றையும் அவர்கள் சாதித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்தக் கட்டம் என்ன? 9 மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் விரைவில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், அங்கு அவர்கள் மருத்துவ நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவார்கள். நீண்ட கால விண்வெளி பயணங்கள் உடலை பாதிக்கின்றன, விண்வெளி வீரர்கள் எலும்பு அடர்த்தியை இழந்து தசை இழப்பை சந்திக்கின்றனர். இரத்த ஓட்டமும் பாதிக்கப்படுகிறது. கண் பார்வையும் பாதிக்கப்படலாம். உடல் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் ஆகலாம், எனவே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரின் உடலும் புவி ஈர்ப்பு விசையுடன் வாழ்வதற்கு மீண்டும் பழகுவதால் அவர்களுக்கு விரிவான உடற்பயிற்சி முறை வழங்கப்படும். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது அளித்த பேட்டிகளில், இருவருமே தாங்கள் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் தங்குவதற்கு நன்கு தயாராக இருந்ததாகக் கூறியுள்ளனர் . கடந்த மாதம் CBS இடம் பேசிய சுனிதா வில்லியம்ஸ், "என் குடும்பத்தினரையும், என் அன்புக்குரிய நாய்களையும் மீண்டும் பார்ப்பதுடன், கடலில் குதிப்பதையும் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். பூமிக்குத் திரும்பி பூமியை உணருவது மிகவும் நன்றாக இருக்கும் ." என்றார். பட மூலாதாரம்,NASA விண்வெளி எத்தகைய கடினமானது என்பதை உணர்த்திய பயணம் புட்ச் மற்றும் சுனிதாவின் வியத்தகு பணி, விண்வெளி கடினமானது என்பதை நமக்குக் காட்டுகிறது என்று பிபிசியின் அறிவியல் பிரிவு ஆசிரியர் ரெபேக்கா மொரெல்லி கூறுகிறார். நினைத்தது தவறாகப் போகலாம். தவறானது நடக்கலாம். அப்படி நிகழும்போது, சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்கிறார் அவர். "எட்டு நாட்களில் முடிய வேண்டிய பணியை ஒன்பது மாதங்களாக நீட்டிக்க வேண்டியிருப்பது நாசாவிற்கு சாதாரணமானது அல்ல. ஆனால் புட்ச் மற்றும் சுனிதா இந்த சூழலுக்கு ஒரு பதிலாக இருக்கின்றனர். புதிய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு விண்வெளி நிலையத்தில் வாழ்வது - ஒரு விண்வெளி வீரர் என்பதற்கான ஒரு பகுதியாகும்." ஒரு திட்டத்தை வைத்திருப்பது - அதை மாற்றுவதற்கும் தயாராக இருக்க வேண்டியது ஆகியவற்றை இந்தப் பயணம் உணர்த்தியிருக்கிறது என்கிறார் ரெபேக்கா. பட மூலாதாரம்,NASA 900 மணி நேர ஆராய்ச்சி, 150 பரிசோதனைகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் திட்டமிட்டதற்கு மாறாக பல மாதங்கள் தங்கியிருக்க நேரிட்ட சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்ஸ்மோரும் அங்கு பல சாதனைகளைப் படைத்திருக்கின்றனர். இந்த விண்வெளிப் பயணத்தின் போது அவர்கள் 900 மணிநேர ஆராய்ச்சிகளைச் செய்திருக்கின்றனர். நாசாவின் விண்வெளி செயல்பாட்டு இயக்குநரகத்தின் ஜோயல் மொண்டல்பானோ இந்தத் தகவலைக் கூறியிருக்கிறார். சுனிதா, புட்ச் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் பணியாற்றிய காலத்தில் 150 பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். நாசா விண்வெளி வீரர்கள் செய்திருக்கும் பணி "தேசத்திற்கு நன்மை பயக்கும்" என்றும், தசாப்தத்தின் இறுதிக்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதரை தரையிறக்கும் இலக்கை நாசா அடையும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்றும் மொண்டல்பானோ கூறுகிறார். போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தால் ஏற்பட்ட காலதாமதம் 61 வயதான வில்மோர், 58 வயதான சுனிதா இருவரும் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலமாக கடந்தாண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். அவர்கள் எட்டே நாட்களில் பூமிக்கு திரும்பி வர வேண்டியது. இந்த ஸ்டார்லைனர் விண்கலம் மனிதர்களுடன் சென்ற போயிங்கின் முதல் விண்கலம் ஆகும். வழக்கமான பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு விண்கலம் எவ்வாறு செயல்படும் என்பதை கவனிப்பதற்கான சோதனை ஓட்டமாக இது இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கிய போது பல பிரச்னைகளை சந்தித்தது. விண்கலத்தை வழிநடத்தும் அதன் ஐந்து உந்துவிசை அமைப்புகள் செயலிழந்தன. அதிலிருந்த ஹீலியமும் தீர்ந்து போனது. இதன் காரணமாக இவர்கள் இருவரும் பூமிக்கு திரும்புவது தாமதமானது. அதன்பிறகு அமெரிக்க தொழிலதிபர் ஈலோன் மஸ்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-இன் விண்கலத்தைக் கொண்டு அவர்களை பூமிக்குத் திரும்ப அழைத்து வருவது என 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவு செய்யப்பட்டது. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் முதலில் அவர்களை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குக் கொண்டு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. பிறகு மார்ச் மாதம் என முடிவு செய்யப்பட்டது. "சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள இரண்டு விண்வெளி வீரர்களையும் விரைவில் பூமிக்கு அழைத்து வருமாறு அதிபர் கூறியுள்ளார். நாங்கள் அப்படியே செய்வோம். பைடன் நிர்வாகம் இத்தனை காலம் அவர்களை அங்கேயே விட்டுவிட்டது மிகவும் மோசமானது," என்று ஈலோன் மஸ்க் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பிய பிறகு உடலில் ஏற்படப் போகும் மாற்றங்கள் பூமிக்கு வரும் விண்கலத்தின் வேகம் 39,000 கிலோமீட்டரில் இருந்து சில நிமிடங்களில் 800 கி.மீ.யாக குறைவது எப்படி? பூமிக்கும் விண்கலத்துக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால் என்ன ஆகும்? விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் இதயம் வேகமாக முதுமை அடையுமா? சுனிதா வில்லியம்ஸின் பின்னணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2013-ஆம் ஆண்டு மும்பை புறநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுனிதா வில்லியம்ஸ் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட படம். கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி நடையில் அதிக அனுபவம் கொண்ட பெண்களில் இரண்டாவது இடத்தில் (9 முறை 62 மணி 6 நிமிடம்) உள்ளார். "விண்வெளியில் இருந்து நாம் வாழும் இந்த பூமியை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன்" - இது தனது விண்வெளி பயணங்கள் குறித்து சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்த வார்த்தைகள். தற்போது வெற்றிகரமாக மற்றுமொரு நீண்ட விண்வெளி பயணத்தை நிறைவு செய்து, பூமிக்கு திரும்பியுள்ள இவருக்கு உலகெங்கிலும் வாழ்த்துகளும், வரவேற்புகளும் குவிந்து வருகிறது. சுனிதா லின் வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரர். கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் 'எக்ஸ்பெடிஷன் -14' குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதாவை நாசா சேர்த்துக் கொண்டது. 1965-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா. அவருடைய அப்பா தீபக் பாண்டியா, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தீபக் பாண்டியா 1958-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். சுனிதாவின் அம்மா போனி பாண்டியா. சுனிதாவின் கணவர் மைக்கேல் வில்லியம்ஸ். அவரும் ஒரு விமானியாக பணியாற்றியவர். தற்போது அவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். 1998-ஆம் ஆண்டு நாசா சுனிதாவை விண்வெளி வீரராக தேர்வு செய்தது. சுனிதா அமெரிக்க கடற்படை அகாடமியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் ஒரு திறமையான போர் விமானி என்று குறிப்பிடுகிறார் உள்ளூர் பத்திரிகையாளர் சலீம் ரிஸ்வி. சுனிதா இதுவரை 30 வகையான விமானங்களை இயக்கியுள்ளார். அதில் அவர் 2700 மணி நேரம் பறந்த அனுபவத்தையும் பெற்றிருக்கிறார். படிப்பை முடித்த சுனிதா வில்லியம்ஸ் கடற்படையில் விமானியாக தன்னுடைய பணியை துவங்கினார். ஆதவி: பொம்மைகளுடன் விளையாடும் வயதில் 'கார்பன் நியூட்ரல்' அங்கீகாரம் பெற்ற குழந்தை18 மார்ச் 2025 'இந்திய கிரிக்கெட் பிதாமகன்' என்று இவரை அழைப்பது ஏன்? பன்முக ஆளுமையின் ஆச்சர்யம் தரும் வாழ்க்கை18 மார்ச் 2025 பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணங்கள் 2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி முதன்முறையாக டிஸ்கவரி விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு பயணப்பட்டார். Expedition 14 குழுவுடன் பணிகளைத் தொடர்ந்த அவர் Expedition 15 விண்கலத்தில் பணிகளை முடித்துக் கொண்டு 2007ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பூமிக்கு திரும்பினார். 2012ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி இரண்டாவது விண்வெளிப் பயணத்தை ரஷ்யாவின் சோயுஸ் டிஎம்ஏ-05 எம் விண்கலத்தின் மூலம் மேற்கொண்டார் சுனிதா வில்லியம்ஸ். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அதே ஆண்டில் நவம்பர் 19ம் தேதி பூமிக்கு திரும்பினார். 2015ம் ஆண்டில் வணிகரீதியான விண்வெளி பயணங்களுக்கான முதல் விண்வெளி வீரராக சுனிதா வில்லியம்ஸ் அறிவிக்கப்பட்டார். இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக 2024ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்தார். ஸ்டார்லைனர் விண்கலத்தின் த்ரஸ்டர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இக்குழு இன்றி விண்கலம் பூமிக்கு திரும்பியது. இதனால் வெறும் 8 நாட்கள் மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த இந்த பயணம், 9 மாதங்களைக் கடந்து நீண்டது. 2025, மார்ச் 15ஆம் தேதி இவர்கள் இருவரையும் அழைத்துவர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிகளை தொடர ஏதுவாக புதிய குழுவினர் அந்த விண்கலத்தில் சென்றனர். க்ரூ-10 திட்டத்தின் கீழ், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நள்ளிரவு 12 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்துடன் வெற்றிகரமாக இணைந்ததாக நாசா கூறியது. பிறகு, மார்ச் 17 இந்திய நேரப்படி காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை நோக்கிய தங்களது பயணத்தை, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வரும் தொடங்கினார்கள். 59 வயதான சுனிதா வில்லியம்ஸ் தனது விண்வெளிப் பயணத்தில் அனுபவத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். எதிர்பாராத விதமாக கூடுதல் நாட்கள் தங்க நேர்ந்த போதிலும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக நாசா தொடர்ந்து கூறிவந்தது. இறுதியாக அவர் இன்று (மார்ச் 19) பத்திரமாக பூமியை வந்தடைந்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8yp625kppo
-
காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்தாக்குதல்-200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
தலைக்கு மேலே 16 போர் விமானங்கள் - பிள்ளைகளின் உடல்களை சுமந்தபடி மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்" - காசாவில் மீண்டும் பெரும் அவலம் Published By: RAJEEBAN 18 MAR, 2025 | 05:06 PM காசா மீது மீண்டும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 400க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை அந்த பயங்கரமான தருணங்களை காசா மக்கள் ஊடகங்களிற்கு விபரித்துள்ளனர் 16 விமானங்கள் தலைக்கு மேலே காணப்பட்டன, பலர் தங்கள் குழந்தைகளின் உடல்களை தூக்கியவாறு மருத்துவமனைக்கு வந்தனர் என ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாங்கள் காசாவின் அனைத்து பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல் சத்தத்தை கேட்டு அச்சத்துடன் கண்விழித்தோம் என ஆசிரியர் அகமட் அல் ரிஸ்க் அல் ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார். குண்டுவீச்சின் ஆரம்ப தருணங்களை பகிர்ந்துகொண்டுள்ள அவர் நாங்கள் அஞ்சிநடுங்கினோம் எங்கள் பிள்ளைகளும் அஞ்சி நடுங்கின பல உறவுகள் எங்களின் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக எங்களை தொடர்புகொண்டார்கள், அம்புலன்ஸ்கள் ஒரு வீதியிலிருந்து மற்றைய வீதிக்கு ஒடத்தொடங்கின என அவர் குறிப்பிட்டுள்ளார். பிள்ளைகளின் உடல்களை கையில் சுமந்தபடி குடும்பங்கள் மருத்துவமனைக்கு வரத்தொடங்கின என அவர் குறிப்பிட்டுள்ளார். எங்கள் தலைக்கு மேலே 16 போர்விமானங்களும் ஆளில்லா விமானங்களும் காணப்பட்டன நாங்கள் பெரும் அச்சத்தில் சிக்குண்டோம் என அவர் தெரிவித்துள்ளார். காசா மருத்துவமனைகள் முற்றாக செயல் இழந்து காணப்படுகின்ற சூழ்நிலையிலேயே காசாவின் சுகாதார கட்டமைப்பு முற்றாக சிதைவடைந்துள்ள நிலையிலேயே இந்த தொடர்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். ஐந்து செகன்டிற்கு ஒரு வெடிப்பு சத்தம் கேட்பதாக ஐநாவின் பணியாளர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். யுனிசெவ் அமைப்பின் பேச்சாளர் ரொசாலியா பொலொன் தென்காசாவின் அல்மவாசியில் உள்ளார். இது அனைவருக்கும் மிகவும் கடினமான இரவு என அவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். பாரிய வெடிப்பு சத்தங்கள் காரணமாக நான் கண்விழித்தேன், நான் தங்கயிருந்த வீடு குலுங்கியது, அடுத்த 15 நிமிடங்கள் நாங்கள் ஒவ்வொரு ஐந்து செகன்டிற்கும் ஒரு வெடிப்புச் சத்தங்கள் என்ற அடிப்படையில் வெடிப்பு சத்தங்களை கேட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். வெளியே அலறல்களையும் அம்புலன்ஸ் சைரன்ஸ்களையும் கேட்டதாக தெரிவித்துள்ள அவர் தலைக்கு மேலே விமானங்களின் இரைச்சல் கேட்டது என தெரிவித்துள்ளார். மனிதாபிமான பொருட்கள், எரிபொருட்கள் சமையல் எரிவாயு போன்றவற்றின் விநியோகத்தினை நிறுத்தி மின்சார விநியோகத்தினை நிறுத்திய பின்னரே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். 15 மாதங்களிற்கு முன்னரே சுகாதாரசேவையை முற்றாக அழித்துவிட்டனர் என தெரிவித்துள்ள அவர், நான் பேசிய சிறுவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர் அதிர்ச்சியில் உள்ளனர் என தெரிவித்துள்ளார். காசாவில் பணிபுரியும் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் இஸ்ரேல் மீண்டும் வான் வழித்தாக்குதலை மேற்கொண்டவேளை தான் பார்த்த முழுமையான படுகொலை மற்றும் அழிவு குறித்து ஸ்கை நியுசிற்கு தெரிவித்துள்ளார். டெய்ர் அல் பலாவில் உள்ள நாசர் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பெரோஸ் சித்வா இஸ்ரேலின் புதிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் பெண்கள் குழந்தைகள் என தெரிவித்துள்ளார். நேற்று இரவு நான் ஆறு சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டேன், இவர்களில் சிலர் ஆறுவயதிற்கு உட்பட்ட குழந்தைகள் துரதிஸ்டவசமாக அவர்கள் அனைவரும் உயிரிழக்கப்போகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். இது பேரழிவு, கூடாரங்கள் மீது குண்டுகளை வீசினால் இதுவே நடக்கும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஒரு சம்பவம் நடந்தாலும் அமெரிக்காவின் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பிவிடும், மரதன் குண்டுவெடிப்பின் போது நான் அங்கிருந்தேன் அங்கு பெரும் குழப்பம் நிலவியது என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அன்று பார்த்தது காசாவில் இன்று நான் பார்த்தன் சிறிய அளவே என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/209578
-
பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள்
அண்ணை, ஏட்டுக்கல்வி ஓரளவுக்கு மேல் கற்க முடியாதவர்களுக்கு ஆல்பாஸ் என வாழ்க்கையையும் காலத்தையும் வீணடிக்காமல் தொழிற்கல்வியை 9 ஆம் ஆண்டில் இருந்து 11வரை கற்பித்து பயிற்சி கொடுத்து 16 வயதில் பகுதிநேர வேலைகளுக்கு அனுப்பினால் 20 வயதில் தேர்ந்த நிபுணராக வாழ்வை தொடங்கலாம்.
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
அண்ணை, அவருக்கு முன்னாள் ஜனாதிபதிகளின் செல்வாக்கு இருக்கோ இல்லையோ! பொலீசில நல்ல செல்வாக்கு இருக்கு! புதிய அரசிலும் செ.வாக்கு இருக்குதோ?! யாரறிவார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
KKR ஐ மாற்றிவிடுங்கோ அண்ணை.
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
தந்தையின் இழப்பால் துயருற்றிருக்கும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள், ஓம் சாந்தி.
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரத்தில் சிக்கிய சிறைச்சாலை அதிகாரி! கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக இன்று (17) கைது செய்யப்பட்ட பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரியை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு குற்றப்பிரிவினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (17) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். விசாரணை சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், சம்பவம் நடந்த அன்று சந்தேக நபரான கணேமுல்ல சஞ்சீவவை சந்தேகநபரான சிறைச்சாலை அதிகாரி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அதன்படி, அவர் கடமை தவறியதால் இந்தக் குற்றம் நடந்ததா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்ற சந்தேக நபரைக் கைது செய்ய சந்தேகநபரான அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவு இவ்வாறானதொரு பின்னணியில், சந்தேக நபரின் தொலைப்பேசி அழைப்புகளின் பதிவை அழைக்கவும் காவல்துறையினர் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர். இதன்படி, கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சந்தேக நபரை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர். https://ibctamil.com/article/jailer-ganemulla-sanjeewa-murder-case-arrested-1742216032
-
பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள்
'இவர்களின் கதைகளை சொல்ல வேண்டும்' - பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள் பட மூலாதாரம்,JAYARAJ S படக்குறிப்பு,பழனியம்மாள் அதிகாலையில் 2 மணிக்கெல்லாம் எழுந்து செங்கல் சூளையில் வேலை செய்ய வேண்டும் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 17 மார்ச் 2025, 05:55 GMT புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர் அதிகாலை 2 மணிக்கெல்லாம் ஜெயராஜின் அம்மா பழனியம்மாளுக்கு விடிந்துவிடும். இரவு எத்தனை மணிக்குத் தூங்கினாலும் 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பது, செங்கல் சூளையில் வேலை பார்க்கும் அவருக்கு ஓர் அனிச்சை செயல். தலைப்பாகை அணிந்து சேறும் சகதியுமான ஆடையுடன் நாள் முழுக்க தன் அம்மா வேலை செய்வதை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளார், 12ம் வகுப்பு படிக்கும் ஜெயராஜ். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சின்னத்தம்பிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ், ஈரோடு அரசு மாதிரிப் பள்ளியில் படித்துவருகிறார். "நானும் செங்கல் சூளையில் அம்மாவுடன் வேலை செய்திருக்கிறேன். மண்ணைக் குழைத்து, செங்கலை உருவாக்குவது வரை கடுமையான வேலை அது. தலையில் மண்ணை சுமந்து, குழைத்து அதனை செங்கல்லாக உருவாக்க வேண்டும். மதியம் வெயிலில் அதிக வேலைகளை பார்க்க முடியாது என்பதால் அதிகாலையிலேயே அம்மா வேலை பார்ப்பார். அவரை புகைப்படம் எடுப்பதற்காக அதிகாலை 2 மணிக்கு ஒருமுறை எழுந்தேன். ஒரேயொரு புகைப்படம் எடுத்துவிட்டு தூக்கம் வருகிறது என வந்துவிட்டேன். ஆனால், அம்மாவுக்கு அது தினசரி செயல்பாடு." பட மூலாதாரம்,SHEIK HASAN K ஜெயராஜ் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சுமார் 17 அரசு மாதிரிப் பள்ளிகளில் படிக்கும் 40 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் செய்யும் வேலைகளையும் தங்கள் சுற்றத்தில் உழைக்கும் மக்கள் பலரையும் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளனர். உழைக்கும் மக்களின் வலியை உணர்த்தும் வகையிலான படங்களாக அவை உள்ளன. துப்புரவு பணி, கட்டுமான தொழில், கல் குவாரி, செருப்பு தைத்தல், மஞ்சள் ஆலை, பனை மரம் ஏறுதல், பேருந்து ஓட்டுநர், தையல் தொழிலாளி என, கடும் உழைப்பை கோரும் வேலைகளைச் செய்யும் தங்கள் பெற்றோர்களை லென்ஸ் வாயிலாக புகைப்படம் எடுத்துள்ளனர். வெட்டுக் காயங்கள், சிமெண்ட், மண் ஊறிய கை, கால்களை பிரதானமாக அவர்களின் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. அவர்கள் பெற்றோரின் உழைப்பு அந்த படங்களில் பிரதிபலிக்கிறது. "செங்கல் சூளையில் வேலை பார்க்கும் போது கால் பாதம் வெடித்துப் புண்ணாகிவிடும். தலைவலி, கால்வலி, மயக்கம், இடுப்பு வலி அடிக்கடி ஏற்படும். கேமரா வழியே புகைப்படம் எடுக்கும் போதுதான் அம்மாவுடைய வலி எனக்குப் புரிகிறது. புகைப்படங்கள் மூலம் அம்மாவின் வலியை மற்றவர்களுக்குக் கடத்த முடியும் என நினைக்கிறேன்." என்கிறார் ஜெயராஜ். அப்பாராவை 20 ஆண்டுகள் கொத்தடிமையாக நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட அண்ணாதுரை சொல்வது என்ன? இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் அன்று ஓய்வறியாத மாஞ்சோலை எஸ்டேட்டில் இன்று பேரமைதி - தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள்? தேசிய அளவில் 42%: ஜவுளி முதல் கார் உற்பத்தி வரை தமிழ்நாட்டுப் பெண்கள் நுழைந்து சாதித்தது எப்படி? "அம்மா முதலில் அவரை புகைப்படம் எடுக்க ஒத்துக்கொள்ளவில்லை. நான் எவ்வளவோ கேட்ட பிறகுதான், 'சரி நான் வேலை பார்க்கிறேன், நீ எடுத்துக்கோ'ன்னு சொன்னாங்க. புகைப்படத்தைக் காண்பித்ததும் 'நல்லா இருக்குன்னு' சொன்னாங்க." அரசு மாதிரி பள்ளிகளில் கல்வி-இணை செயல்பாடுகளாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புகைப்படக் கலை, அரங்கக் கலை, மைமிங், நிகழ்த்துக் கலைகள் என பலவும் கற்றுத்தரப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கலையை கற்பதன் மூலம், நான்கு ஆண்டுகளில் நான்கு வெவ்வேறு கலைகளை அவர்களால் கற்க முடியும் என்பதே இதன் நோக்கம். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையால் இது செயல்படுத்தப்படுகிறது. பட மூலாதாரம்,GOVARTHANAN L S படக்குறிப்பு,இந்த புகைப்பட கண்காட்சி கடந்த பிப்ரவரி மாதம் 3 நாட்கள் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது 'அப்பா ஒரு ஹீரோ' அப்படி புகைப்படக் கலையை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு 6-7 மாதங்களாக பயிற்சியளித்து, 'உழைக்கும் மக்கள்' எனும் தலைப்பில் அவர்கள் எடுத்த புகைப்படங்கள், கடந்த பிப். 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. அரசு மாதிரி பள்ளிகள் என்பது உண்டு உறைவிட பள்ளிகளாகும். எனவே, வார விடுமுறையில்தான் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வார்கள். அப்போதுதான் இந்த புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். மதுரை அரசு மாதிரிப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவரும் கோபிகா லெட்சுமியின் தந்தை முத்துகிருஷ்ணன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருடைய ஒரு சிறுநீரகம் செயலிழந்த காரணத்தால் வாரத்துக்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்துவருகிறார். பட மூலாதாரம்,GOPIKA LAKSHMI M படக்குறிப்பு,கோபிகாலெட்சுமியின் தந்தை டயாலிசிஸ் செய்த நிலையிலும் வாகனத்திலேயே சென்று பலசரக்குகளை விற்பனை செய்துவருகிறார் "அப்பா ஒரு சிறிய நான்கு சக்கர வாகனத்திலேயே பல சரக்கு வியாபாரம் செய்துவருகிறார். அருகிலுள்ள கிராமங்களுக்கு வாகனத்திலேயே சென்று சரக்குகளை விற்பார். டயாலிசிஸ் செய்தும் அப்பா எங்களுக்காக கடினமாக உழைக்கிறார். டயாலிசிஸ் செய்துவிட்டு வீட்டில் ஓய்வெடுப்பதற்கு எங்களுக்கு வசதி இல்லை. இந்த நிலையிலும் அப்பா எப்படி உழைக்கிறார் என்பதை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என நினைத்தேன். நாம் எடுக்கும் படங்கள் நம் வாழ்க்கையின் ஆதாரமாக இருக்க வேண்டும்." என்கிறார் தா. வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபிகாலெட்சுமி. அவரை பொறுத்தவரை இந்த புகைப்படங்களில் அவருடைய அப்பா 'ஒரு ஹீரோ போன்று இருக்கிறார்." அறக்கட்டளை மூலமாக இலவசமாக டயாலிசிஸ் செய்யும் முத்துக்கிருஷ்ணனுக்கு, மாதந்தோறும் ரூ.3,000 வரை மாத்திரைகளுக்கு செலவாகிறது. பட மூலாதாரம்,MUKESH படக்குறிப்பு,கல்குவாரியில் டிரில்லிங் வேலை செய்யும் கதிர்வேலுக்கு ஒருநாள் சம்பளம் ரூ.500-600 தொழில்முறையிலான டி.எஸ்.எல்.ஆர் கேமரா மூலம் புகைப்படம் எடுப்பது ஆரம்பத்தில் இந்த மாணவர்களுக்குக் கடினமானதாக இருந்தாலும், தொடர் பயிற்சியின் வாயிலாக இக்கலை சாத்தியமாகியிருக்கிறது. இம்மாணவர்களுக்கு ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள புகைப்படக் கலை பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்துள்ளனர். "மாணவர்களை சமூக பொறுப்புள்ளவர்களாக உருவாக்குவதுதான் இதன் நோக்கம். குழந்தைகள் என்ன புகைப்படங்கள் எடுக்கின்றனர் என பார்க்க நினைத்தோம். உழைக்கும் மக்கள் அவர்களை சுற்றியே இருக்கின்றனர், அதை ஆவணப்படுத்தியிருக்கின்றனர். அவர்களை பற்றி தெரிந்து கொள்வதுதான் சமூக மாற்றத்தின் தொடக்கம்." என்கிறார், மாதிரி பள்ளிகளில் கல்வி-இணை செயல்பாடுகளின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள முத்தமிழ் கலைவிழி. இவர், நீலம் அறக்கட்டடளை நிறுவனராகவும் உள்ளார். பட மூலாதாரம்,SARAN R படக்குறிப்பு,இம்மாணவர்களை பொறுத்தவரை இயற்கை காட்சிகளைவிட மற்றவர்களின் உழைப்பை புகைப்படங்களாக பதிவு செய்வதன் மூலம் அக்கலையின் நோக்கம் நிறைவேறுகிறது கடின உழைப்பும் சொற்ப வருமானமும் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்த முகேஷ் அம்மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவருகிறார். அவருடைய அப்பா கதிர்வேல், திருத்தணியில் உள்ள கல்குவாரி ஒன்றில் வேலை பார்க்கிறார். "புகைப்படங்கள் எடுப்பதற்காக அப்பாவுடன் கல்குவாரியிலேயே நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். அப்போதுதான் அப்பா கல் குவாரியில் எப்படியான வேலைகளை செய்கிறார் என்பதை முதன்முறையாக பார்த்தேன். அப்பா அங்கேயே தங்கி வேலை பார்க்கிறார். வாரத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார்." என்கிறார் முகேஷ். அதிகாலை 3 மணியிலிருந்து மதியம் 12 மணி வரையும் பின்னர் சிறிது ஓய்வுக்குப் பிறகு மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரையும் தன் தந்தை கல் குவாரியில் 'டிரில்லிங்' வேலைகளை பார்ப்பதாகக் கூறுகிறார் அவர். 'விதிகளை வளைத்து ரூ.300 கோடி முறைகேடு' - உணவுத்துறை மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்14 மார்ச் 2025 கோவையில் மத்திய அரசுப் பணிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் - வட மாநிலத்தவர்கள் சிக்கியது எப்படி?13 மார்ச் 2025 பட மூலாதாரம்,MUKESH K படக்குறிப்பு,தங்களை சுற்றி இருப்பவர்களின், பலராலும் அறியப்படாத அவர்களின் உழைப்பை ஆவணப்படுத்த வேண்டும் என்பதே இந்த மாணவர்களின் நோக்கமாக உள்ளது "அவர்கள் தங்கும் அறையில் கட்டில், மெத்தையெல்லாம் இல்லை. குவாரியில் உள்ள காலி அட்டைப் பெட்டிகள் மீதுதான் அப்பா படுத்திருப்பார். அப்பாவுக்கு கடும் வெயிலில் வேலை செய்வதால், கடந்தாண்டு சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டது." இந்த டிரில்லிங் வேலையில் ஒரு நாளைக்கு 500-600 ரூபாய் கிடைக்கும் எனக்கூறுகிறார் முகேஷ். இந்த மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர், விளிம்புநிலை குழந்தைகள். தினசரி கூலி வேலைகளையே இவர்களின் பெற்றோர்கள் செய்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை பிரதானப்படுத்த வேண்டும் என்பது இந்த புகைப்படங்களின் நோக்கமல்ல, மாறாக, "தங்கள் பெற்றோரின் கடின உழைப்பை சமூகம் அறிய செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம்;" என்பது இந்த புகைப்படங்களை பார்க்கும்போது புரிகிறது. பட மூலாதாரம்,KEERTHI S படக்குறிப்பு,சரக்குகளை வாங்க தன் அம்மா முத்துலட்சுமி பேருந்தில் சென்றுவருவதில் உள்ள சிரமங்களை ஆவணப்படுத்தியுள்ளார் கீர்த்தி தென்காசி மாவட்டம் மாயமான்குறிச்சியை சேர்ந்த கீர்த்தி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் முன்பு சிறியதாக பெட்டிக் கடை வைத்திருக்கும் தன் அம்மா முத்துலட்சுமி, சரக்குகளை வாங்க பேருந்தில் சென்றுவருவதில் உள்ள சிரமங்களை ஆவணப்படுத்தியுள்ளார். "அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை. அம்மாதான், கடை, வீடு இரண்டையும் கவனிக்கிறார். காலை 4 மணிக்கு எழுந்து இரவு 11 மணி வரை அவருக்கு வேலை இருக்கும். குழந்தைகளை முன்னேற்ற ஒரு பெண் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை புகைப்படங்கள் வாயிலாக காண்பிக்க வேண்டும் என நினைத்தேன்." என்கிறார் கீர்த்தி. "அம்மா வேலை செய்வதை கேமரா லென்ஸ் வழியாக பார்க்கும்போது புதிதாக இருந்தது. புரொபஷனல் கேமராவை பிடிப்பது ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும் பின்னர் பழகிவிட்டது. இரவு நேரத்தில் எப்படி படம் எடுப்பது, ஷட்டர் ஸ்பீடு, அபெர்ச்சர் எப்படி சரிசெய்வது என எல்லாம் தெரியும்." பட மூலாதாரம்,SHEIK HASAN K படக்குறிப்பு,தங்கள் பெற்றோர்களின் கை, கால்களை புகைப்படம் எடுப்பதன் வாயிலாக அவர்களின் கதைகளை சொல்ல முயல்கின்றனர் இந்த புகைப்பட கண்காட்சியை புகைப்படக் கலைஞர் எம். பழனிக்குமார் ஒருங்கிணைத்துள்ளார். "நம் கதைகளை எப்படி ஆவணப்படுத்துவது என்பதை இந்த மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம்." என்கிறார் அவரர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்போரின் மரணங்களை தொடர்ச்சியாக தன் புகைப்படங்கள் வாயிலாக ஆவணப்படுத்தி வருகிறார் பழனிக்குமார். வேலை செய்யும் அம்மாவின் கைகள் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும் அம்மாக்களையும் சில மாணவர்கள் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். " வெளியில் சென்று வேலை பார்ப்பது மட்டும் உழைப்பு அல்ல, வீட்டில் காலை முதல் இரவு வரை என் அம்மாவின் கைகள் வேலை செய்துகொண்டேதான் இருக்கிறது" என தன் அம்மாவின் கைகளை மட்டுமே புகைப்படமாக எடுத்துள்ளார் மாணவி ஒருவர். "இம்மாணவர்களின் அப்பாவோ அம்மாவோ எப்படிப்பட்ட சூழல்களில் வேலை பார்க்கின்றனர் என்பதை முன்பு பெரும்பாலும் பார்த்திருக்க மாட்டார்கள். அதை நேரடியாக பார்க்கும்போது அந்த உழைப்பை உணருகின்றனர். அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகின்றது. புகைப்படக் கலையில் அவர்களின் திறமையை அவர்களின் புகைப்படங்களை பார்த்தாலே புரியும்" என்றார். பட மூலாதாரம்,RASHMITHA T படக்குறிப்பு,பீடி சுற்றும் தொழில் செய்பவர்களின் வீடு முழுவதும் புகையிலை வாசனையே நிரம்பியிருக்கிறது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ரக்ஷ்மிதா, தங்கள் பகுதியில் பீடி சுற்றும் தொழிலாளர்களை புகைப்படங்கள் எடுத்துள்ளார். "வீட்டு வாசல் முன்பு அமர்ந்துதான் பீடி சுற்றுவார்கள். அவர்களுடைய வீட்டில் புகையிலை வாசனை அதிகமாக இருக்கும். கொஞ்ச நேரத்துக்கு மேல் அங்கு இருக்க முடியாது. இவர்கள் ஆயிரம் பீடி சுற்றினால்தான் 250 ரூபாய் கிடைக்கும். மிக வேகமாக பீடி சுற்றுபவர்களுக்கே ஆயிரம் பீடி சுற்ற ஐந்து நாட்களாகும். அவர்களுக்கு காசநோய், நுரையீரல் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. இவர்கள் என்ன வேலை செய்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. சொல்லப்படாத இவர்களின் கதைகளை சொல்ல வேண்டும்." என்கிறார் ரக்ஷ்மிதா. சமூகத்தில் அதிகம் அறியப்படாத எளிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் பிள்ளைகளாலேயே புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70elj406yzo
-
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
வன்கொடுமைக்கு ஆளான பெண் வைத்தியரின் தொலைபேசி கண்டுபிடிப்பு அநுராதபுர போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சந்தேக நபரால் திருடப்பட்ட ஐபோன் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் மறைந்திருந்த காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதாக கல்னேவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புகைப்படங்கள் கல்னேவ காவல் பிரிவில் உள்ள நிதிகும்ப யாய மற்றும் மஹாமெவ்ன அசபுவ இடையேயான காட்டுப் பகுதியில் இரண்டு காவல் குழுக்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இந்த கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், சந்தேகபர் பெண் வைத்தியரின் தொலைபேசியை வலுக்கட்டாயமாக எடுத்து, மிரட்டி, அதன் கடவுச்சொல்லைப் பெற்று பின்னர் அதே தொலைபேசியிலிருந்து அவரது புகைப்படங்களை எடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்திருந்தது. நீதிமன்ற உத்தரவு இவ்வாறானதொரு பின்னணியில், சந்தேகநபரால் திருடப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்த தொலைபேசி தற்போது மீட்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க அநுராதபுரம் நீதவான் இன்று (17) உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/stolen-phone-of-anuradhapura-hospital-doctor-found-1742218055
-
அமெரிக்க புயலில் பலர் பலி.
''இப்படி ஒன்னு நடந்ததே இல்ல’’ - US-ஐ உலுக்கிய Tornadoes; குறைந்தது 32 பேர் பலி. என்ன நடந்தது? அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களை கொடிய சூறாவளிகள் தாக்கியதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்தனர். பல வீடுகள் சேதமடைந்தன. தெருக்களில் கார்கள் கவிழ்ந்து கிடக்கின்றன. மசோரியில் மட்டும் குறைந்தது 12 பேர் உயிரழந்துள்ளனர். கான்சஸில் 8 பேர் உயிரிழந்தனர்.
-
தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி தேர்தல்களில் பெரிய வெற்றியை பெறுமா?
16 MAR, 2025 | 03:31 PM டி.பி.எஸ். ஜெயராஜ் "தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் வெற்றி பெற்று நிருவாகங்களை அமைக்கும்." கடந்த வியாழக்கிழமை (மார்ச் 13) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கிளப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது கடற்தொழில், நீர்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் தேசிய மககள் சக்தி வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக அவர் யாழ்ப்பாணம் தேர்தல் செயலகத்துக்கு சென்றிருந்தார். அவருடன் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் பிரதேச அமைப்பாளர்களுடன் கூட இருந்தனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான ஆள் அமைச்சர் சந்திரசேகர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. பதுளை மாவட்டத்தின் பண்டாரவளையை சேர்ந்தவராக இருந்தாலும், சந்திரசேகரிடம் யாழ்ப்பாணத்தில் அரசியல் விவகாரங்களை யேற்பார்வை செய்து ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவரே யாழ்ப்பாணம், கிளிநொச்சி நிருவாக மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் இருக்கிறார். இந்த இரு மாவட்டங்களையும் உள்ளடக்கியதே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டமாகும். சந்திரசேகர் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தேர்தல்களில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் குறிப்பாக ஊடகங்களுடன் பேசும்போது வெற்றியில் நம்பிக்கையை வெளிப்படுத்தவதாக தெரிகிறது. தேர்தல் வெற்றி மீதான நம்பிக்கை அரசியல்வாதிகளுக்கு சாசுவதமாக பீறியெழும். அது வழமையாக எதிர்பார்க்கப்படுவதே. நூற்றுக்கணக்கான வாக்குகளைப் பெற இயலாத வேட்பாளர்களும் கூட தேர்தலுக்கு முன்னதாக தங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று தம்பட்டம் அடிப்பார்கள். யதார்த்தமாக நோக்கும்போது தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன்னதாக தாங்கள் வெற்றி பெறுமாட்டார்கள் என்று எந்த வேட்பாளரும் கூறுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் கூட பலர் தங்களுடன் போட்டியிட்டவர்கள் வாக்கு மோசடிகளில் ஈடுபட்டதாக அல்லது வாக்குகள் எண்ணும் செயன்முறைகளில் தலையீடு செய்ததாக குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இந்த பின்புலத்தில் பார்க்கும்போது, ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சந்திரசேகர் எதிர்வு கூறுவதைப் போன்று உண்மையில் பெரிய வெற்றியை பெறுமா அல்லது அவரது நம்பிக்கை நடைமுறைக்கு ஒத்துவராதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு வருடத்துக்கு முன்னர் சந்திரசேகர் இவ்வாறு கூறியிருந்தால், அவர் கேலி செய்யப்பட்டிருப்பார். தேசிய மக்கள் சக்தி போன்ற சிங்கள ஆதிக்கத்திலான ஒரு தேசியக்கட்சி யாழ்ப்பாணத்தில் சகல உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றக்கூடியதாக இருக்கும் என்பது நம்பமுடியாதது. ஆனால், கடந்த வருடத்தைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நிலைவரத்தை முற்றாக மாற்றிவிட்டது. குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் திருப்பமாக யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான வாக்குகளைப் பெற்றது. போனஸ் ஆசனம் ஒன்றுக்கும் அது உரித்துடையதாக இருந்தது. அதனால் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றது. அதற்கு அங்கு 80, 830 ( 24. 85 சதவீதம் ) வாக்குகள் கிடைத்தன. இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற தமிழ்த் தேசியவாத கட்சிகளை விடவும் தேசிய மக்கள் சக்தி கூடுதல் வாக்குகளைப் பெற்றது. இந்த கட்சிகளுக்கு முறையே 63, 327 ( 19.47 சதவீதம்), 22,513(6.92 சதவீதம் ), 27, 986 (8.60 சதவீதம்) வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. தேசிய மக்கள் சக்தியின் மூன்று எம்.பி.க்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் கூடுதலான வாக்குகள் கருணானந்தன் இளங்குமரனுக்கே கிடைத்தன. அவருக்கு 32, 102 விருப்பு வாக்குகள் கிடைத்தன. தென்மராட்சி பிராந்தியத்தின் உசனை சொந்த இடமாகக் கொண்ட இலங்கை மின்சார சபையின் முன்னாள் ஊழியரான அவர் தற்போது யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் வசிக்கிறார். ஐந்து வருடக்களாக தேசிய மககள் சக்தியின் முழுநேரச் செயற்பாட்டாளராக இருந்துவரும் இளங்குமரன் பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அந்த கட்சியின் பிரதான வேட்பாளராக களமிறங்கினார். யாழ்ம்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து இரண்டாவதாக தெரிவான வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜாவுக்கு 20, 430 விருப்பு வாக்குகள் கிடைத்தன. முப்பது வருடங்களுக்கும் கூடுதலான காலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய அவர் அண்மையில் பிரதி் பணிப்பாளராக ஓய்வு பெற்றார். தேசிய மக்கள் சக்தியின் மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினரான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனுக்குை17, 579 விருப்பு வாக்குகள் கிடைத்தன யாழ்ப்பாணத்தில் அவர் நன்கு பெயர்பெற்ற தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். ரஜீவன் அண்மைக்காலம் வரை இலங்கை தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னதாக தனது அரசியல் விசுவாசத்தை மாற்றிக்கொண்ட அவர் அநுரா குமாரவுக்காக பிரசாரங்களில் ஈடுபட்டார். சந்திரசேகர் யாழ்ப்பணத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியின் சிற்பி அதன் மாவட்ட அமைப்பாளரான இராமலிங்கம் சந்திரசேகரேயாவார். அவர் ஜே.வி.பி.யின் மத்தியகுழுவிலும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார். ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிரான அவர், இந்த தடவை தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு அநுரா குமார திசாநாயக்கவின் அமைச்சரவையில் கடற்தொழில் அமைச்சராக இணைத்துக் கொள்ளப்ட்டார். ஜே.வி.பி.யின் அமைப்பாளர் என்ற வகையில் சந்திரசேகர் யாழ்ப்பாணத்தில் பல வருடக்கள் பணியாற்றியிருக்கிறார். தமிழ்ப் பத்திரிகைகள், தொலைக்காட்சி சேவைகள் மற்றும் செல்வாக்குமிக்க யூரியூபர்களுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்ட அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். விவசாயிகள், மீனவர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் போன்ற யாழ்ப்பாணச் சமூகத்தின் பல பிரிவினரையும் அணிதிரட்டிய அவர் தேசிய மக்கள் சக்தியின் அணிகளுக்குள் அவர்களை இணைத்துக் கொண்டார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை சந்திரசேகர் பரவலாக்கினார் என்பது முக்கியமாக கவனிக்கத்தக்கது. அவர்களில் இலட்சிய நோக்குடன் கூடிய சில படித்த இளைஞர்களும் அடங்குவர். யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் பட்டியலை அநுராாகுமார, பிமால் இரத்நாயக்க, விஜித ஹேரத் ஆகியோருடன் ஆலோசனை கலந்து சந்திரசேகர் இறுதி செய்தார். முன்னதாக, 2024 செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அநுரா குமாரவுக்கு சுமார் 27,000 வாக்குகள் மாத்திரமே கிடைத்தது. ஆனால், பாராளுமன்ற தேர்தலில் அந்த எண்ணிக்கை சுமார் மூன்று மடங்காக அதிகரித்தது. இந்த வாக்குகள் எங்கிருந்து வந்தன? தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களினால் பெறப்பட்ட வாக்குகளில் காணப்பட்ட வீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தேசிய மக்கள் சக்திக்கு இந்த கட்சிகள் சகலதிலும் இருந்தும் புதிய வாக்காளர்களிடம் இருந்தும் வாக்குகள் வந்து சேர்ந்தன என்று தோன்றியது. தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளில் ஒரு கணிசமானவை பெண்களினாலும் இளைஞர்களினாலும் போடப்பட்டவையாகும். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த மிகவும் கூடுதலான தபால்மூல வாக்குகள் அரசாங்க ஊழியர்கள் மத்தியில் அதற்கு இருக்கும் ஆதரவை வெளிக்காட்டின. மேலும், யாழ்ப்பாணத்தில் உள்ள 11 தேர்தல் தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வந்தது. நல்லூர், கோப்பாய், மானிப்பாய், காங்கேசன்துறை, உடுப்பிட்டி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை ஆகிய தொகுதிகளில் ' திசைகாட்டி ' முதலாவதாக வந்தது. ஏனைய கட்சிகளினால் மூன்று தொகுதிகளில் மாத்திரமே வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. ஊர்காவற்துறை (ஈ.பி.டி.பி.), கிளிநொச்சி ( தமிழரசு கட்சி ), சாவகச்சேரி ( சுயேச்சைக்குழு 17) ஆகியவையே அந்த தொகுதிகளாகும். அநுரா குமார திசாநாயக்க அநுரா குமார திசாநாயக்க 2024 செப்டெம்பரில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் தேர்தலில் முதலாவதாக வந்தார், ஆனால் 42.31 சதவீதமான வாக்குகளையே பெறக்கூடியதாக இருந்தது. இரண்டாவதாக வந்த சஜித் பிரேமதாசவுக்கு 32.76 சதவீதமான வாக்குகள் கிடைத்தன. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் வெற்றிபெற்ற வேட்பாளரினால் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறமுடியாத சந்தர்ப்பமாக 2024 ஜனாதிபதி தேர்தல் அமைந்தது. அதனால் ஏனைய வாக்காளர்களின் வாக்குகள் நீக்கப்பட்டு இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் இரண்டாவது விருப்பு வாக்கு கணக்கில் எடுக்கப்பட்டது. இதில் அநுரா 55.89 சதவீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவானார். அநுராவின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாடு தடுமாற்றமானதாக இருந்த போதிலும், பிறகு ஒரு அரசியல் அதிசயம் நிகழ்ந்தது. அநுரா தனது கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களை தலைமை தாங்கி முன்னெடுத்தார். ஜனாதிபதியாக அவர் நாடுபூராவும் பயணம் செய்து தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்காக வாக்குக் கேட்டார். அலை திரும்பியது. நாட்டை ஒரு அநுரா அலை சூழ்ந்து கொண்டது. பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி சாதனை படைத்தது. அநுரா அலை தமிழ்த் தேசியவாத கோட்டையான யாழ்ப்பாணம் அநுரா அலையின் கீழ் சென்றது. 25 சதவீதமான வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாணத்தின் ஆறு ஆசனங்களில் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்தியைக் குதூகலிக்க வைத்தன. யாழ்ப்பாண வெற்றி ஒரு மகுடச்சாதனை என்று பல தலைவர்கள் வர்ணித்தனர். தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக் கிரீடத்தில் யாழ்ப்பாண முடிவுகள் ஒரு அணிகலனாக அமைந்தன. அதை யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியவாதத்தின் முடிவு என்றும் கூட சில அவதானிகள் எதிர்வு கூறினர். இந்த பின்னணியிலேயே, யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியினால் மகத்தான வெற்றியைப் பெறமுடியும் என்று அமைச்சர் சந்திரசேகர் அதிவிசேடமான நம்பிக்கையைக் கொண்டவராக இருக்கிறார். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு மாநகரசபை, மூன்று நகரசபைகள் மற்றும் பதின்மூன்று பிரதேச சபைகள் இருக்கின்றன. எல்லாமாக பதினேழு உள்ளூராட்சி சபைகள். பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வந்ததால், உள்ளூராட்சி தேர்தல்களில் ஒரு முற்றுமுழுதான வெற்றி சாத்தியம் என்று தோன்றலாம். தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கமான தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் கருத்துக்களின் பிரகாரம் யாழ்ப்பாணத்தில் அந்த கட்சியின் மக்கள் செல்வாக்கு குறையவில்லை என்று தெரிகிறது. அதற்கு ஆதரவு பெருகியிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். தேசிய மக்கள் சக்தி தற்போது ஆளும் கட்சியாக இருப்பதால், யாழ்ப்பாண மக்கள் அதிகாரத்தில் உள்ள கட்சியுடன் சேர்ந்துகொண்டால் அலுவல்களைச் செய்வித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு வாக்களிக்க விரும்புவர். அரசாங்கத்தின் புதிய பட்ஜெட் வடக்கிற்கு ஓரளவு தாராளமாக நிதி ஒதுக்கீடுகளைச் செய்திருக்கிறது. நடைமுறைச் சாத்தியமாகச் சிந்திக்கும் யாழ்ப்பாண தமிழர்கள் தேசிய மக்கள் சக்தியின் 'வண்டிலில்' தொங்கிக் கொண்டுபோவது சிறந்தது என்று விளங்கிக்கொள்வர். வல்வெட்டித்துறை அநுரா அலை யாழ்ப்பாணத்தில் தணிந்துவிடவில்லை என்று தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் உணருகின்றன. அநுரா அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு செய்த விஜயம் அதற்கு சான்று என்று அவர்கள் கூறுகிறார்கள். வல்வெட்டித்துறையிலும் மிருசுவிலிலும் இடம்பெற்ற வெற்றிகரமான பொதுக்கூட்டங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சாதாரண மக்கள் அநுரா மீது தன்னியல்பாகவே அன்பை வெளிப்படுத்தினார்கள். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற வெற்றிகரமான கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்று இந்த தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வல்வெட்டித்துறை விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய தலைலர்களின் சொந்த ஊராகும். ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாதத்தின் தொட்டில் என்று வல்வெட்டித்துறை கருதப்படுகிறது. அந்த ஊரில் தேசிய மக்கள் சக்தியினால் வெற்றிகரமான ஒரு கூட்டத்தை நடத்தக்கூடியதாக இருந்தமை உண்மையில் அதன் செல்வாக்கு வளருவதன் ஒரு அறிகுறியாகும் என்று இந்த வட்டாரங்கள் கூறுகின்றன. உறுதிமொழியும் செயற்பாடும் தேசிய மக்கள் சக்திக்குள் நம்பிக்கை நிலவுகின்ற போதிலும், உள்ளூராட்சி தேர்தல்களில் யாழ்ப்பாண மக்களின் போதுமான ஆதரவை கட்சியினால் பெறக்கூடியதாக இருக்குமா என்று சந்தேகமும் இருக்கிறது. உறுதிமொழிக்கும் செயற்பாட்டுக்கும் இடையிலான வெளியே இதற்கு பிரதான காரணமாகும். பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது பொதுவில் தேசிய மக்கள் சக்தியும் குறிப்பாக அநுராவும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும், சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை கையாளப்படும், இராணுவத்தினர் கையகப்படுத்திய காணிகள் அவற்றுக்கு உரித்தானவர்களிடம் மீண்டும் கையளிக்கப்படும், பாதுகாப்பு படைகளின் முகாம்களும் வீதிச்சோதனை நிலையங்களும் குறைக்கப்படும், உயர்பாதுகாப்பு வலயங்கள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களும் வீதிகளும் குறைக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகள் அள்ளிவீசப்பட்டன. இவற்றில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. ஒரு சில வீதிச்சோதனை நிலையங்களும் முகாம்களும் மூடப்பட்டன. ஒரு சில வீதிகள் பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் திறந்துவிடப்பட்டன. முக்கியமான எந்த காரியமும் இடம்பெறவில்லை. அரசியல் கைதிகளை விடுதலை செயதல், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை, காணிகளை திருப்பிக் கையளித்தல் போன்ற விவகாரங்களில் நடைமுறைச் சாத்தியமான முறையில் முன்னோக்கிய செயற்பாடு எதையும் காணக்கூடியதாக இல்லை. அரசியல் கைதிகள் விவகாரத்தைப் பொறுத்தவரை, நீதியமைச்சர் இப்போது அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று கூறுகிறார். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படமாட்டாது என்றும் அரசாங்கம் கூறுகிறது. இன்னொரு கசப்பான விடயம் அதிகாரப்பரவலாக்கல் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பானதாகும். புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டுவரப்படும் வரை மாகாணசபைகள் தொடர்ந்து இருக்கும் என்று தேசிய மக்கள் சக்தி கூறுகின்றது. ஆனால், புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் திட்டம் இப்போது பின்போடப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதில் இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் அதிகாரப்பரவலாக்கம் பற்றியோ அல்லது மாகாணசபைகள் பற்றியோ எந்த குறிப்பும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்யக்கூடியதாக அவரால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நம்பவைக்க இயலுமாக இருந்தது. இந்திய மீனவர்களின் அத்துமீறல் இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களில் அத்துமீறில் தொடர்ந்து உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். இந்திய மீனவர்களின் படகுகள் வருவதையும் அவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதையும் தடுத்து நிறுத்துவதாக 2024 தேர்தல் பிரசாரங்களின்போது சந்திரசேகரும் அநுரா குமார திசாநாயக்கவும் விசேடமாக வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால், இதுவரையில் அர்த்தமுடைய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்திய படகுகள் பெரும் எண்ணிக்கையில் வந்து வடபகுதி கடலில் தொடர்ந்து இழுவைப்படகுகள் மூலமாக மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இந்திய மீனவர்களை இடைக்கிடை கைதுசெய்து அவர்களி்ன் படகுகளையும் கைப்பற்றும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொள்கிறது. ஆனால், சில நாட்களுக்கு பிறகு 'மனிதாபிமான அடிப்படையில்' அந்த மீனவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். 'சட்டவிரோத மீன்பிடியை' முடிவுக்கு கொண்டுவருவதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்திய இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக வடபகுதி மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி வளர்ந்து வருவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஒரு பிரச்சினையாகலாம். வடபகுதி மீனவர் சமூகத்தைச் சேர்ந்த பெருமளவானோர் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். கரையோரப்பகுதி மக்களிடம் தமிழ் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களன வாக்குக் கேட்கச் சென்றபோது அவர்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று அந்த மக்கள் முத்துக்கு நேரே கூறினார்கள்."நாங்கள் இந்த தடவை ஜே.வி.பி.க்கே வாக்களிக்கப் போகிறோம். ஏனென்றால் இந்திய மீனவர்களின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவரக்கூடிய ஒரே கட்சி ஜே வி.பி.யே என்று நாம் நம்புகிறோம்" என்று அவர்கள் கூறினார்கள். அவர்களில் பலர் இப்போது ஏமாற்றமடைந்து விட்டார்கள். "கதையே தவிர காரியம் எதுவும் இல்லாத" ஒரு கட்சியாக ஜே வி.பி. இப்போது பலராலும் நோக்கப்படுகிறது. இது தவிர, யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றல் மற்றும் நடத்தைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் காணப்படுகிறது. யாழ்ப்பாண வெற்றியை தங்களது கிரீடத்தில் உள்ள அணிகலன் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கொக்கரித்துக் கொண்டு திரிகிறார்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான மூவரும் செயற்திறன் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பாராளுமன்றத்தில் பேசுவது அபூர்வம். அவ்வாறு அபூர்வமாகப் பேசுகின்ற சந்தர்ப்பங்களிலும் கூட மக்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகளைப் பற்றி எதையும் கூறுவதை காணமுடியவில்லை. அந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களுக்கு வாக்களித்த மக்களால் சந்திக்க முடியாமல் இருக்கிறது. அவர்களிடம் மக்கள் பிரச்சினை கிளப்பும்போது "இந்த விவகாரத்தில் எமது கட்சியின் தலைமைத்துவம் மாத்திரமே தீர்மானம் எடுக்கமுடியும்" என்று ஒரு பதிலை கைவசம் வைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வுப் போக்குகள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் திசைகாட்டிக்கு வாக்களித்த மக்கள் சலிப்படைந்து போகிறார்கள் என்பதை வெளிக்காட்டுகின்றன. ஆனால், இந்த அதிருப்திப் போக்கு ஒரு தொடக்கமா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது ஒரு தொடக்கமாக இருந்தால் வாக்களிப்பில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மக்கள் பெருமளவில் திரும்பவதற்கு வாய்ப்பு குறைவு. ஆனால் இந்த அதிருப்தி ஆழமானதாக வளருமானால் யாழ்ப்பாணத்தில் உள்ள பதினேழு உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றும் அமைச்சர் சந்திரசேகரின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வெறும் பகற்கனவாக மாத்திரமே இருக்க முடியும். இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தில் இருக்கிறது என்ற உண்மையை கருத்தில் எடுத்தே ஆகவேண்டும். செல்வாக்கான இடத்தை தேடியோடும் அருவருப்பான பேர்வழிகளுக்கு அது ஒரு காந்தம் போனறு இருக்கும். அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளவே பலரும் விரும்புவர். ஆனால், தேசிய மக்கள் சக்தியில் இணைகின்ற அல்லது ஆதரிக்கின்ற அந்த சந்தர்ப்பவாத பேர்வழிகளினால் பெருமளவில் வாக்குகளைக் கொண்டுவர முடியுமா என்பது மிகவும் சந்தேகமே. எண்கணிதக் காரணி எண்கணிதக் காரணியை கருத்தில் எடுக்கவேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற ஆசனங்களில் அரைவாசியைக் கைப்பற்றியதன் மூலமாக தேசிய மக்கள் சக்தி மிகச்சிறந்த வெற்றயைப் பெற்றது. ஆனால், அது பெற்ற வாக்குகள் நான்கில் ஒரு பங்கிற்கு சமமானது மாத்திரமே. அநுரா அலை தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளைக் கவர்ந்தாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் நான்கில் மூன்று பங்கு ஏனைய கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்குமே சென்றது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இந்த கட்சிகளிலும் சுயேச்சைக் குழுக்களிலும் பெரும்பாலானவறனறை "தமிழ்த் தேசியவாத அமைப்புகள்" என்று வகைப்படுத்த முடியும். அதனால், தமிழ்த் தேசியவாத கட்சிகளினாலும் குழுக்களினாலும் ஒரு வகையான ஐக்கியத்தை ஏற்படுத்தி இரண்டு அல்லது மூன்று கூட்டணிகளாக தேர்தலில் களமிறங்க முடியுமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாய்ப்புகள் குறைவானதாகவே இருக்க முடியும். அவ்வாறு நடந்தால் தமிழ்த் தேசாயவாத கட்சிகளும் கூட்டணிகளும் தேசிய மக்கள் சக்தியை விடவும் உயர்வான செயற்பாட்டை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புக்களுக்கு இடமிருக்கிறது. தவிரவும், தமிழ்த் தேசியவாதத்தின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் சிங்கள தேசியக் கட்சி ஒன்று முதலாவதாக வந்தது குறித்து குறிப்பிட்ட சில வட்டாரங்கள் கவலைப்படுகின்றன. தமிழ்த் தேசியவாத கட்சிகள் அதனால், தமிழ்த் தேசியவாதக்கட்சிகள் திருப்பித்தாக்கி அநுரா அலையைப் பின்வாங்கச் செய்வதற்கான ஒரு சாத்தியப்பாடு இருக்கிறது. இது தமிழ்த் தேசாயவாதக் கட்சிகளினால் எந்தளவு ஐக்கியத்தைச் சாதிக்கக்கூடியதாக இருக்கும் என்பதிலேயே தங்கியிருக்கிறது. பல்வேறு கூட்டங்களும் கலந்துரையாடல்களும் நடைபெற்று வந்திருக்கிறது. ஆனால், இதுவரையில் அவற்றினால் பயன் கிட்டவில்லை. ஐக்கியம் சாத்தியமாகாமல் போனாலும் கூட, தேர்தல் பிரசாரங்களின்போது தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் ஒன்றை ஒன்று தாக்குவதைத் தவிர்த்து தேசிய மக்கள் சக்தியை தனியொரு இலக்காகக் கொண்டு தாக்குவதற்கான ஏற்பாடொன்றைச் செய்துகொள்ள முடியும். மேலும், தமிழ்த் தேசியவாத கட்சிகள் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க வேண்டுமானால் புதிய, நடைமுறைச் சாத்தியமானதும் கற்பனைத் திறனுடையதுமான கொள்கைகளை அவை வகுக்க வேண்டும். பழைய கொள்கைகளையே தொடர்ந்தும் பின்பற்றிக் கொண்டிருப்பது எதிர்பார்க்கப்படும் பயன்விளைவுகளைத் தராது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான அடிப்படைக் காரணம் மக்கள் மத்தியில் காணப்பட்ட மாற்றுத்துக்கான அவாவேயாகும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் தேசிய மக்கள் சக்தியைத் தோற்கடிக்க வேண்டுமானால் இந்த முதன்மையான காரணியை கருத்தூன்றிக் கவனத்துக்கு எடுக்கவேண்டும். தங்களது தற்போதைய கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளினால் தேசிய மக்கள் சக்தியிடமிருந்து வாக்காளர்களை கவரக்கூடியதாக இருக்குமா என்பதை தமிழ்த் தேசியவாத கட்சிகள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டும். உள்ளூராட்சி தேர்தல்முறை உள்ளூராட்சி சபைகளுக்கென்று தேர்தல் முறையொன்று இருக்கிறது. 60 சதவீதமான ஆசனங்கள் வட்டாரங்கள் மூலமாகவும் 40 சதவீதமான ஆசனங்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் மூலமும் தெரிவு செய்யப்படுவதே அந்த முறையாகும். இந்த தேர்தல் முறையின் விளைவாக 2018 பெப்ரவரி தேர்தல்களுக்கு பிறகு அரசியல் கட்சிகளினால் உள்ளூராட்சி சபைகளில் ஒரு தெளிவான பெரும்பான்மையைப் பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தமிழரசு கட்சி, ரெலோ, புளொட் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அது 2018 ஆம் ஆண்டில் போட்டியிட்ட 48 உள்ளூராட்சி சபைகளில் மூன்று சபைகளில் மாத்திரமே பெரும்பான்மைப் பலத்தைப் பெறக்கூடியதாக இருந்தது. அதனால் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபை ஒன்றில் கூடுதலான வாக்குகளைப் பெற்றாலும் தெளிவான பெரும்பானமைப் பலத்தை பெறமுடியாத சூழ்நிலை தோன்றுவதற்கான சகல சாத்தியப்பாடுகளும் இருக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்காக தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் தேசிய மக்கள் சக்தியை ஓரங்கட்டக் கூடியதாக இருக்கும். https://www.virakesari.lk/article/209374
-
அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நிலையியற் கட்டளையின் படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற விவாத தொடக்கத்தில் சிறப்பு அறிக்கையை வெளியிட்டபோது பிமல் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்வஸ்திகா அருள்லிங்கம் மீது அவதூறான கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தகுந்த நடவடிக்கை அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமிருந்து பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாக ஸ்வஸ்திகா அருள்லிங்கமும் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அது குறித்து முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இதன்படி, குறித்த விடயத்தை விசாரணை செய்து இந்த நாடாளுமன்ற உறுப்பினரின் நடத்தைக்கு எதிராக நிலையியற் கட்டளையின் படி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். https://ibctamil.com/article/request-filed-in-parliament-against-mp-archuna-1742221471
-
புகழ்பூத்த சர்வதேச வீரர்களைக் கொண்ட 6 அணிகள் பங்குபற்றும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய மாஸ்டர்ஸ் சம்பியன்; அதிக பவுண்டறிகள் அடித்த சங்காவுக்கு 5 இலட்சம் ரூபா பணப்பரிசு 17 MAR, 2025 | 01:40 PM (நெவில் அன்தனி) இலங்கை உட்பட ஆறு நாடுகளின் மாஸ்டர்ஸ் அணிகள் (முதுநிலை வீரர்கள்) பங்குபற்றிய சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (International Masters League) ரி20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி சம்பினானது. ராய்பூர் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று இரவு மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ப்றயன் லாரா தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணியை 6 விக்கெட்களால் வெற்றிகொண்டு சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணி சம்பியனானது. சம்பியனான இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் ஒரு கோடி இந்திய ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணிக்கு 50 இலட்சம் இந்திய ரூபா பணப்பரிசு கிடைத்தது. இந்த சுற்றுப் போட்டியில் அதிக பவுண்டறிகள் (38) அடித்த இலங்கை மாஸ்டர்ஸ் அணித் தலைவர் குமார சங்கக்காரவுக்கு 5 இலட்சம் ரூபாவும் அதிக சிக்ஸ்கள் (25) அடித்த அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி வீரர் ஷேன் வொட்சனுக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் அம்பாட்டி ராயுடு அபார அரைச் சதம் குவித்து இந்திய மாஸ்டர்ஸ் அணியின் வெற்றியை இலகுவாக்கினார். மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 149 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மாஸ்டர்ஸ் அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அம்பாட்டி ராயுடு, சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரும் 45 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். சச்சின் டெண்டுல்கர் 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய அம்பாட்டி ராயுடு 50 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களைக் குவித்தார். அவர்களை விட குர்க்கீத் சிங் மான் 14 ஓட்டங்களையும் யுவ்ராஜ் சிங் 13 ஓட்டங்களையும் ஸ்டுவர்ட் பின்னி ஆட்டம் இழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஏஷ்லி நேர்ஸ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது. ப்றயன் லாரா, வில்லியம்ஸ் பேர்க்கின்ஸ் ஆகிய இருவரும் தலா 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். ஆனால், திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ட்வேன் ஸ்மித் 35 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 45 ஓட்டங்களையும் லெண்ட்ல் சிமன்ஸ் 41 பந்துகளில் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 57 ஓட்டங்களையும் பெற்று அணியைப் பலப்படுத்தினர். மத்திய வரிசையில் தினேஷ் ராம்டின் (12 ஆ.இ.) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். பந்துவீச்சில் வினய் குமார் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷாபாஸ் நதீம் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: அம்பாட்டி ராயுடு https://www.virakesari.lk/article/209434
-
கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட திட்டம் - பாப்பரசர் அனுமதி வழங்கினார்
17 MAR, 2025 | 03:27 PM கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ள பரிசுத்த பாப்பரசர் இதன் மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தனது பதவியில் தொடர்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரான்சின் ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அங்கிருந்தவாறே சீர்திருத்த தி;ட்டங்களிற்கு அனுமதி வழங்கும் ஆவணத்தில் கைச்சாத்திட்டார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. பெப்ரவரி 14 முதல் பாப்பரசர் மருத்துவமனையில் உள்ளார். கடந்த 12 வருடகாலப்பகுதியில் அவர் நீண்டநாட்கள் மருத்துவமனையில் உள்ளமை இதுவே முதல் தடவை. கத்தோலிக்க திருச்சபையில் பெண்களிற்கு அதிகளவு பங்களிப்பினை வழங்குவது,ஆட்சி மற்றும் தீர்மானம் எடுப்பதில் பாமர மக்களை அதிகளவில் சேர்ப்பது உட்பட பல சீர்திருத்தங்கள் குறித்து கத்தோலிக்க திருச்சபை ஆராயவுள்ளது. இந்த சீர்திருத்தங்களை ஆயர்கள் பேரவை என்ற அமைப்பு ஆராயும்.பரிசுத்த பாப்பரசர் தனது பதவிக்காலத்தில் பணி நிகழ்ச்சி நிரலை இந்த குழு மூலமே முன்னெடுத்துவருவார். சமீபகாலமாக பாப்பரசர் தனது புதுப்பித்தல் செயற்பாட்டில் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களை ஈடுபடுத்த முயன்றுவந்துள்ளார். இதேவேளை பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரது படத்தை முதல்தடவையாக வத்திக்கான் வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள தேவாலயத்தில் பாப்பரசர் திருப்பலியை நிறைவேற்றினார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/209449
-
உடல் நலப் பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி
சிகிச்சைக்கு பின்னர் பாப்பரசர் எப்படி இருக்கிறார்; வத்திக்கான் வெளியிட்ட புகைப்படம் போப் பிரான்சிஸ் உடல் நலம் தேறிய நிலையில், தேவாலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், (88, வயது) முதுமை காரணமாக உடல் நலம் குன்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார். கடந்த பெப்ரவரி14ம் திகதி ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலில் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருகிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர். Thinakkural.lkசிகிச்சைக்கு பின்னர் பாப்பரசர் எப்படி இருக்கிறார்; வத்திக...போப் பிரான்சிஸ் உடல் நலம் தேறிய நிலையில், தேவாலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், (88, […]
-
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை வெளிப்படுத்தும் ஆவணப்படம் அமைச்சர் சந்திரசேகரிடம் கையளிப்பு
இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியை வெளிப்படுத்தும் ஆவணப்படம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கையளிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணப்படம் இன்று யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் கடற்றொழில் அமைச்சரிடம் கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது. இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியால் கடல் வளங்கள் பாதிக்கப்படுவதுடன் பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/316133
-
நாஜி பிரசாரத்தை முறியடிக்க தொடங்கப்பட்ட 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா' நிறுவனத்தை மூட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா முகமையை மூடும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா செய்தி நிறுவனத்தை மூடுவதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்நிறுவனம் டிரம்ப் எதிர்ப்பு மனநிலையுடன் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், வரிசெலுத்துபவர்கள் இத்தகைய பிரசாரங்களுக்கு இலக்காவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மீதான அரசியல்வாதிகள் மற்றும் வலதுசாரி ஊடகங்களின் விமர்சனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப்போர் நேரத்தில் நாஜி பிரசாரங்களை எதிர்கொள்ளும் விதமாக கட்டமைக்கப்பட்ட வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா இன்னமும் ஒரு அடிப்படையில் ரேடியோ சேவையாகவே தொடர்கிறது. ஒவ்வொரு வாரமும் லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் இதன் சேவைகளைப் பெறுவதாக அந்நிறுவனம் கூறுகிறது. ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,1,300 ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் உள்ளனர் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் இயக்குநர் மைக் அப்ராமோவிட்ஸ் பேசுகையில், அவர் உட்பட அந்நிறுவனத்தின் 1,300 ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். "டிரம்பின் இந்த உத்தரவால் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா அதன் கடமையை செய்ய முடியவில்லை. குறிப்பாக இரான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் அமெரிக்காவை இழிவுபடுத்துவதற்காக தவறான செய்திகளை பரப்ப பில்லியன் டாலர் பணத்தை செலவிட்டு வருகின்றன." என்று அப்ராமோவிட்ஸ் கூறுகிறார். "இந்த நடவடிக்கை சுதந்திரமான மற்றும் தன்னிச்சையான ஊடகங்களுக்கான அமெரிக்காவின் நீண்டகால உறுதிப்பாட்டை குறைத்து மதிப்பிடுகிறது" என்று அமெரிக்க ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய தேசிய பிரஸ் கிளப் தெரிவித்துள்ளது. "ஒரே இரவில் ஒட்டுமொத்த செய்தியறையும் முடக்கப்படுமானால், பத்திரிகை சுதந்திரத்தின் நிலை குறித்து என்ன சொல்ல முடியும்" எனவும் கேள்வி எழுப்பியுள்ள அந்த அமைப்பு, "ஒரு நிறுவனம் துண்டாடப்பட்டுள்ளது. இது வெறும் ஊழியர் தொடர்புடையது அல்ல மாறாக சுதந்திரமான இதழியலின் எதிர்காலத்தை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் அடிப்படை மாற்றம்" என குற்றம் சாட்டியுள்ளது. மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட தகவல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரசாரங்களை எதிர்கொள்ளும் விதமாக இந்த முகமைகள் செயல்படுகின்றன அதிபரின் நடவடிக்கையானது விஓஏ எனப்படும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் தலைமை நிறுவனமான உலக ஊடகங்களுக்கான அமெரிக்க முகமையை (US Agency for Global Media) குறிவைக்கும் விதமாக உள்ளது. இந்நிறுவனம் Radio Free Europe மற்றும் Radio Free Asia போன்ற லாபநோக்கற்ற நிறுவனங்களுக்கு நிதி வழங்குகிறது. கம்யூனிஸ்ட் பிரசாரங்களை எதிர்கொள்ளும் வகையில் இவற்றின் செயல்பாடு இருக்கும். உலக ஊடகங்களுக்கான அமெரிக்க முகமை (USAGM) தனது மேலாளர்களை "பணியை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. மனித வளத்தை குறைத்துக் கொண்டு விதிகளுக்கு தேவைப்படும் அளவுக்கு செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்" என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ் கூற்றுப்படி, யூஎஸ்ஏஜிஎம் மனிதவள இயக்குநர் கிரிஸ்டல் தாமஸின் மின்னஞ்சல் மூலம் விஓஏ பணியாளர்களுக்கு இந்த விவரம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்-க்கு கிடைத்த தகவலின்படி, அனைத்து நிரந்தரமற்ற பணியாளர்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்ததாரர்களுக்கும் வழங்குவதற்கான பணம் தற்போது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேடியோ ஃப்ரீ ஏசியா மற்றும் ரேடியோ ஃப்ரீ யூரோப் அல்லது ரேடியோ லிபர்டி ஆகிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் சிபிஎஸ்-க்கு கிடைத்துள்ளது. அந்நிறுவனங்களுக்கான அமெரிக்க அரசின் நிதி உதவி ரத்து செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஎஸ்ஏஜிஎம் நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் விஓஏ மற்றும் இதர நிலையங்களின் கூற்றுப்படி தங்களுக்கு 400 மில்லியன் நேயர்கள் இருப்பதாக கூறுகின்றன. இது பிரிட்டன் அரசின் பகுதி நிதியோடு செயல்படும் பிபிசியின் உலக செய்தி சேவைக்கு இணையானது. ஆலோசகராக நியமிக்கப்பட்ட டிரம்பின் விசுவாசி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டிரம்ப்பின் தீவிர விசுவாசியான கரி லேக் யுஎஸ்ஏஜிஎம்-ன் சிறப்பு ஆலோசகராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார் செக் குடியரசு நாட்டின் வெளியுறவு அமைச்சரான ஜான் லிப்பாவ்ஸ்கி, பராகுவே-யில் இயங்கி வரும் ரேடியோ ஃப்ரீ யுரோ/ரேடியோ லிபர்ட்டியை தொடர்ந்து இயங்கச் செய்ய ஐரோப்பிய யூனியன் உதவும் என்று நம்புவதாகக் கூறினார். திங்கட் கிழமை நடைபெறும் ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் இந்த ஒலிபரப்பு சேவைகளை பகுதி அளவாவது இயங்கச் செய்ய வழிகளை காணுமாறு கேட்டுக் கொள்வேன் என செக் குடியரசின் வெளியுறவு அமைச்சர் கூறினார். பெரும் பணக்காரரும் டிரம்பின் பிரதான ஆலோசகர்களில் ஒருவருமான ஈலோன் மஸ்க் அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்கும் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். இவர் தமது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் விஓஏ மூடப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். வீடற்றவர்களை பாதுகாக்கும் திட்டம், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களுக்கான நிதி உள்ளிட்ட அமெரிக்க அரசின் பிற ஃபெடரல் முகமைகளுக்கான நிதியையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார். டிரம்ப் தமது முதல் ஆட்சிக்காலத்தின் போதும் விஓஏ குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். தன்னுடைய தீவிர விசுவாசியான கரி லேக்-ஐ யுஎஸ்ஏஜிஎம்-ன் சிறப்பு ஆலோசகராக சமீபத்தில் நியமித்தார். அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் பலவும் தனக்கு எதிராக பக்கச் சார்புடன் செயல்படுவதாக அதிபர் டிரம்ப் வழக்கமாகவே குற்றம் சாட்டி வந்தார். நீதித்துறையில் பேசும் போது சிஎன்என் மற்றும் எம்எஸ்என்பிசி ஆகிய செய்தி முகமைகளை "ஊழல்" என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிட்டார். நாஜி மற்றும் ஜப்பானிய பிரசாரங்களை எதிர்கொள்வதற்கான உத்தரவோடு 1942 ம் ஆண்டு வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தொடங்கப்பட்டது. இதன் முதல் ஒளிபரப்பு பிபிசியால் கடனாக வழங்கப்பட்ட ஒரு டிரான்ஸ்மீட்டரில் தொடங்கப்பட்டது என்பதன் மூலம் இதன் குறைந்தபட்ச நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அமெரிக்க முன்னாள் அதிபரான ஜெரால்டு ஃபோர்டு , விஓஏவின் தலையங்க சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான பொது சாசனத்தில் 1976-ஆம் ஆண்டு கையெழுத்திட்டார். ராணுவ தொடர்பற்ற ஒளிபரப்புகளை மேற்பார்வையிடும் நிர்வாகிகள் வாரியம் 1994-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட சட்டத் திருத்தம் ஒன்று விஓஏ மற்றும் துணை நிறுவனங்கள் அமெரிக்காவில் ஒளிபரப்பைத் தொடங்க அனுமதி வழங்கியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cr521p8494zo
-
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த விமானப்படை கோப்பிரல் உட்பட இருவர் வெடிகுண்டுகளுடன் கைது
வெல்லாவெளியில் வெடிபொருட்களுடன் விமானப்படை கோப்ரல் ஒருவர் உட்பட இருவர் கைது கனகராசா சரவணன் மட்டு. வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக சென்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த லான்ட் குறோஸ் வாகனத்துடன் விமானப்படை கோப்பிரல் உட்பட இருவரை வெடிகுண்டு பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை (17) அதிகாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். வெல்லாவெளி பாலையடிவட்டை வீதியில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் பிரயாணித்த லான்ட்குரோஸ் வாகனத்தை பொலிசார் சந்தேகத்தில் நிறுத்திய போது அம்பாறை விமானப்படைக்கு செல்வதாக தெரிவித்ததையடுத்து குறித்த வாகனத்தை பொலிசர் சோதனையிட்டனர். இதனை தொடர்ந்து வாகனத்தில் வெடிபொருளுக்கான அமோனியா ஒருகிலோ, ஜெல்கூறு ஓன்று, வெடிக்கான கயிறு ஒருபந்தம், 3 போத்தல் கெமிக்கல் என்பவற்றை மீட்டதையடுத்து கொடகவில அரகம்பாவிலையைச் சேர்ந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் ரோன் கமரா இயக்குநரான விமானப்படை கோப்பிரல் ஹனிந்து போப்பிந்த சமரவீர மற்றும் களனி கொல்கம்புறவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சிறிலால் சுஜீவ ஆகிய இருவரையும் சந்தேகத்தினடிப்படையில் கைது செய்ததுடன், டபிள்யூ பி.கே.ஜே. 6270 லான்ட்குரோஸ் வாகனத்தை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் புதையல் தோண்டும் நோக்கத்துடன் இந்த பகுதிக்கு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/316131
-
பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல சித்திரவதை முகாம்கள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டு வரவேண்டும் - ஞா.சிறிநேசன் கோரிக்கை
17 MAR, 2025 | 05:15 PM பட்டலந்த சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்குப் பின்னர் வெளிவந்துள்ளது. இவ்வாறு வடக்கு கிழக்கில் இயங்கிய பல முகாம்களில் தமிழர்கள் படுகொலை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் என்பதற்காக அதனை மூடிமறைத்துவிட்டு சிங்கள இளைஞர்கள் மற்றும் உங்கள் கட்சியினர் மாத்திரம் பாதிக்கப்பட்டார்கள் என்று கருத்து கொண்டுவந்திருப்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே தமிழ்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டு ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது பேசும் பொருளாக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் 1988 ம் ஆண்டு இயங்கிய பட்டலந்தை சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜே.வி.பியின் இரண்டாம் கட்ட போராட்டத்தை மேற்கொண்ட போது அவர்களை அடக்குவதற்காகச் சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கின்றது மாத்திரமல்ல முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உச்சரிக்கப்பட்டுள்ளது. 1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்தை முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றதுடன் உண்மைகளும் புதைக்கப்பட்டுள்ளன. 37 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜே.வி.பியினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியிலிருந்து வெளியில் வந்துள்ளது இந்த ஜே.வி. பி என்ற தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வராவிட்டால் இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்காது. ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்கின்றது எனவே இது போன்ற வடக்கு கிழக்கில் பல சட்டவிரோத முகாம்கள் காணப்பட்டது. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கிய மட்டக்களப்பு சத்திருக்கொண்டான் படைமுகாமில் 4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் முதியோர்கள் பெண்கள் உட்பட 186 பொதுமக்களைச் சித்திரவதை செய்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில் படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள் அதில் ஒருவர் வெட்டுகாயங்களுடன் தப்பி வெளிவந்து உண்மைகளைத் தெரிவித்தார். இந்த சத்திருக் கொண்டான் முகாம் சித்திரவதை படுகொலை காணாமல் ஆக்கப்படுவதற்கு முக்கியமான முகாமாக இயங்கியது அவ்வாறே பல முகாம்கள் இயங்கியதுடன் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பிவராதளவுக்கு கல்லடி, கரடியனாறு, கொண்டைவெட்டுவான், உட்பட பல முகாம்கள் காணப்பட்டது. ஜே.வி.பியினர் பாதிக்கப்பட்ட விடையம் அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது ஏன் என்றால் தங்களுடைய தோழர்கள் சகாக்கள் கொல்லப்பட்ட விதம் சித்திரவதை செய்யப்பட்ட விதம் அதில் பங்கு கொண்ட முக்கிய புள்ளிகள் தொடர்பாக வெளியில் வந்துள்ளது. சித்திரவதை என்பது சாதாரன விடையமல்ல அமிலத் தொட்டிகளில் இளைஞர்களைப் போட்டு கொலை செய்துள்ளனர். எங்களை பொறுத்தமட்டில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் சார்பாகச் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை எண்ணிக்கை ரீதியாகச் சிறுபான்மையாக இருக்கின்றதனால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. எனவே எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களது நீதியை வெளியில் கொண்டுவரமுடியாது ஆனால் 37 வருடத்திற்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதை பாலியல் பலாத்காரம் போன்ற அநீதிகள் வெளியில் கொண்டுவருவதாக இருந்தால் நாங்களும் ஆட்சியை கைப்பற்றினால் தான் முடியும் ஆனால் நாங்கள் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலை சித்திரவதை அநியாயம் அராஜகத்தை வெளிக் கொண்டுவருவதற்கு வழியே இல்லை எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் நாங்கள் உருக்கமாகவும் நியாயமாகவும் கேட்பது உங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பட்டலந்தை சித்திரவதை முகாமை கொண்டுவந்திருப்பதாக மற்றவர்களுக்குக் கூறாமல் வடக்கு கிழக்கு பிரதேசத்திலும் இவ்வாறான படுகொலைகள் சித்திரவதைகள் நடந்துள்ளது போன்ற விடையங்களை நீங்கள் வெளிக் கொண்டுவருவதாக இருந்தால் நீங்கள் ஒரு சமத்துவவாதிகள், சத்திருக்கொண்டான் பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி போன்ற பல கிராமங்களை சேர்ந்த மக்களை வெளிப்படையாகச் சுற்றிவளைப்பில் கைது செய்து கூட்டிச் சென்று ஒரே இரவில் படுகொலை இதற்கு நீதி இல்லை. கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்ட பகலில் 180க்கு மேற்பட்டவர்கள் கொண்டு சென்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இன்றும் கூட புதைக்கப்பட்ட புதைகுழி எது என்று தெரியாமல் உள்ளது இவ்வாறு பல முகாம்களில் இப்படியான அநியாயங்கள் நடந்துள்ளன. ஆகவே தேசிய மக்கள் சகத்தியினர் பட்டலந்தை முகாம் ஒரு ஆரம்பப்புள்ளியாக இருந்தால் வடக்கு கிழக்கில் முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகளை வெளிக் கொண்டுவரவேண்டும். ஆனால் உங்களது தோழர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் நீதியைத் தேடுகின்றீர்கள்; எனவே சித்திரவதை முகாம்களில் தமிழர்களுக்கு இடம்பெற்ற அநியாயங்கள் கொண்டுவரவேண்டும் என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/209467
-
விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை சபைக்கு சமர்ப்பிப்போம் என்கிறார் சாமர சம்பத்
விஜயகுமாரதுங்க படுகொலை உள்ளிட்ட முக்கிய படுகொலைகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்போம் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார். பட்டலந்த விவகாரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை போன்று 88 மற்றும் 89 காலப்பகுதியில் இடம்பெற்ற கலவரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என பட்டலந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பட்டலந்த சித்திரவதை முகாமினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. அரசாங்கம் இந்த அறிக்கைகளை சமர்ப்பித்ததை போன்று பிரதான மூன்று படுகொலைகள் தொடர்பான அறிக்கைகளையும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். விஜயகுமாரதுங்க படுகொலை உட்பட முக்கிய படுகொலைகள் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்போம். 1989 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 ஒருங்கிணைப்பாளர்கள் கொல்லப்பட்டார்கள். அதேபோல் சுதந்திர கட்சியின் 6300 உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களுக்கு நீதி கிடைக்காதா? 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனையும் ஆராய வேண்டும். மேலும் தமிழர்களுக்கு எதிரான இன கலவரத்தை மக்கள் விடுதலை முன்னணியே கட்டவிழ்த்துவிட்டது. தமிழர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் இன்று இனநல்லிணக்கம் பற்றி பேசுகிறார்கள் என்றார். https://thinakkural.lk/article/316085
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று ஆரம்பம் 17 MAR, 2025 | 04:27 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் புதன்கிழமை (19) முதல் சனிக்கிழமை (22) வரை - நான்கு நாள்கள் பதின்மூன்று அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று திங்கட்கிழமை (17) காலை இடம்பெற்றது. இதன் போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றிய விபரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அதன் முழு விபரமும் வருமாறு: வருடந்தம் நடைபெறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு வைபவமானது, பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக அமைவதுடன், ஒவ்வொரு பட்டதாரியினதும் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாகவும் இடம்பிடிக்கின்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு பொன் விழா ஆண்டு நிறைவில் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. 39வது பட்டமளிப்பு விழாவுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிப்பார். இந்தப் பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்ப பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் வவுனியா வளாகத்தைச் (தற்போது வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானங்கள் பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பட்டமளிப்பு விழாவில் 399 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 686 உள்வாரி மாணவர்களுக்கும், 702 திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 133 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 399 மாணவர்கள் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை நான்கு மாணவர்களும், முது மெய்யியல்மாணிப் பட்டத்தை 11 மாணவர்களும், தமிழில் முதுமாணிப்பட்டத்தை 22 மாணவர்களும், சைவசித்தாந்தத்தில் முதுமாணிப்பட்டத்தை மூன்று மாணவர்களும், கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப்பட்டத்தை 38 மாணவர்களும், தூய சக்தித் தொழில்நுட்பங்களில் முதுமாணிப் பட்டத்தை ஒரு மாணவரும், கல்வியியலில் முதுமாணிப்பட்டத்தை 176 மாணவர்களும், பொது நிர்வாகத்தில் முதுமாணிப்பட்டத்தை 70 மாணவர்களும், கல்வியில் பட்டப்பின் தகமைச் சான்றிதழை 54 மாணவர்களும், பிராந்தியத் திட்டமிடலில் முதுமாணிப்பட்டத்தை 17 மாணவர்களும், தமிழில் பட்டப்பின் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெறவிருப்பதுடன் வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை இரண்டு மாணவர்களும் பெறுகின்றனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 147 மாணவர்கள் மருத்துவமாணி சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 177 மாணவர்கள் பொறியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 110 மாணவர்கள் விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 84 மாணவர்கள் பொறியியலில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், 91 மாணவர்கள் உயிர்முறைமைகளில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், சித்தமருத்துவ பீடத்தில் இருந்து 60 மாணவர்கள் சித்த மருத்துவ சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர். இவர்களுடன், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் இருந்து மருந்தகவியல் சிறப்புமாணிப் பட்டத்தை 39 மாணவர்களும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 52 மாணவர்களும், தாதியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 38 மாணவர்களும் பெறவிருக்கின்றனர். அத்துடன், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து சிறப்பு வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை 267 மாணவர்களும், வியாபார நிர்வாகமாணிப் (பொது) பட்டத்தை 13 மாணவர்களும், சிறப்பு வணிகமாணிப் பட்டத்தை 83 மாணவர்களும், வணிகமாணிப் (பொது) பட்டத்தை மூன்று மாணவர்களும் பெறவிருக்கின்றனர். இவர்களுடன், கலைப்பீடத்தில் இருந்து சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 276 மாணவர்களும், பொதுக் கலைமாணிப் பட்டத்தை 353 மாணவர்களும், மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 22 மாணவர்களும், சட்டமாணியில் சிறப்புப் பட்டத்தை 69 மாணவர்களும் பெறவிருக்கின்றனர். மேலும், சேர். பொன் இராமநாதன் ஆற்றுகைகள், காண்பியக் கலைகள் பீடத்தைச் சேர்ந்த 158 மாணவர்கள் நடனம், இசை மற்றும் சித்திரமும் வடிவமைப்பும் துறைகளில் நுண்கலைமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர். மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 36 மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 30 மாணவர்கள் கணனி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 57 மாணவர்கள் சுற்றுச் சூழல் விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமாணிப் பட்டத்தை இரண்டு மாணவர்களும், தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தை 106 மாணவர்களும், பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணி பட்டத்தை 56 மாணவர்களும் பெறவிருக்கின்றனர். வியாபாரக் கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 57 மாணவர்கள் கணக்கியலும், நிதியியலிலும் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 13 மாணவர்கள் வியாபாரப் பொருளியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 32 மாணவர்கள் மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 12 மாணவர்கள் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 34 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணி (பொது)ப் பட்டத்தையும், 67 மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், ஒன்பது மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும் பெறவிருக்கின்றனர். இவர்களுடன், தொழில்நுட்பக் கற்கைகள் பீடத்தில் இருந்து 110 மாணவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இளமாணி சிறப்புப் பட்டத்தையும் பெறுகின்றனர். பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் தொலைதூரக் கற்கைகள் முறைமை மூலம் பட்டக் கற்கைகளைப் பூர்த்தி செய்த 514 மாணவர்கள் கலைமாணி பட்டத்தையும், 76 மாணவர்கள் சிறப்பு வணிகமாணிப் பட்டத்தையும், 26 மாணவர்கள் வணிகமாணிப்பட்டத்தையும், 86 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளதுடன், 90 மாணவர்கள் உடற்கல்வியில் உயர் தகமைச் சான்றிதழ்களையும், 37 மாணவர்கள் தொழில்சார் ஆங்கிலத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் உயர் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும், வியாபார முகாமைத்துவத்தில் மூன்று மாணவர்கள் உயர் தகமைச் சான்றிதழ்களையும், வணிகத்தில் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெற இருப்பதுடன், வியாபார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெறுவது உறுதிப்படுத்தப்படவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 68 தங்கப் பதக்கங்களும், 57 பரிசில்களும், நான்கு புலமைப்பரிசில்களும், வழங்கப்படவுள்ளன. ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மதிப்புமிக்க பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கங்களை முறையே 2020 ஆம் கல்வியாண்டு பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து கலைப்பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும், 2021 ஆம் கல்வியாண்டுக்குரிய தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் கலைப்பீடத்தில் இருந்து ஒரு மாணவரும், மருத்துவ பீடத்தில் இருந்து ஒரு மாணவரும் பெறுவதுடன், 2022 ஆம் கல்வியாண்டுக்குரிய தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் முகாமைத்துக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து ஒரு மாணவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் பெறுகின்றனர். மேலும், தூய மற்றும் பிரயோக விஞ்ஞானத்தில் சிறந்த செயலாற்றுகைக்கான பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப் பதக்கத்தை பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பட்டமளிப்பு வைபவத்துக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் நிகழ்வுகளாக அமையும் நினைவுப் பேருரைகளான சேர். பொன் இராமநாதன் நினைவுப்பேருரை பங்குனி மாதம் 26ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப்பேருரை பி.ப 4.00 மணிக்கும் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவிருக்கின்றன. சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தகைசால் பேராசிரியருமான பொ.பாலசுந்தரம்பிள்ளை, “இலங்கை, வடமாகாணத்தில் குடித்தொகை வேறுபாட்டு ஒழுங்கும், இடஞ்சார் பரம்பல் மாற்றங்களும் 1871-2022 (The Population Variations Pattern and Spatial Distributional Changes in the Northern Province of Sri Lanka - 1871-2022)” என்ற தலைப்பிலும், மதிப்புமிகு சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையை கொழும்புப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் கலாநிதி. டர்சி தொறடெனியா, “ பெண்கள் ஆரோக்கியத்தின் முன்னோடி கலாநிதி சிவா சின்னத்தம்பி (Pioneer in Women’s Health Dr.Siva Chinnatamby)” என்ற ஆய்வுத் தலைப்பிலும் நினைவுப் பேருரைகளை நிகழ்த்தவிருக்கின்றனர். https://www.virakesari.lk/article/209459
-
கோத்ரா கலவரம், ஆர்எஸ்எஸ், காந்தி, சீனா - அமெரிக்க பாட்காஸ்டர் கேள்விக்கு மோதி பதில்
கோத்ரா கலவரம், ஆர்எஸ்எஸ், காந்தி, சீனா - அமெரிக்க பாட்காஸ்டர் கேள்விக்கு மோதி பதில் என்ன? பட மூலாதாரம்,ANI 17 மார்ச் 2025, 08:24 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரீட்மேனின் யூடியூப் சேனலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நேர்காணல் வழங்கியுள்ளார். இந்த மூன்று மணி நேர 17 நிமிட பாட்காஸ்டில், தனது தனிப்பட்ட வாழ்க்கையைத் தவிர, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து ராஷ்ட்ரா, மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மோதி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, குஜராத் கலவரம் குறித்தும் அவர் பேசியுள்ளார். தவிர, சீனா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உடனான உறவுகள் குறித்தும் இந்த நேர்காணலில் விவாதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், பிரதமர் மோதியின் நேர்காணல் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகங்களை எதிர்கொள்ள அஞ்சுபவர் ஒரு 'வலதுசாரி வெளிநாட்டு பாட்காஸ்டருடன்' பேசியதாகக் கூறியுள்ளார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நேர்காணலில், பிரதமர் மோதி பல்வேறு தலைப்புகளில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். 'பயங்கரவாதம் எங்கும் இருக்கலாம், ஆனால் அதன் பிறப்பிடம் பாகிஸ்தானில் உள்ளது' அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோதி கூறுகையில், "உலகில் எங்கு பயங்கரவாத சம்பவம் நடந்தாலும், அதுகுறித்த தேடல்கள் எப்படியோ பாகிஸ்தானுக்கு இட்டுச் செல்கின்றன" என்றார். "9/11 போன்ற ஒரு பெரிய சம்பவம் அமெரிக்காவில் நடந்தது. அதன் முக்கிய மூளையாக இருந்த ஒசாமா பின்லேடன் எங்கே கண்டுபிடிக்கப்பட்டார்? அவர் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்திருந்தார்" என்று மோதி தெரிவித்தார். "இந்தியாவிற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் பிரச்னையின் மையமாக பாகிஸ்தான் மாறிவிட்டது. இந்தப் பாதையால் யார் பயனடைவார்கள் என்பதை நாங்கள் தொடர்ந்து அவர்களிடம் கூறி வருகிறோம். நீங்கள் பயங்கரவாதத்தின் பாதையை கைவிட வேண்டும். அரசின் ஆதரவு கொண்ட பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும்" என்று பிரதமர் மோதி கூறினார். தொடர்ந்து பிரீட்மேனிடம் பேசிய அவர், "நானே அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்ள லாகூருக்குச் சென்றேன். பிரதமரான பிறகு, ஒரு நல்ல தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக, எனது பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தானை சிறப்பாக அழைத்தேன். ஒவ்வொரு முறையும் எடுக்கப்படும் நல்ல முயற்சிகள் அனைத்தும் எதிர்மறையாக மாறும்." என்றார். அமெரிக்கா: இந்தியர்களை கைவிலங்கிடப்பட்டு அனுப்பிய விவகாரத்தில் என்ன நடந்தது? முழு விவரம்7 பிப்ரவரி 2025 அமெரிக்கா: இந்திய குடியேறிகள் நாடு கடத்தப்படுவது இரு நாட்டு உறவை பாதிக்குமா?6 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவில் 9/11 தாக்குதல் நடந்த இடம் கோத்ரா கலவரம் பற்றி மோதி கூறியது என்ன ? நேர்காணலின் போது, குஜராத்தின் 2002 கலவரம் குறித்தும் பிரதமர் மோதியிடம் ஃப்ரீட்மேன் கேள்விகளைக் கேட்டார். அக்கேள்விகளுக்குப் பதிலளித்த மோதி, "அதற்கு முந்தைய சம்பவத்தை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். டிசம்பர் 24, 1999 அன்று, விமானம் கடத்தப்பட்டு காந்தஹாருக்குக் கொண்டு செல்லப்பட்டது. 2000ம் ஆண்டில், டெல்லியில் உள்ள செங்கோட்டை மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது" என்று கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோதி, "செப்டம்பர் 11, 2001 அன்று, அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அக்டோபர் 2001 இல், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. டிசம்பர் 13, 2001 அன்று, இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது"என்றார். பிறகு, "எட்டு முதல் பத்து மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பாருங்கள். அத்தகைய சூழலில், எனக்கு முதல்வர் பொறுப்பு கிடைத்தது. அதற்கு முன்பு, நூற்றாண்டின் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. நான் பதவியேற்றவுடன் இந்தப் பணியில் ஈடுபட்டேன்" என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சபர்மதி ரயிலின் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் மக்கள் இறந்தனர். "பிப்ரவரி 27, 2002 அன்று, சட்டமன்றத்தில் எனது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் அவையில் அமர்ந்திருந்தோம். நாங்கள் சட்டமன்ற உறுப்பினர்களான மூன்று நாட்களுக்குப் பிறகு, கோத்ரா சம்பவம் நடந்தது. அது ஒரு கொடூரமான சம்பவம். மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். காந்தஹர் விமான விபத்தில் தொடங்கி, பின்னணியில் பல பெரிய சம்பவங்கள் நடந்தன, ஏராளமான மக்கள் இறந்தனர், உயிருடன் எரிக்கப்பட்டனர். நிலைமை எப்படி இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?" என்றார். ஒரு பெரிய கலவரம் நடந்ததாகக் கூறுபவர்கள், இந்தத் தவறான கருத்தைப் பரப்பியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். "2002 ஆம் ஆண்டுக்கு முந்தைய தரவுகளைப் பார்த்தால், குஜராத்தில் எத்தனை கலவரங்கள் நடந்தன என்பதை நாம் காணலாம். பட்டம் விடும் போட்டியில் வகுப்புவாத வன்முறை நடந்துள்ளன. சைக்கிள் மோதலால் கூட வகுப்புவாத வன்முறைகள் நடந்துள்ளன. 2002 ஆம் ஆண்டுக்கு முன்பு, குஜராத்தில் 250க்கும் மேற்பட்ட பெரிய கலவரங்கள் நடந்தன. 1969 ஆம் ஆண்டு நடந்த கலவரங்கள் ஆறு மாதங்கள் நீடித்தன. அத்தகைய பெரிய சம்பவம் ஒரு தீப்பொறியாகி சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்" என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார். மத்திய பட்ஜெட் 2025: 'ஏழை, எளிய மக்களுக்கானது இல்லை' - பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன?2 பிப்ரவரி 2025 அமெரிக்க அதிபரான பிறகு முதன் முறையாக மோதியுடன் பேச்சு - டிரம்ப் முன்வைத்த 2 விஷயங்கள் என்ன?29 ஜனவரி 2025 வங்கதேசம் - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் சந்திப்பு அதிகரிப்பு - இந்தியா கூறியது என்ன?27 ஜனவரி 2025 "நான் போரை அல்ல, அமைதியை ஆதரிக்கிறேன்" பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று மோதி கூறினார். ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையே நீடிக்கும் போர் குறித்து பிரதமர் நரேந்திர மோதி தனது நேர்காணலில் பதிலளித்துள்ளார். "எங்கள் பின்னணி மிகவும் வலுவானது, நாங்கள் அமைதிக்காகப் பேசும் போதெல்லாம், உலகம் எங்கள் பேச்சைக் கேட்கிறது. ஏனென்றால் இது புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் பூமி" என்றார். பிரதமர் மோதி தொடர்ந்து பேசிய போது, ரஷ்யா-யுக்ரேன் குறித்து கூறுகையில், "எனக்கு ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளுடனும் நல்ல உறவு உள்ளது. இது போருக்கான நேரம் அல்ல என்று அதிபர் புதினிடம் நான் கூற முடியும். நட்பு மனப்பான்மையுடன், உலக நாடுகள் உங்களுடன் எவ்வளவு தூரம் நின்றாலும், போர்க்களத்தில் எந்த முடிவும் ஏற்படாது என்று ஸெலென்ஸ்கியிடமும் கூறுகிறேன் " என்றும் தெரிவித்தார். போரின் முடிவு பேச்சுவார்த்தை மூலமே அமையும் என்றும், ரஷ்யாவும் யுக்ரேனும் அந்த மேசையில் உள்ள போது தான் அது நடக்கும் என்றும் பிரதமர் மோதி கூறினார். "உலகமே யுக்ரேனுடன் எவ்வளவு தான் அமர்ந்து பேசினாலும், இரு தரப்பினரும் இருப்பது முக்கியம். நான் அமைதியை ஆதரிப்பவன் என எப்போதும் கூறுவேன்" என்றும் மோதி தெரிவித்தார். சீன அதிபரை அழைத்த டிரம்ப், தனது 'நண்பர்' மோதியை அழைக்காதது ஏன்?22 ஜனவரி 2025 ஹிண்டன்பர்க்: அதானி குழுமத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்த்த நிறுவனம் மூடப்படுவது ஏன்?17 ஜனவரி 2025 இந்தியா: ஒருபுறம் டிரம்ப், மறுபுறம் சீனா, பாகிஸ்தான் - மோதி அரசுக்கு 2025இல் காத்திருக்கும் சவால்கள்17 ஜனவரி 2025 ஆர்.எஸ்.எஸ் மற்றும் காந்தி குறித்து மோதி கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் நரேந்திர மோதி நேர்காணலின் போது, பிரதமர் மோதி ஆர்.எஸ்.எஸ் குறித்து விரிவாகப் பேசினார். "சங்கம் ஒரு பெரிய அமைப்பு. அது 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உலகில் எங்காவது இவ்வளவு பெரிய தன்னார்வ அமைப்பு இருக்குமா? கோடிக்கணக்கான மக்கள் அதனுடன் தொடர்புடையவர்கள். சங்கத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானது அல்ல. சங்கத்தின் செயல்பாடுகளை உணர வேண்டும். சங்கம் வாழ்க்கையின் நோக்கத்திற்கு வழிகாட்டுகிறது" என்று அவர் தெரிவித்தார். மேற்கொண்டு பேசிய அவர், "சங்கத்தின் சில தன்னார்வலர்கள் காடுகளில் வனவாசி கல்யாண் ஆசிரமத்தை நடத்துகிறார்கள். அவர்கள் பழங்குடியினரிடையே ஏகல் வித்யாலயாவை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் சிலர் அவர்களுக்கு 10 முதல் 15 டாலர்கள் நன்கொடை அளிக்கிறார்கள். இதுபோன்ற 70 ஆயிரம் பள்ளிகள் இயங்குகின்றன. அதேபோல், கல்வியில் புரட்சியைக் கொண்டுவர வித்யா பாரதி என்ற அமைப்பு அமைக்கப்பட்டது. அவர்கள் நாட்டில் சுமார் 25 ஆயிரம் பள்ளிகளை நடத்துகிறார்கள்" என்றும் பிரதமர் மோதி குறிப்பிட்டார். கூடுதலாக பாரதிய மஸ்தூர் சங்கம் குறித்தும் பிரதமர் மோதி விவாதித்தார். இதுகுறித்து பேசிய அவர், 'இடதுசாரி தொழிற்சங்கங்கள், உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள் என்று கூறுகின்றன. ஆர்.எஸ்.எஸ் கிளைகளிலிருந்து வெளியே வந்து தொழிற்சங்கங்களை நடத்துபவர்கள், 'தொழிலாளர்களே, உலகை ஒன்றிணையுங்கள்' என்று கூறுகிறார்கள். இரண்டு சொற்களில் மட்டுமே மாற்றம் உள்ளது, ஆனால் கருத்தியல் மாற்றம் மிகப் பெரியது. சங்கத்தின் சேவை மனப்பான்மை என்னை வடிவமைக்க உதவியது" என்று குறிப்பிட்டார். மேலும், மகாத்மா காந்தியின் செல்வாக்கு இன்றும் ஏதோ ஒரு வடிவத்தில் இந்திய வாழ்வில் காணப்படுகிறது என்று பிரதமர் மோதி நேர்காணலின் போது கூறினார். "சுதந்திரத்தைப் பற்றிப் பேசினால், லட்சக்கணக்கான துணிச்சலான மக்கள் இங்கு தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். அவர்கள் தங்கள் இளமையை சிறைகளில் கழித்தனர். அவர்கள் முன்வந்து நாட்டிற்காக தியாகிகளாக மாறினார்கள். அந்தப் பாரம்பரியம் தொடர்ந்தது, அது ஒரு சூழலையும் உருவாக்கியது. ஆனால் காந்தி ஒரு வெகுஜன இயக்கத்தைத் தொடங்கினார். அவர் ஒவ்வொரு செயலையும் சுதந்திரத்தின் நிறத்தால் வண்ணமயமாக்கினார். தண்டி யாத்திரை ஒரு பெரிய புரட்சியை உருவாக்கும் என்று ஆங்கிலேயர்களுக்கு ஒருபோதும் தெரியாது" என்று அவர் தெரிவித்தார். மேலும், மகாத்மா காந்தி கூட்டு உணர்வை வளர்த்ததாகவும், மக்களின் சக்தியை அங்கீகரித்ததாகவும் பிரதமர் மோதி கூறினார். என்னைப் பொறுத்தவரை, அது இன்றும் முக்கியமானது. நான் எந்த வேலை செய்தாலும், பொதுமக்களை இணைத்து செய்வதற்கே முயற்சிக்கிறேன் என்றும் தெரிவித்தார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நீக்க பாஜக மேலிடம் தயாராகிறதா?13 ஜனவரி 2025 ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகலால் இந்தியா - கனடா உறவு மேம்படுமா? ஒரு விரிவான அலசல்7 ஜனவரி 2025 அஜ்மீர் தர்காவுக்கு சால்வை வழங்கிய பிரதமர் மோதி: இந்து சேனா எதிர்ப்பது ஏன்?3 ஜனவரி 2025 'கண்ணுக்குக் கண் உரையாடல்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார். 2013 ஆம் ஆண்டு கட்சி தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்த போது, 'அவர் ஒரு மாநிலத்தில் ஆட்சி புரிந்து வருகிறார், வெளியுறவுக் கொள்கையை அவர் எவ்வாறு புரிந்துகொள்வார்' என்று மக்கள் கூறினர் என பிரதமர் மோதி குறிப்பிட்டார். "அப்போது நான் கூறினேன், ஒரு நேர்காணலில் முழு வெளியுறவுக் கொள்கையையும் விளக்க முடியாது. ஆனால், இதை மட்டும் நிச்சயமாகச் சொல்கிறேன், இந்தியா கண்களைத் தாழ்த்தியோ உயர்த்தியோ பேசாது, ஆனால் கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசும். இன்றும் கூட, நான் அந்தக் கருத்தைப் பின்பற்றுகிறேன். எனக்கு என் நாடுதான் முதன்மையானது. ஆனால் ஒருவரை அவமதிப்பது, ஒருவரைப் பற்றி தவறாகப் பேசுவது, இவை எனது கலாசாரத்தின் மதிப்புகளோ அல்லது எனது பாரம்பரியமோ அல்ல" என்று தெரிவித்தார். மன்மோகன் சிங்கை கோபப்படுத்திய மோதியின் குற்றச்சாட்டு - இரு தலைவர்களின் உறவு எப்படி இருந்தது?28 டிசம்பர் 2024 மோதி, மோகன் பாகவத் இடையே மறைமுக யுத்தம் நடக்கிறதா? உண்மை என்ன?26 டிசம்பர் 2024 மோதிக்கு உயரிய விருது கொடுத்த குவைத் - அந்நாட்டு ஊடகங்கள் கூறுவது என்ன?24 டிசம்பர் 2024 டிரம்ப் குறித்து மோதி கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி. (கோப்புப் படம்) பிரதமர் நரேந்திர மோதி, ஹூஸ்டன் மைதானத்தில் டிரம்புடன் இணைந்து பங்கேற்ற நிகழ்ச்சியைப் பற்றியும் குறிப்பிட்டார். உரைக்குப் பிறகு, அரங்கத்தைச் சுற்றிப் பார்க்கலாமா என்று டிரம்பிடம் கேட்ட போது, அவர் உடனடியாக ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார். "அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பு பதற்றமடைந்து விட்டது. பாதுகாப்பு எவ்வளவு இறுக்கமாக உள்ளது, எத்தனை சோதனைகள் செய்யப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். அவருக்கு இருக்கும் தைரியம் எனது மனதைத் தொட்டது. அவர் சுயமாக முடிவுகளை எடுக்கிறார், இரண்டாவதாக மோதி மீது நம்பிக்கை வைத்துள்ளார், மோதி அழைத்துச் செல்கிறார் என்றால் போகலாம் என்றார்" என்று மோதி நினைவுகூர்ந்தார். அனைத்து நெறிமுறைகளையும் மீறி, டிரம்ப் முழு கட்டடத்தையும் தனக்குக் காட்டியதாக பிரதமர் மோதி கூறினார். "அவர் 'அமெரிக்காவுக்கு முன்னுரிமை' என்பவராக உள்ளார். நான் 'இந்தியாவுக்கு முன்னுரிமை' என்கிறேன். அதனால் எங்களுடைய கூட்டணி சிறப்பாக பொருந்துகிறது." என்றும் கூறினார். அம்பேத்கரை காங்கிரஸ் வேண்டுமென்றே தேர்தலில் தோற்கடித்ததா? ஒரு வரலாற்று ஆய்வு22 டிசம்பர் 2024 இந்தியா - குவைத்: 43 ஆண்டுகளுக்கு பிறகு செல்லும் முதல் பிரதமர் - மோதியின் நோக்கம் என்ன?20 டிசம்பர் 2024 ராகுல் காந்தி ஆர்எஸ்எஸ் குறித்து பேசியது என்ன? பாஜக அஞ்சுவதாக பிரியங்கா காந்தி கூறியது ஏன்?20 டிசம்பர் 2024 சீனாவுடனான உறவுகள் குறித்து மோதி கூறியது என்ன? சீனாவுடனான உறவுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பிரதமர் மோதி பதிலளித்தார். இரு நாடுகளுக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான உறவுகள் இருப்பதாகவும், ஒரு காலத்தில் இந்தியாவும் சீனாவும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியைக் கொண்டிருந்தன என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதற்கான வரலாறு இல்லை என்றும் அவர் கூறினார். "ஒரு காலத்தில் சீனாவில் புத்தரின் செல்வாக்கு மிகவும் வலுவாக இருந்தது." என்றார். அமெரிக்காவில் ஸெலன்ஸ்கி நடத்தப்பட்ட விதம் இந்தியாவுக்கு சொல்லும் சேதி என்ன? டிரம்ப் - மோதி: இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன? 'நீதிபதி நாத்திகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை' - நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிபிசி பேட்டியில் கூறியது என்ன? "இந்த உறவுகள் வலுவாக இருக்க வேண்டும், இதேபோல் தொடர வேண்டும். இரண்டு அண்டை நாடுகளிடையே ஏதாவது ஒன்று நடப்பது இயல்பு தான். சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் இயற்கையானவை. இது குடும்பத்திலும் உள்ளது, ஆனால் எங்கள் வேறுபாடுகள் சச்சரவுகளாக மாறாமல் இருக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்" என்று பிரதமர் மோதி தெரிவித்தார். கால்வானை சுட்டிக்காட்டிய மோதி, "2020 ஆம் ஆண்டு எல்லையில் நடந்த சம்பவங்கள் எங்களுக்கிடையிலான சூழ்நிலையை பதற்றமானது. ஆனால் நான் அதிபர் ஜியைச் சந்தித்த பிறகு, எல்லையில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியது" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgp359n1ego