Everything posted by ஏராளன்
-
டைப் 2 நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் அரக்கப் பல்லியின் விஷம்
மருத்துவ உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் கிலா அரக்கப் பல்லியின் விஷம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த பல்லியின் விஷம், செமிக்ளூடைடு எனும் மருந்துக்கு ஆதாரமாக விளங்குகின்றது கட்டுரை தகவல் எழுதியவர்,ரஃபேல் அபுசைபே பதவி,பிபிசி முண்டோ 4 மணி நேரங்களுக்கு முன்னர் வட அமெரிக்காவின் பாலைவனங்களில் பளபளக்கும், செதில்களைக் கொண்ட, மெதுவாக நகரும் அந்தச் சிறிய உயிரினம்தான் மருந்துகள் துறையில் புரட்சியை ஏற்படுத்த மறைமுகமாக உதவியுள்ளது. அதன் அறிவியல் பெயர் ஹெலோடெர்மா சஸ்பெக்டம் (Heloderma suspectum), ஆனால், பெரும்பாலானோர் அதை கிலா மான்ஸ்டர் என்கின்றனர். அதன் விஷம், பல தீவிரமான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். 2024 நவம்பரில் கொலோரடோ மாகாணத்தில் இந்த கிலா அரக்கப் பல்லியின் குட்டி ஒன்று கடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சிறிய, விகாரமான உயிரினம்தான் வருங்காலத்தில் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றப் போகும் மருத்துவக் கண்டுபிடிப்பின் பின்னால் உள்ளது. அதன் விஷத்தில், ஜிஎல்பி-1 ஏற்பி (GLP-1 receptor) எனும் புரதத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் மருந்துகளை உருவாக்க உதவக்கூடிய ஊக்குவிக்கும் நொதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புரதம், தற்போது ஓஸெம்பிக் (Ozempic), வெகோவி (Wegovy), மௌஞ்சரொ (Mounjaro) எனும் பெயரில் மருந்துகளாக விற்கப்படுகின்றன. இவை, டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு புரட்சியாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மாடுகள் எவ்வாறு தகவல் பரிமாறிக் கொள்கின்றன? மனிதன் புரிந்து கொண்டால் என்ன மாற்றம் நிகழும்? தவளைக் குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் அரிய வகை ஆண் தவளை பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க என்ன காரணம்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா? பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா? இந்த மருந்துகளை உருவாக்குவதில் கிலா மான்ஸ்டர் முக்கிய உயிரினமாக உள்ளது. விலங்கின் நஞ்சை மக்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்துவது புதிதல்ல, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் முதல் ரத்தம் உறைதல் ஆகியவற்றுக்கான மருந்துகளில் அவை முக்கியப் பங்கு வகித்துள்ளன. ஆனால், இந்தப் பல்லி எந்த அளவுக்குச் சிறப்பானது? நம்பிக்கைக்குரிய மருந்துகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் அதன் நஞ்சை எப்படிப் பெறுவது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செமிக்ளூடைட் டைப் 2 நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது அரக்க பல்லியின் நஞ்சு "தன்னை வேட்டையாட வருவதிலிருந்து காத்துக்கொள்வது மற்றும் தன்னுடைய இரையை முடக்குவது என குறிப்பாகச் செயல்படும் வகையில் இத்தகைய நஞ்சுக்கள் பரிணமிக்கின்றன," என உயிரினங்களின் நஞ்சு குறித்து ஆராய்ந்து, அதன் மாற்றுப் பயன்பாடுகள் குறித்து ஆராய்ந்து வரும் பேராசிரியர் கினி பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். வட அமெரிக்காவை சேர்ந்த இரண்டு விஷப் பல்லி இனங்களில் ஒன்றான இந்த கிலா அரக்க பல்லியைப் பொறுத்தவரையில் அதனால், வேகமாக நகர முடியாது என்பதால் தன் இரை வேகமாகச் செயல்படுவதைத் தடுக்கும் வகையில் அதன் விஷம் பரிணமித்துள்ளது. இரையின் மீது ஏற்படுத்தும் இந்த விளைவைத் தவிர்த்து, அதன் விஷத்தில் உள்ள ஹார்மோன் ஒன்று, இந்தப் பல்லி வெறும் ஆறு வேளை உணவின் மூலம் ஓர் ஆண்டு வரை வாழும் வகையில் அதன் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தைக் குறைப்பதில் உதவுவதாக, குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் எக்ஸென்டின் - 4 (exendin-4) எனப் பெயரிட்டுள்ள இந்த ஹார்மோன், மனிதர்களில் ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உற்பத்தியாகும் ஜிஎல்பி 1-ஐ ஒத்திருப்பதாகக் கூறுகின்றனர். எனினும், எக்ஸென்டின் - 4 ஜிஎல்பி 1-ஐ விட முக்கியமான ஒரு விஷயத்தில் வித்தியாசமானதாக உள்ளது. மனித உடலில் உள்ள ஜிஎல்பி 1 இயற்கையாகவே கழிவாக வெளியேறும் நிலையில், எக்ஸென்டின் - 4 உடலில் நீண்ட காலம் தங்குகிறது, இதனால், குளுக்கோஸ் அளவைச் சீராக வைத்திருப்பதில் இது நீண்ட கால விளைவைக் கொண்டிருக்கிறது. இதுதான் ஜிஎல்பி-1 ஏற்பியாகச் செயல்படும் மருந்துகளை உருவாக்குவதன் அடிப்படையை வழங்குகிறது. சிரியாவில் அசத் வீழ்ச்சிக்குப் பிறகு மிகப்பெரிய மோதல் - நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்ட பொதுமக்கள்9 மார்ச் 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு வைத்த நியூசிலாந்து9 மார்ச் 2025 நஞ்சு மருந்தாக மாறுவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இதன் விஷம் மற்ற உயிரினங்களைத் தாக்குவதைவிட தன்னைப் பாதுகாப்பதிலேயே அதிகம் செயலாற்றுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர் எக்ஸெண்டின்-4 முதன்முதலில், டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பையெட்டா (எக்ஸெனாட்டைட்) (Byetta -exenatide) எனும் மருந்துக்காகத்தான் பெரியளவில் பயன்படுத்தப்பட்டது. இந்த மருந்து குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் உதவியது. மேலும், சில மாற்றங்களுடன் செமக்ளூடைடு(semaglutide - Ozempic, Wegovy) போன்ற மிகவும் வலுவான மற்றும் நீடித்த சேர்மங்களுக்கு அடித்தளத்தை அமைத்தது. "ஒன்று அல்லது இரண்டு அமினோ அமிலங்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், அவற்றை ரத்த ஓட்டத்தில் நீடித்த விளைவுடன் மாற்றுவதால், அதன் சிகிச்சைத் திறனை சீராக நிர்வகிப்பது அல்லது அதிகப்படுத்துவது அற்புதமான விஷயம்," என பேராசிரியர் கினி பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். செமக்ளூடைடை பொறுத்தவரை கொழுப்பு அமில சங்கிலியை ரத்தத்தில் ஹார்மோன்கள், வைட்டமின்கள் மற்றும் நொதிகளை உடலில் கடத்துவதற்குப் பயன்படுத்தும் ஆல்புமின் எனும் புரதத்துடன் இணைப்பதன் மூலம், ரத்த ஓட்டத்தில் மருந்தின் விளைவை நீடித்ததாக ஆக்குவதாக அவர் விளக்கினார். எனினும், ஒரு மருந்தைத் தயாரிப்பதற்கு இத்தகைய நஞ்சு அடிப்படையாகப் பயன்படுத்தப்படுவதற்கு செமிக்ளூடைடு மட்டும் உதாரணம் அல்ல என்கிறார் பேராசிரியர் கினி. சுனிதா வில்லியம்ஸ் எப்போது, எவ்வாறு பூமிக்குத் திரும்புவார்? நாசா புதிய அறிவிப்பு9 மார்ச் 2025 ஜென் Z, ஜென் ஆல்பா தலைமுறையினர் பயன்படுத்தும் வார்த்தைகள் எங்கிருந்து வந்தன?9 மார்ச் 2025 மற்ற உயிரினங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,போத்ரோப்ஸ் ஜராராகா எனும் இனத்தின் பெப்டைட் ரத்தம் உறைதலை நிர்வகிப்பதற்குப் பயன்படும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது பேராசிரியர் கினி சுட்டிக்காட்டுவது போன்று, கடந்த பல்லாண்டுக் காலமாக பல்வேறு விதமான உயிரினங்களின் நஞ்சை உலகம் முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்மூலம் தயாரிக்கப்படும் மருந்து சேர்மங்கள், சந்தையில் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன. "கடந்த 1970களின் முற்பகுதிக்கு முன்பே பிரேசில் நாட்டு பாம்பு இனமான போத்ரோப்ஸ் ஜராராகா (Bothrops jararaca) எனும் இனத்தின் நஞ்சில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பெப்டைட் எனும் அமினோ அமிலங்கள், ஏசிஇ (angiotensin-converting enzyme) எனப்படும் மருந்துகள் தயாரிக்கப்பட வழிவகுத்தது," எனக் கூறும் அவர், அந்த மருந்துகள் தற்போது ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு ஆகியவற்றில் அத்தியாவசியமான மருந்துகளாக உள்ளன என்றார். காலப்போக்கில் கேப்டோப்ரில் (captopril) மற்றும் எனலாப்ரல் (enalapril) போன்ற மருந்துகள், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. கடல் நத்தைகளின் நஞ்சு, நாள்பட்ட வலிக்கு சிகிச்சை அளிப்பதில் பயன்படுத்தப்படுகிறது, மேலும், இயற்கையான ரத்த உறைவு எதிர்ப்பு மருந்தாக விளங்கும் அட்டைப் பூச்சிகள், ரத்தக் குழாய் அடைப்பு ஆபத்தைக் குறைக்கும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. "தன் இரை அல்லது வேட்டையாட வரும் உயிரினங்கள் மீது மிகவும் குறிப்பான விளைவுகளை இந்த நஞ்சுகள் கொண்டிருக்கின்றன. இதைப் புரிந்துகொண்டு, நாம் பிரித்தெடுத்தால் அந்த நஞ்சை சிகிச்சை மருந்தாக மாற்ற முடியும்," என கினி விளக்குகிறார். பாம்பின் நஞ்சு, கொசுவின் எச்சில் ஆகியவற்றிலிருந்து மாரடைப்புக்குப் பிறகான இதய செயலிழப்பைத் தடுப்பது அல்லது சிறுநீரகத்தில் இருந்து அதிகப்படியான சிறுநீர் உற்பத்தியாதல் (diuresis) ஆகிய பிரச்னைகளுக்கான மருந்துகளை உருவாக்கும் நோக்கத்துடன் அவற்றை ஆய்வு செய்து வருகிறார் கினி. அவரது அனுபவத்தில், இந்த நச்சுகளில் பலவற்றில், ஒன்று அல்லது இரண்டு அமினோ அமிலங்களில் சிறிய மாறுபாடுகளைக் கொண்டுள்ளன. அவை மிகவும் குறிப்பிட்ட உடலியல் விளைவுகளைத் தூண்டுகின்றன, மேலும் புதிய சிகிச்சைகளை உருவாக்க அவற்றைத் தனிமைப்படுத்தி மாற்றியமைக்க வேண்டும். 'வெறும் 30 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூரு' - விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்?11 மார்ச் 2025 காஸா குழந்தைகளுக்கு ஜோர்டானில் சிகிச்சை - திரும்பிச் செல்வது எப்போது?9 மார்ச் 2025 நஞ்சுகளின் எதிர்காலம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல வகையான உயிரினங்களின் நஞ்சு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன மூலக்கூறு உயிரியல், மருந்தியல் மற்றும் நஞ்சுகள் குறித்த விரிவான ஆய்வுகளை ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கிலா அரக்க பல்லி மீதான சோதனைகள் வழங்குகின்றன. மிகவும் மெதுவாக நகரும், பெரிதாக ஆபத்து இல்லாத, சில வேளை உணவுகளில் மட்டும் உயிர் பிழைக்கும், நிலையான நஞ்சைக் கொண்டுள்ள இந்த உயிரினம், புரட்சிகரமான மருந்துகளைத் தயாரிப்பதற்கான அடிப்படையை வழங்கும் என்கிறார் கினி. "முன்பைவிட மிக வேகமாக இயங்குவதற்கு அனுமதிக்கும் புதிய சாதனங்கள் உள்ள யுகத்தில் நாம் வாழ்கிறோம். எனினும், இப்போதும் நிதி என்பது பெரும் சவாலாக உள்ளது. ஆய்வக கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக சந்தைப்படுத்துவதற்குப் பல ஆண்டுக்கால மனிதர்கள் மீதான சோதனைகள் மற்றும் பெரும் முதலீடுகள் தேவைப்படுகின்றன," எனக் கூறுகிறார் அவர். ஆனால், இந்த முயற்சிகளுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் முடிவுகள் இருப்பதாக அவர் நம்புகிறார். குறிப்பாக, நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகிய நோய்களின் தாக்கத்தைக் கருத்தில் கொள்ளும்போது இந்த முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக அவர் கூறுகிறார். இந்த ஆய்வில், "அடுத்த சில பத்தாண்டுகளில் இன்னும் புதிய ஆச்சர்யங்கள் ஏற்படும்" என்கிறார் கினி. மேலும், "இன்னும் பல விலங்குகளின் நஞ்சில் இருந்து அதிக திறன் வாய்ந்த மருந்து சேர்மங்களை நம்மால் கண்டுபிடிக்க இயலும் அல்லது, நோய்களைப் புதிய கோணத்தில் எதிர்க்கக்கூடிய செயற்கையான நஞ்சுகளை உருவாக்க முடியும்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm2nw92gz97o
-
பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகக் கல்வியையே கைவிடும் மாணவிகள் - மகளிர் தின நிகழ்வில் பேராசிரியர்கள் சுட்டிக்காட்டு
Published By: DIGITAL DESK 2 11 MAR, 2025 | 09:58 PM ( டானியல் மேரி மாக்ரட் ) பாடசாலையில் உயர்தரத்தை நிறைவு செய்துவிட்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் சில மாணவிகள் பகிடிவதை காரணமாக தங்கள் பல்கலைக்கழகக் கல்வியையே கைவிட்டுவிடக்கூடிய நிலைமை காணப்படுவதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பாலின சமத்துவ மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு செவ்வாய்க்கிழமை (11) ஆணைக்குழுவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழகத்தில் மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். ஆரம்ப நிகழ்வாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு, சிறப்பு விருந்தினர்களால் விளக்கேற்றி வைக்கப்பட்டது. அடுத்ததாக பாலின சமத்துவ மையத்தின் இயக்குனரான பேராசிரியர் பிரபா மனுரத்னவினால் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது. உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ஏன் ஒவ்வொரு வருடமும் மகளிர் தினத்தைக் கொண்டாடுகிறோம் என்று பலர் கேட்கிறார்கள்? ஆண்களுக்கான தினம் எங்கே? என எப்போதும் என்னிடம் கேள்விகள் எழுப்புவார்கள். எனவே நான் அதற்கான சிறு விளக்கம் கூறுகிறேன். ஆண்கள் ஒவ்வொரு நாளும் மிக எளிதாக வரவேற்கப்படுகிறார்கள், மேலும் ஆண்கள் பல வருகைகளிலும் வியாபித்து காணப்படுகின்றார்கள். இந்த நாள் தான் உலகம் முழுவதும் பெண்களை வரவேற்பதற்காக கொண்டாடப்படுகின்ற ஒரு நாளாக காணப்படுகிறது. நமது பல்கலைக்கழக கல்வி முறையில், பெண்களே முதலில் பெரும்பான்மையாக உள்ளனர். எனவே பெண்கள் தினத்தை கொண்டாடுவது சரிதான். எங்களால் கடந்த வருடங்களில் மாற்றங்கள் சில இடம்பெற்றுள்ளன. பாலின சமத்துவ மையத்தின் இயக்குனரான எனக்கு பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு கடந்த ஆண்டு கிடைத்தது. நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், நாம் அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்ளவது தான். விசேடமாக மாணவர்களின் மலசலகூடங்கள் மிகவும் அழகானதாகவும் சுத்தமானதாகவும் இருந்தது. மாணவர்களின் வரவேற்பை உணரக் கூடியதாக இருந்தது. நாங்கள் மாணவர்களை சுமையாக உணரவில்லை. இடைநிலை வேலை திட்டம், நாம் செய்யும் செயல்களுக்கு மதிப்பளிக்கப்படுகின்றதே தவிர அவற்றில் பாலினம், இனம், மொழி எதையும் கருதுவதில்லை என்றார். மேலும் விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர் குழுவினால் வயலின் , மேளம் , புல்லாங்குழல் , தபேலா, ஓகன் போன்ற இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டன. அடுத்ததாக, இந்த ஆண்டுக்கான பாலின விருதுகள் வழங்கப்பட்டு பாராட்டு விழா நடைபெற்றதுடன் பவ்கலைகை்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பின்னர், பல்கலைக்கழக பேராசியர்களால் குழு விவாதம் நடைபெற்றது, குறித்த குழு விவாதத்தில், பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், பல்கலைக்கழகங்களில் பெண்கள் எதிர்நோக்கும் பகிடிவதை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும் பல பெண்கள், பல்கலைக்கழகம் என்பது பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை என கருதுகின்றார்கள். இதற்கு காரணம் பகிடிவதையே ஆகும். இதனால் தங்கள் உயர் கல்வியை முடித்து பல்கலைக்கழகம் தெரிவான பெண்கள் பகிடிவதையினால் தங்கள் பல்கலைக்கழக கல்வியை கைவிடுகின்றார்கள். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழு விவாதத்தில் கலந்துரையாடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைச் செயலாளரும், பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த சிறப்பு அறிக்கையாளருமான தேசமான்ய டாக்டர் ராதிகா குமாரசாமி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் பல்கலைக்கழக பேராசியர்கள் பலர் இவ் விழாவில் பங்குபற்றினர். https://www.virakesari.lk/article/208943
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதிநாள் இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் புதன்கிழமை (12) நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அஞ்சல் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், சான்றளிக்கும் அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிப் பகுதிக்கான மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். வேட்பு மனு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் நியமனக் கடிதங்களை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு முன்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நாளை 13ஆம் திகதி போயா தினமாக இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் திறந்திருக்கும் என்று தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/315937
-
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு இலங்கை மருத்துவ சங்கம் கண்டனம் Published By: VISHNU 12 MAR, 2025 | 03:28 AM அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு இலங்கை மருத்துவ சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. தனது பணியிடத்திற்குள் அவசரகாலப் பணிகளில் ஈடுபட்டு இருந்த ஒரு பெண் மருத்துவர் மீது நடந்த பாலியல் வன்கொடுமையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இச்செயலை மேற்கொண்ட சந்தேகநபரை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தவும், தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி செயல்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்துகிறோம். இந்த துரதிர்ஷ்டவசமான, அருவெருக்கத்தக்க செயலுக்கு ஆளான மருத்துவரின் தனியுரிமை மற்றும் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். வைத்தியர்களுக்கான பணியிடங்களின் பாதுகாப்பை விரைவில் உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் வைத்தியர்கள் தமது பணிகளைத் தொடர்வது சவாலான விடயமாக அமையலாம். சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு ஆகிய இரண்டும் ஒன்று என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு சவால்களுக்கு மத்தியில், நாடு முழுவதும் தங்கள் கடமைகளை மேற்கொண்டு வரும் மருத்துவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் பொறுப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதேவேளை, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் செவ்வாய்க்கிழமை (11) காலை 10. 00 மணி முதல் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பு காலவரையரையின்றி நீடிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதுடன் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை கிளையின் செயலாளர் வைத்தியர் சசிக விதானகே தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208955
-
மரண அச்சுறுத்தல் - பாலியல் தொந்தரவு இலங்கையின் பெண் அரசியல்வாதி நியுசிலாந்தில் தஞ்சம்
Published By: RAJEEBAN 12 MAR, 2025 | 11:29 AM இலங்கையில் அரசியலில் ஈடுபட்ட- பெண் என்பதால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர் மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவு காரணமாக நியுசிலாந்தில் தஞ்சமடைந்துள்ளமை தீர்ப்பாயமொன்றின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கையின் 32 வயது பெண் அரசியல்வாதியொருவருக்கு நியுசிலாந்து அடைக்கலமளித்துள்ளது. முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகாக்கள் அந்த பெண் தனது அரசியல்வாழ்க்கையை தொடர்வதற்காக அவருடன் பாலியல் உறவில் ஈடுபடவேண்டும்,என தெரிவித்தனர் அந்த பெண்ணின் நண்பர் ஒருவர் இதனை சமூக ஊடகத்தில் பதிவிட்ட பின்னர் அவரை பழிவாங்க முயல்கின்றனர்என்பது தீர்ப்பாயத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட அரசியல்வாதி 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். குறிப்பிட்ட பெண் அரசியல்வாதியின் உறவினர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தை தொடர்ந்து அவரது இறுதிசடங்கில் பிரேதப்பட்டிக்கு அருகில் அடுத்ததாக அவர் கொல்லப்படுவார் என்ற குறிப்பு காணப்பட்டது. அந்த பெண் அரசியல்வாதிக்கு இரண்டு முறைமரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன, அவரை நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்தது. 2018 பொதுத்தேர்தலிற்கு முன்னர் அவர் அரசியலில் இருந்து விலகவேண்டும் என எச்சரித்தனர் தனது வீட்டிற்கு அருகில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என இலங்கையை சேர்ந்த அந்த பெண் குடிவரவு தீர்ப்பாயத்திடம் தெரிவித்தார். இலங்கையில் அரசியலில் ஈடுபடும் பெண்களிற்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரிக்கின்றன என தகவல்கள் கிடைப்பதாக நியுசிலாந்தின் தீர்ப்பாயம் தெரிவித்தது. 'உயிர் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் தான் மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என அந்த பெண் தெரிவித்தார்" அரசியலில் ஈடுபட நினைத்ததே எனது வாழ்க்கையின் மிக மோசமான தீர்மானம் நான் என்னை இழந்தேன் தோல்வியடைந்தது மாதிரி உணர்கின்றேன்" என அவர்தெரிவித்தார். இலங்கைக்கு தான் திரும்பிச்சென்றால் அந்த அரசியல்வாதி தன்னை கொலை செய்வார் தனது அரசியல்வாழ்க்கையை அழித்தமைக்காக பழிவாங்குவார் என அவர் கருதுகின்றார். 2022 இல் தனது பெற்றோரின் வீடு தீக்கிரையானது என தெரிவித்துள்ள அவர் அவ்வேளை நிலவிய குழப்பத்தை பயன்படுத்தி இதனை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். நண்பரின் வாக்குமூலம் இவ்வாறு தெரிவிக்கின்றது -' எதிர்கட்சிகளின் அச்சுறுத்தல் காரணமாகவும்,நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவரை பாலியல் உறவிற்கு இணங்க செய்ய முயற்சி செய்ததாலும் அவரால் அரசியலில் முழுமையாக ஈடுபடமுடியாமல் போனது. https://www.virakesari.lk/article/208958
-
ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார் – உக்ரேன் இணக்கம்!
யுக்ரேன் போர்: 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஸெலன்ஸ்கி தரப்பு - ரஷ்யாவின் முடிவு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,சௌதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நிறுத்தத்திற்கு யுக்ரேன் தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், மையா டேவிஸ் & பால் ஆடம்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சௌதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய யுக்ரேன் தரப்பினர், அமெரிக்கா பரிந்துரைத்தபடி உடனடியாக அமலாகும் வகையில் ரஷ்யாவுடன் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்தனர். இனி இந்த விஷயத்தில் "ரஷ்யாதான் முடிவெடுக்க வேண்டும்" என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இனி இந்த நேர்மறையான முன்மொழிவை ஏற்றுக் கொள்ளும் வகையில் ரஷ்யாவை சமாதானப்படுத்துவது அமெரிக்காவின் கையில் இருக்கிறது என்று யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில், டிரம்ப், ஸெலன்ஸ்கி இடையே நடைபெற்ற அசாதாரணமான வார்த்தைப் போருக்குப் பின்னர், இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் அதிகாரப்பூர்வ முதல் சந்திப்பாக ஜெட்டாவில் செவ்வாய்க்கிழமை நடந்த சந்திப்பு அமைந்தது. இரு தரப்பும் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில் யுக்ரேனுக்கான பாதுகாப்பு உதவிகள் மற்றும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கை உடனடியாக மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உதவிகளை, யுக்ரேன் அதிபர் உடனான ஓவல் அலுவலக சந்திப்புக்குப் பின்னர் அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்தது. 'இனி முடிவு ரஷ்யாவின் கையில்...' இரு தரப்பு கூட்டறிக்கையில் "இரு தரப்புப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைக்கான குழுக்களின் பெயர்களை அறிவிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். யுக்ரேனின் நீண்ட கால பாதுகாப்புக்காக அமைதியை எட்டுவதற்கான பேச்சுவார்தையைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெட்டாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மார்கோ ரூபியோ இந்த முன்மொழிவை ரஷ்யா ஏற்கும் என நம்பிக்கை தெரிவித்தார். "யுத்தத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்க யுக்ரேன் தயாராக உள்ளது" எனக் கூறிய ரூபியோ ஒருவேளை ரஷ்யா இதை நிராகரித்தால், "அமைதிக்குத் தடையாக யார் இருக்கிறார்கள் என்பதை துரதிர்ஷ்டவசமாக நாம் தெரிந்து கொள்வோம்" எனக் கூறினார். "போரை நிறுத்தவும், உடனடியாக பேச்சுவார்த்தையைத் தொடங்கவும், நாங்கள் வழங்கிய ஒரு திட்டத்தை யுக்ரேன் இன்று ஏற்றுக்கொண்டது" எனவும் அவர் தெரிவித்தார். "நாங்கள் இந்தத் திட்டத்தை ரஷ்யா தரப்புக்கு எடுத்துச் செல்வோம். அவர்களும் அமைதியை ஆமோதிப்பார்கள் என நம்புகிறோம். இனி முடிவு அவர்கள் கையில் உள்ளது" என்றார் ரூபியோ. கடலிலும், வான் பரப்பிலும் மட்டும் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற ஸெலென்ஸ்கியின் முன்மொழிவைவிட இந்த 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவு பரந்துபட்டதாக இருக்கிறது. அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து டிரம்ப் எழுதிய கடிதத்திற்கு இரானின் பதில் என்ன? பாகிஸ்தானில் ரயிலை கடத்திய ஆயுதக்குழு, ஆபத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் - என்ன நடக்கிறது? பிரிட்டன் அருகே நடுக்கடலில் இரண்டாவது நாளாக பற்றி எரியும் கப்பல்கள் - என்ன நடக்கிறது? நன்றி தெரிவித்த ஸெலன்ஸ்கி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சௌதி அரேபியாவின் ஜெட்டாவில் செவ்வாய்க்கிழமையன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது ஜெட்டாவில் நடந்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்காக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, டிரம்புக்கு நன்றி தெரிவித்தார். ஸெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், "போரை நிறுத்துவதற்கோ அல்லது தொடர்வதற்கோ ரஷ்யா தனது விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும். இது முழு உண்மைக்கான நேரம்" என்று கூறியுள்ளார். ரஷ்யா இதுவரை ஏதும் பதிலளிக்காத நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகை செவ்வாய்க்கிழமை முன்கூட்டியே அளித்த தகவல்களின்படி, பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து அமெரிக்காவுடன் விவாதித்த பிறகு ஓர் அறிக்கை வெளியிடப்படும். பிப்ரவரி 2022 முதல் யுக்ரேனில் முழுமையான ஆக்கிரமிப்பை ரஷ்யா தொடங்கியது. யுக்ரேனின் நிலப்பரப்பில் 20 சதவீதத்தை தற்போது மாஸ்கோ கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசவுள்ளதாகவும் தமது முன்மொழிவுகளை அவர் ஏற்பார் என்று நம்புவதாகவும் கூறியிருந்தார். "அவர்கள் கூறுவதைப் போன்று, இது இரு தரப்பு ஒப்புதல்களுக்கு உட்பட்டது" எனக் கூறிய டிரம்ப் அடுத்த சில நாட்களில் இந்தத் திட்டமானது ஏற்றுக் கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். "எங்களுக்கு ரஷ்யாவுடன் நாளை பெரிய சந்திப்பு இருக்கிறது, சில சிறந்த பேச்சுவார்த்தைகள் தொடரும் என நம்புகிறோம்" என்பது டிரம்பின் கூற்றாக இருக்கிறது. யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியை மீண்டும் வாஷிங்டன் அழைப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறினார். ரஷ்யாவின் அரசு செய்தி ஊடகமான Tass வழங்கிய தகவல்களின்படி, வரும் சில நாட்களில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை இருக்கிறது என்பதை ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளரான மரிய ஸகரோவா மறுக்கவில்லை. ஓநாய்-மனித நோயால் முகம் முழுக்க வளர்ந்த முடி - இந்திய இளைஞர் செய்த கின்னஸ் சாதனை5 மணி நேரங்களுக்கு முன்னர் மருத்துவ உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் கிலா அரக்கப் பல்லியின் விஷம்4 மணி நேரங்களுக்கு முன்னர் அரிய கனிமங்களை வழங்கும் யுக்ரேன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஓவல் அலுவலக நிகழ்வுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை டிரம்ப், ஸெலன்ஸ்கி இடையிலான நல்லுறவு மீண்டும் சரியான பாதைக்குத் திரும்பியுள்ளதா? இந்தக் கேள்விக்குப் பதிலளித்த மார்கோ ரூபியோ, "அமைதிக்கான பாதையை நோக்கித் திரும்பியுள்ளது" என்று கூறினார். "இது தொலைக்காட்சித் தொடரில் நடக்கும் நிகழ்ச்சிகள் அல்ல" எனவும் அவர் குறிப்பிட்டார். "மக்கள் நேற்றும் போரில் இறந்தார்கள், போர் நிறுத்தம் எட்டப்படவில்லை எனில் நாளையும் மரணங்கள் நிகழும்" என்று ரூபியோ கூறினார். மாஸ்கோவில் இரவில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், யுக்ரேன் போரை நிறுத்துவதற்கான ராஜ்ஜீய நடவடிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் யுக்ரேன் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா இடையிலான "அரிய கனிமங்கள்" தொடர்பான ஒப்பந்தத்தைச் சாத்தியமுள்ள வகையில் விரைவாக இறுதி செய்ய டிரம்ப் மற்றும் ஸெலன்ஸ்கி ஒப்புக் கொண்டதாகவும் கூட்டறிக்கை கூறியுள்ளது. அமெரிக்கா அளிக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தின் பேரில் அரிய கனிமங்களை எடுத்துக் கொள்வதற்கான அனுமதியை அமெரிக்காவுக்கு வழங்குவதாக யுக்ரேன் கூறியிருந்தது. ஆனால் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற பிரச்னையால் இது தடம் மாறியது. ஆனால் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கனிமங்கள் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை எனவும், யுக்ரேன் மற்றும் அமெரிக்க கருவூலத் துறைகள் சார்பில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் மார்கோ ரூபியோ கூறினார். புத்தகயா: புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் உருவான மகாபோதி கோவில் யாருக்குச் சொந்தம்? இந்து - பெளத்தர் மோதல்11 மார்ச் 2025 அப்பாராவை 20 ஆண்டுகள் கொத்தடிமையாக நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட அண்ணாதுரை சொல்வது என்ன?11 மார்ச் 2025 'பேச்சுவார்த்தையில் ஐரோப்பாவும் இடம் பெற வேண்டும்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உடனடி பாதுகாப்பு உத்தரவாதங்கள் இன்றி கனிமங்களைத் தர ஒப்புக் கொண்ட யுக்ரேன் ஜெட்டாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கான அமெரிக்க குழுவில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், மத்திய கிழக்கு நாடுகளுக்கான தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். ஸ்டீவ் விட்காஃப் வரும் நாட்களில் ரஷ்யா செல்லவிருப்பதாக, திட்டமிடல் குறித்து அறிந்த வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன. ஆனாலும் இது மாறுதலுக்கு உட்பட்டது. இந்தக் கூட்டறிக்கையின்படி, எந்த அமைதிப் பேச்சுவார்த்தையிலும் ஐரோப்பிய நாடுகளின் ஈடுபாடு இருக்க வேண்டும் என கீயவ் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பாவை பேச்சுவார்த்தையில் இருந்து தள்ளி வைக்கும் வகையில், போர் தொடர்பான அணுகுமுறையில் அமெரிக்காவிடம் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, ஐரோப்பிய நாடுகள் கடந்த சில வாரங்களில் அவசர சந்திப்புகளை நடத்தின. ஐரோப்பிய யூனியன் ஆணையத்தின் தலைவரான உர்சுலா வோன் டெர் லெயன் பேசுகையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நேர்மறையான முன்னேற்றங்களை வரவேற்பதாகக் கூறினார். யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது அமெரிக்க அதிபரின் முக்கிய உறுதி மொழியாக இருக்கிறது. யுக்ரேன் அதிபர் வலியுறுத்திய உடனடிப் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்காமல், போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஸெலன்ஸ்கிக்கு அவர் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தார். போர் காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவுக்கு எதிராக மேலும் தடைகளை விதிக்கக் கூடும் என்ற அரிதான எச்சரிக்கையையும் வெள்ளிக்கிழமையன்று டிரம்ப் விடுத்தார். போர்க்களத்தில் தற்போது ரஷ்யா யுக்ரேனை முழு வேகத்துடன் தாக்குகிறது என்பதால் இந்த நடவடிக்கை குறித்து யோசிப்பதாக டிரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார். ரூ.13,000 கோடி கிரிப்டோகரன்சி கொள்ளை: வட கொரியா ஹேக்கர்கள் செயல்படுவது எப்படி? மீட்பதில் சிக்கல் ஏன்?11 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்தபடியே செய்தியாளர் சந்திப்பு - கேள்விகளும் பதில்களும்8 மார்ச் 2025 தொடரும் டிரோன் தாக்குதல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மாஸ்கோ பிராந்தியத்தில் யுக்ரேனின் டிரோன் தாக்குதலால் 3 பேர் கொல்லப்பட்டனர் நடைமுறையில், களத்தில் நடைபெற்று வரும் போர் செவ்வாய்க்கிழமை அன்றும் தொடர்ந்தது. மாஸ்கோ பிராந்தியத்தில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இரு நாடுகளுக்கு இடையிலான போர் தொடங்கியது முதல் ரஷ்ய தலைநகரில் நடந்த மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. இது மட்டுமின்றி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் காயமடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் கூறியுள்ளன. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அளித்த தகவலின்படி, 337 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. இதில் 91 டிரோன்கள் மாஸ்கோ பிராந்திய வான் வெளியில் இடைமறிக்கப்பட்டன. தலைநகர் கீயவ் மற்றும் பல பிராந்தியங்களில் ரஷ்யாவின் டிரோன் தாக்குதல்கள் நடந்ததாக யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவால் ஏவப்பட்ட 126 டிரோன்களில் 79 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக யுக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது. இதில் Iskander-M ஏவுகணையும் இருந்ததாக யுக்ரேன் கூறியுள்ளது. ஆனால் யுக்ரேனில் உயிரிழப்புகள் குறித்து உடனடியாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj0q1p8p93do
-
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
Published By: DIGITAL DESK 3 12 MAR, 2025 | 10:49 AM அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய பெண் வைத்தியரைக் கத்திமுனையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை (12) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர். நாட்டின் சகல வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்றையதினம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அநுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் தப்பியோடிய இராணுவச் சிப்பாய் எனக் கருதப்படுபவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி அடையாள பணிப்பகிஷ்கரிப்பு நடைபெறுகின்றது. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை https://www.virakesari.lk/article/208962
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
புலிகளின் தலைவரின் வீரச்சா அறிவிப்பு; பின்னணியில் இந்திய புலனாய்வுத்துறை என்கிறார் பொன் சுதன் சீற்றம் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரச்சாவை அறிவித்தவர்கள் இறுதி போரில் மக்களை சுட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியவர்களே என பொன் சுதன் தெரிவித்துள்ளார். யாழ் வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூகமாற்றத்திற்கான ஊடக மையத்தில் நேற்றையதினம்(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்து விட்டதாக கூறி அவருக்கான வீரச்சாவு அறிவித்தலை புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்த இவர்களை தற்போது யார் தூண்டி விட்டது? இவர்களுக்கு தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? இவர்கள் எல்லோரும் முன்னாள் போராளிகள் இல்லை. இவர்கள் கொண்ட கொள்கையை மறந்து இறுதி போரில் தாங்கள் தப்பிப்பதற்காக மக்களை சுட்டுவிட்டு சென்றவர்கள். தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக ஒன்று சேரும் போதெல்லாம் போலி அறிவிப்புக்களை வெளியிட்டு மக்களை திசை திருப்புகிறார்கள். இலக்கில் இருந்து அவர்களை அகற்றுகிறார்கள் இவர்கள் அனைவரும் இந்திய புலனாய்வுத்துறையான” றோ” அமைப்பின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குபவர்கள். இரண்டு அணிகளாக பிரிந்து போலி அறிவிப்புகளை செய்து மக்களை நம்பவைத்து பணம் சேர்க்கும் தந்திரத்தில் இதுபோன்ற புலம்பெயர் அமைப்புக்கள் சிலர் செயற்பட்டு வருகிறார்கள். ஒரு அணியினர் துவாரகா இருக்கிறார் என்றும் இன்னொரு அணியினர் தலைவர் பிரபாகரன் இல்லை என்றும் பிரச்சாரம் செய்து பணம் சேர்க்கிறார்கள். இந்த இரண்டு அணியினரும் ஒரே நிகழ்ச்சி நிரலின்கீழ் செயற்படுகிறவர்கள். முன்னாள் போராளிகள் என வெளி நாடுகளில் இருந்து இதுபோன்ற அறிக்கைகளை விடுபவர்கள் உண்மையான போராளிகள் இல்லை, உயிருக்கு பயந்து காக்க வேண்டிய மக்களை சுட்டுவிட்டு தப்பி ஓடியவர்கள். இவர்கள் தற்போது புலிகளின் பணத்தை சுருட்டியவர்களுடன் இணைந்து இவ்வாறான போலி அறிவிப்புக்களை விடுகின்றனர். இது தொடர்பில் புலம்பெயர் தமிழர்களும் இலங்கை தமிழர்களும் அவதானமாக இருப்பதுடன் இவர்களை எமது தேசிய ரீதியான பயணத்தில் இருந்து அகற்ற வேண்டுமெனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/315922
-
இந்தியா ஆதிக்கம்: சாம்பியன்ஸ் டிராபி நிகழ்வுகள் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியா?
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானைவிட இந்தியாவுக்கே அதிக பலனா? நியூசிலாந்து ஊடகங்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவுடனான தோல்விக்குப் பிறகு நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாம்பியன்ஸ் டிராபி 2025இன் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு நியூசிலாந்து அணி நாடு திரும்பியுள்ளது. அதைத் தொடர்ந்து, இப்போது அங்குள்ள ஊடகங்களில் அது குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. நியூசிலாந்தின் முன்னணி நாளிதழான நியூசிலாந்து ஹெரால்டு, "1.438 பில்லியன் மக்கள் தொகையையும் கிரிக்கெட்டுக்கு வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தையும் கொண்ட இந்தியா, மும்பையைவிட குறைவான மக்கள் தொகை கொண்ட நாடான நியூசிலாந்தை தோற்கடித்தது" என்று குறிப்பிட்டது. இந்தியாவின் வெற்றிக்கான காரணங்களைப் பட்டியலிட்டு, "இந்த வெற்றியில் இந்தியாவின் சுழற்பந்துவீச்சு முக்கியப் பங்கு வகித்தது. இந்தப் போட்டியில் இந்தியா சிறந்த அணியைக் கொண்டிருந்தது, மேலும் பல விஷயங்களும் அதற்குச் சாதகமாக அமைந்தன. பாகிஸ்தான் போட்டியை நடத்தியது, ஆனால் இந்தியா அங்கு விளையாட மறுத்துவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், இந்தியா ஐந்து போட்டிகளையும் துபையில் மட்டுமே விளையாடியது. அதேபோல், இந்திய அணி துபை மைதானத்திற்குப் பழகிவிட்டது. பயணங்களில் இருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொண்டது. போட்டி எங்கு நடைபெற வேண்டும் என்பது உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்போது, அதற்கேற்ப 15 வீரர்களைக் கொண்ட ஓர் அணியை உருவாக்குவது உங்களுக்கு எளிதாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், "ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் 11 இந்திய வீரர்களில், நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்பட மொத்தம் ஆறு பந்து வீச்சாளர்கள் இருந்தனர். இந்தியாவை பொறுத்தவரை, 50 ஓவர்களில் 38 ஓவர்கள் அதன் சுழற்பந்து வீச்சாளர்களால் வீசப்பட்டன. மறுபுறம், நியூசிலாந்து அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஒருவர் சாண்ட்னர், மற்றவர் மிட்செல் பார்ஸ்வெல்," என்று நியூசிலாந்து ஹெரால்டு தனது செய்தியில் கூறியுள்ளது. அதோடு, "க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர ஆகியோர் இருந்தாலும், அவர்கள் முழுநேர சுழற்பந்து வீச்சாளர்கள் அல்ல. உதாரணமாக, இந்தியாவின் நான்காவது சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மறுபுறம், நியூசிலாந்தின் நான்காவது சுழற்பந்து வீச்சாளர் பிலிப்ஸ் தனது கிரிக்கெட் வாழ்க்கையை விக்கெட் கீப்பராக தொடங்கினார்," என்று நியூசிலாந்து ஹெரால்டு செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவின் ஆதிக்கம் பற்றிய விவாதம் போட்டியின் சூழல், இந்தியாவுக்கு சாதகமாகவும், நியூசிலாந்துக்கு எதிராகவும் இருந்தது என்றாலும், நியூசிலாந்து அணி எளிதில் தோல்வியடைந்தது என்று நியூசிலாந்து ஹெரால்டு நாளிதழ் குறிப்பிட்டிருந்தது. நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் கூறுகையில், "எனது அணியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். இதுபோன்ற போட்டிகளில் எப்போதும் சில சவால்கள் இருக்கும், அவற்றில் இருந்து நீங்கள் வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். நான் எதைப் பற்றியும் குறை சொல்ல முடியாது. போட்டி முழுவதும் நாங்கள் முழு பலத்துடன் எதிரணி அணிக்கு சவாலாக இருந்திருக்கிறோம்," என்றார். இந்தியா ஆதிக்கம்: சாம்பியன்ஸ் டிராபி நிகழ்வுகள் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியா? முகமது ஷமி நோன்பு கடைப்பிடிக்கவில்லை என விவாதம் - இன்சமாம் உல்-ஹக் கூறிய அறிவுரை என்ன? கோலி, ரோஹித் இருவரும் அடுத்த உலகக்கோப்பை வரை அணியில் நீடிக்க முடியுமா? முன்னுள்ள சவால்கள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. "நிலவியல் அரசியல் யதார்த்தங்கள், அக்கறையின்மை மற்றும் போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானின் விறுவிறுப்பற்ற போட்டிச் சூழல் ஆகியவை சாம்பியன்ஸ் டிராபி போட்டி, ஐ.சி.சி திட்டமிட்டபடி நடக்காமல் போவதற்குக் காரணமாக அமைந்தன. சாம்பியன் டிராபி ஐ.சி.சி.க்கு நிதி திரட்டும் ஒரு வழியாக மாறியது. ஆனால் டி20இன் மகத்தான வெற்றிக்கு மத்தியில், ஒருநாள் போட்டியின் தன்மை குறித்த கேள்வி இன்னும் அப்படியே உள்ளது" என்று ரேடியோ நியூசிலாந்து தனது வலைதளத்தில் எழுதியுள்ளது. "எந்தவொரு போட்டியின் வெற்றிக்கும் இந்தியா ஒரு நிதி இயந்திரம் போன்றது. 1996க்கு பிறகு, எந்தவொரு ஐ.சி.சி போட்டியையும் நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டபோது, இந்தியா பங்கேற்குமா என்பது குறித்து சந்தேகத்துக்குரிய சூழல் நிலவியது" என்று ரேடியோ நியூசிலாந்து பதிவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, "இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் இன்னும் முடிவுக்கு வராததால், பாகிஸ்தானில் விளையாடுவதில்லை என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இரு நாடுகளும் ஐ.சி.சி போட்டிகளில் மட்டுமே ஒருவருக்கொருவர் எதிராக விளையாடுகின்றன. அதுவும் இப்போது மூன்றாவது நாட்டில்" என்றும் ரேடியோ நியூசிலாந்து குறிப்பிட்டிருந்தது. விருது பெற்ற கிரிக்கெட் எழுத்தாளர் நிக்கோலஸ் ப்ரூக்ஸ், இந்திய கிரிக்கெட் வீரர்களை நினைத்துத் தான் வருத்தப்படுவதாகக் கூறியுள்ளார். "என்னைப் பொறுத்தவரை, இந்திய அணி சிறப்பானது. எந்தச் சூழ்நிலையிலும் முன்னேறும் திறன் கொண்டது. இந்தப் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றி அதன் திறமையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் ஒரே இடத்தில் விளையாடுவதன் மூலமாகப் பலன் பெற்றதாக மற்ற விஷயங்கள் பேசப்படுகின்றன" என்று கூறியுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்கள் வெற்றிக் களிப்பு - புகைப்படத் தொகுப்பு10 மார்ச் 2025 நியூசிலாந்தை வீழ்த்தி 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வென்றது எப்படி?9 மார்ச் 2025 இந்தியா மீதான பாராட்டும் விமர்சனமும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த முறை சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்தியது, ஆனால் இந்தியா அங்கு சென்று விளையாட மறுத்துவிட்டது. ஜஸ்பிரித் பும்ரா உடற்தகுதி காரணமாகப் போட்டியில் இருந்து வெளியேறியதாலும், விராட் கோலி இரண்டாவது பந்திலேயே அவுட் ஆனதாலும், இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றி இன்னும் பெரிதாக்கப்படுகிறது என்று நியூசிலாந்து செய்தி வலைதளமான ஸ்டஃப் குறிப்பிட்டுள்ளது. "கடந்த இரண்டு ஆண்டுகளில், மூன்று ஐ.சி.சி போட்டிகளில் இந்தியா 24 போட்டிகளில் 23 போட்டிகளில் வென்றுள்ளது. இதில் 2023 ஒருநாள் உலகக்கோப்பை, கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் தற்போதைய சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை அடங்கும். ஆனால் இந்த சாம்பியன்ஸ் டிராபி குறித்து, போட்டியை நடத்தும் நாட்டிற்குக் கிடைத்திருக்க வேண்டிய நன்மைகள் இந்தியாவுக்கு கிடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எந்தவொரு தொடரையும் நடத்தும் நாடு, அந்தத் தொடரில் பலனடைகிறது. கடந்த நான்கு ஒருநாள் உலகக் கோப்பைகளில், போட்டியை நடத்திய நாடு மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. எந்தவொரு பெரிய விளையாட்டுப் போட்டியிலும், சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு கிடைத்த பலன்களை, போட்டி நடத்தாத நாடு ஒருபோதும் பெறுவதில்லை," என்று ஸ்டஃப் தெரிவித்துள்ளது. மேலும் "2021ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஐ.சி.சி அனைத்து 15 போட்டிகளையும் பாகிஸ்தானுக்கு வழங்கியது. அந்த நேரத்தில், இந்தியா வேறு எந்த நாட்டிலும் போட்டிகளை விளையாடுவதற்கான ஏற்பாடு செய்யப்படவில்லை. ஆனால், கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா தனது அணியை பாகிஸ்தானில் விளையாட அனுமதிக்கவில்லை. இந்நிலையில், மீதமுள்ள ஏழு நாடுகள் பாகிஸ்தானில் இருந்தபோது, ஐ.சி.சி இந்தியாவுக்கான அனைத்துப் போட்டிகளையும் துபையில் ஏற்பாடு செய்தது" என்று ஸ்டஃப் இணையதளம் எழுதியுள்ளது. அதோடு, "இறுதிப் போட்டிக்கு முன்பு, முகமது ஷமி, ஆடுகளத்தின் நிலை குறித்து எங்களுக்குத் தெரியும், எனவே எங்களுக்கு நிச்சயமாகப் பலன் கிடைக்கிறது என்று கூறியிருந்தார். நியூசிலாந்து தனது போட்டிகளை பாகிஸ்தானின் மூன்று நகரங்களில் விளையாடியது, அதே நேரத்தில் இந்தியா அனைத்து போட்டிகளையும் துபையில் விளையாடியது," என்று ஸ்டஃப் குறிப்பிட்டது. சாம்பியன்ஸ் டிராபி: துபையில் அனைத்து போட்டிகளையும் விளையாடுவதன் மூலம் இந்தியா பயனடைகிறதா?27 பிப்ரவரி 2025 கோலி சாதனை சதம்: இந்தியா பெற்ற வெற்றியால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தே வெளியேறுமா?24 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பாகிஸ்தான் நடத்தினாலும் இந்தியாவுக்கே பலன் கிடைத்துள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன கென்யாவின் நைரோபியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததாக நியூசிலாந்தின் செய்தி வலைதளமான தி போஸ்ட் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. அதன் பிறகு, நியூசிலாந்து அணி வெள்ளை பந்து இறுதிப் போட்டியில் தொடர்ந்து ஐந்தாவது தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தியா தனது குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்த நாளிலிருந்து, பல வகையான கேள்விகள் எழத் தொடங்கின. இந்திய அணி ஏற்கெனவே பலமாக உள்ளது. அதுபோக இந்திய அணிக்குப் பல விஷயங்கள் சாதகமாக இருந்தன. "ஐ.சி.சி பிற அணிகளிடம், பாகிஸ்தானுக்கு வெளியே விளையாட ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது நிதி இழப்புகளைச் சந்திக்க வேண்டும் என்று கூறியது. ஆனால், இந்திய அணி துபையில் முகாமிட்டுத் தனது சொந்த மைதானத்தில் விளையாடுவதைப் போன்ற உதவியைப் பெற்றது. மறுபுறம், நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் இருந்து துபைக்கு மாறி மாறிப் பயணித்தது" என்றும் ஸ்டஃப் இணையதளம் குறிப்பிட்டது. நியூசிலாந்தின் செய்தி இணையதளமான தி போஸ்ட், "இந்தியா வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினாலும், இந்தியா பெற்ற வசதிகள் எந்தவொரு உலகளாவிய விளையாட்டிலும் வேறு எந்த நாட்டிற்கும் கிடைக்காது," என்று தெரிவித்தது. இவைதவிர, நியூசிலாந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் நியூசிலாந்து ஒரு பெரிய போட்டியைத் தவறவிடுவது இது முதல் முறை அல்ல என்றும் அந்தச் செய்தி இணையதளம் எழுதியுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு கென்யாவில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோதும், இறுதிப் போட்டியின்போது, வெற்றி அவர்களின் கைகளைவிட்டு நழுவுவது போலத் தோன்றியதை தி போஸ்ட் நினைவுகூர்ந்தது. ஆனால் அப்போது கிறிஸ் கெய்ன்ஸ் 102 ரன்கள் எடுத்திருந்தார். இந்த முறையும் அதே போன்ற ஒரு இன்னிங்ஸ் தேவைப்பட்டது என்றும் தி போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce8vqze416yo
-
தேசிய கல்விக் கொள்கை - தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு எதிர்ப்பு - நாடாளுமன்றத்திற்கு வெளியே எம்பிக்கள் போராட்டம்
பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,தர்மேந்திர பிரதான் பேச்சைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்பிக்கள் 10 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2வது அமர்வின் முதல் நாளான நேற்றே, தேசிய கல்விக் கொள்கை பிரச்சனையால் விவாதங்களுடன் தொடங்கியது. தமிழ்நாடு எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சுக்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளிக்கும் போது, தமிழ்நாடு எம்பிக்களை நோக்கி ஒரு வார்த்தையால் குறிப்பிட்ட பிரதான் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என குறிப்பிட்டார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவையை ஒத்தி வைக்க நேர்ந்தது. அமர்வின் இரண்டாவது நாளான இன்று, நாடாளுமன்றம் முன்பாக தமிழ்நாடு எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது "இந்தியை ஏற்க மாட்டோம்" "மும்மொழியை ஏற்க மாட்டோம்" என்று கோஷங்களை எழுப்பினர். மேலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். போராட்டத்தின் நடுவே செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. வைகோ, மத்திய அமைச்சரின் பேச்சால், மக்களின் மனம் புண்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், "அமைச்சர் தமது பேச்சை திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறினார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட வேண்டும்" எனவும் வைகோ வலியுறுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி, அமைச்சருக்கு எதிராக திமுக சார்பில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்துள்ளதாகவும், இதனை அவைத்தலைவர் ஏற்க வேண்டும் எனவும் கூறினார். கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கான நிதியை நிறுத்தி வைக்க மத்திய அரசுக்கு உரிமை இல்லை எனக் கூறினார். மத்திய அரசின் முடிவு வெறும் அரசியல் முடிவு அல்ல எனவும், இதனால் தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, தங்களின் கட்சி திமுகவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக கூறினார். மத்திய அமைச்சர் பயன்படுத்திய வார்த்தை , மக்களை தாழ்த்தக் கூடியது எனவும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தர்மேந்திர பிரதான் என்ன பேசினார்? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் குறித்து அமளி ஏற்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெற்ற நிலையில் 2 ஆவது அமர்வு, மார்ச் 10 ஆம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். ''பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகத்துக்காக ஒதுக்கப்பட்ட சுமார் ரூ 2,000 கோடி நிதி, பிற மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் எங்களுக்கு இந்த நிதி மறுக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்தச் செயல், பள்ளி மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது. சட்டத்தால் கட்டாயமாக்கப்படாத ஒரு கொள்கையை பின்பற்றாததால், எந்த ஒரு மாநிலமும் இதுபோல் நிதி இழப்பை சந்திக்காது என்ற வாக்குறுதியை ஒன்றிய அரசு அளிக்குமா?'' என்று அவர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டிற்கான பள்ளிக்கல்வி நிதி ரூ.2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியதா? பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர தமிழ்நாடு அரசு முடிவு - புதிய கல்வி கொள்கைக்கு திமுக எதிர்ப்பு என்ன ஆகும்? சென்னையில் ரூ.6 கோடி மோசடி: சினிமா பிரபலம் பெயரில் ஏ.ஐ மூலம் மோசடி நடப்பது எப்படி? இந்தியாவில் விபத்துகளில் தினசரி பலியாகும் 45 குழந்தைகள் - வாகனங்களில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது எப்படி? 'தமிழ்நாடு யு டர்ன் அடித்துவிட்டது' - மத்திய அமைச்சர் இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக கடந்த காலங்களில் நாங்கள் தமிழ்நாடு அரசோடு விவாதங்களை நடத்தி இருக்கிறோம். அப்போது, பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த தமிழக அரசு மத்திய அரசோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. தமிழக கல்வி அமைச்சரோடு வந்து தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் இது தொடர்பாக என்னை சந்தித்துப் பேசினார்கள். தற்போது கேள்வி எழுப்பி இருக்கும் எம்பியும் என்னை சந்தித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒப்புக்கொண்டுவிட்டு சென்ற அவர்கள் பின்னர் யு டர்ன் அடித்துவிட்டார்கள். தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிரச்னை செய்கிறார்கள்" என்றார். "இன்று மார்ச் 10. இந்த நிதி ஆண்டு முடிய இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. மாநில அரசு மீண்டும் எங்களோடு பேசலாம். நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். நாட்டில் பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா இதற்கு ஒரு உதாரணம். அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டு பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதி பெறுகிறார்கள். இதேபோல், ஹிமாச்சலப் பிரதேச மாநிலமும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது." என்று பேசினார். மாடுகள் எவ்வாறு தகவல் பரிமாறிக் கொள்கின்றன? மனிதன் புரிந்து கொண்டால் என்ன மாற்றம் நிகழும்?9 மார்ச் 2025 'வெறும் 30 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூரு' - விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்?7 மணி நேரங்களுக்கு முன்னர் மேலும்,"அவர்கள் தமிழக மாணவர்கள் விஷயத்தில் பொறுப்பாக இல்லை, நேர்மையாக இல்லை, ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை.'' மேலும் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு, அவர்கள் அப்படி நடந்துக்கொள்ளவில்லை என்றார் தர்மேந்திர பிரதான் '' அவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்." என தெரிவித்தார். மேலும், "பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர தமிழக முதல்வர் முன்வந்தார். ஆனால், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார். சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர்" என்று அவர் தெரிவித்தார். அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உரையின்போது எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பிக்கள், அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். உடல் பருமனாகாமல் இருக்க தினசரி சமையலில் எந்த எண்ணெய், எவ்வளவு சேர்க்க வேண்டும்?8 மார்ச் 2025 தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா?5 மார்ச் 2025 'தேசிய கல்விக் கொள்கையை திமுக ஒப்புக் கொள்ளவில்லை' - கனிமொழி பட மூலாதாரம்,PTI அவை மீண்டும் கூடிய போது பேசிய திமுக எம் பி கனிமொழி, மத்திய கல்வி அமைச்சர் தமிழக எம்.பி.க்களை, தமிழக அரசை ஒரு வார்த்தையை குறிப்பிட்டு விமர்சனம் செய்ததாக கூறினார். "நாங்கள் மத்திய கல்வி அமைச்சரை சந்தித்த போது, தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது, அதிலுள்ள மும்மொழி கொள்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று கூறியிருந்தோம். தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக திமுக கூறவில்லை" என்று கனிமொழி பேசினார். அதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தான் அந்த வார்த்தைகளை கூறியிருக்கக் கூடாது என்றார். "எனது வார்த்தைகள் காயப்படுத்தும் வகையில் இருந்திருந்தால் நான் அவற்றை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை" என்றார். "எனினும் முக்கியமான விசயம் இதுதான். தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், கனிமொழி தலைமையில் மாநில கல்வி அமைச்சருடன் வந்து என்னை சந்தித்தனர். அப்போது அவர்கள் இந்த திட்டத்தில் கையெழுத்திட ஒப்புக்கொள்வதாக தெரிவித்தனர்" என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசினார். உடனே திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். தொடர்ந்து பேசிய அமைச்சர், "நீங்கள் அமைதியாக இருங்கள். உண்மையை கேட்பதற்கான தைரியம் உங்களுக்கு வேண்டும்" என்று கூறிவிட்டு "எனக்கு கிடைத்த தகவல்படி தமிழக முதல்வர் இத்திட்டத்துக்கு ஒப்புக் கொண்டார். ஆனால் அதற்குள் ஏதோ சில உள்விவகாரம் எழுந்தது, தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள்" என்றார். முதல்வர் ஸ்டாலின் கண்டனம் இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களை குறிப்பிட்டு பேசிய வார்த்தையை கண்டித்து பதிவிட்டுள்ளார். "தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தரமேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்", என்று ஸ்டாலின் தெரிவித்தார். "தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள்", என்றும் அவர் அந்த அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். "புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை குறித்து அனுப்பிய பிஎம் ஸ்ரீ திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?", என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி அன்று எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டு இருந்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சென்னையில் திமுக கட்சியினர் போராட்டம் "நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்", என்று தரமேந்திர பிரதானிடம் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் அமைச்சர் தரமேந்திர பிரதான் பேசிய கருத்தினை எதிர்த்து சென்னையில் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் கண்டன போராட்டங்களை நடத்தினர். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8mz4p42mvo
-
உணவு ஒவ்வாமையால் 53 மாணவர்கள் பாதிப்பு; மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சம்பவம்
மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 53 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தரம் 6 முதல் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரையில் பயிலும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்யப்பட்ட உணவை உட்கொண்டமையால் மாணவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 31 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிற்றுண்டிச்சாலையில் உணவை உட்கொண்ட 53 மாணவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக பாடசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர்களில் 31 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளரை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரிசோதனைகளுக்காக மாணவர்கள் உட்கொண்ட உணவுகளின் மாதிரிகளை பொது சுகாதார பரிசோதகர்கள் பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இச்சம்பவம் காரணமாக பாடசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தில் பெற்றோர் மற்றும் பிரதேசவாசிகள் பிரவேசத்தினால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/315912
-
மொஸ்கோ மீது உக்ரைன் ‘பாரிய’ ட்ரோன் தாக்குதல்
மொஸ்கோ மீது உக்ரைன் உக்கிர ஆளில்லா விமானதாக்குதல் Published By: RAJEEBAN 11 MAR, 2025 | 11:56 AM ரஸ்ய தலைநகர் மொஸ்கோவின் உக்கிரமான ஆளில்லா விமானதாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். மொஸ்கோவிற்கு வெளியே உள்ள விட்னோய் மற்றும் டொமெடெடோவோ ஆகிய நகரங்களில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் ஏழு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மொஸ்கோவை நோக்கி செலுத்தப்பட்ட 75 ஆளில்லா விமானங்கள் செயல் இழக்கச்செய்யப்பட்டன என மொஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார். ஆளில்லா விமான சிதறல்கள் காரணமாக கூரையொன்று சேதமடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மொஸ்கோ மீதான இந்த தாக்குதலை தொடர்ந்து ஒருபுகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது, விமானநிலையங்களில் விமானங்கள் பயணிப்பது குறித்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 2022 இல் உக்ரைன் மீது ரஸ்யா தாக்குதலை ஆரம்பித்த பின்னர் மொஸ்கோ மீது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் ஆளில்லா விமானதாக்குதல் இது என தெரிவிக்கப்படுகின்றது. சவுதி அரேபியாவில் உக்ரைன் அமெரிக்க பிரதிநிதிகள் மத்தியில் மிக முக்கிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மொஸ்கோவில் சேதமடைந்;த கட்டிடங்களையும், எரியுண்ட வாகனங்களையும் காண்பிக்கும் படங்களை மொஸ்கோ ஆளுநர் வெளியிட்டுள்ளார். ஆளில்லா விமான தாக்குதலால் சேதமடைந்த வீடுகளில் இருந்து மூன்று சிறுவர்கள் உட்பட 12 பேரை வெளியேற்றியதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208883
-
சிரியாவில் மோதல் – 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
“தங்கள் வீடுகளில் பலர் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன், பெண்களும் குழந்தைகளும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டனர்” - சிரிய படுகொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் Published By: RAJEEBAN 10 MAR, 2025 | 11:00 AM bbc சிரியாவில் அலவைட் சிறுபான்மை முஸ்லீம் மதபிரிவினர் அவர்களில் வீடுகளில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து அவற்றை நேரில் பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபத பசார்அல் அசாத்தின் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீதான பழிவாங்கல் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்துள்ள நிலையில் சிரியாவின் இடைக்கால தலைவர் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அசாத்தின் ஆதரவு கோட்டைகளான லடாகியா மற்றும் டர்டஸ் ஆகிய கடலோர மாகாணங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். சூறையாடல்கள் குறித்தும் சிறுவர்கள் உட்பட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து உள்ளுர் மக்கள் விபரித்துள்ளனர். கடலோர நகரமான பனியாவில் உள்ள அல்வைட் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் ஹை அல் குசூரில் இரத்தம் தோய்ந்த பெருமளவு உடல்கள் சிதறிக்கிடப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பலவயதுடைய ஆண்கள் இங்கு சுடப்பட்டனர் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை நாங்கள் ஜன்னலிற்கு வெளியே எட்டிப்பார்ப்பதற்கு கூட அஞ்சினோம் என தெரிவித்துள்ள பொதுமக்கள் இணையசேவை பாதிக்கப்பட்டிருந்தது அது ஒழுங்காக செயற்படதொடங்கியவேளை முகநூல் பதிவுகள் மூலம் அயலவர்களின் மரணங்கள் குறித்து நாங்கள் அறிந்தோம் என தெரிவித்துள்ளனர். பசார் அல் அசாத்தை முகநூலில் விமர்சித்தமைக்காக 2023இல் என்னை கைதுசெய்தார்கள்,கடந்த டிசம்பரில் பசார் அல் அசாத் பதவியிலிருந்து அகற்றப்பட்டபின்னர் இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்கள் சிறையிலிருந்து பலரை விடுதலை செய்தவேளை என்னையும் விடுதலை செய்தார்கள் என பிபிசிக்கு தெரிவித்துள்ள அய்மென் பரெஸ் சில நாட்களிற்கு முன்னர் ஹை அல் குசூர் மீது இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்கள்( அரசதரப்பினர்) தாக்குதல்களை மேற்கொண்டவேளை என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள் அவர்கள் என்னை கொலை செய்யவில்லை ஆனால் எனது கார்களை எடுத்து சென்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். அவர்கள் புதியவர்களாக நான் இதுவரை பார்க்காதவர்களாக காணப்பட்டனர்,அவர்கள் உஸ்பெக் அல்லது செச்சினியாவை சேர்ந்தவர்களாகயிருக்கவேண்டும் என பரெஸ் தெரிவித்துள்ளார். அவர்களுடன் சிரியாவை சேர்ந்தவர்களும் காணப்பட்டனர் ஆனால் அவர்கள் பாதுகாப்பு படையினர் இல்லை சில பொதுமக்களும் வன்முறையில் ஈடுபட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தங்கள் வீடுகளில் பலர் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன், பெண்களும் குழந்தைகளும் இரத்த வெள்ளத்தில்காணப்பட்டனர்,சிலர் உயிர் தப்புவதற்காக வீடுகளின் கூரைகளிற்கு தப்பிச்சென்றனர் ஆனால் அவர்களும் இந்த இரத்தக்களறியிலிருந்து உயிர் பிழைக்கவில்லை என பரெஸ் தெரிவித்துள்ளார். லடாக்கியா ஜப்லே பணியாசில் 750க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவின் மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தவிர அசாத் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் பாதுகாப்பு படையினர் இடையிலான நேரடி மோதலில் 300 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பனியாஸ் நகரிற்கு சிரிய பாதுகாப்பு படையினர் வந்து சேர்ந்ததை தொடர்ந்து நிலைமை ஸ்திரமடைந்தது என பரெஸ் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தரப்பினர் ஏனைய ஆயுததாரிகளை அங்கிருந்து வெளியேற்றி பொதுமக்களிற்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார். சிரியாவின் கரையோர பகுதிகளில் சிறுபான்மையினரான இஸ்லாமிய அலவைட் மத பிரிவினர் அதிகளவில் வாழ்கின்றனர்.முன்னாள் ஜனாதிபதி அசாத் இந்த சமூகத்தை சேர்ந்தவர் எனினும் இந்த மதபிரிவினர் தங்களை அவருடன் இனம்காணவில்லை. அலவைட் சமூகத்தினர் தங்கள் ஆட்சியின் கீழ் பாதுகாப்பாக இருப்பார்கள் பழிவாங்கும் கொலைகள் இடம்பெறாது என சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் உறுதியளித்திருந்தனர். எனினும், இந்த வாரம் அரசாங்க படையினர் நூற்றுக்கணக்கான அலவைட் சமூகத்தினரை கொலை செய்துள்ளமை சிறுபான்மை சமூகத்தினரிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/208765
-
தமிழரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்பினராக இணைந்தார் விந்தன் கனகரட்ணம்!
ரெலோவின் முக்கியஸ்தர் விந்தன் தமிழ் அரசுக் கட்சியில் இணைவு தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்னம் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். ரெலோ அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்து முன்னாள் மாநகரசபை மாகாண சபை உறுப்பினராக இருந்த விந்தன் கனகரட்னத்துக்கும் கட்சிக்கும் இடையில் அண்மைக்காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டு வந்திருந்தன. இந் நிலையில் திடிரென நேற்றையதினம் அவரும் அவரது மகனும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் முன்னிலையில் தமிழரசுக் கட்சியில் இணைந்து உறுப்புரிமைகளையும் பெற்றுக் கெண்டுள்ளனர். தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் முதல், அரசியல் பயணம் என நீண்டகால உறுப்பினர் மட்டுமல்லாது, அக்கட்சியின் முக்கியஸ்தராகவும் விளங்கி வந்த விந்தன் கனகரட்னம், அக் கட்சியிலிருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டமை அரசியல் கட்சிகளிடத்தே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/315909
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களை நியமித்தல் குறித்து விசேட அறிவித்தல் 11 MAR, 2025 | 05:05 PM 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களை நியமித்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பெயர் குறித்த நியமனங்கள் வெளியிடப்பட்ட 336 உள்ளூர் அதிகார சபைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் கடிதங்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு முன்னர் அந்தந்த உள்ளூர் அதிகார சபை தெரிவத்தாட்சி அலுவலருக்கு சமர்ப்பித்தல் வேண்டும். சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களினால் கட்டுப்பணம் பணம் செலுத்தப்படும் போது வேட்பாளர்களில் ஒருவரை அக்குழுவின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராக நியமிக்க முடியும். மேலும், எதிர்வரும் 13 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாக (பௌர்ணமி தினம்) இருந்தாலும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகமும் அனைத்து மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களும் திறந்து இருக்கும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/208925
-
பட்லந்த வதை முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் - அல்ஜசீரா பேட்டியில் மறுத்தார் ரணில்
பட்டலந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு பட்டலந்த தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை இந்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். பட்டலந்த முகாம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய குறித்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். https://thinakkural.lk/article/315900
-
பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டே கைது
யார் இந்த ரொட்ரிகோ டுட்டெர்டே? Published By: RAJEEBAN 11 MAR, 2025 | 04:44 PM guardian முன்னாள் ஜனாதிபதியான இவர் தன்னை பற்றி பெருமிதமாக பேசிக்கொள்வதில் விருப்பம் உள்ளவர். தனது இளம் வயதில் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் குற்றவாளிகளை தேடியலைந்ததையும், 16 வயதில் ஒருவரை கத்தியால் குத்திக்கொன்றதையும் அவர் பெருமையுடன் கூறியவர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணொருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதற்கான வாய்ப்பை தவறவிட்டமை குறித்து 2016 இல் அவர் தெரிவித்திருந்தார். அந்த பெண் 1989 இல் சிறையில் கொல்லப்பட்டார். 2016 இல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் தனது ஈவிரக்கமற்ற போதைப்பொருளிற்கு எதிரான போரை ஹிட்லரின் யூத அழிப்பு நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டிருந்தார். ஹிட்லர் 3 மில்லியன் யூதர்களை கொலை செய்தார் பிலிப்பைன்சில் போதைப்பொருளிற்கு அடிமையான மூன்று மில்லியன் பேர் உள்ளனர் அவர்களை படுகொலை செய்வது குறித்து நான் மகிழ்ச்சியடைவேன் என்றார். பெண்களை இழிவு செய்தல் தன்னை பற்றிய மிகைப்படுத்தி கதைத்தல் பத்திரிகைகளை தாக்குதல் ஆகியவற்றை விரும்புபவரான ஒரு ஜனரஞ்சகவாதியான பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே ஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்த போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்தமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார். மனிலா விமான நிலையத்திற்கு அவர் வந்தவேளை சர்வதேச பொலிஸாரின் பிடியாணை அவருக்கு வழங்கப்பட்டது. அவருடைய பதவிக்காலத்தில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மின்டானாவோவில் உள்ள டாவோ நகரத்தின் முன்னாள் வழக்குதொடுநரும், மேயருமான டுட்டெர்டே போதைப்பொருள் குற்றங்களை ஒழிப்பதாக வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் 2016 இல் பிலிப்பைன்ஸ் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியானார். போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அவர் ஈடுபட்டதால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களின் உடல்கள் மனிலா குடாவில் உள்ள மீன்களிற்கு உணவாக வழங்கப்பட்டன. இவர் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் போதைப்பொருள் ஒழிப்புநடவடிக்கைகளின் போது 30,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் வறியமக்கள், நகரப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள். பொலிஸாரினால் இனந்தெரியாத குழுக்களினால் சுடப்பட்டார்கள். தண்டனை வழங்குபவர் என அழைக்கப்பட்ட 79 வயது டுட்டெர்டே 15 வயதில் துப்பாக்கி வைத்திருந்தமைக்காக பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டவர் . அவர் சில பாடசாலைகளில் இருந்து நீக்கப்பட்டார், தனது சக மாணவன் ஒருவன் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தார், ஆனால் எதற்காகவும் தண்டிக்கப்படவில்லை தப்பினார். இவரை கடுமையாக விமர்சித்தவரான பிலிப்பைன்சின் செனெட்டர் அந்தோனியோ டிரிலேன்ஸ் ஒரு முறை கார்டியனிற்கு தெரிவித்தார். இதுவே தண்டனையிலிருந்து விடுபடும் மனோநிலையை அவரிடம் உருவாக்கியிருக்கலாம். அவர் ஒருபோதும் தண்டிக்கப்படாததால் அவர் கொலைகளில் ஈடுபட்டார், தனது விருப்பம் போல செயற்பட்டார் என செனெட்டர் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/208926
-
கன்னரதேவன்: போரில் சோழ இளவரசனை வீழ்த்திய ராஷ்டிரகூட மன்னர் - கல்வெட்டு தரும் சுவாரஸ்ய தகவல்கள்
தக்கோலப் போர்: சோழர்களின் தோல்விக்கு வித்திட்ட ராஜாதித்த சோழன் வீரமரணம் - யானை மீதிருந்தவருக்கு என்ன நேர்ந்தது? பட மூலாதாரம்,BJP TAMILNADU / INSTAGRAM கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 11 மார்ச் 2025, 01:50 GMT தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பிராந்திய பயிற்சி மையத்துக்கு ராஜாதித்த சோழனின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. தக்கோலத்துக்கும் ராஜாதித்த சோழனுக்கும் என்ன தொடர்பு? அந்தப் போரில் நடந்தது என்ன? மார்ச் ஏழாம் தேதியன்று ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பிராந்திய பயிற்சி மையத்தில் நடைபெற்ற 56வது நிறுவன நாள் விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அந்த மையத்துக்கு ராஜாதித்த சோழனின் பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார். தக்கோலத்துக்கும் ராஜாதித்த சோழனுக்கும் இடையிலான தொடர்பை மனதில் வைத்தே இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. பிற்காலச் சோழ மரபைச் சேர்ந்தவரான ராஜாதித்த சோழன் ஒருபோதும் மன்னராக இருந்ததில்லை. இருந்த போதும், சோழ வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இராசகேசரி பெருவழி: முதலாம் ஆதித்த சோழன் வணிகர்களுக்காக அமைத்த நிழல் படை என்ன செய்தது? கங்கை முதல் இலங்கை வரை தமிழர் ஆட்சியை ராஜேந்திர சோழன் விரிவாக்கியது எப்படி? கன்னரதேவன்: போரில் சோழ இளவரசனை வீழ்த்திய ராஷ்டிரகூட மன்னர் - கல்வெட்டு தரும் சுவாரஸ்ய தகவல்கள் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் சிற்றரசர்கள் இடையிலான எல்லை ஒப்பந்தம் கூறும் சுவாரஸ்ய தகவல் தக்கோல யுத்தத்தின் முக்கியத்துவம் பிற்காலச் சோழ மன்னர்களின் வரிசையில் மூன்றாவதாக வருபவர் முதலாம் பராந்தகச் சோழன். கி.பி. 955ல் இவர் மரணமடைந்தார். சோழ மன்னர்களிலேயே மிகவும் புகழ்பெற்ற மன்னராக இருந்த ராஜராஜ சோழன் கி.பி. 985ல் மன்னராக முடிசூடினார். இந்த இரு மன்னர்களுக்கும் இடையிலான காலகட்டம் 30 ஆண்டுகள். ஆனால், 'இந்த முப்பது ஆண்டுகள் சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதி' எனக் குறிப்பிடுகிறார், சோழர்களின் வரலாற்றை எழுதிய பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி. அப்படி ஒரு கடுமையான சூழலை சோழ அரசுக்கு ஏற்படுத்திய யுத்தம்தான் தக்கோல யுத்தம். முதலாம் பராந்தகச் சோழன் இரண்டு சேர இளவரசிகளை மணந்திருந்தார். அவர்களில் கோ கிழான் அடிகளுக்குப் பிறந்தவர்தான் ராஜாதித்தன். பராந்தகச் சோழனுக்கு கண்டராதித்தன், அரிஞ்சயன் என வேறு இரு மகன்களும் உண்டு. பட மூலாதாரம்,PIB படக்குறிப்பு,தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பிராந்திய பயிற்சி மையத்திற்கு ராஜாதித்திய சோழனின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது ராஜாதித்தன் கொல்லப்பட்ட போர் ராஷ்டிரகூட (ஏறக்குறைய தற்போதைய கர்நாடகப் பகுதி) மன்னனான மூன்றாம் கிருஷ்ண தேவன், கி.பி. 949-இல் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தார். கங்க நாட்டின் மன்னனான இரண்டாம் பூதுகனும் பெரும் படையுடன் அவருக்கு துணையாக சேர்ந்துகொண்டார். இந்த இரு படைகளும் ஒன்றாகச் சேர்ந்து, சோழ நாட்டின் ஒரு பகுதியான தொண்டை நாட்டைத் தாக்கின. அந்தத் தருணத்தில் திருநாவலூரில் தன் படையுடன் சோழ இளவரசனான ராஜாதித்தன் தங்கியிருந்தார். ராஷ்டிரகூட படைகளை எதிர்கொள்வதற்காக தக்கோலத்துக்குச் சென்றார் ராஜாதித்தன். இந்தப் போரில்தான் அவர் கொல்லப்பட்டார். இந்தப் போர் திடீரெனத் துவங்கியதில்லை. இந்தப் போருக்கு ஒரு நீண்ட காலப் பின்னணி இருந்தது. இந்தப் பின்னணியை தனது 'லார்ட்ஸ் ஆஃப் எர்த் அண்ட் சீ' (Lords of Earth and Sea) நூலில் சுவாரஸ்யமாக விவரிக்கிறார் அனிருத் கனிசெட்டி. தர்மேந்திர பிரதானின் விமர்சனமும், ஸ்டாலினின் எதிர்வினையும் - நாடாளுமன்றத்தில் இன்று என்ன நடந்தது?6 மணி நேரங்களுக்கு முன்னர் முகமது ஷமி நோன்பு கடைப்பிடிக்கவில்லை என விவாதம் - இன்சமாம் உல்-ஹக் கூறிய அறிவுரை என்ன?10 மார்ச் 2025 தக்கோலப் போருக்கான விதை கி.பி. 930களின் பிற்பகுதி. பராந்தகச் சோழனின் அரசவையில் வந்து நின்ற அந்த இளைஞன், எல்லாவற்றையும் இழந்திருந்தாலும் அவனுடைய ஆடைகள் சிறப்பாகவே இருந்தன. அந்த இளைஞன் வேறு யாருமல்ல, சில மாதங்களுக்கு முன்புவரை ராஷ்டிரகூட ராஜ்ஜியத்தின் மன்னனாக இருந்தவன். தன்னுடைய தளபதிகளே தனக்கு எதிராக சூழ்ச்சி செய்து, தன்னைத் தூக்கியெறிந்துவிட்டு தனது வயதான சித்தப்பாவை மன்னராக்கியிருப்பதாகவும் தனக்கு ஆதரவாகப் படையெடுத்து வந்து நாட்டை மீட்டுத்தர வேண்டுமென்றும் பராந்தகச் சோழனிடம் சொன்னான் அந்த இளைஞன் (இவரது பெயரை கெனிசெட்டி குறிப்பிடவில்லை. ஆனால், இந்த மன்னன் கி.பி. 930 முதல் கி.பி. 936வரை ராஷ்டிரகூட நாட்டை ஆண்ட நான்காம் கோவிந்தன் என்கிறார், வரலாற்றாசிரியரான சதாசிவ பண்டாரத்தார்). பட மூலாதாரம்,JUGGERNAUT தொடர்ந்து வெற்றிகளைச் சந்தித்து வந்த பராந்தகச் சோழன் அந்த இளைஞனை ஆதரிக்க முடிவுசெய்தார். அவனுக்கு தன் மகளையும் திருமணம் செய்துவைத்தார். தன் கணவருக்கு சோழ நாடு ஆதரவு அளித்திருப்பதை தெரிவித்ததைக் குறிக்கும் வகையில், தக்கோலத்தில் இருந்த ஒரு கோவிலுக்கு அணையா விளக்கு ஒன்றை பரிசளித்தாள் பராந்தகச் சோழனின் மகள். ஆனால், அதே தக்கோலத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கக் காத்திருந்தன. கி.பி. 939ஆம் ஆண்டு. சோழ தேசத்திலிருந்து வெகு தூரத்தில் இருந்த மான்யகேதா நகரம் அன்றைக்கு விழாக் கோலம் சூடியிருந்தது. 30 வயது மதிக்கத்தக்க இளைஞனின் தலையில் தங்கக் கிரீடத்தை வைத்து, அவனை ராஷ்டிரகூட நாட்டின் மன்னனாக அறிவித்தார்கள் அந்நாட்டின் தளபதிகள். அந்தப் புதிய மன்னனின் பெயர் மூன்றாம் கிருஷ்ணன். உண்மையில், ராஷ்டிரகூட நாட்டின் சிம்மாசனத்துக்கான வரிசையில் மூன்றாம் கிருஷ்ணன் இருக்கவில்லை. ஆனால், மோசமான ஆட்சியின் காரணமாக கோவிந்தன் நாட்டை விட்டு துரத்தப்பட்ட பிறகு, மூன்றாம் கிருஷ்ணின் தந்தை அரசராக்கப்பட்டார். தந்தை மன்னனாக இருந்த காலத்திலேயே, மூன்றாம் கிருஷ்ணன், தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ளத் துவங்கினார். தான் அரசனாக முடிசூடிய பிறகு மத்திய இந்தியாவில் பல இடங்களைப் பிடித்த அவர், கங்க நாட்டில் இருந்த அரசனைத் தூக்கியெறிந்துவிட்டு இரண்டாம் பூதுகன் என்பவருக்கு முடிசூடினார். அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ள மார்க் கார்னி - யார் இவர்?10 மார்ச் 2025 இந்தியா ஆதிக்கம்: சாம்பியன்ஸ் டிராபி நிகழ்வுகள் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியா?7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்நிலையில்தான், தன் மருமகனுக்கு ஆதரவாக கங்க நாட்டின் மீது படையெடுத்தார் பராந்தகச் சோழன். இந்தப் போரில் வெற்றி கிடைக்கவில்லை. இந்தப் போரில், முன்னாள் ராஷ்டிரகூட மன்னனான பராந்தகச் சோழனின் மருமகனும் கொல்லப்பட்டான். இதற்குப் பிறகு, பராந்தகச் சோழன் ராஷ்டிரகூடர்களின் மீது படையெடுக்கவில்லையென்றாலும், மூன்றாம் கிருஷ்ணன் விடுவதாயில்லை. கி.பி. 949ல் சோழ நாட்டை நோக்கி தன் படைகளைத் திருப்பினான் மூன்றாம் கிருஷ்ணன். ராஷ்டிரகூடர்களை எதிர்கொள்ள தஞ்சையிலிருந்தபடியே மிகப் பெரிய படையை தனது வட எல்லைக்கு அனுப்பினார் பராந்தகச் சோழன். அந்தப் படைகளுக்கு ராஜாதித்தன் தலைமை தாங்கினார். கிட்டத்தட்ட நடு வயதை எட்டியிருந்த ராஜாதித்தன் இன்னமும் பட்டத்து இளவரசனாக முடிசூட்டப்பட்டிருக்கவில்லை. இவருக்கு ஏற்கனவே நல்ல பெயர் இருந்தாலும், இந்தப் போரில் வெற்றிபெற்றால், அடுத்த மன்னர் அவர்தான் என்பதில் சந்தேகமில்லை. இந்த யுத்தத்தில் அவருக்குத் துணையாக இருந்தவர் சேர நாட்டைச் சேர்ந்த வெள்ளன் குமரன். பட மூலாதாரம்,BJP TAMILNADU/INSTAGRAM அணையா விளக்கும் கிருஷ்ணனின் படைகளும் கிருஷ்ணனின் படைகள் தக்கோலத்தில் வந்து இறங்கின. 11 ஆண்டுகளுக்கு முன்பாக, தன் கணவனுக்காக சோழ இளவரசி எந்த ஊரில் அணையா விளக்கை ஏற்றினாரோ, அதே தக்கோலத்தில் கிருஷ்ணனின் படைகள் நின்றுகொண்டிருந்தன. மிகப் பெரிய படை. கிருஷ்ணனின் யானைக்கு முன்பாக மிகப் பெரிய கொடி மரத்தை பிடித்திருந்தார்கள். அதில் ராஷ்டிரகூடர்களின் கொடிக்குக் கீழே, அவனிடம் தோற்ற மன்னர்களின் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. திடீரென துந்துபிகள் முழங்கின. நிலம் அதிர படைகள் இரு திசைகளிலும் முன்னேறின. கத்திகள் மோதும் ஒலியும் அம்புகள் பறக்கும் ஒலியும் அந்த இடத்தை நிறைத்தன. அடுத்த சில விநாடிகளில் மனிதக் கூக்குரல்களும் எழுந்தன. ராஜாதித்தனின் தளபதியான வெள்ளன் குமரன் ஒரு பக்கம் சண்டையிட்டுக் கொண்டிருக்க, யானை மீதிருந்து கங்க மன்னன் பூதுகனுடன் போரிட்டுக் கொண்டிருந்தார் ராஜாதித்தர். அவருடைய யானைக்கு அருகே பயிற்சி பெற்ற வாள் வீரர்கள், வேல் வீரர்கள் இருந்தனர். அவர்களும் கங்க மன்னனின் யானையை வீழ்த்த முயன்றனர். அதேபோல, எதிர்த் தரப்பும் முயன்று கொண்டிருந்தது. இந்த யுத்தம் மிகக் கொடூரமானதாக இருந்தது. யுத்தத்தின் ஆரம்பத்தில், ராஷ்டிரகூட - கங்கர் கூட்டணியை கிட்டத்தட்ட பின்னுக்குத் தள்ளினார் ராஜாதித்தர். சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றது பற்றி பாகிஸ்தான் ஜாம்பவான்கள் கூறுவது என்ன?10 மார்ச் 2025 காமராஜர் கட்டிய மலம்புழா அணையிலிருந்து மதுபான தொழிற்சாலைக்கு தண்ணீர்: கேரளாவில் வலுக்கும் போராட்டம் – பிபிசி கள ஆய்வு11 மார்ச் 2025 சோழர்கள் தோல்விக்கு வித்திட்ட திருப்புமுனை நிகழ்வு ஒரு தருணத்தில் திடீரென பூதுகனின் யானை, ராஜாதித்தரின் யானைக்கு அருகில் வந்தது. சட்டென தனது கத்தியை உருவியபடி ராஜாதித்தனின் யானை மீது ஏறிய பூதுகன், ராஜாதித்தனை வீழ்த்தினார். யானை மீதே இறந்து போனார் ராஜாதித்தன். இதற்குப் பிறகு சோழப் படைகள் சிதற ஆரம்பித்தன. வெள்ளன் குமரனுக்கு இந்தச் செய்தி வந்து சேர்ந்த போது, திகைத்துப் போனான். போர்க்களத்தில் எந்த இடத்தில் ராஜாதித்தர் விழுந்து கிடக்கிறார், யார் கொன்றது என்பதுகூட அவனுக்குத் தெரியவில்லை. ராஜாதித்தன் இறந்த பிறகு, கிருஷ்ணன் தஞ்சையையும் மதுரையையும் சூறையாடினான் என்கிறார், அனிருத் கனிசெட்டி. சில கல்வெட்டுகள் மூன்றாம் கிருஷ்ண தேவனை 'கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னர தேவன்' என குறிப்பிடுகின்றன. கார்காட் செப்பேடுகள் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டை வென்று அதனை தனது தளபதிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாகவும் இலங்கை உள்ளிட்ட அரசர்களிடமிருந்து கப்பம் பெற்று, ராமேஸ்வரத்தில் ஒரு வெற்றித் தூணை நிறுவியதாகவும் கூறுகின்றன. ஆனால், அவன் தஞ்சையை வெற்றி கொண்டதாகச் சொல்ல முடியாது என்கிறார், பிற்காலச் சோழர்கள் நூலை எழுதிய சதாசிவ பண்டாரத்தார். தற்போதைய பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகை வீரட்டானத்துக்கு தெற்கே மூன்றாம் கிருஷ்ணனின் கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, சோழர்களின் கீழிருந்த தொண்டை நாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் வென்று, தனது கூட்டாளிகளுக்குப் பிரித்துக் கொடுத்ததையே மிகைப்படுத்தி கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் கூறியிருக்க வேண்டும் என்கிறார் அவர். ராஜாதித்தர் கொலை குறித்த மாற்று கருத்து ஆனால், ராஜாதித்தர் கொல்லப்பட்டது குறித்து வேறு விதமான கருத்தும் இருக்கிறது. இரண்டாம் பூதுகன் விடுத்த அம்பு, ராஜாதித்தரின் மார்பைத் துளைத்ததால் அவர் கொல்லப்பட்டதாக லெய்டன் செப்பேடுகளை அடிப்படையாக வைத்து குறிப்பிடுகிறார் சதாசிவ பண்டாரத்தார். பூதுகனின் செயலைப் பாராட்டி அவனுக்கு மிகப் பெரிய அளவிலான பிரதேசங்களை மூன்றாம் கிருஷ்ணன் வழங்கியதாகவும் (மாண்டியாவுக்கு அருகில் உள்ள) ஆதக்கூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கும்பகோணம், திருவிடைமருதூர், திருவெள்ளறை ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் 'ஆனைமேற்றுஞ்சினார்' என ராஜாதித்தனைக் குறிப்பிடுகின்றன. ராஜாதித்தனின் மரணம் முதலாம் பராந்தகச் சோழனைக் கடுமையாக பாதித்தது. அடுத்த ஆண்டே, அதாவது கி.பி. 950ஆம் ஆண்டே தனது இரண்டாவது மகனான கண்டராதித்தனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினார். அடுத்த சில ஆண்டுகளிலேயே அதாவது கி.பி. 953- 55க்குள் இறந்தும் போனார் பராந்தகச் சோழன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gm73563evo
-
கொழும்பிலிருந்து புத்தூரை துவிச்சக்கரவண்டியில் சென்றடைந்து 74 வயது சிரேஷ்ட பிரஜை சாதனை!
வாழ்த்துகள் ஐயா.
-
'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
படக்குறிப்பு, தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூட்டை நடத்தியதற்கான காரணத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வெளிப்படுத்தினார். 45 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பு பாலைவனமாவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை கடற்றொழில், நீரியல்வள, கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கின்றார். ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மறுத்து வருகின்றனர். பிபிசி தமிழுக்காக இலங்கையில் இருந்து செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதைக் குறிப்பிட்டார். தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இதன்போது வெளிப்படுத்தினார். கேள்வி: இந்தியா-இலங்கை மீனவப் பிரச்னை, மிக முக்கியமான பிரச்னையாகக் காணப்படுகின்றது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதற்கான பாரிய பொறுப்பு உங்கள் வசம் காணப்படுகிறது. இது தற்போது எவ்வாறான நிலைமையில் காணப்படுகின்றது? பதில்: இலங்கை இந்தியா இடையிலான மீனவப் பிரச்னை என்பது மிக நீண்ட நாட்களாக புரையோடிப் போயுள்ள பிரச்னையாகக் காணப்படுகின்றது. இதைத் தீர்ப்பதற்காக அல்லது இணக்கப்பாட்டிற்கு வருவதற்காகக் கடந்த காலங்கள் முழுவதுமே இங்கிருக்கின்ற மீனவர்கள், மீனவ சங்கங்கள், அரசியல்வாதிகள் எல்லோருமே பல்வேறு பேச்சுவார்த்தைகள் அல்லது உடன்படிக்கைகளைச் செய்துகொண்ட போதிலும்கூட எந்தவித இணக்கப்பாடும் இல்லாது தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்று வருகின்றது. அத்துமீறல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதன் காரணமாக இன்று அது திருப்புமுனையாக மாறியுள்ளது என நான் நினைக்கின்றேன். அதற்குக் காரணம் என்னவென்றால், எங்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு மீன்பிடி அமைச்சராகப் பொறுப்பேற்றதன் பிறகு அது மாத்திரமல்ல, கடந்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு கணிசமான மக்கள் வாக்களித்தார்கள். யாழ் மாவட்டத்திலும் எங்களை முதலாவது கட்சியாக மக்கள் உயர்த்தி வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில் எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது. எங்களை நம்பிய மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய முடியாது. மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். அதை நோக்கிய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அந்த வகையில் மீனவர்களுடைய பிரச்னை தொடர்பில் பல தடவை சொல்லியிருப்பேன். பெருமளவான மீனவர்கள் என்னிடம் சொல்வது ஒன்றுதான். முடியுமானால், இந்த இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துங்கள். தடுத்து நிறுத்த முடியாவிட்டால் நாங்கள் எல்லோருமே இந்தக் கடலில் குதித்து செத்துப் போகின்றோம் என்ற வார்த்தையைப் பல மீனவர்கள் என்னிடம் சொல்லியிருக்கின்றார்கள். அந்த அளவுக்கு இன்றைக்கு இது உச்சக்கட்டமான பிரச்னையாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் இந்திய அரசிடமும் சரி, தமிழ்நாட்டு அரசிடமும் சரி, நாங்கள் மிக மிக வினையமாகக் கேட்டுக்கொள்வது, 'எங்களுடைய கடற்பரப்பு, இது சர்வதேச ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட கடல் பரப்பு, இலங்கைக்குச் சொந்தமான கடல். இந்தக் கடல் எல்லையை மீற வேண்டாம், தாண்ட வேண்டாம் என்று இந்திய மீனவர்களுக்குச் சொல்லும் படி,' நாங்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தையும், மத்திய அரசாங்கத்தையும் மிக மிக வினையமாகக் கேட்டுக்கொள்கின்றோம். தமிழக மீனவர்கள் தங்களுக்குப் பக்கத்தில் இருக்கின்ற கேரளா கடல் பரப்பிற்குச் செல்லமாட்டார்கள். ஆந்திராவுக்கு செல்ல மாட்டார்கள். பக்கத்தில் இருக்கின்ற பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள். ஆனால், எங்களுடைய கடற்பரப்புக்குள் வந்து முற்று முழுதாக எங்களுடைய மீன்வளங்களைக் கொள்ளையடித்து விட்டு, எங்களுடைய கடல் வளங்களை நாசம் செய்துவிட்டு, எங்களுடைய கடல் தொழிலாளர்களின் வலைகள், வளங்கள் எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டு கொள்ளையடித்துக் கொண்டு, போகும் வழியில் நாங்கள் தொப்புல்கொடி உறவு என்று சொல்லிக் கொண்டு போகின்றார்கள். இதுதான் இன்றைக்கு இவர்களுடைய நிலைமை. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை. அதற்கான நடவடிக்கைகள் நகர்வுகளை நாங்கள் எடுத்து வருகின்றோம். இலங்கை: 2 வயது குழந்தையை தத்தெடுத்து சித்ரவதை செய்து கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? நிழலுலக மோதல், வாள்வெட்டு சம்பவங்கள் உணர்த்துவது என்ன? இலங்கையில் வெறும் ஐந்தே நிமிடங்களில் விலங்குகளை கணக்கெடுக்க திட்டம் - எப்படி? கச்சத்தீவுக்கு அருகில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கூறக்கூடிய ஒரு விடயம், கச்சத்தீவு நிலப்பரப்புக்கு அண்மித்த பகுதியில்தான் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதைத் தாண்டி நாங்கள் செல்வதில்லை எனக் கூறுகின்றார்கள். அப்படி கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடிக்கின்ற அந்த மீனவர்களை இலங்கை கடற்படை ஏன் கைது செய்கின்றது? பதில்: இதற்கான பதிலை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. இலங்கையில், ஒரு சில இந்திய ஊடகவியலாளர்கள் இருக்கின்றார்கள். விசேடமாக ஆங்கில பத்திரிகைகளில் இலங்கை தொடர்பான செய்திகளை இந்தியாவுக்கு கொண்டு செல்கின்ற வலிமையான பத்திரிகைகளில் இருக்கின்றார்கள். அவர்களிடம் நீங்கள் சென்று கேட்டுப் பார்க்கின்றபோது, மிகத் தெளிவாக அவர்கள் சொல்கின்ற ஒரு விடயம் இருக்கின்றது. நாங்கள் நேரடியாக வந்து பார்த்திருக்கின்றோம். இந்திய ட்ரோலர்கள் வந்து, எங்களுடை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வந்து எங்களுடைய கடல் பரப்பில் இருந்துகொண்டு எங்கள் மீன் வளங்களையும், கடல் வளங்களையும் கொள்ளையடிப்பதை நாசமாக்குவதையும் நாங்கள் கண்கூடாகக் கண்டிருக்கின்றோம். அதனால், இவர்கள் கச்சத்தீவுக்கு வருகின்றார்களா அதற்குப் பக்கத்தில் இருந்து மீன் பிடிக்கின்றார்களா என்பது அல்ல பிரச்னை. கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது. கச்சத்தீவுக்குக்கூட வந்து மீன் பிடிப்பதற்கான உரிமை இவர்களுக்குக் கிடையாது. நாங்கள் ஏதோ இணக்கப்பாட்டிற்கு வந்து கொடுத்தாலே தவிர, அவர்கள் அங்கு வர முடியாது. அவர்களுக்குச் சொந்தமான கடலில் அவர்கள் எந்த விளையாட்டை விளையாடினாலும் பரவாயில்லை. அதேபோன்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்தியாவின் கடல் பரப்பில் அவர்கள் மீன் பிடிப்பார்களாக இருந்தால், அதற்கு எங்களுடைய கடற்படை எந்தவிதத்திலும் தலையீடு செய்யாது. அவர்கள் எங்களுடைய கடற்பரப்பு அல்ல, எங்களுடைய எல்லையையும் தாண்டி, எங்களுடைய கரையையும்கூட அண்மிக்கின்ற அளவுக்கு வந்து மீன் பிடிக்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள். கச்சத்தீவுக்கு அந்தப் பக்கம் அவர்களின் கடலில் இருந்துகொண்டு மீன்பிடிக்கின்றோம் என்பது பொய்யான விடயம். அவர்களின் கடலில் மீன்பிடிக்கும்போது எந்தவித நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கப் போவதில்லை, ஆனால், எங்களுடைய கடலில் மீன்பிடிக்கும்போது நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம். கேள்வி: இரண்டு நாட்டு மீனவர்களின் பிரச்னையாகக் காணப்படுவது கச்சத்தீவு. இந்த கச்சத்தீவை தமிழக அரசாங்கம், மத்திய அரசாங்கம் இலங்கையிடம் மீளக் கோரியிருந்தன. இலங்கை அரசாங்கத்திற்குக் கச்சத்தீவை கொடுப்பதற்கான எண்ணம் எதுவும் இருக்கின்றதா? பதில்: கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது. இது ஐக்கிய நாடுகள் சபையில் கடல் எல்லை தொடர்பான விடயத்தில் எங்களுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம், கச்சத்தீவை என்றைக்குக் கொடுத்தார்கள், யார் கொடுத்தார்கள், ஏன் கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள் என்பது வரலாற்று ரீதியில் வேறு விடயங்கள் இருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது எங்களுக்குச் சொந்தமானது. ஆனால், எங்கள் எல்லோருக்குமே தெரியும். நேற்று இன்று அல்ல. இந்தியா, தமிழ்நாட்டில் தேர்தல் காலங்கள் வருகின்றபோது காளான் பூத்ததைப் போன்று தொடர்ந்து கச்சத்தீவு பிரச்னையை இவர்கள் கையில் எடுப்பது வழமை. ஆனால், கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது. இதை யாருக்கும் விட்டுக் கொடுப்பதற்கு நாங்கள் தயார் இல்லை. புத்தகயா: புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் உருவான மகாபோதி கோவில் யாருக்குச் சொந்தம்? இந்து - பெளத்தர் மோதல்3 மணி நேரங்களுக்கு முன்னர் அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து டிரம்ப் எழுதிய கடிதத்திற்கு இரானின் பதில் என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் யோசனைகள் உள்ளதா? படக்குறிப்பு,"அவர்களின் கடலில் மீன்பிடிக்கும்போது எந்தவித நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கப் போவதில்லை, ஆனால், எங்களுடைய கடலில் மீன்பிடிக்கும்போது நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம்" என்கிறார் இராமலிங்கம் சந்திரசேகரன். கேள்வி: கடந்த காலங்களில் நாங்கள் கண்ட ஒரு விடயம். அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் வரக்கூடிய இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது என்ற குற்றச்சாட்டு காணப்பட்டது. சில வேளையில் அவர்களை விரட்டுவதற்காக வானை நோக்கி துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தியா தரப்பினர், தங்களை நோக்கியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகச் சொல்கின்றார்கள். உயிரிழப்புகள் நேர்ந்ததாகவும் அவர்கள் குற்றசாட்டுகளை முன்வைக்கின்றார்கள். இது உங்களின் அரசாங்கம் அல்ல. இதற்கு முன்னர் இருந்த அரசுகளின் காலப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் நேர்ந்தன. உங்களின் ஆட்சியில் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிக்கும் பட்சத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைப் பின்வாங்கச் செய்யும் யோசனைகள் எதுவும் முன்வைக்கப்பட்டு இருக்கின்றதா? பதில்: இல்லை. எங்களுடைய அரசாங்கத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிராக துப்பாக்கிப் பிரயோகம் செய்வதோ அல்லது அவர்களைத் துன்புறுத்துவதோ, அவர்களைச் சிறையில் அடைப்பதோ எங்களுடைய நோக்கம் கிடையாது. ஆனால் உங்களுக்கு தெரியும். ஒரு நாட்டின் கடல் எல்லையை மீறுகின்றபோது அந்தக் கடல் எல்லையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கடற்படைக்கு உண்டு. யுத்த காலத்தில் அது வேறு கதை. யுத்தம் முடிந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் சம்பங்கள் இடம்பெற்று இருக்கின்றது. ஆனால், எங்களுடைய அரசாங்கம் ஆட்சி பீடத்திற்கு வந்ததற்குப் பிறகு நாங்கள் இந்திய படகுகளைக் கைது செய்வது உண்மை. ஆனால் கடற்படை அவர்களைத் துப்பாக்கி பிரயோகம் செய்து, தடுக்க வேண்டும் என கோரிக்கையோ கட்டளையோ யாரும் விடவில்லை. ஆனால் குறிப்பிட்ட சம்பவமொன்று இருக்கின்றது. அந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மை என்னவென்றால், அந்தச் சம்பவம் இடம்பெற்றபோது எங்களுடைய கடற்படையினர் கைது செய்வது வழமை. பலவந்தமாக அவர்களுடைய படகுகளில் ஏறிக் கைது செய்கின்ற நடவடிக்கைகளை எடுப்பார்கள். அவ்வாறு நடவடிக்கைகளை எடுக்கின்றபோது அவர்கள் படகுகளில் ஏற முடியாதவாறு சுற்றி வர ஓயில் போட்டிருப்பார்கள். அதையும் மீறி ஏறினால் சுடுநீரைக் குழாய் மூலம் பாய்ச்சுவார்களாம். கடற்படைக்குத் தீங்கு செய்கின்ற நடவடிக்கைகளை அவர்கள் செய்கின்றார்கள். அதையும் மீறி அன்றைய தினம் எங்களுடைய ஒரு சிப்பாய் படகிற்குள் ஏறிவிட்டார். ஏறிய பிறகு அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டு, அவரை தமிழ்நாட்டிற்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே துப்பாக்கிப் பிரயோக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அவர்களின் தலையில் சுட்டிருக்கலாம் அல்லது ஏனைய பாகங்களில் சுட்டிருக்கலாம். ஆனால், முழங்காலுக்குக் கீழேதான் சுடப்பட்டது. மீன்பிடிப் படகுகளில் வருகின்றவர்கள் கூலித் தொழிலாளர்கள் அப்பாவிகள். அங்குள்ள ஒரு சில பெண்கள் கதறி அழுவதையும் நான் பார்த்திருக்கின்றேன். நான் இந்திய மீனவர்களைச் சந்தித்து இருக்கின்றேன். ஒரு மீனவர் என்னிடம் சொன்னார், "ஐயா நான் இனி இந்தப் பக்கம் வர மாட்டேன். இது எங்களுடைய வாழ்க்கைப் பிரச்னை. இந்த வாழ்க்கைப் பிரச்னைக்கு தமிழ்நாட்டு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாக இருந்தால், இந்திய கடற்பரப்பில் மீன்கள் உற்பத்தியாவதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்குமானால், அல்லது இந்திய கடற்பரப்பின் ஏனைய பகுதிகளில் மீன்களைப் பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருக்குமானால், சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கான சலுகைகளைச் செய்து கொடுத்து இருக்குமானால், நிச்சயமாக நாங்கள் இவ்வாறானதொரு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அல்லது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிணக்குகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க மாட்டோம்" என்றார். தங்களுக்கு முடியாத பட்சத்திலேயே இவ்வாறான செயற்பாடுகளை எடுப்பதாக அவர்கள் தரப்பில் கருத்துகள் கூறப்படுகின்றன. அந்த வகையில் அந்த மீனவர்களை நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதோ அவர்களைத் துன்புறுத்துவதோ அவர்களைச் சிறையில் அடைப்பதோ எங்களுடைய நோக்கம் கிடையாது. அவர்களைச் சிறையில் அடைக்கின்றபோது தங்களுக்குத் தெரியும் என்று கூறி அவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். "நாங்கள் சட்டவிரோதம் எனத் தெரிந்து கொண்டுதான் இலங்கை கடல் எல்லையை மீறி இருக்கின்றோம். அதற்காகவே சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றோம்" என்று கூறுகிறார்கள். அதன் காரணமாகவே அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. எங்களால் அல்ல. நீதிமன்றத்தால். அந்த நிலைமையின் கீழ் நாங்கள் சொல்கின்றோம். இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றால், தீர்வு வேறு ஒன்றும் அல்ல. இந்திய மீனவப் படகுகள் எங்களுடைய எல்லையை மீறாமல் இருப்பதுதான். இலங்கை: வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்திலேயே சட்டவிரோத கும்பல் தலைவரை கொன்ற நபர்21 பிப்ரவரி 2025 இலங்கை: 2025-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய 10 விடயங்கள்17 பிப்ரவரி 2025 இந்திய பிரதமர் மோதியுடன் மீனவர் பிரச்னை குறித்து பேசப்பட்டதா? படக்குறிப்பு,"இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், தீர்வு வேறு ஒன்றும் அல்ல, இந்திய மீனவப் படகுகள் எங்களுடைய எல்லையை மீறாமல் இருப்பது தான்." கேள்வி: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு சென்றார். நரேந்திர மோதியை சந்தித்தார். குடியரசுத் தலைவரைச் சந்தித்திருந்தார். இப்படியான சந்திப்புகளில் இந்த மீனவப் பிரச்னை தொடர்பாக எவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன? பதில்: ஒரு விடயம் இருக்கின்றது. இந்திய விஜயத்தின்போது தோழர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் மோதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்னை முதன்மையான பிரச்னையாகப் பேசப்படவில்லை. அதைவிட வேறு விதமான தேவைகள் இந்தியாவிற்கு இருக்கின்றன என்பதே அதற்குக் காரணம். இந்தியாவுக்கும் தெரியும் இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிக்கின்றார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், நான் அண்மையில் தமிழ்நாட்டிற்குச் சென்றபோது இந்திய அரசாங்கம் 42 லட்சம் ரூபா நட்ட ஈடாக அல்லது மானியமாக வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக அங்கிருக்கின்ற மீனவர்கள் தொடர்பான புத்திஜீவிகள் சிலர் என்னிடம் கூறினார்கள். இது ட்ரோல் மூலம் மீன் பிடிப்பதை நிறுத்துவதற்கான நடவடிக்கை. அப்படி இருந்தும், தமிழ்நாட்டு மீனவர்கள் அந்தப் பொடம் ட்ரோலிங் இழுவை படகுகளின் மூலமாக எங்களுடைய கடல் பரப்பை நாசமாக்குகின்றார்கள் என்பது நன்றாகவே அவர்களுக்குத் தெரியும். அதனால், இது சம்பந்தமாக தோழர் அநுர குமாரவோடு வேறு விதமான ஆழமான உரையாடல்கள் இடம்பெறவில்லை. ஆனால், இது பேசப்பட்டது. எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் மிகத் தெளிவாக அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றோம். நாங்கள் ஒரு தீவு. இலங்கை என்பது ஒரு தீவு. இந்தத் தீவு அழகாக இருக்கின்றது. அது தீவாக இருப்பதன் காரணமாக நாங்கள் இறைமையுள்ள நாடு, தன்னாதிக்கம் உள்ள நாடு. மோதியுடனான சந்திப்பின்போது நாங்கள் கூறியுள்ளோம். இது, இந்திய பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற ஒவ்வொரு சந்திப்புகளிலும் நானும்கூட அடித்துக் கூறுகின்ற ஒரு விடயம்தான். இந்திய படகுகள் எங்களுடைய கடல் எல்லையை மீறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. டிரம்ப் உத்தரவு எதிரொலி: USAID இடைநிறுத்தத்தால் இலங்கைக்கு என்ன பாதிப்பு?9 பிப்ரவரி 2025 இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்3 பிப்ரவரி 2025 தமிழ்நாடு, இலங்கை மீனவப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: இந்திய மீனவர்களைக் கைது செய்யும்போது, அவர்களின் உடைமைகள், சொத்துகள் இலங்கையில் அரசு உடையாக்கப் படுகின்றன. அந்த நடவடிக்கை இனி வரும் காலங்களில் எப்படியான விதத்தில் முன்னெடுக்கப்படும் என்பதுடன், இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு என்பதை இந்த அரசாங்கம் எப்படிப் பார்க்கின்றது? பதில்: இந்த நடவடிக்கைகள் தொடரும். அதனால், தயவு செய்து தமிழ்நாட்டு மீனவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். எங்களுடைய கடல் எல்லையை மீற வேண்டாம். நீங்கள் வருவீர்களாக இருந்தால், கைது செய்யப்படுவீர்கள். கைது செய்யப்படுவது மாத்திரமல்ல. உங்களின் உடைமைகளும் இல்லாதுபோகும் நிலைமை ஏற்படும். இப்போதும்கூட 124 படகுகள் அரசு உடைமையாக்கப்பட்டு இருக்கின்றது. 24 படகுகள் தொடர்பில் வழக்கு நடக்கின்றது. சுமார் 20 படகுகளை அவர்கள் கொண்டு செல்ல முடியும். அவர்கள் வருவதில்லை. 124 படகுகள் என்பது விளையாட்டு இல்லை. பெரிய படகுகள். லட்சக்கணக்கான பெறுமதிமிக்க படகுகள். இந்தப் படகுகள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் இன்றைக்கு அவை அரசு உடைமையாக்கப்பட்டு இருக்கின்றது. இந்திய படகுகளால் எங்களுடைய கடல்வளம் அழிக்கப்படுகின்றது. அந்தக் கடல் வளத்தை மீள உருவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கப் போகின்றோம். இதை இந்தியாவுக்கும் நாங்கள் அறிவித்து இருக்கின்றோம். இந்திய தூதுவர்களுக்கும் நாங்கள் அறிவித்துள்ளோம். அந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கப் போகின்றோம். இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு என்னவென்றால்,வேறு எதுவும் அல்ல. இது எங்களுடைய வீடு.எங்கள் வீட்டில் வேறு ஒருவர் வந்து புகுந்து விளையாடுவாராக இருந்தால், அவருக்குத் தேவையான வகையில் வளங்களை நாசம் செய்வாராக இருந்தால், அதை நாங்கள் கண்மூடிப் பார்த்துக் கொண்டு இருப்போமாக இருந்தால், நாங்கள் ஒன்று குருடர்களாக அல்லது செவிடர்களாக அல்லது மூடர்களாக, ஊமைகளாகவே இருக்க வேண்டும். அல்லது இதைக் கண்டு அஞ்சும் முதுகெலும்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் அப்படியல்ல. இந்திய அரசாங்கத்தை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். இந்திய மீனவர்களை நாங்கள் நேசிக்கின்றோம். மீன்பிடி அமைச்சர் என்ற வகையில் இந்திய மீனவர்கள் மீதான பாசம் நேசம் அதிகரித்திருக்கின்றது. அந்த நேசம் பாசம் எல்லாமே இருக்கின்றது. அதனால், நேசம் பாசம் தொடர வேண்டும் என்றால், அல்லது நீங்கள் சொல்கின்ற அந்தத் தொப்புள் கொடி உறவு உண்மை என்றால் அந்தத் தொப்புள் கொடி உறவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள மீனவர்களாகும். கடலையே நம்பி வாழ்கின்றார்கள். கடந்த 30 வருடத்திற்கு மேல் யுத்தம். பாதிக்கப்பட்டது வாழ்க்கை. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாக இன்னமும் தங்களால் எழ முடியவில்லை. தங்களின் வாழ்க்கையில் மேல் எழ முயன்று கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கட்டி எழுப்புகின்ற அந்த வாழ்க்கையில், மண்ணை வாரிப் போடுவது, தொப்புள் கொடி உறவு என்று கூறிக்கொள்ளும் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களே. எங்களுடைய மீனவர்களின் வாழ்க்கையை அவர்களே நாசமாக்கின்றார்கள். எங்களுடைய கடல் வளத்தை நாசமாக்கின்றார்கள். இவ்வாறு கடல் வளம் நாசமாக்கப்படுவது தொடருமாக இருந்தால், இன்னும் 15, 20 வருடங்களுக்குப் பிறகு எங்களுடைய கடல் பரப்பு பாலைவனமாக மாறுவதைத் தவிர்க்க முடியாது. அந்தப் பாலைவனத்தில் நாளை இந்தியாவுக்கும் இடம் கிடையாது. எங்களுக்கும் இடம் கிடையாது. இந்திய மீனவர்களுக்கும் அன்றைக்கு எந்த விளையாட்டையும் விளையாட முடியாது. அதனால், நாங்கள் நீங்கள் எல்லோருமே சேர்ந்து இந்தக் கடலைப் பாதுகாக்க வேண்டும். கடல் எங்களுக்குச் சொந்தமானது அல்ல. உங்களுக்கும் சொந்தமானது அல்ல. நாளைய தலைமுறைக்குச் சொந்தமானது. அந்த வகையில்தான் இதற்கு இறுதியானதும் உறுதியானதுமான தீர்வு, இந்திய படகுகள், குறிப்பாக தமிழ்நாட்டின் ஒரு சில படகு உரிமையாளர்கள் எங்களுடைய கடல் எல்லையை மீறாதிருப்பதே இதற்கான நீண்டு நிலைக்கக்கூடிய நிரந்தரமான தீர்வு என்று நான் நினைக்கின்றேன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq8ydyeqkdyo
-
பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டே கைது
Published By: DIGITAL DESK 3 11 MAR, 2025 | 10:38 AM பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டே, சர்வதேச குற்றவியல் நீதின்றத்தின் பிடியாணையின் கீழ் மணிலா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதின்றத்தின் பிடியாணையின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவராவார். போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக டுடேர்டே நடத்திய போராட்டத்தின் போது 30,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் நீதிமன்றமான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) இது குறித்து விசாரணை நடத்தியது. இந்நிலையிலேயே அவருக்கு பிடியாணையும், இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட டுடேர்டே தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளர். கைது சட்டவிரோதமானது எனவும், விமான நிலையத்தில் வழக்கறிஞர்களில் ஒருவரை டுடேர்டேவைச் சந்திக்க பொலிஸார் அனுமதிக்கவில்லை எனவும் டுடெர்ட்டேவின் முன்னாள் சட்ட ஆலோசகர் சால்வடார் பனெலோ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208869
-
தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
கண்ட இடத்தில் கைது செய்ய உத்தரவு கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, இன்று செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை இந்த விவகாரம் தொடர்பாக மேலும் அறிக்கையை தாக்கல் செய்து, சந்தேக நபரான ஐ.ஜி.பி-யைக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியது. வெலிகம பெலேன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தேசபந்து தென்னகோன், பத்து இடங்களில் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், கூடுதலாக, மேலும் 18 இடங்களுக்கு புலனாய்வு அதிகாரிகள் அனுப்பப்பட்டு மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். https://thinakkural.lk/article/315898
-
விடுதலைப்புலிகளின் பேட்டியை பிரசுரித்தமைக்காக டிபிஎஸ் கைதுசெய்யப்பட்டவேளை இந்து ராம் அவருக்காக ஜேஆருடன் பேசினார்- நூல் வெளியீட்டு நிகழ்வில் சிரேஸ்ட பத்திரிகையாளர் தனபாலசிங்கம்
டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் நூலின் தமிழாக்கம் தமிழ்ச் சங்கத்தில் வெளியீடு டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் “இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க” என்ற நூல் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வீரகத்தி தனபால சிங்கம் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (09) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டது. இதன் போது தலைமை உரையை தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வீரகத்தி தனபால சிங்கம் நிகழ்த்தியதோடு நூல் விமர்சனத்தை மூத்த பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணர் நிகழ்த்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து புத்தக வெளியீட்டை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் வெளியிட மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் அவர்கள் முதற் பிரதியை பெற்றுக் கொண்டார். தொடர்ந்தும் நிகழ்வில் சட்டத்தரணி மற்றும் சமூக, அரசியல் செயற்பாட்டாளரான சுவஸ்திகா அருலிங்கம் மற்றும் பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் ஆகியோரும் சிறப்புரைகளை வழங்கியிருந்தனர். https://thinakkural.lk/article/315875
-
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும் ; அருட்தந்தை மா.சத்திவேல்
11 MAR, 2025 | 10:49 AM தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும். அதனை மறுப்பவர்கள் குற்றவாளிகள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அருட்தந்தை மா.சத்திவேல் செவ்வாய்க்கிழமை (11) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் பிரதம மந்திரியும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவோடு ஆல்ஜசீரா ஊடகவியலாளர் நடாத்திய நேர்காணலைத் தொடர்ந்து தெற்கில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மக்களின் கொந்தளிப்பு விழுந்துள்ளது. படலந்த வதை முகாமை மையமாக வைத்து அதற்கு காரணமான பிரதான சூத்திரதாரியான ரணிலின் "சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை பறிக்க வேண்டும்" எனும் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கையில் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனக் கூறுவதில் எவ்வாறு நம்பிக்கை வைப்பது? ஒரு குற்றவாளி இன்னும் ஒரு குற்றவாளியை விசாரிக்க முடியுமா? அவ்வாறு விசாரித்தாலும் அது அரசியல் நோக்கம் கொண்டதாகவே இருக்கும். தெற்கில் ரணிலிற்கு எதிரான மனநிலை பட்டலந்தை வதைமுகாமை பற்றியதாகவே மட்டும் இருப்பதும் உருவாகி இனவாத தன்மையை வெளிப்படுத்துகின்றது. யுத்த காலப்பகுதி தொடர்பிலும் யுத்த இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தவை தொடர்பு கொள்ளும் அப்பேட்டியில் கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றிற்கும் பதில் அளிக்க ரணில் தடுமாறியதே நாம் அறிவோம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கரிசனையோ அக்கறையோ இல்லாத மனநிலையையும் படலந்த குற்றங்களை முன்னிலைப்படுத்தி தண்டிக்கப்பட வேண்டும் எனக்கொருவது பக்க சார்பானதும் இனி வாத மனநிலையை கொண்டதுமாகும். அல்ஜசீரா ஊடகவியலாளர் தெற்கிலும் வடக்கிலும் நிகழ்த்தப்பட்ட வதைகள், கொடூர கொடூரங்கள் யுத்தக் காலப்பகுதி தொடர்பிலும் குற்றங்கள் கேள்விக்கணைகள் தொடுகின்ற போது தெற்கு சார்ந்து மட்டும் சிந்திப்பதும் தமிழர் தேசத்தில் நிகழ்த்தப்பட்ட யுத்த குற்றங்கள் தொடரில் கருத்துக்கள் வெளியிடாது இருப்பது இரண்டு நாடுகள் என்பதையே காட்டி நிற்கின்றது. இரண்டு நாடுகள் என்றாலும் அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பது ஒவ்வொருவரினதும் தார்மீக பொறுப்பாகும். தற்போதும் அதனை காண முடியாமல் இருப்பது இனவாத அவல நிலையையே மீண்டும் உணர்த்துகின்றது. பட்டர் அந்த முகாமோடு தொடர்புபட்டவர்கள் அதற்கு துணை நின்ற பாதுகாப்பு தரப்பினரும் நீதி முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்களே அதில் மாற்று கருத்து இல்லை காலம் கடந்தேனும் நீதி நிலைநாட்டப்படல் வேண்டும். உண்மை முழு நாட்டுக்கும் தெரிய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச 1988/ 89 காலப்பகுதியில் மாத்தலை பிரதேசத்தில் இராணுவத்திற்கு தலைமை தாங்கிய போது அங்கு கொண்டு புதைக்கப்பட்டவர்களின் சமூக புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. தெற்கில் மேலும் பல சமூக புதைகுழிகள் தொடர்பான அறிக்கைகள் 2023 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்கா நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இது தொடர்பான அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்ட போதும் அது தொடர்பில் தற்போதைய தேசிய மக்கள் சக்தியான மக்கள் முன்னணி வாய் திறக்காமல் அமைதி காத்து தற்போது ரணில் மீது விசாரணை எனக் கூறுவது அரசியல் நாடகமாக அமையக்கூடாது. ஊடகவியலாளர் திஸ்சநாயகத்தின் உதவியோடு 1988/ 89 காலப்பகுதியில் நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கைகளை தூக்கிக்கொண்டு மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நோக்கி ஓடியதை மறக்க முடியாது. அதே மகிந்த திஸ்ச நாயகத்திற்கு 20 வருட தண்டனையை பெற்றுக் கொடுத்ததும் சர்வதேச தலையீட்டின் காரணமாக அவர் விடுதலை பெற்றுதும் மறக்க முடியாது. படலந்த கொலைகளை காரணம் காட்டி ஆட்சியை கைப்பற்றிய பின்னர் இது தொடர்பில் சந்திரிக்கா பண்டார நாயக்கரும் மகிந்த ராஜபக்சவும் அமைதி காத்தமை கொலை குற்றவாளிகளை பாதுகாத்ததாகவே கருதப்பட வேண்டும். அவர்களும் ரணிலுக்கு கொலை குற்றவாளிகளே, தண்டிக்கப்பட வேண்டியவர்களே. சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய யுத்தம் அவர்களால் புரியப்பட்ட கொலைகள் படலந்த விடயத்தை விசாரணைக்கு உட்படுத்தாததை மறைத்து விட்டது. தெற்கு இனவாத யுத்தத்தில் மூழ்கி இருந்தது.இனவாதம் தெற்கின் கண்களை மறைத்து நீதியை புதைத்து விட்டது என்றும் கூறலாம். இவ்வாறு மறைத்தவர்களும் பட்டலந்தை கொலையாளிகளே. அல் ஜாசீரா ஊடகவியலாளர் கேள்விகளை கேட்கவில்லையேல் தற்போதும் நீதிக்கான குரல் எழுத்திருக்காது. தமிழர்களை பொறுத்தவரையில் ரணிலுக்கு எதிரான விசாரணை எனக் கூறும் தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணி நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் சந்திரிகாவையும் மகிந்தவையும் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்திற்கு பலவந்தமாக தள்ளி தமது முன்னணி உறுப்பினர்களையும் சாதாரண கிராமிய இளைஞர்களையும் இனவாதத்திற்குள் தள்ளி தமிழர்களை இனப் படுகொலை புரிந்த இவர்களும் தண்டனைக்குரியவர்களே. தற்போதைய ஆட்சியாளர் ரணிலுக்கு எதிராக விசாரணை நடத்துவதாக கூறுவது போல் தங்கள் மனசாட்சியை தொட்டு தங்களுக்கு எதிராக விசாரணை நடத்தினால் மட்டுமே இவர்களின் கிளீன் சிறீலங்காவிற்கு நீதி கிட்டும் இல்லையேல் அதுவும் போலியே. தற்போதைய ஆட்சியாளர் வடக்கு கிழக்கில் நிகழ்ந்த யுத்தம் தொடர்பாக உள்ளக விசாரணை என்பதும் சர்வதேசத்தின் எந்த தலையீட்டையும் ஏற்க மாட்டோம் என்று கூறுவதற்கும் காரணம் இவர்கள் மீதும் கொலை குற்றச்சாட்டுகள் விழும் என்பதன் காரணமாகவே. கடந்த ஆட்சியாளர்களை போல பாதுகாப்பு படையினரை பாதுகாக்கும் நோக்கமேயாகும். சர்வதேச விசாரணைக்கு மறுப்பு தெரிவிப்பவர்களும் கொலை குற்றவாளிகளே. இலங்கை வரலாற்றில் எல்லா காலப்பகுதிகளிலும் நிகழ்த்தப்பட்ட இன சுத்திகரிப்பு, இனப்படுகொலை, யுத்த குற்றங்கள் எல்லாவற்றுக்கும் இதய சுத்தியோடு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கான தகுதி இலங்கைக்கு இல்லை என்பதே தமிழர்களின் கடந்த கால நிகழ்கால அனுபவமாகும். அதனாலையே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் யுத்த குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழ் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இது இன்று வரை செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. இதுவரை காலமும் பட்டலந்த வதைமுகாம் தொடர்பாக அமைதி காத்தவர்கள் எல்லாம் இன்று வாய் திறக்கிறார்கள் எனில் அதற்கு அல் ஜஸீரா சர்வதேச ஊடகமே காரணமாகும். அதைப் போன்று தமிழர்களுக்கு எதிரான இன படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும். அதனை மறுப்பவர்கள் குற்றவாளிகள், கொலையாளிகள், இனவாதிகள் என்பதை உண்மை என்றுள்ளது. https://www.virakesari.lk/article/208870
-
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவியேற்கிறார் அன்னலிங்கம் பிரேமசங்கர்!
11 MAR, 2025 | 09:10 AM திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை (11) அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் உறுதியுரை எடுத்து பதவியேற்கிறார். கண்டி மேல் நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பிரியந்த பேர்னாண்டோ மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகிய மூவருமே இன்று பதவியேற்கின்றனர். யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நீதிவான், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதியாக அன்னலிங்கம் பிரேமசங்கர் சுமார் 28 ஆண்டுகள் நீதிச் சேவையில் கடமையாற்றியுள்ளார். 1967ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி யாழ்ப்பாணம், வடமராட்சி, துன்னாலையில் அன்னலிங்கம் (முன்னாள் அத்தியாவசிய சேவைகள் உதவி ஆணையாளர்) மகாலக்ஷ்மி தம்பதியினருக்கு மகனாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர் பிறந்தார். துன்னாலை அமெரிக்க மிசன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடர்ந்து சட்டத்துறையில் கல்வி கற்று சட்டத்தரணியானார். 1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நீதித்துறை அலுவலராக நீதிபதி நியமனம் பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, சாவக்கச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களில் ஒரே தடவையில் நீதிவானாகவும் (போர் இடம்பெற்ற காலப்பகுதியில்) மல்லாகம், சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் என யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனைத்து நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாகக் கடமையாற்றியுள்ளார். சுமார் 14 ஆண்டுகள் நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த அன்னலிங்கம் பிரேமசங்கள் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக (மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நாடாளுமன்றினால் அதிகரிக்க முன்னர்) பின்னர் 2013ஆம் ஆண்டு ஜூலை 01ஆம் திகதி தொடக்கம் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற ஆணையாளராக பதவி வகித்ததுடன் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி முதல் மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு என மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் சுமார் 13 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் 27 ஆண்டுகள் நீதிச் சேவையில் முதல் நிலை நீதிபதியாகத் தொடர்ந்த நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், தலைமை நீதியரசர் முறுது பெர்னான்டோ தலைமையிலான நீதிச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையுடனும் சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்புச் சபையின் ஒப்புதலுடனும் ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்படுகிறார். 2000ம் ஆண்டு பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிவானாக செயற்பட்ட காலத்தில் மிருசுவிலில் ஐந்து வயது சிறுவன் உட்பட எட்டுப்பேரை சுட்டு படுகொலை செய்த வழக்கின் விசாரணைகளை உரியவகையில் முன்னெடுத்தமைக்காக அந்த வழக்கின் தூக்குத் தண்டனை பெற்ற இராணுவச் சிப்பாயின் மேன்முறையீட்டை விசாரணை செய்து தூக்குத் தண்டனையை உறுதிசெய்த தீர்ப்பில் உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கருக்கு பாராட்டை கோடிட்டுக் காட்டியிருந்தது. https://www.virakesari.lk/article/208861