Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. நம் கண்கள் நம் எதிரே இருப்பவைகளை மட்டுமே காணும் எனவே கண்களால் காண்பது பொய் இரண்டாவது படத்தில் சிங்கம் தன் குட்டியை விழுங்குவது போல் தோன்றும் ஆனால் முதல் படத்தில் அது கவி கொண்டு செல்கிறது. நாம் எல்லா நேரத்திலும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை. நமக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் ஏற்படப்போகும் நிகழ்வுகள் அதைக் கொண்டு நாம் நிகழ்காலத்தில் இருக்கிறோம் காலையில் வேலைக்கு செல்லும்போது இருக்கும் பரபரப்பு இரவு வீட்டிற்கு வரும் போது இருப்பதில்லை காலையில் பார்க்கும்போது அனைவரும் வேலைக்கு செல்வதாகவே தோன்றும் இரவு பார்க்கும்போது அனைவரும் வீட்டுக்கு செல்வதாகவே தோன்றும் ஆனால் இரவு நேர ஷிப்ட் முடிந்து காலையில் வீட்டிற்கு செல்பவர்கள் கலைந்த ஆடையோடு முகத்தில் சோர்வுடன் இருப்பார்கள் அதை நம் கண்கள் உற்று நோக்காது ஏனெனில் நாம் பரபரப்பாக வேலைக்கு செல்கிறோம் அவர்களும் பரபரப்பாக தான் செல்வார்கள் என்பது நம் மூளை உடனடியாக எடுக்கும் ஒரு முடிவு அதை அலசி ஆராய நேரமோ அல்லது அதற்கான தெளிவு அந்த நேரத்தில் நமக்கு இல்லை. எனவே தான் நம் முன்னோர்கள் கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று கூறியிருக்கின்றார்கள். நாம் ஒரு அறைக்குள் தொலைபேசியை எடுக்க நுழைகிறோம் அப்பொழுது உங்களது பார்ட்னர் உங்கள் தொலைபேசியை எடுத்து கீழே வைத்து வைத்து விட்டு போகிறார் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் பார்வைக்கு உங்கள் தொலைபேசியில் என்ன இருக்கிறது என்பதை அவர் பார்க்கிறாரோ என்று ஒருகணம் நினைக்கத் தோணும ஆனால் அந்த சூழ்நிலையையும் நிகழ்ச்சியையும் ஆராயும்போதுஆராயும் போது அவர் உங்கள் தொலைபேசி எடுத்து விட்டு எடுத்து வைத்துவிட்டு அவரது தொலைபேசியை சார்ஜ் செய்துவிட்டு போயிருக்கிறார் என்பது தெரியும்.
  2. கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக செய்யும் சேவைக்கு பாராட்டுகளும் நன்றிகளும் அக்கா. பண இழப்பு என கருதாதீங்க அக்கா, உங்கள் மனத்திருப்திக்கு உதவி செய்தீர்கள். தவறான கைகளுக்கு போகாது பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தளவு பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புங்கள். அவர்களோடு நேரடி தொடர்பில் இருக்க முயலுங்கள். உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் மூலமாக நேரடியாக பயனாளிகளைத் தொடர்பு கொள்ளுங்கள். 2011/2012 காலங்களில் இருந்து உதவி ஒழுங்குகள் சிலவற்றில் ஈடுபட்ட அனுபவத்தில் யாரிடமும் 100% சரியாக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. நெடுங்கேணியில் கிணறு கட்ட முப்பதாயிரம் கேட்டு உதவ வெளிக்கிட்டு கட்டி முடிக்கையில் 90ஆயிரம் செலவளித்து முடிந்தது. கணவர் வவுனியா சிறையில் இருக்க 5 பிள்ளைகளுடன் மிகுந்த சிரமத்தில் இருந்த பெண்மணிக்கு நேரடியாக வங்கிக் கணக்கிற்கே பணத்தை அனுப்புவோம். அவவிற்கு வீட்டுத் திட்டமும் கிடைத்திரு்தது என ஞாபகம். கிணறு கட்ட குடுத்த காசை வீட்டு வேலைக்கும் எடுத்துப்போடுவார். இருந்தாலும் வாழ்வாதாரத்திற்கு தோட்டம் செய்ய ஏற்கனவே தோண்டப்பட்ட கிணறை கட்டி முடிக்க லண்டனில் வசித்த உறவுகள் உதவினார்கள்.
  3. வவுனிக்குளத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட இளைஞரின் மரணத்துக்கு நீதி கோரி முல்லைத்தீவில் மக்கள் ஆர்ப்பாட்டம் 14 MAR, 2025 | 04:51 PM முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனிக்குளத்திலிருந்து கடந்த ஆண்டு சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் கொலைக்கு நீதி கோரி இன்று (14) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வெளிநாடு செல்வதற்கான பயன ஏற்பாடுகளைச் செய்த 27 வயதுடைய மல்லாவியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 29-07-2024 அன்று முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டு குளத்துக்குள் போடப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்தபோதும் அதனுடன் தொடர்புபட்ட கொலையாளிகளை இதுவரை கைது செய்யவில்லை என தெரிவித்து இன்றைய தினம் பிரதேச பொது அமைப்புகள், வர்த்தக சங்கம், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்லாவி பேருந்து நிலையத்திலிருந்து மல்லாவி பொலிஸ் நிலையம் வரை சென்ற போராட்டக்காரர்கள் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடி பொலிஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனையடுத்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு மாங்குளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் இளைஞரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை தொடர்ந்து நடத்துவதாகவும் இந்த விசாரணைகளுக்காக விசேட குழு ஒன்றை நியமிப்பதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் கையளித்தனர். பின்னர், சம்பந்தப்பட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெற்றோர், உறவினர்களுடன் கலந்துரையாடினர். இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் மல்லாவி பொலிஸாரால் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/209204
  4. தமிழ்நாடு பட்ஜெட் 2025: 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப், டேப் பட மூலாதாரம்,TN ASSEMBLY 14 மார்ச் 2025, 03:23 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு ரூ.133 லட்சம் ஒதுக்கீடு முதல் சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கப்படுவது வரை பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சிக்கான பட்ஜெட் திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். வருங்காலங்களில் தமிழ் புத்தகக் கண்காட்சிகளை இந்திய பெருநகரங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய வெளி நாட்டின் நகரங்களிலும் நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு நூறு புத்தகங்கள் வீதம் வருகின்ற ஐந்து ஆண்டுகளில் 500 தமிழ்ப் புத்தகங்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மரபை முறையாக அறிமுகம் செய்திடும் வகையில், அயலக தமிழர் நல வாரியம் மூலம் அவர்களுக்கு தமிழ் மொழி மற்றும் நாட்டுப்புறக் கலையைப் பயிற்றுவிக்கும் 100 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை வைத்து நேரடி வகுப்புகளை நடத்திட ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழின் பெருமை மற்றும் சிறப்பை உலகத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற நகரங்களில் உள்ள பள்ளிகளிலும், உலகத் தமிழ் மையங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு கணினி வழி உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும். பட மூலாதாரம்,THANGAM THENNARASU/X படக்குறிப்பு, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினுடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு (கோப்புக் காட்சி) தொல்லியல் துறை அறிவிப்பு தமிழ்மொழியின் தொன்மை மற்றும் தொடர்ச்சியினை அறிந்து கொள்ளும் வகையில், அகரம் - மொழிகளின் அருங்காட்சியகம் ஒன்று மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும். அகழ்வாராய்ச்சியில் வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் பொருட்களில் தொல் மரபணுவியல், உலோகவியல் பகுப்பாய்வு, நுண் தாவரவியல், மகரந்த பகுப்பாய்வு, தூண்டொளி வெப்பக் காலக் கணிப்பு, மட்பாண்டவியல் உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்காக, வரும் நிதி ஆண்டில் தொல்லியல் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்படும். தென்கிழக்கு ஆசியா, மத்தியத் தரைக்கடல், அரேபிய தீபகற்பம், ரோமப் பேரரசு பகுதிகளுடன் வைத்துக்கொண்ட கடல் வழி வணிகம் தொடர்பாக ஆழ்கடல் அகழ்வாய்வுகளை தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல்கட்டமாக இந்த ஆண்டு தொல்லியல் ஆய்வாளர்களின் அறிவுரைப்படி காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடல் அகழ்வாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐம்பொன்னால் ஆன இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அதன் சிறப்பை வெளிநாட்டினரும் ரசிக்கும் வகையில், மரபுசார் கட்டட அமைப்பில் தனியாக காட்சி அரங்கம் ஒன்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைக்க ரு. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொடுமணல் அகழாய்வுகளை முன்னிலைப்படுத்தி ஈரோடு மாவட்டத்தில், நொய்யல் அருங்காட்சியம் ரூ.22 கோடி மதிப்பீட்டிலும், சங்ககாலப் பாண்டியரின் கடல்வழி வணிகச் சிறப்பை விளக்கிடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் ரூ. 21 கோடி மதிப்பீட்டிலும் உருவாக்கப்படும். பட மூலாதாரம்,TNDIPR படக்குறிப்பு, ஈரோட்டில் நொய்யல் அருங்காட்சியம் ரூ.22 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் (சித்தரிப்புப் படம்) ஊரக வளர்ச்சி திட்டத்திற்கான அறிவிப்புகள் இந்த நிதியாண்டில் (2025-26) ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கீடு முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6,100 கிலோமீட்டருக்கு கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ. 2100 கோடி ஒதுக்கீடு கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகளின் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.120 கோடி ஒதுக்கீடு தமிழ்நாட்டின் அனைத்து குக்கிராமங்களும் தன்னிறைவு அடையும் வகையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 2329 கிராம ஊராட்சிகளில் ரூ.1087 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும். நகராட்சி நிர்வாகம் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 6483 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.3750 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் ஒரு பகுதியாக வேளச்சேரி மற்றும் கிண்டியில் வசிக்கும் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வேளச்சேரி பிரதான சாலை துவங்கி, குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்திற்கு ரூ. 310 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும். ரயில்வே துறையுடன் இணைந்து கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரூ. 70 கோடி மதிப்பில் கட்டப்படும். சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு நிலையம், இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள் மீட்பு மையம் மற்றும் 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிக்காக ரூ. 3450 கோடி திட்டக் காலத்திற்கான மதிப்பீட்டில் தொடங்கப்படும். பட மூலாதாரம்,@CMOTAMILNADU படக்குறிப்பு, மார்ச் 13ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சமச்சீர் வளர்ச்சி சென்னை மாநகரத்தின் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்திட வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிதியாண்டில் அதற்காக ரூ.6,858 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவதன் முதல்கட்டமாக சென்னைக்கு அருகே ஒரு புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். மகளிர் நலன் விடியல் பயணம் என்பது பேருந்தில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்க அறிமுகம் செய்யப்பட்ட திட்டம். அந்த ஆண்டு அந்தத் திட்டத்திற்கான மானியத் தொகை ரூ.3600 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 4.76 லட்சம் மகளிர் திட்ட சுயஉதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. சுயஉதவிக் குழு இயக்கத்தில் இதுவரை இணைந்திடாத மகளிர் மற்றும் விளிம்புநிலை வாழ் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு, 10,000 புதிய சுயஉதவிக் குழுக்கள் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும். மேலும், எதிர்வரும் நிதியாண்டில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ஈரோடு, கரூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் புதிதாக தோழி மகளிர் விடுதிகள் கட்ட ரூ.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்விக்காக பெரு நகரங்களுக்கு வருகை புரியும் மாணவிகளுக்காக சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் தலா ஆயிரம் மாணவியர் தங்கும் வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாணவியர் விடுதிகள் ரூ.275 கோடி மதிப்பில் கட்டப்படும். இந்த விடுதிகளின் மாணவியர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும். புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை திருநர் சமூகத்தினருக்கும் விரிவுபடுத்தப்படும். பள்ளிக்கல்வி துறை இந்த நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.46,767 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2025-26ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பொருட்டு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கத்தோடு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே உயர் கல்வியைப் பெறும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உள்ளிட்ட இடங்களிலுள்ள தொலைதூர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். சேலம், கடலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் கூடங்களுக்கான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நூலகங்கள் அமைக்கப்படும். உயர்கல்வி பட மூலாதாரம்,MK STALIN படக்குறிப்பு,தேசிய இலச்சினை நீக்கப்பட்டு தமிழில் 'ரூ' பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்காக ரூ.8,494 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பல்கலைக் கழங்களில் நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில், பல்கலைக் கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நிதி நல்கை ரூ.700 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் கீழ் தற்போது 41,038 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும் வகையில் ரூ.550 கோடி ஒதுக்கீடு. குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், பெரம்பலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 10 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் அறிவியல் சிந்தனையை வளர்த்திடவும், புதிய தொழில்நுட்ப வசதிகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்திடும் நோக்கத்தோடும் சென்னை அறிவியல் மையம் ரூ.100 கோடி மதிப்பில் உருவாக்கப்படும். செயற்கை நுண்ணறிவு இந்த உலகை மாற்றும் சூழலில், தொழில்நுட்ப அறிவு மற்றும் திறனை மேம்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் லேப்டாப் அல்லது டேப்லட் வழங்கப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு ஹெச்.பி.வி. தடுப்பூசி - ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹெச்.பி.வி. தடுப்பூசியை பெண் குழந்தைகளுக்கு வழங்க ரூ. 36 கோடி நிதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 21,906 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க 14 வயது பூர்த்தியான அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ஹெச்.பி.வி. தடுப்பூசியை படிப்படியாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தேசிய நலவாழ்வுக் குழுமம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ரூ.2754 கோடியும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.1092 கோடியும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 1461 கோடியும், அவசர ஊர்தி சேவைகளுக்காக ரூ.348 கோடியும் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிற்துறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு சென்னையில் ரூ.100 கோடி மதிப்பில் செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மற்றும் பரிசோதனை மையம் உருவாக்கப்படும். கோவை-சூலூர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவிலும், பல்லடம் அருகே 100 ஏக்கர் பரப்பளவிலும் செமி கண்டக்டர் உற்பத்திக்கான இயந்திரத் தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும். ஓசூரில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா ஒன்று அமைக்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் புதிய மினி டைடல் பூங்கா ஒன்றும் அமைக்கப்படும். கடலூரில் இரண்டு காலணி தொழிற்பூங்காக்கள் ரூ.250 கோடி மதிப்பில் அமைக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். 9 இடங்களில் ரூ. 366 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டைகள் சிறுதொழில் முன்னேற்றக் கழகத்தால் (SIDCO) உருவாக்கப்படும். மாறிவரும் தொழில்நுட்ப தேவைகளை நிறைவு செய்ய விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் ரூ.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் தமிழ்நாட்டில் தொழில்நுட்ப ஜவுளிகளின் உற்பத்தி மற்றும் அவற்றிற்கான முதலீடுகளை ஜவுளி நிறுவனங்கள் மேற்கொள்வதை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் செயல்படுத்தப்படும். மெட்ரோ ரயில் திட்டங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் 119 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர்வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அறிவிப்பு கோவையில் ரூ.10,740 கோடிக்கும், மதுரையில் ரூ.11,368 கோடியிலும் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலாதன பங்களிப்பை பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை விமானநிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரையும், கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரையிலும், பூந்தமல்லியிலிருந்து திரும்பெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையும் நீட்டிக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும், விரைவில் மத்திய அரசின் மூலாதன பங்களிப்பிற்காக அனுப்பப்படும் எனவும் அறிவிகப்பட்டுள்ளது. தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையும், கலங்கரை விளக்கத்திலிருந்து உயர்நீதிமன்றம் வரையும் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என அறிவிப்பு சென்னை-செங்கல்பட்டு- திண்டிவனம்- விழுப்புரம் வழித்தடம் உட்பட 3 வைழித்தடங்களில் அதிவேக ரயில்வே அமைப்பை உருவாக்க விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு. மாமல்லபுரம், ஊட்டி, கொடைக்கானலில் ரோப்வே போக்குவரத்தை ஏற்படுத்த சாத்தியக்கூறுகள் ஆய்வுசெய்யப்படும் ரூ.2,000 உதவித்தொகை பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டு பெற்றோரையும் இழந்து உறவினர்கள் பராமரிப்பில் மிகவும் வறிய நிலையில் உள்ள 50,000 குழந்தைகள் 18 வயது வரை இடைநிற்றல் இன்றி பள்ளி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை. கோயில்களுக்கு சொந்தமான 7,327 ஏக்கர் நிலங்களும், 36.38 லட்சம் சதுர அடி மனைகளும், 5.98 லட்சம் சதுர அடி கட்டடங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவற்றின் மதிப்பு ரூ.7,185 கோடி எனவும் அறிவிப்பு சுற்றுலாத்துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், சுற்றுலா துறையில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதி சட்டம் கொண்டுவரப்படும், உதகமண்டலத்தில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு கால்நடை வளத்தை அதிகரிக்கவும், அதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க ஏதுவாக கால்நடை இனப்பெருக்க கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj92rxdxpzeo
  5. யுக்ரேன் போர் நிறுத்தத்துக்கு புதின் முன்வைத்துள்ள நிபந்தனைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் லாண்டேல், கேப்ரியலா போமராய் பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனில் போர்நிறுத்தம் குறித்த யோசனையுடன் உடன்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். எனினும், அவர் பல கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளதால் போர்நிறுத்தத்தின் தன்மை குறித்து "கேள்விகள்" எழுந்துள்ளன. அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, யுக்ரேன் இந்த வாரத் தொடக்கத்தில் ஒப்புக் கொண்ட 30 நாட்கள் போர்நிறுத்தத் திட்டம் பற்றி பேசும்போது, புதின் இந்த கருத்தை கூறியுள்ளார். போர் நிறுத்த திட்டம் குறித்து, புதின் கூறிய கருத்தை "சூழ்ச்சி" என்று விவரித்த யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கிடையில், ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு மற்றும் வங்கித் துறைகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. வியாழன் அன்று மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய புதின், "இந்த யோசனை சரியானது. நாங்கள் அதை ஆதரிக்கிறோம், ஆனால் நாங்கள் விவாதிக்க வேண்டிய கேள்விகள் உள்ளன "என்று போர்நிறுத்தம் குறித்து கூறினார். போர்நிறுத்தம், "நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும். இந்த நெருக்கடியின் மூல காரணங்களை அகற்றவும் வேண்டும்" என புதின் தெரிவித்தார். இரான், துருக்கி இடையே அதிகரித்து வரும் பதற்றம் - எர்துவானின் உண்மையான நோக்கம் என்ன? விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப நாசா செய்வது என்ன? பல அமைதி ஒப்பந்தங்களில் சௌதி அரேபியாவும், கத்தாரும் மத்தியஸ்தர்களாக இருப்பது ஏன்? தொடர்ந்து பேசிய அவர், "எங்களது அமெரிக்க நண்பர்கள் மற்றும் கூட்டணிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றும் "ஒருவேளை நான் டொனால்ட் டிரம்புடன் பேசலாம்''' என்றும் கூறினார் மேலும், "யுக்ரேன் தரப்பு 30 நாள் போர் நிறுத்தத்தை எட்டுவது நல்லது. நாங்கள் அதற்கு ஆதரவாக இருக்கிறோம், ஆனால் அதில் சில நுணுக்கங்கள் உள்ளன" என்றும் புதின் தெரிவித்தார். இரு தரப்பும் கடுமையாக முரண்படும் விஷயங்களில் ஒன்று, மேற்கு ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் பிராந்தியம். கடந்த ஆண்டு யுக்ரேன் அங்கு ராணுவ ஊடுருவலைத் தொடங்கி சில பகுதிகளை கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார். குர்ஸ்க் பிராந்தியத்தின் முழு கட்டுப்பாட்டையும் ரஷ்யா மீட்டுள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள யுக்ரைன் படைகள் "தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்" அவர் தெரிவித்துள்ளார். "அவர்கள் வெளியேற முயற்சிக்கிறார்கள், ஆனால் கட்டுப்பாடு எங்களிடம் உள்ளது. அவர்களின் ஆயுதங்கள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன." "குர்ஸ்கில் யுக்ரேனியர்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று சரணடைவது அல்லது இறப்பது" என்றார். அதனைத் தொடர்ந்து, "அந்த 30 நாட்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும்? யுக்ரேன் மீண்டும் படைகளை திரட்டி ஆயுதங்களைச் சேகரிப்பதற்கா? படைக்குப் பயிற்சி அளிக்கவா? அல்லது இவற்றில் எதுவும் இல்லையா? அப்படி என்றால், இதை எவ்வாறு கண்காணிப்பது?" என புதின் கேள்வி எழுப்பினார். ''சண்டை நிறுத்த உத்தரவை விடுப்பது யார்? 2,000 கிலோமீட்டருக்கு மேலான எல்லையில் யார் போர்நிறுத்த உடன்பாட்டை மீறியது என முடிவெடுப்பது யார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் இரு தரப்பும் மிகுந்த கவனத்துடன் திட்டமிடுதல் அவசியம். இதை கண்காணிக்கப்போவது யார்?"என்கிறார் புதின். புதின் "நேரடியாக இல்லையென்று சொல்லவில்லை, ஆனால் உண்மையில் அவர் மறுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்"என யுக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி தனது வீடியோ உரையில் கூறினார். "நிச்சயமாக, புதின் இந்த போரைத் தொடர விரும்புவதையும், யுக்ரேனியர்களைக் கொல்ல விரும்புவதையும் அதிபர் டிரம்புக்கு நேரடியாகச் சொல்ல பயப்படுகிறார்" என்றார் ஸெலன்ஸ்கி. மேலும், ''புதின் பல முன்நிபந்தனைகளை விதித்ததால் எதுவுமே நடக்காது" என்றும் கூறினார் புதினின் கருத்துகளுக்கும் ஸெலன்ஸ்கியின் பதிலுக்கும் பிறகு, இரு தரப்புகளின் நிலைப்பாடுகளுக்கு இடையில் இப்போது தெளிவான பிளவு இருப்பது தெரிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யா "சரியானதைச் செய்யும்" என்று தான் நம்புவதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். யுக்ரேன் இரண்டு கட்ட செயல்முறையை விரும்புகிறது. முதலில் விரைவான போர்நிறுத்தம், அதன் பிறகு நீண்டகால அமைதி உடன்படிக்கையைப் பற்றிய பேச்சுவார்த்தைகள். ரஷ்யா இரண்டு செயல்முறைகளாக பிரிக்க முடியாது என்றும், அனைத்து பிரச்னைகளும் ஒரே உடன்படிக்கையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறது. யுக்ரேன், ரஷ்யாவை அமைதியை விரும்பாத நாடாக சித்தரித்து, அதன் மீது அழுத்தத்தை அதிகரிக்கலாம் என கருதுகிறது. மறுபுறம், நேட்டோ விரிவாக்கம் மற்றும் யுக்ரேனின் இறையாண்மை குறித்த கேள்விகளை எழுப்ப இப்போது ஒரு வாய்ப்பு இருப்பதாக ரஷ்யா நம்புகிறது. ஆனால் இது டொனால்ட் டிரம்புக்கு ஒரு சிக்கலை அளிக்கிறது. சில நாட்களில் போரை முடிவுக்கு கொண்டு வர, விரைவான முடிவை விரும்புவதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது, புதின் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பதை காட்டுகிறது. புதினின் கருத்துகளைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், ரஷ்யத் தலைவரைச் சந்திக்க விரும்புவதாகவும், ரஷ்யா "சரியானதைச் செய்யும்" என்றும், 30 நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளும் என்று நம்புவதாகவும் கூறினார். மேலும் "ரஷ்யாவிடம் இருந்து போர் நிறுத்தம் வருவதை நாங்கள் விரும்புகிறோம்," என்றும் டிரம்ப் தெரிவித்தார். முன்னதாக அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட் உடனான சந்திப்பின்போது, யுக்ரேனுடன் ஏற்கனவே குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றி விவாதித்ததாக செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் டிரம்ப். "யுக்ரேனுடன் நிலம் குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம். எந்த பகுதிகள் பாதுகாக்கப்படும், எவை இழக்கப்படும் என்பது குறித்தும் , இறுதி ஒப்பந்தத்தின் மற்ற அம்சங்கள் குறித்தும் விவாதித்து வருகிறோம்" என டிரம்ப் கூறினார். "இறுதி ஒப்பந்தத்தின் பல விவரங்கள் உண்மையில் விவாதிக்கப்பட்டுள்ளன." மேலும், நேட்டோ ராணுவக் கூட்டணியில் யுக்ரேன் இணைவது குறித்து, "அதற்கான பதில் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார் டிரம்ப். அமெரிக்க பரிவர்த்தனை முறைகளுக்கான அணுகலை டிரம்ப் நிர்வாகம் கட்டுப்படுத்தியதை தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு விதிக்கப்பட்ட புதிய தடைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால், பிற நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்குவது கடினமாகியுள்ளது. இதற்கிடையில், அமெரிக்காவின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்டை ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோவில் சந்தித்து பேசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES புதன்கிழமை, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குப் புதின் பயணம் செய்ததாகக் கூறும் வீடியோவை ரஷ்யா வெளியிட்டது. அந்த வீடியோவில், ரஷ்ய அதிபர் புதின் ராணுவ உடை அணிந்திருந்தார். 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது, இப்போது யுக்ரேனிய பகுதிகளில் சுமார் 20 சதவீதம் அதன் கட்டுப்பாட்டில் உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c05mvjz7r48o
  6. Published By: DIGITAL DESK 2 14 MAR, 2025 | 04:50 PM வீதிகளைப் புனரமைப்புச் செய்யாமல் எந்தவொரு அபிவிருத்தியும் சாத்தியமில்லை. வீதி அபிவிருத்தி மிக மிக முக்கியமானது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். பருத்தித்துறை – பொன்னாலை வீதியில், தொண்டைமனாறு அரசடி முதல் பருதித்தித்துறை துறைமுகம் வரையிலான வீதியின் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு வல்வெட்டித்துறை சந்தியில் வியாழக்கிழமை (14) நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்கரையோரமாகச் செல்லும் இந்த வீதியின் பாதுகாப்புச் சுவர்கள் கூட கடந்த காலத்தில் விழுந்துள்ளன. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இந்த வீதி புனரமைக்கப்படுவது முக்கியமானது. மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வீதிப் புனரமைப்புக்கு நிதி கோரியிருந்தார். அதற்கு அமைவாக நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக ஜனாதிபதிக்கும், நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் வடக்கு மக்கள் சார்பில் இந்த நேரத்தில் நன்றிகளைக் கூறுகின்றேன். அரசாங்கம் வடக்கு மாகாணத்தின் வீதி அபிவிருத்திக்காக இந்த ஆண்டுக்கு மாத்திரம் 5,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருக்கின்றது. எதிர்காலத்தில் இங்கு பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் என்றார். இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், யாழ்.மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், பருத்தித்துறை பிரதேச செயலாளர் சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/209202
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அமண்டா ருகேரி பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இரவு தூக்கத்திற்குப் பிறகு சுறுசுறுப்பாக உணர்வதற்கான ரகசியம், உங்களது பகல் நேரப் பழக்க வழக்கங்களில் இருந்து தொடங்குகிறது. உங்கள் தூக்கத்தை மேம்படுத்தவும், சோர்வைக் குறைக்கவும் சில குறிப்புகள் இங்கே அளிக்கப்பட்டுள்ளன. சோர்வாக உணர்கிறீர்களா? நீங்கள் மட்டுமே அவ்வாறு உணர்வதில்லை. அதோடு, உங்களது தூக்கப் பழக்கத்தை எப்படி மாற்றுவது என்பது குறித்தும் நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம். இதுகுறித்து அடிக்கடி நமக்குச் சொல்லப்படும் உத்திகள் பெரும்பாலும், இரவுநேரப் பழக்கங்களைக் குறித்தானதாகவே இருக்கும். அதாவது வழக்கமாக உறங்கும் நேரம், படுக்கையில் கைப்பேசியை உபயோகப்படுத்தாமல் இருப்பது போன்ற உத்திகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் ஒரு நல்ல இரவுத் தூக்கம் என்பது உங்கள் இரவுநேர பழக்கத்தைப் பற்றியது மட்டுமல்ல. புத்துணர்ச்சி என்பது எப்போதும் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறுவது மட்டும் அல்ல. ஏனென்றால், நீங்கள் விழித்திருக்கும்போது, அந்த நாள் முழுவதும் செய்யக்கூடிய பிற விஷயங்களும் நன்கு தூங்குவதற்குப் பலனளிக்கலாம். உங்கள் தூக்கப் பழக்கங்களை மாற்றாமல், அதிக சுறுசுறுப்புடன் உணரவும், ஆற்றலை அதிகரிக்கவும், உங்கள் தூக்கத்தையும் மேம்படுத்தவும் உதவும் ஐந்து எளிய வழிகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. உங்கள் உடலின் இரும்புச்சத்து அளவை கவனியுங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உடலால் எளிதாக உறிஞ்சப்படும் ஹீம் இரும்புச்சத்து (Heme Iron) இறைச்சி, மீன் மற்றும் முட்டையில் கிடைக்கிறது உலகளவில் மூன்று பேரில் ஒருவருக்குப் போதுமான அளவு இரும்புச் சத்து இல்லை என அறியப்படுகிறது. குறிப்பாக, பச்சிளம் குழந்தைகள் முதல் சிறுமிகள், பெண்கள் மற்றும் பருவ வயதுடைய பெண்கள், கர்ப்பிணிகள், தடகள விளையாட்டு வீரர்கள், சைவ உணவு உண்பவர்கள் மற்றும் அடிக்கடி ரத்த தானம் செய்பவர்களுக்கு இந்தக் குறைபாடு ஏற்படுகிறது. ஆனால், இரும்புச்சத்துக் குறைபாட்டின் விளைவாக ஏற்படும் ரத்தசோகை (Anaemia) யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடும். இதன் அறிகுறிகளில் உடல் சோர்வு மற்றும் களைப்பைத் தவிர, அமைதியின்மை மற்றும் இரவில் அடிக்கடி விழித்துக்கொள்வது போன்றவையும் அடங்கும். உங்கள் தூக்க பழக்க வழக்கங்களை மாற்றிய பிறகும் நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்கிறீர்கள் என்றால், உங்கள் உடலில் இரும்புச்சத்தை சேமிக்க உதவும் புரதமான ஃபெரிடின் (Ferritin) அளவையோ அல்லது உடலெங்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபின் அளவையோ பரிசோதிக்க மருத்துவரை அணுகுவது பயனுள்ளதாக இருக்கும். இரும்புச்சத்துக் குறைபாடு இல்லாவிட்டாலும், ஊட்டச்சத்துக் குறைபாடுகளைத் தவிர்க்க விழிப்புடன் இருப்பது அவசியம். மனித உடல் எளிதில் உறிஞ்சிக்கொள்ளும் ஹீம் இரும்புச்சத்து (Heme Iron) இறைச்சி, மீன் மற்றும் முட்டையில் கிடைக்கிறது. ஹீம் அல்லாத இரும்புச்சத்து (Non-Heme Iron) பட்டாணி வகைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளில் இருந்தாலும், வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளை உண்ணும்போது, அவற்றையும் சேர்த்து உட்கொண்டால் அதிக பலன் கிடைக்கும். அதிக காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES பெரியளவில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில், அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுபவர்கள் நன்றாக உறங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், துரித உணவுகள் மற்றும் குளிர்பானங்களை உட்கொள்வோர் குறைவாகத் தூங்குவதாகவும், அவர்களுடைய தூக்கத்தின் தரம் மோசமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய தரைக்கடல் உணவுமுறையை (Mediterranean Diet) பின்பற்றுபவர்கள், அழுத்தமின்றி, நிலைத்த மற்றும் தரமான தூக்கத்தை அனுபவிப்பதையும் ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த உணவுமுறையில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்பு உள்ள பால் பொருட்கள் அடங்கும். அதேநேரத்தில், இரவு ஐந்து மணிநேரத்துக்குக் குறைவாகத் தூங்கும் நபர்கள், அதிக நேரம் தூங்கும் நபர்களோடு ஒப்பிடும்போது, இரும்பு, துத்தநாகம், செலீனியம், பாஸ்பரஸ், மக்னீசியம், விட்டமின் சி, லூட்டின், செலீனியம் ஆகிய ஊட்டச்சத்துகளைக் குறைவாக உட்கொள்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான காரணம் மற்றும் அதன் விளைவு ஆகியவற்றின் தொடர்பைப் புரிந்துகொள்வது எப்போதுமே கடினம்தான். குறிப்பாக ஊட்டச்சத்து மற்றும் தூக்கத்தைப் போன்ற ஆய்வு செய்வதற்குச் சிக்கலான தலைப்புகளில் இது மிகவும் சவாலானது. இதனால், அதிகம் தூங்கும்போது மக்கள் நல்ல உணவுகளைச் சாப்பிடுகிறார்களா, அல்லது நல்ல உணவுகளைச் சாப்பிடுவதால் நல்ல தூக்கம் கிடைக்கிறதா, அல்லது இரண்டும் சேர்ந்து நடக்கிறதா என்பது பெரும்பாலான ஆய்வுகளில் தெளிவாகத் தெரியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் சோர்வாக இருக்கும்போது, ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் விரும்புவது மட்டுமல்லாமல், அது நம்முடைய தூக்கத்தின் தரத்தையும் பாதிக்க வாய்ப்புள்ளது. ஸ்வீடனில் 15 இளைஞர்களிடம் நடத்திய ஓர் ஆய்வில், அதிக கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவை உட்கொண்டபோது, அவர்கள் தூங்கும்போது மூளையின் அலைகளில் மாற்றம் ஏற்பட்டது மற்றும் அவர்களின் ஆழ்ந்த தூக்கத்தின் தரம் குறைந்தது தெரிய வந்தது. பின்னர் குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த சர்க்கரை கொண்ட ஆரோக்கியமான உணவுக்கு மாறிய பிறகு, அவர்களுடைய தூக்கத்தின் தரம் மேம்பட்டது. சில ஆய்வுகள், தினமும் ஐந்து (அல்லது பத்து) வகை காய்கறிகளை உட்கொள்வது நம் தூக்கத்தை மேம்படுத்தும் என்பதை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, 1,000க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், அவர்கள் தினம் மூன்று வகை பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே உட்கொண்டு வந்தனர் எனத் தெரிய வந்தது. அவர்கள் உண்ணும் காய்கறிகள், பழங்களின் அளவை அதிகரித்த பின்பு அவர்களின் தூக்கத்தின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்து, தினமும் குறைந்தது ஆறு வகை பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்ட பெண்களுக்கு, (ஆண்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) தூக்கமின்மை அறிகுறிகளைக் குறைக்கும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகவும், தூக்கத்தின் தரம் சற்று மேம்பட்டதாகவும், சரியாக உறங்காதவர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் வேகமாக உறங்கியதும் கண்டறியப்பட்டது. அதே நேரத்தில், மற்றோர் ஆய்வில், வாரத்திற்கு ஐந்து முறை பச்சைக் காய்கறிகளை உட்கொள்ளும் குழந்தைகள், தங்களுக்கு அதிக ஓய்வு கிடைத்ததாகவும், தூக்கத்தின் தரம் மேம்பட்டதாகவும் தெரிவித்தனர். பச்சைக் காய்கறிகளில் அதிக அளவு வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இரும்பு போன்ற உறக்கத்தை ஆதரிக்கும் தாதுக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துவதால், உடலுக்கு நன்மை ஏற்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர். உடற்பயிற்சி செய்யுங்கள் (அது மாலை நேரமாக இருந்தாலும் சரி) பட மூலாதாரம்,GETTY IMAGES உடற்பயிற்சி, தூக்கம் ஆகிய இரண்டுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தாலும் உடற்பயிற்சி செய்வது நம்மை அதிக நேரம் நன்றாகத் தூங்க உதவுவதாக அறியப்படுகிறது. அதற்காக நீங்கள் கற்பனை செய்யும் வகையில், அளவுக்கு அதிகமாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, 2015ஆம் ஆண்டில் வெளியான முக்கியமான ஒரு பகுப்பாய்வில், 66 ஆய்வுகளின் முடிவுகள் பகிரப்பட்டுள்ளன. அதில், சில நாட்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்தாலும், மக்கள் விரைவாக உறங்கத் தொடங்கி, அதிக நேரம் உறங்கியது கண்டறியப்பட்டது. மேலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தவர்களிடையே தூக்கத்தின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்கங்கள் பெரும்பாலும் சிறிய அளவில் இருந்தாலும், தூக்கக் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பெரிதாக இருந்தது. குறிப்பாக, தூக்கக் குறைபாட்டால் பாதிக்கப்படுவோருக்கு, உடலைச் சிறிது வியர்க்க வைக்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்தால் அதிக நன்மை கிடைக்கும். மற்ற ஆய்வுகள், உடற்பயிற்சிகள் தீவிரமானதாகவோ அல்லது ஒவ்வொரு நாளும் வித்தியாசமாகவோ இருக்க வேண்டியதில்லை என்பதைக் குறிக்கிறது. தினமும் அல்லது வாரத்தில் ஒரேயொரு முறை உடற்பயிற்சி செய்வதைவிட, ஒரு வாரத்தில் மூன்று முறை உடற்பயிற்சி செய்வது தூக்கத்திற்குச் சிறந்த பலன்களை வழங்கும் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மிதமான உடற்பயிற்சி, தீவிர உடற்பயிற்சியைவிட தூக்கத்திற்கு அதிக உதவியாக இருக்கும். தினமும் குறைந்தது 10 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால்கூட மாற்றத்தைக் காண முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இரவு நேரத்தில் தூங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னர் உடற்பயிற்சி செய்வது தூக்கத்தைப் பாதிக்காது என்று மற்றோர் ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. ஆனால் உடற்பயிற்சி செய்வதற்கு வேறு நேரம் கிடைக்காதவர்களுக்கு இதுவொரு நல்ல செய்தி. உடற்பயிற்சி தூக்கத்தை மேம்படுத்துவது மட்டுமல்ல, அது நம்மை மேலும் புத்துணர்ச்சி பெறச் செய்து, அதிக ஓய்வை உணரவும் உதவும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்வதால், உண்மையாகவே எவ்வளவு நன்றாக உறங்கினோம் என்பது குறித்துக் கவலைப்படாமல், நன்றாக உறங்கியதாக நம்மால் உணர இயலும். மது மற்றும் புகையிலையைக் குறைக்கவும் பட மூலாதாரம்,GETTY IMAGES மது மற்றும் புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று பலர் புத்தாண்டுக்காகத் தீர்மானங்கள் எடுப்பதுண்டு. ஆனால் மது அருந்தும் அல்லது புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதைத் திடீரென நிறுத்துவது கடினமாக இருக்கலாம். ஏனென்றால், முழுமையான மதுவிலக்கை மையமாகக் கொண்ட இலக்குகளைவிட நேர்மறையான பழக்க வழக்கங்களை அல்லது அளவிடக் கூடிய மாற்றங்களைச் செய்வதில் கவனம் செலுத்தும் இலக்குகள் மிகவும் வெற்றிகரமானவையாக இருக்கலாம். அதேபோல் இந்த ஆண்டு நீங்கள் மது அல்லது புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட முயற்சி செய்யலாம், இது அதிக ஓய்வை உணர உதவும். புகைப் பிடிப்பது, தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவும், மேலும் ஓய்வளிக்கும் 'மெதுவான அலை தூக்கத்தை' குறைக்கவும் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், மது அருந்துவதும் தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது என்று தெரிய வந்துள்ளது. ஆனால் இதில் ஓர் எச்சரிக்கையும் உள்ளது. தூங்கச் செல்வதற்கு முன் இரண்டு அல்லது மூன்று முறை மது அருந்துவது தொடக்கத்தில் தூக்கம் வருவது போல் உணர வைக்கலாம். ஆனால், இதை மூன்று நாட்கள் (அல்லது அதற்கு அதிகமாக) தொடர்ந்தால், அந்த விளைவு எதிராக மாறுகிறது. மேலும் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பது தூக்கமின்மை ஏற்படும் ஆபத்தைக்கூட அதிகரிக்கிறது. மற்றோர் ஆய்வில், படுக்கைக்கு முன்னால் வெறும் ஒரு கோப்பை மது அருந்துவதும் நம்முடைய தூக்கத்தின் இயல்பை மாற்றுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மது அருந்துபவர்கள் உறங்க ஆரம்பிக்கும்போது விரைவாகவும், முதல் பாதி இரவில் ஆழ்ந்த தூக்கத்தையும் பெறலாம். ஆனால் இரவின் இரண்டாம் பாதியில் அவர்கள் விழித்துவிடக்கூடும். அதே போல், மது அருந்துவது நமது உயிரியல் கடிகாரத்தையும் பாதிக்கக்கூடும். இது நாம் பெறக்கூடிய மொத்த தூக்கத்தின் நேரத்தைக் குறைக்கலாம் மற்றும் மூச்சுத் திணறலுடன் தொடர்புடைய தூக்கக் கோளாறுகளை மேலும் மோசமாக்கலாம். காலை உணவைத் தவிர்க்காதீர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES உடல் பருமனைக் குறைப்பதற்கும், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதற்கும் காலை உணவு உதவுமா என்ற கேள்விக்கு, பதிலாகக் கிடைக்கும் ஆதாரங்கள் குழப்பமானவையாகவே உள்ளன என்று பிபிசி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, காலை உணவை உண்ணுதல் அல்லது தவிர்த்தல் ஆகியவை உடல் எடைக்கான விளைவுகளில் தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஓர் ஆய்வு கண்டறிந்தது. மனரீதியான விழிப்புணர்வையும் கூர்மையையும் அதிகரிப்பதில் காலை உணவின் நன்மைகள் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. 43 ஆய்வுகளின் மறு ஆய்வு ஒன்று, காலை உணவு உண்பதால் நினைவாற்றல் மற்றும் கவனம் மேம்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறது. இந்த விளைவுகள் பொதுவாகச் சிறியதாக இருந்தாலும், அவை சீரானதாக இருந்தன. குழந்தைகளுக்கும் இது பொருந்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. காலை எழுந்த பிறகு உணவு உண்ணும் குழந்தைகளுக்குக் கவனம், நினைவாற்றல் மற்றும் முடிவெடுத்தல் திறன் மேம்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் காலை உணவு எடுத்துக்கொள்வது சோர்வைக் குறைக்க உதவக்கூடும் என்று மற்ற ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. எடுத்துக்காட்டாக, 127 மருத்துவப் பள்ளி மாணவர்களின் ஓர் ஆய்வு, காலை உணவைத் தவிர்த்தவர்களைக் காட்டிலும், காலை உணவை உட்கொண்டவர்களுக்கு சோர்வு குறைவாக இருப்பதாகக் கண்டறிந்தது. அதேபோன்று ஒழுங்கான நேரத்தில் உணவு உண்பதும் பயனளிக்கலாம். 127 மருத்துவ மாணவர்களைப் பற்றிய ஆய்வும், தைவானில் 1,800க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவர்கள் பற்றிய மற்றோர் ஆய்வும், சீரற்ற நேரங்களில் உணவு உண்பவர்கள் அதிக சோர்வாக உணர்ந்தனர் என்பதை வெளிப்படுத்துகின்றன. அதே நேரத்தில், ஒழுங்காக உணவு உண்ணும் நேரத்தைக் கடைபிடித்தவர்கள் குறைவான சோர்வை உணர்ந்துள்ளனர். வேறு எதுவுமே உதவவில்லை என்றால், நீண்ட நேரம் சோர்வுடன் போராடுகிறீர்கள் என்றால், வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் இரண்டு முட்டைகள் அல்லது ஒரு கோப்பைக் கஞ்சியைச் சாப்பிட நேரம் ஒதுக்குவது சோர்வைப் போக்குவதற்கான இன்னொரு எளிதான தீர்வாக இருக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crknrr3zejjo
  8. பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை சட்டவிரோத நடவடிக்கைகளிற்கு ஏன் பயன்படுத்தினார்கள் - விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை Published By: RAJEEBAN 14 MAR, 2025 | 05:08 PM பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை சட்டவிரோத நடவடிக்கைகளிற்கு பயன்படுத்தியமைக்கான காரணங்கள் நாசகார சக்திகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல் அதிகரித்ததால், அரசாங்கம் இந்த பிரச்சினை குறித்து தீவிர கவனம் செலுத்தியது. அதிகரித்து வரும் வன்முறையை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக காணப்பட்டது. ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் கடுமையான ஆபத்துக்களை எதிர்கொண்டிருந்தனர். தங்கள் நாளாந்த கடமைகளில் ஈடுபடுவது கூட அவர்களிற்கு சாத்தியமற்ற கடினமான விடயமாக காணப்பட்டது. அரசசொத்துக்களும் அச்சுறுத்தலிற்குள்ளாகியிருந்தன, வன்முறைகள் அதிகரித்தமை அரசாங்கத்தின் மீது ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தியிருந்தது, நிர்வாகத்தை முன்னெடுப்பதிலும் இது தாக்கம்தை செலுத்தியிருந்தது. ஆளும் ஐக்கிய தேசிய கட்சி ஜேவிபியிடமிருந்தே ஆபத்தை எதிர்கொண்டிருந்தது. ஜேவிபியின் பிரச்சாரம், ஜனநாயக ரீதியில், சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயற்படும் அரசாங்கத்தின் எதிராளிகளிற்கு உதவுகின்றது என அன்றைய அரசாங்கம் கருதியது. செயற்படும் விதத்தில் அரசாங்கத்தின் ஏனைய எதிராளிகளை விட ஜேவிபி வித்தியாசமானது என்றாலும், ஜேவிபியினரும் அரசாங்கத்திற்கு(ஐக்கியதேசிய கட்சி) எதிரான செயற்பாட்டாளர்களும் ஜனநாயக அரசியல் செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்டு வந்தமைக்கான சான்றுகள் காணப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கும் ஜனநாய அரசியல் கட்சிகளிற்குள் ஜேவிபியினர் ஊடுருவியுள்ளனர் என புலனாய்வு தகவல்கள் தெரிவித்தன. மூலோபாய அடிப்படையில் பார்த்தால் இது ஜேவிபியின் செயற்பாட்டாளர்களிற்கு உதவியிருக்கும். ஆகவே நாசகார சக்திகளால் உருவாக்கப்பட்ட வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கு அரசாங்கத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட காரணங்கள் இருந்தன. நாசகார சக்திகளிற்கு எதிராக நடவடிக்களை எடுப்பதற்கு அரசாங்கம் பொலிஸாரையே பெருமளவிற்கு பயன்படுத்தியது. எனினும் கிளர்ச்சியின் பிந்தைய காலத்தில் அதனை எதிர்கொள்ள திறனை பொலிஸார் இழந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதன் காரணமாக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டிய நிலையேற்பட்டது. அரசியல்வாதிகளை பொது சொத்துக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அப்பால் நாசகார வேலைகள் குறித்து விசாரணை செய்யவேண்டிய தேவை பொலிஸாருக்கிருந்தது. புலனாய்வு தகவல்களை சேகரிப்பது நாசகார சக்திகளிற்கு எதிரான நடவடிக்கையில் முக்கியமான அம்சம், நாசகார இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்த புலனாய்வு தகவல்களை தகவல்களை வழங்கியவர்கள் மூலமாக மாத்திரம் பெறவில்லை, பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட சந்தேகநபர்களை விசாரணை செய்வதன் மூலம் தகவல்களை பெற்றனர். நாசகார இயக்கம் குறித்தும் அதன் திட்டங்கள் குறித்தும் நம்பகதன்மை மிக்க புலனாய்வு தகவல்களை பெறுவதற்கான நேரடி வழிமுறையாக இது காணப்பட்டது, இதன் காரணமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களை விசாரணை செய்வது என்பது ஜேவிபிக்கு எதிரான நடவடிக்கையில் முக்கியமானதாக காணப்பட்டது. ஜேவிபிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸாரின் முக்கிய பிரிவாக நாசகார நடவடிக்கைகளிற்கு எதிரான பிரிவு காணப்பட்டது. இந்த பிரிவுகளிற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் தலைமைதாங்கினார்கள், இவர்கள் நடவடிக்கைகளிற்கான ஏஎஸ்பி என அழைக்கப்பட்டார்கள். இந்த ஏஎஸ்பிக்கள் குறிப்பிட்ட பகுதியின் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு பதிலளிக்கவேண்டியவர்களாக காணப்பட்டனர், (பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் அத்தியட்சகர்களாக அல்லது சிரேஸ்ட அத்தியட்சகர்களாக காணப்பட்டனர்.) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அந்த பிராந்தியத்திற்கான பிரதிபொலிஸ்மா அதிபருக்கு பதிலளிக்க வேண்டியவர்களாக காணப்பட்டனர். நாசகார நடவடிக்கைகளிற்கு எதிரான ஒவ்வொரு பிரிவிலும் பொறுப்பதிகாரியொருவரும் - பத்து அல்லது பதினைந்து கனிஷ்ட தர உத்தியோகத்தர்களும் காணப்பட்டனர். நாசகார நடவடிக்கைகளிற்கு எதிரான இந்த பிரிவு அந்த பகுதிக்கான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியுடன் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும். விசாரணைகளை முன்னெடுப்பதன் மூலமும் நாசகார நடவடிக்கைகளிற்கு எதிரான பிரிவின் விசாரணைகளிற்கு உதவுவதன் மூலமும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அவர்களுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவார்கள். நாசகார நடவடிக்கைகளிற்கு எதிரான பிரிவிற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தேவையான சேவைகளை வழங்கவேண்டும், நடவடிக்கைகளிற்கு ஈடுபடுவதற்கு மேலதிக ஆள்பலம் தேவைப்பட்டால் அதனை வழங்கவேண்டும். அனேகமான சந்தர்ப்பங்களில் நாசகார நடவடிக்கைகளிற்கு எதிரான பிரிவு குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்திலேயே இயங்கியது. இந்த பிரிவினால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறிப்பிட்ட பிரிவினால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். நாசகார சக்திகளிற்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததும் அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகரிக்க ஆரம்பித்தன. பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டவர்கள் காணாமல்போகின்றார்கள் என குற்றச்சாட்டுகள் வெளியாகின, கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது. நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்படுகின்றனர் என குற்றச்சாட்டுகள் வெளியாகின.(நாசகார சந்தேகநபர் என கைதுசெய்யப்பட்ட ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் தான் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தன்னைசித்திரவதை செய்ததாகவும் குறடினை பயன்படுத்தி தனது பல்லை பிடுங்கினார் எனவும் மேல்நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தார்) அரசாங்க சட்ட அமுலாக்கல் அமைப்புகளினால் கைதுசெய்யப்பட்ட சிலர் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகளும் வெளியாகின.(பலர் மோசமாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர்) கொல்லப்பட்ட சிலரின் உடல்கள் பொது இடங்களில் போடப்பட்டன, உடல்களின் மீது டயர்களை போட்டு எரித்தனர், இவை டயர் சிதைமூட்டல் என ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பொது இடங்களில் இளைஞர்களின் உடல்கள் காணப்பட்டவேளைகளில் இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். பொதுமக்கள் அரசியல்வாதிகள் எதிர்கட்சிகளிடமிருந்து பொலிஸாரும் இராணுவத்தினரும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டனர். பொலிஸார் இராணுவத்தினர் இந்த கொலைகளை செய்கின்றனர் அல்லது வேறு யாரோ பொலிஸ் இராணுவத்தின் உதவியுடன் இதனை செய்கின்றனர் என்ற கதைகள் வெளியாகின. அரசாங்கத்தின் ஆதரவுடன் செயற்பட்ட இந்த துணைப்படையினர் கண்காணிப்பு குழுக்கள் என அழைக்கப்பட்டனர், இந்த குழுக்கள் சிலவற்றின் பெயர்கள் - பிரா, பச்சை புலி மஞ்சள் பூனை. இவர்கள் பொலிஸார் இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்டனர் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த குழுக்களின் உண்மை தன்மை குறித்து சந்தேகம் காணப்பட்டது சில பகுதிகளில் பொலிஸாரே இந்த பெயர்களில் செயற்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு வெளியானது. கறுப்புபூனை என்பது பொலிஸாரே என தான் கருதியதாக முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். சிஐடி போன்ற பொலிஸின் ஒரு பிரிவு என தான் நினைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சிரேஸ்ட அரசியல்வாதி என்ற அடிப்படையில் அவ்வாறு கருதுவதற்கான நியாபூர்வமான காரணங்களை அவர் கொண்டிருந்திருக்கவேண்டும் என நாங்கள் நிச்சயமாக நம்புகின்றோம். அவ்வாறான ஒரு எண்ணத்தினை பெறுவதற்கு அவர் பொருத்தமான தகவல்களை பெற்றிருப்பார். ஆகவே இது இந்த விழிப்பு குழுக்களில் பொலிஸாருக்கும் தொடர்பிருந்தது என கருதுவதற்கான நியாயமான காரணங்கள் இருப்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. அவர்கள் யாராகயிருந்தாலும் அவர்களின் நடவடிக்கைகள் தெளிவானவை, அவர்கள் நாசகார சக்திகளை இலக்குவைத்து படுகொலை செய்தார்கள். எரியுண்ட சடலங்கள் காணப்படும்போதெல்லாம் தான் அந்த பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியை தொடர்புகொண்டதாகவும் இது குறித்து விசாரித்ததாகவும் டிஐஜி எம்எம்ஆர் மெரில் குணவர்த்தன தெரிவித்தார். தமிழில் - ரஜீபன் https://www.virakesari.lk/article/209198
  9. பட மூலாதாரம்,TN ASSEMBLY 14 மார்ச் 2025, 03:23 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு முதல் சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கப்படுவது வரை பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் 'ரூ' சேர்க்கப்பட்டது விவாதமாவது ஏன்? 'விதிகளை வளைத்து ரூ.300 கோடி முறைகேடு' - உணவுத்துறை மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில் இந்திய மீனவர்களுக்கு எதிராக கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்க இலங்கையில் தீர்மானம் திருக்குறளை மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கீடு திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்மொழி வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்துப் பேசிய அவர் "வருங்காலங்களில் தமிழ் புத்தகக் கண்காட்சிகளை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய பெருநகரங்களான புதுடெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய வெளிநாடுகளிலும் புத்தகக் கண்காட்சி நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று அறிவித்தார். ஆண்டுக்கு நூறு புத்தகங்கள் வீதம் வருகின்ற ஐந்து ஆண்டுகளில் 500 தமிழ்ப் புத்தகங்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சர் அறிவித்தார். பட மூலாதாரம்,THANGAM THENNARASU/X வெளிநாடு வாழ் இளம் தமிழர்களுக்கு தமிழ் மரபை அறிமுகம் செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மரபை முறையாக அறிமுகம் செய்திடும் வகையில், அயலக தமிழர் நல வாரியம் மூலம் அவர்களுக்கு தமிழ் மொழி மற்றும் நாட்டுப்புறக் கலையைப் பயிற்றுவிக்கும் 100 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை வைத்து நேரடி வகுப்புகளை நடத்திட ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டி குறித்து அறிவிப்பு "தமிழின் பெருமை மற்றும் சிறப்பை உலகத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற நகரங்களில் உள்ள பள்ளிகளிலும், உலகத் தமிழ் மையங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு கணினி வழி உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும்" என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தொல்லியல் துறைக்கான நிதி அறிவிப்பு வரும் நிதி ஆண்டில் தொல்லியல் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், "தென்கிழக்கு ஆசியா, மத்தியத் தரைக்கடல், அரேபிய தீபகற்பம், ரோமப் பேரரசு பகுதிகளுடன் வைத்துக்கொண்ட கடல் வழி வணிகம் தொடர்பாக ஆழ்கடல் அகழ்வாய்வுகளை தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல்கட்டமாக இந்த ஆண்டு தொல்லியல் ஆய்வாளர்களின் அறிவுரைப்படி காவிரிப் பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடல் அகழ்வாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்று அறிவித்தார். ஐம்பொன்னால் ஆன இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அதன் சிறப்பை வெளிநாட்டினரும் ரசிக்கும் வகையில், மரபுசார் கட்டட அமைப்பில் தனியாக காட்சி அரங்கம் ஒன்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைக்க ரு. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,@CMOTAMILNADU படக்குறிப்பு,மார்ச் 13ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஊரக வளர்ச்சி திட்டத்திற்கான அறிவிப்புகள் இந்த நிதியாண்டில் (2025-26) ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ. 3500 கோடி ஒதுக்கீடு முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6100 கி.மீ கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ. 2100 கோடி ஒதுக்கீடு கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகளின் பராமரிப்பு பணிகளுக்காக ரூ. 120 கோடி ஒதுக்கீடு தமிழ்நாட்டின் அனைத்து குக்கிராமங்களும் தன்னிறைவு அடையும் வகையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி-2இன் கீழ் 2329 கிராம ஊராட்சிகளில் ரூ.1087 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும். நகராட்சி நிர்வாகம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக ரூ. 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 6483 கி.மீ. நீளமுள்ள சாலைகளை ரூ.3750 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் கடும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் ஒரு பகுதியாக வேளச்சேரி மற்றும் கிண்டியில் வசிக்கும் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வேளச்சேரி பிரதான சாலை துவங்கி, குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்திற்கு ரூ. 310 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும். ரயில்வேதுறையுடன் இணைந்து கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரூ. 70 கோடி மதிப்பில் கட்டப்படும். சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு நிலையம், இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள் மீட்பு மையம் மற்றும் 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிக்காக ரூ. 3450 கோடி திட்டக் காலத்திற்கான மதிப்பீட்டில் தொடங்கப்படும். சமச்சீர் வளர்ச்சி சென்னை மாநகரத்தின் சமச்சீர் வளர்ச்சியை உறுதிசெய்திட வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிதியாண்டில் அதற்காக ரூ. 6858 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவதின் முதல்கட்டமாக சென்னைக்கு அருகே ஒரு புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். மகளிர் நலன் விடியல் பயணம் என்து மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அறிமுகம் செய்யப்பட்ட திட்டமாகும். அந்த ஆண்டு அத்திட்டத்திற்கான மானியத் தொகை ரூ. 3600 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நிதியாண்டில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் புதிதாக தோழி மகளிர் விடுதிகள் கட்ட ரூ. 77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'ரூ' தொடர்பாக எழுந்த சர்ச்சை காணொளியில் நிதிநிலை அறிக்கை குறித்த இலச்சினையில் ரூபாயை குறிக்கும் '₹' என்ற தேசிய சின்னத்திற்குப் பதிலாக தமிழில் 'ரூ' என்று தமிழ்நாடு அரசு பயன்படுத்தி இருந்தது. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பள்ளி கல்வித்துறைக்குத் தேவையான நிதியை வழங்க இயலும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். பட மூலாதாரம்,MK STALIN படக்குறிப்பு,தேசிய இலச்சினை நீக்கப்பட்டு தமிழில் 'ரூ' பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த நிலையில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையே மும்மொழிக் கொள்கை, ஹிந்தி திணிப்பு போன்ற விவகாரங்களில் நீடித்த வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் 'ரூ'வை பயன்படுத்தியது தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj92rxdxpzeo
  10. 14 MAR, 2025 | 10:55 AM பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவும் அமைச்சரவையும் கொள்கை தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சபையில் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பது எனவும் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/209156
  11. Published By: VISHNU 14 MAR, 2025 | 03:37 AM (ஆர்.ராம்) இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும், அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் ஆகியோருக்கும் இடையில் இருவேறு சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தில் வியாழக்கிழமை (13) நண்பகல் நடைபெற்ற சந்திப்பின்போது, சமகால நிலைமைகள் சம்பந்தமாக உரையாடப்பட்டதாக சுமந்திரன் குறிப்பிட்டார். குறிப்பாக, அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் நிலைப்பாடுகள், மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக உயர்ஸ்தானிகர் மற்றும் அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து நேற்று மாலை, அமெரிக்கத்தூதரகத்தில் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குடன் சுமந்திரன் சந்திப்பை நடத்தியுள்ளார். இச்சந்திப்பு தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்க வெளியேறியுள்ள நிலையில் தமிழ் தரப்பினர் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமை தொடர்பில் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டதாக கூறினார். அத்துடன், நடைபெறும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழரரசுக்கட்சி தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்தமைக்கான தொழில்நுட்பக் காரணத்தினையும் அமெரிக்கத் தூதுவரிடத்தில் தெளிவுபடுத்தியதோடு அடுத்தகட்டச் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் கருத்துப்பகிர்வு நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான பயணத்தில் அமெரிக்காவின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் தொடர்ச்சியாக நீடிக்கும் என்றும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/209141
  12. ஊழியர் சேமலாப நிதியத்தை (EPF) உரிய வகையில் வழங்காத 22,450 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவிக்கின்றது. இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/316023
  13. Published By: VISHNU 14 MAR, 2025 | 03:34 AM பெண் கிராம உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி வெள்ளிக்கிழமை (14) நள்ளிரவு 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமை இரவு நேரங்களில் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் உயிரிழப்பு தொடர்பான அனைத்து பணியிலிருந்தும் விலகுவதாகத் தெரிவித்துள்ளதுடன், அரச பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் வியாழக்கிழமை (13) கடிதம் ஒன்றை வழங்கியுள்ளது. பாதுகாப்பற்ற மற்றும் மக்கள் வசிக்காத பகுதிகளில் உள்ள அலுவலகங்களை மூடுதல், ஒருவரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட இடத்திலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வது மற்றும் மதியம் 1 மணி வரை மாத்திரம் கிராம உத்தியோகத்தர்களுக்கான அலுவலகத்தில் தங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, கிராம உத்தியோகத்தர் சங்கம் மேற்படி பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. பெண் கிராம உத்தியோகத்தர்களின் பாதுகாப்புக்கான உடனடி தீர்வுகளைப் பெறும் நோக்குடன் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளமையால், எமக்கான தீர்வு கிடைக்கும் வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்துக் கொள்ள தயாராக உள்ளனர் என இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/209140
  14. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: இம்முறை 155,976 பேர் புதிய வாக்காளர்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு Published By: VISHNU 14 MAR, 2025 | 03:31 AM (இராஜதுரை ஹஷான்) உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை 1 கோடியே 72 இலட்சத்து 96,330 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர். இவர்களில் 155,976 பேர் முதல் தடவையாக வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு தேருநர் இடாப்புக்கு அமைவாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் நடைபெற்றன. இவ்விரு தேர்தல்களிலும் 17,440,354 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றிருந்தனர். 2024 ஆம் ஆண்டு தேருடர் இடாப்பின் பதிவுகளுடன், இம்முறை 155,976 பேர் புதிதாக வாக்களிக்க இம்முறை தகுதிப்பெற்றுள்ளனர். இதற்கமைய இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 17,296,330 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர். உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (17) தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தலுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் நிறைவடையவுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்கு குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துகின்ற நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் கட்டுப்பணம் செலுத்தல் நிறைவடைகிறது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் வியாழக்கிழமை (20) ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு 35 நாட்களுக்கு குறையாமல், 49 நாட்களுக்கு அதிகரிக்காமல் பிரசார காலம் வழங்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மே மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/209139
  15. 14 MAR, 2025 | 10:20 AM அமெரிக்காவின் டென்வர் விமானநிலையத்தில் தரையிறங்கியவேளை அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் திடீரென தீ பரவியதை தொடர்ந்து 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டென்வர் விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கிய வேளை திடீரென தீ மூண்டது அனைவரும் ஸ்லைட்களை பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் சிறிய காயங்களுடன் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளனர். கொலராடோ ஸ்பிரிங்ஸ் விமானநிலையத்திலிருந்து டலஸ் போர்ட் வேர்த்திற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் இயந்திரத்தில் அதிர்வுகள் காணப்படுவதாக பணியாளர்கள் தெரிவித்ததை தொடர்ந்து விமானம் டென்வர் விமானநிலையத்திற்கு பயணத்தை மாற்றியது என தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் ஓடுபாதையில் இறங்கி பயணித்துக்கொண்டிருந்தவேளை தீடிரென தீபரவல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பயணிகள் ஸ்லைட்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர். 172 பயணிகளும் ஆறு பணியாளர்களும் முனையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். https://www.virakesari.lk/article/209151
  16. தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் 'ரூ' சேர்க்கப்பட்டது விவாதமாவது ஏன்? பட மூலாதாரம்,MKSTALIN 16 நிமிடங்களுக்கு முன்னர் 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், நிதிநிலை அறிக்கை குறித்த முன்னோட்ட காணொளியை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (மார்ச் 13) வெளியிட்டார். அதில் இருந்த ஒரு படம், நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கை முன்னோட்ட காணொளியை வெளியிட்டுள்ளார். இந்த காணொளியில் நிதிநிலை அறிக்கை குறித்த இலச்சினையில் ரூபாயை குறிக்கும் குறியீடாக 'ரூ'-வை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி இருந்தது. 'ரூ'-வாக மாறிய '₹'? இந்த விவகாரம் குறித்து, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசை விமர்சித்துள்ளார். "ஒட்டுமொத்த இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பண மதிப்புகளில் பயன்படுத்தப்படும் ரூபாய்க்கான சின்னத்தை, 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் திமுக அரசு மாற்றியமைத்துள்ளது", என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இத்துடன் அவர் 2024 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் இலச்சினையுடன் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் இலச்சினையின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான இலச்சினையில் '₹' என்று குறிப்பிட்டிருந்தது. பட மூலாதாரம்,X/@ANNAMALAI_K படக்குறிப்பு,அண்ணாமலை வெளியிட்ட படம் இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "ரூ என்ற எழுத்தை மாற்றியமைத்ததன் மூலம் மக்களை திசைதிருப்பும் வேலையில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் சொத்து வரி, பால் வரி ஆகியவற்றை அரசு குறைக்கப் போவதில்லை. அதையெல்லாம் விடுத்து 'ரூ' என்ற எழுத்தை வைத்து திமுக நாடக்கமாடுகிறது", என்று கூறினார். இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கிறார்கள். மாநில பட்ஜெட் ஆவணங்களில் '₹' போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானதாகும், மேலும் இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது", என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். ''திமுகவிற்கு உண்மையிலேயே '₹' சின்னத்துடன் உடன் பிரச்னை இருந்தால், 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் அக்கட்சி இருந்தபோது, இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? என்றும் நிர்மலா சீதாராமன் கேள்வியெழுப்பியுள்ளார் பட மூலாதாரம்,X/@MKSTALIN இந்தோனீசியாவில் உள்ள இந்தக் குகை மெக்காவுக்கு செல்லும் ரகசிய சுரங்கப் பாதையா?8 மணி நேரங்களுக்கு முன்னர் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு மீண்டும் சாப்பிட்டால் உடலில் பாதிப்பு ஏற்படுமா?3 மணி நேரங்களுக்கு முன்னர் 'இந்தி எழுத்துக்கு எந்த வேலையும் இல்லை' எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திமுக செய்தித் தொடர்புத் துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், "தமிழ்நாடு அரசு தனது நிதிநிலை அறிக்கையில் 'ரூ' என்று குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. ரூபாய் என்று தமிழில் எழுதும்போது 'ரூ' என்றுதான் எழுத வேண்டும்" என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "தமிழில் வெளிவரக் கூடிய பொருளாதார அறிக்கைகளில் இந்தி எழுத்துக்கு எந்த வேலையும் இல்லை" எனக் கூறுகிறார். 'தமிழ்நாடு அரசின் நோக்கம் நிறைவேறிவிட்டது' "தற்போது ரூபாயைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சின்னத்தில் நடுவில் உள்ள கோட்டை எடுத்திவிட்டால், அது தேவநகரியில் உள்ள 'ர'வைத்தான் குறிக்கிறது. மத்திய அரசு தொடர்ந்து மும்மொழிக் கொள்கை போன்ற விவகாரங்களில் தமிழக அரசை வலியுறுத்திவரும் நிலையில், இந்த முடிவை எடுத்திருக்கிறோம்", என்கிறார் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவரான ஜெயரஞ்சன். தொடர்ந்து பேசிய அவர், "இந்த ரூபாய் சின்னம் தமிழர் ஒருவர் கண்டுபிடித்தது என்கிறார்கள். தமிழர்கள் ஆயிரம் விஷயங்களைச் செய்கிறார்கள். எல்லாவற்றையும் ஏற்க வேண்டிய அவசியமில்லை. தேவநகரி எழுத்தில் இருந்ததை தமிழில் மாற்றியிருக்கிறோம். இதில் என்ன பிரச்னை? ரூபாயை பயன்படுத்த ஆரம்பித்ததில் இருந்தே, 'ரூ' என்ற எழுத்து புழக்கத்தில் இருக்கிறது. அதை மீண்டும் பயன்படுத்துகிறோம். தமிழ்நாட்டில் எல்லோரும் Rs. என்றோ ரூ. என்றோதான் குறிப்பிடுகிறார்கள்" என்கிறார். மேலும், "ரூ' என்று எழுதியதற்கு பா.ஜ.க தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது குறித்து கேட்டபோது, "அப்படியானால் தமிழ்நாடு அரசின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார். படக்குறிப்பு,மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவரான ஜெயரஞ்சன் 'எந்த தவறும் இல்லை' தமிழில் 'ரூ' என்று எழுதியதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனக் கூறுகிறார் தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம. சீனிவாசன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பட்ஜெட்டில் 'ரூ' என்ற எழுத்துக்கு பதிலாக வேறு எந்த குறியீடையும் தமிழ்நாடு அரசு பயன்படுத்தவில்லை. அதைப் பயன்படுத்தியதில் எந்த தவறும் இல்லை. அது புழக்கத்தில் உள்ள ஒன்றுதான். உலகளவில் ரூபாய்க்கு என ஒரு குறியீடு வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி '₹' என்பதை உருவாக்கியது. அதைக் கூட ஒரு தமிழர் தான் உருவாக்கினார். தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் 'ரூ' என்ற எழுத்து பயன்படுத்துவதை வரவேற்கிறேன். 'ரூ' என்பதும் ஓர் இந்திய மொழி எழுத்துதான். இதன்மூலம் இந்தியை ஒழித்துவிட முடியும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கருதுவது தேவையற்றது" எனக் கூறினார். வங்கதேச ராணுவத்தில் அதிகாரக் கவிழ்ப்பு முயற்சி நடந்ததா? உண்மை என்ன?13 மார்ச் 2025 ரேபிஸ் நோய் முற்றிய நோயாளிகளை கையாளும் வழிமுறைகள் - மருத்துவர் விளக்கம்9 மணி நேரங்களுக்கு முன்னர் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "ரூபாய்க்கான சின்னம் தி.மு.க. கூட்டணியில் இருக்கும்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சின்னம்தான். இப்போது மத்திய அரசு தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையைத் திணிப்பது, நிதியைக் குறைப்பது போன்றவற்றில் ஈடுபடுவதால் அதற்குப் பதிலடியாக தி.மு.க. இதைச் செய்கிறது. இதனால், அடிப்படையான மாற்றம் ஏதும் இருக்கப்போவதில்லை. பலனும் இருக்காது.''என்றார். '' ஆனால், தொகுதி மறுசீரமைப்பு போன்ற விவகாரங்களில் தேசிய அளவில் எதிர்ப்பை ஒருங்கிணைக்க தி.மு.க. முயல்கிறது. அதன் ஒரு பகுதியாகவும் இதனைப் பார்க்கலாம். ஆனால், மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதையும் பார்க்க வேண்டும். ஏற்கனவே டாஸ்மாக்கில் ரெய்ட் முடிந்திருக்கிறது. அடுத்த பத்து மாதங்கள் தி.மு.கவுக்கு நெருக்கடியான காலமாகத்தான் இருக்கும். இந்த நிலையில், இது போன்ற நடவடிக்கைகள், ஒரு அரசியல் பதிலடி நடவடிக்கைதானே தவிர, வேறு ஏதும் இல்லை" என்கிறார் . ₹ சின்னம் எப்படி வந்தது? ரூபாயை குறிப்பிட பயன்படுத்தப்படும் '₹ ' சின்னம் தேவநாகரி "ரா" மற்றும் ரோமானிய எழுத்தான 'ஆர்' ஆகியவற்றின் கலவையாகும். '₹' சின்னத்தில் மேலுள்ள இரண்டு கிடைமட்ட கோடுகள் தேசியக் கொடியைக் குறிக்கின்றன, மேலும் "சமம்" (equal to) குறியீட்டையும் குறிக்கின்றன. இந்த ரூபாய் சின்னமானது 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம்15 ஆம் தேதி அன்று இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த சின்னத்தை தமிழ்நாட்டை சேர்ந்த உதய குமார் என்பவர் வடிவமைத்தார். நிதி அமைச்சகம் நடத்திய ஒரு போட்டியில் ஆயிரக்கணக்கான பதிவுகளிலிருந்து இந்த சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce8vgggmdqeo
  17. பாக்கிஸ்தானில் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளைமீட்கும் நடவடிக்கை முடிவிற்குவந்தது – பிரிவினைவாதிகள் ஆப்கானில் உள்ள தங்கள் தலைவர்களுடன் தொடர்பிலிருந்தனர் என அதிகாரி தகவல் Published By: RAJEEBAN 13 MAR, 2025 | 02:40 PM பாக்கிஸ்தானில் பிரிவினைவாதிகளிடம் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளை மீட்கும் நடவடிக்கை முடிவிற்கு வந்துள்ளதாக பாக்கிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது. பயணிகளை மீட்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளோம், அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் தொடர்பாடல்களிற்கான அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டுள்ளனர் கிளர்ச்சியாளர்கள் அனைவரையும் புகையிரதத்திலிருந்து வெளியேற்றிவிட்டோம் 33 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். புகையிரதத்தில் 440 பயணிகள் இருந்தனர் என அவர் தெரிவித்துள்ள போதிலும் மீட்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை அவர் தெரிவிக்கவில்லை. இதேவேளை ஒவ்வொரு கட்டமாக மீட்பு பணிகளை மேற்கொண்டோம், முதலில் சுமார் 100 விடுவித்தோம், இரண்டாவது கட்ட நடவடிக்கையின் போது விடுவிக்கப்பட்ட 80 பேர் மச் என்ற பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர் என பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரியொருவர் டோவ்னிற்கு தெரிவித்துள்ளார். இதேவேளை பிரிவினைவாதிகளிடம் பிடிடபட்ட புகையிர பாதுகாப்பு பிரிவை சேர்ந்த இரண்டு பொலிஸார் உட்பட பல பயணிகள் பாதுகாப்பாக தப்பிவந்துள்ளனர். 21 பயணிகளும் நான்கு படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு செல்வது மிகவும் கடினமான விடயம் மக்கள் குடியிருப்புகள் வீதிகள் போன்றவை இல்லாத இடம் என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் பயங்கரவாதிகள் பெண்கள் சிறுவர்களை பணயக்கைதிகளாக பயன்படுத்தினார்கள் என குறிப்பிட்டுள்ளார். ஆயுதமேந்திய நபர்கள் புகையிரதத்தை சுற்றி ரோந்து வந்தனர், தங்களிடம் சிக்கியிருந்த பொதுமக்களை உன்னிப்பாக அவதானித்து வந்தனர். விசேட படைப்பிரிவினர் பணயக்கைதிகளை மீட்பதற்காக மிகவும் அவதானமாக செயற்பட்டனர், தாக்குதல்கள் மூலம் எஞ்சியிருந்த கிளர்ச்சியாளர்களை செயல் இழக்கச்செய்த பின்னர் 68 பணயக்கைதிகளை மீட்டனர் என டோவ்னிற்கு தெரிவித்துள்ள பாதுகாப்பு அதிகாரியொருவர் நடவடிக்கை முடிவடைந்துவிட்டது என தெரிவித்துள்ளார். புகையிரதத்தை பிடித்து பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தவேளை பயங்கரவாதிகள் ஆப்கானில் உள்ள தங்கள் தலைவர்களுடன் செய்மதி தொலைபேசி மூலம் தொடர்பிலிருந்தனர் என லெப் ஜெனரல் ஷெரீவ் தெரிவித்துள்ளார். புகையிரதம் பிரிவினைவாதிகளிடம் சிக்குண்ட பகுதியையும் புகையிரதத்தையும் காண்பிக்கும் ஆளில்லா விமானப்படத்தையும் பாக்கிஸ்தான் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் மூன்று குழுக்களாக பலர் புகையிரதத்தின் அருகில் அமர்ந்திருப்பதை காணமுடிகின்றது. இது குறித்து விளக்கமளித்த அதிகாரியொருவர் பணயக்கைதிகளை புகையிரதத்தலிருந்து இறக்கி தற்கொலை குண்டுதாரிகளின் பாதுகாப்பில் வைத்திருந்தார்கள் இதனால் மீட்பு பணிகளை முன்னெடுப்பது கடினமாகயிருந்தது என பாக்கிஸ்தான் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தற்கொலை குண்டுதாரிகளை சினைப்பர்கள் மூலம் வீழ்த்தினோம், பணயக்கைதிகள் எவருக்கும் பாதிப்புகள் இல்லை என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/209087
  18. பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை தரவுகள், தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அரசினை மிக கடுமையாக சாடி திணறடித்துள்ளார். முக்கியமாக இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கொக்கிளாய், நாயாற்றில் தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியிருப்பதுடன், படை அதிகாரிகளின் துணையுடன் தமிழரின் பாரம்பரிய பகுதிகளான கொக்கிளாய், நாயாற்றுப்பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு நிரந்தர சிங்கள மீன்பிடிக் குடியிருப்புகளாக ஆக்கப்படுவதை எதிர்த்தும் குரல் எழுப்பியிருக்கிறார். மேலும் மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி, தென்பகுதி ஆழ்கடல் பன்னாட் கல மீன்பிடி மீனவர்களின் பயன்பாட்டுக்குரிய ஒன்றாகவும் வடக்கு மீனவர்கள் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டதுடன், வடக்கே பரந்த ஆழ்கடல் இருந்தும் அதனைப் பயன்படுத்துவதற்கான உட்கட்டுமான வசதிகள் முக்கியமாக பலநாட் கலங்களுக்கான முதலீட்டு வசதியின்மை, துறைமுகம், பயிற்சி, மற்றும் உபகரணங்கள் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாதுள்ளமை குறித்தும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். வடகரையோரத்தில் அடுக்கடுக்காக படைமுகாம்களை வைத்துக்கொண்டு இந்திய மீனவர்களின் ஊடுருவலையோ போதைவஸ்து கடத்தலையோ அவர்களால் தடுக்கமுடியாத கையறு நிலையில் இருப்பது குறித்தும் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் திணறிப்போயிருந்த அரசு சார்பிலே கடற்றொழில் அமைச்சர் வடக்கு மீனவர்களின் நம்பிக்கையை காப்போம் எனவும் வைத்துள்ள நம்பிக்கைக்கு கடுகளவேனும் தீங்கு விளைவிக்கமாட்டோம் எனவும் ஒப்பாரி வைத்திருக்கிறார். தவிர அமைச்சர் பிமல் ரத்நாயக்கா, இந்தியாவை நோக்கி வடக்கு மீனவர்களுக்கு நல்லது செய்ய விரும்பின் எல்லை தாண்டி மேற்கொள்ளும் சட்டபூர்வமற்ற மீன்பிடியினை தடுக்க உதவ வேண்டுமெனவும் மன்றாடியிருக்கின்றார். வடக்கு என்.பி.பி. தமிழ் உறுப்பனர்களோ, வன்னி உறுப்பினர்களோ வாய் பிளந்து கொட்டாவி விடும் நிலைதான். மீனவர் துன்பம் குறித்து எந்தக் கவலையும் அவர்களுக்கு கிடையாது. ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியாவினுடைய நிலைப்பாடு புரியாத ஒன்றல்ல, அவர்களை நம்பமுடியாது. எமது கோரிக்கை நாம் சிறிலங்கா அரசிடம் கோருவது என்னவெனில், அரசு வடக்கு மீனவர்களுக்கு நல்லது செய்ய விரும்பினால் முதலில் உள்ளூர் இழுவைமடித் தொழில் தடையினை நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதுதான். 2017 ல் இழுவைமடி உள்ளூரில் தடையென சட்டம் இயற்றியிருந்தது. ஆனால் இதுவரை அது அமுற்படுத்தப்படவில்லை. முதலில் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பல தடவைகள் இது குறித்து பேசியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே நிலைமை உள்ளது. மேலும் கண்டல் கிளைகளையும் மரக்குற்றிகளையும் வெட்டி கடற்பகுதிகளில் அதனை அமிழ்த்தி மீனை ஒருங்குசேர விட்டு வெடிகளை அதன் மீதும் பவளப்பாறைத் தொடர்கள் மீதும் வீசி எறிந்து மீன்களை வேட்டையாடுவதையும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரையில் படையினர் பார்த்திருக்க டைனமெட் வெடி வைத்து மீன்களைக் கொல்லும் நாசகார செயற்பாடுகளையும், கடலில் நிலையாக நிறுத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கிலான கம்பிப்பொறி வலைகளை அகற்றி சிற்றளவு மீன்பிடியாளர்களின் மீன்பிடிச் செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் போரின்போது பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட மக்கள் மீளவும் சொந்த இடம் திரும்பி தமது மீன்பிடிச் செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இடம்பெயர்ந்து வரும் தென்பகுதி மீனவர்களை படையினரின் உதவியுடன் நிரந்தர குடியிருப்புக்களை அமைப்பது, அவ்விடங்களில் பிக்குகளை கொண்டு விகாரைகளை அமைப்பது போன்ற இழிவான, அருவருப்பான செயற்பாடுகளை முன்னெடுப்பது வெறுக்கத்தக்கது.ஏற்றுக் கொள்ளவும் முடியாதது. மேலும், கரையோரங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள படை முகாம்களால் மீனவர்களுக்கு எந்த நன்மைகளும் கிடையாது என்பதை உறுதிபடக் கூறிவைக்க விரும்புகின்றோம். தேசிய பாதுகாப்புக்கென பெருமளவு நிதியினை ஒதுக்கீடு செய்து படையினரை நிலைகொள்ள வைப்பதைத் தவிர தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற கஞ்சாக் கடத்தலைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லையே? மனித புதைகுழிகளும் பெளத்தர்களே இல்லாத இடங்களிலும் படைமுகாம்களிலும் துப்பாக்கி முனையிலே விகாரைகளை கட்டி அருவருப்பை ஊட்டியதும் தவிர, காத்திரமான அபிவிருத்தி திட்டங்கள் எவற்றையும் வடக்கில் காணோம். தேசப்படத்தில் மட்டுமே சர்வதேச கடல் எல்லை வடக்கிலே பாக்கு நீரிணை, பாக்கு குடா, மன்னார் குடா ஆகிய பாரம்பரிய கடல்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் வசமே உள்ளன. இதை ஊடறுத்தே 1974, 76 களில் இந்திய – இலங்கை எல்லைக்கோடு வரையப்பட்டது. கச்சதீவு அன்றைய பாரதப் பிரதமரின்( இந்திரா காந்தி) ஆலோசனையின் பிரகாரம் இலங்கை பிரதமரின் ( சிறிமாவோ) விருப்பிற்கிணங்க இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆயினும் ஐம்பது வருடங்களாக கச்சதீவில் வடக்கு தமிழர் அடைந்த நன்மை எவையுமே இல்லை. இருந்தென்ன இல்லாமல் போனால் என்ன. எல்லாமே ஒன்றுதான். கச்சதீவும் ஐந்து மைல் சுற்றாடல் பரப்பு கடல் பகுதியும் மீனவர்களுக்காக குத்தகைக்குத் தேவையென ஓர் கோரிக்கை இந்திய தரப்பில் (பேராசிரியர் சூரியநாராயன்) ஓர் கருத்து முன்னர் முன்வைக்கப்பட்டது. பாக்கு கடலில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதிப்பது வடக்கு கடலில் சவப்பெட்டிகளை மிதக்க விடுவதற்குச் சமம். புதுக்கோட்டை, நாகபட்டின மீனவர்களின் தளமாக பாக்கு நீரிணை மற்றும் முல்லைத்தீவு கடற் பகுதியும், இராமேஸ்வர மீனவர்களின் பகுதிகளாக பாக்கு குடா கடலும், தூத்துக்குடி மீனவர்களுக்கான பகுதியாக மன்னார் குடாக்களும் பறிபோயுள்ளன. ஏறத்தாழ வடக்கு கடல் முழுவதும் பறிபோயுள்ளது. இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லைக்கோடு தேசப்படத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் அந்த எல்லைக் கோடானது வடக்கு கரையோரமாக இப்போது தள்ளப்பட்டிருக்கிறது. சர்வதேச கடற் சட்டம் இங்கு செல்லுபடியாகாத ஓர் விடயமாகவே உள்ளது. இந்திய மீனவர்களுக்கு கச்சதீவு அமைவிடம் எது, எல்லைக்கோடு எது என்பது நன்றாகத் தெரியும். ஆனால் தெரியாது என்பதே இந்தியாவின் நிலை. Thinakkural.lkதேசப்படத்தில் மட்டும் இந்திய-இலங்கை கடல் எல்லைவங்கையூரான் பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக...
  19. இலங்கையில் பெண் மருத்துவர் துஷ்பிரயோகம் - நாடு முழுவதும் போராட்டம் நடத்திய மருத்துவர்கள் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 6 மணி நேரங்களுக்கு முன்னர் அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் பணிப்புரியும் பெண் மருத்துவர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், இலங்கையில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம், முடிவுக்கு வந்துள்ளது. கச்சத்தீவு, தமிழ்நாடு - இலங்கை மீனவர் பிரச்னைக்கு தீர்வு என்ன? பிபிசிக்கு இலங்கை அமைச்சர் பேட்டி இலங்கை: 2 வயது குழந்தையை தத்தெடுத்து சித்ரவதை செய்து கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? நிழலுலக மோதல், வாள்வெட்டு சம்பவங்கள் உணர்த்துவது என்ன? படக்குறிப்பு,அநுராதபுரம் போதனா மருத்துவமனை நடந்தது என்ன? அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் வேலை செய்யும் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மார்ச் 10 ஆம் தேதி இரவு, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பெண் மருத்துவர் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இதை செய்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். "அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் விசேட மருத்துவ நிபுணராக பயிற்சி பெற்று வரும் 32 வயதான பெண் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் அவர் தனது கடமைகளை நிறைவு செய்துள்ளதுடன், அதன்பின்னர் மருத்துவமனைக்கு முன்பாக உள்ள மருத்துவர்களின் விடுதிக்கு சென்றுள்ளார். இதன்போது, குறித்த பெண் மருத்துவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், விடுதிக்கு அருகில் வைத்து பெண் மருத்துவரின் கழுத்தில் கத்தியொன்றை வைத்து அச்சுறுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது. அதன்பின்னர் பெண் மருத்துவரை, கடும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து, சந்தேகநபர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். மருத்துவரின் கையடக்கத் தொலைபேசியை எடுத்துக்கொண்டே, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்திற்கு பின்னர், மருத்துவமனைக்கு வருகைத் தந்த பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனை தொலைபேசியிலிருந்து தனது பெற்றோருக்கு இது குறித்து அறிவித்துள்ளார். அதன்பின்னர், இந்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டதுடன், போலீஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது", என்று போலீஸ் ஊடக பிரிவு பிபிசி தமிழிடம் தெரிவித்தது. இலங்கையில் வெறும் ஐந்தே நிமிடங்களில் விலங்குகளை கணக்கெடுக்க திட்டம் - எப்படி?4 மார்ச் 2025 இலங்கை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு: கைது உத்தரவை அடுத்து தலைமறைவான போலீஸ் மாஅதிபர்2 மார்ச் 2025 இலங்கை: வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்திலேயே சட்டவிரோத கும்பல் தலைவரை கொன்ற நபர்21 பிப்ரவரி 2025 மருத்துவர்கள் வேலை நிறுத்தம் இந்த சம்பவத்தை அடுத்து, அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர்கள் மார்ச் 11 ஆம் தேதி உடனடியாக வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இன்று காலை 8 மணி வரை நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. ''இந்த இடத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற நிலைமை குறித்து நாங்கள் முன்பே தெரிவித்திருந்தோம். எனினும், இவ்வாறான அசம்பாவிதமொன்று இடம்பெறும் வரை, இந்த மோசமான சம்பவத்தை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவொரு அதிகாரிக்கும் இயலுமை கிடைக்கவில்லை. சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், இந்த பிரச்னை முடிவுக்கு வராது. வேலை செய்யும் சுகாதார அதிகரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்'' என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அநுராதபுரம் மாவட்ட செயலாளர் டாக்டர் ஷஷிக்க விதானகே தெரிவித்தார். படக்குறிப்பு,அநுராதபுரம் போதனா மருத்துவமனை எதிர்கட்சி கடும் எதிர்ப்பு பெண் மருத்துவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ எதிர்ப்பை வெளியிட்டார். நாடாளுமன்றத்தில் மார்ச் 11 ஆம் தினம் உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தனது எதிர்ப்பை வெளியிட்டார். ''இந்த சம்பவத்தை அடுத்து, பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து பாரிய பிரச்னையொன்று உருவெடுத்துள்ளது. பெண் மருத்துவர் எதிர்கொண்ட இந்த பாலியல் துஷ்பிரயோகத்தை அடுத்து, அரச சேவையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது. உண்மையில் தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து பாரிய பிரச்னை எழுந்துள்ளது. எனக்கும் பெண் குழந்தையொன்று உள்ளது. அதனால், கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம். இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் சட்டங்களை கொண்டு வருவதற்கு நாங்களும் ஒத்துழைப்புக்களை வழங்குவோம்'' என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். சந்தேகநபர் கைது இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (மார்ச் 12) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கல்நேவ பகுதியில் வைத்து இந்த சந்தே கநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவம் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபரை கைது செய்வதற்காக 5 போலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துகின்றமை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என போலீஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னர் பௌத்த துறவியாக இருந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா போலீஸின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோக தவிர்ப்பு பிரிவின் பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர கருத்து வெளியிட்டிருந்தார். இதன்படி, 2023 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 2252 முறைகளும், 2024 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 2785 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx29l49jwp2o
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், வெரோனிக் கிரீன்வுட் பதவி, 2 மணி நேரங்களுக்கு முன்னர் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, மீண்டும் சாப்பிட தொடங்கும் போது உடலில் சில மோசமான விளைவுகளை சந்தித்ததாக சிலர் தெரிவித்தனர். இறைச்சியை செரிமானம் செய்வது எப்படி என்பதை உங்கள் உடல் மறந்துவிடுமா? வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் கார்பனின் அளவை குறைப்பதற்கு உட்கொள்ளும் இறைச்சியை குறைத்துக்கொள்வது ஒரு எளிமையான வழி. பிரிட்டனில் உள்ள அனைவரும் நாளொன்றுக்கு 50 கிராமுக்கு குறைவான இறைச்சியை உட்கொள்ளும் உணவுமுறைக்கு மாறினால், 8 மில்லியன் கார்கள் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கும்போது சேமிக்கப்படும் அதே அளவிலான கார்பன் வெளியீட்டை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் மதிப்பீட்டுள்ளனர். 1980 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் செம்மறி ஆட்டிறைச்சி ஆகியவற்றை உட்கொள்ளும் அளவு 62% சதவீதம் சரிந்துள்ளதாக அடைந்துள்ளதாக பிரிட்டன் அரசின் தரவுகளின் காட்டுகின்றன. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இயற்கை சூழல் மீதான அக்கறையை விட, அதிகரிக்கும் விலைகளே காரணமாக இருக்கக்கூடும். மேலும் மேலும் அதிகமானோர் இறைச்சி வேண்டாம் என கூறிவருகின்றனர். ஆனால் அதை சாப்பிடுவதை நீண்டகாலம் தவிர்த்து விட்டால், இறைச்சியை செரிமானம் செய்யும் உடலின் தன்மை மாறிவிடுகிறதா? சைவம் மற்றும் வீகனாக (vegan) இருப்பவர்கள், மீண்டும் இறைச்சி சாப்பிடுவதால் வயிற்று வலி, வயிறு உப்புசம் மற்றும் பிற அறிகுறிகள் ஏற்படக்கூடுமா? என்ற கேள்வியை சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர். மற்றவர்கள் தங்களது சொந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ள, ஆர்வமிகுதியால் தேடல் தொடங்குகிறது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் இறைச்சியை சாப்பிடுவது வயிற்று உபாதைகளை ஏற்படுத்துகிறதா என்பதை பற்றி பெரிய அளவில் ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை என்கிறார் அமெரிக்காவின் கானெல் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து துறையில் பேராசிரியராக இருக்கும் சான்டெர் கர்ஸ்டென். "ஆதாரங்கள் இல்லை என்பதால், அது இல்லையென்றாகிவிடாது, மக்கள் அதை ஆய்வுசெய்யவில்லை," என்கிறார் அவர். சில அரிதான சமயங்களில், இறைச்சிக்கு ஒவ்வாமை ஏற்படுவது சாத்தியமே. ஆல்பா- கால் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் நிலையில் விலங்குகள் சார்ந்த புரதங்களை உட்கொள்ளும்போது, நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அவற்றை தீங்கு விளைவிக்கும் பொருளாக பார்க்கும். இதனால் அனாபிலாக்ஸிஸ் (உடலில் அதிகமான அமிலங்கள் சுரக்கும் நிலை) மற்றும் இறப்பு கூட ஏற்படலாம். பல ஆண்டுகள் நன்றாக இறைச்சி சாப்பிட்டவர்களுக்கு கூட இந்த ஒவ்வாமை ஏற்படலாம். இதற்கும் குறைவான இறைச்சி உணவுமுறைக்கு மாறுவதற்கும் தொடர்பு இல்லை. உதாரணமாக உண்ணி கடித்த பிறகு கூட இம்மாதிரியான நிலை ஏற்படலாம். இறைச்சியை தவிர்ப்பவர்களில் பலருக்கு, தங்களை அறியாமல் அதை உட்கொண்டுவிட்டது தெரியவந்தால் உணர்வுப்பூர்வமாக வேதனையளிப்பதாக இருக்கலாம். சைவ உணவு உட்கொள்பவரான கெர்ஸ்டன், "இது சிலரை மிகவும் சோகமடையச் செய்யும்," என்கிறார். "ஆனால் இதனால் உடலில் அறிகுறிகள் ஏற்படுமா என்பது எனக்கு தெரியாது, ஆனால் அது அவர்களை மிகுந்த கோபத்திற்கு- உள்ளாக்க வாய்ப்புள்ளது," என்கிறார் கர்ஸ்டென். செரிமான செயல்முறையை கருத்தில் கொள்ளும்போது, நீண்டகால இடைவெளியில் இறைச்சியை செரிக்கும் திறன் குறைந்துவிடுவது சாத்தியமானதுதான் என நீங்கள் நினைப்பது அவ்வளவு சரியல்ல. பழங்கள், காய்கறிகள், பருப்புவகைகளில் இருக்கும் நார் சத்தைப் போல இல்லாமல் இறைச்சியை மிக எளிதில் நமது உடல் செரிமானம் செய்துவிடும். இதை சாத்தியமாக்க நமது உடலில் உள்ள நுண்ணுயிரிகள் உதவுகின்றன. தாவர புரதங்களை செரிக்கும் அதே என்ஜைம்கள்தான் இறைச்சியில் உள்ள புரதங்களையும் செரிமானம் செய்கிறது. உட்கொள்ளப்படும் புரதத்தில் உள்ள வேதி பிணைப்புகளை அடையாளம் கண்டு அவற்றை இந்த என்ஜைம்கள் பிரிக்கும். தாவரங்களிலிருந்து வந்தாலும், விலங்குகளிடமிருந்து வந்தாலும், புரதங்கள் அமினோ ஆசிட்களால் உருவாகியுள்ளன. எனவே எங்கிருந்து வந்தாலும் என்ஜைம்களால் புரதங்களை உடைக்கமுடியும். பட மூலாதாரம்,ALAMY இதிலிருந்து மாறுபட்டு இருப்பது விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பாலில் உள்ள லாக்டோஸ் போன்ற சர்க்கரைகள். லாக்டோஸை செரிக்க லாக்டேஸ் என்ற என்ஜைம் தேவைப்படும். ஒருவருக்கு இது குறைவாக சுரக்கும் போது அவரால் பால் சார்ந்த உணவுகளை உட்கொள்ள முடியாது (lactose intolerent). இவர்கள் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டால் வயிற்றுவலி போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஆனால் இறைச்சி புரதங்களை பொறுத்தவரை, ஒரு ஹேம்பர்கரை செரிமானம் செய்ய தேவையான என்ஜைம்களை உற்பத்தி செய்வதை உடல் நிறுத்திவிடும் என நினைப்பது அர்த்தமற்றது- அந்த என்ஜைம்கள் எப்போதும் இருக்கின்றன. ஏனென்றால் பட்டாணி, சோயா பீன் ஆகியவற்றை செரிக்க உதவும் அதே என்ஜைம்கள்தான் இதற்கும் தேவைப்படுகிறது, என்கிறார் கர்ஸ்டென். மனித குடலில் உள்ள நுண்ணுயிரிதொகுதி, தனி நபரின் உணவுப் பழக்கத்திற்கு ஏற்றார் போல மாற்றமடையும். இதனால் சில நேரங்களில் நமது உடலில் உள்ள சில பாக்டீரியா மற்றமடையலாம். அதே போல நுண்ணுயிரிகளும் வேறுவிதமான என்ஜைம்களை வெளியிடலாம். உணவுப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றம், நுண்ணுயிரிதொகுதியில் உடனடியாக மாற்ற முடியும். ஆய்வு ஒன்றில் பங்கேற்றவர்கள் முழுமையாக இறைச்சியை சார்ந்த உணவு முறைக்கு மாறினர். இதன் விளைவாக அவர்களின் நுண்ணுயிரிதொகுதியில் ஒரே நாளில் மாற்றம் தெரிந்தது(இந்த உணவுப்பழக்கம் முடிந்தவுடன் நுண்ணுயிரிதொகுதியும் விரைவில் பழைய நிலைக்கு திரும்பியது). இதில் ஈடுபட்டவர்கள் உடலில் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் தெரிவிக்கும்படி கூறப்பட்டிருந்தது. ஆனால் ஏதும் அறிக்கையில் இடம்பெறவில்லை. பட மூலாதாரம்,ALAMY சொல்லப்போனால், நீண்ட இடைவேளைக்கு பிறகு அதிக அளவிலான நார் சத்தை உட்கொள்வதால்தான் செரிமான பிரச்னைகள் ஏற்படலாம். இது போன்ற உணவு மாற்றங்களை படிப்படியாக கொண்டுவருவது நல்லது. "உட்கொள்ளும் நார்சத்தை பொறுத்து, சில கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்," என்கிறார் கர்ஸ்டென். நீண்ட இடைவேளைக்கு பின்னர் இறைச்சி சாப்பிட்டதால் வயிறு உபாதை உங்களுக்கு ஏற்பட்டால், இது இன்னமும் அதிகம் ஆய்வு செய்யப்படாததாக இருந்தாலும்,என்ஜைம்கள் குறைப்பாடு காரணமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் கர்ஸ்டென். "மனித உடல் என்பது சூழ்நிலைக்கு ஏற்றார் போல மாற்றம் அடையக்கூடியது. நீங்கள் நினைப்பதை விட அதிகமான செயல்களை அதனால் செய்யமுடியும்,". - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cp3yz974190o
  21. 13 MAR, 2025 | 08:20 PM (நமது நிருபர்) இலங்கை 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் குடும்ப நட்பு நாடாக காண்டே நாஸ்ட் டிராவலர் பெயரிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் குடும்ப நட்பு நாடுகள் பட்டியல் இலங்கை, சுவீடன், நோர்வே, நியூசிலாந்து, ஐஸ்லாந்து, ஜேர்மனி, பின்லாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா, அமெரிக்கா என அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் பயனாளர்களுக்கு பணம் அனுப்ப உதவும் அமெரிக்காவின் ரெமிட்லி மீள்குடியேற விரும்புபவர்களுக்கு தெரிவிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய குடிவரவு சுட்டெண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை சுகாதாரத் தரம், பொருளாதார வலிமையிலிருந்து பாதுகாப்பு அளவீடுகள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு வரையான 24 காரணிகளில் 82 நாடுகளை தர வரிசைப் படுத்தி ஒவ்வொன்றுக்கும் மொத்தம் 100 மதிப்பெண்களை வழங்குகிறது. ஒவ்வொரு நாட்டிலும் கல்வியின் தரம் மற்றும் கல்வியைப் பெற்றுக்கொள்தல் போன்ற தரவுப்புள்ளிகளைப் பார்ப்பதனூடான ஒரு நாடு எவ்வளவு குடும்ப நட்புடன் உள்ளது என்பது கருத்திற்கொள்ளப்படுகின்றது.இதில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை அதன் கல்வி முறைமையினால் ஈர்க்கக்கூடிய மதிப்பெண்ணை பெற்றுள்ளதுடன் 10ஆவது இடத்திலுள்ள அமெரிக்காவில் வருடாந்தம் 16439.40 டொலர் செலவுடன் ஒப்பிடும் போது ஆண்டொன்றுக்கு 354.60 டொலர் என்ற குறைந்த வருடாந்த குழந்தை பராமரிப்பு செலவையும் கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/209113
  22. புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மூன்றாவது தலைமுறையினை எட்டிவிட்ட நிலையில், இளைய ஈழத்தலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றது. அந்தவகையில் பிரான்சின் மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி கவனத்தை பெற்றுள்ள சுஜீவன் முருகானந்தம் எனும் உயர்நிலை மாணவர் உலகத் தமிழர்களின் தேர்வு வாக்குக்கு அழைப்பு விடுத்துள்ளார். மன இறுக்க உளப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள 4-12 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களின் அக-மன நிலையினை உணர்ந்தறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கை வளையல் கருவியொன்றினை உருவாக்கியுள்ளார். இக்கருவியூடாக அச்சிறார்களுக்கு ஏற்படுகின்ற மன இறுக்க உளப் பாதிப்புக்களை உடனடியாகவே கைபேசி வழியாக எச்சரிக்கும் திறன் கொண்டதோடு ஏற்படுகின்ற பாதிப்புக்களை முறையாக ஆவணப்படுத்தும் திறன்கொண்டதாகவும் இக்கருவி உருவாக்கம் பெற்றுள்ளது. நாடளாவிய ரீதியில் இத்துறைசார்ந்து 81 பேர் இதனை உருவாக்கியிருந்த நிலையில், இவர்களில் 6 பேர் தேசிய அளவிலான இறுதித்தேர்வுக்கு சென்றுள்ளனர். ஒவ்வொருவரது உருவாக்க கருவியின் பயன்பாடு, அதன் அவசியம் குறித்தான ஆய்வுகளின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக இறுதிச்சுற்றில் கருவி தேர்வு செய்யப்படவுள்ளது. இதில் மூன்றாம் நிலையாக பொதுமக்களும் தங்களுக்கு தேவையான கருவியினை தேர்வு செய்ய முடியும். அந்தவகையில் இவர்களில் ஒருவராக சுஜீவன் முருகானந்தம் அவர்கள் “cœur léger ” எனும் பெயரில் தனது கருவியை உருவாக்கியுள்ளார். எதிர்வரும் மார்ச் 14 ம் திகதி வெள்ளிக்கிழமை ஐரோப்பிய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னராக குறித்த https://gpseo.fr/prix-entrepreneur/coeur-leger-le-bracelet-qui-aide-les-enfants-gerer-leurs-emotions இந்த இணையத்தளத்துக்கு தேர்வுக்கான வாக்களிப்பினை மேற்கொள்ள வேண்டும். மின்னஞ்சல் பதிவுடன் சுஜீவன் முருகானந்தம், உருவாக்கியுள்ள “cœur léger ” எனும் கருவியினை தேர்வு செய்யும்பட்சத்தில் ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். 1995 யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு பின்னராக கிளிநொச்சியில் தற்காலிகமாக வாழ்ந்து அங்கிருந்து 2000 ஆம் ஆண்டுகளில் 7 வயதில் பிரான்சில் கால்பதித்த இந்த மாணவரே சுஜீவன் முருகானந்தம் ஆவார். https://thinakkural.lk/article/315975
  23. பயிர்செய்கைகளை நாசம் செய்யும் குரங்குகளை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவியுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட எம்.பி சுஜித் சஞ்சய பெரேரா அரசுக்கு ஆலோசனை வழங்கினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற 2025 வரவு- செலவுத் திட்டத்தின் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலைஆலோசனை வழங்கிய அவர் மேலும் பேசுகையில், காட்டு விலங்குகளினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்பு நாளாந்தம் தீவிரமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குரங்குகள் வருடாந்தம் 90 மில்லியன் அளவிலான தேங்காய்களை நாசம் செய்வதாக விவசாயத்துறை அமைச்சு குறிப்பிடுகிறது. மார்ச் 15 ஆம் திகதி வீட்டுத் தோட்டங்களுக்கும், விளைநிலங்களுக்கும் வரும் காட்டு விலங்குகளை கணக்கிடுமாறு குறிப்பிடப்படுகிறது. கணக்கிடுவதால் மாத்திரம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. குரங்குகளை பிடித்துக் கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 அல்லது 1000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவியுங்கள். குரங்குகளே பயிர்ச்செய்கைகளை அதிகளவில் நாசம் செய்கின்றன. கருத்தடை செய்ய முடியாவிடின் அவற்றை தனித்த காட்டு பகுதிகளுக்காவது கொண்டு சென்று விடுங்கள் என்றார். https://thinakkural.lk/article/315984
  24. இந்திய மீனவர்களுக்கு எதிராக கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்க இலங்கையில் தீர்மானம் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 48 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் பிரச்னை வலுப் பெற்றுள்ள பின்னணியில், கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை தரப்பு முன்னெடுத்துள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை(மார்ச் 14) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 15) நடைபெற உள்ளது. இந்த நிலைமையில், இந்த முறை நடைபெறுகின்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்தில் தாம் பங்கேற்க போவதில்லை என யாழ் மாவட்ட மீனவ சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்தை கண்டித்து இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நட்குணம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். 'விதிகளை வளைத்து ரூ.300 கோடி முறைகேடு' - உணவுத்துறை மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்9 மணி நேரங்களுக்கு முன்னர் பல அமைதி ஒப்பந்தங்களில் சௌதி அரேபியாவும், கத்தாரும் மத்தியஸ்தர்களாக இருப்பது ஏன்?4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையின் பூரண ஒத்துழைப்புடன் இந்த உற்சவம் நடத்தப்படவுள்ளது. இந்த விழாவுக்கு வரும் படகுகளுக்கு தற்காலிக இறங்கு துறைகளை அமைத்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், சுகாதார வசதிகள் அமைத்தல், சாலைகள் அமைத்தல், மின்சார வசதிகள் அமைத்தல், மருத்துவ வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை கூறுகின்றது. மேலும், தீவு பகுதி மற்றும் கரையோர பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டும் பாதுகாப்பு கேமராக்களை பொருத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று இலங்கை கடற்படை கூறுகின்றது. அத்துடன், பக்தர்களுக்கான தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் தொலைத்தொடர்பு கோபுரமொன்று பொருத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்தது. இந்த ஆண்டு உற்சவத்திற்கு 9000 பக்தர்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாக யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சார்பில் 4000 பக்தர்களும், இந்தியா சார்பில் 4000 பக்தர்களும் கலந்துக்கொள்ளவுள்ளதுடன், 1000 அதிகாரிகளும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவிலிருந்து இதுவரை 3464 பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இராமேஸ்வரத்திலிருந்து வருகைத் தர இவர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக யாழ் அரசாங்க அதிபர் அலுவலக தகவல்கள் குறிப்பிடுகின்றன. கச்சத்தீவு கொடியேற்றம் மார்ச் 14-ஆம் தேதி மாலை 4 மணிக்கு இடம்பெறும் அதேவேளை, 15-ஆம் தேதி காலை 7.30க்கு சிறப்பு திருப்பலி கூட்டு பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது. இலங்கையில் பெண் மருத்துவர் துஷ்பிரயோகம் - நாடு முழுவதும் போராட்டம் நடத்திய மருத்துவர்கள்5 மணி நேரங்களுக்கு முன்னர் கோவையில் மத்திய அரசுப் பணிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் - வட மாநிலத்தவர்கள் சிக்கியது எப்படி?6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய மீனவர்களின் வருகை இலங்கை கடற்பரப்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் வருகைத் தருவதாக இலங்கை மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர். 2025ம் ஆண்டின் இதுவரையான காலம் வரை இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ் 145 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 19 இந்திய படகுகளை தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களின் உடமைகள், அரசுடமையாக்கப்படும் என்ற சட்டம் 2018ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட 2018ம் ஆண்டு முதல் இதுவரையான காலம் வரை, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்களின் படகுகள் அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட காலப் பகுதி முதல் இன்று வரையான காலம் வரை 150திற்கும் அதிகமான படகுகள் இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல்வளம் மற்றும் கடல்வள அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்டட 124 படகுகள் அரசுடமையாக்கப்பபட்டுள்ளதுடன், 24 படகுகள் தொடர்பில் வழக்குகள் இடம்பெற்று வருவதாக கடற்றொழில், நீரியல்வள, கடல்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். சுனிதா வில்லியம்ஸ்: மீட்புக் குழுவின் ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்ன?8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தோனீசியாவில் உள்ள இந்தக் குகை மெக்காவுக்கு செல்லும் ரகசிய சுரங்கப் பாதையா?8 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு,அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் இலங்கை மீனவர்கள் எதிர்ப்பு தமிழர்கள் என்ற உணர்வு இல்லாத நிலையில், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நட்குணம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''ஏற்கனவே இருந்த நிலைமையை விடவும் அதிகளவில் இந்திய மீனவர்கள் வருகின்றார்கள். அரசாங்கம் தன்னுடைய செயலை செய்துக்கொண்டிருக்கின்றது. இந்திய மீனவர்களை கைது செய்துக்கொண்டிருக்கின்றார்கள். எங்களை பொறுத்தவரை அது தற்காலிக தீர்வாகவே இருக்கின்றது. எங்களுக்கு தேவை எங்களுடைய மீனவர்கள் சுதந்திரமாக எங்களுடைய பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்கான வசதிகளை எங்களுடைய அரசாங்கம் செய்து தர வேண்டும்" தொடர்ந்து பேசிய செல்லத்துரை நட்குணம், "எங்களுடைய எல்லையை தாண்டி இந்திய இழுவை படகுகள் வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது எங்களுடைய அரசாங்கத்தின் வேலை. அதனை நிச்சயமாக செய்ய வேண்டும். தொப்புள் கொடி உறவு என்று சொல்லி சொல்லி இந்த நிலையை செய்து கொண்டிருக்கின்றார்கள். எங்களுடைய மீனவர்கள் கடலில் போடும் வலைகளை இந்திய படகுகள் சுக்கு நூறாக இல்லாது செய்கின்றன. கடன்களை வாங்கி தான் இந்த தொழிலை செய்கின்றார்கள். இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டாம் என்று சொல்லி அங்கு போராட்டங்களை நடத்துகின்றனர். தமிழக மீனவர்கள், தமிழக மக்களுக்கு நாங்கள் ஆதரவு. எங்களுக்கு அவர்கள் மீது விருப்பம். இந்த செயலை பார்க்கும் போது அவர்கள் மீது வெறுப்பு வருகின்றது. தமிழன் என்ற உணர்வு இல்லாத நிலையில் அவர்கள் இந்த வேலையை செய்துக்கொண்டிருக்கின்றார்கள்'' என தெரிவிக்கின்றார். பாகிஸ்தான்: கடத்தப்பட்ட ரயிலில் இருந்து 300 பயணிகள் மீட்பு, 33 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை13 மார்ச் 2025 வங்கதேச ராணுவத்தில் அதிகாரக் கவிழ்ப்பு முயற்சி நடந்ததா? உண்மை என்ன?13 மார்ச் 2025 படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். கச்சத்தீவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவிற்கு விட்டு கொடுக்க போவதில்லை என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சம்மேளனத்தின் உபத் தலைவர் அந்தோனிபிள்ளை பிரான்ஸிஸ் ரத்னகுமார் தெரிவிக்கின்றார். ''கச்சத்தீவு எங்களுடையது. நாங்கள் அதை சுற்றி மீன்பிடிக்கின்றோம். கச்சத்தீவு அந்தோனியார் கோவிலுக்கு இந்தியாவில் இருந்தும் வருவார்கள். இலங்கையில் இருந்தும் போவார்கள். முன்னாள் கடற்றொழில் அமைச்சர் இரண்டு கச்சத்தீவு உற்சவத்திற்கு அழைத்து சென்றார். அந்த மீனவர்களுடன் நீங்கள் பேச வேண்டும் என சொல்லி அழைத்து சென்றார். ஆனால் அது தோல்வி அடைந்தது. நாங்கள் இங்கு வருவது பிழை என்று சொல்லிவிட்டு, அடுத்த நாளே இங்கு வந்து விடுவார்கள். அதைபற்றி நாங்கள் நம்புவதற்கு தயார் இல்லை. அரசாங்கம் இந்திய இழுவை படகை நிறுத்த வேண்டும். இந்தியாவிற்கு எங்களுடைய கச்சத்தீவை நாங்கள் எந்த காரணத்திற்காகவும் விட்டு கொடுக்க மாட்டோம்.'' என அந்தோனிபிள்ளை பிரான்ஸிஸ் ரத்னகுமார் குறிப்பிட்டார். படக்குறிப்பு,அந்தோனிபிள்ளை பிரான்ஸிஸ் ரத்னகுமார் 'கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்கின்றோம்' இந்திய மீனவர்களினால் தாம் எதிர்நோக்கும் அவல நிலைமையை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதற்காக இம்முறை கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவத்தை தவிர்த்துக்கொள்வதாக யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நட்குணம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். "இந்த பிரதேசத்தில் நாங்கள் சுதந்திரமாக தொழில் செய்ய வேண்டும் என்பதற்காகவும், நாங்கள் படுகின்ற அவல நிலைமையை தெரியப்படுத்துவதற்காக இந்த வருட புனித தலத்தின் விசேடத்தை யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளனம் தவிர்த்துக்கொள்கின்றது. அரசாங்கத்திற்கு இந்த நிலைமையை தெரியப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எங்களுக்கு தேவை ஒரு நிரந்தர தீர்வு", என்று செல்லத்துரை நட்குணம் குறிப்பிட்டார். சங்கம் என்ற வகையில் மாத்திரமே தாம் உற்சவத்தை புறக்கணிப்பதாக தெரிவித்த அவர், தனிப்பட்ட ரீதியில் பக்தர்களுக்கு செல்ல முடியும் எனவும் கூறினார். பலூச் விடுதலை ராணுவம்: பாகிஸ்தானில் பயணிகளுடன் ரயிலை கடத்தி மிரட்டும் இவர்கள் யார்?12 மார்ச் 2025 தொகுதி மறுவரையறை: 7 மாநில முதல்வர்களை ஒன்றிணைக்கும் ஸ்டாலினின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா?13 மார்ச் 2025 படக்குறிப்பு,செல்லத்துரை நட்குணம் கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்கும் தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தின் பதில் கச்சத்தீவு பிரச்னை என்பது வேறு, மீனவப் பிரச்னை என்பது வேறு என்ற அடிப்படையில், கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்க வேண்டாம் என கடற்றொழில், நீரியல்வளம், கடல் வளம் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், மீனவ சங்கங்களிடம் கேட்டுக்கொண்டார். ''எந்த சங்கங்கள் புறக்கணிக்கின்றார்கள் என்பது தொடர்பில் உண்மையில் எனக்கு தெரியாது. இருந்த போதிலும் நான் ஒரு விடயத்தை கூறுகின்றேன். இங்கிருக்கின்ற மீனவர்களுக்கும் சரி, இந்திய மீனவர்களுக்கும் சரி, இந்தியாவிலிருந்து வருகைத் தருகின்ற பக்தர்களும் சரி, இலங்கையிலுள்ள பக்தர்களும் சரி, இந்த கச்சத்தீவு பிரச்னையையும், இந்த மீன்பிடி பிரச்னையையும் ஒன்றாக இணைத்துக்கொள்ள வேண்டாம். அது வேறு இது வேறு. அந்த நிகழ்வுக்கு நானும் கூட போகலாம் என்று தீர்மானித்திருக்கின்றேன். அந்த ஆலயத்திற்கு சென்று ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்", என்று அமைச்சர் கூறினார். மேலும் பேசிய அவர், "அரசாங்கத்தோடு கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டும் என்றால், நேரடியாக செய்யலாம். எங்களுடைய மீனவர்களுக்கு அன்பாக அழைக்கின்றோம். உங்களுக்கான கதவு 24 மணித்தியாலங்களும் திறந்தே வைக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்னையும் முன்னர் போன்று இல்லை. நேரடியாக வரலாம். பேசலாம். உரையாடலாம். இந்த பிரச்னை எங்களுக்குரிய பிரச்னை இல்லை. நமக்குள் பிரச்னை. நாங்கள் நீங்கள் என அனைவரும் சேர்ந்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்னை. அதனால் நீங்கள் வேறு அல்ல. நான் வேறு அல்ல. இந்த நாட்டில் புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது, இதற்கான ஒத்துழைப்பை பெற்றுத்தர வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்' என பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj67w925ndno

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.