Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 16 MAR, 2025 | 09:46 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) இலங்கையிலுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே தற்போதுள்ள ஆட்சியாளர்களை ஆட்சிபீடத்துக்கு ஏற்றினோம். ஆனால் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்தாமலும் எமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் இருந்து வந்தால் நாம் மீண்டும் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படுமென கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தற்போதுள்ள அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். அத்துடன், லசந்த விக்ரமதுங்க கொலை, பிரதீப் எக்னெலியகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீய்த் நொயர் தாக்கப்பட்டமை உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ள அரசாங்கம் இனியும் காலம் தாழ்த்தக்கூடாது. இந்த விடயங்கள் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் இரகசியமாக வைத்துக்கொள்ளாமல், எவருடனும் 'டீல்' போடாமல் உண்மையை வெளியே கொண்டு வருவதற்கு விரைந்து செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்றுடன் 6 ஆவது ஆண்டு நிறைவு தினத்துக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்று பெற்றுக்கொடுப்பதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் நாம் வீதியில் இறங்குவதற்கு பின்னிற்க மாட்டோம் எனவும் பேராயர் குறிப்பிட்டார். 2025 ஜூபிலி ஆண்டை முன்னிட்டு கொழும்பு மறை மாவட்ட மக்கள் தொடர்பு மத்திய நிலையத்தினால் கொழும்பு பேராயர் இல்லத்தில் சனிக்கிழமை (15) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், நாட்டில் ஊடகச் சுதந்திரம், மானுடத்துவம், மக்கள் சுயாதீனமாக இருத்தல் போன்றவற்றை நிலைநாட்டுவதற்கும், நாட்டில் புதிய கலாச்சாரத்தை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். இதற்காகத் தான், நாம் உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தோம். தற்போது உங்களிடம் உள்ள ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு சட்ட திட்டங்களை திருத்துங்கள். அவற்றை திருத்துவதற்கு இனியும் காலவேளை தேவையில்லை. சட்டம் திருத்தப்பட வேண்டும் என கூறிக்கொண்டு இனியும் கால தாமதம் ஏற்படுத்தாதீர்கள். இந்நாட்டில் 1978 அரசியலமைப்பில் தனி ஒரு நபர் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன்வசப்படுத்துவற்கான சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த 1978 அரசியலமைப்பின் பின்னர், ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கு முழு காரணமும் அரசியல் தலைவர்கள் ஆவர். லசந்த விக்ரமதுங்க கொலை, பிரதீப் எக்னெலியகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீய்த் நொயர் தாக்கப்பட்டமை உள்ளிட்ட இன்னும் பல ஊடகயவியலாளர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து எந்தவொரு சட்ட நடவடிக்கைகளும் இல்லை. அவர்களுக்கு நீதியும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. தற்போதுள்ள அரசாங்கமும் இந்த விடயங்கள் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா குறித்து எனக்குத் தெரியாது. உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் சம்பவம் குறித்தும் எமக்கு அதனையே கூற வேண்டியுள்ளது. பலதரப்பட்ட வகையில் எமக்கு வாக்குறுதி அளித்தார்கள். வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கினர். எனினும், ஒரு வாக்குறுதியை கூட இதுவரை நிறைவேற்றவில்லை. இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் பிரிவினைகளை ஏற்படுத்தி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி, தேர்தல்களின்போது வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளே 1948 ஆம் ஆண்டிலிருந்து எமது அரசியல் தலைவர்கள் எமது நாட்டில் செய்து வருகின்றனர். இவ்வாறு, எமது அரசியல் தலைவர்கள் இனங்களுக்கிடையே, மதங்களுக்கிடையே குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ளும் ஓர் சமூகமாக இந்நாட்டு மக்களை உருவாக்கியதுடன், அவர்கள் சொல்வதை செய்யும் அடிமைகளாக்கினர். பட்டலந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ள விடயங்கள் மிகவும் மோசமான சம்பவங்களாகும். ஊடகங்களுக்கு வரம்பு நிலையை கொண்டு வருவதற்கு கடந்த அரசாங்கம் முயற்சித்திருந்தது. நல்ல‍ வேளையாக இது சட்டமாக்கப்படவில்லை. அவை சட்டமாக இயற்றப்பட்டால் எவரும் கருத்து தெரிவிக்க முடியாது வாயை மூடியிருக்க வேண்டியதுதான். இவ்வாறு கொண்டு வருவதற்கு காரணம் என்னவெனில், நம்மில் பலர் பக்கச்சார்பாக சிந்திப்பதுதான். சில ஊடகங்களும் பக்கச் சார்பாக செயற்படுவதுண்டு. இவ்வாறு அவர்கள் செயற்படுவதனால் உண்மைத் தன்மையை மக்கள் அறிய முடியாமல் போகின்றது. இந்த முறைமையை மாற்றியமைக்க வேண்டும். இந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றி அமைப்பற்காகவே, நாம் இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கான காரணமாகும். இந்த அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் நாம் மீண்டும் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். விசேடமாக ஊடகச் சுதந்திரம், மானுடத்துவம், சுயாதீனமாக இருத்தல் போன்றவற்றுக்கு தடையாக இருக்காதீர்கள். இந்த கலாச்சாரத்தை நிறுத்திவிடுங்கள். இலங்கையில், புதிய சிந்தனைகள், புதிய புதிய கலாச்சாரத்தை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். இதற்காகவே நாம் உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்தோம். இதனை செயற்படுத்துவதற்கான சட்ட திட்டங்களை மாற்றி அமையுங்கள். மாற்றியமைப்பதற்கு காலம் எடுக்கத் தேவையில்லை. தங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகில், அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவற்றை மாற்றியமைக்க முடியும். உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு இனியும் காலம் தாழ்த்தக்கூடாதென்றும், இவ்விடயம் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் இரகசியமாக வைத்துக்கொள்ளாமல், எவருடனும் 'டீல்' போடாமல் உண்மையை வெளியே கொண்டு வருவதற்கு தற்போது ஆட்சியுள்ள அரசாங்கம் விரைந்து செயற்படுவது அவசியம். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்றுடன் 6 ஆவது ஆண்டு நிறைவு தினத்துக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்று பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு எமக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் நாம் வீதியில் இறங்குவதற்கு பின்னிற்க மாட்டோம். ஆட்சிபீடம் ஏறியதன் பின்னர் கட்டுவப்பிட்டிக்கு வந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தவறாதீர்கள் என்றார். https://www.virakesari.lk/article/209328
  2. Published By: DIGITAL DESK 2 16 MAR, 2025 | 09:16 AM (ஆர்.ராம்) இலங்கையுடனான வெளிநாட்டுக் கடன்மறுசீரமைப்பை மேற்கொண்டதன் காரணமாக சீனாவின் பிரதான ஏற்றுமதி, இறக்குமதி பங்குதாரரான சீன எக்ஸிம் வங்கிக்கு 7பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். அத்துடன், தெற்காசியாவில் இலங்கை, இந்தியா, சீனா ஆகியன ஒன்றிணைந்து 'கூட்டுச் செயற்றிட்டமொன்றை' முன்னெடுக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சீனத்தூதரகத்தில் சீனத்தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும் ஊடகப்பிரதிநிதிகளுக்கும் இடையில், சீன அரசாங்கத்தின் செயற்பாட்டு அறிக்கை மற்றும் வெளிவிவகார கொள்கை மற்றும் உறவகள் பற்றிய உரையாடல் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆசியாக் கண்டத்தில் இந்தியாவும், சீனாவும் மிகப்பெரிய நாடுகள். இரு நாடுகளும் நட்பு நாடுகள். ஒரேயெல்லையைக் கொண்ட நாடுகளாகவும் உள்ளன. பாரம்பரிய நாகரீகத்தினையும் கொண்ட நாடுகளாகவும் உள்ளன. இரு நாடுகளிலும் பாரிய சந்தை வசதி காணப்படுவதோடு இரு நாடுகளுக்கும் பொருளாதார அபிவிருத்தி என்ற ஒரே இலக்கும் காணப்படுகின்றது. அந்த வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் முன்னேற்றமடைந்து மேம்பட்டவையாக இருக்க வேண்டியது அவசியமாகும். பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவும், ஜனாதிபதி ஷி தலைமையிலான சீனாவும் முரண்பாடுகளை களைந்து நல்லிணக்கத்துடன் பயணிக்க வேண்டியது அவசியமாகிறது. ஆசியப்பிராந்தியத்தில் இலங்கையும், இந்தியாவும், சீனாவும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் 'கூட்டு செயற்றிடடத்தில்' பங்கேற்க வேண்டும் என்பது எனது மிகப்பெரும் கனவாக உள்ளது. ஜனாதிபதி அநுரவின் சீனாவுக்கான விஜயம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த ஆண்டின் முற்பகுதியில் சீனாவுக்கு விஜயம் செய்தார். அவரது விஜயமானது இருநாடுகளுக்கும் இடையிலான வரவிலக்கணமாக அமைந்துள்ளது. அவரது விஜயத்தின்போது 15உடன்படிக்கைகள் கைச்சத்தாகியுள்ளதோடு, அவை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கும் இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கியுள்ளனர். இதன்மூலமாக இருநாட்டு பிரஜைகளும் அதிகளவான நன்மைகளை அடையவுள்ளனர். 2026ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை சீனா வழங்கியுள்ளதோடு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை அதிகளவான தொகை வழங்கப்படுகின்றது. இதில் பௌத்த கற்கை நிலையங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவற்றை வழங்குவதற்கான விசேட தூதுக்குழுவினரும் வருகை தரவுள்ளனர். மேலும், துறைமுகநகரத்தில் சீனாவின் மாநாட்டு மண்டபமொன்று நிர்மாணிக்கப்பட்டு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது. இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவதை பார்வையிடுவதற்காக விசேட தூதுக்குழுவொன்றும் வருகை தரவுள்ளது. சினோபெக் நிறுவனமானது, இலங்கைக்கு பாரியளவிலான வெளிநாட்டு முதலீட்டை கொண்டுவரவுள்ளதோடு கைத்தொழில்துறையை மேம்படுத்தி அதனூடாக வருமானத்தை ஈட்டுவதற்கும் பெரும்பங்களிக்கவுள்ளது. நான்கு வருடங்களாக நான் இலங்கையில் கடமையாற்றுகின்றேன். எமது மக்களுடன் மக்களுக்கான மூலோபாயத்தின் அடிப்படையிலான உதவிகள் எந்தவிதமான மறைமுகமான நிகழ்ச்சி நிரலையும் கொண்டதல்ல. கடன்மறுசீரமைப்பால் ஏற்பட்டுள்ள நட்டம் இலங்கையுடன் சீனாவே முதன்முதலாக கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டது. அந்த வகையில் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு முதலில் இணங்கிய நாடாகவும் சீனா இருக்கின்றது. ஆனால் இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் இன்னமும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. அதேநேரம், இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பை சீனா மேற்கொண்டதன் மூலமாக பெருந்தொகையான நிதியை இழந்துள்ளது. குறிப்பாக இலங்கையுடனான சீனாவின் கடன்மறுசீரமைப்பு இணக்கத்தினால் 7பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவின் எக்ஸிம் வங்கி இழந்துள்ளது. இந்த இழப்பு தொடர்பில் யாரும் பேசுவதில்லை. சீன எக்ஸிம் வங்கி சீனாவின் முக்கியமான ஏற்றுமதி, இறக்குமதி விடயங்களில் பங்காளராக இருக்கின்றது. ஆகவே இத்தகைய பெரும் இழப்பானது எவ்வாறிருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க முடியும். இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்காக சீனா பெருந்தியாகத்தைச் செய்துள்ளதோடு அதிகளவான பங்களிப்பையும் வழங்கியுள்ளது. ஆனால் அந்த விடயங்களை சீனா பிரசாரம் செய்வதில்லை. அமெரிக்க, ரஷ்ய உறவு உலக ஒழுங்கு மாறிவருகின்றது. பல்வேறு சவால்களை கடந்து பயணிக்க வேண்டியுள்ளது. இது ட்ரம் தலைமையிலான அமெரிக்காவுக்கு மட்டுமல்ல அனைத்து தரப்புக்களுக்குமே பொருந்தக்கூடியது தான். அந்த வகையில் சீனா கடந்த காலங்களைப்போன்று மோசமான கூறுகளின் தாக்கங்களை கடந்து பயணிப்பதற்கு உறுதி பூண்டுள்ளது. இங்கே அமெரிக்கா, ரஷ்யா உறவுபற்றி கேட்கப்பட்டது. சீனாவும், ரஷ்யாவும் அணிசேராக் கொள்கையை பின்பற்றுகின்றன. மூன்றந்தரப்பு மோதல்களை தவிர்ப்தொடு முரண்பாடுகளற்ற தேசங்களாக பயணிப்பதற்கான இணக்கத்தைக் கொண்டிருக்கின்றன. இந்த வரலாற்று ரீதியான பிணைப்பானது என்றும் மாற்றமடையப்போவதில்லை. அதேநேரம், அமெரிக்காவுடனான இருதரப்பு உறவுகளை சுமூகமாக முன்னெடுப்பதற்கு அதிகளவில் ஆர்வத்தை சீனா கொண்டிருக்கின்றது. எனினும் சீனாவுக்கு எதிராக பயங்கரவாதப்போர், வர்த்தகப்போர், தொழில்நுட்ப பரிநாம வளர்ச்சினை மட்டுப்படுத்தும் நிலைமைகள் தொடருகின்றன. எத்தைகயை போர்க்களை அமெரிக்கா தொடுத்தாலும் அந்தப்போர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சீனா எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராகவே உள்ளது. புதிய சீனா வடிவமைக்கப்பட்டு 76ஆண்டுகளாகின்றன. அந்த வகையில் எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் புதிய சீனா முகங்கொடுப்பதற்கு தயாராகவே உள்ளது. பல சவால்களை வெற்றிகொண்டு முன்னேற்றி வருகின்றது. தனக்கான பொருளாதாரத்தினை தனாவே உருவாக்கியுள்ளது என்றார். வினாக்களுக்கு பதிலளித்த தூதரகத்தின் பிரதிப் பிரதானி சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய், வடக்கில் இந்தியாவைத் தவிர வேறெந்த தரப்பினரும் கால்பதிக்க முடியாது என்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவித்த கருத்து தொடர்பிலான வினாவுக்க பதிலளித்தார். அவர், இலங்கை, இந்திய கடல் மற்றும் நிலங்களில் சீனாவிற்கு எவ்விதமான மூலோபாய கவனமும் கிடையாது. சீனா இலங்கையர்கள் என்ற அடிப்படையில் தான் அனைத்து மக்களுக்கும் உதவிகளை வழங்கி வருகின்றது. இலங்கையின் கடற்பரப்பு இலங்கைக்கு சொந்தமானது. இந்தியாவுடன் இலங்கையை மையப்படுத்திய முரண்பட வேண்டிய அவசியம் சீனாவுக்கு இல்லை. சீனாவும் இந்தியாவும் நட்பு நாடுகள். அத்துடன் இலங்கையுடான உறவுகளை மேம்படுத்துவதிலோ, உதவிகளை வழங்குவதிலோ சீனாவுக்கு எவ்விதமான மறைமுக நிகழ்ச்சி நிரலும் கிடையாது. இலங்கை மீண்டும் காலனித்துவ யுகத்துக்குள் செல்லப்போவதில்லை என்றார். இதேவேளை, அம்பாந்தோடையில் சினோபெக் நிறுவனத்தின் முதலீடு தொடர்பிலும் நிறுத்தப்பட்டுள்ள திட்டகளை முன்னெடுப்பது குறித்தும் அவர் தெளிவுபடுத்தல்களைச் செய்தார். அந்தவகையில் அரசியல் ஸ்திரத் தன்மை மற்றும் இலங்கையுடனான நெருக்கமான உறவுகளின் அடிப்படையில் தான் சீனா அம்பாந்தோட்டையில் தெற்காசியாவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை திறக்கின்றது. இந்த முதலீட்டை சீனாவின் சினோபெக் நிறுவனம் மேற்கொள்கின்றது. இதற்காக 3.7பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளது. இதன்மூலமாக 15ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர். தற்போதைய நிலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்காக ஆரம்பத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலத்தின் அளவிற்கு மேலதிகமாகவும் நிலம் பெறப்படவுள்ளது. அங்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை ஆரம்பிப்பதால் நீர்நிலைகள் பாதிக்கும் என்று கரிசனை வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே சீனா, நீர்நிலைகளை பாதுகாப்பதில் கவனம் கொண்டுள்ளதோடு நீர் விநியோகத்திற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் நீரின் தன்மை மாறிவிடும், அல்லது குறைந்து விடும் என்று அஞ்சத்தேவையில்லை. அதேநேரம், சீனாவின் சில திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடன் மறுசீரமைப்புக்கான அனைத்துச் செயற்பாடுகளும் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அந்தத் திட்டங்கள் மீள்பரிசீலனையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டும் என்றார். https://www.virakesari.lk/article/209279
  3. கடைசி ஓவர் வரை திக் திக்! மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன் - மதுரை வீராங்கனை கமலினி சாதித்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2025 சீசனுக்கான மகளிர் ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மும்பை அணி வெல்லும் 2வது சாம்பியன் பட்டம் இதுவாகும். ஏற்கெனவே 2023ம் ஆண்டில் அறிமுக ஐபிஎல் தொடரில் மும்பை அணி பட்டம் வென்றுள்ளது. மும்பையில் பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை அணி. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. 150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்து 8 ரன்னில் வெற்றியைத் தவறவிட்டது. டெல்லி கேப்டல்ஸ் அணி தொடர்ந்து 3வது முறையாக பைனலுக்கு வந்து, 3 முறையும் தோல்வி அடைந்தது. 2023ல் மும்பை அணியிடம் தோற்றது, 2024ம் ஆண்டில் ஆர்சிபி அணியிடம் தோற்ற நிலையில் 2025ம்ஆண்டில் மீண்டும் மும்பை அணியிடமே டெல்லி அணி தோற்றுள்ளது. அதிர்ச்சியளித்த டெல்லி அணி டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் மேக் வேனிங் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பவர்ப்ளே ஓவர்கள் மட்டுமல்லாது முதல் 10 ஓவர்கள் வரை டெல்லி அணியின் பந்துவீச்சில் பட்டையக் கிளப்பியது. டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி திணறியது. ஆட்டம் தொடங்கி 5வது ஓவருக்குள் தொடக்க வீராங்கனை யாஷிகா பாட்டியா(8), ஹீலி மேத்யூஸ்(3) இருவரின் விக்கெட்டுகளையும் காப் அருமையான பந்துவீச்சில் வீழ்த்தினார். 14 ரன்களுக்கு மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. காப் ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளத்தை அடுத்துவந்த பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்தி மும்பை அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES கேப்டன் ஹர்மன் பொறுப்பான ஆட்டம் 3வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், பர்ன்ட் இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். 10வது ஓவரில்தான் மும்பை அணி 50 ரன்களையே எட்டியது. டெல்லியின் பந்துவீச்சாளர்கள் காப், சதர்லாந்த், பாண்டே, ஜோனாசன் ஆகியோர் சேர்ந்து மும்பை ரன்ரேட்டை கட்டுப்படுத்தியதால் ஸ்கோர் உயரவில்லை. ஆனால், நிதானமாக ஆடிவந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு கட்டத்துக்கு மேல் அணியின் நிலையைப் பார்த்து அதிரடி ஆட்டத்தில் இறங்கி பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார். 38 பந்துகளில் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதத்தை எட்டினார். 15-வது ஓவரில் மும்பை அணி 100 ரன்களை எட்டியது. பர்ன்ட் 30 ரன்கள் சேர்த்த நிலையில் சரணி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு ஹர்மன்ப்ரீத், பர்ன்ட் இருவரும் 89 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவு ஜோனாசென் வீசிய 16-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்து தவித்தது. அமலி கெர்(2) ரன்னில் ஜோனாசென் பந்துவீச்சிலும், சஜீவன் சஜனா கால்காப்பில் வாங்கி ஜோனாசென் பந்துவீச்சில் டக்அவுட்டில் வெளியேறினார். ஹர்மன்ப்ரீத், கமலினி இருவரும் களத்தில் இருந்தனர். ஹர்மன்ப்ரீத் ஸ்கோரை உயர்த்தும் முடிவில் அடித்து ஆட முற்பட்டபோது, சதர்லாந்த் பந்துவீச்சில் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES 29 ரன்களுக்குள் 5 விக்கெட் 103 ரன்கள்வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த மும்பை அணி, அடுத்த 29 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதிலும் 112 ரன்களில் இருந்து 118 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது. கடைசி நேரத்தில் அமன்ஜோத் கவுர்(14), சன்ஸ்கிரிதி குப்தா(8) இருவரும் வேகமாக ரன்களைச் சேர்த்ததால், மும்பை அணி ஸ்கோர் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர், பிரன்ட் களத்தில் இருந்தபோது அணியின் ஸ்கோர் 170 ரன்களை எட்டும் என கணிக்கப்பட்டது. ஆனால், கடைசியில் 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே சேர்த்தது. டெல்லி அணித் தரப்பில் ஜோனாசென், சரணி, காப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி மோசமான தொடக்கம் 150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் களமிறங்கியது. ஷபாலி வர்மா, கேப்டன் லேனிங் இருவரும் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய லேனிங் இருபவுண்டரிகளை விளாசினார். ஆனால், பர்ன்ட் வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் லேனிங் க்ளீன் போல்டாகி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இஸ்மெயில் வீசிய 3வது ஓவரில் ஷபாலி வர்மா கால்காப்பில் வாங்கி 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பவர்ப்ளே ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து, 37 ரன்கள் மட்டுமே டெல்லி அணி சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES நம்பிக்கை தந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு ஜோனாசென், ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்து அணியை மெல்ல சரிவிலிருந்து மீட்டனர். ஆனால் இந்த பார்ட்னர்ஷிப்பும் நிலைக்கவில்லை, ஜோனாசென் 13 ரன்கள் சேர்த்திருந்தபோது கெர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பாட்டியாவிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய சதர்லாந்த் 2 ரன்னில் இஸ்காக் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார், ஓரளவு நிலைத்து பேட் செய்த ரோட்ரிக்ஸ் 30 ரன்னில் கெர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் டெல்லி அணி 66 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. விக்கெட் கீப்பர் சாரா 5 ரன்னில் ரன்அவுட் ஆகவே மும்பை அணி ஆதிக்கம் செய்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES காப் - நிக்கி பிரசாத் ஜோடி சிறப்பான ஆட்டம் காப், நிக்கி பிரசாத் ஜோடி 7-வதுவிக்கெட்டுக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் பேட் செய்தனர். கடைசி 5 ஓவர்களில் டெல்லி அணி வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்பட்டது. இஷ்காக் வீசிய 16-வது ஓவரை குறிவைத்து ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் என 17 ரன்கள் சேர்க்கவே ஆட்டம் விறுவிறுப்பானது. 17-வது ஓவரை வீசிய இஸ்மெயில் கட்டுக்கோப்பாக பந்துவீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்து ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார். கடைசி 3 ஓவர்களில் டெல்லி அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES திருப்புமுனை ஓவர் பர்ன்ட் வீசிய 18-வது ஓவரில் திருப்பம் ஏற்பட்டது. இந்த ஓவரில் காப் 40 ரன்கள் சேர்த்த நிலையில் மேத்யூஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். காப் இருக்கும் வரை டெல்லி அணிக்கு நம்பிக்கை இருந்தது, அவர் அவுட்டானதும் அந்த அணியின் நம்பிக்கையும் குலைந்தது. அடுத்துவந்த பர்ன்ட் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மினு மணி பவுண்டரி அடித்தார். டெல்லி அணி வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 23 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்தன. மேத்யூஸ் வீசிய 19-வது ஓவரில் மணி 4 ரன்னில் சஜானாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் நிக்கி பிரசாத் பவுண்டரி அடிக்கவே 9 ரன்கள் சேர்த்தது டெல்லி அணி. பட மூலாதாரம்,GETTY IMAGES திக் திக் கடைசி ஓவர் கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. பிரசாத், சரணி களத்தில் இருந்தனர். கடைசி ஓவரை பர்ன்ட் வீசினார். முதல் பந்தில் பிரசாத் ஒரு ரன்னும், 2வது பந்தில் சரணி ஒரு ரன்னும் எடுத்தனர். 3வது பந்தை சந்தித்த பிரசாத் ரன் எடுக்கவில்லை, 4வது பந்தில் பிரசாத் ஒரு ரன்னும், 5வது பந்தில் சரணி ஒரு ரன் எடுக்கவே மும்பை அணி சாம்பியன் பட்டம் உறுதியானது. கடைசி ஓவரை கச்சிதமாக வீசிய பர்ன்ட் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றியை மும்பை அணிக்கு பெற்றுக் கொடுத்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்து 8 ரன்னில் தோல்வி அடைந்தது. மும்பை அணித் தரப்பில் பர்ன்ட் 3 விக்கெட்டுகளையும், கெர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக்கு காரணமானவர்கள் மும்பை அணியின் வெற்றிக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்(66), பர்ன்ட்(30) இருவரும் பேட்டிங்கில் அளித்த பங்களிப்புதான் ஆட்டத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி அணியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இந்த ஆட்டத்தின் போக்கை மாற்றியது இருவரின் பேட்டிங்தான். இருவரைத் தவிர மும்பை அணியில் வேறு எந்த வீராங்கனைகளும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. ஹீரோவான பர்ன்ட் பந்துவீச்சிலும் பர்ன்ட் அற்புதமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இஸ்மெயின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, கெர் வீழ்த்திய 2 விக்கெட்டுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றின. கடைசி நேரத்தில் காப், பிரசாத் இருவரும் வெற்றியை நோக்கி டெல்லி அணியை நகர்த்தினர். ஆனால் இஸ்மெயில் வீசிய 17வது ஓவர் டெல்லி அணிக்கு நெருக்கடியை அதிகப்படுத்தி, அடுத்தடுத்து விக்கெட் சரிய காரணமாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணிக்கு டாஸ் வெற்றி முதல் அனைத்துமே சாதகமாக இருந்தது. ஆனால் எதையுமே சரிவர பயன்படுத்தாததுதான் தோல்விக்கு காரணம். பவர்ப்ளே ஓவருக்குள் மும்பை அணியின் டாப்ஆர்டர் விக்கெட்டை சாய்த்து ஆட்டத்தை டெல்லி அணி கைக்குள் கொண்டு வந்தது. ஆனால், அதன்பின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தவும், ஹர்மன், பர்ன்ட் பார்ட்னர்ஷிப்பை உடைக்கவும் டெல்லி பந்துவீச்சாளர்கள் தவறவிட்டனர். அது மட்டுமல்லாமல் கடைசி 5 ஓவர்களில் டெல்லி அணி 45 ரன்களை விட்டுக்கொடுத்ததும் தோல்விக்கு முக்கியக் காரணம். அதேபோல பேட்டிங்கிலும் டெல்லி அணியில் காப், ரோட்ரிக்ஸ் தவிர வேறு எந்த பேட்டரும் பங்களிப்பு செய்யவில்லை. கடைசிநேரத்தில் காப், பிரசாத்துக்கு துணையாக வேறு பேட்டர்கள் இருந்திருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். சீரான இடைவெளியில் டெல்லி அணி விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு முக்கியக் காரணம். குறிப்பாக 37 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி அணி. அடுத்த 50 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 123 ரன்களில் இருந்து 128 ரன்களுக்குள் அதாவது 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியை தேடிக்கொண்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES மதுரை வீராங்கனை ஏமாற்றம் கமலினி ஒரு சிக்ஸர் உள்பட10 ரன்கள் எடுத்து சரணி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது. உள்நாட்டுப் போட்டிகளிலும், 19வயதுக்குட்பட்டோருக்கான முத்தரப்பு தொடர்களிலும் சிறப்பாக ஆடியதால் கமலினியை அந்த அணி வாங்கியது. இந்த 2025 ஐபிஎல் தொடரில் அறிமுகமான கமலினி 9 போட்டிகளில் 32 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதிகபட்சமாக ஆர்சிபி அணிக்கு எதிராக 11 ரன்கள் சேர்த்தார். கமலினி மீது மிகுந்த எதிர்பார்ப்பை மும்பை அணி வைத்திருந்த நிலையில் இந்த தொடரில் அவரது பேட்டிங் எதிர்பார்த்தபடி அமையவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0kgr41r238o
  4. படையினரால் வன்கொடுமைக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி வழங்கவில்லை; உயிருடன் இருந்த இசைப்பிரியா கொல்லப்பட்டது எப்படி - சாணக்கியன் கேள்வி 15 MAR, 2025 | 06:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இசைப்பிரியா உயிருடன் இருந்தமைக்கான சாட்சியங்கள் பல வெளியாகின. கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் உயிருடன் இருந்த இசைப்பிரியாவின் புகைப்படங்கள் வெளியாகின. பின்னர் ஆடையின்றி இருக்கும் காணொளிகள் வெளியாகின. இசைப்பிரியா ஒரு பெண் இல்லையா, ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பெண்கள் படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் இவர்களுக்கு ஏன் நீதி வழங்க முடியாதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அநுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்த நாட்டில் இனியொருபோதும் இவ்வாறான சம்பவங்கள் தோற்றம் பெறாமல் இருக்க வேண்டும். இந்த நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அநுராதபுரம் சம்பவத்துக்கு அரசாங்கமும், நாட்டு மக்களும் கொந்தளிப்பதை போன்று ஏன் தமிழ் பெண்கள் படுகொலை செய்யப்பட்டமைப்பு கொந்தளிக்கவில்லை. சிறந்த உதாரணமாக எமது இசைப்பிரியாவை குறிப்பிட முடியும். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இசைப்பிரியா உயிருடன் இருந்தமைக்கான சாட்சியங்கள் பல வெளியாகின. கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் உயிருடன் இருந்த இசைப்பிரியாவின் புகைப்படங்கள் வெளியாகின. பின்னர் ஆடையின்றி இருக்கும் காணொளிகள் வெளியாகின. இசைப்பிரியா ஒரு பெண் இல்லையா, அவருக்கு இந்த நாட்டில் நீதி தேவையில்லையா?, படுகொலை செய்யப்பட்ட தமிழ் பெண்களுக்கு நீதியை வழங்க ஏன் இலஙகை அரசாங்கங்கள் அவதானம் செலுத்துவதில்லை. முடிந்தால் விசாரணை செய்து சட்டத்தை நிலைநாட்டுங்கள். இராணுவத்தினர் கூட்டு பாலியல் வன்கொடுகைளிலும் ஈடுபட்டார்கள். இந்த அநீதிகளுக்கு எப்போது நீதி கிடைக்கும். பாதிக்கப்பட்ட எமது சமூகம் தொடர்ந்து நீதியை கோருகிறார்கள். குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு இந்த அரசாங்கமும் செயற்படுகிறது. பொறுப்புற்கூறல் விவகாரத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/209282
  5. கனகராசா சரவணன் பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு (ஐ லவ் யூ) தெரிவித்த அதே வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவனை அதிபர் பிரம்பால் கண்டித்ததையடுத்து மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக அந்த பிரதேச பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது; ஆண், பெண் பிள்ளைகள் கற்றுவரும் கலவன் பாடசாலையில் சம்பவதினமான நேற்று குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவரை பார்த்து அதே வகுப்பில் கல்விகற்று வரும் மாணவன் (ஐ லவ் யூ) என தெரிவித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து குறித்த மாணவி பாடசாலை அதிபரிடம் சென்று குறித்த மாணவன் ஐ லவ் யு என தெரிவித்ததாக முறைப்பாடு செய்ததையடுத்து அதிபர் குறித்த மாணவனை தனது காரியாலயத்துக்கு வரவழைத்து பிரம்பால் மாணவன் மீது இரண்டு அடி கொடுத்து ஒழுக்கமாக நடக்குமாறு தெரிவித்து எச்சரித்து அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற மாணவன் அதிபர் தனக்கு அடித்துள்ளார் என தெரிவித்ததையடுத்து மாணவனை பெற்றோர் மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அதிபரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிறுவர் பெண்கள் பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/316063
  6. 15 MAR, 2025 | 05:06 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு 160 இலட்சம் ரூபாவை செலவழித்துள்ளது. அதற்காக அவர்கள் இவர்கள் வெட்கப்பட வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் இந்த நிதி குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு சபைக்கு உண்மையை அறிவிக்க வேண்டுமென சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க வெளிவிவகாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்படும் சேவைகளுக்காக நாட்டு மக்களின் வரிப்பணம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஏனைய அமைச்சுக்களில் காணப்படும் ஊழல் மோசடி மற்றும் நிதி வீண்விரயம் வெளிவிவகாரத்துறை அமைச்சினையும் விட்டுவைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயம் தொடர்பிலான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த தனிப்பட்ட விஜயத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு செலவழித்துள்ளது. இந்த தனிப்பட்ட விஜயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பாரியார், சேனாநாயக்க திசாநாயக்க, சந்திரா பெரேரா உட்பட 10 பேர் கலந்துக் கொண்டுள்ளனர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட லண்டன் பயணத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு 160 இலட்சம் ரூபாவை செலவழித்துள்ளது. ஆரம்பத்தில் தனிப்பட்ட பயணம் என்று குறிப்பிடப்பட்ட நிலையில் பயணத்தின் பின்னர் அரசமுறை பயணம் என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த பயணத்துக்கான செலவுகள் தொடர்பான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் வங்குரோத்து நிலைக்கு மத்தியில் மக்களின் நிதியை இவ்வாறு வீண்விரயமாக்கியுள்ளார்கள். உண்மையில் வெட்கப்பட வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சு இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு சபைக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என்றார். வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்படும் சேவைகளுக்காக நாட்டு மக்களின் வரிப்பணம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஏனைய அமைச்சுக்களில் காணப்படும் ஊழல் மோசடி மற்றும் நிதி வீண்விரயம் வெளிவிவகாரத்துறை அமைச்சினையும் விட்டுவைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் லன்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயம் தொடர்பிலான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த தனிப்பட்ட விஜயத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு செலவழித்துள்ளது. இந்த தனிப்பட்ட விஜயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பாரியார், சேனாநாயக்க திசாநாயக்க, சந்ரா பெரேரா உட்பட 10 பேர் கலந்துக் கொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட லன்டன் பயணத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு 160 இலட்சம் ரூபாவை செலவழித்துள்ளது. ஆரம்பத்தில் தனிப்பட்ட பயணம் என்று குறிப்பிடப்பட்ட நிலையில் பயணத்தின் பின்னர் அரசமுறை பயணம் என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த பயணத்துக்கான செலவுகள் தொடர்பான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் வங்குரோத்து நிலைக்கு மத்தியில் மக்களின் நிதியை இவ்வாறு வீண்விரயமாக்கியுள்ளார்கள். உண்மையில் வெட்கப்பட வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சு இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு சபைக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/209308
  7. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ மூலம் ஆஜரானார் பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி Published By: RAJEEBAN 15 MAR, 2025 | 12:07 PM பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டே சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜரான முதல் ஆசிய தலைவராகியுள்ளார். பிலிப்பைன்சின் 79 வயது முன்னாள் ஜனாதிபதி அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து வீடியோ மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளில் இணைந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ரொட்ரிகோ டுட்டர்டே நீண்டதூரம் பயணம் செய்ததை கருத்தில் கொண்டு நீதிபதி இதற்கான அனுமதியை வழங்கியிருந்தார். போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தின்போது இவர் 30,000க்கும் அதிகமான பொதுமக்களை கொலை செய்தார் என சர்வதேச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. 2016 முதல் 2022 முதல் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக பதவிவகித்த செவ்வாய்கிழமை ஐசிசியின் பிடியாணையின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் விமானம்மூலம்நெதர்லாந்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் அவர் வீடியோ மூலம் கலந்துகொண்டவேளை அவர் இழைத்ததாக தெரிவிக்கப்படும் குற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டதுடன் அவருக்கு தன்னை நியாயப்படுத்துவதற்கான உரிமைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. பலவீனமானவராக காணப்பட்ட பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி தனது பெயர் விபரங்களை உறுதி செய்தார். இதேவேளை தனது கட்சிக்காரர் பிலிப்பைன்சிலிருந்து கடத்தப்பட்டுள்ளார் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/209267
  8. Published By: RAJEEBAN 14 MAR, 2025 | 02:33 PM பனாமா கால்வாயை அமெரிக்கா தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான வழிவகைகள் குறித்து அமெரிக்க இராணுவத்திடம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசனை கோரியுள்ளார் என இரண்டு அதிகாரிகள் ரொய்ட்டரிடம் தெரிவித்துள்ளனர். வடஅமெரிக்காவிற்கும் தென்அமெரிக்காவிற்கும் இடையிலான சமவெளியின் மிக குறுகிய பகுதியில் அமைந்துள்ள உலகின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிகளில் ஒன்றான பனாமாகால்வாயை அமெரிக்கா மீண்டும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவிரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பலமுறைதெரிவித்துள்ளார். எனினும் அதனை இராணுவழிமுறை ஊடாக செய்யப்போகின்றாரா அல்லது வேறு வழிமுறையிலா என்பதை அவர் தெரிவிக்கவில்லை. டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு வழிகாட்டுதல் என்ற இரகசிய ஆவணம் பனாமா கால்வாயை தடையின்றி அமெரிக்கா பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை இராணுவத்திடமிருந்து கோரியுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பனாமா இராணுவத்துடன் இணைந்து செயற்படுவது உட்பட அமெரிக்க இராணுவத்திடம் பலவகையான சாத்தியப்பாடுகள் உள்ளன என மற்றுமொரு இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்த கேள்விக்கு பென்டகன் உடனடியாக பதிலளிக்கவில்லை என கார்டியன் தெரிவித்துள்ளது. இந்த இடைக்கால ஆவணம் குறித்த தகவலை முதன்முதலில் சிஎன்என் வெளியிட்டுள்ளது.பனாமா கால்வாயிற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்குமாறு அமெரிக்க இராணுவத்தை டிரம்ப்நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது என என்பிசி தெரிவித்துள்ளது. பனாமா கால்வாயை சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து அமெரிக்காவிற்கு எதிராக செயற்படக்கூடும் எனஆதாரமில்லாமல் தெரிவித்துவரும் டிரம்ப் அமெரிக்கா பனாமா கால்வாயை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என வாதிட்டுவருகின்றார். https://www.virakesari.lk/article/209183
  9. Published By: DIGITAL DESK 2 15 MAR, 2025 | 05:12 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இராணுவத்தில் ஒருசில படையினர் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். இதனை முழு இராணுவத்தினர் மீதும் தொடர்புபடுத்தி இராணுவத்தினர் யுத்தக் குற்றத்திலும், பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது. சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் காலத்துக்கு பொருத்தமற்றவையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ராஜபக்‌ஷக்களை ரணில் விக்கிரமசிங்கமே பாதுகாத்தார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறிப்பிட்டிருந்தார்.எங்களுக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார். அதிகளவில் வழக்குகளை தாக்கல் செய்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் ஒழிப்பு அலுவலகத்தின் செயலாளராக பதவி வகித்த ஆனந்த விஜேபால தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுகிறார். நீங்களே அந்த வழக்குகளை தாக்கல் செய்தீர்கள். அவற்றில் நாங்கள் நீதிமன்றத்தினால் நாங்கள் விடுதலையாகியுள்ளோம். கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் இறையாண்மைக்ககு எதிராக செயற்பட்டார். ஆனால் தற்போது சர்வதேச ஊடகங்களில் அவர் நாட்டை காட்டிக்கொடுக்காமை தொடர்பில் மகிழச்சியடைகின்றோம். எமது அரசியல் மாற்றங்கள் என்பது வேறு விடயமாகும். நம்மிடையே நட்புறவுகள் உள்ளன. 2005இல் ஒரே மேடையில் இருந்தோம். 2015 இல் நீங்களும் ரணிலும் ஒரே மேடையில் இருந்தீர்கள். இப்போது பட்டலந்த அறிக்கையை நீங்களே முன்வைக்கின்றீர்கள். அன்று அந்த அறிக்கையை மறைத்து வைத்துக்கொண்டு இருந்தீர்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் 2005இல் உடன்படிக்கை கைச்சாத்திடும் போது குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று கூறவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அமைச்சரவையிலும் இருந்தீர்கள். அப்போதும் பட்டலந்த அறிக்கை தொடர்பில் பேசவில்லை. ஆனால் இப்போது சர்வதேச ஊடகம் கேட்டதும் அந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளீர்கள். நாங்கள் நாட்டை பாதுகாக்க வேண்டும். நாட்டின் முன்னாள் தலைவர் ஒருவர் வெளிநாட்டுக்கு சென்று எமது இராணுவத்தினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதனை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு சென்றால் மஹிந்த ராஜபக்ஷவுக்கோ, ரணில் விக்கிரமசிங்கவுக்கோ பாதகமாக அமையாது, முழு நாடும் நெருக்கடிக்குள்ளாக நேரிடும். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், இராணுவத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். இராணுவத்தினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டனர் என்பது மட்டுன்றி பாலியல் வன்கொடுமைகளிலும் ஈடுபட்டதாகவும் கூறுகின்றார். ஏதேனும் சம்பமொன்று முன்னாள் இராணுவ சிப்பாயால் நடந்திருக்கலாம். ஒரு நபரின் செயற்பாட்டை முழு இராணுவத்தினருடனும் தொடர்புபடுத்த வேண்டாம். பாதாள கும்பல் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதில் தலையீடு செய்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். அந்த நடவடிக்களை எடுக்கும் போது நாங்கள் உங்களை பாதுகாக்கின்றோம். பாதாள உலக கும்பலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் போது பிலிப்பைன்ஸில் நடந்ததை போன்று மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. இதனால் இறுதியில் நாடே வீழ்ச்சியடையும். இங்கே சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் காலத்திற்கு பொருத்தமானது அல்ல. இராணுவத்தினர் அன்று யுத்தம் செய்தனர். அதன்போது ஏதேனும் சம்பவம் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை செய்வதல்ல பிரச்சினை, இதனை அரசியல் விடயமாக மாற்றி, வருடங்கள் பலவற்றுக்கு பின்னரும் இதுபற்றி கூறிக்கொண்டு போனால் 1988 இல் நடந்த சம்பவத்தை 2028 இலும் கதைப்போம் என்றால், 2009இல் நடந்தவற்றை 2048 இலும் கதைக்க தயாராவோம் என்றால் அதனூடாக இந்த சமுகத்தில் வெறுப்புணர்வு உருவாகுவதை நிறுத்த முடியாது. வெறுப்புணர்வற்ற அரசியலை இங்கே கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசு என்ற விடயத்தில் நாம் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/209297
  10. படக்குறிப்பு, எய்ம்ஸில் நடந்த அரிய அறுவை சிகிச்சையில், மோஹித்தின் உடலில் கூடுதலாக இருந்த இரண்டு கால்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர் கட்டுரை தகவல் எழுதியவர், அன்ஷுல் சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில புகைப்படங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். நான் மோகித்தை முதல் முறையாகப் பார்த்தபோது அவரது சட்டையின் முன்பகுதியைத் தனது கைகளால் பிடித்துக்கொண்டிருந்தார். இதைத்தான் அவர் கடந்த 17 ஆண்டுகளாகச் செய்து வந்துள்ளார். இது அவருக்குப் பழகியும் போனது. ஆனால் அவர் இனி அதைச் செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் அவ்வாறு அவர் செய்வதற்குக் காரணமாக இருந்த, அவரின் உடலில் கூடுதலாக இருந்த இரண்டு கால்கள் கடந்த மாதம் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டன. மிகவும் அரிதான இந்த அறுவை சிகிச்சையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் செய்து முடித்தனர். உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த மோகித்தால் தனது வயிற்றுப் பகுதியில் இருந்த இரண்டு கூடுதல் கால்கள் நீக்கப்பட்டு விட்டதை இன்னமும்கூட நம்ப முடியவில்லை. "எனக்கு நான்கு கால்கள் இருந்தது. அதை நீக்க முடியும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் மருத்துவர்கள் அதைச் செய்து காட்டினார்கள். நான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மிகுந்த அச்சத்தோடுதான் வந்தேன்," என்று மகிழ்ச்சியோடு மோகித் கூறினார். "எனக்கு இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. எனது வயிற்றில் இருந்த கூடுதல் சுமையை இறக்கி வைத்ததைப் போல் இருக்கிறது." மருத்துவத் துறையில் இந்த நிலையை ஒட்டுண்ணி இரட்டையர்கள் (Parasitic Twins) என்று அழைப்பர். மோகித்தின் உடலில் கூடுதலாக இருந்த இரண்டு கால்கள் இருந்தன. அவரது பிட்டம், வெளிப்புறத்தில் இருக்கும் பிறப்புறுப்பு ஆகியவை அவருடைய நெஞ்சுப் பகுதியுடன் இணைந்திருந்தது. இதன் எடை 15 கிலோவாக இருந்தது. மருத்துவர் அசுரி கிருஷ்ணா தலைமையில் நடந்த இந்த அறுவை சிகிச்சை, பிப்ரவரி 8 ஆம் தேதி கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. நீரிழிவு, உடல் பருமன் மருந்துகளில் புரட்சியை ஏற்படுத்தும் கிலா அரக்கன் பல்லியின் விஷம் மாடுகள் எவ்வாறு தகவல் பரிமாறிக் கொள்கின்றன? மனிதன் புரிந்து கொண்டால் என்ன மாற்றம் நிகழும்? விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் இதயம் வேகமாக முதுமை அடையுமா? படக்குறிப்பு,அறுவை சிகிச்சைக்கு முன் மோஹித் குமார். ஒட்டுண்ணி இரட்டையர் குறைபாடு பற்றி அசுரி கிருஷ்ணா விரிவாக விளக்கினார். "கருமுட்டையும், விந்தணுவும் இணையும்போது கருவணு ஒன்று உருவாகும். இதுதான் குழந்தையாக வளர்ச்சியடையும். சில நேரங்களில் தொடக்கத்தில் இது இரண்டு பகுதிகளாகப் பிரியலாம். இதன் விளைவாக இரட்டைக் குழந்தைகள் உருவாகின்றனர். ஆனால் சில நேரங்களில் இவை இரண்டும் சரியாகப் பிரியாமல் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும்." "பின்னர் இது முழுமையான மனித உயிராக வளர்ச்சியடையும்போது பிறக்கும் குழந்தைகள்தான் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். மோகித்தை பொறுத்தவரை, கரு உருவானபோது இரண்டு குழந்தைகளும் பிரியவில்லை. அதே சமயம் ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடைவும் இல்லை." "இதனால் ஒருவர் முழுமையாக வளர்ச்சியடைந்ததும், மற்றொரு குழந்தையின் பாகங்கள் இவரது உடலிலேயே ஒட்டுண்ணியைப் போல ஒட்டிக்கொண்டன. இது முழுமையாக வளர்ச்சியடைந்த மனிதனின் உடலில் இருக்கும் ரத்தம் மற்றும் சத்துகளை உறிஞ்சி வாழக்கூடியது." மோகித்தின் நிலை குறித்து விளக்கிய அவர், "இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பாகங்களால் தொடுதல், வலி போன்ற அனைத்து விதமான உணர்ச்சிகளையும் உணர முடியும்," என்றார். பிபிசியிடம் பேசிய மருத்துவர் கிருஷ்ணா, உலகம் முழுவதும் இது போன்ற வழக்குகள் வெறும் 40 முதல் 50 வரை மட்டுமே பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். இதுபோன்ற வழக்குகளில் குழந்தைகள் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதையும் தெரிவித்தார். அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், வயிற்றுப் பகுதியில் இருந்து வெளியே வந்திருந்த இரண்டு கூடுதல் கால்கள் காரணமாக சிறுவனின் இயல்பான வளர்ச்சி தடைப்பட்டதாகத் தெரிவித்தனர். இந்தக் கால்களால் உடலிலுள்ள மற்ற பாகங்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அறுவை சிகிச்சை இன்றியமையாத ஒன்றாக இருந்தது. அவரது உடலில் இருந்த ஒட்டுண்ணி இரட்டையருக்கு, அவரின் மார்புப் பகுதியில் இருந்த நரம்பின் வழியாக ரத்தம் பாய்ந்து வந்தது அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் வாயிலாகத் தெரிய வந்தது. அறுவை சிகிச்சையைப் பற்றிப் பேசிய மருத்துவர் கிருஷ்ணா, "உடலில் ஒட்டிக்கொண்டிருந்த கூடுதல் பாகங்களை நீக்கியவுடன், மோகித்தின் உடலில் இருந்த 30 முதல் 40 சதவீத ரத்தம் வெளியேறியது. இதனால் அவரின் ரத்த அழுத்தம் குறைந்தது. இதுபோன்ற ஒரு நிலை ஏற்படலாம் என்பதால், நாங்கள் இதற்குத் தயாராக இருந்தோம். அவரது நிலையைச் சீர் படுத்தினோம். அறுவை சிகிச்சையின்போது மோகித்தின் எந்தவொரு பாகமும் பாதிப்படையாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம்," என்றார். இதற்குப் பின்னர் அவரின் வயிற்றுப் பகுதியில் இருந்த கட்டியை மருத்துவர்கள் நீக்கினார்கள். உடல் பருமனாகாமல் இருக்க தினசரி சமையலில் எந்த எண்ணெய், எவ்வளவு சேர்க்க வேண்டும்?8 மார்ச் 2025 தூங்குவதற்காகவே சுற்றுலா செல்வது குறித்து உங்களுக்கு தெரியுமா?7 மார்ச் 2025 பட மூலாதாரம்,BBC/TARIQ KHAN படக்குறிப்பு,நான்கு கால்கள் இருப்பதால், மோஹித் படிப்பைப் பாதியில் விட்டுவிட நேரிட்டதாக மோஹித்தின் தந்தை கூறினார். கதிரியக்க நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இணைந்து இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு நாட்களில் அவர் மீண்டும் வீட்டிற்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். மோகித் நான்கு மாத குழந்தையாக இருந்தபோதே அவரது அம்மாவை இழந்துவிட்டார். இவரது தந்தையான முகேஷ் குமார் கஷ்யப்தான் மோகித்தை குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்த்து வருகிறார். நான்கு கால்கள் இருந்த காரணத்தால் உடல் ரீதியாக மட்டுமின்றி சமூகத்திலும் பல சவால்களை மோகித் சந்திக்க நேரிட்டது. அதுகுறித்து அவரது தந்தை முகேஷ் குமார் கூறுகையில், "மோகித்தை பள்ளிக்கு அனுப்பியபோது, அங்கிருக்கும் மற்ற மாணவர்கள் அவனை கிண்டல் செய்வார்கள். இதனால் மோகித் என்னிடம் வந்து, தன்னைத் துன்புறுத்துவதாகவும், 'நாலு கால், நாலு கால்' என்று கிண்டல் செய்வதாகவும் என்னிடம் கூறினான்," என்றார். இதன் பின்னர் மோகித் தனது பள்ளிப் படிப்பை எட்டாம் வகுப்புடனே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அந்தப் பழைய கதைகளை மறந்து புது அத்யாயத்தை தொடங்க மோகித் முயற்சி செய்யப் போவதாகத் தெரிவித்தார். "என்னிடம் இருந்த சுமையை இறக்கி வைத்துவிட்டேன். இனி நானும் மற்ற சிறுவர்களைப் போல இருப்பேன்," என்றார் மோகித். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c30mj5g1mq5o
  11. 15 MAR, 2025 | 05:29 PM கைத்தொழில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட ஆனால் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக உற்பத்திக் கைத்தொழில்களை பயனுள்ளதாக முன்னெடுத்தல், ஒருங்கிணைத்தல், அபிவிருத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய சவால்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது. சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தின் ஆரம்ப முதலீடுகள் மேற்கொள்ளல் மற்றும் அவற்றின் முறையான கண்காணிப்பு முதலீட்டு சபைகளை அண்டிய உள்ளூர் சிறு அளவிலான கைத்தொழில்களை உருவாக்குதல் மற்றும் சிறு மற்றும் மத்திய தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் வணிகக் கடன்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பரவலாக ஆராயப்பட்டது. கைத்தொழில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட ஆனால் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். உள்ளூர் கைத்தொழிலாளர்களை வலுப்படுத்த இறக்குமதி கட்டுப்பாடுகளை செயற்படுத்துதல் மற்றும் கணக்காய்வு செய்தல் நிர்மாணத்துறைசார் கொள்முதல் செயற்பாட்டில் உள்ளூர் விநியோகஸ்தர்கள் குறித்து அதிக கவனம் செலுத்துதல் இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணத் கைத்தொழில் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதன் முழு வருவாயையும் தேசிய பொருளாதாரத்தில் இணைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/209295
  12. “தமிழருக்கான 13வது திருத்த சட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என இந்தியாவிற்கான ஐ.நா.பிரதிநிதி அரின்டம் பாக்ஜீ தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 58வது கூட்டத் தொடர் வேளையில், இந்திய தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் கூட்டத்தின் போதே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். ஐ.நா. மண்டபத்தில் நடத்தப்பட்ட இக் கூட்டத்தின் முக்கிய பேச்சாளராக, இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர், நீதியரசர்(Justice) வி. இராம சுப்பிரமணியம், இந்தியாவின் மனித உரிமை நிலைமை பற்றி ஓர் நீண்ட உரையாற்றியிருந்தார். இவர் தமிழ் நாட்டு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது உரையில், “படிப்பிக்கும் பொழுது யாரும் ஏதும் முக்கிய கேள்வி கேட்டால், இவ் விடயம் பாடத்திட்டத்தில் (syllabus) இல்லையென கூறுவது சுலபமென கூறியிருந்தார்”. இராம சுப்பிரமணியத்தின் உரையை தொடர்ந்து சபையில் கேள்விகள், அபிப்பிராயங்கள், கருத்துக்கள் கூறுவது ஆரம்பமாகியது. அவ்வேளையில், அக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் – பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன் கேள்வி எழுப்பினார். அதாவது, சிறிலங்காவில் யுத்தம் முடிந்த காலம் தொட்டு, இந்தியாவினால், தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வாக 13வது திருத்த சட்டத்தை முற்று முழுதாக நிறைவேற்ற வேண்டுமென இந்தியா கூறிவந்துள்ளது. ஆனால் சிறிலங்காவில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, இந்தியா தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அமைதியாக உள்ளது? இவ் அமைதி, 13ம் திருத்த சட்ட விடயத்தில் இந்தியாவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என கிருபாகரன் கேள்வி எழுப்பினார். இவ்வினா வெளிநாட்டு விடயமாகையால் இராம சுப்பிரமணியம் இவ் வினாவிற்கு பதில் கூறுவதை தவிர்த்திருந்த பொழுதிலும், இந்தியாவிற்கான ஐ.நா. பிரதிநிதி அரின்டம் பாக்ஜீ (Mr. Arindam BAGCHI) அவர்கள், சபையில் உடனே பதில் கூறியிருந்தார். அவர் கூறியதாவது, “சிறிலங்கா விடயத்தில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வான 13வது திருத்த சட்டம் என்பதில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. நீங்கள் விரும்பினால், இவ்விடயமாக டெல்கியில் கதைத்து உறுதிப்படுத்தலாமெனவும் கூறியிருந்தார். அரின்டம் பாக்ஜீ, சிறிலங்காவில் 2014ம் முதல் 2018 ஆண்டுவரை இந்தியாவின் துணை தூதுவராக கடமையாற்றியதுடன், இந்தியாவின் வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளராக மூன்று வருடங்கள் கடமையாற்றினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இக் கூட்டத்தில் சிறிலங்காவின் தூதுவர் திருமதி கிமாலி அருணதிலாக உட்பட, மண்டபம் நிறைந்த ராஜதந்திரிகள், தமிழ் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/316060
  13. ஐபிஎல் 2025: சிஎஸ்கே ஆட்டங்கள் எப்போது? கேப்டன்கள், தொடக்க விழா, மாறும் விதிகள் உள்பட முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும், கோடைகால விளையாட்டுத் திருவிழா 2025ம் ஆண்டு சீசனுக்கான 18-வது ஐபிஎல் டி20 தொடர் இந்த மாதம் தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு அணி வீரர்களுடன் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சீசனைப் போல் இல்லாமல் ஒட்டுமொத்த அணிகளிலும் உள்ள வீரர்கள் மாற்றப்பட்டு ஏராளமான புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஆர்சிபி, லக்னெள அணி ஆகியவற்றுக்கு புதிய கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணி கோப்பையைத் தக்க வைக்குமா, நட்சத்திர வீரர் விராட் கோலிpயன் ஆர்சிபி அணி இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா, சிஎஸ்கே, மும்பை அணிகள் தங்களது வேட்டையைத் தொடருமா, புதிய அணிகள் ஏதேனும் கோப்பையை வெல்லுமா என்பன போன்ற பெரிய எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் வருண் தவான், ஷ்ரதா கபூர், பாடகர் அர்ஜித் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மார்ச் 22 மாலை 6 மணிக்கு தொடக்க நிகழ்ச்சி தொடங்குகிறது (கோப்பு புகைப்படம்) ஐபிஎல் 2025 1. ஐபிஎல் டி20 போட்டித் தொடர் எந்த தேதியில் தொடங்குகிறது, எப்போது முடிகிறது? 18வது சீசன் ஐபிஎல் டி20 தொடர் மார்ச் 22-ஆம் தேதி தொடங்குகிறது. மே 25-ஆம் தேதி முடிகிறது. 65 நாட்களில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடக்கிறது. 2. 2025 ஐபிஎல் தொடரில் எத்தனை அணிகள் பங்கேற்கின்றன? 2025 ஐபிஎல் டி20 தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்ளென சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. 3. ஐபிஎல் டி20 போட்டியில் முதல் ஆட்டம் எப்போது? எந்தெந்த அணிகள் மோதுகின்றன? மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் இந்த ஐபிஎல் டி20 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. 4. 10 அணிகளின் கேப்டன்கள் யார்யார்? ருதுராஜ் கெய்க்வாட் (சிஎஸ்கே) ஹர்திக் பாண்டியா(மும்பை இந்தியன்ஸ்) சஞ்சு சாம்ஸன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) அக்ஸர் படேல் (டெல்லி கேபிடல்ஸ்) சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்) ஸ்ரேயாஸ் அய்யர் (பஞ்சாப் கிங்ஸ்) ரிஷப் பந்த் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) அஜிங்கயே ரஹானே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ரஜத் பட்டிதார் (ராயல் சேலஞ்சர்ஸ்) பேட் கம்மின்ஸ் (சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்) டபுள் ஹெட்டர்ஸும், குவாலிஃபயர் போட்டிகளும்! 5. ஐபிஎல் தொடரில் மொத்தம் எத்தனை போட்டிகள் நடக்கின்றன? 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 சீசனில் மொத்தம் 74 போட்டிகள் 65 நாட்களில் நடத்தப்படுகின்றன. இதில் 12 போட்டிகள் டபுள் ஹெட்டர்ஸ் முறையில் அதாவது ஒரே நாளில் இரு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 6. ஐபிஎல் போட்டிகள் எந்தெந்த நகரங்களில் நடக்கின்றன? ஐபிஎல் டி20 போட்டிகள் இந்த முறை 13 நகரங்களில் நடக்கின்றன. சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டிணம், லக்னெள, புதுடெல்லி, அகமதாபாத், முலான்பூர், ஜெய்பூர், தரம்சாலா, கெளஹாத்தி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன. 7. ஒரே நாளில் 2 ஆட்டங்கள் (டபுள் ஹெட்டர்ஸ்) எந்தெந்த தேதியில் நடக்கின்றன? 2025 ஐபிஎல் சீசனில் மொத்தம் 12 டபுல் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் டபுள் ஹெட்டர்ஸ் மார்ச் 23ம் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 30, ஏப்ரல் 5,6, 12,13 தேதிகளில் நடக்கிறது. அதன்பின 19,20, 27 தேதிகளில் டபுள் ஹெட்டர்ஸ் போட்டி நடக்கிறது. மே மாதத்தில் 4, 11 , 18 ஆகிய தேதிகளில் ஒரே நாளில் இரு ஆட்டங்கள் நடக்கின்றன. 8. ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் 1 போட்டி எப்போது, எங்கு நடக்கிறது? ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் முதல் போட்டி மே மாதம் 20ம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கில் இரவு நடக்கிறது. 9. ஐபிஎல் தொடரில் குவாலிஃயர் 2 போட்டி எப்போது, எங்கு நடக்கிறது? ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் 2வது போட்டி மே மாதம் 23ம் தேதி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபிஎல் டி20 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது 18 சேனல்களில் நேரலை 10. ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டி எப்போது எங்கு நடக்கிறது? ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்றுப் போட்டி மே மாதம் 21ம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கில் இரவு நடக்கிறது. 11. ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி எப்போது எங்கு நடக்கிறது? ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி மே மாதம் 25-ஆம் தேதி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. 12. ஐபிஎல் போட்டியை எந்த சேனல் நேரலை செய்கிறது, எந்த செயலியில் பார்க்கலாம்? 2025 சீசனுக்கான ஐபிஎல் டி20 போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரடியாக காணலாம். இது தவிர மொபைலில் ஜியோ சினிமாவில் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரடியாகப் போட்டியைப் பார்க்க முடியும். 13. ஐபிஎல் தொடரில் டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் பிற்பகலில் எத்தனை மணிக்குத் தொடங்கும்? ஐபிஎல் டி20 தொடரில் மொத்தம் 12 டபுள்ஹெட்டர்கள் போட்டிகள் நடக்கின்றன. இதில் முதல் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கும், 2வது போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மார்ச் 23ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே மும்பை அணியுடன் மோதுகிறது சென்னையில் நடக்கும் போட்டிகள் எத்தனை? 14. சிஎஸ்கே அணி எத்தனை லீக் ஆட்டங்களில் விளையாடுகிறது, தேதிகள் என்ன? 2025 ஐபிஎல் சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி என பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் சிஎஸ்கே, கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்ளென சூப்பர் ஜெயின்ஸ்ட் அணிகள் உள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் உள்ள சிஎஸ்கே அணி தன்னுடைய குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் தலா 2 போட்டிகளும், பி குரூப்பில் உள்ள அணிகளுடன் மும்பை தவிர்த்து மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு போட்டி என 14 லீக் ஆட்டங்களில் மோதுகிறது. மார்ச் 23ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே மும்பை அணியுடன் மோதுகிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 28 (ஆர்சிபி), மார்ச் 30 (ராஜஸ்தான்), ஏப்ரல் 5 (டெல்லி), ஏப்ரல்8 (பஞ்சாப்), ஏப்ரல்11 (கொல்கத்தா), ஏப்ரல் 14 (லக்னெள), ஏப்ரல்20 (மும்பை), ஏப்ரல்25 (சன்ரைசர்ஸ்), ஏப்ரல் 30 (பஞ்சாப்), மே3 (ஆர்சிபி), மே7 (கொல்கத்தா), மே12 (ராஜஸ்தான்), மே18 (குஜராத்) ஆகிய தேதிகளில் சிஎஸ்கே அணி விளையாடுகிறது. 15. சென்னை சேப்பாகத்தில் எத்தனை ஆட்டங்கள் நடக்கின்றன? சென்னையில் 2025 ஐபிஎல் டி20 தொடரில் 7 ஆட்டங்கள் நடக்கின்றன. மார்ச் 23, மார்ச் 28, ஏப்ரல்-5, ஏப்ரல் 11, ஏப்ரல் 25, ஏப்ரல் 30,மே 12 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன. 16. சென்னையில் இறுதிப்போட்டி, குவாலிஃபயர் ஆட்டங்கள் நடக்கிறதா? இல்லை, சென்னையில் லீக் ஆட்டங்கள் மட்டுமே நடக்கின்றன. குவாலிஃபயர் ஆட்டங்களோ, இறுதிப்போட்டியோ நடக்காது. 17. ஐபிஎல் டிக்கெட் விற்பனை சென்னையில் எப்போது தொடக்கம்? சென்னையில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ரீசெல் டிக்கெட் விற்பனை செய்யும் தளமான வியாகோகோவில் சிஎஸ்கே-மும்பை ஆட்டத்துக்கான டிக்கெட் விலை ரூ.1.23 லட்சத்துக்கு பேரம்பேசப்படுகிறது, குறைந்தபட்சமாக ரூ.17ஆயிரத்துக்கு பேரம் பேசப்படுகிறது. 18. சிஎஸ்கே-மும்பை அணி ஆட்டங்கள் எந்தெந்த தேதியில், எங்கு நடக்கின்றன? 2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே-மும்பை அணிகள் 2 முறை லீக்ஆட்டங்களில் மோதுகின்றன. முதல் ஆட்டம் மார்ச் 23ம் தேதி, சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. 2வது ஆட்டம் ஏப்ரல் 20ம் தேதி மும்பை வான்ஹடே மைதானத்தில் நடக்கிறது. 19. சிஎஸ்கே-ஆர்சிபி ஆட்டங்கள் எப்போது, எங்கு நடக்கின்றன? 2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் 2 முறை லீக்ஆட்டங்களில் மோதுகின்றன. முதல் ஆட்டம் மார்ச் 28ம் தேதி, சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. 2வது ஆட்டம் மே 3ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய விதிகள் 20. ஐபிஎல் தொடரில் புதிய விதிகள் என்ன? ஐபிஎல் அணிகளில் உள்ள வீரர்களின் ஓய்வறைக்குள் நண்பர்கள், சப்போர்ட் ஸ்டாப், குடும்ப உறுப்பினர்கள் செல்ல அனுமதியில்லை. அணி வீரர்கள் அனைவரும் ஒரே பேருந்தில்தான் பயணிக்க வேண்டும், தனியாக காரில் பயணிக்கக் கூடாது. போட்டி நடக்கும் நாட்களில் பயிற்சி கிடையாது. திறந்தவெளி வலைப்பயிற்சி இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே வீரர்கள் ஓய்வறைக்குள் செல்ல முடியும். எல்இடி போர்டுகளில் வீரர்கள் பந்தை அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். எல்இடி போர்டுக்கு முன் வீரர்கள், அணியின் ஊழியர்கள் அமரக்கூடாது. அவர்களுக்கான இடத்தில்தான் அமர வேண்டும். ஆரஞ்சு, பர்ப்பிள் தொப்பி வாங்கிய வீரர்கள் அதனை குறைந்தபட்ச நேரம் அணிந்திருக்க வேண்டும். வீரர்கள் ப்ளாப்பி தொப்பி, ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸி அணிய அனுமதியில்லை. முதல் முறை தவறு செய்தால் எச்சரிக்கையும் 2வது முறை அபராதமும் விதிக்கப்படும். ஜெர்ஸியில் எண்கள் மாற்றப்படுவதற்கு 24 மணிநேரத்துக்கு முன்பாக ஓர் அணி தெரிவிக்க வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2g47xp5x6o
  14. Published By: RAJEEBAN 14 MAR, 2025 | 01:56 PM காசா மருத்துவமனையின் மகப்பேறு வோட்கள் ஐவிஎவ் சிகிச்சை நிலையங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் ஒரு இனப்படுகொலை செயல் என ஐநா தெரிவித்துள்ளது. காசாவின் பெண்களிற்கு மருத்துவசதிகளை வழங்கும் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் திட்டமிட்டு மேற்கொண்ட தாக்குதலை இனப்படுகொலை நடவடிக்கைகளிற்கு சமனானது என தெரிவித்துள்ள ஐநா பாலஸ்தீன பிரதேசங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அவற்றை அழிப்பதற்கும் இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறையை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் சுயாதீன ஆணைக்குழு மேற்கொண்ட 49 பக்க அறிக்கை ஐநாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காசா மருத்துவமனைகளில் மகப்போறு வோர்ட்கள் மற்றும் பெண்களிற்கு சுகாதார சேவைகளை வழங்கும் ஏனைய நிலையங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து விரிவான விபரங்களை அந்த அறிக்கையில் காணமுடிகின்றது. ஐவிஎவ் சிகிச்சை நிலையங்கள் அழிக்கப்பட்டமை காசாவிற்குள் மருந்துகள் உணவுபொருட்கள் நுழைவதற்கு அனுமதிமறுக்கப்பட்டமை காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் இனப்பெருக்க திறனை ஒரு பகுதியாக அழித்துவிட்டது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. ரோம் சட்டம் மற்றும் இனப்படுகொலைசமவாயம் ஆகியவற்றின் அடிப்படையில் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் இரண்டுவகையான இனப்படுகொலைகளாகும்.ஒன்று பாலஸ்தீனியர்களை உடல்ரீதியாக அழிப்பதற்கு திட்டமிட்டு அவர்களின் வாழ்க்கை முறை வேண்டுமென்றே திட்டமிட்டு பாதிப்புகளை ஏற்படுத்துதல் மற்றையது பிறப்பை தடுப்பதற்காக திட்டமிட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என மனித உரிமை பேரவை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் பொது இடங்களில் நிர்ப்பந்தப்படுத்தி ஆடைகளை களைதல் பாலியல் தொந்தரவுகள், பாலியல் வன்முறை அச்சுறுத்தல் ,உட்பட சிலவகையான பாலியல் மற்றும் பாலினஅடிப்படையிலான வன்முறைகளை தங்களின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர் என ஐநாவின்அறிக்கை தெரிவித்துள்ளது. பாலியல் வன்முறை மற்றும் பாலியல் அடிப்படையிலான சித்திரவதைகள்போன்ற இஸ்ரேலிய படையினர் பயன்படுத்தும் பாலியல்வன்முறையின் வடிவங்களை பயன்படுத்துகின்றது இது யுத்த குற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்கு சமனாது என ஐநா தெரிவித்தள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் நிகழ்த்தப்படும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான குற்றங்களின் பரவல் மற்றும் தீவிரம் பாலஸ்தீன மக்களை சீர்குலைக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் ஒடுக்கவும்அழிக்கவும் இஸ்ரேல் அதிகளவில் பாலியல் வன்முறையை ஒரு போர் வடிவமாக பயன்படுத்துகின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அரசியல் மற்றும் இராணுவத்தலைமை பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு வெளிப்படையான உத்தரவுகளை அல்லது மறைமுகமான ஊக்கத்தை வழங்கியுள்ளது என ஐநாவின் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/209179
  15. Published By: VISHNU 15 MAR, 2025 | 02:46 AM (எம்.மனோசித்ரா) தேசிய அபிவிருத்தியில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை உணர்ந்து, பொருளாதாரத்தில் பெண்கள் முழுமையாகப் பங்கேற்பதைக் கட்டுப்படுத்தும் தடைகளை உடைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் மகத்தான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு தடைகள் பொருளாதாரத்தில் அவர்களின் முழு பங்களிப்பையும் மட்டுப்படுத்தியுள்ளன. பெண்கள் வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களாக முன்னேறக்கூடிய ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் இந்தத் தடைகளை உடைக்க எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. பெண் தொழில்முனைவோருக்கு உகந்த சூழலை உருவாக்குவதன் மூலமும், குழந்தை பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் பெண்களின் பொருளாதார பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் மாற்றுத்திறனாளி சேவைகள் போன்ற துறைகளை வலுப்படுத்துவதன் மூலமும் பெண்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/209242
  16. சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - எப்போது திரும்புவார்? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,சர்வதேச விண்வெளி நிலையத்தில் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) புதிய குழுவினரை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு செலுத்தியுள்ளது. இந்த இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாட்கள் மட்டுமே தங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, அவர்கள் 9 மாதங்களுக்கும் மேலாக தங்க நேரிட்டது. "புட்ச் மற்றும் சுனிதா ஆகிய இருவரும் ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளனர். அவர்களை மீண்டும் அழைத்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று நாசாவின் வணிகக் குழு திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் கூறினார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புதிய குழுவினர் சென்ற 2 நாட்களில் சுனிதா மற்றும் புட்ச் பூமிக்கு தங்களது பயணத்தை தொடங்குவார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான நாசாவின் நிக் ஹேக், ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ், விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து இவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர். அவர்களுக்குப் பதிலாக, ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிகளைத் தொடர்வார்கள். தமிழ்நாடு பட்ஜெட் 2025: 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப், டேப்14 மார்ச் 2025 உதகை, கொடைக்கானலில் ஏப்ரல் 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் - ஒரு நாளில் எவ்வளவு வாகனங்களுக்கு இனி அனுமதி?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA இவ்விரு குழுக்களுக்கான பணிப்பரிமாற்றம் 2 நாட்கள் நீடிக்கும். அதன் பிறகு பழைய குழுவினர் பூமிக்குத் திரும்பும் பயணத்தை மேற்கொள்வார்கள். ஆனால், பூமியில் பாதுகாப்பான மறு நுழைவுக்கான சூழ்நிலைக்காகக் காத்திருக்க நேரிட்டால், இன்னும் சிறிது தாமதம் ஏற்படலாம் என்று சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்தின் மேலாளர் டானா வெய்கல் கூறினார். "வானிலை ஒத்துழைக்க வேண்டும், அது சாதகமாக இல்லாவிட்டால், அந்த நேரம் வரும் வரையில் நாங்கள் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்வோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். கடந்த வாரமே விண்வெளி வீரர்கள் தங்களின் பணிகளை கைமாற்றத் தொடங்கிவிட்டதாக வெய்கல் விளக்கினார். "சுனிதா, விண்வெளி வீரர் அலெக்ஸி ஓவ்சினினிடம் தனது பணிகளை ஒப்படைத்தார்." என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,NASA விண்வெளி நிலையத்தில் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக விண்வெளி வீரர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். சுனிதா வில்லியம்ஸ் அதை தனது "மகிழ்ச்சியான இடம்" என்று விவரித்தார். ஆனால் திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சிமியோன் பார்பர், தனிப்பட்ட முறையில் சில பாதிப்புகள் இருந்திருக்கும் என்று பிபிசி செய்தியிடம் கூறினார். "ஒரு வாரம் நீடிக்கும் ஒரு வேலைப் பயணத்திற்கு நீங்கள் அனுப்பப்படும் போது, அது ஒரு வருடத்தின் சிறந்த பகுதியை எடுக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை," என்று அவர் கூறினார். "விண்வெளியில் இவ்வளவு நீண்ட காலம் தங்கியிருப்பது குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்திருக்கும், அவர்கள் வீட்டில் பல விஷயங்களை அவர் தவறவிட்டிருப்பார்." என்றார் அவர். ஸ்பேஸ்எக்ஸின் போட்டியாளரான போயிங் விண்வெளி நிறுவனத்தின் ஸ்டார்லைனர் என்ற சோதனை விண்கலத்தில் புட்ச் மற்றும் சுனிதா, ஜூன் 2024 தொடக்கத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். விண்கலத்தின் மேம்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் அதனை ஏவுதல் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் போது சிக்கல்கள் இருந்ததால் ஸ்டார்லைனரை ஏவும் பணி பல ஆண்டுகள் தாமதமானது. பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவதற்கு விண்கலத்தின் வேகத்தை குறைக்க தேவைப்படும் ஸ்டார்லைனரின் சில த்ரஸ்டர்களில் உள்ள சிக்கல்கள் மற்றும் உந்துவிசை அமைப்பில் ஹீலியம் வாயு கசிவு ஆகியவை அவர்களின் இருப்பை விண்வெளியில் அதிகப்படுத்தியது. இதையடுத்து புட்ச் மற்றும் சுனிதாவை ஸ்டார்லைனரில் கொண்டு வருவதில் ஒரு சிறிய ஆபத்தை கூட அனுமதிக்க கூடாது என்று நாசா முடிவு செய்தது. இதையடுத்து, ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் காப்ஸ்யூலில் புட்ச் மற்றும் சுனிதாவை மீண்டும் பூமிக்கு அழைத்து வர தீர்மானிக்கப்பட்டது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட சர்வதேச விண்வெளி நிலைய பணியாளர்குழு சுழற்சியின் போது இதைச் செய்வதே சிறந்த வழி என்று நாசா முடிவு செய்தது. தமிழில் ரூபாயை குறிக்க 'ரூ' பயன்படுத்தப்பட ஆரம்பித்தது எப்போது?- ஓலைச் சுவடியில் எப்படி எழுதப்பட்டுள்ளது?14 மார்ச் 2025 யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீடித்த அமைதியை ஏற்படுத்துவதில் உள்ள முக்கிய சவால்கள் என்னென்ன?2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA "போயிங்கிற்கு கஷ்டம்தான்" புட்ச் மற்றும் சுனிதாவை ஸ்டார்லைனரில் பூமிக்கு அழைத்து வருவது பாதுகாப்பானதாக இருந்திருக்கும் என்று போயிங் நிறுவனம் தொடர்ந்து வாதிட்டு வருகிறது. அதற்கு பதிலாக ஒரு போட்டியாளரான ஸ்பேஸ்எக்ஸின் காப்ஸ்யூலைப் பயன்படுத்துவதற்கான முடிவு குறித்து அந்நிறுவனம் அதிருப்தி அடைந்துள்ளது. இது போயிங்கிற்கு "தர்மசங்கடமாக" இருக்கும் என்று டாக்டர் பார்பர் கூறுகிறார். "விண்வெளிக்கு அழைத்துச் சென்ற விண்வெளி வீரர்கள் ஒரு போட்டியாளரின் விண்கலத்தில் திரும்பி வருவதைப் பார்ப்பது போயிங்கிற்கு கஷ்டம்தான்." என்றார் அவர். பட மூலாதாரம்,NASA டிரம்ப், மஸ்க் குற்றச்சாட்டிற்கு நாசா மறுப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஈலோன் மஸ்க் ஆகிய இருவரும் கடந்த பிப்ரவரியில் ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த கூட்டு நேர்காணலில், புட்ச் மற்றும் சுனிதாவை முன்பே வீட்டிற்கு அழைத்து வந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். "அவர்கள் விண்வெளியில் விடப்பட்டனர்" என்று டிரம்ப் கூறுகிறார். நெறியாளர் சீன் ஹானிட்டி, "அவர்கள் 8 நாட்கள் மட்டுமே அங்கே இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கிட்டத்தட்ட 300 நாட்களாக அங்கே இருக்கிறார்கள்" என்று என்று குறிப்பிட்டார். அதற்கு டிரம்ப் ஒரே வார்த்தையில், "பைடன்" என்று பதிலளித்தார்: "அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அங்கேயே விடப்பட்டனர்." என்று மஸ்க் கூறினார். இந்த கூற்றை நாசாவின் வணிகக் குழு திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிட்ச் மறுக்கிறார். "நாங்கள் பல்வேறு வாய்ப்புகளை பரிசீலித்தோம், ஒட்டுமொத்தமாக எது சிறந்தது என்பதைப் பார்க்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துச் செயல்பட்டோம்,," என்று அவர் கூறினார். கொலம்பியா விண்கல விபத்தில் இருந்து நாசா கற்றுக்கொண்ட பாடம் என்ன? ராஜேந்திர சோழன் சிற்றன்னை நினைவாகக் கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான கோவிலில் வெளிப்பட்ட பாதாள அறை மீட்புக் குழுவின் ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்ன? "நாசா சரியான முடிவை எடுத்துள்ளது" லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தின் விண்வெளித்துறை தலைவரும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஐரோப்பிய கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றியவருமான டாக்டர் லிப்பி ஜாக்சன், இந்த முடிவை ஆதரித்துள்ளார். "புட்ச் மற்றும் சுனிதாவின் நல்வாழ்வு எப்போதும் அனைவரின் மனதிலும் பிரதானமாக இருந்திருக்கும். ஏனெனில் அவர்கள் முன்னிருந்த சூழ்நிலைகளை எவ்வாறு சிறப்பாகச் சமாளிப்பது என்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன," என்று அவர் கூறினார். "தொழில்நுட்பம் மற்றும் சரியான நிகழ்ச்சி நிரல் காரணங்களுக்காக, நாசா அந்த முடிவுகளை எடுத்தது. மேலும் புட்ச் மற்றும் சுனியைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் சரியான தீர்வையும் நாசா கண்டுபிடித்தது. சர்வதேச விண்வளி நிலையத்தின் சக பணியாளர்களுடன் சேர்ந்து அவர்கள் பூமிக்குத் திரும்புவதைப் பார்க்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று லிப்பி ஜாக்சன் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c3vw732lyyro
  17. 14 MAR, 2025 | 04:32 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் தமது வீடுகளுக்கு புதிதாக மின்னிணைப்பை பெற்றுக்கொள்வதாயின் அதற்கு அந்த தோட்ட முகாமையாளரின் சிபாரிசு கடிதத்தை பெற வேண்டும். இலங்கை மின்சார சபைக்கு தோட்ட முகாமையாளர் ஏன் கடிதம் வழங்க வேண்டும். இந்த முறைமையை மாற்றுங்களெனன மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பெருந்தோட்ட பகுதியில் 10 பேச்சர்ஸ் காணியில் தனி வீட்டினை நிர்மாணிப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சபையில் உறுதிப்படுத்தியதை வரவேற்கிறேன். பெருந்தோட்ட பகுதிகள் 22 தோட்ட கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. ஒருசில தோட்டங்களில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகள் ஏதுமில்லை. பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பெருந்தோட்டங்களை பாதுகாக்க வேண்டுமாயின் அப்பிரதேசங்களில் வாழும் மக்களை பாதுகாக்க வேண்டும். 50 ஆண்டுகாலத்துக்கே பெருந்தோட்டங்கள் தோட்ட கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. மிகுதி 20 ஆண்டுகளில் இந்த தோட்ட கம்பனிகள் எந்த தோட்டங்களையும் அபிவிருத்தி செய்யபோவதில்லை. 50 ஆண்டுகால குத்தகையை நீடிப்பதா அல்லது இரத்துச் செய்வதா என்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். 20 ஆண்டுகளுக்கு பிறகு தோட்டத்தொழில்துறை முழுமையாக கைவிடப்படும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு தோட்ட கம்பனிகள் செயற்படுகின்றன. ஆகவே தோட்ட கம்பனிகளுடன் அரசாங்கம் நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். பெருந்தோட்டங்களை அரசாங்கத்தினால் நிர்வகிக்க முடியாது. ஆகவே குத்தகை வழங்கல் தொடர்பில் தோட்ட நிறுவனங்களுடன் அரசாங்கம் விரைவாக பேச வேண்டும். பெருந்தோட்டங்களில் தற்போது தோட்ட நிர்வாகிகள் தான் ஆங்கிலேயர்களை போன்று ஆதிக்கம் கொள்கிறார்கள். தோட்ட மக்களின் நலன்கருதி எந்த திட்டங்களையும் தோட்ட கம்பனிகள் மேற்கொள்வதில்லை. பொகவந்தலாவலை பகுதியில் உள்ள பொகவான தோட்டத்தில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள வீதியை அந்த தோட்ட முகாமையாளர் மறித்துள்ளார். இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துங்கள். தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் தமது வீடுகளுக்கு புதிதாக மின்னிணைப்பை பெற்றுக்கொள்வதாயின் அதற்கு அந்த தோட்ட முகாமையாளரின் சிபாரிசு கடிதத்தை பெற வேண்டும்.இலங்கை மின்சார சபைக்கு தோட்ட முகாமையாளர் ஏன் கடிதம் வழங்க வேண்டும்.இந்த முறைமையை மாற்றுங்கள். தோட்ட முதலாளிமார் சம்மேளம் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே 1700 ரூபா சம்பளத்தை வழங்க முடியும். இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பெருந்தோட்ட பகுதிகளில் 64,740 தனி வீடுகள், 70,444 தனி லயன் அறைகள், 65,279 இரட்டை லயன் அறைகள் மற்றும் 10,891 தற்காலிக வீடுகள் காணப்படுகின்றன. பெருந்தோட்டத்துறைகளில் 10 பேச்சர்ஸ் காணியுடன் தனி வீட்டுத்திட்டத்தை அமுல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய முன்னெடுக்கப்படும் கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை பெருந்தோட்ட பகுதியில் முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/209192
  18. படக்குறிப்பு, ''இந்த நிலவறை அமைப்பு 14-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு அமைக்கப்பட்டதாக இருக்கலாம்'' கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 14 மார்ச் 2025 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கோவில் குடமுழுக்கு விழாவுக்காக நடந்த சீரமைப்பு பணியின் போது ஒரு பாதாள அறை வெளிப்பட்டது. பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது என்ன? தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் சோழர்கால மங்களநாயகி சமேத ராமலிங்கசுவாமி கோயில் (பஞ்சவன்மாதேவி ஈஸ்வரம்) உள்ளது. இந்த பழமை வாய்ந்த சோழர் கால கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவிலை தூய்மைப்படுத்தி தளம் சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. குடமுழுக்கு விழா பணிகள் படக்குறிப்பு, பட்டீஸ்வரத்தில் உள்ள சோழர்கால மங்களநாயகி சமேத ராமலிங்கசுவாமி கோயில் கடந்த திங்கள்கிழமை (10-03-2025) பிரகாரப் பகுதியில் தளம் போடும் பணி செய்து கொண்டிருந்த பணியாளர்கள் மண்வெட்டி கடப்பாரை கொண்டு தரையில் குத்தியபோது வித்தியாசமான ஓசை கேட்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் தட்டிய போது எழுந்த ஓசை மாறுபடவே பணிகளை உடனடியாக நிறுத்தினர். கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவியிடம் தகவலைக் கூறி அவரையும் அழைத்து வந்து தரையைத் தோண்டினர். ''அப்போது அப்பகுதி உள்வாங்கியது. பணியாளர்கள் அந்த இடத்தில் இருந்த பொருட்களை அகற்றியபோது அங்கு கருங்கல்லில் கட்டப்பட்டு மூடப்பட்ட பாதாள அறை வெளிப்பட்டது.'' என்றார் இக்கோவிலின் செயல் அலுவலர் நிர்மலா தேவி. ''விரைவில் பாதாள அறையின் உள்ளே இறங்கி ஆய்வு மேற்கொள்ளப்படும்" எனவும் அவர் கூறினார். மேலும் இது தொடர்பாக உயர் அதிகாரிகள் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் தகவல் தரப்பட்டுள்ளதாகவும், வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் வந்து பார்வையிட்டதாகவும் நிர்மலா தேவி பிபிசி தமிழிடம் கூறினார். படக்குறிப்பு, கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு சீரமைக்கும் பணி நடைபெறுகிறது பிபிசி தமிழிடம் பேசிய விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ், "இக்கோவில் ராஜராஜசோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன்மாதேவி என்பவரின் பள்ளிப்படை கோயிலாகும்" என்று கூறினார். "பஞ்சவன்மாதேவி தனது கணவரான ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன் மீது அதீத பாசம் கொண்டு அவரை தனது சொந்த மகனாக வளர்த்து வந்தார். அந்த அளவற்ற பாசத்தின் வெளிப்பாடாக தனது சிற்றன்னையின் நினைவாக (பஞ்சவன் மாதேவி ஈஸ்வரம்) மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோயிலை ராஜேந்திரசோழன் கட்டியதாக கூறிய பேராசிரியர் ரமேஷ் தொடர்ந்து கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ரகசிய பாதாள அறை குறித்து விவரித்தார். பாதாள நிலவறை படக்குறிப்பு,"இந்த பாதாள அறை எதிரிகள் படையெடுப்புகளின்போது விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்" "கோவிலில் தற்போது வெளிப்பட்டுள்ள பாதாள அறை தரைப்பகுதி மட்டத்திலிருந்து சுமார் 8 அடி ஆழத்தில் உள்ளது. இதன் நீளம் 15 அடியாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் கண்டறியப்பட்டுள்ள இந்த பாதாள அறை எதிரிகள் படையெடுப்புகளின் போது விக்கிரகங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்" என்கிறார் பேராசிரியர் ரமேஷ். இந்த நிலவறை அமைப்பு 14-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு அமைக்கப்பட்டதாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். "தொல்லியல்துறையினர் ஆய்விற்கு பின்பு, பாதாள அறையில் உள்ள மண்ணை வெளியே எடுத்தால் தான் அறையில் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளதா? இது எதுவரை செல்கின்றது உள்ளிட்ட பிற தகவல்கள் தெரியவரும்" என்றார் பேராசிரியர் ரமேஷ். பள்ளிப்படை என்றால் என்ன? படக்குறிப்பு, ராஜேந்திர சோழனின், ஏழாம் ஆட்சியாண்டில் ( கி.பி .1021) கட்டப்பட்ட இந்த கோவில் கருவறை பகுதியில் மிகப்பெரிய கல்வெட்டு காணப்படுகிறது ''பள்ளிப்படை என்பது சைவ சடங்குகளின்படி, இறந்தவரின் அஸ்தி புதைக்கப்பட்ட இடத்தின் மேல் சிவலிங்கம் வைத்து வழிபடுவதாகும். பள்ளிப்படையை மிக நெருக்கமான, நேசிக்கப்பட்ட ஒருவர் இறந்து விட்டால் அவர்களுக்காக கட்டப்படும் கோவில் என்றும் கூறலாம்'' என்கிறார் பேராசிரியர் ரமேஷ்‌. ''ராஜேந்திர சோழனின், ஏழாம் ஆட்சியாண்டில் ( கி.பி .1021) கட்டப்பட்ட இந்த கோவில் கருவறை பகுதியில் மிகப்பெரிய கல்வெட்டு காணப்படுகிறது. கோவிலில் பூஜைகள் தடையில்லாமல் தொடர்ந்து நடைபெற்றதை இந்த கல்வெட்டு மிக விரிவாக தெரிவிக்கின்றது" என்கிறார் ரமேஷ். தொடர்ந்து பேசிய அவர், "தினமும் பூஜை நடத்துவதற்காக ஓதுவார்கள், மேளம் வாசிப்பவர்கள், சைவ பிராமணர் ஒருவர், கணக்கு வழக்குகளைப் பார்ப்பவர் ஒருவர், பொருளாளர் ஒருவர், காவலர் ஒருவர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பணிகள், கொடுக்க வேண்டிய ஊதியம் ஆகியவை இந்த கோவிலில் அமைந்துள்ள கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது" என்றார். ராஜேந்திரன் மற்றும் அவரது சிற்றன்னை பிறந்த நட்சத்திரமான திருவாதிரை நாளில் விஷேசப் பூஜை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது சாமிக்குப் படைக்க வேண்டிய உணவு வகைகள் என்ன என்பது கல்வெட்டில் கூறப்பட்டு இருக்கிறது என்றும் வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார். படக்குறிப்பு,கருவறையின் அர்த்தமண்டபத்தில் உள்ள நந்தியும் கல்தூணும் பழுவேட்டரையர்களின் கலைப்பாணியில் அமைந்த படைப்பாகும் பழுவேட்டரையர் மகள் பிபிசி தமிழிடம் பேசிய கல்வெட்டு ஆய்வாளரும் எழுத்தாளருமான குடவாயில் பாலசுப்பிரமணியன், "சோழ மன்னர்கள் வரிசையில் முதலாம் ராஜராஜனின் மனைவியே பஞ்சவன்மாதேவி. இவர் சேர குறுநில மன்னர்களுள் ஒருவராகிய பழுவேட்டரையரின் மகள். திருச்சி மாவட்டம் உடையார்குடி தாலுகாவில் உள்ள பழுவூரே இவரின் ஊராகும். இந்த கோயில், பஞ்சவன்மாதேவி மறைந்த பிறகு, ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் தன் சிற்றன்னைக்காக கட்டிய பள்ளிப்படை கோவிலாகும்'' என்றார். "பழுவேட்டரையரின் மகள் என்பதால் பஞ்சவன்மாதேவி பிறந்த மண்ணின் கலைத்திறன் இக்கோவிலில் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோவில் கடந்த காலங்களில் 'பஞ்சவன் மாதேவிஈஸ்வரம்' என்று அழைக்கப்பட்டது" என்று குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2er47rzekvo
  19. 14 MAR, 2025 | 04:43 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு முக்கோண வலயம் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு 5500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலவசமாக தென்னங்கன்றுகள் மற்றும் உரம் வழங்குவதற்காக 819 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு நீர் விநியோகித்துக்கும் நிலப்பரப்புக்கு அமைய நிவாரணம் வழங்கப்படுமென பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தேங்காய் விநியோகத்தில் தட்டுப்பாடு காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஒருகாலத்தில் இலங்கையில் இருந்து தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது இறக்குமதி செய்யப்படுகிறது. அரசுக்கு சொந்தமான தென்னந் தோட்டங்களுக்கு கடந்த 5 ஆண்டுகாலமாக உரம் வழங்கப்படவில்லை, தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சியினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தேங்காய் தோட்டங்களை முறையாக பராமரிக்காமல், சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. சிலாபம் மற்றும் குருநாகல் பகுதிகளில் உள்ள தெங்கு தோட்டங்களை முறையாக பராமரிப்பதற்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தெங்கு பயிர்ச்செய்கைக்கு உரிய காணிகளில் அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் துண்டாக்கப்பட்டன அழிக்கப்பட்டன. தெங்கு பயிர்ச்செய்கை தொடர்பில் 10 ஆண்டுகால தேசிய கொள்கை திட்டத்தை தயாரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வருடாந்தாம் 3000 மில்லியன் தேங்காய்களுக்கான கேள்வி காணப்படுகின்ற நிலையில் கடந்த ஆண்டு 2,754 மில்லியன் தேங்காய்கள் மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 2,900 மில்லியன் தேங்காய்களை உற்பத்தி செய்யவும், 2020 ஆண்டளவில் 4,200 மில்லியன் தேங்காய்களை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ரஷ்யா அரசாங்கம் இலங்கைக்க இலவசமாக எம்.ஒ.பி வகையான உரத்தை வழங்கியுள்ளது. இந்த உரம் தெங்கு பயிர்ச்செய்கைக்கு முழுமையாக வழங்கப்படும். 4,000 ரூபாய் என்ற நிவாரண விலைக்கு வழங்கப்படும்.இதற்கமைய இந்த ஆண்டு 5,700 மில்லியன் ரூபா அளவில் தெங்கு பயிர்ச்செய்கையாளருக்கு நிவாரணம் வழங்கப்படும். 30 ஆண்டுகால யுத்தத்தை எதிர்க்கொண்டு வடக்கு மாகாணத்துக்கு இதுவரை காலமும் குறைந்தளவான அபிவிருத்திகளே வழங்கப்பட்டன. வடக்கு மாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு முக்கோண வலயத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். 10 இலட்சத்து 24 ஆயிரம் தென்னை கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. வடக்கு மாகாண மக்களுக்கு தெங்கு பயிர்ச்செய்கைக்கு இலவசமாக உரம் வழங்கப்படும். இதற்கு மாத்திரம் 819 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீர்விநியோகித்தக்கும் ஏக்கர் நிலப்பரப்புக்கு அமைய நிவாரணம் வழங்கப்படும். தேயிலை தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேயிலைத் தோட்டங்களை முறையாக பராமரிப்பதற்கு நிவாரணம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேயிலை தோட்டப் பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை தனியார் தரப்பினருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் வாரம் சமர்ப்பிக்கப்படும். பெருந்தோட்ட பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இந்த ஆண்டு 4,700 வீடுகள் நிர்மாணிக்கப்படும், 1300 வீடுகள் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த ஆண்டு 6,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/209197
  20. நம் கண்கள் நம் எதிரே இருப்பவைகளை மட்டுமே காணும் எனவே கண்களால் காண்பது பொய் இரண்டாவது படத்தில் சிங்கம் தன் குட்டியை விழுங்குவது போல் தோன்றும் ஆனால் முதல் படத்தில் அது கவி கொண்டு செல்கிறது. நாம் எல்லா நேரத்திலும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை. நமக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் ஏற்படப்போகும் நிகழ்வுகள் அதைக் கொண்டு நாம் நிகழ்காலத்தில் இருக்கிறோம் காலையில் வேலைக்கு செல்லும்போது இருக்கும் பரபரப்பு இரவு வீட்டிற்கு வரும் போது இருப்பதில்லை காலையில் பார்க்கும்போது அனைவரும் வேலைக்கு செல்வதாகவே தோன்றும் இரவு பார்க்கும்போது அனைவரும் வீட்டுக்கு செல்வதாகவே தோன்றும் ஆனால் இரவு நேர ஷிப்ட் முடிந்து காலையில் வீட்டிற்கு செல்பவர்கள் கலைந்த ஆடையோடு முகத்தில் சோர்வுடன் இருப்பார்கள் அதை நம் கண்கள் உற்று நோக்காது ஏனெனில் நாம் பரபரப்பாக வேலைக்கு செல்கிறோம் அவர்களும் பரபரப்பாக தான் செல்வார்கள் என்பது நம் மூளை உடனடியாக எடுக்கும் ஒரு முடிவு அதை அலசி ஆராய நேரமோ அல்லது அதற்கான தெளிவு அந்த நேரத்தில் நமக்கு இல்லை. எனவே தான் நம் முன்னோர்கள் கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று கூறியிருக்கின்றார்கள். நாம் ஒரு அறைக்குள் தொலைபேசியை எடுக்க நுழைகிறோம் அப்பொழுது உங்களது பார்ட்னர் உங்கள் தொலைபேசியை எடுத்து கீழே வைத்து வைத்து விட்டு போகிறார் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் பார்வைக்கு உங்கள் தொலைபேசியில் என்ன இருக்கிறது என்பதை அவர் பார்க்கிறாரோ என்று ஒருகணம் நினைக்கத் தோணும ஆனால் அந்த சூழ்நிலையையும் நிகழ்ச்சியையும் ஆராயும்போதுஆராயும் போது அவர் உங்கள் தொலைபேசி எடுத்து விட்டு எடுத்து வைத்துவிட்டு அவரது தொலைபேசியை சார்ஜ் செய்துவிட்டு போயிருக்கிறார் என்பது தெரியும்.
  21. கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக செய்யும் சேவைக்கு பாராட்டுகளும் நன்றிகளும் அக்கா. பண இழப்பு என கருதாதீங்க அக்கா, உங்கள் மனத்திருப்திக்கு உதவி செய்தீர்கள். தவறான கைகளுக்கு போகாது பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தளவு பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புங்கள். அவர்களோடு நேரடி தொடர்பில் இருக்க முயலுங்கள். உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் மூலமாக நேரடியாக பயனாளிகளைத் தொடர்பு கொள்ளுங்கள். 2011/2012 காலங்களில் இருந்து உதவி ஒழுங்குகள் சிலவற்றில் ஈடுபட்ட அனுபவத்தில் யாரிடமும் 100% சரியாக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. நெடுங்கேணியில் கிணறு கட்ட முப்பதாயிரம் கேட்டு உதவ வெளிக்கிட்டு கட்டி முடிக்கையில் 90ஆயிரம் செலவளித்து முடிந்தது. கணவர் வவுனியா சிறையில் இருக்க 5 பிள்ளைகளுடன் மிகுந்த சிரமத்தில் இருந்த பெண்மணிக்கு நேரடியாக வங்கிக் கணக்கிற்கே பணத்தை அனுப்புவோம். அவவிற்கு வீட்டுத் திட்டமும் கிடைத்திரு்தது என ஞாபகம். கிணறு கட்ட குடுத்த காசை வீட்டு வேலைக்கும் எடுத்துப்போடுவார். இருந்தாலும் வாழ்வாதாரத்திற்கு தோட்டம் செய்ய ஏற்கனவே தோண்டப்பட்ட கிணறை கட்டி முடிக்க லண்டனில் வசித்த உறவுகள் உதவினார்கள்.
  22. வவுனிக்குளத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட இளைஞரின் மரணத்துக்கு நீதி கோரி முல்லைத்தீவில் மக்கள் ஆர்ப்பாட்டம் 14 MAR, 2025 | 04:51 PM முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனிக்குளத்திலிருந்து கடந்த ஆண்டு சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் கொலைக்கு நீதி கோரி இன்று (14) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வெளிநாடு செல்வதற்கான பயன ஏற்பாடுகளைச் செய்த 27 வயதுடைய மல்லாவியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 29-07-2024 அன்று முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டு குளத்துக்குள் போடப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்தபோதும் அதனுடன் தொடர்புபட்ட கொலையாளிகளை இதுவரை கைது செய்யவில்லை என தெரிவித்து இன்றைய தினம் பிரதேச பொது அமைப்புகள், வர்த்தக சங்கம், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்லாவி பேருந்து நிலையத்திலிருந்து மல்லாவி பொலிஸ் நிலையம் வரை சென்ற போராட்டக்காரர்கள் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடி பொலிஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனையடுத்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு மாங்குளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் இளைஞரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை தொடர்ந்து நடத்துவதாகவும் இந்த விசாரணைகளுக்காக விசேட குழு ஒன்றை நியமிப்பதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் கையளித்தனர். பின்னர், சம்பந்தப்பட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெற்றோர், உறவினர்களுடன் கலந்துரையாடினர். இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் மல்லாவி பொலிஸாரால் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/209204
  23. தமிழ்நாடு பட்ஜெட் 2025: 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப், டேப் பட மூலாதாரம்,TN ASSEMBLY 14 மார்ச் 2025, 03:23 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு ரூ.133 லட்சம் ஒதுக்கீடு முதல் சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கப்படுவது வரை பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சிக்கான பட்ஜெட் திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். வருங்காலங்களில் தமிழ் புத்தகக் கண்காட்சிகளை இந்திய பெருநகரங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய வெளி நாட்டின் நகரங்களிலும் நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு நூறு புத்தகங்கள் வீதம் வருகின்ற ஐந்து ஆண்டுகளில் 500 தமிழ்ப் புத்தகங்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மரபை முறையாக அறிமுகம் செய்திடும் வகையில், அயலக தமிழர் நல வாரியம் மூலம் அவர்களுக்கு தமிழ் மொழி மற்றும் நாட்டுப்புறக் கலையைப் பயிற்றுவிக்கும் 100 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை வைத்து நேரடி வகுப்புகளை நடத்திட ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழின் பெருமை மற்றும் சிறப்பை உலகத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற நகரங்களில் உள்ள பள்ளிகளிலும், உலகத் தமிழ் மையங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு கணினி வழி உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும். பட மூலாதாரம்,THANGAM THENNARASU/X படக்குறிப்பு, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினுடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு (கோப்புக் காட்சி) தொல்லியல் துறை அறிவிப்பு தமிழ்மொழியின் தொன்மை மற்றும் தொடர்ச்சியினை அறிந்து கொள்ளும் வகையில், அகரம் - மொழிகளின் அருங்காட்சியகம் ஒன்று மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும். அகழ்வாராய்ச்சியில் வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் பொருட்களில் தொல் மரபணுவியல், உலோகவியல் பகுப்பாய்வு, நுண் தாவரவியல், மகரந்த பகுப்பாய்வு, தூண்டொளி வெப்பக் காலக் கணிப்பு, மட்பாண்டவியல் உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்காக, வரும் நிதி ஆண்டில் தொல்லியல் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்படும். தென்கிழக்கு ஆசியா, மத்தியத் தரைக்கடல், அரேபிய தீபகற்பம், ரோமப் பேரரசு பகுதிகளுடன் வைத்துக்கொண்ட கடல் வழி வணிகம் தொடர்பாக ஆழ்கடல் அகழ்வாய்வுகளை தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல்கட்டமாக இந்த ஆண்டு தொல்லியல் ஆய்வாளர்களின் அறிவுரைப்படி காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடல் அகழ்வாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐம்பொன்னால் ஆன இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அதன் சிறப்பை வெளிநாட்டினரும் ரசிக்கும் வகையில், மரபுசார் கட்டட அமைப்பில் தனியாக காட்சி அரங்கம் ஒன்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைக்க ரு. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொடுமணல் அகழாய்வுகளை முன்னிலைப்படுத்தி ஈரோடு மாவட்டத்தில், நொய்யல் அருங்காட்சியம் ரூ.22 கோடி மதிப்பீட்டிலும், சங்ககாலப் பாண்டியரின் கடல்வழி வணிகச் சிறப்பை விளக்கிடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் ரூ. 21 கோடி மதிப்பீட்டிலும் உருவாக்கப்படும். பட மூலாதாரம்,TNDIPR படக்குறிப்பு, ஈரோட்டில் நொய்யல் அருங்காட்சியம் ரூ.22 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் (சித்தரிப்புப் படம்) ஊரக வளர்ச்சி திட்டத்திற்கான அறிவிப்புகள் இந்த நிதியாண்டில் (2025-26) ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கீடு முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6,100 கிலோமீட்டருக்கு கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ. 2100 கோடி ஒதுக்கீடு கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகளின் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.120 கோடி ஒதுக்கீடு தமிழ்நாட்டின் அனைத்து குக்கிராமங்களும் தன்னிறைவு அடையும் வகையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 2329 கிராம ஊராட்சிகளில் ரூ.1087 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும். நகராட்சி நிர்வாகம் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 6483 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.3750 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் ஒரு பகுதியாக வேளச்சேரி மற்றும் கிண்டியில் வசிக்கும் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வேளச்சேரி பிரதான சாலை துவங்கி, குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்திற்கு ரூ. 310 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும். ரயில்வே துறையுடன் இணைந்து கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரூ. 70 கோடி மதிப்பில் கட்டப்படும். சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு நிலையம், இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள் மீட்பு மையம் மற்றும் 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிக்காக ரூ. 3450 கோடி திட்டக் காலத்திற்கான மதிப்பீட்டில் தொடங்கப்படும். பட மூலாதாரம்,@CMOTAMILNADU படக்குறிப்பு, மார்ச் 13ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சமச்சீர் வளர்ச்சி சென்னை மாநகரத்தின் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்திட வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிதியாண்டில் அதற்காக ரூ.6,858 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவதன் முதல்கட்டமாக சென்னைக்கு அருகே ஒரு புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். மகளிர் நலன் விடியல் பயணம் என்பது பேருந்தில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்க அறிமுகம் செய்யப்பட்ட திட்டம். அந்த ஆண்டு அந்தத் திட்டத்திற்கான மானியத் தொகை ரூ.3600 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 4.76 லட்சம் மகளிர் திட்ட சுயஉதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. சுயஉதவிக் குழு இயக்கத்தில் இதுவரை இணைந்திடாத மகளிர் மற்றும் விளிம்புநிலை வாழ் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு, 10,000 புதிய சுயஉதவிக் குழுக்கள் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும். மேலும், எதிர்வரும் நிதியாண்டில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ஈரோடு, கரூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் புதிதாக தோழி மகளிர் விடுதிகள் கட்ட ரூ.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்விக்காக பெரு நகரங்களுக்கு வருகை புரியும் மாணவிகளுக்காக சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் தலா ஆயிரம் மாணவியர் தங்கும் வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாணவியர் விடுதிகள் ரூ.275 கோடி மதிப்பில் கட்டப்படும். இந்த விடுதிகளின் மாணவியர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும். புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை திருநர் சமூகத்தினருக்கும் விரிவுபடுத்தப்படும். பள்ளிக்கல்வி துறை இந்த நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.46,767 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2025-26ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பொருட்டு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கத்தோடு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே உயர் கல்வியைப் பெறும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உள்ளிட்ட இடங்களிலுள்ள தொலைதூர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். சேலம், கடலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் கூடங்களுக்கான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நூலகங்கள் அமைக்கப்படும். உயர்கல்வி பட மூலாதாரம்,MK STALIN படக்குறிப்பு,தேசிய இலச்சினை நீக்கப்பட்டு தமிழில் 'ரூ' பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்காக ரூ.8,494 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பல்கலைக் கழங்களில் நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில், பல்கலைக் கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நிதி நல்கை ரூ.700 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் கீழ் தற்போது 41,038 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும் வகையில் ரூ.550 கோடி ஒதுக்கீடு. குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், பெரம்பலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 10 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் அறிவியல் சிந்தனையை வளர்த்திடவும், புதிய தொழில்நுட்ப வசதிகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்திடும் நோக்கத்தோடும் சென்னை அறிவியல் மையம் ரூ.100 கோடி மதிப்பில் உருவாக்கப்படும். செயற்கை நுண்ணறிவு இந்த உலகை மாற்றும் சூழலில், தொழில்நுட்ப அறிவு மற்றும் திறனை மேம்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் லேப்டாப் அல்லது டேப்லட் வழங்கப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு ஹெச்.பி.வி. தடுப்பூசி - ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹெச்.பி.வி. தடுப்பூசியை பெண் குழந்தைகளுக்கு வழங்க ரூ. 36 கோடி நிதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 21,906 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க 14 வயது பூர்த்தியான அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ஹெச்.பி.வி. தடுப்பூசியை படிப்படியாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தேசிய நலவாழ்வுக் குழுமம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ரூ.2754 கோடியும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.1092 கோடியும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 1461 கோடியும், அவசர ஊர்தி சேவைகளுக்காக ரூ.348 கோடியும் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிற்துறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு சென்னையில் ரூ.100 கோடி மதிப்பில் செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மற்றும் பரிசோதனை மையம் உருவாக்கப்படும். கோவை-சூலூர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவிலும், பல்லடம் அருகே 100 ஏக்கர் பரப்பளவிலும் செமி கண்டக்டர் உற்பத்திக்கான இயந்திரத் தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும். ஓசூரில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா ஒன்று அமைக்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் புதிய மினி டைடல் பூங்கா ஒன்றும் அமைக்கப்படும். கடலூரில் இரண்டு காலணி தொழிற்பூங்காக்கள் ரூ.250 கோடி மதிப்பில் அமைக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். 9 இடங்களில் ரூ. 366 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டைகள் சிறுதொழில் முன்னேற்றக் கழகத்தால் (SIDCO) உருவாக்கப்படும். மாறிவரும் தொழில்நுட்ப தேவைகளை நிறைவு செய்ய விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் ரூ.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் தமிழ்நாட்டில் தொழில்நுட்ப ஜவுளிகளின் உற்பத்தி மற்றும் அவற்றிற்கான முதலீடுகளை ஜவுளி நிறுவனங்கள் மேற்கொள்வதை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் செயல்படுத்தப்படும். மெட்ரோ ரயில் திட்டங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் 119 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர்வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அறிவிப்பு கோவையில் ரூ.10,740 கோடிக்கும், மதுரையில் ரூ.11,368 கோடியிலும் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலாதன பங்களிப்பை பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை விமானநிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரையும், கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரையிலும், பூந்தமல்லியிலிருந்து திரும்பெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையும் நீட்டிக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும், விரைவில் மத்திய அரசின் மூலாதன பங்களிப்பிற்காக அனுப்பப்படும் எனவும் அறிவிகப்பட்டுள்ளது. தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையும், கலங்கரை விளக்கத்திலிருந்து உயர்நீதிமன்றம் வரையும் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என அறிவிப்பு சென்னை-செங்கல்பட்டு- திண்டிவனம்- விழுப்புரம் வழித்தடம் உட்பட 3 வைழித்தடங்களில் அதிவேக ரயில்வே அமைப்பை உருவாக்க விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு. மாமல்லபுரம், ஊட்டி, கொடைக்கானலில் ரோப்வே போக்குவரத்தை ஏற்படுத்த சாத்தியக்கூறுகள் ஆய்வுசெய்யப்படும் ரூ.2,000 உதவித்தொகை பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டு பெற்றோரையும் இழந்து உறவினர்கள் பராமரிப்பில் மிகவும் வறிய நிலையில் உள்ள 50,000 குழந்தைகள் 18 வயது வரை இடைநிற்றல் இன்றி பள்ளி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை. கோயில்களுக்கு சொந்தமான 7,327 ஏக்கர் நிலங்களும், 36.38 லட்சம் சதுர அடி மனைகளும், 5.98 லட்சம் சதுர அடி கட்டடங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவற்றின் மதிப்பு ரூ.7,185 கோடி எனவும் அறிவிப்பு சுற்றுலாத்துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், சுற்றுலா துறையில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதி சட்டம் கொண்டுவரப்படும், உதகமண்டலத்தில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு கால்நடை வளத்தை அதிகரிக்கவும், அதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க ஏதுவாக கால்நடை இனப்பெருக்க கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj92rxdxpzeo
  24. யுக்ரேன் போர் நிறுத்தத்துக்கு புதின் முன்வைத்துள்ள நிபந்தனைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் லாண்டேல், கேப்ரியலா போமராய் பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனில் போர்நிறுத்தம் குறித்த யோசனையுடன் உடன்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். எனினும், அவர் பல கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளதால் போர்நிறுத்தத்தின் தன்மை குறித்து "கேள்விகள்" எழுந்துள்ளன. அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, யுக்ரேன் இந்த வாரத் தொடக்கத்தில் ஒப்புக் கொண்ட 30 நாட்கள் போர்நிறுத்தத் திட்டம் பற்றி பேசும்போது, புதின் இந்த கருத்தை கூறியுள்ளார். போர் நிறுத்த திட்டம் குறித்து, புதின் கூறிய கருத்தை "சூழ்ச்சி" என்று விவரித்த யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கிடையில், ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு மற்றும் வங்கித் துறைகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. வியாழன் அன்று மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய புதின், "இந்த யோசனை சரியானது. நாங்கள் அதை ஆதரிக்கிறோம், ஆனால் நாங்கள் விவாதிக்க வேண்டிய கேள்விகள் உள்ளன "என்று போர்நிறுத்தம் குறித்து கூறினார். போர்நிறுத்தம், "நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும். இந்த நெருக்கடியின் மூல காரணங்களை அகற்றவும் வேண்டும்" என புதின் தெரிவித்தார். இரான், துருக்கி இடையே அதிகரித்து வரும் பதற்றம் - எர்துவானின் உண்மையான நோக்கம் என்ன? விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப நாசா செய்வது என்ன? பல அமைதி ஒப்பந்தங்களில் சௌதி அரேபியாவும், கத்தாரும் மத்தியஸ்தர்களாக இருப்பது ஏன்? தொடர்ந்து பேசிய அவர், "எங்களது அமெரிக்க நண்பர்கள் மற்றும் கூட்டணிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றும் "ஒருவேளை நான் டொனால்ட் டிரம்புடன் பேசலாம்''' என்றும் கூறினார் மேலும், "யுக்ரேன் தரப்பு 30 நாள் போர் நிறுத்தத்தை எட்டுவது நல்லது. நாங்கள் அதற்கு ஆதரவாக இருக்கிறோம், ஆனால் அதில் சில நுணுக்கங்கள் உள்ளன" என்றும் புதின் தெரிவித்தார். இரு தரப்பும் கடுமையாக முரண்படும் விஷயங்களில் ஒன்று, மேற்கு ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் பிராந்தியம். கடந்த ஆண்டு யுக்ரேன் அங்கு ராணுவ ஊடுருவலைத் தொடங்கி சில பகுதிகளை கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார். குர்ஸ்க் பிராந்தியத்தின் முழு கட்டுப்பாட்டையும் ரஷ்யா மீட்டுள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள யுக்ரைன் படைகள் "தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்" அவர் தெரிவித்துள்ளார். "அவர்கள் வெளியேற முயற்சிக்கிறார்கள், ஆனால் கட்டுப்பாடு எங்களிடம் உள்ளது. அவர்களின் ஆயுதங்கள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன." "குர்ஸ்கில் யுக்ரேனியர்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று சரணடைவது அல்லது இறப்பது" என்றார். அதனைத் தொடர்ந்து, "அந்த 30 நாட்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும்? யுக்ரேன் மீண்டும் படைகளை திரட்டி ஆயுதங்களைச் சேகரிப்பதற்கா? படைக்குப் பயிற்சி அளிக்கவா? அல்லது இவற்றில் எதுவும் இல்லையா? அப்படி என்றால், இதை எவ்வாறு கண்காணிப்பது?" என புதின் கேள்வி எழுப்பினார். ''சண்டை நிறுத்த உத்தரவை விடுப்பது யார்? 2,000 கிலோமீட்டருக்கு மேலான எல்லையில் யார் போர்நிறுத்த உடன்பாட்டை மீறியது என முடிவெடுப்பது யார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் இரு தரப்பும் மிகுந்த கவனத்துடன் திட்டமிடுதல் அவசியம். இதை கண்காணிக்கப்போவது யார்?"என்கிறார் புதின். புதின் "நேரடியாக இல்லையென்று சொல்லவில்லை, ஆனால் உண்மையில் அவர் மறுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்"என யுக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி தனது வீடியோ உரையில் கூறினார். "நிச்சயமாக, புதின் இந்த போரைத் தொடர விரும்புவதையும், யுக்ரேனியர்களைக் கொல்ல விரும்புவதையும் அதிபர் டிரம்புக்கு நேரடியாகச் சொல்ல பயப்படுகிறார்" என்றார் ஸெலன்ஸ்கி. மேலும், ''புதின் பல முன்நிபந்தனைகளை விதித்ததால் எதுவுமே நடக்காது" என்றும் கூறினார் புதினின் கருத்துகளுக்கும் ஸெலன்ஸ்கியின் பதிலுக்கும் பிறகு, இரு தரப்புகளின் நிலைப்பாடுகளுக்கு இடையில் இப்போது தெளிவான பிளவு இருப்பது தெரிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யா "சரியானதைச் செய்யும்" என்று தான் நம்புவதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். யுக்ரேன் இரண்டு கட்ட செயல்முறையை விரும்புகிறது. முதலில் விரைவான போர்நிறுத்தம், அதன் பிறகு நீண்டகால அமைதி உடன்படிக்கையைப் பற்றிய பேச்சுவார்த்தைகள். ரஷ்யா இரண்டு செயல்முறைகளாக பிரிக்க முடியாது என்றும், அனைத்து பிரச்னைகளும் ஒரே உடன்படிக்கையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறது. யுக்ரேன், ரஷ்யாவை அமைதியை விரும்பாத நாடாக சித்தரித்து, அதன் மீது அழுத்தத்தை அதிகரிக்கலாம் என கருதுகிறது. மறுபுறம், நேட்டோ விரிவாக்கம் மற்றும் யுக்ரேனின் இறையாண்மை குறித்த கேள்விகளை எழுப்ப இப்போது ஒரு வாய்ப்பு இருப்பதாக ரஷ்யா நம்புகிறது. ஆனால் இது டொனால்ட் டிரம்புக்கு ஒரு சிக்கலை அளிக்கிறது. சில நாட்களில் போரை முடிவுக்கு கொண்டு வர, விரைவான முடிவை விரும்புவதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது, புதின் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பதை காட்டுகிறது. புதினின் கருத்துகளைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், ரஷ்யத் தலைவரைச் சந்திக்க விரும்புவதாகவும், ரஷ்யா "சரியானதைச் செய்யும்" என்றும், 30 நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளும் என்று நம்புவதாகவும் கூறினார். மேலும் "ரஷ்யாவிடம் இருந்து போர் நிறுத்தம் வருவதை நாங்கள் விரும்புகிறோம்," என்றும் டிரம்ப் தெரிவித்தார். முன்னதாக அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட் உடனான சந்திப்பின்போது, யுக்ரேனுடன் ஏற்கனவே குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றி விவாதித்ததாக செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் டிரம்ப். "யுக்ரேனுடன் நிலம் குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம். எந்த பகுதிகள் பாதுகாக்கப்படும், எவை இழக்கப்படும் என்பது குறித்தும் , இறுதி ஒப்பந்தத்தின் மற்ற அம்சங்கள் குறித்தும் விவாதித்து வருகிறோம்" என டிரம்ப் கூறினார். "இறுதி ஒப்பந்தத்தின் பல விவரங்கள் உண்மையில் விவாதிக்கப்பட்டுள்ளன." மேலும், நேட்டோ ராணுவக் கூட்டணியில் யுக்ரேன் இணைவது குறித்து, "அதற்கான பதில் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார் டிரம்ப். அமெரிக்க பரிவர்த்தனை முறைகளுக்கான அணுகலை டிரம்ப் நிர்வாகம் கட்டுப்படுத்தியதை தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு விதிக்கப்பட்ட புதிய தடைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால், பிற நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்குவது கடினமாகியுள்ளது. இதற்கிடையில், அமெரிக்காவின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்டை ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோவில் சந்தித்து பேசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES புதன்கிழமை, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குப் புதின் பயணம் செய்ததாகக் கூறும் வீடியோவை ரஷ்யா வெளியிட்டது. அந்த வீடியோவில், ரஷ்ய அதிபர் புதின் ராணுவ உடை அணிந்திருந்தார். 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது, இப்போது யுக்ரேனிய பகுதிகளில் சுமார் 20 சதவீதம் அதன் கட்டுப்பாட்டில் உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c05mvjz7r48o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.