Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 09 Mar, 2025 | 10:07 AM பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் நேற்று முன் தினம் நள்ளிரவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அவர்களுடன் இருந்த ஆண் சுற்றுலா பயணி சனாப்பூர் கால்வாயில் தள்ளி கொல்லப்பட்டார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி உலக புகழ்ப்பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இங்கு தங்கும் விடுதி நடத்திவரும் பங்கஜ் பாட்டீல் (42)இ தனது விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளான அமெரிக்காவை சேர்ந்த‌ டேனியல் ஜேம்ஸ் (23) ஒடிஸாவை சேர்ந்த பிபாஷ் குமார் (27) சுற்றுலா வழிகாட்டியான 28 வயதான பெண் இஸ்ரேலை சேர்ந்த 27 வயதான பெண் ஆகியோருடன் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் சனாப்பூர் கால்வாய் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். உள்ளூர் இளைஞர்கள் அட்டகாசம்: அப்போது அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் 3 பேர் அவர்களிடம் 'பெட்ரோல் இருக்கிறதா? இல்லையென்றால் ரூ.100 கொடுங்கள்' என‌ கன்னடத்தில் கேட்டுள்ளனர். அதற்கு பங்கஜ் பாட்டீல் 'இல்லை' என பதிலளித்துள்ளார். இதனால் கோபமடைந்த இளைஞர்கள் சுற்றுலா பயணிகளிடம் இருந்த கிடாரை பிடுங்கிக்கொண்டு ''பணம் தராவிட்டால் அதனை கால்வாயில் போட்டுவிடுவோம்'' என மிரட்டியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த இளைஞர்கள் 3 ஆண்களையும் கற்களால் தாக்கி கால்வாயில் பிடித்து தள்ளி விட்டனர். இஸ்ரேலை சேர்ந்த 27 வயது பெண்ணையும் சுற்றுலா வழிகாட்டியான 28 வயதான‌ பெண்ணையும் மலையடிவாரத்துக்கு இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த 3 செல்போன்கள் ரூ.9,500 ரொக்கம் 1 லேப்டாப் ஆகியவற்றையும் பறித்து சென்றுள்ளனர். கால்வாயில் இருந்து தப்பித்த பங்கஜ் பாட்டீல் அமெரிக்காவை சேர்ந்த டேனியல் ஜேம்ஸை சிரமப்பட்டு காப்பாற்றியுள்ளார். ஒடிஸாவை சேர்ந்த பிபாஷ் குமார் நீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து பங்கஜ் பாட்டீல் கங்காவதி போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீஸார் பாதிக்கப்பட்ட 2 பெண்களையும் 2 ஆண்களையும் மீட்டு கொப்பல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சனாப்பூர் கால்வாயில் 6 மணி நேரம் தேடியதை தொடர்ந்து பிபாஷ் குமார் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொப்பல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2 பேர் கைது: இதனிடையே கொப்பல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராம் எல் அரசித்தி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ''இந்த சம்பவம் குறித்து விடுதி உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் பாலியல் வன்கொடுமை கொள்ளை கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 2 பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 2 ஆண்களும் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கங்காவதியை சேர்ந்த சாய் மல்லு (27)இ சேத்தன் சாய் (26) ஆகிய 2 பேரை கைது செய்திருக்கிறோம். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்துள்ளோம்'' என்றார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/208670
  2. மறக்க முடியாத 2000: பழைய கணக்கை தீர்க்குமா இந்தியா? இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் இன்று மோதல் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர்,க.போத்திராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக 9 மார்ச் 2025, 02:01 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு என்பதை முடிவு செய்ய நாளை துபையில் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளுமே ஒருவொருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில்தான் கடந்த காலங்களில் ஐசிசி கிரிக்கெட் பயணத்தைக் கடந்துள்ளனர். இந்த சாம்பியன்ஸ் தொடருக்கு முன்பாக இந்திய அணி மீதும், ரோஹித் சர்மா மற்றும் கோலி மீதும் ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் போட்டித் தொடர் முடியும் தருவாயில் கரைந்துவிட்டன. இதுவரை 3 லீக், அரையிறுதி என 4 போட்டிகளிலும் வென்று இந்திய அணி வீறுநடை போடுகிறது. லீக் சுற்றில் இந்திய அணியிடம் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தாலும் மற்ற போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவை அச்சுறுத்தும் 5 நியூசிலாந்து வீரர்கள் யார்? சாம்பியன்ஸ் டிராஃபி: 25 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் மோதும் இந்தியா-நியூசிலாந்து; தென் ஆப்பிரிக்கா தோல்வி ஏன்? வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்: நியூசிலாந்தை வென்ற இந்தியாவுக்கு காத்திருக்கும் புதிய சவால்கள் சாம்பியன்ஸ் டிராஃபி 2025: பாகிஸ்தான் சொந்த மண்ணிலேயே தோல்வியை தழுவ என்ன காரணம்? மறக்க முடியாத 2000 நியூசிலாந்தும், இந்தியாவும், 25 ஆண்டுகளுக்கு முன்பு 2000ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மோதின. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், 265 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி, இரண்டு பந்துகள் மிச்சமிருந்தபோது இலக்கை எட்டி, இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போது மீண்டும் அதே நியூசிலாந்து அணியுடன் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி 25 ஆண்டுகளுக்குப் பின் மோதுகிறது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்த போட்டியை இந்திய அணி பயன்படுத்தும் என எதிர்பார்க்கலாம். 40 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியைக் காண ரசிகர்கள் மத்தியில் அதீத ஆர்வம் காணப்படுகிறது. துபை கிரிக்கெட் நிர்வாகம் டிக்கெட் விற்பனையைத் தொடங்கிய 40 நிமிடங்களில் மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.2.50 லட்சம் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 25 ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய அரங்கில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகிவிட்டதால், அரங்கு நிறைந்து ரசிகர்கள் ஆட்டத்தை ரசிப்பார்கள் 18 தொடர்களை வென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரில் ‘ஒயிட்வாஷ்’ ஆகக் காரணம் என்ன?4 நவம்பர் 2024 இந்தியாவை அதன் சொந்த மண்ணில் முதன் முறையாக 'ஒயிட் வாஷ்' செய்த நியூசிலாந்து - சாதித்தது எப்படி?3 நவம்பர் 2024 பட மூலாதாரம்,Getty Images ஐசிசி தொடரில் யார் ஆதிக்கம்? கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 86 ஐசிசி போட்டிகளில் பங்கேற்று அதில் 70 போட்டிகளில் வென்றுள்ளது. அடுத்த இடத்தில் தலா 49 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. 3 அணிகளுமே தலா 77 போட்டிகளில் விளையாடியுள்ளன. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு நடந்துள்ள 14 ஐசிசி போட்டித்தொடர்களில் 12 முறை இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 4 முறை அரையிறுதியிலும், 5 முறை இறுதிப்போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. 3 முறை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்து அணியும் ஐசிசி தொடர்களில் நிலையாக, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதை புள்ளிவிவரம் உறுதிப்படுத்துகிறது. 8 முறை நாக்அவுட் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து அணி, 4 முறை அரையிறுதியிலும் 3 முறை இறுதிப்போட்டியிலும் தோற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியனானது. டி20 மகளிர் உலகக் கோப்பையில் நியூசிலாந்து சாம்பியன் - ஆடவர் அணியால் முடியாததை சாதித்தது எப்படி?21 அக்டோபர் 2024 ரோஹித், விராட் இந்திய அணியில் உலகக்கோப்பை வரை நீடிப்பார்களா? இளம் வீரர்களின் நிலை?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,Getty Images சுழற்பந்துவீச்சு பலம் இரு அணிகளிலும் சுழற்பந்துவீச்சு பலமாக இருக்கிறது. இந்திய அணியில் மாயாஜால சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, ஜடேஜா, அக்ஸர் படேல், ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் என வெவ்வேறு கோணங்களில் பந்துவீசக் கூடியவீரர்கள் உள்ளனர். நியூசிலாந்து அணியில் சான்ட்னர், பிரேஸ்வெல், ரச்சின் ரவீந்திரா, பிலிப்ஸ் என 4 சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடங்கியதிலிருந்து துபையை விட்டு வேறு எங்கும் விளையாடவில்லை. ஆனால் நியூசிலாந்து அணியோ பாகிஸ்தான், துபை என இரு இடங்களிலும் மாறி, மாறி விளையாடிவிட்டது. துபை மைதானத்தை நன்கு அறிந்திருப்பது இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறது. இதுவரை 4 போட்டிகளில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்திய அணிக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப் போல் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். நியூசிலாந்து அணியில் கான்வே, வில் யங், சான்ட்னர், ஹென்றி ஆகிய 4 முக்கிய வீரர்களும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள், பட மூலாதாரம்,Getty Images ரோஹித், கோலி இருவரும் மீண்டும் சாதிப்பார்களா? இந்திய அணியில் உள்ள வீரர்கள் வெற்றிக்கு பலமுறை பங்களிப்பு செய்துள்ளார்கள் என்றாலும், விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் மற்றவர்களை விஞ்சி நிற்கிறார்கள். 2023 உலகக் கோப்பைத் தொடரில் 765 ரன்கள் குவித்து கோலி சாதனை படைத்தார். சாம்பியன்ஸ் டிராபியில் கெயில் சாதனையான 791 ரன்களை முறியடிக்க கோலிக்கு இன்னும் 46 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ரோஹித் சர்மா ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் 7 சதங்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு பலமுறை உதவியுள்ளார். இதில் 5 சதங்கள் 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா அடித்தவை. டி20 உலகக் கோப்பைத்தொடரில் 50 சிக்ஸர்களை ரோஹித் விளாசியுள்ளார். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை ரோஹித் பெரிதாக ரன்களைக் குவிக்கவில்லை. ஒருவேளை இன்று நடைபெறும் ஆட்டத்தில் ரோஹித் விஸ்வரூமெடுத்தால் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டும். சாம்பியன்ஸ் டிராபியில் ஜடேஜா அதிகபட்சமாக 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும், தங்கப்பந்தையும் ஜடேஜா வென்றார் என்பதால் இந்த முறையும் இவரின் ஆட்டம் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. கடந்த 2023 உலகக் கோப்பைத் தொடரில் பாதியில் இருந்து ஆட்டங்களில் பங்கேற்ற ஷமி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரே தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இந்த 4 பேரும் இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கக் கூடியவர்கள். 'சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்னார்?5 மார்ச் 2025 ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்தியா - 14 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறிய கனவு4 மார்ச் 2025 பட மூலாதாரம்,Getty Images கோலியும் லெக் ஸ்பின்னும் விராட் கோலி சமீபகாலமாக லெக் ஸ்பின், ரிஸ்ட் ஸ்பின்னுக்கு தடுமாறுகிறார், திணறுகிறார் என்றால் கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறுப்பதற்கில்லை. 2024 தொடக்கத்தில் இருந்து ஒருநாள் போட்டிகளி்ல் கோலி 5 முறை லெக் ஸ்பின்னர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்துள்ளார். லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக கோலி 48 ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் கூட கோலி சுழற்பந்துவீச்சை பெரிதாக அடித்தாடவில்லை. அவர் ஆடம் ஸம்பாவுக்கு எதிராக 24 பந்துகளில் 23 ரன்களும், தன்வீர் சங்கா பந்துவீச்சில் 12 பந்துகளில் 9 ரன்களும் சேர்த்தார். தன் மீதான விமர்சனங்களுக்கு கோலி, இந்தத் தொடரில் ஒரு சதம், 84 ரன்கள் சேர்த்து பதில் அளித்துள்ளார். இருப்பினும் கோலி சுழற்பந்துவீச்சுக்கு திணறுவார் என்ற சந்தேக ஆயுதத்தை நியூசிலாந்து சாதகமாகப் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. ஆபத்தான நியூஸி. வீரர்கள் நியூசிலாந்து அணி தனது சமீப வெற்றிகளில் வில்லியம்ஸன் இல்லாமல் கடந்து வந்திருக்க முடியாது. அந்த அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக அவர் கருதப்படுகிறார். ஐசிசி தொடர்களில் நியூசிலாந்தின் 6-வது பைனலில் வில்லியம்ஸன் விளையாடி வருகிறார். ஐசிசி வெள்ளைப் பந்துப் போட்டிகளில் வில்லியம்ஸன் போல் எந்த நியூசிலாந்து வீரரும் அதிக ரன்களைச் சேர்த்தது இல்லை. 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் பைனல் வரை செல்லும்போது அதிக ரன்களை சேர்த்த வீரராக வில்லியம்ஸன் இருந்தார். அதேபோல மிட்ஷெல் சான்ட்னர் முதல்முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு தலைமை ஏற்று அணியை வழிநடத்துகிறார். கடந்த 10 ஆண்டுகளில் டேனியல் வெட்டோரிக்குப் பின், நியூசிலாந்துக்கு கிடைத்த சிறந்த சுழற்பந்துவீச்சாளராக சான்ட்னர் கருதப்படுகிறார். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய சான்ட்னர், அரையிறுதிவரை செல்ல உதவினார். இந்த சாம்பியன்ஸ் டிராபியிலும் இதுவரை 7 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். ஹென்றியும் கடந்த 2019 உலக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் நியூசிலாந்து அணிக்கு முக்கியப் பங்களிப்பு செய்துள்ளார். 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு ஹென்றி தொடக்கத்தில் வீழ்த்திய 2 விக்கெட்டுகளே முக்கிய காரணம். நடப்பு சாம்பியன்ஸ் டிராபியிலும் 10 விக்கெட்டுகளுடன் ஹென்றி முன்னணியில் இருக்கிறார். பட மூலாதாரம்,Getty Images இந்தியா - பாகிஸ்தான் 'ஆயுதமில்லா போரை' இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது எது? ஒரு பகுப்பாய்வு26 பிப்ரவரி 2025 பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற மிதாலி ராஜ் - இவர் யார்?20 பிப்ரவரி 2025 ஹென்றி விளையாடுவாரா? தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் மாட் ஹென்றி தோள்பட்டை வலி காரணமாக பாதியிலேயே வெளியேறினார். தோள்பட்டை காயத்திலிருந்து ஹென்றி முழுமையாக குணமாகவில்லை எனத் தெரிகிறது. நியூசிலாந்து அணி நிர்வாகமும் ஹென்றி உடல்நிலை குறித்து எதுவும் பேசாமல் கடைசி நேரத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. நடப்புத் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் ஹென்றி ஒருவேளை பந்துவீச முடியாமல், விளையாடாவிட்டால் இந்திய அணிக்கு சாதகமாக அமையும். பட மூலாதாரம்,Getty Images ஆடுகளம் எப்படி? அரையிறுதி ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே புதிய ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட்டன. துபை ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு ஓரளவு ஒத்துழைக்கும் ஆனால், சிறப்பாக இருக்கும என்று கூற இயலாது. துபாய் ஆடுகளங்கள் பெரும்பாலும் முதல் 10 ஓவர்கள் வேகப்பந்துவீச்சுக்கும், அதன்பின் சுழற்பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும், நடுவரிசை ஓவர்களில் ஆடுகளம் மெதுவாகிவிடுவதால் ஸ்கோர் செய்ய பேட்டர்களுக்கு கடினமாக இருக்கும். இரவில் பனியின் தாக்கம் இருக்காது என்பதால், பந்துவீசுவதில் சிரமம் இருக்காது. இதனால், சேஸிங் செய்யும் அணி ரன் சேர்க்க போராட வேண்டியதிருக்கும். டாஸ் வெல்லும் அணி குறைந்தபட்சம் 270 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டால் வெற்றி எளிதாகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg5der682q0o
  3. 08 Mar, 2025 | 08:35 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தங்களை விரைவாக மேற்கொள்ள வேண்டும். திருமண வயதை 18ஆக திருத்தம் மேற்கொள்ள முஸ்லிம் சமூகத்திலும் உடன்பாடு இருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் 1951ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும். என்றாலும் தற்போது காலத்துக்கு ஏற்றவகையில் அதில் திருத்தங்களை மேற்கொள்ள நீண்டகாலமாக கலந்துரையாடி வருகிறோம். அதுதொடர்பான குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்துக்கு தேவையான திருத்தங்களை கொண்டுவர தவறியமைக்கு நாங்கள் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். திருத்தங்களை மேற்கொள்ளும்போது ஒருசில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. குறிப்பாக திருமண வயது தொடர்பில் நாட்டில் இருக்கும் பொதுவான சட்டம் 18 வயதாகும். முஸ்லிம் சமுகத்திலும் திருமண வயதை 18ஆக திருத்துவதற்கு உடன்பாடு இருக்கிறது. அதேபோன்று விவாக சான்றிதழில் கையெழுத்திடுவது பெண்களின் உரிமையாகும். முஸ்லிம் பெண்களுக்கும் தங்களின் விவாக சான்றிதழில் கைச்சாத்திடும் உரிமை இருக்க வேண்டும். இந்த திருத்தத்தை மேற்கொள்ள சமூகத்தில் உடன்பாடு இருக்கிறது. அதேபோன்று விவாகரத்து வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் இடம்பெற்றாலும் முஸ்லிம் விவாகரத்து வழக்குகள் காழி நீதிமன்றங்களிலே விசாரிக்கப்படுகின்றன. அதனால் காழி நீதிமன்றங்களை வலுப்படுத்த வேண்டும். அத்துடன் காழி நீதிமன்ற விடயத்திலும் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக காழி நீதிமன்றங்களில் பெண்களும் அதில் நீதிபதியாக வருவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதி, சட்டத்தரணிகள் தோன்றுவது போன்று காழி நீதிமன்றங்களிலும் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பில் கருத்திற்கொள்ள வேண்டும். மேலும் பராமரிப்பு செலவுகளை மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்றே பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் காழி நீதிமன்றங்களில் அனுமதியை பெற்ற பின்னரே மாவட்ட நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். அதனால் முஸ்லிம் பெண்களும் பராமரிப்பு செலவுகளை பெற்றுக்கொள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கு செல்ல முடியுமான வகையில் இதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/208649
  4. பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,விஜயானந்த் ஆறுமுகம் பதவி,பிபிசி தமிழ் 9 மார்ச் 2025, 04:05 GMT புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் சென்னையில் தமிழக அரசின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் மோசடி கும்பலிடம் 6 கோடி ரூபாயை இழந்துள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரபலங்களின் பெயரில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பேசியதாக புனையப்பட்ட செய்தி ஒன்றையும் சைபர் கிரைம் ஏடிஜிபி சந்தீப் மிட்டல் மேற்கோள் காட்டியுள்ளார். மோசடிக் கும்பலிடம் பணத்தை இழந்தாலும் அதனை விரைந்து மீட்பதற்கான வழிகள் உள்ளதாகக் கூறுகின்றனர், சைபர் தொழில்நுட்ப வல்லுநர்கள். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக எவ்வாறு மோசடி நடக்கிறது? இதில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? டீப் ஃபேக்: நெருங்கிப் பழகி ரகசியமாக ஆபாசப் படங்களை வெளியிட்ட நண்பன் - தம்பதி செய்தது என்ன? கோவை: 'ரூ. 6,000 செலுத்தினால் தினமும் ரூ. 300' - மொபைல் ஆப் மூலம் மக்களை ஏமாற்றியது எப்படி? நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்! 'சமூக ஊடகங்களில் மற்றவர் பெயரில் கணக்கு வைத்திருப்பது குற்றம்' - வாட்ஸ்ஆப்பில் ஃபார்வர்டு செய்வதும் குற்றமாக வாய்ப்பு ரூ.6 கோடியை இழந்த ஓய்வு பெற்ற அதிகாரி தமிழ்நாடு வனத்துறையில் தலைமை வனப் பாதுகாவலராக (PCCF) பதவி வகித்தவர் கிருஷ்ணன் குமார் கவுசல். இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். சென்னையில் வசித்து வரும் இவர், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு சுமார் 6 கோடி ரூபாய் வரை மோசடிக் கும்பலிடம் பணத்தை இழந்ததாக, 1930 என்ற இணைய குற்றப் பிரிவு உதவி எண்ணில் புகார் அளித்துள்ளார். தனது புகார் மனுவில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலீட்டுக்கு அதிக லாபம் கொடுப்பதாக வாட்ஸ்ஆப்பில் வந்த தகவல் ஒன்றைக் கவனித்ததாகவும் அதன்பிறகு இரண்டு செயலிகளை பதிவிறக்கம் செய்ததாகவும் கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் மோசடி நிறுவனத்துக்குச் சொந்தமான பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 6.58 கோடி ரூபாயை பரிமாற்றம் செய்ததாக புகார் மனுவில் கிருஷ்ணன் குமார் கவுசல் தெரிவித்துள்ளார். பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி கிருஷ்ணன் குமார் கவுசலை மோசடிக் கும்பல் ஏமாற்றியுள்ளது. "செயலியில் பங்குகளின் மதிப்பு உயர்வதைப் போன்று திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டது. ஆனால் அந்த விலையானது, தேசிய பங்குச்சந்தை விலைகளுடன் ஒத்துப் போகவில்லை" எனப் புகார் மனுவில் அவர் கூறியுள்ளார். "பேராசையே ஏமாறுவதற்கு அடிப்படை காரணம்" "ஆன்லைன் டிரேடிங் தொடர்பாக வரும் போலி விளம்பரங்களின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். அவ்வாறு ஆராயாமல் முதலீடு செய்வதால்தான் இதுபோன்ற மோசடிகள் நடக்கின்றன" என பிபிசி தமிழிடம் கூறினார், சென்னை சைபர் குற்றப்பிரிவின் காவல் ஆய்வாளர் பீர் பாஷா. அதிக லாபம் ஈட்ட நினைக்கும் நபர்களை வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் மோசடிக் கும்பல் சேர்த்துவிடுவதாகக் கூறும் பீர் பாஷா, "குழுவில் உள்ள சிலர், தனக்கு ஓரிரு நாளில் பல லட்சம் லாபம் கிடைத்தது எனப் போலியாக பதிவிடுவதைப் பார்த்து இவர்களும் நம்பி ஏமாறுகின்றனர் " என்கிறார் அவர். "ரிசர்வ் வங்கி விதிகளின்படி முதலீட்டுக்கு எவ்வளவு வட்டியை தர முடியும் என்பதற்கு விதிகள் உள்ளன. ஆனால், அதையும் மீறி பல மடங்கு லாபம் தருவதாக கூறப்படுவதை நம்புகின்றனர். இதற்கு அடிப்படைக்கு காரணம் பேராசை தான்" எனவும் பீர் பாஷா குறிப்பிட்டார். கிருஷ்ணன் குமார் கவுசல் விவகாரத்தில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் இதயம் வேகமாக முதுமை அடையுமா?8 மார்ச் 2025 தூங்குவதற்காகவே சுற்றுலா செல்வது குறித்து உங்களுக்கு தெரியுமா?7 மார்ச் 2025 ஏடிஜிபி எச்சரிக்கை பட மூலாதாரம்,Handout படக்குறிப்பு,தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவின் ஏடிஜிபி சந்தீப் மிட்டல் வனத்துறை அதிகாரியிடம் நடைபெற்ற மோசடி தொடர்பான செய்தி, ஊடகங்களில் வெளியான ஓரிரு தினங்களில் தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவின் ஏடிஜிபி சந்தீப் மிட்டல் கடந்த மார்ச் 6 ஆம் தேதியன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திகளைப் போலவே தென்படும் 2 போலிகளின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை பகிர்ந்த சந்தீப் மிட்டல், 'எக்ஸ் தளத்தில் பாடகி ஸ்ரேயா கோஷல் தொடர்பான விளம்பரங்களை சிலர் வெளியிட்டுள்ளனர். இவை சைபர் மோசடிகளில் பொதுமக்களை சிக்க வைக்கும் பொறிகளாக உள்ளன' எனத் தெரிவித்துள்ளார். X பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு 'எச்சரிக்கையாக இருங்கள்... பாதுகாப்பாக இருங்கள்' எனக் கூறியுள்ள சந்தீப் மிட்டல், "குற்றச்செயல்களில் வெளிப்படையாக இயங்கும் இதுபோன்ற நபர்களைக் கண்டறிந்து தடுப்பதற்கான வழிமுறைகளை எக்ஸ் தள நிர்வாகம் கண்டறிய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்ற போலிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளெடு தெரிவித்துள்ளது. உடல் பருமனாகாமல் இருக்க தினசரி சமையலில் எந்த எண்ணெய், எவ்வளவு சேர்க்க வேண்டும்?8 மார்ச் 2025 ரமலான் நோன்பு இருக்கும்போது கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான உணவு முறை என்ன?5 மார்ச் 2025 ஸ்ரேயா கோஷல் சொன்னது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் தனது எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார் ஆனால், இந்தச் சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்னதாக தனது எக்ஸ் தளக் கணக்கு சிலரால் ஹேக் செய்யப்பட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரேயா கோஷல் தெரிவித்திருந்தார். பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் தனது எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர், அதனை மீட்பதற்கு தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய பக்கத்தில் பதிவிடப்படும் எந்தச் செய்தியையும் நம்ப வேண்டாம் எனவும் அவர் கூறியிருந்தார். இதுதொடர்பாக 'பொது எச்சரிக்கை' என்ற பெயரில் விரிவான அறிக்கை ஒன்றையும் தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவின் தலைமையகம் வெளியிட்டுள்ளது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு போன்று மோசடியாக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் ஆன்லைன் முதலீட்டை பாடகி ஸ்ரேயா கோஷல் ஊக்குவிப்பதைப் போல புனையப்பட்டுள்ளது, இது போலியானது என' அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டிரம்ப் தொனியில் மாற்றம் - ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போகிறாரா?8 மார்ச் 2025 டிரம்பின் புதிய வரி விதிப்புகள் சீன பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும்? ஓர் அலசல்8 மார்ச் 2025 துரித முடிவுகளை எடுக்கத் தூண்டுவது எது? பட மூலாதாரம்,Handout படக்குறிப்பு,பணி ஓய்வில் வரக்கூடிய பணத்தை எந்தவித சிரமமும் இல்லாமல் முதலீடு செய்வதை பலரும் விரும்புகின்றனர் என்கிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன் அந்த அறிக்கையில், "அண்மையில் வெளியான பல விளம்பரங்கள் சில புகழ்பெற்ற பிரபலங்கள் அல்லது தொழிலதிபர்களின் பெயர்களில் வருகின்றன. இந்த விளம்பரங்கள் உண்மையானவை போல் தோன்றுகின்றன, ஆனால் அவை உண்மை இல்லை. இந்த விளம்பரங்கள் பயனரின் இணைய தேடுதல் தரவுகள் மற்றும் அவரது சமூக ஊடக செயல்பாட்டின் அடிப்படையில் அவர்களை இலக்காக வைத்து செயல்படுகின்றன. அந்த தரவுகள் அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) முழுமையாக பகுப்பாய்வு செய்து, ஒருவரை ஈர்க்கும் விளம்பரங்களை பரிந்துரைக்கின்றன. இவை உங்கள் மனநிலையை கண்காணித்து, துரித முடிவுகளை எடுக்கத் தூண்டுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலமான வலைதளங்கள், வாட்ஸ்ஆப் செயலி, டெலிகிராம் போன்றவற்றில் இவை விளம்பரப்படுத்தப்படுவதாகக் கூறியுள்ள இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு தலைமையகம், இதனை பிரபலங்கள் ஆதரிப்பதைப் போல காட்டும் போலி வீடியோக்களை உருவாக்குவதற்கு ஏஐ தொழிநுட்பம் பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளது. "ஆன்லைன் வர்த்தகத்தில் மக்களின் ஆர்வத்தைத் தூண்டி மோசடி செய்கின்றனர். பணி ஓய்வு அல்லது சொத்தை விற்று வரக் கூடிய பணத்தை முதலீடு செய்ய பலரும் விரும்புகின்றனர். இதை சிலர் பயன்படுத்திக் கொள்கின்றனர்" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன். பங்கு வர்த்தக நிலவரம், தங்கம் விலை ஏற்ற, இறக்கம் ஆகியவற்றை ஆராய்ந்து கொண்டிருப்பவர்களை இலக்காக வைத்து இந்த மோசடிகளை அரங்கேற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்? தங்கக் கடத்தல் நடப்பது ஏன்?8 மார்ச் 2025 டிரம்ப் அறிவிப்பால் மதிப்பு உயர்ந்த 5 கிரிப்டோகரன்சிகள் யாவை? என்ன அறிவிப்பு?5 மார்ச் 2025 மோசடிக் கும்பலை கைது செய்வது சாத்தியமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இதன் பின்னணியில் இயங்கும் நபர்களைக் கண்டறிய முடியாவிட்டாலும் போலி வங்கிக் கணக்குகளை உருவாக்கும் சிலரை (Runners) காவல்துறை கைது செய்துள்ளதாகக் கூறுகிறார் கார்த்திகேயன் "இவ்வாறு மோசடியில் ஈடுபடுகிறவர்களை அவ்வளவு எளிதில் கைது செய்ய முடியாது. ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் எப்படிச் செயல்படுமோ, அப்படியே இவர்களும் செயல்படுகிறார்கள்" எனக் கூறுகிறார் கார்த்திகேயன். இதன் பின்னணியில் இயங்கும் நபர்களைக் கண்டறிய முடியாவிட்டாலும் போலி வங்கிக் கணக்குகளை உருவாக்கும் சிலரை (Runners) காவல்துறை கைது செய்துள்ளதாகக் கூறுகிறார் கார்த்திகேயன். "நமக்கு தொடர்பில்லாத அல்லது நாம் மேற்கொள்ளாத ஒரு செயலுக்கு எதாவது பரிசுப் பொருளோ, தள்ளுபடி அறிவிப்போ வந்தால் அதைத் தவிர்த்துவிடுவதே பாதுகாப்பானது" எனக் கூறுகிறார் சைபர் கிரைம் குற்றத் தடுப்புப் பிரிவின் ஆய்வாளர் பீர் பாஷா. தற்காத்துக் கொள்வது எப்படி? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,எந்தவொரு முதலீட்டை செய்வதற்கு முன் அதுதொடர்பாக சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள் ஆன்லைன் டிரேடிங் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு சில வழிமுறைகளையும் தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவின் தலைமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, எந்தவொரு முதலீட்டையும் செய்யும் முன் அதுதொடர்பாக சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள் முறையான முதலீட்டு தளங்கள் எதுவும் அதிக உத்தரவாதமுள்ள வருவாயை உறுதியளிப்பதில்லை. விளம்பரங்களில் காட்டப்படும் சான்றுகளை மதிப்புரை செய்ய வேண்டும். பிரபலங்களின் ஒப்புதல்கள் உண்மையானவையா என்பதை சரிபார்க்காமல் அவற்றை நம்ப வேண்டாம். இந்த மோசடிக்கு தொழில்நுட்பத்தையும் கட்டண விளம்பரங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆன்லைனில் முதலீடு செய்யும் போது HTTPS (Hypertext transfer protocol secure) வலைதளங்களில் மட்டும் தேட வேண்டும். இதுபோன்ற மோசடிகள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் சைபர் கிரைமின் 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என காவல்துறை கூறியுள்ளது. கர்நாடகாவில் இஸ்ரேலை சேர்ந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம், தடுக்க வந்த நபர் கொலை - என்ன நடந்தது?8 மார்ச் 2025 திருப்பதி கோவில் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை கோரிய தேவஸ்தானம் - மத்திய அரசு கூறியது என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் இழந்த பணத்தை மீட்க முடியுமா? பட மூலாதாரம்,Getty Images இணைய மோசடிக் கும்பலிடம் பணத்தை ஏமாந்தாலும் அதனை மீட்பதற்கான வழிகள் உள்ளதாக கூறுகிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநர் கார்த்திகேயன், "ஏமாந்ததை உணர்ந்த ஓரிரு மணிநேரத்தில் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்" எனக் கூறுகிறார். காவல்துறை உதவியுடன் பணப் பரிவர்த்தனை நடைபெற்ற வங்கிக் கணக்கை முடக்க முடியும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சுமார் 80 சதவீத பணத்தைத் திரும்பப் பெற்றுவிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy8751nyd95o
  5. பிரதமர் மோடி ஏப்ரல் 4 இலங்கை வருகிறார் 09 Mar, 2025 | 08:59 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை கொழும்பில் சந்திக்க உள்ளதுடன் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து டெல்லி தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி பிற்பகல் அவர் கொழும்புக்கு வரவுள்ளார். இதேவேளை பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பை உறுதி செய்யும் வகையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கடந்த வியாழக்கிழமை ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இதன் போது, பிரதமர் மோடியின் இலங்கை விஜயம், கொழும்பு சந்திப்புகள் மற்றும் இலங்கையில் அவர் செல்விருக்கும் இடங்கள் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும், ரணில் விக்கிரமசிங்கவின் ஊடக செயலாளருமான தினித் சிந்தக குறிப்பிட்டார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமத நிலை குறித்தும் இதன் போது பேசப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் பிரதமர் நரேந்திர மோடியின் முதல் இலங்கை விஜயம் இதுவல்ல. இதற்கு முன்பு 2015, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவரின் முதல் இருதரப்பு விஜயமாக 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் அமைந்திருந்தது. இந்த விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான முக்கிய அறிவிப்புகள் மாத்திரமன்றி, யாழ்ப்பாணத்திற்கு சென்று தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அத்துடன் 2017 ஆம் ஆண்டு மே மாதம், இலங்கை நடத்திய சர்வதேச வெசாக் தினத்திற்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். மேலும் 2019 ஆம் ஆண்டில், இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்களுக்கு பிறகு, இலங்கைக்குச் சென்ற முதல் உலகத் தலைவராக பிரதமர் மோடி கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். இவ்வாறானதொரு நிலையில் இருதரப்பு இணைப்பு திட்டங்கள் உட்பட இலங்கை - இந்திய உறவில் பல தூண்கள் உள்ளன. இதில் முதன்மையான இணைப்பு திட்டமாக இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய படகுப் பாதை திட்டம் உள்ளது. அதே போன்று நாகப்பட்டினத்தை திருகோணமலையுடன் இணைக்கும் பல்துறை பெட்ரோலிய குழாய் திட்டமும் உள்ளது. ஆனால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான கூட்டு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தொடர் இழுபறி நிலைகள் நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளன. குறிப்பாக ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பல விடயங்களில் ஏற்பட்டுள்ள தாமத நிலை குறித்து டெல்லி அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே 2023 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்கள் குறித்து கொழும்பு சந்திப்புகளில் பிரதமர் மோடி அவதானம் செலுத்த உள்ளார். இதேவேளை, அநுராதபுரம் மகாபோதி மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களுக்கும் பிரதமர் மோடி விஜயம் செய்யவுள்ளார். அத்துடன் முந்தைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார வழித்தடத்தின் ஊடாக 6 ரில்லியன் டொலர் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உட்பட பல துறைகளை சார்ந்த பொருளாதார நன்மைகள் ஏற்படுத்திக் கொள்ள முடியும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார். இந்த விடயத்தை அண்மைய டெல்லி விஜயத்தின் போது ரணில் விக்கிரமசிங்க நினைவுக் கூர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/208658
  6. 52 வருடங்களின் பின் சென். பற்றிக்ஸை வீழ்த்தி பொன் அணிகளின் போரில் வெற்றியை சுவைத்தது யாழ்ப்பாணக் கல்லூரி 08 Mar, 2025 | 06:59 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான பொன் அணிகளின் போரில் 52 வருடங்களின் பின்னர் சென் பற்றிக்ஸ் கல்லூரியை முதல் தடவையாக வீழ்த்தி யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றியை சுவைத்தது. சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை நிறைவடைந்த 108ஆவது போன் அணிகளின் போரில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியை 59 ஓட்டங்களால் யாழ்ப்பாணக் கல்லூரி அணி வெற்றிகொண்டது. அணித் தலைவர் சிதம்பரலிங்கம் மதுசன் முழுப் போட்டியிலும் 10 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததுடன் இரண்டாவது இன்னிங்ஸில் சுரேஷ் கோபிஷனுடன் 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 71 ஓட்டங்களைப் பகிர்ந்து தனது அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இப் போட்டியில் மதுசன் 68 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்களைக் கைப்பற்றி பந்துவீச்சில் அசத்தியிருந்தார். முதல் ஒன்றரை நாட்களில் இப் போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்டபோதிலும் இரண்டாம் நாள் ஆட்டத்தின் பிற்பகுதியில் சென் பற்றிக்ஸின் கை மேலோங்கி இருந்தது. இதன் காரணமாக சென் பற்றிக்ஸ் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டியின் கடைசி நாளான இன்று சனிக்கிழமை காலை 5 விக்கெட் இழப்புக்கு 65 ஓட்டங்களிலிருந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்த யாழ்ப்பாணக் கல்லூரி 159 ஓட்டங்களைப் பெற்று சற்று பலமான நிலையை அடைந்தது. மொத்த எண்ணிக்கை 70 ஓட்டங்களாக இருந்தபோது 6ஆவது விக்கெட் வீழ்ந்ததால் சென். பற்றிக்ஸ் அணியினர் பெரும் சந்தோஷத்தில் மிதந்தனர். ஆனால், சிதம்பரலிங்கம் மதுசனும் சுரேஷ் கோபிஷனும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 71 ஓட்டங்களைப் பகிர்ந்து போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினர். 120 பந்துகளை எதிர்கொண்ட மதுசன் 32 ஓட்டங்களையும் 84 பந்துகளை எதிர்கொண்ட கோபிஷன் 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் குமணதாசன் சாருஷன் 4 விக்கெட்களையும் பிரேமநாயகம் மதுசன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 146 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் கல்லூரி 35.3 ஒவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 86 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் பற்குணம் மதுஷன் தனித்து போராடி 73 பந்துகளை எதிர்கொண்டு 35 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை. இரண்டாவது அதிகப்பட்ச எண்ணிக்கையாக 14 உதிரிகள் சென். பற்றிக்ஸ் அணியின் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தது. பந்துவீச்சில் சிதம்பரலிங்கம் மதுசன் 7 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 16.3 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். மதுசனுக்கு பக்கபலமாக பந்துவீசிய வாசுதேவன் விஷ்ணுகோபன் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். எண்ணிக்கை சுருக்கம் யாழ்ப்பாணக் கல்லூரி அணி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 153 (ரொபின்சன் ஜோன்சன் 61, வாசுதேவன் விஷ்னுகோபன் 30, விஜயகுமார் எவொன் 17 - 3 விக்., பிரேமநாயகம் மதுசன் 17 - 2 விக்., விமலதாஸ் பிரியங்கன் 21 - 2 விக்., குமணதாசன் சாருஷன் 42 - 2 விக்.) சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 167 (உதிரிகள் 35, டேவிட் அபிலாஷ் 28, ஸ்டீவ் ஆதித்தியா 27, விமலதாஸ் பிரியங்கன் 23 ஆ.இ., பிரேமநாயகம் மதுசன் 20, சிதம்பரலிங்கம் மதுசன் 45 - 5 விக்., வாசுதேவன் விஷ்னுகோபன் 34 - 2 விக்., ஹமிஷ் ஹார்மிஷன் 43 - 2 விக்.), யாழ்ப்பாணக் கல்லூரி அணி 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 159 (எஸ். கோபிஷன் 35, சிதம்பரலிங்கம் மதுசன் 32, குமணதாசன் சாருஷன் 45 - 4 விக்., பிரேமநாயகம் மதுசன் 35 - 3 விக்., பற்குணம் மதுஷன் 9 - 2 விக்.) சென். பற்றிக்ஸ் (வெற்றி இலக்கு 146 ஓட்டங்கள்) 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 86 (பற்குணம் மதுஷன் 35, சிதம்பரலிங்கம் மதுசன் 23 - 6 விக்., வாசுதேவன் விஷ்னுகோபன் 43 - 3 விக்.) https://www.virakesari.lk/article/208652
  7. Published By: Digital Desk 2 08 Mar, 2025 | 09:13 PM திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு எதிர்காலத்தில் மேள்கொள்ளப்பட திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணி தொடர்பில் இந்திய தூதுவரக உயர் அதிகாரிகள் கள ஆய்வுகளை மேற்கொண்டனர். சனிக்கிழமை (08) கள ஆய்வு மேற்கொண்டதுடன், ஆலயத்துக்கு வருகைதந்து பல விடயங்கள் கேட்டறிந்தனர். இதன் போது, அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் ஆறு.திருமுருகன் ஆலய நிர்வாக சபைத் தலைவர் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தியப்பிரதமரிடம் கோணேஸ்வரத் திருப்பணிக்கு உதவுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த திருக்கோணேஸ்வரம் ஆலயம் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/208642
  8. 08 Mar, 2025 | 05:52 PM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்து அந்த பதவியை பெண் பிரதிநிதி ஒருவருக்கு வழங்குவேன் என்று யாழ் மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அச்சுனா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பே பெண்களை துணிகரமாக உலகுக்கு வெளிக்காட்டியது. சுதந்திர பறவைகள் என்ற அடிப்படையில் புலிகள் அமைப்பில் பெண்களை எமது தேசிய தலைவர் இணைத்துக் கொண்டார். ஆகவே எமது தேசிய தலைவரே பெண்களை முழு உலகுக்கும் துணிச்சல்மிக்க பாத்திரமாக வெளிப்படுத்தினார். இசைப்பிரியா படுகொலை, பாலச்சந்திரன் படுகொலை மற்றும் கிருசாந்தி படுகொலைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முறையான விசாரணைகளை மேற்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனை தமிழ் மண் நம்பாது ஏனெனில் இவை வெறும் அரசியல் வாக்குறுதிகள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். 2022 ஆம் ஆண்டு இந்த நாட்டில் காணப்பட்ட ஸ்திரமற்ற நிலைமையின் போது சிங்கள மற்றும் தமிழ் தலைவர்கள் எமது தேசிய தலைவரை நினைவுப்படுத்தினார்கள் என்பதை இதன்போது குறிப்பிட்டுக்கொள்கிறேன். இந்த நாட்டில் பெண்களுக்கு முறையான அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு காணப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. எமது தேசியத் தலைவரின் காலத்தில் பெண்கள் இரவு 12 மணிக்கு கூட சுதந்திரமாக வெளியில் செல்லும் நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பகலில் கூட வெளியில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.பெண்களுக்கு நான் மதிப்பளிப்பேன். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்து அந்த பதவியை பெண் பிரதிநிதி ஒருவருக்கு வழங்குவேன். இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் இந்த அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் பிரதிநிதிகள் கூட இல்லை. அதேபோல் கிளின் ஸ்ரீ லங்கா செயலணியில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி கூட இல்லை இவ்வாறான நிலையில் எவ்வாறு தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும். வைத்தியர்களின் சம்பளம் தொடர்பில் மாத்திரமே பேசப்படுகிறது. தாதியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களுக்கான சேவை வசதிகள் பற்றி பேசப்படுதில்லை. வடக்கு வைத்தியசாலைகளில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.அவற்றுக்கான தீர்வுகள் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. போலியான வாக்குறுதிகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளன. மன்னார் வைத்தியசாலையில் சிந்துஜா என்ற இளம் தாய் மரணம், சிறுமி வைசாலியின் கை அகற்றப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் விசேடமாக குறிப்பிட வேண்டும். மலையக பெண்கள் கடுமையான நிலையில் தான் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் சம்பளம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் உறுதியாக ஏதும் குறிப்பிடப்படவில்லை.மாறாக அவர்களை தோட்ட நிர்வாகங்களுக்கு பொறுப்பாக்கும் பரிந்துரைகள் மாத்திரமே வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றார். https://www.virakesari.lk/article/208650
  9. Published By: Digital Desk 2 08 Mar, 2025 | 09:14 PM பார்வைக் குறைபாடு உள்ளிட்ட இயலாமையுடைய பெண்கள் உயிர்வாழ்வதற்காக மேற்கொள்ளும் போராட்டத்திற்குப் பாராளுமன்றம் உறுதுணையாகவிருக்கும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். 2025ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நோக்கில் பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை பார்வைக் குறைபாடுள்ள மக்கள் சங்கத்தின், பார்வைக் குறைபாடுள்ள பெண் ஒன்றியத்தின் கொடி தினத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் மேலும் தெரிவிக்கையில், பார்வைக் குறைபாடு உட்பட இயலாமை உடைய பெண்கள் தமது தொழில்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கும் நாளாந்தம் போராடிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். சமூகம் இயலாமைக்கு உட்பட்டிருப்பதால் இவ்வாறான பெண்களுக்குப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இந்த நிலைமையைச் சரியாக அடையாளம் கண்டு இதற்காக நடவடிக்கை எடுக்கப் பாராளுமன்றம் தலையீடு செய்யும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் இலங்கை பார்வைக் குறைபாடுள்ள மக்கள் சங்கத்தின், பார்வைக் குறைபாடுள்ள பெண் ஒன்றியத்தின் உறுப்பினர்களினால் பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு 2025 சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கொடி அணிவிக்கப்பட்டது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பிரதிச் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த சில்வா, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர நாயகம் ஹன்ச அபேரத்ன, சட்டவாக்கத் திணைக்களப் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, இலங்கை பார்வைக் குறைபாடுள்ள மக்கள் சங்கத்தின் தலைவர் எச்.ஜே.நில்மினி, பார்வைக் குறைபாடுள்ள பெண் ஒன்றியத்தின் தலைவர் ஷாரிகா ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/208639
  10. 08 Mar, 2025 | 02:25 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கம் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, மின்கட்டணத்தை அதிகரித்து நாட்டிலுள்ள அனைவரிடமிருந்தும் மறைமுக வரியை அறிவிடுவதற்கு திட்டமிடுகிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். மேலும் கொலைக்குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் செவ்வந்தி என்ற பெண் இருக்குமிடங்களை அறிந்திருந்தும் அவர்கள் கைது செய்யப்படாமையானது அரசாங்கத்துக்கு இவர்களுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பிருக்கிறது என்பதை காண்பிப்பதாகவும் அஜித் பி பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. அரசாங்கம் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, மின்கட்டணத்தை அதிகரித்து நாட்டிலுள்ள அனைவரிடமும் தண்டப்பணம் அறவிடுவதற்கும் அனைவரிடமிருந்தும் மறைமுக வரியை அறிவிடுவதற்கும் திட்டமிடுகிறது. நாணய நிதியத்தின் நியாயமற்ற அழுத்தங்களுக்கு அடிபணிந்து மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்கு முன்னர் பொது மக்கள் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மின்கட்டணத்தை குறைக்க முடிந்தது. நாமும் அதற்காக போராடினோம். எனவே மீண்டும் நியாயமற்ற முறையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டால், நாம் சட்ட ரீதியாக அது குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தி அந்த முயற்சியை தோற்கடிப்போம். நாட்டு பிரஜைகளுக்கு நியாயமான விலையில் மின்சாரம் கிடைக்க வேண்டும். மாறாக அது வரி அறவிடுவதற்கான மறைமுக முறைமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் அதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. குறிப்பாக சூரிய மற்றும் காற்றாலை மின்னுற்பத்திகளை மின் கட்டமைப்பில் இணைத்து அதன் தொழிநுட்ப கூறுகளை மேம்படுத்தி குறைந்த விலையில் மின்சாரத்தை மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பது அரசாங்கம் பொறுப்பாகும். அந்த பொறுப்புக்களை தட்டிக்கழித்து குரங்களைப் பற்றி பேசிக் கொண்டு, மின்சக்தி துறையை கேலிக்குள்ளாக்கி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாறானதொரு சதித்திட்டம் இடம்பெறுவதை நாம் அறிவோம். அதனை நாம் தோற்கடிப்போம். இன்று நாட்டில் முன்னாள் பொலிஸ்மா அதிபரை தேட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமை வெட்கத்துக்குரிய விடயமாகும். பிரதி அமைச்சர் சுனில் வட்டகல முன்னாள் பொலிஸ்மா அதிபர் இருக்குமிடத்தையும், கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான செவ்வந்தி என்ற பெண் இருக்குமிடத்தையும் நாம் அறிவோம் எனத் தெரிவித்துள்ளார். அவர்களை நாம் கைது செய்வோம் என்றும் அவர் கூறினார். சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருக்கும் இடம் தெரிந்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு வலியுறுத்துகின்றோம். அவ்வாறின்றி அவர்கள் உடனடியாக கைது செய்யப்படவில்லை எனில் அவர்களுடன் அரசாங்கத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பிருக்கிறது. கொலைக்குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருக்குமிடத்தை அறிந்து கொண்டு அவர்களை கைது செய்யாவிட்டால் அது பாரிய தவறாகும் என்றார். https://www.virakesari.lk/article/208628
  11. காஞ்சிபுரம் சாம்சங் ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி? - இன்றைய முக்கியச் செய்திகள் 9 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய (08/03/2025) தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. சாம்சங் தொழிற்சங்கம் அமைப்பதற்காக போராட்டம் நடத்திய 23 பேரை பணியிடை நீக்கம் செய்த சாம்சங் தொழிற்சாலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்ததாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதனிடையே பணி நேரத்தில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 23 சி.ஐ.டி.யு. தொழிற்சங்க ஊழியர்களை சாம்சங் நிர்வாகம் தற்காலிக இடை நீக்கம் செய்தது. இதனால் விரக்தியடைந்த மற்ற ஊழியர்கள் சாம்சங் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடத்தப்பட்ட 3 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது. சாம்சங் ஊழியர்கள் அனைவரும் தொழிற்சாலை முன்பு வேலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சாம்சங் நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு வந்தால் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக ஊழியர்கள் தெரிவித்தனர்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிரம்ப் வரி விதிப்பு முறை ஆயுதத்தைப் பயன்படுத்துவது ஏன்? எளிய விளக்கம் கோவையில் கல்லுாரி மாணவர்கள் அறைகளில் போலீசார் சோதனையிடுவது ஏன்? பெலிகாட்: கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற தந்தை மீது குற்றச்சாட்டை பதிவு செய்த மகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - சிறையில் இருக்கும் பிறரின் நிலை என்ன? "போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்களுக்கு சாம்சங் நிர்வாகம் அடையாள அட்டை தடை நீக்க கோரிக்கை என அச்சிடப்பட்ட விண்ணப்ப படிவத்தை வழங்கியது. இதனைப் பெற்று ஊழியர்கள் பூர்த்தி செய்தனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 23 பேர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இன்று முதல் ஊதியம் வழங்கப்படும் என்றும் சாம்சங் நிர்வாகத்தினர் அறிவித்தனர். இன்று முதல் குழுக்களாக அவரவர் மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பப்பட்டு பயிற்சி வழங்கி அதன் பிறகு பணியில் சேர்க்கப்படுவர் என்றும் சாம்சங் நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது," என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு மார்ச் 14 வரை நீதிமன்றக் காவல் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கும் வரும் 14ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "ராமநாதபுரம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட விசைப் பகுகுகளில், 1,500-க்கும் அதிகமான மீனவா்கள் வியாழக்கிழமை காலை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் கச்சத்தீவு-தலைமன்னாா் வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஒரு விசைப் படகில் இருந்த 14 மீனவா்களைக் கைது செய்து, மன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தூங்குவதற்காகவே சுற்றுலா செல்வது குறித்து உங்களுக்கு தெரியுமா?7 மார்ச் 2025 திருவண்ணாமலையில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருக்கிறதா? உண்மை என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இலங்கைக் கடற்படையினா் ஒரு விசைப் படகில் இருந்த 14 மீனவா்களைக் கைது செய்து, மன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா் "சமீபத்தில் ராமேசுவரம் மீனவா்கள் 42 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்ததைக் கண்டித்து, மீனவ சங்கத்தினா் போராட்டங்களை நடத்தினர். தற்போது 14 மீனவா்கள் கைது செய்யப்பட்டது ராமேசுவரம் பகுதி மீனவா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கைதான பாம்பன் மீனவர்கள் 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை வரும் 14ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பின்னர் மீனவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்," என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்ப பிரச்னை தீர 5 வயது சிறுமி நரபலி கோவாவில் குடும்ப பிரச்னை தீர 5 வயது சிறுமியை நரபலி கொடுத்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர் என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "கோவா மாநிலம் பொண்டா அருகே வசித்து வருபவர் பாபாசாகேப் அலார் (வயது 52). இவரது மனைவி பூஜா (45). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த 5-ஆம் தேதி திடீரென மாயமானார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். அப்போது அங்கே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இதில் அந்த சிறுமி கடைசியாக அலார் தம்பதி வீட்டுக்கு சென்றதும், பின்னர் அங்கிருந்து திரும்பாததும் தெரியவந்தது. எனவே அந்த தம்பதியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமியை கொலை செய்ததை அலார் மற்றும் பூஜா தம்பதி ஒப்புக்கொண்டனர்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களது குடும்பத்தில் ஏராளமான பிரச்னைகள் இருந்ததாகவும், அதை தீர்க்க நரபலி கொடுக்க வேண்டும் என மந்திரவாதி ஒருவர் கூறியதாகவும் அதன்படி அந்த சிறுமியை கொலை செய்து தங்கள் வீட்டு வளாகத்தில் புதைத்ததாகவும் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், கணவன்-மனைவி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1400 படங்கள், 7000 பாடல்கள்: அன்னக்கிளி முதல் சிம்ஃபொனி வரை இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம்8 மார்ச் 2025 தெரு நாய்களின் உடலில் மைக்ரோ சிப் பொருத்தும் சென்னை மாநகராட்சி - எதற்காக? என்ன பயன்?4 மணி நேரங்களுக்கு முன்னர் மேக்கேதாட்டு அணைத் திட்டம்: ஆயத்தப் பணிகள் நிறைவு - சித்தராமையா மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கான ஆயத்தப்பணிகள் முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில், உரிய அமைப்புகளிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் வெள்ளிக்கிழமை அன்று செய்த அவர், "மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கான ஆயத்தப்பணிகள் முடிவடைந்துள்ளன. உரிய அமைப்புகளின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் திட்டம் செயல்படுத்தப்படும். மாநிலத்தில் நீர் மேலாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கான கர்நாடக நீர்ப்பாசன திருத்தச் சட்டம் 2024 அமல்படுத்தப்பட்டுள்ளது," என்று கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அணைத் திட்டத்துக்கான ஆயத்தப்பணிகள் நிறைவடைந்திருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருக்கிறார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சார வசதியில்லாத மடகாஸ்கர் கிராமத்திற்கு வெளிச்சம் தந்த சோலார் பாட்டிகள்7 மார்ச் 2025 டிரம்பின் வர்த்தகப் போர் சீனாவின் சந்தை வளர்ச்சியை எந்த அளவுக்கு பாதிக்கும்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,Getty Images மலையக மக்களுக்கான காணி உரிமை வழங்குவதற்கு ஒத்துழைப்போம் - ஜீவன் தொண்டமான் வீட்டை வைத்து மலையகத்தில் அரசியல் செய்ய முடியாது. அவர்களுக்கு காணி உரிமையே வழங்க வேண்டும். அதற்கு தேவையான ஒத்துழைப்பை நாங்கள் வழங்குவோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார் என்று வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் மார்ச் 7 அன்று இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கீழ்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? நிழலுலக மோதல், வாள்வெட்டு சம்பவங்கள் உணர்த்துவது என்ன?5 மார்ச் 2025 தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா?5 மார்ச் 2025 பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,காணியை அவர்களிடம் ஒப்படைத்தால் அவர்களால் சொந்த வீட்டை கட்ட முடியும் என ஜீவன் தொண்டைமான் பேச்சு "வீட்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் அமைச்சு ரீதியில் முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். இந்த வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்காக 387 வீடுகளுக்கான திட்டமே உள்ளன. மலையகத்தில் 2 இலட்சத்து 51ஆயிரம் குடும்பங்கள் வீடுகள் இன்றி இருக்கின்றனர். இந்திய அரசாங்கத்தால் ஏற்கனவே நான்காயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் 10 ஆயிரம் வீடுகள் வரவுள்ளன. எவ்வளவு வாய்சொல் வீரர்களாக இருந்தாலும் வீட்டுப் பிரச்சினை தீரப்போவதில்லை. மலையக மக்களுக்காக இரண்டு இலட்சத்து நான்காயிரம் ஹெக்டரில் 10 பேர்ச்சர்ஸ் என்ற அடிப்படையில் குடும்பமொன்றுக்கு காணியை வழங்கினால் 4777 ஹெக்டர் மட்டுமே போகும். காணி உரிமையே மக்களுக்கு அத்தியாவசிய தேவையாகும். சலுகை அரசியல் மலையக மக்களை மாற்றப் போவதில்லை. மாற்றம் தேவையென்றால் கட்டாயம் காணி உரிமையை வழங்கியே ஆக வேண்டும். காணியை அவர்களிடம் ஒப்படைத்தால் அவர்களால் சொந்த வீட்டை கட்ட முடியும். நாடளாவிய ரீதியில் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படுகிறது. ஏன் மலையக மக்களுக்கு அதனை வழங்க முடியாது. வீட்டை வைத்து அரசியல் செய்ய முடியாது. அவர்களுக்கு காணி உரிமையையே வழங்க வேண்டும். அதற்கு தேவையான ஒத்துழைப்பை நாங்கள் வழங்குவோம். நாங்கள் மூன்று முறை அதுதொடர்பில் அமைச்சரவையில் அனுமதி பெற்றுள்ளோம் அதனை செயற்படுத்தவே வேண்டியுள்ளது என்றார்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyd0qpnzn5o
  12. 17 இந்திய மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை ! 08 Mar, 2025 | 02:17 PM இலங்கை கடல் எல்லை பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் மேலும் ஒரு மீனவருக்கு இரண்டரை இலட்சம் ரூபா தண்டப் பணமும் விதித்து விடுதலை செய்யுமாறு மன்னார் நீதவான் வெள்ளிக்கிழமை (07) மாலை தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே நேரம் நபர் ஒருவர் அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் இரண்டாவது தடவையாக ஈடுபட்டமை கண்டறியப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு 24 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த மாதம் (23) தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 32 மீனவர்களில் நான்கு மீனவர்கள் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனைய மீனவர்களை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டார் அதே நேரம் கடந்த மாதம் (02) கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களில் 9 பேர் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன் ஒருவர் இரண்டாவது தடவை இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் (20) கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களும் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் இலட்சம் ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப் பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் எதிர்வரும் 14 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/208624
  13. ''பிள்ளைகளை ஒவ்வொருநாளும் தேடித்தேடி நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம்'' - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 08 Mar, 2025 | 01:56 PM முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்றுவரை தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 வருடங்களுக்கு மேலாக நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டு வரும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை சனிக்கிழமை (08) முன்னெடுத்துள்ளனர். கவனயீர்ப்பு போராட்டமானது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாமிற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது வட்டுவாகல் பாலம் ஊடாக பேரணியாக சென்று வட்டுவாகல் பகுதியில் இறுதியாக கையளிக்கப்பட்ட இடத்திற்கு முன்பாக வரை சென்று போராட்டம் நிறைவடைந்திருந்தது. கவனயீர்ப்பு போராட்டத்தின் போது சர்வதேசமே பதில் சொல், சர்வதேசமே எமக்கான தீர்வு என்ன! , பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம், கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம்! எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும், தமிழரை கடத்தாதே! இனவழிப்பு செய்யாதே! உங்கள் சிறைக்கூடம் எங்கள் பிள்ளைகளுக்கு என்ன கல்விக்கூடமா? எமது நாட்டில் நாம்வாழ உரிமையில்லையா? உலகமெல்லாம் பெண்கள் உரிமை பேசும் இந்நாளிலும் தெருவில் கிடந்து அழவைத்திருக்கிறது அரசு ,போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். கவனயீர்ப்பு போராட்டத்தின் போது வட்டுவாகல் விகாரைக்கு செல்லும் வழியில் அதிகளவவான பொலிஸார் கடமையில் ஈடுபட்டடிருந்தமையும் குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/208622
  14. சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் எவ்வாறு தொடங்கியது? அது ஏன் அவசியம்? பட மூலாதாரம்,Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, உலகம் முழுவதும் உள்ள மக்கள் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். உலகளவில் கொண்டாடப்படும் இந்த நாள், பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடுவதுடன், பாலின சமத்துவமின்மை மற்றும் பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது. ஆனால் இந்த நாள் ஏன் முக்கியமானது? சர்வதேச மகளிர் தினம் எப்படி தொடங்கியது? சர்வதேச மகளிர் தினம் (IWD) தொழிலாளர் இயக்கத்தில் இருந்து தொடங்கியது. இதற்கான விதை 1908 ஆம் ஆண்டில் விதைக்கப்பட்டது. 15,000 பெண்கள் நியூயார்க் நகரம் முழுவதும் பேரணி நடத்தி, வேலைநேர குறைப்பு, சம்பள உயர்வு மற்றும் வாக்குரிமை கோரி போராட்டம் நடத்தினர். ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது. உத்தராகண்ட்: 'எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அரசு ஏன் தலையிடுகிறது?' லிவ்-இன் உறவில் இருப்பவர்களின் அச்சம் என்ன? 'வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை' - சமையல், வீட்டை சுத்தப்படுத்துவதில் ஆண், பெண் குழந்தைகளுக்கிடையே பாகுபாடா? பெண்ணுறுப்பு சிதைப்பு: 6 வயதில் இழைக்கப்பட்ட கொடூரம் - மீண்டு வந்த சோமாலிய பெண் செய்தது என்ன? இதை ஒரு சர்வதேச நிகழ்வாக மாற்றுவதற்கான சிந்தனை, ஜெர்மன் கம்யூனிஸ்ட் மற்றும் பெண் உரிமைக்காக வாதிடும் கிளாரா ஜெட்கின் என்பவரிடமிருந்து பிறந்தது. 1910 இல், கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் அவர் இந்த யோசனையை முன்வைத்தார். அந்த மாநாட்டில் கலந்துகொண்ட 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் அவரது பரிந்துரையை ஒருமனதாக ஆதரித்தனர். அதனைத் தொடர்ந்து, முதல் சர்வதேச மகளிர் தினம் 1911 இல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது. பின்னர், 1977 இல் ஐக்கிய நாடுகள் சபையால் (UN) இந்த நாள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையால் (1996 இல்) ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் மகளிர் தின கருப்பொருள் "கடந்த காலத்தைக் கொண்டாடுதல், எதிர்காலத்திற்கான திட்டமிடல்" என்பதாகும். பட மூலாதாரம்,Topical Press Agency/Getty Images படக்குறிப்பு,சர்வதேச மகளிர் தினத்தை நிறுவிய கிளாரா ஜெட்கின் சர்வதேச மகளிர் தினம் ஏன் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது? ஜெட்கின் முன்முதலில் முன்மொழிந்த சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் எந்த குறிப்பிட்ட நாளுடன் தொடர்புடையதாக இல்லை. 1917 இல் போர்க்கால வேலைநிறுத்தத்தின் போது ரஷ்ய பெண்கள் "ரொட்டி மற்றும் அமைதி"க்காகப் போராடியதை அடுத்து மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. வேலைநிறுத்தத்தின் நான்கு நாட்களுக்குப் பிறகு, ரஷ்யாவின் ஜார் மன்னர் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. ரஷ்யாவில் அப்போது பயன்பாட்டில் இருந்த ஜூலியன் நாட்காட்டியின்படி, பெண்கள் வேலைநிறுத்தம் பிப்ரவரி 23 அன்று தொடங்கியது. உலகின் பிற பகுதிகளில் பயன்படுத்தப்படும் கிரிகோரியன் நாட்காட்டியில், அந்த தேதி மார்ச் 8 ஆகும். காதலர் தினம்: 3 ஆண்டுகள் வெளியூரில் வீட்டுச்சிறை, உறவினர்களின் புறக்கணிப்புகள் - சாதி தடையை உடைத்து இணைந்த தம்பதி14 பிப்ரவரி 2025 இரவில் தனியாக பயணிக்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்7 பிப்ரவரி 2025 அயோத்தியில் தலித் பெண் படுகொலை: கதறி அழுத எம்.பி - என்ன நடந்தது?3 பிப்ரவரி 2025 சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் எவ்வாறு கொண்டாடப்படுகிறது? சர்வதேச மகளிர் தினம் பல நாடுகளில் தேசிய விடுமுறையாக உள்ளது. ஊர்வலங்கள், உரையாடல் நிகழ்வுகள், கச்சேரிகள், கண்காட்சிகள் மற்றும் விவாதங்கள் உட்பட ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் அந்நாளில் நடைபெறுகின்றன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த ஆண்டு பிரான்சில் நடந்த சர்வதேச மகளிர் தினம், பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை உள்ளடக்கிய நாளையும் குறித்தது. இத்தாலியில், சர்வதேச மகளிர் தினம் 'ஃபெஸ்டா டெல்லா டோனா' என்று அழைக்கப்படுகிறது. மிமோசா பூக்கள், இத்தினத்துக்கான பிரபலமான பரிசாக விளங்குகின்றன. சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ரஷ்யாவில் பூக்களின் விற்பனை இரட்டிப்பாக உயரும். உகாண்டாவில், 1984 முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது, அரசு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலைப்புகளில் கவனம் செலுத்தும். செர்பியா, அல்பேனியா, மாசிடோனியா மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் அன்னையர் தினம் மற்றும் சர்வதேச மகளிர் தினம் ஆகியவை ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன. அமெரிக்காவில், மார்ச் மாதம் மகளிர் வரலாற்று மாதமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் அதிபரின் அறிவிப்பானது அமெரிக்க பெண்களின் சாதனைகளைப் போற்றுகிறது. சர்வதேச மகளிர் தினத்திற்கு மக்கள் ஏன் ஊதா நிறத்தை அணிகிறார்கள்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மடகாஸ்கர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளும் இந்த நாளை பெண்களுக்கு மட்டும் அதிகாரப்பூர்வமான விடுமுறையாக அங்கீகரித்துள்ளன. சர்வதேச மகளிர் தின இணையதளத்தின் படி, ஊதா, பச்சை மற்றும் வெள்ளை ஆகியவை சர்வதேச மகளிர் தினத்தின் நிறங்கள் என அறியப்படுகின்றன. "ஊதா நீதி மற்றும் கண்ணியத்தை குறிக்கிறது. பச்சை நம்பிக்கையை குறிக்கிறது. ஒரு சர்ச்சைக்குரிய கருத்தாக இருந்தாலும், வெள்ளை நிறம் தூய்மையை குறிக்கிறது" என சர்வதேச மகளிர் தின இணையதளம் குறிப்பிடுகிறது. இந்த வண்ணங்களை பெண்களின் சமூக மற்றும் அரசியல் ஒன்றியம் (WSPU) பயன்படுத்தியது. 1903 இல் இங்கிலாந்தில் பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடுவதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டது. பட மூலாதாரம்,ELIZABETH CRAWFORD படக்குறிப்பு,1909 இல் பெண்களின் சமூக மற்றும் அரசியல் ஒன்றியம் வழங்கிய பதக்கம் குஜராத் கலவரத்தில் எரிக்கப்பட்ட குடியிருப்பு: நீண்ட காலம் நீதிக்காக போராடிய பெண் மரணம் - யார் அவர்?1 பிப்ரவரி 2025 விளையாட்டுத் துறையில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை குவிப்பதை நிதிப் பற்றாக்குறை தடுக்கிறதா?31 ஜனவரி 2025 மதுரை: அரசு செவிலியரின் மூன்றாவது கர்ப்பத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு - நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன?29 ஜனவரி 2025 2025 சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் என்ன? 2025 ஆம் ஆண்டிற்கான ஐ.நா.வின் கருப்பொருள் "அனைத்து பெண்களுக்கும் சிறுமிகளுக்கும்: உரிமைகள். சமத்துவம். அதிகாரமளித்தல்," என்பதாகும். இது நீடித்த மாற்றத்திற்கான உந்து சக்தியாக செயல்பட்டு, அடுத்த தலைமுறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சர்வதேச மகளிர் தின இணையதளத்தில், #AccelerateAction என்ற கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த, மகளிர் தின கொண்டாட்டத்தைப் பற்றிய நேர்மறையான செய்திகளைப் பகிரும் போது, #IWD2025 மற்றும் #AccelerateAction என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்த உலகம் முழுவதும் உள்ள மக்களை இந்த அமைப்பு ஊக்குவிக்கிறது. சர்வதேச மகளிர் தினம் தேவை என்று ஏன் வாதிடப்படுகிறது? பாலின சமத்துவத்தை விரைவுபடுத்தும் நடவடிக்கைக்கான அழைப்பை இந்த நாள் குறிக்கிறது என்று அமைப்பாளர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் உள்ளதா? தரவுகள் ஆம் என்ற பதிலை பரிந்துரைக்கும். 2023 ஆம் ஆண்டில் வன்முறையுடன் தொடர்புடைய 3,688 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இச்சம்பவங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளன. மேலும் இதில் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் சிறுமிகளாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யூனிசெஃப் வெளியிட்ட அறிக்கையின்படி, பள்ளிக்குச் செல்லும் வயதுடைய சுமார் 119 மில்லியன் பெண்கள் பள்ளிக்குச் செல்வதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. 2024 உலக வங்கிக் குழுமத்தின் அறிக்கை, ஆண்கள் அனுபவிக்கும் சட்ட உரிமைகளில் மூன்றில் இரண்டு பங்கை மட்டுமே பெண்கள் பெறுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. உலக மக்கள் தொகையின் பாதி, அதாவது சுமார் 3.6 பில்லியன் மக்கள் 2024ல் நடைபெற்ற முக்கியத் தேர்தல்களில் பங்கேற்றதாக அறியப்படுகிறது. ஆனால், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் கடந்த 20 ஆண்டுகளில் மிகவும் மெதுவான வளர்ச்சி மட்டுமே 2024 ஆம் ஆண்டில் காணப்பட்டது என்று பிபிசி 100 பெண்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. ஐநா பெண்கள் அமைப்பின் 2024 ஜெண்டர் ஸ்னாப்ஷாட் (Gender snapshot) அறிக்கையின்படி, அனைத்து பெண்களையும், சிறுமிகளையும் வறுமையிலிருந்து மீட்க 137 ஆண்டுகள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், 20 முதல் 24 வயதுடைய பெண்களில் 5 பேரில் ஒருவருக்கு 18 வயதிற்கு முன் திருமணம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உலகளவில், 2023 ஆம் ஆண்டில் சுமார் 51,100 பெண்களும் சிறுமிகளும் அவர்களின் நெருங்கிய உறவினர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டனர் என்றும் அறியப்படுகின்றது. ஜெர்மனிக்கு படிக்கச் சென்ற இடத்தில் ஹிட்லரின் இனவெறி கொள்கைகளை எதிர்த்து நின்ற இந்திய பெண் - என்ன செய்தார்?21 ஜனவரி 2025 சொல்லிசை சிஸ்டாஸ்: ஒடுக்குமுறைக்கு எதிராகப் பாடும் தமிழ்நாட்டின் முதல் பெண்கள் ராப் இசைக் குழு17 ஜனவரி 2025 ஜப்பான்: 56 ஆண்டு கால போராட்டம்; தம்பியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய 91 வயது அக்கா16 ஜனவரி 2025 சர்வதேச ஆண்கள் தினம் உள்ளதா? சர்வதேச ஆண்கள் தினம் 1990 களில் இருந்து நவம்பர் 19 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு ஐநாவால் அங்கீகரிக்கப்படவில்லை, ஆனால் பிரிட்டன் உட்பட உலகளவில் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. அந்த நாளின் முக்கியத்துவம் "ஆண்கள், உலகிற்கு, அவர்களது குடும்பங்களுக்கு மற்றும் சமூகங்களுக்கு கொண்டு வரும் நேர்மறை மதிப்பை" சிறப்பிக்கும் வகையில் உள்ளது என்று இந்த நிகழ்வின் அமைப்பாளர்கள் கூறுகிறார்கள். இது நேர்மறையான முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்துவதையும், ஆண்களின் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் மற்றும் பாலின உறவுகளை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, நகைச்சுவை நடிகர் ரிச்சர்ட் ஹெர்ரிங், ஒவ்வொரு சர்வதேச மகளிர் தினத்திலும், "ரெஃப்யூஜ்" எனும் குடும்ப வன்முறை நிவாரண அமைப்புக்காக பத்தாயிரக்கணக்கான பவுண்டுகளை நிதியாகத் திரட்டி வந்தார். சமூக ஊடக தளமான எக்ஸில், சர்வதேச ஆண்கள் தினம் இல்லாதது குறித்து கோபமாக இருந்தவர்களுக்கு பதிலளிப்பதன் மூலம் இந்த நிதி திரட்டலை அவர் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqjdel8880zo
  15. யாழ். மத்திய அணியை 5 விக்கெட்களால் வீழ்த்தி வடக்கின் சமரில் 40ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது சென் ஜோன்ஸ் 08 Mar, 2025 | 04:15 PM (நெவில் அன்தனி) யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (08) நிறைவுக்கு வந்த 118ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரியை 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 118 வடக்கின் சமர்களில் சென். ஜோன்ஸ் கல்லூரி 40ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது. இதற்கு அமைய வடக்கின் சமரில் 118 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் சென். ஜோன்ஸ் கல்லூரி 40 - 29 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் வடக்கின் சமரில் கடந்த 5 அத்தியாயங்களில் தொடர்ச்சியாக முடிவு கிட்டியுள்ளதுடன் சென். ஜோன்ஸ் கல்லூரி தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. சென் ஜோன்ஸ் அணியின் வெற்றியில் அணித் தலைவர் ஜெயச்சந்திரன் அஷ்நாத்தின் சகலதுறை ஆட்டம், ரேமன் அனுஷாந்த் பெற்ற பொறுமையும் திறமையும் கலந்த அரைச் சதம் என்பன பிரதான பங்காற்றின. இந்த வருடப் போட்டியில் 93 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு போட்டியின் மூன்நாம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணி பகல் போசன இடைவேளைக்குப் பின்னர் 5 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. உதயணன் அபிஜோய்ஷாந்த் 33 ஓட்டங்களையும் ஜெயச்சந்திரன் அஷ்நாத் ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் பெற்றனர். முன்னதாக மூன்றாம் நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த யாழ். மத்திய கல்லூரி மேலதிகமாக 7 ஓட்டங்களைப் பெற்று கடைசி 2 விக்கெட்களை இழந்தது. விசேட விருதுகள் சிறந்த துடுப்பாட்ட வீரர்: ரேமன் அனுஷாந்த் (சென் ஜோன்ஸ்) சிறந்த பந்துவீச்சாளர்: ஜெயச்சந்திரன் அஷ்நாத் (சென். ஜோன்ஸ்) சிறந்த களத்தடுப்பாளர்: அன்டன் நிரோஷன் அபிஷேக் ( யாழ். மத்திய கல்லூரி) சிறந்த சகலதுறை வீரர்: ரஞ்சித்குமார் நியூட்டன் (யாழ். மத்திய கல்லூரி) சிறந்த விக்கெட் காப்பாளர்: கிருபாகரன் சஞ்சுதன் (சென். ஜொன்ஸ்) ஆட்டநாயகன்: ஜெயச்சந்திரன் அஷ்நாத் (சென். ஜோன்ஸ்) கடந்த வியாழக்கிழமை (06) ஆரம்பமாகி இன்று சனிக்கிழமை நிறைவடைந்த இப் போட்டியின் எண்ணிக்கை சுருக்கம் வருமாறு:- யாழ். மத்திய அணி: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 131 (அன்டன் நிரேஷான் அபிஷேக் 27, ரஞ்சித்குமார் நியூட்டன் 24, சதாகரன் சிமில்டன் 24, மதீஸ்வரன் கார்த்திகன் 15,ஜெயச்சந்திரன் அஷ்நாத் 38 - 5 விக், முர்ஃபின் ரெண்டியோ 25 - 2 விக்., குகதாஸ் மாதுளன் 27 - 2 விக்., நாகேஷ்வரன் கிரிஷான் 6 - 1 விக்.) சென். ஜோன்ஸ் அணி: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 181 (ரேமன் அனுஷாந்த் 86, ஜெயச்சந்திரன் அஷ்நாத் 29, கிருபாகரன் சஞ்சுதுன் 22, முர்ஃபின் ரெண்டியோ 20, ஜோன் ஆர்னல்ட் 11, ரஞ்சித்குமார் நியூட்டன் 62 - 5 விக்., முரளி திசோன் 47 - 2 விக்., தகுதாஸ் அபிலாஷ் 15 - 1 விக்.) யாழ். மத்திய அணி: 2ஆவது இன் - சகலரும் ஆட்டம் இழந்து 142 (சுதாகரன் சிமில்டன் 34, தகுதாஸ் அபிலாஷ் 28, கணேசலிங்கம் மதுசுதன் 17, முரளி திசோன் 16, விக்ணேஸ்வரன் பாருதி 13 ஆ.இ., ஜெயச்சந்திரன் அஷ்நாத் 54 - 3 விக்., குகதாஸ் மாதுளன் 17 - 2 விக்., உதயணன் அபிஜோய்ஷாந்த் 5 - 1 விக்,, முர்ஃபின் ரெண்டியோ 34 - 1 விக்.) சென் ஜோன்ஸ் அணி: (வெற்றி இலக்கு 93 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 93 - 5 விக்;. (உதயணன் அபிஜோய்ஷாந்த் 33, ஜெயச்சந்திரன் அஷ்நாத் 29 ஆ.இ., முர்ஃபின் ரெண்டியோ 11, ஜோன் நெதேனியா 11, முரளி திசோன் 29 - 2 விக்., ரஞ்சித்குமார் நியூட்டன் 37 - 2 விக்., தகுதாஸ் அபிலாஷ் 11 - 1 விக்.) https://www.virakesari.lk/article/208643
  16. கூட்டுச் செயற்பாடுகளுக்கான முக்கிய தருணம் : சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு ! Published By: Digital Desk 2 06 Mar, 2025 | 01:33 PM சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நாம் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் நிற்கிறோம். இது நாம் ஒன்றுபடுவதற்கான தருணம். அது வெறுமனே நாம் அடைந்துள்ள முன்னேற்றங்களை கொண்டாடுவதற்கானது மட்டுமானதல்ல என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஆனால் அது இலங்கையில் மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள பெண்களது வாழ்வில் தாக்கம் செலுத்தக்கூடிய கட்டமைப்புசார் சமமின்மைக்கும், பெண்களுக்கு எதிரான கருத்துக்களுக்கும் முகங்கொடுப்பதற்கு ஒன்றுபட்டு இணைய வேண்டிய ஒரு காலமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாலின அடிப்படையிலான வன்முறை, பொருளாதார கஷ்டங்கள் மற்றும் அரசியல் ஒதுக்கல்கள் ஆகியன, பெண்களை பொருத்தமற்ற வகையில் பாதிக்கின்றன. குறிப்பாக கிராமிய சமூகங்கள், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள், தோட்டப்பகுதிகள் மற்றும் முறைசாரா தொழிற்றுறையைச் சேர்ந்தவர்கள் இவற்றுக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக இருக்கும்வரை எந்தப் பெண்ணும் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஒருவரையொருவர் பாதுகாப்பதற்கும், எவரும் கைவிடப்படாதிருப்பதை உறுதி செய்வதற்கும், ஒவ்வொரு பெண்ணினதும் உரிமைகளும், பாதுகாப்பும் நிலைநிறுத்தப்படுவதற்கும், நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். எமது சனத்தொகையில் பெண்கள் 52% உள்ளனர். மேலும் 1931 ஆம் ஆண்டு நாம் உலகளாவிய வாக்குரிமையைப் பெற்றோம். கடந்த தேர்தலில் பாராளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க எமக்கு முடிந்தது. அந்த அடைவை நாம் கொண்டாடும் அதே வேளையில், அது இன்னும் மிகக் குறைவு என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது பிரஜைகளில் கணிசமான பகுதியினர் தலைமைத்துவம் மற்றும் முடிவெடுக்கும் செயற்பாட்டில் உள்வாங்கப்படாதிருக்கும்போது எமது ஜனநாயகம் முழுமையடையாது. இலங்கை பொருளாதார மீட்சி, காலநிலை மாற்றம், டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் ஜனநாயக சவால்களை எதிர்கொண்டு வரும் ஒரு காலகட்டத்தில், எமது சனத்தொகையில் அரைவாசிப் பகுதியினரை நாம் தள்ளிவைக்க முடியாது. இந்த சவால்களை வெற்றிகொள்வதற்கும் அனைவருக்கும் ஒரு தாங்குதிறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பெண்களின் குரல்கள், தலைமைத்துவம் மற்றும் முகவராண்மை அவசியமாகும். பெண்ணிய இயக்கங்கள் நீண்ட காலமாக மாற்றம் சாத்தியம் என்பதை நமக்குக் கண்முன்னே காட்டியுள்ளன. ஆனால் நாம் தற்போதைய நிலையை சவாலுக்குட்படுத்தி முறையான மாற்றத்தைக் கோரும்போது மட்டுமே இது சாத்தியமாகும். இலங்கையின் பிரதமர் என்ற வகையில், பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் முகவராண்மையை மையமாகக் கொண்ட கொள்கைகளை முன்னெடுப்பதற்கான எனது உறுதியான அர்ப்பணிப்பை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். இந்த சர்வதேச பெண்கள் தினத்தில், வெறுமனே வார்த்தைகளில் மட்டுமன்றி, பாலின உணர்வுள்ள கொள்கைகள், வரவுசெலவுத்திட்டங்கள் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் வாழ்வு அனுபவங்கள் மூலம் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உறுதிபூணுவோம். பெண்களின் வாழ்வு செழிப்புறும்போது, சமூகங்கள் செழிப்புற்று விளங்கும். பெண்கள் தலைமையேற்கும்போது, தேசங்களில் சிறந்த மாற்றத்தினை எதிர்பார்க்க முடியும். இந்த சர்வதேச மகளிர் தினத்தில், நாம் சொற்களுக்குள் கட்டுண்டிருக்காது, ஒன்றுபட்டு முன்னேறுவோம். நமக்கு முன்னுள்ள தலைமுறைக்காகவும், இன்று போராடுகின்றவர்களுக்காகவும், எதிர்கால தலைமுறைக்காகவும் உண்மையான, நீடித்த மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/208428
  17. படலந்த வதை முகாம் சர்ச்சை! ரணிலுக்கு எதிராக வலுக்கும் கண்டனம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமைகளை இரத்து செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னனி கோரிக்கை முன்வைத்துள்ளது. படலந்தா வதை முகாம் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவதன் மூலம் இந்தப் பணியைச் செய்ய முடியும் என்று அதன் தேசிய அமைப்பாளர் துமிந்த நாகமுவ சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாட்டு ஊடகங்களுடனான கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க கூறிய விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். படலந்த வதை முகாம் படலந்த வதை முகாம் அறிக்கை இதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், நாகமுவ தெரிவித்துள்ளார். ஜனதா விமுக்தி பெரமுனவின் பெரும்பான்மையினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இந்த அரசாங்கம் அந்தப் பணியை நிறைவேற்றுமா என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் துமிந்த நாகமுவ இதனை கூறியுள்ளார். https://tamilwin.com/article/strong-condemnation-against-ranil-viral-media-meet-1741399432
  18. சம அளவில் மோதிக்கொள்ளப்படும் சென். பற்றிக்ஸ் - யாழ்ப்பாணக் கல்லூரி பொன் அணிகளின் போர் Published By: Vishnu 07 Mar, 2025 | 08:12 PM (நெவில் அன்தனி) யாழ். சென். பற்றிக்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது பொன் அணிகளின் போர் சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கிறது. சுமாரான மொத்த எண்ணிக்கைகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் யாழ்ப்பாணக் கல்லூரி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 5 விக்கெட்கள் மீதம் இருக்க யாழ்ப்பாணக் கல்லூரி 55 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 50 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி, சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் நால்வர் மாத்திரமே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். இன்னிங்ஸில் பெறப்பட்ட 35 உதிரிகளே அதிகப்பட்ச எண்ணிக்கையாக இருந்தது. பந்துவீச்சில் சிதம்பரலிங்கம் மதுசன் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார். எண்ணிக்கை சுருக்கம் யாழ்ப்பாணக் கல்லூரி அணி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 153 (ரொபின்சன் ஜோன்சன் 61, வாசுதேவன் விஷ்னுகோபன் 30, சுரேஷ் கபிஷன் 14, விஜயகுமார் எவொன் 17 - 3 விக்., பிரேமநாயகம் மதுசன் 17 - 2 விக்., விமலதாஸ் பிரியங்கன் 21 - 2 விக்., குமணதாசன் சாருஷன் 42 - 2 விக்.) சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 167 (உதிரிகள் 35, டேவிட் அபிலாஷ் 28, ஸ்டீவ் ஆதித்தியா 27, விமலதாஸ் பிரியங்கன் 23 ஆ.இ., பிரேமநாயகம் மதுசன் 20, சிதம்பரலிங்கம் மதுசன் 45 - 5 விக்., வாசுதேவன் விஷ்னுகோபன் 34 - 2 விக்., ஹமிஷ் ஹார்மிஷன் 43 - 2 விக்.), யாழ்ப்பாணக் கல்லூரி அணி 2ஆவது இன்: 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 69 - 5 விக். (ஹமிஷ் ஹார்மிஷன் 15 ஆ.இ., வாசுதேவன் விஷ்னுகோபன் 13, தர்மகுமாரன் டேமியன் 10, பிரேமநாயகம் மதுசன் 5 - 2 விக்., குமணதாசன் சாருஷன் 16 - 2 விக்.) https://www.virakesari.lk/article/208586
  19. 118ஆவது வடக்கின் சமர்: தடுமாற்றத்துக்கு மத்தியில் யாழ். மத்திய அணி 85 ஓட்டங்களால் முன்னிலை Published By: Vishnu 07 Mar, 2025 | 07:45 PM (நெவில் அன்தனி) யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் 118ஆவது வடக்கின் சமரில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் யாழ். மத்திய கல்லூரி அணி தடுமாறுகிறது. முதல் இன்னிங்ஸ் நிறைவில் 50 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த யாழ். மத்திய கல்லூரி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க 85 ஓட்டங்களால் யாழ். மத்திய கல்லூரி அணி முன்னிலையில் இருக்கிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (07) காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த சென். ஜோன்ஸ் அணி சகல விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது. ராமன் அனுஷாந்த் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 86 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ரஞ்சித்குமார் நியூட்டன் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். எண்ணிக்கை சுருக்கம் யாழ். மத்திய அணி: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 131 (அன்டன்ரேஷான் அபிஷேக் 27, ரஞ்சித்குமார் நியூட்டன் 24, சதாகரன் சிமில்டன் 24, ஜெயச்சந்திரன் அஷ்நாத் 38 - 5 விக், முர்ஃபில் ரெண்டியோ 25 - 2 விக்., குகதாஸ் மாதுளன் 27 - 2 விக்.) சென். ஜோன்ஸ் அணி: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 181 (ராமன் அனுஷாந்த் 86, ஜெயச்சந்திரன் அஷ்நாத் 29, கிருபாகரன் சஞ்சுதுன் 22, முர்ஃபின் ரெண்டியோ 20, ரஞ்சித்குமார் நியூட்டன் 62 - 5 விக்., முரளி திசோன் 47 - 2 விக்.) யாழ். மத்திய அணி: 2ஆவது இன் - 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 135 - 8 விக். (சுதாகரன் சிமில்டன் 34, தகுதாஸ் அபிலாஷ் 28, கணேசலிங்கம் மதுசுதன் 17, முரளி திசோன் 16, ஜெயச்சந்திரன் அஷ்நாத் 54 - 3 விக்., குகதாஸ் மாதுளன் 17 - 2 விக்.) https://www.virakesari.lk/article/208584
  20. 08 Mar, 2025 | 10:43 AM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 8 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில், அதனை முன்னிட்டு சனிக்கிழமை (8) வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இறுதிக்கட்டப்போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், நீதியை நிலைநாட்டுமாறும் கோரி முல்லைத்தீவு மாவட்ட உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதியுடன் எட்டு வருடங்கள், அதாவது 2923 நாட்கள் பூர்த்தியடைகின்றன. ஆனால் அக்கோரிக்கை இன்னமும் ஈடேறாத நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் 8 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு, வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 'தாய்மார்களாக, பெற்றோராக, குடும்பமாக எமது உறவுகளைக் கண்டுபிடிக்க நீதிக்கான இந்த நீண்ட போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கிறோம்' என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு இன்றைய கவனயீர்ப்புப்போராட்டத்தை 'போரின் இறுதி நாட்களில் வட்டுவாகல் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்த எங்கள் உறவுகள் என்னவானார்கள்?' எனும் பிரதான கேள்வியுடன் முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இப்போராட்டத்தில் சகல தரப்பினரும் கலந்துகொண்டு தமக்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/208585
  21. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதில் இலங்கை பெண்களின் பங்களிப்பு மகத்தானது - சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு! Published By: Digital Desk 2 07 Mar, 2025 | 04:26 PM சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும். தொழில் செய்யும் நேரத்தைக் குறைத்தல், மிகச் சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி சுமார் 15,000 பெண்கள் நியூயோர்க் நகரில் நடத்திய பேரணியின் விளைவாக மார்ச் 08 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கடந்த காலங்களில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்காக நம் நாட்டில் பல கலந்துரையாடல்களும் கருத்தாடல்களும் நடத்தப்பட்டிருந்தாலும், மேடைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அந்த கலந்துரையாடல்கள், பூமியில் ஒரு யதார்த்தமாக விதைக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதில் இலங்கை பெண்களின் பங்களிப்பு மகத்தானது. அந்த மகத்தான பணிக்காக ஒரு அரசாங்கமென்ற வகையில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை, கடந்த குறுகிய காலத்தில் இலங்கைப் பெண்களுக்கு பல வெற்றிகளை அடைய தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம் என்பதையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். பல தசாப்தங்களாக கலந்துரையாடலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம், பங்கேற்பு மற்றும் வகிபாகத்தை அதிகரித்து, கடந்த பொதுத் தேர்தலில் இருபத்தி இரண்டு பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இந்நாட்டின் அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. அதேபோல், ஆண்- பெண் சமூக சமத்துவத்திற்கான சமூக நீதியை அடைவதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையான உற்பத்திப் பொருளாதார செயல்பாட்டில், இந்நாட்டின் சனத்தொகையில் 51.7% ஆக இருக்கும் பெண்களை தீவிரமாகவும் செயற்திறனுடனும் ஈடுபடுத்தும் திட்டத்தை நாம் செயல்படுத்தியுள்ளோம். நீதியான சமூகம், சுதந்திரமான நாடு, சுதந்திரமான பெண்கள் என்ற அபிலாஷைகளை அடையும் வகையில் வீடு, போக்குவரத்து, சமூகம், தொழிலிடம் மற்றும் அரசியல் உட்பட அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் போன்ற பெண்களின் தனித்துவமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அரச கொள்கைகளை வகுப்பதற்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம். இதற்கமைய, " சகல பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கும் சமத்துவம்,உரிமைகள் மற்றும் வலுவூட்டல் எனும் தொனிப்பொருளின் கீழ் " நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் " என இந்த ஆண்டு மகளிர் தினத்தை ஏற்பாடு செய்வதிலுள்ள அர்த்தம் மற்றும் நடைமுறைச்சாத்தியம் என்பனவற்றை நினைவூட்ட வேண்டும். பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கும், நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்வு மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு புதிய மறுமலர்ச்சியை நோக்கிய நமது பயணத்தில் முழுமையான பெண்கள் தலைமுறையினரின் ஆதரவை எதிர்பார்த்து சர்வதேச மகளிர் தினத்திற்கு எனது மனார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/208514
  22. தங்க நகைகளுடன் இந்தியாவுக்கு தப்பியோடியுள்ள செவ்வந்தி - அதிகாரிகள் வெளியிட்ட தகவல் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று அது தொடர்பில் விசாரணை நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் மறைந்திருப்பதாக நம்பப்படும் சுமார் 200 இடங்களில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் செவ்வந்தி தொடர்பில் எந்த தகவலும் கண்டுபிடிக்க முடியவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இஷாரா செவ்வந்தி தனது கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதால், அவரைப் பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய செவ்வந்தி கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களின் பின்னர் களுத்துறை பகுதியிலுள்ள தங்க நகைக் கடைக்கு சென்ற இஷாரா செவ்வந்தி, சுமார் 500,000 ரூபாய் மதிப்புள்ள நகைகளை எடுத்துச் சென்றதாக தெரியவந்தது. ஆனால் அவரைப் பற்றிய குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சந்தேக நபர் தென் மாகாண கடற்கரை வழியாக படகு மூலம் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://tamilwin.com/article/ishara-sewwandi-escaped-from-sri-lanka-1741401560#google_vignette
  23. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஞானசார தேரரரிடத்தில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரஜைகள் அமைப்பினால் முறைப்பாடு Published By: Vishnu 08 Mar, 2025 | 02:03 AM (எம்.வை.எம்.சியாம்) உயிர்த்த ஞாயிறு தாக்குலுடன் தொடர்புடைய பல விடயங்களை தாம் அறிந்திருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினால் வெள்ளிக்கிழமை (7) முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய பல விடயங்களை தாம் அறிந்திருப்பதாக அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த விடயங்களை ஜனாதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தாம் வெளிப்படுத்த தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பு நேற்று இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தது. அந்த அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் அதனுடன் தொடர்புடைய பல தகவல்கள் தாம் அறிந்திருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்திருக்கிறார்.எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியாயமான விசாரணைகளை முன்னெடுக்கும் என உறுதியளித்துள்ளது. இந்நிலையில் தேரரின் இந்த அறிவிப்பு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக அமையும்.அத்துடன் அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே அரசாங்கம் அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். ஏற்கனவே அவர் இந்த தாக்குதல் இடம் பெறுவதற்கு முன்னரும் நாட்டில் அசம்பாவிதமொன்று இடம்பெறவுள்ளதாக எச்சரித்திருந்தார்.தற்போது அவர் இந்த விசேட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள தலதா கண்காட்சியின் போது உயர் பாதுகாப்பை வழங்குமாறு கூறியுள்ளார். நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோன்று தற்போது மக்களுக்கு தேவையான சேவையை முன்னெடுத்துள்ள இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. எனவே இந்த அரசாங்கத்துக்கு எதிராக பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் காணப்படுமாயின் அது இந்த நாட்டில் மீண்டும் பாரிய நெருக்கடியை தோற்றுவிக்கும். அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தேரரரை அழைத்து அவரிடம் வாக்குமூலம் பெற வேண்டும்.அவரிடமிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களை கொண்டு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/208593
  24. Published By: Vishnu 07 Mar, 2025 | 10:11 PM வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் வெள்ளிக்கிழமை (07) தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குறித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் உள்ள அவரது மனைவி ஆசிரியராக பணி புரிவதால் பாடசாலைக்கு சென்ற நிலையில் குறித்த நபர் மட்டும் வீட்டில் நின்றுள்ளார். பாடசாலை முடிந்து மனைவி வந்து பிற்பகல் 1.45 மணியளவில் வீட்டில் உள்ள கணவரை அழைத்த போதும் நீண்ட நேரமாக வீட்டு வாயில் திறக்கப்படவில்லை. இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் மதிலால் ஏறி சென்று கதவை திறந்த போது கணவன் அறை ஒன்றில் இறந்த நிலையில் காணப்பட்டதுடன், தலையில் காயமும் காணப்பட்டது. இந்நிலையில், உறவினர்கள் பிற்பகல் 1.55 மணியளவில் பண்டாரிக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதும் அவர்கள் மரணத்தை தாம் பார்ப்பதில்லை வவுனியா பொலிசில் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். அதன்பின் பிற்பகல் 2 மணியளவில வவுனியா பொலிசாருக்கு நேரில் சென்று தகவல் வழங்கப்பட்டது. நீண்ட நேரமாக சம்பவ இடத்தில் கிராம அலுவலர் உள்ளிட்ட பொது மக்கள் திரண்டிருந்த போதும் பொலிசார் வரவில்லை. அதன் பின் பிற்பகல் 4 மணியளவில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் அவசர தொலைலைபேசி இலக்கமான 107 தகவல் வழங்கப்பட்டது. அதன் பின் 4.30 மணியளவில் வவுனியா பொலிசார் வருகை தந்ததுடன், பண்டாரிக்குளம் பொலிசார் மாலை 5 மணிக்கு வருகை தந்து விசாரணைகளை நடத்தினர். திடீர் மரண விசாரணை அதிகாரி டா.சுரேந்திரசேகரன் சம்பவ இடத்திற்கு சடலத்தை பார்வையிட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டிருந்தார். பிற்கபல் 1.50 மணியளவில் இறந்த நிலையில் சடலம் காணப்பட்ட போதும், பொலிசார் தாமதமாக வந்தமையால் மாலை 5 மணிக்கே சடலம் அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற் கூற்று பரிசோதனைகக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள கட்டிலின் மேல் ஏறி அறை ஒன்றின் சுவருக்கு வர்ணம் பூசிய போது கட்டிலிலிருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதில் நில அளவைத் திணைக்களத்தில் பணி புரிந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற சி.மகேந்திரராஜா (வயது 60) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்தவாராவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/208590
  25. ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை 35 வருடங்களின் பின்னர் திறந்து வைப்பு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை 35 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் இன்று (07.03.2025) மாலை 4:30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக குறித்த தொழிற்சாலையின் பழைய இயந்திர சாதனங்களை திருத்தம் செய்து இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் புதிய உபகரணங்களை கொள்வனவு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.facebook.com/LankasriTv/videos/3057664874391011/?ref=embed_video&t=0 கைத்தொழில் அமைச்சு குறித்த நிகழ்வில் கைத்தொழில் அமைச்சர் சுனில் கந்துநித்தி மற்றும் நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷ சூரியபெருமா ராமலிங்கம் சந்திரசேகரன் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலக, பிரதேச செயலக உயர் அதிகாரிகள் குறித்த பிரதேச மக்களுடைய பங்குபற்றுதலுடனும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது . https://tamilwin.com/article/inauguration-of-the-odtusuddan-oto-factory-1741377757#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.