Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 26 பிப்ரவரி 2025 "எனது வீட்டில் இருக்கப் பிடிக்காமல், நான் பல நாட்கள் அழுதிருக்கிறேன். யாரிடம் சொல்வது என்று தெரியாமல், விட்டு விலகிப் போகவும் முடியாமல், செய்வதறியாமல் இருக்கிறேன். 'ஒரே வீட்டில் வளர்ந்த குழந்தைகளுக்குள் ஏன் இத்தனை பாகுபாடுகள்?' என்ற கேள்வி என்னுள் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று சமீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் கூறினார். இளங்கலை படித்து வரும் 21 வயதான சமீராவுக்கு 25 வயதில் சகோதரர் ஒருவர் இருக்கிறார். வீட்டில் அவருக்கும் அவரது அண்ணனுக்கும் பாலின அடிப்படையில் தனித்தனியே விதிகள் இருப்பதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "எனது சகோதரர் அவர் விரும்பும் நேரத்தில் வெளியே சென்று வரலாம், வீட்டில் அவர் ஒரு வேலையும் செய்யத் தேவையில்லை, அவருக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. ஆனால் நான் கல்லூரி முடிந்தவுடன் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் மற்றும் சமையல், வீட்டைச் சுத்தப்படுத்துவது என்று எல்லாவற்றிலும் உதவி செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது" என்கிறார் சமீரா. சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா ஒரு வழக்கு விசாரணையின்போது, "பாலியல் சமத்துவம் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், பள்ளிகளில் மட்டுமல்ல வீடுகளிலும் இருக்கும் பாலின சமத்துவமின்மை குறித்துப் பேச வேண்டியுள்ளது என்று வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். வீடுகளில் பாலின பாடுபாடு எவ்வாறு இருக்கிறது? பாலின சமத்துவத்தை எட்ட நிபுணர்கள் கூறும் வழி என்ன? காலநிலை மாற்றம்: ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணுக்கு இரட்டைச் சுமை என்று நிபுணர்கள் எச்சரிப்பது ஏன்? சந்தரா: சமணர்கள் கடைபிடிக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை விடும் நடைமுறை கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? சமீராவை போல லோகேஷ் என்பவரும் அவரது வீட்டில் பாலின பாகுபாட்டை உணர்ந்ததாகத் தெரிவித்தார். "வீட்டிற்கு வெளியே செல்லும் வேலையையும் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளையும் நான் செய்வேன். ஆனால் எனது அக்கா வீட்டை விட்டு வெளியே செல்வதில் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன" என்று கூறிய லோகேஷ் தனது வீட்டார் அவரது சகோதரியை திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் கூறினார். "எனது சகோதரிக்கு 24 வயதான உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு எனது பெற்றோர் அழுத்தம் கொடுத்தனர். அப்போதுதான் உறவினர்கள் மற்றும் சமூகத்திற்கு முன்பு தனது குடும்பம் நற்பெயருடன் இருக்கும் என்று எனது பெற்றோர் கருதினர்" என்கிறார் லோகேஷ். இந்தக் கட்டுரைக்காகப் பேசியவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வீட்டில் பாலினப் பாகுபாடு இருப்பதாகத் தெரிவித்தனர். அவற்றில் சமீரா மற்றும் லோகேஷின் அனுபவங்கள் மட்டுமே உதாரணமாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. 2024 YR4: பூமியை மோதவிருந்த பிரமாண்ட விண்கல் என்ன ஆனது? நிலவில் மோதப் போகிறதா?26 பிப்ரவரி 2025 5,000 ஆண்டுக்கு முந்தைய மம்மிகளில் வெளிப்பட்ட நறுமணம் - எகிப்தியர் எவ்வாறு தயார் செய்தனர்?26 பிப்ரவரி 2025 'பாகுபாடு' என்ற சொல் நீக்கப்பட வேண்டும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை அதிகரிப்பதற்கான மூலகாரணம், பாலின சமத்துவம் குறித்த அடிப்படைக் கல்வி இல்லாததுதான் எனக் குறிப்பிட்டு, இது தொடர்பாக அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் ஆபாத் ஹர்ஷத் போண்டா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடந்த வழக்கு விசாரணையில், "பாலின சமத்துவம், ஆண்கள், பெண்களிடம் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்த நெறிமுறைகள் பள்ளிப் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்" என்று நீதிபதி நாகரத்னா கூறியதாக 'தி ஹிந்து' நாளிதழின் செய்தி கூறுகிறது. மேலும் மகள்களுக்கும் மகன்களுக்கும் இடையிலான பாலின சமத்துவம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக வீட்டில் பெற்றோரிடம் இருந்துதான் பாகுபாடே தொடங்குகிறது என்று அவர் தெரிவித்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. "பெற்றோர்கள் தங்கள் மகன்களை அல்லாமல், மகள்களைக் கட்டுப்படுத்துவதிலே அதிக கவனம் செலுத்துகிறார்கள். அகராதியில் இருந்து 'பாகுபாடு' என்ற சொல் நீக்கப்பட வேண்டும்" என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் புதிய பறக்கும் கார் சோதனை24 பிப்ரவரி 2025 காலநிலை மாற்றம்: ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணுக்கு இரட்டைச் சுமை என்று நிபுணர்கள் எச்சரிப்பது ஏன்?23 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,FACEBOOK/BAR & BENCH படக்குறிப்பு,நீதிபதி பி.வி. நாகரத்னா 'வீட்டிலிருந்தே கற்றுக்கொள்கின்றனர்' "பாலின பாகுபாடானது ஒரு குழந்தை பிறந்ததில் இருந்தே தொடங்குகிறது. உதாரணமாக ஆண் குழந்தைக்கு கார், மோட்டார் பைக் போன்ற விளையாட்டுப் பொருட்களும், பெண் குழந்தைகளுக்கு பொம்மைகள், கிச்சன் செட் போன்ற விளையாட்டுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. இதுபோல அவர்களின் ஆடைகள், அதன் வண்ணங்கள் என சின்னச் சின்ன விஷயங்களில் பாலினப் பாகுபாடு குழந்தைகளிடம் புகுத்தப்படுகிறது" என்று பாலின அம்சங்கள் குறித்துப் பயிற்சி அளித்து வரும் அபர்ணா தோட்டா பிபிசி தமிழிடம் கூறினார். பல காலமாகப் பெண்கள் தங்களுக்கான உரிமைகளுக்காகவும் பாலின சமத்துவத்திற்காகவும் போராடி வருகின்றனர். உலகில் எவ்வளவு முன்னேற்றம் வந்திருந்தாலும், இன்னும் பாலின விஷயத்தில் சமூகம் சற்றுப் பின்னோக்கிய நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்கட்டுகிறார். "வீடு என்பது குழந்தைகளின் மீது மிக முக்கியமான தாக்கத்தைச் செலுத்தும் ஓரிடமாக இருக்கிறது. அங்கு எதைப் பார்க்கிறார்களோ, அனுபவிக்கிறார்களோ, அதையேதான் குழந்தைகள் அவர்களது வாழ்நாள் முழுவதும் சமூகத்தில் செயல்படுத்துகிறார்கள்" என்று அரசுப் பள்ளி ஆசிரியரான உமா மகேஷ்வரி கூறுகிறார். "எனது வகுப்பில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், 'நான் ஒரு ஆம்பள அப்படித்தான் கோபப்படுவேன்' என்று சக மாணவரிடம் கூறினார். இந்த நடத்தை குறித்து அவரிடம் கேட்டதற்கு 'எனது அப்பா எனது அம்மாவிடம் இப்படித்தான் நடந்து கொள்வார்' என்று பதிலளித்தார். இவ்வாறு குழந்தைகள் எல்லாவற்றையும் குடும்பச் சூழலில் இருந்தே கற்றுக்கொள்கின்றனர்" என்று உமா மகேஷ்வரி குறிப்பிட்டார். குடும்ப விஷயங்கள் குறித்து முடிவெடுத்தல், கருத்துரிமை தொடங்கி சமமான வேலைப் பகிர்வு வரை வீட்டிலுள்ள பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்டால் அதைப் பார்த்து வளரும் குழந்தைகள் பாலின சமத்துவம் குறித்த சரியான கண்ணோட்டம் கொண்டிருப்பார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார். பிரான்சில் பிரிட்டிஷார் பிடியில் இருந்து தப்ப, கப்பலில் இருந்து கடலில் குதித்த சாவர்க்கர் - என்ன நடந்தது?22 பிப்ரவரி 2025 நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை22 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாலின சமத்துவம் குறித்த கண்ணோட்டத்தை குழந்தைகள் வீட்டிலேயே கற்றுக் கொள்கின்றனர் கடந்த 2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாலின இடைவெளி(global gender gap) குறித்து உலக பொருளாதார மன்றத்தால் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. 146 நாடுகளின் தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பகுப்பாய்வின் பட்டியலில் இந்தியா 129வது இடத்தில் இருக்கிறது. பெண்களுக்கும் சம உரிமை அளிக்கும் விவகாரத்தில், கடந்த ஆண்டுகளில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் அது முழு வீச்சில் நடைபெறாமல் மெதுவாகவே நடப்பதாக ஆசிரியர் உமா மகேஷ்வரி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் வேலைக்குச் செல்கின்றனர். அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் மேம்பட்டுள்ளன. ஆனால் இன்னும் குடும்பச் சூழலில் பெண்கள்தான் வீட்டு வேலைகளைச் செய்பவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பணியில் எத்தகைய உயர்ந்த பதவிகளை வகித்தாலும், வீட்டிற்கு வந்தால் இந்தப் பெண்கள்தான் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியதாக இருக்கிறது" என்கிறார். "பொதுவாக பெண்கள், அவர்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைக் கடந்து, எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று அவரது குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். அவர்களுக்கான சுதந்திரம் வழங்கப்பட்டாலும், குடும்பத்தின் நலன் மீது கொண்ட நாட்டத்தால், அவர்கள் வீட்டு வேலைகளில் பங்களிக்கத் தேர்வு செய்கிறார்கள். இதை ஆண்கள் அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்." இவ்வாறு பாலின சமத்துவம் இல்லாத ஒரு வீட்டிலும், அதைப் பற்றிக் கற்பிக்கப்படாத ஒரு பள்ளியிலும் ஒரு குழந்தை பயிலும்போது, அவர் எவ்வாறு சமூகத்தில் பாலினப் பாகுபாடு காட்டாமல் இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார். டீப்சீக் ஏஐ: செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவுக்கு நிகராக இந்தியா வளர முடியுமா?21 பிப்ரவரி 2025 மேற்கு ஆப்பிரிக்கா: உயிருக்கு ஆபத்தான ஓபியாய்டுகளை அதிகளவில் பரப்புவதன் பின்னணியில் இந்திய மருந்து நிறுவனம் - பிபிசி புலனாய்வு21 பிப்ரவரி 2025 'பாலின சமத்துவப் பாடங்கள் தேவை' படக்குறிப்பு, கல்வியாளர் தேவநேயன் "வெறும் அரசாங்கத்தின் கொள்கைகள், சலுகைகள் மற்றும் சட்டங்களால் மட்டுமே பாலின சமத்துவத்தை நிலைநாட்ட முடியாது, மக்கள் மனதில் முதலில் இந்த மாற்றத்திற்கான விதையை விதைக்க வேண்டும்" என்று கூறுகிறார் கல்வியாளர் தேவநேயன். பாலினப் பாகுபாடுடைய கலாசாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வர கல்வியே அதற்குச் சிறந்த வழி என்று வலியுறுத்தும் அவர், "பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்குமான தற்போதைய பாடத் திட்டத்தில் இதற்கான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். மேலும் இதை மாணவர்களுக்கான புரிதலோடு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்ற பயிற்சியும் ஆசிரியர்களுக்கு முதலில் வழங்கப்பட வேண்டும்," என்கிறார். கடந்த 2024ஆம் ஆண்டு, கேரளாவின் மாநில அரசு, பாலின சமத்துவம் புகட்டும் நோக்கில் பள்ளிப் பாடத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தது. அதில் ஆண்களும் பிற குடும்ப உறுப்பினர்களும் பெண்களுடன் சேர்ந்து சமையலறையில் வேலை செய்வதைக் காட்டும் படங்கள் பாடத் திட்டத்தில் இடம்பெற்றிருந்தன. சிறு வயதிலிருந்தே குழந்தைகளிடம் பாலினப் பாகுபாட்டை அகற்றி, அனைவரையும் உள்ளடக்கிய கண்ணோட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கேரளா மாநில அரசு அப்போது குறிப்பிட்டிருந்தது. "பாலியல் மற்றும் பாலினம் சார்ந்து தெளிவான புரிதலை நாம் சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்குக் கற்பித்தால், அவர்கள் எதிர்காலத்தில் சுயமாக ஆன்லைனில் இருந்தோ, அல்லது அவர்களைச் சுற்றி நடக்கும் தவறான முன்னுதாரணங்களில் இருந்தோ கற்றுக் கொள்வதைத் தவிர்க்க வாய்ப்புள்ளது" என்கிறார் கல்வியாளர் தேவநேயன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c2d43egeed5o
  2. இந்திய துணை தூதரகத்துடன் கலந்துரையாடலுக்கு சென்ற மீனவர்கள்! Published By: DIGITAL DESK 2 27 FEB, 2025 | 12:02 PM யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் பேரணியாக சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை அடைந்தனர். துணை தூதரகத்தின் வீதியில் வீதித்தடை போடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மீனவ அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மீனவர்கள் வெளியில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/207813
  3. சந்தேகத்திற்கிடமான பந்துவீச்சு என அளிக்கப்பட்ட புகாரிலிருந்து குணேமானை ஐசிசி விடுவித்துள்ளது Published By: VISHNU 26 FEB, 2025 | 11:25 PM (நெவில் அன்தனி) மெட் குணேமானின் பந்துவீச்சுப் பாணி சந்தேகத்திற்கிடமானது என அளிக்கப்பட்ட புகாரிலிருந்து அவரை ஐசிசி விடுவித்துள்ளது. ஐசிசியினால் அங்கீகரிக்கப்பட்ட பிறிஸ்பேன் நிலையத்தில் மெட் குணேமானின் பந்துவீச்சுப் பாணி தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனைகளின்போது அவரது அனைத்து பந்துவீச்சுகளும் விதிகளுக்கு உட்பட்டதாக இருந்துள்ளது. இடதுகை சுழல்பந்துவீச்சாளரான மெத் குணேமான் பந்துவீசும் போது அவரது முழங்கை நீட்டிப்பு 15 பாகைக்குள் இருந்தமை இந்த பரிசோதனையின் போது தெரியவந்தது. இதனை அடுத்து சர்வதேச போட்டிகளில் பந்துவீச அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடையை நீக்கிய ஐசிசி அவருக்கு தொடர்ந்து பந்துவீச அனுமதி அளித்துள்ளது. காலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் அவரது பந்துவீச்சு பாணி தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது. அந்தத் தொடரில் அவர் மொத்தமாக 16 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் அவுஸ்திரேலியா 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தொடரை வென்றது. 2017இல் இருந்து தொழில்முறை கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுவரும் குணேமானுக்கு எதிராக இதற்கு முன்னர் ஒருபோதும் எந்தவித புகாரும் செய்யப்பட்டிருக்கவில்லை. எனினும், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஐசிசியினால் அங்கீகரிக்கப்பட்ட பிறிஸ்பேன் கிரிக்கெட் நிலையத்தில் மெத் குணேமானின் பந்துவீச்சு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இந்த பரிசோதனை அறிக்கையை ஐசிசி இன்று புதன்கிழமை (26) வெளியிட்டது. அதில், 'பிறிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் நிலையத்தில் பெப்ரவரி 15ஆம் திகதி சுயாதீன பந்துவீச்சு மதிப்பீட்டுக்கு அவர் (மெத் குணேமான்) உட்படுத்தப்பட்டார். அவரது சகல பந்துவீச்சுகளின்போது அவரது முழங்கை நீட்டிப்பு அளவு ஐசிசியின் தவறான பந்துவீச்சுப் பாணிக்கான விதி முறைகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட 15 பாகைக்கு உட்பட்டதாக இருந்தது தெரியவந்தது' என ஐசிசி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/207776
  4. 27 FEB, 2025 | 11:16 AM ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு எதிராக விரைவில் 25 வீதவரியை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிடமிருந்து அளவுக்கதிகமான இலாபத்தை பெறும் நோக்கத்துடனேயே ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் தனது முதலாவது அமைச்சரவை கூட்டத்தினை நடத்தியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். அமைச்சரவை உறுப்பினர் இல்லாத எலொன்மஸ்க் இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வரிகளை விதிப்பது தீர்மானித்துள்ளீர்களா என்ற கேள்விக்கு நாங்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளோம் நாங்கள் விரைவில் இது குறித்துஅறிவிப்போம் 25 வீத வரியாக காணப்படும் கார்கள் மற்றும் ஏனைய பொருட்கள் மீது இந்த வரிவிதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் கனடாவை விட வித்தியாசமான விடயம் அவர்கள் எங்களை வேறு விதத்தில் சாதகமாக பயன்படுத்தியுள்ளனர் என டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர்கள் எங்கள் கார்களை ஏற்றுக்கொள்வதில்லை,எங்கள் விவசாய பொருட்களை ஏற்றுக்கொள்வதில்லை,அதற்கான அனைத்து காரணங்களையும் தெரிவிப்பார்கள்,ஆனால் நாங்கள் அவர்களிடமிருந்து அனைத்தையும் ஏற்றுக்கொள்வோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிடமிருந்து அதிக இலாபம் உழைப்பதற்காகவே ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது,அவர்கள் அதனை சாதித்துள்ளனர்,ஆனால் தற்போது நான் ஜனாதிபதி என டிரம்ப் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/207806
  5. இணையம் மூலம் வெளிநாட்டு நாணயம் சம்பாதிப்பவர்களுக்கு தனது அரசாங்கம் வரி விதிக்கவில்லை என அநுர அரசு விளக்கமளித்துள்ளது. மாறாக முந்தைய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வரியைக் குறைத்ததாக பொருளாதார பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வரி இல்லாத சேவைகள் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முந்தைய அரசு இந்த சேவைகளுக்கு 30% வரி விதித்ததாகவும், தனது அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, அது 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு திட்டத்தை செயல்படுத்துவேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உலகின் சமீபத்திய சட்டத்தின்படி, வரி இல்லாத சேவைகள் வழங்கப்படுவதில்லை என்றும், ஒரு நாடு வழங்கும் சேவைக்கு அந்த நாடு வரி விதிக்கவில்லை என்றால், அந்த சேவையைப் பெறும் நாடு அந்த வரியை விதிக்கும். அதன்படி, இந்த வரியை நாம் வசூலிக்கவில்லை என்றால், வேறு யாராவது வசூலிப்பார்கள் என பொருளாதார பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/sri-lanka-freelancers-new-tax-on-usd-earnings-1740631840
  6. யாழில் தொடர்ந்து ஊதாசீனப்படுத்தப்படும் சுற்றாடல் பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இம்மாதம் ஆறாம் திகதி யாழ்.மாவட்ட சுற்றாடல் பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள ஒலிபெருக்கித் தொல்லை தொடர்பில் பொதுமக்களினால் தொடர்ச்சியாக மாவட்டச்செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக அதனை கட்டுப்படுத்திவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனை மீறுவோர்மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இம்முடிவு காவல்துறையினருக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை மீறுவோர் தொடர்பிலான தகவல்களை பிரதேச செயலகங்களுக்கு தெரியப்படுத்தினால் அவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அரச அதிபரினால் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. எனினும், பல பிரதேச செயலகப் பிரிவுகளில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. சில பிரதேச செயலகப் பிரிவில் ஒலிபெருக்கிப் பாவனையின் மோசமான செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளது. இது குறித்து பிரதேச செயலர்களுக்கு தெரியப்படுத்தினாலும் பொதுமக்ளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள் ஒலிபெருக்கித்தொல்லையினால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றன. இம்மாதம் 16 ஆம் திகதி சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாதகல் புனித லூர்துமாதா ஆலய திருவிழாவில் மாதகலிலிருந்து பண்டத்தரிப்பு சந்திவரை 3 கிலோமீற்றர் நீளத்திற்கும் அதிகமாக ஏராளமான ஒலிபெருக்கிகளை பொருத்தி இரவு பகலாக பயன்படுத்தப்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளானார்கள். நேற்று (26-02-2025) இதே பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட விளான் - சண்டிலிப்பாய் வீதியலுள்ள பிரான்பற்று நரசிம்ம வைரவர் என்ற சிறிய ஆலயம் ஒன்றில் அன்னதான நிகழ்விற்காக 15 இற்கும் அதிமான ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு நேற்று முன்தினம் இரவுமுதல் (25-05-2025) அதிக இரைச்சலுடன் ஒலி எழுப்பப்பட்டது. அத்துடன் இன்றையதினமும் அந்த பகுதியில் ஒலிபெருக்கி இசைக்கப்படுகிறது. இதனால் அருகிலுள்ளவர்கள் மட்டுமன்றி் அயல் கிராமங்களிலுள்ள மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இது குறித்து காவல்துறையிருக்கும் அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சண்டிலிப்பாய் பிரதேச செயலருடன் தொடர்புகொள்ள முயற்சி மேற்கொண்டபோதும் அது பலனளிக்கவில்லை. சுற்றாடலை பாதிக்கும் ஒலி மாசு தொடர்பில் மாவட்டச்செயலகத்தினல் எடுக்கப்பட்ட தீர்மானம் சில பிரதேச செயலகங்களுக்கும் காவல் நிலையங்களுக்கும் அறிவிக்கப்படவில்லையா அல்லது தீர்மானம் உதாசீனம் செய்யப்படுகின்றதா என பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர். https://ibctamil.com/article/loudspeaker-nuisance-on-the-rise-in-jaffna-1740637388
  7. 27 FEB, 2025 | 10:28 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பில் ஒரு நிலைப்பாட்டையும் உக்ரைன் தொடர்பில் வேறு ஒரு நிலைப்பாட்டையும் பின்பற்றுவதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் இது குறித்து தீவிர கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார். இலங்கை குறித்து செப்டம்பர் மாதம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானமொன்றை நிறைவேற்றவுள்ளதால் இது குறித்து இப்போதே இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச அரசியல் மாற்றமடைந்துள்ளது, அமெரிக்கா உக்ரைன் ரஸ்ய யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு முயல்கின்றது, ரஸ்யர்கள் தங்கள் நோக்கங்களிற்காக தியாகம் செய்துள்ளனர். அவர்கள் நெப்போலியனை தோற்கடிப்பதற்காக தங்கள் தலைநகரத்தையே தீயிட்டவர்கள். பல ஐரோப்பிய தலைநகரங்கள் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி குறித்து மௌனமாக உள்ளன, அவர் ஜனாதிபதி தேர்தலை நடத்தாது குறித்து மௌனமாக உள்ளன என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் மார்சல் சட்டம் நடைமுறையிலிருந்தால் தேர்தலை பொதுத்தேர்தலை நடத்தாமலிருக்கலாம் என அந்த நாட்டின் அரசமைப்பு தெரிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் அரசமைப்பு ஜனாதிபதி தேர்தல் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களின் போது பிரிட்டன் தேர்தல்களை பிற்போட்டது, பொதுச்சபை பிரபுக்கள் சபையின் ஆதரவுடன் இது இடம்பெற்றது. விடுதலைப்புலிகள் வடக்கில் போரிட்டபோதும் ஜேவிபியின் கிளர்ச்சியின் காலத்திலும் நாங்கள் தேர்தல்களை நடத்தியுள்ளோம், 2024 இல் நாங்கள் தேர்தல்களை நடத்தினோம். ஜேவிபி தற்போது ஆட்சியில் உள்ளது, ஆனால் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவை இலங்கை இரட்டைநிலைப்பாடுகளை பின்பற்றுகின்றது. இலங்கையை வேறுமாதிரி நடத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/207797
  8. Published By: DIGITAL DESK 2 27 FEB, 2025 | 10:10 AM நாடளாவிய ரீதியில் தாதியர் சேவையிலுள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். வரவு - செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில், பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (27) அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று மதிய உணவுவேளை, நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துடன், போராட்டத்தால் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாதென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/207796
  9. யாழில் வெடித்த மாபெரும் போராட்டம்...! குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டமானது இன்றைய தினம் (27.02.2025) யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் ஆரம்பமாகிய நிலையில் பேரணியாக யாழ்ப்பாண நகர் பகுதி ஊடாக ஆளுநர் செயலகம் நோக்கி சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கடற்றொழில் சங்கங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் இதில் பங்குபற்றியுள்ளனர். மாபெரும் போராட்டம் "தாண்டாத தாண்டாத எல்லையை தாண்டாதே, அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, இந்திய அரசே எங்களை வாழ விடு, மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே" போன்ற கோஷங்களை எழுப்பிய நிலை கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் நீரில் வளர்த்தினை களத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த கடற்றொழிலாளர்கள் பேரணியாக சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை அடைந்தனர். இருப்பினும் துணை தூதரகத்தின் வீதியில் வீதித்தடை போடப்பட்டு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மீனவ அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையகடற்றொழிலாளர்கள் வெளியில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செய்திகள் : பு.கஜிந்தன் மற்றும் பிரதீபன் https://ibctamil.com/article/fishermen-stage-massive-protest-in-jaffna-1740634187
  10. 27 FEB, 2025 | 06:43 AM வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை நுவரெலியா, பொலன்னறுவை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். கொழும்பு தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 - 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/207792
  11. கொழும்பு நீதிமன்றப் படுகொலையின் பின்னணியில் இந்தியா? இலங்கையின் தலைநகர் கொழும்பில் (Colombo) உள்ள புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு சட்டத்தரணி போன்ற தோற்றத்துடனும், சட்டத்தரணியின் அடையாள அட்டையுடன் நுழைகின்றார். சட்டத்தரணியின் தேற்றத்தில் வருகின்ற ஒரு பெண் - கொலையாளியிடம் ஒரு சட்டப் புத்தகத்தை ஒப்படைக்கின்றார். சட்டப்புத்தகத்தின் உள்ளே - அதன் பக்கங்கள் கச்சிதமாக நீக்கப்பட்டு, அதனுள்ளே ஒரு கைத்துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது - விசாரணைக் கூண்டில் நின்றுகொண்டிருந்த கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலக குழு ஒன்றின் தலைவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, சாதாரணமாக மக்களோடு மக்களாகக் கலந்து தப்பிச் சென்றிருந்தார் கொலையாளி. இந்தக் கொலையின் பின்னணியிலி இந்தியாவின் (India) கரங்கள் இருக்கின்றதா என்கின்ற கோணத்தில் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: https://ibctamil.com/article/conspiracy-over-colombo-court-incident-1740496285#google_vignette
  12. கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் நடைபெற்றது Published By: VISHNU 27 FEB, 2025 | 04:33 AM பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாய் திகழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேரோடும் ஆலயமென பெயர் பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் 26ஆம் திகதி புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றன. உலகநாச்சி அம்மையாரால் பூஜிக்கப்பட்ட ஆலயமான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகளில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு சாம பூசை இடம்பெற உள்ளதாக பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தெரிவித்தார். பூசை வழிபாடுகளில் கலந்துகொண்ட பக்த அடியார்கள் நெய் விளக்கேற்றியும், கற்பூரச் சட்டி ஏந்தியும், வில்வ இலைகளால் சிவலிங்கப்பெருமானை பூஜித்தும் தங்களது நேர்த்திகளை நிறைவேற்றியதுடன், கண் விழித்து சிவபுராணத்தினை ஓதி, ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்து பக்திபூர்வமாக மகா சிவராத்திரி விரதத்தை அனுட்டித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/207791
  13. சாம்பியன்ஸ் டிராஃபி: ஆப்கானிஸ்தான் திரில் வெற்றி, இங்கிலாந்து ஏமாற்றம் - சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அணியின் வெற்றியை கொண்டாடும் ஒமர்ஸாய் 27 பிப்ரவரி 2025, 03:37 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் லாகூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் இங்கிலாந்து அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆப்கானிஸ்தான் அணி. இதனால், சாம்பியன்ஸ் டிராஃபி தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 325 ரன்கள் எடுத்தது. 326 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் விளையாடியது இங்கிலாந்து. ஆனால், 49.5 ஓவர்களில் 317 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இங்கிலாந்து அணி. இந்தியா - பாகிஸ்தான் 'ஆயுதமில்லா போரை' இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது எது? ஒரு பகுப்பாய்வு இந்தியாவிடம் தோல்வி - பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறியது என்ன? இந்தியா அரையிறுதிக்கு தகுதி, பாகிஸ்தான் வெளியேற்றம்: நியூசிலாந்து - வங்கதேசம் ஆட்டத்தில் என்ன நடந்தது? சேவாக் சாதனை சமன்: இங்கிலாந்துக்கு எதிராக 352 இலக்கை எட்டிப் பிடித்து வரலாறு படைத்த ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 111 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். 11 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து இந்த ஸ்கோரை அடைந்தார் ஜோ ரூட். அவருடைய காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக, இறுதியில் 26 பந்துகளுக்கு 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜோ ரூட் அவுட் ஆனார். ஜோ ரூட் ஆட்டத்தில் இருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தானின் தோல்வி முகம் வெற்றியின் பக்கம் திரும்பியது. இங்கிலாந்து அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் மிக விரைவாகவே அவுட் ஆகினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபில்ட் சால்ட் 13 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பென் டக்கெட் 45 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். ஜேமி ஸ்மித் 9, ஹேரி ப்ரூக் 25, கேப்டன் ஜோஸ் பட்லர் 38, லியம் லிவிங்ஸ்டோன் 10, ஜேமி ஓவர்டன் 32, ஜோஃப்ரா ஆர்ச்சர் 14, அடில் ரஷித் 5 ரன்களை எடுத்தனர். மேலும், மார்க் வுட் 2 ரன்களை எடுத்த நிலையில் பெவிலியனுக்கு திரும்பினார். இங்கிலாந்து அணி வீரர் ஜேமி ஓவர்டன் 32 ரன்கள் அடித்த நிலையில், வெற்றி நோக்கி வந்த இங்கிலாந்துக்கு மூன்று விக்கெட்டுகள் மீதமிருக்கும் நிலையில், 14 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆல் அவுட் ஆனது. தொழிலதிபர் ஷியாம் சுந்தர் பார்டியா மீது பாலியல் வன்கொடுமை புகார் - புகார்களை மறுத்து அறிக்கை3 மணி நேரங்களுக்கு முன்னர் அரசுப் பள்ளி கழிப்பறையில் சடலமாக கிடந்த 14 வயது மாணவர் - என்ன நடந்தது? இன்றைய முக்கிய செய்திகள்2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் 111 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். இதில், 11 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார் அசத்திய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை அஸ்மதுல்லா ஒமர்ஸாய் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை எடுத்தார். முகமது நபி 2 விக்கெட்டுகளையும் ஃபஸல்ஹக், ரஷித் கான் மற்றும் குல்பதின் நயிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரிலிருந்து வெளியேறியது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராக வலுவாக பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் ஸத்ரான் 146 பந்துகளில் 177 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 12 ஃபோர்களும் அடங்கும். இது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியில் இதுவரை ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 37 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அந்த அணி தோற்று விடுமோ என கருதப்பட்டது. ஆனால், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் ஹஸ்மத்துல்லா இருவரும் சேர்ந்து 103 ரன்கள் எடுத்து அணி அதிக ஸ்கோர் குவிக்க உதவினர். அஸ்மத்துல்லா ஒமர்ஸாய் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். முகமது நபி 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். 2020 டெல்லி கலவரம்: ஐந்து ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களுக்கு விடுதலை எப்போது? பிபிசி கள ஆய்வு25 பிப்ரவரி 2025 தவெக ஆண்டு விழாவில் விஜய் பேசிய 5 முக்கிய விஷயங்கள்26 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டநாயகன் விருதைப் பெற்ற ஸத்ரான் சாதனை படைத்த ஸத்ரான் ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஸத்ரான் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இதுவரை ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் டக்கெட் 165 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. மேலும், உலகக் கோப்பைக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராஃபியில் ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்ற ஸத்ரானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஸத்ரான் 146 பந்துகளில் 177 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 12 ஃபோர்களும் ஏமாற்றத்தை ஏற்படுத்திய இங்கிலாந்து அணி போட்டியின் ஆரம்பத்தில் இங்கிலாந்து வெளிப்படுத்திய பிரமாதமான ஆட்டத்தோடு ஒப்பிட்டால் போட்டியின் முடிவு மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. முதல் நான்கு ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே வழங்கினார்கள் வுட் மற்றும் ஆர்ச்சர். அதனைத் தொடர்ந்து ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் சேதிக்குல்லா அதால் ஆகியோர் ஐந்தாவது ஓவரில் அவுட் ஆனார்கள். சில நிமிடங்களிலேயே ரஹ்மத் ஷாவும் அவுட்டானார். கடந்த 14 ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு, நேற்று பவர்ப்ளேயில் 3 விக்கெட்டுகளை இங்கிலாந்து வீழ்த்தியது. வுட் அவருடைய நான்காவது ஓவரில் காலில் பிரச்னை ஏற்பட்டு வெளியேற, இப்ராஹிம் தன்னுடைய அணிக்கான ரன்களை குவிக்க ஆரம்பித்தார். இப்ராஹிமும் ஹஸ்மத்துல்லா ஷாஹிதியும் சேர்ந்து 124 பந்துகளுக்கு 103 ரன்கள் குவித்து அபாரமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். பின்பு ஷாஹிதி ரஷித்தின் பந்தில் அவுட் ஆனார். ஆப்கானிஸ்தான் அணி 30-வது ஓவரில் 140 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த போதும் இங்கிலாந்து தான் போட்டியை கட்டுப்பட்டுத்தியது. முகமது நபியும் இப்ராஹிமும் சேர்ந்து 9.1 ஓவர்களுக்கு 111 ரன்களை எடுத்தனர். முகமது நபி 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தனர். மீண்டும் களத்துக்கு வந்த வுட் 4.2. ஓவர்களுக்கு 37 ரன்களை வாரி வழங்கினார். 47-வது ஓவரில் பந்து வீசிய ரூட் ஆப்கானிஸ்தானின் 6-வது விக்கெட்டை எடுத்தார். முதல் ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை களத்தில் நின்று ஆடிய இப்ராஹிம் பவுண்டரிகளை விளாசினார். நான்கு நாட்களுக்கு முன்பு டக்கெட் புரிந்த சாதனையை அவர் முறியடித்து புதிய சாதனையை சாம்பியன்ஸ் டிராஃபி வரலாற்றில் அவர் பதிவு செய்தார். இங்கிலாந்து ஆட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணி டி20 போட்டிகள் போல் விளையாடுவது சரியான அணுகுமுறை இல்லை என்று முன்னாள் வீரர் கருத்து இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கூறியது என்ன? இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் விக் மார்க்ஸ் இது குறித்து பேசும் போது, "இது பிரபலமற்ற கருத்தாகக் கூட இருக்கலாம். ஆனால் சர்வதேச அளவில் நீங்கள் 50-ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை என்றால் அத்தகைய போட்டி ஆட்டங்களில் சிறப்பான பங்களிப்பை தர இயலாது. ஜோ ரூட்டைப் பாருங்கள். அவர் 50-ஓவர் இன்னிங்க்ஸை சிறப்பாக ஆடினார். ஆனால் டி20 விளையாட்டு அனுபவம் மற்றும் அதில் உள்ள திறன்களை மையமாக கொண்டு நீங்கள் அணியை உருவாக்கி இருந்தால், 10 ஓவர்களுக்கு மேல் பந்து வீசாதவர்களாகவே அவர்கள் இருப்பார்கள்," என்ற விமர்சனத்தை முன்வைத்தார். "இதில் கவனமும் மிக முக்கியம். பில் சால்ட் இந்த குளிர்காலத்தின் துவக்கத்தில் நல்ல ஆரம்பத்தைக் கொண்டிருந்தார். ஆனால் அது டி20க்கு என்று வரும் போது சரியாக இருக்கும். ஒரு நாள் போட்டிகளில் இதே போக்கு இருந்தால் அது விரைவாக விக்கெட்டுகளை இழக்கவே வழிவகை செய்யும். அது அடுத்தடுத்து விளையாட வரும் பேட்ஸ்மென்களுக்கும் நெருக்கடியைக் கொடுக்கும். இது டி20-ல் இருந்து முழுமையாக மாறுபட்டது. நீங்கள் இதை வேறொரு விதத்தில் அணுக வேண்டும். இதனை பெரும்பாலான இங்கிலாந்து வீரர்கள் உணர்ந்திருப்பதாக தோன்றவில்லை," என்றும் அவர் கூறினார். இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் இது குறித்து பேசும் போது, "தொடரில் இருந்து வெளியேறியது வருத்தமே அளிக்கிறது. எங்களுக்கான வாய்ப்புகள் இருந்தது. இது சிறப்பான விளையாட்டு. ஆனால் போட்டி முடிவுகள் எங்களுக்கு வேறுவிதமாக அமைந்துவிட்டது," என்று கூறினார். ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, "ஒரு அணியாக இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்கள் மொத்த நாடும் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என்று எனக்கு தெரியும். நாங்கள் அடுத்த ஆட்டத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் முதல்முறையாக இங்கிலாந்தை 2023 உலக கோப்பைப் போட்டியின் போது தோற்கடித்தோம். ஒவ்வொரு நாளும் ஒரு அணியாக நாம் முன்னேறி வருகிறோம் என்று நான் அடிக்கடி கூறுவது உண்டு. போட்டி முடிவுகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்று அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgkmm1l0jlxo
  14. அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்த முடியாது - சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் 27 FEB, 2025 | 11:23 AM மத்தியவங்கி பிணைமுறிமோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூர் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு மறுத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற மத்தியவங்கி பிணைமுறிமோசடியுடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை நாடுகடத்துவதற்கான வேண்டுகோளை இலங்கை சட்டமாஅதிபர் திணைக்களம் விடுத்திருந்தது. எனினும் சிங்கப்பூரின் சட்டங்களின் கீழ் இலங்கைக்கு அவரை நாடு கடத்த முடியாது என சிங்கப்பூரின் சட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/207808
  15. ஐசிசி சம்பியனஸ் கிண்ணத்தில் ஆப்கன் வீரர் இப்ராஹிம் ஸத்ரான் துடுப்பாட்ட சாதனை Published By: VISHNU 26 FEB, 2025 | 08:58 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக லாகூர் கடாபி விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் பி குழுவுக்கான ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இப்ராஹிம் சத்ரான் 177 ஓட்டங்களைக் குவித்து ஒரு போட்டியில் தனிநபருக்கான அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சம்பியன்ஸ் கிண்ண சாதனையை நிலைநாட்டினார். சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பென் டக்கெட் 165 ஓட்டங்களைக் குவித்து ஏற்படுத்திய சாதனையை இப்ராஹிம் ஸத்ரான் இன்று முறியடித்தார். இப்ராஹிம் ஸ்த்ரான் குவித்த அபார அதிரடி சதத்தின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 325 ஓட்டங்களைக் குவித்தது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தானின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. ஒன்பதாவது ஓவரில் 3ஆவது விக்கெட் வீழந்தப்பட்டபோது ஆப்கானிஸ்தானின் மொத்த எண்ணிக்கை வெறும் 37 ஓட்டங்களாக இருந்தது. ஆனால், ஆரம்ப வீரர் இப்ராஹிம் ஸத்ரான் துணிச்சலை வரவழைத்து அற்புதமாகவும் ஆக்ரோஷமாகவும் துடுப்பெடுத்தாடி சாதனைமிகு சதம் குவித்து அணியை மீட்டெடுத்தார். 2025 சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்னர் உபாதை காரணமாக சுமார் 11 மாதங்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த 23 வயதான இப்ராஹிம் ஸத்ரான் தனது மீள்வருகையில் இரண்டாவது போட்டியில் 146 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள் 6 சிக்ஸ்களுடன் 177 ஓட்டங்ளைக் குவித்தார். இதனிடையே 4ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிதியுடன் 102 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாயுடன் 6ஆவது விக்கெட்டில் மொஹமத் நபியுடன் 111 ஓட்டங்களையும் இப்ராஹிம் ஸத்ரான் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர் 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லியாம் லிவிங்ஸ்டோன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 326 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து 16 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. https://www.virakesari.lk/article/207773
  16. 26 FEB, 2025 | 05:08 PM அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. மெக்சிகோ கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பலகட்டங்களாக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: “நாங்கள் தங்க அட்டை ஒன்றை விற்பனை செய்ய இருக்கிறோம். க்ரீன் கார்டு போல இது கோல்டு கார்டு. இந்த அட்டைக்கு நாங்கள் 5 மில்லியன் டாலர்கள் என விலை நிர்ணயம் செய்துள்ளோம். இதில் க்ரீன் கார்டில் இருக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். இது குடியுரிமைக்கான ஒரு வழியாகும். பணக்காரர்கள் எங்கள் நாட்டுக்கு இந்த கார்டை பெற்று வரலாம். அவர்கள் இங்கே வசதியுடனும் வெற்றிகரமாகவும் இருப்பார்கள். அவர்கள் நிறைய பணம் செலவு செய்வார்கள் நிறைய வரி செலுத்துவார்கள். நிறைய பேரை வேலைக்கு அமர்த்துவார்கள்” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார். மேலும் இந்த திட்டம் இரண்டு வாரங்களில் நடைமுறைக்கு வரும் என்றும் இதற்கு காங்கிரஸின் ஒப்புதலை பெறவேண்டிய அவசியம் தனது நிர்வாகத்துக்கு இல்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. அமெரிக்காவில் குடியேறும் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து கிரீன் கார்டுகளைப் பெற அனுமதிக்கும் திட்டத்துக்கு இது மாற்றாக இருக்கும் என்று அமெரிக்க வர்த்தகத் துறை செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/207759
  17. Published By: RAJEEBAN 26 FEB, 2025 | 12:59 PM கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் உயிரிழந்த பயணியொருவரின் உடலுடன் பயணித்த அனுபவங்களை அவுஸ்திரேலிய தம்பதியினர் பகிர்ந்துகொண்டுள்ளனர். வெனிசிலிருந்து தங்களின் கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் பயணித்த மிச்செல் ரிங்கும் ஜெனிபர் கொலினும் மெல்பேர்னிலிருந்து டோஹா பயணத்தின்போது தங்கள் விமானத்தில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்தார் என அவுஸ்திரேலியாவின் சனல் 9 க்கு தெரிவித்துள்ளனர். விமான பணியாளர்கள் போர்வையால் சுற்றி அந்த உடலை தங்களிற்கு அருகில் வைத்தனர் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய தம்பதியினர் விமானத்தில் வேறு ஆசனங்கள் காலியாகயிருந்த போதிலும் நான்கு மணித்தியாலங்கள் அந்த உடலை தங்களிற்கு அருகிலேயே வைத்திருந்தனர் என தெரிவித்துள்ளனர். கட்டார் எயர்வேய்ஸ் இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்காக மனம் வருந்துவதாக தெரிவித்துள்ளதுடன் குறிப்பிட்ட பயணிகளை தொடர்புகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் இதுவரை எவரும் தங்களை தொடர்புகொள்ளவில்லை என அவுஸ்திரேலிய தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பயணிகளை கவனித்துக்கொள்வதற்கான விதிமுறைகள் அவசியம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தங்களுடன் விமானத்தில் பயணித்த பெண் மயங்கி விழுந்ததும் விமான பணியாளர்கள் உடனடியாக தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர் என தெரிவித்துள்ள ரிங் ஆனால் அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை அதனை பார்ப்பது துரதிஸ்டவசமானதாகயிருந்தது என குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் உடலை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றனர், ஆனால் அவர் மிகவும் பருமனானவராக காணப்பட்டதால் அது முடியவில்லை, எங்களிற்கு பின்னால் ஆசனங்கள் இருப்பதை விமானப்பணியாளர்கள் அவதானித்தனர், சற்றே விலக முடியுமா என கேட்டனர் நாங்கள் ஆம் என்றோம் அவர்கள் நான் இருந்த ஆசனத்தில் உடலை வைத்தனர் என ரிங் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/207721
  18. தவெக ஆண்டு விழாவில் விஜய் பேசிய 5 முக்கிய விஷயங்கள் பட மூலாதாரம்,TVK 26 பிப்ரவரி 2025, 09:44 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 26) காலை நடைபெற்றது. அப்போது பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மாநில அரசும் மத்திய அரசும் பேசி வைத்துக் கொண்டு நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டினார். இந்த நிகழ்வில் விஜய் பேசிய ஐந்து முக்கிய விஷயங்கள் யாவை? இந்தத் தொகுப்பில் காணலாம். அதிமுக வாக்கு வங்கியை விஜய் குறி வைக்கிறாரா? அவருக்கான வாக்குகள் எங்கிருந்து வரும்? விஜய் நாம் தமிழரின் கொள்கை எதிரியா? சீமான் பேச்சுக்கு த.வெ.க.வின் பதில் என்ன? விஜய் வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் என்ன நடக்கிறது? 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய கூட்டணி உருவாகுமா? விசிக - தவெக: 'திருமாவுக்கு கூட்டணிக் கட்சிகளால் அழுத்தம்' - விஜய் திருமாவளவன் குறித்துக் கூறியது என்ன? 1. 'எல்லோருக்கும் பிடித்தவன் அரசியலுக்கு வந்தால் சிலருக்கு எரிச்சல் வரும்' "அரசியலில் யார் எப்போது யாரை எதிர்ப்பார்கள், ஆதரிப்பார்கள் என்று தெரியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் நிரந்தர எதிரியும் கிடையாது என்று கூறுவார்கள். மக்களுக்கு அதிகமாகப் பிடித்த ஒருவர் அரசியலுக்கு வந்தால் நல்லவர்கள் அதை வரவேற்பார்கள், ஆனால் ஒரு சிலருக்கு எரிச்சல் ஏற்படும்," என்று விஜய் பேசினார். அதோடு, "இதுவரை நாம் சொன்ன பொய்களை நம்பி மக்கள் வாக்களித்தார்களே, ஆனால் இவன் இன்று மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறானே, எப்படி இவனைச் சமாளிக்கலாம் என்று நினைப்பார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் நமக்கு எதிராகப் பேசுகிறார்கள் இல்லையா அந்த மாதிரி," என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,PTI 2. 'கட்சி நிர்வாகிகள் இளைஞர்களாக இருந்தால் என்ன தவறு?' கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இளைஞர்களாக இருப்பது குறித்து விமர்சிக்கப்படுவதாகக் கூறிய விஜய் அதற்கான தனது பதிலையும் தெரிவித்தார். அப்போது, "ஏன் இருந்தால் என்ன? அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியபோது அவர்களின் பின்னால் இருந்தவர்கள் இளைஞர்கள்தானே! அவர்களால்தான் 1967, 1977 தேர்தல்களில் வெற்றி கிடைத்தது," என்று பேசினார். பூமியை நெருங்கிய பிரமாண்ட விண்கல் நிலவின் மீது மோதுமா?நாசா புதிய தகவல்5 மணி நேரங்களுக்கு முன்னர் கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? - 5 அரிய தகவல்கள்25 பிப்ரவரி 2025 3. 'பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவோம்' அதோடு, கட்சி நிர்வாகிகளின் பின்னணி குறித்தும் பேசப்படுவதாகக் குறிப்பிட்ட த.வெ.க. தலைவர் விஜய், "கட்சி நிர்வாகிகள் சாதாரண குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் என்பதையும் நம் மீதான புகாராகக் கூறுகிறார்கள். சாதாரணமானவர்கள்தான் பெரிது பெரிதாகச் சாதித்துள்ளனர். இது எளிய மக்களுக்கான கட்சி, பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது," என்று கூறினார். "அந்தக் காலத்தில், பண்ணையார்கள் கட்சியில் இருப்பார்கள். ஆனால் இப்போது கட்சியில் இருப்பவர்கள் பண்ணையாளர்களாக மாறிவிடுகிறார்கள். மக்கள் நலன், வளர்ச்சி ஆகியவை குறித்துக் கவலைப்படாமல், எந்தெந்த வழிகளில் எல்லாம் பணம் பெறலாம் என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்றுவதுதான் நமது நோக்கம்," என்று விமர்சித்தார். ஆதவ் அர்ஜுனா: திமுக-வில் அரசியலை தொடங்கியவர் விஜய் உடன் இணைந்தது எப்படி?31 ஜனவரி 2025 விஜய், திமுக கூட்டணி, 2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் பற்றி திருமாவளவன் பிபிசி தமிழுக்கு பேட்டி25 டிசம்பர் 2024 4. 'மும்மொழிக் கொள்கை' பட மூலாதாரம்,@TVKVIJAYTRENDS "புதிதாக ஒரு பிரச்னையைக் கிளப்பிவிடுகிறார்கள்" என்று கூறி மும்மொழிக் கொள்கை குறித்தும் விஜய் தனது கருத்தைத் தெரிவித்தார். அப்போது, "மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்தாவிட்டால் மாநில அரசுக்கு கல்விக்கான நிதியை கொடுக்க மட்டார்கள் என்பது எல்கேஜி, யுகேஜி சிறுவர்கள் சண்டை போட்டுக் கொள்வது போல உள்ளது" எனக் கூறிய அவர், கொடுக்க வேண்டியது அவர்களது கடமை, வாங்க வேண்டியது இவர்களது உரிமை என்றார். மேலும், "இரண்டு பேரும் – அதாவது பாசிசமும் பாயாசமும் - அதாவது நமது அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் பேசி வைத்துக் கொண்டு சமூக ஊடகத்தில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இருவரும் அடித்துக் கொள்வது மாதிரி நடிப்பார்களாம், அதை மக்கள் நம்ப வேண்டுமாம்," என்று பாஜக, திமுக இருதரப்புமே மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் அரசியல் செய்வதாக விமர்சித்தார் விஜய். மேற்கொண்டு பேசியவர், "நமது ஊர் சுயமரியாதை ஊர், அனைவரையும் மதிப்போம், அனைத்து மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் எந்தப் பள்ளியில் வேண்டுமானாலும் படிக்கலாம், எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் கூட்டாட்சித் தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மாநில அரசின் கல்விக் கொள்கையை மொழிக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறொரு மொழியை அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி?" என்றும் பாஜகவை விமர்சித்தார். செலவிட பணமில்லாமல் திணறும் 100 கோடி இந்தியர்கள் - ஆய்வு கூறுவது என்ன?6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவுடன் முரண்படும் வங்கதேசத்தை வளைக்க சீனா முயற்சியா?6 மணி நேரங்களுக்கு முன்னர் 5. 'கட்சி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்' பட மூலாதாரம்,TVK தமிழக வெற்றிக் கழகம் இப்போது முக்கியமான கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட விஜய், மாநில அளவில் நிர்வாகிகளை நியமித்து வருவதாகவும், கட்சியின் கட்டமைப்புதான் ஒரு கட்சிக்குப் பலமே என்பதால் அதை வலுவாகக் கட்டமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பிரஷாந்த் கிஷோருடன் கை கோர்க்கும் விஜய் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் கடந்த வாரம் சென்னையில் விஜயை சந்தித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்துக்கான தேர்தல் உத்திகளை வகுத்துத் தரும் பணியில் ஈடுபடப் போவதாக, இன்று தவெக விழாவில் பங்கேற்ற பிரஷாந்த் கிஷோர் தெரிவித்தார். அப்போது, "அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வெற்றி பெறச் செய்ய உதவுவேன்" என்று கூறினார். "எனது நண்பர், எனது சகோதரர்" என்று பிரஷாந்த் கிஷோரை குறிப்பிட்டுப் பேசிய விஜய், "தமிழ்நாட்டில் 1967 மற்றும் 1977 சட்டமன்றத் தேர்தல்களைப் போல, 2026 சட்டமன்றத் தேர்தலில் வரலாறு படைப்போம் என்ற தீர்க்கமான உறுதியுடன் இயங்கி வரும் வளர்ந்து வரும் முதன்மை அரசியல் சக்தி தவெக" என்றார். கட்சியின் கொள்கைகளில் சமரசம் செய்யாமல் பிரஷாந்த் கிஷோருடன் பணியாற்றப் போவதாகவும் அவர் பேசினார். விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி என்ன? தி.மு.க-வுக்கு பாதிப்பா? த.வெ.க-வில் குழப்பம் வருமா?11 பிப்ரவரி 2025 விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஓராண்டாக என்ன செய்தது? தாக்கம் ஏற்படுத்தியதா?4 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,@TVKVIJAYTRENDS நிகழ்வில் பேசிய பிரஷாந்த் கிஷோர் "கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக குஜராத் மாடல் வளர்ச்சியே சிறந்தது என ஒப்புக்கொள்ள இந்தியா கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு வளர்ச்சி மாடல்தான் சிறந்தது" என்றார். எனினும் இதுவரை இல்லாத அளவிலான அரசியல் ஊழல் தமிழ்நாட்டில் நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார். "தமிழ்நாடு பிற மாநிலங்களைவிட பல குறியீடுகளில் முன்னோடியாக உள்ளது. ஆனால் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கான அரசியல் ஊழல் இங்கு நடைபெறுகிறது. வாரிசு அரசியல் குறித்து நாம் பெரிதாகக் கவனிப்பதில்லை. கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கரின் வாரிசுகள் மட்டுமே ஆட வேண்டும் என்றால் நமக்கு எப்படி சச்சின், தோனி போன்ற வீரர்கள் கிடைத்திருப்பார்கள்? தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ளவர், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தோனி. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் அவரைவிடப் பிரபலமான பிகாரி நானாக இருக்க வேண்டும். அடுத்த 100 நாட்களில் தமிழக வெற்றிக் கழக குடும்பத்தைப் பத்து மடங்கு பெருக்க வேண்டும் என்று சூளுரை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று பேசினார். இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து தவெகவில் அண்மையில் இணைந்திருந்த ஆதவ் அர்ஜூனா மேடையில் பேசினார். முன்னதாக 'கெட் அவுட்' என்று மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் கூறும் வகையில் கையெழுத்திடும் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் விஜய் முதல் கையெழுத்திட்டார். அந்த பேனரில் பிரஷாந்த் கிஷோரை கையெழுத்திடுமாறு ஆதவ் அர்ஜுனா கூறியபோது, அவர் மறுத்துவிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgl0ydngg9yo
  19. வடக்கு கிழக்கில் 92,000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன இவர்களுக்கு நிலையான வருமான வழிமுறைகள் இல்லை, இதனால் இக்குடும்பங்களில் உள்ள பிள்ளைகளது எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது. எனவே பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருவாய் பெறக்கூடிய சுய தொழில்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். என தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட எம்.பி. கே.எஸ்.குகதாசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் விரிவாக்கமானது, ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் நம்பிக்கைக்குரிய ஒரு படியாகும். பொருளாதார மாற்றச் சட்டத் திருத்தம், அரச-தனியார் கூட்டுச் சட்ட அறிமுகம் முதலியன வணிக நம்பிக்கை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளன. எனினும், இந்த ஒப்பந்தங்கள் எவ்வாறு கட்டமைக்கப்படும் அல்லது எந்தக் குறிப்பிட்ட தொழில்கள் பயனடையும் என்பது பற்றிய தெளிவான வரைபடத்தை அரசு வழங்கவில்லை என்றார். https://thinakkural.lk/article/315462
  20. மாறும் வானிலை | இலங்கைக்கான கப்பல் போக்குவரத்து 3 நாட்களுக்கு ரத்து 26 FEB, 2025 | 03:01 PM சென்னை: வங்கக் கடலில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பிப். 26 முதல் 28 வரை நாகை - இலங்கை பயணிகள் இடையேயான கப்பல் போக்குவரத்து மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ம் தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ம் தேதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையிலிருந்து காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது. வாரத்தில் ஐந்து நாட்களுக்கு கப்பல் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்தாண்டுக்கான கப்பல் போக்குவரத்து இம்மாதம் 22 ம் தேதி தொடங்கியது. தினமும் காலை 7.30 க்கு நாகையில் கிளம்பி 11.30 க்கு காங்கேசன் துறைமுகத்தை அடையும் கப்பல், அங்கிருந்து மறு மார்க்கத்தில் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 க்கு நாகையை வந்தடைந்தது. இதனை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று முதல் 28 ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படியே நேற்று முன்தினம் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வங்கக்க்கடலில் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக கப்பலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 26 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், மார்ச் 1 ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் என்றும் கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம் அறிவித்துள்ளது. நாகை - இலங்கை இடையே நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு தடைப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/207735
  21. பட மூலாதாரம்,CCTV படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் தௌஹித் ஹொசைன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை ஜனவரி மாதம் சந்தித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், எத்திராஜன் அன்பரசன் பதவி, பிபிசி உலக சேவை, தெற்காசிய ஆசிரியர் 26 பிப்ரவரி 2025, 03:08 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கொண்ட வங்கதேச குழு ஒன்று சீனாவுக்கு 10 நாள் பயணத்தை தொடங்கியுள்ளது. அவர்கள் சீன அரசு அதிகாரிகளுடனும், அங்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்துவார்கள் என அந்த குழுவில் இடம்பெற்ற தலைவர் ஒருவர் பிபிசியிடம் உறுதி செய்தார். பல்வேறு விவகாரங்களில் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சீனா வங்கதேசத்தை கவர முயற்சி செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வங்கதேசத்தில் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஷேக் ஹசீனா இந்தியாவில் வசிப்பதும் அதில் ஒன்று. அவரை ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேசம் கேட்டுக்கொண்டது. இந்தியா அதை ஏற்க மறுத்துவிட்டது. "அடிப்படையில் இது சீனா முன்னெடுத்துள்ள ஒரு நல்லெண்ண பயணம்" என பெய்ஜிங் சென்றுள்ள குழுவிற்கு தலைமை தாங்கியிருக்கும் பி என்பி எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சியை சேர்ந்த அப்துல் மொயின் கான் பிபிசியிடம் தெரிவித்தார். "வங்கதேசத்தின் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளை சீனா அழைத்திருப்பதால் இந்த பயணம் தனித்துவமானது." என்றார் அவர். அந்த குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் பலரும் வங்கதேச தேசியவாத கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஹசீனா தலைமையிலான அவாமி லீக் தவிர முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சியும் வங்கதேசத்தில் ஒரு முக்கிய கட்சியாகும். கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்படுவதற்கு காரணமான எழுச்சியை தொடங்கிய மாணவர் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகளும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, வங்கதேசத்தில் தற்போது பதவியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் 'புதிய குடிமக்கள்' சந்திக்கும் பிரச்னைகள் என்ன? பிபிசி கள ஆய்வு வங்கதேசம்: வங்காள தேசியவாதத்தில் இருந்து இஸ்லாமிய தேசியவாதத்தை நோக்கி நகர்கிறதா? அமெரிக்க நிதியுதவி நிறுத்திவைப்பு: டிரம்ப் உத்தரவால் இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு? மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை எதிர்கொள்ள ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டை ஆளும் இடைக்கால அரசு இந்தியாவை வலியுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் போராட்டத்தை ஒடுக்க ஹசீனா அரசு எடுத்த நடவடிக்கையில் சுமார் 1400 பேர் கொல்லப்பட்டதாக ஐநா கூறுகிறது. மறுபுறம், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஹசீனாவை ஒப்படைக்க இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது எதிர்ப்பாளர்களால் இந்தியாவுக்கு ஆதரவானவராக பார்க்கப்படும் ஹசீனாவின் 15 ஆண்டு ஆட்சி காலத்தில் இந்தியாவும் வங்கதேசமும் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தன. டெல்லியுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த அதே நேரம், அவர் சீனாவுடனான உறவையும் பராமரித்து வந்தார். ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, வங்கதேச தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் இஸ்லாமிய கட்சிகள் உள்ளிட்டவற்றின் குழுக்களோடு சீனாவின் தொடர்பு அதிகரித்துள்ளது. ஜனவரியில் வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் தௌஹித் ஹொசைன், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை பெய்ஜிங்கில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து, இந்த வாரம் வங்கதேச குழு சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் பிஎன்பி குழு பெஜிங் சென்று வந்த நிலையில் அதன் நிர்வாகிகள் சீனாவிற்கு பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும். வங்கதேசத்தில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதுடன், இந்தியாவின் செல்வாக்கும் இல்லாத நிலையில், சுமார் 170 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டின் மீது சீனா தனது பிடியை வலுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வங்கதேசத்தின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக சீனா உள்ளது. அதில் பெரும்பாலானவை, சீனாவின் ஏற்றுமதியாக தெற்காசிய நாடான வங்கதேசத்துக்குச் செல்கிறது. சீன உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளையே, வங்கதேச ராணுவம் பெரிதும் நம்பியுள்ளது. அதற்குத் தேவையான 70 சதவீதத்துக்கும் அதிகமான பொருட்கள் சீனாவிலிருந்தே வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வங்கதேச தேசியவாதக் கட்சியின் மூத்த தலைவரான அப்துல் மொயீன் கான், பெய்ஜிங்கில் உள்ள தூதுக்குழுவிற்கு தலைமை தாங்குகிறார். சீனாவின் அணுகுமுறையோடு ஒப்பிடுகையில், கடந்த ஆறு மாதங்களில் வங்கதேச இடைக்கால அரசு மற்றும் பிற வங்கதேச அரசியல் தலைவர்களுடன் இந்தியா மிகக் குறைவான தொடர்புகளையே மேற்கொண்டுள்ளது. ஹசீனாவுக்கு இடமளிப்பதன் மூலம் வங்கதேசத்தின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாகக் கூறி வங்கதேச தேசியவாத கட்சி கடந்த டிசம்பர் மாதம் போராட்டம் நடத்தியது. கூடுதலாக, இடைக்கால அரசின் சில ஆலோசகர்களும் இதே காரணத்திற்காக இந்தியாவை விமர்சித்துள்ளனர். இந்த விமர்சனத்திற்கு இந்தியாவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "எங்களுடன் என்ன வகையான உறவைப் பேண விரும்புகிறார்கள் என்பதை வங்கதேசம் முடிவு செய்ய வேண்டும்" என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரம் கூறினார். வங்கதேச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இந்தியாவை விமர்சிப்பது "முற்றிலும் அபத்தமானது" என்றும் அவர் கூறினார். இந்திய தூதருக்கு வங்கதேசம் மீண்டும் சம்மன் - இருநாட்டு எல்லையில் என்ன பிரச்னை?14 ஜனவரி 2025 மோதி - டிரம்ப் உறவு எப்படி இருக்கப் போகிறது? 2025இல் இந்தியா சந்திக்கவுள்ள 6 சவால்கள்2 ஜனவரி 2025 வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த வாக்குவாதம் வங்கதேசத்தை சீனாவை நோக்கி தள்ளக்கூடும் என்று சிலர் வாதிடுகின்றனர். இலங்கை, மாலத்தீவு, நேபாளத்திற்கு அடுத்தபடியாக வங்கதேசமும் இந்தியா - சீனா இடையிலான போட்டியின் இலக்காக மாறியுள்ளது என்பதை சமீபத்திய நிகழ்வுகள் வெளிக்காட்டுகின்றன. ஏனெனில் இந்தியாவும் சீனாவும் தங்களின் செல்வாக்கை அதிகரிக்க முயற்சி செய்கின்றன. "இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள நாடுகள் முழுவதும் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்ட பிராந்தியமாக வருவதாக இந்தியா கருதக் கூடாது என்று நான் நம்புகிறேன். அந்த அணுகுமுறை இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்," என்று பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக் கழகத்தின் மூத்த சீன ஆய்வாளர் ஜோ போ பிபிசியிடம் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62zqq9y5z0o
  22. 26 FEB, 2025 | 05:30 PM (எம்.மனோசித்ரா) இந்திய உயர் ஸ்தானிகரகம் 'ஐ.என்.ஆர். - எல்.கே.ஆர். (INR - LKR) வர்த்தக தீர்வு : இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல்' என்ற தொனிப்பொருளில் கொழும்பில் ஒரு வட்ட மேசை மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள், இலங்கை மற்றும் இந்திய வங்கிகளின் பிரதிநிதிகள், பல்வேறு வர்த்தக சபைகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிந்தனையாளர் குழுக்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இந்நிகழ்வை வழிநடத்தினர். இந்திய உயர் ஸ்தானிகரின் வரவேற்புரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து இந்திய சேமிப்பு வங்கியின் தலைமைப் பொது முகாமையாளர் ஆதித்யா கைஹாவின் விரிவான விளக்கவுரை வழங்கப்பட்டது, இந்திய ரூபாவை சர்வதேசமயமாக்கல் மற்றும் இலங்கை - இந்திய வர்த்தக தீர்வு குறித்தும், இலங்கையில் இந்திய ரூபாவில் முதலீடுகளை அனுமதிக்கும் இந்திய சேமிப்பு வங்கியின் முக்கிய கொள்கைகளையும் அவர் இதன் போது எடுத்துரைத்தார். எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளில் இந்திய - இலங்கை நாணய பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தில் இந்திய சேமிப்பு வங்கியின் சமீபத்திய திருத்தங்கள் குறித்து அவர் மேலும் விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இந்திய ரூபாய் மதிப்பிலான வர்த்தக தீர்வு கட்டமைப்பைப் பற்றிய நுண்ணறிவுகள் தொடர்பில் விளக்கமளித்தார். இந்த பொறிமுறையின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் இந்த பொறிமுறையை நெறிப்படுத்துவதில் இரு நாடுகளிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் மத்திய வங்கிகளுடன் இணைந்து செயற்படுவதையும் அவர் வலியுறுத்தியிருந்தார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது, உயர்மட்டத் தலைமைகளால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட உறுதிப்பாட்டுடன் இந்த முயற்சி ஒத்துப்போகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை ஆழப்படுத்துவதற்காக இந்திய - இலங்கை ரூபாய் மதிப்புள்ள வர்த்தக தீர்வுகளை மேம்படுத்துவது குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது. https://thinakkural.lk/catagory/local_news
  23. நோயாளிகள் நலன் கருதி எனில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே நன்மை அளிக்கும், மாறாக தொழிற்சங்க நடவடிக்கைக்காக சிகிச்சை அளிக்காது விடுவதல்ல. வேறு முறைகளில் எதிர்ப்பைக் காட்டலாமே?!
  24. நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் என தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, உள்ளூராட்சி சபைத் தேர்தலில், நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட தீர்மானத்திற்கமைவாக தனித்துப் போட்டியிடுவோம். சபைகளில் ஆட்சி அமைக்கும்போது, கூட்டாக ஆட்சி அமைக்க முடியும். இது தொடர்பாக எமது கட்சித் தலைவர் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/315488
  25. Published By: RAJEEBAN 26 FEB, 2025 | 11:38 AM பாலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என கார்டியன் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது. பாலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என நம்பப்படுகின்றது உலக சுகாதார ஸ்தாபனம் இவர்களின் நலன்கள் பாதுகாப்பு குறித்து கரிசனை வெளியிட்டுள்ளது. 162 மருத்துவ பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தன்னால் உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக பாலஸ்தீன மருத்துவ அரசசார்பற்ற அமைப்பான சுகாதார பணியாளர்கள் நலன் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. காசாவின் சிரேஸ்ட மருத்துவர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்இமோதல்களின் போது மருத்துவமனைகளில் கைதுசெய்யப்பட்ட24 பேர் காணாமல்போயுள்ளனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் உட்பட பெருமளவு சுகாதார பணியாளர்களை தடுத்துவைத்திருப்பது சர்வதேச சட்டங்களின் சட்டவிரோதமான செயல் என சுகாதார பணியாளர்கள் நலன் கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் முவாத் அல்செர் தெரிவித்துள்ளார். மருத்துவநிபுணத்துவம் பராமரிப்பு போன்றவற்றை மறுப்பது பொதுமக்களின் துன்பங்களை மேலும் அதிகரிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார பணியாளர்களை இஸ்ரேல் இந்த விதத்தில் இலக்குவைப்பது பாலஸ்தீன மக்களிற்கான சுகாதார சேவை மீது கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் பெரும் துன்பங்கள் நிகழ்கின்றன இ தடுத்திருக்ககூடிய உயிரிழப்புகள் பல நிகழ்கின்றனஇமருத்துவ நிபுணத்துவம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்துள்ளார். யுத்தம் ஆரம்பித்த பின்னர் 297 சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என உறுதி செய்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. எனினும் எத்தனை பேர் விடுதலை செய்ய்பட்டனர் என்ற புள்ளிவிபரங்கள் இல்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு நலன் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/207713

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.