Everything posted by ஏராளன்
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்த துப்பாக்கிதாரியின் காதலி கைது Published By: VISHNU 21 FEB, 2025 | 09:26 PM கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் ஒரு பெண்ணை மஹரகம பொலிசார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட பெண் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கணேமுல்ல சஞ்சீவவைக் கொலைசெய்த பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனது காதலியுடன் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகியிருந்தமை தெரியவந்துள்ளது. அதற்காக, அவளை நீர்கொழும்பு பகுதிக்கு அழைத்துச் செல்ல ஒரு நபர் மஹரகம பகுதிக்கு வந்துள்ளார். மேலும், அந்த நபரை கைது செய்த பொலிசார், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்தனர். மேற்கு மாகாண தெற்குப் பொறுப்பான துணைப் பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) கயங்க மாரப்பனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/207327
-
யாழ். அரச வைத்தியசாலைகளுக்கான வைத்திய சேவை ஊழியர்களை வழங்க நடவடிக்கை - சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம்
Published By: DIGITAL DESK 2 21 FEB, 2025 | 07:34 PM (செ.சுபதர்ஷனி) யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நிலவிவரும் வைத்திய சேவை ஊழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு சுகாதார அமைச்சால் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் காணப்படும் மனிதவள தேவைகளை இனங்கண்டு, அவற்றிற்கு உரிய தீர்வுகளை பெற்று தரும் நோக்குடன் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அண்மையில் விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது ஊர்காவற்றுறை பொது மருத்துவமனை, வேலணை மாவட்ட மருத்துவமனை, வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், யாழ். போதனா வைத்தியசாலை , சாவகச்சேரி பொது வைத்தியசாலை மற்றும் மாங்குளம் பொது வைத்தியசாலை ஆகியவற்றில் மனித மற்றும் பௌதீக வளங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் யாழ். மக்களைப் பாதிக்கக் கூடிய தொற்றா நோய்கள், தொற்று நோய்களை கட்டுப்படுத்தல், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல் மற்றும் வைத்தியசாலைக்கு அவசியமான மருந்துப் பொருட்கள் தொடர்பிலும் வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது சுகாதார பணிப்பாளர், தீர்வினைப் பெற்றுதரக் கூடிய சிக்கல்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்ததுடன், சுகாதார அமைச்சரிடம் தெரிவித்து ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் வழங்கப்படும் என்றார். இதேவேளை சுகாதார அமைச்சின் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்துக்குட்பட்ட அரச வைத்தியசாலைகளில் தற்போது நிலவிவரும் வைத்தியர் ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தற்போது பயிற்சி நெறிகளை முன்னெடுத்து வருபவர்கள் மற்றும் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வைத்திய ஊழியர்களை மேற்படி வைத்தியசாலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். புதிய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சின் எதிர்கால அபிவிருத்தி பணிகளுக்காக பெருமளவான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் குறித்த நிதியை உரிய முறையில் பயன்படுத்தி இந்நாட்டு மக்களுக்கு உயர்தரமான சுகாதார சேவையை வழங்குவது சுகாதார அமைச்சின் முதன்மையான நோக்கமாகும் என்றார். https://www.virakesari.lk/article/207314
-
ஹலால் முறையில் விலங்குகள் எப்படி வெட்டப்படும்? அதன் இறைச்சி ஆரோக்கியமானதா? 6 கேள்வி-பதில்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹலால் என்பது 'சட்டபூர்வமானது அல்லது அனுமதிக்கப்பட்டது' என்று பொருள்படும், அரபு மொழி வார்த்தையாகும் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் 'ஹலால்' என்ற இஸ்லாமிய மதம் தொடர்பான வார்த்தை பெரும்பாலும் உணவுகள் சார்ந்த விஷயங்களில் மட்டுமே விவாதிக்கப்படுகிறது. ஹலால், ஹராம் என்றால் என்ன? இஸ்லாமியர்களுக்கு அது எந்தெந்த விஷயங்களில் பொருந்தும்? ஹலால் இறைச்சி ஆரோக்கியமானதா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். சென்னையில் தலித்துகள், முஸ்லிம்கள் வாடகை வீடு தேடுவதில் சந்திக்கும் சவால்கள் என்ன? 'மத உணர்வை விட பொறுமையின்மை, கபடம், ஒழுங்கின்மையைப் பார்த்தேன்', கும்பமேளா குறித்த மகாத்மா காந்தியின் பதிவுகள் சொல்வது என்ன? கும்பமேளாவும் தமிழர்களும்: பக்தர்கள் புனித நீராடுவது தவிர வேறு என்னவெல்லாம் செய்கிறார்கள்? செய்யும் வேலை மூலம் கடவுளை தொழும் 'பயே ஃபால்' முஸ்லிம்கள் குறித்து தெரியுமா? ஹலால் என்றால் என்ன? ஹலால் என்பது 'சட்டபூர்வமானது அல்லது அனுமதிக்கப்பட்டது' என்று பொருள்படும், அரபு மொழி வார்த்தையாகும் (حلال - Halal). 'ஹராம்' என்ற அரபு மொழிச் சொல்லுக்கு சட்டவிரோதமானது அல்லது தடை செய்யப்பட்டது என்று பொருள். ஹலால், ஹராம் என்பது இஸ்லாத்தை பின்பற்றுபவர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் எந்தெந்த நடைமுறைகள் அனுமதிக்கப்படுகின்றன அல்லது தடை செய்யப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கின்றன. "இஸ்லாத்தில் ஹலால்/ ஹராம் என்பது உணவில் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது என பலரும் கருதுகிறார்கள். உண்மை என்னவென்றால், வாழ்க்கை முறையாகவே இது கடைபிடிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு உண்மை பேசுவது ஹலால், பொய் சொல்வது ஹராம்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த மௌலானா சம்சுதீன் காசிம். தந்தை வாயில் இருந்து பிறக்கும் தலைப் பிரட்டைகள் - அருகி வரும் அரிய வகை சதர்ன் டார்வின் தவளைகள்6 மணி நேரங்களுக்கு முன்னர் பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க என்ன காரணம்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?20 பிப்ரவரி 2025 ஹலால்/ஹராம் உணவுகள் எவை? பட மூலாதாரம்,GETTY IMAGES "ஹலால் உணவுகள் என்றால், இஸ்லாமியர்களுக்கு உட்கொள்ள அனுமதிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை குறிக்கிறது. அதுவே இறைச்சி என்றால், ஷரியா அல்லது இஸ்லாமிய சட்டத்தின்படி வெட்டப்பட்ட விலங்கின் இறைச்சி" என 'அமெரிக்க ஹலால் அறக்கட்டளை' எனும் அமைப்பின் இணையதளம் கூறுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த அமைப்பு, 1986 முதல் உணவு, பானங்கள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்களுக்கான 'ஹலால் சான்றிதழை' வழங்கி வருகிறது. எளிதாகச் சொல்வதென்றால், இஸ்லாத்தில் 'ஹராம்' என வகைப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர, மற்ற அனைத்துமே இஸ்லாமியர்களுக்கு ஹலால் உணவுகள் தான். அமெரிக்க ஹலால் அறக்கட்டளை, பின்வரும் உணவுப் பொருட்களை 'ஹராம்' எனப் பட்டியலிடுகிறது. பன்றி இறைச்சி மற்றும் அதன் அனைத்துவிதமான துணைப் பொருட்கள், ஜெலட்டின் உட்பட இஸ்லாமிய வழிகாட்டுதல்களின்படி வெட்டப்படாத விலங்கின் இறைச்சி ரத்தம் (உறைந்த அல்லது வழியக்கூடிய) மற்றும் அதன் துணைப் பொருட்கள் மாமிச உண்ணி விலங்குகள் (Carnivorous animals) மதுபானங்கள் மற்றும் வேறு ஏதேனும் போதைப் பொருட்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு பொருளையும் உள்ளடக்கிய உணவுகள் எந்தெந்த விலங்குகளின் இறைச்சிகளை, இஸ்லாம் 'ஹராம்' என குறிப்பிடுகிறது என்பதை பின்னால் விரிவாகப் பார்ப்போம். "தாமாக இறந்தது, ரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவைகள் ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆதலால், எவரேனும் வரம்பு மீறாமலும், பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் இருந்து (இவற்றைப் புசிக்க) நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டால் (அது) அவர் மீது குற்றமாகாது." என குர்ஆன் கூறுகிறது (Al-Baqarah : 173). மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?10 பிப்ரவரி 2025 'காரம் குறைவு, ருசி அதிகம்'- தெலங்கானாவின் சப்பாட்டா மிளகாய்க்கு புவிசார் குறியீடு பெற முயலும் விவசாயிகள்1 பிப்ரவரி 2025 ஹலால் இறைச்சி என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பசு, காளை, ஆடு, ஆட்டுக்குட்டி, செம்மறி ஆடு, மான், கோழி, வான்கோழி, காடை, வாத்து போன்ற விலங்குகள் இஸ்லாத்தின் 'ஹலால்' என்ற பிரிவில் வரும். ஆனால், அந்த விலங்கை கொல்வதற்கு/வெட்டுவதற்கு என சில விதிமுறைகள் உள்ளன. 1) கொல்லப்படும் விலங்கு/பறவை ஹலால் (சட்டப்பூர்வமான) இனத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். 2) கொல்லப்படும் விலங்கு/பறவை கருணையுடன் கையாளப்பட வேண்டும். 3) அந்த விலங்கு/பறவை அறுக்கப்படும்போது உயிருடன் இருக்க வேண்டும். 4) கொல்லப்படும் முன் விலங்கு/பறவையின் உடலின் எந்தப் பகுதியையும் வெட்டக்கூடாது. 5) இதில் ஈடுபடும் நபர் மனரீதியாக நல்ல நிலையில் இருக்க வேண்டும், ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் மற்றும் இஸ்லாமிய நடைமுறைகளை அறிந்தவராக இருக்க வேண்டும். 6) தஸ்மியா, பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்), மற்றும் தக்பீர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) ஆகியவை ஒவ்வொரு விலங்கு/பறவையையும் கொல்வதற்கு முன் மற்றும் கொல்லப்படும்போது, அந்த நபரால் கூறப்பட வேண்டும். 7) விலங்கின் முதுகுத் தண்டு துண்டிக்கப்படாமல், கழுத்துப் பகுதியில் உள்ள மூச்சுக்குழாய், உணவுக்குழாய் மற்றும் பிரதான கரோடிட் தமனிகள் மற்றும் கழுத்து நரம்புகளைத் துண்டிக்க வேண்டும். 8) ரத்தம் முழுமையாக வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும். ரத்தப்போக்கின் விளைவாக விலங்கின் மரணம் நிகழ வேண்டும். 9) கொல்லப்பட்ட பிறகு, விலங்கு/பறவையை தன்மையாகக் கையாள வேண்டும். கொல்லப்பட்ட விலங்கு/பறவையின் தலை, தோல் மற்றும் பிற பாகங்கள் அவை இறந்த பின்னரே அகற்றப்பட வேண்டும். இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்வதற்கு முன் அவற்றை மயக்கமடையச் செய்து கொல்வது (Stunning- ஸ்டன்னிங்) உலகின் பல இடங்களில் பின்பற்றப்படுகிறது. அதாவது, கொல்லப்படும்போது அந்த விலங்குக்கு எந்த வலியும் பயமும் இருக்கக்கூடாது என்பதற்காக அதை மயக்கமடையச் செய்வது. அமெரிக்க ஹலால் அறக்கட்டளையின் படி, மயக்கமடையச் செய்வதால் அந்த விலங்குக்கு காயம் ஏதும் ஏற்படக்கூடாது மற்றும் உயிர் பிரியாமல் இருக்க வேண்டும். அதாவது, இஸ்லாமிய முறைப்படி மட்டுமே அந்த விலங்கின் உயிர் பிரிய வேண்டும். ஸ்டன்னிங் காரணமாக அந்த விலங்கு இறந்துவிட்டால், அது நிச்சயம் 'ஹராம்' இறைச்சி தான். பிரமாண்ட விண்வெளி கண்ணாடி மூலம் இரவை பகலாக்க முடியுமா? ரஷ்யாவின் இந்த திட்டத்தின் நோக்கம் என்ன?20 பிப்ரவரி 2025 செவ்வாய் மற்றும் நிலாவில் மனிதன் குடியேற சென்னை ஐஐடியின் இந்த ஆய்வு எவ்வாறு உதவும்?19 பிப்ரவரி 2025 எந்தெந்த விலங்குகள்/பறவைகளின் இறைச்சி ஹராம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பன்றி இறைச்சி உண்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது (ஹராம்) 1) பன்றிகள் மற்றும் காட்டுப் பன்றிகள் 2) நாய்கள், பாம்புகள் மற்றும் குரங்குகள் 3) நகங்கள் மற்றும் கோரைப் பற்களைக் கொண்ட மாமிச உண்ணி விலங்குகள் (சிங்கங்கள், புலிகள், கரடிகள் மற்றும் அவற்றை ஒத்த பிற விலங்குகள்) 4) நகங்களைக் கொண்டு இரையைப் பிடிக்கும் பறவைகள் (கழுகுகள் மற்றும் அவற்றை ஒத்த பிற பறவைகள்) 5) எலிகள், பூரான்கள், தேள்கள் மற்றும் அவற்றை ஒத்த பிற விலங்குகள், பூச்சிகள். 6) இஸ்லாத்தில் கொல்வதற்கு தடை செய்யப்பட்ட விலங்குகள், அதாவது எறும்புகள், தேனீக்கள் மற்றும் மரங்கொத்தி பறவைகள். 7) பேன், ஈக்கள், லார்வாக்கள் போன்றவை. 8) தவளைகள், முதலைகள் போன்ற நிலத்திலும் நீரிலும் வாழும் விலங்குகள். 9) கோவேறு கழுதைகள் மற்றும் கழுதைகள். 10) அனைத்து விதமான, நஞ்சுடைய மற்றும் ஆபத்தான நீர்வாழ் விலங்குகள். 11) இஸ்லாமிய சட்டத்தின்படி கொல்லப்படாத பிற விலங்குகள். 12) ரத்தம். இமயமலை: நூறாண்டுக்கு முன்பே ஆபத்துகளை கடந்து புகைப்படக் கலைஞர் எடுத்த அரிய படங்கள்18 பிப்ரவரி 2025 பிரபஞ்சத்தின் மிகப்பெரிய, பிரமாண்ட கட்டமைப்பு கண்டுபிடிப்பு - உள்ளே என்ன இருக்கிறது?18 பிப்ரவரி 2025 பிற மதங்களிலும் இதேபோன்ற நடைமுறை உள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யூத மதத்தில் உண்ண அனுமதிக்கப்பட்ட உணவு, கோஷர் (Kosher) உணவு என அழைக்கப்படுகிறது. இஸ்லாத்தைப் போலவே, யூத மதத்திலும் உணவு தொடர்பான கட்டுப்பாடுகள் உள்ளன. உண்ண அனுமதிக்கப்பட்ட உணவு, கோஷர் (Kosher) உணவு என அழைக்கப்படுகிறது. உணவு தொடர்பான யூத மதத்தின் விதிகள், கஷ்ருத் (kashruth- כַּשְׁרוּת) என விவரிக்கப்படுகிறது. இங்கும் உண்ண தடை செய்யப்பட்ட உணவுகள் உள்ளன, அவை ட்ரீஃப் (Treyf) என அழைக்கப்படுகிறது. யூத மதத்தால் அங்கீகரிக்கப்பட்ட விலங்குகள் (உண்பதற்கு), பாரம்பரிய யூத சட்டத்தின்படி கொல்லப்பட்டு, அவற்றின் இறைச்சி வெட்டப்படுகிறது. இதுவே கோஷர் இறைச்சி என அழைக்கப்படுகிறது. இரண்டு மதங்களிலும், விலங்கு கொல்லப்படும் முறையில் சில ஒற்றுமைகள் உள்ளன. கூர்மையான கத்தி பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற, அந்தந்த மதங்களைப் பின்பற்றும் ஒருவர் தான் விலங்கை கொல்ல வேண்டும். யூத சட்டம் ஸ்டன்னிங் முறையை பயன்படுத்துவதை உறுதியாக தடை செய்கிறது. ஹலாலைப் போலல்லாமல், கஷ்ருத் விதிகளின்படி தொடக்கத்தில் மட்டும் கடவுளின் பெயரைச் சொல்லி ஆசீர்வதித்தால் போதும். ஒவ்வொரு விலங்கை கொல்லும்போதும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கஷ்ருத் விதிகளின்படி, ரத்தம், சையாட்டிக் நரம்பு மற்றும் குறிப்பிட்ட கொழுப்புகள் உட்பட கொல்லப்பட்ட விலங்கின் சில பகுதிகளை உண்பது யூதர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஹலால் விதிகளின் படி, இனப்பெருக்க உறுப்புகள், வேகஸ் நரம்புகள் மற்றும் ரத்தம் போன்ற சிலவற்றை உண்பது இஸ்லாமியர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆப்ரகாம் லிங்கனின் மனைவியை சூழ்ந்த சர்ச்சைகள், விமர்சனங்கள் - ஓர் வரலாற்று பார்வை17 பிப்ரவரி 2025 சாவர்க்கர் மன்னிப்பு கேட்டு ஆங்கிலேயருக்கு கடிதம் எழுதியது ஏன்? அருண் ஷோரி புது தகவல்19 பிப்ரவரி 2025 ஹலால் இறைச்சி ஆரோக்கியமானதா? பட மூலாதாரம்,GETTY IMAGES பிற இறைச்சிகளுடன் ஒப்பிடுகையில் ஹலால் முறையில் வெட்டப்பட்ட இறைச்சி ஆரோக்கியமானது என சில ஆய்வுகள் குறிப்பிட்டாலும், அதுகுறித்த விரிவான ஆய்வுகளோ தகவல்களோ இல்லை. மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில், ஹலால் மற்றும் ஹலால் அல்லாத முறையில் வெட்டப்பட்ட கோழி இறைச்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், ஹலால் முறையில் கொல்லப்பட்ட கோழிகளின் உடலில் இருந்து ரத்தம் விரைவாக மற்றும் அதிக அளவில் வெளியேறியது என்றும், அதுவே ஹலால் அல்லாத முறையில் வெட்டப்பட்ட கோழிகளில் ரத்தம் வெளியேற கூடுதல் நேரம் தேவைப்பட்டது என்றும் கண்டறியப்பட்டது. ஹலால் அல்லாத முறையில் வெட்டப்படும் இறைச்சியில் ரத்தம் கூடுதலாக எஞ்சியிருக்கும் என்றும், இது பாக்டீரியா எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், சீக்கிரமே இறைச்சி கெட்டுபோவதற்கும் வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வு கூறியது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) இதுவரை ஹலால் இறைச்சியின் ஆரோக்கியத்தன்மை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றாலும், இறைச்சி கெட்டுப்போகாமல் இருக்க பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி, "ஹலால் இறைச்சியா அல்லது சாதாரண இறைச்சியா என்பதை விட, வெட்டப்பட்ட இறைச்சி ரத்தம் இல்லாதவாறு நன்றாக சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதைத் தான் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பார்ப்பார்கள். எனவே சுத்தமான, கெட்டுப்போகாத இறைச்சி உடலுக்கு நல்லது. அவ்வளவு தான்" என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yxw0l78ldo
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் சிறி அண்ணை, வளத்துடன் வாழ்க.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
வாகன வரி சம்பந்தமான இணையத்தளம் ஒன்றில் 20000$ வாகனத்திற்கு வரி விபரம் கொடுத்து பார்த்தபோது 60லட்ச ரூபாவிற்கு வரிகளோட கிட்டத்தட்ட 2 கோடி வருகிறது!! https://cal.lk/vehicle-cost-calculator/ புதிய வாகனங்களுக்கு வரி 300% என நினைக்கிறேன் அண்ணை. அதனால் ஜப்பானில் பாவித்த வாகனங்களை குறைந்த வரியோடு இறக்குமதி செய்கிறார்கள்.
-
செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவுக்கு நிகராக இந்தியாவால் முன்னேற முடியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சாட்பாட்கள் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் டீப்சீக்கைப் போல் இந்தியா அதன் சொந்த அடிப்படை மொழி மாதிரியை இன்னும் உருவாக்கவில்லை. கட்டுரை தகவல் எழுதியவர், நிகில் இனாம்தார் பதவி, பிபிசி நியூஸ் 20 பிப்ரவரி 2025 சாட்ஜிபிடி உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இப்போது சீனாவின் டீப்சீக், செயற்கை நுண்ணறிவு செயலிகளை உருவாக்குவதற்கான செலவைக் கடுமையாகக் குறைத்து தொழில்நுட்பத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான உலகளாவிய போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், குறிப்பாக சாட்பாட்களை இயக்குவதற்குத் தேவையான அதன் சொந்த அடிப்படை மொழி மாதிரியை உருவாக்குவதில் இந்தியா பின்தங்கியுள்ளதாக அறியப்படுகிறது. டீப்சீக் செயலிக்குச் சமமான இந்திய மாதிரி விரைவில் தயாராகும் என்று அரசாங்கம் கூறுகிறது. எனவே 10 மாதங்களுக்குள் அதை உருவாக்கத் தேவையான ஆயிரக்கணக்கான உயர்தர கணினி சிப்களை தொடக்கநிலை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கி வருகிறது. சமீபத்தில், உலகெங்கிலும் உள்ள சிறந்த செயற்கை நுண்ணறிவுத் தலைவர்கள் பலர், ஏஐ துறையில் இந்தியாவின் திறன்கள் குறித்துப் பேசி வருகின்றனர். டீப் ஃபேக்: நெருங்கிப் பழகி ரகசியமாக ஆபாசப் படங்களை வெளியிட்ட நண்பன் - தம்பதி செய்தது என்ன? ஏ.ஐ. உலகில் புதிய அலை: ஒரே செயலி மூலம் அமெரிக்க நிறுவனங்களை மிரளச் செய்த சீன நிறுவனம் ChatGPT உருவாக வழிவகுத்த கண்டுபிடிப்புக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு தொடக்கத்தில், ஓபன் ஏஐயின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் திறனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், உலகளாவிய ஏஐ புரட்சியில் இந்தியா ஒரு முக்கியப் பங்காளியாக இருக்க வேண்டுமென்று இந்த மாதம் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். தற்போது, பயனர்களின் அடிப்படையில் ஓபன்ஏஐ-இன் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் போன்ற பிற நிறுவனங்கள், இந்தியாவில் கிளவுட் மற்றும் ஏஐ உள்கட்டமைப்பை மேம்படுத்த 3 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய உறுதியளித்துள்ளன. மேலும் எதிர்காலத்தில் நாடு வளர்ச்சியடைய முக்கியக் காரணமாக இந்தியாவின் "நிகரற்ற" தொழில்நுட்பத் திறன்கள் இருப்பதாக என்விடியா நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஜென்சன் ஹுவாங் கூறினார். இந்தியாவில் 200 தொடக்கநிலை நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் ஏஐ தொடர்பாக வேலை செய்வதால், தொழில்முனைவோர் இதில் ஆர்வமாகச் செயல்படுவதையும் அறிய முடிகிறது. வெற்றிக்குத் தேவையான முக்கியக் காரணிகள் இந்தியாவிடம் உள்ள போதிலும், கல்வி, ஆராய்ச்சி மற்றும் அரசாங்கக் கொள்கைகளில் அடிப்படை மேம்பாடுகளைச் செய்யாவிட்டால் பின்தங்க நேரிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சாம்சங் இந்தியா: 5 மாதங்களை கடந்தும் போராட்டம் நீடிப்பது ஏன்? 5 கேள்விகளும் பதில்களும்20 பிப்ரவரி 2025 தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலான வரலாறு - சட்டமன்றத்தில் அண்ணா பேசியது என்ன?20 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாரிஸில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் மோதி கலந்து கொண்டார் ஏஐ வளர்ச்சியில் இந்தியாவைவிட சீனாவும் அமெரிக்காவும் "ஏற்கெனவே நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் முன்னிலையில் உள்ளன" என்கிறார் தொழில்நுட்ப ஆய்வாளர் பிரசாண்டோ ராய். ஏனென்றால், அவர்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் அதிகமாக முதலீடு செய்து, ராணுவப் பயன்பாடுகள், சட்ட அமலாக்கம் மற்றும் மொழி மாதிரிகள் ஆகியவற்றுக்காக ஏஐ தொழில்நுட்பத்தை இப்போது உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காப்புரிமைகள், நிதியுதவி, கொள்கைகள் மற்றும் ஆராய்ச்சி போன்ற காரணிகளை அளவிடும் ஸ்டான்ஃபோர்டின் ஏஐ வைப்ரன்சி இண்டெக்ஸில் (Stanford AI Vibrancy Index) உலக அளவில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இருப்பினும், இன்னும் பல முக்கியமான பகுதிகளில் சீனா மற்றும் அமெரிக்காவைவிட இந்தியா பின்தங்கியுள்ளது. 2010 மற்றும் 2022க்கு இடையில் உலகின் மொத்த ஏஐ காப்புரிமைகளில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் முறையே 60 சதவீதம் மற்றும் 20 சதவீதம் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு அரை சதவீதத்திற்கும் குறைவாகவே கிடைத்தது. மேலும் 2023இல் அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்கள் பெற்ற தனியார் முதலீட்டில் ஒரு பகுதியை இந்தியாவின் தொடக்கநிலை செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்தியாவின் அரசு நிதியுதவியுடன் கூடிய ஏஐ திட்டத்தின் பட்ஜெட் சுமார் ஒரு பில்லியன் டாலர்களாக உள்ளது. இது அமெரிக்காவின் "ஸ்டார்கேட்" (Stargate) என்ற ஏஐ உள்கட்டமைப்பு உருவாக்கத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் டாலர் மற்றும் 2030க்குள் ஏஐ மையமாக மாறுவதற்காக சீனா அறிவித்த 137 பில்லியன் டாலர் நிதியுடன் ஒப்பிடும்போது மிகச் சொற்பமாகவே தெரிகிறது. டிராகன்: அரியர் வைப்பது கெத்தா? திரைப்படங்கள் கல்லூரி மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?20 பிப்ரவரி 2025 ரேகா குப்தா: பாஜகவில் முதல்முறை எம்எல்ஏ டெல்லி முதல்வராக பதவியேற்பு - யார் இவர்?20 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஏஐ மாதிரிகளை பழைய, குறைந்த விலையுள்ள சிப்களை பயன்படுத்தி உருவாக்க முடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ள டீப்சீக்கின் வெற்றி இந்தியாவுக்கும் உறுதியளிக்கிறது. ஆனால், தொழில்துறை மற்றும் அரசாங்கத்திடம் இருந்து "நீண்டகால மற்றும் நிலையான" முதலீடு கிடைக்காதது ஒரு பெரிய பிரச்னை என்பதை நிறுவனங்களில் ஏஐ கல்வியறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் நிறுவனர் ஜஸ்ப்ரீத் பிந்த்ரா சுட்டிக்காட்டுகிறார். "டீப்சீக் மாதிரியை உருவாக்குவதற்காக 5.6 மில்லியன் டாலர்களே செலவிடப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், அதன் பின்னால் அதிக மூலதனம் இருந்தது" என்கிறார் ஜஸ்ப்ரீத் பிந்த்ரா. ஹிந்தி, மராத்தி, தமிழ் போன்ற பிராந்திய மொழிகளில் ஏஐ மாதிரிகளைப் பயிற்றுவிக்கத் தேவையான உயர்தர தரவுத் தொகுப்புகள் இல்லாததால், குறிப்பாக இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையின் அடிப்படையில், இந்தியா சிக்கலை எதிர்கொள்கிறது. அனைத்து சவால்களையும் மீறி, திறமையின் அடிப்படையில் இந்தியா சிறப்பாகச் செயல்படுகிறது. ஏனெனில் உலகின் ஏஐ பணியாளர்களில் 15 சதவீதத்தினர் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஆனாலும், பிரச்னை என்னவென்றால், ஏஐ திறமை உள்ளவர்களின் இடப்பெயர்வு குறித்த ஸ்டான்ஃபோர்டின் ஆராய்ச்சி, திறமையான வல்லுநர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதைக் காட்டுகிறது. நீரிழிவால் கண் பார்வை பறிபோவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?17 டிசம்பர் 2024 கேரளா: தாய், இரட்டை குழந்தை கொலை - செயற்கை நுண்ணறிவு மூலம் 19 ஆண்டுக்கு பிறகு துப்பு துலங்கியது எப்படி?14 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஏனென்றால் "அடிப்படை ஏஐ கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் நிறுவன ஆய்வுகளின் ஆராய்ச்சியில் இருந்து உருவாகின்றன," என்கிறார் பிந்த்ரா. மேலும் இந்தியாவில் ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்கும் சூழல் குறைவாக உள்ளது. இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து சில முன்னோடி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மட்டுமே உருவாகியுள்ளன. இந்தியாவின் பணப்பரிவர்த்தனை புரட்சியின் மிகப்பெரிய வெற்றி, அரசு, தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் ஆகியவை இணைந்து செயல்பட்டதால்தான் நடந்தது. அதே மாதிரியான கூட்டணி முறை, ஏஐ வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார் பிந்த்ரா. யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) என்பது இந்தியாவில் ஒரு அரசு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைமை. இது, வெகு எளிதாக ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்வவதன் மூலம், மில்லியன் கணக்கான மக்களைப் பணப் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கிறது. பெங்களூருவின் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள அவுட்சோர்சிங் தொழில், லட்சக்கணக்கான குறியீட்டாளர்கள் (coders) வேலை செய்கின்ற இடமாக உள்ளது. இது, இயல்பாகவே, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களை முன்னணி இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், அங்கு செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இதுவரை தங்களின் கவனத்தை மலிவான சேவை அடிப்படையிலான வேலைகளில் இருந்து, நுகர்வோருக்கான அடிப்படை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்கும் திசைக்கு மாற்றிக் கொள்ளவில்லை. "அந்த நிறுவனங்கள் விட்டுச்சென்ற அந்த மிகப்பெரிய இடைவெளியை, தொடக்கநிலை நிறுவனங்கள் நிரப்ப வேண்டியுள்ளது" என்கிறார் ராய். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் தொடக்கநிலை நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத் திட்டங்கள் இந்தப் பெரும் பொறுப்பை விரைவாக மேற்கொள்ள முடியுமா என்பதில் சந்தேகம் இருப்பதாகக் கூறும் அவர், "இந்த 10 மாத காலக்கெடு அமைச்சரால் அறிவிக்கப்பட்டதற்குக் காரணம், டீப்சீக் திடீரென வெளியானதற்கான உடனடி எதிர்வினையாக இருக்கலாம்" என்றும் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "குறைந்தபட்சம் இன்னும் சில ஆண்டுகளுக்கு டீப்சீக் போன்ற ஒன்றை இந்தியாவால் உருவாக்க முடியும் என நான் நினைக்கவில்லை" என்றும் தெரிவித்தார். இதே கருத்தைப் பலரும் பகிர்ந்து கொள்கின்றனர். இருப்பினும், டீப்சீக் போன்ற வெளிப்படையான மூல தளங்களைப் பயன்படுத்தி, செயலிகளை உருவாக்கி, அதை மேம்படுத்துவதன் மூலம், "நமது சொந்த ஏஐ முன்னேற்றத்தை விரைவுபடுத்த முடியும்," என்று இந்தியாவின் முதல் ஏஐ தொடக்கநிலை நிறுவனங்களில் ஒன்றான க்ருட்ரிமின் நிறுவனர் பவிஷ் அகர்வால் சமீபத்தில் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஒரு அடிப்படை மாதிரியை உருவாக்குவது மிக முக்கியமாக இருக்கும். இது ஏஐ துறையில் தன்னாட்சி பெறவும், பிறநாட்டு இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், தடைகள் போன்ற அபாயங்களைத் தவிர்க்கவும் உதவும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அத்தகைய மாதிரிகளை இயக்க இந்தியா அதன் கணக்கீட்டு சக்தி அல்லது வன்பொருள் உள்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும். இந்தச் செயல்முறை செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்வதை உள்ளடக்கியது. ஆனால் அந்தத் தொழில் இன்னும் நாட்டில் சரியாக வளர்ச்சி அடையவில்லை. எனவே அமெரிக்கா, சீனாவுடனான இடைவெளியை இந்தியா குறைக்க வேண்டுமென்றால், இதுபோன்ற பல முக்கியக் கூறுகள் கவனிக்கப்பட வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e4jdyz99eo
-
"தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என போலி முகநூல் பதிவு தொடர்பில் யாழ். ஊடகவியலாளர்களிடம் 06 மணி நேர விசாரணை
21 FEB, 2025 | 05:04 PM "தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். " தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் .." என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன. குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில மணிநேரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த பதிவு போலியானது என தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பொன்றினையும் நடாத்தி அது போலியான விளம்பரங்கள் என அறிவித்திருந்தார். அந்நிலையில் கடந்த வாரம், "விகாரையை இடிக்க வாரீர் " என போலி முகநூல்களில் விளம்பரப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பலாலி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் வாக்கு மூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பிரிவுக்கு அழைத்த பொலிஸார், ஊடகவியலாளர்களை அங்கிருந்து உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இரண்டு ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பெற்று சோதனையிட்டதுடன், அவர்களிடம் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்ட பின்னர், குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் தாம் அழைக்கும் போது பொலிஸ் நிலையத்திற்கு சமூகம் அளிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் இருவரையும் பொலிஸார் விடுவித்துள்ளனர். அதேவேளை தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வாசுகி சுதாகரன் உள்ளிட்டோரை பலாலி பொலிஸார் வாக்கு மூலம் வழங்க என நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பிரிவுக்கு அழைத்து சுமார் 02 மணி நேரம் காத்திருக்க வைத்த பின்னரே வாக்கு மூலங்களை பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/207313
-
சிவராத்திரிக்கு மறுநாள் 27 ஆம் திகதி வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை
27 ஆம் திகதி வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை : சிவஶ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார் விடுத்துள்ள கோரிக்கை! Published By: DIGITAL DESK 3 21 FEB, 2025 | 04:46 PM சிவராத்திரிக்கு மறுநாள் 27ம் திகதி விடுமுறை வழங்கப்படுவது முதல்நாள் கண்விழித்து மறுநாள் உறங்கலாம் என்பதான தவறான நடைமுறையாகிவிடும். இது சிவராத்திரி விரத அனுட்டான விதிக்கு முற்றிலும் முரணானதாகும் என சிவஶ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார். வடமாகாண பாடசாலைகளுக்கு சிவராத்திரிக்கு மறுநாள் 27 ஆம் திகதி விடுமுறை என வடமாகாண ஆளுநர் அறிவித்தல் விடுத்துள்ள நிலையில், சிவஶ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 27ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கை வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. எனினும், மஹாசிவராத்திரி விரதம் 26 புதன்கிழமை என்பதால் மாணவர்கள் அன்றைய தினமே சிவாலய வழிபாடு செய்யவது உத்தமமாகும் என்பதுடன் அதுவே சரியான முன்னுதாரணமாகும். 27 ஆம் திகதி சிவராத்திரி மறுநாள் விடுமுறை வழங்கப்படுவது முதல் நாள் கண்விழித்து மறுநாள் உறங்கலாம் என்பதான தவறான நடைமுறையாகிவிடும். இது சிவராத்திரி விரத அனுட்டான விதிக்கு முற்றிலும் முரணானதாகும். பொதுவாக சிவராத்திரியன்று காலை முதல் விரதம் நோற்று விழித்திருந்து, பசித்திருந்து, தனித்திருந்து மறு நாள் சூரிய அஸ்தமனத்தின் பின்பே உறங்கவேண்டும் என்பது விரத நியதியாகும். இவ் விடயத்தை மீள் பரிசீலனை செய்து 26 ஆம் திகதி விடுமுறை வழங்க வேண்டுமென வேண்டுகோள் ஒன்றை வட மாகாண ஆளுநருக்கு முன் வைத்துள்ளோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/207305
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
LIVE 3rd Match, Group B (D/N), Karachi, February 21, 2025, ICC Champions Trophy South Africa (35.3/50 ov) 201/3 Afghanistan South Africa chose to bat Current RR: 5.66 • Last 5 ov (RR): 30/1 (6.00) Live Forecast:SA 321 Ryan Rickelton run out (Rashid Khan/†Rahmanullah Gurbaz) 103 (106b 7x4 1x6) SR: 97.16
-
வெப்பநிலை குறித்து எச்சரிக்கை
Published By: DIGITAL DESK 3 21 FEB, 2025 | 03:57 PM நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இந்த நிலைமை ஏற்படக்கூடும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. பணியிடங்களில் இருப்பவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நீண்ட நேரம் வெளியிடங்களில் இருந்து விட்டு மீண்டும் வீடு திரும்பிய பின்னர் குளிர் நீரில் குளித்தல் பொருத்தமானது என்றும், வெளியிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் அல்லது சிறுவர்களை நீண்ட நேரம் தனித்து விட வேண்டாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. முடிந்தளவு பகல் வேளைகளில் வெளியில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும், வெளியில் செல்லும் போது வெள்ளை அல்லது இலகு நிற ஆடைகளை அணிந்து செல்லுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/207300
-
சர்வதேச சந்தையில் விண்ணை முட்டும் தங்கத்தின் விலை
Published By: DIGITAL DESK 3 21 FEB, 2025 | 10:26 AM சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. உக்ரேன் - ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெறும் மோதல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் வரிவிதிப்பு கொள்கை ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. ஒரு அவுன்ஸ் தூய தங்கம் 3000 அமெரிக்க டொலரை அண்மித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 2942 அமெரிக்க டொலர் முதல் 2940 அமெரிக்க டொலர் வரை தங்கத்தின் விலை காணப்படுகிறது. https://www.virakesari.lk/article/207256
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பேருந்துகள் - மேற்குகரையில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு 21 FEB, 2025 | 12:00 PM இஸ்ரேலில் மூன்று பேருந்துகள் வெடித்துசிதறிய சம்பவத்தின் பின்னர் மேற்குகரையில் இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உத்தரவிட்டுள்ளார். இந்த பேருந்து வெடிப்புகள் காரணமாக எவரும் காயமடையாத அதேவேளை இது பயங்கரவாத தாக்குதலாகயிருக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 2000ஆம் ஆண்டு பாலஸ்தீன எழுச்சியின் போது இவ்வாறான பேருந்து குண்டுவெடிப்புகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. வேறு இரண்டு பேருந்துகளில் காணப்பட்ட வெடிபொருட்கள் வெடிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐந்து குண்டுகளும் ஒரே மாதிரியானவையாக குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் காணப்பட்டன என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.டெல்அவிக்கு வெளியே உள்ள பகுதியில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன. பயணத்தை முடித்த பின்னர் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளிலேயே வெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/207277
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 21 பிப்ரவரி 2025, 02:15 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் துபையில் நேற்று (பிப். 20) நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியின் 2வது ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 49.4 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 229 ரன்கள் எனும் எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி, 21 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து, இந்திய அணிகள் தலா 2 புள்ளிகளுடன் உள்ளனர். இதில் குறைந்த இலக்கை கடைசிவரை போராடி சேஸ் செய்ததால் ரன்ரேட்டில் நியூசிலாந்தைவிட இந்திய அணி பின்தங்கியுள்ளது. நியூசிலாந்து 1.200 நிகர ரன்ரேட்டில் இருக்கும் நிலையில் இந்திய அணி 0.408 நிகர ரன்ரேட்டில் இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இருவர் முக்கியக் காரணமாக அமைந்தனர். ஒருவர் சதம் அடித்த சுப்மான் கில் (101), மற்றொருவர் முகமது ஷமி. இதில் பேட்டிங்கில் தொடக்க வீரராகக் களமிறங்கி கடைசிவரை களத்தில் இருந்த சுப்மான் கில் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் போட்டியில் பெரும் சாதனைக்கான கேட்சை தவறவிட்டதற்காக ரோஹித் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற மிதாலி ராஜின் நம்பிக்கை பயணம் சாம்பியன்ஸ் டிராஃபி 2025: பாகிஸ்தான் சொந்த மண்ணிலேயே தோல்வியை தழுவ என்ன காரணம்? பிபிசியின் வளரும் வீராங்கனை விருது பெற்ற ஷீத்தல் தேவி யார்? பிபிசி வளர்ந்து வரும் வீராங்கனை விருதை பெற்ற ஷீத்தல் தேவி யார்? ஷமி மைல்கல் பந்துவீச்சில் ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார் முகமது ஷமி. அதுமட்டுமல்லாமல், வேகமாக 200 விக்கெட்டுகளை எட்டிய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஷமி பெற்றார். 102 போட்டிகளில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க், அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். ஷமி, 104 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டாக்குடன் இடத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த 200 விக்கெட்டுகளை வீழ்த்த ஷமி 5126 பந்துகளை வீசியுள்ளார். ஆனால், ஸ்டார்க் 5240 பந்துகளை வீசித்தான் 200 விக்கெட்டுகளை சாய்த்தார். வங்கதேசத்தின் 10 விக்கெட்டுகளில் 8 விக்கெட்டுகளை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, ஹர்சித் ராணா இருவரும் பகிர்ந்துகொண்டனர். ஷமி 10 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், ராணா 7.4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். காங்கிரஸ்: செல்வப் பெருந்தகைக்கு எதிராக டெல்லியில் மாநில தலைவர்கள் புகார் - அவர் கூறுவது என்ன?20 பிப்ரவரி 2025 செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவுக்கு நிகராக இந்தியாவால் முன்னேற முடியுமா?20 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பந்துவீச்சில் ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார் முகமது ஷமி வாய்ப்புகளைத் தவறவிட்ட வங்கதேசம், இந்தியா சாம்பியன்ஸ் டிராஃபியின் முதல் ஆட்டத்திலேயே இரு அணிகளும் தங்களுக்குக் கிடைத்த பல கேட்ச் வாய்ப்புகளையும், ஃபீல்டிங்கை தடுப்படுதிலும் கோட்டைவிட்டனர். வங்கதேச அணி டாஸ் வென்ற நிலையில், ஆடுகளம் காய்ந்து பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. ஆனால், தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து பவர்ப்ளே முடிவுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது வங்கதேசம். ஆனால், 6வது விக்கெட்டுக்கு தவ்ஹித் ஹிர்தாய், ஜேக்கர் அலி சேர்ந்து அமைத்த கூட்டணி அணியை மிகப்பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றது. இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்திய அணிக்கு எதிராக எந்த விக்கெட்டுக்கும் எதிரான அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. வங்கதேச அணி ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்தி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடியிருந்தால் ஆட்டம் ஒருதரப்பாக முடிந்திருக்காது. வங்கதேச அணியும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டனர். இந்திய அணி தொடக்கத்தில் வங்கதேசத்தின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை தங்கள் பக்கம் வைத்திருந்தாலும், ஹிர்தாய்-ஜேக்கர் அலி கூட்டணியைப் பிரிக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டனர். தந்தை வாயில் இருந்து பிறக்கும் தலைப் பிரட்டைகள் - அருகி வரும் அரிய வகை சதர்ன் டார்வின் தவளைகள்20 பிப்ரவரி 2025 சாம்சங் இந்தியா: 5 மாதங்களை கடந்தும் போராட்டம் நீடிப்பது ஏன்? 5 கேள்விகளும் பதில்களும்20 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 6வது விக்கெட்டுக்கு தவ்ஹித் ஹிர்தாய், ஜேக்கர் அலி சேர்ந்து அமைத்த கூட்டணி அணியை மிகப்பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றது அக்ஸரிடம் மன்னிப்புக் கேட்ட ரோஹித் இந்திய வீரர் அக்ஸர் படேலுக்கு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பெரும் சாதனை புரிவதற்கான வாய்ப்பு இந்தப் போட்டியில் கிடைத்தது. 9-ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் தன்சித் ஹசனை வெளியேற்றினார் அக்ஸர். அடுத்து களமிறங்கிய முஷ்ஃபிகுர் ரஹ்மானை வெளியேற்றினார். இந்த இருவரின் கேட்ச்களையும் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் பிடித்தார். அடுத்த பந்திலும் இதேபோன்றதொரு வாய்ப்புக் கிடைத்தது. புதிதாக களமிறங்கிய ஜேக்கர் அலிக்கு அக்ஸர் வீசிய பந்து பேட்டில் பட்டு ஸ்லிப்பை நோக்கிச் சென்றது. அங்கு நின்றிருந்த ரோஹித் சர்மா அந்த கேட்சை தவறவிட்டார். இந்திய வீரர்கள் அதிர்ச்சியடைந்த அந்த வேளையில், தரையில் கையால் அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். கையைக் கட்டி அக்ஸரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ரோஹித் சர்மா தவறவிட்டதால்தான் ஹிர்தாய், ஜேக்கர் அலி 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க முடிந்தது. அதேபோல, ஒருநாள் போட்டியில் 228 ரன்களை சேஸிங் செய்வது என்பது எளிதானது. இந்த குறைவான ரன்களை சேஸிங் செய்வதற்கு 44 ஓவர்கள் வரை இழுத்துக்கொண்டு செல்லத் தேவையில்லை. குறைவான ரன்களை சேஸிங் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்திய அணியின் நிகர ரன்ரேட் மிகவும் குறைந்துள்ளது. மேலும், 2023 உலகக் கோப்பைக்குப்பின், நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட் இழக்காமல் இந்திய அணி இருந்தது இப்போட்டியில் தான். 2002ம் ஆண்டிலிருந்து இந்திய அணி 5வதுமுறையாக நடுப்பகுதிகளில் விக்கெட் வீழ்த்தாமல் விளையாடியது. ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் கிடைத்த ஸ்டெம்பிங் வாய்ப்பை கே.எல்.ராகுல் தவறவிட்டதால் ஜேக்கர் அலி தப்பித்தார். ஜேக்கர் அலி அப்போது 24 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணியின் ஃபீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன் நேற்று வழக்கத்துக்கும் குறைவாக இருந்தது. அதிலும், ரோஹித் சர்மா 2023-ஆம் ஆண்டிலிருந்து 10 கேட்சுகளை தவறவிட்டுள்ளார். நியூசிலாந்தின் டாம் லேதம் 11 கேட்சுகளையும் தவறவிட்டிருந்தார். ரோஹித் சர்மாவின் கேட்ச் பிடிக்கும் சதவிகிதம் 54.55% குறைந்துவிட்டது. 22 கேட்ச் வாய்ப்புகளில் 12 கேட்சுகளை மட்டுமே ரோஹித் சர்மா பிடித்துள்ளார். அதேசமயம், விராட் கோலி 156 கேட்சகளைப் பிடித்து முன்னாள் கேப்டன் அசாருதின் சாதனையுடன் சமன் செய்தார். முதலிடத்தில் இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனா (218) கேட்சுகளையும் பாண்டிங் 161 கேட்சுகளையும் பிடித்துள்ளார். க்ளோயி சியுங்: இவரது தலைக்கு ஒரு மில்லியன் ஹாங்காங் டாலர்கள் சன்மானம் அறிவிக்கப்பட்டது ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலான வரலாறு - சட்டமன்றத்தில் அண்ணா பேசியது என்ன?20 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி 156 கேட்ச்களைப் பிடித்து முன்னாள் கேப்டன் அசாருதீன் சாதனையுடன் சமன் செய்தார் கேட்ச் தவற விட்டதற்கு தண்டனை என்ன? வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் "இங்கு வந்து எந்த போட்டியும் விளையாடுவதற்கு முன் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சேஸிங்கில் லேசாக சறுக்கியபோது கே.எல். ராகுல், கில் இருவருக்கும் அதிகமான அனுபவம் இருந்ததால், சேஸிங்கை எளிமையாக்கினர். இந்த ஆடுகளத்தில் ரன் சேர்ப்பது கடினம். அதிகமான புற்கள் இல்லை என்பதால் ஆடுகளம் மந்தமாக இருக்கும் என நினைத்தோம். இந்த சூழலுக்கு ஏற்றாற்போல் அணியினர் பழகிவிட்டனர். பந்துவீச்சும், பேட்டிங்கும் சிறப்பாக இருந்து. குறிப்பாக ஷமியின் பந்துவீச்சைப் பார்க்க நீண்டகாலம் காத்திருந்தோம். சிறப்பான பந்துவீச்சை அளித்தார். சுப்மான் கில் அற்புதமாக பேட் செய்தார். நான் அக்ஸர் படேலுக்கு கேட்சை தவறவிட்டு ஹாட்ரிக் வாய்ப்பை கெடுத்துவிட்டேன். இதற்கு தண்டனையாக அவரை இரவு விருந்துக்கு அழைத்துச் செல்வேன். எளிமையான கேட்சுதான். அதை நான் பிடித்திருக்க வேண்டும். ஹிர்தாய், ஜேக்கர் அலி அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆடுகளத்தைப் பற்றி நான் ஏதும் கூற முடியாது, 23-ம் தேதி ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்பது தெரியும்" எனத் தெரிவித்தார் டிராகன்: அரியர் வைப்பது கெத்தா? திரைப்படங்கள் கல்லூரி மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?20 பிப்ரவரி 2025 ரேகா குப்தா: டெல்லியின் 4வது பெண் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இவர் யார்?20 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "அக்ஸர் படேலுக்கு கேட்சை தவறவிட்டு ஹாட்ரிக் வாய்ப்பை கெடுத்துவிட்டேன்" - ரோஹித் சர்மா பந்துவீச்சில் கடும் போட்டி இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், ஜடேஜா, குல்தீப் சேர்ந்து 28 ஓவர்களை வீசி, 123 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள்தான் எடுத்தனர். எக்கானமி ரேட்டும் 4.29 ஆக அதிகரித்தது. ஆனால், வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்கள் 20 ஓவர்கள் வீசி 3.75 எக்கானமி ரேட் வைத்திருந்தனர். அதேசமயம், இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஷமி, ராணா இருவரும் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆனால், வங்கதேச அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் 26.3 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள்தான் எடுக்க முடிந்தது, 5.88 எக்கனாமி வைத்தனர். மந்தமான பேட்டிங் இந்திய அணியின் பேட்டிங்கைப் பொருத்தவரை துபை மைதானம் மந்தமானது எனக் கூறப்பட்டாலும் ரோஹித் சர்மா, சுப்மான் கில் கூட்டணி அருமையான தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளே ஓவர்களுக்குள் இந்திய அணி 69 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா (41) விக்கெட்டை இழந்தது. அனுபவ வீரர் விராட் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தநிலையில் கவர் திசையில் வந்த பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு, கோலி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். லெக் ஸ்பின்னுக்கு கோலி இன்னும் திணறுகிறார் என்பது நேற்று தெளிவாகத் தெரிந்தது. லெக் ஸ்பின் பந்துகளை எவ்வாறு கையாள்வது, ஃபீல்டிங் இடைவெளிக்குள் தட்டிவிடத் தெரியாமல் தவித்தார். அடுத்துவந்த ஷ்ரேயாஸ் (15), அக்ஸர் படேல்(8) ரன்களில் பெவிலியன் திரும்பினர். கடைசி 3 விக்கெட்டுகள் 20 ஓவர்களில் 75 ரன்களுக்குள் இந்திய அணி இழந்தது. 69 பந்துகளில் அரைசதம் அடித்த சுப்மான் கில் 125 பந்துகளில் சதம் விளாசினார். சுப்மான் கில் சதம் அடித்தபோதிலும் அதில் வேகமில்லை, கே.எல்.ராகுல் 41 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி வெற்றி பெற்றாலும் அதன் சேஸிங் திறன் இன்னும் உத்வேகமெடுக்கவில்லை. 229 ரன்களை 35 ஓவர்களுக்குள் சேஸிங் செய்யாமல் 46 ஓவர்கள் வரை இழுத்தனர். பவர்ப்ளேயில் இந்திய அணி 69 ரன்கள் சேர்த்தபோது, வங்கதேசம் அணி 39 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. ஆனால், நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக ஆடிய வங்கதேச பேட்டர்கள் விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் இந்திய அணியை விட நடுப்பகுதி ஓவர்களில் கூடுதலாக 6 ரன்கள் சேர்த்தது. நடுப்பகுதி ஓவர்களில் இந்திய பேட்டர்கள் ரன் சேர்க்கத் திணறினர். இந்திய பேட்டர்களை வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்கள் கட்டிப்போட்டனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.virakesari.lk/article/207277
-
புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் - உக்ரைனிற்கு துரோகமிழைக்கின்றதா அமெரிக்கா என சர்வதேச அரசியல் அரங்கில் கேள்வி
ஒரேயொரு தொலைபேசி உரையாடலில் புதினும், டிரம்பும் ஒரே வாரத்தில் உலகத்தை உலுக்கியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ரியாதில் பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற முதல் மாநாட்டில் சந்தித்துகொண்டனர் கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீவ் ரோஸன்பர்க் பதவி, ரஷ்ய ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 1917 ரஷ்ய புரட்சியை நேரில் பார்த்த சாட்சியாக, அதைப் பற்றி எழுதிய அமெரிக்க பத்திரிகையாளர் ஜான் ரீட், தான் எழுதிய கட்டுரைக்கு உலகை உலுக்கிய 10 நாட்கள் என தலைப்பிட்டார். ஆனால் டொனால்ட் டிரம்புக்கும், விளாடிமிர் புதினுக்கும் 10 நாட்கள் என்பது மிக நீண்ட காலம். அவர்கள் ஒரு வாரத்திலேயே அனைத்து விஷயங்களையும் அசைத்துப் பார்த்திருக்கிறார்கள். அது பிப்ரவரி 12ஆம் தேதி புதின்-டிரம்ப் தொலைபேசி உரையாடல் மற்றும் இருதரப்பு உறவுகளை தொடரவிருப்பதாக அவர்கள் அறிவித்த வாக்குறுதிகளுடன் தொடங்கியது. ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டிலும், ஐரோப்பா - அமெரிக்கா இடையேயான பிளவிலும் இது தொடர்ந்தது. அடுத்தபடியாக, சௌதி அரேபியாவில் ரஷ்யா-அமெரிக்கா பேச்சுவார்த்தை: ரஷ்யா யுக்ரேன் மீது முழு வீச்சில் படையெடுத்த பின்னர், இரு நாடுகளுக்கிடையில் முதல் முறையாக நடைபெற்ற உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தை இது. இதில் யுக்ரேன் பங்கேற்கவில்லை. "நாங்கள் இடம் பெறாத எந்தவொரு அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டோம்" என்று யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். டிரம்ப்: ஸெலன்ஸ்கியை சர்வாதிகாரி என அழைத்தது ஏன்? முற்றும் வார்த்தைப் போர் - என்ன நடக்கிறது? டிரம்பின் திடீர் அணுகுமுறையால் அதிர்ந்து போன யுக்ரேன் - போர் முனையில் நடப்பது என்ன? யுக்ரேன்: அமெரிக்கா - ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்ட 3 விஷயங்கள் என்ன? லாவ்ரோவ் தகவல் டிரம்ப் - புதின் முதல் சந்திப்பை சௌதி அரேபியாவில் திட்டமிடுவது ஏன்? ஒரு பகுப்பாய்வு சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா - ரஷ்யா இடையே 3 விஷயங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படின், யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியுடன் பேச ரஷ்ய அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்கள், பாரம்பரிய கூட்டணிகளை தலைகீழாக கவிழ்த்துப்போட்டு, ஐரோப்பாவையும், யுக்ரேனையும் பதில் தேட வைத்து ஐரோப்பாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளன. உலக அரசியலில் முதன்மையிடத்தில் இருக்கவேண்டும் என ரஷ்யா விரும்பியதற்கு ஏற்ப, அந்த இடத்தை எந்த சலுகைகளையும் கொடுக்காமல் எட்டிய வாரம் இது. 'மீண்டும் வங்கதேசம் திரும்புவேன்' - ஷேக் ஹசீனா பேச்சுக்கு வங்கதேச அரசு எதிர்ப்பு19 பிப்ரவரி 2025 மகளிர் கால்பந்து போட்டிகள் ரத்து, நடிகைகளுக்கு மிரட்டல் - வங்கதேசத்தில் மதவாதம் தலைதூக்குகிறதா?19 பிப்ரவரி 2025 'எதிரிகளாக இருப்பதை நிறுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்கா - ரஷ்யா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர் ரஷ்யாவில் திங்கட்கிழமை காலை செய்தித்தாள்களில் பிரதானமாக இடம்பெற்ற படம்- ரஷ்ய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ரியாத்தில் பேச்சுவார்த்தைக்காக அமர்ந்திருந்த காட்சிதான். யுக்ரேன் யுத்தத்துக்காக ரஷ்யாவை தனிமைப்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி தோல்வியடைந்துவிட்டது என்பதை ரஷ்ய மக்களும், சர்வதேச சமுதாயமும் காணவேண்டும் என ரஷ்யா விரும்புகிறது. அமெரிக்காவுடன் நல்லுறவு என்பதை வரவேற்கும் ரஷ்ய ஊடகங்கள் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் யுக்ரேன் குறித்து இகழ்கின்றன. "யுக்ரேனில் வெற்றிபெற்றுக்கொண்டிருக்கும் பக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதால், (ரஷ்யாவுக்கு) சலுகைகளை வழங்கவேண்டியிருக்கும் என டிரம்புக்கு தெரியும்." என ரஷ்ய ஆதரவு இதழ் மாஸ்கோவ்ஸ்கி காம்சோமோலெட்ஸ் எழுதியுள்ளது. "அவர் சலுகைகள் தருவார், ஆனால் அமெரிக்காவுக்கு பாதகமாக அல்ல, மாறாக ஐரோப்பா மற்றும் யுக்ரேனுக்கு பாதகமாக தருவார்." "நீண்ட காலமாக ஐரோப்பா, தன்னைத் தானே நாகரீக உலகமாகவும், சொர்க்கபூமியாகவும் நினைத்துக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தி நடந்துகொண்டிருந்தது. ஆனால், அந்த மதிப்பை ஐரோப்பா இழந்துவிட்டதை உணரத் தவறிவிட்டது. இப்போது அட்லாண்டிக் கடலின் அக்கரையில் உள்ள அதன் பழைய தோழர் அதை சுட்டிக்காட்டியுள்ளார்" ஆனால் மாஸ்கோவின் தெருக்களில் இந்த அளவு அவலமான மகிழ்ச்சியை நான் காணவில்லை. மாறாக, டிரம்ப் உண்மையில் ரஷ்யாவின் புதிய நெருங்கிய நண்பராக மாறுவாரா, அவர் உண்மையில் யுக்ரேன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவாரா என்பதை பார்க்க மக்கள் காத்திருக்கிறார்கள். "டிரம்ப் ஒரு தொழிலதிபர். பணம் சம்பாதிப்பதில் மட்டும்தான் அவருக்கு ஆர்வம் இருக்கிறது," என நடேஸ்டா என்னிடம் சொல்கிறார். "விஷயங்கள் எந்த வகையிலும் வேறாக இருக்கும் என நினைக்கவில்லை. சூழ்நிலையை மாற்ற ஏராளமான விஷயங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது." "ஒருவேளை (சௌதி அரேபியாவில் நடைபெற்ற) இந்த பேச்சுவார்த்தைகள் உதவக்கூடும்," என்கிறார் கியோர்கி. "நாம் எதிரிகளாக இருப்பதை நிறுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது." அமெரிக்கா: சட்டவிரோத இந்தியக் குடியேறிகள் பற்றிய ஆச்சரியமளிக்கும் 9 தகவல்கள்18 பிப்ரவரி 2025 சர்வதேச தலைவர்களை சந்திக்கும் போதும் ஈலோன் மஸ்க் தனது குழந்தைகளை அழைத்துச் செல்வது ஏன்?17 பிப்ரவரி 2025 அமெரிக்கா - ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் சௌதி அரேபியாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா - ரஷ்யா இடையே 3 விஷயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் கூறினார். அவரது கூற்றுப்படி, முதலாவதாக இரு நாடுகளும் விரைவில் ஒருவருக்கொருவர் தூதர்களை நியமிக்கும். தூதரகங்களுக்கான வங்கி பரிமாற்றங்கள் மீதான கட்டுப்பாடுகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜ தந்திர பணிகளுக்கான தடங்கல்கள் நீக்கப்படும். இரண்டாவதாக, யுக்ரேனுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தேவையான செயல்முறைகள் தொடங்கப்படும் என்றும், இதற்காக அமெரிக்கா அதன் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்றும், அதன் பிறகே ரஷ்யா அதன் பிரதிநிதிகளை நியமிக்கும் என்றும் செர்கே லாவ்ரோவ் கூறினார். மூன்றாவதாக, பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே முழு ஒத்துழைப்பைத் தொடங்கவும், மேம்படுத்தவும் தேவையான சூழல் உருவாக்கப்படும். "இது மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தையாக இருந்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் சொல்வதைக் கவனித்துக் கேட்டோம்', என்று லாவ்ரோவ் கூறினார். யுக்ரேன் போர்: அமெரிக்கா மீது அதிருப்தியா? ஐரோப்பிய நாடுகள் பாரிஸில் நாளை அவசர ஆலோசனை16 பிப்ரவரி 2025 'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு15 பிப்ரவரி 2025 'டிரம்ப் ஏதாவது செய்வாரா?' பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,2019-ல் நடைபெற்ற ஜி20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை டொனால்ட் டிரம்ப் சந்தித்தார் "டிரம்ப் செயல்படுகிறார். உத்வேகத்துடன் இருக்கிறார். ஆனால் அவர் ஏதாவது செய்வாரா?" என வினவுகிறார் ரஷ்யாவைச் சேர்ந்த ஐரீனா. "இந்த பேச்சுவார்த்தைகள் அமைதியை கொண்டுவரும் என கனவு காண்கிறோம். இது ஒரு முதல் படி. ஒருவேளை இது நமது பொருளாதாரத்துக்கு உதவக்கூடும். உணவு மற்றும் பிற பொருட்களின் விலை இங்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதற்கு சிறப்பு ராணுவ நடவடிக்கை (யுக்ரேனில் நடைபெறும் யுத்தம்) மற்றும் பொதுவான சர்வதேச சூழல் ஒரு காரணம்" என்கிறார் அவர். புதினும், டிரம்பும் (பிப்ரவரி 12 அன்று) தொலைபேசியில் பேசினர். ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த உரையாடலில், யுக்ரேன் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்க இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர், அவர்களது குழுவினர் (பிப்ரவரி 18 அன்று) சௌதி அரேபியாவில் சந்தித்துள்ளனர். அதிபர் அளவில் பேச்சுவார்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் மாஸ்கோவிஸ்கி காம்சோமோலெட்ஸ் செய்தித்தாள், இரண்டு தலைவர்களுக்கு கடந்த வார தொலைபேசி உரையாடலில் ஒருவரிடம் ஒருவர் என்ன சொல்லியிருப்பார்கள் என கற்பனை செய்ய முயன்றிருந்தது. அவர்களுடைய கற்பனை இதுதான்: "டிரம்ப் புதினை அழைத்தார். விளாதிமிர்! நீங்கள் ஒரு அற்புதமான நாட்டை வைத்திருக்கிறீர்கள், நான் ஒரு அற்புதமான நாட்டை வைத்திருக்கிறேன். நாம் சென்று உலகத்தைப் பிரிப்போமா?" "இவ்வளவு நாள், நான் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறேன்? செய்வோம்!...." இது கற்பனையா? பொறுத்திருந்து பார்ப்போம்.. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62xd8r18jdo
-
வடக்கு பேருந்துகளுக்கு ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை
Published By: VISHNU 20 FEB, 2025 | 08:04 PM வடக்கு மாகாணத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்டு சேவையில் ஈடுபடும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக கொள்கை ஆவணத்தை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் பொதுமுகாமையாளர் ஆகியோரைப் பணித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (20) வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், ஜனாதிபதி குறிப்பிட்டமையைப் போன்றும், ஏற்கனவே ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இலங்கை போக்குவரத்துச் சபையும், தனியார் பேருந்துகளும் இணைந்த நேர அட்டவணையிலேயே சேவையில் ஈடுபடவேண்டும். இதை இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல நீண்டதூர பேருந்து நிலையத்திலிருந்தே சேவைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றமில்லை. அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை. இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஒழுங்குமுறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என இரு தரப்புக்களும் ஒழுக்கமாகச் செயற்படவேண்டும். அதை மீறும் பட்சத்தில் தயவுதாட்சணியமின்றி நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் பொலிஸாருக்குப் பணித்தார். மேலும் அரசாங்கத்தின் கொள்கையாகவுள்ள இலத்திரனியல்மயப்படுத்தலை மேற்கொள்ளவேண்டியுள்ள தேவையுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், ஏனைய மாகாணங்களில் உள்ளதைப்போன்று இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு அவர்களது வழித்தடம் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் இதை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உரியமுறையில் மத்திய அமைச்சுக்கு அறிவித்து மேற்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இலங்கை போக்குவரத்துச் சபையும் அரசாங்கத்தின் ஓர் அங்கம் எனக் குறிப்பிட்ட யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், ஒழுங்குமுறைகளை அவர்கள் நிச்சயம் பின்பற்றியாகவேண்டும் எனக் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக அரசாங்கப் பணியாளர்கள் தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி தூர இடங்களுக்கு தொடர்ச்சியாக பயணிப்பதன் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வட இலங்கை தனியார் போக்குவரத்து ஒன்றியப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதிகார சபையின் தலைவர் இது தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினார். சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சின் மூத்த உதவிச் செயலர் விளக்கமளித்தார். இதனடிப்படையில் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக கொள்கை ஆவணத்தை தயாரித்து வழங்குமாறும், ஏனைய மாகாணங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளையும் கண்டறியுமாறும் பணித்தார். அதற்கு அமைவாக எதிர்காலத்தில் நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸாரை அறிவுறுத்தினார். அதேநேரம், அரச பணியாளர்கள் வழமையான வழித்தட பேருந்துகளில் பயணிக்காது அதிக கட்டணம் செலுத்தி வாடகை அடிப்படையில் பேருந்துகளை அமர்த்தி பயணிப்பதற்கான காரணங்களைக் கண்டறியுமாறும் குறிப்பிட்ட ஆளுநர் அதற்கேற்ற வகையில் தனியாரும் தங்கள் சேவைகளை மேம்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் அரச பணியாளர்கள் தற்போது வாடகைக்கு பேருந்தை அமர்த்தி பயணிக்கும் வழித்தடங்களில் உடனடியாக பேருந்து சேவைகளை அதிகரித்து நடத்துமாறும் ஆளுநர் பணித்தார். இதேவேளை, சிறிய ரக தனியார் பேருந்துகளை எதிர்காலத்தில் சேவையில் நிறுத்தவேண்டிய நிலைமை காணப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டார். குறிப்பாக இவ்வாறான பேருந்துகளில் பயணிகள் அசௌகரியத்துடன் பயணிக்கவேண்டிய நிலைமை காணப்படுவதால் குறித்த காலப் பகுதிக்குள் பேருந்துகளை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். இதற்காக அத்தகைய பேருந்து உரிமையாளர்களுக்கு கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுப்பது உதவியாக இருக்கும் எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் எந்திரி சு.ராஜேந்திரா, வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன், அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலர் இ.குருபரன், வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன், பொதுமுகாமையாளர் ப.ஜெயராஜ், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, வட இலங்கை தனியார் போக்குவரத்து ஒன்றியத் தலைவர் சிவபரன் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/207243
-
யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு !
அரியாலை மயான மனிதப் புதைகுழி குறித்து அரசாங்கம் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் - கஜேந்திரகுமார் எம்.பி. Published By: VISHNU 20 FEB, 2025 | 08:00 PM அரியாலை சிந்துப் பாத்தி மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்க விடையம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த மயானத்தில் மனித எச்சங்கள் வெளிவந்தமை தொடர்பில் அறிய கிடைத்ததும் நாங்கள் சென்று பார்வையிட்டோம். அங்கு காணப்பட்ட எச்சங்களை பார்க்கும்போது எங்கிருந்தோ கொண்டு வந்து புதைக்கப்பட்ட எச்சங்களாகப் பாகங்கள் கலக்கப்பட்டவையாகக் காட்சி தந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண நீதி மன்றம் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி இருப்பது நம்பிக்கை தரும் நிலையில், தேவை ஏற்படின் சர்வதேச தரத்திலான பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போதைய அரசாங்கம் யுத்த கால உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளைக் கோர மாட்டோம் உள்ளக விசாரணைகளே இடம்பெறும் எனக் கூறி வரும் நிலையில் குறித்த புதைகுழி யுத்த காலத்தில் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட மனித எச்சங்களாக இருக்கலாம் என நாம் சந்தேகிக்கிறோம். ஆகவே தற்போதைய அரசாங்கத்திடம் நாங்கள் கோரிக்கை முன் வைக்கிறோம் குறித்த மனிதப் புதை குழி தொடர்பில் நீதியான நம்பகத்தன்மையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/207242
-
காஞ்சிபுரம்: சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராடுவது ஏன்? - பிபிசி கள நிலவரம்
சாம்சங் இந்தியா: 5 மாதங்களை கடந்தும் போராட்டம் நீடிப்பது ஏன்? 5 கேள்விகளும் பதில்களும் பட மூலாதாரம்,HANDOUT கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக 14 நாட்களைக் கடந்து உள்ளிருப்பு போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை வாபஸ் பெறும் வரையில் போராட்டம் தொடர உள்ளதாக சி.ஐ.டி.யு அறிவித்துள்ளது. ஆனால், பணியிட சூழல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தொழிலாளர்களை மன்னிக்கப் போவதில்லை எனக் கூறுகிறது சாம்சங் இந்தியா. ஐந்து மாதங்களைக் கடந்தும் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டம் தீவிரமடைவது ஏன்? சாம்சங் இந்தியா போராட்டத்தில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது எப்படி? 5 முக்கியக் கேள்விகள் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராடுவது ஏன்?- பிபிசி கள நிலவரம் சாம்சங் ஊழியர் தொழிற்சங்கம் தொடங்க நிர்வாகம் அனுமதி மறுப்பது ஏன்? பிரச்னையின் தொடக்கம் என்ன? காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1500 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஊதிய உயர்வு, சி.ஐ.டி.யு தொழிற்சங்கப் பதிவு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அரசின் தொழிலாளர் நலத்துறை பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பலன் கிடைக்காததால் ஆர்ப்பாட்டம், போராட்டம், நள்ளிரவு கைது, வழக்குப் பதிவு என்று பிரச்னை நீண்டது. ஒரு கட்டத்தில் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்திய பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவித்தார். ஆனால், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிற்சங்கப் பதிவுக்கு தொழிலாளர் நலத்துறை அனுமதி அளிக்காததால் நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆறு வாரங்களில் முடிவை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜனவரி 27ஆம் தேதியன்று சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தை தொழிலாளர் நலத்துறை பதிவு செய்தது. இதன் பிறகே பல்வேறு பிரச்னைகள் தொடங்கியதாகக் கூறுகிறார், சாம்சங் இந்தியா தொழிற்சங்க தலைவர் (சிஐடியு) முத்துகுமார். பிப்ரவரி 4, 5 ஆகிய தேதிகளில் சி.ஐ.டியு தொழிற்சங்கத்தில் நிர்வாகிகளாக உள்ள மூன்று தொழிலாளர்களை சாம்சங் இந்தியா நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இதை எதிர்த்துக் கடந்த 14 நாட்களுக்கும் மேலாக சுமார் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர, சாம்சங் இந்தியா ஆலையின் அருகிலுள்ள வெள்ளை கேட் மேம்பாலம் அருகே ஊழியர்களில் இன்னொரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலான வரலாறு - சட்டமன்றத்தில் அண்ணா பேசியது என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர் ஸெலன்ஸ்கியை 'சர்வாதிகாரி' என அழைத்த டிரம்ப்: இரு தலைவர்களுக்கும் இடையே முற்றும் வார்த்தைப் போர் - என்ன பிரச்னை?2 மணி நேரங்களுக்கு முன்னர் மூன்று பேர் இடைநீக்கம் - காரணம் என்ன? பட மூலாதாரம்,HANDOUT போராட்டம் முடிந்து பணிக்குத் திரும்பிய ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறார், சாம்சங் இந்தியா (சிஐடியு) தொழிற்சங்கத் தலைவர் முத்துகுமார். சிஐடியு அமைப்பில் இணைந்துள்ள ஊழியர்களை அதிலிருந்து வெளியேறுமாறும் நிர்வாகத்தின் ஆதரவு பெற்ற தொழிலாளர் குழுவில் (Workers committee) சேருமாறும் கட்டாயப்படுத்துவதாக முத்துகுமார் கூறுகிறார். "இதற்கு உடன்படாத தொழிலாளர்களை அவர்களுக்குத் தொடர்பில்லாத வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்குகின்றனர். அவ்வாறு 30க்கும் மேற்பட்டோரை வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்துள்ளனர்" என்கிறார் முத்துகுமார். இதன் தொடர்ச்சியாக, சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த குணசேகரன், தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் தேவன், துணைச் செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். "நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரைப் பார்க்க விரும்பியதற்காக குணசேகரன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். ஆனால், முறையாக நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை. மூவர் இடைநீக்கத்துக்கு எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை" எனக் கூறுகிறார் முத்துகுமார். பேச்சுவார்த்தையின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீறும் வகையில் சாம்சங் இந்தியா நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும் முத்துகுமார் தெரிவித்தார். டிரம்பின் திடீர் அணுகுமுறையால் அதிர்ந்து போன யுக்ரேன் - போர் முனையில் நடப்பது என்ன?9 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை: உடல் பருமனால் ஏற்பட்ட மன அழுத்தம் - விபரீத முடிவை எடுத்த அண்ணன் தங்கை2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒப்பந்தத்தில் என்ன உள்ளது? பட மூலாதாரம்,@TRBRAJAA/X சாம்சங் இந்தியா நிர்வாகம், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு தரப்பிலும், "போராட்டத்துக்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டும். பணியில் சேர்ந்த பிறகு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது. ஊதிய உயர்வு தொடர்பாக விரைவில் பேசி முடிக்க வேண்டும்" என முடிவு செய்யப்பட்டது. "ஆனால் இவை எதையும் சாம்சங் இந்தியா நிர்வாகம் கடைபிடிக்கவில்லை. ஆனால், நிறுவனமே ஏற்படுத்தியுள்ள தொழிலாளர் குழுவுடன் ஒப்பந்தம் போடும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்" எனக் கூறுகிறார் முத்துகுமார். இதுதொடர்பாக, தொழிலாளர் நலத்துறையில் சி.ஐ.டி.யு அமைப்பினர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இதையடுத்து, தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிற்சாலை நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் கடந்த சில வாரங்களில் மூன்று முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. செவ்வாய் மற்றும் நிலாவில் மனிதன் குடியேற சென்னை ஐஐடியின் இந்த ஆய்வு எவ்வாறு உதவும்?19 பிப்ரவரி 2025 சாவர்க்கர் மன்னிப்பு கேட்டு ஆங்கிலேயருக்கு கடிதம் எழுதியது ஏன்? அருண் ஷோரி புது தகவல்19 பிப்ரவரி 2025 பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,HANDOUT சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் புதன்கிழமையன்று (பிப்ரவரி 19) சாம்சங் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதிகள், சி.ஐ.டி.யு நிர்வாகிகள் ஆகியோருடன் துறையின் கூடுதல் ஆணையர் உள்பட அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "நாங்கள் அனைவரும் வேலைக்குச் செல்லத் தயாராக இருக்கிறோம். பணியிடை நீக்கத்தை வாபஸ் பெற வேண்டும் என்றோம். ஆனால், நிர்வாகம் அதை ஏற்கவில்லை. மேலும் 18 பேரை பணியிடை நீக்கம் செய்ய உள்ளதாகக் கூறினர். நாங்களும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் எனக் கூறிவிட்டோம்" என்கிறார் முத்துகுமார். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தரப்பில், "போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு மற்றவர்கள் வேலை பார்க்கட்டும். பணியிடை நீக்க நடவடிக்கைக்கு ஆளான மூன்று பேர் மட்டும் நான்கு நாட்களுக்குப் பிறகு வேலைக்குச் செல்லட்டும்' என அறிவுறுத்தினர். ஆனால் இதை சாம்சங் இந்தியா நிர்வாகம் ஏற்கவில்லை" எனக் கூறுகிறார் முத்துக்குமார். "ஊழியர்களுடன் குறைந்தபட்ச உடன்படிக்கைக்குக்கூட அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். ஊழியர்களின் போராட்டத்தால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா எனக் கேட்டபோது, "இதைச் சரிசெய்வதற்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து சாம்சங் இந்தியாவில் வேலைகள் நடந்து வருகின்றன. இது சட்டவிரோத உற்பத்தி என அதிகாரிகளிடம் கூறியுள்ளோம்" எனக் கூறினார். வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 20) காலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்களை வெளியேற்றிவிட்டு உற்பத்திப் பிரிவில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். "அப்போது நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு யாரும் வரவில்லை" என்றார் முத்துகுமார். இதற்கு பிபிசி தமிழுக்குப் பதில் அளித்துள்ள சாம்சங் இந்தியா ஊடக தொடர்பாளர், "தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் இன்று (பிப்ரவரி 20) மீண்டும் சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் தொழில் அமைதியை சீர்குலைக்க முயன்றனர். இதுபோன்ற நடவடிக்கையை ஏற்க முடியாது" எனக் கூறியுள்ளார். பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க என்ன காரணம்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?9 மணி நேரங்களுக்கு முன்னர் இமயமலை: நூறாண்டுக்கு முன்பே ஆபத்துகளை கடந்து புகைப்படக் கலைஞர் எடுத்த அரிய படங்கள்18 பிப்ரவரி 2025 சாம்சங் இந்தியா நிறுவனம் சொல்வது என்ன? பணியிடை நீக்க நடவடிக்கை, உள்ளிருப்புப் போராட்டம், பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வி ஆகியவை குறித்து சாம்சங் இந்தியா நிறுவனத்திடம் பிபிசி தமிழ் கேள்விகளை எழுப்பியது. இதற்கு சாம்சங் இந்தியா நிறுவனத்தின் ஊடக தொடர்பாளர் விரிவான விளக்கம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "தொழிலாளர்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தையை நடத்தி பிரச்னையைத் தீர்ப்பதில் சாம்சங் இந்தியா நிறுவனம் உறுதியாக உள்ளது" எனக் கூறியுள்ளார். தொழிற்சாலையின் அமைதி மற்றும் பணியிட பாதுகாப்பு ஆகியவற்றை அச்சுறுத்தும் வகையில் சில தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை சாம்சங் இந்தியா நிர்வாகம் ஒருபோதும் மன்னிக்காது எனவும் சாம்சங் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், "சாம்சங் இந்தியா நிறுவனத்தின் கொள்கைகளை அனைத்து ஊழியர்களும் கடைபிடிப்பது முக்கியம். அதை மீறுபவர்கள், உரிய ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் நிலையான பணியிடத்தைப் பராமரிப்பதே எங்களின் முன்னுரிமையாக உள்ளது" என்றும் சாம்சங் இந்தியா செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், சாம்சங் இந்தியாவில் உற்பத்தி தடையின்றி இருக்கும்போது, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வணிகம் செய்வதை எளிதாக்குமாறு மாநில அரசின் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம் எனவும் சாம்சங் இந்தியா ஊடக தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அரசிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாக சி.ஐ.டி.யு கூறும் புகார், ஒப்பந்த ஊழியர்களை வைத்து நடக்கும் பணிகள் ஆகியவை தொடர்பாக எந்த விளக்கத்தையும் சாம்சங் இந்தியா நிறுவனம் அளிக்கவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c93kyqxzr3vo
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
RESULT 2nd Match, Group A (D/N), Dubai (DICS), February 20, 2025, ICC Champions Trophy Bangladesh 228 India (46.3/50 ov, T:229) 231/4 India won by 6 wickets (with 21 balls remaining) KL Rahul* (rhb) 41 47 1 2 87.23 10 (9b) 19 (14b) Shubman Gill (rhb) 101 129 9 2 78.29 38 (30b) 16 (17b)
-
எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் – ஜனாதிபதி
Published By: VISHNU 20 FEB, 2025 | 07:19 PM பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 20ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்காக சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அவருடைய தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்புத் தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, இது தொடர்பில் முன்மொழிவொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சோதனையிடுவதற்கும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களுடன் கூடிய காணிகளை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் இங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி நாடு முழுவதிலும் முப்படையினரின் பாவனையில் உள்ள காணிகள் தொடர்பில் மீண்டும் மதிப்பாய்வு மேற்கொண்டு காணிகளை விடுவிப்பது குறித்து எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இங்கு பதிலளித்தார். இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் வணிகங்களை சுற்றுலாத் துறையில் மேலும் வினைத்திறன் மிக்க முதலீடுகளாக மாற்றுவதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு வினவினர். இதற்கமைய, எதிர்காலத்தில் இது தொடர்பில் ஆய்வு நடத்தி, பொருளாதார நன்மைகளுக்காக அவற்றைப் பயன்படுத்துவது குறித்துத் தீர்மானிக்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சில வழிபாட்டுஸ்தலங்களை அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். மதவாதம் மற்றும் இனவாதம் என்பன அரசியலில் இருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். இந்தப் பகுதியில் உள்ள மக்களின் உண்மையான தேவைக்கு அமைய இந்த சகல பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்றும், குறுகிய அரசியல் இலாபம் தேடும் குழுவினர் இதுபோன்ற சம்பவங்களை அரசியல் முரண்பாடுகளாக்குவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, இதுபோன்று குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அத்துடன், தேசிய அனர்த்தக் குழுவை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கான நடவடிக்கையை விரைவில் பூர்த்திசெய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ பாதுகாப்பு பிரதியமைச்சர் (மேஜர் ஜெனரல்) அருன ஜயசேகர (ஒய்வுபெற்ற), கௌரவ அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (ஓய்வுபெற்ற), முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள், பாராளுமன்ற பதவியணித் தலைமை அதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் – ஜனாதிபதி
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கணேமுல்ல சஞ்சீவ கொலை; துப்பாக்கிதாரியின் அடையாள அட்டை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விளக்கம் Published By: DIGITAL DESK 3 20 FEB, 2025 | 07:07 PM பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் வைத்திருந்த வழக்கறிஞர் அடையாள அட்டை போலியானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வழக்கறிஞர் அடையாள அட்டை அதன் உறுப்பினர்களால் பரிசோதனைக்குட்படுத்தபட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை சட்டதரணிகள் சங்கம் விளக்கமளித்துள்ளது. பரிசீலனை செய்ததில் வழக்கறிஞர் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்ட நபர் இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின உறுப்பினர் அல்ல என்பதும், பதிவு எண், உயர்நீதிமன்ற எண் மற்றும் கியூஆர் குறியீடு ஆகியவை போலியானவை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட வழக்கறிஞர் அடையாள அட்டையானது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வழங்கப்பட்ட ஒன்றல்ல என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது. குறித்த வழக்கறிஞர் அடையாள அட்டையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளரின் கையொப்பம் வேறொரு இடத்தில் இடப்பட்டுள்ளதாகவும், போலியான விபரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக்குழு தலைவன் கணேமுல்ல சஞ்சீவ புதன்கிழமை (19) மன்றில் சாட்சியமளிக்கும் போது சட்டத்தரணி போல் வேடமணிந்து வந்த நபரொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய பெண்ணைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கணேமுல்ல சஞ்சீவ கொலை ; துப்பாக்கிதாரியின் அடையாள அட்டை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விளக்கம்
-
டிராகன்: அரியர் வைப்பது கெத்தா? திரைப்படங்கள் கல்லூரி மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
பட மூலாதாரம்,AGS ENTERTAINMENT கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த வாரம் வெளியான 'டிராகன்' திரைப்படத்தின் டிரெய்லர் சமூக ஊடகங்களில் சில விவாதங்களை எழுப்பியுள்ளது. "கல்லூரி செல்லும் நாயகன் என்றாலே அவர் பல அரியர்கள் வைத்திருக்க வேண்டும், குடிக்க வேண்டும், பேராசிரியர்களை மதிக்கக் கூடாது எனக் காட்டிவிட்டு, பிறகு படத்தின் இறுதியில் அந்த நாயகன் வெற்றி பெறுவது போலக் காட்டுவது என்ன நியாயம்?" என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல், "நிஜத்தில் 5 அரியர்களை ஒரே செமஸ்டரில் கிளியர் செய்வதே கடினம், அப்படியிருக்க 40 அரியர்களுக்கும் மேல் வைத்திருக்கும் ஒரு நாயகன், அதை பெருமையாகச் சொல்வது தவறான முன்னுதாரணம்" என்பது போன்ற பதிவுகளையும் காண முடிந்தது. இதற்கிடையே இத்தகைய படங்களுக்கு ஆதரவாகவும் கருத்துகள் வந்துள்ளன. "தவறுகளில் இருந்து பாடம் கற்பதைத்தானே காட்டுகிறார்கள், திரைப்படம் வெளியாகாமல் டிரெய்லரை மட்டும் வைத்து முடிவு செய்ய வேண்டாம்" என்பது போன்ற கருத்துகளையும் காண முடிந்தது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளை (பிப்ரவரி 21) வெளியாகவுள்ளது. விடாமுயற்சி: நவீன கால ராமாயணமா? பெரிதாக விளம்பரம் செய்யாதது ஏன்? மகிழ் திருமேனி பேட்டி பேட் கேர்ள் டீசர்: கலாசாரம், சாதி சர்ச்சைகள் கிளம்புவது ஏன்? படத்தின் இயக்குநர் கூறியது என்ன? பல வருடங்களாக வெளியாகாமல் இருக்கும் துருவ நட்சத்திரம் போன்ற படங்களுக்கு மதகஜராஜாவின் வெற்றி உதவுமா? நடிகர் பாலகிருஷ்ணா மேடையிலேயே நடிகையிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால் சர்ச்சை மாணவர்கள் மீதான உளவியல் தாக்கம் மின்னலே, சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், டான், போன்ற தமிழ்ப் படங்கள் மற்றும் பிரேமம், வாழா, ஒரு வடக்கன் செல்ஃபி போன்ற மலையாளப் படங்கள் இடையே ஒரு ஒற்றுமை உண்டு. கதைகள் வெவ்வேறு என்றாலும், அதன் கதாநாயகர்கள் அல்லது முன்னணி கதாபாத்திரங்கள் பல அரியர்கள் வைத்திருப்பார்கள். ஆனால், அதைப் பற்றி ஒரு அலட்சிய மனோபாவம் அவர்களிடம் இருப்பது போலவும், ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர்கள் அதை மொத்தமாக எழுதி முடித்துவிடுவார்கள் அல்லது வேறு ஏதேனும் ஒரு துறையில்/பணியில் வெற்றி பெறுவது போலவும் காட்சிகள் இருக்கும். "திரைப்படம் வேறு, வாழ்க்கை வேறு என்று சொன்னாலும், இத்தகைய படங்கள் மாணவர்களிடையே உளவியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது" என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்பொரு கட்டத்தில் வில்லனாக காட்டப்பட்ட கதாபாத்திர வடிவமைப்புகள், இன்று கதாநாயகர்களாக வடிவமைக்கப்படுவதன் தொடர்ச்சியாக இந்த கதாபாத்திரங்களைப் பார்க்க முடிகிறது என்கிறார் அவர். பட மூலாதாரம்,DEEPA/INSTAGRAM படக்குறிப்பு,இத்தகைய திரைப்படங்கள் மாணவர்களிடையே உளவியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா ஜா.தீபாவின் கூற்றுக்கு உதாரணமாக 1994இல், கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான 'நம்மவர்' திரைப்படத்தைக் கூறலாம். அதில் கல்லூரி மாணவராக வரும் ரமேஷ் (நடிகர் கரண்) கதாபாத்திரம்தான் வில்லன். தனது தந்தையின் கல்லூரி என்பதால், அவர் படிப்பில் கவனம் செலுத்தமாட்டார், வகுப்புகளைப் புறக்கணிப்பார், பேராசிரியர்களை அலட்சியமாகக் கையாள்வார், வன்முறையில் ஈடுபடுவார். அவரைப் பின்தொடரும் ஒரு மாணவர் குழுவும் இருக்கும். அதே கல்லூரிக்கு பேராசிரியராக வரும் வி.சி.செல்வம் (கமல்ஹாசன்) ரமேஷையும் அவரது நண்பர்களையும் பகைத்துக் கொண்டு, கல்லூரியில் பல மாற்றங்களைக் கொண்டு வருவார். "நாயகன் Rugged boy அல்லது எதையும் அலட்சியமாகக் கையாள்பவன் என்பதைக் காட்ட இத்தகைய கதாபாத்திரங்களை எழுதுகிறார்கள். அவன் நாயகன் என்பதால் எப்படியும் வாழ்க்கையில் வெற்றி பெறுவான் என்றும் காட்டுகிறார்கள். ஆனால் எதார்த்தம் அவ்வாறு இல்லையே. இதைத் பார்க்கும் ஒரு மாணவன், கல்லூரியில் அரியர் வைத்தால், குடித்தால் அது சாதாரணமான ஒன்று அல்லது அதுதான் 'கெத்து' என நினைக்கலாம். அவ்வாறு இல்லாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த நினைக்கும் மாணவர்கள் கேலிக்கு ஆளாகவும் இத்தகைய 'நாயக பிம்பங்கள்' காரணமாகின்றன" என்கிறார் ஜா.தீபா. பெங்களூரு சாலையில் பாடிய பாப் பாடகர் எட் ஷீரன், மைக் ஒயரை துண்டித்து காவலர் - என்ன நடந்தது?11 பிப்ரவரி 2025 சொல்லிசை சிஸ்டாஸ்: ஒடுக்குமுறைக்கு எதிராகப் பாடும் தமிழ்நாட்டின் முதல் பெண்கள் ராப் இசைக் குழு17 ஜனவரி 2025 'இயக்குநர்களின் சொந்த அனுபவங்கள்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"தவறுகளில் இருந்து பாடம் கற்ற ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார் என்பதையே சொந்த அனுபவத்திலிருந்து இயக்குநர்கள் காட்ட விரும்புகிறார்கள்" என்கிறார் துணை இயக்குநர் பாலசுப்ரமணியம். ஆனால், 'இத்தகைய கதாபாத்திரங்களை தவறான நோக்கத்தில் எழுதுவதில்லை என்றும், கதைசொல்லி என்ற முறையில் தங்களது சொந்த அனுபவத்தையே இயக்குநர்கள் திரையில் கொண்டு வருவதாக' கூறுகிறார் துணை இயக்குநர் பாலசுப்ரமணியம். கோப்ரா, டிமான்டி காலனி 2 போன்ற படங்களில் பணியாற்றியுள்ள இவர், தற்போது நடிகர் அஜித்குமாரின் 'குட், பேட், அக்லி' படத்தில் பணியாற்றி வருகிறார். "தான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்ற ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார் என்பதையே சொந்த அனுபவத்திலிருந்து காட்ட விரும்புகிறார்கள். நாயகனுக்கு சில மோசமான குணங்கள் இருப்பதாகக் காட்டி, பின்னர் அவன் திருந்துவது என்பது திரைக்கதையை சுவாரஸ்யமாக மாற்ற இயக்குநர்கள் பயன்படுத்தும் உத்தி" என்கிறார் அவர். ஆனால், சொந்த அனுபவமோ அல்லது வாழ்க்கையில் பார்த்த நபர்களோ, அத்தகைய கதாபாத்திரங்கள் படங்களில் இடம்பெறுவது பிரச்னையல்ல, நாயகர்களாக முன்னிறுத்தப்படுவதுதான் பிரச்னை என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா. "கல்விதான் முக்கியம் எனப் பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டதால்தான், ஒரு சமூகமாகப் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளோம். அதை எடுத்துக்கூறும் படங்கள் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகம் வெளியாகின்றன. அப்படியிருக்க '30, 40 அரியர்கள் வைப்பதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை' என நாயகன் வசனம் பேசுவது ஆபத்தானது." "வெறும் பொழுபோக்கிற்காக படம் எடுக்கிறேன் என ஒரு இயக்குநர் சொல்ல முடியாது. ஒரு படைப்பாளிக்கு சமகால அரசியல் குறித்த புரிதலும், சமூகப் பொறுப்புணர்வும் அவசியம்" என்கிறார் ஜா.தீபா. மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? இந்தி எதிர்ப்பின் நெடிய வரலாறு18 பிப்ரவரி 2025 தமிழுக்காக குழந்தைகளுடன் சிறை புகுந்த 73 பெண்கள் - அறியப்படாத முதல் மொழிப்போர் வரலாறு17 பிப்ரவரி 2025 'எது கெத்து என்ற குழப்பம்' பட மூலாதாரம்,GETTY IMAGES "கல்லூரியில் இப்படி இருந்தால்தான் 'கெத்து' என்று எனக்கும் ஒரு எண்ணம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால், திரைப்படங்களைப் பார்த்தே பொறியியல் படிப்பைத் தேர்வு செய்தேன். ஆனால் கல்லூரிக்குச் சென்ற பிறகு, திரையில் பார்த்த எதுவும் அங்கு நடக்கவில்லை. எது கெத்து என்ற குழப்பமே ஏற்பட்டது" என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனக்கு 15 அரியர்கள் இருந்ததாகவும், அவற்றை எழுதி முடிக்கக் கூடுதலாக 2 ஆண்டுகளும், சிறப்பு வகுப்புகளும் தேவைப்பட்டது என்றும் கூறுகிறார் அவர். "அரியர் வைக்காவிட்டால், சில பழக்கங்கள் இல்லாவிட்டால் 'பழம்' என முத்திரை குத்தி விடுவார்கள். எனவே எனக்கு அரியர்கள் இருந்தது குறித்து நான் முதலில் கவலைப்படவில்லை. பின்னர், அந்த 15 அரியர்களை முடிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். அதைவிட கஷ்டம் வேலைக்காக அலைந்ததுதான்." "ஏன் இத்தனை அரியர்கள் வைத்தீர்கள் என எல்லா நேர்காணல்களிலும் கேட்டார்கள். ஒருவழியாக துபையில் ஒரு நிறுவனத்தில், உறவினர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் எனக்கு வேலை கிடைத்தது. வெளிநாடு செல்ல விருப்பம் இல்லாவிட்டாலும்கூட, வேறு வழியின்றி ஒப்புக் கொண்டு 8 வருட காலமாக இங்கு வேலை செய்கிறேன்" என்கிறார் மகேஷ். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலான வரலாறு - சட்டமன்றத்தில் அண்ணா பேசியது என்ன?6 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டிஷாரிடம் இருந்து தப்பிக்க பிரான்ஸில் கப்பல் கழிவறையில் இருந்து கடலில் குதித்த சாவர்க்கர்3 மணி நேரங்களுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் எழுந்த விவாதங்கள் பட மூலாதாரம்,AGS ENTERTAINMENT படக்குறிப்பு,கடந்த வாரம் வெளியான 'டிராகன்' படத்தின் முன்னோட்டம் சமூக ஊடகங்களில் சில விவாதங்களை எழுப்பியுள்ளது "எந்த அரியர்களும் இல்லாத ஒருவருக்கே வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் குறைவான சம்பளமே கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், 'அரியர் வைப்பது பெருமை' எனப் பேசி படம் எடுக்கிறார்கள்" என்று 'டிராகன்' படத்தின் டிரெய்லரை குறிப்பிட்டு ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். "சமூகத்தைச் சீரழிக்கும் படம் எனச் சொல்வார்களே, உண்மையில் இதுதான் அப்படிப்பட்ட படம். இந்தப் படத்தில் வருவது போல 48 அரியர்கள் வைக்கும் ஒருவன் நிச்சயமாகப் பல சிக்கல்களை எதிர்கொள்வான். இதைப் பார்க்கும் ஒருவர் அந்த நாயகனை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டால், அவ்வளவுதான்" என்று பெண் ஒருவர் ட்வீட் செய்திருந்தார். "எங்கள் கல்லூரியில் குறிப்பிட்ட அரியர்களுக்கு மேல் வைத்தால் அல்லது இந்த நாயகனைப் போல பிரச்னை செய்தால், உடனடியாக டிஸ்மிஸ் செய்துவிடுவார்கள். இத்தகைய படங்கள் தவறான கருத்துகளைப் பரப்புகின்றன" என்று ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். ஈரோடு மாவட்டத்தில் தனியார் கல்லூரியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் வெள்ளியங்கிரி பிபிசி தமிழிடம் பேசியபோது, "அரியர் வைப்பது ஒன்றும் மிகப்பெரிய தவறு கிடையாது. அரியர் வைப்பவர்கள் முட்டாள்களும் அல்ல. கல்லூரி மாணவர்களில் கணிசமானவர்கள் பெற்றோர் வற்புறுத்தலால், ஒரு படிப்பைத் தேர்வு செய்கிறார்கள். ஓரிரு செமஸ்டர்களுக்கு பிறகுதான் ஒரு நிலைக்கு வருகிறார்கள் அல்லது இந்தப் படிப்பு வேண்டாம் என முடிவு செய்கிறார்கள்" என்றார். ஆனால் பிரச்சினை "அரியர் வைப்பது அல்லது வகுப்புகளைப் புறக்கணிப்பது 'கெத்து' என்று மாணவர்கள் நினைக்கும்போதுதான் தொடங்குகிறது" என்கிறார் அவர். மறுபுறம், படைப்பாற்றல் இருப்பவர்களால் படிப்பில் சிறந்து விளங்க முடியாது என்ற எண்ணத்தையும் சில திரைப்படங்கள் விதைப்பதாகக் கூறுகிறார். "உதாரணமாக நன்றாகக் கதை எழுதுபவர், ஓவியம் வரைபவர் அல்லது நடிப்பவர், படிப்பில் கவனம் செலுத்தமாட்டார் என்ற எண்ணம் உள்ளது. அதுவும் தவறு. திரையில் நாயகன் 40 பேரை அடிப்பது நிஜத்தில் சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொள்வது போல, இதையும் மாணவர்கள் உணர வேண்டும்" என்றார். பூமியின் உட்புற மையக்கரு வடிவம் மாறிவிட்டதா? விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்17 பிப்ரவரி 2025 பிரபஞ்சத்தின் மிகப்பெரிய, பிரமாண்ட கட்டமைப்பு கண்டுபிடிப்பு - உள்ளே என்ன இருக்கிறது?18 பிப்ரவரி 2025 'இயக்குநர்களுக்கு இருக்கும் பயம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, படங்களில் புத்திமதி கூறினால், கிரிஞ் என்று ரசிகர்கள் கூறிவிடுவார்களோ என்ற பயம் இயக்குநர்களிடையே உள்ளதாகக் கூறுகிறார் கௌதம் ராஜ் "ஒரு கட்டத்தில் பல திரைப்படங்களில் 'ராகிங்' (Ragging) என்பது நகைச்சுவையாகக் காட்சிப்படுத்தப்பட்டது. அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட சமூக புரிதலுக்குப் பிறகு அத்தகைய காட்சிகள் குறைந்தன. அப்படி ஒரு சமூகப் பொறுப்புணர்வு மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்கும்" என்கிறார் இயக்குநர் கௌதம் ராஜ். ராட்சசி, கழுவேத்தி மூர்க்கன் போன்ற கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசும் திரைப்படங்களை இயக்கியவர் கௌதம் ராஜ். "இப்போதுள்ள தலைமுறையினருக்கு புத்திமதி கூறினால், கிரிஞ் (Cringe) அல்லது பூமர் என்று ரசிகர்கள் ஒதுக்கிவிடுவார்களோ என்ற பயம் இயக்குநர்களிடையே உள்ளது. எனவே டிரெண்டுக்கு ஏற்றாற்போல் எடுக்கிறேன் என சில விஷயங்களை ஹீரோயிசமாக காட்டுகிறார்கள். உதாரணத்திற்கு போதைப் பழக்கத்தை மிகவும் சாதாரணமான ஒன்றாகக் காட்டுவது. அதன் தொடர்ச்சிதான் இதுவும்" என்கிறார் அவர். ஒரு படைப்பு ஒரு தனிமனிதரைப் பாதித்தால், அதில் படைப்பாளிக்கும் பங்கு உள்ளது எனக் கூறும் இயக்குநர் கௌதம் ராஜ், "ஒரு திரைப்படம் முழுவதும் பெண்களைத் திட்டி அல்லது ஆபாசமாகச் சித்தரிப்பது போல பாடல்கள், காட்சிகளை வைத்துவிட்டு, இறுதியில் 'பெண்கள் நம் கண்கள்' என வசனம் பேசுவதால் பயனில்லை என்பதைப் போலவே இதுவும். எனவே கிளைமாக்ஸில் என்ன சொல்கிறோம் என்பதில் இருக்கும் பொறுப்பும், நேர்மையும் படம் முழுவதும் இருந்தால் நல்லது," என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு டிராகன்: அரியர் வைப்பது கெத்தா? திரைப்படங்கள் கல்லூரி மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
-
பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு !
உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களை கையளித்தது ஹமாஸ் 20 FEB, 2025 | 02:14 PM ஹமாஸ் அமைப்பு தன்னிடம் பணயக்கைதிகளாகயிருந்தவேளை உயிரிழந்த நான்கு இஸ்ரேலியர்களின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்துள்ளது. உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் கையளித்துள்ளமை இதுவே முதல்தடவை. செஞ்சிலுவை சங்கம் தற்போது அந்த உடல்களை இஸ்ரேலை நோக்கி கொண்டு செல்கின்றது. பிபாஸ் குடும்பத்தை சேர்ந்த தாய் தாய் ஒன்பது மற்றும் நான்கு மாத குழந்தைகளின் உடல்களையும் ஹமாஸ் கையளித்துள்ளது. உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களை கையளித்தது ஹமாஸ்
-
முகநூலில் அறிமுகமான பாகிஸ்தான் பெண்ணுக்கு கடற்படை தள படங்களை பகிர்ந்த இரண்டு இந்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள்
20 FEB, 2025 | 12:29 PM முகநூலில்அறிமுகமான பாகிஸ்தான் பெண்ணுக்கு கடற்படை தளம் பற்றிய படங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்த இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனர். இது குறித்து என்ஐஏ மூத்த அதிகாரிகள் கூறியதாவது: இந்திய கடற்படை குறித்த தகவல்களை பாகிஸ்தான் புலனாய்வு குழு திரட்டி வருவதாக எங்களுக்கு கடந்த ஆண்டு தகவல் கிடைத்தது. இது தொடர்பான விசாரணையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தீபக் என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் கார்வார் அருகேயுள்ள கடம்பா கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் ஆகாஷ் நாயக் வேதன் தண்டேல் ஆகிய இருவர் பற்றிய தகவல் பற்றிய தகவல் கிடைத்தது. இந்த இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். மேலும் நட்புடன் பழகி கடம்பா கடற்படை தளம் குறித்த தகவல்களை கேட்டுள்ளார். இருவருக்கும் அந்தப் பெண் சில பரிசுகளை கொடுத்துள்ளார். மேலும் மாதம் ரூ.5 ஆயிரம் நன்கொடையாக தந்துள்ளார். இதன்படி ஆகாஷும் வேதனும் கடம்பா மற்றும் அங்கோலா கடற்படை தளங்களின் படங்களை அவருக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிந்தவுடன் இருவரையும் ஹைதராபாத் வரவழைத்து என்ஐஏ விசாரணை நடத்தியது. இருவரின் செல்போன் மின்னஞ்சல் ஃபேஸ்புக் ஆகியவற்றை ஆராய்ந்ததில் புகைப்படங்களும் சில தகவல்களும் பகிர்ந்தது உறுதியானது. இதையடுத்து ஆகாஷ் வேதன் ஆகிய இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று கார்வாரில் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார். இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இருவரும் பாகிஸ்தானிய பெண்ணுக்கு கடம்பா அங்கோலா கடற்படை தளங்களின் செயல்பாடுகள் மற்றும் அங்குள்ள போர்க் கப்பல்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. முகநூலில் அறிமுகமான பாகிஸ்தான் பெண்ணுக்கு கடற்படை தள படங்களை பகிர்ந்த இரண்டு இந்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
LIVE 2nd Match, Group A (D/N), Dubai (DICS), February 20, 2025, ICC Champions Trophy Bangladesh 228 India (10/50 ov, T:229) 69/1 India need 160 runs from 40 overs.Stats view Current RR: 6.90 • Required RR: 4.00 • Last 5 ov (RR): 46/1 (9.20) Win Probability:IND 85.86% • BAN 14.14%
-
எலான் மஸ்க் கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றார் - அவர் செவ்வாய் கிரகத்திற்கு செல்லவேண்டும் - சல்மான் ருஸ்டி
Published By: RAJEEBAN 19 FEB, 2025 | 03:07 PM அமெரிக்காவின் கோடீஸ்வரர் எலான் மஸ்க் கருத்து சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றார் என குற்றம்சாட்டியுள்ள பிரபல எழுத்தாளர் சல்மான் ருஸ்டி அவர் செவ்வாய் கிரகத்திற்கு செல்லவேண்டும் என தெரிவித்துள்ளார். வெளிப்படையாக கருத்துதெரிவிப்பவரும் கொலைமுயற்சியிலிருந்து உயிர் தப்பியவருமான சல்மான் ருஸ்டி கருத்து சுதந்திரம் தொடர்பில் எலான் மஸ்க்கின் நிலைப்பாடு குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். மஸ்க்கின் எக்ஸ் தளம் உண்மையாகவே கருத்து சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றதா என்ற கேள்விக்கு எலன் மஸ்க் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கு பதில் அதற்கு ஊறு விளைவிக்கின்றார் என சல்மான் ருஸ்டி கருத்து வெளியிட்டுள்ளார். தீவிர வலதுசாரிகளிற்கு சார்பாக கருத்துருவாக்கத்தில் மஸ்க் ஈடுபட்டுள்ளார் என சல்மான் ருஸ்டி கருத்துசுதந்திரத்திற்கு எதிராக செயற்பட்டுக்கொண்டே எலன் மஸ்க் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதாக தெரிவிக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார். மஸ்க் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை, அவரது சமூக வலையமைப்பு தீவிரவலதுசாரிகளிற்கு ஆதரவான கருத்துருவாக்கத்தில் ஈடுபடுகின்றது என தெரிவித்துள்ள சல்மான் ருஸ்டி, கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் உன்னதமான பணியில் ஈடுபடுவதாக தெரிவித்துக்கொண்டே அதற்கு எதிராக செயற்படுவது நேர்மையற்ற விடயம், செவ்வாய்கிரகத்திற்கு செல்லும் முதல் மனிதனாக எலான் மஸ்க் விளங்கவேண்டும் என நான் விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார். எலான் மஸ்க் கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றார் - அவர் செவ்வாய் கிரகத்திற்கு செல்லவேண்டும் - சல்மான் ருஸ்டி