ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: வாசுகி கணேசானந்தனின் “Brotherless Night”
Everything posted by ஏராளன்
-
கடந்தவருடம் கனடா அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளது - பலர் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள்
27 FEB, 2025 | 03:23 PM கனடா கடந்தவருடம் மிக அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளது இவர்களில் அனேகமானவர்கள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டு;ள்ளது. இது தொடர்பில் ரொய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளதாவது. கனடா கடந்த வருடம் அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளது,ஒருதசாப்தகாலத்திற்கும் மேற்பட்ட காலத்தில் அதிகளவானவர்கள் வெளியேற்றப்பட்டமை கடந்த வருடத்திலேயே. ரொய்ட்டர் பெற்றுக்கொண்டுள்ள தரவுகள் இதனை வெளிப்படுத்துகின்றன. கடந்தவருடம் ஒக்டோபர் மாதம் வரை கனடா நாடுகடத்தியவர்களின் எண்ணிக்கையை வைத்துபார்க்கும்போது 2015ம் ஆண்டின் பின்னர் கடந்த வருடமே கனடா அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளமை புலனாகின்றது. நாடு கடத்துவதற்காக அதிகளவு நிதியை கனடா அரசாங்கம் கடந்த வருடம் ஒதுக்கியிருந்தது. புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கைஅதிகரிப்பு மற்றும் கனடாவில் வீடுகளிற்கான தட்டுப்பாட்டினை புலம்பெயர்ந்தவர்களின் வருகை அதிகரிக்கின்றது என்ற சர்ச்சை போன்றவற்றை எதிர்கொண்டிருந்த ஜஸ்டின் ட்ருடோ அரசாங்கம் தான் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாக காண்பிப்பதற்காக புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதை தீவிரப்படுத்தியுள்ளது. 2020 முதல் புகலிடக்கோரிக்கைகளை பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாகவே நாடு கடத்தல்களை தீவிரப்படுத்தவேண்டிய நிலையேற்பட்டது என கனடாவின் எல்லை முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கனடாவிலிருந்து தாமாக வெளியேறியவர்கள்,இருதரப்பு உடன்படிக்கையின் கீழ் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களின் விபரங்களை ரொய்ட்டர்ஸ் கோரியிருந்தது. கனடாவின் எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பு வழங்கியுள்ள புள்ளிவிபரங்கள் மூலம் 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 19ம் திகதி வரை 7300 பேரை நாடுகடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.இது 2023ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 8வீதம் அதிகமாகும். https://www.virakesari.lk/article/207835
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
பட மூலாதாரம்,@SEEMAN4TN படக்குறிப்பு,நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 27 நிமிடங்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில் சம்மன் ஒட்டிய விவகாரத்தில் காவலர்களுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் இருவரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் கூறினார். கைதான நபர்கள் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், "நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை" எனக் கூறியுள்ளார். சீமானின் வீட்டில் என்ன நடந்தது? சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் புகார்: வீட்டில் போலீஸார் ஒட்டிய சம்மனை கிழித்த தொண்டர் பெரியாரை விமர்சித்து, அண்ணாவை புகழ்ந்த சீமான் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதகவுக்கு கைகொடுத்ததா? தவெக: விஜய் எதிர்பார்ப்பது என்ன? 2026 தேர்தலில் அதிமுக-வுக்கு ஆபத்தா? செங்கோட்டையன் கலகக் குரலா? அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் மாற்றம் நிகழுமா? சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் மனுவின் அடிப்படையில் சீமான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அடுத்து வந்த நாட்களில் புகாரை வாபஸ் பெறுவதாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து, புகாரின் மீது காவல்துறையும் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதன் பிறகு கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது அதே நடிகை மீண்டும் ஒரு புகார் மனு அளித்தார். இந்தநிலையில், தன் மீது 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்தார். கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கை ரத்து செய்வதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், அரசியல் அழுத்தம் காரணமாக தனது புகார் மனுவை நடிகை வாபஸ் பெற்றதாகவும் தெரிவித்தார். "மனரீதியான பிரச்னைகளை நடிகை எதிர்கொண்டுள்ளார். புகாரை வாபஸ் பெற்றாலும் சமரசம் செய்து கொள்ள முடியாது. இது தீவிரமான குற்றம்" எனக் குறிப்பிட்ட நீதிபதி, 12 வாரங்களில் வழக்கில் புலன் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, அந்த நடிகையிடம் வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார், புதன்கிழமையன்று (பிப்ரவரி 26) நேரில் சந்தித்து வாக்குமூலம் பெற்றனர். இதுதொடர்பாக, வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 27) நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால், ஏற்கெனவே திட்டமிட்ட கட்சி நிகழ்வில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் செல்வதால் தன்னால் வர இயலாது என சீமான் தெரிவித்துவிட்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் பிபிசி தமிழிடம் கூறினார். டிரம்பின் 'கோல்டு கார்டு' விசா என்றால் என்ன? - கிரீன் கார்டில் இருந்து வேறுபட்டதா?4 மணி நேரங்களுக்கு முன்னர் சிரியா: பஷர்-அல்-அசத் வீழ்ச்சிக்கு பிறகும் குர்து மக்கள் தொடர்ந்து போரிடுவது ஏன்?3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு இன்று வளசரவாக்கம் போலீஸார் சென்றுள்ளனர். நீலாங்கரை வீட்டில் என்ன நடந்தது? நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு இன்று (பிப்ரவரி 27) வளசரவாக்கம் போலீஸார் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 28) நேரில் ஆஜராகுமாறு சீமானிடம் சம்மன் கொடுப்பதற்கு அவர்கள் சென்றுள்ளனர். ஊடகங்களில் வெளியான வீடியோ பதிவுகளின்படி, சம்மனை சீமான் வீட்டின் சுவற்றில் போலீஸார் ஒட்டியுள்ளனர். இதை அங்கிருந்த நபர் ஒருவர் கிழித்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே போலீஸார் செல்ல முயன்றபோது, ஒருவர் தடுத்துள்ளார். இதனால் அவருக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். 'இப்போது தவறவிட்டால் 2040ல் தான் தெரியும்': வானில் ஒரே நேரத்தில் அணிவகுக்கும் ஏழு கோள்கள் - 5 கேள்வி பதில்கள்9 மணி நேரங்களுக்கு முன்னர் தொழிலதிபர் ஷியாம் சுந்தர் பார்டியா மீது பாலியல் வன்கொடுமை புகார் - புகார்களை மறுத்து அறிக்கை27 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததால் நடந்த மோதல் பிபிசி தமிழிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன், "சம்மன் கொடுக்க வரும்போது வீட்டில் யாரும் இல்லாமல் இருந்தாலோ அல்லது வீடு பூட்டப்பட்டிருந்தாலோ சுவற்றில் ஒட்டலாம். ஆனால், சீமானின் வீட்டில் குடும்பத்தினர் இருந்துள்ளனர். அவர்களிடம் கொடுக்காமல் சுவற்றில் ஒட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது?" எனக் கேள்வி எழுப்பினார். "ஆஜராக முடியாது" - சீமான் இதே கருத்தை ஒசூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது சீமான் தெரிவித்தார். "எனக்கு ஏற்கெனவே அழைப்பாணையை போலீஸ் கொடுத்தபோது அதில் கையெழுத்திட்டு, திட்டமிட்டபடி வேலை இருப்பதால் வர முடியாது எனக் கூறிவிட்டேன். தினந்தோறும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறேன். அப்படியிருக்கும்போது என்னை விரட்ட வேண்டிய அவசியம் என்ன?" என்றார் "நாளையே வருமாறு கூறினால் வர முடியாது. 15 வருடங்களாக இதே நாடகத்தை நடத்தி வருகிறார்கள். விசாரணையே நடத்தாமல் இவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். என்னை எதுவும் செய்ய முடியாது. இதற்கெல்லாம் பயந்து ஓடக் கூடிய ஆள் நான் இல்லை" எனவும் சீமான் பதில் அளித்தார். "என் வீட்டில் மனைவி, மகன்கள் இருந்தனர். ஆனால் போலீஸார் அழைப்பாணையை சுவற்றில் ஏன் ஒட்ட வேண்டும்? ஏற்கெனவே விசாரணைக்கு பதில் அளித்துவிட்டேன்" என அவர் கூறினார். ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?8 மணி நேரங்களுக்கு முன்னர் 'வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை' - சமையல், வீட்டை சுத்தப்படுத்துவதில் ஆண், பெண் குழந்தைகளுக்கிடையே பாகுபாடா?9 மணி நேரங்களுக்கு முன்னர் நீலாங்கரை உதவி ஆணையர் சொல்வது என்ன? சீமானின் குற்றச்சாட்டு தொடர்பாக, நீலாங்கரை காவல் உதவி ஆணையர் பரத்திடம் பிபிசி தமிழ் பேசியது. "வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார் சீமானிடம் தகவல் கொடுப்பதற்காக வந்திருந்தனர். சீமானோ அல்லது அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அவர்களைப் பார்ப்பதற்கு வந்திருக்க வேண்டும். அவர்கள் யாரும் வரவில்லை. அதைப் படிக்காமல் கிழிப்பதை ஏற்க முடியாது" எனக் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், " சம்மனை கிழித்தது தொடர்பாக, வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார் புகார் கொடுத்ததால், நீலாங்கரை காவல்நிலைய ஆய்வாளர் விசாரிப்பதற்குச் சென்றார். இந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனக் கூறினார். நடைமுறை என்ன? காவல்துறை சார்பில் சம்மன் கொடுப்பது தொடர்பான நடைமுறை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, "குறிப்பிட்ட நாளில் ஆஜராகுமாறு காவல்துறை கூறினால், தன்னால் வர முடியாது எனக் கூறி ஒருவர் அவகாசம் கேட்கலாம். ஆனால் ஆஜராகாமல் தவிர்த்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்" எனக் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "வழக்கில் தொடர்புடைய நபருக்கு தபால் மூலமாகவோ நேரில் சென்றோ சம்மன் அளிக்கலாம் அல்லது அவர்களின் உறவினர்களிடம் வழங்கலாம். அவ்வாறு ஒப்படைக்க முடியாவிட்டால் வீட்டில் ஒட்டிவிட்டு வரலாம்" எனக் கூறுகிறார். ''சம்மனைப் பெறுவதற்கு தொடர்புடைய நபரின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தால், அதை உரிய சாட்சிகள் மூலம் காவல்துறைதான் நிரூபிக்க வேண்டும்'' எனவும் கூறுகிறார் கருணாநிதி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ckgzz4j79k0o
-
ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவு விபரங்கள் வெளியாகின!
மிதிபலகையில் தொங்கிச் சென்றாலும் குறைந்த செலவில் வெளிநாடு செல்ல முடியாது : ஜனாதிபதி அநுர எவ்வாறு 18 இலட்சம் ரூபா செலவில் 3 நாடுகளுக்கு சென்றார் - திலித் ஜயவீர 27 FEB, 2025 | 09:03 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 18 இலட்சம் ரூபா செலவில் மூன்று நாடுகளுக்கு எவ்வாறு சென்றார் என்பது புரியவில்லை. மிதிபலகையில் தொங்கிக்கொண்டு போனாலும் அவ்வாறு குறைந்த செலவில் வெளிநாட்டு பயணத்தை செய்ய முடியாது என சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இந்த வரவு செலவுத் திட்டம் எந்த திசையை நோக்கி இந்த நாட்டை கொண்டு போகின்றது என்று புரியவில்லை. எவ்வாறு இந்த வரவு செலவுத் திட்டம் முன்னிலையானது என்றும் புரியவில்லை. இந்த அரசாங்கம் சோஷலிச அரசாங்கம் என்று கிராமங்களில் உள்ளவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். கிராமங்களில் உள்ளவர்களை எவ்வவாறு மேலே கொண்டு வரப் போகின்றோம் என்றோ அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலோ குறிப்பிடப்படவில்லை. அவர்கள் முன்னேற்றமடைய வேண்டும். இளைஞர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும். இந்த வரவு செலவுத் திட்டத்தில் அந்த கனவுகளுக்கு உயிர் கிடைக்குமா? உள்ள கனவுகளையும் கலைக்கும் வகையிலேயே வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது. அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு சர்வதேச நாணய நிதியம் கழுத்தை நெரித்தாலும் அதற்கு இடமளிக்காது அப்பாவிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். இந்நிலையில் இந்த அரசாங்கம் பழைய அரசியலையே செய்கின்றது. இவர்களின் அரசியலுக்குள் மறைந்துள்ள அரசியலை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயன்படுத்தி கொண்டு செல்லப்படும் பயணத்தில் இந்த நாட்டை முன்னால் கொண்டு செல்ல முடியாது. மக்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்த அரசாங்கத்துக்கு பெரும் பொறுப்புகள் உள்ளன. எதிர்பார்ப்புகளுடன் உள்ள மக்களை மகிழ்விக்கும் பொறுப்பு உள்ளது. அவர்களின் சம்பளம், வருமை நிலையில் உள்ளவர்கள், சுற்றுலாத்துறை ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் பாரிய மாற்றங்களை எதிர்பார்த்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. உங்களின் அரசியல் இருப்புக்காக மட்டும் செயற்படுகின்றீர்கள். அரசியல் கலாச்சாரத்தை மாற்றுகின்றோம் என்று கூறி செலவுகளை குறைப்பதால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது நிதியை உருவாக்க வேண்டும். அதற்காக மனித மற்றும் பௌதீக வளங்களை பயன்படுத்த வேண்டும். அதற்காக மக்களை ஊக்குவிக்க வேண்டும். செலவுகள் மற்றும் வீணடிப்புகளை குறைப்பதால் மட்டும் நாட்டை அபிவிருத்தி செய்துவிட முடியாது. ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் அவரின் உரையில் ஜனாதிபதி 1.8 மில்லியன் ரூபாவில் மூன்று நாடுகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள. எப்படி அவர் சென்றார் என்று தெரியவில்லை. மிதிபலகையில் தொங்கிக்கொண்டு போனாலும் அந்த தொகையில் எவ்வாறு மூன்று நாடுகளுக்கு சென்றிருக்க முடியும் என்று புரியவில்லை. அவர் எப்படி குறைந்த செலவில் மூன்று நாடுகளுக்கு சென்றார் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/207865
-
நாடளாவிய ரீதியில் போராட்டத்திற்கு தயாராகும் தாதியர்கள்!
நாட்டை முடக்குவோம்..! அநுர அரசை கடுமையாக சாடிய யாழ். போதனா தாதியர் வரவு செலவுத்திட்டத்தில் தாதியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு உட்பட சில கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பானுமகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Jaffna ) தாதியர் சங்கத்தினர் இன்றையதினம் (27.02.2025) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். போராட்டத்தின் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பானுமகேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தாதியர்கள் போராட்டம் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்றைய தினம் (27) நாடளாவிய ரீதியில் எமது சங்க தாதியர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளோம். கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நடைமுறையின் படி தாதியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு அளவு உட்பட சில கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் பதவி உயர்வு காலநிலை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுகாதார ஊழியர்களை முழுமையாக பாதிக்கும் ஒரு செயற்பாடாக உள்ளது. பாரிய அநீதி தாதியர்கள் மிகவும் வேலை பழுக்கும் மத்தியில் இரவு பகலாக வேலை செய்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை அவர்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும். இந்த அநீதிக்கெதிராக அகில இலங்கை ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக தாம் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பானுமகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். https://ibctamil.com/article/govt-nurses-protest-allowance-cuts-in-2025-budget-1740646622#google_vignette
-
சிரியா: பஷர்-அல்-அசத் வீழ்ச்சிக்கு பிறகும் குர்து மக்கள் தொடர்ந்து போரிடுவது ஏன்?
படக்குறிப்பு, ஐஎஸ்-ன் கோபனி நகர முற்றுகையை முறியடித்த பத்தாம் ஆண்டை அந்நகரத்து குர்து மக்கள் ஜனவரியில் கொண்டாடினர் கட்டுரை தகவல் எழுதியவர், ஜியர் கோல் பதவி, பிபிசி பெர்ஷிய சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் வடகிழக்கு சிரியாவை அடைய நாங்கள் டிகிரிஸ் ஆற்றின் குறுக்கே மோசமான நிலையில் உள்ள மிதக்கும் பாலத்தை கடந்து சென்றோம். இராக்கின் குர்திஸ்தான் பகுதியில் இருந்து சிரியாவின் எண்ணெய் வெளிகள் வழியாக எங்களை அழைத்துச் செல்லும்போது எங்கள் பேருந்து பயங்கரமாக குலுங்கியது. அந்த சாலையோரம் முழுவதும் கச்சா எண்ணெயை இறைக்கும் இயந்திரங்கள் இருந்தன. சிரியாவின் இந்தப்பகுதி குர்துகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. குர்து மக்கள், இந்த இந்தப் பகுதியை 'ரோஜாவா' என்று அழைக்கின்றனர். இதற்கு பொருள் மேற்கு குர்திஸ்தான் என்பதாகும். 2012-ல் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர், அதை சுயாட்சி பெற்ற பகுதியாக அறிவித்து, குர்து மக்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இப்பகுதி குர்துகள் தலைமையிலான ஆயுதப் படையினரால் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் பஷர் அல் அசதின் அரசு இதனை எப்போதும் அங்கீகரித்தது இல்லை. அவர் அதிகாரதிலிருந்து வீழ்ந்த பின்னரும் இப்பகுதியின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் உள்நாட்டு போருக்கு பிறகும் சிரியாவின் குர்துகள், வடக்கில் உள்ள அதன் அண்டை நாடான துருக்கியுடன் பல ஆண்டுகளாக மோதிக்கொண்டிருக்கின்றனர். இந்த மோதல் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சிரியா: அசத் ஆட்சியின் வீழ்ச்சி மத்திய கிழக்கில் அதிகார சமநிலையை மாற்றியமைக்குமா? பஷர் அல் அசத் : ஒரு கண் மருத்துவர் சிரியாவின் சர்வாதிகார அதிபர் ஆனது எப்படி? சிரியா: செட்னயா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 'எலும்புக்கூடு போல் தோற்றமளித்த' மர்ம கைதி 'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி ஐஎஸ்-க்கு எதிரான யுத்தம் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் துருக்கி எல்லைக்கு அருகில் உள்ள கோபனி நகரை அடையும் வரை, அப்பகுதியில் பல நகரங்கள், கிராமங்களை ஐ.எஸ் குழு கைப்பற்றியது. ஐஎஸ் குழுவினர் இந்த நகரினுள் நுழையமுடியவில்லை, ஆனால் அவர்கள் பல மாதங்களுக்கு முற்றுகையை தொடர்ந்தனர். 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகளின் உதவியுடன் குர்து தலைமையிலான ஆயுதப் படையினர் இந்த முற்றுகையை முறியடித்தனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற, இதன் 10 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நகரவாசிகளுடன் நானும் இணைகிறேன். கோபனி நகரத்தின் நுழைவாயிலில் தங்களது 50-களில் உள்ள பெண்கள் ஏகே-47 துப்பாக்கிகளுடன் சோதனைச்சாவடிகளை காவல் காக்கின்றனர். ஐஎஸ் குழுவுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகித்தனர். பல பெண்கள் தாமாக முன்வந்து அனைத்து பெண்கள் பாதுகாப்பு பிரிவில் (YPJ) சேர்ந்தனர். நகரை சுற்றி நாங்கள் வாகனத்தில் செல்லும்போது, இந்த போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை இன்னமும் பார்க்கமுடிகிறது. அத்துடன் உயிரை இழந்த இளைஞர்கள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் அச்சிட்ட சுவரொட்டிகளையும் பார்க்கமுடிந்தது. ஆனால் நகரின் முக்கிய சதுக்கத்தில், திருவிழா போன்ற மனநிலையே நிலவுகிறது. வண்ணமயமான குர்து உடைகளை அணிந்துகொண்டு சிறுவர்களும், சிறுமிகளும் கைகோர்த்து ஆடிப் பாடி கொண்டாடுகின்றனர். ஆனால் மூத்த தலைமுறைக்கு, இது இனிப்பும் கசப்பும் கலந்த ஒரு தருணம்தான். "கோபனி நகரில் வீரமரணம் அடைந்த எனது சகோதரன் மற்றும் மற்றவர்களின் நினைவை போற்றும் விதமாக நேற்றிரவு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தேன்," என்கிறார் 45 வயதான நியுரோஸ் அகமது. இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றன. "இது ஒரு மகிழ்ச்சியான நாள், அதே நேரம் வலி நிறைந்த நாள். இதைக் காண அவர் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." தேநீர் அருந்த ரயிலில் இருந்து இறங்கியவர் 20 ஆண்டுகளுக்கு மேல் கொத்தடிமையாக இருந்த துயரம் - அதிகாரிகள் மீட்டது எப்படி?9 மணி நேரங்களுக்கு முன்னர் 'வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை' - சமையல், வீட்டை சுத்தப்படுத்துவதில் ஆண், பெண் குழந்தைகளுக்கிடையே பாகுபாடா?9 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஜனவரி 2015-ல் ஐஎஸ் முற்றுகை முறியடிக்கப்பட்ட பின்னர் கோபனி துருக்கியுடன் மோதல் குர்துகள் தலைமையிலான சிரியா ஜனநாயக படை (SDF) வடகிழக்கு சிரியாவில் ஐஎஸ்-க்கு எதிராக வெற்றி பெற்றதாக 2019-ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் ஐஎஸ்ஸிடம் பெற்ற விடுதலை நிரந்தர அமைதியை கொண்டுவரவில்லை. துருக்கியும், சிரியா தேசிய ராணுவம் (SNA) எனப்படும் துருக்கியின் ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுக்களின் கூட்டணியும் 2016 முதலே சிரியா ஜனநாயக படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு எதிராக பல ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. மேலும் எல்லையில் உள்ள நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பகுதிகளையும் அவர்கள் கைப்பற்றியிருந்தனர். சிரியா ஜனநாயக படையின் முக்கிய அங்கமான மக்கள் பாதுகாப்பு பிரிவை (ஒய்பிஜி), குர்து தொழிலாளர் கட்சியின் ஒரு நீட்டிப்பாக துருக்கி கருதுகின்றது. குர்து தொழிலாளர் கட்சி துருக்கியில் குர்து மக்களின் உரிமைக்காக பல ஆண்டுகளாக போராடியுள்ளது. அதனால் அதை பயங்கரவாத அமைப்பாக துருக்கி அறிவித்தது. சிரியா ஜனநாயக படையை தனது எல்லையில் இருந்து பின்னுக்கு தள்ள துருக்கி விரும்புகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு அசத் ஆட்சி வீழ்ந்த பின்னர், துருக்கியின் ஆதரவு பெற்ற சிரியா தேசிய ராணுவம் யுப்ரேடிஸ் நதிக்கு மேற்கே சிரியா ஜனநாயக படையின் வசமிருந்த பகுதிகளை கைப்பற்ற புதிய முயற்சியை மேற்கொண்டது. ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?8 மணி நேரங்களுக்கு முன்னர் 'இப்போது தவறவிட்டால் 2040ல் தான் தெரியும்': வானில் ஒரே நேரத்தில் அணிவகுக்கும் ஏழு கோள்கள் - 5 கேள்வி பதில்கள்9 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கோபானி நகரின் நுழைவாயில்களில் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன இப்போது இந்த மோதல் கோபன் நகருக்கு அருகில் உள்ள பகுதிகளை எட்டியுள்ளது. "இங்கே கேமராவில் படம் பிடிக்காதீர்கள், மற்றொரு முற்றுகைக்கு தயாராகும் வகையில் நாங்கள் நகருக்கு கீழே சுரங்கங்கள் அமைத்துள்ளோம்," என நகரில் இருக்கும் குர்து படைத்தளபதி ஒருவர் அமைதியாக என்னிடம் தெரிவித்தார். நகரில் எங்கும் பெட்ரோல் மனம் வீசுகின்றது, ஜென்ரேட்டர்களின் சத்தம் எல்லா பகுதிகளிலும் ஒலிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் துருக்கி விமான தாக்குல்களில் பெரும்பாலான மின்சார உற்பத்தி நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஆண்டெனாக்கள் கூட அழிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் என்னிடம் தெரிவித்தனர். "ஐஎஸ்-ஐ கோபானி நகரில் தோற்கடித்த பின்னர் துருக்கியையும் அதன் பினாமிகளும் எங்களது நகரை ஆக்கிரமிக்க அனுமதிக்கமாட்டோம், அவர்களையும் தோற்கடிப்போம்," என்கிறார் நியுரோஸ் அகமது. ஒரு உணவகத்தில் இருந்தோம், நாங்கள் உள்ளூர்வாசிகள் அல்ல என்பதை உணர்ந்தவுடன் மக்கள் எங்களை சூழ்ந்துகொண்டனர். நரைத்த முடி மற்றும் கைகளில் ஒரு குச்சியுடன் இருந்த முதியவரிடம் அவரது வயது என்னவென்று கேட்டேன். அவருக்கு 80வயதிருக்கும் என நான் யூகித்தேன், ஆனால் அவரது பதில் என்னை சங்கடப்படுத்துகிறது. "எனக்கு 60 வயது." என்றார் அவர். இவ்வளவு உயிரிழப்புகளையும், ரத்தம் சிந்தியதையும் பார்த்த பின்னர் இங்கிருக்கும் மக்கள் சோர்ந்து போய் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. இப்போது மற்றொரு யுத்தத்தின் அபாயம் எழுந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராஃபி: ஆப்கானிஸ்தான் திரில் வெற்றி, இங்கிலாந்து ஏமாற்றம் - சறுக்கியது எங்கே?27 பிப்ரவரி 2025 தொழிலதிபர் ஷியாம் சுந்தர் பார்டியா மீது பாலியல் வன்கொடுமை புகார் - புகார்களை மறுத்து அறிக்கை27 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, நியுரோஸ் அகமதுவின் சகோதரர் ஐஎஸ் முற்றுகையில் உயிரிழந்தார். மக்கள் மீது தாக்குதல் துருக்கி தயாரித்த டிரோன்களும், துருக்கி போர் விமானங்களும் சிரியா ஜனநாயக படையின் நிலைகள் மற்றும் நகரை சுற்றிய விநியோகத்திற்கான வழிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளன. எதிர்த்து போராடிய குடிமக்கள் கூட தாக்கப்பட்டுள்ளனர். ஒரு பிராந்திய மருத்துவமனையில் காயமடைந்தவர்களில் ஒருவரான ஜெர்மனியை சேர்ந்த 28 வயதான லீயா பன்ஸியை கண்டேன். அவர் ஒரு அமைதிக்கான செயற்பாட்டாளர் ஆவார். இவர் ரோஜாவாவில் ஒரு பெண்கள் தங்குமிடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தன்னார்வலராக பணியாற்றியிருக்கிறார், ஜனவரி மாதம் தாம் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் காணொளியை அவர் எனக்கு காட்டினார். அந்தக் காட்சிகளில் வானத்திலிருந்து இரண்டு குண்டுகள் விழுந்து நடனமாடும் மக்கள் கூட்டத்தைத் தாக்குவதைக் காட்டுகின்றன. இந்த போராட்டம் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த டிஷ்ரீன் அணையின் அருகே நடைபெற்றது. இதில் ஆறு குடிமக்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் சிரியா ஜனநாயக படை கூறுகிறது. "எனக்கு அருகே இருந்த முதியவர் ஒருவரும் காயமடைந்தார்," என தனது படுக்கையிலிருந்து அவர் தெரிவித்தார். "எனக்கு கொஞ்சம் ரத்த இழப்பு ஏற்பட்டது... ஆனால் நாங்கள் அம்புலன்ஸின் உள்ளே நுழைந்த பின்னர், எங்கள் ஆம்புலன்ஸ் அருகே மற்றொரு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது," என அவர் மேலும் கூறுகிறார். குர்திஷ் ரெட் கிரசண்ட் ஆம்புலன்ஸ் மீதான தாக்குதலை துருக்கிய-சிரியா தேசிய ராணுவ கூட்டணியின் "ஒரு போர்க்குற்றம்" என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது. ''குடிமக்கள் மீதும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீதும் நடந்த தாக்குதலில் துருக்கிக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மையை பிரதிபலிக்கவில்லை" என துருக்கியின் வெளியுறவுத்துறை பிபிசியிடம் தெரிவித்தது. குறிப்பிட்ட அந்த அணை மீதான கட்டுப்பாட்டை இழக்காமல் இருக்க மனித கேடயங்களாக பயன்படுத்துவதற்காக பொதுமக்களை சண்டை நடக்கும் பகுதிக்கு சிரியா ஜனநாயக படை வேண்டுமென்றே அனுப்புவதாகவும் துருக்கி வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளி கழிப்பறையில் சடலமாக கிடந்த 14 வயது மாணவர் - என்ன நடந்தது? இன்றைய முக்கிய செய்திகள்27 பிப்ரவரி 2025 தவெக: விஜய் எதிர்பார்ப்பது என்ன? 2026 தேர்தலில் அதிமுக-வுக்கு ஆபத்தா?26 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, கோபேனை சுற்றி எஸ்டிஎஃப் வீரர்கள் காவல் காப்பதை காணமுடிகிறது தடுமாற்றம் சிரியாவின் புதிய தலைவர் அகமது அல்-ஷாரா கடினமான ஒரு சூழலுக்கு இடையே மாட்டிக்கொண்டிருக்கிறார். சிரியாவில் அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைப்பதாக உறுதியளித்த இடைக்கால அதிபர் அல்-ஷாரா, ஆயுதம் தாங்கிய அனைத்து பிரிவினரையும் ஆயுதங்களை கைவிட கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரது இஸ்லாமிய அமைப்பான ஹையத் தஹ்ரீர் அல் ஷாம் (ஹெச்டிஎஸ்) அசத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியிருந்தது. வடகிழக்கிற்கு ஒரு தீர்வு காண்பதற்கு சிரியா ஜனநாயக படை உடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் குர்து பிரிவுகளை உள்ளடக்குவது, அவரது முக்கிய கூட்டாளிகளில் ஒன்றான துருக்கியுடன் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்கிழமை சிரியாவின் எதிர்காலம் குறித்த தேசிய கூட்டத்தை ஷாரா தொடங்கியபோது, குர்து தன்னாட்சி நிர்வாகம் அதில் பங்கேற்கவில்லை. தாங்கள் அழைக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர். சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹசாகே பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்க தளத்திற்கு அருகே ரகசிய இடத்திலிருந்து என்னிடம் பேசிய சிரியா ஜனநாயக படையின் தலைவர் ஜெனரல் மாஸ்லோம் அப்தி, தாம் ஷாராவை டமாஸ்கஸில் முன்பே சந்தித்திருப்பதாக தெரிவித்தார். ஆனால் இருதரப்பும் இதுவரை எந்த உடன்பாட்டையும் எட்டவில்லை. "உண்மையின் துருக்கியுடனும், அதன் பினாமிகளுடனும் நாங்கள் இன்னமும் போரிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். துருக்கி போர்விமானங்களும், டிரோன்களும் எங்கள் மீது தொடர்ந்து குண்டுகளை வீசி வருகின்றன."என்கிறார் அவர். "சிரியாவில் புதிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. அவர்களது கருத்துக்கள் நேர்மறையாக இருக்கின்றன. ஆனால் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு எதிராக செயல்படும்படி அவர்களுக்கு துருக்கியிடமிருந்து அழுத்தம் வருகிறது. ஆனால், குர்து உரிமைகளை அங்கீகரிக்கும்படி அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் சில அரபு நாடுகள் அவர்களிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றன," என்கிறார் அவர். அமெரிக்காவைப் பொறுத்தவரை ஐஎஸ்-க்கு எதிரான சண்டையில் சிரியா ஜனநாயக படையை சேர்த்தவர்கள்தான் மிகவும் நம்பகமான கூட்டாளிகளாக இருந்திருக்கின்றனர். இன்றோ, ஐஎஸ் ஸ்லீப்பர் செல்களை எதிர்கொள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்கப் படைகள் குர்து கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கின்றன. ஆனால் அதிபர் டொனால்ட் டிரம்ப் படைகளை திரும்பப்பெற்று, துருக்கியின் ராணுவ நடவடிக்கைக்கும், ஐஎஸ்-ன் எழுச்சிக்கும் காரணமாகிவிட வாய்ப்பிருப்பதாக குர்து மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிரியா ஜனநாயக படையின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்கள் மற்றும் சிறைகளில் இன்னமும் சுமார் 40,000 ஐஎஸ் குழுவை சேர்ந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களும், 10,000 வரை ஜிகாதிகளும் இருக்கலாம் என கணிக்கப்படுவதாக அப்தி கூறுகிறார். "துருக்கி தாக்குதல் நடத்தினால், எங்களுடைய படைகளை இடமாற்றம் செய்வதை தவிர எங்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. அப்படி நேர்ந்தால் சிறைகள் மீது தாக்குதல் நடத்தி கைதிகளை விடுவிக்க ஐஎஸ் அமைப்புக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்." என்கிறார் அவர் பார்வையற்ற காளையை 12 ஆண்டுகளாக சொந்த மகன் போல கவனிக்கும் விவசாயி27 பிப்ரவரி 2025 சந்தரா: சமணர்கள் கடைபிடிக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை விடும் நடைமுறை26 பிப்ரவரி 2025 படக்குறிப்பு,ரோக்சனா முகமது நிச்சயமற்ற எதிர்காலம் ஐஎஸ் குழுவுக்கு எதிராக சண்டையிட்ட பெண்களை மட்டும் உள்ளடக்கிய பெண்கள் பாதுகாப்பு பிரிவில் உள்ள பெண்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. பெண்கள் பாதுகாப்பு பிரிவின் செய்தித்தொடர்பாளர் ரோக்சனா முகமதுவின் அலுவலக அறை சுவர்கள் போரில் உயிரிழந்த சக பெண் கமாண்டர்களின் புகைப்படங்களால் நிறைந்துள்ளது. "சிரியாவின் புதிய தலைமையில் பெண்களுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்பட்டு நாங்கள் பார்க்கவில்லை," என்கிறார் அவர். "ஏன் ஒரு பெண் பாதுகாப்பு அமைச்சராக இருக்கக்கூடாது?" இந்தப் பகுதியில் பெண்கள் தங்களது உரிமைகாக போராடியதாக ரோக்சனா முகமது சொல்கிறார். அரசியல், சமூக மற்றும் ராணுவ வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் பங்கேற்றுள்ளனர். "எங்களது உரிமைகள் மதிக்கப்படாவிட்டால் , நாங்கள் எப்படி ஆயுதங்களை கைவிடுவோம்?." என அவர் கேள்வி எழுப்புகிறார். எனவே சிரியாவில் நிலைத்தன்மை அருகில் தெரிவதாக சிலர் நம்பினாலும், குர்து மக்களை பொறுத்தவரை எதிர்காலம் தெளிவில்லாமல்தான் இருக்கிறது. புதிய சிரியாவில் அவர்கள் கூட்டாளிகளாக அங்கீகரிக்கப்படுவார்களா அல்லது மற்றொரு வாழ்க்கை போராட்டதை சந்திப்பார்களா? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn7vvxxmxm3o
-
யாழ். போதனா நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம்!
சங்கமாக பணிப்புறக்கணிப்புச் செய்வதால் தனிநபர்களை தண்டிக்க முடியாதே அக்கா.
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு காவல் நிலையத்தின் காவல் அதிகாரி, கொலைத் திட்டம் குறித்து ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த பொலீஸ் அதிகாரி கைதை குறிப்பிடுகிறார்கள் அண்ணை.
-
அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை : அநுரவின் அதிரடி அறிவிப்பு
சிங்கப்பூர் அரசினால் தப்பிய அர்ஜுன் மகேந்திரன்: தோல்வியில் முடிந்த அரசாங்கத்தின் முயற்சி சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த சிங்கப்பூர் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு பத்து பில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிடியாணை இது தொடர்பில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, வரும் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மகேந்திரனுக்கு அழைப்பானை அனுப்பியிருந்தது. இருப்பினும், அன்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை, பின்னர் அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக மகேந்திரனை கைது செய்ய கொழும்பு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்டர்போல் மூலம் பிடியாணை பிறப்பித்திருந்தது. நாடு கடத்தல் இதேவேளை, மகேந்திரனை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில், அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு நாடு கடத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் பல சந்தர்ப்பங்களில் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ளதால், நாட்டின் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் அவரை இலங்கைக்கு நாடு கடத்த முடியாது என்று சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. https://ibctamil.com/article/attempt-to-extradite-arjuna-mahendran-fails-1740670114#google_vignette
-
அரச தரப்பு வெளியிட்ட செலவு அறிக்கை: சபையில் கொந்தளித்த மனோ கணேசன்
முன்னாள் சபாநாயகர்கள் உட்பட பல அதிகாரிகள் தங்கள் பதவிக் காலத்தில் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் எரிபொருள் தொடர்பான பல செலவு அறிக்கைகளை சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) நாடாளுமன்றில் இன்று வெளியிட்டார். அதன்படி, 2024 நவம்பர் வரை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 70 ஊழியர்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். சபாநாயகரின் வாகன செலவு 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 24 ஆம் திகதி வரை, முன்னாள் சபாநாயகர் 9 வாகனங்களைப் பயன்படுத்தியதாகவும், அந்த 9 மாத காலத்தில் மட்டும் எரிபொருளுக்காக ரூ.3.34 மில்லியன் செலவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், முன்னாள் துணை சபாநாயகர் 9 மாதங்களில் 6 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்றும், எரிபொருளுக்காக 1.35 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளார் என்றும் சபைத் தலைவர் தெரிவித்தார். மேலும், முன்னாள் துணைக் குழுத் தலைவர் 04 வாகனங்களைப் பயன்படுத்தியதாகவும், எரிபொருளுக்காக 7.2 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மனோ கணேசன் கண்டனம் இந்த நிலையில், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க கருத்து தெரிவித்ததை தொடர்ந்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan), இவ்வாறான விடயங்களை வெளியிடும் போது பொதுவாக அனைவரையும் குறிப்பிடாமல் தொடர்புடைய நபரின் பெயரை கூறுமாறு கேட்டுக் கொண்டார். https://ibctamil.com/article/expense-reports-of-former-speakers-sri-lanka-1740655791
-
யாழ். போதனா நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளார்கள் பெரும் அவதி யாழ்.போதனா வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையினால் வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் அவதிவை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது. வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (27) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை வைத்திய அதிகாரிகள் இடைநிறுத்தி உள்ளதால் வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்நோக்கியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியர்கள் சங்கத்தின் குறித்த போராட்டத்தினால் வைத்தியசாலையின் வழமையான செயற்பாடுகள் பலவும் இயங்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. கோரிக்கை இதனால் பல்வேறு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் சிகிச்சையை பெற்றுக் கொள்ள முடியாமல் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் நோயாளர்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளதாகவும் நோயாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டுமெனவும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். https://ibctamil.com/article/jaffna-hospital-patients-suffering-today-strike-1740663619#google_vignette
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: 20 பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசிகள் பறிமுதல்! கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக, அன்றைய தினம் நீதிமன்றத்தில் அவரைப் பாதுகாத்து வந்த காவல்துறை சிறப்புப் படை மற்றும் சிறைச்சாலைகள் துறையைச் சேர்ந்த சுமார் 20 அதிகாரிகளின் கையடக்கத் தொலைபேசிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மற்றும் சிறைச்சாலைகள் துறையைச் சேர்ந்த சுமார் 30 அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய கொழும்பு குற்றப்பிரிவு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது. வாக்குமூலங்கள் அதன்படி, அவர்களின் தொலைபேசிகளை சம்பந்தப்பட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, கொலை சம்பவம் தொடர்பாக 15 சிறைச்சாலை அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொலைத் திட்டம் அத்தோடு, கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு காவல் நிலையத்தின் காவல் அதிகாரி, கொலைத் திட்டம் குறித்து ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கொலையின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள தற்போது தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி என்ற பெண் சந்தேகநபருடன் தொடர்பு வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/ganemulla-sanjeewa-murder-case-investigation-1740653459
-
ஒரே இரவில் 7 கோள்கள் வானில் தெரியும் அதிசயம் - எப்போது, எப்படி பார்ப்பது? பூமியில் என்ன நடக்கும்?
'இப்போது தவறவிட்டால் 2040ல் தான் தெரியும்': வானில் ஒரே நேரத்தில் அணிவகுக்கும் ஏழு கோள்கள் - 5 கேள்வி பதில்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏற்கெனவே செவ்வாய் கோள் இடதுபக்கத்திலும், வியாழன் கோள் நடுவிலும், சனி மற்றும் வெள்ளி கோள்கள் வலதுபக்கத்திலும் தெரிந்தது. ஆனால், இந்த வாரம் ஏழு கோள்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும் கட்டுரை தகவல் எழுதியவர், மேடி மோல்லோய் பதவி, பிபிசி காலநிலை & அறிவியல் செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பிப்ரவரி 28 அன்று (நாளை) செவ்வாய், வியாழன், யுரேனஸ், வெள்ளி, நெப்டியூன், புதன் மற்றும் சனி ஆகிய ஏழு கோள்களையும் மாலையில் ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என்பது, வானியல் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படி பல கோள்கள் அணிவகுத்து நிற்கும் இந்த அரிய நிகழ்வை 'பிளானெட்டரி பரேட்' (planetary parade) என அறிவியல் மொழியில் அழைக்கின்றனர். இப்போது இந்த நிகழ்வை நீங்கள் தவறவிட்டால், 15 ஆண்டுகள் கழித்து 2040-ம் ஆண்டில்தான் தோன்றும். இந்த நிகழ்வை இன்னும் சில தினங்கள் பார்க்க முடியும் என்கின்றனர் வானியலாளர்கள். சூரியன் மறைந்த பின்னர், முடிந்தவரை அனைத்து கோள்களையும் பார்ப்பதற்கு சிறந்த நேரமாகும். இதுகுறித்து நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கேள்வி-பதில்களை இங்கே தொகுத்துள்ளோம். வானியல் அற்புதம்: ஒரே இரவில் வரிசை கட்டி நிற்கும் 7 கோள்கள் - எப்போது, எப்படி பார்ப்பது? பூமியில் என்ன நடக்கும்? பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட 2024 YR4 விண்கல் நிலவில் மோதப் போகிறதா? நாசா புதிய தகவல் கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? - 5 அரிய தகவல்கள் செவ்வாய் மற்றும் நிலாவில் மனிதன் குடியேற சென்னை ஐஐடியின் இந்த ஆய்வு எவ்வாறு உதவும்? 'பிளானெட்டரி பரேட்' என்பது என்ன? நமது சூரிய குடும்பத்தின் முக்கிய 8 கோள்களும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருகின்றன. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கோளானது, 88 நாட்களில் ஒரு சுற்றை நிறைவு செய்கிறது. அதாவது, புதன் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 88 நாட்கள். பூமியின் ஆண்டு 365 நாட்கள். அதிகபட்சமாக நெப்டியூன் சூரியனை சுற்றிவர 60,190 நாட்கள், அதாவது சுமார் 165 புவி ஆண்டுகள் ஆகும். கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருவதால், சில நேரங்களில் அவற்றில் பல, சூரியனின் ஒரே பக்கத்தில் வரிசை கட்டி நிற்பது உண்டு. பூமியிலிருந்து காணும் போது இரவு வானில் ஒரே நேரத்தில் பல கிரகங்களை நம்மால் காண முடியும். சில அபூர்வ சந்தர்ப்பங்களில் இரவு வானில், அவை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தரும். இதை 'பிளானெட்டரி பரேட்' என்கின்றனர். சூரியனை சுற்றிவரும் கோள்கள் வெவ்வேறு வேகம் மற்றும் தொலைவில் சூரியனை சுற்றிவருகின்றன. அப்படியிருக்கும் போது பூமியிலிருந்து ஒரே நேரத்தில் அணிவகுத்து நிற்கும் கோள்களை பார்ப்பது பிரமிக்கத்தக்க காட்சியாக இருக்கும். எனினும், இந்த கோள்கள் பூமியிலிருந்து வெகு தொலைவிலேயே இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வானில் கோள்கள் ஒரே நேரத்தில் வரிசையாக நிற்பதை சித்தரிக்கும் படம் அனைத்து கோள்களையும் வெறுங்கண்ணால் பார்க்க முடியுமா? சிறந்த நேரம் எது? புதன், வெள்ளி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களை வெறுங்கண்களாலேயே பார்க்க முடியும். சனிக்கோள் அடிவானத்தில் கீழாக இருக்கும் என்பதால் அதை பார்ப்பது கடினம். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களை தொலைநோக்கி மூலமே பார்க்க முடியும். அடிவானம் மற்றும் வானம் தெளிவாக இருந்தால் அனைத்து கோள்களையும் பார்ப்பதற்கு சிறப்பான வாய்ப்பாக இருக்கும். ஆனால், ஏழு கோள்களையும் பார்ப்பதற்கான நேரம் மிக குறைவானதே. தென்கிழக்கு லண்டனில் உள்ள கிரீன்விச் ராயல் கோளரங்கத்தின் வானியலாளர் முனைவர் எட்வர்ட் ப்ளூமர் கூறுகையில், "நாம் எளிதாக பார்க்கும் விதத்திலான இடத்தில் அந்த ஏழு கோள்களும் இருக்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது." என்றார். 'கோவில் திருவிழா அழைப்பிதழ்களில் சாதிப் பெயர் கூடாது' - நீதிமன்ற உத்தரவுக்கு அறநிலையத்துறை பதில் என்ன?26 பிப்ரவரி 2025 தவெக ஆண்டு விழாவில் விஜய் பேசிய 5 முக்கிய விஷயங்கள்26 பிப்ரவரி 2025 எந்தெந்தெ கோள்களை பார்ப்பது கடினம்? சூரியன் மறையும்போது சனி மற்றும் புதன் கோள்களும் மறையும் சமயம் என்பதால், அவற்றை பார்ப்பது கடினமானது. "சூரியன் மறைந்த பிறகு அந்த கோள்களை பார்ப்பதற்கு உங்களுக்கு சில நிமிடங்களே இருக்கும். அதன்பின், அவை அடிவானத்துக்குக் கீழே சென்றுவிடும். அதன்பின்னும் வெள்ளி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களை இன்னும் சிறிது அதிக நேரத்துக்கு பார்க்க முடியும்," என்கிறார் ப்ளூமர். பட மூலாதாரம்,GETTY IMAGES கோள்களை பார்ப்பதற்கு சிறந்த சூழல் எது? வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய கோள்கள் மிக பிரகாசமான கோள்கள் என்பதால் அவற்றை எளிதாக பார்க்க முடியும். அதேசமயம், செவ்வாய் கோள் தனித்துவமான சிகப்பு நிறத்தில் காட்சியளிக்கும். "யுரேனஸ் கோளை வெறுங்கண்ணால் பார்க்க முடியும், ஆனால் உங்களுக்கு சிறந்த பார்வை திறனும் தகுந்த சூழலும் அமைய வேண்டும்," என விளக்குகிறார் ப்ளூமர். ஒளி மாசு குறைவாகவும் அடிவானம் தெளிவாகவும் தெரியும் இடத்துக்கு சென்று பார்த்தால், அதிகமான கோள்களை பார்ப்பதற்கான வாய்ப்புகள் கூடும் என்றும் முனைவர் ப்ளூமர் அறிவுறுத்துகிறார். "நீங்கள் அப்போதுதான் உங்கள் சமையலறையிலிருந்து கொல்லைப்புறத்துக்கு வந்திருந்தால், அதன் வெளிச்சத்துக்கு நீங்கள் பழக நேரம் எடுக்கும். அதற்கு சிறிது நேரம் கொடுங்கள், அந்த வெளிச்சத்துக்கு முழுமையாக உங்கள் கண்கள் பழகுவதற்கு அரை மணிநேரம் ஆகும்," என்கிறார் ப்ளூமர். "உங்கள் மொபைல்போனை பார்ப்பதை தவிருங்கள், சௌகரியமாக இருங்கள். அடிவானத்தை தடையின்றி பார்ப்பதை உறுதிசெய்யுங்கள்." இது ஓர் ஆச்சர்யகரமான வாய்ப்பு எனக்கூறும் அவர், இரவு வானத்தை உற்றுநோக்குவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஊக்கப்படுத்துகிறார். "எப்படி விஷயங்கள் மாறுகின்றன என்பதை கவனியுங்கள்," எனக்கூறுகிறார் அவர். "சூரிய குடும்பத்தின் இயக்கவியலை கவனிப்பதற்கான ஒரு வாய்ப்பு வானத்தைப் பார்ப்பதுதான்." என்கிறார் அவர். சந்தரா: சமணர்கள் கடைபிடிக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை விடும் நடைமுறை26 பிப்ரவரி 2025 செலவிட பணமில்லாமல் திணறும் 100 கோடி இந்தியர்கள் - ஆய்வு கூறுவது என்ன?26 பிப்ரவரி 2025 இந்தியாவில் பார்க்க முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புதன், செவ்வாய், வியாழன், சனி கோள்கள் வெறும் கண்களாலேயே காணக்கூடிய அளவு பிரகாசமாக இருக்கின்றன உலகம் முழுவதிலும் இந்த வானியல் அற்புதத்தைப் பார்க்க முடியும் என்கிறார், மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் "வெறுங்கண்ணாலேயே பெரும்பாலான கோள்களை பார்க்க முடியும். யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரு கோள்களை மட்டும் தொலைநோக்கியால் பார்க்க முடியும். வானம் தெளிவாக இருக்க வேண்டும், மேக மூட்டத்துடன் இருக்கக் கூடாது என்பதை மட்டும் தான் நினைவில் கொள்ள வேண்டும்." என்றார் அவர். சென்னை பிர்லா கோளரங்கத்தின் விஞ்ஞானி லெனின் கூறுகையில், "இதை வீட்டிலிருந்தே பார்க்க முடியும். இது பிப். 28-ல் தொடங்கி சில நாட்களுக்கு தெரியும். அதன்பின், ஒவ்வொரு கோளும் வெவ்வேறு காலத்தில் அடிவானத்தில் கீழே சென்றுவிடும்." என்றார். கூடுதல் தகவல்கள்: ஜோனதன் ஓ'கலஹன், பிபிசி அறிவியல் செய்தியாளர் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgwm0re7ywo
-
யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
உச்சம் தொட்ட தேங்காய் விலைக்கு விரைவில் தீர்வு : அரச தரப்பு தகவல் நாட்டில் தற்போது தேங்காயின் விலையானது பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுப்பட்டுள்ளதை தாம் ஏற்றுக் கொள்வதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (25.02.2025) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தேங்காய் பிரச்சினை அரசாங்கம் என்ற ரீதியில் தேங்காய் பிரச்சினையை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு ஊடாக சதோச நிறுவனத்திடம் ஒப்படைத்து மக்களுக்கு சாதாரண விலைக்கு தேங்காயை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். விலங்குகளின் பிரச்சினை, உர பற்றாக்குறை மற்றும் காலநிலை காரணமாக அதிக அளவில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது. மேலும் தற்போதைய தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக கம்பஹா மாவட்டத்தில் 2.5 மில்லியன் தென்னங்கன்றுகளை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக இந்த சிறப்பு தேங்காய் சாகுபடி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். https://ibctamil.com/article/increase-in-price-of-coconuts-shortage-in-srilanka-1740476181#google_vignette
-
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ‘தங்க அட்டை’; விலை 5 மில்லியன் அமெரிக்க டொலர் - ட்ரம்ப் அறிவிப்பு
டிரம்பின் 'கோல்டு கார்டு' விசா என்றால் என்ன? - கிரீன் கார்டில் இருந்து வேறுபட்டதா? பட மூலாதாரம்,GETTY IMAGES 27 பிப்ரவரி 2025, 11:05 GMT புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் 5 மில்லியன் டாலர்கள் செலவழித்து பெறக்கூடிய "கோல்டு கார்டு" விசா திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் பணக்கார வெளிநாட்டினர் நிரந்திரமாக குடியிருப்பதற்கான (permanent residency) உரிமையை வழங்கும். மேலும், அவர்கள் நாட்டின் குடிமக்கள் ஆவதற்கான பாதையாகவும் இது இருக்கும். "அவர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள். அதிக பணம் செலவிடுவார்கள், அதிக வரி செலுத்துவார்கள். மேலும் பலரை வேலைக்கு அமர்த்துவார்கள். இந்த திட்டம் மிகுந்த வெற்றியை பெறும் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று வெள்ளை மாளிகையிலுள்ள அதிபர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமையன்று டிரம்ப் கூறினார். தற்போது நடைமுறையில் இருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விசா வழங்கும் ஈபி-5 முதலீட்டாளர் விசா திட்டத்திற்கு பதிலாக, புதிய "கோல்டு கார்டு" விசா திட்டம் இருக்கும் என்றார் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவார்ட் லட்னிக். இந்தியாவுடன் முரண்படும் வங்கதேசத்தை வளைக்க சீனா முயற்சியா? டிரம்பின் முடிவுகள் அமெரிக்கா - அரபு நாடுகளுக்கு இடையே இந்தியாவை சிக்க வைத்துவிட்டதா? ஒரே வாரத்தில் உலகிலும், உள்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டிரம்பின் 19 நடவடிக்கைகள் டிரம்ப் முன்மொழிவது என்ன ? புதிய விசாவை பெற வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தேவை குறித்து டிரம்ப் எதையும் குறிப்பிடவில்லை. "அது பணக்காரர்களுக்கானதாக இருக்கும்," என்றார் அவர். ஈபி-5 விசாக்களின் எண்ணிக்கை வரம்பிடப்பட்டுள்ள நிலையில், அதன் பற்றாக்குறையை குறைக்க 10 மில்லியன் "கோல்டு கார்டுகளை" அரசு விற்கலாம் என்றார் டிரம்ப். இது "சிறப்பானதாக இருக்கலாம், அல்லது இது மிகவும் அற்புதமாக இருக்கலாம்" என்றும் அவர் தெரிவித்தார். "இது பணக்காரர்கள் அல்லது மிகவும் திறமையான நபர்களுக்கான குடியுரிமைக்கான பாதையாகும். திறமையான நபர்கள் நாட்டிற்குள் வருவதற்கு பணக்காரர்கள் பணம் செலுத்துவார்கள். மேலும் இதுபோன்றவர்களை நாட்டிற்கு அழைத்து வரவும், அவர்கள் நாட்டில் நீண்ட காலம் தங்குவதற்கான உரிமையை பெறவும் நிறுவனங்கள் பணம் செலுத்தும்" என்று அவர் குறிப்பிட்டார். பணக்கார ரஷ்யர்கள் இதற்குத் தகுதி பெற முடியுமா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, "ஆம், ஒருவேளை அவர்களும் தகுதி பெறலாம். எனக்கு தலைசிறந்த சில ரஷ்யப் பணக்காரர்களைத் தெரியும், அவர்கள் மிகவும் நல்ல மனிதர்கள்" என்று டிரம்ப் பதிலளித்தார். இருப்பினும், அனைத்து விண்ணப்பதாரர்களும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று லட்னிக் கூறினார். கோல்டு கார்டு விசா வைத்திருப்பவர்கள் குடியுரிமைக்காக எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. தற்போதைய ஈபி-5 திட்டத்தின் பயனாளிகள் (கிரீன் கார்ட் வைத்திருப்பவர்கள்) ஐந்து ஆண்டுகள் நிரந்தர குடியிருப்பாளராக அமெரிக்காவில் வசித்த பிறகே அமெரிக்க குடியுரிமை பெற தகுதி பெற முடியும். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்கான தகுதிகளை நாடாளுமன்றம் தீர்மானிக்கிறது, ஆனால் "கோல்டு கார்டு விசா" பெறுவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய திட்டத்தின் விவரங்கள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். ஈபி -5 திட்டத்தை ஏன் மாற்ற வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் கூறுகையில், டிரம்பின் "கோல்டு விசா" 35 ஆண்டுகால ஈபி-5 முதலீட்டாளர் விசா திட்டத்திற்கு பதிலாக உருவாக்கப்பட்டுள்ளது என்றார். "ஈபி-5 திட்டம்...அர்த்தமற்றது, கற்பனையால் நிரம்பியதும் மோசடிகளால் நிறைந்ததுமாக இருந்தது. குறைந்த விலையில் கிரீன் கார்ட் பெறுவதற்கான ஒரு வழியாக இது இருந்தது. எனவே இதுபோன்ற அபத்தமான ஈபி-5 திட்டத்தை வைத்திருப்பதைக் காட்டிலும், நாங்கள் ஈபி-5 திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என்று அதிபர் கூறினார்'' என்கிறார் லட்னிக். வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றம் 1990ம் ஆண்டில் ஈபி-5 திட்டத்தை தொடங்கியது. சுமார் 1 மில்லியன் டாலர் முதலீடு செய்து, குறைந்தபட்சம் 10 வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களுக்கு இந்த விசா வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டிற்கு ஈடாக உடனடியாக கிரீன் கார்டு பெறுகிறார்கள், இது எதிர்காலத்தில் அவர்கள் குடியுரிமை பெறுவதற்கான ஒரு வழியாகும். ஆனால், கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் பெரும்பாலானோர், நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்தை பெற பல மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஈபி-5 திட்டமானது வருடத்திற்கு 10,000 விசாக்களுக்கு வரம்பிடப்பட்டுள்ளது, மேலும் வேலைவாய்ப்பின்மை அதிகம் உள்ள பகுதிகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்காக 3,000 விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. பிற குடியேற்ற விசாக்களை விட ஈபி-5 விசாக்களால் மோசடி நடவடிக்கைகள் அதிகம் ஏற்படும் ஆபத்து உள்ளது என்று 2021ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவையின் அறிக்கை கண்டறிந்தது. " முதலீட்டாளர்களின் நிதி சட்டப்படி பெற்றதா என்பதைச் சரிபார்ப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் இந்த விசா மூலம் கிடைக்கக்கூடிய பண ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றுடன் இந்த வகையான ஆபத்துக்கள் தொடர்புடையவை. இது முதலீட்டாளர்களை ஏமாற்ற தனிநபர்களை தூண்டக்கூடும் மற்றும் விசா வழங்கும் முறையில் சிலருக்கு விருப்பச்சலுகை வழங்கப்படுகின்றது எனும் தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும்," என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. பில் கேட்ஸின் பால்ய காலம் எப்படி இருந்தது? அவர் நன்கொடைகளை அள்ளி வழங்குவது ஏன்?23 பிப்ரவரி 2025 எப்.பி.ஐ. இயக்குநராக பதவியேற்பு: இந்திய வம்சாவளி காஷ் படேலைப் பார்த்து டிரம்ப் எதிர்ப்பாளர்கள் அஞ்சுவது ஏன்?23 பிப்ரவரி 2025 டிரம்ப் - புதின் இடையிலான ஒரே ஒரு தொலைபேசி உரையாடல் உலகையே உலுக்கியது எப்படி?22 பிப்ரவரி 2025 இதே போன்ற திட்டங்கள் மற்ற நாடுகளில் எவ்வாறு செயல்படுகின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோல்டு விசாக்கள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் பணக்காரர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன இது போன்ற திட்டங்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. "கோல்டு கார்டு விசா" திட்டங்கள், பணக்கார வெளிநாட்டினரின் பெரிய முதலீட்டிற்கு ஈடாக நாட்டில் வசிக்கவும் வேலை செய்யவும் உரிமை வழங்குகின்றன. "கோல்டு பாஸ்போர்ட்" திட்டங்களும் சில கரீபியன் நாடுகளில் பிரபலமாக உள்ளன. இந்த திட்டங்களின் மூலம், அந்த நாட்டில் வேலை செய்யவும் வாக்களிக்கவும் உள்ள உரிமைகள் உட்பட குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் சுதந்திரங்களையும் பணக்கார தனிநபர்கள் பெறுகின்றனர். இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் அறிக்கையின்படி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், கிரீஸ், மால்டா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் இத்தாலி உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட நாடுகள், பணக்கார தனிநபர்களுக்கு "கோல்டு விசாக்களை'' வழங்குகின்றன என அறியப்படுகின்றது. இருப்பினும், இந்த திட்டங்கள் அதிகமான விமர்சனங்கள் மற்றும் கண்காணிப்பிற்கு உட்பட்டுள்ளன. "(அவை) வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் பொருளாதார வளர்ச்சியை தூண்டும், ஆனால் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை சட்டபூர்வமான வருவாய் போல மாற்றி, ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புடைய பணத்தை ஒழுங்குபடுத்த இது உதவலாம்," என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) 2023ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊழலுக்கு எதிராக செயல்படும் உலகளாவிய தன்னார்வ தொண்டு நிறுவனமான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள திட்டங்கள் "உண்மையான முதலீடு அல்லது இடம்பெயர்வு பற்றியது அல்ல, மாறாக ஊழல் நலன்களுக்கு சேவை செய்வது" என்று எச்சரிக்கிறது. 2022 ஆம் ஆண்டில், சிவில் உரிமைகள், நீதி மற்றும் உள்நாட்டு விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியக் குழு கோல்டு பாஸ்போர்ட்டுக்களை தடை செய்வதற்கு வாக்களித்தது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விசா இல்லாமல் வருகை தர அனுமதிக்கும் மூன்றாம் தரப்பு நாடுகளை தங்களுடைய பாஸ்போர்ட் திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தியது. இந்த காரணங்களே, பிரிட்டன் , ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் கிரீஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சமீபத்திய ஆண்டுகளில் தங்களுடைய கோல்டு விசா திட்டங்களை திரும்பப் பெற வழி வகுத்தன. எடுத்துக்காட்டாக, ஸ்பெயின், 2013 இல் உருவாக்கப்பட்ட அதன் "கோல்டு விசா" திட்டத்தை நீக்கியது. இது முதலீட்டாளர்களுக்கு 500,000 யூரோ(525,000 டாலர்) அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களை வாங்குவதற்கு ஈடாக விசா வழங்கியது. இதற்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி காலக்கெடு 3 ஏப்ரல் 2025 ஆகும். இங்கிலாந்தின் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அண்ட் பாலிடிக்கல் சயின்ஸ் (London School of Economics and Political Science) மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) இணைந்து நடத்திய ஐரோப்பிய ஒன்றிய கோல்டு விசாக்கள் பற்றிய ஆய்வு இந்த திட்டங்களின் பொருளாதார நியாயத்தை கேள்விக்குள்ளாக்கியது. ஆய்வின் முடிவில், இவை "மிக குறைந்த" பொருளாதார தாக்கத்தைதான் ஏற்படுத்துகிறது என கூறப்பட்டது. புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் உலகளாவிய வலையமைப்பான, 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டத்தால்' நடத்தப்பட்ட விசாரணை அக்டோபர் 2023ல் வெளியிடப்பட்டது. போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் லிபிய கேப்டன் மற்றும் துருக்கியில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு துருக்கிய தொழிலதிபர் ஆகிய இருவராலும் இந்த திட்டங்களின் மூலம் டொமினிகன் பாஸ்போர்ட்டை வாங்க முடிந்தது என்பது இந்த விசாரணை மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c86ppw8yz91o
-
யுத்த நிறுத்தத்தின் அடுத்த கட்டம் குறித்த அச்சத்திற்கு மத்தியில் காசாவில் குளிரினால் குழந்தைகள் இறக்கின்றன - என்பிசி நியுஸ்
Published By: RAJEEBAN 27 FEB, 2025 | 12:31 PM குழந்தைகளிற்கான போர்வையில் போர்த்தப்பட்டு தந்தையின் அரவணைப்புடன் ஷாம் அல் சான்பாரி, இரண்டு கிழமைக்கு முன்னர் மிகவும் கடினமான முயற்சியின் பின்னர் சாத்தியமான யுத்த நிறுத்தம் காரணமாக காசாவில் ஒரளவு அமைதி நிலவிய இரண்டு கிழமைக்கு முன்னர் உலகிற்கு வந்தார். எனினும் காசா யுத்தம் அவளின் உயிரையும் பறித்தது. திங்கட்கிழமை இரவு காசாவில் சமீபத்தில் கடும் குளிரினால் உயிரிழந்த ஏழு குழந்தைகளில் ஒருவராக ஷாம் அல் சான்பாரி மாறினாள். சுகாதார அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். அவளது குடும்பம் ஆயிரக்கணக்கான ஏனைய பொதுமக்கள் போல கடும் குளிரில் தற்காலிக கூடாரங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களால் அவர்களின் வீடுகள் வாழமுடியாதவையாக மாற்றப்பட்ட பின்னரே அவர்கள் தற்காலிக கூடாரங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர். நள்ளிரவு குழந்தையின் தாயார் அவளை உறங்கச்செய்தார் என தந்தை முகமட் தவ்பீக் அல்சன்பாரி என்பிசி செய்தியாளர்களிற்கு இதனை தெரிவித்தார். காசாவின் வடக்குகிழக்கில் உள்ள பெய்ட் இன் கனூனில் அவர் இதனை தெரிவித்தார். காலையில் அவளை நாங்கள் எழுப்ப முயன்றோம் அவள் எழும்பவில்லை என அவர் தெரிவித்தார். தனது மகளின் சிறிய உடல் சிறிய புதைகுழிக்குள் வைக்கப்படுவதை பார்த்தபடி அவர் இதனை தெரிவித்தார். கடந்த இரண்டு வாரகாலப்பகுதியில் கடும் குளிரால் மேலும் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளன என காசாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் முனீர் அல் பேர்ஸ் தெரிவித்தார். காசாவில் வீடுகள் அழிக்கப்பட்ட குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களிலும் ஏனைய தற்காலிக தங்குமிடங்களிலும் உறங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சிலா அப்துல் காதர் என்ற இரண்டு வயது குழந்தையே இறுதியாக கடும்குளிர் காரணமாக உயிரிழந்தது என பாலஸ்தீன சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் முனீர் அல் பேர்ஸ் தெரிவித்தார். எனது மகள் இறப்பதற்கு முன்னர் 100 வீதம் ஆரோக்கியமானவளாக காணப்பட்டாள், விளையாடினால் வழமை போல சிரித்தால் என என தந்தை முகமட் தவ்பீக் அல்சன்பாரி தெரிவித்தார். ஆனால் நான் கூடாரத்தில் வசிக்கின்றேன் கடும் குளிர் அவள் எப்படி உயிர் தப்பமுடியும் என அவர் கேள்வி எழுப்பினார். காசாவில் கடந்த ஒருவாரகாலமாக இரவில் குளிர் 10டிகிரிக்கும் குறைவானதாக காணப்படுகின்றது, என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் குளிரினால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம். ஒருவருடத்திற்கு மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் காரணமாக காசாவின் மருத்துவமனைகள் முற்றாக அழிந்துள்ளன. இதன் காரணமாக உயிரை பாதுகாப்பதற்காக அடிப்படை மருத்துவ வசதிகளை காசா மக்கள் பெறுவது கூட சாத்தியமற்ற விடயமாகியுள்ளது. காசாவில் பாடசாலைகள்மருத்துவமனைகள் உட்பட 70 வீதமான உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும்,65வீதமான வீடுகளும் வீதிகளும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஒக்டோபர் 2023ம் திகதி ஒக்டோபர் மாதம் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக 48300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் ஒரு இரண்டுவயது குழந்தையாவது உயிரிழந்துள்ளதை பதிவு செய்துள்ளதாக ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த பாலஸ்தீனியர்களிற்கான மருத்துவ உதவி என்ற பிரித்தானிய அமைப்பொன்று தெரிவித்துள்ளது. குளிர் காரணமாகவே அந்த குழந்தை உயிரிழந்தது,குளிர் பாதிப்பு காரணமாக மேலும் மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/207820
-
திட்டமிட்டபடி நாளை தொடர் உண்ணாவிரதம் - தமிழக மீனவர்கள் அறிவிப்பு
Published By: DIGITAL DESK 3 27 FEB, 2025 | 04:49 PM எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு நாளை வெள்ளிக்கிழமை (28) முதல் தங்கச்சிமடத்தில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள மீனவர்கள் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தவுள்ளனர். இந்நிலையில், இன்றையதினம் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீன்வளத்துறை வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கைவிட கோரி மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து தமிழக மீனவர்கள் நாளையதினம் திட்டமிட்டபடி தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/207845
-
வட, கிழக்கில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு 'தீவிரவாதி' முத்திரை - மேரி லோலர் விசனம்
Published By: VISHNU 27 FEB, 2025 | 03:47 AM (நா.தனுஜா) இலங்கையில் மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதாகவும், தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதாகவும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வில் செவ்வாய்கிழமை (25) இலங்கை சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும் எனவும், நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார். அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை தொடர்பான வாய்மொழிமூல அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. அதேபோன்று உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள் மற்றும் மீறல்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன்படி இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாவலர்களின் நிலை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மேரி லோலர், மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதாகவும், தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி பல பெண் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கும்போது தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/207783
-
அரசியல்மயப்படுத்தப்படாத அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையை உறுதிப்படுத்தவேண்டும் - சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய
Published By: VISHNU 27 FEB, 2025 | 03:52 AM (நா.தனுஜா) அரசியலமைப்பில், குறிப்பாக நிறைவேற்றதிகாரத்தில் மேற்கொள்ளப்படும் தொடர் திருத்தங்கள், அரசியலமைப்புத்திருத்தங்கள் அரசியல்மயப்படுத்தப்படக்கூடிய அச்சுறுத்தலைக் காண்பிக்கின்றது. அரசியலமைப்பானது அரசியல் நலன்களுடன் பிணைந்ததாக இருக்கக்கூடாது. மாறாக அது ஒட்டுமொத்த மக்களினதும் கூட்டு நலனைப் பிரதிபலிப்பதாக அமையவேண்டும். எனவே நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு, இலங்கையில் சகலரையும் உள்ளடக்கிய, அரசியல்மயப்படுத்தப்படாத அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையொன்று முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தினார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் செவ்வாய்கிழமை (25) கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே ரஜீவ் அமரசூரிய மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: ஜவகர்லால் நேருவினால் 1951 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கருத்து, அடிக்கடி திருத்தங்களுக்கு உட்படுத்தப்படக்கூடாத அரசியலமைப்பின் மேன்மைத்தன்மையைக் காண்பிக்கின்றது. இருப்பினும் இலங்கையின் அரசியலமைப்பானது கடந்த இரு தசாப்தகாலத்தில் 17 ஆவது திருத்தம் முதம் 21 ஆவது திருத்தம் வரை பல திருத்தங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது. இத்திருத்தங்கள் அவை மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் நிலவிய அரசியல் மற்றும் சமூக ரீதியான வல்லாதிக்கம் அரசியலமைப்பின் நேர்மைத்தன்மையையும், அரசியலமைப்புவாத கோட்பாட்டையும் புறந்தள்ளியிருப்பதைப் பிரதிபலிக்கின்றன. அரசியலமைப்புவாத கோட்பாடானது ஜனநாயகம், ஆட்சியியல் நிர்வாகம், அதிகாரப்பகிர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கின்றது. அரசியலமைப்பானது அரச இயங்குகையை வடிவமைக்கும் அடிப்படை சட்டக்கட்டமைப்பாகக் காணப்படுகின்றது. நாட்டின் சட்ட, அரசியல் மற்றும் சமூகக்கட்டமைப்பை வழிநடத்தும் மீயுயர் சட்டமாக அரசியலமைப்பு விளங்குகின்றது. அரசியலமைப்பு என்பது சகலரையும் உள்ளடக்கிய, பரந்துபட்ட சட்டக்கட்டமைப்பைக் கொண்டிருக்கவேண்டும். இலங்கையின் அரசியலமைப்பு வரலாறானது ஜனநாயகக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதும், வலுவிழக்கச்செய்வதுமென மாறி மாறி ஏற்ற இறக்கங்களைக் கொண்டமைந்திருக்கின்றது. அரசியலமைப்பும், ஆட்சியியல் கட்டமைப்புக்களும் நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்தி கூட்டிணைந்து இயங்கவேண்டியது அவசியமாகும். இருப்பினும் இலங்கை இன்னமும் அரசியலமைப்பு ஜனநாயகத்தின் முழுமையான இயலுமையை அடைந்துகொள்ளவேண்டியிருக்கின்றது. அரசியலமைப்பில், குறிப்பாக நிறைவேற்றதிகாரத்தில் மேற்கொள்ளப்படும் தொடர் திருத்தங்கள், அரசியலமைப்புத்திருத்தங்கள் அரசியல்மயப்படுத்தப்படக்கூடிய அச்சுறுத்தலைக் காண்பிக்கின்றது. அரசியலமைப்பானது அரசியல் நலன்களுடன் பிணைந்ததாக இருக்கக்கூடாது. மாறாக அது ஒட்டுமொத்த மக்களினதும் கூட்டு நலனைப் பிரதிபலிப்பதாக அமையவேண்டும். எனவே நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு, இலங்கையில் சகலரையும் உள்ளடக்கிய, அரசியல்மயப்படுத்தப்படாத அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையொன்று முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/207785
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ABANDONED 9th Match, Group A (D/N), Rawalpindi, February 27, 2025, ICC Champions Trophy PrevNext Pakistan Bangladesh Match abandoned without a ball bowled
-
இந்திய குடும்பங்களில் ஆண், பெண் சமமாக நடத்தப்படுவது இல்லையா? உச்சநீதிமன்றம் கூறியது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 26 பிப்ரவரி 2025 "எனது வீட்டில் இருக்கப் பிடிக்காமல், நான் பல நாட்கள் அழுதிருக்கிறேன். யாரிடம் சொல்வது என்று தெரியாமல், விட்டு விலகிப் போகவும் முடியாமல், செய்வதறியாமல் இருக்கிறேன். 'ஒரே வீட்டில் வளர்ந்த குழந்தைகளுக்குள் ஏன் இத்தனை பாகுபாடுகள்?' என்ற கேள்வி என்னுள் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று சமீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் கூறினார். இளங்கலை படித்து வரும் 21 வயதான சமீராவுக்கு 25 வயதில் சகோதரர் ஒருவர் இருக்கிறார். வீட்டில் அவருக்கும் அவரது அண்ணனுக்கும் பாலின அடிப்படையில் தனித்தனியே விதிகள் இருப்பதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "எனது சகோதரர் அவர் விரும்பும் நேரத்தில் வெளியே சென்று வரலாம், வீட்டில் அவர் ஒரு வேலையும் செய்யத் தேவையில்லை, அவருக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. ஆனால் நான் கல்லூரி முடிந்தவுடன் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் மற்றும் சமையல், வீட்டைச் சுத்தப்படுத்துவது என்று எல்லாவற்றிலும் உதவி செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது" என்கிறார் சமீரா. சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா ஒரு வழக்கு விசாரணையின்போது, "பாலியல் சமத்துவம் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், பள்ளிகளில் மட்டுமல்ல வீடுகளிலும் இருக்கும் பாலின சமத்துவமின்மை குறித்துப் பேச வேண்டியுள்ளது என்று வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். வீடுகளில் பாலின பாடுபாடு எவ்வாறு இருக்கிறது? பாலின சமத்துவத்தை எட்ட நிபுணர்கள் கூறும் வழி என்ன? காலநிலை மாற்றம்: ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணுக்கு இரட்டைச் சுமை என்று நிபுணர்கள் எச்சரிப்பது ஏன்? சந்தரா: சமணர்கள் கடைபிடிக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை விடும் நடைமுறை கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? சமீராவை போல லோகேஷ் என்பவரும் அவரது வீட்டில் பாலின பாகுபாட்டை உணர்ந்ததாகத் தெரிவித்தார். "வீட்டிற்கு வெளியே செல்லும் வேலையையும் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளையும் நான் செய்வேன். ஆனால் எனது அக்கா வீட்டை விட்டு வெளியே செல்வதில் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன" என்று கூறிய லோகேஷ் தனது வீட்டார் அவரது சகோதரியை திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் கூறினார். "எனது சகோதரிக்கு 24 வயதான உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு எனது பெற்றோர் அழுத்தம் கொடுத்தனர். அப்போதுதான் உறவினர்கள் மற்றும் சமூகத்திற்கு முன்பு தனது குடும்பம் நற்பெயருடன் இருக்கும் என்று எனது பெற்றோர் கருதினர்" என்கிறார் லோகேஷ். இந்தக் கட்டுரைக்காகப் பேசியவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வீட்டில் பாலினப் பாகுபாடு இருப்பதாகத் தெரிவித்தனர். அவற்றில் சமீரா மற்றும் லோகேஷின் அனுபவங்கள் மட்டுமே உதாரணமாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. 2024 YR4: பூமியை மோதவிருந்த பிரமாண்ட விண்கல் என்ன ஆனது? நிலவில் மோதப் போகிறதா?26 பிப்ரவரி 2025 5,000 ஆண்டுக்கு முந்தைய மம்மிகளில் வெளிப்பட்ட நறுமணம் - எகிப்தியர் எவ்வாறு தயார் செய்தனர்?26 பிப்ரவரி 2025 'பாகுபாடு' என்ற சொல் நீக்கப்பட வேண்டும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை அதிகரிப்பதற்கான மூலகாரணம், பாலின சமத்துவம் குறித்த அடிப்படைக் கல்வி இல்லாததுதான் எனக் குறிப்பிட்டு, இது தொடர்பாக அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் ஆபாத் ஹர்ஷத் போண்டா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடந்த வழக்கு விசாரணையில், "பாலின சமத்துவம், ஆண்கள், பெண்களிடம் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்த நெறிமுறைகள் பள்ளிப் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்" என்று நீதிபதி நாகரத்னா கூறியதாக 'தி ஹிந்து' நாளிதழின் செய்தி கூறுகிறது. மேலும் மகள்களுக்கும் மகன்களுக்கும் இடையிலான பாலின சமத்துவம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக வீட்டில் பெற்றோரிடம் இருந்துதான் பாகுபாடே தொடங்குகிறது என்று அவர் தெரிவித்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. "பெற்றோர்கள் தங்கள் மகன்களை அல்லாமல், மகள்களைக் கட்டுப்படுத்துவதிலே அதிக கவனம் செலுத்துகிறார்கள். அகராதியில் இருந்து 'பாகுபாடு' என்ற சொல் நீக்கப்பட வேண்டும்" என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் புதிய பறக்கும் கார் சோதனை24 பிப்ரவரி 2025 காலநிலை மாற்றம்: ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணுக்கு இரட்டைச் சுமை என்று நிபுணர்கள் எச்சரிப்பது ஏன்?23 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,FACEBOOK/BAR & BENCH படக்குறிப்பு,நீதிபதி பி.வி. நாகரத்னா 'வீட்டிலிருந்தே கற்றுக்கொள்கின்றனர்' "பாலின பாகுபாடானது ஒரு குழந்தை பிறந்ததில் இருந்தே தொடங்குகிறது. உதாரணமாக ஆண் குழந்தைக்கு கார், மோட்டார் பைக் போன்ற விளையாட்டுப் பொருட்களும், பெண் குழந்தைகளுக்கு பொம்மைகள், கிச்சன் செட் போன்ற விளையாட்டுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. இதுபோல அவர்களின் ஆடைகள், அதன் வண்ணங்கள் என சின்னச் சின்ன விஷயங்களில் பாலினப் பாகுபாடு குழந்தைகளிடம் புகுத்தப்படுகிறது" என்று பாலின அம்சங்கள் குறித்துப் பயிற்சி அளித்து வரும் அபர்ணா தோட்டா பிபிசி தமிழிடம் கூறினார். பல காலமாகப் பெண்கள் தங்களுக்கான உரிமைகளுக்காகவும் பாலின சமத்துவத்திற்காகவும் போராடி வருகின்றனர். உலகில் எவ்வளவு முன்னேற்றம் வந்திருந்தாலும், இன்னும் பாலின விஷயத்தில் சமூகம் சற்றுப் பின்னோக்கிய நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்கட்டுகிறார். "வீடு என்பது குழந்தைகளின் மீது மிக முக்கியமான தாக்கத்தைச் செலுத்தும் ஓரிடமாக இருக்கிறது. அங்கு எதைப் பார்க்கிறார்களோ, அனுபவிக்கிறார்களோ, அதையேதான் குழந்தைகள் அவர்களது வாழ்நாள் முழுவதும் சமூகத்தில் செயல்படுத்துகிறார்கள்" என்று அரசுப் பள்ளி ஆசிரியரான உமா மகேஷ்வரி கூறுகிறார். "எனது வகுப்பில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், 'நான் ஒரு ஆம்பள அப்படித்தான் கோபப்படுவேன்' என்று சக மாணவரிடம் கூறினார். இந்த நடத்தை குறித்து அவரிடம் கேட்டதற்கு 'எனது அப்பா எனது அம்மாவிடம் இப்படித்தான் நடந்து கொள்வார்' என்று பதிலளித்தார். இவ்வாறு குழந்தைகள் எல்லாவற்றையும் குடும்பச் சூழலில் இருந்தே கற்றுக்கொள்கின்றனர்" என்று உமா மகேஷ்வரி குறிப்பிட்டார். குடும்ப விஷயங்கள் குறித்து முடிவெடுத்தல், கருத்துரிமை தொடங்கி சமமான வேலைப் பகிர்வு வரை வீட்டிலுள்ள பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்டால் அதைப் பார்த்து வளரும் குழந்தைகள் பாலின சமத்துவம் குறித்த சரியான கண்ணோட்டம் கொண்டிருப்பார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார். பிரான்சில் பிரிட்டிஷார் பிடியில் இருந்து தப்ப, கப்பலில் இருந்து கடலில் குதித்த சாவர்க்கர் - என்ன நடந்தது?22 பிப்ரவரி 2025 நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை22 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாலின சமத்துவம் குறித்த கண்ணோட்டத்தை குழந்தைகள் வீட்டிலேயே கற்றுக் கொள்கின்றனர் கடந்த 2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாலின இடைவெளி(global gender gap) குறித்து உலக பொருளாதார மன்றத்தால் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. 146 நாடுகளின் தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பகுப்பாய்வின் பட்டியலில் இந்தியா 129வது இடத்தில் இருக்கிறது. பெண்களுக்கும் சம உரிமை அளிக்கும் விவகாரத்தில், கடந்த ஆண்டுகளில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் அது முழு வீச்சில் நடைபெறாமல் மெதுவாகவே நடப்பதாக ஆசிரியர் உமா மகேஷ்வரி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் வேலைக்குச் செல்கின்றனர். அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் மேம்பட்டுள்ளன. ஆனால் இன்னும் குடும்பச் சூழலில் பெண்கள்தான் வீட்டு வேலைகளைச் செய்பவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பணியில் எத்தகைய உயர்ந்த பதவிகளை வகித்தாலும், வீட்டிற்கு வந்தால் இந்தப் பெண்கள்தான் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியதாக இருக்கிறது" என்கிறார். "பொதுவாக பெண்கள், அவர்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைக் கடந்து, எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று அவரது குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். அவர்களுக்கான சுதந்திரம் வழங்கப்பட்டாலும், குடும்பத்தின் நலன் மீது கொண்ட நாட்டத்தால், அவர்கள் வீட்டு வேலைகளில் பங்களிக்கத் தேர்வு செய்கிறார்கள். இதை ஆண்கள் அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்." இவ்வாறு பாலின சமத்துவம் இல்லாத ஒரு வீட்டிலும், அதைப் பற்றிக் கற்பிக்கப்படாத ஒரு பள்ளியிலும் ஒரு குழந்தை பயிலும்போது, அவர் எவ்வாறு சமூகத்தில் பாலினப் பாகுபாடு காட்டாமல் இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார். டீப்சீக் ஏஐ: செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவுக்கு நிகராக இந்தியா வளர முடியுமா?21 பிப்ரவரி 2025 மேற்கு ஆப்பிரிக்கா: உயிருக்கு ஆபத்தான ஓபியாய்டுகளை அதிகளவில் பரப்புவதன் பின்னணியில் இந்திய மருந்து நிறுவனம் - பிபிசி புலனாய்வு21 பிப்ரவரி 2025 'பாலின சமத்துவப் பாடங்கள் தேவை' படக்குறிப்பு, கல்வியாளர் தேவநேயன் "வெறும் அரசாங்கத்தின் கொள்கைகள், சலுகைகள் மற்றும் சட்டங்களால் மட்டுமே பாலின சமத்துவத்தை நிலைநாட்ட முடியாது, மக்கள் மனதில் முதலில் இந்த மாற்றத்திற்கான விதையை விதைக்க வேண்டும்" என்று கூறுகிறார் கல்வியாளர் தேவநேயன். பாலினப் பாகுபாடுடைய கலாசாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வர கல்வியே அதற்குச் சிறந்த வழி என்று வலியுறுத்தும் அவர், "பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்குமான தற்போதைய பாடத் திட்டத்தில் இதற்கான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். மேலும் இதை மாணவர்களுக்கான புரிதலோடு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்ற பயிற்சியும் ஆசிரியர்களுக்கு முதலில் வழங்கப்பட வேண்டும்," என்கிறார். கடந்த 2024ஆம் ஆண்டு, கேரளாவின் மாநில அரசு, பாலின சமத்துவம் புகட்டும் நோக்கில் பள்ளிப் பாடத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தது. அதில் ஆண்களும் பிற குடும்ப உறுப்பினர்களும் பெண்களுடன் சேர்ந்து சமையலறையில் வேலை செய்வதைக் காட்டும் படங்கள் பாடத் திட்டத்தில் இடம்பெற்றிருந்தன. சிறு வயதிலிருந்தே குழந்தைகளிடம் பாலினப் பாகுபாட்டை அகற்றி, அனைவரையும் உள்ளடக்கிய கண்ணோட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கேரளா மாநில அரசு அப்போது குறிப்பிட்டிருந்தது. "பாலியல் மற்றும் பாலினம் சார்ந்து தெளிவான புரிதலை நாம் சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்குக் கற்பித்தால், அவர்கள் எதிர்காலத்தில் சுயமாக ஆன்லைனில் இருந்தோ, அல்லது அவர்களைச் சுற்றி நடக்கும் தவறான முன்னுதாரணங்களில் இருந்தோ கற்றுக் கொள்வதைத் தவிர்க்க வாய்ப்புள்ளது" என்கிறார் கல்வியாளர் தேவநேயன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c2d43egeed5o
-
இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம்
இந்திய துணை தூதரகத்துடன் கலந்துரையாடலுக்கு சென்ற மீனவர்கள்! Published By: DIGITAL DESK 2 27 FEB, 2025 | 12:02 PM யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் பேரணியாக சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை அடைந்தனர். துணை தூதரகத்தின் வீதியில் வீதித்தடை போடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மீனவ அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மீனவர்கள் வெளியில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/207813
-
இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின் பந்துவீச்சு சந்தேகத்திற்குரியதென புகார்
சந்தேகத்திற்கிடமான பந்துவீச்சு என அளிக்கப்பட்ட புகாரிலிருந்து குணேமானை ஐசிசி விடுவித்துள்ளது Published By: VISHNU 26 FEB, 2025 | 11:25 PM (நெவில் அன்தனி) மெட் குணேமானின் பந்துவீச்சுப் பாணி சந்தேகத்திற்கிடமானது என அளிக்கப்பட்ட புகாரிலிருந்து அவரை ஐசிசி விடுவித்துள்ளது. ஐசிசியினால் அங்கீகரிக்கப்பட்ட பிறிஸ்பேன் நிலையத்தில் மெட் குணேமானின் பந்துவீச்சுப் பாணி தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனைகளின்போது அவரது அனைத்து பந்துவீச்சுகளும் விதிகளுக்கு உட்பட்டதாக இருந்துள்ளது. இடதுகை சுழல்பந்துவீச்சாளரான மெத் குணேமான் பந்துவீசும் போது அவரது முழங்கை நீட்டிப்பு 15 பாகைக்குள் இருந்தமை இந்த பரிசோதனையின் போது தெரியவந்தது. இதனை அடுத்து சர்வதேச போட்டிகளில் பந்துவீச அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடையை நீக்கிய ஐசிசி அவருக்கு தொடர்ந்து பந்துவீச அனுமதி அளித்துள்ளது. காலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் அவரது பந்துவீச்சு பாணி தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது. அந்தத் தொடரில் அவர் மொத்தமாக 16 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் அவுஸ்திரேலியா 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தொடரை வென்றது. 2017இல் இருந்து தொழில்முறை கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுவரும் குணேமானுக்கு எதிராக இதற்கு முன்னர் ஒருபோதும் எந்தவித புகாரும் செய்யப்பட்டிருக்கவில்லை. எனினும், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஐசிசியினால் அங்கீகரிக்கப்பட்ட பிறிஸ்பேன் கிரிக்கெட் நிலையத்தில் மெத் குணேமானின் பந்துவீச்சு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இந்த பரிசோதனை அறிக்கையை ஐசிசி இன்று புதன்கிழமை (26) வெளியிட்டது. அதில், 'பிறிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் நிலையத்தில் பெப்ரவரி 15ஆம் திகதி சுயாதீன பந்துவீச்சு மதிப்பீட்டுக்கு அவர் (மெத் குணேமான்) உட்படுத்தப்பட்டார். அவரது சகல பந்துவீச்சுகளின்போது அவரது முழங்கை நீட்டிப்பு அளவு ஐசிசியின் தவறான பந்துவீச்சுப் பாணிக்கான விதி முறைகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட 15 பாகைக்கு உட்பட்டதாக இருந்தது தெரியவந்தது' என ஐசிசி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/207776
-
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக 25 வீத வரி - டிரம்ப்
27 FEB, 2025 | 11:16 AM ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு எதிராக விரைவில் 25 வீதவரியை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிடமிருந்து அளவுக்கதிகமான இலாபத்தை பெறும் நோக்கத்துடனேயே ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் தனது முதலாவது அமைச்சரவை கூட்டத்தினை நடத்தியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். அமைச்சரவை உறுப்பினர் இல்லாத எலொன்மஸ்க் இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வரிகளை விதிப்பது தீர்மானித்துள்ளீர்களா என்ற கேள்விக்கு நாங்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளோம் நாங்கள் விரைவில் இது குறித்துஅறிவிப்போம் 25 வீத வரியாக காணப்படும் கார்கள் மற்றும் ஏனைய பொருட்கள் மீது இந்த வரிவிதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் கனடாவை விட வித்தியாசமான விடயம் அவர்கள் எங்களை வேறு விதத்தில் சாதகமாக பயன்படுத்தியுள்ளனர் என டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர்கள் எங்கள் கார்களை ஏற்றுக்கொள்வதில்லை,எங்கள் விவசாய பொருட்களை ஏற்றுக்கொள்வதில்லை,அதற்கான அனைத்து காரணங்களையும் தெரிவிப்பார்கள்,ஆனால் நாங்கள் அவர்களிடமிருந்து அனைத்தையும் ஏற்றுக்கொள்வோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிடமிருந்து அதிக இலாபம் உழைப்பதற்காகவே ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது,அவர்கள் அதனை சாதித்துள்ளனர்,ஆனால் தற்போது நான் ஜனாதிபதி என டிரம்ப் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/207806
-
டொலரில் சம்பாதிப்பவர்களுக்கு வரி - அமைச்சர் வெளியிட்ட தகவல்
இணையம் மூலம் வெளிநாட்டு நாணயம் சம்பாதிப்பவர்களுக்கு தனது அரசாங்கம் வரி விதிக்கவில்லை என அநுர அரசு விளக்கமளித்துள்ளது. மாறாக முந்தைய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வரியைக் குறைத்ததாக பொருளாதார பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வரி இல்லாத சேவைகள் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முந்தைய அரசு இந்த சேவைகளுக்கு 30% வரி விதித்ததாகவும், தனது அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, அது 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு திட்டத்தை செயல்படுத்துவேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உலகின் சமீபத்திய சட்டத்தின்படி, வரி இல்லாத சேவைகள் வழங்கப்படுவதில்லை என்றும், ஒரு நாடு வழங்கும் சேவைக்கு அந்த நாடு வரி விதிக்கவில்லை என்றால், அந்த சேவையைப் பெறும் நாடு அந்த வரியை விதிக்கும். அதன்படி, இந்த வரியை நாம் வசூலிக்கவில்லை என்றால், வேறு யாராவது வசூலிப்பார்கள் என பொருளாதார பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/sri-lanka-freelancers-new-tax-on-usd-earnings-1740631840
-
யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள ஒலிபெருக்கித் தொல்லை
யாழில் தொடர்ந்து ஊதாசீனப்படுத்தப்படும் சுற்றாடல் பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இம்மாதம் ஆறாம் திகதி யாழ்.மாவட்ட சுற்றாடல் பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள ஒலிபெருக்கித் தொல்லை தொடர்பில் பொதுமக்களினால் தொடர்ச்சியாக மாவட்டச்செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக அதனை கட்டுப்படுத்திவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனை மீறுவோர்மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இம்முடிவு காவல்துறையினருக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை மீறுவோர் தொடர்பிலான தகவல்களை பிரதேச செயலகங்களுக்கு தெரியப்படுத்தினால் அவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அரச அதிபரினால் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. எனினும், பல பிரதேச செயலகப் பிரிவுகளில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. சில பிரதேச செயலகப் பிரிவில் ஒலிபெருக்கிப் பாவனையின் மோசமான செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளது. இது குறித்து பிரதேச செயலர்களுக்கு தெரியப்படுத்தினாலும் பொதுமக்ளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள் ஒலிபெருக்கித்தொல்லையினால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றன. இம்மாதம் 16 ஆம் திகதி சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாதகல் புனித லூர்துமாதா ஆலய திருவிழாவில் மாதகலிலிருந்து பண்டத்தரிப்பு சந்திவரை 3 கிலோமீற்றர் நீளத்திற்கும் அதிகமாக ஏராளமான ஒலிபெருக்கிகளை பொருத்தி இரவு பகலாக பயன்படுத்தப்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளானார்கள். நேற்று (26-02-2025) இதே பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட விளான் - சண்டிலிப்பாய் வீதியலுள்ள பிரான்பற்று நரசிம்ம வைரவர் என்ற சிறிய ஆலயம் ஒன்றில் அன்னதான நிகழ்விற்காக 15 இற்கும் அதிமான ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு நேற்று முன்தினம் இரவுமுதல் (25-05-2025) அதிக இரைச்சலுடன் ஒலி எழுப்பப்பட்டது. அத்துடன் இன்றையதினமும் அந்த பகுதியில் ஒலிபெருக்கி இசைக்கப்படுகிறது. இதனால் அருகிலுள்ளவர்கள் மட்டுமன்றி் அயல் கிராமங்களிலுள்ள மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இது குறித்து காவல்துறையிருக்கும் அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சண்டிலிப்பாய் பிரதேச செயலருடன் தொடர்புகொள்ள முயற்சி மேற்கொண்டபோதும் அது பலனளிக்கவில்லை. சுற்றாடலை பாதிக்கும் ஒலி மாசு தொடர்பில் மாவட்டச்செயலகத்தினல் எடுக்கப்பட்ட தீர்மானம் சில பிரதேச செயலகங்களுக்கும் காவல் நிலையங்களுக்கும் அறிவிக்கப்படவில்லையா அல்லது தீர்மானம் உதாசீனம் செய்யப்படுகின்றதா என பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர். https://ibctamil.com/article/loudspeaker-nuisance-on-the-rise-in-jaffna-1740637388