Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை ; சந்தேகநபர் தொடர்பில் தகவல் வழங்கினால் ரூ.12 இலட்சம் சன்மானம் Published By: Digital Desk 3 05 Mar, 2025 | 09:08 AM பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’வின் கொலையுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் பெண் சந்தேகநபர் தலை மறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்கு உண்மையான தகவல்களை பொதுமக்களை வழங்குமாறு கோரி பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தகவல்களை பின்வரும் எண்களுக்குத் தெரிவிக்கலாம்: • பணிப்பாளர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு (CCD): 071-8591727 • பொறுப்பதிகாரி (OIC), கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு (CCD): 071-8591735 https://www.virakesari.lk/article/208312
  2. Published By: Vishnu 05 Mar, 2025 | 02:40 AM திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுகிற­து. திருநீறு பூசும் நிகழ்ச்சி திருப்பலியின்போது நடத்தப்படுகின்றது. “மனி­தா, மண்ணாய் பிறந்த நீ மண்ணுக்கே திரும்புவாய்” என்று கூறி அருட்தந்தையர் எமது நெற்றியில் திருநீற்றைப் பூசுகின்றார்கள். இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலத்தின் முதல் நாள் இந்தச் சடங்கின் மூலமாக ஆரம்பமாகின்றது. “உங்கள் முழு இத­யத்­துடன் என்­னிடம் திரும்பி வாருங்கள் என்­கிறார் ஆண்­டவர்” (யோவேல் 2:12) 'தவக்காலம்' என்பது மனமாற்றத்துக்கான ஒரு காலமாகக் கருதப்படுகிறது. மனதுக்கு ஏற்ப பாவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மனம் திரும்ப வேண்டிய காலம்; மனிதனின் சுய ஆய்வுப் பயணத்தின் காலம். இதற்கு அடையாளம் நெற்றியில் பூசப்படும் விபூ­தி. விபூ­தி என்பது தவத்தின் தொடக்கம். தவங்கள் எல்லாம் மீட்பில் அடங்குகின்­ற­ன. தவக்காலத்தில் 16 வயதுக்குட்பட்­டவர்கள் சுத்த போசனமும், 18 வயதுக்கு மேற்பட்டோர், 60 வயதுக்கு உட்பட்டோர் அனைவரும் வாரத்தில் ஒருநாளாவது உண்ணா நோன்பு இருக்கலாம். உண்ணா நோன்பு இது காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிகழ்வு. `இயேசு அலகையால் சோதிக்கப்படுவதற்கு முன் 40 நாட்கள் உண்ணா நோன்பிருந்தார்.' இதன் அடிப்படையில் 40 நாட்கள் என்பது மனம் வருந்தி மனமாற்றம் பெற்று, இறைவனின் கொடைகளையும் வரங்களையும் பெறும் காலமாகக் கருதப்படுகிறது. மனித பாவங்களுக்காக இயேசு இவ்வுலகில் மனிதனாகப் பிறந்து பாடுபட்டு சிலுவையில் உயிர் துறந்தார். இதனையே தவக்காலம் எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. ஆதித் தாய் தந்தையரான ஆதாம்–ஏவாள், இறை கட்டளையை மீறியதால் பாவம் செய்ய சாத்தானால் தூண்டப்பட்டனர். இதனூடாகவே பாவம் இவ்வுலகுக்குள் பிரவேசித்தது. மனிதன் பாவியானான். மானிடரை பாவத்திலிருந்து மீட்க இறைவன் சித்தம் கொண்டார். அதன்படியே தம் சுதனாகிய இயேசுவை இவ்வுலகுக்கு அனுப்பினார். மானிட பாவத்தை மீட்க பரமன் இயேசு பாடுளை அனுபவிக்கவும் சிலுவையில் அறையப்பட்டு மரிக்கவும் பரமபிதா சித்தமானார். இயேசு அனுபவித்த திருப்பாடுகளின் முதல் நாள் தான் ‘திருநீற்றுப் புதன்’ என அழைக்கப்படுகின்றது. இன்றிலிருந்து எமது தவக்காலம் ஆரம்பமாகின்றது. இயேசு பாலைவனத்தில் 40 நாட்கள் உபவாசம் இருந்தது முதல் அவர் கல்வாரி மலையில், சிலுவையில் உயிர் துறந்தது வரையான அவரது திருப்பாடுகளை நினைவுகூர்ந்து இன்றிலிருந்து எமது வாழ்வில் ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்துவோம். இறை இயேசுவுக்குகந்த மக்களாக வாழ வரம் வேண்டி தியானிப்போம். நாம் அனைவரும் என்றேனும் ஒருநாள் மண்ணுக்குத் திரும்புவோம். அதற்கு நம் நெற்றியில் பூசப்படும் சாம்பல் தான் அடையாளம். நாம் மண்ணுக்குள் போவதற்குள் மனம் திருந்தி, நம் பாவங்களை ஏற்றுக்கொண்டு, பிறர் மீது வைத்துள்ள கோபம், பொறாமை, வஞ்சகம், பழி வாங்கும் எண்ணம் ஆகியவற்றைத் தவிர்த்து, அன்பு, கருணை, இரக்கம் ஆகிய குணங்களைப் பெற்று, நம்முடைய மண்ணுலக வாழ்வை, நாம் செய்யும் இரக்கச் செயல்களால் நிறை­வாக்குவோம். அதற்கு ஒரு வாய்ப்பாக இந்த தவக்காலத்தைப் பயன்படுத்துவோம். https://www.virakesari.lk/article/208308
  3. ஆஸ்திரேலியாவின் வியூகத்தை தகர்த்த கோலி - இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த 5 விஷயங்கள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபித் தொடரின் இறுதிப் போட்டிக்கு 5-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடக்கும் நியூசிலாந்து-தென் ஆப்ரிக்கா இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணி இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதும். வரும் ஞாயிற்றுக்கிழமை துபையில் இறுதிப் போட்டி நடக்கிறது. இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்று அதில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2013-ம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இந்தியா-இலங்கை அணிகள் ஒரு முறை சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. மற்ற இருமுறையும் பைனலில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. கோலி அசத்தல், ஷமி அற்புதம்! 5-ஆம் முறையாக முத்திரை பதித்த இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்தியா - 14 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறிய கனவு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்கு தலைவலியாக திகழும் 5 முக்கிய பலவீனங்கள் நாக்அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் - இந்தியா வெற்றி பெற இந்த உத்திகள் கைகொடுக்குமா? ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி 2017-ம் ஆண்டுக்குப் பின், இரு முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை பைனல், 2024 டி2உலகக் கோப்பை பைனல் ஆகியவற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில் 2024 டி20 உலகக் கோப்பையை மட்டும்தான் இந்திய அணி வென்றுள்ளது. மற்ற 3 ஐசிசி போட்டிகளிலும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. 2013-ஆம் ஆண்டுக்குப் பின் சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை இந்திய அணி வெல்லவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பின் அந்த பட்டத்தை வெல்ல இந்த வாய்ப்பை இந்திய அணி பயன்படுத்தும். துபையில் நேற்று நடந்த முதலாவது அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. 264 ரன்களை அநாசயமாக சேஸ் செய்து இந்திய அணி அசத்தியது. 2011-ம் ஆண்டுக்குப் பின் ஆஸ்திரேலிய அணியை ஐசிசி நாக்அவுட்டில் முதன் முறையாக இந்தியா தோற்கடித்துள்ளது. இந்திய அணியின் நேற்றைய அரையிறுதி வெற்றிக்கு ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்பாடு காரணமாகக் கூறப்பட்டாலும் அதில் முக்கியமான 5 அம்சங்கள் உள்ளன. அவை குறித்துப் பார்க்கலாம். ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய 'தனி ஒருவன்'4 மார்ச் 2025 இலங்கையில் வெறும் ஐந்தே நிமிடங்களில் விலங்குகளை கணக்கெடுக்க திட்டம் - எப்படி?4 மார்ச் 2025 'சேஸ் மாஸ்டர்' கோலியின் ஆட்டம் போட்டிக்குப் பின் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில் "ஒருநாள் போட்டிகளில் நான் பார்த்த வகையில் மிகச்சிறந்த சேஸ் மாஸ்டர் விராட் கோலி மட்டும்தான். இதில் விவாதத்துக்கு இடமே இல்லை, அவரின் புள்ளிவிவரங்களே அவரின் முக்கியத்துவத்தை சொல்லும்" என புகழாரம் சூட்டியிருந்தார். உண்மையில் விராட் கோலியின் நேற்றைய முத்தாய்ப்பான ஆட்டம் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்திருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து ஆகச்சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்திய கோலி நேற்றும் மிகுந்த பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 84 ரன்கள் சேர்த்தார். விராட் கோலியின் நேற்றைய ஆட்டத்தில் எந்தவிதமான பதற்றமோ, ரன் சேர்க்க வேண்டும் என்ற அழுத்தமோ, தவறான ஷாட்களை அடிக்க முயன்றதோ என ஏதும் இல்லை. 30 ரன்களில் இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்தவுடன் களமிறங்கிய கோலி, அணியின் சூழலை உணர்ந்து பொறுப்புடன் பேட் செய்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றி, அவர்களுடன் "மைண்ட் கேமில்" விளையாடிய கோலி, பவுண்டரி, சிக்ஸர் என பெரிதாக அடிக்கவில்லை. ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து, ஒரு ரன், 2 ரன் என ரன் சேர்த்தார். விராட் கோலியின் ஃபார்ம் குறித்து விமர்சித்தவர்களுக்கு பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதத்தையும், இந்த ஆட்டத்தில் சிறந்த இன்னிங்ஸையும் விளையாடி பதில் அளித்துள்ளார். இந்த போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களின் 45 பந்துகளை சந்தித்து 44 ரன்களை எடுத்துள்ளார். அதில் 13 டாட் பந்துகளாகும். அதுமட்டுமல்லாமல் கிடைக்கின்ற இடைவெளியில் ஒரு ரன், இரு ரன்களை அடித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறவிட்டார். கோலி 26 சிங்கிள்களையும், 3 இரு ரன்களையும் சேர்த்தார். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோலி ஜொலித்தார். பட மூலாதாரம்,Getty Images தன்னுடைய ஆட்டம் குறித்து கோலி பேசுகையில் " பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் போலத்தான் இந்த ஆட்டமும் இருந்தது. இந்த ஆட்டத்தில் சூழலை அறிந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும் என அறிந்து ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்தேன். அரையிறுதி, பைனல் போன்றவற்றில் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டியது அவசியம். நம் கைவசம் அதிகமான விக்கெட்டுகள் வைத்திருந்தாலே எதிரணியினர் தாங்களாகவே ரன்களை நமக்கு வழங்குவார்கள். எனக்கு சதம் அடிப்பது முக்கியமல்ல, பீல்டர்களுக்கு நடுவே ஒரு ரன், 2 ரன்கள் எடுப்பதில்தான் மகிழ்ச்சி. பாகிஸ்தானுக்கு எதிரான இன்னிங்ஸ், இந்த இன்னிங்ஸில் என்னுடைய ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்தார். சர்வதேச அளவில் சேஸ் மாஸ்டர் என்று இன்றைய காலகட்டத்தில் விராட் கோலியை மட்டுமே அழைக்க முடியும். சேஸிங்கில் மட்டும் 8 ஆயிரம் ரன்களை கோலி கடந்து, சச்சினுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டி சேஸிங்ஸில் 64 ரன்கள் சராசரி வைத்து ஏபி டிவில்லியர்ஸுக்கு அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் கோலி அடித்த 51 சதங்களில் 28 சதங்கள் சேஸிங்கின் போது அடிக்கப்பட்டவை, சச்சின் அடித்ததைவிட 11 சதங்களை கூடுதலாக சேஸிங்ஸில் கோலி அடித்துள்ளார். சேஸிங்கில் கோலியின் ஆட்டம் இந்திய அணிக்கு பலமுறை வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது. பெருவெற்றிகளை பெற்ற ஔரங்கசீப் முகலாய பேரரசு வீழ்ச்சிக்கு காரணமானது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை4 மார்ச் 2025 'நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்' - இயர்போன், ஹெட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?3 மார்ச் 2025 ஹெட்டை சாய்த்த வருண் சக்ரவர்த்தி பட மூலாதாரம்,Getty Images இந்திய அணிக்கு எப்போதுமே தலைவலியாக இருப்பவர் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட். கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அணிக்கு எதிராக 1000 ரன்களுக்குமேல் அடித்து குடைச்சல் கொடுத்து வந்தவர் டிராவிஸ் ஹெட். ஐசிசி டெஸ்ட் சாம்பியஸ்ஷிப், உலகக் கோப்பை, பார்டர்-கவாஸ்கர் தொடர் என அனைத்திலும் டிராவிஸ் ஹெட் ஆட்டம் இந்திய அணிக்கு தலைவலியாகவே இருந்தது. இந்த ஆட்டத்திலும் தொடக்கத்தில் நிதானமாக ஆடி 11 பந்துகளில் ஒரு ரன் சேர்த்திருந்த ஹெட், அதன்பின் அதிரடியாக பவுண்டரி, சிக்ஸர் அடிக்கத் தொடங்கி, தனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பினார். அக்ஸர், குல்தீப் பந்துவீசியும் டிராவிஸ் ஹெட்டை கட்டுப்படுத்த முடியவில்லை. 9-வது ஓவரை வீச வருண் சக்கரவர்த்தி அழைக்கப்பட்டார். முதல் பந்தில் ஸ்மித் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை ஹெட்டிடம் வழங்கினார். சர்வதேச அரங்கில் வருண் பந்துவீச்சில் முதல் பந்தை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயே பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை இழந்தார். டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்த இந்த தருணம் இந்திய அணி அடுத்த அடி எடுத்துவைக்க நம்பிக்கையை அளித்தது, பந்துவீச்சாளர்களுக்கு ஊக்கத்தை அளித்து உற்சாகத்துடன் பந்துவீசவைத்தது. பிளாஸ்டிக் தாளில் இட்லியை வேக வைத்தால் என்ன ஆபத்து?மருத்துவர்கள் தகவல்3 மார்ச் 2025 இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்2 மார்ச் 2025 மீண்டு(ம்) வந்த ஷமி பட மூலாதாரம்,Getty Images காயத்திலிருந்து ஓராண்டுக்குப்பின் அணிக்குத் திரும்பிய ஷமியின் பந்துவீச்சு குறித்த பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இங்கிலாந்து தொடரில் பெரிதாக பந்துவீசாத ஷமி, சாம்பியன்ஸ் டிராபியில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டார். ஒவ்வொரு போட்டியிலும் ஷமியின் பந்துவீச்சு மெருகேறிக் கொண்டே வந்துள்ளது. துபை மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு பெரிதாக ஒத்துழைக்காது, அதிலும் முதல் 10 ஓவர்களுக்குப் பின் ஸ்விங் செய்ய சிரமமாக இருக்கும் நிலையில் 10 ஓவர்களுக்குள் ஷமி விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திவிட்டார். இந்த ஆட்டத்திலும் தொடக்கத்திலேயே கனோலி விக்கெட், செட்டில் பேட்டர் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்ததுடன் நேதன் எல்லிஸ் விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார். அதிலும் முதல் இரு விக்கெட்டுகள், ஸ்மித்தை வெளியேற்றியது ஆகியவை ஷமியின் மாஸ்டர் கிளாஸ் பந்துவீச்சுக்கு உதாரணம். இந்தத் தொடரில் 4 போட்டிகளில் ஆடிய ஷமி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அதில் வங்கதேசத்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கடன் கொடுத்த இந்திய வணிகரைப் பற்றி தெரியுமா?2 மார்ச் 2025 புதினின் ரகசிய ஆயுதம்: ஐரோப்பிய நாடுகளுக்கு கடலுக்கு அடியில் மறைந்துள்ள ஆபத்து1 மார்ச் 2025 திருப்புமுனையை ஏற்படுத்திய பார்ட்னர்ஷிப் இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் விரைவாகவே சுப்மன் கில், ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்ததும் தடுமாறியது. அப்போது 3வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ்-கோலி கூட்டணி ஆட்டத்தின் போக்கை மாற்றி, இந்திய அணியின் கையை ஓங்கச் செய்தனர். இருவரும் 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தி கோலியை ஆட்டமிழக்கச் செய்ய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் அமைத்த வியூகங்களை கோலி தகர்த்தார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சை அவர் எளிதாக சமாளித்து ஆடினார். ஸ்ரேயாஸ் அய்யர் சுழற்பந்துவீச்சை ஆடுவதில் வல்லவர் என்பதால் அவரையும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்வதில் ஆஸ்திரேலிய அணியினர் தோல்வி அடைந்தனர். இருவரின் பேட்டிங்கால் இந்திய அணி சரிவில் இருந்து நிமிர்ந்தது. ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்த பின் அக்ஸர் படேலுடன் 44 ரன்கள், ராகுலுடன் 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கோலி, இந்திய அணியின் இன்னிங்சை அருமையாக கட்டியெழுப்பினார். இந்த 3 பார்ட்னர்ஷிப்புகளும்தான் இந்த ஆட்டத்தை இந்திய அணிக்கு சாதகமாக திருப்பின. உயிரை பணயம் வைத்து இந்தியா வந்து இவர்கள் சிறுநீரகங்களை விற்பது ஏன்?28 பிப்ரவரி 2025 ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?27 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,Getty Images நிரூபித்த ராகுல் சாம்பியன்ஸ் டிராபிக்கு ரிஷப் பந்தை ப்ளேயிங் லெவனில் களமிறக்கலாமா அல்லது கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பிங் செய்ய வைக்கலாமா என தொடக்கத்தில் இந்திய அணியில் பெரிய ஆலோசனை நடந்தது. ஆனால் ஐசிசி தொடர்களில் அனுபவம் மிகுந்த ராகுல் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த நம்பிக்கையை நேற்று கே.எல்.ராகுல் நிறைவேற்றிவிட்டார். தனக்கு வழங்கப்பட்ட பணியையும் செவ்வனே செய்து முடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி வந்த கே.எல்.ராகுல், நடுவரிசையில் ஆங்கர்ரோல் எடுத்து விளையாடவும் முடியும் என்பதை இந்தத் தொடரில் நிரூபித்துள்ளார், இந்திய அணியின் பேட்டிங்கை நடுவரிசையில் வலுவாகக் கொண்டு செல்வதில் முக்கிய பேட்டராக ராகுல் இருந்து வருகிறார். 84 ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களை நேற்று ராகுல் கடந்தார், இதில் ஸ்ட்ரைக் ரேட் 88ஆக வைத்துள்ளார். இந்த ஆட்டத்திலும் 34 பந்துளில் 42 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பு செய்தார். ஐசிசி தொடர்களில் 24 போட்டிகளில் ஆடியுள்ள ராகுல், இதுவரை 919 ரன்களை குவித்து 61.26 சராசரி வைத்துள்ளார். ராகுலின் பொறுப்பான பேட்டிங், இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தது, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகும். ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 3 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் சேர்த்து சேஸிங்கில் இருந்த அழுத்தத்தை குறைத்தார். பட மூலாதாரம்,Getty Images - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce98x4z97xyo
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் ஊடகங்கள் முன்னிலையில் சூடான விவாதம் நடத்தினார் அமெரிக்க அதிபர் டிரம்ப். கட்டுரை தகவல் எழுதியவர், ரஜ்னீஷ் குமார் பதவி, பிபிசி நிருபர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் அதிபர் விளாதிமிர் ஸெலன்ஸ்கி மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகுந்த கோபத்தில் இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஸெலன்ஸ்கியை அதிபர் டிரம்ப் சரியாக நடத்தினார் என்று ரூபியோ சிபிஎஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார். அதிபர் டிரம்ப் மட்டுமல்ல, பைடனும் ஸெலன்ஸ்கி மீது வருத்தமடைந்ததாகவும், மக்கள் அதை மறந்துவிடக் கூடாது என்றும் ரூபியோ கூறினார். அக்டோபர் 2022 இல், அமெரிக்க செய்தி நிறுவனமான என்பிசி செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஸெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசும் போது கோபமடைந்தார் என்று கூறப்பட்டது. தொலைபேசி உரையாடலின் போது அதிபர் பைடன், ஸெலென்ஸ்கிக்கு 1 பில்லியன் டாலர் நிதி உதவியை வழங்குவதாக கூறினார். ஆனால், யுக்ரேன் அதிபர் "இது கிடைக்கவில்லை, அது கிடைக்கவில்லை" என்று புகார் கூறத் தொடங்கியதால், பைடன் கோபமடைந்ததாகவும் அச்செய்தியில் கூறப்படுகிறது. இதேபோல், ஜூலை 2023-ஆம் ஆண்டில், அப்போதைய பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ், "யுக்ரேன் தனது சர்வதேச கூட்டாளிகள் அமேசான் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும், நீங்கள் ஆர்டர் செய்தால் பொருட்கள் வீட்டிற்கு கொண்டு வரப்படுவதில்லை" என்று எச்சரித்தார். "யுக்ரேன் இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார். அப்போது பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் இருந்தார். டிரம்ப் மீண்டும் அதிபரான பிறகு, வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த ஆறாவது வெளிநாட்டு விருந்தினராக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி இருந்தார். முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஜோர்டான் மன்னர் அப்துல்லா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் ஆகியோர் வருகை தந்திருந்தனர். இந்த சுற்றுப்பயணங்கள் அனைத்தையும் ஸெலன்ஸ்கி சரியாகப் புரிந்துகொண்டிருந்தால், உலக ஊடகங்களின் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் அவருக்கு என்ன நடந்ததோ அதை அவர் தவிர்த்திருக்கலாம். யுக்ரேனுக்கு ஆதரவாக திரளும் ஐரோப்பிய நாடுகள் - லண்டன் மாநாட்டில் முடிவான 4 அம்ச செயல் திட்டம் என்ன? 'ஐரோப்பாவை பாதுகாக்க தலைமுறைக்கான வாய்ப்பு' யுக்ரேன் குறித்த உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் பேசியது என்ன? ஸெலன்ஸ்கியை அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் மிக தீவிரமாக தாக்கி பேசியது ஏன்? பின்னணியில் உள்ள தந்திரம் இதுவா? ஆக்ரோஷமான ஸெலன்ஸ்கி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸெலன்ஸ்கி தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை பாதியிலேயே கைவிட வேண்டியிருந்தது. டிரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, யுக்ரேன் தொடர்பாக தனது நிலைப்பாடு பைடனின் நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்ற செய்தியையும் வழங்கியிருந்தார். இஸ்ரேல் குறித்து அவர் கொடுத்த செய்தியும், அவர் எடுத்த நிலைப்பாடும் ஒன்றே. ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இந்தியா தொடர்பாகவும் டிரம்ப் மிகத் தீவிரமாக இருந்தார். ஆனால் வெள்ளை மாளிகையில் ஸெலன்ஸ்கி எதிர்கொண்டது போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட இந்த நாட்டுத் தலைவர்கள் அனுமதிக்கவில்லை. டிரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்னும் பின்னும் இந்தியாவுக்கு எதிராக மிகவும் தீவிரமாக இருந்தார். ஆனால் டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து வெள்ளை மாளிகைக்குச் செல்வதற்கு முன்பு பிரதமர் மோதி முழுத் தயாரிப்புகளை செய்திருந்தார். பொது பட்ஜெட்டில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை இந்தியா குறைத்திருந்தது. எரிசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதாகவும் இந்தியா அறிவித்திருந்தது. மோதி வாஷிங்டனை அடைந்தவுடன் டிரம்பும் பரஸ்பர வரியை அறிவித்தார். ஆனால் டிரம்பின் எந்த அறிவிப்பையும் இந்தியா விமர்சிக்கவில்லை. டிரம்பின் ஆக்ரோஷத்திற்கு இந்தியாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இது டிரம்பை கையாள்வதற்கான ஒரு தயாரிப்பு மற்றும் உத்தியாகக் கருதப்பட்டது. "ஸெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் ஒரு கேலிப்பொருளாக மாறினார். ஏனெனில் அவர் தயாரிப்பின்றி அங்கு சென்றார். ரஷ்ய அதிபர் புதினுடன் நல்ல உறவைக் கொண்ட அதிபரை சந்திக்க ஸெலன்ஸ்கி எந்த தயாரிப்பும் இல்லாமல் சென்றார். ஸெலன்ஸ்கி , புதினுடன் அமைதி ஒப்பந்தத்திற்கு பதிலாக பாதுகாப்பு உத்தரவாதங்களை கேட்டார். ஆனால் பிரதமர் மோதி, டிரம்பின் எந்த கோரிக்கையையும் மறுப்பதில்லை" என்று வெளியுறவு நிபுணரும் மூத்த பத்திரிகையாளருமான நிருபமா சுப்பிரமணியன் பதிவிட்டார். "சர்வதேச வர்த்தகத்தில் டாலரின் அந்தஸ்தை பலவீனமடையச் செய்ய முயற்சிப்பதாக பிரிக்ஸ் அமைப்புகளை டிரம்ப் தாக்கிய போது, டாலருக்கு மாற்று நாணயத்தை ஆதரிக்கவில்லை என்று இந்தியா கூறியது. வரிகள் தொடர்பாக டிரம்ப் இந்தியாவை வெளிப்படையாக விமர்சித்து வந்தார். ஆனால் மோதி அவருடன் வாக்குவாதம் செய்யவில்லை. மூடிய கதவுகளுக்குப் பின்னால் இவற்றைக் கூறுவது சிறந்தது என்று இந்தியா நினைத்தது. வங்கதேசத்தில் தொடங்கியுள்ள 'சாத்தான் வேட்டை' என்றால் என்ன? அங்கு பயமும், நிச்சயமற்ற சூழலும் நிலவுவது ஏன்?2 மார்ச் 2025 இலங்கை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு: கைது உத்தரவை அடுத்து தலைமறைவான போலீஸ் மாஅதிபர்2 மார்ச் 2025 இந்தியாவுக்கான சேதி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேன் - ரஷ்யா போருக்குப் பிறகு, சீனா மற்றும் ரஷ்யா இடையேயான நெருக்கம் அதிகரித்துள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு சில விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளார். இது இந்தியாவிற்கும் ஒரு தெளிவான செய்தியாகும். கடந்த வாரம், புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, சீனா தைவானை வலுக்கட்டாயமாக இணைக்க முயன்றால் அமெரிக்கா அதை ஆதரிக்குமா என்று கேட்கப்பட்டது. இதுகுறித்து டிரம்ப், "இந்த சர்ச்சையில் நான் என்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாததால், இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்று கூறியிருந்தார். பைடன் போல தைவான் மீது தனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை என்பதை டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். டிரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அமெரிக்கா யாருக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தை இலவசமாக வழங்கப் போவதில்லை என்று கூறி வருகிறார். தைவானின் சிப் தொழில்நுட்பம் அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனங்களை பாதிக்கிறது என்று அவர் குற்றம் சுமத்தினார். ஸெலன்ஸ்கியுடன் டிரம்ப் இவ்வாறு நடந்து கொண்ட பிறகு, சீனா தைவானைத் தாக்கினால் அமெரிக்கா உதவுமா இல்லையா என்ற கவலை தீவிரமாகியுள்ளது. அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரப் பேராசிரியர் முனைவர் கான் கூறுகையில், "ஸெலன்ஸ்கி தனது தவறுக்கு விலை கொடுப்பார். ஒரு வல்லரசுக்கு எதிராக இன்னொரு வல்லரசை சார்ந்து போரிட முடியாது. யுக்ரேனுக்கு ரஷ்யா ஒரு வல்லரசாகவே உள்ளது. அமெரிக்காவோ அல்லது ஐரோப்பாவோ போரில் உங்களுக்கு உதவுகின்றன என்றால், அவர்களுக்கும் சொந்த நலன்கள் உள்ளன. அவர்களின் நலன்களை நிறைவேற்ற நீங்கள் போராடினால், நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள்" என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பேராசிரியர் கான், "அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற டிரம்பின் கொள்கை இந்தியாவிற்கு ஒரு பாடம். அமெரிக்காவின் கட்டளைப்படி நீங்கள் சீனாவுடன் போருக்குச் செல்ல முடியாது. அமெரிக்க வெள்ளையர்களின் மரபணு ஐரோப்பாவிலிருந்து வந்தது. டிரம்ப் ஐரோப்பாவையே விட்டு விட்டால், இந்தியாவின் ஆதரவாளராக எப்படி இருப்பார்? டிரம்பால் கனடாவையே மண்டியிட வைக்க முடியும் போது, அவருக்கு ஏன் இந்தியா மீது அனுதாபம் இருக்க வேண்டும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் சேதி என்னவென்றால், ஒருவரின் ஆதரவை நம்பி, போரின் ஒரு பகுதியாக நீங்கள் மாறக்கூடாது என்பது தான்" என்றார். மோதியின் அமெரிக்க வருகைக்கு முன்பு, டிரம்ப் சீன அதிபர் ஜின்பிங்கைப் பாராட்டியிருந்தார். மோதியுடனான செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப், சீனா உலகில் ஒரு முக்கியமான நாடு என்று கூறியிருந்தார். சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் முன்வந்தார். ஆனால் இந்தியா எந்த மூன்றாவது நாட்டின் மத்தியஸ்தத்தையும் தெளிவாக மறுத்துவிட்டது. இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்2 மார்ச் 2025 டிரம்ப் - ஜெலன்ஸ்கி மோதல் பற்றி புதின் மௌனம் - ரஷ்ய தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?2 மார்ச் 2025 குறைவான நண்பர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புதினுக்கும் டிரம்பிற்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கம் உலக ஒழுங்கை மாற்றும் என்று கூறப்படுகிறது. "டிரம்ப் வழங்கிய ஒரே சலுகையாக இது இருக்கலாம், இந்தியா பகிரங்கமாக அதனை ஏற்க மறுத்துவிட்டது" என்று நிருபமா சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். "அமெரிக்கா யுக்ரேனுக்கு பரிந்துரைக்கும் அமைதி ஒப்பந்தத்தால் அதற்கு இழக்க எதுவும் இல்லை, ஆதாயங்கள் மட்டுமே உள்ளன. பாதிக்கப்பட்டவர் தன்னைத் தாக்கியவரிடம் சரணடைய வேண்டும் என்று டிரம்ப் கூறுகிறார். இது நம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை. நாம் அனைவரும் இப்போது ஸெலன்ஸ்கி தான்." "பழைய நட்புகளும் கூட்டணிகளும் எதிர்காலத்தில் பலனளிக்காமல் போகலாம் என்ற யதார்த்தத்தை இந்தியா எதிர்கொள்ள வேண்டும். புதினும் டிரம்பும் இப்போது ஒரே முகாமில் இருப்பதால் இந்தியாவும் ரஷ்யாவை நம்பியிருக்க முடியாது. சீனா பாகிஸ்தானுடன் நெருங்கி வருகிறது. பூகோளத்தின் தென் பாதியில் முக்கிய சக்திகளான பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவும் இந்தியாவை விட சீனாவுடன் நெருக்கமாக உள்ளன." என்றார் நிருபமா சுப்பிரமணியன். பேராசிரியர் கான் கூறுகையில், "டிரம்ப் தனது பதவியேற்பு விழாவிற்கு ஜின்பிங்கை அழைத்திருந்தார். ஆனால் இந்திய பிரதமர் மோதியை அழைக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவின் ஆதரவில் நீங்கள் எந்தப் போரையும் நடத்த முடியாது, அதுவும் எந்த வல்லரசுக்கும் எதிராகப் போரிட முடியாது என்ற தெளிவான செய்தி இந்தியாவிற்கு உள்ளது. இன்று ஐரோப்பியத் தலைவர்கள் யுக்ரேனுடன் நிற்பதைக் வெளிக்காட்டுகிறார்கள், ஆனால் ஐரோப்பாவிலிருந்து எவ்வளவு உதவி வருகிறது? ஐரோப்பா பணம் கொடுத்தாலும், அது ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளிலிருந்து தான் கொடுக்கிறது. 2014-ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லையை, யுக்ரேன் மீண்டும் அடைய முடியாது என்று டிரம்ப் நிர்வாகம் தெளிவாகக் கூறிவிட்டது. யுக்ரேன் நேட்டோவில் உறுப்பினராக முடியாது என்பதுடன், அமெரிக்கா யுக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்காது என்றும் டிரம்ப் நிர்வாகம் திட்டவட்டமாக கூறிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு ஈடாக யுக்ரேன் என்ன பெற்றது என்ற கேள்வி எழுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c7vz7qv1ql3o
  5. போப் பிரான்சிஸ் எப்படி இருக்கிறார்?; வெளியான புதிய தகவல் போப் பிரான்சிஸின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. போப் பிரான்சிஸுக்கு ஒரே நேரத்தில் மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டதால், மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. கத்தோலிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 14ஆம் திகதி ரோமில் உள்ள ஜெமிலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 வாரத்தில் இரண்டு முறை நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போப்புக்கு, ஒக்சிஜன் உதவியோடு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், செயற்கை சுவாசத்தின் உதவியின்றி அவர் இயல்பாக சுவாசித்ததோடு, அவராகவே காலை உணவு எடுத்துக்கொண்டதாகவும், சிறிது காபி அருந்தியதாகவும் வாடிகன் தேவாலயம் தெரிவித்தது. இந்நிலையில், போப் பிரான்சிஸுக்கு நேற்று ஒரே நேரத்தில் மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், அவருக்கு மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாக வாடிகன் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/315596
  6. 04 MAR, 2025 | 08:57 PM (நமது நிருபர்) அரசியல் தலையீடு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றிருந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். நாட்டை சரியான பாதைக்கு கொண்டுவர வேண்டும். அதற்கு தேவையான மாற்றங்களைச் செய்யவும் தவறுகளை திருத்திக்கொள்ளவும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை அரசாங்கத்தால் மட்டும் செய்ய முடியாது. அதற்கு அரச அதிகாரிகள், மத தலைவர்கள் போன்று நாட்டு மக்களும் முன்வர வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரநாயக்க சுனந்த கலையரங்கில் அண்மையில் இடம்பெற்ற மகளிர் பேரவை உறுப்பினர்களுக்கு மத்தியில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் நாம் சரியான இடத்தை வந்தடைந்துள்ளோம். இப்போது நாட்டை சரியான பாதைக்கு கொண்டுவர வேண்டும்.அனைவரும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதற்கான பணிகளை நாம் தொடங்கியுள்ளோம். அதற்கு தேவையான மாற்றங்களைச் செய்ய தவறுகளை திருத்திக் கொள்ள நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை அரசாங்கத்தால் மட்டும் செய்ய முடியாது. அதற்கு அரச அதிகாரிகள் மத தலைவர்கள் போன்று நாட்டு மக்களான நீங்களும் முன்வர வேண்டும். எமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். 2024ஆம் ஆண்டு இந்த நாட்டின் அரசியல் வரலாற்றை மாற்றி எழுத பெண்கள் ஒன்றுசேர்ந்து முன்வந்தனர். எதிர்காலத்தில் எழுதப்படும் நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத பெண்களாகிய நீங்கள் தலைவர்களாக முன்வந்து செயற்பட வேண்டும். அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'களின் ஸ்ரீலங்கா ' திட்டத்தின் நோக்கம் சூழலை சுத்தப்படுத்துவது மட்டுமல்ல. நாம் சிந்திக்கும் விதமும் செயற்படும் விதமும் தூய்மையானதாக மாற வேண்டும். ஆன்மீக ரீதியிலும் மனப்பான்மையிலும் நாம் மாற வேண்டும். உங்களில் இருந்து தொடங்கி உங்கள் வீடு கிராமம் வேலை செய்யும் இடம் என்று இந்த மாற்றம் நிகழ வேண்டும். நாட்டை மாற்றும் பயணத்தில் நீங்கள் மிகவும் முக்கியமானவர்கள். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பொருளாதார ஜனநாயகத்தின் அடிப்படையில் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அரச, தனியார் துறைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் அனைவரும் பொருளாதார முகாமைத்துவத்தில் ஈடுபட வேண்டும். அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளம் பல வருடங்களாக அதிகரிக்கப்படாவிட்டாலும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான வேலைகளை முன்னெடுத்துள்ளோம். அரச ஊழியர்கள் தங்களின் சேவையை மக்களுக்கு முறையாக வழங்க வேண்டும். அரச சேவை கவர்ச்சியான சேவையாக மாற வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம் இலங்கையில் தற்போது கிடைக்கும் மிக உயர்ந்த சம்பள தர வரிசைகளுள் கொண்டுவரப்பட்டுள்ளது. கல்வித் துறையை முன்னேற்றவேண்டுமானால் பிள்ளைகள் நல்ல கல்வியைப் பெற வேண்டுமானால் ஆசிரியர்கள் அறிவிலும் ஆன்மீகத்திலும் வலுவாக இருக்க வேண்டும். மக்களுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் தரத்தை உயர்த்தவே இதையெல்லாம் செய்து வருகிறோம். அரசியல் சார்பு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றிருந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இன்று அரசியல்வாதிகளிடமிருந்து அரசாங்க அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்புகள் வருவதில்லை. பெண்களை பொருளாதாரத்துடன் இணைக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது. அதற்கான தடைகளை படிப்படியாக குறைத்து வருகிறோம். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம். பெண்கள் தங்கள் வீட்டில் தங்கள் பொறுப்புகளை சரியாக நிர்வகிக்கின்ற அதேநேரம் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். அதற்காக நாங்கள் பாலர் பாடசாலைகள்இ பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சுகாதார சேவைகளை அபிவிருத்தி செய்துவருகிறோம். விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியும் நவீன அறிவையும் விரைவாகப் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த நாம் திட்டமிட்டுவருகிறோம். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்று அரசு நம்புகிறது. அதற்காக 2026 முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்களை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக ஆசிரியர் பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/208288
  7. அண்ணை, வயிற்றுக்குள் போகாதவரை அதிஸ்டம்தான் என நினைக்கிறேன். குடைக்குள் மழை போல வடைக்குள் ஊசி என கவி பாடத்தோணலையா அண்ணை?!
  8. Published By: RAJEEBAN 04 MAR, 2025 | 03:07 PM ஹமாசிற்கு எதிரான அழுத்தங்களை அதிகரிப்பதற்காக இஸ்ரேல் காசாவிற்கான நரக திட்டமொன்றை உருவாக்கிவருகின்றது என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேல் பாலஸ்தீனிய பகுதியிலிருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளாமல் ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிககளை விடுதலை செய்வதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்காக காசா மீதான முற்றுகையை தீவிரப்படுத்துவதற்கான திட்டமொன்றை உருவாக்கி வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை தடுத்து நிறுத்தியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அரசாங்கம் அதற்கு அப்பாலும் சென்று காசாவில் உள்ள 2.2 மில்லியன் மக்களையும் அந்த பகுதியையும் தனிமைப்படுத்தும் திட்டமொன்றை தயாரிக்கின்றது என இஸ்ரேலிய வானொலி நிலையமான கான் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய அரசாங்கம் இந்த திட்டத்தினை நரகதிட்டம் என குறிப்பிடுகின்றது என இஸ்ரேலிய வானொலி தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் காசா மக்களிற்கான மின்சாரம் குடிநீர் போன்றவற்றை இஸ்ரேல் துண்டிக்கும், காசா மக்களை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லுமாறு உத்தரவிடும். முழுமையான யுத்தமொன்றினை ஆரம்பிப்பதற்காகவே இஸ்ரேல் உத்தரவை பிறப்பிக்கவுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினரை முழுமையான யுத்தமொன்றிற்கு தயாராகுமாறு அதன் பாதுகாப்பு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார் என வலா செய்திதளம் தெரிவித்துள்ளது. ஹமாசிற்கு எதிராக வேகமான தீர்க்கமான வெற்றியை பெறுவதற்காக கடும் பலத்தை பயன்படுத்தவேண்டும் என தெரிவித்துவரும் மேஜர் ஜெனரல் எயால் ஜமீர் இஸ்ரேலிய இராணுவத்தின் புதிய பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை ஹமாஸ் அமைப்பும் மீண்டும் மோதல்களிற்கு தயாராகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/208254
  9. இலங்கை வரும் இந்திய பிரதமருக்கு உயர்மட்ட பாதுகாப்பு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 6 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இந்தியாவிலிருந்து உயர்மட்ட பாதுகாப்பு குழுவொன்று தற்போது நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கொழும்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி உட்பட்டோரை சந்திக்கவுள்ள இந்திய பிரதமர், சம்பூருக்கு ஹெலிகொப்பரில்ல் சென்று மின்திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதேபோல அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதிக்கு சென்று வழிபாடுகளிலும் அவர் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/315583
  10. 04 MAR, 2025 | 03:27 PM யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞனொருவர் கைவிரல் துண்டாடப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியிலுள்ள கடை ஒன்றின் களஞ்சியசாலையில், களஞ்சியசாலை பொறுப்பாளராக குறித்த இளைஞன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த இருவர், களஞ்சியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வாள் வெட்டில் இளைஞனின் கை விரல் துண்டாடப்பட்டுள்ள நிலையில், இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கண்காணிப்பு கமராவில் பதிவான வீடியோ காட்சிகளின் அடிப்படையில், தாக்குதலை நடத்திய இருவரையும் பொலிஸார் இனம் கண்டுள்ளதுடன், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/208255
  11. ஓட வெளிக்கிட்டாலோ பயந்து பின்வாங்கும்போதோ நாய்கள் கடிக்க முனையும் என நினைக்கிறேன். ஒரு தடவை தான் கடிவாங்கினேன். அது கடிநாய் வீட்டிலே தான் இருப்பது. ஒரு முறை எமது முச்சந்தியில் எதிர்பாரத விதமாக எதிரே வந்துவிட்டது. அதனை கண்டவுடன் பயத்தில் நான் அலற, வேகமாக வந்து பாய்ந்து தொடையில் கவ்விவிட்டது. இப்போது எனது முச்சக்கரவண்டியில் மிகமெதுவாக(10-12 கி.மீ/மணி வேகம்) பயணித்தாலும் இலகுவான கடிக்கும் வாய்ப்புள்ளதால் உடனடியாக நிறுத்தி சத்தமிடுவேன், பின்னர் இன்னும் மெதுவாக நகர்ந்து அவைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிடுவேன்.
  12. தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட தமிழரசின் கதவுகள் திறந்தே உள்ளதாகவும் தேசிய தலைவனின் கொள்கையிலேயே தான் பயணிப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசுக் கட்சியோடு ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய மூன்று கட்சிகளுமாக நான்கு கட்சிகள் இணைந்து கூட்டமைப்பாக செயற்பட்டு வந்திருந்தோம். ஆனால் கடந்த உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் தனித் தனியாக போட்டியிட்டு கூட்டாக செயற்படுவதென தமிழரசுக் கட்சி தீர்மானித்தது. ஆனால் அதனை தவறாக சித்தரித்து தமிழரசு தனிவழி என்றவாறாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியிருந்தன. நாங்கள் கூட்டமைப்பை உடைக்க வேண்டுமென நினைக்கவில்லை. இப்போது கூட முன்னரைப் போல மீளவும் கூட்டமைப்பாக ஒன்று சேர்ந்து இயங்குதவற்கான அழைப்பையே விடுத்திருக்கிறோம். அந்த முயற்சியின் தொடராக கூட்டமைப்பில் இருந்த கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி இருக்கிறேன். ஆனால் இக் கட்சிகளின் தலைவர்களை நான் சந்தித்த போது சாதகமாக பரிசீலிப்பதாக சொன்னவர்கள் மறுநாளே தாங்கள் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கின்றனர். இப்படி ஒரு திட்டம் அவர்களிடம் இருக்கிறது என்றால் அதனை நேரடியாகவே எங்களிடத்தே சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து ஏமாற்று வித்தை காட்டியமையே எமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் அவர்களிண் புதிய கூட்டணியை எதிர்க்கவில்லை. அது அவர்களது உரிமை. ஆனால் அவர்களின் செயற்பாடே எமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை தான் நான் சொல்லி இருக்கிறேன். ஆனால் தாம் ஒரு கூட்டணியை அமைத்துள்ளதாகவும் எங்களது கட்சியின் மத்திய குழுவோடு பேசிவிட்டு வருமாறும் புளொட் தலைவர் சித்தார்த்தன் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் உள்ளது. நாங்கள் ஒன்றும் சில்லறைக்கட்சி அல்ல. எம்மை யாரும் மலினப்படுத்தக் கூடாது. ஈழத் தமிழினத்திற்காக நாங்கள் மீளவும் கூட்டமைப்பா இயங்குவோம் வாருங்கள் என்றே இணக்கத்தின் இடிப்படையில் அழைப்பு விடுத்தோம். அதைவிடுத்து உங்களது கூட்டணியுடன் நாங்கள் வரப்போவதாக சொல்லவில்லை. இந்த விவகாரத்தில் மிகவும் அப்பாவித் தனமாக நாங்கள் இருந்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் நாங்கள் இப்போதும் கூறுகிறோம் கூட்டமைப்பில் இருந்து செயற்பட்டவர்கள் மீளவும் கூட்டமைப்பிற்கு வருவதற்கான கதவுகள் திறந்தே உள்ளன. அவர்கள் வராவிட்டால் தமிழரசுக் கட்சி மீண்டும் தனி வழியில் போவது இயல்பானது. ஆனாலும் தமிழ்த் தலைமைகளைக் கொண்ட கட்சிகளுக்கே தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும். அதற்காக எங்களுக்கு பயம் என்றில்லை. தந்தை வழியில் வந்தவன் நான். தேசிய தலைவரின் கொள்கையில் நிற்கிறேன். எனக்கு பயம் கிடையாது. ஆனால், தமிழர் நலன் சார்ந்து செயற்பட வேண்டியது அவசியம். அந்த அடிப்படையில் தான் சில முயற்சிகளை எடுத்துச் செயற்படுகிறோம் என்றார். https://thinakkural.lk/article/315615
  13. கச்சதீவு புனித அந்தோணியார் திருவிழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள 3,464 பெயர் பதிவு 04 MAR, 2025 | 04:11 PM ராமேசுவரம்: இந்திய-இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. திருவிழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள 3,464 பெயர் பதிவு செய்துள்ளனர். கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். மீனவர்கள் தங்களின் வழிபாட்டுக்காக கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயத்தை 1913-ம் ஆண்டில் நிறுவனர். அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவில் அந்தோணியார் ஆலய விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற உள்ள திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெபரத்தினம் , ராமேசுவரம் பங்குத்தந்தை அசோக் வினோவுக்கு அனுப்பிய அழைப்பிதழை ஏற்று, ராமேசுவரத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்ல 79 விசைப்படகுகள் மற்றும் 23 நாட்டுப் படகுகளில், 2,720 ஆண்கள், 652 பெண்கள், 56 ஆண் குழந்தைகளும், 36 பெண் குழந்தைகளும் என மொத்தம் 3,464 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சாராத வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் தங்கள் ஊர்க் காவல் நிலையங்களில் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். அதுபோல மத்திய, மாநில அரசு பணியாளர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள தங்களின் அலுவலகத்தில் தடையில்லாச் சான்று பெற்றிருக்க வேண்டும். மார்ச் 14 அன்று மாலை 4 மணியளவில் கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் விழா துவங்கும். தொடர்ந்து ஜெபமாலை மன்றாட்டு, இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும், இரவு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனியும் நடைபெறுகிறது. மார்ச் 15 அன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு திருப்பலியும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறும். இதனை தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா முடிவடையும். மேலும் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்ளும் இந்திய-இலங்கை இருநாட்டு பக்தர்களும் உணவு, தண்ணீர், மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகளை யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/208265
  14. Published By: DIGITAL DESK 3 04 MAR, 2025 | 03:22 PM கடந்த சில நாட்களாக நீரேந்தும் பகுதிகளில் பெய்த பலத்த மழையினால் 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 44 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேனநாயக்க சமுத்திர, மகாகங்கரவ, நுவரவெவ, மகாவிலச்சிய, மல்வத்து ஓயா, ருக்கம் குளம், லுணுகம்வெஹெர, பகிரிய, வீரவில, கிரிந்தி ஓயா, மாணிக்க கங்கை மற்றும் வெஹெரகல ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து தற்போது கணிசமான அளவு நீர் ஆற்றை சென்றடைக்கின்றது. வரும் சில நாட்களில் வரட்சி நிலவும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எதிர்பார்க்கப்படுவதனால் நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டிய அவசியம் குறைவடையும். நீர்ப்பாசனத் திணைக்களம் வரும் நாட்களில் வரட்சியான காலத்தை எதிர்பார்க்கிறது, இதனால் எனவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்று நீரைப் பயன்படுத்தும் போது விழிப்புடன் இருக்குமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்றைய தினம் (4) முதல் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும், கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் காலையில் சில நேரங்களில் மழை பெய்யக்கூடும். https://www.virakesari.lk/article/208256
  15. பட மூலாதாரம்,AUSTRALIAN RED CROSS LIFEBLOOD கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்ஜி பதவி, பிபிசி செய்திகள் 4 மார்ச் 2025, 06:04 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் உலகில் மிக அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் காலமானார். அவர் தனது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார். ஜேம்ஸ் ஹாரிசன், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று தனது தூக்கத்திலேயே இயற்கை எய்தினார் என்று அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை (மார்ச் 03) அன்று தெரிவித்தனர். அவருக்கு வயது 88. ஆஸ்திரேலியாவில் அவர் 'தங்கக் கை மனிதர்' என்று அழைக்கப்படுகிறார். ஜேம்ஸ் ஹாரிசனின் ரத்தத்தில் Anti-D எனப்படும் ஒரு அரிய வகை ஆன்டிபாடி இருந்தது. கருவில் இருக்கும் குழந்தையை தாயின் ரத்தம் தாக்கும் அபாயம் இருக்கக் கூடிய கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளைத் தயாரிக்க இந்த ஆன்டிபாடி பயன்படுகின்றது. 14 வயதில், அவருக்கு செய்யப்பட்ட மார்பு அறுவை சிகிச்சையின் போது, பல முறை அவருக்கு ரத்தமாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகே அவர் ரத்த தானம் செய்ய உறுதியளித்ததாக, ஹாரிசனுக்கு அஞ்சலி செலுத்திய ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ரத்த தான சேவை தெரிவித்தது. 18 வயதில் அவர் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்ய தொடங்கினார். தனது 81 வயது வரை ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒருமுறை ஜேம்ஸ் ஹாரிசன் இதனை செய்து வந்துள்ளார். இதன் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை அவர் காப்பாற்றியுள்ளார். 2005 ஆம் ஆண்டில், அதிக முறை ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்ததற்கான உலக சாதனையை அவர் படைத்தார். 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் இந்த சாதனையை முறியடித்த வரை, ஜேம்ஸ் ஹாரிசன் இந்த சாதனையை தன் வசம் வைத்திருந்தார். "எந்த செலவும் அல்லது வலியும் இல்லாமல், எனது தந்தை பல உயிர்களைக் காப்பாற்றியதில் நான் பெருமைப்படுகிறேன்", என்கிறார் ஹாரிசனின் மகள் டிரேசி மெல்லோஷிப். "இது வலிக்காது என்றும், நீங்கள் காப்பாற்றும் உயிர் உங்களுடையதாக கூட இருக்கலாம் என்றும் எனது தந்தை எப்போதும் கூறுவார்", என்று டிரேசி கூறினார். டிரேசி மற்றும் ஜேம்ஸ் ஹாரிசனின் இரண்டு பேரக் குழந்தைகளுக்கும் anti-D தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. "எங்களைப் போன்ற பல குடும்பங்கள், அவரது இந்த செயலால் பலன் அடைத்துள்ளதைப் பற்றி கேள்விப்பட்டது ஜேம்ஸுக்கு மகிழ்ச்சியை அளித்தது", என்று அவர் கூறினார். Anti-D தடுப்பூசிகள் கருவில் உள்ள மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு வரும் ஹீமோலிடிக் நோய் அல்லது HDFN எனப்படும் ஆபத்தான ரத்தக் கோளாறிலிருந்து பாதுகாக்கின்றன. இந்த நோய் கர்ப்ப காலத்தின் போது வருகிறது. தாயின் ரத்த சிவப்பணுக்கள் கருவில் வளரும் குழந்தையின் ரத்த சிவப்பணுக்களுடன் பொருந்தாத போது இந்த நோய் பாதிப்பு ஏற்படுகின்றது. தாயின் நோயெதிர்ப்பு அமைப்பு குழந்தையின் ரத்த அணுக்களை அச்சுறுத்தலாகக் கருதி அவற்றைத் தாக்க ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இது கருவில் உள்ள குழந்தைக்கு கடுமையான தீங்கு விளைவிக்கக் கூடும். இதனால் குழந்தைக்கு கடுமையான ரத்த சோகை, இதய செயலிழப்பு அல்லது மரணம் கூட ஏற்படலாம். 'நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்' - இயர்போன், ஹெட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?3 மார்ச் 2025 ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?27 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டிசம்பர் 1992-இல் ஹாரிசன் தனது 537வது இரத்த தானத்தின் போது எடுக்கப்பட்ட படம் 1960-களில் anti-D தடுப்பூசிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பு, HDFN நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளில் ஒன்று உயிரிழந்தது. ஜேம்ஸ் ஹாரிசனின் ரத்தத்தில் anti-D ஆன்டிபாடி எவ்வாறு இவ்வளவு அதிகமாக இருந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. 14 வயதில் அவருக்கு அதிக அளவில் ரத்த மாற்றம் செய்யப்பட்டதால் இதுபோல நடந்திருக்கக் கூடும் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் 200 க்கும் குறைவான anti-D ஆன்டிபாடிகளை தானம் செய்பவர்களே உள்ளனர். ஆனால் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 45,000 தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு உதவுகிறார்கள் என்று லைஃப்பிளட் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ரத்த தான சேவை தெரிவிக்கிறது. ஹாரிசன் மற்றும் அவரைப் போல anti-D ஆன்டிபாடிகளை தானம் செய்பவர்களிடம் இருந்து பெறப்படும் ரத்தம் மற்றும் நோயெதிர்ப்பு செல்களைப் போன்று, ஆய்வகத்திலே anti-D ஆன்டிபாடிகளை உருவாக்க லைஃப்பிளட் அமைப்பு, ஆஸ்திரேலியாவின் வால்டர் அண்ட் எலிசா ஹால் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது. உலகெங்கிலும் உள்ள கர்ப்பிணிகளுக்கு உதவ இந்த ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட anti-D ஆன்டிபாடிகளை பயன்படுத்தும் காலம் வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த புதிய சிகிச்சை முறையை உருவாக்குவது நீண்ட காலமாக 'முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் ஒரு விஷயம்' என்று லைஃப்பிளட் ஆராய்ச்சி இயக்குநர் டேவிட் இர்விங் கூறினார். போதுமான தரத்தில் மற்றும் அளவில் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யக் கூடிய, ரத்த தானம் செய்வதில் உறுதி பூண்டுள்ள நபர்கள் குறைவாக இருப்பதாகவே அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cr42z17ydg7o
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 4 மார்ச் 2025, 01:42 GMT 1680-ஆம் ஆண்டு முகலாய பேரரசர் தென்னிந்தியாவுக்கு தன்னுடைய முழு படையுடன் கிளம்பினார். அவருடைய ஒரு மகன் தவிர்த்து, மூன்று மகன்களுடன் ஒரு பெரிய படை தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்தது. ஔரங்கசீப்பின் வரலாற்றைக் கூறும், 'ஔரங்கசீப், தி மென் அண்ட் தி மித்' (Aurangzeb, the Man and the Myth) என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆட்ரே ட்ருஸ்ச்கே, "அந்த படை, முகாம்கள், சந்தை, மன்னரின் வாகனம், பணியாட்கள், அதிகாரிகளுடன் முன்னோக்கி நகர்ந்தது." என்று குறிப்பிட்டுள்ளார். "ஔரங்கசீப், பழைய முகலாய பாரம்பரியத்தையே பின்தொடர்ந்தார். முகலாய மன்னர்களுடன் அவர்களின் தலைநகரும் சேர்ந்தே நகரும் என்பது தான் அந்த பாரம்பரிய நடைமுறை. ஆனால், மற்ற மன்னர்களோடு ஒப்பிடுகையில் ஔரங்கசீப் வித்தியாசப்படுகிறார். ஏன் என்றால் அவர் தென்னிந்தியா வந்த பிறகு டெல்லிக்கு திரும்பவே இல்லை." டெல்லியை விட்டு அவர் வெளியேறிய பிறகு டெல்லி தனித்துவிடப்பட்டது. செங்கோட்டையில் தூசி படலத்தின் அடர்த்தி கூடியது. கிருஷ்ணரின் 'துவாரகா' நகரம் உண்மையில் இருந்ததா? அகழாய்வில் புதிய தகவல்கள் இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கடன் கொடுத்த இந்திய வணிகரைப் பற்றி தெரியுமா? தரங்கம்பாடி: 400 ஆண்டுகள் கடந்தும் உறுதியாக நிற்கும் 'டேனிஷ்' கோட்டை எதற்காக கட்டப்பட்டது? நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை தனிமையில் கழிந்த வயதான காலம் தன்னுடைய வாழ்நாளின் இறுதி மூன்று தசாப்தங்களை தென்னிந்தியாவில் கழித்த ஔரங்கசீப் அங்கிருந்தபடியே போர்களை வழிநடத்தினார். அவரது படையில் இடம் பெற்றிருந்த பிம்சேன் சக்சேனா என்ற இந்து வீரர், பாரசீகத்தில் 'தாரிக்-இ-தில்குஷா' என்ற சுயசரிதை நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், "இந்த உலக மக்கள் அனைவரும் பேராசைக்காரர்களாக இருப்பதை நான் உணர்கிறேன். ஔரங்கசீப்பும் அதற்கு விதிவிலக்கல்ல. பல கோட்டைகளை கைப்பற்றுவதில் அவர் அதீத ஆர்வம் காட்டுகிறார்," என்று குறிப்பிட்டிருந்தார். ஔரங்கசீப்பின் இறுதி காலம் அவருக்கு மகிழ்ச்சியாக இல்லை. இந்தியா முழுமையும் ஆள வேண்டும் என்ற அவருடைய கனவு கொஞ்சம்கொஞ்சமாக தகர்ந்து போகத் துவங்கியது. பட மூலாதாரம்,PENGUIN VIKING படக்குறிப்பு,டெல்லியை விட்டு அவர் வெளியேறிய பிறகு டெல்லி தனித்துவிடப்பட்டது. 'தி ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் ஔரங்கசீப்' (The Short History of Aurangzeb) என்ற புத்தகத்தில் வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்கார், "வயதான காலத்தில் தனிமை நோய்க்கு ஆளானார் ஔரங்கசீப். அவருடைய நெருங்கிய உறவினர்கள் பலரும் இறந்து போனார்கள். இளமை காலம் முதல் அவருடன் பயணித்த அவரின் அமைச்சர் அசாத் கான் மட்டுமே உயிருடன் இருந்தார். ஔரங்கசீப்பின் அமைச்சரவை, கோழைத்தனம் கொண்ட, பொறாமை மிகுந்த, சுயநலனுக்காக எதையும் செய்ய தயாராக இருந்தவர்களால் நிறைந்திருந்தது," என்று எழுதியுள்ளார். தாந்தியா தோபே: சப்பாத்தி மூலம் புரட்சி செய்தியைப் பரப்பிய கிளர்ச்சியாளர் - ஆங்கிலேயர்களை திணற வைத்தது எப்படி?19 பிப்ரவரி 2025 சாவர்க்கர் மன்னிப்பு கேட்டு ஆங்கிலேயருக்கு கடிதம் எழுதியது ஏன்? அருண் ஷோரி புது தகவல்19 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வயதான காலத்தில் தனிமை நோய்க்கு ஆளானார் ஔரங்கசீப் திறமையற்ற மகன்கள் ஔரங்கசீப் மரணத்தின் போது அவருடைய மூன்று மகன்கள் உயிருடன் இருந்தனர். இரண்டு மகன்கள் அவர் வாழும் போதே உயிரிழந்தனர். உயிருடன் இருந்த மகன்கள் யாருமே இந்தியாவை ஆளக்கூடிய தகுதியையோ, பலத்தையோ பெற்றிருக்கவில்லை. 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில், தன்னுடைய இரண்டாவது மகன் மௌசத்தால் கந்தஹாரை வெற்றி கொள்ள இயலவில்லை என்ற விமர்சனத்தை ஔரங்கசீப் முன்வைத்தார். "திறமையற்ற மகன் இருப்பதைக் காட்டிலும் ஒரு மகளைப் பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்," என்றும் அவர் எழுதியிருந்தார். ஔரங்கசீப்பின் கடிதங்கள் அனைத்தும் 'ருகாயத் ஆலம்கிரி' என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. "உன்னுடைய எதிரிகளிடமும், கடவுளிடமும் உன்னுடைய முகத்தை எவ்வாறு காட்டுவாய்?" என்று கோபத்துடன் அந்த கடிதத்தை அவர் முடித்திருப்பார். அவர் மகன்கள் வாரிசாக இந்தியாவை ஆள முடியாமல் போனதற்கு அவரும் ஒரு காரணம் என்பதை ஔரங்கசீப் உணரவில்லை. தி பிரின்சஸெஸ் ஆஃப் தி முகல் எம்பையர் (The Princesses of the Mughal Empire) என்ற புத்தகத்தில் வரலாற்றாசிரியர் முனிஸ் ஃபரூக்கி, "இளவரசர்களின் தனிப்பட்ட வாழ்வில் தலையிட்டு ஔரங்கசீப் அவர்கள் சுயமாக தேர்வு செய்யும் உரிமையை கேள்விக்குள்ளாக்கினார்," என்று கூறுகிறார். ஆட்ரே தன்னுடைய புத்தகத்தில், "ஔரங்கசீப், 1700-களின் போது, தன்னுடைய மகன்களைக் காட்டிலும் பேரன்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க துவங்கினார். இது மகன்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியது. சில நேரங்களில், ஔரங்கசீப் தன்னுடைய மகன்களைக் காட்டிலும் அரசவையில் இடம் பெற்றிருந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். அவரின் இளைய மகனான கம்பக்‌ஷை முதன்மை அமைச்சர் அசாத் கான் மற்றும் ராணுவத் தளபதி ஜுல்ஃபிகர் கான் கைது செய்தது அதற்கு ஒரு முக்கிய உதாரணம்," என்று குறிப்பிடுகிறார். தந்தையின் அனுமதியைப் பெறாமல் மராத்தி அரசர் ராஜாராமுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயன்றது தான் கம்பக்‌ஷ் செய்த தவறு. ராஜாராம், சிவாஜியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இமயமலை: நூறாண்டுக்கு முன்பே ஆபத்துகளை கடந்து புகைப்படக் கலைஞர் எடுத்த அரிய படங்கள்18 பிப்ரவரி 2025 மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? இந்தி எதிர்ப்பின் நெடிய வரலாறு18 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சில நேரங்களில், ஔரங்கசீப் தன்னுடைய மகன்களைக் காட்டிலும் அரசவையில் இடம் பெற்றிருந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களின் மரணம் ஔரங்கசீப்புக்கு வயது அதிகரிக்கஅதிகரிக்க அவருடைய தனிப்பட்ட வாழ்வில் இருள் சூழ்ந்தது. 1704-ஆம் ஆண்டு இரானில் அவரின் போராட்ட குணம் மிக்க மகன், இரண்டாம் அக்பர் மரணம் அடைந்தார். 1705, மார்ச் மாதத்தில் அவருடைய மருமகள் ஜஹான்ஜெப் பானோ குஜராத்தில் மரணம் அடைந்தார். அதற்கு முன்னதாக 1702-ஆம் ஆண்டு அவருடைய மகளும் கவிதாயினியுமான ஜெப்-உன்-நிஷா மரணம் அடைந்தார். அதன் பிறகு உயிருடன் இருந்த கடைசி உடன்பிறப்பான கௌஹர்-ஆராவும் உயிரிழந்தார். "ஷாஜகானின் பிள்ளைகளில் நானும் அவளும் மட்டுமே உயிர் பிழைத்திருந்தோம்," என்று ஔரங்கசீப் ஒரு முறை கூறினார். ஆனால் அவருடைய இழப்புகள் அத்துடன் முடிவுக்கு வந்துவிடவில்லை. 1706-ஆம் ஆண்டு அவருடைய மகள் மெஹர்-உன்-நிஷா, மருமகன் இஸித் பக்‌ஷும் உயிரிழந்தனர். ஔரங்கசீப் மரணமடைவதற்கு சில காலம் முன்னர், அவருடைய பேரன் புலாந்த் அக்தரும் உயிரிழந்தார். அதன் பின்னரும் இரண்டு பேரன்கள் உயிரிழந்தனர். இது ஔரங்கசீப்பிற்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் என்பதால் அரசவை உறுப்பினர்கள் அவரிடம் இந்த மரணங்கள் குறித்து தெரிவிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஔரங்கசீப் வயதாக ஆக அவருடைய தனிப்பட்ட வாழ்வில் இருள் சூழ்ந்தது வறட்சியும் கொள்ளை நோயும் இது மட்டுமின்றி, இந்த காலக்கட்டத்தில் தென்னிந்தியாவில் நிலவிய பஞ்சம் ஔரங்கசீப்பின் பிரச்னைகளை அதிகரித்தது. நிகோலோ மனுச்சி என்ற இத்தாலிய பயணி ஔரங்கசீப் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அவருடைய ஸ்டோரியா டொ மோகர் (Storia do Mogor) என்ற புத்தகத்தில், "1702 முதல் 1704 வரையிலான காலக்கட்டத்தில் தென்னிந்தியாவில் மழையே இல்லை. அதோடு கொள்ளை நோயும் பரவிய காலம் அது. இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் பேர் உயிரிழந்தனர். பசியால் வாடிய மக்கள் காலணாவுக்காக பெற்ற பிள்ளைகளையும் விற்க தயாராக இருந்தனர். ஆனால் வாங்கிக் கொள்ளத்தான் ஒருவரும் இல்லை," என்று குறிப்பிடுகிறார். "இறந்து போன மக்கள் கால்நடைகளைப் போல் புதைக்கப்பட்டனர். புதைப்பதற்கு முன்பு அவர்களின் உடைகளில் ஏதேனும் நாணயங்கள் இருக்கிறதா என்று தேடப்பட்டது. பிறகு தலையும் காலும் ஒரே கயிற்றால் கட்டி, இழுத்துவரப்பட்டு, கண் முன்னே தெரியும் ஏதாவது ஒரு குழியில் போட்டு புதைக்கப்பட்டனர்" "அந்த இடத்தின் நாற்றம் வாந்தி உணர்வை ஏற்படுத்தியது," என்று மனுச்சி குறிப்பிடுகிறார். அதனைச் சுற்றி ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. உணவு உண்பது முடியாமல் போய்விட்டது," என்றும் கூறுகிறார். "வயல்களில் மரங்களும், பயிர்களும் இல்லாமல் போனது. அந்த இடத்தை மனிதர்கள், விலங்குகளின் எலும்புகள் ஆக்கிரமித்தன. மொத்த பகுதியிலும் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து போனது. மூன்று நான்கு நாட்கள் பயணத்தில் மக்கள் நெருப்பு பற்ற வைத்ததைக் கூட காண இயலவில்லை," என்று அவர் எழுதியுள்ளார். தமிழுக்காக குழந்தைகளுடன் சிறை புகுந்த 73 பெண்கள் - அறியப்படாத முதல் மொழிப்போர் வரலாறு17 பிப்ரவரி 2025 ஆப்ரகாம் லிங்கனின் மனைவியை சூழ்ந்த சர்ச்சைகள், விமர்சனங்கள் - ஓர் வரலாற்று பார்வை17 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,VINTAGE படக்குறிப்பு,நிகோலோ மனுச்சி என்ற இத்தாலிய பயணி ஔரங்கசீப் ஆட்சி காலத்தில் தான் இந்தியாவுக்கு வருகை புரிந்தார் இறுதி வரை உடன் இருந்த உதய்பூரி இறுதி காலம் வரை, கம்பக்‌ஷின் அம்மா உதய்பூரி ஔரங்கசீப்புடன் இருந்தார். மரணப் படுக்கையில் இருந்த போது கம்பக்‌ஷுக்கு ஔரங்கசீப் எழுதிய கடிதத்தில்,"உடல் நிலை மோசமடைந்த காலத்திலும் உதய்பூரி என்னைவிட்டுச் செல்லவில்லை. மரணம் வரையிலும் என்னுடன் வருவார்," என்று குறிப்பிட்டிருந்தார் ஔரங்கசீப். உண்மையில் அவ்வாறே நடந்தது. ஔரங்கசீப் மரணம் அடைந்து சில மாதங்களில் உதய்பூரியும் மரணத்தை தழுவினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஔரங்கசீப் மரணம் அடைந்து சில மாதங்களில் உதய்பூரியும் மரணத்தை தழுவினார் வடக்கில் ஏற்பட்ட புரட்சி இறுதியாக அஹமதுநகரில் முகாமிட்டார் ஔரங்கசீப். ஸ்டான்லி லேன்-பூல், 'ஔரங்கசீப் அண்ட் தி டிகேய் ஆஃப் தி முகல் எம்பையர்' (Aurangzeb and the Decay of the Mughal Empire) என்ற புத்தகத்தில்," ஔரங்கசீப் நீண்ட காலம் டெல்லியில் இல்லாத காரணத்தால் வடக்கில் பல இடங்களில் கலகங்கள் வெடித்தன. ராஜபுத்திரர்கள் முன்னோக்கி வந்தனர். ஆக்ரா அருகே ஜாட் பிரிவினர் தலை தூக்கினார்கள். சீக்கியர்கள் முல்தானில்ஆதிக்கம் செலுத்தி முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு சவாலாக மாறினார்கள். முகலாய ராணுவம் சோர்வுற்றிருந்தது. மராத்தியர்களும் முகலாயர்களை ரகசியமாக தாக்கும் துணிவைப் பெற்றனர்," என்று எழுதியுள்ளார். தன்னுடைய தந்தை ஷாஜகானுக்கு அவருடைய மகன்கள் செய்ததைப் போன்றே, தன்னுடைய மகன்களும் தன்னை மோசமாக நடத்தக் கூடும் என்று நினைத்த ஔரங்கசீப் அவர்களை தொலைதூரங்களுக்கு அனுப்பி வைத்தார். "ஔரங்கசீப் ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பிராந்திய விரிவாக்கம் முகலாயர்களை பலப்படுத்துவதற்கு பதிலாக பலவீனமாக்கியது. அவருடைய ஆட்சியின் கீழ், சாம்ராஜ்ம் விரிவாக்கப்பட்டது. அதனை ஆள்வது கடினமானது. எனக்குப் பின்னால் இந்த சாம்ராஜ்யம் தலைமையில்லாமல் தடுமாறும் என்று ஔரங்கசீப்பே ஒருமுறை கூறியுள்ளார்," என்று மற்றொரு வரலாற்றாசிரியர் ஆப்ரஹாம் எராலி 'தி முகல் த்ரோன் தி சகா ஆஃப் இண்டியாஸ் கிரேட் எம்பெரர்ஸ்' ( 'The Mughal Throne The Saga of India's Great Emperors') என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எனக்குப் பின் இந்த சாம்ராஜ்யம் தலைமையில்லாமல் தடுமாறும் என்று ஔரங்கசீப்பே ஒருமுறை கூறியுள்ளார் மோசமான ஔரங்கசீப் உடல்நிலை இவை அனைத்தைக் காட்டிலும் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது, அவரைத் தொடர்ந்து அரியணையை கைப்பற்றுவது யார் என்பது தான். மனுச்சி, "அரியணைக்கு உரிமைக் கோரக் கூடியவர்களான, ஔரங்கசீப்பின் மகன்களுக்கும் வயதாகிவிட்டது. அவருடைய பேரன்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் தாடிகளும் நரைத்துப் போகும் அளவுக்கு 45 வயதை தாண்டியவர்களாக இருக்கின்றனர். இளைய இரத்தமான கொள்ளுப்பேரன்கள் அவர்களின் 25-27 வயதில் இருந்தனர். ஆனால் ஔரங்கசீப்புக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஒருவரால் மட்டுமே ஏற்க முடியும். அரியணைக்கான போட்டியில் மற்றவர்களின் கைகளும் கால்களும் வெட்டப்படும் அல்லது கொல்லப்படுவார்கள்," என்று குறிப்பிட்டுள்ளார். 1705-ஆம் ஆண்டு வாகின்சேரா என்ற மராட்டிய கோட்டையை கைப்பற்றிய பிறகு ஔரங்கசீப் தன்னுடைய படைகளுடன் கிருஷ்ணா நதிக்கரையில் ஒரு கிராமத்தில் தங்கினார். அங்கே தான் அவருக்கு உடல் நிலை மோசமானது. அதே ஆண்டு டெல்லி செல்வதை இலக்காகக் கொண்டு அவர் அஹமதுநகருக்கு நகர்ந்தார். ஆனால் அதுவே அவரின் இறுதிப்பயணமாக அமைந்தது. 1707-ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று 89 வயதான ஔரங்கசீப் உடல் நிலை மீண்டும் மோசமானது. சில நாட்களில் உடல் நலன் தேறி அரசுப் பணிகளை மேற்கொண்டார். ஆனால் இந்த முறை, அவருக்கு இனி போதுமான அவகாசம் இல்லை என்பதை உணர்ந்திருந்தார். தன்னுடைய மகன் அஸாமின் பொறுமையின்மை அவரை கலங்க வைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,1707-ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று 89 வயதான ஔரங்கசீப்பின் உடல் நிலை மீண்டும் மோசமானது மகன்களுக்கு ஔரங்கசீப் கடிதம் ஜாதுநாத் சர்க்கார், "ஔரங்கசீப் உடல் நிலை சரியில்லாமல் போன நான்கு நாட்கள் கழித்து, தனது மகன் அஸாமை மாள்வா ஆளுநராக நியமித்து அனுப்பிவைத்தார். ஆனால் தன்னுடைய அப்பா அவரின் இறுதி காலத்தை நெருங்குகிறார் என்று உணர்ந்த அஸாம் எந்த பரபரப்பும் இல்லாமல் பொறுமையாக மாள்வா செல்ல ஆரம்பித்தார் அஸாம். பல இடங்களில் பொறுமையாக நின்று தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். அஸாமை அனுப்பிய நான்காவது நாளில் ஔரங்கசீப்பிற்கு உடல் நிலை மேலும் மோசமடைந்தது. இருப்பினும் அவர் அரசவைக்கு வந்து தன்னுடைய பணிகளை தொடர்ந்தார். அந்த மோசமான சூழலிலும் அவர் ஐந்து முறை தொழுகை நடத்தினார்," என்று எழுதியுள்ளார். ஔரங்கசீப் தன்னுடைய இறுதி காலத்தில் தன்னுடைய மகன்களுக்கு இரண்டு கடிதங்களை எழுதினார். "உங்கள் இருவருக்கும் இடையே அதிகாரத்துக்கான சண்டை வரவே கூடாது என்று விரும்புகிறேன். ஆனால் என்னுடைய மரணத்திற்கு பிறகு ரத்தக்களரி ஏற்படும் என்பதை என்னால் உணர முடிகிறது. மக்களுக்காக பணியாற்றும் ஆசையையும், ஆட்சி செய்வதற்கான திறனையும் கடவுள் உங்களுக்கு வழங்கட்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார். ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?3 பிப்ரவரி 2025 ஹிட்லரின் யூத படுகொலை மையமாக திகழ்ந்த 'அவுஷ்விட்ஸ்' வதை முகாம் எவ்வாறு இயங்கியது?28 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உடல் நிலை சரியில்லாமல் போன நான்கு நாட்கள் கழித்து, ஔரங்கசீப் அஸாமை மல்வாவுக்கு ஆளுநராக நியமித்து அனுப்பிவைத்தார் 1707 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதி ஔரங்கசீப் தன்னுடைய படுக்கை அறையில் இருந்து வெளியே வந்தார். ஜாதுநாத் சர்கார், "ஔரங்கசீப், அன்று காலை தொழுகை நடத்தினார். ஜெபமாலையில் உள்ள மணிகளை எண்ணினார். மெதுவாக, அவர் சுயநினைவை இழக்கத் துவங்கினார். சுவாசிக்க சிரமப்பட்டார். அவருடைய உடல் பலவீனம் அடைந்தாலும் கூட, அவர் கையில் இருந்த ஜெபமாலை அவர் கையை விட்டு நழுவவில்லை. வெள்ளிக்கிழமை தான் அவருடைய இறுதி நாளாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த ஆசையும் நிறைவேறியது," என்று எழுதினார். அவர் மரணிப்பதற்கு முன்பு, அவருடைய உடல் சவப்பெட்டி ஏதும் இல்லாமல் அருகிலேயே எங்காவது புதைக்கப்பட வேண்டும் என்ற தன்னுடைய இறுதி விருப்பத்தை தெரிவித்தார். அவர் மரணமடைந்த இரண்டு நாட்கள் கழித்து அங்கே வந்த அஸாம், துக்கம் அனுசரித்தார். தன்னுடைய சகோதரி ஜூனத்-உன்-நிஷா பேகத்திற்கு ஆறுதல் கூறிய அவர் தன்னுடைய தந்தையின் உடலை, தௌதலாபாத்தில் உள்ள குல்தாபாத்தில் அமைந்திருக்கும் சூஃபி ஞானி ஷேக் ஜெய்ன்-உத்-தின் கல்லறை அருகே அடக்கம் செய்தார். ஔரங்கசீப் 89 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். ஜாதுநாத் சர்கார், "ஔரங்கசீப் நல்ல நினைவாற்றலைக் கொண்டிருந்தார். ஒருவரை ஒரு முறை பார்த்துவிட்டால் அந்த முகத்தை அவரால் மறக்க மாட்டார். அவருடைய இறுதி காலத்தில், அவரின் ஒரு காதில் கேட்கும் திறன் குறைந்தது. அவர் வலது காலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நடுக்கத்துடன் நடக்கத் துவங்கினார்," என்று எழுதியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஔரங்கசீப் நல்ல நினைவாற்றலைக் கொண்டிருந்தார். ஒருவரை ஒரு முறை பார்த்துவிட்டால் அந்த முகத்தை அவரால் மறக்கவே மாட்டார். ஔரங்கசீப் மகன்களுக்கு இடையே நடந்த யுத்தம் பஞ்சாப் ஆளுநராக இருந்த தன்னுடைய மகன் மௌசம் என்ற ஷா ஆலத்தை ஔரங்கசீப் அடுத்த வாரிசாக அறிவித்திருந்தார். இருப்பினும் கூட, ஔரங்கசீப்பின் மரணத்திற்கு பிறகு அங்கே வந்த அஸாம் ஷா தன்னை மன்னனாக பிரகடனப்படுத்திக் கொண்டார். பின்னர் அங்கிருந்து ஆக்ரா நோக்கிச் சென்றார். அப்போது தான் அவருடைய மன்னர் பொறுப்பு முறையாக அங்கீகரிக்கப்படும். மனுச்சி இது குறித்து கூறும் போது, "மற்றொருபுறம், ஷா ஆலம் தன்னுடைய அப்பாவின் மரண செய்தியை கேட்டு ஆக்ராவுக்கு விரைந்தார். அஸாம் ஷா ஆக்ராவுக்கு வருவதற்கு முன்பே ஆலம் அங்கே சென்றார். அவரை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். ஜஜௌவில் இரண்டு சகோதரர்களின் ராணுவமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பல ஆண்டுகளுக்கு முன்பு ஔரங்கசீப்பிற்கும் அவருடைய சகோதரர் தாரா சிகோவுக்கும் இதே இடத்தில் தான் போர் மூண்டது. ஷா ஆலம் அந்த சண்டையில் முன்னிலையில் இருந்தார். அடுத்த நாள், ஜூன் 20 அன்று தந்தையின் அரியணையை தன் வசமாக்கிக் கொண்டார் ஷா ஆலம். ஜெர்மனிக்கு படிக்கச் சென்ற இடத்தில் ஹிட்லரின் இனவெறி கொள்கைகளை எதிர்த்து நின்ற இந்திய பெண் - என்ன செய்தார்?21 ஜனவரி 2025 எரிமலை வெடிப்பால் நகரமே அழிந்தபோது இந்த ஆண், பெண் கைகளில் பற்றி இருந்தது என்ன? 2,000 ஆண்டுக்கு முந்தைய அற்புத வாழ்க்கை23 ஜனவரி 2025 பட மூலாதாரம்,VINTAGE படக்குறிப்பு,பஞ்சாபின் ஆளுநராக இருந்த தன்னுடைய மகன் மௌசம் என்ற ஷா ஆலத்தை ஔரங்கசீப் அடுத்த வாரிசாக அறிவித்திருந்தார் முகலாய சாம்ராஜ்யத்தின் முடிவு தோல்வி அடைந்த அஸாம் ஷா, தன்னுடைய சகோதரன் ஷா ஆலமின் கையில் சரணடைவதற்கு முன்பே தன்னுடைய முடிவை தானே தேடிக் கொண்டார். ஷா ஆலமும் 1712-ஆம் ஆண்டு, ஔரங்கசீப் இறந்து ஐந்து ஆண்டுகள் கழித்து மரணம் அடைந்தார். 1712 முதல் 1719 வரையிலான 7 ஆண்டுகளில் நான்கு முகலாய மன்னர்கள் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் அதற்கு முந்தைய 150 ஆண்டுகளை வெறும் நான்கே நான்கு முகலாய மன்னர்கள் தான் ஆட்சி செய்தனர். கொஞ்சம் கொஞ்சமாக முகலாய சாம்ராஜ்யத்தின் பழம்பெருமை அழியத் துவங்கியது. "அவர் பாரிய சாதனைகளை புரிந்திருந்தாலும் கூட, அரசியல் ரீதியாக அவர் தோல்வியுற்ற அரசர். அவருடைய தனி ஆளுமை மட்டுமே அவருக்குப் பின்னால் முகலாய சாம்ராஜ்யம் அழியக் காரணம் இல்லை. அவரால் தான் முகலாய சாம்ராஜ்யம் அழிந்தது என்று கூறுவதும் கூட சரியல்ல. ஆனால் சாம்ராஜ்யம் அழிவதை தடுக்க அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது தான் உண்மை," என்று ஜாதுநாத் சர்கார் எழுதியுள்ளார். 1707-ஆம் ஆண்டு ஔரங்கசீப் மரணித்த பிறகு, முகலாய சாம்ராஜ்யம் கடந்த கால கனவுகளுடன் வாழ்ந்து கொண்டு தான் இருந்தது. அந்த மரணம் நிகழ்ந்து 150 ஆண்டுகள் கழித்து, 1857-ஆம் ஆண்டு பஹதூர் ஷா ஜாஃபரின் ஆட்சியோடு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது முகலாய சாம்ராஜ்யம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9deqvwd7j1o
  17. ஆஸ்திரேலியா ஆல் அவுட்- இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 39 நிமிடங்களுக்கு முன்னர் துபையில் இன்று (மார்ச் 4) நடைபெற்று வரும் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற, 50 ஓவர்களில் 265 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ள இலக்கை இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்யும் என்பது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பே, துபை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருப்பது இந்திய அணிக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல, முதல் இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜடேஜா, அக்ஷர் படேல் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இந்திய பந்துவீச்சில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக, டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கோனொலி களமிறங்கினார். கூப்பர், தொடக்கம் முதலே சற்று தடுமாறி வந்த நிலையில், மூன்றாவது ஓவரில் ஷமி பந்துவீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பொறுப்பை உணர்ந்து விளையாடத் தொடங்கினார். ஸ்மித்- டிராவிஸ் ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில், எட்டாவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார் டிராவிஸ். அவர் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன், 33 பந்துகளில், 39 ரன்களை எடுத்திருந்தார். ஆனால், டிராவிஸ் எந்த ரன்னும் எடுக்காமல் இருந்தபோதே, அவர் கொடுத்த கேட்சை ஷமி தவறிவிட்டார். டிராவிஸ் வெளியேறிய பிறகு, மார்னஸ் லபுஷேனுடன் ஜோடி சேர்ந்த ஸ்மித், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 10 ஓவர்களுக்குள், ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை எடுத்திருந்தது. அதன் பின்னர், கிட்டத்தட்ட 13 ஓவர்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்களால், ஸ்மித்- மார்னஸ் ஜோடியை பிரிக்க முடியவில்லை. அதேசமயம், ஷமி, வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், ஜடேஜா ஆகியோர் அதிக ரன்களையும் கொடுக்காமல் சிறப்பாகவே பந்துவீசினர். பிறகு 22-வது ஓவரில், ஜடேஜா வீசிய பந்தில் 'எல்பிடபிள்யூ' முறையில் ஆட்டமிழந்தார் மார்னஸ். அவர் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு சீரான இடைவெளியில் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, மறுபுறம் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தார் கேப்டன் ஸ்மித். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்கு தலைவலியாக திகழும் 5 முக்கிய பலவீனங்கள்8 மணி நேரங்களுக்கு முன்னர் நாக்அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் - இந்தியா வெற்றி பெற இந்த உத்திகள் கைகொடுக்குமா?3 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வருண் சக்கரவர்த்தி ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்ட கேப்டன் ஸ்மித் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் 96 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்தார் 26வது ஓவரில், தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார் ஸ்மித். 68 பந்துகளில் 50 ரன்களை எட்டியிருந்தார். அதற்கு அடுத்த ஓவரில், ஆஸ்திரேலிய அணி தனது நான்காவது விக்கெட்டை இழந்தது. ஜடேஜா பந்தில், விராத் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்கிலிஸ். சிறப்பாக விளையாடி வந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 96 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், ஸ்மித் 36 ரன்களில் இருந்தபோதே கொடுத்த ஒரு கேட்சை ஷமி தவறவிட்டார். ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கத் தொடங்கிய நிலையில், ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தியது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. அடுத்ததாக க்ளென் மேக்ஸ்வெல், 5 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து, அக்சர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது, 37.3 ஓவர்களில், 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. ஆட்டத்தின் போக்கை மாற்றிய இரு விக்கெட்டுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேப்டன் ஸ்மித், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷமி பந்தில் ஆட்டமிழந்தார் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெலின் விக்கெட்டுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றின என்றே கூறலாம். 50 ஓவர்களில் 270 ரன்களையாவது ஆஸ்திரேலியா எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. 45வது ஓவரில், வருண் சக்கரவர்த்தி தனது இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தினார். 29 பந்துகளில் 19 ரன்களை எடுத்திருந்த ஆஸ்திரேலியாவின் பென் த்வார்ஷுயிஸை அவர் வெளியேற்றினார். மறுபுறம் நிதானமாக பேட் செய்து கொண்டிருந்த அலெக்ஸ் கேரியும் சற்று நேரத்தில் ரன் அவுட் ஆகியது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது. அவர் 57 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு விக்கெட்டுகள் வேகமாக சரியத் தொடங்கின, குறிப்பாக கடைசி ஐந்து ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா. 49.3 ஓவர்களின் முடிவில், 10 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களை எடுத்திருந்தது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள், ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணிக்கு, 50 ஓவர்களில் 265 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸை இழந்த இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இதுவரையிலான நான்கு ஆட்டத்திலும் இந்திய அணி டாஸ் வெல்லவில்லை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டாஸ் வென்றதும் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இதுவரையிலான நான்கு ஆட்டத்திலும் இந்திய அணி டாஸ் வெல்லவில்லை. ஆனாலும், 3 ஆட்டங்களில் வெற்றியே பெற்றுள்ளது. டாஸ் இழந்த பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, "நான் இரண்டிற்கும் (பேட்டிங் மற்றும் பந்துவீச்சு) தயாராக இருந்தேன். இங்குள்ள விக்கெட்டுகள் மிகவும் வித்தியாசமாக உள்ளன. இரண்டு மனமாக இருக்கும்போது, டாஸை இழப்பது தான் நல்லது." என்று கூறினார். இந்த போட்டிக்கான தங்களது அணியில் (Playing 11) ஆஸ்திரேலியா இரண்டு மாற்றங்களைச் செய்தது. தொடக்க வீரர் மேட் ஷார்ட் காயம் காரணமாக விலகியதால், அவருக்கு பதிலாக கூப்பர் கோனொலியும், வேகப்பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் தன்வீர் சங்காவும் சேர்க்கப்பட்டனர். கடந்த ஞாயிறன்று (மார்ச் 2) நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqx024z14p7o
  18. டிரம்பின் வரிகள் நடைமுறைக்கு வந்தன - கனடாவும் சீனாவும் உடனடியாக பதிலடி 04 MAR, 2025 | 12:27 PM கனடா சீனா மெக்சிக்கோவிற்கு எதிரான அமெரிக்காவின் வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து சீனாவும் கனடாவும் பதில் நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. அமெரிக்காவின் 150பில்லியன் டொலர் பெறுமதியான இறக்குமதிகள் மீது 25வீத வரிகளை விதிப்பதாக கனடா அறிவித்துள்ளது. இதேவேளை சீனா அமெரிக்காவின் விவசாய உற்பத்திகள் மீது பத்து முதல் பதினைந்து வீத வரிகளை அறிவித்துள்ளதுடன் பதில் நடவடிக்கையாக அமெரிக்க நிறுவனங்களை இலக்குவைக்கப்போவதாக அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/208234
  19. பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 3 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய சிம்ஃபொனி வரும் மார்ச் 8-ஆம் தேதி லண்டன் நகரில் வெளியிடப்படவிருக்கிறது. சிம்ஃபொனி என்றால் என்ன? 'சிம்ஃபொனி' இசைப்பது இசையுலகில் கௌரவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுவது ஏன்? கேள்வி: சிம்ஃபொனி என்றால் என்ன? பதில்: சிம்ஃபொனி (symphony) என்பது மேற்கத்திய செவ்வியல் இசை (Classical music) மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஒரு ஒத்திசைத் தொகுப்பு. இந்த இசைத் தொகுப்பு, பல பகுதிகளை, பெரும்பாலும் நான்கு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். இந்தப் பகுதிகள் movements என்று குறிப்பிடப்படுகின்றன. அதில் ஒரு பகுதி சொனாடா என்ற வடிவத்தில் இருக்கும். சிம்ஃபொனிகளுக்கு என மிகத் தெளிவான விதிகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. ஒரு சிம்ஃபொனி 30 முதல் 100 இசைக்கலைஞர்களைக் கொண்டு இசைக்கப்படும் ஒரு நிகழ்வாக இருக்கும். இதில் வயலின், செல்லோ போன்ற தந்திக் கருவிகள், ட்ரம்பட், புல்லாங்குழல், க்ளாரினெட், சாக்ஸபோன் போன்ற காற்றால் இசைக்கப்படும் கருவிகள், தாள இசைக் கருவிகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். ஐரோப்பிய இசை வரலாற்றில் செவ்வியல் இசையின் காலகட்டமாகக் கருதப்படும் 1740 - 1820 காலகட்டத்தில் சிம்ஃபொனிகள் உருவாகத் துவங்கியதாக பிரித்தானியா கலைக்களஞ்சியம் தெரிவிக்கிறது. ஜோசஃப் ஹைடன், மொசார்ட், பீத்தோவன் ஆகியோர் மிகச் சிறந்த சிம்ஃபொனி தொகுப்புகளை உருவாக்கியவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆஸ்கர் விழா மேடையில் ஏ.ஆர்.ரஹ்மானை தமிழில் பேச தூண்டிய நிகழ்வு எது தெரியுமா? எட் ஷீரன்: திக்குவாய் பிரச்னையை கடந்து, 600 கோடி பார்வைகளை பெற்று இசையில் சாதித்த இவர் யார்? சொல்லிசை சிஸ்டாஸ்: ஒடுக்குமுறைக்கு எதிராகப் பாடும் தமிழ்நாட்டின் முதல் பெண்கள் ராப் இசைக் குழு பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: காலத்தால் அழியாத 15 பாடல்கள் கேள்வி: விரைவில் இளையராஜா வெளியிடவிருக்கும் சிம்ஃபொனியின் பின்னணி என்ன? பதில்: இளையராஜா, Valiant என்ற பெயரில் ஒரு சிம்ஃபொனியை உருவாக்கியிருக்கிறார். இதனைத் தான் உருவாக்கிய முதல் சிம்ஃபொனி எனக் குறிப்பிடுகிறார் இளையராஜா. இந்த சிம்ஃபொனி லண்டனின் Royal Philharmonic Orchestra மூலம் இசைக்கப்பட்டு, ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுவிட்டது. இந்தப் பதிவு, மார்ச் 8ஆம் தேதியன்று வெளியிடப்படவிருக்கிறது. சிம்ஃபொனிகள் மிகச் சிக்கலான இசை வடிவமாககக் கருதப்படும் நிலையில், இதனை வெறும் 34 நாட்களில் எழுதி முடித்ததாக இளையராஜா தெரிவித்திருக்கிறார். கேள்வி: இந்தியர் ஒருவர் இதற்கு முன்பாக சிம்ஃபொனிகளை உருவாக்கியிருக்கிறார்களா? பதில்: ஆசியாவிலிருந்து சிலர் சிம்ஃபொனிகளை உருவாக்கியிருந்தாலும், இந்தியர் ஒருவர் இதுவரை சிம்ஃபொனிகளை உருவாக்கியதில்லை. இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிறு சிறு இசைத் தொகுப்புகளை சிலர் சிம்ஃபொனி என அழைத்தாலும், அப்படி அழைப்பது சரியல்ல என தன்னுடைய பேட்டிகளில் சுட்டிக்காட்டுகிறார் இளையராஜா. சிம்ஃபொனிகளுக்கென உள்ள விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்படுவதை மட்டுமே சிம்ஃபொனி எனக் குறிப்பிட வேண்டும் என்கிறார் அவர். தமிழ்நாட்டில் ஃபிளாட், வில்லா வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன? 11 கேள்வி - பதில்கள்3 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனுக்கு ஆதரவாக திரளும் ஐரோப்பிய நாடுகள் - லண்டன் மாநாட்டில் முடிவான 4 அம்ச செயல் திட்டம் என்ன?3 மார்ச் 2025 பட மூலாதாரம்,FACEBOOK கேள்வி: சிம்ஃபொனியை இளையராஜா ஏன் லண்டனில் பதிவுசெய்தார்? இந்தியாவில் சிம்ஃபொனிகளை பதிவுசெய்ய முடியாதா? பதில்: சிம்ஃபொனிகளை இசைக்க, மேற்கத்திய இசையை ஒத்திசைந்து இசைக்கக்கூடிய சுமார் 100 தேர்ந்த இசைக் கலைஞர்கள் தேவை. சிம்ஃபொனிகள் இறுதியாக பதிவுசெய்யப்படுவதற்கு முன்பாக, பல முறை அவை வாசிக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்படும். ஆகவே, அதற்கென வடிவமைக்கப்பட்ட அரங்கங்கள் தேவை. சிம்ஃபொனிகளை இசைக்கக்கூடிய சில இசைக் குழுக்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், புதிதாக சிம்ஃபொனி ஒன்றை உருக்கியுள்ள நிலையில் அதனை தேர்ச்சிபெற்ற மேற்கத்திய இசைக் கலைஞர்களை வைத்தே லண்டனில் பதிவுசெய்ததாகத் தெரிவிக்கிறார் இளையராஜா. கேள்வி: இளையராஜா இதற்கு முன்பாக, மேற்கத்திய செவ்வியல் இசையில் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறாரா? பதில்: 1986 ஆம் ஆண்டில் How to Name It? என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டார் இளையராஜா. இதில் மொத்தம் பத்து ட்ராக்குகள் (tracks) இடம்பெற்றிருந்தன. இளையராஜாவின் முதல் ஃப்யூஷன் ஆல்பமாக (fusion album) இது வெளியானது. 1988 ஆம் ஆண்டில் Nothing but Wind என்ற ஆல்பத்தை வெளியிட்டார் இளையராஜா. மேற்கத்திய செவ்வியல் இசை, இந்திய நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி ஆகியவற்றை இணைத்து இளையராஜா உருவாக்கியிருந்த இந்த இசைத் தொகுப்பை வாசித்திருந்தவர், புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைக் கலைஞரான ஹரி பிரசாத் சௌராசியா. 1993 ஆம் ஆண்டில் இளையராஜா ஒரு சிம்ஃபொனியை உருவாக்கியதாக செய்திகள் வெளியாயின. ஆனால், அதிகாரபூர்வமாக அந்தத் தொகுப்பு வெளியாகவில்லை. 2005 ஆம் ஆண்டில் திருவாசகத்தை மேற்கத்திய இசைக் கருவிகளின் இசையோடு வெளியிட்டார் இளையராஜா. புடாபெஸ்ட் நகரில் புடாபெஸ்ட் சிம்ஃபொனி ஆர்க்கெஸ்ட்ரா இதனை இசைத்து, பதிவுசெய்யப்பட்டது. இது oratorio வகையைச் சேர்ந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce98v44n0vmo
  20. 04 MAR, 2025 | 11:53 AM தனுஷ மரைன் (Danusha Marine) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடி படகின் வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை (03) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நடைபெற்றது. சோமாலியாவில் இருந்து பெறப்பட்ட கோரிக்கை பிரகாரம் 24 மீற்றர் கொண்ட இந்த பிரமாண்ட மீன்பிடி படகு சர்வதேச தரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். தனுஷ மரைன் (Danusha Marine) நிறுவனம் தென் கொரியா, கென்யா, சுவீடன் மற்றும் நோர்வே உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு மீன்பிடி படகுகளை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிகழ்வின் போது கருத்து தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், கடந்த 3 மாதங்களாக கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்ததாகவும், அமைச்சின் கீழ் இயங்கும் பல நிறுவனங்கள் கடந்த காலங்களில் பெரும் பின்னடைவை சந்தித்தது. 90 வீதமான பணியாளர்கள் திறமையும் அனுபவமும் கொண்டவர்களாக இருந்த போதிலும் அரசியல் அழுத்தங்களினால் அவர்களின் செயற்திறனை சரியான முறையில் பயன்படுத்த முடியவில்லை. எனினும், தற்போது நல்ல தலைமைத்துவம் இருப்பதால், அமைச்சின் ஊழியர்கள் அனைவரும் சுதந்திரமாகவும், அரசியல் அழுத்தங்கள் இன்றியும் திறமையாக சேவையாற்ற தயாராக இருக்கின்றன. Danusha Marine கம்பனியின் தலைவர் சுமித்ரா பெர்னாண்டோ போன்ற திறமையான தொழில் முயற்சியாளர்கள் நாட்டுக்கு தேவை. எதிர்காலத்தில் இவ்வாறான மீன்பிடி படகுகள் மாத்திரமன்றி பாரிய கப்பல்களையும் இந்நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் என்றார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, இலங்கை சிறந்த மனித வளங்கள் நிறைந்த நாடாக விளங்கும் அதேவேளை, புவிசார் அரசியல் அமைவிடத்தின் அடிப்படையில் இலங்கையானது உலகில் தனித்துவமிக்க நாடாகும். மேலும், மீன்பிடி படகுகளை உற்பத்தி செய்யும் திறன் இலங்கைக்கு உண்டு என்பதை இவ்வாறான மீன்பிடி படகுகளின் உற்பத்தி உலகிற்கு எடுத்துக்காட்டுவதாகவும், அடுத்த கட்டமாக இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மீன்பிடி படகுகளை உள்ளூர் மீன்பிடித் தொழிலுக்கு வழங்க வேண்டும். அடுத்தகட்டமாக உள்ளூர் கப்பல்கள் தயாரிப்பிலும் ஈடுபட வேண்டும் , தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றார். கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தனுஷ மரைன் லங்கா நிறுவனத்தின் தலைவர் சுமித்ரா பெர்னாண்டோ, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் , சுசாந்த கஹாவேஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/208227
  21. 04 MAR, 2025 | 10:57 AM வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தல் நடாத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தனிநபர் பிரேரணைகூட கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் 50வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு தென்னிலங்கையிலும் கடும் எதிர்ப்பு வந்தது. நாங்களும் அதற்கு எதிர்ப்பு இவ்வாறான இழுபறியில் மாகாண சபை தேர்தல் உள்ளது. இவ்வாறானதொரு சூழ் நிலையில் மாகாண சபை தேர்தல் நடந்தால் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு தயாரில்லை கட்சி வழக்கில் உள்ளது. கட்சியில் உள்ளவர்களே வழக்கினை தாக்கல் செய்திருக்கின்றனர். தாயினை நீதிமன்றத்தில் வைத்துக்கொண்டு தாயிடம் உணவு கேட்பது போலுள்ளது. பால் அருந்த போகின்றோம் என்று சொல்வது இனவிடுதலைக்கான அரசியல் அல்ல நாங்கள் செய்வது பதவிகளுக்கான அரசியல் அல்ல இனவிடுதலைக்கான அரசியல் பதவிகளுக்கு அரசியல் செய்வது தவிர்க்கப்படவேண்டும். இவ்வாறான சூழல் இருக்கும் போது நான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் இல்லை என்றார். https://www.virakesari.lk/article/208222
  22. 04 MAR, 2025 | 10:52 AM (செ.சுபதர்ஷனி) வருடாந்தம் இலங்கையில் 3 இலட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. எனினும் அவர்களில் சுமார் 4 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரத்துக்கு இடைப்பட்டக் குழந்தைகள் பிறவிக் குறைபாடு நோய்களுடன் பிறப்பதாக விசேட வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்தார். மார்ச் 3 சர்வதேச பிறவி குறைபாடு நோய் தினத்தை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மருத்துவ சங்கத்தில் நேற்று திங்கட்கிழமை (03) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் முதன் முறையாக 2006 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் பிறவிக் குறைபாடு நோய்கள் தொடர்பில் விசேட ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. 18 ஆயிரம் குழந்தைகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மேற்படி ஆய்வின் போது நாட்டில் சிசு இறப்பு வீதம் குறைவடைந்து உள்ளதுடன், பிறவிக் குறைபாடு நோய்களுடன் பிறக்கும் குழந்தைகளின் வீதம் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. வருடாந்தம் இலங்கையில் 3 இலட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. அவர்களில் சுமார் 4 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரத்துக்கு இடைப்பட்டக் குழந்தைகள் பிறவிக் குறைபாடு நோய்களுடன் பிறப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அத்தோடு வருடாவருடம் நாட்டின் பிறப்பு வீதமும் கனி சம அளவில் குறைவடைந்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மேலும் 5 வயதுக்கு குறைந்த சிறுவர்களின் உயிரிழப்புக்கு 39 சதவீதம் பிறவிக் குறைபாடு நோய்களே பிரதான காரணமாக உள்ளது. வெளிப்பார்வைக்கு புலப்படும் வகையிலும், எமது பார்வைக்கு அப்பாற்பட்டு உடல் உறுப்பு சார்ந்த பகுதிகளில் ஏற்படும் குறைபாட்டு நோய்களும் உள்ளன. பிறவிக் குறைபாடு நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதுடன் உரிய சிகிச்சைகளை முறையாக பெறும் பட்சத்தில் நோயை முழுமையாக குணப்படுத்திக் கொள்ள முடியும். யாழ். போதனா வைத்தியசாலை, வவுனியா வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, பேராதனை வைத்தியசாலை, கொழும்பு சிறுவர் வைத்தியசாலை, கராபிட்டிய தேசிய வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் விசேடமாக சிறுவர்களின் பிறவிக் குறைபாடு நோய் தொடர்பில் உரிய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பிறக்கும் குழந்தைகளில் 30 பேரில் ஒருவருக்கு பிறவிக் குறைபாடு நோய் உள்ளது. அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாரதூரமான பிறவிக் குறைபாடு நோய் காரணமாக குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன், அவர்களது குடும்பமும் பொருளாதாரம் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படலாம். பிறவிக் குறைபாடு நோய்களில் 30 தொடக்கம் 3 வீதமானவை மரபணு குறைபாட்டால் ஏற்படும் நோய் நிலைமைகளாகும். குறிப்பாக இலங்கையில் டவுன் சிண்ட்ரோம் என்னும் மரபணு குறைபாட்டால் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிறவிக்குறைபாடு மற்றும் ஊனக் குறைபாட்டுடன் கூடிய கரு கலைப்புக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. ஆகையால் திருமணமானவர்கள் வைத்திய பரிந்துரையின் படி கர்பகாலத்தை திட்டமிடுவது நல்லது. நாட்டில் பிறவி குறைபாடு நோய்களை தடுப்பதற்கான வழிமுறைகளை உள்ளடக்கிய ஆய்வு அறிக்கையை பிறவி குறைபாடு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம், அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அரசாங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/208218
  23. 04 MAR, 2025 | 10:43 AM (நா.தனுஜா) இலங்கையில் நீண்டகாலமாக நிலவிவரும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தை முடிவுக்குக்கொண்டுவந்து, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் இதுவே சரியான தருணம் எனச் சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் சார்பில் உரையாற்றிய பேரவைத்தலைவர், அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செயன்முறை குறித்து தமது வரவேற்பை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் நேற்று திங்கட்கிழமை (03) இலங்கை நேரப்படி பி.ப 2.00 மணிக்கு ஆரம்பமான அமர்வில், 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அதன் சமகால நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் வாய்மொழிமூல அறிக்கை பேரவைத்தலைவரால் வாசிக்கப்பட்டது. அதன்படி இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தலில் பரந்துபட்ட மக்கள் ஆணையைப்பெற்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடமேறியதாகவும், புதிதாகத் தெரிவான பாராளுமன்றத்தில் ஆற்றிய கொள்கைப்பிரகடன உரையில் நாட்டில் நீண்டகாலமாக நிலவும் பிரிவினைகளைக் களைந்து, இனங்களுக்கு இடையில் தேசிய ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றத் தயாராக இருப்பதாக உறுதியளித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோன்று உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுவதாக ஜனாதிபதியினால் அளிக்கப்பட்ட வாக்குறுதி குறித்து வரவேற்பு வெளியிடப்பட்டதுடன், இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்கவேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. அதேவேளை உண்மை மற்றும் நீதிக்காக நீண்டகாலமாகப் போராடிவரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டதுடன், அவர்களுக்கான தீர்வை வழங்கக்கூடியவகையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் செயற்திறனான முறையில் இயங்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலைக்காப்புச்சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் உரிய நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டும் எனவும், வட, கிழக்கு மாகாணங்களில் சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்புக்கள் தொடர்வதாகத் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில், அவை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு, சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும் நீண்டகாலமாக நிலவிவரும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தை முடிவுக்குக்கொண்டுவந்து, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் இதுவே சரியான தருணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செயன்முறை குறித்து வரவேற்பு வெளியிடப்பட்டது. https://www.virakesari.lk/article/208217
  24. Published By: DIGITAL DESK 3 04 MAR, 2025 | 10:54 AM இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “ஐஎன்எஸ் குதர்” (INS Kuthar) என்ற கப்பல் மூன்று நாள் விஜயமாக திங்கட்கிழமை (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். இந்த கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் நிதின் சர்மா மற்றும் இலங்கைக் கடற்படையின் மேற்கு கடல் தளபதி ரியர் அட்மிரல் எம்.எச்.சி.ஜே. சில்வா ஆகியாருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த கப்பல் வருகையின் ஒரு பகுதியாக இலங்கை கடலோர காவல்படையின் சுரக்ஷா கப்பலுக்கு முக்கிய பாதுகாப்பு அமைப்பின் அத்தியாவசிய அங்கமான தீயணைப்பு அமைப்பின் நிரப்பப்பட்ட சிலிண்டர் கையளிக்கப்பட்டது. எஸ்.எல்.சி.ஜி.எஸ் சுரக்ஷா கப்பலானது கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு கடல் ரோந்துக் கப்பலாகும். முன்னதாக ஜூன் 2021 மற்றும் ஏப்ரல் 2022 இல் இந்தியா சுரக்ஷா கப்பலுக்கான உதிரி பாகங்களை நன்கொடையாக வழங்கியது. ஜனவரி 2024 இல் ஹாலோன் சிலிண்டர்களை மீண்டும் நிரப்புவதற்கான உதவியையும் வழங்கியது. இந்த செயற்பாடானது, பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதற்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இது அடையாளப்படுத்துகிறது. இக்கப்பலின் செயல்பாட்டுத் திறன்கள் குறித்து இலங்கை கடற்படை வீரர்களுக்குக் கற்பிக்கும் ஒரு நிகழ்ச்சியும் கப்பலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கப்பல் இலங்கை கடற்படையுடன் விளையாட்டு போட்டிகள் மற்றும் யோகா பயிற்சியையும் மேற்கொள்ளவுள்ளது. பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பகிரப்பட்ட சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்காக இலங்கை கடற்படையின் திறன்களை அதிகரிப்பதில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, இந்திய கடற்படைக் கப்பலான குதரின் அமைந்துள்ளது. நாளை மறுதினம் (06) இக்கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/208214
  25. யுக்ரேனுக்கான அமெரிக்க ராணுவ உதவி நிறுத்திவைப்பு - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,வெள்ளிக்கிழமை ஓவல் அலுவலகத்தில் காரசாரமான வாதம் 4 மார்ச் 2025, 01:53 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனுக்கு வழங்கும் ராணுவ உதவிகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ ஒரு அறிக்கையின் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று ஓவல் அலுவலகத்தில் நடந்த காரசார விவாதம் நடந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ்-க்கு வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் அளித்த தகவலின் படி," அமைதியில் கவனம் செலுத்துவது என்பதில் அதிபர் (டொனால்ட் டிரம்ப்)தெளிவாக உள்ளார். எங்களின் கூட்டாளிகளும் அந்த நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். யுக்ரேனுக்கு எங்களின் உதவியை நிறுத்தி வைத்து, அது தீர்வு தருகிறதா என்பதை மறுஆய்வு செய்து வருகிறோம்" என கூறினார். புளூம்பெர்க் செய்தியின் படி, "யுக்ரேன் தலைவர்கள் அமைதிக்கு உறுதி பூணும் வரை அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்தி வைக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளார்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிறுவனத்தின் செய்திகளின்படி, யுக்ரேனுக்கு சென்றடையாத அனைத்து ராணுவ தளவாடங்களும் நிறுத்தப்படும். யுக்ரேனுக்கு சென்று கொண்டிருக்கும் ஆயுதங்களை அப்படியே நிறுத்தி வைப்பதுடன், போலந்தில் உள்ள ஆயுதக்கிடங்கில் இருந்து யுக்ரேனுக்கு சப்ளை செய்வதும் நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், யுக்ரேனுக்கான ராணுவ உதவி நிறுத்தம் குறித்து உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை. இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் "என்ன நடக்கிறது என பார்க்கலாம்" என்று மட்டுமே பதிலளித்திருந்தார். யுக்ரேன் ராணுவ உதவி எப்படி வேலை செய்கிறது? யுக்ரேன் போரில் அமெரிக்காவின் ராணுவ உதவியின் நடைமுறை சிக்கலானது. ஆனால் இது மூன்று படிநிலைகளில் வேலை செய்கிறது. அதிபர் நிதியளிப்பு ஆணையம் (The presidential drawdown authority) வெளியுறவு அமைச்சகத்தின் அந்நிய ராணுவ நிதியளிப்பு (State Department Foreign Military Financing (FMF)) யுக்ரேன் பாதுகாப்பு உதவி முன்னெடுப்பு ( Ukraine Security Assistance Initiative (USAI)) "அதிபரின் நிதியளிப்பு ஆணையமானது அமெரிக்க ராணுவத்தின் சொந்த கையிருப்பில் இருந்து யுக்ரேனுக்கு ஆயுத உதவிகளை வழங்குவதை முடிவு செய்கிறது. இதில் தோராயமாக 3.85 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வழங்க முடியும்" என பிபிசியிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த உதவியை வெள்ளை மாளிகையே நேரடியாகத் தீர்மானிக்கும். அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் அந்நிய ராணுவ நிதியளிப்பு திட்டத்தின் கீழ் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் யுக்ரேனுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது மானியமாகவோ, கடனாகவோ வழங்கப்படும். இந்த துறையானது வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவின் கட்டுப்பாட்டில் வரும். அமெரிக்க அரசின் "யுக்ரேன் பாதுகாப்பு உதவி முன்னெடுப்பு" (USAI) திட்டமானது அமெரிக்க உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக யுக்ரேனுக்கான ராணுவ தளவாடங்களை வாங்கும் திட்டத்திற்கு நிதியளிக்கிறது. இவ்வாறு மூன்று கட்டங்களாக நிதி வழங்கப்படும் நிலையில், அமெரிக்காவின் அறிவிப்பு எந்த அளவுக்கு இந்த உதவித் திட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என தற்போது தெரியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டிரம்பின் நம்பிக்கையை யுக்ரேன் பெறும் வரை உதவி நிறுத்தம் தொடரும் என கூறப்படுகிறது. "போரை நிறுத்த டிரம்பால் மட்டுமே முடியும்" யுக்ரேனுக்கான அமெரிக்க ராணுவ உதவி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அறிக்கை மூலம் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ உறுதி செய்துள்ளார். "தற்போதுள்ள சூழலில் யுக்ரேனில் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ள ஒரே தலைவர் டொனால்ட் டிரம்ப் மட்டும் தான்" என அவர் கூறியுள்ளார். "நாங்கள் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என விரும்புகிறோம். அமைதி சாத்தியமானதா என ஆராய விரும்புகிறோம்" எனவும் ரூபியோ கூறியுள்ளார். டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து யுக்ரேனுக்கான ராணுவ உதவி நிறுத்தம் தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மார்கோ ரூபியோ மூலம் வெளியாகியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"போரை நிரந்தரமான முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ள ஒரே தலைவர் டொனால்ட் டிரம்ப் மட்டுமே" பிரச்னையைத் தீர்க்க ஸெலன்ஸ்கியால் முடியுமா? யுக்ரேனுக்கான ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ள நிலையில், இந்த சூழலை ஸெலன்ஸ்கியால் சரி செய்ய முடியுமா? என வட அமெரிக்க செய்தியாளர் நோமியா இக்பால் ஆராய்ந்துள்ளார். "அதிபரிடம் மன்னிப்பு கேட்கலாமா? நிபந்தனையின்றி கனிம ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளலாமா?" என்ற கேள்விகளை முன்வைக்கும் நோமியா, டிரம்ப் நிர்வாகம் விரும்புவதும் அதுவாகத்தான் இருக்கும் என கூறியுள்ளார். "இந்த பிரச்னைக்கு ஸெலன்ஸ்கி காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறார், போதுமான அளவு நன்றி சொல்லவில்லை என பொய்யாகக் குற்றம் சாட்டுகின்றனர்." என கூறும் நோமியா, உதவியை நிறுத்தும் இந்த அசாதாரண நடவடிக்கை போரை எதிர்கொண்டுள்ள நாட்டின் தலைவருக்கு அழுத்தம் கொடுத்து வழிக்கு கொண்டு வருவதற்காகவே தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறுகிறார். ஆனால் அத்தனைக்கும் ஸெலன்ஸ்கி ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளதையும் நோமியா சுட்டிக்காட்டுகிறார். "கடந்த ஆண்டு பேட்டி அளித்த ஸெலன்ஸ்கி, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் அப்படியே இருக்கட்டும் என ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இதற்கு ஈடாக நேட்டோவில் உறுப்பினராக யுக்ரேன் சேர்க்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். நேட்டோவில் யுக்ரேனை சேர்த்துக் கொள்ள தயார் என்றால் பதவி விலகவும் தயாராக இருப்பதாக ஸெலன்ஸ்கி கூறினார்" எனவும் நோமியா கூறுகிறார். "ஆனால், நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் யுக்ரேனை சேர்க்க டிரம்ப் மறுத்தார். அதேநேரத்தில் ரஷ்யா என்னென்ன விஷயங்களில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது பற்றி டிரம்ப் ஒரு போதும் பேசவில்லை" எனவும் நோமியா கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிபந்தனையின்றி கனிம ஒப்பந்தத்தை யுக்ரேன் ஏற்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் விரும்புகிறது ஸெலன்ஸ்கி மீது வான்ஸ் விமர்சனம் யுக்ரேனுக்கான ராணுவ உதவி நிறுத்த அறிவிப்பு வெளியாகும் முன்பாக, ஃபாக்ஸ் நியூஸ்-க்கு பேட்டி அளித்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஓவல் அலுவலக சந்திப்பில் நடந்தது என்பது குறித்து விவரித்துள்ளார். இந்த பேட்டியின் போது நெறியாளர் சீன் ஹானிட்டியின் கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த சந்திப்பின் தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் முடிந்த வரையிலும் "ராஜதந்திர ரீதியாக" இருக்க முயற்சித்ததாக வான்ஸ் கூறியுள்ளார். "நான் நிலைமையை கொஞ்சம் தணிக்க முயற்சித்தேன்" எனக் கூறிய வான்ஸ், ஆனால் "ஸெலன்ஸ்கி, மரியாதை இன்றியும் உரிமை கொண்டவர் போலவும் இருந்தார்" என தெரிவித்தார். "அமைதிக்கான செயல்பாட்டில் தமது விருப்பமின்மையை ஸெலன்ஸ்கி தெளிவாகக் காட்டினார்" என கூறிய வான்ஸ் ஆனால் இறுதியில் "அவர் இறுதியில் அங்கு(அமைதிப் பேச்சுவார்த்தை) தான் வரவேண்டும்" எனவும் கூறினார். அமைதி பேச்சுவார்த்தைக்கு ஸெலன்ஸ்கி தயாராக இருந்தால், ஓவல் அலுவலகத்திலோ, வேறு எங்கேயோ பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறியுள்ள வான்ஸ், அமைதி ஒப்பந்தத்தின் விவரங்களை விவாதித்து மறுக்கவும் செய்யலாம் என கூறினார். ஆனால் ஸெலன்ஸ்கியிடம் இருக்கும் பிரச்னை, பாதுகாப்பு உத்தரவாதங்களின்றி பேச்சுவார்த்தைக்கு வர அவர் மறுப்பது தான் எனக் கூறும் வான்ஸ், சமாதானத்திற்குப் பின்னர் பாதுகாப்புக்கான உத்தரவாதம் குறித்து பேசலாம் என்பது தான் வெள்ளை மாளிகையின் நிலைப்பாடு என தெரிவித்தார். பட மூலாதாரம்,BLOOMBERG படக்குறிப்பு,முடிந்த வரையிலும் ராஜதந்திர ரீதியாக இருக்க டிரம்ப் முயற்சித்தார் - வான்ஸ் "இந்த உதவி நிறுத்தமானது தற்காலிக ஏற்பாடு. ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு யுக்ரேன் முன்வரும் என்று டிரம்ப் நம்பும் வரை இந்த தடை தொடரும்" என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்ததாக வட அமெரிக்க செய்தியாளர் நோமியா இக்பால் கூறுகிறார். ஸெலன்ஸ்கி கோரும் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்காமல், கனிம ஒப்பந்தத்தை உறுதி செய்வதுடன், ரஷ்யாவுடன் சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் விரும்புகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதே நேரத்தில் அமெரிக்காவில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, டிரம்பின் முடிவை விமர்சித்துள்ளது. யுக்ரேனை கைவிட்டது வெட்கி தலைகுனிய வேண்டிய செயல் என்று ஜனநாயகக் கட்சி டிரம்ப் மீது குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த டக்வொர்த், டிரம்பின் இந்த முடிவு அமெரிக்காவின் பாதுகாப்பை வலுப்படுத்தாது என்று தமது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். "இந்த நடவடிக்கை புதினையும், அமெரிக்காவின் எதிரிகளையும் துணிவடையச் செய்யும் அதே நேரத்தில் நமது ஜனநாயக கூட்டாளிகளுடனான உறவை பலவீனப்படுத்தும் " என அவர் கூறியுள்ளார். இதேபோன்று ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினரான பீட்டர் வெல்ச், " புதின் ஒரு போர்க் குற்றவாளி, ஸெலன்ஸ்கி ஒரு கதாநாயகன். டிரம்ப் பலவீனமானவர் " என தமது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,டிரம்ப் நடவடிக்கையை ஜனநாயகக் கட்சி விமர்சித்துள்ளது. அண்மையில், ஸெலன்ஸ்கியின் வாஷிங்டன் பயணம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸுடன் ஒரு சூடான கருத்து பரிமாற்றத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. டிரம்ப் ஸெலன்ஸ்கியை மூன்றாம் உலகப் போர் என்ற பேராபத்துடன் விளையாடுவதாக குற்றம் சாட்டினார். யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாகவும், ரஷ்ய அதிபர் புதின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். யுக்ரேனை தவிர்த்து விட்டு ரஷ்யாவுடன் அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அண்டை நாடான யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பை 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கியவர் புதின் என்றாலும், யுக்ரேன் போரைத் தொடங்கியதாக ஒரு கட்டத்தில் ஸெலன்ஸ்கியை டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn89675vj5yo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.